Thursday, August 31, 2017

கச்சேரி தொடரட்டும் !!

நண்பர்களே,

வணக்கம். செப்டெம்பர் புலரவிருப்பது நமது இதழ்களோடுமே என்பதில் மகிழ்ச்சி எனக்கு ! இன்றைய பகலில் உங்கள் கூரியர்கள் சகலமும் கிளம்பி விட்டன என்பதால் - நாளைய தினத்தை "டப்பா உடைக்கும் படலத்தோடு" துவங்கிடலாம் ! And ஆன்லைன் லிஸ்டிங்கும் தற்போது ரெடி ; so சந்தாவில் இல்லாத நண்பர்களுமே இதழ்களைக் கைப்பற்ற விரையலாம் !! 


ஏற்கனவே ஒரு வண்டி பில்டப் தந்தாகி விட்டது என்பதால் - இனி  இதழ்களைப் பற்றிய உங்கள்  அலசல்களை ரசிப்பது தான் எனது ஜோலியாக இருக்கப் போகிறது  ! தோர்கல் இதழின் அட்டைப்படமும் சரி ; உட்பக்கங்களும் சரி - ரொம்பவே வித்தியாசமான வர்ண கலவையில் இருப்பதை பார்க்கப் போகிறீர்கள் ! அதிலும் இரவில் அரங்கேறும் காட்சிகள் கதைகளினூடே தலை காட்டும் பொழுது செம dark shades-ல் கலரிங் செய்துள்ளனர் ! அச்சில் அதை சமாளிக்க ஏகமாய் முயற்சித்துள்ளோம் ! அதற்கு நேர் மாறாய் SMURFS கதையில் முழுக்க முழுக்க செம டாலடிக்கும் கலர்கள் என்பதால் - ஓவராய் கண்ணை உறுத்தக் கூடாதே என்ற எண்ணத்தில் அங்கேயும் இயன்ற பல்டிக்கள் அடித்துள்ளோம் ! எத்தனை காலமானாலும் புதுசு புதுசாய் விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் நிலை மாத்திரம் மாறவே மாறாது போலும் ! இரு இதழ்களையும் புரட்டும் பொழுது கண்களுக்கு இதமாகத் தெரியின் - குக்கரைப் போல விசில் விடுவோம் - நிம்மதிப் பெருமூச்சோடு ! 

TEX & கிராபிக் நாவல் black & white-ல் கம்பீரமாய்த் தயாராகியுள்ள ! And ஏற்கனவே சொன்னது போல "என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்" பற்றிய உங்களின் எண்ணங்கள் ; விமர்சனங்கள் ; அபிப்பிராயங்கள் என்னவாக இருக்கப் போகிறதோ ? என்ற பரபரப்பு டெண்ட் போட்டுக் குடியேறியுள்ளது எனக்குள் ! As always - நெளிந்து நிற்கும் விரல்களோடு ஜூரிக்களின் தீர்ப்புக்காகக் காத்திருப்பேன் ! அப்புறம் இம்மாத surprise பற்றிய உங்களின் எண்ணங்களையும் அறிந்திட சுவாரஸ்யம் எனக்குள் ! 

அப்புறம் கடந்த பதிவில் "இரத்தக் கோட்டை" சார்ந்த அலசல்கள் ; quiz shows  என்று  நீங்கள் தெறிக்க விட்டுக் கொண்டிருந்ததை வாய் திறந்து ரசித்துக் கொண்டிருந்தேன் !  ஒவ்வொரு இதழுக்கும் இது போல் treatment கிட்டின் - இந்த "பொம்மை புக்" முத்திரை சீக்கிரமே காணாது போய் விடுமென்பேன் !! Awesome guys !!

சரி...நாளை முதல் செப்டெம்பரின் கச்சேரி தொடங்கட்டுமே !! Let the music begin folks !!

Our Stall # 97

மாண்புமிகு அமைச்சர் நமது மதுரை ஸ்டாலில் ! 

156 comments:

  1. Replies
    1. I - வேணும்னு விட்டீங்களா?
      வேண்டாம்னு விட்டீங்களா??

      KiD ஸ்மா்ப்!!

      Delete
    2. ஸ்டைலா இருக்கும்னு நினைச்சுட்டேன் மிதுன்.. ஹிஹி. .!!

      Delete
  2. இந்தா நாங்களும் வந்துட்டோம்ல...!!!!

    ReplyDelete

  3. வணக்கம் சொந்தங்களே.

    ReplyDelete
  4. கச்சேரி கச்சேரி களை கட்டுதடி....

    ReplyDelete
    Replies
    1. ஹே! மியூசிக் ஸ்மா்ப்?
      வாட் ராகம் யூ ஆா் பிளேயிங் யா??

      Delete
    2. கும்..ணங்...சத்..
      தட்..தடார்..டம்..டமார்..
      ஹி...ஹி...

      Delete
  5. இரவு வணக்கம் காமிக்ஸ் நண்பர்களே....

    ReplyDelete
  6. // சரி...நாளை முதல் செப்டெம்பரின் கச்சேரி தொடங்கட்டுமே !! Let the music begin folks !!//
    அருமை,அருமை.

    ReplyDelete
  7. அனைவருக்கும் இனிய வணக்கம்.

    ReplyDelete
  8. // As always - நெளிந்து நிற்கும் விரல்களோடு ஜூரிக்களின் தீர்ப்புக்காகக் காத்திருப்பேன்.//
    இந்த மாதம் நல்லதொரு வாசிப்புக்கு என்று தோன்றுகிறது சார்.ஒவ்வொன்றும் ஒவ்வொரு வெரைட்டி.

    ReplyDelete
  9. காதலுக்கும் உண்டோ
    அடைக்கும் தாழ்

    கிட் தூள் பரத்திவிட்டார் அறிமுகமே அமர்க்களம்.ஏஞ்சலினாவிடம் ஜொள் வடியும் சித்திரங்கள் படுசூப்பர் ஒவ்வொரு பிரேமும் சிரிச்சு வயிறு வலிச்சிங்.கடைசி ரெண்டு ப்ரேமும் எதிர்பாரா முடிவு.இந்த மாதிரி கிட்டின் குட்டிகதைகளை தூங்கவைக்காமல் சமயத்திற்கு ஒவ்வொன்றாக வெளியிடுங்கள் எடிட்டர் ஐயா.எனக்கும் 'குட்டி கதை' ரொம்ப பிடித்துவிட்டது

    ReplyDelete
  10. //. இன்றைய பகலில் உங்கள் கூரியர்கள் சகலமும் கிளம்பி விட்டன என்பதால் - நாளைய தினத்தை "டப்பா உடைக்கும் படலத்தோடு" துவங்கிடலாம் !///---வெள்ளி கிழமை மங்களகரமாக கொரியர் ஆபீஸ் போயிடலாம்...சூப்பரே

    ReplyDelete
  11. Crime quiz and crime time full set books 2018 Sandhaa vil I lavas inaippaaka ethirpaarkkiren

    ReplyDelete
  12. ஐயோ ஐயோ! ஒரே ஸ்மா்பா இருக்கு

    ReplyDelete
  13. ரொம்ப சந்தோஷம் சீனியர் ஸ்மர்ஃப் அவர்களே! நாளைக்கு ஸ்மர்ஃப் வில்லாவை கண்ணார கண்டுகளிக்கும் சந்தோஷத்தோடு இப்போது போய் நான் ஒரு பொடித் தூக்கம் போடப் போகிறேன்..... gud n8!

    ReplyDelete
    Replies
    1. ஸ்மா்ப்பா பொடிஞ்சீங்க பாஸு!!

      +111111111

      Delete
  14. Replies
    1. இது கண்ணாடி ஸ்மா்ப்பா??

      Delete
  15. //// தோர்கல் இதழின் அட்டைப்படமும் சரி ; உட்பக்கங்களும் சரி - ரொம்பவே வித்தியாசமான வர்ண கலவையில் இருப்பதை பார்க்கப் போகிறீர்கள் ! அதிலும் இரவில் அரங்கேறும் காட்சிகள் கதைகளினூடே தலை காட்டும் பொழுது செம dark shades-ல் கலரிங் செய்துள்ளனர்////--- இம்மாத தோர்கல் இதழ் பட்டையை கிளப்பும் என முக்கிய இடத்தில் இருந்து தகவல் கிட்டியிள்ளது. வழக்கத்தை விட தோர்கல் மேல் சற்றே அதிக ஆர்வத்தை கிளப்பி உள்ளது.

