Thursday, October 19, 2017

நல்லதொரு துவக்கம் !

நண்பர்களே,

வணக்கம். 'உண்ட மயக்கம் தொண்டருக்கு' என்று கட்டையைக் கிடத்திக் கொண்டே கண்ணுக்கு எட்டும் தூரத்தில் இஞ்சிமிட்டாய் ஜாடைக்கு ஏதாவது தென்படுகிறதாவென்று நோட்டம் விடும்   உள்ளூராருக்கும் ; விடுமுறை முடிந்து பெருநகரங்களுக்கு கஷாயம் குடித்த முகங்களோடு திரும்பத் துவங்கியிருக்கும் அசலூராருக்கும் மாலை வணக்கங்கள் ! அட்டவணையை உங்களிடம் ஒப்படைத்த பின்பாக நேற்றைக்கு நிம்மதியாய் அடுத்தகட்டப் பணிகளுக்குள் இறங்கி விட்டேன் ! கடந்த 60 + நாட்களாய் இந்த "அட்டவணை விளையாட்டை" நான் ஆடிப் பார்த்து வந்து நோட்டை -  பத்திரமாய்த் தூக்கி பீரோவுக்குள் போட்ட போதுஒரு நண்பனுக்கு விடைதந்தது போலிருந்தது - becos என்னோடே அந்த நோட்டும் ஊர், உலகெல்லாம் சுற்றி வந்திருந்தது -கடந்த 2 மாதங்களாய் ! இந்த அட்டவணைப் படலத்தில்  இங்கே முக்கியமாய் நானொரு பெயரைக் குறிப்பிட்டாக வேண்டும் ; in fact - நேற்றைய பதிவிலேயே அதனைச் சேர்க்க எண்ணி, மறந்து தொலைத்திருந்தேன் ! 

எனது திட்டமிடல் 60+ நாட்களுக்கு முன்பாய்த் துவங்கியதெனில், கடந்த 30+ நாட்களாய் இந்த கேட்லாக்கின் தயாரிப்பில் ஆழ்ந்து கிடந்தது நமது DTP அணியின் கோகிலா. "ஜேம்ஸ் பாண்ட் விளம்பரத்தைப் போடுமா ; ஊஹும்......வேணாம்..வேணாம்...அது இதிலே வரலே  ; டெக்ஸ் - டைனமைட் ஸ்பெஷல் விளம்பரம் இந்தப் படத்தோட வரணும் ; ஜில் ஜோர்டன் விளம்பரம் ரெடியா இருக்கட்டும், யோசிச்சிட்டு நாளைக்கு சொல்றேன் ; தோர்கல் 2 புக்..!! .இல்லே..இல்லே...ஒரே புக்- 4  கதை !! ; ஆங் ...."காலனின் கூரியர்" ; இல்லே..இல்லே...அது இந்தச் சந்தாவிலே இல்லே ; ஜம்போ விளம்பரமா ? ம்ம்ம்ம்ம்.....இப்போ போடுறதா...இல்லையான்னு அப்புறமா சொல்றேன் !" - என்று தினம் தினம் நான் கொலையாய்க் கொன்றாலுமே, சகலத்துக்கும் துளியும் சலனம் காட்டாது பணியில் அக்கறை காட்டிய கோகிலாவுக்கு ஒரு ஷொட்டு உரித்தாகிட வேண்டும் ! 

Moving on,  புதிய  அட்டவணைக்குக் கிட்டியுள்ள ஆரம்பம் அமர்க்களம் என்பேன் ; அதற்குள்ளாக 20+ சந்தாக்கள் ஆன்லைனில் மாத்திரம் கிட்டியுள்ளன ; வங்கி கணக்குக்குப் பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை நாளை தான் பார்த்திட வேண்டும் ! பண வரவுகள் ஒருபக்கமிருக்க - நமது தேர்வுகள் பற்றியும், கல்தாக்கள் பற்றியும் 95% ஒருமித்த கருத்துக்கள் (இதுவரையிலாவது) இருந்து வருவது தான் மிகப் பெரிய relief எனக்கு ! "ஆங்...இவருக்கு VRS கொடுத்ததில் தப்பில்லை ; இவர் உள்ளே இருப்பது ஓ.கே. தான் !" என்ற ரீதியில் இந்த Big Boss ஆட்டம்  உங்கள் ரசனைகளோடு ஒத்துப் போயிருப்பது நிஜமாக மகிழ்ந்திடவோரு காரணம் ! End of the day - இணைதடங்கள் இரண்டும் ஒரே திசையில் ஓடுவது தானே முக்கியம் ? 
கதைகளுக்கு ஆர்டர் தரும் வேலைகள் ; பிரெஞ்சு ; இத்தாலிய மொழிபெயர்ப்புகளுக்கான முஸ்தீபுகள் என்று 2018 சார்ந்த பணிகள் எப்போதோ துவங்கி விட்டன ! அட்டவணை official ஆக ரிலீஸ் ஆகி விட்டுள்ளதைத் தொடர்ந்து  - எந்த இதழ்கள் / எந்த மாதங்களுக்கு ? என்ற ரோசனைகளுக்குள் இனி ஆழ்ந்தாக வேண்டும் ! Keep writing folks & சந்தாப் புதுப்பித்தல்களையும் செய்திடத் துவங்கிடலாமே - ப்ளீஸ் ? ஒரு அற்புத வாசக வட்டமாய் இருந்து வந்து ; எங்களின் ஒவ்வொரு முயற்சிக்கும் மூச்சுக் காற்றாய் இருந்து வரும் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மானசீகப் பூங்கொத்தை வழங்கிய கையோடு கிளம்புகிறேன் - இம்மாத LADY S எடிட்டிங்கினுள் புகுந்திட ! Bye all ! See you around !  

347 comments:

  1. அட்டகாசமான ட்ரைலரை கொடுத்த எடிட்டருக்கும் ஒரு பூங்கொத்து பார்சல்....

    ReplyDelete
  2. கழற்றிவிடப்பட்ட ஜூலியாவுக்காக வருந்துகிறேன்!

    இயல்பான, மனோதத்துவ ரீதியான கதையம்சங்களால் ஒரு புதிய ட்ரென்டை உருவாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக நம்மை வசியப்படுத்திவந்த பெண் அவள்! கடைசியாக வந்த 'பெளர்ணமி இரவில் காலன் வருவான்' கதையில்கூட இயல்பாக காதல்வசப்படும் ஒரு சாதாரணப் பெண்ணின் உணர்வுகளை மிக அழகான, நேர்த்தியான சித்திரங்களில் வெளிப்படுத்தியிருந்தார்கள்!

    ஆனால் விற்பனை முனையில் சுணக்கம் காட்டிய காரணத்தைச் சொல்லி இன்று ஜூலியாவின் நீளமான கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியிருக்கிறது இந்த எடிட்டர் சமூகம்!

    சில விசயங்கள் மக்களுக்கு லேட்டாகத்தான் புரியும் ஜூலியா! என்றாவது ஒருநாள் உன் அருமை புரிந்து, இருகரம் நீட்டி அழைப்பார்கள்... அதுவரை பொறுமையோடு காத்திரு!

    ReplyDelete
    Replies
    1. இந்த ஜூலிக்கும் ஆதரவு இல்லையா ???

      Delete
    2. வோட்டுப் போட வேண்டியோர் வேட்டு வைத்தால் நான் செய்வது தான் என்னவாக இருக்கும் ?

      Delete
    3. இது தோர்கல் போல .. முதலிரண்டு ஆண்டுகள் தோர்கல் சோபிக்கவில்லை. பின்னர் ஹிட்டானது போல may be Julia in 2019 !

      Delete
  3. இனிமையான இரவு வணக்கம் நண்பர்களே,!!!!!!

    ReplyDelete
  4. எடிட்டர் சார் A+B+C+D DTDC courier வாயிலாக தமிழ்நாட்டில் எவ்வளவு என தெரிவிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil : சார்...ST கூரியரை விடவும் DTDC ஆண்டுக்கு ரூ.125 ஜாஸ்தி இருக்கும் !

      Delete
  5. /// கிளம்புகிறேன் - இம்மாத LADY S எடிட்டிங்கினுள் புகுந்திட ! Bye all ! See you around ! ///

    வார்த்தைகளில்தான் என்னாவொரு குஷி!!! அப்படியாப்பட்ட வேலை!! :P

    ReplyDelete
    Replies
    1. ஆங்...சொல்ல மறந்தே போச்சு ; இடையிடையே - சந்தா F & F -க்கோசரம் வந்திருக்கும் சில பல ஜிங்கிடி ஜாங் கதைகளையும் பரிசீலனை செய்ய வேண்டி இருக்கிறது ! ஷப்பா.... ஷப்பப்பா.... என்னவொரு கலைக்கண்ணோடு சித்திரங்கள் போட்டிருக்காங்க !!

      Delete
    2. 😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲

      இந்தியாவுல சென்சார் போர்டுல வேலையோ அல்லது ஐரோப்பாவில்
      எடிட்டர் வேலையோ அடுத்த ஜென்மத்திலாவது கிடைக்கனும்...

      ஏன்னா நானும் ஒரு சகல கலைகளின் ரசிகன்...!!!😎😎😎😎

      Delete
    3. சிவகாசியில் கத்திரி கத்தி கருப்பு மசி
      இம் மூன்றையும் ஆசிரியர் கையில்
      கிடைக்காமல் ஒளித்து வைக்கவும்.
      மிடில.

      Delete
  6. 10 வது...(என்ன ஒரு சந்தோஷம்) ....😂😂😂😂😂

    ReplyDelete
  7. இப்போது A+B+C+D சந்தாவுக்கான முதல் தவணையாக Rs.2200/- செலுத்தியுளேன் .

    ReplyDelete
  8. DTP அணியின் மகளிரணி தலைவி கோகிலாவுக்கு சங்கத்தின் சார்பில் ஒரு அழகான பூங்கொத்தை வழங்குகிறேன்!

    ReplyDelete
    Replies


    1. கல்லாச் சாவியை இடுப்பு மடிப்பில் செருகிய கையோடு தலீவர் தூங்கி ஒரு ஜாமம் ஆகிப் போயிருக்கும் வேளையில் ஒரு கமர்கட்டு வாங்கவே கடன் சொல்ல வேண்டியிருக்குமே ? பொருளாரரையும் காணோம் ! பூங்கொத்தும் இப்போல்லாம் கடனுக்குக் கிடைக்குதா ?

