Wednesday, May 30, 2018

லார்கோ வாராகோ ...!

நண்பர்களே,

வணக்கம். பொன்னான புதனில், உங்கள் கூரியர்கள் புறப்பட்டு விட்டன ! So நாளைக் காலையில் லார்கோ & கோ. உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டத் தயாராகி நிற்பார்கள் ! பதிவுத் தபாலில் புத்தகங்களைப் பெற்றிடும் நண்பர்கள் மட்டும் கொஞ்சம் கூடுதலாய்க் காத்திருக்க வேண்டி வரும் போலும் ; தபாலாபீஸில் தொடர்ச்சியாய் வேலை நிறுத்தத்தில் உள்ளனர் என்பதால் ! கிட்டத்தட்ட 10 நாட்களாய் எந்தப் பார்சலையுமே தொடக் கூட மறுக்கிறார்கள் ! உள்ளூர் பார்சல்களுக்கே கதி இது தான் எனும் போது, விமானம் ஏறி அயல்தேசம் செல்லும் சமாச்சாரங்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா - என்ன ? So சற்றே பொறுமை ப்ளீஸ் - இம்முறை ! சொல்லப் போனால் - இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாய் இத்தாலியின் சில மர்ம மனிதன் மார்ட்டின் ரசிகர்களிடமும் ஜகா வாங்கிட வேண்டிப் போயுள்ளது - "மெல்லத் திறந்தது கதவு" 25 பிரதிகளை அனுப்ப வழியில்லாததால் !! பாஷை தெரிந்திராவிடினும், தங்கள் ஆதர்ஷ நாயகரின் இதழ்களை சேகரிக்க அவர்கள் காட்டும் ஆர்வம் - டயபாலிக் ரசிகர்களுக்கு அடுத்தபடியானது எனலாம் ! But ஏனோ தெரியலை - 'தல'யின் இத்தாலிய ரசிகர்கள் இதே போல பொங்கிடக் காணோம் !! 

அப்புறம் இம்மாத இதழ்களில் லார்கோவே வண்ணத்தில் கலக்குகிறார் ! அதுமட்டுமன்றி இம்முறை ரொம்பவே 'ஜாலிலோ-ஜிம்கானா' விமர்சனங்களுக்கு அவர் புண்ணியத்தில்  வாய்ப்புகள் பிரகாசம் என்றும் பட்சி சொல்கிறது ! So கடந்த 2 வாரங்களாக ஈயோட்டிக் கொண்டிருக்கும் இந்தத் தளத்துக்கு நமது கோடீஸ்வரர் கொஞ்சம் உத்வேகத்தை நல்கினால் நலமே ! 
And TEX !!!! பெருசும் சரி ; கலரில் வந்துள்ள குட்டியும் சரி - இம்முறை செமையாகத் தகிக்கின்றன என்பேன் !! வானவில்லின் இரு முனைகள் போல் - டெக்சின் இரு முற்றிலும் மாறுபட்ட  பரிமாணங்களைக் காட்டவுள்ள ஆக்கங்கள் இவை !! And வித்தியாசங்களைக் காட்ட டெக்ஸ் கதாசிரியர்கள் ஓயாது செய்து வரும் மெனெக்கெடல்களைக் கண்டு சிலாகிக்காது இருக்க இயலவில்லை ! (நம்மளவுக்கு) புதியதொரு கதாசிரியர் - "இரவுக் கழுகின் நிழலில்" சாகசத்துக்கு !
Happy Reading folks !! See you around !!

Sunday, May 27, 2018

எஞ்சிய அரை டஜன்....!

நண்பர்களே,

வணக்கம். தோட்டாச் சத்தங்கள் கேட்கக் கூடிய அருகாமையே நமக்கு! அந்தக் கரும் புகை திரண்டு எழுவதை முகர முடியாத குறை தான் ! கதைகளில், படங்களில், காமிக்ஸ்களில் ‘டுமீல்‘ ‘டுமீல்‘ சத்தங்களும், காக்காய்-குருவி போல எதிராளிகள் சரிந்து விழுவதும் நமக்குக் கொட்டாவியை ஏற்படுத்தும் சம்பவங்களே ! ஆனால் நிஜத்தில், அதுவும் மிக அருகிலுள்ள மண்ணில் துப்பாக்கி முழக்கங்கள் கேட்பதும், ஜனங்கள் சுருண்டு விழுவதும் வயிற்றைப் பிசையும் போது தான் எமதர்மனின் ஆதர்ஷ ஆயுதத்தின் வலிமை புலனாகிறது ! கண்ணில்படும் ஊடகங்கள் சகலத்திலும் இந்த மரண தாண்டவமே அலசப்படுகிறது ; ஏகமாய் உயரும் குரல்களில் ஏகப்பட்டோர் பேசுகின்றனர் ; ஆனால கண் செருகி மண்ணில் வீழ்ந்து கிடக்கும் மக்களின் அந்த ஒற்றைப் புகைப்படம் ஏற்படுத்தும் கலக்கத்துக்கு மருந்து யாரிடமும் இருப்பதாய்த் தோன்றவில்லை! இந்தச் சாவுகளுக்கு ஒரு அர்த்தமில்லாது போய்விடக் கூடாதென்று மட்டும் உள்ளுக்குள் படுகிறது! RIP the fallen ones !! 

போன வாரத்துக் கனமான நிகழ்வுகளா ? திருமண நிகழ்வுகள்… கிரகப் பிரவேசங்கள் என்ற பிசியா ? அல்லது IPL மேட்ச்களின் மும்முரமா ?; அல்லது பொதுவானதொரு அயர்ச்சியா ? என்று சொல்லத் தெரியவில்லை - ஆனால் கடந்த பதிவினில் நண்பர்களின் வருகைப் பதிவேட்டில் பெரும்பாலுமே ‘absent’ என்ற வாசகமே தென்பட்டது ! மாதா மாதம் ஒரு "நிஜங்களின் நிசப்தமோ" ; ஒரு "மெல்லத் திறந்தது கதவோ" வெளியிட்டால் அதனில் சேதமாகும் கேசத்தைப் பற்றிப் புகார் சொல்லவோ ; அவற்றை அகழ்வாராய்ச்சி செய்திடும் முனைப்பிலோ - நண்பர்கள் இங்கே அணிதிரள்வது நிகழ்ந்திடும் போலும் ! So இதுக்காகவேணும் மண்டையைப் பதம் பார்க்கும் சில பல ஆல்பங்களைத் தேடிப் பிடித்தாக வேண்டுமோ ?

Anyways – இதோ காத்திருக்கும் ஜுன் மாத இதழ்களின் பட்டியல் & updates : 

- லார்கோ : அச்சாகி முடிந்துள்ளது; பைண்டிங் பணிகள் பாக்கி.
- டெக்ஸ் - நடமாடும் நரகம் : ditto
- மாயாவி – நடுநிசிக் கள்வன் : ditto
- இரவுக்கழுகாரின் நிழலில் – Color டெக்ஸ் : ditto

அப்புறம் ஜம்போ காமிக்ஸின் முதல் இதழில் Young Tex – ஜுன் 15-ல் தனியாகக் களமிறங்கவுள்ளார் ! கூரியர் செலவுகள் மறுக்கா இதற்கென அவசியமாகிடும் என்பது புரிந்தாலும் – முதல் தேதிக்கே அதனையும் அனுப்பி வைத்து டெக்ஸ் overkill ஆகிட வேண்டாமே என்று பார்த்தேன் ! So இந்த மாதத்தின் மையத்திலும்  இதழொன்று உண்டு இம்முறை !  அப்புறம் இதுவரையிலும் வெளியாகியுள்ள 3 Color Tex இலவச இணைப்புகளின் தொகுப்பானது ஜுலை மாதம் பொது விற்பனைக்குத் தயாராகி விடும். சந்தாவில் இல்லாத நண்பர்கள் அடுத்த மாதம் அதனை வாங்கிக் கொள்ளலாம்.

இரத்தப் படலம்” பணிகளும் ஒருவழியாக வேகமெடுத்து விட்டன ! புக் # 1 முழுமையாய் அச்சாகி முடிந்து விட்டுள்ளது ! புக் # 2 நேற்றைக்கு அச்சுக்குச் சென்றுள்ளதெனும் போது – அடுத்த சில நாட்களில் that should be done too ! புக் # 3 பின்னேயே தொடர்ந்திடுமென்பதால் ஜுன் முதல் வாரத்துக்குள் மொத்தமாய் பைண்டிங்குக்கு அனுப்பி விட்டு, அந்த slip-case பணிகளுக்குள் புகுந்திட வேண்டியது தான் ! 
So அடுத்த operation – அந்த டெக்ஸ் டைனமைட் மீதே! வேலையோடு வேலைகளாய் இதனையும் கரை சேர்த்து விட்டால் அப்புறம் ஆண்டின் இறுதி வரைக்கும் கையை வீசிக் கொண்டு லாத்தலாய் இருக்கலாமென்ற நினைப்பே எங்கள் கால்களுக்கு சக்கரங்களை வழங்குகின்றன ! Wish us luck guys! ஆகஸ்டையே இலக்காகக் கொண்டு முடிந்தமட்டுக்கு 'தம்' பிடித்துப் பணியாற்றுவோம் ; எங்கேனும் வண்டி தடுமாறிடும் பட்சத்தில் - செப்டம்பர் for sure!

அப்புறம் போன பதிவில் எனது Recent Top 12 பற்றி எழுதத் துவங்கியிருந்தேன்! முதல் அரை டஜனை விவரித்திருக்க – இதோ எனது எஞ்சிடும் அரை டஜன்!

க்ரீன் மேனர்:

Cinebook ஆங்கிலப் பதிப்பில் இந்த ஆல்பங்கள் வெளிவந்திருக்கா பட்சத்தில் நாம் இந்த திசைப் பக்கமாய் தலை வைத்தே படுத்திருக்க மாட்டோமென்பது நிச்சயம்! அவர்களது அட்டகாசமான மொழிபெயர்ப்பில் இந்தக் கதைகளைப் படித்த முதல் நொடியில் எனக்குப் பட்டதெல்லாம் – ‘தமிழில் இதனை முயற்சித்தால் நம்மவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?‘ என்பதே ! எனது தயக்கங்களுக்கு 3 காரணங்கள் இருந்தன! அப்போதெல்லாம் கிராபிக் நாவல்களுக்குள்ளே புகுந்து முத்துக்குளிக்கும் அனுபவங்களெல்லாம் நமக்கு அவ்வளவாய்க் கிடையாதென்பதால் – இந்த பாணிக்கு நமது வரவேற்பு எவ்விதமிருக்குமோ என்று சொல்லத் தெரியவில்லை! சிக்கல் # 2 ஆக நான் பார்த்தது அந்தக் குட்டிக்குட்டிக் கதை பாணிகள்! இது போன்ற சிறுகதைத் தொகுப்புகளை வெளியிடும் போதெல்லாமே 1986-ல் நமது முதல் 3 திகில் இதழ்களுக்குக் கிட்டிய “பிச்சைக்காரன் வாந்தியெடுத்தது போல” என்ற விமர்சனமே ஞாபகத்துக்கு வந்திடுவது வழக்கம் ! So ஒரே கதையாக இல்லாத, ஹீரோவே இல்லாத துண்டு + துக்கடா கதைக்கு சாத்து விழுமா ? சந்தன மாலை விழுமா ? என்று கணிக்கத் தெரிந்திருக்கவில்லை. பிரச்சனை # 3 ஆகத் தென்பட்டது அந்தக் கார்ட்டூன் சித்திர ஸ்டைல்களே! சீரியஸான கதைக்களத்துக்கு செம கார்ட்டூன் பாணியில் சித்திரங்கள் என்பதை எவ்விதம் எடுத்துக் கொள்வீர்களோ என்ற தயக்கம் நிரம்பவே! 

ஆனால் எது எப்படியானாலும், இதனை வெளியிடாது விட்டால் தலைக்குள் குடியேறியிருந்த ஆர்வம் சீக்கிரத்தில் வெளியேறாது என்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது! அப்புறம் தொடர்ந்த சமாச்சாரங்கள் தான் நீங்கள் அறிந்ததே! நான் மிரண்டு நின்ற கார்ட்டூன் சித்திர பாணிகளே இந்த ஆல்பத்தை இன்னொரு லெவலுக்கு இட்டுச் செல்லும் காரணியாக அமைந்தது! அந்தச் சிறுகதை பாணியே ஒரு அசாத்திய variety-க்குக் களம் அமைத்துத் தந்திருந்தது! நான் தயக்கம் காட்டிய புது genre ரசிப்பு சார்ந்த கேள்விக்குறி – ஒரு ஆச்சர்யக்குறியாக உருமாறியிருந்தது ! Without an iota of doubt - க்ரீன் மேனர் – நம் பயணத்தின் ஒரு மறக்க இயலா ஸ்டாப்!