    என் சித்தம் சாத்தானுக்கு சொந்தம்--ஆசிரியர் சார் ஏகப்பட்ட பில்டப் தந்து உள்ளார்.

    கடற்குதிரை முத்திரை- டெக்ஸ் பிரம்மாக்கள் காலப்பினி& போனெல்லியின் படைப்பு.

    கடவுளே! இதென்ன சோதனை...

    ம்ம்..ம்..ம்.. அட இதை எப்படி மறந்தேன்...
    அதி நவீன யுக்தி..
    இங்கி பிங்கி பாங்கி க்கு வேலை வந்துட்டதே...

    ReplyDelete
  16. டியர் எடிட்டர்,

    "BREAKING NEWS" க்கு நன்றி!!

    என்னுடைய ஆர்வமெல்லாம் தோர்கல் மற்றும் கி.நாவல் பற்றியே. ஆவலுடன் வெயிட்டிங்! தல டெக்ஸ் பற்றி கவலையே இல்லை, எப்பவும் போல கலக்குவார் என நம்பலாம். ஸ்மர்ப்ஸ் ம்ம்ம்... No Comments.

    ReplyDelete
    Replies
    1. ///தல டெக்ஸ் பற்றி கவலையே இல்லை,///யெஸ்...
      மறுக்கா ஒருக்கா சொல்லுங்க...
      4வது இடத்தை ஆட்டத்தை துவக்காமலே பொடியர்களுக்கு பொடிஞ்சிட்டீகளா...
      ம்..அதுவும் சரிதான்...
      தங்கத்துக்கு தலையும், ஆரிஸியாவின் தலைவனும் பலப்பரீட்சை பார்ப்பகளோ...!!!
      பிங்கலத்துக்கு ச்சே வெங்கலத்துக்கு சித்தமும் பொடியும் போட்டி போடுவாங்களோ, என்பதே என் பீலிங்கும்...

      Delete
    2. ஆனாக்கா பாருங்க நண்பரே!
      ஸ்மா்ப் மேலதான் எனக்கு முதல் ஆா்வமே!

      நீட் பிரச்சனை இருக்கர சமயத்துல டாக்டா் ஸ்மா்ப் வா்ரதுனால ஒரே எதிா்பாா்ப்போடு இருக்கிறேன்!

      என்னென்ன பகடியெல்லாம் இருக்கப் போறதோ!!

      Delete
  17. ///அப்புறம் இம்மாத surprise பற்றிய உங்களின் எண்ணங்களையும் அறிந்திட சுவாரஸ்யம் எனக்குள்///--ஆஹா, ஏற்கெனவே புத்தக ஜூரம் ஏகத்தில் எகிற கிடக்க, இவர் வேறு ஏத்தி விடறாரே...
    அய்யோ விடிய விடிய தூக்கம் வராதே...

    ReplyDelete
  18. தோர்கல் ரொம்பவே ஆர்வத்தைக் கூட்டுகிறது.
    அதைவிட மிகவும் எதிர்பார்ப்பது 'கிராபிக் நாவலே '

    பிதாமகர்களின் படைப்பெனும் போது டெக்ஸ் எப்படியும் தன்னை நிரூபித்து விடுவார்.

    ReplyDelete
  19. This month reading plan ...

    1 St reading smurf
    2 nd thorgal
    3 Rd en sittham satthanukke sontham
    4 th thala

    ReplyDelete
  20. நான் முதலில் படிக்கப் போவது டெக்ஸைதான் இம்முறை பட்டையை கிளப்பப் போவது உறுதி

    ReplyDelete
  21. தமிழ் இரத்தக்கோட்டையில் வசனங்கள் அதிகம், சித்திரங்களை மறைப்பதாக சில நண்பர்கள் ஆதங்கப்படுகின்றார்களே?

    ReplyDelete
    Replies
    1. saravanan : 44 / 46 பக்கங்களுக்குள் ஒரு ஆழமான கதையை உருவாக்கும் கட்டாயம் படைப்பாளிகளுக்கு இருக்கும் போது - பக்கமொன்றுக்கு அதிக frame-கள் ; வசன பலூன்கள் என்று மிகுந்திருப்பது தவிர்க்க இயலா விஷயம் ! மின்னும் மரணம் முதலாய் எல்லா டைகர் சாகசங்களிலுமே இந்த "வசனம் நிறைய" என்ற புகார் சொல்லலாம் தான் ! இன்றைக்கும் "மி.ம" இதழைப் புரட்டிப் பார்த்தால் படங்கள் பாதி ; வரிகள் மீதி என்பது புரியும் !

      Crisp ஆக இன்னொரு "தங்கக் கல்லறை" (மறுபதிப்பு) தயார் செய்து சாத்து வாங்க யாருக்கு சார் சத்துள்ளது ?

      Delete
    2. நன்றிகள் சார்.நீங்கள் கூறுவது உண்மை தான் சார்.!!!

      Delete
  22. முதலில் நான் பொடியர்களைத் தான் பொடிவேன்.இரண்டாவது தோர்கல்.
    அப்புறம் தான் மற்றவர்கள்.

    ReplyDelete
  23. பார்சல் வந்ததும்
    முதல் மரியாதை ஸ்மர்ஃப்க்குத்தான்.
    அடுத்து சி.சா. சொந்தம்
    அப்பால தோர்கல்

    கடோசியாதான் டெக்ஸ். ! ஏன்னா ஒரு புது டெக்ஸ் கதை இன்னும் படிக்காம நம்ம கையில இருக்குன்னு அதை பார்த்துகிட்டு இருக்குற சந்தோசமே அலாதிதான்.

    ஸோ, எல்லா மாசமும் டெக்ஸ் கடைசி அஸ்திரம்தான். ஆனால் பிரம்மாஸ்திரம்.!!

    ReplyDelete
    Replies
    1. நானும் இதே வரிசையில் - அதே எண்ணங்களுடன்!

      Delete
    2. ////முதல் மரியாதை ஸ்மர்ஃப்க்குத்தான்////

      அதானே பாா்த்தேன்!!!

      வாழ்க பொடி ஸ்மா்ப்!!!

      Delete
  24. ஆத்தா... மகமாயி... நாளைக்கு சாயந்திரத்துக்குள்ள எப்படியாவது பொட்டி கைக்கு வந்து சேர்ந்திடணும் தாயி...

    (ஏற்கனவே இரண்டுமுறை கூழ்ஊத்தி - குழவை போடுறதா வேண்டிக்கிட்டது நல்லாவே ஞாபகம் இருக்கு தாயி...)

    ReplyDelete
    Replies
    1. ///ஏற்கனவே இரண்டுமுறை கூழ்ஊத்தி - குழவை போடுறதா வேண்டிக்கிட்டது நல்லாவே ஞாபகம் இருக்கு தாயி...)///

      மகமாயிக்கும் அது நல்லாவே ஞாபகமிருக்காம். வேண்டுதலை நிறைவேத்துறப்பாட்ட காணோமேன்னு இப்பதான் குறைபட்டுகிட்டு இருந்துச்சி..! நீங்க அடுத்த வேண்டுதலையும் வெச்சிட்டீங்களே குருநாயரே!?
      குரல்வளம் நல்லா இருக்கறச்சயே குழவை போட்டுடுங்கோ..! : -)

      Delete
    2. ////குரல்வளம் நல்லா இருக்கறச்சயே குழவை போட்டுடுங்கோ..! ///

      :D :D உலுலுலுலுலூஊஊஊ

      Delete
  25. ///அப்புறம் இம்மாத surprise பற்றிய உங்களின் எண்ணங்களையும் அறிந்திட சுவாரஸ்யம் எனக்குள் ! ///

    2018 சந்தா பட்டியலா இருக்குமோ??? 😍😍😍

    ReplyDelete
  26. இதழ்களை எப்போது காண்போம் என்று உள்ளது.?!

    ReplyDelete
  27. முதல் மரியாதை "என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்

    ReplyDelete
  28. ஊர் பயணம், பார்சலை பார்க்க 4 நாள் காத்திருக்க வேண்டும்... ஹ்ம்ம்....

