Sunday, August 20, 2017

ஒரு காமிக்ஸ் கேரவனின் கதையிது...!

நண்பர்களே,

வணக்கம். சாப்பாட்டு மேஜையில் குந்தியிருக்கும் போது இன்னொரு இட்லி வேண்டுமென்றால் கூட புகை சமிக்ஞையில் தகவல் அனுப்பலாமா ? என்று நினைக்கத் தோன்றுகிறது! ‘புதுசாய் பேப்பர் ரகம் வந்திருக்கிறது அண்ணாச்சி !‘ என்று அப்பிராணியாய் வந்து சேரும் சேல்ஸ் rep-களிடம் கூட அதிரடியாய் ஏதாவது பஞ்ச் டயலாக் பேசும் ஆசை நாவில் நடனமாடுகிறது! வரிசையில் நின்று கொண்டிருக்கும் போது, நம்மூர்களுக்கே உரித்தான அந்த ‘முண்டியடித்து முன்னே போகும் கழக‘ உறுப்பினர்களைப் பார்த்தால் நடுமூக்கில் ‘நச்‘சென்று குத்துவோமா ? என்ற பரபரப்பு தொற்றிக் கொள்கிறது! (என்ன ஒரே பிரச்சனை – ‘மு.மு.போ.க.‘ உறுப்பினர்கள் முக்கால்வாசி நேரங்களில் மூணு புல் மீல்ஸ்களை,தனியாளாய் முழுசாய் ரவுண்ட் கட்டியடிக்கும் ஆகிருதியோடு இருப்பதால் நம்மள் கி பரபரப்பை சற்றே பொத்தி வைக்க வேண்டியிருக்கிறது!!) கடந்த 2 வாரங்களாய் நமது ‘தல‘ சார்ந்த தேடல்களில் லயித்துக் கிடந்ததன் விளைவுகள் தான் வருடந்தோறும் repeat ஆகிடும் இந்த பேமானித்தனங்கள் என்பது இந்நேரத்துக்குப் புரிந்திருக்குமே guys? என்ன தான் “நடுநிலை அவசியம்”; “ஓவராய் ஒரே நாயகருக்கு பில்டப் தரப்படாது”; “flagship hero-வாக இருப்பினுமே சராசரியாகவே நடத்திட வேண்டும்” என்றெல்லாம் மனதில் திடமாகக் கட்டளைகளைப் பதித்துக் கொண்டே தேடல்களுக்குள் புகுந்தாலும் – அந்த மஞ்சள் சொக்காய் சற்றைக்கெல்லாம் ஏதோ மெஸ்மரிசம் செய்து விடுகிறது! கடைவாயில் ஜலம்... 'லப்டப்பில்' ஒரு வேகம் என்ற கெமிக்கல் ரியாக்ஷன்கள் தாமாகவே கடைவிரிக்கத் தொடங்கி விடுகின்றன! "சரி - இன்னுமொரு ‘தல‘ புராணத்தை ஆரம்பித்து விட்டானாக்கும் ?" என்ற கொட்டாவிகளுக்கு அவசியமில்லை ; simply becos – இந்தப் பதிவானது ரொம்பவே நடைமுறை சார்ந்ததொன்று! சில பல விசில்கள் எழுந்திடவும் முகாந்திரங்கள் இருக்கப் போகின்றன ; சில பல வதனங்கள் கார்வண்ணமாகிப் போகவும் சமாச்சாரமிருக்கப் போகிறது - தொடரும் பத்திகளில்! So சுவாரஸ்யமான சில நடைமுறை நிஜங்களைப் பார்க்கலாமா?

நெய்வேலி, கோவை & ஈரோடு – என 3 பெருநகரங்களில் நமது காமிக்ஸ் கேரவன் ரவுண்டடித்து விட்டு ஊர் திரும்பியுள்ளது. வழக்கமாய் ஒவ்வொரு புத்தக விழாவின் இறுதியிலும், வரவு-செலவுக் கணக்குகள்; sales ரிப்போர்ட் என்ற ரீதியில் பார்த்து விட்டு அடுத்த வேலைக்குள் மூழ்கிப் போவது வழக்கம். ஆனால் இம்முறை அடுத்தடுத்த 3 விழாக்களின் இறுதியில் விற்பனையில் ஏதேனுமொரு pattern தென்படுகிறதாவென்று பார்க்க நினைத்தேன்! So மொத்தமாய் விற்பனை விபரங்கள்; திரும்பி வந்த ரிட்டன் புக்குகள் என சகலத்தையும் தலைப்புவாரியாக; genre- வாரியாகப் பாகுபடுத்திப் பார்த்த போது ராட்டினத்தில் ஏறியமர்ந்தது போலொரு உணர்வு! So இந்தக் காமிக்ஸ் கேரவன் சொல்லவிருக்கும் கதையே இவ்வாரத்துப் பதிவு! 

‘நல்ல சேதி... கெட்ட சேதி‘ என்றதொரு கார்ட்டூனை நாம் ரசித்திருக்கிறோம்! அதே பாணியில் என்னிடமும் சில நல்ல சேதிகள் + சில கெட்ட சேதிகள் உள்ளன! Let’s start off with the good ones.....!!

TEX!!! மங்களகரமாய் ஆரம்பிக்க இந்த மஞ்சள் சட்டை மாவீரனைத் தவிர்த்து வேறு யார் பொருத்தமான தேர்வாக இருக்க முடியும்? Without an iota of doubt - இன்னமும் விற்பனைகளில் முதல்வராய்த் திகழ்வது இந்த அதிரடி ரேஞ்சரே !! என்னதான் புதுசாய் நாயகர்கள் ; தொடர்கள் ; களங்கள் என்று நாம் 'தம்' பிடித்து முயற்சித்தாலும், இந்த டெக்ஸாஸ் சிங்கத்திடம் அத்தனையுமே மண்டியிட்டே தீர வேண்டியுள்ளது ! ஆண்கள், பெண்கள், சிறுசுகள், பெருசுகள் என்ற பாகுபாடின்றி இரவுக்  கழுகாரின் ரசிகர்கள் என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது ! "அட்டையை மாற்றினால் கதைகளுக்கிடையே வேற்றுமை ஏது ?" என்றதொரு விமர்சனம் முன்பு டெக்ஸுக்கு எதிராய் வைக்கப்பட்டிருந்தது நிஜமே ; ஆனால் 'நீ அட்டையை மாத்துவியோ ; சட்டையை மாத்துவியோ - நாங்க பட்டையைக் கிளப்பாம விடமாட்டோம் ' என்று TEX & co சொல்லாது சொல்வதை இந்த விற்பனை நம்பர்கள் புரியச் செய்கின்றன guys !   இந்த விற்பனைப் புள்ளிவிபரங்கள் என் தலைக்குள் லேசாய்க் கூடுகட்டியிருந்த சிலபல சிந்தனைகளையுமே  சுத்தம் செய்ய உதவியுள்ளன ! 

“ஓவர்டோஸ்” என்றதொரு அசுரன் நாளாசரியாய் டெக்ஸ் & கோ மீதான நமது ஈர்ப்பை மட்டுப்படுத்தி விடுவானோ என்ற பயம் என்னுள்ளே கணிசமாய்க் குடியிருந்தது நிஜமே! ஆனால் அது கடுகளவும் முகாந்திரமிலாப் பயம் மட்டுமே என்பதை நம்பர்கள் அடித்துச் சொல்கின்றன! நிறைய Tex டைட்டில்கள் இருந்தாலும், பரவலாய் சகலத்திலும் விற்பனை இருப்பது தெரிகிறது! அதற்காக பல நூறு இதழ்கள் விற்பனை என்றெல்லாம் நான் அள்ளி விட மாட்டேன்; ஆனால் நாங்கள் அனுப்பிடும் பிரதிகளுக்கும், வாபஸ் வந்திடும் பிரதிகளுக்குமிடையிலான ratio டெக்ஸின் விஷயத்தில் ரொம்பவே மனதுக்கு இதமளிப்பதாய் உள்ளன! 

அதே போல ‘பணால்‘ என்று போட்டுத் தள்ளப்பட்டிருக்கும் மாயை # 2 – விலைகள் சார்ந்தது! “60 ரூபாய் டெக்ஸ் – 120 ரூபாய் டெக்ஸை விடவும் ஜாஸ்தி விற்கக் கூடும்; So குறைந்த விலைகளில் நிறைய இதழ்கள் இருப்பின் – புத்தக விழா விற்பனைகளுக்கு உதவிடும்” என்ற ரீதியில் நான் நினைப்பதுண்டு! ஆனால் கையில் தூக்கினால் அது ஓமக்குச்சி நரசிம்மனாய்க் காட்சி தருவதை விடவும் குண்டு கல்யாணமாக வலம் வருவதையே ஜனம் விரும்புகிறது என்பதும் புரிகிறது! அதிலும் நமது hardcover இதழ்களுக்குக் கிட்டிடும் சிலாகிப்புகள் ஜிலீர் ரகம்! குறிப்பாக “சர்வமும் நானே” & “லயன் # 300” இம்முறை amongst the bestsellers! 

இன்னமுமொரு சுவாரஸ்யம் - “நிலவொளியில் நரபலி” கண்டு வரும் விற்பனை சார்ந்தது! அந்த ‘மினி‘ சைஸில் வண்ணம் என்ற பாணிக்கு நிரம்பவே ரசிகர்கள் இருப்பது புரிகிறது! இது பற்றி நமது கோவைக் கவிஞருமே ஏற்கனவே என்னிடம் பேசியிருந்தார் ! எப்போதுமே ஒரு விதமான பாக்கெட் சைஸுக்கான மோகம் நம்மிடையே மங்கவே மங்காது போலும்! மண்டைக்குள் சிந்தனைச் சக்கரங்கள் சுழன்றிடும் நேரம் folks!

‘தல‘க்கு அடுத்தபடியாக ஆக்ஷன் நாயகர்களுள் இம்முறை களத்தை அதிரச் செய்திருப்பது 3 சர்ப்ரைஸ் புது வரவுகள்! முதலாமவர் செம்பட்டைத் தலை ஜேசன் ப்ரைஸ்!! இவரது முப்பாக fantasy த்ரில்லரானது நிறைவான விற்பனையைச் சந்தித்துள்ளது! இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயமொன்று இருப்பதாக நான் நினைக்கிறேன்! ‘டெக்ஸ்‘ என்ற பெயர் 32 ஆண்டுகளாய் நம் அணிகளில் ஒலித்து வருவது மாத்திரமின்றி; அவ்வப்போது மீடியா கவரேஜிலும் அடிபடும் பெயர் என்ற வகையில், புத்தகவிழா வருகையாளர்களுக்கும் பரிச்சயம் இருப்பதில் வியப்பில்லை தான்! ஆனால் ‘ஜே.பி்.‘ என்ற பெயர் சமீப காலத்து அலசல்களில் மாத்திரமே பிரசித்தம் பெற்றதொரு பெயரல்லவா? So – அந்த அலசல்களைப் பற்றி அரசல் புரசலாகவாவது கேட்டிருக்கும் வாய்ப்பு நமது காமிக்ஸ் ஆர்வல வட்டத்தைத் தாண்டிய casual readers-க்கும் கிட்டியிருக்கும் போல் படுகிறது ! அல்லது ஒருவிதத் திகிலூட்டும் அந்த அட்டைப்படங்களும், கதைகளின் பெயர்களும் புது வாசகர்களை ஈர்த்திருக்குமா ? சரியாக பதில் சொல்லத் தெரியவில்லை எனக்கு ! 

விற்பனையில் கலக்கியுள்ள புதுவரவு # 2 பிணம் புதைக்கும் வெட்டியான் புள்ளையாண்டானே! சமீப வரவு ; சமீப இதழ் என்ற ப்ளஸ் பாய்ண்ட்கள் மட்டுமே காரணமா ? அல்லது நமது அலசல்களிலும், FB ; வாட்சப் தகவல் பரிமாற்றங்களிலும் தெறித்த positive விமர்சனங்கள் இந்த விற்பனை வெற்றிக்குக் காரணமா? – சொல்லத் தெரியவில்லை! எது எப்படியோ – “தி அண்டர்டேக்கர்” புத்தக விழாக்களிலும் ஸ்கோர் செய்துள்ளார்! சற்றே offbeat நாயகர்களுக்கு என்றைக்குமே ஒருவித ஈர்ப்பு இருந்திடும் போலுள்ளது ! 

# 3 யாரென்பதில் – வியப்பில்லை தான்! அந்த மோனாலிசா ரகப் பார்வையுடனான அட்டைப்படமும் சரி, Lady S என்ற அந்தப் பெயரின் வசீகரமும் சரி, இந்த recent இதழைப் புத்தக விழாக்களில் ஒரு ஆதர்ஷக் கொள்முதல் பொருளாக்கியுள்ளது புரிகிறது ! தொடரும் இதழ்களிலும் அம்மணி சாதித்தால் கொங்கு மண்டலத்தில் இவருக்கொரு சிலை நிறுவ கடும் போட்டி நிலவுமென்பது நிச்சயம் ! "கண்டதும் காதல்" ரகம் - ஷானியாவைப் பொறுத்தமட்டிலும் ! 

“Decent Show” என்று சொல்லும் விதமாய் களம் கண்டுள்ளோர் நால்வர் – ஆக்ஷன் ஹீரோக்களின் பட்டியலிலிருந்து! முதலாமவர் நமது ‘W’ குழும முதலாளியான “லார்கோ வின்ச்”! ‘வித்தியாசமான கதை பாணி‘ என்ற முத்திரை இவருக்கு அழகாக set ஆகி விட்டதென்றே சொல்லலாம் போலும் ; பரவலாக இவரது சாகஸங்கள் சகலமுமே decent ஆன விற்பனை கண்டுள்ளன ! தொடர்ந்து நாலைந்து ஆண்டுகளாய் எல்லாப் புத்தக விழாக்களிலுமே விரும்பி வாங்கப்படும் இதழாக இவரது ஆல்பங்கள் அமைந்து வருவது சந்தோஷமானதொரு நிகழ்வு ! கையில் துப்பாக்கியோ, கனைக்கும் குதிரைகளோ இல்லாது போனாலும், சில நாயகர்கள் சாதிக்கத் தடைகளில்லை போலும் !  Too bad – இவரது தொடரில் ஜாஸ்திக் கதைகள் மீதமில்லை!!

