Saturday, April 07, 2018

கோடையிலொரு இடிமுழக்கம் !!

நண்பர்களே,

வணக்கம்.  இதோ இன்னுமொரு ஏப்ரல் முதல் வாரம் புலர்ந்து விட்டுள்ளது & இதோ – இன்னுமொரு தென்மாவட்ட ஸ்பெஷலான “பங்குனிப் பொங்கலுமே“ நெருங்கி விட்டது ! போன ஞாயிறு முதலே ஊரே வண்ணமயமாகத் துவங்க, தொடரவிருக்கும் அடுத்த 3 நாட்களில் பக்தியும், பரவசமும், சந்தோஷங்களும், கோலாகலங்களும் ஒரு உச்சத்தை நோக்கிப் பயணமாகிடும்! அதிலும் நமது ஆபீஸ் இருப்பது கோவிலின் வாசலிலே எனும் போது – இந்தத் திருவிழா மூடில் ஐக்கியமாகிடுவது ஒரு மேட்டரே அல்ல! சாயந்திரங்களில் அப்படியே பொடிநடையாய் கோவில் பாதையில் பஜார் வரை ஒரு நடை போட்டால் – தினப்படிப் பிடுங்கல்கள் சகலத்தையும் தற்காலிகமாவது தள்ளிப்போட்டு விட்டு, மக்கள் காட்ட முனையும் அந்தக் கலப்படமிலா உற்சாகமானது நொடிப் பொழுதில் நம் தோளுக்கும் தாவி விடுகின்றது ! ராட்டினங்களில் பளீர் சிரிப்போடு சுற்றி வரும் சுட்டி பென்னிகளையும் ; கலர் கலரான பானங்களை ‘கடக்‘ ‘கடக்‘ என்று உள்ளே தள்ளிக் கொண்டு அவரவரது நாக்குகளை வெளியே நீட்டி – 'கலர் ஒட்டியுள்ளதா?' என்று பரிசோதிக்கும் குட்டி லியனார்டோக்களையும்; பாதையோரக் கடைகளில் ஜரூராய் பேரம் பேசிடும் மக்களைச் சமாளித்து, வியாபாரத்தைப் பார்த்து வரும் லார்கோக்களையும் ரசிக்கும்போது – மண்டைக்குள் அலையடித்துக் கிடக்கும் நெருடல்கள் ஒன்று பாக்கியில்லாது மறைந்து விடுவதன் மாயம் என்னவோ – தெரியலை !! “பு.வி.” ஸ்கிரிப்ட் சத்தியமாய் ஒரு ‘குட்டி யானை‘யிலோ, TATA 407-இலோ தான் பயணித்து வரவுள்ளதெனும் போது – அதனை டைப்செட் செய்வதில் துவங்கி, தலையைப் பிய்த்துக்கொள்ளும் ஆனந்த நாட்கள் காத்துள்ளன என்ற ஞானமோ ; மே மாதத்து மார்ட்டினின் சாகஸத்தால் ராட்டினத்தில் ஏற அவசியமேயின்றி தலை 360 டிகிரியில் சுழல்வதன் அற்புதமோ ; ட்யுராங்கோ ஆல்பத்தின் எடிட்டிங் பணியின் sheer intensity-யோ ; டைனமைட் ஸ்பெஷலுக்கான படபடப்புகளோ  – இந்தத் திருவிழா நாட்களின் பரபரப்பின் முன்னால் சுலபமாய் பின்சீட்டுக்குப் போய் விடுவதால் தற்காலிகமாவது விட்டத்தை முறைக்காது நாட்களை நகர்த்த முடிகின்றது!

தகிக்கும் கோடை எனும் போது – “கோடை மலரிலிருந்து கச்சேரியை ஆரம்பிப்பது தானே பொருத்தமாகயிருக்கும்? And இம்முறை இந்தக் கோடையை அதிரச் செய்யவிருப்பவர் நமது காமிக்ஸ் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் தான்! “மௌனமாயொரு இடிமுழக்கம்ட்யுராங்கோ தொடரின் ஒரு அடுத்த கட்டம் எனலாம். சித்திர நேர்த்தி மெருகேறிடுவது ஒரு பக்கமெனில் ; கதையில் தென்படும் பன்முகத்தன்மை இன்னொரு highlight! அதிலும், "ஒரு ராஜகுமாரனின் கதை" என்ற சாகஸத்தின் க்ளைமாக்ஸ்  நாம் துளியும் எதிர்பார்த்திட இயலா ரகம் ! So ஒரு தொடரென்ற முறையிலும், ட்யுராங்கோ முன்னேறி வருவது அப்பட்டம் ! என்ன ஒரே சிக்கல் -  கடந்த 2 வாரங்களை இந்த அதிகம் பேசா மனுஷனோடு செலவிட்டதைத் தொடர்ந்து எனக்குமே மணிரத்னம் பட நாயகர்கள் போல ரெண்டு வார்த்தை; மூணு வார்த்தைப் பதில்களே பேச வருகிறது இப்போதெல்லாம் ! நிறைய தருணங்களில் கேப்டன் டைகர் கதைகளின் சாயல்; பாணி தட்டுப்பட்டது எனக்கு மட்டும் தானா ? என்பதை மே மாதம் தெரிந்து கொள்ளக் காத்திருப்பேன் – உங்களது விமர்சனங்களிலிருந்து ! 

இதோ – கோடை மலர் 2018-ன் அட்டைப்பட preview ரொம்ப ரொம்ப அட்வான்ஸாய் ! முழுக்க முழுக்க நமது டிசைனர் பொன்னனின் கைவண்ணமிது! நாம் இதற்குத் தரவுள்ள special effects சகிதம் புக்காக நீங்கள் கையில் ஏந்திப் பார்க்கும் போது - ஒரு மிரட்டலான அனுபவம் உத்திரவாதம் என்பேன் ! 
சில ஹீரோக்களுக்கு ‘ஹிட்‘ பாடல்கள் தாமாய் அமைந்து விடுவது போல – சில காமிக்ஸ் நாயகர்களுக்கு ராப்பர்கள் சுலபமாய் set ஆகிடுவதை நான் கொஞ்ச காலமாகவே கவனித்து வருகிறேன் !  ட்யுராங்கோ அந்தப் பட்டியலில் நிச்சயம் ஒரு புது வரவே! And இந்த இதழுக்கென நிறைய மெனக்கெட்டு, நண்பர்கள் பலரும் முன்கதைச் சுருக்கங்களை எழுதியிருப்பது அழகானதொரு gesture ! இங்கே கொஞ்சம்; அங்கே கொஞ்சமென இரவல் வாங்கி ஒரு மாதிரியாய் அமைத்துள்ளேன்! Thanks a ton guys! உங்களின் திறன்களைப் பார்த்த கணத்தில் எனக்குத் தோன்றியதொரு விஷயத்தை இந்த வாரத்து சுவாரஸ்யக் கூட்டலுக்கு பயன்படுத்திடும் எண்ணமும் உதித்துள்ளது! Here goes:

இதோ – கீழே நீங்கள் பார்த்திடும் சித்திரமானது – ட்யுராங்கோவின் கதை # 3-ன் ஆரம்ப பிரேம்! இங்கே சித்திரமே பேசட்டுமென்று Yves Swolf அவர்கள் வசனங்கள் எதையும் அமைத்திடவில்லை! ஆனால் கதையின் opening sequence-ல் எழுதும் வரிகள் – அந்தக் கதையின் மூடுக்கு ஒரு திறவுகோலாக அமையக்கூடுமென்பது எனது அபிப்பிராயம். So இந்த பிரேமுக்குப் பொருத்தமான வரிகளை எழுதிப் பார்க்க ஆசையா guys? ரெண்டு – மூன்று வரிகளுக்கு மிகாது பார்த்துக் கொள்ளல் அவசியம். இங்கேயோ; மின்னஞ்சலிலோ,அவற்றை நீங்கள் பகிர்ந்திடலாம் ! சிறப்பாய்த் தோன்றும் வரிகளை கதையில் பயன்படுத்திடுவோம் ! ப்ளஸ் ஒரு LMS குண்டு புக்கும் பரிசு ! முயற்சித்துப் பார்க்கலாமே all?
அதான் ஒரிஜினல்லேயே காலியா இருக்கே… அதிலே புதுசா என்ன நாட்டாமை பண்ணத் தேவையாம்?” என்று சில ஆர்வலர்கள் ஆங்காங்கே உடனடிப் பொங்கல்களைப் படையல் போடக் கூடுமென்பதை யூகிப்பதில் சிரமமில்லை! But மெருகேற்றும் எந்தவொரு முயற்சியும் வியர்த்தமாகிடாது என்ற நம்பிக்கையோடு தொடர்வோமே ?!

மே நோக்கிய பார்வையில் நடப்பு இதழ்களை மறந்து விடலாகாது என்பதால் சில updates! “சிக்பில் க்ளாசிக்ஸ் – 2“ & “பவளச் சிலை மர்மம்“ என்ற வண்ண ஜாம்பவான்களுக்கு மத்தியில் தான் இம்மாத விற்பனை bestseller எதுவென்று போட்டி! இரண்டுமே (வண்ண) மறுபதிப்புகள் என்பதை ஒரு தற்செயலான நிகழ்வென்று நிச்சயமாய் ஓரம்கட்டிவிட முடியாதென்பேன்! அந்த பால்யம் சார்ந்த ஞாபகங்கள் கலரில்; தரமாய் உருமாற்றம் காணும் போது – அதற்கு நீங்கள் நல்கிடும் வரவேற்பு நிச்சயமாய் ஒரு அலாதி ரகம் தான்! Having said that – “பவளச் சிலை மர்மம்” கதை குறித்து, நண்பர் கார்த்திகைப் பாண்டியன் எழுதியிருந்த வரிகளை நான் நூற்றுக்கு நூறு ஆமோதிப்பேன்! "போன மாதத்து இதழ் எது?" என்று கேட்டாலே மலங்க மலங்க முழிக்கும் வெண்டைக்காய்ப் பார்ட்டியான எனக்கு 1985-ல் நாம் வெளியிட்ட இந்தக் கதை சுத்தமாய் நினைவில் இல்லை! ஏதோ ஒரு சிலையைத் தேடி, நம்மவர்கள் வலம் வருவது மாத்திரமே மச மச ஞாபகம்! So ஈரோட்டில் சென்றாண்டு நீங்கள் படுஜோராய் இதனைத் தேர்வு செய்த போது – இதுவுமே “தலைவாங்கிக் குரங்கு” ரேஞ்சுக்கான க்ளாசிக்காக இருக்குமென்று எதிர்பார்த்திருந்தேன்! ஆனால் கதையை எடிட்டிங் செய்யும் போது – செவாலியே சிவாஜி சாரின் ”ஓடினான்… ஓடினான்… வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினான்!” வசனம் தான் ஞாபகத்துக்கு வந்தது! மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் போல டெக்ஸும், கார்சனும், செவ்விந்தியர்களும் ஓட்டமோ ஓட்டமாய் ஓட - எனக்கிங்கே  மூச்சிரைக்காத குறை தான் ! And அறவங்காடு தோட்டா பாக்டரியின் ஒரு வருஷத்துத் தயாரிப்பை இந்த 110 பக்கங்களிலேயே நம்மாட்கள் காலி பண்ணியிருப்பதைப் பார்த்த கணத்தில் கருமருந்துப் புகை வாசனை பக்கங்களிலிருந்து எழாத குறை தான் ! No offence meant at all guys - ஆனால் "இதுக்கு என்னோட favorite “சைத்தான் சாம்ராஜ்யம்” தேவலாமோ?” என்ற சிந்தனை எழாதில்லை எனக்குள் ! ஜுராஸிக் பார்க் பாணிக் கதைக்களமென்றாலுமே அதிலொரு X-factor இருப்பதாக எனக்கு நம்பிக்கை ! “வைக்கிங் தீவு மர்மம்” உங்கள் தேர்வுப் பட்டியலில் அடுத்த இடத்தில் இருந்ததே guys – அதுவுமொரு மறுபரிசீலனையைக் கோரிடுமா ? Or அது ஓ.கே.வா ? மறுபதிப்புகளில் சொதப்புவது பெரும் பிழையாகிடுமென்பதால் – let’s be doubly sure please!
அப்புறம் 2019-ன் அட்டவணையில் 70% தேர்வாகி விட்டுள்ள நிலையில் – மறுபதிப்புகள் சார்ந்த உங்கள் selections எனக்கு ரொம்பவே உதவிடும் என்பதால் – கீழ்க்கண்ட வினாக்களுக்கு தெளிவான விடைகள் ப்ளீஸ்:

1. அடுத்த Tex மறுபதிப்புக்கு? (வை.தீ.ம. ஓ.கே. தானா ? லாக் பண்ணிடலாமா ? )

2. அடுத்த லக்கி மறுபதிப்புக்கு? (Again – just 2!)

3. அடுத்த கேப்டன் பிரின்ஸ் மறுபதிப்புக்கு? (Just 1!)

Moving on, ஜம்போவின் சந்தா ரயில் தடதடத்து வருகிறது! ‘இதைக் கூட்டியிருக்கலாமே; அதைக் குறைத்திருக்கலாமே!‘ என்ற suggestions சகிதம் நிறைய மின்னஞ்சல்களும் வந்துள்ளன! முதல் சுற்றின் கதைகள்; தயாரிப்புப் பணிகள் என்று ஏற்கனவே நிறையவே பயணித்திருக்கிறோம் guys! So மாற்றங்கள் எதுவும் இனி சாத்தியமில்லை! Maybe தொடரவிருக்கும் அடுத்த cycle-ன் போது உங்களது எண்ணங்களுக்கு நடைமுறை சாத்தியம் தந்திட முடிகிறதாவென்று பரிசீலிப்போம்! 

தற்போது முதல் இதழான இளம் டெக்ஸின்காற்றுக்கென்ன வேலி?” தயாராகி வருகிறது! இங்கொரு சின்ன விளக்கம் ! சென்றாண்டின் தீபாவளி மலரில் வெளியான “ஒரு தலைவன் – ஒரு சகாப்தம்” இதழை – இளம் டெக்ஸ் கதைவரிசையோடு முடிச்சுப்போட்டு ஆங்காங்கே சில தயக்கங்கள் பதிவாகியிருப்பதைக் கவனித்தேன். Let’s be clear on it folks:

தீபாவளி மலரில், வண்ணத்தில் நாம் பார்த்தது –மூத்த படைப்பாளி பாவ்லோ எல்ட்யூரி செர்பியரியின் பார்வையிலான டெக்ஸின் கடந்த காலம் பற்றியதொரு யூகமான ஆக்கமே ! பிரான்கோ-பெல்ஜியக் கதைகளின் சைஸில்; வண்ணத்தில்; வித்தியாசமான சித்திர பாணியில் ஒரு ஆல்பத்தை உருவாக்கிட எண்ணிய குழுமம் அதற்கெனத் தேர்வு செய்தது திரு.செர்பியரி அவர்களை! போனெல்லியின் வரையறைக்குள் பயணிக்கும் கட்டுப்பாடுகளின்றி – ஒரு புதியதொரு கோணத்தில் “டெக்ஸ்” எனும் சகாப்தத்தைப் பார்த்திடும் சுதந்திரம் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது! So அதனில் நாம் ரசித்துப் பழகியிருக்கும் அந்த மாமூலான ‘டெக்ஸ் touches’ தூக்கலாய்த் தெரியாது போயிருக்கலாம் ! ஆனால் ஜம்போவில் நாமிப்போது பார்த்திடவுள்ள இளம் டெக்ஸ் – பெரியவர் போனெல்லி உருவகப்படுத்தி, ஆரம்பக் கதைகளில் சுருக்கமாய் கண்ணில் காட்டிய  டெக்ஸ் வில்லரின் துவக்க நாட்களது விசாலச் சித்தரிப்பு ! கதாசிரியர் மௌரோ போசெல்லி கதைக்களத்தைக் கையாள்கிறார் எனும் போதே ஒற்றை விஷயம் நிச்சயமாகி விடும்! அது தான் – “மாற்றங்களின்மை” எனும் factor! பெரியவர் போனெல்லி; அப்புறமாய் அவரது மைந்தர்; பின்னே க்ளாடியோ நிஸ்ஸி & இப்போது மௌரோ போசெல்லி எனத் தொடர்கிறது டெக்ஸ் வில்லரின் தலையெழுத்தை நிர்ணயிப்போரின் பட்டியல்! இன்றைய யுகத்தின் பிரதிநிதியாய் போசெல்லி இருந்தாலுமே – ‘காலத்துக்கு ஏற்றபடி நாயகரை நான் பட்டி-டிங்கரிங் செய்கிறேன் பேர்வழி‘ என்ற விஷப் பரீட்சைகளைச் செய்திட அவர் முனைவதே கிடையாது! ‘டெக்ஸ்‘ எனும் பார்முலா 70 ஆண்டுகளாய்ச் சாதித்து வந்துள்ளதெனும் போது – இன்னுமொரு 100+ ஆண்டுகளுக்குமே அதுவே சுகப்படத் தான் செய்யுமென்ற நம்பிக்கை அவருக்குண்டு! So ”காற்றுக்கென்ன வேலி”யில் அவர் நம் கண்முன்னே உலவச் செய்யும் டெக்ஸ் – பெரியவர் போனெல்லி சுருக்கமாய் சொல்ல நினைத்த flashback-களின் விஸ்வரூபமே! MAXI TEX தொடரில் இந்த 240 பக்க சாகஸம் கறுப்பு-வெள்ளையில் வெளிவந்து சக்கை போடு போட்டுள்ளது! So – “அதுவா இது?” என்ற மிரட்சிகளுக்கு நிச்சயம் அவசியமிராது!
ஜம்போ இதழின் தயாரிப்பிலும், வழக்கமான பாணிகளே தொடர்ந்திடாது – புதிதாயொரு template உருவாக்கிட முயற்சித்து வருகிறோம்! மண்டைக்குள் மட்டும் இந்த இரத்தப் படலம் + டைனமைட் ஸ்பெஷல் சார்ந்த ஆகஸ்ட் பரபரப்பு குடையாமல் இருந்தால் – இன்னும் கொஞ்சம் relaxed ஆக சிந்தனைகளை ஓடச் செய்திட முடிந்திடும் ! தற்போதைக்கு all roads seem to lead to August ; at least for me !

Before I sign off – சின்னதொரு நினைவூட்டல்! திருவிழாவினை முன்னிட்டு நமது அலுவலகம் திங்கள் (9 ஏப்ரல்) விடுமுறையிலிருக்கும் ! So உங்களது ஃபோன் அழைப்புகளுக்கோ; மின்னஞ்சல்களுக்கோ  பதிலிராது! ஆனால் ஆன்லைன் ஆர்டர்கள் மட்டும் எவ்விதமேனும் டெஸ்பாட்ச் ஆகிடும்!

Have a wonderful weekend ! எனது விடுமுறை நாட்களை ஜேம்ஸ் பாண்டோடும், லக்கி லூக்கோடும் கழிக்கும் ஜாலியில் புறப்படுகிறேன்…! “மை நேம் இஸ் பாண்ட்… ஜேம்ஸ் பாண்ட்”… மொண மொண…. “தனிமையே என் துணைவன்” மொண மொண…!மிஸ்.மணிபென்னி மொண மொண ; ஜாலி ஜம்பர்...மொண மொண......லண்டன்....பெர்லின்....மொண மொண..... டால்டன் ..டெக்ஸாஸ்...மொண மொண !  Bye guys – See you around !

P.S : இந்தப் பதிவுக்கு மங்களம் பாடும் தருவாயில் நெட்டில் இந்த ட்யுராங்கோ + டைகர் + ஜிம்மியின் படம் கண்ணில் பட்டது ! இது போதாதா - தலைக்குள் நமைச்சலெடுக்க ? Caption time again ! பரிசு இன்னொரு LMS குண்டு புக் !!! Get cracking !!

334 comments:

  1. வந்தேன் முதலில்...

    ReplyDelete
    Replies
    1. வெல்கம் பேக் சரண்...🍨🍦🍰

      Delete
    2. நன்றி நண்பரே...ஒவ்வொரு பதிவுக்கும் யோசித்து பதில் தெரிவிப்பதற்குள் ...அடுத்த பதிவு வந்து விடுவதால் பார்வையாளராக இருக்க முடிகிறது. அதுவும் இங்கு வெள்ளி விடுமுறை என்பதால் இந்த தடை....

      Delete
  2. வெகு நாட்களாக வெறும் பார்வையாளராகவே இருந்து வந்த நான் களம் காணுகிறேன்....படித்து விட்டு வருகிறேன்..

    ReplyDelete
  3. கலரில் படித்துவிட்டு க/வெ பார்த்தாலே பிடிக்கவில்லை. மறுபதிப்புகள் கலரிலேயே இருக்கட்டும்.

    ReplyDelete
  4. பின் அட்டை முன்னே வந்து இருக்காலமோ என்று நினைக்க தோன்றுகிறது. (மரண விளையாட்டு ரேம்போ போல் படு அட்டகாசமாக இருந்திருக்கும்).

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக நண்பரே பின் அட்டை முன் அட்டையாகக் கூடிய தகுதியிருக்கிறது

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. வந்துட்டேன் ..தேங்க்யூ செயலரே..

    ReplyDelete
  7. பங்குனி பொங்கலுக்கா இன்று முதல் அடுத்த மூன்று நாட்கள் விருதுநகர் டேரா.

    விருதுநகர் மற்றும் சிவகாசி மற்றும் அருப்புக்கோட்டை காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் பங்குனிப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    நமது ஆசிரியர் மற்றும் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் நமது காமிக்ஸ் அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய பங்குனிப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. நண்பர்கள் அனைவ௫க்கும் மாலை வணக்கம்!!!

    ReplyDelete
  9. ட்யூராங்கோ அட்டைப்படத்தை பார்த்தவுடன் வாய்விட்டு வந்த ஒரே வார்த்தை...