    ReplyDelete
  29. கடந்தமாதத்தில் கார்ட்டூன் வரிசையில் ஏதும் வெளியாகாததால் எதையோ இழந்தமாதிரியான மனநிலை இருந்துவருகிறது! குட்டி குட்டி ஸ்மர்ஃப்புகள் அதை இட்டுநிரப்புவார்கள் என்ற சந்தோசம் இப்போது! கதைக்களம் ஒரு டாக்டர் ஸ்மர்ஃபைச் சுற்றியிருப்பதாலும், கதையில் ஸ்மர்ஃபி இருப்பதாலும் ரகளைக்குப் பஞ்சமிருக்காது என்றே நினைக்கிறேன்!

    முதல் தேதியும் அதுவுமாய் டென்ஷனான ஆபீஸ் வேலைகளின் முடிவினில் - ஒரு அழகான ஸ்மர்ஃப் வில்லாவில் நானும் கொஞ்ச நேரமாவது உலவித்திரியமுடியுமெனில் - அது காமிக்ஸ் தந்த வரமல்லவா?

    ReplyDelete
    Replies
    1. ////ஸ்மர்ஃபி இருப்பதாலும்////

      நானும் ரொம்ப ஸ்மா்ப்பா இருக்கேன்!

      Delete
    2. ஏலேலோ ஸ்மைலஸா!

      Delete
  30. வரட்டும் பாக்கலாம் சார் அந்த முன்பதிவு வண்டியில் எத்தனை பெட்டிகள் இணைந்துள்ளது சார்

    ReplyDelete
  31. I am waiting for new properties and purchases in SEPTEMBER. I WILL ATTEND MADURAI BOOK FAIR. ANYBODY INTERESTED TO ATTEND MADURAI PLEASE CONFIRM OUR WHATSUP GROUP """ COMICS LOVERS ASSOCIATE'S """.

    ReplyDelete
  32. @ திரு விஜயன்.

    //"என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்" பற்றிய உங்களின் எண்ணங்கள் ; விமர்சனங்கள் ; அபிப்பிராயங்கள் என்னவாக இருக்கப் போகிறதோ ? என்ற பரபரப்பு டெண்ட் போட்டுக் குடியேறியுள்ளது எனக்குள் ! As always - நெளிந்து நிற்கும் விரல்களோடு ஜூரிக்களின் தீர்ப்புக்காகக் காத்திருப்பேன் !//

    சுட சுட படித்து எதுனா ஒரு பக்கம் குறையாம கிறுக்கி உங்களை குழப்பியடிக்க முடியாதபடிக்கு ஆகிட்டதை நினைச்சாதான் துக்கம் துக்கமா வருது ஸார்....அவுக்..அவுக்...

    ஐ மீன்....இரண்டுவார காலம் பறந்து,நடந்து,சவாரி செய்து என கலந்து கட்டிய பயணத்திற்கு கிளம்பிவிட்டதால்...

    இரண்டுவாரம் புத்தகத்தை கையில் தொட்டுபார்க்கவே சான்ஸ் லேதுங்க... :(((( அப்புறம் இந்த ரெண்டுவாரம் 'மாத்தியோசி' க்கும் லீவுங்க.!

    லீவுக்கு லெட்டர் தரணுமில்லையா..!?!? லீவ் லெட்டர் பார்க்க...இங்கே'கிளிக்'

    பி.கு: எதுனா பண்ணி கதையை பொடிஞ்சிடும் முயற்சி....விடாது கறுப்பு...ஹீ.ஹீ..!

    ReplyDelete
  33. இந்த முறை முதலில் படிக்க போவது தோர்கல் தோர்கல் .... தோர்கல் தவிர வேறு எந்த கதைக்கும் வாசிப்பில் இந்த முறை முதலிடம் கிடையாது. அப்புறம் பெட்டியை திறந்த உடன் பார்க்க விழைவது அந்த "சர்ப்ரைஸ்".

    மற்ற கதைகள் வேலைக்கு நடுவில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் படிக்க வேண்டும்.

    ReplyDelete
  34. யாஹூ.....கொரியர் தகவல் வராம மெளன விரதம் கலைக்க கூடாதுன்னு இருந்தேன் ..வந்துருச்சு ...

    சூப்பர் ....இன்று மாலை வழக்கம் போல புத்தகம் புரட்டல் மட்டும் அல்லாமல் ஏதாவது ஒரு இதழையாவது படித்து முடித்தவிட வேண்டும் என உறுதி பூண்டுள்ளேன் ..காரணம் அனைத்து இதழ்களின் எதிர்பார்ப்பும் அப்படி...இதழ்களை கையில் ஏந்தியவுடன் தான் எவர் முதலில் என முடிவெடுக்க வேண்டும் ..



    இந்த முறையாவது சிங்கத்தின் வயது தெரியுதான்னு வேற பாக்கனும் ...

    ReplyDelete
  35. பார்சலை கைப்பற்றி அந்த சர்ப்ரைஸ் என்னான்னு பார்த்தாச்சு.....

    ஹீர்ரா....ஹே...சூப்பரு...

    அட்டகாசம்,

    அருமை,

    அது
    அது
    அது...

    இதுவரை வெளிவந்த அனைத்து முத்து, லயன், திகில், மினி, லைப்ர்ரி...என அனைத்து பிரகாஷ் பப்ளிசர்ஸ் வெளியீடுகளின் லிஸ்ட்...

    அருமையான கிஃப்ட் சார்...

    நன்றிகள்...நன்றிகள்...

    ReplyDelete
    Replies
    1. என்னது நமது இதழ்களின் அட்டவனை வரிசை கையேடா ...

      வாவ்......அட்டகாசமான பரிசு ....அருமையான இணைப்பு...ஐயோ....இப்போது இதழ்களை விட முதலில் இந்த அட்டவனையை பார்க்க மனது துடிக்கிறதே.....


      நேற்று அலுவலகத்திற்கு போட்ட விடுமுறையை இன்று போட்டிருக்க கூடாதா ...ஏமாந்து போச்சே ...:-(

      Delete
  36. சென்ற மாதத்தின் ஒல்லி குச்சி ஒடம்புக்காரியான பார்சலுக்கு பிறகு, கொஞ்சம் கும்முனு இருந்த இம்மாத பார்சலை கையில் வாங்கும்போதே வாயெல்லாம் பல்...

    2கருப்பு வெள்ளை&2கலர் என சமமான போட்டிக்களன்...

    ஆசிரியர் சாரின் ஏகப்பட்ட ஏத்திவிடலை(அதாம்பா பில்டப்) அடுத்து 10மணிக்காக காத்து இருந்து கொரியர் ஆபீஸ்லயே பார்சலை கைப்பற்றினேன்...

    அடுத்த நிமிடம் கடையில் வந்து திறந்து, கவரை வெளியே எடுப்பதற்குள் அந்த கிஃப்ட் என்னான்னு அவசரப்பட்ட மனதுடன் ஓப்பன் பண்ணினால் முதலில் அந்த "நீங்களும் எடிட்டர் ஆகலாம்" என்ற 2018 சந்தா செலக்சன் பேப்பர் தான் கண்ணில் பட்டது. இதாஆஆஆ அந்த கிஃப்ட் என ஒருநொடி ஏமாந்து, மறுபடியும் நிதானமாக எடுக்க நடுவே இருந்த இந்த
    "ஒரு காமிக்ஸ் பாஸ்போர்ட்"- என்ற அட்டவணை கண்ணில் பட்டது. ஆகா தன்னியனானேன் என புரட்ட நச்சுனு 6லோகோக்கள் முன்பக்கம், நடுவே பிரதானமாக காமிக்ஸ் "தல" டெக்ஸின் பவளசிலை மர்ம போட்டோவுடன் பட்டையை கிளப்ப,ஆகா தலைக்கு உண்டான கெளரவம் இதல்லவோ என குறித்த மனதுடன் பட்டியலை பார்த்து மகிழ்ந்தேன்.

    பழங்கால சேகரிப்பாளர்கள் இனிமேல் இதன் கூட்டல் குறையை பிரிச்சி மேய்வாங்க, சாலியா பொழுது போகும்...

    ReplyDelete
  37. நான்கு அட்டைகளின் தரவரிசை அடுத்து...

