Tuesday, January 30, 2018

ஷெல்டன் !

நண்பர்களே,

வணக்கம். ஆக்கப் பொறுத்தாச்சு....ஆறவும் பொறுத்திருந்தால், ஒரு அழகான நிகழ்வை மனநிறைவோடு அரங்கேற்றிப் பார்த்த சந்தோஷமும் கிட்டியிருக்கக்கூடும் ; இப்போது பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்படும்  கணைகளுக்கு அவசியமும் நேராது போயிருக்கக் கூடும் ! But நடந்த எதையும் மாற்றியமைக்க முடியாதெனும் போது என்னால் நேர்ந்த உளைச்சல்களுக்கு சாரி சொன்ன கையோடு Peace guys என்று வேண்டுவதைத் தாண்டி வேறெதுவும் தோன்றவில்லை எனக்கு ! தொடரும் காலங்களில் என்னால் இது போன்ற சங்கடங்கள் யாருக்கும் நேராதிருக்க ஆன மட்டும் முனைவேன் என்பது மட்டும் உறுதி ! 

பிப்ரவரி இதழின் ஷெல்டன் ராப்பரும், உட்பக்கப் preview-ம் கடந்த பதிவில் விடுபட்டிருந்தன. Here they are !


Bye all !

211 comments:

  1. WOW. அருமையான ஆர்ட் ஒர்க்...

    ReplyDelete
  2. ஷெல்டனை ஆவலுடன் எதிர்நோக்கி .................!!!!!

    ReplyDelete
  3. ஷெல்டன் கதையின் கடைசி கதை இதுதானா?

    ReplyDelete
    Replies
    1. இல்லை ..தொடர் தொடர்கிறது நண்பரே !

      Delete
  4. சில அனுமானங்களின் தவறிது விஜயன் சார்! இருபக்கம் அவர் அவர் நியாயம்! எனவே இது இரண்டு பக்கம் உள்ள அனுமானங்களின் தவறிதுவே தவிர ஒருபக்க தவறு இல்லை!

    ReplyDelete
  5. சார்....இதழ் வருகை தரும் நாள் இன்னும் குறிப்பிட வில்லையே..:-(

    ReplyDelete
    Replies
    1. அப்படி கேளுங்க தலைவரே.

      Delete
    2. அப்படி கேளுங்க தலைவரே.

      Delete
  6. பரபரக்கும் ஆக்சன் காத்திருப்பது போல தோண்றுகிறது...

    ReplyDelete
  7. எல்லாம் சரிதான் சார் இந்த பிப்ரவரி இதழ்கள் மட்டும் எப்ப கிடைக்கும்னு சொன்னிங்கன்னா.....

    ReplyDelete
    Replies
    1. அதானே??

      நடந்த சண்டையில 2 நாள் தாமதம்னு சொல்லீராதீங்க!!

      Delete
    2. நடந்த சண்டையில 2 நாள் தாமதம்னு சொல்லீராதீங்க!!

      ₹####

      :-)))))))

      Delete
  8. கணேஷ் சார் ...உங்களை பற்றி நாங்கள் அனைவருமே நன்கு புரிந்துள்ளோம் ..உண்மையை சொன்னால் நீங்கள் சேந்தம்பட்டி உறுப்பினர் போல எங்களில் ஒருவராகி நீண்டநாட்களாகி விட்டது .இம்முறை டெக்ஸ் உங்களை தாக்கும் அந்த செயலுக்கு டெக்ஸ் போன முறை டிராகன் நகரம் இதழ் சொதப்பியதாக ஆசிரியரை கடுமையாக சாடிய பொழுது அவரை கண்டித்து எங்களில் இருந்து அவரை விலக்கியும் விட்டோம் நாங்கள் எவரும் வாட்ஸ்அப் ..போன் காலிலோ கூட தொடர்பு கொள்வது கிடையாது எனும் போது ஆசிரியருக்கு உதவியாக இருக்கும் தங்களை நாங்கள் மிக மதிக்கிறோம் .நீங்கள் எங்களில் ஒருவரே ...அதை பிரித்தாளும் சூழ்ச்சியில் சிலர் இறங்கி ஆசிரியரிடம் இருந்தும் உங்களை தொலைவில் வைக்க முயற்சிக்கலாம் .ஏற்கனவே அனுபவ பட்டவன் என்ற முறையில் இதை உங்களுக்கு சொல்ல கடமைபட்டுள்ளேன் .

    அடுத்து உங்களை பேசும் நண்பருக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்காத காரணம் ..அவரை பற்றி ஏற்கனவே அறிந்து அவரை விலக்கி வைத்தமையால் தான் ஒழிய அன்றி உங்களை அல்ல

    புரிந்து கொள்வீர் ...ஏனெனில் இங்கே காமிக்ஸ் அரசியல் பற்றி பேசுபவர்களுக்கு அனைத்து அரசியல் சூதுகளும் அறிந்தவர்களே...ஆனால் ஜால்ராபாய்ஸ் அரசியல் அறிவு இல்லாத வெறும் ஜால்ராபாய்ஸ் மட்டுமே ...நீங்களும் ஜால்ராபாய்ஸ் அங்கத்தினராகி விடுவீர்களோ என்ற அச்சம் சிலருக்கு உண்டு .ஆனால் ஏற்கனவே ஜால்ராவில் நீங்கள் இனைந்துவிட்டீர்கள் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு உண்டு


    அன்புடன்

    நானே

    ReplyDelete
    Replies
    1. அப்டீன்னாக்கா

      நானுமே ஒரு ஜால்ரா பாய் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்!

      வருசத்துக்கு 4 லக்கியும், 3 சிக்பில்லும் வரும் வரை கட்சி தாவ மாட்டோம்ல

      Delete
    2. welcome to ஜால்ரா பாய்ஸ் க்ளப் மிதுன் ஜி...

      Delete
    3. யுவா ஹா,ஹா,ஹா நச்.

      Delete
    4. நண்பர்களே, நேற்றுவரை நிகழ்ந்தவை நேற்றோடு போகட்டுமே ப்ளீஸ் ? கசப்புகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது நம் வீட்டு அழுக்கை முச்சந்தியில் வைத்து அலசுவது போலுள்ளது !

      எங்கெங்கோ-யார் யாரோவாய் இருந்த நம்மை இணைத்தது காமிக்ஸ்.....இன்று அதுவே பிரிவினைக்கு வித்திட்டதாய் இருக்க வேண்டாமே ?

      Delete
    5. அருமையான கருத்து ஆசிரியரே
      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

      Delete
    6. மன்னிக்கவும் சார்....

      Delete
    7. யுவா...மன்னிப்பெல்லாம் வேண்டுமா - என்ன ?

      Delete
    8. நன்றிங்க சார்:):):)

      Delete
  9. இந்த முறை தாமதமாக வருகிறது எனது காமிக்ஸ் அலசல்.....

    நிஜங்களின் நிசப்தம்!
    ====================

    🗣ரத்தமும் சதையுமான மனிதன் தன் வாழ்வின் ரணங்களையும் , செய்த துரோகங்களையும், ஆசைகள், அபிலாசைகள் போன்றவற்றிற்காக தான் அரங்கேற்றும் நயவஞ்சகம், துரோகம் இன்ன பிறவற்றை தனிமனிதனான ""ப்ரோடெக் "" தேட முயலும் அற்புதமான கிராபிக் நாவல் இது....

    😾 வசனங்களின்றி கதைகளை நகர்ததுவதில் மனு லார்செனட் திறமைசாலி என்பதை அழுத்தமாகவே தடம் பதிக்கின்றன கதையின் ஒவ்வொரு பிரேமும்.....

    😤😤😤 இறுளைக் கிழித்துக்கொண்டு பிரவாகமெடுக்கும் பனிக்காற்றினுடே ஆதாரமற்ற சிட்டுக்குருவியின் தேடலில் மதிமயங்கி ஒளிர்கிறாள் நிலவுதேவதை.....

    👄👄👄 இவ்வாறாக தொடங்கும் கதை ஆன்டெரர் என்னும் அந்நியன் புதிதாக ஊருக்குள் வரும்போது அவனை கொண்டாடி வரவேற்கும் ஊர் நாளடைவில் அவனது தேடலில் தெறிகிறது ஊராரின் முகத்திரை அவன் தீட்டும் ஓவியத்தில் கிளிகிறது..... மேலும் எங்கே உண்மைகள் அவனது தூரிகை நம்மை தூக்கிட்டுவிடுமோ என்றென்னி முதலில் அவனது பிரியமான குதிரையை தூக்கிலிட்டு தண்டனையை தொடங்குகின்றனர்.....

    👀 ஒருநாள் ஆன்டெரர் கதையும் ஊரார் சுபபாக முடித்து வைக்க ஊரின் முகவரியையும் கயவர்களின் கயமையும் பேனா முனையில் தீட்டும் அவலம் ப்ரோடெக் வசம் தருகின்றனர் அவனும் உழைத்து எழுதி முடிக்கிறார் முடிவில் வெளிச்சத்திற்கு வராமலே தீயின் நாக்குகள் ருசிக்கின்றன.....

    💔💔💔ப்ரோடெக் குடும்பம் அமைதியாக வேறொரு ஊர் தேடி பயணிக்கிறான்.....

    💓 கதையை முடித்த பின்பும் இதயம் கனமாகின்றன.....

    😀 லயன் காமிக்ஸ் வெளியீடு இது.....

    😀 லயன் கிராபிக் நாவல்: 5

    www.lioncomics.com

    💋 யாழிசை செல்வா 💋
    30/01/2018

    ReplyDelete
  10. //Vijayan29 January 2018 at 11:22:00 GMT+5:30
    @ ALL : இந்த விஷயத்தில் எனது நிலைப்பாட்டை புரிந்திட "புலனாய்வு" கோரும் நண்பர்கள் கொஞ்சமும் பொறுமை காட்டிடவில்லையே என்பதில் தான் வருத்தமே !

    இந்தச் சிக்கலுக்கும் ஒரு சுலப விடையுள்ளது ; அதனை முன்மொழிய எனக்குத் தேவைப்படும் அவகாசத்தை தந்திடும் பொறுமை யாருக்கேனும் இருந்திருப்பின் நிச்சயம் மகிழ்ந்திருப்பேன் !//

    We are waiting patiently from the beginning and still waiting for your plan..

    ReplyDelete
    Replies
    1. Dasu Bala : Sir....thanks for the patience.....but so much water has flown under the bridge ! Just won't make much sense trying to talk about it now. Will keep you posted when the time is right !

      Delete
    2. Sure sir..Can understand..Will wait for the right time..

      Delete
  11. நிஜங்களின் நிசப்தம்:
    இதுவரை வந்த காமிக்ஸில் எத்தனையோ மலர்கள் வந்திருந்தாலும் இது ஒரு குறிஞ்சி மலர்.காரணம் இதில் என்னதான் சித்திரம் மற்றும் கதையின் தரம் இருந்தாலும் எ ன்னைப்பொருத்தவரை இந்த இரண்டையும் தாண்டி நிற்பது இந்த கதையின் மொழிபெயர்ப்பு தரமே.மாதம் நான்கு புத்தகங்களை படிப்பதற்க்கே நமக்கு நேரம் பத்துவதில்லை ஆனால் அதனை உருவாக்கும் பொருட்டு எத்தனை பரபரப்பு இருக்கும்.அதனையும் மீறி எப்படி இதைப்போன்ற ஒரு மொழிபெயர்ப்பை தரமுடிகிறது ?உண்மையில் இதற்காக உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் சார்.இது உங்களால் மட்டுமே முடியும் .இன்னொருவர் பிறந்து கூட வரமுடியாது.இதற்கு கைமாறாக நாங்கள் தரக்கூடியது என்னவென்று இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல இன்னும் ஏழு ஜென்மங்கள் ஈரோடு le jardin ஹோட்டலில் ரூம் போட்டு யோசித்தாலும் விடை கிடைக்காது.

    ReplyDelete
    Replies
    1. sachin Kanmani : பெரிய வார்த்தைகள் வேண்டாமே சார் ! கதையின் தன்மையும், ஒரிஜினல் ஸ்கிரிப்ட்டின் வீரியமும் ஒன்றிணையும் போது - நம்மைக் கையைப் பிடித்து எழுத வைத்து விடுமென்பதை அனுபவத்தில் பலமுறைகள் உணர்ந்துள்ளேன் !

      And இதுவொரு யுத்தம் சார்ந்த tale எனும் போதே எனது favorite ஜானர் ஆகிப் போகிறது ! பிடித்ததை எழுதும் போது வார்த்தைகள் தாமாய் தேடி வந்திடும் சார் !

      Delete
    2. 60 வயதிற்குள் முடிந்தவரை எத்தனை லட்சங்கள் திரட்ட முடியும் என்பதுதான் வாழ்க்கையின் உச்சம் என்ற அந்த மாரத்தான் போட்டியில் நானும் இருக்கிறேன் சார்.அந்த ஓட்டத்திலும் என்னை தாலாட்டும் தொட்டில் இந்த காமிக்ஸ் மட்டுமே சார்.அதை எனக்கு அறிமுகம் செய்த உங்களுக்கு இந்த வார்த்தைகள் மிகவும் சாதாரணம் சார்.

      Delete
    3. // 60 வயதிற்குள் முடிந்தவரை எத்தனை லட்சங்கள் திரட்ட முடியும் என்பதுதான் வாழ்க்கையின் உச்சம் என்ற அந்த மாரத்தான் போட்டியில் நானும் இருக்கிறேன் சார். //

      செமைய எழுதி இருக்கீங்க ஜி! மிகவும் ரசித்தேன்!

      Delete
  12. பிப்ரவரி ரிலீஸ் எப்ப சார்?

    ReplyDelete
    Replies
    1. Sivakumar Jegadeeswaran : சீக்கிரமே....! பைண்டிங் நடந்து வருகிறது சார் !

      Delete
  13. // மனிதர்கள் பலவிதம்.. அதிலும் சிலர் மாறிக்கொண்டே இருப்பார்கள் என்பதற்கு என்னவொரு "உள்ளங்கை நெல்லிக்கனி" போல எடுத்துக்காட்டு???