நிலவொளியில் நரபலி !

Comic Con 2013 (2012 ??)-ன் சமயம் அடித்துப் பிடித்துத் தயார் செய்த இந்த இதழ் எனது favourites பட்டியலில் எப்போதுமே இடம்பிடிக்குமொரு சமாச்சாரம்! Maybe அந்த சைஸும் ஒரு கூடுதல் காரணமா என்று சொல்லத் தெரியவில்லை; ஆனால் பட்டாசாய்ப் பொரிந்து தள்ளும் அந்த 110 பக்க Tex சாகஸம் வண்ணத்தில், அந்த 'சிக்' சைசில் ரொம்பவே பிரமாதமாய்த் தோன்றியது  எனக்கு ! ஒரே ஞாயிறில் மொழிபெயர்ப்பு ; தொடர்ந்த 2 நாட்களில் டைப்செட்டிங்; பிராசஸிங்; அதன் மறுநாள் அச்சு என்று எல்லாமே இதனில் எக்ஸ்பிரஸ் வேகமே ! டெக்ஸைக் கலரில் தரிசிப்பதெல்லாம் அந்நாட்களில் குதிரைக் கொம்பெனும் போது, மினுமினுக்கும் மஞ்சள் சட்டைகள் வசீகரித்தன ! இந்தக் கதைக்குத் தலைப்பு தேர்வு செய்யத் தான் ரொம்பவே திணறியதாய் ஞாபகம் – simply becos 5 விதமான பெயர்கள் தலையில் முளைத்திருந்தன! அவற்றுள் எதைத் தேர்வு செய்வதென்று தான் மொக்கை போட நேர்ந்தது! விற்பனையிலும் அதகளம் செய்ததொரு இதழிது! Wish you liked this size too guys ! 

இரவே... இருளே... கொல்லாதே!

இந்த இதழ் வெளியான போது பரவலாய்க் கிடைத்தது சாத்துக்களே என்பது நினைவில் உள்ளது! “தீபாவளி நெருங்கும் வேளையில் bright ஆகவொரு ஆல்பத்தை வெளியிடாது – இது மாதிரியொரு இருண்ட சாகஸத்தைப் போடச் சொல்லிக் கேட்டோமா?” என்றே சாத்துக்களுக்கொரு முகாந்திரமும்! ஆனால் நாட்கள் நகர, நகர – இந்தத் த்ரில்லரைப் படிக்கப் படிக்க, நிறையவே சிலாகிப்புகள் நம்மைத் தேடி வந்தன! என்னைப் பொறுத்தவரை, இது மாதிரியான cinematic கதைக் களங்கள் வெற்றி பெறாது போகாது என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது! 3 ஆல்பங்கள்; இவற்றைத் தொகுப்பாக்கிப் போடுவதா? அல்லது ஜேஸன் ப்ரைஸ் பாணியில் பிரித்துப் போடுவதா? என்ற கேள்வி மட்டுமே என்னுள் அப்போது ! ஆனால் பிரித்துப் போட்டால் அந்த த்ரில் element சிதைந்திடக் கூடுமென்றுபட்டதால் ஒரே ஆல்பமாக்கிடத் தீர்மானம் செய்தேன்! பொதுவாய் இது மாதிரிக் கதைகளை நாம் சினிமாக்களில் மட்டுமே பார்த்திருப்போம் – நமது காமிக்ஸுக்கு இது புதிதே என்பதால் – உங்கள் மீது நம்பிக்கை வைத்த கையோடு களமிறங்கினோம்! தாமதமாக என்றாலும், பிரமாதமாய் தோள் கொடுத்தீர்கள் ! P.S : அந்த ஹாலோவீன் பண்டிகை சார்ந்த "கவிதைகளை" நினைவுள்ளதா guys ? 😅😄😂

என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம் :

அது ஏனோ தெரியவில்லை – ஆனால் இந்த noir ரக இருண்ட கதைகள் மீது எனக்கு மையல் ஜாஸ்தியே ! அதிலும் உலகப் போர்ப்பின்னணியோடு பின்னிப் பிணைந்த கதையெனும் போது சொல்லவா வேண்டும் ? எனது ஆர்வ மீட்டர் படுசூடானது ! 2016-ல் இந்தக் கதையைப் பரிசீலனை செய்த போது – இத்தாலிய பாஷையிலிருந்த வரிகளை கூகுள் உதவியோடு மொழிபெயர்த்துப் படிப்பதே கூட ஒரு கி.நா. அனுபவம் போலவே இருந்தது தான்! மேலோட்டமாய்ப் புரிந்து கொள்ளவே ஏகப்பட்ட பிரயத்தனம் தேவைப்பட்டது! “இதழ் வெளிவர வேண்டிய சமயம் பார்த்துக் கொள்ளலாம்” என்று அப்போதைக்குத் தாண்டிச் சென்று விட்டிருந்தாலும், அதனை வெளியிடும் தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தேன் ! கதைநெடுக சோகமே அடித்தளம் என்ற போதிலும், அந்நாட்களின் வாழ்க்கையின் பிரதிபலிப்பே என்ற புரிதல் இந்தக் கதைக்கு ஒரு கூடுதல் பரிமாணத்தை நல்கியது போலிருந்தது ! இதனில் பணி செய்த 10 நாட்களுமே எனக்கும் அதன் தாக்கம் இருந்தது! A book to remember !! At least for me!!

Never Before Special:

இந்த இதழைப் பையில் தூக்கி வைத்துப் பேக் பண்ண ஒரு நூறு காரணங்கள் சொல்லலாம்! நமது இரண்டாவது இன்னிங்ஸின் பயணத்துக்கு ஒரு வேகத்தை மட்டுமன்றி ஒரு நம்பகத்தன்மையையும் தந்த இதழிது என்பது என் அபிப்பிராயம் ! இந்தப் புது மாப்பிள்ளை ஜோரெல்லாம் ஆறு மாசம் தாங்குமா?” என்று என்னிடமே கேட்ட நண்பர்கள் உண்டு ! Maybe அவர்களையுமே “நம்புவோர் பட்டியலுக்கு” மாறச் செய்த இதழ் இது என்றும் சொல்லலாம் ! திரும்பி பார்க்கையில் இன்றைக்கு இந்த NBS பட்ஜெட் ஒரு சிகர உச்சியாய்த் தெரியாது போகலாம் தான்; ஆனால் அந்தத் தருணத்தில் அதுவொரு massive – massive ப்ராஜெக்டே! அதனில் வெற்றி காணச் செய்த உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மலர்க்கொத்து உரித்தாக்கிட வேண்டும்! எல்லாவற்றையும் விடப் பெரும் அனுபவம் – இதன் ரிலீஸின் தருணத்தில் சென்னைப் புத்தகவிழாவில் நாம் செய்த அதகளங்கள் தான்! கண்ணில்பட்ட இதர ஸ்டால் உரிமையாளர்கள் அத்தனை பேரின் ரௌத்திரங்களையும் அன்று சம்பாதித்த துரதிர்ஷ்டத்தை மட்டும் கால இயந்திரத்தில் பின்சென்று அழித்திட முடியுமெனில் முதல் ஆளாக நான் காத்திருப்பேன் ! Phew!!!

LMS:

இன்னுமொரு மெகா ப்ராஜெக்ட்; இன்னுமொரு மைல்கல் இதழ்! And உங்கள் புண்ணியத்தில் இன்னுமொரு runway hit! என்னைப் பொறுத்தவரையிலும், இந்த இதழின் highlight அந்த வண்ணத்திலான டைலன் டாக் சாகஸமே! அந்தக் கதைக்களமும் செம மிரட்டலானதொன்று எனும் போது, வண்ணத்தில் அதை ரசிப்பது ஒரு சூப்பர் அனுபவமாக இருந்தது! அந்த மெகா டெக்ஸ் சாகஸம் ; b&w கிராபிக் நாவல்; ரின்டின் கேன் அறிமுகக் கதை என்று ரசிக்க ஏகமாய் சமாச்சாரங்கள் இந்த இதழில் இருந்ததாய் நினைவு ! இப்போதும் இதைக் கையில் தூக்கிப் புரட்டும் போது, இதன் டெஸ்பாட்ச் சமயம் ஆபீசே திருவிழா போல் காட்சி தந்தது தான் ஞாபகத்துக்கு வருகிறது ! In many many ways - மறக்க இயலா இதழ் ! And வாரா வாரம் ஞாயிறன்று ஒரு பதிவு - என்ற routine-ஐத் தெரிந்தோ – தெரியாமலோ ஏற்படுத்தித் தந்த இதழும் இது! 4 ஆண்டுகள் ஓடிவிட்டன இதன் வெளியீட்டுச் சமயத்திலிருந்து என்பதை நம்பவா முடிகிறது ?!!

And that winds up my list of my recent top 12 !! இன்னும் கொஞ்ச காலம் போன பின்னே இந்தப் பட்டியலிலுள்ள சில இதழ்கள் காணாது போயிருக்கலாம் ; சில புதுசுகள் இடம் பிடித்திருக்கவும் செய்யலாம் ! ஆனால் தற்போதைக்கு எனது லிஸ்ட் இதுவே ! உலகைப் புரட்டிப் போடக்கூடிய இந்தச் சேதியைச் சொன்ன கையோடு நான் நடையைக் கட்டுகிறேன் guys - காத்திருக்கும் "டைனமைட் ஸ்பெஷல்" பணிகளுக்குள் புகுந்திட !! 

புதனன்று உங்களது கூரியர்கள் புறப்படும் ! Have an awesome Sunday ! Bye for now ! See you around!

Sunday, May 20, 2018

ஒரு படகு...ஒரு தீவு...ஒரு பயணப்பை...!

நண்பர்களே,

வணக்கம். ஒன்றிரண்டு பதிவுகளுக்கு முன்பாக - டெக்ஸ் கதைக் குவியல்களுக்குள் உலாற்றிய வேளையில் கண்ணில் பட்டதொரு தொகுப்பு பற்றி எழுதியிருந்தேன்! “நான் பயணம் போகும் படகு, கடலில் மல்லாந்து போய், ஆளில்லாத் தீவில் நான் ஒதுங்க நேரிட்டால் – கையோடு எடுத்துப் போக விரும்பும் காமிக்ஸ் இதழ்கள்” என்பது அந்தத் தொகுப்பின் தலைப்பு! ஏகப்பட்ட டெக்ஸ் ஆல்பங்களை அதனில் மனுஷன் பட்டியலிட்டிருந்தார்! அதையே லயித்துப் படித்துக் கொண்டிருந்த போது – அட… நாமும் இப்படியொரு லிஸ்ட் ஒன்றைத் தயாரிக்க முனைந்தாலென்னவென்று தோன்றியது! “எனது Top 10" என்ற ரீதியில் – வெவ்வேறு தேர்வுகளை இதற்கு முன்பாய் நான் செய்துள்ளது நினைவுள்ளது தான்! ஆனால் நமது மறுவருகைக்குப் பின்பாய் இது போன்றதொரு memory lane பயணத்தில் ஈடுபட்டதாய் ஞாபகமில்ல! அது மட்டுமன்றி, வயது ஏற ஏற – நமது ரசனைகளிலும் மாற்றங்கள் புகுவது இயல்பெனும் போது – 10 ஆண்டுகளுக்கு முன்பாய் ரசித்த சமாச்சாரம் இப்போது ‘ஙே‘ என்று முழிக்கச் செய்யவும் வாய்ப்புண்டல்லவா? So – இதனை எனது “நவீன பட்டியல்” என்று எடுத்துக் கொள்ளலாம்! அதாவது 2012-க்குப் பின்பாய் வண்ணம்; பெரிய சைஸ் என்ற தரங்களைத் தொட்டதன் பிற்பாடு வெளியான இதழ்களுள் எனது favourites! (அட… இதைத் தெரிந்து இப்போது எந்த மாநிலத்து சட்டசபையைத் தூக்கி நிறுத்தப் போகிறோமோ? என்று கேட்கிறீர்களா? நமக்கும் பொழுது போக வேண்டுமல்லவா guys?)

