Sunday, August 13, 2017

தேடலே ஒரு தொடர்கதையாய்....!

நண்பர்களே,

வணக்கம். இரண்டு நாட்களாய் தொண்டையிலிருந்து கார்பொரேஷன் குழாயைப் போல 'புஸ்ஸ்...புஸ்ஸ்ஸ்' என்று காற்று மட்டுமே வெளிப்பட, "போட்றா மாத்திரைகளை" என்று விழுங்கிவிட்டு ஒரு கும்பகர்ணத் தூக்கத்தைப் போட்டால் - கனவெல்லாம் கலர்கள் !! உங்கள் கற்பனைக் குதிரைகள்  தறி கெட்டுப் போவதற்கு முன்பாய் - அந்தக் "கலர்களுக்கு" கனவில் என்ன ரோல் என்று சொல்லிவிடுகிறேனே !  மஞ்சள் சொக்காய் போட்டுக்கொண்டு ஒருத்தர் தெற்கேயும், வடக்கேயும் ரவுண்ட் அடிக்க ; ஆட்டுத்தாடி ஆரஞ்சு சொக்காய் ஆசாமியோ எதை எதையோ விழுங்கிக் கொண்டிருக்க, தட்டை மூக்குடனான ஊதா சொக்காய் பார்ட்டி பீப்பீ ஊதிக் கொண்டே தலைக்குள் தாண்டவம் நடத்தி வர, ரணகளம் தான் ! ஈரோட்டின்  ஹேங்கோவரா ?  இரத்தக் கோட்டை / TEX 70-ன்சிந்தனைகளா ? என்று சொல்லத் தெரியவில்லை - ஆனால் கண்மூடும் மறு கணமே அந்த அரிசோனா பாலையும்....அதனை ஆராதிக்கும் நம்மவர்களின் முகங்களுமே தென்படுகிறது ! 

But பண்டிகையும் முடிந்தாச்சு ; பட்டாசும் வெடிச்சாச்சு ; பட்சணமும் ருசிச்சாச்சு என்றான பின்னே நடைமுறைக்குத் திரும்பத் தானே வேணும் ? And here we are - காத்திருக்கும் நாட்களையும், இதழ்களையும் எதிர்நோக்கிடும் உற்சாகத்தோடு ! நிறைய விதங்களில் ஆகஸ்ட் ஒரு முக்கிய மாதம் நமக்கு ! புத்தக விழாக்கள், சந்திப்புகள் என்பது ஒருபக்கமிருக்க, மறு ஆண்டின் அட்டவணை தயாரிப்புத் துவங்கும் நேரமும் இதுவே ! வெவ்வேறு சந்தாக்களில் நாயக / நாயகியரைத் தேர்வு செய்வது முதல் பணியெனில் -நாம் தரவிருக்கும் ஒன்றோ - இரண்டோ slot-களை நிரப்பிட அவர்களது கதை வரிசைகளிலிருந்து சுவாரஸ்யமான சாகசங்களுக்காகச் சல்லடை போடுவது இரண்டாம் கட்டம் ! இங்கு தான் படைப்பாளிகளின் சிண்டுகளும், நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரின் சிண்டும் படாத பாடு பட்டுப் போகும் ! 

லார்கோ ; ஷெல்டன்  தோர்கல் போன்ற தொடர்களில் சிக்கலேதும் கிடையாது - simply becos வரிசைக்கிரமப்படி அத்தனை ஆல்பங்களையும்  போட்டு விடுவது தான் நடைமுறை ! ஆனால் லக்கி லூக் ; சிக் பில் ; ரிப்போர்ட்டர் ஜானி ; ரோஜர் போன்ற ஆஞ்சநேயர் வால் நீளக் கதைவரிசைகளைக்  கொண்டோரின் விஷயங்களில் எக்கச்சக்க research அவசியப்படும் ! இதற்கென நான் கடைபிடிக்கும் யுக்திகள் பற்றி நிறையவே எழுதியுள்ளேன் ; ஆனால் இம்முறை ஒரு புதியதொரு திக்கிலிருந்து சன்னமான ஒத்தாசையும் கிடைத்துள்ளது தான் highlight ! 

2018-ல் வெளிவரவுள்ள ரிப்போர்ட்டர் ஜானி கதையானது அவரது புது அவதாரின்ஆல்பம் # 2 ! இரண்டு ஆண்டுகளுக்கு முன்னிருந்தே இந்த ஜானி version 2.0 புழக்கத்தில் உள்ளதை நாமறிவோம் ; ஆனால் அந்தக் கதையோட்டத்தைப் பற்றிச் சரியானதொரு கணிப்புக்கு வர எனக்கு சாத்தியமாகியிருக்கவில்லை ! ஆனால் திடீரென ஒருநாள் எனக்கு வந்ததொரு சேதியில் - "சார்....நமது ஜானியின் புது வரிசையின் ஆல்பம் # 2 பிரமாதம் ! Our Johnny is back !" என்றிருந்தது ! யாரிடமிருந்து ? என்று பார்த்தால் பாரிஸிலிருந்து நண்பர் ராட்ஜா அனுப்பியிருந்த தகவல் அது ! பிரெஞ்சில் அந்த ஆல்பம் வெளியான சற்றைக்கெல்லாம் அதனைப் படித்துவிட்டுத் தனது அபிப்பிராயத்தைப் பகிர்ந்துள்ளார் என்பதை புரிந்து கொண்டு அந்தத் தகவலைத் தலைக்குள் சேமித்துக் கொண்டேன் சந்தோஷமாய் ! என்ன தான் நாம் ஒரு திறமையான மொழிபெயர்ப்பாளரின் உதவியோடு கதைகளை அலச முனைந்தாலுமே, அவர் நம்மைப் போலொரு காமிக்ஸ் fan அல்ல என்பது தான் யதார்த்தம் ! So நம் வட்டத்துக்கு ஒத்த கதையிது ; ஒத்து வரா சங்கதியிது என்ற நிர்ணயம் அவருக்கு அத்தனை சுலபமல்ல ! "இது இப்டி உள்ளது....அது அப்டி உள்ளது....இனி உங்கள் பாடு" என்று ஒதுங்கிக் கொள்வார் ! நானோ கைதேர்ந்த விஞ்ஞானபூர்வ ஆய்வுகளை செய்து பார்த்து, கொத்துக் கொத்தாய் கேசத்தை இழந்த பிற்பாடு - மகா அஸ்திரமான "இங்கி-பிங்கி-பாங்கி"யை வெளியெடுத்து விடுவேன் ! அந்த அஸ்திரம் சில நேரங்களில் பாகுபலி ரேஞ்சுக்கு அமைந்து விடுவதுமுண்டு ; சில தருணங்களில் "துயில் எழுந்த பிசாசு" ரேஞ்சுக்கு இருந்திடுவதுமுண்டு ! ஆனால் நம் வட்டத்தைச் சார்ந்தவர் ; அயல் மொழியினைத் தாய்மொழி போல் பேசக் கூடியவர் என்ற தகுதிகளைக் கொண்டவரின் பரிந்துரை என் வேலையை ரொம்பச் சுலபமாகி விடுகிறது ! 2018-ன் முதல் டிக் பெற்ற சாகசம் அதுவே ! தொடரும் நாட்களில் , இணையத்தில், வேற்று மொழிகளில் என ஸ்பெஷல் கவனம் தரக்கூடிய கதைகளை படிக்கும் நண்பர்கள் அவை சார்ந்த தகவல்களை நமக்கு அனுப்பி வைப்பது ஆக்கபூர்வமான ஒத்தாசைகளாய் இருக்கும் தானே ? 

எனது தேடல்களை வருஷா வருஷம் லக்கியிடமிருந்து ஆரம்பிப்பது வழக்கம் ; and இம்முறையும் அதே சம்பிரதாயம் தொடர்ந்தது !  கிட்டத்தட்ட லக்கியின் 90 % கதைகள்  Cinebook புண்ணியத்தில் இப்போது ஆங்கிலத்தில் கிடைப்பதால் - எனது எர்வாமாட்டின் ஆர்டர் லேசாக மட்டுப் பெறுகிறது ! படைப்பாளிகளிடமிருந்து ஆங்கிலப் படிவங்களின் pdf பைல்கள் சுலபமாய்க் கிட்டிவிடும் என்றாலும், அசோக சக்கரவர்த்தி காலத்து ஆளான எனக்கு, ஒரிஜினல் புக்கைக் கையில் ஏந்திப் படிக்கும் சுகம் கிடைக்காவிடின் படிக்கும் ஆர்வமும் எழுவதில்லை ! கம்பியூட்டர் திரையில் படிப்பது ; பிரிண்ட் போட்டுப் படிப்பது என்பதெல்லாம் நமக்கு ஒத்து வராத விஷயங்கள் !  So எங்கெங்கெல்லாம் ஆங்கிலப் பதிப்புகள் சாத்தியமோ, அங்கெல்லாம் அதனை தேடிப் பிடித்து வாங்கிவிடுவேன். புக் ஒன்று 932 ரூபாய் என்று Amazon-ல் பார்க்கும் போது காரமான சூப் புரையேறியது போலான பீலிங் எழுவதுண்டுதான் ; ஆனால், அத்தியாவசியங்களில் கஞ்சத்தனம் கதைக்கு ஆகாதே ?!! So கடந்த 4 வாரங்களாக வாயில் புல்லோடு லக்கியும், கோடு போட்ட பனியன்களோடு டால்டன்களும்  காட்சி தரும் கலர் கலரான புக்குகளே எனது சாப்பாட்டு வேளைத் தோழர்களாக இருந்து வருகின்றனர் ! ஜாம்பவான்கள் பணியாற்றிய தொடர்களை ; அவர்களது உச்சங்களின் கோலோச்சலின் போது ருசிக்கும் வரம் நமக்கு அருளப்பட்டிருப்பது லக்கியின் தொடரில் கண்கூடாய்த் தெரிகிறது ! இந்த ஒல்லிப்பிச்சான் ஹீரோவை நாம் நேசிக்கத் தொடங்கிய 1987-ன் போது கதாசிரியராக கோசினியும், ஓவியராக மோரிஸும் பணியாற்றிப் படைத்திருந்த சூப்பர்-டூப்பர் கதைகள் ஒரு வண்டி தயாராகக் காத்திருந்தன ! So சூப்பர் சர்க்கஸ் ; புரட்சித் தீ ; பொடியன் பில்லி ; கௌபாய் எக்ஸ்பிரஸ் ; ஜெஸ்ஸி ஜேம்ஸ் ; கோச் வண்டியின் கதை etc etc என்று தோண்ட தோண்ட புதையல்களாய்க் கிட்டின நமக்கு ! அவற்றையெல்லாம் வரிசைக்குப் போட்டுத் தாக்கிவிட்டு, இப்போது அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளின் கதைகளை படிக்கும் போது அந்த ZING ...ZIP மிஸ்ஸிங் என்பது அப்பட்டமாய்ப் புரிகிறது ! So "பழைய குருடி..கதவைத் திறடி.." என்ற கதையாக 1960-களின் துவக்கத்தில் உருவான கதைகளுள் நாம் வெளியிடாதவைகளாக என்னவுள்ளது என்ற சல்லடை போடும் படலம் தொடர்கிறது ! கடந்த 10 நாட்களுக்குள் பழசும், புதுசுமாய்க் கலந்து குறைந்தது 15 லக்கி இதழ்களை வாசித்ததன் பலனாய் சில சூப்பர் ஆல்பங்கள் சிக்கியுள்ளன ! So அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளுக்காவது இந்தப் புலம்பல்கள் அவசியமாகாது என்பேன் ! 

