Wednesday, May 30, 2018

லார்கோ வாராகோ ...!

நண்பர்களே,

வணக்கம். பொன்னான புதனில், உங்கள் கூரியர்கள் புறப்பட்டு விட்டன ! So நாளைக் காலையில் லார்கோ & கோ. உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டத் தயாராகி நிற்பார்கள் ! பதிவுத் தபாலில் புத்தகங்களைப் பெற்றிடும் நண்பர்கள் மட்டும் கொஞ்சம் கூடுதலாய்க் காத்திருக்க வேண்டி வரும் போலும் ; தபாலாபீஸில் தொடர்ச்சியாய் வேலை நிறுத்தத்தில் உள்ளனர் என்பதால் ! கிட்டத்தட்ட 10 நாட்களாய் எந்தப் பார்சலையுமே தொடக் கூட மறுக்கிறார்கள் ! உள்ளூர் பார்சல்களுக்கே கதி இது தான் எனும் போது, விமானம் ஏறி அயல்தேசம் செல்லும் சமாச்சாரங்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா - என்ன ? So சற்றே பொறுமை ப்ளீஸ் - இம்முறை ! சொல்லப் போனால் - இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாய் இத்தாலியின் சில மர்ம மனிதன் மார்ட்டின் ரசிகர்களிடமும் ஜகா வாங்கிட வேண்டிப் போயுள்ளது - "மெல்லத் திறந்தது கதவு" 25 பிரதிகளை அனுப்ப வழியில்லாததால் !! பாஷை தெரிந்திராவிடினும், தங்கள் ஆதர்ஷ நாயகரின் இதழ்களை சேகரிக்க அவர்கள் காட்டும் ஆர்வம் - டயபாலிக் ரசிகர்களுக்கு அடுத்தபடியானது எனலாம் ! But ஏனோ தெரியலை - 'தல'யின் இத்தாலிய ரசிகர்கள் இதே போல பொங்கிடக் காணோம் !! 

அப்புறம் இம்மாத இதழ்களில் லார்கோவே வண்ணத்தில் கலக்குகிறார் ! அதுமட்டுமன்றி இம்முறை ரொம்பவே 'ஜாலிலோ-ஜிம்கானா' விமர்சனங்களுக்கு அவர் புண்ணியத்தில்  வாய்ப்புகள் பிரகாசம் என்றும் பட்சி சொல்கிறது ! So கடந்த 2 வாரங்களாக ஈயோட்டிக் கொண்டிருக்கும் இந்தத் தளத்துக்கு நமது கோடீஸ்வரர் கொஞ்சம் உத்வேகத்தை நல்கினால் நலமே ! 
And TEX !!!! பெருசும் சரி ; கலரில் வந்துள்ள குட்டியும் சரி - இம்முறை செமையாகத் தகிக்கின்றன என்பேன் !! வானவில்லின் இரு முனைகள் போல் - டெக்சின் இரு முற்றிலும் மாறுபட்ட  பரிமாணங்களைக் காட்டவுள்ள ஆக்கங்கள் இவை !! And வித்தியாசங்களைக் காட்ட டெக்ஸ் கதாசிரியர்கள் ஓயாது செய்து வரும் மெனெக்கெடல்களைக் கண்டு சிலாகிக்காது இருக்க இயலவில்லை ! (நம்மளவுக்கு) புதியதொரு கதாசிரியர் - "இரவுக் கழுகின் நிழலில்" சாகசத்துக்கு !
Happy Reading folks !! See you around !!

137 comments:

  1. சொல்லப் போனால் - இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாய் இத்தாலியின் சில மர்ம மனிதன் மார்ட்டின் ரசிகர்களிடமும் ஜகா வாங்கிட வேண்டிப் போயுள்ளது - "மெல்லத் திறந்தது கதவு" 25 பிரதிகளை அனுப்ப வழியில்லாததால் !! பாஷை தெரிந்திராவிடினும், தங்கள் ஆதர்ஷ நாயகரின் இதழ்களை சேகரிக்க அவர்கள் காட்டும் ஆர்வம் - டயபாலிக் ரசிகர்களுக்கு அடுத்தபடியானது எனலாம் ! But ஏனோ தெரியலை - 'தல'யின் இத்தாலிய ரசிகர்கள் இதே போல பொங்கிடக் காணோம் !!

    ReplyDelete
    Replies
    1. ஏன்னா தல எல்லா இடத்திலும் இருப்பவர்.

      Delete
  2. Replies
    1. போட்டாச்சி போட்டாச்சி பின்னூட்டம் போட்டாச்சி!

      Delete
  3. அடடே நம்ப்ள்கி first.

    ReplyDelete
  4. TEX !!!! பெருசும் சரி ; கலரில் வந்துள்ள குட்டியும் சரி - இம்முறை செமையாகத் தகிக்கின்றன என்பேன் !! வானவில்லின் இரு முனைகள் போல் - டெக்சின் இரு முற்றிலும் மாறுபட்ட பரிமாணங்களைக் காட்டவுள்ள ஆக்கங்கள் இவை !! And வித்தியாசங்களைக் காட்ட டெக்ஸ் கதாசிரியர்கள் ஓயாது செய்து வரும் மெனெக்கெடல்களைக் கண்டு சிலாகிக்காது இருக்க இயலவில்லை ! (நம்மளவுக்கு) புதியதொரு கதாசிரியர் - "இரவுக் கழுகின் நிழலில்" சாகசத்துக்கு !

    புதிய கதாசிரியர் போன பதிவில் கவனித்தேன் சார்.

    ReplyDelete
  5. லார்கோ,டெக்ஸ் கடையில் எப்போது ?
    கிடைக்கும் சார்.

    ReplyDelete
    Replies
    1. நாங்க ரெடி சார்....! மறுபக்கமும் ரெடியான்னு தெரியலியே ?

      Delete
    2. சந்தா செலுத்துங்கள். சந்தோஷமாக இருங்கள்.

      Delete
  6. ஏழாவது நபராக இரவு வணக்கம் நண்பர்களே....

    ReplyDelete
  7. விருதுநகர் வைகாசி பொங்கலுக்கு‌ இன்று காலை குடும்பத்துடன் வந்துள்ளேன். நாளைக்கு இங்கிருந்து பெங்களூர் திரும்புவதால் வெள்ளிக்கிழமை காலை தான் நமது புத்தகங்களை பார்க்க முடியும்.

    ReplyDelete
    Replies
    1. ஹும்ம்....
      பர்மா கடை........

      Delete
    2. நேத்து இரவு பரோட்டா சுக்கா அங்கே தான் சாப்பிட்டேன். சுமார்.

      Delete
  8. எடிட்டர் சார் ஆஜர்.நண்பர்கள் சீக்கிரமாக வரவும்.

    ReplyDelete
  9. விஜயன் சார், ஸ்மர்ப் மற்றும் ரின் டின் கதைகள் 40 பக்கங்களில் இல்லாமல் 20 பக்கங்களுடன் இருந்தால் குழந்தைகள் படிக்க மற்றும் அவர்களுக்கு கதை சொல்ல வசதியாக இருக்கும். தற்போது வரும் கதைகளை அவர்களுக்கு பெட் டைம் கதையாக சொல்ல ஆரம்பித்தால் முழுக் கதையையும் சொல்லி முடிக்க இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. 20 பக்கங்கள் எனும் போது இரண்டு கதைகளாக கிடைக்கும். வருடத்திற்கு இரண்டு கதைகள் (என் போன்ற) குழந்தைகளுக்கு கிடைக்கும்.

