Sunday, October 09, 2016

கொஞ்சம் அக்டோபர்...கொஞ்சம் நவம்பர்...!


நண்பர்களே,
            
வணக்கம். அக்டோபர்கள் எப்போதுமே நம் அனைவருக்கும் வாஞ்சையான பொழுதுகள் என்பதில் சந்தேகமிருக்க முடியாது ! மெலிதாய் எட்டிப் பார்க்கும் அடை மழை... ஆயுத பூஜை... அப்புறமாய் அதிரடி தீபாவளி என்று இந்த மாதமே ஒருவிதக் கோலாகல மூடில் பயணிப்பது போல் எனக்குத் தோன்றுவது வழக்கம். ‘பட்டாசுத் தலைநகரம்‘ என்பதால் இந்த மாதம் எங்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா ? திரும்பிய திசையிலெல்லாம் பட்டாசுப் பார்சல்கள் இந்தியாவின் மூலை முடுக்குகளையெல்லாம் தேடிக் கிளம்புவது இங்கே அன்றாடக் காட்சிகள் ! இந்தப் பரபரப்புகளுக்கு மத்தியில் நமது “பட்டாசுப் பார்டிகள்” வன்மேற்கையே ஒரு தீபாவளிக் களமாக்குவது தான் இவ்வாரத்துப் பதிவின் highlight !

     “சர்வமும் நானே” இதழினைத் திட்டமிட்ட போது- அதன் தலைப்பினைத் தேர்வு செய்ய எனக்கு ஒன்றரை நொடிகளுக்கு மேல் அவசியப்பட்டிருக்கவில்லை ! தற்போதைய நிலவரத்தில் (தமிழ்) காமிக்ஸின் சர்வமுமாய் உலா வரும் நமது இரவுக்கழுகாருக்கு இந்தக் கதைத் தலைப்பு அட்சரசுத்தமாய்ப் பொருந்துவதாய்ப்பட்டது எனக்கு ! 3 தனித்தனி இதழ்கள் என்ற துவக்க நாட்களது திட்டமிடலுக்கு விடைகொடுத்து விட்டு ஒரே hardcover பதிப்பாகத் திட்டமிட்டு - அதன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன ! இதோ- நம்மவரின் இந்த 395 பக்க சாகஸத்தின் அட்டைப்பட முதல் பார்வை!





ஒரிஜினல் டிசைனே... ! வர்ணச் சேர்க்கைகளில் மட்டும் நமது கைவரிசைகளோடு ! வழக்கம் போல - “பச்சையைக் கூட்டு ; சிகப்பை ஜாஸ்தி பண்ணு... ....இல்லை நீலம் கம்மியாய்.... no... no... மஞ்சள் தூக்கலாய் தெரியட்டும் ! ” என்று நமது டிசைனிங் டீமின் குடல்களின் பரிமாணங்களைப் பரிசோதிக்கத் தவறவில்லை நான் ! இதோ நீங்கள் பார்ப்பதெல்லாமே நாம் முயற்சித்த சிலபல வர்ணக் கூட்டணிகள் ! இதனுள் எதனை நாம் தேர்ந்தெடுத்திருப்போமென்பதில் நிச்சயமாய் சந்தேகங்களுக்கு இடமிராது என்றே நினைக்கிறேன் !

கதையைப் பொறுத்தவரை - பக்கம் 1-ல் துவங்கும் டாப் கியர் - ‘சுப மங்களம்‘ என்று end card போடும் 395-வது பக்கம் வரையிலும் துளி கூட மாற்றமின்றி பரபரப்பாய் பறக்கிறது! ‘குப்பண்ணன் தான் வில்லன்... சுப்பண்ணன் தான் அவனது தளபதி... கோவிந்தசாமி தான் போர்வாள்‘ என்று கதையின் துவக்கத்திலேயே எதிராளிகளை அழகாய் அடையாளம் காட்டி விடுவது டெக்ஸ் கதைகளின் டிரேட்மார்க் எனலாம் ! ‘அதில் twist வைக்கிறேன் பேர்வழி... எதிரி யாரென்று யூகியுங்கள் பார்ப்போம் !‘ என்ற பல்லாங்குழி ஆட்டத்திற்கெல்லாம் இங்கே அவசியங்களே இருப்பதில்லை தானே ? அதே ஸ்டைல் தான் இம்முறையும் ! ‘வல்லவன்‘ என்றதொரு வில்லனை அறிமுகம் செய்து வைத்து, அவனை துவம்ஸம் செய்திட நமது புயல்படை கிளம்புவதே கதையின் களம் ! இம்முறை மொத்த டீமும் கதைநெடுக வலம் வருவதால் அதிரடிகளுக்குப் பஞ்சமே கிடையாது ! And எப்போதும் போலவே மஞ்சள் சட்டைகள் தகதகக்கின்றன - பக்கத்துக்குப் பக்கம் ! கடந்த 2 நாட்களாய் நமது அச்சுக் கூடத்தினுள் புகுந்தாலே - ‘நெருப்புடா!‘ என்று நம்மாட்கள் பின்னணி மியூசிக் தந்தால் ஆச்சர்யப்பட ஏதுமிருக்காது – becos ‘டமால்‘; ‘டுமீல்‘; ‘க்ராஷ்‘; ‘சத்‘ என்று அதிரடிகள் மட்டுமே அவர்களது கண்களில் பட்டு வருகின்றன “சர்வமும் நானே” அச்சிடத் தொடங்கியது முதலாகவே ! பாலைவனங்கள்... யுத்தகளங்கள்... சலூன்கள் என்ற பழகிப் போன backdrops மட்டுமன்றி இம்முறை கப்பலில் ஏறி நமது டீம் கடலுக்குள் செல்கிறது புலிப்பாய்ச்சலாய் ! “சர்வமும் நானே” – நேர் கோட்டில் பாய்ந்து பரபரக்கும் யானை வெடிச்சரம் ! தீபாவளிக்கு 4 நாட்கள் முன்பாகவே நவம்பர் இதழ்கள் உங்கள் கைகளில் கிடைத்திட வேண்டுமென்பதால் - தீயாய்ப் பணி செய்து வருகிறது எங்களது டீம் !

அக்டோபரின் முதல் வார விளிம்பிலிருக்கும் போதே அடுத்த மாத இதழ்கள் பக்கமாய் நமது பார்வைகளைத் திருப்பினால் - இம்மாத இதழ்கள் சவலைப் பிள்ளைகளாய் மாறிப் போகுமென்பதால் - ஒளிவட்டம் அக்டோபரின் மைந்தர்கள் மீதே தொடரட்டுமே ? இறுக்கமான முகத்தோடு, இருண்டதொரு பின்னணியில் அமர்ந்திருந்த ஜேஸன் பிரைஸ் அக்டோபரின் டாப் ஸ்டார் என்பதில் ஐயமில்லை ! கதை நெடுக விரவிக் கிடந்த அந்த மெல்லிய திகிலுணர்வை ஓவியரும், கலரிங் ஆர்ட்டிஸ்டும் அற்புதமாய் கையாண்டிருந்ததே இந்த ஆல்பத்தின் highlight என்பேன் ! And இங்கொரு கொசுறுச் சேதி ! இந்த இதழின் அடித்தள மொழியாக்கத்தில் உதவியது திரு.N.சொக்கன் அவர்கள் ! ஈரோட்டுப் புத்தக விழாவினி்ல் சந்தித்த போது அதிகம் பேசிக் கொள்ள வாய்ப்பில்லாது போனாலும், அப்புறமாய் மாயாவி சிவாவின் உதவியோடு சொக்கன் சாரோடு தொடர்பில் இருக்க முடிந்தது ! ஏதேனுமொரு மொழிபெயர்ப்பை முயற்சித்துப் பார்க்க அவர் ஆர்வம் காட்டிய போது- என் மேஜையில் காத்துக் கிடந்த ஜே.பி.யை பொட்டலம் கட்டி அனுப்பி வைத்தேன் ! வேகமாய் பார்சலை அனுப்பி விட்ட போதிலும் எனக்குள் நிறையவே கலக்கம் ! பெரியதொரு எழுத்தாளர்- அவருக்கென சன்மானம் தரும் சத்து நமக்குக் கிடையாதெனும் போது, நாம் தரக்கூடிய தொகை சங்கடம் கொள்ளச் செய்து விடக் கூடாதே என்பது கலக்கம் # 1. அப்புறம் நமது கருணையானந்தம் அவர்கள் எழுதினாலும் சரி ; (வாசக) நண்பர்கள் எழுதிய ஸ்க்ரிப்ட்களாக இருந்தாலும் சரி, வெண்கலக்கடையினுள் புகுந்த யானையைப் போல தயக்கமின்றி மாற்றங்கள் செய்து நான் overwrite செய்திடுவதே நடைமுறை ! நிறையத் தருணங்களில் பாதிக்குப் பாதி மாற்றங்கள் கூடச் செய்துள்ளேன் எவ்விதத் தயக்கமுமின்றி ! ஆனால் இம்முறை ஒரு தேர்ந்த எழுத்தாளரின் ஸ்க்ரிப்டில் கை வைப்பதென்பதை அவர் எவ்விதம் எடுத்துக் கொள்வாரோ என்பது கலக்கம் # 2. So மெதுமெதுவாய் எனது எண்ணங்களை மின்னஞ்சலில் தெரியப்படுத்திய போது - சொக்கன் சார் சிம்பிளாக முடித்துக் கொண்டார் – ‘அவசியமென்று நீங்கள் கருதும் மாற்றங்களைத் தாராளமாகச் செய்து கொள்ளுங்கள் ! உங்களுக்குச் சாத்தியமான சன்மானத்தில் எனக்கும் பூரண திருப்தியே‘ என்று ! வாயடைத்துப் போனேன் ! சில வாரங்கள் கழித்து ஸ்க்ரிப்டும் அழகாய் ஈமெயிலில் வந்து சேர, மெது மெதுவாய் அதனுள் புகுந்தேன். சரளமான நடையும், சுலபமான ஓட்டமும் ஸ்க்ரிப்டில் இருந்ததால் – ஏகமாய் திருத்தங்கள் செய்திட அவசியம் தோன்றிடவில்லை. ஆனால் கதையின் dark mood-க்கு ஏற்றவாறு பட்டி டிங்கரிங் தேவைப்பட்டிட அவற்றைச் செய்யத் துவங்கினேன். ஒரு மாதிரியாய் சொக்கன் சாரது சாலையில் தார் போடும் பணி நிறைவேறிய போது - “எழுதப்பட்ட விதி” தயாராகி இருந்தது ! மூன்று பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின், தொடரும் 2 பாகங்களை நானுமே இன்னும் படிக்கவில்லை ; அந்த சஸ்பென்ஸைப் பணியாற்றும் நேரத்திற்கே தெரிந்து கொள்வோமென்ற எண்ணத்தில் ! So ‘மறைக்கப்பட்ட நிஜங்கள்‘ என்னவென்பதை உங்களைப் போலவே நானும் டிசம்பரில் அறிந்திட ஆவலாய்க் காத்திருப்பேன் !  ஒரே  ‘இக் கன்னா‘ என்னவென்றால்  – கதையோட்டத்தில் கொஞ்சம் 'மிட்நைட் மசாலா' சமாச்சாரங்கள் தூக்கலாய் தலைகாட்டுவதாகத் தோன்றுகிறது ! அதனைச் சமாளித்தாக வேண்டும் – கதைக்குச் சேதமின்றி ! Fingers crossed !

அக்டோபரின் அணுகுண்டு ஜேசன் ப்ரைஸ் எனில், ஜாலியான சரவெடி “தற்செயலாய் ஒரு ஹீரோ” தான் என்பதும் உறுதி ! 2016-ன் ஓட்டத்தில் மாதம்தோறும் நாம் இரவுக்கழுகாரைச் சந்தித்து வந்தாலும் – நிஜமான highlight அவரது பற்பலப் பரிமாணங்களைப் பார்க்க சாத்தியமானதே என்பேன் !

- சட்டத்திற்கொரு சவக்குழியில் – அதிரடி முகம்
- திகில் நகரில் டெக்ஸ் – டிடெக்டிவ் முகம்
- விதி போட்ட விடுகதை – பாசமான தந்தை அவதாரம்
- தலையில்லாப் போராளி - துணிவே உருவான சாகஸ முகம்
-டாக்டர் டெக்ஸ் – லைட்டான கதைக்களத்திலும் பளீரிடும் பாங்கு
- குற்றம் பார்க்கின் – மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஈரம்
- கனவாயின் கதை – நட்பின் வலிமை !
- துரோகத்திற்கு முகமில்லை – தோல்வியின் பயம் உணரும் சராசரி மனிதனின் வேதனை !
- தற்செயலாய் ஒரு ஹீரோ – பெருந்தன்மையின் மறுமுகம் !