    ஏகப்பட்ட முறை ஒப்பீட்டு பார்த்தபின்

    தோர்கல் முதலிடம்....
    அந்த இளம் மஞ்சள் பின்னனியில் வெள்ளியோடை;
    கரையில் மதர்த்த மனசுடன் ஆரிஸியா;
    பூட்டிய விற்களுடன் தோர்கல் ஏஜிர்சன் கோஷ்டி என மனசை கவர்ந்த அட்டைப்படம்.

    2வது இடம்...
    டெக்ஸும், கார்சும் ஆளுக்கு இரண்டாக துடிக்கும் துப்பாக்கிகளுடன் நிற்க, இடையே புகுந்து போகும் இரட்டை குண்டுகள், அவைகள் துளைத்து சென்றதால் தெறித்து சிதறும் கண்ணாடி ஜன்னல், சீரியசான சாகச ஜோடி என கலவையான அட்டை.
    பின் அட்டை வழக்கமான பரபரப்பான ஆக்சன் காட்சிகள் கலந்து கலக்குகின்றன...

    கடற் குதிரை பாணியில் எழுத்துக்கள் அம்சம், ஒவ்வொரு பணியிலும் நேர்த்தியை கூட்ட விழையும் உங்கள் அணிக்கு வணக்கங்கள்+பாராட்டுக்கள் சார்.

    3வது இடத்தை பொடியர்களும், சாத்தானும் கூட்டாக...
    பொடியர்களின் அட்டை வர்ணம் இதமான கலவை...
    சித்தம் கலங்கி முகத்தை பொத்தி அழும் யுவதி-அட்டையிலேயே கதையோட்டம்.அம்மாடியோவ்...

    ReplyDelete
  38. பார்சலை கைப்பற்றியாச்சே ..!!

    ஸ்மர்ஃப் - டாலடிக்குது
    சி.சா. சொ - மிரளவைக்குது
    தோர்கல் - பொளந்துகட்டுது
    கடல்முத்திரையின் முத்திரை - போட்டுத் தாக்குது

    சர்ப்ரைஸ் - சாச்சேப்புடுச்சி..! : -)

    ReplyDelete
  39. இதழ்களை புரட்டி பார்க்கையில் புது மையின் வாசம் நாசியை துளைக்கிறது கடற் குதிரையின் முத்திரையில்...

    அத்த சித்தம் சாத்தானுக்கே சொந்தம்...அம்மோடியோவ் அசத்தலான வித்தியாசமான ஓவியங்கள்... பார்த்தவுடன் மனதை கவருகிறது. அது என்ன வகைனு டெக்னிகலாக ஏதும் உள்ளதா என விசயம் தெரிந்த நண்பர்கள் கூறுங்கள். முதலில் இதை தான் படிக்கனும் போல, அப்படி ஒரு வசீகரிக்கும் நுட்பமான வகையில் நேர்த்தியாக உள்ளது. சித்திரக்கதை என சொல்வது கச்சிதமாக இதற்கு பொருந்தும்...

    கடற்குதிரை:- இதுவரை வெளிவந்த டெக்ஸ் கதைகளிலேயே சீனியர் கதை என ஆசிரியர் சார் தெரிவித்து உள்ளார். இத்தாலிய டெக்ஸ் வரிசையில் இது 16ம் வெளியீடாம், அப்டீனா எம்புட்டு சீனியர் கதை... ஓவியங்கள் அப்படியே ட்ராகன் நகரை ஞாபகப்படுத்துகின்றன...
    இதன் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம், எனக்கு மிகவும் பிடித்த புராதன வழக்கமான ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒரு பெயர்...இதில் ஒரு சாம்பிள்-"மர்மத்தின் ஆரம்பம்", "கிட்டுக்கு ஆபத்து" -என தலைப்புகளே நாக்கில் நயாகராவை ஊற்றெடுக்க வைக்கின்றன...

    தோர்கல் அட்டையை புரட்டிய உடன் முதல் பக்கம் கண்ணில் மின்னுவது இரத்த படலத்தின் புக்கிங் விளம்பரம்.இதழ்களில் இந்த விளம்பரத்தை பார்த்தவுடன் இன்று நிறைய நண்பர்கள் இன்ப அதிர்ச்சி அடைவது உறுதி.

    திறந்த மனதுடன் வரவேற்கும் "ஜெஸ்ஸிகா" வை கடந்து பக்கங்களை (சிரமப்பட்டு தான்...ஹி..ஹி...) புரட்டினால் பக்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வர்ண ஜால வித்தை செய்யும்.
    ஒவ்வொரு பக்கமும் அதற்கு ஏற்றார் போல பின்னணி வர்ண கலவையுடன் அசத்துகிறது. கதை படிக்கும்போது நாமும் இதை பரிபூரணமாக உணரலாம்...தோர்கலுக்கு ஒரு திருப்புமுனையாக இந்த இதழ் அமைய கூடும்....

    பொடியர்கள் வழக்கம் போல பின்னி பெடலெடுக்கிறார்கள்...

    தலையா, சாத்தானா என்ற போட்டியில் சாத்தானை முதலில் எடுத்து கொள் என தூண்டிய ஓவியங்களில் மூழ்க புறப்படுகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் 6 சந்தாதாரர்கள் நவம்பர்1ல் வரும் ட்ராகன் நகரில் தங்களது போட்டோ இடம்பெற விரும்பினால் அதற்கான கால அவகாசம் மேலும் 10நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது...
      உங்கள் போட்டோக்களை உடனடியாக அனுப்ப வேண்டிய முகவரி,
      photos_lioncomics@yahoo.com

      Delete
    2. தகவலுக்கு நன்றி சகோதரரே

      Delete
    3. நன்றி பாஸ்!

      ஆனா both ids failing பாஸ்:

      photos_lioncomics@yahoo.com
      photos-lion@yahoo.com

      யாருக்காவது success ஆச்சுங்களா பாஸு?

      Delete
  40. சுருக்கமாக
    அனைத்தும்
    அற்புதம்.
    அட்டணை அட்டகாசம்.
    Xiiiன் கேட்லாக் சூப்பரோ சூப்பர்.

    ReplyDelete
  41. Received books, thanks. What is the booking status of XIII sir.

    ReplyDelete
  42. இந்த மாதம் Xiiiமுன்பதிவு எதிர் பார்ப்புகளை தாண்டி மிகஅதிக எண்ணிக்கையில் புக் செய்யப்படும்.
    நண்பர்களே முன்பதிவுக்கு முந்துங்கள்.
    காமிக்ஸ் இதிகாசத்தை கைப்பற்றுங்கள்.

    ReplyDelete
  43. விஜயன் சார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்,

    வணக்கம். நான் நமது தளத்தின் மௌன வாசகன், நமது காமிக்ஸ் நல்ல முன்னேற்றமான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. எனக்கு அதில் மிக்க மகிழ்ச்சி!!!

    நமது காமிக்ஸ் அடுத்த தலைமுறைக்கு முன்னேற வேண்டும்... அதற்காகவே இந்த விண்ணப்பம். நாம் இப்போது பல/சில நல்ல முயற்சிகளை செய்துகொண்டு இருக்கிறோம்(காமிக்ஸில்). நாம் ஏன் மங்கா வகை காமிக்ஸ் முயற்சிக்க கூடாது (இதைப்பற்றிக்கூட ஆசிரியர் ஒருமுறை கூறியதாக நியாபகம்). இப்போது சிறியவர்கள் / மாணவர்கள் அனைவரிடமும் மங்கா கலாச்சாரம் பரவி வருகிறது. எனக்கும் கூட மங்கா மிகவும் பிடித்தே இருக்கிறது. தினமும் mangarock application ல் ஒரு காமிக்ஸாவது படித்து விட்டே தூங்குகிறேன். எப்படியும் நமது காமிக்ஸிலும் 5 அல்லது 6 வருடங்களில் மங்கா வரத்தான் போகிறது. அதை ஏன் நாம் முன்னமே முயற்சிக்க கூடாது. உண்மை ஒன்றை இங்கே சொல்லவேண்டும்... நான் நமது காமிக்ஸ்ன் நீண்ட நாள் வாசகன், இப்போது நமது காமிக்ஸ் வந்தாலும் அதை வாங்கி வைத்து கொண்டு மங்காவைத்தான் நான் தினமும் படிக்கின்றேன் (யாரும் இதை தவறாக நினைக்க வேண்டாம்). மங்காவில் பல நல்ல கதைகள் இருக்கு. நாமும் சின்னதாக முயற்சி செய்வோமே...