இந்த யோசனை வெள்ளிக்கிழமை மாலை தோன்றிட – நமது சென்றாண்டின் காமிக்ஸ் பாஸ்போர்ட்டைப் புரட்டியெடுத்து – சமீப இதழ்களின் பெயர்களை மேயத் தொடங்கினேன்! நிஜத்தைச் சொல்வதானால் – நிறைய கதைகளின் பெயர்களை மட மடவென்று வாசிக்கும் போது – ”ஙே… இது யாரோட கதை? எந்த ராப்பரை இதுக்குப் போட்டோம்?” என்று மலங்க மலங்க முழிக்க வேண்டியிருக்குமோ? என்ற பயமிருந்தது என்னுள்! ஆனால் surprise… surprise… ஒன்றிரண்டு இதழ்கள் தவிர்த்து பாக்கி எல்லாமே ‘சட்‘டென்று நினைவுக்கு வந்து விட்டன ! ஒவ்வொரு இதழையுமே நாமிங்கு preview செய்வது; அப்புறமாய் surf excel போட்டு துவைத்துக் காயப் போடுவதெல்லாமே வழக்கமாகி விட்டதால் ஒவ்வொன்றும் ஏதேனுமொரு வகையில் மண்டையில் தங்கி விட்டன என்பேன்! அரை மணி நேர பட்டியல் அலசலின் முடிவில் நான் ‘டிக்‘ அடித்து வைத்திருந்த இதழ்களின் எண்ணிக்கை 12 ஆக நின்றது! அட… தீவுக்குப் போகும் போது 2 புக் கூடுதலாயிருந்தால் குடியா முழுகிடப் போகிறதென்ற எண்ணத்தில் – எனது “Top 12” என்று லிஸ்டின் தலைப்பை மாற்றிக் கொண்டேன்! And தொடரும் வரிசையானது எனக்குப் பிடித்தவைகளின் தரவரிசையில் என்றாகாது; நினைவுக்கு வர வர எழுதியவைகளே! So இது நம்பர் 1; இது நம்பர் 2 – என்ற வரிசைக்கிரமங்களில் பார்த்திட வேண்டாமே? Here goes:

பழசிலும் இடம்பிடித்து; புதுசிலும் இடம்பிடித்திடும் வாய்ப்பு நிறைய இதழ்களுக்கு வாய்ப்பதில்லை! ஆனால் கேப்டன் டைகரின் பல சாகஸங்களுக்கு அந்த சான்ஸ் சுலபமாய் கிட்டியுள்ளது – வண்ணத்தில் மறுபதிப்புகளாக நாம் வெளியிட்டதால்! தங்கக் கல்லறை; மின்னும் மரணம்; இரத்தக் கோட்டை என 3 ஸ்பெஷல் தொகுப்புகள் இந்த வரிசையில் வெளிவந்திருப்பினும் என்னைப் பொறுத்தமட்டிலும் போட்டி முதலிரண்டு இதழ்களுக்கு மத்தியிலேயே! And நிறையவே யோசித்தாலும் இவற்றுள் ஏதேனும் ஒன்றை இரண்டாமிடத்துக்கு அனுப்ப எனக்கு மனம் ஒப்பவில்லை! So நான் கரை ஒதுங்குவதாயின் கையோடு எடுத்துப் போக விரும்பும் முக்கிய இதழ்களுள் தங்கக் கல்லறை & மின்னும் மரணம் நிச்சயம் இடம்பிடிக்கும்!

 தங்கக் கல்லறை:

ஒரு லட்சம் தடவை நாம் அலசி முடித்து விட்டிருக்கக் கூடிய கதையிது என்பதால் புதுசாய் நான் இதனில் சேர்ப்பதற்கு ஏதுமிராது தான்! ஆனால் இந்த ஆல்பத்தினை கலருக்குக் கொணரப் பணியாற்றிய சமயம் தான் வன்மேற்கின் கொடூரங்களை நேரில் உணர்ந்தது போல் மனதுக்குப் பட்டது. ஆங்கிலத்தில், கலரில் படிக்கும் போது இதெல்லாம் வழக்கமான சமாச்சாரங்கள் தானே என்பதைப் போல பக்கங்களைப் புரட்ட முடிந்தது! ஆனால் நாம் கலருக்குள், உயர்தரத்துக்குள் கால் வைக்கத் துவங்கிய பிற்பாடு வெளியான முதல் கமர்ஷியல் கௌபாய் ஆல்பம் தங்கக் கல்லறையே என்ற போது – இதனை வழக்கத்தை விட நுணுக்கமாய்க் கவனித்ததன் பலனோ என்னவோ தெரியலை – லக்னரும், ஜிம்மியும், டைகரும் உழன்று திரிந்த பாலைவனத்தின் வெப்பமும், புழுதியும் என்னையும் தாக்கியது போலிருந்தது!

பொதுவாய் டெக்ஸ் கதைகளில் கதையின் மாந்தர்களுக்கும், கதையில் ஓட்டத்துக்குமே நிரம்ப முக்கியத்துவமிருக்கும்! ஆனால் டைகர் கதைகளில், அந்தக் களத்துக்குமே அதீத கவனிப்புக் கிட்டுவது வாடிக்கை! பாலைவன இரவுகளின் நடுங்கும் குளிர்; உரித்தெடுக்கும் வெப்பம் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அந்த வனாந்திரங்களின் தனிமையை இந்த ஆல்பத்தில் கதாசிரியர் சொல்லியுள்ள விதம் எனக்கு அட்டகாசமாய்ப் பட்டது! அந்தப் புராதன செவ்விந்தியக் குடியிருப்பில் லக்னரும், குஸ்டாவும் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம் ஒரு அசாத்திய ஸ்க்ரிப்ட்-ரைட்டருக்கு மட்டுமே சாத்தியமென்பேன்! அதிலும் குடிதண்ணீருக்குள் ஒரு முரட்டுப் பல்லி மிதக்கும் சீனும் சரி, பாடம் செய்யப்பட்ட ஒரு அபாச்சேயின் சடலத்தோடு கட்டிப் போடப்பட்டிருக்கும் ராட்சஸப் பல்லி தென்படும் ஃப்ரேமும் சரி, மனதை விட்டு லேசுக்குள் அகலா கணங்கள் – இந்த ஆல்பத்தைப் பொறுத்தவரையிலும்! So வண்ணத்தில், இந்த அதகளத் த்ரில்லரை வெளியிட்ட நாட்கள் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்! Of course – “மாப்பிள்ளை இவர் தான்… ஆனாக்கா அவர் போட்டிருக்கிற சட்டை அவரது இல்லை” என்ற கதையாக – தங்கக் கல்லறையின் திருத்தப்பட்ட தமிழ் வசனங்களுக்குக் கிடைத்த சாத்தல் படலங்களுமே எனது நினைவுகளுக்கு spice சேர்த்திடும் காரணிகள்!

மின்னும் மரணம் !

ரூ.2200/- என்ற நம்பரையெல்லாம் பார்த்துப் பழகி விட்டுள்ள இந்நாட்களில் ரூ.1000 என்பது அத்தனை பெரிய சமாச்சாரமாய்த் தோன்றாது தான்! ஆனால் முதன்முறையாக ஒரு நாலு இலக்க விலையை நமது இதழ்களுக்கு நிர்ணயம் செய்யச் சாத்தியமாக்கிய அந்த “மின்னும் மரண” நாட்களை மறக்கவாவது முடியுமா? ஈரோட்டில் பந்தாவாய் அறிவித்த கையோடு, அன்றைக்கே 100+ முன்பதிவுகளையும் பார்த்திருந்தாலும், உள்ளுக்குள் என்னமோ ஏகமாய் பயமிருந்தது! And பணியின் பரிணாமம் இன்னொரு பக்கம் செமையாக உடுக்கை அடிக்கச் செய்தது! ஆனால் அந்தக் கதைக்குள் மறுபடியும் நுழைந்த நொடியில் எல்லா பயங்களுமே கரைந்து போனது போன்றதொரு உணர்வு! அந்த மெக்ஸிகன் புதையல்; தங்கத் தேட்டை; confederate gold என்ற கதைக்கரு நிஜ சம்பவங்களின் பின்னணியே எனும் போது – Charlier போன்றதொரு அற்புதக் கதாசிரியருக்கு ரவுண்டு கட்டி அடிக்க சூப்பரான மைதானம் ஆகிப் போகிறது! வடக்கத்திய – தெற்கத்திய உள்நாட்டுப் போர்; மெக்ஸிகன்கள்; அபாச்சேக்கள்; அமெரிக்க பிரஸிடெண்டைக் கொலை செய்ய முயற்சி; ரயில் வண்டிகள்; பிடிவாதங்கள்; இராணுவத் தளபதிகள்; சிகுவாகுவா சில்க்; வெகுமதி வேட்டையன்; முதிர்ந்த செவ்விந்தியத் ‘தல‘ என்று கதைநெடுகிலும் நாம் பார்த்திடக் கூடிய ஒவ்வொரு சமாச்சாரத்திலும் வன்மேற்கின் வரலாறு அட்சர சுத்தமாய் ஒட்டிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது! எந்தவொரு இடத்திலுமே இதுவொரு மிகைப்படுத்தப்பட்ட கற்பனையாகப்படவேயில்லை எனக்கு! முழுசுமாய் எடிட் செய்து இந்த இதழை அச்சுக்கு ரெடி செய்ததே ஒரு நாக்குத் தள்ளச் செய்த அனுபவமாயிருந்தாலும் – இந்தக் கதையை ஒட்டு மொத்தமாய், ஒரே ஆல்பமாய்க் கையிலேந்திப் புரட்டிய போது – பிரான்கோ பெல்ஜியப் படைப்புகளின் உச்சங்களுள் ஒன்றை வெளியிட்டுள்ள அதிர்ஷ்டம் நமதாகியுள்ளது புரிந்தது! 

இந்த இதழின் தயாரிப்பின் போது எனக்கு ரொம்பவே மண்டை காய்ந்து போனது அட்டைப்படத் தயாரிப்பினில் தான்! இதற்கென மொத்தம் 3 பெயிண்டிங்குகள் போடச் சொல்லியிருந்தேன் நம் ஓவியரிடம்! ஆனால் எதிலுமே எனக்கு அவ்வளவாய்த் திருப்தி இல்லை! அதிலும் NBS ராப்பருக்குக் கிடைத்திருந்த பல்புகள் நினைவில் பசுமையாயிருக்க – மின்னும் மரணத்துக்கும் அதே கதியாகிடக் கூடாதென்று விழைந்தேன்! Of course – மின்னும் மரணம் ராப்பருக்குமே நண்பர்களுள் சிலர் – “யார் அந்த அட்டைப்படத்திலுள்ள கூர்க்கா?” என்று வாரியிருந்தனர் தான்! ஆனால் என்னளவுக்கு அந்த டிசைனில் நிறைவே! And அந்த மினுமினுக்கும் அட்டைப்படத்தை அச்சிடும் பொருட்டு – சிவகாசியிலுள்ள ராட்சஸ அச்சகமொன்றில் படையெடுத்த நாட்களும் நினைவில் நிற்கின்றன! நமக்கே அந்த டெக்னாலஜி கொஞ்சம் புதுசு என்பதால் – ‘ஆஆ‘வென்று பராக்குப் பார்த்துக் கொண்டே பணிகளின் பரிமாணத்தை உள்வாங்கிக் கொள்ள முயற்சித்தேன்! பொதுவாய் இது போன்ற பெரிய அச்சகங்களில் உள்ளே இயந்திரங்களிருக்கும் ஹால் பக்கமே யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் அந்த அச்சக உரிமையாளரோ நம்மிடம் நிறைய மிஷின்கள் வாங்கிய கஸ்டமர் என்பதால் தாராளமாய் உள்ளே போய்ப் பார்க்க அனுமதித்தார்! அந்த ராப்பர் அச்சாகிய தினம் வீட்டுக்கு ஒரு தாளை எடுத்து வந்து அதனை நடுக்கூடத்தில் தரையில் போட்டு விட்டு, நடுச்சாமத்தில் இந்தப் பக்கம் நின்றும், அந்தப் பக்கம் நகன்றும் பார்த்துப் பார்த்து ரசித்த கதையும் நிகழ்ந்தது. அவ்வப்போது இந்த நள்ளிரவு பாலே நடனத்தை நான் சோலோவாய் அரங்கேற்றுவது வாடிக்கையே என்பதால் என் இல்லாள் – “ரைட்டு… பௌர்ணமி நெருங்குதுடோய்” என்றபடிக்கு அகன்று விடுவதுண்டு! ஆனால் காலையில் எழுந்த போது எனக்கு அந்த மினுமினு ராப்பரில் லேசான நெருடல்! டைகரின் பின்னணியில் pure white பேக்கிரவுண்ட் இருப்பது போல டிசைன் செய்திருந்தோம்! ஆனால் அந்த மினுமினுப்பு effectன் மோகத்தில் ஒட்டுமொத்தமாய் போட்டுத் தாளிக்கச் செய்திருந்தேன்! காலையில் எழுந்து அதே தாளை மறுக்கா தரையில் போட்டுப் பார்க்கும் போது – “கொஞ்சம் ஓவராத் தான் போய்ட்டோமோ?‘ என்றுபட்டது! அப்புறமென்ன – இருக்கவே இருக்கிறது dust jacket! இம்முறை பின்னணியை ‘மொழுக்கடீர்‘ என்று வெள்ளையாக விட்டு, அச்சிட்டு – அரும்பாடும் நிறைய செலவும் செய்து அச்சிட்ட டாலடிக்கும் ராப்பரை கவர் செய்தோம்! இன்றைக்கு உங்களில் எத்தனை பேரிடம் இந்த dust jacket மிஞ்சியிருக்கிறதோ தெரியவில்லை; ஆனால் அன்றைக்கு எனக்கு ரொம்பவே அத்தியாவசியப்பட்ட விஷயமிது! So டஸ்ட்-கவரோடோ; இல்லாமலோ – தீவில் ஒதுங்கும் சமயம் எனது பெட்டிக்குள் ”மின்னும் மரணம்” நிச்சயமாயிருக்குமென்பேன்!