      Delete
  10. ஹை!!! நாளைக்கு புக்ஸூ!!

    ReplyDelete
  11. Eagerly waiting for TEX and Largo....

    ReplyDelete
  12. இரவு வணக்கம் இரவுக் கழுகுகளுக்கு...

    ReplyDelete
  13. எங்கள் ஆசானுக்கு வணக்கம்

    ReplyDelete
  14. அதிகாலை வணக்கம் 🙏

    ReplyDelete
  15. லார்கோ, டெக்ஸ்னு இந்த வாரம் நமது பிலாகில் தூள் பறக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சார்.

    ஜுன் மாத ரிலீஸ் என்றும் சோடை போனதில்லையே??? அப்போ கலகலபுக்கும் பஞ்சமிருக்காதே??

    எனக்கும் பார்சல் இந்த முறையாவது சரியாக கிடைக்குமென்று எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  16. ஏ வாய்யா வாய்யா வாய்யா
    லார்கோ......

    வாய்யா வாய்யா வாய்யா

    ReplyDelete
  17. இந்த வாரம் கொண்டாட்டம் தான்....
    தல கதை இரண்டு ...
    படித்து விட்டு வருகிறேன் சார். .....

    ReplyDelete
  18. நம்பள் பெல்ஜியத்து சஞசய் ராமசாமிய
    ஈரோட்ல தடதடக்க விட்டு கலக்கோணும்.


    லோக்கல் டீவியில விளம்பரம்...


    சும்மா சாதாரண பேப்பர்ல நியூஸ்பேப்பர் இன்ஸர்ட்...

    விளம்பர மாடலா வெளியீட்டுக்கு நம்ப கஸ்தூரி இருக்கவே இருக்காங்க....
    (கணேஷ் சாரும் ஈரோடு விஜய்யும் அந்தம்மாவுக்கு திக் ப்ரண்ட்ஸ்....
    நம்பாளுங்க கண்டிப்பா ஹெல்ப்பு பண்ணுவாங்க....)

    ஈரோடு கோவை
    ஈரோடு சேலம்
    ஈரேடு பஸ்ஸ்டாண்ட்
    ஈரோடு ரயில்வே ஜங்ஷன்
    ஈரோடு ஏர்போர்ட்....?
    முக்க்க்க்கியமா புக் ஃபேர் வாசல்ல....
    பேனர் வைக்கணும்.....

    ஆட்டோக்கள் பின்புறம் போஸ்டர்கள்..

    அப்பறம் இப்பிடி யோசிப்போம்....

    சும்மா சாதாரணமா ," பெல்ஜிய சஞ்சய் ராமசாமி வர்றார் வர்றார் வர்ர்றார்ர்ர் " ன்னு சின்ன சின்ன போஸ்டர்கள ஒட்டலாம்.
    யார் யார் யார் யாரு யாரு யார அதுன்ன ஆளாளுக்கு கேக்க வைச்சுட்டா ஒரு க்யூரியாசிட்டி கண்டிப்பா ஏற்படும். இது உறுதி.
    கண்டிப்பா தமிழ்நாடு முழுசும் பேச்சு வழ்க்காயிடும்.....
    கொஞ்சம் வருஷங்களுக்கு முந்தி எய்ட்ஸ் விளம்பரம் இப்டி தான் ஆரம்பிச்சி படுபயங்கர பேச்சு பட்டிதொட்டியெல்லாம் பேமஸாயிடிச்சி....
    இப்ப வாட்ஸ்அப் இருக்கவே இருக்கு ஹெல்ப் பண்ண....


    WhatsApp ல ஏதாச்சும் வைரலாக ஏற்பாடு பண்ணணும்..
    இதுக்கு நம்ப டெக்ஸேவ்வி நண்பர்கள் யோசன சொல்லணும்...

    கடேசியா ஒண்ணு.
    மதுரை அப்பல்லோ ஹாஸ்பிடல்ல நண்பர் ஒருத்தரு அட்மிட் ஆயிருந்தாரு.
    அவர பாக்கப் போனப்ப நம்ம "மின்னும் மரணத்த" குடுத்தட்டு --- படிடா உன்னோட வலியெல்லா காணாம போயிரும் பொழுதும் போகும்.
    எல்லாமே மறந்துறும்னேன்.
    சீக்கிரமே ரெகவரியாகி டிஸ்சார்ஜ் ஆயிட்டார்.

    எனக்கு நன்றியும் சொன்னார்.

    இந்த டெக்னிக்க நாம வசதியான ஹாஸ்பிடலைஸ்டு நண்பர்கள பாக்க போறப்ப எல்லாரும் யூஸ் பண்ணுங்க.

    நம்பளால முடியாதது எதுவுமில்ல நண்பர்களே...
    Nothing is impossible under the roof of the Sun ....

    என்ஜாய்....



    ReplyDelete
    Replies
    1. @ j

      நிச்சயம் சிந்திப்போம்... தோதானதைச் செயல்படுத்திடுவோம்... _/\_

      Delete
  19. ////பாஷை தெரிந்திராவிடினும், தங்கள் ஆதர்ஷ நாயகரின் இதழ்களை சேகரிக்க அவர்கள் காட்டும் ஆர்வம் - டயபாலிக் ரசிகர்களுக்கு அடுத்தபடியானது எனலாம் ! ////

    தமிழில் வெளியாகும் புத்தகத்திலாவது டயபாலிக் ஒரு நல்லவனாக இருந்துவிடமாட்டானா என்ற ஏக்கம் காரணமாக இருக்கலாம்!

    தமிழில் படித்தாலாவது மார்ட்டின் கதைகள் முழுமையாகப் புரிந்துவிடாதா என்ற ஏக்கம் காரணமாக இருக்கலாம்!

    ஆனால் 'தல' பேசும் 'கும், ணங், சத், டுமீல்' பாஷைகள் - உலகப் பொது மொழி!

    ReplyDelete
    Replies
    1. அதா டயாபாலிக்க ஊத்தி மூடியாச்சே..
      ஆனா நம்பாளுங்களுக்கு பிடிக்கல.


      திரும்ப படிச்சா கண்டிப்பா பிடிக்குமோ என்னவோ....

      Delete
    2. ஆனா dryயா போட்ற சிலபல கதைகளுக்கு இது ரெம்பவே தேவலம்னு சொல்லுவேன்...

      Delete
  20. அப்புறம்நம்ப எடிட்டருக்கு ஒரு வேண்டுகோள்

    சார்...
    இங்கன இருக்குற வாசகர்கள் நாற்பதை கடந்து விட்டவர்கள்.

    செல்போன் டீவி கம்ப்யூட்டர பாத்து பாத்து கண் பார்வ மங்கிருக்குறவங்க தான்.

    வெலய கொறக்கணும் சரிதான்...
    ஆனா
    இன்னும் நாங்க கண் நெறைய படிக்க ஆசைபடற புத்தகங்கள நீங்க நெறைய குடுக்கணும்....

    அதாவது...
    தலையில்லாப் போராளி சைஸ்ல ....
    கொஞ்சம் பெரிய எழுத்தா பலூனுக்குள்ள போட்டு அடைங்க...பகவானே.