    நன்றி.....

    ReplyDelete
    Replies
    1. அதென்னங்க மங்கா!!

      கொஞ்சம் விவரமா சொல்லுங்கள் நண்பரே!!!

      Delete
    2. @Mithun Chakravarthi
      மங்கா என்பது ஜப்பானில் வெளிவரும் படக்கதைகள் சகோதரரே

      Delete
    3. சப்பானிய பொம்மை பொஸ்தவங்களில் அப்படி என்னதான் இருக்குன்னு தெரிஞ்சுக்க நானும் ஆவலா இருக்கேன்!

      மங்கா படைப்பாளிகளுக்கு இப்பவே ஒரு கடுதாசி போட்டு 'உங்க கோரிக்கையை ஏத்துக்கிடறோம்'னு சொல்லிடுங்க எடிட்டர் சார்.

      உடைந்த மூக்காரின் சகாப்தம் முடிவுக்கு வர்றமாதிரி இருக்கும் இந்தவேளையில், சப்பை மூக்கர்களை களமிறக்குவது பொருத்தமாய் இருக்கும்... மூக்குக்கு-மூக்கு சரியாப் போய்டும் பாருங்க?!

      Delete
  44. ஆத்தாவுக்கு கூழ் ஊத்தும் நிலுவை எண்ணிக்கை தற்போது 3 ஆக உயர்ந்திருக்கிறது! யெஸ்... புத்தகங்களை கைப்பற்றியாச்சு! ஆத்தா மகமாயியின் மகிமையே மகிமை!

    ( கோவிச்சுக்காத ஆத்தா... சீக்கிரமே ஊத்திப்புடறேன். என்னியப் பத்திதான் உனக்குத் தெரியுமில்லே? )

    ReplyDelete
  45. மறக்காம ஊத்திடனும்
    அப்புறம் அடுத்த மாசம் புக்ஸ் வந்து சேரரது தாமதம் ஆகிடும்

    ReplyDelete
    Replies
    1. ஆத்தாவே மறந்துபோய் அப்படியே விட்டுட்டாலும், நீங்க விடமாட்டீங்க போலிருக்கே சகோ! :)

      Delete
  46. புத்தகங்கள் திருப்பூரில் இருப்பதால் நாளைதான் பார்க்க முடியும் ... :)

    ReplyDelete
  47. இந்தமாத சந்தா சர்ப்ரைஸ் - எதிர்பாராத நிஜமானதொரு சர்ப்ரைஸ்!! 'இதுபோன்றதொரு பட்டியல் ஒரு சிறு புத்தக வடிவில்' என்பது பலரது மெளனமான ஆசைகளில் ஒன்று! அது இன்று அட்டகாசமாய் நிறைவேறியிருக்கிறது! சந்தா கட்டாத பலரும் ஏக்கப்பெருமூச்சு விடப்போவது உறுதி!

    பின்னட்டையில் காமிக்ஸ் பாஸ்போட்டுக்காண்டி கேட்கப்பட்டிருக்கும் சுயவிவரங்கள் - ஹா ஹா ஹா... நக்கல்/நையாண்டி நகைச்சுவையின் உச்சம்!! :))))

    ReplyDelete
  48. இந்தமாத இதழ்களை ஒருவழியாக மாலை கைப்பற்றியாகி விட்டது,முதல் புரட்டலில் அனைத்து இதழ்களும் அருமை,எதை முதலில் வாசிப்பது,வசிப்பது,சுவாசிப்பது இப்படி குழப்பமா யோசிக்க வைத்து விட்டீர்களே,கதை சொல்லும் படங்கள் என்று நான் அடிக்கடி கூறும் வாசகத்தை தோர்கிலும்,எ.சி.சா.சொ இதழும் நிரூபிக்கின்றன,இந்த மாத சர்ப்ரைஸும் அட்டகாசம்,பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.உங்களின் அக்கறையும்,உழைப்பும்,மெனக்கெடலும் வெளிப்படையாகவே தெரிகிறது.
    மொத்தத்தில் எங்களுக்கு மகிழ்ச்சியும்,மனநிறைவும்.
    👏👏👏👏👏

    ReplyDelete
  49. தோர்கல் வண்ண அச்சு வெளிரடிக்க்கிறேன் பேர்வழி என்று மிகவும் சொதப்பிவிட்டது. ஆங்கில இதழின் வண்ண அச்சுடன் ஒப்பிட்டால் இது விளங்கும். A great story spoiled by a shabby print :-(

    Consolatory has been Smurfs. இதமாக உள்ளது - எனக்கு பிடித்த smurf கதையும் கூட ...

    ReplyDelete
  50. என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்.. மிக அருமை..

    டெக்ஸ் கதை.. பட்டாசு.. அதுவும் இளம் கிட்டின் கார்சனை சந்திக்கும் சந்தோச தருணம்.. க்ளாசிக்...

    ReplyDelete
  51. சர்ப்ரைஸ் NOT RECEIVED

    ReplyDelete
  52. ஆசிரியரின் காமிக் டைம்மில் சந்தா 'A' என்று குறிப்பிட்ட டெக்ஸ் பின்புறம் விளம்பரத்தில் சந்தா 'B' என்று குறிப்பிடப்பட்டுள்ள

    ReplyDelete
  53. ***** டாக்டர் பொடியன் ******

    நீலப்பொடியர்களின் உலகத்தில் ஒரு டாக்டர் எப்படி உருவாகிறார்; வைத்திய முறைகள் எப்படி உருவாகின்றன; ஒரு க்ளினிக் எப்படி பெரிய மருத்துவமனையாக உருவாகிறது; மாற்று வைத்திய முறைகள் எப்படி உருவாகின்றன; நோயாளிகள் எப்படி உருவாகிறார்கள்; 'நர்ஸ்' பணியமர்தப்படுவதன் நோக்கம் என்ன - என்பதையெல்லாம் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துச் சிரிக்கும்படியாக அழகாகப் படைத்திருக்கிறார்கள்!

    அல்லோபதி, ஹோமியோபதி, சைக்கோதெரபி, பிசியோதெரபி, அக்குபஞ்சர், மட் தெரபி, ஹைட்ரோதெரபி - என்று சகலவிதமான மருத்துவமுறைகளையும் சகட்டுமேனிக்கு கலாய்த்துத் தள்ளியிருக்கிறார்கள் இக்கதையின் படைப்பாளிகள் - ஆனால் டாக்டர்களே படித்துச் சிரிக்கும் விதத்தில் மிக அழகாக! விடுவாரா நம் உள்ளூர் படைப்பாளி...?!! தன் நகைச்சுவை தெறிக்கும் வசனங்களால் சில இடங்களில் இன்ஸ்டன்ட் கெக்கேபிக்கேக்களையும், பல இடங்களில் கிச்சுகிச்சுகளையும் ஏற்படுத்தி ரணகளம் செய்திருக்கிறார்! ( ஓவரா வேலை செஞ்சா வரும் வியாதியின் பெயர் - 'அலுப்போட்டிகோ சலிப்பாட்டிகா'வாம்) சந்தடி சாக்கில் சமகால நிகழ்வுகளும் ரகளையாய் பகடி செய்யப்பட்டிருக்கிறது!

    முழுநீளக்கதை - ஒரு ப்ளஸ் பாயிண்ட்!
    அட்டைப்படம் - அபாரம்!
    பிரின்ட்டிங் & கலரிங் பாணி - பட்டாசு!
    தலைப்பு மாத்திரம் ' டாக்டர் ஸ்மர்ஃப்'னே இருந்திருக்கலாமோ?

    என்னுடைய ரேட்டிங் : 9.75/10


    ReplyDelete
  54. SEP -1 -1961ல் வெளிவந்த டெக்ஸின்
    கடல் குதிரையின் முத்திரை இதழை 56
    வருடங்களுக்குப்பிறகு அதே SEP 1-2017
    அன்று எங்கள் கைகளில் வழங்கிய
    விஜயன் சாருக்கு வந்தனம்.

    ReplyDelete
    Replies
    1. அடடே!! இப்படியொரு ஒற்றுமையா?!!

