Sunday, May 07, 2017

மார்க் போடும் ஞாயிறு இது !

நண்பர்களே,

வணக்கம். கந்தக பூமி தான்... ‘மழை‘ என்பதையெல்லாம் பேப்பரில் எழுதிப் பார்த்து ரசித்துக் கொள்ள வேண்டியதொரு மண் தான் ; மல்லாக்கப் படுத்து உத்திரத்தை ரசிப்பதைத் தாண்டி பொழுதைப் போக்க இங்கே புகலிடங்கள் கிடையாது தான் ; ஆனாலும் முகத்திலொரு புன்னகையோடு, அவரவர் பிழைப்புகளைப் பார்க்க ஓடியாடும் இந்த ஊரில் வசித்திட ஏப்ரலும், மே மாதங்களும் ரம்யமான பொழுதுகள் என்பேன் ! ஒன்றுக்கு, இரண்டாய் அம்மன்கோவில்கள் இருப்பதால் - தென்மாவட்டங்களின் தனி அடையாளமான பங்குனித் திருவிழா மாத்திரமன்றி - சித்திரைத் திருவிழாவும் இங்கே களைகட்டுவது இந்த 2 மாதங்களில் தான் ! பள்ளி விடுமுறைகளும், சித்திரைப் பொருட்காட்சியும் சேர்ந்து கொள்ள - ஊருக்குள் திரும்பிய திசையெல்லாம் ஒளி வெள்ளமும், ஒலிப் பிரவாகமுமே ! நாளையும், வரும் புதனும் திருவிழாவின் பொருட்டு ஊருக்கே விடுமுறை என்பதால், நமது அலுவலகமும், அலைபேசிகளுக்குமே லீவு தான் ! So நீங்களெல்லாம் பிஸியாக இருக்கவுள்ள வாரநாட்களில்- ரின்டின் கேனோடு ஒரு பக்கமும், அண்டர்டேக்கரோடு மறுபுறமும் எனது நேரத்தைச் செலவிடவுள்ளேன் ! எட்டு கழுதை வயசானாலும் லீவுகளைப் பார்த்து ‘ஹை... ஜாலி !‘ என்று மனம் துள்ளுவதன் மாயம் என்னவென்ற தெரியவில்லை ! அது ஏன்கிறேன்...? 

Moving on to May albums...

Early days தான்... உங்களுள் ஒரு கணிசமான பகுதியினர் இன்னமும் மே மாத இதழ்களின் ‘மசி முகர்தல்களையும்‘; ‘படம் பார்க்கும் படலங்களையும்‘ தாண்டி நகர்ந்திருக்க மாட்டீர்கள் என்று யூகிக்கவும் முடிகிறது தான் ! ஆனால் இதுவரையிலான reactions சொல்லும் முக்கிய  சேதி ஒன்றே ! அது சந்தா E–யின் “ஆத்தா... நான் பாசாயிட்டேன்!” என்ற கூக்குரலே ! 

லார்கோ வின்ச் தலைகாட்டும் தருணங்களில் - கதைகளில் மாத்திரமன்றி, நம்மிடையேயும் பரிபூரண கவனம் அவர் திசையில் பிரவாகமெடுப்பது இயல்பே ! So இம்மாத “சதுரங்கத்திலொரு சிப்பாய்” வெளியாகும் முன்பாகவே அதன் 'நலம்' பற்றிய நம்பிக்கை எனக்குள் நிறையவே இருந்தது. மாமூலான லார்கோ templates கொண்ட கதை தான் இதுவும் - ‘திடுக்‘ கொலையோடு ஆரம்பம் ; உலக வரைபடத்தின் புதுப்புதுப் பகுதிகளாய் தேடிப் பிடித்து ப்ளுஜீன்ஸ் பில்லியனரை அங்கே இட்டுச் செல்வது ; சைமனின் ஜாலி சைட்-டிராக் ஒன்றினை ஓடச் செய்வது etc... என்ற வகையில் ! ஆனால் இந்தத் தொடரை நாம் நேசிக்கும் பிரதான காரணங்களுள் முக்கியமானவை இந்த சுவாரஸ்ய templates தான் எனும்போது- நாமிதை இம்முறையும் சந்தோஷமாய் ஏற்றுக் கொள்வோம் என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது என்னுள் ! வழக்கமான லார்கோ standards-க்கு இம்முறை கதையின் ஆழம் ஒரு மாற்று குறைவு என்ற போதிலும் - அனல் பறக்கும் அந்தக் கதையோட்ட வேகத்தை நாம் ரசிப்பது சுலபம் என்று நினைத்தேன் ! Add to it - ஓவியர் பிலிப் ப்ரான்கின் மூச்சிரைக்கச் செய்யும் ஓவியங்கள் & கலரிங் – ஒரு டப்பா கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு நம்முன்னே இம்மாத லார்கோவின் ரூபத்தில் திறந்து வைக்கப்பட்டிருப்பது போல உணர்ந்தேன் ! So ப்ளுஜீன்ஸ் பில்லியனர் பற்றி எனக்குக் கவலை இருந்திருக்கவில்லை !

கேரட் மீசைக்காரரும் கூட எனக்குள் சலனங்களையோ ; சந்தேகங்களையோ அதிகம் எழச் செய்திருக்கவில்லை ! எப்போதுமே நமது மார்க் போடும் அளவுகோல்கள் கார்ட்டூன்களுக்கு சற்றே இளகிய மனம் கொண்டிருப்பது ஒரு பக்கமெனில் - இது போன்ற breezy reads இன்றைய நமது பிசியான நாட்களை இலகுவாக்க உதவிடுவதால் சிரமமின்றி இவற்றை ஏற்றுக் கொள்வது சுலபமாகிறது தானே ? ‘இதெல்லாம் என் வீட்டு அரை நிஜார்களுக்கு மாத்திரமே !‘ என்று கார்ட்டூன்களை குச்சி முட்டாய் & குருவி ரொட்டி ரகத்துக்கு ஒதுக்கிடும் நண்பர்கள் நீங்கலாக - பாக்கிப் பேரை நமது க்ளிப்டன் சுலபமாய் ஈர்த்து விடுவாரென்ற நம்பிக்கை எனக்கிருந்தது ! என்ன - அந்தச் சிறுத்தைக்குக் கதையின் ஓட்டத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் பங்கு தந்திருப்பின்- சிரிப்பு மீட்டரை இன்னமுமே கொஞ்சம் உயர்த்தியிருக்கலாமென்று பட்டது ! கதைகளுள் நாய்கள், பூனைகள், ஏன் - யானைகள் கூட வலம் வந்திருக்கலாம் ; ஆனால் ஒரு ஜாலியான பப்ளிமா ரூபத்தில் சிறுத்தை அறிமுகமாவது நமக்காவது இதுவே முதல் தடவையல்லவா ? So “கர்னலுக்கொரு சிறுத்தை” நிச்சயம் உதைபடாது என்ற எனது எதிர்பார்ப்பு பொய்த்திடவில்லை !

மறுபதிப்பைப் பற்றி நான் புதுசாய் சொல்ல என்ன பாக்கியிருக்க முடியும்? நல்ல நாளைக்கே விற்பனைகளில் முன்னணி வகிக்கும் இதழ்களுள் ஒரு நிஜமான classic சாகஸம் இடம்பெறும் போது, விறுவிறுப்பிற்குப் பஞ்சம் இராது தானே? “தலைகேட்ட தங்கப் புதையல்” இந்த வாரத்தின் hotseller - நமது ஸ்டோரிலும், ஏஜெண்ட்களிடமும் !!

‘தல‘ இல்லாத மாதம் என்று நிறையவே சோக முகங்களைப் பார்க்க முடிந்த போது ஒரு சில சமாச்சாரங்கள் என் தலைக்குள் realign ஆகின என்பதை நானிங்கே குறிப்பிட்டாக வேண்டும் ! “மாதமொரு டெக்ஸ்”-ன் ஆரம்பம் 2016-ல் தான் என்றாலும், தொடர்ச்சியாய் பத்துப்-பதினைந்து Tex இதழ்களுக்குப் பின்னே துவக்க நாட்களது ஈர்ப்பு தொடர்ந்திடுமோ - தொடர்ந்திடாதோ ? என்ற மெல்லிய சந்தேகம் எனக்குள் ஒரு ஓரமாய் குடியிருந்தது ! என்றைக்குமே நாம் திகட்டத் திகட்ட variety களை ரசித்துப் பழகியவர்கள் என்பதால் ஒருசேர எந்தவொரு நாயகரையும் இத்தனை இதழ்களுக்குத் தொடர்ச்சியாய் நாம் வாசித்திருக்க மாட்டோம் ! இதற்கு முன்பாய் 1995+ல் ஒரு காலகட்டத்தில் 4 டெக்ஸ் இதழ்கள் அடுத்தடுத்த மாதங்களில் வந்தது தான் longest stretch என்றிருந்திருக்கும் (am I right guys ??)  எனும் போது- எனது பயங்களே இந்தப் பொன் வாத்தை - பிரியாணி போட்டு விடக் கூடாதே என்பதே ! So 2017-ன் சந்தாக்களில் மொத்தமே 10 இதழ்களே ஒவ்வொரு பிரிவிலும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து - இடைப்பட்ட ஏதோவொரு மாதம் ‘தல‘ இலா மாதமாய் அமைந்திடுமென்ற “ஞானம்” பிறந்த போதே- அச்சமயம் உங்களது reactions களைக் கூர்ந்து கவனித்திட வேண்டுமென நினைத்திருந்தேன் ! மேயும் புலர்ந்து... டெக்ஸ் நஹி ! என்ற யதார்த்தமும் புலர்ந்த போது உங்களது வதனங்களில் வடிந்த கவலை ரேகைகளே என் கேள்விகள் / சந்தேகங்கள் அத்தனைக்கும் ஒட்டுமொத்தப் பதில்களாகி விட்டன ! மாதந்தோறும் நமது கூரியர் கவர்களில் ஒரு தவிர்க்க இயலா அங்கமாகிப் போனவர் - நம் மனங்களிலுமே ஒரு நிரந்தர சீட்டை ‘புக்‘ பண்ணி விட்டார் என்பதை அட்சரசுத்தமாய் புரியச் செய்தமைக்கு நன்றிகள் folks ! தொடரும் காலங்ளில் “சூன்ய மாதம்” எதுவுமேயிராது என்ற உறுதியை இப்போதே பதிவிட்டு விடுகிறேன்! 

And இந்த மே மாதம் ‘டெக்ஸ்‘ இல்லாது போனதற்கு ரொம்பவே சிம்பிளானதொரு காரணமும் உள்ளது ! In fact அதனை யாருமே யூகிக்காது போனதில் ஆச்சர்யமே எனக்கு ! மே மாதத்து 4 இதழ்களுள் – லயன் காமிக்ஸ் ஒரு இடம் கூடப் பிடித்திருக்கவில்லை எனும் போதே அதன் பின்னுள்ள காரணத்தை கவனிக்க முயற்சித்திருப்பீர்கள் என்று நினைத்தேன் ! நமது தற்போதைய "லயன்" வெளியீடு நம்பரையும்  ; அப்புறம்  ஜுலையில் நமது ஆண்டுமலர் தருணம் காத்திருப்பதையும்; கூப்பிடு தொலைவில் கைதூக்கி நிற்கும் நமது லயன் # 300 இதழையும் ஒரே நேர்கோட்டில் ஒன்றிணைத்துப் பாருங்களேன் guys- ‘இது தான் அது... அது தான் இது...!‘ என்று சொல்ல விழையும் எனது திட்டமிடல் புரியும் ! இம்மாதம் மட்டும் லயன் இதழ் ஏதும் இல்லாது கடந்து போயின்- ஜுலைக்கு Issue # 300 வெளிவருவது கச்சிதமாய் பொருந்திப் போகும் என்பதால் - எப்படியும் Tex-க்குக் கொடுத்தாக வேண்டிய ஓய்வை இந்தத் தருணத்தில் கொடுத்திட முன்வந்தேன்! Last but not the least – இன்னமுமொரு (முக்கிய) காரணமும் உண்டு - இரவுக் கழுகாரை கண்ணில் காட்டாததற்கு ! !

சந்தா E தனது அறிமுகப் படலத்தை அரங்கேற்றும் மாதத்தில் – black & white ஒளிவட்டத்தை பிரதானமாய் அதற்கே தந்திடுவதில் தவறில்லை என்று நினைத்தேன் ! அட்டகாசச் சித்திரங்களுடனும், செம விறுவிறுப்பாதொரு போசெல்லி கதையோடும் காத்துள்ள ‘கவரிமான்களின் கதை‘யையும், இம்மாதமே தயார் செய்திருந்தால் - சந்தா E யோ - கொசுவோ ; 'ஏக் தம்மில்' - மொத்தத்தையும் நம்மாள் கபளீகரம் செய்திருப்பார் என்ற பயம் (!!) எனக்கிருந்தது ! ரொம்ப ரொம்ப வித்தியாசமான கதைக்களம் ; அனல் பறக்கும் action என்று டெக்ஸ் ஒரு டபுள் ஆல்பத்தில் அதகளத்தை அரங்கேற்றம் செய்யும் போது - பக்கத்து மேடையில் ஒரு இளம்... புதுப் பாகவதர் சாதகம் செய்ய முயற்சித்தால் பருப்பு வேகத்தான் செய்யுமா ? 