    விஜயன் சாரிடம் பழகினபிறகும், வட்டிக்கு விட்டு சம்பாத்தியம், வாக்கு தவறுகிறார் என்று "நினைப்பதே" மகா மட்டமான எண்ணம். இப்படி ஒரு மனிதரின் குணத்தை வைத்து பாராட்டி, ஆதரிக்கும் போது, அதற்காக நான் அவருக்கு ஜால்ரா பாய்ஸ் என்றால் அப்படியே இருப்பதே எனக்கு சந்தோஷம்/நிம்மதி.//
    நண்பர் ஹசன் அவர்களின் சார்பாக.

    ReplyDelete
    Replies
    1. அருமையாக சொல்லி உள்ளார்..

      Delete
    2. எவ்வளவோ பார்த்தாச்சு ; கேட்டாச்சு சார்....! வாங்கி வந்த வரம் இது தான் எனும் போது மாற்றியெழுத முடியுமா - என்ன ?

      இருக்கவே இருக்கிறது தொடரும் மாதத்துப் பணிகள் - என்னை பிசியாக வைத்திட ! அந்த லோகத்தினில் புகுந்தால் all is well !

      ஜில் ஜோர்டனுடன் பாரிஸின் வீதிகளில் உலாற்றி வருகிறேன் ஹசன் சார் !! உங்களைப் பார்த்து செயின்ட் டெனீ வீதியில் ஏதேனுமொரு வழுக்கையன் கையாட்டினால் - அது நானாக தான் இருக்கக்கூடும் !!

      Delete
    3. Sir,
      எந்த arrondissement என்று சொன்னால் நானும் கலந்து கொள்வேனே!!

      Strasbourg St denis-ஆ??
      இல்லை la chapelle/gare du nord-ஆ??
      உங்களுக்கு நேரமிருந்தால் தொடர்பு கொள்ளவும் சார். நானும் வீட்டிலிருந்து பாரிஸ் தான் வருகிறேன்

      Delete
    4. சார்..நானிருப்பது ஜில் ஜோர்டனின் பாரிசில் !! அது இருப்பது சிவகாசியில் என் வீட்டு மேஜையினில் !!

      அடுத்தமுறை நிஜமாய் பாரிஸ் வரும் பொது நிச்சயமாய் சந்திப்போம் !

      Delete
    5. :-) :-)
      நீங்க சிவகாசியிலே உலகம் சுத்தி பாத்திடுரீங்க சார்.

      Delete
    6. ///Strasbourg St denis-ஆ??
      இல்லை la chapelle/gare du nord-ஆ??
      உங்களுக்கு நேரமிருந்தால் தொடர்பு கொள்ளவும் சார். நானும் வீட்டிலிருந்து பாரிஸ் தான் வருகிறேன்///

      நானும் என்னிக்காவது ஒருநா பாாிஸ் வருவேன்!!

      ஹிஹிஹி

      கனவு காணுங்கள்னு நம்ம கலாம் சாா் சொல்லீருக்காருல்ல!!

      Delete
    7. எனக்கும் அதே கருத்துதான்.

      Delete
    8. கண்டிப்பாக வாருங்கள் மிதுன் சார். நான் கம்பெனி தருவேன் :-)

      Delete
  14. [5:31 AM, 1/30/2018] +1 (512) 203-9865: @மாயாவி
    //அவர்களின் கவனம் அதை சுற்றியே இருக்கும்படியாக பார்த்துக்கொள்ளப்பட்டவர்கள்...!!! அவர்களுக்கு சந்தா செலுத்தும் வலி தெரியாமல் பார்த்துக்கொள்ளப்பட்டவர்கள்.! :(((//

    This is mean and low. You don’t know the truth and so you are fabricating your own truth. Otherwise You know the truth but spreading lies. You are doing a great job if your intention is insulting people. I don't believe anymore that your intention is to get the Pulan Visaranai.

    ReplyDelete
    Replies
    1. விஷயம் புரியவில்லை ; ஆனால் வருத்தத் தொனி மாத்திரம் புரிகிறது ! எதுவாயினும் தாண்டிப் போவோம் சார் !

      Delete

  15. தோர்கல் எனும் பிரம்மாண்டம்:-

    *சில படைப்புகள் ஆச்சர்யங்களை அநாயாசமாக அள்ளித்தெளிக்கக் கூடியவை. படைப்பின் களம் பிரம்மாண்டமானதாக இருக்கும் போது இது பன் மடங்கு கூடிவிடும். படைப்புகள் நிகழும் காலம் ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருந்து, அந்த காலகட்டத்தில் நம்மையும் உலாவ விடும்படி படைத்து அசரடிப்பது உச்சமான சில படைப்புகளே.

    *அந்த உச்சமான படைப்பில் முதன்மையான பொன்னியின் செல்வனை நம்மில் பெரும்பாலான நண்பர்கள் ரசித்து ருசித்து இருப்போம். அதில் இப்படி ஒரு கேரக்டரா என பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருப்பார்கள் செம்பியன் மாதேவி எனும் மூதாட்டி. பழுத்த சிவபக்தரான அவர், அவரின் கணவரின் சொல்லை இம்மியும் பிசகாமல் காப்பாற்றிவருவார்.

    *குமரி முதல் ஏன் அதைத்தாண்டிய இலங்கை முதல் இன்றைய ஆந்திரா வரை என முழுமையும் அடங்கிய பரந்த சாம்ராஜ்ஜியத்தின் வாரிசாக தன் மகன் வரக்கூடாது என்ற தனது கணவரின் சொல்லை ஒருவர் செயல்படுத்த முடியுமா???? என கேட்டால் முடியாது என்பதே அநேகரின் பதில். இவர் ஆச்சர்யகரமாக அதை நடத்தி காட்டி இருப்பார். வாழ்வின் எந்த ஒரு அசாத்திய இக்கட்டிலும் தான் கைகொண்ட தர்மத்தை காப்பாற்றுவார். இப்படி ஒருவரை நம்மால் கற்பனை செய்யக்கூட முடியாது.

    *அப்படி ஒருவரை படைத்து நம்மை அசத்தி இருப்பார் கல்கி பெருமான் அவர்கள். இப்படி ஒரு கேரக்டரை வேறு ஏதாவது ஒரு படைப்பில் காணமுடியாது என்றே எண்ணி இருந்தேன். ஆனால் அப்படி ஒரு கேரக்டரை காமிக்ஸில் படைக்க முடியும் என செய்து காட்டிவிட்டார் மதிப்பிற்குரிய வான் ஹாம் அவர்கள்.

    *எந்தவொரு இக்கட்டான சூழலிலும் நேர்மையை கைவிடாத, தன் மகன் உயிர் ஆபத்தில் இருக்கும்போதும், தன் உயிர் ஆபத்தில் இருக்கும் போதும் தான் கொண்ட கொள்கையில் இம்மி அளவும் பிசகாத நாயகன் தான்

    "தோர்கல் ஏஜிர்சன்"

    *இம்மாத வெளியீடான முத்து காமிக்ஸ் 46வது ஆண்டுமலர் "கடவுளரின் தேசம்", கடுமையான பணி சுமைக்கு நடுவே அமைந்த பொங்கல் விடுமுறையில் படிக்க முடித்தது. படித்தேன் என்பதைவிட தோர்கலோடு வாழ்ந்தேன் என சொல்வதே பொருத்தமானது.

    *வைகிங்குகளின் காலமான 8ம் நூற்றாண்டு முதல் 11ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில், அவர்களின் தேசமான ஸ்காண்டிநேவிய கடல்களிலும், வடதிசை வைகிங் நாடான நார்வே மற்றும் தென் திசை வைகிங் நாடான டென்மார்க் நிலப்பரப்புகளிலும் நம்மையும் ஒரு பரபரப்பான பிரயாணம் கூட்டிச் செல்கிறது.

    *வான் ஹாம்மின் பல படைப்புகளில் நாம் பெரிதும் ரசித்தவை 4.

    1.இரத்தபடலம்
    2.லார்கோ வின்ச்
    3.லேடி S
    4.தோர்கல்---- இந்த 4க்கும் உள்ள ஒற்றுமை கடந்தகாலம், நிகழ்காலம் இரண்டையும் மாறி மாறி கலந்து கதை சொல்லும் யுக்தி திறம்பட கையாளப்பட்டு இருக்கும். அந்த யுக்தி தோர்கலில் உச்சமாக கையாண்டு இருப்பார் கதாசிரியர்.

    *கடவுளரின் தேசம் மற்றும் இதுவரை வெளிவந்த 6தோர்கல் புத்தகங்களை எடுத்து ஒன்றாக ஒரு வாசிப்பு செய்தோமானால் இந்த யுக்தியை முழுமையாக ருசிக்கலாம்.

    *இந்த 7புத்தகங்களையும் கொஞ்சம் மெனக்கெட்டு படித்ததில் நான் கிரகித்த தோர்கலின் நிலைப்பாடு,

    1.உணவுக்கு மட்டுமே வேட்டையாடுவது.
    2.தன் மனைவி, மகனை காப்பாற்ற மட்டுமே ஆயுதம் ஏந்துவது.

    ----வைகிங்களின் ஆதார கொள்கைக்கு எதிரான இவற்றை தோர்கல் கடைப்பிடிப்பதை சவாலாக தொடர் முழுதும் வான் ஹாம் படைத்து இருப்பார்.

    (கதை அலசல் அடுத்த பாகத்தில்)

    ReplyDelete
  16. அப்படி எனில் இந்த மாத பிப்ரவரி இதழ்கள் பிப்ரவரியில் தான் கிடைக்கும் போல....:-)

    ReplyDelete
    Replies
    1. அதானே ..!!

      போராட்டம் ஒண்ணு போட்ருவோமா தலீவரே ..!

      Delete
  17. ***** சில-சிற்சில ******

    'புலன் விசாரணை' பற்றி :
    வெளிவந்தால் சந்தோசமே! ஆனால், எடிட்டரை மனதாலும், உடலாலும் கஷ்டப்படுத்தித்தான் புலன் விசாரணை கிடைக்குமென்றால், அது எனக்கு அவசியமே இல்லை!

    மாயாவி-சிவா'வின் சிலம்பாட்டம் பற்றி:
    அளவுக்கு அதிகமான கம்பு சுழற்றல்! கையைப் பிடித்துக் கேட்டாலே கிடைக்கும் எனும் போது, கழுத்தைப் பிடித்துக் கேட்பது அபத்தத்தின் உச்சம்! அதுவும் 'உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டுகிறேன்' என்று எடிட்டரிடம் முழங்குவதெல்லாம் டூ டூ மச்! உங்களை நினைத்து பெருமைப்பட்ட கணங்கள் ஏராளம் உண்டு மாயாவிசிவா! இப்போதோ இது வேதனைக்கான தருணம்!

    ஜால்ரா பாய்ஸ் பற்றி :
    உடலில் உயிர் தங்கும் வரை அந்த இசைக் கருவியை தொடர்ந்து தாளம் தப்பாமல் வாசித்துக்கிடக்கவே விரும்புகிறேன்!

    நண்பர் மது பிரசன்னா பற்றி:
    உங்களது தீவிர இரத்தப்படல பக்தி பற்றி நானும் கொஞ்சம் அறிவேன் நண்பரே! புலன் விசாரணையை தமிழில் படித்துவிடும் தீவிர ஆசையில் உங்களது முந்தைய பின்னூட்டங்கள் சற்று தீவிரமாக இருந்தாலும், பிரச்சினை வேறு எங்கெங்கோ திசை திரும்புவதை உணர்ந்து இங்கே வருத்தம் தெரிவித்தது - உங்களது பக்குவப்பட்ட நல்ல மனதைக் காட்டுகிறது! இந்த நல்ல பண்புக்காகவேனும் (யாரையும் காயப்படுத்தாத அறவழியில்) உங்களோடு சேர்ந்து புலன்விசாரணைக்காக போராடலாம் போல தோனுகிறது நண்பரே! வாழ்க வளர்க!

    KV கணேஷ் பற்றி :
    நண்பர்களுக்காகவே சதாகாலமும் சிந்தித்துக் கிடக்கும் உங்கள் குணத்தை நானறிவேன் ஜி! 'நண்பர்கள் என் மீது கல்லெறிந்தாலும் அதை பூவாய் உடலில் தாங்கிக் கொள்வேன்' எனும் அழகான குணத்தை கொண்ட உங்களை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை! உங்களின் நட்புக் கிடைக்கப்பெற்றதில் இப்போது இன்னும் கூடுதலாய் பெருமையடைகிறேன்!

    எடிட்டர் பற்றி:
    நேற்றைய பொழுதுகள் உங்களுக்கு எத்தனை வேதனையாய் அமைந்திருக்குமென்பதை என்னால் கொஞ்சமேனும் உணரமுடிகிறது சார்! இந்த வலிகளோ, வேதனைகளோ உங்களுக்கும் புதிதல்ல என்பதை நினைத்தே கடந்த இரண்டுநாட்களிலும் எனக்கு நானே சாமாதானம் சொல்லிக்கொண்டிருந்தேன்! 'எல்லாம் நன்மைக்கே' என்ற வாசகமும் மனதுக்குள் திரும்பத் திரும்ப வந்துபோனது - ஏனென்றுதான் புரியவில்லை!

    ReplyDelete
    Replies
    1. @All: இதுவும் கடந்து போகும்...

      Delete
    2. ஈரோடு விஜய் : சார்...பாதாளத்தைப் பார்ப்பதிலும் ஒரு வசதியுண்டு .... அதற்கு மேலுமாய் கீழே போக முடியாதல்லவா ? இனி மேலே வருவது மட்டும் தானே பிழைக்கும் வழி ? அதாவது மறுக்கா மண்டையில் மிதிக்க யாரும் காத்திரா பட்சத்தில் !

      சங்கடம் வேண்டாம் சார் ; இந்த பொம்மைப் புத்தக உலகுக்குள் நுழைந்திடும் போது எனக்கு எல்லாமே அமைதியாகிப் போய் விடுவது வழக்கம் ! இங்கே ஜில்லாரோ ; நீலப் பொடியர்களோ ; ரேஞ்சர்களோ என் நாணயத்தை கேள்விக்குறியாக்குவதில்லை ; டைகரோ, LADY S ஷானியாவோ சட்டையைப் பிடித்து "வட்டிக்கு விடறியாடா ?" என்று சாத்துவதில்லை !! இரத்தப் படலம் நனவாகும் வரையிலும் முன்பதிவிலிருந்து ஒற்றை ரூபாயைக் கையால் தொடக் கூடக் கூடாது என்று வைராக்கியமாக சுற்றி வருவது யாருக்குத் தெரியுமோ-தெரியாதோ, நம்மவர் லார்கோவுக்கும், பெரும் தேவன் மணிடோவுக்கும் தெரியும் ! So இருக்கவே இருக்கு சார் அந்த லோகம் எனக்குத் தஞ்சமாய் ! !!

