Sunday, August 06, 2017

வந்தனம் ஈரோடு !

நண்பர்களே,

வணக்கம். நிறைய முறை அனுபவித்து விட்ட உணர்வுகளே  ; நிறையத் தடவைகள் பார்த்து விட்ட காட்சிகளே ; நிறையத் தடவைகள் கேட்டு விட்ட வரிகளே ...! ஆனால் ஒவ்வொரு முறையும் அவையெல்லாமே ஒரு புது உச்சத்தைத் தொட முயற்சித்துக் கொண்டே இருக்கும் போது - அவை உண்டாக்கும் தாக்கங்களும் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டே செல்கின்றன ! துளியும் குன்றா காமிக்ஸ் நேசம், நம் மீதான நிபந்தனைகளற்ற  அன்பு மழை  என்ற உணர்வுகளின் குவியல் ; நெடு நாள் நண்பர்களாய் அங்கே அத்தனை பேரும் கைகோர்க்கும் அந்தக் காட்சிகளின் ரம்யம் ; ஒவ்வொரு சந்திப்பின் போதும் பறக்கும் கேள்விக் கணைகள் -  நான் விவரித்த விஷயங்கள் இவையே என்பதை புரிந்து கொள்ள நாமெல்லாம் லியனார்டோ தாத்தாவாக இருக்க வேண்டியதில்லை தானே ? நேற்றைய ஈரோட்டுப் புத்தக விழாவின் பகலில் நடந்த நமது வாசக சந்திப்புப் படலமும், அதன்பின்பாய் அந்தி புலரும் நேரம் முதல் ஊரடங்கும் வேளை வரைக்கும் தொடர்ந்த அளவளாவல்களும் ; இன்று காலை மறுபடியும் நண்பர் ஸ்டாலினின் இல்லத்தில் தொடர்ந்த கலகலப்புகளும் ஒரு ஆயுளுக்குத் தேவையான சந்தோஷ நினைவுகளைத் தந்துள்ளன  என்றால் அது மிகையில்லை ! 

ஆரம்பிப்பது எங்கே ?  ;  முடிப்பது எங்கே ?  என்று தெரியாது விழிப்பதுமே ஒரு சுவாரஸ்யமான அனுபவமே என்பதை 2012 சென்னைப் புத்தக விழாவிலிருந்தே உணர்ந்து வருகிறேன் ! இந்த ஈரோட்டு விழாவும் அதற்கு விதிவிலக்கல்ல ! முழுவீச்சில் ஒரு வாசக சந்திப்பு நடைபெற்ற  போன வருடம் - இந்த ஒட்டு மொத்த அனுபவமுமே எவ்விதமிருக்குமென்று நம்மில் யாருக்கும் தெரிந்திருக்காது என்பதால் அங்கே அந்த novelty factor பிரதானமாய் இருந்தது ! And அதற்கேற்ப நண்பர்கள் குழுமிட, ஒரு ரகளையான தினமன்று சாத்தியமானது ! ஆனால் எப்போதுமே ஒரு வெற்றியை சுவைப்பதை விட, அதனைத் தக்க வைத்துக் கொள்வதும், அதற்கு மெருகூட்டுவதும் ரொம்பவே சிரமமான காரியங்கள் என்பதில் எனக்குள் ஐயங்களிருக்கவில்லை ! So இம்முறை நமது சந்திப்புக்கு சென்றாண்டுக்கு ஈடு தரும் அளவிலான attendance இருக்குமா ? என்றதொரு கேள்வி எனக்குள் இருக்கவே செய்தது ! ஆனால் எப்போதும் போல் நமது சேந்தம்பட்டிக் குழு ஏற்பாடுகளைக் கையிலெடுத்துச் செய்திட - லார்ட் லபக்தாஸ் போல  ஈரோட்டுக்கு வந்து சேர்வது மாத்திரமே எனது வேலையாக இருந்தது ! And சனிக்கிழமை காலை Le Jardin ஹோட்டலின் அருகாமையில் கண்ணுக்குத் தெரிந்த திசைகளிலெல்லாம் நம் நட்பு வட்டங்கள் மட்டுமே தென்படத் தொடங்க ஆட்டம் துவங்கிவிட்டது புரிந்தது ! எங்கெங்கிருந்தோ அடித்துப் பிடித்து, தத்தம் பணிகளையெல்லாம் ஓரம்கட்டி விட்டு, தம் வீட்டு வைபவம் போல உத்வேகத்தோடு ஆஜராகிவந்த ஒவ்வொருவரையும் பார்த்த போது, சூப் வாளியைப் பார்த்த ரின்டின் கேனைப் போல எனது உற்சாக மீட்டர் தெறிக்கத் தொடங்கியது. நிகழ்ச்சியைத் துவக்கிய சமயம் கணிசமான காலி இருக்கைகள் தென்பட்ட போதும், வெகு சீக்கிரமே அரங்கம் FULL என்பதை உணர முடிந்தது ! அன்றைய விழாவின் மையப் புள்ளி நமது tsi-nah-pah வின் "இரத்தக் கோட்டை" தான் என்பதால் - அதன் ரிலீசோடு நிகழ்ச்சியினை துவக்கம் செய்த போது, எனது தலைக்குள்ளோ - "இது போன வருடத்தின் இதே தருணத்தின் கனவன்றோ ? நாட்கள் தான் எத்தனை துரிதமாய் ஓட்டம் பிடிக்கின்றன !!"  என்ற சிந்தனையே பிரதானமாய் ஓடிக்கொண்டிருந்தது ! இன்னமுமே இதனைத் தடவி, அழகு பார்த்து சிலாகிக்கும் படலத்தை பெரும்பான்மை நண்பர்கள் தாண்டியிருக்கவில்லை என்பதை அறிவேன் ! Maybe நாளை முதலாய் இந்த ஆல்பத்தினுள் புகுந்திட நேரம் கிடைப்பின், அது பற்றிய உங்களது எண்ணங்களை இங்கே பதிவிடுங்களேன் folks ? Hardcover இதழ்கள் என்பதெல்லாம் ஒரு சீமான் தேசத்து, தூரத்துக் கனவாய் இருந்த நாட்களெல்லாம் போய் - நடப்பாண்டில் இது ஐந்தாவது hardcover என்ற நாட்களில் நாமெல்லாம் உலவி வருகிறோம் என்பதை நம்ப முடிகிறதா ? The power of dreams !!











"இரத்தக் கோட்டை" ரீலீஸைத் தொடர்ந்து நான் பேசியது ; சஸ்பென்ஸ் இதழாய் XIII மர்மம் தொடரின் "கர்னல் ஆமோஸ்" இதழை அறிமுகம் செய்தது ;  நடுவே நண்பர்களுக்கு நடத்திய காமிக்ஸ் நினைவுத் திறன் போட்டியின்லூட்டிகள் என்றெல்லாம் நிமிடங்கள் செம ரகளையாய் கழிந்த போதிலும், "அந்த" முக்கிய அறிவிப்பு உண்டா ? இல்லையா ? என்பதிலேயே அநேக நண்பர்கள் தீவிரமாய்க் காத்திருந்தது புரிந்தது ! And "அந்த" அறிவிப்பு எது தொடர்பானது என்பதில் சந்தேகம் வேண்டுமா - என்ன ?  







கனவுகளுக்கொரு ரம்யமான பழக்கம் உண்டு  - ஒன்று நிறைவேறியான பின்னே அதனைத் தொடர்வதோ, ஒரு படி மெகா சைசில் இருப்பது வாடிக்கை என்ற விதத்தில் ! And அது மீண்டுமொருமுறை நிஜமாகியுள்ளது - "இரத்தப் படலம்" ஒரு முழுவண்ணத் தொகுப்பு என்ற ரூபத்தில் ! சிலபல ஆண்டுகளாகவே இந்தக் கோரிக்கையினை நண்பர்கள் முன்வைத்து வருவதும்,  "பார்ப்போமே !" என்று நான்தட்டிக் கழித்து வந்ததிலும் இரகசியமேது ?  இம்முறை அதற்கான தருணம் மெய்யாகவே புலர்ந்திருப்பதாய் நினைக்கத் தோன்றுகிறது - நண்பர்களின் வேகத்தைப் பார்க்கும் பொழுது ! And so - இதோ அதற்கான முறையான அறிவிப்பு !

  • வெறும் 800 பிரதிகளே விற்பனை இலக்கென்ற நிர்ணயத்தோடு 848 முழுவண்ணப் பக்கங்களோடு - 3 தொகுப்புகள் இணைந்ததொரு  பிரத்யேக slipcase-ல் இதனைத் திட்டமிட்டுள்ளோம் !
  • ஒற்றை இதழாய் - இரண்டேகால் கிலோ எடையோடு இந்த இதழைத் தயாரிப்பதில் ஒரு பிரம்மாண்டம் நிச்சயம் இருக்கும் தான் ; ஆனால் தயாரிப்பில் ; சேகரிப்பில் ; வாசிப்பில் ஏகமாய் நடைமுறை சிக்கல்கள் கொண்ட அந்த முயற்சியை விடவும், இந்த 3 தொகுப்பென்ற பாணி நிரம்ப சுலபமென்பதில் சந்தேகங்கள் கிடையாது ! 
  • இந்தத் தொகுப்பின் விலை ரூ.2200 ; slipcase ; கூரியர் / ஏர்மெயில் கட்டணங்கள் தனி !
  • இது முன்பதிவின் விலை மாத்திரமே ; கடைகளில் / புத்தக விழாக்களில் வாங்கிடுவதாக இருப்பின், விலை கூடுதலாய் இருக்கும் !
  • தற்சமயம் ரூ.1200 முன்பதிவுக்கென அனுப்பினால் போதுமானது. பாக்கித் தொகையினை 31/01/2018-க்கு முன்பாய் அனுப்பிடல் வேண்டும்.
  • குறைந்த பட்சம் 400 முன்பதிவுகள் அத்தியாவசியம்  - இந்த முயற்சி நனவாகிட ! So நமது நண்பர் XIII-ன் விதியை தமிழில் நிர்ணயிக்கப் போகும் பொறுப்பு உங்களிடமே இனி !
  • ஜனவரிக்குள் முன்பதிவுகள் ; அடுத்த ஈரோட்டு விழாவினில் இதழ் ரிலீஸ் என்பதே இலட்சியம் ! Maybe ; just maybe - 'தட தடவென' முன்பதிவுகள் கிட்டிடும் பட்சத்தில் ஏப்ரல் 2018-ல் இதனை அழகு பார்க்கும் சாத்தியங்களும் இருக்கலாம் !
  • பாகங்கள் 1 - 18 அதே ஒரிஜினல் மொழிபெயர்ப்போடு வெளிவந்திடும் ! Proofreading பணியினில் நமக்கு ஒரு கூட்டு முயற்சி ரொம்பவே அவசியம்  என்பதால் - இதற்கு உதவிட உங்களை பெரிதும் எதிர்பார்த்திருப்போம் guys !!
  • "இரத்தக் கோட்டை" பாணியிலேயே  - ஓவியர் வான்சின் ஒரிஜினல் அட்டைப்பட டிசைன்கள் மட்டுமே 3 ஆல்பங்களுக்குமே அட்டைப்படங்களாக அமைக்கப்படும். Plus - XIII சார்ந்த செய்திகள் தவிர்த்து இங்கே வேறெந்த விஷயங்களுக்கும் இடமிராது ! Will be a total dedication to XIII !
  • முன்பதிவு செய்திடும் முதல் 200 நண்பர்களுக்கு "Codename மின்னல்" என்றதொரு பேட்ஜ் + wristband உண்டு ! 
  • நண்பர்களின் உதவியோடு இந்த முயற்சிக்கென ஒரு பிரத்யேக FB பக்கமொன்றை உருவாக்கிட எண்ணியுள்ளேன் ! ரெகுலராக XIII சார்ந்த செய்திகள் ; நினைவுகள் ; என இதனில் சுவாரஸ்யத்தைத் தொடர முனைவோம் ! 
  • நாளைய தினமே ஆன்லைன் லிஸ்டிங்கும் செய்து விடுவோம் என்பதால் புக்கிங்கள் சுலபமாகிடக் கூடும் ! 

தொடர்ந்த பொழுதுகளில் - 2018 அட்டவணை பற்றியும், SUPER 6 பற்றியும் ; நமது 'தல' 70 க்கு என்ன திட்டமிடல் என்பது பற்றியும்  - கருத்துக்கள் ; கேள்விகள் ; கோரிக்கைகள் என ஓராயிரம் கணைகள் பறக்கத் துவங்கின ! நேரப் பற்றாக்குறை ஒருபக்கமிருக்க, இந்த சந்திப்பில் உங்களிடமிருந்து நான் கிரகித்துக் கொண்ட சில விஷயங்களை நடைமுறைப்படுத்திப் பார்க்க - back to the drawing board அவசியமென்று நான் நினைத்ததால் - பெவிக்கால் பெரியசாமியாகவே நான் நிறைய நேரத்துக்கு உலவி வந்தேன் ! நிஜத்தைச் சொல்வதானால் - 4 மணி நேர சந்திப்பில் - நேரம் நிறைய மிச்சமிருந்து போயின் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து நிற்க  கூடாதே என்ற முன்ஜாக்கிரதையில் 2018 -ன் அட்டவணையையும் கையில் கொண்டே வந்திருந்தேன் ! ஆனால் இன்னும் 4 நேரங்கள் கூடுதலாய் இருந்திருந்தாலுமே அதனைப் பையிலிருந்து வெளியே எடுத்திருக்க அவசியமோ / அவகாசமோ இருந்திராதென்று இப்போது புரிகிறது ! So பத்திரமாய் அது என்னோடே வ்வேடு திரும்புகிறது - சிறுசிறு மாற்றங்களோடும், மெருகூட்டல்களோடும் தீபாவளிக்கு முன்பாய் உங்களைச் சந்திக்கும் பொருட்டு !




இன்னமுமே ஒரு அதிரடி அறிவிப்புக்கான சமாச்சாரமுமே எனது கைப்பைக்குள் பதுங்கியிருந்து - அவசியம் நேர்ந்திடும் பட்சத்தில் ஆஜராகிட ! But அதனிலுமே மெலிதான fine-tuning தேவை என்று எனக்கு உங்களோடு உரையாடிய பொழுதில் பட்டதால் - அதற்கான அவகாசத்தையும் எடுத்துக் கொண்டு இன்னமுமே பக்காவான திட்டமிடலோடு உங்கள் முன்னே இன்னொரு தருணத்தில் ஆஜராவேன் ! So இப்போதைக்கு யூகக் குதிரைகள் திக்குக்கொன்றாய் உலவிட விட வேண்டியது தான் guys !!

ஒரு இலட்சம் விஷயங்கள் தலைக்குள் நீச்சல் அடித்துக் கிடப்பினும், உங்களின் அன்பெனும் அலை அவையனைத்தையும் பின்கொண்டு சென்று விடுவதால் - நிதானத்துக்குத் திரும்பிய பிற்பாடு அவற்றைப் பகிர்ந்திட முயற்சிப்பேன் ! இன்னமுமொரு சந்திப்பை ஒரு ஆயுட்கால நினைவுப் பொக்கிஷமாய் எங்களுக்கு மாற்றித் தந்த உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள் folks ! சிறு துளிகள் தான் பெரு வெள்ளங்களுக்கு அச்சாரமன்று படித்திருக்கிறோம் ! அது நிஜமாகும் நாளொன்று புலராது போகாது என்ற நம்பிக்கை முன்னெப்போதையும் விட இப்போது துளிர் விட்டு நிற்கிறது ! நம் பயனத்திற்கொரு புது அர்த்தம் வழங்கும் இந்த ஈரோடு நகருக்கு என்றென்றும் நமது வந்தனங்கள் ! 