      Delete
    2. ////கல்லாச் சாவியை இடுப்பு மடிப்பில் செருகிய கையோடு தலீவர் தூங்கி ஒரு ஜாமம் ஆகிப் போயிருக்கும் வேளையில்////

      :)))))))

      உங்களுக்குத் தெரியாத விசயமே இல்லை போலிருக்கே எடிட்டர் சார்!!!! :))))

      Delete
  9. டெக்ஸ் என்னும் மூன்று எழுத்து ஜாலத்தால் ஆட்டி படைக்கப்படுவது மட்டுமே வாடிக்கை ஆனால் இம்முறை டெங்கு என்னும் மூன்று எழுத்து ஆட்டி படைத்து விட்டது...தினசரி ரெக்கார்டுகள் பராமரிப்பு நேரத்தை சாப்பிட்டு வருகிறது . ( NO REGRETS THERE )..
    கொலைப்படை என்று இருப்பதை கொசுப்படை என வாசிக்க முடிகிறது .
    போன மாத இதழ்களையும் இம்மாத இதழ்களையும் இப்போதுதான் வாசிக்க துவங்கியிருக்கிறேன் ..கிராபிக் நாவல் தவிர ...
    அட்டவணை அமர்க்களமாக உள்ளது ..ஜில் ஜோர்டான் வருவது ரொம்ப மகிழ்ச்சி ...
    பொதுவாக அட்டவணையை உள்வாங்குவது அல்ஜீப்ரா கையில் கொடுக்கப்பட்ட எல் கேஜி பையனின் மனநிலைதான் எனக்கு எப்போதுமே ...
    இவ்வருடமும் அதற்கு விதிவிலக்கல்ல ...பொதுவான அட்டவணையின் கான்செப்ட் நல்லாத்தான் இருக்கு ...
    தோ ..சந்தா கட்ட போறேன் .....புள்ளிகள் முக்கியமானவை ..இப்படியாவது ‘’ பெரும் புள்ளி’’யா ஆக முயற்சி பண்ணுவோம் ...

    ReplyDelete
    Replies
    1. அடக்கடவுளே!!! சீக்கிரமே பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன் செனாஅனா அவர்களே!! ஒரு நல்ல டாக்டரா பார்த்து ட்ரீட்மெண்ட் எடுத்துக்கோங்க ப்ளீஸ்!

      Delete
    2. ஹா ஹா ஹா... டெங்குவினால் வேலை அதிகமா போச்சுன்னு சொல்ல வந்தேன் செயலாளரே ....ஜூலியா மயக்கத்தில் இருந்து வெளியே வாங்க ...

      '''மரணத்தின் நெடியை சலசலக்கும் காற்று அப்புறபடுத்த முயன்று தோற்று கொண்டு இருப்பது அப்பட்டமாக தெரிந்தது ..''

      ''சிராய்ப்புகளால் சிங்கம் சாய்ந்ததாய் சரித்திரம் கிடையாது''

      ஒரு தலைவன் ஒரு சகாப்தம் ...தூள் !! இப்பத்தான் நாங்க படிச்சாங்க ...( ஹி ..ஹி ..ஓவியா பாஷை வருது ..)

      Delete
    3. ///டெங்குவினால் வேலை அதிகமா போச்சுன்னு சொல்ல வந்தேன் செயலாளரே ///

      பார்த்தீங்களா, என் பிரார்தனைக்கு உடனே செவி சாய்ச்சுட்டார் இறைவன்! கடவுளுக்கு நன்றி!

      ////இப்பத்தான் நாங்க படிச்சாங்க ...( ஹி ..ஹி ..ஓவியா பாஷை வருது ..)////

      :D

      Delete
  10. டெக்ஸ் வில்லருக்கே முக்காவாசி இடம் .நல்லது நல்ல கதையை எல்லாம் தூக்கி போட்டுவிடுங்கள்.
    இன்னும் இரண்டு வருடத்தில் சந்தா முழுக்க டெக்ஸ். அதை தவிர எதுவும் வேண்டாம். நான் எப்போதும் மவுன வாசகன் ஆனால் இனி அப்படி கிடையாது ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நல்வரவு சார் !

      Delete
    2. இலவச இணைப்பான TEX இதழ்கள் - நமது அன்பளிப்புகள் ; so அவற்றை equation -லிருந்து எடுத்து விடுங்கள்.

      எஞ்சியிருக்கும் 2018 -ன் 45 இதழ்களுள் (5 சந்தாப் பிரிவுகள் x 9 இதழ்கள் வீதம் ) TEX இடம் பிடிப்பது 8 இதழ்களில். அதில் 1 மறுபதிப்பு.

      45 -ல் ஏழு இடங்கள் ஓவர்டோஸா ? And அந்த 7 இதழ்களுள் 2 சிங்கிள் ஆல்பங்கள் என்பது கொசுறுச் சேதி ! இவை தான் facts ; இவற்றைப் பார்க்கும் விதம் அவரவரது choice !

      Delete
    3. @ hollywood,books,comics and sci fi news channel

      நல்வரவு நண்பரே! மெளனம் கலைந்து இங்கே பதிவிட்டதற்கு வாழ்த்துகள்!!

      ஆனா, உங்க பேர்தான் ரொம்ப வித்தியாசமா, நீளமா இருக்கு! ;)

      Delete
    4. ஹாஹா ஐயா என்பெயர் ரத்தினவேல். எப்படியோ ஆசிரியர் காமான்சியை தூக்கிவிட்டார்.

      Delete
    5. ஒரு நல்ல கௌபாய் கதை காலி.

      Delete
    6. அந்த நல்ல கௌபாய் கதை குடோன்ல இருந்து காலியானா, எடிட்டர் அதை ஏன் கல்தா தர போகிறார்.

      Delete
    7. மறுபடியும் சொல்கிறேன் சார் ; கமான்சே இடம் பிடிப்பது சந்தா A -வில் ! TEX குடியிருப்பதோ B பிளாக்கில் ! அங்கே கட்டான மின்சாரத்துக்கு இங்கே வசிப்பவரை நொந்திடுவானேன் ?

      Delete
    8. இன்னும் இரண்டு வருடத்தில் சந்தா முழுக்க டெக்ஸ். அதை தவிர எதுவும் வேண்டாம். நான் எப்போதும் மவுன வாசகன் ஆனால் இனி அப்படி கிடையாது ஐயா.//// டெக்ஸ் ரசிகர்களிலும் பல மவுன வாசகர்கள் உண்டென்பதை சொல்லிகொண்டு .......

      Delete
    9. ///டெக்ஸ் ரசிகர்களிலும் பல மவுன வாசகர்கள் உண்டென்பதை சொல்லிகொண்டு ..///

      திருத்தம்: பல மவுன வாசகர்கள் --> பல நூறு மவுன வாசகர்கள்

      Delete
    10. ஹாஹா ஐயா என்பெயர் ரத்தினவேல். எப்படியோ ஆசிரியர் காமான்சியை தூக்கிவிட்டார்//// உண்மைதாங்க ஐயா. தூங்கி போன டைம்பாம் கதை மிக அருமையான கதை. அந்த கதை வரிசையில் பல கருத்தாழமிக்க கதைகள் உண்டு. அந்த கதைகளையும் எடிட்டர் தூக்கிவிட்டார். அதையும் கொஞ்சம் என்னன்னு கேளுங்க ஐயா :-)

      Delete
    11. எப்படியோ ஒரு முழு சந்தாவும் டெக்ஸ்.
      இந்த ஜேம்ஸ் பாண்டு.அண்டர்டேக்கர் யாவது தயவுசெய்து கரை ஏற்றுங்கள். என்னை பொருத்தவரை எல்லாம் லயன் முத்து காமிக்ஸ். நல்ல வேலை மார்ட்டின் ஒன்னு இருக்கு.நான் நம்பி இருப்பதே சந்தா E யை தான்.

      Delete
    12. மௌனத்தின் பாதகங்களுள் இதுவும் ஒன்று சார் ! ஒவ்வொரு முறையும் உங்கள எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள நான் கோருவதே - ரசனைகளை நானாக யூகிப்பதை விடவும், கேட்டுத் தெரிந்து கொள்ளும் பொருட்டே ! ஆனால் அதற்கென நேரம் செலவிட இயலாது போவதால் உங்கள் அபிப்பிராயங்களுக்கு வடிகால் இல்லாதே போய் விடுகிறதே ?!

      And இன்னொரு விஷயத்தின் பக்கமும் கவனத்தைக் கேட்கிறேன் : கமான்சே கூட, ஆசை ஆசையாய் நான் அறிமுகம் செய்த நாயகர் தானே ? அவரை ஓரம் கட்டுவதென்பதில் எனக்குமே சங்கடம் இருக்கும் தானே ?

      Delete
    13. இங்கு மாற்று கருத்துடைய என்னை போன்ற மவுன மனிதர்களே இனியாவது மவுனம் விட்டு வெளியே வாருங்கள். நம் கருத்து மிக மிக அவசியம் இங்கு

      Delete
    14. உண்மைதாங்க ஐயா. தூங்கி போன டைம்பாம் கதை மிக அருமையான கதை. அந்த கதை வரிசையில் பல கருத்தாழமிக்க கதைகள் உண்டு. அந்த கதைகளையும் எடிட்டர் தூக்கிவிட்டார். அதையும் கொஞ்சம் என்னன்னு கேளுங்க ஐயா :-)//
      அன்று இந்த வசதி இருந்திருக்கவில்லை ஐயா.

      Delete
    15. Actually I felt 7 TEX is short by 4 stories next year, opinion differs sir, I normally read TEX stories when I feel bored.

      Delete
    16. மற்றவர்கள் பற்றி தெரியாது. எனக்கு ரொம்ப ரொம்ப ஓவர்.....அநியாயத்துக்கு டெக்ஸ் அதிக ஸ்லாட் மறுபதிப்பு வேறு தனி மனிதன் துதி தழிழ் நாட்டில் இருக்கும் வரை ஓன்னும்

      Delete
    17. Actually I felt 7 TEX is short by 4 stories next year, opinion differs sir, I normally read TEX stories when I feel bored .மாற்று கருத்துக்கு தெரிவித்த ஐயா அவர்களுக்கு நன்றி

      Delete
    18. //இங்கு மாற்று கருத்துடைய என்னை போன்ற மவுன மனிதர்களே இனியாவது மவுனம் விட்டு வெளியே வாருங்கள். நம் கருத்து மிக மிக அவசியம் இங்கு.//

      5 பேராவது சேர்ந்தா சரி

      Delete
    19. ஏன் போன வருடம் டெக்ஸ் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த மார்டினுக்கு ஓரே ஓரு ஸ்லாட். ஏன் இன்னும் அவருக்கு ஓரு ஸ்லாட் கூடுதலாக வழங்கலாமே?

      சந்தாவில் 25% மேல் டெக்ஸூக்கு. வெறும் 9 டெக்ஸ் கதைதான் என்று கூறும் ஆசிரியர் சந்தாவில் பெரும் தொகையை டெக்ஸ் கபளீகரம் செய்கிறாரே?. இதற்கு என்ன பதில்.