      Delete
    3. என்ன கொடுமை சாா் இது!

      ரண்டு நாளா தூங்காம கொள்ளாம எத்தனை கமாண்ட் போட்டிருக்கேன்!

      என்னை பத்தி ஒரு வாி கூட சொல்லனும்னு தோனலையா??

      ச்சே so 😢😢

      Delete
    4. எப்டியாவது சூழ்நிலையை மாத்தலாம்னா யாருமே நம்மல கண்டுக்க மாட்டேங்கிறப்பா!

      "தனிமையே என் துணைவன்"ன்னு பாட்டுப் பட வேண்டியது தான்!

      Delete
    5. //உங்களை நினைத்து பெருமைப்பட்ட கணங்கள் ஏராளம் உண்டு மாயாவிசிவா! இப்போதோ இது வேதனைக்கான தருணம்!//

      எனக்கும் இதே எண்ணம்தான் தோன்றியது :-((

      எடிட்டர் சார்,
      உங்களின் இந்த பக்குவப்பட்ட மனதிற்கு ஆயிரம் வந்தனங்கள்!*

      Delete
    6. // சங்கடம் வேண்டாம் சார் ; இந்த பொம்மைப் புத்தக உலகுக்குள் நுழைந்திடும் போது எனக்கு எல்லாமே அமைதியாகிப் போய் விடுவது வழக்கம் ! //
      நான் பல இதழ்களின் வாசகன்,பலதரப்பட்ட நூல்களின் வாசிப்பாளன் என்ற அடிப்படையில் ஒன்றை சொல்கிறேன் சார்,எங்கும் இல்லாத சுதந்திரமும்,மகிழ்ச்சியும்,ஈடுபாடும் இங்கு உண்டு,ஏனெனில் இங்கு நாம் பேசுவதை காது கொடுத்து கேட்க நண்பர்கள் பலருண்டு,மேலும் நல்லதொரு இணக்கமான புரிதலும் உண்டு.
      காமிக்ஸால் நான் இழந்ததை விட,நான் பெற்றது அதிகம்.
      ஆனால் இது சிலருக்கு புரிவதில்லை என்பதே சங்கடம்,புரிந்தவர்களுக்கும் பல பட்டங்கள் வழங்கப்படுகிறது,அதையும் மகிழ்ச்சியுடன் ஏற்போம் சார்,
      எது எப்படியோ உங்களின் மீதான மதிப்பு மாறாது என்பதே நிதர்சனம்.

      Delete
    7. ///காமிக்ஸால் நான் இழந்ததை விட,நான் பெற்றது அதிகம்.///

      +111

      Delete
    8. மிதுன் சார்...சகஜ நிலையைக் கொணர நீங்கள் எடுத்துக் கொண்ட பிரயத்தனங்களை நிச்சயம் நான் கவனிக்காது போகவில்லை ! பிப்ரவரியின் இறுதிப் பணிகளுக்கும், இங்கு பதில் சொல்லும் நிர்ப்பந்தத்துக்கும் மத்தியில் நேற்றும் இன்றும் கழிந்ததால் முறையாக acknowledge செய்திட இயலாது போயிற்று !! Sorry !! கார்ட்டூன் காதலர்களான நாமெல்லாம் ஸ்டீல்பாடி ஷெர்லக்கின் சீடர்களாச்சே !!

      அந்தத் தொடரையும் நேரம் கிட்டும் போது படித்துப் பாருங்களேன் - நான் ரொம்பவே ரசித்த சமாச்சாரங்களுள் அதுவும் ஒன்று !!

      Delete
    9. ////கார்ட்டூன் காதலர்களான நாமெல்லாம் ஸ்டீல்பாடி ஷெர்லக்கின் சீடர்களாச்சே !!

      அந்தத் தொடரையும் நேரம் கிட்டும் போது படித்துப் பாருங்களேன் - நான் ரொம்பவே ரசித்த சமாச்சாரங்களுள் அதுவும் ஒன்று !!////

      கண்டிப்பாக சாா்!!

      Delete
    10. ////Sorry !! ////

      சாா்,
      இதென்ன கவனிக்காம ஏதோ டைப் பண்ணீட்டீங்க போலிருக்கே!

      Delete
    11. ///கார்ட்டூன் காதலர்களான நாமெல்லாம் ஸ்டீல்பாடி ஷெர்லக்கின் சீடர்களாச்சே !! ///

      ஹாஹாஹா ..!

      முன்பெல்லாம் ஃபில்லர் பேஜஸாக வந்து கொண்டிருந்தது. ! ரொம்பவே ரசனையான Spoof தொடர்.!
      மீண்டுவர வாய்ப்பிருக்குமா சார்.!?

      Delete
    12. @Radja

      விடுங்க ராஜா..இது தான் அடிக்கடி நடக்கறது ஆச்சே...இந்த ஆகஸ்டில் வருகிறீர்களா?

      Delete
    13. வணக்கம் !
      ஈரோட் விஜய்!
      அப்பிடியெல்லாம் பக்குவப்பட்ட மனம் இல்லை நண்பரே என்னுடையது! உள்ளே புலன்விசாரணை நெருப்பு அது கையில் கிடைக்கும்வரை அணையாது! பிரச்சனைகள் திசைமாறத் தொடங்கியதும் அதை நிறுத்த வேறு வழி தெரியவில்லை . இதை ஆரம்பித்தவர்களில் நானும் ஒருவன் எனவே அனைவரையும் பாதிப்பிலிருந்து தவிர்த்துக்கொள்ள வைக்க நான் apologize பண்ணுவதைத்தவிர வேறு வழி தெரியவில்லை. எனது தந்தையார் சொல்லுவார் “ விவாதங்களின்போது விவாதிப்பதைவிட மன்னிப்புக் கேட்பதால் பிரச்சனைகள் குறையுமானால் ego பார்க்காமல் மன்னிப்பு கேட்டுவிடு , அது பல மனங்களை உடைக்காது ஏனெனில் உறவுகள் முக்கியம்” என்று. அதையே செய்தேன்!
      இனி blog இற்குள் வரவிரும்பாமல் இருந்தபோதும் சில பதில்களைக் கொடுப்பதற்காக வரவேண்டியதாயிற்று!
      மாயாவி சிவாவின் statements : தொர்பாக அவரைப்பற்றி பிழையாக நினைக்காதீர்கள் நண்பரே! அவரது flow பற்றி என்னைவிட நீங்களே அறிவீர்கள்! Full packed database. “எடியிடம் இன்றைக்கே கேட்டு புலன்விசாரணையை வாங்கிருவமா ?” என என்னிடம் கேட்டுத்தான் ஆரம்பித்தார். அவர் எடியுடனும் நெருக்கமானவர் . சில நேரம் அதீத ஆர்வம் அதிக உரிமையுள்ளவருடன் சட்டையைப் பிடித்தும் கேட்க வைத்துவிடும்.
      அது உண்மையில் கோபத்திலோ அவமானப்படுத்தவோ அல்ல!
      சேது படத்தில் சிவகுமாரிடம் ஶ்ரீமன் “ உன்னால் முடியாட்டி பொத்.....கிட்டு போய்யா” என்பாரே. அதுக்கு காரணம் விரோதம் அல்லவே உரிமை பாசம் நட்பு.
      அதுபோலத்தான்!
      பழனி , கணேஷ் அண்ணன் போன்றோரில் யாரும் யாருடைய தூண்டலிலும் பதிவிடவில்லை. இங்கு அனைவரும் புலன்விசாரணைமேல் கொண்ட விருப்பில் எடி தந்த உரிமையில் ஆர்வத்தை சற்று உரமாக கேட்டது மட்டுமே! தனிப்பட்ட விரோதங்கள் எதுவுமில்லை! அவர்கள் அப்பிராணிகள் நண்பரே!
      ஏனெனில் இரத்தப்படலம் 1-18 Reprint என்பது இனி 2018 இன்பின் நடக்கப்போவதே இல்லை அல்லது அடுத்த 10 வருடங்களுக்கு இல்லை. So 7 வருடம் தாமதமான புலன்விசாரணை now or never category க்குள் வந்ததே காரணம்!
      @Editor: உங்களை யாரும் வட்டி எடுத்துக்கதைத்ததாக எண்ணாதீர்கள் ஆசிரியரே! இங்கு comics வாங்குபவர்களில் பலபேர் அவ்வளவு பணபலமுள்ள குடும்பங்களைச் சார்ந்தவர்களல்லர். இதுவரை வந்த விலை நிர்ணயத்தில் இரத்தப்படலம் விலை பெரியது. ஏறத்தாழ ஈழ மதிப்பில் 7000/- ரூபா. So பலரது வருமானத்தின் கணிசமான பங்கை பிடித்தே அவர்கள் முன்பதிவு செய்தார்கள். அதை வங்கியிலிட்டால் அவர்களுக்கு வட்டி வந்து சற்றே வருமானமாக இருக்கும். ஆனால் அதை விட இரத்தப்படலம் அவர்களுக்குப்பெரியது. அந்த அடிப்படையில் மாயாவி சிவா கதைத்ததாகப்பாருங்கள். எப்படியாவது இலவசமாகப் பெற்றுக்கொடுப்பதற்கு அதீத முயற்சியெடுத்ததில் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டார்.
      இரத்தப்படலம் முன்பதிவில் புலன்விசாரணை உண்டென்பதை இறுதிவரை நம்பியவன் நான் ( misunderstanding ஆகவே இருந்துவிட்டுப்போகட்டும்) அதனடிப்படையிலேயே முன்பதிவிட்டேன். நண்பர்களையும் ஊக்கப்படுத்தினேன் . தற்போது அதற்கு என்ன விலை குடுக்கவும் தயாராகவே! ஆனால் அதனால் எடிட்டருக்கு நட்டம் வராமல். இனி இது தொடர்பாக நான் எதுவும் கேட்கப்போவதில்லை!
      மேலும் இவையனைத்தும் அதீத ஆர்வம் அதீத உரிமை யால் ஏற்பட்டவை.
      இது தொடர்பாக மீண்டும் மீண்டும் பதிவிட்டு நினைவுபடுத்த வேண்டாம் என நினைக்கிறேன். அனைவரும் என்றும் நண்பர்களாகவே இருப்போமே!

      Delete
    14. This comment has been removed by the author.

      Delete
    15. //உங்களை நினைத்து பெருமைப்பட்ட கணங்கள் ஏராளம் உண்டு மாயாவிசிவா! இப்போதோ இது வேதனைக்கான தருணம்!//

      +1

      // சில நேரம் அதீத ஆர்வம் அதிக உரிமையுள்ளவருடன் சட்டையைப் பிடித்தும் கேட்க வைத்துவிடும். //

      நமக்கு கிடைத்த உரிமையை சரியாக எப்படி உபயோகபடுத்த தெரிந்து இருக்கவேண்டும்! ஆனால் அதில் அவர் தவறியதுதான் தவறு! இதனை நேரில் தனியாக பார்த்து கேட்டால் சரி, ஒரு பொது தளத்தில் செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்!

      மனதில் ஆயிரம் உள்ளது! அதனை வெளிக்காட்டினால் நண்பர்களது மனம் பாதிக்கலாம்! எனவே இதனை கடந்து செல்கிறேன்!

      Delete
    16. //நமக்கு கிடைத்த உரிமையை சரியாக எப்படி உபயோகபடுத்த தெரிந்து இருக்கவேண்டும்! ஆனால் அதில் அவர் தவறியதுதான் தவறு! இதனை நேரில் தனியாக பார்த்து கேட்டால் சரி, ஒரு பொது தளத்தில் செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்!

      மனதில் ஆயிரம் உள்ளது! அதனை வெளிக்காட்டினால் நண்பர்களது மனம் பாதிக்கலாம்! எனவே இதனை கடந்து செல்கிறேன்!// Totally agreed. நாம் ஒருவர் மீது உண்மையான அபிமானம் வைத்திருந்தால் எந்த வகையிலும் அவரை பொதுவெளியில் மனம் நோகச் செய்ய மாட்டோம். இங்கே நடப்பது என்ன?

      Delete
    17. Prashenna R Madhu : வரிக்கு வரி ; வார்த்தைக்கு வார்த்தை என்றெல்லாம் நானும் பதில் சொல்லிக் கொண்டே போகலாம் தான் ! ஆனால் சட்டையைப் பிடித்து பொதுவெளியில் சாத்துவதையும் கூட நியாயப்படுத்தும் வேகத்தில் நீங்களிருக்கும் போது நான் சொல்லும் விளக்கங்கள் பூஜ்ய பலனையே நல்கும் !

      "தலைக்கடியில் வைத்துத் தூங்கப் போகும் சமாச்சாரம் தான் ; ஆனாலும் பாரு.. இன்றைக்கே வாங்கிக் காட்டவா ?" என்று சவால் விடுவதும் , அதனில் கெலித்திட எல்லாமே ஓ.கே. தான் என்ற சிந்தையும் உங்களுக்கு maybe ஆர்வங்களின் நீட்சியாகத் தெரிந்திடலாம் ; ஆனால் யதார்த்தம் வேறு sir !

      "மனிதர்களுக்கு மறதி ஒரு வரப்பிரசாதம்.....!"

      வெகு சமீபமாய் ""நிஜங்களின் நிசப்தம்" கிராபிக் நாவலுக்கு நான் எழுதிய வசனமிது ! துரதிர்ஷ்டவசமாய் அந்த வரம் அத்தனை சுலபமாய் எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை ! கொஞ்சம் பிரயத்தனப்பட்டு அதை முதலில் பெற்றிட முயற்சிக்கிறேனே ?!

      அப்புறம் ஒரேயொரு சிந்தனை : கண்ணை விற்றுத் தான் ஓவியத்தை வாங்கிடணுமா சார் ? நட்பையும், சௌஜன்ய உறவுகளையும் கசாப்புக்கு அனுப்பி விட்டுத் தான் ஒரு இதழைப் பெற்றிட வேண்டுமா ? சத்தியமாய் எனக்குப் புரியவில்லை !

