Sunday, June 18, 2017

பயணத்தின் பன்முகங்கள் !!

நண்பர்களே,

வணக்கம். லேட்டாய்த் தலைகாட்டினாலும் , லேட்டஸ்ட் வரவானது ஷிகர் தவனைப் போல அடித்து ஆடி வருவதைப் பார்க்கும் போது குஷியாக உள்ளது ! Yup -   வருஷம் தொடங்கி மாதங்கள் 5 ஓடிய பின்னரே தலைகாட்டிய  சந்தா E -  ஒரு வித்தியாசமான அனுபவத்தினை இதுவரையிலுமாவது தந்து வருவதைப் பற்றியே சிலாகிக்கிறேன் ! அதிலும் இந்த நடப்பு மாதத்தில் - ஒரு 'தல' முழுநீள சாகசத்துடன் போட்டி போடும் நெருக்கடி உருவாகினும், அந்த வெட்டியான் தம்பியே thumbs up காட்டிடும் சூழலை வியப்போடே பார்த்து வருகிறேன் ! அதிலும் நண்பர்கள் கடந்த பதிவில் அண்டர்டேக்கர் தொடர்பாய்    முன்வைத்திருக்கும் அலசல்களைப் பார்க்கும் போது மலைப்பாகவும் ; நிம்மதியாகவும் இருந்தது ! மலைப்பு : ஒரு சித்திரக் கதையை நீங்கள் ஒவ்வொருவரும் அணுகிடும் கோணங்களையும், ஆழங்களையும் கண்டு ! நிம்மதி : "நல்ல வேளைடா சாமி - திருவிளையாடல் தருமியைப் போல "எனக்குக் கேள்விகளைக் கேட்க மட்டும் தான் தெரியும் !" என்று ஓரத்திலிருந்து வேடிக்கை பார்க்க சாத்தியமாவது குறித்து !! ஒற்றைக்கை பௌன்சருக்கு அப்புறமாய் இத்தனை விவாதங்களை அவசியப்படுத்தியுள்ள பெருமையைத் தனதாக்கியுள்ள அண்டர்டேக்கருக்குப் பின்னே சின்னதொரு சுவாரஸ்யக் கதையுள்ளது ! 

முதன்முதலாய் இந்த மயானத்து மீசைக்காரரை நான் பார்த்தது 2014-ன் மத்தியில் ! படைப்பாளிகளின் ஆபீசுக்குள் நுழையும் போதே கண்களிரண்டுமே பழைய அம்பாஸடர் காரின் முகப்பு விளக்குகளை போல 'டொய்ங்' என துருத்திக் கொள்வது வாடிக்கை & அன்றைய பொழுதுமே ஒரு விதிவிலக்கல்ல ! அவர்களது வரவேற்பறையில்- வரவிருக்கும் மெகா ஸ்டார் நாயக ஆல்பங்களின் விளம்பரப் போஸ்டர்கள் ; கட்-அவுட்கள் என்று இரைந்து கிடப்பதை ரசிப்பதற்கும், போட்டோ எடுப்பதற்குமே 10 நிமிடங்களைச் செலவிட்டால் தப்பில்லை என்று தோன்றும் ! அன்றைக்கு மிரட்டலாய் அங்கே நிற்க நான் பார்த்த மனுஷன் தான் நமது அண்டர்டேக்கர் ! இன்றைய ரசனைகளோடு ஒப்பிடுகையில் - 2014-ல் நாம் கொஞ்சமாய்ப் பின்தங்கியே இருந்தோம் தானே ? So இந்தப் புதுவரவை லேசாய் ஒரு நோட்டம் விட்டுவிட்டு, எனது கவனங்கள் முழுசையும் நான் தர விழைந்தது நமது XIII-ன் இரண்டாம் சுற்றின் முதல் ஆல்பத்தின் அட்டைப்படத்துக்கே ! MAYFLOWER என்ற பைபாஸ் ரூட்டைப் பிடித்து ; புதியதொரு ஓவியர் - கதாசிரியர் கூட்டணியோடு XIII மீள்வருகை செய்திடவுள்ளார் என்பதே எனக்கு அப்போதைய மின்சாரச் செய்தியாகத் தோன்றியது ! (பின்னாட்களில் அதே சேதியானது மின்சார ஓட்டைக்குள் தெரியாத்தனமாய் விரலை நுழைத்து விட்டு மிச்சம் சொச்சம் கேசமெல்லாம் அந்தரத்தில் நிற்க  'ஆர்வக்கோளாறு அப்புசாமியாய்' உணரச் செய்தது என்பது தனிக் கதை !) மேலே சென்று அவர்களது conference அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போதுமே எனது கேள்விகளெல்லாமே XIII பற்றியே இருந்தன ! அவர்களாகத் தான் UNDERTAKER என்றதொரு 2 பாக cowboy graphic novel தயாராகி வருவதாய்ச் சொல்லி வைக்க - நானும் சுவாரஸ்யம் காட்டுவது போல் தலையாட்டி வைத்தேன் ! 2015-ன் துவக்கத்தில்  இதன் முதல் ஆல்பம் வெளியான சமயமுமே, ரொம்பவே உற்சாகமாய்ப் பேசினர் - இந்தக் கதைக்களத்தைப் பற்றியும், முதல் ஆல்பத்தின் விற்பனை அமர்களத்தைப் பற்றியும் ! ஆனால் 2015-ல் எனக்கு பௌன்சரை கூடையைப் போட்டுக் கவிழ்ப்பதைத் தவிர்த்து வேறெதுவும் முக்கியமாய்த் தோன்றவில்லை என்பதால் இந்தத் தடவையும் - only தலையாட்டல் என்பதோடு முடித்துக் கொண்டேன் ! வருஷத்தின் இறுதியில் அவர்களை மீண்டும் சந்திக்க வாய்ப்புக் கிட்டிய போதோ - அண்டர்டேக்கர் பாகம் 2 ம் வெளியாகி தூள் கிளப்பிக் கொண்டிருந்தது ! கழுகுகளோடு மனுஷன் ஜாலியாய்க் குந்தியிருக்கும் ஒரு  சிகப்பு பேக்கிரவுண்ட்  டிசைனை எட்டடி உயர போஸ்டராய் ஒட்டி வைத்திருந்தார்கள் ! ஆனால் 2016-ன் முழுமைக்கும் இரவுக் கழுகாரின்விஸ்வரூபம் திட்டமிடப்பட்டிருந்ததால்- வேறெந்தக் கௌபாயும் அச்சமயம் சுகப்படமாட்டார்கள் என்ற தீர்மானத்திலிருந்தேன் ! So அப்போதுமே பாராமுகம் ! ஆனால் 2016-ல் அவர்களது ஆபீசில் உருட்டல்களைச் செய்து கொண்டிருந்த போது கண்ணில் பட்டது ஒரு black & white சித்திரம் ! அண்டர்டேக்கரின் உட்பக்கங்களுள் ஏதோவொன்று - வர்ணம் தீட்டப்படாத நிலையில் - இந்தியன் இங்க் டிராயிங்காகவே பிரம்மாண்டமாய்க் காட்சியளித்தது ! அந்தச் சித்திரத்தின் வசீகரத்தைப் பார்த்த போதே ஸ்தம்பித்துப் போனேன் !! And சந்தா E என்ற திட்டமிடல் என்னுள் ஏற்கனவே உறுதியாகியிருந்த நிலையில் - yesssssssssss என்று பூம் பூம் மாடாய்த் தலையாட்டி வைத்து, அண்டர்டேக்கருக்கான கான்டிராக்டைத்   தயார் செய்திடக் கோரினேன் ! So இன்றைக்குத் தமிழ் பேசிடும் இந்த மயானத்துக் காவலன்ஓராண்டுக்கு முன்பே கூட நம் பக்கம் ஒதுங்கியிருக்கக்கூடும் - நான் மட்டும் அந்த ஆந்தை விழிகளை இன்னும் கொஞ்சம் திறந்து வைத்திருக்கத் தயாராக இருந்திருக்கும் பட்சத்தில் ! Better late than never என்று நினைத்துக் கொண்டேன் ! 

நமது பயணத்தின் ரம்யமே - ஒற்றை நொடி செம  சீரியஸ் ; மறு கணம்  ஜாலிலோ ஜிம்கானா !! என்ற கும்மாளம் தானென்பேன் ! So பிணம்.,,,பணம்,,,,தங்கம்....மயானம் என்றபடிக்கு ஒரு ஆல்பத்தை மங்களம் பாடிவிட்டு நிமிர்ந்து பார்த்தால் வெள்ளந்தியாய்ச் சிரித்து நிற்பது நமது பெல்ஜியத்து கவுண்டரும் - செந்திலும் !! நல்ல நாளைக்கே எனது ஞாபக சக்தி மீது புல்டோசர் ஓட்டலாம் ; இந்த நிலையில் ஆண்டுக்கு 50 இதழ்களெனும் நெருக்கடியில் மேரா ஞாபக சக்தி கண்ணாமூச்சி ஆடுவதில் வியப்பில்லை ! ஏதோ ஒரு யுகத்தில் வெளியான "இரும்புக் கௌபாய்" இதழும் சரி ; "விண்ணில் ஒரு எலி"யும் சரி - ஒட்டுமொத்தமாய்ப் புத்தம்புது கதைகளாய்த் தோன்றிட - சும்மா செம ஜாலியாய் பணிகளுக்குள் புகுந்திட முடிந்தது ! பற்றாக்குறைக்கு "விண்ணில் ஒரு எலி" கதைக்கு ஒட்டு மொத்தமாய்ப் புதுத்  தமிழாக்கமும் என்றாக - சூப்பர் 6 -ன் நான்காம் இதழ்  என் பணியிடத்தை உட்ஸிடியாக மாற்றித் தந்தது ! பாருங்களேன் - காத்திருக்கும் hardcover இதழின் அட்டைப்படத்தினை - நம் டிசைனர் பொன்னனின் கைவண்ணத்தில் :  
இந்த இரண்டினில் நாம் தேர்வு செய்திருப்பது எந்த டிசைனாக இருக்கும் என்று any guesses folks ?

And இதோ - இரு கதைகளிலிருந்துமே வண்ணத்தில் உட்பக்க previews ! 
தொடர்வது - முற்றிலும் புது மொழியாக்கத்தோடு வரவிருக்கும் "விண்ணில் ஒரு எலி" உட்பக்கம் : 
நீங்கள் பழைய வாசகரோ - புது வாசகரோ -  இந்த இதழில் உங்களுக்கோர் முற்றிலும் புது வாசிப்பு உத்திரவாதம் என்று மட்டும் சொல்வேன் - simply becos "விண்ணில் ஒரு எலி" கதையானது ஒரிஜினலாகவே  வெறும் 30 பக்கங்கள் கொண்டதே ! அந்நாட்களில் அதனை  நாம் 64 பக்கங்களை வெட்டி-ஒட்டி இதழினை black & white-ல் உருவாக்கியிருந்தோம். ஆனால் இன்றோ இந்த சூப்பர் 6 ஆல்பத்தில் - கதைகளுக்கு 44 + 44 பக்கங்கள் + filler pages என்ற பார்முலா அமலில் இருப்பதால் - இரும்பு கௌபாய் - 44 பக்கங்கள் + விண்ணில் எலி - 30 பக்கங்கள் என்று மட்டுமே எழுதிட முடியாதல்லவா ? So  இந்தாண்டில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கும் "ஒரு ஷெரீப் சிப்பாயாகிறார்" கதையினில் இருந்ததொரு 14 பக்க சிக் பில் சிறுகதையை இங்கே இணைத்துளோம் ! ஆகையால் பழசினுள், புதுசும் உண்டு இம்முறை ! அழகாய் அட்டைப்படம் ; ஜாலியான கதைக்களம் ; அதிலும் ஒரு ஆதர்ஷ கார்ட்டூன் கும்பல் எனும் பொழுது தலைக்குள் 'ஜிவ்வ்' வென்ற எதிர்பார்ப்பு இப்போதே மேலோங்குகிறது - இந்த ஆல்பத்தை உங்கள் கைகளில் ஒப்படைக்கும் நாளை நினைத்து !! And a kind reminder folks : இது நம்பர் போடப்பட்டு மிகக் குறைவான பிரிண்ட்ரன் கொண்டதொரு collector's ஆல்பமாகவே இருந்திடும் ! 

LADY S அச்சுப் பணிகள் நிறைவுற்று பைண்டிங் நோக்கிப் புறப்படுகின்றன திங்களன்று ! ஓவியர் Aymond-ன் சித்திரங்கள் நவீன பாணி வர்ணங்களில், ஆர்ட்பேப்பரில் சும்மா தகதகப்பதைப் பார்க்கும் போது கைகள் நம நமக்கின்றன - இதனைப் புத்தக வடிவில் தரிசித்திட !! இன்னும் எத்தனை கழுதை வயசானாலுமே, இந்த first copy thrill மட்டும் விட்டு விலகாதென்பதை மீண்டுமொருமுறை உணர்ந்தேன் நேற்றைக்கு ! 

லயன் # 300 -ன் பணிகள் தான் தற்சமயம் ஒட்டு மொத்தமாய் எங்களது குறுக்கெலும்புகளைப் பதம் பார்த்து வருகின்றன ! முழுவதுமே black & white தானென்றாலும் 512 பக்கங்கள் என்ற கத்தைக்குள் கதக்கழி ஆடுவது கிறுகிறுக்கச் செய்யும் சவாலாய் முன்னிற்கிறது !! ராபினும், மாடஸ்டியும் நிறைவு பெற்றிருக்க, டெக்ஸும், ஜுலியாவும் ஆபீசுக்குள் மேஜைக்கு மேஜை தாவித் திரிகின்றனர் தற்போதைக்கு ! சரியான சமயத்தில் பணிகளை நிறைவு செய்திடும் ஆற்றலைக் கோரி புனித மனிடோவை தான் வேண்டிக்கிடக்கிறோம் ! 

புனித மனிடோ இம்மாதம் மட்டுமன்றி, ஆகஸ்டிலும் நம் மீது கருணை காட்டல் அவசியமென்பேன் - காத்திருக்கும் "இரத்தக் கோட்டை" யின் பொருட்டு ! அதன் பணிகளும் ஜரூராய் நடைபெற்று வருகின்றன = இணைத் தடத்தினில் ! Maybe இங்கே நண்பர்கள்  எனக்கொரு சகாயம் செய்திடலாம் - உட்பக்கங்களின் பிழைதிருத்தப் பொறுப்பைக் கையில் எடுத்துக் கொள்வதன் மூலம் ! ஒற்றையாளாய் இதனைச் செய்வது கடினமே என்பதால் - at least 2 அல்லது 3 பேர் இணைந்து ஒருசேர பணியாற்றும் வாய்ப்பினை உருவாக்கிடக் கூடிய நண்பர்கள் ஒரு மின்னஞ்சலைத் தட்டி விடலாமே, ப்ளீஸ் ! அப்புறம் அதற்கான அட்டைப்படப் பணிகளுமே நடந்தேறி வருகின்றன ! Here's one.....!