See you around all ! "இரத்தக் கோட்டை" பற்றிய விமர்சனங்கள் + ஆகஸ்ட் இதழ்கள் சார்ந்த அலசல்களோடு தொடர்வோமா - வரும் வாரத்தில் ? Bye now ! 

296 comments:

  1. காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்!

    ReplyDelete
  2. இனிய வணக்கம் எடிட்டர் சார்!!!
    இனிய வணக்கங்கள் நண்பர்களே!!!

    ReplyDelete
  3. வணக்கம் எடி சார்

    ReplyDelete
  4. @எடிட்டர் சார்:
    அப்ப 'இரத்தப்படலம்' மூணு பாக புக் மட்டும் தானா...?!
    ஒரே பாக புக் கிடையாதா சார்?!

    ReplyDelete
  5. இரத்தப் படலம் அறிவிப்பு சிறப்பு. அடுத்த மாதத்தில் முதல் முதலீடு இதுவாகவே இருக்கும். புரூப் ரீடிங்கில் என்னால் ஆன உதவியை செய்ய நான் தயார் ஆசிரியரே

    ReplyDelete
  6. Replies
    1. நானும்.. எனது வருத்தத்தை பதிவு செய்கிறேன்..

      Delete
    2. இரத்தபடலத்துக்கு முதல் ஆளா புக் பண்ணனும்னு இருந்த நான்,இப்போ சரி புக் பண்ணிக்கலாம் மெதுவா என்ன இப்ப என்ற மன நிலையில் உள்ளேன்...எப்படியும் வாங்கத் தான் போறேன் என்ன இப்ப....
      ஹ்ம்ம்ம்ம்...
      (-:(-:(-:(-:(-:(-:(-:(-:(-:(-:(-:(-:(-:(
      (மீதி மனக் குமறல்களை இங்கே சொல்வதைவிட, பெரிய மெயிலாக டைப் பண்ணி எடிட்டருக்கு அனுப்பப் போகிறேன்...!)

      Delete
    3. எடிட்டர் சார்,
      அப்ப நிஜமாலுமே 'இரத்தப்படலம்' ஒரே புக்கா இல்லையா சார் (-:(-:(-:
      இன்று மிக வருத்தமான நாள் (-:(-:(-:

      Delete
    4. பதிவு செய்ய வாய்ப்பிருந்தால் உடனே பதிவு செய்திடுங்கள் நண்பரே...இரத்தக் கோட்டயே முன் பதிவு நானூற தொடலை என வருத்தமாக உள்ளார்..வாய்புள்ள நண்பர்கள் உடனே பணமனுப்புங்கள்..ஆசிரியர ஊக்கப்படுத்தி , உற்சாகபடுத்துவதுடன் ....விரைவாக வெளியிட உத்வேகமளிக்குமல்லவா..யார் கண்டார்..ஜனவரிக்கே கூட வரலாம்..நானூறு கால் மண்டபமது..நானும் ஓர் தூணாய் பங்களித்து விட்டேன்....நண்பர்கள் விரயவும்.......சிறு துளியல்லாது ..பெரு வெள்ளமேது..

      Delete
  7. இனிய இரவு வணக்கம் சார். நன்றாக ஓய்வு எடுத்து கொண்டீர்களா சார்.

    ReplyDelete
  8. படிச்சுட்டு வாரேன்

    ReplyDelete
  9. இ.ப முறையான அறிவிப்பு - அட்டகாசம்!!

    ////முன்பதிவு செய்திடும் முதல் 200 நண்பர்களுக்கு "Codename மின்னல்" என்றதொரு பேட்ஜ் + wristband உண்டு !
    நண்பர்களின் உதவியோடு இந்த முயற்சிக்கென ஒரு பிரத்யேக FB பக்கமொன்றை உருவாக்கிட எண்ணியுள்ளேன் ! ரெகுலராக XIII சார்ந்த செய்திகள் ; நினைவுகள் ; என இதனில் சுவாரஸ்யத்தைத் தொடர முனைவோம் ! ////

    அருமை அருமை!

    ReplyDelete
    Replies
    1. Codename மின்னல் வருமா என்று கேட்டதற்கு ஆசிரியர் சாத்தியமில்லை என்பதற்காக ஒற்றை வரியில் sorry - தெரிவித்திருந்தார். தற்போது பேட்ஜ் தருவதாக குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் Codename மின்னல் வரும் என்று எடுத்துக் கொள்ளலாமா?

      Delete
    2. Jegang Atq : கதையையும் வாங்கி, மொழிபெயர்க்கவும் செய்து ; அட்டைப்படத்தையும் அச்சிட்டு, அப்புறமாய் மொத்தத்தையும் கூடையில் போட்டு அமுக்குகிறேன் என்றால் அதன் பின்னொரு காரணம் இருக்காது போகாது என்ற கோணத்தில் சிந்தித்துப் பாருங்களேன் ?

      அதே போல மின்னலாய் செயல்படும் வாசகர்களுக்கு அந்த பெயர பொருத்தம் பற்றியும் யோசித்துப் பாருங்களேன் சார் ? உங்கள கேள்விக்கான விடை காத்திருப்பது புரியும்

      Delete
  10. இரவு வணக்கம் நண்பர்களே.....Proof readingக்கு நான் தயார் ஆசிரியரே...

    ReplyDelete
  11. எடிட்டர் சார் மற்றும்
    நண்பர்களுக்கு அன்பு வணக்கங்கள்!

    ReplyDelete
  12. ////இன்னமுமே ஒரு அதிரடி அறிவிப்புக்கான சமாச்சாரமுமே எனது கைப்பைக்குள் பதுங்கியிருந்து - அவசியம் நேர்ந்திடும் பட்சத்தில் ஆஜராகிட !/////


    அடடா!!! பைக்கு எட்டியது கைக்கு எட்டாமப் போச்சே...

    ஸோ ஷேடு!

    ReplyDelete
    Replies
    1. ஸோ ஷேடு
      இந்த வார்த்தையை எங்கியோ கேட்ட
      மாதிரி இருக்கே.?????????

      Delete
    2. என்கிட்ட இருந்து தான் ஆரம்பமே கணேஸ் ஜி

      நான் எதற்க்கோ சொல்லப்போய்
      இவங்க வம்படியாய் இதான் சொன்னேன் இப்படித்தான் சொன்னேன்னு சொல்லுறாங்க

      இவங்க குழந்தைகளாட்டம் நடந்துக்கும்போது நானும் இவங்களோட ஓடிப்பிடிச்சு விளையாடப்போறேன் ;) ;)

      Delete
    3. விளையாடுங்க.

      Delete
    4. ஷோ கிழவி ஷேட் ஹீஹீஹீஹீ

      Delete
  13. கோடி கொட்டிக்கொடுத்தாலும் கிடைக்காத அருமையான தருணம் அது நண்பர் ஸ்டீல்க்ளா வெளியிட நான் பெற்றுக்கொண்டதை.சற்றும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.ஜென்மஜென்மத்திற்கும் மறக்க இயலாத நிகழ்வு அது நன்றி சார்.

    ReplyDelete
  14. Replies
    1. உங்ககிட்ட பேச இருக்கீங்களான்னு பார்த்தால் உங்களை காணோம் ஜி. உடனே கிளம்பிட்டீங்களா ?

      Delete
  15. அப்புறம் இரத்தப்படல முன்பதிவு அறிவிப்பு நிச்சயமாக என் சக்திக்கு மீறி அதிக முன்பதிவை பெற்றுத்தருவேன் சொல்லக்கூடாது செஞ்சிட்டு சொல்றேன் சார்.இப்போதைக்கு ஒரு பத்து போதும்

    ReplyDelete
  16. 🎶🎶 தனிமையே என் துணைவன் 🎶🎶

    ReplyDelete
    Replies
    1. Very Thank You Tex Sampath!!

      👏👏👏

      Delete
    2. நட்பிற்க்குள் நன்றி தேவையில்லையே தோழர்

      உங்களை சந்தோசப்படுத்தனும்னு அந்த என்முருகனே எனக்கு உத்தரவிட்டு விட்டான் எனும்போது
      நானெல்லாம் அவன் முன் எம்மாத்திரம்

      வாழ்த்துக்கள் நட்பே

      Delete
    3. ///தனிமையே என் துணைவன் 🎶🎶///
      அப்ப நாங்க மட்டும் தனியா இல்லாம அனுஷ்காவோடவா சுத்துறோம்...
      என்னஜி நீங்க...

      Delete
  17. எடிட்டர் சார் முன்பதிவில் ஒரு சிறிய முயற்சி உங்களுடைய அப்ரூரூவல்காக வெயிட்டிங்

    ReplyDelete
  18. தோ பணத்தை கட்டிட்டு வந்துடறேன்

    ReplyDelete
  19. எடிட்டர் சார் முன்பதிவில் ஒரு சிறிய முயற்சி உங்களுடைய அப்ரூரூவல்காக வெயிட்டிங்

    ReplyDelete
  20. அட சொக்கா ஏப்ரல் மாதமேவா !👌

    ReplyDelete
  21. ப்ரூப் ரீடிங் ஐயம் ரெடி

    ReplyDelete
    Replies
    1. சகோதரருடன் நானும் ரெடி ஆசிரியரே :)

      @palanivel arumugam
      சகோதரரே மெயில் நேற்று கிடைக்க பெற்றது மிக்க நன்றி
      புது குடும்பத்தை வீட்டில் அறிமுகம் செய்தேன்
      இந்த தடவை தங்களின் இரு அழகு செல்விகளை பற்றி தான் முதலில் கூற ஆரம்பித்தேன்
      புது குடும்பம் கிடைத்ததில் மிக்க மிக்க மகிழ்ச்சி
      குழந்தை மாதிரி உங்க சிரிப்பு சகோதரரே
      உங்கள் துணைவியாரிடம் நல்ல அறிமுகம் கிடைத்தது.....சூப்பரான பெர்சன்
      (பேக்ஸ் நன்றாக தூக்கினீர்) :P :P

      Delete
  22. Rs 2350 ஆன்லைனில் அனுப்பியாச்

    ReplyDelete
  23. இரத்த கோட்டை ....ஈரோட்டு சந்திப்பில் தங்கள் கையால் ஆரம்பத்திலியே வாங்கினாலும் பிரித்து பார்த்து ரசிக்க இரவு தான் நேரம் கிடைத்தது சார்...ஆனால் பிரித்து இதழை கைகளில் தவழும் போது அசந்தோ அசந்து போனது நிஜம் சார்....முன் அட்டைப்படமும் சரி.....பின் அட்டைப்படமும் சரி ..,உட்பக்க சித்திர தரங்களும் சரி பிரித்து ரசிக்க ரசிக்க படித்த இதழாகவே இருப்பினும் ஏதோ புது கதை போல உடனே படிக்க வேண்டும் என்ற உணர்வு மனதில் உடனடியாக எழுந்தது உண்மை...


    உண்மையிலியே சில சமீபத்திய வெளியீடுகளின் மறுபதிப்புகள் எனும் பொழுது எனது ஆர்வம் கொஞ்சம் குறைவது உண்மை தான் ..காரணம் ஏற்கனவே கைவசம் இருக்கும் இதழ்....ஒருமுறைக்கு இருமுறை படித்த இதழ் என்பவை ஒரு காரணமாக இருக்கும் .அந்த ஆர்வ குறைப்பாடு உங்களின் தயாரிப்பு தரத்தை பார்த்தவுடன முழுவதுமாய் மறைந்து போவதுடன் அந்த கதைகளை இதுவரை படிக்காத ஒன்று போல உடனடியாக அந்த மறுபதிப்பு இதழில் தான் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது .


    அது லக்கி ஸ்பெஷல் ஆகட்டும் ,சிக்பில் ஸ்பெஷல் ஆகட்டும் ,இரத்த கோட்டை ஆகட்டும் அடுத்தடுத்து வரும் மறுபதிப்பு தரங்கள் ஒவ்வொரு படியாக தரத்தில் முன்னேறிகொண்டே போகிறது ...இதற்காக உங்களின் குழுமத்தின் அனைவருக்கும் நண்பர்களின் சார்பாக மனமார்ந்த பாராட்டுகளுடன் நன்றிகள் சார்....இனி இதழ்களில் நுழைந்த பின்.....

    ReplyDelete
    Replies
    1. தலீவரே காப்பி பேஸ்ட் செய்ய நேரம்
      இல்லை.அதே அதே சபாபதே.

      Delete
  24. Dylan dog First class thriller

    ReplyDelete
  25. வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே

    ReplyDelete
  26. இரண்டு நாள் காமிக்ஸ் வேடந்தாங்கலில் இருந்து நிறைந்த மனதுடன் வீடு திரும்பினேன்...
    ஆனால் மனம் மட்டும் இன்னமும் அந்த அரங்கையும் நண்பர்களையும் சுற்றியே வருது😊😊😊😊

    ReplyDelete
  27. நேற்றைய தினம் மறக்க முடியாத தினம். ஒரே வருத்தம் தோட்டா நகரம் மறுபதிப்பிற்கு பிறகு கேப்டன் டைகர் நம்மிடம் இருந்து விடைப்பெற்று சென்று விடுவார் என்பது.

    ReplyDelete
    Replies
    1. @ senthilwest2000@ Karumandabam Senthil

      ஒரு ஹலோ சொல்வதைத் தாண்டி உங்களோடு வேறெதுவும் பேசமுடியாமல் போன சூழ்நிலைக்காக வருந்துகிறேன் நண்பரே!

      அடுத்த முறை வரும்போது இரண்டு நாட்கள் இங்கேயே இருக்கும்படி வாருங்களேன்?

      Delete
    2. கேப்டன் டைகரின் இளமையில் கொல் மூன்று பாக சாகஸம் வண்ணத்தில் இல்லையே என்ற குறை எனக்கு...இது தொடர்பாக ஈரோட்டு சந்திப்பில் யாரும் கோரவில்லையே? திருப்பூர் ப்ளூபெர்ரி உட்பட!

      Delete
    3. நியாயமான ஆசை. முதல் சிறு யங் ப்ளு பெர்ரியை மறந்து விட்டீங்களா தோழர்களே.

      Delete
    4. பெரும்பாலும் EBF ஆகஸ்ட் மாதம் வருவதால் Income tax return filingல் உச்ச கட்ட மாதம் பணி அழுத்தம் மிக கடுமையாக இருக்கும் அதனால் தங்கி செல்வது இயலவில்லை. இந்த முறை நடந்த நம் வாசகர் சந்திப்பு நிகழ்ந்த 5ம் தேதிதான் income tax return file செய்ய இறுதி நாள். அடுத்த ஆண்டு எப்படியோ பார்க்கலாம். உங்களை நேரில் சந்தித்தது மகிழ்ச்சியான தருணம்.

