Saturday, March 18, 2017

மகிழ்வோம்..மகிழ்விப்போம் !!

நண்பர்களே,

வணக்கம். பின்னிரவில் ஊர் திரும்பி. அதிகாலையில் கண்ணைத் திறந்து பார்க்கும் போதே - load more தலைநோவுக்கு மத்தியிலும்   உங்களது அழகான வாழ்த்துக்கள் அணிவகுத்து நிற்பதைப் பார்த்திடும் போது நிறைவாக இருந்தது ! "அட...சில பல கழுதை வயசாவதையும் கூட, அன்பிற்குரியவர்களின் அண்மை இத்தனை அழகாக்குகிறதே" என்று நினைத்துக் கொண்டேன் !!  இங்கும் சரி ; FB -யிலும் சரி - வாழ்த்தியுள்ள / வாழ்த்தவுள்ள நண்பர்கள் அனைவருக்கும் thanks a ton !!

வழக்கம் போலவே ஏதேனும் வேறு பணிகளின் பெயரைச் சொல்லி பிளைட் டிக்கெட்டைப் போட்டுவிட்டு, சிக்கும் சந்தடி சாக்கில் - நமது காமிக்ஸ் வேலைகளை செய்திட இம்முறையும் தவறவில்லை !! And லாலா கடைக்குள் தொலைந்து போன பொடுசைப் போல வியாழனன்று விடத் துவங்கிய வாயோர ஜலப் பிரவாகம் இன்னமும் தீர்ந்தபாடில்லை !! ஷப்பா.....!!! .ஓராண்டுச் சந்தாவை முன்கூட்டியே மட்டும் அறிவிக்காது முன் போல - 'ஒரு ஸ்பெஷல் தோசை ; ஒரு பிளேட் லெமன் ரைஸ் ; நடுவே கொஞ்சம் ஐஸ் கிரீம் ; அப்புறம் புரோட்டா ; திரும்பவும் ஒரு பிளேட் பிரியாணி' என கலந்து கட்டும் வாய்ப்பு இருப்பின் அடுத்த மாசமே  அதகளம் பண்ணியிருக்கலாமே !! என்ற ஆதங்கம் தான் ஊர் திரும்பும் வழி நெடுகிலும் !! Anyways 2018 அத்தனை தூரமில்லை தானே என்று மனசைத் தேற்றிக் கொள்கிறேன் -ஜொள்ளைத் துடைக்கும் முயற்சிக்கு மத்தியினில் !! 

Load more மொக்கையைத் தவிர்க்க - இதோ வழக்கம் போலொரு உப பதிவு !! அட்டகாச மேடையாய் டாலடிக்கும் நமது சமீப நாட்களது வலைப் பக்கத்தை இதே போன்ற high voltage உற்சாகத்தோடு தொடரும் பாக்கியம் மட்டும் கிட்டின் - காமிக்ஸ் எனும் கைக்குழந்தையை உச்சி முகர ஒரு பட்டாளமே சீக்கிரம் தயாராகி விடுமென்பது உறுதி !! நம்பினால் நம்புங்கள் folks - கடந்த 1 வாரத்து ஆன்லைன் விற்பனை almost double than normal !! இங்கே நிலவி வரும் அந்த சந்தோஷ உச்சஸ்தாயிக்கும் அதற்கும் தொடர்பில்லை என நான் நினைப்பின் - ஆர்டினை விடப் பெரிய அசமஞ்சி நானே !! விற்பனைகள் என்பதையெல்லாம்  புறம் தள்ளிவிட்டுப் பார்க்கும் போது - இந்த சந்தோஷ சதிராட்டம் தரும் உற்சாகமும், கலப்படமற்ற மகிழ்வும் நமது நாட்களுக்கொரு புது மெருகூட்டுவது கண்கூடு !! மகிழ்வோம்..மகிழ்விப்போம் !!

ஞாயிறு பதிவு வரை உங்கள் பொழுதுகளை சுவாரஸ் யமாக்கிட இதோவொரு caption contest ! வெற்றி பெரும் வாசகருக்கு ஒரு WWF ஸ்பெஷல் பரிசு !! Bye now ! See you again soon ! 

126 comments:

  1. Replies
    1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்..

      Delete
    2. மனங்கணிந்த பிறந்தநாள் வாழ்த்துகள் சார். .!!

      Delete
  2. இன்று பிறந்த நாள் காணும் இந்திய காமிக்ஸ் உலகின் முடிசூடா மன்னர், எங்கள் கனவுலகின் பேரரசர், அன்பிற்கினிய லயன் காமிக்ஸ் ஆசிரியர் திரு.ஸ்ரீகாந்த் விஜயன் அவர்களை வாழ்த்த வயதில்லை.வணங்குகிறோம்!!!

    ReplyDelete
  3. இன்று பிறந்தநாள் கொண்டாடிக்கொண்டிருக்கும் அன்பு ஆசிரியர் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🏼

    என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼

    ReplyDelete
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்....

    ReplyDelete
  5. " வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.!"

    ReplyDelete
  6. " உண்மை, உழைப்பு, உயர்வு."
    இவ்வார்த்தைகளின் மொத்த உருவம், எங்கள் அனைவரின் அன்புக்குரிய ஆசான், எங்களின் உடன்பிறவா சகோதரர், சிவகா(மி)சியின் செல்வன்
    திரு.விஜயன் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
    "வளமுடன் வாழ்க பல்லாண்டு."

    ReplyDelete
  7. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  8. //சந்தா அறிவிக்காமல் இருந்திருந்தால் //

    அதான் இஸட் சந்தா இருக்கே சார்.!??

    ReplyDelete
  9. Dear Editor

    THE INCAL தமிழில் வர வாய்ப்புள்ளதா?

    ReplyDelete
  10. விஜயன் சார்
    "மாதமொன்றுக்கு ஐம்பதாயிரம் பிரதிகள்"
    இலக்கை எட்டிப்பிடிக்கும் நாள் தொலைவில்
    இல்லை.

