Tuesday, February 28, 2017

"அந்த" நாள் !!

நண்பர்களே,

வணக்கம். மாதத்தின் "அந்த" நாள் மீண்டுமொருமுறை வந்து சென்றுள்ளது ! ஆபீசுக்குள் நுழைந்தாலே அட்டை டப்பாக்களில் விரவிக் கிடக்கும் பசையின் நெடி குபீரென்று வரவேற்கும் ;  கம்பியூட்டர் மேஜைகள் 'தேமே' என ஒரு மூலையில் ஓய்வெடுத்துக் கிடக்கும் ;  அச்சுப் பிரிவின் ஆட்களோ சம்மணமிட்டு தரையில் அமர்ந்து கொண்டு, கலர் கலராய்ப் புத்தகங்களை முன்னே குவித்து வைத்துக் கொண்டு "படம் பார்த்துப் பெயர் சொல்" என்ற பயிற்சியில் ஈடுபட்டுள்ள  மாணாக்கர்களைப் போல பக்கம் பக்கமாய்ப் புரட்டிக் கொண்டிருப்பார்கள் ;  கிணுகிணுக்கும் செல்போன்களை ஆளுக்கொன்றாய்க் காதிடுக்குகளுக்குள் அடைக்கொடுத்துக் கொண்டே நம்மவர்கள் - "சரி சார்..ஆமா சார்..இல்லை சார்..!..ஆகட்டும் சார் !" என்று ஏதேதோ பதில் சொல்லிக் கொண்டே ஒரு வண்டி பிரவுண் டேப்பால் பருமனான டப்பாக்களுக்குப்  புத்தூர் கட்டுப் போட்டு விட்டுக் கொண்டிருப்பார்கள் ; மேஜை நிறைய ஸ்டிக்கர்களைப் பரப்பிப் போட்டுக் கொண்டு, குனிந்த தலை நிமிராது வேலை செய்து கொண்டிருக்கும் மைதீனோ அவற்றை எதன் மீதாவது 'சபக்..சபக்கென்று ஒட்டிக் கொண்டிருக்க  ; நமக்கு வாடிக்கையாய் உதவிடும்  லோடு ஆட்டோ 'சர்...சர்ரென்று குறுக்கும் நெடுக்கும் உலாத்திக் கொண்டிருக்கும் ! உள்ளே நுழைவோரோ சுவற்றில் இடுங்கிடும் பல்லிகளைப் போல பம்மிப் பதுங்கி உட்புக வேண்டியிருக்கும் !! அலுவலகமே கருமமே கண்ணாய் பணி செய்து கொண்டிருக்கும் வேளைதனில், வேலையேதுமின்றி முன்னுக்கும், பின்னுக்கும் குட்டி போட்ட பூனை போல நடை பயின்று கொண்டிருக்கும் ஆந்தை விழிக்காரன் இன்னொரு பக்கம் !! 

Welcome to yet another despatch day folks !! 

கடந்த சில பல ஆண்டுகளாய், ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாட்களுள்  ஏதோவொன்றில் திருவிழாக் கோலம் பூணும் நமது ஆபீசை புதிதாய்ப் பார்ப்போருக்கு கோயம்பேட்டுக் கொத்தவால் சாவடி நினைவுக்கு வரலாம் ! ஆனால் இருக்கும் குறைச்சலான இடத்துக்குள், இருக்கும் சொற்பமான  அவகாசத்துக்குள், சந்தாப் பிரதிகள் மொத்தத்தையும் டெஸ்பாட்ச் செய்திட நம்மவர்கள் அடிக்கும் சர்க்கஸ் வேலைகளை ரசிப்பது எனது மாதாந்திர சந்தோஷ அனுபவங்களுள் உச்சமானது ! 29 நாட்கள் செய்த வேலையினை உங்களிடம் கொண்டு சேர்க்கும் அந்த 30-வது நாள் இன்று வரைக்கும் அதே பரபரப்பை எனக்குள் துளிர் விடச் செய்து வருகிறது ! 

இன்றைய பகல் பொழுதும் அதே routine தான் ; உங்களின் மார்ச் பிரதிகள் அனைத்தையும் கூரியர்களுக்கு 'பேக்-அப்' செய்திடும் மும்முரத்தில் ! தோர்கல் + டெக்ஸ் + லக்கி லூக் + ஸ்பைடர் + மாடஸ்டி + ஒரு குட்டியூண்டு சர்ப்ரைஸ் gift என இம்முறை உங்களை வந்தடையவிருக்கும் டப்பாக்களுக்குள் மாறுபட்டதொரு கூட்டணி காத்துள்ளது ! Fantasy-ம் படிப்போம் ; Cowboy-களும் ரசிப்போம் ; Cartoon-களும் (சு)வாசிப்போம்; ஆக்ஷனுக்கும் ஆர்ப்பரிப்போம் என்றதொரு unique வாசக வட்டத்தை வேறெந்த பிராந்திய மொழியிலும் சல்லடை போட்டாலும் கண்டுபிடிக்க சாத்தியப்படாது என்பதே எனது அனுமானம்!! அத்தகையதொரு அணிக்குப் பணியாற்றுவது செம உற்சாக அனுபவம் என்பது ஒவ்வொரு மாதமும் பலமான அடிக்கோடோடு நிரூபணமாகி வருகிறது! So நாளைய பொழுதைக் கூரியர் கைப்பற்றலோடு துவக்கிடலாம் guys ; புது இதழ்கள் பற்றியும், (வண்ண) மறுபதிப்பு பற்றியும் உங்களின் அபிப்பிராயங்களை அறிந்திட ஆவலாய் இருப்போம் !! 

காதுகளை பிரீயாக வைத்துக் கொள்ளுங்கள் folks ; சரம் சரமாய் காத்துள்ளது  !! 
Before I sign off -  FB பக்கமாய்ப் பயணம் செய்திடா நண்பர்களின் பொருட்டு, கண்ணில்பட்ட சில பல "அஜய்விளையாடல்களை" பகிர்ந்து கொள்கிறேன்  !! 
Phew !!! 
P.S : மார்ச் இதழ்களின் ஆன்லைன் லிஸ்டிங்கும் இப்போது செய்து விட்டாயிற்று ; so சந்தாக்களில் அங்கமாகிடா நண்பர்களும் இப்போதே ஆர்டர் செய்திட துவங்கிடலாம் !! 
http://lioncomics.in/monthly-packs/296-march-2017-pack.html

328 comments:

  1. Good evening sir.. Super news. Thank you..

    ReplyDelete
  2. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  3. வணக்கம் நன்பர்களே!!!!! வெல்கம் டு
    குட்டியூன்டு சர்ப்ரைஸ்

    ReplyDelete
  4. இந்த மாதம் புத்தகம்களை வாசிக்க உள்ள வரிசை
    1. க.ம.கோ
    2. த.த
    3. வி.வெ.பி
    4. ப.வா.பொ
    5. ஒ.த.பு (சாரி டெக்ஸ் நண்பர்களே)

    ReplyDelete
    Replies
    1. 1997லிலோ 1998லோ சேலம் நண்பர் திரு சிவா (மாயாசார் அல்ல வேறொரு மூத்த நண்பர்) , இந்த கழுகு மலைக் கோட்டையை படிக்க தந்தார். மாடஸ்தி சாகசத்தில் என்னை அதிகம் கவர்ந்தது இதுவே. மீண்டும் தோராயமாக 20ஆண்டுகள் கழித்து வண்ணத்தில் அந்த கதையை படிக்க இருப்பது சற்றே ஆவலை தூண்டியுள்ளது.
      நானும் கூட க.ம.கோட்டை தான் முதலில் படிக்க போகிறேன் நண்பரே பரணி.

      Delete
    2. Tex - விருந்தின் இறுதியில் சாப்பிடும் sweet என எடுத்துக் கொள்கிறோம் 😊 :-)

      Delete
    3. சேலம் Tex விஜயராகவன் @ அது! நன்றி!

      Yasin @ எங்க ஊர் பக்கம் விருந்தின் ஆரம்பத்தில் sweet சாப்பிடுவது வழக்கம் :-)

      Delete
  5. ஆனாலும் பொம்மை மறக்க முடியாத ஒன்று
    என்னமோ போங்கப்பா
    ஒண்ணாம் தேதி ஆயிட்டா குட்டி போட்ட பூனை மாதிரி திரியாறோம் பாருங்க
    கை காச காசுன்னு பாக்காம போட்டுட்டு ,,,,, ஹ்ம்ம்

    --
    P,Janarthan

    ReplyDelete
    Replies
    1. 😊 பொம்மய வச்சு இந்த வயசுலயும் வெளாட ஏலுதுன்னா ஸ்பைடர்தா

      Delete
  6. Replies
    1. ஹலோ ST கொரியரா?..

      Delete
    2. ஹலோ கொரியரா?..பிளா...பிளா....சரி சார்.ஓகே.நீங்க பல்லு விளக்கனப்புறம் வரேன். அது வந்து சார் மாடஸ்டி வேண்டப்பட்ட பொண்ணு சார்..பிளா.பிளா....டொக்....சார் ...கொரியர் சார்?

      Delete
    3. இம்மாத லயன் வெளியீடு எண் ( 294 )
      #லூக்_லக்கி_லூக் ன்

      #தரைக்கடியில்_தங்கம்

      மிக அருமை
      ஹப்பாடி
      #சிரிச்சு_மாளலை... ஹா ஹா ஹா :) :)

      #கிரிஸ்டல் ன் காமெடி தான் இங்கே பிரதானம்

      ஒவ்வொருத்தரும் அவரவர் வேலைக்கு தகுந்தாற்ப்போல் #தட்டி அடித்து வைத்துள்ளதும் அருமை

      இக்கதையில் வரும் ஓவியங்களில் சிலவற்றை நாம் இதற்கு முன் வெளிவந்த லக்கி கதைகளில் பார்த்திருந்திருப்போம்

      போனவருடம் வந்த லக்கி யின் #ஒரு_பட்டாப்போட்டி க்கு அடுத்து வந்த காமிக்ஸ்களில் இப்பொழுதுதான் மனம் விட்டு சிரித்தேன் :) :)

      Delete
  7. மாயாவி சார் எங்க இருக்கிங்க
    மாடஸ்டியுடன் இந்திய தொழில் அதிபர்
    லிங்க் .....கிளிக் கொடுங்க
    ஈரோடு விஜய் ......நல்லா இருக்கு சூப்பர்

    ReplyDelete
  8. வானவில்லின் வண்ணங்களைத் தாங்கிய 'பழிவாங்கும் பொம்மை' அட்டைப்படம் அசத்தலாய் இருக்கிறது! ச்சோஓஓ கலர்ஃபுல்!

    அஜய்சாமி பிரம்மிக்கச் செய்கிறார்!!! என்னவொரு திறமை!!!! கடவுள் கொடுத்த வரம்!!!

    இளவரசியின் அட்டைப்படத்தை காணோமே? திட்டமிட்டே மறைக்கப்பட்டிருக்கிறதா?!!

    இளவரசியின் புக்கு வெளியாகும் வேளையில் இப்படியொரு தலைப்பு-'அந்த' நாள் - ம்ஹூம் இது சரியாப்படலை! ஏதோ புரியறாப்ல இருக்கா நண்பர்களே?

    ஆங்! அதுவேதான்! ;)

    ReplyDelete
  9. சிறு வயதில் பழிவாங்கும் பொம்மை புக்கை என் தலையணையின் அடியில் வைத்து தூங்கி இருக்கிறேன், இப்போ கூட 10 தடவை படிக்க தயார் :). ஹாலிவூட்டில் படமாக எடுக்கலாம் :). கிளாஸ்சிக்ஸ் புக் SIZE ai மாற்றி அமைத்து, வேறு எதாவது SIZEil வெளி இட்டால் அட்டகாசமாக இருக்கும் ...

    //"அஜய்விளையாடல்களை" பகிர்ந்து கொள்கிறேன் !! // அசரடிக்கிறார் :)

    ReplyDelete
  10. ///, சந்தாப் பிரதிகள் மொத்தத்தையும் டெஸ்பாட்ச் செய்திட நம்மவர்கள் அடிக்கும் சர்க்கஸ் வேலைகளை ரசிப்பது எனது மாதாந்திர சந்தோஷ அனுபவங்களுள் உச்சமானது ! 29 நாட்கள் செய்த வேலையினை உங்களிடம் கொண்டு சேர்க்கும் அந்த 30-வது நாள் இன்று வரைக்கும் அதே பரபரப்பை எனக்குள் துளிர் விடச் செய்து வருகிறது ! ///...

