Tuesday, February 27, 2018

பிப்ரவரியில் மார்ச் !

நண்பர்களே,

வணக்கம். மார்ச்சின் "பொட்டிகள்" கிளம்பி விட்டன - as promised ! So நாளைக் காலையில் ஜில்லார் + டெக்ஸ் + நீலப் பொடியர்கள் + கேப்டன் டைகர் என்ற அதிரி-புதிரி கூட்டணி உங்கள் இல்லக் கதவுகளைத் தட்டத் தயாராகியிருப்பர் ! இம்மாதத்தின் இதழ்கள் சகலமும் light reading என்பதால் - சிரமங்களின்றிப் படித்து முடிக்க சாத்தியமாகிடும் என்பதில் ஐயமில்லை ! எப்போதும் போல் காத்திருப்போம் - எங்களது மார்ச் முயற்சிகளின் மதிப்பெண்களைத் தெரிந்திட !! Do let us know please !

அப்புறம் ஆன்லைன் லிஸ்டிங்குமே தயார் - அவ்வப்போது இதழ்களைத் தேர்வு செய்து வாங்கிவரும் நண்பர்களின் பொருட்டு : http://lioncomics.in/monthly-packs/482-march-2018pack.html


And இதோ - கடந்த பதிவினில் நாம் கேட்டிருந்த கேள்விகள் இங்கேயும் தொடர்கின்றன :

1. உங்கள் பார்வையில் ‘Album of the Year 2017’ எதுவோ? (ஒற்றை முதல் பரிசு மட்டுமே சாத்தியம் என்பதால் “"ஆங்… இது… அப்புறம் அது… அப்பாலிக்கா இதுவுமே"” என்ற தேர்வுகள் வேண்டாமே ?!)

2. உங்கள் பார்வையில் “அறிமுகம் of the Year”?

3. உங்கள் பார்வையில் ”சொதப்பல் of the Year” 2017?
(இங்கேயும் ஒற்றை சாய்ஸ் மட்டுமே ப்ளீஸ்)

4. அட்டைப்படங்களுள் உங்களது Top3 ?

5.மிகச் சுமாரான அட்டைப்படங்களின் பட்டியலுமே ப்ளீஸ்? The Bottom 3 ?

6. 2017-ன் “Top Moment” – உங்களைப் பொறுத்தவரை ?

7. லயன் கிராபிக் நாவல் (சந்தா E)– உங்கள் பார்வையில்?

8. 2017 – ஒட்டுமொத்தமாய் என்ன மாதிரியான அனுபவம் என்பீர்கள்?
(a) சூப்பர்-டூப்பர் (b) தேவலாம்!   (c) ஹாவ்வ்வ்!

Bye all !! Happy Reading !!

201 comments:

  1. // மார்ச்சின் "பொட்டிகள்" கிளம்பி விட்டன.//
    சூப்பரே,ஆவலுடன் ஒரு காத்திருப்பு.

    ReplyDelete
  2. Welcome new friends. Giid evening all.

    ReplyDelete
    Replies
    1. இனியமாலை வணக்கங்கள் அனைவருக்கும்.

      Delete
    2. Q.7.நல்ல முயற்சி.

      Delete
    3. Q.2.டுராங்கோ..சத்தமின்றி யுத்தம் செய்து மனதை மயக்கிய அறிமுகம்.

      Delete
    4. Q.1.ஒரு தலைவன் ஒரு சகாப்தம். போன்னெலியை உட்புகுத்தி புதுமை படைத்ததால் என் ரேட்டிங்கில் டாப்...

      Delete
    5. Q.3.டாக்டர் பொடியன். வரவர கசக்குதய்யா...

      Delete
    6. Q.4.1.பிணத்தோடு ஒரு பயணம்.
      2.ஓநாயின் சங்கீதம்
      3.300.லயன்

      Delete
    7. Q.5.ஒரு முடியா இரவு
      இரத்தக் கோட்டை (வெளிர் வண்ணம் ஒட்டவில்லை)
      லேடி எஸ்..

      Delete
  3. டெக்ஸ் வில்லர் கதைகள் தவிர மற்ற அனைத்தும் தேவலாம்

    ReplyDelete
  4. டெக்ஸ் வில்லர் கதைகள் தவிர மற்ற அனைத்தும் ok

    ReplyDelete
  5. நன்றி விஜயன் சார். ஒவ்வொரு மாத இறுதியில் சிங்கத்தின் பாய்ச்சலுடன் அட்டகாசமாய் எங்களுக்கு புத்தகங்களை தயார் செய்து கொடுத்து வரும் நமது குட்டி டீமுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. நடுசாமத்தில் வரும் என நினைத்த பதிவு மாலையிலேயே வெளிவந்தமைக்கு நன்றிகள் சார்..:-)

    ReplyDelete
  7. பொடியர்கள் அட்டைப்படம் அள்ளுது;
    காலை காணப்போகும் மிஸ்ஸுக்கு மனம் துள்ளுது;
    ஜில்லார் ஜெயம் காண்பாரா என கேள்வி தெறித்து எழுகுது;
    டெக்ஸ் முஷ்டி பஞ்சராக்கும் மூக்குகள் காண நெஞ்சம் துடிக்குது. (வழியில் கொஞ்சம் ஓவர் ஹி...ஹி...)

    ReplyDelete
  8. 1. இந்த வருடத்தின் பெஸ்ட்

    ட்யுராங்கோ

    2. சிறந்த அறிமுகம்

    ட்யுராங்கோ

    3. இந்த வருடத்தின் சொதப்பல்

    தீபாவளி டெக்ஸ்

    4. சிறந்த அட்டைப்படங்கள் டாப் 3

    1. ட்யுராங்கோ

    2. Undertaker

    3. இரத்தக்கோட்டை

    5. சுமாரன அட்டைப்படங்கள் பாட்டம் 3

    1. மரணத்தின் நிறம் பச்சை

    2. அஜாரகம் அன்லிமிட்

    3. மிஸ்டரி ஸ்பெஷல்

    6. 2017. ன் சிறந்த தருணம்

    இரத்தப்படலம்

    அறிவிப்பு

    7. கிராபிக் நாவல் சந்தா

    90/100

    8.2017.ன் காமிக்ஸ் அனுபவம்

    தேவலாம் 75/100


    ReplyDelete
  9. நாளை மாலை இனிய பொழுதாக அமைய வைக்க இருக்கும் லயன் குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துகளும் உரித்தாகுக...!

    ReplyDelete
    Replies
    1. வரலைன்னா போராடத் தயாராகவும் போராடக் குழுத் தலைவரே.

      Delete
  10. மொத முறையாக டெக்ஸ்ஸை விட டைகர் சாகசம் ஆவலை கிளப்பிட்டு.... எது முதலில் படிப்பது என்பதில் தயக்கமே இல்லை...

    நாளை ஒருநாள் மட்டும் என் பெயர்,

    "சேலம் Tiger விஜயராகவன்"

    ReplyDelete
    Replies
    1. அப்பிடிப் போடுங்க டைகர்ஜி.

      Delete
    2. இல்லியா பின்னே நீங்கள் டெக்ஸை டாப் மொமென்ட் ஆஃப் 2017ல் வைக்கையில், நாம இதைக்கூடவா செய்ய மாட்டோம்...

      டெக்ஸ் லயன் கிங்னா, டைகர் டான் ஆஃப் முத்து.

      Delete
    3. நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லுங்க.

      Delete
    4. சேலம் "டீச்சரம்மா" விஜயராகவன் என்று வைத்தால் இன்னமும் பொருத்தமாய் இராதா ?

      Delete
    5. ஆகா... இன்னும் ஏகப்பொருத்தம் சார்...

      Delete
  11. டெக்ஸ் படுக்கை வசமாக இருப்பது போலுள்ளது. வருங்காலங்களில் படுக்கை வசமாக புத்தகங்கள் வெளியிடவேண்டாம்.

    ReplyDelete

  12. 1. உங்கள் பார்வையில் ‘Album of the Year 2017’ எதுவோ?
    கனவுகளின் கதையிது.

    2. உங்கள் பார்வையில் “அறிமுகம் of the Year”?
    லேடி ஷானியா.

    3. உங்கள் பார்வையில் ”சொதப்பல் of the Year” 2017?
    தடைபல தகர்த்தெழு.

    4. அட்டைப்படங்களுள் உங்களது Top3 ?
    சத்தமின்றி யுத்தம் செய்.
    டிராகன் நகரம்.
    ஓநாயின் சங்கீதம்.

    5.மிகச் சுமாரான அட்டைப்படங்களின் பட்டியலுமே ப்ளீஸ்? The Bottom 3 ?
    அராஜகம் அன்லிமிட்டட்.
    தங்க விரல் மர்மம்.
    கொலைக் கரம்.

    6. 2017-ன் “Top Moment” – உங்களைப் பொறுத்தவரை ?
    இரத்தக்கோட்டை.
    7. லயன் கிராபிக் நாவல் (சந்தா E)– உங்கள் பார்வையில்?
    ஆறு புத்தகங்கள் அநியாயம்.
    12 புத்தகங்கள் வேண்டும்.
    8. 2017 – ஒட்டுமொத்தமாய் என்ன மாதிரியான அனுபவம் என்பீர்கள்?
    (a) சூப்பர்-டூப்பர்

    ReplyDelete
  13. ஹைய்யா!! நாளைக்கு புக்கு!! :)

    ஆத்தா மகமாயி...

    ReplyDelete
    Replies
    1. வேப்பிலை அடிக்கணும். இங்கே ஒருத்தருக்கு சாமி வந்திருச்சேய்..

      Delete
    2. பூனையார்க்கு தொப்பி கண்ணை மறைக்கும், அப்பாடி நிம்மதி; மிஸ்ஸை பார்க்கும் கள்ள "பார்வையில்" ஒன்று கம்மி...

      Delete
    3. ///
      பூனையார்க்கு தொப்பி கண்ணை மறைக்கும், அப்பாடி நிம்மதி;///

      சமீப காலமா பூனையார்க்கு 'தொப்பி'கள்னாலே அலர்ஜியாகிடுச்சு, ஹிஹி!

      Delete
  14. ///எப்போதும் போல் காத்திருப்போம் - எங்களது மார்ச் முயற்சிகளின் மதிப்பெண்களைத் தெரிந்திட !! Do let us know please !///

    வேட்டையாடு விளையாடு - 10/10
    காகிதமும் கறுப்புஓநாயும் - 9/10
    தோட்டா தலைநகரம் - 10/10
    பாலைவனத்தில் புலனாய்வு - 9/10

    (நாளைக்கு புதன்கிழமைன்னு இன்னிக்கே நமக்கு தெரியுறதில்லையா ..அதே லாஜிக்குதேன். ..ஹிஹி)

    ReplyDelete
    Replies
    1. என்னாவொரு புத்திச்சாலித்தனம்!! :D

      Delete
  15. டெக்ஸ் படுக்கை வசமாக இருப்பது போலுள்ளது. வருங்காலங்களில் படுக்கை வசமாக புத்தகங்கள் வெளியிடவேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. ஒருக்களித்துப் படுத்தபடியே படிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்காக போடப்பட்ட ஸ்பெஷல் இதழாக இருக்குமோ? ;)

      Delete
    2. கொஞ்சம் மாறுதலுக்கு சோபா செட் வசமாக போட்டால் உக்காந்து படிக்க வசதியாக இருக்குமில்லையா!!!???

      Delete
  16. இந்த மாதம் முதலில் படிக்க ஆசைப்படும் புத்தகம் ஜில். ஆனால் நம்ப வீட்டுப் பொடியனுக்கு பொடியர்கள் தான் பிடிக்கும்.

    என்ன ஒரு சோதனை:-)

    ReplyDelete
    Replies
    1. பொடியரை பொடியர்களைப் படம் பார்க்க விட்டு விட்டு, சைக்கிள் கேப்பில் ஜில்லாரோடு பயணம் போய் வந்து விடலாம் ; பர பர ஆல்பம் - "கடிதமும்..கருப்பு ஓநாயும் !"

      Delete
    2. அப்படித்தான் செய்யனும். ஆனால் இவன் ஒவ்வொரு படத்திலும் 20 கேள்வி கேட்பான். அதுவும் சில பதில்கள் அவனுக்கு திருப்தியாக இல்லை என்றால் அதே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்பான்... கெட்ட பையன் சார் எங்க வீட்டு பொடியன்.