    " வாவ் "

    ReplyDelete
  10. 1. அடுத்த டெக்ஸ்: இரண்டு பக்கையும் அடுத்த வருடம் போடலாமே. கடந்த வாரத்தில் இருந்து போராடுகிறேன்.கேட்பாரில்லேயே.

    2. லக்கி Doule ok

    3. பிரின்ஸ் (just2ன்னா) double ok.

    ReplyDelete
  11. விஜயன் சார், பங்குனி பொங்கல் ஆர்ப்பாட்டங்களை நமது காமிக்ஸ் கதாப்பாத்திரங்களுடன் இணைத்து எழுதியது மிகவும் ரசிக்கும்படி இருந்தது. இதுதான் உங்கள் ஸ்பெஷல்.

    ReplyDelete
    Replies
    1. நம்ம ஊர் ஸ்பெஷல் பற்றி ஸ்பெஷலாக எழுத வேண்டுமே சார் !

      Delete
  12. அடுத்த டெக்ஸ் மறுபதிப்பு

    சைத்தான் சாம்ராஜ்யம் அல்லது அதனுடன் இணைந்த வை்தீ எனில் சிறப்பு சார்..:-)

    ReplyDelete
  13. விஜயன் சார், அடுத்த மறுபதிப்பு வைக்கீங் தீவு மர்மம் மற்றும் சைத்தான் சாம்ராஜ்யம் இரண்டும் இணைந்த குண்டுப் புத்தகமாக வேண்டும். ப்ளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அதே அதே.

      Delete
    2. பழிவாங்கும் பாவை, பழிக்கு பலி, இந்த இரண்டு புக்ஸும் கலரில் வந்தால் மிக நன்றாக இருக்கும். பேசாமல் அந்த இரண்டு, இந்த இரண்டு மொத்தம் நான்கும் சேர்த்து ஒரே குண்டு புக்காக போடலாம்.

      Delete
    3. ஶ்ரீதர் சொக்கப்பா சார் ;
      உங்களுக்கு கை தட்டும் படங்கள் பத்தாயிரம்!!!!!!!

      Delete
  14. 2019 க்கு மறுபதிப்புக்கான பதில்:::
    1.சைத்தான் சாம்ராஜ்யம்(வை.தீ.மர்மம்-ஒரு சுமாரான கதை தான்.)அந்த விலங்குகளின் வண்ண அணிவகுப்பை காண கண்கள் காத்திருக்கின்றன....முடிந்தால் இரண்டையும் சேர்த்து வெளியிடுங்களேன்...ப்ளீஸ். .
    2.கெளபாய் எக்ஸ்பிரஸ்+மனதில் உறுதி வேண்டும்.
    3.மரண வைரங்கள்(திகில் கோடை மலர்)

    ReplyDelete
    Replies
    1. //கெளபாய் எக்ஸ்பிரஸ்+மனதில் உறுதி வேண்டும்.//
      +111111
      எனது தேர்வும் இதுவே.

      Delete
    2. // மரண வைரங்கள்(திகில் கோடை மலர் //
      +1

      Delete
  15. // அடுத்த Tex மறுபதிப்புக்கு? (வை.தீ.ம. ஓ.கே. தானா ? லாக் பண்ணிடலாமா ? ) //

    டபுள் ஓகே..

    அப்படியே சைத்தான் சாம்ராஜ்யத்தையும் இணைந்து ஒரு குண்டு புத்தகமாக் கொடுத்தால் டிரிபிள் ஓகே.

    ReplyDelete
    Replies
    1. +11111
      இரண்டு புக்கையும் சேர்த்து ஒரே குண்டு கலர் புக்கா போட்டுடுங்க சார் வேலை முடியும்.

      Delete
  16. பவளச்சிலை மர்மம் பற்றி என்ன சொன்னாலும் இது ஒரு அக்மார்க் ஆக்சன் கதை.

    அதேபோல் என்னைப் போன்று முதல் முறையாகப் படித்தவர்களுக்கு அட்டகாசமான தலைவாழை விருந்து. அதுவும் வண்ணத்தில் இன்னும் செம.

    ReplyDelete
    Replies
    1. உண்மை...எனக்குமே பரபரப்பாக சென்ற கதை எனக்கு மறுபதிப்பாக இருந்தாலுமே கூட..!.

      Delete
    2. முதல் முறையல்ல எப்போது படித்தாலும் திருப்தியான உணர்வைத் தரும்

      Delete
  17. அன்புள்ள ஆசிரியருக்கு சென்ற ஆண்டு நீங்கள் மெபிஸ்டோவின் சில புத்தகங்கள் 2018 இல் try பண்ணலாமா என்று சில பக்கங்களை பதிவிட்டு இருந்தீர்கள் அதை 2019 வெளியிடும் வாய்ப்புகள் உண்டா. ஜான் சில்வருக்கு இன்னுமொரு வாய்ப்பு தரலாமே.பலன் கிட்டுமா ஆசிரியர்.

    ReplyDelete
    Replies
    1. மெபிஸ்டோவுக்காக வெயிட்டிங்.

      Delete
    2. மெபிஸ்டோ டைனமட்டில்உண்டு என்று பட்சி சொல்கிறது😜😜😜😜

      Delete
    3. எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது சரண்

      Delete
    4. Tex கதைகளுக்கு நம்மைப் பொறுத்தமட்டிலுமாவது - Before 2012 ; After 2012 என்று இரு பாகுபாடுகள் உருவாகியுள்ளன என்பேன் !

      B 2012 டெக்ஸுக்கு சூப்பர் ஹீரோ அந்தஸ்த்திருந்தது தான் ; அவரை ஏகமாய் ரசித்தோம் தான் ! ஆனால் அந்நாட்களில் அவருக்கு இணையான popularity கொண்டிருந்த நாயகர்களும் வலம் வந்தனர் - ஸ்பைடர் ; ஆர்ச்சி ; ரெட்டை வேட்டையர் etc என்று ! தவிர, அவை "காதிலே புய்ப்பம்" ரகக் கதைகளைத் தேடித் தேடி லயித்த நாட்களும் கூட ! So அன்றைக்கு டெக்ஸ் கதைகளில் மாயாஜாலங்களை ; மெபிஸ்டோ போன்ற வில்லன்களை just like that ஏற்றுக் கொண்டோம் !!

      ஆனால் A 2012 டெக்ஸ் முற்றிலும் வேறு ரேஞ்சிலிருக்கும் ஒரு உச்ச ரேஞ்சர் ! இன்றைக்கு இவரே நமது undisputed # 1 !! And இன்றைக்கு சகலத்தையும் அக்கு வேறு ; ஆணி வேறாகப் பிரித்துப் பார்க்கும் ஆர்வமும், ரசனைகளும் ஆழமாய் வேரூன்றி விட்டுள்ளன ! அன்றைக்கு வாய் பிளக்கச் செய்த சூப்பர் ஹீரோக்கள் இன்றைக்கு கெக்கே பிக்கே சிறப்புக்கு ஆளாகிடுவதே நிதர்சனம் ! So இன்றைய சூழலில் டெக்ஸை ஒரு ஜாம்பவானாய்க் காட்டலாம் ; ஆனால் ரத்தமும், சதையுமான எதிரிகளோடு மோதும்விதமாய்க் காட்டல் அவசியம் என்பதை சென்றாண்டின் "க்யூபா படலம்" அப்பட்டமாய்ப் புரியச் செய்து விட்டது ! அந்தக் கதைக்கு கிடைத்த டின் கட்டல் - அடுத்த 10 வருஷங்களுக்கு மறக்காது !! தாட்டியமான வில்லனை சில்லுமூக்கில் குத்துவது ஓ.கே. ; அதே நேரம் விட்டலாச்சார்யா ரேஞ் வில்லன்களோடு மோதும் போது நம்மவருமே சிரிப்புப் போலீஸ் ஆகிப் போகும் அபாயம் இருப்பதை கழுவி ஊற்றிய நண்பர்கள் புரியச் செய்திருந்தனர் !

      Of course - இன்னமும் ஆர்ச்சி காதல்களை விடாப்பிடியாய் கொண்டுவரும் சத்யா போன்ற நண்பர்கள் மெபிஸ்டோ ; யமா போன்ற வில்லன்களைக் கோரிடும் பாங்கு தொடரத் தான் செய்யும் ! But காலங்கள் மாறி விட்டன ; நம் (பெரும்பான்மை) ரசனைகளும் மாறி விட்டன என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் தான் !

      Delete
    5. எனக்கும் அவ்வப்போது TEX வரிசையில் இந்த supernatural வில்லன்களைக் களமிறக்கும் ஆசை இருந்தது தான் நண்பர்களே ; ஆனால் க்யூபா படலம் வாங்கிய சாத்தில் எல்லாமே மறந்தே போச்சு !

      Delete
    6. இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல சார்,ஆனால் சரியான சந்தர்ப்பம் வரும்வரை காத்திருப்போம் சார்.

      Delete
  18. ///ராட்டினங்களில் பளீர் சிரிப்போடு சுற்றி வரும் சுட்டி பென்னிகளையும் ; கலர் கலரான பானங்களை ‘கடக்‘ ‘கடக்‘ என்று உள்ளே தள்ளிக் கொண்டு அவரவரது நாக்குகளை வெளியே நீட்டி – 'கலர் ஒட்டியுள்ளதா?' என்று பரிசோதிக்கும் குட்டி லியனார்டோக்களையும்; பாதையோரக் கடைகளில் ஜரூராய் பேரம் பேசிடும் மக்களைச் சமாளித்து, வியாபாரத்தைப் பார்த்து வரும் லார்கோக்களையும் ரசிக்கும்போது – மண்டைக்குள் அலையடித்துக் கிடக்கும் நெருடல்கள் ஒன்று பாக்கியில்லாது மறைந்து விடுவதன் மாயம் என்னவோ –///

    Fantastic...impressed...enjoyed the expression ..wow...

    ReplyDelete
    Replies
    1. நானுமே... அந்த நோம்பியுலே நானும் ..

      Delete
    2. அந்தச் சாலைகளில் 'அக்கடா'வென்று நடை போடும் போது மனசு தானாய் இலகுவாகிடுவதை உணர முடிந்தது சார் ! Maybe அதன் தாக்கம் எழுத்திலும் பிரதிபலித்திருக்கலாம் !

      Delete
  19. மறு பதிப்புக்கு வைகிங் தீவு மர்மத்தை விட பழிக்கு பழி மற்றும் எமனுடன் ஒரு யுத்தம் அதிக விறுவிறுப்புடன் அதிக ஆக்ஷனுடனும் இருக்கும். உங்களுக்கே தெரியும் வைகிங் தீவு நார்மலான கதை என்று.முடிவு ஆசிரியர் கையில்.

    ReplyDelete
    Replies
    1. //முடிவு ஆசிரியர் கையில்//

      என் கையில் நஹி சார் - at least மறுபதிப்புகளின் தேர்வுகளாச்சும் !!

