Saturday, December 09, 2017

ஒரு பின்பார்க்கும் படலம் !

நண்பர்களே,

வணக்கம். சவ்வு மிட்டாய் கலரிலான அந்த கோட் ரெடி; காதில் தொங்கட்டான்களும் ; நெற்றியில் பொட்டும் கூட ரெடி! 'நாய் ஷேகர்' ஒரு வாகான பொசிஷனில் 'டர்ன்' பண்ணி நின்றால் போதும் - பின்னோக்கிய பயணத்தைத் தொடங்கிடலாம்! Oh yes - இது ஆண்டின் "அந்த நேரம்" ! (கிட்டத்தட்ட) ஒரு வருஷத்தின் மொத்த இதழ்களையும் முடித்த ஆயாசத்தோடு சோம்பல் முறித்தபடிக்கே சகலத்தையும் மனதில் அசை போடும் தருணமிது ! And உங்கள் வருகையும், பங்களிப்பும் எப்போதையும் விட இப்போதே ரொம்பவும் அவசியமென்பேன் - simply to tell  us இந்தாண்டின் பயணத்தில் நீங்கள் ரசித்தவை எவையோ ? முகம் சுளிக்கச் செய்த குண்டும் குழிகளும் எவையோ ? என்று ! நம் முதுகில் வருடித் தருவதற்கோ ; மத்தளம் வாசிப்பதற்கோ இந்த நொடியில் நேரம் எடுத்துக் கொள்வதை விடவும் கடந்துள்ள நடப்பாண்டின் கதைத் தேர்வுகள் பற்றியும்; இந்த ஒட்டுமொத்த வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களின் ஆழ்மனதின் குரல்தனை உரக்க ஒலிக்கச் செய்வதற்குப் பிரயாசை எடுத்தீர்களெனில் - காத்திருக்கும் திட்டமிடல்களுக்கு ஏக உதவியை இருக்குமல்லவா? So 'மௌனமே எங்கள் ஆதர்ஷ மொழி!' என்று கோட்டுக்கு 'அந்தாண்டை' நிற்கும் நண்பர்களுமே இந்த முக்கிய தருணத்திற்காவது தத்தம் மௌனவிரதங்களைக் கலைக்க முனைந்தால் செமையாக இருக்கும் !
          
ரயில் பயணத்தின் ஜன்னலோர சீட்களில் அமர்ந்தபடிக்கே, பனைமரங்களும், மின்விளக்குகளும் தூரத்தில் ஈர்க்குச்சிகள் போலத்தெரிவதையும், கிட்டே நெருங்க, நெருங்க அவற்றின் நிஜ உசரங்கள் புலப்படுவதையும், தாண்டிச் செல்லச் செல்ல, மறுபடியுமே குண்டூசிகளைப் போல உருமாறித் தெரிவதை ரசிக்காதோர் யாருமிருக்க முடியாது தானே ? கதைத் தேர்வுகள் சார்ந்த பணிகளுமே - "ரயிலின் ஜன்னல் சீட்" அனுபவத்தைப் போன்றதே என்பேன் ! புரட்டோ புரட்டென்று கதைகளைப் புரட்டி ஒவ்வொன்றையும் முடிந்த மட்டிற்குக் கண்ணில் விளக்கெண்ணையை விட்டுக் கொண்டு பரிசீலனை செய்ய ஆரம்பிக்கும் போது அவை தூரத்து ஈர்க்குச்சிகளைப் போலத் தோன்றுவது வாடிக்கை ! அவற்றோடு ஒன்றத் துவங்கி, அவற்றில் பணியாற்றத் தொடங்கும் போது - அண்மை தரும் வசதியில் அவை ஒவ்வொன்றுமே   விஸ்வரூபமெடுத்திருப்பது போலத் தோன்றும் ! And அவை இதழ்களாக உருமாறி, உங்களை எட்டிப் பிடித்து, அலசல்கள், ஆராய்வுகளுக்கு உள்ளாகி, சிறுகச் சிறுக நினைவுகளாய் மாத்திரமே தொடரக்கூடிய சமயங்களில் once again குண்டூசிகள் போலவே தெரிய ஆரம்பிக்கும்! நான் செல்லும் ரயிலின் வேகமும், முட்டைக்கண்களை இமைக்காது நான் பார்த்திடும் லாவகமும், எனக்கு அமைந்திடும் பார்வைக்கோணங்களுமே காட்சிகளுக்கு மெருகு சேர்ப்பவை ! அதே சமயம், ரயிலுக்குள் இல்லாது-பனைகளருகே நின்று நிதானப் பார்வை பார்த்திடும் உங்களுக்குத் துல்லியமாய்த் தெரிந்திடக்கூடும்-'நெட்டை எது? குட்டை எது?' என்று! So இந்த அலசலை - இணைந்து செய்வதை ஒரு வருடாந்திர exercise ஆக ஏற்படுத்திக் கொள்ளும் ஆசை எனக்குள் !

எங்கே ஆரம்பிக்க? எதை மையப்படுத்திட ? எதை சுருக்கமாய்த் தொட்டுச் செல்ல ? என்று சுத்தமாய்த் தெரியவில்லை ! கல்யாண வீட்டு வாசலில் நின்று கொண்டு மையமாய் விருந்தினர்களை நமஸ்கரிக்கும் போது தலை ஒரு மார்க்கமாய் blank ஆகிடுவதுண்டு ! அதைப் போலவே இந்த நொடியும்!

2017-ன் highlights-களிலிருந்து ஆரம்பிப்பதே முறையாக இருக்குமென்று தோன்றுவதால் கோலத்தின் முதல் புள்ளியாக அவையே இருந்து விட்டுப் போகட்டுமே ? தனிப்பட்ட முறையில், கதைத்தேர்வில் ; தயாரிப்பில் ; விற்பனையில் கிட்டிய அனுபவங்கள் சார்ந்த எனது பார்வைகளாக மாத்திரமே தொடரும் வரிகளைப் பார்த்திடுங்களேன் - please ?!

'A job well begun is half done' என்ற சமாச்சாரம் நம்மைப் பொறுத்தவரையிலும் நூற்றுக்கு நூறு சரி தான் என்பேன்! வருஷத்தை சென்னைப் புத்தகவிழா துவக்கித் தருகிறதெனில் 2017-ன் நமது opening salvo-க்களை முழக்கியது (நமக்கொரு) புதுமுகமே! ட்யுராங்கோ என்ற பெயர் 2017 வரையிலும் நம்மில் பெரும்பான்மைக்குப் பரிச்சயமற்றதொன்று தான் ; ஆனால் ஜனவரியில் சத்தமின்றி யுத்தம் செய்த இந்த மனுஷன், கெளபாய் ரசிகர்களின் ஒரு ஆதர்ஷ நாயகனாகிப் போனது - ஆண்டுக்கொரு அழகான துவக்கம் தந்த விஷயம் என்பேன் ! ட்யுராங்கோ கதைகளில் நிச்சயமாய் டைகரின் ஆழமோ; வில்லரின் பன்ச்சோ கிடையாதென்றாலுமே -அந்த ஹாலிவுட் திரைப்பட பாணியிலான கதை நகர்த்தலுக்குக் கைதட்டினோம் நாமெல்லாமே ! இந்த மனுஷன் நம் மத்தியில் அறிமுகமானது நடப்பாண்டில் தான் என்றாலுமே-நான் இவர்  பின்னே சாமரம் வீசி நின்று வந்தது 2014 முதலே ! 'சோலேல்' என்ற நிறுவனத்தின் படைப்பான இதன் உரிமைகளைப் பெற்றிடுவதில் குட்டிக்கர்ணம் பல அடித்தும் பெரிதாய் முன்னேற்றம் இருக்கவேயில்லை! என் கையில் இந்தத் தொடரின் பின்பாதியின் ஆல்பங்கள் சேர்ந்ததொரு தொகுப்பு இருந்தது ; and அதனில் artwork; கதை பாணி; கலரிங் என்று சகலமும் நாமிப்போது பார்த்துப் பழகியிருக்கும் பாணிகளை விடவும் பற்பல படிகள் தூக்கலாய் இருந்தன! So நாலு மாதத்திற்கொரு தபா அதனைப் புரட்டுவது ; அந்தப் பக்கங்களின் ஜாலங்களைக் கண்டு ஜொள்ளிடுவது ; சோலேலுக்கு பஞ்சப்பாட்டுப் பாடி ஒரு மின்னஞ்சல் தட்டி விடுவது ; அவர்களிடமிருந்து அனுசரணையான பதிலில்லாது போவது ; 'ஐயையே... இந்த ஹீரோ முழியே சரி இல்லியே...ஊஹூம்...சும்மா டூஷூம்.. டிஷூம் ன்னு சுட்டுக்கிட்டுத் திரியுறானே !! ?' என்ற வேதாந்தம் பேசுவதெல்லாமே சலிக்காததொரு மாமூலாகிப் போயிருந்தது எனக்கு ! ஆனால் நமது அதிர்ஷ்டம் - இந்த நிறுவனமும், நமக்கு ஏற்கனவே பரிச்சயமிருந்த டெல்கோ நிறுவனமும் கரம் கோர்த்துக் கொண்டார்கள் - ஒரு சுபயோக சுபதினத்தில் ! ஒரு திருநாளில் திடுமென அவர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது - ஒற்றை சாளரத்தின் கீழ் இனி இரு நிறுவனங்களோடும் தொடர்பு கொள்ளலாமென்று ! நமக்கு லேசாய் ஒரு கோடி காட்டிவிட்டால் தான் போதுமே -அவர்களது குடல்களின் நீள-அகலங்களைத் தெரிந்திட மாட்டோமா என்ன ? ஆனால் சிக்கல் அத்தனை சீக்கிரம் ஓய்ந்த பாடில்லை ! நிறுவனங்கள் இணைந்திருந்தாலும் ட்யுராங்கோவின் படைப்பாளிகள் சாமான்யத்துக்குள் பிடி கொடுக்கவேயில்லை எனும் போது - பூசாரியெல்லாம் அர்ச்சனைக்கு இசைவு தெரிவித்து விட்ட போதிலும் மூலவர்(கள்) கண் திறக்க மாட்டேன்கிறார்களே - என்ற ஆதங்கம் பிடுங்கித்  தின்றது ! நமது 45 ஆண்டு சர்வீஸை சொல்லிய கையோடு ; இன்ன பிற நாயகர்களின் பட்டியலை ; சமீப இதழ்களின் மாதிரிகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தேன் ! அப்புறம் ஒரு யோசனையாய்  "மின்னும் மரணத்தையும்" அனுப்பினேன் ! பின்னென்ன - மூலவர்களும்   மெதுமெதுவாக மேற்கிலிருந்து thumbs up காட்டினார்கள்  ! So பகுமானமாய் 2017-ன் அட்டவணையின் முதல் பக்கத்திலேயே ட்யுராங்கோ பற்றிய அறிவிப்பைப் போட்டு விட்டிருந்தாலும் - எல்லாம் ஓ.கே.வாகிடும் வரை எனக்கு பேதிப் படலம் தொடர்ந்து கொண்டேயிருந்தது ! And the rest as they say - is (our) history ! அமர்த்தலாய் மனுஷன் வந்தார்... அந்த அமர்க்களமான ஹார்ட்கவர் இதழோடு நம்மை வென்றார் என்று தான் சொல்ல வேண்டும்! சமீபத்தில் பிராங்க்பர்ட் புத்தகவிழாவின் போது இதனைப் பார்த்த பதிப்பகங்கள் எல்லாமே ”Nice !” என்று புன்னகை பூத்தது-இதன் ராப்பரை வடிவமைத்த பொன்னனுக்கும், நமது தயாரிப்பு டீமுக்குமான பாராட்டாய் பார்த்திட்டேன் ! So  2017-ன் பிரதான highlight -களுள் முக்கியமானது 'சத்தமின்றி யுத்தம் செய்”! 

ஆண்டின் ஆரம்பப்பகுதிகளிலேயே இடம் பிடித்த இன்னொரு முக்கியஸ்தரும் நம்மைப் பொறுத்தவரை ஒரு சமீப முகமே! ‘சேது’ விக்ரம் போலொரு blonde ஹேர்ஸ்டைல்; ‘பிதாமகன்’ விக்ரம் போலொரு துளைக்கும் பார்வை என்ற அடையாளங்களோடு 2016-ன் இறுதியில் ஆஜராகி நம்மையெல்லாம் கட்டுண்டு போகச் செய்த ஜேசன் ப்ரைஸின் இறுதி சாகஸம் வெளியானது நடப்பாண்டின் பிப்ரவரியில் தான் ! நிறைய எதிர்பார்ப்புகளைக் கிளப்பிவிட்டிருந்த கதையின் க்ளைமேக்ஸ் பாகம் லைட்டாகப் பதம் தப்பிய ரவா தோசையைப் போல மாவாய் இருந்ததென்னவொ நிஜம்தான்... ஆனால் அந்த சாகஸத்திற்கு அத்தகையதொரு fantasy முடிவைத் தாண்டி வேறெதுவும் சாத்தியமாகியிராது என்பது தொடரை நிதானமாய் அசைபோட்ட போது புரிந்தது! ஏகமாய் hype ; ஏகமாய் சிலாகிப்புகள்; ஏகமாய் அலசல்கள் என கலக்கிய இந்தத் தொடர; 2017-ன் முக்கிய மைல்கல்களுள் ஒன்றென்பேன்! 'திரை விலகும் நேரம்” - ஒரு வித்தியாசமான சாலையில் பயணம் !
2017-ன் வெளிச்சத் தருணங்களில் இன்னொன்று நம்மின் பலரின் லேட்டஸ்ட் eye candy ஆன ‘லேடி S’-ன் அறிமுகம் ! சவரம் பாரா கரடுமுரடான கௌபாய் முகங்களுக்கு மத்தியில் ரம்யமானதொரு மதிமுகம் எட்டிப் பார்த்த கணமே பற்பல விக்கெட்டுகள் காலி என்பது கண்கூடாய்த் தெரிந்தது ! வான் ஹாம்மேவின் spy  த்ரில்லர் எனும் போதே இயல்பாய் எழும் எதிர்பார்ப்பு ஒரு cute ஹீரோயினுடன்; என்றான போது பன்மடங்கு கூடிப் போனதும் புரிந்தது! And  முத்து காமிக்ஸின் இதழ் # 400 என்ற மைல்கல் தருணத்தினில் ‘லேடி S’-ன் வருகை ஒரு runaway ஹிட்டாக அமைந்து போனதில் எங்களுக்கு செம குஷி ! அந்தக் காலத்துத் தியாகராஜ பாகவதர் படங்களின் பாடல்கள் எண்ணிக்கை போல கணிசமானதொரு நம்பராக இல்லாது - crisp ஆக (இதுவரைக்கும்) 13 ஆல்பங்களே கொண்ட தொடரிது என்பதால் நடைமுறைக்கும் இது சுகப்படுவது கூடுதல் சந்தோஷம் ! So ஒரு புது நாயகியின் வரவும், அதனைத் தொடர்ந்து   சாத்தியமாகிய சுவாரஸ்யமும், நடப்பாண்டின் மனதில் நிற்கும் பொழுதுகளில் ஒன்று என்பேன் ! சமீபமாய் வந்த இந்தத் தொடரின் ‘சுடும் பனி’யும் did well எனும் போது- "ஷானியா நற்பணிமன்றங்கள்" ஈரோட்டிலும், சேலத்திலும், இன்னபிற சான்றோர் உறையும் ஸ்தலங்களிலும் வேரூன்ற முகாந்திரங்கள் பலமாகிப் போகின்றன !!
அதே தருணம்; ஆனால் ரொம்பவெ பழக்கமானதொரு முகம் - இன்னொரு அழகான நினைவை விட்டுச் சென்றது 'லயன்-300” என்ற ரூபத்தில் ! குண்டு புக்குகளுக்கு என்றைக்கும் மவுசு குன்றிடாது என்பதை -டெக்ஸ் வில்லரின் 'க்யூபா படலம்” centrestage எடுத்துக் கொண்ட இந்த இதழ் இன்னொருமுறை ஸ்பெஷ்டமாய் நிரூபித்தது ! பக்கவாத்திய வித்வான்களும், வித்வானிகளும் (!!) வாசித்தது அத்தனை சுருதி சேரவில்லை என்றாலும் - solo-வாகக் கச்சேரியை அமர்களப்படுத்திடும் ஆற்றல் பாகவதர் டெக்ஸுக்கு உண்டென்பதால், இந்தக் கச்சேரி சோடை போகவில்லை ! கதையில் ஊடூ; பேசும் பாம்புகள் என்று ஆங்காங்கே புய்ப்பச் சரங்கள் இழையோடினாலும் ஒரு புதுக் களத்தில் நம்மவர் வீடு கட்டி அடிக்கும் அழகை ரசிக்காதோர் சொற்பமெ என்பது தெரிந்தது ! And ஆண்டுக்கொரு black&white  ஹார்ட்கவர் குண்டு புக்கென்பது எத்தனை ரம்யமான concept என்பதை இன்னொருமுறை பதிவு செய்த லயன்#300-இந்தாண்டின் topsellers-களுள் ஒன்றும் கூட!

A,B,C,D என்று கவர்ன்மென்ட் ஹைஸ்கூலின் செக்ஷன்கள் போல நமது சந்தாப் பிரிவுகள் நடைபோட்டு வருவவதில் ரகசியம் லேது ! ஆனால் அந்த வரிசையோடு மெதுமெதுவாய் இணைந்து கொண்டு - ஓசையின்றி ஆட்டத்தைத் தொடங்கிய சந்தா E தான் நடப்பாண்டின் ஒட்டுமொத்தக் "கவனக் கோரி" ! 