    தயவுசெய்து இதை யோசனைப் பண்ணுங்க...
    செயல்படுத்துங்க...
    முந்தியெல்லாம் பெரிய எழுத்து திருவிளையாடல் புராணம்.
    பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதை..
    பெரிய எழுத்து சித்ரகுப்தன் கதைன்னு வரும்.....


    மூர் மார்க்கெட் இருந்தப்ப வாங்கியிருக்கேன்..எங்க வீட்டு பெருசுகளூக்கன்னு...

    சுவர வைச்சுத்தான் சித்திரம்...
    கண்ண வைச்சுத்தான் காமிக்ஸ்...

    யோசிங்க ப்ளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. அதே.!அதே.! கொஞ்சம் பெரிய எழத்துக்களாக இருந்தால் நன்றாக இருக்கும்.!

      Delete
  21. ப்ளாக் அண்ட் ஒயிட் முடிஞ்ச வரைக்கும்
    செலவை குறைக்க..

    ReplyDelete
  22. @ லார்கோ.

    வாங்கண்ணா.., வணக்கங்கண்ணா...!

    ReplyDelete
    Replies
    1. ///'தல'யின் இத்தாலிய ரசிகர்கள் இதே போல பொங்கிடக் காணோம் !!///

      அநியாயத்தைக் கண்டா பொங்குற பழக்கம் இத்தாலி ரசிகர்களுக்கு கொஞ்சம் கம்மியோ ??

      Delete
  23. I finished my 11th standard successfully with 445 marks
    Happyyy

    ReplyDelete
    Replies
    1. வாவ்!!! அருமையான மார்க்!! வாழ்த்துகள் அகில்!!

      Delete
    2. /// 11th standard ///

      10th தானே?!!!!

      Delete
    3. 11த் தான் மார்க் 600க்கு 445.

      அப்படி தானே அகில்.
      வாழ்த்துக்கள்.

      Delete
    4. ஆமாம் ரோம்பவும் சிரமமான portion ரோம்ப கஷ்டம்
      ஆனால் மிக சிறப்பாக எழுதினேன்!!!!!!

      Delete
    5. வாழ்த்துகள் அகில்.

      Delete
    6. வாழ்த்துக்கள் அகில்

      Delete
    7. அகில் @ படிப்பில் இன்னும் அதிகம் கவனம் தேவை. 445 என்பது மிகவும் குறைவு. இந்த வருட 12 வகுப்புத் தேர்வுக்கு நீ இன்னும் கடினமாக படிக்க வேண்டும்.

      Delete
    8. கண்டிப்பாக பரணி அண்ணா
      உங்கள் ஆதரவுத்கு நன்றி
      !!

      Delete
  24. சார் அட்டைபடம் அனைத்தும் தூள். மாலையப்பன் வரைந்ததிலே இதான் டாப் டெக்ஸ் அசத்தல், பின்னணி அருமை .டெக்ஸ் கண்களில் தெரிவது நரகமோ,நடமாடும் டெக்ஸ் தலைப்பிற்கேற்ப நடமாடியபடி நரகத்த காட்டுனா பின்ணணியில் மண்டையோடும் நரக சூழல. காட்டுவது அருமை, தலைப்புக்கேற்ப படம், ,,தூள்

    ReplyDelete
    Replies
    1. யப்பா ஸ்டீல் இப்பதான் நீங்க என்ன சொல்ல வர்றிங்கன்றதை புரிஞ்சுக்க முடியுது பிழையில்லாமல் நல்லா எழுதியிருக்கிங்க

      Delete
  25. புத்தகம் கைப்பற்றியாச்சு....

    ReplyDelete

  26. மாலை மலர் - மே 31

    "புக்கும் கிடையாது, ஒன்றும் கிடையாது போ!" என்று போக்குக் காட்டிவிட்டு, கொரியர்பாய் உருவில் வீடு தேடிக் கொண்டுவந்து கொடுத்து பக்தனை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஆத்தா மகமாயி!! - ஈரோட்டில் பரபரப்புச் சம்பவம்!!

    ReplyDelete
  27. டஎக்ஸ் பின்னட்டை தூள்,,நடுநிசிக்கள்வன் அட்டை பழமை, அருமை. குட்டி டெக்ஸ் அமர்க்களம். லர்கோ நீலத்தில் மிதத்தல் அருமை. அனைத்து அட்டஐகளும் சிறப்பு

    ReplyDelete
  28. முதல் புரட்டலில்...

    * லார்கோ - கண்களுக்கு விருந்து! ஒரு சில பக்கங்களைப் புரட்டும்போது கண்கள் அகலமாகி, நாக்கு வெளியே வந்துவிடும் சம்பவங்களும் நடந்தது(ஹிஹி)!
    * டெக்ஸ் - அட்டைப்படம் அசத்தல்! அந்த கூரிய பார்வைக்கே கோடி ரூபாய் கொடுக்கலாம் தல! உள் பக்கங்களில் க்ளாசிக் சித்திரங்கள் கண்ணில்பட, குதூகலமாகிறது மனது!
    * கலர் டெக்ஸ் - அடடா!! அடடடடடா!! அந்தத் துல்லியமான சித்திரங்களும், மிகமிக வித்தியாசமான - உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் - கலரிங் பாணியும் - அருமை அருமை அருமை! நிச்சயம் அனைவரையும் கவரும் இதழாக இருந்திடும்!
    * மாயாவி - ஹெலிகாப்டர் டார்ச்லைட் அடிக்க, பளபளக்கும் இரும்புக்கைக்கு விளம்பர மாடல் போல மாயாவி! (வழக்கமாக மின்சாரம் பாய்ந்தால் மட்டுமே வாயைத் திறந்து அலறும் நம் மாயாவி, இம்முறை டார்ச் லைட்டுக்கே அலறுவது வினோதம்!! )

    ReplyDelete
    Replies
    1. //* லார்கோ - கண்களுக்கு விருந்து! ஒரு சில பக்கங்களைப் புரட்டும்போது கண்கள் அகலமாகி, நாக்கு வெளியே வந்துவிடும் சம்பவங்களும் நடந்தது//

      தென்கிழக்குப் பருவம் தொடங்க ; குற்றால அருவிகளில் நீர்வரத்தும் துவங்க ; ஈரோட்டிலும் அதன் பிரதிபலிப்பு எதிரொலிக்க ....ம்ம்ம்ம் !!

      Delete
    2. ஹிஹி!! பருவங்கள் துவக்கம் பெறுவதே சிவகாசியிலிருந்துதானே சார்?!! ;)

      Delete
  29. லார்கோவும் ,டெக்ஸ் வில்லரும் வீட்டுக்கு வந்திருப்பதாக தகவல் வந்தது.
    அவர்கள் ரெண்டு பேரும் வடை ,பாயாசத்தோடு விருந்து வைப்பாங்கனு உறுதியா தெரியுது.

    ReplyDelete
    Replies
    1. விருந்தோம்பலில் பிழை! வீடுதேடி வந்தவங்களுக்கு நீங்கதானே வடை, பாயாசம் வைக்கணும்?!!

      Delete
    2. ஒவ்வொரு தடவையும் நானும் முயற்சி பண்றேன்.அது என்னமோ தெரியல ,என்ன மாயமோ தெரியல,ஒவ்வொரு மாசமும் வீட்டுக்கு வர்றதோடு இல்லாம விருந்தும் வைக்கிறதே அவங்களுக்கு வேலையாப் போச்சு.