      எனது பர்சனல் favorite ஆன "சைத்தான் சாம்ராஜ்யம்" கதையை வெளியிடவே நான் துணைக்கு ஆள் தேடிக் கொண்டிருக்கிறேன் !

      Delete
  20. Mouna manathoru mayanathil theera mounamaaki pona than maganin mun mounamaga suluraithukondirunthal oru thaai

    ReplyDelete
  21. ட்யுராங்கோவின் அட்டைப்படம் சூப்பர். ஓவியம்,வண்ணம், தேர்ந்தெடுத்த சித்திரங்கள் என அட்டகாசமாக உள்ளது. அதுவும் பின் அட்டையில் உள்ள நாயகனின் ஆக்ரோசமாக மெசின் கன்னை இயக்கும் படம் சூப்பர்.

    இத்தனை சிறப்புக்கும் காரணமான இதனை வடிவமைத்த நமது ஓவியருக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இந்த அட்டைப்படத்தை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

      Delete
    2. ட்யுராங்கோ அட்டைப்படங்கள் அந்தக் கதையின் வீரியத்தைப் பிரதிபலித்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்ததன் பலன் என்பேன் !!

      Delete
  22. லார்கோ எப்போது சார் வருகிறார்

    ReplyDelete
  23. A:mm rendum kaluzhi mangankal
    B:nama pechai aranbika koodathu
    C:Namuna pechai aranbika koodathu
    D:enga yarum pesaporathu ellai($@#&**!!)

    ReplyDelete
  24. சைத்தான் சாம்ராஜ்யம் + வைக்கிங் தீவு மர்மம் இரண்டையும் இணைத்து வண்ண குண்டு இதழாக வெளியிட்டால் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக நன்றாக இ௫க்கும் .
    நண்பர்களின் ஆதரவுகளை இ௫ கரம் கூப்பி வேண்டுகின்றேன்.
    ஆதரவு த௫வீர்களா நண்பர்களே?

    ReplyDelete
  25. பனிப்போர்வையின் கீழ் மீளாத்துயில் கொண்டிருப்போரின் மயான பூமியின் நிசப்தமான நாளில்.....

    மேற்கண்ட வரிகள் டுயுராங்கோவின் ஆரம்ப வரிகளுக்கு எனது சிறு முயற்சி.

    ReplyDelete
  26. டுரங்கோ பிரேம் வரிக்காக ....
    பனிமூடிய மலைச்சிகரங்கள் மௌனமாய்ப் பார்த்துக்கொண்டிருக்க பள்ளத்தாக்கில் அமைந்திருந்த அந்தப் பரந்த கல்லறையின் நடுவில் ஒற்றைப் பெண்மணியின் மெல்லிய விசும்பல் சப்தம் மட்டும் ஊதைக்காற்றின் ஊடாக கேட்டுக்கொண்டிருந்தது ..காலங்கள் கடந்தாலும் உறவுகளின் ஞாபகங்களுக்கு மட்டும் எல்லைகள் இல்லையன்றோ..!

    ReplyDelete
  27. டெக்சின் எல்லையில் ஓர் யுத்தம் அடுத்த மறுபதிப்பா வரலைனா... அடுத்த மானே தேனே லெட்டர் எழுதி சிவகாசி அட்ரசும் எழுதி வெச்சுட்டு சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெசல் படிச்சுடுவேன்....அப்புறம் உங்க இஷ்டம்..

    ReplyDelete
    Replies
    1. மிரட்டல்களுக்கு அஞ்சோம் !! எங்ககிட்டேயுமே ஒரு அஸ்திரம் இருக்குல்லே !!

      கோவை கவிஞர்கிட்டே சொல்லி , அந்த sinister 7 பற்றிய வேண்டுகோளையும் ; "சூ.ஹீ.சூ.ஸ்பெ." பற்றிய சிலாகிப்பையும் ஒன்றாக்கி ஒரு கவிதையை ரெடிபண்ணச் சொன்னோம்னா சும்மா அதிரும்லே !!

      Delete
  28. இளம் டெக்ஸ் சித்திரம் மிக அருமை.
    சித்திர நேர்த்தி அபாரம்.
    ஜுனில் அற்புத விருந்து காத்துள்ளது.

    ReplyDelete
  29. பவளச்சிலை மர்மம்....

    நினைவுப் பேழையில் மின்னிய பவளமும் நனவான புதிய கலர் கனவும்...!!!

    *க்ளைமாக்‌ஸே முழுக் கதையும் ஆக்ரமிக்குமா??? பதில் இல்லாத கேள்விதான் பவளச்சிலை மர்மத்தை அறியும் வரை. துவக்கத்திலேயே ஆரம்பித்து விட்ட க்ளைமாக்ஸ் விறுவிறுவென தனக்கேயுரிய திருப்பங்களுடன் பயணத்தை தொடர்ந்து 110பக்கங்களில் சொர்னமாக ஒளிர்ந்த சாகசம் இது.

    *டெக்ஸ் சாகசத்தில் செவ்விந்தியர்கள் வந்தாலே வாணவேடிக்கை தடபுடல் கிளப்புவது வாடிக்கை; இம்முறை ஒருபடி கூடுதலான வீரியத்துடன் கொக்கப்பனை கொளுத்தி விட்டார்கள் டெக்ஸ் & கோ.

    *போனெல்லியில் டெக்ஸ் கதைகள் கருப்பு வெள்ளையில் வெளிவந்த காலத்திலேயே 100வது இதழ், 200வது, 300வது இதழ்,.....700வது இதழ் என்ற மைல்கல் இதழ்களை வண்ணத்தில் வெளியிட்டு வந்தார்கள். அந்த வரிசையில் நாம் அறிந்த சாகசங்கள் மூன்று.
    சைத்தான் சாம்ராஜ்யமும், பவளச்சிலை மர்மும், நிலவொளியில் நரபலியும் தான் அவைகள்.

    *இந்த அசாத்திய ஸ்பெசல் வரிசையில் வந்த பவளச்சிலை மர்மம், கருப்பு வெள்ளையில் ஒரு மெகா ஹிட்டான இதழ். சற்றே அகலம் அதிகமான அளவில் ஓவியங்கள் அசரடிக்கும் தரத்திலானவை. வலைப்பக்கங்களில் இதன் வண்ணப் பக்கங்கள் சிலவற்றை ரசித்திருந்த நண்பர்கள் கம்பேக்கிற்கு பிறகு வண்ணத்தில் மிளிரும் டெக்ஸின் முதல் சாகசமாக இதை எதிர்பார்த்து இருந்தனர். நிலவொளியில் ஒரு நரபலி முந்திக் கொள்ளவும், இது எப்போது என்ற கேள்விக்கு பதில் சென்ற ஈரோடு விழாவில் தான் கிட்டியது.

    *கம்பேக்கிற்கு பிறகு வண்ணத்தில் அசத்திய இதழ்களில் சட்டுனு நினைவுக்கு வரப்போகும் டெக்ஸ் இதழ் இதுவே. வாயை பிளக்க வைக்கும் ஒரிஜினல் வண்ணச்சேர்கை, சற்றும் வீரியம் குறையாமல் அப்படியே வார்த்தெடுக்கப் பட்டுள்ளது லயன் பணியாளர்களால். அவர்களின் அற்புதமான பணிக்கு தனித்த நன்றி சொல்லாமல் போனால் வரலாறு நம்மை மன்னிக்காது.

    *நவஹோக்களின் புனிதசிலையை அதன் பாதுகாவலன் மாந்த்ரீகன் ஹடானிடமிருந்து அபகரித்து செல்கிறார்கள் மற்றொரு பழங்குடியினரான ஹீவால்பைகள். முந்தைய வாய்ப்பில் கார்சனையும்& கிட்டையும் கூண்டுகளில் தொங்கவிட்ட அவர்களை அதற்கும் சேர்த்து தண்டிக்க வேணும் என கொதித்து எழுகிறார் கார்சன்.

    *தொடரும் அதகள வேட்டையில் 4வரும் அடுத்த சுமார்100 பக்கங்களில் நம்மை பரபரப்பின் விளம்பிலேயே வைத்து உள்ளார்கள். சிலையின் வீரியம் வெளிப்படும் இடம் தடதடக்கும் காட்சியமைப்பு உச்சகட்டம்.

    *ஹீவால்பைகளின் பழக்க வழக்கங்களை கதையின் ஓட்டத்தில் நாமும் கண்டுனரலாம்.
    நரபலிக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் முறை, அந்த கொடூர சடங்கு நடத்தப்படும் முறை நுட்பமாக விவரிக்கப்பட்டு இருக்கும்.

    ---நவஹோக்களின் புனிதமலை,

    ---ஹடானின் காகம்,மலைச்சிங்கங்கள்,

    ---ஹீவால்பைகளின் கொண்டை அலங்காரம்,

    ---நவஹோக்களின் கிராமம்,

    ---ஹீவால்பைகளின் கிராம வழித்தட மலைகள், பாலைவனப் பரப்புக்கள்,

    ---வானவில் பாலமும், அந்த உபநதியின் நீரோட்டம், அவர்களின் இருப்பிடம்,

    ---இளம் ஹீவால்பை நங்கைகள்,
    பலியாகப்போகும் மங்கையின் அதிர்ச்சியான வதனம்,

    ---ஹீவால்பைகளின் கிராமத்தில் இருந்து பிரிந்து செல்லும் வழித்தடங்கள், சிற்றோடைகள், அந்த மலைத்தொடர்கள், பாறைமுகடுகள்,

    ---தப்பிச்செல்லும் ஹூவால்பை இளம்பெண்ணின் நிம்மதியான வதன அழகு,

    ---நவஹோக்களின் படைவரிசையும், சீறும் குதிரைகளும்,

    ---பாலத்தை அறுத்து விடும் கார்சனின் பதட்டம்,
    ஹடானோடு உரையாடல்,

    .....என பக்கத்துக்குப் பக்கம் விருந்தான காட்சிகள், தடாலடி யுக்திகள் என பரபரப்பான த்ரில்லர் தான் பவளச்சிலை மர்மம்.

    *மறுவாசிப்பு பட்டியலில் தடாலடியாக இடம்பிடித்த சாகசம்.
    2018ன் முதல் 4மாதங்களில் மறக்க முடியாதவை மூன்று. தோர்கலின் கடவுளர் தேசம், மினி கலர் டெக்ஸ் இதழ்கள் மற்றும் பவளச்சிலை மர்மம். 2வது 4வது மாத காலமும் மற்றொரு அதிரடி பேக்கேஜ்களை கொண்டு வரவேற்பதை இப்போதே உணரமுடிகிறது.

    கதை சுருக்கங்களோடு கூடிய நீஈஈஈண்ட விமர்சனம் நம்ம Krishna Raja Kumaran V V ஜி, தன்னுடைய தளத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னரே விரிவாக அலசி ஆராய்த்துள்ளார்... அதை இந்த லீங்கில் காணலாம்...

    http://www.kittz.co.in/2012/10/tex-willer-action-thriller.html?m=1

    ReplyDelete
    Replies
    1. அற்புதமான வரிகள்..ஒவ்வொன்றையும் அழகாக அலசி உள்ளீர்...மிக அருமை 👍👍👍👍👍

      Delete
    2. தெள்ளிய நடை ...ரசித்தவற்றை வார்த்தைகளாக மாற்றியிருக்கும் பாங்கு அருமை ...