டீசண்ட் பார்ட்டி # 2 நமது ரிப்போர்ட்டர் ஜானி! இதழ்களைப் புரட்டுவோர்க்கு இந்தக் கதைகளின் அழகான சித்திர பாணி + கலரிங் பாணி வசீகரம் செய்கின்றனவோ; அல்லது வருஷமாய்ப் படித்துப் பழகியதில் இந்த டிடெக்டிவ் மீது ஒரு மையல் நிலைக்கிறதோ தெரியவில்லை – ஆனால் சோடை போகா கோட்டைச்சாமி இந்த பிரான்கோ – பெல்ஜிய ரிப்போர்ட்டர்! விற்பனையில் அதகளம் பண்ணுகிறாரென்று சொல்ல முடியாது ; but ஓசையின்றி நமது ரஹானே போல பணியைச் செய்து விட்டுக் கிளம்பிடும் ரகம் இவர் ! 

மிஸ்டர் டீசண்ட் # 3 – ‘கேப்டன் பிரின்ஸ் & கோ. எப்போதுமே மிகைப்படுத்தலின்றி, தானுண்டு, தன் வேலையுண்டு என்று சுற்றி  வரும் இந்தப் பரட்டைத் தலைக் கேப்டன் சத்தமின்றிக் கைதட்டல்கள் பெற்றிருக்கிறார் புத்தக விழாக்களில் ! சூப்பர் கேப்டன்!

Last in the list - நமது fantasy நாயகர் தோர்கல் ! எப்போதுமே ஒரு மந்திரவாதி ; மாய மண்டலம் சார்ந்த கதைகளெனில் நமக்குள்ளே ஒரு சன்னமான லயிப்பு தொடரும் போலுள்ளது ; சிறுவயதுகளில் நாம் கேட்டும், படித்தும் வளர்ந்த அம்புலிமாமா கதைகளின் தாக்கமோ - என்னவோ ?!! அதன் பலனாய் தோர்கல் கதைகள் doing decently ok ! 

“சத்தமின்றி யுத்தம் செய்வதில்” மட்டுமல்ல; விற்பனையில் சாதிப்பதிலும் தான் கில்லாடியென்பதைப் பதிவு செய்திருக்கும் ட்யுராங்கோ தான் நம் சிலாகிப்பிற்கான அடுத்த நாயகர் ! அந்த ராப்பரா? கதை பாணியா? புத்தக வடிவமைப்பா? முதல் புரட்டலில் தட்டுப்படும் ஹாலிவுட்டின் க்ளின்ட் ஈஸ்ட்வுட் பாணியிலான கதைக்களமா ? – வாசகர்களை ஈர்க்கக் காரணமாகயிருந்தது எதுவோ தெரியவில்லை ; ஆனால் wow! என்று மட்டும் சொல்வேன் இவரது விற்பனைகளைப்  பார்த்து! ரொம்பவே low profile நாயகராக ட்யுராங்கோவை கதாசிரியர் சித்தரித்திருப்பினும், அந்த அலட்டலில்லா பாணிக்கும் ஒரு ரசிகர் வட்டம் set ஆகியுள்ளது புரிகிறது ! 

“Surprise pack” என்ற பட்டத்தை இந்த விழாக்களில் ஈட்டியுள்ள இதழ்கள் 2  ! முதலாவது  Jeremiah ! “குமுதம்” கேள்வி பதிலின் சிலாகிப்பு ; நமது விவாதங்களில் பட்டையைக் கிளப்பிய எண்ணச் சிதறல்கள்; FB-ல் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் என நிறையக் காரணங்களின் பொருட்டு இந்த இதழுக்கு வெளிச்ச வட்டம் கிட்டியிருப்பது புரிகிறது ! So விற்பனையிலும் ஜெரெமயா கைததூக்கி நிற்பதில் சந்தோஷமே!!

Surprise # 2 - உங்களால் யூகிக்கவே இயலாவொரு இதழ் ! (எனக்கு மட்டுமாவது) டபுள் சந்தோஷம் – “விண்ணில் ஒரு வேங்கை” இதழானது சூப்பராக விற்பனையாகியுள்ளதன் பொருட்டு! யுத்தப் பின்னணியுடனான இந்தக் கதை 3 புத்தக விழாக்களிலுமே தெரியுள்ளது - ஆச்சர்யமூட்டும் விதத்தினில் !  அதை வாங்கிச் சென்றோருக்குமே மகிழ்வு இருந்திருப்பின் சூப்பர் தான்! பாகம் 2 & 3 வெயிட்டிங் பாபு... ‘ம்ம்ம்‘ என்று மட்டும் கண்ணசைத்தால் டெம்போ வைத்தாவது அம்மணியை அழைத்து வந்து விடுவேன்! ஏதோ பார்த்து பண்ணுங்க சாமி!

ஆக்ஷன் ரவுண்டப்பில் அடுத்தது மும்மூர்த்திகள் + கூர்மண்டையரின் progress report ! 

வழக்கம் போல நமது மின்சாரத் திருடர் மாயாவி doing good! ஆனால் முந்தைய ஆண்டுகளைப் போல “ஹாாா... மாயாவியா??” என்று நாற்கால் பாய்ச்சலில் ஜனம் துள்ளிக் குதிப்பது மட்டுப்பட்டு வருவது புரிகிறது! முன்பெல்லாம் புத்தக விழாவின் முதல் வாரயிறுதிக்கு மாயாவி ஸ்டாக் தீர்ந்திருக்கும்! ஆனால் இப்போது மாயாவிகாருவுமே வாபஸ் வருகிறார்! ஆச்சர்ய நிஜம் !

மாயாவிக்கே இந்தப் பாடெனில் பூப்போட்ட டிராயர்காரர் பாடு எவ்விதமோ? என்ற உங்கள் மைண்ட்வாய்ஸ் இங்கே கேட்கிறது! ஆனால் ஆச்சர்யம் கொள்ளும் விதமாய், மனுஷன் அத்தனை சொதப்பவில்லை! ஜானிக்காகவோ, ஸ்டெல்லாவுக்காவோ – விற்பனைகள் எதெற்கென்று தெரியவில்லை ; ஆனால்  படகு முழுகிடவில்லை என்பது மட்டும் கண்கூடு ! இன்னொரு ஜோடியான CID லாரன்ஸ் & டேவிட் தான் இந்த மூவரணியினுள் best இந்தாண்டு! யெஸ் – இவர்களது மறுபதிப்புகள் எல்லாமே ரொம்பவே neat விற்பனை கண்டுள்ளன இம்முறை ! Strong show from a strong pair !

சரி... மும்மூர்த்திகள் பற்றிச் சொல்லியாச்சு; கூர்மண்டையர் சேதி என்னவோ? என்று கேட்கிறீர்களா? ‘என்னமோ போடா மாதவா...!‘ ஒரு காலத்துக் குற்றச் சக்கரவர்த்தி இன்றைக்கு பென்னியிடம் உதை வாங்காத குறை தான்! மறுபதிப்புகளுள் இந்தாண்டினில்  – the least performing தொடர் ஸ்பைடர் தான்! பேந்தப் பேந்த விழிக்கிறேன்!

ஆக்ஷன் ப்ளாக் முடிந்து விட்டதால் அடுத்த ஸ்டாப் நேராக கார்ட்டூன் காலனி பக்கமாய்! And நீங்களொரு கார்ட்டூன் காதலராய் இருக்கும் பட்சத்தில் தரையில் உருண்டு புரண்டு குதூகலிக்க ஏகமாய் காரணங்கள் காத்துள்ளன! அதே சமயம் நீவிர் கார்ட்டூன்களின் காதலர்களல்ல எனில் தொடரும் பத்திகள் உங்களுக்கு வெறும் academic interest-க்கு மாத்திரமே ! 

Simply put - அடித்து தூள் கிளப்பியுள்ளன கார்ட்டூன் இதழ்கள் – புத்தக விழா விற்பனைகளில் ! விடாப்பிடியாய் கார்ட்டூன் கதைவரிசைகளில் நமது நேரங்களையும், கவனங்களையும் முதலீடு செய்ததற்கான பலன்கள் மெதுமெதுவாக துளிர்விடத் தொடங்குவது புரிகிறது ! Early days தான் - இருப்பினும், கார்ட்டூன்கள் பக்கமாய் தீர்க்கமான ஆதரவு தென்படுவது கலக்கலான சந்தோஷச் சேதி என்பேன் ! 

பட்டியிலில் உசக்கே நிற்பது வழக்கம் போலவே திருவாளர் லக்கி லூக் தான்! இவருமே ஆங்கில காமிக்ஸ் இதழ்களில், டி.வி. தொடர்களில், மீடியாவில் என ரவுண்ட் கட்டும் நாயகரென்பதால் விழாக்களுக்கு வருகை தருவோர் லக்கியின் கதைகளை ஆர்வமாய்த் தேர்வு செய்வதில் வியப்பில்லை! முழு வண்ணம் ; அந்த clean storylines ; வண்ணத்தில் மிளிரும் artwork என நிறைய ப்ளஸ்கள் இருப்பதால் -  புது வாசகர்களைக் கூட நொடியில் தோள் மீது கை போட்டு நண்பர்களாக்கி விடுகிறார் இந்த ஒல்லிக் cowboy ! And “தரைக்கடியில் தங்கம்” தான் எண்ணிக்கையில் best seller – இதுவரையிலான புத்தக விழா விற்பனைகளில்!

இரண்டாமிடத்திலிருப்பவர் நாலடி உயரம் கூடத் தேறாதொரு சுட்டிப் புயல்! Oh yes – அந்தப் பால் வடியும் பாலகன் பென்னியைக் கண்டவுடன் காதல் casual readers-க்கு! அழகான சித்திரங்கள்; வர்ணங்கள் என்று பென்னி நொடியில் சகலரையும் அரவணைத்துக் கொள்வதில் no surprises! இந்தாண்டின் விற்பனை சரவெடி ! 

மூன்றாமிடத்தில் இருப்போர் நிச்சயமாய் நீங்கள் எதிர்பார்த்திடக் கூடிய நாயகர்களல்ல! ‘ஏனோ தெரியவில்லை என்னால் இவர்களது தொடர்களோடு ஒன்றிடவே முடியவில்லை!‘ என நான் சந்திக்கும் வாசகர்கள் பரவலாய் ஸ்மர்ஃப்ஸ் பற்றிப் புகார் வாசிப்பதுண்டு! ஆனால் புத்தக விழாக்களிலோ  பரவலாய் இவர்களது எல்லா ஆல்பங்களுமே விற்று வருகின்றன ! அதிலும் "வானம் தந்த வரம்" செமையாக sales ! So இந்த நீலப் பொடியர்கள் நிஜமாகவே not bad at all ! மண்டையைச் சொறியும் படங்கள் ஒன் டஜன் !

சிரிப்பு போலீஸ் அடுத்த இடத்தில் உள்ளனர் – courtesy: சமீபத்து சிக் பில் ஸ்பெஷல் ! அந்த hardcover collection தரும் ஈர்ப்பா ? classic கதைகளின் சேகரிப்பென்ற காரணமா ? என்று காரணத்தைப் pinpoint செய்யத் தெரியவில்லை - ஆனால் விற்பனையில் தூள்!  ஒற்றை புக் கூட வாபஸில்லை என்ற பெருமையை ஈட்டியுள்ள இதழும் கூட இது ! ஆனால் இவர்களது மற்ற ஆல்பங்களின் விற்பனை சொல்லிக் கொள்ளும் ரகத்தில் இல்லை என்பது தான் புதிரே! “ஒரு பைங்கிளிப் படலம்” போன்றவையெல்லாம் பரிதாபமாய் விற்பனை கண்டுள்ளன!

‘ஒற்றை slot-க்கு ஓ.கே.! முதலுக்கு மோசமில்லை‘ என்ற வர்ணனை கேரட் மீசைக்காரருக்குப் பொருந்தும்! “கர்னல் க்ளிப்டன்” கதைகள் எல்லாமே மிதமான விற்பனை கண்டுள்ளன என்பதால் இவருக்குக் கல்தாவும் அவசியமில்லை ; இட அதிகரிப்புக்கும் முகாந்திரமில்லை என்றாகிறது ! Variety என்பதற்கேனும் இவர் நிச்சயம் அவசியம் என்பேன் ! 

அதே சமயம் “2018-ன் அட்டவணையில் maybe 2 ஸ்லாட்கள் தரலாமா?” என்ற ‘ரோசனையை‘ எனக்குத் தந்திருந்த ப்ளுகோட் பட்டாளத்திற்கோ just about average sales! ஏனோ தெரியவில்லை - இந்த யுத்த பூமியின் சிரிப்பு நாயகர்களுக்கு அவ்வளவாய் ரசிகர்கள் கிட்டவில்லை புத்தக விழாக்களிலாவது ! So ஒரு சீட்டே போதும்டா சாமி இந்த நீல உடுப்புப் போராளிகளுக்கு என்று நினைத்துக் கொள்ளத் தோன்றுகிறது!

And "விட்டேனா பார் ?!!" என்று விற்பனையில் பிரித்து மேய்ந்துள்ளனர் இரு “மதில் மேல் பூனை” பார்ட்டிகள்! நமது குள்ளவாத்து மந்திரியாரும் சரி; ரின்டின் கேனும் சரி- நிச்சயமாய் ஆளுக்கொரு ஸ்லாட்டைத் தக்க வைத்திட சகல தகுதிகளும் வாய்த்தவர்களே என்பதை நம்பர்கள் புரியச் செய்கின்றன! இரு நாயகர்களின் (!!) ஆல்பங்களுமே விற்பனையில் சோடை போகவில்லை என்ற ஆச்சர்யத் தகவல் கைவசம் !  Maybe நாலுகாலாரின் விற்பனையில் ஒரு பூனையின் பங்களிப்பு கணிசமாக இருக்கலாமோ? என்ற சந்தேகம் எழாதில்லை தான்; ஆனால் எது எப்படியோ ரின்டின் கேன் நிச்சயமாய் “அந்தப் பக்கமாய் போய் விளையாடுறா தம்பி” ரகமல்ல ! So தடை பல தகர்த்தெழுடா பையா!!

