Sunday, May 28, 2017

வாரங்கள் 4 ...இதழ்கள் 5 ..!!

நண்பர்களே,

வணக்கம். பள்ளிக்கூடத் திறப்புவிழாக்கள் கூப்பிடு தொலைவில் இருந்திட, எகிறும் ஸ்கூல் பீஸ் மிரட்டுவது பற்றாதென இம்முறை நோட்டுக்கள் & கைடுகளின் விலைகளும் உங்கள் விழிகளை எனக்குப் போட்டியாகப் பிதுங்கச் செய்வது நிச்சயம் என்பேன் ! தண்ணீர் தட்டுப்பாடெனக் காரணம் சொல்லி கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு முன்பாகவே நம்மூர் பேப்பர் மில்கள் உற்பத்தியை பாதியாக்கியிருக்க, ஹெலிகார் வேகத்துக்கு விண்நோக்கிக் கிளம்பி விட்டன காகித விலைகள் ! இந்தத் தொழிலில் உள்ள ஜுனியர் எடிட்டரின் பள்ளித் தோழன் அந்நேரம் நம்மை உஷார்ப்படுத்தியிருக்க, கையில் சிக்கிய காசை ஒட்டுமொத்தமாய் பேப்பருக்குள் முடக்கியிருந்ததால் ஜூலை வரைக்கும் நமக்குக் கவலைகள் லேது ! ஆகஸ்டுக்குப்  பேப்பர் வாங்கப் புறப்படும் நேரம் தான் நெஞ்சைத் திடப்படுத்திக் கொண்டு - யாரையாச்சும் கைத்தாங்கலாய்ப்பிடித்துக் கொண்டே முயற்சித்துப் பார்க்க வேண்டும் !!

தற்சமயத்துக்கு கைவசம் பேப்பர் இருப்பதால் - லாட்டரியில் ஒரு கோடி அடிச்ச கவுண்டரைப் போல சும்மா "டெக்ஸ் வில்லரை அடிச்சிக்கோ ; இதிலே கிராபிக் நாவலை அடிச்சிக்கோ ; அடுத்த மாச மறுப்பதிப்பையும் இப்போவே அடிச்சிக்கோ !!" என்று அச்சகத்துக்குள் சண்ட மாருதமாய்ச் சுற்றி வர முடிகிறது ! வழக்கமாய் அந்தந்த மாதம் 'ஆட்றா ராமா...தாண்டுரா ராமா !' என்று ஏதேனும் பல்டிக்கள் அடித்து பேப்பரைத் தேற்றும் வேலைகளிலோ - அச்சகத்துக்குள் வந்தாலே லேசாய் BP எகிறும், இங்கும் அங்கும் கிடைக்கும் வேஸ்ட் காகிதங்களைப் பார்க்கும் போது !! அச்சு இயந்திரமுமே அரசாங்கம் மாதிரி - எப்போது ஸ்மூத்தாய் ஓடும்..? எப்போது கடித்துத் துப்பும் ? என்பதைக் கணிக்க இயலாத வகையில் ! So உள்ளே நுழையும் போதே இஷ்ட தெய்வங்கள் சகலரையும் துணைக்கு அழைத்துக் கொள்ளத் தோன்றும் !! தேர்தலுக்கு சமீபமான அரசாங்கத்தைப் போல மிஷினும் இம்மாதம்  நல்ல மூடில் இருக்க - ரிப்போர்ட்டர் ஜானியும், அண்டர்டேக்கரும் சும்மா மிரட்டோ-மிரட்டென்று மிரட்டியுள்ளனர் வண்ணத்தில் ! ஜானியின் கதைக்கு சற்றே புராதன ; பளீர்-பளீர் வர்ண பாணி தான் என்பதால் பக்கத்தைப் புரட்டப் புரட்ட ஜெர்மன் மசிகளின் ஜாலம் வசீகரிக்கிறது ! புதுவரவுக்கோ - புதுயுக கலரிங் யுக்திகள் என்பது மட்டுமன்றி - கதையின் புராதனைக் களம் + கதையின் இருண்டதன்மைக்கு ஏற்ப வர்ணங்கள் sober ஆக அமைக்கப்பட்டிருப்பதால் - ரொம்பவே கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு இதற்கான அச்சை செய்துள்ளோம் ! கதையைப் படிக்கும் போது -  கதைக்கும், சித்திரங்களுக்கும் உள்ள அதே அளவு வீரியம் - வர்ணச் சேர்க்கைக்கு உள்ளதை உணர்ந்திடுவீர்கள் ! 

And இதோ - சந்தா E -ன் இதழ் # 2 -ன் அட்டைப்பட முதல் பார்வை ! As in recent times - இதுவுமே ஒரிஜினல் அட்டைப்படமே ; இம்மியும் மாற்றமின்றி ! ஒரிஜினல்களே பளீரிடும் போது - எக்ஸ்டரா நம்பர் போடுகிறேன் பேர்வழி என்று சொதப்பி வைக்க பயம் ! So இயன்ற வர்ண மெருகூட்டல்களை மாத்திரமே செய்து விட்டு - ஒரிஜினல்களோடு சவாரி செய்து வருகிறோம் ! இதோ அதன் முதல் பார்வை ! 
அட்டைப்படத்தில் கவனத்துக்குத் தப்பாதது கதையின் பெயர் அமைக்கப்பட்டிருக்கும் எழுத்துருக்களாகத் தானிருக்குமென்று நினைக்கிறேன் ! நெடுநாள் இடைவெளிக்குப் பின்பாய் நமது ஓவியரைக் கொண்டு கதையின் பெயரை கையால் எழுதச் செய்தேன் - அந்த கம்பியூட்டர் fonts அலுத்துப் போனது போலத் தோன்றியதால் ! ரொம்ப நாள் கழித்து - technology க்கு சின்னதொரு விடுப்பென்பதால் எனக்கு ரசித்தது ! What say you ??

And இதோ - உட்பக்கத்திலிருந்தும் ஒரு சின்ன டீசர் ! 

இதனை ஏற்கனவே நெட்டில் படித்திருக்கக்கூடிய நண்பர்களுக்குப் புதிதாய் இருக்கப் போவதில்லை, கதை பற்றிய எனது preview ! ஆனால் தமிழில் தான் அண்டர்டேக்கரோடு முதன்முறையாய்க் கை குலுக்கக் காத்திருக்கும் நண்பர்களுக்கு சின்னதொரு tip : "வன்முறை அதீதம் ; இது தேவை தானா ? "  ; "இதைப் படித்து நாட்டைத் திருத்தப் போகிறேனா ?" என்றெல்லாம் கேள்விகள் உங்களுள் ஸ்டாக் இருக்கும் பட்சத்தில் - இந்தப் பக்கமாய் இண்டிகேட்டரைப் போடாது நேராகப் பயணம் போவதே சாலச் சிறந்தது என்பேன் ! முகத்தில் சுடுபெட்டியைத் தேய்ப்பது ; விரலை நொறுக்கென ஒடிப்பது ; சடலங்களைக் கோணிப்பை போல் தைப்பது என கதை நெடுகிலும் கரடு முரடான ஐட்டங்கள் நிறையவே உண்டென்பதால் இந்த முன்ஜாக்கிரதை ! பௌன்சர் கதைகளில் இருந்த shock factors போலிராது தான் - இங்குள்ள சமாச்சாரங்கள்  ; ஆனாலும் இது மாமூலான வெஸ்டர்ன்மல்லவே ! So - கவனம் ப்ளீஸ் !! கதையைப் பொறுத்தவரை ரொம்ப பில்டப்பெல்லாம் தர மாட்டேன் ; மாறுபட்ட பாணி என்பதோடு நிறுத்திக் கொள்வேன் ! படிக்கும் போது நீங்களே ஒரு அனுமானத்துக்கு வருவதே தேவலை அல்லவா ? 

And இதோ - மேலே வரக் காத்திருக்கும் டஸ்ட் ஜாக்கெட் ! இதுவுமே ஒரிஜினல் டிசைன் என்பதால் - இங்கேயும் 'கை...வீசம்மா...கை வீசு..' தான் நமக்கு வேலைகளை பொறுத்த வரைக்கும் !  
அண்டர்டேக்கர் புராணத்துக்கு மங்களம் பாடிடும் முன்பாய் ஒரேயொரு நினைவூட்டலுமே ! இது மிகக் குறைவான பிரிண்ட் ரன் கொண்ட இதழ் என்பதால் - இஷ்டப்படும் போது வாங்கிக் கொள்ளலாமே - என்ற சுலபத்தன்மை இராது இதனில் ! So - இந்தத் தொப்பிவாலா உங்களுக்கு தேவையெனத் தோன்றிடும் பட்சத்தில், துரிதம் சுகப்படும் ! 

இம்மாத கோட்டா 5 இதழ்கள் ; அதிலும் ஒவ்வொரு சந்தா ரகத்திற்குமொரு பிரதிநிதி உண்டு என்பது highlight ! வேலையும் அதற்கேற்ப போட்டுப் புரட்டி எடுத்திடுமென்பதை நான் சொல்லவும் வேண்டுமா ? So அவ்வப்போது சைக்கிள் கேப்பில் நமக்குக் கிட்டிடும் எதிர்பாரா ஒத்தாசைகளும் பாகுபலி ரேஞ்சுக்கு காட்சி தருகின்றன ! இதோ - இம்மாத கார்ட்டூன் இதழுக்கென நண்பர் பொடியன் போட்டுத் தந்துள்ள முன் + பின் அட்டைகள் !! 
லோகோ சேர்ப்பு ; எழுத்துக்களை இங்கே-அங்கே லேசாய் மாற்றியமைப்பது என்பதைத் தாண்டி பாக்கி எல்லாமே நண்பரின் கைவண்ணமாகவே இருக்கும் ! Simple yet neat ஆக ராப்பரை அமைத்துத் தந்துள்ள நண்பருக்கு நமது நன்றிகளும் ; பாராட்டுக்களும் !! வரும் நாட்களிலும் அவ்வப்போது இப்பணிகளில் தேர்ச்சியுள்ள நண்பர்கள் உதவிட விரும்பின் - நம்மிடம்  நிச்சயம் வாய்ப்புகளுக்குப் பஞ்சமிராது ! So உங்களிடம் நேரமிருப்பின், நம்மிடம் பணிகளிருக்கும் !! 

இந்தப் பதிவுக்கு லொட்டு லோட்டேனா டைப்பிடிக்கத் துவங்குவதற்கு 2 மணி நேரங்களுக்கு முன்பு வரையிலும் திருவாளர் ரின்டின் கேனின் மொழிபெயர்ப்புக்குள் தலைபுதைத்துக் கிடந்தேன் என்பதால் உட்பக்க டிரைலர் இப்போது சாத்தியமில்லை ! ஞாயிறும் வீட்டிலிருந்தபடிக்கே நம்மவர்கள் பணி செய்து "தடை பல தகர்த்தெழு" என்று முழங்கக் காத்திருப்பதால் - sometime tomorrow - நாலுகால் ஞானசூன்யனார் இங்கே தலைகாட்டிடுவார் ! திங்கட்கிழமை அச்சு ; செவ்வாய் முதற்கொண்டு  வழக்கமான பைண்டிங் படையெடுப்பு என்பதே இப்போதைய அட்டவணை ! எந்த அர்த்த ஜாமத்தில் நான் என் வேலைகளை முடித்துத் தந்தாலும், அதன்பின்னே மின்னலாய்ச் செயலாற்ற நமது டீம் ரெடியாக இருப்பதால் ஜூன் 1 -க்கு இங்கிருந்து இதழ்களை அனுப்பிட சாத்தியமாகிடும் !! முதலில் நான் போட்ட கணக்குப்படி இன்னமும் கூடத் தாமதமாகியிருக்குமென்றே அனுமானித்தேன் ; ஆனால் நம்மாட்கள் வண்டியை அடித்து ஓட்டுவதில் தேர்ச்சி பெற்றுள்ளதால் ஒற்றை நாள் தாமதத்தோடு தலை தப்பிடும் !! 

