Saturday, June 16, 2018

No frills...!

நண்பர்களே,

வணக்கம். மாதத்தின் மத்தியும் புலர்ந்து விட்டது ; புதுவரவு ஜம்போவும் உங்களை சந்திக்கத் தயாராகி விட்டது ! இதழ் அச்சாகி பைண்டிங்கிலிருக்க, எதிர்பாரா திக்கிலிருந்து தாமதம் ! அது தான் கூரியர் அனுப்பும் டப்பிகளின் ரூபத்தில் ! ஒரேயொரு புக் என்பதால் நம்மிடம் எப்போதுமே ஸ்டாக்கில் உள்ள வழக்கமான டபராக்களைப் பயன்படுத்திட  வழியில்லை ! So இந்தக் குட்டியூண்டு டப்பாவைச் செய்து தர ஆளை பிடித்துக் கேட்டால் - "கொஞ்சம் லேட்டாகும்..பரால்லியா ?" என்றார்கள் ! "சாதாரண துணிக் கவரில் போட்டு அனுப்பிடுவோமே சார்  ?" என்று நம்மவர்கள் ஆபத்பாந்தவர்களாய் நிற்க - எனக்கோ முதுகில் இன்னொரு தபா நயம் நல்லெண்ணையைத் தடவிக் கொண்டு சாத்து வாங்கச் சத்தில்லை சாமிகளா !! என்று சொல்லி விட்டேன் !   So டப்பிக்கள் திங்கள் வர்றான்...புக்குகள் கிளம்புறான் !      

And இதோ - ஜம்போ # 1-ன் அட்டைப்பட முதல்பார்வை !! அட்டைப்படம் மாத்திரமன்றி அந்த லோகோவுமே புதுசு தான்! பெயர் சொல்ல  விரும்பா நண்பரொருவர் அனுப்பிய டிசைனை நமக்குத் தெரிந்தமட்டுக்குக் கொஞ்சம் பட்டி-டிங்கரிங் பார்த்து இங்கே கொணர்ந்துள்ளோம் ! அந்த யானை ஜோடியானது அட்டைப்படங்களின் வர்ணப் பின்னணிகளுக்கேற்ப  அவ்வப்போது நிறம் மாறிக் கொள்ளும் ! Hope you like it !! அட்டைப்படத்தைப் பொறுத்தவரை - இது நமது ஓவியரின் கைவண்ணம் + டிசைனரின் மெருகூட்டல் ! இளம் டெக்சின் யூனிபார்ம் & அந்த முகவெட்டு ஒரிஜினலுக்கு நியாயம் செய்யும் விதமாய் அமைந்துள்ளதாய் எனக்குத் தோன்றியது ! ஆனால் தீர்ப்பெழுதும் ஜூரிக்கள் ஒத்துப் போனாலே எனக்கு நிம்மதி ! (அந்த ரெண்டு கைகளிலும் உள்ளது ஏதோ ஒரு கையுறை மாதிரியான சமாச்சாரம் guys - நம்மவருக்கு சகதியில் காப்புப் போட்டு விட்டோமோ ? என்று ரோசிக்க அவசியமில்லை !!)
பின்னணி வர்ண சேர்க்கையில் இன்னும் ஒன்றிரண்டு variants முயற்சித்துப் பார்த்திருந்தோம் ; ஆனால் அவை ரொம்பவே 'ஜிங்கு-ஜாங்' என்றிருப்பது போல் எனக்குப் பட்டது ! Anyways - அவையும் உங்கள் பார்வைக்கு ! 

And அட்டைப்படத்தில் இயன்ற சிற்சிறு நகாசு வேலைகளும் செய்துள்ளோம் என்பதை இதழைக் கையில் ஏந்தும் வேளையில் புரிந்து கொள்வீர்கள் ! 

கதையைப் பற்றி ஏற்கனவே கொஞ்சம் முன்னுரை தந்துள்ளேன் என்பதால் - மறுக்கா ரொம்பவே தமுக்கடிக்கப் போவதில்லை ! இதுவொரு flashback படலம் என்பதால் - அந்த வழக்கமான இரவுத்தீக்கு முன்னே அமர்ந்து கதை சொல்லும் / கேட்கும் பாணியே இம்முறையும் ! டெக்ஸ் தனது கடந்த காலத்தைப் பற்றி ; தான் ஒரு போக்கிரியாய் திரிந்த நாட்களைப் பற்றி பேசுகிறார் தன் சகாக்களிடமும், நம்மிடமும் !  நாம் ஆண்டாண்டு காலமாய்ப் பார்த்துப் பழகிய டெக்ஸ் அவதார் ஒரு நீதிக் காவலரது என்பதால் - இங்கே நாம் பார்க்கவிருக்கும் டெக்சிடம் லேசான வேறுபாடு இருந்திடும் ! And அந்த வேறுபாடே என் பெண்டையும் ஒரு வாரத்துக்குக் கழற்றிவிட்டது என்பதையும் சொல்லியாக வேண்டும் ! இது ஒன்றரை மாதங்களுக்கு முன்பாய் நமது கருணையானந்தம் அவர்களால் எழுதப்பட்ட கதை என்பதால் - மேலோட்டமாய் டெக்ஸ் பன்ச் டயலாக்குகளை மட்டும் மாற்றி எழுதி வீட்டுக் கிளம்பி விடலாமென்ற மிதப்பில் சாவகாசமாகவே இதனை எடிட்டிங்குக்கு எடுத்தேன் ! ஆனால் பக்கங்களைப் புரட்டப் புரட்ட - எனது நெருடல்கள் வலுப்பெற்றுக்  கொண்டே சென்றன  ! வயதில் குறைச்சலான டெக்ஸ் ; சட்டத்தால் தேடப்படும் டெக்ஸ் ; வன்மேற்கில் அத்தனை பெரிய முத்திரையெல்லாம் பதித்திருக்கா டெக்ஸ் - என்பதே இந்தக் கதையில் நம்மவரின் profile ! ஆக அதற்கேற்றவாறு மொழியாக்கமும் ஒரு வித்தியாசத்தைக் காட்டிட வேண்டுமே என்பது எனது எதிர்பார்ப்பாய் இருந்தது ! ஆனால் - இளம் டெக்ஸுக்கு தாத்தா வயதிலான கூட்டாளி கூட "வாங்க..போங்க....வீரரே..தீரரே !" என்று சிலாகிப்பான மரியாதை தருவதும்  ; தற்போதைய (ரேஞ்சர்) டெக்ஸுக்கு பயன்படுத்தும் அதே பாணியிலான வரிகள்  கதை நெடுகிலும் இளம் டெக்ஸ்க்கும் தரப்பட்டிருப்பது எனக்கு ரொம்பவே உதைத்தது ! So திருத்தி எழுதும் படலம் தொடர்ந்தது ஒட்டு மொத்தமாய் 224 பக்கங்களுக்குமே !! புதுசாய் எழுதுவது ஒரு விதச் சிரமமெனில் - ஏற்கனவே உள்ள மொழிபெயர்ப்போடு sync ஆகும் விதமாய் ஒட்டுமொத்தத் திருத்தங்கள் செய்ய முனைவது வேறொரு ரக நோவு ! பந்தாவாய் எடிட்டிங்கோடு கிளம்பலாமென்று நினைத்துத் திரிந்தவனுக்கு பிதுங்கின விழிகள் - இந்தக் கடைசி ஒரு வாரம் முழுசுக்குமே !! ஆனால் இந்த மாற்றங்களின்றி இளம் டெக்ஸை உங்களிடம் ஒப்படைக்க மனம் ஒப்பவில்லை என்பதால் அதன் பொருட்டும் ஒரு சில நாட்கள் கூடுதலாய் எடுத்துக் கொண்டேன் !! இதோ - உட்பக்கங்களின் preview :
ஒரு முழு நீள ஆக்ஷன் மேளா காத்துள்ளது என்று மட்டும் உறுதியாய்ச் சொல்லலாம் ! அப்புறம் ஜம்போவில் துவக்கம் முதலே பின்பற்றவிருக்கும் பாணி பற்றியும் சொல்லிவிடுகிறேனே : "No Frills ...Only Thrills ..." என்பதே ஜம்போவின் தாரக மந்திரமாய் இருந்திடும் ! So குட்டியானதொரு அறிமுகம்....கதை....தொடரவிருக்கும் விளம்பரங்கள் என்பனவற்றைத் தாண்டி வேறெதுவும் இடம் பிடித்திடாது ! நான் ஆப்பம் சாப்பிட்ட கதை ; அல்வா வாங்கிய கதையென்றெல்லாம் இங்கே நீட்டி முளக்கப் போவதில்லை ! 

Moving on,காத்திருக்கும் ஜூலையில் No Tex என்பதே மெனு ; ஆனால் வேறு 2 கௌபாய் நாயகர்கள் களமிறங்குகிறார்கள்  ! அவர்களுள் ஒருவர் ஒல்லிப்பிச்சான் லக்கி - நமது லயனின் 34 -வது ஆண்டுமலரில் டபுள் சாகசம் செய்கிறார் ! அடுத்தவரோ - புது வரவான ட்ரெண்ட் !! கனடாவின் பணிமண்டலத்தில் இவரது சாகசங்கள் நமக்கொரு refreshing change ஆக இருக்குமெபென் ! பனிமண்டலம் ஒருபக்கமெனில் - தகிக்கும் எரிமலை இன்னொரு பக்கம் ! Yes - சந்தா D சார்பாய் மறுபதிப்பில் மிளிர்கிறார் கேப்டன் பிரின்ஸ் ! அட்டகாசமான புது ராப்பருடன் "எரிமலைத்தீவில் பிரின்ஸ்" வண்ணத்தில் மிரட்டத்த தயாராகி வருகிறது !  மூன்று  ஆல்பங்களுமே அடுத்த சில நாட்களில் அச்சாகவுள்ளன என்பதால் ஜூலை இதழ்கள் bang on time இருந்திடும் !! அதனைத் தொடர்ந்து ராட்சசனொருவன்காத்துள்ளான் என்பதால் இடைப்பட்ட சகலத்தையும்  முடித்துத் தள்ளுவதில் முனைப்பாகவுள்ளோம் ! 

நாளைய பொழுதுக்கு  திருமண வீட்டுச் சாப்பாடு ; அரட்டை என்று அட்டவணை காத்திருப்பினும், "டைனமைட் ஸ்பெஷல்" மிரட்டிக் கொண்டிருப்பதை மறக்க இயலவில்லை ! ஒரு நூறல்ல..இரு நூறல்ல....மொத்தமாய் எட்டு நூறுக்கு கொஞ்சமே குறைச்சலான பக்கங்கள் எனும் போது - எத்தனை அவகாசம் கிடைத்தாலும் பற்றாது போலவே தோன்றுகிறது ! அட...நம்மவர் ஒரு வருஷம் கழித்துப் பிறந்திருக்கலாமோ ? என்ற நினைப்பு எழாதில்லை !! Bye all ...See you around !! Have a lovely Sunday !

