Friday, December 30, 2016

பதினாறில் பதினேழு.. !!

நண்பர்களே,

வணக்கம். நடப்பாண்டின் இறுதி பதிவும் ஒரு சந்தோஷப பகிர்வாக அமைந்திடுவது ஒரு வரமென்பேன் ! யெஸ்...."நவம்பரில் டிசம்பர்" சாத்தியமான போது - "டிசம்பரில் ஜனவரி" நிஜமாகிடாதா - என்ன ? இன்றைக்கு 2017 ஜனவரியின் சந்தாப் பிரதிகள் சகலமும் கூரியரில் புறப்பட்டு விட்டன - உங்கள் இல்லங்களைத் தேடி ! (ரசீதுகள் எல்லாமே இரவில் தான் எங்களுக்குத் தருவார்கள் என்பதால் - ட்ராக்கிங் நம்பர்கள் கோரி இப்போதே போன் அடித்தலில் பலன் இராது  - ப்ளீஸ் ?

* சத்தமின்றி யுத்தம் செய் ! - ட்யுராங்கோ
* ஆவியின் ஆடுகளம் - டெக்ஸ் வில்லர்
* நானும் சிப்பாய்தான் ! - ப்ளூகோட் பட்டாளம்
* இயந்திரத்தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி 
   Plus
* ஒரு சர்ப்ரைஸ் கிப்ட்

அடங்கிய பார்சல்கள் on the way ! நாளைய காலையில் முதலாவதாக இவற்றைக் கைப்பற்றவிருக்கும் நண்பரே-2017-ன் முதல் வாசகராகிடுவார் ! 

"ஜனவரிப் பணிகள் முடிந்த மாதிரித் தான் ; பிப்ரவரியில் இருக்கிறேன் ; மார்ச்சில் மிதக்கிறேன் !" என்று அவ்வப்போது நான் அள்ளிவிட்டுக் கொண்டிருந்தாலும் - நடப்பாண்டின் (டிசம்பரின்) இதழ்களை நிறைவுக்கு கொணர்ந்த பின்பாக லேசாயொரு விடுமுறை மூட் தொற்றிக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும் ! So "நீதிக்கு நிறமேது ?" பணிகளை முடித்த கையோடு - ஜனவரியின் இறுதிப் பணிகளுக்குள் பாய்ந்திடாது கொஞ்சம் ஜாலியாய் சுற்றித் திரிந்தேன் ! கண்ணிமைக்கும் வேளைக்குள் டிசம்பரின் பாதியைக் காணோம் ! அதன் பின்பாக,அடித்துப் பிடித்து ட்யுராங்கோவின் final touches-க்குள் மூழ்கிட - 4 கதைகள் கொண்ட இந்த ஆல்பத்தின் பணிகள் ஒன்றன்பின் ஒன்றாய் குவிந்து கொண்டே இருந்தன ! அட்டைப்படம் - முத்து காமிக்சின் ஒரு முக்கிய தருணத்துக்கு நியாயம் செய்வதாகவும் இருக்க வேண்டும் ; ஆண்டின் முதல் மெகா இதழுக்கான தோரணையுடனும் அமைந்திட வேண்டுமென்ற ஆர்வத்தில் - நமது டிசைனரை ஒரு வழி பண்ணி விட்டேன் ! இதனில்   முக்கிய கண்டிஷன் - ஒரிஜினல் டிசைனையே பயன்படுத்திட வேண்டுமென்ற படைப்பாளிகளின் கட்டளை சார்ந்ததாகிப் போனதால் - ஓவராக மாற்றங்கள் / நகாசு வேலைகளை செய்திட இடமில்லை ! Without much ado - இதோ 2017 -ன் முதல் ஸ்பெஷல் இதழின் முதல் பார்வை ! 
ஒரிஜினல் டிசைனையே லேசாக மேம்படுத்தி - வழக்கம் போல நமது ஹார்ட்கவர் இதழ்களுக்கான வேலைப்பாடுகளோடு உருவாக்கியுள்ளோம் ! முடித்த இதழைக் கையில் ஏந்திப் பார்க்கும் போது அட்டகாசமாய் இருப்பது போல் எனக்குத் தோன்றியது !! But of course - இதனில் உடன்பாடும் இருக்கக் கூடும் ; மாற்றுக கருத்து இருந்திடலும் சாத்தியமே என்பதால் - all yours to rate ! கதை / தயாரிப்பு / அச்சு என எல்லாமே ஒரு புதுப் பரிமாணத்தில் இருப்பதாகவும் எனக்குத் தோன்றியது ! "விடுதலையே உன் விலை என்ன ?" கூட பிரமாதம் என்று சொன்னவன் தானே சாமி நீ ? " என்ற மைண்ட் வாய்ஸ்க்கும் இங்கே வாய்ப்புகள் உண்டு எனும் போது - மார்க் போடும்  பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன் ! So ஆண்டின் ஆரம்பத்தை ட்யுராங்கோ with a bang துவக்கித் தந்துள்ளார் எனும் போது - ஒரு முழுமையான ரேட்டிங் பொறுப்பு உங்கள் முன்னுள்ளது !

* நாயகர் எப்படி ?
* ட்யுராங்கோவின் கதாப்பாத்திரம் எவ்விதம் ?
* கதைபாணி பற்றிய உங்கள் அபிப்பிராயங்கள் ?
* Overall தயாரிப்புப் பற்றி ?

என்று உங்களிடமிருந்து நிறைய சமாச்சாரங்களைத் தெரிந்து கொள்வது எங்களது புத்தாண்டின் எதிர்பார்ப்புகளுக்குள் ஒன்றாக இருந்திடும் ! So படித்து விட்டு please do share your thoughts ? இதழைப் புரட்டிவிட்டு ; படித்து விட்டு மௌனமாய் நீங்கள் நகர்ந்திடும் போதும் "விற்பனை ஆச்சுதானே !" என்று நாங்கள் நினைத்துக் கொள்ளலாம் தான் ; ஆனால் நிறை-குறைகளை அறிந்து கொள்ளும் போதே இந்தப் பணிகளுக்கொரு அர்த்தம் இருப்பது போல் தோன்றிடும் ! So ,இது போன்ற தருணங்களிலாவது மௌனத்துக்கு சிறு விடுமுறை தந்திட்டால் மகிழ்வோம் !  
அப்புறம் - நமது இரவுக் கழுகார் & கார்சன் ! எப்போதும் போலவே வண்ண இதழ்களை முதலில் முடித்துவிட்டு, அப்புறமாய் b & w ஐப் பார்த்துக் கொள்ளலாமென்ற நினைப்பில் சுற்றி வந்துவிட்டு, கிருஸ்துமஸ் தினத்தன்று 'மாங்கு மாங்கென்று' எழுதித் தள்ளி "ஆவியின் ஆடுகளம்" பணிகளை நிறைவு செய்தேன் ! ஆண்டின் முதல் 'தல' சாகசம் எவ்விதமென்றும் சொல்லுங்களேன் - ப்ளீஸ் ?

வரிசையில் மூன்றாவதாக ப்ளூகோட் பட்டாளம் ! But நிறைய நண்பர்களின் வாசிப்பினில் முத்லிடத்தைப் பிடிக்கப் போவது இந்த வண்ண விருந்தானது தானிருக்குமென்று நினைக்கிறேன் ! ஓராண்டு break-க்குப் பின்னர் தலைகாட்டும் இந்த ஜோடியின் ஒரு அழகான ஆல்பமிது ! 

Finally - மாயாவி !! இவரெல்லாம் 'பில்டப்' அவசியங்களுக்கு அப்பாற்பட்ட தனியொருவர் எனும் போது - இதழின் அட்டைப்படத்தை உங்கள் கண்ணில் காட்டுவதோடு முடித்துக் கொள்கிறேன் ! ஆங்காங்கே பற்களை ஆட்டம் கண்ணகி செய்த புராதன வசன கடைகளில் மெலிதான திருத்தங்களைத் தாண்டி இங்கே பெரிதாய் எனக்குக் கம்பு சுழற்றும் பணிகள் இருந்திடவில்லை ! 
Last but not the least - சின்னதாயொரு gift-ம் கூட, நமது சந்தா நண்பர்களுக்கு ! 2017-ன் ஒவ்வொரு மாதமும் நம் சக்திக்குட்பட்ட சிற்சிறு surprises உங்களது கூறியர்களில் இருந்திடும் என நான் அறிவித்திருந்ததை மெய்ப்பிக்கும் முதல் வாய்ப்பு ! இதன் நிதியுதவி - சீனியர் எடிட்டரின் உபயம் என்பது கொசுறுத் தகவல் ! Gift-ஐப் பார்த்து விட்டு - "ப்பூ...இதுக்குத் தானா ?" என்று நண்பர்கள் என்னிடவும் கூடும் ; "அட !" என்று முகம் மலரவும் கூடும் ! எது எப்படியிருப்பினும் - பதினாறிலேயே (2016 ) பதினேழைச் (2017 ) சாத்தியமாக்கிய சந்தோஷத்துடன் நடையைக் காட்டுகிறேன் ! ஒரு விசாலமான ஆண்டின் பயணத்தை, நமது இதழ்கள் வாயிலாகவும், இந்தப் பதிவின் மார்க்கமாகவும் உங்களோடு பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு ஒரு ஆயுட்கால நினைவாகத் தொடரும் என்னுள் !