      இது பத்தி ஒரு தடவை கண்டீசனா கம்ப்ளைண்ட் பண்ணினேன்.அதுக்கு அவுங்க, விருந்து வைக்கிறது தங்களோட கடமை ,உரிமை, பெருமை, லட்சியம், குறிக்கோள் னு நீட்டி முழக்கிறாங்க.

      நம்ம வேலை என்னான்னா அந்த விருந்தை சிந்தாமல், சிதறாமல், ரசிச்சு, ரசிச்சு, ருசிச்சு ருசிச்சு என்ஜாய் பண்றது மட்டும்தானாம்.

      Delete
  30. **** இரவுக் கழுகின் நிழலில் **** டெக்ஸ் வில்லர் மினி சாகஸம்!!

    சாகஸமே செய்யாமல் ஒரு சாகஸத்தை நிகழ்த்திக் காட்ட முடியுமா?!! முடியும் என்கிறார் டெக்ஸ்!!
    நிஜ உருவத்தால் உயிரை எடுக்க முடியும்... நிழலால் முடியுமா?!! முடியும் என்கிறார் டெக்ஸ்!!

    ஓவியங்களும், கலரிங் பாணியும் - திகைக்கச் செய்திடும் அழகு!

    ஆஹா ஓஹோ கதை இல்லையென்றாலும், அம்சமான கற்பனை!!

    ReplyDelete
    Replies
    1. இரவுக் கழுகின் நிழலில் சாகஸம் வித்தியாசமான சிந்தனை.மினி சாகஸங்களில் இது போன்ற வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வது எளிது.இதுவும் இரசனைக்குரிய சாகஸமே.

      Delete
    2. ஆண்டின் இறுதியில் ௬ சிறுகதைகளையும் ஒன்றாக்கி பைண்டிங் செய்து மொத்தமாய்ப் புரட்டி பாருங்களேன் - கதாசிரியர்களின் ஜாலங்கள் வசீகரிக்கும் !

      Delete
    3. Dear Editor

      நான் ஏற்கனவே கேட்டதுதான் - உங்கள் இதழ்களைத் தேர்ந்தெடுத்தால் கஸ்டம் பைண்டிங் செய்து வாங்க முடியுமா - just like we opt for different couriers. உங்களூரில் நல்ல பைண்டர்கள் - தொழில் நிமித்தம் - உண்டென்பதால் இந்த கேள்வி

      Delete
  31. சார்! புத்தகங்கள் கிடைத்தது சார்!

    * ஜூலையில் டெக்ஸ் கிடையாதா சார்?
    * ஜூலையில் அறிமுகமாகும் ட்ரென்ட் கதையின் பெயர் என்ன சார்?

    ReplyDelete
    Replies
    1. ஆண்டுக்கு ஒவ்வொரு சந்தாப் பிரிவிலும் ௯ இதழ்கள் மாத்திரமே & அந்த ஒன்பதில் ௨ ஸ்லாட்கள் மார்ட்டின் & ராபின் வசம் ! So எஞ்சியுள்ள ௭ இடங்கள் மட்டுமே டெக்ஸுக்கு ! So ரேஷன் தொடரும் - இனி வரும் மாதங்களில் !

      டிரெண்ட் : பனிமண்டல வேட்டை !

      Delete
  32. அப்பாடா கொரியர் போனே காணலையே இன்னிக்கு வட போச்சான்னு கவலையா இருக்கச்சே இப்ப வந்துருச்சுல தகவல்..

    மாலை நேரத்தை நினைத்தால் சூப்பர் ...

    ReplyDelete
  33. தங்கம் வந்த கதை.............
    மார்டின் மிஸ்ட்ரில ......
    ‘’நிறுத்துங்க ....அது வந்து ஒரு மாசமாச்சு ..இன்னமுமா ???’’
    அதுல ரசவாதம் பத்தி ....
    ‘’எங்க வூட்ல வைக்கிற ரசத்தை குடிச்சா யாருக்கு வேணும்னாலும் ‘’ வாதம்’’ வரும் ..’’
    இல்ல ..அந்த கதைல ரசவாதம் பத்தி சொல்லியிருக்காங்க ..
    அதுக்கு வெளிப்படையான அர்த்தம் செம்பு மாதிரியான கீழ் மட்ட உலோகத்தை தங்கம் மாதிரி மேல்மட்ட உலோகமா மாத்துறது .......இன்னொன்னு மனித உடல் ,ஆத்மா மாதிரி சமாச்சாரங்களை சுத்தப்படுத்தி திவ்யமான நிலைக்கு கொண்டு போறது ..இது உள்ளர்த்தம்....
    ‘’போதும் ..போதும் ... குண்டலினி, சித்தர்கள் பத்தி , திருமூலர் சொல்லியிருக்கிற ‘’ பரிசன வேதி மூலிகை ,ஐரோப்பாவுல பிலாசபர் ஸ்டோன் ( ஹாரி பாட்டர் மூலமா பிரபலமானது ) இன்னும் நிறைய தமிழ்ல நிறைய கட்டுரை படிச்சிட்டோம் ..மறுபடியும் ஆரம்பிச்சு உயிரை எடுக்காதீங்க ...’’

    அதெல்லாம் பெரிய விஷயம் ..நான் சொல்ல வந்தது தங்கம் பத்தி ..கெமிஸ்ட்ரி என்ன சொல்லுதுன்னா ...
    ‘’எனக்கு சிவகார்த்திகேயனுக்கும் கீர்த்தி சுரேசுக்கும் ஆன் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரி பத்தி தெரிஞ்சா போதும் ..’’

    தங்கம் எப்படி கிடைக்கும்னு .......
    ‘’காசு அல்லது கிரெடிட் கார்ட் கொடுத்தா ஜோஸ் ஆலுக்காஸ்ல கிடைக்கும் ....’’
    இல்ல வேதியியல் என்ன சொல்லுதுன்னா ...
    ‘’இங்க பாருங்க சுவாமி ....சின்ன வயசிலேயே
    மீத்தேன்
    ஈத்தேன்
    படித்தேன்
    செத்தேன்
    மறுபடியுமா ?????’’
    கொஞ்சம் பொறுமையா நான் சொல்றதை கேக்க முடியுமா ???
    ‘’முயற்சி பண்றேன் ...’’
    தங்கம் பத்தி சொல்றதுக்கு முன்னாடி ‘’அணு ‘’ பத்தி கொஞ்சம் ஞாபகப்படுத்துறேன்..
    ‘’அனுவா ???/ கீதா மேடம் பொண்ணு பத்தி சொல்றீங்களா ??? தங்கமான பொண்ணு !!!’’

    ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    எனத் துவங்கும் ரசவாதம் பற்றிய நெடிய கட்டுரை எழுத துவங்கும் முன்னரே அடுத்த மாத இதழ்கள் வந்துவிட்டன ..
    ஆயினும் ............................
    உண்மையான ரசவாதிகள் நட்சத்திரங்களே ..

    சமீபத்தில் பத்து பில்லியன் ஆண்டுகளாக இரண்டு சுற்று வட்ட பாதையில் சுழன்று கொண்டிருந்த இரு நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று மோதி இணைந்தபோது வீசியடிக்கப்பட்ட தங்க தூசுகளின் எடை சுமார் ஒன்றரை பில்லியன் டன்..
    இதனோடு வீசியடிக்கப்பட்ட பிளாட்டினத்தின் எடை சுமார் மூன்று பில்லியன் டன்...
    ஒரு ராக்கெட் லாரியை கொண்டு போய் அள்ளி வரலாம்தான் ..
    ஆனால் இது நடந்தது பூமியிலிருந்து சுமார் நான்கரை பில்லியன் ஒளி வருடங்கள் தொலைவில் ..அதாவது பார்க்க முடிய கூடிய பிரபஞ்சத்தில் (visible universe) பாதி தொலைவு ..