"கிராபிக் நாவல்கள்” என்ற பதத்தை வேப்பங்காயோடு இணைத்துப் பார்க்கும் ஒருவித mindset நம் வாசக வட்டத்தின் ஒரு கணிசமான பகுதியின் மத்தியில் விரவிக் கிடந்ததற்கு நாமுமே ஒரு காரணம் ! மத்திமமான கதைத்தேர்வுகள்  ; அழுகாச்சிகளுக்கு முன்னுரிமை ; அவற்றைக் கையாண்ட விதத்தில் கற்றுக்குட்டித்தனம் என என்னை நானே கடிந்து கொள்ள இங்கே நிறையவே முகாந்திரங்கள் இருந்தன ! இதன் பலனாய் ஏகப்பட்ட சூடு கண்ட பூனைகள் நம்மிடையே உருவாகியிருக்க-எனக்குள் இது தொடர்பாய் நிறையவே சங்கடமிருந்தது ! கிராபிக் நாவல்கள் சார்ந்த நமது இந்த அவப்பெயரை சரி செய்ய நிச்சயமாய் பிரயாசைகள் பல மேற்கொண்டே தீர வெண்டுமென்று எனக்குள் ஒரு மௌனமான வைராக்கியம் குடியேறியிருந்தது ! சாம்பாரையும், நூடுல்ஸையும் ஜாய்ண்ட் போடுவது சரிவராது என்பதால் கி.நா.க்களுக்கென தனியாகவே ஒரு சந்தாத்தடம் அத்தியாவசியம் என்று பட்டது ! வெள்ளைக்காரன் தான் 26 எழுத்துக்களைப் படைத்து வைத்திருக்கிறானே- அதனில் இன்னொன்றை இரவல் வாங்கினால் போச்சு என்று சந்தா E-வை களமிறக்கும் மகா சிந்தனை உதயமானது ! இம்முறை கதைத் தேர்வுகளிலோ; கதைகளைக் கையாளும் பாணிகளிலோ குளறுபடி நேரின் - என் பிழைப்பு சிரிப்பாய்ச் சிரித்துப் போய் விடும் என்பதை விட - நம் புண்ணியத்தில் 'கிராபிக் நாவல்” என்ற genre மீதே ஏளனம் பாய்ந்துவிடும் என்பதும் புரிந்தது ! ஆயிரம் முட்டுச் சந்துகளில் ஆயிரத்தொரு மொத்துக்கள் வாங்கினாலும் இந்த ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’ கலங்க மாட்டான் என்றாலும் - நமது தவறான திட்டமிடல்களால் ஒரு கதைரகத்தையே நாம் புறம்தள்ளும் சூழலுக்கு 'இந்த என்கவுண்டர் ஏகாம்பரம்  காரணமாகிடக் கூடாதென்று பட்ட து! So நிரம்ப ரோசனைகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் அப்புறமாய் மெது மெதுவாய் கதைத்தேர்வுகளைச் செய்யும் போதே -ஏகப்பட்ட இஷ்ட தெய்வங்களை நினைத்துக் கொண்டேன்!  
சந்தா E-வின் கதைத் தேர்வுகளுக்குப் பின்னே ஒரு கதையும் இல்லாதில்லை! ஒரிஜினலாய் நான் தேர்வு செய்திருந்த ஆல்பங்களின் பெரும்பான்மை வண்ணத்திலானவை ! ஆனால் அவற்றின் கதைத்தரங்கள் பற்றி எனக்குப் பரிபூரண நம்பிக்கை ஏற்படத் தவறிக் கொண்டேயிருந்தது ! பற்றாக்குறைக்கு சந்தாத் தொகையும் எகிறிக் கொண்டே போவது போலத் தோன்றியதால் மலைத்துக் கொண்டே நின்றேன் ! Black & White இதழ்களுக்குப் பெரும்பான்மை எனில்-கொஞ்சமாய் விலைகளில் சகாயம் சாத்தியமாகுமே என்ற எண்ணம் அப்போது தலைதூக்க - ‘கறுப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு..டொயுங்க்..டொயிங்...’ என்ற படிக்கே வட்டமடிக்கத் தொடங்கினாலும் உருப்படியாய் எதுவும் கண்ணில்பட்ட பாடைக் காணோம்! அதற்கு மீறி வித்தியாசமானதொரு ஆல்பம் ஆர்வத்தைத் தூண்டியதெனத் தருவித்து பக்கங்களைப் புரட்டினால், ஏகப்பட்ட பிகினி பெண்களின் புஷ்ஷிடியான பின்பக்கங்கள் பக்கத்துக்குப் பக்கம் தெறித்துக் கொண்டிருந்தன ! 'சும்மாவே சாமியாடுவோர சங்கம்” ஒன்றும் நம் மத்தியிலிருக்க - அவர்களுக்கு மஞ்சள் தண்ணியும், உடுக்கை ஓசையையும் நாமே இலவசமாய் சப்ளை செய்து வைத்தால் நாடு தாங்காதென்று தோன்றியது ! தலையை நோண்டிக் கொண்டே மறுபடியும் இன்டர்நெட் தேடல்களுக்குள் லயித்த போது ஒரு அழகான (இத்தாலியப்) படைப்பாளியின் பேட்டி ஒன்றை வாசிக்க முடிந்தது ! டைலன் டாக் தொடருக்குக் கதைகள் எழுதும் பெண்மணி என்பதையறிந்த போது ‘அட... டைலன் டாக் மாதிரியான இரத்தக்களரியான கதைக்களங்களைக் கூட female  authors கையாள்கிறார்களா?’ என்ற மலைப்பு மேலோங்கியது ! அந்தப் பேட்டியினில் சிலபல கிராபிக் நாவல்களையும் அவரே எழுதியிருப்பதாய்ச் சொல்லியிருந்ததைக் கவனித்த போது, எனக்குள் ஒரு குண்டு மஞ்சள் பல்பு பளீரென்று எரிந்தது போலிருந்தது! அதைத் தொடர்ந்து நடந்த தேடலில் சிக்கியது தான் 'ஒரு முடியா இரவு” ஆல்பத்தின் ஒரிஜினல் ! அதே வரிசையின் 'என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்” அடுத்து கண்ணில்பட - எனக்குள் பஞ்சு மிட்டாயைப் பார்த்த பொடிப்பையனின் உற்சாகம் ! 'உலகயுத்தம் & அதன் aftermath” என்ற களங்கள் எனக்கு என்றைக்குமே பிடித்தமானவை தானே? So-இந்த ஆல்பமும் ஒரு இறுக்கமான post war களமாய்க் காட்சி தந்ததால்- கடைவாயில் ஜலம் ஓடத் தொடங்கியது! ஆனால் 'வானமே எங்கள் வீதி” ; 'பிரளயத்தின் பிள்ளைகள்” ; 'விண்ணில் ஒரு வேங்கை” போன்ற war tales வாங்கிய மெகா சாத்துக்கள் இன்னமும் பசுமையாய் மனதில் நிழலாடிட தயக்கமும் படர்ந்து கொண்டது! ஆனால் சபலத்தின் சக்தி தான் அளப்பரியதாச்சே-ஒரு ஆந்தைக் கண்ணனால் அதைப் புறம் தள்ள முடியுமா என்ன ? என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம் கதைக்கு நேராகவும்  ‘டிக்’ அடித்து வைத்தேன்! ‘கனவுகளின் கதையிது’ சீக்கிரமே கைகோர்த்துக் கொள்ள, ஆறே இதழ்களோடு திட்டமிடப்பட்ட சந்தா  E-யின் பாதிப் பசி ஆறியிருந்தது ! ‘நிஜங்களின் நிசப்தம்’ என்னுள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாய் ஓடி வரும் ஆதர்ஷம் என்பதால், அதுவும் பட்டியலினுள் புகுந்திட அதிக நேரமாகவில்லை ! என்ன ஒரே குளறுபடி-இரு பாகங்கள் கொண்ட இந்த சாகஸத்தின் முதல் பகுதியினை டிசம்பர் 2017-ல் வெளியிடுவதென்றும்; இறுதிப் பாகத்தை ஜனவரி 2018-ல் வெளியிடலாமென்றும் திட்டமிட்டிருந்தேன் ! So 'காலம் தவறிய காலன்” எனும் sci-fi  த்ரில்லரை ஸ்லாட்#4-ல் நுழைத்திருந்தேன்! ஆனால் அப்போதேவும், நிஜங்களின் நிசப்தத்தை 2017 & 2018 என பிரிப்பது நடைமுறையில் சுகப்படுமா ? என்ற சன்னமான சந்தேகம் எனக்குள் இருந்ததால்-2017ன் அட்டவணையில் ‘காலம் தவறிய காலன்’ இறுதி நேர கல்தாவுக்கு உட்பட்டதே என்று குறிப்பிட்டிருந்தேன்! And 2018-ன் கிராபிக் நாவல் சந்தாவானது அறிவிப்பு கண்டிடப் போவதே  ஏப்ரலில் தான் என்பதால் 'நி.நி”யைப் பிரிக்கும் திட்டமானது பணாலானது ! எஞ்சிக்கிடந்த ஒற்றை ஸ்லாட்டில் கலரில் ‘அண்டர்டேக்கரை’ களமிறக்கச் செய்வதென்று தீர்மானித்த கணத்தில்-சந்தா E வில் ஒரு வித இனம் சொல்ல முடியா புதிர் விரவிக் கிடப்பது போன்ற உணர்வு எனக்குள் இருந்தது ! இத்தனை காலம் கடந்தான பின்பும், உங்களை ஏதேனுமொரு விதத்தில் திகைக்கச் செய்ய முற்படும் ஆசை என்னை விட்டு அகல்வதே கிடையாது! And சந்தா E-வின் X factor நிச்சயமாய் உங்களது கவனங்களை ஈர்த்திடுமென்ற நம்பிக்கை எப்படியோ துளிர்விட்டது ! So ஒரு சந்தாவின் behind the scenes சிந்தனையோட்டம் இதுவே!

யோசிப்பதெல்லாம் சரிதான்; திட்டமிடுவதும் சுலபம் தான்; ஆனால் குறும்படமே ஆனாலும் அதை எடுத்து தியேட்டர்களுக்கு அனுப்பும் போது வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகளின் பரதம் அரங்கேறாது போகுமா? எனக்குள் ஓராயிரம் கேள்விகள் - லயன் கிராபிக் நாவலின் முதல் இதழின் தயாரிப்புக்குள் தலை நுழைத்த கணத்தில் ! எனது ஒரிஜினல் அட்டவணையின்படி ‘என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்’ தான் தடம் E- வில் தடதடத்திருக்க வேண்டிய எக்ஸ்பிரஸ் ! ஆனால் கடைசி நிமிடத்தில் பீதியாகிப் போய்விட்டது-'மறுபடியும் ஒரு யுத்தப் பின்னணிக் கதை தானா?” என்ற கேள்வியோடு நீங்கள் சுதி குறைந்து போய்விடுவீர்களோ என்று ! So சுத்தமாய் நாமிதுவரையிலும் பார்த்திராத களத்தைக் கொண்ட 'முடியா இரவை” முன்னே இழுத்து வந்தேன்! கதைத் தேர்வின் போது ‘ஆசம்... ஆசம்’ என்று நான் சிலாகித்த சித்திர பாணிகள் பணியாற்ற அமர்ந்த நொடியில்-'கந்தசாமி”யில் வரும் முரட்டுச் சேவல் வடிவேலைப் போல செம மொக்கையாய் தென்படத் தொடங்கியது ! ‘ஐயோ... தெய்வமே... ‘சிவனே’ என்று மண்டபத்தில் டெக்ஸ் வில்லப் புலவர்களும், கார்சக் கவிஞர்களும் எழுதித் தரும் பாட்டுக்களை வாங்கிய கையோடு  பிழைப்பைப் பார்த்துப் போயிருக்கலாமோ ?"  என்றெல்லாம் யோசனைகள் நாற்கால் பாய்ச்சல் காட்டத் தொடங்கின! கதையின் டெம்போவுமே மெது மெதுவாய்த் தான் ‘பிக் அப்’ ஆகும் ரகம் எனும் போது -கல்யாண வீட்டில் மைக்கை லபக்கிய கரைவேட்டிகள் போல ஆளாளுக்குப் பேசிக் கொண்டே போவதை ஆரம்பப் பக்கங்களில் கவலையுடன் பார்த்தேன்! ஆனால் நாலு நாள் குடித்தனம் நடத்தினால் பிரபஞ்ச அழகனோ, அழகியோ ; உலக பேமானியோ, பேமானனோ சராசரி முகங்களாக மட்டுமே தெரியத் தொடங்கும் என்ற நியதி சிறுகச் சிறுக நிஜமாகிட - அந்த semi cartoon  பாணிச் சித்திரங்களின் பின்னணியிலும் ஒரு ஜீவன்; ஒரு சோகம் இழையோடுவதை பார்த்திட முடிந்தது! And பேனா ஓட ஓட- கதையோடு ஒரு அந்நியோன்யம் வளர்ந்து செல்லச் செல்ல- மெது மெதுவாய் நிமிர்ந்து உட்காரத் தொடங்கினேன்!
இந்த இதழ் வெளியான தினம் உங்கள் ஒவ்வொருவரின் ரியாக்ஷன்களையும் அறிந்திட நான் தவித்த தவிப்பு எனக்கு மட்டுமே தெரியும் ! ‘ஙே… ஹீரோவே கிடையாதா?’ என்றோ; ‘‘ஓடிக் கொண்டே போகும் வண்டிக்கு சடன் பிரேக் போட்டது போல க்ளைமேக்ஸ் திடுதிடுப்பென அமைந்துள்ளதே?’ என்றோ முகச்சுளிப்புகள் சன்னமாய் எதிர்பட்டால் கூட- தொடரும் வாசகர்களின் கருத்துக்களை அவை influence செய்திடக் கூடுமோ என்ற பயம் கணிசம்! ஆனால் எகிறியடித்தது இதுவொரு சிக்ஸர் என்பதை நீங்கள் உறுதி செய்த போது- சீஸ் கேக் சாப்பிட்ட மியாவியைப் போல முகமெல்லாம் புன்னகை குடி கொண்டது! ‘கதைகளே இங்கே ஹீரோக்கள்’ என்பதே போனெல்லியின் இந்தக் கதைவரிசையின் பின்னணி சித்தாந்தம் !  எம்.ஜி.ஆர்களையும், சிவாஜிகளையும், ரஜினிகளையும், கமல்களையும் வில்லர்களையும், பிளைஸிகளையும், லக்கிகளையும் ஆராதித்தே வளர்ந்த நமக்கு இந்த நவீன பாலிஸி சுகப்படுமா என்ற நியாயமான பயங்களை ஒரே நொடியில் சுக்கு நூறாக்கினீர்கள் ! முதன்முறையாக மாத இதழ்களுள் டெக்ஸையும், இன்ன பிற வண்ண நாயகர்களையும் ‘அப்படி ஓரமாப் போயி விளையாடுங்கப்பா’என்று சொல்ல ஒரு கிராபிக் நாவலுக்கு சாத்தியமாகும் அதிசயத்தைப் பார்த்த நொடியில் லானாவைப் பார்த்த ஆர்டினைப் போல ‘ஆர்ஹியூ’ என்று கூவத் தோன்றியது எனக்கு! So நடப்பாண்டில் priceless தருணங்களில் ரொம்பவே நெஞ்சுக்கு நெருக்கமானதாய் நான் பார்த்திடுவது முடியா இரவின் ரிலீஸ் சார்ந்த உற்சாகங்களை !
‘வந்தார்… வென்றார்.. சென்றார்’ பாணியில் இன்னமும் ஒரு கௌபாய் நாயகர் முத்திரை பதித்தது 2017-ன் ஆச்சர்யங்களுள் முக்கியமானதும் கூட! ஒரு வெட்டியானையும் - ஒரு வெற்றியாளனாக மாற்றிட முடியுமென்று நிருபித்துக் காட்டிய காதாசிரியர் டோரிசனும், ஓவியர் ரால்ப் மேயரும் இங்கே எனக்கு கற்பனையுலக ராட்சஸர்களாகத் தெரிகிறார்கள் ! And என்னவொரு வரவேற்பு இந்தப் புதிரான நாயகனுக்கு !!!! ‘அண்டர்டேக்கர’ மாத்திரமே நமது வலைப்பதிவினில் உருவாக்கிய அலசல் ஒரு சுனாமிக்கு சமமான வீரியத்தோடிருந்தது என்றால் மிகையில்லை ! இந்தக் களம் நிரம்ப சுவாரஸ்யம் தாங்கியதொன்று என்பதில் எனக்கு துவக்கம் முதலே  ஐயம் இருந்திருக்கவில்லை தான்...ஆனால் இதன் தாக்கம் இத்தனை முரட்டுத்தனமாய் இருக்குமென்று யூகிக்க எனக்கு முடிந்திருக்கவில்லை! ‘பிணத்தோடு ஒரு பயணம்’ இந்தாண்டின் blockbuster என்பதில் no doubts! A stunning entry !!!
தொடர்ந்த இரு கிராபிக் நாவல்களுமே வெவ்வேறு ரூபத்தில் உங்களை ‘wow’ என்று குதூகலிக்கச் செய்ததும் எனது நடப்பாண்டின் உச்சங்களுள் முக்கியமானவை என்பேன் ! ‘என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்" மற்றும் ‘கனவுகளின் கதையிது’ இரு வேறு துருவ முனைகள் எனலாம் - கதைக் களங்களைப்  பொறுத்தமட்டிலும் ! ஆனால் இரண்டுக்குமே  ஒற்றை ஒற்றுமை உண்டு - மனிதர்களின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய விதத்தினில் ! பொதுவாய் மொழிபெயர்ப்பு வேலைகளை ஏதேதோ பணிகளுக்கு மத்தியில் சிக்கிய சிக்கிய நேரங்களிளெல்லாம் செய்வது தவிர்க்க இயலா வாடிக்கை எனக்கு! ஆனால் ஏனோ தெரியவில்லை -   ‘முடியா இரவு’ ; ‘என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்’ ‘கனவுகளின் கதையிது’ கிராபிக் நாவல்களை இரவுகளில் மட்டுமே எழுதப் பிடித்திருந்தது! ஒவ்வொன்றிலும் இழையோடிய மெலிதான சோகங்களும், ஆற்றமாட்டாமைகளும், இரவின் நிசப்தத்தில் ஒரு மடங்கு கூடுதலான வீச்சோடு தென்படுவது போலத் தோன்றியது! And இரு ஆல்பங்களுமே வெளியாகி உங்களின் ஏகோபித்த சிலாகிப்புகளை ஈட்டிய போது -‘‘கதையிருக்க பயமேன்?’’ என்று போனெல்லி ஆணித்தரமாய் நம்பியதன் பின்னணி லேசு லேசாய்ப் புரிந்தது போலிருக்கிறது ! இத்தனைக்கும் இத்தாலிய காமிக்ஸ் உலகின் ஏகப்பட்ட ஜாம்பவான் ஹீரோ , ஹீரோயின்களை அணிவகுப்பில் கொண்டிருக்கும் பதிப்பகம் இது ! அவர்கள் இந்த "நாயக சிலாகிப்பிலிருந்து" சற்றே விலகி நின்றுமே சாதித்துக் காட்டத் தீர்மானித்திருந்தால் கைவசம் முறுக்கான சரக்கில்லாது போயிராது என்பதை உணர முடிந்தது! So (இதுவரையிலான) சந்தா E நமது நெடும் பயணத்தின் ஒரு நிஜமான மைல்கல் தருணம்-for sure!!
இன்னமுமே ஒரு அற்புதத் தடமாய் அமைந்த ‘சூப்பர் 6’ பற்றியும் ; 2017-ன் இன்னும் சில மறக்க இயலா moments பற்றியும், அடுத்த ஞாயிறுக்கு எழுதுகிறேன் guys! உச்சங்களைப் பற்றிப் பேசிய கையோடு ஆண்டின் மொக்கைகள் பற்றியும் ; low points பற்றியுமே அலசிடுவோம்-எப்போதும் போலவே ! 
அப்புறம் நானிதுவரையிலும் இங்கே விவரித்தவை எல்லாமே தனிப்பட்ட முறையில் எனக்கு ஸ்பெஷலாகக் காட்சி தந்த சமாச்சாரங்கள்! So அந்த ஆல்பங்களோ,. கதைகளோ உங்களுக்கு அவ்வளவாய் ரசித்திராது போயிருப்பின்-அவற்றில் நீங்கள் கண்ட குறைகளைச் சுட்டிக்காட்டிடலாம்! அதே போல உங்களது பார்வைகளில் நான் விவரித்திரா சில / பல இதழ்கள் செமையானவைகளாகத் தோன்றியிருப்பின் - would love to hear about them too!
ஊர் கூடி இழுக்கும் தேரை உற்சாகமாய் ஒன்றிணைந்து அணுகிட்டால் அந்த அனுபவத்தின் தாக்கமே அபரிமிதமானது தானே ? இக்கணத்தில் நான் கோருவதும் - உங்கள் ஒவ்வொருவரின் மனத்திறவுகளையே! Let's celebrate the year of comics that has gone by...! 

And அதே கையோடு காத்திருக்கும் 2018-க்கு உங்களின் சந்தாக்களையும் அனுப்பிடலாமே ப்ளீஸ் ?! http://lioncomics.in/2018-subscription/442-2018-subscription-abcd-within-tn.html

மீண்டும் சந்திப்போம் !! Have an awesome weekend !

P.S : 2017 -ன் TOP 3 தருணங்கள் - உங்கள் பார்வைகளில் எதுவோ என்பதை பகிர்ந்திட நேரம் எடுத்துக் கொள்ளுங்களேன் guys ? 

193 comments:

  1. ஹைய்யா முதல் என்ட்ரி.

    ReplyDelete
  2. டைப்படிக்கிறதுக்குள்ள நாலாவது

    ReplyDelete
  3. எம்மாம் பெரிய மாத்திரை.