      Delete
    3. ///

      ஆனால் இவன் ஒவ்வொரு படத்திலும் 20 கேள்வி கேட்பான். அதுவும் சில பதில்கள் அவனுக்கு திருப்தியாக இல்லை என்றால் அதே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்பான்..///


      @ pfb

      நீங்க முதல் தடவையே சரியா சொல்லியிருந்தா, ஜூனியர் பரணி ஏன் திரும்ப கேக்கப்போறாரு? ;-)

      Delete
  17. சார் பொடியர்கள் அட்டை தூள்....நாளை நல்ல நாள்...காத்திருக்கிறேன்😍😍😍

    ReplyDelete
  18. அலட்சியமாக துப்பாக்கியை கையில் ஏந்தியபடி டைகரின் போஸ். தோ. த. அட்டைப்படம் பச்சக்குன்னு மனசுல ஒட்டிகிச்சு.

    ReplyDelete
    Replies
    1. துப்பாக்கி பிடிக்க தெரியாமல் கைகளில் வைத்து இருக்கிறத நல்லா சமாளிக்கிறிங்க ஜி.

      Delete
    2. @பரணி. 🤣🤣🤣🤣🤣. ரம்மியோ, ப்ளூ வோ வரதுக்குள்ள எங்கியாவது ஓடி ஒளிஞ்சுக்குங்க. 🤣🤣🤣🤣🤣

      Delete
    3. ரெண்டு பேரும் நம்ப பசங்க தான் ஜி :-)

      அடிக்கிறதா இருந்தா ஈரோட்டில் தான் அடிப்பாங்க.. அதுவரைக்கும் பிரச்சினை இல்லை.

      Delete
  19. என்னுடைய எதிர்பார்ப்பும் தோட்டாதலைநகரமே...!

    ReplyDelete
  20. Last year release of modesty Blaise reprint in color is really good.
    When will the next issue come in 2018?
    You said you will post the modesty Blaise cover on Monday.... But instead got the new post... Post here at least.... I searched on the net and previous blog posts... Didn't see one cover image also anywhere? Looks like a forgotten issue...

    ReplyDelete
  21. பொன்னு கிடைச்சாலும் புதன் கிடைக்காதுன்னு சொல்லூவா...நமக்கு புதன் அன்னைக்கு புக்கே கிடைக்க போகுது...

    ReplyDelete
  22. அப்புறம் மார்ச் 15க்குள்ள ஏப்ரல் வருமா..
    நம்ப கடைக்கு தான் வேலை நடக்க போகுதுல்ல

    ReplyDelete
    Replies
    1. அட உங்களுக்கு தெரியாதா... போய் புத்தகப் பார்சலை வாங்குங்கள்.. ஏப்ரல் புத்தகங்கள் பிப்ரவரி மாதம் கிடைக்கிற மாதிரி ஏற்கனவே அனுப்பி வைச்சிட்டாங்களாம்.

      Delete
    2. அட...கடைகளில் விற்றுக் கொள்ளவும் அவகாசம் தந்திட வேண்டும் தானே சார் ?

      Delete
  23. பாலைவனத்தில் புலனாய்வு அட்டகாசம்....

    நான் அட்டைபடத்தை சொன்னேன். மூன்று நபர்களும் குளோசப்பில் அவர்கள் முகம் மற்றும் உடல் அசைவுகளை துள்ளியமாக. சூப்பர்

    டைகர் வழக்கம் போல ஸ்டைலான அட்டைப்படம். வண்ணம் படத்திற்கு வலுவுட்டுகிறது.

    ReplyDelete
  24. காலிங் பை கொரியர்..ஹேப்பிங்..பட் வொர்க்கிங் ப்ளேஸ் இன் சிட்டிங். பை டென்சிங்..ஈவினிங் புக்கு ரிசீவிங்..அப்போதான் ட்ரூ ஹேப்பிங்.. .

    ReplyDelete
    Replies
    1. தல இங்கிலீஷ் எல்லாம் பேசுது.

      Delete
    2. எல்லா பக்கமும் மிஸ் மார்ஸின் தாக்கம் இருக்கத்தானே செய்யும்...

      Delete
    3. கங்காருலைசன்ஸ் தலீவரே.
      இங்கிலிபீசுல பொளந்து கட்றீங்க.😄

      Delete
  25. பார்சலைக் கைப்பற்றி ஜென்ம சாபல்யம் அடைஞ்சாச்சேஏஏஏஏஏஏ....!!!

    அட டா என்ன அழகு, எத்தனை அழகு, கோடிமலர் கோட்டிய கொள்ளை அழகு...!!!

    மிஸ் மார்ஸ்ஸின் கள்ளப்பார்வையும்,
    டைகரிடம் சீறும் சிறுத்தை பார்வையும்,
    பள்ளியில் துப்பாக்கி ஏந்தி விடும் லுக்கும், எவன்யா சொன்னது புலி மானை வேட்டையாடும்னு; இங்கே மான் பார்வையே புலியை வீழ்த்துது...

    ReplyDelete
  26. அட்டைப்படம் அழகெலாம் கண்ணுக்கு எட்டல; சரி, மார்க்க பார்க்க எங்கும் கண்களும் இருக்கத்தானே செய்யுது.

    1.டாப்- தோட்டா தலைநகரம்.தளபதி டைகர் லுக்குக்கே 10/10.

    2.டெக்ஸ்- ஜஸ்ட் மிஸ்ல 2வது இடம்.இதுலும் ஒரு அம்மனி, போட்டுத் தாக்குறாங்க....

    3.பொடி பசங்க நீவ வான பின்னணியில் "கோன்சா பதக்"

    4.ஜில்லாரைப் பார்க்கவே பாவமா இருக்கு, ஆறுதல் பரிசு-அன்னக்கரண்டி.
    (சரி விடுங்க, கதையில் பிடித்து விடலாம்)

    ReplyDelete
  27. லயன் காமிக்ஸ்
    வெளியீடு எண் : 320
    மார்ச் 2018

    Tex Willer துப்பறியும்
    பாலைவனத்தில்புலனாய்வு

    பால்டிமோர் நகரிலிருந்து சியரா விஸ்டா நகருக்கு வரும் நிக் மார்ட்டின் என்கிற புலனாய்வுத்துறை அதிகாரி காணாமல் போகிறார்

    அவரை தேடி வரும் டெக்ஸ் வில்லர் அவர் வந்த விபரங்களை சேகரித்து அவர் என்னவானார் ? அவர் வந்த நோக்கம் என்ன ? எதிராளி யார் ? மர்மம் தான் என்ன ? என்பதை கண்டுபிடிக்கிறார்....

    வாவ்.. வாவ்.. வாவ்.. !!!
    14 மாதங்களுக்கு பின் மிக அருமையான கதை ( எனக்கு மிகவும் பிடித்துப்போன கதைகளம்... !! <3 <3 <3 )
    செம்ம மாஸ் ஸ்டோரி
    இதுபோன்ற துப்பறியும் புலனாய்வு கதைகள் வெளிவந்தால் நன்று



    எனது மார்க் : 10/10 ( 100/100 )

    ReplyDelete
    Replies
    1. அதுக்குள்ள படித்து விமர்சனம் வரை போயாச்சா :-) இங்கே புத்தகம் இன்னும் வரவில்லை... மாலையில் தான் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

      Delete
    2. முத்து காமிக்ஸ்
      வெளியீடு எண் : 414
      மார்ச் 2018

      Captain Tiger In
      தோட்டா தலைநகரம் ( கலர் - ரீபிரிண்ட் )

      இதை பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன ?

      #மாஸ்

      எனது மார்க் 10/10

      Delete
    3. லயன் காமிக்ஸ்
      வெளியீடு எண் : 319
      மார்ச் 2018

      ஜில் ஜோர்டன் ன்
      கடிதமும் ஒரு கருப்பு ஓநாயும்

      இதுவரை வந்துள்ள ஜில் கதைகளில் இது ஜில் ன்னு இருக்கு.

      பாரீஸ் நகரில் அடிக்கடி குறிப்பிட்ட வகை மாடல் கார்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருகிறது.
      நிற்க...

      மாறி வந்த ஒரு கடிதத்தினை ஜில் படிக்க நேர்கிறது அக்கடிதத்தின் பிண்ணணியில் ஏதோவொரு பிரச்சினை இருப்பதை கண்டு கொள்ளும் ஜில் அக்கடிதத்தின் உரிமையாளரை தேடிக்கொண்டு போகிறார்கள் ஜில்லும் அவர் அசிஸ்டண்டும்

      அதன் தொடர்ச்சியே கதை..

      கடிதத் தொடர்ச்சியின் மூலம் துப்பறிவதும் கார்கள் காணாமல் போவதற்க்கும் கடிதத்திற்க்கும் உண்டான தொடர்பின் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதும் சுவராஸ்யம்.

      ஜில் ஜோர்டன் ன் துப்பறியும் கதைகள் பிடித்தவர்களுக்கு இக்கதை ஏமாற்றம் தராது

      அசிஸ்டண்டாக வரும் லிபெல் லின் காமெடி என சொல்லும் கடி வசனங்கள் எரிச்சலூட்டுகின்றன..

      கார் திருடன் டோனி போன் பேசும்போது ஒரு துப்பாக்கியை படமாக வரைகிறான் அது எதற்க்காக ஒரு கட்டம் போட்டு காட்டுகிறார்கள் என்பதை கடைசி வரை சொல்லவேயில்லை (சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன்)

      எனது மார்க் 07/10

      Delete
    4. "ஆவியின் ஆடுகளம்" கூட இந்த detective பாணி தானே சார் ?

      Delete
    5. ஆனால் இக்கதையில் உள்ள எபக்ட் அதில் சுத்தமாக இல்லை

      Delete
  28. ௧😍
    ௨😍😍
    ௩😍😍😍
    ௪😍😍😍😍
    ஆஹா...ஒண்ணு...ரண்டு...மூணு...நாலு
    அடடா இந்த மாத இதழ்லயே டெக்ஸ் பின்னட்டதான் பெஸ்ட்...நீல வண்ணத்ல ஜொலிக்குதே...அட முன்னட்ட அதுக்கு போட்டி போடுதே...இல்லல்ல....டைகர்தான் சூப்பர்...பின்னட்டயும் நச்....நோ....வேட்டயாடு வெளாட மிஞ்சுமா ,இதுக....அந்த நீலவான பின்னணில இது வர வந்த அட்டயிலயே இதான் பெஸ்டோ....இல்ல டெக்ஸ்தான் ...திரும்ப பொறுமயா பாரு டம்பி...லேது ...டைகர்காருதான்....அட ஜில் கூட வித்தியாசமாகீதே....சார் இங்கி பாங்கிதான்...அத்தன அட்டயும்் மற்றத விஞ்சுவது ...இதான் மொத தபா....

    ReplyDelete
    Replies
    1. அட புரட்ட புரட்ட இன்பம்....சார் கொலைகாரக்காதலி....ஆஹா...ஆஹா....லார்கோ விளம்பரரம் ஜூப்பருப்பா...அட நம்ம கிட் அடூத்தா மாதம் ...அபாரம்்காலனின் கானகம் அசத்தலான ஓவியம்...எத்துனை கோடி இன்பம் வைத்தாய் விஜயா...

      Delete
    2. ஏல நீ புள்ளி வைக்காமல் எழுதறதே படிக்க முடியவில்லை. இதில் கவிதைன்னு சொல்லி இப்ப நீ எழுதறத சுத்தமாக படிக்க முடியவில்லை.

      பல பேர் வந்து போற தளம். வர்றவங்க பயந்து போய் விடக்கூடாது. பார்த்து நிதானமாக புல் ஸ்டாப் எல்லாம் வைத்து எழுதுள்ள...