274 comments:

  1. Replies
    1. நண்பரே, உங்களை எனக்கு தொியுமா? என தொியவில்லை!

      (உங்களுக்கு சிறுவலூாில் யாரேனும் நண்பா்கள் உண்டா??)

      Delete
    2. நண்பர்கள் இருக்காங்க மிதுன்

      Delete
  2. நானும் வந்துட்டேன்.

    ReplyDelete
  3. கியாரே போஸ்ட்டிங்கா!

    ReplyDelete
  4. சார் அட்டைப்படம் அருமை,கடைசி அட்ணையும் அழகு . ஷாருக்கான்!

    ReplyDelete
    Replies
    1. ///அட்ணையும் அழகு///

      😂😂😂

      ஆனாலும் உங்க தமாஸுக்கு அளவே இல்லை!

      Delete
    2. அட்ணையும்=அட்டை+நையும்,,,,,அதாவது எதிராளிகள் வில்லர் முன் நைவதை போல இந்த அட்டையும் நையும்,,,,,இப்பவெல்லாம் சுருக்கமா எழுதிப் பழகுறேன்

      Delete
    3. ///இப்பவெல்லாம் சுருக்கமா எழுதிப் பழகுறேன் ///

      சுப்பர்!! :)

      Delete
    4. ///இப்பவெல்லாம் சுருக்கமா எழுதிப் பழகுறேன் ///

      நல்ல வேளை மோர்ஸ் கோட்ல எழுதாம விட்டீங்க.😉😉😉

      Delete
    5. அதான் பெயரையும் சுருக்கிட்டீங்களா??

      Delete
    6. @ Steel : BTW யாருங்கோ அந்த ஷாருக்கான் ?

      Delete
    7. நண்பர்களே பாய்ண்ட்னாலும் சுருக்கம்தான

      Delete
  5. இம்மாத இதழ்கள் அனைத்துமே மரண மாஸ். அதற்கு ஐசிங் ஆன் த கேக் ஆக இளம் டெக்ஸ் அமைந்துவிடுவார் என வெகு நம்பிக்கையுடன் வெய்ட்டிங்....

    ReplyDelete
  6. SUNDAR ANNACHEE VERY HAPPY FOR JUMBO TEX BOOK.

    I.V.SUNDARAVARADAN
    LITTLE KANCHEEPURAM
    CELL:: 7667291648

    ReplyDelete
  7. இரவு வணக்கம் 🙏

    ReplyDelete
  8. லோகோ எளிய வடிவில் சிறப்பாக அதிலும் ஜ எழுத்து யானையின் தும்பிக்கை போல இருப்பது மிக சிறப்பு அட்டையில் டெக்ஸ் ஸ்கூல் பையன் போல் கூலாக இருக்கிறார். சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. //அதிலும் ஜ எழுத்து யானையின் தும்பிக்கை போல இருப்பது//

      நமது ஓவியர் சிகாமணியின் கைவண்ணம் சார் !

      Delete
  9. அட்டைப்பெட்டி பிரச்சனை என்றால் இளம் டெக்ஸ் கதையை ஜூலை மாதம் கூட அனுப்பலாமே சார்! ஜூலையில் டெக்ஸ் கதை இல்லாத ஏக்கத்தையும் தீர்த்து விடுமே???

    ReplyDelete
    Replies
    1. +1

      ஆம் சார். ஜம்போ இதழை அப்படி‌ சேர்த்து அனுப்புவதால், பல நன்மைகள் உண்டு. முக்கியமாக பேக்கிங் மற்றும் கூரியர்.
      ஒரு 10நாள் வெயிட் பன்னுவதன் மூலம், இந்த மாத கடைசியிலே அனுப்பிடலாமே???

      Delete
    2. ரைட்டா ? லெப்டா ?

      Delete
    3. தாராளமாக ஜூலையில் அனுப்பலாமே நண்பர்களே....மேற்கண்ட நன்மையுடன் அட்லீஸ்ட் நம்மால் ஐந்து சந்தாவையாவது மிச்சபடுத்தியது போல இருக்குமே..... நண்பர்கள் யோசிக்கலாமே.....

      Delete
  10. டெக்ஸ் அட்டைப்படம் நன்றாக இல்லை...முகம் டெக்ஸ்'ஐ போலவே இல்லை... இரவு வணக்கம் நண்பர்களே...!!!

    ReplyDelete
  11. இளம் டெக்ஸ் அட்டைப் படம் வெகு அசத்தல்.
    ஜூலையில் இதைத் தந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.
    ஜம்போ லோகோ அசத்தல் ரகமே.அந்த முகமறியா நண்பருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  12. இரவு வணக்கமுங்க _/|\_
    .

    ReplyDelete
  13. // டெக்ஸுக்கு பயன்படுத்தும் அதே பாணியிலான வரிகள் கதை நெடுகிலும் இளம் டெக்ஸ்க்கும் தரப்பட்டிருப்பது எனக்கு ரொம்பவே உதைத்தது ! //


    வாவ்
    புதிய மாற்றத்திற்காக ஆவலாக காத்திருக்கிறோம் சார்
    .

    ReplyDelete
  14. நண்பர்களுக்கு தாமதமான ரம்ஜான் வாழ்த்துகள் _/|\_
    .

    ReplyDelete
  15. மாடஸ்டி பிளைஸி

    ReplyDelete
  16. பணியாளர்களின் கருத்தே எமது கருத்தும். சாதாரண துணிக் கவரில் போட்டு அனுப்பிஇருக்கலாமே சார்!இருப்பினும் உங்களின் மெனகேடலுக்கு பாராட்டுக்கள் சார் !

    ReplyDelete
  17. ஆசிரியரே தேவையில்லாத கொரியர் செலவு வேண்டாம் பேசாமல் ஜுலை மலர்களோடு அனுப்பிவிடுங்களேன்

    ReplyDelete
  18. ஜம்போவின் அட்டை படம் அசத்தல். உட்பக்க preview உம் எதிர்பார்ப்பை கூட்டுகிறது. தலை சில்லு மூக்குகளை சிதறடிப்பதுதான் நமக்கு பழக்கம். தலையின் தாடையில் ஒருவன், ஓங்கி அறைவது, எமக்கு புதுசு சார். ஆவலுடன் waiting Sir.
    சென்ற மாத இதழ்கள் , பதிவு தபாலில் வந்து கிடைத்தன சார். மிக்க நன்றிகள். இதழ்களை பருகி கொண்டிருக்கிறேன். அதனால் I am escape.

    ReplyDelete
  19. அகால வேளை வணக்கங்கள்

    ReplyDelete
  20. அதி காலை வணக்கங்கள்.

    ReplyDelete
  21. சார் ஜம்போ 10 நாள் கழித்து அனுப்பவும் கூரியர் செலவாவதூ மிச்சமாகும்.

    ReplyDelete
    Replies
    1. வழிமொழிகிறேன்..

      Delete
    2. அப்டிங்கிறீங்க ?

      Delete
    3. Dear Sir, Only for this time, please send me this “காற்றுக்கென்ன வேலி” book by today as mentioned earlier. As I will be out of India from 25th, I will be glad to get this book soon. Rest of the Jumbo books, you may send along with regular books. Thanks.

      Delete
  22. லோகோவும் அதன் கீழ் வெளியீடு எண்ணும் ,விலையும் அருமை சார்..

    லோகோ அமைத்த நண்பருக்கு மனமார்ந்த பாராட்டுகள்..

    ReplyDelete
  23. அடுத்த மாசம் டெக்ஸ் இல்லையா !?

    அப்ப அடுத்த மாச இதழ்களுடன் அனுப்பினால் கூட ஓகே தான் சார்...

    அது என்னவோ மாதாமாதம் இதழ்களில் டெக்ஸ் இல்லையெனில் இப்போது எல்லாம் சிறிது வெறுமையாய் தெரிகிறது சார்.

    ReplyDelete
  24. அறிமுகம்....கதை....தொடரவிருக்கும் விளம்பரங்கள் என்பனவற்றைத் தாண்டி வேறெதுவும் இடம் பிடித்திடாது ! நான் ஆப்பம் சாப்பிட்ட கதை ; அல்வா வாங்கிய கதையென்றெல்லாம் இங்கே நீட்டி முளக்கப் போவதில்லை !


    #############


    ஜம்போ காமிக்ஸ் இதழில் மட்டும்தானா ..இப்பொழுது அனைத்து இதழ்களுமே அப்படி தான் வருவது போல எனக்கு ஒரு மனபிராந்தி :-(

    சகாப்தத்தின் சிறு வயதின் இதழிலா நாங்கள் சிங்கத்தின் சிறு வயதை எதிர்பார்க்க போகிறோம்...

    என்னமோ போங்க சார்...:-(

    ReplyDelete
    Replies
    1. தல. என்ன காலைலயே சரக்கை பத்தி்பேசறீங்க...ஒன்னும் சரியில்ல போங்க.

      Delete
    2. நச்'னு சொன்னீங்க தலீவரே!! ஆனா எத்தனை சொன்னாலும் அவர் திருந்துற மாதிரி தெரியலை!!

      Delete
    3. மனப்பிராந்தி...மனவிஸ்கி என்று தலீவர் புலம்புவதும், அதை செயலர் பாராட்டுவதும் - என்ன நடக்குது இக்கட ?

      அப்புறமா கீழேயோரு நண்பரும் இது தொடர்பா பதிவு போட்டிருக்கார் பாருங்கோ !

      Delete
  25. டியர் எடிட்,

    ஜம்போ லோகோவும், இளம் டெக்ஸ் அட்டையும் சிறப்பாக அமைந்துள்ளன. அதுவும், நீங்கள் குறிபிட்டபடி இது நமது ஓவியரின் சிறப்பான அட்டைகளில் ஒன்று.

    தனி புத்தகம் கூரியரில், சிதைந்து விட கூடாத உங்கள் எண்ணம்.. பேஷ், பேஷ்.

    ஆவலுடன் காத்திருப்பேன்... ஒரு வழியாக, தள்ளி தள்ளி போய் கொண்டிருந்த ஸ்பெஷல் சந்தா கட்டி விட்ட திருப்தியில்.

    ReplyDelete
    Replies
    1. கவரில் அனுப்பி முனைகள் லேசாக மடங்கிப் போய் சேர்ந்தாலும் சங்கடப் பட்டது போலாகி விடுமே என்ற கவலை தான் சார் !

