Sunday, October 23, 2016

கனவும்...ஒரு கட்டை விரலும்..சில பல கோடிகளும்....!

நண்பர்களே,

வணக்கம். கூப்பிடு தொலைவில் தீபாவளி காத்து நிற்க, கடைவீதியெல்லாம் கலகலக்கும் கூட்டத்தில் அலை மோதுவதைப் பார்ப்பதே ஒரு சந்தோஷ அனுபவம் ! என்னதான் பிக்கல் பிடுங்கல்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம்  ஓரம் கட்டிவிட்டு, பண்டிகையின் வரவை எதிர்நோக்கிக் காத்திருப்பதும் ஒரு அவசியமான எதிர்பார்ப்பு தானன்றோ ? And நமது காமிக்ஸ் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திட, பைண்டிங் அணியினர் ஞாயிறும் பணி செய்து வருகின்றனர் - வரும் செவ்வாய்க்கிழமைக்கு உங்கள் கூரியர்களை நாம் அனுப்பிட வேண்டுமென்பதன் பொருட்டு !! சில தினங்களுக்கு முன்பாய் நடந்த கோரமான அந்தப் பட்டாஸுக்கடை விபத்துப் பகுதியில் தான் நமது அட்டைப்படங்களின் மினுமினுப்பான foils அச்சிடும் பணியகம் உள்ளது ! விபத்து நாளன்று துண்டிக்கப்பட்ட மின்சாரம் ஒன்றரை நாட்களுக்கு அங்கே திரும்பிடவில்லை என்பதால், முடங்கிக் கிடந்த பணிகளை எண்ணிக் கைகளைப் பிசைவதைத் தாண்டி எதுவும் செய்திட முடியவில்லை !  ஆனால் எட்டுப் பேர் பரிதாபமாய் உயிர் இழந்த நிலையில்,  foils அச்சிடவில்லையே என்ற விசனங்களெல்லாம்  பெரியதொரு சமாச்சாரமாய்த் தெரியவில்லை !  "ஆகிற போது பணிகள் ஆகட்டும்" என்று விட்டுவிட்டேன் ! ஆனால் இது "தீபாவளி மலர்" எனும் பொழுது, தாமதமாய்த் தயாராகின் நமத்துப் போன பட்டாசாகிடும் என்று அந்த நண்பர் புரிந்துகொண்டு, இரவில் பணிமுடித்துக் கொடுக்க, பைண்டிங்கில் ஞாயிறும் வேலை நடந்தேறி வருகிறது ஜரூராய் !! தோள் தரும்  இது போன்ற நல்ல இதயங்கள் மட்டும் நம்மைச் சுற்றி   இல்லையெனில்  , ஒவ்வொரு அட்டவணையிலும் எங்கேனும் சறுக்கிப் பல்லை பதம் பார்த்துக் கொண்டிருந்திருப்போம்  !  

So தக தகக்கும் வர்ணத்தில் இரவுக் கழுகாரும், லியனார்டோ தாத்தாவும் ஜொலிக்க - இதோ இம்மாத கருப்பு-வெள்ளை அணியினர் ! C.I.D ராபினின் "வேதாள வேட்டையின்" அட்டைப்பட முதல் பார்வை இதோ ! நமது ஓவியரின் டிசைனுக்கு சற்றே வித்தியாசமான பின்னணி தந்தாலென்ன ? என்ற மகா சிந்தனை அடியேனுக்கு ஒரு நாள் உதிக்க, எங்கோ , எப்போதோ பார்த்திருந்த பாணியை நமது DTP அணியினைச் சார்ந்த கோகிலாவின் சகாயத்தோடு செயல்படுத்தியதன் விளைவே நீங்கள் இப்போது பார்த்திடும் அட்டைப்படம் ! "தலை தப்பிக்கும் ரகமா ?" என்பதை நீங்கள் தான் சொல்லியாக வேண்டும் ! கதையைப் பொறுத்தவரை - பெரியதொரு ஆர்ப்பாட்டமெல்லாம் இல்லாத நேர்கோட்டு கிரைம் த்ரில்லர் இது ! 