ஆக கார்ட்டூன் ரிப்போர்ட்களோடு நான் அடுத்ததாய்  ‘ஜம்ப்‘ செய்திடவுள்ளது கிராபிக் நாவல்கள் பக்கமாய்! “தேவ ரகசியம் தேடலுக்கல்ல” & “இரவே... இருளே.... கொல்லாதே” & “ஒரு முடியா இரவு” definitely not bad at all ரகத்தில் அடைக்கலம் காண்கின்றன! அதிலும் ”தே.ர.தே.” – has been a consistent performer ! அதே சமயம் “சிப்பாயின் சுவடுகள்”; “வானமே எங்கள் வீதி”; “பாதைகளும், பயணங்களும்” ஆல்பங்களெல்லாம் அட்டகாசமான பயணிகளாக இருந்து வருகின்றன! “ஓஹோ... இது தான் நெய்வேலியாக்கும்?”; “அட... இது கோவைங்களாண்ணா?”; “சொல்லவேயில்லை... இது தான் ஈரோடுன்னு”; என்று நயமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டு பத்திரமாய், துளிச் சேதமுமின்றி சிவகாசிக்குத் திரும்பி விடுகின்றன! So அற்புதமான travelers ! இந்தப் பட்டியலில் க்ரீன் மேனருமே அடக்கம் என்பது தான் கொடுமையே! எண்ட குருவாயூரப்பா!

ஆக ஒரு மாதிரியாய் progress (முன்னேற்றம்) காட்டியோரின் ரிப்போர்ட்களை வாசித்து முடித்த கையோடு இனி ரிவர்ஸ் கியர் போட்டுத் தாக்கும் நாயகர்கள் பக்கமாய் பார்வையைத் திருப்பும் துரதிர்ஷ்டப் பணிக்குள் நுழைகிறேன் ! Guys – இவை விற்பனை சார்ந்த புள்ளி விபரங்கள் மட்டுமே; So உங்களின் ஆதர்ஷ நாயகர்(கள்) தொடரும் சொதப்பல் பட்டியலில் இருப்பின் அதற்கென என்னைக் கோபிக்க வேண்டாமே ப்ளீஸ்? எனக்குமே இதுவொரு சங்கடமான பணியே என்பதை மறவாதீர்கள்!

இரத்தக் கோட்டை” இம்மாத வெளியீடு என்பதோடு டைகரின் க்ளாசிக்களுள் ஒன்றும் என்பதால் ‘இ.கோ‘ விற்பனையில் (ஈரோட்டில்) அழகாய் சாதித்துக் காட்டியுள்ளது! ஆனால்... ஆனால்... ஆனால்... அதைத் தாண்டிய சகல டைகர் இதழ்களுமே தர்ம அடி வாங்கியுள்ளது தான் வேதனை! சரி... மார்ஷல் டைகர் பிடிக்கலியா? ....இளம் டைகர் கதைகள் அத்தனை ரசிக்கலியா? பரவாயில்லை தான்! ஆனால் “தங்கக் கல்லறை” கூட ஒற்றை இலக்க எண்ணங்களில் விற்பனையாகியிருப்பதைத் தான் ஜீரணிக்கவே முடியவில்லை! இளம் டைகர் கதைகளெல்லாம் - உப்ப் !!  Maybe புதிதான வாசகர்களுக்கு அந்த அழுக்கு முகமும், புழுதி மண்டலங்களும் ரசிக்கவில்லையோ – என்னவோ?? ரொம்பவே சங்கடமான நிலை!!

டைகரின் நிலை இதுவெனில் கமான்சே தொடர் படும் அல்லல்கள் சொல்லி மாளா ரகம்! இதுவரையிலான ஏழோ-எட்டு ஆல்பங்களிலும் தலா 3 அல்லது 4 பிரதிகளே விற்றுள்ளன ஒவ்வொரு விழாவிலும் ! யதார்த்தம்; மிகைப்படுத்தல் இல்லாக்களம்; ஹெர்மனின் சித்திர ஜாலங்கள் என்று ஏதேதோ ப்ளஸ்கள் இருப்பினும் இந்தத் தொடருக்கொரு ‘ஸ்டார் பவர்‘ இல்லாதது பெரும் குறையாகவே தென்படுகிறது போலும்! நேற்றைக்கு வந்த ட்யுராங்கோ கூட ஒரே ஆல்பத்தில் ஒரு ரசிகர் படையை உருவாக்கியிருக்க – கமான்சே தொடரோ தட்டுத் தடுமாறுகிறது! Sad... really sad!

மீசைக்கார நாயகர்களுக்கு வெகுஜன ஒப்புதல் எட்டாக்கனிகள் போலும் – at least காமிக்ஸ் துறையிலாவது! நம்மிடையே decent ஆன மதிப்பெண்கள் பெற்றுள்ள வேய்ன் ஷெல்டன் – புத்தக விழா விற்பனைகளில் ரொம்பவே பின்தங்கி நிற்கிறார்! இம்மாத இதழான “ஒரு காகிதத்தைத் தேடி” யினை நீங்கலாகப் பார்த்தால் இதர ஷெல்டன் ஆல்பங்கள் எல்லாமே மிக மிக சுமாரான விற்பனைகளையே கண்டுள்ளன! புரியமாட்டேன்குதே இந்த லாஜிக் ?!

ஷெல்டன் பாடு இப்படியெனில் – டயபாலிக் பாடு அதை விடவும் தரைமட்டம்! ஈரோட்டில் மொத்தமாய் 2 புக்குகளே விற்பனையாகியுள்ளன என்று சொன்னால் நம்பத் தான் முடிகிறதா ? இத்தனைக்கும் இந்த இதழின் விலையும் குறைச்சல்; சலவை வெள்ளைப் பேப்பரில் பளிச்சிடவும் செய்கிறது! ஆனால் விற்பனையில்...????

“குறைந்த விலையில் black & white இதழ்கள் விற்பனைக்கு லட்டுக்கள்!” என்ற எண்ணம் நேற்று வரை எனக்குள் இருந்தது வாஸ்தவமே! ஆனால் மூன்று புத்தக விழாக்களிலுமாய்ச் சேர்ந்து கீழ்க்கண்ட நாயக/ நாயகியர் ஈட்டியுள்ள விற்பனை எண்ணிக்கைகள் எனது அபிப்பிராயத்தைப் பப்படமாக்கி விட்டுள்ளன!

- ராபின்
- மாடஸ்டி
- ஜுலியா

இவர்களது stuttering விற்பனைகளைப் பார்க்கும் போது – வித்தியாசமானதொரு சிந்தனையும் தோன்றுகிறது! மறுபதிப்புகள் + டெக்ஸ் தவிர்த்து மற்ற கதைகள் எதுவுமே b & w-ல் self எடுக்காதோ - இனி வரும் நாட்களில் ? என்பதே அந்த சந்தேகச் சிந்தனை! Of course மர்ம மனிதன் மார்ட்டின் “மோசமில்லை” என்ற ரகத்தில் நிற்கிறார்! அவரைத் தவிர்த்த மற்ற நாயக / நாயகியர் சோபிக்கத் தவறுவது வண்ணமின்மையின் பொருட்டுத் தானா ? கறுப்பு – வெள்ளையின் ஆயுட்காலம் ரொம்பவே மட்டுப்படத் தொடங்கி விட்டதோ? இன்றைய தலைமுறைக்கு வர்ணம் ஒரு அடிப்படை அத்தியாயவசியமோ? Thinking......

“சரி... வண்ணம் தானே வேண்டும்? எங்க கிட்டே அது திகட்டத் திகட்ட இருக்குது!” என்று கீழ்க்கண்ட மூவர் சொல்லிப் பார்க்கிறார்கள் தான்! 

- டைலன் டாக்
- சாகஸ வீரர் ரோஜர்
- பரூனோ பிரேசில்

ஆனால் “அந்த ஓரமாய்ப் போய் விளையாடுங்க தம்பிகளா!” என்று புத்தக விழாவில் வாசகர்கள் இவர்களிடம் சொல்லியிருப்பது புரிகிறது! இம்மாத புது இதழ் தவிர்த்து பாக்கி டைலன் டாக் இதழ்கள் எல்லாமே so so விற்பனைகளே !  ஒன்னுமே புரியலே... உலகத்திலே! என்னவோ நடக்குது... மர்மமா இருக்குது...!

ஆக இது தான் விற்பனைகள் வாயிலாய் எனக்குப் புரிபட்ட சேதிகள்! Of course – ஒற்றை நாளில் புதுப் புதுக் கதவுகளைத் திறந்து வைக்கவும்; பற்பல பழங்கதவுகளைப் படீர் படீரென்று அறைந்து சாத்தவும் நான் முனையப் போவதில்லை! நொடிப் பொழுதினில் தீர்மானம் எடுக்கும் knee-jerk reactions சத்தியமாய் அமலில் இருக்கப் போவதில்லை! மாறாக – long run-ல் மேய்ச்சலுக்கு அனுப்பப்பட வேண்டிய குதிரைகள் எவை? ஓய்வு தரப்பட்டு பரணுக்குப் பார்சலாகிட வேண்டிய குதிரைகள் எவை? என்ற பட்டியலைத் தயாரிக்க இதுவொரு துவக்கப் புள்ளியாக இருந்திடலாம்! சந்தாக்களே நமது ஜீவநாடி எனும் போது – சந்தாதாரர்களின் எண்ணவோட்டங்கள்; நமது வலைப்பதிவின் அலசல்கள் நல்கும் சேதிகள்; அப்புறமாய் ஆன்லைன் விற்பனைகளின் patterns & நமது ஏஜெண்ட்களின் விற்பனை patterns என்று சகலத்தையும் தொடரும் 2 மாதங்களில் உன்னிப்பாகக் கவனிக்கத் தீர்மானம் செய்துள்ளேன்! பார்க்கலாமே- அவற்றுள் புதைந்து கிடக்கும் சேதி என்னவாகயிருக்குமென்று!

Anyways – back to the present – செப்டம்பரின் பணிகள் ஜரூராய் நடந்தேறி வருகின்றன! காத்திருக்கும் டபுள் ஆல்பம் நமது fantasy நாயகரான தோர்கலின் “கனவு மெய்ப்பட வேண்டும்!” And வழக்கம் போலவே சீனியர் எடிட்டரை இதன் மொழிபெயர்ப்புகளைச் செய்திடக் கோரியிருந்தேன்! டபுள் ஆல்பத்தின் முதலாவது ஆல்பத்தில் “அடடே... தேவலியே!” என்று தோன்றியது ; மிகச் சொற்பமான டயலாக்குகள் மட்டுமே இருந்த போதிலும் ! ஆனால் பேனா பிடிக்கும் பணியானது ஒரு தொடர் பணியாகயின்றி – அவ்வப்போதைய சமாச்சாரங்களாக இருந்திடும் பட்சத்தில் நேரக்கூடிய சகல சிரமங்களையும் இரண்டாவது ஆல்பத்தில் சீனியர் சந்தித்திருப்பது புரிந்தது. ஏகமாய் வசனங்கள் ; கோர்வையாய்ச் சொல்லப்பட வேண்டிய வரிகள் என்று கதை நெடுக இருந்திட, மொழிபெயர்ப்பின்  flow ரொம்பவே தேங்கிடுவதாய்ப் பட்டது !  கதையின் சவாலான ஸ்கிரிப்டுக்கு நியாயம் செய்ய முயற்சிக்காது போனால் – ஒரிஜினல் ஆங்கில வடிவத்தைக் கையிலேந்தியபடிக்கு பத்திக்குப் பத்தி பிழைகளைச் சுட்டிக் காட்டும் படலங்கள் தலைதூக்கக் கூடுமென்று பட்டதால் – ‘வம்பே வேணாமே!‘ என்று கிட்டத்தட்ட முழுசையுமே புதிதாய் எழுதிடும் பணியினை நேற்றைக்குத் தான் முடித்து வைத்தேன். நான் சுத்தியுள்ள கம்பு அட்சர சுத்தமென்று நான்நிச்சயம் சொல்லப் போவதில்லை ; but ஓரளவேனும் தேறிடும் என்ற நம்பிக்கையுள்ளது !  தொடரும் நாட்களில் அச்சுப் பணிகள் தொடங்கிடும்! And இதோ – அட்டைப்படத்தின் preview! வழமை போலவே முன் & பின் ராப்பர்கள் ஒரிஜினல்களே!





Before I sign off – இதோ நமது இரத்தப் படலத் தொகுப்பின் முன்பதிவுப் பட்டியல்! இரண்டே வாரங்களுக்குள் 110+ முன்பதிவுகள்; அதுவுமே நமது இதழ்களில் இது சார்ந்த விளம்பரங்கள் இல்லாத போதே என்பதைக் கருத்தில் கொண்டால் இதுவொரு smashing beginning என்பேன்! துவக்க வேகம் தொடரும் நாட்களிலும் தொடரின்  – ஒரு சாதனை இதழ் நம் கண்முன்னே நனவாகி நிற்கும் நாள் தூரத்தில் இல்லை என்பேன்! Keep those bookings going folks! Yoohoo!

மீண்டும் சந்திப்போம்! அது வரை have a fun weekend! Bye for now!



308 comments:

  1. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  2. ரத்த படலம் முன்பதிவு 118 என்பது ரொம்ப சந்தோசமாக உள்ளது. விரைவில் 400 தொட ஆண்டவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  3. Hi ! Everybody ! Good morning to all ! wake up nanbarkale !