    ReplyDelete
  11. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் எடிட்டர் சார் :-):-):-)

    ReplyDelete
  12. A - அட கண்ணுகளா நீங்க கொண்டுவார வறுத்தகறியை விட நீங்க போட்டுறுக்குற ட்ரெஸ்ஸும் உங்க ஸ்டைலும் டக்கரா இருக்கு , என் செல்லங்களா

    B - திருட்டுப்பையா இப்போவும் 18வயசுப்பையண்ட நினைப்போ உனக்கு வயசான காலத்துல அங்க இங்க பார்வைய அலையவிடாம வந்தோமா நல்லா வறுத்தகறில நாலு வாய் சாப்பிட்டோமா மூக்கு முட்ட பீரை குடிச்சோமா வருசத்துக்கு தவறாம 12 டெக்ஸ் கதைய தமிழ்ல கொண்டு வாரதுக்கு டெக்ஸ் ரசிகர் மன்றத்துல ஒரு மனுவை தாக்கல் செஞ்சோமானு இருக்கோனும்

    ReplyDelete
  13. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்...

    ReplyDelete
  14. *தாவி வரும் கடல் அலையே,
    உன்னை கரை வாழ்த்தும்,
    சுற்றி வரும் பூமியே,
    உன்னை உலகம் வாழ்த்தும்,
    வீசி வரும் தென்றலே,
    உன்னை மரங்கள் வாழ்த்தும்,
    பாடி வரும் குயிலே,
    உன்னை இசை வாழ்த்தும்,
    பூத்து வரும் புன்னைகையே
    எந்நாளும் வாழ்க...

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்..

    (*நெட்டில் சுட்ட கவிதைதான் - சொந்தமாக எழுதும் அளவுக்கு *ஞானமில்லை சார்.)
    (*கி.ஆ.க. நன்றாக கவனியும் - யானை இல்லை ஞானம் என்பதை)

    ReplyDelete
  15. இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆசிரியர் சார்....

    ReplyDelete
  16. என்னடா திருக்குறள் சைஸூக்கு ஒரு பதிவு
    இத்தோடு அடுத்த வாரம் தானாவென்ற அதிர்ச்சியில் (கர்ர்ர்ர்ர்ர்.....)உங்களது பதிவினை படிக்கையில் "ஞாயிறு பதிவுவரை" என்ற வார்த்தையை கண்டவுடன்தான் மனது சமாதானது.
    "இது வெறும் ட்ரெயிலர்தான்.
    மெயின் பிக்சர் நாளை உண்டு" என்பதில் மிக்க மகிழ்ச்சி.
    நாளைய பதிவில் உங்களுக்கு வியாழனன்று துவங்கி இன்றுவரை நிற்காமல் வரும் ஜலப்பிரவாகத்திற்கான காரணத்தை விவரமாக விளக்குவீர்கள் என்று என் வாயிலிருந்து ஒழுகும் ஜலப்பிரவாகத்துடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  17. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் எடிட்டர் சார் !

    ReplyDelete
  18. எடிட்டர் சார்,
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ஜலப்பிரவாகம், வீ ஆர் வெய்ட்டிங் வித் சேம் ஐலப்பிரவாகம் :-)

    ReplyDelete
  19. இ.கு.த.பு - ஒரு இன்டியானா ஜோன்ஸ் படம் பார்த்த திருப்தி. மெயின் வில்லன், சைடு வில்லன், இணை வில்லன், துணை வில்லன், உப வில்லன் , உதவி வில்லன் னு இத்தனை வில்லன்களா? வில்ல(ன்) ங்க விளையாட்டு என பேர் வைத்திருக்கலாம். இத்தனை வில்லன்களையும் பறக்க விடும் இரவுக் கழுகாரும், வெள்ளி முடியாரும் தூள் டக்கர் , டாப் டக்கர். டபுள் தம்ப்ஸ் அப்.

    ReplyDelete
  20. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்..

    ReplyDelete
  21. கார்ஸன்: ஏ புள்ள, இந்த பித்த நரையைப் பார்த்து தாத்தான்னு தப்புக்கணக்கு போடாதே!!ஆங்!!!

    டெக்ஸ்: பல நூற்றாண்டா வளர்ந்த மொத்த நரையை பித்த நரைங்குதே இந்தப் பெரிசு!!! அட மனிடோ!!!

    ReplyDelete
  22. அவர் பெயரிலெ வெற்றியைக் கொண்டவர்.
    தோல்விகள் சுற்றி நின்று சிரிக்கும் போதும்,
    தன்னிலையில் சற்றும் மனம் தளரா விக்ரமாதித்தன் போல்
    காலைக் குத்தும் முட்களைத் தாண்டி
    வெற்றித் தோட்டத்தை அடைந்தவர்.
    கையைக் கிழிக்கும் கடும் பாறைகளைக் கடந்து
    அதன் ஒளிரும் உச்சியைக் கைப்பற்றியவர்.

    அவர் அன்பின் விழுதுகளை
    அரவணைத்துக்கொண்ட ஆலமரம்.
    முன்பின் அறியாவரிடத்தும்
    முகமலர்ச்சி காட்டும் தோழமை குணம்.
    கண்முன்னே காணும் நம் கனவுகளை
    தன்முன்னே வைத்து அரங்கேற்றியவர்.
    முன்சென்று பாதையை சீராக்கி
    பின்தொடரும் சந்ததிக்கு கம்பளம் விரித்தவர்.

    அவர் பிழைக்க வழி தேடினார்.
    ஆம்
    ஆங்கிலம் கோலோச்சும் அன்னை உலகில்
    தமிழ் காமிக்ஸ் பிழைக்க வழி தேடினார்.
    அதன் முலம்
    அழிந்து போன ஒரு தலைமுறையின்
    பால்யங்கள் பிழைக்க வழி தேடினார்.
    அயல்நாட்டு ஆக்கங்கள்
    அழகு தமிழ் மூலம் பிழைக்க வழி தேடினார்.
    தன் எழுத்துக்களை வியாயபாரம் செய்யாமல்
    நம் எண்ணங்கள் பிழைக்க வழி தேடினார்.