ப்ளூகோட் பட்டாளத்தின் கதைகளுமே இப்போது ஆங்கிலத்தில் வரத் துவங்கியிருப்பதால் அங்கேயுமே பர்ஸ் பழுக்கும் படலம் தொடர்கிறது ! அதனில் ஒரு சுவாரஸ்ய நிகழ்வொன்று ! பொதுவாக நமது பிரெஞ்சு - ஆங்கில மொழிமாற்றப் பணிகள் 1  வருடம் அட்வான்ஸில் ஓடுவது வழக்கம். இப்போது கூட 2018-ன் இறுதிக் quarter-ன் கதைகள் மீதான பணிகள் ஓடிவருகின்றன !  நமது மொழிபெயர்ப்பாளர் மட்டும் டெங்குக் காய்ச்சலில் அவதியுற்றிராவிடின் இந்நேரம் 2019-க்குள் கால் பதித்திருப்போமென்பது நிச்சயம் !! So போன வருடத்தின் ஒரு சமயம், ப்ளூகோட் பட்டாளத்தின் கதையொன்றை தேர்வு செய்து அதனை பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்து வாங்கி விட்டிருந்தேன்.ஆனால் அப்புறமாய் "நானும் சிப்பாய் தான்" கதையின் ஆங்கிலப் பதிப்பு என்கண்ணில் பட, "அட..இதுவே நல்லாத் தானே இருக்கு ? இதையே போட்டு விட்டுப் போவோம் !" என்று தீர்மானித்து செயல்பட்டேன். So அந்த பிரெஞ்சு மொழிமாற்றம் என் பீரோவிலேயே உறங்கி வந்தது ஓராண்டாய் ! இப்போது 2018-க்கான Bluecoats கதையைத் தேர்வு செய்திடும் பொருட்டு - Cinebook-ன்பதிப்புகளில் ஒரு நாலைந்துக்கு ஆர்டர் போட்டு வைத்தேன் ! பார்சல் வந்த சமயம்பார்த்தால் - அதனுள் ஒரு புக், நம்மிடம் ஏற்கனவே மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள அதே கதை தான் ! தொடர்ந்த நாட்களில் அந்த ஆல்பங்கள் சகலத்தையும் படித்து முடித்த போது - அந்தக் கதையே best ஆகத் தோன்ற, 2018-ன் பட்டியலுக்குள் அது நுழைகிறது ! இப்போது சுவாரஸ்யம் என்னவெனில் என் கையில் ஒரு உயர்தர ; ஒரிஜினல் பிரெஞ்சு மொழியாக்கமும் உள்ளது ; அதே கதைக்கு நம்மூரில் நமது ரெகுலர் மொழிபெயர்ப்பாளர் எழுதித் தந்துள்ள ஸ்கிரிப்ட்டும் உள்ளது ! இதன் தமிழாக்கத்தில் பணியாற்றும் போது இரண்டையுமே வைத்துக் கொண்டொரு ஒப்பீடு செய்து பார்க்கும் ஆவல் எனக்குள்ளே ஏகமாய் உள்ளது ! தாய்மொழியில் இருக்கக் கூடிய புலமைக்கும் , பயின்றதொரு மொழியில் ஏற்படுத்திக் கொள்ளும் புலமைக்கும் மத்தியினில்  போட்டி வைப்பது முறையல்ல தான் ; ஆனால் தற்செயலாய் அமைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தை உருப்படியாய் பயன்படுத்திடுவதாக உள்ளேன் ! இதற்காகவே கூட ப்ளூகோட் பட்டாளம் ஆண்டின் ஆரம்பத்திலேயே தலைக்காட்டக் கூடும் என்பேன் !  Can't wait to get to work on it !!

கார்ட்டூன் சந்தாவின் "நிச்சயங்கள்" பட்டியலில் சிக் பில்லுக்கும் இடமுண்டு என்பதாலும், இந்தத் தொடரிலும் 70 கதைகள் உள்ளன என்பதாலும், இங்கேயும் வழக்கம் போல் தேடல் படலம் ! ஆனால் சென்றாண்டே மூன்றோ/ நான்கு கதைகளை shortlist செய்து வைத்திருந்தோம் என்பதால் இந்தத் தடவை அந்த மாவைக் கொண்டே தோசை சுட்டு விட்டேன் ! நமது டைகரும் சரி ; டெக்ஸும் சரி - அதிரடி செய்த அதே OK CORRAL-க்கு நமது சிரிப்புப் போலீஸ் படை பயணம் செய்தால் என்னவாகுமோ - அதனை இம்முறை பார்க்கவிருக்கிறோம் ! 

கதைகளுக்குள் சல்லடை போடும் பணியானது - ஒரு புது வரவின் பொருட்டும் இந்த வாரம் முதல் அரங்கேறவுள்ளது ! ஏற்கனவே இந்தத் தொடர் மீது எனக்கொரு (பெரிய) கண் இருந்ததால் - அது பற்றியதொரு பொதுவான ரிப்போர்ட்டை பெல்ஜியத்தில் உள்ள நமது ஆலோசகரிடம் கோரிக் பெற்றிருந்தோம். அதனை இப்போது எடுத்து பரீட்சைக்குப் படிக்கும் பிள்ளையைப் போல மண்டைக்குள் ஏற்ற முயற்சித்து வருகிறேன் ! நமது மொழிபெயர்ப்பாளருமே இந்தத் தொடருக்கு green signal கொடுத்து விட்டால் - ஒரு முற்றிலும் மாறுபட்ட பாணிச் சிரிப்பு மேளா நமக்கு காத்துள்ளது ! "அப்டின்னா கேரட் மீசைக்காரர் கிடையாதா ?" "Smurfs அவ்ளோ தானா ?".." பென்னி பூட்ட கேஸ் தானா ?"... "ரின்டின்க்கு டிங்கு டாங் தானா ?" என்ற கேள்விகளெல்லாம் கார்ட்டூன் காதலர்களின்மனங்களில் இந்நேரம் உதிக்கத் தொடங்கியிருக்கும் என்பது புரிகிறது ! Rest assured guys - நிச்சயமாய் கார்ட்டூன் சந்தா எப்போதும் போலவே colorful & vibrant ஆக இருந்திடும் ! So "யாருக்கு  வீட்டிலிருந்து கல்தா கொடுக்கப் போறானோ இந்த மாங்காய்ப் பயல் ?" என்ற பயம் அனாவசியம் !

எப்போதுமே உச்சபட்ச சிரமம் தலையெடுப்பது 'தல' சார்ந்த தேடல்களில் தான் என்பதில் no secrets ! 70 கதைகள் ; அத்தனைக்குமே  சீரான பக்க நீளங்கள் - என்றதொரு அடையாளம் தாங்கிய குவியலிலிருந்து filter செய்வதே பிராணனில் பாதியை விலையாகக் கேட்கும் முயற்சி எனும் போது, கிட்டத்தட்ட 700-ஐத் தொட்டுப் பிடிக்கவுள்ளதொரு மெ-காஆஆ தொடரிலிருந்து கதைகளை தேர்வு செய்வது என்ன மாதிரியான வேலையாக இருக்கக் கூடுமென்பதை யூகிக்கலாம் தானே ? அதுவும் கதைகளின் பக்க நீளங்கள் பற்றிச் சொல்லவும் வேண்டுமா ? 76 பக்கங்கள் ; 94 பக்கங்கள் ; 110  பக்கங்கள் ; 178 ; 192 ; 220 ; 240 ; 260 ; 330 ; 500+ பக்கங்கள் என்று இஷ்டத்துக்கு பயணிக்கும் தொடரிது ! "கதை செமையாகத் தெரிகிறதே !" என்று பின்தொடர்ந்தால் - "260 பக்கங்கள்" என்று ஒரு ரெண்டும்கெட்டான் விலைக்கு அடிப்போடும் குத்துக்கல் ஜிங்கென்று ஆஜராகி நிற்கும் ! "சரி...மேற்கொண்டு புரட்டுவோம்" என்று போனால் - ஓவிய பாணியில் ஒரு compromise செய்யும் அவசியம் தலைதூக்கி நிற்கும் !  "சார்...என்ன செய்வீங்களோ தெரியாது ; ஆனால் டெக்ஸுக்கு "சித்தப்பாமேரி" தோற்றத்திலுள்ள கதைகள் வேண்டாமே !!" என்ற ஈரோட்டுக் கோரிக்கைகளுள் ஒன்று என் காதில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்க, 'டிக்' அடித்திருந்த 2 கதைகள்  இப்போது waiting list-க்கு இடம் மாறிவிட்டுள்ளன ! கதைகளுள் ஒருவித ஒற்றுமை தொடர்ந்திட வேண்டாமே ; முடிந்த மட்டிலும் variety காட்ட வேண்டுமே என்ற ஆசை தொற்றிக் கொள்ளும் போது - வழக்கமான ஆயுதக் கடத்தல் ; செவ்விந்தியக் கிளர்ச்சி பாணியிலான கதைகளை நாசூக்காய் ஒதுக்கவும் வேண்டி வரும் ! நடப்பாண்டின் TEX  கதைத் தேர்வுகள் தெர்மோகோல் போட்டு மூடப்படாத வைகையையும் பற்றி எரியச் செய்திருக்கவில்லை எனும் பொழுது - தொடரும் ஆண்டுக்கான தேடல்கள் இன்னமுமே உத்வேகத்தோடு இருக்க வேண்டுமே என்ற வேட்கை ஒரு வித வெறியாகவே உள்ளுக்குள் பதுங்கியுள்ளது என்பேன் ! 

In an ideal world - ஆண்டின் சகல இதழ்களுமே சூப்பர் ஹிட்களாகிட வேண்டுமென்பதே எதிர்பார்ப்பாய் இருக்கும் தான் ! ஆனால் நடைமுறையில் 75 % -ஐத் தாண்டி விட்டாலே பெரும் பிரயத்தனம் என்பது புரிந்தாலுமே -காத்திருக்கும் TEX 70 ஆண்டானது ஒரு சரவெடிச் சூறாவளியாய் இருந்திட வேண்டுமென்ற ஆர்வம் என்னைப் பரோட்டா சூரியாக மாறச் செய்கிறது !  ஒரு TEX கதை பட்டியலைப் போட்டு வைப்பது ; அப்புறம் நாலு நாள் கழிந்த பின்னே..."இல்லே.இல்லே ...கோட்டை அழி...முதல்லேர்ந்து பரோட்டா சாப்பிடுறேன் " என்று ஆரம்பிப்பதே பிழைப்பு என்றாகியுள்ளது ! அதுவும் AFTER ஈரோடு - இந்த டெக்ஸ் எதிர்பார்ப்புகளுக்கு பூரண நியாயம் செய்யும்  பொருட்டு - இணையத்தை உருட்டோ உருட்டென்று உருட்டி வருகிறேன் ! "லக்ஷணமான" டெக்ஸ் தான் லட்சியம் - என்ற கூடுதல் கண்டிஷன் நிறையவே சிந்தனைகளை அவசியமாக்குகின்றன ! இந்தாண்டின் ஹிட்டான "இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல்" நிறைவான கதையே ; ஆனால் ஓவியர் Jose Ortiz -ன் அந்த  ஓவிய பாணியினை நாம் நிராகரித்திருப்பின், இந்த classic த்ரில்லரைத் தவற விட்டிருப்போம் தானே ?!

அதே போல இன்னொரு மகாசிந்தனையுமே ஒரு நள்ளிரவில் தோன்றியது ! "Variety காட்டுகிறேன் பேர்வழி என்று படுத்துவானேன் ? TEX என்றாலே அதிரடி தானே ? சிவனே என்று "சட்டம் அறிந்திராச் சமவெளி"யைப் போன்ற கதைகளையாகத் தேர்வு செய்து போட்டால் வேலை முடிந்து விடாதா ? " என்று நினைக்கத் தோன்றியது ! ஆனால் மறு கணமே, வெள்ளையுடை தேவதைகள் BG மியூசிக்கோடு - "ஒரு குறிப்பிட்ட template கதைகளாக மட்டுமே தேர்வு செய்வதாயின் -  "கியூபா படலம்" போன்ற சற்றே 'ரிஸ்க்கான' கதைகளை ஓரம் காட்ட வேண்டிவரும் தம்பி ! பர்வால்லியா ?" என்று கேட்பதும் கேட்டது ! வெள்ளை டிரஸ் பொம்மனாட்டிகளையும் சரி, டார்க் கலர் உடுப்பணிந்த லேடீஸ்களையும் சரி - உங்கள் முன்னேயே நிற்கச் செய்து ஒரு தீர்மானத்துக்கு வந்தால் தேவலாம் என்று பட்டது ! சொல்லுங்களேன் guys - 

1.டெக்ஸ் கதைத் தேர்வுகளில் கதைகள் 100% & சித்திரங்கள் 100% ஸ்கோர் செய்ய வேண்டுமென்பதே நியதியா ? அல்லது கதைகள் ஓ.கே. எனில் சித்திரங்களின் cut off மதிப்பெண்களைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாமா ?

2 .மூன்றாம் பக்கத்தைப் புரட்டும் போதே ஒரு நாலைந்து சில்லுமூக்குகள் சேதாரம் கண்டிருக்கும் கதைகள் உங்கள் சாய்சா ?

3.இல்லீங்கோ ; தற்போதுள்ள பாணியில், கதைகளில் variety காட்டும் முயற்சிகளே க்ஷேமம் என்பீர்களா ?

4.மாயாஜாலம் ; அமானுஷ்யம் + TEX >>>>>>> இது சரிப்படாது ! டபுள் ஓ.கே. ! உங்கள் பதில் என்னவோ ?

TEX கதைகளின் இறுதிப் பட்டியலை அடுத்த 7 நாட்களுக்குள் தயார் செய்திட எண்ணியுள்ளதால் - your inputs would help !!

அப்புறம் நமது "இரத்தப் படலம்" வண்ணத் தொகுப்பு பற்றிய update :

ஆன்லைனில் லிஸ்டிங் போட்டது முதலாய் செம விறுவிறுப்பு முன்பதிவில் ! And இதில் ஆச்சர்யமே - payment pattern-ல் தான் ! கிட்டத்தட்ட 75% முன்பதிவாளர்கள் இரு தவணையில் பணம் அனுப்பும் வசதியினை நாடிடாது முழுத் தொகையையும் அனுப்பி வருகின்றனர் !! வெள்ளி & சனி நான் ஆபீஸ் செல்லவில்லை என்பதால் முன்பதிவின் சரியான நம்பரை சொல்லத் தெரியவில்லை ! ஆனால் somewhere between 60 - 70 என்று நினைக்கிறேன் ! திங்கட்கிழமை ஒரு உபபதிவு போடும் அவசியம் நேர்ந்தால், அந்த புக்கிங் பட்டியலையே போட்டுத் தாக்கி விடலாம் ! தொடரும் நமது செப்டெம்பர் இதழ்களிலும்  இது சார்ந்த விளம்பரங்களை வெளியிட்டால் - வலைக்கு விலகி நிற்கும் நண்பர்களும் முன்பதிவில் கலந்து கொள்வார்களென்ற நம்பிக்கை நிறையவே உள்ளது ! முன்பதிவு 300-ஐ தொட்டு  விட்டாலே - கதைகளின் டிஜிட்டல் பைல்களுக்கு ஆர்டர் செய்து விட்டு, வேலைகளைத் துவக்கி விடுவோம்  ! So we are waiting !! இதோ ஆன்லைன் புக்கிங் லிங்க் :

புறப்படும் முன்பாய் குட்டியாய் சில சந்தோஷ updates :

1.நமது கேரவன் அடுத்து மதுரை நோக்கிப் பயணமாகவுள்ளது ! மதுரை புத்தக விழாவினில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளோம் ; அமைப்பாளர்களின் இசைவு கிடைக்கும் பட்சத்தில் செப்டெம்பர் 1 அங்கே இருப்போம் !