    ReplyDelete
  4. காலை வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  5. Replies
    1. ஹாய். ரம்மி நல்லாருக்கீங்களா ...விடுங்க ...ஒண்ணும் கவலை படவேண்டாம் ..நாங்க இருக்கோம்ல ...

      Delete
  6. ஆனால் “தங்கக் கல்லறை” கூட ஒற்றை இலக்க எண்ணங்களில் விற்பனையாகியிருப்பதைத் தான் ஜீரணிக்கவே முடியவில்லை!
    இதற்க்கு காரணம் நீங்கள் செய்த புதிய மொழிபெயர்ப்பு என்பது புரியவில்லையா சார். பழைய மொழி பெயர்பில் ஹாட் பவுண்டில் விட்டிருந்த எவ்வளவு அருமையாக இருந்து இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. saran brte : சரி சார்...இதர டைகர் இதழ்களும் உதை வாங்கியிருப்பதற்கும் ஒரு காரணம் சொல்லுங்களேன்- கேட்டுக் கொள்கிறேனே?

      Delete
    2. சார் இந்த வாரம் தான் தங்கக்கல்லறை மீண்டும் வாசித்தேன். நிச்சயமாக மொழி பெயர்ப்பு மிகவும் நன்றாக இருந்தது. அது ஒரு காரணம் என்று நிச்சயமாகச் சொல்ல வேண்டாம் என்பதே என் கருத்து. புதிதாக படிக்கும் யாருக்கும் பிடிக்கும் வண்ணமே உள்ளது.நான் பழைய புத்தகங்களும் படித்திருக்கிறேன்.

      Delete
    3. நானும் தங்கக் கல்லறை புதிய மொழிபெயர்ப்பு தான் படித்துள்ளேன் - நன்றாகவே இருந்தது !

      Delete
    4. நான் தங்கக் கல்லறை புதிய மற்றும் பழைய மொழிபெயர்ப்பு ரெண்டும் படித்துள்ளேன் - நன்றாகவே இருந்தது ! சொல்ல போனால் அதிலும் புதிய மொழி பெயர்ப்பு என்னை ரொம்பவே கவர்ந்தது!

      Delete
    5. மொழிபெயர்ப்பு என்பதைத் தாண்டி நீண்ட வருடங்களாக ஸ்டாக் இருப்பது "தங்கக் கல்லறை " மீதான ஈர்ப்பு குறைய காரணம்.

      Delete
    6. ஹ ஹ ஹா...மொழி பெயர்ப்பா...ஸ்டாலில் அந்த கதய சரியா விளம்பரபடுத்த வேண்டும் . அப்பறம் பாருங்க ...காமிக்ஸ்னா என்னன்னு கேட்டவரயும் காமிக்ஸ்தான் வேண்டும்னு முழங்கச்செய்திடும் .😊

      Delete
  7. ஞாயிறு காலை வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  8. விஜயன் சார், நமது நாயகர்கள் புத்தக திருவிழாவில் எப்படி பார்க்கபடுகிறார்கள் மற்றும் அவர்களது விற்பனை போன்றவற்றை அலசிய விதம் அருமை. இந்த அலசலுக்கு கணிசமான நேரம் உழைத்து இருப்பீர்கள். அடுத்த ஆண்டு அட்டவணை தயாரிக்க இந்த தகவல் மிகவும் உபயோகபடும்.

    ReplyDelete
  9. ஆசிரியரின் 405 வது பதிவுக்கு அனைத்து நண்பர்களையும் வ௫க வ௫க என இ௫ கரம் கூப்பி வரவேற்கின்றேன்.

    ReplyDelete
  10. விஜயன் சார், ரத்த படலம் முன்பதிவு 112 என்பது ரொம்ப சந்தோசமாக உள்ளது. விரைவில் முன்பதிவு 400 தொட ஆண்டவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  11. ///நீங்களொரு கார்ட்டூன் காதலராய் இருக்கும் பட்சத்தில் தரையில் உருண்டு புரண்டு குதூகலிக்க ஏகமாய் காரணங்கள் காத்துள்ளன! ///

    உடம்பு முழுக்க எண்ணெய் தேய்த்து ஊரப்போட்டிருப்பதால், இப்போதைக்கு தரையில் உருண்டுபிரண்டால் பூரிக்கட்டை உருட்டுக்கட்டை ஆகிடும் அபாயம் இருப்பதால், அப்பாலிக்கா குதூகலிக்கலாமென்ற முடிவுக்கு தள்ளப்பட்டு இருக்கிறேன் என்பதை சபையோருக்கு தெரிவித்துக்கொண்டு...!!

    ReplyDelete
    Replies
    1. புரண்டு புரண்டு குதூகலித்துக் கொண்டிருக்கும் ...

      😂😂😂😇😇😇😋😋😋😹😹😹🙈🙈🙈🙉🙉🙉🙊🙊🙊👆👆👆😂😂😂😇😇😇🤔🤔🤔😍😍😍🤔🤔🤔😂😂😂😇😇😇

      Delete
    2. இவுங்க ரெண்டு பேருக்கும் இன்று சாப்பாடே தேவையில்லை...

      Delete
  12. காமிக்ஸ் காதலர்களுக்கு காலை வணக்கம்

    ReplyDelete
  13. ///ப்ளுகோட் பட்டாளத்திற்கோ just about average sales! ஏனோ தெரியவில்லை - இந்த யுத்த பூமியின் சிரிப்பு நாயகர்களுக்கு அவ்வளவாய் ரசிகர்கள் கிட்டவில்லை புத்தக விழாக்களிலாவது ! ///

    ஒரு ஸ்லாட்டாவது தொடரட்டுமே சார்.!
    நானும் சிப்பாய்தான் நல்ல வரவேற்பு பெற்றதாக ஞாபகம். விற்பனையில் சுணக்கம் என்பது சற்றே வருத்தம் தரக்கூடியதாக இருக்கிறது.!

    ReplyDelete
    Replies
    1. வருத்ததுடன் கண்ணனின் கருத்தை வழிமொழிகறேன் சார் :-(

      Delete
  14. காலை வண்க்கங்கள் நண்பர்களே.

    ReplyDelete
  15. டெக்ஸ் எப்போதும் நம்பர் 1.என்பது நிரூபணம் ஆகியுள்ளது.

    ReplyDelete
  16. லார்கோ,லேடி எஸ்,லக்கி,ஜானி, பதிமூன்று இவர்கள் எல்லாம் ஆல் டைம் பேவரைட் ஹீரோஸ்.

    ReplyDelete
  17. // நமது குள்ளவாத்து மந்திரியாரும் சரி; ரின்டின் கேனும் சரி- நிச்சயமாய் ஆளுக்கொரு ஸ்லாட்டைத் தக்க வைத்திட சகல தகுதிகளும் வாய்த்தவர்களே.//
    மந்திரியார் தலை தப்பித்தது மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ,சூது கவ்வும் ....:-)

      Delete
    2. நடக்கட்டும்... மந்திரி ஒரு தந்திரி - நிரூபனம் ஆகிட்டு..

      Delete
  18. வணக்கம் சார்..
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

    ///
    TEX!!! மங்களகரமாய் ஆரம்பிக்க இந்த மஞ்சள் சட்டை மாவீரனைத் தவிர்த்து வேறு யார் பொருத்தமான தேர்வாக இருக்க முடியும்? Without an iota of doubt - இன்னமும் விற்பனைகளில் முதல்வராய்த் திகழ்வது இந்த அதிரடி ரேஞ்சரே !! என்னதான் புதுசாய் நாயகர்கள் ; தொடர்கள் ; களங்கள் என்று நாம் 'தம்' பிடித்து முயற்சித்தாலும், இந்த டெக்ஸாஸ் சிங்கத்திடம் அத்தனையுமே மண்டியிட்டே தீர வேண்டியுள்ளது ! ஆண்கள், பெண்கள், சிறுசுகள், பெருசுகள் என்ற பாகுபாடின்றி இரவுக் கழுகாரின் ரசிகர்கள் என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது///--- ஏ டன்ட னக்கா... டனுக்க னக்கா...டன்ட னக்கா..ஊய்..ஊய்..ஊய்...👏👏👏👏👌👌👌👌

    ReplyDelete
  19. // Of course மர்ம மனிதன் மார்ட்டின் “மோசமில்லை” என்ற ரகத்தில் நிற்கிறார்! //
    அப்ப மார்ட்டினும் ஓகே,ஹைய்யா.

    ReplyDelete
  20. Sir,

    It seems overall we did good in book fair sales, it seems we need more hardbound albums next year as test run to take our sales to next level. People are ready to pay little bit extra for quality books. Maybe 4-5 hardbound albums next year would be great. Tex 70 as a mega album would be great. Please share some news about tex 70 sir.

    ReplyDelete
  21. // வாசகர்கள் பரவலாய் ஸ்மர்ஃப்ஸ் பற்றிப் புகார் வாசிப்பதுண்டு! ஆனால் புத்தக விழாக்களிலோ பரவலாய் இவர்களது எல்லா ஆல்பங்களுமே விற்று வருகின்றன.//
    வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

    ReplyDelete
  22. // இந்த பிரான்கோ – பெல்ஜிய ரிப்போர்ட்டர்! விற்பனையில் அதகளம் பண்ணுகிறாரென்று சொல்ல முடியாது ; but ஓசையின்றி நமது ரஹானே போல பணியைச் செய்து விட்டுக் கிளம்பிடும் ரகம் இவர் !//
    சூப்பர், அப்ப 2018 ல் ஜானிக்கு இரண்டு தாராளமாக ஒதுக்கலாம் என்று சொல்லுங்கள்.

    ReplyDelete
  23. // குறிப்பாக “சர்வமும் நானே” & “லயன் # 300” இம்முறை amongst the bestsellers!//
    இதிலிருந்து ஒன்று தெளிவாக புரிகிறது, குண்டு புக் நல்லது,அதிலும் ஹார்ட் பைண்ட் மிக நல்லது,அதிலும் டெக்ஸ் குண்டு புக் மிக மிக நல்லது.

    ReplyDelete
  24. காமிக்ஸ் முன்னேற்ற கழகத்தின்
    சார்பாக அனைவருக்கும் காலை
    வணக்கம்.

    ReplyDelete
  25. இந்த பதிவின் மையக் கருத்தின் படி எனது சுருக்கமான எண்ணங்கள் ...



    டெக்ஸ் - மகிழ்ச்சி


    குண்டு டெக்ஸ் - மிக்க மகிழ்ச்சி




    ஜேசன் பிரைஸ் - மகிழ்ச்சி


    அண்டர்டேக்கர் ,லேடி S, லார்கோ ,ஜானி,பிரின்ஸ் - மிக்க மகிழ்ச்சி


    ட்யூராங்கோ -மிக்க மகிழ்ச்சி


    ஜெராமியா - மகிழ்ச்சி



    விண்ணில் ஒரு வேங்கை - எ.போ.மா ..:-)


    மும்மூர்த்திகள் - அடுத்த வருடம் சி.சி யில் வராத கதைகளை பெரும்பாலாக தேர்ந்தெடுத்தால் மீண்டும் ஏணியில் ஏறுவார்கள் என்பது எனது எண்ணம் சார் ..:-)

    ReplyDelete
  26. கார்ட்டூன் ...


    லக்கி -மகிழ்ச்சி


    பென்னி - மிக்க மகிழ்ச்சி


    சமர்ப் -மண்டையை சொறிந்து கொண்டே மகிழ்ச்சி

    சிக்பில் - மிக்க மகிழ்ச்சி


    க்ளிப்டன் -விட்டத்தை பார்க்கும் படம் ஒன்று


    ப்ளூகோட் - தலைகுனிந்து சோகபார்வை பார்க்கும் படம் ஒன்று


    ரின்டின் -சதிபார்வை பார்க்கும் படம் ஒன்று


    மந்திரியார் -வாய்விட்டு சிரிக்கும் படம் ஒன்று

    ReplyDelete
    Replies
    1. தலீவரே வணக்கம்

      Delete
  27. Sir, lot of thigil, mini and junior lion comics books are not reprinted, if they reprinted 3 or 4 books altogether in a single hard bound book, it must be a best seller and would recive some attention in all book fairs, please consider about this, because everybody likes hardbound "GUNDU BOOKS"

    ReplyDelete
  28. கிராபிக் நாவல்


    இரவே இருளே கொல்லாதே,ஒரு முடியா இரவு -மகிழ்ச்சி


    சிப்பாயின் சுவடுகள் ,வானமே எங்கள் வீதி,பாதைகளும் பயணங்களும் -

    வருத்ததுடன் மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  29. கேப்டன் டைகர் - ரம்மி போன்ற டைகர் ரசிகர்களின் கவனத்திற்கு மட்டும்

    என சொல்லி கொண்டு

    நோ கமெண்ட்ஸ் ...!

    ReplyDelete
    Replies
    1. கெளபாய் ரசிகனாக அதிர்ச்சி...

      Delete
    2. சரி..சரி..
      டைகருக்கு 'னு ஒரு நல்ல நேரம் வராமலா போயிடும்?

      கேப்டன் அப்பிடிங்கறதால இப்ப
      தமிழ்நாட்டுல கொஞ்சம் மவுசு கம்மியா இருக்குது. அதுவுமில்லாம டைகர் (புலி) அரிய வகை உயிரினம் 'ங்கறதால, அதை வாங்கினா தேவையில்லாம பிரச்சனையில மாட்டிக்குவோம்னு மக்கள் அதை தவிர்க்கிறாங்கனு நினைக்கிறேன்.

      Delete
    3. பெருமாள் சார் ....:-)))


      Delete
  30. ////நாங்க பட்டையைக் கிளப்பாம விடமாட்டோம் ' என்று TEX & co சொல்லாது சொல்வதை இந்த விற்பனை நம்பர்கள் புரியச் செய்கின்றன guys ! இந்த விற்பனைப் புள்ளிவிபரங்கள் என் தலைக்குள் லேசாய்க் கூடுகட்டியிருந்த சிலபல சிந்தனைகளையுமே சுத்தம் செய்ய உதவியுள்ளன !///....லாலே லாலலி லேலா....