      Delete
    2. சூப்பரான கண்டுபிடிப்பு கணேஷ் சார்

      Delete
    3. ஆசிரியரின் ஹாட் லைன் பகுதியில்
      ககுமு புத்தக முதல் பக்கத்தில் அவர்
      தெரிவித்த செய்திதான்.
      நானாக ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை.

      Delete
    4. கணேஷ் சாா், சூப்பா்!

      Delete
  55. My favourite manga series
    1. Death Note by Tsugumi Ohba
    "Light Yagami is an ace student with great prospects - and he's bored out of his mind. But all that changes when he finds the Death Note, a notebook dropped by a rogue Shinigami death god. Any human whose name is written in the notebook dies, and now Light has vowed to use the power of the Death Note to rid the world of evil. But when criminals begin dropping dead, the authorities send the legendary detective L to track down the killer. With L hot on his heels, will Light lose sight of his noble goal...or his life?"
    Why I feel it should be on this list:
    A title that I feel anyone can enjoy. The premise is simple and the plot takes you places you didn't expect. The characters feel real and well written. It's easy to get into, and will keep you on the edge of your seat.
    Kindly check it....
    Thx frndz

    ReplyDelete
    Replies
    1. 2. One-Punch Man by ONE
      "Nothing about Saitama passes the eyeball test when it comes to superheroes, from his lifeless expression to his bald head to his unimpressive physique. However, this average-looking guy has a not-so-average problem—he just can’t seem to find an opponent strong enough to take on! Every time a promising villain appears, he beats the snot out of ’em with one punch! Can Saitama finally find an opponent who can go toe-to-toe with him and give his life some meaning? Or is he doomed to a life of superpowered boredom?"
      Why I feel it should be on this list:
      A fairly new series that has made a huge splash in the manga and anime world. It pokes fun at a lot of the stereotypes found in manga. You would think there wouldn't be much tension in battles where the protagonist can destroy any opponent with one punch, but they somehow found a way.

      Anime Series link : http://animecruzers.io/download-one-punch-man-episodes-mini-mkv-mp4/
      Download panni paarunga frndz, apram neengaley editor kita kepinga....

      Delete
  56. 3. Attack on Titan by Hajime Isayama (Intha maadhiri oru manga series ah inime yaralaiyum edukave mudiyathu, apdi patta oru super seriesithu)
    Summary:
    "In this post-apocalytpic sci-fi story, humanity has been devastated by the bizarre, giant humanoids known as the Titans. Little is known about where they came from or why they are bent on consuming mankind. Seemingly unintelligent, they have roamed the world for years, killing everyone they see. For the past century, what's left of man has hidden in a giant, three-walled city. People believe their 100-meter-high walls will protect them from the Titans, but the sudden appearance of an immense Titan is about to change everything."
    Why I feel it should be on this list:
    A series that is still being published, and has everyone clamoring for more. The world in Attack on Titan is incredibly well thought out, and if you crave action, look no further.

    Must Google it frndz also available in anime....

    ReplyDelete
    Replies
    1. Innum niraiya iruku.....
      - Mob Psycho 100
      - My Hero Academia (Personal Favourite)
      - Full Metal Alchemist
      - Fairy Tail
      - Bleach
      - Berserk
      - Magi
      - Kingdom
      - Vagabond (Superb Artwork)
      & Last but not least My favorite of all time Manga
      - One Piece...

      Idhula edhu vandalum enaku magilchiey.....

      Delete
    2. கூகுளின் உதவியுடன் Attack on Titan by Hajime Isayama'ன் சில பக்கங்களைப் புரட்டினேன். சித்திரங்கள் - பிரம்மிக்கச் செய்கின்றன!!!

      ஹம்ம்ம்...

      Delete
  57. Blog-ல் எனது படம் வரவில்லை. மற்றும் எனது ID jegangatq என இருக்க வேண்டும். ஆனால் jegang என்று மட்டுமே உள்ளது. ஏனென்று தெரியவில்லை.

    ReplyDelete
  58. அப்பாடி இதற்கு முந்தைய பதிவில் விடுபட்டது தற்பொழுது தானாகவே சரியாகி விட்டது.

    ReplyDelete
  59. கடல் குதிரையின் முத்திரை வழக்கம் போல டெக்ஸ் கதைகளில் ஒரு முத்திரை என்பது மிகை ஆகாது.

    ReplyDelete
  60. கடல்குதிரையின் முத்திரை அபார ஆர்ட்வொர்க்.படங்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல.ரொம்பவே மெஸ்மரைஸிங்கான சித்திரங்கள்.

    ReplyDelete
  61. அன்பின் ஆசிரியருக்கு,

    வணக்கம். நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு ஒரு டெக்ஸ் வில்லரின் கதையை ரசித்துப் படிக்க முடிந்ததெனில் அது கடல்குதிரையின் முத்திரைதான். பொனெல்லி பணிபுரிந்த ஆரம்பகாலக் கதை என்பது இங்கு நாம் கவனிக்க வேண்டியது. எனில் ஏன் நாம் வில்லரின் கதைகளையும் அவை வெளியான வரிசைக்கிரமத்திலேயே வெளியிடக் கூடாது, தோர்கலைப் போல? கிட்டத்தட்ட அறுநூறு கதைகள் இருக்கின்றன எனும்போது நாம் அது குறித்து கவலை கொள்ளும் தேவையும் இருக்காது என நம்புகிறேன். பதிப்பக நண்பர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்களோடு உரையாடும்போது அவர்களும் வில்லரின் புத்தாங்களே எளிதில் விற்பனையாவதாகச் சொல்கிறார்கள். ஆகவே டெக்ஸின் ஆரம்பகால / அற்புதமான சாகசங்களைத் தொடர்ந்து வெளியிடுவதன் மூலம் நாம் இன்னும் அதிக வாசகர்களைச் சென்றடைய முடியும் என எண்ணுகிறேன். கதைத் தேர்வுகளில் உங்களுக்கிருக்கும் சிரத்தையும் அதற்கென நீங்கள் அடிக்கும் குட்டிக்கரணங்களையும் அறிவோம் என்றாலும் இதுவொரு எளிய வழிமுறையாக இருக்கும் எனத் தோன்றியதால் சொன்னேன். நன்றி.

    பிரியமுடன்,
    கார்த்திகைப் பாண்டியன்

    ReplyDelete
    Replies
    1. கார்த்திகைப் பாண்டியன் : சார் , பெரியவர் போனெல்லியின் ஆக்கங்கள் சகலமும் ஹிட் ரகங்கள் என்று சொல்ல வழியில்லை என்பது தான் சிக்கலே ! சமீப நாட்களது மெகா டப்ஸாவான "அராஜகம் அன்லிமிடெட் " கூட ஆரம்பத்து வரிசையிலான கதையே ! So கதைத் தேர்வில் இன்னமும் கவனம் என்பது மாத்திரமே முன்செல்லும் பாதை என்பேன் !

      அது மாத்திரமன்றி பின்னாட்களின் மௌரோ போசெல்லி ஆக்கங்கள் முற்றிலும் ஒரு புதுப் பரிமாணத்தைக் கொணர்கிறது !

      2018-ல் the best of both worlds காத்துள்ளது என்பேன் !

      Delete
    2. ////2018-ல் the best of both worlds காத்துள்ளது என்பேன் !////

      O Super, We are waiting sir!

      Delete
    3. நண்பரே! வணக்கம்!
      நலமாய் உள்ளீா்களா!

      Delete
    4. அன்பின் மிதுன்.. வணக்கம். நான் நலம். போலவே நீங்களும் என நம்புகிறேன். பட்டாம்பூச்சிகளில் என்னுடைய தொடர்பு எண் இருக்கும். வாய்ப்பிருந்தால் அழையுங்கள். பேசுவோம். நன்றி

      Delete
    5. இம்முறை EBFல் நண்பர் கார்த்திகைப் பாண்டியன் அவர்களுடன் அதிகநேரம் செலவிடமுடியாமல் போனதில் துளியூண்டு வருத்தம் எனக்கு! :(

      Delete
  62. கடந்த 3 நாட்களாக கடும் காய்ச்சலால் பதிக்கப்பட்டதாலும், புத்தகங்கள் பெற இயலாததாலும், ஈரோடு சென்றோ, சிவகாசிக்கு பணம் செலுத்தியோ, புக் பெற வேண்டிய சூழல் இருப்பதாலும், நான் வெளியே செல்ல இயலாத காரணத்தாலும்....