நவம்பரில் ஒரு பாசாங்கில்லா ஆக்ஷன் அதிரடியிலும், டிசம்பரில் ஒரு மனதைத் தொடும் சாகஸத்திலும் நம்மவரைப் பார்த்திடும் போது ஒரு வானவில்லின் பல வர்ணங்களைப் பார்த்த திருப்தி கிட்டின் – இந்தாண்டின் special தருணங்களுள் இதுவொரு உச்ச இடத்தைப் பிடிக்குமென்பது உறுதி ! பாருங்களேன் இந்த ரங்கோலியை !


அக்டோபரில் ஒரு அட்டகாச நகைச்சுவை விருந்தோடு ஆஜராகியும் வெண்கலக் கோப்யையை மட்டுமே பெற்றிடும் லக்கியாரை எண்ணி ‘லைட்டாக மண்டையைச் சொரியத்தான் முடிகிறது ! லக்கியின் கதைவரிசையினுள் ஒரு டாப் ஆல்பம் “திருடனும் திருந்துவான்” என்பதில் ஐயம் கிடையாது ! ஆனால் அதுவே போட்டியில் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளதென்று நினைக்கையில், புதுவரவு ஜேசனும், இரவுக்கழுகாரும் ஸ்கோர் செய்திருப்பதன் வீரியத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது ! 

And surprise.... surprise! கூர்மண்டையரின் “கடத்தல் குமிழிகள்” பெற்றுள்ள applause ! இது போன்ற சூப்பர் ஹீரோ-சூப்பர் "புய்ப்பச்சூட்டல்" கதைகளிலுள்ள ஒரே ப்ளஸ் பாய்ண்ட்- புராதன நெடிகளுக்கு இங்கே அதிகமாய் இடமிருப்பதில்லை என்பதே ! So - ஒரு லாரன்ஸ், டேவிட் கதையில் தென்படுமளவிற்கு ஸ்பைடர் கதைகளில் அந்த பழமை நெடி தூக்கலாய் தெரிந்திட வாய்ப்புகள் குறைச்சல் என்பதால் – “கடத்தல் குமிழிகள்” போன்ற கதைகள் சேதமின்றித் தலை தப்பி விடுகின்றன ! And guess what ? நமது ஆன்லைன் ஸ்டோரில் செப்டம்பர் மாதத்து விற்பனை # 1 – மிஸ்டர் சிலந்தியாரின் அத்தனை இதழ்களும் அடங்கிய pack தான் ! So எட்டுத்திக்கிலும் சிலந்தியாரின் சிரசாசன SMS களும் ; ஹெலி-கார் சாகஸங்களும் ஒரு இரண்டாவது ரவுண்ட் சுற்றி வருவது புரிகிறது ! Phew !!

தீபாவளியும், தீபாவளி மலர்களும் கவனத்தைக் கோரி வரும் வேளையில் - கைவசமிருக்கும் கதைகளின் ஸ்டாக் எடுக்கும் படலத்தை நடத்திக்கொண்டிருந்தேன் நேற்றைய பகலில் ! அப்போது நமது முதன்முதல் தீபாவளி மலரும் கண்ணில் பட்ட போது - சின்னதொரு curiosity-ல் பக்கங்களைப் புரட்டினேன் ! சட்டித்தலையன் டன் டன்னாய் காதில் பூ சுற்றுவதைத் தாண்டி ; அந்த அட்டைப்படத்தைத் தாண்டி எனக்கெதுவும் நினைவில் இல்லை ! ப்ளு; ஆரஞ்சு; தேன் மஞ்சள்; கிளிப் பச்சை; ராமராஜன் பிங்க் என்று 5 மாறுபட்ட வண்ணங்களோடு இன்னமும் நியூஸ்பிரிண்டில் இதழ் டாலடிப்பதைப் பார்க்க பிரமிப்பாகவே இருந்தது ! “ஆர்ச்சியை நம்பினோர் கைவிடப்படார் !” போன்ற அகிலத்தை அசங்கச் செய்யும் ஆழ்ந்த வசனங்கள் ஆங்காங்கே விரவிக் கிடப்பதைப் பார்த்த போது அந்நாட்களிலேயே உங்களை நான் படாத பாடு படுத்தி வந்திருப்பது புரிந்தது ! ஆனால் அழகான அந்நாட்களது அச்சுப் கோர்ப்பும், நமது ஆர்டிஸ்ட்களின் நேர்த்தியான பணிகளையும் மெய்யாக ரசிக்க முடிந்தது ! கனத்த அட்டைகளில் ஒரிஜினல் b&w பிரிண்ட்களை வெட்டி, ஒட்டி, அப்புறமாய் அதன் மீது அச்சுக் கோர்ப்பின் பிரிண்ட்களை ஒட்டி விடடு - படங்களை, பலூன்களைப் பூர்த்தி செய்வது ஒரு நுணுக்கமான, நுட்பமான கலை ! பலூன்களைச் சுற்றிய strokes ; படங்களை நீட்டிக்கும் strokes பட்டையாக அமைந்தால் அது என்னை ரொம்பவே உறுத்திடும். மெல்லிதான, ஷார்ப்பான strokes இதமாக இருந்திடும் ! காளிராஜன் & சிகாமணி என இரு ஓவியர்களும் இந்த மெலிதான strokes-களில் கில்லாடிகள். இந்த இதழின் முழுமையிலும் அவர்களது பணித்தடங்களைப் பார்க்க முடிந்த போது அந்நாட்களது நினைவுகள் அநியாயத்துக்கு அலையடித்தன ! இரவு டிபனுக்கு 5 ரூபாய் தந்தனுப்பி விட்டு, நானொரு பத்து ரூபாயைப் பாக்கெட்டில் செருகிக் கொண்டு இங்க்கி-பிங்க்கி-பாங்க்கி போட்டு ஏதேனும் ஒரு ஹோட்டலில் நுழைந்த நினைவுகள் இன்றைக்கு போதி தர்மரது காலத்துச் சமாச்சாரங்களாய் தோன்றுகின்றன. இதழின் விளம்பரப் பக்கங்களில் முழுக்க முழுக்க கையால் எழுதப்பட்ட தலைப்புகள் ; நெருடலில்லா filler pages லே-அவுட் என்பது போதாதென்று - அடியேனின் கதையோடும் (!!?); ஓவியர் சிகாமணியின் சித்திரத்தோடும் டாலடிக்கும் ஒற்றைப்பக்கக் கார்ட்டூன் - அந்நாட்களது திறமைசாலிகளை நினைத்துப் பெருமூச்சிடச் செய்தது ! இன்றைக்குக் கணினிகளில் உலகுக்கே பாடம் சொல்லித்தருகிறோம் தான் ; ஆனால் மனிதனின் ஆற்றல்கள் மட்டுமே முன்னணியில் நின்ற அந்நாட்கள் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் என்பேன் ! 

இதோ- வால்ட் டிஸ்னியையும், ப்ராங்கோ-பெல்ஜியக் காமிக்ஸ் ஸ்டூடியோக்களையும் ‘டரியலாக்கிய‘ அந்நாட்களது நமது படைப்பு! நல்ல காலத்துக்கு அந்தக் ‘கலைச் சேவையைத் தொடரவில்லை... இல்லையேல் பற்பல ‘காதல்‘ பரத்கள் நம் புண்ணித்தில் சாலைகளில் உலாற்றிக் கொண்டிருந்திருப்பார்கள்.

அப்புறம் சந்தா 2017 பற்றி ! ஒருவழியாய் அட்டவணைப் படலமும் நிறைவு கண்டு ; அதன் சாதக-பாதகங்கள் அலசப்பட்டு வரும் நிலையில் கிட்டியிருக்கும் சூப்பர் நியூஸ்- சந்தா E-க்கென நீங்கள் தந்திருக்கும் ஏகோபித்த thumbs up தான் ! ஒரேயொரு PLATINUM ; 3 SILVER நீங்கலாகப் பாக்கி அனைத்துமே A B C D E என்ற GOLD சந்தாவுக்கே ! எப்போதுமே டிசம்பரிலும், ஜனவரியிலும் தான் சந்தாக்கள் விறுவிறுப்படைவது வாடிக்கை ; ஆனால் இம்முறையோ இந்தத் துவக்கப் படலமே அதிரடி ரகம் தான் ! 

"இவற்றைக் கடையில் வாங்கினால் இருநூறு ரூபாய் மிச்சம் பண்ணுகிறீர்கள்" ;   "புத்தக விழாக்களில் வாங்கினால் முன்னூறு ரூபாய்சேமிக்கிறீர்களென்ற" ஆழமான ஆராய்ச்சிகள் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருப்பதும் இயல்பே ! ஆனால் இந்த இருநூறு , முன்னூறு ரூபாய்கள் நாம் செய்யும் பணிகளுக்கு கிடைக்கும் ஊதியமாக இருந்துவிட்டுப் போகட்டுமே என்ற  கண்ணோட்டத்தில் பார்த்திடுவதில்  நண்பர்களுக்கு  என்ன சிரமம் என்று சத்தியமாய்ப் புரியவில்லை எனக்கு ! இங்கே நான் ஈட்டும் ஒவ்வொரு ரூபாயும் ஒன்றரை ரூபாயாகவோ, இரண்டு ரூபாயாகவோ மறுபடியும் இங்கேயே தான் விதைக்கப்படுமே தவிர, அதனில் என் இடுப்பின் சுற்றளவை அதிகம் செய்ய நான் வழி தேடியதே கிடையாதே ? எங்களிடம் நீங்கள் ஒப்படைக்கும் ஒவ்வொரு ஒற்றை ரூபாயும் உங்களின் உழைப்பின் பலன்களே என்பதை நாங்கள் ஒருநாளும் மறந்திடுவதில்லை ; ஆனால் சந்தா செலுத்தாது நீங்கள் மிச்சம்பிடிக்கப் போகும் அந்த 200 / 300 ரூபாய்கள் மெய்யாக இன்றைய உலகினில் அத்தனை அசாத்தியமான தொகைகள் தானா ? பொருளாதார ரீதியினில் அனைவருக்கும் நமது சந்தாத் தொகைகள் சாத்தியமென்ற கற்பனைகள் நிச்சயமாய் நமக்கு கிடையாது ! So உங்களளவில் அவ்வப்போது கடைகளில் வாங்கி கொள்ளும் பட்சங்களில் நிச்சயம் அதில் பிழையில்லை ! ஆனால் சென்னை போன்றதொரு பெருநகரில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் விற்பனையாளர்களைத் தேடிச் செல்லும் நேரங்களும், செலவுகளும் நிச்சயமாய் கணக்கினில் வந்திட வேண்டிய அம்சங்கள் தானே ? சென்னையில் THREE ELEPHANTS தற்காலிகமாய் செயலாற்றும் சூழலில் இல்லை  ; திருப்பூர் ஏஜெண்ட் - இது சரிப்படாது எனக்கு ! என்று கைவிரித்து விட்டார் ! So இத்தகைய சிரமங்கள் நேரும் இடங்களில்  மாற்று ஏற்பாடுகள் நடந்தேறும்வரையிலும் இதழ்கள் கிடைக்காதென்பதும் கணக்கில் கொள்ள வேண்டிய சிந்தனைகள் அல்லவா ? இதோ - இந்த மாதம் ஈரோட்டில். சேலத்தில்...மதுரையில் வாசகர்கள் புகார் சொல்லியுள்ளனர் கடைகளில் 2017-ன் கேட்டலாக் தர  மறந்துவிட்டார்கள் என்று ! அதனை மறுபடியும் வாங்கச் செல்வதென்பதெல்லாம் அத்தனை சுலபமே சுலபம் தானா ?  And ஏதோ காரணங்களின் பொருட்டு உங்களுக்கு சந்தா வசதியாகத் தோன்றிடாது போகும் பட்சத்தில் புரிந்து கொள்ளுவதில் சிரமமில்லை ! ஆனால் சக வாசகர்களையும் அதனிலிருந்து discourage செய்திட ஆர்வம் காட்டுவதன் பின்னணியில் இருப்பது மெய்யாக சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மட்டுமே தானா ? அலசுங்கள் ...ஆராயுங்கள் ...வாட்சப் ...வலைப்பக்கங்கள் ...FB என்று விவாதங்கள் பண்ணுங்கள்... நையாண்டி பண்ணுங்கள்...அறிவுரை வழங்குங்கள்... தவறில்லை ; அதே மூச்சில் இதே துறையில் உள்ள ஏதேனும் ஒரு மூத்த பதிப்பகத்திடம் நமது 46 இதழ்களின் திட்டமிடல்களையும், விலைகளை, தரங்களையும் காட்டிவிட்டு - அரையணாவிற்கு விளம்பரமே இல்லாதொரு ஒரு துக்கனூண்டு சர்குலேஷனில் இவற்றினுள் இருக்கக் கூடிய இலாப விகிதம் என்னவாக இருக்குமென்ற அபிப்பிராயங்களையும் கோரிடப் பாருங்களேன் ? அட.. அவ்வளவு தூரம் போவானேன் ? அவரவருக்குள் உறையும் ஆழ்மனதிடம் கேட்டுத் தான் பாருங்களேன் - இதனில் உள்ள பணிச் சுமைக்கும் - லாப விகிதத்துக்கும் ஏதேனும் சம்பந்தம் இருந்திடல் சாத்தியம்தானா என்று  ? இன்றைய பதிப்புலக சூழலில் ஊர் ஊராய்க் கடன் கொடுத்து விட்டு அதனை வசூலிக்க நாயாய்ப், பேயாய் அலைந்து, போலீஸ் ஸ்டேஷன், பஞ்சாயத்து என்றெல்லாம் நம்மாட்கள் வலம் வந்து, ஆண்டுக்கு குறைந்தது நாலு / ஐந்து இலட்சங்களை நிலுவைச் சேதாரங்களாய் இழந்து, அப்புறமும் "வலிக்கலியே  " என்று புன்னகைக்க முற்படுவது அத்தனை சுலபம்தானா என்றும் கேட்டுத் தான் பாருங்களேன் ?