பாகுபலியையும், ஒரு art film-ஐயும் ஒரே நேரத்தில், ஒரே காம்ப்ளெக்சில் ஓடச் செய்தால் விசில்கள் பறப்பது எங்காக இருக்கக்கூடும் ? என்பதில் சந்தேகம் இருக்கத் தான் முடியுமா ? So புதுவரவுக்கு மூச்சு விடச் சிறிதளவாவது சுதந்திரம் தந்திடும் எண்ணமும் எனது தீர்மானத்துக்குப் பின்னணி ! ஜுன் மாதம் சந்தா E-யிலும் ஒரு புது அதிரடிக்காரர்- ‘அண்டர்டேக்கர்‘ ரூபத்தில், அதுவும் வண்ணத்தில்  காத்திருப்பதால் எனக்குக் கவலைகளில்லை - TEX-ஐ எவ்விதம் அடுத்த மாதம் சந்தா E சமாளிக்குமோ என்று !சரி... சாலைகளைச் சீராக்கித் தந்து ; வண்டிக்குப் பெட்ரோலும் போட்டுவிட்டான பிறகு - சவாரி செய்யும் பொறுப்பானது சம்பந்தப்பட்டவர் கைகளில் தானே இருக்க முடியும் ? களமிறக்கிவிட்ட பிறகு தனது ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது சந்தா E தானே ? இதனில் முதல் இதழாக நான் துவக்கத்தில் திட்டமிட்டிருந்தது – “என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்” இதழினைத் தான்! ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பு முடிந்த நிலையில் இரண்டு கதைகளுமே லேப்டாப்பில் இருந்திட - பொறுமையாய் வாசித்தேன் ! சந்தேகமின்றி “ஒரு முடியா இரவு” நமது இன்னிங்ஸைத் துவக்கித் தர பிரமாதமான ஓபனிங் பேட்ஸ்மேனாகக் காட்சி தர- இதனுள் புகுந்தேன் பணி செய்ய ! 

சில ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலும் மொழிபெயர்ப்பு / எடிட்டிங் பணிகளின் போது இன்டர்நெட்டைத் தோண்டுவது ; பின்னணிகளை ஆராய்ச்சி செய்ய (!!!) முற்படுவது என்ற ஞான மார்க்கங்களில் நான் பயணித்ததில்லை ! இந்தாண்டை ஒரிஜினல் படங்கள்...அந்தாண்டை டைப்செட்டிங் முடிந்த பக்கங்கள்....சைடாண்டை ஆங்கில மொழிபெயர்ப்பு என்று பரப்பிப் போட்டுக் கொண்டு சிண்டைப் பிய்த்துக் கொள்ளும் தருணங்களிலும் நெட்டைத் தேடும்  பணி/ பாணி துவங்கியது - க்ரீன் மேனர் முதலாய் !! அதனில் பயன்படுத்த அவசியமான கட்டாணியும்- முட்டாணியுமான சொற்களின் spelling-களைச் சரிபார்க்கும் பொருட்டு இன்டர்நெட்டை நாடத் தொடங்கியவனுக்கு பின்நாட்களில் “மர்ம மனிதன் மார்டின்”; “மேஜிக் விண்ட்”; கிராபிக் நாவல்கள் என்ற தருணங்களில் கூகுளாண்டவரின் கிருபை இன்றியமையாததாகிப் போனது ! “ஒரு முடியா இரவு” இதழைத் தேர்வு செய்ததே நிறைய விமர்சனங்களை நெட்டில் பரிசீலித்த பின்னரே எனும் போது - கதைக்குள் பணி செய்யும் போதும் அவ்வப்போது இணைய தேடல்கள் அவசியமானது ! ‘கேட்டானிக்  மனச்சிதைவு‘ என்றால் என்னவென்று புரிந்து கொள்ளாது - மார்வினின் கதாப்பாத்திரத்தைப் புரிந்து கொள்ளத் தடுமாறியிருப்பேன் ! இதை போல ஆங்காங்கே இன்னும் சில தருணங்களும் எழுந்தன !  ‘சிவனே‘யென்று கதையைச் சத்தமின்றி நமது செனா.ஆனா ஜிக்கு கூரியர் அனுப்பி விட்டு எழுதச் சொன்னால் இன்னும் தேவலாமோ  ? என்ற எண்ணம் கூட மேலோங்கியது ! ஆனால் சவாலானதொரு அப்பத்தைப் பிரித்துக் கொடுக்க இந்தக் குரங்குக்குச் சம்மதம் தோன்றவில்லை என்பதால் ‘தம்‘ கட்டி அச்சுக்குப் போகும் 2 நாட்களுக்கு முன்னர் வரை எழுதிக் கொண்டிருந்தேன் ! மாதத்தின் கடைசி வாரத்தில், நமது ஆபீஸ்  அந்த செயிண்ட் பிரான்சிஸ் மனநல க்ளினிக்குக்குப் போட்டியாய் எப்போதுமே காட்சி தருவதுண்டு தான் ; ஆனால் இம்முறை அடித்த கூத்துக்கள் ஒரு படி ஜாஸ்தி என்பேன் ! So ‘விடாதே- பிடி...!‘ என்று தட்டுத் தடுமாறி தயார் செய்த இதழைக் கையில் ஏந்தி ஆற; அமரப் பார்க்கக் கூட நேரமின்றி உங்களுக்கு டெஸ்பாட்ச் செய்து விட்டு - இந்த இதழுக்கான உங்கள் முதல் reactions எவ்விதமிருக்கக் காத்துள்ளதோ ? என்ற ‘டர்ரோடே‘ இங்கே பதிவுப் பக்கங்களை எட்டிப்பார்த்துக் கொண்டே இருந்தேன்!

Oh yes- எனக்கு வித்தியாசமாகத் தோன்றியது என்பதற்காக மட்டுமோ ; சிரமப்பட்டு பணியாற்றினோம் என்பதற்காக மாத்திரமோ ஒரு கதையை / இதழை நீங்களும் கொண்டாட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு குழந்தைத்தனமானது என்பது புரிந்தது தான் ! இருந்தாலும் – மனசுக்குள் ஒரு நப்பாசை, நமது பரஸ்பர ரசனைகளும் ஒரே பக்கத்தில் லயித்து விட்டால் பிரமாதமாய் இருக்குமே என்று ! ! இன்னும் கொஞ்சம் போனால் -“டெம்போல்லாம் வச்சுக் கடத்தியிருக்கோம் ! ஏதாச்சும் பார்த்து மார்க் போடுங்க ஷாமியோவ் !” என்ற எனது மைண்ட்வாய்ஸ் வெளியே கேட்டுத் தொலைத்துவிடுமோ என்றும் தோன்ற ஆரம்பித்தது  ! ஆனால் சிறுகச் சிறுக thumbs up சின்னங்கள் இங்கும், நமது இ-மெயில்களிலும் பதிவாகத் துவங்கிய போது “ஆத்தா... நான் பாசாயிட்டேன்” என்று LGN கைதூக்கி கர்ஜிப்பது போலப்பட்டது ! Of course தலீவரின் சிலாகிப்பு கேக் மீதான ஐசிங் என்பதில் ஐயமில்லை தான் ; ஆனால் இன்னமும் பெரும்பான்மை நண்பர்களின் அபிப்பிராயங்களை / அலசல்களை அறிய முடியும் போதே இந்தப் பாஸ் - முதல் வகுப்பிலா ? distinction சகிதமா ? அல்லது ஜஸ்ட் பாஸா ? என்பதை உறுதி செய்து கொள்ள முடியும் ! So இந்த ஞாயிறையும், தொடரும் சில நாட்களையும் “ஒரு முடியா இரவின்” அலசலுக்கென ஒதுக்கிடுவோமா guys? 

Only சிலாகிப்புகள் தேவை ; விமர்சனங்களுக்குத் தடா ! என்ற தயக்கங்கள் நிச்சயமாய் இங்கே அவசியமாகா ! ஒரு புது முயற்சிக்குப் பரவலான- ஆழ்மன அபிப்பிராயங்கள் தானே உரமிட முடியும்? So மனதில் பட்டதைப் ‘பளிச்‘சென்று சொல்லுங்கள் நண்பர்களே ! அதே சமயம் - கண்ணில் castor oil வீட்டுக் கொண்டு நெருடல்களுக்கு தேடிட வேண்டாமே - ப்ளீஸ் ? இயல்பாய்ப் படிக்கும் சமயம் உங்களுக்குத் தோன்றிடும் reactions தான் நமக்கு பயனாகிடும் ! 

சந்தா E-ல் எனக்கு சந்தோஷமே என்றாலும் ; 2 சிறு வருத்தங்கள் இல்லாதில்லை - இந்த இதழினில் ! முதலாவது - கதையின் இடையிடையே "லூசுப் பசங்கள் " ; "மெண்டல்கள்" etc என்று நோயாளிகளை அந்தத் திருட்டுக் கும்பல் கூப்பிடுவது போலிருக்கும் வரிகளை எழுதியது சற்றே நெருடலாகவே இருந்தது ! மனநலமற்றிருப்போரை அவ்விதம் விழிப்பது தவறு என்றாலும், கதையோட்டத்தில் இயல்பாய் வசனங்கள் தோன்றிட வேண்டுமென்ற ஆசையில் அவற்றைத் தவிர்க்க இயலவில்லை ! வருத்தம் # 2 - LGN லோகோவை டிசைன் செய்து தந்த நண்பர் கார்த்திக்கின் பெயரைக் குறிப்பிட விடுபட்டுப் போனது தொடர்பாய் ! இதழ் அச்சாகி முடிந்த பின்னே தான் அது நினைவுக்கு வர - ஒரு ரப்பர் ஸ்டாம்ப் செய்து கருப்பு மசியில் தொட்டு சாப்பா பதித்து விடுவோம் என்று சொல்லியிருந்தேன் ! But சனிக்கிழமையன்று இதழ்களை பைண்டிங்கில் இருந்து கொணர்ந்து சேர்ப்பதிலேயே  நம்மவர்களுக்கு கவனம் லயித்து நிற்க, ரப்பர் ஸ்டாம்பைக் கோட்டை விட்டு விட்டார்கள் ! நானும் ஊரில் அன்று இல்லாது போக - அவசரத்தில் வேறெதுவும் செய்திட முடியாது போனது !  Phew !

அடுத்த மாதம் காத்திருக்கும் சந்தா E-யின் “அண்டர் டேக்கர்” தூள் கிளப்பக் காத்திருக்கும் ஒரு அடாவடி ஆசாமி என்பதில் எனக்கு ஐயமே கிடையாது! அதனால் அடுத்த மாதம் கவலைகளும் கிடையாது ! இந்த b&w கிராபிக் நாவல் பாணி நமது வாசிப்புக் களங்களுக்கு மெருகூட்டும் சாத்தியங்கள் பிரகாசமா ? என்பதை நீங்கள் ஊர்ஜிதம் செய்யின் - எனது திட்டமிடல்களுக்கு அவை ரொம்பவே சகாயம் செய்திடும் ! 2018-ன் லிஸ்ட்கள் மண்டைக்குள் ஓடிவரும் வேளைதனில் உங்களது நேரங்களை சன்னமாய் இதற்கென செலவிட்டால் - பலன் நம் அனைவருக்குமே இருந்திடும் ! So வாருங்களேன் மார்க் போடும் மார்க்கர் பேனாக்களோடு ?

Before I sign off - சில குட்டித் தகவல்கள்!

*இரத்தப் படலம்- பாகம் 25 தயாராகி வருகிறதாம்  !! சீக்கிரமே அதன் first-look இணையத்தில் வெளியானால் ஆச்சர்யம் கொள்ளாதீர்கள் !

*XIII மர்மங்கள் பட்டியலில் “ஜாதைன் ப்ளை” இதழ் # 11 ஆக வெளிவரவுள்ளது ஜூன் 2 -ம் தேதிக்கு ! சஞ்சய் ராமசாமி அணியைச் சார்ந்த என் போன்றோர்க்கு... நிறைய மண்டை சொரிதலுக்குப் பின்னரே அவர் யாரென்று நினைவுக்கு வருமென்று நினைக்கிறேன் !

*“இளம் டைகர்” படலம் தொடர்கிறது... நம்மவரின் இளவயது சாகஸங்களோடு ! ஆல்பம் # 22 தயாரிப்பில் உள்ளது ! 

மீண்டும் சந்திப்போம்! Have a relaxed Sunday & a week ahead! Bye for now!

279 comments:

  1. Waiting for the Thalai ketta Thanga pudhayal

    ReplyDelete
  2. நாங்களும் வருவம்ல 1st ;-)

    ReplyDelete
  3. Dear Edi,

    Request you to treat Muthu 400 as equal to Lion 300 Special, and make it a fat big issue.... great injustice to your Non-Blood Brother ;)

    ReplyDelete
    Replies
    1. //great injustice to your Non-Blood Brother//
      ;-)

      Delete
    2. //great injustice to your Non-Blood Brother//
      ;-)

      Delete
  4. ஆக XIII சம்மந்தமா எத பாத்தாலும் ஒரே ஏப்பி

    ReplyDelete
  5. லயன் 400 ல் ஜுலியாவும் ராபினும் வருவது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது சார் லயனின் சாதனை இதழ் 400 ல் புதிய பெண் மற்றும் முத்துவின் ஹூரோ

    ReplyDelete
  6. டெக்ஸ் விஜயராகவன் கோபத்திற்கு காரணம் இந்த மாதம் டெக்ஸ் வில்லர் இல்லாத வாரம் அதாவது மாதம்.


    ஒரு மாதத்திற்கே இப்படி கோவப்பட்டால்........வருடத்தில் பதினோரு மாதம் இளவரசி இல்லாமல் நாங்கள் எரிமலையாக அல்லவா குமுறனும்.????????

    சரிதான் சார் எங்க XIII டீம என்ன சொல்ரது ?

    ReplyDelete
  7. Tiger art work super.அதுபோல கதையும் நன்றாக இருக்கும் என தெரிகிறது. Xiii ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆவன செய்யுஙகள் சார்.TeX பற்றிய செய்திகள் அடிக்கடி இடம் பெற வேண்டும் சார். நன்றி.