    I miss you Doctor smurf!!

    Really so sad!! 😢😢😢

    வாழ்நாள் காா்ட்டூன் சந்தா ஏற்பாடு பண்ணுங்க எடிட்டா் சாா்!

    ReplyDelete
    Replies
    1. @ மிதுன்

      சீக்கிரமே பூரண நலம் பெற்று, டாக்டர் ஸ்மர்ஃபை சந்திக்க என் வாழ்த்துகள்!

      Delete
    2. ///வாழ்நாள் காா்ட்டூன் சந்தா ஏற்பாடு பண்ணுங்க எடிட்டா் சாா்!///

      நீங்க மொதல்ல வருஷ சந்தா கட்டுற வழியப் பாருங்க மிதுன் சார். இப்போ வரைக்கும் ஈரோடு பஸ் ஸ்டாண்டு கடையிலதானே வாங்கிக்கிட்டிருக்கீங்க? ;)

      ம்.. ஆவட்டும் ஆவட்டும்!

      Delete
  63. ****** என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம் ******

    அலெர்ட் : கதை (அளவாக) விவரிக்கப்பட்டிருக்கிறது!

    கிழக்கு பெர்லினின் புகழ்பெற்ற மேடைப் பாடகி மர்லினின் ராஜாங்க விசுவாசம் கம்யூனிச வெறி கொண்ட அந்நாட்டு அரசாங்கத்தால் ஏகத்துக்கும் சந்தேகிக்கப்படுகிறது. அம்மணியைத் தொடர்ந்து ரகசியமாகக் கண்காணித்து அவளது குற்றத்தை உறுதிப்படுத்த அந்நாட்டு உளவுத்துறை மதிநுட்பம் மிக்க 'ஃப்ரெடரிக்' என்பவரை நியமிக்கிறது! அவளது வீடு முழுக்க ஒட்டுக்கேட்கும் கருவிகள் பொருத்தப்பட்டு இரவுபகலாகக் கண்காணித்தில் - அவர்களது சந்தேகம் உறுதிப்படுத்தப்படுகிறது.

    ராஜாங்கத்தின் மேல்மட்டக் குழு ஒன்றுகூடி, அம்மணியைப் போட்டுத்தள்ளவும் முடிவெடுக்கிறார்கள்! ஆனால், உளவுபார்க்க பணியமர்த்தப்பட்ட ஃப்ரெடரிக்கிற்கு அதில் விருப்பமில்லை. காரணம் - அம்மணியின் மீதான ஏதோவொரு மையல்! தன்னைவிட வயது குறைவான இளைஞனிடம் காதல்வயப்பட்டுக் கிடந்த மர்லினை தனது புத்திச்சாலித்தனத்தால் அவனிடமிருந்து பிரிக்கும் ஃப்ரெடரிக் - அவளது தற்கொலை முயற்சியைத் தடுத்து - அரசாங்கத்தால் அவளது உயிருக்கு நேரவிருக்கும் ஆபத்தை எடுத்துச் சொல்லி - தன்னை ஒரு ஆபத்பாந்தவனாக அவளிடம் முன்நிறுத்திக் கொள்கிறான்! அதன் பலனாக அவன் 'ஆசைப்பட்டதையும்' அடைகிறான்!

    ஃப்ரெடரிக்கின் நடவடிக்கைகளை சந்தேகிக்கும் உளவுத்துறையின் மேல்மட்டம், மர்லினை வேவுபார்க்கும் பணியிலிருந்து அவனை நிறுத்திவிட்டு, மர்லினோடு ஃப்ரெடரிக்கையும் சேர்த்துப் போட்டுத்தள்ள முடிவெடுக்கிறது. தனது மதிநுட்பம் மிக்க செயல்பாடுகளால் இதனை மோப்பம் பிடித்துவிடும் ப்ரெடரிக், மர்லினோடு தப்பிச் சென்று 'பெர்லின் சுவருக்கு' அப்பாலுள்ள மேற்கு பெர்லினுக்குள் தஞ்சமடைந்துவிட திட்டமிடுகிறான்!

    ஒரு ரகசிய சுரங்கப் பாதையின் வழியாக மேற்கு பெர்லினுக்குள் நுழையத் திட்டமிடும் ஃப்ரெடரிக் - ஒரு கட்டத்தில் மர்லினுக்கு மட்டும் தப்பியோடுவதற்கான ஏற்பாட்டைச் செய்துவிட்டு - தான் பின்தங்கிவிடுகிறான்!

    * மர்லின் உயிர்தப்பினாளா?
    * ஃப்ரெடரிக் தப்பியோடாமல் பின்தங்கிவிடுவதன் காரணம் என்ன?
    * மர்லினும், ஃப்ரெடரிக்கும் மீண்டும் சந்தித்தார்களா?
    * ஃப்ரெடரிக்கின் உயிருக்கு வலைவிரித்த அரசாங்கத்தின் பிடியிலிருந்து அவன் உயிர்தப்பினானா?
    - போன்ற கேள்விகளுக்கெல்லாம் நம்மால் சிறிதும் யூகிக்க முடியாத திருப்புமுனைகளுடன் பதில் சொல்கிறது மீதக் கதை!

    ஓவியங்கள் - அபாரம்!!!
    கி.நா - என்ற முத்திரையுடன் வெளியாகியிருப்பினும் நேர்கோட்டிலேயே கதை சொல்லப்பட்டிருப்பதால் புரிந்துகொள்வதில் சிரமமேதுமில்லை! கதையின் சில அழுத்தமான திருப்புமுனைகளும், ஓவிய பாணியுமே இதை 'கி.நா' ஆக்குகின்றன!

    சென்ற LGN வெளியீடான 'ஒரு முடியா இரவு' சற்றே அதிகப்படியான வசனங்களைக் கொண்டிருந்தது. ஆனால், இந்தக் கதையில் வசனங்களின் நீளம் சுருக்கப்பட்டு, வீரியம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. சில வசனங்கள் நம்மில் ஏற்படுத்தும் அதிர்வுகளை வார்த்தைகளால் விவரிக்கவே இயலாது! செம்ம!!

    'பெர்லின் சுவர்' பற்றிய சுவையான ஸ்தல புராணங்களை இத்தளத்தின் ஆராய்ச்சியாளர்களிடம் நிறைய ஆவலோடு விட்டுவிட்டு...

    'என் சித்தம் LGN வசம்' என்பதை கொஞ்சம் கிறக்கத்தோடு சொல்லிக்கொண்டு...

    இதுபோன்ற வித்தியாசமான கதைகளைப் படித்துப் பிரம்மிக்க வாய்ப்பளித்த LGNக்கு நன்றிகூறி...

    _/\_

    ReplyDelete
    Replies
    1. அபாரம்,அருமை,அட்டகாசம்.
      👏👏👏👏👏

      Delete
    2. ஈரோடு விஜய் //சென்ற LGN வெளியீடான 'ஒரு முடியா இரவு' சற்றே அதிகப்படியான வசனங்களைக் கொண்டிருந்தது. ஆனால், இந்தக் கதையில் வசனங்களின் நீளம் சுருக்கப்பட்டு, வீரியம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. //

      கதைகளின் பாணியில் நிறையவே மாற்றமல்லவா - அங்கும், இங்கும் ? "எ.சி.சா.சொ" -வில் கதாப்பாத்திரங்கள் எத்தனை பிரதானமோ - அதே அளவிற்கு முக்கியம் அந்தக் கிழக்கு பெர்லின் நகரமும் ! அதன் வீதிகள் ; பூங்காக்கள் ; அரங்குகள் ; மதில் சுவர் என ஏகப்பட்ட சமாச்சாரங்கள் மௌன மொழி பேசி கதை நெடுகப் பயணிப்பதால் - வசனங்கள் அளந்தே அமைக்கப்பட்டுள்ளன ! மௌனத்தின் வீரியமுமொரு அழகே என்பதால் அங்கே என் திருக்கரங்களைக் கொண்டு செல்ல முனையவில்லை !