      Delete
    5. இதனை மரத்தடி மாநாடுட்டில் பேசியதாக நினைவு.நான் சொல்வது சரி என்றால், நண்பர்கள் முடிந்தால் பகிரவும்.

      Delete
  28. அம்மா வீட்டுக்கு வந்துட்டு திரும்பி போகும் மனநிலை.

    ReplyDelete
  29. ஈரோடு வாசகர் மீட் - 2017

    காலை புலர்ந்தவுடன்
    ஈரோடு செல்லும் ஞாபகம் வந்தது
    இந்த வருடமாவது சரியான நேரத்திற்க்கு செல்ல வேண்டும் என்கிற முனைப்பில் நானும் - நண்பர் சிவக்குமார் சிவா வும் அவரது செல்ல மகளுடன் கிளம்பினோம் .. வழியில் தோழமை கடல்யாழ் ரம்யா எங்களோடு இணைந்து கொண்டார்...
    நேரமின்மை காரணமாக காலை உணவு அருந்தாமலே ஈரோடு போய் சேர்ந்தோம்.

    ஈரோடு சென்றதும் இம்முறை முதலில் எதிர்ப்பட்டவர் சல்லூம் ஜி. அவருடன் அளவாவி விட்டு பின் ஹாலுக்குள் நுழைந்ததும் சேந்தம்பட்டி குரூப் பரபரவென்று ஒரு இறுக்கமான சூழ்நிலையில் இயங்கி கொண்டிருந்தது. நண்பர்களுக்கு நாங்கள் கொண்டுவந்த டெக்ஸ் பனியன்களை விநியோகம் செய்துவிட்டு ( இம்முறை நேரமின்மை பணத்தட்டுபாடு காரணமாக ஒரு இருபதுக்குள்ளாகவே பனியன்களை ரெடி செய்தோம்.
    தோழர் சிவக்குமார் சிவா போன வருடத்தை விட 2018 ல் இன்னும் சிறப்பாக அனைவருக்கும் செய்வேனென்று வாக்குறுதி அளித்தார்)

    பின் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்

    நண்பர்கள்
    கரூரார் குணா சரவணக்குமார் அவர்களுடைய டாக்டர்நண்பர் இன்னொரு நண்பர் அவர் பெயர் நினைவுக்கு வரவில்லை. மற்றும் கலீல் அண்ணா ரட்ஜா செந்தில். சின்னஞ்சிறு கோபு அண்ணா மற்றும் பல நண்பர்கள் பெயர் யோசித்து யோசித்து எழுத முடியவில்லை. நிறைய நண்பர்களை அலைபேசி யில் அழைத்து எங்க வந்திருக்கீங்க என கேட்டு சிலர்க்கு வழி சொல்லியும்
    பத்து மணியளவில் பெரிய சிறிய ஆசிரியர் களுக்கு வணக்கம் வைத்து விட்டு வந்தேன் மீட் ஆரம்பித்தது அனைவருக்கும் இரத்தக்கோட்டை புத்தகங்களை கொடுக்க ஆரம்பித்தது நண்பர்களிடையே பலத்த சந்தோச கைதட்டல்கள் ஒருவர் பின் ஒருவராக பெற்றுக்கொண்டனர். பின் எடிட்டரின் இரத்தக்கோட்டையை பற்றி உரையாற்றினார் இடையிடையில் நண்பர் கோவை கிரி அன்போடு அனுப்பியிருந்த பாபப்கார்ன்கள். ஈரோடு விஜய்யின் ஸ்பெசல் ஐட்டமான பன் வடை காப்பிகளை வயிற்றுக்குள் தள்ளும் படலம் ஆரம்பித்தது. அடுத்து இரத்தப்படல மெகா ஸ்பெஷலுக்கான ஆரம்ப அறிமுகங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தது

    அடுத்து ஆசிரியர் மாணாக்கர்களிடம் கேள்வி பதில் படலம் ஆரம்பமானது. மிக அருமையான அந்த அரைமணித்துளிகளை மிகவும் ரசித்தேன்.ரசித்தேன் ரசித்தேன் ரசித்துக்கொண்டே இருந்தேன். இந்த.?கள் அண்ட் விடைகள் எனக்கு புதியவை அதில் வெற்றிபெற்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
    அங்கு வந்திருந்த வாசகர்களுக்கான
    மதிய உணவினை எடிட்டரே ஏற்றுக்கொண்டார் (விஜயன் சார் மதிய சாப்பாடு மிகவும் அருமை நன்றி)

    மூன்று மணிக்கு மேல் ஸ்டாலை நோக்கி நகர்ந்தோம்.

    இவ்வருடம் எதிர்பாரத
    விதமாய் நிறைய நண்பர்கள் எனக்கு புத்தகங்களை அன்பளிப்பாக அள்ளித் தெளித்து விட்டனர்
    சத்தியமாக அந்த மாதிரியான ஒரு தருணத்தை நானே எதிர்பார்க வில்லை தேங்க்யூ நட்பூக்களே இதில் நான்தேடிய சில புத்தகங்களும் அடங்கும்..

    செல்வம் அபிராமி அண்ணணுடன் சிறிது நேரம் பேசியதிலிருந்தே அவரைப்பற்றி தெரிந்து கொண்டேன் தங்கமான மனிதர் அவர்
    அவர்க்கு வந்த யேர்லி பேர்டை எனக்கென கொடுத்துவிட்டார் .

    சின்னஞ்சிறு கோபு ராஜேந்திரன் அண்ணணை அங்கு பார்த்தது எதிர்பாரா சந்திப்பு.
    நிறைய நண்பர்களை சந்தித்திருந்தாலும் பேச நேரம் அதிகம் கிடைக்கவில்லை என்பதே அப்போதைய நிலவரம்.

    ( இவ்வருடமும் ஈரோடு மீட் ஐ மிக மிக அருமையாக செவ்வென கச்சிதமாய் செய்து முடித்த சேந்தம்பட்டி குழுவினர்க்கு என்மனமார்ந்த வாழ்த்துக்கள் ) :) :)

    இன்னும் பேசலாம் நண்பர்களே...
    - தொடரும்

    ReplyDelete
    Replies
    1. @ டெக்ஸ் சம்பத்

      உங்களுடைய அன்புப் பரிசுகள் நிஜமாகவே ஸ்தம்பிக்கச் செய்தன! ( குறிப்பாக, தல'யின் ஒரிஜினல் இதழ்). நன்றிகள் பல!!
      தல படம் அச்சிடப்பட்டஅழகான டீ-ஷர்ட்டை வடிவமைத்திருந்த நண்பர் திருப்பூர் சிவாவுக்கும்,குமாருக்கும், உங்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!

      உங்களுடைய பேச்சுகளை வைத்துக் கவனித்தால், நீங்கள் சந்தாச் செலுத்தவும்; அவ்வளவு ஏன்.. டீ குடிக்கக்கூட கஷ்டப்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது ( ஸோ ஷேடு)! அப்படியாப்பட்ட நிலையிலும் - என் பொருட்டும்,மற்ற நண்பர்களின் பொருட்டும் ரொம்பவே மெனக்கெட்டு அன்புப் பரிசுகளையும், அசர வைத்திடும் தல'யின் மினி போஸ்டர்களையும் தயார் செய்து எடுத்து வந்தது ரொம்பவே நெகிழச் செய்கிறது! ( 'ஸோ ஷேடு' சொல்லும் உயரமான மனிதரின் படம் - பத்து)

      காரில் வருவதற்குப் பதிலாக நீங்கள் பஸ்ஸில் வந்திருந்தால், மிச்சப் படுத்திய பெட்ரோல் காசில் காலாண்டு சந்தாச் செலுத்தியிருக்கலாமே என்ற ஆதங்கமும் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை! ('மை டியர் மார்த்தாண்டன்' படத்தில் கவுண்டர் சொல்லும் 'ஆனாலும் நீங்க ரொம்பத்தான் ஏழைகள்ப்பா' டயலாக் ஞாபகம் வந்து தொலைக்கிறது)

      என்னவோ போங்க சம்பத்... ஐ யாம் ஸோ ஷேடு!

      Delete
    2. அண்ணே மிக்க நன்றி

      நான் சந்தா பற்றி பேச வந்தது உங்களை போன்ற பணக்காரர்களை பற்றி அல்ல
      என் போன்ற ஏழைகளை பற்றி

      நான் பேச முனைந்ததும் எடிட்டர் முன் எந்தநிலையிலும் கேட்கவே முடியாத என் போன்ற அந்த இருபது ஏழைகளின் சார்பிலும்மே யாகும்

      இது உங்களுக்கு எங்களை கேலி கிண்டல் ஏதுவாக அமைந்ததென்றால் அது என் தவறல்லவே

      நான் காரில் வந்ததை பற்றியெல்லாம் நீங்கள் பேசக்கூடாது. நான் எதில் வரவேண்டும் என்று முடிவு செய்பவன் நான் மட்டுமே. உங்களுக்கு ஆறாயிரம் ரூபாய் பெரிதாக இல்லாமல் இருக்கலாம். எனக்கு/எங்களுக்கு அது பெரிது .நீங்கள் கவர்வ்மண்ட் சர்வன்ட். நான் அடுத்த வேளைக்கான உணவை அந்த நாளில் சம்பாரித்தால் மட்டுமே என்கிற நிலை உங்கள் நிலை அப்படி அல்லவே


      எனிவே மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா

      Delete

    3. இந்த டெக்ஸ் பனியனை தயாரித்தது முழுக்க முழுக்க திருப்பூர் சிவக்குமார் சிவா மட்டுமே சேரும் மற்ற எவரும் இதில் பங்கெடுப்பு இல்லை என்பதையும் (என்னையும் சேர்த்து - பனியனுக்கு உண்டான தொகையும் பிரிண்டிங் டிசைன் மட்டும் என்னுடையது ) இக்கமண்டின்மூம் தெரிவித்துக் கொற்கிறேன் விஜய் அண்ணே

      Delete
    4. அதில் ஒண்ணை இப்படிப் பார்சல் தட்டுறது சம்பத்து!😁

      Delete
    5. T-shirts கொடுத்ததுக்கு நன்றி, சிவா & சம்பத். அன்புடன் கொடுத்ததை மறுக்க முடியவில்லை t-shirts பெரியதாக இருந்த போதும்.

      ஜானி உங்கள் முகவரி கொடுங்கள் உங்களுக்கு சம்பத் சார்பில் அனுப்பி வைக்கிறேன்.

      Delete
  30. Dear Edi,

    So good of you to have decided to part with Original Art covers you cherished and savored this long, for that to be on a pride collection with comic friends. Great Gesture.

    Yet to get Tiger Special, but early reviews sound it has come out well. Hoping I would get my Early Bird badge too along with.

    Looking forward for the 2018 list, and special announcements as always.

    P.S.: While I have mixed feelings about XIII special and it's timing, like always I would be in the first batch to register my copy.

    ReplyDelete
    Replies
    1. ////While I have mixed feelings about XIII special and it's timing, like always I would be in the first batch to register my copy.////

      Great!!! :)

      Delete
    2. சூப்பர், வெல் செட் ரஃபீக் ஜி...

      Delete
  31. Dear Sir,

    இரத்தக்கோட்டை complete திருப்தி. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

    ஒரு கேள்வி சார் அந்த "விசாரணை" பாகம் இந்த முறையாவது வெளிவருமா

    ஒரு குறையாகவே உள்ளது.

    ReplyDelete
  32. இரத்தப்படலத்துடன்

    ReplyDelete
    Replies
    1. அது வராதுன்னு தான் விஜயன் சார் மீட் ல சொல்லிருக்கார் ப்ரோ

      Delete
  33. @ Friends : எருமை மாடு போல நிறைய சிக்கலான தருணங்களையும் கடந்து வந்துள்ளவன் தான் ; ஆனால் ஊர் திரும்பும் ரயிலில் ஏறி அமர்ந்த நொடியில் தொண்டையில் ஏதோவொரு மெல்லிய பந்து போல் அடைக்கும் உணர்வை தவிர்க்க இயலவில்லை...!

    ReplyDelete
    Replies
    1. உங்களை நோில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சாா்!!

      Delete
    2. ////ரயிலில் ஏறி அமர்ந்த நொடியில் தொண்டையில் ஏதோவொரு மெல்லிய பந்து போல் அடைக்கும் உணர்வை தவிர்க்க இயலவில்லை...!////

      மெல்லிய பந்து மாதிரின்னா... நிச்சயமா அது நம்ம பாட்ஷா ஜி நேத்திக்கு மீட்டிங்ல கொடுத்த 'மக்கன் பேடா'வாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன் எடிட்டர் சார்!

      Delete
    3. மக்கன் பேடாவா!!!
      முன்னமே சொல்லியிருந்தா நானும் சாப்பிட்டு பார்த்திருப்பேனே அண்ணா

      போங்கன்னா உங்களைலாம் நம்பி ஈரோடு வந்தா ம.பே. வை பாக்கக்கூட கொடுத்து வைக்கலையே

      Delete
    4. ஆசிரியரே உங்களுக்குள்ள அதே உணர்வுதான் எனக்கும் நமது கை தட்டல் ஓசைகளால் ஈரோட்டில் அதிர்வுகள் உண்டாகி இருக்கும் அவ்வளவு உற்சாகம் சந்தோஷம் ஆனால் கிளம்பும் போது மனது பாரமாகி விட்டது இனம் புரியா சோகம் இதயம் முழுவதும் விரவிக்கிடக்கிறது

      Delete
    5. ///மெல்லிய பந்து மாதிரின்னா... நிச்சயமா அது நம்ம பாட்ஷா ஜி நேத்திக்கு மீட்டிங்ல கொடுத்த 'மக்கன் பேடா'வாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன் எடிட்டர் சார்! ///
      Unbeatable விஜய்...!!
      Simply superb.
      நீண்ட நாட்களாய் வெளிநாட்டில் பணி புரியும் ஒருவர் ஊர் திரும்பி,வீட்டாரை சந்தித்த உணர்வு.
      நண்பர்கள் அனைவரின் அன்பும்,பாசமும் நெகிழ வைத்துவிட்டது.
      அதிலும்,சேந்தம் பட்டி குழுவினரின் ஆற்றலும்,அற்பணிப்பும் .... பிரமிப்பு நண்பர்களே... !! கிடைப்பதற்கரிய நட்பு உங்களுடையது....!!!
      ஆசிரியரும்,நாங்களும் கொடுத்து வைத்தவர்கள்.பணிவான என அஸ்ஸலாமு அலைகும்...
      புன் சிரிப்பால் அரங்கை அலங்கரித்த அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.

      Delete
  34. அன்பு நண்பர்கள் ஈரோடு விஜய்
    சேலம் டெக்ஸ் மாயாவிசிவா Kokகண்ணன்
    ரம்மி பேபி முக்கியமா தலீவர் ,மிதுன்
    பரணிபேங்களூர் ஷல்லூம் செந்தில்சத்யா
    ஆடிட்டர்ராஜா யுவா கண்ணன் ஸ்டீல்
    கருர் சரவணன் Jk மற்றும் பல நண்பர்களை ரத்தத்தின் ரத்தங்களை
    உடன்பிறவா சகோதரர்களை சந்தித்து
    இருநாள் பொழுதை இருநிமிடங்களில்
    கடந்தது போல் உணர வைத்த அனைத்து
    சகோதரர்களுக்கும் என் மனமார்ந்த
    அன்பு முத்தங்கள்.கனத்த மனதுடன் பிரியா விடை பெறுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. @ ganesh kv

      _/\_

      ஸோ ஷேடு!