      Delete
    18. ///கண்ணை விற்றுத் தான் ஓவியத்தை வாங்கிடணுமா சார் ? நட்பையும், சௌஜன்ய உறவுகளையும் கசாப்புக்கு அனுப்பி விட்டுத் தான் ஒரு இதழைப் பெற்றிட வேண்டுமா ? ///

      +11111

      அன்பால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை!

      இதுவரை நாம் எடிட்டரிடம் கேட்டுப் பெற்றவை எத்தனை எத்தனையோ உண்டு! அவையெல்லாம் சட்டையை பிடித்து உலுக்கி வாங்கப்பட்டவை இல்லையே?!!

      Delete
    19. // கண்ணை விற்றுத் தான் ஓவியத்தை வாங்கிடணுமா சார் ? நட்பையும், சௌஜன்ய உறவுகளையும் கசாப்புக்கு அனுப்பி விட்டுத் தான் ஒரு இதழைப் பெற்றிட வேண்டுமா ? //

      +1

      Delete
    20. நன்றி பரணி !
      ஆனாலும் தளத்தை மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டுவர முயற்சிப்போமே!

      Delete
    21. சரி விஜய்!
      அவரையும் மன்னித்துவிடுங்களேன்!

      Delete
    22. @Editor: அடக்கடவுளே நான் வரிக்குவரி பதிலளிப்தாகவோ கேட்பதாகவோ நினைக்காதீர்கள்ஆசிரியரே அத்தோடு public இல் சட்டையைப்பிடித்துக் கேட்பதை நான் நியாயப்படுத்துவதாகவும் கூறவில்லை.
      அத்தோடு இன்றே வாங்கிக்காட்டவா என அவர் கெத்தாகவும் கூறவில்லை. நட்பு ஆசிரியரே.
      நான் இந்தியா வந்ததுமில்லை உங்கள் யாரையும் நான் நேரடியாகப்பார்த்ததுமில்லை. ஆனால் உங்களனைவருக்குமிடயேயான நட்பைப்பற்றி பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். “ அவர் எடியுடன் அடிக்கடி phone இல் கதைப்பார் “ “ இவர் இந்தக் கதை சரியில்லை என போனிலேயே comment சொல்வார்.” அப்பிடி இப்பிடி நிறைய கேள்விப்பட்டேன். So நான் நினைத்தேன் அந்த உரிமையில் உடனே கேட்டால் “ சரி சரி போடுவம்” என்ற முடிவுக்கு வந்துவிடுவீர்கள். என நனைத்திருந்தேன் ஆசிரியரே! எமக்கு வெளியில் கிடைக்கும் தகவல் அப்படியானவை! உங்கள் நட்பின் உச்சம் நானறியாதது!
      இங்கே நாம் பல அமைப்புகள் பல கட்டங்களினூடாக வடிகட்டப்பட்டவர்கள் . இதைவிட மோசமாக இடம்பெற்றபோதும் ஒரு beer ஒரு hug ஒரு sorry என முடித்துக்கொண்டோம். இதைப்போலத்தான் என நான் நினைத்திருந்தேன். இங்கு உங்களுக்குடையிலான பல விவாதங்களைக்கண்டுள்ளேன் . Sticker விடயத்தில்கூட. ஆகவே உங்களுக்குடையிலான வாதங்கள் பிரதிவாதங்களில் நட்புக்கிடையிலான சண்டை என நினைத்து நாம் தலையிடாமல் இருந்ததுண்டு. இதுவரை அப்படித்தானே இருந்தது? எனினும் நீங்கள் வயதில் அனுபவத்தில் மூத்தவர் . உங்களுக்கு அட்வைஸ் பண்ணுமளவிற்கு நான் பெரியவனில்லை.நான் அவ்வாறு நினைத்தது தவறுதான். மீண்டுமொருமுறை இங்கு இடம்பெற்ற அனைத்து தவறுகளுக்கும் நான் பொறுப்பெடுத்து மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் . இன்னும் நீங்கள் normal mode இற்கு வரவில்லை என நினைக்கிறேன். நானும்தான். உங்களால் இதை sportive ஆக எடுக்க முடியும். இங்கு blog இல் ஒருவர் மீது இன்னொருவர் வீசும் சேறுகளை இங்குள்ள மற்றொருவர் வந்துதான் துடைக்க வேண்டுமென்றுமில்லை. அதை நீங்களும் செய்யலாம். ஏனெனில் இது எங்களுக்கான உங்கள் தளம்.
      It may be hard incident to digest but why can’t we just forget this at once ? which is really needed at this moment to proceed further.
      இங்கு நான் பேசிக்கொண்டிருப்பது எனக்கும் உங்களுக்குமிடையிலான நட்பைப்பற்றியல்ல ஆசிரியரே , உங்களுக்கும் மாயாவியாருக்குமிடையிலான நட்பைப்பற்றி. என்னை மன்னிக்காவிடினும் பறவாயில்லை அவரை மன்னித்துவிடுங்கள்.
      இப்படி நீங்கள் என்னுடன் பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. ஏனெனில் வந்த புதிதில் உங்களிடம் பேச நான் பலமுறை முயன்றும் பரணிதான் பதில் தந்தார்.
      அந்த பஞ்சாயத்து ஒன்று T. Prabahar உடன் மற்ற பதிவில் சொல்லவேண்டும். Thanx for chatting with me!

      Delete
    23. கவலையேபடாதீங்க மது. ஆசிரியர் இந்த மாதிரி விசயங்களை மறந்தும் மன்னித்தும்வி ட்டிருக்கிறார். மாயாவி சார்ந்தோரை பொதுவெளியில் போட்டுத்துவைப்பது முதல் முறையுமல்ல. ஆசிரியருக்கே இது மூன்றாவதோ நான்காவதோ முறை நடக்கிறது. கடந்த முறை வந்த இலவசப் புத்தகத்திற்கும் தவறான தகவல்களை வைத்துக் கொண்டு போட்டுத் துவைத்தார். சந்தாவைத்திருப்பிக் கேட்டஇருக்கிறார். தவறான தகவல்களை பதிவிடுவதும் அதைக் கொண்டு சண்டையிடுவதும் புதிதல்ல. ஒரு மாதம் கழித்து சரியாகிவிடும். அப்படி சரியாவதே தொடர் பிரச்சினைகளுக்கு காரணமாகி விடுகிறது.

      Delete
    24. நீங்க வேற கொழுத்திப்போடாதிங்க மகேந்திரன்! திரும்ப திரும்ப நினைவபடுத்தாம விட்டிருங்கோ . Please!

      Delete
    25. கொழுத்திப் போட்டு எனக்கு ஆகப் போவது ஒன்றுமில்லை பிரசன்னா. புலன் விசாரணை கேட்கிறேன் என்ற போர்வையில் மாயாவி இங்கும் வேறு இடங்களில் தொடர்நது தவறான தகவல்களை விசமப் பிராச்சாரமாக தொடர்ந்து செய்தார். செய்து கொண்டிருக்கிறார்.

      இங்கு நடந்த பல நல்ல நடபு கலந்த நிகழ்வுகளையும்எ ந்தவித ஆதாரமுமில்லால் அசிகப்படுத்திக் கொண்டிருக்கிறார். நேர்மையும் நியாயமும் கொண்ட எந்த மனிதனும் அப்படி செய்யப் போவதுல்லை. இந்த பிரச்சினையே நீங்க தான் ஆரம்பிச்சு வைச்சதா நம்பிட்டு இருக்கிறீங்க பாரு. அதுவே அவரோட சாமார்ததியம் தான்.

      எனக்கும் இதை தொடர்நது விவாதிப்பதில் ஆர்வம் இல்லை. ஆசிரியரின் மனம் வருத்தப்படும் என்பதால். இந்த மாதிரி விவாதங்களில் நான் தள்ளியே இருந்திருக்கிறேன். இது சம்பந்தப்பட்ட விசயங்களில் எனக்கு நிறய உண்மை தெரியும் என்பதால் பேசுகிறேன்.

      I will stop for now.

      Delete
    26. // கண்ணை விற்றுத் தான் ஓவியத்தை வாங்கிடணுமா சார் ? நட்பையும், சௌஜன்ய உறவுகளையும் கசாப்புக்கு அனுப்பி விட்டுத் தான் ஒரு இதழைப் பெற்றிட வேண்டுமா ? //

      +1

      Delete
    27. நியாயமான வாதம் மஹி.

      Delete
    28. // கொழுத்திப் போட்டு எனக்கு ஆகப் போவது ஒன்றுமில்லை பிரசன்னா. புலன் விசாரணை கேட்கிறேன் என்ற போர்வையில் மாயாவி இங்கும் வேறு இடங்களில் தொடர்நது தவறான தகவல்களை விசமப் பிராச்சாரமாக தொடர்ந்து செய்தார். செய்து கொண்டிருக்கிறார். //

      வருத்த பட வேண்டிய விஷயம், உண்மை என்றால்!
      இதற்குத்தான் நான் கடந்த 6 மாதங்களாக FB பக்கம் செல்வது இல்லை!

      Delete
    29. // கண்ணை விற்றுத் தான் ஓவியத்தை வாங்கிடணுமா சார் ? நட்பையும், சௌஜன்ய உறவுகளையும் கசாப்புக்கு அனுப்பி விட்டுத் தான் ஒரு இதழைப் பெற்றிட வேண்டுமா ? //

      +111111111111111

      Delete
    30. ,டாக்டர் நானும் நண்பர் என்ற முறையில் இந்தியா வரும் போது உங்கள உதைத்து கேப்பேன்...உங்க அப்பா சொன்ன மாதிரி மன்னிப்பும் கேப்பேன்...ஏன்னா நாம நண்பர்கள்...😃

      Delete
    31. தம்பி மேல கைய வெக்கிறத இந்த
      அண்ணண் பாத்துட்டு சும்மா இருக்கமாட்டான்.

      Delete
  18. புலன் விசாரணை - விஜயகாந்த் படம் புத்தகமா வந்துடுச்சா

    ReplyDelete
  19. மன அழுத்தத்துக்கான நல்ல மருந்து காமிக்ஸ்னு நினைச்சிருந்தேன். ஆனா, இங்கே நிலமை தலைகீழாருக்கு.

    ReplyDelete
    Replies
    1. @Podiyan: // மன அழுத்தத்துக்கான நல்ல மருந்து காமிக்ஸ்னு நினைச்சிருந்தேன். ஆனா, இங்கே நிலமை தலைகீழாருக்கு. //

      காமிக்ஸ் வாசிப்பது வேறு, காமிக்ஸ் விவாதங்கள் வேறு. இரண்டின் மூலமும் கிடைக்கும் பலன்கள் முற்றிலும் எதிரெதிரானவை. இங்கு மட்டுமல்ல, எந்த தளத்திலும் மன நிம்மதி வேண்டுவோர் கமெண்ட் செக் ஷனை கண்டுகொள்ளாமல் செல்வதே இன்றைய நடைமுறை.

      இவ்வளவு தீவிரமாகவும் அழுத்தமாகவும் தேவைகளை தனக்காகவோ, பொதுவுக்காகவோ விவாதம் செய்வோர் தன்னையறியாமலேயே காமிக்ஸ் வாசிப்பு தரும் இலகுவான நுட்பமான பொழுதுபோக்கை நிரந்தரமாக இழந்தவர்களே. ஒரு கட்டத்தில் தனக்காகவேனும், தேவைகளின் தீவிரத்தனத்தை மட்டுப்படுத்தாவிடில் வாசிப்பதே குழந்தை கையில் கிடைத்த டிவி ரிமோட் போல அலைக்கழிப்பாகிவிடும்.

      Delete
    2. // தேவைகளை தனக்காகவோ, பொதுவுக்காகவோ விவாதம் செய்வோர் தன்னையறியாமலேயே காமிக்ஸ் வாசிப்பு தரும் இலகுவான நுட்பமான பொழுதுபோக்கை நிரந்தரமாக இழந்தவர்களே. //
      +1

      Delete
  20. கணேஷ் சார்@

    உங்கள் பணி போற்றுதலுக்குரியது. நேரம் இருப்பினும் அங்கே வந்து செயல்படும் மனசு வேணும். அந்த தங்கமான மனசு உங்களிடம் இருக்கு. அதற்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இன்னும் பலகாலம் உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

    எடிட்டரின் பணிச்சுமையின் அளவை உணராமல், இப்பவே தந்தாகனும் என பிடிவாதமாக கேட்டதாலேயே உங்களுக்கு காட்டமாக பதில் தரவேண்டியதாயிற்று. இருப்பினும் உங்கள் மனசை சங்கடப்படுத்தியற்கு என்னுடைய மனப்பூர்வமான வருத்தங்களை பதிவு செய்கிறேன் சார்.

    ReplyDelete
  21. ஸ்டீல் க்ளா@ ///சண்டை போடுவதற்கே இங்கே வருபவர்களை பற்றியும் தெரியும்.///--- அவரவர் குடும்பத்திலேயே சண்டை சச்சரவுகள் தவிர்க்க முடியாதது நண்பரே. இவ்வளவே பேர் குழுமும் இங்கே கருத்து மோதல் வர்லனாதான் ஆச்சர்யம்.

    அப்புறம் எல்லோரும் அவரவர்க்கு இயன்ற காமிக்ஸ் பணி ஆற்றிகொண்டு தான் உள்ளோம். என் ஊரில் வசிக்கும் நண்பரிடம் இம்முறையும், டிசம்பரில் ஞாபகப்படுத்தி ரூபாய் 5000ஐ அவரிடம் வாங்கி வந்து அவருக்கு சந்தா செலுத்தி உள்ளேன். நான் அவரை சிலமுறை பார்த்து ஞாபகப்படுத்தலனா ஒரு சந்தா அவுட். வாங்கும் வசதி இருந்தும், அவருக்கு நேரம் கிடையாது.

    நம்முடைய மற்றொரு நண்பர், அவருடைய கடும்பணி காரணமாக சந்தா செலுத்த பேங்கிற்கு செல்ல இயலாமையால், எனக்கு தொடர்பு கொண்டார். ஓடிச் சென்று அவருடைய பணத்தை வாங்கி வந்து அவருக்கு சந்தா செலுத்தி உள்ளேன்.