Before I sign off - சில குட்டிச் சேதிகள் :
  • நெய்வேலியில் ஜூன் 30 முதல் துவங்கும் புத்தக விழாவினில் நமக்கு ஸ்டால் உறுதியாகியுள்ளது ! So முதன்முறையாக நிலக்கரி நகருக்கு நம் கேரவன் நகர்கிறது ! புதுக் களம் , முற்றிலும் புது  மார்க்கெட் என்பதால் ரொம்பவே excited !! இதுவரையிலும் கிட்டியிரா வாய்ப்பு முதன்முறையாக நமதாகி இருப்பதால் - அந்தப் பகுதியினில் காலூன்ற பிரயத்தனம் செய்வோம் !! நம் நண்பர்கள் யாரேனும் அங்கிருப்பின், உங்களின் ஒத்தாசைகள் நமக்குத் பெரிதும் பயன் தந்திடும் ! 
  • ஆகஸ்டில். ஈரோட்டிலும் நமக்கு ஸ்டால் வழங்கிட மக்கள் சிந்தனைப் பேரவை அன்புடன் இசைவு தெரிவித்துள்ளது நமக்கு அடுத்த சந்தோஷத் தகவல் ! கொஞ்சம் ஆர்வக் கோளாறில் - இரட்டை ஸ்டால் கேட்டு விண்ணப்பித்திருந்தோம் - சென்னையின் பாணியில் ! ஆனால் அரங்க எண்ணிக்கை பெரிதாய்க் கூடாத சூழலில், ஈரோடை நோக்கி சகல பதிப்பாளர்களும் படையெடுக்கும் நிலையில், ஒரு ஸ்டாலுக்கு மேல் ஒதுக்கிடல் சாத்தியமாகாது என்று நமக்குத் பொறுமையாய் விளக்கிய மக்கள் சிந்தனைப் பேரவைக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள் ! 
  • புதியதொரு கௌபாய் கிராபிக் நாவல் கண்ணில் பட்டுள்ளது !  கௌபாய் ஓவர்டோஸ் ஆகிடக் கூடாதே என்ற மெல்லிய பயம் கட்டிப் போடுகிறது நம நமக்கும் கைகளை !! 
Bye all ! ஞாயிறு நமக்கொரு கோப்பை நாளாகிடுமென்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன் !! (நிச்சயமாய் நான் குறிப்பிடும் கோப்பை எதுவென்பதில் சந்தேகம் இராது தானே !!) See you around ! 


337 comments:

  1. ஞாயிறு வணக்கங்கள்.

    ReplyDelete
  2. வணக்கம் சார்...
    வணக்கம் நண்பர்களே...

    நெய்வேலியில் வெற்றிக்கனியை தோண்டியெடுக்க வாழ்த்துகள்...

    அனைத்து தந்தையர்களுக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துகள்...!!!

    "தந்தைசொல் மிக்க மந்திரமில்லை"

    ReplyDelete
    Replies
    1. 'டெக்ஸை' காணோம் ஏன்?

      Delete
    2. டெக்ஸ் இல்லாமல் பெயர் நன்றாக உள்ளது.

      Delete
    3. டெக்ஸ் விஜயராகவன் என்ற பெயரே ஒரு கம்பீரத்தை சேர்க்கிறது.

      Delete
    4. நன்றிகள் நண்பர்களே...!!!

      கம்பீரம் அழகுதான், ஆணவமாக மாறாதவரை; சொக்காய் சேதங்களை கணிசமாக ஏற்படுத்தாதவரை.

      Delete
    5. வருக வருக இத்தாலி சேலம் அவர்களே..🙏🙏🙏

      Delete
  3. ####(பின்னாட்களில் அதே சேதியானது மின்சார ஓட்டைக்குள் தெரியாத்தனமாய் விரலை நுழைத்து விட்டு மிச்சம் சொச்சம் கேசமெல்லாம் அந்தரத்தில் நிற்க 'ஆர்வக்கோளாறு அப்புசாமியாய்' உணரச் செய்தது என்பது தனிக் கதை !) ####

    இந்த எழத்து நடைதான் உங்ககிட்ட ராெம்ப பிடிச்சது சாா்..
    நிஐமாலுமே சிாிக்க வைச்சது இந்த வரிகள்..
    இந்த இடத்துல வடிவேலுதான் சட்டுனு நினைவுக்கு வந்தாா்...

    ReplyDelete
  4. இதோ வந்துட்டேன்

    ReplyDelete
  5. மாடஸ்டி பிளைசி

    ReplyDelete
  6. நடுநிசி வணக்கம்!!!

    ReplyDelete
  7. To: Editor,
    இரண்டாவது அட்டை க்ரியேட்டிவிட்டி சற்று அதிகமாக வெளிப்படுகிறது. ஆனால், முதலாவது அட்டையே உங்கள் தெரிவாக இருக்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. எனது விருப்பமும் இரண்டாவது தான் "WRAPPER KING" Podiyan Sir!

      Delete
  8. மாடஸ்டி In நெய்வேலி.இமைக்கா விழிகளுடன் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  9. வணக்கம், நானும் வைத்துவிட்டேன்....
    கவரிமான்களின் முடித்த கையோடு வெட்டியான் நாயகரின் கதையில் புகுந்துள்ளேன் சித்திரம் அருமையாக உள்ளது வித்தியாசமான கதைகளத்தை தேர்வு செய்த ஆசிரியருக்கு வாழ்த்துகள், புனித மானிடோ விரைவில் அந்த புதிய கெளபாய் நாயகரை களம்காண ஆவண செய்யும்படி வேண்டிக்கொள்கிறேன்....
    தல கதை 300இதழில் மிரட்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு உள்ளது......

    ReplyDelete
    Replies
    1. வெட்டியான் நாயகா் வருக வருக என வம்போடு வரவேற்கிறாா்!

      ச்சீ! அன்போடு வரவேற்கிறாா்!!

      Delete
  10. சிக்பில் கிளாச்சிக் ஜே!

    ReplyDelete
    Replies
    1. ME TOO ஜே ஜே!!

      இது சிக்பில்லுக்கு ஜே!!

      வேற ஜெஜெ-வை நெனைச்சிக்காதீங்க!!

      Delete
  11. சிக்பில் அட்டைப்படம் அருமை. உட்பக்கங்கள் வர்ணக்கலவை கண்ணைப்பறிக்கிறது. இரும்புக் கவ்பாய் கதையை எத்தனை முறை படித்து சிரித்திருப்பேன் என்று கணக்கே இல்லை. வண்ணத்தில் படிக்க ஆவலாக இருக்கிறேன். நிறைய கார்ட்டூன் கதைகளை வெளியிடுங்கள் சார்.

    ReplyDelete
  12. அண்டர்டேக்கர் ஒரு அதிரடியான கௌபாய் வரவு. சந்தா Eல் ஒரே நாளில் படித்து முடித்த திரில்லர்

    ReplyDelete
  13. விஜயன் சாா் மறந்தாப்ல உபபதிவையே மெயின் பதிவாப் போட்டுட்டாரு போல!!

    விடிஞ்ச பிறகாவது மெயின் பதிவு வருதான்னு பாப்போம்!!

    ReplyDelete
  14. சிக்பில் கிளாசிக்ஸ் Wrapper Design

    SECOND ONE IS MY CHOICE

    ReplyDelete
  15. இனிய ஞாயிறு வணக்கங்கள் காமிக்ஸ் நண்பர்களே,,,

    ReplyDelete
    Replies
    1. //ஆகஸ்டில். ஈரோட்டிலும் நமக்கு ஸ்டால் வழங்கிட மக்கள் சிந்தனைப் பேரவை அன்புடன் இசைவு தெரிவித்துள்ளது நமக்கு அடுத்த சந்தோஷத் தகவல் ! //

      எதிர்பார்த்தது தான்.. மிக்க மகிழ்ச்சி..

      Delete
  16. சிக்பில் கிளாசிக் இன் அட்டை படங்களும் , உட்பக்க பிரிவியூம் பிரமாதம் . அதிலும் என் தெரிவு இரண்டாவது அட்டை படமே . அதிலும் என்னிடம் இரண்டு கதைகளும் இல்லை என்பதால், கூடுதல் சந்தோசம் . பம்பர் பரிசாக "ஒரு செரீப் சிப்பாயாகிறார் " கதையினில் உள்ள சிக்பில் இன் சிறு கதை வேறு . கரும்பு தின்ன கூலியா ? இரத்த கோட்டை - collection இன் அட்டை-சிம்பிளி சூப்பர் . நெய்வேலிஜிலும், ஈரோடிலும் ஸ்டாலில்கள் கிடைத்தது மகிழ்ச்சி . இரட்டிலுமே விற்பனை சிறப்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  17. விடிய காலை வணக்கங்கள் நண்பர்களே....

    ReplyDelete
  18. Replies
    1. நல்வரவு நண்பரே !

      Delete
    2. நல்வரவு சரவணன்.

      Delete
    3. வாங்க சரவணன் அனைவரும் கலந்தே பயணிப்போம் வாருங்கள்.

      Delete
    4. நல்வரவு சரவணன் சார்..அப்படியே நீங்கள் தொடர்ந்து பதிவிடும்போது அவ்வப்பொழுது நீங்கள் படித்த காமிக்கதைகளில் உங்களுக்குப் பிடித்தது எது.? நீங்கள் விரும்பும் கதாபாத்திரங்கள் என்னென்ன என்ற உங்களுடைய காமிக் அனுபவத்தை எழுதுவீர்களானால் நாங்கள் மிகவும் மகிழ்வோம்...

      Delete
  19. தந்தையர் தின வாழ்த்துக்கள் அனைத்து அப்பாக்களுக்கும்....

    ReplyDelete
  20. ///ஆகஸ்டில். ஈரோட்டிலும் நமக்கு ஸ்டால் வழங்கிட மக்கள் சிந்தனைப் பேரவை அன்புடன் இசைவு தெரிவித்துள்ளது நமக்கு அடுத்த சந்தோஷத் தகவல் ! ///

    கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாவோம் நண்பர்களே..!
    இந்தவருட CBFஐ தவறவிட்ட என் போன்ற நண்பர்கள் கூடுதல் ஆவல் + ஏக்கம் மேலிட காத்திருக்கிறோம் சார். .!

    ReplyDelete
    Replies
    1. // கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாவோம் நண்பர்களே..!//
      அதே,அதே இந்த வருஷம் மிகச் சிறப்பாக கொண்டாடிடுவோம்.

      Delete
  21. ///புதியதொரு கௌபாய் கிராபிக் நாவல் கண்ணில் பட்டுள்ளது ! கௌபாய் ஓவர்டோஸ் ஆகிடக் கூடாதே என்ற மெல்லிய பயம் கட்டிப் போடுகிறது நம நமக்கும் கைகளை !! ///

    2017 ல் வேண்டாம் சார், ஓவர் டோஸாகிடும்தான் ஆகையினால 2018 அட்டவணையில் சேர்த்துவிடுங்க. .!

    ///ஞாயிறு நமக்கொரு கோப்பை நாளாகிடுமென்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன் !!///

    டெபனட்லீ டெபனட்லீ..!

    ReplyDelete
  22. ஒரு கிராப்பிக் நாவலில் அதிரடி,திகில்,த்ரில்,சஸ்பென்ஸ் என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி நடைமுறை எதர்த்தங்கள் துளி கூட மீறப்படாமல் ;அனைவருக்கும் ஏற்புடைய வகையில்(ஜேசன் ப்ரைஸில் இத்தனை அம்சங்களும்இருக்கும்;ஆனால் மூன்றாம் பாகத்தில் அமானுஸ்யமாக கதையின் போக்கு தடம் மாறி கற்பனைக்கு எட்டாத ஜந்துக்களை எல்லாம் புகுத்தியிருப்பார்.)புனையப்படும் அசாத்திய ஆற்றல் கதாசிரியரின் கூர்மையை உணர்த்தும்.அவருக்கு ஈடு கொடுத்து இணையான வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் இதை காட்சிப்படுத்திய படுத்திய ஓவியரிடமும் காணப்பட்டால் உலகம் முழுதும் முத்திரை பதிக்கலாம்.
    தன் வாழ்வின் இறுதியில் சில தீர்மானமங்களுக்கு வந்து விடும் மிகப்பெரிய செல்வந்தரும் தங்கச் சுரங்க அதிபருமான ஜோ கஸ்கோ வெகு ஜனங்களால் பெரிதும் விரும்பப்படாத தொழிலை செய்யும் அண்டர்டேக்கருக்கு தந்தி அனுப்புகிறார்.அனோகி சிடிக்கு வரும் ஜ்னோஸ் க்ரோவை வீட்டுக்கு வெளியிலோ,வரவேற்பரையிலோ சந்திக்காமல் தன்னுடைய பிரத்தியேகமான அறையில் உண்ணும் வேளையில் ,தனக்கு சரிநிகர் சமமாக அமரவைத்து பேரம் நடத்தும் போதே அந்த கதாப்பாத்திரத்தின்(வெட்டியான்)மீது கேள்வியம்,ஒரு வித ஆர்வமும் ஏற்படும்.தன்னுடைய கூலித்தொகையை திடும்மென இரட்டிப்பாக்கும் போது மற்றொருவரிடம் பொறுப்பை ஒப்படைக்காமல் அவனோடு உடன்படுகிறார்.அந்த பாத்திரத்தை நன்கு உணர்திருந்தால் மட்டுமே இது சாத்தியம். லின்னும் அதே போல் க்ரோவிடம் வாஞ்சையுடனும்,ஒரு வித புரிதலுடனுமே அணுகுவதை கதை நெடுகிலும் உணர முடியும்.அவரவரிடம் பொறுப்புகளை பிரித்தளித்துவிட்டு;விஷத்தை குடித்து விட்டு கடைசி நேரத்தில் தன் சொத்துக்களை விற்றதால் கிடைக்கப் பெற்ற தங்கங்களை விழுங்கி விட்டு தன்னுடைய அறையில் தன்னைத்தானே மாய்த்து கொல்கிறார்.ஜோ கஸ்கோ ரெட்சன்ஸ்க்கு சென்று இதை செய்திருந்தால் இந்த கதையே நிகழ்ந்திருக்க தேவையில்லை. கடைசி நேரத்தில் தான் வாழ்ந்த சூழலில் இறக்க முடிவெடுத்ததுதான் காரணமாக இருக்கும்.ஜோனஸ் இதை பொறுப்பேற்றுக்கொள்ளவில்லையெனில் தன் திட்டத்தை மாற்றியிருக்கக்கூடும்.ஜோனஸ் பிணத்தோடும்,பிணத்தின் வயிற்றிலுள்ள சிறு மதிப்பிலான தங்கத்தோடும் தடைபல தாண்டி பயணிக்கிறான்.மெக்கல்லன் மூலம் தங்கம் இருப்பதையுணர்ந்த அதன் மதிப்பை அறியாத ஊர்மக்கள்(பேராசை)இறுதிவரை தங்கத்தை கைப்பற்ற துரத்தி வருகிறது.தன்வாழ்நாளில் திரட்டிய பொக்கிஷங்களை ரெட்சன்ஸ்ஸில் உள்ள கைவிடப்பட்ட தன் முன்னால் சுரங்கத்தில் பதுக்கியுள்ளார்.98ம் பக்கம் ஊர் மக்கள் பார்ப்பது வெறும் தட்டு முட்டு சாமான்களே.செல்வங்கள் இருப்பது அங்குள்ள இரகசிய குகையில்.101ம் பக்கம், ஜோனஸ் வேகனில் தப்பும்போது அந்த குகையின் நுழைவு வாயிலை வெடிவைத்து தகர்த்துவிடுகிறான்.அப்போது அங்கு ஏற்படும் புகை மண்டலம் அவர்களை சூழ்ந்து தீவட்டிகளை அணைத்துவிடுகிறது.
    பக்கம் 59,ப்ரைரியை பணியில் அமர்த்தும் காட்சி;"""அந்த ஸ்கர்ப்பையும் தான்"""என்று ஜோ கூறும்போது பின்னனியில் ஒரு சுவர்படம் அரைகுறையாக காணப்படும்.25ம் பக்கம் ஜோ கஸ்கோ இறந்து விழுந்து ஓர் இலக்கை வெறித்துப் பார்க்கிறார்.28 ம் பக்கம் கஸ்கோவின் அறைக்குள் நுழையும் க்ரோ மேசைமீது சவத்தை கிடத்தி இறந்தவுடலை பதப்படுத்துகிறான்.அப்பொழுதும் ஒரு சுவர்படத்தை அரைகுரையாக(தெளிவாகத் தெரியும்படி)காட்டியிருப்பார்கள்.க்ரோ புரிந்து கொண்டு அந்த சுவர்சித்திரத்தை பார்க்கும் கோணத்தில் உடலை மேசை மீது கிடத்தி பதப்படுத்த தொடங்குகிறான். அந்த புகைப்படத்தில் இருப்பது கஸ்கோவின் வாரிசாக இருக்க வேண்டும். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பே எதிர்பாராத விதமாக இறந்திருக்க வேண்டும். வாரிசில்லாத செத்தை குறி வைத்து,கஸ்கோவின் மரணத்திற்காக(மெக்கல்லன்,பிக்பை,மொத்த ஊர்மக்களுமே)காத்திருக்கிறார்கள்.அதானால்தான் எங்கு எடுக்கப்பட்டதோ அங்கேயே கொடுக்கப்பட்டது(கீதா சாரம்)என்பதாக கஸ்கோ முடிவெடுக்கிறார்.ஆனால் தீய பேராசை ஒரு கடையை சூரையாடிவிட்டு இராணுவ வீரர்களையே கொன்றொழித்து விட்டு அம்மக்களை மரணப்படுகுழியில் இட்டுச் செல்கிறது.
    தொடரும்...........