    அவரை,நீட்டி முழக்கினால்
    'ஸ்ரீகாந்த் முத்து விஜயன்' எனலாம்
    சுருக்கமாக திரு.விஜயன் எனலாம். அவரை வாழ்த்துவது ஒற்றைக் குரலல்ல.
    ஒரு தலைமுறையின் குரல்.

    வாழ்க வளமுடன்.






    ReplyDelete
    Replies
    1. சூப்பரா இருக்குங்க சார்....

      Delete
    2. ஹலோ SVV sir மயிலை வைங்கனா மானை வைத்து உள்ளீர்களே...!!!

      Delete
    3. ////அவர் பிழைக்க வழி தேடினார்.
      ஆம்
      ஆங்கிலம் கோலோச்சும் அன்னை உலகில்
      தமிழ் காமிக்ஸ் பிழைக்க வழி தேடினார்.
      அதன் முலம்
      அழிந்து போன ஒரு தலைமுறையின்
      பால்யங்கள் பிழைக்க வழி தேடினார்.
      அயல்நாட்டு ஆக்கங்கள்
      அழகு தமிழ் மூலம் பிழைக்க வழி தேடினார்.
      தன் எழுத்துக்களை வியாயபாரம் செய்யாமல்
      நம் எண்ணங்கள் பிழைக்க வழி தேடினார்.
      ////


      அருமை அருமை! அழகான பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை!!

      கலக்கிட்டீங்க கோவிந்தராஜ்!

      Delete
    4. கோவிந்த்@
      டைமிங் காமெடியில் அசரடிக்கிறீர்கள்.
      கவிதையிலும் பின்னி பெடல் எடுக்கிறீர்கள்...

      நீ நீ நீங்கள் ஆரு...
      பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க...

      Delete
    5. பெருமாள் சார் - செம .

      Delete
    6. பெருமாள் சார் WOVWWW

      Delete
  23. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஆசிரியர் சார்.🎇🎇🎇🎇🎇🎇🎇🎉🎉🎉🎊🎊🎊🎊🎁🎁🎁🎂🎂🎂🎂🎂🍰🍰🍰🍰🍰🍰🍰🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍨🍨🍨🍨🍨🍧🍧🍧🍧🍧🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍕🍕🍕🍕🍕🍕🍕🎈🎈🎈🎈🎈🎈🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎄🎄🎄🎄🎄🎄

    ReplyDelete
    Replies
    1. 50வது பிறந்த நாளில்
      500சந்தாக்களில் இருந்து 5000சந்தாக்களாக உயரவும்
      50000பிரதிகளாக விற்பனை இலக்கை
      எட்டவும் வாழ்த்துகிறேன் சார்.

      Delete
  24. போன வாரம் திங்கள் கிழமை net மக்கர் பன்னிடதால மயிலு பேட்ஜக்கு மங்கலம் ஆனது நினைச்சு நொந்து போய் அதுக்கப்புறம் நாம எல்லாம் பருந்து நம்ம ரேஞ்சுக்கு மினிம் ostrich ஆது வேனமா? மேலும் மயிலுன்னா ஶ்ரீதேவி. ஆசிரியர் வேன கனவு கன்னி இருக்கலாம். ஆனா நம்ம வயசுக்கு இனிமேல் தானா பொறக்கனும். மேலும் தேசிய பறவைய நெஞ்சில் குத்தி அவமானம் படுத்துறதா. நெவர் ன்னு ஓரு மாதிரியா மனச தேத்திகிட்டு அப்பறமா WWF பணம் கட்லாம்னு விட்டுடேன்.

    நேத்து சாய்திரம் தான் போன பதிவுல நடந்த அட்சிட்டி எல்லாம் தெரிஞ்சுது. அப்பறமா மயில் எவ்வளவு அழகான பறவை. தேசிய பறவை யை நெஞ்சு பக்கதுல எவ்வளவு பெருமை. தமிழ் நாட்ல பிறந்து வட நாட்ல கொடி கட்டி பறந்த ஶ்ரீதேவி evergreen நாயகி. அப்படி பட்ட மயிலை அடஞ்சே திருவது என்று ஓடனே order பன்ன online போன 575 கூரியர் charge ஜேட வருது. நாம தான் ஈரோடு வரோமே. 75 ரூபாய் காக மயில விட முடியுமா? நேத்து order பன்னியாச்சு .

    நானும் மயில் தான்.

    ReplyDelete
  25. Happy birth day comics jiant vijayan.

    ReplyDelete
  26. /// Anyways 2018 அத்தனை தூரமில்லை தானே என்று மனசைத் தேற்றிக் கொள்கிறேன் -ஜொள்ளைத் துடைக்கும் முயற்சிக்கு மத்தியினில் !///....
    வழக்கமாக அக்டோபரில் அறிவிக்கும் அடுத்த ஆண்டு சந்தாக்களை முன்கூட்டியே ஈரோட்டில் அறிவிக்கலாமே சார்.

    ஆகஸ்ட் 4வெள்ளிக்கிழமை புத்தக விழா துவக்கம் எனில் நம்முடைய ஆட்டம் ஆகஸ்ட் 5சனிக்கிழமை இருக்கும். அன்று முழு நேர ஆட்டமாக மாற்றி காலை கலந்துரையாடல், மதியம் 2018சந்தா இதழ்கள் அறிவிப்பு என ப்ளானிங் பண்ணலாம் சார்.