ஓட்டமாய்  ஓடிக் கொண்டேயிருந்த சமயம் - 52 ஆண்டுகள் கொண்டதொரு ஆண்டினில் எங்களது டீம் உருவாக்கியுள்ளது 58 இதழ்களை (தற்போதைய இதழ்களையும் சேர்த்துக் கொண்டால்) என்பதன் முழு தாக்கத்தையும் புரிந்து கொள்ள நேரமிருக்கவில்லை ! ஆனால்  ஒரு வருஷத்தின் ஓட்டத்தை நின்று, நிதானமாய் மனதில் இன்றைக்கு அசை போடும் போது - ஓசையின்றிச் சுழன்றிருக்கும் எங்களது டீமின் ஆற்றல் என்னை அசாத்தியப் பெருமை கொள்ளச் செய்கிறது ! 

நான்கே பெண்கள் + மைதீன் + நமது மார்க்கெட்டிங் மேனேஜர் என்பதே நமது front office ; back end என சகலமும் !! Of course அச்சுப் பிரிவும் நமக்கு இன்றியமையா அங்கமே - but அதுவொரு commercial பிரிவு எனும் போது, நம் பணிகள் மட்டுமென்றில்லாது, மற்ற அச்சு வேலைகளையும் செய்வதுண்டு ! ஏன் - நானோ, ஜுனியரோ கூட காலையில் ஒரு வேலை ; மதியமொன்று என்று மரத்துக்கு மரம் தாவும் மந்திகள் தானே ?! ஆனால் நமது இந்த 4 + 1 +1 டீமுக்கோ  - உலகம் ஆரம்பிப்பதும், முடிவதும் நமது காமிஸ்களோடு தான் ! ஆண்டு முழுக்க உங்களது பார்சல்களை அனுப்புவதிலிருந்து, தோராயமாக சில ஆயிரம் போன் கால்களை, துளியும் சளைக்காமல் புன்சிரிப்போடே கையாளும் ஸ்டெல்லா & வாசுகி ஒரு பக்கமெனில் - மிஷின்கன் வேகத்தில் டைப்செட்டிங் / டிசைனிங் என எதைக் கையில் கொடுத்தாலும் மூன்றே நாட்களில் முடித்துத் தரும் இவாஞ்செலின் & கோகிலா இன்னொருபக்கம் ! போனிலேயே "இந்தக் கதையில் யார் ஹீரோ ? " என்பதில் ஆரம்பித்து ; கைவசமுள்ள 140 இதழ்கள் பற்றியும் ஒரு நூறு கேள்விகளை வாசகர்கள் எழுப்பும் போது, அத்தனைக்கும் பதில் சொல்லும் பொறுமையை எண்ணி நான் எத்தனையோ நாட்கள் வியந்ததுண்டு ! காலை பத்துக்குத்  துவங்கி மாலை ஏழு வரை இவர்கள் உலகமே இந்தப் பணிகள் மட்டுமே ! மைதீனுக்கோ ஒன்பதுக்குப் புலரும் பொழுது - இரவு பதினொன்றுக்கு முன்பாய் ஓய்ந்ததில்லை ! And எந்தவொரு பணியும் அவனது எல்லைகளுக்கு அப்பாற்பட்டவையாகாது !! களப்பணிகளே நமது மார்க்கெட்டிங் மேனேஜர் கணேஷுக்கு என்பதால் - ஊர் ஊராய் ; வீதி, வீதியாய் நம் முகவர்களை பொறுமையாய் / திறமையாய்க் கையாள்வது அவரது இலாக்கா ! And புத்தக விழாவினில் நம் ஸ்டாலைப் பார்த்துக் கொள்பவரும் அவரே ! தமிழ் பதிப்புலகில் - இத்தனை சன்னமான - ஆனால் இத்தனை ஆற்றலானதொரு அணியிருக்க சத்தியமாய் வாய்ப்புகள் குறைவு என்பேன் ! Doubtless - ஆங்காங்கே சின்னச் சின்ன குறைபாடுகள் இருந்திடலாம் தான் ; ஆனால் அவர்களின் முன்னே நான் குவித்துப் போட்டிருக்கும் பணிகளின் சுமைக்கு சற்றே அனுசரணையும் நிச்சயம் அவசியமே ! ஆண்டின் இறுதி நாளை நெருங்கும் இந்தத் தருணத்தில், அளவில் சிறிதாயிருப்பினும் ஆற்றலில் அசகாயர்களாக இருக்கும்  எனது இந்த டீமை உயர்த்திப்பிடிப்பதும் - இந்தாண்டின் மறக்க இயலா விஷயங்களுள் ஒன்றாக இருக்குமென்பது நிச்சயம் ! Thank you my team !

And before I sign off -சின்னதொரு வேண்டுகோளும் !! இன்னமும் சந்தாப் புதிப்பித்தல்களைச் செய்திருக்கா நண்பர்கள் - இனியும் தாமதிக்க வேண்டாமே - ப்ளீஸ் ? எங்களுக்குச் சுறுசுறுப்பைக் கற்றுத் தந்தவர்கள் நீங்களே ! இன்றைக்கு எங்களோடு தோள் கொடுத்து நிற்க நீங்களில்லாது போனால் ரொம்பவே மிஸ் செய்வோம் !! 

புத்தாண்டில் சந்திப்போம் folks - God be with us all ! Happy Reading !! And அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்களும் !

169 comments:

  1. எதிர்பாரா நேரத்தில் இன்ப அதிர்ச்சியாய் ஒரு பதிவு! அருமை ஆசிரியரே!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் உங்கள் அணிக்கும் நம் வாசக நண்பர்களுக்கும் பிறக்கவிருக்கும் புத்தாண்டு மிக வெற்றிகரமானதாக அமையட்டும்!

      Delete
  2. முதன் முதலாக இரண்டாவது Comment என்னுடையது மகிழ்ச்சி ஞாயிறு பதிவு வெள்ளியில் கிடத்தது

    ReplyDelete
  3. Naanum sikiram vandhuten.. ellarukkum happy new year sir..

    ReplyDelete
  4. அனைத்தும் வளம்பெற்றோங்கிட வாழ்த்துகிறேன். வரும் ஆண்டு மென்மேலும் சிறப்புகள் கொண்டு பாய்ச்சல் நிகழ்த்திட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. உங்கள் கடின உழைப்பு மிகப் பெரிய வெற்றியை தர மனமார்ந்த பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  6. உள்ளேன் அய்யா..!!!


    உங்கள் கடின உழைப்பு மிகப் பெரிய வெற்றியை தர மனமார்ந்த பிரார்த்தனைகள்..!

    ReplyDelete
    Replies
    1. காமிக்ஸ் ஆசானுக்கும்
      அவர் பணியாளர்களுக்கும்
      சீனியர் எடிட்டருக்கும்
      ஜூனியர் எடிட்டருக்கும்
      மற்றும் நம் தளத்தில் உள்ள நண்பர்களுக்கும் தோழிகளுக்கும்
      இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete
  7. ///52 ஆண்டுகள் கொண்டதொரு ஆண்டினில் எங்களது டீம் உருவாக்கியுள்ளது 58 இதழ்களை (தற்போதைய இதழ்களையும் சேர்த்துக் கொண்டால்)///

    தங்களுடைய பாட்டில் பிழை இருக்கிறது ..,

    52 வாரங்கள் கொண்டதொரு ஆண்டில் -என்று இருந்திருக்க வேண்டுமென நினைக்கிறேன் சார். .!

    ஹைய்யா.. ஹைய்யா..!!

    ReplyDelete
  8. மாலை வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  9. சார் இதுவே மிகப் பெரிய கிஃப்ட்தான்....நெனச்சே பாக்கல....சூப்பர்...எனது நிலையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை...

    ReplyDelete
  10. ///நமது சந்தா நண்பர்களுக்கு ! 2017-ன் ஒவ்வொரு மாதமும் நம் சக்திக்குட்பட்ட சிற்சிறு surprises உங்களது கூறியர்களில் இருந்திடும் என நான் அறிவித்திருந்ததை மெய்ப்பிக்கும் முதல் வாய்ப்பு ! இதன் நிதியுதவி - சீனியர் எடிட்டரின் உபாயம் என்பது கொசுறுத் தகவல் !///

    நன்றி சீனியர் எடிட்டர் சார். .!!