    ReplyDelete
  8. We want TeX,tiger , xiii.லயன் ஆண்டு மலர் மற்றும் முத்து ஆண்டு மலர் இரட்டை காம்போ specialஆக வெளியீடு நன்றாக இருக்கும் என தோன்றுகிரது சார்.

    ReplyDelete
  9. Hello E.V sir,Salem vijay sir,TeX vijay sir எழுந்து வாருங்கள்.சீக்கிரம் ,comments 15 தாண்ட போகிரது.kanesh Kumar வாங்க சீக்கிரம்.

    ReplyDelete
    Replies
    1. தோ.. வந்திட்டேன்! நீங்க கூப்பிட்டு வராம இருப்பேனுங்களா? நன்றி நண்பரே!

      எல்லா நண்பர்களுக்கும் குஜாலான ஞாயிறு வணக்கம்!

      Delete
    2. நானும் வந்துட்டேன்.

      Delete
  10. No 16 .படித்து விட்டு வருகிறேன். ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு காலை வணக்கம்.

    ReplyDelete
  11. வாங்க. ச் ர ன் செல்வி.good m o r n i n i n g.

    ReplyDelete
  12. தொடரும் மாதங்களில் சூன்ய மாதம் லேது என்ற தங்களின் உறுதி மொழிக்கு நன்றி..நன்றி. ..

    ReplyDelete
  13. சந்தா சொதப்பலால் ( என்னுடைய தவறினால்) இம்மாத இதழ்களை தவற விட்டு விட்டேன் எல்லோரும் கர்னலை யும் லார்கோ வையும் கிராபிக் நாவலை யும் சிலாகிப்பதை பார்த்தால் ஆவல் தாங்க வில்லை
    எனவே சீக்கிரமே சந்தா வை சரி செய்து விட்டு பழைய பன்னீர் செல்வமாக வருகிறேன் வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே

    ReplyDelete
  14. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் காலை வணக்கங்கள்..

    ReplyDelete
    Replies
    1. பழைய பன்னீர் செல்வமா வரணும்.😛😛😛😛😛

      Delete
  15. சென்ற பதிவிலேயே லயன் லோகோ இடம் பெறாதாதை சுட்டி காட்டி இருந்தேன் நண்பர்கள் யாரும் அதை கவனிக்காமல் சென்று விட்டனர்.
    மனதிற்குள் ஆண்டு மலரையும்,லயன் 300 ரை ஒன்றாக கொண்டு வர உள்ளதாக பட்சி சொன்னப் போதிலும் புத்தகங்களின் வரிசை சரியாக தெரியவில்லை. (ஊரில் இருந்தால் அடுத்த cricket world cup listயை finger printல் வைத்து இருப்பேன்.அதுபோல் நமது லயனை ....)but?????
    நான் இழந்தது குடும்பத்தை மட்டுமல்ல நமது இதழ்களையும் தான்என்பதை குறிப்பிட்டு தீர வேண்டும்.

    ReplyDelete
  16. மே மாத இதழ்களின் விமர்சனம்:

    க.) ஒரு முடியா இரவு

    அட்டைப்படம் : அருமை
    சித்திரங்கள் : அருமை
    கதை : அருமை
    ஒரு வரி விமர்சனம்: ஒரு இரவுக்குள் நடக்கும் சம்பவங்கள் தான் எத்தனை….மாறி போகும் வாழ்க்கை கணக்குகளை தெளிவாக சொல்லும் கதை…!!

    உ) லார்கோ வின்ச்

    அட்டைப்படம் : அருமை
    சித்திரங்கள் : அருமை
    கதை : சுமார்
    ஒரு வரி விமர்சனம்: வழக்கமான விறுவிறு இல்லை….வேகம் இல்லை….மொத்தத்தில் கொஞ்சம் ஏமாற்றம் தான்….!

    ங) கர்னல்
    அட்டைப்படம்: அருமை
    சித்திரங்கள் : அருமை
    கதை : சுமார்
    ஒரு வரி விமர்சனம்: சுமாரான கதை … எதிர்ப்பார்த்த முடிவு ….!!!

    ச) டேவிட் & லாரன்ஸ்
    அட்டைப்படம்: சுமார்
    சித்திரங்கள் : அருமை
    கதை : சுமார்
    ஒரு வரி விமர்சனம் : எப்போ படிச்ச கதை…மீண்டும் படிக்கும் போது , நிறைகளை விட குறைகளை அதிகம் தெரிந்தது….அறியாமையை இழந்தது புரிகிறது மறுபதிப்புக்களை படிக்கும் போது…!!!

    ReplyDelete
    Replies
    1. //ஒரு முடியா இரவு: ஒரு இரவுக்குள் நடக்கும் சம்பவங்கள் தான் எத்தனை….மாறி போகும் வாழ்க்கை கணக்குகளை தெளிவாக சொல்லும் கதை…!!//
      +1

      Delete
  17. இனி ஒவ்வொரு மாதமும் நமக்கு கிட்டும் சுவீட் பாக்ஸில் டெக்ஸ் என்ற பால்கோவா(இனிப்புகளில் எனது all time favorite) இடம் பெறும் என்ற நமது ஆசிரிருக்கு ஒரு வண்டி மாம்பழம் பார்சல்.(அங்கு பங்குனி,சித்திரை திருவிழா போல் .இங்கு மாங்கனி திருவிழா )....
    இப்படி பட்ட திருவிழாவிற்கு ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பு விடுக்க ஆசை .வீடு கட்டிய பிறகு என்றாவது ஒருநாள் என் கனவு நிறைவேறும் என்ற நம்பிக்கை நிறைய உள்ளது.நன்றி

    ReplyDelete
  18. இனிய ஞாயிறு காலை (சனி இரவு) வணக்கம் எடிட்டர் சார்!!!
    இனிய வணக்கங்கள் நண்பர்களே!!!

    ReplyDelete
  19. ஆர்டினின் அன்பு வணக்கங்கள்..!!

    ReplyDelete
  20. Eagerly waiting for the 'The Undertaker' sir...அட்டையில் 'தி அண்டர்டேக்கர்' என்றும் உள்ளே 'அறிமுகம்' என்றும் அச்சிடுங்கள் சார்...
    'தி அண்டர்டேக்கர்' என்ற தலைப்பே கூட ஓ.கே. தான் சார்...
    வேறேதேனும் தலைப்பு என்றால் நல்ல கெத்தான் தலைப்பா வையுங்கள் சார்!!!

    ஏனோ 'அண்டர்டேக்கர்' என்கிற பெயரும் அதே கருப்பு கோட் கருப்பு தொப்பியயையும் பார்த்தாலே மனதுக்குள் ஒரு உற்சாகம்...WWF-Undertaker effect என்று நினைக்கிறேன்!!!

    ReplyDelete
  21. லார்கோ வின்ச் அட்டகாசம்... கதை ஜெட் வேகம்... ஓவியங்கள் மூச்சிறைக்க செய்கின்றன. நகைச்சுவை பிரமாதம்....

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. இம்மாத இதழ்கள் ரேட்டிங் ;
    1.ஒரு முடியா இரவு-9/10,
    2.கர்னல் கிளிப்டன்-9/10,
    3.லார்கோ வின்ச். -9/10,
    4.லாரன்ஸ் & டேவிட்-8.5/10.

    ReplyDelete
    Replies
    1. என்ன ரவி, எல்லா மார்க்கையும் மைனஸ்ல போட்டு இருக்கீங்க??

      Delete
  24. காலை வணக்கம் சார் & நண்பர்களே _/\_
    .

    ReplyDelete
  25. லயன் 300 வது இதழும் ஆண்டு மலரும் ஒன்றாக வருவது மிக் மிக மகிழ்ச்சி சார்:-)
    அப்புறம் சந்தா தனித் தடமாகவே போட்டாச்சே சார்...அதிலே எந்த கதை வந்தாலும் படிக்க நாங்க ரெடி...அது ஹிட்டா ஹிட்டில்லையா என்றெல்லாம் ஆராய வேண்டாம் சார்..!!!

    எங்களுக்கு 'க்ரீன் மேனர்', 'தேவ ரகசியம் தேடலுக்கல்ல' போன்ற கதைகள் வேண்டும் சார்!!!

    ஒரு சின்ன கோரிக்கை சார்...என்ன தான் நீங்க இதற்கு பல முறை விளக்கம் சொன்னாலும்...லயன் ஸ்பெஷல் இதழில் முத்து காமிக்ஸ் ஹீரோக்கள் கதை வருவதும் முத்து ஸ்பெஷல் இதழில் லயன் நாயகர்கள் வருவதும் நெருடலாகவே உள்ளது சார்...

    'கோடை மலர்','கௌபாய் ஸ்பெஷல்' என்றால் கூட நாயகர்கள் கலந்து வருவது ஓ.கே. சார்...

    ஆனால் 'லயன் 300','முத்து 400' என பிரத்யேக இதழ்களில் இரு நாயகர்களும் கலந்து வருவது ஏனோ சின்ன நெருடலைத் தருகிறது சார்!!!

    ReplyDelete
  26. பாகுபலியையும், ஒரு art film-ஐயும் ஒரே நேரத்தில், ஒரே காம்ப்ளெக்சில் ஓடச் செய்தால் விசில்கள் பறப்பது எங்காக இருக்கக்கூடும் ? என்பதில் சந்தேகம் இருக்கத் தான் முடியுமா ?//
    நியாயமான கவலைதான்,சரியான முடிவுதான்.

    ReplyDelete
  27. // ஜுலையில் நமது ஆண்டுமலர் தருணம் காத்திருப்பதையும்; கூப்பிடு தொலைவில் கைதூக்கி நிற்கும் நமது லயன் # 300 இதழையும் ஒரே நேர்கோட்டில் ஒன்றிணைத்துப் பாருங்களேன் guys- ‘இது தான் அது... அது தான் இது...!‘ என்று சொல்ல விழையும் எனது திட்டமிடல் புரியும்.//
    என்னைப் பொறுத்தவரை சற்று ஏமாற்றமான முடிவு தான்,ஆண்டுமலர் தனியாகவும்,லயன் 300 ஸ்பெஷல் தனியாகவும் வந்திருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  28. அபி மே சன்டிகர் மே ஹூ

    செவ்வாய் கிழமை பாத் மே மார்க் குடுக்குறான்.

    டைகர் எப்ப சார் வருவார்?

    ReplyDelete
  29. ///கதையின் இடையிடையே "லூசுப் பசங்கள் " ; "மெண்டல்கள்" etc என்று நோயாளிகளை அந்தத் திருட்டுக் கும்பல் கூப்பிடுவது போலிருக்கும் வரிகளை எழுதியது சற்றே நெருடலாகவே இருந்தது ///

    80,90 களில் அறிமுகமாகும் ஹீரோயின்ஸ், பத்திரிக்கைக்கு பேட்டி குடுக்குறச்சே, கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்கத் தயாராக இருக்கிறேன்னு சொல்லுவாங்களே!!, அதுமாதிரி எடுத்துக்கிறோம் சார்.! இதற்கு நெருடல் எதற்கு? அந்த திருட்டுக்கும்பல்தானே அப்படி பேசுகிறார்கள், நாமில்லையே!!

    ReplyDelete
  30. // இந்த b&w கிராபிக் நாவல் பாணி நமது வாசிப்புக் களங்களுக்கு மெருகூட்டும் சாத்தியங்கள் பிரகாசமா ?//
    கிராபிக் கதைகளுக்கு தாரளமாக சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கலாம்,ஒரு முடியா இரவை வாசித்த பொழுது ஒன்று தெளிவாக புரிந்தது,இதனில் நீங்கள் பணி ஆற்றிடும் பொழுது கடினமாக இருந்திருக்கும் என்பதே,நல்ல மொழி பெயர்ப்பு, பொறுமையாக வாசித்தே ஆக வேண்டிய கதையோட்டம்.கலரில் கதைக்களம் அமைந்திருந்தால் இன்னும் அதன் பாய்ச்சல் சற்று வீரியமாக இருந்திருக்க வாய்ப்புண்டு,ஆனால் ஒரிஜினலே க & வெ எனும்போது நீங்களும்தான் என்ன செய்ய முடியும்.
    ஒரு முடியா இரவு மனதின் புதிரான எண்ணவோட்டங்களை சற்றே கவனித்து பார்க்கும் ஒரு படைப்பு,அடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றம் நம்மை தொற்றிக் கொள்கிறது,குறிப்பாக டேனியல் கதாபாத்திரத்திற்கு இறுதியில் ஏற்படும் மனச்சோர்வு (சரியான சொல் என்றுதான் நினைக்கிறேன்) மிகச்சரியாக அமைக்கப்பட்டுள்ளது,மார்வின் கதாபாத்திரம் தரும் திருப்புமுனை எதிர்பாராதது,மனித மனதின் புதிரான போக்குதான் எவ்வளவு வியப்பானது.

    ReplyDelete
    Replies
    1. +1

      ரசிச்சு ரசிச்சு படிச்சிருக்கீங்க ரவி அவர்களே!

      Delete
    2. Arivarasu @ Ravi : //மனித மனதின் புதிரான போக்குதான் எவ்வளவு வியப்பானது.//

      +1

      Delete
  31. ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள்.

    தற்சமயம் மறுபதிப்புகளாக வந்துகொண்டிருக்கும் இரும்புக்கை மாயாவி, லாரென்ஸ் & டேவிட், ஜானி நீரோ, ஸ்பைடர் கதைகள் மனதுக்கு முழு நிறைவை தருகிறது. முன்பு வெளியான சமயம் பாதுகாத்து வைத்திருந்து தற்போது நம் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைக்க தவறிவிட்டோமே என்ற வருத்தத்தில் இருந்த என்னைபோன்ற வாசகர்கள் பலரும் இந்த சேவையை ஒரு வரமாக உணர்வதை இங்கு பதிய விரும்பும் வேளையில் உங்களால் ஏற்றுகொள்ளகூடிய நிறைவேற்றமுடிகிற ஒரு விண்ணப்பத்தையும் முன் வைக்கிறேன்.