    இதைப்போன்ற உயிரோட்டமான வர்ணனைகளே இந்த தளத்தில் குட்டி போட்ட மியாவ்களாக எங்களை உலவச் செய்கின்றன சார்.

    ஏதாவது ஒரு மாதத்தின் டெஸ்பாட்ச் நாளை நாங்களும் சர்ப்ரைஸாக ஒரு நாள் வந்து பார்ப்போம் சார்.

    தங்கத்தை தேடி அலையும் இரும்புக்குதிரையில் தொத்திக் கொள்ளும் ஆவலுடன்....

    ReplyDelete
    Replies
    1. ////ஏதாவது ஒரு மாதத்தின் டெஸ்பாட்ச் நாளை நாங்களும் சர்ப்ரைஸாக ஒரு நாள் வந்து பார்ப்போம் சார்.////

      வீட்டில வடை சுட்டாங்கன்னா கிச்சன் வாசல்லயே நின்னுக்கிட்டு சூடா வாங்கி வாயில் போட்டு "ஊப்ப்... தொம்ப சூதா இதுக்குது" னு ரசிப்போமே... அதேமாதிரி ஒருநாள் நம்ம பிரின்ட்டிங் மெஷின்லேர்ந்து சூடா வெளிவரும் புத்தகங்களை கையிலெடுத்து "ம்ம்ம்..ஹா..." பண்ணணும்!

      Delete
    2. ஆகா.! நல்ல ஐடியா நேற்றுமுன்தினம் நெல்லையியில் இருந்து சென்னை வரும்போது இங்கிருந்து சிவகாசி எவ்வளவு தூரம் , என்று மனது கணக்கு போட்டது.ஏசி கோச்சில் பயணம் மேற்கொண்டதால் கொஞ்சம் எடிட்டர் சாயலில் யாரவது தென்பட்டாலும் எடிட்டரா இருப்பாரோ என்று உடலெங்கும் மாயாவி மாதிரி மின்சாரம் பாய்ந்ததுபோல் இருந்தது.!!!

      Delete
    3. mv...உங்க கண்ணாடிக்கு நாளை உயிர் வரப்போகுது....ஸ்பைடரின் பொம்மை கத போல

      Delete
  11. எப்பொழுது விடியும் தேவதையை கை(பிடிக்க)பற்ற போகிறேன் மிக நீண்ட இரவாக போகிறது

    ReplyDelete
    Replies
    1. +1111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111............

      Delete
    2. இதே மாதிரி கோடு போட்ட சட்டைகளை நாளை நிறையப் பார்க்கலாம்! ;)

      Delete
  12. 29 நாட்கள் செய்த வேலையினை உங்களிடம் கொண்டு சேர்க்கும் அந்த 30-வது நாள் இன்று வரைக்கும் அதே பரபரப்பை எனக்குள் துளிர் விடச் செய்து வருகிறது ! //
    இந்த மாசம் மட்டும் உங்களோட கணக்கு மாறும் சார்.

    ReplyDelete
  13. மாடஸ்ட்டியின் இறுதி அட்டை படத்தையும் பதிவேற்றியிருக்கலாமே சார்

    ReplyDelete
  14. Good eveng friends& vijayan sir.Nalai vara erulum chellankaluku O poduvom.

    ReplyDelete
  15. Good eveng friends& vijayan sir.Nalai vara erulum chellankaluku O poduvom.

    ReplyDelete
  16. So Thanks Sir!!
    நாளை கிடைக்கவிருக்கும் தோர்கலின் கதைக்காக மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறேன். தோர்கலின் 4 புத்தகங்களையும் நேற்று எடுத்து வந்து வேலைகளின் நடுவில் படித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது சாகாவரத்தின் சாவியில் இருக்கிறேன். நாளை மதியம் உங்கள் பார்சல் கிடைப்பதற்குள் மூன்றாம் உலகத்தை கடந்துவிட்டு விண்வெளியின் பிள்ளையை தூக்கி கொஞ்ச வேண்டும். மேலும் எனது சந்தாவின் 2வது தவணை தோகை நாளை உங்கள் வங்கி கணக்கில் சேர்ந்துவிடும். நண்பர் விஜயராகவன் அவர்கள் உதவியால் இந்த ஆண்டு சந்தாதாரராக முடிந்தது. பணம் செலுத்த வங்கிக்கு என்னால் போக இயலாத அளவிற்கு நான் ஒரு disabled person. அவர் அறிமுகமும் உதவியும் எனக்கு கிடைக்காது போயிருந்தால் நான் இந்த ஆண்டு சந்தாதாரராக முடியாமல் 10ம் தேதி வரை கடையில் வாங்க காத்திருந்திருப்பேன். பிசியான வேலைகளுக்கு நடுவே நேரம் ஒதுக்கி எனக்கு வந்து உதவிய நண்பர் விஜயராகவன் சாருக்கு என் நன்றிகள்.!!!

    ReplyDelete
    Replies
    1. வெல்டன் விஜயராகவன்!

      Delete
    2. டெக்ஸ் விஜய ராகவன்.!!!


      அண்ணன் டெக்ஸ் விஜயராகவன் வாழ்க.! வாழ்க.!

      Delete

    3. செய்த உதவியை வெளியே சொல்லாத விஜய ராகவன் சாருக்கும் நன்றி மறவாத ஜெகத் சாருக்கும் வாழ்த்துகள்

      Delete
    4. அடக் கடவுளே...

      ஆயிரக்கணக்கில் விலை மதிப்பிலான புத்தங்களை அன்பு பரிசாக வழங்கும் பல நண்பர்கள் மற்றும் அரிய பழைய புத்தகங்களை படிக்க அளிக்கும் பல மூத்த நண்பர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு சந்தா செலுத்தி அன்பு மழையில் சில நண்பர்களை நனைய விட்ட நண்பர்களுக்கு மத்தியில்,
      நண்பர் ஜெகத்தின் பணத்தை ஆசிரியர் சாரிடம் கொண்டு சேர்க்கும் சின்னஞ்சிறு வேலையை செய்தது பாராட்டும் அளவிளானது இல்லை நண்பர்களே...

      "ஒவ்வொரு முகத்திலும் புன்னகை" என்ற மந்திரத்தை செயல்படுத்தும் ஆசிரியர் சாரின் கரத்தை வலுப்படுத்தும் இதுபோன்ற வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு நானல்லவா நன்றி சொல்லனும்.

      இருப்பினும் நண்பர்களின் பாராட்டை இருகரம் கூப்பி ஏற்றுக்கொள்கிறேன்.
      ப்ளீஸ் இதை மேற்கொண்டு பெருது படுத்த வேணாமே!!!

      Delete
  17. மீண்டும் பாக்கெட் சைஸ் புத்தகத்தை மனம் எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறது? யோசித்தால் விடையில்லை! நாளையபொழுதில் புத்தகத்தைக் கையில் ஏந்தப் போகும் அந்தத் தருணமே விடைசொல்ல வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. G Manam irundhal margham undhu.g pocket size books always a good one to read. No weight, compact size.

      Delete
    2. சும்மா கலக்கும்...மாற்றத்திற்கு நம்ம மனம் ரசிகர்தான ev

      Delete
  18. ஆஹா......! தானைத்தலைவன்....தமிழ் காமிக்ஸ் உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ....ஸ்பைடரின் அட்டைப்படம் கலர்ஃபுல்லாய் கலக்குகிறது.அட்டகாசம்...!

    ReplyDelete
    Replies
    1. க்கும், மாடஸ்தி வர்ரதுக்கே தளம் தாங்காது.
      இப்ப தாத்தா ஸ்பைடரும் சேர்ந்து வர்ராரு... ஆட்டம் ஓவராத்தான் இருக்கும்.

      நல்லா நடத்துங்கய்யா...
      பெருசுங்க ஆட்டத்தை இளசுங்க, நாங்க கைகட்டி ஓரமாக நின்று பார்த்து ரசிக்கோம்...

      Delete
    2. சரி சரி.கையிலே கழி ஊணிக்கிட்டு செவுத்த புடிச்சுகிட்டு பல்செட்டை பாக்கெட்ல போட்டுக்கிட்டு ஓரமா இருந்து வேடிக்கை பாருங்க இளசுகளா!600 சொச்ச கதையிலே கார் படம் கூ வராத அரத பழசு நீங்க

      Delete
    3. ஙே...ஙே...ஙே....
      நம்ம சாகசங்கள் அனைத்தும் கார் என்ஜின் கண்டுபிடிக்கப்படா முன்பே நடந்தவைகள் அல்லவா....

      டெக்ஸும் மார்க்கண்டேயரு, அவருடைய சிஷ்ய புள்ளைகளும் மார்க்கண்டேயருங்க தான்...

      Delete
  19. வணக்கம் சார் & நண்பர்களே :))
    .

    ReplyDelete
  20. சார் ஸ்பைடர எப்டிதான் மறந்தேனோ ...அட்டைபடம் சும்மா மிரட்டுது...மாடஸ்டி மயக்கத்துல மறந்துட்டேன் . பழய கதை மாடஸ்டின்னு இருந்தேன் மாத துவக்கத்தில் உங்களிடம் ஒரு பக்க கட்டுரை வரய கேட்டது நினைவில் புய்பம்னு தயவு செய்து சொல்லாதீர்கள் . அதப்போல பல ஆராய்ச்சிகள் நடந்து வரும் நிலையில் லாஜிக்கான விஞ்ஞான வித்தைக்காக காத்திருப்போம் .அன்று சூலாயுதமாய் தோன்றிய ஆயுதம் நாளை என்னவாக மாறியிருக்குமோ ....மாடஸ்டிய காட்டல...அசத்தப் போறார் நாளை ...தோர்கள் ...என மூன்றாம் மாதம் ஏக எதிர்பார்ப்புகள் மூன்றில் என் உயிரிருக்கும்....அது வந்த பின் பேச்சொலிக்கும் அது கதை அது கதை....மூன்றெழுத்துதான்...நம்புங்க....சர்ப்ரைஸ் என்னவோ..சொக்கநாதா...தா..தா

    ReplyDelete
  21. I am waiting for 4 ladus from Sivakasi. KANNA 4 ladus thinna ready ya. I am ready and waiting. Hello ST COURIER WHERE IS MY PARCEL?

    ReplyDelete
  22. நண்பர் அஜய் ஓவியங்கள் மிரட்டுகிறது சூப்பர்

    ReplyDelete
  23. ஸ்பைடர் அட்டை படம் கலக்கலா வந்திருக்கு சார்.

    ReplyDelete
  24. சீனியர் எடிட்டரின் sensational மொழிபெயர்ப்பில் - வான் ஹாமே'யின் தூரிகை ஜாலத்தில் - நாம் கனவிலும் கண்டிராத ஒரு மாயலோகத்திற்கு பயணிக்கப் போகிறோம்...

    ஆருஷியா...

    ReplyDelete
    Replies
    1. ஆரிஸியா நாளைய சாகசத்தில் உண்டா என சந்தேகமாக இருக்கு செயலரே!.
      இந்த பொடி பயல் வாளைச் சுழற்றிக்கொண்டு இருப்பதை பார்த்தால் , தோர்கலின் சிறுவயது நிகழ்வுகளோ என தோன்றுகிறது.

      தோர்கலின் சிறுவயது எனில் அழகு மயில் ஆரிஸியா தரிசனம் கிடைப்பது சிரமம் தான்...ஹூம்...

      Delete
    2. வான் ஹாமே எப்ப சார் தூரிகை புடிச்சாரு. அவர் பேனா தானே புடிப்பாரு

      Delete
    3. ////வான் ஹாமே எப்ப சார் தூரிகை புடிச்சாரு. அவர் பேனா தானே புடிப்பாரு////

      ஆங், சொல்றேன்! ஒருநாள் நடுராத்திரியில வான் ஹாமே பேனாவால இந்தக் கதையை எழுதிக்கிட்டிருக்கும்போது திடீர்னு மை தீர்ந்து போச்சாம். கன்டினியூட்டி மிஸ் ஆகிடக் கூடாதேன்னு நினைச்சவர் சரக்'னு கட்டைவிரலை கிழிச்சுக்கிட்டு, பக்கத்துல கிடந்த தூரிகைய எடுத்து அந்த இரத்தத்த தொட்டு எழுத ஆரம்பிச்சுட்டாராம்... என்னாவொரு கடமை உணர்வு பாருங்களேன்!!