2.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நமது இதழ்களுள் ஒரு சிறு பகுதியினை தருவித்துள்ளார்கள் ! விரைவில் லக்கியும்; நீலப் பொடியர்களும், கிட் ஆர்டின்னும் ; ரின்டின்னும் அங்கே சாகசம் செய்திடுவார்கள் !

3. வாசக சந்திப்பின் போது ஜாலியாய் நடத்திய அந்தப்   போட்டிக்குப் பரிசாய் நமது ஓவியங்களை வழங்கியதற்கு நிறைய சந்தோஷ மின்னஞ்சல்கள் !! எங்களைப் பொறுத்தவரை இவை தினப்படி சமாச்சாரங்களாய்த் தோன்றினாலும்,  உங்கள் பார்வைகளில் அவற்றிற்கான மதிப்பீடே தனி என்பது புரிகிறது !! 

Bye all...see you around ! Have a sparkling sunday !



322 comments:

  1. Replies
    1. first time ஆ நான் மொதல் வந்துட்டேன்!!

      Delete
  2. Replies
    1. செனா அனா ஜி
      வணக்கம்!

      Delete
    2. வணக்கம் மிதுன் :)...

      Delete
    3. உங்கள் முதல் ஈரோடு விஜயம் எப்படி இருந்தது ஜி..

      Delete
  3. ////கடந்த 10 நாட்களுக்குள் பழசும், புதுசுமாய்க் கலந்து குறைந்தது 15 லக்கி இதழ்களை வாசித்ததன் பலனாய் சில சூப்பர் ஆல்பங்கள் சிக்கியுள்ளன ! So அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளுக்காவது இந்தப் புலம்பல்கள் அவசியமாகாது என்பேன் ! ////

    என்னவொரு அதிா்ஷ்டம் பாத்தீங்களா!

    லக்கியை பாத்தி பதிவு போடும்போது, லக்கி ஃபேனே மொத ஆளா வந்திருக்காரு!!

    ReplyDelete
    Replies
    1. ////Rest assured guys - நிச்சயமாய் கார்ட்டூன் சந்தா எப்போதும் போலவே colorful & vibrant ஆக இருந்திடும் ! So "யாருக்கு வீட்டிலிருந்து கல்தா கொடுக்கப் போறானோ இந்த மாங்காய்ப் பயல் ?" என்ற பயம் அனாவசியம்////

      Thank you sir

      Delete
    2. ஆனாலும் நாங்க உங்களை அப்டியெல்லாம் திட்ட மாட்டோமுங்க சாா்!!!

      (என்ன பண்றது அதையும் இதையும் திட்டி இருக்கறதையும் நிறுத்திட்டீங்கன்னா?)

      வண்டி நல்லா போறவரைக்கும் திட்டவே மாட்டோமுங்க சாா்!!

      Delete
  4. நீண்ண்ண்ண்ண்ட பதிவு, நன்றி சார்

    ReplyDelete
  5. நடு நிசி வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  6. ////விரைவில் லக்கியும்; நீலப் பொடியர்களும், கிட் ஆர்டின்னும் ; ரின்டின்னும் அங்கே சாகசம் செய்திடுவார்கள் !////

    ஆ! சூப்பா் சாா்!

    வாழ்க காா்ட்டூன்! வளா்க காமிக்ஸ்!!

    ReplyDelete
  7. 1.கட் ஆப் குறைக்கலாம்.. டெக்ஸ் குணாதிசயம் மட்டுமே முக்கியம்...டெக்ஸை பொறுத்தமட்டில் beauty is only pencil deep..


    2.நடுவே ஓரிரண்டு மட்டுமே

    3.வெரைட்டி ப்ளீஸ்

    4.வொய் நாட்? டபுள் ஓகே....

    ReplyDelete
    Replies
    1. செனா அனா ஜி

      உங்களுக்கும் எனக்கும் டெக்ஸ்ல
      4 வித்தியாந்தான்!

      (பி.கு. : கேள்வியே 4 தான்)

      Delete
  8. //ப்ளூகோட் பட்டாளம் ஆண்டின் ஆரம்பத்திலேயே தலைக்காட்டக் கூடும் என்பேன் ! Can't wait to get to work on it !!//

    ஆகா!!! Can't wait to get the eyes on

    it..!!!!

    ReplyDelete
  9. 1. சித்திரம் 100%! டெக்ஸ்னாவே போதுமே கதையெல்லாம் எதுக்கு??!!

    2. Yes! சில்லிமூக்குகள் உடைபட வேண்டும்!

    3. No verity! அதுக்கெல்லாம் வேறா ஆளுங்க இருக்காங்க!!

    4. மாயாஜாலம், மாந்திரீகம் ஆகவே ஆகாது சாமியோவ்!!

    ReplyDelete
    Replies
    1. வாங்கா மாங்கா சாங்காவுக்கு பதிலாக "நில் கவனி சுடு" மாதிாியான கதைகளை தோ்வு செய்யலாமே சாா்!

      Delete
  10. சார் டெக்ஸ் 2018 க்கு- 1.கட் ஆப் குறைக்கலாம். 2.நான்கு அல்லது மூன்று அதிரடிக் கதைகள் தரலாம்.
    3.வகை வகையான கதைகள் கண்டிப்பாக வேண்டும்.
    4.வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும்!!!!

    ReplyDelete
  11. சார், இந்த ஆண்டு ஈரோட்டில் விற்பனை நிலவரம் எப்படி உள்ளது சார்?. என்ன வகையான இதழ்கள் அதிகம் விற்பனையாகின்றன?

    ReplyDelete
  12. சூப்பா் சாா்!

    1. டெக்ஸ் கதைத் தேர்வுகளில் சித்திரங்கள் 100% - கதைகள் cut off கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாமா?
    3. தற்போதுள்ள பாணியில், கதைகளில் variety காட்டும் முயற்சிகளே க்ஷேமம்
    4. மாயாஜாலம் ; அமானுஷ்யம் + TEX >>>>>>> டபுள் ஓ.கே. !

    ReplyDelete
  13. அப்பாலே இந்த புகை சமிக்ஞை புகை சமிக்ஞை னு சொல்லீனு கிராங்ளே, அதெல்லாம் மெய்யாலுமே கீதாபா??

    யாா்னா? எதுனா தொிஞ்சா சொல்லுபா?

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்.. இந்த கஜா, முனி, கபாலி, குமாரு எல்லாம் ஓடியாங்கோ!

      Delete
  14. .மாயாஜாலம் ; அமானுஷ்யம் + TEX >>>>>>> இது சரிப்படாது !தற்போதுள்ள பாணியில், கதைகளில் variety காட்டும் முயற்சிகளே க்ஷேமம் -இதுவே டெக்ஸ் பற்றிய கேள்விகளுக்கான பதில். 2018 மேலும் colourful ஆக இருக்க தங்களின் மெனக்கெடல் நன்றாக தெரிகிறது சார்! மெனகேடலுக்கு மிக்க நன்றி !

    ReplyDelete
    Replies
    1. ////மாயாஜாலம் ; அமானுஷ்யம் + TEX >>>>>>> இது சரிப்படாது////

      +11111111

      Delete
  15. ப்ளூகோட் பட்டாளத்தை கைவிடடாதற்கு நன்றி

    ReplyDelete
  16. ஹலோ சார்,
    Awaiting for 2018 list.

    Tex கேள்விகளுக்கு..
    1. படம் 100%. MGR, Rajini படமெல்லாம் கதைக்காகவா பாக்குரோம்? (எனக்கு அதிநுட்பமான கறுப்பு வெள்ளை சித்திரங்கள் என்றால் கொள்ளை பிரியம். கலர் அதை அமுக்கிடராமாதிரி தோனுது)

    2. மூக்கென்ன முகரையே ஒடயனும் முதல் பக்கத்திலயே.. "நெருப்புடா" மாதிரி..

    3. Verity? ராகவேந்திரா, பாபா மாதிரியா ஆயுடும் சார்..

    4. மாயாஜாலம், மாந்திரீகம் தப்பில்லைதான். ஆனா மாந்தீரனுக்கு டவுசர் கிழியனும் Tex போடர போடுல..

    ReplyDelete
    Replies
    1. எல்லாமும் வேண்டும் டெக்ஸ் பொறுத்த வரையில். பன்ச் டயலாக் வேண்டும். அடி ஒவ்வொன்றும் இடியா இருக்க வேண்டும். மாந்திரீகமும் வேண்டும்,செவ்விந்தியர் பானி கதைகள் வேண்டும்.முக்கியமாக அதிரடி சரவெடி டயனமைட் அடி வேண்டும்.

      Delete
  17. சார் அந்த மெபிஸ்டோ கதை வேண்டும்.

    ReplyDelete
  18. டெக்ஸ் தனி சாகசம்.

    ReplyDelete
  19. டெக்ஸ் & கார்சன் அதிரடி.

    ReplyDelete
  20. டெக்ஸ் & கோ அதிரடி .

    ReplyDelete
  21. டெக்ஸ் & டைகர் ஜாக் சாகசம்.

    ReplyDelete
  22. கார்ட்டூன் கதைகளை குறைத்து விடமாட்டோம் என்று உறுதியளித்ததற்கு மிக்க நன்றி. ஒரு விதியாசத்திற்கு டபுள் ஆல்பங்களாக கார்ட்டூன் கதைகளை வெளியிடுங்கள் சார்.
    டெக்ஸ் கதைகள் அனைத்தையும் படிக்க ஆசை. அதனால் எதை வெளியிட்டாலும் ok சார்.

    ReplyDelete
    Replies
    1. கார்ட்டூன் டபுள் ஆல்பம் சூப்பர்

      Delete
  23. அப்புறம் சர்வமும் டெக்ஸ் போல சூப்பர் டுப்பர் கதைகள் வேண்டும் சார்.

    ReplyDelete
  24. கதைகள் ஓ.கே. எனில் சித்திரங்களின் cut off மதிப்பெண்களைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாமா ?
    சித்திரத்தில் பாரபட்சம் பார்க்க வேண்டாம்.ஆனால் அவ்வப்போது சிவிடெல் வரைந்த டெக்ஸ் கதைகள் போடவும்.

    2 .மூன்றாம் பக்கத்தைப் புரட்டும் போதே ஒரு நாலைந்து சில்லுமூக்குகள் சேதாரம் கண்டிருக்கும் கதைகள் உங்கள் சாய்சா ?
    கண்டிப்பாக சில்லுகள் பெயர வேண்டும்.

    3.இல்லீங்கோ ; தற்போதுள்ள பாணியில், கதைகளில் variety காட்டும் முயற்சிகளே க்ஷேமம் என்பீர்களா ?
    எப்படி இருந்தாலும் ஓகே .உங்கள் மொழி பெயர்ப்பில் டெக்ஸ் எதுவாக இருந்தாலும் ஒக்.

    4.மாயாஜாலம் ; அமானுஷ்யம் + TEX >>>>>>> இது சரிப்படாது ! டபுள் ஓ.கே. ! உங்கள் பதில் என்னவோ ?
    டபுள் டபுள் ஓகே.

    ReplyDelete
  25. 1)டெக்ஸ் கதை தேர்வில் கதைகள் ஓகே என்றால் சித்திரங்களின் cut off மதிப்பெண்களின்களினை கொஞ்சம் குறைத்து கொள்ளலாம் என்பது எனது தாழ்மையான கருத்து .
    2)-3) தற்போதய பாணியிலே vareity காட்டும் முயற்சிகள் தொடர்வது க்ஷேமம் என்று தோன்றுகின்றது .
    4மாயாஜாலம்; அமானுஷ்யம் +TEX ----> டபுள் ஓகே

    ப்ளூ கோட் பட்டாளம் இனை மீண்டும் தெரிவு செய்ததுக்கு நன்றிகள் சார் .

    மற்றும் இம் மாத இதழ்களுடன் early பிரட் batch வரவில்லை. ஒரு வேளை நான்Early Bird இனுள் இல்லையோ ? எனது முன்பதிவு இலக்கம் 21. கர்னல் ஆமோஸ் இன் இதழினை எனக்காக வரவு செய்து அனுப்பி வைக்க முடியுமா சார். இதழினை பற்றிய விமர்சனங்கள் ஆவலை தூண்டுகின்றன . அதுதான் . "ரத்த படலம் "வண்ண மறுபதிப்பு எனக்கு முன் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என்று தெரிவதில்லை. தளத்தினில் பொதுவில் கேட்பதுக்கு என்னை தயை கூர்ந்து மன்னிக்க வேண்டும் .

    ReplyDelete
  26. சார் மற்றும் ஒரு வேண்டுகோள் சந்தா B முழுதும் டெக்ஸ்க்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. மார்டின் மன்றத்தார் மண்டையை பிளந்து விடுவாங்களே சாமி...