ஊர் கூடி இழுக்க வேண்டிய தேர் அல்லவா இது ? என் மீதான வருத்தங்களை வெளிப்படுத்த சக்கைகள் செதுக்கும் நேரத்திற்கு, வடம்பிடிக்க முன்வந்தால் ஒன்றிணைந்த சந்தோஷம் நமதாகிடாதா  ? அந்தச் சக்கைகள் செதுக்கும் முனைப்பினை அழகாய் சிறு சிற்பங்கள் செதுக்குவதனில் காட்டிடும் பட்சத்தில் அழகாகிடுவது தேராக இருக்குமன்றோ ?  2017-க்கென நீங்கள் அனுப்பி வரும் தொகைகளை கவனமாய் அடுத்தாண்டின் செலவினங்களுக்கென ஒதுக்கி வைத்து - அவசர ஆத்திரங்களுக்கு அதனிலிருந்து லேசாய்  லவட்டும் சபலத்தைக் கடும் பிரயத்தனத்தின் பேரில் தவிர்த்து வருகிறோம் ! போனெல்லியும், பிராங்கோ-பெல்ஜியக் குழுமங்களும் நம் ஆர்வங்களை மதித்து, 2017-ன் கதைகளில் ஒரு கணிசமான பகுதியை ஏற்கனவே தந்து விட்டபடியால் – “நாங்க இங்கே ஒரே பிஸி !” 2017-ன் இதழ்களை நாளைக்கே கண்ணில் காட்ட வேண்டுமா ? நாங்கள் ரெடி ! நீங்களும் ரெடியாகிக் கொள்ளுங்களேன் – சந்தாக் குடும்பத்தில் ஐக்கியமாகி !

மீண்டும் சந்திப்போம் guys! அனைவருக்கும் நமது சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்! Have a fun filled weekend & more!

P.S : முதிர்ந்த நமக்கெதற்கு வரையறைகள் ? என்ற சிந்தனையில்தான் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாய் இந்தத் தளத்தில் எவ்விதக் கட்டுப்பாடுகளையும் விதிக்க நான் முனையவில்லை ! ஆனால் blog admin ஆன எனக்கு இடையிடையே மட்டுமே தலைகாட்ட நேரம் கிட்டுகிறதெனும் பொழுது - வீடு பற்றி எரிந்த பின்னே சைரன் ஊதிக் கொண்டு வரும் தீயணைப்பு எஞ்சினைப் போலவே காட்சி தர முடிகிறது. So நிலைமைகளை சீர் செய்திட சிற்சிறு மாற்றங்களை அமல்படுத்தவிருக்கிறோம் வரும் திங்கட்கிழமை  முதல் ! (நாளைய பொழுதினில் அந்தப் பதிவு செய்து கொள்ளும்  படிவத்தை தயார் செய்திடுவோம் ! )

இனி இங்கே தத்தம் ஐடி களைப் பதிவு செய்து கொள்ளும் நண்பர்கள் மாத்திரமே கமெண்ட் செய்திட இயலும் வகையில் செட்டிங்ஸ் மாற்றிடப்படும். So அதற்கென சிறிது நேரம் எடுத்துக் கொள்ளத் தேவைப்படும் !

உங்கள் எண்ணங்கள் என்னவாக இருப்பினும் - அதனை இனி நிஜ முகங்களோடு பதிவிடும் முயற்சிகளுக்கு தொடக்கம் கொடுப்போமே ?!

327 comments:

  1. Replies
    1. பிரான்சின் மகாரா(ட்)ஜாவுக்கு காலை வணக்கங்கள்...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Radja Sir, மன்னிச்சூ. உங்க thread இல் போஸ்ட் பண்ணுகிறேன்

      Delete
  2. //நல்ல காலத்துக்கு அந்தக் ‘கலைச் சேவையைத் தொடரவில்லை//
    தொடரணும் சார்.. தொடரணும்.... இப்ப நீங்க பயன்படுத்தற சில ஃபில்லர்ஸ்ல என்னமோ மிஸ் ஆவுது!

    ReplyDelete
    Replies
    1. Podiyan : சிங்கத்தின் சிறு வயதில் / வலையில் & வருகிறது விளம்பரங்களைத் தாண்டி இன்று எங்குள்ளது சார் filler pages-க்கான இடம் ?

      Delete
  3. Within 10. Received the October books. Yet to read. Just looking... looking the lucky luke cover. Excellent work.

    ReplyDelete
  4. Please continue your wonderful work. All our books are mind relaxing. Thanks.

    ReplyDelete
  5. மாடஸ்டி பிளைஸி

    ReplyDelete
  6. Dear Editor,

    Finally able to register.

    Coming to the blog post this week, I feel there is a lot of emotions attached to the last three paragraphs. Even the person who did the analysis had concluded that the 300 INR extra is "snack" change. I would add that if you include commute from one end of Chennai to bookfair grounds it becomes even more expensive. Given this I am amused that this topic gains this much importance.

    I would rather be looking at the possibility of single track subscriptions for say B / C / D etc - even gaining 10 extra subscriptions an year in single track would net you a path that would increase probably in the coming years.

    ReplyDelete
    Replies
    1. Raghavan : Single track subscriptions are no tough task if the courier factor doesn't come into the picture. You will just need to add up Rs.480 (packing + courier - without any subsidising) + cost of books in each case !

      It's just the fact that shipping costs would look so glaringly high that we refrain from it.

      Delete
  7. சிறுவர்களுக்கான பூந்தளிர் போன்ற இதழ் நம் லயன்-முத்து குழுமத்திடம் இருந்து வர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்

    ReplyDelete
    Replies
    1. மஞ்சள் சட்டை மாவீரன் : அதெல்லாம் ஒரு கனாக் காலம் சார் ! இன்றைக்கு தமிழில் வாசிக்கும் சிறார்களைத் தேடிட வேண்டுமெனில் லெமூரியாவுக்குத் தான் பயணம் போயாக வேண்டும் ! குட்டீஸ்களுக்கான இதழ்களை வெளியிட்டு வரும் முன்னணி நிறுவனங்களே தடுமாறும் சங்கட நாட்கள் இவை !

      Delete
    2. //அதெல்லாம் ஒரு கனாக் காலம் சார் !//

      Golden words.....Globally.

      Delete
  8. சர்வமும் நானே எங்கள் கைகளில் கிடைத்தபிறகு சர்வமும் மகிழ்ச்சியே! Idகளை பதிவு செய்துகொள்ளும் முறை நல்ல முறை அந்த படிவம் எங்களை பற்றிய அறிமுகம் இருக்குமாறு வடிவமைத்து விடுங்கள் இதுவே நமது வாசக அன்பர்களின் databaseஆக செயல்படட்டும்.

    ReplyDelete
    Replies
    1. // ஐ.டி.களை பதிவு செய்யும் முறை.!//

      ஆகா.! சூப்பர் சார்.! நிம்மதியாக நம் நண்பர்களிடம் அரட்டை அடிக்கலாம்.!

      Delete
  9. அருமையான பதிவு சார்.

    ReplyDelete
    Replies
    1. பிடியுங்கள் என் மெயில் ஐடியை.
      tkahmedbasha@gmail.com

      Delete
  10. அட்டகாசமான பதிவு!

    தலையின் அட்டைப்பட வர்ண ஜாலத்திற்கு முன்பு வானவில் வண்டியைப் பிடித்து ஓடிவிட்டதென்றே சொல்லவேண்டும்!

    சந்தா-E பெற்றுவரும் வரவேற்பு உற்சாகமளிக்கிறது! இப்போதுள்ள '6' அடுத்தவருடம் '12' மாறினால் மகிழ்ச்சியே!

    போலி-ஐடிக்ளை புறம்தள்ள மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைக்கு என்னுடைய தம்ப்ஸ்-அப்!

    சந்தா பற்றி அவதூறாக எழுதி வருபவர்களெல்லாம் நம்முடைய இப்போதைய வளர்ச்சியால் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டவர்களே! அவர்களைப் பார்த்து 'ஹோ ஹோ ஹோ' என்று ஸ்பைடர் பாணியில் சிரித்துவிட்டு நம் வேலைகளைத் தொடர்வதே அவர்களுக்கான 'மரியாதை'யாக இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. // சந்தா பற்றி அவதூறாக எழுதி வருபவர்களெல்லாம் நம்முடைய இப்போதைய வளர்ச்சியால் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டவர்களே! அவர்களைப் பார்த்து 'ஹோ ஹோ ஹோ' என்று ஸ்பைடர் பாணியில் சிரித்துவிட்டு நம் வேலைகளைத் தொடர்வதே அவர்களுக்கான 'மரியாதை'யாக இருக்கும்! //

      சரியாக சொன்னீங்க! இதுதான் அவர்கள் நோக்கம்!!! நாம் எப்போதும் போல் சந்தா கட்டிவிட்டு சந்தோசமாக இருப்போம்!!

      Delete
    2. ஆ.பழனிவேல்
      ஐடி palanivel arumugan

      Delete
    3. // சந்தா பற்றி அவதூறாக எழுதி வருபவர்களெல்லாம் நம்முடைய இப்போதைய வளர்ச்சியால் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டவர்களே! அவர்களைப் பார்த்து 'ஹோ ஹோ ஹோ' என்று ஸ்பைடர் பாணியில் சிரித்துவிட்டு நம் வேலைகளைத் தொடர்வதே அவர்களுக்கான 'மரியாதை'யாக இருக்கும்! //...+1234567890987654321

      வெல் செட் விஜய்...

      Delete
    4. போலி ஐடியில் உலா வருபவர்கள் திருந்த எடிட்டர் சார் முயற்சிப்பது பாராட்டுக்குரியது.
      நல்லதையே எதிர்பார்ப்போம்.

      Delete
    5. ஈரோடு விஜய்.!


      //ஸ்பைடர் பாணியில்//

      ஹாஹாஹாஹா..... நல்ல டைமிங் ,(ரூம் போட்டு யோசிப்பீங்களோ.??)

      Delete
  11. காலை வணக்கம்
    நல்ல முடிவு ஆசிரியரே

    ReplyDelete
  12. காலை வணக்கம்.
    நீங்கள் கூறும் சந்தா பற்றிய அலசல் நானும் பார்த்தேனே. அவர் மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தை வலியுறுத்தி இருக்கிறார். சந்தாவில் சேருவது ஷேமம் என்று. இந்த வருடம் போன வருடத்தை விட சந்தா மும்மடங்காக வாழ்த்துக்கள். டிசம்பர் மாதம் என் சந்தா வந்து சேரும்.

    ReplyDelete
    Replies
    1. ஆப்ப கண்ணுக்கு தெரியாமல் இருக்க...சில ங்கமுலாம் பூசிய வார்த்தைகள்...ஏன்னா அவர் நலம் விரும்பும் விசுவாசியா காட்டிக்கிறாராம்....பிற வார்த்தைகள்....விட்உ விடுவோம் அவர்களை..