And இதோ - ஆண்டின் இறுதி மறுபதிப்பின் அட்டைப்பட preview ! 

நமது ஓவியரின் கைவண்ணமே இங்கும் - இம்முறை துளி கூட நமது நோண்டல்களின்றி ! ஒரிஜினலாகவே டிசைன் பளிச் என்று அமைந்துவிட்டதால் அதனில் பட்டி-டிங்கரிங் பார்த்திட நமக்கு ஆர்வம் எழவில்லை ! So கதைக்கு ஏற்றதொரு (புதிய) தோரணையில் நிற்கும் CID லாரன்ஸ் ஓ.கே.வா ? என்ற தீர்ப்பை எதிர்பார்த்திருப்போம் ! பின்னட்டைகள் இரண்டுமே கோகிலாவின் உருவாக்கங்களே  ! இந்தாண்டில் மறுபதிப்புகள் நிஜமாகவே செமையாய் ஸ்கோர் செய்திருக்கும் தருணத்தில் - இந்த இதழும் சோடை போகப் போவதில்லை என்று நிச்சயமாய் நம்புகிறோம் ! பழமை விரும்பிகளுக்கு இதோ இன்னுமொரு விருந்து ! If all goes well, செவ்வாய் பகலில் உங்கள் கூரியர்கள் எல்லாமே புறப்பட்டுவிடும் இங்கிருந்து ! And வலைப்பதிவினைத் தவறாது தொடர்ந்திடும் முகவர் நண்பர்களின் கவனத்துக்கு :  உங்களது பார்சல்கள் புதன்கிழமை இங்கிருந்து கிளம்பிடும் !  "செவ்வாயே எங்களுக்கும்  வேண்டுமென்று" நம் பணியாளர்களை தயைகூர்ந்து வறுத்து எடுக்க வேண்டாமே - ப்ளீஸ் ! Becos முதல்நாள் பைண்டிங்கிலிருந்து நமக்கு வந்து சேரும் பிரதிகள் சந்தாவின் எண்ணிக்கைக்கே சரியாக இருக்கும் !  ஒரு தினத்துப் பொறுமை ப்ளீஸ் !  

நவம்பரின் பணிகள் நிறைவுற்ற கையோடு - டிசம்பரின் இதழ்களின் இறுதிக் கட்டப் பணிகளுக்குள் குதித்தாயிற்று என்பதால் - தீபாவளி விடுமுறைகளுக்கு முன்பாகவே டிசம்பர் இதழ்கள் அச்சுக்குத் தயாராகி விடும் ! டிசம்பரில் 3 ரெகுலர் இதழ்களே எனும் போது - சமீபமாய் நாம் பழகி விட்டுள்ள அந்த "FOUR EACH MONTH " என்ற பார்முலா உதைவாங்கிடக் கூடும் என்பதால்  - அந்தக் குறையை நிவர்த்தி செய்திட SUPER 6-ன் முதல் இதழாக லக்கி லூக் CLASSICS அட்டகாசமாய் வந்திடவுள்ளது ! முன்சொன்னது போலவே - இதுவொரு வரிசைக்கிரம நம்பர் தாங்கிய, குறைவான பிரிண்ட் ரன் கொண்ட பதிப்பாகவே இருந்திடும் ! அது மட்டுமன்றி - நீங்கள் ஏற்கனவே ரசித்துள்ள அந்த 2 கதைகளை இன்னமும் அட்டகாசமாய் சுவாரஸ்யமாக்கிட, சிலபல எக்ஸ்டரா நம்பர்களை இணைக்கும் முஸ்தீபுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன ! இந்த எக்ஸ்டரா நம்பர்கள் இதழ்களை வாங்கிடவிருக்கும் ஒவ்வொரு முகத்தினிலும்  ஒரு அகலமான புன்னகையைக் கொணரப் போவது நிச்சயம் ! லக்கி லூக்கின் 70-வது பிறந்தநாள் ஆண்டின் இறுதி மாதத்திலாவது அவருக்கொரு tribute செய்திட முடிகிறதே என்ற மகிழ்ச்சி எங்களுக்கு !  இதை படிக்கும் கணமே "சூப்பர் 6-ன் முதல் இதழாக MILLION & MORE ஸ்பெஷல் வரலியா ? ஜெரெமியா வரலியா ?" என்ற கேள்விகள் உங்களுக்கு எழுந்திடும் பட்சத்தில் - "no worries ; கொஞ்சமே கொஞ்சமாய்ப் பொறுமை ப்ளீஸ் !" என்று மட்டும் சொல்லிடுவேன் ! அதன் பணிகள் மும்முரமாய் நடைபெற்று வருகின்றன ; and அந்த இதழ் சற்றே தாமதமாய் வெளிவந்திடுவதற்கு ஒரு அட்டகாசமான காரணமும் உள்ளது ! அதனை இப்போதே போட்டு உடைத்து விடாமல், இதழ் வெளியாகவிருக்கும் தருவாயில் சொல்வது இன்னமும் நயமாக இருக்கும் என்பதால் மௌனச் சாமியார் ஆகிடுகிறேன் இப்போதைக்கு ! 