    ReplyDelete
  4. இரவு வணக்கம் விஜயன் சார்

    எவ்வளோ பெரிய பதிவு
    அருமை சார்
    படிச்சிட்டு அப்பாலிக்கா வர்றேன் _/\_
    .

    ReplyDelete
  5. இரத்த படலம் முன்பதிவு இலக்கத்தை எட்டிவிட்டோமா சார்?

    ReplyDelete
  6. ///2017-ன் பிரதான highlight -களுள் முக்கியமானது 'சத்தமின்றி யுத்தம் செய்”! ///

    நிச்சயமாக ..!

    க்ளின்ட் ஈஸ்ட்வுட் சாயலில் கெத்தாக, அந்த தெனாவெட்டான பார்வையுடன் முதல் பக்கத்தில் ட்யூராங்கோவை பார்த்ததுமே முடிவுபண்ணிட்டேன் .. இது வேறலெவல் தொடர்னு.!
    என் நம்பிக்கைக்கு சிறிதும் குறைவைக்காமல் தொடர்ந்த பக்கங்கள் அதகளப்படுத்தின..!
    நல்லவனும் அல்ல அதேசமயம் கெட்டவனுமல்ல .. அதுதான் ட்யூராங்கோ.!
    கண்களையும் மனதையும் சுண்டியிழுத்து லயிக்கச்செய்யும் சித்திரங்களும் கலரிங்கும் .. அப்பப்பா ..! ட்யூராங்கோ என் மனதில் ஆதர்ஷ நாயகனாக அரியாசனமிட்டு அமர்ந்த , முதல்முறையாக வாசித்த அந்த நாட்கள் என்னுடைய 2017 ன் மறக்க இயலாத தருணம் நம்பர் 1.!

    இதுவரை நான்குமுறை முழுமையாக ட்யூராங்கோ வை படித்துவிட்டேன்...நம்பமுடிகிறதா!?

    லவ் யூ ட்யூராங்கோ 😍😍😍

    ReplyDelete
  7. டாப் - 5 (2018)

    1. தி அண்டா்டேக்கா்

    2. லக்கி & சிக்பில் கிளாசிக்

    3. லேடி S

    4. டியுராங்கோ

    5. இரத்தக் கோட்டை

    ReplyDelete
    Replies
    1. 2, 3, 4, 5 எல்லாம் யோசித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது.

      முதலிடம் மட்டும் யோசிக்கவே வேண்டியதில்லை!

      "அண்டா்டேக்கா்" வெட்டியானுக்குத் தான்!

      2017 ன்னாவே "அண்டா்டேக்கா்" இயா்னு நியாபகத்துல வெச்சுக்கலாம்!!

      Delete
    2. ////2017 ன்னாவே "அண்டா்டேக்கா்" இயா்னு நியாபகத்துல வெச்சுக்கலாம்!!///

      ஹா ஹா! செம & உண்ம!

      Delete
  8. ...அப்படினு நெனச்சா... You are in que. அப்படின்னுட்டங்க.

    ReplyDelete
  9. ///சவரம் பாரா கரடுமுரடான கௌபாய் முகங்களுக்கு மத்தியில் ரம்யமானதொரு மதிமுகம் எட்டிப் பார்த்த கணமே பற்பல விக்கெட்டுகள் காலி என்பது கண்கூடாய்த் தெரிந்தது ! ///

    நானெல்லாம் முதல் பந்திலேயே மிடிஸ் ஸ்டிக்கை தெறிக்கவிட்டு(பறிகொடுத்து) கோல்டன் டக் ஆயிட்டேனாக்கும்.!!

    ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான உளவுத்துறை உள்குத்துகள்., என்னோட சிற்றறிவுக்கு எட்டாத ஏதெதோ சிக்கலான சமாச்சாராங்கள் சில இருந்தாலுமே கூட, அந்த மச்சக்கன்னியும் வான்ஹாமேவின் விறுவிறு கதைசொல்லும் பாணியும் கதையோடு கட்டிப்போட்டுவிட்டன ..!

    லே S ன் வருகையும் இந்த வருடத்தின் பிரதான நிகழ்வுகளில் முக்கிய இடம் பெறவேண்டிய ஒன்றே ..!

    ReplyDelete
  10. அருமையான பதிவு எடிட்டர் சார்!!

    குறிப்பாக, கி.நா கதைத் தேர்வுகள் பற்றிய உங்களது அணுகுமுறைகள், எண்ணவோட்டங்கள், செயல்படுத்திய விதம் - அத்தனையும் படிக்கப் படிக்க அருமை!

    இந்த ஆண்டு - நமது வெளியீடுகளைப் பொறுத்தவரை - ஒரு டமால் டுமீல் வெற்றியாண்டு!

    இதேமாதிரியும், அப்புறமா இன்னும் இன்னும் வித்தியாசமாவும் அடுத்தடுத்த வருடங்களில் எதிர்பார்க்கிறோம் எடிட்டர் சார்!

    எதிர்பார்க்கவேண்டியது கூட இல்லை - நீங்களே செய்வீங்க! எங்களுக்குத் தெரியும்!

    ReplyDelete
  11. ஜனவரியிலிருந்து நவம்பர் வரை (இன்னும் டிசம்பர் இதழ்கள் வந்து சேரவில்லை) ஒரு நிறைவான பயண உணர்வை தந்தது. சந்தா C எப்போதும் மனதுக்கு நெருக்கமான ஒன்று. முன்பெல்லாம் வருடத்திற்கு ஒன்றோ இரண்டோ கார்ட்டூன் கதைகள் (அதுவும் கருப்பு வெள்ளை அல்லது இரு வண்ணத்தில்) முழு வண்ணத்தில் வராதா என ஏங்கி இருக்கிறேன். உங்களை சந்திக்கும் போது எல்லாம் வலியுறுத்தி இருக்கிறேன். இப்போது முழு வண்ணத்தில் உயர்ந்த தரத்தில் கார்ட்டூன் கதைகள் தாங்கள் வெளியிடுவது மெத்த மகிழ்ச்சி. இன்னும் பல இதழ்கள் வெளியிட்டு விற்பனையில் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே

    ReplyDelete
  13. ///முதன்முறையாக மாத இதழ்களுள் டெக்ஸையும், இன்ன பிற வண்ண நாயகர்களையும் ‘அப்படி ஓரமாப் போயி விளையாடுங்கப்பா’என்று சொல்ல ஒரு கிராபிக் நாவலுக்கு சாத்தியமாகும் அதிசயத்தைப் பார்த்த நொடியில் லானாவைப் பார்த்த ஆர்டினைப் போல ‘ஆர்ஹியூ’ என்று கூவத் தோன்றியது எனக்கு! ///

    உண்மைதான் சார். 'கிராபிக் நாவல் ' என்ற பதம் தன்னை நிரூபித்தது.

    கிராபிக் நாவல்களின் வெற்றியே இந்தாண்டின் சிறந்த ஹைலைட்டாக உணர்கிறேன்.
    ஹீரோ என்ற பிம்பத்தை உடைத்து, இன்னபிற அளவுகோல்களை அநாயசமாக தூக்கி எறிந்து, தனக்கான ராஜபாட்டையை தகவமைத்துக் கொண்டது.

    பட்ஜெட்டை கணக்கில் கொண்டு B/w இதழ்களாக Fix செய்திருந்தாலும், உண்மையில் அதுவே சிறப்பான முடிவு.

    கிராபிக் நாவல்களின் வீரியம் கருப்பு வெள்ளையிலேயே முழுமையாக வெளிப்பட்டது மறுக்க முடியாது.

    ReplyDelete
    Replies
    1. சூப்பரா சொன்னீங்க கோவிந்தன்.

      Delete
  14. 30 வருஷங்களுக்கும் மேலாக கடந்து தான் செல்கிறேன் .உமதார்வம் உம்மை சளைக்காமல் இருக்க வைக்கிறது என தார்வம் படக்கதை படித்த பின்பு பக்கென்றிருக்கிறது .30 வருடங்கள் கடந்து இன்று உமக்கு பதில் கருத்து எழுதுகிறேன் . கோட்டையையும் ஆர்ச்சியையும் எமக்கே தருவீரானால் என்னை நான் திருப்பிக் கொள்வேன் திருந்திக் கொள்வேன் . ஆர்வம் ஆயாசம் தருமா ?ஆசிரிய உமக்கு நிகர் நீரே வணங்குகிறேன்

    ReplyDelete
    Replies
    1. அருமை. தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பரே.

      Delete
    2. @ Gandhi Babu The Great

      என்ன சொல்ல வரீங்கன்னு சரியா புரியலையே நண்பரே!!

      Delete
  15. இந்த ஆண்டின் சிறந்த தேர்வுகள் Graphic novels.

    ReplyDelete
  16. இந்த top stories Under taker, Durango, Lady S, Lucky Luke Classic, Chick bill classic, Captain prince classic

    ReplyDelete
  17. ட்யுராங்கோ இந்த வருட அட்டகாச அறிமுகம். (சந்தா புத்தகம் கையில் வர காலதாமதமாகிவிட்டது. பரிசளித்த சீனியர் மோஸ்ட் காமிக்ஸ் ஃபேன் அவர்களுக்கு நன்றி)
    கிளாசிக்ஸ் of லக்கி, சிக்பில், ரத்தகோட்டை, அனைத்து டெக்ஸ் கதைகளும், தோர்கலும், மார்டினும், ஷெல்டனும் திரும்ப திரும்ப படிக்கத் தூண்டியவை. சிறந்த தேர்வுகள்.

    சில கார்ட்டூன் இதழ்கள், Lady S, ஜூலியா, சில கிராபிக் நாவல்கள், சில முத்து மறுபதிப்புக்கள்: மன்னிக்கவும். சில பக்கங்களை கூடத் தாண்ட முடியவில்லை. துயில்கின்றன. விடுமுறையில் திரும்ப படிக்க முயற்சிக்க வேண்டும்.

    இந்த வருடம் பல மிகச்சிறந்த இதழ்களை வழங்கி, இனிமையான தருணங்களை வழங்கிய ஆசிரியருக்கு நன்றிகள்!!

    ReplyDelete
  18. காமிக்ஸ் வலைத்தளத்துக்கு,
    இனிய காலை வணக்கம்.

    ReplyDelete
  19. காலை வணக்கம் நண்பர்களே.

    ReplyDelete
  20. விஜயன் சார்
    நீங்கள் மட்டும் பிகினிய பாத்துட்டு
    முக்காடு போட்ட மூஞ்சிகளை எங்களுக்கு
    காட்டுரது சரியில்ல.சொல்லிப்புட்டேன்.

    ReplyDelete
  21. அஸ்ஸலாமு அலைகும்

    ReplyDelete
  22. ////‘வந்தார்… வென்றார்.. சென்றார்’ பாணியில் இன்னமும் ஒரு கௌபாய் நாயகர் முத்திரை பதித்தது 2017-ன் ஆச்சர்யங்களுள் முக்கியமானதும் கூட! ஒரு வெட்டியானையும் - ஒரு வெற்றியாளனாக மாற்றிட முடியுமென்று நிருபித்துக் காட்டிய காதாசிரியர் டோரிசனும், ஓவியர் ரால்ப் மேயரும் இங்கே எனக்கு கற்பனையுலக ராட்சஸர்களாகத் தெரிகிறார்கள் !////

    +123456789

    ReplyDelete
  23. ஸ்மர்ப்ஸ் சொபிக்கவில்லை! Lady S ஏனோ பிடிக்கவில்லை!

    ReplyDelete
    Replies
    1. Aslam Basha : யாருக்கும் ரசிக்காது போயிருப்பின் - அதனை "சோபிக்கவில்லை" என்ற முத்திரை குத்துவதில் தவறு இராது ! ஆனால் சமீப இதழ்களுள் விற்பனையில் மூன்றாமிடம் இந்த நீலப் பொடியர்களுக்கே சார் !

      So "சோபிக்கவில்லை " என்று சொல்வதை விட, "பொடிக்கவில்லை " என்று சொல்வது பொருத்தம் என்பேன் !

      Delete
  24. அன்பின் திரு விஜயன் & நண்பர்களுக்கு காலை வணக்கங்கள்.!

    அமைதியான தளம், நிறையவே எழுத தோன்றுகிறது.இந்த வருடத்தில் என்னை மிகவும் கவர்ந்த முதலிடம் பிடித்த கதை அண்டர்டேக்கர்.!

    இந்த கதை வெளிவந்த நேரத்தில் மனசு இருந்த பரபரப்பை விடவும் தளம் பரபரப்பாக இருந்ததால் சில சிந்தனைகளை பகிராமல் நின்றுவிட்டேன்.அன்று அதுவே உத்தமம் என்தோன்றியதால் கிடப்பில் போட்டதை இன்று பகிர்ந்து கொள்கிறேனே.!!!

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    கௌபாய் கதைகள் என்றாலே தங்கம் தேடி வேட்டையர்கள்,புழுதி,முரட்டுத்தனம்,குதிரைகள், துப்பாக்கி சண்டை தானே; அன்டர்டேக்கர் கூட அவ்விதமே..! ஆனால் அதை ஒரு முரடனின் கதையாக, நாயகன் கதையாக பார்த்தால் அவ்விதமே..! நான் முற்றிலும் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறேன்..!!

    வறுமையும், பசிக்கொடுமையும், இருப்பிடமும் பாதுகாப்பும் இல்லாத கொடுமை ஒருபுறம் என்றால்...அந்த கொடுமைகளை எல்லாம் அனுபவித்து விட்டு, தங்கம் மேல் தங்கம் சேர்த்தவன் மனதில் எழும் கொடுங்கோலான மனப்பான்மை செய்யும் கொடுமைகள் மறுபுறம்.!

    கொட்டிகிடக்கும் பணத்திற்கு சேவகம்செய்ய அடிமையாக வேலைப்பார்ப்பவர்களை பம்பரமாய் வேலைவாங்குவதும்...
    சாட்டையாய் சொற்களை வீசுவதும்...
    எடுத்ததற்கெல்லாம் எரிந்து விழுவதும்...
    ஊழியர்களை எப்படியெல்லாம் இழிவுபடுத்தலாம் என சதா யோசிக்கும் ஒரு சுரங்கஅதிபரை சுற்றியிருப்பவர்கள் மனநிலையில் என்னவாக இருக்கும் என சொல்லவேண்டுமா என்ன.!!

    எஜமானுக்கு காட்டும் விசுவாசமெல்லாம் அவன் கண்ணெதிரில் மாத்திரமே...அவருக்கு தரவேண்டிய உணவை சுகாதாரமாக தயாரித்து, கொஞ்சம் எச்சிலை காறித்துப்பி தரும் ஒரு காட்சியிலேயே அவரை சுற்றியிருக்கும் விசுவாசம் வெட்டவெளிச்சமாகிறது.

    உயிருள்ள போதே இந்த மரியாதையை என்றால்...மொத்த தங்கத்தையும் முழுங்கிவிட்டு,"என் உயிர் பிரிந்ததும் என்னை தூரத்து எனது முதல் சுரங்கத்தில் கொண்டுபோய் புதைத்துவிடு..." என தான் நம்பும் விசுவாச இளம்பெண் ஊழியரிடம் சுரங்கஅதிபர் தன் கடைசிஆசை ஒப்படைக்கிறார்.

    தன் எஜமானின் கண்களை தோண்டி எடுத்துவிடவேண்டும்,அப்படியே குரல்வலையை நெறித்து கொன்றுவிடவேண்டும் என தினம் தினம் நினைக்கும் அந்த இளம்பெண், வயிற்றில் தங்ககட்டிகளை சுமக்கும் தனது முன்னால் எஜமானனை என்ன செய்யபோகிறாள் என்பதே இந்த கதையின் அடிநாதம்..!

    தன் மனைவி,கணவர்,மகன்,தாய்,தந்தை என நெருங்கிய உறவின் உடலோடு வேண்டுமானால் தங்கத்தை சேர்த்து புதைக்க யாரேனும் முன் வரலாம்.ஒரு கொடுமைக்கார எஜமானனை அப்படி புதைக்க முன்வருவார்களா...???? இவள் ஏதோவொரு திட்டத்துடன் தான் பிணத்துடன் கிளம்புகிறாள். நிச்சயம் ஒரு திருப்பத்தில் இவளின் கூட்டாளி வருவான். இவளுடைய எல்லையை அடைந்ததும் அவளுடைய சொரூபம் தெரியும் அல்லது இவளை அசால்ட்டாக தட்டிவிட்டு தங்கம் கைமாறிவிடும் என எதிர்பார்த்த என் கணிப்பு தவறாகி போனது.!!

    தங்க(உருண்டை)கட்டிகள் பிணத்தின் வயிற்றுக்குள் இருக்கும் விஷயம் மொத்த ஊருக்குமே தெரிந்து விரட்ட...முன்பே பேரம் பேசப்பட்ட ஒரு வெட்டியானுடன், இன்னொரு வேலைக்காரியான சீனாக்காரி துணையுடன் பிணத்தை பெட்டியில் எடுத்துக்கொண்டு சுரங்கத்தை நோக்கி ஏன்தான் இப்படி பறக்கிறாள்..??? இவளோட கடமை உணர்ச்சியின் ஒரு அளவே இல்லையா..??? நமக்கு தெரியாதா...??? இதோ அடுத்தபக்கத்தில் சுயரூபம் தெரிந்துவிடும் என பார்த்தால்...

    கதை எங்குமே திரும்பாமல் நேராக சுரங்கத்தை நோக்கியே பயணிக்கிறது,அந்த வெட்டியானும் லேசிப்பட்ட ஆளில்லை.அவனும் சரியான அழுத்தக்காரன்."இந்த தங்கத்தை ஆட்டையை போடாமல் எப்படித்தான் இருப்பாள்..??? என்னதான் செய்கிறாள் பார்க்கலாம்" என அவளுக்கு உயிரை கொடுத்து உதவும் வெட்டியான் அட்டகாசமான பாத்திரபடைப்பு. அந்த அன்டர்டேக்கர் பற்றிய விவரங்கள் பின்னால்.!!

    இந்த கதையில் பின்னால் பின்னப்பட்ட,நாம் வாழ்க்கையில் எல்லோரும் எதிர்கொள்ளும் இரண்டு சவால்களை பார்க்கிறேன். எல்லோர்முன்பும் வாழ்க்கை அந்த இரண்டு கேள்வியை வைக்கிறது. ஆனால் அதற்கு விடைதெரியாமலேயே வாழ்க்கையை கரைத்தவர்களே அத்தனை பேரும் என்பதே நிதர்சனம்..!

    அந்த முதல் கேள்வி பார்க்க....இங்கே'கிளிக்'

    தொடர்கிறது...>>>>>>>>>>>

    ReplyDelete
    Replies
    1. பணம்: நான் உன்னை எப்படியும் மாற்றிவிடுவேன்...பார்ப்போமா..???

      இதற்கு மனம்: உன்னை நான் எப்படியும் வென்று காட்டுவேன் பார்ப்போமா..???

      என மனம் சவால்விடுகிறது....ஆனால் சத்தமேயில்லாமல் சின்ன திருப்பத்திலேயே நாம் பணத்தின் பக்கம் சாய்ந்துவிடுகிறோம் நமக்கே தெரியாமல்.!!

      இந்த கதையில் வரும் ஒரு ஆதரவற்ற பணிப்பெண் முன்பும் இந்த கேள்விவைக்கபடுகிறது....கிட்டதட்ட ஐம்பது வருடங்கள் முதுகு தண்டு உடைய,கைகள் புண்ணாக மண்ணை தோண்டி எடுத்த மொத்த தங்கத்தையும் யாருக்கும் தெரியாமல் தன்னுடனேயே புதைத்துவிடும் பொறுப்பை, தங்கசுரங்க அதிபரான கஸ்கோ அவரின் பனிபெண் பிரைரி வசம் ஒப்படைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொள்கிறார்.!