      Delete
  29. கணேஷ், சென்னை புத்தகத் திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய உங்களுக்கு நான் தருவதாக சொன்ன a b c d அரையாண்டு சந்தாவை நீங்கள் கேட்டுக் கொண்டது போல் செந்தில் சத்யாவிற்கு கொடுத்து விட்டேன். இன்று நமது காமிக்ஸ் அலுவலகத்தில் இதற்கான பணத்தை செலுத்தி விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் பல பரணி.
      வாழ்த்துக்கள் செந்தில் சத்யா.
      காமிக்ஸ் மூலம் அன்பும் நட்பும் உறவும்
      பல கோடி ஆண்டுகள் தழைக்க
      வேண்டும்.பொம்மைக்கதை படிக்கும் நாம் என்றும் மற்றவர் கண்ணுக்கு
      சின்னப்பிள்ளைகளில்லை என்பதை
      ராஜசேகருக்கு உதவி செய்வதிலும்
      நண்பர்களுக்கு சந்தா கட்டுவதிலும்
      செயல் படுத்தி வருகிறோம்.
      வாழ்க நம் நேசம்
      வாழ்க நம் நட்பு.
      வாழ்க லயன் முத்து
      வணங்குகிறோம் சீனியரை
      வாழ்த்துக்கள் விஜயன்சார்
      விரைவில் களமிறங்ப்போகும் விக்ரம்
      எதிர்பார்ப்புடன் நாங்கள்.

      Delete
    2. காமிக்ஸ் சொந்தங்களின் அன்புப் பரிசினால் நானும் சந்தாவில் இனைந்து விட்டேன் நன்றி நன்றி நண்பர்களே

      Delete
  30. புத்தகங்கள் கிடைத்துவிட்டன. வீட்டில் பொடியன் தூங்கிக் கொண்டிருப்பதால் நம்ம ஜில் கதையை ஆரம்பித்து விட்டேன். செம் சஸ்பெஸா போய்க்கொண்டு இருக்கிறது.

    ReplyDelete
  31. Replies
    1. கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்சி சென்று இருந்தேன். திருச்சி நண்பர்கள் யாரிடமும் பேசவோ நேரில் பார்க்கவோ முடியவில்லை. ஆனால் நமது செல்வம் அபிராமி அவர்களிடம் மட்டும் சில நிமிடங்கள் போனில் தொடர்பு கொண்டு பேசினேன்

      Delete
    2. பரணி சார் நான் உங்களுக்கு கால் செய்தேன். நீங்கள் அட்டென்ட் பண்ணவில்லை. பிறகு நீங்கள் கூப்பிட்ட பொது நான் அவுட்டரில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டதால் உங்கள் அழைப்பை என்னால் மாலை தான் பார்க்க முடிந்தது. சாரி

      Delete
  32. ஆசிரியர் சார்@

    அடுத்த மாத அறிவிப்பில் நாலுகால் நண்பன்(சிக்பில்),
    சிக்பிக் ஸ்பெசல் என இரண்டு வெளியீடுகள் ப்ளானிங் ஏனோ சார்...
    5கதைகளில் 3சிக்பில் எனும்போது ஓவர்டோஸ் ஆகிட வாய்ப்பு இருக்கே சார்.

    கார்டூனும்,டெக்ஸ்ம் பிடிக்காத ரசிகர் எனில் ஏப்ரல் மாதம் நிஜமாவே கோடைகாலமா மாறிடும் வாய்ப்பு அதிகம் சார்....

    மாற்றத்திற்கு வாய்ப்பு ஏதேனும் இருக்கா சார்...

    ReplyDelete
    Replies
    1. சிக்பில்லையும்,டெக்ஸையும் பிடிக்காமல் இருக்காங்களா என்ன?!
      அய்யகோ,என்னே துரதிர்ஷ்டம்.

      Delete
    2. ஆம் ரவி, உண்மை அதான்,
      டெக்ஸ் ரசிகர்களையே பிடிக்காதவங்க இருக்கும் போது டெக்ஸை பிடிக்காமல் போவது ஆச்சர்யம் ஒன்றும் இல்லை தான்... சில மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவர் அப்படித்தானே போட்டார்....

      டெக்ஸை பிடிக்கலனா அவுங்களுக்கு நிச்சயமாக கார்ட்டூன் பிடிக்காது.
      காம்பினேசன் அப்டித்தான் வரும்.

      Delete
    3. கார்ட்டூன்களுக்கு 50 - 50 எனலாம், ஆதரவும், எதிர்ப்பும் !

      ஆனால் டெக்ஸுக்கு 95 - 5 என்பது தான் யதார்த்தம் !

      Delete


    4. அடுத்த மாத சிக் பில் பழசு & புதுசு மோதலைத் தவிர்க்க இயலவில்லை ! அட்டைப்படங்களில் வெளியீடு நம்பர் மட்டுமல்லாது barcode களும் சேர்ந்தே வருகின்றன இப்போதெல்லாம் ! இரு ராப்பர்களுமே கொஞ்ச காலம் முன்பே அச்சாகி விட்டதால் மாற்றியமைக்க வழியில்லை !

      Delete
    5. ஆசிரியர் சார் @ விளக்கத்திற்கு நன்றிகள்.

      டெக்னிகலாக மாற்றி அமைக்க வாய்ப்பு இல்லை எனும்போது , நோ ப்ராப்ளம் சார். கார்டூன் கலாட்டா மாதம்; கோடையில் குளு குளு
      ...

      சிக் பில் பழசு Vs புதுசு- ஓவ்...இது கூட ரகளையான போட்டிதான்... கார்டூன் ரசிகர்கள் கடைவாயோர நீர்வீழ்ச்சியை கன்ட்ரோல் பண்ணுங் சாமீஸ்...

      Delete
  33. முதல் புரட்டலில்,
    1.தோட்டா தலைநகரம் அட்டை அசத்தல்,வித்தியாசமான கலிரிங்,டைகர் லுக் இவை செம கெத்து.
    2.டெக்ஸ் அட்டை படுக்கை வசத்தில் கம்பீரமாக இருக்கிறது,பின்னட்டை ஓஹோ.
    3.ஸ்மர்ப்ஸ் அதன் பாணியில் சிறப்பாக இருக்கு,
    4.ஜில் ஜோர்டன் பழைய ஓவிய பாணி இருந்தாலும் ஓகே.
    உள் பக்கங்களில் தோட்டா தலைநகரம் கலிரிங் சிறப்பு,வசனங்கள் நெரிசலில் இருப்பது போல் தோற்றம்,
    டெக்ஸும் ஓவிய பாணி நிறைவு.

    ReplyDelete
  34. மாதந்தோறும் பருமனான இதழ்களை பெற்று வந்ததால் இந்த மாதம் டப்பாவும்,இதழ்களும் இளைத்து இருப்பதைப் போல் ஒரு எண்ணம் தோன்றியது.

    ReplyDelete
    Replies
    1. +1.... எல்லாம் பேலியோ டயர்ட் பாய்ஸ்ங்களா அமைஞ்சுட்டது...

      Delete
    2. கனமான மாயாவி மாமாவுக்குப் பதிலாய் sleek ஆக டைகர் வந்திருக்கிறார் சந்தா D -ல் ! Maybe அது தான் வித்தியாசமோ ?

      Delete
  35. புக்கு வந்திடுச்சேய்...!!!

    ஆத்தா மகமாயி... உன் கருணையே கருணை தாயி! _/\_

    ReplyDelete
    Replies
    1. மகமாயிக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்க,ஈ.வி.
      ஆத்தாவுக்கு உங்களை கவனிக்கவே நேரம் சரியா இருக்கும் போலிருக்கே.

      Delete
    2. இத்தனைக்கும் ஏகப்பட்ட கூழ் பெண்டிங். ஆனா ஆத்தா இவரை மட்டும் கவனிக்குது. இதெல்லாம் சரியில்ல ஆத்தா.

      Delete
    3. நீங்க வேற மகி.
      ஆத்தா கூழ் ஊத்த சொல்லி ஈ வி க்கு
      போன் போட்டா..
      ஹலோ ஹலோ இங்க சிக்னல் சரியில்ல
      ஹலோ ஹலோ... என்றுதான் கேக்குதாம்

      Delete
    4. நீங்க வேற மகி.
      ஆத்தா கூழ் ஊத்த சொல்லி ஈ வி க்கு
      போன் போட்டா..
      ஹலோ ஹலோ இங்க சிக்னல் சரியில்ல
      ஹலோ ஹலோ... என்றுதான் கேக்குதாம்

      Delete
    5. நீங்க வேற மகி.
      ஆத்தா கூழ் ஊத்த சொல்லி ஈ வி க்கு
      போன் போட்டா..
      ஹலோ ஹலோ இங்க சிக்னல் சரியில்ல
      ஹலோ ஹலோ... என்றுதான் கேக்குதாம்

      Delete
    6. கணேஷ் முடியல்ல... செம

      Delete
  36. கடிதமும் ஒரு கறுப்பு ஓநாயும் - கதை
    20% சஸ்பென்ஸ்.
    10% நகைச்சுவை(லிபெல் பக்கம் 25 & 26)
    30% மரண மூக்கை (லிபெல் சார்வாளின் மரண கடிக்கு, ஓநாய் கடியே ஓ.கே)
    20% த்ரில்
    20% ட்விஸ்ட்ஸ்.
    மார்க்ஸ் 70/100

    ஓவியம் & வர்ண சேர்க்கை...
    85/100.
    முதலில் படித்ததால் ஏற்பட்ட கடி வலி குறைய started Smurfs 😂😂😂

    ReplyDelete
    Replies
    1. மரண மொக்கை... not மூக்கை... மன்னிச்சூ

      Delete
  37. மக்களே இந்த மாத புத்தகங்களில் பொடியர்கள் கதை விறுவிறுப்பாகவும் அட்டகாசமாய் உள்ளது. இந்த வருட கார்டூன் கதைகளில் இது டாப்.

    விரிவான விமர்சனம் விரைவில்...

    I love this story.

    ReplyDelete
  38. "வேட்டையாடு விளையாடு" பிரமாதம்.!! குழந்தைகளை மடியில் உட்கார வைத்து அழகாக கதை சொல்லலாம். அவர்களும் நிறைய தடவைகளுக்கு ஒன்ஸ்மோர் இந்த கதையை சொல்லச் சொல்லி கேட்டு நச்சரிக்கப் போகிறார்கள். என் மகன் வளர இன்னும் நாலு வருடங்கள் இருக்கிறது. ஆனால், எனக்கு இப்போதே அவனை மடியில் உட்கார வைத்து கதை சொல்ல வேண்டும் போல ஆனந்தமாக இருக்கிறது. மனதை கொள்ளைக்கொண்ட நீலப் பொடியர்களின் விறுவிறுப்பான ஆக்க்ஷன் கதை.

    ReplyDelete
    Replies
    1. Maybe இப்போதிலிருந்து 25 ஆண்டுகளுக்கு அப்பால் - இந்தக் கதைகளை கேட்டு வளரும் ஜுனியர்கள் நமது அடுத்த batch வாசகர்களாய் இருப்பார்களோ - என்னவோ !!

      Delete
    2. அப்பவும் நீங்கதேன் எடிட்டர்

      Delete
  39. இதழ்கள் நான்கையும் கண்டவுடன் ஆனந்தம்.அதிலும் டெக்ஸின் அட்டைப்படம் அசத்தலோ அசத்தல்..பார்த்து கொண்டே இருக்கலாம் அவ்வளவு அருமை..உட்பக்க டெக்ஸ் சித்தரங்களும் சூப்பர் ஸ்டைலாக காணப்பட ஒரு அட்டகாச திரைப்படத்தை ரசிக்க போகும் அனுபவம் காத்துகொண்டு இருக்கிறது என்பதை இப்போதே உணர முடிகிறது.

    அடுத்த இதழான தோட்டா தலைநகரம் ..நினைவுகள் தலைப்பை கண்டவுடன் அப்போது வந்த தோட்டா தலைநகரம் வெளிவந்த காலத்தை அசை போட நேர்ந்தது. அந்த இதழுக்கு முன் இதழ்தான் அப்பொழுதைய பத்துரூபாய் விலைஏற்றத்தில் தடிமனான அட்டைப்படத்தில் அட்டகாசமாய் வெளிவந்த நினைவு.மேலும் அப்பொழுது அந்த இதழில் வந்த அட்டைப்படம் செம மாஸாக காணப்பட்டது ..அந்த அட்டைப்படமே இந்த அட்டைப்படத்திலும் இடம் பெற்றால் பெரிய அளவில் இன்னும் பட்டையை கிளப்பும் என ஓர் எண்ணம் மனதில் இருந்து வந்தது மறுக்க முடியா உண்மை.ஆனாலும் இப்போது காணப்படும் அந்த தெனாவெட்டான டைகர் போஸும் சிறப்பாகவே காணப்படுகிறது.அதுவரை மகிழ்ச்சியே.