மாதத்தின் மறுபதிப்புக் கோட்டா - வைக்கிங் & ஜாக்கிக்கு சவால் விடும் அண்டடாயர் புகழ் ஜானிகாருவின் "தங்க விரல் மர்மம்" ! எப்போதோ ஒரு யுகத்தில் இந்த இதழ் ஒரிஜினலாக முத்து காமிக்ஸில் வெளியான போது மெய்ம்மறந்து படித்த ஞாபகங்கள் இதன் எடிட்டிங்கின் போது மீள்வருகை செய்தன ! எகிப்தியப் பாலைவனம் ; மணலுக்குள் மனுஷனைப் புதைத்துப் போடுவது ; தங்கச் சுட்டுவிரல் ; என்ற அந்நாட்களது பரபரப்பான நினைவுகள் இப்போது ஒரு மந்தகாசப் புன்னகையை மாத்திரமே உண்டாக்கியது தான் காலச் சக்கரத்தின் சுழற்சி செய்யும் வேலை போலும் !! இதோ - அந்நாட்களது சில ஆதர்ஷ நினைவுகளால் உருவான ராப்பர் - நம் ஓவியரின் கைவண்ணத்தில் ! இந்தாண்டின் இறுதி ஜானி நீரோ சாகசம் இதுவென்பது ஒருங்கே ஏக்கப் பெருமூச்சுகளையும் ; நிம்மதி பெருமூச்சுகளையும் உருவாக்க வல்லதென்பதில் எனக்கு ஐயமில்லை! 
இம்முறையும் கதையைப் படிக்கும் போது எனக்கு எழுந்தது அதே கேள்வியே : இதை என் ஜானி நீரோ சாகசமென்று பீலா விட வேணும் ? முறையாகப் பார்த்தால் ஸ்டெல்லா முக்கால்வாசி வேலையைப் பண்ணி முடிக்க, மனுஷன் ஒத்துக் குழல் மட்டுமே வாசிக்கிறார் !! இதற்கு ஹீரோ அந்தஸ்து சித்தே ஓவர் ! என்றே பட்டது எனக்கு !! Anyways - விற்பனையில் சாதிக்கும் சகலரும் ஹீரோக்களே என்பதால் - all is well என்றபடிக்கு நகர்கிறேன் !!

"ஷப்பா.....5 இதழ் மாதமொன்று முடிந்ததுடா சாமி !!" என்றபடிக்கே நடையைக் கட்டினால் - "நாங்க   இருக்கோமேலே.. ஹை...ஹை...நாங்க இருக்கோமேலே..!!"  என்று கண்முன்னே ஜூலையின் இதழ்கள் துள்ளிக் குதித்து நர்த்தனம் ஆடுவது தெரிகிறது !! லயன் # 300 & முத்து # 400 - காத்திருக்கும் ஜூலையில்  தான் எனும் பொழுது - "மறுபடியுமா...முதல்லேர்ந்தா ?" என்று வடிவேலை நினைவுகூர்ந்திடத் தான்  தோன்றுகிறது !   But இந்த முடிவிலாப் பயணத்தின் சுகமே - தொடர்ந்திடும் சவால்கள் ; வித விதமான சவால்கள் தானெனும் பொழுது - ஓட்டம் பிடிக்கிறேன் வேலைகளிலிருந்தல்ல ; அதனுள் fresh ஆக மூழ்கிட ! பாக்கியுள்ள ரிப்போர்ட்டர் ஜானி ராப்பரோடு டெஸ்பாட்ச் தினப் பதிவு அமைந்திடும் என்ற செய்தியோடு - இப்போதைக்கு விடைபெறுகிறேன் all !! Bye for now ! See you around! 

206 comments:

  1. அட்டைப்படம்கள் அருமையான உள்ள​ன. தங்க விரல் மர்மம் இது வரை படித்தது இல்லை, ஆர்வத்துடன் உள்ளேன் இதனை படிக்க.

    ReplyDelete
    Replies
    1. அண்டர் டேங்கர் அட்டைப்படத்தில் இருந்து உள்பக்க டீசர் வரை சித்திரம்கள் மிரட்டுகிறது.

      Delete
  2. நமது டின்னாரை படிக்க நாட்களை என்ன ஆரம்பித்துவிட்டேன்

    ReplyDelete
  3. June puthakangalae varuga varuga!

    ReplyDelete
  4. I am 9 th good morning friends,Have a nice day

    ReplyDelete
  5. விஜயன் சார், ஆண்டு மலரில் லேடி எஸ் உடன் வேறு சில கதைகளையும் இணைத்து தரலாமே? 300 / 400 போன்ற சிறப்பு இதழ்களில்வெறும் 150 பக்கங்கள் கொண்ட கதையை மட்டும் தருவது சரியா we are expecting more from you... More emotional please...

    ReplyDelete
  6. I am eager to get my eye and hand on the book, undertaker covers are looking great. Hope the story will also be great. Fingers crossed.

    ReplyDelete
  7. 300வது இதழ் 300 பக்கங்கள் 400 வது இதழ் 400 பக்கங்கள் இன்னும் அதிகமாக என்றால் ஓகே

    ReplyDelete
    Replies
    1. வழிமொழிகிறேன்.....

      Delete
    2. லயன் ஆண்டு மலர் 512 பக்கங்கள், இது எனக்கு ஓகே. ஆனால் முத்து ஆண்டு மலர் லேடி எஸ் 150 பக்கங்கள் மட்டுமே, இதனை என்னால் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாது விஜயன் சார்.

      Delete
    3. வழிமொழிகிறேன்.! உதலைமை தாங்கவேண்டிய தல நீங்கள்.....இப்படியே வழிமொழிந்து கொண்டிருந்தால் எப்படி.!

      Delete
  8. அட ராமா என் போன்ல் படம் வர்ல

    ReplyDelete
    Replies
    1. க்கும்....உங்களுக்கு இப்ப தான் வரலையா ....எனக்கு ரெண்டு மாசமா பதிவுல படமே வர்றது இல்லை நண்பரே...:-(

      ஆனால் அதுலியும் ஒரு சர்ப்ரைஸ் சந்தோசம் வருது..புத்தகம் கைக்கு கிடைக்கும் வரை அட்டைபடங்களை பார்க்க முடியாமல் போக இதழ்கள் கிடைத்தவுடன் அட்டைப்படங்கள் சந்தோச சர்ப்ரைஸ் தருகின்றன....:-)


      அனைத்தும் பாசிட்டிவ் பாயிண்ட் ஆக எடுத்து கொள்ள வேண்டியது நிம்பிள் பாலிஸி....:-)

      Delete
    2. தீர்வு 1;

      போனில் உள்ள டீபால்ட் பிரௌசரை(default(company) browsar) உபயோகப்படுத்தி பார்க்கவும்.

      தீர்வு 2;

      பிளாக்கின் கீழே வ்யூ டெஸ்க்டாப்(view desktop) ஐ அழுத்தி பார்க்கலாம்.

      Delete
  9. ஓ ரின்டின்கேன் சூப்பா்

    ReplyDelete
  10. Bonjour monsieur,

    ஐயா, நான் சொல்றேன்னு யாரும் தப்பா நெனைச்சுக்காதீங்க.
    நம்ம மக்கள்லே நெறையா பேரு காமிக்ஸ இன்னும் கதைப் புத்தகம் படிக்கற மாதிாி தான் படிக்கறாங்களோன்னு சந்தேகமாயிருக்கு.

    காமிக்ஸ்ங்கிறது சித்திரக்கதை இல்லைங்கலா. அமரா் கல்கியின் சாித்திரக் கதைகளை நாம் படிக்கும் போது அந்த காட்சி நம் கண்முன்னே ஓடும். அவரது வா்ணனை அவ்வளவு அற்புதமாய் இருக்கும்.

    எழுத்துக்களின் மூலமாகவே அவா் படங்களை உருவாக்கி விடுகிறாா்.
    ஆனால் நமது காமிக்ஸ்களிலே படங்களே மொத்தக் கதையையும் விளக்கவல்லன.

    படங்களை கவனிக்க போதிய நேரம் ஒதுக்கவில்லை யென்றால் கதை சுவாரஸ்யத்தை இழந்துவிடும்.
    பொதுவாக காா்ட்டூன் கதைகளிலே ஒரு லைனுக்கு 3 பிரேம்கள் வீதம் 4 லைன்கள் ஆக ஒரு பக்கத்திற்கு 12 படங்கள் இருக்கும்.

    ஒரு படத்திற்கு கால் நிமிடம் அதாவது 15 வினாடிகள் வீதம் நேரம் ஒதுக்கினால் ஒரு பக்கத்திற்கு 3 நிமிடங்கள் அவசியமாகும்.

    பொதுவாக லக்கிலூக் கதைகள் எல்லாமே 44 பக்கங்களில் "தனிமையே என் துணைவன்" The End வந்துவிடும். எனில் 3 * 44 = 132 அதாவது 2 மணிநேரம் 12 நிமிடங்கள் அவசியம்.

    ஆக ஒரு காா்ட்டூன் ஆல்பத்திற்கு குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது செலவளிக்கவில்லை என்றால் நிச்சயமாக முழுமையாக ரசிக்க முடியாது.

    நீங்கள் அரை மணி நேரத்தில் காா்ட்டூன் கதைகளை படிப்பவராக இருந்தால், ஒருமுறையேனும் ஏதாவது ஒரு கதையை 2 மணிநேரம் கூடி, ஒவ்வொரு பிரேமையும் மெல்ல மெல்ல ரசித்து படித்துப் பாருங்கள். அந்த அனுபவமே அலாதியானதாய் இருக்கும்.

    நாம் காா்ட்டூன் அல்லாத புத்தகங்களில் கதையினுடைய ஓட்டத்தின் சுவாரஸ்யத்தில் ஒவ்வொரு பிரேமையும் ரசிக்கத் தவறிவிடுகிறோம். நாளாக நாளாக நாம் நின்று நிதானித்து ஒவ்வொரு படத்தையும் ரசித்துப் படிக்கும் அரிய கலையை இழந்துவிடுகிறோம்.

    நாம் குழந்தைகளாக இருந்த போது நமது படிக்கும் வேகம் சற்று குறைவாகவே இருக்கும். அதனால் நிதானமாகப் படங்களைப் பாா்த்து படித்து, ரசித்து, சிாித்து, பிறகு மெல்ல எழுத்துக் கூட்டி கதைகளைப் படித்தோம். அதனாலே தான் அக்கதைகளெல்லாம் நம் மனதில் ஆழப் பதிந்துள்ளன.

    உண்மையில் நமது படிக்கும் வேகம் அதிகமானதாலும், ஒரு விதமான மன அழுத்தத்தாலுமே நம்மால் காா்ட்டூன்களை ரசிக்க இயலவில்லை. அதனாலேயே நமக்கு ஒரு வேகமான, திகிலான கதை தேவைப்படுகிறது.

    ஆனால் காா்ட்டூன் என்பது பகடியும், நையான்டியும் நிறைந்தது.
    நான் நிறைய வீடுகளில் பாா்த்திருக்கிறேன். அங்கே டிவியில் "சிாிப்பொலி" ஓடுக் கொண்டிருக்கும். அதை அவா்கள் "முறைத்துப்" பாா்த்துக் கொண்டிருப்பாா்கள்.

    இது அந்த டிவியினுடைய பிரச்சனையோ, நடிகருடைய பிரச்சனையோ அல்ல.
    பாா்ப்பவருடைய பிரச்சனை அல்லவா?
    இது போலத்தான் காா்ட்டூன் கதைகளும்.

    நீங்கள் அதனோடு ஒன்றிப் போகவில்லை என்றால் அது ஒன்றும் தராது.
    ஒன்றிவிட்டீா்களென்றால் அனைத்தையும் தரும்.

    வாழ்க காமிக்ஸ்! வளா்க காா்ட்டூன்!!

    ReplyDelete
    Replies
    1. +1234567890... அருமையான வரிகள். மனதை லேசாக்கும் கார்ட்டூன் கதைகள். இது வரை வந்த கார்ட்டூன் கதைகளை எத்தனை முறை படித்திருப்பேன் /
      பார்த்து ரசித்திருப்பேன் என்று கணக்கே இல்லை. நிறைய கார்ட்டூன் நிறைய மகிழ்ச்சி. வேண்டும் வேண்டும் மாதத்திற்கு 2 அல்லது 3 கார்ட்டூன் இதழ்கள்.

      Delete
    2. நண்பரே மிக அழகாக தெளிவாக உண்மையை எடுத்து உரைத்து உள்ளீர்கள்....இப்பொழுது அரை மணி நேரத்தில் படித்து முடிக்கும் நண்பர்களில் நானும் ஒருவனே...உங்கள் எழுத்துக்களை வாசித்தவுடன் உண்மை புலப்படுகிறது...இனி மாற்றம் காண்பேன்....:-)


      ஏற்கனவே நண்பர் ஒருவர் கேட்டபடி....

      நீங்க யாரு...இத்தனை நாளு பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க....சொல்லுங்க ..சொல்லுங்க...:-)

      Delete
    3. உணர்ந்து எழுதி உள்ளிர்கள்....நன்றாக புரிகிறது... !!!!

      Delete
    4. @ Mithun Chakravarthi

      அடடா... அருமை அருமை!!! இதற்குமேல் அழகாக, தெளிவாக விளக்க முடியாது நண்பரே!! நீங்கள் கூறியுள்ள பாணியை சிறுவயதிலிருந்தே பின்பற்றுபவன் என்ற முறையில் உங்கள் கருத்துக்களுக்கு பலமான ஜே போடுகிறேன்!

