Sunday, November 27, 2016

ஒரு சோம்பல் முறிப்பு !

நண்பர்களே,
            
வணக்கம். ஒவ்வொரு சனிக்கிழமையும் பொழுது சாய்ந்த பின்பாகப் பேப்பரையும், பேனாவையும் தூக்கிக் கொண்டு, இந்த வாரத்துப் பதிவுக்கு என்ன எழுதலாமென்ற ‘ரோசனைக்குள்‘ லயிப்பது வழக்கம். ஆனால் இந்தப் பதிவை நான் எழுதியதோ- வியாழன் இரவினில் ! டிசம்பரின் தயாரிப்பில் வண்ண இதழ்கள் சகலமும் இம்முறை சடுதயாய்த் தயாராகிட, b&w இதழான “நீதிக்கு நிறமேது?” மாத்திரம் பின்தங்கி விட்டது ! “அட.... கறுப்பு வெள்ளை இதழ் தானே ? நொடியில் தயார் பண்ணிக்கலாம் !” என்ற மெத்தனம் லேசாய் மனதில் குடியிருந்ததும் இதற்கொரு காரணம் ! ஆனால் பக்க நீளமும் சற்றே அதிகம் ; கதையினில் வசனங்களும் கூடுதல் என்ற போது நான் எதிர்பார்த்ததை விடவும் இந்த இதழின் பணிகள் அதிக நேரம் பிடித்துவிட்டது ! ஒரு வழியாய் வியாழன் இரவில் என் பேனாவின் பணிகள் நிறைவுற - "ஹை !! நடப்பாண்டின் பணிகள் சகலமும் முடிந்தது டோய் !!" என்ற ஞானோதயம் பிறந்தது !  ‘அக்கடா‘வென அந்த நொடியின் ஏகாந்தத்தை அனுபவித்த போதே - இவ்வாரத்துப் பதிவையும் எழுதிடத் தோன்றியது ! ஒரு 12 மாதப் பயணத்தின் இறுதி இதழின் பணிகளுக்கு ‘சுப மங்களம்‘ போடும் அந்தத் தருணம் கொஞ்சமே கொஞ்சமாய் ரசித்திட வேண்டிய பொழுதாகப்பட்டது எனக்கு ! ஒவ்வொரு டிசம்பரிலும் இப்போதெல்லாம் இது போன்றதொரு வேளை உதிப்பதுண்டு தான் ; நிமிர்ந்து பார்ப்பதற்குள் ஜனவரியும், இன்னுமொரு நெடும் பயணமும் காத்திருப்பதும் புரிகிறது தான் ! ஆனாலும் முழுப்பரீட்சை லீவுகள் அறிவிக்கப்படும் அந்த நாளினில் ஒரு மாணவன் அனுபவிக்கும் குதூகலத்தில் ஒரு குட்டி சதவிகிதம் எனக்குள் இந்த நிமிடத்தில் அலையடிக்கிறது!

2015-ம் கூட நமக்கொரு படுபிசியான ஆண்டே ! அப்போதும் 45+ இதழ்களைப் போட்டுத் தாக்கியிருந்தோம் தான் ! So சென்றாண்டின் இதே சமயத்திலும் கூட இந்த சந்தோஷச் சோம்பல் முறிப்பு அரங்கேறியிருக்கும் தான் ! ஆனால் 2016 - எண்ணிக்கையின் விகிதத்தில் மட்டுமன்றி, இன்னும் சில பல காரணங்களினால் ரொம்பவே unique ஆனதொரு ஆண்டென்று சொல்லத் தோன்றுகிறது ! கதைகளை genre வாரியாகப் பிரிக்கும் முயற்சிகளுக்கொரு பிள்ளையார் சுழி போட்டது நடப்பாண்டில் தான் எனும் போது அது காரணம் # 1 என்பேன் ! இது வரையிலும் ‘திகில்‘; ‘மினி லயன்‘; ‘ஜுனியர் லயன்‘ என்று முற்றிலும் வெவ்வேறு பத்திரிகைகளாக நாம் பிரசுரித்து வந்த (சொற்ப) நாட்களில் இந்தக் கதைகளுக்குள்ளான பாகுபாடு அமலில் இருந்தது ! ஆனால் அவை சடுதியில் சயனம் செய்ய நேர்ந்த பின்பாக இந்தாண்டு வரைக்கும் ஒரே இலையில் கூட்டு ; பொரியல் ; பாயாசம் ; பாயா; என்று சகலத்தையும் பரிமாறி வந்திருந்தோம் ! சந்தாக்களுள் தனித்தனித் தடங்கள் அவசியமானதொரு சமாச்சாரமாகிப் போனது - ‘தனி ராஜ்யம்‘ என்ற டெக்ஸ் வில்லர் கொடி பறக்கத் தொடங்கிய வேளை முதலாகவே என்பேன் ! 12 மாதங்களும் ; 12 விதவிதமான டெக்ஸ் கதைகளும் வெளியான பின்பாக ‘சர்வமும் நானே‘ என்று சொல்லிட நம்மவருக்கு சாத்தியமாகிறதென்றால் அதுவொரு சாதனையே என்று தான் சொல்வேன் ! ஆனால் அது பற்றிய அலசல்களுக்கு இன்னமும் நாட்கள் உள்ளன என்பதால் தற்சமயத்துக்கு steering clear of it!

ஆக்ஷன் கதைகளுக்கொரு சந்தா ; போனெல்லியின் b&w படைப்புகளுக்கொரு சந்தா ; கார்ட்டூன்களுக்கொரு சந்தா ; மறுபதிப்புகளுக்கென்று என்ற தெள்ளத் தெளிவான 4 தனித்தனிப் பாதைகளை 2016-க்கென வகுத்துக் கொண்டு பணியாற்றியதால் இந்த ஆண்டின் நிறைவில் எனக்குள் சந்தோஷம் ஒரு மிடறு ஜாஸ்தி என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! அடுத்த சில நாட்களில் டிசம்பரின் ‘பொட்டி‘ உங்களைத் தேடிப் புறப்பட்டான பின்னே ; கதைகளை வாசித்திட / விமர்சித்திட ஓரிரு வார அவகாசம் தந்தான பின்னே - 2016 பற்றிய 'திரும்பிப் பார்த்தலைத்' துவக்கிடலாம் ! ஆனால் இந்த நொடியில் நான் திரும்பிப் பார்க்க விழைவதோ - கடந்துள்ள 365 நாட்களது எனது பணிசார்ந்த நினைவலைகளை ! 

சட்டத்திற்கொரு சவக்குழி”யோடு ஜனவரியைத் தொடங்கியது நேற்றைக்குப் போல ஒரு கணத்திலும், ஒரு மகாமகத்துக்கு முன்பான நிகழ்வு போல மறுகணத்திலும் தோன்றுகிறது ! 2016-ன் பக்க எண்ணிக்கையினில் ‘தல‘ தாண்டவம் மாத்திரமே சுமார் 2300 பக்கங்கள் என்பதை இப்போது ஆற அமர தலைக்குள் ஓட அனுமதிக்கும் போது திகைப்பாய் உள்ளது ! பேசிய அதே பன்ச் வரிகளை திரும்பவும் ஏதேனும் ஒரு இதழுக்கு எழுதித் தொலைத்து விடக் கூடாதே என்ற பயத்தில் - இரவுக் கழுகாருக்காக புதுசு புதுசாய் டயலாக்குகளை உருவாக்க நான் செலவிட்ட இரவுகள் தான் மனதில் இப்போது நிழலாடுகின்றன ! அவை சிறப்பாய் அமைந்ததாக நீங்கள் நினைத்தாலும் சரி ; மொக்கையாகத் தோன்றியதாகக் கருதினாலும் சரி - அந்த வரிகளை எழுத செலவாகிய பொழுதுகளே நான் இங்கு நினைவுகூர்ந்திடும் சமாச்சாரம் !   நாட்கள் நகர நகர, நமது நாயகரின் மவுசும் கூடக் கூட, வரிகளின் வீரியமும் அதற்கேற்ப அமைந்திட வேண்டுமென்ற ஒற்றை சிந்தனை மட்டுமே இந்தாண்டு முழுவதற்கும் எனக்குள்ளே உறைந்து வந்தது ! “திகில் நகரில் டெக்ஸ்” & “விதி போட்ட விடுகதை” சற்றே off the beaten Tex track என்ற அங்கீகாரம் கிட்டிய போது பிரகாசமான எங்கள் வதனங்கள் - மெகா சைசிலான “தலையில்லாப் போராளி” யின் சமயம் ஆயிரம் வாட்ஸ் பல்ப் போலாகியது ! அந்த இதழின் சித்திர பிரம்மாண்டம் நம்மிடையே ஏற்படுத்திய தாக்கம் 2016-ன் மறக்க இயலாத் தருணங்களில் ஒரு முக்கிய இடம்பிடிக்குமென்று நினைக்கிறேன் ! ஈரோட்டில் இத்தாலி ; சர்வமும் நானே - என்று இன்னமும் வர்ண ஜாலங்களை நமது மஞ்சள் சட்டைக்காரர் தலைக்குள் விட்டுச் சென்றுள்ளதையும் இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும் ! 

‘தல புராணத்து‘க்குள் புகுந்தால் வாய் சுளுக்கும் வரை ஓய மாட்டேனென்பதால் – லேசாகப் பார்வையை மற்ற சாமான்ய நாயகர்கள் பக்கமாய்த் திருப்பும் போது - இந்தாண்டின் பணிகளுக்குள் எனக்கொரு உச்ச திருப்தியைத் தந்த மர்மமனிதன் மார்டின் தான் அழுத்தமாய் நினைவில் நிற்கிறார் ! “இனியெல்லாம் மரணமே” இதழினைக் கையாண்டதும், அதற்கெனப் பேனா பிடித்த (சிரம) நாட்களும் மறக்க இயலா ஞாபகங்களாய்த் தொடர்ந்திடும் என்னுள் ! களம் எப்போதுமே சுலபமானதாக இராது என்பது தெரிந்திருந்தாலும் - ஒவ்வொருமுறை மார்ட்டினோடு கைகுலுக்கும் போதும் ஒரு சன்னமான குஷி எனக்குள் பொங்கிடுவதுண்டு ! மரத்தைச் சுத்தி வந்து டூயட் பாடுவதுமே நமது நாட்களின் ஒரு அத்தியாவசியப் பகுதி தான் என்றாலும், எப்போதாவது கிடைக்கும் இது போன்ற சறுக்குமரம் ஏறும் சவாலான வாய்ப்புகள் தரும் திருப்தி ரொம்பவே பிரத்யேகமானது ! அந்த விஷயத்தில் “இனி எல்லாம் மரணமே” 2016-ன் standout என்பேன்- எனது பணிசார்ந்த அளவுகோல்களில் ! அது உங்களாலும் சிலாகிக்கப்பட்டதொரு இதழாக அமைந்தது bonus !!

ரசித்துப் பணி செய்த இன்னுமொரு ஆல்பம் - நமது பென்சில் இடையழகி ஜுலியாவின் “நின்று போன நிமிடங்கள்” கூடத்தான்! ஆரவாரமிலா ; அதிரடியிலா யதார்த்த நாயகி என்பதால் இவருக்கான மொழிநடை எனது வழக்கமான ‘கடமுட‘ பாணியில் இல்லாது சுலபமாய் அமைந்திட வேண்டுமென நிறையவே மெனக்கெட்டேன் ! End result - காயா? பழமா? என்பதை நானறியேன் ; ஆனால் சுவாரஸ்யம் தந்த project-களுள் “நி.போ.நி.” மும் ஒன்று !