      சிறிய எழுத்துப்பிழை மட்டுமே ...

      ஹீவால்பைகள் என திரும்ப திரும்ப வருகிறது ..

      ஹூவால்பைகள் என வரவேண்டும் ..

      நீங்கள் கொடுத்த வ வெ கிருஷ்ணா லிங்கில் இத்தாலிய ஒரிஜினல் பக்கங்களை போட்டு இருக்கிறார் ..

      அதில் HUALPAI என்றே இருக்கிறது ..

      இணையத்தில் HUALAPAI TRIBE என்று இருக்கிறது ..


      இதனை வா-ல -பை என உச்சரிப்பது வழக்கம் ..

      ஹூவாலபை எனவும் உச்சரிக்கலாம் ..


      நீங்கள் முந்தைய பதிவிலும் ஹீ எனவே போட்டு இருப்பதால் இந்த சிறிய திருத்தம் ..

      Delete
    3. சூப்பர் டெ.வி. 👏👏👏👏👏👏👏👏

      Delete
    4. எம்மாம் பெரிய விமர்சனம். சூப்பர் விஜயராகவன்.

      Delete
    5. நன்றிகள் நண்பர்களே...

      பொருளர் ஜி@

      வாவ்....தேங்யூ ஜி.தன்யனானேன், விமர்சனத்தை ஆய்வு செய்து பிழையை திருத்தியமைக்கு நன்றிகள் ஜி.

      அடுத்த முறை இதுபோன்ற பிழைகள் நேரா வண்ணம் பார்த்து கொள்வேன் என உறுதி அளிக்கிறேன் ஜி.

      Delete
  30. . அடுத்த Tex மறுபதிப்புக்கு?
    வை.தீ.ம. சை.சா.
    பழிக்கு பழி மற்றும் எல்லையில் ஒரு யுத்தம்.

    ReplyDelete
  31. வந்துட்டேன்

    ReplyDelete
  32. Captain prince reprint 'Kaanaamal pona kazhugu ' if not "Erimalai theevil prince". Mmmm...... Why not both?

    ReplyDelete
  33. எனது சாய்ஸ்
    அடுத்த லக்கி மறுபதிப்புக்கு?
    1. மனதில் உறுதி வேண்டும்.
    2. தாயில்லாமல் டால்டன் இல்லை.

    ReplyDelete
  34. வைகிங் தீவு மர்மம் வேண்டும் மறுபதிப்பு .....

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக வேண்டும் அதற்க்கு முன்னால் எல்லையில் ஒர் யுத்தம் வந்தால் நலம்

      Delete
  35. // அடுத்த கேப்டன் பிரின்ஸ் மறுபதிப்புக்கு? (Just 1!)//
    போன பிரின்ஸ் ஸ்பெஷலுக்கு ஓட்டெடுப்பு நடத்தும்போதே பிரின்ஸுக்கு இணையாக ரிப்போட்டர் ஜானியும் இருந்தால்,இந்த சுற்றில் ரிப்போட்டர் ஜானிக்கு ஒரு வாய்ப்பு தரலாமே சார்,அப்படி ஜானிக்கு வாய்ப்பு தருவது போல் இருப்பின் இரத்தக் காட்டேரி மர்மம் எனது சாய்ஸ்.
    இது எனது கோரிக்கை.

    ReplyDelete
    Replies
    1. But we reporter johnny in new stories but no price

      Delete
    2. வாய்ப்பிருந்தால் ஜானி+பிரின்ஸ் ஸ்பெசல் போடலாம்...
      முன்பு லக்கி+சிக்பில் போட்டது போல...!!!

      Delete
    3. Tex vijay super idea prince+johnny
      +1

      Delete
    4. கூட்டணிகள் நஹி ; தனித்தே போட்டி !

      Delete
    5. //இந்த சுற்றில் ரிப்போட்டர் ஜானிக்கு ஒரு வாய்ப்பு தரலாமே சார்,//

      மறக்குமா சார் - அந்த பிரின்ஸ் vs ஜானி - ஆன்லைன் தேர்தல் குத்தோ குத்ஸ் !!

      Delete
    6. மங்கு,மங்குனு ஓட்டு போட்ட ஆதங்கத்தில்தான் சார் கேட்கிறோம்.ஹி,ஹி.

      Delete
  36. பங்குனி -சித்திரை வெளியீடு (ஏப்ரல்):

    அ)கலர் டெக்ஸ் வில்லர்

    சித்திரங்கள் : அருமை

    கதை:
    வழக்கமான தேடல்…சொன்ன விதம் அருமை.

    விமர்சனம்:
    சின்ன கதையாக இருந்தாலும்…டெக்ஸ் முத்திரையுடன் முடித்து இருந்தது அருமை.

    ஆ)டெக்ஸ் வில்லர்

    அட்டைப்படம்:
    அருமை. கதைக்கு சம்பந்தமில்லாத டெக்ஸ் முன்னட்டையில் என்பது மட்டுமே உறுத்தல்.

    சித்திரங்கள் : அருமை

    கதை:
    சிலையை தேடி செல்லும் டெக்ஸ் குழு…கண்டு…மீட்பது…தான் கதை.
    விமர்சனம்:

    வசனங்கள் இன்னும் செம்மைப்படுத்தி இருக்கலாம். ஒரு இடத்தில், டெக்ஸ் கார்சனை ‘ங்க’ போட்டு பேசுவது…இன்னும் சில இடங்களில் இதைமாதிரி சறுக்கல்கள்..!!





    இ)லேடி S
    அட்டைப்படம்:
    அருமை(!!)கதையில் முன்னட்டையில் வரும் காட்சியை இல்லை...

    சித்திரங்கள்: அருமை
    கதை:
    கதை என்று ஒன்றும் இல்லை…சில சம்பவங்கள் மட்டுமே!!!

    விமர்சனம்:

    இது ஆரம்பமா….அல்லது’ லேடி எஸ்’ கதையை இப்படி தானா என்பது அடுத்த கதையில் தெரிந்து விடும் என்று நினைக்கிறேன்…!!!

    ஈ)கிட் ஆர்டின் கிளாசிக்
    அட்டைப்படம் : அருமை(!!)
    சித்திரங்கள்: அருமை
    கதை:
    முன்று கதைகள்… ஒவ்வொறுன்றும் ஒரு விதம்!!!

    விமர்சனம்:
    படிக்க விறுவறுப்பாக இருந்தது. ஏனோ புன்னகை மலரவில்லை…படித்து விட்டேன் என்ற எண்ணம் மலர்ந்தது.

    உ)கிட் ஆர்டின் (மீண்டும்)
    அட்டைப்படம்: அருமை(!!)
    சித்திரங்கள் : அருமை
    கதை:
    கிட்டின் மாடு வளர்க்கும் ஆசை…அதனால் ஏற்படும் விளைவுகள் தான் கதை.

    விமர்சனம்:
    படிக்க தூண்டும் வசனங்கள்…பக்கங்கள் பறக்கின்றன…மீண்டும் புன்னகை பூக்கவில்லை…வயது காரணமா….அல்லது அறிவு வளர்ந்து விட்டதா….குழந்தைத்தனம் காணாமல் போய் விட்டது. முதல் முறை படிப்பதற்கு…வாங்கியது காரணம். மீண்டும் படிப்பேனா…ஆர்வம் வேண்டும். லார்கோ, டைகர், டெக்ஸ்’ஐ மீண்டும் படிப்பது போல்…கார்ட்டூன் கதைகளை படிக்க முடிவது இல்லை…ஆராய வேண்டிய விஷயம்!!!!

    ReplyDelete
    Replies
    1. //புன்னகை பூக்கவில்லை…வயது காரணமா….அல்லது அறிவு வளர்ந்து விட்டதா….குழந்தைத்தனம் காணாமல் போய் விட்டது.ஆராய வேண்டிய விஷயம்!!!!//

      :-) ரசனைகளின் மாற்றங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கம் தானே சார் ?

      Delete
  37. Durango super
    Nowadays I am die hard fan of durango's art work lt memirise me
    Awaiting for may month...

    ReplyDelete
  38. கேப்டன் பிரின்ஸ்:- மரணவைரங்கள்

    டெக்ஸ் :-சைத்தான் சாம்ராஜ்யம்

    லக்கி லூக் :- உங்கள் மற்றும் நண்பர்கள் சாய்ஸ்

    ReplyDelete
    Replies
    1. Prince,tex,lucky
      All you and friends choice because Ethu paduchalum enaku Athu new thaa

      Delete
  39. டியுரங்கோ 3ம் பாகம் :

    பனிபடா்ந்த அம்மயானத்தில், தனிமையில் வாடும் அபலைப் பெண்ணுக்கு கல்லறையே துணையாகிறது, தன் உள்ளக் குமுறல்களைக் கொட்ட...

    ReplyDelete
  40. Next rworints as my choice::

    1. Ratha MUTHIRAI or bailing thevu marmam plus saithan samrajyam
    2. Lucky Luke any new stories( more than 100 stories available )
    3. Erimali thevil prince and kanamal pins kazhughu.
    4. That tex willer VS Mbhisto story 600 more pages story with MARANA MANDALAM.

    Kindly try above books to publish

    Regards
    I.V.SUNDARAVARADAN

    ReplyDelete
    Replies
    1. SOME TYPING MISTAKES IN MY MESSAGE.

      1. REPRINTS
      2. VAIKING THEVU MARMAM
      3. KANAMAL PONA KAZHUGHU

      Delete
    2. // Lucky Luke any new stories( more than 100 stories available//

      தவறான தகவல் சார் !

      Delete
  41. பங்குனி திருவிழா நல்வாழ்த்துக்கள் எடிட்டர் சார்!

    ReplyDelete
  42. ///“வைக்கிங் தீவு மர்மம்” உங்கள் தேர்வுப் பட்டியலில் அடுத்த இடத்தில் இருந்ததே guys – அதுவுமொரு மறுபரிசீலனையைக் கோரிடுமா ? Or அது ஓ.கே.வா ? மறுபதிப்புகளில் சொதப்புவது பெரும் பிழையாகிடுமென்பதால் – let’s be doubly sure please!///

    சென்ற ஈரோடு விழாவில் ஓட்டெடுப்பில் முதல் 3இடங்களில் வந்த கதைகள்...

    1.பவளச்சிலை மர்மம்-36வாக்குகள்
    2.வைகிங் தீவு மர்மம்-28வாக்குகள்
    3.சைத்தான் சாம்ராஜ்யம்-25வாக்குகள்

    2வது இடத்திற்கும், 3வது இடத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை சார்.

    எது வந்தாலும் ஓகே தான்.அல்லது இடைத்தேர்தல் என்றாலும் சரியே.

    இடைத்தேர்தலில் இவை 2டோடு வேறு பல கட்சிகளும் ச்சே கதைகளும் போட்டியில் குதிக்கக்கூடும்.

