Saturday, October 07, 2017

வாருங்களேன்... வாழ்த்துங்களேன் .. !

நண்பர்களே,

வணக்கம். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாய் தொடர்ந்திடும் இந்தப் பதிவுப் படலத்தில் காமிக்ஸ் சார்ந்த சமாச்சாரங்களைத் தவிர்த்து வேறேதும் எழுதிடக் கூடாது என்பதை ஒரு கொள்கையாகவே கொண்டு வந்திருக்கிறேன் ! அவ்வப்போது எனது பயணங்கள் சார்ந்த பதிவுகளோ ; சிலபல வில்லங்கக் கிழவிகளிடம்  பல்ப் வாங்கிய நினைவுகளோ அந்தக் கொள்கைக்கு விலக்காக நின்றிருக்கலாம் ! ஆனால் அவையும் ஏதோவொரு விதத்தில் நம் தேடல்களுக்குச் சம்பந்தம் கொண்டவைகளே என்ற விதத்தில் இதுநாள்வரையிலும் வண்டி ஓடியுள்ளது ! முதன்முறையாக  எடிட்டர் குல்லாயை அணியாது, இங்கொரு சொட்டைத்தலைத் தந்தையாய் மட்டுமே ஆஜராகிடவொரு சந்தோஷத் தருணம் புலர்ந்துள்ளது ! அதனை உங்களோடு பகிர்ந்திடுவதே இவ்வாரப் பதிவு !

Without anymore ado - இதோ நேராய் விஷயம் ! முரட்டு நந்தியாய் நான் நிற்க, நமது ஜுனியர் எடிட்டருக்கு தொழில்முறை promotion கிட்டியுள்ளதோ, இல்லையோ - வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு நகர்ந்திடும் நேரம் மலர்ந்துள்ளது ! Oh yes - வரும் நவம்பர் 30-ம் தேதி விக்ரமுக்குத் திருமணம் உறுதியாகியுள்ளது ! And சிவகாசியிலேயே தான் திருமணம் !! இதோ அது சார்ந்த விபரங்கள் ! 
கணக்கிலடங்கா சந்தர்ப்பங்களில் நீங்கள் ஒவ்வொருவருமே எங்கள் மீது பொழிந்துள்ள அன்புக்கும், ஆதரவுக்கும், அனுசரணைக்கும் ஒரு ஆயுட்காலம் போறாது நன்றி சொல்ல ! முதன்முறையாக உங்களை எங்கள் ஊருக்கு வரவேற்று, இந்த சந்தோஷத்தைப் பகிர்ந்திடக் கிட்டியுள்ள வாய்ப்பினை கடவுளின் வரமாகவே பார்த்திடுகிறேன் ! So  ஒவ்வொருவரையுமே நேரில் அழைத்ததாய்க் கருதி, நம் இல்ல விழாவினில் பங்கேற்றிட கரம்கூப்பி வரவேற்கிறோம் ! Of course - குடும்பத்துடன் வர சாத்தியமாகின் would be simply awesome !! முந்தைய மாலையே நிச்சயதார்த்த விழா உள்ளதால் - அப்போதிலிருந்தே உங்களை வரவேற்கக் காத்திருப்போம் ! Of course சீனியர் எடிட்டரும் உங்களை எங்களூரில் சந்திக்கவிருக்கும் உற்சாகத்தில்  துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார் ! 

உங்களோடு வளர்ந்த பிள்ளையை வாழ்த்த உங்களைவிடவும் தகுதியானவர்கள் வேறு யார் இருக்க முடியும் folks ? வாருங்களேன்... வாழ்த்துக்கங்களேன்.. .ப்ளீஸ் !! 
  • பின்குறிப்பு : Rain or shine .....நமது இதழ்கள் வழக்கம் போலவே தொடர்ந்திடும் ! ஆகையால் அவை சார்ந்த பணிகளிலோ ; அட்டவணையின் கவனங்களிலோ, வாராவாரத்துப் பதிவுகளிலோ  துளியும் சுணக்கமிராது ! Business as usual !! 
  • சிறுநகரம் என்பதால் தங்கிட ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்திட அவசியமாகிடலாம்  என்பதால் - நண்பர்கள் wedding.lion@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ ; அல்லது இங்கேயேவோ தங்களின் திட்டமிடலைப் பகிர்ந்திட்டால் உதவிடுமென்று தோன்றியது ! Of course வார நாளென்பதாலும், பிஸியான முகூர்த்த தினமென்பதாலும் தத்தம் பணிகளை / முன்கூட்டிய அட்டவணைகளை உதறி விட்டு இத்தனை தூரம் பயணிப்பது சுலபமல்ல என்பதை அறியாதவனல்ல நான் ! So வருகை தந்திடச் சிரமமாகிடும் பட்சத்தில் உங்களின் long distance வாழ்த்துக்களுமே நம் பிள்ளையை தழைக்கச் செய்யுமென்பதை புரிந்து கொள்வேன் ! But all the same - உங்களை வரவேற்கும் ஆவலோடு விடைபெறுகிறேன் இப்போதைக்கு ! 

Bye all !! See you around !! (And I mean it literally too this time !!)

289 comments:

  1. இரவு வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  2. வாவ்...வாவ்... வாழ்த்துக்கள் ஜூனியர் எடிட்டர் சார்...🎉🎉🎉🎉🌷🌷🌷🌷

    ReplyDelete
    Replies
    1. ஹும்ம்ம்
      சும்மாவே சாமியாடுவாங்கே
      இப்ப கறி விருந்தா

      இப்பவே கண்ண கட்டுதே°°°°°°

      Delete
  3. வாழ்த்துக்கள் விக்ரம்!!!!

    ReplyDelete
  4. Wow, congrats Vikram for stepping into next phase of your personal life.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் விக்ரம்!!!

    ReplyDelete
  6. இனிய இல்வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் விக்ரம்...

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் விக்ரம்

    ReplyDelete
  8. ஜூனியர் எடிட்டருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.
    🎁🎁🎁🎁🎁

    ReplyDelete
  9. மணவாழ்வில் மகிழ்ந்து திளைத்துத் தழைத்திட வாழ்த்துகள் விக்ரம்-கீர்த்தனா..!