சவால்கள் எல்லா வேளைகளிலும் சீரியஸ் ரகங்களில் இருக்கத்தான் வேண்டுமென்பதில்லை ; ‘கெக்கே-பிக்கே‘ பார்ட்டிகளின் படலங்களிலும் கூட நிறையவே பஸ்கி எடுக்க வேண்டி வரலாமென்பதை மாதந்தோறும் நினைவூட்டிய புண்ணியம் சந்தா C-ஐச் சாரும் ! துவக்கமே “சூ மந்திரி காலி” யின் மிரட்டலிலிருந்து என்றபோது ஜனவரியில் தொடங்கிய மண்டைப் பிறாண்டல் வெகு சொற்பமான மாதங்கள் நீங்கலாகப் பிடிவாதமாய்த் தொடர்ந்தது ! மதியில்லா மந்திரி கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பானது ஒரு நிகரில்லா உச்சம் என்பது என் அபிப்பிராயம் ! வார்த்தைகளில் புகுந்து அவர்கள் ஆடும் சித்து விளையாட்டினை தமிழுக்கும் அப்படியே கொண்டு வருவது கிட்டத்தட்ட நடவாக் காரியம் ! ஆனாலும் இயன்றமட்டிலும் முயற்சிக்காவிடின் இந்தக் குள்ளவாத்தாரின் குறுங்கதைகள் சோபிக்காது என்பதால் சென்றாண்டின் இதே வேளையில் சூ... மந்திரி காலியோடு மல்யுத்தம் போட்டுக் கொண்டிருந்தது நினைவில் நிற்கிறது ! And இந்தாண்டின் டிசம்பரில்  - 2017  பிப்ரவரிக்காக அதே மந்திரியாரோடு இப்போதும் WWF நடத்திக் கொண்டிருப்பதொரு சந்தோஷ coincidence என்பேன் ! 

சிரமங்களின் பொருட்டு மட்டுமல்ல, சுலபங்களின் பொருட்டும் சில நாட்கள் நினைவில் தங்கின ! அதில் குறிப்பிட்டுச் சொல்வதாயின் ரின்டின் கேனின் “பிரியமுடன் ஒரு பிணைக்கைதி”யைச் சொல்லலாம். ஜாலியான அந்த ஞானசூன்யத்துக்குப் பின்னணிக் குரல் கொடுப்பது எப்போதுமே குஷியானதொரு பணி ! And லக்கி லூக்கின் “திருடனும் திருந்துவான்” இதழிலும் ரி.டி.கே. சுற்றி வந்து எனது பணி மேஜையை சில வாரங்களுக்காவது செம ஜாலியாக்கியது நினைவில் நிற்கும் moments ! ஸ்மர்ப்ஃப்களும், சுட்டிப் புயல் பென்னியும் கூட இதே பாணியில் சந்தோஷ மீட்டர்களை உச்சப்படுத்தியவர்கள்- தத்தம் கதைக்களங்களில் வியாபித்துக் கிடந்த அந்த cho sweet factor களின் பொருட்டு ! அதிலும் “ஒரே ஒரு ஊரிலே” ஒரு செம அனுபவம் - எனக்காவது!!

ஆக்ஷன் & adventure கதைகள் சார்ந்த சந்தா A-வில் மாமூலான அடிதடிகளுக்கு மத்தியில் வேறுபட்டு நின்றவர்கள் கேரட் தலை கமான்சேவும், புதிர் நாயகர் ஜேஸன் ப்ரைஸும் தான் என்பேன் ! கமான்சேவின் கதைக்களம் அத்தனை வீரியமானவையல்ல என்றாலும் - ஒரிஜினல்களின் ஸ்கிரிப்ட்டில் ஏகமாய் அழுத்தம் தந்திருப்பார் கதாசிரியர் க்ரெக் ! அதனை ஓரளவுக்குத் தமிழாக்கத்தின் போது பத்திரப்படுத்த முயற்சித்து நான் இழந்த கேசம் எக்கச்சக்கம் என்பேன் ! “அட... இந்தக் கதைக்கு அப்படியென்ன மெனக்கெடல் தேவை ?” என்று மேலோட்டமாய்த் தோன்றலாம் தான் ; but trust me guys - கதைநடைக்கான ஒரிஜினல் வரிகள் அபரிமித ஆழம் கொண்டவை ! 

ஆண்டின் இறுதிகளில் எட்டிப் பார்த்த ஜேஸன் ப்ரைஸ் இன்னுமொரு நினைவில் நிற்கும் performer ! டிசம்பரில் காத்துள்ள பாகம் 2-ன் பொருட்டு ஏகமாய் உழைத்தது வெகு சமீபமாய்த் தான் என்பதால் மட்டுமன்றி - அந்த அசாத்திய மர்ம முடிச்சுகளின் காரணமாகவும் நினைவில் தங்கியுள்ளது ! அடுத்த சில நாட்களில் இந்த ஆல்பத்தைப் படித்து விட்டு நீங்கள் ‘மெர்செல்‘ ஆகப் போவது சர்வ நிச்சயம் !

ஆனால் இந்தாண்டின் நாக்குத் தள்ளச் செய்த நினைவுகளின் உச்சத்தை நல்கியவர் நமது உடைந்த மூக்கார் தான் ! “என் பெயர் டைகர்” ஆல்பத்தின் முதற்கட்ட மொழிபெயர்ப்பு கருணையானந்தம் அவர்களது உபயம் ! SO ‘மட மட‘ வென்று 2 மாத அவகாசத்தினுள் மொழிபெயர்ப்பும் ; தொடர்ந்த சில வாரங்களில் நம்மிடத்தில் டைப்செட்டிங்கும் பூர்த்தியாகி பிப்ரவரியின் மத்தியிலேயே என் மேஜைக்கு ஒரு லோடு பிரிண்ட்-அவுட்கள் வந்து சேர்ந்து விட்டன ! ஆனால் வறண்ட அந்தக் கதைக்களத்தை ஒட்டுமொத்தமாய் ஒரே ஆல்பமாய் உருவாக்குவதற்குள் ஒரு டஜன் ATM வாசல்களில் ‘தேவுடா‘ காத்து நின்ற மாதிரியான அயர்ச்சியை உணர்ந்தேன் என்றால் அது மிகையில்லை ! நிஜ வரலாறை- கற்பனையோடு  கைகோர்க்கச் செய்து ஒரு டாக்குமென்ட்ரி மாதிரியும் ; ஒரு கௌபாய் ஆல்பம் மாதிரியும் தோற்றமளிக்க திரு.ஜிரௌ முயற்சித்திருப்பதை சிலபல வாரங்களுக்கு நான் பேய்முழியோடு தான் அணுகினேன் ! வ்யாட் ஏர்ப் ; கோசைஸ் ; ஓ.கே.கோர்ரல் துப்பாக்கி சம்பவம் என வன்மேற்கின் பல “பெரிய பெயர்கள்” பக்கத்துக்குப் பக்கம் வலம் வருவதால் - கதாசிரியர் வழக்கம் போல கற்பனையில் உதிக்கும் அதிரடிகளை அரங்கேற்ற இயலாச் சூழ்நிலைக் கைதியாக இருப்பது தெளிவாகவே புரிந்தாலும் – இதனை நமது வாசகர்கள் எவ்விதம் ஏற்றுக் கொள்வார்களோ ? என்ற பயத்தில் ஜிங்ஜர் பீர் குடித்த மந்தி போலத் தான் திரிந்தேன் ! ரொம்பவே காய்ந்து தெரிந்த கதைக்களத்தினில் மொழியாக்கத்திலாவது லேசாகக் காரமூட்ட முயற்சித்து அடுத்த ஒன்றரை மாதங்களைச் செலவிட்டிருப்பேன் - தினமும் ஒரு குறிப்பிட்ட அளவிலான பக்கங்களைக் கையில் எடுத்துக் கொண்டு ! “மின்னும் மரண” உச்சத்துக்குப் பின்பாக - “என் பெயர் டைகர்” எவ்விதம் சோபிக்குமோ என்ற பீதி தான் 2016-ன் ‘லக லக லக‘ moment எனக்கு ! ஆனால் பட்டி, டிங்கரிங் செய்யப்பட்ட அந்தப் பக்கங்களை ஒட்டுமொத்தமாய், ஒரே ஆல்பமாய் வாசிக்க முடிந்த போது அதனை நீங்கள் அழகாய் ரசித்தது இந்தாண்டின் சந்தோஷ ஆச்சர்யத்தின் சிகரம் என்பேன் ! ‘ஐயே... மொக்கை!‘ என்று ஒற்றை வரியில் இதைத்  தூக்கிப் போட்டு விட்டு நகர்ந்திருப்பின் நிச்சயமாய் அதனில் நான் பிழைகண்டிருக்க முடியாது தான் ! ஆனால் மாறி வரும் நமது ரசனைகளுக்கும், முதிர்ச்சியின் தாக்கங்களுக்கும் இந்த இதழின் வெற்றியே பிரமாதமானதொரு சான்று என்பேன் ! Ufffff !!! #அந்த நிம்மதிப் பெருமூச்சு moment 2016 !

முதிர்ச்சியின் தலைப்பிலிருக்கும் போதே இந்தாண்டின் விற்பனையில் கணிசமான தாக்கத்தை உண்டு பண்ணியுள்ள திருவாளர். ஸ்பைடரும் எட்டிப் பார்க்கிறார்- ஒரு டிரேட் மார்க் இளிப்போடு ! “என் பெயர் டைகர்“ கதையை ரசித்த அதே மூச்சில் கடத்தல் குமிழிகளையும், டாக்டர் டக்கரையும் சிலாகித்துள்ளீர்கள் எனும் போது உங்களுக்குள்ள ரசனைகளின் முகங்கள் தான் எத்தனை ? என்று மண்டையை லைட்டாகச் சொரிந்து நிற்கிறேன் ! ஆனால் பந்தியில் பாயாசமும் சுவையே, பாயாவும் சுவையே ; பாஸந்தியும் சுவையே என்பதால் - absolutely no complaints at all ! 

கேக்கின் மேலே ஐசிங்... அதன் மேலொரு செர்ரிப் பழம் என்பது போல - இந்தாண்டில் நமக்கு பிரெஞ்சு அரசிடமிருந்து கிட்டியுள்ள அங்கீகாரம் தான் ஒட்டுமொத்த வருஷத்தையே வேறொரு பரிமாணத்திற்கு இட்டுச் சென்றிடுகிறது ! வெகு சமீபமாய் மான்யத் தொகையின் ஒரு முதல் கட்டம் நம்மை வந்து சேர்ந்துள்ளது ! தொகை ஐந்திலக்கத்திலானது என்றாலும் - அதன் பின்னுள்ள அன்பும், ஆதரவுக் கரமும் அசாத்திய ஆற்றல் வாய்ந்தவை என்ற புரிதல் சுட்டிப் புயல் பென்னியைப் போல ஜிங்-ஜிங்கென்று LIC கட்டிடங்களைத் தாண்டித் தாவிடும் சக்தியை எங்களுக்கு  நல்கியது போல உணர்கிறோம் ! அந்த சந்தோஷ உச்ச moment 2016 !! 

அது மாத்திரமன்றி - திடீர் மறுபதிப்புகளாய் ‘முத்து மினி காமிக்ஸ்‘ தலைகாட்டியதும் ; அதைச் சார்ந்து அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு உங்கள் சார்பில் செய்திட்ட ஐந்திலக்க நன்கொடையும் மனநிறைவை முழுமையாக்கிய காரணிகள் ! (கருப்பு மார்க்கெட் / க்ரே மார்க்கெட் என்ற காரசாரங்கள் ஓடிக் கொண்டிருந்த வேளைதனில் - "அந்தப் பணத்தை செலுத்தியாச்சா ? " என்று ஆவேசக் குரல் கொடுத்து வந்த "உயிர்ப்பிக்கும் நண்பர்களுக்க்கும் சேர்த்தே இந்தச் சேதி  : "கவலையே வேண்டாம்  ; உரிய வேளையில், தொகை உரியவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டது !)
  • சாதித்தோமா? சொதப்பினோமா?
  • கதைத் தேர்வில் வெற்றி கண்டோமா ? மண்ணைக் கவ்வினோமா?
  • மொக்கைகள் கோட்டா கட்டுக்குள் இருந்ததா - 2016-ல் ? அல்லது ஜாஸ்தி தானா ? 
என்ற தர்க்கங்களுக்கெல்லாம் அவரவரிடம் விதவிதமான அபிப்பிராயங்கள் இருந்திடலாம் தான் ! ஆனால் இயன்றதைச் செய்தோம் ; சில பல புன்னகைகளை விதைத்தோம் ; எங்கள் முகங்களிலும் அந்தப் புன்னகை ஆண்டிறுதியில் நிலைத்திருக்கிறது என்ற சன்னமான ஆத்மதிருப்தியே போதும் இந்தாண்டை சந்தோஷமாய் நினைவுகூர்ந்திட ! இதன் ஒவ்வொரு நொடியிலும் எங்களோடு பயணித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த மனநிறைவில் பங்குண்டு என்பதால் ஒரு MEGA Thanks all !! இதே மகிழ்வு ஒவ்வொரு டிசம்பரிலும் நமதாகிடும் வரம் கிட்டின் - all will be well ! மீண்டும் சந்திப்போம் all !