    அடுத்து வந்த சமர்ப் ன் வேட்டையாடு விளையாடு நீல மேக பிண்ணனியில் அழகு.அட்டைப்பட பார்வையில் நான்காவதாக இடம் பெறும் ஜில் ஜோர்டன் எனது மனம் கவர்ந்தவர் என்பதால் கதையில் வேறு இடத்தை பிடிப்பார் என்று மனதார நம்புகிறேன்.அதைவிட அந்த இதழில் சிறப்பு லார்கோவின் வருகிறது விளம்பர அறிவிப்பு தான்.என்னதான் அதிரடி ஹீரோக்கள் பலர் பலர் படை எடுத்தாலும் லார்கோ ,ஷெல்டன் வருகிறது விளம்பரத்தை கண்டால் கூட மனம் கூதுகலமடைகிறது.காத்திருக்கிறேன்.

    இப்படி நான்கு இதழ்களையும் கையில் ஏந்தி மகிழ்ந்தாலும் இந்த முறை ஏதோ ஒரு குறை என்பது போலவே மனம் சொல்லி கொண்டே இருக்க பிறகு தான் புரிந்தது. மாதம் நான்கு கிலோ சர்க்கரை அளவாக சுமையை தூக்கி பழக்கபட்டு இப்பொழுது இரண்டு கிலோ சர்க்கரை சுமையை மட்டுமே ஏந்துவது கொஞ்சம் போல ஒரு வருத்தம் .மாதம் ஒரு இதழ் "குண்டாக " இல்லாவிட்டாலும் மாதம் ஒரு இதழாவது "மினிகுண்டாக" இருந்தால் கூட அந்த சுமை சுகமே...


    இனி களங்களில் புகுந்து விட்டு......!

    ReplyDelete
  40. வேட்டையாடு விளையாடு,
    சீனியர் ஸ்மர்ப் செய்யும் ஒரு ஆராய்ச்சியில் கிடைக்கும் சத்து டானிக்கை ஒரு தாவரத்தின் மேல் சோதனை செய்யும் பொழுது அது விபரீதமான அளவு வளர்ந்தும்,ஆட்கொல்லி தாவரமாகவும் உருமாறுகிறது.
    இதில் இருந்து ஒருவழியாக மீண்ட சீனியர் நம்ம பொடி ஸ்மர்ப்ஸ்கிட்ட அந்த டானிக்கை கொடுத்து ஏதாவது பாலைவனத்தில் அதை புதைத்து விட்டு வரச் சொல்கிறார்,நம்ம ஸ்மர்ப்ஸ்கள் அதை வழியிலேயே கடாசி விட்டு வர,மருந்தை சாப்பிட நேரும் ஒரு குட்டி பறவை (க்ராவ்,க்ராவ் பறவைன்னு கூட வெச்சிக்குவோம்)அசுர வளர்ச்சி அடைந்து நம்ம ஸ்மர்ப்ஸ் வில்லாவை கதிகலங்க செய்கிறது,
    இதில் இருந்து எப்படி ஸ்மர்ப்ஸ் எல்லாம் மீண்டு வருகிறார்கள் என்ற நகைச்சுவை தோரணமே வே.வி.
    1.ச்சை,எனக்கு வயித்தை ரொப்பிக்கிறவனையும் புடிக்காது,வயித்திலே அடிக்கறவனையும் புடிக்காது,
    2.ச்சை,எனக்கு சுறுசுறுப்பே புடிக்காது,
    3.ச்சை,எனக்கு டான்ஸ் ஆடறதே புடிக்காது,
    4.ச்சை,எனக்குப் பாலமும் புடிக்காது! கட்டறதும் புடிக்காது.
    -உம்மாண மூஞ்சி ஸ்மர்ப்ஸின் வசனங்கள் செம கிச்சு கிச்சு ரகம்.
    5.நடக்கும் கலவரத்தில்,எனக்கொரு பேண்ட் தரேன்னு சொன்னிங்களே, மறந்துட்டிங்களா னு சீனியரை பொங்கல்ஸ் வைப்பதும்,ஹி,ஹி ரகம்.
    6.நான் உன்கிட்ட போல்ட்டு கேட்டேன்,ஏன்னா எனக்கு ஆணி தேவைப்பட்டுச்சி,போல்ட் ஆணி ஆகலாம்,ஆணி போல்ட் ஆகலாம்,ஆனா போல்ட் எப்படிடா நட்டாக முடியும்.
    -சீனியர் ஸ்மர்ப்பின் புலம்பல்.
    ஹா,ஹா,ஹா ரகம்.
    - எனது மார்க் 09/10.

    ReplyDelete
    Replies
    1. இது பொடியர்களின் சாகசம் # 7 - நமது இதழ்களில் !

      ஒரு பெரும்பான்மை ஆதரவை இந்நேரத்துக்கு ஈட்டி இருந்தால் செமையாக இருக்கும்....! சொல்லத் தெரியவில்லை இந்த நொடியில் இவர்களது வாக்கு வங்கி எத்தனை சதவிகிதத்தில் நிற்கிறது என்று !

      Delete
    2. பொடியர்களை பொறுத்தவரை, நாமும் ஒரு பொடியர்களாக பாவித்து அந்த கற்பனை உலகில் சஞ்சரித்தால்,அந்த பொடி உலகின் முழுமையான நகைச்சுவையை நாம் அழகாக உள்வாங்கிக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது,எப்போதும் குழந்தைமை ஒரு வரம்தானே,இப்போதைய கடுமையான வாழ்வியல் சூழலில் இது போன்ற கதைகள் நமக்கு வரப்பிரசாதமே,புரிந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

      Delete
    3. ///இப்போதைய கடுமையான வாழ்வியல் சூழலில் இது போன்ற கதைகள் நமக்கு வரப்பிரசாதமே...///யெஸ்.... நச் பாயிண்ட்

      Delete
  41. செயலருக்கு....


    இனி நமது போராட்ட குழுவை கலைத்து விடுவதே சிறப்பு என நம்பகிறேன்..எவ்வகை போராட்டத்திற்கும் சிங்கத்தின் சிறு வயது மயங்காது என உறுதிபட தெரிவதால் இனியும் போராட்ட குழு தொடர்ந்தால் போராட்ட குழுவையே பிறர் பதுங்கு குழியில் போட்டு மூடி சபதம் எடுக்கும் அளவிற்கு சென்றுவிடுவார்கள் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர பிரியபடுகிறேன்..!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் அழைக்கும் செயலாளர் வாழைப் பூ வடையோடு தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுள்ளார் !

      Delete
    2. சிப்பு சிப்பா வருதே போ.கு. நிலைமையை பார்த்து...😁😁😁😁

      Delete
  42. புத்தகங்கள் கிடைச்சிடுச்சி.

    சுடச்சுட (நிஜமாகவே) உச்சிமோந்து பார்க்கிறேன். அந்த வாசனை உண்மையாகவே பரவசப்படுத்துகிறது.

    அட்டைப்படங்கள் மேலும் மேலும் மெருகேறும் ரகசியம் என்னவோ.?
    அநேகமாக இன்றைய இரவு, அட்டைப்படங்களை ரசித்து, சிலாகித்து மகிழவே ஒதுக்கப்படும் என எண்ணுகிறேன்.

    டெக்ஸின் அட்டை ஒருபடி மேல்.நான் கூட முதல் பார்வையில் 'டஸ்ட் கவர் ' போடிருக்கிறார் போல 'என அசந்தே விட்டேன்.அவ்வளவு நேர்த்தி.

    கையக் கொடுங்க எடிட்டர் சார்.

    ReplyDelete
    Replies
    1. //அட்டைப்படங்கள் மேலும் மேலும் மெருகேறும் ரகசியம் என்னவோ.?//

      பிரதான காரணம் : ஒரிஜினல் டிசைன்களையே பயன்படுத்த நாம் முனைந்து வருவது என்பேன் சார் !

      தொடரவிருக்கும் லார்கோ & சிக்பில் க்ளாசிக்ஸ் 2-ன் ராப்பர்கள் இன்னமும் ஒரு படி தூக்கலாய் அமைந்துள்ளன ; ஒரிஜினல் டிசைன்கள் + மேம்படுத்தப்பட்ட வர்ண கலவைகளோடு !! மிரட்டலாக அமைந்துள்ளன இரண்டுமே !!

      Delete
  43. ஆசிரியர் சார்!

    கோடை மலர் ட்யுராங்கோவின் "மௌனமாயொரு இடி முழக்கம்" ஏப்ரல் இதழில் அடுத்த வெளியீடாக காட்டப்படவேண்டியது, இன்னும் இம்மாத இதழில் விளம்பரமாக கூட வரவில்லையே? லார்கோவின் "பிரியமுடன் ஒரு பிரளயம்" வந்துவிட்டதே...

    ReplyDelete
    Replies
    1. இடம் பிடிக்கும் விளம்பரங்கள் எல்லாமே அடுத்த மாதத்துக்கானவைகள் மட்டுமே என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லையே ஜகத் !

      பணிகள் நடந்தேறி வருகின்றன ! விரைவில் வரும்...!

      Delete
    2. விஜயன் சார் லார்கோவ லேட் பண்ணாதீங்க.

      Delete
    3. அன்புள்ள விஜயன் சார்
      F & F சந்தா எப்போது வரும்.
      தாங்களே நேரிடையாக பதிலத்தால்
      மகிழ்ச்சி.

      Delete
  44. எடிட்டர் சமூகத்க்குதிற் ஒரு கேள்வி

    October 18 2017
    நீங்க போட்டிருக்கும் பதிவில்

    சிக்பில் கலக்ஷன் 2 ல் வரும் கதைகளாவன
    1. கொலைகார காதலி
    2. தேவை ஒரு மொட்டை

    என்று கூறியுள்ளீர்கள்

    ஆனால்?

    இம்மாதம் வெளி வந்த புத்தகத்தில்
    1. கொலைகார காதலி
    2. விசித்திர ஹீரோ என்று இருக்கிறதே

    இடையில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்தது போல் எனக்கு ஒன்றும் நினைவில் இல்லை

    எதற்க்காக ? ஏன் இந்த மாற்றம் என்று தெரிந்து கொள்ளலாமுங்களா சார் ?

    நீங்கள் இதற்க்கு பதில் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்

    ReplyDelete
  45. எடிட்டர் சமூகத்க்குதிற் ஒரு கேள்வி

    October 18 2017
    நீங்க போட்டிருக்கும் பதிவில்

    சிக்பில் கலக்ஷன் 2 ல் வரும் கதைகளாவன
    1. கொலைகார காதலி
    2. தேவை ஒரு மொட்டை

    என்று கூறியுள்ளீர்கள்

    ஆனால்?

    இம்மாதம் வெளி வந்த புத்தகத்தில்
    1. கொலைகார காதலி
    2. விசித்திர ஹீரோ என்று இருக்கிறதே

    இடையில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்தது போல் எனக்கு ஒன்றும் நினைவில் இல்லை

    எதற்க்காக ? ஏன் இந்த மாற்றம் என்று தெரிந்து கொள்ளலாமுங்களா சார் ?

    நீங்கள் இதற்க்கு பதில் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்

    ReplyDelete
    Replies
    1. "தேவை ஒரு மொட்டை" டிஜிட்டல் பைல்கள் மெருகூட்டப்பட்டு வருகின்றனவாம் ; அது தாமதமாவதால், அதற்குப் பதிலாய் "விசித்திர ஹீரோ" + 1 புதுக் கதை !

      Delete
    2. சார் வி.ஹீரோ கதை மினிலயனில் கடைசியாக வந்த கதை எல்லோரிடமும் இருக்கும்

      ஆனால் தே.ஒ. மொட்டை அப்படியல்லவே

      மொதல்ல ஒண்ணு சொல்றீங்க
      அப்புறம் அதை தவிர்க்கறீங்க

      ஒண்ணும் புரியலைங்க சார்

      (ஏதாவது அறிவிப்பாவது செய்து வாசகர்களிடம் கருத்து கேட்டிருக்கலாமே)

      Delete
    3. தவிர்க்க இயலா சூழல்களிலும் யோசனை கேட்கிறேனென்று நான் கிளம்பி. ஆளுக்கொரு கருத்துக் சொல்லி வைக்க மறுபடியும் குழப்பிக் கொள்ளும் பொருட்டா ? அந்த ஆட்டத்துக்கே நான் வரலை சாமீ !