      Delete
  26. கேப்டன் பிரின்ஸ் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்

    ReplyDelete
  27. எடிட்டர் சார்,

    யங் டெக்ஸுக்காண்டி மொழிபெயர்ப்பை மாற்றி எழுதிய உங்களின் மெனக்கெடல் எங்களுக்கொன்றும் ஆச்சரியமான நிகழ்வல்ல! ஒவ்வொரு இதழும் மிகச் சிறப்பாக அமைந்து எங்களுக்கு ஒரு அருமையான வாசிப்பு அனுபவத்தைத் தர உங்களின் இந்த மெனக்கெடல்கள்தானே தொடர் காரணமாக இருந்துவருகிறது!! தயாரிப்புப் பணிகளின் ஏதாவதொரு கட்டத்தில் இப்படி ஏதாவதொரு சிக்கலில் மாட்டி விழிபிதுங்கி, அதைக் களைய நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியுமே எங்களுக்கு கிச்சுகிச்சு மூட்டும் சமாச்சாரங்கள்!! தொடரட்டம் உங்கள் வி.பி படலங்கள்!!

    ஜம்போ காமிக்ஸின் லோகோவும், முதல் அட்டைப்படமும் - அசத்தலாய் அமைந்திருக்கின்றன! பதிவைப் படிக்காமல் அட்டைப்படத்தை முதலில் பார்த்தபோது இது ஒரிஜினல் அட்டைப்படம் என்றே நினைத்தேன்!! யங் டெக்ஸை படு யூத்ஃபுல்லாக வரைந்திருப்பதன் மூலம் 'நாங்களும் யூத்துத்தேன்' என்று நிரூபித்திருக்கிறார் ஓவியர் மாலையப்பன்!! மூன்று அட்டைப் படங்களுமே அசத்தல்!!!! ஒவ்வொன்றிலுமே பின்னணியை மிக அழகாக மிளிரச் செய்திருக்கும் டிசைனர் பொன்னன் அவர்களின் திறமை பாராட்டுக்குரியது!!
    ஓவியருக்கும், டிசைனருக்கும் சங்கத்துச் சார்பில் தலா ஒரு பூங்கொத்து!!

    பார்த்து ரசிக்க ஆயிரம் விசயங்கள் கிடந்தாலும், குறைகளைத் தேடிப்பிடித்தாவது சொல்லிவிடுவது நம் பாரம்பரியப் பழக்கமென்பதால்....
    * டெக்ஸின் வலது பக்க துப்பாக்கி செருகும் பெளச், இடது பக்கத்தைவிட சிறியது. சுட்டு முடித்துவிட்டு சொருகும்போது கீழே விழுந்துவிட வாய்ப்பிருப்பதால் யங் தல'யை கவனமாக இருக்கச் சொல்லவும்! :)
    * டெக்ஸின் ஜீன்ஸு பேண்ட் கொஞ்சம் தொளபுளா!! சுருக்கங்கள் அதிகம்!! அயர்ன் பண்ணிப் போட்டிருக்கலாம்!! :)

    துப்பாக்கி எப்போது நீட்டப்பட்டிருந்தாலும் அதிலிருந்து தீப்பிளம்பு கக்கப்படுவதைப் போல வரையப்படும் நம் பாரம்பரியப் பழக்கம் மாற்றப்பட்டிருப்பதும் - வரவேற்புக்குரியது!!

    அட்டைப்படத்தேர்வில் வழக்கமான நம் 'சிவப்புப் பின்னணி' அசத்தல்தான் என்றாலும், 'யங் டெக்ஸ்' என்ற நாமகரணத்திற்கு ஏற்றாற்போல அந்த ஃபேன்ஸியான இரண்டாவது அட்டைப்படத்தைத் தேர்வு செய்திருந்தால் கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கும் எ.எ.க!

    'காற்றுக்கு ஏது வேலி'யை கையில் ஏந்த ஆவலுடன் வெயிட்டிங்!!




    ReplyDelete
    Replies
    1. Sagotharare thuppaakkikalin alavukalai kavanikkavum, valathu kaiyil irukkum thupppaakki idathu kaiyil thuppaakiyin alavu vida siriyathu, atharkku etra maathiri thaan pouch amainthullathu enpathai thazhmaiudan therivithu kolkiren

      Delete
    2. அது இரப்பர்ல செய்த உறை,,,,,அப்றம் சிறு வயது டெக்ஸ் தறுதலையா சுத்துனதால அயர்ன் பண்ணி போட மாட்டாராம் கதையல்ல நிஜமாம்

      Delete
    3. // யங் டெக்ஸுக்காண்டி மொழிபெயர்ப்பை மாற்றி எழுதிய உங்களின் மெனக்கெடல் எங்களுக்கொன்றும் ஆச்சரியமான நிகழ்வல்ல! ஒவ்வொரு இதழும் மிகச் சிறப்பாக அமைந்து எங்களுக்கு ஒரு அருமையான வாசிப்பு அனுபவத்தைத் தர உங்களின் இந்த மெனக்கெடல்கள்தானே தொடர் காரணமாக இருந்துவருகிறது! //

      +1

      Delete
    4. @ கடல்யாழ்9

      ///valathu kaiyil irukkum thupppaakki idathu kaiyil thuppaakiyin alavu vida siriyathu///

      இப்பத்தான் கவனித்தேன் சகோ, வலது கையில் பிஸ்டலும், இடது கையில் ரைஃபிலும் வைத்திருக்கிறார்! :P

      அப்புறம், அவர் கழுத்தில் கட்டியிருப்பது கூட பெட்ஷீட் தானே? :D :P

      Delete
    5. ஜீன்ஸையும்்அயர்ன் பண்ணி போடறது நம்மூர் வழக்கம். டீசர்ட், ஜீன்ஸ் கார்டுராய்மாறி துணிகளை இங்க யாரும் அயர்ன் பண்றது இல்லை பெரும்பாலும் பிசினஸ் கேசுவல்ஸ், மற்றும் சில துணி வகைகளே அயர்ன் அல்லது ட்ரை க்ளீனிங் பண்ணி அணிகிறார்கள்.

      Delete
    6. ஒருக்கா அயர்ன் முன்சாமி அன்னிக்கின்னு பார்த்து பொட்டி போடலியோ என்னவோ ?

      Delete
    7. நல்லா அடிச்சுச் சொல்லுங்க ரம்யா !! பூனைக்கு நக்கீரர் தாடிலாம் ஒத்தே வராதுன்னு !

      Delete
    8. @Vijayan
      ஆமாம் ஆசிரியரே பூனையாருக்கு நன்றாக இல்லை

      Delete
    9. @ஈரோடு விஜய்
      சகோதரரே அது ரைபிள் இல்லை, வின்செஸ்டர்
      எங்கள் தலயின் டயனமைட்

      //அப்புறம், அவர் கழுத்தில் கட்டியிருப்பது கூட பெட்ஷீட் தானே? :D :P//

      டெக்சின் கழுத்தில் கட்டி இருப்பது ஸ்டைலாக உள்ளது
      அதனை பெட் சீட் என்று கிண்டல் பண்ணிய உங்களுக்கு தண்டனை ஈரோட்டில் வறுத்த கறி உங்களுக்கு கிடையாது

      Delete
  28. விஜயன் சார், டெக்ஸ் அட்டைப்படம் அருமை.

    ஜம்போ லோகோ சுமாருக்கும் கீழ்.

    ReplyDelete
  29. எடிட்டர் சார்
    டெக்ஸ் அட்டைப்படம் என்னை ஒரு ஐம்பது வருடம் பின்னோக்கி அழத்துச் சென்று விட்டது!!
    அப்போது அரைக்கால் சட்டையுடன் திரியும் நானும் என் அண்ணனும் என் தந்தை வீட்டில் இல்லாதபோது அவருடைய பேண்ட்டை எடுத்து போட்டுக்கொண்டு...
    சாரி! அதன் உள்ளே நுழைந்து கொண்டு இடுப்பிலிருந்து அது நழுவாமல் இருக்க பெல்ட்டை மாட்டி கண்ணாடியில் பார்த்து ரசிப்போம்!!!
    நம்ம இளம் டெக்ஸூம் அவருடைய தந்தையாரின் பேண்டை மாட்டி போஸ் கொடுப்பது போல் எனக்கு தோன்றுகிறது.பாவம்!! அவரும் அரைக்கால் சட்டையுடன் திரிந்திருப்பார் போலும்!!!

    ReplyDelete
    Replies
    1. அட.. பெர்முடாஸ் போட்ட இளம் டெக்ஸைக் கூட முயற்சித்திருக்கலாம் போலுள்ளதே !

      Delete
    2. ஹப்பா...
      இப்போதுதான் மனம் நிம்மதியானது.
      காலையில் டெக்ஸ் அட்டைப்படத்தை பார்த்தவுடன் என் மனதில் ஓடிய எண்ணத்தை பதிவிட்டுவிட்டேன்.
      அதன் பின்னர் எனக்குள்ளே ஒரு உறுத்தல். ஆசிரியரின் உழைப்பை அலட்சியப் படுத்திவிட்டோமோ என்று.ஆனால் ஆசிரியர் இதனை எளிதாக எடுத்துக் கொண்டதை கண்டவுடன் நிம்மதி.
      Sorry sir.

      Delete
  30. காமிக்ஸ் வறட்சியைப் போக்கவரும் ஜம்போ காமிக்ஸ் காண ஆவலாய் காத்திருக்கிறேன் ..ஆனாலும் அடுத்தமாதம் டெக்ஸ் இல்லை எனும்போது ஒரே கூரியரில் அனுப்புவதே நல்லது என்பது எனது கருத்து .

    ReplyDelete
  31. நிறம் மாறும் யானை ஜோடிகள் பற்றி சொல்லியிருக்கின்றீ ர்கள் .எவ்வளவு உற்று பார்த்தாலும் ஒரு சர்க்கஸ் யானை மட்டுமே கண்ணுக்கு தென்படுகிறது ..

    ReplyDelete
    Replies
    1. ///எவ்வளவு உற்று பார்த்தாலும் ஒரு சர்க்கஸ் யானை மட்டுமே கண்ணுக்கு தென்படுகிறது ..///

      நல்லா பாருங்க நண்பரே... இரண்டு யானைகள்!!

      Delete
    2. யானைக்குள் யானை!!

      Delete
    3. ஓ ..பார்த்துவிட்டேன்.அந்த சிவப்பு பின்னணியில் யானைக்குள் யானையாக ..நல்ல கற்பனை ..வரவேற்கிறேன் .