சிகப்பாய் ஒரு சொப்பனம்!

‘தளபதி‘ பையிலிருக்கும் போது – ‘தல‘ இல்லாது போவாரா- என்ன? But எனது இந்தத் தேர்வு பலருக்கு ஆச்சர்யமூட்டுவதாய் இருக்கலாம் தான்! ”சர்வமும் நானே”; ”Lion 250”; ”தீபாவளி with டெக்ஸ்” என்று பல டெக்ஸ் ஹிட்கள் இருக்கும் போது – இந்த நார்மலான ஆல்பத்தைத் தேர்வு செய்வானேன்? என்று தோன்றலாம்! சன்னமான காரணம் உள்ளது அதன் பின்னணியில்! 

நமது டெக்ஸ் கதைகளுள் செவ்விந்தியப் புரட்சி; ஆயுதக் கடத்தல் இத்யாதிகள் புதிதேயல்ல தான்! இந்த ஆல்பமுமே ஹுவால்பைகளின் தலைவனின் இரத்தவெறி சார்ந்தது என்றாலுமே – கதை துவங்கும் விதமே செம dramatic! அது மட்டுமல்லாது ரேஞ்சர்களின் முழு அணியுமே கதைநெடுக ஆரவாரமாய் – ஓவியர் மாஸ்டாண்டுவோலோவின் சிம்பிள் & neat சித்திரங்களில் மிளிர்வதை நான் ரொம்பவே ரசித்தேன்! எப்போதும் போல நேர்கோட்டுக் கதை; தெறிக்கும் க்ளைமேக்ஸ் என சலிப்பே ஏற்படுத்தாவிதத்தில் 224 பக்கங்களுக்குத் தடதடப்பதை இந்த ஆல்பத்தில் உணர முடிந்தது! இவையெல்லாவற்றையும் விடவும், இந்த ஆல்பம் எனக்கு ஸ்பெஷலாகப்படுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு! அது தான்- டெக்ஸ் கதைகளைக் கையாள்வதிலான பாணியில் நாம் கொண்டிருந்த மாற்றம்! அதுவரைக்குமான நமது முதல் இன்னிங்ஸ் டெக்ஸ் கதைகளில் – ஒரிஜினல்களின் டயலாக் பாணிகளைப் பின்பற்றியே நமது மொழிபெயர்ப்புகளும் இருந்திருந்தன! ஆனால் post 2012 – நமது வாசகவட்டம் மிகச் சிறிதே என்பதும் அந்த வட்டமானது முதிர்ந்த வாசகர்கள் நிரம்பியதே என்பதும் புரியத் தொடங்கிய போது – டெக்ஸ் கதைகளைக் கொஞ்சம் வித்தியாசமாய்க் கையாண்டால் தேவலாமோ? என்று எனக்குத் தோன்றத் தொடங்கியது! வலைப்பதிவில் உங்களோடு நான் செய்யத் துவங்கியிருந்த interactions இதற்கொரு முக்கிய க்ரியா ஊக்கி என்பேன்! எது எப்படியோ- TEX the hero-வுக்கு வரிகளில் அழுத்தமும்; கார்சனுக்கு சகஜமான humour-ம்; அதே சமயம் தன் நண்பன் மீது அசாத்திய பிணைப்பு உள்ள விதமாய் டயலாக்குகள் இருந்தால் – அந்த வன்மேற்கின் வறண்ட களங்களை இன்னும் சுவாரஸ்யமாக்கிடலாமோ என்று பட்டது! So முதன் முறையாக கதையின் முக்கியப் பகுதிகளில் டெக்ஸ் & கார்சனின் வரிகளைத் தனியாக எழுதும் பணி / பாணி தொடக்கம் கண்டது இந்த ஆல்பத்திலிருந்தே!

- Tex : குறைந்துள்ளது உன் முடியின் நிறம் தானே தவிர, உன் நெஞ்சின் உரமல்ல நண்பா!

- Tex : மிகப் பணிவாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவெனில் - உயிரை பணயம் வைப்பது எங்களுக்கு ஒரு உற்சாகமான பொழுதுபோக்கு!

கார்சன் (மைண்ட் வாய்ஸ்) : ஆங்! பொழுது போகவில்லையெனில் போக்கர் ஆடிவிட்டுப் போவது தானே?

- கிட் வில்லர் : அங்கிளின் பசி ரொம்பப் பிரசித்தமானது! செய்தி எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் சுக்காவில் குறை வைக்க மாட்டார்!

 - கார்சன் : விரியன் பாம்புகளுக்கிடையே வெறும் காலோடு நடந்து செல்வதில் உள்ள ஆபத்து இதில் உண்டல்லவா?

Tex : நம்மைக் கிளர்ந்தெழச் செய்வதே ஆபத்தின் நெடி தானே தோழா?

 - கார்சன் : என்றைக்காவது ஒரு நாள் உன் தந்தையை ஓங்கி மண்டையில் நான் ஒரு போடு போட்டால்- ஏன், எதற்கென்று கேள்வி கேட்கக் கூடாது! புரிந்ததா?

கிட் வில்லர் : அதற்குள் டாடி உங்கள் மீசையினை, பூட்ஸ் கயிற்றோடு முடிச்சுப் போட்டிருப்பாரே அங்கிள்? பரவாயில்லையா?
------------------------------------------------------------------------------------------------------------
இது மாதிரியான டயலாக்குகளை கதையின் ஒரு ஓட்டத்துக்குப் பயனாகும் உத்தியாக நான் கையிலெடுக்கத் தொடங்கியது சி.ஒ.சொ. முதலாய் தான்! “எக்ஸ்ட்ரா நம்பர் கேட்டேனா?” என்று நண்பர்களுள் சிலர் கேள்வியெழுப்புவது நிச்சயம் என்பது புரியாதில்லை! 'ஒரிஜினல் வரிகளை ‘சிவனே‘ என்று அப்படியே போட்டுப் போக வேண்டியது தானே?' என்று அவர்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது! ஆனால் மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகளே ஒவ்வொரு ஆக்கமும் எனும் போது – அவற்றை இக்ளியூண்டு கலர்புல்லாக்கிட இது பிரயோஜனப்படுவதாய் நான் பார்க்கிறேன்! Anyways – இந்த இதழ் முதலே டெக்ஸ் & கார்சன் டயலாக்குகளில் ஒரு பன்ச்; கொஞ்சம் கலாய்ப்பு; நிறைய நேசம் என்று அலங்கரிக்க முயன்று வருகிறோம் ! அதற்கு பிள்ளையார் சுழி போட உதவிய இதழ் என்ற வகையில் “சிவப்பாய் ஒரு சொப்பனம்” எனது பயணப் பைக்குள் இடம்பிடிப்பது உறுதி!

ஆகாயத்தில் அட்டகாசம் !

மறுபடியும் ஒரு புருவத்தை உயரச் செய்யும் தேர்வு தான் guys!! ப்ளுகோட் பட்டாளத்தின் நம்மிடையிலான அறிமுகம் இந்த இதழ் மூலமாகத் தான்! நிஜத்தைச் சொல்வதானால் இந்த ஜோடியின் கதைகளை முயற்சித்துப் பார்க்கலாமே என்று நண்பர் ரபீக் & இன்னும் சிலர் என்னிடம் சென்னையிலோ; பெங்களுரிலோ சொல்லியிருந்த போதெல்லாம் நான் தயக்கத்தையே பதிலாக்கியிருந்தேன். Oh yes – இன்றைக்கும் இந்த ஜோடியை நம்மில் ஒரு பகுதி வாசகர்களே ஏற்றுக் கொண்டுள்ளனர்; இன்னமுமே நிறையப் பேருக்கு இவர்களை அத்தனை பிடிக்கவில்லை தான்! ஆனால் Cinebook இவர்களது கதைகளை இங்கிலீஷில் வெளியிட உள்ள தகவலும்; ஆங்கில மொழிபெயர்ப்பின் ஒரு அட்வான்ஸ் பிரதியும் படைப்பாளிகளிடமிருந்து நமக்குக் கிடைத்திருந்தது. “சிறைக்குள் சடுகுடு” கதையின் இங்கிலீஷ் ஒரிஜினலது! அதைப் படித்துப் பார்த்த போது – ”முயற்சித்தால் தப்பில்லை!” என்றுபட்டது! அப்புறமாய் நெட்டில் இந்தத் தொடரின் இதர ‘ஹிட்‘ கதைகளைப் பற்றிய தேடலைச் செய்த போது, ஒரு பெல்ஜிய ரசிகையின் பரிச்சயம் கிட்டியது! அவரொரு diehard ப்ளுகோட் விசிறி! தொடரில் வெளிவந்துள்ள ஒட்டுமொத்த ஆல்பங்களையும் கரைத்துக் குடித்தவர்! அவரிடமே இந்தக் கேள்வியை முன்வைத்தேன் – “ஒரேயொரு ப்ளுகோட் கதையை மட்டும் பயணத்தின் போது கையில் எடுத்துப் போக முடியுமென்றால் எதைத் தேர்வு செய்வீர்களோ?” என்று! தயக்கமின்றி – ”ஆகாயத்தில் அட்டகாசம்” என்ற பெயரில் நாம் வெளியிட்ட கதையின் ஒரிஜினல் பிரெஞ்சுப் பெயரைக் குறிப்பிட்டு மெயில் அனுப்பியிருந்தார். இந்தக் கதையின் ஆங்கில version எனக்கு எப்படியோ கிட்டியிருந்தது (scanlation ? cinebook ?) என்பதால் அதைப் படித்த கணமே ‘டிக்‘ போட்டு விட்டேன் – இந்தப் புது வரவுகளை அறிமுகம் செய்திட இது உருப்படியான ஆல்பமே என்று! 

எழுதத் தொடங்கும் போது – சுத்தமான தமிழா? பேச்சு வழக்குத் தமிழா? என்ற கேள்வி எழுந்தது! இரண்டு மாதிரியும் முதல் 4 பக்கங்களை எழுதி, டைப்செட்டும் செய்து படித்துப் பார்த்த போது – சுத்தத் தமிழ் சுகப்படுவது போலத் தெரியக் காணோம்! பேச்சுவழக்கே ஓ.கே. என்ற மட்டில் வண்டியை ஓட்டத் துவங்க – சிறுகச் சிறுக அந்தக் கதைகளத்துக்குள் ஐக்கியமானேன்! அதுவரையிலும் லக்கி லூக் & சிக் பில் தான் நமது கார்ட்டூன் பட்டியலில் heavyweights எனும் போது இந்தப் புதுப்பாணி கார்ட்டூனுக்குப் பேனா பிடிப்பது வித்தியாசமான அனுபவமாய் இருந்தது. ஓவராக slapstick காமெடியாக எழுதிடவும் கூடாது; காமெடி வறட்சியும் தட்டுப்பட்டு விடக் கூடாது என்று மனதில பட, தத்தா-பித்தாவென்று தட்டுத்தடுமாறி manage செய்த இதழ்! And கதையைப் பொறுத்தவரை மெய்யாகவே அந்த பலூனில் வேவு பார்க்கும் பாணி; ஸ்கூபியும், ரூபியும் மேலே-கீழே என்று அடிக்கும் கூத்துக்கள்; கோமாளித்தனமான இராணுவ கர்னல்கள் என்று ரசிக்க ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருப்பதாய் எனக்குத் தோன்றியது! அதிலும் அந்த அரை லூசு கர்னல் ஸ்டார்க் கதையின் மூன்றாவது ஹீரோவாக என் கண்களுக்குத் தோன்றினார்! பலூனின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொண்டே “சார்ஜ்ஜ்ஜ்” என்று முழங்கும் மனுஷனை என்னவென்பது? ரொம்பவே மாறுபட்ட காமெடி என்ற காரணத்தினால் எனது பைக்குள் இந்த இதழுக்கும் ஒரு ஓரமிருக்கும்!

 ஆதலினால் அதகளம் செய்வீர் !