    கீழ்காணும் கதைகளை மறுபதிப்புகளாக ஒரே புத்தகமாக ஸ்பெஷல் வெளியீட்டாக வெளியிட்டால் என்னைபோன்ற பல இதயங்கள் மகிழ்ச்சியில் துள்ளும் என்பதை இதை வாசிக்கும் பல வாசகர்கள் ஏற்றுகொள்வார்கள் என்றும் நம்புகிறேன்.

    பல வாசகர்களை பலவிதங்களில் கவர்ந்த பல கதைகளுள் இக்கதைகள் தவிர்க்க முடியாத இடங்களை பிடித்திருக்கும் என்பது வாசகர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியருக்கும் தெரிந்த விஷயமாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை.

    வாசகர்களுக்கும் ஒரு வேண்டுகோள். இந்த கதைகள் மறுபதிப்புகளாக வந்தால் எந்த அளவு வரவேற்பு இருக்கும் என்பதையும், எந்த அளவு தற்கால வாசகர்களை திருப்திபடுத்தும் என்பதையும், கதைகளை பற்றிய உங்கள் கடந்தகால அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வது ஆசிரியருக்கு ஒருவித உத்வேகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தலாம் என்றும் எண்ணுகிறேன்.

    புத்தகத்தின் தலைப்பு: எக்ஸலென்ஸ் ஃபார் எவர் ஸ்பெஷல்
    1) புதையல் வேட்டை – ரிப் கிர்பி – முத்து
    2) மடாலய மர்மம் – காரிகன் – முத்து
    3) நெப்போலியன் பொக்கிஷம் – ஜார்ஜ் - முத்து
    4) மர்ம தலைவன் – மாண்டிரெக் – முத்து
    5) ரயில் கொள்ளை – சிஸ்கோ கிட் – முத்து
    6) கானக கள்வர்கள் – வேதாளர் – முத்து
    7) சதி வலை – ஜான் மாஸ்டர் – லயன்
    8) கழுகு மலை கோட்டை – மாடஸ்டி – முத்து (சமீபத்திய மறுபதிப்பை வாங்க என்னைபோலவே வேறுபல வாசகர்களுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது என்ற எண்ணம் என்னுள் உண்டு)

    புத்தகத்தின் தலைப்பு: இரும்பில் ஒரு இதயம் - ஆர்ச்சி ஸ்பெஷல்
    1) ஆர்ச்சி கதைகள் அனைத்தும் (11) – ஆர்ச்சி – லயன்

    டெக்ஸ் வில்லர் ஸ்பெஷல் வெளியீட்டுக்கு இந்த தலைப்புகள் பொருத்தமாக இருக்குமா?
    1) இது டெக்ஸ் ராஜ்ஜியம் – டெக்ஸ் ஸ்பெஷல்
    2) கழுகு சாம்ராஜ்ஜியம் – டெக்ஸ் ஸ்பெஷல்
    3) வில்லன்களுக்கு ஒரு வில்லர் – டெக்ஸ் வில்லர் ஸ்பெஷல்

    ஆசிரியரே, உங்கள் எண்ணம் என்னவாக இருக்கும்?

    ReplyDelete
    Replies
    1. Excellent idea bro , I hope , all comics fans must support this idea ,

      Delete
    2. ஆதரவுக்கு நன்றி நண்பர்களே.
      இதுவரையிலும் சிறு அளவிலேயே ஆதரவுகள் கிடைத்திருந்தாலும் ஆசிரியர் ஆவன செய்வார் என்று நம்புவோம்.

      Delete
    3. Muthu V : நண்பரே...மறுபதிப்புகளுக்கென ஒரு சீரான ; லிமிடெட் தடத்தை ஒதுக்கியான பின்னே, அதன் பொருட்டு மேலும் மேலும் உழைப்பையும், உங்கள் பணங்களையும் விரயம் செய்ய வேண்டாமே ?

      தற்போதைய மாயாவி & கோ.வின் சுற்று முடிவுறட்டும் ! அப்புறமாய் அடுத்த oldies projects பற்றி யோசிப்போமே ?

      Delete
    4. மறுப்பதிப்புகளில் இரண்டிரண்டு கதைகளாக வெளியிட்டு கூடிய விரைவில் முற்றும் போடலாமே.

      Delete
    5. ஆசிரியரே, உங்கள் இடத்தில் இருந்து, அனைத்து வாசகர்களின் எதிர்பார்ப்புகளையும் உடனடியாக பூர்த்திசெய்வது என்பது கடினமான காரியம்தான். இந்த களத்தில் அனைவரையும் திருப்திபடுத்துவது என்பது எளிதான காரியம் அல்ல. புரிந்துகொள்ளமுடிகிறது. தமிழகத்தின் காமிக்ஸ் உலகில் உங்களின் பங்கு சேவை பாராட்டுதலுக்குறியது. இதை மீண்டும் மீண்டும் சலிப்பின்றி சொல்லிகொண்டே இருக்கலாம். உங்கள் கருத்துக்கு நன்றி.

      Delete
    6. கருத்துக்கு நன்றி ஆசிரியரே.

      Delete
  32. நேற்றிரவு ஒரே மூச்சில் லார்கோ கதையைப் படித்துமுடிக்க நேரம் ஒதுக்கிய விதிக்கடவுள் ஷாய்'க்கு நன்றி!

    ***பிடிச்சிருக்கு... பிடிச்சிருக்கு...****
    கதை ஜெட் வேகம்!!! ஓவியங்கள் பிரம்மிக்கச் செய்கின்றன! வண்ணங்கலவைகள் (குறிப்பாய் பச்சை மற்றும் நீல வண்ணங்கள்) கண்களுக்குள் குளிர்காற்றை வீசிச் செல்கின்றன!
    சில்க்கியும், சைமனும் சிரிக்க வைக்கிறார்கள்! இத்தனை ஆல்பங்களுக்குப் பிறகும் பெரியவர் நெரியோ வின்ச்சை ஃப்ளாஸ்பேக்கில் பயன்படுத்தியிருப்பது ஆச்சர்யம்!
    அட்டைப்படங்கள் - அருமை! குறிப்பாக, பின்னட்டை செம!
    சில பல இடங்களில் வசனங்களைக் கையாண்டிருக்கும் நேர்த்தியைப் பார்க்கும்போது "பாத்தீங்களா.. பாத்தீங்களா எங்க எடிட்டரை.."னு தானாகவே ஒரு பெருமை வந்து ஒட்டிக்கொள்கிறது!

    **** புடிக்கல... புடிக்கல... *****
    'சதுரங்கத்திலொரு சிப்பாய்' என்ற தலைப்பு - புடிக்கல அல்லது புரியல!
    'இயற்கையை' ரசிக்கவிடாமல் குறுக்காலே தடையாக வந்து நிற்கும் டயலாக் பலூன்கள்! ;)

    ReplyDelete
    Replies
    1. படிக்கல..படிக்கல...கதைய இன்னும் கதைய இன்னும் படிக்கல..!!

      Delete
    2. //சில பல இடங்களில் வசனங்களைக் கையாண்டிருக்கும் நேர்த்தியைப் பார்க்கும்போது "பாத்தீங்களா.. பாத்தீங்களா எங்க எடிட்டரை.."னு தானாகவே ஒரு பெருமை வந்து ஒட்டிக்கொள்கிறது! //
      உண்மை,ஆசிரியரின் சிறந்த மொழிபெயர்ப்பு கதையின் ஓட்டத்திற்கு நல்ல பலம்,கர்னல் கிளிப்டனின் கதையை ரசித்து படிக்க சிறந்த மொழி பெயர்ப்பும் ஒரு காரணம்.

      Delete
    3. ஈரோடு விஜய் : //'சதுரங்கத்திலொரு சிப்பாய்' என்ற தலைப்பு - புடிக்கல அல்லது புரியல!//

      செஸ் ஆடிய அனுபவமிருப்பின் யூகிக்க முடிந்திருக்கும் பூனையாரே ! ஆட்டத்தில் சர்வ வல்லமை படைத்த piece - QUEEN தான் ! கடைநிலை piece -கள் சிப்பாய்(கள்) ! ஆனால் தேர்ந்த ஆட்டக்காரராக இருப்பின், சிப்பாயைக் கொண்டே ராணியை வீழ்த்தவும் சாத்தியமாகும் !

      இந்தக் கதையின் சூத்ரதாரி சிபில் தான் QUEEN ! லார்கோவை ஒரு சாதாரண சிப்பாயாய் பயன்படுத்த எண்ணிடுகிறாள் ! ஆனால் சிப்பாய் இறுதியில் வைக்கும் checkmate தான் கதையே !

      இப்போது தலைப்பை மறுபரிசீலனை செய்து பாருங்களேன் ?

      Delete
    4. அப்புறம் "இயற்கையை" ரசிக்க சுலப வழி - CINEBOOK லார்கோ ! Only ரூ.400 !! ஹி..ஹி..!

      Delete
    5. // CINEBOOK லார்கோ// அங்கேயும் நிறைய சென்சார். ஒரே வழி ஒரிஜினல் தான்.

      Delete
  33. இன்றைய தினமலர் பேபப்பரில் படிக்கலாம் வாங்க பகுதியில் நமது
    இரும்புக்கைமாயாவியின் இயந்திரத்தலை
    மனிதர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
    டெக்சின் படங்களை பார்க்கும்போது
    மாயாவியின் நடுநிசிகள்வன் மான்டிஜுமா
    நினைவுக்குவருகிறார்.மறுபதிப்பு எப்போது
    ஆசிரியரே???.தயவுசெய்து தற்போது
    வந்து கொண்டிருக்கும் இரு வித புத்தக
    அளவினைதவிர வேறு வித அளவில்
    மாற்றம் செய்ய வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. ganesh kv : மான்டிஜுமா - சீக்கிரமே !!

      Delete
    2. நன்றி சார்.

      Delete
  34. நான் கடந்த வாரம் ரொம்ப பிஸியாக இருந்ததால். சரியாக பதிவிட முடியவில்லை.

    சென்ற வார கேள்விகான பதில்

    நல்ல கதையும் சித்திரங்களும் இருக்கும் பட்சத்தில் அந்த கதை லண்டனாக இருந்தால் என்ன? அன்டார்டிக்காவாக இருந்தால் என்ன?.எங்களுடைய எதிர்பார்ப்பு உங்களுக்கு தெரியும். மேலும் அடுத்த வருடம் புதிய காமிக்ஸ் வெளியிட்டாக வேண்டிய கட்டாயம். BEN 10 The 99 போன்ற நல்ல லண்டன் படைப்புகளை எதிர்பார்கிறேன்.

    மாதம் நன்கு என்பது எனக்கு யானை பசிக்கு சோளப்பொரி அளவுக்கு கூட இல்லை. ட்ராங்கோவ படிச்சிகிட்டே இருக்கும் போது டக் குன்னு முடிச்சு போச்சு. பெரும்பாலன மாதங்களில் காமிக்ஸ் வந்த முதல் நாளே டெக்ஸை தவிர மற்ற மூன்று காமிக்ஸ் ஸையும் படித்து வடுவேன். அதிலும் ஆரம்பிப்பது கார்ட்டூனில் இருந்து.

    ReplyDelete
    Replies
    1. Ganeshkumar Kumar : 2018 இரவுக் கழுகாரின் ஆண்டு !! தயாராகிக் கொள்ளுங்கள் சார் !!

      Delete
    2. //மாதம் நன்கு என்பது எனக்கு யானை பசிக்கு சோளப்பொரி அளவுக்கு கூட இல்லை.//
      +1

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. இப்படி சொல்லி பயமுறுத்தறதே வேலையாபோச்சு. 2018 full-லா A to Z 48 டெக்ஸ் காமிக்ஸ்ஸூ போட்டு தாக்கிடுங்க. அப்படியே தொடரும் வருடம் செய்யுங்கள். எப்ப டெக்ஸ் முடியுதோ அப்ப புது முயற்சி எல்லாம் செய்யலாம். எனக்கும் காமிக்ஸ் படிக்கிறது இருந்து ஓரு 5 அல்லது 6 வருஷம் ரெஸ்ட் எடுத்தா மாதிரி இருக்கும்.

      Delete
    5. WHY THIS KOLAVERI? ???

      Delete
    6. சூப்பர் கணேஷ் குமார்.அப்படியே ஒரு 20 வருடம் எங்கையாவது பாரீன் டூர் அடித்தீர்கள் என்றால் அதற்குள்ளாக அனைத்து டெக்ஸையை முடித்து ஆசிரியர் குரங்கு பல்டி யாவது அடித்து அப்போதைய டெக்ஸ் புதிய தொரை கையில் எடுக்க முயற்சி செய்து இருப்பார்.

      Delete
  35. Goodmorning sir.. Have a joyfull Sunday .

    ReplyDelete
  36. ///என்ன - அந்தச் சிறுத்தைக்குக் கதையின் ஓட்டத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் பங்கு தந்திருப்பின்- ///

    ரசூல், கர்னல் தன்னுடன் வந்துதான் ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தும்போது, கர்னல் முகத்தை கடுகடுப்பாக வைத்துக்கொண்டு "என்னாது " என்று பெரிய எழுத்துகளில் கத்துவார். அப்போது பின்னனியில் பப்ளிமாவின் உறுமல் சத்தம் கேட்கும். அடுத்த பேனலில் பயந்த முகபாவத்தோடு "என்னாது " என்று மெதுவாக சிறிய எழுத்துகளில் கேட்பார்.