      Delete
  32. Logo with black back ground looks awful. Some other good colour combination will make it definitely elegant.

    ReplyDelete
  33. Sent along with july books sir so tex will be there for July as well..

    ReplyDelete
  34. யானையும் புடிக்கல பானையும் புடிக்கல மொத்தத்துல ஜம்போங்கிற பேரையும் புடிக்கல.புடிக்கலலலலலலலல

    ReplyDelete
  35. I bought last month Tex after a very long time since i had stoped buying Tex. Average marks from my side. Story is simple and too many dialogues making me sleep. Sorry if my comment is negative. Again i strongly decided not to buy Tex again... sorry Tex fans

    ReplyDelete
  36. எடிட்டர் சார்@

    மாத மத்தியில் அனுப்புகிறேன் என்ற வாக்குறுதியை காப்பாற்ற தோராயமாக ரூபாய் 8000 டூ 10000ஐ பேக்கேஜிங் மெட்டீரியல்ஸ்+ கொரியர் செலவில் வீண்டிக்க வேணாம் சார்.

    இன்றைய வியாபார சூழலை தெளிவாக உணரமுடிகிறது. இம்மாத இறுதியில் அனுப்பும் ஜூலை மாத பேங்கிங்கோடு அனுப்புங்கள்.

    ஒரு வாரம் என்பது சாதாரணமாக ஓடிவிடும் சார்.

    இரத்தப்படலம் பாகம்4ல் முறையான பயிற்சியை முடிக்க ஒரு உயிரை பலி கொடுப்பதை, தான் தண்டனை அனுபவித்தாலும் பரவாயில்லை என வாதாடி தடுத்து நிறுத்துவார் ராஸ் டான்னர். நாமும் அதை உதாரணமாக எடுத்து கொண்டு வாக்குறுதியை தள்ளிவைப்போம், பொது நன்மையை கருதி.

    ReplyDelete
    Replies
    1. Maybe ஒரு ஓட்டெடுப்பு எடுப்போமா ? ஒரு வாரம் கழித்து மொத்தம் 4 இதழ்களாய் அனுப்புவதா ? அல்லது 1 + 3 என்றா ?

      Delete
    2. ஜூலை இதழ்களோடே அனுப்பலாம் சார்,ஒன்னும் பிரச்சினை இல்லை.தேவையற்ற ரிஸ்க் வேண்டாம்.

      Delete
    3. தாராளமாவே ஒண்ணா அனுப்பலாம் சார்.எந்த பாதகமும் நேராது.

      Delete
    4. சேலம் தல. வாட்ஸ்அப் ல ஒரு மெசேஜ் கொஞ்ச நாளைக்கு முன்னே அனுப்பிச்சேன். பாத்தீங்களா?

      Delete
    5. ரெகுலர் சந்தாவில் உள்ளவர்களுக்கு ஓக்கே.
      என்னைப் போல் ஜம்போ மட்டும் சந்தா கட்டி இருக்கவங்களுக்கு எப்போ அனுப்பினாலும் தனி தான்.ஆகவே கணம் ஆசிரியர் அவர்களே என்னை போன்று உள்ளோர்க்கு மட்டும் நாளைக்கு அனுப்பிடுங்க.ஹி !ஹி !.

      Delete
    6. மஹி ஜி@ தங்களுக்கு மெயில் அனுப்பி உள்ளேன். ப்ளீஸ் செக் யுவர் மெயில் பாக்ஸ் ஜி.

      Delete
    7. ஆசிரியரே ஒரு வாரம் கழித்தே அனுப்புங்களேன்

      Delete
    8. ஒரு வாரம் கழித்தே...:-)

      Delete
    9. ஒரு வாரம் கழித்தே...:-)

      Delete
  37. Please stop your singathin siru vayathil in all books. Nothing impressive in that.

    ReplyDelete
    Replies
    1. கடைசியாய் எந்த சமீப இதழில் அந்தப் பகுதியைப் பார்த்தீர்கள் சார் ?

      Delete
    2. ஓஹோ... அதானா மேட்டர்....

      Delete
    3. Comicsselva17 June 2018 at 17:02:00 GMT+5:30
      Please stop your singathin siru vayathil in all books. Nothing impressive in that.///



      சார் உங்களுக்கு அது பிடிக்கவில்லை என்றால் அந்த தொடரை ( இப்ப வராமல் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக திரும்பவும் சி.சி.வயதில் வரும்...) படிக்காமல் தாண்டி செல்லலாமே சார்....அது வருவதால் புத்தகத்தின் விலையில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை தானே.. அப்பறம் என்ன உங்களுக்கு பிரச்சினை ....என்னைப்போல் சி.சி.வயதில் தொடரை விரும்புகிறவர்கள் இங்க நிறைய பேர் இருக்கிறார்கள் சார்...அவர்களுக்காக சி.சி.வயதில் கண்டிப்பாக மீண்டும் தொடர வேண்டும்.......

      Delete
    4. //என்னைப்போல் சி.சி.வயதில் தொடரை விரும்புகிறவர்கள் இங்க நிறைய பேர் இருக்கிறார்கள் சார்...அவர்களுக்காக சி.சி.வயதில் கண்டிப்பாக மீண்டும் தொடர வேண்டும்...//+1234567890

      Delete
    5. சிசிவ இதுவரை அருமை,,,,சுவாரஷ்யமான விஷயங்கள் இருந்தால் தொடரலாமே ஆசிரியரே

      Delete
    6. ////Please stop your singathin siru vayathil in all books. Nothing impressive in that.;///

      !!!!

      எடிட்டர் சார்... இதெல்லாம் அநியாயம்!! 'சி.சி.வ' கேட்டு நாங்க வருஷக் கணக்கா போராட்டம் நடத்திக்கிட்டு கிடக்கோம்... ஆனா நீங்க Comicsselvaக்கு மட்டும் மாசம் தவறாம 'சி.சி.வ'வை திகட்ட திகட்ட கொடுத்துக்கிட்டிருப்பது கொஞ்சம் கூட நல்லா இல்லை - சொல்லிப்புட்டோம்!

      @Comicsselva

      கொடுத்து வைத்தவர் நீங்க, நண்பரே!!
      இப்போ ஒரு நூறு-நூத்திப்பத்து பாகங்கள் தாண்டியிருப்பாரா?!!

      Delete
    7. ஆசிரியரே எங்களுக்கு உங்கள் சிறுவயதின் ஞாபகங்கள் வேண்டும்

      Delete
    8. யுவா உங்கள் கருத்துக்கு
      👏👏👏👏👏👏👏

      Delete
    9. அப்பாடா ....இத்தனை பேர் ஆதரவுக்காவது செவி சாய்ப்பாரா ஆசரியர்...

      Delete
    10. அப்பாடா ....இத்தனை பேர் ஆதரவுக்காவது செவி சாய்ப்பாரா ஆசரியர்...

      Delete
    11. எதனை?
      எப்போது??
      எப்படி???
      தருவதென்பதை கரைத்து குடித்தவர் நம் ஆசிரியர்.
      திரு.காமிக்ஸ் செல்வா அவருடைய எண்ணத்தை ஆசிரியரிடம் தெரிவித்தார்.அவ்வளவுதான் என்று கடந்து போகலாமே.
      எனக்கும் "சிசிவ" மேல் தீராக்காதல் உண்டுதான்.
      இருப்பினும் அவரவர் கருத்தினை பதிவிட நாம் இடையூறாக இருக்க வேண்டாமே.
      என்னுடைய பதிவு ஒரு வேண்டுகோள் மட்டுமே.இதற்கு எதிர்கருத்து கொண்டவர்கள் தயவுசெய்து இதனை கடந்து செல்ல வேண்டுகிறேன்.

      Delete
    12. ஆமா சார், இன்னும் ஒரு பதினைந்து வருடங்களுக்கு சிங்கத்தின் சிறுவயதில் - எழுதினீர்கள் என்றால். அதன் பின்னர் அதில் சுவாரஸ்யமாகச் சொல்ல (அல்லது எமக்கு அறிய) எதுவும் இராது. அதனால் அப்போது அதனை ஸ்டாப் செய்வதுதான் சரியாக இருக்கும்!

      Delete
  38. I bought last month Tex after a very long time since i had stoped buying Tex. Average marks from my side. Story is simple and too many dialogues making me sleep. Sorry if my comment is negative. Again i strongly decided not to buy Tex again... sorry Tex fans

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகேஷ் குமார். அந்த ஜனவரி மாத டெக்ஸ் புக் எனக்கு கடையில் கிடைக்கவில்லை. அத எனக்கு தரலாமா?

      Delete
    2. sir am ready to sell most of the Tex books(some of them i want to keep) at 50%price..
      Actually i already planned to sell in Ukkadam market. if you wish, pls mail me at : mahesh.celluloid@gmail.com

      Delete
  39. டெக்ஸ் அட்டைப்படத்தில் அந்த மூன்றாவது ரொம்ப அட்டகாசமாக உள்ளது.

    ReplyDelete
  40. லார்கோ வின்ச் படித்தேன் .சகிக்கவில்லை.இது மாதிரியான கதைகளை தவிருங்கள் .கேப்டன் பிரின்ஸ் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.கதை விறுவிறுப்பாகவும் இருக்க வேண்டும்.நடமாடும் நரகம் நன்றாக இருந்தது.

    ReplyDelete
  41. ஆர்ச்சி மற்றும் டெக்ஸ் டயலாக் சூப்பர். சீக்கிரம் ஆர்ச்சியை கண்ணில் காண்பிங்க விஜயன் சார். இல்லை என்றால் டெக்ஸைக் கொன்றது யார் என்று விசாரணை செய்ய வேண்டி வரும்.

    ReplyDelete
    Replies
    1. "லக்கி லூக்கைப் போட்டுத் தள்ளியது யார் ?" என்றொரு ஆல்பம் உள்ளது தெரியும் ; இதென்ன புதுசா இருக்கே ? ஹை !

      Delete
    2. உங்கள் வாட்ஸ் ஆப் பில் என்னுடைய மெசேஜ் பாருங்கள் ஆசிரியரே

      Delete
  42. சார்!
    அண்டர்டேக்கர்-ன் அடுத்த சாகஸம்?