      Delete
  27. டெக்ஸ் கதைகளில் மாந்திரீகம் , அமானுஷயம் கலந்த கதைகள் தயவு செய்து வெளியிட வேண்டாம் .

    ReplyDelete
    Replies
    1. இதுதான் நம்மாளுக்கு அடையாளம்!

      பொியாா் பூமிங்க!
      பேய் பூச்சாண்டியெல்லாம் ஏத்துக்குவமா என்ன??

      ஈரோடு கொங்குசிங்கம் நண்பரே
      நா கோபிதானுங்க!!

      Delete
    2. இரண்டும் சிங்கங்களும் மந்திர மண்டலத்தையும், இருளின் மைந்தர்களையும் இன்னொரு வாட்டி படித்து பாருங்கள் சார். இரண்டும் செம மாஸ்+ த்ரில்லாங்கா இருக்கும்...
      சைத்தான் சாம்ராஜ்யம்னு ஒன்று இருக்கும் அதை அடியில் ஒளித்து வைத்து விடுங்கள்...

      Delete
  28. ஹேலொ நண்பர்களே இந்த மிதுன் சார் யாரையும் எழுப்பாமலெயெய் commentsஆ போட்டு தாக்கிட்டு தூங்க போய்ட்டார்.
    டெக்ஸ் விஜய் சார் வாங்க.ஈ.வி சார் தான் எப்பவும் பதிவு ரெடினு போடுவார். இன்றைக்கு அவர் சார்பாக நான் போட்டுவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. 12.00 மணிக்கே எழுப்பினேன்

      ஆனா யாரும் ஏந்திரிக்கலையே

      Delete
  29. Possible to add xiii 13 th part to reprint edition.you had omitted last time.but advertisement of that story printed as " kutra pulanaivu by two reporters view" in collector edition.13th part may be give more clarification on core because that story and drawings dealt by same Vance and hamme .add this 152 pages may be helpful to our 1000 pages dream.

    ReplyDelete
  30. Editor sir kly give the clarification on this.this is my obligation. And also possible to give chance our xiii remaining spinoff stories one by one in different occations .

    ReplyDelete
  31. அன்பு எடிட்டர் ,டெக்ஸ் கதைகள் அனைத்தும் வேண்டும் .சித்திரங்கள் பற்றி கவலை இல்லை.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. எடிட்டர் சார்! இது சம்பந்தமாக ஈரோட்டில் தங்களிடம் நேரில் கோரியிருந்தேன்.டெக்ஸின் முதல் கதையிலிருந்து வண்ணத்தில் கிளாசிக் டெக்ஸ் என தற்போது இத்தாலியில் வெளிவருவது போல முதல் கதையிலிருந்து லயனில் தொடர்ந்து வெளிவந்தால் நல்லது.சித்திரங்களை பற்றியோ கதையினை பற்றியோ கவலை இல்லை.சைஸ் மட்டும் ஒரே சைஸில் இருக்கட்டும்.பெரிய சைஸ் பாக்கெட் சைஸ் என மாற்றி மாற்றி வெளியிட வேண்டாமே!

      Delete
  32. படிக்க ,படிக்க மகிழ்ச்சியான பதிவு....மற்ற கருத்துகளை விட டெக்ஸ் பற்றிய வினாக்களுக்கு எனது கருத்துக்கள் .


    டெக்ஸின் தோற்றம் நிரம்ப மாற்றமில்லா கதைகளை வெளியிடலாம் சார் உதாரணம் சாத்தான் வேட்டை போல .. .அதே சமயம் டெக்ஸ்70 சிறப்பு மலரில் டெக்ஸின் தோற்றம் மாறாதவாறு தேர்ந்த கதைகளை தேர்ந்தெடுக்கவும் எனவும் வேண்டிகொள்கிறேன்


    இரண்டு மற்றும் மூன்றாவது வினாக்களுக்களுக்கான எனது கருத்து



    எம்மதமும் சம்மதமே....



    நான்கு ....எனக்கு ஓகே ...என்ன தான் மாய தந்திர கதைகளில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் அந்த களத்தில் டெக்ஸ் நுழையும் போது இதுவரை ஏமாற்றமளிக்கா பயணத்தையே தொடர்ந்து உள்ளார் .லயன் 150 வது சிறப்பு மலருக்கே அந்த மாயாஜால கதைகளன் சிறப்பு சேர்த்ததே ...எனவே எனக்கு டபுள் ஓகே சார் ...

    ReplyDelete
    Replies
    1. சாத்தான் வேட்டையில் ஒவ்வொரு பிரேமும் நன்றாக இருக்கும் பரணி சார்.அந்த கதையை கலரில் யு டியூப் பில் பாருங்கள்.டெக்ஸ் பிரமாதமான தோற்றத்தில் இருப்பார்.

      Delete
  33. ரிப்போர்ட்டர் ஜானி ...லக்கி..சிக்பில் ..,ப்ளுகோட்பட்டாளம் என சந்தோசமான அறிவிப்புகள் ..காத்திருக்கறோம் .

    மத்தவங்க எப்படியோ ஆனா முக்கியமாக பென்னியை விட்றாதீங்க சார்...

    ReplyDelete
  34. 1.டெக்ஸ் கதைத் தேர்வுகளில் கதைகள் 100% & சித்திரங்கள் 100% ஸ்கோர் செய்ய வேண்டுமென்பதே நியதியா ? அல்லது கதைகள் ஓ.கே. எனில் சித்திரங்களின் cut off மதிப்பெண்களைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாமா ?

    கதை ஸ்கோர் செய்யும் பட்சத்தில் ஓவியத்தின் மதிப்பெண்களை கொஞ்சம் குறைத்து கொள்வதில் தவறில்லை


    2 .மூன்றாம் பக்கத்தைப் புரட்டும் போதே ஒரு நாலைந்து சில்லுமூக்குகள் சேதாரம் கண்டிருக்கும் கதைகள் உங்கள் சாய்சா ?
    இல்லை சார் அப்படி கதைகள் அவ்வளவு பொருத்தமாக இருக்காது ஒரே டெம்ப்ளேட் போல் தோன்றுகிறது

    3.இல்லீங்கோ ; தற்போதுள்ள பாணியில், கதைகளில் variety காட்டும் முயற்சிகளே க்ஷேமம் என்பீர்களா ?
    யெஸ் சார் தயவு செய்து வித்தியாசமான கதைகள் தான் வேண்டும்

    4.மாயாஜாலம் ; அமானுஷ்யம் + TEX >>>>>>> இது சரிப்படாது ! டபுள் ஓ.கே. ! உங்கள் பதில் என்னவோ ?
    இதை தானே சார் இவ்வளவு காலமாக எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் அந்த டெக்ஸ் இன் குண்டு புக் ஒன்றூ பற்றியும் ஏற்கனவே இங்கு பதிவிட்டிருந்தீர் அதை கேட்டு கேட்டு சலித்து போய் விட்டேன் , அமானுஸ்யம் , மாயாஜாலம் கலந்த டெக்ஸ் கதைகள் சற்று அதிகமாகவே களம் இறக்குங்கள் சார் முடிந்தால் திகில் நகரில் டெக்ஸ் , ஆவியின் ஆடுகளம் இந்த மாதிரி கதைகளையும் களம் இறக்குங்கள்

    ReplyDelete
    Replies
    1. சூப்பரா சொன்னீங்க நண்பரே......நானும் தான் அந்த குண்டு புக்கை கேட்டுக்கொண்டே இருந்தேன் ...இருக்கிறேன் ...இருப்பேன்...ஆனால் நான் சலித்துப் போக மாட்டேன் ...விடா முயற்சி விஸ்வரூப வெற்றி .......சார் அந்த 590 பக்க டெக்ஸ் & மெபிஷ்டோ கதை ப்ளீஸ் சார்.....

      Delete
    2. YES SIR, PLEASE ISSUE THAT ADVENTURE FOR THIS DIWALI FESTIVAL SIR.

      Delete
    3. SIR, SORRY. FOR DIWALI 2018.SORRY SIR.

      Delete
  35. 1.டெக்ஸ் கதைத் தேர்வுகளில் சித்திரங்கள்:
    டெக்ஸ் முக ஒற்றுமை மிக அவசியம் சித்திரங்களில்..!

    2 .மூன்றாம் பக்கத்துக்குள் சில்லுமூக்குகள் சேதாரம்:
    Oh yes.!!

    3.கதைகளில் variety:
    இந்த வருடம்போல 10 கதைகள் என்றால் ஒரு 7 கதைகள் trademark அதிரடி டெக்ஸ் இம், மீதி 3 கதைகளில் variety try பண்ணலாம்!!

    4.மாயாஜாலம் ; அமானுஷ்யம் + TEX >>>>>>> இது சரிப்படாது !
    ஏன்னா இந்த கதைகளில் வில்லனை நம்ம தல வெளுக்க,சுளுக்கு எடுக்க மாட்ங்கிறரே?..!

    ReplyDelete
  36. முடிந்தால் மார்ட்டின் கதைகளை அதிகம் களம் இறக்குங்கள் ஆண்டுக்கு 200 பக்க கதைகள் மூன்று அல்லது இரண்டாவது களம் இறக்குங்கள் சார்

    ReplyDelete
  37. செல்வம் அபிராமி @
    // அமோசின் மகள்தான் ஜெஸ்ஸிகா என ஜியார்டினோ –வுக்கு தெரியுமா என்ன ???? //
    ஆமாம் என எடுத்துக் கொள்ளலாம். கடைசி சில பக்கங்களில் ஆமோஸ் வீட்டில் நடக்கும் உரையாடல் முடியும் போது டேபிலில் கிராவுடன் ஜெஸிக்கா இருக்கும் போட்டோவை எடுத்து ட்ராயரில் எடுத்து வைப்பது போல இருக்கும், அதனை ஜியார்டினோ பார்ப்பது போல கதையில் அமைத்து இருப்பார்கள்.

    ReplyDelete
  38. // ஆனால் somewhere between 60 - 70 என்று நினைக்கிறேன் ! திங்கட்கிழமை ஒரு உபபதிவு போடும் அவசியம் நேர்ந்தால், அந்த புக்கிங் பட்டியலையே போட்டுத் தாக்கி விடலாம்.//
    சூப்பர் சார்,முன்பதிவுகள் களை கட்ட தொடங்கியுள்ளது மகிழ்ச்சியான செய்தி.

    ReplyDelete
  39. டெக்ஸ் கதைத் தேர்வுகளில் கதைகள் 100% & சித்திரங்கள் 100% ஸ்கோர் செய்ய வேண்டுமென்பதே நியதியா ? அல்லது கதைகள் ஓ.கே. எனில் சித்திரங்களின் cut off மதிப்பெண்களைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாமா ?//
    நல்ல சித்திரங்கள் அவசியம்தான்,அதற்காக நல்ல கதைகளை மிஸ் செய்திட மனமில்லை,எனவே,50% கதைகளுக்கு முக்கியத்துவம் தரலாம்.

    2 .மூன்றாம் பக்கத்தைப் புரட்டும் போதே ஒரு நாலைந்து சில்லுமூக்குகள் சேதாரம் கண்டிருக்கும் கதைகள் உங்கள் சாய்சா ?//
    சுவாரஸ்யமான களமாக இருந்தால் எவ்வளவு பன்ச் என்றாலும் சரிதான்.

    3.இல்லீங்கோ ; தற்போதுள்ள பாணியில், கதைகளில் variety காட்டும் முயற்சிகளே க்ஷேமம் என்பீர்களா ?//
    வெரைட்டி 50%,கதைகள் 50 %.


    4.மாயாஜாலம் ; அமானுஷ்யம் + TEX >>>>>>> இது சரிப்படாது ! டபுள் ஓ.கே. ! உங்கள் பதில் என்னவோ ?//
    டபுள் ஓகே சார்.

    ReplyDelete
  40. அனைவருக்கும் காலை வணக்கம்.

    ReplyDelete
  41. விஜயன் சார்,
    கர்னல் ஆமோஸ் கதையில் // D-OVE-V // என்ற வார்த்தையை நீங்கள் இப்படி ஆங்கில எழுத்துகளில் உபயோகபடுத்தி இருக்கா ஏதாவது குறிப்பிட்ட காரணம் உண்டா?

    ReplyDelete
  42. செல்வம் அபிராமி @
    கடந்த பதிவில் எனது கேள்வியின் தொடர்ச்சி

    // 4. கிரா ஆமோஸ்ஸிடம் தனது மகளை அறிமுகபடுத்தி வைக்கும் போது சொன்ன அதே டயலாக்கை ஜியோர்டினாவிடம் தனது மகளை அறிமுகபடுத்தி வைக்கும் போதும் சொல்வதன் காரணம் என்ன? கிராவின் குறிக்கோள் என்ன? //

    எனக்கு ஏதோ ஒரு குறிப்பிட்ட காரணம் இருப்பதாகவே தோன்றுகிறது.
    1. கிராதான் அதிகம் நம்பும் அல்லது நேசிக்கும் அன்பர்களிடம் இது போன்று சொல்லலாம்.
    2. முதல் சில பக்கம்களில் ஆமாஸ், ஜியோர்டினா அறையில் இருந்து வெளிவருவதை பார்த்து இருவரும் நண்பர்கள் என முடிவு செய்து விட்டு, ஆமோஸ்ஸிடம் உள்ள அதே உரிமையை ஜியோர்டினா எதிர்பார்க்கலாம்.
    3. அல்லது ஆமோஸ் ஜியோர்டினா அடுத்த என்ன செய்ய உள்ளார் என்பதை ஜெசிக்கா முலம் வேவு பார்பதற்காக கூட இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. @ பரணி ...1,2 கதையில் முக்கியத்துவம் இல்லை என்பதே என் எண்ணம் ..
      3.ஜியார்டினோ போன்ற குள்ளநரியிடம் தன் மகளை பலியிட அமோஸ் விரும்பியிருக்க போவதில்லை..