    கதையில்
    நான் ரசித்த பல விசயங்களையும் நண்பர்கள் எழுதியிருந்தனர். நிறைவாக இருந்தது . ஆனால் இந்த விசயம் மட்டும் மிஸ்ஸிங்.


    சோ, அயாமே களத்துல எறங்கி சொல்லிஃபையிங்..!

    ReplyDelete
    Replies
    1. +1

      அந்த சின்ன, பெரிய 'என்னாது'களையும், நடுவே கிளிப்டனின் முகபாவத்தையும் நானுமே ரொம்ப்ப்ப ரசித்தேன்! :)

      Delete
    2. நமது கர்னலை தமிழில் சினிமாவாக்கினால் - அந்த வேஷத்தைச் செய்யக் கூடியது யாராக இருக்குமென்று யோசித்துப் பாருங்களேன் guys ?

      Delete
    3. ////நமது கர்னலை தமிழில் சினிமாவாக்கினால் - அந்த வேஷத்தைச் செய்யக் கூடியது யாராக இருக்குமென்று யோசித்துப் பாருங்களேன் guys ?///

      கொஞ்சம் புதுமுக நடிகர்தான் சார். ஆனா பர்ஃபாமன்ஸுல பட்டையக் கிளப்பிடுவார். சிவகாசில எடிட்டரா இருக்கார். பேர்தான் ஞாபகத்துக்கு வரமாட்டேன்றது!

      Delete
    4. காமெடி நடிகர் சாம்ஸ் அவர்களின் முகம் கர்னல் கிளிப்டனின் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கும்.

      Delete
  37. ///! இந்த b&w கிராபிக் நாவல் பாணி நமது வாசிப்புக் களங்களுக்கு மெருகூட்டும் சாத்தியங்கள் பிரகாசமா ? என்பதை நீங்கள் ஊர்ஜிதம் செய்யின் - எனது திட்டமிடல்களுக்கு அவை ரொம்பவே சகாயம் செய்திடும் ! ///


    க/வெ கிநாக்கள் அதிகம் வெளியிடாமல் வருடம் ஒரு ஆறு மட்டும் வெளியிடுங்கள் சார் போதும்.!
    கலரில் ஆறு, க/வெ யில் ஆறு என ஒரு 12 மட்டும் 2018 அட்டவணையில் வந்தால் போதும். .! அதிக ஆசையெல்லாம் எனக்கு எப்போதும் கிடையாதுன்னும் இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்..!! :-)

    ReplyDelete
    Replies
    1. :D

      ஆமா ஆமா ஆமா!

      'ஆசையே துன்பத்திற்குக் காரணம்'னு அறியாத குழந்தைப்பசங்களா நாங்கள்லாம்? வருசத்துக்கு 12 கி.நா'கள் போதும்! அட்ஜீஸ் பண்ணிக்கறோம்! :)

      Delete
    2. கி.நா. வருடத்திற்கு 12 போதாது மாதம் இரண்டு வரவேண்டும்

      Delete
    3. KiD ஆர்டின் KannaN & all : 2018 -ன் கி.நா. அட்டவணையில் வண்ணமும், b & w -ம் சரி விகிதத்தில் இருக்கும் !

      Delete
    4. /// 2018 -ன் கி.நா. அட்டவணையில் வண்ணமும், b & w -ம் சரி விகிதத்தில் இருக்கும் !///

      அதில் 12 இதில் 12 என்ற சரிவிகிதத்திலா சார்னு மனசு கேக்கச் சொன்னாலும் .. . .!! :-)

      Delete
  38. கர்னலுக்கொரு சிறுத்தை...


    முன்பின் இரு அட்டைப்பட ஓவியங்களும் அசாத்திய அழகு எனில் கதையும் அவ்வாறே..மறுவரவான முதல் சாகஸத்தில் சுமாராக தோன்றிய கரனல் இரண்டாம் சாகஸத்தில் பரவாயில்லை ரகத்தில் இருக்க இச்சாகஸத்தில் பட்டையை கிளப்பி அசத்தி விட்டார்.இம்மாதம் வெளிவந்த ஆக்‌ஷன் ஹீரோ லார்கோ சாகஸம் காமெடியுடன் கலக்க காமெடி கர்னலோ ஆக்‌ஷனுடன் காமெடியில் கலக்குகிறார்..அழகான ..அமர்க்களமான மொழிபெயர்ப்பு நகைக்க வைத்து கொண்டே இதழை பரபரவென புரட்ட வைத்தது. கர்னல் தான் காமெடி கர்னல் என்றால் வில்லனின் அடியாள் காமெடியில் கர்னலை முந்துகிறான் ..

    " சுதந்திரத்துக்கு விலை மதிப்பே கிடையாது...அதை விக்க துணியறவன் பின்னே ஒப்பாரி தான் வைப்பான் " போன்ற வசனங்கள் சீரியஸாக தோன்றினாலும் திருமணமாகாத இளம் வாலிபர்களுக்கான எச்சரிக்கையாகவும் எடுத்து கொண்டு புன்வறுவலையும் ஏற்படுத்தியது..

    காமெடி கர்னல் ..சிக்ஸர்..



    மொத்தத்தில் போன மாதம் வந்த இதழ்களின் அனைத்து தர வரிசைகளில் ஒரு இதழே அனைத்து வரிசைகளையும் கைப்பற்றியதாக எனது பார்வையில் இருந்திருக்க இந்த மாதமோ அனைத்து இதழ்களுமே ஒரே முதல் வரிசையை கைப்பற்றிதாக எனது பார்வை மாறுபடுகிறது...

    ஆனால் டெக்ஸ் இல்லை என்பது குறையே என்பதையும் பலமாக மீண்டும் மீண்டும் தெரிவித்து கொள்கிறேன் ..இந்த அராஜகத்தை எதிர்த்து இன்று மீண்டும் "அராஜகம் அன்லிமிட்டேட்டில்" தலை நுழைக்கிறேன் ..நன்றி

    ReplyDelete
  39. தொடரும் காலங்ளில் “சூன்ய மாதம்” எதுவுமேயிராது என்ற உறுதியை இப்போதே பதிவிட்டு விடுகிறேன்!


    #########


    நன்றி...நன்றி ....நன்றி .....சார்...:-)

    ReplyDelete
  40. 4 இதழ்களுள் – லயன் காமிக்ஸ் ஒரு இடம் கூடப் பிடித்திருக்கவில்லை எனும் போதே அதன் பின்னுள்ள காரணத்தை கவனிக்க முயற்சித்திருப்பீர்கள் என்று நினைத்தேன் !

    ######

    ஆண்டுமலர் லயன் 300 ஒன்றினைவதை எதிர் பார்க்க வில்லை சார்...ஆனால் ஏதாவது ஒரு சிறப்பு வெளியீட்டு வரிசைக்காக தான் லயன் வெளியீடு இருந்திருக்காது என்பதை யூகித்திருந்தேன் ...:-)

    ReplyDelete
  41. கதையின் இடையிடையே "லூசுப் பசங்கள் " ; "மெண்டல்கள்" etc என்று நோயாளிகளை அந்தத் திருட்டுக் கும்பல் கூப்பிடுவது போலிருக்கும் வரிகளை எழுதியது சற்றே நெருடலாகவே இருந்தது


    ########


    கண்டிப்பாக தவறு அல்ல சார்...கதையினுள் அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு அமைவது தான் சிறப்பு...அப்பொழுது தான் உண்மையாகவே அந்த கதாபாத்திரங்களோடு ஒன்ற முடியும்...இந்த மொழிபெயர்ப்பே சரியான ஒன்று....

    ReplyDelete
    Replies
    1. ///கண்டிப்பாக தவறு அல்ல சார்...கதையினுள் அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு அமைவது தான் சிறப்பு...அப்பொழுது தான் உண்மையாகவே அந்த கதாபாத்திரங்களோடு ஒன்ற முடியும்...இந்த மொழிபெயர்ப்பே சரியான ஒன்று....///

      +1

      Delete
  42. பதிவுகளில் இறுதியாக வரும் குட்டி தகவல்கள் எப்போதுமே மகிழ்ச்சியை கூட்டும்....தவறாக நினைக்க வேண்டாம் சார்...உண்மையை சொன்னால் இந்த முறை குட்டி தகவங்கள் மகிழ்ச்சியை விட " பயந்து வருது " மொமண்ட் தான் எனக்கு....:-)

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : தரணி போற்றும் தலீவர் இதுக்கெல்லாமா crocin தேடுவது ?

      Delete
  43. sir what about muthu mini comics? Eagerly waiting for under taker.Graphic novel wonderful. 🐴🌝😄😄🐴🐴🎅

    ReplyDelete
  44. அனைவருக்கும் வணக்கம்.

    நேற்றுதான் புத்தகங்கள் கிடைத்தன.

    லார்கோ
    கிளிப்டன்
    சந்தா E

    புதிதாக பிறந்த குழந்தையை(சந்தாE)யை கொஞ்சுவதுதானே முறை.
    அத்தனைபேரும் முறைவைத்து கொஞ்சியிருப்பதால் ஒரு மாறுதலுக்கு பெயர் சூட்டும்(மாற்றும்) வைபவத்தை துவங்குகிறேன்.

    புதுப்பெயர் (தலைப்பு)
    1.இரவுக்கு ஆயிரம் கண்கள்
    2.இது பொது வழி அல்ல.
    3.முள் முனையில் ஓர் இரவு.
    4.இரவுகள் இறப்பதற்கே.


    ReplyDelete
    Replies
    1. ///இரவுகள் இறப்பதற்கே.///

      செம!

      Delete
    2. அவர்கள் தொடங்கிய காரியத்தை அவர்களே நினைத்தாலும் முடிக்கமுடியாமல் போகுமல்லவா?

      தொடக்கம் மட்டுமே அவர்களுடையது, தொடர்ந்து நடைபெறுவதும் முடிவும் அவர்கள் வசம் இருப்பதில்லையே.! அந்த சாரம்சத்தை வெளிப்படுத்தும் பொருட்டே "ஒரு முடியா இரவு " என்ற தலைப்பு - கச்சிதமான ஒன்று என்பது என் கருத்து..!

      /// இது பொது வழி அல்ல // _ செம்ம..!!

      அதையே "ஒரு வழிப் பாதை "ன்னும் சொல்லலாமே? ஹிஹி..!! :-)

      Delete
    3. @ FRIENDS : சுவாரஸ்யமான பெயர்சூட்டல் படலம் தான் !! ஆனால் இந்தப் பெயரை நான் தேர்வு செய்ததோ சென்ற செப்டெம்பரில் - கைவசம் ஒரு துக்கனூண்டு கதைச் சுருக்கம் மாத்திரமே இருந்த வேளையில் ! அதுமட்டுமன்றி 2017 -ன் 36 புது இதழ்களுக்கும் ஒரே நேரத்தில் பெயர் வைக்கும் வைபவம் தலைக்குள் ஓடிக் கொண்டிருந்த நாட்களவை ! திரும்பிப் படுக்கும் போது ஒரு தலைப்பு தோன்றும் ...மல்லாக்கப் படுத்தால் - அதே தலைப்பு கண்றாவியாய் இருப்பது போல் உணரும்...!

      இந்த மல்லுக்கட்டுக்கு மத்தியில் "ஒரு முடியா இரவு" என்ற பெயர் வைத்ததுக்குக் காரணம் இல்லாதில்லை ! ஒற்றை இரவானது வாழ்க்கையை எவ்விதம் மாற்றி அமைக்கக் கூடிய வல்லமை படைத்தது என்பதையே highlight செய்திட நினைத்தேன் ! And ஓரளவுக்கு இந்தக் கதைக்கு இது பொருந்தியது போலவே பட்டது எனக்கு !

      இதன் ஒரிஜினல் (இத்தாலிய) பெயர் : THE CAGE !

      Delete
  45. Replies
    1. வருக,வருக பேபி ஸ்மர்ப் அவர்களே.

      Delete
    2. நண்பர்களே!

      இங்கே பேபி ஸ்மர்ஃப் ன்னு கமெண்ட்டியிருப்பது நமது அருமை நண்பர் சேலம் சுசீந்தரகுமார்தான். ஏதோ ஃபேக் ஐடின்னு நினைக்கவேண்டாம்.!
      ஸ்மர்ஃப் தனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்றும், சேலம் சுசீ என்பது ரொம்ப ஃபார்மலாக இருப்பதாகவும் கூறி, இந்தப் பெயரில் வருகைபுரிந்துள்ளார்.!!

      தளத்திற்கு நல்வரவு BABY SMURF என்கிற சுசீந்தர் அவர்களே!!

      Delete
    3. பேபிம்மா சுசீந்தருக்கு நல்வரவு!:)

      Delete
    4. குழந்தை சிரிப்பு... குழந்தை மனம். Welcome BABY SMURF

      Delete
    5. Thanks friends & Editor sir___/\____/\____

      Delete

  46. *“இளம் டைகர்” படலம் தொடர்கிறது... நம்மவரின் இளவயது சாகஸங்களோடு ! ஆல்பம் # 22 தயாரிப்பில் உள்ளது !
    *“இளம் டைகர்” படலம் தொடர்கிறது... நம்மவரின் இளவயது சாகஸங்களோடு ! ஆல்பம் # 22 தயாரிப்பில் உள்ளது ///
    இளம் டைகர் கதைகளை குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு வது வெளியிடுங்கள்.இருப்பில் பதிணோறு கதைகள் இருப்பதாக நீங்கள் சொன்னதாக ஞாபகம் ஸார்

    ReplyDelete
    Replies
    1. Jaya Kumar : நம் வண்டி நிற்பது "இளம் டைகர்" ஆல்பம் # 9 -ல் சார்......தற்போது 22 தயாரித்து வருகிறார்கள் அங்கே !