SUPER 6 துவங்கிடும்  நேரம் முன்பதிவுகளைப் பார்த்துக் கொள்ளலாமென்று இதுவரை முனைப்புக் காட்டாது இருந்திருக்கக்கூடிய வாசக நண்பர்களே : இனி ஜாஸ்தி அவகாசமில்லை ! ஒரு வாரத்தினில் அச்சுக்குச் செல்லவிருப்பதால் இந்த மைல்கல் முயற்சிக்கு உங்கள் பங்களிப்புகள் இருந்திட வேண்டுமென்ற அவா இருப்பின், please do send in your subscription right away !  ஆன்லைனில் இதனைச் செய்திட நினைப்பின் : http://lioncomics.in/2017-subscription/197-the-super-6-pre-booking.html
போராட்டக் குழுவின் உக்கிரமான பதுங்கு குழி சிரசாசன SMS போராட்டத்தின் விளைவாய் மறுமலர்ச்சி கண்டிருக்கும் (!!) "சிங்கத்தின் சிறுவயதில்" பகுதியின் புண்ணியத்தில் - நானே மறந்து போயிருக்கும் சிலபல முந்தைய வெளியீடுகளைத் தேடித் துருவும் படலம் சமீபமாய் நடந்து வருகிறது ! துண்டும், துக்கடாவுமாய் அந்நாட்களது பாக்கெட் சைஸ் ; அதுக்கும் குட்டி சைஸ் என்று பழுப்புக் காகிதங்களிலான அந்த இதழ்களை பார்க்கும் போது கலவையான உணர்வுகள் ! பற்றாக்குறைக்கு இங்கே நமது வலைப்பதிவினில் வந்து பார்த்தால் -  சேலம் டெக்ஸ்விஜயராகவன் அந்நாட்களது தீபாவளி மலர்களை வரிசைப்படுத்தி இருக்க, கால் கட்டைவிரலில் ஒரு பரிச்சயமான நமைச்சல் தோன்றியது ! மண்டைக்குள் சிலபல சக்கரங்கள் சுழலும் சத்தம் லியனார்டோ தாத்தா பாணியில் எனக்கும் கேட்க - இதோவொரு கேள்வி உங்களுக்கு :

இன்றைய சூழலில் "ஒரு கனவு இதழ்"  என்று நீங்கள் உருவகப்படுத்துவதாயின் - அது என்னவாக இருக்கும் ? 