    ReplyDelete
  43. சார்! ஜம்போ சந்தா எண்ணும், ரெகுலர் சந்தா எண்ணும் தனித்தனி எண்களாக உள்ளபோது அதை மாதக்கடைசியில் அனுப்பினாலும் ஜம்போவை தனி பார்சலாகத்தான் அனுப்புவீர்கள் என்று நினைக்கிறேன். அப்படி அனுப்பினாலும் ஒரே செலவுதானே. ஜம்போ இதழை இன்றைக்கே அனுப்பினால் மிகவும் சந்தோஷப்படுவேன். மாதத்தின் முதல் நாள் கிடைக்கும் புத்தகங்களை இரண்டு வாரங்களில் படித்து முடித்துவிடுகிறேன். கடைசி இரண்டு வாரங்களையும் ஜம்போ ஈடு செய்யட்டும். ஒவ்வொரு மாதமும் இப்படியே அனுப்புங்கள்.
    லோகோ மிக அட்டகாசமாக உள்ளது சார். டிசைன் செய்த அந்த நண்பருக்கு வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹாய் ஜெகத்.

      முந்தைய சந்தர்ப்பங்களில்

      +6,

      வண்ண மறுபதிப்பு ஸ்பெசல் (5X100),

      சூப்பர்6,

      சன்சைன் லைப்ரரி (கி.நா.),

      கிராபிக் நாவல் சந்தா(பெளன்சர் சீரியஸ்)

      Super6,

      லயன் கி.நா.

      .......

      ......
      போன்றவற்றிற்கும் தனித்தனி புக்கிங் தான். பல சமயங்களில் தனித்த புக்கிங் எண்கள் இருந்தன. பேக்கேஜிங்ல ஒன்றாகத்தானே அனுப்பப்பட்டு வந்தன.

      ரெகுலர் சந்தாவில் இல்லாத நண்பர்களுக்கு மட்டுமே தனித்த பார்சலில்....

      ஒரே வாரம் காத்திருக்கலாமே. காத்திருந்து படிக்கும் சுகமும் தனிச்சுவை தானே..!!!

      அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகையைவிட 5000அதிகம் வழங்கப்படும் என அறிவிப்பு வந்த போது வரவேற்றோமே. காரணம் அதில் உபயோகம் உண்டு. உபயோகமான செலவுக்கு என்றும் தடையில்லைதானே.

      (அந்த முடிவையே நிறைய பேர் வராது, அம்புட்டுதேன், எதுவும் நல்லாயில்லை போட்டி கேன்சல்னு சொல்லுவாரு; அப்டீனு நினைத்து இருப்பாங்க. அதற்கு மாறாக இப்போது அதிக பரிசு எனும்போது, வாங்குவது நம்ம நண்பர்கள் எனும்போது நமக்கும் குதூகலம் தானே)

      இன்றைய வியாபார சூழல் எப்படினு பில்லிங்கில் இருக்கும் உங்களுக்கு நன்றாகவே தெரியும் நண்பரே.

      முடிந்தளவு ஆசிரியர் சாருக்கு நம்மாள் இயன்ற சிறு அட்ஜஸ்மென்டாக இருக்கட்டுமே.

      இப்ப ஒரு தடவை பாதிபேர் எனக்கு வர்ல, உனக்கு வர்லனு சொல்லி அதை சரிபார்ப்பதற்குள் அடுத்த பார்சல் நேரமும் வந்துடும்.

      Delete
    2. @ சேலம் Tex விஜயராகவன் சார்!
      நான் சந்தாவுக்கு புதியவன் என்பதால் சற்றே குழம்பிவிட்டேன். பார்சலில் சந்தா எண் குறிப்பிடப்பட்டு வருவதை பார்த்திருக்கிறேன். இப்போது எனக்கு இரண்டு சந்தா எண்கள் கிடைத்துள்ளதால் இரண்டு பார்சல்களாக வரப்போகிறது என்று நினைத்தேன். இரண்டு சந்தாக்களையும் ஒரே பார்சலில் அனுப்பலாம் என்றால் உங்கள் கருத்தையே ஆதரிக்கிறேன்.

      Delete
    3. நைஸ் ஜெகத்.

      புரிதலுக்கு நன்றிகள்.

      Delete
  44. Lion comics and its other genres in total, I really appreciate for the Translation efforts by Edi sir.
    Most of the books looks like original Tamil script, rather than like translated. This is why am buying comics till to date.

    If Edi gets retired in future, i worry for the future of comics!!!
    Anyone can try to translate, but crispness and maintaining the slang of the original is what others will fail to keep up. Edi succeeds this way.

    Only rarely some books i noticed the dialogues not so good, but otherwise no mistakes. Sometimes even I will wonder what were the original dialogues and if it is the same Editor has translated, or he has rewritten in his own way...
    thought came in mind and so published; no other reasons....

    ReplyDelete
    Replies
    1. ///If Edi gets retired in future, i worry for the future of comics!!!///

      அதை நினைச்சாலே என்னவோ போல இருக்குங்க நண்பரே!!

      எடிட்டரின் ரிடையர்மெண்ட்டுக்குப் பிறகு தமிழ் காமிக்ஸின் கதி என்ன?

      ஒருவேளை, பழைய புத்தகங்களையே திரும்பத் திரும்ப வாசித்துக்கொள்ள வேண்டிய நிலை வருமா?


      விடை தருவார் யாரோ?

      Delete
    2. கனிவான வார்த்தைகளுக்கு நன்றிகள் நண்பர்களே ; ஆனால் நான் அத்தனை பெரிய அப்பாடக்கரும் கிடையாது ; தமிழ் காமிக்ஸ் உலகம் அத்தனை சவலைப் பிள்ளையும் கிடையாதே ! ஆங்காங்கே இருக்கக்கூடிய திறமைசாலிகளைத் தேடிக் கண்டுபிடித்து ஊக்குவிக்க வேண்டியது மட்டுமே அவசியமாகிடலாம் !

      Delete
    3. ஆசிரயர் சார்@ நோ சார். யூ டிசர்விங் திஸ், சோ சிம்பிள்.

      பிலிப்-அலெக்ஸ் பற்றியும், சந்திர-சமுத்திரர் பற்றியும் எழுத்துக்களில் தவிர அறியேன்.

      ஆனால் ராஜராஜரின் சாதனையை ஒற்றை கோபுரம் உணர்த்தியபோது விக்கித்துத்தான் போனேன் 32வயதில்... அதற்கு நிகர் வேறில்லை, இருக்கவும் முடியாது எனவும் எண்ணி இருந்தேன்.

      8ஆண்டு கழித்து கங்கை கொண்ட சோழபுரத்தை காணும் வரை மட்டுமே...!!!! என்னுடைய 40வது பிறந்தநாள் அன்று 3மணி நேரத்துக்கு மேல் அந்த புல் தரையில் அமர்ந்து மெளனமாக கண்ணீர் சிந்திக்கொண்டு இருந்தேன்.

      தங்களின் சாதனையின் உயரம் எங்களைப் பொறுத்து அதைவிட அதிகம் தான்.

      ஜூனியர் எடிட்டர் உங்களை விட ஒரு படி அதிகமாகவே சாதிப்பார் சார்... எனக்கு இதில் மாற்றுக் கருத்தே இல்லை....

      நீங்கள் போராடி ஏற்படுத்திக் கொடுத்துள்ள மேடையின் முழுப்பரிணாமும் அவர் காலத்தில் தான் உணர முடியும்.

      நீங்களும் எங்களோடு ரசிக்கப் போகிறீர்கள் தூரத்து நாளில்....!!!

      ரஷ்யா அழைக்கிறது, சீ யூ டுமாரோ சார்..!!!

      Delete
    4. ///அன்று 3மணி நேரத்துக்கு மேல் அந்த புல் தரையில் அமர்ந்து மெளனமாக கண்ணீர் சிந்திக்கொண்டு இருந்தேன்.///

      புல் தரைக்கு 3 மணி நேரம் உப்புத் தண்ணீர் பாய்ச்சி அதை சிதைச்சுருக்கீங்க... அப்படித்தானே? :P

      Delete
    5. செயலர்@ ஹா...ஹா...ஹா...

      மெஸ்ஸி மிஸ்ஸில் சோகமாக இருந்த மனசை ரிலாக்ஸ் பண்ணிட்டீங்க... தேங்யூ.

      கர்சீப்ல அவ்வப்போது வீட்காரிக்கு தெரியாம துடைத்து கொண்டேன் சாமி...!!!

      அங்கே செல்லும் முன் 1கி.மீ.க்குள் உள்ள அரண்மனை மேடு என்ற இடத்தில் ராஜேந்திரர் அரண்மனை இடிபாடுகளில் சற்று நேரம் அமர்ந்து இருந்தேன். மனசை பிசைந்து எடுத்து விட்டது. நண்பர்களே என்றேனும் வாய்ப்பு அமைந்தால் அங்கே செல்லத் தவறாதீர்கள்.

      Delete
    6. சார் ....சரித்திர நாயகர்களோடான ஒப்பீடெல்லாம் உங்கள் பிரியத்தின் அடையாளங்களாய்ப் பார்த்தாலுமே ஓவரோ ஓவர் என்பதில் சந்தேகம் நஹி ! உலக மேடைகளில் வலம் வந்த வரம் வாய்ந்த மனிதர்கள் எங்கே ? தெருக்கோடியில் பந்தை உதைத்துத் திரியும் நாமெங்கே ?

      Delete
    7. காமிக்ஸ் என்னும் ஒற்றை துறையில் உங்களின் சாதனைகள் அளவுகோள்கள் 216 அடிகளுக்கு இந்த நவீன காலத்தில் ஒப்பானதே..

      Delete
    8. ஆசிரியர் சார்@

      நீங்களே இதற்கு விடையையும் பகிர்ந்து விட்டீர்கள்.

      // தெருக்கோடியில் பந்தை உதைத்துத் திரியும் நாமெங்கே ?///----

      பியோனஸ் அயர்ஸின் சப் அர்ப் தெருக்களில் பந்தை உதைத்து திரிந்த அந்த சிறுவன் ஒரு நாள் உலக உருண்டையையே தன்னை கவனிக்க வைத்தான்.

      தனியொருவனாக 1986உலக கோப்பையை அர்ஜென்டினா வுக்கு வென்று தந்த டியகோ அர்மென்டோ மரடோனா தான் அந்த சிறுவன்.

      தனயொருவராக லயன்-முத்துவை மட்டுமல்லாமல், தமிழ் காமிக்ஸையே நிலைநிறுத்திய சாதனைக்கு சொந்தக்காரர் தான் எங்கள் சிவகாசி சிறுவர்.

      உங்கள் மேடையில் உங்கள் சாதனைதான் பெஞ்ச்மார்க் சார்.
      இது ஒன்றும் அதீதம் அல்ல;ரியாலிட்டி மட்டுமே.

      Delete
    9. புரொஃபஷனல் கால்பந்தில் 2ட்ராபிகள் மோஸ்ட் பிரஸ்டீஜ் இன் த வேர்ல்ட் சார்.