      Delete
    2. அப்ப அடுத்த கியர் போட்டு ஆக்ஸிலேட்டரை முடுக்கி விடுங்க சார். என்னாது பிரிலயா....வண்டிய அடுச்சு ஓட்டுங்க ஐயா.

      Delete
  47. Hai friends,i am a new comer to our blog. How type in tamil?

    ReplyDelete
    Replies
    1. நான் செய்வது தலையை சுற்றி மூக்கை தொடுவதுபோல இருக்கும். இருப்பினும் பகிர்ந்துகொள்வது உமக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
      அழகி தமிழ் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்து மைக்ரோசாப்ட் வேர்டு ஃபைலில் தமிழில் டைப் செய்து காபி பேஸ்ட் செய்வதுதான் என் வழி. எனக்கு எளிதாக இருக்கிறது. Use “Alt 3” option for Tamil Typing in Azhagi Software Application.
      நண்பர்கள் வேறு பல எளிதான வழியினை உமக்கு பரிந்துரைக்கலாம்.

      Delete
    2. நல்வரவு magesh kumar!

      நீங்கள் பயன்படுத்துவது ஆன்ட்ராய்டு இயங்குதளமெனில் தமிழ்விசை, செல்லினம், எழுத்தாணி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை 'play store'லிருந்து பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்தலாம். உபயோகிக்க எளிமையானவை. நன்கு கற்றுக்கொள்ள சிலபல நிமிடங்களே போதும்!

      Delete
    3. magesh kumar @ நல்வரவு!

      முதலில் உங்களுக்கு பிடித்த கருத்துகளுக்கு +1/+10/+100 என ஆரம்பித்து கூகிள் தமிழ் இன்புட் டூல் முலம் பதிவு போட ஆரம்பிக்கலாம்.

      மொபைல் முலம் என்றால் செல்லினம் மென்பொருள் முலம் தமிழில் பின்னோட்டம் இட ஆரம்பிக்கலாம்!

      Delete
  48. கதையின் இடையிடையே "லூசுப் பசங்கள் " ; "மெண்டல்கள்" etc என்று நோயாளிகளை அந்தத் திருட்டுக் கும்பல் கூப்பிடுவது போலிருக்கும் வரிகளை எழுதியது சற்றே நெருடலாகவே இருந்தது///
    திருட்டு கும்பல் அப்படி அழைத்தால்தானே கதையில் கெட்டவர்களாக அவர்கள் தெரிவர்.திருட்டு கும்பலை அவ்வாறுதானே காட்டமுடியும் எனவே அனைவரும் இதை சாதாரணமாகவே எடுத்துக்கொள்வோம்.

    ReplyDelete
    Replies
    1. ///திருட்டு கும்பல் அப்படி அழைத்தால்தானே கதையில் கெட்டவர்களாக அவர்கள் தெரிவர்.திருட்டு கும்பலை அவ்வாறுதானே காட்டமுடியும்.///

      நியாயந்தானே..!! :-)

      Delete
    2. அக்காங்.. நியாந்தானே?!!

      'லூசுச் செல்லம்', 'மை டியர் மென்ட்டல்ஸ்'னு கூப்பிட்டா நல்லாவா இருக்கும்?

      ஆனாலும் நம்ம எடிட்டருக்கு இவ்வளவு வருத்தம் ஆகாதுங்க!

      Delete
    3. @ Friends : கதையோட்டத்தில் ஓரிடத்தில் டாக்டர் கிராஸ்மேனாய் அறிமுகம் காணும் அந்த குண்டு மனுஷர் பேசும் டயலாக் ஒன்றினை எழுதும் போது தான் எனக்குக் கொஞ்சம் கூடுதலாகவே நெருடியது...! பக்கம் 34-ஐப் பாருங்களேன் !

      Delete
    4. ஒரு நிபந்தனையின் பேரில்! அங்கே யாரையும் 'மெண்டல்,லூசு..பைத்தியம்'னு கூப்பிடக் கூடாது! ஓ.கே.வா?
      - இதானே சார்.

      Delete
    5. பக்கம் 34 ஐ தான் தேடி கொண்டிருந்தேன்...

      உங்களின் நெருடலுக்கு பதில் சொல்லும் விதமாக இந்த வசனத்தை, மார்ஜரி கூறியதாக நினைத்து எவ்வளவு நேரமாக தேடினேன் விமர்சனம் எழுதும்போது, ஆனால் கிடைக்கவில்லை.

      உங்களின் நெருடலுக்கு அவர் பேசும் வசனம் மூலமாக பரிகாரம் கிடைத்ததாக தான் நான் நினைத்தேன் சார். ஏன் என்றால் அவர்களின்(டேனியல், அலெக், வில்) மனநிலையில் அது கதைக்கு அவசியமே..

      Delete
    6. Arivarasu @ Ravi : இதுவே தான் சார் !

      Delete
  49. கர்னலுக்கொரு சிறுத்தை: தனது செல்ல குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வரும் கர்னல், அங்கே அவருக்கு காத்துக்கொண்டு இருக்கும் புதிய வேலை அதில் ஆரம்பித்து ரசூலை கைது செய்து சிறையில் அடைப்பது வரை கீழே புத்தகத்தை வைக்காமல் ஒரே முச்சில் படித்துமுடித்தேன்.

    இந்த கதையில் திருப்புமுனை ரசூல், கடைசி சில பக்கம்களில்தான் இவன்தான் இந்த கதையின் வில்லன் என புரிந்து கொண்டேன்.. சரியான ட்விஸ்ட்.

    அப்துல்லா உண்மையான நேர்மையான உழைப்பாளி என்னை மிகவும் கவர்ந்து விட்டார், அவரை சுற்றி புனையப்பட்ட நகைச்சுவையை மிகவும் ரசித்தேன், அது என்கிறேன் :-)

    கர்னல் மீண்டும் ஒருமுறை என்னை மிகவும் கவர்ந்து விட்டார்

    ReplyDelete
  50. ///
    *XIII மர்மங்கள் பட்டியலில் “ஜாதைன் ப்ளை” இதழ் # 11 ஆக வெளிவரவுள்ளது ஜூன் 2 -ம் தேதிக்கு !////

    'விரியனின் விரோதி' அளவுக்கு விறுவிறுப்பானதாக இருந்தால் இதை அடுத்தவருச ஸ்லாட்டில் களமிறக்க முயற்சியுங்கள் சார்! ( ஸ்பின்-ஆஃப் கதைகள்னாலே தலீவருக்கு குளிர்ஜுரம் கண்டிடுது பாருங்க) இரத்தப்படலத்தின் மறக்கமுடியாத கேரக்டர்களில் இந்த அமைதியே உருவான 'ஜோனாதன் ப்ளை'யும் ஒன்றாச்சே! இரண்டுவயது க்யூட் குட்டிப்பையனாக ஜேசன் ப்ளையை கையில் பிடித்தபடி, ஒடிசலான தேகத்துடன் இவர் ஒரு கிராமத்தில் வந்திறங்கும் அந்தக் காட்சி அப்படியே என் மனக்கண்ணில் நிற்கிறது!

    ஆனால் இதைப்போன்ற spin-off வகையறாக்களின் விற்பனை அளவீடுகள் இதுவரை மிதமான அளவுகளிலேயே இருந்துகொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுவது நிஜம்தானா எடிட்டர் சார்?


    ReplyDelete
    Replies
    1. ///இரண்டுவயது க்யூட் குட்டிப்பையனாக ஜேசன் ப்ளையை கையில் பிடித்தபடி, ஒடிசலான தேகத்துடன் இவர் ஒரு கிராமத்தில் வந்திறங்கும் அந்தக் காட்சி அப்படியே என் மனக்கண்ணில் நிற்கிறது!///

      நேக்கும்.. நேக்கும். .!!

      ஏதோ ஒரு ஆல்பத்தின் அட்டைப்படமாகவும் வந்திருக்கும். அந்தப் படத்தில் ஏதோவொரு இனம்புரியா லயிப்பு எனக்கும் உண்டு.!

      சில்மிஷம் செய்யவந்த அரைடஜன் போக்கிரிகளை போட்டுத்தள்ளிட்டு, ஒரு கையில் துப்பாக்கியும் மறுகையில் சிகரெட்டுமாக நிற்கும் பெட்டி பார்னோவ்ஸ்கியும் போஸும் எப்போதும் என் மனதில் நிழலாடிக்கொண்டே இருக்கும்.!

      Delete
    2. ///அந்தப் படத்தில் ஏதோவொரு இனம்புரியா லயிப்பு எனக்கும் உண்டு ///

      அடடே! உங்களுக்குமா?!! 'வயசுப் பசங்க திங்க் அலைக்'னு பெரியவங்க சொல்றது சரியாத்தானே இருக்கு!!! :)

      Delete
    3. //இரத்தப்படலத்தின் மறக்கமுடியாத கேரக்டர்களில் இந்த அமைதியே உருவான 'ஜோனாதன் ப்ளை'யும் ஒன்றாச்சே! இரண்டுவயது க்யூட் குட்டிப்பையனாக ஜேசன் ப்ளையை கையில் பிடித்தபடி, ஒடிசலான தேகத்துடன் இவர் ஒரு கிராமத்தில் வந்திறங்கும் அந்தக் காட்சி அப்படியே என் மனக்கண்ணில் நிற்கிறது!//
      ஒரு கிராமத்தில் வந்திறங்கும்: Greenfalls village...

      Delete
    4. /ஏதோ ஒரு ஆல்பத்தின் அட்டைப்படமாகவும் வந்திருக்கும். அந்தப் படத்தில் ஏதோவொரு இனம்புரியா லயிப்பு எனக்கும் உண்டு.!//
      ஆல்பம் 7..மனதை விட்டு நீங்கா அட்டை படம்...

      Delete
    5. ஈரோடு விஜய் : தலீவர் என்னடான்னா இப்போவே குளிர் ஜுர அறிகுறிகளோடு போர்வைகளைத் தேடத தொடங்கி இருக்க, இங்கே ஜானதன் பிளை பற்றி அலசல்களா ? நடக்கட்டும்..நடக்கட்டும்...!

      Delete
    6. @EV சின்ன கரெக்சன்...//அடடே! உங்களுக்குமா?!! 'வயசானப் பெருசுங்க திங்க் அலைக்'னு சிறிசுங்க சொல்றது சரியாத்தானே இருக்கு!!! :)//
      என் அக்கௌன்ட்டுக்கு பணம் இன்னும் வரலை

      Delete
    7. @ M.P

      ///என் அக்கௌன்ட்டுக்கு பணம் இன்னும் வரலை///

      இதை முன்னாடியே சொல்றதுக்கு என்னவாம்?

      செனா அனா ஜி... மிச்சம்மீதி இருக்கிற சில்லரைகளை டாலரா மாத்தி நம்ம அமெரிக்க எம்.பி'க்கு அனுப்பிவச்சுடுங்க. இல்லேன்னா, உங்க கழுத்தில கிடக்கிற டாலரையாவது சில்லரையா மாத்தி எப்படியாவது அனுப்பிவச்சுடுங்க. அந்நிய நாடுகளின் ஊடுருவல் தாங்கல.

      Delete
  51. தலைகேட்ட தங்க புதையல்: சிறுவயதில் படித்த கதைகளில் இன்றும் எனது மனதில் நீங்கா இடம் கதை.

    முதல் பக்கம்களில் அஸ்டெக் சரித்திரம் மற்றும் புதையல், அடுத்த சில பக்கம்களில் ஸ்பெயின் மக்கள் அடுத்து அடுத்து கடத்தபடுவது, அதனை கண்டுபிடிக்க நமது கதாநாயகர்கள் புறப்படுவது, கடத்தபட்டவர்கள் அஸ்டெக் புதையலை வெளிகொண்டுவரவே என்பதை கண்டுபிடித்து அவர்களை மீட்பது, என சுறுசுறுப்பாக சென்ற கதை ஸ்டீவென் ஸ்பீல்பெர்க்கின் ரைடர்ஸ் ஆப் தி லாஸ்ட் ஆர்க் & இன்டியனா ஜோன்ஸ் படம் பார்த்த உணர்வை கொடுத்தது!

    இந்த கதையை பற்றி நிறைய சொல்லலாம், எழுதலாம், குடும்ப வேலைகள் அதிகம் இருப்பதால் நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ///இந்த கதையை பற்றி நிறைய சொல்லலாம், எழுதலாம், குடும்ப வேலைகள் அதிகம் இருப்பதால் நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்!///

      நாளைக்கு ஆபீஸுக்குப் போய் எழுதுங்க, PfB! ;)

      Delete
    2. லாரன்ஸ் வாடிவாசல் காளை என அவர் ஜெயிலில் இருந்து வெளிவந்தார் என தற்போதைய சுழலுக்கு ஏற்ப வசனத்தை மாற்றி எழுதியது பாராட்டுக்குரியது.

      அதே நேரம் 52 பயணிகள் வந்த பஸ்ஸை ஒரு சில இடத்தில் பஸ் எனவும் பல இடம்களில் கார் என குறிபிட்டது நெருடியது!

      Delete
    3. ஈரோடு விஜய் @ டின்னு கட்டி புடுவானுங்க ஜி, அங்கேயும் வேலை ஜாஸ்தி!

      Delete
    4. Parani from Bangalore : அட..பஸ் கூட பெரியதொரு மோட்டார் கார் தானே சார் ?!