(இரத்தப் படலம் முழுத் தொகுப்பு - வண்ணத்தில்  என்பது நீங்கலாக ! அது நிச்சயிக்கப்பட்ட இதழே ; அதற்கான ஆண்டு எது ? என்பது மட்டுமே தீர்மானம் காணப்பட வேண்டிய விஷயம் ! So அதனை இங்கே கொணர வேண்டாமே - ப்ளீஸ் !)  உங்களது "கனவு இதழ்" நமது நாயக / நாயகியர் சார்ந்த தேர்வுகளாகவும் இருக்கலாம் ; மொத்தமாய் புதிதாய் - global புதியவர்களின் கதைகள் சார்ந்தும் இருந்திடலாம் ! "2000 பக்கங்கள் ; 3000 பக்கங்கள் !" என்ற ரீதியில் பீதியைக் கிளப்பாது - சற்றே நடைமுறைக்கு ஒத்து வரும் கனவுகளாய்  இருப்பின்,   அவற்றை நாங்களும் கண்டு பார்ப்பது முடிகிறதா ? சாத்தியங்களின் எல்லைகளுக்குள் இருப்பின் அவற்றை நனவாக்கிட முடிகிறதா ? என்று முட்டித்  தான்பார்க்கிறோமே ?!! கழுதை - கட்டை விரல்தான் எதற்கு உள்ளது?  - தொண்டைக்குழி நர்த்தனத்துக்கு உதவாது போனால் !! (அதற்காக - "SINISTER SEVEN - ஸ்பைடர் போடுங்க " என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் ; அழுதே விடுவேன் நான் !!) 

And இன்றைய கனவு - அடுத்த மாதத்து நனவாகிடும் என்றெல்லாம் எதிர்பாத்திட வேண்டாமே ப்ளீஸ்! தடையின்றி ஏகமாய்க் கதைகள் கிடைத்து வரும் இத்தருணத்திலும் உங்களுக்குள் ஏக்கங்களென்று ஏதேனும் நிஜமாக உள்ளனவா ? என்பதைக் கண்டறியும் brainpicking முயற்சியே இது என்று இப்போதைக்கு வைத்துக் கொள்ளுங்களேன் !  So இதற்கு பலன் தெரிய அவகாசம் நிறையவும் ஆகலாம் ; நம் சக்திகளுக்கு மீறிய கனவுகளாய் இருப்பின் அவை கானல்நீராகவே இருந்தும் போகலாம் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன் ! "நான் மாங்கு-மாங்கென்று எழுதினேன் ; நீ அதைச் சட்டையே செய்யவில்லை !!" என்று பின்னாட்களில் துடைப்பத்தைத் தூக்கிடக் கூடிய நண்பர்களின் பொருட்டு இந்த disclaimer ! 

அப்புறம், போன வாரத்து "டெக்ஸ்-மாந்த்ரீகர்" caption போட்டியின்joint winners - ஈரோடு விஜய் & டாக்டர் ஹரிஹரன் ! 
Dr.Hariharan :
A: புனித மானிடோ, எங்கள் இரவுக் கழுகை காப்பாற்று  !
B: ஜில் பர டிம்பலக்கோ (புனித மந்திரம்)C: டைகர் ஜாக் அதிநவீன மருத்துவமனைனு சொல்லிருக்கும் போதே சுதாரிச்சுருக்கணும்.

Erode VIJAY :
A : விஷக்காய்ச்சலுக்கான மருந்துடன் வெள்ளி முடியார் விரைந்து வந்துகொண்டிருப்பதாக புகை சமிக்ஞை வந்திருக்கிறது!

B : வோ! வெள்ளிமுடியாரின் பசிதீர விருந்துக்குத் ஏற்பாடு செய்யுங்கள்!

தல : (மனதுக்குள்) அச்சச்சோ...! கொஞ்சூண்டு வறுத்தகறி வாசம் வந்தாலே அந்தப்பய விஷக்காய்ச்சல் மருந்தை வீசியெறிஞ்சுட்டு விருந்துக் குடிலுக்குள்ள பாய்ஞ்சுடுவானே...!!

வாழ்த்துக்களுடன் - இருவருமே ஆளுக்கொரு சந்தாவினை (B அல்லது C) யாருக்கேனும் வழங்கும் வாய்ப்பை அவர்களுக்குத் தருகிறோம் ! Congrats !!