      மூலக்கதையில் ஜெஸ்ஸிகா ஜியார்டினோ -வின் ஆசை நாயகி என்பது நினைவிருக்கலாம் ...

      மூலத்தில் ஜெஸ்ஸிகா ஒரு அற்புதமான பாத்திர படைப்பு ...அமோசின் மகள் ஜெஸ்ஸிகா என்பதாக இந்த ஒன் ஷாட் ஸ்பின் ஆப் கதை சொல்வது கொஞ்சம் சென்சேஷனல் என்பதாக மட்டும் எடுத்து கொள்ளலாம் ..

      Delete
    2. அட இது எனக்கு மறந்து விட்டது. நன்றி ஜி.

      Delete
  43. இனிய ஞாயிறு வணக்கங்கள் ஆசிரியர் & நண்பர்களே

    ReplyDelete
  44. 1.டெக்ஸ் கதைத் தேர்வுகளில் கதைகள் 100% & சித்திரங்கள் 100% ஸ்கோர் செய்ய வேண்டுமென்பதே நியதியா ? அல்லது கதைகள் ஓ.கே. எனில் சித்திரங்களின் cut off மதிப்பெண்களைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாமா ?

    கதை ஸ்கோர் செய்யும் பட்சத்தில் ஓவியத்தின் மதிப்பெண்களை கொஞ்சம் குறைத்து கொள்வதில் தவறில்லை


    2 .மூன்றாம் பக்கத்தைப் புரட்டும் போதே ஒரு நாலைந்து சில்லுமூக்குகள் சேதாரம் கண்டிருக்கும் கதைகள் உங்கள் சாய்சா ?
    இல்லை சார் அப்படி கதைகள் அவ்வளவு பொருத்தமாக இருக்காது ஒரே டெம்ப்ளேட் போல் தோன்றுகிறது

    3.இல்லீங்கோ ; தற்போதுள்ள பாணியில், கதைகளில் variety காட்டும் முயற்சிகளே க்ஷேமம் என்பீர்களா ?
    யெஸ் சார் தயவு செய்து வித்தியாசமான கதைகள் தான் வேண்டும்

    4.மாயாஜாலம் ; அமானுஷ்யம் + TEX >>>>>>> இது சரிப்படாது ! டபுள் ஓ.கே. ! உங்கள் பதில் என்னவோ ?
    இதை தானே சார் இவ்வளவு காலமாக எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் அந்த டெக்ஸ் இன் குண்டு புக் ஒன்றூ பற்றியும் ஏற்கனவே இங்கு பதிவிட்டிருந்தீர் அதை கேட்டு கேட்டு சலித்து போய் விட்டேன் , அமானுஸ்யம் , மாயாஜாலம் கலந்த டெக்ஸ் கதைகள் சற்று அதிகமாகவே களம் இறக்குங்கள் சார் முடிந்தால் திகில் நகரில் டெக்ஸ் , ஆவியின் ஆடுகளம் இந்த மாதிரி கதைகளையும் களம் இறக்குங்கள்

    ReplyDelete
  45. ஒரு காகிதத்தை தேடி @
    லாட்ரி சீட்டில் விழுந்த பணத்தை கைப்பற்ற நினைக்கும் ஒரு வில்லியிடம் இருந்து அதனை காப்பற்றி அதனை உரியவரிடம் செல்டன் ஒப்படைப்பதுதான் கதை. இதனை சொல்லி இருந்த விதம் அருமை.

    முதல் சில பக்கம்களில் வரும் அந்த பாட்டியின் ஏழ்மையை சொன்ன வசனம்கள் & படம்கள் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது, தனக்கு பம்பர் பரிசு கிடைத்ததை (கேட்க கூட முடியாமல்) அனுபவிக்க முடியாமல் இறந்தது என்னை மிகவும் பாதித்தது.

    இந்த கதையில் வில்லி என்பது ஒரே ஆள்தான், ஆனால் இவரின் வில்லத்தனம் செம; ரொம்பவும் பவர்புல் வில்லி; இன்னும் சொல்லப்போனால் செல்டன் அம்மணியின் வில்லத்தனத்தை சமாளிக்க ரொம்பவே சிரமப்படுகிறார்.

    இந்த கதையில் வில்லி செல்டனின் முன்னால் காதலி, இவர் செல்டன் தனக்கு வேலை செய்ய வேண்டும் என்பதற்கு அவர் ப்ளாக் மெயில் செய்ய உபயோகபடுத்திய ஆயுதம் சூப்பர். இனி மேலாவது இந்த கிழக்கோமான் திருந்தினால் சரிதான் :-)

    அதிகமான action காட்சிகள் இல்லை, மெகா சைஸ் டராக்குகள் இல்லை, ஆனாலும் கதை விறுவிறுப்பாக சென்றது.

    படம்கள் வழக்கம் போல் அருமை. செல்டன் கதை எனக்கு பிடிக்க காரணம், ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் கதை மற்றும் குறைந்த கதாபாத்திரம்கள்.

    கேள்வி: கதையில் முதல் பக்கத்தில் பாட்டிக்கு உதவும் அந்த பெண் யார்? செல்டனின் முன்னால் காதலி?

    ReplyDelete
    Replies
    1. ///கேள்வி: கதையில் முதல் பக்கத்தில் பாட்டிக்கு உதவும் அந்த பெண் யார்? செல்டனின் முன்னால் காதலி?///

      ஆம். ! ஷெல்டனின் முன்னாள் காதலியேதான். ஆனா அந்த பியூட்டியும் ஒரு பாட்டிதான். ஹிஹி..!

      Delete
    2. அப்ப முப்பது வருடங்களுக்கு முன்பே அந்த பாட்டிகிட்ட லாட்டரி டிக்கெட் இருந்து தெரியும்னு சொல்லுங்க. அப்ப அன்னைக்கே டிக்கெட் எடுத்துகிட்டு ஏன் ஓடவில்லை?

      Delete
    3. ///அப்ப முப்பது வருடங்களுக்கு முன்பே அந்த பாட்டிகிட்ட லாட்டரி டிக்கெட் இருந்து தெரியும்னு சொல்லுங்க. அப்ப அன்னைக்கே டிக்கெட் எடுத்துகிட்டு ஏன் ஓடவில்லை?///

      லாட்டரி சம்பவம் நடப்பது முப்பது வருடங்களுக்கு முன்பு அல்ல.!

      Delete
  46. டைகர் கதைகளில் ஏகப்பட்டவை உள்ளன. எது முதலில் , எது கடைசி என்று நண்பர்கள் யாராவது தெளிவு படுத்தவும். அதாவது காலக்கிரம தொடர் வரிசைப்படி...

    ReplyDelete
    Replies

    1. டைகர் கதை தொடர்கள் 1963ல்
      முதன் முறையாக
      வெளியிடப்பட்டன. இதில்
      இதுவரை 28கதைகள் இடம்பெற்று
      உள்ளன.இவை அனைத்தும்
      தமிழில் வந்துவிட்டன.

      1,2,3,4&5=இரத்தக்கோட்டை-5பாக
      கதை
      6.தோட்டா தலைநகரம்-சிங்கிள்
      சாட்
      7,8,9&10=இரும்புக்கை
      எத்தன்-4பாக கதை
      11&12=தங்க கல்லறை-இருபாக
      கதை
      13to23=மின்னும் மரணம்-11பாக
      கதை
      24,25,26,27&28=என் பெயர்
      டைகர்-5பாக கதை

      இத்தொடர் பெரிய வெற்றி
      பெற்றதை அடுத்து டைகரின்
      இளவயது நடப்புகளை கொண்ட
      யங்டைகர் சீரியஸ் 1989ல்
      வெளியிடப்பட்டது. அதில்
      இதுவரை 21கதைகள் வந்துள்ளன.
      தமிழில் 9கதைகள் 3பாக, இருபாக
      கதைகளாக வெளிவந்துள்ளன.
      இன்னமும் 12பாக்கியுள்ளன.

      இளம்டைகர்...
      1,2&3=இளமையில் கொல்-3பாக
      கதை.
      4.மரணநகரம் மிசெளரி(வைல்டு
      வெஸ்ட் ஸ்பெசல்sep2012)
      5.கான்சாஸ் கொடூரன்
      (முத்துNBS jan2013) -4&5இரு பாக
      சாகசம்.
      6.இருளில் ஒரு
      இரும்புக்குதிரை(முத்து NBS
      jan2013)
      7. வேங்கையின் சீற்றம்(டிசம்பர்
      2013)-6&7-இருபாக சாகசம்.
      8.அட்லான்டா ஆக்ரோசம்
      9.உதிரத்தின்விலை...8&9 ஒரே
      இதழாக மார்ச்2014ல் வந்த இருபாக
      சாகசம்.

      டைகரின் முன்கதை கொண்டு
      இளம்டைகர் உருவாக்கப்பட்டது
      போல பின்கதைக்கு ஏதும்
      உண்டா என்றால் அதற்கும் "ஆம்"
      என்பதே பதில். சீக்வலாக மார்சல்
      டைகர் என்ற 3பாக டைகர்
      சாகசமும் வந்துள்ளது.

      தமிழில்...2014ஆகஸ்டில் லயன்
      மேக்னம் ஸ்பெசலில் வந்த முதல்
      பாகம்+2015மார்ச்சில் வந்த
      வேங்கைக்கு முடிவுரையா"ல்
      இரண்டு பாகம் என 3ம்
      வந்துவிட்டன.
      அவ்வப்போது இங்கே கொஞ்சம்
      அங்கே கொஞ்சம் னு கொத்து
      புரோட்டா போட்டதால் இந்த
      கன்பியூசன்.

      Delete
  47. விஜயன் சார் @

    // 4.மாயாஜாலம் ; அமானுஷ்யம் + TEX >>>>>>> இது சரிப்படாது ! டபுள் ஓ.கே. ! உங்கள் பதில் என்னவோ ? //
    போங்க சார், இது போன்ற கதைகளில் டெக்ஸ் வில்லனை துப்பாக்கியால் சுட்டு வில்லனுக்கு காயம் ஏற்பட வாய்ப்பே இல்லை! ஒன்னு டெக்ஸ்க்கு புதிய ரக துப்பாக்கி கொடுங்க இல்லை ஸ்பைடர்கிட்ட வேலைக்கு அனுப்புங்க.

    ReplyDelete
    Replies
    1. மரணத்தின் நிறம் பச்சைல ஏலியன்சையே இந்த பழைய ரகக் துப்பாக்கியை வச்சு துரத்தராருன்னா பாருங்களேன்!

      எதிரி யாரா இருந்தாலும், எதா இருந்தாலும், ஏகே 47லயே வந்தாலும், அணகோண்டா, டைனோசா் போன்ற பயங்கர ஜந்துக்களாய் இருந்தாலும், அந்த பழைய ரைபிளும், சிலபல ஈயத்தோட்டாகளும் இருந்தால் எமனையே என்ன செய்தினு கேப்பாரு!!

      அதுதான் நம்ம தல டெக்ஸ்!!

      Delete
  48. விஜயன் சார்,
    // 4.மாயாஜாலம் ; அமானுஷ்யம் + TEX //
    இது தோர்கலுக்கு மட்டும்தான் சரிப்படும் எனவே அடுத்த வருட தோர்கல் கதைகளில் எண்ணிக்கையை அதிகபடுத்தலாமே? முடிஞ்சா ஒரு நான்கு கதைகள் கொண்ட ஒரு புத்தகம் ப்ளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. என்ன வரவர ரொம்ப நியாயமா பேசரீங்களே!

      Delete
    2. டெக்சும் வேணும்...தோர்கள் நான்கு கொண்ட ஹார்டுபௌண்டும் வேணும்....ம்ம்ம்...எல்லாமும் எல்லாவும் பெறவேண்டும்...இங்க இல்லாமை நீங்கவே...

      Delete
  49. டெக்ஸ் வில்லரை பொருத்தவரை இரண்டாவது கேள்வியே எனது சாய்ஸ்

    ReplyDelete
  50. விஜயன் சார்,
    // 1.டெக்ஸ் கதைத் தேர்வுகளில் சித்திரங்கள்://

    டெக்ஸ் முக ஒற்றுமை மிக அவசியம்.

    ஆமாம் சார், அவர் ஒரு கண்ணை மட்டும் மறைத்துக்கொண்டு வில்லன் கூடத்தில் உலாவும் அந்த கதை இன்னும் மறக்க முடியவில்லை. கடைசி பக்கம் வரை இது டெக்ஸ்ஸுதான் என்று என்னால் நம்பவே முடியவில்லை என்றால் பார்த்துகொங்களேன் :-_

    ReplyDelete
    Replies
    1. எல தம்பி மறந்தாப்புல கடைசி வரை வேசத்த கலைக்காம விட்டுட்டாப்ல...அதப் போயி...