    ReplyDelete
  10. வணக்கம்

    ReplyDelete
  11. மனமார்ந்த வாழ்த்து சொல்லும் அளவுக்கு மணமான ஆளில்லை நான்.. இருப்பினும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் விக்ரம் சகோ.. இல்வாழ்வில் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துக்கள்..💐💐💐🎂🎂

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் விக்ரம் அரவிந்த்...

    ReplyDelete
  13. வாழ்த்துகள் விக்ரம் சார்.!!

    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    ReplyDelete
  14. விக்ரமுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் விக்ரம்.
    முத்து பெற்றது சிங்கம்
    சிங்கம் பெற்றது லயன்
    விக்ரம் தரப்போவது வேதாளரோ.

    ReplyDelete
    Replies
    1. Ayya
      Unga vaayile 1000000000 kgs
      Panai vella sarkkaraiyai poda
      Unga vaai muhoortham palikkattum
      Vedhaalar kalam irangattum

      Delete
  16. சூப்பரான செய்தி சார்.

    ஜூனியர் எடிட்டருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete

  17. ஜூனியர் எடிட்டருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    இது நம்ம வீட்டு விசேஷம் சார் ...


    திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன்

    ReplyDelete
  18. விஜயன் சார் இது அழைப்பிதழ்.
    நாளை வழக்கமான பதிவு வேண்டும்.

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் சின்ன எடிட்டரே

    ReplyDelete
  20. இனிப்பான செய்தி ஆசிரியரே மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  21. ஆசிரியர் குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  22. இல்லற வாழ்வில் இணையவிருக்கும் எங்கள் வீட்டுப் பிள்ளை விக்ரமிற்கு எங்களது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  23. சந்தோஷமான விஷயம் சார். வாழ்த்துக்கள் விக்ரம்.! God bless..

    ReplyDelete
  24. Advance happy married life my dear vikki

    By. Sham erode

    ReplyDelete
  25. Certainly I will be come to the marriage

    Sham erode

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள் விக்ரம்.

    ReplyDelete
  27. Wish you happy marriage life

    ReplyDelete
  28. வாழ்த்துகள் விக்ரம்.
    உங்கள் திருமண வாழ்க்கையில் எல்லா நலன்களும் பெற்று என்றென்றும் சந்தோஷமாய் வாழ எனது மனம் நிறைந்த ஆசிகளும்,வாழ்த்துகளும்.
    சீனியர் எடிட்டர்,நமது எடிட்டர்,ஜூனியர் எடிட்டர் இவர்களின் பங்களிப்பை நம் காமிக்ஸ்களில் பார்த்துவிட்டோம்.
    வரும் காலங்களில் மினி ஜூனியர் எடிட்டர் அவர்களின் பங்களிப்பையும் பார்க்காமல் விடப்போவதில்லை.
    "தம்பதிகளுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்"

    ReplyDelete
  29. உய்ய்ய்ய்...இதை..இதைதான்
    எதிர்ப்பார்த்தேன்...
    என்ன இனிப்பான செய்தி...

    வாழ்த்து மழை பொழியவும்,
    வரேற்ப்பு அரங்கம் அதிரவும்,
    நம் நெஞ்சார்ந்த அன்பை தெரிவிக்கவும்,
    நமது மகிழ்மதியான சிவகாசி
    பயணத்திற்கு தயாராகுங்கள் நண்பர்களே.!

    ReplyDelete
  30. ஜூனியர் எடிட்டருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.எனக்கு வாழ்த்துக்களை வழங்கிய எடிட்டர் சார் மற்ற நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி ஆயிரம்

    ReplyDelete
  31. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ஜூனியர் எடிட்டர்!

    ReplyDelete
  32. Advance congratulations &best wishes vikram brother. 💑💞🎁🎁🌷🌹🌷🌹💐💐👏👏👏

    ReplyDelete
  33. வாழ்த்துக்கள் விக்ரம்

    ReplyDelete
  34. Hearty wishes for happy married life dear Vikram !

    ReplyDelete
  35. ஜூனியர் எடிட்டருக்கு அட்வான்ஸ் திருமண வாழ்த்து

    ReplyDelete
  36. !!!

    :) :) :) :) :)

    இக்ளியூண்டுகூட எதிர்பார்த்திடாத சந்தோச அறிவிப்பு இது!

    மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மகிழ்ச்சி!

    அட்வான்ஸ் வாழ்த்துகள் விக்ரம்!

    இதுவரை சிவகாசியில் காலடி வைத்ததில்லை! சிவகாசிக்குச் சென்று சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்துவிட்டு வரவேண்டுமென்பது என் நீண்டநாள் கனவு! அது இப்படியொரு அழகான வைபவத்தின் மூலமாக நிறைவேறயிருப்பது குறித்து ஆனந்தமோ ஆனத்தம் எனக்கு!

    விக்ரமிற்கு: இன்னும் சுமார் இரண்டு மாதங்கள் மீதமுள்ள நிலையில், இப்போதிருந்தே பூரிகட்டைகளையும், கரண்டி வகையறாக்களையும் லாவகமாக கேட்ச் பிடிக்கக் கற்றுகொள்ளவும்! ;)

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்
      அனுபவம் பேசுகிறது.

      Delete
    2. மண்ட வீங்கி மகாதேவன் சொல்லிட்டாரு
      கேட்டு தான ஆகணும்

      Delete
  37. Congrats Vikram. Wish you a Happy Married Life, in advance.

    அம்மனிக்கும் காமிக்ஸ் ஆர்வம் உண்டெனில், இரட்டை சந்தோஷம் !

    ReplyDelete
    Replies
    1. அட ரபீக்கு
      எப்டீ இருக்கீக

      Delete
  38. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள் விக்ரம்! சந்தோசம்.

    ReplyDelete
    Replies
    1. சிவகாசி பக்கம் வண்டியை திருப்பி விட வேண்டியதுதான்.