      இங்கு தான் நிறைய டெக்ஸ் ரசிகர்கள் உள்ளனரே ஏன் dynamate 700 பக்க டெக்ஸ் காமிக்ஸ் ஸை "மின்னும் மரணம்" வெளியிடலாமே?. அப்படியே 3000 மேல் ஆர்டர் வந்து குவிந்து இருக்குமே?. அந்த இடத்தில undertaker நான்கைந்து புது நாயகர் மாதிரி நாயகர்களை கொண்டு வரலாமே?

      சந்தா B டெக்ஸ் தான் வர வேண்டும் என்பது அவ்வளவு கட்டாயம் என்ன வந்தது?

      Delete
    20. //சந்தா B டெக்ஸ் தான் வர வேண்டும் என்பது அவ்வளவு கட்டாயம் என்ன வந்தது? //
      ரொம்பவே சிம்பிள் : 365 நாட்களும்,எல்லா சந்தர்ப்பங்களிலும், எல்லா வயதினரும் வாங்கிடும் எதோவொரு மாயாஜாலம் அந்த 3 எழுத்து நாயகனிடம் இருப்பதே காரணம் !

      Delete
    21. சரியாக சொன்னீர்கள் ஆசிரியர் அவர்களே.இதை விட சிறப்பாக கூற முடியாது. நண்பர்கள கூறிய கருத்துக்களை படித்த போது நீங்கள் மட்டும் இப்படியொரு கருத்தை கூறா விட்டால் என் கருத்து வேறு மாதிரீ இருந்திருக்கும்.(மன்னிக்கவும்) .

      Delete
    22. ஆசிரியர் சா௫க்கு கைதட்டும் படங்கள் பத்து லட்சம் கோடி....!!!!!!.

      Delete
    23. என்னாது தூங்கிப் போன டைம்பாம் நல்ல கதையா?
      ரத்னவேல் சார் மிடியல.?!

      Delete
    24. ரொம்பவே சிம்பிள் : 365 நாட்களும்,எல்லா சந்தர்ப்பங்களிலும், எல்லா வயதினரும் வாங்கிடும் எதோவொரு மாயாஜாலம் அந்த 3 எழுத்து நாயகனிடம் இருப்பதே காரணம் !



      ₹₹₹₹₹₹₹₹



      101 % சரியான பதில் சார்...

      Delete
    25. பலர் காமிக்ஸ் படிக்கும் முக்கிய காரணம் ஒரு entertainment. வாழ்க்கையின் பிடிக்குள் இருந்து ஒரு இரண்டு மணிநேரங்கள் நழுவப் பார்பதற்க்கே. TEX போன்ற கதைகள் அதற்க்கு உதவுகின்றன. சட்டை கூட கலையாத ஒரு (மிதி - மதி)மிஞ்சிய கற்பனை என்றாலும் ஒரு relaxation அளிக்கிறது. MGR formula போல. எனவே அனைத்து வயதினர் மற்றும் சமூகத்தின் அனைத்துப் படிகளிலும் உள்ள பெரும்பான்மையினரைக் கவர்வது வியப்பில்லை.

      Delete
  11. என் கையில் ஒரு தராசு!

    தராசின் ஒரு தட்டில் ஜூலியாவும், மற்றொரு தட்டில் இளவரசியையும் வைத்தேன். ஜூலியாவின் தட்டு 'தடால்' எனக் கீழிறங்க, அந்த வேகத்தில் மேலெழும்பிய இளவரசி காற்றில் பறந்து காணாமல் போய்விட்டார்!

    மன்னிச்சுக்கோ இளவரசி! உன்னையும் எனக்குப் பிடிக்கும்தான்... ஆனால், என் தராசின் குணம் அப்படி! ;)

    ReplyDelete
    Replies
    1. தராசுல ஏதாச்சும் கோளாறு இருக்கலாம் ...மடிப்பாக்கத்துல நல்ல தராசு கிடைக்கும்னு சொன்னாங்க ..:)

      Delete
    2. ஒரு வக்கீலும், ஒரு போலீஸ்காரரும் சேர்ந்து எடிட்டரை மிரட்டித்தான் இளவரசிக்கு ஸ்லாட் வாங்கிக் கொடுத்திருக்காங்களோன்னு ஒரு டவுட் வருது, செனாஅனா அவர்களே! ;)

      Delete
    3. எங்க ஊர் தராசில் நடப்பாண்டின் "க.ம.கோ." என்றொரு சமாச்சாரமும் இணைந்திருந்ததே !

      Delete
    4. என் கையில் ஒரு தராசு!

      தராசின் ஒரு தட்டில் ஜூலியாவும், இளவரசியும், மற்றொரு தட்டில் ஷானியாவையும் வைத்தேன். ஷானியாவின் தட்டு 'தடால்' எனக் கீழிறங்க, அந்த வேகத்தில் மேலெழும்பிய இளவரசியும் ஜூலியாவும் காற்றில் பறந்து காணாமல் போய்விட்டார்கள்!

      மன்னிச்சுக்கோங்க லேடீஸ். ஆனால், என் தராசின் குணம் அப்படி! ;)

      Delete
    5. "முதன்முறையாக வண்ணம் + பாக்கெட் சைஸ் + ஆயிரம் புக்குகள் மட்டுமே" என்ற காம்பினேஷன் ஏற்படுத்திய மாயாஜாலம் அது, எடிட்டர் சார்! ( கணிசமான எண்ணிக்கையில் வாங்கிப் பதுக்கி வைத்து 'முதலீடு' செய்தவர்களின் பங்களிப்பும் இதில் சேர்த்தி!)

      மேற்கூறிய அம்சங்கள் மட்டும் இல்லேன்னா உங்க ஊர் தராசு சில பேரிச்சம்பழங்களுக்குத் தகுதியாகியிருக்கும்!

      Delete
    6. @ MP

      ஹா ஹா ஹா!! :))))))))

      இத்தனை நாளும் எங்கே ஒளிச்சு வச்சிருந்தீங்க - உங்க ஹியூமர் சென்ஸையும், அந்த தராசையும்! :D

      Delete
    7. ஆளுக்கு ஆள் கையில் தராசோடு காட்சி தர, எனக்கு என்னமோ எங்க ஊர் கொத்தவால் சாவடிக்குள்ளாரே கால் வைச்ச மாதிரியே ஒரு பீலிங்கு !!

      Delete
    8. எடிட்டர் சார்! :)))))

      Delete
    9. இப்டி பண்ணினால் என்ன ? மாடஸ்டி ; ஜூலியா & ஷானியாவை ஒரே லைனா நிற்க வைச்சு ஒரு ஜிமிக்கி கம்மல் டான்ஸ் போடுவோம் ; வெற்றி பெறுவோருக்கு ஸ்லாட் ! நடுவர்களாக யார்லாம் ரெடி ?

      Delete
    10. பேசாம தளத்தில் ஒரு ஓட்டெடுப்பு நடத்திடலாம் எடிட்டர் சார்!

      மறுபடியும் டெல்லியிலிருந்து வந்த தேர்தல் அதிகாரி பதவி உங்களுக்கே!

      எல்லாரும் தயாரா பாய்ஸ்? :D

      Delete
    11. நானும் சேர்ந்து ஆட ரெடி

      Delete
    12. ஆங்..."தேர்தல்"னா ..? ஒரு பெரிய தேரை ஆளாளுக்கு சேர்ந்து தள்ளுவாங்கல்லே ? அது தானே ? எங்க ஊரிலே பங்குனிக்கு தள்ளுவாங்க ; அப்போ பாத்துக்குறேன் !

      Delete
    13. தேர்தல் என்றால் விஜயன் சாரை நம்ப
      முடியாது.ரைட்ல இன்டிகேட்டர போட்டு
      லெப்டில் கை காட்டி ஸ்ட்ரெயிட்டா
      போவார்னு நினைச்சா திடீர்னு ரிவர்ஸ்
      கியரும் போடுவார்.

      Delete
  12. டெக்ஸ் ஓவர்டோஸ் என்பவர்களை பார்த்து சிரிக்கத்தான் தோன்றுகிறது,ஜெயிக்கிற குதிரை மேல்தான் பந்தயம் கட்டுவோம்,இதுதானே இயல்பான விஷயம்,மேலும் இந்த வேகத்தில் போனாலே போனெல்லி வெளியீடுகளை எட்டிப் பிடிக்க எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?!
    விற்பனையில் சாதிக்கும் ஒரு இதழை தொடர்ந்து வெளியிட ஏன் தயங்குவானேன்.
    டெக்ஸ் இதழ்கள் படிக்கும் வாசகர்களின் மனநிலையை மகிழ்ச்சிக்கு உட்படுத்துபவை,எனவே ஓவர்டோஸ் என்ற வாதம் ஏற்புடையதல்ல.

    ReplyDelete
    Replies
    1. வரிக்குவரி +1 அறிவரசு அவர்களே!

      Delete
    2. +100000000

      டெக்ஸ் தனக்கான இடங்களையே தக்க வைத்து கொண்டு உள்ளார்.. அந்த உண்மையை ஒப்புக் கொள்ள மனமில்லாதவர்களே டெக்ஸ் ஓவர் டோஸ் என்ற ஆதாரம் அற்ற புகாரை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்...

      சந்தாவை ஊக்கப் படுத்த மினி கிஃப்ட் அடுத்த ஆண்டு டெக்ஸ் செலக்ட் ஆக காரணம் "டெக்ஸ்70" என்பதே...

      Delete
    3. ஆகசுவலா 8/45. அதனால நிறயவே மற்றக் கதைகள் வருது. இதுக்கெல்லாம் ஒரே வழி தான். ஜூலியா கதைகளெல்லாம் செயலாளர் அண்டு கம்பெனி(ஜூலியா ஆர்மி?) இந்த வருசக் கடைசிக்குள்ள எப்படியாவது வித்துக் குடுத்துட்டா அடுத்த வருசம் ஒன்னுக்கு நாலா்கேட்டு வாங்கிக்கலாம்.

      Delete
    4. சார் எனக்கு மைசூர்பா பிடிக்காது.அதனால்
      நீங்கள் அதை தயாரிக்க வேண்டாம்.
      நண்பர்களே நீங்களும் மைசூர்ப்பா
      சாப்பிடாதீர்கள்.

      Delete
  13. எடிட்டர் சார்
    சிக்கில் கிளாசிகல்
    தேவை ஒரு மூட்டை, விசித்திர ஹூரோ, ஆர்டின் மரணம் போடலாம்

    ReplyDelete
  14. தேவை ஒரு மொட்டை

    ReplyDelete
  15. அட்டவணை மிக மிக சிறப்பு.
    ஆனால் டைலன் டாக் ,கமான்சே, ஜூலியா இல்லாதது பெ௫ங்குறை.