      சிக் பில் தொடரின் சகல கதைகளும் வண்ணத்தில் மறுபதிப்பு காணவுள்ளன - so அவை வெளியாகும் வரிசைகள் வேண்டுமானால் மாறுபடலாம் ; ஆனால் முன்னேவோ - பின்னேவோ ஒவ்வொன்றாய் அவை வெளி வந்திடும் !

      Delete
  46. கடிதமும் ஒரு கறுப்பு ஓநாயும்,
    பாரீஸ் நகரில் அடிக்கடி ஒரு குறிப்பிட்ட ரக கார்கள் பிரபல கார் திருடர்கள் டோனி,லினோவால் திருடப்படுகிறது,
    அப்படியே கட் பண்ணா ஜில்லார் ஏஜென்சிக்கு வரும் கடிதாசிகளில் எதேச்சையாக கலந்துவரும் ஒரு மொட்டைக் கடிதாசி,சேவஜோல்ஸ் கிராமத்தில் வசிக்கும் மார்க் ரூலோ எனும் நபருக்கு வரும் அந்த மிரட்டல் கடிதாசியால் கவரப்படும் அக்கிராமத்துக்கு கடிதாசியுடன் கிளம்ப,
    வழியில் சில பிரச்சினைகளை தனது அசிஸ்டெண்ட் லிபெல்லின் கடி காமெடியுடன் கடந்து மார்க் ரூலோவை சந்திக்கிறார்,
    1.அங்கே நடக்கும் ஆராய்ச்சியில் சந்திக்கும் புதிர்களையும்,மர்மங்களையும் தெளிவுபடுத்தி மார்க் ரூலோவை காப்பாற்றினாரா?
    2.பாரீஸில் காணாமல் போகும் குறிப்பிட்ட இரக கார்களுக்கும் இச்சம்பவங்களுக்கும் என்ன சம்பந்தம்?
    3.வழியில் சந்திக்கும் வெடி மருந்து கிட்டங்கியில் இருக்கும் மர்மம் என்ன?
    - இவற்றை ஜில்லார் தனது பாணியில் துப்பறிந்து புதிர்களை விடுவிக்கிறார்.
    கொஞ்சம் கடி,கொஞ்சம் மொக்கை,கொஞ்சம் காமெடி,கொஞ்சம் விறுவிறுப்பு,கொஞ்சம் சஸ்பென்ஸ் அனைத்தையும் கலந்த ஒரு காக்டெயில் சாகசம் இது.
    மொத்தத்தில் ஜில்லாரின் சாகசம் திருப்தி.
    எனது ரேட்டிங்-9/10.

    ReplyDelete
    Replies
    1. 4வது இடம் , இதுவரை வந்த வாக்குகளை வைத்து ஏகமனதாகத் தேர்வாகிடும் போலத் தெரிகிறது...

      1..........

      2..........

      இதற்கு டெக்ஸ் vs டைகர், ரொம்ம்ம்மம்ம நாள் கழித்து டஃப் பைட்,
      இரண்டும் சிங்கிள் ஆல்பம்...

      சபாஷ் சரியான போட்டி...

      முடிவு தெரிய ஒரு 10நாள் ஆகலாம்...

      3.பொடியர்கள் (அன்ன போஸ்ட்)

      4.ஜில்லார்...
      (இது இனிஜியல் ரவுண்ட்ஸ் தான், பார்ப்போம் அடுத்தடுத்த ரவுண்ட்களில் ஜில்லார் பிக்அப் ஆவாரானு......)

      Delete
    2. Arivarasu @ Ravi : 1963 -ல் உருவான கதையிது சார் ; நவீனத்துவங்கள் ஏதுமின்றி, ஒரு சீரான கதையோட்டத்தை மட்டுமே நம்பி அப்போதைய கதாசிரியர்கள் உருவாக்கிய பல டிடெக்டிவ் தொடர்களுள் ஜில்லார் முக்கிய இடத்தைப் பிடிப்பவர் !

      எனக்கு சிம்பிளான இந்த பாணி ரொம்பவே பிடித்திருந்தது !

      Delete
    3. ஜில்லாரின் கதையில் கலரிங் சேர்க்கையும்,வசனங்களும் ரசிக்க வைத்தன சார்,மார்க் ரூலோவின் வீட்டில் அவருடன் ஜில்லார் பேசிக் கொண்டு இருக்கும் போது அசிஸ்டெண்ட் லிபெல் அடிக்கும் கூத்து செம ரகளை,
      ஜில்லார்,ஸ்மர்ப்ஸ் இரண்டிலுமே நல்ல வசனநடைகள் முக்கிய பலம்.

      Delete
  47. அப்புறம் நண்பர் புதுவைசெந்தில் இனி "குவைத் செந்தில் " ! புதியதொரு தேசத்துக்கு குடிபெயர்ந்து சென்றுள்ளவருக்கு நமது வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சார்..

      Delete
  48. செயலருக்கு....


    இனி நமது போராட்ட குழுவை கலைத்து விடுவதே சிறப்பு என நம்பகிறேன்..எவ்வகை போராட்டத்திற்கும் சிங்கத்தின் சிறு வயது மயங்காது என உறுதிபட தெரிவதால் இனியும் போராட்ட குழு தொடர்ந்தால் போராட்ட குழுவையே பிறர் பதுங்கு குழியில் போட்டு மூடி சபதம் எடுக்கும் அளவிற்கு சென்றுவிடுவார்கள் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர பிரியபடுகிறேன்..!

    ReplyDelete
    Replies
    1. முதல்ல செயலாளரை மாத்துங்க. சாப்பாடு போடுகிறோம் என கண்ணைக் காண்பித்து விட்டால் இலையோடு முதல் ஆளாக க்யூவில் நிக்கிறார். அதுவும் நண்டு வறுவல் மற்றும் வாழைப்பூ வடை என்றால் கேட்கவே வேண்டாம்.

      சங்க கூட்டத்திற்கு பஜ்ஜி சொஜ்ஜி வாங்க நமக்கு நிதி நிலைமை சரியில்லை என்பதை நமது எதிரணியினர் சரியாக பயன்படுத்தி வருகிறார்கள் என்பது வருந்தத்தக்கது.

      Delete
    2. இந்த கமெண்ட் திரும்ப எப்படி இங்கே வந்தது...?!


      ஆனாலும் என்ன பன்றது பரணிசார்..செயலர் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழியே ன்னு போயிறாங்க ..:-(

      Delete
  49. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. வேட்டையாடு விளையாடு:-
      அமைதியான ஸ்மர்ப்ஸ் வில்லா.. பாலம் கட்டும் வேலையில் பொடியகர்கள் பொ(பி)ஸியாக இருக்கிறார்கள். சீனியர் வழக்கம் போல் ஆராய்ச்சி கூடத்தில். அவர் கண்டுபிடிக்கும் மருந்து செடியை விரைந்து ராட்சசமாய் வளரச்செய்யும். அந்த மருந்தை இரண்டு பொடியர்களிடம் கொடுத்து அழிக்க செய்கிறார். ஆனால் அவர்கள் அதனை சரியாக அழிக்காமல் வருவதால் ஏற்படும் பிரச்சினை மற்றும் எப்படி அதில் இருந்து மீள்கிறார்கள் என படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

      நீதி:-
      1. காலத்திற்கு ஒவ்வாத ஆராய்ச்சி அழிவைத் தரும்.
      2. பெரியவர்கள் சொல்வதை நாம் அப்படியே செய்ய வேண்டும்.

      பெரிய பறவையால் தனது வீடு மற்றும் லங்கோட்டையும் இழந்த பொடியன் கடைசிவரை அந்த லங்கோட்டை சீனியரிடம் இருந்து பெற முயற்சி செய்யும் இடம் எல்லாம் அக்மார்க் காமெடி.

      சீனியர் இந்த முறை கதைக்கு உண்மையான ஹீரோ இவர் தான்
      மனுஷன் இந்த வயதிலும் செய்யும் சாகசங்கள் என்ன ஐடியா என்ன.

      ஆல் இன் ஆல் ஸ்மர்ப்ஸ் கொடுக்கும் ஐடியா மூலம் அந்த பறவையிடம் இருந்து தப்பிக்கிறார்கள். பெயர் பொருத்தம் அபாரம்.

      ஜீனியஸ் ஸ்மர்ப்ஸ் வெறும் வாய் வார்த்தை தான், சக ஸ்மர்ப்ஸ் இதன் மேல் உள்ள கோபத்தை வெளிப்படுத்தும் இடம் அருமை. இதன் பெயரை வாய்சவடால் ஸ்மர்ப்ஸ் என வைத்து இருக்கலாம்.

      ஒரு காமெடி கதையை இரசிக்கும்படி விறுவிறுப்பாக காமெடியோடு சொல்ல முடியுமா? முடியும் என நிரூபித்து இருக்கிறார்கள்.

      இதுவரை வந்த ஸ்மர்ப்ஸ் கதைகளில் இது தான் பெஸ்ட்.

      இந்த மாத புத்தகத்தில் இது தான் முதல் இடம்.

      Delete
  50. ஒரே மாதத்தில் மூணு கிட் ஆர்டின் மூணு டாக்புல் ....

    கொஞ்சம் பொறுங்க ...குத்தாட்டம் இன்னும் முடியலே .... முடிச்சிட்டு வரேன்.!

    ReplyDelete
    Replies
    1. மேச்சேரியில் நிலநடுக்கமாமே,ரிக்டர் அளவு குபுகுபுவென்று ஏறுதாமே.

      Delete
    2. கன்கிராட்ஸ் மாம்ஸ்...
      ஆடும்யா....நல்லா ஆடும்...
      நாங்களாம் 2015லேயே இப்படி பார்த்து ஆடுனுவங்களாக்கும்....

      ஃபைனலி தி கிரேட் டெக்ஸ் வில்லருக்கு இணையாக ஒரே மாதத்தில் 3 வெவ்வேறு கதைகள் வெளிவரும் 2வது நாயகர் என்ற அந்தஸ்தை பெற்று விட்டார்கள் கிட் ஆர்டின்&கோ...👏👏👏👏👏👏

      லக்கி லூக்குக்கே கிடைக்காத பெருமை...செம... இப்பலாம் லக்கியை விட உட் சிட்டி கலாட்டா க்கள் தான் ரசிக்கும் படி உள்ளன...

      லக்கியை முந்திவிட்டு டாப் கார்டூன் நாயகர் பட்டம் வென்ற டாக்புல்&கிட் ஆர்டினுக்கு வாழ்த்துக்கள்....🌷🌷🌷🌷🌷🌷🌷

      Delete
    3. அதிலும் "நண்பனுக்கு நாலு கால்" சும்மா கலக்கல் களம் !!

      Delete
    4. சூப்பரு... லக்கி லூக் ரசிகாஸ் வயிற்றில் ஏற்கெனவே புகைய ஆரம்பிச்சுட்டு... நெய்யும் கொஞ்சம் வார்த்து விட்டுட்டீங்களே ஆசிரியர் சார்...
      நடக்கட்டும்...டும்..ம்...

      Delete
  51. அடேயப்பா.அமர்க்களம் அற்புதம் இந்தமுறை நமது நீல பொடியர்கள் முதலிடத்தைப் பிடித்து விட்டார்கள்.முரட்டுக்காளையை அடக்குவது போல் சீனியர் பறவையோடு மல்லுக்கட்டுவது சிரிப்போ சிரிப்பு..முக்கியமான விஷயம் என்று பாண்ட் டை ஞாபகப்படுத்தும் பொடியன் அபாரம் ..என்னுடைய மார்க்.பத்துக்கு பதினைந்து .

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வீரையன். நலமா.‌நேரம் கிடைக்கும் போது போன் செய்யவும்.

      Delete
  52. கடந்த இரண்டு வாரங்களாக வீட்டில் யாருக்கும் உடம்பு சரியில்லை.. இன்னும் முழுமையாக சரியாகவில்லை.

    இந்த நேரத்தில் பொடியர்களின் கதை மனதிற்குள் ஒரு மாற்றத்தையும் புத்துணர்ச்சியையும் கொடுத்தது என்றால் மிகையில்லை. நன்றி பொடியர்களே.

    ReplyDelete
    Replies
    1. மருந்தே காமிக்ஸ்..காமிக்ஸே மருந்து என இருந்தாலும் மருத்துவரிடமும் ஆலோசனை பெறுங்கள் நண்பரே..உங்கள் இல்லத்து உறுப்பினர்கள் அனைவரும் விரைவில் நலம்பெற எனது மனமார்ந்த வேண்டுதல்களும்...