P.S : பின்குறிப்பாய் இதனை நான் எழுதுவது - மறந்து போய் விட்டு அப்புறமாய் நினைவு கூர்ந்தல்ல ! பத்தோடு பதினொன்றாய் பதிவின் உள்ளே புதைந்து போய் விடக் கூடாதே  என்ற ஆசையில் have reserved the best for the last !

ஆகஸ்டில், ஈரோட்டுப் புத்தக விழாவின் போது அரங்கேறிய வாசகர் சந்திப்பும், அந்த அதகள சந்தோஷப் பரிமாற்றமும் இந்த வருடத்தை ஒரு ‘மந்திரப் பொழுதாக‘ உருமாற்றியதென்று சொன்னால் அது நிச்சயம் மிகையாகாது ! நிறையமுறை நாம் சந்தித்துள்ளோம் தான் ; ஆனால் நிறையப் பேரை இத்தனை நிறைய நேரம் சந்திக்க முடிந்தது ஒரு அசாத்திய அனுபவம் ! அதை சாத்தியமாக்கிய சேந்தம்பட்டி நண்பர்கள் குழுவுக்கும், உள்நாடு ; வெளிநாடு ; உள்மாநிலம் ; வெளிமாநிலம் என தூரங்களைப் பார்த்திடாது பயணித்திருந்த அத்தனை நண்பர்களுக்கும் எங்களது கரம் கூப்பிய நன்றிகள் ! End of the day - ஒரு வாசிப்பு அனுபவம் என்பதோ ; ஒரு பிரமாதமான காமிக்ஸ்  வெளியீடு என்பதோ ; சேகரிப்பு என்பதோ ஏதேனுமொரு விலை கொடுத்து வாங்கிடக் கூடியதொரு சமாச்சாரமே ! ஆனால் விலைகளுக்கு அப்பால் நிற்கும் இது போன்ற நட்புகளும், நேசங்களும் - சாகாவரம் பெற்றவையல்லவா ? Take a bow people !!! You have  created an almost perfect year !!

இதோ - டிசம்பரில் எஞ்சி நிற்கும் இதழின் அட்டைப்படப் preview !  நடுவினில் உள்ள நம்மவர் மாத்திரமே - நமது ஓவியரின் தூரிகை தயாரிப்பு ; பாக்கி எல்லாமே நமது டிசைனரின் கைவண்ணம் !! அழகாய் அமைந்திருப்பதாய்த் தோன்றியது எனக்கு ! உங்களுக்கு ? Bye all !! See you around !! 



170 comments:

  1. எடிட்டர் சார் ,good night!

    ReplyDelete
  2. சமூகத்துக்கு வணக்கம்

    ReplyDelete
  3. கடவுளே கண்ண மூடி திறக்ககுள்ள 1 வருஷம் ஓடிருச்சு

    ReplyDelete
    Replies
    1. கும்பகர்ணன் கூட ஆறு மாசத்துக்கு ஒருதபா முழிச்சுக்குவாராமே!? நீங்க ஒரு வருசமாவா தூங்கிட்டு இருந்திங்க பாஸு. .!!? :-)

      Delete
  4. வணக்கம். 2016 ஆண்டிற்கான அழகான நிறைவுரை.

    ReplyDelete
  5. குறள் பால்:அறத்துப்பால்.குறள் இயல்:துறவறவியல்.அதிகாரம்:தவம்
    குறள் 263:

    'துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
    மற்றை யவர்கள் தவம்.'

    மு.வ உரை:
    துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ?.

    பரிமேலழகர் உரை:
    மற்றையவர்கள் - இல்லறத்தையே பற்றி நிற்பார், துறந்தார்க்குத் துப்புரவு வேண்டித் தவம் மறந்தார்கொல் - துறந்தார்க்குஉண்டியும் மருந்தும் உறையுளும் உதவலை விரும்பித் தாம் தவம் செய்தலைமறந்தார் போலும். ( துப்புரவு - அனுபவிக்கப்படுவன. 'வேண்டியாங்கு எய்தற்' பயத்தது ஆகலின் (குறள்265) யாவராலும் செய்யப்படுவதாய தவத்தைத் தாம்செய்யும் தானத்தின்மேல் விருப்பம் மிகுதியால் மறந்தார் போலும். எனவே, தானத்தினும் தவம் மிக்கது என்பது பெற்றாம்.).

    மணக்குடவர் உரை:
    துறந்தவர்களுக்கு உணவு கொடுத்தலை வேண்டித் தவிர்ந்தாராயினரோ? இல்வாழ்வார் தவஞ் செய்தலை. இது தானத்திலும் தவம் மிகுதியுடைத்தென்றது.a

    ReplyDelete
    Replies
    1. ஏன் யாருமே அந்த 'காமத்துப்பால்' பகுதிக்கு மட்டும் விளக்கம் சொல்லவே மாட்டேன்றீங்க? என்ன பாவம் பண்ணுச்சு அது?! ;)

      Delete
    2. Erode VIJAY : 'ஆவின் பால்' பூத்தில் அந்த விளக்கம் கிடைக்கக் கூடுமாம் ! ஒரு குரங்குக் குல்லாவைக் காலங்கார்த்தாலே மாட்டிக் கொண்டு ஒரு நடை போய் தான் பாருங்களேன் ?

      Delete
    3. கையிலே ஒரு கிலுகிலுப்பையும், வாயிலே ஒரு லாலிபாப்பும் வச்சுக்கணுமா சார்?

      கிர்ர்ர்ர்...

      Delete
  6. டெக்ஸ் அட்டைப்படம் சும்மா பட்டைய கெழப்புது அருமை சார்

    ReplyDelete
  7. என் உடன்பிறவா காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் என் அன்புகலந்த காலை வணக்கங்கள்.

    ReplyDelete
  8. இந்த வருடத்தின் மற்றொரு சாதனை..
    ஓரே மாத்தில் 13 இதழ்கள் வெளியிட்டதும்
    சென்ற தீபாவளி மாதத்தில் 8 இதழ்கள் வெளியிட்டதும் அபார பாய்ச்சல் (சுட்டி பயல் பென்னியை போல) இந்த வருடத்திய சாதனை தானே சாா்.

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைகும்.
    அன்பு ஆசிரியரே...!
    தீபாவளி மலர் "சர்வமும் நானே"
    இப்போது தான் வாசித்து வருகிறேன்.அட்டைப்படம் உலக தரம்.
    உள்பக்கங்களும் அருமையாக உள்ளன.முக்கியமாக எழுத்துகளில் உங்கள் பிரத்யேகமான Flavour வாசிப்பை ஒரு சுகமான அனுபவமாய் அலங்கரிக்கின்றன.
    நீண்ட நாட்களுக்குப்பின் இந்த பரவசத்தை உணருகின்றேன்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. என்ன சார் ரொம்ப நாளா ஆளையே காணோம்! நலம் தானே! மீண்டும் உங்கள் பதிவை பார்ப்பது சந்தோசமாக உள்ளது!

      Delete
    2. Parani from Bangalore : நிறையப் பேரை நிறைய நாட்களாய்க் காணோம் தானே ?

      Delete
    3. அனைவரும் பேங்க முன்னரோ ...ஏடிம் முன்னரோ ரொம்ப பிஸியாக இருப்பார்கள் சார் ..என்ன செய்வது ..

      Delete
    4. Vijayan @ உங்களின் வேதனை தொனிக்கும் கேள்வியை புரிந்து கொள்ள முடிகிறது!

      Delete
    5. //மீண்டும் உங்கள் பதிவை பார்ப்பது சந்தோசமாக உள்ளது!//

      நன்றி பரணி சார்..!!!

      //நிறையப் பேரை நிறைய நாட்களாய்க் காணோம் தானே ?//

      ஆனாலும் நம் ஞயாயிறுகள் புலர்வது இங்கு தானே.
      எங்கு சென்றாலும் வீடு திரும்பியே ஆக வேண்டும் தானே...!!

      Delete
  10. உள்ளேன் ஐயா..!!

    அருமையான பதிவு. .!

    ReplyDelete
  11. /// அடுத்த சில நாட்களில் இந்த ஆல்பத்தைப் படித்து விட்டு நீங்கள் ‘மெர்செல்‘ ஆகப் போவது சர்வ நிச்சயம் !///

    முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கமே இன்னும் குறையவில்லை சார்.! அடுத்த பாகத்துக்காக ஆர்வங்கா வெய்ட்டிங்கு சேஸ்தானன்டி. .!

    ஆனா பார்சல் என்னிக்கு புறப்படும்னு சொல்லாமலயே பதிவை முடிச்சிட்டிங்களே சார்.??!

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : புதன் காலையில் இதழ்கள் உங்கள் கைகளில் இருக்கும்...!

      Delete
  12. சார் உங்கள் வேர்வைத் துளிகளை தூரிகைக்கு கலந்து ...இரத்தத்தையும் நிறமாய் சேர்த்த பதிவு...அருமயான நினைவு கோ/கூறல்கள்....விரிவான அலசல்களுடன் சந்திக்கிறேன்...பனியினூடே பணி....

    ReplyDelete
  13. எடிட்டர் சார் ,தங்கள் பதிவில் காமிக்ஸ் எப்போது எங்கள் கைகளில் கிடைக்கும் என்ற தகவலே இல்லையே சார்?

    ReplyDelete
  14. வணக்கம் சார்...
    வணக்கம் நண்பர்களே...
    நடுங்கும் குளிரில் அல்ல நடுக்கும் குளிரில் மனதுக்கும் உடலுக்கும் இதமான உற்சாகத்தை அள்ளித்தரும் வெந்நீர் குளியல் போன்ற சூடான சுவையான பதிவு...
    ஒவ்வொரு தருணமும் நிறைவான நினைவுகளை விதைத்து விட்டு செல்ல தவறவில்லை...
    அருமையான நினைவு கூர்தல் பதிவு, செம்ம சார்...
    இந்த சிறப்பான தருணங்களை நிஜமாக்கிய முகமறியா உங்களின் அத்துணை பணியாளர்களுக்கும் ஆயிரம் நன்றிகள் சார்...

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : அந்த முகம் காட்டா பின்னணி இல்லையேல் முன்னணியில் நான் நிற்க வாய்ப்பில்லை ! So உங்கள் வாழ்த்துக்களை சேர்ப்பித்து விடுகிறேன் அவர்களிடம் !

      Delete
  15. அட்டகாசமான, சுவையான, செமயான பதிவு! படித்து முடிக்கும்போது ஏதோ ஒரு நிறைவான உணர்வும், ஆனந்தமும் ஒட்டிக்கொள்கிறது!

    எல்லா வகையிலும் நிறைவானதொரு ஆண்டு இது! இதே அனுபவம் என்றென்றும் தொடந்திட ஏதோ ஒன்று யாரிடமோ இறைஞ்சுகிறது! _/\_

    சாதாரணமாகத் தோன்றிய சில இதழ்களின் பின்னும்கூட உங்கள் அசாத்திய உழைப்பு இருப்பது (அவ்விதழ்களைப் படித்தபோதே கொஞ்சம் உணர்ந்தாலும்கூட) இப்போது உங்கள் நடையில் சுவையான இப்பதிவைப் படிக்கும்போதுதான் முழுமையாக உணரமுடிகிறது! ஒரு சவாலான வருடத்தை பல்வேறுவிதமான குட்டிக்கரணங்களுடன் மகிழ்ச்சி பொங்க முடித்திருப்பதற்கு வாசகர்கள் சார்பில் எங்கள் வாழ்த்துகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் எடிட்டர் சார்! உங்கள் அசாத்திய உழைப்பும், உற்சாகமுமே எங்களின் உணர்வுகளை இக்காமிக்ஸ் உலகின்பால் தொடர்ந்து ஜீவித்திருக்கச் செய்பவை!
    காமிக்ஸ் மீதான இந்த லயிப்பு மட்டும் இல்லையென்றால் எங்களில் பலர் ஏரியா ரவுடிகளாக வலம் வந்திருப்போமோ என்னவோ?!! ;) அப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தொடர்ந்து எங்களை மென்மையாக வைத்திருக்க உதவிடும் உழைப்புக்கு நன்றி நன்றி நன்றி!