    ReplyDelete
  16. இந்த அட்டவணை சிறப்பு தான், ஆனாலும் ஏதோ ஒன்று குறைவதாகத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா?

    ReplyDelete
    Replies
    1. சந்தா-E பற்றிய விளக்கங்கள் இடம்பெறாததே அப்படித் தோன்றக் காரணமாய் இருக்கக்கூடும்!

      Delete
  17. ஜம்போ காமிக்ஸ் னா என்ன சார்?

    ReplyDelete
  18. ஆசிரியர் சார்@

    பவளச் சிலை மர்மம்- நம்முடைய லயனில் வந்தபோது இப்போதைய ரெகுலர் டெக்ஸ் சைசைவிட அகலத்தில் சற்றே பெரியதுங் சார்....

    அந்த அகலத்தில் பெரிய சைசில் அசாத்திய ஓவியங்கள் அசத்தின...

    நிலவொளியில் நரபரலி சைஸ்னு அறிவிப்புல இருக்கு, அது மினி பாக்கெட் சைஸ்..

    இந்த சைசில் அந்த பவளசிலை 110பக்கத்தில் எனில் ஓவியங்கள் மினியாக இருக்குமே,லென்ஸ் வச்சுத்தான் பார்க்கனும்...ஓவிய உன்னதத்தை
    ரசிப்பதில் சிறு தடங்கள் இருக்கு கூடுமோ???

    ஒருவேளை ஒரு பெரிய பக்கத்தை இரண்டு சிறிய பக்கங்களாக்கி 220பக்கங்களில் பெரிய புக்காக தரப்போகிறீர்களா சார்...

    கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்...!!!

    ஏற்கெனவே கார்சனின் கடந்த காலம் என்ற காவியம் வண்ண மறுபதிப்பில் சித்திரங்கள் ரீஅலைன் செய்யப்பட்ட விதம் திருப்தியாக இல்லை சார்... மினி பாக்கெட் சைஸ் தான் பட்ஜெட்டில் கிடைக்கும் எனில், மினி பாக்கெட் சைசிலேயே வெளியான வைக்கிங் தீவு மர்மத்திற்கு அந்த வாய்ப்பை வழங்கி விடலாம் சார்...

    பவளச் சிலையை அடுத்த ஆண்டு அதன் ஒரிஜினல் சைசிலேயே பார்த்து கொள்ளலாம், என்பதே என் பணிவான வேண்டுகோள் சார்....

    ReplyDelete
    Replies
    1. இதையே தான் நான் சொல்லுவதாக இருந்தேன்...

      +1234567890987654321

      Delete
    2. ஆமாங்க சார். இல்லன்னா ஒரு ரெண்டு வருசம் கழிச்சு மறுபடியும் ரீப்ரிண்ட்னு்வந்து நிப்போம். பரோட்டல மட்டும் இல்ல காமிக்ஸலயும்்நாங்க அப்படித்தேன்.

      Delete
    3. +111111111112111எழுத்துக்கு எழுத்து!!!!

      Delete
    4. எனது எண்ணமும்...

      Delete
    5. //பவளச் சிலையை அடுத்த ஆண்டு அதன் ஒரிஜினல் சைசிலேயே பார்த்து கொள்ளலாம்,//
      எனது கருத்தும் இதுவே,பார்த்து கொஞ்சம் கவனிங்க சார்.

      Delete
  19. Dear Editor,

    Why not Julia in the Graphic Novel line? Or an Italian album like Mangum special?

    ReplyDelete
    Replies
    1. அப்படிக்கேளுங்க ராகவன்ஜி!

      Delete
    2. ராக்ஜி ராக்ஸ்....
      கி.நா.வில் தான் 007வரப் போகிறார் எனும் போது , வொய் நாட் ஜூலியா...!!!

      கருவாடு காய்ஞ்சி மெலிஞ்சி இருந்தாலும், அதன் குழம்பு ருசியே தனிதான் சார்..(புரட்டாசி ஓவர்)

      Delete
    3. என்ன இருந்தாலும் ஜுலியாவை கருவாடு கூட ஒப்பிடுவது ரொம்ப ஓவர் சேனா வினா..

      Delete
  20. Copy & paste from last post

    47 stories in 36 books + 6 TEX short stories + minimum of 9 stories in F & F, 2018 is going to be a milestone year for us

    ReplyDelete
    Replies

    Mahesh19 October 2017 at 14:19:00 GMT+5:30
    Forgot to add XIII Collection of 18 stories and JUMBO COMICS, (as well as any surprise editions in 20018)TOTALS 80++++ stories.

    Editor sir try to make it a 100 story year. I know it's a too much of ask. BUT NOTHING IS IMPOSSIBLE FOR YOU.

    ReplyDelete
  21. ஈரப்பை அதிகம் நான் கண்ட சந்தா D தான்!!!!
    அநியாயத்துக்கு மிக அட்டகாசமாக்கி விட்டீர்கள்!!!!!
    கை தட்டும் படங்கள் பத்துக் கோடிகள் சார் உங்களுக்கு!@!!!!!!!

    ReplyDelete
  22. அதுவும் சந்தாவுக்கு இலவச இனைப்பாக டெக்ஸ் என்ற செய்தி என்ன மிகவும் பாதித்தது.
    எங்களை மாதிரி டெக்ஸ் பிடிக்காத சிறுபான்மை எண்ணி கை கொண்டோரை ஆசிரியர் ஓரு பொருட்டாக நினைக்கவில்லை.

    சந்தா விற்காக கொடுக்க படும் உக்கம் என்பது அனைத்து சந்தா கட்டுபவர்களையும் திருப்தி படுத்த வேண்டும். டெக்ஸ் ரசிகர்களை மட்டும் திருப்தி படுத்தினால் போதும் என்று ஆசிரியர் எதனால் நினைத்தார் என்று என்று புரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. /// சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு  நடப்பாண்டைப் போலவே எவ்விதம் ஊக்கம் வழங்குவது ?என்றெல்லாம்  யோசிக்கத் துவங்கினேன் !

      அந்த நொடியில் பிறந்தது தான் TEX in ColoR !! இது நம்மவரின் 70-வது ஆண்டுக் கொண்டாட்டங்களெனும் போது - இன்னும் கூடுதலாய் எமோஷன்ஸ் இருப்பின் நலமே என்று மனதுக்குப்பட்டது ! So கொஞ்சகாலமாகவே நான் மனதுக்குள் அசை போட்டு வரும் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும் வேளை இது  என்று தீர்மானித்தேன். ///

      இது ஆசிரியர் சென்ற பதிவில் சொல்லியது.. இது டெக்ஸின் 70வது ஆண்டுக்கு சிறப்பு செய்வதற்காக அடுத்த ஒரு ஆண்டுக்கானது மட்டுமே என நினைக்கிறேன்..

      Delete
    2. ஆண்டுக்கு ஓரு முறைதான் பிறந்த நாள் வரும். 25, 50, 75 பிற ந்த நாட்கள் உயர்ந்தவை. 70வது பிறந்த நாளுக்கு 700 பக்கம் அதுவும் ரெகுலர் சந்தாவில்.
      இதுக்கு மேல் சந்தா இலவச இனைப்பும் டெக்ஸ் கொண்டு வந்த தான் ஆக வேண்டுமா? டெக்ஸ் பிடிக்காதவர்கள் இந்த ஆண்டு சந்தா கட்ட வேண்டாம் என்று ஆசிரியர் சொல்லாமல் சொல்லுகிறாறா?

      Delete
    3. ///டெக்ஸ் பிடிக்காதவர்கள் இந்த ஆண்டு சந்தா கட்ட வேண்டாம் என்று ஆசிரியர் சொல்லாமல் சொல்லுகிறாறா?///

      டெக்ஸ் பிடிக்காதவர்கள் சந்தா A+C+Dயை தேர்வு செய்யுங்கள் என்று சொல்லியே சொல்லுகிறார்! ( அட்டவணையைக் கவனித்தீர்களா இல்லையா கணேஷ்? )

      Delete
    4. // சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு  நடப்பாண்டைப் போலவே எவ்விதம் ஊக்கம் வழங்குவது ?என்றெல்லாம்  யோசிக்கத் துவங்கினேன் \\\

      டெக்ஸ் ரசிகர்கள் மட்டும் தான் சந்தா கட்டுகிறார்கள் என்ற முடிவுக்கு ஆசிரியர் வந்து விட்டார் என்று எடுத்து கொள்ளலாம்.

      இல்லை என்றால் டெக்ஸை பிடிக்காதவர்கள் சந்தா கட்ட வேண்டாம் என்று சொல்வதாகவும் எடுத்து கொல்லலாம்.

      Delete
    5. @ Ganeshkumar Kumar

      ///இம்முறை பிடித்ததைத் தேர்வு செய்யும் சுதந்திரம் முழுமையாய் உங்கள் வசம் ! "TEX திகட்டுகிறது" என்று சொல்லும் சிறுபான்மையா நீங்கள் ? No worries - சந்தா B-ஐ நீங்கள் தேர்வு செய்திடும் அவசியமில்லை ! கார்ட்டூன் வேண்டாமா ? - ஒன்றும் பிரச்சனையே இல்லை ; பை-பாசில் வண்டியை வீட்டுக் கொள்ளுங்கள் ! மறுபதிப்புகளுக்கு NO சொல்வோரா நீங்கள் ? சுதந்திரமாய் சந்தா D-க்கும் NO சொல்லிடலாம் ! So இயன்றமட்டுக்கு எல்லாக் கூட்டணிகளிலும் சந்தாப் பிரிவுகளை இம்முறை உங்களுக்கென உருவாக்கியுள்ளோம்///

      இது கடந்த பதிவில் எடிட்டர் எழுதியிருப்பது! இதற்குமேலும் தெளிவாகச் சொல்லவேண்டுமா?

      Delete
    6. சார் எனக்கு மைசூர்பா பிடிக்காது.அதனால்
      நீங்கள் அதை தயாரிக்க வேண்டாம்.
      நண்பர்களே நீங்களும் மைசூர்ப்பா
      சாப்பிடாதீர்கள்.

      Delete
    7. கண்டிப்பாக நான் சந்தா இந்த வருடம் சந்தா கட்ட போவது கிடையாது. எதனால் என்பது தான் இங்கு கேள்வி.

      சந்தா B முழுவதும் ஆசிரியர் டெக்ஸ் ஆக வெளியிட்டு இருந்தால் நான் A C D சந்தா கட்டி விட்டு பேசாமல் போய் இருப்பேன். சந்தா ஊக்கம் கொடுக்கும் இலவசங்கள் கூட நான் டெக்ஸ் தான் கொடுப்பது என்ற முடிவு தான் என்னை வருத்தம். (A B C D க்குத்தான் டெக்ஸ் இலவசம் கிடைக்கும் என்ற அறிவுபூர்வமான விளக்கம் கொடுக்க வேண்டாமே)

      Delete
  23. அல்லாருக்கும் வணக்கம்பா

    ReplyDelete
  24. 2015--- தில் லயன் 250ல் 3டெக்ஸ் கதைகள், தீபாவளி வித் டெக்ஸ் 2பெரிய கதைகள்

    காலத்தின் தேவை, நெடுநாளைய கோரிக்கை நிறைவேறி2016ல் மாதந்தோறும் டெக்ஸ்...