      Delete
  13. அன்பு எடி ஐடி பதிவு செய்வது மிக நல்ல முடிவு .எனது ஐடி senthilmadesh2010@gmail.com

    ReplyDelete
  14. டெக்ஸ் அனைத்து அட்டயும் அருமை...வண்ண மத்தாப்புகளை தீபாவளிக்கு சிதறச் செய்துள்ளீர்கள்...ஹார்டு பவுண்டு அட்டை ..சூப்பர்..கொலைப்படை ஒருவரிடம் இப்படி ஒருகதை வந்ததா என வியப்புடன் நண்பரிடம் வாங்கிப்படித்ததும்...அந்த சீனிவாசன் ஆமைத்தீவில் ஆர்ச்சி என ொரு கதை வைத்திருப்பதாய் கூறி என்னை அலைய விட்டதும் பசுமையாய் நினைவில்...அது புருடா என உணர தேவைபட்ட காலங்கள் ஒரிரு வருடங்கள்...அந்த கதய அதே வடிவமைப்பில் இருவண்ணத்தில் விட்டால் தூள் கிளப்புமே...யோக்கியனாய் முகம் காட்டி ..அயோக்கியனாய் முகம் மாற்றி பதிவிடும் அந்த ......ுங்கள் மேல் பொறாமைப்புழுதியை வாரி இறைததிடும் நபருக்கு சரியாய் பிடி போட்டுள்ளீர்கள்...அருமை.....ஏன் சந்தா கட்டவேண்டும் என்ற ுங்கள் கோரிக்கை நண்பர்களை மேலும் சந்தாவில் இணையச் செய்யும் .அருமை....ஸ்பைடரின் முழு அருமையும் வருங்கால வாசகர்களுக்கு தெரிய வரும் போது ...ஸ்பைடர் குரல்கள் ஒலிப்பது நிச்சயம் என நிரூபனமாகி உள்ளது....கொலைப்படையை சிறிதும் மாற்றமின்றி அதே போல வெளியிட்டு பாருங்கள் உங்களுக்கும்...வாசக நண்பர்களுக்கும் இன்ப அதிர்ச்சி உறுதி....

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : ஆமைத் தீவில் ஆர்ச்சியா ? அட்ரா சக்கை !! அட்ரா சக்கை !!

      Delete
  15. நான் ஏன் சந்தா கட்டுகிறேன்?

    விடை : பஸ் ஆட்டோ செலவு மிச்சப்படுவதோடு கிடைக்காத இதழ்கள் தரும் மனச்சோர்வை தவிர்க்க முடிகிறது.
    வலைப்பதிவில் சிறப்பான விமர்சனங்களை படித்தபின் தேடி அலைந்து வாங்க முடியாத இதழ்களை படிக்க சந்தா நண்பர்களை நச்சரிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை இனி .

    சந்தா தொகை செலுத்த சிரமப்படும் வாசகர்கள் கவனத்திற்கு சில உத்திகள்.
    நண்பர்கள் 4 பேர்கள் இணைந்து செலுத்துங்கள். இதழ்களை பகிர்ந்து வாசித்து மகிழுங்கள்.

    எனது பள்ளி நாட்களில் எட்டு அனா விலையில் விற்ற பராசக்தி மனோகரா வசன புத்தகங்களை எட்டுப்பேர் கூட்டணியில் வாங்கி மனப்பாடம் செய்து மகிழ்வோம்.
    கல்லூரி. நாட்களில் நண்பர் வீட்டு மொட்டை மாடியில் கூரை வேய்ந்து ஒரு நூலகம் அமைத்து விரும்பிய இதழ்களை 10 நண்பர்கள் பகிர்ந்து வாங்கி பயன் அடைந்தோம் . அந்த வட்டாரத்து சிறுவர்களுக்கு விடுமுறை நாட்களில் இலவச நூலகமாக செயல் படுத்தி அவர்களுக்கு கட்டுரை பேச்சுப்போட்டி என்று அமர்களப்படுத்தினோம்.

    இன்றய இளைய தலைமுறை மாணவ llமாணவியர் மற்றும் இல்லத்தரசிகள் இணைந்துஇதுபோன்ற முயற்சிகளில் ஈடு படலாமே?

    வலைப்பதிவிடும் நண்பர்கள் உங்கள்
    ஆலோசனைகளைப்பதிவிட்டு வாசிக்கும்
    வட்டங்களை விரிவு படுத்த உதவிடுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக அருமையான கருத்து...

      Delete
    2. சூப்பர்.... அருமையான ஐடியா நண்பரே

      Delete
    3. உண்மை ....அருமை....

      Delete
    4. //நண்பர்கள் 4 பேர்கள் இணைந்து செலுத்துங்கள். இதழ்களை பகிர்ந்து வாசித்து மகிழுங்கள்.//

      //அந்த வட்டாரத்து சிறுவர்களுக்கு விடுமுறை நாட்களில் இலவச நூலகமாக செயல் படுத்தி அவர்களுக்கு கட்டுரை பேச்சுப்போட்டி என்று அமர்களப்படுத்தினோம்.
      இன்றய இளைய தலைமுறை மாணவ மாணவியர் மற்றும் இல்லத்தரசிகள் இணைந்துஇதுபோன்ற முயற்சிகளில் ஈடு படலாமே?//

      Awesome idea(s) !!


      Delete
  16. விஜயன் சார், தூத்துக்குடியில் நடைபெறும் புத்தக திருவிழாவில் உள்ள நமது ஸ்டாலுக்கு எனது மகள் மற்றும் அண்ணனுடன் சென்று வந்தேன். நமது ஸ்டால் மிகவும் வசதியான இடத்தில் உள்ளது. நமது காமிக்ஸ் விற்பனை பற்றி கேட்டேன், சரி இல்லை சார் அடுத்த வருடம் எல்லாம் வரமாட்டோம் என்று சொன்னார். நான் அவரிடம் தூத்துக்குடியில் இதுதான் முதல் புத்தக (பெரிய) திருவிழா, எனவே புத்தக திருவிழா என்பது எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாகதான் கொண்டு வரும். எனவே அடுத்த ஆண்டு புத்தக திருவிழாவிற்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகும் அதே போல் நமது விற்பனை வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பாக நடைபெறும் என்று சொன்னேன். முழு புத்தககடைகளை சுற்றி பார்த்து முடிக்க சுமார் 1.5 மணி நேரம் ஆனது. காமெடி புத்தகம்கள் 5 வாங்கி விருதுநகரில் உள்ள ஒரு பள்ளிக்கூட நூல் நிலையத்திற்கு கொடுத்து விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : முத்து நகரின் விற்பனைக் கதைகளைச் சொன்னால் ரூம் போட்டு அழுதிடத் தோன்றும் நண்பரே ! மொத்தம் 10 நாட்களில் ஆன சேல்ஸ் 4 இலக்கங்களைத் தாண்டவில்லை !

      Delete
  17. // நமது ஆன்லைன் ஸ்டோரில் செப்டம்பர் மாதத்து விற்பனை # 1 – மிஸ்டர் சிலந்தியாரின் அத்தனை இதழ்களும் அடங்கிய pack தான் ! //

    When are you going to include the Robot Archie in the classic list ?

    ReplyDelete
    Replies
    1. Editor Sir,ஆர்ச்சியின் சாகசங்களில் லயித்திருக்க இன்னும் எவ்வளவு நாள் பொறுத்திருக்க வேண்டுமோ!

      Delete
  18. எடிட்டர் சார்....!
    A+B+D+E என்ற காம்பினேஷனில் சந்தா கட்ட அனுமதியுண்டா...? உண்டு எனில் பதிவு தபாலில் பெற தொகை எவ்வளவு என்று தெரிவிக்கவேண்டுகிறேன்..!!!

    (கார்ட்டூன் கதைகளின் ரசிகனல்ல நான்...!)

    ReplyDelete
  19. "எழுதப்பட்ட விதி" மிக நன்றாக இருந்தது. இப்படி ஒரு கதையை படிக்கத்தான் ஆவலோடு இருந்தேன். கறுப்பு கிழவியின் கதைகளுக்கு பிறகு என்னை ஈர்த்த அமானுஷ்ய ரகமான கதை. ஜேசன் ப்ரைசுக்கு இந்த ஒரு கதை மட்டும்தானா. ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் ஆவாரத்தொடு வெளியிடும் டைலன் டாக், மேஜிக் விண்ட் கதைகளை விட நன்றாக இருக்கிறது. 3 கதைகளும் ஒரே புத்தகமாக வந்திருந்தால் கிராபிக் நாவல் என்ற பார்வையில் பத்தொடு பதினொண்றாகி இருக்கும். ஹீரோவின் பெயர் வாசகர் மனதில் நிலைத்து நிற்க வேண்டுமென்றுதான் 3 புத்தகமாக தனித்தனியாக வெளியிடுகிறீர்களோ. சுமாரான சித்திரங்கள் கொண்ட கதைகளுக்கெல்லாம் ஓவியர் பெயரை அட்டையில் போட்டு அந்த ஓவியருக்கு பெருமை சேர்க்கிறீர்கள். ஆனால் இந்த கதைக்கு சூப்பராக சித்திரங்கள் அமைத்த ஓவியர் பற்றி ஒரு சிறு குறிப்பு கூட புத்தகத்தில் இல்லையே. அவர் தனது அழகான சித்திரங்கள் மூலம் என்னை ஒரு மணி நேரம் லண்டனில் வாழ வைத்துவிட்டார்.

    ReplyDelete
  20. சர்வமும் நானே ...

    ஆஹா ஒரே தொகுப்பாக ஹார்ட் பைண்டிங்கில் வருகிறதா ..சூப்பர் ஸார் ..அதுவும் தீபாவளிக்கு முன்னரே ...

    வாரே வாவ் ...

    இந்த தீபாவளி காமிக்ஸ் நேசர்களுக்கு சர்வமும் ..அதகள அதிரடி தீபாவளியாக அமைய போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ...

    எனது மெயில் ஐடி

    Kparanitharan76@gmail.com

    என்பதே சார்...

    ReplyDelete
  21. வணக்கம் சார்...

    சர்வமும் நானே...
    அட்டைப்படம் அள்ளுது மனசை...
    தீபாவளிமலர் என்ற டைட்டிலும், பின்னணி வாணவேடிக்கை களும் பழைய தீபாவளி நினைவுகளை கிளறிவிடுகின்றன்.
    டெக்ஸின் மிக நீண்ண்ட்டட்ட சாகசமான இந்த 10000 வாலா சரவெடியை வெடிக்கும் தருணத்தை எண்ணி குத்தாட்டம் ஆரம்பம் இப்போதே சார்...

    ReplyDelete
  22. சர்வமும் நானே, அட்டைகள்
    சகலமும் நன்றே

    ReplyDelete
  23. Dear Edi,

    Your effort in working out that 2017 list with utmostcare and precision alone, deserves a full subscription from anyone able and caring towards our comics. Have been a proud subscriber ever since I started earning on my own. And will continue to do so as long as our Comics is publishing (which I pray it would be forever).

    Looking forward for the Diwali set.

    P.S. Very good decision, to enable registration for commenting. Longtime overdue, but good to see it finally in fruition.

    ReplyDelete
    Replies
    1. Rafiq Raja : நன்றிகள் சார் ! உங்கள் ஒவ்வொருவரது அன்பும், ஆதரவும் தொடரும்வரை நம் பயணங்களும் தொடர்வது சர்வ நிச்சயம் !

      Delete
  24. எடிட்டர் சார், ஐடி பதிவு செய்து கொள்ளும் நடைமுறையை இன்னும் சற்று யோசித்துச் செயல்படுத்துங்களேன்...

    ReplyDelete
    Replies
    1. SV VENKATESHH : இங்குள்ளது இரண்டே options சார் ! முதலாவது கமெண்ட்ஸ் moderation ; இரண்டாவது பதிவு செய்தலைக் கட்டாயமாக்குதல் ! இரண்டின் சாதக-பாதகங்களை கேட்டுக் கொள்ளத் தயாராக உள்ளேன் !

      Delete
  25. எடிட்டர் மற்றும் நண்பர்களுக்கு ஆயுத / சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. Good morning Edi sir,

    Talking about deepavali, why can't you purchase and send crackers in 500,1000,2000,3000 range for our subscribers from next deepavali. If possible you can make it this year also. I still remember getting a craker gift parcel along with bundled box set of old books for rs. 500 which i sold it for rs. 150 to recover my part money. Nice memories. That rs. 500 was a big money for me. I even sold some of my rani comics for some handsome price in road shop near kamala theater, vadapalani. If you can purchase crackers at good discount price and send, i will transfer money to you account. Please forgive me if this is a too much ask.

    ReplyDelete
    Replies
    1. Mahesh : நானே பட்டாசு வாங்கி ஆறேழு ஆண்டுகள் இருக்கும் ! இப்போதெல்லாம் நமக்குத் தெரிந்த டமால்-டுமீல் சமாச்சாரங்கள் எல்லாமே நமது ரேஞ்சர்களின் உபயமே !