      Delete
  39. மலர்களில்
    மாலை கட்டும் வித்தையை
    உன்
    கண்களுக்குச் சொல்லி
    வைத்த
    மணமகள் கீர்த்தனா –
    எங்கள்
    மணமகன் விக்ரம் அரவிந்த் - ன் எண்ணங்களை
    மலர்களாக்கி
    மாலைசூடி அணிந்துகொண்ட தென்று
    வாழையடி வாழையாய்
    பூமலரும் சோலையாய்
    நல்லதொரு வேளையில்
    புதுமனங்கள் சேர்ந்திட
    தேவர்களும் வாழ்த்துவர்
    வானவரும் வாழ்த்துவர்
    மண்ணிலுலகில் வாழ்ந்திடும்
    மாந்தர்களும் வாழ்த்துவர்
    நாங்களும் வாழ்த்துவோமே.. 💐💐💐

    மிக்க மகிழ்ச்சியான பெறுஞ்செய்தி விஜயன் சார்... 😍😍

    என் முருகனின் ஆசீர்வாதங்கள் என்றும் இத்தம்பதியினர்க்கு கிட்டிட என் பழனி முருகனை நேரில் சென்று வேண்டிக் கொள்கிறேன் சார்

    கீர்த்தனா - விக்ரம் அரவிந்த் தம்பதியினராய் வளமுடன் நலமுடன் புகழுடன் வாழ்வாங்கு வாழ்ந்திட எங்கள் குடும்பத்தாரின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 😍😍😍😍😍😍

    ReplyDelete
  40. விக்ரமிற்கு வாழ்த்துகள்..

    அப்படியே, மனைவியின் பூரிகட்டை அடியிலிருந்து தப்பிப்பது எப்படி என்று அனுபவசாலியான பூரிகட்டை அடிதாங்கி இடிதாங்கியான டெக்ஸ் விஜயராகவன் எழுதிய புத்தகத்தை ஒரு முறை வாசித்தல் நலம்.


    வாழ்க வளமுடன்! !!

    ReplyDelete
    Replies
    1. அவரு எழுதுனது எப்படி தப்பிக்கறதுங்கறது இல்லீங். எவ்வளவு அடி வாங்கினாலும் சிரிச்சுகிட்டே கம்பீரமா நிக்கறது எப்படீங்கறது.

      Delete
    2. பயப்படுத்தாதீங்கப்பா..

      Delete
    3. க்கும்... பப்ளிக்...பப்ளிக்... கம்பெனி ரகசியத்தை வெளில சொல்லீட்டீங்களே டாக்டர்...😎😎😎

      அந்த புத்தகத்தில் ஸ்பெசலாக ஒரு அத்தியாயம் எழுதியுள்ள மருத்துவரின் அனுபவங்கள், பூரி கட்டை தடுப்பு யுத்திகளை சிறப்பாக சொல்லி தரும் விக்ரம் ஜி.

      அடிவாங்கி அடிவாங்கி குரூப்புக்கே உதாரணமாக நிற்கும் கம்பீரமான கனவான்தான் நம்ம டெக்ஸாஸ் மஹி ஜி. அவருடைய வியூகங்கள் உலக பிரசித்தி. உதாரணமாக மனுசன் வீட்டிற்குள்ளேயும் ஹெல்மெட்டை கழட்டவே மாட்டார்.ஹா...ஹா...

      அப்புறம் நம்ம கரூர் சாரோடது மாடர்ன் டெக்னீக். எல்லா பூரி கட்டையும் ஃபைபர்ல வாங்கி தந்து உள்ளாராம். எவ்வளவு வேகமாக வந்து மோதினாலும் அப்படியே வளைந்து வளைந்து இம்பாக்ட் குறைந்து விடுகிறதாம். அதுவே அவரோட பெர்சனால்டி ரகசியம்...

      Delete
    4. ஹாஹ்ஹா ஹஹா
      அப்டியே நம்ப ரகசியத்த சீக்ரட்டா சொல்றேன்னேன்
      கிட்டக்க வாங்கப்பா

      கிஸ்கிஸ்க கிசுகிசு

      எப்பூடி...

      என்னாது
      ஓண்ணுமே கேக்கலியா

      நல்லா கேளுங்கப்பூ

      ...............

      கேட்டிச்சா
      ஆமா
      யார்ட்டயும் சொல்லக் கூடாது

      திருமதிJ: அங்க என்ன சத்தம் ...
      J: ஹிஹ்ஹி. ஓணும்மில்லம்மா
      J: (வாய்க்குள்ள) இப்டி சத்தமா கேட்டா பயந்துடுவோமாக்கும்
      காமிக்ஸ்: ஙே°°°°
      J: சிங்கம்ல .
      வெளியிலயும் சிங்கம்
      உள்ளேயும் சிங்கம் தாம்ல
      என்ன வீட்டுக்குள்ள சிங்கத்து மேல
      எம் பொஞ்சாதி உக்காந்திருப்பா
      மகிசாசுர மர்த்தினியாட்டமா..

      Delete
    5. J ji@ஹா...ஹா...

      இந்த மனைவியாண்டீஸ்வரிகளே இப்படித்தான்...😷😷😷(வார்த்தை உபயம் தலீவர்)

      Delete
  41. விக்ரமிற்கு வாழ்த்துகள்..

    அப்படியே, மனைவியின் பூரிகட்டை அடியிலிருந்து தப்பிப்பது எப்படி என்று அனுபவசாலியான பூரிகட்டை அடிதாங்கி இடிதாங்கியான டெக்ஸ் விஜயராகவன் எழுதிய புத்தகத்தை ஒரு முறை வாசித்தல் நலம்.


    வாழ்க வளமுடன்! !!

    ReplyDelete
  42. Best wishes to Vikram and Keerthana !

    Congratulations to Editor and family - it is an immense task to accomplish a bring up culminating in Wedding !

    Comic Lover Raghavan

    ReplyDelete
    Replies
    1. Please plan Reception parties in Chennai and Erode 2018 !! :-)

      Delete
  43. ஜூனியர் எடிட்டருக்கு அட்வான்ஸ் திருமண வாழ்த்துகள். இல்வாழ்ககை இனிதே அமைய, மனமொத்த தம்பதிகளாக பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகள்.