    பழிக்குப் பழி,
    கழுகு வேட்டை,
    இரத்த முத்திரை,
    பழிவாங்கும் பாவை,
    தலை வாங்கி குரங்கு (வண்ணத்தில் அவசியம் வேணும்),
    அதிரடி கனவாய்,
    எமனிடன் ஒரு யுத்தம்,
    இரத்த வெறியர்கள்,
    இரும்பு குதிரையின் பாதையில்(லயன் சென்சுவரி ஸ்பெசலில் வந்த இரயில்பாதை சம்பந்தமான கதை)
    மரணமுள்,
    இரத்த நகரம்,
    மந்திர மண்டலம்,
    எல்லையில் ஒரு யுத்தம்,

    (லயனில் வந்த முதல் 25கதைகளில் இருந்து மட்டுமே மறுபதிப்புகள்ல படிக்க, ரசிக்க விரும்புவதை தந்துள்ளேன்)

    நண்பர்கள் தீர்ப்பே என் முடிவும்...!!!

    ReplyDelete
  43. 1. அடுத்த Tex மறுபதிப்புக்கு? (வை.தீ.ம. ஓ.கே. தானா ? லாக் பண்ணிடலாமா ? )

    விரிவான பதில் மேலே...!!!மறு யோசனைக்கு பரிசீலிக்கிறேன்.

    2. அடுத்த லக்கி மறுபதிப்புக்கு? (Again – just 2!)
    எல்லா லக்கியும் மறுமுறை படிக்கலாம். எதுவாயினும் ஓகே தான்

    3. அடுத்த கேப்டன் பிரின்ஸ் மறுபதிப்புக்கு? (Just 1!)
    மரண வைரங்கள்..

    ReplyDelete
  44. இரண்டாவது தவணை சந்தா தொகை கட்டாதவர்களுக்கு மே மாத இதழ்கள் கிடைக்க வாய்ப்புள்ளதா?

    ReplyDelete
  45. சிக்பில் கிளாசிக்ஸ் 2 வெற்றி என்பேன் காரணம் காமிக்ஸ் பற்றி தெரியாத நண்பர்ஒருவர் இதை படித்துவிட்டு வைத்துக்கொள்கிறேன் என்கிறார்.

    ReplyDelete
  46. நான் இன்னும் புலனாய்வின் மொழிபெயர்ப்பை புலனாய்வு செய்து கொண்டு இருக்கிறேன்(மொழிபெயர்ப்பு செய்து கொண்டு இருக்கிறேன்).
    ஒரு மாதம் நேரம் தருவதாக ஆசிரியர் தெரிவித்தார். புலனாய்வு வை மொழிபெயர்ப்பு செய்ய புத்தகம் என்க்கு மார்ச் 21 தேதியன்று கிடைத்தது.

    ஏப்ரல் 25 மேல் 30 க்குள் என்னால் அனுப்ப முடியும். தயவுசெய்து ஆசிரியர் கால அவகாசத்தை உறுதி படுத்தவும்.

    மேலும் tablet உபயோபடுத்துவதால் என்னால் ms-word file லாக 25 பக்கங்களாக பிரித்து மெயிலில் அனுப்பலாமா?(கூரியர் மற்றும் printout செலவு மிச்சம். மேலும் computer ல் டைப் செய்வதற்கு பதிலாக அப்படியே copy, paste செய்து விடலாம்)

    ReplyDelete
    Replies
    1. இது அவசரப்படுத்தக்கூடிய பணியல்ல என்பது புரிகிறது ; ஆனால் ஏப்ரல் 30 என்பது ரொம்பவே லேட்டாகி விடும் சார் ! ஸ்கிரிப்ட் பரிசீலனை ; திருத்தம் ; லே அவுட் செட்டிங் ; DTP ; ப்ராசசிங் என்று அதன் பின்னே காத்திருக்கும் எங்கள் பணிகள் ஏகம் ! பற்றாக்குறைக்கு மே முதல் வாரத்தில் மறுபடியும் எங்களுக்கு 4 நாள் விடுமுறைகளுண்டு !

      So ஏப்ரல் 15 க்குள் எவ்வளவை முடித்துள்ளீர்களோ - அதை மட்டும் அனுப்புங்கள் சார் !

      Delete
    2. முதல் பாதிக்கு மேல் ஏப்ரல் 15 க்குள் அனுப்பி விடுகிறேன் (குறைந்து 75 பக்கம்).
      Word file லாக mail லில் அனுப்புவது பற்றி நீங்கள் கூறவில்லையே.

      Delete
  47. கேப்சன் போட்டி

    டைகர் :

    ஏன் சார்? ஏன்? . அதான் அதான் 2018க்கு ஒரு ஸ்லாட் கூட தரலியே. அப்புறம் ஏன் எங்க போனாலும் போட்டோ புடிச்சி போட்டி வச்சி, கடுப்பேத்துறீங்க.

    ஜிம்மி :
    ஆமா இவரும் மாப்பிள்ளை கணக்கா போஸ் குடுக்கிறாரு.கல்யாணமும் ஆக மாட்டேங்குது.கதையும் வரமாட்டேங்குது.

    டியூராங்கோ :

    சாரி பாஸ்.டயலாக்க கம்மியா பேச சொல்லி ட்ரெயிங் குடுத்திருக்காங்க. அதனால, ஹி....ஹி....

    டைகர் ஜாக் :
    வீராப்பா இருக்கும்னு டைகர்னு பேர் வச்சப்ப கார்சன் சிரிச்சது ஏன்னு இப்பதான் புரியுது. கடைசி வரைக்கும் பேச்சிலராகவே அலைய விட்டுடுவாங்களோ? உஉடனே பேர மாத்திட வேண்டும்.ஆமா.


    ReplyDelete
  48. டெக்ஸ் மறுபதிப்பு எனது சாய்ஸ்
    1.அதிரடி கணவாய்
    2.எல்லையில் ஒரு யுத்தம்
    வைக்கிங் தீவு மர்மம் சைத்தான் சாம்ராஜ்யம் இரண்டும் ஒரே புக்காக குண்டு புக்காக வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. ஏதாச்சும் ஒன்றில் நில்லுங்கள் சத்யா !!

      Delete
    2. எல்லாமும் வேண்டும் என்ற ஆசையில் மனம் அலை பாய்வதால் ஒன்றிலே நிற்க்க முடியவில்லை

      Delete
  49. லக்கி லூக் மறுபதிப்பு எனது சாய்ஸ்
    1.மனதில் உறுதி வேண்டும்
    2. பிசாசுப் பண்ணை

    ReplyDelete
  50. பிரிண்ஸ் மறுபதிப்பு
    மரண வைரங்கள்

    ReplyDelete
  51. என்னைப் பொறுத்தவரை பவளச்சிலை மர்மம் அன்றும் இன்றும் என்றும் பொக்கிஷமே

    ReplyDelete
  52. My personal favorites in TEX always starts with ..
    “பவளச் சிலை மர்மம்“
    then...
    “வைக்கிங் தீவு மர்மம்”
    then ...
    Dragaon Nagaram or “தலைவாங்கிக் குரங்கு”..

    ReplyDelete
    Replies
    1. # 2 தவிர்த்து பாக்கி எல்லாமே மறுபதிப்பு கண்டுவிட்டனவே சார் ?

      Delete
  53. ###ரெண்டு – மூன்று வரிகளுக்கு மிகாது பார்த்துக் கொள்ளல் அவசியம்.###

    எனது சிறு முயற்சி...

    முடிவுரைகள் எழுதப்பட்ட ஒரு அத்தியாயத்தின் ஆரம்பம்.

    ReplyDelete
  54. ###ரெண்டு – மூன்று வரிகளுக்கு மிகாது பார்த்துக் கொள்ளல் அவசியம்.###

    எனது சிறு முயற்சி 2...

    மயான பூமியில் இன்னும் மிச்சம் இருக்கும் மனிதாபிமானம்..

    ReplyDelete
  55. டெக்ஸ் மறுபதிப்புக்கு
    வைக்கீங் தீவு மர்மம்
    கேப்டன் பிரின்ஸ்க்கு
    மரண வைரங்கள்
    லக்கிலுக்
    பிசாசுப் பண்ணை & பயங்கரப் பாலம் + ஒரு ஜோஸ்யனின் கதை

    ReplyDelete
    Replies
    1. I like this also

      பயங்கர பாலம் தவிர மீதமுள்ள கதைகள் எதுவும் படிக்கவில்லை.

      Delete
    2. ///லக்கிலுக்
      பிசாசுப் பண்ணை & பயங்கரப் பாலம் + ஒரு ஜோஸ்யனின் கதை///

      இந்த காம்போ செமத்தியாக இருக்கு!

      Delete
    3. @ FRIENDS : "வை.தீ.ம." வெளியாகிடும் பட்சத்தில், நிச்சயமாய் பாக்கெட் சைசில் இராது என்பதை நினைவில் இருத்திக் கொள்ளுங்கள் guys !!

      Delete
  56. ###ரெண்டு – மூன்று வரிகளுக்கு மிகாது பார்த்துக் கொள்ளல் அவசியம்.###

    எனது சிறு முயற்சி 3...

    நேசித்த உறவின் பிரிவையும் வலியையும் உணராதிப்போரும் உண்டோ இந்த உலகில்..

    ReplyDelete
  57. ###ரெண்டு – மூன்று வரிகளுக்கு மிகாது பார்த்துக் கொள்ளல் அவசியம்.###

    எனது சிறு முயற்சி 4...

    பனி பெய்திடும் முன்மாலை பொழுதில் இந்த பேதையின் சோகங்களை சொல்ல வார்த்தைகளும் தேவையா என்ன...

    ReplyDelete
  58. அடுத்த டெக்ஸ் மறுபதிப்பு "மரண முள்" வாய்ப்புள்ளதா?

    லக்கிலூக், கேப்டன் பிரின்ஸ் கதைகள் உங்கள் சாய்ஸ் சார்.

    ReplyDelete
    Replies
    1. "மரண முள் " ஈரோட்டில் விவாதிக்கப்பட்டதா ? நினைவில்லை சார்...but நல்ல கதை என்ற மட்டுக்கு ஞாபகமுள்ளது !

      Delete
    2. விவாதிக்கலை சார்,ஆனா போட்ட நல்லா இருக்கும்,விரைவில் எண்ணம் நிறைவேறும் என்ற ஆவலுடன்.

      Delete
    3. அன்புள்ள ஆசிரியர் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.

      Delete
  59. அனைவருக்கும் காலை வணக்கம்.

    ReplyDelete
  60. இன்று பிறந்தநாள் காணும்
    டெக்ஸ் வில்லரின் தம்பியும் இனிய நண்பருமான டெக்ஸ் விஜயராகவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் வாழ்நாள் முழுவதும் காமிக்ஸ் படித்து மன மகிழ்வுடன் நல் வாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டெக்ஸ் விஜய்!! இத்தாலியத் தலயின் கீர்த்தியைப் போல மங்காப் புகழுடன் நீடுழி வாழ்க!