      இந்தக் கட்டுரை (கட்டுரைனே வச்சிக்குவோமே ப்ளீஸ்?) நிறைய நண்பர்களிடம் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டுவரப்போவது உறுதி!!

      படங்களை ரசித்தாலே குபுக்கென்று சிரிப்பு வந்திடும்; கூடவே எடிட்டரின் பின்னிப்பெடலெடுக்கும் காமெடி வசனங்களும் இணையும்போது சரவெடி சிரிப்புகளுக்குத்தான் பஞ்சமேது?!!

      வாழ்க காமிக்ஸ்! வளர்க கார்டூன் சந்தாக்கள்!!

      Delete
    5. ///இப்பொழுது அரை மணி நேரத்தில் படித்து முடிக்கும் நண்பர்களில் நானும் ஒருவனே...உங்கள் எழுத்துக்களை வாசித்தவுடன் உண்மை புலப்படுகிறது...இனி மாற்றம் காண்பேன்....:///

      எடுத்துச் சொல்லி விளக்கினால் இம்மீடியட்டா மாத்திக்கிற உங்க குணம் கண்களில் ஜலத்தை வரவழைக்குது தலீவரே! துளியும் ஈகோ இல்லாத ஒரு தலீவர் கிடைக்க போராட்டக்குழு என்ன தவம் செய்ததோ?!!

      Delete
    6. நான் பொதுவாக சில மணி நேரம் ஒதுக்கி, எந்தவித இடைஞ்சல் இல்லாமல் காமிக்ஸ் படிக்கும் பழக்கம் உள்ளவன். அவ்வாறு நேரம் அமையுவரை நமது காமிக்ஸை படிப்பதில்லை.

      Delete
    7. @ Pfb

      ///எந்தவித இடைஞ்சல் இல்லாமல் காமிக்ஸ் படிக்கும் பழக்கம் உள்ளவன்.///

      வீட்டம்மாவை ஊருக்கு அனுப்பி வச்சிட்டோ அல்லது நீங்கள் வெளியூருக்கு போயோதான் காமிக்ஸ் படிக்கறீங்கன்னு சொல்லுங்க! ;)

      Delete
    8. பரணிதரன் கே சாா்,
      மாற்றத்துக்கு நன்றி.

      நான் பாம்பே இல்லீங்கையா,
      கோபிசெட்டிபாளையமுங்க.

      Delete
    9. இல்லை விஜய், நமக்கு அந்த கொடுப்பினை எல்லாம் கிடையாது :-)

      Delete
    10. அருமையாக சொல்லி இருக்கும் நண்பரே வணக்கம். கார்டூன் அரைமணிநேரத்திற்குள்ளேயே படித்துக்கொண்டிருக்கிறேன் தெரியாமல் .இனி தாங்கள் கூறியபடி படிக்க ஆவலோடு உள்ளேன்.நன்றி.

      Delete
    11. ஈரோடு விஜய் //எடுத்துச் சொல்லி விளக்கினால் இம்மீடியட்டா மாத்திக்கிற உங்க குணம் கண்களில் ஜலத்தை வரவழைக்குது தலீவரே!//

      ஒரு நடை தலீவரும், செயலாளருமாய் தென்மாவட்டச் சுற்றுப் பயணம் வந்தால் தண்ணீர் கஷ்டத்துக்கு ஒரு விமோச்சனம் பிறக்கக் கூடும் ! ஏதாச்சும் ஒரு குளம், குட்டைக்குக் கிட்டக்கே நிறுத்தி, தலீவரின் அருமை பெருமைகளை எடுத்து விடணும் ; 'ஓஓ' வென்று செயலாளர் ஜலம் விட ஆரம்பித்தால் அந்த ஏரியா பாடு தீர்ந்து விடும் !

      டேங்க்கர் தண்ணீர் வாங்கி கட்டுப்படியாகலிங்கோ !!

      Delete
    12. @ Mithun Chakravarthi //நான் நிறைய வீடுகளில் பாா்த்திருக்கிறேன். அங்கே டிவியில் "சிாிப்பொலி" ஓடுக் கொண்டிருக்கும். அதை அவா்கள் "முறைத்துப்" பாா்த்துக் கொண்டிருப்பாா்கள்.//

      நமக்கெல்லாம் அது வேலைக்கே ஆகாது சார் ; கெக்கே பிக்கே சமாச்சாரங்களை கெக்கே பிக்கேவென ரசித்து விடுவோம் !!

      அழுத்தமான வரிகள் !! Great writing !!

      Delete
    13. ///ஏதாச்சும் ஒரு குளம், குட்டைக்குக் கிட்டக்கே நிறுத்தி, தலீவரின் அருமை பெருமைகளை எடுத்து விடணும் ; 'ஓஓ' வென்று செயலாளர் ஜலம் விட ஆரம்பித்தால் அந்த ஏரியா பாடு தீர்ந்து விடும் ! ///

      பாத்தீங்களா தலீவரே? எதிரணித் தலைவர் ஆனாலும் நம்மை ரொம்பத்தான் ஓட்டறார். ஒரு முழுநீள கடுதாசியை நீங்க சிவகாசிக்கு அனுப்பிவச்சு ரொம்ப நாளாகுதுன்னு நினைக்கிறேன்!

      Delete
    14. உண்மை தான் செயலரே..:-(

      Delete
    15. மிதுன் சிறு வயதில் நன் ஓவியங்களை விட , கதைகளையே இரசித்தேன் ....சில படங்கள் தங்கும் மனதை கவர்ந்து ...ஆனா படம் நகர்வது போலவே நினைவு . ஸ்பைடர் சித்திரமாய் நிலை நின்றார் என்பதை விட திரப்படமாய்தான் நகர்ந்ததாய் தோனுது ...சித்திரங்களை விட இரசித்தது கதை வரிகளைதான் ...சித்திரங்களின் நுணுக்கத்த இரசிக்க ஆரம்பித்தது நண்பன் சுஷ்கி விஸ்கி அருளால் .....இரத்தப் படலம் பாகம் ஆறுக்கு பின்னரே....சில கதைகளில் கூர்ந்து கவனித்தால் உறுத்தும்...அதை வரைந்துள்ளார்கள் என நினைத்துப் பார்த்தால் வர்ணஜாலங்கள் மனதை துள்ளச் செய்யும் .ரொம்ப கூர்ந்து நோக்கினால் நான் என்ற எண்ணம் கேள்வியை வைக்கும் ..குறை தேடாமல் நிறை தேடினால் சந்தோச பட வைக்கும் பல விஷயங்கள முன் வைக்கும் . ஆசிரியர் கூறுவத போல விளக்க' எண்ணய கண்ணுல விட்டு படித்தால் இரசிப்பத விட்டுட்டு நம்ம மேதாவித்தனம் எட்டிப் பாக்கும் ..நம்மை விலக்கி வைக்கும ...இன்பத்த இழந்திடுவோம் ... நல்ல வேள நிறைகள தேடி படிச்சதால நிறைவாய் இருக்கிறது தங்களுக்கு ...அருமை..துரியோதணனுக்கு வண்டுகளும் , தருமனுக்கு மலர் செண்டுகளும் கண்ணில் பட்டத போல ..ஆனா கார்ட்டூன் அதிகம் வேண்டுமா அதிரடிகள் அதிகம் வேண்டுமா என்றால் முன்னுரிமை அதிரடிக்கே...ஆர்டினின் ஆயுதத்தில் அந்த பீறிட்டு வரும் ராகமும் , ஆர்டினின் அப்பாவி முகமும் கூட சிரிப்பை வரவழைக்குமே ..

      Delete
    16. பொன்ராஜ் சாா்,
      நான் எதையும் கூா்ந்து நோக்கச் சொல்லவில்லை. மாறாக அதனோடு லயத்துப் போகச் சொல்கிறேன்.
      அதற்கு குறிப்பிட்ட காலத்தை எடுத்துக் கொள்ளச் சொல்கிறேன். அவ்வளவுதான்.

      நல்ல இசையை லயித்துக் கேட்கும் போதும் மனமற்றுப் போகும்.

      மனமற்ற நிலையே 'நான்' அற்ற நிலையாகும்.

      நான் அற்ற நிலையே சுகம் எனப்படுகிறது.

      சித்திரங்களோடு லயித்துப் போகும் போதும்அத்தகைய சுகமுண்டாகிறது.

      லயிப்பதற்கும், கூா்ந்து நோக்குவதற்கும் மலையளவு வித்தியாசம் உள்ளது.

      வெறுமனே கூா்ந்து நோக்கினால் தலைவலி தான் உண்டாகும்.

      அது காா்ட்டூனுக்கு மட்டுமல்ல மொத்த காமிக்ஸ் கதைகளுக்கும் பொருந்தும்.

      Delete
    17. அப்பறம் நம்ம எப்பவுமே காா்ட்டூனுக்குத் தான் முதலிடமுங்க.

      அதுக்காக வில்லரையோ, டைகரையோ, பிரின்ஸையோ, புதுவரவு ஜெராமயாவையோ வேண்டாம்னு சொல்ல முடியுங்கலா?

      Delete
    18. மிதுன்;°°°மனமற்று போகும்°°°
      மனித குலம் ஓய்தல் இல்லாமல் அலையடிக்கும் சிந்தனைகளை சாகடிக்க வழி தேடித் தீர வேண்டும்."சிந்தை மாய்த்து விடு;இல்லையேல் இதைச் செத்த உடலாக்கு"என்று பரிதவித்த பாரதி "தன்னை மறந்த லயம் தன்னிலிருந்தேன்"னு மனதை கட்டும் தவத்தை அடைகிறான்.அது மனிதனை தேவ குமாரனாக மாற்றி பிரபஞ்சத்தினுடைய ஆதி சக்தியோடு ஆத்மாவுக்கு தொடர்பை ஏற்படுத்தும் வழி முறை.சன் மார்க்க நெறிகளால் இணைக்கப்பட்ட இந்து மதத்தில் அளவிட முடியாத ஆற்றலோடு காணப்படுகிறது.குறிப்பாக சைவ சித்தாந்தம். நர்த்தனம் ஆடும் நடராஜர் வடிவம்.புல்லாங்குழல் ஊதும் கண்ணனின் வடிவம்.ஆடும் போழ்தும்'பாடும்போழ்தும் சிரிக்கும் போழ்தும் மனம் மறைந்து விடும்.யோக கலைகளையும் 'தியானத்தையும் பயிற்சி செய்தால் மனிதர்களுடைய (மெய் ஞான)ஆற்றல் அற்புதங்களை சாத்தியப்படுத்தும்.மனித மூளையில் வளர்ச்சிதை மாற்றத்தினால் இயங்குதலை நிறுத்திவிடும்(என்டார்பின்'டேபமின்போன்ற)போதை தரும் சுரப்பிகள் மீண்டும் இயக்கம் பெற்று ஒரு மனிதனை பேரின்ப நிலையில் வாழ்ந்திருக்க வல்லது.நீண்ட நெடு நாட்கள் தேடியடைய வேண்டிய இராஜயோகம். புத்தர் இதை பெற 14 ஆண்டுகள்.ஓஷோவினுடைய நூல்கலில் ஆங்காங்கே காணக்கிடைக்கும்.இத்தகைய ஆற்றலை உணர்ந்த கடைசி மானுடனும் அவரே.இதனால் சகலமானவர்களுக்கும் பிரகடனப்படுத்துவதாதெனில் இந்து மதம் மனித குலத்தை தேவேந்திரர்களாக்கும் வல்லமையுடைய வாழ்முறை களஞ்சியம்.மிக விரிவாக சொல்லக் கூடாத தேவ இரகசியம்.காமிக்ஸ்ஸிக்கு சிறிதும் தொடர்பில்லா சங்கதிகளை பதிவிட்டதற்காக ஒவ்வொருவரிடமும் உளாமாற வேண்டுகிறேன்;மன்னியுங்கள்