      (உஷ்ஷப்பா... அரைத் தூக்கத்துல எதையாவது எழுதிட்டு எப்படியெல்லாம் சமாளிக்க வேணுடியிருக்கு!)

      ஆனா, நல்லா கவனிக்கறீங்க கோவிந்தராஜ் சார்! :)

      Delete
    4. என்னை பேர் சொல்லி அழைத்தாலே சந்தோப்படுவேன். 'சார்' என்பது கொஞ்சம் அதிகப்படியா தெரியுது சார்

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  25. அஜய் நம்ம ரசனைக்கு தகுந்த புத்தகம் ஒன்ன தயார் பண்ணுங்க...அட்டகாசம்

    ReplyDelete
  26. My favorite spider story scarecrow revenge. I am waiting

    ReplyDelete
    Replies
    1. Mine too. Very good and interesting classic story. The villain is too hood

      Delete
  27. பழி வாங்கும் பொம்மை அட்டைபடம் அசத்தல். பலகாலத்திற்கு முன்பு படித்தது மகிழ்வுடன் எங்கள் காது புஷ்பாஞ்சலிக்கு தயார்!

    ReplyDelete
  28. கண்ணுல வேர்க்குது......


    மாடஸ்டிக்கு இம்புட்டு தீவிர ரசிகர்களா....???

    மாடஸ்டிக்கு நீருபூத்த நெருப்பாக மிகப்பெரிய வாசகர்கள் படை உள்ளது என்பதை மாண்புமிகு எடிட்டர் அவர்கள் உணரவேண்டும்.அதை நிரூபிக்கும் வகையில் சில உண்மை நிகழ்வுகளை கூறுகிறேன்.!


    என் நண்பர் ஒருவர் மிகச்சிறந்த காமிக்ஸ் ரசிகர்.அவர் பிரபல ஹீரோ ஒருவரின் தீவிரமான ரசிகர் என்றே எல்லோராலும் அறியப்பட்டவர்.அவர் ஒருமுறை அவரது வீட்டிற்கு சென்றிருந்தேன்.அவரது வீட்டின் முன்பு எனது டு வீலரை நிறுத்திவிட்டு அவரது வீட்டு கேட்மதில் சுவரை பார்த்த போது திடுக்கிட்டேன் .சுவற்றில் மார்பில் கல்லில் அவரது பெயர் ஒருபுறமும் மறு புறம் மாடஸ்டி பிளைசியின் பாதிபெயருடன் அழகாக எழதப்பட்ட அவரது புதல்வியின் பெயருடன் அழகாக ஜொலித்தது.. நான் ஆச்சரியத்துடன் அவரிடம் கேட்டபோது ,அவர் தீவிர மாடஸ்டி ரசிகையும் கூட என்று தெரிந்தது..பிறகு அழகான குட்டி மாடஸ்டியை கொஞ்சிவிட்டு..அந்த நண்பரிடம் வீட்டில் எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என்று கேட்டபோது,உஷ்ஸ்...என்றார்.! சத்தமில்லாமல் காரியத்தில் ஜெயித்த அந்த கெட்டிகார நண்பர்.


    நண்பரின் கெட்டிகார தனம் என்னிடம் இல்லாததால் என் மனைவியை இந்த பிளாக்கினுள் வர வழைத்து விட்ட நான் பட்ட அவஸ்தைகள் சொல்லிமாளாது.! கோவை சரளாவிடம் மாட்டிக்கொண்ட சுனாபானா கதிதான் எனக்கு.என் பெயரில்ல மாடஸ்டி பெயரை எடுக்க சொல்லி என்னை கொதிக்கும் சுண்ணாம்பு சூளையில் போட்டாலும் சரி.கல்லை கட்டி கிணற்றில் போட்டாலும் சரி.என் வாய் மாடஸ்டியின் திருநாமத்தையே சொல்லும்.!!!

    ReplyDelete
  29. ஆமாம் Mv சார்.நாமென்ன மாதந்தோறும்
    மாடஸ்டியா கேட்கிறோம்.வருடத்திற்கொரு
    வண்ண மறுபதிப்பு ஆசிரியர் தரலாமே?

    ReplyDelete
    Replies
    1. MV sir& இனியர்@

      அடுத்தடுத்து வரும் புத்தக விழாக்களில் வரவேற்பு நன்றாக இருந்தால் உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்வதில் தடையேதும் ஆசிரியர் சாருக்கு இருக்காது என்பது அவரின் முந்தைய பதிவுகளில் இருக்கும் விற்பனை அளவு கோல்கள் பற்றிய விபரங்களில் இருந்து அறியலாம்.

      வண்ணத்தில் ரசிப்பது எனக்கும் மற்றும் அனைவருக்கும் ஏற்புடையதே என்பதால் விற்பனையும் வரவேற்பும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே நம் எல்லோரின் அவா...

      எல்லாம் வல்ல கடவுள் அதற்கு ஆசிர்வதிப்பார் என நானும் பிரார்த்திக்கிறேன்.

      Delete
  30. I paid subscription last month at Tirupur book fair only. And I received Jan and Feb books there. All I really want is please send the surprises of Jan and Feb.. Particularly January months surf and rise.. As per the calendar it is the month of Thanga thalaivan..
    I want to see him all this year.
    Pls send me this months parcel along with Thabga Thalaivan

    ReplyDelete
  31. பழி வாங்கும் பொம்மை அட்டை படம் அருமை புத்தக திருவிழாவில் அட்டை படத்திற்காகவே விற்பனை யில் சக்கை போடு போட போகிறார் ஸ்பைடர்

    ReplyDelete
  32. Spider's one of the best story. Eagerly waiting to read one more time.

    ReplyDelete
  33. கழுகு மலைக் கோட்டை வெளியான சமயம் எப்போதும் நமது இதழ்கள் ஒரு ரூபாய்.இதற்கே நூறு குட்டிக் கரணங்களை போட வேண்டும்.
    கழுகு மலைக் கோட்டை கூடுதல் பக்கங்கள் என்பதால் விலை ஒன்னரை ரூபாய்!!!
    இந்த விலை வித்தியாசத்தை ஈடுகட்ட புத்தகம் வெளிவருவதற்கு முந்தைய இரவு வரை போராடிய நிகழ்வுகள் இன்றைய இரவில் நினைவில் வந்து பாடாய்படுத்துகிறது. கண்கள் லேசாய் வேர்க்கிறது!!
    இன்றைய இரவு முழுவதும் விடியலை நோக்கிய ஆர்வத்தில் தூக்கம் வருவதும் சிரமம்தான்.
    இன்று உடல் வலுவிழந்து போனாலும், ஆண்டுகள் பல கடந்தாலும் உள்ளம் மட்டும் அன்றைய அதே பலத்துடன் திகழ நமது காமிக்ஸை தவிர வேறெந்த ஒன்றாலும் சாத்தியமாக்குவது என்பது நடக்காத ஒன்றுதான்.
    காமிக்ஸ் என்ற ஒன்றின் சுவையுணர்ந்து வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு அமையப்பெற்ற நாமெல்லாம் ஒரு விதத்தில் இயற்கையால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்தாம்.காமிக்ஸ் என்ற ஒன்றைத்தவிர நம்
    உடலுக்கும், உள்ளத்துக்கும், அடுத்தவருக்கும்,இயற்கைக்கும் சற்றும் மாசு உண்டாக்காத வேறெந்த பொழுதுபோக்கு சாதனமோ, பொழுதை அர்த்தமுள்ளதாக்கும் என்று வேறெதையும் கற்பனையில்கூட ஒப்பிட இயலவில்லை.
    வாழ்க காமிக்ஸ்.

    ReplyDelete
  34. மீண்டும் ஒரு திருவிழா!!!!
    மீண்டும் ஒரு கொண்டாட்டம்!!!
    நாளைய பொழுது ஒரு சுகமான அனுபவமாய் அமையப்போகிறது.

    ReplyDelete
  35. Dear Edi, I am Waiting... Got to say the Classics Cover designs are getting Better and Better ! Kudos !!

    ReplyDelete
    Replies
    1. Rafiq Raja : நன்றிகள் சார் ! இப்போதெல்லாம் விற்பனைகளில் முதலிடம் பிடிப்பது மறுபதிப்புகளே எனும் போது - "முதல் மரியாதை" அவசியமாகிடுகிறதே !!

      Delete
  36. கடைசிவரைக்கும் மாடஸ்தி அட்டைய காட்டலயே சார்

    ReplyDelete
    Replies
    1. palanivel arumugam : அஜயின் டிசைன்கள் தானே அட்டைப்படங்களே ? எழுத்துக்களை இணைப்பதைத் தாண்டி அங்கென்ன வேலை நமக்குள்ளது நண்பரே ?

      Delete
  37. நண்பர்களே,

    எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள் நமது என் பெயர் டைகர் புத்தகம் குறித்துத் தன் வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறார். பாருங்களேன்:

    http://www.jeyamohan.in/95845#.WLYyn5_hXqA

    ReplyDelete
  38. 1989 இல்ல 2017 விஜயன் சார்..

    ReplyDelete
  39. கொரிய வங்கியாச்சி

    ReplyDelete
  40. சர்பிரைஸ் கிப்ட் சூப்பரு சார்
    ஆனாக்கா தாயக்கட்டை வரலைங்கோ சார் ☺

    ReplyDelete
    Replies
    1. அட..ஆமால்லே ? ஒரு தாயக்கட்டை ஜோடியையும் உள்ளே சேர்த்து அனுப்பியிருக்கலாமோ ?

      Delete
  41. மாடஸ்டி கலரில் கலக்குகிறார்
    யாரும் எதிர்பாராத வகையில் டஸ்ட் ப்ரூப் கவர் போட்டு
    சூப்பரு சூப்பரு சூப்பரு சார்
    (மா.வெ சார் குத்தாட்டம் போடுவது இப்போதே மனக்கண்ணில் தெரிகிறது )
    உங்களது ஆத்மார்த்தமான மனதுக்கு தலைவணங்குகிறோம் சார்

    ReplyDelete
    Replies
    1. Prabakar T : சார்.. சின்ன சைஸ் புக்குக்கு ஹார்ட் கவர் பைண்டிங் ரொம்பவே சிரமப்படும் என்பதால் - அந்த dust jacket யோசனை தோன்றியது ! அதுவும் அன்றைய ஒரிஜினல் டிசைனேயே - dj -க்கு பயன்படுத்தினால் ஒரு nostalgia உணர்வும் கிட்டுமென்று நினைத்தேன் !

      Delete
  42. இளவரசியின் பாக்கெட் சைஸ் புக் அசத்தல்... நிஜமாகவே அதை கையில் எடுக்கும்போது ஆனந்தத்தில் கை நடுங்கியது.. படபடப்பு அடங்க ஐந்து நிமிடங்களாகியது.. மற்ற புத்தகங்களை இனிமேல் தான் பார்க்க வேண்டும்... தாய விளையாட்டை ப்ளஸ்2 லீவில விளையாட வீட்டில் சந்தோசமாக எடுத்துக்கொண்டு விட்டார்கள்... நன்றி என ஒரு வார்த்தையில் சொல்லமுடியாத நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி கரூராரே.....:-)

      Delete
    2. கரூர் சரவணன் : பாக்கெட் சைசில் இளவரசியை அனுப்பும் வேளையில் எனக்கும் கூட கை நடுங்கியது சார் ! அளவுக்கு ; அமைப்புக்கு ; வர்ணங்களுக்கு உங்களின் விமர்சனங்கள் எவ்விதம் இருக்குமோவென்று !! பெரும்பான்மை இதழ்களை பெரிய சைஸ்களில் இப்போதெல்லாம் பார்த்துப் பழகி விட்டு, எனக்கே பாக்கெட் சைஸ் சற்றே விநோதமாய்த் தெரிந்தது முதலில் !! ஆனால் கையில் வைத்துப் புரட்ட தொடங்கிய பின்னே அந்த நாள் ஞாபகம்.. நெஞ்சிலே.. வந்ததே..வந்ததே....!