      அவள் நினைத்திருந்தால் அந்த ராஜ்ஜியத்திற்க்கே ராணியாகிஇருக்கலாம், ஆனால் அவள் அப்படி செய்யாமல்...அவளின் மாஸ்டரின் ஆசைபடியே அவரின் சட்டபடியான மொத்த சேகரிப்பையும் அவருடனே சேர்த்து புதைக்க முயல்கிறாள்.!

      அதற்கு அவள் சொல்லும் பதில் தான் நம்மை புரட்டி போடும் சிந்தனை.!

      அந்த பதில் பார்க்க...இங்கே'கிளிக்'

      இந்த சிந்தனை தெறிக்கும் புத்தக வரிகள்...

      "காஸ்கோ இஸ்டத்துக்கெல்லாம் இணக்கமாக நான் நடந்துக்கிட்டேன்.சுயம்னு என்னிடம் எதையுமே தக்கவைத்துக்கொள்ள அவர் விட்டுவைக்கவேயில்லை! எரிந்து விழுவார்!ஆங்கராமாய் பாய்வார்!எங்களை இழிவுபடுத்த என்னென்ன மாதிரி உக்தியேல்லாம் கையாள்வார் தெரியுமா? எதுஎப்படியானாலும் அவரைப் போல இருக்க கூடாதுன்னு உறுதி பூண்டேன்.தன்னை மாதிரியே என்னையும் தரங்கெட்டவளா மாற்றிடத் துடிச்சார்!

      அவரோட முழியைத் தோண்டனும்,குரல்வளைய நெரிக்கணும்கிற மாதிரியான எண்ணம் என் மனசிலே எழாத நாளே கிடையாது!நாம கிளம்பின வினாடிதொட்டு,வல்லூறுகளுக்கு விருந்தா இந்தப் பிணத்தைக் கடாசிட்டா என்னங்கிற நினைப்பு வழி நெடுக இருந்துக்கிட்டே யிருக்கு!ஆனால்,அப்படிப் பண்ணிட்டா அவருக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிடுமே.!

      என்கிட்டேர்ந்து எல்லாவற்றையும் எடுத்துகிட்டார். என் கண்ணிய சிந்தனைகளைத் தவிர.!"


      மேற்கண்ட வரிகளை பார்க்க...இங்கே'கிளிக்'

      தொடர்கிறது...>>>>>>>>>>>>

      Delete
    2. எவ்வளவோ விதமான கதைகளை படித்திருக்கிறேன்,பணத்தில் மேல் உள்ள ஆசையை வைக்காமல்...நேர்மை,கடமை,நம்பிக்கை,வாக்கு,சொல்தவறாமை என பல உணர்வு போராட்டத்தை மையமான வைத்து ஏராளாமான படைப்புகளை கடந்திருக்கிறேன். ஆனால்...கிட்டதட்ட இருபத்திஐந்து வருடங்களுக்கு முன்பு என் வாழ்க்கையை தீர்மானித்த ஒரு வலிமையான சிந்தனையை நினைவுட்டும் படைப்பை சந்தித்ததாக எனக்கு நினைவில்லை.காது வழியே கேட்ட அந்த சிந்தனையை இத்தனை வருடங்களுக்கு பிறகு இந்த படைப்பில் தான் சந்திக்கிறேன்.!

      அந்த சிந்தனை பார்க்க...

      இங்கே'கிளிக்'-1


      இங்கே'கிளிக்'-2

      இந்த சம்பாஷனையை சிறுவயதில் (சொல்ல) கேட்டநான்... எது சரி? எது உயர்வு? என அளந்து பார்த்து.... என்னை உயர்வின்பக்கம் நகர்த்திக்கொள்ளும் விழிப்புணர்வை வளர்த்துக்கொள்ள உதவியது.!. ஒன்று உயர்வுஉள்ள இடத்தை நோக்கி நான் நகர்வேன்,அல்லது என்னிடம் உள்ள சரியானவற்றுக்கு எதிராளி ஏறிவர வேண்டும்.! எக்காரணம் கொண்டும் இழப்புக்கு பயந்து சமரசம் கிடையாது.!

      இதை இன்னும்கொஞ்சம் இறங்கி யார்த்தமாக சொல்ல வேண்டுமென்றால்...

      பன்றியுடம் சேர்ந்து மாடு கழிவை சாப்பிடுவது கிடையாது.! அந்த பன்றி வேண்டுமானால் மாடுடன் சேர்ந்து புல்லை திங்கலாம்.!!

      கிட்டதட்ட இந்த வலிமையான சித்தாந்தத்தை மையமாக வைத்து இதுவரையில் இத்தனை காலத்தில் ஒரு படைப்பையும் நான் படித்தே இல்லை. இந்த சிந்தனையை மையாக வைத்து ஒரு காமிக்ஸ் வந்துள்ளது சிறப்போ சிறப்பு..! என்னை இன்னும் வலிமையாக்க மறுபுனரமைப்பு செய்துகொள்ள உதவும்படி இந்த படைப்பு அமைந்துள்ளது..!

      தொடர்கிறது....>>>>>>>>>>>>>>>>>>

      Delete
    3. இப்படியே தொடர்ந்து எழுத எனக்கே கொட்டாவி வருவதால்...இந்த அளவில் இதை நிறைவு செய்கிறேன்.அப்புறம் ஒரு சின்ன தகவல்...

      மேற்கண்டவை அண்டர்டேக்கர் பற்றிய ஒரு பதிவிற்காக எழுதிய ஒரு சின்ன பகுதி மாத்திரமே.! :)))

      முழுசும் படிச்சா 'மெர்சலாவிங்களா..? மெண்டல் ஆவீங்களா..?' அப்படிங்கிறது சொல்லத்தான் வேண்டுமா என்ன.!

      பின்னாளில் அடுத்த பாகம் வரும் நாளில் தொடரும்.!
      நன்றி,வணக்கம்.!!

      நட்புடன்,
      மாயாவி.சிவா

      Delete
    4. மாயாவி.சிவா : சூப்பர் - டூப்பர் அலசல் ! காத்திருக்கும் அடுத்த சுற்றுக் கதைகள் இந்தத் துவக்கத்துக்கு நியாயம் செய்யும் விதமிருப்பின் அட்டகாசமாய் இருக்கும் !Fingers crossed !

      Delete
    5. செம சிவா. அருமையான அலசல். கதையை வாழ்க்கையில் உள்ள விசயங்களுடன் ஒப்பிடுவது அருமை.
      கதையை படித்து முடித்த பின்னர் அதை அலசும் உங்கள் ஈடுபாடு ஆச்சரியபடுத்துகிறது.

      Delete
    6. அட்டகாசம் மாயாவி சிவா அவர்களே....
      வித்தியாசமான விமர்சனம்.

      Delete
    7. @ மாயாவிகாரு

      வித்தியாசமான கோணத்தில் ஒரு பணிப்பெண்ணின் கேரக்டரை அலசி ஆராய்ந்து அசத்திட்டீங்க!

      செம்ம!

      Delete
    8. எழுந்து நின்று கை தட்டும் படம் இருபத்து ஏழு.....

      Delete
  25. இந்த மாத இதழ்கள் ரேட்டிங்,
    1.ஸ்மர்ப்ஸ்-விண்ணில் ஒரு பொடியன்-10/10,
    2.கமான்சே-ஓநாயின் சங்கீதம்-09/10,
    3.கேப்டன் பிரின்ஸ்-
    நதியில் ஒரு நாடகம்-10/10,
    கொலைகாரக் கானகம்-09/10.

    ReplyDelete
    Replies
    1. 1.ஸ்மர்ப்ஸ்-அட்டைப் படத்தில் சொன்னது போலவே முழு வண்ண சிரிப்பு மேளாதான்,இருமுறை வாசிப்பில் நிறைவு,அழகான கதையோட்டத்திற்கு சீரான,சிரிப்பான மொழிபெயர்ப்பு நன்கு துணை செய்துள்ளது,இந்த கதையின் வாசிப்பிற்கு பின் ஸ்மர்ப்ஸ் மீதான ஈர்ப்பு இன்னும் ஒருபடி மேலே அதிகரித்துள்ளது.
      2.கமான்சே- அட்டகாசமான கலரிங்,வித்தியாசமான பின்னணிகள்,மெலிதான சஸ்பென்ஸ்,பங்கரையான முகங்களை தவிர்த்து பார்த்தால் கமான்சே ரசனைக்குரியவர்.
      3.கேப்டன் பிரின்ஸ்- இரு சாகசங்களுமே நிறைவு,முதல்முறை வாசிப்பு என்பதால் எதிர்பார்ப்பு இருந்தது,அதை அழகாய் நிறைவு செய்தது,நதியில் ஒரு நாடகம் நல்ல விறுவிறுப்பான வாசிப்பை உறுதி செய்தது.வழக்கம்போல் அடர்த்தியான கலரிங்,கடல் சார்ந்த பின்னணிகள் இன்னும் கூடுதல் சிறப்பு.
      -மொத்தத்தில் இந்த மாதம் நிறைவு.

      Delete
    2. Arivarasu @ Ravi : கால அளவுகோல்கள் இல்லா அந்த கடல் சார்ந்த கதைகளை முதன்முறையாய்ப் படிக்கிறீர்களெனில் லயிக்கும் அனுபவம் நிச்சயம் நண்பரே !

      Delete
    3. பிரின்ஸ் ஸ்பெஷல் இம்மாத கூரியரில் இல்லாது போயிருப்பின் - இந்த மனநிறைவு சாத்தியமாகி இராது என்பேன் !! அதன் பொருட்டே கடைசியில் ஓட்டமாய் ஓடினோம் !

      Delete
    4. ///அழகான கதையோட்டத்திற்கு சீரான,சிரிப்பான மொழிபெயர்ப்பு நன்கு துணை செய்துள்ளது,இந்த கதையின் வாசிப்பிற்கு பின் ஸ்மர்ப்ஸ் மீதான ஈர்ப்பு இன்னும் ஒருபடி மேலே அதிகரித்துள்ளது.///

      செம & உண்ம!

      Delete
  26. 💟ஓநாயின் சங்கீதம்! 💟
    =====================

    😤மாற்றம் ஒன்றே மாறாதது என்ற
    காரல் மார்க்ஸின் கூற்றிற்கு இணங்க
    கிரீன்ஸ்டோன் ஃபால்ஸ் ஊர் பழமை போய் நவீன மாற்றத்திற்கு மாறிவரும் சூழலில் புதிதாக ஊருக்கு வரும் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி ஏஜெண்ட் மற்றும் அவனது கைத்தடியை பாரில் சந்திக்கிறான் நாயகன் ரெட் டஸ்ட்.

    🔊தொடர்ச்சியாக அரங்கேறும் பண்ணைகளின் தீ விபத்தும் அதற்கு இனையாக இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி ஏஜெண்ட் அவ்விடங்களுக்கு வருவதும் சந்தேகத்தின் பலன் அடிஸன் டி வேகா (இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி ஏஜெண்ட்) எதிராக அமைகிறது.

    📣குற்றவாளி யார் என்ற கேள்வி தலைக்கு மேல்?

    🎤666 யும் எறிந்த பண்ணைகளில் ஒன்று.
    சொல்ல வேண்டுமா?
    ரெட்டஸ்ட் மற்றும் அவனது செவ்விந்திய நண்பன் மார்க் ஆஃப் மூன் உதவியுடன் தொடர்கிறான்.

    🎤பண்ணைகளை கொழுத்தும் ஓநாய் பழி ஒன்று பாவம் ஒன்னு என "பாவ்னீஸ் " செவ்விந்தியர்களின் அம்புகளை பயன்படுத்தி எறிக்கிறான்.

    🎸ஓநாயின் தேடுதலில் திடுக்கிடும் திருப்பம் அரங்கேறுகிறது.

    🎼ஹெர்மானின் தூரிகை வர்ண ஜாலம் காட்டி உள்ளது.
    666 பண்ணை தீபிடித்ததை கமான்சே சலூனில் சொன்னதும் ரெட்டஸ்ட் கிளம்பும் காட்சி தொடர்ந்த பயணம்
    அதன் தொடர்ச்சியாக பண்ணை எறியும் சூழல் அங்கே வரும் அடிஸன் அவனது கைத்தடி கைகலப்பு என மாறும் காட்சி என 14 முதல் 23 வரை தத்ரூபமாக உள்ளது.

    🎻பக்கம் 26 முதல் ரெட்டஸ்ட் மற்றும் மார்க் ஆஃப் மூன் பயணிக்கும் காட்சி ஒவ்வொரு பிரேமும் வேற லெவல் வானவில் தோரணங்கள்......
    அதிலும் பக்கம் 29 ல் உள்ள ஒவ்வொரு காட்சியும் செதுக்கி உள்ளார்.
    ரெட்டஸ்ட் ஓநாயை தேடும் முயற்சியில் பதுங்கி செல்லும் காட்சி அவரை கொல்ல முயற்சிக்கும் எதிரி விடும் அம்பு அவரை தாக்கும் சூழல் 29 பக்கத்தின் கடைசி மூன்று கட்டம் வானவில் பூகம்பம்.!!!!

    🎼பக்கம் 34 ல் கடைசி கட்டத்தில் மாலை மங்கும் காட்சி தொடங்கி பக்கம் 35 ல் நிலவு பொழியும் சூழலில் ஓநாயை தேடும் வேட்டை தொடர்கிறது.
    இரவுசூழல் நீல வண்ணத்தில் லயக்கும் சூழல் தொடர்கிறது.
    பக்கம் 36 அ நீல வண்ணத்தில் இருந்து நெருப்பு எரியும் காட்சி மாறும் காட்சி அடடா....
    💋💋💋 36 லிருந்து இறுதி வரை வர்ணங்கள் மாறி மாறி ஜொலிக்கின்றன.

    💔💔💔இறுதியில் கதையின் மர்ம முடுச்சு டாக்டர் வெட்சின் மருத்துவம் பார்க்கும் சாக்கில் ஒவ்வொரு பண்ணைகளின் பண பரிமாற்றம் மற்றும் பணம் இருக்கும் இடம் பண்ணைகளின் பலம் மற்றும் பலவீனம் அறிந்த ஓநாயாக வலம் வந்து பணத்தை திருடிவிட்டு பண்ணைகளை கொழுத்திவிட்டு பலியை பாவ்னீஸ் செவ்விந்தியர்களின் அம்புகளை பயன்படுத்தி " வெள்ளையர்- செவ்விந்தியர்களின் மோதலில் " தப்பிக்கும் ஓநாயின் சங்கீதம் மரண காணமாக மார்க் ஆஃப் மூன் டாக்டரின் மண்டை தொலியை உறித்து இசைக்க கதை சுபமாகிறது.

    💞அட்டகாசமான கதை,
    மனதை கொள்ளை கொள்ளும் ஹெர்மானின் தூரிகை......

    💗ஹெமானுக்கு ஒரு ராயல் சல்யூட்.... 💗💗💗💗

    www.lioncomics.in

    💓யாழிசை செல்வா 💓
    10/12/2017

    ReplyDelete
    Replies
    1. yazhisai selva : கலக்கல் விமர்சனம் !!

      Delete
    2. // தப்பிக்கும் ஓநாயின் சங்கீதம் மரண காணமாக மார்க் ஆஃப் மூன் டாக்டரின் மண்டை தொலியை உறித்து இசைக்க கதை சுபமாகிறது. //

      சூப்பர்.

      அதே போல் இந்த தொடரில் இவர் தான் ஹீரோ என்று இல்லாமல் யாரும் ஹீரோவாக இருக்கலாம் என்ற வகையில் இருக்கும். இந்த கதையில் பார்த்தால் மார்க் அப் மூன் தான் ஹீரோ.

      Delete
    3. எடிட்டர் சார் அவர்களுக்கு நன்றிகள் பல.....

      Delete
    4. Paranitharan.k and parani from Bangalore lot of thanks bro.....

      Delete
    5. @ yazhisai selva

      சூப்பர் விமர்சனம்!

      Delete
    6. யாழிசை நச் விமர்சனம்.

      Delete
  27. 1.undertaker.
    2.durango.
    3.tex irumbukudhirai.
    Cuba tex was horrible according to me.
    Sorry.

    ReplyDelete
    Replies
    1. ARVIND : No reasons to apologise for your thoughts on Cuba Tex.

      ரசனைகளில் பன்முகங்கள் இருப்பது இயல்பு தானே நண்பரே !

      Delete
  28. கிராபிக் நாவலை இந்த வருடம் தாங்கள் தேர்ந்தெடுத்த விதத்தை ,அவை கொணர்ந்த வெற்றியை ,அதனால் தாங்கள் அடைந்த மகிழ்ச்சியை என தாங்கள் பகிர்ந்த விதமே ஓர் " அழகான கிராபிக் சிறுகதை " படித்த உணர்வை கொண்டு வருகிறது .கிராபிக் என்றாலே காத தூரம் ஓடும் நிலையில் இருந்து இப்பொழுது உங்கள் பதிவே " கிராபிக் சுவை " போல இனிமையாக உள்ளது என எழுத தோன்றும் பொழுதே இந்த வருட கிராபிக் நாவல்களின் வெற்றியை பறைசாற்றி விடலாம் .


    வேப்பம் மருந்து போல கசக்கும் திரவித்தை கண்டு அலறி அடித்து ஓடும் குழந்தைகளை போல இருந்த பலரை தற்பொழுது குழந்தைகளே அழுது அடம் பிடித்து கேட்கும் " இனிப்பு பானம் " போல மாற்றியது அருமை.வேண்டா வெறுப்பாய் படிக்கும் இதழாய் இருந்த இந்த கிராபிக் இதழ்கள் இப்பொழுது விரும்பி படிக்கும் இதழ்களாய் மாறிபோனதே இந்த வருடத்தின் மிக சிறப்பு என்பேன் .இது போன்ற கதைகளின் களம் வண்ணத்தில் வெளிகொணரும் வீரியத்தை விட கறுப்பு வெள்ளையில் அதிகம் என்பது எனது எண்ணம் .அதற்கு காரணியாய் அமைந்த த/எங்கள் நிதி நிலை காரணம் இந்த விதத்தில் நன்றே...:-)


    எனவே என்னை பொறுத்தவரையும் மிக சிறப்பான ஆண்டாக எண்ண வைத்த இதழ்களில் முதலிடம் இந்த கிராபிக் நாவல்களே..மாதம் ஒரு டெக்ஸ் போல மாதம் ஒரு கிராபிக் நாவல் என்றாலுமே
    இப்பொழுது சிறப்பே..(எனக்கு...)

    ReplyDelete
    Replies
    1. எப்படி இருந்த 'தல' இப்டி ஆகிடுச்சே ?!!!

      :-)

      Delete
    2. பின்றீங்க தலீவரே!

      Delete
  29. Dear mayavi Siva,

    உங்கள் விமர்சனம் சிறப்பாக உள்ளது.really awesome பிரெஞ்சு மேய்ஞ.சுட்டீங்க..

    ReplyDelete
  30. Durango one of my all time favorite.
    Undertaker is awesome story.
    Shania... Great but story line seems to liitle bit typical template for vanhamme

    ReplyDelete
  31. Comanche: Red dust ஓநாயின் சங்கீதம் கதையை படித்தபின் நம் சந்தாவில் ரெகுலராக தொடரவேண்டிய நாயகர் இவர் என்று நினைக்க த் தோன்றுகிறது.
    எடிட்டர்ஜி, நம் நிலைப்பாடு என்ன.. ரெட் டஸ்டைப் பற்றி

    ReplyDelete
    Replies
    1. leom : அட்டவணையில் மாற்றம் இராது என்பதே நமது நிலைப்பாடு சார் ! ஒரு சின்ன பிரேக் தருவோமே 666 பண்ணையின் மனிதர்களுக்கு !

      Delete
    2. ஓகே சார்! ஆனால், 2019'ல் 666 பண்ணைக்காரர்களுக்கு 2 சான்ஸ் கொடுங்கள்.