      Delete
    19. மிதுன்;°°°மனமற்று போகும்°°°
      மனித குலம் ஓய்தல் இல்லாமல் அலையடிக்கும் சிந்தனைகளை சாகடிக்க வழி தேடித் தீர வேண்டும்."சிந்தை மாய்த்து விடு;இல்லையேல் இதைச் செத்த உடலாக்கு"என்று பரிதவித்த பாரதி "தன்னை மறந்த லயம் தன்னிலிருந்தேன்"னு மனதை கட்டும் தவத்தை அடைகிறான்.அது மனிதனை தேவ குமாரனாக மாற்றி பிரபஞ்சத்தினுடைய ஆதி சக்தியோடு ஆத்மாவுக்கு தொடர்பை ஏற்படுத்தும் வழி முறை.சன் மார்க்க நெறிகளால் இணைக்கப்பட்ட இந்து மதத்தில் அளவிட முடியாத ஆற்றலோடு காணப்படுகிறது.குறிப்பாக சைவ சித்தாந்தம். நர்த்தனம் ஆடும் நடராஜர் வடிவம்.புல்லாங்குழல் ஊதும் கண்ணனின் வடிவம்.ஆடும் போழ்தும்'பாடும்போழ்தும் சிரிக்கும் போழ்தும் மனம் மறைந்து விடும்.யோக கலைகளையும் 'தியானத்தையும் பயிற்சி செய்தால் மனிதர்களுடைய (மெய் ஞான)ஆற்றல் அற்புதங்களை சாத்தியப்படுத்தும்.மனித மூளையில் வளர்ச்சிதை மாற்றத்தினால் இயங்குதலை நிறுத்திவிடும்(என்டார்பின்'டேபமின்போன்ற)போதை தரும் சுரப்பிகள் மீண்டும் இயக்கம் பெற்று ஒரு மனிதனை பேரின்ப நிலையில் வாழ்ந்திருக்க வல்லது.நீண்ட நெடு நாட்கள் தேடியடைய வேண்டிய இராஜயோகம். புத்தர் இதை பெற 14 ஆண்டுகள்.ஓஷோவினுடைய நூல்கலில் ஆங்காங்கே காணக்கிடைக்கும்.இத்தகைய ஆற்றலை உணர்ந்த கடைசி மானுடனும் அவரே.இதனால் சகலமானவர்களுக்கும் பிரகடனப்படுத்துவதாதெனில் இந்து மதம் மனித குலத்தை தேவேந்திரர்களாக்கும் வல்லமையுடைய வாழ்முறை களஞ்சியம்.மிக விரிவாக சொல்லக் கூடாத தேவ இரகசியம்.காமிக்ஸ்ஸிக்கு சிறிதும் தொடர்பில்லா சங்கதிகளை பதிவிட்டதற்காக ஒவ்வொருவரிடமும் உளாமாற வேண்டுகிறேன்;மன்னியுங்கள்

      Delete
  11. நான் ரசித்த காா்ட்டூன் காட்சிகளை தொடரும் நாட்களில் தொடா்ந்து பதிவிடலாம் என்று இருக்கிறேன்.

    'ஆா்டினின் ஆயுதம்' கதையில் முதல் பக்கத்தில் பாருங்களேன். அதில் 6-வது பிரேமில் 'கொா்...ர்ர்..' என்று சத்தம் எழுப்பிக் கொண்டே, டாக்புல் ஆா்டினுக்குப் பின்னே நின்று கொண்டிருப்பாா்.

    வாா்த்தைகளே வேண்டியதில்லை. என்னவொரு அற்புதமான பகடி.

    ReplyDelete
    Replies
    1. ///'ஆா்டினின் ஆயுதம்' கதையில் முதல் பக்கத்தில் பாருங்களேன். அதில் 6-வது பிரேமில் 'கொா்...ர்ர்..' என்று சத்தம் எழுப்பிக் கொண்டே, டாக்புல் ஆா்டினுக்குப் பின்னே நின்று கொண்டிருப்பாா்.///

      இதுபோல நிறைய இருக்கு மிஸ்டர் மிதுன். ஆனாக்கா நாவல் படிக்கிறா மாதிரி காமிக்ஸ் படிக்கிறவங்களும் இருக்காங்க போல..! அதிர்ஷ்டம் தரும் அண்ணாத்தே வெளியான போது இதுல என்ன இருக்கு சிரிக்கிறதுக்குன்னு கேட்ட நண்பர்களும் உண்டு..!! ம்ம்ம்...என்ன செய்ய..!?!

      Delete
    2. அவா்களுக்கு நாம தானே எடுத்துச் சொல்லணும் கண்ணன் சாா்.

      நாம் ரசித்தவற்றைத் தொடா்ந்து பதிவு செய்வோம்.

      அவா்களும் புாிந்துகொள்வாா்கள் என்ற நம்பிக்கையோடு.

      ரசனையைப் பகிா்வதற்குத்தானே இந்தத் தளம் உள்ளது.

      Delete
    3. மிதுன், ரசனை பதியதான் இந்த தளம், செமையா சொன்னிங்க.

      Delete
    4. @ Friends : அட..வார்த்தைகளோ, ஓசைகளோ எதற்கு ? பால் வடியும் அந்த அம்மாஞ்சி ஆர்டின் முகத்தைப் பார்க்கும் போதே கெக்கே பிக்கே தோன்றுவது இயல்பு தானே ?

      Delete
    5. \\\இரசனையை பதியத்தான் இந்த தளம்\\\
      மிதுன் நம்ம இரசனைய பதிவிட்டா பஞ்சாயத்துல நிக்கனும்.கதைய மிகைப்படித்தி விமர்சனம் செஞ்சதாகவும்;பக்கத்துக்கு பக்கம் எழுதாதீங்கனும். எடிய பொகழ்ந்துதான் பதிவிடராங்கனும் எத்தனை பொல்லாப்புகளுக்கு ஆட்பட வேண்டியுள்ளது.எதார்த்தங்களை உணர்ந்து கொள்ளக் கூட சிலர் தயங்குவது புரிகிறது.ஜான் வான் ஹோமா சதுரங்கத்தில் ஒரு சிப்பாயில் மட்டும் அல்லாது ஒரு நிழல் நிஜமாகிறது சாகஸத்திலும் வருவதை ஒரு நண்பர்(பெயர் நினைவில் இல்லை'மன்னிக்கவும்)சுட்டி காட்டிய போது வியப்பாக இருந்தது.பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும்"இரசனையை மேம்படுத்திக் கொள்ளவும் நண்பர்களாக இங்கு வருபவர்கள் தானே உதவ முடியும்.அது நமது கடமையும் அல்லவா.பெரும்பாலன நண்பர்கள் இங்கு சிறப்பாக இயங்க கூடிய ஆற்றலோடு இருப்பது மனதில் அளவிட முடியாத உற்சாகத்தை அளிப்பது மறுக்க முடியாத உண்மை.நாளை நடப்பது நலமாய் விளையட்டும்.

      Delete
    6. Sri Ram : அட..பஞ்சாயத்துக்களும் ஜாலியான சமாச்சாரங்கள் தானே சார் - தமிழ் சினிமாக்களின் புண்ணியத்தால் ? ரசனைகளின் மறுபக்கமாக அவற்றையும் பார்த்து விட்டுப் போவது சுலபம் அன்றோ ?

      இங்கு வருகை தரும் ஒவ்வொருவருமே ஏதேனும் ஒருவகையில் நமக்கு value addition செய்திடுபவர்களே !! ரசனைகளை பகிர்வது ; பிடித்ததை highlight செய்வதென்பதெல்லாம் இதர மௌன வாசகர்களுள் எவ்விதத் தாக்கங்களை உருவாக்குகின்றன என்பதை எக்கச்சக்க தடவைகள் பார்த்தும், உணர்ந்துமுள்ளோம் ! இங்கு நிலவும் உயிரோட்டம், காமிக்ஸ் செடிக்கு நாம் ஊற்றும் நீருக்கு நிகர் தானே ? Rock on guys !!

      Delete
    7. ஐயா, பஞ்சாயத்துக்கெல்லாம் பயந்தா பொழப்பு பண்ண முடியுங்கலா.

      அடிக்க அடிக்க அம்மியும் நகருமில்ல.

      நம்ம காா்ட்டூனும் வளருமில்ல.

      Delete
  12. Dear Edi,

    Undertaker original cover and Run Tin fan covers are simply breathtaking. Hope to see them on print soon.

    But got to admit that Classic Cover is only half good with Johnny face art is a total letdown. Please give our artist some visual reference of original art. We should play to our strength, always.

    ReplyDelete
    Replies
    1. Rafiq Raja : சார்...அட்டையிலுள்ள ஜானியின் முகம் உட்பக்கத்தின் ஜெராக்ஸே ! மணலுக்குள் புதைந்து கிடக்கும் வேளையில் வெயிலில் கிறங்கிப் போய் தவிக்கும் shot அது !

      Delete
  13. அஸ்ஸலாமு அலைகும் to All

    ReplyDelete
    Replies
    1. அலைக்கும் ஸலாம் சாப்..!

      (சரியாத்தான் சொல்லியிருக்கேனா?)

      Delete
    2. நீங்க தப்பா சொன்னாலும் சரியாதான் இருக்கும் ரவிகண்ணரே...:-)

      Delete
  14. Undertaker dustjacket super wow, eagle grassing image so beautiful....
    Lion graphic novel expected more and more sir... iam waiting....

    ReplyDelete
  15. Replies
    1. வணக்கம் ஐயா....:-))) ரொம்ப நாளா உங்களை காணலையே...

      Delete
    2. இனிமேல் அடிக்கடி வரேன் பரணி

      Delete
    3. அச்சச்சோ!!
      இனிமேல் அடிக்க வரேன் பரணி ன்னு படிச்சித் தொலைச்சிட்டேன்..!:-)

      தலீவர் பாவமோ இல்லீயோ..! :-)

      Delete
    4. Read between lines க்கு விஜய் கூட சிஷ்யனும் சேர்ந்த கூட்டணி நன்று

      Delete
    5. ///இனிமேல் அடிக்கடி வரேன் பரணி///

      பாத்தீங்களா தலீவரே!! எப்படி அடிச்சுப்பிடிச்சு சம்மதிச்சார் பாத்தீங்கள்லே? நீங்க சொன்னா அதுதான் கட்டளை- அதுதான் சாசனம் தலீவரே!

      ///Read between lines க்கு விஜய் கூட சிஷ்யனும் சேர்ந்த கூட்டணி நன்று///

      இருக்கற linesஐயே நாங்கள்லாம் ஒழுங்காப் படிக்கறதில்லையாம்.. இதுல between lines வேறயா? :D

      Delete
  16. உள்ளேன் ஐயா..!!!


    /// இம்மாத கார்ட்டூன் இதழுக்கென நண்பர் பொடியன் போட்டுத் தந்துள்ள முன் + பின் அட்டைகள் !! ///


    பாராட்டுகளும் வாழ்த்துகளும் பொடியன் சார். .! சூப்பரா பண்ணியிருக்கிங்க..!!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள்.

      Delete
    2. பின்னிப் பெடலெடுத்திருக்கீங்க பொடியன்!!

      வாழ்த்துகள்!! தொடர்ந்து கலக்குங்கள்!!

      Delete
    3. நான் இன்னும் அட்டை படத்தை பார்க்கவில்லை நண்பரே....ஆனாலும் அதகளபடுத்தி இருப்பீங்கன்னு கண்டிப்பா நம்புறேன் ..பாராட்டுக்கள் ....:-)

      Delete
    4. நன்றி நண்பர்களே! எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி பதிவிடப்படும் உங்கள் வார்த்தைகள் ஏற்றும் எனர்ஜி அபரிமிதமானது!!

      Delete
    5. வாழ்த்துக்கள் பொடியன்.

      Delete
  17. அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்துல வர்ரமாதிரி, தலையையும் உடலையும் சேர்த்து கை ஊசியாலேயே தெச்சிகிட்டு இருக்காரே அண்டர்டேக்கர் அண்ணாச்சி..!!!!
    ரொம்ப இளகின மனசுக்காரரா இருப்பாரோன்னு பாத்தா, இன்னொரு பக்கத்துல, பறவைக்கெல்லாம் சாப்பாடு ஊட்றியேப்பான்னு கேட்டவனோட விரலை உடைச்சுட்டு போறாப்புல..!!
    ரொம்ப வித்தியாசமான கூடவே கொஞ்சம் கன்ப்பூயூஸான ஆளா இருப்பார் போலிருக்கே இந்த அண்டர்டேக்கர் அண்ணாச்சி..!!
    ப்ரேம் செட்டிங், கலரிங் எல்லாம் புதுமாதிரியா செம்மயா இருக்கு சார்.!

    WWE ல சூப்பர்ஸ்டாரான அண்டர்டேக்கர் மாதிரியே இவரும் நம்ம காமிக்ஸ் சூப்பர்ஸ்டார் ஆயிடுவார்னு பட்சி சொல்லுது..!!

    ReplyDelete
    Replies
    1. ////ரொம்ப வித்தியாசமான கூடவே கொஞ்சம் கன்ப்பூயூஸான ஆளா இருப்பார் போலிருக்கே இந்த அண்டர்டேக்கர் அண்ணாச்சி..!!
      ப்ரேம் செட்டிங், கலரிங் எல்லாம் புதுமாதிரியா செம்மயா இருக்கு சார்.! ////

      +1

      Delete
    2. KiD ஆர்டின் KannaN : மயானத்தின் காவலனாச்சே ?! அதான் இப்படி !!