      Delete
  27. எனது மெயில் ID : jegangatq@gmail.com

    ReplyDelete
  28. முத்துக் காமிக்ஸ் வந்தநாள் முதல் நான் காமிக்ஸ் படிக்காமல் இருந்தது இல்லை. திடீரென காமிக்ஸ் வராமல் நின்று போனதும் எனக்கு ஒன்றும் புரியாமல் பைத்தியம் பிடித்தது போலிருந்தது. அதன் பிறகு காமிக்ஸ் கிடைக்குமா என்று வெளியூரில் எல்லாம் அலைந்து பழைய புத்தக கடையில் தேடி தேடி கிடைக்கும் காமிக்ஸ் களை வாங்கி வருவேன். இந்நிலையில் ஒருநாள் எனது கனவில் ஏதோ ஒரு கடையில் தினுசு தினுசாக காமிக்ஸ்கள் தொங்குவதை பார்த்து கடைகாரிடம் வாங்கும் பொழுது விழித்துக் கொணடேன். அடடே கனவுதான என்று மனசு நொந்து போனேன். அந்த கனவில் ஒரு விசேசம் என்னவென்றால்¸ தினுசு தினுசாக என்று குறிப்பிட்டேன் அல்லவா? அது சைஸ் களை பற்றி. பாக்கெட் சைஸ்¸ நார்மல் சைஸ்¸ தலையில்லா போராளி வந்ததே அதே சைஸ்; மற்றும் நாளிதழ்களின் சைஸ் என்று பல வகைகளில் தொங்கவிடப்பட்டிருந்தது. அதில் மூன்று சைஸ்கள் பார்த்து விட்டோம் இன்னனும் நாளிதழ்களின் சைஸ் மட்டுமே பார்க்க வேண்டியுள்ளது. அதுவும் நடக்கலாம். இந்த கனவு வந்து ஆறேழு மாதங்களில் மீண்டும் காமிக்ஸ் தொடர்ந்து வர ஆரம்பித்து விட்டது. எப்படியோ எனது கனவு பலித்தது.

    ReplyDelete
    Replies
    1. Jegang Atq @ உங்கள் கமெண்ட் ரெண்டு ரெண்டாக வருகிறது! கொஞ்சம் சரி செய்தால் நலம்!

      Delete
  29. சர்வமும் நானே ...

    ஆஹா ஒரே தொகுப்பாக ஹார்ட் பைண்டிங்கில் வருகிறதா ..சூப்பர் ஸார் ..அதுவும் தீபாவளிக்கு முன்னரே ...

    வாரே வாவ் ...

    இந்த தீபாவளி காமிக்ஸ் நேசர்களுக்கு சர்வமும் ..அதகள அதிரடி தீபாவளியாக அமைய போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ...

    எனது மெயில் ஐடி

    Kparanitharan76@gmail.com

    என்பதே சார்...

    ReplyDelete
  30. SUPER DEEPAVALI MALAR.VANNAKORVAIGALIN ATTAGASAM.KEEP IT UP EDITOR SIR .ID balachandran5356@gmail.com

    ReplyDelete
  31. எனது பார்வையில் இம்மாத இதழ்கள்:

    1. எழுதப்பட்ட விதி / திருடனும் திருந்துவான்.

    மதியும்/ விதியும் விளையாடும் 'சதி'ராட்டம் ஒருபுறமெனில் மதியேயில்லா நாலு கால் ஜீவனின் காமெடி ஹெலிகாப்டர் ஷாட்கள் மறுபுறம். கதைகேற்ற அடர் வர்ணப் பிண்ணணிகளில் ஜேஸன் ப்ரைஸ் அட்டகாசம். மூன்று பாகங்களும் ஒன்றாக வந்திருந்தால் தே.ர.தே போல் ஒரு க்ளாஸிக்காக அமைந்திருக்கும் என்பது என் எண்ணம்.
    சமீபத்திய லக்கி லூக் கதைகளில் பெஸ்ட் தி.தி தான்.

    1.5 கடத்தல் குமிழிகள்

    ஸ்பைடரின் அதகளங்கள் எப்போதுமே எனக்கு ஸ்பெஷல் தான். இன்னும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் சார். வேறென்ன எல்லா ஸ்பைடர் கதையும் தான். ஒரு ஸ்பைடர் டைஜெஸ்ட் க்கு எதாவது பாஸிபிலிட்டி? (சும்மா போட்டு வைப்போம். கிடைத்தாலும் கிடைக்கும் :-))

    2. தற்செயலாய் ஒரு ஹீரோ - ஆவரேஜுக்கு மேலே சூப்பருக்கு கீழே.

    லயன்/ முத்து ஒப்பிடும் போது எனக்கு முத்துவின் மேல் ஒரு பெரியவரிடம் வரும் மரியாதை உண்டு. லயனைப் பொருத்த வரையில் பால்யத்தில் என் கண் முன் பிறந்த சிங்கக்குட்டி என்னுடனே வளர்ந்து இப்போது ராஜ கம்பீரமாக சிங்க ராஜாவாக உலா வந்தாலும் நம்ம பையன் என்ற உரிமை , ப்ரியம் , காதல் லயனிடம் மட்டுமே உண்டு. என் பால்யத்தின் நினைவுகளை மீட்டெடுப்பது லயனின் நாயகர்களே. அதில் முதலிடம் ஸ்பைடருக்கு. லக்கி நூலிழையில் இரண்டாமிடம். மாடஸ்டிய சொல்லாட்டி உம்மாச்சி கண்ணை குத்திடும். கரண்ட் ட்ரெண்ட்ல முத்துவின் லார்கோ தான் டாப்.

    ரெஸ்பெக்ட்வ் யூ முத்து/ லவ் யூ லயன்.

    ReplyDelete
    Replies
    1. இதை.. இதைத்தான் அனைவரும் எதிர்பார்கிறோம்.. வரவேற்கிறோம்... தொடரட்டும் உங்கள் பங்களிப்பு....

      Delete
    2. ஹாரிஸ்.!!!! நீங்க நல்லா எழுதுவீங்கன்னு தெரியும்...ஸ்டில் இம்ப்ரஸ்ட்....செம....லவ்லி....

      தொடர்ந்து எழுதுங்க....!!!!

      Delete
    3. \\\ஸ்பைடரின் அதகளங்கள் எப்போதுமே எனக்கு ஸ்பெஷல்தான் ///

      எனக்கும்......!

      Delete
    4. Mohammed Harris : //ரெஸ்பெக்ட் யூ முத்து/ லவ் யூ லயன்.//

      நெஞ்சிலிருந்து வந்த வரிகள் என்பதாலோ என்னவோ, நெஞ்சை நிறையச் செய்கின்றன நண்பரே !

      Delete
    5. ஹாரிஸ்.!!!! நீங்க நல்லா எழுதுவீங்கன்னு தெரியாது; ஆனா இப்ப தெரிஞ்சுக்கிட்டேன்! ...இம்ப்ரஸ்ட்....செம....லவ்லி....

      தொடர்ந்து எழுதுங்க....!!!!

      நன்றி: செனா அனா!

      Delete
  32. விஜயன் சார்,

    நமது காமிக்ஸ் புத்தகம் சரியாக வராத நாட்களில் பல கடைகள் பல ஊருகளில் அலைந்து திரிந்து வாங்கிய நாட்கள் நன்றாக நினைவு உள்ளது. இவை மீண்டும் தொடராமல் நமது காமிக்ஸ் மாதம் மாதம் கிடைக்க வேண்டும். சந்தாதார்கள் அதிகரித்தால் இந்த பிரச்சனை தீரும் நமக்கு தொடர்ந்து காமிக்ஸ் கிடைக்கும்.

    தமிழ் காமிக்ஸ் என்பது இன்று மிகவும் அரிதான விஷயம், அதே நேரம் பிற மாநில மொழிகளில் இது போன்ற சிறந்த காமிக்ஸ் வருகிறதா என்றால் இல்லை (என நினைக்கிறேன்) தற்போது தமிழில் உள்ள மிக சிறந்த காமிக்ஸ் நமது லயன் முத்து காமிக்ஸ் தான், இவை தொடர்ந்து வரவேண்டும்.

    இந்த கால சிறுவர் சிறுமியர்கள் ஆங்கில காமிக்ஸ் மட்டும் படிகிறார்கள், மேலும் அவர்களுக்கு சரியாக தமிழ் பேச எழுத வருவது இல்லை. இதற்கு சரியான மருந்து காமிக்ஸ் முலம் தமிழை படிக்க செய்வது, அதுவும் நமது காமிக்ஸ் முலம் இதனை செய்வது சிறப்பு.

    காமிக்ஸ்காக செலவு செய்வது என்பது மாதம் ரூபாய்.350-400, இது மிகவும் குறைவு! இன்றைய தலைமுறை கோக்-பெப்சி மற்றும் உடலைகெடுக்கும் நொறுக்கு தீனிகளுக்கு செலவழிக்கும் பணத்தை விட இது குறைவு மேலும் காமிக்ஸ்க்கு செலவழிப்பது ஆரோக்கியமான விஷயம் என்பது எனது எண்ணம்.

    உண்மையான காமிக்ஸ் ரசிகர்கர்களுக்கு காமிக்ஸ் தொடர்ந்து வரவேண்டும் என்பது தலையாய கவலையே, அதை விட்டு எப்போதாவது தென்படும் மிக சிறிய குறைகளை கண்டு கொள்ள மாட்டார்கள்.

    புத்தக திருவிழாவில் எல்லா விதமான புத்தகம்கள் கழிவு விலையில் கிடைக்கும் என்பதால் மாதம் வரும் பிற புத்தகம்களை வாங்காமல் யாராவது இருகிறார்களா? வாங்காமல் விடுபட்ட மற்றும் கிடைபதற்கு அறிய புத்தகம்கள் வாங்குவதற்கே புத்தக திருவிழா! இதனை சரியாக புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே!

    சந்தா செலுத்துவதால் புத்தகம் வீடு தேடி வருகிறது, அதுவும் இன்றைய எந்திர வாழ்கையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்று திரும்பும் நேரம் மற்றும் செலவை பார்க்கும் போது சந்தா செலுத்துவது மிக சிறந்த செயல்.

    சந்தாவில் கூரியர் மற்றும் பாக்கிங் செலவு, நாம் கொடுக்கும் தொகை குறைவு என்பது எனது எண்ணம். அதே நேரம் இன்று காய்கறி, மளிகை, பிட்ட்சா, மற்றும் எல்லாவற்றையும் வீட்டில் இருந்து ஆர்டர் செய்து பெறுகிறோம், அவர்கள் டெலிவரி இலவசம் என்றாலும் மறைமுகமாக அவற்றை நம்மிடம் இருந்து வசூலித்து விடுகிறாக்கள் என்பது உண்மை.

    எனது வாழ்நாள் முழுவதும் இன்று போல் என்றும் இந்த காமிக்ஸ்காக தொடர்ந்து சந்தா செலுத்துவேன்!

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : அழுத்தமான எண்ணங்கள் !!

      Delete
    2. @ PfB

      நீங்க அருமையா எழுதியிருக்கீங்கன்னு நினைக்கல; உங்க எழுத்துல நான் இம்ப்ரஸ் ஆகிட்டேன்னு நம்பல!
      ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு! ஹிஹி!

      Delete
    3. ///எனது வாழ்நாள் முழுவதும் இன்று போல் என்றும் இந்த காமிக்ஸ்காக தொடர்ந்து சந்தா செலுத்துவேன்!///

      +1 PfB

      Delete
    4. Erode VIJAY @ நீங்க இப்படி சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கல... ஆனா நன்றி சொல்லனும்ன்னு நினைக்கிறேன்.

      Delete
  33. விஜயன் சார், சர்வமும் நானே அட்டைபடம் அருமை, "சர்வமும் நானே" font size பெரிதாக இருந்தால் நன்றாக இருக்கும் அதே நேரம் "தீபாவளி மலர்" என்பதின் font type மாற்றினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. சர்வமும் பணி நிறைவு பெறா முயற்சிகளே !

      Delete
    2. புரிந்து கொண்டேன் சார்!

      Delete
  34. இனிய விஜயதசமி வாழ்த்துகள் விஜயன் சார்!!!

    ReplyDelete
    Replies
    1. சாத்தான் @ நன்றி! இரண்டு முறை சொல்வதின் மர்மம் என்ன?

      Delete
    2. நம்ம சாத்தான் தாத்தா வயோதிக அன்பருங்க... ! கை நடுக்கத்துல ரெண்டு முறை பப்ளிஷ் பண்ணிடுவாரு.!

      இந்த முறை பப்ளிஷ் பண்ணிட்டதை மறந்து இன்னொருமுறை பண்ணியிருப்பாரு. வயசாயிட்டா ஞாபகமறதி சகஜந்தானுங்களே!? :-)

      Delete
    3. மேச்சேரியாரே.!

      என்ன இருந்தாலும் புனித சாத்தன் அவர்கள் இளவரசியின் சீனியர் ரசிகர்கள்.அவர் ஏன் தற்போது இளவரசியின் தேசீய நீரோட்டத்தில் ஐக்கியமாக வில்லை

      Delete
    4. ///இளவரசியின் தேசீய நீரோட்டத்தில்///....ஙே..ஙே...ஙே...