      Delete
    3. கிழிஞ்சது....!! "அந்த நாள்" என்றவுடன் - "அ-ந்-த" நாளோ ? என்று ஆஜராகிடுவாரே ஒரு பூனைப் பார்ட்டி !!

      Delete
    4. இன்னமும் பூனையாரை காணோமே...!!!

      நம்ம பார்ட்டி ஊரில் இல்லையா?

      Delete
  43. இன்னும் இதழ்களை கண்ணில் காணவில்லை....ஆனால் கிடைக்க பெற்ற நண்பர்களின் கொண்டாட்டம் அதுவும் மாடஸ்தி இதழை கண்டவர்களின் கொண்டாட்டம் இங்கும் வாட்ஸ்அப்பிலும் பலத்த ஓசையை கிளப்புவதால் இம்மாதம் செம தீபாவளி போல தான் ...என்னால் நாளை தான் கண்ணில் காண முடியும் ...

    ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்..

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : உங்கள் எண்ணங்களை அறிந்திட நானும் ஆவலாய்க் காத்திருப்பேன் தலீவரே !

      Delete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. அருமை மாயாஜீ ...சரியா சொன்னீங்க....

      Delete
    2. mayavi.siva : சார்...தீவிர காமிக்ஸ் வெறியர்கள் எனும் விதத்தில், கதைகளை ரசிப்பதில், கொண்டாடுவதில், நினைவில் இருத்திக் கொள்வதில் நாமெல்லாம் சற்றே வித்தியாசமானவர்கள். நம்மின் அதே ரசனை பாணிகளை, காமிக்ஸ் உலகோடு நம்மளவிற்குப் பிணைப்பிருக்க வாய்ப்பிலா வாசகர்களும் கொண்டிருப்பது சற்றே சிரமமான காரியம் தானே ?!

      True - டைகர் பற்றிய அந்தக் குறிப்புகள் சற்றே நெருடத் தான் செய்தன ; ஆனால் அவற்றை ரௌத்திரமின்றிச் சுட்டிக் காட்டிடுவோமே - ப்ளீஸ் ? ஆற்றல் வாய்ந்ததொரு பெரும் படைப்பாளிக்கு நமது நெருடல்களை சாத்வீகமாகவும் சொல்லலாம் தானே சார் ?

      கடந்த நாலைந்து ஆண்டுகளில் நம்மைப் பற்றியோ /; பொதுவாக காமிக்ஸ் பற்றியோ, ஊடகங்களில் / இணையத்தில் வெளியாகியுள்ள செய்திகள் / பேட்டிகள் / "ஆய்வுக்" கட்டுரைகளில் தென்பட்டுள்ள கருத்துப் பிழைகளைப் பட்டியலிட்டால் அதுவே இரத்தப் படலத்தின் நீளத்துக்குச் சவாலிடும் என்பேன் ! பேட்டிகளில் நான் தெரிவித்த விஷயங்களுக்கும் ; அச்சில் வந்திடும் சமாச்சாரங்களும் மத்தியினில் நிறையவே இடைவெளி இருந்திடுவதை அடிக்கடிப் பார்த்திட முடிவதுண்டு. அதன் பொருட்டு சங்கடம் கொள்வதை விடவும், யதார்த்தத்தைச் சுட்டிக் காட்டி அவர்களுக்கே மின்னஞ்சல் அனுப்புவதையே நான் கடைபிடித்துள்ளேன்.

      டைகர் பற்றியதொரு பதிவுக்கு, டைகரின் ட்ரேட்மார்க் பொறுமையை நாமும் கையில் எடுத்துக் கொள்வோம் சார் !

      Delete
    3. சிவாவின் கருத்துக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன்.

      Delete
    4. மாயாவிஜி!!!!
      ஜெமோ ஒரு பிரபல எழுத்தாளர்....
      அவர் நமது காமிக்ஸை பற்றி அவரது தளத்தில் எழுதியிருப்பது நமது காமிக்ஸ் பற்றி இதுவரை அறியாத அவரது வாசக வட்டத்தினூடே லயன் முத்து காமிக்ஸை பற்றி கொண்டு சேர்க்கும் என்பதோடு நமது பார்வையை நிறுத்தி கொள்ளலாமே?????
      ஏன் இந்த வெறுப்புணர்ச்சி????
      நமது இதழ் அல்லது எடிட்டர் குழுமம் பற்றி அவருக்கு தவறான புரிதல்கள் இருப்பதாக கருதுவோமாயின் அவரது தளத்திலேயே இன்முறுவலுடன் அதனை நம்மால் சுட்டி காட்ட இயலுமே????
      அவரது தளத்தில் அவருக்கு கொடுக்கப்படவேண்டிய மரியாதையுடனும்,சக காமிக்ஸ் வாசகர் என்ற அன்புடனும் –வெறுப்பு விடுத்து –பதில் அளிக்க வேண்டுகிறேன்.
      மேலும் பல –நமது காமிக்ஸ்களை அவர் படித்து எழுத-ஓர் உந்து சக்தியாக உங்கள் பதில் அமையுமாயின் அது நன்மை பயக்கும் செயலாகும்....

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. செனாஅனா +1

      ஏன் மாயாவி இப்படிக் கொந்தளிக்கறீங்க? என்ன ஆச்சு உங்களுக்கு?!!
      அநியாயத்துக்கு இப்புடி புசுக் புசுக்'னு கோவம் வருதே! நான் பார்த்த 22 மாயாவிகள்லயும் (இரும்புக்கை மாயாவியையும் சேர்த்துச் சொல்றேன்) இப்படியொரு கோவக்கார மாயாவியை நான் பார்த்ததில்லைப்பா!

      Delete
    7. அன்பின் மாயாவி.சிவா சார், உங்களுக்குப் பிரியமான காமிக்ஸைப் பற்றி ஒருவர் தவறாக எழுதும்போது (அவர் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளராக இருந்தாலும் கூட) அதற்கான எதிர்வினையை பதிவிடுகிறீர்கள். மகிழ்ச்சி. காமிக்ஸ் மீதான உங்கள் நேசம் புரிகிறது. உடன், காமிக்ஸ் பற்றி எதுவுமே தெரியாமல் எழுத வந்து விடுகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டுகிறீர்கள். சில நாட்களுக்கு முன்பு கௌதம் சித்தார்த்தன் விசயத்திலும் இதுதான் நடந்தது. இத்தனை பேசுகிற மக்கள் குறைந்தபட்சம் இந்த எழுத்தாளர்களெல்லாம் யார், தமிழ் இலக்கியத்தில் இவர்களுடைய பங்கு என்ன என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு பேசலாம் என்பதுதான் என்னுடைய பணிவான வேண்டுகோள். காமிக்ஸ் ரசிகர்கள், முரட்டு பக்தர்களாய் இருப்பது வேறு. கண்மூடித்தனமான வெறியர்களாய் இருப்பது வேறு. இலக்கியத்தின் பாலபாடமே ஒரு பிரதியை வாசிக்கும் ஒருவர் அதனை எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ள முடியும் என்பதே. அந்தப் புரிதலில் உங்களுக்கு ஒப்புதல் இல்லையெனில் முரண்படலாம் அல்லது சுட்டிக்காட்டலாம். மாறாக, நீ எப்படி எழுதப் போனது என்று தடியைக் கையில் எடுப்பது எந்த வகையில் சேர்த்தி என்று எனக்குப் புரிபடவில்லை. //நிறைய இடத்துல// எனத் தொடங்கும் உங்களுடைய வரிகளை வாசித்துப் பாருங்கள். சக மனிதனைப் பற்றிப் பேச இவை சரியான வார்த்தைகள்தானா? நீ ஜெயமோகனின் விசிறியா என்று ஆரம்பித்து விடாதீர்கள். கருத்தியல் ரீதியாக நான் அவருக்கு எதிர்த்திசையில் பயணிப்பவன். என்றாலும் வால்டேரின் வார்த்தைகளை மதிப்பவன். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். நன்றி.

      Delete
    8. ma.si. & sal.Tex : நண்பர்களே, எழுத்துலகில் ; திரையுலகில் உயரமானதொரு இடத்திலுள்ளதொரு படைப்பாளிக்கு நமது நிழல்களில் இளைப்பாறிடும் அவசியம் இருப்பதாகவோ ; நமது மெழுகுவர்திகளின் பிரகாசத்தில் ஒளி தேடிக் கொள்ளும் அவசியம் இருப்பதாகவோ நிச்சயமாய் நான் கருதிடவில்லை ! நாம் அத்தனை பெரிய பயில்வான்களுமல்ல ; அவர் பலவீனத்தில் உழல்பவரும் அல்ல தானே ?

      கருத்து ரீதியில் நாம் முரண்படும் இடங்களை நயமாய்ச் சுட்டிக் காட்டி விட்டு, நம் வழியைத் தொடர்ந்திட்டுப் போவோமே ? Agreeing to disagree என்பதும் வாழ்வின் ஒரு அங்கமல்லவா ?

      தவிர "மு.த." சமாச்சாரத்தில் பிசகான புரிதல் கொண்டிருக்கும் முதலாமவராக திரு.ஜெமோ அவர்கள் இருந்திடவில்லை ; இறுதி நபராகவும் இருக்கப் போவதுமில்லை ! முழுவதையும் அருகிலிருந்து பார்த்தவன் என்ற முறையில், இது பற்றி நான் எழுதியதால் இங்குள்ள நம் வட்டத்துக்கு நிஜமென்னவென்று தெரியும் ! ஆனால் அந்த வாய்ப்பிலா இதர வாசகர்களின் மனதில் தவறான தகவலே வேரூன்றி இருப்பின், அதற்கொரு முகாந்திரத்தை ஏற்படுத்தித் தந்ததே சீனியர் எடிட்டர் தானெனும் போது யாரை நொந்து என்னசெய்வது ?

      இணைய விவாதங்கள் பொதுவெளியில் எவ்விதம் பயணிப்பினும், நம்மளவிற்காவது நமது தளத்தில் கண்ணியத்தோடு முன்கொண்டு செல்வோமே - ப்ளீஸ் ?

      Delete
  45. கொரியர் வந்துவிட்டதாக போன்.!

    இன்னும் பணிமுடியவில்லை.......க்ர்ர்கர்ர்......!!!!!

    ReplyDelete
    Replies
    1. மாடஸ்டி வெங்கடேஸ்வரன். : 'தம்' பிடித்துக் கொண்டு அடக்கி வாசித்தபடிக்கே வீட்டுக்குப் போங்க சார் ; வீட்டம்மாவிடம் புதுசாய் வாங்கி கட்டிக்க கூடாதில்லையா ?

      Delete
    2. கொரியர் வந்தாச்சு........


      புதுச கண்ணாடி போட்டாச்சு......


      ஆனா வேலை இன்னும் முடியலையே........


      Delete
    3. எடிட்டர் சார்.


      மாடஸ்டி ரசிகர்கள் கூட்டம் ஏன் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காமல்.மறைமுகமாக நீருபூத்த நெருப்பாய் இருக்கிறது என்பதை அனுபவம் உணர்த்தியது.!

      Delete
    4. உண்மைதான் MV சார்,.. ஆனா இன்னிக்கு புக் வந்ததும், பிரிக்கும் போதும், இளவரசியின் புத்தகத்தை கையில் எடுத்து பார்த்துக்கொண்டு இருக்கும் போதும், குடும்பமே, குழந்தையாகிப் போன என்னைப் பார்த்து ரசித்து சிரித்துக் கொண்டு இருந்தார்கள்..

      Delete
  46. Dear Editor
    க.ம.கோ. தேவையல்லாத சென்ஸார் அதனால் படங்கள் சொதப்பலாகிவிட்டது

    ReplyDelete
    Replies
    1. உள்ளாடைகளோடு இளவரசி உலாற்றும் இடங்களில் மட்டும் நம் கலரிங் ஓவியர் சற்றே உடுப்பு நீட்டல் செய்துள்ளார் ; மற்றபடிக்கு இங்கே சென்சார் என்ற மெனெக்கெடலே எனக்கு இருந்திருக்கவில்லை சார் !