      Delete
    2. ரொம்ப ஓட்டாதீங்க விஜய் அண்ணே

      நேருக்கு நேரா நின்னு குத்துங்க அது ஆம்பளைக்கு அழகு

      மறைமுகமா தாக்குனா அதுக்கு அர்த்தம் வேற

      உங்க டீம்க்கு உண்டான கெத்தை நீங்களே உங்களுக்கு குறைவா எடைபோட்டு அசிங்கப்பட்டுக்காதீங்க

      போன வருஷம் நான்
      இந்த வருஷம் இவர் அவ்ளோதான் வித்யாசம்

      இனிய இரவு வணக்கம்

      Delete
    3. ///நேருக்கு நேரா நின்னு குத்துங்க அது ஆம்பளைக்கு அழகு
      ///

      கையில் மைக்குடன் நேருக்கு நேராய் குத்தும் உங்கள் ஆம்பிளைத்தனம் நிச்சயமாய் எனக்குக் கிடையாதுதான் சம்பத்!

      நிஜம்மாவே ஸோ ஷேடு!

      Delete
    4. ///போன வருஷம் நான்
      இந்த வருஷம் இவர் அவ்ளோதான் வித்யாசம்///--- ஓஹோ, இதான் உன் கோபத்துக்கு காரணமா சம்பத்???

      Delete
    5. இதுல எங்க மறைமுகம் இருக்குன்னு தெரியலையே ....இதை விட பளிச்சின்னு கேட்க முடியாது ....அருமை விஜய் .....சூப்பர்...

      Delete

    6. நானும் உங்ககிட்ட ஷோ சேடு விஜய் அண்ணே

      Delete
    7. ///உங்க டீம்க்கு உண்டான கெத்தை///---- நீயும் உங்க ஊர்ல ஒரு மீட்டுக்கு ஏற்பாடு பண்ணு சம்பத். இப்ப விஜய் செய்துள்ளது போல 130பேரை அழைத்து நடத்தி உன் கெத்தை நல்ல வழியில் காட்டு...
      அதை விட்டுட்டு வேறு மாதிரி எண்ணத்தில் பேசுவது நீ உன் பேரோடு வைத்து கொண்டு இருக்கும் "டெக்ஸ் "-க்கு அழகல்ல சம்பத்...

      Delete
    8. நான் நேற்றைக்கு முந்திய நாள் இரவில் என் முகநூல் பதிவில் என் வீட்டை பற்றிய பதிவை போட்டதற்க்கு உங்க டீம்மெம்பர் ஒருவர்அ தை உங்களை நோக்கி சொல்கிறேனென்று தவறாக எடுத்துகொண்டு அதை உங்கள் அனைவரிடமும் கூறி அதன் வெளிப்பாடை மீட் டில் உங்கள் அனைவரையும் சந்தித்த போது என்னிடம் அனைவரும் பேசாமல் முகம் திருப்பியதேனோ ? என்னிடம் நேரடியாகவே கேட்டிருக்கலாமே விஜி அண்ணா எங்களை த்தான் சொன்னாயா என்று

      Delete
    9. நான் பேசுவது வேறு
      நீங்கள் சொல்வது வேறு விஜி அண்ணா
      தேவையில்லாம கன்பியூஸ் பண்ணிக்காதீங்க

      விஜய் அண்ணா கேட்டார் நான் பதில் சொல்லிருக்கேன் அவ்வளவே . நீங்க ஏன் தேவையில்லாம வெக்ஸ் ஆகறிங்க

      Delete
    10. Kannan s நல்ல விசயத்தை ப்ளாக்ல யாராவது பேசும்போது சப்போர்ட் பண்ண நீங்க எப்போதும் வரமாட்டீங்க.
      உங்க நண்பர்களை யாராவது ஏதாவது சொல்லிட்டா நக்கல் நையாண்டி பண்ண மட்டும் முன்னாடி வந்து நிக்கறீங்க.

      ஏன் ஜி இப்படில்லாம்

      Delete
    11. மறைமுகமாகவெல்லாம் சொல்லலை.. நேராவேதான் சொல்லறாங்க.. மூஞ்சி புத்தகத்துல ஒரு மாதிரியும் இங்க ஒரு மாதிரியும் போடுவதை நினைத்துத்தான் எல்லாரும் சோ ஸேட்.. மூஞ்சி புத்தகத்துல ஸ்டேடஸ் போடற மாதிரி நம்ம தளத்துல எல்லாரும் சந்தோசமா இருக்கிற நேரத்தில அந்த வார்த்தைய போட்டு உங்கள நீங்களே உயர்த்திக்கிறத நினச்சு நானும் சோ ஸேட்..

      Delete
    12. டெக்ஸ் க்கு அழகல்ல
      இதை நான் உங்களிடமே திருப்பி கேட்க முடியுமன்னா
      ஆனால் நீங்கள் வயதில் என்னை விட பெரியவர் அதுதான் என்னை தடுக்கிறது

      Delete
    13. நான் நல்லபடியாத்தான் கமன்ட் போட்டிட்டிருக்கேன் உங்க டீம்தான் தேவை யில்லாம என்னை வம்படியா உள்ள இழுத்து விட்டிருக்கிங்க. என் கருத்தை நான் ப்ளாக்கில சொல்கிறேன்.
      மூஞ்சி புக்கென்ன. ப்ளாக்கென்ன நான் எப்பவும் ஒரே மாதிரித்தான். உங்களைப் போல மைண்ட் செட்டை மாத்திக்க எனக்கு எப்பவும் தெரியாது

      நான் என் வீட்டை பத்தி முகநூலில் சொன்னா
      உங்களுக்கெல்லாம் ஏன் நோகுது

      Delete
    14. ////அதன் வெளிப்பாடை மீட் டில் உங்கள் அனைவரையும் சந்தித்த போது என்னிடம் அனைவரும் பேசாமல் முகம் திருப்பியதேனோ ? என்னிடம் நேரடியாகவே கேட்டிருக்கலாமே விஜி அண்ணா எங்களை த்தான் சொன்னாயா என்று////---- 9மணிக்கு அந்த ஹாலுக்கு நாங்கள் வந்தோம் ,10க்கு தான் கரண்ட் வரும்னுட்டாங்க, வியர்வையில குளித்து கொண்டே ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்த எங்களை பார்த்து இப்படி நினைக்க உனக்கு எப்படி மனசு வந்தது சம்பத்??? மனசாட்சியோடதான் பேசறியா? உன்ட்ட யார் அப்போ பேசல?
      எதுவாயினும் நடந்ததை மாற்றி பேசாத, அந்த கச கச சூழலிலும் உன்னை வரவேற்கவில்லையா??
      வீட்டில் இருந்து கிளம்பும் போதே நீ முடிவு செய்து கொண்டு வந்ததற்கு நாங்கள் எப்படி பொறுப்பு ஆக முடியும்....

      Delete
    15. ///. என் கருத்தை நான் ப்ளாக்கில சொல்கிறேன்.
      மூஞ்சி புக்கென்ன. ப்ளாக்கென்ன நான் எப்பவும் ஒரே மாதிரித்தான். உங்களைப் போல மைண்ட் செட்டை மாத்திக்க எனக்கு எப்பவும் தெரியாது//// பொய் பேசாதே தம்பி, நாம் தப்பா பேசி இருந்தாலும் பேசியதை மாற்ற இயலாது்.
      விழாவுக்கு வந்ததே வேஸ்ட்டுனு கமெண்ட் போட்டுட்டு இப்ப எதுக்கு தேவையற்ற விவாதம். விழாவுக்கு வந்ததே வேஸ்ட்னா, உனக்கு இனிமேல் எல்லாமே வேஸ்டா தான் தோணும்...

      Delete
    16. //உங்க டீம்மெம்பர் ஒருவர்அ தை உங்களை நோக்கி சொல்கிறேனென்று தவறாக எடுத்துகொண்டு அதை உங்கள் அனைவரிடமும் கூறி அதன் வெளிப்பாடை மீட் டில் உங்கள் அனைவரையும் சந்தித்த போது என்னிடம் அனைவரும் பேசாமல் முகம் திருப்பியதேனோ ?///

      நடக்காத ஒன்றை நீங்களே கற்பனை செய்து கொண்டு அதன் பேரில் குற்றம் வாசிப்பது அழகல்ல..

      Delete
    17. /// உங்கள் அனைவரையும் சந்தித்த போது என்னிடம் அனைவரும் பேசாமல் முகம் திருப்பியதேனோ ? என்னிடம் நேரடியாகவே கேட்டிருக்கலாமே விஜி அண்ணா//..--++உன்னை பார்த்து முகத்தை திருப்பி கொண்டு நான் போயிருந்தா யார்ட்ட அவ்ளோ நேரம் பேசி இருப்பாய்? யாரிடம் டீ சர்ட் தந்து இருப்பாய்?
      யாருக்கு இத்தாலி டெக்ஸ் கிஃப்ட் தந்து இருப்பாய்???
      தப்பு சம்பத்!!!
      நீ வேறு எதையோ நினைத்து கொண்டு வீண் வாதம் செய்து கொண்டு இருக்கிறாய்...

      Delete
    18. நான் விழா விற்க்கு வந்தது வேஸ்ட்டு

      அதற்குண்டான காரணத்தை பிறகு சொல்கிறேன் விஜி அண்ணா

      நான் வீட்டிலிருந்து கிளம்பி ஈரோடு வரும் வரை என்னென்ன பேசினேன் எப்படி நடந்துகொண்டேன் என்று கடல்யாழ் ம சிவக்குமார் சிவாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்

      உங்கள் அதீத கற்பனைக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டுமென்பதில்லை
      நான் உள்ளே வரும்போது பார்த்தபோது முதலில்பே சியவர்சாட்சாத் விஜய் அண்ணாவே பிறகு மாயாவி சிவா பிறகு நானாக பேசியபிறகுதானே பேச ஆரம்பித்தீர்கள்

      டீ சர்ட் கொடுத்தது புத்தகம் கொடுத்ததெல்லாம் நான் உங்கள்மேல் கொண்ட அன்பின் வெளிப்பாடே அதை அசிங்கப்படுத்தாதீங்க

      தென் கரூரர் சரவணண்
      நடக்காத ஒன்றல்ல உங்க டீம் ல யே ஒருவர் நான் முகநூலில் கமண்ட் போட்டதை பற்றி அந்த இரவில் நீங்கள் (அதாவது உங்பேக டீம்சிமெம்யபர்தைஸ் சிலர்) பேசியதை பற்றி என்னிடம் வருத்தப்பட்டார்.

      அதைத்தான் நான்ஏன் என்று கேட்கிறேன்

      என் பதிவில் நான் என்ன போட்டால் உங்களுக்கென்ன அப்போ என்னை நன்றாக ககவனிச்சிருக்கிங்க இதத்தவிர உங்களுக்கு வேற வேலை இல்லையா

      Delete

    19. நான் வேஸ்ட் டென்று முகநூலில் சொன்னதை நீங்க உங்களை பற்றி சொன்னதா நீங்க ஏன் நினைக்கறீங்க. என் சம்பந்தமா வேறு இருந்திருக்கலாமே

      உங்களின் தவறான புரிதலுக்கு நான் என்ன சொல்லனும்னு நெனைக்கறீங்க

      Delete
    20. விழாவிற்கு சிரமம் பார்க்காமல் உளைத்தவர்கள், நேரம் எடுத்து வருகை தந்தவர்கள், அனைவரையும் இணைக்கும் காமிக்ஸ் நேசம், இந்த சிறு வருத்த்தையும் உங்களிடம் இருந்து போக்கும் என்ற நம்பலாமா..

      ஒருமையில் பேசுவது, குத்து காட்டி பதிவிடுவதை தவிர்த்து, இதையும் கடந்து போகலாம் தோழர்களே.

      Delete
    21. நான் கடந்துதான் போகிறேன் ரபீக் அண்ணா
      விஜி ம விஜய தவிற மற்றவர்கள் தவிர மற்றவர்கள் ஆரம்ப நிலையில் நின்றால்எப்படி

      Delete
    22. Its like watching bigg boss program, sad.

      Delete
    23. காமிக்ஸ் நேசம் !!??????????????

      உங்க கருத்துக்கே நான் வருகிறேன்
      கடந்த நான்கு நாட்களாய் என்மகனுக்கு உடல்நிலை சரியில்லை என் மனைவி என் காமிக்ஸ் ஆர்வத்தை புரிந்து கொண்டு என்னை மீட் ல் கலந்து கொள்ள அனுமதித்தார். நேற்று மாலை எனது மனைவியிடமிருந்து அழைப்பு மகனுக்கு உடல்நிலை ஆஸ்பிடலில் சேர்த்துள்ளோம் என்று மனைவியிடமிருந்து அழைப்புவந்தது என் வருத்தத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஸ்டாலில் எடிட்டர் மீட் ல் உடன் வந்த நண்பர்கள் பேசவேண்டும் என்று சொன்ன காரணத்திற்காக அவர்களுடன் இருந்து எனது ஊர்வந்து சேரும் வரை அவர்களுக்கே தெரியாது எப்படி சென்றோமோ அதன் படியே திரும்ப கொண்டுவந்து விட்டேன். நான் வந்ததும் ஆஸ்பிடல் சென்று டாக்டரிடம் விபரங்களை கேட்டு இரவு முழுதும் ஆஸ்பிடலில் பொட்டுத் தூக்கமிலலாமல் காலை மகனை வீட்டிற்க்கு கொணர்ந்து இன்று இரவும் கண்விழித்து மகனருகில் அமர்ந்திருக்கின்றேன். நான் இந்த விஷயங்களை மறைத்து மீட் ல் கலந்து கொண்டது ஏன்எதற்காக யாருக்காக

      வாய் இருக்கு என்ன வேணுண்ணாலும் பேசிடலாம் கிண்டல் நக்கல்நையாண்டி பண்ணாலாம்னு பேசுறாங்க
      நான் இந்த நேரத்தில எப்படி பேசனும்னு எதிர்பார்க்கிறாங்க??

      டெக்ஸ் உங்க சூழ்நிலை எனக்கு தெரியாது (பைப்ல தண்ணி வர்ல) அதே போல் என் சூழ்நிலை உங்களுக்கு தெரியாது (என்மகன் உடல்நிலை பற்றி)

      அப்புறம் ஏன் இந்த கேள்விகளெல்லாம் ?
      ஒருவர் தன் ஆதங்கத்தை பதிவு செய்தா பதிவு செய்தா இப்படித்தான் ரவுண்டு கட்டி பேசனும்னு உங்க டீம்ல குறிப்பிட்ட அந்த எல்லோரும் முடிவெடுத்திருக்கீங்களா ?