    ReplyDelete
    Replies
    1. // காமிக்ஸ் மீதான இந்த லயிப்பு மட்டும் இல்லையென்றால் எங்களில் பலர் ஏரியா ரவுடிகளாக வலம் வந்திருப்போமோ என்னவோ?!! ;) //

      இது என்னவோ உண்மைதான் :-)

      Delete
    2. Erode VIJAY : //எங்களில் பலர் ஏரியா ரவுடிகளாக வலம் வந்திருப்போமோ என்னவோ?!!//

      அது ஏனோ தெரியலை : அர்ஜுனும், வடிவேலும் போலீஸ்காரர்களாய் நடித்த ஏதோவொரு படத்தின்டயலாக் தான் நினைவுக்கு வருகிறது !

      Delete
    3. மருதமலை ரவுடி செயலாளர் வாழ்க வாழ்க ..:-)

      Delete
    4. //அது ஏனோ தெரியலை : அர்ஜுனும், வடிவேலும் போலீஸ்காரர்களாய் நடித்த ஏதோவொரு படத்தின்டயலாக் தான் நினைவுக்கு வருகிறது !//

      கிர்ர்ர்ர்ர்ர்ர்...

      Delete
    5. // காமிக்ஸ் மீதான இந்த லயிப்பு மட்டும் இல்லையென்றால் எங்களில் பலர் ஏரியா ரவுடிகளாக வலம் வந்திருப்போமோ என்னவோ?!! ;) //... விஜய் கோர்த்து விட பார்க்கிறார். உசார்பா பூரிக்கட்டை ஞாபகம் இருக்கல்லோ...!!!

      நான்லாம் சேலம் ஸ்டீல்ல பூரிக்கட்டை வாங்கி தந்து உள்ளேன். ஙே...ஙே...ஙே...

      Delete
    6. சேலம் Tex விஜயராகவன் @ அந்த பூரிக்கட்டை எதுக்கு? சப்பாத்தி போடவா அல்லது பூரி போடவா? இந்த அப்பாவிக்கு புரியலை :-) எனக்கு ஒண்ணும் அனுப்ப வேண்டாம்!

      Delete
  16. டெக்ஸ் அட்டைப்படம் - பட்டையைக் கிளப்புகிறது! ஓவியருக்கும், டிசைனருக்கும் ஒரு பூங்கொத்து!

    ReplyDelete
  17. //இயன்றதைச் செய்தோம் ; சில பல புன்னகைகளை விதைத்தோம் ; எங்கள் முகங்களிலும் அந்தப் புன்னகை ஆண்டிறுதியில் நிலைத்திருக்கிறது என்ற சன்னமான ஆத்மதிருப்தியே போதும் //பண்பட்ட நெஞ்சத்தின் ஆழத்தில் இருந்து வருகின்ற அருமையான வார்த்தைகள். இனி வரும் காலங்களிலும் புன்னகை நிலைத்திருக்கும் சார் ..

    ReplyDelete
  18. புத்தகம் எப்போ கிளம்புது பார்சலில்
    3 புத்தகம் தான் இருக்கும் போல
    கிளாசிக் இதழக்கு இன்னும் பணம் அனுப்பல 2 ஆயிரத்துக்கு மேல மோடிஜி பணம் தரமாட்டேன்கிறார்
    .????

    ReplyDelete
    Replies
    1. Anandappane karaikal : மோடிஜி சொல்வது போல மின்னணுப் பரிவர்த்தனைப் பக்கமாய்க் கவனங்களைத் திருப்பிப் பார்க்கலாமே ? ஆன்லைனில் ஆர்டர் போட்டிடலாமே ?

      Delete
  19. விஜயன் சார், இந்த வருடம் சந்தோசத்தை அள்ளித்தந்தது என்றால் அது மிகையில்லை! ஒவ்ஒரு மாதம் புத்தகத்தை கைகளில்; நமது மறுவிஜயதிற்கு பின் மாதம் தவறாமல் சொன்ன தேதியில் எங்கள் கைகளில் புத்தகம் தவழ உங்களின் திட்டமிடல் மற்றும் அதற்கு இணையாக பணிபுரியும் நமது அலுவலக நண்பர்களின் உழைப்பும்தான்; ஒரு கோடி நன்றிகள்!

    இரண்டு பெரிய வாசகர் சந்திப்பு, அந்த நாட்கள் என்று வரும் என்று காத்திருந்த தருணம்கள் நமது விட்டு விசேஷம்களை நினைவுபடுத்தியது! மிகவும் ரசித்த நாட்கள்! இந்த சந்திப்புகளை மறக்க முடியாதா நாட்களாக மாற்றிய நமது காமிக்ஸ் நண்பர்கள் அனைவர்க்கும் எனது நன்றிகள்; இந்த சந்திப்புகள் திகட்டாத அனுபவம்! மீண்டும் உங்களை சந்திக்க ஆவலுடன் உள்ளேன்!

    ReplyDelete
    Replies
    1. @ PfB

      ///இரண்டு பெரிய வாசகர் சந்திப்பு, அந்த நாட்கள் என்று வரும் என்று காத்திருந்த தருணம்கள் நமது விட்டு விசேஷம்களை நினைவுபடுத்தியது! மிகவும் ரசித்த நாட்கள்! இந்த சந்திப்புகளை மறக்க முடியாதா நாட்களாக மாற்றிய நமது காமிக்ஸ் நண்பர்கள் அனைவர்க்கும் எனது நன்றிகள்; இந்த சந்திப்புகள் திகட்டாத அனுபவம்!///

      சூப்பரா சொன்னீங்க! ஒரு கூட்டமாக நண்பர்களையும், எடிட்டர்களையும் சந்திக்கும்போது கிடைக்கும் எனர்ஜி - பல மாதங்களுக்கு நம்முள் நீடித்திருப்பது உண்மை!

      ஒன்றிரண்டு நாட்கள் முழுக்க முழுக்கவே காமிக்ஸ் நண்பர்களோடு கலந்திருப்பது ஒரு வரம்; ஒரு தவம்!

      எதிர்வரும் சென்னை சந்திப்பை எண்ணி இப்போதே மனம் ஏங்கத் தொடங்கிவிட்டது!

      Delete
  20. Replies
    1. Parani from Bangalore : //இரண்டு பெரிய வாசகர் சந்திப்பு, அந்த நாட்கள் என்று வரும் என்று காத்திருந்த தருணம்கள் நமது விட்டு விசேஷம்களை நினைவுபடுத்தியது! மிகவும் ரசித்த நாட்கள்!//

      நூற்றுக்கு நூறு நிஜம் !

      Delete
  21. இந்த மாத இதழ்களை புதன்கிழமை எதிர்பார்க்கலாமா சார்.

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi : உறுதியாய் சார் !

      Delete
  22. மாடஸ்டி பிளைசி

    ReplyDelete
  23. அருமை சார்
    நாட்கள் நல்ல புத்தகமாகி விட்டன
    வரும் நாட்களை எதிர்பார்த்து
    அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. // நாட்கள் நல்ல புத்தகமாகி விட்டன //
      அருமையான வார்த்தைகள்!

      Delete
    2. @ சுரேஷ்

      //நாட்கள் நல்ல புத்தகமாகி விட்டன
      வரும் நாட்களை எதிர்பார்த்து
      அன்புடன்//

      அழகாய் சொன்னீங்க நண்பரே!

      Delete
  24. அனைவருக்கும் வணக்கம்.எடிட்டர் சார்.
    கடந்துபோன இவ்வருட காமிக்ஸூடனான நாட்களையும்,கடந்த ஒவ்வொரு மாத ஆரம்ப தினங்களில் உங்களிடமிருந்து புறப்படும் பொக்கிஷங்களை காண ஆவலுடன் காத்திருந்த நொடிகளும், அதுவும் டெக்ஸ் எனும் மூன்றெழுத்து மாமனிதனின் எதிர்பார்ப்புகளை ஏகத்துக்கும் எகிற வைத்த தலையில்லா போராளி தந்த பரவசமும், செல்ஃபி வித் டெக்ஸ் எனும் கொண்டாட்டங்களும், ஓமகுச்சி சைஸ் முதல் உசிலைமணி சைஸ் வரையிலான ஸ்பெஷல் மற்றும் அனைத்து இதழ்களும், பால்யங்களை மீட்டெடுக்கச் செய்த மும்மூர்த்திகளின் இதழ்களும் இவைகளுடன் வாராவாரம் ஆரவாரமாக உருவெடுக்கும் உங்களது ஞாயிறு பதிவுகளும் அன்றைய தினத்திலும், தொடரும் வாரநாட்களிலும் நமது இணைய குடும்ப உறவுகளின் ஆனந்தம், ஆச்சர்யம், கேலி, கிண்டல்,நக்கல், நையாண்டி பதிவுகளும், அவ்வப்போது பதிவுகளில் திடீர் திருப்பங்களாக வரும் கோபமான பதிவுகளும்(அடியேனுக்கு இதில் முக்கிய பங்கு உண்டு!) மோதல்கள், கடுமையான விவாதங்கள் இவற்றை வைத்து கடுமையான "பாறைகளை போன்ற மனம் கொண்டவர்களோ இவர்கள்"என எட்ட நின்று பார்க்கும்போது தோன்றிய தவறான எண்ணத்தை தவிடுபொடியாக்கி "பாறையல்ல நாங்கள் பனிக்கட்டிகளே" என்று உச்சந்தலையில் ஓங்கி குட்டி உணர வைத்த ஈரோடு புத்தகவிழா எனும் திருவிழா தினத்தில் கரைபுரண்ட வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடிய அன்பெனும் ஆற்றினை இணையம் மூலம் கண்டபோது உணர்ந்தேன் நான் "இது நாள் வரையிலான மோதல்கள் உதட்டளவில்தான் உள்ளத்திலளவில் இல்லையென" (முற்றுப்புள்ளியே இல்லாமல் நீண்டுவிட்டது!). உங்களின் தொடர்ந்த வேளை பளுவிலும் வாரநாட்களில் இடையில் உங்களது திடீர் பதிவுகள், பதில்கள் என்று இவ்வருட நாட்களை இனிமையான நாட்களாய் மாற வைத்த உங்களுக்கும், உங்கள் அலுவலக தோழர்களுக்கும், இணைய உறவுகளுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.காமிக்ஸ் மீதான லயிப்பு மட்டும் இல்லையென்றால் சகோதரர்
    ஈ.வி. அவர்கள் கூறியதைப் போல ஏரியா ரௌடியாக ஜாம்பஜார் ஜக்குவாக நான் உருவெடுத்திருக்காவிட்டாலும், குணா கமலைப்போலவோ, சேது விக்ரமைப்போலவோ மாறியிருப்பேன் என்பது மட்டும் நிஜம்.
    வரும் ஆண்டு நமது இதழ்களில் இன்னும் அதிகமான ஆச்சர்யங்களையும், பலமடங்கு உயர்ந்த விற்பனையையும், இணைய உறவுகளுடனான ஆனந்த அனுபவங்களையும் தர
    வேண்டும் என எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.
    இந்த நேரத்தில் எதையோ இழந்ததைப் போல மனம் கனப்பது எனக்கு மட்டும்தானா?

    ReplyDelete
    Replies
    1. AT Rajan : //இந்த நேரத்தில் எதையோ இழந்ததைப் போல மனம் கனப்பது எனக்கு மட்டும்தானா?//

      விடைகொடுக்கும் தருணங்கள் எப்போதுமே சற்றே கனமானவைகளே ! ஒரு அழகான ஆண்டுக்கு விடைகொடுக்கும் வேளையல்லவா இது ?

      Delete
    2. @ திரு. ATR சார்

      உங்கள் விலாசத்தை எடிட்டருக்கு அனுப்ப மறந்துவிடாதீர்கள்!

      Delete
    3. அனுப்பிவிடுகிறேன் திரு.ஈ.வி.அவர்களே.

      Delete
    4. atr பூரண குணமாகி வர இறைவன் அருளை வேண்டுகிறேன்...

      Delete
    5. நன்றி திரு.ஸ்டீல் அவர்களே.