    ReplyDelete
    Replies
    1. ஆட்டம் முடிவதற்கல்ல ...:-)

      Delete
  31. 1. TIGER Thani thaniya pirikkamal rendu moonu kadaigalai hard bound le podalam sir .. (EN PEYAR TIGER , MINNUM MARANAM , RATHA KOTTAI) madiri ... Pirithu podum podu yedu yedhoda thodarchine theriya mattengudu sir ... Innun "KANSAS KODURAN" Final Part varalenu nenaikiren ...
    2.MARTINU KU innoru slot kudukalame sir ...

    ReplyDelete
  32. காலை வணக்கம் அனைவருக்கும். எம்மாம் பெரிய மாத்திரை இதை இதை தானே எதிர் பார்க்கிறோம் ஒவ்வொரு பதிவிலும் .சபாஷ் படித்து விட்டு வருகிறேன். நன்றி

    ReplyDelete
  33. ///“ஓவர்டோஸ்” என்றதொரு அசுரன் நாளாசரியாய் டெக்ஸ் & கோ மீதான நமது ஈர்ப்பை மட்டுப்படுத்தி விடுவானோ என்ற பயம் என்னுள்ளே கணிசமாய்க் குடியிருந்தது நிஜமே! ஆனால் அது கடுகளவும் முகாந்திரமிலாப் பயம்...---லாலே லாலலி லேலா....லாலே லாலலி லேலா....லாலே லாலலி லேலா....

    ReplyDelete
    Replies
    1. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ....:-))

      Delete
    2. டெக்ஸை பத்தி ஆசிரியர் நல்லவிதமா தானே சொல்லிருக்காரு.
      அப்புறம் ஏன் சோக ராகம் வாசிக்கிறீங்க.?

      Delete
    3. காதில் தேனாக பாயும் மியுசிக்காக்கும் அய்யா....

      Delete
  34. ///அதிலும் நமது hardcover இதழ்களுக்குக் கிட்டிடும் சிலாகிப்புகள் ஜிலீர் ரகம்! குறிப்பாக “சர்வமும் நானே” & “லயன் # 300” இம்முறை amongst the bestsellers////--- அப்படிப் போடு, போடு அசத்தி போடு குண்டாலே....

    ஜனவரி-சென்னை விழா
    மே.....கோடைமலர்
    ஜூலை-ஆண்டுமலர்
    ஆகஸ்ட்-ஈரோடு ஸ்பெசல்
    தீபாவளி-தீபாவளி ஸ்பெசல்

    உங்களின் வசதி+ புத்தகவிழாக்களின் அவசியம் இவற்றை கருத்தில் கொண்டு முடிவு செய்யுங்கள் சார்...

    ReplyDelete
  35. ஷெல்டன் .....


    வயசான ஹீரோ ஆக்‌ஷன் பண்ணமாட்டாருன்னு நினைச்சாட்டாங்களோ என்னவோ சார் ...நான் சின்ன வயசுல பொம்பளைங்க சண்டை போட மாட்டாங்கன்னு மாடஸ்தி ,அதிரடிபடை சாகஸதலைவியை ஒதுக்கிய மாதிரி ...

    பேசாம மாடஸ்திக்கு கோடு போடற மாதிரி ஷெல்டன் மீசைக்கு,காதோரத்துக்கு என 'டை " அடிச்சு பாக்கலாம் சார்...

    டைலன் டாக் ,கமான்சே ...


    வருத்ததுடன் எ.போ.மா.:-(

    ReplyDelete
  36. சபையோர்களுக்கு வணக்கம்

    ReplyDelete
  37. ////இன்னமுமொரு சுவாரஸ்யம் - “நிலவொளியில் நரபலி” கண்டு வரும் விற்பனை சார்ந்தது! அந்த ‘மினி‘ சைஸில் வண்ணம் என்ற பாணிக்கு நிரம்பவே ரசிகர்கள் இருப்பது புரிகிறது! எப்போதுமே ஒரு விதமான பாக்கெட் சைஸுக்கான மோகம் நம்மிடையே மங்கவே மங்காது போலும்!///----மரத்தடி மீட்ல வாக்கு கொடுத்து உள்ளீர்கள் சார், வருடம் ஒரு "நிலாவெளியில் நரபலி" பாணி உண்டு என...

    ReplyDelete
  38. மீண்டும் எங்கள் "தல"டெக்ஸ் தான் நம்பர் 1 என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி.!!!!!!
    நேற்று மட்டுமல்ல,இன்று மட்டுமல்ல-, நாளையும் எங்கள் டெக்ஸ் தான் நம்பர் ஒன்!!!!!இதை கவனத்தில் கொண்டு 2018 ல் தல 70ஐ குண்டு இதழ் ஆகத் த௫மாறு எடி ஐ பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. குண்டு இதழ் தான் நண்பரே, கருப்பு வெள்ளைனு காதில் விழுந்தது, கலரில் வேணும்னு கொஞ்சம் கோரசாக சொல்வோம்...

      Delete
    2. கருப்பு வெள்ளையெல்லாம் ஆவாது!!

      கலா் தான் வேண்டும்!!

      Delete
    3. நண்பர்களே , ஆசிரியரிடம் டெக்ஸ்-70க்கு லயன் 250 போல முழு வண்ண குண்டு இதழ் தர பலத்த கோரிக்கை வைப்போம்.
      ஆதரவு தா௫ங்கள் டெக்ஸ் காதலர்களே!!!

      Delete
    4. இதோ என் ஆதரவு
      +123456789

      Delete
    5. //ஆதரவு தா௫ங்கள் டெக்ஸ் காதலர்களே!!!//
      +123456789

      Delete
    6. எனது கண்ணா பின்னா ஆதரவும்...

      Delete
  39. என்னமோ தெரியலை....இந்த பதிவை படித்தவுடன் காலை முதல் மனம் மகிழ்ச்சியில் திளைக்கறது ....:-)

    ReplyDelete
    Replies
    1. இங்கேயும் ஒரு கங்கை தான் தலீவரே... மறுபடுயும் மறுபடியும் அந்த மொத ஏழெட்டு பாராவையே மனசு பார்க்குது...

      Delete
    2. உண்மை,உண்மை,2018 ல் நிறைய மாற்றங்களுக்கு வித்திடலாம்.

      Delete
  40. டியூராங்கோ, ஜெராமியா, சிக்பில் ஸ்பெசல் - சாதித்தது மகிழ்ச்சி...அஃப்கோர்ஸ் அத்த ஹார்ட் பைண்டிங், நீட் பிரசன்டேசன், உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம்...

    லேடி S--ஆகா நம் செட்ல சபைக்கு வெளியவும் நிறைய இளந்தாரி நண்பர்கள் இருப்பது புளங்காகிதம்; ஒருவேளை நிசமாகவே லேடீஸ் ஆதரவோ????

    ReplyDelete
  41. ////எது எப்படியோ – “தி அண்டர்டேக்கர்” புத்தக விழாக்களிலும் ஸ்கோர் செய்துள்ளார்////

    😂😂😂🤔🤔🤔😇😇😇😂😂😂

    ReplyDelete
    Replies
    1. வெட்டியான் தி கிரேட்!!

      Delete
    2. வெட்டியான் வெட்டிப்பயல் அல்ல.

      Delete
  42. Thorgal back wrapper front wrapper ra change pannalame edi sir,

    ReplyDelete
  43. ////நான் சந்திக்கும் வாசகர்கள் பரவலாய் ஸ்மர்ஃப்ஸ் பற்றிப் புகார் வாசிப்பதுண்டு! ஆனால் புத்தக விழாக்களிலோ பரவலாய் இவர்களது எல்லா ஆல்பங்களுமே விற்று வருகின்றன ! அதிலும் "வானம் தந்த வரம்" செமையாக sales ! So இந்த நீலப் பொடியர்கள் நிஜமாகவே not bad at all////

    அய்யோ அய்யோ!! நல்லா ஸ்மா்ப்பா பொடிஞ்சீங்க எடிட்டா் சாா்!!

    ReplyDelete
  44. எல்லாம் சரி.தான். ஆனால் dylon dog விற்பனையில் சோடை கண்டுள்ளது வருத்தமஆனது. அதற்காக dylon dog slot ஐ குறைக்க வேண்டாம்.

    ReplyDelete
  45. ////சமீபத்து சிக் பில் ஸ்பெஷல் ! அந்த hardcover collection தரும் ஈர்ப்பா ?////

    சந்தேகமே இல்லை சாா்!

    Hardcover தான் காரணம் சாா்!

    பாா்க்கரதுக்கே பால்கோவா மாதிாி இருக்கு Hardcover book!!

    ReplyDelete
  46. இரத்த படலம்-இரண்டே வாரத்தில் 110
    புக்கிங்- ஐசிங் ஆன் த கேக்... ஈரோடு 2018க்கு டிக்கெட் போட்டு வைத்து விடலாம்....ஆகஸ்ட் 4, சனிக்கிழமை, 2018, இரத்த படலம் வெளியீட்டு விழா- பிரம்மாண்டமான விழாவாக இருக்கப் போகிறது...

    இன்னும் புக்கிங்குகள் வேகமெடுத்து 2018ஏப்ரலில் வந்தாலும் இரட்டிப்பு மகிழ்ச்சியே...

    ReplyDelete
    Replies
    1. தவறு 2018 ஜனவரி!!!!!!

      Delete
    2. உங்கள் ஆர்வம் புரிந்து கொள்ள முடிகிறது கணேஷ் சார்.
      நாளை காலை வேலையை ஆரம்பித்தால் கூட மின்மம் ஆறு மாதங்கள் ஆகும்.
      ஆசிரியர் சாரே , 2018ன் ஏப்ரலுக்கான
      வெளியிடல் வாய்ப்பு பற்றி தெரவித்தது "மே பீ ஜஸ்ட் மே பீ" -என்பதே. சோ, ஆகஸ்ட் 2018ன் இரட்டை வெளியீடுகளான இரத்த படலம்& டெக்ஸ் 70க்கு தயாராகுங்கள்....

      Delete
  47. ////நமது குள்ளவாத்து மந்திரியாரும் சரி; ரின்டின் கேனும் சரி- நிச்சயமாய் ஆளுக்கொரு ஸ்லாட்டைத் தக்க வைத்திட சகல தகுதிகளும் வாய்த்தவர்களே என்பதை நம்பர்கள் புரியச் செய்கின்றன//

    சிரிப்போ சிரிப்பு!!

    😂😂😂😂😂😂

    ReplyDelete
  48. டியர் எடிட்டர்

    Godown சுமைகள் குறைக்கும் பிரதம காரணம் அதிக விற்பனைகளே என்பதால் - இதுவரை உங்கள் அலசல்களில் அதிகம் விற்பனையாகும் ஆல்பங்களை மட்டும் மீண்டும் repeat (அதாவது அடுத்த கதைகள் வெளியீடு செய்யவும்). விற்பனைக்கு உதவாதவைகளை தயவு தாட்சண்யம் பார்க்காமல் ஒதுக்கவும்.

    சந்தா E trackல் புதிய முயற்சிகளை வைத்துக்கொள்ளலாம் கண்டிப்பாக.

    விற்பனை காண்பதற்கு ஒரு 15 டைட்டில்கள் இருப்பதால் 30 புத்தகங்கள் வெளியீடு செய்ய சிரமம் இருக்கப்போவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. நெத்தியடி பாயிண்ட்ஸ் ராக்ஜி...

      Delete
  49. ஒரு சிப்பாயின் சுவடுகள் கதையை பற்றி அதிகமானோர் அறியவில்லை. மேலும் ஒரு டிராமா அல்லது memoir genre வகை கதைகள் நமது தனிப்பட்ட ரசனை க்குறியவை. பரவலான ஜனரஞ்கமான கதைகளை காட்டிலும் இவ்வகை கதைகளை படிக்க mood and mind set ஐ கோருகிறது.

    ReplyDelete
  50. புதியப்பதிவைக்காண http://tamilcomicseries.blogspot.in/

    ReplyDelete
  51. Replies
    1. இந்த தம்பிக்கு என்ன ஆச்சு? குளிர் ஜுரம் வந்தது போல் பினாத்திக் கொண்டு இருக்கு

      Delete
  52. இந்த லிஸ்ட்ல என் பேரு வரலிங்

    ReplyDelete
    Replies
    1. அதான் ரின்டின்கேன் உண்டுன்னுட்டாா்ல!

      Delete
  53. புதிய வாசகர்களுக்கு tiger கதைகளை பற்றிய ஒரு கருத்து என்னவென்றால் ஆரம்ப பாகங்களை பற்றிய கதைகள் titles நிறைய உள்ளன. இதில் எது முதலில் எது கடைசி என்று தெளிவாக அறிவதில் உள்ள சிரமமே ஒரு புதிய வாசகரை tiger ஐ வாங்க யோசிக்க வைக்கிறது. அல்லது

    ReplyDelete
  54. நண்பர்களுக்கு ,

    இதுவரை Thorgalலை ஒரு மந்திர மாயாஜால கதையாகவே எண்ணி படித்து வந்தவர்களுக்கு - now starts the music ! வரவிருப்பது thorgalன் சிறந்த ஆல்பங்கள் இரண்டின் தொகுப்பு.

    முதல் கதை : thorgalன் ஒரே திகில் கதை - படிக்க எனக்கு சற்று பயமாகவே இருந்தது - மறு வாசிப்பிலும் விறுவிறுப்பு
    குறையவில்லை

    இந்த தொகுப்பின் இரண்டாம் கதை முதல் adventures ஆரம்பம் - பெரும்பாலானோர் மனத்தைக் கவர்ந்து விடும் !