      Delete
  52. // XIII மர்மங்கள் பட்டியலில் “ஜாதைன் ப்ளை” இதழ் # 11 ஆக வெளிவரவுள்ளது ஜூன் 2 -ம் தேதிக்கு ! //

    XIII ரெண்டாவது சுற்றில் வீரியனின் விரோதி தவிர மற்ற எந்த கதையும் என்னை கவரவில்லை. தேவையில்லாமல் இந்த கதையை வெளிஇட்டு அடுத்தவருடத்தின் ஒரு ஸ்லாட் வீணாக்க வேண்டாம் என்பது எனது எண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : பரணி to பழனிவேல் ...ஓவர்...ஓவர்...!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. போராட்டகளம் தயார்.

      Delete
    4. அட போங்க பழனிவேல்! சும்மா சும்மா பொங்கினால் போராட்டத்துக்கு மதிப்பில்லாமல் போய்விடும்!

      அதுக்குதான் நமது XIII முழுத்தொகுப்பு வருகிறதே, அத கொண்டாடுவோம்!

      Delete
    5. அதான் சார் எப்ப வருதுங்கறது பஞ்சாயத்துல இருக்கே.

      Delete


  53. அண்டர்டேக்கரை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். ஆனால், நண்பர்களில் சில/பலரின் அபிப்ராயப்படி 'பிணத்தோடு ஒரு பயணம்' என்ற தலைப்பு ஒரு மாதிரியா இருக்கு.

    'சவத்தோடு ஒரு பயணம்'/ 'சடலத்தோடு ஒரு பயணம்'னு வச்சாலும் அதே எஃபெக்ட் தான்...
    'பாடியோடு ஒரு பயணம்'னு வச்சா உடனே நம்ம நண்பர்கள் கற்பனையை சிறகடிக்க விட்டுடுவாய்ங்க... வேணாம்! :P

    ஆங்! 'பூதவுடலோடு ஒரு பயணம்'? ம்ஹூம்.. சுமார் தான்!

    'உயிரற்ற உடலோடு ஒரு பயணம்'? - ரொம்ப நீளமாக்கீது!

    பேசாம அன்புத்தம்பி சத்யா சொன்னாப்ல 'அண்டர்டேக்கர்'னே இருக்கலாமோ? ரொம்பக் குழப்புதே... அது ஏன்கறேன்?!!

    ReplyDelete
    Replies
    1. பூனையாரே ஹா,ஹா,ஹா.

      Delete
    2. ஈரோடு விஜய் : "சவத்தோடு சடுகுடு.." ; " மண்ணிலொரு பரலோகப் பயணம் !" ; "காலனோடு கேளிக்கை" - இவற்றையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாமே ?

      Delete
    3. ////'உயிரற்ற உடலோடு ஒரு பயணம்'? - ரொம்ப நீளமாக்கீது! ////

      ஹா ..ஹா ... இதுவே நீளம்னா....

      FORBIDDEN BRIDES OF THE FACELESS SLAVES IN THE SECRET HOUSE OF THE NIGHT OF DREAD DESIRE
      இது ஷேக்ஸ்பியர் –லிருந்து மேற்கோள் எதுவும் இல்லை .. ஒரு காமிக்ஸ்-ன் தலைப்பு ...:)
      பிணத்தோடு ஒரு பயணம் .. மங்கல வழக்கு அல்ல என்பதாயின்
      ஜீவனற்ற யாக்கையுடனொரு யாத்திரை ...
      இப்படி தலைப்பு வச்சா தலைப்பு பத்தி ஒரு மாசம் விவாதம் ஓடி அடுத்த மாசம் புக் வந்திடும்...சேப் –ஆ இருக்கலாம் .:)

      Delete
    4. ஈரோடு விஜய் : கதையை படித்த பின்பு உங்களுக்கு புரிந்திடும், "பிணத்தோடு ஒரு பயணம்" என்ற தலைப்பே பொருத்தமாய் இருக்கிறது என்று :-))

      Delete
    5. ///FORBIDDEN BRIDES OF THE FACELESS SLAVES IN THE SECRET HOUSE OF THE NIGHT OF DREAD DESIRE
      இது ஷேக்ஸ்பியர் –லிருந்து மேற்கோள் எதுவும் இல்லை .. ஒரு காமிக்ஸ்-ன் தலைப்பு ...:) ///

      தலைப்பே இம்புட்டு பெரிஷ்ஷா!!!
      புத்தக அட்டையில இந்தத் தலைப்பைத் தாண்டி எதுவுமே இருக்காதே?!!
      அந்த ஊர் கடைகள்ல மக்கள் இந்த புக்கை எப்படிக் கேட்டுவாங்கனு யோசிச்சுப் பார்த்தேன்... "கடைக்காரரே... அந்த Forbidden brides of the... ம்... யோவ் அந்த பச்சைக் கலரு புக்கை எடுய்யா"

      @ Radja

      ஏற்கனவே அண்டர்டேக்கரை ஏழெட்டு தடவை படிச்சுட்டீங்க போலிருக்கே?!! சீக்கிரமே நானும் ஃப்ரெஞ்ச், இத்தாலி மொழிகளை கத்துக்கிட்டு சகட்டுமேனிக்கு படிச்சுத்தள்றேனா இல்லையா பாருங்க! இப்போல்லாம் தமிழ்ல இந்த டயலாக் பலூன்களின் தொந்தரவுவேற தாங்கமுடியலைன்றது ஒரு காரணம்!

      Delete
    6. ///ஜீவனற்ற யாக்கையுடனொரு யாத்திரை ...///

      ஆஹா!!! ஏதோ ஆன்மீக புத்தகத்தின் தலைப்பு மாதிரி மங்களகரமா இருக்கு!
      எடிட்டர் சார்... 'பிணத்துடன் ஒரு பயணம்' தலைப்புக்குப் பதிலா மேற்கண்டதை தலைப்பா வச்சீங்கன்னா, புத்தகத்தை பூஜை ரூம்லயே வச்சுக்கிடலாம்! ன்னான்றீங்க? ;)

      Delete
  54. மே மாத விமர்சனம்...

    லாா்கோ -அட்டகாசம்

    கிராபிக் நாவல் -பரவசம்

    க்ளிப்டன் -அமர்க்களம்

    லாரன்ஸ் டேவிட் - தங்கம் மரண பங்கம்

    இ.இணைப்பு -சந்தோஷம்

    ReplyDelete
  55. ஒரு முடியா இரவு சூப்பர் கதை.

    ReplyDelete
  56. @ edi

    Mudiya iravu forced me to drop a line of thanks.

    முடியா இரவு சூப்பர் ஒரே மாதிரியான கதைகளுக்கு நடூவே வித்தியாசமான முயற்சி. வருடத்துக் இது போன்று 6 தனிக் கதைகள் ஊறுகாய் போல் வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும் : நிச்சயமாய் இந்தத் தேடல்களைத் தொடருவோம் சார் !

      Delete
  57. Dear vijayan sir,

    I felt somewhat let down in milestone books of lion #300 and muthu #400. Its going to be another 7-8 years to reach such milestones.

    ReplyDelete
    Replies
    1. Mahesh : "பட்ஜெட்" என்றொரு கத்தியைத் தலைக்கு மேலே ஊசலாட விட்டபடிக்கே அட்டவணையைத் தயாரித்துத் தான் பாருங்களேன் நண்பரே - எனது சிரமங்கள் புரிந்திடும் ! ரெகுலர் இதழ்களே ரூ.75 என்றான பின்னே, ஸ்பெஷல் இதழ்களை ரொம்பவே களமிறக்கிவிட்டு நிறைய பர்ஸ்களை பொத்தல் போட மனம் ஒப்புவதில்லை !

      And அடுத்த landmark களை எட்டிப் பிடிக்க 7 - 8 ஆண்டுகள் ஏன் அவசியமாகிடப் போகிறது - தற்போதைய வேகத்தில் போனால் மூன்றே ஆண்டுகள் போதுமே ?!

      Delete
    2. I understand your position edi sir, we could have cut the tiger reprint and invested those budget in this milestone books.

      Delete
    3. Mahesh : Nopes....டைகர் மறுபதிப்பு - "விரும்பினால் வாங்கி கொள்ளலாம்" என்ற ரீதியிலான limited edition imprint ! அதற்கான தொகையோ / திட்டமிடலோ ரெகுலர் சந்தாவுக்குத் துளியும் தொடர்புடையது அல்லவே ?!

      Delete
  58. இன்னும் மே இதழ்கள் கைக்கு வந்து சேரவில்லை. சார், registered post வாசகர்களுக்கு கூரியர் அனுப்பும் அதே நாளில் அனுப்புவீர்களா? தற்போது ஒன்றிரண்டு நாள் கழித்து தான் அனுப்புகிறீர்கள். அது இங்கே UK வந்து சேர 10 நாட்கள் ஆகிவிடுகின்றன. பின்பு படித்துவிட்டு கருத்து எழுதலாம் என எண்ணும் போது இங்கு அடுத்த மாத சிலாகிப்புகள் போய்க்கொண்டு இருக்கும். தயவு செய்து முதலில் reg post அனுப்ப ஆவன செய்யுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவில் இருந்த போது மட்டும் கருத்து செல்லிட்டீங்களான்னு கேட்க கூடாது. என்னை பொறுத்த வரையில் நமது இதழ்களை அனுபவிக்கனும் ஆராயக்கூடாது.

      Delete
    2. Sankar C : சார்..ஏற்கனவே இதுபற்றிக் குறிப்பிட்ட ஞாபகம் எனக்குள்ளது.....கூரியர்கள் மிகுந்துவிட்ட இந்நாட்களில் தபாலாபீஸில் நிறையவே ஆள்பற்றாக்குறை ! நிறைய தற்காலிகப் பணியாளர்களை கொண்டு சமாளிக்கிறார்கள் ! So ஏர்-மெயில் பார்சல்களை மொத்தமாய்க் கொண்டு இறக்கினால், அன்றைக்கு எவ்வளவு அனுப்ப முடியுமோ - அதனை மட்டுமே புக்கிங் செய்கிறார்கள் ! இடைவெளி விட்டு அவை இங்கிருந்து கிளம்புவதற்கு முக்கிய காரணம் அதுவே !

      Delete
  59. தலை இல்லாத மாதத்தில்
    தலைகேட்டதங்கப்புதையல் வந்தது
    ஏதேனும் குறியீடா???

    ReplyDelete
  60. சேலம் டெக்ஸ் கவனிக்கவும்

    ReplyDelete
  61. ஒரு முடியா இரவு உண்மையிலே விடியா இரவுதான் ஏனென்றால் கதையின் மாந்தர்கள் கனவில் வந்ததால்,இது போல சிங்கிள் சாட் கதைகளை வருடத்திற்கு கலரில் 6,பிளாக் & ஒயிட் 6 மட்டும் போதும்.அப்புறம் அந்த சார்லி மற்றும் சைமன் கேரக்டர்கள் & பேசும் வசனங்கள் அசத்தல்,அதுவும் சைமன் விரக்தியுடன் பேசும் வசனம் யதார்த்தம் என்னுடைய ரேட்டிங் 9.5/10.

    ReplyDelete
    Replies
    1. BABY SMURF : வசனங்கள் பொருந்தி வந்திருப்பேன், அதற்கான பெரும் பங்கு - இதனை இத்தாலிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்து தந்த பெண்மணியையே சாரும் ! இத்தாலிய மொழியைத் தாய்மொழியாய்க் கொண்டவர் ; அங்கேயே வசிப்பவர் ; காமிக்ஸ் ஆர்வலர் - என்பதால் எனக்கு கிட்டிய ஆங்கிலப் படிவம் தெளிவாய் அமைந்தது ! இல்லாது போயின், இது போலொரு மாறுபட்ட களத்தில் ரொம்பவே தடுமாறிப் போயிருப்பேன் !

      Delete
    2. BABY SMURF @ வணக்கம் புதிய நண்பரே! தங்களை பற்றி சிறு குறிப்பு கொடுத்தால் இங்குள்ள அனைவரும் உங்களை பற்றி தெரிந்துகொள்ள உதவும்.

      Delete



    3. BABY SMURF @
      // இங்கே பேபி ஸ்மர்ஃப் ன்னு கமெண்ட்டியிருப்பது நமது அருமை நண்பர் சேலம் சுசீந்தரகுமார்தான். ஏதோ ஃபேக் ஐடின்னு நினைக்கவேண்டாம்.!
      ஸ்மர்ஃப் தனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்றும், சேலம் சுசீ என்பது ரொம்ப ஃபார்மலாக இருப்பதாகவும் கூறி, இந்தப் பெயரில் வருகைபுரிந்துள்ளார்.!! //

      இது நமது சுசீந்திரன் என்பதை புரிந்து கொண்டேன்! தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பரே!

      Delete
    4. Baby smurf ; அந்த மண்ட மேல இருக்கற கொண்டைய மறந்துட்டமே.போக்கிரில வர்ற அந்த காமெடி சீன்தான் ஞாபகம் வர்து.அது ஏன்கிறேன்.

      Delete
  62. ஒரு முடியா இரவு:
    மனதை விட்டு நீங்க மறுக்கும் சம்பவங்கள் நிறைந்த "Psychological thriller".

    பக்கம் 99 கடைசி பேனலில், ரூத் வெளிப்படுத்தும் அச்சம் என்னையும் தொற்றிக்கொண்டது. அது குறித்து பக்கம் 104ல் ரூத் மேலும் விவரிக்கையில், என்ன நடக்குமோ என்ற பயம் கலந்த ஆர்வத்தை தூண்டி, அனால் கடைசி வரை அப்படி ஏதும் நடக்காமல் கதையை நகர்த்தும் விதம் நச்.

    திட்டமிடாமல் நடக்கும் சில செயல்பாடுகள் மனிதனின் நிலைப்பாட்டை, மனநிலையை எவ்வாறெல்லாம் பாதிக்கும் என்பதை அலெக் மற்றும் டேனியல் கதாபாத்திரம் நிதரிசனமாக வெளிக்காட்டுகிறது.