      Delete
  25. இந்த வருடம் நமது அனைத்து இதழ்களுமே அருமை...சிலர் சுமார் எனக் கூறிய டாக்டர் டெக்ஸ் கூட அதகள சூப்பர் எனக்கு...என்னாலும் பணியால் உடனடியாக படிக்க ியலவில்லை..கடந்த ிருமாதமாய் ..டெக்ஸ் கூட படிக்கவில்லை...நீங்கள் கேட்ட கேள்விக்கு விடை...அதிக கதைகளால் வந்த அயற்ச்சி அல்ல...பணியில் கடக்கும் இனிய நேரம் தவிர ேதுமில்லை...தானைத் தலைவரின் கடத்தல் குமிழிகள் படித்த போது ஏற்பட்ட புத்துணர்வை வேறு எதும் தருமா எனத் தெரியாது..எங்கப்பாவுக்குத் தெரியாமல் கடத்தல் குமிழிகளை வாங்கி வந்து ...கடை ரேக்கின் மேல் தூக்கி வீசி விட்டு ......நல்ல பிள்ளையாய் அதனை மறந்து...பின்னர் தேடி அலைந்து தாயாரிடம் பணம் வாங்கி அதை திரும்ப வாங்கி....பின்னர் பார்த்தால் விவிலிய பழய ேற்பாடு என கடைக்கு வந்த பழய அந்த சிகப்பு அட்டைக்குள் பத்திரமாய் ஸ்பைடர் என்னை பார்த்தும் கேளியாய் சிரித்து முறைக்க...அடடா வேறு கதை வாங்கி இருக்கலாமே அந்த காசில் என பதைத்தது நினைவில்....எந்த கதைதொலைந்தாலும் திரும்ப வாங்கி இருக்கமாட்டேன்....ஆனால் ஆர்ச்சியும்..ஸ்பைடரும் வேறு ரகமாச்சே...இப்ப படிக்கும் போதும் அதே கால கட்டத்தில் நுழைந்த நினைவு என்னுள்....வலை மன்னன் அதே வசீகரத்தை தினிக்கும் கால எந்திரம் இந்த ிதழ்......நிச்சயமாய் காலப் பயணம் செய்தேன் அந்த சிறு வயதுக்குள்.......

    ReplyDelete
  26. ஆகவே ...வண்ண ிதழ்களும்....கருப்பு வெள்ளை இதழ்களும் ஏராளம் வர ுள்ள நிலையில்.....இரு வண்ண ிதழ்களை அப்போதய சைசில் வெளியி்டால் ..கொலைப் படை....இரும்பு மனிதன் ....அதே போல ிருந்தால் காலப்ஙபயணம் பலருக்கும் சாத்தியமாகலாம்...இருவண்ண ிதழ்களுக்கு நீங்கள் வெளியிடும் வாய்ப்பை விட்டால் வேறு வாய்ப்பே இல்லை...ஆகவே தயவு செய்து...இந்த ிதழ்களைஅப்படியே தாருங்கள் ..ப்ளீஸ்...இன்னொரு பயணத்திற்காக ேங்கும் வலையில் சிக்கிய அப்பாவிப் பூச்சி..

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : கவலையே வேண்டாம் - "கொலைப்படை" வெளியாகும் போது அதனை நிச்சயமாய் 2 வண்ணத்தில் போட்டுத் தாக்கி விடுவோம் !

      Delete
    2. /// தயவு செய்து...இந்த ிதழ்களைஅப்படியே தாருங்கள் ..ப்ளீஸ்...இன்னொரு பயணத்திற்காக ேங்கும் வலையில் சிக்கிய அப்பாவிப் பூச்சி..///

      பின்றீங்க ஸ்டீல்! :)

      Delete
    3. Thanq so much foe your promise sir.
      Thanq steel claw ponraj.. for all ur requests for the old goldies.

      Delete
    4. ஹ ஹ ஹா...எல்லாம் நிச்சயம் வருமென ாசிரியர் கூறியுள்ளார் நண்பரே....இருந்தாலும் ஒரு பிட்ட போடுவமே.....நன்றிகள் கோடி போதாதே சார் சொன்னாலுமே...சூப்பர் சார்

      Delete
  27. என் பெயர் டைகர் யதார்த்தம் கலந்தும் கலக்கியதென்றால் தங்கள் பட்ட பலனுக்கு வெற்றி தவிர ேதுமில்லை....எதிர் காலத்துக்கு சென்ற மார்ட்டினும் இது போல கதைகள் வருமா என ேங்க வைத்த ிரத்தப் படலமும்..லார்கோவும்....மின்னும் மரணமும் சாத்தியமே இனிமேலும் என நம்ப வைத்த ிதழ்கள் என் பெயர் டைகர்...இனியெல்லாம் மரணமே ...என துணிந்து சொல்லலாம்...அடுத்து வர உள்ள அழிவு நிலை உலக கௌபாயும் இதற்கினையாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை...இன்றய பதிவில் தங்கள் மும்முறமான...சளைக்கா உழைப்பு...பற்றிய....பீற்றலாய் இருக்குமோ என ெண்ணி பதிவிட்டிருந்தாலும்..உங்கள் மதிப்பை கூட்டி விட்து...தலை வணங்குகிறேன் உங்கள் ஈடுபாடான ுழைப்பிற்கு...உங்கள் உழைப்பின் களைப்பை போக்க ெனது எழுத்துகளும் .....நண்பர்களின் உற்ச்சாகமும் உதவினால் சந்தோசம்........

    ReplyDelete
  28. நீதிக்கு நிறமேது ட்ரைலர் ?

    ReplyDelete
    Replies
    1. Sridhar : மெயின் பிக்ச்சரே புதன்கிழமை ஒடத் தொடங்கிவிடுமே !

      Delete
  29. அட்டகாசமான, சுவையான, செமயான பதிவு! படித்து முடிக்கும்போது ஏதோ ஒரு நிறைவான உணர்வும், ஆனந்தமும் ஒட்டிக்கொள்கிறது!

    எல்லா வகையிலும் நிறைவானதொரு ஆண்டு இது! இதே அனுபவம் என்றென்றும் தொடந்திட ஏதோ ஒன்று யாரிடமோ இறைஞ்சுகிறது! _/\_

    சாதாரணமாகத் தோன்றிய சில இதழ்களின் பின்னும்கூட உங்கள் அசாத்திய உழைப்பு இருப்பது (அவ்விதழ்களைப் படித்தபோதே கொஞ்சம் உணர்ந்தாலும்கூட) இப்போது உங்கள் நடையில் சுவையான இப்பதிவைப் படிக்கும்போதுதான் முழுமையாக உணரமுடிகிறது! ஒரு சவாலான வருடத்தை பல்வேறுவிதமான குட்டிக்கரணங்களுடன் மகிழ்ச்சி பொங்க முடித்திருப்பதற்கு வாசகர்கள் சார்பில் எங்கள் வாழ்த்துகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் எடிட்டர் சார்! உங்கள் அசாத்திய உழைப்பும், உற்சாகமுமே எங்களின் உணர்வுகளை இக்காமிக்ஸ் உலகின்பால் தொடர்ந்து ஜீவித்திருக்கச் செய்பவை!
    காமிக்ஸ் மீதான இந்த லயிப்பு மட்டும் இல்லையென்றால் எங்களில் பலர் ஏரியா ரவுடிகளாக வலம் வந்திருப்போமோ என்னவோ?!! ;) அப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தொடர்ந்து எங்களை மென்மையாக வைத்திருக்க உதவிடும் உழைப்புக்கு நன்றி நன்றி நன்றி! .....


    சிறப்பு உதவி ....செயலாளர் ....

    ReplyDelete
  30. சார், இந்த வருடம் சந்தோசத்தை அள்ளித்தந்தது என்றால் அது மிகையில்லை! ஒவ்ஒரு மாதம் புத்தகத்தை கைகளில்; நமது மறுவிஜயதிற்கு பின் மாதம் தவறாமல் சொன்ன தேதியில் எங்கள் கைகளில் புத்தகம் தவழ உங்களின் திட்டமிடல் மற்றும் அதற்கு இணையாக பணிபுரியும் நமது அலுவலக நண்பர்களின் உழைப்பும்தான்; ஒரு கோடி நன்றிகள்!

    இரண்டு பெரிய வாசகர் சந்திப்பு, அந்த நாட்கள் என்று வரும் என்று காத்திருந்த தருணம்கள் நமது விட்டு விசேஷம்களை நினைவுபடுத்தியது! மிகவும் ரசித்த நாட்கள்! இந்த சந்திப்புகளை மறக்க முடியாதா நாட்களாக மாற்றிய நமது காமிக்ஸ் நண்பர்கள் அனைவர்க்கும் எனது நன்றிகள்; இந்த சந்திப்புகள் திகட்டாத அனுபவம்! மீண்டும் உங்களை சந்திக்க ஆவலுடன் உள்ளேன்


    சிறப்பு உதவி ...பரணி சார் ப்ரம் பெங்களூர் ..

    ReplyDelete
  31. நடுங்கும் குளிரில் அல்ல நடுக்கும் குளிரில் மனதுக்கும் உடலுக்கும் இதமான உற்சாகத்தை அள்ளித்தரும் வெந்நீர் குளியல் போன்ற சூடான சுவையான பதிவு...
    ஒவ்வொரு தருணமும் நிறைவான நினைவுகளை விதைத்து விட்டு செல்ல தவறவில்லை...
    அருமையான நினைவு கூர்தல் பதிவு, செம்ம சார்...
    இந்த சிறப்பான தருணங்களை நிஜமாக்கிய முகமறியா உங்களின் அத்துணை பணியாளர்களுக்கும் ஆயிரம் நன்றிகள் சார்...


    சிறப்பு உதவி ..சேலம் டெக்ஸ் ...

    ReplyDelete
  32. டெக்ஸ் அட்டைபடம் ஏ ஒன் எனும்படி ...அட்டகாச அமர்களமாக அமைந்துள்ளது சார் ..ஒவ்வொரு மாத டெக்ஸ் அட்டை படங்கள் அசத்தி கொண்டே இருக்க இவ்வருட கடைசி அட்டை பட டிசைன் எப்படி இருக்க போகிறது என காத்து கொண்டே இருந்தேன் ...காரணம் வருடத்தின் பதினொரு மாதமும் பட்டாசாய் டெக்ஸ் அட்டைப்படம் பரபரக்க இறுதி மாத அட்டைப்படம் கொஞ்சம் சுமாராக அமைந்தாலும் மக்கள் மனதில் ...

    ஓபனிங் எல்லாம் நல்லாருக்குப்பா ..ஆனா பினிஷிங் சரியில்லையே ...

    என முத்திரை குத்தும் அபாயம் ஏற்பட்டு விடும் சூழல் உண்டாகி விடலாம் ...


    ஆனால் அதற்கு வழியே விடாமல் செம டச்சாக அமைத்துள்ள இந்த அட்டைப்பட ஓவியத்தை சிறப்பாக அமைத்த அத்துனை நண்பர்களுக்கும் ...

    அனைத்துலக டெக்ஸ் ரசிகர் நற்பனி மன்றத்தின் சார்பாக பாராட்டுதல்களை தெரிவித்து விடுங்கள் சார் ...:-)

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : நமது இரவுக் கழுகாரை எப்படி வரைந்தாலும் 'நச்' என்று தோற்றம் தருவதால் எங்கள் உழைப்புகள் தானாக ஒரு படி கூடுதல் மெருகோடு காட்சி தருகின்றன ! இம்மாதம் நமது டிசைனரின் கைவண்ணம் கொஞ்சம் கூடுதல் அழகு என்பதால் அட்டைப்படமும் கூடுதல் அழகாய் வந்துள்ளது !

      Delete
  33. அடுத்த மாத இதழ்கள் இந்த மாதம் எப்போது கிடைக்கும் என அறிவிக்கலாமே சார் ..:-)


    ஹூம் ....முன்னர் எல்லாம் அடுத்த மாத இதழ் எந்த மாதம் கிடைக்கும் என வினவி கொண்டு இருந்தோம் ...இப்போது வினா எப்படி எல்லாம் மாறி விட்டது...:-)

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : தலீவரே, மாதம் பிறப்பது நமது இதழ்களோடு தானிருக்கும் !

      Delete
    2. ஆஹா ..மிக்க நன்றி சார் ..காத்திருக்கிறோம்..

      Delete
  34. ஆசிரியர் சார்! இந்த முறை புத்தக நிலையங்களுக்கு வரவேண்டிய 4 புத்தகங்களில் மறுபதிப்பு புத்தகம் வராது. அதற்கு பதிலாக LUCKY CLASSICS'ஸை அனுப்பிவிடுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. CLASSICS - It is customized copy. It will not be available in book stall! முன் பதிவுக்கு மட்டும்!

      Delete
    2. Jagath Kumar : முழுவதுமாய் முன்பணம் அனுப்பிடும் பட்சத்தில் கடைகளுக்கு அனுப்பிட சின்னதொரு கையிருப்பு இருக்கும். ஆனால் உங்கள் நகரில் உள்ள முகவர்களின் ஒத்துழைப்பே இங்கே முக்கியம் !