      Fifa வேர்ல்ட் கப்,
      Uefa சேம்பியன் லீக் தான் அவையிரண்டும் என உங்களுக்கு தெரியும்.

      க்ளாரன்ஸ் சீட்ரஃப் என்ற வீரர் சேம்பியன் லீக்கில் 3வேறு வேறு அணிகளில் வென்றுள்ளார்.

      அனைவரும் அறிந்த மெஸ்ஸி 4முறை பார்சிலோனாவோடும், சூப்பர் மேன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 5முறை ரியால் மாட்ரிட்+மான்செஸ்டர் அணிகளோடும் வென்றுள்ளனர்.

      ஆனால் இந்த சாதனைகள் அனைத்தும் ஒரேயொரு கேள்விக்கு முன் காணாமல் போய் விடும்.

      "ஹவ் மெனி வேர்ல்ட் கப் தே வின்?"...பதில் எ பிக் "0"...

      தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் "சேம்பியன் லீக்" என்ற கருப்பு வெள்ளை காலத்தோடு மட்டுமே நீங்கள் ஓய்வு பெற்று இருந்தீர்களேயானால் உங்கள் கூற்றை நான் ஏற்றுக் கொண்டு இருந்து இருப்பேன்.

      ஸ்டன்னிங் கம்பேக் செய்து தமிழ் காமிக்ஸ் என்ற மேடையில் "ரசிகர்களின் உள்ளம்" என்ற வேர்ல்டு கப்பை வென்றெடுத்துள்ளீர்கள்.
      சோ யூ ஆர் ஆல்சோ எ கம்ப்ளீட் பிளேயர் லைக் டியகோ. அஃப்கோர்ஸ் யூ ஆல்சோ மேட்ச் வித் ஹிம் இன் கான்ட்ராவர்ஸீஸ் டூஊ...!!!

      Delete
    10. சூப்பர் டெக்ஸ்,,,,சார் இந்த விளையட்டு வீரர்கள பத்தி ஒரு கத மினி லயன்ல விட்டீங்களே,,,,கால்பந்தா, டென்னிசான்னு திணறுவாரே அதப்போல கதைகள வெளியிடலாமே என கேக்க வச்சுட்டார் நம்ம டெக்ஸ்

      Delete
  45. Well said

    ////If Edi gets retired in future, i worry for the future of comics!!!////

    Me too!!

    ReplyDelete
    Replies
    1. மீஈஈஈ டூஊஊஊஊ!!

      Delete
    2. மிதுன்@ உங்களுக்கு வரலாறு என்னை விட 10மடங்கு தெரியும்.

      பிலிஃப்-அலெக்ஸாண்டர்...

      சந்திரகுப்தா-சமுத்திரகுப்தா...

      ராஜராஜர்-ராஜேந்திரன்...

      இவுங்கள இன்னொரு தடவை ஞாபகப்படுத்தி பார்த்துட்டு, மேற்கண்ட சந்தேகத்தை மீண்டும் கேளுங்களேன்...😎😎😎

      Delete
  46. ரெகுலர் சந்தாவில் உள்ளவர்களுக்கு ஓக்கே.
    என்னைப் போல் ஜம்போ மட்டும் சந்தா கட்டி இருக்கவங்களுக்கு எப்போ அனுப்பினாலும் தனி தான்.ஆகவே கணம் ஆசிரியர் அவர்களே என்னை போன்று உள்ளோர்க்கு மட்டும் நாளைக்கு அனுப்பிடுங்க.ஹி !ஹி !.

    ReplyDelete
  47. சாா்,
    சாித்திர நாயகா்களோடு (அரசா்களோடு) ஒப்பீடு செய்வது என்பது முரணானது, கொஞ்சம் மிகையானதும் கூடத் தான் சாா்!
    சந்தேகமில்லை!
    அது உணா்ச்சிப் பெருக்கின் வெளிப்பாடு!
    ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வெளிப்படுத்தலாம்!

    ஆனாலும்,

    தான் மிகவும் விரும்புகின்ற ஒன்றோடு தன் வாழ்நாள் முழுவதும் இரண்டறக் கலந்து பயணக்கின்ற பாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைக்கும்!
    அதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும்!

    கலைத்துறையில் சாதித்தவா்களும், சாதிக்கத் தவறியவா்களும், பெரும்புகழ் ஈட்டியவா்களும், புகழின் வெளிச்சம் படாதவா்களும் ஒாிடத்தில் ஒத்துப் போகிறாா்கள்!
    அவா்கள் அந்தக் கலையோடே லயித்து, வாழ்ந்து, அனுபவித்து மாண்டு போகிறாா்கள்!!

    அந்த வகையில் நமது ஆசிாியா் அவா்களும், தமிழ் கூறும் நல்லுலகில், என்றென்றும் அழிக்க இயலா "கலைஞராக", "படைப்பாளியாக" தனக்கென தனி அடையாளத்தோடு பன்னெடுங்காலம் வலம் வருவாா் என்பதே என் எண்ணம்!!

    ReplyDelete
    Replies
    1. //தான் மிகவும் விரும்புகின்ற ஒன்றோடு தன் வாழ்நாள் முழுவதும் இரண்டறக் கலந்து பயணக்கின்ற பாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைக்கும்!
      அதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும்!//

      ஆண்டவனின் கொடை சார் !

      Delete
  48. நண்பர்களே,

    இந்த அன்புக்கு என்றென்றும் நான் கடமைப்பட்டிருப்பேன் ; ஆனால் எப்போதும் சொல்வது போலவே நானொரு glorified postman மாத்திரமே என்பதில் என்னளவுக்குச் சந்தேகம் கிடையாது !

    நாம் வாய் பார்த்துத் திரியும் இந்தக் காமிக்ஸ் உலகின் ஜாம்பவான்களின் பட்டியலைப் பாருங்களேன் லேசாய் : வில்லியம் வான்ஸ் ; வான் ஹாம் ; ஹெர்மன் ; கிரேக் ; வெஹ்ல்மான் ; போனெல்லி ; போசெல்லி ; நிஸ்ஸி ; ஜீசஸ் ப்ளாஸ்க்கோ ; ஓடோரோவ்ஸ்கி etc etc என்று ! கற்பனைத் திறனில் ; கதை சொல்லும் ஆற்றலில் ; ஸ்கிரிப்ட் எழுதும் சாதுர்யத்தில் ; சித்திரங்கள் போடும் நேர்த்தியில் ; வண்ணங்கள் சேர்க்கும் லாவகத்தில் இவர்கள் ஒவ்வொருவரும் சாதித்துள்ளவைகளை பேரரசர் ராஜராஜ சோழனது நினைவுச்சின்னங்களோடு ஒப்பிட்டால் - காலத்தைத் தாண்டி அவை சகலமும் நிலைத்து நிற்குமென்ற வகையில் ஒரு கிஞ்சித்தும் தவறு இராது !

    ஆனால் நம் கதையோ வேறல்லவா ? அந்த ஜாம்பவான்கள் உருவாக்கியுள்ள அசாத்திய தாஜ்மஹால்களின் நிழல்களில் குளிர் காயும் ஒண்டுக்குடித்தனக்காரர்கள் நாம் ! ! என்ன - அவ்வப்போது ஜன்னல்களுக்கொரு அழகான திரைச்சீலை போடுவது ; வாசலில் ஒரு க்யூட்டான கோலம் போடுவது ; சுவர்களில் அழகாய் ஓவியங்களைத் தொங்க விடுவது என்று நம் சத்துக்கு ஏற்ற நகாசு வேலைகளை செய்து வருகிறோம் ! இந்தக் கோலங்களால் ; இந்தத் திரைசீலைகளால் அழகும், பெருமையும் சேர வேண்டியது தாஜ் மஹாலுக்கும், அதன் படைப்பாளிக்கும் தானேயன்றி - நமக்கல்ல தானே ?! "ஹை..இந்த பெயின்டிங் நல்லா இருக்கே...எங்கே வாங்குனீங்க ?" என்று வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் கேட்கும் போது ..."ஓ ..அதுவா...? You see... நான் போன வருஷம் பாரிஸ் போனச்சே அலைஞ்சு திரிஞ்சு வாங்கினேனாக்கும் !" என்று பீற்றிக் கொண்டு லேசாய் ஒரு சந்தோஷம் கொள்வோமல்லவா - அதற்கு வேண்டுமானால் நாம் சொந்தம் கொண்டாடலாம் !

    இது அவையடக்கம் ; ஆட்டுக்குட்டிஅடக்கமெல்லாம் கிடையாது guys ! ஒரு மொழிபெயர்ப்பை மாத்திரமே செய்து விட்டு நாம் கூரை வரைக்கும் எகிறிக் குதித்தோமெனில் - இந்த ஆக்கங்களை முழுமையாய் உருவாக்கிய மனிதர்கள் நிலா வரையிலும் அல்லவா ஹை-ஜம்ப் பண்ண முயற்சித்திட வேண்டும் ? அவர்களெல்லாம் ஒரு மெல்லிய புன்னகையோடு அடுத்த படைப்புக்குள் மும்முரமாகிப் போகும் போது, நாமும் அந்த முன்னுதாரணத்தைப் பின்பற்ற வேண்டுமென்ற புரிதலே இது guys !!

    சின்னதொரு வட்டம் நாம் ; சின்னச் சின்ன சந்தோஷங்களைப் பெரிதாக்கிக் கொண்டு நம்மளவிற்குக் குதூகலிப்பது இயல்பே ! இது அந்த மாதிரியானதொரு தருணமே என்பது புரிகிறது ! மகிழ்வோம் நண்பர்களே - கால்களைத் தரையில் பதித்துக் கொண்டே !

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவுதான் நீங்க அவையடக்கமாக கூறினாலும் எங்களுடைய காமிக்ஸ் கடவுள் நீங்கள்தான் இதில் மாற்று கருத்து கிடையாது

      Delete
    2. // ஜன்னல்களுக்கொரு அழகான திரைச்சீலை போடுவது ; வாசலில் ஒரு க்யூட்டான கோலம் போடுவது ; சுவர்களில் அழகாய் ஓவியங்களைத் தொங்க விடுவது என்று நம் சத்துக்கு ஏற்ற நகாசு வேலைகளை செய்து வருகிறோம் ! இந்தக் கோலங்களால் ; இந்தத் திரைசீலைகளால் அழகும், பெருமையும் சேர வேண்டியது தாஜ் மஹாலுக்கும், அதன் படைப்பாளிக்கும் தானேயன்றி - நமக்கல்ல தானே ?! //

      //என்று பீற்றிக் கொண்டு லேசாய் ஒரு சந்தோஷம் கொள்வோமல்லவா - அதற்கு வேண்டுமானால் நாம் சொந்தம் கொண்டாடலாம் ! //

      +1 உண்மை.