    என் கடைக்கு வரம் பல் மருத்துவர், காமிக்ஸ் ரசிகர். அவரிடம் சொல்லி சொல்லி இந்த வாரம்தான் அவரும் சந்தா செலுத்தினார். இரத்த படலம் புக்கிங்கும் செய்துள்ளார் என்பது கொசுறு செய்தி.

    இரத்த படல ரசிகர் இன்னொரு நண்பர். ஈரோட்டில் வாங்கி கொள்கிறேன் என்றார்.
    எப்படியும் வாங்கத்தானே போறீங்க; இப்பவே கட்டுங்க என அவரை வற்புறுத்தி இரத்த படல முழுபுக்கிங் செய்ய வைத்தேன்.

    இன்னொரு நண்பர் கடையில் வாங்கி வருபவர். அவரிடம் இந்தாண்டு நடைமுறையில் உள்ள பாயிண்ட் சிஸ்டம், டெக்ஸ் இலவச இணைப்பு என எடுத்து சொல்லி அவரையும் சந்தா கட்ட முடிவெடுக்க வைத்து உள்ளேன். பிப்ரவரியில் நிச்சயமாக செலுத்துவார் என தெரியும். இரத்த படல புக்கிங்கிற்கும் அவர் ரெடி ஆகிட்டார்.

    காமிக்ஸ் உலகை விட்டு விலகி இருக்க முடிவெடுத்தாலும், முழுமையாக விலகி முடியல என்பதே யதார்த்தம்.

    தொடர்ந்து கிடைக்கும் பேட் பாய் முத்திரைகளைப் பற்றி எனக்கு கவலை இல்லை.

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேலை செய்தீர்கள் விஜயராகவன்!

      Delete
    2. /// நம்முடைய மற்றொரு நண்பர், அவருடைய கடும்பணி காரணமாக சந்தா செலுத்த பேங்கிற்கு செல்ல இயலாமையால், எனக்கு தொடர்பு கொண்டார். ஓடிச் சென்று அவருடைய பணத்தை வாங்கி வந்து அவருக்கு சந்தா செலுத்தி உள்ளேன். ///

      அது நானே.! எனக்கு நேரம் கிடைத்தால் கூட என்னால் பேங்கிற்கு போக இயலாது. காரணம், இங்கே இருக்கும் TMBL பேங்க் கட்டிடத்தில் லிஃப்ட் வசதி கிடையாது. நான் 90% மாற்றுத் திறனாளி என்பதால் படி ஏறி செல்லவும் முடியாது. உதவிக்கு தம்பிகளை அழைத்தால், அவர்கள் இருவரும் "எல்லா புக்கும் வாங்க வேண்டாம். டெக்ஸ் வில்லர், லக்கி லுக் இந்த மாதிரி நல்ல புக் மட்டும் போதும்! கடையிலேயே வாங்கிக்கலாம்!" என்று எனக்கு அறிவுரை கூறுகிறார்கள். யாரை நம்பினாலும் சரியில்லை என்று 2017'ம் வருடம் விஜய ராகவன் சாரின் உதவியை நாடினேன். சென்ற ஆண்டும் இவர்தான் உதவி செய்தார். இந்த ஆண்டும் இவர்தான் உதவி செய்திருக்கிறார். அவருக்கு கோடி நன்றிகள்!!

      Delete
    3. வாழத்துகள் டெக்ஸ்.

      Delete
    4. வாழ்த்துக்கள் டெக்ஸ்...

      Delete
    5. Jagath @ ச்சே ச்சே... நன்றி தெரிவிக்க அவசியமே இல்லை நண்பரே. இது வெறும் சன்னமான போஸ்ட் மேன் வேலைதான். எனக்கு திருப்தியான ஒன்று. இது வெளியே சொல்லும் படியான ஒன்றும் இல்லை.

      Delete
    6. மஹி ஜி & ஹசன்@ நன்றிகள் நண்பர்களே.

      Delete
    7. மனமார்ந்த பாராட்டுகள் டெக்ஸ்...

      Delete
  22. ungaloda akka poruu rendu masathukku orukka chinna kuzhanthaingala vida mosama sanda pottukureenga...pongappa poi comics padinga...

    ReplyDelete
  23. ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு பிடித்த கதைகளை அவை மற்றவர்களுக்கு பிடித்ததோ இல்லையோ என்பது பெற்றியெல்லாம் சிந்திக்காமல் எக்கச்சக்கமாக ப்ரமோட் பண்ணப்படுவதைப் பார்க்கிறோம். ஆஹா.. இப்படியே எல்லாக் கதைகளையும்பற்றி எழுதுவார்கள் ப்ரமோட் பண்ணுவார்கள் என்று ஆசிரியர் எதிர்பார்த்திருக்க, அந்தக் குறிப்பிட்ட பகுதியினருக்கு பிடிக்காமல், ஏனைய பெரும்பான்மையான வாசகர்களுக்கு பிடித்த கதைகள் வரும்போது விமர்சிக்கிறோம் என்ற பெயரில் அவற்றை நாறடித்து, ஏனையவர்கள் வாங்கிடாத அளவுக்கு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடும் ஓர் அரசியல் உள்ளதை ஆசிரியர் புரிந்திடவேண்டும்.

    ReplyDelete
  24. இதனாலேயே பல நல்ல கதைகள் க்ரீன் மேனர், சில க்ராபிக் நாவல்கள் எல்லாம் நார் நாராய்க் கிழிக்கப்பட்டன. யுத்தத்தின் பின்னணியில் பிறந்து, அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்குத்தான் அதன் நிஜங்கள் புரியும். ஜேர்மன் சுவர் உடைக்கப்பட்டதன் கணங்களைப் படித்தபோது இதயம் சில கணங்கள் இயங்க மறுத்தது. கப்பலில் அடைக்கப்பட்டவர்கள் கப்பலோடு தப்பும்போது நானே நிஜத்தில் குதித்தேன்... கதைகள் புரியாதவர்கள், மெதுவான கதைகளை ரசிக்காதவர்கள், டெக்ஸ் இன் வித்தியாசக் கதைகளை இரசிக்க முடியாதவர்கள் அதை எதிர்மறையாக விமர்சிப்பதைப் பார்க்கும்போது சிரிப்புத்தான் வரும். டுமீல் டமீல் கும் கும்மா என்று சத்தங்களை பார்த்து எமக்கு சிரிப்பு வந்தாலும் அதனை ரசிப்போருக்கு மரியாதை கொடுத்து விமர்சனம் என்ற பெயரில் நாறடிப்பதில்லை. ஆனால்......

    ReplyDelete
  25. தமிழில் வாங்கிடும் இதே லக்கிலூக் காமிக்ஸ்களை ஆங்கிலத்தில் வாங்கவேண்டுமானால் ஒரு புத்தகத்துக்கு ஆயிரக்கணக்கில் இங்கே கொடுக்கவேண்டும். அந்த வகையில் தமிழில் இவ்வளவு தரத்தில் காமிக்ஸ்களை நியாய விலையில் வழங்கிடும் நமது ஆசிரியருக்கு நன்றியுள்ளவர்களாக, அவரது ரசனைக்கும் தேர்வுக்கும் மதிப்புக் கொடுப்பவர்களாக, அவரது வயதுக்கும் அனுபவத்துக்கும் சிரம் தாழ்த்துபவர்களாக இருப்பதே மனிதப் பண்பாகும்!

    ReplyDelete
    Replies
    1. Podiyan : //சமூக வலைத்தளங்களில் பதிவிடும் ஓர் அரசியல் உள்ளதை ஆசிரியர் புரிந்திடவேண்டும்.//

      சார்...இணையத்துக்கோ ; சமூக வலைத்தளச் செயல்பாடுகளுக்கோ - முந்தைய தலைமுறையைச் சார்ந்தவன் நான் ! இந்த அரசியல்களோ ; நெளிவு சுளிவுகளோ என் திறனுக்கு அப்பாற்பட்டவையே !

      சந்தோஷத்துடன் வந்தேன் இந்தத் துறையினுள் ; சந்தோஷம் தங்கும் வரைக்கும் இருந்திடப் போகிறேன் - simple as that !! இந்த வயதுக்கு மேல் புதுசாய் அரசியல் நெளிவு சுளிவுகளை படித்து நானென்ன செய்யப் போகிறேன் சார் ?

      ரின்டின் கேனா ? லியனார்டோவா ? யாராக இருக்க விரும்புகிறாய் ? என்று கேட்டால் - நானெப்போதுமே RTC கட்சி தான் !!

      Delete
    2. // அந்த வகையில் தமிழில் இவ்வளவு தரத்தில் காமிக்ஸ்களை நியாய விலையில் வழங்கிடும் நமது ஆசிரியருக்கு நன்றியுள்ளவர்களாக, அவரது ரசனைக்கும் தேர்வுக்கும் மதிப்புக் கொடுப்பவர்களாக, அவரது வயதுக்கும் அனுபவத்துக்கும் சிரம் தாழ்த்துபவர்களாக இருப்பதே மனிதப் பண்பாகும்! //

      +1

      Delete
    3. // RTC //

      இது என்ன விஜயன் சார்?

      நீங்க இன்றும் இங்கு தலையை காட்டுவதை பார்த்தால் புத்தகங்கள் இன்று மாலையே கிளம்பி விடும் போல் தெரிகிறது!

      Delete
    4. //அந்த வகையில் தமிழில் இவ்வளவு தரத்தில் காமிக்ஸ்களை நியாய விலையில் வழங்கிடும் நமது ஆசிரியருக்கு நன்றியுள்ளவர்களாக, அவரது ரசனைக்கும் தேர்வுக்கும் மதிப்புக் கொடுப்பவர்களாக, அவரது வயதுக்கும் அனுபவத்துக்கும் சிரம் தாழ்த்துபவர்களாக இருப்பதே மனிதப் பண்பாகும்!//
      +1

      Delete
    5. RTC = Rin Tin Can !!

      என் பணிகள் முடிந்தாச்சே ? பைண்டிங் படையெடுப்பு மட்டுமே இப்போதைய வேலை !!

      Delete
    6. ஙே...அப்ப தளத்தில ரின்டின்கேன் கிற பேர்ல காமெடி அதகளம் பண்ணிட்டு இருக்கிறது ஆசிரியரா..?

      மேல இருக்கிறது ஜோக்கு. இது தெரியாம ஆசிரியர் பேக் ஐடில வராருன்னு அதுக்கு தனியா அவரை அடிச்சு துவைச்சுடாதீங்கப்பா..

      Delete
    7. பொடியன் சார்...

      +11111

      Delete
    8. 'தமிழில் வாங்கிடும் இதே லக்கிலூக் காமிக்ஸ்களை ஆங்கிலத்தில் வாங்கவேண்டுமானால் ஒரு புத்தகத்துக்கு ஆயிரக்கணக்கில் இங்கே கொடுக்கவேண்டும்........................'

      Dear Podiyan & others,

      தயவுசெய்து இந்த ஒப்பீடு இனிமேல் வேண்டாமே.
      நீங்கள் ஐரோப்பாவில் வேலை பார்ப்பவராக இருந்தால் நீங்கள் கொடுக்கவேண்டியது just 'FEW' Euros only.

      நம்ம ஊரு காய்கறிக்கடையில இலவசமா குடுக்குற கறிவேப்பிலை பிரான்சில்/ஜெர்மனியில் என்ன விலைன்னு தெரியுமா?
      இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 'ஆயிரம் ரூபாய்'.

      Delete
    9. //Dear Podiyan & others,

      தயவுசெய்து இந்த ஒப்பீடு இனிமேல் வேண்டாமே.
      நீங்கள் ஐரோப்பாவில் வேலை பார்ப்பவராக இருந்தால் நீங்கள் கொடுக்கவேண்டியது just 'FEW' Euros only.

      நம்ம ஊரு காய்கறிக்கடையில இலவசமா குடுக்குற கறிவேப்பிலை பிரான்சில்/ஜெர்மனியில் என்ன விலைன்னு தெரியுமா?
      இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 'ஆயிரம் ரூபாய்'. //

      + 1

      Delete
    10. //நம்ம ஊரு காய்கறிக்கடையில இலவசமா குடுக்குற கறிவேப்பிலை பிரான்சில்/ஜெர்மனியில் என்ன விலைன்னு தெரியுமா?
      இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 'ஆயிரம் ரூபாய்'. //

      இதுவும் தவறான தகவலே.
      இங்கு பாரிஸில் 1 விருந்து 2€ மட்டுமே (இந்திய மதிப்பு ₹75-150).

      ஒரு தகவலுக்காக : அத்துடன் நான் சென்னையிலே ₹5 க்கு வாங்கிருக்கிறேன்....

      Delete
    11. // தயவுசெய்து இந்த ஒப்பீடு இனிமேல் வேண்டாமே.
      நீங்கள் ஐரோப்பாவில் வேலை பார்ப்பவராக இருந்தால் நீங்கள் கொடுக்கவேண்டியது just 'FEW' Euros only.//

      Not true, in US Lucky Luke comics is 13$ (with tax), Which is not a small money for a 48 page comics. Equivalent tamil version even with a gigantic shipping to US is still less than 13$, so i can enjoy the comics in my own language for less than the english version.

      Delete
  26. பொதுவாக நான் comments படிப்பதோடு சரி.பதிவிடுவதில்லை. புலனவிசாரணை கேட்டு பதிவிட்டவர்களில் நானும் ஒருவன்.ஆனால் விவாதம் போன விதத்தை பார்த்து நிஜமாகவே சங்கடப்பட்டென். Really I feel so sorry.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் நண்பரே!

      Delete
    2. நானும் கூடத் தான்!

      Delete
    3. அட! விடுங்கப்பா.! யானைனா நடக்குறதும்.,பானைனா உடையிறது சகஜம்தானப்பா.!!!