      Delete
  53. ஒரு கடிதமும் கருப்பு ஓநாயும்:
    பாரீஸ் நகரில் அடிக்கடி குறிப்பிட்ட வகை மாடல் கார்கள் தொடர்ந்து காணாமல் போகிறது.
    நிற்க...

    அதே நேரத்தில் மாறி வந்த ஒரு கடிதத்தினை ஜில் படிக்க நேர்கிறது. அந்த கடிதத்தை அதன் உரிமையாளரிடம் கொடுக் செல்ல அங்கே காணாமல் போன காருக்கும் இந்த கடிதத்திற்கும் உள்ள தொடர்பை கண்டுபிடிப்பதே கதை. அருமையான சஸ்பென்ஸ்.. மேலே உள்ள இரண்டுக்கும் உள்ள தொடர்பு ரசிக்கும்படியும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளது.

    கதை நெடுகிலும் சஸ்பென்ஸ் அவைகளை கடைசி இரண்டு பக்கங்களில் அவிழ்ப்பு சிறப்பு, ஒன்றைத் தவிர திருடன் டோனி வரையும் துப்பாக்கி பற்றி சொல்லாதது.

    இந்த விறுவிறுப்பான கதையில் மிகப்பெரிய மைனஸ் ஜில்லின் அஸிஸ்டென்ட் காமெடி என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்கள்.. இதனை வெட்டி எறிந்து இருக்கலாம். இதற்கு முந்தைய கதைகளில் இவரின் காமெடி ரசிக்கும் படி இருந்தது. இந்த முறை அது மிஸ்ஸிங்.

    அட்டைப்படம் நம்மை 1980 கூட்டிச் செல்கிறது. ஏன் சார் இப்படி ஒரு அட்டைப்படம்; இந்த வருடத்தின் முதல் சுமாருக்கும் கீழான அட்டைப்படம்.

    மொத்தத்தில் ஜில்லார் ஏமாற்றவில்லை. மனதை ஜில்லாக்கி விட்டார்.

    மதிப்பெண் 7.5/10

    ReplyDelete
  54. பாலைவனத்தில் புலனாய்வு....

    ஒரு கொலைகாரனை தேடி சென்ற போலீஸ்காரரும் காணாமல் போக அவரை தேடி தூங்கி வழியும் ஒரு கிராமத்திற்கு சென்று அவர் என்னவானார் ..அந்த கொலைகாரன் என்னவானான் என்பதை டெக்ஸ் புலனாய்வு செய்யும் சாகஸமே இந்த பாலைவனத்தில் புலனாய்வு.கெளபாய் களத்திலும் ஒரு டிடெக்டிவ் பாணி அறிமுகமானது தான் என்றாலுமே கூட டெக்ஸ் சாகஸத்தில் அறுபது பக்கங்கள் தாண்டியும் ஒரு "டூமீல் " சத்தம் கூட வராமல் டெக்ஸ் சாகஸம் செய்த இதழ் இதுதானோ என்று தோன்றுகிறது.டூமீல் சத்தம் கேட்கா விட்டாலும் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறு..பரபரவென சென்று பட்டாசாய் வெடித்ததுள்ளது இந்த புலனாய்வு.அட்டை படத்தை கண்டாலே இந்த இதழ் சுறுசுறுவென புத்தகவிழாக்களில விற்பனை பட்டையை கிளப்புவது உறுதி .அந்த அட்டைபடத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் சென்ற இந்த பாலைவன புலனாய்வு ஒரு அக்மார்க் ஸ்டார்..

    கடிதமும் ஒரு கறுப்பு ஓநாயும்...

    தன்னிடம் வந்த தவறான ப்ளாக்மெயில் கடிதம் மூலம் ஒரு பேங்க் கொள்ளையை தடுத்து நிறுத்தும் ஜில் ஜோர்டன் சாகஸம் .ஆசிரியர் முன்னுரையில் சொன்னபடி கார்ட்டூன் பாணி ஓவியம் என்றாலும் அதிரடி நகைச்சுவையை எதிர்பார்க்காமல் ஒரு துப்பறியும் நாயகரின் கதையாக இதனை எதிரபார்த்து படித்தால் ஏமாற்றம் அளிக்காது என்பது உண்மையே.பழைய சாகஸங்களில் காணப்பட்ட நகைச்சுவை இந்த இதழில் இன்னும் குறைவே என்றாலும் கதை ஏமாற்ற வில்லை..சிறப்பே..


    கடிதமும் ஒரு கறுப்பு ஓநாயும்...சந்தோசமான மணிஆர்டரே..:-)

    ReplyDelete
  55. ஸ்மர்ஃப்ஸ் வேட்டையாடு விளையாடு பற்றி பலரும் பல விதமாக பல பதிவுகள் எழுதி இருக்கீங்க. ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது இணைந்து வந்திருக்கும் "காதல் படுத்தும் பாடு".
    ஸ்மர்ஃபியின் கடைக்கண் பார்வைபடின், ஸ்மர்ஃப்ஸ் பொடியர்க்கு அந்த வெண்ணிலாவும், கைப்பிடிக்குள்.
    அந்த பொண்ணு ஏதோ அண்ணாச்சி கடைல வெங்காயம் கேக்கற மாதிரி நிலா வேணுங்கவும், நம்ம பசங்க பயங்கர ப்ளான்ஸ் போடுறதுமா சுப்பர்.
    கடைசில ஆத்தா வையும் ஊட்டுக்கு போறேன்னு டாட்டா காட்டி escape....
    Lovely

    ReplyDelete
  56. என்னது சிக்பில் க்ளாசிக் இதழில் ஒரு மறுபதிப்புக்கு பதிலாக புதுகதையா...


    இது சூப்பர் காம்போவாச்சே ...


    அப்போ அடுத்த மாசம் ஒரு மறுபதிப்பு சிக்பில் ..இரண்டு புது சிக்பில் ..

    வாவ்...சூப்பரோ சூப்பர்..


    அட்டகாசமான செய்தி...நன்றியோ நன்றி சார்..:-)))

    ReplyDelete
  57. பாலைவனத்தில் புலனாய்வு,
    பால்டிமோரில் தொடர் கொலைகளை புரிந்துவிட்டு தப்பிக்கிறான் ஒரு சைக்கோ கொலைகாரன்,
    அக்கொலை வழக்கை துப்பறிந்த நிக் மார்டின் எனும் அதிகாரிக்கு ஐந்தாண்டுகளுக்கு பிறகு அக்கொலைகாரன் அரிசோனா நகரின் வட எல்லையில் உள்ள சியரா விஸ்டாவில் அவன் இருப்பதாக கிடைக்கும் தகவலை வைத்து அக்கிராமத்திற்கு கிளம்புகிறார்.
    அதை கண்டறிய ரேஞ்சர் குழுவால் அனுப்பி வைக்கப்படுகிறார் டெக்ஸ் வில்லர்
    அங்கே காணாமல் போகும் நிக் மார்டினின் கதி என்ன?
    அந்த தொடர் கொலைகாரன் கிடைத்தானா?
    எனும் கேள்விகளுக்கு நம்ம டெக்ஸ் தனது பாணியில் விடை சொல்கிறார்,
    நேர்கோட்டுக் கதையில் கொஞ்சம் ட்விஸ்டுடன் விறுவிறுப்பாக கதை பயணிக்கிறது,
    அடிதடி ரகளைகள்,டமால்,டுமீல்கள் அதிகம் இல்லாவிட்டாலும் கதை சுவராஸ்யமாகவே செல்கிறது,
    தெளிவான சித்திர பாணியும்,ஆர்பாட்டம் இல்லாத வசனங்களும் நன்றாக கதைக்குப் பொருந்திப் போகின்றன,
    டெக்ஸின் புலனாய்வுக்கு கிராம ஷெரீப் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் கதை சட்டென்று முடிவுக்கு வந்திருக்க வாய்ப்புண்டு,
    கிராம சூழலையும்,ஷெரீப்பையும் தூங்கி வழியும் சோம்பேறிகளாக காட்டியிருப்பதால் விசாரணை சற்றே நீள்கிறது,
    பொதுவாக வில்லர் கதைகளில் ஏதேனும் மற்றொரு துணைப் பாத்திரம் மனதில் நிற்பது போல் கட்டமைக்கப்பட்டிருக்கும்,அதில் வில்லருக்கு அடுத்து அந்த கதை பாத்திரம் நம் மனதில் ஒட்டிக் கொள்ளும்,இந்தக் கதையில் அது மிஸ்ஸிங்,எனினும் உள்ளூர் பத்திரிக்கையாளராக வரும் பானியன் ஓரளவு நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறார்.
    புலனாய்வில் ஒரு கட்டத்திற்கு பிறகு ,குறிப்பிட்ட ஒரு சந்திப்பிற்குப் பிறகும் இவர்தான் அந்த தொடர் கொலையாளியாக இருக்க வாய்ப்புண்டு என்று நம்மால் கணித்து விட முடிகிறது, எனினும், ஏதேனும் திருப்பம் கதையில் ஏற்பட்டு வேறு யாரையேனும் நோக்கி கதை நகரும் என்று நாம் யோசித்தால் சற்று ஏமாற்றமே.
    மேலும்,டெக்ஸுக்கு இணையான வலுவான எதிரியாக தொடர் கொலையாளி தோன்றவில்லை, இது சற்று சுணக்கமே,எனினும் கதைக் களம் எளிமையானது என்பதால் நம்மை ஆறுதல்படுத்திக் கொள்ளலாம்.
    மொத்தத்தில் நல்ல,சுவாரஸ்யமான வாசிப்புக்கு உத்திரவாதம் பாலைவனத்தில் புலனாய்வு.
    எனது ரேட்டிங்-9.5-10.

    ReplyDelete
    Replies
    1. செம ரவி..... நல்ல விறுவிறு விமர்சனம்....

      மினிப்பார்வையில் இருந்து சரளமான விமர்சனங்கள் வைக்கும் முறைக்கு தாவி, நல்லா கொண்டு போறீங்க... சூப்பர் தொடருங்கள்... இன்னும் கொஞ்ச காலத்தில் உங்களுக்கு என ஒரு பாணியை ஏற்படுத்தி கலக்குவீங்க என கணிக்க முடிகிறது....

      Delete
  58. Muthu Comics
    Title No : 413

    Smurfs in
    வேட்டையாடு விளையாடு

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா.... முடியலை.. 😏😒

    கதை பற்றி சொல்ல ஒன்றுமில்லை.. 😔
    (சும்மா பக்கம் பக்கமா டைம்பாஸ் பண்ண படிக்கலாம் அவ்ளோதான்)

    ஆறு அ பத்து பக்கங்களில் முடிக்க வேண்டிய பில்லர் பேஜ் கதை இது பக்கம் பக்கமா 37 பக்கம் சும்மா ஜவ்விழுக்குது 😡

    நோ சிரிப்பு...
    நோ ஆர்வம்...
    நோ கதை...
    நோ.. நோ.. நோ.. நோ.. இப்படி பல நோ..

    2016 ஆகஸ்ட் முதல் நாலு கதை தொகுப்பில் இரண்டு கதைகள் & அதற்கடுத்து வந்த ஒரு கதையை தவிர எதுவுமே சோபிக்கவில்லை எனத்தெரிந்தும் தொடர்ந்து வெளியிடுவது எதனால். ?

    ஸ்மர்ப்ஸ் க்கு பர்மனண்ட் தடா எப்ப வரும்னு தெரியலை ..
    வந்தா நல்லார்க்கும்...

    சில பலரோட திருப்திக்காக
    மார்ட்டின் மாதிரி ஹீரோக்களின் நல்ல பல கதைகள் இது போன்ற மொக்கை கதைகளுக்காக பின் தள்ளி உதாசீனப்படுத்தப்படுவது வேதனை அளிக்கிறது

    எனது மார்க் : 02/10

    ReplyDelete
    Replies
    1. // சில பலரோட திருப்திக்காக
      மார்ட்டின் மாதிரி ஹீரோக்களின் நல்ல பல கதைகள் இது போன்ற மொக்கை கதைகளுக்காக பின் தள்ளி உதாசீனப்படுத்தப்படுவது வேதனை அளிக்கிறது //

      -1

      Delete
    2. எனக்கும் ஸ்மர்ப்ஸ் கதைகளை பிடிக்கவில்லை. வாங்கி விட்டோமே என்பதற்காக கஷ்டப்பட்டு படித்திருக்கிறேன்

      Delete
    3. எனக்கும் ஸ்மர்ப்ஸ் கதைகளில் அவ்வளவாக திருப்தி இல்லை.. .அதற்காக ஸ்மர்ப்ஸ் கதைகளையே வெளியிட வேண்டாம் என்று சொல்லமாட்டேன்....அதை ரசிப்பவர்களின் உணர்வுக்கும் மதிப்பளிக்க வேண்டும்...