    ஒரு ஆண்டு சந்தாவை அந்த 200பேர் நிரம்பிய கூட்டத்தில் அறிவித்து, அத்துணை பேரின் அபிப்ராயங்களுடன் கலந்து கட்டி அடித்தால் சும்மா டபுள் பிரியாணி அடிச்ச மாதிரி இருக்கும் சார்.

    50பேரின் அபிப்ராயங்களை தளத்தில் அறியும்போதே இவ்வளவு உற்சாகம், சுமாராக மும்மடங்கு வித்தியாசமான எண்ணங்களை லைவாக நினைக்கும்போதே மெர்சலாக இருக்குங் சார்.

    ReplyDelete
  27. அட ஆண்டவா...!!! 'இனி கேப்ஷன் போட்டிகளில் கலந்துக்கறதில்லை'னு முடிவெடுத்துத் தொலைச்சுட்டேனே...

    சில சமயங்களில் என்னை நானே பிறாண்டிக்கலாம் போல ஒரு கோவம் வருது!

    ReplyDelete
    Replies
    1. வேணும்னா நீங்க எழதி என் பேர போட்டுக்குங்க

      Delete
  28. பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    சார்

    நம்முடைய ஆட்டம் ஆகஸ்ட் 5சனிக்கிழமை இருக்கும். அன்று முழு நேர ஆட்டமாக மாற்றி காலை கலந்துரையாடல், மதியம் 2018சந்தா இதழ்கள் அறிவிப்பு என ப்ளானிங் பண்ணலாம் சார்.
    அருமை
    பண்ணாலாம் சார்

    ReplyDelete
  29. கார்சன்: யார்ரா இது இவ்ளோ வெள்ளையா இருக்காங்க..?
    டெக்ஸ் : அட நீ வேற அது நம்ம பழனிவேலோட புள்ளைங்க 2 நாளா பவுடர பூசிகிட்டு அடிக்கிற ரவுசு தாங்கல !

    ReplyDelete
  30. இலங்கையிலிருக்கும் அத்தனை வாசக நண்பர்கள் சார்பிலும் எமது உளம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஆசிரியரே!

    ReplyDelete
  31. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆசானே.

    ReplyDelete
  32. டெக்ஸ் :- ஹாய் கேர்ள்ஸ்..!எனக்கு ஒரு பிளேட் சுக்கா ரோஸ்ட்..! உங்க தாத்தா கார்ஸனுக்கு பல்லு ஆட்டம் கண்டுட்டதாலே வேக வைத்த ஆப்பிளும்..,உருளைகிழங்கு மசியலும் கொண்டு வாங்க...!

    கார்ஸன் :- அடேய் பாவி...! சின்ன பொண்ணுங்க முன்னாடி இப்படி மானத்தை வாங்கறயே...? உருப்புடுவியா நீ...? சுக்கா ரோஸ்ட்டா வேணும் ....சுக்கா ரோஸட்..? நீ இரவுக்கழுகுங்கிறதாலே உனக்கு கழுகு ரோஸ்ட்தாண்டி கிடைக்கும்...!

    ReplyDelete
  33. அன்பு தவழும் நாள்:-🌹🌹🌹🌹🌹

    ///இங்கே நிலவி வரும் அந்த சந்தோஷ உச்சஸ்தாயிக்கும் அதற்கும் தொடர்பில்லை என நான் நினைப்பின் - ஆர்டினை விடப் பெரிய அசமஞ்சி நானே !! விற்பனைகள் என்பதையெல்லாம்  புறம் தள்ளிவிட்டுப் பார்க்கும் போது - இந்த சந்தோஷ சதிராட்டம் தரும் உற்சாகமும், கலப்படமற்ற மகிழ்வும் நமது நாட்களுக்கொரு புது மெருகூட்டுவது கண்கூடு !! ////....

    ஆகா...அருமை..அட்டகாசம்...அற்புதம் சார்...👌👌👌👌👌

    இந்த சந்தோசமும் அதனால் விளையும் விற்பனையில் அதிகரிப்பும் படிக்கும் போதே கண்ணில் நீரை வரவைக்கிறது சார்.

    தளத்தின் மகிழ்வான இயல்பு இதை சாதிக்குது என்பதை அறிந்து நெகிழ்ச்சி சார்.

    இந்த நிலைக்கு எக்காலத்திலும் என்னால் பங்கம் வராமல் பார்த்து கொள்வேன் என உறுதி அளிக்கிறேன் சார்.
    அதற்கு முன்மாதிரியாக இதுவரை இங்கே வாதம் செய்தும் கேள்விகள் கேட்டும் சங்கடப்படுத்திய அத்துணை முகம்அறியா மற்றும் முகம்அறிந்த நண்பர்களிடமும் மனமாற மன்னிப்பும் கேட்டு கொள்கிறேன்.🙏🙏🙏🙏

    நம் பிரியத்திற்கு உகந்த குதிரைப் பையன்கள் வசிக்கும் ஆங்காரம் படைத்த அமெரிக்க மண்ணிலேயே ஆண்டுதோறும் "தேங்ஸ் கிவிங் டே" கொண்டாடப்படுகிறது.

    அன்பே உருவான தமிழ் மண்ணில் வசிக்கும் காமிக்ஸ் உலகின் அன்பின் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளான மார்ச் 18ஐ காமிக்ஸ் ரசிகர்கள் "அன்பு தவழும் நாள்" ஆக செலபரேட் செய்யனும் என முன்மொழிகிறேன் நண்பர்களே...💖💖💖💖💖💖💖

    ReplyDelete
  34. பிறந்த நாள் வாழ்த்துகள் சார். நீண்ட நெடிய ஆரோக்கிய ஆயுளுடன் மகிழ்வுடன் நீங்கள் வாழ வேண்டும். வருடா வருடம் காமிக்ஸ் கடலில் மூழ்கி முத்துகள் பல கண்டெடுத்து சிங்கநடை போட்டு வர வேண்டும். :)

    ReplyDelete
  35. Many more happy returns of the day dear sir.