      காமிக்ஸ் காக நண்பர்களுக்காக வந்தேன்

      பிடிக்கலைன்னா இங்க நேரடியாகவே சொல்லிடுங்க

      இனி ஈரோடு மீட்க்கு நான் எப்பவும் வரலை

      Delete
    24. அப்புறம் இன்னொரு விசயம்
      நான் காரில் வந்தது என்தேவையை உணர்ந்து அவசரமெனில் உடனே கிளம்புவதற்க்காக

      பஸ் பிரயாணம் எனது தேவைக்கு அவசரத்திற்க்கு முடியாத விஷயம்

      Delete
    25. ரஃபீக் ஜி@ புரிதலுக்கு நன்றிகள். நாங்கள் அன்று வந்திருந்த சிறு குழந்தை முதல் 80வயது இளைஞர் வரை அனைவரிடமும் இன்முகத்துடன் தான் பழகினோம். வந்திருந்த 135பேரில் 134க்கு பேரும் இதை உறுதி செய்வார்கள். ஆனால் ஒரே ஒரு நபர் மட்டும் குறை சொல்கிறார் எனில் தவறு யார் பக்கம் என எளிதில் விளங்கும். இவராகவே எதையோ கற்பனை செய்து கொண்டு பேசுவதற்கு நாம் பொறுப்பாக முடியாது.
      நீங்கள் சொன்னபடி வழக்கம் போல இதையும் தாண்டிப்போகிறோம் ரஃபீக் ஜி.

      Delete
    26. தம்பி சம்பத்தை நான் ஒருமையில் அழைத்தது கோபத்தில் அல்ல ரஃபீக் ஜி.

      2015முதலே எங்கள் இருவர் இடையே நிலவிவந்த புரிதலின் நெருக்கம். அந்த புரிதலே அவரின் அன்பு பரிசுகளுக்கு உரியவனாக என்னை ஆக்கியது. ஹூம், ஆசிரியர் சார் சொல்வது போல, " இதுவும் கடந்து போகும் ".

      Delete
    27. Kannan s நல்ல விசயத்தை ப்ளாக்ல யாராவது பேசும்போது சப்போர்ட் பண்ண நீங்க எப்போதும் வரமாட்டீங்க.
      உங்க நண்பர்களை யாராவது ஏதாவது சொல்லிட்டா நக்கல் நையாண்டி பண்ண மட்டும் முன்னாடி வந்து நிக்கறீங்க.

      ஏன் ஜி இப்படில்லாம்///////



      நல்லதுக்கு வரலைனாலும் பரவாயில்லை கெட்டதுக்கு கண்டிப்பா வந்துவிடனும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க சம்பத் ஜி ...அதான்.....நீங்க வேணா சோ சேடு அ இருக்கலாம்....ஆனா ஈரோடு வந்த மத்தவங்க எல்லாம் செம ஹேப்பியா தான் இருந்தாங்க....சோ சேடு அ , இல்ல செம ஹேப்பியாங்கிறது.... அவங்க எண்ணத்தை பொருத்தே....உண்மையிலேயே நாங்க செம ஹேப்பியா தான் இருந்தோம்....

      Delete
    28. Kannan s
      இங்க நானும் சந்தோஷமாக த்தான் இருந்தேன்

      நான் பேசிய விஷயம் இதுவல்ல
      என்பதை புரிந்து கொண்டு பேசினால் சரி

      ஷோ சேடு

      இதை நான் எதற்காக கூறினேன் என்பதை புரிந்துகொள்ளாமல் ஆளாளுக்கு ஏதோவொன்றை கற்பனை செய்துகொண்டால் அதற்க்கு நான் பொறுப்பாளி அல்ல

      Delete
    29. நா உங்களிடம் விவாதம் பண்ணியது,நீங்கள் கூறிய " சோ சேடு " என்கிற வார்தைகளுக்காக இல்லை சம்பத் ஜி......விஜயிடம் நீங்கள் கோபத்தில் சொல்லிய ஒரு குறிப்பிட்ட வார்த்தைக்காக தான்....அதற்கு நீங்கள் இங்கே கீழே வருத்தம் தெரிவித்ததால் நான் மேற்கொண்டு இந்த விவாதத்தை தொடர விரும்பவில்லை சம்பத் ஜி....மற்றபடி நான் உண்மையில் உங்களுக்கு விரோதி எல்லாம் இல்லை....சோ சேடு அ விட்டு பீ ஹேப்பியாக இருங்கள் ....உங்கள் மகன் விரைவில் உடல்நலம் பெற்று நலமுடனும் நீண்ட ஆயுளுடனும் அளவில்லா சந்தோசத்துடனும் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்....நன்றி.....

      Delete
    30. ///உங்கள் மகன் விரைவில் உடல்நலம் பெற்று நலமுடனும் நீண்ட ஆயுளுடனும் அளவில்லா சந்தோசத்துடனும் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்///- நானும் வேண்டிக் கொள்கிறேன். குழந்தை நலன் பெற்றதும் இங்கே தெரிவிக்கவும்...

      Delete
    31. டெக்ஸ் சம்பத் உங்கள் மகன் விரைவில்
      பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம்
      வல்ல ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.

      Delete
  35. ///நேரம் நிறைய மிச்சமிருந்து போயின் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து நிற்க கூடாதே என்ற முன்ஜாக்கிரதையில் 2018 -ன் அட்டவணையையும் கையில் கொண்டே வந்திருந்தேன் !///


    வடை போச்சே..!! :-)

    ReplyDelete
    Replies
    1. @கிட் ஆர்டின்
      வடையுடன் பன்னும் கொடுத்தார்களே:-)

      Delete
  36. கர்னல் அமோஸ் புக் எப்படி கிடைக்கும்

    ReplyDelete
  37. ஆல் ஷோ சேடு பார்டீஸ்@ பீஈஈஈஈஈ கூல் &சியர் அப்...
    அடுத்த ஈரோடு விழாவுக்கு இன்னும் 363நாள்தான் இருக்கு. உங்களை எல்லாம் சந்திக்க இருப்பது எண்ணி உள்ளம் துள்ளிக்குதிக்குது...

    ReplyDelete
  38. வணக்கம் நண்பர்களே!.வணக்கம் ஆசிரியர் சார்.!

    ReplyDelete
  39. ஆசிரியர் சார், டெக்ஸ் 70வது ஆண்டிற்கு ஸ்பெஷல் குண்டு இதழ் ஏதும் இல்லையா சார்?

    ReplyDelete
  40. சார் இரத்தப் படல அறிவிப்புகள் தூள்.....பேட்ஜும் , பேண்டும் சீக்கிரமே அனுப்பிடுங்கள்..போனா போகுது அடுத்த இருநூறுக்கு பேண்டு மட்டுமாச்சும் தந்து நண்பர்கள உற்சாகபடுத்தி...ஆகஸ்டுக்கு முன்னரே தாருங்கள்.....
    அப்புறம் ஒரே மாதத்தில் புத்தகம் முழுவதயும் பிழை திருத்தித் தர நான் தயார்...காலை சந்திப்போம்..

    ReplyDelete
  41. இரத்தக் கோட்டை

    மிகவும் அருமையோ அருமை !!
    கலர்ல டைகரை கண்ணில ஒத்திக்கலாம் போல இருக்கு
    இதுவரை கலர்ல வந்த கதைகளில் இது டாப் ஒன்

    மீள் வாசிப்பென்றாலும் இப்படி கலரில் படிக்க இக்கதை சோடை போகப்போவதில்லை

    முதன்முதலா மீட்ல புக்கை கையில் வாங்கி ஓப்பன் பண்ணி பார்த்ததும் மெய் மறந்திட்டேன்

    அதிக கலர் இல்லாம மென்மை யா படிப்பவர் மனதை கவரும்விதமா சான்ஸே இல்லை சூப்பர் சார்

    உங்க உழைப்பு என் கண்ணில் தெரிகிறது
    தேங்யூ சார்

    டைகர் பேன்ஸ் உங்க காட்டில மழைதான்

    பட் டைகரை மட்டும் இப்படி மனதை கவர்கிற மாதிரி போடுகிற நீங்க டெக்ஸை இப்படி கண்ணில காட்ட மறுப்பது ஏனோ ???

    டெக்ஸ் எப்பவும் ஓவர் கலர்ல!?? படிக்க ஆர்வம் வரமாட்டேங்குதே :(

    ReplyDelete
  42. முன்பதிவில் 31 இருந்தாலும் இன்னும் இரத்தகோட்டை கைக்கு கிட்டவில்லை. :(

    ReplyDelete
  43. தீபாவளி, பொங்கல் சமயங்களில் வீட்டிலிருக்க முடியாமல் போய்விட்டது போன்ற ஒரு எண்ணம்.

    வருத்தங்கள் லிஸ்ட்:

    1.நண்பர்களின் சந்திப்பு, உற்சாகம் போன்றவற்றை தவறவிட்டது.

    2. இரத்தக்கோட்டையை நேரில் பெற்றுக்கொண்டு போடோ எடுத்துக்கொள்ள முடியாதது.

    3. இரத்தப்படலம் சாம்பிள் இதழை பார்க்க முடியாமல் போனது.

    4. ஆந்தைவிழியாரின் சற்றே பதற்றத்தோடு கூடிய, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டிருக்கக்கூடிய, ’வந்து அதுவுந்தே.. வந்து இதுவுந்தே..’ எனும் கலக்கலான பேச்சை தவறவிட்டது.

    5. நண்பர்களின் டிசர்ட், பேட்ஜ், துண்டுப் பிரசுரங்கள், பிரத்யேக விளம்பரப் பதாகைகள் போன்றவற்றை தவறவிட்டது.

    மகிழ்ச்சிகள்:

    1. இரத்தப்படல அறிவிப்பு. ஒரு கனவு நனவாகும் தருணம். தமிழ் காமிக்ஸ் உலகின் இதிகாசம்! மிக்க மகிழ்ச்சி! (அந்த ஒற்றை இதழ் சாம்பிளைப்
    போட்டோவில் பார்க்கச்சொல்லோ அப்படி ஒன்றும் பெருசாத் தெரியலையே.. ஒரே இதழாக போட்டுடலாமோ எனும் வாய்ப்பை அத்தனை சீக்கிரம் கைகழுவிவிட வேண்டாம்.)

    2. யூகக்குதிரைகள் பலவற்றை இங்கே பறக்கவிட்டது.

    3. தல 70, 2018 அட்டவணை, சூப்பர் 6 போன்றவற்றை கிளறிவிட்டது. (மோர் டீடெயில்ஸ் சீக்கிரமே தாங்க.. சஸ்பென்ஸ் தாங்காது)

    4. கர்னல் ஆமோஸ்!

    உற்சாக மீட்டர்களைத் தெறிக்கவிட்ட அனைத்து நண்பர்களுக்கும் அன்பும், நன்றியும்!!

    ReplyDelete
    Replies
    1. @ ஆதி

      ஆந்திரா பார்டர்ல குந்திக்கிட்டு அடுத்த வருசமும் இதே மாதிரி லிஸ்ட்டு போடாம இருக்கிறவரைக்கும் சரிதான்!

      Delete
    2. //இரத்தப்படல அறிவிப்பு. ஒரு கனவு நனவாகும் தருணம். தமிழ் காமிக்ஸ் உலகின் இதிகாசம்! மிக்க மகிழ்ச்சி! (அந்த ஒற்றை இதழ் சாம்பிளைப்
      போட்டோவில் பார்க்கச்சொல்லோ அப்படி ஒன்றும் பெருசாத் தெரியலையே.. ஒரே இதழாக போட்டுடலாமோ எனும் வாய்ப்பை அத்தனை சீக்கிரம் கைகழுவிவிட வேண்டாம்.)//
      +1000000000000

      Delete
    3. +9999999999999999999999999999999

      Delete
  44. It seems Rs.2350 is quite a lump sum amount for XIII. Is it possible to reduce the price of the book to Rs. 2000? I don't know if it's fair to ask this question. But please consider this as a humble request sir.

    ReplyDelete
  45. ஆகஸ்ட் மாத இதழ்களின் விமர்சனம்:
    க) வெய்ன் ஷெல்டன்

    அட்டைப்படம்: அருமை
    சித்திரங்கள் : அருமை
    கதை : அருமை
    ஒரு வரி விமர்சனம்: ஆரம்பம் முதல் இருந்த விறுவிறுப்பு....கடைசி வரை கொண்டு சென்றது கதாசிரியரின் திறமைக்கு சான்று.


    உ) டைலன் டாக்

    அட்டைப்படம்: அருமை(கதைக்கும் அட்டை படத்திற்கும் சம்பந்தம் இல்லை)
    சித்திரங்கள் : அருமை
    கதை : சுமார்
    ஒரு வரி விமர்சனம்: ஆரம்பம் குழப்பமாக ஆரம்பித்து…போக போக விறுவிறுப்பு அடைந்து….சுபமாக முடிந்த கதை.

    ங) டெக்ஸ் வில்லர்

    அட்டைப்படம்: சுமார்
    சித்திரங்கள் : அருமை
    கதை : அருமை
    ஒரு வரி விமர்சனம்: படித்த கதை. மீண்டும் படித்ததில் விறுவிறுப்பு குறையாத கதை….அதனாலேயே மறுபதிப்பு என்பதை உணர முடிந்தது.

    ReplyDelete
  46. மின்னலைப் பிடிச்சாச்சேய்ய்ய். இரண்டாயிரம் அனுப்பிட்டேன். மீதம் விரைவில். புரூப் ரீடிங்கில் எனது பெயரை யும் பரிசீலிங்க பாஸ். ஆயா கதை போடறதா தெரியலை. நற நற நற.. கணினி சரியானதும் வெச்சிக்கிறேன். இரத்தப்படல முயற்சி வெற்றியை நிலைநாட்டிட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. @John Simon C

      அடுத்த வருசமாவது EBFக்கு வந்து நம்ம 'டொக்கு செல்லம்' கருப்பு ஆயாவுக்கு பெருமை சேர்க்கப்பாருங்க ஜானிஜி!

      Delete
  47. காமிக்ஸ் திருவிழா
    ஈரோடு ஒரே உற்சாகம்
    நண்பர்கள் குதுகலம்
    பொங்கி வழிந்த அன்பு
    நேரம் போவது தெரியாமல் உரையாடல்
    புதிய புத்தகங்கள்
    பதிய வேண்டிய புது வரவுகள்
    கை நிறைய அள்ளியதால்
    பை நிறைந்த புதினங்கள்
    மனம் பொழிந்த பாச தூறல்கள்
    உள்ளம் நிறைந்த தருணங்கள்
    கொள்ளை போன கவலைகள்
    பறவைகளாய் காமிக்ஸ் உறவினங்கள்
    தேடல்களாய் கேள்விகள்
    கவி பாடல்களாய் பதிலுரைகள்
    ஏக்கங்களாய் வேண்டல்கள்
    வரங்களாய் பேரங்கள்
    காரம் இனிப்பு உணவுகள்
    மற்றும் பல
    முற்றும் இல.

    காமிக்ஸ் காதல் மட்டும்

    கண்ணார கண்டு
    காதார கேட்டு
    மூச்சார சுவாசித்து
    வாயார சுவைத்து
    உளமாற மகிழ்ந்து

    விடை பெற்றோம்

    அன்புடன்
    ஜனா



    ReplyDelete
    Replies
    1. வாவ்!!! செம்ம!!

      கும்பகோணத்திலிருந்து வருகை தந்து விழாவைச் சிறப்பித்ததற்கு நன்றிகள் ஜனா அவர்களே!

      நம் வாசக நண்பர்களுள்தான் எத்தனை ஆற்றலாளர்கள்!!!