அப்புறம் ஒரு சமீப வலைத்தள ரிப்போர்ட் இது - சீனியர் எடிட்டரின்கண்ணில் பட்டது :

உலகளவில் காமிக்ஸ் சேகரிப்பாளர்களின் மெக்காவாக இருந்து வரும் அமெரிக்காவின் சில பல ரெக்கார்டுகள் ஆட்டம் கண்டுள்ளன - ஒரு காரட் நிற மண்டை கொண்ட டின்டின் முன்னே ! ஜூன் 1938-ல் வெளியான முதல் சூப்பர்மேன் காமிக்ஸ் தான் வரலாற்றிலேயே அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட இதழாக இருந்து வந்துள்ளது - அதாவது  இரண்டு ஆண்டுகளுக்கு  முன்பாக வரையிலும் ! 32 இலட்சம் டாலர்கள் ( 21.50 கோடி ரூபாய்) கொடுத்து சேகரிப்பாளர் ஒருவர் இந்த இதழை EBAY-ல் நடந்த ஏலத்தினில் வாங்கி இருந்தது ஒரு அசாத்திய சாதனையாக இருந்து வந்தது ! 
ஆனால் சமீப காலங்களில் பெல்ஜியத்தின் ஆதர்ஷப் புதல்வனான  டின்டினின் ஓவிய ஒரிஜினல்களில் பல ஏலத்தில் ஈட்டியுள்ள தொகைகள் கண்களை பிதுங்கச் செய்யும் விதத்தில் உள்ளன !! 1937 முதல் 1958 வரை வெளியாகிய டின்டின் ஆல்பம்களின் அட்டைப்பட ஒரிஜினல் டிசைன்கள் 36 லட்சத்துப் பதினெட்டாயிரம் டாலர்களுக்கு (24.25 கோடி ரூபாய் !!) விற்பனை கண்டு உலக சாதனை படைத்துள்ளன !! 
சேகரிப்பின் பொருட்டு ஜாக்பாட் அடித்திருக்கும் காமிக்ஸ் பட்டியல் இதோ ! 
இதோ - அந்த ACTION COMICS இதழை வாங்கிய குழுமத்தின் பிரதிநிதி !! 
அட..ஒரேயொரு சூப்பர் ஹீரோவுக்கே இந்த அலப்பரை என்றால் - ஒன்றுக்கு மூன்றாய் சூப்பர் ஹீரோக்கள் நிறைந்திருக்கும்   நமது சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் இதழை யாராச்சும் சிலபல கோடிகளுக்கு வாங்கிடத் தயாராக இருப்பின் நானும் E-BAY-க்கு வருகிறேன் சாமியோவ் !! மீண்டும் சந்திப்போம் all !! Have a great Sunday !

369 comments:

  1. First time in history..மகிழ்ச்சி..

    ReplyDelete
  2. Replies
    1. வாழ்த்க்கள் ஹரி & விஜய்.(ஞயம பார்த்த எனக்கு தான் குடுத்திறுக்கனும்.)😊😊😊

      Delete
    2. @ Kathirvel S & Ganeshkumar

      நன்றி நண்பர்களே! :)

      Delete
  3. நடுஇரவு வணக்கம்

    ReplyDelete
  4. 5வது இடத்தை பிடித்தது மகிழ்ச்சி, ரொம்ப நாளைக்கு பிறகு டாப் 10ல்...

    ReplyDelete
  5. கனவு இதழ்கள்

    1. ஆல்டபரான் சீரிஸ்
    2. கென்யா , நமீபியா
    3. கோல்டன் சிடி
    4. ஆர்டிகா

    இப்போதைக்கு இது மட்டும் போதும் சார். :-)

    ReplyDelete
  6. 3 மாடஸ்டி கதைகள் ஒரே புக்காக

    ReplyDelete
    Replies
    1. இந்த கனவு ரொம்ப நல்ல இருக்கு....

      Delete
    2. இளவரசிக்கு 12 புத்தகங்கள் ஒரே தொகுப்பாய் அதுவும் கலரில்.!!!!!