    1980-ல் பிஸ்மத்தை தங்கமாக மாற்றும் முயற்சி நடைபெற்றது ...
    அதில் வெற்றியும் பெறப்பட்டது ..
    அது உண்மையான வெற்றியா என்றால் இல்லை ..
    பல ஆயிரம் பிஸ்மத் அணுக்கள் தங்கமாக மாற்றப்பட்டன
    இதற்கு உதவிய லினயர் ஆக்ஸலரேட்டர் –ஐ இயக்க ஒரு மணி நேரத்துக்கு ஐயாயிரம் டாலர்கள் செலவாயின ..
    இவ்வகையில் ஒரு அவுன்ஸ் தங்கம் தயாரிக்க ஒரு குவாட்ரில்லியன் டாலர் ( ஒன்றுக்கு பக்கத்தில் 15 பூஜ்யங்கள் போட்டு கொள்ளவும் ) தேவைப்படும் என மதிப்பிடப்பட்டது ..
    அப்போது மார்க்கெட்டில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 560 டாலர்கள்தாம் ..
    { லினயர் ஆக்ஸலரேட்டர்-போன்றவை தங்கம் குறைந்த செலவில் தயாரிக்க உதவாமல் போயிருக்கலாம் ...ஆனால் நவீன மருத்துவத்தில் புற்றுநோய் நிலைகளை கண்டறிய , குணப்படுத்த பெரும்பங்கு வகிக்க துவங்கியுள்ளன }
    நமக்கு தங்கத்தை விட மேலானது புதிதாக வருகின்ற அம்மாத இதழ்கள்தாமே ..
    அதிர்ஷ்டவசமாக இந்த தங்கத்தை பார்க்க பரிசன வேதி மூலிகையோ ,.பிலாசபர் ஸ்டோன்களோ தேவையில்லை ...
    ஒரு கத்திரிக்கோல் மட்டும் போதும் ..
    இதோ கூரியர் கட்டை பிரிக்க போகிறேன் ....



    ReplyDelete
    Replies
    1. @ செனா அனா

      ஹா ஹா ஹா!! :))))))))))))
      சிரிச்சு மாளலை!!

      இது.. இது.. இதுக்குத்தான் செனாஅனா வேணும்றது!

      அப்புறம் ஒரு டவுட்!! நீங்க மொதல்லேர்ந்தே இப்படித்தானா அல்லது எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுக்குப் பின் திடீர்னு உடம்புக்குள்ளே ஏதாவது மாற்றம் நிகழ்ந்து இப்படி ஆகிட்டீங்களா?!! ;)

      Delete
    2. நம்பள் இத பத்தி ஏற்கனவே எழுதியிருக்கான்.
      செல்வம் சாரும் சித்தர்னு இப்பதான் தெரியுது.

      Delete
    3. எனக்கு தலீவரின் முகத்தை இப்போ பாக்கணும் போல் தோணுது !! Wonder why...?!

      Delete
    4. செனா அனா ஜி உங்க வீட்டு ரசத்தால் வாதம் மட்டுமே வரும் எங்க வீட்டு ரசம் குடித்தால் எமனின் திசை என்னருகில்

      Delete
    5. ஆனாக்க நீங்க "நியூட்டனின் இரசவாதம்" பற்றிய விசயங்களை சொல்லாமல் போனதும்,
      சில மணிநேரத்தில் கெட்டுப் போகும் பால், பல நாட்கள் கெடாத "நெய்" ஆக மாறும் விந்தையை சொல்லததும் என்னை லாா்கோ கதையில் மூழ்க வழி தந்திருக்கிறது!!

      சை! எனக்கு இந்த ரசவாதமே புடிக்காது!! 😣😣😣

      Delete
    6. Super! பாராட்டுவதற்கு வார்த்தைகள் காணாது.

      Delete
    7. ///எனக்கு தலீவரின் முகத்தை இப்போ பாக்கணும் போல் தோணுது !! Wonder why...?!///

      நீங்களே சொல்லிடுங்களேன் எடிட்டர் சார்? எங்க தலீவர் பத்தி அப்படி என்னதான் உங்க கணக்கு?!!

      Delete
    8. செல்வம் அபிராமி சார் !!

      சூப்பர் சார்.!!!!

      Delete
  34. லார்கோவின் பிரியமுடன் ஒரு பிரளயம் 2018-ன் சிறந்த அட்டைப்படத்திற்கான இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.

    ReplyDelete
  35. நடுநிசிக் கள்வன் அட்டைப்படத்தில் உள்ள மாயாவி பார்ப்பதற்கு இளவயது மாயாவி போல தெரிகிறார்.

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ! சித்தே சும்மா இருங்கோ ஜெகத் குமார்... அப்புறம் 'யங் மாயாவி கதைகள்'னு எதையாச்சும் கொண்டுவந்து இறக்கிடப்போறார்!! ;)

      Delete
  36. கார்டூன் கதைகள் எனக்கு கொரியரில் வரவில்லை

    ReplyDelete
    Replies
    1. சட்டியிலேயே இல்லையெனும் போது அகப்பைக்கு அகப்படாதே சார் !

      இந்த மாதம் மொத்தமே ௩ இதழ்கள் தான் !

      Delete
    2. ஆசிரியரே இப்போதெல்லாம் உங்கள் பதிவில் நம்பர்களே விழுவதில்லையே

      Delete
    3. நண்பரே செந்தில் சத்யா,

      அந்த எழுத்தெல்லாம் தமிழ் எண்கள்!!

      Delete
  37. இரவுக் கழுகின் நிழலில்

    கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது இந்த டெக்ஸின் மினி சாகசத்திற்க்கு ரொம்பவே பொருந்தும். மிக மிக வித்தியாசமான டெக்ஸ் கதை வெண்டுமா, இந்த கதையை தாராளமாக பரிந்துரைக்கலாம். இன்னும் இந்த கதையை பெரும்பாலானவர்கள் படித்திருக்கமாட்டிர்கள். எனவே கதையை விவரிக்க விரும்பவில்லை. ஆனால் ஒரே ஒரு இரகசியம் காதை கொடுங்கள் சொல்கிறேன் இதில் டெக்ஸ் & கோ சாகசம் செய்கிறது. ஆனால்...

    இந்த மினி சாகசத்தில் 'டெக்ஸ் இருக்கிறார் ஆனால் இல்லை' :)

    ReplyDelete
  38. //இந்த மினி சாகசத்தில் 'டெக்ஸ் இருக்கிறார் ஆனால் இல்லை' :) //
    ஹி ஹி ஹி இது டெக்ஸ் கதையே இல்லை

    ReplyDelete
    Replies
    1. ஆமா இப்படியும் சொல்லலாம்தான் ! :)

      Delete
    2. டெக்ஸ் கி.நா ?!!

      Delete
  39. கடுப்பேத்தராங்க மை லார்டு புக்கே இன்னும் கைக்கு கிடைக்கல

    ReplyDelete
    Replies
    1. கூரியரா ? பதிவுத் தபாலா சார் ?