    ReplyDelete
  55. Tiger ஐ பற்றிய கதை வரிசை பற்றிய ஒரு சிறிய tag கண்ணில் படுமாறு புத்தக கண்காட்சி யில் நமது stall இல் வைத்தால் அநேகம் பேருக்கு ஒரு புரிதல் மற்றும் தெளிவு கிடைக்கும் என்பது என் கருத்து.

    ReplyDelete
  56. பெரும்பாலான டைகர் வாசகர்கள் வாங்கி படித்து பத்திரப்படுத்தியிருப்பார்கள்.
    புதிய கதைகள் சற்று சுமார்தான் பழசோடு ஒப்பிடுகையில்.

    ReplyDelete
  57. 'கமான்சே' - தனித்தனி ஆல்பங்களாக வரும்போது அந்தத் தொடருக்கு ஒரு வெய்ட் கிடைக்காமல் போய்விடுகிறதோ என்று தோன்றுகிறது. எனவே, தோர்கல் போல குறைந்தது 2 கதைகளை கொண்ட தொகுப்பாக முயற்சிக்கலாமே சார்?

    ReplyDelete
    Replies
    1. நண்பர் பொடியன் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன் :-)

      Delete
    2. இதே கருத்தை இன்று காலை ஈரோடு
      விஜயிடம் கூறினேன். அதே சமயம்
      மீதமுள்ள பாகங்களை ஒரே தொகுப்பாக.

      Delete
  58. 'வேய்ன் ஷெல்டனை' பொறுத்தவரை எனக்கும் பெரிய ஈர்ப்பு இருந்ததில்லை. காரணம், ஒரே பாணியிலான கதைகள். அவரது தொடரில் கதை எண்ணிக்கையுமே குறைவு என்பதால் இருப்பதைத்தானே நீங்களும் தர முடியும். சித்திரங்கள் மட்டுமே கதையை வெற்றிபெற வைக்கமுடியாது என்பதற்கு இவரும் ஓர் உதாரணமாகலாம்....

    ReplyDelete
  59. 'டயபாலிக்'குக்கு இன்னும் சில வாய்ப்புகள் வழங்கிவிட்டு விற்பனை பற்றி பேசுவது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன் சார். புத்தக விழாக்களில் அவருக்கும் தனியாக இரண்டு பனர்கள் வைத்துப்பாருங்கள். விற்பனை நிச்சயம் முன்னேறும்!

    ReplyDelete
    Replies
    1. Podiyan : டயபாலிக்கின் வெளியீட்டுத் தேதியை நினைவுபடுத்தித் தான் பாருங்களேன் சார் ! இவையெல்லாமே 3 + ஆண்டுகளாய் கோந்து போட்டு நம்மிடம் தர்ணா செய்து வரும் இதழ்கள் !

      Delete
    2. அது தெரியாமல் பதிவிடவில்லை சார். புதிய வெளியீடுகளும் வரும்போது முன்னைய ஸ்டாக்குகளிலும் நகர்வு இருக்குமே என்பதே என் கருத்து. டயபாலிக்கை ஆரம்ப நாட்களில் இரசித்திட்ட சிலரே இன்றுவரை பிடிவாதமாக அவர் வேண்டுமென்று கேட்கிறோம். புதியவர்கள் மனதில் அவரது 'நெகடிவ்' காரக்டர் பதிய இன்னும் சில கதைகள் தேவைப்படுமென்று தோன்றுகிறது...

      Delete
  60. மூவேந்தர்கள் 'ரீ-பிரிண்டுகள்' பற்றி நீங்கள் முடிவெடுத்தபோது - எம்மில் சிலர் சொன்னதை இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன் சார். அவற்றில், சரவெடி கதைகளை தேர்ந்தெடுத்தால் மட்டுமே வெற்றிகரமாகும். இல்லையெனில் நீண்ட கால நோக்கில் தொய்வினையே சந்திக்கும் என்பதே அது. நீங்கள் எதிர்பார்த்த 'குறைந்த விலை - விற்பனை வாய்ப்பு' - என்பது சற்றே சறுக்கும் நிலையில், அதிரடியான 2,3 கதைகளை தொகுப்பாக்கி ட்ரை பண்ணலாமே? அல்லது, ஒவ்வொரு நாயகருக்கு ஒரு கதை என எடுத்து 3-4 நாயக நாகயர்களின் கதைகளை தொகுப்பாக கொண்டுவரலாமே? ரூபா 200 - 250 என விலை யில் திட்டமிட்டால் வரவேற்பிருக்கும் என்பது எனது தனிப்பட்ட எண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. வழிமொழிகிறேன் !

      Delete
    2. Podiyan & friends : மும்மூர்த்திகள் ரீப்ரிண்டுக்கு முன்பாய் நான் என்ன சொல்லி வந்தேன் என்பதைக் கொஞ்சமாய் நினைவுபடுத்தியும் பாருங்களேன் ? அட...அவ்வளவு பின்னே போவானேன் - ஒவ்வொரு மறுபதிப்புக் கோரிக்கைக்குமே எனது ரியாக்ஷன்கள் என்னவென்று பாருங்களேன் ப்ளீஸ் ?

      அப்புறம் நம் வசதிக்கேற்ப "இது வேண்டும் - இது வேண்டாமென்ற" தேர்வுகள் எல்லா நேரங்களிலும் சாத்தியமாகா விஷயங்கள் ! So "இது க்ளாசிக்க்சில் வந்து விட்டது ; அது வரவில்லை" என்ற கணக்குகளெல்லாமே நீங்களும் நானும் மட்டும் வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம் ! நடைமுறையில் சாத்தியமில்லை !

      Delete
    3. அதை ஏற்றுக்கொள்கிறோம் சார். உரிமை பெறும்போது உங்களுக்குள்ள சவால்களை ஏற்கனவே பல தடவைகளில் தெரிவித்துவிட்டீர்கள். ஆனால், இந்த 'கோம்போ' ஸ்டைலை அடுத்தாண்டில் ஏதாவது ஒரு வாய்ப்பில் பயன்படுத்திப் பார்த்திட முயற்சி செய்யுங்களேன்? குறைந்தது புத்தக திருவிழாக்களில் ஏதேனுமொரு சிறப்பு வெளியீடாகவேனும்..? அது கொஞ்சம் ஈர்த்திடும் என்றே தோன்றுகிறது...

      Delete
    4. +999999999999999099909099999999099099

      Delete
  61. அவுட் - ஆஃப் ஸ்டாக் ஆகியுள்ள இதழ்களை மீள கொண்டுவர அவ்வப்போது முயற்சிக்கிறீர்கள். மாடஸ்டியின் 'கழுகு மலைக் கோட்டையின்' கலர் ரீ-பிரிண்டையும் முயலலாமே?

    ReplyDelete
    Replies
    1. Podiyan : ஏதேனும் விற்றுத் தீர்ந்தால் நிம்மதிப் பெருமூச்சு மட்டுமே விடுவதாக இருக்கிறேன் ! நிரம்பி வழிகிறது கிட்டங்கி !

      Delete
    2. எது சார், 'கழுகு மலைக் கோட்டையா?' - எங்களுக்கு 50 புக்கு பார்சேசேசேல்ல்ல்ல்ல்.....

      Delete
    3. எனக்கு ரெண்டு போதும்.

      Delete
  62. சார் மும்மூர்த்தி கதைகள் செம போர் டைகரின் புதிய கதைகலும் போர் கலரில் ஒரு கதை படிக்க் எல்லோரும் விரும்புவது இயல்பானது TeX martin போன்ற சிலரே கருப்பு வெள்ளையில் பார்க்க வேண்டும் மற்ற் அனைத்தும் கலரில் தான் வேண்டும்.

    ReplyDelete
  63. ////இன்னமுமொரு சுவாரஸ்யம் - “நிலவொளியில் நரபலி” கண்டு வரும் விற்பனை சார்ந்தது! அந்த ‘மினி‘ சைஸில் வண்ணம் என்ற பாணிக்கு நிரம்பவே ரசிகர்கள் இருப்பது புரிகிறது! இது பற்றி நமது கோவைக் கவிஞருமே ஏற்கனவே என்னிடம் பேசியிருந்தார் ! எப்போதுமே ஒரு விதமான பாக்கெட் சைஸுக்கான மோகம் நம்மிடையே மங்கவே மங்காது போலும்! மண்டைக்குள் சிந்தனைச் சக்கரங்கள் சுழன்றிடும் நேரம் folks////

    நல்லா சுழலட்டும்!!

    கட்டிலில் படுத்துக் கொண்டே, பக்கோடா, முறுக்கு, மிக்சா் போன்ற சிலபல பட்சணங்களை நெருக்கியபடியே கதை படிக்கும் ஆரம்ப நாட்களது சொா்க்கானுபவத்திற்கு சின்னசைஸ் புத்தகங்கள் மிகத் தோதானவை என்பதில் சந்தேகமே இல்லை!

    என்னைப் கேட்டால் காா்ட்டூன்களையே அந்த சைஸ்ஸிற்கு கொண்டு சொல்லலாம் என்பேன்!!

    புத்தகம் படிப்பது தியானம் செய்வது போல கடினமான பணியாக இருந்தால் வாசிப்பு குறைந்துவிடக்கூடும் என்பது என் எண்ணம்!!

    (நாங்கள் இரண்டு பைபிள் சைஸ்க்கு புத்தகம் இருந்தாலும் படிப்போம் தான்! ஆனாக்கா உடம்பு சொகுசு கேட்துதே)

    புத்தங்களை மடக்கிப் படிக்கும் வாய்ப்பும் பறிபோய் விடுகிறது!!

    ஆகவே நான் என்ன சொல்றேன்னா??

    படுத்துக் கோண்டே படிக்கும்போது பக்கோடா தின்னும் வாய்ப்பு பறிபோவதினால், பக்கோடாவை லேசாக்க முடியாத காரணத்தினால், புத்தகங்களை லேசாக்கிடுங்கள்னு சொல்றேன்!

    ReplyDelete
  64. தல கதைகள்.
    தலைக்கு வருடத்திற்கு 12 இதழ்கள்.
    அதில்
    6 இதழ்கள் வழக்கம் போல்.
    3 இதல்கள் கனமான கதைக்களம்.
    ஓவியங்கள் பிரச்சனை இல்லை.
    3 இதழ்கள் அமானுஸ்யம்,மாந்ரீகம் . கலந்த கதைக்களம்.
    இதை தனி இதழாகவோ,
    காம்போவாகவோ வெளியிடுங்கள்.
    சிறப்பு இதழ்கள் இந்தக் கோட்டாவில் வராது.

    ReplyDelete
    Replies
    1. சிறப்பு இதழ்கள் இந்தக் கோட்டாவில் வராது.ஆமாம் 12ம் டெக்ஸ் டெக்ஸ் மட்டுமே.+அவ்வப்போது சிறப்பு இதழ்கள்.

      Delete
  65. விஜயன் சார்,
    ஸ்மர்ஃப்ஸ் கண்டிப்பாக வேண்டும்....விட்டு விடாதீர்கள்...

    ReplyDelete
  66. சார் டெக்ச பற்றிய உங்க உற்ச்சாக எழுத்துகள் இங்க லஞ்சம் வாங்குற காக்கிகள ஒரு பிடி பிடிச்சா என கேக்க வைக்கின்றன . ஸ்பைடரின் விற்பனை , உங்களை தொந்தரவு செய்த வகையில் எனக்கும் வருத்தம் . இப்போது மிக மிக மிக சிறந்த கதை வரிசைகள் நம்மிடம் இருப்பதால் சாதாரண சிறந்த கதைகளை அதாவது மாடஸ்டி , ராபின் ,ஜூலியா ,டைலன் போன்றோரை பின்னர் பார்க்கலாம் . அவர்களுக்கு சற்று ஓய்வளித்து விட்டு அந்த இடத்திற்கு தாங்கள் வைத்துள்ள அற்புதங்களை களமிரக்கலாமே...

    ReplyDelete
  67. அப்பாடி முதல்முறையாக முன்பதிவு பட்டியலில் என் குடும்ப பெயர்கள் ஷோ ஹேப்பி

    ReplyDelete
  68. கனவு மெய்ப்பட வேண்டும்...அட்டைப்படம் அருமை..

    ReplyDelete
  69. //Surprise # 2 - உங்களால் யூகிக்கவே இயலாவொரு இதழ் ! (எனக்கு மட்டுமாவது) டபுள் சந்தோஷம் – “விண்ணில் ஒரு வேங்கை” இதழானது சூப்பராக விற்பனையாகியுள்ளதன் பொருட்டு! யுத்தப் பின்னணியுடனான இந்தக் கதை 3 புத்தக விழாக்களிலுமே தெரியுள்ளது - ஆச்சர்யமூட்டும் விதத்தினில் ! அதை வாங்கிச் சென்றோருக்குமே மகிழ்வு இருந்திருப்பின் சூப்பர் தான்! பாகம் 2 & 3 வெயிட்டிங் பாபு... ‘ம்ம்ம்‘ என்று மட்டும் கண்ணசைத்தால் டெம்போ வைத்தாவது அம்மணியை அழைத்து வந்து விடுவேன்! ஏதோ பார்த்து பண்ணுங்க சாமி!//

    முதல்ல அதை பண்ணுங்க சாமி.. டிங்கிர்க் படம் பாத்தப்ப இந்த கதைதான் நினைவுக்கு வந்தது..

    ReplyDelete
  70. ///ஒரு காமிக்ஸ் கேரவனின் கதையிது...!///

    இப்பதிவுக்குப் பொருத்தமான, அழகான தலைப்பு!!