    ReplyDelete
    Replies
    1. நல்ல அலசல்,நல்ல கோணம்.பார்வைகள் பலவிதம்,ஒவ்வொன்றும் ஒருவிதம்.

      Delete
    2. நண்பர்களே இந்த கதையில் மேலும் சில அசாத்தியமான சூட்சும முடிச்சுகள் உள்ளது.அதைத் தொடர்ந்து பதிவிடுகிறேன்,அல்லது முடிந்தால் புத்தகத்திரு விழாவில் விளக்குகிறேன்.இந்த பதிவினுடைய பொருள் புரிபடாமல் போகுமாயின் தொடர்ந்து பதிவிடும் தவறை செய்வது மடமையே.

      Delete
    3. Sri Ram, Please continue...its interesting...

      Delete
    4. ஸ்ரீராம்,
      இந்த அலசல்கள் கண்டிப்பாய் அவசியமானது.தொடர்ந்து உங்கள் ரசிப்பை எழுதுங்கள். இது இக்கதையை புதிதாய் படிப்பவர்களுக்கு அதனுள் மூழ்கி திளைப்பதற்கு பேருதவியாய் இருக்கும். என்ன ஆசிரியருக்கு இவை அனைத்தையும் சேகரித்து 10 பக்க அளவில் பதிப்பு செய்து நாவலுடன் இலவசமாக தர வேண்டி இருக்கும்.

      Delete
    5. அன்பின் ஸ்ரீராம்...

      உங்கள் அலசல் அருமை,இது பற்றிய உங்கள் கருத்தான //இந்த பதிவினுடைய பொருள் புரிபடாமல் போகுமாயின் தொடர்ந்து பதிவிடும் தவறை செய்வது மடமையே// என முன்வைப்பதால் இதை வேண்டுகிறேன்.

      உங்கள் பார்வை தேடுதல் நிறைந்தவையாக இருந்தாலும் கூட,நீங்கள் குறிப்பிட்ட இரண்டு விஷயங்களில் உங்கள் பார்வையில் தவறு உள்ளது. அதை நான் சரியான கோணம் எது என விவரிக்கலாமா.?

      Delete
    6. shinesmile ;சார் இதை ஆசிரியருக்கு தாளில் எழுதித்தான் அனுப்ப எண்ணியிருந்தேன்.ஒரு தனித்துவமான,அசாத்திய ஆற்றல்மிக்க,வீரியமான படைப்பு வாசகர்களாகிய நமக்கு மிகச்சரியாக உணரப்பட வேண்டும்.இவற்றை எழுதி முடிக்கும் போது நான்கு பக்கங்களை கடந்துவிட்டது.வெகு சிரமத்துடன் இதை டைப்புகிறேன்.நான் கண்டு இரசித்த அற்புதங்களை மற்றவரும் உணர்ந்து படைப்பாளிகளுடைய ஆற்றலையும்;பல்லாயிரம் மைல்கள் கண்டம் கடந்து இதைக் கொணர்ந்தளித்த நம்முடைய ஆசானுடைய மதிப்பையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.அதற்கு படைப்புகளை மிகச் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.மோசமான கதைகளை வெளியிடும் போது தாக்குதலை தொடுப்பதும் இது போன்ற தரமான கதைகளை புரிபடாமலே விமர்சனம் செய்வதும் இரண்டுமே ஒத்த அளவுடையவைதான்.இங்கு வந்து நான் நேரமிழக்க முனைவது நான் உணர்ந்தவற்றை என் நண்பர்களாகிய உங்களோடு பகிர்ந்து கொள்ளவே.

      Delete
    7. நேசமிகு சிவா அவர்களுக்கு
      இங்குள்ளவர்களில் யாதொருவரையும் நான் முகம் அறிந்து பழகியவனல்ல.காமிக்ஸ் மீதான அதீத நேசம் இங்கு வருகை புரியும் ஒவ்வொருவரின் மீதும் படிந்துள்ளது.அனைவரையுமே உடன்பிறப்பாகவும்,தோழமையுடைத்தவர்களாவும் மட்டுமே உணர்ந்திருக்கிறேன்.இங்கு வரும் பொழுதில் எதிர்மறையான சிந்தனைகள் ஆழ் குழியில் இயல்பாகவே புதைபடுகிறது.எனது பதிவுகளில் குறையிருக்குமாயின் உரத்தும்,நிறையிருக்குமாயின் மிக மென்மையாகவும் உணர்த்துங்கள்.திறந்த மனதோடு ஏற்றுக் கொள்வேன்.💐💐💐.மற்றபடி நண்பர்கள் நான் தேடியடைந்த மைல்கள் உறவுகள்💐💐💐.

      Delete
    8. Sriram @ தாங்கள் தொடரும் என போட்டு இருந்ததால் எனது மாற்று கருத்துகளை பதிவிட தயங்கினேன் ....இப்போது தற்காலிகமாக நிறுத்தியிருப்பதால் ‘’எசப்பாட்டு ‘’ பாட தயக்கமில்லை ..

      ///லின்னும் அதே போல் க்ரோவிடம் வாஞ்சையுடனும்,ஒரு வித புரிதலுடனுமே அணுகுவதை கதை நெடுகிலும் உணர முடியும்.////////
      கண்டிப்பாக இல்லை ....லின் கஸ்கோ –வுக்கு பட்ட நன்றிக்கடன் மட்டுமே அவளுடைய சிறப்பம்சம் ...
      பிரைரி மேல் லின்னுக்கு நன்மதிப்பு இல்லவே இல்லை ..வழியில் குண்டடிப்பட்டபோது அவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும் என குரோவை வற்புறுத்துவதால் மட்டுமே இது சிறிது மாறியிருக்கிறது ...
      பிரைரிக்கே இக்கதிஎனில் –பிரைரி பற்றி குரோவிடம் அவள் பேசுவதை கவனிக்கவும் –குரோவினை பற்றி கேட்கவா வேண்டும் ?????
      அவள் மனதில் இருப்பதெல்லாம் கஸ்கோ சொல்லியிருப்பதை நிறைவேற்றுவது பற்றியே .இதில் மற்றவர்கள் உயிரை பற்றியோ தனது உயிரை பற்றியோ அவளுக்கு கவலை இல்லை.......
      //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      Delete
    9. விஷத்தை குடித்து விட்டு கடைசி நேரத்தில் தன் சொத்துக்களை விற்றதால் கிடைக்கப் பெற்ற தங்கங்களை விழுங்கி விட்டு தன்னுடைய அறையில் தன்னைத்தானே மாய்த்து கொல்கிறார்.ஜோ கஸ்கோ ரெட்சன்ஸ்க்கு சென்று இதை செய்திருந்தால் இந்த கதையே நிகழ்ந்திருக்க தேவையில்லை.//////

      ஜோ கஸ்கோ ரெட்சன்ஸ்க்கு சென்று இதை செய்யாததன் காரணம் தான் வாழ்ந்த இடத்தின் மேலான விருப்பமல்ல ....
      அனோக்கி சிட்டியின் பெரும்புள்ளி அப்படி செய்திருப்பாராயின் கலிபோர்னியா மாகாண போலிஸ் படை முழுதும் அவரை தேட கூடும் என்பதாலேயே ....இதன்பின்விளைவுகள் ஒருவேளை தனது சுரங்கத்திற்கு அவர்கள் கவனத்தை கொண்டு வந்து சேர்க்கலாம் என்பதை கஸ்கோ விரும்பியிருக்க போவதில்லை ..
      குறைந்தபட்ச நபர்களே தான் புதைக்கப்படும் இடம் பற்றி அறியவேண்டும் என கஸ்கோ நினைத்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லைதான் ...மெக்கல்லனுக்கு கூட கஸ்கோ விழுங்க தவறிய தங்க துண்டு மூலம் கஸ்கோ –வின் வயிற்றில் தங்கம் இருப்பது தெரியினும் அவரது புதைவிடம் எதுவென தெரியாது ..

      இதனாலேயே உயிலில் அண்டர்டேக்கரை தவிர யாரும் அழைத்து செல்ல கூடாது என்ற நிபந்தனை பிரைரிக்கு விதிக்கபடுகிறது ..
      தனது மரணம் வெளிச்சத்திற்கு வரவேண்டும் ஆனால் சவக்குழி இருப்பிடம் யாருக்கும் தெரிய கூடாது என்பதே கஸ்கோ-வின் நிலைப்பாடு .....

      Delete
    10. ////.தன்வாழ்நாளில் திரட்டிய பொக்கிஷங்களை ரெட்சன்ஸ்ஸில் உள்ள கைவிடப்பட்ட தன் முன்னால் சுரங்கத்தில் பதுக்கியுள்ளார்.98ம் பக்கம் ஊர் மக்கள் பார்ப்பது வெறும் தட்டு முட்டு சாமான்களே.செல்வங்கள் இருப்பது அங்குள்ள இரகசிய குகையில்.101ம் பக்கம், /////
      101 –ம் பக்கத்தில் என்ன ???? 98-ம் பக்கத்தில் காட்டப்படும் சிலையின் அடிப்பகுதி வேறு கோணத்தில் காட்டப்படுகிறது அவ்வளவே ....................
      நீங்கள் கூறுவது திரு பிரகாசம் கதிரேசன் சொல்ல முனைவதற்கு முற்றிலும் முரணாக இருக்கிறது என்பது என் எண்ணம் ....
      சுரங்கத்தின் பின் வழி சுரங்கம் உபயோகத்தில் இருந்தபோது பாறை தாதுக்களை கீழே கொண்டு செல்ல உபயோகிக்கப்பட்ட இருப்பு பாதை செல்லும் வழி ....
      மெக்கல்லன் குழுவினர் சுரங்கத்தின் உள்ளே நுழைந்தவுடன் சிலையை காணுகின்றனர் .
      அப்போது அங்கு நடைபெறும் சம்பாஷனை பிரகாசம் சொல்ல முனைவதற்கு பொருத்தமாக இருக்கிறது ...
      அந்த சிலை தங்க முலாம் பூசப்பட்ட சிலை ,அங்கிருக்கும் பொருள்கள் தங்கத்தினாலனவை அல்ல எனின் அந்த உரையாடல்களுக்கு அர்த்தம் இல்லாது போய் விடும் ..
      நான் புரிந்துகொண்டது இவ்விடத்தில் என்னவெனில் தன் கற்சிலையை தானே நிறுவி கொள்ளும் ஒரு மெகலோமேனியாக் கிறுக்கன் ---கஸ்கோ தன்னை ஒரு பெரிய செல்வந்தன் என ஒரு இல்லாத உண்மையை –ஸ்தாபிக்க பணத்தை வாரி இறைத்து அப்படி காட்டி கொள்ள முயல்கிறார் என நினைத்து விட்டேன் .....
      அது தங்க முலாம் பூசப்பட்ட சிலை அங்கிருக்கும் பொருள்கள் தங்கம் என வைத்து கொண்டால் அதில் ஒரே ஒரு லாஜிக் மீறல் மட்டுமே உள்ளது ...
      இயங்கு நிலையில் உள்ள லிப்ட் –டுடன் கஸ்கோ உடல் புதைக்கப்படும் வரை அவை பாதுகாப்பின்றி உள்ளன என்பதே ...
      காரணம் கைவிடப்பட்ட தங்க சுரங்கங்களை ஏதேனும் தேறாதா என மீண்டும் சல்லடை போட்டு சலிக்கும் gold scavengers கும்பல் 1857 –லிருந்தே உண்டு ..அவ்வபபோது ஜாக்பாட் அடிக்கும் இக்கும்பல் கண்ணில் கஸ்கோ சுரங்கம் கண்ணில் பட்டு தொலைந்து இருந்தால் .... அந்த ரிஸ்க் மட்டுமே பிரகாசம் குறிப்பிடும் விஷயத்தில் உண்டு ....
      நாம் பணக்காரர்களாக சாக போகிறோம் எனக் மெக்கல்லன் கும்பல் குறிப்பிடுவது கஸ்கோ உடலில் உருகி ஓடி கொண்டிருக்கும் தங்கத்தைத்தான் என நான் நினைத்து விட்டேன் ....

      பொன்னாலான சிலை போல் அச்சிலை ஜொலிக்கவில்லை எனினும் மங்கலான தீவர்த்தி வெளிச்சத்தில் அப்படித்தான் தெரியும் என சொல்லி கொள்ளலாம்....

      பிரகாசத்திற்கு அப்படி ஒரு சிந்தனை தோன்றியது மகிழ்வும் ஆனந்தமும் அளிப்பதாக உள்ளது ...........................
      /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      Delete
    11. 59,ப்ரைரியை பணியில் அமர்த்தும் காட்சி;"""அந்த ஸ்கர்ப்பையும் தான்"""என்று ஜோ கூறும்போது பின்னனியில் ஒரு சுவர்படம் அரைகுறையாக காணப்படும்.25ம் பக்கம் ஜோ கஸ்கோ இறந்து விழுந்து ஓர் இலக்கை வெறித்துப் பார்க்கிறார்.28 ம் பக்கம் கஸ்கோவின் அறைக்குள் நுழையும் க்ரோ மேசைமீது சவத்தை கிடத்தி இறந்தவுடலை பதப்படுத்துகிறான்.அப்பொழுதும் ஒரு சுவர்படத்தை அரைகுரையாக(தெளிவாகத் தெரியும்படி)காட்டியிருப்பார்கள்.க்ரோ புரிந்து கொண்டு அந்த சுவர்சித்திரத்தை பார்க்கும் கோணத்தில் உடலை மேசை மீது கிடத்தி பதப்படுத்த தொடங்குகிறான். அந்த புகைப்படத்தில் இருப்பது கஸ்கோவின் வாரிசாக இருக்க வேண்டும். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பே எதிர்பாராத விதமாக இறந்திருக்க வேண்டும். வாரிசில்லாத செத்தை குறி வைத்து,கஸ்கோவின் மரணத்திற்காக(மெக்கல்லன்/////

      இது தவறான கருத்து .....சாவதற்கு முன் வலியுடன் இறந்துபோன தன் அன்னையை பற்றி மட்டுமே கஸ்கோ மனம் வருந்துகிறார் ....பார்க்க பக்கம் 15…..அந்த
      வரை படம் அவரது அன்னையின் அல்லது வேறு ஏதாவது அழகியல் சார்ந்த படமாக இருக்கலாம் ...

      Delete
    12. @ ஸ்ரீராம்

      வார்த்தைகளாலே கட்டிதழுவும் உங்கள் அன்பும் நட்பும் தளத்தை பார்க்கும் பக்குவமும்....எழுத வரிகள் அகப்படவில்லை.! ஈரோட்டில் உங்கள் முதல் வகுப்பு நண்பனாக உறவாட கத்திருப்பேன்.

      ///ஜோனஸ் வேகனில் தப்பும்போது அந்த குகையின் நுழைவு வாயிலை வெடிவைத்து தகர்த்துவிடுகிறான்.அப்போது அங்கு ஏற்படும் புகை மண்டலம் அவர்களை சூழ்ந்து தீவட்டிகளை அணைத்துவிடுகிறது.///
      அந்த தீவட்டிகள் அணைந்துவிடும் பாயிண்ட் அருமையானது.இனி தீ இல்லாமல் திரும்ப குகைக்குள் செல்வது என்பது,தீ இன்றி அந்த குகையிலேயே உயிர் வாழ்வது என்பது சாத்தியமில்லை.