      Delete
    3. //ஓகே சார்! ஆனால், 2019'ல் 666 பண்ணைக்காரர்களுக்கு 2 சான்ஸ் கொடுங்கள்.//
      +1

      Delete
    4. கமான்சே இல்லாதது மிகுந்த வருத்தமே எடிட்டர் சார்....

      Delete
    5. Comanche: Red dust - சித்திரங்கள் மட்டுமே நன்றாக உள்ளது.
      தேவைப்பட்டால் 2019-ல் பார்த்துக் கொள்ளளலாம்.

      Delete
  32. டிசம்பர் மாத இதழ்களின் விமர்சனம்:

    க) ஸ்மார்ப்

    அட்டைப்படம்: அருமை
    சித்திரங்கள் : அருமை
    கதை : அருமை
    ஒரு வரி விமர்சனம்: ஜாலியாக…சந்தோஷமாக உணர்ந்தேன் – படிக்கும் போது.

    உ) கமான்சே

    அட்டைப்படம்: அருமை
    சித்திரங்கள் : அருமை
    கதை : சுமார்
    ஒரு வரி விமர்சனம்: ஒரு முறை படிக்கலாம். பிறகு நிரந்தரமாக பரண் மேல் இடம் கொடுத்து விடலாம்.


    ங) இரும்பு கை மாயாவி

    அட்டைப்படம்: சுமார்
    சித்திரங்கள் : சுமார்
    கதை : சுமார்
    ஒரு வரி விமர்சனம்: இன்னும் மெருக்கேற்றி இருக்கலாம் வசனத்தை…பிழைகளை பார்க்க முடிந்தது.

    ReplyDelete
  33. இந்த வருடம் பெரும்பாலான எல்லா கதைகளுமே சிறப்பு,மிகவும் கவர்ந்தவை,
    1.ட்யுராங்கோ-சத்தமின்றி யுத்தம் செய்,
    2.லார்கோவின்-சதுரங்கத்தில் ஒரு சிப்பாய்,
    3.lady "S"-விடை கொடு ஷானியா,
    4.ரிப்போர்ட்டர் ஜானி-ஒரு சிலந்தியின் வலையில்,
    5.ஜேசன் ப்ரைஸ்-ஒரு திரை விலகும் நேரம்,
    6.டெக்ஸ்-க்யுபா படலம்,இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல்,கவரிமான்களின் கதை.
    7.மர்ம மனிதன் மார்ட்டின்-வேட்டையரை வேட்டையாடுவோம்,பனியும் ஒரு புதிர்ப் பெண்ணும்.
    8.கார்ட்டூன் ஸ்பெஷல்-ஒரு செரிப் சிப்பாயாகிறார்,விண்ணில் ஓர் பொடியன்,டாக்டர் பொடியன்,ஒற்றைக் கை பகாசுரன்,மதியில்லா மந்திரி,சிக்பில் கிளாசிக்,லக்கி லூக் கிளாசிக்.
    9.கிராபிக் நாவல் ஸ்பெஷல்-என் சித்தம் சாத்தனுக்கே சொந்தம்,தி அண்டர்டேக்கர்,ஒரு முடியா இரவு,கனவுகளின் கதையிது.
    10.கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல்,கேப்டன் டைகரின்-ரத்தக் கோட்டை.

    ReplyDelete
  34. மிக அருமையாக ஒரு ப்ளாஷ்பேக்கைக் கொடுத்திருக்கிறீர்கள். பிரமாதம்! அண்டர்டேக்கர், லேடி எஸ், டியூராங்கோ, சூப்பர் 6 இதழ்கள் என மிகப் பிரமாதமான இதழ்கள் வெளியான இந்தாண்டே ஒரு ஹைலைட் ஆண்டுதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

    என்னைப் பொருத்த வரை டாக்புல்லிடம் உதை வாங்கும் கிட் ஆர்டின் போல, சொந்த வாழ்க்கையில் பல குட்டிக் கரணங்களைப் போட்டுக் கொண்டிருந்ததால், முதல் தடவையாக ஏராளமான இதழ்களைப் படிக்காமல், இன்னும் ஷெல்பில் காக்கவைத்திருக்கும் ஆண்டு இது. இப்போது எல்லாம் செட்டில் டவுன் ஆகிவருவதால், அடுத்த ஓரிரு மாதங்களுக்கு விடிந்தாலும், அடைந்தாலும் அது நம் புத்தகங்களோடே நடக்கப்போகிறது எனக்கு! அதுவும் மகிழ்ச்சிதான் எனக்கு!

    ஈ.வி: அப்புறம் எப்படி மேலே முதல் பாராவில் அண்டர்டேக்கர், டியூராங்கோ என லிஸ்ட் போட்டீர்கள்?

    நான்: ஹிஹி! நாங்கல்லாம் கிலோகணக்கை வைத்துக்கூட பிரமாதம்னு சொல்லுவோம்! :-))))))))

    ReplyDelete
  35. கமான்சே....வேண்டும் அதே போல்
    வேதாளன் வேண்டும் இதுவே என் வேண்டுகோள் நன்றி....

    ReplyDelete
    Replies
    1. வேதாளர்! வேண்டும்! வேண்டும்!
      வேதாளர்! வேண்டும்! வேண்டும்!

      Delete
  36. அடுத்து இந்த வருட சிறப்பு நீல பொடியர்கள்...


    ஆரம்பத்தில் நீல பொடியர்களை கண்டு எப்படா பக்கம் முடியும் என்ற நிலை இருந்து வந்தது எனக்கு அதிர்ச்சியே.காரணம் மிக பெரிய எதிர்பார்ப்பை அவர்கள் ஈடு செய்யவில்லை .ஆனால் இந்த வருடம் அதே நீல பொடியர்கள் ஏமாற்றம் அளிக்காமல் மனநிறைவை தந்தனர் என்பதும் உண்மை சார்.

    ReplyDelete
  37. கமான்சேயின் கதை 2018 அட்டவணையில் இடம் பெறாமல் போனதற்கு காரணம் அதன் sales performance-சோ, ரொம்பவே யதார்த்தம் ரொம்பவே நிதான நடை என்பதோ, மனதை முழுமையாக கொள்ளைக் கொள்ளவில்லை என்பதோ அல்ல. இந்த ஆண்டிற்கான கமான்சேயின் ஓநாயின் சங்கீதம் இதழ் வெளியீடு கடைசி மாதமாக அமைந்துவிட்டதுதான் காரணம். இது முன்னரே வெளிவந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது.

    ReplyDelete
  38. இந்த வருடத்தின் ஏமாற்றங்கள் ஏதுமில்லை என சொல்லமாட்டேன் சார் .இரு ஏமாற்றங்கள் உண்டு .இரண்டுமே அதிகம் எதிர்பார்த்து ஏமாந்து போனதுதான் .

    ஒன்று டெக்ஸ் வில்லர் மூலம் .டெக்ஸ்வில்லர் மூலம் அதிர்ச்சியா என சிலர் அதிர்ச்சி அடையலாம் .ஆனால் அதிலும் நிஜம் கலந்து உள்ளதே.


    தீபாவளி மலராக வந்த ஒரு தலைவன் ஒரு சகாப்தம் கொஞ்சம் ஏமாற்றம் ஏற்படுத்தியது உண்மை.ஆனால் அதன் காரணிகள் புத்தகத்தின் தரமான தயாரிப்பிற்கோ ,அட்டகாசமான கதை தரத்திற்கோ அல்ல.உண்மையை சொல்ல போனால் அட்டகாசமான ,ஒரு வித்தியாசமான கதை பாணி அந்த இதழ் .ஆனால் அந்த கதையில் டெக்ஸ் வில்லரை எந்த பக்கத்திலுமே காண முடியவில்லை என்பது மிக பெரிய ஏமாற்றம்.தாங்கள் ஒரு முறை டெக்ஸ் வில்லரின் சாகஸங்கள் பல ஓவியர்களால் படைக்கபடுவதால் டெக்ஸ் அவர்களின் முக தோற்றம் மாறுபடுவது உண்டு .ஓவியபாணி முக்கியமா ,கதை முக்கியமா என தாங்கள் வினவும் பொழுது கதை ஓகே சார் என பதில் அளித்ததையும் நான் உணராமல் இல்லை.ஆனால் நான் எதிர்பார்த்த அந்த டெக்ஸ் அவர்களின் முக தோற்றம் கொஞ்சம் வேறுபடலாம் ( சாத்தான் வேட்டை போல ..) கதை பட்டாசாய் பறந்தால் போதும் என நினைத்து அந்த எண்ணத்தை தெரிவித்து இருந்தேன்.ஆனால் ஒரு தலைவன் ஒரு சகாப்தம் இதழில் இந்த அளவிற்கு டெக்ஸ் (ஆ) மாற்றம் அளிப்பார் என நினைக்க வில்லை.


    அந்த இதழ் வெளிவந்து படித்து முடித்த பொழுது டெக்ஸை காணவில்லை என்றாலும் அதன் கதை பாணியும்..முடிவும் அதற்கு நியாயம் செய்தது என ஒரு நிறைவு ஏற்பட்டது உண்மை என்றாலும் முழு திருப்தி டெக்ஸாக ஏற்பட்டதா எனில் கொஞ்சம் ஏமாற்றமே .கதை பாணியே டெக்ஸ் முக வேறுபாட்டிற்கு நியாயம் செய்ததாக தோன்றினாலும் படிக்கும்..,படிக்க போகும் நண்பர்கள் அது டெக்ஸ்வில்லர் சாகஸம் தான் என உறுதியுடன் படிக்க தொடங்கும் பொழுது அந்த பலத்த முக மாறுபாடு கொஞ்சம் ஏமாற்றம் அளித்தது உண்மை.

    எனவே ஓவியபாணி முக்கியமில்லை கதையே முக்கியம் என்ற எனது பழைய முடிவை ஓவியபாணியும் முக்கியமாக கொஞ்சமாகவாது டெக்ஸ் முக பாணியை கொண்டுவருவதும் முக்கியமே என முடிவை மாற்றி கொள்கிறேன் சார்.

    ReplyDelete
    Replies
    1. நீதி : தீபாவளி மலர்களில் ரிஸ்க் எடுக்கக்கூடாது.

      Delete
  39. அடுத்த இந்த வருடத்தின் மிக பெரிய ஏமாற்றம் தங்களால் ஏற்பட்டது என்பதும் அதிர்ச்சிகரமான விசயமே...



    சாதாரண வாசகன் முதல் பிரபல பதிப்பகநிறுவனர் வரை தங்களின் சி.சிறு வயதில் தொடரை விரும்பி படித்து வந்த நிலையில் அதனை கொஞ்சம் கொஞ்சமாக மானியம் கொடுப்பது போல் கொடுத்து பிறகு ஒன்றுமே சொல்லாமல் மானியத்தை நிறுத்தும் செயல் போல இந்த தொடருக்கும் நேர்ந்து போனது டெக்ஸ் அளித்த ஏமாற்றத்தை விட அதிகமானது .ஏதோதோ போராட்டம் என்ற பெயரில் நாங்கள் ஈடுபட்டாலும் மக்களின் போராட்டத்தை அரசு ஒடுக்கவதை போல ஒடுக்கினால் கூட பரவாயில்லை அரசியல் தலைவர்களின் போராட்டத்தை மக்கள் கண்டு கொள்ளாததை போல தாங்களும் கண்டு கொள்ளாமல் போவது தான் ஏமாற்றத்திலும் ஏமாற்றம்.

    புது வருடத்தில் ஆவது சிங்கத்தின் சிறு வயது ஏறி கொண்டு போகுமா இல்லை நின்ற வயதிலியே தடை போடுமா ?!


    ஒவ்வொரு வருட ஏமாற்றத்தையும் கேட்டு நிவர்த்தி செய்யும் தாங்கள் இந்த வருட பெரிய ஏமாற்றமான இதனை அடுத்த வருடம் நிவர்த்தி செய்வீர்களா ?


    காத்திருக்கிறோம்...!

    ReplyDelete
    Replies
    1. ஒட்டு மொத்த சங்கத்தினரின் ஒருவருச உணர்வுகளையும் இந்த ஒரே பின்னூட்டத்தில் எழுதி அசத்திட்டீங்க தலீவரே!

      நியாயப்படி, இதைப் படிக்கறப்போ (எதிரணியின்) கல்நெஞ்சு கூட கரையணும்...
      கரையாட்டிக்கூட பரவாயில்ல, 'கெக்கபிக்கே'னு சிரிக்காம இருந்தாக்கூடப் போதும்!

      Delete
  40. ஒரே ஒரு தலீவர் வர்ரார் வழிவிடுங்கோ.


    தலீவர் ராக்ஸ்.👏👏👏👏👏👏👏👏

    ReplyDelete
  41. East or west
    அண்டர்டேக்கர் is best

    ReplyDelete
  42. அப்புறம் சார் ஒரு சின்ன வேண்டுகோள், ஜனவரியில் வரும் தோர்கிலின் சாகசமான கடவுளரின் தேசத்தை ஹார்ட் பைண்டிங்கில் வெளியிட்டால் மிகவும் நிறைவாக இருக்கும்.இதுபோன்ற 4 பாக சாகசங்கள் ஹார்ட் பைண்டிங்கில் வருவதே சிறப்பு.
    அட்டவணை அறிவிப்பில் இது பற்றி எந்த குறிப்பும் இல்லை, எனவே ஆவண செய்வீர்கால் என்று நம்ப்ய்கிறோம்.

    ReplyDelete
  43. இரத்தப் படலம் முன்பதிவு நிறைவாக செல்கிறதா சார்?

    ReplyDelete
  44. கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஏனோ ரசனையில் ஒன்றிப்போகவே முடியல. ! அங்கிட்டு போய் விளையாடு என்று ரசனை யில் ஓரங்கட்டிய மாதிரி. ஒரு பீலிங். !

    இந்த வருடமாவது அனைத்து தரப்பினரும் ரசிக்கும் ஜனரஞ்சகமான கதைகளை ஆரம்ப த்தில் களம் இறங்கி விட்டு போக போக புதுவிதமான கதைகள் மற்றும் நாயகர்களை களம் இறங்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. !!!!

    ( திருவிளையாடல் தருமி மாதிரி எழுதி கொடுத்த கதையே போதும் !!!! )

    ReplyDelete
  45. எடிட்டர் சார்
    எவ்வ்வளவு நீண்ட பதிவு!!
    இவ்வாரம் நண்பர்களின் பின்னூட்டங்கள் களை கட்டப் போவதற்கான விதையினை விதைத்து விட்டீர்கள்.சூப்பர் சார்.
    மெகா சைசில் டெக்‌ஸ் இவ்வாண்டு அளித்த ஏமாற்றத்தை தவிர மற்ற கதைகளெல்லாம் இவ்வாண்டு சிறப்பாகவே இருந்தன. பெரிய அளவில் மொக்கை போட்ட கதைகளை தேர்ந்தெடுப்பது சற்று சிரமம்தான்.
    ஆனால் என்னை பொருத்தவரை இவ்வாண்டில் உங்களுடைய முக்கியமான சாதனை என்னை பொருத்தவரை டமால்... டுமீல்... பூம்...ய்ய்யீக்க்...சதக்..என்ற சத்தங்கள் அதிகம் இல்லாத கிராபிக் நாவல்களின் பக்கம் எங்கள் கவனத்தை திருப்பியதுதான்.காமிக்ஸ் என்றாலே பலம் பொருந்திய நாயக நாயகிகள், உளவாளிகள், அதிரடிகள், சேசிங், சண்டை, தோட்டா முழக்கங்கள் கார்டூன் கதைகள். இப்படியாக மட்டுமே நாற்பத்தைந்து ஆண்டுகளாக வாசித்து ஏறக்குறைய கடிவாளம் கட்டிய குதிரையாய் பயணித்த என்னைப்போன்றோருக்கு இது மட்டுமே காமிக்ஸ் இல்லை.இதோ பாருங்கள் அதன் இன்னொரு பரிமாணத்தை என்று கிராபிக் நாவல் பக்கம் திருப்பியதே! மனித உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்யும் சம்பவங்கள், மனித மனங்களின் வன்மங்கள், ஆழ்மனதின் சோகங்கள், ரணங்கள்,வலிகள் இவற்றைக் கொண்டே உருவாக்கப்பட்ட நல்ல படைப்புகளை வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் எங்கள் ரசனைகளை மட்டுமே அடித்தளமாக்கி வெளியிட்டு வெற்றியும் பெற்றதே இவ்வாண்டில் உங்களது மிகப் பெரும் சாதனை. 2017 கிராபிக் நாவல் என்கிற புதிய உலகத்தின் கதவினை திறந்திருக்கிறது.இனி வரும் ஆண்டுகளில் அந்த கதவுக்குப் பின்னே மறைந்திருக்கும் பலவித காமிக்ஸ் காவியங்கள் எங்கள் கண் முன்னே காணக் காத்திருக்கிறது என்ற எண்ணமே இன்னமும் எனது ரசனைகளை அதற்கேற்ப தயார் படுத்த வேண்டும் என்ற ஆவல் உந்திக் கொண்டுள்ளது.வரப் போகும் காலங்கள் உங்களுக்கு சவாலான ஒன்றாகத்தான் இருக்கப்போகிறது.இதுவரை வந்த கிராபிக் நாவல்களை மிஞ்சும் கதைகளை நீங்கள் தேடவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதை உங்களால் மறுக்க இயலாது. ஆனால் எங்களின் ரசனைகளை எங்களைவிட நன்றாக உணர்ந்திருக்கும் உங்களுக்கு இது ஒன்றும் கடினமான பணியல்ல.உங்களது சாதனைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகப்போவதை நாம் அனைவருமே அடுத்த ஆண்டின் இறுதியிலும் இதே போன்று அல்லது இதைவிட அதிகமாக பகிர்ந்து கொள்ளப் போவது நிச்சயம். இன்னமும் பல புதிய கதவுகளை திறந்து எங்களுக்கு புதிய அனுபவங்களை உணர வாய்ப்பளியுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. ////காமிக்ஸ் என்றாலே பலம் பொருந்திய நாயக நாயகிகள், உளவாளிகள், அதிரடிகள், சேசிங், சண்டை, தோட்டா முழக்கங்கள் கார்டூன் கதைகள். இப்படியாக மட்டுமே நாற்பத்தைந்து ஆண்டுகளாக வாசித்து ஏறக்குறைய கடிவாளம் கட்டிய குதிரையாய் பயணித்த என்னைப்போன்றோருக்கு இது மட்டுமே காமிக்ஸ் இல்லை.இதோ பாருங்கள் அதன் இன்னொரு பரிமாணத்தை என்று கிராபிக் நாவல் பக்கம் திருப்பியதே!////

      ஒரு சீனியர் வாசகரிடமிருந்து இப்படியாப்பட்ட ஒரு பதிவு வந்திருப்பதே கி.நா'களின் வெற்றியை பறைசாற்றுகிறது!

      வாழ்க கி.நா! வளர்க தானா!

      Delete
  46. என்னுடைய 2017 வருடங்களுடைய highlights என்றால்.

    1 அண்டர்டேக்கர்
    2 ஜேசன் பிரைஸ்
    3 டுரங்கோ
    4 ஒரு முடியா இரவு
    5 ஷானியா
    6 இரும்பு குதறியில் ஒரு தங்க புதையல்
    7 என் சித்தம் சாத்தனுக்கே சொந்தம்
    8 தரைக்கடியில் தங்கம்
    9 தோர்கள் - கனவு மெய் படவேண்டும்
    10 தடை பல தகர்த்தெழு

    புதியதும் - பழையதும்
    ----------------------

    விடை கொடு ஷானியா - ஷானியா யார், அவள் பின்னணி என்ன என்பதை நேர்கோட்டில் சொல்லாமல், முன்னும் பின்னும் சென்று வரும் கதை. சித்திரங்கள் அற்புதம். ஆனாலும் ஒரு சிறு அலுப்பு தட்டுவதை மறுப்பதற்கில்லை.