    ReplyDelete
  44. தோழர் விக்ரம் அவர்களுக்கு அட்வான்ஸ் தி௫மண நல் வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. அலோ சரவணாரே@ சந்தடி சாக்கில் உங்களுக்கும் மாப்பிள்ளை வயசுதான்னு சொல்றீங்களே... நியாயமா பாஸ்...நீங்களாம் நம்ம செட்... நாமலாம் டை அடிக்க ஆரம்பிச்சே வருசம் 20ஆச்சு...ஹி...ஹி...😆😆😆

      Delete
    2. அப்டியா டெக்ஸு
      இது தெரியாம போச்சே

      Delete
  45. Vikram,
    Congratulations!
    Advance wishes for your new life ahead!

    ReplyDelete
  46. வாழ்த்துக்கள் விக்ரம்
    சகோதரனின் திருமணத்தில் நாங்க இல்லாமலா ? போட்டர்றேன் 4டிக்கெட் 2முழு 2 அரை

    ReplyDelete
    Replies
    1. மூஊஊஊஊஊஊத்த சகோதரன்னு சொல்லுங்கள் பழனி அண்ணே...!!!

      Delete
    2. சாமி அந்த பித்தநரைய தப்பா எடுத்துக்காதிங்க அண்ணே !!!

      Delete
    3. என்னாது தல புராணமாவே இருக்கு

      Delete
  47. நண்பர்களே குடும்பத்தோட சிவகாசிய அதிர வைப்போம் எடிட்டரோட உறவினர்கள் மெரண்டுபோகனும் ஆமா சொல்லிட்டேன் !

    ReplyDelete
  48. வண்டிக்கு ஆயில் மாத்தி டேங்க புல் பண்ணியர வேண்டியது தான் .!
    யாராவது கூட வர்ரிங்களா ?

    ReplyDelete
  49. மணமக்கள் விக்ரம்-கீரத்தனா அவர்களுக்கு மனமார்ந்த முன்கூட்டிய
    தி௫மண நல் வாழ்த்துக்கள்!!!!!!!!!
    பதினாறும் பெற்று பெ௫வாழ்வு வாழ்க!!!!!!!
    மணமக்கள் வாழ்க வளமுடன்!!!!!
    தி௫மண பந்தத்தில் இணையும் இம் மணமக்கள் வாழ்வின் எல்லா நலன்களையும் ஒ௫ங்கே பெற்று மகிழ்ச்சியான மணவாழ்க்கை வாழ எல்லாம் வல்ல பழனி மு௫கன் ஆசிகள் துணை புரியட்டும்.!!!!!

    ReplyDelete
  50. தம்பி விக்ரம் அவர்களுக்கு இனிய அட்வான்ஸ் தி௫மண நல் வாழ்த்துக்கள்!!!!!

    ReplyDelete
  51. ஜூனியர் எடிட்டருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.
    🎁🎁🎁🎁🎁

    ReplyDelete
  52. வண்டிக்கு ஆயில் மாத்தி டேங்க புல் பண்ணியர வேண்டியது தான் .!
    யாராவது கூட வர்ரிங்களா ?

    ReplyDelete
    Replies
    1. கரூரில் மதியம் 2 மணிக்கு வண்டிய கெளப்புறோம்

      Delete
    2. 21 பேர் போற டிராவல்ஸ் புக் பண்றோம் கெளம்பறோம் வேலாயுதம்பாளையம் வேலூர் ஜேடர்பாளையம் கரூர் இன்னும் பக்கமாக யார் வந்தாலும் சரி

      Delete
    3. அய்யா கல்யாணம் காலை 10.45 -11.45. நீங்கள் கிளம்பி வர்ர நேரத்த பார்த்தால் மறுநாள் கறிச்சோற குறிபார்த்து வர்ர மாதிரி தெரியுது.

      Delete
    4. அய்யா 29 தேதி மத்தியானம் ஜி

      Delete
  53. மகிழ்ச்சியான செய்தி சார்!!!!!
    மணமக்கள் விக்ரம்-கீர்த்தனா அவர்களுக்கு எங்கள் அப்பன் மு௫கப் பெ௫மான் என்றென்றும் துணையாய் இ௫ந்து அ௫ளாசி வழங்கி வாழ்க்கைப் பயணத்தை இனிமையாக்கிடுவார்!!!!!

    ReplyDelete
  54. டியர் எடிட்டர்

    விக்ரமுக்கு திருமணம் ஆக இருப்பதால் இனி ஜூனியர் எடிட்டர் என்று அழைப்பதை நிறுத்தவும். He can be called Editor. நீங்கள் லயன் காமிக்ஸ்ல் Founding Editor என்றும் முத்து காமிக்ஸ்ல் ஒன்றும் போட்டுக்கொள்ளாமலும் (அதான் Founding Editorஆக தாத்தாவும் Editor ஆக பேரனும் இருக்காங்கல்ல :-)) காலத்தை ஒட்டவும் !

    :-) :-) :-)

    (ஹப்பா .. இன்னி பொழுதுக்கு கொளுத்தி போட்டாச்சி .. நிம்மதியா தூங்குவோம் .. கொர் ... கொர் ... கொர் ... கொர் ...)

    ReplyDelete
  55. மணமக்கள் விக்ரம்-கீர்த்தனா அவர்களுக்கு
    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் உடைத்தது.
    நல் வாழ்த்துக்கள்!!!!!!!!

    ReplyDelete
  56. வாழ்த்துக்கள் விக்ரம்🎉🎈🎇🎆🎊🎇🎈🎆🎁🎉

    ReplyDelete
  57. Hope my 20 years dream of traveling to sivakasi takes place on November 30. Congrats Vikram.

    ReplyDelete
  58. Congratulations Vikram!

    what a timing.. I just posted this 2 days back to make Vikram captain for the first time ...

    ----------------------------------------------------------------
    Vijan Sir and friends,
    Just an idea...
    How about a special edition (outside of regulars) in 2018 with following conditions?
    1. 100% fully managed by our Junior Editor
    2. From source story selection to dispatch and everything in between (ofcourse he could use professionals wherever needed)
    3. Size, price totally fixed by him
    4. We could call it as..
    NextGen special or
    3Gen or 3G special

    -------------------------

    ReplyDelete
  59. குட்டி சிங்கத்திற்கு அட்வான்ஸ் திருமண நல்வாழ்த்துகள். இன்று போல் என்றும் மனமகிழ்ச்சியுடன் திருமண வாழ்க்கை அமைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.....💐💐💐💐

    ReplyDelete
  60. Dear Vikram,

    Advance wishes for long , prosperous and happy married life.