      Delete
    5. நன்றிகள் சாத்தான்ஜி ! உங்களுக்கும் நம் வாழ்த்துக்கள் !

      Delete
    6. ///இளவரசியின் தேசீய நீரோட்டத்தில்///....ஙே..ஙே...ஙே...///

      மாம்ஸு. . .:):):)

      Delete
    7. KiD ஆர்டின் KannaN @ பார்த்து மரத்து மேல இருந்து இறங்கி உங்க மேல சவ்வாரி செய்திட போறார்!

      Delete
  35. சர்வமும் நானே

    மூன்றாவது அட்டைப்படம் கலக்கலாக தெளிவாக உள்ளது எடி சார்

    கதை அட்டகாசமாய் கலர் புல் தீபாவளி சர வெடியாய் இருக்கப்போவது உறுதி

    நான் டிசம்பரில் சந்தா கட்டி விடுகிறேன்

    என் மூலம் மூன்று சந்தாக்கள் உறுதி
    மூன்றில் ஒன்று புதிய வாசகர் ஆவார்

    இந்த வருட டெக்ஸ் கதைகளை
    படிக்கக் கொடுத்ததன் விளைவாக அவரும் காமிக்ஸ்மேல் காதலாகி முழுமூச்சாய் மூன்றே நாட்களில் படித்து முடித்து விட்டார்
    இவ்வளவிற்க்கும் அவர் ஒரு பிஸினஸ் மேன்

    எனது மெயில் ஐடி : texsampath24@gmail.com

    ReplyDelete
    Replies
    1. Tex Sampath : //இந்த வருட டெக்ஸ் கதைகளை படிக்கக் கொடுத்ததன் விளைவாக அவரும் காமிக்ஸ்மேல் காதலாகி முழுமூச்சாய் மூன்றே நாட்களில் படித்து முடித்து விட்டார் //

      அது தான் 'தல' யின் மகிமை !!

      Delete
  36. Dear Editor,
    Thanks for explaining the practical problems of our despatch department (sorting the books for different subscription combination during the time of dispatch). Could you please plan in the below manner, on the first day of dispatch only GOLD subscribers books will be dispatched. On day 2 only PLATINUM subscribers books will be dispatched. On day 3 other subscribers books will be dispatched. Finally the single book (A / B / C / D E) subscribers (this subscription plan is not available) books will be dispatched. In this manner I feel that the practical difficulty of sorting the books during the time of dispatch shall be reduced. Also our readers will get an option to choose only one among A - E. (I have already paid for Gold + 6). This is just a suggestion.
    Thanks & regards,
    Senthil Vinayagam. S
    (senthilsvinayagam@rediffmail. com, Mob: 7401476001)

    ReplyDelete
    Replies
    1. Senthil Vinayagam : நிச்சயமாய் நடைமுறைக்குச் சரி வரா திட்டமிது ! கூரியர்கள் 2 மணி நேரம் தாமதம் ஆகிப் போனாலே நம் அலுவலக போன்கள் அலறத் தொடங்கி விடும் நிலையில் 2 நாட்கள் கழித்த டெஸ்பாட்ச் எனில் மென்னியைத் திருகி விடுவார்கள் நண்பர்கள் !

      Delete
    2. Golden member-வும் ordinary member-வும் ஒன்றாக முடியாது. இது வசதியை கொண்டு வருவதல்ல. ரசனையை கொண்டு. அனைத்து காமிக்ஸையும் ரசித்து gold சந்தா கட்டும் ந(ண்)பர்களுக்கு முன்னுறிமை தந்து மேற்குறிப்பிட்ட முறையை அமுல்படுத்தலாமே??

      அத்துடன் சிங்கிள் சந்தா கட்டுபவருக்கு, இதை முன்கூட்டியே அறிவித்துவிட்டால்( சந்தா நம்பர் கொடுக்கும்போதே), அவர்களும் எதிர்பார்க்கமுடியாதே.
      இம்முயற்சியினால் சந்தா அதிகரிக்கும் என்ற நப்பாசைதான்...
      மேலும் சந்தா C மட்டும் gift செய்ய நினைப்பவர்களுக்கும் வசதியாக இருக்கும்.

      Delete
  37. All other friends please pardon me, I feel slightly difficult in typing Tamil.

    ReplyDelete
  38. சர்வமும் நானே புத்தக அட்டையின்
    மூன்றாவது அட்டையில்
    தீபாவளி மலர் என்ற வார்த்தைகள் கலரில் சரியாக தெரியவில்லை எடி சார்

    அதை வெள்ளை கலரில் மாற்றினால் பார்க்க எடுப்பாகவும் நன்றாகவும் இருக்கும் சார்

    புத்தகத்தின் முதுகில் கூட தீபாவளி மலர் 2016 என்று டைப் செய்து விடலாம் சார்

    ReplyDelete
    Replies
    1. Tex Sampath : இங்குள்ள எவையுமே நீங்கள் பார்த்திடப் போகும் பணி நிறைவுற்ற டிசைனல்ல !

      Delete
  39. டெக்ஸின் முதல் அட்டைப்படமே மிக பொருத்தமாக இருக்கும்.. ஏனெனில் டெக்ஸின் நிழல் ஆற்றில் விழுவது போல் உள்ளது... அதற்கு மூன்றாவது அட்டைப்படம் லாஜிக் (நிலவு எதிர்பக்கத்தில்) இடிக்கிறது.. இரண்டாவதில் (சிவகாசி) பட்டாசு வெடிப்பது போல அமைந்துள்ளது... மொத்தத்தில் இன்னும் பதினைந்து நாள் பொறுமையாக இருப்பது சிரமமே...

    தலீவரே... விரைவில் சேந்தம்பட்டி குழுவின் சிவகாசி விஜயம் குறித்த அறிவிப்பு வெளியிட பதுங்கு குழியில் ஆலோசனை எப்போதும் போல சிறிய கெடா வெட்டோடு ஏற்பாடு செய்யுங்கள்....

    ReplyDelete
    Replies
    1. அறிவிப்பு சீக்கிரம் வரவேண்டும்...

      Delete
    2. ஙே ...கரூராரே ...வாட்ஸ்அப் இல்லா சூழலில் ஏதோதோ ஐடியா பண்ணிட்டு இருக்கீங்க போல ...

      :-(

      Delete
    3. புரட்டாசியில் கிடா வெட்டா ? போச்சுடா !

      Delete
  40. திருடனும் திருந்துவான் ரின்டின் வசனங்கள் மிகவும் எரிச்சலூட்டுபவையாய் இருந்தன... ஒரிஜினலிலும் இதே வசனங்கள் தான் பேசப்பட்டதா?
    my id: arunkumarjnl@gmail.com

    ReplyDelete
    Replies
    1. Arun Kumar : ஒரு நாய் யோசிப்பதையும், பேசுவதையும் ஏற்றுக் கொள்ள சாத்தியமாகின் வசனங்களால் பெரிதாய் நெருடல் நேர்ந்திருக்க வாய்ப்பில்லை என்பதே எனது எண்ணம் ! ஒரிஜினலிலும் ரின்டின் கேன்இதே போல் பேசும் தான் ; வித்தியாசம் இங்கு நாம் பயன்படுத்தியுள்ள பெயர்களில் மட்டுமே ! மாயாவி...டார்ஜான்..வேதாளன் என்பதற்குப் பதிலாய் நாம் அவ்வளவாய்க் கேள்விப்பட்டிரா wild west ஆசாமிகள் பெயர்களை அங்கே பயன்படுத்தியிருப்பார்கள் !

      Delete
    2. நன்றிகள் சார்.

      Delete
    3. அந்த வசனங்கள்தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தன என்று சொன்னால் நம்ப முடிகிறதா ? :-)

      Delete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. //ரின் டின் வசனங்கள் எரிச்சலூட்டுபவைகளாக இருந்தது.//

      +1

      எனக்கு நாய் என்றாலே அலர்ஜி.! நாய் நன்றி உள்ளது.விசுவாசமானது.என்றாலும் அதனுடைய எஜமானர்களுக்கு மட்டுமே.!

      மற்றவர்களுக்கு.......?

      நான் டீன் ஏஜ் பருவத்தில் ,மிலிட்டரி மற்றும் போலீஸில் சேர நண்பர்களுடன் அதிகாலையில் ஜாக்கிங் & ரன்னிங் போவோம்.எனது ஊர் கிராமமும் இல்லாது நகரமும் அல்லாத ஒரு சிற்றூர். 25 வருடங்களுக்கு முன்னால் ஜாக்கிங் பற்றி அறியாத அந்த சிற்றூரில் ஊருக்கு ஒதுக்குபுறமாக சாலையில் அதிகாலையில் ரன்னிங் செய்யும்போது நாய்கள் எங்களை ரவுண்டு கட்டிவிடும். அப்போது ஏற்பட்ட பயத்தில் இதயம் எகிறி தொண்டையில் அடைத்த மாதிரி ஆகிவிடும்.சில சமயங்களில் இளம்பெண்கள் முன்னால் கூனிக்குறுகி போனதும் உண்டு.இதனாலே நாங்கள் பயிற்சியை விட்டு விட்டோம்.!
      பற்றாக்குறைக்கு வெறி நாய்க்கு மருந்து கண்டுபிடித்த எட்வர்டு ஜென்னர் பற்றிய ஒரு கட்டுரையை படித்த பின் வெறி நாய் கடியால் ஏற்ப்படும் ரேபிஸ் நோய்க்கு மருந்து கிடையாது என்றும்.தடுப்பூசி மட்டுமே உயிர் தப்ப ஒரு வாய்ப்பு என்றும்.இந்நோய் நேரிடையாக நரம்பு மண்டலங்களை பாதிப்பதால் வேறிபிடித்து கொடூரமாய் இறப்பார்கள் என்றும்.இந்நோயினால் இறந்துபோனவர்களை உடல்களை உறவினர்களுக்கு கொடுத்து இறுதி சடங்குகள் செய்யக்கூட அனுமதி இல்லை என்றும்.உடலை மருத்துவ முறைப்படி அழிக்கப்படும் என்று படித்த பிறகு நாயை பார்த்தாலே எமனைப்பார்ப்பதாக ஒரு பீலீங்.நாய் ஜோக் செய்வதை கொஞ்சம் கிரமப்பட்டுதான் ரசிக்கவேண்டியது உள்ளது.!

      நாயை பிடிக்காவிட்டாலும் ,பிராணிகள் மேல் அன்பு வைத்திருக்கும் அமலா ,திரிஷா.,நம் ம ஈரோடு விஜய் அவர்களை ரொம்ப பிடிக்கும்.!

      Delete
    2. Arun Kumar: //ரின் டின் வசனங்கள் எரிச்சலூட்டுபவைகளாக இருந்தது.//

      மாடஸ்டி வெங்கடேஸ்வரன்: // +1 எனக்கு நாய் என்றாலே அலர்ஜி.! //

      க்ளுக்... ஹி ஹி!

      @வெங்கடேஸ்வரன், அவர் வசனங்களை மட்டும்தான் பிடிக்கவில்லை என தெரிவித்தார். ரின்டின் எனும் கதாபாத்திரத்தை அல்ல. கதையோ அதன் அம்சங்களோ பிடிக்கவில்லை என நிராகரித்து விமர்சிப்பதற்கும், தனக்குப் பிடிக்காத ஒன்று இடம்பெறுவதாலேயை ஒரு கதையை நிராகரிக்கும் விமர்சனத்துக்கும் வித்தியாசம் உண்டு.

      முன்பு ஒருமுறை அரசு மற்றும் ராணுவத்தை எதிர்த்து செயல்பட்டதனால் டெக்ஸ்வில்லரின் ஒரு குறிப்பிட்ட கதை நன்றாக இல்லை எனத் தெரிவித்திருந்தீர்கள் - இத்தனைக்கும் அது ஒரு க்ளாசிக் என பெரும்பாலானோர் கருதும் கதை. நம் அனைவருக்குமே பிடிக்காத அம்சங்கள் கிரீன் மேனரில் உள்ளது எனச்சொல்வேன் - ஆனால் க்ரீன்மேனர் ஒரு படைப்பாக தாழ்ந்துவிடாது. ராமர் இடம்பெறுவதால் மட்டும் ராமாயணம் உயர்ந்த படைப்பாகாது, இராவணன் இடம்பெறுவதால் மட்டும் அதுவே தாழ்ந்தும்விடாது ;)

      Delete
    3. ரமேஷ் குமார் சார்.!

      மனச்சார்பு (biased) வாழ்க்கையிலும் ஏன் சட்டத்தில் கூட இது உள்ளது. காமிக்ஸில் இருக்கக்கூடாதா.? மேற்கூறியவை என் தனிப்பட்ட கருத்துதான்.!