    ///Gift-ஐப் பார்த்து விட்டு - "ப்பூ...இதுக்குத் தானா ?" என்று நண்பர்கள் என்னிடவும் கூடும் ; "அட !" என்று முகம் மலரவும் கூடும் !///


    பரிசு என்று வரும்போது அது பெரியதொரு புக்காக இருந்தாலும் சரி, ஒரேயொரு பேப்பராக இருந்தாலும் சரி. எங்கள் கண்ணுக்குத் தெரிவது பரிசளிப்பவரின் அன்பு மட்டுமே.!!

    அன்பையும் விமர்சிக்க நினைப்பவர்களை ஹிஹி என்றுதான் சொல்லமுடியும்.!

    ReplyDelete
    Replies
    1. \\பரிசு என்று வரும்போது அது பெரியதொரு புக்காக இருந்தாலும் சரி, ஒரேயொரு பேப்பராக இருந்தாலும் சரி. எங்கள் கண்ணுக்குத் தெரிவது பரிசளிப்பவரின் அன்பு மட்டுமே.!!

      அன்பையும் விமர்சிக்க நினைப்பவர்களை ஹிஹி என்றுதான் சொல்லமுடியும்.!// சரியா சொன்னீங்க ஆர்ட்டின் அண்ணா

      Delete
    2. பின்னே என்ன சிவா., நாம கொடுக்குற காசுக்கு உண்டான புத்தகம் நமக்கு கிடைச்சிடுது. அதை விமர்சிக்கலாம் தப்பில்லே. அதற்கு உரிமை உண்டு.

      ஆனால் சந்தாவை ஊக்குவிப்பதற்காக தரப்படும் பரிசை விமர்சித்து ஒரு பிரகஸ்பதி எழிதியிருந்ததை நேற்று படிக்க நேர்ந்ததால் வந்த ஹிஹி தான் அது.

      Delete
    3. KiD ஆர்டின் KannaN : நாளைய தினம் இந்த "கிப்ட்" காரணமாய் எனக்கு மண்டகப்படி இருக்கும் சாத்தியக் கூறுகள் ரொம்பவே பிரகாசம் என்பேன் நண்பரே ! எதிர்பார்த்தது தானே ?

      என் கையில் வண்டியை முழுமையாய் ஒட்டிடத் தேவையான காசில்லை ! உழைப்பும், எனது சொற்ப முதலீடும் தவிர்த்து - பாக்கிப் பணத்தைத் தந்து உதவிடும் சந்தாதாரர்களுக்கு நமது நன்றி நவிலல் இது ! அதுவும் தொடர்ச்சியாய் 5 வருடங்கள் இந்தப் பெரும் உதவியைச் செய்து வருவோர்க்கு இம்முறையேனும் ஒரு சன்னமான ஸ்பெஷல் thank you சொல்லத் தோன்றியது ! இதன் பொருட்டு ஒரு சிலருக்குச் சங்கடம் எனும் பட்சத்தில் நாம் செய்திடக் கூடியது தான் என்னவாக இருக்கும் ?

      விமர்சனங்கள் நமக்குப் புதிதல்ல ; சிற் சிறு விஷயங்களின் பொருட்டும் பிரவாகமெடுக்கும் ரௌத்திரங்களும் நாம் பார்த்திடாததல்ல ! So எதிர்மறை எண்ணங்களை உந்தித் தள்ள உதவும் எரிபொருளாய்ப் பாவித்துக் கொண்டு பயணத்தைக் தொடர்வோம் சார் !

      Delete
    4. இதில் வேடிக்கையே - விலகி நின்று பகடி செய்வதாய் எண்ணிக் கொண்டிருப்போரே அட்சர சுத்தமாய் நமது பதிவுகளையும், எண்ணப் பகிரல்களையும் (சு)வாசிப்போர் ! So இதுவுமே ஒரு புறங்கையிலான பாராட்டே என்று எடுத்துக் கொண்டு நமக்குத் தெரிந்ததைத் தொடர்ந்து அழுத்தமாய்ச் செய்து செல்வோம் !

      Delete
    5. /// இதுவுமே ஒரு புறங்கையிலான பாராட்டே என்று எடுத்துக் கொண்டு நமக்குத் தெரிந்ததைத் தொடர்ந்து அழுத்தமாய்ச் செய்து செல்வோம் !///

      பின்தொடர நாங்களும் இருக்கிறோம் சார். .!

      Delete
  11. Was eagerly waiting for this week's post. Wish the lion comics team and all friends a very happy new year ☺

    ReplyDelete
  12. அட்டப்படம் சும்மா பிச்சு உதறுது..நமது டாப்...மாயாவியும் அதகளம்...ட்யூராங்கோ...ஓ..ஓ....உய்....உய்..எப்போதும் பொறுப்பாக ..பொறுமயாக பதிலுறைக்கும் ஸ்டெல்லா....மற்றும் சக பணியாளர்கள்...ஜூ.விக்ரம்...தந்தையார் அனைவருக்கும் சிலிர்த்திடும் நன்றிகள் எனது சார்பாயும்...

    ReplyDelete
  13. Mayaviyai sandhika mika aval.Happy new yr Muthu comics team.pudhiya 2017 sandathar nanum nalai puthakangalai kaipatralama?

    ReplyDelete
    Replies
    1. Balachandran Subramaniam : இந்த வாரத்தில் புதன்கிழமை வரையிலும் கிட்டியிருந்த சந்தாக்கள் அனைத்திற்குமே பிரதிகள் அனுப்பி விட்டோம் சார் ! So நாளை உங்கள் பார்சலும் நிச்சயம் கிடைத்திட வேண்டும் ! புதுச் சந்தாதாரர் எனும் பொழுது உங்கள் பகுதி கூரியர் ஆபீசில் ஒரு போன் அடித்துச் சொல்லி வைத்தீர்களெனில் தேவலை என்பேன் ! ஓரிரு மாதங்கள் பழகி விட்டார்களெனில் அப்புறம் சிக்கலின்றிக் கதவைத் தட்டி விடுவார்கள் ! உங்கள் சந்தா நம்பரைக் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள் - நாளை நம்மவர்களை உதவிடச் செய்கிறேன் !

      And Welcome to the subscription world !

      Delete
  14. ட்யுராங்கோ அட்டைப்பம் சூப்பர் ஓவியர் வெகு சிரத்தை எடுத்திருப்பது குதிரையை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
    எடிட்டர் ஸார் அடுத்த பதிவு நீங்கள் போட நாங்கள் இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டுமோ(ஹி ஹி).
    அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் முன்கூட்டியே.

    ReplyDelete
  15. 2017 வெற்றிகரமான ஆண்டாக மலர இறைவனை பிரார்த்திப்போம்��

    ReplyDelete

  16. புத்தாண்டில் தோர்கல்,வேய்ன்ஷெல்டன் இல்லாததை நினைத்தால் .. மூச் மூச் மூச்... ... ...

    ReplyDelete
    Replies
    1. Jaya Kumar : ஏன்..ரெண்டு பேருமே புத்தாண்டில் இருக்கிறார்கள் தானே ? தோர்கல் 2 ஆல்பங்களிலும், ஷெல்டன் ஒன்றிலும் தலை காட்டுகிறாரே ?

      Delete
    2. எடிட்டர் ஸார்,நான் ஜனவரி மாதத்திற்கு சொல்லியிருந்தேன் ஸார்.

      Delete
  17. 2017 நம் காமிக்ஸோடு மலர்வதற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

    ReplyDelete
  18. "விடுதலையே உன் விலை என்ன ?" கூட பிரமாதம் என்று சொன்னவன் தானே சாமி நீ ? " என்ற மைண்ட் வாய்ஸ்க்கும் ///
    விடுதலையே உன் விலையென்ன பிரமாதம்தானே ஸார் அனைத்துவிதத்திலும்.

    ReplyDelete
    Replies
    1. Jaya Kumar : நிச்சயமாய் "மோசமில்லை" என்று சொல்வேன் சார் ; ஆனால் "அட்டகாசம்" என்று சொல்வதற்கில்லை என்பது தானே சிக்கலே ?

      Delete
  19. 2016 அதிக பதிவுகள் கொண்ட ஆண்டாக இருந்தது
    2017 இன்னும் அதிகம் பதிவுகள் இட வாழ்த்துகிறன் எடிட்டர் சார்
    காமிக்ஸ் தயாரித்து அனுப்பும்
    குழுவிற்கும் வாசகர்களுக்கும்
    புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. Anandappane karaikal : மாலை தான் பார்த்தேன் - 83 பதிவுகள் இந்தாண்டிற்க்கென !! கொஞ்சம் டூ...டூ. மச் என்றுதான் பட்டது !!

      Delete
  20. அடடே!! துளியும் எதிர்பாராப் பதிவு! 'ட்யூராங்கோ' அட்டைப் படம் ஒரிஜினலைவிடவும் அசத்தலாக, பொழிவாக இருக்கிறது! மிரட்டலான கதையைப் படித்து ரசிக்கவும், பிரம்மிக்கச் செய்யவிருக்கும் வித்தியாசமான வண்ணக்கலவையை கண்டுகளிக்கவும் மிகுந்த பசியோடு காத்திருக்கிறோம்!