      Delete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. சார்,

    மாயாவி சிவா அவர்கள் கேட்டதில் எந்த தப்பும் இருக்கின்ற மாதிரி தெரியவில்லை, நீங்கள் வாக்கு கொடுத்ததைதான் ஆதார பூர்வமாக கேட்டு இருக்கிறார், போன பதிவில் நீங்கள் இந்த லிங்கை பார்த்தீர்களா என்று தெரியவில்லை, மறுபடியும் உங்களுக்காக.
    https://4.bp.blogspot.com/-LriioAi-cYE/Wm6vkUnOoXI/AAAAAAAAHww/xGlp-P-Qzhc9eMK5NAnT_aRRsQTLs929gCLcBGAs/s1600/22-1-2017%2Bcopy.jpg

    "அந்த புலன் விசாரணை பாகம் முன்பதிவுகளுக்கொரு பரிசாய் உண்டென்பதையும் சொல்லி விடுகிறேன் " இது நீங்கள் பதிவிட்டதுதான். இதற்க்கு உங்கள் விளக்கம் என்ன என்பதைத்தான் கேட்டு இருக்கிறார்.Even I am interested to hear back from you...Thanks

    ReplyDelete
    Replies
    1. EBFல் வழங்கப்பட்ட நோட்டீசிலோ, அல்லது அன்று நடந்த வாசகா் சந்திப்பிலோ, அது இலவசம் என்று குறிப்பிடப்படவில்லையே நண்பரே!

      அன்று தானே இரத்தப்படலம் வெளியீடு அதிகாரப் பூா்வமாக அறிவிக்கப்பட்டது!

      அதன் பிறகு வந்த எந்த விளம்பரத்திலுமே புலன் விசாரனை இலவசம் என்று அறிக்கப்படவில்லையே!

      ஒரு முடிவு எடுக்கும் முன் ஆயிரம் விவாதங்களும், கருத்துக்களும் பகிரப்படலாம். இறுதியாக அறிவிக்கப்பட்ட முடிவு தானே இறுதியானது!

      என்ற வகையில் அது இலவசமாக வழங்கப்படும் என்பதை தனிப்பட்ட நபாின் தவறான புாிதலாகக் தானே இருக்கமுடியும்!

      மேலும் EBFல் 18 பாகங்களையும் ஒரே புத்தகமாக வெளியிடுவதா? மூன்று பாகமாக வெளியிடுவதா? என்பதற்குத் தானே பொிய அளவில் விவாதம் நடந்தது!!

      அங்கே யாரும் புலன் விசாரனை பற்றி கேட்கவே இல்லையே???

      நான் உணா்ந்த மட்டும் மாயாவி சிவா அவா்கள் தவறாகப் புாிந்து கொண்டிருக்கிறாா் என்றே கூறுவேன்!!

      Delete
    2. Desr Mithun, so EBFலேயே கேட்டிருந்தால் எடிட்டர் புலன் விசாரணை புக்கும் கொடுத்திருப்பாருன்னு சொல்லுறீங்க. சரி EBF ல் கேட்காததுக்கு உங்க வீட்டு புள்ளையா நினைச்சு மன்னிச்சு விட்டுருங்க. இப்போ கொஞ்சம் லேட்டா கேக்கிறோம், குடுக்கலாமே!!!
      கொடுக்கவே முடியாத ஒன்று என்றால் (கோஹினூர் வைரத்தில் ஒரு சின்ன பீஸ் - just 1 கிராம்), கண்டிப்பாக கேட்கப்போவதில்லை.
      எடிட்டரால் முடிந்த ஒன்றைதான் கேட்க்கிறோம்.

      Delete
    3. மிதுன் சார் ...வரிக்கு வரி இதையே தான் வழிமொழிகிறேன் .

      மீண்டும் கையை பிடித்து இழுக்க எனக்கு சக்தி இல்லை..:-(

      Delete
    4. எடிட்டரால் முடிந்த ஒன்றைதான் கேட்க்கிறோம்..###


      அதை தான் ஆசிரியரும் கோடிட்டு காட்டி இருந்தார் நண்பரே..பொறுமையாக இருங்கள் சந்தா F ல் இனைக்கலாமா என்று...ஆனால் ...:-(

      Delete
    5. Dear Paranitharan நண்பரே, slip caseக்குள்ளேயும் இணைச்சுட்டா அதோட அழகே தனி தான். இதை உங்களால் மறுக்க முடியுமா நண்பரே?

      Delete
    6. உண்மை தான் நண்பரே...ஆசிரியர் காரணங்களை அடுக்கியும் இல்லை இல்லை அப்படியே தான் வேண்டும் என மீண்டும் மீண்டும் சாடுவது அழகு தானா நண்பரே...யோசியுங்கள்..

      Delete
  29. மறுபடியும் முதல்லேர்ந்தா...

    ReplyDelete
  30. @all: இங்கு யாரும் நடந்த பிரச்சனைகளை மீண்டும் மீண்டும் கிளறி அலசாம விடமாட்டீர்களா? இங்கு யார் சரி யார் தவறு என கண்டுபிடித்து என்ன செய்யப்போகிறீர்கள்? தண்டனை தர முடியாதல்லவா! தளம் அமைதிபெற உதவுங்களேன்! உங்களுக்குள் அடிபட்டு என்ன ஆகப்போகிறது?
    Please!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே மூன்று நாளுக்குப் பிறகு இப்போதான் எதிா்த்து பதிவு போட்டிருக்கேன்!!

      என்ன செய்ய சொல்றீங்க??

      அமைதியாக இருப்பதனால் தவறை ஏற்றுக் கொள்வதாக நினைத்துக் கொள்கிறாா்களே!!

      Delete
    2. இல்லாத ஒன்றை இருப்பதாக கூறுவதும், சொல்லாத ஒன்றை சொன்னதாகக் கூறுவதும் அபத்தம் இல்லையா??

      Delete
    3. பிரசன்னா மது சார் இதை விட கடுமையான முறையில் ஆசிரியரும்..,நண்பர்களும் பல போலி முகமூடிகளிடம் காய பட்டு இருக்கிறார்கள் .அதை எல்லாம் உடனே மறந்தும் விட முடியும்..தூக்கி போட்டு விடவும் முடியும்..ஆனால் நன்கு அறிந்த .பழகிய ,புரிந்த ..,நெருங்கிய நண்பர்களே அந்த செயலை செய்யும் பொழுது வேதனை பன்மடங்காக அதிகரிக்கும் என்பதை சிலர் புரிந்து கொண்டால் சரி..

      Delete
    4. சிலர்,
      ஒரு கூட்டம்,
      10பேர்,
      ஒரு வட்டம்,
      ஒரு குரூப்...

      இப்படி பொத்தாம் பொதுவாக பேசுவதே பிரச்சினைகளின் ஆரம்பம் என பலமுறை உணர்ந்தாச்சுங்க பரணிதரன்.K..

      நீங்களும் அதையே தொடர வேணாமே.ப்ளீஸ்... சொல்ல வருவதை முழுவதுமாக சொல்லுங்கள். இங்கே "சிலர்" என யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என ஓப்பனாகவே போடுங்க. மேலும் மேலும் குழப்பங்களை தவிர்க்க உதவும் அது.

      Delete
    5. //சேலம் Tex விஜயராகவன் (முன்னாள் சேந்தம்பட்டி உறுப்பினர்) //

      ஹா ஹா ஹா :)))

      இரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு :))

      Delete
    6. Udaya@ ஹா...ஹா... 3வருடங்களாக ஒரு குழுவில் இருந்த போது நான், சொல்லும் கருத்துக்கள் சக அங்கத்தினர் களையும் கட்டுப்படுத்தும் அல்லவா.

      இப்போது உறுப்பினராக இல்லாத போது என்னுடைய கருத்துக்களுக்கு நானே முழுப்பொறுப்பு. முறையாக நானே அறிவித்து விட்டு விவாதித்து இருக்கனும்.இனியும் என் வார்த்தைகள் அந்த குழுவின் உறுப்பினர்கள் யாரையும் கட்டுப்படுத்தாது என தக்க சமயத்தில் அறிவிப்பது தானே முறையானது.

      Delete
    7. நான் இப்பொழுது நடப்பதை பேசுகிறேன் டெக்ஸ்...இப்போது ஆசிரியரை சாடும் முறையாளர் யார் என்பது அவருக்கும் தெரியும்..ஆசிரியருக்கும் தெரியும்..ஏன் உங்களுக்கும் தெரியும்..

      உங்களுக்கு பழைய நினைவு வந்தால் நான் பொறுப்பல்ல..மேலும் நீங்கள் அதற்கு வருத்தமும் தெரிவித்து விட்டீர்கள் .எனவே அதை மறந்து விடுங்கள் :-)

      பழகிய ,நெருங்கிய நண்பர்களை பெயரை குறிப்பிட்டே சாடுவது " சிலருக்கு " மகிழ்ச்சி அளிக்கலாம்.ஆனால் என்னை போன்ற சிலருக்கு அது கைவருவது இல்லை..( மிகவும் மீறினால் ஒழிய ..)

      Delete
    8. விளக்கத்திற்கு நன்றிகள் தலைவரே...!!!

      இப்போது நடப்பது தேவையற்ற ஒன்று... நல்ல கொண்டாடப்பட வேண்டிய படைப்பில் கவனம் செலுத்தாமல் அனைவரையும் சங்கடத்திற்கு ஆளாக்கும் நிலை தவிர்த்து இருக்க வேண்டியது.

      ஒவ்வொரு முறை பெரிய படைப்புக்கள் வரும்போதும் இது வாடிக்கையாக தொடர்வது துர் அதிர்ஷடமானது...

      1.முத்துNBS
      2.Lion LMS
      3.மின்னும் மரணம்
      4.லயன்250
      5.என் பெயர் டைகர்
      6.இரத்த கோட்டை
      7.இரத்தப்படலம்
      .............
      .............
      .............இப்படி பிரம்மாண்டமான வெளியீடுகள் வரும்போதெலாம் ஏன் இப்படி ஆகிறது. ஹூம் "காய்ச்ச மரம் தானே கல்லடி படும்"...

      டெக்ஸ்70 ஸ்பெசல் வரும்போது இப்படி ஏதும் நடக்க கூடாது என கடவுளை வேண்டுவதை தவிர வேறு வழியேயில்லை...!!!

      Delete
    9. /^முன்னாள் சேந்தப்பட்டி குழ உறுப்பினர்.!!!/^

      ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ...........................

      Delete
    10. M.V.sir@ ஹா...ஹா... அழவைத்தே பழக்கமான நான் முதல் முறையாக சிரிக்கவும் வைத்தும் உள்ளேன்....எப்பூடி...!!!

      Delete
    11. டாக்டரே ஆசிரியர் தெளிவா இப 600-400,ஆன கதைய சொன்னா காதுல போட்ட மாதிரியே தெரிலயே...மூளைல இருந்துதான் உதிக்குதா

      Delete
    12. ஸ்டீலு மூளை இருக்கிறதாலத்தான் தம்பி
      டாக்டராக பட்டம் வாங்கினார். ஈரோட்டுக்கு
      வாடி உன் மண்டைக்குள்ள என்ன இருக்குன்னு திறந்து பாக்கிறேன்.

      Delete
  31. ஆசிரியரே நண்பர்களே
    இரத்த உறவுகளே
    இரத்தப்படல உறவுகளே நாம் அனைவரும்
    ஒரே குடும்பம் சண்டையும் சச்சரவும்
    இருந்தாலும் நாம் அனைவரும்
    நண்பர்கள் சொந்தங்கள்.எல்லோரும்
    என் நண்பர்கள் சகோதரர்கள்.
    மீண்டும் ஒற்றுமையாக லயன்- முத்து
    காமிக்ஸ் முன்னெற்றத்திற்கும் நமக்கு
    கிடைக்கப்போகும் உலகதரம் வாய்ந்த
    கதைகளுக்கும் பக்கபலமாக இருப்போம்.
    டெக்ஸ் நலமா?.

    ReplyDelete
    Replies
    1. கணேஷ் சார்@
      உங்கள் எல்லா கருத்துக்களுக்கும் +1சார்....

      நல்ல நலம் சார்...தங்கள் நலத்தை தான் நான் சோதித்து பார்த்துட்டேன்...!!!

      சாப்பாடு உண்ணத்த தொடங்கும் போது மெதுவாக மென்று, விழுங்கனும் என உட்காருவேன். 2வாய் போன உடன் எப்படி ஸ்பீடு ஆச்சி, எப்படி முடிச்சன்னு உணரவே முடியாது...

      அதேபோலவே ஏதாச்சும் விவாதம் ஆரம்பிக்கும் போது யார் மனசையும் நோகடிக்க கூடாதுனு ஆரம்பிப்பேன். ஆனால் எப்ப சூடாச்சி, சில மனங்களை ரணப்படுத்திச்சினு உணராமலே விவாதம் முடியும். என் டிசைன் அப்படி படைக்கப் பட்டேன் போல...இனிமே விவாதம் னா நெட்டை ஆஃப் பண்ணிட்டு போய்விடனும்னு முடிவு பண்ணி இருக்கேன்.

      தவறான புரிதலால் உங்களை சங்கடப்படுத்தியற்கு மீண்டும் ஒரு ஸாரி சார்.

      Delete
  32. இதனாலேயே பல நல்ல கதைகள் க்ரீன் மேனர், சில க்ராபிக் நாவல்கள் எல்லாம் நார் நாராய்க் கிழிக்கப்பட்டன. யுத்தத்தின் பின்னணியில் பிறந்து, அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்குத்தான் அதன் நிஜங்கள் புரியும். ஜேர்மன் சுவர் உடைக்கப்பட்டதன் கணங்களைப் படித்தபோது இதயம் சில கணங்கள் இயங்க மறுத்தது. கப்பலில் அடைக்கப்பட்டவர்கள் கப்பலோடு தப்பும்போது நானே நிஜத்தில் குதித்தேன்... கதைகள் புரியாதவர்கள், மெதுவான கதைகளை ரசிக்காதவர்கள், டெக்ஸ் இன் வித்தியாசக் கதைகளை இரசிக்க முடியாதவர்கள் அதை எதிர்மறையாக விமர்சிப்பதைப் பார்க்கும்போது சிரிப்புத்தான் வரும். டுமீல் டமீல் கும் கும்மா என்று சத்தங்களை பார்த்து எமக்கு சிரிப்பு வந்தாலும் அதனை ரசிப்போருக்கு மரியாதை கொடுத்து விமர்சனம் என்ற பெயரில் நாறடிப்பதில்லை. ஆனால்......

    #####

    உண்மைதான் பொடியன் சார்..இதை லேட்டாக புரிந்து கொண்டதால் தான் இந்த முறை கிராபிக் நாவல் என்னால் படிக்க முடியாவிட்டாலும் அதனை பற்றி இங்கே பகிரவில்லை..