      Delete
    4. //மேற்கூறியவை என் தனிப்பட்ட கருத்துதான்.!// +1
      உயர்ந்தது தாழ்ந்தது என்பதாக அல்லாமல்,பிடித்துள்ளது பிடிக்கவில்லை என்பதாகவே எனது கருத்துகள் அமைக்கப்படுகின்றன......

      நன்றிகள் ம.வெ சார்

      Delete
    5. //வசனங்கள் மட்டும்தான் பிடிக்கவில்லை என தெரிவித்தார். ரின்டின் எனும் கதாபாத்திரத்தை அல்ல//+1

      Delete
  42. வணக்கம் எடிட்டர் சார்.

    ReplyDelete
  43. Restrictions definitely need our site ,,

    ReplyDelete
  44. டியர் எடிட்டர்

    இந்த ஜேமோ அண்ட் ரோபோ கதைக்கு copyrights எல்லாம் போட்டது .. ஹி ஹி ... அது சரி, இக்கதையை 'வீட்டில்' காட்டியதுண்டா? இப்போது காண்பித்து விட்டு அடுத்த சிங்கத்தின் சிறு வயதில் பகுதியில் reactionஐ பதிக்கவும் :-)

    ReplyDelete
    Replies
    1. Raghavan : அப்புறம் அது தற்காலிகமாய் "சந்துக்குள் சாத்து .." என்ற பெயர் தாங்கிய பகுதியாகிட வேண்டிப் போகும் !

      Delete
  45. ஈரோடு விழாவில் உற்சாகத்துடன் திருசொக்கன் அவர்கள் பங்கு பெற்றபோதே நமது காமிக்ஸ்களில் அவரின் பங்களிப்பு கூடிய விரைவில் இருக்ககூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது சார்.

    கடினமான கதைக்களம் கொண்ட ஜேசன் பிரைசின் தொடரை அவர் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார் என்பது எதிர்பாரா ஆச்சர்யம். அவரின் ஆக்கத்தில் எழுதப்பட்ட விதி"- நன்றாகவே இருந்தது சார். அடுத்த பாகம் எதிர்பார்க்க வைத்து விட்டது.
    அடுத்த இரு பாகங்களிலும் மொழிபெயர்ப்பு சொக்கன் என அச்சாக வாய்ப்பு இருந்தால் செயல்படுத்துங்கள் சார்.
    திரு சொக்கனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த கதை என தெரிந்தால், அவரின் அதிதீவிர ரசிகர்களுள் குறைந்த பட்சம் 100பேர் வாங்க வாய்ப்புள்ளது சார்.

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : தற்போது வெளியாகியிருப்பது ஒரு hybrid மொழியாக்கம் என்பதால் இதழினில் சொக்கன் சாரின் பெயரினைக் குறிப்பிடவில்லை. அடுத்த பாகத்தினில் பார்ப்போமே என்றுள்ளேன் !

      Delete
  46. //வரும் திங்கட்கிழமை முதல் ! (நாளைய பொழுதினில் அந்தப் பதிவு செய்து கொள்ளும் படிவத்தை தயார் செய்திடுவோம் ! )

    இனி இங்கே தத்தம் ஐடி களைப் பதிவு செய்து கொள்ளும் நண்பர்கள் மாத்திரமே கமெண்ட் செய்திட இயலும் வகையில் செட்டிங்ஸ் மாற்றிடப்படும். So அதற்கென சிறிது நேரம் எடுத்துக் கொள்ளத் தேவைப்படும் !////....
    வாவ்..என்னே ஒரு அற்புதமான முடிவு சார்...சூப்பர்...சூப்பர்...
    ஏதோவொரு ஸ்பைடர் கதையில் வில்லன் 4கைகளை தட்டி வரவேற்பான். அந்த கைகளை கொஞ்சம் கடன் வாங்கி நானும் தட்டி வரவேற்கிறேன் சார்.

    எத்தனை எத்தனை இன்னல்களுக்கு இந்த தளத்தின் அட்மீனும் எங்களின் அன்பின் ஆசிரியருமான நீங்கள், இந்த போலி ஐடிக்களால் அவதிப்பட்டு இருப்பீர்கள்.
    நான்லாம் அடுத்த சில ஜென்மங்களுக்கு உண்டான அவஸ்தையை பட்டு விட்டேன்.ரொம்ம மகிழ்ச்சி சார். ரொம்ம ரொம்ம...
    ஒவ்வொரு பதிவிற்கும் 200க்கும் குறைந்த கமெண்ட்கள் இருந்தால் கூட அத்துனையும் உண்மையான நபர்களால் பதியப்பட்டது என்பதே இனிமையான செய்தி.
    இனிமேல் அடிதடி, உரசல் வந்தாலும் யார்ட்ட விவாதம் செய்கிறோம்னு ஒரு திருப்தி இருக்கும்.
    உண்மையான தீபாவளி பரிசு இது,நண்பர்கள் பலரின் நீண்டநாள் கோரிக்கையான இதை இப்போதாவது நிறைவேற்றுவதற்கு நூறாயிரம் நன்றிகள்சார்...

    ReplyDelete
  47. இந்த ஆண்டில் இரவுகழுகு ...போஸ்டர் சூப்பராக உள்ளது சார் ..டிசம்பர் மாத கடைசி இதழில் இதை புக்லெட்டாக சந்தா நண்பர்களுக்கு அனுப்புங்கள் சார் ..லக்கி..டெக்ஸ் தனி போஸை விட இது இன்னும் அழகாகவும் உள்ளது சார்..

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : தலீவரே, ஆனாலும் நீங்க ஒரு தீர்க்கதரிசி !

      Delete
    2. தலீவரே!!!! பதுங்கு குழியிலே ரொம்ப நாள் இருக்கறவங்களுக்கு இப்பல்லாம் இப்படியொரு சக்தி கிடைக்குதா?!!!

      Delete
    3. //இந்த ஆண்டில் இரவுகழுகு ...போஸ்டர் சூப்பராக உள்ளது சார் ..டிசம்பர் மாத கடைசி இதழில் இதை புக்லெட்டாக சந்தா நண்பர்களுக்கு அனுப்புங்கள் சார் ..லக்கி..டெக்ஸ் தனி போஸை விட இது இன்னும் அழகாகவும் உள்ளது சார்.//எடிட்டர் சார் ,
      தலைவரின் கருத்து சூப்பரோ சூப்பர் .
      இதை கொஞ்சம் கருத்தில் கொள்ளுங்கள் சார். ப்ளீஸ் .

      Delete
  48. சிலந்தி மன்னன் ...!

    இவனுக்கு நிகர் இவனே..!

    ஆன்லைனில் கண்டு வரும் வரவேற்பு ..

    மகிழ்ச்சி..!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி.....மகிழ்ச்சி....!

      எட்டுதிக்கும் பரவட்டும்....
      குற்றசக்ரவர்த்தியின் புகழ்...!

      Delete
    2. கிங்குடா ஸ்பைடர் கிங்குடா வலை மன்னன் புகழ் ஓங்குக

      Delete
  49. 20 வயதில் ரசித்த கார்ட்டூன் கதைகளை இந்த 40 வயதில் ரசிக்க இயலவில்லை.எனது குழந்தைகளுக்கோ டி.வி-யில் வரும் கார்ட்டூன் தொடர்கள்தான் பிடிக்கிறது. ஆகவே சந்தா C வேண்டாம்.மறுபதிப்புகள் மற்றும் One Shot கதைகளை பொறுத்த வரை ஒன்றிரு கதைகளை தவிர மீதமுள்ள கதைகள் மொக்கையாக அமைந்திடுவதால் சந்தா D&Eவேண்டாம்.எனக்கு சந்தா A&B மட்டும் தேவை.வாய்ப்பிருந்தால் தெரிவியுங்கள் சார்.வாய்ப்பில்லை எனில் 2016-ஐ போல 2017-ம் கடையிலேயே வாங்கிக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Boopathi Rajkumar : Sorry sir, ஏற்கனவே சொன்னது போல் சந்தாக் கூட்டணிகளில் ஓரளவுக்கு மேல் சாத்தியமில்லை ! So ஆன்லைனில் அல்லது கடைகளில் தான் வாங்கிட வேண்டியிருக்கும் !

      Delete
  50. சர்வமும் நானே அட்டைப்படங்கள் அருமை
    ஹார்ட் பவுண்ட் அட்டை டபுள் ஓகே Anandbala67@gmail.com

    ReplyDelete
  51. தற்செயலாய் ஒரு ஹீரோ...

    "கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது"- என்ற இந்திய பழமொழி இத்தாலியிலும் பேமஸ் போல. இந்த வருடம் வந்த சிறிய சாகசஸங்கள் 4ல் இதுதான் டாப்.

    இந்த கதையிலும் கால் இடறி விழும் டெக்ஸ் அடிபடிவது,
    வயதான செவ்விந்திய தம்பதியினர் காப்பாற்றுவது,
    காயம் சரியாக குணமாகாமல் எதிரிகளை எதிர்கொள்ள தாமதிக்கும் டெக்ஸ்,
    குதிரை திருடனாக இருந்தாலும் காதலியை மறக்க இயலாமல் மீண்டும் திரும்பிவந்து முரடர்கள் கும்பலுடன் மோதும் மின்னல் மக்ரே,
    என அனைத்து சம்பவங்களும் யதார்த்தமாக கோர்க்கப்பட்டுள்ளதே பரபரப்பாக கதை தொய்வில்லாமல் நகர காரணம்.

    இந்தாண்டு மூன்று விதமான நீளங்களில் வெளிவந்த டெக்ஸ் கதைகளில் ஒற்றை பாக சாகசங்களின் மதிப்பெண் பட்டியல்...
    1.தற்செயலாய் ஒரு ஹீரோ 10/10
    2.குற்றம் பார்க்கின் 9/10
    3.கணவாயின் கதை 8/10
    4.டாக்டர் டெக்ஸ் 7/10

    மீடியம் நீளத்தில் வந்த கதைகளில் டிசம்பரில் ஒன்று இருப்பதால் அப்போது....

    மிக நீண்ட கதைகளில் இறுதியானது சர்வமும் நானே" அடுத்த மாதம் வருவதால் அப்போது...

    ReplyDelete
  52. ஆசிரியருக்கு பணிவான வணக்கங்கள்.
    இந்த பதிவை பார்த்தவுடன் மனதில் தோன்றிய சந்தேகங்களும் சந்தோஷங்களும் .முதலில் சந்தேகம் 1.₹300 விலை என்று அறிவித்து விட்டு திடீரென ₹350 என்று வந்தால் சந்தாதாரர்களிடம் ₹50 துண்டு விழுமே எப்படி சமாளிக்கீர்கள்?
    2.அறிவிப்பின் போது 330 பக்கம் என்றும் இப்போது பார்த்தால் 395 பக்கம் வருகிறதே கதை .எதனால் இப்படி?
    சந்தோஷம் 1.தீபாவளி மலர் என்றாலே அன்றிலிருந்து என்றும் வரை குண்டுபுக்காக இருந்தால் சந்தோஷப் படும் நபர்களில் அடியேனும் ஒருவன். அந்த வகையில் happy.
    2.தனித்தனிஇதழை ஒன்றாக ஆக்கியது..(இதனால் 2 அட்டைப்படம் கிடைக்காமல் போனாலும் hard cover ல் வருவது.
    3
    இதுவரை வந்த டெக்ஸ் கதைகளில் நீளமான கதை இது தான் என்று நினைக்கிறேன்.
    4.டெக்ஸின் இந்த அட்டை மிகப்பிரமாதமாக இருக்கிறது.( முதல் முறையாக நமது குழுவினர் நழுவி தப்பித்தல் அட்டை அல்லவா).
    5.சிலந்தி மன்னனின் வலைப்பின்னலில்் இருந்து யாரும் தப்பமுடியாது என்பது மீண்டும் ஒருமுறை நிஜமாகிறது வாழ்த்துக்கள் வலைமன்னனுக்கு....நன்றி

    ReplyDelete
    Replies
    1. மறு பதிப்பு புத்தகம் ஒன்று குறைக்கப்படுகிறது
      டெக்ஸ் கதை ஒன்று 154
      பக்க கதையாக மாறுகிறது(சிகப்பு கொலைக்கு பதிலாக நீதிக்கு நிறமேது)

      Delete
    2. சரண்@
      1&2.அறிவிக்கப்பட்ட போது 330பக்கம் தான், ஆசிரியருக்கு மூல கதை 3பாகம் மட்டுமே என சென்றாண்டு சொல்லப்பட்டது போல. இப்போது கதையை வாங்கும் போது நீளம் 395பக்கங்கள் என தெரியவருகிறது. எனவே தனிதனியாக 3புத்தகங்கள் என்றது மாறி ஒரே அட்டை, ஹார்ட்கவர் விலை 300ல் இருந்து 350ஆகிறது. இந்த 50விலைக்காக ஆண்டின் இறுதி மறுபதிப்பு கட் ஆகிறது.