      Delete
    2. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பரே..

      Delete
    3. இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

      Delete
    4. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

      Delete
    5. நமது நல்வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் சார் !

      Delete
    6. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டெக்ஸ் விஜய்!!!

      Delete
    7. டெக்ஸ் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் என்றும் நலமாய் வாழ வாழ்த்துகிறேன்.

      Delete
  61. ட்யூராங்கோ கேப்ஷன்:

    மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்ட என் அன்பே, மாண்டவரை மீட்கும் சக்தி கிடைக்குமென்றால் உலகின் எல்லைக்கல்ல நரகத்தின் எல்லைக்கே சென்றிடவும் தயங்க மாட்டேனென்பது உங்களுக்கு தெரியததன்றோ???

    ReplyDelete
  62. தேத்து ராவுலேர்ந்து ட்யூராங்கோவின் அட்டைப்படத்தைப் பார்த்து மெர்சலாகிக் கிடக்கிறேன்!! ப்பா, என்னவொரு பிரம்மாதமான வடிவமைப்பு!!! இன்னும் சேரவிருக்கும் ஜிகினா வேலைகளோடு கைகளில் ஏந்திப் பார்த்திடும் சமயத்தில் மூச்சுவிட மறந்துபோனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!!

    நம் டிசைனர் பொன்னனுக்கு அரங்கு அதிரும் கரகோஷங்கள்!!

    ReplyDelete
    Replies
    1. //தேத்து ராவுலேர்ந்து//

      பொருளாளர் இப்போத்தான் சேலம் டெக்சின் எழுத்துப் பிழையைத் திருத்தி விட்டுக் கிளம்பியிருக்கிறார் ; அதற்குள் செயலாளர் புதியதொரு பாஷையில் இறங்கிவிட்டார் !!

      Delete
  63. பரிசுக்கு:
    பனி மலைகளின் நடுவே ஒரு எரிமலையாய்க் குமிறிக் கொண்டிருந்தது அவள் உள்ளம். மெலிதாய் எழுந்த சிறு விசும்பல்கள், அம்மலைப் பகுதியெங்கும் மௌன இடி முழக்கங்களாய் எதிரொலித்துக் கொண்டிருந்தன!


    பொங்கலுக்கு:
    //அதான் ஒரிஜினல்லேயே காலியா இருக்கே… அதிலே புதுசா என்ன நாட்டாமை பண்ணத் தேவையாம்?” என்று சில ஆர்வலர்கள் ஆங்காங்கே உடனடிப் பொங்கல்களைப் படையல் போடக் கூடும்//


    அடியேனும் அந்தப் பட்டியலில்! ஆனால், புரிந்து கொள்ளப்படாத சில பொங்கல்கள், படைக்கப் படுவதில்லை, ஒரிஜினலைப் போல காலியாகவே விடப் படுகின்றன!

    மெருகேற்றலுக்கு:
    துருத்திக் கொண்டு தெரியாத மெருகேற்றல்கள் பரவாயில்லை தான்...

    ReplyDelete
    Replies
    1. // பனி மலைகளின் நடுவே ஒரு எரிமலையாய்க் குமிறிக் கொண்டிருந்தது அவள் உள்ளம். மெலிதாய் எழுந்த சிறு விசும்பல்கள், அம்மலைப் பகுதியெங்கும் மௌன இடி முழக்கங்களாய் எதிரொலித்துக் கொண்டிருந்தன //

      சூப்பர் கார்த்திக்.

      Delete
  64. டெக்ஸ் விஜய் ;
    இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  65. அந்த பனிபடர்ந்த வெள்ளை பிரதேசத்தில் மயான அமைதியின் நடுவே அந்த மயானத்தில்
    அந்த காரிகையின் பிரார்தனை அவள் உள்ளகுமறல்களை நீக்குமா..!?




    ******


    நைட்ல இருந்து என்கிட்ட இருந்த சிறு ,பெரு ,நடு மூளைகளை கசக்கி பிழிந்தும் இதை விட சிறப்பான ஆரம்ப வரிகளை (ஹீஹீ..) தவிர வேறு எதுவும் தோன்ற வில்லை.

    இப்ப தெரியுதுப்பா மொழிபெயர்ப்பாளர்களின் சிரமம்.. திறமை அனைத்தும்..


    எனவே இன்னொரு முறை நமது இதழ்களின் அந்த யாருன்னு தெரியாத மொழிபெயர்ப்பாளர்களின் திறமைக்கு தலை வணங்குகிறேன் .

    ReplyDelete
    Replies
    1. யாருன்னே தெரியாத அந்த "முழிபெயர்ப்பாளர்கள் " நன்றி சொல்லச் சொன்னார்கள் தலீவரே !

      Delete
  66. Tex

    வை.தீ மர்மம் + சை.சாம்ராஜ்யம்

    அல்லது

    இந்த இரண்டில் ஏதாவது ஒன்றும்
    87 கோடை மலரில் வெளி வந்த * பழிக்குப்பழி * இணைந்தால் நன்றாக இருக்கும் எடி சார்

    ( Tex கதைகளில் நான் படித்த வரை டெக்ஸ் குண்டடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கும் கதை இது மட்டுமாகதானிருக்கும் )

    ReplyDelete
    Replies
    1. 'தல' ஆஸ்பத்திரியிலா ? அடடே.....அந்தக் கதையைப் புரட்டிப் பார்க்கணும் போல் தெரிகிறதே ?

      Delete
    2. அந்த ஒற்றைக்கு ஒற்றை சவாலுக்கு அடுத்து வரும் காட்சி

      * ஆஸ்பிட்டலில் Tex *

      Delete
  67. அப்படி இல்லையெனில் நண்பர் ஸ்ரீதர் சொக்கப்பாவின் கருத்தும் எனது கருத்தாகும்

    மூன்று புதிய கலர்டெக்ஸ் கதைகள் ஒன்றாக வந்தது போல்

    நான்கு கலர் ரீபிரிண்ட் களை ஒன்றாக களமிறக்கலாமே எடி சார் ?

    இவ்வருட டைனமைட் ஸ்பெஷல் போல
    அடுத்த வருட டபுள் டைனமைட் ஸ்பெஷல் ஆக இதை வெளியிடலாம் எடி சார்

    ReplyDelete
    Replies
    1. "பட்ஜெட் எகிறா வருஷம்" என்று 2019 -ஐ அடையாளப்படுத்த ஆசை சார் !

      Delete
    2. இந்த நான்கு கதைகளும் இரண்டிரண்டாக வருடத்தின் ஆரம்பத்திலும் (march)

      முடிவிலும் (October) வெளியிடலாமே சார்
      அனேகமாய் தீபாவளி நெருக்கத்தில் வரும்

      Delete
  68. Captain Prince

    திகில் கோடை மலரில் வெளிவந்த
    மரண வைரங்கள் + பனிமண்டல கோட்டை
    + சைத்தாஜ் ஜெனரல்

    இந்த மூன்றில் ஏதேனும் இரண்டு

    (ம.வைரங்கள் கண்டிப்பாய் வேணும்ங்க சார்)

    ReplyDelete
  69. கேப்சன் போட்டி:

    டைகர் :

    இன்னா ட்யுராங்கோ மச்சி,கோடை மலருல எல்லாம் வந்து கலக்குற போல,நீ கலக்கு மச்சி இது உன்னோட சீசனு.

    ஜிம்மி :

    இந்த டைகர் பயலும் பார்முல இல்லை,சரக்கடிக்க காசு வேணுமே,பேசாம கொஞ்ச நாளைக்கு இந்த ட்யுராங்கோ பய கூட போய்டுவோமா?

    டியூராங்கோ :

    ஏதோ நம்ம டைகர் மச்சி கொஞ்சம் அவுட் ஆப் பார்முல இருக்கறதால நாம தப்பிச்சோம்,டைகரு பார்முக்கு வரதுக்குள்ள சாதிச்சுட்டு நமக்கு நல்லது.

    டைகர் ஜாக் :

    நம்ம தல ஓடற ஓட்டத்துக்கு இவனுங்க எல்லாம் எப்ப வந்து அவரோட சேருவானுங்க,ஹைய்யோ,ஹைய்யோ.

    ReplyDelete
  70. Luke Lucky Luke
    ..........................

    மினிலயனில் வெளி வந்த அனைத்து சிறு கதைகளையும் தொகுப்பாய் போடலாம் சார்

    மற்றபடி லயனில் வெளிவந்த அனைத்தும் நண்பர்கள் வசம் இருக்கும். சில கதைகள் நீங்களும் ரீபிரிண்ட் செய்தாச்சுங்களே சார்

    லயனில் சொல்ல எனக்கு எந்த கதையும் தோன்றவில்லை

    ReplyDelete
  71. கேப்சன் போட்டி:

    டைகர் :

    இந்த எடிகிட்ட சொல்லி அடுத்த வருஷ ஸ்லாட்லயாவது எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க சொல்லு மச்சி போரடிக்குது.

    ஜிம்மி :

    இவனுங்க பேசிக்கிட்டே சரக்கை நமக்கு மிச்சம் வெக்காம குடிச்சிருவானுன்களோ ???

    டியூராங்கோ :

    அட வெண்ண,நீ ரெஸ்டுல இருக்கறதாலதான் நான் கலக்கிட்டு இருக்கேன்,நீ வந்தா என் கதை கந்தல்தான்.

    டைகர் ஜாக் :

    இந்த மூணு பக்கிங்களும் இங்கதான் இருக்கானுங்களா ? உடனே நம்ம ஆளுங்களை இங்க வரச் சொல்லனும்.

    ReplyDelete
  72. டுரங்கோ .-இங்கே யாருக்காவது சிக்குவாகுவா எங்கே இருக்குன்னு தெரியுமா ?
    ஜிம்மி .-ஆஹா வம்பு வான்டனா வந்து முன்னாலே நிக்குதே ..நம்மாளு சும்மாவே சாமியாடுவான் .சிக்குவாகுவா பேரை கேட்டாலே கொதிச்சிடுவானே ..நல்லவேளை சண்டை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலே நம்ப கிளாஸை கைப்பத்திட்டேன் .கொஞ்சம் தொண்டையை நனைச்சுக்கலாம்
    டைகர் ஜாக் ..-தலே இல்லாம தனியா தண்ணி போட வந்தது தப்பா போச்சே பூரா முரட்டுப்பசங்களா தெரியிறாங்க எதுக்கும் நம்ம ஒரு குரல் குடுத்து வைப்போம் ..வோ ..எனக்கு ஒரு கிளாஸ் ..
    டைகர் ..- நல்லவேளை தண்ணி அடிக்கிறதுக்கு முன்னாலேயே கேட்டே ..இப்போ கரெக்ட்டா சொல்றேன் கேட்டுக்கோ . நீ மப்புலே இருக்கே .சிக்குவாகுவா மேப்ல இருக்கு ஹா ஹா ..