      Delete
    2. /////உள்ளாடைகளோடு இளவரசி உலாற்றும் இடங்களில் மட்டும் நம் கலரிங் ஓவியர் சற்றே உடுப்பு நீட்டல் செய்துள்ளார் ////

      'கலரிங் ஓவியர்'னா உத்துப் பார்த்து வண்ணம் தீட்டினோமா... லைட்டா முகம் சிவந்தோமானு இருக்கணும். அதவிட்டுட்டு எதுக்கு இந்த 'உடுப்பு நீட்டல்' வேலையெல்லாம்? இல்ல கேக்குறேன்! :P

      Delete
    3. ஆனாலும் எனக்கு படிக்கும் போது ஓரிரு இடங்களைத் தவிர மற்றபடி எதுவும் தெரியவில்லை... நானே வீட்டில் படிக்க சொல்லியிருக்கிறேன்..

      Delete
  47. அட்டைப் படங்கள் அனைத்தையும் பயன் படுத்தியது அட்டகாசம்

    ReplyDelete
  48. Dear Editor
    மாடஸ்ட்டியின் அட்டைப்படங்களை பற்றி குறிப்பிட்டேன்.

    ReplyDelete
  49. எடிட்டர் சார்,
    எனக்கு இன்று வந்துசேர்ந்த கொரியரில் மாடஸ்டியின் கழுகுமலைக் கோட்டை இதழ் மட்டுமே இருந்தது.
    நான் கோல்டு சந்தாதாரன். இரண்டு மாதங்களும் சரியாக அனைத்து இதழ்களும் கிடைத்தன. இந்த மாதம் மாடஸ்டி மட்டுமே வந்திருக்கிறார். தயவு செய்து சரிபார்த்து ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.எனது எண்1015

    ReplyDelete
    Replies
    1. சேலம் சுசீ : சார்...ஈரோட்டுப் புத்தக விழாவில் ஒருமுறையும் ; அக்டோபர் 5 -ல் இன்னொருவாட்டியும் நீங்கள் SUPER 6 சந்தா செலுத்தியுள்ளீர்கள் சார் ! So இரு கூரியர்களில், உங்களுக்கு இதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன ! இன்னமும் பட்டுவாடா செய்யப்படாதிருக்கும் அந்த இன்னொரு பார்சலில் இம்மாதப் புது இதழ்கள் + இன்னொரு இளவரசி இருப்பார் !

      Delete
    2. ///சேலம் சுசீ : சார்...ஈரோட்டுப் புத்தக விழாவில் ஒருமுறையும் ; அக்டோபர் 5 -ல் இன்னொருவாட்டியும் நீங்கள் SUPER 6 சந்தா செலுத்தியுள்ளீர்கள் சார் !///

      பேபிம்மா @ ஆர்வம் இருக்க வேண்டியதுதான். அதுக்காக இப்படியா ரெண்டு தடவை சந்தா கட்டிட்டு மறப்பாங்க.!!
      நல்லவேளை இந்த வருசம் ஜனவரியில நீங்க சென்னைக்கு போகலை. போயிருந்தீங்கன்னா மூணு மாடஸ்டி வந்திருக்கும் ஹிஹி!! :-)

      Delete
    3. அக்டோபரில் பேபிம்மா செலுத்திய சூப்பர் சிக்ஸ் சந்தா சேந்தம்பட்டி சார்பில் தம்பி அகிலுக்கு செலுத்தப்பட்ட சந்தாவா இருக்கப் போகிறது சார்.

      எனக்கு தெரிந்து பேபிம்மா இரட்டை சந்தா கட்டாது...

      Delete
    4. சேலம் Tex விஜயராகவன் : But பேபிம்மா பெயரில் தானே இரு சந்தாக்களும் உள்ளன ?? Confusion ?!!

      Delete
  50. சார் காலை எட்டு மணிக்கே புத்தகத்த கைபற்றியாச்சு .காலை நீங்க வருவீங்கன்னு புன்னகையுடன் எடுத்துத் தந்தார் dtdc பணி நண்பர் . இனி மாதா மாதம் நிற்க வேண்டிய வேளை மிச்சம் இளவரசி ராசி . காலையிலிருந்து ஓடிக் கொண்டிருப்பதால் பரபரப்பாய் பிரிக்க மனமில்லை .நிதானமாய் பிரித்ததும் பகிர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் //நிதானமாய் பிரித்ததும் பகிர்கிறேன்//

      காத்திருப்போம் !!

      Delete
  51. இன்னும் பொட்டி வந்து சேரவில்லையே அய்யகோ..! என் செய்வேன். டெக்ஸும் லக்கியும் கண்ணிலேயே நிற்கிறார்களே???

    ReplyDelete
  52. புத்தகங்கள் வந்து கிடைத்தன சார்...

    பார்சலைப் பிரித்தவுடன் இந்த மாத சர்ப்ரைஸ் கண்ணில் பட்டு அசத்திவிட்டது.
    இந்த முழு ஆண்டு லீவில் இந்த அட்டை உடன் தான் என் பையனும், என் தங்கை குழந்தைகளும் செலவிடப் போவது உறுதி சார்.

    அட்டைப்படங்களைப் பார்த்து வாயடைத்துப் போய் உள்ளேன் சார்...

    வழக்கமாக மறுபதிப்பு அட்டைப்படம் போட்டியில் இருக்காது. இம்முறை பழிவாங்கும் பொம்மையும் ஆட்டத்தில் இணைந்து கொண்டது சார்.

    அடுத்து டெக்ஸ் நேரில் அசத்தல், டெக்ஸின் முகம் சற்றே மாறுபட்ட விதத்தில் கவருகிறது.

    மாடஸ்தி அட்டைப்படம் செம்ம...செம்மயோ செம்ம சார்.
    டஸ்ட் கவர், அந்த ஹார்ட் கவர் இல்லாத குறையை போக்கிவிட்டது சார்.
    உங்கள் வாக்குறுதுகளுக்கு மேலே செய்கிறீர்கள், உங்கள் அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது சார்.

    ReplyDelete
  53. எல்லா புக்குகளும் பர்ஸ்ட் லுக் செம கலக்கல்....
    மாடஸ்டிதான் பெஸ்ட்....
    இதுவரை ஆர்ட் பேப்பரில் பாக்கெட் சைஸ் பார்த்தது இல்லை என்பதால் பரவச அனுபவம்....
    ஈனா வினா....உங்கள் பாக்கெட் சைஸ் பற்றிய எதிர்பார்ப்பு கேள்விக்கு உங்கள் அனுபவம் எப்படி இருந்தது என்பதை அறிய விழைகிறேன்...
    @ எடிட்டர் சார்!!!
    எனக்கு மாடஸ்டி மிகவும் பிடிக்கும் என நான் போன பதிவில் சொன்னது வாஸ்தவம்தான்...
    அதற்காக –இரண்டு சந்தாவுக்கு இரண்டு க ம கோட்டை என்பதற்கு பதில் –மூன்று மாடஸ்டி அனுப்பி வைப்பதா???? :)......அதுவும் மூன்றாவது இதழ் தனி பார்சலில் வந்துள்ளது....:-)
    திருப்பி அனுப்ப போவதில்லை....அதற்கான தொகையை மாலைக்குள் சன்ஷைன் அக்கவுண்ட்டிற்கு அனுப்பி விடுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. oh














      oh!!!1 sorry editor sir!!! i have just read your answer to salem susee...modesty comes under super six...forgotten...since i paid three subscriptions for super six i received 3 copies..got it....

      Delete
    2. selvam abirami : இதற்கிடையே நம்மவர்களுக்குச் சின்னதாய் ஒரு குட்டு வைத்திருந்தேன் சார் !!

      Delete
    3. //இதுவரை ஆர்ட் பேப்பரில் பாக்கெட் சைஸ் பார்த்தது இல்லை என்பதால் பரவச அனுபவம்...//

      சிற் சிறு சர்ப்ரைசஸ் தந்திட எனக்குக் கிட்டும் இது போன்ற வாய்ப்புகள் god sent சார் !

      Delete
    4. ////ஈனா வினா....உங்கள் பாக்கெட் சைஸ் பற்றிய எதிர்பார்ப்பு கேள்விக்கு உங்கள் அனுபவம் எப்படி இருந்தது என்பதை அறிய விழைகிறேன்...////

      இன்னும் புக்கு வந்து சேரலை, செனாஅனா அவர்களே! இஸ்கூல் படிக்கறப்போ பாக்கெட் சைஸ் புத்தகங்களை தொளதொள டவுசர் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சகமாணவர்களிடம் காட்டிப் பெருமைப் பட்டிருக்கிறேன்! அதேமாதிரி இந்த மாடஸ்டி புக்கையும் டவுசர் பாக்கெட்டில் வச்சுக்கிட்டு ஆபீஸ் போகணும்போல ஆசைஆசையா வர்து...

      Delete
  54. March 1, 2017

    என் பெயர் டைகர்



    ShareTweetPinMail

    Share10



     

    சென்ற சில மாதங்களாகவே நான் நிறைய வாசிப்பது முத்து காமிக்ஸ் மற்றும் இணையத்தில் ஆஸ்ட்ரிக்ஸ் ஒபேலெக்ஸ் காமிக்ஸ்களை. என் எண்ணங்கள் இருந்துகொண்டிருப்பது மகாபாரதத்தில். அதிகம் வாசிப்பவை அதைச்சார்ந்த ஆய்வுநூல்கள். சொல்லப்போனால் நவீன ஆங்கிலமே ஏதோ அயல்மொழி போலத் தோன்றுமளவுக்கு எங்கோ இருக்கிறேன். நாளிதழ்களை, அன்றாட விஷயங்களை மிகமிகக்குறைவாகவே வாசிக்கிறேன். அவ்வப்போது சமகாலத்திற்கு வந்துவிட்டு மீண்டும் பின்வாங்கிச்செல்கிறேன்.

    ஆகவே எழுத்தின், வாசிப்பின் இடைவெளிகளில் இளைப்பாறுவதற்கு வேறுவகைநூல்கள் தேவையாகின்றன. எப்போதுமே தனிவாழ்க்கையில், சிந்தனையில் ரொம்பவும் சீரியஸாக இருப்பது எனக்குக் கட்டுப்படியாவதில்லை. என் இயல்பே வேறு. சிரிப்பும் விளையாட்டும் இல்லாத ஒருநாள் கடந்தால் அது இழப்பென்றே மாலையில் தோன்றும். அதற்கான நண்பர்களே உடனிருக்கிறார்கள். சைதன்யா சொல்வதுபோல அப்பா ஒரு ‘கான்ஷியஸான லூசு’

    துப்பறியும்நாவல்களையும் சாகசநாவல்களையும் விரும்பிப்படிப்பது ஒருவகையில் என் இளமையை தக்கவைக்கும் முயற்சியும்கூட. அவை என்னுள் உள்ள அழியாத சிறுவனை குதூகலப்படுத்துகின்றன. ஹாங்காங் சண்டைப் படங்கள், ஹாலிவுட் சாகசப்படங்கள் மேல் தணியாத மோகம் எப்போதும் எனக்கு உண்டு.

    சினிமாவில் நான் சீரியஸ் படங்களை விரும்புவதில்லை. விதிவிலக்குகள் என்றால் மிகமிகச்சீரியஸான படங்கள், டெரென்ஸ் மாலிக் அல்லது ஹெர்ஷாக் போல. அதுவும் எப்போதாவது, மனதில் அந்த அளவுக்கு இடைவெளி இருக்கும்போது மட்டும். சினிமாவே பார்த்துக்கொண்டிருக்கவேண்டிய ஊடகம், நேரடியாக நிகழும் கனவு, அதிலென்ன சிந்தனை என்பதே என் எண்ணம். சினிமா பார்க்கும்போது எப்போதும் எனக்கு பன்னிரண்டுவயது.
    Contd -

    ReplyDelete
    Replies
    1. நீண்ட இடைவெளிக்குப்பின் படக்கதைகளுக்கு வந்தது அவ்வாறுதான். தற்செயலாக கடையில் ஒரு டெக்ஸ்வில்லர் காமிக்ஸ் வாங்கினேன். என் கனவுநிலமான வன்மேற்குக்குச் சென்று சேர்ந்தேன். நேரில் சென்று அந்த நிலத்தை பார்த்தபோதும் அந்தக்கனவு கலையாமலிருக்கிறதென்பதே பெரிய ஆச்சரியம்தான். மோவே பாலை வழியாகச் செல்லும்போது நண்பர் திருமலைராஜன் இருந்தது தென்திருப்பேரையில். நான் இருந்தது கௌபாய் உலகில்



      முத்து காமிக்ஸ் என் இளமையில் பெரும் கனவை விதைத்த நூல்களை வெளியிட்டிருக்கிறது. சொந்தத் தோட்டத்திலேயே தேங்காயும் பாக்கும் திருடி விற்று வாங்கிய புத்தகங்கள் எத்தனை. முல்லை தங்கராசனை ஒருமுறை நேரில் காண வேண்டுமென்றெல்லாம் கனவு கண்டிருக்கிறேன். இன்று முத்து காமிக்ஸ் மீண்டு வந்துள்ளது.