    ReplyDelete
  61. வருவமுல்ல...வழ்த்துவமுல்ல......விக்ரம் முன் கூட்டிய வாழ்த்துகள்

    ReplyDelete
  62. ஜூனியர் எடிட்டருக்கு அட்வான்ஸ் திருமண வாழ்த்துகள்.

    ReplyDelete
  63. மிக மகிழ்ச்சியான தருணம் சார் . மண மக்களாக ஜூனியர் எடிட்டர் விக்ரம் -கீர்த்தனா தம்பதிகளுக்கு இனிய அட்வான்ஸ் திருமண நல் வாழ்த்துக்கள் . சகல வளங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ மனமார வாழ்த்துகின்றேன்

    ReplyDelete
  64. Our best wishes to vikram & keerthana.

    ReplyDelete
  65. நல்வாழ்த்துகுக்கள்.

    ReplyDelete
  66. ஜூனியர் எடிட்டருக்கு அட்வான்ஸ் திருமண வாழ்த்துகள்

    ReplyDelete
  67. ஜூனியர் எடிட்டருக்கு என் முன்கூட்டிய திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்....

    ReplyDelete
  68. ஐூனியர் எடிட்டருக்கு அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  69. மிக மகிழ்ச்சியான செய்தி...

    ஜூ.எடிட்டர் அவர்களுக்கு எனது மனமார்ந்த முன்கூட்டிய வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன் ..:-)

    ReplyDelete
  70. Sir, VIKRAM MARRIAGE SPECIAL nu Oru bookuu.......😀😀😀😀

    ReplyDelete
  71. வாழ்த்துக்கள் மணமக்கள் விக்ரம் மற்றும் கீர்த்தனா.
    வாழ்த்துக்கள் எடி சார்.( விரைவில் தாத்தாவாக)

    ReplyDelete
  72. மணமக்களுக்கும் குடும்பத்தினருக்கும்,
    மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  73. வாழ்க்கை கப்பலில்
    MLA (MEMBERS of LIFE ASSOCIATION) ஆக போகிறார் விக்ரம்.

    வாழ்த்துக் கவி

    கலங்கரை விளக்கு கண்டீர்
    சௌந்தர மாய் நிமிர்ந்து நிற்க
    கலங்கா நம்பிக்கை கொண்டீர்
    மௌனமாய் பாட்டியோடே கற்க

    வழி காட்டும் ஜோதியாய் அப்பா
    விழி சாட்டி விஜயன் கை காட்ட
    ஜோதிக்கு மெழுகாய் தந்திட
    பாதியாய் ஶ்ரீமதிவிஜயன் வந்திட

    வாழ்க்கை கலத்தில் பயணிக்க வரும்
    வேழ்க்கை விக்ரம் வாராய்
    திருவே வருக ஶ்ரீஶ்ரீ
    திருவின் உருவே வருக என்றுனை

    நம்பியே வரும் துணையை
    அம்பியே நீ யழைத்து வா
    சார்ந்த குடி மலர்ந்து தளை விட
    சோர்ந்திடா பாகுபலி களை களை

    வீழ்ந்திடா மனங் கொண்டிங்கு
    தாழ்ந்திடா சினங் கிண்டி
    ஆலமாய் கிளை பரப்பி
    ஞாலமாய் கண் சிறப்பி

    சீலமா யுயர்ந் தோங்கி
    கீலமாய் துயர் கதவாங்கி
    பாலமாய் கரை கடந்து
    வேலமாய் பகை வென்றே


    சிவந்த அறமகள் கொள்வாய்
    பவந்து டைத்து யர்வாய்
    அவந்த னியில்லை பாராய்
    உவந்த ழைத்தோ மெம்பிள்ளாய்!

    அன்பன்
    J

    ReplyDelete
    Replies
    1. ஈ வி
      டெக்ஸ் வி
      பரணி
      கிட் ஆ
      சே சத்யா
      ஸ்டீல்
      ம பா
      சரவணா
      சரண்
      தனி
      பொடி
      திரு செ

      சேந்த மங்
      சென்னை சங்
      மதுரை கங்
      கோவை விங்
      ஈரோடு செங்
      ஸ்ஸப்ப்ப்பாஆஆஆஆ
      எல்லா தரப்பும
      வண்டி கட்டி
      சிவ காசி யவே
      ஒண்ணு மண்ணா நிண்ணு
      ரெண்டுல ஒண்ணு
      பாத்திடணும் வாங்க மக்கா....

      Delete
    2. J sir super 👏👏👏👌👌

      Delete
    3. ஓம்குமார் சிவகாசி சலோ

      Delete
    4. செம j ji...
      பிரமாதமான வாழ்த்து...

      ஒரு ட்ரெயினே புக் பண்ணிடலாம் ஜி...

      Delete
    5. ட்ரெயின்னா விருதுநகர் அல்லது சாத்தூர் போய் அங்கிருந்து பஸ்ஸில் போகனும்.

      Delete
    6. டெக்ஸ் வித்தியாசமா
      கவனத்தை ஈர்க்கிற மாதிரி
      ஏதாவது பண்ணலாம்

      Delete
    7. ஏம்பா நாம எல்லாமா சேந்து
      ஓரு காமிக்ஸ் ரகசியமா
      போட்டுத் தாக்குவோமா

      Delete
    8. @ j

      அம்மாடியோவ்!!! பின்னிட்டீங்க!!!

      பாதி புரியலேன்னாலும், புரிந்த வரிகளே பிரம்மிக்க வைக்கிறது!

      ஜூ.எடிக்கு கிடைத்த அழகான, சிறப்பான வாழ்த்து!

      Delete
    9. ஈ.வி
      எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும்

      ஈரோட்ல......
      எடிட்டர் கை பேக்ல பெரிய மேட்டரு வச்சிருக்கேன்னு
      சொன்னார்ல
      சீக்ரட் மேட்டரு இதாம் போலருக்கு
      அக்காங்~~~~~~|

      Delete
    10. @ j

      இருந்தாலும் இருக்கும்! ஆனாலும் ரொம்ப ஷார்ப் சார் நீங்க!