லார்கோ தொடரில் ஒவ்வொரு கதையுமே ஒவ்வொரு விதத்தில் மாஸ் ஹிட் தான் என்றாலும் – என்னைப் பொறுத்தமட்டில் நண்பன் சைமனுக்காக பர்மாவின் கானகத்தினுள் லார்கோ செய்யும் அதகளம் a class apart! Oh yes – NBS-ல் வெளியான கான்க்ரீட் கானகம் நியூயார்க் ஆல்பமும் ஒரு அட்டகாச த்ரில்லரே; “துரத்தும் தலைவிதி” செம racy சாகஸமே! ஆனால் கோடீஸ்வரக் கோமகன் அந்தப் பெருநகரங்களிலிருந்து வெளியேறி வனாந்திரத்தில் சுற்றித் திரிவதில் ஒரு இனம் சொல்லத் தெரியா த்ரில் இருப்பதாய் எனது அபிப்பிராயம்! பற்றாக்குறைக்கு கதை நெடுக சைமன் வளைய வருவது கதையை இலகுவாக்கிட உதவியதென்பேன்! And அந்த க்ளைமேக்ஸில் அரங்கேறிடும் action sequences – ஜேம்ஸ் பாண்ட் பாணிக்குத் துளி கூடக் குறைச்சலில்லாதது தானே guys? வழக்கமாய் கதையில் கவர்ச்சிக்கோசரம் பெண்கள் தலைகாட்டுவது வாடிக்கை; ஆனால் இந்த ஆல்பத்தில் லார்கோவோடு தோள் சேர்த்து நிற்கும் மாலுனாய் ரொம்பவே வலுவானதொரு கதாப்பாத்திரம்! மெலிதான காதல்; கடமையுணர்வு; தேசபக்தி என்று அவருக்குக் கதாசிரியர் தந்துள்ள வர்ணங்கள் எக்கச்சக்கம்! நாம் ரசிக்கும் கதைகளை மொழிபெயர்ப்பது எப்போதுமே ஒரு ஜாலியான அனுபவம்! அந்த வகையிலும் இந்த ஆல்பம் சார்ந்த என் நினைவுகளில் சகலமும் சந்தோஷமானவை! Icing on the cake – இந்த ஆல்பத்தின் பின்பகுதியில் வெளிவந்திருந்த 7 பக்க லக்கி லூக் சாகஸத்தை மொழிபெயர்த்தது ஜுனியா எடிட்டர்! அது மிதமோ – சொதப்பலோ – அன்றைக்கு எனக்கு அசாத்தியமாய்த் தென்பட்டதென்னவோ – நிஜமே!

 நிஜங்களின் நிசப்தம் !

‘ஙே‘ என்று சிலரையும்; ‘ஙே...ஙே...ஙே...‘ என்று பலரையும் கிறுகிறுக்கச் செய்த இந்த கிராபிக் நாவல் இல்லாது எனது பயணப்பை முழுமை காணாது! வெகு சமீப இதழ் என்பதால் எக்கச்சக்க அலசல்கள் இதன் மீது அரங்கேறி விட்டன என்ற போதிலும் இது பற்றியும் லேசாகவேணும் எழுதாது விட மனதில்லை! நான் சிறுவயதில் ரசித்துப் படித்த War Comics இதழ்கள் தான் காரணமாவென்று சொல்லத் தெரியவில்லை; ஆனாலும் உலக யுத்தங்கள் சார்ந்த தகவல்கள்; நிகழ்வுகள்; கதைகள் மீது எனக்கு எப்போதுமே எக்கச்கக்க அபிமானமுண்டு! மிஷினரி தொழில் காரணமாய் ஒரு காலகட்டத்தில் கிழக்கு ஐரோப்பாவுக்கு அடிக்கடி பயணிக்க வேண்டியதிருந்துள்ளது! செக் குடியரசு; போலந்து; கிழக்கு ஜெர்மனி; ரஷ்யா ஹங்கேரி என்று முன்னாள் கம்யூனிஸ்ட் நாடுகளுக்குள் கால்பதிக்கும் போதெல்லாம் வரலாற்றின் ஒரு பக்கத்துக்குள் நுழைந்து பார்ப்பது போலொரு உணர்வு எழும்! ஊர்களில் ஒரு மெல்லிய சோகம் கப்பிக் கிடப்பது மாதிரியே எனக்குத் தோன்றும். அங்கே கொஞ்சமாய் ஓய்வு நேரம் கிடைத்தால் – போரில் சிதிலமடைந்த தேவாலயங்கள்; கைதிகளை அடைத்துப் போட்ட கொட்டடிகள் போன்ற landmark-களை மௌனமாய்ப் பராக்குப் பார்த்து நிற்பேன்! So யுத்தம்... அது சார்ந்த இருண்ட நாட்கள் என்றாலே எனக்கொரு soft corner உண்டு! கதைத் தேர்வுகளின் போது அந்த ரசனை என்னையுமறியாது கலந்துவிடுவது உண்டு தான்! “விண்ணில் ஒரு வேங்கை” போன்ற விளக்குமாற்றுச் சாத்து அனுபவங்கள் அரங்கேறினாலும் எனக்குள்ளிருக்கும் அந்த noir tales-களின் ரசிகன் முழுசுமாய் ஜகா வாங்குவதில்லை! அந்த விதத்தில் “நிஜங்களின் நிசப்தம்” எனக்கு செம பிடித்தமானதொரு ஆல்பம் ! அதில் பணியாற்றியது; கதைப் பின்னணிகள் என்று நிறையவே பேசிவிட்டேன்! So மேற்கொண்டும் அதையே மறுஒலிபரப்பு செய்யப் போவதில்லை! ஆனால் இந்தக் கதைக்கு இன்னுமொரு காரணமும் உண்டு – எனக்கு ரொம்பப் பிடித்தமானதாய் அமைந்து போக! அது 2013 வரை பின்னே போகுமொரு காரணம் & அதனில் ஒரு முக்கிய பங்குண்டு உங்களுக்குமே! என்றேனும் ஒரு சந்திப்பின் போது அது பற்றிச் சொல்கிறேன்!

சரி, நீண்டு செல்லும் பதிவுக்கு இங்கே தற்காலிக ‘சுப மங்களம்‘ போட்ட கையோடு கிளம்புகிறேன் folks! Top 12-ல் அடுத்த அரை டஜன் பற்றி அடுத்த வாரம் ! அதற்கு மத்தியில் நீங்களும் ஒரு பயணப் பையை ‘பேக்‘ செய்து ஒத்திகை பார்க்கலாமே – யாருக்கு எது அத்தியாவசியப்படுகிறது? என்ற ஆராய்ச்சிகளோடு!

Before I sign off - இதோ - ஜூன் மாதத்து டெக்சின் அட்டைப்பட முதல் பார்வை ! நம் ஓவியரின் பெயின்டிங் இது - போனெல்லியின் போஸ்டர்களில் ஏதோவொன்றின் inspiration-ல் ! And கதையைப் பொறுத்தவரை அனலாய்ப் பொரிந்து தள்ளப் போகும் அக்மார்க் த்ரில்லர் இது ! ஒரு ஸ்டேஜ் கோச் பயணம் ; நம்மவர்களின் entry ; அதகள ஆக்ஷன் ; தெறிக்கும் கிளைமாக்ஸ் என்று ஒரு full meals காத்துள்ளது guys !! அப்புறம் ரொம்ப நாட்களுக்குப் பின்னே ஓவியர் காலப்பினியின் clean ஓவிய பணிகளோடு டெக்ஸ் & கார்சன் செம handsome ஆகத் தோன்றுவதாக  எனக்குப்பட்டது ! நடமாடும் நரகம் - a fireball !! Bye guys! See you around!

Tuesday, May 15, 2018

RIP...!!

நண்பர்களே,

வணக்கம். ஒரு சகாப்தம் நேற்றோடு வரலாற்றின் ஒரு  நிரந்தர பக்கமாக உருமாறி விட்டது ! தனது ௮௨ -வது வயதில் ஜாம்பவான் ஓவியரான திரு.வில்லியம் வான்ஸ் அமரராகி விட்டார் ! ௨௦௦௭ முதலே ஒய்வு நாடி பணிகள சகலத்துக்கும் விடை கொடுத்தவர் ஸ்பெயின் தேசத்தின் சிறியதொரு கிராமத்தில் குடியேறினார் ! பார்க்கின்சன் எனும் வயோதிகம் சார்ந்த சுகவீனம் அவரது நடமாட்டத்தை கட்டுப்படுத்திட - யாரையும் சந்திப்பதை தவிர்த்து வந்தார் ! நேற்றைக்கு கதவைத் தட்டியது காலன் எனும் போது அந்த அழைப்பை ஏற்காது போக முடியுமா - என்ன ?

பிரான்க்கோ பெல்ஜிய காமிக்ஸ் படைப்புலகின்  மறக்க முடியா இந்த மாமனிதரை நமக்கு ௧௯௮௬ முதற் பரிச்சயம் - இரத்தப் படலம் வாயிலாக !! பின்நாட்களில் சில ப்ரூனோ பிரேசில் ; ரோஜர் சாகஸங்கள் ; ஒன்றிரு மார்ஷல் டைகர் சாகஸங்கள் வாயிலாக திரு.வான்சின் ஒவிய ஜாலங்களை நாம் பார்த்திருப்பினும் - அந்த XIII தொடரின் அசாத்தியமே நமக்கெல்லாம் திரு.வான்ஸ் அவர்களின் நீங்கா நினைவுகளாய் அமைந்து போயின ! இன்னும் ஒரு நூறு வெற்றித் தொடர்கள் வெளிவந்து, ஒரு நூறு அட்டகாச ஓவியர்கள் நம் முன்னே அணிவகுத்தாலும் , திரு வான்ஸ் நம்மில் ஏற்படுத்திய தாக்கங்களின் உயரத்தை வேறு யாருமே தொட்டிட முடியுமென்று எனக்குத் தோன்றிடவில்லை !! நிம்மதியாய்த் துயிலுங்கள் சார் !!

உங்களின் நினைவை நம்மிடையே போற்றும்  விதமாய் உங்களின் படைப்புகளில், நாம் இதுவரை ரசித்திரா  ஏதேனும் ஒன்றை ௨௦௧௯-ல் நிச்சயமாக வெளியிடுவோம் !! 


Saturday, May 12, 2018

இன்னொரு வாரயிறுதி....!!

நண்பர்களே,

வணக்கம். மே மாத இதழ்களை சடுதியில் நாங்கள் அனுப்ப ; ஜல்தியாய் அவற்றை நீங்கள் படிக்க ; அப்புறம் சட்டுபுட்டுன்னு இங்கே விமர்சித்து முடிக்க – இதோ மாதத்தின் மத்திமப் பொழுதில் கொட்டாவிகள் விட்டம் வரை விரிவதை உணர முடிகிறது ! இந்தக் கூரியர் கட்டணங்கள் மாத்திரம் குடலைப் பதம் பார்க்காது இருப்பின் – மாதத்தின் துவக்கத்தில் இரண்டு ; நடுவாக்கில் இரண்டு என நமது இதழ்களைப் பிரித்து அனுப்புவது சாத்தியமாகியிருக்கும் ! உங்களுக்கும் ஒரே சமயத்தில் திகட்டத் திகட்ட 4 புத்தகங்களைக் கையில் ஏந்தியபடியே, எதை - எப்போது படிப்பதென்ற குழப்பங்களிராது ! ஆனால் தண்டமாய் ஆண்டுக்கொரு மூன்று இலட்சத்தை, இரட்டைக் கூரியர்களுக்கென விரயம் செய்வதில் யாருக்கும் துளி ஆதாயமுமில்லை என்பதால் பெருமூச்சு விட்டபடிக்கே நகர வேண்டியுள்ளது ! கைக்குச் சிக்கும் பிரவுன் தாளைச் சுற்றி ஒரு பாக்கெட் போட வேண்டியது ; நாலாபக்கமும் ஒரு நூலைச் சுற்ற வேண்டியது ; 4 ரூபாய்க்கு ஸ்டாம்பை ஒட்டி புக்-போஸ்டில் போட்டால் டெஸ்பாட்ச் வேலை முடிந்தது! என்றிருந்த அந்நாட்கள் மனதில் நிழலாடுவதே இந்தப் பெருமூச்சின் பின்னணி ! போகிற போக்கில் – back to the past என்று திட்டமிட்டாலும் தப்பில்லை போலும் !

"நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு? திடீர்னு ரிவர்ஸ் கியர் ரோசனை ஏனோ ?" என்று புருவங்கள் உயரலாம் தான் ! Don’t take me serious guys – ஆற்றமாட்டாமைக்கு உரக்கப் புலம்ப மட்டுமே செய்கிறேனே தவிர்த்து – மெய்யாகவே backpedal செய்யும் உத்தேசமெல்லாம் இல்லை ! எத்தனை பேர் கவனித்தீர்களோ தெரியாது – ஆனால் கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்க டாலரின் மதிப்பு பிட்டத்தில் தீப்பந்தத்தை உரசி விட்டது போல பரபரவென மேல்நோக்கிப் பாய்ந்து வருகிறது ! நமது பணம் ரூ.65-க்கு ஈடாக ஒரு டாலர் என்றிருந்த கணக்கு – திடுதிப்பென ரூ.68-ஐ தொட்டுப் பிடிக்க பறந்து கொண்டிருக்கிறது ! ”டாலர் ஏறுது!” என்று லேசாய் செய்தி பரவத் தொடங்கியது தான் தாமதம் – பேப்பர் விற்பனையாளர்கள் அத்தனை பேரும் குலசாமிகளுக்கு கிடா வெட்டிப் படையல் போட்ட குஷியில், "அட்ரா சக்கை; அட்ரா சக்கை” என்றபடிக்கே தங்கள் கைவசமுள்ள சரக்கு ; வந்து கொண்டிருக்கும் சரக்கு ; வீட்டுக் கொல்லைப்புறத்தில் கிடந்திருக்கக் கூடிய சரக்கு என சகலத்தையும் விலையேற்றம் செய்து விட்டார்கள் ! GST அறிவிக்கப்பட்ட மாதத்திலிருந்து இன்றைய நடப்பு விலைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் டன் ஒன்றுக்கு ஆர்ட் பேப்பர் மாத்திரமே ரூ.10,000/- கூடியுள்ளது ! “அட… நாங்க மட்டும் என்ன தத்திகளா ?" என்றபடிக்கே உள்ளுர் பேப்பர் மில்களும் ஒன்றுகூடி கும்மியடித்து வருகின்றன ! So ஆர்ட் பேப்பர்; வெள்ளைத் தாள் ; அட்டை என சகலமும் அனல் பறக்கும் விலைகளில் தகிக்கத் துவங்கிவிட்டன  !

டாலர் கூடி விடும் போது – பேப்பர் மட்டுமன்றி, பிரிண்டிங் இங்க் ; இன்ன பிற உட்பொருட்களும் இஷ்டத்துக்குக் குதியாட்டம் போடத் தொடங்கியும் விடும் ! ராயல்டி கட்டணங்களுமே நமது ரூபாய் மதிப்பில் ‘டப்‘பென்று உசந்து விடுமெனும் போது – மாதந்தோறும் பட்ஜெட்டில் விழும் துண்டு / பாய் / ஜமுக்காளம் செம பெருசு ! ஏற்கனவே  நமது ஆண்டுச் சந்தாக் கட்டணங்கள் ‘கிர்‘ரென்று எகிறி நிற்கும் சூழலில் – இந்த விலையேற்றங்களை உங்கள் தலையில் தூக்கி வைக்கவும் பயமாகவுள்ளது. So பழைய பாணிகளை நோக்கிப் பெருமூச்சு விட்டபடிக்கே தலையை பிறாண்டத் தான் தோன்றுகிறது ! ஒன்று நிச்சயம் guys: ஹார்ட் கவர் ; ஜிகினா வேலைகள் ; 'அட...கலரில் பார்ப்போமே !' என்ற சும்மாக்காச்சும் ஆசைகளெல்லாம் வரும் காலங்களில் பின்சீட்டுக்குப் போயிட வேண்டி வரும் போலும் ! இயன்ற மட்டிலும் செலவுகளைக் குறைக்க முயற்சிக்காது போயின் – சிரம நாட்கள் நிறையவே காத்திருக்கும் தான் !

Oh yes – டெக்ஸ் கதைகளைக் கலரில், கம்ப்யூட்டர் ஸ்கிரீன்களில் பார்க்க முடிகின்ற போது எனக்குமே அதே அழகில் அவற்றை நமது இதழ்களிலும் கொணரும் ஆசை அலையடிக்கிறது தான் ! ஆனால் பட்ஜெட்டில் எகிறும் தொகைகளைச் சமாளிக்க சூப்பர் ஹீரோ சக்திகள் தேவைப்படும் போலும் ! So விற்பனை எண்ணிக்கையானது தற்போதுள்ள சிறுவட்டத்தைத் தாண்டி விரிவடையும் வரையிலாவது ‘சிக்கனம்‘ என்ற தாரக மந்திரத்தை நினைவில் கொண்டிட வேண்டும் போலும் ! 

“அட… ஞாயிற்றுக்கிழமை ஜாலியாகப் பதிவைப் படிக்க வந்தாக்கா ஒப்பாரி வைக்கிறானே?” என்று தோன்றினால் sorry for that guys…! ஆனால் கடந்த 2 நாட்களாய் பேப்பர் வியாபாரிகளோடு கெஞ்சிக், கூத்தாடிப் பார்த்து அலுத்தே போய் விட்டது ! அந்த அயர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே இந்தப் புலம்பல் படலம் !

புலம்பல்ஸ் apart – தற்போதைய நமது ஆல்பங்களில் கார்ட்டூன் தொடர்களைத் தவிர்த்து வேறு ஆக்ஷன் நாயகர்களின் கதைகளுக்கு கலர் எத்தனை தூரம் அவசியமென்று லேசாய் யோசித்துத் தான் பாருங்களேன் ? கார்ட்டூன்களுக்கு வண்ணம் அத்தியாவசியமோ - அவசியம் என்பதில் சந்தேகம் நஹி ! ஆனால் ஒரு வேய்ன் ஷெல்டனுக்கோ ; ஒரு கமான்சேவுக்கோ ; ஒரு ட்யுராங்கோவுக்கோ black & white போதாதா ? அல்லது கலரில் பார்த்துப் பழகியான பின்னே b&w-ல் பார்ப்பது என்பதெல்லாம் அந்நாட்களது தூர்தர்ஷன் டி.வி.யைப் பார்த்தது போலத் தானிருக்குமா ? இதுவொரு மந்தகாச மதியப் பொழுதில் எழுந்த சிந்தனை மாத்திரமே தவிர – எவ்விதத் தீர்மானமுமில்லை ! So ”2019-ல் அத்தனை பயல்களும் கருவாடாய் காய்ஞ்சு கறுப்புலே தான் வரப் போறானுவ!” என்று சைரனை ஒலிக்கச் செய்யத் தேவைகளில்லை ! எங்கே கலர் அத்தியாவசியம் ? எங்கே அதுவொரு ஆடம்பரம் ? என்ற ரீதியில் உரக்க அலச மட்டுமே முற்பட்டு வருகிறேன் !

And இந்த வாரத்துப் பேப்பர் ஸ்டோர் லடாய்க்கு மத்தியில் நமது இரவு கழுகாரின் கதைக் களஞ்சியத்தினுள் துளாவும் வேலையைச் செய்திட முயற்சிக்கவும் செய்தேன் ! இந்த 70 வருட சகாப்தத்தின் கதைக் கிட்டங்கியினுள் புகுவது ; கதைகளின் one-liner கருக்களை வாசிப்பது ; அட்டைப்படங்களை வாய் பார்ப்பது ; அப்புறமாய் அவற்றின் விமர்சனங்களைத் தேடி அங்குமிங்கும் ஆராய்ச்சி செய்வதென்பது தலைநோவுகளுக்கு ஒரு சூப்பர் மருந்து ! அதிலும் பெரியவர் போனெல்லியின் ஆரம்ப நாட்களது டெக்ஸ் கதைகளை உருட்டும் போது கண்ணில் படும் diverse கதைக்களங்கள் வாய்பிளக்கச் செய்யத் தவறுவதேயில்லை ! அப்படியே நகன்று அவரது மகர் போனெல்லியின் படைப்புகள் ; கதாசிரியர் க்ளாடியோ நிஸ்ஸியின் ஆக்கங்கள் ; நடப்பு எடிட்டர் போசெல்லியின் காவியங்கள் என்று ரவுண்ட் அடிப்பது அயர்ச்சிகளைப் போக்கும் மாயாஜால ஆற்றல் கொண்ட routine ! அதிலும் ஒரு சில குறிப்பிட்ட ஓவியர்களோடு கதாசிரியர்களுக்கு set ஆவதும், அந்தக் கூட்டணியில் சில பல க்ளாசிக் ஹிட் கதைகள் பிரவாகமெடுத்திருப்பதையும் பார்க்கும் போது கற்பனைகளின் வல்லமையும், கடவுள் தந்த ஓவிய வரமும் இணைந்திடும் போது தொட சாத்தியமாகும் உயரங்களை நினைத்து பிரமிக்காது இருக்க முடியாது ! அங்குமிங்குமாய் நிறைய டெக்ஸ் ரசிகத் தளங்களில் உருட்டும் போதெல்லாம் – டெக்ஸின் Top கதைகளாக மக்கள் எதைக் கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்க்கும் ஆவல் தான் பீறிடும் ! என் கண்ணில் பட்ட மட்டிலும், அந்த உச்ச லிஸ்டில் தவறாது இடம் பிடிக்கும் கதைகள் 2 ! முதலாவது “கார்சனின் கடந்த காலம்” ; மற்றது – “கழுகு வேட்டை”! இந்த இரண்டையுமே நாம் வெளியிட்டு விட்டோம் எனும் போது – அந்தப் பட்டியலில் இடம்பிடிக்கக் கூடிய இன்னும் சில சாகஸங்களை ஆராய்ச்சி செய்ய முனைந்தேன் ! மெபிஸ்டோ தலைகாட்டும் த்ரில்லர்கள் ; யமா மிரட்டும் ஆல்பங்கள் என அவற்றுள் சில இருப்பதைப் பார்க்க முடிந்தது ! இந்த “காதுல பூ” கதை பாணிகளுக்கு நம்மிடையே அத்தனை பெரிய ரசிக வட்டமில்லை என்பதை சமீபத்து “க்யூபா படலம்” வாங்கிய சாத்துக்கள் தெளிவாகச் சொல்வதால் – அவற்றைத் தாண்டியே எனது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தேன் ! கண்ணில் பட்டவை :
  • -வரிசையாக சில அதிரடி 110 பக்க சிங்கிள் ஆல்பங்கள் !
  • - மிரட்டலாய் சில 300+ பக்க சாகஸங்கள் !
  • - டெக்ஸின் ப்ளாஷ்பேக் சாகஸங்கள் !
  • - டெக்ஸ் கம்பி எண்ணும் சாகஸம்….!
  • - கார்சன் களி சாப்பிடும் சாகஸம்…!

ஒரு தளத்திலோ – ”என் படகு குடை சாய்ந்து ஒரு ஆளில்லா தீவில், ஒதுங்கும் நிலை நேரிட்டால் – நான் கையோடு எடுத்துப் போக விரும்பும் காமிக்ஸ்கள்” என்றொரு பட்டியலைப் போட்டு, அதனில் மானாவாரியான டெக்ஸ் சாகஸங்களைப் பட்டியலிட்டுள்ளார் ! ‘அட…. இது கூட புது மாதிரியா இருக்கே !!‘ என்று தோன்றிட – அந்தக் கதைகள் எவையோ என்ற curiosity எனக்குள் !! தற்சமயம் அவற்றின் மீதான ஆராய்ச்சி தான் ஓடிக்கொண்டுள்ளது என்பதால், பொழுது செம சுவாரஸ்யமாய் ஓடி வருகிறது !  Of course 2019 -ன் அட்டவணைக்கு இது ரொம்பவே early என்பதால் இப்போதைக்கு ஜாலியாய் கதை படிக்கும் படலம் தான்  ! ஒன்றே ஒன்று மட்டும் சர்வ நிச்சயம் :  எதில் எதிலோ ஆராய்ச்சி செய்வோர் - 70 ஆண்டுகளாய் சிலபல தலைமுறைகளை மெய்மறந்து போகச் செய்துள்ள இந்த இரவுக் கழுகாரின் கதைகளைப் பற்றி ஒரு டாக்டரேட் ஆய்வு செய்ய முன்வந்தால் – செம சுவாரஸ்ய அனுபவங்கள் காத்திருக்கின்றன !!

மண்டைக் குடைச்சலுக்கு, டெக்ஸ் களஞ்சியத்தில் சன்னமாய் நிவாரணம் தேடிக் கொண்ட கையோடு ஜுன் பக்கமாய் பார்வையினை ஓடச் செய்தால் நமது கோடீஸ்வரக் கோமகன் காத்திருப்பது புரிகிறது ! “பிரியமுடன் ஒரு பிரளயம்” – லார்கோ வின்ச் தொடரில் ஒரு முக்கிய தருணம் ; simply becos அதன் ஜாம்பவான் படைப்பாளியான ஷான் வான் ஹாம் இந்த ஆல்பத்தோடு விடைபெற்றுக் கொள்கிறார் ! லார்கோவின் அடுத்த சுற்றில் ஓவியரே பிரதான பொறுப்புகளைச் சுமக்கத் துவங்குகிறார் – எரிக் கியாகோமெட்டி என்றதொரு நாவலாசிரியரின் சகாயத்தோடு ! So இறுதி முறையாய் வான் ஹாம் + லார்கோ என்ற கூட்டணியை நமக்குக் கண்ணில் காட்டும் வகையில் இந்த ஆல்பம் ஸ்பெஷல் என்பேன் ! அது மட்டுமன்றி – இந்த ஆல்பமானது லார்கோவின் காரியதரிசியான கிழட்டு பென்னிவிங்கிளுக்கும் சரி ; லார்கோவின் குழும இரண்டாவது ‘தல‘யான ட்வைட் கோக்ரேனுக்கும் சரி, ரொம்பவே ஜாலிலோ ஜிம்கானா சாகஸம் ! இருவரையும் இது வரைக்கும் பார்த்திரா ஒரு புது பாணியில் இந்த ஆல்பத்தில் காணலாம் ! கதையைப் பொறுத்தவரை அது இம்முறை மையம் கொள்வது இலண்டன் மாநகரில் ! எப்போதும் போல பரபரவென சீறிடும் ஆல்பமிது என்பதால் மொழிபெயர்ப்பதில் துளியும் தொய்வு தோன்றிடவில்லை ! சொல்லப் போனால் பேனா பிடிப்பதை விட, கையில் கத்திரியோடு டெய்லர் வேலை பார்ப்பதே இங்கே சவாலான பணியாக இருந்தது எனக்கு !