    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
    பழையது
    --------

    திகில் தீவு - மாடஸ்டி ஒரு தீவின் மக்களை அங்கு ஆட்சி செய்யும் ஒரு கொடுங்கோலனிடமிருந்து காப்பாற்றும் கதை

    திகில் கனவு - ஜானி ஒரு பெரிய எஸ்டேட்டில் மாட்டி கொண்டு உயிரோடு வேட்டையாட பட, அங்கிருந்து தப்பிக்கும் கதை. இதில் ஆக்சன் ஹீரோ அவதாரம் எடுத்து இருக்கிறார்.

    இருளின் தூதர்கள் - ஜானியின் அப்பா ஒரு முன்னாள் குற்றவாளிகள் கழகம் உருவாக்கி, தங்கள் திறமை இன்னும் அப்படியே இருக்கிறதா என்று சோதிக்க மாதிரி திருட்டுகளை நடத்த, பழைய குற்றவாளிகள்

    கடத்த பட்டு கால தூதனினால் கொல்ல படுகிறார்கள்.

    பறக்கும் பரலோகம் - மாடஸ்டியும் அவளின் தொல்லை குடுக்கும் நண்பன் கைடோவும் பலூனில் பறக்கும் போட்டியில் பங்கேற்கின்றனர். அப்பொழுது ஒரு கொலையை கண்ணுறுகிறார்கள். அவர்கள் அந்த

    பயங்கரவாத கூட்டத்தில் மாட்டி, வில்லி கார்வினின் உதவியுடன் எப்படி தப்பிக்கிறார்கள் என்பது கதை. கதை படு அட்டகாசம் ஆனால் சித்திரங்கள் அவ்வளவு மோசம்.

    சாத்தானின் சாட்சிகள் - ஒரு கொலை நடக்கிறது, 3 பேர் சாட்சி சொல்லுகிறார்கள். குற்றம் சாட்ட பட்டவள் நிஜமான கொலைக்காரியா அல்லது மாட்டி வைக்க பட்டவளா? ரிப்போர்ட்டர் ஜானி துப்பு துலக்கிறார்.

    சிரிக்கும் மரணம் - பேட்மானும் ஜோக்கேறும் பங்கேற்கும் மனோதத்துவ மோதல். இது The Killing Joke என்று அமெரிக்காவில் சக்கை போடு போட்ட கதை. இது அனிமேஷன் படமாகவும் வெளி வந்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. பிரபு சார்!

      திகில் தீவு, பறக்கும் பரலோகம்,

      சான்சே இல்லை. !!! எவர் கிரீன் கிளாசிக் படைப்புகள் சார்!

      Delete
  47. எனது தேர்வுகள் இந்த ஆண்டு :
    1.டியூராங்கோ
    2.கடல்குதிரையின் முத்திரை - தல
    3. டிராகன் நகரம் - தல

    ReplyDelete
  48. 4. லேடி எஸ்
    5. இளவரசி
    6. மார்டின்

    ReplyDelete
  49. மேற் கண்ட எனது நாயக நாயகி தேர்வுக்கு அவர்களது கதை வந்த போதே விமர்சனம் எழுதி விட்டேன் மறுபடி எழுதினால் அது மீள் பதிவாகிடும் ....

    ReplyDelete
  50. மேற்குறிப்பிட்ட இரு ஏமாற்றங்களை தவிர வேறு ஏதும் குறைகளோ ..,ஏமாற்றங்களோ இல்லை என்பதையும் மொத்த சதவீதத்தில் மிக மிக திருப்தியான ஆண்டு இந்த 2017 என்பதில் எந்த சந்தேகமும் இல்லை சார் .

    ReplyDelete
  51. இந்த வருடத்தின் ஏமாற்றம்னா, தலீவர் சொன்னமாதிரி தீபாவளிமலரைச் சொல்லலாம்.!
    அதைத்தாண்டி வேறெந்த ஏமாற்றமோ சொதப்பலோ இல்லை என்பது என் கருத்துஹே.!

    ReplyDelete
  52. இரத்தப்படல முன்பதிவின் நிலை எஞ்சியிருக்குப் தூரம் குறித்து ஒரு பதிவை ஆவலுடன் எதிர்நோக்கும் XIII ஆர்மி

    ReplyDelete
  53. வீழ்வேன் என்று நினைத்தாயோ ......

    இன்று

    பாரதியை நினைவு கூர்வோம் .........

    ReplyDelete
    Replies
    1. நல்லதோர் வீணைசெய்தே
      அதை
      நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
      சொல்லடி சிவசக்தி...

      எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
      வல்லமை தாராயோ
      இந்த மாநிலம் பயணுற வாழ்வதற்கே ... ....

      Delete
    2. தேடிச்சோறு நிதம்தின்று
      பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
      மனம் வாடித்துன்பம் மிகஉழன்று
      பிறர்வாட பல செயல்கள் செய்து
      நரைகூடிக் கிழப்பருவமெய்தி
      கொடுங்கூற்றுக் கிரையெனப் பின்மாயும்
      பல வேடிக்கை மனிதரைப்போல்
      நான் வீழ்வேனென்று நினைத்தாயோ...


      - மந்திரியாருக்காக -

      Delete
    3. ஆகா தன்யன் ஆனேன்...
      நன்றி

      Delete
  54. 1. Durango 2. Undertaker 3.Mudiya Iravu 4. Irumbu kuthirai - Tex 5. Jason price
    flops- as thalivar said

    ReplyDelete
  55. பிரின்ஸ் ஸ்பெசலில் அட்டையில் உள்ள வரிசைப்படி முதலில் கொலைகார கானகமும் இரண்டாவதாக நதியில் ஒரு நாடகமும் இருந்திருக்க வேண்டும்

    ReplyDelete
  56. தேடிச்சென்று காமிக்ஸ் படித்து
    தினுசுதினுசாய் கி.நா படித்து
    மனம் வாடி குழப்பம் மிக அடைந்து
    கத்தை கத்தையாய் கடுதாசி பல வரைந்து
    சிங்கத்தின் சிறுவயது கேட்டுப்
    போராட்டம் பல நடத்திப் பின்
    பதுங்கு குழிக்குள் பாயும்
    பல வேடிக்கை மனிதரைப்போல்
    நானும் தொபீர்னு விழுந்துடுவேனென்று நினைச்சீங்களாக்கும்...


    - தலீவருக்காண்டி -

    ReplyDelete
    Replies
    1. கட்டுரை கவிஞரே!!!

      Delete
    2. இதை எழுதியது பாரதியாரா பாரதிராசாவா கன்பூஷன்...:-)

      Delete
  57. மும்மூர்த்திகள் ரீப்பிரிண்ட்ஸ் தவிர அனைத்தும் அருமை.... தலையின் தீபாவளி இதழ் எனக்கும் சன்னமான நெருடலே..... கார்ட்டூன் + ட்யூராங்கோ கிளாசிக் ட்ரீட்... மற்றபடி ஆதி சாரை போலவே சூழ்நிலை காரணமாக சானியா + கொஞ்சம் புத்தகங்கள் தேக்கம்...

    ReplyDelete
  58. இந்த வருடத்தின் டாப் 3

    1. அண்டர்டேக்கர்
    2. ட்யூராங்கோ
    3. லயன் 300
    தலைவர்
    சிறிய ஏமாற்றம் தலைவன் ஒரு சகாப்தமே கதை பட்டாசாக தெறித்தாலும் டெக்ஸ் என்று ஊண்றி படிக்க முடிய வில்லை மற்றபடி இந்த வருடம் கிராபிக் நாவல்களில் ஒரு முடியா இரவை தவிர மற்றவை எல்லாம் பட்டையை கிளப்பியது டெக்ஸ் கதைகள் சில ஏமாற்றியதை தவிர இந்த ஆண்டு காமிக்ஸ் வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டு
    அருமை ஆசிரியரே தொடர்ந்து வெளுத்துக்கட்டுங்கள்

    ReplyDelete
  59. ////2017 -ன் TOP 3 தருணங்கள் - உங்கள் பார்வைகளில் எதுவோ என்பதை பகிர்ந்திட நேரம் எடுத்துக் கொள்ளுங்களேன் guys ? ////

    சொல்றேன் எடிட்டர் சார்... சொல்றேன்!

    டாப்-1 : ஜூ.எடியின் திருமணம் விழா! காரணங்கள் நிறைய்ய்ய!
    * முதன் முதலாய் சிவகாசியில் காலடி எடுத்து வைத்தது ( பல வருடக் கனவு)
    * அழகான, ரம்மியமான திருமண விழாவில் பங்கேற்றது
    * உங்கள் சகோதரர் பிரகாஷ், கருணையானந்தம் அவர்கள், மாலையப்பன் அவர்களை முதன்முதலாய் சந்தித்ததும்; அவர்களோடு சில நிமிடங்கள் உரையாடியதும்.
    * நீண்ட நாட்களுக்குப் பிறகு அண்ணாச்சி இராதாகிருஷ்ணன் அவர்களையும், முதன்முறையாக ஸ்டெல்லா, வாசுகி, பொன்னன் உள்ளிட்ட நம் அலுவலகப் பணியாள நண்பர்களைச் சந்தித்ததும்
    * இரண்டு நாட்கள் நண்பர்களோடு கழித்த இனிமையான பொழுதுகளும்
    * அன்பாய் உபசரித்த உங்களாலும், சீனியர் எடிட்டராலும்
    * திருமணத்திற்கு வந்திருந்த நண்பர்கள் காட்டிய அன்பாலும்

    மனது மகிழ்ச்சியில் நிரம்பி வழிந்ததே... இதைவிடவும் ஒரு சிறப்பான தருணம் இந்த ஆண்டில் நிகழ வாய்ப்பில்லை என்பதால் - இதுவே என் டாப்-1 தருணம்!


    ReplyDelete
    Replies
    1. அதே அதே.

      Delete
    2. விடமாட்றீங்க? என்னோட டாப்-2வை சொன்னாத்தான் ஆச்சுன்னு அடம்பிடிக்கறீங்க. சொல்றேன் மக்களே... சொல்றேன்! :)

      டாப்-2 தருணம்:

      ஏன்னு தெரியலை... எதற்காகன்னு இப்போ வரைக்கும் புரியலை... ஆனா அடுத்தவருடச் சந்தா முச்சூடும் எனக்கு பரிசாக அளிக்கப்பட்டது! சுமார் ஐயாயிரம் மதிப்புள்ள சந்தா!! யார் கொடுப்பாங்க இந்தக் காலத்துல? ஆனா கொடுத்தாங்க! யாரோ ஒரு அன்புள்ள அனாமதேயரோட வேலை! வானத்துலேர்ந்து வெள்ளை டிரெஸ் போட்ட பிகருங்க எல்லாம் பூமாரி பொழிஞ்சா மாரி இருந்துச்சு!

      என்ன கைம்மாறு செய்யப்போறேன்... முகம்காட்டா இந்த அன்புக்கும், இந்த பொம்மை பொஸ்தவ உலகத்துக்கும்?!!

      இந்த வருடத்தின் டாப்-2 தருணம் எனக்கு!

      Delete
    3. ****** இந்தவருடத்தின் 3வது டாப் தருணம் *****

      EBF தான்!

      ஏன்னா...

      * சங்கப் பொருளாளர் செனாஅனாவை முதன்முதலாக சந்திச்ச நாள்! முன்னேபின்னே பார்த்ததில்லை; ஃபோனில்கூட ஓரிருமுறைகளுக்கு மேல் பேசியதில்லை! ஆனால் நேரில் பார்த்தபோது - பலவருடங்களாக மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மீண்டும் சந்தித்த - மகிழ்ச்சி ஏற்பட்டதே...!!
      * மேற்கூறிய கிடாயோடு ;) , முதன்முதலாக சந்தித்த நண்பர்களின் பட்டியலில் - இங்கே சமீப காலமாகத் தன் எழுத்தாற்றலால் நம்மை அசத்திவரும் - மிதுன் சக்கரவர்த்தி, கோவிந்தராஜ் பெருமாள், J என்கிற ஜனா, ஐயா சுரேஷ் சந்த் உள்ளிட்ட பலரையும் சந்தித்த நாள் அது!

      * 'இரத்தக் கோட்டை' மறு பதிப்பு வெளியாகி, அதன் வடிவமைப்புக்காக வாயைப் பிளக்க வைத்த தினம் அது! அசாத்திய உழைப்புகளின் அப்பட்டமான பலன் அது!

      * ஈரோடு ஸ்டாலினின் வீட்டில் நண்பர்கள் புடைசூழ, சீனியர் எடிட்டருடன் நிகழ்ந்த பிரத்யேகக் கலந்துரையாடல்! சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு முந்தைய தன் காமிக்ஸ் பயண அனுபவத்தை சீ.எடிட்டர் விளக்கியபோது - இனம்புரியாத ஒரு மகிழ்ச்சியும், வியப்பும் - அப்பப்ப்பா!

      டாப்-3ல் மூணாவது தருணம் எனக்கு!

      Delete
  60. 2017 ன் டாப் 3 (ரீபிரிண்ட்)

    இரத்தக் கோட்டை.
    லக்கி க்ளாசிக்.
    டிராகன் நகரம்.

    சந்தா A டாப் 3

    சதுரங்கத்திலொரு சிப்பாய்.
    விண்வெளியின் பிள்ளை.
    லேடி S (சுடும் பனி அல்ல) .

    சந்தா B

    இரும்புக்குதிரையில் தங்கப் புதையல்.
    லயன் 300
    கடல் குதிரையின் முத்திரை.

    சந்தா C

    தரைக்கடியில் தங்கம்.
    நானும் சிப்பாய்தான்.
    விண்ணில் ஒரு பொடியன்.

    சந்தா E

    இதில் டாப் 3 கிடையாது.டாப் 6தான்.

    சந்தா D.

    நான் இந்த ஆட்டத்துக்கே வர்ல.



    ReplyDelete
  61. சார்! ''நிஜங்களின் நிசப்தம்'' எப்போது கிடைக்கும்.??

    ReplyDelete
  62. டாப் 3 தருணங்கள்
    1. செயலாளர் சொன்னது போல் ஜீனியர் எடிட்டரின் திருமணம் தான் வாழ்க்கையின் மறக்க முடியாத சந்தோஷம் மிகுந்த நாள்

    2. பிரிண்ஸ் கிளாசிக் கில் எனது குடும்ப புகைப்படம் கண்ட நாள் எல்லோரிடமும் அதைக் காட்டி இறுமாந்த நாள்

    3. ஈரோடு திருவிழா எப்போதுமே சந்தோஷம் பொங்கும் இம்முறை இன்னும் அதிகமாக பொங்கியது அதிலும் ஆசிரியர் வைத்த போட்டிதான் ஹைலைட் அதில் செயலாளர் ஒபி அடித்தது தனி கலை என்னுள் இருந்த சிறுவன் வெளியே வந்து கும்மாளமடித்த நாள் இன்னும் நிறைய சொல்லலாம்

    ReplyDelete
  63. ஆண்டு சந்தா பாதி பாதியாக இரண்டு முறை கட்ட வாய்ப்பிருக்கா .அப்படி கட்ட முடியும் என்றால் எந்த எந்த மாதம் எவ்வளவு தொகை கட்ட வேண்டும்... பதில் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும் நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு உள்ளது நண்பரே..
      முதல் தவணை 15/12/2017 குள்ளும்
      இரண்டாம் தவணை 31/03/2018 குள்ளும் செலுத்த வேண்டும்

      Delete
    2. ஆஹா கடைசி தேதி 15 ஆ...இறுதிவரை என நினைத்து இருந்தேன்..

      நினைவூட்டலுக்கு நன்றி சார்...

      Delete
  64. சிறந்த தருணம் 1

    ஈரோடு புத்தக விழாவில் கலந்து கொண்டதே. ஈரோடுவாசியாக இருந்தாலும், காமிக்ஸ் மீது ஏகப்பட்ட ஈடுபாடு இருந்தாலும்
    விழாக்ககளில் கலந்து கொள்வது என்னைப் பொருத்த வகையில் மிகச் சிரமான பணியே.

    விஷேஷமாக காரணம் ஏதுமில்லை.பொதுவாகவே ஏகப்பட்ட கூச்ச குணமுடையவன் நான். அதிலும் கூட்டத்தைக் கண்டால் அநியாயத்திற்கு அலர்ஜி ஏற்படும் இயல்புடையவன் நான்.

    எப்படி என்றால், ஐந்தடிக்கு முன்னால் ஐந்து பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களைக் கடந்து போக வேண்டும் என்றால், துளியும் யோசிக்காமல் அவர்கறைச் சுற்றி ஐந்தடிக்கு அரைவட்டமடித்துச் செல்வேன்.

    ஒவ்வொரு முறையும் வாசகர் சந்திப்பில் கலந்து கொள்ள ஹோட்டல் வாசல் வரை வந்து விட்டு, அப்படியே லெப்டில் திரும்பி நேராகச் சென்று விடுவேன். ஒவ்வொரு வருடமும் இதே கதைதான்.

    சென்ற வருடம் (2016) சற்றே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ஆசிரியரைச் சந்தித்து, "ஈரோட்டில் இத்தாலி "ல் அவரது கையெழுத்தை வாங்கிக் கொண்டு, போட்டோ எடுக்கலாம் என மொபைலை ஒருவரிடம் கொடுத்தேன். ஐயகோ நல்ல நேரம் பாத்து பேட்டரி டௌன் ஆக, அவர் தன்னுடைய கேமராவில் படமெடுத்தார்.அவர்தான் மாயாவியார் என்பது பிறகுதான் தெரிந்தது.பிறகு அவரோடு மெயிலுறவாடியதன் விளைவாக அந்த போட்டோவை எனக்கு அனுப்பினார்.அன்றிலிருந்து மாயாவியாரிடம் இனம்புரியா நேசம் உருவானது.

    இந்த வருடமாவது கண்டிப்பாக கல ந்து கொள்ள வேண்டும்.லோக்கல்ல இருந்திட்டு நாம போகலைனா எப்படின்னு மனசுல வைராக்கியம் எடுத்தேன்.

    இந்த பாழா போன சுபாவம்தான் தடுக்குதே.இத எப்படி கடக்கணும்னு யோசித்தேன்.

    ஒருவழி தென்பட்டது.

    EPF க்கு நான் போயே ஆகணும் என்ற கட்டாயத்தை உருவாக்க நினைத்தேன்.

    முதல்கட்டமாக 'இரத்தக் கோட்டை ' நம்ம ஊரில் தானே ரீலீஸ் என்று, எதையுமே முன்கூட்டியே புக்கிங் பண்ணாதவன் இரத்தக் கோட்டையை வா லெண்டரியா புக் செய்தேன்.அது மட்டுமல்ல அதை ஆசிரியர் திருக்கரங்களால் பெற வேண்டும் என்ற ஆப்சனை ஓகே செய்தேன்.

    முதல்படி ஓகே.

    அடுத்து நடந்தது எதிர்பாராதது. ஏதேச்சையாக எழுதிய கேப்சன், ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட, இரண்டாம்படி மேலும் விழாவை நோக்கித் தள்ள 'கடவுள் இருக்கான் குமாரு 'னு மானசீகமாக எண்ணிணேன்.

    அது மட்டுமில்லாம குடும்பத்துல, நண்பர்கள்கிட்ட'எனக்கு பரிசு தரப் போறாங்கனு 'கொஞ்சம் பிட்டு போட்டு என்னை நானே நெருக்கடிக்கு உள்ளாக்கினேன்.

    ஆகஸ்ட் நெருங்கியது.