      Delete
  74. விக்ரம் -க்கு நல்வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  75. Vikram special nu, oru kundu book release pannalame edi sir

    ReplyDelete
    Replies
    1. அட ஆமாம்ல
      ஹை ஹை போட்டுத்தாக்கு\\\\\\

      Delete
    2. விஜய் நோட் திஸ் பாயிண்ட். ரொமான்ஸ் கதைக்கு ஒரு கடைசி சான்ஸ்.

      Delete
  76. இல்லறம் நல்லறமாய் அமைந்திட எனது குடும்பத்தினர் அனைவரின் ஆசிர்வாதங்கள் என் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் ஜூனியர் எடிட்டர் விக்ரம் அவர்களுக்கு......
    எனக்கு நேரில் வர விருப்பமே சந்தர்ப்பங்கள் அமைந்தால் வருவேன்.....
    எடிட்டரின் தம்பி பிரகாஷ் அவர்களின் திருமணத்திற்கு நான் போக முடியவில்லை அப்போது எனது தந்தையார் சென்று வந்தார் இப்போதும் அதுமாதிரி நடந்தாலும் நடக்கலாம், பார்ப்போம்......இனிய திருமண வாழ்த்துகள், அனைத்து வளமும் பெற்று நலமாய் வாழ வாழ்த்துகள்......

    ReplyDelete
  77. வாழ்த்துக்கள் விக்ரம்! இறைவன் ஆசீர்வதிப்பாராக!

    ReplyDelete
  78. This is awesome and best wishes to Jr. Editor and pray to god that he be blessed with all the happiness.

    ReplyDelete
  79. வாவ்.. எதிர்பாரா இன்ப அதிர்ச்சிதான். நம குடும்பத்தில் ஒரு திருமணம் என்பதாய் மகிழ்ச்சி ஏற்படுகிறது. விக்ரமுக்கு நம் அன்பும், வாழ்த்துகளும்.

    பை தி வே, லவ் மேரேஜா, அரேஞ்ச்டா என்ற தலைபோகிற முக்கியமான தகவலை எடிட்டர் சொல்லாத கோபத்தில்.. ரெண்டு நாள் முன்னமே சிவகாசிக்குப் போய் டேரா போட்டுவிடலாமா எனும் யோசனையில் இருக்கிறேன். :-)))))

    ReplyDelete
  80. விஜயன் சார், கல்யாணத்துக்கு மறுநாள் கறி விருந்து உண்டா :-)

    ReplyDelete
    Replies
    1. இப்பவே பூண்டு உறிக்க ஆரம்பிச்சிட்டாங்கே

      Delete
    2. ஆட்ட உரிக்க வில்லையா.? காலையில் இட்லி குடல் குழம்பு இரத்த பொரியல்..... மதியம்

      Delete
    3. கவுச்சீ யெல்லாம் மொத நாள் மாப்பிள்ள பார்ட்டீயில உண்டு

      உண்டு மகிழ்ந்து
      விழாவை சிறப்பிப்போர் சங்கம்

      Delete
  81. ஈரோடு.விஜய் @ ரொமான்ஸ் கதைக்கு கொஞ்ச நஞ்ச நம்பிக்கை கொடுத்த நம்ப விக்ரமும் மணவாழ்க்கைக்குள் நுழைவதால் உங்கள் கனவு கானல் நீர் போல் ஆகிவிடும் போல் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. விடுங்க இனி நிறைய ஆக்சன் கதைய பார்கலாம்.

      Delete
    2. @ PfB

      கல்யாணமாகிட்டா ரொமான்ஸ் வராதுன்னு யாருங்க சொன்னது?!! ஜூ.எ இனிமேதான் பலப்பல ரொமான்ட்டிக் கதைகளைக் கொண்டுவருவார்னு ஜக்கம்மா சொல்லிட்டா!

      Delete
  82. ஜுனியா் எடிட்டருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  83. Replies
    1. 200வது 'இங்கே கிளிக்'க்கிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் மாயாவி காரு!

      200 அட்டைப்படங்களுக்கு வெவ்வேறு அழகான பின்னணி படங்களை இணைத்து, தேர்ந்த வாசகங்களை தேடிப்பிடித்துப் பொருத்தி வடிவமைப்பது ஒவ்வொரு நாளுமே கணிசமான நேரத்தை விழுங்கும் பணி! அசாத்திய ஆர்வம் இல்லையெனில் இப்பணியை 200 நாட்களுக்கு நீட்டித்திருக்க முடியாது என்பதும் அப்பட்டமான உண்மை!

      தொப்பி தூக்கி தலைவணங்குகிறோம் மாயாவி அவர்களே! காலம் உள்ளவரையில் உங்களது இந்தக் காமிக்ஸ் பணி தொடர வாழ்த்துகள்!

      எழுந்துநின்று கைதட்டும் படங்கள் ஏழாயிரம்!



      Delete
    2. கைதட்டி ஆரவாரம் செய்யும் படங்கள் எண்ணிலடங்காத எண்ணிக்கையில் சிவாகாரு.

      Delete
    3. @ இத்தாலிகாரு

      "நல்லா படிச்சி நல்ல மார்க் வாங்கியிருக்கே செல்லம்.என்னோட பாராட்டுக்கள்.. " ன்னு படிக்கற குழந்தைய வாழ்த்துறோம்.

      "வரவர நல்லா விளையாடி நல்லா சாப்புட்டு சுகமா தூங்கற செல்லம்..வாழ்த்துக்கள்.." ன்னு என்னிக்காச்சும் வாழ்த்தியிருக்கோமா...???

      இதை ஏன் இங்க சொல்றேன்னா...

      பிடிச்ச விஷயம் செய்யதுக்கு எதுக்கு பாராட்டுங்கிறேன்.! :)))

      ஆனா அந்த கடைசி வரி...

      ஏழாயிரம் கைதட்டல்...

      அந்த கைகளுக்கு சொந்தமானவர்கள் காமிக்ஸ் வாசகர்களாக இருந்தால் எடிட்டரின் முக பிரகாசத்தை நினைச்சுப்பாருங்க...