      இந்த தீவெட்டி பாயிண்ட் முன்வைத்த உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

      இனி திருத்தம்...

      ஜோனஸ் வேகனில் தப்பும்போது அந்த குகையின் நுழைவு வாயிலை வெடிவைத்து தகர்த்துவிடுகிறான்...என்பது தவறு. ஜோன்ஸ் வேகனில் தப்பிக்க மட்டுமே செய்கிறான். கீழே உள்ள லின்&பிரைரி இருவரும் சேர்ந்து அந்த லிஃப்ட் கட்டமைப்பை டைனமைட் வைத்து தகர்க்கிறார்கள்.

      பக்கம் - 102 ஐ கவனித்தால் வெடி கீழே வெடிப்பதையும்,வேகன் சீறி வெளிவருவதும் பார்க்கலாம்.!

      பெண்கள் தான் வெடி வைத்தார்கள் என்பதற்கு இன்னுமொரு குளூ...

      100 பக்கத்தில் "நாம் உடனே அவர்களின் டைனமைட் ஐ தேடி கண்டுபிடிக்க வேண்டும்.." என பிரைரி சொல்வதை படியுங்கள்... புரிந்து விடும்....ரைட்..!

      அடுத்தவை விவரிக்க டைம் ப்ளிஸ்...

      Delete
    13. ////பொன்னாலான சிலை போல் அச்சிலை ஜொலிக்கவில்லை எனினும் மங்கலான தீவர்த்தி வெளிச்சத்தில் அப்படித்தான் தெரியும் என சொல்லி கொள்ளலாம்....

      பிரகாசத்திற்கு அப்படி ஒரு சிந்தனை தோன்றியது மகிழ்வும் ஆனந்தமும் அளிப்பதாக உள்ளது////

      Yes me too!!

      Delete
    14. நண்பரே மாயாவி சிவா,

      முதலில் அனைத்திற்கும் வருத்தம் தொிவிக்கிறேன்! சில வாா்த்தைகள் கோபப்படுத்திவிட்டன. ஆனால் பொறுமையாக பதில் அளிக்காதது என் தவறே!!

      5000 வாக்காளா்களைக் கொண்ட எனது ஊா்ப் பகுதியில் காமிக்ஸ் படிப்பவன் நான் ஒருத்தன் தான்!

      காமிக்ஸ் ரசிகா் வட்டம் என்பது எவ்வளவு குறுகியது பாருங்கள்.

      பல ஆண்டு காலமாக காமிக்ஸ்களை மனதுக்குள்ளேயே ரசித்து சிாித்து இருந்த எனக்கு இந்தத் தளம் சொா்க்கபுாியாகவே தொிகிறது.

      இங்கே உள்ள சொா்ப்ப நண்பா்கள் அனைவரோடும் நான் நட்புறவோடே இருக்க விரும்புகிறேன்.

      மீண்டும் ஒருமுறை நடந்த அனைத்திற்காகவும் வருத்தம் தொிவிக்கிறேன்!!!

      ////ஜோனஸ் வேகனில் தப்பும்போது அந்த குகையின் நுழைவு வாயிலை வெடிவைத்து தகர்த்துவிடுகிறான்...என்பது தவறு. ஜோன்ஸ் வேகனில் தப்பிக்க மட்டுமே செய்கிறான். கீழே உள்ள லின்&பிரைரி இருவரும் சேர்ந்து அந்த லிஃப்ட் கட்டமைப்பை டைனமைட் வைத்து தகர்க்கிறார்கள்.////

      உங்கள் கருத்தே என்னுடையதும்!!

      Delete
    15. ////பொன்னாலான சிலை போல் அச்சிலை ஜொலிக்கவில்லை எனினும் மங்கலான தீவர்த்தி வெளிச்சத்தில் அப்படித்தான் தெரியும் என சொல்லி கொள்ளலாம்....

      பிரகாசத்திற்கு அப்படி ஒரு சிந்தனை தோன்றியது மகிழ்வும் ஆனந்தமும் அளிப்பதாக உள்ளது////

      Yes me too!!

      Delete
    16. நண்பர்கள் விவாதிக்க விவாதிக்கத்தான் பல விஷயங்களும் வெளிப்படுகிறது..இதைப்பார்த்துவிட்டு எனக்குத் தோன்றுவது என்னவென்றால்..ஒருவேளை இறுதியாக அந்தத் தொழிலாளர்கள் வந்துசேர்ந்த இடம்தான் அந்தத் தங்கச்சுரங்கமா..?அதனால்தான் சுரங்கத்தையே கைப்பற்றிய மகிழ்ச்சியில் அவர்கள் பணக்காரர்களாகிவிட்டோம் என்கிறார்களா..? Anyway அண்டர்டேக்கரையே தெறிக்கவிட்டுக்கொண்டிருக்கிறோம்..

      Delete
    17. @ மிதுன் சக்கரவர்ததி

      :))) [கை குலுக்கும் படம் ஒன்று]

      உங்களுடைய கேள்விக்கான பதில் இன்னும் அப்படியே என்னிடம் உள்ளது. அதை யாரும் இன்னுமும் நெருங்கவேயில்லை.! சொல்லத்தான் பயமாக உள்ளது. ஹஹஹா காத்திருங்கள்...

      ஒரு நுட்பமான விரிவரை தொடர்கிறது...

      'மிஸ் பிரைரி'

      முதல் பாகம் முழுதுமே எல்லோரும் அந்த ஆங்கிலேய பணிபெண்ணை இப்படித்தான் கதை நெடுகிலும் அழைக்கிறார்கள்....ஒரேயொருவரை தவிர. அது மிஸ்டர் கஸ்கோ தான்..! கஸ்கோ மட்டும் அவளை 'ரோஸ்' என்றே அழைப்பார்.!!

      இரண்டாம் பாகத்தில் [பக்கம்-61] முதல் முறையாக சீனாக்காரி 'மேடம் ரோஸ்..உளறுவதை நிறுத்து' என மாற்றி அழுத்தமாக அழைப்பதை கவனியுங்கள். அந்த 'மேடம்' என்ற திடீர் மாற்றம் ஏன் என புரிகிறாதா..??? தன் மாஸ்டர் அவளை அந்த ஸ்தானத்தில் தான் அவர் மனதில் வைத்திருந்தார் என்பதே.! அதாவது மறைந்த தன் காதலி 'ரோஸ்' இடத்தில்.!

      பக்கம்-59 ல் பிரைரியின் முழு உடைகளையும் அகற்ற சொல்லும்போது...அந்த ஸ்கார்ப் எடுக்கும்போது....பின்னால் உள்ள படத்தில் உள்ள அந்த அழகிய பெண் அவரின் காதலியே.! அவர் தன் காதலி 'ரோஸ்' ஸ்தானத்தில் மிஸ் பிரைரியை வைத்து 'ரோஸ்' என்று அழைக்கிறார்.! அதை அவள் மனதார ஏற்கவில்லை என்பதே அவள் கண்ணியம்.!

      அந்த உண்மை தெரிந்து தான் 'மேடம்' என்ற சொல் குறியீட்டின் வழியே 'லின்' அழுத்தமாக அழைக்கிறாள்.! அதன் பின்புதான் வெட்டியான் 'ரோஸ்' என்ற பெயரை பயன்படுத்துவதை புத்தகம் முழுதும் புரட்டினால் புரிந்துவிடும். இதை இன்னும் உறுதி செய்துக்கொள்ள பக்கம்-95 ல் கடைசி டயலாக்கை பாருங்கள்....
      உன்னோட ரோஸை நீ தரம் கெட்டவாளா நாறடிச்சுட்டே!

      பிரைரி வெறிகொண்டு கஸ்கோ பிணத்தை பார்த்து சொல்லும் அந்த வரிகள்...கஸ்கோ மனதில் அவள் எந்த ஸ்தானத்தில் இருந்தாள் என்பது ஆழமாக வெளிப்படுத்துகிறது..!

      அம்மா சென்டிமென்ட் அவரின் வலிகளுக்கானவை.! 'ரோஸ்' சென்டிமென்ட் அவரின் ஆசைகளுக்கானவை.!

      Delete
    18. நண்பர்களே;101ம் பக்கம் கடைசி நான்கு ப்ரேம்களும். வேகன் காரில் க்ரோ செல்ல அவனைத் துரத்தி ஓடுகிறார்கள்.பூம் என்று பின்னால் தங்கம் பதுக்கப்பட்டிருக்கும் குகையின் வாயில் வெடித்து தகர்கிறது.சுரங்கத்தில் புகை சூழ்ந்து தீவட்டிகள் அணைந்து விடுகிறது.
      க்ரோ வெடி வைத்ததும் ப்ரைரியும் வெளியில் வெடி வைக்கிறாள். 102ம் பக்கம் சுரங்கத்திலிருந்தும் புகைமூட்டம் வெளிப்படுகிறது, கீழிருந்தும் மேல்நோக்கி கிளம்புகிறது.பிறகு இரண்டும் இணைந்து அங்கு மிகப்பெரிய புகை மண்டலத்தை ஏற்படுத்துகிறது.
      96ம் பக்கம் ஜோனஸ் குழு சுரங்கத்தின் உள்நோக்கி செல்கிறது. அங்கு கஸ்கோவின் உடைகளை களைந்து விட்டு அவருடைய பிரேத்தின் வயிற்று பகுதியில் உள்ள தங்கத்தை எடுத்து விடுகிறார்கள்.அதை அங்குள்ள சுரங்கத்திலுள்ள பொக்கிஷங்களோடு வைத்துவிட்டு வெடிகளை பொருத்துகிறார்கள்.உடல் கிழிக்கப்பட்டதால்(அறுவை சிகிச்சை) அங்குள்ள ஏற்கனவே வெட்டப்பட்ட(கஸ்கோவின் முன் கூட்டியே செய்து வைக்கப்பட்ட ஏற்பாடு)குழியில் புதைக்கப்படாமல் எரிக்கப்படுகிறார்.திட்டத்தை நன்கு விளக்கி விட்டு சவப்பெட்டியில் வைத்து கீழே அனுப்புகிறான் க்ரோ.லின்னுக்கு கஸ்கோவின் ஆடை.கஸ்கோ சற்று பருமனான உடல்,லின்னும் கஸ்கோவைவிட பருமன் சற்று குறைவு.லின் மேல் நோக்கி பார்த்தபடியும்,ப்ரைரி ஒருக்களித்தும் சவப்பெட்டிக்குள் படுத்ததால்தான் இது சாத்தியம்.
      Selvam abirami அவர்களுக்கு புரியப்படும் போது அனைத்துமே தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.கதையில் மேலும் சில நுட்பமான ஆற்றல் மறைந்துள்ளது.இதில் ஒவ்வொரு பக்கத்தையுமே கதாசிரியரும்,ஓவியரும் செதுக்கியிருப்பார்கள்.அனைத்தையும் விளக்கி பதிவிடுவது சாத்தியம் இல்லை. நேரில் அமர்ந்து விவாதிக்க வேண்டி சூழல் உருவாகும்.அதுவே எளிமையான வழிமுறையும்.அதனால்தான் தொடர்ச்சியாக பதிவிடவில்லை.இதன் அடுத்த பாக கதையையும் ஓரளவு அனுமானிக்க முடிகிறது.அடுத்த பாகமே உங்களுடைய அனைத்துசந்தேகங்களுக்கும்தீர்வாக இருக்கும்.என்னுடைய விளக்கங்கள் அல்ல.மிக்க நன்றி நண்பர்களே!!!.

      Delete
    19. This comment has been removed by the author.

      Delete
    20. This comment has been removed by the author.

      Delete
    21. ஒவ்வொருவருடைய பார்வைக் கோணங்களும் அலசல்களும் மலைக்க வைக்கின்றன. கதையை விடவும் அனைவரின் விளக்கங்கள் எதிர்பார்ப்புகளை தூண்டுகிறது. வியப்பாகவும் சுவாரசியமாகவும் உள்ளது.

      Delete
    22. @ ஸ்ரீராம் !!!!!
      அற்புதம் ...அட்டகாசம் !!!! ஆனந்தத்தில் துள்ளி குதிக்காததுதான்....ஒரு நல்ல காமிக்ஸை உணர வைக்க படுவதில்தான் எவ்வளவு சந்தோஷம்....
      நீங்கள் கூறியபிறகுதான் அந்த சீக்வென்ஸ் –ஐ புரிந்து கொண்டேன் ...தளத்திற்கு வருவதன் ஆத்மார்த்த பலனை இரண்டாம் முறையாக நன்கு அனுபவிக்கிறேன் ..
      சித்திரங்கள் மட்டுமே உள்ள சில பேனல்கள் கூறிய விஷயங்களை மிஸ்டர் மரமண்டை முன்பொருமுறை சிறுபிள்ளைக்கு விளக்குவது போல் விளக்கி புரிய வைத்தார்

      இப்போது நீங்களும் பிரகாசமும் அதே மனம் துள்ளும் சந்தோஷத்தை அளித்து பரவச படுத்தியிருக்கிறீர்கள் ....

      அன்டர்டேக்கரின் பெரும்பகுதியை தவறாக புரிந்திருக்கிறேன் ..
      மீதி பகுதியை புரிந்துகொள்ளவேயில்லை .....

      இனி நீங்கள் எழுத வேண்டிய அவசியமில்லை ...நுட்பமான பல விஷயங்களை மோவாயில் கைவைத்து ஈரோட்டில் கேட்க ரெடி ....
      உண்மையாகவே சித்திரங்கள் மூலம் கதை சொல்வது என்பது இதுதான் போலும்.....அருமை ...அருமை....அருமை.......

      Delete
    23. அருமையான அலசல்கள், தகவல்கள் நண்பர்களே.
      இந்த வாரம்தான் இவரை படிக்க போகிறேன்.

      Delete
    24. உங்கள் கருத்து சிதறல்கள் என்னை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்திவிட்டது. அப்ப்பா அக்கு வேறு ஆணி வேறாக அலசி காயப்போட்டுவிட்டீர்கள். தொடரட்டும் இது போன்ற ஆரோக்கியமான விவாதங்கள்.

      Delete
    25. அன்பு நண்பா் மாயாவி சிவா,

      ///உன்னோட ரோஸை நீ தரம் கெட்டவாளா நாறடிச்சுட்டே!

      பிரைரி வெறிகொண்டு கஸ்கோ பிணத்தை பார்த்து சொல்லும் அந்த வரிகள்...கஸ்கோ மனதில் அவள் எந்த ஸ்தானத்தில் இருந்தாள் என்பது ஆழமாக வெளிப்படுத்துகிறது..!

      அம்மா சென்டிமென்ட் அவரின் வலிகளுக்கானவை.! 'ரோஸ்' சென்டிமென்ட் அவரின் ஆசைகளுக்கானவை.!///

      "ரோஸ் பிரைாி" என்பதே அந்த இங்கிலீஷ் பெண்ணின் முழுப்பெயா்!!

      ரோஸ் வேறு; பிரைாி வேறல்ல!!

      இக்கதையின் குறிப்புகளை நான் இணையத்தில் படித்திருக்கிறேன் நண்பரே!

      இரண்டும் ஒருவா் தான்!!

      Delete
    26. @ Sri Ram
      @ MUTHUN CHAKRAVARTHI
      @ PRAKASAM KATHIRESAN
      @ Mayavi Siva
      @ Selvam abirami

      பட்டையைக் கிளப்புகிறீர்கள் நண்பர்களே!! ஒவ்வொருவருடைய பார்வைக் கோணங்களும், அவை விளக்கப்பட்டிருக்கும் விதங்களும் பிரம்மிப்பூட்டுகின்றன!

      ஒரு தேர்த்த நிபுணர் குழுவின் பரபரப்பான அலசல் பார்வை போல உள்ளது!

      Sri Ramன் எழுத்துக்களில் ஒரு வசீகரம் தெறிக்கிறது!