      Delete
    2. அட போங்க சார், ஏற்கனவே கதைக்கு கதை Tex மாறுவேடம் போட்டு வர மாதிரி சித்திரங்கள்மாறுது.. வேற வேற artist புண்ணியத்தில். அந்த மஞ்சா சொக்கா மட்டும் இல்லாடி ..

      Delete
  51. 1. TEX Drawings sumara aaga irundal kuda OK sir ... kadhai than mukkiyam ...
    2. Variety irundal nalla irukum sir ...
    3. மாயாஜாலம் ; அமானுஷ்யம் + TEX டபுள் ஓ.கே. ! .. mandira mandalam ,Irulin Maindargal rendume nalla irukum sir ... ande 500 page mefisto kadhai try pannalam sir ...

    ReplyDelete
  52. சார்:
    டயபாலிக் ஒரே புக் மட்டும்மாவது 2018 முயர்சிக்கலாமே???!!!

    ReplyDelete
  53. அல்லார்க்கும் வணக்கமுங்க!


    1. டெக்ஸ் 'சித்தப்பாமேரி' இருப்பதைக் காட்டிலும், நல்ல கதைகளே முக்கியம்!

    2. சில்லுமூக்குகளை உடைப்பதுதான் டெக்ஸின் ட்ரேட் மார்க் என்றாலும், எல்லாக் கதைகளிலும் அப்படி இருந்தாகவேண்டிய அவசியமில்லை.

    3. வெரைட்டியும் வேண்டும்; வழக்கமான அதிரடிகளும் வேண்டும்.

    4. அமானுஷ்யம் + டெக்ஸ் : வருடத்திற்கு ஒன்று வருவதில் தவறில்லை!

    ReplyDelete
    Replies
    1. 1. அப்போ வையாபுாி மாதிாி படத்தை போட்டு இதுதான் டெக்ஸ்னா ஏத்துவீங்களா??

      2. சில்லி மூக்கு ஒடையலீனா தக்காளி சட்னி வராதோ! அப்புறம் எதை தொட்டு சாப்புடரது.

      3. எப்டி இந்த கடவுள் பாதி + மிருகம் பாதி னுவாங்களே அது மாதிாியா??

      4. பிக் பாஸ்ல வா்ர மாரியே பண்ரீங்களே ஈ.வி.
      அவங்களுக்கு வேணும், இவங்களுக்கு வேணும்னு எல்லாம்
      சும்மா நாச்சும் சொல்லப்படாது. உங்களுக்கு வேணுமா அத சொல்லீங்க!

      Delete
    2. ///1. அப்போ வையாபுாி மாதிாி படத்தை போட்டு இதுதான் டெக்ஸ்னா ஏத்துவீங்களா?? ///

      மாட்டோம். ஆனா, அதை 'டைகர்' கதைன்னு நினைச்சுப் படிச்சுக்கிடுவோம் ஹிஹி!

      Delete
    3. ஓ அப்டி வா்ரீங்களா??

      Delete
    4. வையாபுரி குளிச்சு தலைசீவி நீட்டாத்தானே இருக்காரு.. அப்புறம் ஏன்கிறேன்..??

      Delete
  54. க்ளா & பழனி@ இரத்த படலம் புக்கிங் பண்ணிட்டேன்....

    ReplyDelete
  55. 1.தோற்றத்தில் கொஞ்சம் வேறுபாடு இருந்தாலும் மாசான கதைகள் எனில் வெளியிடலாம் சார். கோழி குருடா இருந்தாலும் கொழம்பு ருசி தானே முக்கியம்.

    2."பஞ்ச் ஒன்று பஞ்சர் பத்து"- கதை நெடுக கலந்து வந்தாலே மதி சார். கதையோட்டமே முக்கியம். ஆவியின் ஆடுகளம், திகில் நகரில் டெக்ஸ் போல பஞ்சர் ரொம்ப குறைவு என்றாலும் அப்படியே நம்மை கட்டிப் போடும் கதைகள் எனில் டபுள் ஓகே...

    3.வெரைட்டி வேணும்; சுவாரஸ்யத்திற்கு பங்கம் இல்லாத வரை வெரைட்டி க்கு தடையில்லை சார்...

    4.மெபிஸ்டோ வாழ்க.... வருடம் ஒரு பாம்பு உடுவதில் தவறில்லை சார்...

    ReplyDelete
    Replies
    1. மெபிஸ்ட்டோஓஓஓஓ வாழ்க டெக்ஸ் வாழ்க

      Delete


    2. விஜய ராகவன் @
      // கோழி குருடா இருந்தாலும் கொழம்பு ருசி தானே முக்கியம். //

      சண்டே என்பது புரிகிறது.

      அல்லாம் சரிதான், டெக்ஸ்க்கு எப்ப கண்ணு குருடு ஆச்சு? சொல்லவே இல்லை?

      Delete
    3. அராஜகம் அன்லிமிடெட்"- பாருங்கள் பரணி...

      Delete
    4. அது டெக்ஸா?! அட நம்பவே முடியல. இது நாள்வரை அது வேற யாரோ ரத்து நினைச்சேன்! நீங்க சொன்ன பிறகுதான் அது டெக்ஸ்ன்னு தெரிஞ்சது. :-)

      Delete
    5. ஹி ஹி..
      Texக்கு கன்னத்தில் ஒரு மரு ஒட்டினா போதாதா.. மாறுவேடத்துக்கு..

      Delete
  56. கதைகள் ஓ.கே. எனில் சித்திரங்களின் cut off மதிப்பெண்களைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாமா ?///
    நிச்சயமாக,கதையின் வேகமும் சுவாரஸ்யம் மட்டுமே எனக்கு போதும்.

    ReplyDelete
    Replies
    1. மாப்பு உள்குத்து ஒன்றும் இல்லைதானே...!!!

      Delete
    2. உண்மையில் இல்லை மாம்ஸ்.

      Delete
  57. பரிசளித்தது போக எஞ்சியவற்றை புதிய வாசகர்களுக்கு பரிசளித்து ஊக்கப்படுத்தியிருக்கலாம்.ஒரு யோசனை! அவ்வளவுதான்.புதிய வாசகர்களுக்கு பரிசளித்திருந்தால் இளைய தலைமுறையினரை ஈர்த்திருக்கலாம்.

    ReplyDelete
  58. ///கடந்த 10 நாட்களுக்குள் பழசும், புதுசுமாய்க் கலந்து குறைந்தது 15 லக்கி இதழ்களை வாசித்ததன் பலனாய் சில சூப்பர் ஆல்பங்கள் சிக்கியுள்ளன ! So அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளுக்காவது இந்தப் புலம்பல்கள் அவசியமாகாது என்பேன்/// சூப்பர் நியூஸ் எல்லோருக்கும்...

    கோபியில் யாரோ தானாவே பேசி தனக்கு தானே சிரிக்கிறாங்களாம்...
    மேச்சேரியில் ஒருவர் மேல் மாடிக்கும் கீழ்மாடிக்கும் துள்ளிட்டே இருக்காராம்....

    ReplyDelete
    Replies
    1. ஓய் மாமா,மேச்சேரியில் இருவர்ப்பா.

      Delete
    2. அப்பவே 'வாங்கா' மனசுல சொல்லுச்சு! லக்கியப் பத்தி நியூஸ் வருது மொத ஆளா போயி பதிவ போடுன்னு!

      Delete

  59. 4.மாயாஜாலம் ; அமானுஷ்யம் + TEX >>>>>>> இது சரிப்படாது ! டபுள் ஓ.கே. ! உங்கள் பதில் என்னவோ ?///
    அமானுஷ்யம் கலந்த டெக்ஸ் கதைகள் நன்றாகத்தானே உள்ளது.

    ReplyDelete
  60. ஈரோடு புத்தக விழாவில் என் கவனத்தை ஈர்த்த, நான் ஆதரிக்கும் சில விஷயங்கள்.

    சீனியர் ஆசிரியர்: குழந்தைகளுக்கான ஒரு நிரந்தர பத்திரிக்கை / இதழை லயன் முத்து காமிக்ஸ் வெளியிடவேண்டும் என்ற கனவு.

    ஆசிரியர்: புதிதாக முதன்முதலாக காமிக்ஸ் உலகில் நுழையவிரும்பும் வாசகர்களுக்கு இதழின் அதிக விலை ஒரு தடையாக இருந்துவிடகூடாது என்ற எண்ணம்.

    சீனியர் ஆசிரியர்: ஆசிரியர் தேவையான அளவு ஓய்வு எடுக்கும் வகையில் குண்டு புத்தகமாக, இன்னும் அதிகமாக என்று கேட்பதை வாசகர்கள் குறைத்துகொள்ளவேண்டும் என்ற கோரிக்கை.

    கனவாகவும் எண்ணமாகவும் கோரிக்கையாகவும் மட்டுமே நின்றுவிடாமல் நடமுறைபடுத்த முயற்சி செய்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  61. ///இப்போது கூட 2018-ன் இறுதிக் quarter-ன் கதைகள் மீதான பணிகள் ஓடிவருகின்றன ! நமது மொழிபெயர்ப்பாளர் மட்டும் டெங்குக் காய்ச்சலில் அவதியுற்றிராவிடின் இந்நேரம் 2019-க்குள் கால் பதித்திருப்போமென்பது நிச்சயம் !!///---யாஹூஊஊஊஊ தமிழ் நாட்டில் தான் நான் இருக்கனா... தொம்....

    ReplyDelete
  62. ஐயா ஆர்டின் உள்ளே வரலாமா?

    ReplyDelete
    Replies
    1. இவ்ளோ லேட்டாவா வா்ரது!

      லக்கியும், ஆா்டினும் அமா்களப்படுத்துட்டு இருக்காங்க மேல!

      Delete
  63. Yes,come in. But too late.so late Good morning Kannan sir.

    ReplyDelete
  64. நண்பர்களுக்கும் ஆசிரியயர்க்கும் காலை
    வணக்கம்.
    தல எப்படி வந்தாலும் தல தலதான்.
    சப்பைகளின் மூக்கை உடைப்பதைவிட
    பலம் பொருந்திய மாயிஜால வில்லனிடம்
    சரிக்குசமமாக மோதி தோல்வியில்லாமல்
    வெற்றியும் பெறாமல் சமபல சாகசமே
    சிறந்தது.ரின்டின்,சிக்பில் டபுள் ஆல்பமாக
    வந்தால் நன்று.லார்கோ 18ல் ஜனவரியில்
    வந்தால் சூப்பர்.மறுபதிப்புகளை அதிகரிக்க முயற்ச்சி செய்யவும்.சந்தா E
    18ல் மாதம் ஒன்றாக 12 வேண்டும்.
    ஈரோட்டில் விவாதித்த சூப்பபர்6
    மாற்றம் கண்டு சூப்பர்12 ஆக மாற
    வேண்டும்.வருடம் 4 தனி ஸ்பெஷல்
    தேவை.தீபாவளிக்கு பெரிய குண்டுபுக்
    சாஹியே.அப்புறம் உங்க பிறந்தநாள்
    சீனியர்&ஜூனியர் பிறந்தநாள் மற்றும்
    தல-தளபதி-லார்கோ -ஷெல்டன்
    மாயாவி மாடஸ்டி & அனைத்து நாயக
    நாயகியரின் பிறந்தநாளை முன்னிட்டு
    சிறப்பு மலர் குண்டாக வெளியிட வேண்டி
    காமிக்ஸ் முன்னேற்ற கழகத்தின்
    சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  65. // இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல்// சித்திரங்களை குறைசொன்னது யார் சார்? அந்தச் சித்திரங்கள் அருமையாக இருந்தன.

    ReplyDelete
  66. விஜயன் சார், // புக் ஒன்று 932 ரூபாய் என்று Amazon-ல் பார்க்கும் போது காரமான சூப் புரையேறியது போலான பீலிங் எழுவதுண்டுதான் ; //

    கடந்த வருடம் ஆன்லைன் மூலமாக நான்கு கதைகள் கொண்ட லக்கி-லூக் (ஆங்கிலம் பதிப்பு) குண்டு புத்தகம் ரூபாய் 250க்கு வாங்கினேன். Euro Kid's பதிப்பகத்தார், First Cry online store மூலம் வாங்கினேன். நீங்களும் முயற்சிக்கலாமே.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே பரணி

      அது மும்பை வெளியீடு!

      24 கதைகள் மட்டுமே அதில் உள்ளன!

      அப்பறம் அது Indian English கொஞ்சம் லோடலோடவாகத்தான் இருக்கிறது!

      Cine Books ஸ்லாங்கே சூப்பரா இருக்கும்!

      Delete
    2. அது சரி. எனக்கு இதுவே நன்றாக இருக்கிறது.

      Delete
  67. மந்திர மண்டலம், பவளச்சில் மர்மம், டிராகன் நகரம்,கதைகள் மாதிரி யான கதைகளை தேர்வு செய்யுங்கள் சார். வசனங்களை குறைத்து டிராகன் நகரத்தில் டெக்ஸின் கை மட்டுமே பேசுமே அது போன்ற கதைகளை தேர்வு செய்யுங்கள் .டெக்ஸ் கதையில் டெக்ஸ் அவராக இருக்க வேண்டும் அவர் மாதிரி வேண்டாம்... டெக்ஸை கதையில் தேடும் அளவிற்கு எங்களை விட்டு விடாதீர்கள் நன்றி சார்

    ReplyDelete
    Replies
    1. // டெக்ஸை கதையில் தேடும் அளவிற்கு எங்களை விட்டு விடாதீர்கள் நன்றி சார் //
      செமயா சொன்னீங்க ஜி.