      பேரன்,பேத்தியை பார்க்கும் போது வர்ற பிரகாசத்தோடு போட்டி போடுங்கிறேன்.! :)))

      இருப்பினும் பாராட்டிய அன்புக்கும்,பண்புக்கும் நன்றிகள்பல பரணி.!

      Delete
    4. //அசாத்திய ஆர்வம் இல்லையெனில் இப்பணியை 200 நாட்களுக்கு நீட்டித்திருக்க முடியாது என்பதும் அப்பட்டமான உண்மை!//
      Well said EV
      Soooper mayavi sir

      Delete
    5. mayavi.siva : As always - அசத்துங்கள் சார் !

      Delete
    6. அழகான பூங்கொத்து படத்துடன் மனமார்ந்த வாழ்த்துக்கள் மாயாஜீ..

      Delete
    7. வாழ்த்துக்கள் வேதாளரே
      🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

      Delete
  84. இந்த தருணம் மிகவும் எதிர்பார்த்த ஒன்று. ஆனால் வியாழக்கிழமை என்பதால் வருவது கஷ்டமான விஷயம். இரண்டு குழந்தைகள் பள்ளி செல்வது பாதிக்கும். பார்கலாம் கண்டிப்பாக எதாவது கடைசி நேர வாய்ப்பு அமையும் இந்த விழாவில் கலந்து கொள்ள.

    ReplyDelete
    Replies
    1. பரணி இதல்லாம ஒரு மேட்டரா
      தனியா வாங்க
      மாப்பிள்ளே தோழன் நீங்க இருக்கப்ப
      எங்களுக்கென்ன கவலை.

      Delete
    2. தனியாக வரதுல உள்ள கஷ்டம்தான் மேலே குறிபிட்டது. குடும்பத்தோட வரதுனா அது இத விட கஷ்டம்ன்னு என்ன விட உங்களுக்கு நல்லாவே தெரியுமே ஜனா!

      Delete
    3. வார நாளைத் தவிர்க்க வழியில்லாது போய் விட்டது சார் ; இந்தாண்டின் முகூர்த்த நாட்களில் பெரும்பான்மை ஞாயிறு அல்லாத நாட்களே !

      Delete
    4. பரணி சார்
      அத வுடுங்க
      போ போ போய்ட்டு வந்த பின்னாடடி
      நாம் போய் வந்த சுற்றலாம் சுவைக்கலாம் பற்றி 2 பக்கங்கள் மிகாமல் வர்ரவு செல்லவு கணக் வித் 18,28 % Gst யோட வூட்டு டீச்சரம்மாட்ட
      குடுத்தாகணுமே.

      Delete
  85. வாழ்த்துக்கள் ஜு.எடி.விக்ரம்.

    ReplyDelete
  86. சும்மாவே சாமியாடுவாங்கே
    இப்ப கறி விருந்தா


    இப்பவே கண்ண கட்டுதே

    விட்றா விட்றா சுனா பானா
    சாப்ட்றதுல நம்பள அடிச்சுக்க முடியுமா

    பாசக் கார பயபுள்ளங்க
    உட்டுட்டு சாப்ட்றாதீங்க சாமிகளா

    அவுக் அவுக் என

    உண்டு மகிழ்ந்து
    விழாவை
    சிறப்பிப்போர் சங்கம்.

    ReplyDelete
    Replies
    1. மாப்ள தோழன் போஸ்டுக்கு அடிதடி நடக்குற மாதிரி கேள்வி.

      Delete
    2. j : எதெதுக்கோ சங்கங்கள் முளைக்கும் தமிழகத்தில் உங்களது 'அவுக்..அவுக்' சங்கம் ஒரு சூப்பர் addition சார் !!

      Delete
    3. // மாப்ள தோழன் போஸ்டுக்கு அடிதடி நடக்குற மாதிரி கேள்வி//
      வொய் திஸ் கொலவெறி.

      Delete
    4. கொல வெறியா
      அதுக்கும் மேல

      பய புள்ளங்க வண்டி புக் பண்ற வேகத்த பாருங்க

      Delete
  87. வாழ்த்துக்கள் விக்ரம் அவர்களே.

    ReplyDelete
  88. Congratulations Mr Vikram.
    Any J.Editor Marriage special comics?

    ReplyDelete
    Replies
    1. Srinivas Nagarajsethupathi : இப்போதே நிர்வாகப் பொறுப்பின் பெரும்பகுதி ஜூனியரைச் சார்ந்தது தானே சார் ? எடிட்டர் குல்லாயை மாட்டிக் கொண்டு நெட்டையாய் நிற்பதால் என் பங்கு கொஞ்சம் தூக்கலாய்த் தெரியலாம் ! அவ்வளவு தான் !

      Delete
  89. This comment has been removed by the author.

    ReplyDelete
  90. @ ALL : வாழ்த்தி வரும் நண்பர்கள் அனைவருக்கும் விக்ரமின் சார்பிலும், எங்கள் சார்பிலும் கோடானுகோடி நன்றிகள் !! உள்ளம் நிறைந்த உணர்வு !!

    ReplyDelete
  91. இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் விக்ரம்.




    எல்லாம் வல்ல இறைவனின் திருவருளால் என்றும் என்றென்றும் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்.
    அன்பின் உறவுகளை ஆண்டவன் ஆசீர்வதிப்பாராக.
    💙🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🌸🌸🌸🌸🌸🌸🌼🌼🌼🌼🌼🌼👂💜💜💜💜❤❤❤❤❤💙💙💙💙💙💚💚💚💚💚💚💚

    ReplyDelete
  92. வாழ்த்துக்கள்!
    மணமக்கள் மகிழ்வுடன் நிறை வாழ்வு வாழ எல்லாம் வல்ல ஏழுமலையாம் திருமலை சுவாமியின் பாதம் பணிகிறேன்........

    ReplyDelete
    Replies
    1. சேலம் டெக்ஸ்... திருமண பயணக்குழுவில் நானும் இருக்கிறேன்... மறந்து விடாதீர்கள்.......