    ReplyDelete
  36. அன்பின் ஆசிரியருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !

    ReplyDelete
  37. எடிட்டருக்கு வாழ்த்துகள் :

    கேப்ஷன் 1:

    கார்சன் : (வெட்கத்துடன்) டெக்ஸ், அன்றைக்கு நான் சொன்னல, என்ன லவ் பண்ற அந்த 2 ஃபிகருங்க இவங்கதான்!
    டெக்ஸ் : (நக்கல்) ஹா ஹா ஹா ..
    கார்சன் : என்னப்பா, சீரியசா பேசிக்கிட்டு இருக்கும் போது...
    டெக்ஸ் : இல்ல, தலைவரு ஒரு படத்துல பழமொழி ஒன்று சொல்லுவாரு, அத நினைச்சேன், அதாவது, ஒருத்தனுக்கு எழுந்து நிக்கவே முடியலையாம், அவனுக்கு 9 பொண்டாட்டியாம்..

    கேப்ஷன் 2:

    கார்சன் : அடுத்த ஸ்பெஷல் இதழ், 7 கழுதை வயசுன்னு பேசிக்கிறாங்க..
    டெக்ஸ் : பக்கத்துல அழகான 2 ஃபிகருங்களை வச்சிக்கிட்டு என்ன சம்பந்தமில்லாம பினாத்திக்கிட்டு இருக்கே..?
    கார்சன் : என்ன பண்றது? எப்போ முதமுதலாக இவங்களை பார்த்தேனோ.. அப்போதிருந்தே பாதி மெண்டலாகத்தான் திரியிறேன்.!

    ReplyDelete
  38. காமிக்ஸ் தனலவருக்கு இனிந பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்.....
    வாழ்க பல்லாண்டு....
    காமிக்ஸ் தேசத்தின் அனடயாளம் நீங்கள்....

    ReplyDelete
  39. சார் அட்டகாசம் . நீங்க ேன் விரைவில் வருகிறது விளம்பரங்கள ...அதாவது அடுத்த வருட அட்டவணை கதைகளின் விளம்பரங்கள இணைக்கக் கூடாது . புத்தகங்களில் அதற்கு இருக்கும் பலமும் , உற்சாகமும் அதிகம்தானே ...

    ReplyDelete
  40. அடுத்த வருட அட்டவணை பிரமாதமான முறை யில் இருக்க வேண்டும் சார், 70 இதழ்கள், 10 ஸ்பெஷல் வெளியீடுகள் இருக்க வேண்டும் , பொங்கல் ,தீபாவளி, கோனடமலர் ,ஆண்டுமலர் என பட்டியல் நீண்டு செல்ல இப்போதே வேண்டுகிறேன்......
    நமது சகாக்கள் இதற்கு துனண புரியவும்.....

    ReplyDelete
  41. கேப்ஷன் A (கார்ஸன்): உன்ன வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா? வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா?


    கேப்ஷன்B (டெக்ஸ்):(ஆவி புடிக்கிற சாக்கில் பிட்டை போட்டுட்டானே.இத இப்படியே வுடக்கூடாது.) ஏம்பா கார்ஸன்,அப்படின்னா யாரோ உன்ன வெளுத்துன வெளுப்புலதான் உன் தலைமுடில்லாம் வெள்ளையாச்சின்னு சோல்றியா?

    ReplyDelete
  42. கார்சன்..காந்தக் கண்ணழகிகளா டெக்சயே கிளாச நெறைக்க வச்சுட்டீங்களே..என்னா ஜொல்லு..
    டெக்ஸ்...ஹி..ஹி....கார்சனு என்னப்பா சொல்ற...வாயி வழுக்குதே

    ReplyDelete
  43. கார்சன்...ஹ...ஹ...ஹ....
    டெக்ஸ்..எப்பா சிரிக்காத...அது ஆசிரியரோட கிளாசு...மனுசன் நைசா நழுவிட்டாரு என் கைல தந்துட்டு...

    ReplyDelete
  44. எமது இதயங்கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  45. கார்சன்...எல்லாம் விதி
    டெக்சு...எல்லா ஆசிரியரின் சதி...

    ReplyDelete
  46. டெக்ஸ்...இந்த பீர் பொங்கி வழியுறத போல ஆசிரியரின் மனதும் சந்தோசத்துல நிரம்பி வழிய வாழ்த்துகள்...
    கார்சன் ...அப்புறமென்ன அழகிகளா ஆசிரியரயும் திருப்பி/திருப்பி பாருங்க...

    ReplyDelete
  47. பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  48. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்...

    ReplyDelete
  49. கடவுள் கேட்டார்...
    உன் ஆசிரியரின்
    பிறந்தநாள் வாழ்த்துக்கு
    என்ன வேண்டும்..,
    கவிதை?
    கட்டுரை?
    ஓவியம்?

    எப்போதும் மறக்காத இதயம்
    எனக்கும்
    என்றும் குறையா புகழ்
    என் ஆசிரியருக்கும்
    போதுமென்றேன்...

    ReplyDelete
  50. Iniya piranthanaal vazhthukkal sir.

    I m very happy since it is my first comment in ediror's blog. Thanks Erode Vijay sir

    ReplyDelete
    Replies
    1. @ kumaran anbu

      நல்வரவு நண்பரே! எடிட்டரின் பிறந்த தினமான இன்றே முதல் கமெண்ட்டும் பிறந்தநாள் கண்டிருப்பது மகிழ்ச்சி! தொடர்ந்து உங்கள் கருத்துகளை தயங்காமல் வெளிப்படுத்துங்கள் நண்பரே! ( முதல்ல இங்கிலீசுலயே எழுதலாம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அம்மா, ஆடு, இலை'னு தமிழ்ல எழுதக் கத்துக்கிட்டாப் போச்சு)

      Delete
    2. Thanks EV sir & Parani from Bangalore ji

      Delete
    3. வணக்கம் !வாங்க பாஸ் ! வாங்க !