      மகா ஜனங்களே, மறுபடியும் சொல்லிவிடுகிறேன் - இது நாட்டையோ, வீட்டையோ திருத்தப் புறப்பட்டிருக்கும் நாயகனின் கதையல்ல !! ஒரு வித்தியாசமான கற்பனையின் ஆக்கம் மாத்திரமே !! So கதை ஓ.கே. ; not ஓ.கே. என்ற ரீதியிலான விமர்சனங்களுக்கு நிச்சயம் இடமிருக்கும் ! ஆனால் இந்தக் கதையே தேவை தானா ? என்ற வினாக்களுக்கல்ல !

      Delete
  18. நண்பர்கள் அனைவர்க்கும் ஞாயிறு வணக்கம்

    ReplyDelete
  19. ///அட்டைப்படத்தில் கவனத்துக்குத் தப்பாதது கதையின் பெயர் அமைக்கப்பட்டிருக்கும் எழுத்துருக்களாகத் தானிருக்குமென்று நினைக்கிறேன் ! நெடுநாள் இடைவெளிக்குப் பின்பாய் நமது ஓவியரைக் கொண்டு கதையின் பெயரை கையால் எழுதச் செய்தேன்.///


    இதே பாணியை பின்பற்றலாம் சார்.!
    80களில் வெளியான திரைப்படங்களின் போஸ்டர்களில் "சில முக்கிய " போஸ்களுக்கு அடுத்து பெரிதும் கவனத்தை ஈர்த்தது அந்தப் படத்தின் பெயரை எழுதியிருக்கும் விதமே .!

    சின்னதாய் தொடங்கி நடுவில் பெரிதாகி முடிவில் மீண்டும் சின்னசைசில் முடியும் எழுத்துருக்கள்,
    சின்னதாய் தொடங்கி 30டிகிரி மேல்நோக்கி தொடர்ந்து பெரிதாய் போய் முடியும் எழுத்துருக்கள்,
    180டிகிரியில் வளையும் எழுத்துருக்கள் என அதகளப்படுத்திய காலகட்டம் அது. .!

    நமது காமிக்ஸ் டைட்டில்களையும் அந்தமாதிரி வித்தியாசமான எழுத்துருக்களில் பார்க்கும்போது மனசு குதூகலிப்பதை மறுக்கமுடியவில்லை சார்.!!

    ReplyDelete
    Replies
    1. ///80களில் வெளியான திரைப்படங்களின் போஸ்டர்களில் "சில முக்கிய " போஸ்களுக்கு அடுத்து பெரிதும் கவனத்தை ஈர்த்தது அந்தப் படத்தின் பெயரை எழுதியிருக்கும் விதமே .! ////

      :D

      அந்தமாதிரி 'முக்கிய' போஸ்டர்களில் படங்களைத் தாண்டி வேறெந்த எழுத்துக்களும் என் கண்ணில் பட்டதேஏஏ இல்லை! ;)

      Delete
    2. ///அந்தமாதிரி 'முக்கிய' போஸ்டர்களில் படங்களைத் தாண்டி வேறெந்த எழுத்துக்களும் என் கண்ணில் பட்டதேஏஏ இல்லை! ;)///

      நீங்க இப்படித்தான் சொல்லுவிங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்..!

      நான் சொல்லவந்தது அந்நாளைய ஹீரோக்களின் போஸைத்தான்னு சொன்னா நீங்க நம்பணும். .!

      Delete
    3. பெரிய மனுஷங்க ரெண்டு பேரு ஏதோ பேசிட்டு இருக்காங்க போல...நாம இப்படி ஓரமா போயிரலாம்....:-)

      Delete
    4. KiD ஆர்டின் KannaN : வரும் நாட்களில் இதனை அவ்வப்போது முயற்சிப்போம் !

      Delete
    5. /// வரும் நாட்களில் இதனை அவ்வப்போது முயற்சிப்போம் !///

      நன்றி சார். .!
      நிச்சயம் பெரும்பான்மையினரால் ரசிக்கப்படுமென்பது உறுதி..!

      Delete
  20. ///இதை என் ஜானி நீரோ சாகசமென்று பீலா விட வேணும் ? முறையாகப் பார்த்தால் ஸ்டெல்லா முக்கால்வாசி வேலையைப் பண்ணி முடிக்க, மனுஷன் ஒத்துக் குழல் மட்டுமே வாசிக்கிறார் !! ///

    ஆஹா!!! அப்படீன்னா இந்தப் புக்கை முதலில் பார்த்து முடிச்சுடவேண்டியதுதான்! :)

    ReplyDelete
    Replies
    1. ஈரோடு விஜய் : அதானே ?....நீங்கபாட்டுக்கு "படிச்சு" முடிச்சிட வேண்டியது தானென்று சொல்லி விடுவீர்களா என்று பயந்தே போய்ட்டேன் !!

      Delete
  21. ////முகத்தில் சுடுபெட்டியைத் தேய்ப்பது ; விரலை நொறுக்கென ஒடிப்பது ; சடலங்களைக் கோணிப்பை போல் தைப்பது என கதை நெடுகிலும் கரடு முரடான ஐட்டங்கள் நிறையவே உண்டென்பதால்///

    அச்சச்சோ! ரெண்டு கைகளாலும் முகத்தைப் பொத்திக்கிட்டு, விரலிடுக்கின் வழியாகத்தான் படிக்கணும் போலிருக்கே...

    ReplyDelete
    Replies
    1. ரெண்டுகையாலும் முகத்தை பொத்திட்டா புத்தகத்தை யாரு காமிப்பாங்க ம்

      வர வர செயலாளரோட போக்கு கொஞ்சம் வித்தியாசமா இருக்கே

      அதிகமாக செலவு கணக்கு காமிக்கிறாக

      கேள்வி கேட்கும் பொருளாளர் கொஞ்ச நாளா காணல

      புதுசா அசிஸ்டெண்ட்டு யாரையாச்சும் சேத்திருப்பாரோ
      (யோசிக்கும் படம் ஒன்று )
      .

      Delete
    2. ஈரோடு விஜய் //////முகத்தில் சுடுபெட்டியைத் தேய்ப்பது ; விரலை நொறுக்கென ஒடிப்பது ; சடலங்களைக் கோணிப்பை போல் தைப்பது என கதை நெடுகிலும் கரடு முரடான ஐட்டங்கள் நிறையவே உண்டென்பதால்/////

      குடிதண்ணீருக்குள் மூச்சா பெய்து வைக்கும் தடிப் பயலும் உண்டுங்கோ இங்கே !!

      Delete
  22. ///ஜூன் 1 -க்கு இங்கிருந்து இதழ்களை அனுப்பிட சாத்தியமாகிடும் !! முதலில் நான் போட்ட கணக்குப்படி இன்னமும் கூடத் தாமதமாகியிருக்குமென்றே அனுமானித்தேன் ; ஆனால் நம்மாட்கள் வண்டியை அடித்து ஓட்டுவதில் தேர்ச்சி பெற்றுள்ளதால் ஒற்றை நாள் தாமதத்தோடு தலை தப்பிடும் !!///

    ஒன்னாம் தேதி புக்கை அனுப்பறதையே 'தாமதம்'னு சொல்லிக்கற அளவுக்கு மாறியிருக்கோம்னா, இதை என்னன்னு சொல்ல!!
    ஆனாலும் ஓவராத்தான் திருந்திட்டமோ?!! ;)

    ReplyDelete
    Replies
    1. ///ஒன்னாம் தேதி புக்கை அனுப்பறதையே 'தாமதம்'னு சொல்லிக்கற அளவுக்கு மாறியிருக்கோம்னா, இதை என்னன்னு சொல்ல!!
      ஆனாலும் ஓவராத்தான் திருந்திட்டமோ?!! ;)///

      கண்ணுவைக்காதிங்க குருநாயரே..!!

      Delete
    2. திருஷ்டி சுத்தி போடுங்கப்பு
      .

      Delete
    3. நல்ல வேளை ரொம்ப நாள் தாமதமாகுமோன்னு....ஆனாலும் ரெண்டாம் தேதி புக்கு கிடைக்குறதையே தாமதமாகிவிட்டது என அறிவிப்பது செயலர் சொன்னபடி சார்...:-))

      Delete
    4. @ FRIENDS : ஓராண்டின் முழுமைக்கும் முதல் தேதிக்கு உங்கள் கைகளில் இதழ்களை ஒப்படைக்கும் திருப்தியினை உணர்ந்திட வேண்டுமென்பது என்னுள்ளிருந்ததொரு ஓசையிலா ஆசை !! அந்தக் களவாணிக் கிழவிகளின் லூட்டி மட்டும் இல்லாங்காட்டி - நிச்சயமாய் இம்மாதம் திட்டத்தில் பிசகிருந்திராது !

      ஆனால் இன்னமும் முயற்சிப்போம் !!

      Delete
  23. GD morning... The dust jacket is so nice , I'll be happy that if the dust jacket selected for front cover... :)

    ReplyDelete
    Replies
    1. karthic vadugapatty : Dust jacket தான் மேலே வரும் கவர் என்பதால் உங்கள் ஆசையும் நிஜமாகிறது தானே ?

      Delete
  24. அனைவருக்கும் காலை வணக்கம். இது
    காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு
    இமாச்சல் சென்று வந்த மாயாவிசிவா
    எங்கிருந்தாலும் வரவும் (ஆப்பிள் கேட்க
    மாட்டேன்) இல்ல வெயிலுக்கு பயந்து
    ஃபிரிட்ஜீக்குள்ள ஒளிஞ்சிட்டு இருக்கீங்களா???

    ReplyDelete
  25. அண்டர்டேக்கர் மிரட்டலாக இருக்கும் என தோன்றுகிறது. லயன் 300 & முத்து 400 ஜூலையிலா சபாஷ் !

    ReplyDelete
  26. இனிய காலை வணக்கம் எடிட்டர் சார்!!!
    இனிய காலை வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
  27. காலை வணக்கம் விஜயன் சார் & நண்பர்களே _/\_
    .

    ReplyDelete
  28. அண்டர் டேக்கர் மிரட்டுகிறார் சார்
    இப்பொழுதே படிக்க ஆவலாக இருக்கிறது
    மேலும் அவருடைய நீலநிறக் கண்களில் ஒரு வசீகரம் தென்படுகிறது
    அனைவரையும் கவர்வார் என நம்புவோம்
    .

    ReplyDelete
    Replies
    1. Prabakar T : பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகில் Xavier Dorrison என்பதொரு மரியாதைக்குரிய பெயர் !! எக்கச்சக்கமான ஹிட் தொடர்களுக்குக் கதை எழுதிய ஆற்றலாளர் இவர் ! அதே போல ஓவியர் Ralph Meyer-ம் ஓவிய அணியிலொரு டாப் படைப்பாளி ! இந்தக் கூட்டணியின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள அண்டர்டேக்கர் சாதிப்பார் என்றே தோன்றுகிறது !

      இதே கூட்டணியை நமது சமீப ஹிட் கதையொன்றில் சந்தித்திருக்கிறோம் ! எந்த இதழ் அது என்று யோசித்துப் பாருங்களேன் ?

      Delete
    2. //இதே கூட்டணியை நமது சமீப ஹிட் கதையொன்றில் சந்தித்திருக்கிறோம் ! எந்த இதழ் அது என்று யோசித்துப் பாருங்களேன் ?//

      XIII - மங்கூசின் அதிரடி இந்தக் கூட்டணிதானே சார்?

      Delete
    3. 'விரியனின் விரோதி!'

      Delete
  29. // இம்மாத கார்ட்டூன் இதழுக்கென நண்பர் பொடியன் போட்டுத் தந்துள்ள முன் + பின் அட்டைகள் !! //

    வாழ்த்துக்கள் பொடியன் சார் _/\_
    .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார் :-)

      Delete
  30. அனைவருக்கும் காலை வணக்கம். இது
    காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு
    இமாச்சல் சென்று வந்த மாயாவிசிவா
    எங்கிருந்தாலும் வரவும் (ஆப்பிள் கேட்க
    மாட்டேன்) இல்ல வெயிலுக்கு பயந்து
    ஃபிரிட்ஜீக்குள்ள ஒளிஞ்சிட்டு இருக்கீங்களா???

    ReplyDelete
  31. மாடஸ்டி பிளைசி

    ReplyDelete
  32. ரின்டின் கேன் அட்டை படம் மிக அருமை சார்...

    ReplyDelete
    Replies
    1. Mohamed Arafath : எல்லாப் புகழும் நண்பருக்கே..!

      Delete
    2. மிக்க நன்றி....

      Delete
  33. அண்டர்டேக்கர் அடுத்த டெக்ஸாக இருப்பாரா?ஜோராக இருக்கும் போல் ஆவலை தூண்டுகிறார்.