    எங்களுக்குக் காமிக்ஸ் கிடைத்துக் கொண்டிருப்பதே மிகப்பெரிய பரிசுதான்! சீனியர் எடிட்டர் மனமுவந்து கொடுப்பது ஒரு குண்டூசியாகினும் பேருவகையுடன் பெற்றுக்கொள்வோம்! ( கையில் கொடுத்தால் மிஸ்ஸாகிடும்னு 'நதக்'னு ஏத்திடாதவரை சரிதான்! ;) )

    இம்மாம்பெரிய தயாரிப்புப் பணிகளை ஒரு தம்மாத்துண்டு டீம் தான் செய்து வருகிறது என்று நம்மைப் பற்றி சரியாக அறியாத யாரிடமாவது நாம் சொல்ல நேர்ந்தால் "போய்யா டூராங்கோ" என்று ஏசுவதற்கும் வாய்ப்பிருக்கிறது!

    சிறிய டீமாக இருப்பினும், ஒவ்வொருவருடைய பணியும் மகத்தானது! அவர்களது கடுமையான உழைப்புக்கும், ரொம்ப ஸ்ட்ரிக்டானவர் போல முகத்தை வைத்துக்கொண்டு உங்களை வேலை வாங்கிய வாத்தியாருக்கும் எங்கள் அனைவரின் சார்பாகவும் வாழ்த்துகளும் நன்றிகளும்!

    போனமாதம் நம் அலுவலத்திற்குப் ஃபோன் செய்திருந்தேன்:

    "ஹலோ"

    "வணக்கம்மா. நான் ஈரோட்லேர்ந்து.."

    "விஜய் தானே சார்? உங்க ட்ராக்கிங் ஐடியை நோட் பண்ணிக்கோங்க.."

    அம்மாடியோவ்!!!

    ReplyDelete
    Replies
    1. ///
      "ஹலோ"

      "வணக்கம்மா. நான் ஈரோட்லேர்ந்து.."

      "விஜய் தானே சார்? உங்க ட்ராக்கிங் ஐடியை நோட் பண்ணிக்கோங்க.."

      அம்மாடியோவ்!!!///

      நீங்க வேர்ட்டு ஃபேமஸ் ஆச்சே குருநாயரே :-)

      Delete
    2. ஆமா ஆமா vijay brother இப்ப world famous ஆயிட்டார்.

      Delete
    3. @ கிட் & sridhar

      ம்... கொஞ்சம் தேவலாம்! அடுத்த தபா மில்க்கிவே, கேலக்ஸி ரேஞ்சுக்கு யோசிக்கணும் நீங்க! :P

      Delete
    4. Erode VIJAY : நம்மவர்களும் பதிவுகளைப் படிப்பார்கள் ; so டிசைன் டிசைனாய் பூனைகளோடு ; விதம் விதமான பின்னூட்டங்களோடு வலம் வரும் நபரை ஞாபகப்படுத்திடத் தவறுவார்களா - என்ன ?

      Delete
    5. ///@ கிட் & sridhar

      ம்... கொஞ்சம் தேவலாம்! அடுத்த தபா மில்க்கிவே, கேலக்ஸி ரேஞ்சுக்கு யோசிக்கணும் நீங்க! :P///


      நீங்க குடுக்குற காசுக்கு இவ்வளவுதான் கூவ முடியும் குருநாயரே.!
      பேமெண்ட்டை ஜாஸ்தி பண்ணுணீங்கன்னா பால்வெளி ரேஞ்சுக்கு யோசிக்க முயற்சிபண்ணுவோம். : Peppe பெப்பே..!!

      Delete
    6. E.V.தப்பா புரிந்து கொண்டார். நாங்கள் சொன்னது. நமது ஆசிரியர் அவர்களை. இப் இபப் என்னா செய்வீஙக ப்ர் ப்ர்

      Delete
  21. ட்யூராங்கோ அட்டைப்படம் அசத்தல். ஒற்றைக்குதிரையை அழைத்துக்கொண்டு ஒய்யாரமாய் நிழலுருவமாய் நடைபோடும் ட்யூராங்கோவின் பின்னட்டை வசீகரிக்கிறது.

    ReplyDelete
  22. எடிட்டருக்கும் அவர்தம் பணியாளர்களுக்கும் வாசக நண்பர்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Unknown : பெயரையும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே சார் ?

      Delete
  23. 2017ஐ தல சிறப்பு ஆட்ட்துடன் ஆரம்பித்து இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. தல தான் ஆவியின் ஆடுகளத்தில் பேயோட்ட வருகிறாரே ஸ்ரீதர் சார். வில்லரின் ஆட்டம் அனைத்துமே சிறப்புதானே.!?

      Delete
  24. அனைவருக்கும் இனிய ஆங்கில புது வருட பிறப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. now only i paid my sandha sir..thank u.. Babu from Gangavalli,Salem-dt..9942549249

    ReplyDelete
    Replies
    1. Geethan : Thanks சொல்ல வேண்டியது நாங்களல்லவா சார் ?

      Delete
  26. ஆசிரியர் மற்றும் லயன் குடும்பத்தினர் அனைவரின் கடின உழைப்பிற்கு நன்றி! நன்றி! நன்றி!
    நண்பர்கள், ஆசிரியர் மற்றும் லயன் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  27. அன்பு ஆசிரியருக்கும், நம் காமிக்ஸ் கனவுகள் நிஜமாகிட அயராது பாடுபடும் அனைத்து நண்பர்களுக்கும் , வாசக நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  28. வாவ்...வாவ்...
    எதிர்பாரா இனிய பதிவு& 16ல் 17 அட்ரா சக்கை...

    சத்தியமாக நான் எதிர்பார்க்கவில்லை இதை, 2ம் தேதி அனுப்புவீர்கள் என்றே நினைத்திருந்தேன் சார், இரட்டை கிஃப்ட் என்னைப்பொறுத்து...

    காமிக்ஸ் ரசிகர்களுக்கு புத்தாண்டே 24மணிநேரம் முந்திக்கொண்டு வந்துட்டது...

    ReplyDelete
  29. நான் கேட்டது 104 - நீங்கள் பதிவிட்டது83.
    வரும் 2017ல் சாத்தியமாகும் என்று நினைக்கிறேன். எனது புத்தாண்டு பரிசு
    நம் இதழ்களே.நமது அலுவலக மற்றும்
    அச்சக பணியாளர்கள் &ஆசிரியருக்கும்
    JR & SR ஆசிரியருக்கும் என் உளம்
    கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. விஜயன் சார், வருடம் முழுவதும் ஒடி comics புத்தகம்ககளை தயார் செய்து சரியான நேரத்தில் வழந்கிட உங்களின் இருகரமாக இருக்கும் நமது அலுவலக நண்பர்ககளுக்கு எனது கோடான கோடி நன்றிகள். Parani from Bangalore

    ReplyDelete
  31. எனது சொந்த ஊரில் (tuticorin) இருப்பதால் அடுத்த வருடம் (Bangalore செல்வதால்) அதாவது அடுத்த வாரம்தான்
    படிக்க பார்க்க முடியும்.

    ReplyDelete
    Replies
    1. Any book shop in tuticorin selling our books?

      Delete
    2. விஜயன் சார், 5 வருடம் வலைபதிவு - இதற்கு ஏதும் சிறப்பு மலர் கிடையதா. - இப்பக்கு எதற்கு எடுதாலும் சிறப்பு மலர் கேட்கும் நண்பர்ககளை பார்த்து கெட்டு போனவர்ககள் சங்கம்

      Delete
    3. Kathirvel S : துரதிர்ஷ்டவசமாக தூத்துக்குடியில் முகவர்கள் செட் ஆகவில்லை ! நிறைய முயற்சித்து விட்டோம் ; ஆர்வம் காட்ட மறுக்கின்றனர் ; அல்லது கமிஷன் ஜாஸ்தியாய்க் கேட்கிறார்கள் !!

      Delete
  32. ஆசிரியருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் , பணியாளருக்கு அவர்தம் குடும்பத்தினருக்கும் , நண்பர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  33. அட்டை படங்கள் இரண்டுமே பிரமாதம் .

    ReplyDelete
  34. Reading TeX books again for year end.awesome all r different this year

    ReplyDelete
  35. ST கொரியர் ஆபீஸ்ல் புத்தகங்களை கைப்பற்றிவிட்டேன்
    ஆசிரியர், நண்பர்கள் மற்றும் லயன் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. சர்ப்ரைஸ் கிப்ட் காலண்டர் சுப்பர்..

      Delete
    2. Super and congratulations. I was expecting the surprise should be a calendar.

      Delete
    3. Tiruppur Kumar : 2017 -ன் முதல் வாசகர் !