      Delete
    2. ஜனா உங்க டாப் ஆன் தி ஸ்பாட் லைவ் ரிப்போர்ட்ஸ்தான் கலக்கலாக அமைந்தது. எங்கேய்யா இருந்தீங்க இம்புட்டு நாளா??

      Delete
    3. ஜனா ஜி@ அன்றைய தினம் என்னுடைய போனுக்கு ஏகப்பட்ட அழைப்புகள், வாட்ஸ் அப் வினவல்கள் என சற்று நேரத்தில் ஹேங் ஆகிட்டது. உங்கள் அப்டேட்ஸ் மட்டும் இல்லையெனில் நண்பர்கள் தவித்து இருப்பார்கள். அருமையான கவரேஜ்க்கு ஆயிரம் நன்றிகள்.👌👌👌👌👌👌🙏🙏🙏🙏

      Delete
  48. EBF - 2017
    சில நிறைவான நிகழ்வுகள்

    இது என் தனிப்பட்ட கருத்துகளாகும்...
    யார் மனதையும் புண்படுத்துவதற்க்கல்ல...

    1. சேலம் டீமி ன் கனகச்சிதமான ஏற்பாடுகள் ( மீட் ல் அந்த புன்னகை(கள்) மட்டும் மிஸ்ஸிங் ) .

    2. வாட்ஸப் க்ரூப் சத்தியமா நெனைச்சு பாக்கலைங்க ( நெடுந்/தொலைவில் உள்ள மீட் க்கு வரமுடியாத நட்புகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் )

    3. எதிர்பார்த்த / பார்த்திராத புதிய நட்புகள்

    4. மீட் டைமிங் சென்ஸ்

    5. அனைவருக்கும் ஸ்நாக்ஸ் டீ கொடுத்த நட்புகளின் அன்பான உள்ளங்கள் (மீட் க்கு வராமலேயே வந்த உணர்வைக் கொடுத்த கோவை கிரி)

    6. இரயில் நேரமாகினாலும் கரக்டா மீட் முடிவதற்க்கு முன்வந்த அகமது பாஷா

    7. இரத்தக்கோட்டை தொகுப்பு

    8. பெரிய எடிட்டர் வந்திருந்து விழாவை சிறப்பித்தது ம (இந்த)குழந்தைகளுக்கான அவரின் புதிய வேண்டுகோள் அறிவிப்புகள்

    9. எடிட்டரின் மதிய உணவு ஏற்பாடு (தரமான சாப்பாடு)

    10. டெக்ஸ் ன் 7(8)0 (வருட) பக்க கதை அறிவிப்பு

    11. கேள்வி - பதில் நேரம் : பரிசளிப்பு அதனால் வாசகர்கள் இன்ப அதிர்ச்சியாகிய தருணம்

    12. இன்ப அதிர்ச்சியாய் எனக்கு புத்தகங்கள் ( பெரும்பாலானவை டெக்ஸ் / வேதாளர் / லக்கி லூக் / ஸ்பைடர் கதைகள் ) பரிசளித்த நண்பர்களாகிய அந்த அன்பு உள்ளங்களால் எனக்கு ஏற்பட்ட பரவச தருணங்கள் ( இதையே வேறு சிலர் வேறு வேறு கண்ணோட்டச்களில் பார்த்திருக்கக் கூடும் அதற்க்கு நான் பொறுப்பல்ல )

    ReplyDelete
  49. முன்தொடர்ச்சி
    -
    ஸ்டாலுக்கு சென்றதும் நண்பர்களுடன் புதிய வாசகர்களுடன் அளவாவி விட்டு என் நண்பர்களுக்கு தேவையான பல புத்தங்களை வாங்கிக்கொண்டு. எடிட்டர் வரும்வரை ரோட்டோர டீக்கடையில் நண்பர்களுடன் பேசிகொண்டிருந்த தருணங்களும் மிக அழகானவை.

    மாலை எடிட்டர் வந்ததும் ஆட்டோக்ராப்பினை வாங்கிவிட்டு என் மகன் உடல்நிலை மிகவும்சரியில்லை ஆஸ்பிடலில் சேர்த்துள்ளோம் என்று என் மனைவி அலைபேசியில் கூறியதை அடுத்து அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு ஊர்வந்து சேர்ந்தோம்

    ReplyDelete
  50. இரத்தப் படலம் அறிவிப்பு கண்டு மிக மகிழ்ச்சி!!!!!!!.இந்த வ௫ட தீபாவளி போனஸ் ஸை x111 க்காக ஒதுக்கப் பட்டு விட்டது.

    ReplyDelete
  51. விஜயன் சார் @ இப்ப எல்லாம் hard bound என்பது நமது டீமுக்கு அல்வா சாப்பிடுவது போல் ஆகிவிட்டது. இ.கோ தயாரிப்பில் அசால்டாக சிக்ஸ் அடித்து இருக்கிறீர்கள். அட்டைப்படத்தில் பல நுண்ணிய வேலைப்பாடுகள் செம். அட்டைப்படத்தை பார்த்து கொண்டே இருக்கலாம். நன்றி.

    ReplyDelete
  52. This comment has been removed by the author.

    ReplyDelete
  53. This comment has been removed by the author.

    ReplyDelete
  54. ஓய் விஜய்....
    உம் குசும்புக்கு ஓர் அளவேயில்லையா?
    காலைல பாத்தா ஆசிரியருக்கு "தம்" வாங்கி தர்றதா சொன்னீரு...!!
    அப்புறம் ஆசிரியர் தொண்டையில மாட்டிகினது நான் கொடுத்த மக்கன் பேடாவாயிருக்கும் என்றீரு...!!
    அப்பப்போ ஷோ ஷேடு வேறு....!!!
    குசும்பு ஓவராயிடுச்சப்பா....!!

    ReplyDelete
    Replies
    1. பாஷா ஜி அது யாரு ஓய் விஜய்
      எனக்கு ஒய் விஜயா ன்னு ஒரு பல்க்கான நடிகையை தான் தெரியும்

      Delete
    2. @ T K AHMED BASHA

      விழாவுக்கு சற்றே தாமதமாய் வந்து சேர்ந்திட்டாலும், 'மக்கன் பேடாவோடு வருவேன்' என்று முன்பொரு நாளில் இங்கே கொடுத்திருந்த வாக்குறுதியை எங்கள் வாய் இனிக்க நிறைவேற்றியதற்கு நன்றிகள் பாட்ஷா ஜி!

      அடுத்தமுறை ஓரிரு நாட்கள் இங்கேயே தங்கியிருக்க முயற்சி செய்யுங்களேன்? செம ஜாலியா இருக்கும்!

      Delete
    3. அதுசரீ......ஆசிரியருக்கும் தம் பாக்கெட் வாங்கி கொடுப்பதா சொன்னீங்களே.......அது என்னாச்சு?

      Delete
    4. சகோதரர் ஈரோடு விஜய்க்கு எப்போதும் கொஞ்சம் குசும்பு ஜாஸ்தி தான்
      இந்த தடவை கொஞ்சம் அவரை கலாய்க்க வாய்ப்பு கிடைத்தது :D :P

      Delete
    5. @T K AHMED BASHA
      மக்கன் பேடா சூப்பராக இருந்தது சகோதரரே
      ரசித்து சாப்பிட்டேன் (ஈரோடு விஜய் சகோதரரின் குசும்பு வார்த்தைகள் வரும்)
      தங்களுடன் அவ்வளாக பேசியது இல்லை
      தங்களுடன் பேசுவதற்கு கொஞ்சம் பயமும் கொஞ்சம் தயக்கமும் இருந்தது
      தாங்கள் என்னிடம் நீங்கள் தானே கடல் யாழ் என்று கேட்டு என்னுடன் பேசியது மட்டும் அல்லாமல் இந்த சகோதரியுடன் புகைப்படமும் எடுத்து கொண்டீர்
      மிக்க மகிழ்ச்சி சகோதரரே :))))))))))))))))

      Delete
    6. மிகவும் நெகிழ்வான அனுபவம் சகோதரி...!!!
      என் பிரத்யேக புகைப்பட ஆல்பத்தை தங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அலங்கரிக்கிறது.
      Take very good Care of yourself.

      Delete
    7. @T K AHMED BASHA
      நன்றி சகோதரரே 😊

      Delete
    8. எனக்கும் உங்கள பாக்க பயமாத்தான் இருக்கு பாஷாஜி :-) அடுத்த முறை சென்னை வரும் பொது அந்த மக்கான் பேடாவை எடுத்து வரவும் - பயம் தெளியுதான்னு பாக்கறேன் ;-)

      Delete
  55. கடந்த 2 வருடமாக EBF வந்துவிட்டு இந்த வருடம் வரமுடியாமல் போனதில் மிகப்பெரிய வருதத்தில் இருந்தேன். ஆனால் சேந்தம்பட்டி நண்பர்கள் மூலமாகவும், காமிக்ஸ் கனவுலகம் வாட்ஸ்அப் குழுமம் மூலமும் அதில் பங்கேற்ற சந்தோசத்தில் ஒரு பங்காது அடைய முடிந்தது. ஜனா வின் லைவ் போட்டோ அப்டேட்ஸ் மற்றும் பரணியின் வீடியோ அப்லோடுகளுக்கும் ஸ்பெசல் நன்றிகள். கடவுள் அருளினால், நிச்சயம் 2018-ல் கலந்துகொள்ள உறுதியாக உள்ளேன். பார்ப்போம்...

    ReplyDelete
  56. I miss Basha bai "Makkan beda" tooo....

    ReplyDelete
    Replies
    1. வெறும் மக்கன் பேடாவா இருந்தா அதன் வழமையான சுவை தான் இருக்கும். நம் பாசா ஜியின் அன்பு எனும் சுவையும் அதில் சேர்ந்த உடன், அது இன்னும் பல மடங்கு தித்திப்பாக இருக்கிறது நண்பர்களே...

      யார் யொரெல்லாம் மக்கன் பேடா சாப்பிடலயோ அவங்க எல்லாம் என்னை நினைத்து கொள்ளுங்கள். உங்களுக்கும் சேர்த்து நானே....ஹி...ஹி...ஹி....

      Delete
    2. நாங்களும் உங்களை ரொம்ப miss பண்ணினோம் நண்பரே...

      Delete
    3. டெக்ஸ், போன தடவை எனக்கு மக்கன் பேடாவ எடுத்து வைத்து கொடுத்தது நீங்கதான் :-) இந்த தடவை நிறையா எடுத்து வைச்சிட்டீங்களோ??? ;-)

      @பாஷா பாய், இன்ஷா அல்லாஹ் அடுத்தவருடம் (2018) சந்திப்போம்.

      Delete

  57. ஈரோடு 2017....

    இனிதே முடிந்த இந்த விழா நடப்புகளை நேரில் பார்த்தும், முகநூல் அப்டேட்ஸ் பார்த்தும், நாம இதற்காம மட்டுமே ஏற்படுத்திய வாட்ஸ்அப் குரூப்ல பார்த்தும் அனைவரும் ரசித்தோம் நண்பர்களே....
    என்னுடைய பார்வையில் ஈரோடு நிகழ்வுகளை டாப்10 ஆக வரிசைப்படுத்தி உள்ளேன் நண்பர்களே...ஒவ்வொன்றாக சொல்கிறேன். நான் மிகவும் ரசித்த நிகழ்வுகளில் டாப்1....

    1.இரண்டு இளைஞர்களின் ஆலிங்கனம்:-

    *நம்முடைய ஆசிரியர் சாரின் தந்தையாரை நாம் வெகு அரிதாகத்தான் பார்க்க இயலும் நண்பர்களே. அவர் வந்திருந்த ஓரிரு விழாக்களில் 3விழாக்களில் அவரைப் பார்த்து உள்ளேன். இம்முறையும் விழா தொடங்கி அனைவருக்கும் சிறப்பு வெளியீடான இரத்த கோட்டை வழங்கப்படும் போதும், சில நாள் முன்பே தெரிந்துவிட்ட சர்ப்ரைஸ் (?)இதழ் வெளியீட்டின் போதும், எடிட்டர் பேசும்போதும், அதிரடி அறிவிப்புகள் வந்தபோது ஆர்ப்பாட்டத்தையும், இரத்தபடலம்&TEX70 பற்றி நண்பர்கள் கருத்து பதிந்த போதும் உற்சாகத்துடன் ரசித்த வண்ணம் இருந்தார்.

    *நாம் செய்த ஆரவாரங்களை முகத்தில் தவழ்ந்த புன்முறுவலுடன் ரசித்த வண்ணம் இருந்தார். விழா குழுவினர், மரியாதைக்குரிய சுரேஷ்சந்த் அய்யா& சென்னிமலை கோவிலின் ஓதுவார் திரு ஆனந்த் அவர்களும் பொன்னாடை, நினைவு பரிசுகள் வழங்கி மரியாதை செய்த போதும் ஆவலுடன் ஏற்றுக்கொண்டு ஆர்வத்துடன் அந்த கணங்களில் மகிழ்ந்திருந்தார். ஸ்நாக்ஸ் நேரங்களில் நம்முடனே கலந்து சுவைத்து மகிழ்ந்தார். அந்த நேரங்களில் அவருக்கு அருகில் இருந்து ரசிக்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது.

    *நம்முடைய காமிக்ஸ் பேக்கிங் ஆகிவரும் கவர்களில் "7முதல்77வரை அனைவருக்கும்" என பிரிண்ட் ஆகி இருக்கும். சேலத்தில் அதைப்பார்த்து விட்டு ஒரு நீண்டகால ரசிகர் தனக்கு 78வயது ஆகிறது, தன்னைப்போன்றவர்களும் இன்னும் நிறைய பேர் ரசிக்கிறோம், எங்களையும் குறிப்பிடும் படி வாசகங்களை அமைக்கலாமே என ஆசிரியர் சாரிடம் தெரிவிக்க நம்மிடம் சொல்லி இருந்தார். அதை நம் எடிட்டரிம் தெரிவித்தபோது காமிக்ஸ் நேசத்திற்கு வயது ஒரு தடையே அல்ல என ஆச்சர்யப்பட்டு போனார். அந்த 78வயது ரசிகர் இம்முறை குடும்பத்துடன் விழா வந்திருந்தார். நான் மேலே குறிப்பிட்டிருந்த விழா நடப்புகளில் இவரும் அதீத ஆர்வத்துடன் முழ்கி இருந்தார்.

    *விழாவின் போட்டோ செசனில் அந்த நீண்டகால ரசிகர் மேடையேறிய போது, அந்த ரசிகரின் வயதையொத்த நம்முடைய மூத்த சீனயர் எடிட்டர் அய்யா திரு செளந்திரபாண்டியன் பாண்டியன் அவர்களும் உற்சாகத்தில் இளைஞராகவே மாறி அந்த ரசிகரின் கைகளை பற்றி வரவேற்றார். அங்கே குழுமியிருந்த 140பேரில் சீனியர்களான அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து தழுவிக்கொண்டதை பார்க்க ஒரு சோடி கண்கள் நமக்கு போதாது நண்பர்களே.