      சற்று முன் அவர்கள் வெளியிட்ட என்பெயர் டைகர் நூலை வாசித்தேன். முழுக்க வண்ணப்படக்கதை. உரையாடல்களும் உறுத்தாமல் உள்ளன [நல்லவேளையாக நம்மூர் பேச்சுமொழியை அமைத்து கொலை செய்யவில்லை]. இது ஒரு சாகஸப் படக்கதை என்பதை விட ஒரு முழுநாவல் என்பதே பொருத்தம். ஏராளமான கதாபாத்திரங்கள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான நுட்பமான குணாதிசயங்கள். கதைநிலம் விரிவான தகவல்களுடன் கண்முன் எழுகிறது. அங்கிருந்த சமூக வாழ்க்கையின் ஒட்டு மொத்தச் சித்திரத்தையே அளிக்கிறது

      அத்துடன் மிகக்கவனமாக முன்னும் பின்னும் நெய்யப்பட்ட கதைச்சரடுகள் ஆச்சரியமூட்டுகின்றன. ஒன்று டைகரின் நினைவு. இன்னொன்று அவனைக் கொல்லத் தொடர்பவர்களின் கதை. இன்னொன்று அந்த சிறுநகரில் நிகழும் கொலை கொள்ளைகளின் பின்னணியும் அதற்கு எதிராகப் போராடும் காவலர்களும் .இன்னொன்று செவ்விந்தியர்களின் போராட்டம். இவையனைத்தையும் எழுத வரும் எழுத்தாளர்களின் வாழ்க்கை கடைசியாக. கச்சிதமாக அத்தனை கதைகளும் ஒன்றிணைகின்றன.

      அனைத்துக்கும் மேலாக செவ்விந்தியர்களை வெறும் காட்டுமிராண்டிகளாக காட்டாமல் அந்நிலத்தின் உரிமையாளர்களாக, வாழ்க்கைக்காகப் போராடுபவர்களாகக் காட்டும் கோணம் நமக்கு முக்கியமானது. செவ்விந்தியர் தலைவனின் பெருந்தன்மையும் ஆண்மையும் மிகச்சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.

      பலவகையிலும் ஆஸ்திரேலியாவின் கதையுடன் ஒத்துப்போகிறது இக்கதை. செவ்விந்தியக் குழந்தைகளைப் பிடித்துவந்து ஓர் அனாதை இல்லம் நடத்தி அங்கே அவர்களை வலுக்கட்டாயமாக கிறித்தவர்களாக ஆக்குகிறார்கள். தங்கள் குழந்தைகளைச் சிறைமீட்கப்போராடும் செவ்விந்தியத் தலைவனின் கதையே மைய இழை

      ”கிறித்தவர்களாக ஆன செவ்விந்தியர்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நாம் அவர்களை கீழ்மக்களாகவே நடத்துவோம். அவ்வாறாக அவர்களின் வாழ்க்கையை நாம் அழிப்போம்” என கதாநாயகன் டைகர் சொல்கிறான். அதுவே கதையின் மைய வரி என நினைக்கிறேன். அவ்வகையில் இது ஒரு மாபெரும் சூறையாடலின் வரலாறும்கூட.

      எளிமையான நம்மூர் வணிகக் கதைகளுக்குப் பழக்காமல் குழந்தைகளை இந்தவகை ஊடுபாவுகள் கொண்ட கதை சொல்லலுக்குப் பழக்குவது நல்லது என்று தோன்றுகிறது. சுஜாதாவிலிருந்து நவீன இலக்கியத்திற்கு வரும் பாதையை விட இது இன்னும் அணுக்கமானது, நேரடியானது

       

      Share10

      தொடர்புடைய பதிவுகள்

      தொடர்புடைய பதிவுகள் இல்லை

      Categories: பொது

      Previous Postதேவதேவன் - கடிதம்

      Back to top

      MobileDesktop

      Copyright: எழுத்தாளர் ஜெயமோகன்

      Delete
    2. நண்பர்களே!
      தயவு செய்து பொறுமையாக இந்தப் பதிவைப் படியுங்கள். இதில் நமது காமிக்ஸ் ரசனையையோ, காமிக்ஸையோ எந்த இடத்திலும் தவறாகவோ மட்டமாகவோ அவர் எழுதவில்லை.
      டைகர் பேசுவதாக குறிப்பிடப்பட்ட வசனம் கூட சற்றே மாறியிருந்தாலும் கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லையே.!

      மேலும் சிறிய அளவிலான வாசகர் வட்டத்தை கொண்ட நமது காமிஸிற்கு பிரபல எழுத்தாளர்களின் விமர்சனங்கள் ஓரளவேனும் புதியவர்களை இட்டுவரக்கூடும்.

      அப்படியே நெகடிவாக எழுதியிருதாக நினைத்தால்கூட . . .

      எதிர்க்கப்படும் விசயம் கவனிக்கப்படும் என்றும் கவனிக்கப்படும் விசயம் பேசப்படும் என்றும் பேசப்படும் விசயம் பிரபலமடையும் என்றும் பிரபலமடையும் விசயம் வளரும் என்றும் நாம் பாசிடிவாக எடுத்துக்கொள்ளலாமே?

      Delete
    3. ///நீண்ட இடைவெளிக்குப்பின் படக்கதைகளுக்கு வந்தது அவ்வாறுதான். தற்செயலாக கடையில் ஒரு டெக்ஸ்வில்லர் காமிக்ஸ் வாங்கினேன். என் கனவுநிலமான வன்மேற்குக்குச் சென்று சேர்ந்தேன். நேரில் சென்று அந்த நிலத்தை பார்த்தபோதும் அந்தக்கனவு கலையாமலிருக்கிறதென்பதே பெரிய ஆச்சரியம்தான். மோவே பாலை வழியாகச் செல்லும்போது நண்பர் திருமலைராஜன் இருந்தது தென்திருப்பேரையில். நான் இருந்தது கௌபாய் உலகில்.///

      இது நமக்கு விளம்பரமில்லையா?



      ///எளிமையான நம்மூர் வணிகக் கதைகளுக்குப் பழக்காமல் குழந்தைகளை இந்தவகை ஊடுபாவுகள் கொண்ட கதை சொல்லலுக்குப் பழக்குவது நல்லது என்று தோன்றுகிறது. சுஜாதாவிலிருந்து நவீன இலக்கியத்திற்கு வரும் பாதையை விட இது இன்னும் அணுக்கமானது, நேரடியானது.///

      இது எவ்வளவு பாசிட்டிவான சமாச்சாரம்.!

      ///சற்று முன் அவர்கள் வெளியிட்ட என்பெயர் டைகர் நூலை வாசித்தேன். முழுக்க வண்ணப்படக்கதை. உரையாடல்களும் உறுத்தாமல் உள்ளன [நல்லவேளையாக நம்மூர் பேச்சுமொழியை அமைத்து கொலை செய்யவில்லை]. இது ஒரு சாகஸப் படக்கதை என்பதை விட ஒரு முழுநாவல் என்பதே பொருத்தம். ஏராளமான கதாபாத்திரங்கள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான நுட்பமான குணாதிசயங்கள். கதைநிலம் விரிவான தகவல்களுடன் கண்முன் எழுகிறது. அங்கிருந்த சமூக வாழ்க்கையின் ஒட்டு மொத்தச் சித்திரத்தையே அளிக்கிறது///

      இது என் பெயர் டைகருக்கு நல்ல விளம்பரமல்லவா?

      Delete
    4. கிட்ஆர்டின் +1

      Delete
    5. அட்டகாசம் கிட்....கதையின் தரத்த விளக்கியுள்ளார்....கூரந்து படித்தால் பல விஷயங்கள் பிடிபடும்...நேற்று படிக்க ஆரம்பித்தேன் ...வியந்தேன்..நாவலப் போன்ற ஒருங்கிணைவு ..எழுதிய ரசிகர் அசத்துறார் ..அருமை....

      Delete
    6. முல்லைத் தங்கராசன்னு முன்னிலைப்படுத்தி ஒரு குழு கிளம்பியுள்ளது..ஆசிரியர சீண்டி என்பதும் ஒரு விஷயம்...

      Delete
  55. மாயாவி மாத்தி யோசிச்சிருப்பாரோ😉.

    எல்லாவற்றையும் பூத கண்ணாடி வைத்து பார்த்தால் தவறாகத்தான் தெரியும்.

    ஒரு பெரிய எழுத்தாளரின் எழுத்தால் காமிக்ஸிற்கு சிறிதளவாவது வெளிச்சம் கிடைத்தால் நல்லதுதானே.
    நிறைய காமிக்ஸ் படிக்கற எனக்கே என் பெயர் டைகர் முதல் வாசிப்பில் அவ்வளவாக புரிபடவில்லை. எனவே எப்போதாவது படிக்கும் ஜெமோவிற்கு இந்த கதையில் முழுபுரிதல் இருந்திருக்கும் என எப்படி சொல்லமுடியும்.

    கண்ணன் இப்ப திருப்திதானே. நீங்க போன்ல சொன்னமாதிரியே டைப்பியாச்சு😉😉😉😁😁😁


    இது ஒரு நண்பரின் கருத்து. நாகரீகம் கருதி டாக்டர் சுந்தரின் பெயரை இங்கு சொல்ல விரும்பவில்லை. :-)

    ReplyDelete
    Replies
    1. ////இது ஒரு நண்பரின் கருத்து. நாகரீகம் கருதி டாக்டர் சுந்தரின் பெயரை இங்கு சொல்ல விரும்பவில்லை. /////

      பேர் சொல்லலன்னாக்கூட பரவாயில்ல, ஏதாச்சும் க்ளூவாவது கொடுங்களேன்?

      Delete
    2. ///பேர் சொல்லலன்னாக்கூட பரவாயில்ல, ஏதாச்சும் க்ளூவாவது கொடுங்களேன்?///

      அழகா, வெள்ளையா தெலுகு பட ஹீரோ மாதிரி இருப்பார்.!

      அப்புறம்

      வெள்ளையா இருக்குறவங்க பொய் சொல்ல மாட்டாங்கதானே?? :-)

      Delete
  56. ஏப்ரலில் சந்தா A வரிசை கிடையாதா சார்..???

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு சந்தாவும் 10இதழ்களை மட்டுமே கொண்டது. எனவே ஒவ்வொரு சந்தாவும் ஏதாவது இரு மாதங்களுக்கு இருக்காது.

      Delete
  57. இம்மாத லயன் வெளியீடு எண் ( 294 )
    #லூக்_லக்கி_லூக் ன்

    #தரைக்கடியில்_தங்கம்

    மிக அருமை
    ஹப்பாடி
    #சிரிச்சு_மாளலை... ஹா ஹா ஹா :) :)

    #கிரிஸ்டல் ன் காமெடி தான் இங்கே பிரதானம்

    ஒவ்வொருத்தரும் அவரவர் வேலைக்கு தகுந்தாற்ப்போல் #தட்டி அடித்து வைத்துள்ளதும் அருமை

    இக்கதையில் வரும் ஓவியங்களில் சிலவற்றை நாம் இதற்கு முன் வெளிவந்த லக்கி கதைகளில் பார்த்திருந்திருப்போம்

    போனவருடம் வந்த லக்கி யின் #ஒரு_பட்டாப்போட்டி க்கு அடுத்து வந்த காமிக்ஸ்களில் இப்பொழுதுதான் மனம் விட்டு சிரித்தேன் :) :)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது சம்பத்
      உங்கள் விமர்சனங்கள் தொடரட்டும்

      Delete
    2. Tex Sampath : அட...அதற்குள் இதழைப் படித்தாச்சா ?