      Delete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
  37. சென்னை புத்தகத் திருவிழாவில் 7 மற்றும் 8 தேதிகளின் பெரும்பான்மை நேரங்களை நமது ஸ்டாலில் கழித்திடும் பொருட்டு நான், மாயாவி சிவா, புனித சாத்தான், டாக்டர் சுவாமிநாதன், கரூர் ராஜசேகர் உள்ளிட்டோர் அங்கே காத்திருப்போம்!

    நிறைய எண்ணிக்கையில் புதிய/பழைய நண்பர்களை சந்தி்த்திட ஆர்வமாய் இருக்கிறோம்...

    அல்லாரும் வாங்கோ... அல்லாரும் வாங்கோ!

    ReplyDelete
    Replies
    1. ஈவி, மாயாவி சிவா, புனித பிசாசு, டாக்டர் சுவாமிநாதன், கரூர் ராஜசேகர். அனைவருக்கும் பயணம் சிறப்பே அமைய இனிய வாழ்த்துகள். சந்தோசமாவும் சாக்கிரதையாவும் போயிட்டு வாங்க.

      Delete
    2. நன்றிகள் M.P அவர்களே! :)

      Delete
    3. எங்களால் கரூரார் என்று அழைக்கபடும் கரூர் சரவணன் சார் அவர்களையும் மற்றும் நாகுஜி புளுபெரி அவர்களையும் கூட்டத்தில சேர்த்திகுங்க.

      Delete
  38. காமிக்ஸ் உலகின் முதல்வர்...
    வன்மேற்கின் வேங்கை...
    தோட்டாக்கள் இவரது விசிட்டிங் கார்டு...
    ஈடில்லை...இணையுமில்லை இவனுக்கு...
    கலக்கல் காமெடி கொளபாய்...
    அழகாய்யொரு அதிரடி...

    ReplyDelete
  39. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  40. பெரிய சைஸ் பார்சல் 8.15க்கே வாங்கியாச்சு..கடவுளின் பாதத்தில் இப்ப...பத்து மணிக்கு பிரிக்கப்படும்..விவரம் பின்னர்..மிக....மிக..மிக...மகிழ்ச்சி சார்

    ReplyDelete
  41. நமக்கு புத்தாண்டே .......காமிக்ஸின் கோலாகலமே .......வாடி செல்லம் வா

    ReplyDelete
  42. Received book with big box super sir
    .

    ReplyDelete
  43. சார் அட்டகாசம் ...மெய்யான ின்ப அதிர்ச்சி..ட்யூராங்கோ அல்ல...ஸ்பைடர்..ஆர்ச்சியின் காலண்டரின் முதல் பக்கம்...அருமை....தந்தையாருக்கு நன்றிகள்...நீங்கள் தந்த ஆச்சரியத்தை விட பெரிய ின்ப அதிர்ச்சி.....நன்றிகள் ஒரு பல கோடிகள்...

    ReplyDelete
  44. அற்புதம்...அருமை...அட்டகாசம்..
    ஆனந்தம்...ஆர்ப்பாட்டமான ஆரம்பம் ஆசிரியர் சார்...

    வழக்கமாக கடைக்கு செல்லும் வழியில் கொரியர் ஆபீஸ்ல எட்டிப் பார்தால் ஆனந்த அதிர்ச்சி, பார்சல் வந்து காத்திருக்கு...
    பெரிய்ய்ய்ய சைஸ் பாக்ஸ்...

    பரபரவென பிரித்தால் அற்புதமான பேக்கிங்...
    2017 காலண்டர் கண்ணில் டாலடித்தது...
    முதல் சர்ப்ரைசே செம்ம...
    ஆண்டாண்டு காலத்தின் கோரிக்கை இன்று நம் கையில்... "மகிழ்ச்சி'...

    நன்றிகள் மூத்த ஆசிரியர் அய்யா செளந்திரபாண்டியன் அவர்களுக்கு....
    அன்பின் எல்லைகள் அரிசோனா வரை....

    ReplyDelete
    Replies
    1. அதற்காகத்தான்
      கடை வாசலில் நின்று கொண்டே டைப் செய்தீகளோ!!!

      Delete
  45. புத்தகங்களும் உங்களின் அன்பு பரிசும் கிடைக்கப்பெற்றன.. dtdc courier வாயிலாக..

    இது தான் நான் சந்ததாரர் ஆன பிறகு கிடைக்கும் முதல் மாத பார்சல்! விரைவாகவும் அருமையான packing உடனும் அனுப்பியதற்கு நன்றிகள் !!

    ஆசிரியருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் advance புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
    Replies
    1. Warm welcome to our comics subscription family.

      Delete
    2. Erode Vinesh : முதல் முறையே கூரியர் பட்டுவாடா துரிதமாய் அமைந்ததில் மகிழ்ச்சி !!

      அப்புறம் அந்தக் காலெண்டர் சுருட்டப்படாது, பத்திரமாய் சென்றடைய வேண்டும் எனும் பொருட்டே டப்பாவையும் பெரிதாக்கி ; உள்ளே கூடுதலாய் பேக்கிங்கும் கொடுத்திருந்தோம் ! Glad it worked !

      Delete
    3. மிக்க நன்றி சார்.

      Delete
    4. புக் ஸ்டாலுக்கு போன் செய்து புத்தகங்கள் வந்ததா என கேட்டு கொண்டே இருந்து, ஒரு வாரம் கழித்து, இங்கே blog இல் கதை சுருக்கம்/ விமர்சனம் எல்லாம் வருவதை ஏக்கத்தோடு பார்த்து!! பின்பு புத்தகம் கிடைத்து படித்து வந்த நான் இப்போது ஒன்றாம் தேதிக்கு முன்பாக, எல்லா புத்தகமும் என் கையில் !!

      Delete
    5. விக்னேஷ் @ சந்தா செலுதியது சரியான முடிவு. சந்தா உலகத்திதிற்கு வரவேற்ற்கிரென்.

      Delete
  46. ஆகா நான் பார்த்தது பின் புறம்...முதல் பக்கம் அசத்த..புரட்டினால் ஸ்பைடர மிஞ்சும் வண்ணம் மாயாவி...அதகளம் சார்..டெக்ஸ் மட்டும் இன்னும் சிறப்பாய் நண்பர்களுடன் தந்திருக்கலாம்...டைகரும் சூப்பர்....லக்கி பரவால்ல..

    ReplyDelete
    Replies
    1. தம்பி எதபற்றி சொல்லுற புத்தகம் பற்றியா இல்ல calendar பற்றியா?

      Delete
    2. ஏல நா காலண்டரல்லா சொன்ன....வாங்கிப் பாரு மக்கா..சும்மா துள்ளுவல்லல

      Delete
    3. எலய் மக்கா சந்தோசம்ல

      Delete
  47. ட்யூராங்கோ அட்டைக்கே காசு சரியா போச்...அட்டை படங்ளில் எனது வரிசையில் இதான் டாப்...முன்னும் பின்னும் கலக்க....அகமும் புறமும் அசத்த.... ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே....பக்கங்களில் நிறச்சேர்க்கை...பிரிண்டிங் துள்ளியம் அன்றி வேறறியேன் பராபரமே....சூப்பர் பரிசு இரண்டு சார்

    ReplyDelete
  48. டெக்ஸ் அசத்தல் வடிவமைப்பும் ...அட்டயும் கச்சிதமாய் பொருந்திய உணர்வு...ப்ளூகோட் நெடெக்கில் எழுதிய ெழுத்தில் அட்டகாசம்..பரிசு மூன்று இரண்டுமே சுகம்....மாயாவி இதம்..

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : அந்தத் தங்கு தடையறியா உற்சாகத்துக்கு ஒரு தனி ஆற்றல் உண்டு போலும் நண்பரே ! படிக்கும் போது முகத்தில் ஒரு புன்னகை குடியேறி விடுகிறது !

      Delete
  49. facebookல் நம் நண்பர்கள் share புத்தாண்டு பரிசான calender அருமையாக உள்ளது. Courier deliveryக்காக waiting!

    ReplyDelete
  50. முதல் புரட்டலில் ட்யூராங்கோ , அட்டைப்படம் சும்மா ஜிகு ஜிகு மினிக் மினிக் சூப்பரு...
    பின்னட்டை தான் டாப் சார்...

    ஓவியங்கள் செம்ம...
    2012ன் லார்கோ கதை என் பெயர் லார்கோவில் இருந்த அசாத்திய தரம் சார்... சிறப்பாக பணியாற்றிய உங்கள் மினி டீம் லயன்க்கு ஆயிரம் நன்றிகள் சார்...
    புரட்டப்புரட்ட பக்க்கங்கள் அசத்துகிறது, உண்ணதமான புத்தாண்டு விருந்து காத்திருக்கு....
    (டாக்டர் சுந்தரய்யா செம்ம ஆர்ட், செம்ம ப்ரிண்டிங், செம்ம கலரிங் )
    முதல் அத்தியாயம் ஆரம்பிக்கும் இடத்தில் உள்ள டியுராங்கோ போட்டோ , சான்சே இல்ல செம்ம சார்...
    அதை அட்டையாக போட்டிருந்தால் ...!!!