    முதலாளியிடம் லீவும் வாங்கிட்டேன்

    இருந்தாலும் பிரம்மாஸ்திரமாக என் மகனை உடனழைத்துப் போகலாம் என முடிவெடுத்தேன். ஒரு வேளை நான் பின் வாங்கினாலும், அவன் என்னை இழுத்து வந்திடுவான்.அதான்

    அதனால் முன்னாடியே 'தம்பி சனிக்கிழமை ஸ்கூலுக்கு லீவு போட்டுக்கோ 'என்று சொல்ல அவன் உற்சாகமானான்.

    இன்னும் க்ளைமாக்ஸ் தான் பாக்கி நண்பர் விஜயராகவன்
    புண்ணியத்தால் அனைத்து நண்பர்களையும் ஒருவாறாக தெரிந்து கொள்ள முடிந்தது.

    இனி எந்த அந்நிய சக்திகளாலும் என்னைத் தடுக்கவே முடியாது.இருந்தாலும் வெள்ளிக்கிழமையே ஒரு என்ட்ரி போடுவது நலம் என, ஸ்டாலுக்குச் செல்ல ஈ.வி யார் இன்முகத்துடன் வரவேற்க, சிறிது நேரத்தில் சேந்தம்பட்டி அணியினரும் வந்து சேர, கலகலப்பானது. சேந்தம்பட்டி நண்பர்கள் ஒவ்வொருவரும் நலம் விசாரிக்க, என்னைச் சுற்றியிருந்த பெருந்தடை சத்தமில்லாமல் உடைந்தது.
    அந்த கணத்தில் 'நல்லா பாத்துக்குங்க நானும் ரௌடிதான் 'மனசுக்குள்ளே கத்தினேன்.

    ரொம்ப நேரம் பேசி விட்டு வீடு திரும்பிய போது மனம் லேசாக மாறியது.

    மறுநாள் காலையில் பதட்டம் இல்லாமல், ஆஜரானேன். இம்முறை நான் தனித்து தெரியவில்லை.நண்பர்களோடு ஐக்கியமானேன்.ஆசிரியரிடம் கைகுலுக்கினேன்.ஒவ்வொருவரிடமும் இயன்ற வரை பேசினேன்.
    ஆசிரியரிடம் இரத்தக் கோட்டை பிரதியும், கேப்சன் போட்டிக்கான பெயிண்டிங்கும் சிலிர்க்க வைத்தவை.
    என் இருப்பை உணர வைத்தவை அவை.என்னை ஆர்பாட்டமாக அங்கரித்த பொன்னான தருணம்.

    இதை வாழ்நாள் சாதனையாகவே பார்க்கிறேன்.
    2017EBF மிக முக்கியத்துவம் பெற்றது என்னளவில்

    ReplyDelete
    Replies
    1. சிறந்த தருணம்2

      'டிராகன் நகரம் 'கைப்பற்றியபோது அடைந்த ஆனந்தம் அளவில்லாதது.

      எனது மகனின் புகைப்படத்துடன் வரும் என்பது ஒருபுறமிருக்க, அதில் ஸ்பெஷலாக வெறொரு சங்கதியும் உள்ளதே காரணம்.

      Delete
    2. @ G.P

      செம்ம & அரும!

      நல்ல எழுத்தாற்றல் உள்ளது உங்களிடம்! ஆனால் அதை வெளிப்படுத்தவும் கொஞ்சம் கூச்சப்படறீங்களோன்னு தோனறது! இது காமிக்ஸ் ரசிகர்களின் ஆடுகளம். அடிச்சு விளையாடுங்க பாஸ்!

      Delete
    3. @ G.P
      சிறந்த நகைச்சுவையணர்வும்,அசாத்திய எழுத்து வன்மையும் உள்ள தாங்கள் புதிய உத்வேகத்துடன் தங்களை வெளிப்படுத்த முனைய வேண்டும்.

      Delete
    4. @G.P
      சிறந்த நகைச்சுவையுணர்வோடு அசாத்திய எழுத்து நடை உங்களுக்கு. தயக்கங்களையும் தடைகளையும் உடைத்தெறிந்து கலந்து கொள்ளுங்கள். நட்பின் தளமிது......ப்ரியா வுடுங்க பாஸூ.....

      Delete
    5. @ G.P
      சிறந்த நகைச்சுவையணர்வும்,அசாத்திய எழுத்து வன்மையும் உள்ள தாங்கள் புதிய உத்வேகத்துடன் தங்களை வெளிப்படுத்த முனைய வேண்டும்.

      Delete
    6. G P சென்ற EBF முதல் முறை வந்தும்
      தங்கள் அறிமுகம் கிடைக்கவில்லை.
      ஆனால் அடுத்த EBF ல் நேரில் சந்திப்போம்
      பல நண்பகளை பார்த்தும் சரியாக பேசி
      அறிமுகம் செய்து கொண்டு பேச முடியவில்லை. இது 2018ல் முற்றிலுமாக
      சரிசெய்யப்படும்.தங்கள் அன்புக்கு நன்றி.

      Delete
    7. G.P : சார்... காதை பக்கத்தில் கொண்டு வாருங்களேன் : ஒரு உலகக் கொடுமையைச் சொல்லட்டுமா உங்களுக்கு ? 2012 -ன் சென்னைப் புத்தக விழாவினில் காலடி வைக்கும் போது எனக்கு உதறிய உதறு என்னவென்று உடன் வந்த ஜுனியருக்கும், வியர்வையைத் துடைத்தே தொப்பலாகிப் போன எனது கைக்குட்டைக்கும் தான் தெரியும் ; இத்தனைக்கும் அதுவொரு மார்கழியின் இதமான பகலே ! ஆடிக்கொரு தபா ; ஆவணிக்கொரு தபா என சிவகாசிக்கு வருகை தரும் வாசகர்களைத் தவிர்த்து வேறு யாரோடும் பரிச்சயம் நஹி அப்போதெல்லாம் ! And இதழ்களை ரணகொடூரமான தாமதத்தோடு சொதப்பிய நாட்களவை ! So மூக்கில் விழக்கூடிய குத்துக்கள் பற்றிய பயம் ; 'தத்துபித்தென' ஏதாச்சும் உளறித் தொலைத்து விடுவேனோ என்ற பயம் ; ஆளாளுக்கு மானசீகமாய் "எடிட்டர்" என வெயிட்டான கற்பனைகளை வருஷமாய் வளர்த்து வைத்திருக்க, பாண்டியராஜன் முழியோடு நான் முன்னே போய் நின்று அந்தக் கற்பனைகளை சிதைத்துத் தொலைத்து விடுவேனோ என்ற பயம் !! அட - இவ்வளவு ஏன் சார் - அன்றைக்கு என்ன கலர் சட்டை போடுவது என்பதிலேயே ஒரு நூறு தயக்கம் ! ஏதாச்சும் தாத்தா பாணியிலும் இருந்திடக் கூடாதே அல்லது வயசுக்குப் பொருந்தா சின்னப் பிள்ளைத்தனமாயும் இருந்திடக்கூடாதே என்று பயம் ! அத்தனையையும் மீறி விழாவுக்கும், நாம் பகிர்ந்து புழங்கிக் கொண்டிருந்த ஸ்டால் பக்கமாய்ப் போக துணைக்கு ஜுனியர் இருங்தாங்காட்டி வண்டிக்கு ரிவர்ஸ் கியர் போடவில்லை நான் ! இல்லாவிடின் 'இன்னிக்கு அஷ்டமி ; நாளைக்கு நவமி ; புயல் வர்றாப்லயே தோணுது' என்று எதையாச்சும் சொல்லி வைத்துக் கம்பி நீட்டி இருப்பேன் - நிச்சயமாக !

      ஸ்டால் கிட்டே போகும் போதே அங்கே தெரிந்த நண்பர்கள் திரளை பார்த்த நொடியினில் ஒன்றுக்கு இரண்டோ, மூன்றோ கறிதோசைகளை கோணார் கடையில் உள்ளே இறக்கிக் கொண்டது போல் வயிற்றை லேசாகப் பிசைந்தது ! தம் பிடித்துக் கொண்டு அங்கே போனால் நம்ம அண்ணாச்சி ராதாகிருஷ்ணன் சும்மா மாய்ஞ்சு மாய்ஞ்சு பில் போட்டுக் கொண்டிருக்க, என்னை அங்கே நின்றிருந்த பாதிப் பேருக்கு அடையாளம் தெரியவில்லை ! 'பெருசு ஒண்ணு - நம்மளை சேர்ந்த கேசு போல' என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும் ! அப்போது வாசகர்கள் யாரோ அண்ணாச்சியிடம் "இந்த வருஷ சந்தா எவ்வளவு ?" என்று கேட்க - நிமிர்ந்து பார்த்த மனுஷன் என்னைப் பார்த்த மறு கணம் - "சந்தா எவ்வளவுயா ?" என்று கேட்டு வைத்தார் ! அந்த கணத்தில் அங்கிருந்தோர் பார்வைகள் ஒரே நேரம் என் பக்கம் திரும்பியது ! "இவர் தான் எடிட்டரா ?" என்ற குசு குசு குரல்கள் கேட்ட நொடியில் உள்ளங்கையெல்லாம் புழுங்கியது இன்றைக்கும் நினைவுள்ளது ! தொடர்ந்த நிமிடங்களில் ஒரு சுனாமியாய் வாசக அன்பினை நான் உணர்ந்த சமயம் தலை மொத்தமாய் blank ஆகிப் போயிருந்தது மட்டுமே நினைவில் உள்ளது ! சாவகாசமானதொரு தருணத்தில் அந்த நாட்களை பற்றி
      நான் எழுதும் போது - இந்த கூச்சமானது உங்களது மாத்திரமல்ல என்பதை புரிந்து கொள்வீர்கள் சார் ! இன்றைக்குப் பாருங்களேன் - ஆளே இல்லா டீ கடைக்கு முன்னே நின்றால் கூட ஆற்றோ ஆற்றென்று ஆற்றி எடுக்கிறேன் - அதே ஆசாமியான நான் !

      கதையின் கருத்து : கூச்சம் நல்லதே ! இல்லாவிடின் அதைத் தாண்டி வரும் அனுபவத்தின் பரவசத்தை உணர முடியாது போய் விடுமன்றோ ?

      Delete
    8. அப்புறம் இன்னொரு பொதுவான விஷயம் !

      உங்களுக்குத் தெரியாத சட்டமில்லை யுவர் ஆனர் ! மேற்படி குறும்பதிவை - சங்கத்தின் சாரி..சாரி.."சிங்கத்தின் சுமாரான வயதிலோ" ; ""பெருசான வயசில" அல்லது முறையான ஏதோ ஒன்றிலோ இணைத்துக் கொண்டு எனது கோட்டாவை தற்காலிகமாய்ப் பூர்த்தி செய்ததாய் எடுத்துக் கொள்ளுங்கள் !

      Delete
    9. ////மேற்படி குறும்பதிவை - சங்கத்தின் சாரி..சாரி.."சிங்கத்தின் சுமாரான வயதிலோ" ; ""பெருசான வயசில" அல்லது முறையான ஏதோ ஒன்றிலோ இணைத்துக் கொண்டு எனது கோட்டாவை தற்காலிகமாய்ப் பூர்த்தி செய்ததாய் எடுத்துக் கொள்ளுங்கள் !/////

      நோஒஓஓஓஓஓ...!

      சங்கம் தன் கடமையைச் செய்யும்!

      Delete
    10. @ ஈ.வி, Sri Ram &

      'பாஸ் ' எல்லாம் வேணாம் சார். பேர் சொல்லி அழைத்தாலே சந்தோசப்படுவேன்.

      @ Kv ganesh sir,

      உங்க அன்புக்கு நிறைய நன்றிகள்.

      @ எடிட்டர்.

      // / கூச்சம் நல்லதே ! இல்லாவிடின் அதைத் தாண்டி வரும் அனுபவத்தின் பரவசத்தை உணர முடியாது போய் விடுமன்றோ ?///

      மறுக்க முடியாத உண்மை. அந்த பரவசத்தை நேரடியாகவே EBFல் உணர்ந்தேன்.

      என் தயக்கம் காத தூரம் போய்விட்டதால் இயல்பாக உணர்கிறேன்.

      Delete
    11. செல்லாது செல்லாது.
      இது போங்கு ஆட்டம்.
      இப்பவே இப்படி அல்வா கொடுத்தால்
      அடுத்த வருடம் நீங்கள்
      தாத்தா ஆகிய பிறகு
      எத்தனை அல்வா கிண்டுவீங்களோ.
      மனக்கண்ணில் மடியில் பேரனுடன்
      புருப் பார்க்கும் காட்சியை நினைத்தால்
      எனக்கு சிப்பு சிப்பாக வருகிறது.

      Delete
    12. செல்லாது செல்லாது.
      இது போங்கு ஆட்டம்.
      இப்பவே இப்படி அல்வா
      கொடுத்தீங்கன்னா
      இன்னும் ஒரு வருடம்
      கழித்து நீங்கள் தாத்தா ஆகி
      பேரனை மடியில் வைத்துக்கொண்டு
      ப்ரூப் ரீடிங் பார்க்கும்போது எவ்வளவு
      அல்வா கிண்டுவீங்களோ??

      Delete
    13. நினைக்கும்போதே எனக்கு
      சிப்புசிப்பாக வருகிறது.

      Delete
    14. நினைக்கும்போதே எனக்கு
      சிப்பு சிப்பாக வருகிறது.

      Delete
    15. விஜயன் சார், உங்களின் 2012 சென்னை புத்தகத்திருவிழா மலரும் நினைவுகள் அருமை.

      Delete
  65. Except Santha D and some "thala vali", everything is great in 2017.

    ReplyDelete
  66. செ.ச.சார், செயலரபோட்டு கொடு த்தீங்கபாருங்க அங்கநிக்கிறீங்க.செயலரேஉடனே செயற்கை குழு பொதுககுழு எல்லா த்தயும்கூட்டுங்க தலீவர் தலமைல முரட்டுதனமா உள்ளிருப்பு ,வெளிநடப்பு,காத்துக் கருப்பு போராட்ட மெலலாம் நடத்துவோம்.

    ReplyDelete
    Replies
    1. டாக்டருங்கல்லாம் மருந்து சீட்டுல எழுதுனாலும் புரியமாட்டேன்றது... தளத்துல எழுதினாலும் புரியமாட்டேன்றது! :P

      Delete
    2. அப்பூடித்தான்,வேண்டும் வேண்டும்lion சிறு வயதில் வேண்டும்.

      Delete
  67. T o p 3 தருணங்கள் :
    -----------------------
    1) டியுரங்கோ
    2)பிரின்ஸ் ஸ்பெஷல் இல் எனது குடும்ப படத்தை பார்த்த அந்த தருணமும் + சிறந்த காமிக்ஸ் காதலர் என்னும் எடிட்டரின் கையெழுத்து தாங்கிய பட்டயம் ஏந்திய அந்த தருணமும் ( இன்றுதான் பொக்கிஷம் வந்தது கிடைத்தது )
    3) ரத்த கோட்டை இதழினை தாங்கிய தருணமும்

    ReplyDelete
  68. *** காமிக்ஸ் 2017 ***





    1.ஜெராமையா மற்றும் ட்யுரங்கோ.

    ஜெராமையா.
    முற்றிலும் மாறுபட்ட ,அழுத்தமான கதைக்களத்தை தேர்வு செய்து கதாசிரியராக தன்னை நிரூபித்த தொடர்.அசத்தலான ஓவியங்களிலும், வர்ணச் சேர்க்கையிலும்,சிறந்த கதை சொல்லியாகவும் சாதித்த ஹெர்மனின் படைப்பு.முத்திரை பதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ள தொடர்.
    ட்யுூரங்கோ.
    கூலிக்கு பணியாற்றும் துப்பாக்கி வீரன்.ஓவியராகவும்,கதாசிரியாகவும் யூவிஸ் ஸ்வால்ப் அசத்திய கொளபாய் தொடர்.உச்சம் தொட அதிக வாய்ப்புகள் உள்ள கதைத் தொடர்.
    இரண்டும் முறையே முதலிடத்தில்.
    2.அண்டர் டேக்கர்.
    திறமையொன்றே உலகை திரும்பி பார்க்கச் செய்யும் என்று செதுக்கப்பட்ட கலைபடைப்பு . காலம் கடந்தும் எஞ்சி நிற்கும் சில படைப்புகளில் இதற்கென ஓர் தனியிடம் உண்டு என்பதை முளையிலேயே உணர்த்திய கொளபாய் தொடர்.சேவியர் டேரிசன்,ரால்ப் மேயர் கைவண்ணத்தில் வெளிவந்த வெட்டியான் த வொன்டர் மெய்மறக்கச் செய்த காவியம்.
    3.சூப்பர் 6 சந்தா
    காமிக்ஸ் சேகரிப்புகளை உயர்த்தி கொள்ள சிறந்த சந்தா தடம்.லக்கி,சிக்பில்,ப்ரின்ஸ்,டெக்ஸ் என பசுமையான கடந்த கால இதழ்களை உயிரோட்டமாக வண்ணத்தில் மீட்டுத் தந்து சாதித்து காட்டிய சந்தா தடம்.
    4.இரத்த கோட்டை.
    சார்லியர் ஜெராட்டின் புயல் வேக கதை சொல்லும் ஆற்றலில் உருவகப்படுத்தப்பட்ட ப்ளூபெரி சாகசத்தின் துவக்கப் புள்ளி. முழு வண்ணத்தில் சிறப்பான புத்தக வடிவமைப்பில் கட்டுறச் செய்த வெற்றி பதிப்பு. சார்லியர் ஜெராட் நிகர் அவரே.
    5.சந்தா E
    தேர்வு செய்யப்பட்ட அனைத்து கதைகளுமே வரவேற்பை பெற்ற கதைகள்.முடியா இரவு அவ்வளவாக ஈர்க்கவில்லை என்றாலும் புதிய திக்குகளில் காமிக்ஸ் பயணத்தை தகவமைத்து கொள்ள நிறுவப்பட்ட சந்தா.நிஜங்களின் நிசப்தமும் அனல் பறக்குமென நம்பலாம்.
    குறைகள்.
    சூப்பர் 6 சந்தா இதழ்கள் லக்கி,சிக்பில்,ப்ரின்ஸ் இரண்டு கதைகளோடு ஹார்ட் பவுன்ட் பைன்டிங்கில் கவனத்தை பெறவில்லை. குறைந்தபட்சம் மூன்று கதைகளை தேர்வு செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
    சந்தா E
    கதைத் தேர்வுகள் அனைத்துமே போனொலி குழுமத்திடம் இருப்பதாக உள்ளது. குறுகிய வட்டத்துக்குள் நமது பார்வைகளை தகவமைத்து கொள்வது சற்றே உறுத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. Sri Ram : //சூப்பர் 6 சந்தா இதழ்கள் லக்கி,சிக்பில்,ப்ரின்ஸ் இரண்டு கதைகளோடு ஹார்ட் பவுன்ட் பைன்டிங்கில் கவனத்தை பெறவில்லை.குறைந்தபட்சம் மூன்று கதைகளை தேர்வு செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்//

      அறிவிக்கப்பட்ட விலைகளும், பட்ஜெட்களும் முன்னே நிற்க -திக்குக்கு ஒரு இண்டிகேட்டரைப் போட்டு வண்டியைத் திருப்புதல் சாத்தியம் தான் ஆகுமா ? சற்றே நடைமுறைகளோடும் இணைந்து பயணிக்கும் கட்டாயம் நமக்குள்ளதற்கு மதிப்பு தந்திடல் அவசியம் தானே ?