      இந்தாண்டு டெக்ஸ் ஆண்டாக இருப்பதால் டிசம்பரில் ரூபாய் 50க்கு அறிவிக்கப்பட்ட சிவப்பு கொலைகள் சிறிய கதையாக இருப்பதால் , ஆண்டின் இறுதி வெளியீட்டிற்கு ஞாயம் செய்ததாகாது என அதற்கு பதிலாக ரூபாய் 75ல் நீதிக்கு நிறமேது என்ற சற்றே பெரிய கதை வருகிறது.
      இதற்கான விலை ஏற்றம் ரூபாய் 25சந்தாதாரர்களுக்கு தள்ளுபடி....

      3.இதுவரை வந்த கதைகளில் இதுதான் நீள்ளள்ளமானது என்ற சாதனை புரிய போவது இதான்.

      4.சிறந்த அட்டைகளோடு வருவது இந்தாண்டின் வழக்கமான ஒன்றுதானே.

      5.ஸ்பைடர் @ நோ கமெண்ட்ஸ்.

      Delete
    3. சரண் சார்.!

      +1

      அட்டகாசம்.நானும் அதே.! அதே!............!!!!

      Delete
  53. ஆசிரியருக்கு பணிவான வணக்கங்கள்.
    இந்த பதிவை பார்த்தவுடன் மனதில் தோன்றிய சந்தேகங்களும் சந்தோஷங்களும் .முதலில் சந்தேகம் 1.₹300 விலை என்று அறிவித்து விட்டு திடீரென ₹350 என்று வந்தால் சந்தாதாரர்களிடம் ₹50 துண்டு விழுமே எப்படி சமாளிக்கீர்கள்?
    2.அறிவிப்பின் போது 330 பக்கம் என்றும் இப்போது பார்த்தால் 395 பக்கம் வருகிறதே கதை .எதனால் இப்படி?
    சந்தோஷம் 1.தீபாவளி மலர் என்றாலே அன்றிலிருந்து என்றும் வரை குண்டுபுக்காக இருந்தால் சந்தோஷப் படும் நபர்களில் அடியேனும் ஒருவன். அந்த வகையில் happy.
    2.தனித்தனிஇதழை ஒன்றாக ஆக்கியது..(இதனால் 2 அட்டைப்படம் கிடைக்காமல் போனாலும் hard cover ல் வருவது.
    3
    இதுவரை வந்த டெக்ஸ் கதைகளில் நீளமான கதை இது தான் என்று நினைக்கிறேன்.
    4.டெக்ஸின் இந்த அட்டை மிகப்பிரமாதமாக இருக்கிறது.( முதல் முறையாக நமது குழுவினர் நழுவி தப்பித்தல் அட்டை அல்லவா).
    5.சிலந்தி மன்னனின் வலைப்பின்னலில்் இருந்து யாரும் தப்பமுடியாது என்பது மீண்டும் ஒருமுறை நிஜமாகிறது வாழ்த்துக்கள் வலைமன்னனுக்கு....நன்றி

    ReplyDelete
    Replies
    1. Saran Selvi @ உங்களின் கமெண்ட் எப்பொதும் ரெண்டு ரெண்டாக வருகிறது நண்பரே, இதனை கொஞ்சம் சரிசெய்தால் நன்றாக இருக்கும்!!

      Delete
    2. சரண் செல்வி@...

      லயன் திருடனும் திருந்துவான் ஹாட்லைனில் உங்கள் கேள்விகள் 1,2,2,3-க்கான பதில் இருக்கிறது.

      அந்த பகுதி வேண்டுமாயின் நமது சேலம் டெக்ஸ் அவர்களிடம் வேண்டுகோள் வைத்தால் fbயில் டெக்ஸ் வில்லர் குரூப்பில் விநாடிகளில் போட்டு விடுவார்....


      அப்புறம் உங்கள் பதிவில் 2 கூட 2 முறை வருகிறது...:-)

      Delete
    3. நன்றி நண்பர்களே நன்றி.சவூதியில் புத்தகம் வருவதில்லை. காரணம் துப்பாக்கி கத்தி கடப்பாரை என்று அட்டையில் இருந்தால் இங்கு அனுமதி இல்லை. துப்பாக்கி இல்லா டெக்ஸ் அட்டை இருந்தால் சொல்லுங்களேன் நண்பர்களே! .
      யாராவது சவூதி வரும் நண்பர்களிடம் கெஞ்சி டெக்ஸ் புக்கையாவது படிப்பது வழக்கம். கடந்த 6 மாத புத்தகம் படிக்கவில்லை.
      உங்களின் விமர்சனம் தான் எனக்கு அப்போதைய கதை.
      இரவு வணக்கம்.

      Delete
  54. My mail id
    SivakumarSivakumar454@gmail.com

    ReplyDelete
  55. தீபாவளி சரவெடிக்கு தலயின் ரசிகர்கள் தயார்.......
    நாங்க ரெடி.....

    ReplyDelete
  56. விஜயன் சார், ஜேஸன் பிரைஸ் ஒரு சர்ப்ரைஸ், "எழுதப்பட்ட விதி" அழகாக எழுதப்பட்ட விதி.

    ReplyDelete
  57. சார் தீபாவளி வருது.........
    டெக்ஸ் பெரிய கதை வருது.....
    Tex போஸ்டர்( ப்ளோ அப்)
    ஒன்னு கொடுக்கலாமே.......
    தீபாவளி போனஸ் மாதிரி
    ....




    ReplyDelete
  58. நண்பர்களுக்கு வணக்கம். என்னவென்று தெரியவில்லை டைப் செய்து விட்டு ஒரு முறை தான் publish யை டச் செய்கிறேன். 2 முறை வருகிறது. எனக்கு நெட்டில் அவ்வளவு பரீச்சயம் கிடையாது..நமது காமிக்ஸ் தவிர்த்து வேற எதற்கும் டைப் sending என்று எதுவும் கிடையாது. ஆதலால் தவறுக்கு மன்னிக்கவும். பிறகு கொஞ்சம் அந்த ஹாட்லைன் பகுதியை தட்டிவிட்டால் எனக்கும் பதில் கிடைத்த திருப்தி கிடைக்கும். செய்வீர்களா நணபர்களே நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மெயில் ஐடி அனுப்புங்கள்...
      viji.comics@gmail.com
      Or SMS me in9629298300

      Delete
  59. டெக்ஸ் விஜய ராகவன்.!


    இதுவரை வந்த டெக்ஸ் கதைகளில் மிக நீளமானது எது.?பக்கத்திலும் அளவிலும்.!

    (இருளின் மைந்தர்கள் ,நள்ளிரவு வேட்டை போன்றவை மரண முள் அளவில் புத்தகங்கள் இருந்தாலும்.இலவம் பஞ்சூ காய்யில் அடைக்கப்பட்ட பஞ்சுபோல் பெரிய கதைகள்.)

    ReplyDelete
    Replies
    1. MV sir@

      ரெகுலர் டெக்ஸ் அளவுதான் நடைமுறை, இதில் நீளமானவைகள்

      1.ஒக்லஹோமா-338பக்கங்கள்
      2.வல்லவர்கள் வீழ்வதில்லை-330பக்கங்கள்

      இந்த சாதனையை சர்வமும் நானே"-முறியடிக்கப்போகிறது.

      உருவத்தில் பெரியது தலையில்லா போராளி -தானே...
      அளவு, நீளம் , அதிக கதைகள், மிகச்சிறந்த அட்டைப்படங்கள், என அனைத்து சாதனைகளும் படைத்து அன்டிஸ்பியூட் கிங்" ஆக டெக்ஸ் உருவெடுத்த ஆண்டு 2016....

      Delete
    2. நன்றி.!- டெக்ஸ்என்சைக்ளோபீடியா விஜயராகவன் அவர்களே.!

      Delete
    3. மாம்ஸ் @

      போனவருட தீபாவளி மலரில் வந்த "டைனோசரின் பாதையில் " எத்தனை பக்கங்கள்??

      Delete
    4. 349 பக்கங்கள்...

      ஓவ்...338ஐ விட 349 பெரியதல்லவா...ஹி...ஹி...
      கலர் னாலே கண்ணல அதான் முன்னே நிக்குதுபா...
      படக்குனு இது கருப்பு வெள்ளனால ஞாபகம் வர்ல...(வயசாவது அப்பட்டமாக புரியுது)

      Delete
  60. ///வால்ட் டிஸ்னியையும், ப்ராங்கோ-பெல்ஜியக் காமிக்ஸ் ஸ்டூடியோக்களையும் ‘டரியலாக்கிய‘ அந்நாட்களது நமது படைப்பு! நல்ல காலத்துக்கு அந்தக் ‘கலைச் சேவையைத் தொடரவில்லை... இல்லையேல் பற்பல ‘காதல்‘ பரத்கள் நம் புண்ணித்தில் சாலைகளில் உலாற்றிக் கொண்டிருந்திருப்பார்கள்.///

    மீண்டும் அதுபோல ஒரு முயற்சியை செய்து பார்க்கலாமே சார்.?
    நரியார் துப்பறிகிறார், நான்கு படங்களில் வேறுபட்டு நிற்பது எது? , இரண்டு படங்களுக்குமிடையே உள்ள ஆறு வித்தியாசங்களை கண்டுபிடியுங்களேன் போன்ற அதிநவீன சங்கதிகள் அவ்வபோது இதழில் ஒரு பக்கத்தை சுவாகா செய்வதற்கு அனுமதிப்பதை விட பல்லாயிரம் மடங்கு இந்த ஒற்றைப் பக்க கார்ட்டூன் பெட்டராய் இருக்குமே சார். .!!

    ReplyDelete
    Replies
    1. மேச்சேரியாரே.!

      // நரியார் துப்பறிகிறார் ,ஆறு வித்தியாசங்கள் அதிநவீன சங்கதிகள்.!//

      மேச்சேரியாலரே என்ன இப்படி பொசுக்கென்று இப்படி சொல்லீட்டீங்க.? புத்தகம் வந்ததும் எனது பத்து வயது மகன் நீங்கள் கூறிய பகுதியை அதிக ஆர்வத்துடன் பார்க்கின்றான்.அவனால் முடியவில்லை என்றால் விடைதெரியும் வரை என் உயிரை வாங்கிவிடுவான்.!

      Delete
    2. ///.அவனால் முடியவில்லை என்றால் விடைதெரியும் வரை என் உயிரை வாங்கிவிடுவான்.!///

      அப்புறமா நீங்க, அதே பக்கத்துல தலைகீழா ப்ரிண்ட் பண்ணப்பட்ட விடைகளை திருப்பிப் பார்த்து விடையை சொல்லாடுவிங்க., சரிதானே மாடஸ்டியாரே!!?? :-)

      (ஏன்னா நான் அப்படித்தான் செய்வேன். ஹிஹி..!!)

      Delete
    3. சொல்லாடுவிங்க - சொல்லிடுவிங்க!

      (ச்சே! இந்த புது வெர்சனில் டைப் பண்ணுவதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது.)

      Delete
    4. கம்பெனி ரகசியத்தை வெளில சொல்லப்படாது....

      Delete
  61. நண்பர்களுக்கு இரவு வணக்கம். நன்றி

    ReplyDelete
  62. நண்பர்களே
    நமது புத்தகங்கள் இம்மாதம் முதல்
    வேலூர் ,
    வேலாயுதம்பாளையம்,
    TNPL ,
    புகளுர் ஆகிய பகுதியில் கிடைக்கும் தொடர்புகொள்ள
    பழனிவேல்
    9789214198
    9344861389
    டோர் டெலிவரி உண்டு

    ReplyDelete
  63. மேலும்
    காட்டுப்புத்தூர்
    மோகனூர்
    வாங்கல்
    பகுதியிலும் உண்டு

    ReplyDelete
  64. என்னுடைய ஐடி
    Senthil2662013@gmail.com

    ReplyDelete
  65. என்னுடைய ஐடி
    Senthil2662013@gmail.com

    ReplyDelete
  66. Good morning dear friends and editor sir
    Thanks for hard cover binding for Diwali special.
    Kindly think about customized plastic covers with Lionmuthu logo for subscribers it helps to keep the books safe for long time.
    My mail id mskmet@rediffmail.com



    ReplyDelete
  67. இரவு கழுகார் கனதனய நேற்று முழுதும் திரும்ப திரும்ப வாசித்தேன்.....
    தலன்ன சும்மாவா....
    சும்மா மிரட்டுதுல......

    ReplyDelete