      Delete
  35. சாதனை ஆண்டு 2016....!!!

    முத்து, லயன், திகில், மினிலயன் என 4இதழ்கள் பட்டயை கிளப்பிய 1980களின் பிற்பகுதியை சீனியர் நண்பர்கள் விவரிக்கையில் பொறாமையாக இருக்கும்.
    அவர்களின் அந்த மகிழ்ச்சியான விவரிப்பில் சிலசமயங்களில் நம்மையும் அந்த தருணங்களில் மூழ்க செய்துவிடுவார்கள்.
    நமக்கும் காதுகளில் கிளம்பும் லேசான புகைச்சலை கண்டு அவர்களின் கண்களில் சற்றே பெருமிதம் மிளிரும்.
    அப்போதெல்லாம் நாமும் என்றாவது இப்படி மாதம் 4இதழ்கள் படிப்போமா என்ற ஏக்க கனவு எழுந்து கலையும்.

    சரியாக கால் நூற்றாண்டுக்குப் பிறகு அந்த கனவும் நனவாகும் காலம் கடைசியில் கனிந்தே விட்டது. 2016ல் மாதம் 4விதமான சுவைகளில் இதழ்கள் வெளிவரும் என, அறிவிக்கப்பட்ட போது சபாஷ் இது இதைத்தான் எதிர்பார்த்தோம் என சொல்லத் தோன்றியது.

    முத்துவின் டிடெக்டிவ், சஸ்பென்ஸ்,
    லயனின் சூப்பர் ஹீரோக்கள்,
    திகிலின் தடாலடிகள்,
    மினிலயனின் அதிர்வேட்டுக்களுக்கு...
    சற்றும் சளைக்காமல்...

    சந்தா Aன் ஆக்சன்,அதகளம்,
    சந்தா Bன் தல தாண்டவம்,
    சந்தா Cன் சிரிப்பு தோரணங்கள்,
    சந்தா Dன் எவர்க்ரீன் கோல்டன் ஓல்டிஸ்கள்...

    என மாதம் 4வித சுவைகளில் காமிக்ஸ் வெடிகள் வெடித்த போது மயங்காத மனமும் ஏது??? மத்தாப்பாக மலராத காமிக்ஸ் முகம்தான் ஏது!!!...

    அன்றைய இளம் ஆசிரியர் எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் அத்தகைய சாதனையை நிகழ்த்தியபோது, இன்றைய அனுபவம் முதிர்ந்த ஆசிரியர் அதைவிட ஒருபடி மேலே சிந்திப்பதும், அதை நிஜமாக்கியதும் அவரது ஆற்றலுக்கு ஒரு சான்று மட்டுமே. இந்த ஆண்டில் நாம் அவரோடு பயணிப்பதும் சத்தியமாக நாம் வங்கி வந்த வரமே. இந்த தருணத்தில் நமக்கும் சிறு பங்கு இருப்பது உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வே....


    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் //இந்த தருணத்தில் நமக்கும் சிறு பங்கு இருப்பது உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வே//

      சின்ன திருத்தம் சார் : "சிறு" பங்கல்ல - உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் ! ஒரு அசாத்தியப் பங்கு !!

      Delete
    2. சேலம் Tex விஜயராகவன் @ சும்மா புகுந்து விளையாடுறிங்க!

      Delete
    3. டெக்ஸ் விஜய் +1

      Delete
  36. 2016 - good and complete year for comics! 100%...

    ReplyDelete
  37. டெக்ஸ் அட்டைபடம் மற்றும் கதையின் தலைப்பை பார்க்கும் போது கருப்பு இனமக்களுக்கு நீதி கிடைக்க போராடும் கதை என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது!

    ReplyDelete
  38. அட்டை படம் சூப்பர் ஆக உள்ளது . மனதுக்கு நிறைவான பதிவு. திரும்பி பார்க்கும் படலம் அருமை . இதன் பின்னே உள்ள உங்கள் மற்றும் உங்கள் பணியாளார்களின் கடின உழைப்புக்கு ஒரு கட்ஸ் ஆப் . திருப்பி பார்க்கும்போது மலைப்பாக உள்ளது . பிரமிப்பாக உள்ளது . நீங்கள் சொல்லும்போதுதான் தெரிகிறது .அருமையான ஒரு ஆண்டு . வரும் ஆண்டு இன்னும் காமிக்ஸ் இதழ்கள் கூட வர ஆவல் .

    ReplyDelete
  39. டெக்ஸ் அட்டைப்பட ஓவியம் ரொம்பவும் அருமை... இந்த வருடம் வந்த டெக்ஸ் அட்டைப்படத்திலேயே இது தான் டாப்.

    ReplyDelete
  40. ஒரு ஓய்வான மாலைப் பொழுதில் 'கடத்தல் குமிழிகள்' படித்தேன்! சிறுவயதில் சிலநூறு தடவைகள் படித்த கதையே என்றாலும், இப்போது படிக்கவும் சுவாரஸ்யமாய் இருந்தது! காரணம் - குற்றவியல் சக்கரவர்த்தியின் எகத்தாளம் தெறிக்கும் வசனங்கள்!

    கதையின் வில்லன் 'கோப்ரா' அவ்வப்போது மக்களை சோப்பு குமிழியில் ஏற்றிக்கொண்டு ஒரு ஜாலி ரைடு கூட்டிப்போய்வந்தபடி இருக்க, ஆர்டினியும் பெல்ஹாமும் ஸ்பைடரைப் போட்டுத்தள்ளிவிட்டு பொக்கிஷங்களை ஆட்டையைப் போடுவதில் குறியாய் இருப்பதும், அம்முயற்சி பலனளிக்காமல் ஸ்பைடரிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதும் ரகளையான கட்டங்கள்!
    பெல்ஹாமின் கண்டுபிடிப்பைக் கொண்டு எதிரியைத் தீர்த்துக்கட்டிவிட்டு ( அதாவது, சோப்புக் குமிழ் 'பட்'டென்று உடைந்துபோகிறதாம்!), "மக்களே, நான் ஏன் ஆர்டினியையும் பெல்ஹாமையும் கொல்லாம விட்டு வச்சிருக்கேன்னு இப்பப் புரியுதா?" என்று ஸ்பைடர் நம்மைப் பார்த்துக் கேட்கும்போது ஏனோ சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது!

    இந்நாளைய சிறுவர்கள் படிக்கவும் ஏற்றதொரு படைப்பு!

    ReplyDelete
    Replies
    1. பாதி பாராட்டியும், மீதி கலாய்த்தும் கலவையாக விமர்சித்துள்ளீர்கள்...விஜய்.

      //இந்நாளைய சிறுவர்கள் படிக்கவும் ஏற்றதொரு படைப்பு!//
      ஸ்பைடர் பாத்திர படைப்பே டீன் சிறுவர்களுக்காக உருவானது தானே...

      நான் என்ன சொல்வது... நீதிக்காவலன் ஸ்பைடரில் வரும் வசனம் தான் ஞாபகம் வருகிறது...
      அதை கொஞ்சமே மாற்றி...

      "உங்களைப் போன்ற ஸ்பைடர் விமர்சகர்கள் இல்லாவிட்டால் காமிக்ஸ் வாழ்க்கை சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும்..."

      Delete
  41. @ ALL : நண்பர்களே,

    ஒரு அனாமதேய அன்பர் கீழ்க்கண்ட சேதிகளுடன் 2 சந்தாக்களை அன்பளிப்பாய் அனுப்பியுள்ளார் :

    To : ATR - சந்தா A + B + C (ஏற்கனவே சந்தா D - ஈரோடு விஜய் வழங்கியுள்ளார்)

    Message : "மருத்துவ மனையில் உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள் சார். இப்போதைக்கு சந்தவை பற்றியோ காமிக் பற்றியோ கவலைப் பட வேண்டாம். எங்கள் பிரார்த்தனைகளில் உங்கள் உடல் நலமும் இருக்கும்."
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    To : இரும்பு நகர் இரவு கழுகு : (சேலம் டெக்ஸ் விஜயராகவன்) - சந்தா A + B + C + D + E

    Message : "இந்த அன்புப் பரிசு உங்களுடைய தொடர் கட்டுரைகளுக்கு. மிக தேர்ந்த கட்டுரை எழுத்தராகிக் கொண்டு இருக்கிறீர்கள். ஆசிரியருக்கே inspiration ஊட்டும் வகையில் இருக்கிறது என்றால் எப்படி என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அனைத்தையும் விரைவில் உங்கள் வலைப்பூவில் ஏற்றுங்கள்".
    -------------------------------------------------------------------------------------------------------
    சேலம் டெக்ஸ் விஜயராகவன் ஏற்கனவே சந்தா கட்டியிருப்பின், இந்த GOLD சந்தாவை அவரது பிரியத்துக்கு உகந்தவர்கள் யாருக்கேனும் அன்பளிப்பாய் வழங்கிடலாமாம் !!!

    அன்பின் எல்லைகள் விசாலமாகிக் கொண்டே செல்வதைக் கண்டு வாய் பிளப்பதைத் தாண்டி வேறென்ன செய்திட இயலும் ? Awesome !!

    ReplyDelete
    Replies
    1. // அன்பின் எல்லைகள் விசாலமாகிக் கொண்டே செல்வதைக் கண்டு வாய் பிளப்பதைத் தாண்டி வேறென்ன செய்திட இயலும் ? Awesome !! //
      +1

      வாழ்த்துக்கள் நண்பர்களே!

      பெயர் சொல்ல விரும்பாத அந்த நல்ல இதயம்கள் எங்கு இருந்தாலும் வாழ்க!!

      Delete
    2. // அன்பின் எல்லைகள் விசாலமாகிக் கொண்டே செல்வதைக் கண்டு வாய் பிளப்பதைத் தாண்டி வேறென்ன செய்திட இயலும் ? Awesome !! //
      .....

      ஆண்டவனே...
      கண்கள் கலங்கிட்டது..
      இதயம் ஆடிப்போனது..
      அந்த நண்பரின் அன்பு கண்டு எழுத ஏதும் வார்த்தைகள் வரவில்லை..
      "நன்றி"-என்ற ஒற்றை வார்த்தையை சொல்லி உடலையும் உயிரையும் அந்நியப்படுத்தவில்லை நான்...
      காமிக்ஸ் நண்பர்கள் என் உயிரைவிட மேலானவர்கள் என்பதை மட்டுமே இன்று பதிவு செய்கிறேன்...
      நெகிழ்ச்சியான சமயத்தில் இருப்பதால் ...பிறகு...

      Delete
    3. ///அன்பின் எல்லைகள் விசாலமாகிக் கொண்டே செல்வதைக் கண்டு வாய் பிளப்பதைத் தாண்டி வேறென்ன செய்திட இயலும் ? Awesome !!///

      +1

      ஏடிஆர் & மாம்ஸ் @ வாழ்த்துகள். !!

      அனாமதேய??? நண்பருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். .!

      வாழ்க லயன் முத்து வளர்க நம் நட்பு..!!

      Delete
    4. ///காமிக்ஸ் நண்பர்கள் என் உயிரைவிட மேலானவர்கள் என்பதை மட்டுமே இன்று பதிவு செய்கிறேன்...
      நெகிழ்ச்சியான சமயத்தில் இருப்பதால் ...பிறகு...///


      சூப்பரப்பு மாம்ஸ்..:-)

      Delete

    5. பரிசு பெற்ற திரு.ATR அவர்களுக்கும், டெக்ஸ் விஜயராகவன் அவர்களுக்கும் வாழ்த்துகளோ வாழ்த்துகள்! :)

      பரிசுகளை அளித்த 'மிஸ்டர்.முகமறியா' Aka 'அன்புள்ள அனாமதேயா' அவர்களுக்கு நன்றிகளோ நன்றிகள்! :)

      பரிசுபெறுபவர்களுக்கு 'மிஸ்டர்.அஅ' விட்டுச் சென்றுள்ள செய்திக் குறிப்புகளைக் கொண்டு அவரை மடக்கிவிட எவ்வளவோ முயற்சி செய்தேன்! ஆனால் (கடந்த பிறவியில் ஷெர்லக் ஹோம்ஸாக பிறத்திருந்த என்னாலேயே அது முடியாத அளவுக்கு ) சாதுர்யமாக தன் எழுத்துநடையை மாற்றியுள்ளார் நம் மதிப்புக்குரிய அனாமதேயா! ;)

      எந்த கேப்ஷன் போட்டியுமே வைக்காமல் ;) சந்தா பரிசுகளை அள்ளித் தெளித்துவரும் அந்த இரக்க சிந்தையுள்ள இளவரசர் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ்க!