      ஆனால் இந்தக் கதையொரு scriptwriter 's delight என்பதில் சந்தேகமே கிடையாது !

      Delete
    3. ஸ்கிரிப்ட் தந்த ஆர்வம் மட்டுமல்லாது, இந்தக் கதையோடு நான் ஒன்றிப் போனதற்கு இன்னொரு காரணமும் உண்டு ! கிழக்கு ஐரோப்பாவின் கம்யூனிச நாட்களையும் சரி, மதில்சுவர் தரைமட்டமாகிய பின்பான ஒன்றிணைந்த நாட்களையும் சரி, நேரில் பார்க்கும் அனுபவம் எனக்குண்டு !

      அந்த இரும்புத் திரை பூமிகளில் எப்போதுமே ஒரு இறுக்கம் ; ஒரு மௌனம் நிலவுவது அப்பட்டமாய்ப் புரியும் ! களையிழந்து நிற்கும் கட்டிடங்கள் ; சிதிலத்தை அரவணைக்கும் நினைவுச் சின்னங்கள் ; கலகலப்பில்லா நகரங்கள் என்று ஒருவித சோகப் போர்வை போர்த்தி கிடப்பது போல் நிறைய முறைகள் உணர்ந்திருக்கிறேன் !

      அதிலும் பெர்லின் நகரம் எப்போதுமே ஒருவித negative vibes தந்த நகராகவே எனக்கு காட்சி தந்திடுவதுண்டு ! So இந்தக் கதையில் ஒரு மௌனக் கதாப்பாத்திரமாக வலம் வரும் அந்த நகரோடு நெருக்கமாகிட சிரமம் தெரியவில்லை எனக்கு !

      Delete
    4. 'அளவாக 'னு அப்படின்ட்டு எட்டு பக்க கட்டுரையே எழுதிட்டீங்களே.

      இன்னும் புக் கைகக்கு வராததால கட்டுரையை படிக்க வில்லை.

      Delete
    5. கதையின் தலைப்பை பார்த்து இரவில் படித்து பயந்நு விடுவேனோ என்று நாளை காலைக்கு படிக்க உத்தேசம்..

      Delete
    6. ////அதிலும் பெர்லின் நகரம் எப்போதுமே ஒருவித negative vibes தந்த நகராகவே எனக்கு காட்சி தந்திடுவதுண்டு ! So இந்தக் கதையில் ஒரு மௌனக் கதாப்பாத்திரமாக வலம் வரும் அந்த நகரோடு நெருக்கமாகிட சிரமம் தெரியவில்லை எனக்கு !///

      சூப்பர் சார்!
      அப்படியே ஜப்பானுக்கும் ஒரு ரவுண்டு போய்ட்டு வந்தீங்கன்னா நாங்க 'மங்கா'வுல நாலஞ்சு கதைகள் படிச்சிக்கிடுவோம் பாருங்க!

      Delete
  64. ஈரோடு விஜய் அவர்களின் விமர்சனம் படித்து விட்டு மீண்டும் ஆறாவது தடயைாக எ.சி.சா.செ ா படித்தேன். பிறகு தான் "தன்னை விட வயது குறைவான இளைஞனிடம் காதல்வயப்பட்டுக் கிடந்த மர்லினை தனது புத்திச்சாலித்தனத்தால் அவனிடமிருந்து பிரிக்கும் ஃப்ரெடரிக்" என்பதன் விளக்கம் புரிந்தது. பக்கம் 35 ஒரு வசனம் கூட கிடையாது. எனது ரேங்க் இம் மாதம் 1. எ.சி.சா.செ ா. 2. டெக்ஸ் 3.தேரர்கல் 4. ஸ்மர்ப்.

    ReplyDelete
    Replies
    1. Senthilnathan Krishnan : ஆறாவது தடவையாகவா ? மெய்யாலுமா ?

      Delete
    2. இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லால்ல.

      நான் இன்னும் புத்தகத்தையே பார்க்கல.
      இதுல ஆறாவது முறையா படிக்கிறத பாக்கறப்ப கொஞ்சம் டென்ஷன் கலந்த பொறாமையா இருக்கு.

      Delete
    3. @ Senthilnathan Krishnan

      ஹிக்! புக்கே நேத்திக்குத்தான் ரிலீஸ் ஆகியிருக்கு.. அதற்குள் ஆறு தடவை படிச்சுட்டீங்கன்னா இந்த மாசம் முடியறதுக்குள்ள சென்சுரி அடிச்சுடுவீங்க போலிருக்கே!!!

      பை த வே, ஆறுமுறை படிக்குமளவு ஆண்டவன் உங்களுக்கு நேரத்தை அள்ளிக் கொடுத்திருப்பதில் துளியூண்டு பொறாமை எனக்கு! :)

      Delete
  65. அமைச்சர் என்ன புத்தகம் வாங்கினாா் சாா் ??

    ReplyDelete
    Replies
    1. sivakumar siva : இரத்தக் கோட்டை !

      Delete
    2. ஆஹா.. அடடா... அற்புதம்...அட்டாகாசம்.

      Delete
    3. அருமை சாா்.....

      (மின்னும் மரணம் தவற விட்டு விட்டாரே..)
      அடுத்த புத்தக திருவிழாவிற்க்குள் இன்னாெரு டைகர் ரசிகர் உருவாவது நிச்சயம்....

      Delete
    4. அமைச்சர் நம்ம ஸ்டாலுக்கு வருவார்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா... தமிழ்நாட்டின் எல்லா பள்ளி, கல்லூரி மற்றும் பொது நூலகங்களிலும் காமிக்ஸ் இடம்பெற வேண்டியதன் அவசியத்தை வழியுறுத்தி ஒரு கோரிக்கை மனு கொடுத்திருக்கலாம்!

      அடுத்த EBFல ஒரு கையெழுத்து இயக்கம் நடத்தி - அந்த கோரிக்கை மனுவை கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பிவைச்சா என்னன்னு தோனறது!

      Delete
  66. ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னறைய மழை இரவில் ஈசல்களின் தரிசனம்... தட்டாம்பூச்சிகளை காணோம்..

    ReplyDelete
    Replies
    1. பிராண்டு மாத்தினா அப்படித்தான் தெரியும்! :P :D

      Delete
  67. டெக்ஸ் கதை அருமை... புராதன சித்திரங்கள்.. அதற்கேற்ற மொழிநடை.. கார்சனின் வித்தியாசமான உடைஅலங்காரம்...கிட்டின் பங்களிப்பு.. நைஸ்... இது ஏதோ தொடரும் போட்ட கதையாமே இத்தாலியில்... அடுத்த பாகம் உண்டா??

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் ரசிகர்களெல்லாம் வரிஞ்சுகட்டிக்கிட்டு டைகரைப் புகழ்ந்து தள்றதும்... டைகர் ரசிகர்களெல்லாம் டெக்ஸ் கதைகளைப் புகழ்ந்து தள்றதும்... ஆனாலும், நாமெல்லாம் அநியாயத்துக்கு நல்லவங்களாகிட்டோமோ?!! ;)

      Delete
    2. // நாமெல்லாம் அநியாயத்துக்கு நல்லவங்களாகிட்டோமோ?!! ;)//
      இதுதான் காமிக்ஸ் கெமிஸ்ட்ரியோ?!😍

      Delete
  68. Good morning editor sir&my dear friends. Graphic novel excellent sir 👏👏👏👏👏👌👌👌🏆🏆🏆🏆

    ReplyDelete
  69. இன்னும் பதிவக் காணலியே...
    இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமைன்றதயே மறந்துட்டாரா நம்ம எடிட்டர்?!!

    ஆனாலும் நம்ம ப்ளாக் இப்பல்லாம் ஒரு மார்க்கமாத்தான் போய்க்கிட்டிருக்காப்ல இருக்கு! பக்கத்து ப்ளாக் காரங்க பார்த்தா நம்மப்பத்தி என்ன நினைப்பாங்க!!!

    ReplyDelete
    Replies
    1. ஞாயிறு பதிவு இல்லைன்னா எதையோ தவறவிட்டதைப் போல தோன்றுகிறது.

      Delete
  70. Namma kadaila therokol ethum stock irukka

    ReplyDelete
  71. எடிட்டரின் புதிய (மினி) பதிவு ரெடீ நண்பர்களே!

    ReplyDelete