      Delete
  58. வழக்கமாக அட்டைப்படங்களைப் பார்த்த உடனடியாக ரேங்கிங் போடும் மனது இம்முறை தடுமாறிவிட்டது சார்.

    மீண்டும் மீண்டும் உற்று நோக்கி 3வது இடத்தை டெக்ஸுக்கும், ஸ்பைடருக்கும் அளிக்கிறேன் சார்.

    மாடஸ்தி இதழ் ஓவரால் பேக்கேஜிங் பிரமாதம் சார். கரூரார் கமெண்டைப் பார்த்து விட்டு 5நிமிடம் அசர என்ன இருக்க போகிறது என நினைத்து, க.ம.கோ.வை எடுத்தால் எனக்கும் அதே ஃபீலிங்.

    வண்ணத்தில் முதல்முறையாக ஆர்ட் பேப்பரில் பாக்கெட் சைசில் நிஜமாகவே குட்டி டைனமைட்டாக ஜொலிக்கிறது. கையில் வைத்து அழகு பார்ப்பதிலேயே நீஈஈஈஈண்ண்ட்ட நேரம் செலவிட்டேன். உள் பக்கங்கள் ஆஆஆஆஆவெறன வாய்ப் பிளக்கச் செய்யும் பளபளப்பில் மின்ன, எழுத்துக்கள் படிக்க தோதான அளவில் அசத்துகிறது சார்.

    அட்டைப்படம்+ வண்ணப்பக்கங்கள்+டஸ்ட் கவர்+ நீட் பிரசன்டேசன் என மாடஸ்தி ஓரு பக்கம்....

    லக்கியின் தரைக்கடியில் தங்கம் அடர் மஞ்சள் வண்ணத்தில் என்னப்பார் என சிரக்கிறது. அதுவும் அந்த "தங்கம்"-என்ற வார்த்தை நிஜமாகவே தங்கத்தில் ஜொலிக்க உள்பக்கங்களும் மிளிற, இது ஒரு பக்கத்தில்....

    இவர்கள் இருவரையும் வலுவான போட்டிக்கு இழுக்கும் வகையில் தோர்கலின் சாகசம்.

    அந்த தக தகக்கும் வாள், அந்த சிறுவயது பையனின் முக உணர்ச்சி, பின்னணி மெலிதான முகங்கள் என கலவையான நிறத்தில் பட்டாசு தோரணம் காட்டுகிறது மற்றொரு பக்கத்தில் சார்.

    உள் பக்கங்களை புரட்டும்போது தோர்கல் ஒரு படி மேலே என்ற எண்ணம் மெதுவாக மிக மெதுவாக ஆனால் தீர்மானமாக எழுகிறது.

    முதல் சுற்றில் இம்மாத ஓவரால் ரேங்கில் 2ம் இடத்தை மாடஸ்தியும், லக்கியும் சமமாக பகிர்ந்து கொள்ள, முதல் இடத்தை தனதாக்கிக் கொள்கிறது..."தோர்கல்"....

    கதைகளின் ரேங்கிங்கிலும் கடும் போட்டியும் சிலப்பல சர்ப்ரைஸ்களும் இருக்கும் என்பது தெளிவாகப் புரகிறது சார்.

    மொத்தத்தில் நீங்கள் பணியை ரசித்து செய்கிறீர்கள் என்பது தெளிவு சார்.

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : //நீங்கள் பணியை ரசித்து செய்கிறீர்கள் என்பது தெளிவு //

      பன்முகக் கதைகளில் பணியாற்றும் வாய்ப்புகள் 2016 முதலே அழுத்தமாய் எனக்கு கிட்டியுள்ளன சார் ; so ஒவ்வொரு மாதமும் இந்த variety சகிதம் உங்களைச் சந்திப்பது ரொம்பவே ஜாலியான அனுபவமே !

      Delete
  59. டெக்ஸ்வில்லர்
    லக்கிலூக்
    ஸ்பைடர்
    மாடஸ்டி
    தோர்கல்
    முதல் முறையாக,ஒரு சேர,இந்த சூப்பர் ஸ்டார்கள் அணிவகுத்திருப்பது பரவசமான அனுபவம் ஆசிரியரே.

    அப்புறம்.....அட்டைப்படங்கள்.

    ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கும் ரகம்.
    மீண்டும் எங்களை பால்யத்திற்கு அழைத்து சென்றமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. T.K. AHMEDBASHA : இம்மாதம் ரொம்பவே வித்தியாசமான கூட்டணி தான் சார் !!

      Delete
    2. மார்ச் மாதம் மறக்க முடியாத மாதமாகி உள்ளது

      Delete
    3. செந்தில் சத்யா : தொடரும் ஒவ்வொரு மாதமும் இதே போல சுவாரஸ்யக் கூட்டணிகளோடு, உங்களின் பொழுதுகளை சுவாரஸ்யமாக்கிட நிச்சயம் குட்டிக் கரணம் அடித்தேனும் முயற்சிப்போம் நண்பரே !

      Delete
    4. பாட்சா சார்.!


      // சூப்பர் ஸ்டார்கள் அணிவகுப்பு.!"

      அட !ஆமால்ல!.

      Delete
    5. ////உங்களின் பொழுதுகளை சுவாரஸ்யமாக்கிட நிச்சயம் குட்டிக் கரணம் அடித்தேனும் முயற்சிப்போம் நண்பரே !///

      கவனிங்க மக்களே... 'குட்டிக்கரணம்' - ஹிஹி! ;)

      Delete
    6. ஈவி இந்த முறை நெசம்மாவே குட்டிக்கரணம்..அடுத்த மாதம் பென்னி குட்டிக்கரணம்

      Delete
  60. "பழிவாங்கும் பொம்மை" அட்டைப்படம் செம்ம கலர்ஃபுல்லாக உள்ளது. ஸ்பைடரின் one of the best & all time hits "பழிவாங்கும் பொம்மை" V.2 காணும் ஆவலை அடக்க முடியவில்லை. உப்புன்னா கரிக்கும், வெத்தல சிவக்கும், ஸ்பைடர்னா புய்ய்ய்ய்ய்ய்ய்ய்பம் என்பது தெரிந்தது தானே..

    ஸ்பைடரின் கதைகளை படிக்கும் போது காது மடல்கள் புய்ப்பத்தால் தொங்கிப் போகவில்லையெனில் தானே கேள்வியே. அப்படி இருக்கும் போது 'காதுகளை பிரீயாக வைத்துக் கொள்ளுங்கள் folks ; சரம் சரமாய் காத்துள்ளது!!' போன்ற நேர்மறையான tagline ஒருவித நெருடலை ஏற்படுத்துகிறது சார்.

    ReplyDelete
    Replies
    1. சிறு வயதில் பழிவாங்கும் பொம்மை கதையை பிரம்மிப்புடன் படித்தது இன்னும் ஞாபகமாக உள்ளது.!!


      "ஞாபகம் வருதே .! ஞாபகம் வருதே.!


      " ஆட்டோகிராப் " சேரன் மாதிரி பாடத்தோன்றுகிறது.!

      Delete
    2. MH Mohideen : சார்...மறுபதிப்புகள் ஆரம்பித்த வேளையில் மாயாவிக்கு ஈடு தர நமது கூர்மண்டயன் திணறியதே நிஜம் ! எனக்கே கூட 'சிவனே' என்று மும்மூர்த்திகள் கதைகளுக்கு மட்டுமே மறுபதிப்புரிமைகளைப் புதுப்பித்திருக்கலாமோ ? ; தேவையில்லாமல் ஸ்பைடரையும் பந்திக்கு வரவழைத்து சிக்கலை விலை கொடுத்து வாங்கி கொண்டோமோ ? என்ற நெருடல் இருந்தது ! ஆனால் "கடத்தல் குமிழிகள்" இதழுக்குப் பின்னர் - நம்மாள் டாப் கியருக்குப் போய் விட்டார் விற்பனையில் !!

      புய்ப்பச் சரங்களுக்கு நீங்கள் ரெடியெனில் - நாங்களும் டபுள் ரெடி தான் சார் !

      Delete
    3. சார்,

      நீங்களே பாருங்களேன்! 'பழி வாங்கும் பொம்மை' எப்படி விற்பனையில் பட்டையைக் கிளப்பப் போகிறதென்று ? விற்பனை டாப் கியரில் போய் அந்த கியரையே கழற்றி உங்க கையில் கொடுத்தாலும் ஆச்சரியம் படாதீர்கள் ! ஒரு ஸ்பூன் சர்க்கரையை மட்டும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

      Delete
    4. MH Mohideen : அட...ஒரு ஸ்பூன் சர்க்கரையா ? ஒரு கேட்பேரிஸ் சாக்லெட்டே வாங்கிட்டால் போச்சு !

      Delete
  61. பாா்சல் வாங்கியாச்சு இரவு தான் பிாிச்சு பாா்க்கனும் & படிக்கனும்...

    சென்ற பதிவின் கடைசியில் நண்பரின் கடிதத்த படிச்சவுடன் தாேன்றியது...

    பேசாமல்
    "ரீ பிரிண்ட் கலெக்டர்ஸ் எடிசன்னுட்டு "
    பத்து கதைகள் மாெத்தமா பாேட்டு காதில புய்ப்பம் இல்ல கூடையே வச்சாலும் வாங்கலாம்னுதான் தாேனுது..

    ReplyDelete
  62. சார் பெட்டிய பிரித்ததும் கண்கள இடுக்கில் மேய விடுகிறேன் .அடடா ஹார்டு பௌண்டு இல்ல போலும்..ஆனா அட்ட திக்கா இருக்கு . கைய விட்டு இழுத்து பாலிதீன் கவருக்குள் கைய விட்டு கொத்தா இழுத்தா மாடஸ்டிக்கு ஜாக்கட் ப்ரூஃப்...இது நிச்சயமிருக்கும்னு எதிர் பார்தேன் . அஜயோட அட்ட இல்லியோன்னு பிரிக்க உள்ளட்ட அதே போல ..அட பழய அட்ட இதப்போலதானேன்னு சாக்கடிக்க பிரிச்சா அஜயின் கைவண்ணம்...அடடா பின்னட்டயும் ஒரே மாதிரி ...அட நிறம் வேறு ..திரும்ப முன்னட்ட ..அந்த மலையில் தொங்கியபடி ......பின்னட்ட நீலம்..அட அந்த ஜீப்பும் இக்குதே.....ஆகா மனத ஈர்த்த அனைத்தும் அடக்கம் . செம சார்....காதலில்லாம பணிக்காக மட்டும் இதெல்லாஞ் செய்ய முடியாது .உள்ள பக்கங்கள புரட்டுனா வண்ணக்கலவ லார்கோவ நினைவுறுத்துது .லார்கோ ஸ்டைல்ல இருந்தா நல்லாருக்குமேன்னு நெனச்சேன்.... அடடகாசம் அசத்திட்டாங்க.. ...
    கொத்தில் வந்த அடுத்தத பாத்தா அந்த காலக் குமிழுக்குள் உறிஞ்சிய படி வலைமன்னன் .....அட்டகாசம் சார் .முகம் கூட ஸ்பைடர அட்டகாசமா சித்தரிக்க.... வைக்கோல் பிடுங்கும் சூலாயுத பொம்மை ...முடில சார் ..பின்னிட்டீங்க ...இதப் போல கொலைப்படை இருவணணத்துல ஈரோட்ல விட்டா அனைத்து தரபபயும் காலப்பயணத்துக்கு அழைத்து செல்லலாம்..டவுசர பிடிச்சபடி நாம திரியலாம்...
    அட சத்தியமா மறந்தே போனேன் ....இதே பெரிய கிஃப்டாச்சே ....நிரவுனா ஏதோ போஸ்டர் ...சரி பார்ப்போமே....ஹஹஹா...சத்தியமா கேமா இருககுமோன்னு கேட்டது மனது ..இல்லடா நாயகரா இருக்கும்னே நினச்சேன் .....ஆனா எதிர்பார்த்த . .....எதிர்பாரா இன்ப அதிர்ச்சி ....வண்ணங்களுக்கு நன்றிகள் .சரி இனி உள்ள போய் பாத்தபின் மீதம்.....சைச மறந்துட்டன் பாத்தியளா...பாக்கட் சைச பாத்து மாமாங்கமாச்சே..அடேங்கப்பா ...அசத்துதே

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து நேரடி ஒளிபரப்புங்களா ஸ்டீல்?