      Delete
    2. அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுமே திருமண பயணக் குழுவில் இருக்கிறோம் சார்...😎😎😎😎

      Delete
  93. நல்வாழ்த்துக்கள் விக்ரம் :)

    promotion for you too Edit sir as father-in-law ! congrats to you too!

    ReplyDelete
  94. நீங்க எப்படியான வேலையும் குட்டிக்கரணம் போட்டு முடிப்பீங்கன்னு தெரியும் (உபாயம் கட்டைவிரல் ) ஆனா ஒரு திருமணம் மத்தியில் இத்தனை குண்டு புக்குக்கு பிசிறடிக்காமல் இந்தவருடம் கொண்டுசெல்கிறீர்கள் எடிட்.

    டச் வுட் ...!

    நீங்க இரவுகளை தூக்கத்திற்கும் கொடுங்கள், டேக் கேர் .

    ReplyDelete
  95. திருமண வாழ்த்துக்காக இந்த பதிவு ஓகேதான் சார்,இன்று இரவு ரெகுலர் காமிக்ஸ் பதிவை ஒன்று போடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் சார்.😍😍😍

    ReplyDelete
    Replies
    1. இங்கே பார்றா
      அறிவு சார் இத வச்சே விஜயன் சார தாத்தா வாக்கி
      "ஈரோட்டில் தாத்தா ஸ்பெஷல்" கேப்பாங்கே

      Delete
  96. Yes sir
    Mr.Vijayan should care of ,sleep,health and mental chaos

    God bless him

    ReplyDelete
  97. எடிட்டர் மற்றும் நண்பர்களுக்கு,

    மகனின் திருமணம் என்பது வாழ்வில் ஒரு முறை மட்டும் என்பதால், இந்த ஒரு மாதம் (நவம்பர் மட்டும்) இரு புத்தகங்கள் (டிராகன் reprint மற்றும் இன்னொரு புத்தகம் ) வெளியிடலாமே. நீங்களும் கொஞ்சம் விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டு விசேஷத்தில் பங்கெடுத்த மாதிரி இருக்கும்).

    டிசம்பரில் 6-7 புத்தகங்கள் போட்டுத் தாக்கி விடலாம் - ஜனவரியில் சென்னை கண்காட்சி என்பதால் விற்பனைக்கும் சுணக்கம் இல்லாமலே இருக்கும் !

    யோசியுங்கள் friends - நம் இல்லத் திருமணமெனில் இரண்டு வாரங்களாவது லீவு போட மாட்டோமா ?!

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் திருமண நிகழ்ச்சி தொடர்பான பணிகளை சிறப்பாக கவனிக்கவும். புத்தகங்களை தாமதமாக வெளியிடலாம். ஏனென்றால் கல்யாணம் பண்ணிபார் வீட்டைக் கட்டிப்பார் என்று சொல்வார்கள் அவ்வளவு பணிகள் இருக்கும் எனவே அதற்கு முக்கியத்துவம் கொடுக்கட்டும்.

      Delete
  98. ராகவன் ஜி,

    எடிட்டருக்கு கொஞ்சம் லீவு கொடுக்க நினைக்கும் உங்கள் நல்ல மன்சு புரிகிறது!

    எடிட்டருக்கு அது வசதியாய் இருக்குமெனில் நிச்சயம் நம் ஒத்துழைப்பு உண்டு ( அழுது அடம் பிடிக்க மாட்டேன்!)

    திருமணத்திற்குப் பிறகும் சுமார் இரண்டுவார காலத்திற்கு விருந்து-விஷேசங்களில் பிஸியாக இருக்க வாய்ப்பிருப்பதால் 6+ புத்தகங்களுக்கான ஒட்டுமொத்த தயாரிப்புப் பணிகள் அதிக சிரமத்தைக் கொடுக்கக்கூடுமோ என்னவோ?!!

    எது எடிட்டருக்கு வசதியானதோ அதைப் பொருத்து அதை அவரே முடிவு செய்யட்டும்!

    ReplyDelete
    Replies
    1. நாம சொல்லோணும் மொதல்ல

      பரவாய்ல்லன்னு

      Delete
  99. வாழ்த்துக்கள் விக்ரம்

    ReplyDelete
  100. மனம் நிறைந்த திருமணநாள் வாழ்த்துக்கள் விக்ரம் அவர்களே _/|\_


    என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் _/|\_
    .

    ReplyDelete
  101. விக்ரம் அரவிந்த் - கீர்த்தனா மற்றும் ஆசிரியரின் குடும்பத்திற்கு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  102. வாழ்த்துக்கள் சார். நான் விக்ரம் அரவிந்த் திருமணம் குறித்து முன்பே இங்கே எங்களை அழைப்பது குறித்து பதிவிட்டுள்ளேன். நான் அன்று அங்கு வருவது உறுதி.

    ReplyDelete
  103. நல்வாழ்த்துக்கள்��வாழியபல்லாண்டு தம்பதிசமேதராய் ஜூனியர் எடிட்டடர்சார்.மாயாவிகாரு சிவகாசிக்கு3டிக்கெட்pls.

    ReplyDelete
  104. ஈ.வி சார் வழக்கம் போல் மறந்து வி டாதீர்கள்.லைப்ரரி(லயன்)ய சுத்திகாட்ரீங்க ஆமா அட்வான்ஸா சொல்லிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. அங்கே குடோன்ல/பீரோவுல இருக்கும் பழைய புத்தகங்களையெல்லாம் சுத்தம் செஞ்சுடலாம் டாக்டர் சார். எடிட்டருக்கும் ஒரு ஹெல்ப் பண்ணா மாதிரி இருக்கும்ல? ;)

      Delete
    2. பத்தவெச்சிட்டயே பரட்டன்னுசொல்லாம பரண்லகைவெக்லாம்னு சொன்னது இருக்கே,செயலரேஅங்கநிக்றீறீங்க நீ ங்க!சூப்பர் சார் கரும்பு திங்ககூலியா?காமிக்ஸ் படிக்கலாம்ஜாலியா.

      Delete
    3. வடிவேலு மாடுலேஷனில் : "ஆ. பி வே. !!"

      Delete
  105. லைப்ரரியா குடோன் பாத்ததா ஞாபகம்

    ReplyDelete