    மாதந்தோறும் டெக்ஸ் என்ற அக்னிப் பரிட்சையிலும் அசால்ட்டாக வென்று லயன் முத்துவின் ஜீவாதாரம் தானே என டெக்ஸ் நிரூபித்தார்...

    2016ல் மொத்த சந்தா இதழ்கள் 48, இவற்றுள் டெக்ஸ் 12இதழ்கள்,அதாவது 25% (அதிலும் ஒரு இதழில் கூட்டு குடித்தனம்)

    2017ல் கணிசமான புத்தக எண்ணிக்கை குறைக்கப்பட்ட போது டெக்ஸூம் தன் இடங்களில் சிலவற்றை விட்டுக் கொடுக்க வைக்கப்பட்டார்.... 40சந்தா இதழ்களில் டெக்ஸுக்கு 9இடங்கள்,அதாவது 22.5%.

    2018ல் மொத்த சந்தா இடங்கள் 36, அவற்றுள் டெக்ஸூக்கான இடங்கள்=8, அதாவது 22.2%...

    வருடா வருடம் தன்னுடைய இடத்தில் குறைத்துக் கொண்டோ, அதே அளவில் மட்டுமே தக்க வைத்துக் கொண்டோ தான் உள்ளார் டெக்ஸ்... யாருடைய இடத்தையும் அவர் கபளீகரம் செய்யவில்லை; அவரவர் விற்பனையில் சொதப்பி அந்தந்த ஹீரோக்கள் வெளியேறினால் அதற்கு அவரவர் தானே பொறுப்பு. நீங்கள் சாதிக்காமல் போனதற்கு டெக்ஸை ஏன் குற்றம் சொல்லனும்...!!!

    இந்த புள்ளி விபரங்கள் மூலம் "டெக்ஸ் ஓவர்டோஸ்" என்பது ஆதாரம் அற்ற குற்றைச்சாட்டு என இந்த மாமன்றத்தில் பதிவு செய்கிறேன்.

    இதற்கு மேலும் டெக்ஸ் ஓவர்டோஸ் என வெற்று கோசங்களை எழுப்பிக் கொண்டிருப்பதில் அர்த்தம் ஏதும் உள்ளதா என்ன...????

    (இலவச இணைப்பு வாசகர்களை ஊக்கப் படுத்த, ஆசிரியர் சாரின் உத்தியே; அதை கணக்கில் சேர்க்க முகாந்திரம் ஏது???)

    ReplyDelete
    Replies
    1. //(இலவச இணைப்பு வாசகர்களை ஊக்கப் படுத்த, ஆசிரியர் சாரின் உத்தியே; அதை கணக்கில் சேர்க்க முகாந்திரம் ஏது???) //

      உண்மைதான்.

      Delete
    2. மிக அழகாக சொல்லி உள்ளார் சேலம் நண்பர்.இதற்கு மேலேயும் வேண்டுமோ....கொஞ்சம் கீழே வாங்கோ...

      Delete
    3. Arumaiyaana pulli vibaram +1, oru Suriya correction 2018il 36 alla minimum 45 idangal. Percentage may reduce

      Delete
  25. எடிட்டர் சார் அட்டவனை அருமை எல்லோரையும் திருப்தி படுத்த தாங்கள் எடுத்த முயற்சி தெரிகிறது.Tex overdose கிடையாது அவர் தான் நம்ம காமிக்ஸ் இன் fuel.TeX கதைகள் தான் சோர்வாய் இருக்கும் போது ஆறுதல் தருகிறது. அவர் கதைகள் மட்டுமே repeat audience கொண்டவை. அதற்காக மற்ற் கதைகள் வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. நாங்கள் tex ரசிப்பது மட்டும் அல்லாமல் bouncer,green manor,tiger,largo,Durango,graphic novel என அனைத்தயும் ரசிக்கின்ரோம் ஆனால் எங்கள் ரசனை மேம்பட்டது texஆல் மட்டுமே.உங்களுக்கு வேண்டாம் என்றால் நீங்கள் வேறு சந்தா தேர்வு செய்யலாம் அது உங்கள் உரிமை. ஆனால் TeX வேண்டாம் என்று சொல்வது மடமை.

    ReplyDelete
    Replies
    1. வரிக்கு வரி +100...

      அப்படி போடுங்க நண்பரே...

      Delete
    2. நானும் வரிக்கு வரி +100

      அப்படியே போடுங்க நண்பரே!

      Delete
    3. நானும் வரிக்கு வரி +10000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

      Delete
    4. ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு ஷொட்டு.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

      Delete
    5. ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு ஷொட்டு.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

      Delete
    6. \\ரசனை மேம்பட்டது texஆல் மட்டுமே.\\
      டெக்ஸ் கதை பிடிக்கும் என்று சொல்லுங்கள்.

      ஆனால் அது படிப்பது உயர்ந்த ரசனை என்று சொல்வது செம காமெடி.

      Delete
    7. // உங்களுக்கு வேண்டாம் என்றால் நீங்கள் வேறு சந்தா தேர்வு செய்யலாம் அது உங்கள் உரிமை. ஆனால் TeX வேண்டாம் என்று சொல்வது மடமை.//
      சரியான கருத்து.
      +11111

      Delete
  26. 2018 சந்தாவும் இரத்தப்படலம் முன்பதிவும் கட்டி விட்டேன்.
    சூப்பர் 6 லிஸ்ட்டுக்கு வெயிட்டிங்

    ReplyDelete
    Replies
    1. அருமை! வாழ்த்துகள் நண்பரே!

      Delete
    2. வாழ்த்துக்கள் அமர்நாத்

      Delete
  27. Ganesh சிறுபான்மையினரை சந்தோஷபடுத்த பெரும்பன்மையினர் வேதனைபடுவதா? உன்மையை சொன்னால் நான் மும்மூர்த்திகள்,ஜெரொமையா,viii spin off மற்றும் சில கதைகள் படிக்க்வே இல்லை ஆனால் அவற்றை நான் வேண்டாம் என்று சொல்லவுமிலலை வாங்கி கொண்டுதான் உள்ளேன். எனக்கு bouncer மிகவும் பிடித்தது ஆனால் ஆசிரியர் வேண்டாம் என்கிறார்?ஏன் என்றால் அது பெரும்பன்மையால் விரும்படவில்லை.சரி காத்திருப்போம் எ என்று விட்டுவிட்டேன். அது போல நீங்களும் பெருன்பான்மை இடம் கொடுங்கல் அவர்கல் சிறுபான்மை கனவுகலை இன்று இல்லவிட்டாலும் நாலை நிறைவேற்றுருவ்ர்

    ReplyDelete
    Replies
    1. நியாயமான பேச்சு அப்துல் அவர்களே!

      Delete
    2. Kabdul சார் நண்பரின் பெயரை முழுதாக
      எழுதவும்.ஏதும் குழப்பம் ஏற்பட கூடாது. மற்றபபடி நான் அவரில்லை.அவர்
      நானில்லை.நான் நான்தான் அவர்
      அவர்தான்.மற்ற படி மைசூர்ப்பா
      வேண்டாம்னு நான் சொல்லவில்லை.

      Delete
    3. பெரும்பான்மை மட்டும் ரொம்ப ரொம்ப சந்தோஷம் படுத்தும் அதே வேளையில் சிறுபான்மை யினர் உணர்வுக்கும் சற்று மதிப்பு கொடுங்கள் என்று கேட்கிறேன். இலவசங்கள் உட்பட எல்லாம் ஓரே நாயகருக்கு என்றால் எப்படி?

      Online ஆர்டர் தான் எனக்கு வசதி ஆனால் சந்தா செலுத்துவோர் எண்ணிக்கை 2016 கனிசமாக குறைந்து கொண்டு உள்ளது. பிடிக்கவில்லை என்றாலும் டெக்ஸ் சந்தாவையும் சேர்த்து தான் வாங்கி கொண்டு இருக்கிறேன். தவறு என் பேரில் தான். வந்தோமா பிடித்ததை online வாங்கினோமா என்று போகமல். இரண்டு வருடமாக சந்தா கட்டியது என் தவறு தான்.

      நீ கட்ட வில்லை என்றால் போ என்று கூறலாம். ஆனால் ஆசியருக்கு அது நட்டம் தான்.

      ஏனெனில் காமிக்ஸ் சந்தா கட்டுபவர்களே 1500 கூட தாண்டத சிறுபான்மை யினர்தான்.

      Delete
    4. //ஏனெனில் காமிக்ஸ் சந்தா கட்டுபவர்களே 1500 கூட தாண்டத சிறுபான்மை யினர்தான்//

      சிரிப்பதா ? அழுவதா ? என்ற யோசனை எனக்கு !! மொத்த பிரிண்ட் ரன்னே 1500 கிடையாது நம் இதழ்களில் ஒரு பகுதிக்கு !! சந்தாவில் 1500 க்கு எங்கே போவதாம் சார் ?

      Delete
  28. 'டெக்ஸ் - ஓவர்டோஸ்' என்று முழங்கும் சொற்ப எண்ணிக்கையிலானவர்களின் கவனத்திற்கு:

    உங்களுக்காகவே சந்தா A+C+D என்ற சந்தா பேக்கேஜ் உருவாக்கப்பட்டிருக்கிறது! ரூ.3175 மட்டுமே! வாங்கிப் பயனடைக! (இந்த சந்தாவிற்கு 'இலவச கலர் டெக்ஸும்' கிடையாதென்பதால், டெக்ஸ் இல்லா காமிக்ஸ் உலகம் உங்களுக்கே உங்களுக்குத்தான்!)

    ( ஒரு ஸ்மைலி படம் ப்ளீஸ்!)

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் காமிக்ஸ் பிடிக்காது என்றால் இலவங்கள் வங்க தகுதி இல்லை. அப்படி தானே. நியாயமான திர்ப்பு

      Delete
  29. உங்களுக்குகான் உரிமைகளை கேளுங்கள் நாங்களும் சேர்ந்தே குரல் கொடுக்கிரோம் ஏன் என்றால் எங்களுக்கு நீங்களும் வேண்டும் அதற்காக எங்கள் சாப்படை கேட்டால் எப்படி?

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே டெக்ஸ் ரசிகர்களுக்கு பிரியாணி, வெள்ளை சாதம் கோழி கொழும்பு சாம்பார் உட்பட எல்லா வகையான விருந்தும் டெக்ஸ் ரசிகர்களுக்கு வைத்தாகிவிட்டது.