      //கதைத் தேர்வுகள் அனைத்துமே போனொலி குழுமத்திடம் இருப்பதாக உள்ளது. குறுகிய வட்டத்துக்குள் நமது பார்வைகளை தகவமைத்து கொள்வது சற்றே உறுத்துகிறது.//

      மறுபடியும் (எனக்கு) ஏற்பிலாக் கருத்து : கதைகள் போனெல்லியினதாக இருப்பது மட்டுமே ஒரு குறையாகிட முடியுமா ? And மேலுள்ள எனது பதிவினை பொறுமையாய் வாசித்தீர்களெனில் - சந்தா E-க்கு நான் செய்த முதல்கட்டத் தேர்வுகள் பற்றியும், b & w கதைகள் பக்கமாய் பின்னே தஞ்சமடைந்தது ஏனென்றும் எழுதியிருப்பதை பார்த்திட முடியும். And கருப்பு-வெள்ளையில் போனெல்லி சாதித்து வருவதை தொனிக்க இன்று வரைக்கும் எந்தவொரு பதிப்பகமும் கிடையாது என்பது யதார்த்தம்! Moreover அவை நமக்கு வாகானதொரு format -ல் அமைந்திருப்பதும் ஒரு போனஸ் தானே ? நல்ல கதைகள் யாரிடம் இருந்தால் என்ன சிக்கல் சார் நமக்கு ?

      Delete
    2. பர்ரால்ல எடிட்டர் சார் சிக்பில்லுக்கும்,லக்கிக்கும் கடந்த கால வெளியீடுகளில் மூன்று கதைகளும்,புதிதாக வெளிவந்த கதைகளில் இரண்டுமாக தேர்வு செய்து ஐந்து பாகங்களில் டைஜஸ்ட் ஸ்பெசலாக வெளியிட்டு தெறி ஹிட் ஆக்கலாம்.

      Delete
    3. சந்தா E ல் வந்தது அனைத்துமே போனொலி குழுமத்தில் வந்த ஹிட் கதைகலாக ஏன் உணரனும்??!.அவைகள் F,G,H ஏதோ ஒன்றில் வெளிவந்ததாக நினைத்தால் போதுமே.

      Delete
  69. லயன் காமிக்ஸ் மாதமிருமுரற வரும்னு ஆசிரியர் சொன்னதா ஒரு செய்தி Facebookக்ல பரவுது. யாருக்காவது என்ன சமாச்சாரம்னு தெரியுமா நண்பர்களே?

    ReplyDelete
    Replies
    1. Podiyan : ஹை !! எனக்கே தெரியாத சமாச்சாரமா இருக்கே !!

      Delete
    2. ஹி...ஹி..அந்த புரளி உண்மையான நல்லாயிருக்கும்...அந்த புரளிக்கு காரணமே நான் தான் எடிட்டர் சார் .லயன் வெளியீடு எண் 20 ல ( ஆப்பிரிக்க சதி) இனி லயன் மாதமிருமுறை வரும் என எப்பவோ போட்டதைதான் இப்ப ஜாலிக்காக போட்டேன் சாரி..ஆனால் இதுவும் ஜாலியாதான் போனது...ஹி...ஹி

      Delete
    3. Aapirica sadhu - wow very nice pocket book. I yearn for irattai vettayar

      Delete
  70. 1.இரத்தப்படல அறிவிப்பு
    2.கரனல் ஆமோஸ் முதல் இதழை பெற்றுக்கோண்டது
    3.நம்ம வீட்டுக்கல்யாணம்

    ReplyDelete
  71. 1.இரத்தப்படல அறிவிப்பு
    2.கர்னல் ஆமோஸ் முதல் இதழை பெற்றுக்கோண்டது
    3.நம்ம வீட்டுக்கல்யாணம்

    ReplyDelete
  72. மறக்க முடியா 2017


    நண்பர்களுடன் வெளிநாட்டு சிவகாசி பயணம்..



    நண்பர்களுடன் ஈரோடு ஆசிரியர் சந்திப்பு..




    மாத ஆரம்பத்தில் புது இதழ்கள் மாதந்தோறும் தவறாமல கைகளில் ஏந்திய தருணம்...

    ReplyDelete
  73. சார்
    நிஜங்களின் நிசப்தம் எப்போது கிடைக்கும்?
    வித்தியாசமான சைஸ் வேறு எதிர்பார்ப்பினை ஏகத்துக்கும் எகிற வைத்துக் கொண்டுள்ளது!

    ReplyDelete
    Replies
    1. வித்யாசமான சைஸ்னா எப்படி? பேங்க் பாஸ்புக் மாதிரியா.??

      Delete
    2. பேங்க் செக் புக் சைஸூக்கு இருந்தால் பரவாயில்லை!!
      பேங்க் ஏடிஎம் கார்டு சைஸூக்கு இல்லாமல் இருந்தால் சரிதான்!!!

      Delete
    3. எடிட்டர் சார்... 'எலாஸ்ட்டிக் டைப்'ல புத்தகம் போட்டீங்கன்னா பரவாயில்லை! அவங்கவங்க வேணுங்கற சைஸுக்கு இழுந்துவச்சோ, தட்டிக் குறுக்கியோ படிச்சுக்கிடலாம்!
      படிச்சு முடிச்சவுடனே சுருட்டியும் வச்சுக்கிடலாம்! :D

      Delete
  74. சந்தா A-வில் : ட்யுராங்கோவின் "சத்தமின்றி ஒரு யுத்தம்."

    சந்தா B-யில் : டெக்ஸ் வில்லரின் "ஒரு தலைவன், ஒரு சகாப்தம்."

    சந்தா C-யில் : ஸ்மர்ஃப்களின் "விண்ணில் ஒரு பொடியன்."

    சந்தா D-யில் : "சில்வர் ஸ்பெஷல்."

    சந்தா E-யில் : [இன்னும் 2 புத்தகங்கள் வராததால்- இதுவரை வந்ததில்]
    "பிணத்தோடு ஒரு பயணம்."


    குறிப்பு :- சந்தா A-வில் 'ட்யுராங்கோ'வின் 'சத்தமின்றி ஒரு யுத்தமும், லார்கோவின் 'சதுரங்கத்தில் ஒரு சிப்பாயும் சரிசமமான மதிப்பெண்களை பெறுகின்றன.
    அதேபோல சந்தா C-யில் 'லக்கி லுக்'கின் ''தரைக்கடி யில் தங்கமும், ஸ்மர்ஃப்களின் ''விண்ணில் ஒரு பொடியனும் சரிசமமான மதிப்பெண்களை பெறுகின்றன.
    ஒன்றை விலக்கிவிட்டு இன்னொன்றை தேர்ந்தெடுக்க மனம் வரவில்லை. முடிவாக இந்தமுறை புதியவர்களுக்கு முன்னுரிமை கொடுப்போம் என்று மனதை ஒருவாறு தேற்றிக்கொண்டு ட்யுராங்கோவிற்கும், ஸ்மர்ஃப்புக்கும் முதலிடம் கொடுத்தேன்.

    ReplyDelete
  75. 2017 என்னுடைய டாப் 5:

    1. அண்டர்டேக்கர்:
    இக்கதை கவ்பாய் வகையில் ஒரு தனிரகம் . எத்துனை முறை படித்தாலும் அலுக்காது, சலிக்காது. உயிரோட்டமான ஓவியங்களும், வர்ணக்கலவையும், அட்டகாசமான வசனங்களும் ஆஸம்.

    2. ட்யூராங்கோ:
    A silent killer. தெளிந்த நீரோடைப் போன்ற கதை, ஆர்ப்பரிக்கும் வர்ணங்களில் ஓவியங்கள் என பார்த்த மாத்திரத்தில் எல்லோருக்கும் பிடித்துப்போவதில் அதிசயமென்ன....! கடைசி நேரத்தில் இந்த புக் ஹார்ட் பவுண்டுக்கு மாறியதுதான், இந்த இதழுக்கு எக்ஸ்ட்ரா கெத்து. .

    3. ஓநாயின் சங்கீதம்:
    ரெட் டஸ்ட் இப்ப கலக்க மாட்டாரா, இப்ப கலக்க மாட்டாரா என ஒவ்வொரு கதையிலும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஒரு வழியாக இக்கதையில் புள்ளையாண்டா விஸ்வரூபம் காட்டியிருக்கிறார். அட்டகாசமான ஓவியங்களுடன் கதையும் அட்டகாசமாய் கைகோர்த்துக்கொள்ள கூட துள்ளலான வசனங்களும் கதையில் ஆங்காங்கே வரும் ட்விஸ்ட்களுக்கு சற்றும் சளைத்ததல்ல. ரெட் டஸ்ட் hope to see you at 2019.

    4. இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல்:
    கவ்பாய் கதையுடன் புதையல், பணம், கொள்ளை என வரும் போது விறுவிறுப்பிற்கு சொல்லவா வேண்டும். கதை ஆரம்பம் முதல் இறுதிவரை தூள் கிளப்புகிறது.

    5. கவரிமான்களின் கதை:
    நம்மூர் பாசமலர் கதை. ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை.

    சொதப்பல்:

    1. ஒரு வெறியனின் தடத்தில்..!
    எடிட்டர் இக்கதையை தேர்வு செய்தது ஆச்சரியமளிக்கிறது. கொஞ்சம் கூட விறுவிறுப்பில்லாத சோ சோ வான கதை. அதிலும் அந்த பாட்டிமா வசனங்களெல்லாம் ரணகளம். ஒரிஜினலில் எப்படியென்று தெரியவில்லை, ஆனால் தூத்தேறி, கஸ்மாலம், பேமாணி எல்லாம் சற்றும் பொருந்தவில்லை.

    2. அராஜகம் அன்லிமிடெட்: அட்டையில் 6 பேக்கில் தல தரிசனம் என்பதற்காக இக்கதை தேர்வு என்று எடிட்டர் சொன்னதாக ஞாபகம். வெகு சுமாரான கதைக்களன்.

    3. கடல்குதிரை முத்திரை: கடல் குதிரை முத்திரை வைத்துக் கொண்டு ஒரு கும்பல் செய்வும் அட்டூழியம். ரொம்பவே சுமாரான கதை. பாதிக்கதைக்கு மேல் தொடரமுடியல.still it is incomplete in my list.

    4. கியூபா படலம்: இதை சொதப்பலில் சேர்க்க முடியாது. ஆனால், படிக்கும் போது ஒரு விதமான அயர்ச்சி. கதையின் கற்பனையோடு வரலாற்றை இணைப்பது ஒன்றெண்டால், மற்றது வரலாற்றோடு கற்பனையை இணைத்து கதை சொல்வது. ஆனால், இதில் கற்பனையோடு வரலாற்றை அதீதமாக சேர்த்துவிட்டப்படியால் இந்த அயற்சிக்கு காரணம். பெரிய பலூனில் நீள நீளமான வசனங்கள் கதை எப்போது முடியும் என்று சொல்ல வைத்து விட்டது. 150 பக்கங்கள் தாண்ட நான் பட்டப்பாடு....படிக்க பொறுமையும், கொஞ்சம் நேரத்தையும் ஒதுக்கி கொண்டோமேயானால் ஒரு மினி கியூபா டூர் உத்தரவாதம். still it is incomplete in my list .

    5. மரணத்தின் நிறம் பச்சை:
    தல கதையிலும் காதில் பூ சுற்றும் கதைகள் உண்டு தான். ஆனால், இது ஒரு தனி ரகம். ஏலியன் ஒருத்தன் வரான் ஓகே. சில மக்களை கொண்டு பச்சை கற்களை வைத்து எதோ செய்கிறான். அந்த கற்களை தொடுவதால் நாளடைவில் நோய்வாய்படுகிறார்கள். இதை, கண்டு பிடிக்க தல & கோ வந்ததும் மாயமாய் மறைந்து போறான். எதற்கு வந்தான், அவன் நோக்கமென்னா..? ஒன்னும் புரியல, கதையை படிச்சி எனக்கு முடியல.

    PN : யானைக்கும் அடி சறுக்கும் என்பது தல கதைகளுக்கும் பொருந்தும் போல. தல கதைகள் 100% க்கு ஒரு 75% தான் இந்தாண்டு தேறியுள்ளது. பார்ப்போமே, அடுத்தாண்டாவது கதை தேர்வில் செஞ்சுரி அடிப்பாராயென்று ..? கதை பக்களவில், சைசில், வண்ணத்தில், B/W என வித்தியாசங்கள் காட்டினாலும், கதை தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் அவசியம்.

    ReplyDelete
    Replies
    1. அருமையான அலசல்!

      // அராஜகம் அன்லிமிடெட்: // I agree with you!!

      // கியூபா படலம்: // எனக்கு மிகவும் பிடித்தது! ஆனால் ரொம்ப பொறுமையுடன் படிக்க வேண்டிய கதை! இதில் உள்ள கதாபாத்திர படைப்புகள் அருமை!

      Delete
    2. ///. அண்டர்டேக்கர்:
      இக்கதை கவ்பாய் வகையில் ஒரு தனிரகம் . எத்துனை முறை படித்தாலும் அலுக்காது, சலிக்காது. உயிரோட்டமான ஓவியங்களும், வர்ணக்கலவையும், அட்டகாசமான வசனங்களும் ஆஸம்///

      மீ டூ...

      Delete
    3. // ஓநாயின் சங்கீதம்:
      அட்டகாசமான ஓவியங்களுடன் கதையும் அட்டகாசமாய் கைகோர்த்துக்கொள்ள கூட துள்ளலான வசனங்களும் கதையில் ஆங்காங்கே வரும் ட்விஸ்ட்களுக்கு சற்றும் சளைத்ததல்ல. ரெட் டஸ்ட் hope to see you at 2019. //

      +100000000000

      Delete
  76. நாளை இந்த வருட E சந்தாவில் பாக்கி இருக்கும் கிராபிக் நாவல் delivery எதிர்பாக்கலாமா சார் ?

    ReplyDelete
  77. எடிட்டர் சார்... 'நிஜங்களின் நிசப்தம்' புத்தகத்தை டேபிள் மேல வச்சுக்கிட்டு நீங்களே 165வது தடவையா படிச்சுக்கிட்டிருந்தா அப்புறம் நாங்கள்ல்லாம் எப்போ படிக்கிறதாம்?!!

    சட்டுபுட்டுனு அனுப்பி வையுங்க சார்... பயங்கரமான கி.நா பசி எங்களுக்கு!

    ReplyDelete
  78. இந்த வருடம் வந்த எல்லா கதைகளையும் படித்துவிட்டேன் ஆனால் ஒரு புத்தகத்தை தவிர! எது என்று சொன்னால் ஆச்சரியப்பட கூடாது  அது இந்த வருட தீபாவளி மலர்தான்! இந்த புத்தகம் வந்த போது மேலோட்டமாக புரட்டிய போது, தலைவன் ஒரு சகாப்தம் ஓவியங்கள் ரசிக்கும் படி நன்றாக இருந்தது, இரண்டாவது கதையான “அழகாய் ஒரு அராஜகம்”, ஓவியம் வெகு சுமார்; படத்தில் உள்ளவர் டெக்ஸ் மாதிரி தெரியவில்லை! எந்த கதையும் படிக்காமல் அப்படியே வைத்து விட்டேன்!

    ஒரு மாதம் கழித்து “அழகாய் ஒரு அராஜகம்” படிக்க ஆரம்பித்தேன் சிறையில் கல் உடைக்கும் டெக்ஸ் ஆர்வத்தை கிளப்பவே இந்த கதையை படிக்க ஆரம்பித்தேன்! நான்கு பக்கங்களுக்கு மேல் படிக்க தோன்றவில்லை! ஆம், நத்தை வேகத்தில் நகர்ந்த கதை. முடிவு இது தான் என்று முதல் பத்து பக்கங்களை படித்த பின் தெரிந்து கொண்டேன், ஆனால் அதனை சுவாரசியமாக கொண்டு செல்லும் காட்சிகள்/விறு விறுப்பான சம்பவங்கள் எதுவும் இல்லை. ஆனால் டெக்ஸின் பல கதைகளின் முடிவு முதல் சில பக்கங்களில் யூகிக்க முடிந்தாலும் அடுத்த அடுத்த சம்பவங்கள் விறுவிறுப்பாக இருக்கும், அது தான் டெக்ஸ் கதையின் சிறப்பு!

    சரி ஓவியமாவது ரசிக்கும் படி இருக்கும் என்றால் அதுவும் இல்லை, கதாபாத்திரங்களை ரசிக்கும் படி வரையவில்லை, சரி கதையின் பின் படங்கள் (back ground) அதுவும் நன்றாக இல்லை. இதில் புத்தகத்தின் அளவு வேறு வழக்கமாக வரும் வண்ண புத்தக கதைகளின் அளவை விட பெரியது, அதற்கு தகுந்தால் போல் சித்திரங்கள் இருக்குமா என்றால் இல்லை! ஒவ்வொரு பக்கத்திலும் குறைந்த படம்கள்தான், ஆனால் ரசிக்கும்படி ஒன்றும் இல்லை, படங்கள் பெரியதாக இருந்ததுதான் மிச்சம்! இதற்கு நமது சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் புத்தகத்தில் உள்ள சித்திரங்கள் பல மடங்கு மேல்!

    ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள்: வரும் காலம்களில் இது போன்று பெரிய அளவில் புத்தகங்களை வெளி இட வேண்டாம்! இதனை பாதுகாப்பது சிரமமாக உள்ளது. தற்போது வரும் இரண்டு அளவுகளில் மட்டும் வெளி இட வேண்டும் (கருப்பு வெள்ளை & வண்ணத்தில் வரும் A4). For this story I don’t see any value add with the size of the book. எங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவது நாங்கள் நன்றாக அறிந்ததே! ஆனால், இது போன்று வேண்டாமே!

    பல வருடங்களுக்கு முன் வந்த தூங்கி போன டைம் பாம் கதையை பலமுறை எடுத்து படிக்க முயற்சித்து இன்று வரை படித்து முடிக்கவில்லை;. இந்த கதையை இன்னும் நான் படித்து முடிக்கவில்லை! ஆனால் எப்படியாவது அடுத்த இரண்டு வாரத்திற்குள் இந்த புத்தகத்தை படித்து முடித்து விட வேண்டும் என்று உள்ளேன்!

    இந்த கதையின் தலைப்பு கவிதைபோல் இருந்தது “அழகாய் ஒரு அராஜகம்”; அதற்கு எனது மலர் கொத்துகள்!

    ReplyDelete
    Replies
    1. @ பரணி வில்லியம் வான்ஸ்ஸினுடைய தூரிகையில் உருவான ஷானின் Xlll ஐ இது போல் பெரிய வடிவமைப்பில் வெளிவந்தால் இரசிக்கும்படி இருக்கும். இதைத்தானே சுற்றி வளைத்து சொல்ல வருகிறீர்கள்.

      Delete
    2. @ பரணி வில்லியம் வான்ஸ்ஸினுடைய தூரிகையில் உருவான ஷானின் Xlll ஐ இது போல் பெரிய வடிவமைப்பில் வெளிவந்தால் இரசிக்கும்படி இருக்கும். இதைத்தானே சுற்றி வளைத்து சொல்ல வருகிறீர்கள்.

      Delete
  79. சகோதரர்களே! இன்று மாலை 4 மணிக்கு லயன் ஆஃபீஸுக்கு போன் செய்திருந்தேன். 'நிஜங்களின் நிசப்தம் 15-ம் தேதி வாக்கில் வந்து சேரும் என்றீர்கள். இன்னும் கிடைக்கவில்லையே, எப்போது கிடைக்கும்?' என்று விசாரித்தேன். போனில் பேசிய பெண் 'அதில் ஒரு சின்ன பிரச்சனை உள்ளது' என்றும் 'இம்மாதம் கடைசி வாரத்தில் வந்தடையும்' என்றும் சொன்னார். அது என்ன பிரச்சனை என்று நாளை மறுநாள் எடிட்டர் பதிவில் அறிவிப்பார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  80. Top stories for 2017,

    For me all stories are at top.

    cartoon stories are little bit boring, dialogue may be a reason for it, does anyone feel it?

    ReplyDelete
    Replies
    1. I do sometimes feel that they are boring due to similar styles across all cartoon stories. It's a mixed bag.

      Delete
  81. எடிட்டரின் புது சூப் ரெடி றண்பர்களே

    ReplyDelete