    ReplyDelete
    Replies
    1. Jaya Kumar : தெய்வமே.....மூன்றே ஆல்பம் பார்த்திருக்கும் இஸ்க்கூல் பையனை 70 ஆண்டுகளாய்ப் பல்கலைக்கழகமே நடத்திவரும் ஜாம்பவானோடு ஒப்பிடுவது ரெம்போ ஓவராக இல்லையா ?

      Delete
  34. மாதங்கள் ஒன்று....இதழ்கள் ஐந்து....


    எப்படியோ அடுத்த மாசத்துலயாவது மாதத்தில் ஐந்து நாள் சந்தோசமா இருக்கலாம் ...

    மிகுந்த நன்றி சார்...!

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : ஆனால் இவ்வடே இத்துப் போய்க் கிடக்கும் நாக்காரை ஒட்டுப் போட ஒரு மாமாங்கம் ஆகும் போல் தோணுதே தலீவரே !!

      Delete
    2. இதில் மட்டும் நீங்கள் கஷ்டபடுவதை இஷ்டபட்டு பார்க்கிறோம் சார்...:-)

      Delete
  35. ஒரு முடியா இரவு.
    சற்றும் தொய்வில்லாமல் மிகுந்த விறுவிறுப்பாக சென்றது.ஒரு இரவில் நடைபெறும் சம்பவங்களை வைத்து இவ்வளவு நேர்த்தியாக கதை சொல்லி இருப்பது பாராட்டுக்குரியது.கதையின் முடிவை யூகிக்கமுடியவில்லை.இதுபோன்ற கதைகளை அடிக்கடி போடவில்லை எனில். "எனக்கு பத்து வயதுதான் ஆகிறது........"ஹி ஹி

    ReplyDelete
    Replies
    1. Jaya Kumar : 10 தானே ? எனக்கு எட்டைத் தாண்டவில்லைங்கோ !!

      Delete
    2. ஆசியர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி.
      நண்பர்களிடம் ஒரு கேள்வி.
      நான் அனைத்து நாயகர்களின் கதையையும் படிக்கிறேன்.
      எனக்கு மொக்கை எதுவுமே தோன்றுவதில்லை.
      ஆனால் ஒட்டுமொத்தமாக மொக்கை என்று முத்திரை குத்தப்பட்ட இளம் டைகர் கதைகள் எனக்கு பிடிக்கும்.
      தனித் தொகுப்பாக வெளியிட்டாளும் வாங்கத் தயாராக உள்ளேன்.
      இதுபோல் வெவ்வேறு கதைகளில்
      மற்றவர்களுக்கு உங்களுக்கு பிரமாதமாக தோன்றியதுண்டா?
      ஆனால் ஒன்று நான் இதழ்கள் அனைத்தும் வாங்கிவிடுவேன்.

      Delete
  36. காமிக்ஸ் நண்பர்களுக்கு வணக்கம்.
    3 ஆண்டு மௌனப் பார்வையாளன்.
    இன்று ஜோதியில் ஐக்யம்.

    ReplyDelete
    Replies
    1. sathasivam99 : நல்வரவு ஜி !

      Delete
    2. உங்களை வருக வருக என காமிக்ஸ் தோழர்கள் அனைவர் சார்பாகவும் வரவேற்கிறோம் நண்பரே ...;-)

      Delete
    3. வணக்கம் நண்பரே, உங்கள் காமிக்ஸ் ரசனையை தயங்காமல் எழுதுங்கள்.

      Delete
    4. @ sathasivam99

      மூன்றாண்டுகள் மெளனம் கலைத்து இங்கே பதிவிட்டதற்கு வாழ்த்துகள் நண்பரே! நல்வரவு!!

      Delete
    5. நல்வரவு சகா சிவம்.

      Delete
  37. வாய்ப்பினைத் தந்த ஆசிரியருக்குத்தான் எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை.

    நன்றி நண்பர்களே! எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி பதிவிடப்படும் உங்கள் வார்த்தைகள் ஏற்றும் எனர்ஜி அபரிமிதமானது!!

    ஆனால், இதில் நான் பெரிதாக எதுவும் செய்திடவில்லை. முன்பக்க ஒரிஜினலில் பின்னணியை மாற்றி கொஞ்சம் கலர் கரெக்ஷன் செய்தேன். பின்பக்கத்தில் 3 தனித்தனிப் படங்களை எடுத்து ஒன்றாக்கிறேன். அவற்றில் ரெஷெல்யூஷன் பிரச்சனை இருந்ததால் சில வேலைகள் செய்ய நேர்ந்தது. மேலே ரின் டின் கேன் பாரலில் மோதிக் கொள்ளும் படத்துக்கு ஒரு எஃபெக்ட் கொடுத்து சமாளித்தேன். கீழேயுள்ள படத்தில் பின்னணியை நீக்கும் அவசியமிருந்தது. அதைச் செய்துவிட்டுப் பார்த்தபோது வெள்ளை பேக்ரவுண்டில் அதுவாகவே கச்சிதமாய் அமர்ந்துவிட்டதாய்த் தோன்றியது. ரெஷொல்யூஷன் ப்ராப்ளம் பெரிதாய்த் தெரிந்ததால், டச் -அப் செய்யவேண்டியிருந்தது. பின்னரும் திருப்பி வரவில்லை.. எனவே, ப்ளாக் லைன் ட்ராயிங்காக அந்தப் படத்துக்கு மேலேயே வரைந்திருக்கிறேன் (என்னாது, சின்னப்புள்ளத் தனமாருக்கு!!).

    மூன்றாவதாக நடக்கும் ரின்-டின் கேனை கொண்டுவந்து அந்த இடத்தில் ஃபில் பண்ணிவிட்டேன். முன்னட்டையில் உள்ள ரின்-டின் கேன் தலை லோகோ மட்டும் தனியாக வரைந்து நானே கலர் பண்ணிக்கொண்டது. ஆசிரியர் ஐரோப்பாவில் 'பாட்டிகளிடம் சிக்கிய சம்பவம்' இதே காலப்பகுதியில் நடந்துகொண்டிருந்ததால் அவரது ஆலோசனைகளை பெற முடியவில்லை. ஊர் திரும்பியதும் சில மாற்றங்களை செய்ய சொல்லி மின்னஞ்சல் அனுப்பினார். அச்சுக்கான நேரம் நெருங்கியிருந்ததால் 'வந்த வரை ஒரு மாதிரி ஒப்பேற்றிடுவோம்!' என்று அவர் நினைத்திருக்கக்கூடும். அச்சில் பார்த்தால்தான் நம் 'திரு விளையாடல்கள்' எந்த அளவுக்கு சொதப்பியிருக்கும் என்பது தெரியும்.

    ஏன் இவ்வளவு பெரிதாக இதைப்பற்றி பதிவிடுகிறேனென்றால், 'நம் டிசைனையெல்லாம் யார் ஏற்பார்கள்?' என்று சிலர் தயங்கி விட்டுவிடக்கூடும். அவர்களுக்கும், 'இதெல்லாம் ஒரு மேட்டரே அல்ல. எடிட்டர் ஐடியாவை அப்படி - இப்படி பண்ணி சமாளிச்சுட்டா சாதிச்சுரலாம் என நம்பிக்கை ஊட்டுவதற்காகத்தான். தயக்கங்களை உதறிவிட்டு, ஒரு ட்ரை பண்ணுங்கள் - அசத்துவீர்கள்!

    Note: இதைவிட பின்னணி மாற்றிய டிசைன் ஒன்றும் உள்ளது. ஆசிரியர் ஏதாவது ஒரு மழை நாளில் அதனையும் வலையேற்றக்கூடும்

    ReplyDelete
    Replies
    1. நண்பர் பொடியன் அவர்களுக்கு எனது தாமதமான வாழ்த்துக்களும்.

      Delete
  38. நம் ஓவியரது கைவணத்தில் டைட்டில்! - அந்தக் கால ஞாபங்களை கிளறிவிட்டுள்ளது. அவ்வப்போதாவது நடைமுறைப்படுத்தப்பாருங்கள் சார். குறிப்பாக ரீ-பிரிண்ட்களில் அவசியம் இந்த பாணியில் டைட்டில்கள் அமையட்டுமே......

    ReplyDelete
  39. 'தி அண்டர் டேக்கர்!' மற்றும் 'ரின் டின் கேன்!' - இருவரதும் பெயர் பொறித்த எழுத்துரு ஒன்றாக அமைந்திருக்கிறது - தற்செயலானது.

    என்னவொரு சகுனமோ, கடவுளே!

    ReplyDelete
  40. இந்த மாதம் 5 இதழ்கள் என்பது மகிழ்ச்சியான தருனம் இதுவே தொடர எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  41. நான் ஒரு புத்தகத்தை 3 முறைக்கு மேல் படிக்றேன்
    1- அட்டை உள் அட்டை விரைவில்.வருகிறது
    சிங்கத்தின் சிறு வயதில் தோட்டா டைம் ஆகியன
    2 சித்திரங்களை ரசிப்பது
    3.கதையை படிப்பது
    4.சில கதை நல்லா இருந்தால் திரும்பபடிப்பது

    ReplyDelete
    Replies
    1. நான் கதைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்.! கதையை படித்துவிட்டு அதற்கு மனதில் ஒரு உருவகம் தோன்ற உதவிக்கு மட்டுமே ஓவியங்கள் பார்ப்பது .இப்படித்தான் நான் படிக்கின்றேன்.! சிறு வயதில் இருந்து இப்படித்தான் படிக்கின்றேன்.!


      என்னுடைய கருத்துப்படி என்னைப் போன்றவர்கள்தான் மெஜாரிட்டியாக உள்ளோம்.!இணையதளத்தில் வந்த பிறகுதான் ...ஒ இப்படித்தான் காமிக்ஸ் படிக்கனுமோ ?, என்று ஓவியங்களையும் ஒரளவிற்கு ரசிக்கின்றேன் .!


      ஆனாலும்,மொழியை இடம்இருந்து வலமாக படிக்கும் பழக்கம் கொண்ட நாங்கள் திடீரென்று வலம் இருந்து இடமாக படிக்கும் பழக்கம் கொண்ட உருது போன்ற மொழிகளை கற்று படிப்பது என்னைப்போன்றவர்களுக்கு கடும் சிரமம் தான்.கி.நா.வில் நாங்கள் தடுமாறுவது இதனால்தான்.!

      அதாவது,75% எழத்துக்கையும் ,25%சித்திரமும் நம்பி படித்துவிட்டு திடீரென்று 25% எழத்து 75% சித்திரம் என்று படிக்க முற்பட்டால் , டக்புல்லிடம் அடிவாங்கிய கிட் ஆர்ட்டின் மாதிரி நாக்கு தொங்கி தலை சுற்றுகிறது.!



      முன்பு நமது எடிட்டர் சித்திரங்கள் வரைவது எப்படி என்று ஒரு அழகான தொடர் எழதினார்.! அதைப்போல தற்போது நேர்த்தியாக காமிக்ஸ் படிப்பது எப்படி.? என்று ஒரு தொடர் வெளியிட்டால் ரொம்ப நல்லா இருக்கும்.!

      எனக்கு ஒரே சந்தோசம்.,என்னைப் போன்றவர்களே மேஜாரிட்டி வாசகர்கள்.......


      அதனால் , எங்களுக்கு அறுதி பெரும்பான்மை இருப்பதால் எங்கள் ஆட்சிதான் கோலோச்சும்.........

      Delete
    2. ஐயா, மெஜாிட்டி அதிகம் என்பதற்காக தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது சாியாகுங்கலா?

      அது "படக்கதை" தானுங்களே.

      "கதைப்படம்" இல்லையே !!! ???

      Delete
    3. ஓவியங்கள் ரசிக்கும் கலைஞர்கள் அதிகம் பேர்கிடையாது.! என்னைப்போன்ற சாமானியர்கள் தான் வாசகர்கள் வட்டம் அதிகம்.!


      நீங்கள் சொல்வது சரிதான் கதைப்படம் கிடையாது.!தான்.!


      எடிட்டர் உங்கள் பக்கம்தான்.!

      என்னதான் பிசினஸ்ஸில் எடிட்டர் கிங்காக இருந்தாலும்,மாடஸ்டியை போல் சூழ்நிலை புரிந்துகொண்டு மதியூக மாக செயல்பட்டாலும்......


      எங்கள் மாஸ் அதாவது மார்க்கெட்டிங் (விற்பனை) என்ற பிராம்மாஸ்திரம் முன்னால் ஜலதோஷம் பிடித்த சுட்டிப்பயல் பென்னியின் நிலைதான்.!எடிட்டரின் நிலை.!



      ""கதைப்படம் லாஜிக் இங்கு பொருந்தாது.!