      Delete
  51. கேப்ஷன்களும் டிரன்டிங்கும்...
    எவ்வளவு காலம்தான் கார்சனின் ஆட்டுத்தாடியையும் ,வறுத்த கறி மோகத்தையும் , வயசையும் வைத்து காலம் தள்ளுவது????
    சமகாலத்திய மேட்டரையும் உள்புகுத்தினால்தான் என்ன???
    டெக்ஸ்-ன் chastity அல்லது celibacy ஏக பத்தினி விரத தன்மை /பிரம்மச்சர்யம் பிரபலமானதுதான்..
    ஆனால் கேப்ஷன் இம்மரபுகளை மீறியது என்பதால்
    கேப்ஷன் 1.
    கார்சன் : ( பெண்களை நோக்கியபடி ) இந்த ‘’ இரட்டை இலை’’ எனக்குத்தான் சொந்தம்..

    டெக்ஸ் : ம்ஹூம் ...இரட்டை இலை எனக்குத்தான் சொந்தம்....

    ஒரு சிலரையேனும் இது முறுவலிக்க செய்யவாவது செய்யுமாயின் கேப்ஷன் எழுதியதன் நோக்கம் முற்றுப் பெறுகிறது...

    அல்லது சமீபத்திய நிகழ்வை குறிக்கும் வண்ணம் இருக்கலாம்
    வெளிப்படையாக அல்லாது மறைபொருளாக -subtle- இருப்பின் உத்தமம் ..

    உதாரணமாக
    டெக்ஸ் : கார்சன் ! ரொம்ப அதிகமாக வழியாதீரும்
    கார்சன் : சும்மாயிருப்பா !!! ரேஞ்சர் சங்க தலைவர் மேல அடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தாத்தான் இந்த மாதிரி சலூனுக்கு எல்லாம் அடுத்த தடவை நுழைய முடியும்..கிடைக்கறப்பவே அனுபவிச்சுக்கனும் ....

    மேலே உள்ளது கூவத்தூர் ரிசார்ட் சம்பவங்களை குறிக்கிறது என்பதை ஆழ் மனதில் உணர வைத்தால் போதும் ..நேரடியாக குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.

    கேப்ஷன்கள் காமெடி என்பதையும் தாண்டி –இடுபொருளாக பயன்படுத்தலாம் என்பதற்காக குறிப்பிடப்படுகிறது..
    ஜல்லிக்கட்டும் கூட......

    டெக்ஸ் : கார்சன் ! இது ஆறாவது ரவுண்டு! அப்புறம் அந்த பொண்ணுங்களோட வழியறதையும் நிறுத்து!!
    கார்சன்: ..யப்பா! குதிரைங்கள அடக்குற போட்டிக்கான தடைதான் இப்ப நீக்கிட்டாங்கல்ல..அந்த குதிரைங்கள நீ அடக்கு ..இந்த குதிரைங்கள நான் அடக்கிக்குறேன் ....

    இந்தாளு என்ன அப்பாடக்கரா ??/ இதெல்லாம் சொல்றதுக்கு ..அப்டின்னு நினைப்பவங்க கூட அத இப்படி சொல்லலாம் ..
    கார்சன்: என்னா டெக்ஸ் !! இந்த மனுஷன் ரொம்ப பேசறான் ? உன்னோட பஞ்ச் ஒண்னு கொடு ..
    டெக்ஸ் :: அதுக்கெல்லாம் இந்தாளு வொர்த் இல்ல ...டைகர் தம்பி குளிச்சு முடிச்ச பாத்டப்பில அதே தண்ணியில தூக்கி போட்டா போதும்...


    ReplyDelete
    Replies
    1. ///அதுக்கெல்லாம் இந்தாளு வொர்த் இல்ல ...டைகர் தம்பி குளிச்சு முடிச்ச பாத்டப்பில அதே தண்ணியில தூக்கி போட்டா போதும்... ///

      :D

      Delete
    2. ஹா.. ஹா.. செனா. அனா.. அடுத்த ரவுண்ட் ஸ்டார்ட்டிங்கா...

      Delete
    3. சூப்பர் திரு 'சுஜாதா' அபிராமி சார் :-)

      Delete
    4. டெக்ஸ்: டைகர் தம்பி குளிச்சு முடிச்ச பாத்டப்பில அதே தண்ணியில தூக்கி போட்டா போதும்...

      கார்சன்: அதற்கு சிலபல ஆண்டுகள் காத்திருக்கவேண்டி வரலாம் பரவாயில்லையா?

      ஹி ஹி ரிலே ஜோக்! ;)

      Delete
  52. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.. நண்பரே..

    ReplyDelete
  53. எடிட்டர் சார் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !

    ReplyDelete
  54. alert.. alert.. alert!

    'இரத்தக் கோட்டை' முன்பதிவில் earlybird சிறப்புத் தகுதிபெற எடிட்டர் அளித்திருந்த காலநீட்டிப்பு இன்று அல்லது நாளை முடியக்கூடும்! இதுவரை பணம் செலுத்தாத/செலுத்த எண்ணியிருக்கும் நண்பர்கள் ஆன்லைன் புக்கிங்/நெட்பேங்கிங்/மொபைல் பேங்கிங் ஆகிய ஏதேனும் ஒரு விரைவுப் பணப் பரிவர்த்தனையை தேர்வு செய்து - உடனே பணம் செலுத்தி - மகிழ்வித்து மகிழுமாறு - அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

    காமிக்ஸ் மக்கள் நலன் கருதி வெளியிடுவோர்:
    நான்தானுங்

    ReplyDelete
    Replies
    1. அப்படியே எடிட்டர் சார் BHIM App மூலம் ₹500க்கு QR code Generate செய்து போடலாம்..