    ///ஓமக்குச்சி நரசிம்மனாய்க் காட்சி தருவதை விடவும் குண்டு கல்யாணமாக வலம் வருவதையே ஜனம் விரும்புகிறது என்பதும் புரிகிறது! அதிலும் நமது hardcover இதழ்களுக்குக் கிட்டிடும் சிலாகிப்புகள் ஜிலீர் ரகம்! குறிப்பாக “சர்வமும் நானே” & “லயன் # 300” இம்முறை amongst the bestsellers! ///

    தல தொடர்ந்து விற்பனையில் நம்பர்-1 ஆக இருப்பது குதூகலமளிக்கிறது. குறிப்பாக ஹார்டுகவர் இதழ்கள் புதிய வாசகர்களையும் ஈர்த்திடுவதை EBFல் கண்கூடாகக் காணமுடிந்தது! கதைத்தேர்வுகளுக்கான உங்களுடைய மெனக்கெடல் இந்த அளவுக்கு இருந்திடும்போது - அதற்கான வெற்றியும் தானே வந்து சேர்வதில் வியப்பில்லைதான்! அடுத்த ஆண்டுக்கான தல கதைத் தேர்வுகளும் விதம்விதமாக அமைந்திடுமென்று உறுதியாக நம்புகிறோம்!

    ////தல‘க்கு அடுத்தபடியாக ஆக்ஷன் நாயகர்களுள் இம்முறை களத்தை அதிரச் செய்திருப்பது 3 சர்ப்ரைஸ் புது வரவுகள்! முதலாமவர் செம்பட்டைத் தலை ஜேசன் ப்ரைஸ்!! ///

    வித்தியாசமான, பயமுறுத்தும்படியான அட்டைப்படங்களே காரணம் எ.எ.க! அட்டைப்படத்தைப் பார்க்கும்போதே அதைப் படிக்கவேண்டுமென்ற ஆவல் + உள்பக்க ஓவியங்களில் ஒரு ஈர்ப்பு மட்டும் தோன்றிவிட்டால், புதிய வாசகர்களும்கூட அதைத் தேர்வு செய்ய அதிகம் யோசிக்கவேண்டியிருக்காது!

    ///“ஒரு பைங்கிளிப் படலம்” போன்றவையெல்லாம் பரிதாபமாய் விற்பனை கண்டுள்ளன!///

    மற்ற அட்டைப்படங்களோடு ஒப்பிடுகையில் 'ஒரு பைங்கிளிப் படலம்' அட்டைப்படம் அத்தனை ஈர்ப்பாய் இல்லையென்பதும், தலைப்பும்கூட 'வாங்கத் தூண்டும்' ஒரு பளீர் மின்னலை உருவாக்கவில்லை என்பதும்.எ.க! ஒரு சராசரி வாசகன் ஒரு புத்தகத்தைத் தேர்வு செய்திட கதையின் தலைப்பு, அட்டைப்பட ஓவியம் ஆகியவை மிக முக்கியப் பங்காற்றுகின்றன எ.எ.க! ( அடுத்தகட்டமாக உள்பக்க ஓவியத் தரமும், வண்ணங்களும்)

    ///நமது குள்ளவாத்து மந்திரியாரும் சரி; ரின்டின் கேனும் சரி- நிச்சயமாய் ஆளுக்கொரு ஸ்லாட்டைத் தக்க வைத்திட சகல தகுதிகளும் வாய்த்தவர்களே என்பதை நம்பர்கள் புரியச் செய்கின்றன!///

    ஹைய்யா!!! :)))

    ///கமான்சே தொடரோ தட்டுத் தடுமாறுகிறது! Sad... really sad!///

    வருத்தமளிக்கும் செய்திதான்!
    666 பண்ணையை சரிவிலிருந்து மீட்டதற்குப் பின் அந்த அணியினரோடு சேர்ந்து கதையும் ( குறிப்பாக, தற்போதுவந்த 'நெஞ்சில் ஒரு நட்சத்திரம்' ) கொஞ்சம் இலக்கின்றி பயணிப்பதாகவே தோன்றுகிறது! ஹெர்மனின் அசாத்திய உழைப்புக்காகவாவது மீதமிருக்கும் பாகங்களை சீக்கிரமே (முடிந்தால் ஒரே குண்டு புக்காக) முடித்துக்கொண்டு மங்களம் பாடிவிடலாம்!

    ReplyDelete
  71. EBFல் இம்முறை - கிடைத்த நேரங்களிலெல்லாம் நம் ஸ்டாலுக்கு வருகைதந்து ஈடுபாட்டோடு களப்பணியாற்றியதற்காக நண்பர் கோவிந்தராஜ் பெருமாலை நிறையவே பாராட்டலாம். அதீதப் புழுக்கம் நிலவும் சமயங்களில்கூட நம் ஸ்டாலை விட்டு நகராமல் புதிய வாசகர்களுக்கு உதவிக்கொண்டிருந்த அவரது ஈடுபாடு - கூடுதல் பாராட்டு்குரியது!

    இம்முறை அதிக ஈடுபாடு காட்டிய இன்னொரு நபர் - மிதுன் சக்கரவர்த்தி!

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

      Delete
    2. என்னால் முடிந்த சிறு பங்களிப்பு மட்டுமே.
      நண்பர்களின் பாராட்டு என்னை ரொம்பவே கூச்சத்தில் நெளிய வைக்கிறது.

      Delete
    3. ///நண்பர்களின் பாராட்டு என்னை ரொம்பவே கூச்சத்தில் நெளிய வைக்கிறது.///

      நல்லவேளையா உங்களை அங்கே ஸ்டாலிலேயே பாராட்டலை. இல்லேன்னா கூச்சத்துல ஓவரா நெளிஞ்சு அங்கே வந்தவங்களையெல்லாம் கவுத்துவிட்டிருப்பீங்க! :D

      Delete
    4. // என்னால் முடிந்த சிறு பங்களிப்பு மட்டுமே.//
      அருமை,தங்கள் பணி தொடரட்டும்.

      Delete
    5. ////இம்முறை அதிக ஈடுபாடு காட்டிய இன்னொரு நபர் - மிதுன் ////

      அது யாருங்க புதுவரவு!!

      😁😁😁

      Delete
    6. மிதுன் & கோவிந்தா, வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

      Delete
  72. இந்த டெக்ஸாஸ் சிங்கத்திடம் அத்தனையுமே மண்டியிட்டே தீர வேண்டியுள்ளது.+123456789

    ReplyDelete
  73. தல தொடர்ந்து விற்பனையில் நம்பர்-1 ஆக இருப்பது குதூகலமளிக்கிறது. குறிப்பாக ஹார்டுகவர் இதழ்கள் புதிய வாசகர்களையும் ஈர்த்திடுவதை EBFல் கண்கூடாகக் காணமுடிந்தது! கதைத்தேர்வுகளுக்கான உங்களுடைய மெனக்கெடல் இந்த அளவுக்கு இருந்திடும்போது - அதற்கான வெற்றியும் தானே வந்து சேர்வதில் வியப்பில்லைதான்! அடுத்த ஆண்டுக்கான தல கதைத் தேர்வுகளும் விதம்விதமாக அமைந்திடுமென்று உறுதியாக நம்புகிறோம்! +12445678998765432

    ReplyDelete
  74. ////புதுசாய் பேப்பர் ரகம் வந்திருக்கிறது அண்ணாச்சி !‘ என்று அப்பிராணியாய் வந்து சேரும் சேல்ஸ் rep-களிடம் கூட அதிரடியாய் ஏதாவது பஞ்ச் டயலாக் பேசும் ஆசை நாவில் நடனமாடுகிறது! வரிசையில் நின்று கொண்டிருக்கும் போது, நம்மூர்களுக்கே உரித்தான அந்த ‘முண்டியடித்து முன்னே போகும் கழக‘ உறுப்பினர்களைப் பார்த்தால் நடுமூக்கில் ‘நச்‘சென்று குத்துவோமா ? என்ற பரபரப்பு தொற்றிக் கொள்கிறது///

    எலேய் மாணிக்கம்... சிவகாசிக்குப் போட்டுவச்சிருந்த அந்த டிக்கெட்டை உடனே கேன்சல் பண்ணிட்டுவாலே!

    ReplyDelete
    Replies
    1. Why this kola very,
      அத அப்பிடியே ரிப்பீட்டு.

      Delete
  75. தொடரட்டும் தல தாண்டவம்.

    ReplyDelete
  76. டியர் விஜயன் சார்,

    இரும்பு மனிதன் ஆர்ச்சிக்கு 2018 காமிக்ஸ் கோட்டாவில் இடம் உண்டா சார் ? புதிய கதை அல்லது மறுபதிப்பு கதை ஒன்றை இடம் பெற செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள் சார் ! நன்றி!
    எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

    ReplyDelete
  77. சார் 13 ஸ்பின் ஆஃப் பற்றி ஏதும் சொல்லவே இல்லை.

    ReplyDelete
  78. கர்னல் அமோஸ் விற்பனை எப்படி சார்?

    ReplyDelete
  79. ஸ்பெயின் பார்சிலோனா நகரில் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் முக்கிய இலக்கு எதுதெரியுமா?
    மர்ம மனிதன் மார்ட்டினின் பொன்னில் ஒரு பிணம் கதையில் ஒரு முக்கியமான கட்டிடமாக வரும் சாக்ரடா ஃபெமிலியா தேவாலயம். அட்டையில் கூட அந்த தேவாலயம் ஓவியமாக இடம்பெற்றிருக்கும். மார்ட்டின் கதைகள் தமிழ் வாசகர் உலகிற்கு எடிட்டர் தந்த ஒரு அற்புத பரிசு. இந்தியாவின் பிற மொழி வாசகர்களுக்கு கிடைக்காத ஒரு விஞ்ஞானகதைகளஞ்சியத்தை நமக்கு அளித்த எடிட்டருக்கு நன்றி! :)

    ReplyDelete
  80. ////தொடரும் இதழ்களிலும் அம்மணி சாதித்தால் கொங்கு மண்டலத்தில் இவருக்கொரு சிலை நிறுவ கடும் போட்டி நிலவுமென்பது நிச்சயம் ! "கண்டதும் காதல்" ரகம் - ஷானியாவைப் பொறுத்தமட்டிலும் ! ////

    சிலை அமைக்கிறோம்... சுற்றிலும் ஒரு தடாகத்தையும் நிறுவுகிறோம்... அந்தத் தடாகத்தை ஜொள்ளால் நிரப்புகிறோம்...

    ReplyDelete
    Replies
    1. நான் அந்த சிலைக்கு ஒரு உம்மா
      கொடுக்கிறேன்.Ok

      Delete
    2. ம்க்கும்! தடாகத்தில் முதலைகளையும் விட்டுவைக்கணும் போலிருக்கே...

      Delete
    3. இதோ நானும் வந்துட்டேன்!!

      Delete
  81. டெக்ஸ் 70,700 பற்றிய பதிவு உண்டா சார்.

    ReplyDelete
  82. கிட்டத்தட்ட எதிர்பார்த்த மாதிரி தான் விற்பனை ரிசல்ட் இருக்கு. நல்ல தரமான, வண்ண, குண்டு புத்தகங்களையே பெரும்பாலான ரசிகர்களை முதல் பார்வையில் கவர்கிறது.

    டெக்ஸ் 2 வருடமாக தொடர்ந்து முன்னணியில் இருப்பது சந்தோசம். வண்ண குண்டா கரூர்கார் பார்முலாப்படி போட்டுத் தாக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. //டெக்ஸ் 2 வருடமாக தொடர்ந்து முன்னணியில் இருப்பது சந்தோசம்.//
      உண்மையாகவே மகிழ்ச்சியான செய்தி,அப்படியே அடுத்த வருடமோ,அல்லது அதற்கு அடுத்த வருடமோ வரும் டெக்ஸின் ஸ்லாட்டில் இந்த செவிந்தியர்கள்,பாலைவனப் பரப்பு சார்ந்த கதைகளை கொஞ்சம் ஆசிரியர் நம் காட்டினால் பரவாயில்லை,சிகப்பாய் ஒரு சொப்பனம் போன்ற கதைகள் இன்னும் நினைவில் நிற்கின்றன.

      Delete
    2. //செவ்விந்தியர்கள்,பாலைவனப் பரப்பு சார்ந்த கதைகளை கொஞ்சம் ஆசிரியர் நம் காட்டினால் பரவாயில்லை,சிகப்பாய் ஒரு சொப்பனம் போன்ற கதைகள் இன்னும் நினைவில் நிற்கின்றன.///+10000000...

      செவ்விந்தியர்கள் பங்கு இருக்கும் & பாலைவனத்தில் நடக்கும் கதைகளான பவளசிலை மர்மம், பழிவாங்கும் பாவை, பழிவாங்கும் புயல், அதிரடி கனவாய்,கழுகு வேட்டை,பாலைவன பரலோகம்...போன்றவை இன்றும் பார்த்தவுடன் வசீகரிக்கும்.
      செவ்விந்தியர்கள் இடையேயான உரசல்கள் எப்போதும் ஆல்டைம் பேவரைட்... இந்த வகை கதைகள் இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம் சார்.

      Delete
  83. மாலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  84. ஹலோ சண்டே பிளாக் லீவா?

    ReplyDelete
  85. விண்ணில் ஒரு வேங்கை 2018 ல் கொண்டு வரலம்

    ReplyDelete
  86. "டைகர் - தொடரும் ஒரு சகாப்தம் ! "

    *150நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியே நமக்கு மறந்து விடுகிறது. 150வருடங்களுக்கு முந்தைய சம்பவங்களை தத்ரூபமாக நம்முன் விவரிக்கும் டைகர் கதைகள் மனதை மயக்கும் தங்க சுரங்கள் என்றால் மிகையல்ல ...

    *சுட்டெரிக்கும் பாலைவனங்கள் ,தகிக்கும் பாறை முகடுகள் ,உயிரை விட மதிப்பு மிக்க தண்ணீர் , நியாயம் என்றால் விலை கிலோவிற்கு எத்தனை டாலர்கள் என கேட்கும் முரடர்கள்; நைச்சியமாக அந்த முரட்டு கரங்களை அடக்கும் டைகரின் சாமர்த்தியம்- என கற்பனையின் உச்சம் நம் கண்முன்னே விரிவதைக் காண்கிறோம்.