      தொடர்ந்து அசத்துங்கள் நண்பர்களே!

      Delete
    27. ஞாயித்துக்கிழமை காலையில் ஒரு செசன்னாவே வெச்சுட்டா என்ன.. நமது காமிக்ஸ் நிபுண நண்பர்களின் பார்வையில்ங்கிற தலைப்புல ஏதாவது ஒரு காமிக்ஸ் பற்றிய பல்வேறு நண்பர்களின் பார்வை...

      Delete
  23. /// இரும்பு கௌபாய் - 44 பக்கங்கள் + விண்ணில் எலி - 30 பக்கங்கள் என்று மட்டுமே எழுதிட முடியாதல்லவா ? So இந்தாண்டில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கும் "ஒரு ஷெரீப் சிப்பாயாகிறார்" கதையினில் இருந்ததொரு 14 பக்க சிக் பில் சிறுகதையை இங்கே இணைத்துளோம் ! ஆகையால் பழசினுள், புதுசும் உண்டு இம்முறை ! ///

    ஆஹா ஆஹா..!

    நம்ம ஆர்டினின் மூன்று சரவெடிகள் ஒன்றாகவா?? ஆஸம் ஆஸம். .!
    இன்றைய தினத்தின் அட்டகாசமான அறிவிப்பாக இதை இதை இதைத்தான் பார்க்கிறேன். .!!

    ReplyDelete
  24. சிக்பில் க்ளாசிக்ஸின் இரண்டு அட்டைப்படங்களுமே தூள். .!

    முதல் அட்டைப்படத்தின் முன்பக்கமும், இரண்டாவது அட்டைப்படத்தின் பின்பக்கமும் ஒன்றாக இணைந்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.
    வாய்ப்பில்லை என்றால் இரண்டாவது அட்டைப் படத்துக்கே என் ஓட்டு. ஏன்னா அதுலதான் நம்ம ஆர்டினு பெருசா கெத்தா சிரிக்கிறாப்புல..!!

    ReplyDelete
  25. ///ஓவியர் Aymond-ன் சித்திரங்கள் நவீன பாணி வர்ணங்களில், ஆர்ட்பேப்பரில் சும்மா தகதகப்பதைப் பார்க்கும் போது கைகள் நம நமக்கின்றன - இதனைப் புத்தக வடிவில் தரிசித்திட !! ///

    இங்கே எங்களுக்கும் அதே அதே. .!!
    Welcome Lady S .வெற்றிபெற வாழ்த்துகள் மிஸ்..! (மிஸ்தானே??? !!! ) :-)

    ReplyDelete
    Replies
    1. மிஸ் இல்லாங்காட்டி ஆரு படிப்பா ???? :-)

      Delete
  26. // ஆகஸ்டில். ஈரோட்டிலும் நமக்கு ஸ்டால் வழங்கிட மக்கள் சிந்தனைப் பேரவை அன்புடன் இசைவு தெரிவித்துள்ளது.//
    மிக்க மகிழ்ச்சியான செய்தி,ஆகஸ்டில் அசத்துவோம்.

    ReplyDelete
  27. சிக் பில் முதல் அட்டை படமே எனது சாய்ஸ்.
    ரத்த கோட்டை அட்டைப் படம் மிரட்டல்.
    அண்டர்ட்கேர் முதல் கதை அமர்க்களம்.

    ReplyDelete
  28. வணக்கம்

    கடந்த சில வாரங்களாக பிளக்கில் கமென்ட் 200 தொடவே நொண்டி அடித்து கொண்டு இருந்தது போன வாரம் ஞயிற்று கிழமை யோடு பிளாக் பார்க்க நேரம் இல்லை. வெள்ளி கிழமை போன வாரப் பதிவில் கமென்ட்டுகள் 300 தாண்டி இருந்தது.
    ஐய்யா ஏதோ சண்டை நடந்து இருக்குது loadmore செய்து பார்த்தால் blog கோட பெரிய தலைகள் இடையில் பெரிய அளவில் யுத்தம் நடந்து இருக்கு.

    அண்டர்டேக்கர் வேறு தன் பங்கிற்க்கு சும்மா விடு கட்டி அடித்திருக்கிறார்.

    ஏதோ வகையில் ஈரோடு விஜய் கிண்டல் செய்வது தவறு என்று வந்தது. இதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஈரோடு விஜய் அவர்களின் நையாண்ட்டிக்கு இங்கு நிறைய ரசிகர்கள் உள்ளார்கள் என்று நம்பு கிறேன். நானும் E.V மற்றும் K.kannan அவர்களின் நையாண்டிகளுக்கு மிகப் பெரிய ரசிகன். ஆசிரியரும் E.V ன் ரசிகரே. என்னை கிண்டல் செய்யும் அளவுக்கு நான் அவருடன் நெருக்கம் இல்லை யே என்று வருத்தம் எனக்குள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. வேண்டும் என்றால் E.V நையாண்டி பிடிக்காதவர்கள் அவரிடம் blog கில் நேரடியாக பிடிக்க வில்லை என்று கூறி விடுங்கள். அவரின் ரசிகர்களை மட்டும் நையாண்டி செய்யட்டும்.

    போன வராம் நடந்த சண்டை க்கு அறிவியல் பூர்வமான காரணத்தை கண்டு பிடத்து விட்டேன்.

    போர் புரிந்த அனைவரும் டெக்ஸ் ரசிகர்கள். டெக்ஸ் கதை படித்து படித்து அடி வாங்குவது என்ற ஓன்றையே மறந்து விட்டனர். டைகர் கதை என்றால் மனுஷர் அடி வாங்குவார் மிதி படுவார். ஆனால் அவற்றில் இருந்து மிண்டு வந்து பதிலடி கொடுப்பது அவர் வழக்கம். ஆனால் டெக்ஸ் கதையில் வில்லன்கள் அனைவரும் டெக்ஸ்காக suicide பன்னவே பிறந்த வர்கள். அதனால் டெக்ஸ் கதை படிப்பதை இன்றே நிறுத்துங்கள்😊😊😊

    ReplyDelete
    Replies
    1. @ Ganeshkumar Kumar

      ஊவ்வ்!!! அன்பிற்கும், ஆதரவுக்கும் நன்றி நண்பரே! என்னை ரொம்பவே நெளியச் செய்கிறீர்கள்!!(நிஜமாகவே இப்போது படுக்கையில் நெளிந்தபடிதான் இதை டைப்புகிறேன்). 'ஆசிரியரும் EVன் ரசிகர்' என்பதெல்லாம் ரொம்பவே ஓவரில்லையா? அவரது எழுத்துக்களால் தமிழ் படிக்கக் கற்றுக்கொண்டவன் தானே நானெல்லாம்!

      இந்தப் பிரச்சினைகளும்கூட 'சின்னப்பசங்க சண்டை மாதிரிதான்' - ஒன்றிரண்டு நாட்களுக்குமேல் நிலைக்காது! இப்போதும் அப்படியே!

      Delete
    2. கணேஷ்@ /// மிண்டு வந்து பதிலடி கொடுப்பது///--- மிண்டு ஸ்ட்ரீட் வந்திருந்தாரா டைகர். அட டா , சென்னை வரை வந்தவரை சேலத்திற்கும் வரவைத்து ஒரு மினி மீட்டை போட்டு இருக்கலாமே. அடுத்த முறை அவசியம் தெரிவியுங்கள்.

      Delete
    3. // ஏதோ வகையில் ஈரோடு விஜய் கிண்டல் செய்வது தவறு என்று வந்தது. இதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஈரோடு விஜய் அவர்களின் நையாண்ட்டிக்கு இங்கு நிறைய ரசிகர்கள் உள்ளார்கள் என்று நம்பு கிறேன்.//
      ஏற்புடைய கருத்து.

      Delete
    4. ஓ யெஸ்! மீ டூ தி ஃபேன் ஆப் ஈ.வி.

      Delete
    5. Ganeshkumar Kumar : சைக்கிள் கேப்பில் குதிரைச் சவாரியா ? ஹை !!

      Delete
    6. //ஈரோடு விஜய் அவர்களின் நையாண்ட்டிக்கு இங்கு நிறைய ரசிகர்கள் உள்ளார்கள் என்று நம்பு கிறேன்.//
      Me too

      Delete
    7. ///ஈரோடு விஜய் அவர்களின் நையாண்ட்டிக்கு இங்கு நிறைய ரசிகர்கள் உள்ளார்கள் என்று நம்பு கிறேன்.///

      அயாம் த சிஷ்யா ஆஃப் த குருநாயர்..! என்ற வகையில் நானும் மிகத்தீவிர ரசிகனே நம்ம விஜய்க்கு..!!

      Delete
    8. ஈரோடு விஜய் அவர்களின் நையாண்ட்டிக்கு இங்கு நிறைய ரசிகர்கள் உள்ளார்கள் என்று நம்பு கிறேன்.//
      Me too

      Delete
  29. நண்பர்களுக்கு ஞாயிறு வணக்கங்கள்!!

    இரும்புக் கெளபாய், விண்ணில் ஒரு எலி - இரண்டுமே என்னிடம் இல்லாத புத்தகங்களென்பதாலும், சிறு வயதில் படித்த கதைகளென்பதால் தற்போது ஞாபகத்தில் இல்லாததாலும் - மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கிறேன் - இத்துடன் ஒரு 14 பக்க புத்தம்புதுக் கதையும் வரயிருப்பது உற்சாக மீட்டரை ஏகத்துக்கும் எகிறச் செய்கிறது!

    நெய்வேலியிலும், ஈரோட்டிலும் நமக்கு ஸ்டால் உறுதியாகியிருப்பது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! 'சின்னப்புள்ளைக தீவாளியை எதிர்பார்த்துக் கிடப்பதுபோல' ஒரு மனோநிலை EBFக்காண்டி இப்போதிருந்தே உருவாகத் தொடங்கிவிட்டது! உற்சாகம், குதூகலம், கொண்டாட்டம், கும்மாளம் - போன்ற சொற்களின் உண்மையான அர்த்தத்தை உணர்த்துகிற நாட்கள் அவையென்றால் அது மிகையில்லை! இரத்தக்கோட்டை மற்றும் இன்னபிற சமாச்சாரங்களோடு ஒரு மாபெரும் கொண்டாட்டத்திற்குத் தயாராவோம் நண்பர்களே! ( சந்திப்புக்கான தேதியையும் சீக்கிரமே அறிவிக்கக் கோருகிறேன் எடிட்டர் சார்... நண்பர்களின் பயண ஏற்பாடுகளுக்கு வசதியாய் இருக்கும்)

    இங்குள்ள அப்பாமார்கள் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்!!

    ReplyDelete
    Replies
    1. ///உற்சாகம், குதூகலம், கொண்டாட்டம், கும்மாளம் - போன்ற சொற்களின் உண்மையான அர்த்தத்தை உணர்த்துகிற நாட்கள் அவையென்றால் அது மிகையில்லை! ///+1111111

      அக்மார்க் உண்மை விஜய்.

      ஆகஸ்ட் 4 வெள்ளி இந்த ஆண்டு ஈரோடு புத்தக விழா தொடங்க கூடும்.
      இரத்தகோட்டை,
      லயன்300,
      முத்து400,
      அத்தோடு இந்தாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் டிராகன் நகரும் ஈரோட்டில் வெளியிடும் வாய்ப்பு இருக்கலாம். (ஜூன் 30க்குள் அதில் இடம்பெறும் சூப்பர்6 சந்தா நண்பர்கள் போட்டோக்கள் அனுப்ப சொல்லி இருப்பதை கணக்கில் கொண்டால்)...
      மேலும் ஒரு சர்ப்ரைஸ் புத்தகமும் இருக்கலாம். இவ்வளவு முக்கிய புத்தகங்களும் அந்த விழாவின் அனைத்து நாட்களும் வந்த போகும் நண்பர்களுக்கும் கிடைக்கவேணும் தானே. எனவே முதல் வாரம் வெளியீடு, விழாக்கள் வைப்பதே இந்த வாய்ப்பை உறுதி செய்யும் என்பது என் கருத்து மட்டுமே.
      பெரும்பாலான நண்பர்களுக்கு உகந்த நாள் எதுவோ அதுவே சிறப்பாகவும் இருக்கும். எந்த நாளாயினும் விரைவில் தேதியை அறிவிக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோளும். ஈரோடு விழா தேதி முடிவான பின்னே என் வருடாந்திர ஆடி மாத ஏழுமலையான் தரிசன ப்ளானை நான் செய்யணும் என்ற தன்னலத்தையும் ஒப்புக் கொள்கிறேன்.

      Delete
    2. ஆகஸ்ட் 5-6 நான் ரெடி.

      Delete
    3. //இரத்தக்கோட்டை மற்றும் இன்னபிற சமாச்சாரங்களோடு ஒரு மாபெரும் கொண்டாட்டத்திற்குத் தயாராவோம் நண்பர்களே! ( சந்திப்புக்கான தேதியையும் சீக்கிரமே அறிவிக்கக் கோருகிறேன் எடிட்டர் சார்... நண்பர்களின் பயண ஏற்பாடுகளுக்கு வசதியாய் இருக்கும்)//
      அதே,அதே ஆகஸ்டில் ஒரு அசத்தல் திருவிழா.

      Delete
    4. @ ALL : வெள்ளியிரவு ஈரோட்டில் ஆஜராகி - ஞாயிறு மதியம் வரை டேரா போட்டிடலாம் ! உங்களுக்கு ஓ.கே. தானென்றால் எங்களுக்கு டபுள் ஓ.கே. !

      Delete
    5. ஈரோட்டு கொண்டாட்டங்கள் இன்றிலிருந்து ஆரம்பமாகிறது.

      Delete
    6. // @ ALL : வெள்ளியிரவு ஈரோட்டில் ஆஜராகி - ஞாயிறு மதியம் வரை டேரா போட்டிடலாம் ! உங்களுக்கு ஓ.கே. தானென்றால் எங்களுக்கு டபுள் ஓ.கே. ! //

      சனிக்கிழமை காலை 10 மணிக்கு மீட்டிங் ஆரம்பித்தால் உணவு இடைவேளைக்காக மதியம் 2 மணிக்குள் முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.. சென்ற முறையே சிரமப்பட நேர்ந்தது.. ( முன்கூட்டியே சொல்லி வைக்கலாம் தான்.. ஆனால் எத்தனை நண்பர்கள் என தெளிவாகத் தெரியாது..)

      வெள்ளிக்கிழமை இரவே வைத்தால், இரவு முழுவதும் பேசிக் கொண்டு இருக்கலாம்.. உணவு இடைவேளை தேவைப்படாது..

      ஆனால் வெளியூர் நண்பர்கள் கலந்துகொள்ள சிரமம் நேரிடும்..

      இதற்கு ஒரே தீர்வு : ஒரு கல்யாண மண்டபத்தை புக் செய்து அங்கேயே செட்டிலாயிர வேண்டியது தான்..

      பல நண்பர்கள் ஈரோட்டில் ஒரு முக்கியமான நண்பருக்கு திருமணம்.. மாப்பிள்ளை தோழனே நாந்தான்னு வீட்டுல சொல்லிகிட்டு வர சவுகர்யமாக இருக்கும்.. ( ஒரு முன் அனுபவம் தான் )...

      Delete
    7. பரணியும் நானும் ஆஜராகி இருப்போம்.

      Delete
    8. ///வெள்ளிக்கிழமை இரவே வைத்தால், இரவு முழுவதும் பேசிக் கொண்டு இருக்கலாம்.. உணவு இடைவேளை தேவைப்படாது..///

      நல்ல ஐடியா சார்

      Delete
    9. @ FRIENDS : புத்தக விழாவின் வாசலில் உள்ள வகையில் அந்த LE JARDIN ஹால் தரும் வசதி பிரேத்யேகமானது அல்லவா ? !