    * காமிக்ஸை ஆரம்பித்த அந்த இளைஞரும், 40ஆண்டுகாலமாக அதை ரசித்து மகிழ்ந்த இளைஞரும் ஆரத் தழுவிய கணங்களில் அங்கே வெளிப்பட்ட காமிக்ஸ் காதலை வடிக்க என்னிடத்தில் வார்த்தைகள் இல்லை நண்பர்களே....!!!!
    இரு இளைஞர்களின் முகத்தில் தெரிந்த உற்சாகமும் அவர்களின் பார்வை பரிமாற்றங்களும் அப்படியே என் உடலில் ஒரு மெல்லிய நடுக்கத்தை தோற்றுவித்தது நண்பர்களே. அவர்களின் காமிக்ஸ் காதல் என்னுடைய கண்களில் துளிர்த்தபோது மெய் சிலிர்த்துப் போனேன். அவர்கள் இத்துணை ஆண்டுகாலமும் எத்துணை ஆழமாக காமிக்ஸ்ஸை ரசித்து வந்தனர் என்பது வெளிப்பட்ட கணத்தையே இந்த விழாவின் "தி பெஸ்ட்" தருணமாக பதிவு செய்கிறேன் நண்பர்களே....

    -------தொடரும்-------

    ReplyDelete
    Replies
    1. வாவ்!!! சம்பவங்களை கோர்வையாக நினைவுகூர்ந்து, அதை எழுத்துக்களில் வடித்தெடுப்பது எல்லோருக்கும் சாத்தியமானதல்ல!

      தொடருங்கள்!

      Delete
  58. காமிக்ஸ் படித்தால் வயசு குறையும் ஜி

    ReplyDelete
    Replies
    1. அதை நேரில் தங்களிடம் கண்கூடாக பார்த்தேன் சகோதரரே
      குடும்பத்துடன் வந்து காமிக்ஸ் விழாவை சிறப்பித்தது மட்டும் அல்லாமல் காமிக்ஸ் பற்றி பேச ஆரம்பித்தவுடன் பள்ளி சிறுவராக மாறி விட்டிர்
      உங்கள் காமிக்ஸ் உற்சாகம் சூப்பர்

      Delete
  59. EV அண்ணா

    நேற்றிரவு நான் இருந்த மனநிலையில் நீங்க கிண்டல் பண்ணியதை தவறாக புரிந்து கொண்டு கோபமாய் பேசிட்டேன்

    அந்த வார்த்தைகளை வாபஸ் பெற்றிக்கொள்கிறேன்

    நீங்க என்னை மன்னிக்கனும்

    ReplyDelete
    Replies
    1. பண்பாளர்களோடு தான் சகவாசம் வைத்துள்ளோம் என்பது பெருமையான விஷயம்.

      Delete
    2. குழந்தை உள்ளம் கொண்ட அருமை
      நண்பர் ஈரோடு விஜய் நிச்சயம் உங்கள்
      மேல் அன்பு செலுத்துவார்.

      Delete
    3. ///நேற்றிரவு நான் இருந்த மனநிலையில் நீங்க கிண்டல் பண்ணியதை தவறாக புரிந்து கொண்டு கோபமாய் பேசிட்டேன்
      ///

      இன்னிக்கு நைட்டு மறுபடியும் மனநிலை மாறாதவரைக்கும் சரிதான்!

      உங்கள் மகனின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்க சம்பத்! நேரம் கிடைத்தால் மாலையில் ஃபோன் செய்கிறேன்!

      Delete
    4. ///குழந்தை உள்ளம் கொண்ட அருமை
      நண்பர் ஈரோடு விஜய்///

      நன்றி கணேஷ் ஜி!

      நீங்க இப்படிச் சொன்னதுக்கப்புறம் இன்னிக்கு தொட்டில்ல படுத்துத் தூங்கணும்போல ஒரு ஆசை வந்துடுச்சு எனக்கு! ;)

      Delete
  60. ஈரோடு புத்த விழாவிற்கு வர முடிந்ததில் பெரு மகிழ்ச்சி
    ஈரோடு புத்த விழாவில் நமது காமிக்ஸ் மீட்டில் ஆசிரியர் , நமது சீனியர் ஆசிரியர் மற்றும் ஜூனியர் ஆசிரியர் பார்க்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி, காமிக்ஸ் சகோததரர்களையும் தோழர்களையும் சந்தித்து பேசி , புகைப்படங்கள் எடுத்து, காமிக்ஸ் கதைகளை பேசியதில் மிக்க மிக்க மகிழ்ச்சி :)

    ReplyDelete
  61. சார்,
    இரத்தப்படலம் வண்ணப்பதிப்பு அறிவிப்பு தாமதமானாலும் better late than never என்பது போலத்தான்.
    தயவுச்செய்து இந்த உயிரோட்ட சித்திரப் புதையலை A4 அல்லது தலையில்லா போராளி சைசில் வெளியிடுங்கள்... இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் உங்களால் முடியும்.
    எங்கள் நீண்ட நாள் விருப்பப்படி ஒரிஜினல் layoutல் காமிக்ஸ் படிக்கும் இந்த காலத்தின் போது வில்லியம் வான்ஸ் சித்திரங்களை 100 சதவீத ஒரிஜினல் சைசில் படிக்க விடாமல் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டாம் சார். குறைந்த அளவில் பதிப்பு தான் என்றாலும் இதனால் எதேனும் கூடுதல் செலவு ஏற்படினும் அந்த விலையேற்றத்தை நாங்கள் ஏற்று கொள்கிறோம்.

    வெறும் டெக்ஸ் வில்லரை மட்டும் நீங்கள் பெரிய சைஸில் அழகு பார்ப்பது பாரபட்சமல்லவா, சார்?

    கார்ட்டூன் கதைகள் நீங்கலாக எல்லா அருமையான சித்திர கதைகளையும் A4 அல்லது demi 1/4 பெரிய சைசில் 100 சதவீத சித்திர அளவில் நீங்கள் வெளியிட வேண்டும்.என்பது என் நீண்ட நாள் ஆசை... நண்பர்களும் கூட இதையே ஆமோதிக்க கூடும்... ப்ளீஸ் ஆவன செய்யுங்கள். ஒரிஜினல் அளவில் வெளியிட காலம் தாழ்த்த வேண்டாம்.

    ReplyDelete
  62. XIII தொகுப்பு பற்றி :

    * விலை மிக அதிகம் - WWFE தொகுப்பு 575 என்னும்போது XIII அது போன்ற மூன்று மடங்கு கொண்டது 1725 ஆகிறது. சரி விலை உயர்வுகளை கணக்கெடுத்து 1800 வைத்தாலும் தகும். 2350 என்பது மிக அதிகம்

    * அதற்காக நண்பர்களின் கொண்டாட்டம் அவசியமற்றது என்று சொல்ல வரவில்லை - விருப்பமுள்ளவர்கள் வாங்கிக்கொள்ளலாம் - இது சரியே

    * Personally நான் முன்பதிவு செய்யப்போவதில்லை - வெளியான பிறகு பிரதி இருந்தால், எனக்கு அப்போது வாங்கலாம் என்று தோன்றினால் பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்கிறேன். இதற்கு கதை மட்டும் காரணமல்ல - கீழே முன்பதிவுகள் குறித்த இன்னொரு காரணமும் உண்டு

    * XIII-யை விட சிறந்த franco-belgian கதைகள் நமது வெளியீடுகளிலேயே வந்துள்ளன - XIIIதான் ஆகச்சிறந்தது என்பது என்னால் ஏற்க இயலவில்லை. படிக்காமல் சொல்லவில்லை - கடந்த மூன்றாண்டுகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழுதாய்ப் படித்தவர்களும் நானும் ஒருவன்

    * முன்பதிவுகள் : 2012 முதல் எந்த முன்பதிவு, முந்தி வந்து அளித்தவரை சமயத்தில் வந்தடைவதில்லை என்பதே நாம் காணும் நிலவரம். இம்முறை கூட பலருக்கு முன்பதிவு செய்த புத்தகங்கள் (ரத்தக்கோட்டை ) இன்னும் வரவில்லை. எனவே இனி குண்டு முன்பதிவுகள் (சந்தாவில் சேர்த்தி இல்லாதது) என்னைக் கவர்ந்ததால் மட்டுமே செய்ய உத்தேசம்

    ReplyDelete
  63. நண்பர் டெக்ஸ் சம்பத் அவர்களுக்கு...

    தங்களின் பதிவுகளுக்கு நண்பர்களின் எதிர்வினைக்கு காரணம் உண்டு.அந்த எதிர்வினைக்கு நீங்கள் சொல்லும் விளக்கங்கள் மேலும் உங்கள் மேல் தவறான அபிராயத்தை ஏற்படுத்தி கொண்டு இருப்பதை தாங்கள் உணராமல் இருப்பதால் இந்த விளக்கம் ...


    ஒன்று...


    உங்கள் ஈரோடு புத்தகவிழா பார்வையில் அந்த குழுவினர் ஒரு வித "இறுக்கமான " சூழலில் பணியாற்றி கொண்டு இருந்ததாக தெரிவத்து இருந்தீர்கள்.மற்ற நண்பர்களுக்கு அதன் காரணம் அறிந்து இருந்தாலும் நீங்கள் அறியவில்லை போலும் .அன்று ஈரோட்டில் மாதாந்திர மின்தடை ..ஆனால் காலை முதலே அங்கே மின்சாரம் கிடையாது ..ஹாலின் நிர்வாகத்தினரும் பத்துமணிக்கு முன் சப்ளை தர இயலாது என அறிவித்து விட்டார்கள் .அந்த சூழலில் நண்பர்கள் குறைவான வெளிச்சத்திலும் ,புழுக்கமான சூழலிலும் காலை முதல் நிகழ்வுக்கான ஏற்பாடு நிகழ்வுகளை செய்து இருக்கும் பொழுது அப்படிதான் இருக்கும் என்பதே உண்மை.இல்லை எனில் தாங்கள் மீட்டிங்ஹாலில் முதலில் (நான் உங்களை நலம் விசாரித்தது மறந்து இருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன் ) என்னை பார்த்ததால் அப்படி சொல்லியிருப்பீர்கள் என்றே நினைக்கறேன் .அப்படி எனில் கண்டிப்பாக நான் தவறாக நினைக்க மாட்டேன் .காரணம் என் முகமே அவ்வாறு தான் .(அத்தனைக்கும் நான் வந்ததும் அப்பொழுது தான் ..எல்லா ஏற்பாட்டையும் என்னைதவிர சேந்தம்பட்டி குழுவினர் அனைவரும் உழைத்து இருந்தனர் என்பதே உண்மை..).மேலும் நெருங்கிய நண்பர்களை தவிர வேறு யாருடனும் நான் அதிகம் பேச தயங்குபவன் .சுபாவம் அப்படி ...எனவே இதன் காரணமாகவே தங்கள் எழுத்தில் "இறுக்கம் " என்பது நுழைந்தது என்று நினைத்து மறந்து தங்கள் தவறை மறந்து விடுகறோம் ...


    இரண்டு...


    ஒரு மேடை நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது .அங்கே அனைவரும் ரசித்து நிகழ்ச்சியை கண்டு கொண்டு இருக்கிறார்கள் .ஒருவர் திடிரென மேடை மீது ஏறி நல்லால ..வேஸ்ட் ..எனும் படி " ஷோ ஷேடு" அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாரு..எல்லாருக்கும் குழப்பம் .என்னடா நல்லாதானே போய்ட்டு இருக்கு ..இவரு ஏன் இப்படி சொன்னாரு அப்படின்னு நினைச்சாங்க .சரி அவருக்கு மட்டும் தெரிஞ்ச குறை ஏதோ இருக்கு போல அப்படின்னு நினைச்சுட்டாங்க .ஆனா நேர்ல போய் ஏப்பா ஷோ ஷேடுன்னு அங்கே போய் சொன்னேன் கேட்டா ..இல்லீங்க எங்க வீட்ல இன்னிக்கு காலைல இட்லிக்கு கொடுத்த சட்னில உப்பே இல்ல ..அதான் அங்கே வந்து ஷோ ஷேடுன்னு வந்து சொன்னதாய் சொன்னார் .அப்ப அந்த பதிலை கேட்டவங்க நமட்டு சிரிப்பு சிரிச்சுட்டு போயிட்டாங்க ..

    அப்புறமா அவர்கிட்ட போய் வீட்ல ஷோ ஷேடுன்னா வீட்ல சொல்லுங்க ...மேடைல ஷோ ஷேடுன்னா மேடைல சோல்லுங்க ..மாத்தி மாத்தி போய் சொன்னீங்கன்னா அதுக்கப்புறம் நீங்க சொன்னாலும் நம்ப மாட்டாங்கன்னு சொல்லிட்டு வந்துட்டாங்க ..அது மாதிரி நீங்களும் சரியான இடத்துல ஷோ ஷேடு பண்ணியிருந்தா உங்களை யாரும் தப்பா நினைச்சு இருக்கமாட்டாங்க இன்குளூடிங் உங்கள் நண்பர்களும் கூட ...


    மூன்று ....

    நான் அங்கே ஒண்ணு பேசமாட்டேன் ,இங்கே ஒண்ணு பேச மாட்டேன் .எப்பவும் ஒரே மாதிரி தான்னு சொன்னீங்க .ஆனா இங்கே நிகழ்ச்சியை பாராட்டி புகழ்கிறீர்.அங்கே ஈரோடு புத்தகவிழாவே போனது வேஸ்ட்ன்னு சொல்றீங்க.நண்பர்கள் வினவினால் நான் வேறு சில காரணங்களால் போனது வீண் என்று சொன்னேன் என்கிறீர்கள் .அதை அந்த இடத்திலியே இந்த காரணத்தினால் நான் அங்கு போனது வேஸ்ட் ன்னு சொல்லி யிருந்தா நண்பர்கள் யாருமே தப்பா நினைச்சு இருக்க மாட்டாங்களே..எது சொன்னாலும் எது செய்தாலும் கிண்டல் செய்வதற்கும் ,சீண்டுவதற்கும் சிலரை ஆண்டவன் படைத்து உள்ளான் .அவர்கள் இடத்தில் அதை செய்து கொண்டே தான் இருப்பார்கள் .அவர்களை பற்றி நண்பர்கள் யாரும் பொருட்படுத்தவே மாட்டார்கள் .நான் அப்படி அல்ல என உரைத்து விட்டு அதன் பொருள்படும் படி இங்கே பதிவு இட்டால் நண்பர்கள் உங்களை தானே தவறாக நினைப்பார்கள் சம்பத் சார் இன்குளூடிங் உங்கள் நெருங்கிய நண்பர்கள் கூட ...


    நான்கு...