      பின்னது என்றால் - காத்திருப்பு தொடரக் கூடும் !

      Delete
  40. இரவுக் கழுகின் நிழலில்..



    ஒரே வார்த்தையில் இல்லை ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால்

    "செம "


    ஒரு நீள சாகஸத்தில் வாசிப்பவர்களை முழுதாக கவர்ந்து அவர்களை திருப்திபடுத்துவது கொஞ்சம் எளிது.காரணம் விலாவரியாக கதை செல்லும் பாதையில் நாம் பயணிப்பதிலும் ,சிறிது நேரத்தில் அந்த களத்தில் நாம் ஒன்றிவிடுவதும்,நாயகனின் பெருமைக்கு ஈடு செய்யும் நிகழ்வுகளையும் அதனில் முழுதாக எடுத்துகாட்ட நாமும் இன்னமும் அதில் ஒண்றினைய எளிதாக முடிந்து விடுகிறது.

    ஆனால் இந்த மினி சாகஸங்கள் நம்மை திருப்தியுற செய்ய மிக கடினமான ஒன்று.அதிலும் ஒரு வெற்றிகர நாயகர் ,முதலிடத்தில் இன்னமும் தொடர்ந்து கொண்டு இருக்கும் ஒரு நாயகர் சிறுகதையில் வருவதும் இல்லாமல் ஒரு கெளரவ தோற்றத்தில் வருகை புரிந்து அந்த சாகஸத்தை "மாஸ்" சாகஸமாக மாற்ற வேண்டுமென்றால் அதற்கான கதைகளத்தை யோசிப்பதே சிரமமான ஒன்று.ஆனால் இதிலும் வெற்றி கொடி நாட்டுகிறார் இரவுகழுகார்.

    இதில் சிறப்பு இதுவரை வந்த எந்த மினி டெக்ஸ்ம் சோடை போகவில்லை என்பது தான் .ஒரு முழுநீள டெக்ஸ் சாகஸத்தை படித்து முடித்தவுடன் ஏற்படும் திருப்தியை முப்பது பக்க பாக்கட் சைஸ் அளிப்பது கதையாசிரியரின் திறமையை உணர முடிகிறது .அதே போல சிறுசாகஸம் தானே சுமாராக இருந்தால் போதும் என இல்லாமல் இதற்கும் மிக சிறப்பான ஓவியங்களை படைக்கும் ஓவியர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.


    இரவுகழுகின் நிழல்


    நிழல் அல்ல மின்னலின் பளீர் ..

    ReplyDelete
  41. நடமாடும் நரகம்

    இங்கே தளத்தில் இதன் அட்டைபடத்தை பார்க்கும் பொழுது பழைய இதழின் நினைவு வந்தது உண்மை.ஆனால் புத்தகத்தில் இப்பொழுது பார்க்கும் பொழுது இது வேறு அது வேறு என உணரமுடிகிறது.சிறப்பான அட்டைப்படம் .

    உட்பக்க சித்திரங்களை நோக்கும் பொழுது கழுகுவேட்டை ,பழிக்குபழி,டிராகன் நகரம் போன்ற அப்போதைய டெக்ஸ் சாகஸங்களை நினைவுபடுத்துவதை போலவே கதையும் தூள் கிளப்பும் என்பதை உணரமுடிகிறது.மேலும் இதழ் கொழுக் மொழுக் போல் இருப்பதால் கைகளில் ஏந்தும்பொழுதே மகிழ்ச்சி கூடுதலாகிறது .

    நரகத்திற்கு செல்ல எவருக்கும் பிடிக்காது தான்.ஆனால் இந்த நடமாடும் நரகத்நிற்கு செல்ல பலரைபோலவே நானும் வெகு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ரெடி ஸ்டார்ட்..


    ReplyDelete
  42. பிரியமுடன் ஒரு பிரளயம்:-
    லாா்கோ கதையில் "துரத்தும் தலைவிதி"க்கு பிற்பாடு நான் ரோம்பவும் ரசித்த கதை
    இத்துடன் வான் ஹாய் விடை பெறுவது வருத்தம் அளிக்கிறது
    பாய் பாய் சொல்லும் முன்பு
    பர பரவேன்று ஒரு கதையை தந்துள்ளார்
    இந்த கதையில் wபோறுப்பதிகிகள் அனைவருக்கு காதல் நோய் தோற்றி கோள்கிரது
    வழக்கம் போல் ஏதோ ஒரு போட்டி கம்பெனி இந்த காதல் என்னும் நாடகத்தை நடத்துகிறது W groupபை வீழ்த்தும் முயற்சியில்
    அதை எப்படி தடுக்கிறார்?!
    அந்த சதி வலையில் இறுந்து எப்படி தப்புகிறாா் என்பதே
    "பிரியமுடன் ஒரு பிரளயம்"

    ReplyDelete
    Replies
    1. ஆச்சரியப்படுத்தும் விமர்சனம்! பாராட்டுக்கள் அகில்!!

      Delete
    2. மிக்க நன்றி அண்ணா!

      Delete
  43. மரணம் மறந்த மனிதர்கள் கதையைத்தான் கண்ணுல காட்டல.அதுல வர்ற ஒரு கேரக்டரயாவது கண்ணுல காட்டினிங்களே.மிக்க நன்றி ஆசிரியரே.(லார்கோ கதையில் வரும் லாரெண்ட் கேரக்டரைதான் சொல்கிறேன்.)

    ReplyDelete
  44. ""தல"" டெக்ஸ் வில்லரின்........
    👹நடமாடும் நரகம்!👺

    லயன் காமிக்ஸ் இதழ்:326

    🗣வெல்ஸ் பார்க்கோ கோச் வண்டி தனது வழக்கமான பயணத்தை தொடங்க முற்படும் போது பல்வேறு பிலாக்கணங்கள் பயணிகளிடையே அறங்கேறுகிறது....
    முதலில் வண்டியின் பாதுகாவலன் பட் தந்தி சேவை முடக்கத்திற்கு அபாச்சேக்கள் சேட்டைதான் காரணம் தொடர்ந்து பயணிப்பது உயருக்கு உலை வைக்கும் வேலை என மறுக்கிறான்,
    இருப்பினும் வண்டியோட்டி டான்னி மார்கன் தைரியமாக பேசி பயணிகளை தயார் செய்து பயணத்தை துவங்குகிறான்.

    🗣வெல்ஸ் பார்க்கோ லார்ட்ஸ்பர்க்கிலிருந்து இலக்கிற்கு சென்றடைந்ததா.....???

    🙍லிட்டில் உல்ப் நோக்கம் நிறைவேறியதா....???

    🙍தன் மனைவி மேட்ஸை கொன்று விட்டு அவளின் நகையோடு கோச்சில் தப்பியோடும் ஜானின் நோக்கம் நிறைவேறியதா......????

    🙍கேப்டன் ப்ரோமோண்ட் தனது மனஉளைச்சலில் இருந்து நீங்கினாரா.....????

    🙍காலின் சேஸ் யார்....????
    அவனுக்கும் அபாச்சேக்களுக்கும் என்ன தொடர்பு......???

    🙍லிட்டில் உல்ப்பின் தலைமையிலான புரட்சிபடையினருக்கு ஆயூதம் விற்கும் ஐந்தாம் படை யார் ....????

    🙍காலின் சேஸிற்கும் லிட்டில் உல்பிற்கும் என்ன தொடர்பு.....????