    மார்வின்: மார்வின் நடிப்பு யூகிக்க கூடியதே ஆதலால் எந்த ஆச்சரியமும் ஏற்படவில்லை அனால் அவன் நாடகம் நடத்தும் விதம் ஆச்சரியப்படுத்த கூடியதே. இப்படியும் மனிதம் மனம் யோசிக்குமா என்று...

    அலெக்: கதையின் ஆரம்ப கட்டத்தில் தன்னை மீறி நடக்கும் ஒரு உயிர் பலியால், அலெக் மனநிலை கதை முழுவது தெளிவில்லாமல் சிந்தித்து, மேலும் மேலும் தவறுகள் செய்து, குழப்பத்தில் ஆழ்ந்து, என்ன செய்கிறோம் என்று உணராமல் தனது முடிவை தேடிக்கொள்வது பரிதாபத்தை உண்டாக்குகிறது

    டேனியல்: பணத்திற்காக மார்வினை கடத்த வந்த இடத்தில ஏற்படும் உயிர் பலியால், மனசாட்சிக்கு பயந்து தங்கள் மீது தவறில்லை என்று மார்ஜரியிடம் தங்கள் நிலைப்பாட்டை உணர்த்த டேனியல் படும் அவஸ்தை மற்றும் இறுதியில் தப்பிக்க வழி இருந்தும், தன உயிரை இழக்க தயாராவதும், டேனியல் கதாபாத்திரத்தின் மீது பச்சாதாபத்தை உண்டாக்குகிறது..

    சார்லி மற்றும் பீட்டர் கதாபாத்திரத்தின் ட்விஸ்ட் எதிர்பார்க்கா கிளைமாக்ஸ் உச்சம்...

    மொத்தத்தில், நோயாளிகளுக்கு ஏதும் நேர்ந்து விட கூடாது என்ற எண்ணத்தையும் மீறி, இவர்கள் மூவரும் தப்பித்து விட மாட்டார்களா என்ற எண்ணமே கதை நெடுகிலும் மேலோங்கி நின்றது என் மனதில்..

    இறுதியில் கூட, ச்சே டேனியல் மட்டுமாவுது தப்பித்து இருக்கலாமே என்று ஒரு இனம் புரிய கவலை மனதில் குடிகொண்டு விட்டது..

    ஏற்கனவே 9.5/10 மதிப்பெண் கொடுத்து இருந்தேன். B&W காக 0.5 குறைத்து இருந்தேன் அனால் ஒரிஜினலே B&W என்று ஆசிரியர் கூறிய பிறகு, மதிப்பெண்ணை குறைப்பது நியாயமாகாது

    ஆகையால் எனது மதிப்பெண் 10/10.

    ReplyDelete
    Replies
    1. Dasu Bala : //நோயாளிகளுக்கு ஏதும் நேர்ந்து விட கூடாது என்ற எண்ணத்தையும் மீறி, இவர்கள் மூவரும் தப்பித்து விட மாட்டார்களா என்ற எண்ணமே கதை நெடுகிலும் மேலோங்கி நின்றது என் மனதில்..//

      இந்தக் கதையைப் படிப்போர் அனைவருக்குமே எங்கேனும் ஒரு இடத்திலாவது அந்தத் திருடர் கும்பலின் மீது(ம்) பச்சாதாபம் தோன்றாது போகாது ! கதாசிரியரின் வெற்றியாக அதைப் பார்க்கிறேன் !!

      விரிவான விமர்சனம் - அட்டகாசம் !!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. @ Dasu bala

      வழக்கமாக '+1'களை மட்டுமே போட்டுச் செல்லும் உங்களையே இப்படி பத்திபிரித்து எழுத வைத்ததிலிருந்தே புரிந்துகொள்ள முடிகிறது - இக்கதை உங்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை!

      அபாரம்!!

      (இனியாவது) தொடர்ந்து எழுதுங்களேன்!

      Delete
    4. ///இந்தக் கதையைப் படிப்போர் அனைவருக்குமே எங்கேனும் ஒரு இடத்திலாவது அந்தத் திருடர் கும்பலின் மீது(ம்) பச்சாதாபம் தோன்றாது போகாது ! ///

      நான் ஒரு கம்பெனியில் மேனேஜர் தெரியுமா? ன்னு அலெக் சொல்லும்போதே அவர்கள் மேல் பச்சாதாபம் ஏற்பட்டுவிட்டது. இரு நண்பர்களையும் இழந்துவிட்டு புலம்பும் டேனியல் மீது கண்டீப்பாக எல்லோரும் "ச்ச்! பாவம்பா இவங்க "என்று நினைத்திருப்பார்கள்.!

      Delete
    5. ///நான் ஒரு கம்பெனியில் மேனேஜர் தெரியுமா? ன்னு அலெக் சொல்லும்போதே அவர்கள் மேல் பச்சாதாபம் ஏற்பட்டுவிட்டது.///

      அச்சச்சோ! நம்ம நண்பர்களிலும்கூட நிறையப் பேர் மேனேஜரா இருக்காங்களே கிட்ஆர்டின்? :D

      Delete
  63. இந்த மாத வெளியீடுகளில் க்ளிப்டன்"லார்கோ"முடியா இரவு"திட்டமிட்டு குறை காண முயன்றாலும் முடியாது;நிறைவான இதழ்கள்.க்ளிப்டன் ரொம்பவே சிரிப்புக்கு உத்தரவாதமான இதழ்.முடியா இரவு இன்னும் மீள முடியாத உணர்வுகளில் தவிப்பை ஏற்படுத்துகிறது.page to page ஏற்கெனவே பல நண்பர்களும் அலசி ஆய்ஞ்சுப்புட்டாங்க அப்பு.

    ReplyDelete
    Replies
    1. //முடியா இரவு இன்னும் மீள முடியாத உணர்வுகளில் தவிப்பை ஏற்படுத்துகிறது//
      +1

      Delete
    2. Sri Ram : //முடியா இரவு இன்னும் மீள முடியாத உணர்வுகளில் தவிப்பை ஏற்படுத்துகிறது//

      பன்ச் வரிகள் இல்லாமலும் ஒரு கதை சாதித்துக் கட்ட முடியுமென்பதை புரிய வைத்துள்ள கதை இது என்பேன் சார் !

      Delete
  64. Sir, நம்ம மறதிக்காரர் XIII, ஒரு அட்டையில் குட்டிப்பயைனாக ஒருத்தரோட கையப் பிடிச்சுக்கிட்டிருப்பாரே, அவர்தானே இந்த ஜோனதன் ஃப்ளை?

    ReplyDelete
  65. //நமது கர்னலை தமிழில் சினிமாவாக்கினால் - அந்த வேஷத்தைச் செய்யக் கூடியது யாராக இருக்குமென்று யோசித்துப் பாருங்களேன் guys ? //
    Manobala or Chaams(பயணம் படத்தில ப்ருத்விய கடுப்பேத்துவாரே...)?

    ReplyDelete
    Replies
    1. Podiyan : //பயணம் படத்தில ப்ருத்விய கடுப்பேத்துவாரே...)?//

      அந்த மொழு மொழு முகத்துக்காரரா ? அட..ஒரு சிகப்பு மீசையை ஒட்டி வைத்தால் கலக்கிடுவார் தான் !!

      Delete
    2. ஆமாம். அவர் கிரேஸி மோகன் டீமிலிருந்தவர்!

      Delete
    3. அவர் பெயர் சாம்ஸ்,அறை எண் 305 ல் கடவுள் என்ற படத்திலும் நடித்திருப்பார்.

      Delete
    4. நானும் அவரைத்தான் நினைத்தேன்.

      Delete
    5. நானும் அவரைத்தான் நினைத்தேன்.

      Delete
    6. அவர் பெயர் சாம்ஸ்,அறை எண் 305 ல் கடவுள் என்ற படத்திலும் நடித்திருப்பார்.

      Delete
  66. விஜயன் சார், XIII முழு வண்ண தொகுப்பு பற்றி எதுவும் சொல்ல முடியுமா!

    ஓவர் டு பழனிவேல்! (எப்படி நாங்களும் செய்வோம்ல :-) )

    ReplyDelete
  67. என் பெயர் டைகர் கதையை விட இந்த வருடம் வந்த ஜெரம்யா மிகவும் சுவாரசியமாக ரசிக்க பல விசயம்கள் இருக்கிறது. ஆனால் நம்மில் பலர் இதனை பிடிக்கவில்லை என சொல்ல காரணம் என்ன என்று எனக்கு புரியவில்லை, இதன் நாயகர்கள் சிறுவர்கள் என்பதாலோ?

    ReplyDelete
  68. ஒரு முடியா இரவை இன்று தான் முடித்தேன்..விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.திடுக் நிமிடங்களுடன் பயணித்த கதை படக்கென முடிந்த உணர்வு எனக்கு மட்டும் தானா..
    மார்வின் என்ன ஆனார்..இரண்டாம்தள மனம் பிறழ்ந்தவர்களுக்கு இரையாவாரே்ா?அது நம் கற்பனைக்கு விடப்பட்டதா?

    ReplyDelete
    Replies
    1. மார்வின் மகா புத்திசாலி ....எடிட்டர் குறிப்பிட்ட SCHIZOPHRENIA என்னும் மனச்சிதைவு நோயின் ஒரு அங்கமான CATATONIA பற்றி நன்கு படித்து மன நோய் மருத்துவர்களையே ஏமாற்றும் அளவிற்கு தேர்ச்சியான நடிப்பை கையாண்டு தனது இலட்சியத்திற்காக உடலை கடுமையாக வருத்தி செயல்படுபவன் ..
      இந்த குழப்பம் அடங்கி சிலகாலம் கழித்து மனநலம் பெற்று விட்டதாக தனது நடிப்பால் மருத்துவமனை விட்டு வெளிவந்து போலிசாரின் கவனம் தன்னை விட்டு விலகும்வரை காத்து இருந்து பத்து மில்லியன் டாலரை லபக்கிடுவான் ...
      பத்து மில்லியன் டாலருக்கு மேல் உபரி செலவு –கையாண்டதே இவ்வளவு எனில் – அந்த கம்பனி தமிழக அரசியல்வாதி யாருக்கோ சொந்தமானதாக கூட இருக்கலாம்

      Delete
    2. ஹா,ஹா,ஹா செம ஜி.

      Delete
  69. ஜெரமையா: சூப்பர் . எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. வரவேற்பு பெரிய அளவில் உருவாகவில்லை எனில் சந்தா E யிலாவது வரட்டும். டக் டக் என மாறும் காட்சி அமைப்புகள் என்ன நடக்குதுன்னு புரிய சிரமபடுத்தி திரும்ப பக்கங்களை புரட்ட வைத்தாலும் நன்றாகவே இருந்தது. கலர், பிரிண்டிங், பைண்டிங் என எல்லாமே உலகத் தரம். உங்கள் டீமிற்கு பல பூங்கொத்துகள்...

    இனி படிக்கப் போவது எல்லாம் டெக்ஸ் கதைகள்... அப்புறம் தான் எல்லாமே...

    டுராங்கோவை அனுப்ப வீட்ல மறந்துட்டாங்க... இனி முனு மாசமோ நாலு மாசமோ வெயிட் பண்ணனும்...

    ReplyDelete
  70. //ஜெரமையா//

    சிலரை மட்டும் அளவுகோலாக வைக்கும் பழக்கம் மாறவேண்டும் எடிட் சார். நீங்கள் சிலசமயம் சிலரது விமர்சனத்தை வைத்து அடுத்த புத்தகம் வரட்டும் அப்புறம் இந்த தொடரை பற்றி முடிவுசெய்யலாம் எனும்போது எரிச்சல் தான் வருகிறது

    ReplyDelete
    Replies
    1. அப்படித் தோன்றவில்லை சதீஸ். ஆசிரியர் ஒட்டு மொத்த வரவேற்புகளைக் கொண்டே முடிவெடுப்பார். தனக்குப் பிடித்த கதைகளை சிலாகித்து பக்கம் பக்கமாக விமர்சிக்கும் எழுத்து வன்மை கொண்ட நண்பர்கள் கூட கதை பிடிக்க வில்லை என்றால் விமர்சனத்தில் அடக்கி வாசிப்பது அனைவரின் குரலும் கேடகப்பட வேண்டும் எனபதற்கோ எஎக

      Delete
  71. This month my ratings are 1 Mudiya Iravu. 2. Clifton. 3. Large 4. Lawrence and david

    ReplyDelete
  72. தற்செயலாய் ஒரு ஹீரோ. 9/10. குண்டு டெக்ஸ் கதைகள் புல் மீல்ஸ்னா...இந்த மாதிரி ஒல்லி புக்கெல்லாம் மழை நாள்ல வீட்ல சாப்பிடற மசால் வடை மாதிரி. எவ்வளவு சாப்பிட்டாலும் அலுக்காது. 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    ReplyDelete
    Replies
    1. ///இந்த மாதிரி ஒல்லி புக்கெல்லாம் மழை நாள்ல வீட்ல சாப்பிடற மசால் வடை மாதிரி. எவ்வளவு சாப்பிட்டாலும் அலுக்காது. ///

      எவ்வளவு சாப்பிட்டாலும் அலுக்காதுதான்... ஆனா, கொடுக்கறதே ஒன்னுதானே கொடுக்கிறாங்க?!!

      Delete
  73. சர்வமும் நானே. நாலு பேரும் வரிசையா ஒவ்வொருத்தரா அதகள அறிமுகம். வாவ். இதுக்கே 10 க்கு 10 குடுக்கலாமே. முடிச்சுட்டு வரேன்.

    ReplyDelete