And இதோ இதன் அட்டைப்பட முதல் look ! நமது டிசைனர் பொன்னனின் கைவண்ணமிது ! 


ஒரிஜினல் டிசைனின் சித்திரத்தையே எடுத்துக் கொண்டு பின்னணியில் ஜாலங்கள் செய்திருப்பதை பாருங்களேன்! உட்பக்கப் preview ஒன்றுமே இங்குள்ளது – அந்தப் பரிச்சயமான சித்திர பாணிகளை ; கலரிங் அற்புதங்களை highlight செய்திட ! “பிரியமுடன் பிரளயம்” –a visual delight - சீக்கிரமே உங்கள் கரங்களில்!
Before I sign off – “இரத்தப் படலம்” & “டைனமைட் ஸ்பெஷல்” பற்றி ! “இ.ப.“ அட்டைப்பட டிசைனிங் பணிகள் நிறைவடையும் நிலையிலுள்ளன ! மூன்று புக்குகளுக்குமே வில்லியம் வான்சின் ஒரிஜினல் சித்திரங்களே ராப்பர்கள் என்பதால் - ஜாஸ்தி நோண்டல்ஸ் இன்றி ஒரிஜினல் feel சகிதம் ராப்பர்கள் இருந்திடும் ! சிற்சிறு நகாசு வேலைகள் மட்டும் செய்த கையோடு 3 பாகங்களது அட்டைப்படங்களும் அச்சுக்குச் செல்லத் தயாராகி வருகின்றன ! And புக் # 1 உட்பக்கங்களும் தொடரும் நாட்களில் அச்சாகவுள்ளது ! மீத 2 புக்குகளுமே இறுதிக்கட்டப் பிழைதிருத்தப் பணிகளில் இருப்பதால் – எப்படியேனும் மே இறுதிக்குள் அவற்றையும் அச்சுக்குத் தயாராக்கும் நம்பிக்கையோடு ஓடிக் கொண்டிருக்கிறோம்! அப்புறமுள்ளது அந்த slipcase மீதான பணிகள் !!

டைனமைட் ஸ்பெஷல்” பொறுத்தவரை – 400+ பக்கங்கள் டைப்செட்டிங் முடிந்திருக்க – இன்னுமொரு 375+ பக்கப் பணிகள் பாக்கி ! மொத்தமாய் 777 பக்கங்களையும் தூக்கிக் கொண்டு எங்கேனும் செல்போன்கள் இல்லா தீவுக்குப் படையெடுத்தால் மட்டுமே இவற்றை எடிட் செய்து புக்காக்கிட முடியுமென்று தோன்றுகிறது ! நேர்கோட்டுக் கதைகள் ; நம்மவரின் பரபர பாணிகள் ; மூக்கைத் தொட மூணாறு வரைக்கும் பயணிக்கும் அவசியங்களை இவை ஏற்படுத்தாது என்றாலுமே – பணியின் அந்த sheer பருமன் இப்போதே மூச்சிரைக்கச் செய்கிறது ! ‘சிவனே‘ என்று இந்த ‘தல‘ ஸ்பெஷலை போனெல்லி செய்வதைப் போல – அவரது பிறந்த மாதமான செப்டம்பருக்கெனவே அறிவித்திருக்கலாமோ ? என்று இப்போது தோன்றுகிறது ! But நமக்குத் தான் வாய்க்குள் காலைப் புகுத்திக் கொள்ளும் வியாதியானது காலம் காலமாய் இருந்து வரும் சமாச்சாரமாச்சே ?! பணியின் பருமன் ஒருபக்கமெனில், இதழின் பருமன் வேறொரு நோவை முன்னிறுத்துகிறது ! இக்கட தேக்கோ ப்ளீஸ் : 
  • இரத்தப் படலம் 3 புக் + slipcase = சுமார் 2.7 கிலோ எடை !
  • டைனமைட் ஸ்பெஷல் = சுமார் 1.1 கிலோ எடை !

ஆக மொத்தம் இரண்டும் இணையும் போது கூரியரில் அனுப்பும் பார்சல் சுமார் 3.8 கிலோ இருக்கும் !! இத்தனை எடையைத் தாக்குப் பிடிக்கும் டப்பா செய்வது ஏகச் சிரமம் என்பது முதல் சிக்கல் ! நோவு # 2 :  இரத்தப் படலம் பெரிய சைஸ் ; டைனமைட் ஸ்பெஷலோ சின்ன சைஸ் என்பது !! டப்பாவுக்குள் இவை ஒன்றோடொன்று  முட்டி மோதிக் கொண்டு பயணிப்பதில் ரிஸ்க்  ஜாஸ்தி ! So இரு தனித் தனிப் பார்சல்களே நடைமுறை சாத்தியம் ! ஆனால் தூக்கியடிக்கும் கூரியர் கட்டணங்கள் ; டெஸ்பாட்ச்சில் நேரக்  கூடிய இரட்டிப்பு வேலைகள் என்பன பூச்சாண்டி காட்டுகின்றன ! So ஆகஸ்டின் spotlight-ஐ நமது ஞாபக மறதிக்காரருக்கே ஒதுக்கி விட்டு, டைனமைட்டை செப்டெம்பரில் டெக்சின் பிறந்த தினத்துக்கே தெறிக்க விடலாமா? அல்லது "ஜெய் பாகுபலி"யா ?  உங்கள் thoughts ப்ளீஸ் ?

இந்தத் தேர்களையெல்லாம் எல்லை சேர்த்த பிற்பாடு புலன் விசாரணையைப் பரிசீலிக்க வேண்டும் ! அதற்கு மெய்யாகவே பாகுபலி அவசியப்படப் போவது நிச்சயம் ! So உங்கள் பிரார்த்தனைகளில் நம்மையும் இணைத்துக் கொள்ள வழியுள்ளதாவென்று பாருங்களேன் guys ! நிச்சயமாய் ‘மேலே இருக்கும் மணிடோ‘வின் நேசக் கரம் முன்னெப்போதையும் விட இப்போது ரொம்பவே தேவை நமக்கு ! 

Bye guys – ஜம்போ TEX ; டைனமைட் TEX ; ஜுன் TEX என்று விதவிதமான கதைகளோடு எனது ஞாயிறைக் கழிக்கப் புறப்படுகிறேன் ! இதோ ஜம்போவின் - ஒரு preview  -இளம் டெக்ஸ் வில்லரோடு !! அட்டகாசச் சித்திர ஸ்டைல் ; அதிரடி ஆக்ஷன் என்று தட தடக்கிறது இதழ் !!

See you around ! Have a lovely weekend !!

Saturday, May 05, 2018

கேள்விகள் முடிவதில்லை !!

நண்பர்களே,

வணக்கம். மே பிறந்து வெகு சொற்ப நாட்களே நகர்ந்துள்ளன ; ஆனால் அதற்குள் இதழ்கள் சகலத்தையும் நாம் படித்து ; விமர்சித்து ; அலசி ; கொடியில் காயப்போட்டு விட்டது போலொரு உணர்வு எனக்கு ! இன்னமும் 25 நாட்கள் உள்ளன - அடுத்த செட் இதழ்கள் தயாராக !! இடைப்பட்ட இந்த அவகாசத்தைக் கடத்திச் செல்ல என்ன செய்வதென்று தெரியாததொரு திரு திரு முழியோடு உங்கள் முன்னே ஆஜராகி நிற்கின்றேன் ! Of course - கூரியர் டப்பாக்களை உடைத்து, இதழ்களைத் தடவிப் பார்த்த கையோடு மறுக்கா அவற்றை உள்ளேயே திணித்து விட்டு - "ஆங்...ட்யுராங்கோ வாக்கும் ? இவர் ஓவரா சுடுவாரே !!  மார்ட்டினா ...? நல்ல நாளைக்கே நாக்குத் தொங்க வைப்பாரே ? ம்ம்ம்..இது யாரு ?   புது ஆசாமிகளாக்கும் ? சரி... பாத்துக்கலாம் ..பாத்துக்கலாம் !!" என்றபடிக்கே பீரோவுக்குள் போட்டு விட்டு "நீட்"தேர்வின் அக்கப்போரை அலசப் புறப்பட்டிருக்கும் நண்பர்களும் நிச்சயம் நிறையவே இருப்பர் என்பது புரிகிறது ! So  இந்த மாதத்தில் இன்னமும் எஞ்சியிருக்கும் நாட்கள், அவர்களுக்கு ஒரு சூப்பர் மேட்டராக இருந்திடலாம்  ! ஆனால் மாதத்தின் முதல் வாரத்துக்குள்ளாகவே "பொட்டியைப் பிரிச்சோமா ? தலைப்பு முதல் சுபம் வரை போட்டுத் தாக்கினோமா ?!" என்று அசுர வேக வாசிப்பில் லயிப்போரும் சம அளவில் இருப்பது நிஜம் எனும் போது - அடுத்த கூரியர் வரையிலான அவகாசம் அக்னீ நட்சத்திரத்துக்கு இணையான சங்கடமாக அவர்களுக்கு  இருக்கக்கூடும் தான் !  Oh yes - மே மாதத்து இதழ்களைக் கடைகளில் வாங்குவோருக்கு அவகாசம் தந்திடுவது முக்கியம் ;  முதல் வாரத்தில், ஆன்லைனில் ஆர்டர் செய்யும்  பழக்கம் கொண்டோரின் ஆர்வங்களைத் தக்க வைப்பதும் அவசியம்  எனும் போது, ஒளிவட்டம் வேறெங்கும் நகராது மே pack மீதே லயித்துத் தொடர்ந்திடும் அவசியமுள்ளது ! So போன பதிவை மார்டினின் high octane ஆல்ப அலசலில் செலவிட்டோமெனில், இந்த வாரத்தின் ஒரு பகுதியை ட்யுராங்கோ & கோ.வோடு ஓட்டிப் பார்ப்போமா ? போன பதிவினில் கொஞ்சமாய் இது சார்ந்த பின்னூட்டங்கள் பதிவாகியிருந்தன தான் ; ஆனால் மார்ட்டினின் ராட்டின அனுபவத்தினில் அவையெல்லாமே பின்சீட்டுக்குப் போனது போல் பட்டது எனக்கு ! So "மௌனமாயொரு இடிமுழக்கம்" பற்றி இன்னும் கொஞ்சம் in depth அலச நேரமெடுத்துக் கொள்ளலாமே folks ? அதன் நீட்சியாய் இம்மாதக் கார்ட்டூன் புது வரவுகளையும் சேர்த்துக் கொள்ளலாமா ?  