      Delete
    2. நல்ல ஐடியா! இரத்தப் படலத்திற்கான 'early-Dinosaurs' சிறப்புத் தகுதிபெறும் முன்பதிவிற்காவது இதை அமல்படுத்துவாராக! ;)

      Delete
    3. விஜய் அண்ணா:
      :-):-):-)

      Delete
  55. CAPTION

    டெக்ஸ்:
    கண்ணு தான் பொண்ணு மேல இருக்குது, ஆனா சிந்தனை எல்லாம் வேறு எங்கோ இருக்குதே என்ன விஷயம்?

    கார்ஸன்:
    இல்ல போன பதிவுல செணா ஆணா சன்னி பொண்ணு மயிலு போட்ஜூ மட்டும் போட்டு வந்ததாக சொன்னாறே போட்ஜ மட்டும் எங்க எப்படி குத்திகிட்டு வந்துறுக்கும் யோசிச்சுகிட்டு இருக்கேன்.

    டெக்ஸ்:
    அடப்பாவி கிழவா....

    ReplyDelete
  56. தமிழ் காமிக்ஸ் தன்னை செல்ஃபி எடுத்து பார்த்தபோது...
    அடடே..விஜயன் சார்!
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அய்யா

    ReplyDelete
  57. @Editor sir:
    நான் நேற்று காலை 2 'இரத்தக்கோட்டை' புக் முன்பதிவு செய்துவிட்டேன் சார்...பேங்க் அக்கவுண்ட்டுக்கு பணம் அனுப்பிவிட்டேன் சார்...இது தொடர்பாக தங்களுக்கு மெயிலும் அனுப்பியுள்ளேன் சார்...!!!

    ReplyDelete
    Replies
    1. இரத்தக்கோட்டை முனதிவு செய்ய www.lioncomics.in ல் லிஸ்ட் செய்யப்படவில்லை சார்..அதையும் கொஞ்சம் கவனியுங்கள் சார்...

      Delete
    2. WWF special என்று Listed ஆகி உள்ளது. நான் நேற்று தான் கட்டினேன்

      Delete
    3. 'இரத்தக் கோட்டை' என்ற தலைப்பும், 'WWF special' என்பதும் ஒன்றோடொன்று ஒத்துப்போகாமல் தனித்து நிற்பதுபோல ஒரு தோற்றம் இருக்கிறது! இத்தளத்தை வாரம் ஒருமுறை மட்டுமே பார்வையிடும் நண்பர்களுக்கு இந்தக் குழப்பம் வர வாய்ப்புகள் அதிகம்!
      ஏற்கனவே ஒரு தலைப்பில் பிரபலமடைந்த கதைத் தொடர்களுக்கு புதிதாய் ஒரு பெயர்சூட்டும்போது இதுபோன்ற குழப்பங்கள் தலை தூக்குவதில் ஆச்சரியமில்லைதான்!

      ரெண்டையும் இணைத்து 'இரத்தக்கோட்டை - WWF special' என்றிருக்குமானால் இக்குழப்பம் வர வாய்ப்பிருக்காது எ.எ.க!

      Delete
  58. A:இந்த கடையிலே ஒன்று வாங்கினா ஒன்று இலவசம் கார்சன்
    B:இரண்டு வாங்கினால்?
    A:நீ மாத்திரைதான் வாங்கனும்...செரிக்கிறதுக்கு

    ReplyDelete
  59. இனிய பிறந்த நாள், சகல வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ்க என்று என்று வாழ்த்த வயதில்லை . வணங்குகிறேன் .🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  60. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆசிரியர் சார்

    ReplyDelete
  61. பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜயன் பாஸ்!

    ReplyDelete
  62. @ ஈரோடு விஜய்

    அட்வான்ஸ் வாழ்த்துக்கள் பாஸ் ;-)

    ReplyDelete
  63. நெட்டிலிருந்து சுட்டது :

    Dear Editor,

    Technically you’re not 50. You’re only $35, plus tax!

    ReplyDelete
  64. வாழ்த்த வயதில்லை ஆதலால். ...
    ஒரு மேடையில் நடிகர் திலகம் சொன்னது கலைஞர் அவர்களை பார்த்து என் வயதில் 2 வருடம் உங்களுக்கு தருகிறேன். ஏனெனில் நானும் வயதானவான் என்று. அதுபோல் நானும் என் வயதில் 2 வருடம் உங்களுக்கு தருகிறேன். பல்லாண்டுகள் வாழ்ந்து இந்த காமிக்ஸை காத்து சிறப்பிக்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஜெய்ஹிந்த்

    ReplyDelete
    Replies
    1. சூப்பர்!

      நானும் 2 தரேன்!

      Delete
    2. அனைவரும் தந்தால் ஜெகஜோதி தான் ஆசிரியருக்கு.

      Delete
  65. A டெக்ஸ்: என்னவொரு உடையலங்காரம், என்னவொரு கவனிப்பு.. இல்லையா கார்சன்?

    B டெக்ஸ் (தனக்குள்): ஆனால் இவ்வளவு ஸ்பெஷலான கவனிப்புக்கு நடுவே கிழவனின் தட்டில் கிடக்கும் கரப்பான் பூச்சியை பற்றி நான் பேசினால் கண்டுகொள்ளவா போகிறான்? வேண்டாம், கிழவனின் சந்தோஷத்தை கெடுப்பானேன்?!

    ReplyDelete
  66. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆசிரியர் சார்

    ReplyDelete
  67. எடிட்டர் விஜயன் சாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  68. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete
  69. எடிட்டர் ஐயாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்(சற்று தாமதமாக).அவர் காமிக்ஸ் பணி மேலும் 100 ஆண்டுகள் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  70. டெக்ஸ்.
    கார்ஸா சிக்கிரம் சாப்பிட்டுவிட்டு கிளம்பவேண்டும் அங்கே என்ன பார்வை.சீக்கிரம் ஆகட்டும் நாம் நெடுந்தொலைவு செல்லவேண்டும்.
    சற்று பின் மீண்டும் டெக்ஸ்.
    யொவ் தாத்தா இங்கே ஒருத்தன் பேசிகொண்டிருப்பது காதில் விழவில்லை.வெள்ளாவியில் வைத்த மீசை தாடியுடன் உனக்கெல்லாம் ஜொள் வேண்டிக்கிடக்கு ஏ கிழவா ஏ பெரியவரே.....பார்றா திரும்பவே மாட்டெங்குறானே.