      பிரம்மிப்பாய் இருக்கிறது நண்பர்களே!

      இந்தக் காமிக்ஸ் நேசம் நாளும் வாழ்க!

      Delete
    6. //பரிசு பெற்ற திரு.ATR அவர்களுக்கும், டெக்ஸ் விஜயராகவன் அவர்களுக்கும் வாழ்த்துகளோ வாழ்த்துகள்! :)

      பரிசுகளை அளித்த 'மிஸ்டர்.முகமறியா' Aka 'அன்புள்ள அனாமதேயா' அவர்களுக்கு நன்றிகளோ நன்றிகள்! :)//
      +1111

      Delete
  42. ATR சார் : உங்கள் முழு முகவரி & கைபேசி நம்பர் விபரங்களை ஒரு மின்னஞ்சலில் அனுப்பிடுங்களேன் - ப்ளீஸ் ?

    ReplyDelete
  43. ..ஊய்ய்ய்... வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....டெக்ஸ்

    ReplyDelete
  44. ATR - சார்... வாழ்த்துக்கள்... சீக்கிரம் நலம் பெற்று வாருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆமா ATR சார்... சீக்கிரமா நலமடைஞ்சு வாங்க! நாம ஒன்னா உட்கார்ந்து படிக்கவேண்டிய சந்தா-E கிராஃபிக் நாவல்கள் நிறைய இருக்கு! ;)

      Delete
  45. Salem TeX அண்ட் atr வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  46. வாவ் .....சூப்பரோ சூப்பர் ....


    வாழ்த்துக்கள் ஏடிஆர் சார் ....மற்றும் டெக்ஸ் ..


    அந்த முகமறியா அன்பருக்கு அவர்களின் சார்பாக நானும் மனம் நெகிழ நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ....

    ReplyDelete
  47. கண்கள் கலங்கிட்டது..
    இதயம் ஆடிப்போனது..
    அந்த நண்பரின் அன்பு கண்டு எழுத ஏதும் வார்த்தைகள் வரவில்லை..


    ########

    டெக்ஸ் சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட அதே உணர்வு இன்று உங்களுக்கும் ...:-)

    ReplyDelete
  48. This comment has been removed by the author.

    ReplyDelete
  49. Erode VIJAY28 November 2016 at 19:16:00 GMT+5:30
    ஆமா ATR சார்... சீக்கிரமா நலமடைஞ்சு வாங்க! நாம ஒன்னா உட்கார்ந்து படிக்கவேண்டிய சந்தா-E கிராஃபிக் நாவல்கள் நிறைய இருக்கு! ;)
    விஜய்,குறும்புக்காரரே....!!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க பாட்ஷா ஜி! போனமாச புத்தகங்களோட பிரின்ட்டிங் தரம் பத்தி என்ன நினைக்கறீங்க?அப்பறம்... இந்தப் பதிவோட பிரின்ட்டிங் தரம் உங்களுக்குப் பிடிச்சுருக்குதானே? ;)
      (மறுபடியும் அதே குறும்புதான்!)

      Delete
    2. வரலாறு மிக முக்கியம் செயலாளரே....!!!

      Delete
  50. வாழ்த்துக்கள் ATR சார்+ TEX விஜயராகவன் நண்பரகளே.
    ATR சார் விரைவினில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  51. வாழ்த்துகள் வழங்கிய, வழங்கப்போகும், வாழ்த்த நினைத்த அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய மற்றும் மூத்த நண்பர் ATR இருவரின் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பர்களே...

    ReplyDelete
  52. நமக்கெல்லாம் மினிலயன் மறுபதிப்பு, ஜூனியர் லயன் மறுபதிப்பு, ரத்தப்படலம் மறுபதிப்புன்னு ஆயிரம் கனவிருக்கலாம்... ஆனால், எடிட்டரின் கனவே 'ஆயிரம்' தான்! ஆமாம்! என்னிக்காச்சும் ஒருநாள் சந்தா எண்ணிக்கை ஆயிரத்தைத் தொடும் என்ற கனவுதான்! ( ஆகவே தான் அவர் அதை 'மந்திர எண்' என்றழைக்கிறார்). அடுத்த வருடமே கூட இது சாத்தியமாகலாம் தான்! குறைந்தபட்சம் பின்வரும் கணக்குப்படியாகவாவது:

    ரெகுலர் சந்தா எண்ணிக்கை = 700
    பரிசுச் சந்தா எண்ணிக்கை = 300
    ______
    ஆக, மொத்த சந்தாக்கள் = 1000

    மேலே உள்ள கணக்கு ச்சும்மா ஜாலிக்காண்டி போடப்பட்டதென்றாலும், நிஜமாகவே அந்த மந்திர எண்ணைத் தொட்டுவிடும் நாளொன்று விரைவில் வரும் என்று உறுதியாக நம்புகிறேன்!

    "சந்தா எண்ணிக்கை ஆயிரம் என்ற மந்திர எண்ணைத் தொட்டுவிடும் வேளையில் தயங்காமல் இன்னும் பல குட்டிக்கரணங்கள் அடிக்கவும் தயாராக இருப்பேன்" என்று முன்பொரு சமயம் ஏதோ ஒரு கேள்விக்கு அவர் பதில் சொன்னதாய் ஞாபகம்!

    அவர் - அடிச்சுக்கிட்டே இருக்கணும்! நாம - படிச்சுக்கிட்டே இருக்கணும்!

    அதனால், கடைகளில்தான் வாங்குவேன்னு அடம் பிடிக்காம, சட்டுபுட்டுனு சந்தாக்களைக் கட்டுற வழியப் பாருங்க மக்களே! குட்டிக்கரண ஷோ பார்க்கலாம்! :)

    ReplyDelete
    Replies
    1. ///மேலே உள்ள கணக்கு ச்சும்மா ஜாலிக்காண்டி போடப்பட்டதென்றாலும், நிஜமாகவே அந்த மந்திர எண்ணைத் தொட்டுவிடும் நாளொன்று விரைவில் வரும் என்று உறுதியாக நம்புகிறேன்!
      அவர் - அடிச்சுக்கிட்டே இருக்கணும்! நாம - படிச்சுக்கிட்டே இருக்கணும்! ///
      +1111111111

      Delete
    2. @ FRIENDS : நான்கிலக்கச் சந்தாதாரர் எண்ணிக்கை மட்டும் சாத்தியமாயின், 'ஆட்றா ராமா.....தாண்டுறா ராமா !! ' தான் !!

      Delete
    3. ////
      நான்கிலக்கச் சந்தாதாரர் எண்ணிக்கை மட்டும் சாத்தியமாயின், 'ஆட்றா ராமா.....தாண்டுறா ராமா !! ' தான் !!///

      பாத்தீங்களா மக்களே? கண்கொள்ளாக் காட்சியா இருக்கப்போகுது!

      இப்போ சாத்தியமில்லாம இருக்கும் ஆஸ்ட்டிரிக்ஸ் & ஓப்லிக்ஸ், டின்டின், பேட்மேன் எல்லாம்கூட நம்ம கையில் அழகா தவழவும் வாய்ப்பிருக்கு!

      ம்.. ஆவட்டும் ஆவட்டும்!

      Delete
    4. யாருப்பா அது டின டின் எனக்கு போட்டியா. பெரிய அறிவாளியோ. பேட் மேனுக்கு பதிலா குட் மேன வரவைத்தா புண்ணியமா போவும்

      Delete
  53. நண்பர்கள். அனைவருக்கும் இப்படிப்பட்ட நல்ல இதயங்கள் வேறு புக்கோ,சினிமாவிலோ பார்க்க முடியுமா? தயவுசெய்து இது போன்ற நல்ல விஷயங்களை காமிக்ஸ் படிக்காதவர்களும் தெரிந்துகொள்ள செய்ய வேண்டும்.
    காமிக்ஸ் என்பது சிறுபிள்ளை விளையாட்டு என்று நினைப்பவர்களுக்கு டெக்ஸ் எதிரியின் நடுமூக்கை பார்த்து குத்துவது போன்று அமைய வேண்டும்.
    காமிக்ஸ் நேசம் மென்மேலும் வளர ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். நல்ல உள்ளங்கள் வாழ்க. நன்றி

    ReplyDelete

  54. ஒரு நபர் விளையாட்டு, பேச்சு, கலை அல்லது வேறு எந்த துறையிலோ பாராட்டும் பரிசும் வாங்குவது சுலபமான காரியம் அல்ல. அதிலும் படிப்பு, எழுத்து மூலம் சாதிப்பது மிக கடினமான ஒன்று.

    நான் எழுதியவை பாராட்டுக்கும், பரிசு வாங்கும் அளவுக்கும் இருந்ததாக நான் நினைக்க வில்லை.
    படிக்காமல் தாண்டி போகும் அளவு மொக்கையாக இல்லாமல் இருந்ததா என நீங்கள் தான் சொல்லனும் நண்பர்களே...!!!

    இதுவரை என்னுடைய படிப்பின் மூலம் 3பரிசுகள் வாங்கியுள்ளேன்.
    முதல் 2ம் மாணவப் பருவத்தில் அநேகர் வாங்கியிருக்க கூடியது.
    இன்று 40வது வயதில் , அந்த முகமறியா நண்பரின் அன்பு பரிசையே மூன்றில் முதலாவதாக கருதுகிறேன் . மற்ற 2ம் என் தேர்வு தாளை திருத்திய ஆசிரியர்களோடு மட்டுமே முடிந்தவை.
    இந்த நம்முடைய காமிக்ஸ் தளத்தில் எழுதியவை பலருக்கு முகச் சுளிப்பை கொண்டு வராமல் இருந்ததே எனக்கு பெரிய ஆறுதல் நண்பர்களே...

    இன்று மதியம் ஆசிரியர் சாரின் அறிவிப்பை பார்த்து விட்டு உடனடியாக நண்பர் S.V.V.தான் எனக்கு தகவல் சொன்னார். தளத்தில் பார்த்து விட்டு திக்கு முக்காடிப் போனேன்..

    இந்த ஆண்டு ஆரம்பத்தில் அன்பின் ஆசிரியர் சொன்ன

    "ஒவ்வொரு முகத்திலும் புன்னகை"

    ---என்ற வாக்கியம் நிறைய பேருக்கு இன்ஸ்பைரேசனாக அமைந்து விட்டது.

    அதுவே ஒவ்வொரு நண்பரும், இயன்றளவு மற்றவர்கள் முகத்தில் புன்னகை வர வைக்கும் முயற்சி எடுக்க தூண்டுகோலாக அமைந்தது.

    உண்மையில் நான் எழுதியவை நண்பர்களால் படிக்க முடிந்த அளவு இருந்ததே எனக்கு திருப்தி.

    அந்த அன்பு நண்பர் சொல்லியுள்ள
    ஆசிரியருக்கும் inspiration ஆக அமைந்தது என்பதெலாம் சற்றே பெரிய வார்த்தை.

    இத்தகைய நேசம் காட்டும் நண்பர்களை உருவாக்கியது உங்களின் மற்றொரு சத்தமில்லாத சாதனை சார்.🙏

    எனக்கும் பதிவு எழுத தூண்டியவை நண்பர்கள் கார்த்திக் சோமலிங்கா, ஜானிஜி, சகோ சீ-நா-பா, ராஜ் முத்துக்குமார் ஜி ஆகியோரின் சமகால விமர்சனங்கள் மற்றும் இங்கே எப்போதும் தன் நகைச்சுவை நடையால் தளத்தில் உயிரோட்டம் குறையாமல் பார்த்து கொள்ளும் என் ஆருயிர் நண்பர் ஈரோடு விஜய், எனக்கு எப்போதும் உற்சாகம் அளிக்கும் சேந்தம்பட்டி சொந்தங்கள் & முகநூல் நண்பர்கள், டெக்ஸின் வசனங்கள் மூலம் வாழ்தலை அர்த்தமாக்கிய அன்பின் ஆசிரியர் என அனைவருக்கும் என் நெகிழ்ச்சியான நன்றிகளை இருகரம் கூப்பி தெரிவித்துக் கொள்கிறேன்....

    கண்களில் துளிர்க்கும் ஆனந்தத்துடன்....