      Delete
    10. விஜயன் சார், கடந்தமுறை கிடைத்த மீட்டிங்ஹால் சிறியதாக இருந்து, பல நண்பர்கள் உட்கார இடம் இல்லாமல் இருந்தார்கள். எனவே கொஞ்சம் பெரியஹால் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

      Delete
    11. @ கரூர்கார்

      ////ஈரோட்டில் ஒரு முக்கியமான நண்பருக்கு திருமணம்.///

      உங்க வாய் முகூர்த்தம் பலிச்சா நல்லாத்தான் இருக்கும்! எனக்கு இப்பவே வெட்க வெட்கமா வர்து!

      Delete
    12. க்கும்.. ஆசையப்பாரு... ஏற்கனவே மயிலாடுதுறை டூருக்கு ஒரு மாப்பிள்ளைக்கு கல்யாணம்ன்னு சொல்லி இன்னும் மணப்பொண்ண காட்டவே இல்லை.. அவரும் அத நம்பி மணப்பெண் எங்கப்பான்னு இன்னும் எங்களை விரட்டிகிட்டு இருக்காரு.. அதுவுமில்லாம அந்த லிஸ்ட்ல ஏற்கனவே நாலு பேரு கமிட் ஆயிருக்காங்க.. அதுல நானும் இருக்கேன்.. நீங்க லிஸ்ட்ல அஞ்சாவதத்தான் இருக்கீங்க.. அதுக்குள்ள வெக்கப்பட ஆரம்பிச்சுட்டீங்களா...

      Delete
  30. சுரங்க நகரில் வெற்றிக்கனி பறிக்க வாழ்த்துகள் சார் !!!

    ReplyDelete
  31. ஒரு சிலந்தியின் வலையில் .....
    ஹா ..ஹா.....இடியாப்ப சிக்கலை விடுவிப்பவர் இடியாப்ப சிக்கலின் மத்தியில் மாட்டி விழி பிதுங்குவதை பார்க்கும்போது சுவாரஸ்யமாகவே இருக்கிறது ..
    கிளைமாக்ஸ் இறுதியில் கிட் ஆர்ட்டின் கண்ணன் குறிப்பிட்டது போல் கொஞ்சம் சப் என்று இருக்கத்தான் செய்தது ...
    கமிஷனர் போர்ட்டன் குரலில் வரும் அழைப்பை ஏற்று உடனடியாக ஜானி அங்கு செல்லுமிடம் மட்டுமே கொஞ்சம் உறுத்தல்..மற்றபடிக்கு செம கதை ....
    அப்புறம் ....இக்கதையை படித்துமுடித்தபின் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த’’ கலைஞன்’’ திரைப்படம் நினைவுக்கு வந்தது....
    கமல் ரசிகர் கிட் ஆர்ட்டின் கண்ணனுக்கு ஞாபகம் வந்ததா என தெரியவில்லை ......

    ReplyDelete
    Replies
    1. selvam abirami : வழக்கமாய் கடைசி 3 பக்கங்களில் திணிக்கும் கிளைமாக்ஸை இம்முறை ஒரே பக்கத்துக்குள் போட்டுச் சாத்தியிருந்தது எனக்கும் நெருடியது ! ஆனால் இதுதான் ஜானியின் template என்றே ஆகிப் போச்சே ?!

      Delete
    2. ///கமல் ரசிகர் கிட் ஆர்ட்டின் கண்ணனுக்கு ஞாபகம் வந்ததா என தெரியவில்லை ///

      செனா அனா..!
      உண்மைய சொல்லணும்னா சத்தியமா ஞாபகம் வரலைங்க..!
      ஆனா இப்போது நம்ம ஜானியை கலைஞனின் இந்திரஜித்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அட ஆமால்ல! என்று தோன்றுகிறது..!

      (நான் இன்னும் வளரணுமோ மம்மீஈஈஈ.. . :-))

      Delete
  32. ஞாயிறு வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  33. விஜயன் சார், இந்த வருடம் கோவையில் நடைபெற உள்ள புத்தகதிருவிழாவில் நாம் பங்கு பெறும் வாய்ப்பு உண்டா?

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : இப்போதைக்கு not sure ....

      Delete
  34. //ஒரு தங்க சுரங்க முதலாளி தன் வாழ்நாள் முழுவதும் 1 கிலோ தங்கம் தான் சம்பாதிச்சாரா?

    1 கிலோவுக்கு மேலயா அவரு கேக்குல வச்சு சாப்பிட முடியும்?

    சுமாா் 1 கிலோ தங்கம் தான் அவா் சம்பாதிச்சாா்னா தற்போதைய இந்திய மதிப்பில் சுமாா் ரூ.30 லட்சம் ஆகுது.

    தலைக்கு 50000 கூட கெடக்காத பிசாத்து காசுக்குதான் ஒரு ஊரே, உயிரைப் பணயம் வைத்துத் தொரத்தீட்டு போகுதா?//

    போன பதிவில் மிதுன் சக்ரவர்த்தியன் கேள்விக்கு லாஜிக்காக பதில் சொல்ல முயற்சி செய்கிறேன்.

    தங்கம் சாப்பிடும் விஷயத்தில் ஓரு கிலோ சாப்பிடலாம். சாப்பிட்டால் இறந்து விடுவார்கள்.

    இன்றும் US ன் middle class ஸேட சராசரி வருமானம் 250 டாலர்கள். இன்றும் 1000 டாலர் என்பது US இன்றுமே பெரிய பணம்தான்.

    இந்தியா வின் பணத்தின் மதிப்பு அகள பாதளத்தில் விழுந்து விட்டது. ஆனால் 1960 களில் 50000 என்பது இந்தியாவிலேயே மிகப்பெரிய பணம்தான்.

    சுரங்கத்தில் வாரக் கூலி 4 டாலர் என்று 8 வது பக்கத்தில் வருகிறது. அப்படி இருக்க ஆயிரம் டாலர் சம்பாதிக்க எத்தனை வருடம் உழைக்க வேண்டும்?. மேலும் 1000 டாலர் வைத்து எதாவது தொழில் தொடங்களாம். இல்லை என்றால் சாப்பாட்டிற்கே வழி இல்லாத அவர்கள் ஓரு வருடம் உட்கார்ந்து கொண்டே சாப்பிடலாம். நுகர்வு கலாச்சாரம் உள்ள இன்றைய நிலையில் 1000 டாலர் என்பது US ல் பெரிய பணம் எனும் போது. அன்றைய கால கட்டத்தில் மிகப்பெரிய பணம்.

    ReplyDelete
  35. விஜயன் சார், சிக் பில் கதையின் முதல் அட்டைபடம் நன்றாக உள்ளது, அது நமது காமிக்ஸில் ஏற்கனவே வந்த மற்றுமொரு கார்ட்டூன் கதையின் டிசைன் போன்று உள்ளது. ரெண்டாவது அட்டை படம் சுமார், அதிலும் அந்த கருநீலம் (அ) கருப்பு நன்றாக இல்லை. எனவே எனது சாய்ஸ் முதல் அட்டைபடம்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு பிடித்ததும் முதல் படமே...

      Delete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
  37. விஜயன் சார்,

    // "ஒரு ஷெரீப் சிப்பாயாகிறார்" கதையினில் இருந்ததொரு 14 பக்க சிக் பில் சிறுகதையை இங்கே இணைத்துளோம் ! ஆகையால் பழசினுள், புதுசும் உண்டு இம்முறை! //

    ரொம்ப சந்தோசம். 3 கதைகள் என்பதால் அட்டைப்படத்திலும் மூன்றாவது கதையின் பெயரை இடம்பெற செய்யலாமே? தற்போது அட்டையில் இரண்டு கதைகளின் பெயர் மட்டுமே உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : இருக்கட்டுமே சார்...டிசைன் ரொம்பவே கொச கொசவென்று ஆகிப் போகும் 3 பெயர்களோடு !!

      Delete
    2. ஆமா! அட்டையின் பின்பக்கத்தில் 2+1 surprise கதையுடன் என குறிப்பிட முடிந்தால் நன்று.

      Delete
    3. அப்பால வர்ற புக்ல 14 பக்கம் குறையுமேப்பா.

      Delete
  38. நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை
    வணக்கம்.ஆசிரியரே EBF வருவதற்க்கு
    ஆகஸ்ட் 5 & 6 டிக்கட் புக் செய்துள்ளேன்
    சரியானதா மாற்றம் ஏதும் உண்டா???
    சென்ற பதிவின் தலைப்பு 300+400
    உண்மைதான் 445பின்னூட்டங்கள்!!!!
    ஈவி ஸ்டீல் மாயாவிசிவா KOK நலமா.

    ReplyDelete
    Replies
    1. @ கணேஷ் KV

      உங்கள் டிக்கெட் முன்பதிவு சரியே.!

      ஆகஸ்ட் 5-ம் தேதி சனிக்கிழமை காலையில்புத்தக வெளியீட்டு விழாவும்,ஞாயிறு அன்று காலையில்புத்ததிருவிழா ஸ்டாலில் சந்திப்பு என... கடந்த வருடம் போலவே எடிட்டரின் வருகை இருக்கும் வாய்ப்பே அதிகமென நம்புகிறேன்.!

      Delete
    2. அப்ப ஆகஸ்ட் 4ம் தேதி இரவில் இருந்து 6ந் தேதி இரவு வரை 6 ரூம் போட்டு விடுவோமா...

      Delete
    3. போட்டாச்சி போட்டாச்சி . .!!

      Delete
    4. @ ALL : Oh yes ...முதல் வாரத்து சனி & ஞாயிறு மஞ்சள் மாநகரில் !

      Delete
  39. Hello friends good morning 🙌🙌🙌🏆🏆🏆

    ReplyDelete
  40. Undertaker was very good.
    A testament to your taste and fearlessness!

    ReplyDelete
    Replies
    1. ARVIND : Our blooming tastes help make me take liberated decisions I'd say !

      Delete
    2. O Mercy beucoup!!!

      Bonsoir shinesmile

      Delete
    3. அது merci சார் ! Mercy அல்ல....!

      பிரெஞ்சை கிட்டத்தட்ட தாய்மொழியாய்க் கொண்டோருமே உள்ள தளமிது என்பதால் சற்றே கூடுதல் கவனம் நலமே !

      Delete
  41. முதல் அட்டைப்படம் ரொம்ப புடிச்சிருக்கு.

    சிக்பில் ஸ்பெஷல் 'கிட் ஆர்டின் ஸ்பெஷல்' ஆக வரும்னு சொன்ன மாதிரி இருந்ததே

    விண்வெளியில் எலி யை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Govindaraj Perumal : "கிட ஆர்டின் ஸ்பெஷல்" என்றே பெயர் மாற்றம் செய்ய நினைத்திருந்தேன் ; ஆனால் துவக்கம் முதலே "சிக் பில் classics " என்று விளம்பரப்படுத்திவிட்டு - இப்போது வேறொரு பெயரில் இதழ் வெளியானால் வீண் குழப்பம் ஏற்படுமென்று பட்டது ! அவ்வளவாய் நமது இணையதள பதிவுகள் ; updates பக்கமாய் வராத வாசகர்கள் - ஆண்டின் இறுதியில் "சிக் பில் ஸ்பெஷல்" போடலியே ? என்று நம்மவர்களை விசாரிக்கும் சாத்தியங்கள் உண்டென்பதால் - sticking to the same name !

      Delete
  42. சிக்பில் கதைகளில் விண்ணில் ஒரு எலி கதையில் பலூனில் இரவு மற்றும் பகலில் பலூனில் பறப்பதாக ப்ரிவ்யூவ் உணர்த்துகிறது.இரண்டு அட்டைகளுமே பாந்தமாக பொருந்தும்.இருந்த போதும் இரவுப் பின்னணியில் குளுகுளு நிலவொளியில் அமைக்கப்பட்டால் அள்ளும்.
    இரத்தக் கோட்டையின் எழுத்துருக்களில்,இரத்தம் என்ற வார்த்தையை இரத்தத்தால்(சிகப்பாக)இரத்தம் வடிவது போல் அமைக்க முயற்சிக்கலாம்.காவியில் ஒரு ஆவியில்,"""ஒரு ஆவி"""என்ற வார்த்தை அமைக்கப்பட்டது போல்,இரத்தக் கோட்டையிலும்,"""இரத்தம் """என்ற வார்த்தையில் இரத்தம் வடியும் விதமாக அமைக்கலாம்.
    ஆசிரியருடைய இந்த வாரப்பதிவு கூடுதல் சிறப்புடன் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. Sri Ram : இரத்தக் கோட்டை டிசைன் பயணத்தில் இதுவொரு துவக்கநிலை முயற்சி மாத்திரமே !! Miles to go....

      Delete
  43. //Bye all ! ஞாயிறு நமக்கொரு கோப்பை நாளாகிடுமென்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன் !! (நிச்சயமாய் நான் குறிப்பிடும் கோப்பை எதுவென்பதில் சந்தேகம் இராது தானே !!) //

    குறும்பு சார் உங்களுக்கு. அப்ப மதியம் கோப்பையோட மன்னிக்கவும் கோப்பைக்காக வைடிங்கா.

    ReplyDelete
    Replies
    1. Mahesh : நானிப்போது இருப்பது க்யூபாவில் நண்பரே !! 'தல'யோடு ஊடூ கானகத்தினுள் பயணம் !!

      Delete
  44. //நெய்வேலியில் ஜூன் 30 முதல் துவங்கும் புத்தக விழாவினில் நமக்கு ஸ்டால் உறுதியாகியுள்ளது.//
    நல்ல செய்தி,நமது இதழ்களின் விற்பனை சிறக்க வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi : நன்றிகள் சார் !

      Delete
  45. // இந்த இரண்டினில் நாம் தேர்வு செய்திருப்பது எந்த டிசைனாக இருக்கும் என்று any guesses folks?//
    முதல் அட்டை நன்கு எடுப்பாக உள்ளது போல் தோன்றுகிறது,எனவே முதல் அட்டையாக இருக்க வாய்ப்பு உண்டு.

    ReplyDelete
  46. காத்திருக்கும் "இரத்தக் கோட்டை" யின் பொருட்டு ! அதன் பணிகளும் ஜரூராய் நடைபெற்று வருகின்றன = இணைத் தடத்தினில் ! Maybe இங்கே நண்பர்கள் எனக்கொரு சகாயம் செய்திடலாம் - உட்பக்கங்களின் பிழைதிருத்தப் பொறுப்பைக் கையில் எடுத்துக் கொள்வதன் மூலம் // எடிட்டர் சார்..உட்பக்க பிழைதிருத்தல் என்றால் மொழியெர்ப்பு வசனங்களில் மட்டுமா அல்லது கதைக்கோர்வையிலும் பிழை திருத்த வேண்டுமா என்பதைக் கொஞ்சம் தெளிவுபடுத்தவும்..இதைப்பற்றித் தெரிந்த நண்பர்களும் கூறலாம்...

    ReplyDelete
    Replies
    1. PRAKASAM KATHIRESAN : //உட்பக்க பிழைதிருத்தல் என்றால் மொழியெர்ப்பு வசனங்களில் மட்டுமா அல்லது கதைக்கோர்வையிலும் பிழை திருத்தவேண்டுமா//

      எழுத்துப்பிழைகளை மட்டுமே நண்பரே !

      Delete
    2. எடிட்டர் சார் அப்படியானால் மெயிலைத் திறந்து என்னுடைய வேண்டுகோள் கிடைக்கப்பெற்றதா என்பதை உறுதி செய்யுங்கள் சார்..அப்படியே ஒரு வாய்ப்பும் அளிப்பீர்கள் என நம்புகிறேன்..நன்றி..

      Delete
  47. ஜூன் மாத இதழ்களின் விமர்சனம்:
    க) அண்டர்டேக்கர்
    அட்டைப்படம்: அருமை
    சித்திரங்கள் : அருமை
    கதை : அருமை
    ஒரு வரி விமர்சனம்: ஆரம்பம் முதல் இருந்த விறுவிறுப்பு....கடைசி வரை நகர்த்தியதில் கதாசிரியரின் திறமைக்கு சான்று.