      Delete
  68. 'ஒரு காகிதத்தைத் தேடி' - படிச்சுக்கிட்டிருக்கேன்... சின்னவயசுல செஞ்ச ஒரு 'கசமுசா' தவறுக்கு தண்டணையாக, 40 வருடங்களுக்குப் பிறகும் அதே கசமுசா'வை செய்யவேண்டிய கட்டாயம் நம்ம ஷெல்டனுக்கு! ( எப்படித்தான் இந்தமாதிரி கதைகள் அமையுதோ... யோவ் ஷெல்டன்... மச்சம்யா உனக்கு!).

    'டைகரின் இளவயது கதைகள்' மாதிரியே, ஷெல்டனுக்கும் இளவயது கதைகள் இருந்தா செமயா இருக்கும்னு தோனறது ஹிஹி! ;)

    ReplyDelete
    Replies
    1. ///40 வருடங்களுக்குப் பிறகும் அதே கசமுசா'வை செய்யவேண்டிய கட்டாயம் நம்ம ஷெல்டனுக்கு!///

      இது ஒருவகை மருத்துவமா இருக்கும். ஆனா ஷெல்டனுக்கு வரமா சாபமான்னு தெரியாது..! :-)

      Delete
  69. Tex story selections:
    1 its ok if artwork is slightly unconventional but story z strong
    2 yes
    3 no variety needed: i miss good old tex stories set in towns and set with redindian backdrop.these two years we have experimented.y not go back to usual stuff that excited us in first place.eg- nil kavani sudu was gud
    So shall v go back to varutha curry beans days?
    4 no need of magic based stories except may be one mepisto or yama which should b reasonably good story.
    Regards
    Arvind

    ReplyDelete
  70. ஈரோடு புத்தக விழா மறக்க முடியா இனிய நிகழ்வு.இந்த முறை விற்பனை வரவேற்பு எப்படி சார் ...ஈரோடு ஏமாற்றவில்லை தானே...?இதை வினவ காரணம் இந்த முறை புத்தக காட்சிக்கு மக்களின் வருகை போன வருடத்தை விட குறைவு என உள்ளூர் செய்தி...:-(

    ReplyDelete
  71. வாசக சந்திப்பின் போது ஜாலியாய் நடத்திய அந்தப் போட்டிக்குப் பரிசாய் நமது ஓவியங்களை வழங்கியதற்கு நிறைய சந்தோஷ மின்னஞ்சல்கள் !! எங்களைப் பொறுத்தவரை இவை தினப்படி சமாச்சாரங்களாய்த் தோன்றினாலும், உங்கள் பார்வைகளில் அவற்றிற்கான மதிப்பீடே தனி என்பது புரிகிறது !!



    ########


    புத்தக காட்சியில் நீங்கள் கேட்ட ,அளித்த அந்த வினாதாளுக்கே பின் நாளில் தனி மதிப்பு வரும் என நம் மூத்த நண்பர் சொன்னார் எனில் ஒரிஜினல் ஓவியம் பற்றி கேட்கவும் வேண்டுமா சார் ...:-)

    ReplyDelete
  72. சார் அருமை..கலர் கலராய் கனவு என்றவுடன் இரத்தப் படலம்தான் என் மனக்கண்ணில் ஓடியது . ஆனா அது இல்ல தம்பி டெக்ஸ் , டைகர்ன்ன வார்த்தைகள பார்த்ததும் எனக்கும் புஸ்..புஸ்ஸுன்னுதான் காத்து வந்தது . தேடல் படலத்தில் நான் கேட்டது இது இல்லயேன்னு இந்தா வந்துறும்னு தேடிகிட்டே போனா கடசில வராதோன்னு போனா ....வந்துட்டண்டா அம்பின்னு பதிமூன்று பளிச்சென பற்கள் முப்பத்திரண்டயும் வெளிக்காட்றார் . ஆனா முன் பதிவு ஏனோ மத்தாப்ப கொளுத்தல . இன்னும் நண்பர்கள் ஆண்டவனாய் விரைய கடவுள் அருளட்டும் .சார் டெக்ச ... ஓவியத்த விட கதைக்கு மிக்கியத்துவம் தரச்செய்யுங்கள். மூ்றாம் பக்கம் புரட்டுனா மூக்கு உடையும் அதிரடிக் கதயா இருக்கோணும் . மாயாஜால கதைகளும் வரட்டுமே .

    ReplyDelete
  73. தல கதை என்றாலே அதிரடி தான்.....
    எனக்கு ஓகே.....

    ReplyDelete
  74. தல 70 ஆண்டு சிறப்பிதழ் 1000 பக்கமாவது இருக்கும் ஆமாம்....

    ReplyDelete
  75. டெக்ஸ் 70 700 பக்கம் என முடிவு செய்ய ப்பட்டுள்ள்து.

    ReplyDelete
  76. ///1.டெக்ஸ் கதைத் தேர்வுகளில் கதைகள் 100% & சித்திரங்கள் 100% ஸ்கோர் செய்ய வேண்டுமென்பதே நியதியா ? அல்லது கதைகள் ஓ.கே. எனில் சித்திரங்களின் cut off மதிப்பெண்களைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாமா ?///

    அப்படி பார்த்தால் நமக்கு ஒரு நில் கவனி சுடு, டைனோசரின் பாதையில், சாத்தான் வேட்டை போன்றவை கிடைத்திருக்காதே?!
    ஆகவே சித்திரத்தைவிட கதையே முக்கியம் என்பது என் கருத்து .

    ///2 .மூன்றாம் பக்கத்தைப் புரட்டும் போதே ஒரு நாலைந்து சில்லுமூக்குகள் சேதாரம் கண்டிருக்கும் கதைகள் உங்கள் சாய்சா ?///

    ஆக்ஷன் தேவைதான். அதற்காக.. ..

    "ஹலோ வில்லர்.! சௌக்கியமா?"

    "னங். . சத்.. கும். . நான் சீக்கா கெடக்குறேன்னு யார்ரா சொன்னது?"

    "காஃபி சாப்புடுறிங்களா டெக்ஸ்? "

    "பொளேர்.. மடார்.. . பளீர்.. .

    எனக்கென்ன சக்கரைவியாதியா? நான் காஃபி சாப்பிடமாட்டேனா?? "

    "அதுக்கில்லை.. .கேட்டுட்டு குடுக்கலாமேன்னு.. ."

    "சப்.. . பட். . தட்.. .

    கேட்டுட்டுதான் குடுப்பிங்களோ..!"

    இவ்வளவு ஆக்ஷன் இல்லாமல் இருந்தால் சந்தோஷம் சார்.

    ///3.இல்லீங்கோ ; தற்போதுள்ள பாணியில், கதைகளில் variety காட்டும் முயற்சிகளே க்ஷேமம் என்பீர்களா ?///

    Variety நிச்சயம் வேண்டும் சார். இப்போதைப்போலவே தொடரலாம்.

    ///
    4.மாயாஜாலம் ; அமானுஷ்யம் + TEX >>>>>>> இது சரிப்படாது ! டபுள் ஓ.கே. ! உங்கள் பதில் என்னவோ ?///

    Variety யில் இதுவும் ஒரு வகைதானே? கியூபா படலம், இருளின் மைந்தர்கள், மந்திரமண்டலம் எல்லாம் செம்ம ஸ்டோரிஸ். மாயாஜாலத்தை ஒதுக்கினால் இவற்றைப் போன்ற கதைகளை மிஸ் செய்து விடுவோம். ஆனாலும் ஸ்பைடருக்கு பதிலாக டெக்ஸ் தோன்றிய சைத்தான் சாம்ராஜ்யம் போன்றவை மட்டும் கொஞ்சம் திகிலூட்டுன்றன.
    மாயாஜாலம் + அமானுஷ்யம் + டெக்ஸ் - அவசியம் தேவை சார்..!

    ReplyDelete
    Replies
    1. @ கிட்

      ஹா ஹா ஹா! செம்ம! :))))))))

      Delete
  77. ///! நமது டைகரும் சரி ; டெக்ஸும் சரி - அதிரடி செய்த அதே OK CORRAL-க்கு நமது சிரிப்புப் போலீஸ் படை பயணம் செய்தால் என்னவாகுமோ - அதனை இம்முறை பார்க்கவிருக்கிறோம் ! ///

    வல்லிய தமாஷாயிட்டு இரிக்கும் ஆ கதா..!

    ஆர்வங்கா வெய்ட் சேஸ்தானு..!

    கிட் ஆர்டின் நீ பேகனே பாரோ..!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா!! நினைச்சாலே சிரிப்பு பொத்துகிட்டு வர்து!

      Delete
  78. டியர் எடிட்டர் சார்,

    டெக்ஸ்ஸின் அனைத்து வகையான கதைகளும் வேண்டும்.. குறிப்பாக அந்த மொபிஸ்டோ கதையும் பிரசிடெண்டை காப்பாற்றும் கதையும் இந்த வருடமே போடவும்..

    70வது ஆண்டை சிறப்பிக்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டு அல்லது மூன்று கதைகளாக இணைத்து ஒரே குண்டு புக்காக போடலாமே.. (சாத்தியப்படாது என புத்திக்கு தெரியுது, ஆனா மனசு கேக்கச் சொல்லுதே..)_/\_

    அப்படி இல்லாட்டி மூனு மாசத்துக்கு ஒரு குண்டு புக்காவது போடுலாமே.. கலவையாக இருந்தாலும் பரவாயில்லை..

    ReplyDelete
  79. ///"சார்....நமது ஜானியின் புது வரிசையின் ஆல்பம் # 2 பிரமாதம் ! Our Johnny is back !" என்றிருந்தது ! யாரிடமிருந்து ? என்று பார்த்தால் பாரிஸிலிருந்து நண்பர் ராட்ஜா அனுப்பியிருந்த தகவல் அது ! ///

    தேங்யூ ரட்ஜா..!

    அதேமாதிரி அந்த ஆஸ்ட்ரிக்ஸ் ஒப்ளிக்ஸும் நல்லாருக்குன்னு ஒரு மெஸேஜ் தட்டிவிடுங்களேன் ப்ளீஸ்.! :-)

    ReplyDelete
    Replies
    1. //ஆஸ்ட்ரிக்ஸ் ஒப்ளிக்ஸும்//
      எடிட் நாம அதுக்கு இன்னும் வளரலைனு சொன்னமாதிரி நியாபகம் அந்த வளர்ச்சிவிகிதத்தை பத்தி எடிட் தான் சொல்லணும். வருமா எடிட் ....?

      Delete
    2. அந்த புதிய கார்டூன் தொடர் ஆஸ்ட்ரிக்ஸ் & ஒபளிக்ஸ்ஸாக இருக்குமோ...???

      Delete
  80. வணக்கம்.
    Prebooking செய்பவர்களுக்கு The enquiery volume இன் தமிழ்ப்பதிப்பு இலவசம் என்பது தற்போது இல்லையெனில் அதை தனிப்பதிப்பாகவேனும் வெளியிடுங்கள்! Miss பண்ண விரும்பவில்லை! Please!
    மற்றும் இந்தியாவிற்கு வெளியில் (இலங்கை) உள்ள வாசகர்களுக்கு என ஒரு prebooking link தந்தால் மிகமிக மகிழ்ச்சி!
    எனக்கும் என் நண்பனுக்குமாக 2 books prebooking செய்ய waiting. இங்குள்ள பெறுமதிப்படி ஒரு இரத்தப்படலம் pack வாங்க ஏறத்தாள 7000/= செலவாகும். But எவ்வளவு செலவானாலும் பறவாயில்லை அந்த book கையில் தவழும் நொடிக்காக ஆவலுடன் இருக்கிறேன். முன்னர் தவறவிட்ட volume களுக்காக ஆங்கில புத்தகங்களை வாங்கி வாசித்தாலும் உங்கள் தமிழ் மொழிபெயர்ப்பிற்குரிய taste ஏ தனி!
    அத்துடன் one kind request , XIII மர்மம் கதைகளை வேறு கதைகளுடன் இணைத்து ஒரே book ஆக வெளியிடாதீர்கள். தனி book ஆகவே வெளியிடுங்கள். அவற்றை collect பண்ணி shelf இல் அடுக்கி அழகு பார்ப்பதில் இடைஞ்சலாக உள்ளது. அவற்றை ஆகக்குறைந்தது 3 மாத இடைவெளியிலாவது வெளியிடுங்களேன். பொறுமையாக இருக்க முடியவில்லையே!
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ////இங்குள்ள பெறுமதிப்படி ஒரு இரத்தப்படலம் pack வாங்க ஏறத்தாள 7000/= செலவாகும். But எவ்வளவு செலவானாலும் பறவாயில்லை அந்த book கையில் தவழும் நொடிக்காக ஆவலுடன் இருக்கிறேன். முன்னர் தவறவிட்ட volume களுக்காக ஆங்கில புத்தகங்களை வாங்கி வாசித்தாலும் உங்கள் தமிழ் மொழிபெயர்ப்பிற்குரிய taste ஏ தனி! ///

      சூப்பர்!

      Delete
    2. madhu Prashenna @ warm welcome!