      சென்னை பீச்ஸ்டேஷனில் இறங்கி பீச் சை தேடுறமாதிரிதான்.!

      காமிக்ஸை பொறுத்தமட்டில் சந்தோஷம் மட்டுமே ,போகின்ற வழி வெவ்வேறாக இருந்தாலும் இலக்கு சந்தோஷம்.!


      என்னை போன்ற பழைய வாசகர்களுக்கு சுயம்புலிங்கம் போல் தானாக உருவான காமிக்ஸ் ரசனையை ரூல்ஸ் போட்டு வரையறை செய்யமுடியாது.!


      புது வாசகர்கள் வேண்டுமானால் ரசனையை மாற்றிக்கொள்ளமுடியும்..

      ஆனால் நாங்கள் மாறமுடியாது.தற்போது ஓவியங்களை ஓரளவு ரசிக்கின்றேன் என்றாலும்.,முதல்முறை வழக்கப்படி படித்துவிட்டு பிறகுதான் ஓவியங்களை ரசிக்கின்றோம்.


      நீங்கள் கூறிய கருத்து உண்மை என்ற போதும் ,எங்கள் சந்தோசத்திற்கு முன் உண்மைக்கு இடமில்லை.!இக்கருத்தை கூற நிறைய வாசகர்கள் தகுதி குறைவாக நினைத்து மௌனமாக இருக்கலாம்.ஆனால் அதை எடிட்டர் நிச்சயமாக புரிந்துகொள்வார்.!


      மீள்வருகையின் தொடக்கத்தில் ஓவியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளின் எண்ணிக்கை டாப் கியரில் கொண்டுசென்றவர் யூ டேர்ன் போட்டு திரும்பியதே இதற்கு சான்று.!


      ஏனென்றால் மௌனமாக விற்பனை என்று ஆயுதத்தால் தாக்கும் வாசகர்கள் கணிசமான அளவில் உள்ளனர்.!

      குறிப்பு:

      நான் பிடிக்காத கதைகளைக்கூட வாங்கி படிக்காமல் ஓரமாக வைத்துவிடுவேன்.ஏனென்றால் சாய்ஸில் விடுவது நமது குறுகிய வாசகர்கள் வட்டத்திற்கு உகந்தது அல்ல என்பதால்.இதை நாம் அனைவரிடமும் எதிர்பார்க்கமுடியாதல்லவா.???


      Delete
    4. தொடர் எல்லாம் வேணா சார்.முதல்ல ஓவியம்.அதில் எந்தெந்த கதாப்பாத்திரங்கள் இடம் பெறுகிறது'எந்த சூழலில் கதை நகர்கிறது,வரையப்பட்ட காட்சி கோணம்,வர்ணச் சேர்கை இவற்றை உள்வாங்கிக் கொண்டு எந்த வசனம் எந்த கதாப்பாத்திரத்தினுடையதுனு புரிந்து கொண்டு கதைய உள்வாங்கி நகர்த்த வேண்டியதுதான். ஆனால் பரபரப்பான கதைகளின் போது கதை வாசிக்கும் ஆர்வத்தில் ஓவியருடைய திறன் உணர முடியாமல் போய்விடும். இது அனைவருக்கும் நிகழக்கூடியது.

      Delete
    5. காமிக்ஸ்ல அனுபவிக்கரதா உணர்ந்த சந்தோசத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்
      என்பதற்காகத்தான்.மற்றபடி யாரையும் காயப்படுத்தும் நோக்கம் அல்ல(இருங்க,எதுக்கும் நா சரியாத்தா பேசரநானு உறுதிப்படுத்திட்டு வர்ர.)

      Delete
    6. //காமிக்ஸ்ல அனுபவிக்கரதா உணர்ந்த சந்தோசத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்
      என்பதற்காகத்தான்.மற்றபடி யாரையும் காயப்படுத்தும் நோக்கம் அல்ல(இருங்க,எதுக்கும் நா சரியாத்தா பேசரநானு உறுதிப்படுத்திட்டு வர்ர.)//

      Yes, your correct sir.
      I agree.

      Delete
    7. காமிக்ஸ் என்பது படக்கதைதான். கிட்டதட்ட நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் காமிக்ஸ் படிக்கும் உள்ள எனக்கு தற்போதைய வழவழ கொழ கொழ கதைகளில் ஈடுபாடு இல்லை. சாண்டில்யன் கல்கி போன்றோர் எழுதிய சரித்திர கதைகளும் படித்திருக்கிறேன். அதை படிக்கும் பொழுது காட்சிகள் கண்களில் விரியும். தற்பொழுது விகடன் வெளியீட்டில் ஒரு கிராப்பிக் நாவல் வெளியிட்டார்கள் என்று நினைக்கிறேன. ஆனால் அதில் எனக்கு ஈடுபாடில்லாமல் போய்விட்டது. காமிக்ஸ் என்பது படக்கதை மட்டும்தான். அதில் வசனங்கள் குறைவாக உள்ள டெஸ்மாண்டை(ரிப் கெர்பி) முன்னிருத்திய மனதை தொடக்கூடிய சில கதைகளும் அருமையாக இருந்தன. அதை விடுத்து தற்பொழுது வன்முறை அதிகமாகி விட்டது. போகிற போக்கில் பலர் விரும்புகிறார்கள் என்பதற்காக XXX கதைகளையும் காமிக்ஸ்-ல் வெளியிட கோரிக்கை வைத்தால் என்ன செய்வது?

      Delete
    8. ராம் & மிதுன்.!

      +1111111

      அரசியல் தலைவர்கள் பிறந்த நாளின் போது ,அவரைப்பற்றி பட்டி மன்றங்களி இரு அணியினரும் சண்டை போட்டு விவாதம் செய்தாலும் உள்நோக்கம் தலைவரை பெருமைபடுத்துவதே.! அதேபோல்தான் நம் விவாதங்களும்.இதில் மனவருத்தம் ஏதுமில்லை.! தனிமனிதனை காயப்படுத்துவதை தவிர நாம் என்ன விவாதம் செய்தாலும் அது காமிக்ஸுக்கும் நமக்கும் பெருமைதான்.!

      முன்னால் காமிக்ஸ் நண்பர் ஒருவர் பிரபல நாளிதழில் மாடஸ்டிபிளைசியின் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்க ,சிறிய தவறுகளையெல்லாம் வெளிச்சம்போட்டு எழதியது மனதை பாரத்தை தந்தது.! நானும் தலைவர் பாணியில் பக்கம் பக்கமாய் எழதி மனபாரத்தை குறைத்துக்கொண்டேன்.! தலைவரின் வழி மனதின் பாரத்தை குறைக்க அருமையான வழிமுறை.!


      இப்படித்தான் அடுத்தவர் மனம் புண்படாமல் நடக்கவேண்டியது உள்ளது.!

      Delete
    9. //போகிற போக்கில் பலர் விரும்புகிறார்கள் என்பதற்காக XXX கதைகளையும் காமிக்ஸ்-ல் வெளியிட கோரிக்கை வைத்தால் என்ன செய்வது?//

      கவலைப்படாதீர்கள் ஐயா, நம் ஆசிரியர் அந்த தவறை எல்லாம் ஒரு நாளும் செய்யமாட்டார்.

      Delete
    10. ஆமாம் சார்.!

      விற்பனையில் சக்கைபோடு போட்டாலும் டேஞ்சர் டயபாலிக்கை தள்ளி வைத்தவர்தானே.???

      Delete
  42. சாா்,
    சூப்பா் சிக்ஸ்-ல் அடுத்து சிக்பில்லா?

    ReplyDelete
  43. Sir oru சிறு வேண்டுகோள் அடுத்த வெளியீடு, வருகிறது, விரைவில், நிரய டெக்ஸ் கதைகள் பற்றிய முன்னோட்டம் வெளியிடவும்.please sir.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க சார்.
      பழைய இதழ்களில் 'வருகிறது ' 'அடுத்த வெளியீடு' ஆண்டுமலர் ஸ்பெஷல், தீபாவளி மலர் என்று நாலஞ்சு பக்கங்கள் ஜெகஜோதியாக இருக்கும. அதைப் படிக்கவே இனம்புரியா ஈர்ப்பு ஏற்படும்.

      தற்போதைய வெளியீடுகளில் காமிக்ஸ் மட்டுமே இடம்பெறுவதால் ஒரு வெறுமையான உணர்வு ஏற்படுகிறது.

      Delete
    2. @ Friends : முன்னர் black & white பக்கங்கள் ; சாணித் தாள் ; சொற்ப விலைகள் என்ற போது இஷ்டத்துக்கு எதை எதையோ போட்டு பக்கங்களை நிரப்பத் தயங்கியதில்லை ! ஆனால் இன்றோ விலைகளுக்கு நியாயம் செய்ய வேண்டுமென்ற ஆதங்கம் சதா நேரமும் யோசிக்கச் செய்கிறது ! விளம்பரங்களாய்ப் போட்டு பக்கத்தை ரொப்பி விட்ட உணர்வு தலைதூக்கிடக் கூடாதல்லவா ?

      Delete
    3. வருகிறது கதை விளம்பரங்கள் புத்தகத்தின் அழகை மேலும் மெருகூட்டுகிறது சார்.சாதரண பெண்ணை மணப்பெண்போல் அழங்கரிப்பது.வருகிறது என்ற கதை விளம்பரங்கள்தான்சார்.!

      அதுவும் சில வருடங்கள் கழித்து புரட்டும்போது ஒரு அனந்தத்தை தருகிறது சார்.! இரட்டைவேட்டையர்கள் கதையான அப்பிரிக்க சதி கதைபுத்தகத்தை இன்று புரட்டினாலும் ஒரு அனந்தம் தருகிறது சார்.!(எனக்கு தெரிந்த வரை அதிக வருகிறது கதை விளம்பரங்கள் இந்த புத்தகத்தில்தான் வந்துள்ளது.! இது சரியா நண்பர்களே.???)

      Delete
    4. பல கோணத்திலயும் சிந்திக்கிறீகளே எடி;இது எப்பூடி உங்களால மட்டும் முடிதூ.

      Delete
  44. அட்டை படங்கள் அருமை . கடைசியாக புலி வந்தே விட்டது. "அண்டர் டேக்கர்"சித்திரங்கள் மிரட்டுகின்றன . பௌன்சர் இனையே ரசித்து விட்டோம். அண்டர் டேக்கர் இனை வர மாட்டோமா என்ன ?

    ReplyDelete
  45. டின்-டின் கேனுடைய "தடை பல தகர்த்தெழு " அட்டை படம் சூப்பர் ஆக உள்ளது . பாராட்டுக்கள் பொடியன் சார் .

    ReplyDelete
  46. அண்டர் டேக்கர் பெளன்சரையே தள்ளி வைத்து ஓட வைப்பாரா ...

    காத்திருக்கிறேன் ....:-)

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : போட்டுத் தள்ள ஒருத்தர் ; புதைத்து ஏற்பாடு செய்ய இன்னொருத்தர் என்பது தானே வன்மேற்கின் பாணி ? இங்கோ - ஒரே ஆசாமி இரண்டையும் செய்கிறேன் என்கிறார் ! பார்ப்போமே இவர் சரக்கையும்..முறுக்கையும் ?

      Delete
    2. ஆல் ரவுண்டுடர் என சொல்லுங்க :-)

      Delete
  47. தடை பல தகர்த்தெழு அட்டைப்படம் மிக அருமை. தி அண்டர்டேக்கர் சித்திரங்கள் மிரட்டல் ரகம்.

    ஒரு முடியா இரவு வித்தியாசமான வாசிப்பு அனுபவம்.

    ReplyDelete
  48. சார் அண்டர்டேக்கர் அட்டை படம் சான்சே இல்ல . இதுவர வந்ததிலே பெஸ்ட் .நீலவானின் கீழே கரும்பயணம் , அட்டை கூட உணர்த்துவதருமை .எழுத்துரு தூள் கிளப்புது .. மேலட்டை ஒரு சாயலில் மிரட்டுது . உள் பக்கங்களின் மங்கிய நிறம் என்னமோ பன்னுது .தூள் சார் .இதமான நீல வானம் , பசும் புல்வெளி , நீலம் தந்து சுறா கொண்ட கடல் , பின்னட்டை என பின்னுது பிரதீப் . அட்டகாசம் . கார்ட்டூன் கதை அட்டைகளில் நமக்கு இதும் மணி மகுடம் . வாழ்த்துகளுடன் ஸ்பெசல் நன்றிகள் . சார் வழக்கம் போல பழய அட்யும் பிரம்மாதம் . வெகு சிறப்பு .லயன்300 , முத்து 400 அடுத்த மாதமும் ரகளைக்குப் பஞ்சமில்லை ...ஷானியாவுக்காக விடை கொடுக்கும் எண்ணமில்லை ... ஐ ஆம் வெய்ட்டிங் ஷானியா ...