      Side வைக்கும் ஊறுகாய் கூட டெக்ஸ் ரசிகர்கள் விருப்ப படிதான் வைப்பேன் என்றால் எப்படி?

      Delete
  30. சந்தா லிஸ்டில் A+c+D என்ற ஒரு வகை.ஆச்சியம் மட்டும் அல்ல அதிர்ச்சியும்...ஆசிரியர் அவர்களுக்கு ஒரு வேண்டுக்கோள் .முன்பதிவு முழுவதும் முடிந்த பின் இதற்கு கிட்டிய நம்பர்களை ஒளிவு மறைவு இன்றி வெளியிட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. எத்தனை பேர் என்னை மாதிரி சந்தா கட்ட வேண்டாம் என்ற முடிவை எடுத்தார்களோ? அந்த புள்ளி விவரம் எப்படி கிடைக்கும்.

      Delete
    2. ///எத்தனை பேர் என்னை மாதிரி சந்தா கட்ட வேண்டாம் என்ற முடிவை எடுத்தார்களோ? அந்த புள்ளி விவரம் எப்படி கிடைக்கும்///

      உங்களோட சேர்த்து ஒரு ரெண்டு மூனு பேர்தான். இங்கேயே வாசிச்சுக் காட்டிடலாம்!

      Delete
    3. //எத்தனை பேர் என்னை மாதிரி சந்தா கட்ட வேண்டாம் என்ற முடிவை எடுத்தார்களோ? அந்த புள்ளி விவரம் எப்படி கிடைக்கும்.//

      ரொம்பவே சிம்பிள சார் : 2018 -ன் சந்தா சொதப்பிடல் தான் எனக்கு அவசியமானதொரு பாடமாக இருக்கக் கூடும் என்ற உங்கள் ஆர்வம் மெய்யாகின் - அந்தப் புள்ளி விபரங்களை நான் அறிவித்துத் தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற நிலையே இராது ! திண்டுக்கல் பக்கமாய் என் தலை தெரிகிறதா ? என்று பார்த்தாலே போதுமானதாக இருக்கக்கூடும் !

      Delete
  31. எது வேண்டும் என்பதை விற்பனை தீர்மானிக்கிரது.TeX over dose என்றால் அதை விற்பனை சொல்லட்டும்.விற்கத பொருளை ஆசிரியர் ஏன் போட போகிறார்?

    ReplyDelete
  32. கருத்து சுதந்திரம் என்பது மற்றவர் மனதை புண்படுத்தாமல் தனது கருத்தை கூறுவதேதானே.உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் வாங்காமல் இருந்து விடுங்கள். அதை விட்டு இப்படி எல்லாம் கூறாதீர்கள்.ப்ளீஸ். ...
    டெக்ஸ்-க்கு அடுத்த படியாக எனக்கு பிடித்த ஹீரோ டைகர் தான்.ஆனால் அவருக்கே 2018 புது இடம் இல்லை என்பதை ஜீரணிக்க பழகிக் கொண்டேன்.அதற்காக எனக்கு பிடிக்காத ஹீரோக்கள் இருந்த போதிலும் அனைவரையும் வருக..வருக..என்று இருக்கை கும்பிட்டு வரவேற்கிறேன்...அதையே நீங்களும் செய்யலாமே...நன்றி. .

    ReplyDelete
    Replies
    1. ///கருத்து சுதந்திரம் என்பது மற்றவர் மனதை புண்படுத்தாமல் தனது கருத்தை கூறுவதேதானே///

      +1

      Delete
    2. என்ன நண்பரே உறங்க வில்லையா...இனிய கனவுகளுடன் உறக்கம் உங்களை தழுவட்டும்.இரவு வணக்கம். ..

      Delete
    3. இன்னும் கொஞ்ச நேரம் போச்சுன்னா 'காலை வணக்கம்' சொல்றாப்ல ஆயிடும்!

      ////என்ன நண்பரே உறங்க வில்லையா...////

      என்னைப் பார்த்தா உறங்கிக்கிட்டே கமெண்ட் போடுற ஆசாமி மாதிரி தெரியுதா உங்களுக்கு? ;)

      Delete
    4. அப்படி தான் தெரிகிறது. 😜😜😜😜😜

      Delete
    5. /கருத்து சுதந்திரம் என்பது மற்றவர் மனதை புண்படுத்தாமல் தனது கருத்தை கூறுவதேதானே///

      டெக்ஸ் கதை அதிக ஸ்லாட் வருவதால் undertaker மாதிரி வருவது குறைகிறது என்பதை எவ்வாறு கூற வேண்டும் என்பதை நீங்களே கூறி விடுங்கள் நான் cut செய்து paste செய்கிறேன்.

      பிரச்சினை சந்தா B பற்றி அல்ல. எல்லா தரப்பு ரசிகர்களும் கட்டும் சந்தாவில் ஏன் டெக்ஸ் ரசிகர்களை மட்டும் ஆசிரியர் திருப்தி படுத்த முயற்சி செய்கிறார்.

      25 % மேல் சந்தா தொகை 700 பக்கம் மேல் பிறந்த நாள் மலர். சந்தா D யில் ஓரு ஸ்லாட.் இவ்வளவு கொடுத்துவிட்டு. சந்தா இலவசம் கூட டெக்ஸூக்கு என்றால் என்ன நியாயம்.

      டெக்ஸ 32 பக்கம்் அப்படி நிறைய வெளியிட வேண்டும் என்றால் ரெகுலர் சந்தாவில் இல்லாமல் online pre-booking வெளியிடலாமே?. ஆயிரக்கணக்கான டெக்ஸ் ரசிகர்கள் வங்கி குவித்து கொள்ளட்டும்.

      சந்தாவில் இன்டு இடுக்கு எல்லாம் டெக்ஸை கொண்டு தான் நிறப்ப வேண்டுமா?

      Delete
  33. நேற்று பிடித்த ராஜேஷ்குமர் இன்று பிடிக்க்வில்லை இன்று பிடித்த சுஜாதா,ஜொமோக்ன் நாளை பிடிக்குமோ இல்லையோ? தெரியவில்லை அதற்காக அவர்கள் எழுத்தாளர்கள் இல்லை என்று சொல்வது மடமை. நமக்கு பிடிக்கவில்லை என்பதர்காக் அதை குறை சொல்வது சரிய?

    ReplyDelete
    Replies
    1. எனக்கு எப்போதும் டெக்ஸ் பிடித்தது இல்லை

      Delete
  34. எனது தராசின் ஒரு முனையில் மொத்த ஹீரோக்களையும் வைத்தேன்.அந்தோ பரிதாபம் அனைவரும் வான்வெளிக்கு சென்று விட்டார்கள். ஏனென்று பார்த்தால் தெரியாத்தனமாக மறு முனையில் நம்ம மஞ்சள் சட்டை மாவீரை வைத்து விட்டேன்.மன்னிக்கவும். 😭😭😭😭😭😭😭😭😭

    ReplyDelete
  35. சந்தா கட்டியாச்சு

    ReplyDelete
    Replies
    1. சந்தா கட்டவில்லை.

      Delete
    2. Ganeshkymar Kumar : சார் ...அவரவர் அளவிற்கு அவரவர் அபிப்பிராயங்களில் பிசகிருப்பதில்லை ! அதற்கு நீங்களோ, நானோ விதிவிலக்கல்ல ! ஆகையால் உங்கள் நிலைப்பாட்டை மாற்ற நானோ ; என்னதை மாற்ற நீங்களோ முயற்சிப்பதில் பலனிருக்கப் போவதில்லை தான் .

      ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள அனுமதியுங்களேன் ?

      சந்தா செலுத்துவதும், செலுத்தாததும் உங்களது தனிப்பட்ட அபிலாஷைகள் ; ஆனால் உங்களுக்கு ஏற்பிலா விஷயம் இருப்பதால் சந்தா முறையே தோல்வி கண்டால் தப்பில்லையே என்ற ரீதியில் சிந்திப்பது சங்கடமாக உள்ளது .

      ஒவ்வொரு ஆண்டும் நான் இங்கு கைகூப்பி யாசித்து நிற்பது, வாசிப்பெனும் அழகான அனுபவத்தை உங்கள ஒவ்வொருவரின் இல்லங்களுக்கும் காமிக்ஸ் வடிவினில் வழங்கிடவும் தான் சார் ! Of course அதனில் வியாபார நோக்கமும் இல்லாதில்லை - ஆனால் அது மாத்திரமே இருப்பின், நான் இருக்கும் இடம் இதுவாக இராது !

      எது எப்படியோ - நெஞ்சைத் திறந்து காட்டும் ஆஞ்சநேயரால் கூட இந்நாட்களில் தாக்குப் பிடிப்பது சிரமம் என்பது புரிகின்றது ; பிசாத்து நானெல்லாம் எம்மாத்திரம் ?

      Delete
    3. வேண்டாம் ஆசிரியரே இவ்வளவு மன கஷ்டம் ஆயிரம் கை கள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
      எந்த இரும்புக் கூண்டினாலும் இந்த சிங்கத்தினை சீண்ட முடியாது

      Delete
    4. ஆசிரியர் மனம் நொந்து போக வேண்டிய அவசியமே இல்லை.சிறு குழந்தையின் உளறலாக நினைத்து செல்லுங்கள்.இதுவும் கடந்து போகும். உண்மையை ஏற்க நினைப்பவர்கள் பட்டியலில் நண்பரை சேர்த்து விடுங்கள் அவ்வளவு தான். ...

      Delete
  36. டியர் எடிட்,

    2018 சந்தா தேர்வுகள், மற்றும் நாயகர்களின் Quota சரியான விகிதாரசாரத்தில் அமைந்திருப்பது, உங்கள் உழைப்பில் தெரிகிறது. விற்பனையில் ஹிட்டடிக்கும் நாயகர்களுக்கு பட்டியலில் இடம் அதிகம் அளிப்பதும், சோபிக்காதவர்களை ஒரு இரு இதழ்களுக்கு ஒதுக்குவதும், நடைமுறை நிகழ்வுகளே. விமர்சனங்களை தாண்டுங்கள்.

    2018 இதழ்களை ஆர்வத்துடன் எதிர்நோக்குவேன், என் சந்தா எப்போதும் போல தொடரும்.

    ReplyDelete
    Replies
    1. அருமையோ அருமை செயலாளரே

      Delete
    2. அச்சச்சோ!! என்னோட செயலாளர் பதவி பறிபோயிடுச்சா?!! :D

      Delete
    3. ஸ்லீப்பர் செல்கள் களமிறங்கியாச்சு!!