    ReplyDelete
    Replies
    1. Dear Podiyan & Paranitharan, அப்ப விமர்சனம் பண்ணக்கூடாது பண்ணினாலும் நல்லாதான் பண்ணனும் & நல்லா மட்டும்தான் பண்ணனும்ன்னு சொல்லுறீங்களா? என்னை பொறுத்தவரை இதற்க்கு பெயர் விமர்சனம் கிடையாது. இதற்கு என்ன பெயர் என்று உங்களுக்கே தெரியும்.

      NOTE: நான் இதுவரை விமர்சனம் செய்தது கிடையாது.

      (This information is not related to our comics, but anyhow for your kind information, 'உளியின் ஓசை' என்ற தமிழ் திரைப்படம் கலைஞர் டிவியில் மட்டும் 'முதல் இடத்தில்' இருந்தது. இதை தான் நல்ல விமர்சனம் என்கிறீர்களா? )

      Delete
    2. //Dear Podiyan & Paranitharan, அப்ப விமர்சனம் பண்ணக்கூடாது பண்ணினாலும் நல்லாதான் பண்ணனும் & நல்லா மட்டும்தான் பண்ணனும்ன்னு சொல்லுறீங்களா? என்னை பொறுத்தவரை இதற்க்கு பெயர் விமர்சனம் கிடையாது. இதற்கு என்ன பெயர் என்று உங்களுக்கே தெரியும்.

      NOTE: நான் இதுவரை விமர்சனம் செய்தது கிடையாது.

      (This information is not related to our comics, but anyhow for your kind information, 'உளியின் ஓசை' என்ற தமிழ் திரைப்படம் கலைஞர் டிவியில் மட்டும் 'முதல் இடத்தில்' இருந்தது. இதை தான் நல்ல விமர்சனம் என்கிறீர்களா? ) //

      +1

      Delete
  33. இங்கு ஏதோ விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்திருப்பதாய் தோன்றுகிறது. Some times, ignorance is bliss!

    இது ரத்தபூமி என்பது தெரிந்ததுதானே! நான் ஸேஃபாக அப்படி ஓரமாக ஊரைச் சுற்றிக்கொண்டு போய்விடுகிறேன்! :-)

    ReplyDelete
    Replies
    1. எனக்கு அப்படியே ரெண்டு சிவகாசி புரோட்டா பார்சல் சொல்லிட்டு போயிருங்க ஆதிதாமிரா சார்.:-)

      Delete
    2. எளசா ஒரு ஆம்லெட்டும் சேத்து வைக்கச் சொல்லியுருக்கேன் தலீவரே! :-)

      Delete
    3. @ஆதி

      ///இது ரத்தபூமி என்பது தெரிந்ததுதானே! நான் ஸேஃபாக அப்படி ஓரமாக ஊரைச் சுற்றிக்கொண்டு போய்விடுகிறேன்! ///

      அட, ச்சும்மா வாங்க பாஸ்! நாம வாங்காத அடியா?!!

      இப்படீக்கா ஊருக்குள்ள வந்துட்டுப்போனீங்கன்னா சூடான ரத்தப் பொரியல் (மாயாவிசிவா இங்கே கம்பு கழற்றியபோது உடைந்த சில்லு மூக்குகளிலிலிருந்து சுடச்சுட தயாரித்தது) மற்றும் காலர் மட்டும் கிழிந்த கட்டம்போட்ட சட்டை ( எடிட்டரோடதுதான்! பின்னே,பிடிச்சு அந்த உலுக்கு உலுக்கினா?!!) இதெல்லாம் பரிசாத் தருவோம்!

      அடிமேல அடியெடுத்து வச்சு வாங்க... கம்பு காற்றிலே சுழல்ற சத்தம் தூரத்துல கேட்டுச்சுன்னாக்கூட அப்படியே ஓடிப்போயிடுங்க! :D

      Delete
    4. ஆம்லெட்ல வெங்காயம் அதிகமா போட சொல்லுங்க...

      எனக்கு "கண்ணு " எரியனும்..:-))

      Delete
    5. ///இது ரத்தபூமி என்பது தெரிந்ததுதானே! நான் ஸேஃபாக அப்படி ஓரமாக ஊரைச் சுற்றிக்கொண்டு போய்விடுகிறேன்! :-)///

      அடி கொடுத்த கைப்புள்ளைக்கே இம்புட்டு அடின்னா ரக வெத்து பில்டப்புகள் மட்டுமே ஆதி ..!

      நீங்க வாங்க .. நம்ம பூமி எப்பவுமே நமக்குண்டு ..!

      Delete
    6. அடடே.! ரொம்ப நாளைக்கு பிறகு நம்ம தளம் சூப்பரா இருக்கு.!!

      லக்கி லூக் கதையில் வரும் சலூன் சண்டை மாதிரி சூப்பரா இருக்கு.! சலூன் ஓனர்தான்(எடிட்டர்) என்ன நினைப்பாரோ என்று வருத்தமா இருக்கு.!!!

      Delete
    7. @ஈவி,

      யோவ்.. ரத்தப்பொரியல்! :-))

      @கிட்,

      சும்மா இருக்கொசொல்லோ வந்து உதை வாங்கலாம். கொஞ்சம் மிசியா இருக்கசொல்லோ ஊரை சுத்திகினு ஓடிர்றதுதான் நல்லது. :-))

      @மா.ஆர்மி,

      சண்டைகளினால் நமக்கு ஜாலி, ஆனால்ச லூன் ஓனர்களுக்கு எப்பவும் நட்டம்தான். வேறென்ன? :-)))

      Delete
  34. I believe communication gap is the main issue here and the reason for not providing pulan visaranai could have made it clear in the finalization post. So, no one can question or could have had all these discussions/arguments that time itself. Hope it will be sorted out in future.
    There was a sneak previews announcement for WWF early bird and don't think it happened.
    //
    - முன்பதிவுக்கு முந்திடும் முதல் 100 வாசகர்களுக்கு “EARLY BIRD” என்றதொரு அழகான கலர் பேட்ஜ் தந்திடவுள்ளோம் ! ஈரோடு புத்தக விழாவிற்கு ஆஜராகும் வேளையில் அதை பந்தாவாகக் கழுத்தில் மாட்டிக் கொண்டு வரலாமே ?! (ஈரோட்டுக்கு டிக்கெட்- யோசனை # 2) !! Earlybird வாசகர்களுக்கு நமது முக்கிய இதழ்கள் தொடர்பான அறிவிப்புகள் ; sneak previews - கொஞ்சம் முன்கூட்டியே தரப்படும் !
    //
    http://lion-muthucomics.blogspot.in/2017/03/blog-post_10.html

    ReplyDelete
  35. ஒரு தாவோ கதை. டெரெக் லின் என்ற தாவோ அறிஞர் சொன்னது...
    ஒரு சக்கரவர்த்தி தன் அன்றாட வேலைகளைச் செய்வதில் முழு கவனத்தோடு ஈடுபட முடியாமல் தவித்தார். உள்நாட்டுப் பிரச்சினைகள், வெளிநாடுகள் மூலம் பிரச்சினைகள், நிர்வாகப் பிரச்சினைகள், குடும்பப் பிரச்சினைகள், அவ்வப்போது முடிக்க வேண்டியிருந்த அவசர வேலைகள் என பல விஷயங்களை அவர் கவனிக்க வேண்டி இருந்த்து. முழு கவனத்தோடு எல்லா அம்சங்களையும் ஆராய்ந்து ஒவ்வொரு பிரச்சினையையும் அணுகி தீர்க்க வேண்டி இருந்தது. அதற்கு மன அமைதி முக்கியத் தேவையாக இருந்தது. மன அமைதி இல்லாத போது எதிலும் முழுக் கவனம் செலுத்துவது முடியாத காரியமாக இருந்தது.
    இந்த சிக்கலை எப்படித் தீர்ப்பது என்று ஆலோசித்தவர் தன் மந்திரியை அழைத்துச் சொன்னார். “தினசரி நாலா பக்கங்களில் இருந்தும் நான் கவனிக்க வேண்டிய வேலைகளும், பிரச்சினைகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த நேரங்களில் அவற்றைச் சரியாகக் கையாளத் தேவையான அமைதி இல்லாமல் தவிக்கிறேன். அதனால் அந்த நேரத்தில் பார்த்தவுடன் அமைதி கிடைக்கும் ஏதாவது ஓவியம் என் முன் இருந்தால் அதைப் பார்த்து நான் என் அமைதியை மீட்டுக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். நம் நாட்டில் உள்ள ஓவியர்களில் சிறந்த ஓவியரைத் தேர்ந்தெடுத்து “உண்மையான அமைதி ” என்ற தலைப்பில் எனக்காக ஒரு ஓவியம் வரையச் சொல்லுங்கள். ”
    மந்திரி நாட்டில் உள்ள தலை சிறந்த ஓவியர்களைப் பற்றி விசாரித்தார். மூன்று ஓவியர்களைத் தேர்ந்தெடுத்தார். மூவரும் மிக நல்ல ஓவியர்கள் எனப் பேரெடுத்தவர்கள். அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது கடினமாக இருந்தது. அரசரிடம் அதைச் சொல்ல அரசர் மூவரிடமும் ஓவியம் வரையச் சொல்லலாம் என்றும் அந்த மூன்று ஓவியங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்றும் சொன்னார்.
    மூன்று ஒவியர்களும் அரண்மனைக்கு வரவழைக்கப் பட்டார்கள். அரசரின் தேவை அவர்களுக்குச் சொல்லப்பட்டது. மூவரும் அரண்மனையில் இருந்தபடியே ‘உண்மையான அமைதி ’ என்ற தலைப்பில் ஓவியம் வரைய ஆரம்பித்தனர். அவர்கள் வரைந்து முடித்த பின் அரசரும் மந்திரியும் ஓவியங்களைப் பார்வையிட வந்தனர்.
    முதல் ஓவியம் மலைகள் சூழ இருந்த அமைதியான பெரிய குளத்தினுடையதாக இருந்தது. மிக அமைதியான ஒரு சூழ்நிலையை அந்த ஓவியம் வெளிப்படுத்தியது.
    இரண்டாவது ஓவியம் பனி மழை பெய்து முடிந்த பின் அமைதியாக இருந்த பனி மலையினுடையதாக இருந்த்து. சத்தங்களும் உறைந்து போனது போன்ற பேரமைதியான ஒரு சூழ்நிலையை அந்த ஓவியம் சித்தரித்தது.
    மூன்றாவது ஓவியம் ஒரு பெரிய நீர்வீழ்ச்சியுடையதாக இருந்தது. அதைக் கண்டதும் மந்திரி சொன்னார். “நாம் சொன்னதை இந்த ஓவியர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை போல இருக்கிறது. இதை விட்டு விட்டு முதல் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்”
    “ஒரு நிமிடம் பொறுங்கள்” என்ற சக்கரவர்த்தி அந்த ஓவியத்தை சிறிது ஆராய்ந்து விட்டு ’ இந்த ஓவியம் தான் நான் எதிர்பார்த்தது ” என்று சொல்ல மந்திரிக்கு குழப்பமாக இருந்தது. “சக்கரவர்த்தியே இதில் அமைதி எங்கே இருக்கிறது. தடதடவென்று சத்தத்துடன் விழுந்து கொண்டிருக்கும் நீர்வீழ்ச்சி அமைதிக்கு எதிராக அல்லவா தோன்றுகிறது” என்று தன் அபிப்பிராயத்தைச் சொன்னார்.
    சக்கரவர்த்தி சொன்னார். “இந்த ஓவியத்தில் நீர்வீழ்ச்சி பிரதானம் அல்ல. நன்றாகப் பாருங்கள்”
    மந்திரி நிதானமாக அந்த ஓவியத்தை ஆராய்ந்தார். அந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஒரு மரம் இருந்தது. அந்த மரத்தின் ஒரு கிளையில் இருந்த கூட்டில் ஒரு பறவை அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது.
    சக்கரவர்த்தி சொன்னார். ” பக்கத்தில் அத்தனை இரைச்சல் இருந்தாலும் அதனால் பாதிக்கப்படாமல் உறங்கிக் கொண்டிருக்கும் அந்த பறவையிடம் உண்மையான அமைதி இருக்கிறது. இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்”
    அந்த ஓவியமே அரசர் பார்வையில் இருக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    ReplyDelete
  36. நமது தளத்தின் சமீபகால நிகழ்வுகள் மனதுக்கு சங்கடத்தை ஏற்படுத்திவருகின்றன.இது அடிக்கடி நடக்கும் நிகழ்வுதான் என்றாலும் ஒரு மெகா கனவு நனவாகும் தருணத்தில் அந்த கனவை நிஜத்தில் நடத்திக்காட்ட ஆயத்தமாகிவரும் நம் எடிட்டருக்கு நம்மால் சங்கடம் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்வது நம் அனைவரின் கடமையல்லவா? கருத்து மோதலை தவிர்த்து வழக்கம் போல் தளத்தை கொண்டு செல்லலாமே.Please.....
    என்னை ஜால்ரா பாய்ஸ் லிஸ்டில் சேர்த்தால் எனக்கு மகிழ்ச்சியே.
    ஏனெனில் கடந்த நவம்பர் 15 ல் 57 வயதை கடந்த எனக்கும் பாய்ஸ் லிஸ்டில் இடம் கிடைத்தால் அதனை மிஞ்சிய ஆனந்தம் வேறென்ன இருக்க முடியும்!!!
    நானும் ரௌடிதான் என்ற வடிவேலுவின் கோஷத்தை போல நானும் பையன் தான் என்று கோஷம் போட்டு ஆனந்தமடைவேன்.

    ReplyDelete
    Replies
    1. ஏடிஆர் சார் நீங்கள் எல்லாம் ஜால்ராபாய்ஸ் ன் மூத்த உறுப்பினர் சார்...:-))

      Delete
  37. விஜயன் சார், சில வருடங்களுக்கு முன் இது போன்ற ஒரு நிகழ்வில், இந்த தளத்தை வெறும் அறிவிப்பு செய்யும் தளமாக மாற்ற (Dashboard) பேசியதாக ஞாபகம். அதனை இப்போதாவது செயல்படுத்தலாமே! ப்ளீஸ்!