      //Prebooking செய்பவர்களுக்கு The enquiery volume இன் தமிழ்ப்பதிப்பு இலவசம் என்பது தற்போது இல்லையெனில் அதை தனிப்பதிப்பாகவேனும் வெளியிடுங்கள்!//

      He explained this in Erode Book Fair interview, please watch the video.

      Delete
  81. டெக்ஸ் & கோ அதிரடி .....

    என் எதிர்பார்ப்பு
    டெக்ஸ் தனியவர்தனம் வேண்டாம் எடிட், குடும்பத்தோடு ஒரு அட்வென்ச்சர் .... கார்சனுக்கும் பெரிய இடம், டைகர்இக்கும் ஒரு சொல்லிக்கொள்ளும் இடம் கிட் இற்கு நல்ல பாத்திரம் ஆகா இருந்தால் சந்தோஷம். genresஐ நீங்க fix செய்யுங்கள்...............

    ReplyDelete
  82. //அப்புறம் நமது "இரத்தப் படலம்" வண்ணத் தொகுப்பு பற்றிய update//

    மகிழ்ச்சி! போனவருடம்,அதற்கு முந்தைய வருடம் கூட இந்த நேரத்துக்கெல்லாம் படலத்தை கெட்டவர்கள் தேஷ் துரோகி போல, தமிழ் காமிக்ஸ் துரோகி ஆகா பட்டம் கட்டப்பட்டனர் .... இப்பொது கனவு நனவாகிறது அகம் குளிர்கிறது .....!

    நீங்கள் செய்தது persistent போராட்டம் வாழ்த்துகள் ஸ்டீல் ..... !

    ReplyDelete
  83. /// TEX 70 ஆண்டானது ஒரு சரவெடிச் சூறாவளியாய் இருந்திட வேண்டுமென்ற ஆர்வம் என்னைப் பரோட்டா சூரியாக மாறச் செய்கிறது .///


    எடிட்டர் சார்..!

    இந்த இரத்தக்கோட்டையை ஒரு வாரமாக கையில் வைத்துக்கொண்டே அலைகிறேன். வெனிலா ஃப்ளேவர் ஐஸ்புரூட் மாதிரி இருக்கும் அந்த அட்டையை அடிக்கடி பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கிறேன். .!

    நிற்க..!
    ( உக்காருங்க சார். .! அந்த நிற்க இல்லை. ) :-)

    இரத்தக்கோட்டையை பார்த்த தருணத்திலிருந்தே எனக்குள் தாங்கொணா ஆசை ஒன்று பீறிட்டு எழுந்துகொண்டே இருக்கிறது.

    டெக்ஸ் 70 க்கு இந்த சைசில் முழுவண்ணத்தில் ஒரு ஷ்பெசல் வந்தால் எப்படியிருக்கும் என்பதே அந்த ஆசை.!
    ரெகுலர் டெக்ஸ் சைசில் 700 பக்கங்கள் என்பது டைகர் சைசில் பக்கத்துக்கு நாலுவரிசை படங்களுடன் சற்றேறக்குறைய 500 பக்கங்கள் வரக்கூடும்.!
    அப்படியில்லாமல் பக்கத்துக்கு மூன்று வரிசைகளே போதுமென்று 700 பக்கங்களுடனேயே வந்தாலும் மெத்த மகிழ்ச்சியே.!!

    பட்ஜெட்தான் பிரச்சினையென்றால் ரெகுலர் இதழ்களில் ஒன்றிரண்டை ஸ்வாஹா செய்துவிட்டாவது இதற்கு சம்மதம் தாருங்கள் சார்.!

    அப்படியே டெக்ஸ் + கார்சனை முன்னட்டையில் டாலடிக்கவிட்டு பின்னட்டையில் டெக்ஸ் + கார்சன் + கிட் + டைகர் ஜாக் ன்னு கெத்தா போஸ் கொடுக்க வெச்சு ஒரு புக்கு சார்.! ஒரேயொரு புக்.! மறுக்கா 80 ஷ்பெசல் வரும்வரை தொந்தரவு தரமாட்டோம் என டெக்ஸ் வில்லர் பேரவை, ஆர்மி, நற்பணி மன்றம் போன்றவற்றின் சார்பாக உறுதியளிக்கிறோம். !

    டெக்ஸ் பாசறையின் போர்வாட்களே! பீரங்கிகளே..!
    உங்களுக்கும் இந்தமாதிரி சைசில் டெக்ஸ் கலரில் வரவேண்டுமென்று ஆசை இருக்குமல்லவா?

    இப்போது விட்டால் எப்போது கிடைக்கும்?

    வாங்க வாங்க! வந்து போராட்டத்தில் பங்கெடுங்க..!!!

    ReplyDelete
    Replies
    1. +22222222222222👌👌👌👌👌
      அப்படியே வரிக்கு வரி வழிமொழிகிறேன்....

      Delete
    2. டெக்ஸுக்காக போராட்டத்தில் குதித்த கார்டூன் அணி பிரசிடெண்ட் அவர்களுக்கு நன்றிகள்....

      Delete
    3. அருமை அருமை!

      என்னுடைய ஏகோபித்த ஆதரவும்!

      Delete
    4. +10000000000000000000000000000000

      Delete
    5. Tex70 வருட வருடம் வரக் கூடிய நிகழ்வு அல்ல. நிறய ரசிகர்களுடன் இருக்கக் கூடிய ஒரு முக்கியமான ஹீரோவுக்கு கண்டிப்பா அந்த மாதிரி ஒரு ஸ்பெசல் இதழ் வேண்டும். தலீவரை பதுங்கு குழியில இருந்து இழுத்துட்டு வாங்க செயலரே. போராட்டத்தை ஆரம்பிப்போம்.

      Delete
  84. ******* ஒரு காகிதத்தைத் தேடி! *******

    (இஸ்பாயிலர் அலெர்ட் : கதை விவரிக்கப்பட்டிருக்கிறது)

    அதாவது, ஷெல்டனுக்கு இருபது வயதிருக்கும்போது அர்ஜென்டினாவில் ஒரு பண்ணை அதிபரின் பருவ மகளை பலாத்காரம் செய்துவிட்டதாகப் பதிவான போலீஸ் கேஸ் இன்னும் நிலுவையில் தொங்கிக்கொண்டிருக்க, 40 வருடங்களுக்குப் பிறகு அங்கே திரும்பவரும் ஷெல்டனை கடமை உணர்வோடு கைது செய்கிறது அந்நாட்டு போலீஸ்!

    பண்ணை அதிபர் எப்போதோ மண்டையைப் போட்டிருக்க, வழக்கைத் தொடர்வதோ ஆசைப்பட்டு(!) பலாத்காரத்திற்கு ஆளான 'பிலார்' எனும் அந்நாளைய இளஞ்சிட்டு; இந்நாளைய பயங்கரப் பாட்டிம்மா!

    நிற்க;

    அர்ஜெண்டினாவின் பம்பா நகரில் ஏழ்மை ஜீவனம் செய்துவரும் ஒரு தேவாலயப் பணிப்பெண்ணுக்கு மூன்று லாட்டரிச் சீட்டுகள் கிடைக்க, அதில் ஒன்றுக்கு 25 மில்லியன் டாலர்கள் ஜாக்பாட் அடிக்கிறது! இன்ப அதிர்ச்சியில் அந்த ஏழைப் பணிப்பெண் மண்டையைப் போட்டுவிட, பணிப்பெண்ணிடமிருந்து லாட்டரிச் சீட்டை ஆட்டையைப் போடவந்த உள்ளுர் களவாணியை தேவாலயப் பாதிரியார் போட்டுத்தள்ளுகிறார். கொலைப் பழிக்கு பயந்தும், தன் கிராம மக்களுக்கு பரிசுத் தொகை போய்ச்சேர ஆசைப்பட்டும், மலைப் பிரதேசத்திலிருக்கும் தன் சொந்த ஊருக்கு எஸ்கேப் ஆகிறார் அந்தப் பாதிரியார்!

    அமர்க;

    கன்னிப் பெண்ணை பலாத்காரம் செய்ததற்காக அந்நாட்டில் விதிக்கப்படும் முப்பதாண்டுகள் சிறைவாசத்தைத் தவிர்க்க வேண்டுமானால், புகார் கொடுத்தவர் அதைத் திரும்பப் பெறவேண்டும். புகாரைத் திரும்பப் பெற வேண்டுமானால், மனுதாரரான அந்த பிலாரி பாட்டீம்மாவுக்கு ஷெல்டன் ஒரு உதவி செய்யவேண்டும்!

    அந்த உதவி : லாட்டரியுடன் தலைமறைவான அந்தப் பாதிரியாரைக் கண்டுபிடித்துத் தரவேண்டும்.

    * பெரும் பணக்காரியான பிலார் பாட்டீம்மா ஏன் அந்த பாதிரியாரை தேடியலையவேண்டும்?
    * ஷெல்டன் அந்தப் பாதிரியாரைக் கண்டுபிடித்துக்கொடுத்து தன்மீதான வழக்கிலிருந்து மீண்டாரா இல்லையா?
    * 25 மில்லியன் ஜாக்பாட்டின் கதி என்ன?

    போன்ற கேள்விகளுக்கு பளபள ஆர்ட் பேப்பரில் பரபரப்பாக நகரும் பக்கங்களைப் புரட்டி தெரிந்துகொள்ளுங்கள்!

    ஷெல்டனுக்காகவே ஸ்பெஷலாக அமைந்த ஒரு வித்தியாசமான, ஜாலியான கதை!

    என்னுடைய ரேட்டிங் : 10/10

    ReplyDelete
  85. 2 .மூன்றாம் பக்கத்தைப் புரட்டும் போதே ஒரு நாலைந்து சில்லுமூக்குகள் சேதாரம் கண்டிருக்கும் கதைகள் உங்கள் சாய்சா?

    YES

    4. மாயாஜாலம் ; அமானுஷ்யம் + TEX >>>>>>> டபுள் ஓ.கே. !

    தல 70 ஆண்டு சிறப்பிதழ் 1000 பக்கமாவது இருக்க வேண்டும்

    ReplyDelete
  86. ரொம்ப நன்றி விஜய்... ஆனாலும் உங்களுடைய டைகர் research ஆச்சர்யமூட்டுகிறது...

    ReplyDelete
    Replies
    1. காமிக்ஸ் ரசிகன்>கெளபாய் ரசிகன்>டெக்ஸ் ரசிகன்...

      எல்லா கெளபாய்ஸ்ம் நம்ம பேவரைட் தான் ஜி.
      அந்த டெக்ஸா டைகரா விவாதம் லாம் சும்மா டைம் பாஸ்தான்...

      Delete
  87. We need 13 th part of xiii pls consider sir..it is not available in English..

    ReplyDelete
  88. At least unveil 13 th part of xiii as special issue like as colonal amos with collecter edition sir..

    ReplyDelete
  89. Dear Vijayan,

    My reply is inline.
    1.டெக்ஸ் கதைத் தேர்வுகளில் கதைகள் 100% & சித்திரங்கள் 100% ஸ்கோர் செய்ய வேண்டுமென்பதே நியதியா ? அல்லது கதைகள் ஓ.கே. எனில் சித்திரங்களின் cut off மதிப்பெண்களைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாமா ?

    Nope, pictures are secondary. Story line is important.

    2 .மூன்றாம் பக்கத்தைப் புரட்டும் போதே ஒரு நாலைந்து சில்லுமூக்குகள் சேதாரம் கண்டிருக்கும் கதைகள் உங்கள் சாய்சா ?
    No, not at all. But it is ok to have, once in a while.

    3.இல்லீங்கோ ; தற்போதுள்ள பாணியில், கதைகளில் variety காட்டும் முயற்சிகளே க்ஷேமம் என்பீர்களா ?
    Variety is important.

    4.மாயாஜாலம் ; அமானுஷ்யம் + TEX >>>>>>> இது சரிப்படாது ! டபுள் ஓ.கே. ! உங்கள் பதில் என்னவோ ?
    Double OK.
    Double OK.

    Regards,
    Mahesh

    ReplyDelete
  90. டெக்ஸின் மெபிஸ்டோ மாயாஜாலக் கதைகளும், அவன் மகனுடனான கதையும் வேண்டும். வேண்டுமென்றால் ஒரு கதையை போட்டு ரெஸ்பான்ஸ் பார்த்து விட்டு தொடரலாம். திகிலுடன் பரபரப்பு கலந்த டெக்ஸ் மாயஜாலக் கதைகள் ஏற்கனவே வந்து வெற்றி பெற்றுள்ளதே.

    ReplyDelete
  91. 1.டெக்ஸ் கதைத் தேர்வுகளில் கதைகள் ஓ.கே. எனில் சித்திரங்களின் cut off மதிப்பெண்களைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாமா ? - Yes

    2 .மூன்றாம் பக்கத்தைப் புரட்டும் போதே ஒரு நாலைந்து சில்லுமூக்குகள் சேதாரம் கண்டிருக்கும் கதைகள் உங்கள் சாய்சா ? - No

    3.இல்லீங்கோ ; தற்போதுள்ள பாணியில், கதைகளில் variety காட்டும் முயற்சிகளே க்ஷேமம் என்பீர்களா ? - Yes

    4.மாயாஜாலம் ; அமானுஷ்யம் + TEX >>>>>>> இது சரிப்படாது ! டபுள் ஓ.கே. ! உங்கள் பதில் என்னவோ ? - டபுள் ஓ.கே.

    ReplyDelete