      Delete
    4. Rafiq Raja : //விற்பனையில் ஹிட்டடிக்கும் நாயகர்களுக்கு பட்டியலில் இடம் அதிகம் அளிப்பதும், சோபிக்காதவர்களை ஒரு இரு இதழ்களுக்கு ஒதுக்குவதும், நடைமுறை நிகழ்வுகளே//

      புரிதலுக்கு நன்றிகள் சார் !

      Delete
    5. ஒரு புளோ வில் வந்து விட்டது மற்றபடி எங்களின் நிரந்திர செயலாளர் நீங்கள்தான் ஈரோடு விஜய்

      Delete
    6. Rafiq ji@ //விற்பனையில் ஹிட்டடிக்கும் நாயகர்களுக்கு பட்டியலில் இடம் அதிகம் அளிப்பதும், சோபிக்காதவர்களை ஒரு இரு இதழ்களுக்கு ஒதுக்குவதும், நடைமுறை நிகழ்வுகளே//... அருமையான கருத்து...

      இதை புரிந்து கொள்ள மாட்டேன் என அடம் பிடிப்பவர்களை, நீங்கள் சொன்ன மாதிரி தாண்டிச் செல்ல வேண்டியதுதான்...👌👌👌

      Delete
  37. கட்டியாச்சு...சந்தா கட்டியாச்சு...ஒன்னுக்கு ரெண்டா கட்டியாச்சு...

    ReplyDelete
    Replies
    1. செம்ம
      மகேந்திர பாகுபலி ஜி

      Delete
    2. சூப்பர், MP அவர்களே!

      Delete
  38. ஆசிரியர் அவர்களுக்கு...

    உங்களின் இந்த வருட அட்டவனை மிக சிறப்பு.அனைவரையும் திருப்தி படுத்தும் சிறப்பு.ஒரு சிலர் டெக்ஸ் ஓவர் டோஸ் என பொறுமுவது உண்மையிலேயே டெக்ஸ் மேல் மட்டும் தானா இல்லை வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா என தெரியவில்லை.கிராபிக் நாவல் ரசனை கூட வளர்ந்து விட்டது.ஆனால் தூங்கி போன டைம் பாம் அளவிற்கு எனது ரசனை இன்னும் வளரவில்லையாதலால் இன்னும் எவ்வளவு சொம்பு காம்ப்ளான் தான் நான் குடிப்பது. ச்சே எனக்கு காம்ப்ளானே பிடிக்காது .

    மேலும் சிலருக்கு டெக்ஸ் அதிகம் வருவது பிடிக்கவில்லையா ..அல்லது இதழ்களே இவ்வளவு வருவது பிடிக்க வில்லையா என்றும் தெரியவில்லை.காரணம் பலருக்கு நானே கூட பழைய இதழ்களுக்காக அலைந்து திரிந்த காலம் உண்டு...அதிக விலை கண்டு மயங்கியதும் உண்டு.ஆனால் இப்பொழுது எல்லாம் மாதம் தவறாத நமது வெளியீடுகளும்..முக்கியமாய் மாதந்தோறும் எங்களை கூதுகலப்படுத்தும் டெக்ஸ் அவர்களும் தொடர்ந்து குஷிபடுத்தி வருவதால் பழைய இதழ்களை தேடி ..,நாடி...ஓடி ..,திரிவது எல்லாம் நின்றுவிட்டது.இதற்கு முதன்மையான காரணம் டெக்ஸ் .மேலும் டெக்ஸ் ஓவர் என அலம்புவர்கள் 45 இதழ்களில் 9 இதழ்கள் மட்டுமே டெக்ஸ் என்று தெரிந்தவுடன் ..ஹே....ஹே....இலவசமா டெக்ஸ் வருகிறது ..இதை ஒத்துகொள்ள முடியாது என்கிறார்கள் .ஏப்பா இலவசம்ன்னா தயாரிப்பாளர் வாடிக்கையாளர் சந்தோசதிற்காக அவர்களாக தருவது.அதிலும் பெரும்பான்மை மக்கள் சந்தோசபடுத்தும் ஒரு பரிசு.அதுவும் குறை என்றால் அவர்கள் வேண்டுவது டைம்டேபிளும் ...லேபிளுமோ என தெரியவில்லை.

    சுத்தமாக கிராபிக் நாவலே பிடிக்காத நண்பர்கள் கிராபிக் நாவலின் ரசனையை கூட இப்போது வளர்த்து கொள்ள முடிந்தவர்கள் மத்தியில் காமிக்ஸ் என்றாலே டெக்ஸ் என்ற நினைவு வரும் அளவிற்கு வீரநடை போடும் ஒரு நாயகரின் ரசனையை வளர்த்து கொள்ள முடியாதவர்களின் குறை கண்டிப்பாக டெக்ஸ் கிடையாது.இது " வேற லெவல் " குறை.எப்படி ரசினி படம்னா கதை இல்லை..எல்லா கதையும் ஒண்ணு..நடிப்பு இல்லை ..என அக்குவேறாக அலசுபவர்கள் தாம் ரசினி ரசிகர்களுக்கு முன்னரே அடம்,இடம் பிடித்து ரசினி படத்தை பார்ப்பார்கள் .பிறகு இல்லாத குறைகளை எல்லாம் எடுத்து காட்டுவார்கள் .ஆனால் பாக்ஸ் ஆபிசுலோ வேறு நாயகர் எவரும் தொடமுடியாத அளவிற்கு வசூலித்து விடும்.அவரின் படம் வரும்பொழுதோ மற்றவர்கள் அவர்களாகவே போய்ட்டு அடுத்த வாரம் வரேன்ப்பா என்று சென்றுவிடுவார்கள் .அந்த கெப்பாசிட்டி தான் டெக்ஸ் அவர்களுக்கும் .


    டெக்ஸ் கதை படிப்பவர்களின் ரசனை குறைவு என நினைக்கும் மேல்தட்டு ரசனை உடையவர்கள் அளவிற்கு நாங்கள் ரசனையை வளர்த்து கொள்ள பிரியபடவில்லை சார்..காரணம் அப்படி எனது ரசனை வளர்ந்து விட்டால் நான் தூங்கிபோன டைம்பாமை நானே வெடிக்க செய்து நானே மயக்கமுறும் அளவிற்கு பாதிக்கபட்டு விடுவேன் .

    ReplyDelete
    Replies
    1. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

      Delete
    2. தலீவர் ராக்ஸ்

      Delete
    3. சூப்பர் தலீவரே....👏👏👏👏👌👌👌👌👌👌
      நச்...நச்...நச்னு சொன்னீங்க...

      Delete
    4. சூப்பர் தலிவரே.. ஆனா என்ன, வேணும்னே குறை சொல்லனும் சொல்லறவங்களுக்கு என்ன சொன்னாலும் ஏத்துக்க மாட்டாங்க.. தாண்டிப் போவதே நல்லது..

      Delete
  39. Vanakkam Sir,

    I am sure you must have thought about translating the great classics of 'asterix and obelix'.

    There is no greater poetic comics than that.

    Is it too hard to get their copyright and translate those comics?

    Thank you,
    Jeba Alexander
    Washington DC, USA.

    alexjeba@gmail.com
    +1-703-731-9560

    ReplyDelete
    Replies
    1. அதற்கான உயரங்களை நாம் எட்டிப் பிடிக்க இன்னமும் நாட்கள் உள்ளன சார் !

      Delete
    2. சார்... ஒரு ஸ்டூல் போட்டு ஏறியாவது இப்பவே எட்டிப்பிடிக்க முயற்சிப்போமே சார்? :)

      Delete
    3. //சார்... ஒரு ஸ்டூல் போட்டு ஏறியாவது இப்பவே எட்டிப்பிடிக்க முயற்சிப்போமே சார்? :)//

      +1

      Delete
  40. 'இலவச இணைப்பான தாயவிளையாட்டே எனக்கு பிடிக்காது... அதனால நான் தீபாவளி மலரே வாங்கப்போவதில்லை'னு யாராவது சொன்னால், அதற்கு எப்படி ரியாக்சன் காட்டணும்னு ஒரே குழப்பமா இருக்கு மக்களே!

    (நான் எப்படி ரியாக்சன் காட்டினாலும் ஒரே மாதிரிதான் இருக்கும்றது வேற விசயம்.ஹிஹி!)

    ReplyDelete
  41. @ Friends : காலையில் எழுந்து மின்னஞ்சலைப் பார்த்தால் இன்னொரு குதூகல சேதி : சங்கத்தின் செயலர் பதவிக்கு தேர்தலே வராது பார்த்துக் கொள்ளும் நிரந்தர செயலாளருக்கு சந்தா ABCD அன்பளிப்பு - அனாமதேயரின் உபயத்தில் !

    பிளஸ் டயபாலிக் அகிலுக்கும் ஒரு full சந்தா வழங்கச் சொல்லி பணம் அனுப்பியுள்ளார் !!

    அதகளம் !!!

    ReplyDelete
    Replies
    1. காமிக்ஸ் நேசம் வாழ்க பல்லாண்டு

      Delete
    2. வாழ்த்துக்கள் செயலாளர்
      வாழ்த்துக்கள் அகில்..👏👏👏

      Delete
    3. வாழ்த்துக்கள் செயலர் மற்றும் அகில் அவர்களே...

      சந்தா செலுத்திய அந்த அநாமதேய நண்பருக்கும் வாழ்த்துக்கள் ...

      Delete

    4. குருநாயருக்கும் அகிலுக்கும் வாழ்த்துகள்.!!

      அன்புள்ள அனாமேதேயரே,

      அப்படியே நண்பர் கணேஷ்குமாருக்கு டபுள் டெக்ஸ் சந்தா கட்டிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.!!

      ஷ்ஷ்ஷப்பா மிடீல!!! 😭😭😭😭

      Delete
    5. ///அனாமேதேயரே ///

      அனாமதேயரே

      Delete
  42. வாழ்த்துக்கள் செயலாளரே
    வாழ்த்துக்கள் தம்பி அகில்

    ReplyDelete
  43. Dear Editor,

    lioncomics@yahoo.com is also valid for transfers from India through PAYPAL?

    ReplyDelete
  44. மீண்டும் மாடஸ்டி

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் என்றும் மாடஸ்டி

      Delete
    2. மீண்டும் என்றும் எப்போதும் மாடஸ்டி..

      Delete
  45. ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கும்.இங்கு ஒரு விசயத்தை தெரியப்படுத்திகிறேன்.2018 அட்டவணையை பார்த்து கொண்டே வரும் போது color tex யை பார்த்து இவை அன்பளிப்பு என்று அறிந்தவுடன் சரி இந்த முறை 2 சந்தா கட்டி விட வேண்டியது தான் என்று முடிவு செய்தேன்.இது பொய்யே கலக்காத அக்மார்க் மெய்..(நான் சந்தா கட்டிய பிறகு கையில் காசு வரும் போதேல்லாம் டெக்ஸின் எந்த புக்காக இருந்தாலும் 2அல்லது 3 பிரதி வாங்குவது இயல்பு.) பிறகு அது தனியாக விற்பனைக்கும் உண்டு என்பதை அறிந்த போது மகிழ்ச்சியின் உச்சத்தை எட்டி பிடித்தேன்....சந்தாவுடன் colour tex க்கு கூடுதலாக பணம் செலுத்தினால் எனது கூரியர் பாக்ஸில் 1க்கு 2யாக colour tex வர வாய்ப்பு உள்ளதா ஆசிரியரே!!!.....