      Delete
    4. // அதை ரசிப்பவர்களின் உணர்வுக்கும் மதிப்பளிக்க வேண்டும்...//
      +111111

      Delete
    5. ///// அதை ரசிப்பவர்களின் உணர்வுக்கும் மதிப்பளிக்க வேண்டும்...///,யெஸ்...நிச்சயமாக...

      ரிப் கெர்பி கதையா இருந்தாலும் (அது வருவதில்லை என்பதாலும், வெரி வெரி படு ஸ்லோ என்பதாலும் அந்த உதரணம்) அதற்கு என குறிப்பிடத்தக்க ரசிகர்கள் இருப்பார்கள். அவர்களின் ரசனையை மதிக்க்கனும்.

      ஒரு புரியாத பாயிண்ட், அப்படியே ஸ்மர்ஃப் ட்ராப் செய்யப்பட்டாலும், வெயிட்டிங் லிஸ்ட்ல உள்ள மற்றொரு கார்டூன் நாயகருக்கு தானே அந்த வாய்ப்பு கிடைக்கும். மார்ட்டின் எப்படி கார்டூன் சந்தாவுல வர முடியும். அவரை எப்பப்பா கார்டூன் லிஸ்ட்ல சேர்த்தீங்க.

      Delete
    6. இதை இத்துடன் நிறுத்திக் கொள்ளலாமே. குழுவில் ஒவ்றொருவராக அதே கருத்தை பதிவிடுவதால் பயன் இல்லை. எந்த புத்தகத்தை வெளியிடுவது என்பது ஆசிரியரின் உரிமை. தான் விரும்பியதை வாங்கி படித்து கொள்வது வாசகனின் உரிமை.

      Delete
    7. ///எந்த புத்தகத்தை வெளியிடுவது என்பது ஆசிரியரின் உரிமை. தான் விரும்பியதை வாங்கி படித்து கொள்வது வாசகனின் உரிமை.////--- இதைத்தான் நானும் சொல்ல வந்தேன் கார்த்தி. கார்டூனை தவிர்க்க வழி இருக்கையில் அதை தவிர்க்கலாம். காமிகஸ்களின் எதிர்காலதிற்கு கார்டூன்களுக்கு கணிசமான பங்கு இருக்கையில் அதை ட்ராப் செய்ய முடியுமா???

      அதனால் தானே அதை பிடிக்காதவங்க வாங்காமல் தவிர்க்கும் உரிமையையும் கொடுத்து விட்டார். பிறகு இன்னும் என்ன தான் வசதி செய்து தருவார்...!!!!

      Delete
    8. //எந்த புத்தகத்தை வெளியிடுவது என்பது ஆசிரியரின் உரிமை. தான் விரும்பியதை வாங்கி படித்து கொள்வது வாசகனின் உரிமை.//

      Well said Karthik.
      +1

      Delete
  59. கடிதமும் ஒரு கறுப்பு ஓநாயும்...
    -- மொக்கை.

    ReplyDelete
  60. இந்த முறை சிறு சிறு இதழ்களாக இருப்பது போல ஓர் எண்ணம்..(உண்மையும் கூட..)எனவே இரண்டே நாளில் அனைத்து இதழ்களையும் படித்து முடித்தாயிற்று...




    இனி....

    ReplyDelete
  61. 💟பாலைவனத்தில் புலனாய்வு! 💟

    💞டெக்ஸ் வில்லர் பர பர ஆக்சன் மேளா இது......

    💓மார்ச், 2018 - லயன் காமிக்ஸ் :320
    இளம் பெண்களை கழுத்தறுத்து கொலைசெய்யும் கொடுர கொலையாளி ஒரு டாக்டர் லிவர்ஸ்டோன் என்ற உண்ணமயை அறிந்த
    போலிஸ் அதிகாரி நிக்மார்டின் காணமல்போக அவரைத்தேடி தொலைதூர குக்கிராமத்திற்கு வருகை தரும் டெக்ஸ் குற்றவாளியை தனது பாணியில் எவ்வாறு கண்டறிந்தார் என்பதை பர பரவென சூடுபரக்க செல்லும் ஹாலிவுட் ஆக்சன் சினிமா போல் கதை நகர்ந்து செல்கிறது, அதோடு போட்டி போட்டுக்கோண்டு நகரும் சித்திரம் வார்த்தைகளை தாண்டி கதைக்கு ஞாயம் சேர்க்கிறது.

    👊👊👊கதையின் பயணத்தின் ஊடே ஆங்காங்கே தனக்கே உறித்தான பஞ்ச்களாக சில "👊கும் கும் படார்👊" என முகரைகளை பெயர்க்கும் கை வைத்தியம் வேறு எதிரிகளுக்கு செவ்வனே அரங்கேர முடிவில் பீட்டர் லிவர்டோன் தான் ரெக்ஸ் மரியட் என்ற உண்மையை தனது புலனாய்வு வழியே கண்டறிந்து மரியட்டை சவக்குழிக்கு அனுப்பும் காட்சி தலயின் அதிரடி அதகளம்.

    👣கதையின் ஊடே பயணிக்கும் பொறுப்பற்ற உள்ளூர் ஷெரீப் , தொடர் இளம்பெண்கள் கழுத்தறுத்து கொலையுண்டும் சிறத்தையற்ற நிலை ... .....

    ❤பத்திரிக்கையாளர் பானியனின் பத்திரிக்கை தர்மம்.....

    ❤டாக்டர் பென்டன் புலனாய்வு முடுச்சுகள் அவில்வதற்கு அவர் தரும் விவரமும் பரிபோன காதலால் துயரமுமென காட்சிகள் நிகழ்வுகளுக்கு துனணசேர்க்கின்றன......

    💘மொத்தத்தில் சிவகாசி சரவெடி இந்த பாலைவனத்தில் புலனாய்வு......!

    www.lioncomics.in

    💋யாழிசை செல்வா 💋
    02/03/2018

    ReplyDelete
  62. 1. Album of the Year 2017 - ட்யுராங்கோ
    2. அறிமுகம் of the Year - ஜெரேமையா
    3. சொதப்பல் of the Year” 2017 - ஒரு தலைவன் ஒரு சகாப்தம் (டெக்ஸ் தீபாவளி மலர்)
    4. அட்டைப்படங்களுள் Top3 - அண்டர்டேக்கர், சத்தமின்றி யுத்தம் செய், இரத்தக்கோட்டை
    5. மிகச் சுமாரான அட்டைப்படங்களுள் The Bottom 3 - ஒரு தலைவன் ஒரு சகாப்தம், சில்வர் ஸ்பெஷல், மிஸ்ட்ரி ஸ்பெஷல்
    6. 2017-ன் “Top Moment” – இரத்தப்படலம் அறிவிப்பு
    7. லயன் கிராபிக் நாவல் (சந்தா E)– Average and long way to go
    8. 2017 – ஒட்டுமொத்தமாய் மாதிரியான அனுபவம் - (b) தேவலாம்!

    ReplyDelete
  63. டெக்ஸ் வில்லர்

    பால்டிமோரில் (சேர்த்து படிக்க வேண்டும். பால், டீ, மோர், காபி என படிக்க வேண்டாம்) தொடர்கொலைகள் புரிந்து, சாமார்த்தியமாக தன்னை அடையாளத்தை மறைத்து வேறொரு ஊரில் அதாவது சியரா விஸ்டா (சேர்த்தும், பிரித்தும் படிக்கலாம்) குடியேறிய ஒரு கொலைகாரனின் முகமூடியை கிழிக்கும் சாகஸம்.

    எனக்குப் பிடித்த அம்சமே வில்லரை எளிமையான டிடக்டிவாக உருமாற்றியதே.ரேஞ்சராக இருந்தாலுமே அதீத அறிவினை வெளிக் காட்டாமல், மற்றறவர்களின் வாக்குமூலத்தை வைத்தே யூகிப்பது டெக்ஸ் கதைகளில் புதிய விசயம்.

    எளிமையான வசனங்கள், நம்பதத்தன்மையுடன் கூடிய காட்சிகள், கடைசி வரையில் தொடரும் சஸ்பென்ஸ், திருப்தியைக் கொடுத்த கதை.

    சுருக்கமாகச் சொன்னால் டெக்ஸின் இமேஜை பலமடங்கு உயர்த்தியது.

    ReplyDelete
    Replies
    1. ///சுருக்கமாகச் சொன்னால் டெக்ஸின் இமேஜை பலமடங்கு உயர்த்தியது.////.... இன்னொரு முறை சொல்லுங்க...

      Delete
    2. சொல்றேன்.

      'சுருக்கமாகச் சொன்னால் டெக்ஸின் இமேஜை பலமடங்கு உயர்த்தியது. '

      'நானே ராஜா நானே மந்திரி 'படத்துல வர்ற மாதிரி மறுபடி மறுபடி கேக்க மாட்டீங்கனு நம்பறேன்.

      Delete
  64. ******பாலைவனத்தில் புலனாய்வு*******

    ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பால்டிமோரில் சைக்கோ கொலைகாரனாக இருந்த 'பீட்டர் லிவர்டோன்' என்பவன் சியரா விஸ்டாவுக்கு வந்து குடியேரியதும் தன் பெயரை 'ரெக்ஸ் மரியட்' என்று மாற்றிக்கொண்ட ரகசியத்தை 60'ம் பக்கத்திலேயே டெக்ஸ் படிப்பவர் எண்ணங்களுக்கு அம்பலமாக்கிவிடுகிறார். இது இந்த "பாலைவனத்தில் புலனாய்வு" கதையில் எனக்கு தோன்றிய ஒரு மைனஸ் பாய்ன்ட். அந்த ரகசியத்தை கதையின் க்ளைமாக்ஸ் வரை தெரியப்படுத்தாமல் இருந்திருந்தால் இன்னும் த்ரில்லாக இருந்திருக்கும். அதனால், இன்டர்வெல் வரை விறுவிருவென சஸ்பென்சாக போகும் இந்த படம், க்ளைமாக்சில் மாற்றம் ஏதும் இல்லாததால் இன்டர்வெலுக்கு பிறகு வழக்கம் போல ஒரு மசாலா படம் ஆகிவிடுகிறது. ஆனால், அமெரிக்க கிராமத்து மக்களின் வாழ்க்கை முறையை ஒட்டியே செல்லும் இந்த கதையின் லாவகமும், டெக்ஸ் வில்லரின் கம்பீரமான தோற்றமும் அதை ஒரு பெரிய குறையாக தெரிவிக்கவில்லை. ஓவியம் படைத்தவரை நிறைய பாராட்ட வேண்டும். அந்த கிராமத்து அழகை கருப்பு வெள்ளையிலேயே கலர்ஃபுல்லாக பார்வைக்கு விருந்து வைத்து, அதன் மண் வாசனையை ஒவ்வொரு ஃப்ரேம் மூலமாக நம் சுவாசத்திற்கு கொண்டு வந்து சேர்க்கிறார். இது இந்த ஆண்டு நான் மிகவும் ரசித்துப் படித்த நான்காவது டெக்ஸ் கதை. எனது ரேட்டிங் 9.75/10.

    ReplyDelete
  65. சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் சந்தா B வரிசையில்"ஒரு வெறியனின் தடத்தில்" என்ற கதை வந்திருந்தது. தலைப்பிற்கும் அந்த கதைக்கும் சிறிதும் சம்மந்தம் இல்லாமல் இருந்தது. உண்மையில் அப்போது அந்த "ஒரு வெறியனின் தடத்தில்" என்ற தலைப்பில் வந்திருக்க வேண்டிய கதைதான் இந்த "பாலைவனத்தில் புலனாய்வு." (சரிதானே ஆசிரியர் சார்?) ஆனால், அமைதியாகவும் அதிரடியாகவும் இருக்கும் இந்த கிராமத்து பின்னணி கதைக்கு அந்த 'ஒரு வெறியனின் தடத்தில்' என்ற தலைப்புதான் பொருத்தமானது.