      Delete
    3. நானொரு glorified postman மாத்திரமே என்பதில் என்னளவுக்குச் சந்தேகம் கிடையாது ! //// எங்களுக்குமே சந்தேகம் கிடையாது யார் the most glorified postman என்பதில்...

      நாம் வாய் பார்த்துத் திரியும் இந்தக் காமிக்ஸ் உலகின் ஜாம்பவான்களின் பட்டியலைப் பாருங்களேன் லேசாய் : வில்லியம் வான்ஸ் ; வான் ஹாம் ; ஹெர்மன் ; கிரேக் ; வெஹ்ல்மான் ; போனெல்லி ; போசெல்லி ; நிஸ்ஸி ; ஜீசஸ் ப்ளாஸ்க்கோ ; ஓடோரோவ்ஸ்கி etc etc என்று ! /// இந்த பெயர்களை எல்லாம் இப்ப தான் எனக்கு தெரியும்.. எனக்கு எட்டு வயதிலிருந்தே தெரிந்த பெயர்கள் எல்லாம் முத்து, லயன் காமிக்ஸ் மற்றும்S.விஜயன்..அவ்வளவே..

      Delete
  49. சார் நீங்கள் என்னதான் காரணம் கூறினாலும் ஏற்பதாயில்லை.
    //அசாத்ய தாஜ்மகால்களின் நிழல்களில் குளிர்காயும் ஒண்டுக்குடித்தனக்கார்ர்கள் நாம்!!//
    உங்களைப் போலவே குடித்தனம் பண்ண வந்தவர்கள் எத்தனை பேர்? இன்று அவர்கள் எங்கே? இருக்கும் இடத்தை அவ்வப்போது ஜன்னல்களுக்கு திரைச்சீலை போட்டும் வாசல்களில் கயூட்டான கோலங்கள் போட்டும்,சுவர்களில் அழகான ஓவியங்களை தொங்கவிடவும் மற்றவர்களால் முடியாமல் போனது ஏன்? இத்தனைக்கும் இத்துறையை விட்டு விலகியவர்கள் சாதாரண ஆட்களில்லை.பெரிய ஜாம்பவான்கள்தான். அவர்கள் ஒரு ரூபாய் முதல் போட்டால் குறைந்த பட்சம் ஐந்து மடங்காக வரவேண்டும் என நினைத்தவர்கள்.ஆனால் காமிக்ஸ் என்பது பணம் காய்க்கும் மரமல்ல.
    கடமையை செய்.பலனை எதிர் பாராதே என்பது காமிக்ஸூக்கு ரொம்ப பொருத்தமான ஒரு உபதேசமாகிவிட்டது.
    இந்த கடினமான துறையை கையிலெடுத்த சிறுவன்( ஆசிரியர் சார்.உங்களைத்தான்!) இன்று இந்தியா முழுக்க தேடினாலும் யாரும் நெருங்க முடியாத சாதனையாளராக உருவாகி இருப்பதுதானே உண்மை. காமிக்ஸ் என்பதே காம்பில் பால் கறக்காமல் கொம்பில் பால் கறக்கும் விஷயமென்பதை தெரிந்தும் இருக்கும் சிறிய வாசகர் கூட்டத்தை அரவணைத்து லாபம் மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல் இத்தனையாண்டு காலமும் சளைக்காமல் கால் கட்டை விரல்களை வாயில் திணித்தும்,உடம்பு முழுக்க சாத்துவாங்கியும் சளைக்காமல் அடுத்து என்ன செய்யலாம்? என்ற சளைக்காத மனம் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கும் ஒரு மனிதரை இனி என் வாழ்நாளில் பார்ப்பது சாத்தியமல்ல என்பதை உறுதியாக நம்புகிறேன்.யாரோ ஒரு சமையல்கார்ரின் சம்மையலுக்கும் நம் தாயின் சமையலுக்கும் வித்தியாசம் உண்டல்லவா? தாயின் சமையலில் அடுத்தவர்களின் சமையலில் இல்லாத ஒன்று நிச்சயம் இருக்கும்.அது வேறொன்றுமில்லை. அன்பு என்ற மூன்றெழுத்துதான் அது. உங்களுடைய படைப்புகளிலும் அது கலந்திருப்பதால்தான் எங்களுக்கு உங்களைத்தவிர வேறு ஒருத்தரை உங்களிடத்தில் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
    "வில்லுக்கு விஜயன். காமிக்ஸூக்கும் விஜயன்" என்பதை வரலாறு மறக்காது.நாங்களும் மறக்க மாட்டோம் சார்.

    ReplyDelete
    Replies
    1. வெல்செட் ATR sir....

      வரிக்கு வரி வழி மொழிகிறேன்...👌👌👌👍👍👏👏👏

      Delete
    2. ////சளைக்காத மனம் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கும் ஒரு மனிதரை இனி என் வாழ்நாளில் பார்ப்பது சாத்தியமல்ல என்பதை உறுதியாக நம்புகிறேன்.யாரோ ஒரு சமையல்கார்ரின் சம்மையலுக்கும் நம் தாயின் சமையலுக்கும் வித்தியாசம் உண்டல்லவா? தாயின் சமையலில் அடுத்தவர்களின் சமையலில் இல்லாத ஒன்று நிச்சயம் இருக்கும்.அது வேறொன்றுமில்லை. அன்பு என்ற மூன்றெழுத்துதான் அது. உங்களுடைய படைப்புகளிலும் அது கலந்திருப்பதால்தான் எங்களுக்கு உங்களைத்தவிர வேறு ஒருத்தரை உங்களிடத்தில் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
      "வில்லுக்கு விஜயன். காமிக்ஸூக்கும் விஜயன்" என்பதை வரலாறு மறக்காது.நாங்களும் மறக்க மாட்டோம் சார்.////

      அட்டகாசம் திரு. ATR சார்!!

      Delete
    3. // சளைக்காத மனம் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கும் ஒரு மனிதரை இனி என் வாழ்நாளில் பார்ப்பது சாத்தியமல்ல என்பதை உறுதியாக நம்புகிறேன்.யாரோ ஒரு சமையல்கார்ரின் சம்மையலுக்கும் நம் தாயின் சமையலுக்கும் வித்தியாசம் உண்டல்லவா? தாயின் சமையலில் அடுத்தவர்களின் சமையலில் இல்லாத ஒன்று நிச்சயம் இருக்கும்.அது வேறொன்றுமில்லை. அன்பு என்ற மூன்றெழுத்துதான் அது //

      சூப்பர்!

      Delete
    4. @ ATR : சார்...தொழிலில் லாபம் ஈட்ட நினைப்பது தவறுமல்ல ; அதனில் சிக்கலெனில் விலகிடுவதிலும் பிழையில்லை ! And நாம் லாபங்களின்றி சேவை நோக்கில் செயல்படவும் இல்லை !

      சின்னதொரு நிறுவனம் என்பதால் நமது overheads குறைச்சல் ; நம்மிடமே அச்சகமும் உள்ளதால் இயன்ற விதங்களில் செலவுகளைக் குறைக்க சாத்தியமாகிறது ; அப்புறம் ஏற்கனவே ஓடி வரும் ஆபீசில் ஒரு பகுதியில் வாடகைகளின்றிக் குப்பை கொட்டியும் வருகிறோம் ! இவை எல்லாமே சென்னை போன்ற பெருநகரங்களில் செயல்படும் நிறுவனங்களுக்கு சாத்தியமாவது சிரமமே ! So நமக்கான அளவுகோல்கள் அவர்கட்கும், அவர்களுக்கான அளவீடுகள் நமக்கும் பொருந்துவது சிரமம் சார் !

      தவிர, லாபம் ஈட்டும் திறன் நம்மிடம் குறைச்சல் என்பதையும் இங்கே மறந்து விடுகிறோம் !! தயாரிப்பில் உள்ள ஆற்றல் விற்பனையிலும் இல்லையே நமக்கு என்று நான் மண்டையைச் சொரியா நாட்கள் சொற்பமே !

      ஒரு குறைபாடையும் நிறையாய்ப் பார்ப்பது அன்பின் அடையாளம் சார் ; அதற்கு எனது வந்தனங்கள் !

      Delete
    5. ஏடிஆர் சார் உண்மையை அழகாக ,தெளிவாக மாற்றமின்றி கூறியுள்ளீர்கள்

      அருமை..

      Delete
    6. அருமை! அருமை!!

      Delete
    7. உங்களின் இந்த தன்னடக்கம்தான் எங்களை வாயடைக்க வைக்கிறது சார்.
      உங்களை லாப நோக்கில்லாமல் சேவை நோக்கில் செயல்படும் மனிதர் என்றெல்லாம் சொல்லவில்லை சார்.அப்படி சொன்னால் அது கம்பளத்தில் வடிகட்டின பொய்யென்று எனக்கு புரிகிறது சார். ஆனால் நீங்கள் உங்கள் தரப்பு சாதகங்களை எடுத்து வைத்து அதனால்தான் இத்துறையில் தொடரமுடிகிறது என்று கூறுவதை மட்டும் கண்டிப்பாக என்னால் ஒத்துக் கொள்ள முடியாது சார்!
      சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள எந்த நிறுவனமும் நீங்கள் இயங்கும் சிவகாசியில் நீங்கள் கூறும் சொந்த கட்டிடம், சொந்த அச்சகம் மற்றும் இன்னும்பல அனுகூலங்களும் வாய்த்தால்கூட உங்களைப் போல இத்தொழிலை மனமுவந்து செய்ய மாட்டார்கள் என்பதை மட்டுமே நான் உறுதியாக கூறுகிறேன் சார்.
      சிங்கத்தின் சிறுவயதில் நடந்த அனுபவங்களை நீங்கள் விவரிக்கையில் எனக்கே பலமுறை என்னடா பிழைப்பு இது! என்று தோன்றியிருக்கிறது.நியூயார்க்கில் மாயாவி கதையை அயல் நாட்டில் ஒரு பூங்காவில் அமர்ந்து புத்தக பார்சல்களின் எடையை குறைக்க ஓரங்களில் கத்தரித்த நிகழ்வுகள், பெரிய பெரிய பதிப்பாளர்களிடம் நாடு கடந்து பயணம் செய்து அந்த சிறிய வயதில் பேசி சமாளித்து உரிமையை வாங்கி தமிழாக்கம் செய்து எங்களுக்கு வழங்கியது, அந்த சிறு வயதில் ஒரு பதிப்பாளராக நீங்களெடுத்த அவதாரம் இன்று விஸ்வரூபமாகியிருக்கிறது. எந்த பெருநகர நிறுவனங்களும் இவ்வாறு மெனக்கெட வாய்ப்பில்லை என்பதையே நான் கூறுகிறேன் சார். எந்த துறையிலும் சாதித்தவர்கள்,சாதித்து கொண்டிருப்பவர்கள் என்று பட்டியல் தொடர்ந்து கொண்டுதான் போகிறது.ஆனால் காமிக்ஸ் என்று நினைக்கையில் சாதித்தவரும், சாதித்துக் கொண்டிருப்பவரும் நீங்கள் மட்டுமே.உங்களுக்கு மாற்றாக யார் சார் இருக்கிறார்கள்? உங்களுக்கு வாய்ந்த அனுகூலங்கள் தமிழ்நாட்டில் வேறு ஒருத்தருக்குகூட வாய்க்கவில்லையா? அதெல்லாம் ரத்தத்திலேயே கலந்திருக்க வேண்டும் சார்.
      இன்னொரு விஷயம்...
      நிறுவனங்களின் பெயரை கூற விரும்பவில்லை. இந்த ஆண்டு அச்சிட்டு விற்பனையாகாத புத்தகங்களின் முதல் தாளை மட்டும் எடுத்து விட்டு அந்த இடத்தில் அடுத்த ஆண்டை குறிப்பிட்டு விலையையும் ஏற்றி விற்பனை செய்கிறார்கள்.என்னிடம் அந்த புத்தகங்கள் இருக்குன்றன. ஆனால் நீங்களோ ஐந்து ஆண்டானாலும் அதே விலையிலேயே புத்தகங்களை விற்பனை செய்கிறீர்கள்!
      இவையெல்லாம் வேறெந்த நிறுவனமும் செய்ய மாட்டார்கள் (இதற்கும் உங்களிடம் பதிலிருக்கும்.கிட்டங்கி காலியானால் போதும் என்று!) நீங்கள் என்னதான் மறுத்தாலும் இதையெல்லாம் சத்தம் போட்டுத்தான் நான் பேசுவேன் என்பதை உங்களிடம் சத்தமில்லாமல் கூறிக்கொள்கிறேன்.