    "ரௌத்திரம் பழகு"... பெளன்சரின் முதல் கதையின் பேரே இதற்கும் செம்ம மேட்ச்சிங் ஆக இருக்குமோ...கதை படிக்கையில் தெரியும்...

    ReplyDelete
    Replies
    1. ......அந்த 100ம் பக்க ஓவியத்தை பார்க்க பார்க்க தக தக மின்னல்...
      குதிரையில் போகும் நாயகன், பின்புற மலைத்தொடரின் அசாத்திய அழகு, அந்தி சூரியனின் செங்கதிர்கள் பனிமலையில் மட்டுமல்லாமல் ஓடை நீரில் செந்நிறம்...
      வேகமாக திருப்பும் நானே இப்படி ரசிக்கிறேன் என்றால் நண்பர் ராஜ் முத்துக்குமார் ஜி க்கு செம்ம வேட்டை காத்திருக்கு... இன்னும் அவர் பார்வையில் பார்க்க வெயிட்டிங்....

      Delete
    2. சேலம் Tex விஜயராகவன் : ஓவியரும், கலரிங் ஆர்டிஸ்டும் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு இருப்பதைக் கதைக்குள் புகுந்திடும் போது கவனிக்க இயலும் சார் ! பனிக்காலத்தில் துவங்கும் முதல் அத்தியாயத்துக்கு வெளீர் நிறங்கள் ; மெல்லிய நீலம் என்றும் ; நடுவில் உள்ள அத்தியாயங்களில் கதையின் அதகளத்தன்மைக்கு நிகராய் அதிரடி அடர் வர்ணங்களும் ; கடைசி அத்தியாயத்துக்கு வெயில் படர்ந்த பாலை பூமியின் வெப்பத்தை உணர்த்த பளீர் மஞ்சள் என்றும் கலரிங் தொனிகளிலேயே ஒரு கதை நகர்த்தும் யுக்தி தென்படும் !

      இதில் இன்னமும் அழகு என்னவெனில் - தொடரின் பின்னாட்களில் புது ஓவியர் பொறுப்பேற்கும் சமயம் - சித்திரத் தரம் அசாத்திய உயரத்தைத் தொடுகின்றது !

      Delete
  51. யாஹி ............காலேண்டர் வந்துடுச்சே .........!!!!!

    ReplyDelete
  52. நானும் மூன்று முறை கேட்டு அலுத்து விட்டேன். கடைசியாக ஒரு முயற்சி. Western Union இல் சந்தா பணம் அனுப்ப,

    First name:
    Last name:
    Bank account number:
    IFSC code:

    என்பவை வேண்டும். யாராவது கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Prunthaban : தவறான இடத்தில தகவல்கள் கோரி வருகிறீர்கள் சார் ; ஒரு மின்னஞ்சலில் கேட்டுப் பெற வேண்டிய தகவல்கள் அல்லவா இவை ?

      And நீங்கள் கோரும் விபரங்கள் வங்கி மூலம் பணப் பரிவர்த்தனை செய்திடத் தேவையானவைகளே தவிர்த்து, இந்தியாவுக்கு வெஸ்டர்ன் யூனியனில் பணம் அனுப்பிட அல்ல ! பர்சனல் பெயருக்கு வெஸ்டர்ன் யூனியனில் பணம் அனுப்பிடுவது சுலபம் ; அதற்கு பெயரும், முகவரியும் போதும். அனுப்பியான பின்னே அவர்கள் தரும் MTR நம்பரை மட்டும் குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பினால், இங்குள்ள ஆபிசிலிருந்து பணம் கொடுத்தனுப்பி விடுவார்கள்.

      தவிர, போன முறையே PAYPAL மூலம் அனுப்பிட இயலுமெனில் முயற்சியுங்களேன் என்று சொல்லி இருந்தேன். அது இன்னும் சுலபமே ! lioncomics@yahoo.com என்பதே அதன் ID.

      Delete
  53. தல டெக்ஸ் கையில் எடுக்கவே லேசாக நடுங்குகிறது...

    மெக்ராத், ஆம்ரோஸ் வகையறாவை பார்த்த இந்திய பேட்ஸ்மேன்களை போலத்தான் எனக்கும் ஒரு கிலி...
    இம்முறை கடுமையான போட்டிக்களத்தில் கருப்பு வெள்ளையில் டெக்ஸ் &கோ...
    அட்ரா சிக்ஸ்ங்கிற மாதிரி டெக்ஸ் பளபளக்குது....
    லயன் டாப் 10ன் பழிகேட்ட புலிகள்& வைக்கிங் தீவு மர்ம பாணி ஓவியங்கள் , பழைய ஓவியங்கள் என்றாலே கோல்டன் ஓல்டிஸ் தலைமுறை கதையாகத்தான் இருக்கும், பரபரப்புக்கு பஞ்சம் இராது...

    ட்யுராங்கோவை பார்த்தவுடன் தோன்றியது டெக்ஸுக்கு அடுத்த இடம் இவர்தான் என....
    லார்கோ & டைகர் இருவரையும் ஏக காலத்தில் ஒரு இடம் இறங்கச் செய்யும் வன்மையான நாயகன் இவர்..
    "சின்னத்தளபதி "- பட்டம் மிகச்சரியான ஒன்றுதான் இவருக்கு...
    ஒரு கதை வரும்முன்னே எப்படி ஹிட் அடிக்கும் என நம்புகிறீர்கள் என கேட்ட நெருங்கிய நண்பருக்கு,
    " அந்த அறிமுக ஓவியங்கள் பார்த்த போதே மனசில் ஒரு நம்பிக்கை இவர் கலக்கப் போகும் ஹீரோ"-என பதில் அளித்து இருந்தோம் சில நாள் முன்பு. இப்போது அந்த ஆருடம் உண்மையாகிட்டு....

    மேன் ஆஃப் த 2017 ஜனவரி நிச்சயமாக டியூராங்கோ...!!!

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : மேட்சே இப்போது தானே ஆரம்பிக்கிறது ? அதற்குள் கோப்பையைக் கொடுத்து விட்டால் எப்படி சார் ?

      Delete
  54. Received books and gift also...advance happy new year sir & team...

    ReplyDelete
  55. நன்றி மறவேல். இந்த ஆண்டின் முதல் வாசிப்பை ஷல்லூம் மஉம் ஈ.வி அவர்களுக்கு அர்ப்னிக்கின்ரேன். நன்றி.

    ReplyDelete
  56. புத்தாண்டு பரிசான calender அருமையாக உள்ளது.

    ReplyDelete
  57. அடுத்த ஆண்டு சந்தா savingsஐ இப்போது முதல் தொடங்கி விடுகிறேன்.

    ReplyDelete
  58. நம் காமிக்ஸ் குடும்பத்தினர் அனைவரின் மீதும் ஏகனின் அன்பும்,கருணையும் நின்று நிலவ பிரார்த்திப்போம்.

    எனக்கு புத்தகங்கள் இன்னும் வந்து சேரவில்லை.

    ReplyDelete
    Replies
    1. T.K. AHMEDBASHA : உங்கள் கூரியர் திருப்பத்தூருக்கு தானே சார் இம்மாதம் ? பார்சலை பார்த்தேனே நேற்று !

      Delete
    2. ஆமாம் சார்...!
      இம்முறை உங்களையெல்லாம் சந்தித்தே ஆக வேண்டுமென பல மாதங்களாய் திட்டமிட்டு தேதிகளை அமைத்துள்ளேன்.
      உங்களையும்,மற்ற நண்பர்களையும் சென்னையில் சனிக்கிழமை சந்திக்க ஆஜராகிறேன் இன்ஷா அல்லாஹ்.
      அப்படியே சில நாட்கள் திருப்பத்தூரில் தங்கி புது இதழ்களை ஆசை தீர ரசிக்கவும் நேரம் கிடைத்துள்ளது உண்மையிலேயே அருமையான புத்தாண்டு கொண்டாட்டம் தான்.

      Delete
  59. Surprise gift Calendar very sooper sir.. முதல் மாத மாயாவி படம் தெறிக்குது....
    ட்யுராங்கோ அட்டை அசத்தலா இருக்கு...Stunned...Grey & Red combination is superb...
    2017 is started with a visual treat...

    Thanks for Senior Editor, You, Junior editor and the Team for this excellent job

    ReplyDelete
  60. பார்ஷலை கைப்பற்றியாச்சு.
    காலண்டரை ஹாலில் மாட்டியாச்சு.
    ஆசைதீர அட்டைப்படங்களை ரசிச்சாச்சு.
    (ட்யூராங்கோ கொஞ்சம் எக்ஸ்ட்ரா டைம் எடுத்துக்கொண்டார்.)

    தலையணையை தலைக்குக்கீழே கொடுத்து படிக்கத்தொடங்கியாச்சு..!