    ReplyDelete
  55. வாழ்த்துகள் சேலம் டெக்ஸ்.

    //ஆசிரியருக்கும் inspiration ஆக அமைந்தது என்பதெலாம் சற்றே பெரிய வார்த்தை.//

    உங்கள் பதிவுகளை நானும் ரசித்தேன். ஒருவேளை அந்த அனமேதய நண்பர் பின் வரும் ஆசிரியரின் வரிகளைத் தான் அப்படிக் குறிப்பிட்டாரோ என்னவோ. அவராகவே முன் வந்து சொன்னால் தான் உண்டு.

    //பற்றாக்குறைக்கு இங்கே நமது வலைப்பதிவினில் வந்து பார்த்தால் - சேலம் டெக்ஸ்விஜயராகவன் அந்நாட்களது தீபாவளி மலர்களை வரிசைப்படுத்தி இருக்க, கால் கட்டைவிரலில் ஒரு பரிச்சயமான நமைச்சல் தோன்றியது ! மண்டைக்குள் சிலபல சக்கரங்கள் சுழலும் சத்தம் லியனார்டோ தாத்தா பாணியில் எனக்கும் கேட்க - இதோவொரு கேள்வி உங்களுக்கு ://

    ReplyDelete
    Replies
    1. தங்கள் இருப்பை தெரியபடுத்துங்கள் நண்பர்களே...சத்தமில்லாமல் வந்து சென்றால் யாருக்க்ம் தெரியாதல்லவா...ஒவ்வொருவரின் வருகைப் பதிவு மட்டுமே தளத்தை உயிர்ப்புடன் நீட்டித்திருக்கும் என்பது தாங்கள் அறியாததல்லவே...

      Delete
    2. //உங்கள் பதிவுகளை நானும் ரசித்தேன்//...தேங்யூ மஹிஜி...

      //தங்கள் இருப்பை தெரியபடுத்துங்கள் //...+1

      Delete
  56. நான் இருப்பது அமெரிக்காவில். இது வரை சந்தாவை எனது இந்திய வங்கிக் கணக்கில் இருந்தே கட்டியிருக்கிறேன். இந்த முறை முதன் முறையாக அமெரிக்காவில் இருந்து கட்ட வேண்டும். எப்படிக் கட்டுவது? எது சிறந்த (கட்டணம் குறைந்த) வழி? பிற வெளிநாட்டவர்கள் எப்படி சந்தா கட்டுகிறீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. Punthaban : Paypal / Western Union / Bank Transfer

      Delete
  57. *** திரு விஜாயாராகவன் சாருக்கும், திரு ATR சாருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!! ***


    எனக்கு 2015-ம் வருடம் ஒரு வருட சந்தாவை வாங்கிதந்த மாயாவி சிவா சாரையும் சந்தாவை வழங்கிய சாரையும் இங்கே நினைவு கூறுகிறேன். அவர் யார் என்று தெரிந்தும் அவரை ஒரு முறைக்கூட சந்திக்க முடியவில்லையே என்ற கவலை எனக்கு உள்ளது. 2014-ம் வருடமும், 2015-ன் ஆரம்பத்திலும் எனக்கு இந்த வலைப்பதிவு அறிமுகம் ஆகவில்லை. அப்போது இங்கே அவர்களுக்கு ஒரு நன்றியை பதிவிட முடியாமல் போனது. மாயாவி சிவா சார் இப்போது இந்த பதிவிலும் facebook'கிலும் வருவதே இல்லை. இருப்பினும் அவர்கள் இருவருக்கும் என்றென்றும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திரு ATR சார் அவர்கள் சீக்கிரம் குணாமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  58. தங்கள் இருப்பை தெரியபடுத்துங்கள் நண்பர்களே...சத்தமில்லாமல் வந்து சென்றால் யாருக்க்ம் தெரியாதல்லவா...ஒவ்வொருவரின் வருகைப் பதிவு மட்டுமே தளத்தை உயிர்ப்புடன் நீட்டித்திருக்கும் என்பது தாங்கள் அறியாததல்லவே...

    ReplyDelete
  59. ரெண்டு நாளா பேங்க் வாசலில் போய் நிக்காமல் ஒரே போர் ........

    சனி ஞாயிறு விடுமுறை வேற...

    ஹெல்லோ யாராவது சொல்லுங்கப்பா .......
    கியூ எங்க இருக்கு.....ஒரு பத்து நிமிஷம் நின்னுட்டு வந்தா தான் நிமாதியா இருக்கும்.....

    கியூ ப்ளீஸ் ....
    மகா ஜனங்களே கியூ ப்ளீஸ் .....

    கியூ ப்ளீஸ் ....
    மகா ஜனங்களே கியூ ப்ளீஸ் .....

    நறநற.......

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்கும் தலா ஒரு ரோஸ் கலர் கட்டு தந்தால் நாங்களும் மாற்றி கொள்வோமே மந்திரி அய்யா...!!!

      Delete
    2. அந்த அதிஷ்டக்கார கல் எக்கட உந்தி ..............அவிக வீட்டு கூரை வழியா போட்டுட வேண்டியது தான் ...........

      Delete
  60. தாமதமான பதிவுக்கு முதலில் மன்னிப்பை வேண்டுகிறேன் சகோதரர்களே. இன்று ஆசிரியரின் பதிவைக் கண்டதும் நிஜமாகவே கலங்கிப்போய் விட்டேன். கல்லாய் கிடந்த மனது இலவம் பஞ்சாய் மாறிவிட்டது. கண்கள் கலங்குகிறது. உடனே பதிவிட மனது தயாராகவில்லை. அதற்காக அனைவரிடமும் மன்னிப்பை வேண்டுகிறேன்.
    துரோகங்களையும், பல சங்கடங்களையுமே கண்டு கலங்கி வந்த என்னை தனது அன்பின் மூலம் கலங்க வைத்த இரக்க சிந்தனையுள்ள நல்லிதயம் கொண்ட சகோதரருக்கு எனது நன்றியை காணிக்கையாக்குவதைத் தவிர வேறொரு வழியும் தெரியவில்லை.
    இன்றைய என்னுடைய
    சூழ்நிலையில் இது மிகப்பெரிய உதவியென்பதை உதவிக்கரம் நீட்டிய சகோதரருக்கு நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
    கோவில்களில் ஒரு மின் விளக்கை போட்டுவிட்டு அதன்கீழ் "உபயம்" என்று தனது பெயரை கொட்டை எழுத்தில் எழுதி பெருமை பட்டுக்கொள்ளும் மக்கள் வாழும் சமுதாயத்தில் தான் யாரென்பதையே வெளிக்காட்டாமல் உதவிய அன்புள்ளம் கொண்ட சகோதரரே உங்கள் குடும்பத்தில் என்றும் மகிழ்ச்சி நிலைக்கட்டும். நீவீர் என்றும் வாழ்க நலமுடன். என்பால் நேசம் கொண்ட நம் இணைய உறவுகள் அனைவரின் குடும்பத்திலும் மகிழ்ச்சி பரவட்டும். நம்மை சுற்றி இத்தனை அன்புள்ளங்கள் உருவாக ஆசிரியர் அவர்களும் முக்கிய பங்கு வகிக்கிறார்.அவருக்கும் எனது நன்றியினையும் வாழ்த்தினையும் காணிக்கையாக்குகிறேன்.
    "மாசற்றவர் நட்பை மறக்கவும் கூடாது.
    துன்பத்தில் துணைநின்றவர்
    நட்பை துறக்கவும் கூடாது".
    இந்த அன்புள்ளங்களை நான் வாழும் காலம்வரை மறக்கமாட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. //கோவில்களில் ஒரு மின் விளக்கை போட்டுவிட்டு அதன்கீழ் "உபயம்" என்று தனது பெயரை கொட்டை எழுத்தில் எழுதி பெருமை பட்டுக்கொள்ளும் மக்கள் வாழும் சமுதாயத்தில் தான் யாரென்பதையே வெளிக்காட்டாமல் உதவிய அன்புள்ளம் கொண்ட சகோதரரே உங்கள் குடும்பத்தில் என்றும் மகிழ்ச்சி நிலைக்கட்டும். நீவீர் என்றும் வாழ்க ///

      +1000000000

      Delete
    2. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சார்

      Delete
  61. நான்கிலக்கச் சந்தாதாரர் எண்ணிக்கை மட்டும் சாத்தியமாயின், 'ஆட்றா ராமா.....தாண்டுறா ராமா !! ' தான் !!


    #########

    ஙே ...சார் நான்கு இலக்கத்துக்கேவா ..

    .எனில் நாம் சந்தா வில் இவ்வளவு தொலைவாகவா இருக்கிறோம் ...

    ஹீம் ...நாம் குறுகிய வட்டத்தில் உள்ளதை அறிந்தே உள்ளேன் ...ஆனால் இவ்வளவு குறுகிய வட்டம் என்பதை அறியவில்லை சார் ..


    முடிந்த அளவு சந்தாவில் நண்பர்கள் இனைந்தால் ஆசிரியரின் பலமான ஆட்டத்தை காணலாம் ...பொறுத்து இருப்போம் புது ஆண்டிற்குள் இந்த சிறிய மந்திர எண்ணை தொட்டு விடுவோம் என்ற நம்பிக்கையிலும் ...ஆசிரியரின் ஆட்டம் காணும் ஆவலிலும் ....

    ReplyDelete
  62. வாழ்த்துக்கள் திரு.டெக்ஸ் விஜய் அவர்களே.
    சமீபகாலமாக உங்கள் எழுத்தில் காணப்பட்ட வசீகரத்தை அனைவரும் அறிந்திருப்பார்கள்.
    புள்ளிவிவரங்களுடன் கதைகளைப் பற்றிய விவரங்களையும், அதனுடனான அனுபவங்களையும், கதைகளுக்குள்ளாகவே நீங்களும் கலந்து வாழ்ந்திருப்பதையும், டெக்ஸ் ரசிகராக இருப்பினும் ஜாம்பவான் லிஸ்டில் டைகர் இடம் பெற்றதை பெருந்தன்மையுடன்
    ஏற்றுக்கொண்டதையும் கண்டு வியந்து கொண்டிருந்தேன்.
    புலி பதுங்கி பாய்வதைப்போல் இந்த திடீர் பாய்ச்சல் எப்படி சாத்தியமானது?
    இடையில் வாளிருந்தாலும் தேவைப்படும் சமயத்தில்தான் அது வீரனின் கைகளுக்கு வரும்.அதுபோலவே உங்கள் தலைக்குள் இவ்வளவு விஷயங்களையும் அடக்கிவைத்து தேவைப்படும் நேரத்தில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
    உங்களது ஆற்றலுக்கு கிடைத்த பரிசிற்கு எனது வாழ்த்துக்கள்.
    தொடர்ந்து கலக்குங்கள்.

    ReplyDelete
  63. நன்றிகள் ATR sir...
    தளத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஊன்றி கவனிக்கிறீர்கள் என புரிந்து கொள்ள முடிகிறது.

    பதிவெழுத 10கட்டளைகள் பிறப்பித்துள்ள நண்பர் கார்த்திக்கின் வழி காட்டுதலை கொஞ்சமேனும் பின்பற்ற முயற்சி செய்கையில்,கிட்டியதுதான் பழைய விசயத்தை பதிவின் கூடவே சொல்ல விழைவது. சில சமயம் சறுக்கினாலும் பல சமயத்தில் அது கைகொடுத்தது.

    துவக்கத்தில் நண்பர் விஜய் மூலம் என் கருத்துக்களை இங்கே பதிவு செய்து வந்ததில் இருந்து, அட்லீஸ்ட் சில நண்பர்களுக்காவது (பி)படிக்கும்படி எழுத எனக்கு கற்றுத் தந்தது இந்த தளம் தான்.
    இங்கே அடிபட்டு விழுந்த நான் எழுந்து நிற்க கைகொடுத்த என் நண்பர்கள் தான் என் ஆற்றல்.

    காமிக்ஸ் ரசிகன்>கொளபாய் ரசிகன்>டெக்ஸ் ரசிகன் - என்பதே உண்மை...

    ReplyDelete
  64. நண்பர் விஜய் சார்பில்...
    ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே....

    ReplyDelete
  65. வாவ் .....வாவ் ......இன்று அலுவலகம் தாமதமாக செல்வதன் காரணமாக ...



    பார்சல் பொக்கிஷத்தை கைப்பற்றி ஆகி விட்டது ....

    நன்றிகள் சார் ...:-)

    ReplyDelete