    ReplyDelete
  46. I was thinking why TEX made a big impression amongst us?

    It's not just the story that makes it possible, then what?

    In childhood days we buy cracker pistol at deepavali times and play with it the whole day with friends and relatives thinking ourselves as a hero or a villain, maybe that could be driving factor behind this TEX attraction.

    Not only that, TEX stories has got a strong line of friendship, family sentiments and love running along whole series, that could impressed as in a way.

    And last but not least, style of dialogue writing of Vijayan sir, particularly karson's comedy dialogue.

    If any of you got any points can share it. Let the haters know why we love TEX.

    ReplyDelete
  47. எனக்கு "காமிக்ஸ்" வேண்டும், இதில் எனக்கு பிடித்த கதை பிடிக்காத கதை எது வந்தாலும் சந்தா மூலம் தொடர்ந்து வாங்குவேன்.

    ஆசிரியரின் கஷ்டமும் தெரியும் அதை விட அவரின் காமிக்ஸ் காதலும் தெரியும். அதையும் விட அவர் மேல் அசைக்க முடியாத நம்பிக்கையும் உண்டு.

    லயன் முத்து "காமிக்ஸ்" வேண்டும், எனவே எப்படி வந்தாலும் சந்தா செலுத்தினான் வாங்குவேன்.

    எனது 30 வருட லயன் முத்து காமிக்ஸ் பயணம் என் இரத்தத்தில் இரண்டர கலந்த ஒன்று இதனை என்றும் பிரிக்கவோ மாற்றவோ முடியாது.

    ReplyDelete
    Replies
    1. சேம் ப்ளட்..

      +1234567890987654321

      Delete
    2. ///எனக்கு "காமிக்ஸ்" வேண்டும், இதில் எனக்கு பிடித்த கதை பிடிக்காத கதை எது வந்தாலும் சந்தா மூலம் தொடர்ந்து வாங்குவேன்.

      ஆசிரியரின் கஷ்டமும் தெரியும் அதை விட அவரின் காமிக்ஸ் காதலும் தெரியும். அதையும் விட அவர் மேல் அசைக்க முடியாத நம்பிக்கையும் உண்டு.

      லயன் முத்து "காமிக்ஸ்" வேண்டும், எனவே எப்படி வந்தாலும் சந்தா செலுத்தினான் வாங்குவேன்.

      எனது 30 வருட லயன் முத்து காமிக்ஸ் பயணம் என் இரத்தத்தில் இரண்டர கலந்த ஒன்று இதனை என்றும் பிரிக்கவோ மாற்றவோ முடியாது.///

      அப்படியே மொத்தமாய் ஒரு +1!

      அருமையாக சொன்னீர்கள் பரணி..!

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

      Delete
    3. பரணி சார் ....சூப்பரா சொன்னீங்க..:-)

      Delete
  48. எனக்கும் மைசூர்பாகு பிடிக்காதுங்க.! தீபாவளி ஸ்வீட்ஸ் வாங்கப்போன கடையில போய்,

    எதுக்கு இத்தனை மைசூர்பாகு போட்டு வெச்சிருக்கீங்க.. எனக்கு பிடிக்காது தெரியுமா? கம்மியா போட்டுவெச்சா போதாதான்னு கேட்டேன்.!

    இல்ல தம்பி, நிறைய பேர் மைசூர்பாகுதான் கேக்குறாங்க, நல்லா விக்குது, அதனால நிறைய போடுறோம்.விக்குற பொருளை நிறைய போட்டாதானே கடைய நல்லா தொடர்ந்து நடத்த முடியும்னு கடைக்காரர் சொன்னாரு.!

    அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு பிடிக்காது அவ்வளவுதான் அப்படின்னு சொன்னேன்.!

    சரி தம்பி! உங்களுக்கு பிடிச்சதை வாங்கிக்கோங்க.. நான் மைசூர்பாகை கட்டாயப்படுத்தலைப்பா ன்னு கடைக்காரர் சொன்னாரரு.

    அதுசரி மூணுகிலோ சுவீட்ஸ்க்கு மேல வாங்குறவங்களுக்கு அரைகிலோ மைசூர்பாகு இலவசம்னு போட்டு இருக்கீங்களே, எதுக்கு என்மேல மைசூர்பாகை திணிக்கிறிங்கன்னு கேட்டேன்.!

    தம்பி..! இலவசமா தர்ர பொருளும் நிறைய பேரால விரும்பப்படுற பொருளா இருந்தா நல்லா இருக்கும்னுதான் இந்த முடிவெடுத்தோம். . உங்களுக்கு வேண்டாம்னா விட்டுடலாமே தம்பி..அப்படீன்னு கடைக்காரர் சொன்னாரு.!

    அப்படீன்னா என்னை சுவீட்ஸ் வாங்கவேண்டாம்னு சொல்றிங்களா? நீங்க பண்றது சரியா, மைசூர்பாகு விக்குது விக்கலை..அதெல்லாம் எனக்கு தெரியாது..நீங்க மைசூர்பாகை குறைச்சே ஆகணும்னு ஒத்தைக்காலில் நின்னேன்.!!

    இன்னும் கடைவாசலிலேயே ஒத்தைக்காலில் நின்னுகிட்டு இருக்கேன்.!!
    மைசூர்பாகு விற்பனை என்னவோ படுஜோராக நடந்துகிட்டுதான் இருக்கு..! கடையிலும் திரும்ப திரும்ப போட்டுகிட்டுதான் இருக்காங்க.! போடப்பபோட தீர்ந்துகிட்டு வர்ரதாலே நிறைய போடுறாங்க.
    மைசூர்பாகு நிறைய போடுவதை நிறுத்தும்வரை ஓயமாட்டேன்.

    இன்னும் கடைவாசலில் ஒத்தைக்காலியே ஒத்தைக்காலில் நின்னுகிட்டே இருக்கேன்.!!

    (மேற்கூறிய சம்பவம் முழுக்க என்னுடைய சொந்த அனுபவமே.. டெக்ஸ் - மைசூர்பாகு இரண்டுக்கும் யாதொரு சம்மந்தமுமில்லை என்பதை கூறிக்கொண்டு.. . .)

    ReplyDelete
    Replies
    1. அதேபோல் மேற்கூறிய சம்பவத்தில் நான் என்ற வார்த்தை -டெக்ஸ் வெறுப்பாளர்கள் இரண்டுக்கும் யாதொரு சம்மந்தமுமில்லை என்பதையும் தெரிவித்துக்கொண்டு. . . .!

      Delete
    2. I loved this fictional story Kannan ji, sad you missed deepavali because of this mysorepa.

      Delete
    3. HaHa.. fact Mahesh ji.

      But the above mentioned "i " is not me.!!
      Me always enjoying the deepavali with large amount of mysorepa.!!

      😍😍😍😍😍😍😍😍😍

      Delete
    4. ச்சே....எனக்கு மைசூர்பாக் மட்டும் தான் பிடிக்கும்..

      Delete
  49. ஆசிரியர் அவர்களுக்கு..

    ஓய்வு பெற்ற தலைமைஆசிரியர் திரு .அன்பரசன் சார் அவர்களின் கருத்து எனது பெயரில் கீழ்கண்டவாறு...



    ஆசிரியர் அவர்களுக்கு..

    என்னை பொறுத்தவரை சந்தா B அட்டவணையில் டெக்ஸ் அவர்களை குறைத்து உள்ளதே மிக பெரிய குறைப்பாடாக தெரிகிறது.மாதம் ஒரு (நார்மல் ,பெரிய ) டெக்ஸ் எதிர்பார்க்கும் என்னை போன்ற பலருக்கு எட்டு இதழ்..,ஒன்பது இதழ் என்பது வருத்தத்தையே அளிக்கிறது.மேலும் மார்ட்டின் ..,ராபின் போன்றோர் வெற்றிவரிசை நாயகர் எனும் பொழுது அவர்களை சந்தா A யிலேயே இனைத்து அந்த இடத்தில் டெக்ஸ் அவர்களே குடி கொண்டு இருந்தால் இன்னும் மகிழ்ச்சி கூடுதலாக இருந்திருக்கும்.அடுத்த வருடத்தில் ஆவது சந்தா B என்பது முழுமையான டெக்ஸ் ஆக கொண்டு வர முயற்சி செய்யுங்கள் சார்.மற்றபடி தங்கள் அட்டவனை வரிசை ..கதை தேர்ந்தெடுப்பு மிக மிக சிறப்பு.வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள்.

    மேலும் இருவருடமாக சந்தா கட்டாத நான் உங்களின் இந்த அட்டவனையை கண்டதும் உடனடியாக நேற்றே ABCD முழு சந்தாவும் ..,இரத்தபடலம் முன்பதிவிற்கும் இனைத்து பணத்தை அனுப்பிவிட்டேன் .


    மேலும் டெக்ஸ் அவர்களுக்கு தனி சந்தா இடம் பெற்று இருந்தால் முழுசந்தாவுடன் எனது புதல்வி அவர்களுக்காக டெக்ஸ் சந்தா ஒன்றையும் இனைத்து அனுப்பி இருப்பேன் .


    நன்றி....

    ReplyDelete
  50. எடிட்டர் சார் நமது காமிக்ஸ் கிடைக்கும் இடங்கள் என்கிற உள் அட்டை விளம்பரத்தில் கடலூரில் பெல் புக் ஹவுஸ் என்று உள்ளது. அங்கு சென்று பார்த்தால் நிலவொளியில் நரபலி வெளியான சமயம் வந்த இதழ்கள் மட்டுமே உள்ளது.விபரம் கேட்டால் நமது இதழ்கள் வரவழைப்பது கிடையாது என்று கூறுகிறார்கள்.கடலூரில் வேறெந்த இடத்திலாவது நமது இதழ்கள் விற்பனையாகிறதா? தயவுசெய்து பதிலளியுங்கள்
    நான் விசாரித்தவரை இல்லையென்ற பதில் மட்டுமே கிடைக்கிறது.மொத்தமாக பணம் செலுத்தி சந்தாவில் இடம் பெற இயலாத நிலையில் மாதாமாதம் கடைகளில் வாங்கி கொள்ள முடிவெடுத்துள்ளதால் தங்கள் பதில் அவசியமாகிறது.Please.

    ReplyDelete