    உ) தங்க விரல் மர்மம்

    அட்டைப்படம்: சுமார்
    சித்திரங்கள் : சுமார்
    கதை : சுமார்
    ஒரு வரி விமர்சனம்: மொழிபெயர்ப்பில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். நிறைய பிழைகள்…மொழி நடையை இன்றைய தலைமுறைக்கு மாற்றினால் நன்றாக இருக்கும்.

    ங) ரின் டின் கேன்

    அட்டைப்படம்: அருமை
    சித்திரங்கள் : அருமை
    கதை : சுமார்
    ஒரு வரி விமர்சனம்: என்ன எழத….படித்து முடித்தாயிற்று…அடுத்த கதை எப்படியோ…..ஆசிரியருக்கே வெளிச்சம்..!!!!

    ச) டெக்ஸ்
    அட்டைப்படம்: கதைக்கும் அட்டைப்படத்திற்கு என்ன சம்பந்தம்?
    சித்திரங்கள் : அருமை
    கதை : சுமார்
    ஒரு வரி விமர்சனம்: ஆசிரியர் ஒவர் பில்டப் பண்ணி விட்டதாக தோன்றியது கதையை படித்த போது….

    ரு) ஜானி

    அட்டைப்படம்: அருமை
    சித்திரங்கள் : அருமை
    கதை : சுமார்
    ஒரு வரி விமர்சனம்: வழக்கமான குழப்பத்துடன் ஆரம்பித்து….முடிக்கும் போது குழப்பத்துடன் முடித்து இருப்பதாக தோன்றியது(எனக்கு மட்டும் தானா)

    ReplyDelete
  48. நானிப்போது இருப்பது க்யூபாவில் நண்பரே !! 'தல'யோடு ஊடூ கானகத்தினுள் பயணம் !!
    க ல க் கு ங் க ள் s i r.

    ReplyDelete
  49. அண்டா்டேக்கா்!!!

    "MOB PSYCHOLOGY" என்று ஒரு பிரிவு உளவியலிலே உண்டு.

    அதாவது "Crowd Psyhology" and "Mass Psycology" என்றும் சொல்வாா்கள்.

    அதாவது கும்பல் மனோநிலை! ஒரு பிரச்சனைக்காக ஒரு கும்பல் கூடுகிறது என்றால், Aggressive (Mobs) என்று சொல்லக்கூடிய Active ஆக செயல்படக் கூடியவா்களும், (Audiences) அதாவது பாா்வையாளா்களாக உள்ள Passive ஆக செயல்படக் கூடியவா்களும் இருப்பாா்கள்.

    பொதுவாக இந்த அக்ரசிவ் நபா்கள் தான் கலவரத்தை உண்டாக்கக் கூடியவா்கள்!!

    ஆடியன்ஸில் Panic ஆக இருப்பவா்களும் உண்டு. Escaping மனநிலையில் இருப்பவா்களும் உண்டு.

    இங்கே நம் கதை "அண்டா்டேக்கா்"ல் இந்த
    Mob சைக்காலஜி கையாலப்பட்ட விதமே அலாதியானது.

    மாக்கெல்லன் தான் கும்பலின் மையமான Aggressive MOB ஆக சித்தாிக்கப்பட்டுள்ளான்.

    பொதுவாகவே Aggressive mobs ல் நம் மகாபாரத "சகுனி"யை போல ஒரு ஆள் இருந்தால் பெருங் கலவரம் மூழ்வது உறுதி!!

    நாமெல்லாம் கஸ்கோவின் மேலேயே நம் பாா்வையை வைத்திருக்கும் போது, உண்மையில் இக்கதையை நகா்த்திச் செல்வதே "மாக்கெல்லன்" தான்.

    மகாபாரதத்தில் துாியோதனனை விட சகுனியே கதையை நகா்த்திக் கொண்டிருப்பாா். அதுபோலத்தான் இங்கே மாக்கெல்லனும்!!

    பொதுவாக கும்பலில் கலவரத்தின் ஆரம்ப நிலையென்றால் மையப்பகுதியை தூக்கிவிட்டால் கூட்டம் கலைந்துபோகும்.

    அதுவே ஆடியன்ஸ்ஆக இருப்பவா்கள் களத்தில் வந்துவிட்டால் ஆடியன்ஸைத் தான் களைக்க வேண்டும்!!

    சொிப்பும், பிரைாியும் உள்ளே வரும்போது ஆட்டம் இரண்டாம் நிலையை எட்டிவிடுகிறது.

    அதிலும் சொிப்பிற்கு இதை வளா்ப்பதிலேதான் ஆா்வம் அதிகம் என்பதால் ஆட்டோமேட்டிக்காக கலவரத்தின் பிடி முழுவதும் மாக்கெல்லன் கைக்கு வந்துவிடுகிறது.

    ஏற்கனவே பசியிலும் பஞ்சத்திலும் இருக்கும் மக்களை மடையா்களாக்குவதில் மாக்கெல்லனுக்கு எந்த சிரமமும் இல்லாமல் போய்விடுகிறது.

    கதாசிாியா் இந்த உளவியல் சமாச்சாரங்களை கையாண்டிருக்கும் விதம் மெய்யாகவே பிரமிப்பளிக்கிறது!!!

    அதுவும் ஒரு முட்டாள்தனமான கலவரத்தில் மட்டரகமான ஒருத்தனோடு சோ்ந்து செயல்பட்டால் கூண்டோடு கைலாசம் என்பதை இக்கதை அற்புதமாய் விளக்குகிறது.!!!

    அண்டா்டேக்காின் அடுத்த ஆட்டத்தை ஆவலோடு எதிா்பாா்க்கிறேன் சாா்!!!

    ReplyDelete
  50. Vijayan Sir,
    Agent 327 try pannalamey, Ippo Vara stories lam nalla iruku.

    ReplyDelete
  51. Nanum Erode book fair ku varenz🤓😁😁
    Last EBF ku vandathu innum enaku pasumaiya nyabagam iruku.

    ReplyDelete
  52. I will come to Neyveli surely. My presence confirmed. So send all new books to Neyveli. I am expecting great sales in Neyveli. All the best.

    REGARDS
    I.V.SUNDARAVARADAN.

    ReplyDelete
  53. சிக் பில் கிளாசிக் க்காக வைட்டிங். இந்த இரு கதைகளும் படித்தது இல்லை. எனக்கு முதல் டிசைன் மிகவும் பிடித்தது.

    இரத்த கோட்டை கவர் கலக்கலாக இருக்கிறது.

    இந்த வாரம் படித்த கதைகள்

    பழையது:
    1 பறக்கும் பாவை படலம் - ஜேம்ஸ் பாண்டின் மிக அற்புதமான கதை. இதை படித்து 15 வருடங்களுக்கு மேலாக இருக்கும். இப்பொழுது படித்த போதும் கதை விறுவிறுப்பாக சென்றது.

    புதியது:
    1 மிஸ். அட்டகாசம் - சுட்டி பயல் பென்னி மறுபடியும் சிக்ஸர் நடித்திருப்பது தெரிகிறது. சிக் பில், லக்கி லூக்கிற்கு அடுத்தது பென்னிக்கு தான் என் ஒட்டு

    2 ஒரு முடியா இரவு - வாவ், அசந்து விட்டேன். கதை படிக்கும்போது அப்படியே ஒரு ஹாலிவுட் படத்தை பார்த்த உணர்வு. இப்படி பட்ட கதைகள் மிக அதிகமாக்க வேண்டும் என்பது ஏன் வேண்டுகோள்.

    3 எழுதப்பட்ட விதி - ஜேசன் ப்ரைஸ். இவரின் பேன் ஆகி விட்டேன். முதல் கதை ஒரு ஒன் ஷாட் போல் இருந்தது. தனியாகவே ரசிக்கலாம்.

    4 மறைக்கப்பட்ட நிஜங்கள் - இந்த கதை அதோட தொடர்ச்சி என்பது கதை முதல் பக்கத்தை புரட்டும் தான் தெரிந்தது. சூப்பர் டூப்பர் திரில்லர்.

    எல்லோரும் அண்டர்டேக்கர் பத்தி பேசி கொண்டு இருக்கும்போது நான் ஒரு முடியா இரவு, ஜேசன் ப்ரைஸ் பத்தி பேசுவது எனக்கே ஒரு மாதிரியாக தான் உள்ளது. ஆனாலும் நான் கேட்ச் அப் பண்ணி வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஜேம்ஸ் பாண்ட் எனது பேவரைட் நாயகன்.
      பறக்கும் பாவைப்படலம் எனக்கும் மிக பிடித்த கதை.
      அதில் பறக்கும் பிடாரிகளின் இருப்பிடத்தை ஜேம்ஸ் துப்பறியும் இடம் ஜேம்ஸின் நுணுக்கமான புலனறிவை வெளிப்படுத்தும்.

      வில்லனின் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் நுழையும் தந்திரமும்
      அலட்டல் இன்றி வில்லனின் நம்பிக்கை பெறுவதும்.நெருக்கடி எழும் போது தப்பித்து வில்லனின் திட்டத்தை தூள்தூளாக்குவது என பாண்ட் முத்திரைகள் ஏகமாய் உள்ள கதை.
      மீண்டும் பாண்ட் கதைகள் வராதது ஒரு வருத்தமே. ஆசிரியர் மனது வைக்க வேண்டும்.

      Delete
    2. இதுவரை வந்த detective காமிக்ஸ் லேயே ஜேஸன் பிரைஸ் முதல் இரண்டு பாகங்களும் top என்பது எனது எண்ணம்.

      Delete
    3. Prabhu : //எல்லோரும் அண்டர்டேக்கர் பத்தி பேசி கொண்டு இருக்கும்போது நான் ஒரு முடியா இரவு, ஜேசன் ப்ரைஸ் பத்தி பேசுவது எனக்கே ஒரு மாதிரியாக தான் உள்ளது. ஆனாலும் நான் கேட்ச் அப் பண்ணி வருகிறேன்.//

      இன்னமும் இரும்புக்கை மாயாவியையே தாண்டிடாத வாசகர்களும் நம்மிடையே உண்டு தான் நண்பரே ; so நீங்கள் ரொம்பவெல்லாம் பின்தங்கியிருக்கவில்லை தான் !

      Delete
  54. தடை பல தகர்த்தேழு - எனது மகளின் பார்வையில்

    முதலில் படம்களை மட்டும் பார்த்துவிட்டு என்னிடம் சில கேள்விகள் கேட்க ஆரம்பித்தால் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கதையில் முழுமையாக முழ்கிவிட்டாள் (விட்டோம்)

    -இந்த நாய்க்கு என்ன ரெண்டு தலையா ? (முதல் பக்கத்தில் உள்ள தலைவரின் படத்தை)
    @@@ அது சில நேரம் அறிவாளி மாதிரி இருக்கும், சில நேரத்தில் முட்டாள் மாதிரி இருக்கும்; அதாவது ரெண்டும் கேட்டான், அதனாலதான் அதற்கு இப்படி படம் போட்டு இருகாங்க :-)

    - இந்த நாய கூண்டில் ஏற்ற பழக்கவில்லையா?
    @ அதுக்கு தெரிஞ்சது எல்லாம் சாப்பாடு சாப்பாடு.. தூக்கம்... அவ்வளவு சோம்பேறி நாய்.

    * ரின் டின்னை சாப்பாடை காண்பித்து கூண்டில் ஏற்றிய sequence ரொம்பவே ரசித்தாள்; டைரக்டர் மற்றும் பாவ்லோ கண்களை கசக்கி அழும் இட, டைரக்ட்டரின் நைட் டிரஸ்,.

    - டேரர் வந்த பின் அதன் செயல்களை பார்த்த பின் ஜெயில் அதிகாரிகள் அதனை பாராட்டாமல் இருப்பதன் காரணம் என்ன?

    @ ரின் டின்னால் இந்த ஜெயில்லில் உள்ளவர்களுக்கு எந்த அளவு பெருமை (???) என்பதை விளக்கியபின் அவளுக்கு கதையில் முழு ஈடுபாடு வந்தது

    - ரின் டின்னை ஏன் நடத்தி கொண்டு புதிய இடத்திற்கு கூட்டி போகாமல் ஏன் இப்படி கூண்டில் ஏற்றி போறாங்க?

    @ அட ஆமாம்ல :-) ஏன்னா இந்த பய புள்ள அந்த அளவு சோம்பேறி... ஜெயில்தான் அதற்கு சொர்க்கம்.

    - டேரர் முகத்தை & அதன் கடமை உணர்ச்சியை ரொம்ப ரசித்து சிரித்தாள்

    * ரின் டின் சிறையில் இருந்து தப்பிக்க குழி தோண்டும் இடத்தில், அதனுடன் உள்ள கைதி சிறையில் இருந்து தப்பிப்பது போன்று கனவு காண்பது, உண்மையில் நமது ரின் டினார் குழியில் இருந்து நீர்ஊற்றில் பறப்பது... அதனை தொடர்ந்து முதலையார் சிறையை சுற்றி பார்க்க வருவது, என படத்தை பார்த்து சிரித்த இடம் அதிகம்

    * சிறை கைதிகள் தப்பிக்க சிறை ஆபிசர்களே வழி ஏற்படுத்தி கொடுப்பது, அதில் பெரிய காமெடி என்னவென்றால் அவர்கள் தப்பி செல்ல ஏதுவாக அம்புகுறி போட்டு உள்ள இடம்கள் அவளை வயிறு வலிக்க சிரிக்க வைத்தது.

    * இப்படி படம் பார்த்து அவள் சிரித்த இடம்களை சொல்லி கொண்டே போகலாம்

    அவளுக்கு படம் / கதையை சொல்லி முடித்த பின்தான் எனது மண்டையில் ஒரு விஷயம் புரிந்தது.. இது போன்ற கதைகளில் படம்கள் சொல்லும் விசயம்கள் அதிகம், முகம், டிரஸ், சுற்றிஉள்ளவர்கள், அதன் பின் டயலாக் ரசிக்கவேண்டும். டயலாக்கில் உள்ளதை விட இந்த கதையில் படம்களை பார்த்து ரசித்தால் சிரித்து கொண்டே இருக்கலாம் :-)

    ReplyDelete
    Replies
    1. அருமை பரணி.. முடிந்தால் குடும்பத்தோடு ( குழந்தையோடு ) ஈரோடு வர முயற்சிக்கவும்..

      Delete
    2. நல்ல விமர்சனம் பரணி. குழந்தைகளோடு படிக்கும் சுகமே அலாதிதான்.

      Delete
    3. பரணி சார் அபாரமான இரசனைகளோடு எழுதியுள்ளீர்கள்.உங்களுடைய எழுத்து நடைக்காகவே 5வது முறையாக படித்துவிட்டு பதிலிடுகிறேன்.டெக்ஸ் விஜயின் வார்த்தைகளே எனதும் அற்புதம் பரணி...

      Delete
    4. அடுத்த தலைமுறை ரசிகா்களை இம்மாதிாியான காா்ட்டுன்களே கொணா்கின்றன.

      பரணி சாா்!!

      Delete
    5. Parani from Bangalore : சார் ..கதை சொல்வதின் இன்பத்தை எழுத்துக்களில் கொணர்ந்துள்ளீர்கள் ; பிரமாதம் !

      ஒரு சின்னஞ் சிறுசின் முகத்தில் அழகாய் புன்னகை மலரச் செய்திட நாம் ஏதோ ஒரு விதத்தில் காரணமாகியுள்ளது பெருமிதம் தருகிறது !

      Delete
    6. @ PfB

      உங்கள் செல்ல மகளின் பார்வையில் ரின்டின்கேனின் இந்த சாகஸம் - இன்னும் அழகு பெறுகிறது!

      Delete
  55. ஜான் சில்வர் மறுபதிப்பில் ஒரு புத்தம் புதிய கதை..,சிக்பில் மறுபதிப்பில் ஒரு புத்தம் புதிய கதை....

    ஜான் சில்வர் கதையில் வெளிவர இருக்கும் மறுபதிப்பு கதையும் படித்த நினைவு இல்லை...சிக்பில் ஸ்பெஷலில் விண்வெளியில் ஒரு எலி படித்த நினைவு இல்லை....