    *மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்கள், அவர்களின் ஆதிகால பழக்க வழக்கங்கள், மத நம்பிக்கைகள், செவ்விந்தியர்களை அழிக்கும் ஆணவ வெள்ளையர்கள் ,செவ்விந்தியர்களை சில சமயம் காக்கும் இனவாதம் சற்றும் இல்லாத டைகர்- என கலவையான உலகம் அல்லவா அது...

    *அந்த தங்க சுரங்கங்களை தேடி பாலைவனங்கள் ,கணவாய்கள், ,மலைத்தொடர்கள் என அழையும் லக்னர் போன்ற முரட்டு வில்லன்கள் ,அவர்களைத் தொடரும் டைகர்; அவர் அருகிலேயே மற்றொரு குதிரையில் பயணம் செய்யும் நாம்.

    *செவ்விந்தியர்களின் மந்திரங்கள், தந்திரங்கள், செய்தி பரிமாற்றங்கள்; முக்கியமாக அந்தப் புராதன புகை சமிக்ஞை- என விசித்திரங்களை அள்ளித்தரும் சித்திரங்கள் வாயிலாக விருந்து படைக்கும் அட்சய பாத்திரங்கள் அல்லவா டைகரின் ஆழ்ந்த பிரமாண்டமான கதைக்களன்கள்....

    *ஒன்றறை நூற்றாண்டுகளுக்கு முந்தைய வன்மேற்கின் வஞ்சக ஆடுகளங்களில் டைகரின் சாகசங்கள் அனல் பறத்தின. அசாதாரண வில்லன்கள் , அவர்களின் வஞ்சக சூழ்ச்சிகள், அந்த சூழ்ச்சிகளை முறியடிக்கும் டைகரின் சமயோசித யுக்திகள் என பிரமிப்புகளுக்கு பஞ்சமே இராது டைகர் தொடர்களில்....

    *கெளபாய் ஹீரோஸ் என்றாலே லயன் & முத்து காமிக்ஸில் வெற்றிகொடி நாட்டிய டெக்ஸ் வில்லர், கேப்டன் டைகர் மற்றும் லக்கிலூக் தான் ஞாபகம் வரும். இந்த மூவரில் டைகருக்கு இருக்கும் தனிச்சிறப்பு தமிழ் காமிக்ஸ்ஸின் "தி பெஸ்ட் இதழ்"ஆன "மின்னும் மரணம் " - இதழின் நாயகன் இவரே . ரூபாய் 1000விழாவில் வந்த ஒரே ஹூரோவும் இவரே.

    *ஒழுக்கம் கெட்ட ராணுவ லெப்டினண்ட் டைகர் , இவரின் கூட்டாளிகளோ கிழட்டு குடிகாரன் ஜிம்மி மற்றும் வயதான ரெட் உல்லி; இருந்தபோதிலும் - லயன் காமிக்ஸ்க்கு ஒரு டெக்ஸ் வில்லர்னா, முத்துவிற்கு ஒரு டைகர்னு சொல்லும் அளவுக்கு கேப்டன் டைகர் புகழ்பெற என்ன காரணம்? பதில் வெரி சிம்பிள்.

    "டைகர் ஒரு சாதாரண சராசரி மனிதன். சக மனிதர்களை மதிக்கும் ஒரு கேசுவல் கேரக்டர். பிரம்மாண்டமான கதைக்களன்களில் சமயோசித புத்தியால் அத்துணை சவால்களையும் சர்வசாதரணமாக கையாளும் எளிமையான வடிமைப்பே ரசிகர்களை சொக்க வைத்த மந்திரம் இங்கே".

    *ஸ்பெசல் இதழ்கள் என்றாலே டைகர் என சொல்லும் அளவுக்கு வெளிவந்த "மின்னும் மரணம்" , அதைத் தொடர்ந்த "என் பெயர் டைகர்" , இம்மாத "இரத்தக்கோட்டை" என கலக்கும் டைகரின் வரிசையில் அடுத்து எஞ்சிருக்கும் இளம் டைகர் வரிசையை தொடரும் நாள் ஓன்று புலர்வது திண்ணம் என்ற எண்ணம் எழுகிறது.

    --------சேலம் Tex விஜயராகவன் ------

    (என் சக கெளபாய் சகோதரர்களான டைகரின் ரசிகர்களுக்கு சமர்ப்பணம், சோர்ந்து கடக்கும் உள்ளத்தை உதறி உற்சாக நடைபோடுங்கள், தமிழ் காமிக்ஸின் 2வது ஜாம்பவான் டைகரல்லவா...)

    ReplyDelete
    Replies
    1. //தமிழ் காமிக்ஸின் 2வது ஜாம்பவான் டைகரல்லவா...)//
      உண்மை,டெக்ஸின் கதைப் பாத்திரத்தை பொறுத்தவரை ஒரு ஒழுங்குக்குள் வடிவமைக்கப்பட்டது,அவருக்கென சில நியதிகள் உள்ளன,ஆனால் டைகரின் கதைப் பாத்திரமானது நியதிகள்,வரைமுறைகள் அற்றது,அதாவது ஒழுங்கற்ற ஒழுங்கு.
      எனினும் இரு பாத்திரங்களின் மையம் நீதியை நிலைநாட்டுவதே,அந்த வகையில் எதிரெதிர் கதைப் பாத்திரங்களாக இருப்பினும் இருவருமே ஈர்ப்புக்கு உரியவர்களாக இருப்பதில் ஆச்சிரியம் எதுவும் இல்லை.

      Delete
    2. 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾

      Delete
  87. தொடர்ந்து காமிக்ஸ் வாசிப்போர் பிடித்தாலும் பிடிக்கவில்லையென்றாலும் எல்லா இதழ்களையும் வாங்கவே செய்வர். புத்தக விழாக்களில் வாங்குபவர்கள் பிடித்ததை தேர்வு செய்து வாங்குகிறார்கள் என்று வைத்து கொண்டால் விற்பனையாகாமல் வந்த இதழ்களின் அட்டை படங்களையும், தலைப்பின் வடிவமைப்பையும் தான் நாம் பரிசீலனை செய்ய வேண்டும்.
    தற்போது DTP முறையில் பணிபுரிபவர்களிடம் தொழிற்நுட்ப அறிவு இருந்தாலும் வடிவமைப்பின் இலக்கணம் தெரியாது எழுத்துருக்களை, வடிவமைப்பை பயன்படுத்துகிறார்கள்.
    தொண்ணூறுகள் வரை ஓவியர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட தலைப்புகளையும் இன்றைய தலைப்புகளையும் பார்த்தால் ஒப்பிட்டால் வித்யாசம் தெரியும். நாம் புதிதாக எதையும் வடிவமைக்க தேவையில்லை. ஆங்கில/பிரெஞ்ச் இதழ்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் Fontகளையொத்த Fontகள் தமிழிலும் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தினாலே போதுமானது. ஒவ்வொரு Fontம்ஒ ருவித உணர்ச்சிகளை வெளிபடுத்த பயன்படுகின்றன. சமீப கால தமிழ் திரைப்பட தலைப்புகள் மிகச் சிறந்தமுறையில் வடிவமைக்கப்படுகின்றன. அவற்றை பார்த்து நாம் கற்று கொள்ள முடியும்.
    புதிதாக ஒரு காமிக்ஸை தேர்வு செய்பவர் உட்பக்கங்களை விட அட்டையால் மட்டுமே முதலில் ஈர்க்கப் படுவார். அதனால் அவற்றை சிறப்பாக அமைக்க வேண்டியது அவசியம். ஒரிஜினல் அட்டைகளை பயன்படுத்துதோடு தலைப்புகளை அவற்றிற்குரிய வடிவமைப்பில் பயன்படுத்துவது இதற்கான தீர்வாகும்.
    மேலும், உட்பக்கங்களில் சத்தங்களுக்கு பயன்படுத்தப்படும் எழுத்துவடிவங்களையும் இன்னும் நாம் மேம்படுத்தத வேண்டும். சில இதழ்களுக்கு Verticalல் அமைக்கப்பட்டிருந்த தலைப்புகள் நிச்சயமாக தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமான கோணம்.

      Delete
    2. வித்தியாசமான அலசல். தொடருங்கள் ஜி...

      Delete
    3. நண்பரே!

      பெரும்பாலும் Anu Font அல்லது Shreelipi Fonts மட்டுமே தமிழ் அச்சுத்துறை பயன்படுத்துகின்றன!

      சுமாா் 250 Anu fonts உள்ளன! அவற்றில் சுமாா் 100 மட்டுமே உபயோகப்படுத்தக் கூடியதாக இருக்கிறது!

      கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புவரை சினிமா உலகமும் இதே எழுத்துருக்களையே உபயோகப்படுத்தின.

      தற்போதுதான் கிராபிக் ஆா்ட்ஒா்க் டைட்டில்களுக்குப் பயன்படுத்தப் படுகின்றன!

      Shreelipi fontsலும் கூட பொிய வெரைட்டி கிடையாது என்பதே நிஜம்!

      இவைதவிர மற்ற எழுத்துருக்கள் தட்டச்சு முறையில் மறுபட்டிருப்பதால் பெரும்பாலும் அச்சுத்துறை அவற்றை உபயோகப் படுத்துவதில்லை! அப்படியென்றும் மற்ற Fonts நன்றாகவும் இல்லை!

      English Fonts ன் நிலையே வேறு!
      6000 Fonts ல் ஏகப்பட்ட வெரைட்டிகள் கிடைக்கின்றன!

      மற்றபடி நமது காமிக்ஸ்களின் உள்பக்கங்கள் ஒலிகளுக்குத் தகுந்தாற் போல் அற்புதமாகவே வடிவமைக்கப் படுகின்றன! அவற்றை குறை சொல்வதில் நியாயம் இல்லை என்பது என் எண்ணம்!!

      ஹாா்டு கவா் அட்டை வடிவமைப்பு நன்றாகவே உள்ளது!

      இதர அட்டைப் படங்களில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்!!

      Delete
    4. ////தற்போது DTP முறையில் பணிபுரிபவர்களிடம் தொழிற்நுட்ப அறிவு இருந்தாலும் வடிவமைப்பின் இலக்கணம் தெரியாது எழுத்துருக்களை, வடிவமைப்பை பயன்படுத்துகிறார்கள்.////

      முற்றிலும் தவறான கருத்து நண்பரே!
      எழுத்துரு எண்ணிக்கைக் குறைபாட்டை வடிவமைப்பின் குறைபாடாகக் கூறுவதில் நியாயமில்லை!

      சினிமாக்களைப் போல கிராபிக் ஒா்க்கெல்லாம் ஒவ்வொரு அட்டைப் படத்திற்கும் செய்வதெல்லாம் சாத்தியமில்லை என்பது என் அனுபவம்!!

      Delete
  88. அற்புதமான கருத்து.

    ReplyDelete
  89. I AM VERY MUCH OF DISAPPOINTED WITHOUT MAAYAVI,LAWRENCE DAVID AND JOHNNY NERO FOR THE PASSED 2 MONTHS.YOU CAN REPRINT NADUNISIKALVAN ,KAATRIL KARAINTHA KAPALGAL,MARMATHEVIL MAAYAAVI,VINNIL MARAINTHA VIMAANANGAL,GORRILLA SAAMRAJYAM,KADATHAL MUTHALAIGAL,IRUMBUKAI MAAYAAVI,PAATHAALANAGARAM,KOLAIKAARAKALIGNAN,MICRO ALAIVARISAI ,JOHNNY IN JAPAN ETC.I I AM EAGERLY WAITING FOR YOUR NEXT MUMOORTHY SPECIAL.

    ReplyDelete
  90. செவ்விந்தியர்கள் பங்கு இருக்கும் & பாலைவனத்தில் நடக்கும் கதைகளான பவளசிலை மர்மம், பழிவாங்கும் பாவை, பழிவாங்கும் புயல், அதிரடி கனவாய்,கழுகு வேட்டை,பாலைவன பரலோகம்...போன்றவை இன்றும் பார்த்தவுடன் வசீகரிக்கும்.
    செவ்விந்தியர்கள் இடையேயான உரசல்கள் எப்போதும் ஆல்டைம் பேவரைட்... இந்த வகை கதைகள் இன்னும் கொஞ்சம் வேண்டும் சார்.

    ReplyDelete

  91. *அந்த தங்க சுரங்கங்களை தேடி பாலைவனங்கள் ,கணவாய்கள், ,மலைத்தொடர்கள் என அழையும் லக்னர் போன்ற முரட்டு வில்லன்கள் ,அவர்களைத் தொடரும் டைகர்; அவர் அருகிலேயே மற்றொரு குதிரையில் பயணம் செய்யும் நாம்.
    செம நல்லா சொன்னீங்க ஜீ.எனக்கும் அதே உணர்வு தான் ஏற்படும்.

    ReplyDelete
  92. செனா அனா ஜீ களத்தில் இறங்க வேண்டும்.

    ReplyDelete
  93. "கனவு மெய்ப்பட வேண்டும் " அட்டை படம் சிறப்பு . "வானமே எங்கள் வீதி ","பாதைகளும் பயணங்களும் "இதழ்களின் தொடர்ச்சியாக இரு ஆல்பங்கள் வந்துள்ளது உங்களுக்கு ஏற்றகனவே தெரிந்திருக்கலாம் ஆசிரியரே . இரண்டு ஆல்பங்களுமே நன்றாக உள்ளதாக எனக்கு படுகிறது . ஏதோ பார்த்து செய்யுங்கள் .
    கேப்டன் டைகர் இன் இதழ்கள் புத்தக விழாக்களில் அதிகம் விற்பனை ஆகவில்லை என்பது மிகவும் வருத்தமான விடயம் . அதுவும் "தங்க கல்லறை " கூட அதிகம் விற்பனைஆகவில்லை என்பது வருத்தமான விடயம் . வாசகர்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொள்ளவே முடியவில்லை . "வேய்ன் ஷெல்டன்" இற்கா இந்த நிலை? இன்னும் ஓரிரு ஆல்பங்களே மீதம் உள்ளதாக நீங்கள் கூறியதாக ஞாபகம் . wait and see Sir .

    ReplyDelete