      Delete
    8. சரியாகச் சொன்னீர்கள் ATR சார்.

      Delete
    9. அருமை,,,,,,சார் நீங்க சொன்ன படைப்பாளிகள் தெய்வமெனில், நீங்க எஙுக கண் கண்ட தெய்வம், எங்க கண்ல நாங்க பார்க்க இயலாதத தமிழுல அழகா மேம்படுத்தி காட்டியதால்

      Delete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நம்ப ஆசிரியர் டெக்ஸ் புத்தகத்த இன்று அனுப்பவா இல்லை ஜூலை இதழ்களுடன் சேர்த்து அனுப்பவா என்று முடிவு செய்ய இங்கி பிங்கி பாங்கி/கோயிலில் பூ போட்டு பார்ப்பது/பூவா தலையா இன்னும் பல புதிய முறைகளை முயற்சித்து வருவதாக கேள்வி!

      Delete
    2. பிரின்ஸ் அச்சாகி விட்டது....
      டிரெண்ட் பிரின்டிங் முடிந்தது...
      லக்கி லூக் : நாளை இரவு முடிந்து விடும் !

      So 'தம்' கட்டி பைண்டிங் பணிகளை முடித்து விட்டால் அடுத்த வாரத் துவக்கத்திலேயே சகலமும் ரெடியாகிவிடும் ! 'ஒரே பார்சலாய் அனுப்பிடலாமே !' என்ற நண்பர்களின் suggestion களும் சீக்கிரமே நனவாகிடும் !

      Delete
    3. அப்படி போடு! சூப்பர் சார்.

      இரத்த படலம் கூட ரெடி என கேள்விப்பட்டேன். முடிந்தால் அதையும் அடுத்த வாரமே அனுப்பிவிடுங்கள் :-)

      Delete
    4. மகிழ்ச்சியான செய்தி

      நன்றி சார்..

      Delete
    5. ///சகலமும் ரெடியாகிவிடும் ! 'ஒரே பார்சலாய் அனுப்பிடலாமே !' என்ற நண்பர்களின் suggestion களும் சீக்கிரமே நனவாகிடும் !///---சூப்பர் சார்... வெயிட்டிங் பார் ட்ரெண்ட்.

      நல்ல ட்ரெண்ட் செட் பண்ணுவாரா???

      Delete
    6. ஜீஸஸான் சாகசத்திற்குப் பின் ராயல் மவுன்டட் ஐ வண்ணத்தில் தரிசிக்கும் வாய்ப்பல்லவா...!!!!

      Delete
    7. அருமை சார்,,,,ஏல பரணஅ நீயால,,,நம்ப முடியவில்லை,,,இல்லை

      Delete
  51. ஆசிரியர் சார்@

    ///தாஜ்மஹால்///....

    தைமூர்,
    அலக்சாண்டர்,
    செங்கிஸ்கான்,
    கோரிமுகம்மது,
    கஜினிமுகம்மது,
    முகமது-பின்-துக்ளக்,
    அலாவுதீன் கில்ஜி,
    இப்ராஹிம் லோடி,
    பாபர்,
    ஷெர்ஷா,
    ஹூமாயூன்,
    அக்பர் த கிரேட்,
    ஜஹாங்கிர்
    ஷாஜகான்,
    ஒளரங்கசீப்,
    நாதிர்ஷா,
    .........
    .........
    .........
    எத்தனையோ கலர்ஃபுல்லான, கான்டராவர்சியான, கொடூரமான மன்னர்கள் டில்லியை தாக்கியிருந்தாலும்,
    ஆட்சிசெய்திருந்தாலும் கூட, டெல்லி என்றவுடன் தாஜ்மகாலை உதாரணமாக காட்டினீர்கள்.

    காரணம் நம் அனைவரும் அறிந்த ஒன்றே...!!!

    ஆகஸ்ட் 4ல் நீங்கள் வெளியிடப்போகும் லயன் "இரத்தப்படலம்"-வண்ண மறுபதிப்பு தொகுப்பு தமிழ் காமிக்ஸின் தாஜ்மஹால் அல்லவா...!!!!

    தமிழ் காமிக்ஸ் உலகம் மட்டுமல்ல, பதிப்பக உலகமே ஆச்சர்யத்துடன் உற்று நோக்கப்போகம் தங்கத் தருணம் அல்லவா...!!!

    இன்னும் சொல்லப்போனால் இரத்த படல ஒரிஜினல் படைப்பாளிகளையே அசத்தப்போகும் இதழ் இது என்பதில் ஐயமேது....
    இது கொஞ்சம் கொண்டாட்டத்திற்கான தருணம் சார்.

    உங்கள் அவையடக்கத்தை கொஞ்சம் ஒத்திவைத்து விட்டு.........!!!!

    ReplyDelete
    Replies
    1. பட்டைய கிளப்புறீங்களே !

      Delete
    2. இன்று முதல் டெக்ஸ் விஜய் தல வரலாறு விஜய் என அழைக்கப்படுவார். தல என்றால் டெக்ஸ் இது காமிக்ஸ் மொழி.

      Delete
    3. ஸ்ரீ ஜி@ ஙே...ஙே...ஙே...

      பள்ளி வரலாற்று புத்தகத்தில் வந்த பெயர்களை, அதுவும் அரைகுறையாக ஞாபகப்படுத்தியதற்கு இது ரொம்பவே ஓவர் ஜி.

      எனி ஹவ், உங்கள் அன்புக்குநன்றிகள்.

      கோவிந்த்@ தேங்யூ நண்பரே...!


      என்ன கேட்டும் சாதனையாளர் ஒதுங்கித்தானே போகிறார்...

      பெரிய தலைகள் களம் இறங்கினால் ஒருவேளை இறங்கி வருவாரோ...!!!!

      Delete
    4. \\காதல் சின்னம் தாஜ்மஹால்...//

      \\காமிக்ஸ் சிகரம் இரத்தப்படலம்...//

      ---என்ற பட்டத்தை மட்டும் வழங்கி விட்டுதிருப்தி பட்டுக்கொள்ள வேண்டியதுதான் போல...!

      Delete

  52. சூப்பர்...!!
    அப்படி போடுங்க டெக்ஸ்.
    அடிச்சி தூள் கிளப்ப வேண்டாமா?


    ReplyDelete
  53. வாழ்க்கையிலேயே முதல் முறையாக நான்(ஜம்போ) சந்தா கட்டி இருக்கேன் ஆனால் புக் வர மேலும் மேலும் தாமதமாகி கொண்டே போகிறது.சை.. எனக்கு இந்த சந்தாவே புடிக்காது...

    ReplyDelete
  54. // So டப்பிக்கள் திங்கள் வர்றான்...புக்குகள் கிளம்புறான் ! //

    ஆசிரியர் கூறியுள்ளது போல் இந்நேரம் புத்தகம் வந்து இருக்கணுமே, என்ன ஆச்சு என்று நேற்று blog பக்கம் வந்து பார்த்தால், ஓட்டெடுப்பு நடத்தலாமா என்ற கேள்வி? இதுவரை ஓட்டெடுப்பும் நடத்தியதாக தெரியவில்லை...

    தனி தனியாக அனுப்புவதில் தங்களின் சிரமம் புரிந்தாலும், வாக்கு கொடுத்து விட்டு அதை மீறுவது ஏனோ? ஒரு சிலர் சொல்வது மட்டும் போதுமென்றால் மற்றவர்களின் நிலை என்ன? அனைவரும் இதை தான் கூறுவார்கள் என்று எதிர்பார்த்து தான் இந்த பதிவு போட்டது போல் உள்ளது!

    எனக்குமே, பதிவை பார்த்ததும் ஏன் வீண் செலவு, மொத்தமாக அடுத்த மாதம் அனுப்பி இருக்கலாமே என்றே தோன்றியது ஆனால் ஒரு சிலரின் கருத்துகளை மட்டுமே கணக்கில் கொண்டு ஒட்டு மொத்தமாக முடிவை மாற்றுவது என்னளவிற்கு சரியாக படவில்லை.

    அதற்கு ஒரேடியாக அடுத்த மாத புத்தகங்களுடன் சேர்த்து அனுப்புவதாக சொல்லி இருந்தால் யாரும் மறுப்பு சொல்லி இருக்க போவது இல்லை..

    பெருத்த ஏமாற்றம்...

    ReplyDelete
    Replies
    1. பாலா சார்

      இதையே வாக்கெடுப்பாக
      நாமே செய்து விடுவோமா.

      பெரும்பாலோனர் கருத்துகளுக்கு யாம் உடன்படுகிறோம்.

      Delete