    ReplyDelete
  73. Hello sir,
    டெக்ஸ் என்றாலே எனக்கு நியாபகம் வருவது பவளசிலை மர்மம் தான், சிறு வயதில் என் நண்பனிடம் இரவல் வாங்கி, என் மாப்பிள்ளையின் உண்டியலை உடைத்து xerox எடுத்தேன், இன்றும் என்னிடம் அந்த புத்தகம் உள்ளது. இந்த புத்தகம் கலரில் வந்தது மிக்க மகிழ்ச்சி.

    அடுத்த Tex மறுபதிப்புக்கு?
    என்னுடைய சாய்ஸ் சைத்தான் சாம்ராஜ்யம்.
    கழுகு வேட்டை
    வை.தீ.ம. சுமாரான கதை.
    அடுத்த லக்கி மறுபதிப்புக்கு:-
    பிசாசுப் பண்ணை-லக்கி லுக் 
    ஜேன் இருக்க பயமேன் - லக்கிலூக்

    அடுத்த கேப்டன் பிரின்ஸ் மறுபதிப்புக்கு?
    எரிமலைத் தீவில் பிரின்ஸ் - பிரின்ஸ் 
    சைத்தான் ஜெனரல் - பிரின்ஸ் 

    ReplyDelete
  74. பழையது:

    1 மரணத்தோடு மோதாதே - கருப்பு கிழவியின் கதைகளோடு, ஒற்றை கண் ஜாக் கதையும் உண்டு.

    2 பனியில் வந்த பேய் - கருப்பு கிழவியின் கதைகளோடு, ரிப்போர்ட்டர் ஜானியின் கதை மற்றும் ஆபத்தை தேடி தொடரின் கதையும் உண்டு

    3 ஜெஸ்ஸி ஜேம்ஸ் - ராபின்ஹூட் போல தன்னை நினைத்து கொண்டு, கொள்ளை அடிக்கும் பணத்தை தன் அண்ணன் மற்றும் அல்லக்கை நடுவில் மாற்றி மாற்றி வைத்து கொண்டு பணக்கர்களிடம் பிடுங்கி

    ஏழைகளிடம் தரும் காமடி ... கலக்கல் கதை.

    புதியது:

    1 வெண்பனியில் செங்குருதி - டெக்சின் பனி பிரதேச சாகசம். நல்ல கதை, விறுவிறுப்பு கார்சனின் தோன தொணப்பு என நல்ல ரசிக்க வைத்த கதை

    2 ஓநாயின் சங்கீதம் - எனக்கு கமான்சே அவ்வளவாக பிடிப்பதில்லை, இருந்தாலும் இந்த கதை நிஜமாகவே நன்றாக இருந்தது

    3 மிஸ்டரி ஸ்பெஷல் - என்னுடைய அபிமான நாயகன் மார்டினின் கலக்கல் கதைகள். simply superb

    4 பவளச் சிலை மர்மம் - இதுவும் நான் முதல் முறையாக அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே படித்து முடித்திருக்கிறேன். கதை நேர்கோட்டில் செல்லும் சராசரி டெக்ஸ் கதை. கலரில் ரொம்ப நன்றாக இருந்தது.

    5 மர்மக் கத்தி - இது நான் முதல் முறையாக படிக்கும் கதை. கதை எனக்கு பிடித்த மாதிரி சயின்ஸ் பிக்ஷன் கலந்த கதை. ஆனால் முடிவில் ஒரு குழப்பம்.

    ரோஜரும் பில்லும் கால இயந்திரம் இன்றி எப்படி மறுபடி 20 ஆம் நூற்றாண்டுக்கு வந்தனர்? எப்படி வாளும் அவர்களுடன் திரும்ப வந்தது? இதற்க்கு யாரவது பதில் சொல்லுங்களேன்?

    ReplyDelete
  75. டைகர் .-பசங்களா இதுதான் என்னோட புது தோஸ்த் டுரங்கோ ஒரு முக்கியமான சந்தர்ப்பத்திலே என்னோட உசிரை காப்பாத்தினார்
    டுரங்கோ .-நான் ஒன்னும் பெரிசா செஞ்சிடலே ..கிழக்கே போகாதே உன்னாலே சமாளிக்க முடியாது மேற்காலே போ ன்னேன் அம்புட்டுதான்
    ஜிம்மி.-மேற்காலேயா ? அடப்பாவி அங்கேதானே அலிஸ்டர் அம்பது பேரோட தங்கியிருந்தார் ..
    ஜாக் .-இந்த பரதேசிங்களோட என்னை ஏன் சேர்த்தாங்கன்னு தெரியலே ..போற போக்கை பார்த்தா அடுத்து லக்கி லூக் கூடத்தான் நான் வருவேன் போலிருக்கு ..வந்ததுக்கு ஒரு கேள்வி கேட்டுருவோம்.. கிழக்கே அதைவிட பெரிய ஆபத்தா ?அப்படி யார் இருந்தா?
    டைகர்சில்க்குதான் .!






    ReplyDelete
  76. கோடை மலர் கண்ணுக்கே தெரிய வில்லை சார். இன்னும் கொஞ்சம் பெரியதாக போட்டிருக்கலாம்.

    ReplyDelete
  77. எடிட்டர் சார்,

    சந்தாதாரர்களுக்கான இலவச பரிசாக வெளியாகிக்கொண்டிருக்கும் 'கலர் டெக்ஸ்' - தனது நறுக் சுறுக் கதைகளாலும், வண்ணங்களாலும், புத்தக வடிவமைப்பாலும் தற்போது நண்பர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருவது நீங்கள் அறிந்ததே!

    இந்த புத்தகங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஆன்லைனில் விலைக்குக் கிடைக்கும் என்று நீங்கள் முன்பே கூறியிருந்ததாக ஞாபகம்!!

    போவட்டும்!

    மொத்தமாக 6 புத்தகங்களையும் பைன்டு செய்து ஒரே விலையில் குண்ண்ண்டாய் ஆன்லைனில் விற்பனைக்கு விட்டால் செம்மயாய் இருக்காதா சார்? நாங்களும் ஆளுக்கு ஒரு காப்பி வாங்குவோமில்ல?

    ReplyDelete
    Replies
    1. அ௫மையான ஐடியா விஜய்.
      ஆசிரியர் மனம் வைத்தால் மிக நன்றாக இ௫க்கும்.நம் பெ௫ம் தேவன் புனித மனிடோ தான் அ௫ளாசி வழங்க வேண்டும்.

      Delete
    2. ஹைய் இது நல்ல ஐடியாவா இருக்கே.
      +11111

      Delete
  78. தட தடத்தபடி குதிரையில் வரும் அட்டைப்படம், இதயத்துடிப்பை எகிறச் செய்கிறது.கதையிலே எந்த வஞ்சனையும் இருக்காது என்பதை ஆக்ரோசமான டியூராங்கோவின் போஸ் பறை சாற்றுகிறது. பின்னட்டை, முன்னட்டையாக மாறி இருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. // கதையிலே எந்த வஞ்சனையும் இருக்காது என்பதை ஆக்ரோசமான டியூராங்கோவின் போஸ் பறை சாற்றுகிறது.//
      அசத்தும் என்று நம்புவோம்.

      Delete
  79. ட்யூராங்கோ முதல் பக்க கேப்ஷன்:

    விதைத்தவை விருட்சங்களாகவும், புதைத்தவை சிலுவைகளாகவும் எழும்பியிருந்த அந்த பனி படர்ந்த பிரதேசத்தின் கனத்த அமைதியை கொஞ்சமேனும் குலைக்க முயன்று, அதில் ஓரளவு வெற்றியும் ஈட்டிக்கொண்டிருந்தன - ஒரு இளம் பெண்ணின் விசும்பல்கள்!

    (ஒருவேளை, தப்பித்தவறி, பரிசு கிடைத்தால் தேவையுள்ள நண்பருக்கு அது டைவர்ட் செய்யப்படும்) :)

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக பரிசு பெ௫ம்.
      பரிசை எனக்கு அனுப்பி விடுங்கள் விஜய் நண்பா!

      Delete
  80. சும்மா ஒரு முயற்சி

    Durango Caption - அந்த ஆரவாரமற்ற மலை சரிவினில் பனி பொழியும் மயானத்தில் மனதில் வெறுமை குடிகொண்டு விட்ட அந்த மாது அந்த கல்லறையின் முன் மௌனமாய் அமர்திருந்தாள்.

    Coversation Captions:

    டைகர் - என்னப்பா ஜிம்மி, கொஞ்ச நாள் நான் வெளியூருக்கு போயிட்டு வரக்குள்ள, யார் யாரோ வந்து நம்ம இடத்தை எடுத்துக்க பாக்கறாங்க. நம்ம பத்தி சாருக்கு தெரியாது போல.

    ஜிம்மி (mind வாய்ஸ்) - இந்த புன்னியவான் எனக்கு சரக்கு வாங்கி குடுக்கறேன்னு சொன்னார், அது இந்த டைகர் பயலுக்கு பொறுக்கலையே, கதையை கெடுத்துருவன் போல இருக்கே.

    டுரங்கோ (mind வாய்ஸ்) - உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும், என்ன பத்தி உனக்கு அடுத்த மாசம் தெரியும்.. அப்ப நீ இதே மாதிரி பேசி பாரு நைனா..

    டைகர் ஜாக் (mind வாய்ஸ்) - ஒருத்தன் திமிரா பேசுவான், இன்னொருத்தன் பேசவே மாட்டான், நம்ம தல மக்களுக்காக பேசறவரு.. எனக்காக நான் பேசினா தான் உண்டு. பேசாம நம்ம ஆர்டரை பண்ணுவோம்..

    ReplyDelete
  81. இன்னும் XIII Collection சந்தா கட்டவில்லை. ஆனால் கண்டிப்பாய் அந்த புத்தகங்கள் வேண்டும். எவ்வளவு புக்ஸ் கடைகளில் கிடைக்கும்? இது சந்தாதாரர்களுக்கு மட்டும் தான் XIII Collection கிடைக்குமா?

    அதே போல் ஜம்போ கடைகளிலும் கிடைக்குமா அல்லது சந்தாதாரர்களுக்கு மட்டும் தானா?

    ReplyDelete
  82. ட்யூராங்கோவிற்கு இரண்டு மூன்று வரியில் எழுத முயற்சி பண்ணி சற்று நீண்டுவிட்ட வரிகள் சார்! "பனி படர்ந்த மயான பூமி அது. முன்பு அங்கு மனிதர்கள் வாழ்ந்ததற்கான சாட்சியாய் நின்று கொண்டிருந்த சிதிலமடைந்த வீடுகளும், பூமியிலிருந்து முளைத்தாற்போன்று மூக்கை நீட்டிக் கொண்டிருந்த சிலுவைகளும் தங்கள் எல்லைக்குள் பிரவேசித்த அப்பெண்மணியை ஆச்சர்யத்துடன் உற்று நோக்க.....! விரைந்து வந்த அந்த பெண்ணோ தான் நாடிவந்த கல்லறையின் முன் அமர்ந்து மனதில் தேக்கி வைத்திருந்த சோகத்தை இறக்கி வைப்பதில் மும்முரமாக இருந்தாள்."

    ReplyDelete