    ReplyDelete
  71. Caption: 1

    கார்சன்:
    டெக்ஸ்.! இப்போ அந்த பொண்ணுங்க உன்ன 'அங்கிள்' 'அங்கிள்'னு சொன்னா கோச்சிக்கப்படாது !
    வயசாகுதோ நோ! சோ பொறுமையா இருக்கணும் !

    பெண்கள்: (கார்சனிடம் கோரஸாக ) 'தாத்தாவ்'!!!

    டெக்ஸ்: ஹோ ஹோ ஹோ ...;-)

    ReplyDelete
  72. Caption: 2

    கார்சன்:
    ஹே செல்லா குட்டிஸ்…!
    அந்த அங்குளுக்கு கல்யாண வயசுல பைய்யன் இருக்கான் !
    யு சி ! ஐம் பேச்சுலர்…! இன்னும் ஒருவாட்டி கூட கல்யாணம் ஆகல !
    கம் கிளோஸ் செல்லாஸ் !
    கம் கிளோஸ்!

    டெக்ஸ்:
    ஆமா! தாத்தாக்கு போன மாசம் ஸ்ட்ராயிட்'ஆ அறுபதாம் கல்யாணம் பண்ணலாம்னு பார்த்தாங்க ! ஆனா இன்னும் ஒரு வருசத்துல எழுபதாம் கல்யாணமே பண்ணிக்கலாமேன்னு கடேசி நேரத்துல நிறுத்திட்டாங்க !
    அவர் பேச்சை கேட்டு ரொம்ப கிளோஸ்ஆ போகாதீங்க ! அப்பறம் அவரே கிளோஸ் ஆயிடுவாரு !

    ReplyDelete
  73. Caption: 3

    கார்சன் (வேடத்தில் இருக்கும் கிட் ஆர்டின்) :
    ஐயோ ! பாஸு! பாஸு!
    ஹாப்பி அவர் !
    ஹாப்பி ஹவர்ன்னா…. இதுதானா !
    இப்போ ஒன்னு வாங்குனா! ஒன்னு பிரீ தான்னா !

    டெக்ஸ் (வேடத்தில் இருக்கும் டாக்புல்):
    அடேய்! அது பீருக்கு மட்டும் தான்!
    உஹும் ! அநேகமா உனக்கு ஒரு செருப்பு வாங்கினா ஒரு செருப்பு பிரீயா குடுப்பாங்கனு நெனைக்கிறேன்!
    நீ இருந்து வாங்கிட்டு வா!
    ஐ'யாம் எஸ்கேப் !

    ReplyDelete
  74. Caption:4

    (நம்ம பொருளாளர் காண்டி :-) )

    (மேற்கே எங்கோ ஒரு ரிசார்ட்டில்.....)

    கார்சன்:
    அட அட அட! ஏப்பா! இந்த ஓட்டிங்கெலாம் முடிஞ்ச அப்பறம் இங்க இருந்து ஒன்னு ரெண்டு கெளப்பிகிட்டு போயிரணும்!
    என்ன சொல்ற நீ!

    டெக்ஸ்:
    ஹ்ம்ம்! முதல்ல ஓட்டிங் முடிச்சப்புறம் உன் ஜீன்ஸ்சை ஒருவாம விடறாங்களானு பார்க்கலாம் !
    கெளப்பிகிட்டு போரறமுள்ள கெளப்பிகிட்டு....!

    (கௌண்டமணி ஸ்டைலில்) கார்சன்:
    அட்கோன்னியா !!! ஐயோ டெக்ஸ்!
    நான் போதைல கொஞ்சம் அப்டி இப்டி இருந்தா நீதானப்பா ஏ அண்டடாயடா உருவமா பார்த்துக்கணும்!
    ஏன்னா நமக்கு மானந்தாய பெருசு !!!

    டெக்ஸ்:
    (முனகலாக....) அட பெருசு! ஊருக்குள்ள இதுக்கும் மேல போறதுக்கு என்ன இருக்கு !

    ReplyDelete
  75. This comment has been removed by the author.

    ReplyDelete
  76. Caption :5

    (நம்ம தலீவர் & செயலர் காண்டி )

    (காமெடிக்கு மன்னிச்சுசுசு....
    லெஜென்டரி கம்பரீசன்க்கு பெருமை படிங் ப்ளீஸ் ;-))

    டெக்ஸ்:(வேசத்தில் தலீவர்) :
    ஹே! என்னப்பா இது!
    கொஞ்சம் டீஜென்டா பார்க்க கூடாதா ?
    ஓவர்'ஆ வெறிக்கறயேப்பா ?

    கார்சன் (வேசத்தில் செயலர்):
    சே! சே! நானு நம்ப எடிட்டருக்கு உதவியா எங்க எங்க கருப்பு மை ஊத்தலாமுன்னு உத்து பார்த்துகிட்டு இருக்கேன் !
    என்னிய போய் தப்பா நெனைச்சுட்டேயப்பா ;-(

    டெக்ஸ் (வேசத்தில் தலீவர்) :
    (அடங்....)
    அது சரி! இந்த பூனையும் பீர் குடிக்குமான்னு மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு இருக்கறதெல்லாம் ஓகே !
    ஆனா கருவாட்ட கண்ட பூனை மாதிரி அந்த கடவா ஓரமா வழியுற ஜொள்ள நிறுத்தி தொலையும் ;-)

    ReplyDelete