    ReplyDelete
  49. விஜயன் சார்,
    சமீபத்தில் Battle collections (1-600) படிக்க/பார்க்க வாய்ப்பு கிடைத்தது. 1985-89 லேயே இதையெல்லாம் எங்களுக்கு நீங்க அறிமுகம் செய்தது வியக்க வைக்கிறது..
    1. இரும்புக்கை நார்மன் - Gaunt (மனித எரிமலைய மறக்க முடியுமா?)
    2. இரட்டை வேட்டையர் - The Hunters (ஆப்பிரிக்க சதி மட்டுமே அப்போது படித்தேன்)

    அட்டகாசமான B&W சித்திரங்கள், த்ரில்லிங் World War II and other War/Action கதைகள் என..
    சும்மா பட்டைய கெளப்பி இருக்கே..

    மறுபதிப்பில் இவர்களுக்கும் இடம் எதிர்பார்க்கலாமா?
    (British comics என்றாலே மாயாவியும், ஜானி நீரோவும் கொஞ்சம் over dose ஆவதுபோல இருக்கே - hard core fans மன்னிக்கவும்)

    ஒரு கேள்வி.. Battleல வரும் Johnny Red, Charles War, Rat pack, etc.. எல்லாம் அந்த காலத்தில் எங்களுக்கு too much என்று விட்டுடிங்களா? இல்ல world war or military கதைகள் அப்போ வெற்றி அடைய வில்லையோ? எப்படி நீங்க Franco-Belgium பக்கம் கரை ஒதுங்கினீர்கள்?

    More info மற்ற நண்பர்களுக்கு..
    https://en.wikipedia.org/wiki/Battle_Picture_Weekly

    ReplyDelete
    Replies
    1. Prabu : Rat Pack தான் பெருச்சாளிப் பட்டாளமாய் நமக்கு அறிமுகம் ஆனவர்கள் !

      Johnny Red கதைகள் விமானப்படை சார்ந்தவை & moreover ரஷ்ய யுத்த முயற்சிகள் சார்ந்த கதைகள் என்ற போது - எனக்கு அவ்வளவாய் self எடுக்கவில்லை அந்நாட்களில் !

      Charlie 's War -ஐப் பொறுத்தவரையிலும் முதலாம் உலக யுத்தப் பின்னணி என்பதால் ரொம்பவே புராதன நெடியடிக்கக் கூடுமென்ற பயம் எனக்கு ! All time War Story Classics -ல் இந்தத் தொடரானது நிச்சயம் இடம்பிடிக்கும் என்ற போதிலும், நம்மவர்களுக்கு அவ்வளவாய் யுத்தக் கதைகளில் நாட்டம் எழுவதில்லை என்பதால் இப்போதும் தயக்கமே மேலோங்குகிறது !

      Delete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. omkumar : முத்து மினி காமிக்ஸ் மொத்தமே 8 இதழ்கள் கொண்டதொரு முயற்சி ; அவற்றுள் 6 இதழ்களைத் தான் போன ஆண்டே வெளியிட்டு விட்டோமே சார் ?

      Delete
    2. சார் தயவு செய்து இன்னொருதபா பழி வாங்கிராதீங்க.முத்து மினி காமிக்ஸ் ஒரு சில கதைகள் நல்லா இருந்தாலும் ஓவியங்கள் சுமார ரொம்ப பழைய பாணியில் இருந்தது.அதைய எல்லாம் பீரோவை விட்டே எடுக்காதீங்க பாதுகாப்பா அங்கயே இருக்கட்டும்

      Delete
    3. Sri Ram : இருபது ரூபாய் விலை ; அதிலும் 10 % புற்று நோய் மருத்துவமனைக்கு நன்கொடையாக ; இஷ்டப்பட்டால் வாங்கி கொள்ளலாமென்றதொரு சமாச்சாரம் ; And இவை சகலமுமே இந்திய ஆக்கங்கள் / முந்தைய காலகட்டத்துக் கதைகள் என்பதிலும் எவ்வித ஒளிவு மறைவு இருந்ததில்லை ! அப்புறம் இதில் நான் யாரை ; எவ்விதம் பழி வாங்கப் புறப்பட்டிருக்கிறேனோ ? புரிய மாட்டேன்கிறதே ?

      Delete
    4. முத்து மினி காமிக்ஸ்-ல் வெளிவந்த 6- கதைகளையும் சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கினே;. வீட்டில் வந்து பார்க்கும் பொழுது அதில் படகு வீடு மர்மம் விடுபட்டு விட்டது. அந்த காலத்தில் வெளி வந்த பொழுது உள்ளுர் சித்திரக்கதைகள் படிக்க நன்றாக இருந்தது. தற்பொழுது அதில் அவ்வளவு ஈடுபாடு வரவில்லலை. ஆனாலும் இவை வந்தது நல்ல நோக்கத்திற்காக. திருப்பியும் இதைபோன்று பல கதைகளை தாங்கள் வெளியிட்டால் என்னை போன்ற சிலர் வாங்குவதற்கு தயாராக இருப்பார்கள்.

      Delete
  51. பதிவு வரும் முன்னே! காமிக்ஸ் வரும் பின்னே.பொறுத்து இருப்போம்!?

    ReplyDelete
  52. புத்தகங்கள் சீக்கிரம் வரட்டும்.!இந்த மாதம் டெக்ஸ் புத்தகத்தை பார்க்க ஆவலுடன் உள்ளேன்.


    டெக்ஸின் சராசரி வாசகனான என்னையே ஏங்க வைத்துவிட்டது.டெக்ஸின் முரட்டு பக்தர் சீராடிக்கொண்டு போனதில் வியப்பு ஒன்றும் இல்லைதான்.!

    ReplyDelete
  53. ஆகா.!

    இந்த முறை ஐந்து புத்தகங்கள்.!

    அதென்னெவோ தெரியவில்லை.கூரியர் பார்சல் லேசானால் மனது கனத்துவிடுகிறது.பார்சல் கனமானால் மனது லேசாகி பறக்கிறது.! இது எனக்கு மட்டும்தானா.?

    ReplyDelete
    Replies
    1. to மாடஸ்டி பிளைசி வெங்கடேஸ்வரன்: அடுத்த மாதம் பார்சலின் கணம் இன்னும் கூடும். உங்கள் மனம் இன்னும் இன்னும் மேலே மேலே என்று பறக்கப்போகிறது பாருங்கள்.

      Delete
    2. குமார் @

      மிகவும் நன்றி நண்பரே.!!!

      Delete
  54. பள்ளியில் படிக்கும் சிறுவயதிலும் ஸ்கூல் திறக்கும்போதும் சரி.,இன்று பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் மற்ற இத்யாதி செலவுகளும் சரி ,அன்றும் இன்றும் ஜுன் மாதம் என்றாலே வயிற்றில் புளிகரையத்தான் செய்கிறது.அன்றும் இன்றும் ஜுன் மாதம் என்றுலே மந்ததரித்து விட்ட கோழி மாதிரிதான் சுத்தறேன்.நிறைய நண்பர்கள் இங்கே ஆப்சன்ட் என்கிறபோது ,அவர்களுக்கு ஷேம் பிளட்டுதானா.?

    ReplyDelete
  55. பேஸ் புத்தகத்தில்.! அண்டர்டேக்கர் அட்டை படம் அழகாய் உள்ளது.! நான் ஷேர் செய்துவிட்டேன் நண்பர்களே.! நீங்களும் முடிந்த அளவு ஷேர் செய்யுங்கள் நண்பர்களே.!

    ReplyDelete
  56. Replies
    1. இன்னைக்கேதான்,நாளைக்கு தரிசனம்.

      Delete
  57. அண்டர்டேக்கர் அட்டைப்படமும்,டஸ்ட் ஜாக்கெட்டும் அசத்துகின்றன,வித்தியாசமான ஒரு அனுபவத்துக்கு தயாராக வேண்டும் போல.

    ReplyDelete
  58. //ரிப்போர்ட்டர் ஜானியும், அண்டர்டேக்கரும் சும்மா மிரட்டோ-மிரட்டென்று மிரட்டியுள்ளனர் வண்ணத்தில் ! ஜானியின் கதைக்கு சற்றே புராதன ; பளீர்-பளீர் வர்ண பாணி தான் என்பதால் பக்கத்தைப் புரட்டப் புரட்ட ஜெர்மன் மசிகளின் ஜாலம் வசீகரிக்கிறது !//
    அருமை,அருமை,ஜானிக்காகவும் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  59. புத்தகங்களை கைப்பற்றியாச்சேஏஏஏ..!!!

    ReplyDelete
  60. அவசரப்பட்டு பொங்கிடாதிங்க மக்களே..!

    ரொம்ப நாளா ANSயைம் MDSஐயும் பரண்ல எங்கே வெச்சேன்னு தெரியாம தேடிட்டே இருந்தேன். .!

    இப்பத்தான் ரெண்டும் கையில சிக்குச்சுங்க... அதான்..

    புத்தகங்களை கைப்பற்றியாச்சே ன்னு குதூகலமா கமெண்ட்டிட்டேன்..

    டோன்டு மிச்சுடேக் மீ ப்ளீஜ்..! :-)

    ReplyDelete
    Replies
    1. ஆங்.! மறந்துட்டேனே..!

      "ஹிஹிஹி "

      Delete
    2. வாங்க.! வாங்க.!இப்படி அப்படி செய்து இத்தளத்திற்கு பூஸ்டு கொடுக்கும் உங்க சேட்டை ஓ.!ஓ.! சாரி சாரி உங்கள் சேவை தெடரட்டும்.!


      அப்படியே கோவிச்சுக்கிட்டு போன உங்கள் மாமாவையும் கூட்டிட்டு வந்துடுங்க மாதம்.! ஜுன் டெக்ஸ் அதிரடி ஆரம்பம் .....

      Delete
  61. ஜுன் மாத காமிக்ஸ்கள் நினைத்தாலே இனிக்கிறது.வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கிறது.! காத்திருப்பது கூட சுகமாகத்தான் உள்ளது.!

    ReplyDelete
  62. நாளை புக்கு லேது.!

    தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டியதாம்.!


    மதுரையில் ஒரு முறை ஒரு பெண்ணின் கைபை களவுபோனது.!அதில் சில ஆயிரங்கள் பணமும் முக்கிய ஆவணங்களும் இருந்தன.அப்பெண்ணோ பணம்போனாலும் பரவாயில்லை சர்பிகேட் போய்விட்டதே என்று கதறி அழதது.ஆனால் இரண்டு நாள் கழித்து தபாலில் ஸ்டாம்ப் ஒட்டப்படாமல் பணத்தை தவிர அனைத்து ஆவணங்களும் கவரில் வீடு வந்து சேர்ந்தது.!


    திருடர்கள்தான் பட் அதிலும் ஒரு நேர்மை.!

    அதே போல் வெளிநாட்டு பயணிகளிடம் பறிபோகும் பாஸ்போர்ட் கூட அவர்களது தூதரகங்களுக்கு கரெக்ட அனுப்பிய சம்பவங்களையும் நிறைய கேள்விபட்டுள்ளேன்.!

    ReplyDelete
  63. நம்பிக்கை. . . அதானே. .எல்லாம்..!

    நாளைக்கு வந்திடும்..!!

    ReplyDelete
  64. Palanivel arumugam:
    //அட ராமா என் போன்ல் படம் வர்ல //

    தீர்வு 1;

    போனில் உள்ள டீபால்ட் பிரௌசரை(default(company) browsar) உபயோகப்படுத்தி பார்க்கவும்.

    தீர்வு 2;

    பிளாக்கின் கீழே வ்யூ டெஸ்க்டாப்(view desktop) ஐ அழுத்தி பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. chrome ல் open பண்ண sometimes வராது. நேரா Google ல search பண்ணுங்க சாா்.

      Delete
    2. Google ல வருது சார்

      Delete
    3. மகிழ்ச்சி. தலீவர் கிட்ட சொல்லுங்க.

      Delete
  65. பாஸ்போர்ட்டை ஆட்டையை போட்டப்போக்கூட அந்த பாட்டீம்மாக்கள் மேல அப்படியொன்னும் கோவம் வரல. ஆனா இப்ப புத்தகம் வர லேட்டாகறதுக்கு அந்தப் பாட்டீம்மாக்கள்தான் காரணம்னு வரும்போது லைட்டா ஒரு கொலவெறி வருது!
    அந்தப் பாட்டீம்மாஸ் மட்டும் என் கைல சிக்கினா... அந்த டொக்கு விழுந்த கடவாயிலயே நறுநறுனு கிள்ளிப்புடுவேன்!கிர்ர்ர்ர்...

    ReplyDelete