Moving on, இந்த சித்திரக் கதை வாசிப்பின் முரண்களை எண்ணி மலைக்காது இருக்க முடியவில்லை ! சின்னதாய் சில சம்பவங்களை விவரிக்கிறேன் - நான் சொல்ல வருவது புரிந்திடும் ! சமீப மாதங்களில், நமக்கு முகவர்கள் இல்லா Tier 2 நகரங்களில் விற்பனைக்கு வழிகள் ஏதேனும் உள்ளனவா ? என்று அலசிட நம்மவர்கள் சுற்றி வந்தனர் ! ஆங்காங்கே உள்ள புத்தகக் கடைகளையோ, பத்திரிகை ஏஜெண்ட்களையோ அணுகி, நமது இதழ்களை விற்பனை செய்திட முயன்று பார்க்குமாறு கோரிக்கை வைத்தனர் ! அவர்களும் நம்மவர்களின் நச்சரிப்புகளுக்கு காது கொடுத்து, ஒரு சின்னத் தொகைக்கு trial ஆர்டர் தந்திட முன்வந்தனர் ! பார்த்து, கவனமாய்த் தேர்வு செய்து - மாயாவி ; லக்கி லூக் ; டெக்ஸ் வில்லர் போன்ற bestseller இதழ்களை மட்டும் அனுப்பி வைத்தோம் - அதுவும் இயன்றமட்டுக்கு ரூ.50 அல்லது ரூ.60 விலைகளுக்கு மிகாது ! அங்கே கடைகளில் ஓட்ட ஸ்டிக்கர்கள் ; விளம்பரப்படுத்த மித சைசில் பிளெக்ஸ் பேன்னர்கள்  என்றும் அனுப்பியிருந்தோம் ! ஒரு மாதம் ; இரு மாதங்கள் ; அட...மூன்று மாதங்கள் கழித்து ஆங்காங்கே விற்பனை நிலவரம் என்னவென்று பார்ப்போமே என்று ரவுண்ட் அடித்தால் கிறு கிறுக்கிறது தலை !! "பத்திரமா அப்டியே இருக்கு !!" என்பதே பொதுவான பதில் ! கொடுமையின் உச்சமென்னவெனில் - ரூ.5000-க்கு சரக்கு வாங்கியிருந்தார் வட மாவட்டத்தின் தலைநகரொன்றில் ! அதனில் ஒரேயொரு ஐம்பது ரூபாய் புக் மாத்திரமே விற்றிருக்க, பாக்கி ரூ.4950- க்கான சரக்கை போன வாரம் திருப்பி அனுப்பியுள்ளார் !! இத்தனைக்கும் ஊருக்குள் ஒரு மையமான இடத்தில கடை வைத்துள்ளவர் தான் !  ஒன்றேகால் இலட்சம் ஜனத்தொகை கொண்ட அந்த ஊரில் ஒரு  90 நாள் அவகாசத்தில் ஐயாயிரம் ரூபாய்க்கான காமிக்ஸை இம்மி கூட விற்றிட முடியவில்லை என்பது என்ன மாதிரியான stat என்று இனம் சொல்லத் தெரியவில்லை எனக்கு ! இதே பாணியில் நெல்லை மண்ணின் ஒரு மித நகரில், 6 மாதங்களில் 75 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரம் நடந்துள்ளது - பஸ் ஸ்டாண்ட் கடைதனில் !! என்ன கொடுமை சார் ?! இன்னமும் இதே போல புதுப்புது நகர்களில் தேவுடு காத்து வரும் நமது இதழ்களின் பட்டியல் நீளமானது !! அதே வேளையில், பத்துக்கு-இரண்டு என்ற கதையாய் சிற்சில நகரங்களில் நமது பரிசோதனைகள் லேசான பலன் தருகின்றன தான் !  தேனியில் விற்கிறது ; பெரியகுளத்தில் சொதப்புகிறது ! தஞ்சையில் விற்கிறது ; புதுக்கோட்டையில் கவிழ்ந்தடித்துப் படுக்கிறது !! So வேகாத வெயிலிலும் சளைக்காது சுற்றிச் சுற்றி வர வேண்டியுள்ளது - இங்கே ஜெயம் கிட்டி விடாதா ? என்ற எதிர்பார்ப்பில் !! ஒருபக்கம் இத்தகைய பரவலான அசுவாரஸ்யம் கோலோச்ச - இன்னொருபக்கமோ, கண்ணுக்குத் தெரியும் காமிக்ஸையேல்லாம் படிக்கத் தயாராயொரு சின்னஞ்சிறு வட்டம் !! என்ன மாதிரியான முரண் இந்த comics வாசிப்பினில் தான் !! 

இந்தக் கள நிலவரத்தில் தான்- முன்னெப்போதையும் விட நான் உங்கள் குடல்களை ரொம்பவே உருவ முனைந்து வருகிறேன் - ரசனை சார்ந்த கேள்விகளோடு ! தொடரும் காலங்களில் "The Best" என்பதைத் தாண்டி வேறு எதையும் உங்கள் சிரங்களில் சுமத்தும் கூமுட்டைத்தனங்களை செய்திடலாகாது என்பது தெளிவாய்த் தெரிகிறதால் தான் - "ராமசாமி இருக்கட்டுமா ? குழந்தைசாமி போகட்டுமா ?" என்ற ரீதியில் on the fence நாயகர்கள் பற்றி ஓயாது கேட்டுக் கொண்டிருந்தேன் ! And மௌனமாய் தொடரும் வாசக நண்பர்களின் மௌன விரதங்களைக் கலைக்கவும் நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் காவடி எடுத்துத் திரிவது - அவர்களது ரசனைகளின் நிஜப் பரிமாணங்களை அவர்களிடமிருந்தே ஊர்ஜிதம் செய்து கொள்ளவே !! "இதுவே பரவலான அபிப்பிராயம் !" என்று நானாகவே எதையாச்சும் யூகித்துக் கொண்டு 2019 -ன் அட்டவணையை தயார் செய்து வைக்க  - "பேச்சியம்மாளுக்குக் கல்தா தந்தது ஏன் ? அய்யாப்பிள்ளையை அறிமுகம் செய்யச் சொல்லிக் கேட்டேனா ?" என்ற ரீதியில் கேள்விகள் எழுந்திடக் கூடாதல்லவா ? So அந்த வினவல் பட்டியலில் மிச்சம் மீதியிருக்கக்கூடிய நாயக / நாயகியரைப் பற்றி இந்த வாரம் கேட்டு வைத்து விடட்டுமா ? ஆண்டின் ஒரு பாதியைக் கடக்கும் வேளை நெருங்கி விட்டிருக்க,  உங்களின் தற்போதைய சிந்தைகளை சந்தேகங்களின்றித் தெரிந்து கொண்டால் தானே - யாரோடு பயணிப்பது ? யாருக்கு டாட்டா காட்டுவது ? என்ற இறுதித் தீர்மானங்கள் எடுக்க இயலும் ? So - please do take time to answer folks :

ஏற்கனவே மகளிரணியின் ஒரு பென்சில் இடைப் பெண்மணியோடு துவங்கிய  அலசலைத் தொடரவிருப்பது நமது ஆதர்ஷ இளவரசியோடு ! நமது துவக்க இதழ் நாயகி ; அந்நாட்களது லேடி ஜேம்ஸ் பாண்ட் ; black & white நாட்களில் கைக்கு அடக்கமான இதழ்களைத் தயாரிக்க உதவியவர் ; இன்றைக்கும் ஒரு சிறு அணியின் இறைவி இவர் !! ஆனால் ஆண்டுக்கொரு சின்ன விலையிலான slot மட்டுமே என்ற சூழலிலும், விற்பனையில் சரளம் missing என்பதே யதார்த்தம் ! ஒரேயடியாக கவ்பாய் ரசனைகள் நம்மை இது போன்ற த்ரில்லர் கதைகளிலிருந்து தூரப்படுத்தி விட்டனவா ? அல்லது கலர் ; ஆர்ட்பேப்பர் என்ற பாணிகளை பார்த்து விட்டு இந்த black & white சித்திரங்களிலான கதைகள் சுகப்பட மாட்டேன்கின்றனவா ? அல்லது - ஒரு குட்டி ரசிகர் மன்ற அணி இந்த நாயகியைத் தூக்கிச் சுமந்து கொண்டாடும் அலப்பறையில்  எஞ்சியுள்ளோரிடம்  ஒரு வித ஒவ்வாமை ஒட்டிக் கொள்கிறதா ? அந்த ஒவ்வாமை in turn மாடஸ்டி மீதே திரும்புகிறதா ? விடை சொல்ல முனைவீர்களா ப்ளீஸ் ? இங்கே மாடஸ்டி ரசிகர் அணியின் மனதை நோகச் செய்வது சத்தியமாய் என் எண்ணமல்ல ; in fact இளவரசியின் fan following-ல் நானும் ஒருவனே ! ஆனால் சில தருணங்களில் "மா.ர.ம."- தனது குறைச்சலான எண்ணிக்கையை ஈடு செய்திடும் பொருட்டு பிரச்சார வால்யூமை ஜாஸ்தி செய்வது - தம்மை அறியாது செய்திடும் ஆர்வங்களின் கோளாறோ  ? என்று எனக்குத் தோன்றியுள்ளது ! அது என் பிரமையாய் மட்டுமே இருப்பின், மகிழ்வேன் ! எது எப்படியோ - தொடரும் காலங்களில் மாடஸ்டியை எவ்விதம் பார்த்திடுவீர்களோ ? என்பதே இப்போதைய எனது கேள்வி !

A bit more down the line - நமது ரிப்போர்ட்டர் ஜானிக்கு ஆண்டுக்கொரு slot என்ற பார்முலா தொடர்ந்து வருகிறது ! வண்ணத்தில் ; அந்தப் பரிச்சயமான சித்திரங்களில் இவரது ஆல்பங்கள் ஒரு செம visual treat என்பதில் ஐயமே இருந்திட முடியாது ! ஆனால் எல்லாக் கதைகளுமே கிட்டத்தட்ட ஒரே template தானே ? என்ற கேள்வியும் இங்கே அவ்வப்போது எழுப்பப்டுகின்றன தான்! "அட...பரவாயில்லை ; அந்த template தான் எங்கள் ரசிப்பிற்குரியது !" என்று சொல்வீர்களா guys ? அல்லது - ஒரு மாற்றமாய் - ஜானியின் புது அவதாரை ; அந்த ஜானி 2.0-ஐ முயற்சித்துப் பார்க்கும் நேரமிது என்பீர்களா ? So இங்கே எனது கேள்வி - ஜானியின் எதிர்காலம் குறித்தல்ல ; ஜானியின் பாணியின் எதிர்காலம் எதுவென்பது பற்றியே ! இதில் ஏற்கனவே 3 ஆல்பங்கள் வந்து விட்டன என்பதால் - புது பாணிக்கு அங்கே வாசகர்கள் தம்ஸ்-அப் தந்துள்ளார்கள் என்றே எடுத்துக் கொள்ளலாம் ! பாருங்களேன் : 
கார்ட்டூன் ஜானரில் கேள்விகளை நான் எழுப்பப் போவதில்லை - simply becos ஏகப்பட்ட தருணங்களில் smurfs  ; ரின்டின் கேன் ; க்ளிப்டன் ; மந்திரியார் ; லியனார்டோ தாத்தா போன்றோரை danger zone-ல் வைக்கக் கோரி உங்கள் பரிந்துரைகள் என்னை நிறையவே எட்டியுள்ளன ! So அவற்றின் மீது தீர்மானிக்கும் முன்பாக  இந்தாண்டின் எஞ்சியுள்ள கார்ட்டூன் இதழ்களின் performance-களைப் பார்க்கும் அவசியமும் இருப்பதாய் உணர்கிறேன் ! 

And உள்ளதில் எதைத் தக்க வைப்பது ? எதற்குக் கல்தா கொடுப்பது ? என்ற அலசல் ஒரு பக்கமெனில் - நமது தற்போதைய டார்லிங்கான   கௌபாய் ஜானரில் ஒரு உச்ச வரம்பை எட்டிப் பிடித்து விட்டோமா ? அல்லது - இன்னமும் குதிரைப்பசங்களை வரவேற்கவே செய்வோமா ? என்ற கேள்வியையும் முன்வைக்கிறேன் ! கமான்சே தற்காலிக பிரேக் எடுக்கும் கையோடு ட்ரெண்ட் என்ற புது கௌபாய் களம் காண்கிறார் ! In fact - ஜூலையில் அவரது முதல் ஆல்பம் வரவுள்ளது & இது நிச்சயமாய் நம்மைக் கட்டுண்டு வைக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது ! So டெக்ஸ் ; டைகர் ; ட்யுரங்கோ ; ட்ரெண்ட் என்று ஓடும் இந்த கௌபாய் எக்ஸ்பிரஸில் இன்னமும் கூடுதலாய்ப் பெட்டிகளை இணைக்கலாமா ? அல்லது பிடுங்கியுள்ள ஆணிகளே போதுமானவை என்பீர்களா ? Thoughts ப்ளீஸ் ?
கிளம்பும் முன்பாய் - ஜூன் பற்றிய ஒரு குட்டி அட்வான்ஸ் சேதி ! காத்திருக்கும் லார்கோ ஆல்பம் - பல விதங்களில் பல surprises தரவுள்ளதொரு இதழ் ! வான் ஹாம் இந்தத் தொடரிலிருந்து ஒய்வு பெற்றுக் கொள்ளத் தீர்மானித்தது ஏனென்றும் இதனில் விடையிருக்கும் !!! 

அப்புறம் ஜம்போ logo டிசைனிங் இன்னமும் தொடர்கிறது - முழுத் திருப்தி தரும்விதமாய் எந்தவொரு ஆக்கமும்  இதுவரையிலும்  இல்லையென்பதால் ! So இன்னமும் எதையேனும் உருவாக்கிட நேரமிருப்பின், please do keep them coming !! 

Bye all ! See you around ! Have a cool weekend !!
P.S : திங்கள் & தொடரும் புதன் எங்கள் நகருக்கே விடுமுறை - சித்திரைப் பொங்கலை முன்னிட்டு ! So நம் அலுவலகமும் மேற்படி 2 நாட்களும் லீவிலிருக்கும் !