    ஹேப்பி நியூ இயர்..!!

    ReplyDelete
  61. நண்பர்களை மற்றும் நம் ஆசிரியரை
    8ம் தேதி ஞாயிறு காலை சந்திக்க ஆவலாக உள்ளேன்.ஈ வி உங்களையும்

    ReplyDelete
    Replies
    1. @ Ganesh k.v

      நிச்சயம் சந்திப்போம் நண்பரே! உங்களைச் சந்திக்க நானும் ஆவலாய் இருக்கிறேன்!

      Delete
  62. ட்யூராங்கோ - அம்சமான அட்டை. செம்ம செம்ம..!!

    அத்தியாங்களின் தலைப்புகள்

    ரௌத்திரம் பழகு
    மனதில் உறுதி வேண்டும்
    தடைபல தகர்த்தெழு

    மூன்றும் ஏற்கனவே வேறு கதைகளுக்கு வைத்திருந்த தலைப்புகள்

    நான்காம் தலைப்பான

    தீதும், நன்றும், பிறர் தர வாரா...!

    மட்டும் புதியது. இதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா சார்.?

    (இன்னும் கதையை படிக்கத் தொடங்கவில்லை. நான்கு இதழ்களையும் புரட்டிப் பார்ப்பதிலேயே இன்றைய பொழுதை ஓட்டிவிடுவேன். எனவேதான் இந்த டவுட்டு..!! :-) )

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு அத்தியாத்தின் முடிவிலும் முற்றுமோ தொடருமோ போடாமல் பயணங்கள் முடிவதில்லை என்று குறிப்பிட்டு இருப்பதும் சிறப்பாக ரசிக்கத்தக்கதாகவே இருக்கிறது. .!!

      Delete
    2. வாழ்த்துக்கள் நண்பா...!

      Delete
  63. விரல் மட்டும் நுழையும் வாய்க்குள் உரலை நுழைத்த கதையாய் மூச்சு திணற வைத்த பணிச்சுமையோடு நிர்வாக கட்டமைப்பை மாற்றும் பணியும் சேர்ந்து கொள்ள திணறித்தான் போனது.
    இரு பதின்ம ஆண்டுகளாய் ரொக்க பரிவர்த்தனை மேற்கொண்டவர்களை இணைய பரிமாற்றத்திற்கு சம்மதிக்க வைக்க –அதற்கான வழிமுறைகளை செயல்படுத்த –எடுத்து கொண்ட நேரத்தில் , சக்தி செலவழிப்பில்
    # டால்டன் சகோதரர்களில் ஒருவனான ஆவ்ரெலின் ஐகூவை 230 என மாற்றியிருக்கலாம்.
    # வறுத்த கறி வாசமேஎனக்கு ஆகாது என கார்சனை சொல்ல செய்து பேலியோ டயட்டிற்கு மாற செய்து இருக்கலாம்.
    # பாரில் நுழைந்த ஜிம்மி கிழவன் எனக்கு கொஞ்சமா ஒரு டீ அதில் துக்கிலியூண்டு லெமன் என ஆர்டர் செய்ய செய்து இருக்கலாம்.
    #கார்ட்டூன் கதையா? உவ்வே.....எனக்கு பிடிக்காது என கிட் ஆர்ட்டின் கண்ணன் வாயால் ஸ்டேட்மென்ட் வாங்கி இருக்கலாம்.
    # ஏந்திழையார் முகம் ரசிப்பதை விட்டு விடுவேன் என சங்கத்தின் நிரந்தர செயலாளர்( ஹி..ஹி) ஈனா வினாவிடம் எழுதி வாங்கி இருக்கலாம்...
    சொந்த கதை போக
    காலண்டர் பார்த்தவுடன் நூறு ரூபாய் நோட்டை கணக்கின்றி தரும் ஏடிஎம் கண்ட சாமான்யன் நெஞ்சம் போல் துள்ளி குதித்தது...
    அட்டகாசம் சார்..............நன்றிகளும் கூட................
    ட்யூராங்கோ முதல் பார்வையிலேயே கட்டமைப்பினால் மனதை கொள்ளை கொள்கிறது
    விரைவில் விமர்சனமும் எழுதப்படும்....
    இரட்டை ஸ்டாலுக்கும் ,பெருக போகும் விற்பனைக்கும்,
    மெலிதான நகைச்சுவை இழையோட எங்களை கட்டி போட்டு வைத்து இருக்கும் அகவை ஐந்தினை தொட்டு விட்ட உங்கள் இனிய – இணைய பதிவு எழுத்துகளுக்கும் வாழ்த்துகள் சார்.
    வரும் ஆண்டு நமது காமிக்ஸ் உலகில் பல்வேறு நிறைவுகளையும் ,ஆனந்தத்தையும் வாரி வழங்க உங்களுக்கும். டீம் லயனுக்கும் காமிரேடுகளுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் .....

    ReplyDelete
    Replies
    1. செனா அனா..!!
      வாங்கோ வாங்கோ..!


      அன்றலர்ந்த தாமரையை வென்றனள்..ங்கறா மேரி என்னோட ஃபேசு உங்க என்ட்ட்ரீயால பிரைட் ஆயிடிச்சி வாத்யாரே..!!

      Delete
    2. ///#கார்ட்டூன் கதையா? உவ்வே.....எனக்கு பிடிக்காது என கிட் ஆர்ட்டின் கண்ணன் வாயால் ஸ்டேட்மென்ட் வாங்கி இருக்கலாம்.
      # ஏந்திழையார் முகம் ரசிப்பதை விட்டு விடுவேன் என சங்கத்தின் நிரந்தர செயலாளர்( ஹி..ஹி) ஈனா வினாவிடம் எழுதி வாங்கி இருக்கலாம்.///

      முன்னதைக்கூட நடத்திவிடலாம். பின்னதை பிரளயமே வந்தாலும் மாற்ற முடியாது. பை பர்த்தே குருநாயர் அப்படித்தான். .!! :-)

      Delete
    3. யப்பா எவ்வளவு நாளாச்சு நம்ம செனா அனா அவர்களின் இம்மாதிரி பின்னூட்டத்தைப் பார்த்து. அடிக்கடி வாருங்கள் சார்

      Delete
    4. @ செனாஅனா

      :)))))))
      வாங்கோ! வாங்கோ! உங்களை இந்த மொத்தத் தளமும் ரொம்பவே மிஸ் பண்ணியது! மீள்வருகை இரட்டை உவகையளிக்கிறது!

      ஆனால் உங்களின் இந்தப் பதிவைப் பார்த்தால் பணப்பரிவர்த்தனைப் பிரச்சினைகளில் சிக்கியவரைப் போல்லல்லாமல் ஏதோ வெளிநாட்டுக்குப் போய் தமிழ் படிச்சுட்டு வந்தா மாதிரி இருக்கு! ;)

      'ஏந்திழையார்'னா என்னன்னு பலபேர்கிட்ட கேட்டு கடைசியா கூகுளில் தேடி 'குழந்தை' என்று அர்த்தம் வருவதைக் கண்டுபிடித்தேன்! ;)

      உங்க வரலாற்றுப் பாடத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!

      @கிட்
      ///
      பை பர்த்தே குருநாயர் அப்படித்தான். .///

      எதுவானாலும் தமிழ்ல்லயே சொல்லுங்க கிட்! ஒரு ஃப்ளோவுல படிச்சு அப்படியே அதிர்ச்சியாகிட்டேன்! :)

      Delete
  64. விஜயன் சார், 5 வருடம் வலைபதிவு - இதற்கு ஏதும் சிறப்பு மலர் கிடையதா. - இப்பக்கு எதற்கு எடுதாலும் சிறப்பு மலர் கேட்கும் நண்பர்ககளை பார்த்து கெட்டு போனவர்ககள் சங்கம் - Parani from Bangalore

    ReplyDelete
  65. ஆரம்பமே சிக்ஸர்...!!!
    ஆசிரியரின் உத்தரவாதம் 100%+ நிறைவேற்றம்.
    அட்டைப்படங்களை உலக தரத்தில் அமைப்பதை வழக்கமாக்கொண்டுள்ளார் ஆசிரியர்.
    உள்பக்கங்களை தீய உள்நோக்கம் உள்ளவர்கள் மட்டுமே குறைகூற முடியும்.கண்களுக்கு எதிர்பாரா விருந்து கிடைத்துள்ளென்றால் மிகையாகாது சார்.....
    ஒரு WORLD CLASS தயாரிப்புடன் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளீர்கள்.
    அசந்து விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. இப்பல்லாம் வசிஷ்டர் அடிக்கடி பட்டம் கொடுக்கிறாரே!!
      அடுத்த தபா 'பிரம்மரிஷி' பட்டத்திற்குப் பதிலாக 'கெளரவ டாக்டர்' பட்டம் கொடுத்தால் பரவாயில்லை! 'டியர் டாக்டர் எடிட்டர்'னு பின்னூட்டம் எழுத ஆரம்பிச்சா ஒரு கிளுகிளுப்பாத்தான் இருக்கும்!;)

      Delete
  66. இம்மாத TeX willer செமம திர் ல்ர்.