    ReplyDelete
  66. ஈரோடு பேருந்து நிலையம் சென்று இம்மாத புத்தகங்களை வாங்கிக்கொண்டு (ஜில்லாரை தவிர்த்து) ஊருக்கு திரும்புகிறேன்.இதே போல் கடந்த மாதங்களில் ஜனவரியில் ப்ளுகோட்டும்,பிப்ரவரியில் ரின்டின் & வேய்ன் ஷெல்டன் ஆகியவற்றை தவிர்த்து விட்டேன்.ஆசிரியர் டெக்ஸினைப்போல 95-5 அல்ல,குறைந்த பட்சம் 75-25 என்ற அளவிலான கதைகளை வெளியிட்டால் நன்று.

    ReplyDelete
  67. ஆசிரியர் அவர்களுக்கு,என்னால் எதிர்பாராத பல காரணங்களால் என்னால் இந்த வருடம் சந்தா கட்ட இயலவில்லை,தருமபுரியில் நமது காமிக்ஸ் முகவர் இப்போது உள்ளார்களா? அவர்களுடைய முகவரியை தந்துஉதவிட முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. தர்மபுரியில் யாரும் இருப்பது போல் தெரியவில்லை. கீழே உள்ள ஊர்களில் முயற்சி செய்து பார்க்கலாம்.

      ஜீவா புத்தகாலயம், நாமக்கல், 7305009585,

      மோகன்தாஸ் புக் ஸ்டால், திண்டுக்கல், 9944286077,

      m.m.பொன்னுச்சாமி, கரூர், 9003755420

      D.சிவக்குமார் நியூஸ் ஏஜெண்ட், திண்டுக்கல், 9894245270

      Delete
  68. 1. உங்கள் பார்வையில் ‘Album of the Year 2017’ எதுவோ? (ஒற்றை முதல் பரிசு மட்டுமே சாத்தியம் என்பதால் “"ஆங்… இது… அப்புறம் அது… அப்பாலிக்கா இதுவுமே"” என்ற தேர்வுகள் வேண்டாமே ?!)


    ஜெரேமியா

    2. உங்கள் பார்வையில் “அறிமுகம் of the Year”?


    ட்யுராங்கோ

    3. உங்கள் பார்வையில் ”சொதப்பல் of the Year” 2017?
    (இங்கேயும் ஒற்றை சாய்ஸ் மட்டுமே ப்ளீஸ்)

    சில்வர் ஸ்பெஷல்

    3. அட்டைப்படங்களுள் உங்களது Top3 ?

    சத்தமின்றி யுத்தம் செய்

    பிணத்தோடு ஒரு பயணம்

    விடை கொடு ஷானியா

    5.மிகச் சுமாரான அட்டைப்படங்களின் பட்டியலுமே ப்ளீஸ்? The Bottom 3 ?

    அராஜகம் அன்லிமிடட்

    லயன் 300

    சில்வர் ஸ்பெஷல்

    6. 2017-ன் “Top Moment” – உங்களைப் பொறுத்தவரை ?

    இரத்தப்படலம் வெளியீடு அறிவிப்பு தருணம்

    7. லயன் கிராபிக் நாவல் (சந்தா E)– உங்கள் பார்வையில்?

    மனதின் நுண்ணிய உணர்வுகளை தொடும் அல்லது டார்க் கதைகள் என்று மட்டும் அல்லாது பல்வேறு பாணி கதைகள் வருமாயின் நலம் .

    8. 2017 – ஒட்டுமொத்தமாய் என்ன மாதிரியான அனுபவம் என்பீர்கள்?
    (a) சூப்பர்-டூப்பர் (b) தேவலாம்! (c) ஹாவ்வ்வ்!

    b தேவலாம்

    ReplyDelete
  69. கடிதமும் ஒரு கறுப்பு ஓநாயும்
    கதையை படித்துமுடித்தவுடன் நினைவுப்பறவையானது ஹம்மிங்பேர்டை போல் பின்னோக்கி வேகமாக சிறகடித்தது ...
    1890 –ல் ஆர்தர் கானன் டாயில் அவர்களால் உருவாககப்பட்ட –RED HEADED LEAGUE –என்ற மிக பிரபலமான சிறுகதையின் மேம்படுத்தப்பட்ட அல்லது வேறுபடுத்தப்பட்ட கதை வடிவமாக ஜில் ஜோர்டானின் இக்கதை பரிணமித்து இருப்பது போல் தோன்றியது .
    இதே கதை நமது லயன்முத்து குழுமத்தில் சிவப்பு தலை சாகசம் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரியும் ..
    ஷெர்லக் ஹோம்ஸ் துப்பறியும் சிவப்பு தலை சாகசத்தில் ‘’ ஏன் சிவப்பு தலை உள்ள நபர்கள் தேவை – என்ற கேள்வி பிரதானமாக எழும் ..
    ஜில்லின் கதையில் ரெனால்ட் வண்டிகள் /வேன்கள் ஏன் திருடப்படுகின்றன என்ற கேள்வியே பிரதானம் ...
    பேங்க் –ஐ கொள்ளையடிக்க ஷெர்லாக் கதையில் சுரங்கம் தோண்டப்படும்.
    ஜில்லின் கதையில் காளான் பண்ணை சுரங்கம் ....
    ஆனால் ஷெர்லாக் கதையில் வருவது போல் அல்லாது பாங்கில் இருந்து பணத்தை வெளிக்கொணர முயல்வதை இம்ப்ரொவைசேஷன் அல்லது வேரியேஷன் எனக் கொள்ளலாம்..
    பணம் கொண்டு வரும் ரெனால்ட் வேனை பாதிப்பின்றி விஞ்ஞான முறைப்படி கடத்த எண்ணும் வில்லனின் முயற்சிகள் அடேங்கப்பா போட வைக்கிறது ...
    RED HEADED LEAGUE – பற்றி பேட்மேன் அண்ட் ராபின் சித்திர தொடரில் # 19-ல்
    ராபினுக்கும் வில்லன் நெமோவுக்கும் கீழ்வரும் உரையாடல் நடக்கும்
    BATMAN : A STORY WHERE THE WHOLE POINT IS…( COMMENCES THE SENTENCE)
    NEMO : NOT WHAT IT SEEMS TO BE .( FINISHES THE SENTENCE)
    ‘’A STORY WHERE THE WHOLE POINT IS NOT WHAT IT SEEMS TO BE.’’
    ஜில் ஜோர்டானின் கடிதமும் ஒரு கறுப்பு ஓநாயும் கதைக்கும் இவ்வரி மிகவும் பொருந்தும்.
    என் பார்வையில் இம்மாத இதழ்களில் முதலிடம் பிடிப்பது ஜில் .

    ReplyDelete
    Replies
    1. நினைவோ ஒரு பறவை...

      ஒரே விமர்சனத்தில் இரு கதைகளின் விளக்கங்கள்... செம ஜி...

      இதைப்போன்ற பழைய நினைவுகளை கிளறுவதில் காமிக்ஸ்களை தாண்டி வேறெதும் இத்தனை பங்கு வகிப்பதில்லை...

      Delete
  70. தோட்டா தலைநகரம்

    இரத்தக்கோட்டையுடன் இணைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.டெக்ஸ் பல சாகஸங்களில் செய்ததை போல டைகர் இதில் ஒரு நகரை சுத்தம் செய்கிறார்.லக்கியின் பயங்கர பொடியன்,ஜெஸ்ஸி ஜேம்ஸ் கதைகளை நினைவூட்டியது.ஆனாலும் ஜிம்மியின் காமெடி கார்ட்டூன் கதைகளையும் விஞ்சியது.ஜிம்மியின் காமெடி மற்றும் மிஸ் மார்ஸின் தீரமுமே இக்கதையின் சிறப்பம்சங்கள் என்றால் மிகையாகாது.சார்லியர்+ஜிரௌ கூட்டணியின் மற்றுமொரு காலத்தை வெல்லும் காவியம்!

    ReplyDelete
    Replies
    1. அருமையான விமர்சனம் நண்பரே

      Delete
  71. 1. உங்கள் பார்வையில் ‘Album of the Year 2017’ எதுவோ? (ஒற்றை முதல் பரிசு மட்டுமே சாத்தியம் என்பதால் “"ஆங்… இது… அப்புறம் அது… அப்பாலிக்கா இதுவுமே"” என்ற தேர்வுகள் வேண்டாமே ?!)

    ட்யூராங்கோ...அடுத்த பாகங்கள் ஜனவரி-2018 என்று சொன்னதாக ஞாபகம்...!?!? eagerly waiting.

    2. உங்கள் பார்வையில் “அறிமுகம் of the Year”?

    ட்யூராங்கோ

    3. உங்கள் பார்வையில் ”சொதப்பல் of the Year” 2017?
    (இங்கேயும் ஒற்றை சாய்ஸ் மட்டுமே ப்ளீஸ்)

    அந்த மஞ்சள் சட்டைக்காரரின் சில இதழ்கள் ....சொன்னால் கும்மியடித்து விடுவார்கள்...!?

    4. அட்டைப்படங்களுள் உங்களது Top3 ?
    காந்தக்கண்ணழகியின் S ஒன்று மற்றும் S இரண்டு (ஸ் ஸ் ..யப்பா)...அப்புறம் அந்த உடைந்த மூக்காரின் கோட்டை.

    5.மிகச் சுமாரான அட்டைப்படங்களின் பட்டியலுமே ப்ளீஸ்? The Bottom 3 ?
    CID லாரன்ஸ்...மரணத்தின் நிறம் பச்சை...மற்றும் மார்டினின் மிஸ்ட்ரி ஸ்பெஷல்

    6. 2017-ன் “Top Moment” – உங்களைப் பொறுத்தவரை ?
    ஒன்றா ரெண்டா...இரத்தக் கோட்டை...இரத்தப் படலம் அறிவிப்பு ...ஒரு தலைவன் ஒரு சகாப்தம் வடிவமைப்பு...ஜுனியர் எடியின் promotion...நண்பர்கள் ராஜசேகருக்கு உதவியது....அப்புறம் அந்த புலன் விசாரணையை முன்னிட்டு உங்களை சேரநாட்டு ரகசிய மூலிகை வைத்தியம் எடுக்க வைத்தது...(அதையும் 'வரும் ஆனா வாராது' என்கிற ரீதியில் நீங்கள் வைத்திருப்பது...கம்பெனிக்கு கட்டு படியாகுமெனில் 'எவ்வளவோ செஞ்சிட்டோம் இத செய்யமாட்டோமா' என்று சொல்லி/செய்து விடுங்களேன்)

    7. லயன் கிராபிக் நாவல் (சந்தா E)– உங்கள் பார்வையில்?
    சந்தா E வரும் மாதங்களில் ஒரு surprise element இருப்பதாகவே படுகிறது. ஆறை பன்னிரெண்டாக்கினால் ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ...இரட்டிப்பு சந்தாசமே...மன்னிக்கவும் சந்தோசமே .

    8. 2017 – ஒட்டுமொத்தமாய் என்ன மாதிரியான அனுபவம் என்பீர்கள்?
    (a) சூப்பர்-டூப்பர் (b) தேவலாம்! (c) ஹாவ்வ்வ்!

    (d)போலாம் ரைட்...எப்பொழுதும் போல் ஒவ்வொரு சாதனையும் ஒரு படிக்கல்லே என நீங்கள் எடுத்துக்கொள்வது...அதே போல் ஒவ்வொரு கல்லடியும் அடிக்கல்லே (strong basement) என நீங்கள் கருதும் "அந்த ஒரு நொடி" (அப்பாடா title வந்தாச்சு).

    ReplyDelete
  72. தோட்டா தலைநகரம்
    இந்த இதழில்தான் நாமும் இணையத்தில் இணைந்துவிட்டோம் என விளம்பரம் .
    பாத்துட்டு இன்டர்நெட் சென்டர்க்கு போயி அண்ணா இத பாக்கணும் எவ்ளோ என கேக்க அவரு ஒரு மணிநேரத்துக்கு 30 ரூபாய் என சொல்ல என்னிடம் 20 தான் இருக்குண்ணா என சொல்லி இணையத்தில் இணைந்தேன்.7 முதல் 77 வரை என வலைமன்னன் முதல்பக்கத்தில் அருமையா இருப்பார்.

    ReplyDelete
  73. இன்றும் முன்னிரவு பதிவு வருமோ...???

    ReplyDelete
  74. புதிய பதிவு ரெடி நண்பர்களே...!!!

    ReplyDelete