    செயலர் போல அரசு அலுவலர்க்காக அதாவது செல்வந்தர்களின் சார்பாக தாங்கள் சந்தா தொகையை ,புத்தக எண்ணிக்கையை பற்றி வினாக்களை தொடுக்கவில்லை..என்ன போல வசதி குறைந்தவர்களுக்கா கேட்கிறேன் என அறிவித்து உள்ளீர்கள்.உளமாற அவர்களுக்காக ,ஏன் எனக்காவும் தான் நீங்கள் வினவியுள்ளீர்கள் அதனை நினைத்து கண்டிப்பாக நான் கரம் தட்டி வரவேற்கிறேன் .ஆனால் உங்களை போன்ற ஏழைகளை மனதில் கொண்டுதான் ஆசரியர் சந்தா திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் என்பதை பணக்கார நண்பர்கள் உணர்ந்து உள்ளதை கூட நீங்கள் உணரவில்லையே நண்பரே ..ஆசிரியர் மொத்தம் இத்தனை புத்தகங்கள் ..இதுதான் விலை மொத்தமா பணத்தை கட்டிட்டு மொத்தமா புக்கை வாங்கு ,இல்லைன்னா நடையை கட்டுன்னு சொல்லவில்லையே ..அவர்களை நினைத்து தானே சந்தா A ,சந்தா B,சந்தா C..சந்தா D என பிரித்து தேவைக்கேற்ப பிடித்த

    ReplyDelete
    Replies
    1. சந்தா A ,சந்தா B,சந்தா C..சந்தா D என பிரித்து தேவைக்கேற்ப பிடித்தவற்றை வாங்க வசதி செய்து கொண்டு இருக்கறார் .இல்லை நான் ஏழை ..என்னால் வாங்க முடியுற அளவுக்கு தான் நீங்க போடனும் எல்லோரும் அது மட்டும் தான் வாங்கனும்னு நாம சொல்ல முடியாதே .அது தப்புன்னா பணக்காரன் போய் என்னால வாங்க முடியற அளவுக்கு நீங்க புத்தகத்தை போட்டுட்டே இருங்க...கம்மியா போட்டா அவ்வளவுதான் போய் சொன்னா அப்ப அதுவும் சரி என்றாகிவிடுமே.தலைக்கு போடற ஷாம்புவை எடுத்து கொள்ளுங்கள் .இருநூறு ரூபாய் டப்பா ஷாம்புவும் உள்ளது .ஒரு ரூவா பாக்கட் ஷாம்புவும் உள்ளது .ஏன்னா தயாரிக்கிற முதலீட்டார்களுக்கு ஏழையும் வேணும் ,பணக்காரனும் வேணும் .எனக்கு வசதி இல்லை .இனி ஒத்த ரூவா ஷாம்பூ பாக்கட்டை மட்டும் தான் விக்கனும் ..டப்பா ஷாம்பூவை வித்தா எப்படிங்க ...என்னால டீயே குடிக்க முடில ..இதுல டப்பாவுல ஷாம்பூ போடுவீயா ன்னு நாம போய் கேட்டா நண்பர்கள் சிரிக்க மாட்டார்களா இன்குளூடிங் உங்கள் நண்பர்கள் கூட ..



      இதனை எல்லாம் அறியாமல் தான் இப்படி பதிவுகளை இட்டேன் என்றால் கண்டிப்பாக நண்பர்கள் உங்களை இனி உணர்ந்து கொள்வார்கள் .தெரிந்தே தான் இட்டேன் என தாங்கள் சொன்னால் உங்களின் தற்போதைய சூழல் அவ்வாறு தவறு இழைக்க வைத்து விட்டது என்றே நம்புகிறோம் .

      எப்படி இருப்பினும் தங்கள் மகனின் உடல்நிலை விரைவில் நலம்பெற்று இன்முகத்துடன் உலா வர எங்கள் சேந்தம்பட்டியின் மனமார்ந்த பிரார்தனைகளை ஆண்டவனிடம் வேண்டிகொள்கிறேம்

      Delete
  64. வாட்ஸப் மற்றும் பதிவுகளில் ஈரோடு விழா நடப்புகளைப் பார்த்த போது எனக்கு ஏற்பட்ட உணர்வு இருக்கிறதே.... ஒரே வார்த்தையில் சொல்வதானால் - கடுப்பு!

    ஒரு வழியாக எனக்குள் இருந்த தயக்கங்களைக் கலைந்து ஈரோடு விழாவில் கலந்து கொள்ள ஆர்வமாகக் காத்திருந்த சமயத்தில்,
    எப்போதோ விண்ணப்பித்திருந்த ஒரு ஆன்லைன் தேர்வுக்காக தேர்வு மையத்தை சென்னையிலும், தேர்வு நாளை கரெக்டாக சனிக்கிழமையும் அறிவிப்பாக பெற்றதால் ஈரோடு விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.

    சரி இருக்கவே இருக்கிறது அடுத்த வருட விழா... இன்னும் 362 நாள் தானே!

    இரத்தப்படல அறிவிப்பு மகிழ்ச்சியே! ஆனால் ஒரே புத்தகமாக வரவில்லை என்பது மகிழ்ச்சியைக் குறைக்கிறது.

    தயாரிப்பு சிக்கல்கள், எடை, படிக்க இலகுவாக இருக்காது என்ற காரணங்களெல்லாம் ஒரே புத்தகமாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்திற்காக தேடப்பட்ட காரணங்களாக மட்டுமே எனக்கு தோன்றுகிறது!

    ஒரே புத்தகமாக வராததால், அந்த அயல்நாட்டுக்காரர்கள் நம்மை புருவம் உயர்த்தி ஆச்சர்ய கண் கொண்டு பார்ப்பார்களே... அதனை நாம் இழக்கிறோம்!

    ஒரே புத்தகமாக வராததால், ஒரே கதை - 19 பாகங்களும் என்ற அமைப்பில் வேறு எந்த கதைகளும் இல்லாததால் - இது ஒரு முன்னெப்போதும் இல்லாத, பின்னெப்போதும் வராத என்ற வரலாற்றுத் தருணத்தையும் நாம் இழக்கிறோம்!

    ஆகவே ஆசிரியர் அவர்கள் சற்று தயவு செய்ய வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்!

    ReplyDelete
  65. காமிக்ஸ்!!

    ஆதிமனிதனின் காலத்தை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். மொழியற்ற, எழுத்தற்ற, நாடோடியாய் திாிந்த ஒரு சமூகத்தைக் கற்பனை செய்து பாருங்கள். அந்த ஆதிகால மனிதன் தன் எண்ணங்களை மற்றவா்களுக்கு வெளிப்படுத்தவும், தனக்கு வேண்டியதைக் கேட்டுப் பெறவும், சித்த்ரங்களை வரைந்து காட்டினான். மான் வேண்டுமென்றால் - மான் படமும், கோழி வேண்டுமென்றால் கோழியின் படமும் வரைந்து காட்டியே பெற்றுக் கொண்டான். தன்னகத்தே உள்ள இன்னபிற எண்ணங்களையும், விருப்பங்களையும் ஓவியத்தின் மூலமே வெளிப்படுத்தியிருக்கிறான்.

    ஓவியம் என்பது மனித குலத்தின் முதற்கலை என்றால் மிகையல்ல. உண்மையில் மனிதன் பேசவும், எழுதவும், மொழி உருவாவதற்கும் முன்பாகவே ஒவியங்களின் மூலம் தன் உணா்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறான் என்ற வகையில் "ஓவியம்" என்பது மனிதனுடைய வாழ்க்கையில் தவிா்க்க முடியாத, மனிதகுல வரலாற்றிலேயே முக்கியமானதும், முதன்முதலாக உருவான ஒரு "கலை" என்ற வகையிலும் அதிமுக்கியத்துவம் பெறுகிறது.

    ஆரம்பத்தில் தன் எண்ணங்களை ஓவியங்களின் மூலம் வெளிப்படுத்திய மனிதன், பிற்பாடு ஒவ்வொரு உருவத்திற்கும் ஒரு ஒலியை எழுப்பிப் பேசத் தொடங்கினான். இந்த மாற்றங்களெல்லாம் நிகழ பல ஆயிரம் தலைமுறைகளை அவன் கடந்திருக்கக்கூடும். இன்னும் பல தலைமுறைகள் கடந்து, தான் பேசும் ஒலிகளுக்கெல்லாம் ஒரு குறியீட்டு எழுத்தைப் பயன்படுத்தியிருக்கக் கூடும். அந்தக் குறியீடுகளே பின்பு பாிமாண வளா்ச்சியடைந்து தனித்தனி எழுத்துக்களாகவும் உருவாகி இருக்கிறது. இன்னமும் கூட சீன எழுத்துக்கள் சித்திர எழுத்துக்களாகவே உள்ளதையும் காண்கிறோம்!!

    ஏறத்தாழ உலகில் உள்ள அனைத்து மக்களும் இவ்விதமே தத்தமது மொழிப் பாிமாணத்தை வளா்த்திருக்கிறாா்கள்.

    ஆரம்பத்தில் மனிதன் ஓவியத்தின் மூலமும், அதனைத் தொடா்ந்து வந்த பாிமாண வளா்ச்சியின் நீட்சியாக தற்பொழுது நாம் பயன்படுத்தும் மொழி எழுத்துக்களையும் உருவாக்கியிருக்கிறான். ஆக ஆரம்பமும், முடிவுமான ஒரு அற்புத கலை வடிவம் தான் நமது கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் இந்த "காமிக்ஸ் புத்தகங்கள்"!!!

    பழமையான, முதற்கலையான "ஓவியமும்", அதன் அதிநவீன இறுதி நீட்சி வடிவமான "எழுத்து" மொழியும் ஓாிடத்தில் இணைந்திருப்பது என்பது எத்தனை அற்புதமானது என்பதையும் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்களேன்!!

    ஒரு பூனையிடமோ அல்லது நாயிடமோ நாம் நமது எண்ணங்களைக் கூற முயன்றால், அது புாிந்து கொள்ளுமா? அல்லது அவை தமக்குள்ளேயேனும் ஏதோ சில கிறுக்கல் ஓவியங்களின் மூலமோ, அல்லது ஏதேனும் எழுதியோ தனது எண்ணங்களைப் பாிமாறிக் கொள்ள சாத்தியமாகுமா??

    இவையெல்லாம் சாத்தியமான ஒரே உயிாினம் மனிதன் என்ற வகையில் இந்த உயாிய ரசனையான காமிக்ஸ் புத்தகங்களை அணுஅணுவாய் ரசிப்போம்! மகிழ்வோம்!! கொண்டாடுவோம்!!!

    ReplyDelete
    Replies
    1. 🙈🙈🙈 🙉🙉🙉 🙊🙊🙊

      " BE HAPPY "

      Delete
    2. /// உயாிய ரசனையான காமிக்ஸ் புத்தகங்களை அணுஅணுவாய் ரசிப்போம்! மகிழ்வோம்!! கொண்டாடுவோம்!!!///---+100

      Delete
    3. ///ஒரு பூனையிடமோ அல்லது நாயிடமோ நாம் நமது எண்ணங்களைக் கூற முயன்றால், அது புாிந்து கொள்ளுமா? ///

      இவ்வளவு ஃபீல் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா முன்னமே உங்க எண்ணங்களைப் புரிஞ்சுக்க முயற்சி செஞ்சிருப்பேன்...! இனிமே சமத்தா இருப்பேன்! :)

      Delete
    4. ஐயோ சாமி,
      அதென்ன புதுக்கதையா இருக்கு!!

      ஹலோ ஈ.வி. நான் சொன்னது மனிதா்களுக்கும், விலங்குகளுக்குமான ஒப்புமை!

      அவ்வளவுதான்!!

      வேண்டுமானால் ஆடு அல்லது மாடு என மாற்றிக் கொள்ளவும்!!

      நான் வேற அா்த்தத்தோடு இதை பதிவிடவில்லை!!

      Delete
    5. பதறாதீங்க மிதுன்!! :)

      ஒரு பூனை அல்லது நாயின் எண்ணங்களைப் புரிந்துகொள்ள எந்த மனிதனாவது முயற்சித்ததுண்டா? இல்ல கேக்குறேன்! ;)

      ( எல்லாக் கமெண்ட்டுலயும் இப்படி ஸ்மைலி போட்டுக்கிடணும் - இல்லேன்னா பிரச்சினையாயிடும் போலிருக்கு!) :P

      Delete
    6. @Mithun Chakravarthi
      சான்ஸ் கிடைக்கும் போது நீங்களும் கலாய்த்து விடுங்கள் மிதுன் சகோதரரே :D
      அப்புறம் ஈரோடு விஜய் சகோதரர் எஸ்கேப் ஆகி விடுவார் (அதுவும் கேட் வாட்கில்) :P (மறக்காமல் ஸ்மைலி போட்டுட்டேன்)

      Delete
    7. அன்பு சகோதாி கடல்யாழ்!

      நானும் 😊😊😊

      ஈ.வி.யோட பூனை profile ஐ மறந்துட்டேன்!!

      (இனிமேல் என் வீட்டில் இருக்கும் பூனையைக் கூட ஆடுன்னே கூப்பிடலாம்னு இருக்கேன்!!)

      (என் வீட்டில் 7 பூனை இருக்கு;
      சாாி 7 ஆடு இருக்கு)

      😂😂😂

      Delete
  66. மேலே உள்ள படங்களில் நண்பர் செல்வம் அபிராமி யார் என்று யாரவது ஒரு நண்பர் சொல்லுங்களேன் !

    ReplyDelete
    Replies
    1. மேலிருந்து கீழே 9வது படம்

      மாயாவி சிவா சாருக்கு அடுத்த படம்

      புளூ மிக்ஸ்டு வயலட் சட்டை

      Delete
  67. இனிய வணக்கம் நண்பர்களே !
    கடல் யாழ் உதவியுடன் இந்த பதிவிற்கு வந்தேன் .. இதன் கதைகளோடும் தமிழோடும் இன்னும் உரையாட விழைகிறேன் ...
    -பாரதிமித்ரன்

    ReplyDelete
    Replies
    1. @PFB
      :))))))))))

      சகோதரரை ஈரோடு விழாவிற்கு அழைப்பு விடுத்திருந்தேன்
      அவருடைய சகோதரிக்கு குழந்தை பிறந்து உள்ளதால் அங்கு குழந்தையுடன் நேரம் செலவிட சென்று விட்டார்
      நமது காமிக்ஸ் இன்னும் சகோதரர் படிக்க வில்லை
      பக்கத்தில் உக்கார்ந்து இருப்பதால் நான் தமிழில் டைப் செய்து கொண்டு இருப்பதை பார்த்து நமது ப்ளாக் மேல் ஆர்வம் பற்றி கொண்டது
      தமிழில் நன்கு கவிதை எழுதி தள்ளுவார்

      Delete
    2. @ Bharathi Mithran

      கவிஞரே வருக!
      கடல்யாழிடமிருந்து சில
      காமிக்ஸ்களை
      கடன் வாங்கிப் படித்து
      கவிதை நடையில் உங்கள் கருத்துக்களைப் பதிவிடலாமே?

      Delete
    3. கடன் எதற்கு
      ஒரு டெக்ஸ் புக்க வாங்கியே தந்து விடுகிறேன்
      படித்து விட்டு கவிதை மழை பொழியட்டும்

      Delete
  68. வருக வருக என காமிக்ஸ் முன்னேற்ற
    கழகத்தின் சார்பாக இரு கரம் கூப்பி
    வரவேற்க்கிறேன்

    ReplyDelete
  69. @Parani from Bangalore
    சகோதரரே தங்களிடம் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் களை தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது மெயிலில் அனுப்பவும்

    ReplyDelete
    Replies
    1. அப்படியே எனக்கும்
      xiiipalanivel@gmail.com

      Delete
  70. புகைப்படங்கள் எடுத்த நண்பர்களே என்னிடம் ஒரு புகைப்படம் கூட இல்லை நேரமிருந்தால் அனுப்பிவையுங்கள் நன்றி
    xiiipalanivel@gmail.com

    ReplyDelete