    🙍என்பதை பரபரக்கும் ஆக்சன் மேளா நடமாடும் நரகததில்பதில் உள்ளது.

    👣இந்த கதையில் எனக்கு பிடித்தவை:
    ===============================

    💓முன் அட்டையை விட பின் அட்டை அத களம்.

    💣வயதான டான்னிமோர்கன் எனும் வண்டியோட்டியின் நேர்மை குறித்த நேரத்தில் பாதுகாப்பாக இலக்கை அடைய மேற்கொள்ளும் முயற்சி....

    💣தொடக்கம் முதலே ஆபத்தோடு விளையாடும் ஆடு புலி ஆட்டம் எமக்கு கை தேர்ந்த கலை என்பதை நிறுபிக்கும் ""தல"" என்றி அருமை.

    💣முதல் கட்ட மோதலில் தங்கள் குதிரைகளை பறிகொடுத்து விட்டு கோச்வண்டியில் பயணிக்கையில் லிட்டில் உல்பின் தாக்குதலை முறியடிக்கும் சூழல் அவ்வேளையில் நிறம் மாறும் வேடதாரியான காலின் சேஸ், பெல்லாமி போன்றோரின் பாத்திரம் அதேவேளையில் மிஸ் பெக்கியின் உயிர்பயம் அவளுக்கு உறுதுனணயாக விளங்கும் பியாபாடி என அற்புதமாக படைத்துள்ளார் கதாசிரியர்.

    💣இறுதியில் ரே , ப்ரோமோண்ட் இருவரும் தங்கள் ஊயிரை தந்து தியாகி ஆகின்றனர் .
    உச்ச கட்ட தாக்குதலில் டெக்ஸ் அன்ட்கோ லிட்டில் உல்ப் கும்பல் தாக்குதலில் மரணத்தை முத்தமிட்டுவிடுவார்களோ என்ற சூழலில் ராணுவத்தால் காப்பாற்றப்படும் சூழல் அட்டகாசம்.

    😤இருப்பினும் லிட்டில் உல்ப் கும்பலை டெக்ஸ் வில்லர் கையால் கைமா பண்ணாமல் கதையை முடித்து இருப்பது மிகுந்த வருத்தமே.......

    💋யாழிசை செல்வா 💋
    01/06/2018

    ReplyDelete
  45. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. சார் ..அழகான விமர்சனமே ; ஆனால் ஒற்றை நூலிழையே கதையெனும் போது , அதனை தொபுக்கடீர் என இப்போதே போட்டுடைப்பது - இன்னமும் இதனைப் படிக்கத் துவங்கியிராதோரின் சுவாரஸ்யத்தை போட்டுத் தள்ளி விடுமன்றோ ? கதையைப் படிப்போருக்கு அந்த சின்னஞ்சிறு த்ரில் எஞ்சியிராவிடின், சப்பென்று ஆகி விடும் என்பதால் பின்னூட்டத்தை நீக்கியுள்ளேன் ; சாரி !!

      Delete
    2. உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன் சார் ....

      Delete
  46. Kokrine matrum Benni winkle romantic sceneskku censor pottirukkalaam.(piriyamudan piralayam-largo)

    ReplyDelete
    Replies
    1. என்னாது கோக்ரெனும் பென்னியும்
      ரொமான்ஸ் ஆ.!!!!!!

      Delete
    2. ஹி ..ஹி ..சின்ன திருத்தம் ! கொக்ரைன் ஒரு திக்கிலும், பென்னிவிங்கில் இன்னொரு பக்கமும் அடிக்கும் லூட்டி !!

      Delete
    3. Padmanaban Ramadurai : இந்தக் கதைக்கு இதற்கு மேலே சென்சார் செய்திடுவது சிரமமே ; கதையின் ஓட்டத்துக்கு இந்த ஜல்ஸாப் படலமும் அவசியப்படுகிறதே சார் !!

      Delete
  47. மேலே உள்ள டெக்ஸ் போட்டோ பிரமாதம் சாா்! அது தான் தற்போது எனது மொபைலின் வால்பேப்பராய் அலங்காித்துக் கொண்டிருக்கிறது!!

    ReplyDelete
  48. இரவுக் கழுகின் நிழலில்

    ஒரே வார்த்தையில் இல்லை ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால்

    "செம "

    --- நன்றி தலீவர் ....

    ReplyDelete
  49. என்னமோ போங்க!

    இம்மாத மாயாவியும் அசத்தலாய் உள்ளது.
    மான்டிஜுமா போன்ற பலம் வாய்ந்த (ஒரு மாதிாியான) வில்லன்கள் இருந்தால் இக்காலத்திலும் மாயாவி ஜொலிப்பாரோ!!

    எந்த எதிா்பாா்ப்பும் இல்லாது சும்மா டைம் பாஸுக்காக எடுத்து படித்த நான், முழுவதும் படித்துவிட்டுத்தான் வைத்தேன்!

    1967ல் இது ஒரு பிரம்மிப்பு உண்டாக்கும் படைப்பாகவே இருந்திருக்கும்!

    ஆனால் ஓவியங்கள் மூலநூலிலுமே இதுபோல சுமாராகத்தான் இருந்திருக்குமா??!!

    ReplyDelete
  50. இன்று எங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு நடுநிசி கள்வன் கதை சொன்னேன் மிகவும் ரசித்தார்கள். வாழ்க மாயாவி.

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் ஸ்பெயின் காளைச் சண்டைய நம்மூர் ஜல்லிக்கட்டு உடன் கம்பேர் செய்தார்கள். மாயாவி மறையும் ரகசியம் மற்றும் அவர் இரும்புகை ஆற்றலை வாயை மூடாமல் கேட்டார்கள்.

      Delete
  51. நடுநிசி கள்வனின் க்ளைமாக்ஸ் சூப்பர்.

    ReplyDelete
  52. Dear Sir, I have not yet received the courier...please do the needful.

    ReplyDelete
  53. நேற்று இரவுதான் பிரியமுடன் பிரளயம் முடித்தேன்.வழக்கமான லார்கோ ஆக்சன் மிஸ்ஸிங்.மைக் மோகன் மாதிரி லார்கோ சோக கீதம் மட்டும் பாடவில்லை.கிழடு முதல் இளசு வரை ஆளுக்கு ஒருபக்கம் ரொமான்ஸ் லூட்டி அடிக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அறுபதிலும் இளமை ஊஞ்சலாடுகிறது !!

      Delete
  54. ******* நடமாடும் நரகம் ******

    வெறியுடன் அலையும் அபாச்சே கும்பல் ஒன்று - அந்த அபாச்சே கும்பலால் துரத்தப்படும் ஒரு கோச் வண்டி - அந்த வண்டியில் சில பயணிகள் - அந்தப் பயணிகளில் ஒருவராக டெக்ஸும், கார்ஸனும்!!
    அப்புறம் கேட்கவேண்டுமா - வானவேடிக்கைகளை?!! டமால் - டுமீல்!!

    சற்றே நாடகப் பாணியில் அமைந்த ஆரம்பப் பக்க வசனங்கள் 'ஞே' சொல்ல வைத்தாலும், கோச் வண்டி தன் பயணத்தைத் துவங்க வேகமெடுக்கும்போது கதையும் வேகம் பிடிக்கிறது!! கோச் வண்டி ஒரு ரிலே-ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்துகொண்ட பிறகான செவ்விந்தியத் தாக்குதல்களில் - மேலும் வேகம் வேகம் மற்றும் திக்திக்!!