    எனவே வர இருக்கும் மறுபதிப்புகளுக்கு ஒரு ஜேஜே.....

    ReplyDelete
    Replies
    1. நமது சங்கத்தின் பெயராவது ஞாபகம் இருந்தால் சரிதான்.

      Delete
    2. இப்படியெல்லாம் ரவுண்டு கெட்டலாமா நீங்க அதுவு ...

      Delete
    3. நம்ம சங்கத்துக்கு பேர் இருக்கா ...

      Delete
    4. பாருங்கள் சங்கத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை, சரி சங்கத்தை நஷ்டம்ன்னு சொல்லி சங்கத்தை மூடுரதற்குள பெயர் வைக்க பாருங்கள் தலைவரே ....

      Delete
    5. Paranitharan K : ஜான் சில்வரின் கதைக்கு "ஆகாயக் கல்லறை" என்பதே பெயர் !

      Delete
  56. இந்த நெய்வேலி புத்தக காட்சி மே மாசம் எல்லாம் வர கூடாதா ....

    வருசாவருசம் மே மாசம் பத்து நாள் நெய்வேலி டேரா போடுவேன் ...அப்ப எல்லாம் நெய்வேலி புத்தக காட்சி வர கூடாதா...:-(

    ReplyDelete
  57. ///இந்தாண்டில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கும் "ஒரு ஷெரீப் சிப்பாயாகிறார்" கதையினில் இருந்ததொரு 14 பக்க சிக் பில் சிறுகதையை இங்கே இணைத்துளோம் ///

    ஒருவேளை அடுத்த மாத சர்ப்ரைஸ் இதுதானோ?

    ReplyDelete
  58. முத்துவின் 391 இதழின் பெயர் என்ன? என்னிடம் இருக்கும் லிஸ்டில், முத்துவின் 391 யாருடைய இதழ் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லவும்.

    ReplyDelete
    Replies
    1. முத்து391 கழுகு மலைக்கோட்டை- சூப்பர் 6ன் 2ம் வெளியீடு-rs75 March 2017

      Delete
  59. உண்மையை சொல்ல போனால் அண்டர்டேக்கர் கதைஆசிரியரும்..,ஓவியரும் கூட இவ்வளவு விஷயங்களை அலசி ஆராய்ந்து இருப்பார்களா என சந்தேகம் வரும் அளவிற்கு நண்பர்கள் பிரித்து பெடல் எடுக்கிறார்கள்...



    Suuuuuuuupppppppppppeeeeerr......:-)

    ReplyDelete
  60. **** அண்டர் டேக்கர் 2 ****
    மிகப்பெரிய செல்வந்தரான சுரங்க அதிபர் ஜோ கஸ்கோவினுடைய ஒரே வாரிசு ஒரு கொள்ளை கும்பலால் கடத்தப்படுகிறது.பிணைத்தொகை பேரம் பேசப்படுகிறது.தன்னுடைய அரசியல் செல்வாக்கு மூலம் இராணுவத்தின் உதவியை நாடுகிறார்.ஜோனஸ் க்ரோ என்ற இராணுவ அதிகாரியிடம் இந்த பணி ஒப்படைக்கப்படுகிறது.க்ரோ தன் நண்பன் ஜெட்டுடன் மிக இரகசியமாக இதன் பின்னனியை புலனாய்வு செய்கிறார்.கஸ்கோ கொள்ளை கும்பலின் பேரத்துக்கு உடன்படுவது போல் நாடகமாடுகிறார்.இறுதியில் க்ரோவும், ஜெட்டும் அவருடைய வாரிசை மீட்க கொள்ளையர் குறிப்பிட்ட இலக்கை அடைகிறார்கள்.கஸ்கோவும்,இராணுவ உயர் அதிகாரி ஒருவரும் திட்டத்தை மீறி தனியாக ஒரு மீட்பு குழுவை(பட்டாளத்தை)அனுப்புகிறார்.இந்த சதி கொள்ளையருக்கு தெரிய வருகிறது.இறுதியில் இப்பதட்டமான சூழல் மோதலை ஏற்படுத்துகிறது.மோதலில் ஜெட்டும்,கஸ்கோவினுடைய வாரிசும் கொல்லப்படுகின்றனர்.அரசாங்கத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலையில் மொத்த பலியையும் ஜோனஸ் க்ரோ மீது சுமத்திவிட்டு தன்மீது கறைபடியாமல் விலகிக் கொள்கிறார் உயரதிகாரி.இராணுவ விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.தண்டனையை நிறைவேற்ற சிறையிலிருந்து அருகில் உள்ள இராணுவ முகாமுக்கு(கோட்டை)அனுப்பப்படுகிறார் க்ரோ.கஸ்கோ தான் செய்த பிழைக்கு பரிகாரமாக அவன் தப்பிச்செல்ல உதவுகிறார்.அராசாங்கம் தேடப்படும் குற்றவாளியாக க்ரோவை அறிவிக்கிறது.அண்டர் டேக்கர் எனும் வெட்டியானாக தலைமறைவாக வாழ்ந்து வருகிறான்.நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கஸ்கோவிடமிருந்து தந்தி வருகிறது.அனோகி சிடிக்கு வருகிறான் க்ரோ.தன் தற்கொலை முடிவை கூறி பேரம் பேசுகிறார் கஸ்கோ.
    இதற்கு பிறகு நடைபெறும் கதை எனக்குத் தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தெரிந்திருந்தால் பதிவிடுங்களேன் நண்பர்களே!!!.நன்றி!!!.

    ReplyDelete
  61. **** அண்டர் டேக்கர் 2 ****
    மிகப்பெரிய செல்வந்தரான சுரங்க அதிபர் ஜோ கஸ்கோவினுடைய ஒரே வாரிசு ஒரு கொள்ளை கும்பலால் கடத்தப்படுகிறது.பிணைத்தொகை பேரம் பேசப்படுகிறது.தன்னுடைய அரசியல் செல்வாக்கு மூலம் இராணுவத்தின் உதவியை நாடுகிறார்.ஜோனஸ் க்ரோ என்ற இராணுவ அதிகாரியிடம் இந்த பணி ஒப்படைக்கப்படுகிறது.க்ரோ தன் நண்பன் ஜெட்டுடன் மிக இரகசியமாக இதன் பின்னனியை புலனாய்வு செய்கிறார்.கஸ்கோ கொள்ளை கும்பலின் பேரத்துக்கு உடன்படுவது போல் நாடகமாடுகிறார்.இறுதியில் க்ரோவும், ஜெட்டும் அவருடைய வாரிசை மீட்க கொள்ளையர் குறிப்பிட்ட இலக்கை அடைகிறார்கள்.கஸ்கோவும்,இராணுவ உயர் அதிகாரி ஒருவரும் திட்டத்தை மீறி தனியாக ஒரு மீட்பு குழுவை(பட்டாளத்தை)அனுப்புகிறார்.இந்த சதி கொள்ளையருக்கு தெரிய வருகிறது.இறுதியில் இப்பதட்டமான சூழல் மோதலை ஏற்படுத்துகிறது.மோதலில் ஜெட்டும்,கஸ்கோவினுடைய வாரிசும் கொல்லப்படுகின்றனர்.அரசாங்கத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலையில் மொத்த பலியையும் ஜோனஸ் க்ரோ மீது சுமத்திவிட்டு தன்மீது கறைபடியாமல் விலகிக் கொள்கிறார் உயரதிகாரி.இராணுவ விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.தண்டனையை நிறைவேற்ற சிறையிலிருந்து அருகில் உள்ள இராணுவ முகாமுக்கு(கோட்டை)அனுப்பப்படுகிறார் க்ரோ.கஸ்கோ தான் செய்த பிழைக்கு பரிகாரமாக அவன் தப்பிச்செல்ல உதவுகிறார்.அராசாங்கம் தேடப்படும் குற்றவாளியாக க்ரோவை அறிவிக்கிறது.அண்டர் டேக்கர் எனும் வெட்டியானாக தலைமறைவாக வாழ்ந்து வருகிறான்.நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கஸ்கோவிடமிருந்து தந்தி வருகிறது.அனோகி சிடிக்கு வருகிறான் க்ரோ.தன் தற்கொலை முடிவை கூறி பேரம் பேசுகிறார் கஸ்கோ.
    இதற்கு பிறகு நடைபெறும் கதை எனக்குத் தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தெரிந்திருந்தால் பதிவிடுங்களேன் நண்பர்களே!!!.நன்றி!!!.

    ReplyDelete
  62. *** அண்டர் டேக்கர் 3 ***
    கஸ்கோவின் உதவியால் தப்பிச் செல்லும் ஜோனஸ் க்ரொ அங்குள்ள மலையுச்சியை அடைகிறான்.பின்னால் துரத்தி வரும் இராணுவ வீரர்களிடமிருந்து தப்பிக்க மலையுச்சியிலிருந்து நீர் வீழ்ச்சியில் குதிக்கறார்.நீச்சல் தெரியாத க்ரோவை ஆற்று வெள்ளம் அடித்து செல்கிறது.இராணு குறிப்புகளிலும் ஜோனஸ் நீச்சல் தெரியாதவனாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.அரசாங்கம் ஜோனஸ் க்ரோ இறந்ததாக அறிவித்து வழக்கை முடித்து கொள்கிறது.ஆனால் அசாத்திய மன வலிமை பொருந்திய க்ரோ ஆற்றில் மூழ்கி இறக்கவில்லை.இவர்களை பின்தொடரும் கஸ்கோ க்ரோவை மீட்டு இரசியமாக பராமரித்து வருகிறார்.லின்னினுடைய பராமரிப்பில் சில மாதங்களிலேயே க்ரோவினுடைய உடல் நிலை விரைவாக குணமடைகிறது.ஜோனஸ் க்ரோவுக்கு தெரியாமல் அவனைச்சுற்றி பின்னப்பட்ட அரசியல் சூழ்ச்சிகளை ஜோ கஸ்கோ விளக்குகிறார்.தன்னுடைய செய்கைக்காகவும் வருந்துகிறார்.செல்வத்துக்கு ஆசைப்பட்டதால் தன்னுடைய ஒரே வாரிசை இழந்ததை எண்ணி வேதனையில் துடிக்கிறார்.தான் ஒரு நடை பிணமாக வாழ்ந்து வருவதை உணர்த்துகிறார்.இதற்கு முழு முதற் காரணமான அந்த இராணுவ உயர் அதிகாரியை பழி தீர்க்க இருவரும் முடிவெடுக்கிறார்கள்.தொடரும்.........

    ReplyDelete
  63. *** அண்டர் டேக்கர் 3 ***
    கஸ்கோவின் உதவியால் தப்பிச் செல்லும் ஜோனஸ் க்ரொ அங்குள்ள மலையுச்சியை அடைகிறான்.பின்னால் துரத்தி வரும் இராணுவ வீரர்களிடமிருந்து தப்பிக்க மலையுச்சியிலிருந்து நீர் வீழ்ச்சியில் குதிக்கறார்.நீச்சல் தெரியாத க்ரோவை ஆற்று வெள்ளம் அடித்து செல்கிறது.இராணு குறிப்புகளிலும் ஜோனஸ் நீச்சல் தெரியாதவனாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.அரசாங்கம் ஜோனஸ் க்ரோ இறந்ததாக அறிவித்து வழக்கை முடித்து கொள்கிறது.ஆனால் அசாத்திய மன வலிமை பொருந்திய க்ரோ ஆற்றில் மூழ்கி இறக்கவில்லை.இவர்களை பின்தொடரும் கஸ்கோ க்ரோவை மீட்டு இரசியமாக பராமரித்து வருகிறார்.லின்னினுடைய பராமரிப்பில் சில மாதங்களிலேயே க்ரோவினுடைய உடல் நிலை விரைவாக குணமடைகிறது.ஜோனஸ் க்ரோவுக்கு தெரியாமல் அவனைச்சுற்றி பின்னப்பட்ட அரசியல் சூழ்ச்சிகளை ஜோ கஸ்கோ விளக்குகிறார்.தன்னுடைய செய்கைக்காகவும் வருந்துகிறார்.செல்வத்துக்கு ஆசைப்பட்டதால் தன்னுடைய ஒரே வாரிசை இழந்ததை எண்ணி வேதனையில் துடிக்கிறார்.தான் ஒரு நடை பிணமாக வாழ்ந்து வருவதை உணர்த்துகிறார்.இதற்கு முழு முதற் காரணமான அந்த இராணுவ உயர் அதிகாரியை பழி தீர்க்க இருவரும் முடிவெடுக்கிறார்கள்.தொடரும்.........

    ReplyDelete
    Replies
    1. நண்பரே,

      2 மற்றும் 3 பாகம் பிரெஞ்சிலே வெளியாகி விட்டதா?

      அல்லது உங்கள் கற்பனையா???

      Delete
    2. நண்பரே SRIRAM,

      ஒன்றை கவனித்தீா்களா!

      இந்த கதை "முற்றும்" போடப்பட்டு விட்டது.

      அடுத்த கதையில் கஸ்கோ இடம்பெற மாட்டாா் என்பது என் எண்ணம்.

      தொடரும் பயணமாகவோ அல்லது அண்டா்டேக்கரின் கடந்த கால வரலாறாகவோ இருக்கலாம்!!

      Delete
    3. அண்டர் டேக்கரின் கடந்த கால கதைதான் மிதுன்.ரோஸ் ப்ரைரி பணியில்அமர்த்தப்படும் முன் குறைந்தது மூன்றாண்டுகளுக்கு முன்பாக கஸ்கோ,ஜோனஸ் க்ரோ இருவருக்கும் தொடர்புடைய கசப்பான கடந்த காலம்.இந்த இடைப்பட்ட காலத்திலேயே பத்து பாகங்களை எழுதலாம்.நான் ஐந்தாவது பாகத்தில் இருக்கிறேன். நான் எழுதியுள்ளது தற்போது வெளியிடப்பட்ட நாவலின் கதையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள புனைவு.படைப்பாளிகளுடைய ட்ரீட்மென்ட் எது என்பதை அறிந்து கொள்ள ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

      Delete
  64. எடிட்டர் சார் அப்படியானால் மெயிலைத் திறந்து என்னுடைய வேண்டுகோள் கிடைக்கப்பெற்றதா என்பதை உறுதி செய்யுங்கள் சார்..அப்படியே ஒரு வாய்ப்பும் அளிப்பீர்கள் என நம்புகிறேன்..நன்றி..

    ReplyDelete
  65. விஜயன் சார், கடந்தமுறை கிடைத்த மீட்டிங்ஹால் சிறியதாக இருந்து, பல நண்பர்கள் உட்கார இடம் இல்லாமல் இருந்தார்கள். எனவே கொஞ்சம் பெரியஹால் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  66. ஆசிரியர் அவர்களுக்கு,
    ஜுலை மாத வெளியீடுகளில் சந்தா D யில்(மறு பதிப்பில்)கூடுதலாக ஒரு கதையும்,சூப்பர் 6 கதைவரிசையில் சிக்பில்லின் சிறுகதையொன்றும் இணைக்கப்படுவதாக அறிவித்துள்ளீர்கள்.நீங்கள் ஒரு பத்திரிகை யாளர்,நாங்கள் உங்கள் மீது மதிப்பு வைத்துள்ள வாசகர்கள்.உலகமே வர்த்தக பெரு நிறுவனமாக உள்ள போது எதையும் நேர்மையான விலைக்கு வாங்கும் திறன் எங்களிடம் உள்ளது.யாசகமாக கேட்டுப் பெறவோ,இனாமாக பெறவோ,மனது விரும்பவில்லை. EBF ல் தோட்டா தலைநகரையும் சஸ்பென்ஸ் வெளியீடாக எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  67. விஜயன் சார், ஈரோட்டில் கிடா விருந்து ஸ்பெஷல் என புத்தகம் ஏதேனும் வெளியிடும் எண்ணம் ஏதும் உண்டா?

    ReplyDelete