    ReplyDelete
  67. அன்பு நண்பர்கள் அனைவருக்கும் அருமை ஆசிரியர் அவர்களுக்கும் அவருக்கு உறுதுணையாக விளங்கும் சிவகாசி ஆபீஸ் நண்பர்களுக்கும் அற்புதமான புத்தாண்டு வாழ்த்துக்கள் ..டிஜாங்கோ நான் சிறு வயதில் பார்த்த அட்டகாசமான ஆங்கில படம் .மறுபடியும் அதேஹீரோ ....அருமை சார் காலண்டர்? 365 நாளும் உங்களை நினைத்து கொண்டே இருக்க இது ஒரு நல்ல யுக்தி .வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  68. தம்பி டீ இன்னும் வரலை

    ReplyDelete
  69. ஆரம்பமே சிக்ஸர்...!!!
    ஆசிரியரின் உத்தரவாதம் 100%+ நிறைவேற்றம்.
    அட்டைப்படங்களை உலக தரத்தில் அமைப்பதை வழக்கமாக்கொண்டுள்ளார் ஆசிரியர்.
    உள்பக்கங்களை தீய உள்நோக்கம் உள்ளவர்கள் மட்டுமே குறைகூற முடியும்.கண்களுக்கு எதிர்பாரா விருந்து கிடைத்துள்ளென்றால் மிகையாகாது சார்.....
    ஒரு WORLD CLASS தயாரிப்புடன் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளீர்கள்.
    அசந்து விட்டேன்.

    ReplyDelete
  70. எடிட்டர் சார்
    புலி வாலை பிடித்து விட்டீர்கள்?????
    நான் காலண்டரை சொன்னேன்
    இனி வருடா வருடம்
    காலண்டர் கொடுத்தாகனும்!!!!!

    அப்புறம் நான்கு இதழ்களுமே அருமை
    ஒன்றை ஒன்று போட்டி
    போடுகிறது
    டெக்ஸ் . மாயாவி வழக்கம் போல் சூப்பர்
    ஒரு வருடம் பார்க்காமல் இருந்த ப்ளு கோட் முதலில் படிக்கிறேன்
    நாளை ஜனவரி1 அன்று சத்தமின்றி யுத்தம் செய்ய போகிறேன்
    இந்த வருடம் முழவதும் சொன்னது போல் இதழ்களை
    அருமையாக கொடுத்ததற்கு உங்களுக்கும் அந்த 4+1+1 குழுவிற்கும் நன்றி நன்றி

    ReplyDelete
  71. Wish you all very happy new year 2017... Special thanks and wishes to Mr Vijayan & his team for making 2017 an intersting year.

    ReplyDelete
  72. சத்தமின்றி யுத்தம் செய். சாதனை செய்கிறது.

    ReplyDelete
  73. இந்த மாத இதழ்கள் அனைத்தும் அருமை.

    ReplyDelete
  74. Dear Editor

    The calendar gift had me really excited. Thanks to Founding editor. Wish you all A Happy New Year 2017

    ReplyDelete
  75. புத்தாண்டு பிறந்துவிட்டது! அனைவருக்கும் வாழ்த்துகள் நண்பர்களே! :)

    ReplyDelete
  76. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  77. நண்பர்கள், சகோதரர்கள், சகோக்கள், ஆசிரியரின் பணியாளர்கள், ஜூனயர் எடிட்டர், மூத்த ஆசிரியர், & அன்பின் ஆசிரியர் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு 2017 ன் வாழ்த்துக்கள்....
    எல்லா நலமும் பெற்று அனைவரும் மகிழ ஆண்டவரின் ஆசியை இந்நாளில் வேண்டி...!!!

    ReplyDelete
  78. எடிட்டர் சார்,

    கொரியரைக் கைப்பற்றியாகிவிட்டது! காலண்டர் - பிரம்மிக்ச் செய்திடும் அட்டகாசமான புத்தாண்டு பரிசு! ரொம்பவே கலர்ஃபுல்லாக ஸ்தம்பிக்கச் செய்யும்படி இருக்கிறது. குறிப்பாக, டைகர் மற்றும் ஸ்பைடர்+ஆர்ச்சி படங்களின் தேர்வும், டிசைனும் அருமை அருமை! வீட்டிலிருப்பவர்களிடமெல்லாம் காலண்டரின் பக்கங்களைப் புரட்டிக் காட்டிப் பெருமிதப்பட்டுக் கொண்டேன்!

    அழகான புத்தாண்டுப் பரிசளித்த சீனியர் எடிட்டருக்கு நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்! _/\_

    ReplyDelete
  79. அடுத்த சிலாகிப்பு - ட்யூராங்கோ பற்றியது! அட்டைப் படத்தை இங்கே தளத்தில் பார்த்ததைவிட நேரில் பார்க்கப் பலமடங்கு பிரம்மிப்பளித்தது! புத்தக வடிவமைப்பும், சித்திரங்களும் 'என் பெயர் டைகரை' நினைவுபடுத்தியது! ட்யூராங்கோவின் அந்த முதல்பக்க க்ளோஸ்அப் சித்திரம் பிரம்மிப்பளிக்கிறது!

    வழக்கமான சம்பிரதாயங்கள் (தடவிப் பார்ப்பது, மை வாசனை பிடிப்பது, etc.,) முடிந்தபிறகு, கதையைப் படிக்க சற்றே ஆசுவாசமான நேரத்திற்காகக் காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  80. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  81. என்னதான் எதிர்பார்க்காத பதிவொன்று நேற்றே வந்துவிட்டாலும் புத்தாண்டு+வழக்கமான ஞாயிறுக்கு ஒரு சிறப்புப் பதிவு இல்லையென்றால் எதையோ மிஸ் பண்ணியதைப் போல ஒரு உணர்வு எழுமென்று தோன்றுகிறது!

    என்ன நண்பர்களே, நான் சொல்வது சரிதானே? ( டெம்ப்ளேட் உதவி : L.கர்ணன்)

    ReplyDelete
  82. @ ALL : புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே !!

    அந்த சனிக்கிழமை நமைச்சல் அதனை சுலபத்தில் போய் விடுமா - என்ன ? இதோ 15 நிமிடங்களில் திரும்புகிறேன் - புதுசாய் ஒரு பதிவோடு !

    ReplyDelete
    Replies
    1. ஆஹாஹாஹாஹா... சூப்பரே!

      Delete
    2. ஆனால், '15 நிமிடங்களில் ஒரு பதிவு'ன்னா "நண்பர்களே! வணக்கம்"னு டைப் பண்ணி பப்ளிஷ் பண்ணத்தானே நேரமிருக்கும்?!!

      Delete
    3. புத்தாண்டு வாழ்த்துக்கள் to all

      Delete
  83. வணக்கங்கள் நண்பர்களே.!

    அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.!!

    சீனியருக்கும்,திரு விஜயன் அவர்களுக்கும் ஜூனியருக்கும் என் ஸ்பெஷல் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.!!

    இன்றுமுதல் இந்த ஆண்டு முழுவதும் உங்களை தினம் ஒரு புதிய சிந்தனையுடன் சந்திக்கும் 'டூ இன் ஒன்' மாத்தியோசி முயற்சியை துவக்க திட்டமிட்டுள்ளேன்.

    முதலில் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லும்...இங்கே 'கிளிக்'

    மாத்தியோசி முயற்சியும் துவக்கமும் இன்று நன்பகலில்.!

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டுக்குப் பயனுள்ள செய்தியுடன் இங்கே க்ளிக்கியிருக்கிறீர்கள் மாயாவி அவர்களே! செம!

      Delete
  84. எடிட்டரின் புதிய, புத்தாண்டுப் பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete
  85. 🆕 year wishes to everyone. May this 🆕 year brings more happiness and success to you and your dear ones 🎆 🎇 🌟 🎉

    ReplyDelete
  86. முதல் மாத சர்பரைஸ் கிப்ட் காலண்டர் அசத்தல் ரகம் சார்! வாவ்! அதுமட்டுமில்லாம என்னோட பிறந்தநாள் மாசமான மார்ச் மாதத்தில் தலைவர் கேப்டன் டைகர் படம், சூப்பரோ சூப்பர்! எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், டுரோங்கோ போன்ற புது நாயகர்களுடனான வாசிப்பு அனுபவங்களுடனும்,வலெரியன் போன்ற புது கதைகளை எதிர்நோக்கியும்... 2017ஐ துவங்குகிறேன்!:)

    ReplyDelete
  87. டெக்ஸ் தலைப்பு
    ஆவிகளின் சரணாலயமா..?!
    ஆவியின் ஆடுகளமா...
    ஒரே குழப்பம்... புத்தகம் வந்தால் தான் முடிவாக தெரியும் போல

    ReplyDelete