    காலப்பினியின் க்ளாசிக் சித்திரங்களில் டெக்ஸ் தன் பழைய முகத்தைக் காட்டினாலும், கோச் வண்டியில் தரை டிக்கெட் பயணம், அபாச்சேக்களின் பிடி இறுகிடும் வேளையில் கார்சனையும் மிஞ்சிய அவநம்பிக்கைப் பேர்வழியாகிப் பிதற்றுவது - என வித்தியாச முகத்தையும் காட்டுகிறார்!
    குறிப்பாக, கோச் வண்டியில் வந்த இளம் பெண் அபாச்சேக்களின் கையில் சிக்க நேர்ந்தால் அவளுக்கு நேரிடவிருக்கும் சித்ரவதையைத் தவிர்த்திடும் பொருட்டு, அவளது கார்டியனிடம் டெக்ஸ் வழங்கும் ஆலோசனை - எதிர்பாராத அதிர்ச்சி!! ஆனால், யதார்த்தமானதும் கூட!!

    குழந்தைகூட யூகித்துவிடும்படியான க்ளைமாக்ஸை மட்டும் சற்று வேறு மாதிரி அமைத்திருக்கலாம்...

    டெக்ஸ், கார்சனுடன் இணைந்து தடதடக்கும் ஒரு கோச் வண்டிப் பயணம் - டிக்கெட்டின் விலை ரூ.125 மட்டுமே!

    இப்பயணத்துக்கான என்னுடைய ரேட்டிங் : 9.5/10

    ReplyDelete
    Replies
    1. சூப்பரா விமர்சனம் எழுதி இருக்கீங்க.

      Delete
  55. நடமாடும் நரகம்

    தலைப்புதாங்க நடமாடும் நரகம், ஆனால் நரகம் கதை முழுவதும் குதிரையில அப்பப்போ மந்தை மந்தையா ஷோ காமிச்சிட்டு போகுது, நம்ம தல சும்மாவே பட்டாசா வெடிப்பாரு, இந்த மாதிரி சோப்லாங்கி வில்லனுக்கெல்லாம் சொல்லவா வேனும். ஆனா பாருங்க டெக்ஸோட கையோ, ஷூ காலோ கடைசிவரைக்கும் வில்லன் மேல படவே இல்லனா பாத்துக்கோங்களேன், அட நேருக்கு நேரா நின்னு “ஏய் என்னைய பத்தி தெரியும்ல, என்கிட்ட மோதினா முகவரய பேத்துடுவன் பாத்துக்க” அப்டிங்கிற டையலாக்கூட இல்லைனா பாருங்களேன். அய்யோ வில்லன நம்ம தல கடைசி பேஜ் வரைக்குமே சந்திக்கவே இல்லைங்க. இப்போ உங்களுக்கெல்லாம் புரிஞ்சிருக்குமே இந்த மாதம் டெக்ஸ் எவ்வளவு வித்தியாசமா கலக்குராருன்ன்னு. ஆங் நான் இன்னும் கதையை விவரிக்கல இல்ல. அது ஒன்னுமில்லங்க, வழக்கம்போல நம்ம தல அவர் தோஸ்த் கார்சனோட ஒருத்தர மீட் பண்ண கெளம்மி வராங்கோ. வழக்கம்போல அவனை வில்லன் ஆட்கள் வழக்கம்போல வெட்டவெளியில போட்டு தள்ளிட்ராங்க. வழக்கம்போல நம்ம ஹீரோஸ் அவன அடக்கம் பண்ணிட்டு (வழக்கம்போல மறக்காம சிலுவை குச்சியையும் நட்டுட்டு) மறக்காம, இந்த கதை முடியர்துக்குள்ள வில்லன துவம்சம் பன்ரேனா இல்லையா பாரு அபடின்னு வழக்கம்போல சபதமெல்லாம் போட்டு... சரி சரி எடிட்டர் மொறைக்கிரார் இதுக்குமேல கதையெல்லாம் சொல்ல முடியாது. படிச்சி என்ஜாய் பண்ணுங்க.

    ஆனா ஒன்னு, இந்த கதையில் ஒரு கோச் வண்டியும், அதன் பயனமும், அதைச்சுற்றி நடக்கும் விஷயங்களும், அந்த கோச் வண்டியுடன் டெக்ஸும் கார்சனும் இனைவதும், அதன் பிறகு நடக்கும் விருவிருப்பான சம்பவங்களும் ரொம்பவே சுவராஸ்யமானது. அதுதான் இந்த கதையை தூக்கி நிறுத்தும் பிரதான காரனங்கள். டெக்ஸின் பழைய பானி ஓவியங்கள், அருமையான வசனங்கள் நம்மை கதை முழுவதும் ஒன்றிப்போக வைக்கிறது.

    நடமாடும் நரகம் பொழுதுபோக்கிற்க்கு 100 சதவிதம் கேரண்டி !

    ReplyDelete
  56. லார்கோ - 18+ என்று வந்திருக்க வேண்டிய இதழ்.
    டெக்ஸ் மினி - அவர் இருக்கிறார் ஆனால் இல்லை
    டெக்ஸ் - படபட பட்டாசு
    மாயாவி - கடைசி முறை மறுபதிப்பானதால் ஒன்றும் சொல்வதற்கில்லை

    ReplyDelete
  57. லார்கோ சூப்பர்... டெரரிஸட்கள் ஒருபுறம், முதுகில் குத்த நினைக்கும் உளவுத்துறை ஒரு புறம், கிராண்ட் போர்டு மீட்டிங் ஒரு புறம், வின்ச் குழுமத்தினரின் காதல்கள், ஏமாற்றங்கள் ஒருபுறம், இன்னமும் பட்டியல் நீள்கிறது.. முதல் முறை படிந்ததற்க்கே..... வான் ஹாமே... வான் ஹாமே தான்..

    ReplyDelete
  58. ரின் டின் ஏன் முட்டாளா இருக்கிறது? என் மகனின் கேள்வி.

    ஹம்...

    ReplyDelete
    Replies
    1. நாமெல்லாம் புத்திசாலியா இருக்கறதாலதான்,ஹி,ஹி.

      Delete
  59. நடமாடும் நரகம்.

    இரண்டாம் பக்கத்தில் குற்றுயிராகக் கிடப்பவரை 'அட ரால்ஃப் 'என கண்டு கொள்கிறார்.
    அடுத்த பக்கத்திலேயே 'நீசப்பயல் லிட்டில் உல்ஃபா? ' என வில்லன் என்று நம்பப்படுபவனை அடையாளம் அறிகிறார்.

    கோச்சு வண்டி டிரைவரை 'அடடே நம்ம டான்னி 'என புன்னகைகக்கிறார்.

    இவ்வளவு ஏன், அப்போதுதான் க்ளைமாக்ஸில் என்ட்ரி ஆகும் கர்னலையே 'கர்னல் ஹேட் பீல்ட் 'என நலம் விசாரிக்கிறார்.

    வில்லர் சார் உங்க ஞாபகசக்திக்கு ஒரு அளவே கிடையாதா? ???

    ReplyDelete
  60. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே.😃😃😃 (நாங்களும் சொல்வோம்ல)

    ReplyDelete

  61. Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
    ACCA Training in Chennai | ACCA Training institutes Chennai | ACCA Exam Coaching Classes

    ReplyDelete