    ReplyDelete
    Replies
    1. //விஜயன் சார், சில வருடங்களுக்கு முன் இது போன்ற ஒரு நிகழ்வில், இந்த தளத்தை வெறும் அறிவிப்பு செய்யும் தளமாக மாற்ற (Dashboard) பேசியதாக ஞாபகம். அதனை இப்போதாவது செயல்படுத்தலாமே! ப்ளீஸ்! //

      ஏன் பரணி ஸார், எதிர் விமர்சனம் என்றால் அவ்வளவு பயமா? எல்லா வாசகர்களும் ஒன்று போல் விசிலடிக்கத்தான் முடியுமா?

      Delete
    2. வேண்டாம் பரணி சார்...எதற்கோ பயந்து எரிப்பது வேண்டாமே என்பது எனது எண்ணம்..

      Delete
    3. ///இந்த தளத்தை வெறும் அறிவிப்பு செய்யும் தளமாக மாற்ற (Dashboard) பேசியதாக ஞாபகம். அதனை இப்போதாவது செயல்படுத்தலாமே! ப்ளீஸ் ///

      தேவையில்லை பரணி ..!
      அந்தளவுக்கு இங்கே எதுவும் பெரிதாக நடந்துவிடவில்லை ..!
      பிப்ரவரி இதழ்களுக்கான எதிர்பார்ப்புகளைப் பற்றி பேசுங்களேன்.!

      Delete
    4. இங்க தளத்தை இழுத்து மூடிடலாம் பரணி. whatsapp குரூப்ல மாயாவி பரப்பும் பேக் நியூஸ்களை என்ன பண்ணுவீங்க?

      Delete
    5. பரணி தயவு செய்து இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்களேன்.

      Delete
    6. // அந்தளவுக்கு இங்கே எதுவும் பெரிதாக நடந்துவிடவில்லை ..! //

      ஒவ்வொரு முறையும் இப்படி நினைத்துத்தான் கடந்து செல்கிறேன்! இந்த முறை இவைகளை கடந்து செல்ல முடியவில்லை!

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. எனது எண்ணத்தை மாற்றிகொள்கிறேன் நண்பர்களே!!

      Delete
  38. //அதனை இப்போதாவது செயல்படுத்தலாமே! ப்ளீஸ்!//

    -111
    பரணி உங்களின் கருத்து தவறானது என்பது என் எண்ணம்

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் விருப்பமில்லை தான் அப்படி எழுத. ஆனால் கேள்விக்கு பதில் கிடைக்கிறது என்று வரமுறை இல்லாமல் கேட்பது மனதை கஷ்டபடுத்துகிறது.

      வேறு எந்த எடிட்டர் உடன் உரையாட கிடைக்காத ஒரு வரத்தை தவறாக பயன்படுத்துவது... இத்துடன் முடித்துக் கொள்கிறேன் ஜி.

      Delete
    2. //எனக்கும் விருப்பமில்லை தான் அப்படி எழுத. ஆனால் கேள்விக்கு பதில் கிடைக்கிறது என்று வரமுறை இல்லாமல் கேட்பது மனதை கஷ்டபடுத்துகிறது.

      வேறு எந்த எடிட்டர் உடன் உரையாட கிடைக்காத ஒரு வரத்தை தவறாக பயன்படுத்துவது..//
      +1

      Delete
  39. வணக்கம் அன்பு நண்பர்களே!
    அத்தனை பின்னூட்டங்களையும் படித்து முடித்து விட்டதும் தோன்றிய உணர்வுகளை வெளிப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.
    கடந்த இரண்டு ஆண்டுகளில் பத்து பின்னூட்டங்களுக்கும் குறைவாகவும் பதிவிட்டிருப்பேன். எனினும் ஆசிரியரின் பதிவுகளுக்கும், அன்பு நட்புகளின் பின்னூட்டங்களுக்கும் நான் மிகப்பெரும் இரசிகன்.
    சென்னையில் வசிக்கும் நான் சில மணித்துளிகள் செலவிட்டு புத்தகக் கண்காட்சி செல்லவில்லை ஆனால் நாட்கணக்கிள் நமது காமிக்ஸ் வாசகர் வட்டம் பெருக வேண்டி அயராது உழைத்தோர் அன்பு ஆகட்டும்;
    அன்பு பெருக்கத்தில், அனாமதேயமாக சந்தா அளித்தோர் உள்ளங்களாகட்டும்;
    அக்கம் பக்கம் உள்ளோர், அறிந்தவர் தெரிந்தவர்களுக்கு காமிக்ஸை அறிமுகம் செய்திடும் இதயங்களாகட்டும்;
    தனக்கு பிறகான காமிக்ஸ் வாசகர் வட்டம் பெருக வேண்டி தன் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த முயலும் நண்பர்கள் உட்பட நம் அனைவரின் உள்ளக்கிடக்கையும் ஒன்றே. நம் காமிக்ஸ் நம் வாழ்வு முழுமையும் நம்மோடு சேர்ந்து பயணம் செய்வதே ஆகும்.
    என் வரையில், இது வெகுஜன பயணமன்றி வெகுசிலஜன பயணம். இங்கு நாம் அனைவருமே,ஓட்டுனர்(ஆசிரியர்) உட்பட, பயணம் செல்வது ஒன்றே இலக்கு. பயணப் பாதையில் நாம் எதிர்கொள்ளும் அனைத்தும் அனைவரின் விருப்பமாய் ஒரு பொழுதும் அமைந்திட போவதில்லை.
    சிலருக்கு டெக்ஸாஸ், சிலருக்கு வைக்கிங் பிரதேசம், சிலருக்கு ஸ்பைடர் நகர்,சிலருக்கோ மாடஸ்டி மாநகர் 😍. நம் ஓட்டுனர் இரண்டு தலைமுறையாக இந்த ஒரே வண்டியை ஓட்டி வருவதோடு மூன்றாவது தலைமுறையையும் தயார் செய்துள்ளார்.
    சில சமயங்களில் அவர் பயண வழியில் வாங்கித்தருவதாக சொன்ன குச்சி மிட்டாய்கள் தர இயலாது போயிருக்கலாம்.
    பின்னர் குருவி ரொட்டி வாங்கித்தர பிரியப்படலாம். நம்மிடையே சுணக்கம் வேண்டாம் காமிக்ஸ் காதலில்.
    என் அப்பாவிடம் கோபப்பட்டு நான் பேசாது இரண்டு நாட்கள் இருக்கையில் என் தாத்தா என்னிடம் ஒருமுறை கூறியது " ஏண்டா, நீ கேட்டதும் வாங்கித்தரலீனு உங்கப்பனோட பேசாம இருக்கியே, உனக்கு கஷ்டமா இருக்குன்னு அழறியே, நீ ஆசைப்பட்டு கேட்டும் வாங்கி கொடுக்க முடியாம அவன் எவ்வளவு கஷ்டப்படுவான்?" அன்றிலிருந்து நான் என் பார்வையில் மட்டுமின்றி என் தந்தையின் பார்வையிலிருந்தும் பார்க்க பழகினேன்.
    நம் ஆசிரியரின் காமிக்ஸ் காதல் மீது நம்பிக்கை வைத்து என்றும் அன்புடன் பயணிப்போம். Love you all guys.

    ReplyDelete
    Replies
    1. @ Navaneetha krishnan

      ////என் அப்பாவிடம் கோபப்பட்டு நான் பேசாது இரண்டு நாட்கள் இருக்கையில் என் தாத்தா என்னிடம் ஒருமுறை கூறியது " ஏண்டா, நீ கேட்டதும் வாங்கித்தரலீனு உங்கப்பனோட பேசாம இருக்கியே, உனக்கு கஷ்டமா இருக்குன்னு அழறியே, நீ ஆசைப்பட்டு கேட்டும் வாங்கி கொடுக்க முடியாம அவன் எவ்வளவு கஷ்டப்படுவான்?" அன்றிலிருந்து நான் என் பார்வையில் மட்டுமின்றி என் தந்தையின் பார்வையிலிருந்தும் பார்க்க பழகினேன்.
      நம் ஆசிரியரின் காமிக்ஸ் காதல் மீது நம்பிக்கை வைத்து என்றும் அன்புடன் பயணிப்போம். Love you all guys.///

      அழகு அழகு!! இங்கே நிலவும் சூழ்நிலைக்கு இதைவிடவும் அழகான வார்த்தைகளால் நிரப்பிவிடமுடியாது நண்பரே!

      உங்கள் எண்ணம் வாழ்க!

      Delete
    2. ஆயிரம் முறை கை தட்டுகிறேன் சார்...மிக மிக தெளிவான பார்வை...

      Delete
    3. /// " ஏண்டா, நீ கேட்டதும் வாங்கித்தரலீனு உங்கப்பனோட பேசாம இருக்கியே, உனக்கு கஷ்டமா இருக்குன்னு அழறியே, நீ ஆசைப்பட்டு கேட்டும் வாங்கி கொடுக்க முடியாம அவன் எவ்வளவு கஷ்டப்படுவான்?" அன்றிலிருந்து நான் என் பார்வையில் மட்டுமின்றி என் தந்தையின் பார்வையிலிருந்தும் பார்க்க பழகினேன்.
      நம் ஆசிரியரின் காமிக்ஸ் காதல் மீது நம்பிக்கை வைத்து என்றும் அன்புடன் பயணிப்போம். Love you all guys.///

      செம்ம ... Love u too sir!

      Delete
    4. நவநீதன் @ அருமையாக சொன்னீர்கள்.

      Delete
    5. அதேதான் எனது எண்ணமும்...

      அருமை அருமை @ நவநீதன்

      Delete
    6. எல்லாம் உங்கள் பின்னூட்டங்களை படித்து படித்து வந்ததே அன்றி வேறொன்றும் இல்லை நண்பர்களே 🙆‍♂️

      Delete
    7. WOW ! அருமையான கருத்து Mr Navaneetha Krishnan!

      Delete
    8. அருமையான கருத்து

      Delete
    9. @Navaneetha Krishnan

      ==என் அப்பாவிடம் கோபப்பட்டு நான் பேசாது இரண்டு நாட்கள் இருக்கையில் என் தாத்தா என்னிடம் ஒருமுறை கூறியது " ஏண்டா, நீ கேட்டதும் வாங்கித்தரலீனு உங்கப்பனோட பேசாம இருக்கியே, உனக்கு கஷ்டமா இருக்குன்னு அழறியே, நீ ஆசைப்பட்டு கேட்டும் வாங்கி கொடுக்க முடியாம அவன் எவ்வளவு கஷ்டப்படுவான்?"==

      கடைசி வரியைப் படித்த போது கண்களில் கண்ணீர்! என் அப்பாவை நினைத்தேன்.

      நமது அன்பு ஆசிரியரின் நிலைமையை அழகாக புரிய வைத்துள்ளீர்கள்!

      Delete
    10. எல்லாம் ரைட்டு இந்த மாடஸ்டி மாநகா்க்கு மட்டும் 😘😘😘😍😍😍 போட்டிருகீங்களே ஏன்னேன்??

      இந்த ரணகளத்திலயும் ஒரு கிலுகிலுப்பு!!

      😂😂😂😂😂😂

      Delete
    11. ஊழலும் கூடலுமாய் ஊடாடி கிடப்பதே இன்பம்...
      என்ன இருந்தாலும் என் கனவுகளில் கண்ணி வைத்த கன்னி 😘

      Delete
  40. இறுதியாக ஒன்றை மட்டும் சொல்லி கொள்கிறேன் ...


    எனது மகனுக்கு மாதாமாதம் ஒரு நண்பர் மூலம் ஓர் அழகான பரிசு வந்தடைகிறது.அதுவும் ஓர் ஆக்கபூர்வமான பரிசு ..புத்தகங்கள் என்றாலே ஆக்கபூர்வமானது தானே.அப்படி வந்தால் ஒரு தந்தையாக என்ன நினைப்பேன் தெரியுமா நண்பர்களே..நினைப்பது என்ன எனது மகனிடமே என்ன கூறுவேன் தெரியுமா நண்பர்களே...


    " இந்த வயதில் உனக்காக இப்படி மாதாமாதம் புத்தகம் அளிக்கும் நண்பரின் அன்பை பாரட்டுகிறேன் மகனே...அதை விட இந்த அன்பிற்கு நீ இந்த வயதிலியே அவர்களுக்கு பிரியமானவனாக பாத்திரபட்டுள்ளாயே உன்னை நினைத்து பெருமை படுகறேன்.நீயும் இதே போல் படித்து உயர்ந்து பெரியவனாகும் சமயம் நீயும் இதே போல மற்றவர்களுக்கு பரிசளித்து உதவி செய்யும் பாங்கை வளர்த்து கொள்ள வேண்டும் தெரிகிறதா என பாராட்டுவேனே தவிர மாற்றி யோசிக்க மாட்டேன்.


    வருத்ததுடன் ஒரு வேண்டுகோள்..


    பழகிய ..தெரிந்த நண்பர்களை வயதில் பக்குவம் அடைந்த ,பதிலுக்கு சீண்டும் நண்பர்களை கூட எவ்வளவு வேண்டுமானாலும் வருத்தப்பட வையுங்கள் நண்பர்களே..

    தயவு செய்து அறியாசிறுவனை இதில் இழுத்து அவனையும் ,அந்த சிறுவனுக்கு (ஆவது) பரிசளித்த அந்த அன்புள்ளத்தையும் கேவலபடுத்தாதீர்கள்.ச்சீ என்கிறது...


    ReplyDelete
  41. தலைவரே...அவருக்ககு என்ன தெரியுமோ அதைதான் செய்யமுடியும் ....அவருடைய எண்ணம் எல்லாம் புலன் விசாரணை புத்தகம் வேண்டும் என்பதல்ல. .முடிந்தவரை அவருக்கு பிடிக்காதவர்களை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதே அவருடை நோக்கம்....அவருடைய அந்த மாதிரியான பதிவை எல்லாம் ஒரு பைசாவுக்கு கொடுக்கும் மரியாதைக்கூட தராமல் கடந்து சென்றாலே போதும்...அப்பறம் காற்றில் கம்பு சுத்தி...சுத்தி தானா கை வலித்தவுடண் காணாமல் போயிவிடவார்..நீங்க எவ்வளவு பொறுமையாக பதில் சொன்னாலும் அது வேஸ்ட் தான் தல.....அதனால நாம நம்ம வேலையை பார்ப்போம் .....

    ReplyDelete