      Delete
    2. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : ஸ்டீல் நண்பரே : ஒரு டெஸ்பாட்ச் தினத்தையே ஒரு பதிவுக்கு அச்சாரமாக்கும் அப்பாடக்கர் நானென்றால் ; கவரிலிருந்து புக்குகளை வெளியில் எடுப்பதையே ஒரு பயணக் கட்டுரையாக்கிடும் நீங்கள் அப்பாவோ-அப்பாடக்கர் !!

      Delete
    3. சார் அனைத்தும் நீங்க தூண்டிய உணர்வுகள்..நேற்று மாலை முதல் பதிவ பார்த்த பின் நானடைந்த சந்தோசம்...உற்சாகம்...என்னவோ இருக்கு சார் ...நம்ம கதைகள்ல...ev😊

      Delete
  63. இன்னும் கொரியர் வராததால் சினம்கொண்ட அந்தப் பூனை, நகங்களைக் கூர்தீட்டிக்கொண்டு வாத்தியாரின் வலைப்பூவில் குதித்தது! கிர்ர்ர்...க்ரா...உர்ர்ர்ர்...

    ReplyDelete
  64. சார் இது வரை நான் புரட்டியதும் தென்பட்ட முதல்பக்கம் தந்த சந்தோசத்த எந்த புத்தகமும் தந்திருக்குமா என்பதாச்சர்யமே . சான்சே இல்ல முதல் பக்கம் காட்டியதோர்களின் அரக்கனை வியந்தவாறு ....பள்ளியின் முதல் வண்ண ஆங்கில lkg புத்தகத்தின் முதல் பக்க அழகிய ஓவியங்களில் கிடைத்த மகிழ்ச்சி....வார்த்தைகளில் முடியாது...சொல்ல...தொடரும் பக்கங்கள புரட்ட ஞான் அடைந்த இன்பத்த...அதகளம் சார் என்னா வண்ணம்..என்னா ஓவியம்...வருகிறதுகனவு மெய்ப் பட வேண்டும் என்ற தோர்களின் விளம்பரம் கூட அட்டகாஷ்....அதிலும் அந்த நானூறாவது இதழ் எப்ப வரும்னு கணக்கு போட்டு முடில சாமியோய் ..சேரி ..சீக்கிரமா வரட்டும் . லக்கியின் வண்ணம் தூக்கலாய் தெரிதே . அரும சார் ...ஆனா , அடுத்த மாதம் மூன்றே இதழ் , ஒல்லியா டெக்சு , சின்னதா ஜானி , சின்னப்பய பென்னிங்றத பாத்ததும் வடியத் தொடங்கிய உற்ச்சாகம்...நம்ம ஜெராமயாவ பாத்தும் மீளல...பரவால்ல கதைகள் அத நிச்சயம் மீட்டிடும்...லார்கோவ கூட தேடல...கவனிச்சீங்களா...ஒவ்வோரு மாதமும் எதைப் போட்டாலும் எதிர் பார்ப்ப எகிற வைத்து விட்டீர்கள்.ஜெராமயா அடுத்த மாதம் என்றாலும் அதிரடியா லார்கோ வந்தா ஈடு செய்ய முடியுமேன்னு தோன்றுவது என்க்கு மட்டும்தானா...அப்பறம் பாத்தா ஆக்சன் கதை இல்லாததுதான் என உணர்ந்தேன் .. ஆனாக்க உயிரத்தேடி அலயும் ஜெராமயா கலக்கப் போறார் . புஷ்பா சித்ரகதை அட்டை அரும சார ..

    ReplyDelete
  65. பாக்கெட் கலர் மறுபதிப்பு ஒரு புது வாசலை திறந்துவைத்துள்ளது. Surprise gift உணமையிலேயே surprise.

    ReplyDelete
  66. இன்னமும் புத்தகம் கைக்கு வரல. அதுல 3 புத்தகங்களை ஏற்கனவே படிச்சிருந்தாரும் எல்லாரும் அப்படி இப்படின்னு கமெண்ட் டைப்பறத படிக்கையில செம கடுப்பாயிருக்கு. யாரக் குறை சொல்லி என்ன பண்ண மூணு மாசமா இதே கூத்தாத்தான் இரு்க்கு. சொக்கா! என்னைய இப்படி புலம்ப விட்டுட்டியே.

    ReplyDelete
  67. யாருக்கும் புத்திசொல்லவோ அடுத்தவர் கருத்து சுதந்திரத்தில் தலையிடுவதாக தோழர்கள் எண்ணவேண்டாம்.
    ஒரு கருத்தை பதிவிடுவதற்கு முன்னர் பொறுப்பான இடத்தில் இருப்பவர்கள் அதனை பற்றி தெரிந்த பின்னர் பதிவிடுவது சரியானதாக இருக்கும். ஆனால் பதிப்பக ஆசிரியர் யாரென்றும் தெரியாது, ஒரு முழுநீள கதையில் வரும் ஒரு வசனத்தை வைத்து அந்த நாயகனின் மதிப்பையே ஒரு நொடியில் காலி பண்ணுவதும் பொறுப்பானவர்களுக்கு அழகல்ல.
    காமிக்ஸை எப்போதோ டைம்பாஸூக்காக உபயோகிப்பவர்கள் எதையாவது சொல்லிவிட்டு போகட்டுமே.
    நம் திரைப்பட வாசனையே சிறிதும் இல்லாத ஒரு மனிதரை நமது அபிமான நாயகர்கள் நடிக்கும் படத்தின் ஒரே ஒரு காட்சியை அதுவும் வில்லனை கதாநாயகன் பழிவாங்கும் காட்சியை மட்டும் பார்த்து விட்டு விமர்சனம் செய்ய சொன்னால் வில்லனை நாயகன் அழிப்பதால் நாயகனை ஒரே விநாடியில் வில்லனாக்கி விடுவார்கள்.
    "இந்த படத்தில் இறுதியில் ஒரு மனிதனை இரக்கமில்லாமல் ஒருவன் கொல்கிறான். ஆனால் அந்த கொலைகாரனை ஊரே கொண்டாடுகிறது" என்பதுபோன்ற விமர்சனம்தான் வரும்.காரணம் அவர் முழு படத்தையும் பார்க்கவில்லை என்பதால்தானே.அதேபோலத்தான் டைகர் கதையை ஏதோ ஒன்றிரண்டு பக்கங்களை படித்து செய்த விமர்சனமும். அதனால் அதை ஏன் நாம் பெரிது படுத்த வேண்டும். நல்ல விமர்சனம் மட்டுமே ஒரு படத்தை வெற்றி பெற வைக்காது.
    எதிர்மறையான விமர்சனங்களாலும் பல படங்கள் ஓடியிருக்கிறது.இதையும் அப்படியே எடுத்துக்கொண்டு மறந்துவிடலாமே.
    மாதம் முழுமைக்கும் குறைவான தோழர்களுடன் இணைந்து சிரமப்பட்டு நம் எடிட்டர் புத்தகங்களை தங்கம்போல் அலங்கரித்து வழங்கி நம்மைப்போன்ற ஒரு சிறுகுழுவினரின் விமர்சனங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.
    அவருடைய உழைப்பால் நமக்கு கிடைக்கும் பொக்கிஷங்களை பற்றியும், அவை நம்முள் ஏற்படுத்தும் பரவசங்களையும் பகிர்ந்து கொள்வதில் கவனத்தை செலவிடலாமே.
    நரகாசுரனை வதம் செய்த ஒருவரியை மட்டும் படித்து நரகாசுரனுக்காக இரக்கப்பட்டிருந்தால் தீபாவளி என்ற ஒன்றே இல்லாமல் போயிருக்குமே.
    அது அப்படியே தலைகீழாய் மாறி நரகாசுரனுக்காக இரக்கப்பட்டு தீபாவளி என்பது துக்க நாளாகவல்லவா மாறியிருக்கும்.
    சில விஷயங்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிட வேண்டும்.
    " என்னதான் மினிஸ்டர் ஒயிட்டில் மடிப்பு கலையாத ஆடை அணிந்தாலும் பளிச்சிடும் விசாலமான வெண்மை நிறத்தைவிட அந்த உடையில் என்றோ பட்ட ஒரு கரும்புள்ளிதான் அடுத்தவர்கள் கண்களில் பெரிதாய் படும்."
    இங்கு வரும் நமக்கு முக்கியமானது நம் ஆசிரியர் மற்றும் அவரது சிறு குழுவினரின் உழைப்பால் விளைந்த பொக்கிஷங்கள் இங்கு வரும் முகமறிந்த மற்றும் முகமறியா தோழர்களின் விமர்சனங்கள், மற்றும் அவர்தம் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டும், யாரையும் புண்படுத்தா நய்யாண்டியுமாய் இத்தளத்தை ஆரோக்கியமாகவே கொண்டு செல்லலாமே.
    எனது இந்த பதிவு சரியா தவறா எனத்தெரியவில்லை.
    தவறெனதோன்றின் ஆசிரியரே இதனை நீக்கிவிடலாம்.

    ReplyDelete
  68. அட்டை படம் அருமை. முதலே " பழி வாங்கும் பொம்மை" படித்ததாக ஞாபகம் இல்லை. காத்திருக்கிறேன். நண்பர் அஜய் அவர்களின் ஓவியம் திறமை மிரட்டலாக உள்ளது.

    ReplyDelete
  69. Received Books
    Modesty Book SIMPLY SUPERB. NOSTALGIC SIZE AND TRANSPORTED TO THE PAST.
    PLEASE
    PLEASE
    PLEASE
    ONCE IN A WHILE MAINTAIN THIS SIZE.
    Classic Reprints because of big size the nostalgic feeling not there.

    This month
    1. Modesty, Lucky, Spider, Thorgal, Tex
    No second position.

    ReplyDelete
    Replies
    1. RAMG75 : சார்...nostalgia என்பதெல்லாம் பழசை சுவாசிக்க எண்ணுவோர்க்கு மட்டுமே பெரிதாய்த் தெரியக் கூடிய விஷயமன்றோ ? இன்றைய புது வாசகத் தலைமுறைக்கு இந்த துக்கனூண்டு சைஸ்கள் எவ்விதம் ரசிக்கிறதென்பதை அறிந்திட வேண்டும் முதலில்...!

      Delete
  70. விமர்சனங்கள் மற்றும் எதிர் விமர்சனங்களும் வரவேற்கவேண்டும். தவிர்க்க முயலக்
    கூடாது. பாராட்டும் விமர்சனங்களை விட குறைகளை சுட்டிக்காட்டும் விமர்சனங்களை வரவேற்க வேண்டும். அவ்விமர்சனங்களை நமக்கு சாதகமாக திருப்ப முயலவேண்டும். அதை விடுத்து நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீ அழுகிறமாதிரி நடி என்பது சரியில்லை.

    ReplyDelete
    Replies
    1. Jegang Atq : இது யாருக்குச் சொல்லப்படும் சேதி என்பதையும் சேர்த்தே சொல்லி விட்டீர்களெனில் நிச்சயம் உபயோகமாக இருக்கும் சார் !

      எனக்கான அறிவுரையாக இருப்பின், அடிக்கிற மாதிரி நான் யாரை அடித்தேன்? ; அழுகிற மாதிரி யார் நடிக்கிறார்கள் ? என்பதையும் சொல்லி விட்டீர்களெனில் என்னைப் போன்ற மந்தபுத்திக்காரர்களுக்கும் சுலபமாய்ப் புரிந்து விடுமல்லவா ?

      Delete
  71. சொன்னது போலவே மாடஸ்டியை
    வண்ணத்தில் சிறப்பாக உருவாக்கி கையில் தந்தமைக்கு நன்றி சார்.

    ReplyDelete
    Replies
    1. ravanan iniyan : இனி விற்பனையில் சாதிக்க வேண்டிய பொறுப்பு இளவரசியைச் சார்ந்தது சார் !

      Delete
  72. உடுப்பு நீட்டலுக்கு கருப்பு மையை பயன் படுத்திதியதில் பாதியாவது மாடஸ்டியின் உதட்டு சாயத்திற்கு சிவப்பை பயன்படுத்தி இருக்கலாம்

    ReplyDelete