      Delete
  7. ஆசிரியருக்கும் & நண்பர்களுக்கும் அதிகாலை வணக்கம்

    ReplyDelete
  8. எனது கனவு இதழ் முத்துவில் வந்த வேதாளர் கதைகள்

    ReplyDelete
  9. Robin story cover is very old style. Below average.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் drawing சொல்றிங்களா அல்லது DTP டிசைனை சொல்றிங்களா. எனக்கு drawing சரியாக படவில்லை. ஆனால் DTP டிசைன் சுப்பர்.

      Delete
    2. And the colours. It reminds me our front pages of comics that comes before year 2000.

      Delete
  10. இரண்டு அட்டை படங்களுமே டாப் அருமை

    ReplyDelete
  11. வணக்கம் எடிட்டர் சார்...!
    வணக்கம் நண்பர்களே...!

    ReplyDelete
  12. எனது கனவு இதழ் 1987 தீபாவளி மலரும் ஆப்ரிக்க சதியும் தான் அது கிடைக்க வாய்ப்பில்லையே என்ன செய்வது

    ReplyDelete
    Replies
    1. இதனை தவிர்த்து பார்த்தால் அடுத்த சாய்ஸ் டெக்ஸ் வில்லரின் மெகா சாகசம்

      Delete
  13. வணக்கம் சார்...
    கனவு இதழாக ஒரு கதையை யோசித்து கிழே படித்த நான்....

    (அதற்காக - "SINISTER SEVEN - ஸ்பைடர் போடுங்க " என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் ; அழுதே விடுவேன் நான் !!)
    ஹா ஹா ஹா.... நடு ஜாமத்திலும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை... நான் கேக்கவிருந்த கனவு இதழ் என்பதால்...
    கனவு இதழ்.... ம்ஹீம்... ஒரு இதழல்ல நிறைய்ய்ய எதை சொல்வது எது விடுவது...? என்று புரியவில்லை... புரிந்தப்பின் டைப்புகிறேன் சார்.

    Dr. ஹரிஹரன்... மிக அருமை...
    ஈரோடு விஜய்.... எப்போதும் நகைச்சுவையாக எழுத எப்படித்தான் உங்களால் முடிகிறதோ...
    வாழ்த்துக்கள் நண்பர்களே...
    இம்முறை பரிசே பாக்கியம் ஆகிவிட்டது...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி உதய் அவர்களே! :)

      சக வின்னர் - டாக்டர் ஹரிஹரன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்!

      Delete
    2. வாழ்த்துக்கள் செயலாளரே

      Delete
    3. வாழ்த்துக்கள்...!
      விஜயீ பவ..!

      Delete
  14. எனது கனவு இதழ் 1987 தீபாவளி மலரும் ஆப்ரிக்க சதியும் தான் அது கிடைக்க வாய்ப்பில்லையே என்ன செய்வது

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் ப்ரோ...!
      இரட்டை வேட்டையரின் அனைத்து கதைகளையும் தாங்கிய ஒரு டைஜஸ்ட் வந்தால் அட்டகாசமாய்த்தானிருக்கும்...! ஆனால் வாய்ப்பில்லையே....?

      Delete
    2. இரட்டை வேட்டையர்களின் காலம் பொற்காலம் அது என்றுமே திரும்பி வராது

      Delete
  15. இரண்டு அட்டை படங்களுமே டாப் அருமை

    ReplyDelete
  16. ROBIN front attai padam kidikkala sir

    ReplyDelete
  17. ROBIN front attai padam, innum nalla panni erukkalam sir

    ReplyDelete
  18. நான் கனவு இதழாக கருதுவது டெக்ஸின் அந்த 550 பக்க சாகஸத்தைதான்...! ( சில வாரங்களுக்கு முன் நீங்கள் அளித்த விளக்கத்தை
    பார்த்தபோது அது ' கனவு இதழாகவே 'ஆகிவிட்டது..!

    அப்புறம் இனியன் சார் சொன்னது போல் குண்டாய் ஹார்டு கவரில் ஒரு இளவரசி டைஜஸ்ட்...!

    ஸ்பைடர் கதையை கேட்கலாம் என்றால்..... சரி..விடுங்கள்...! உங்களை அழ வைத்துப்பார்க்க எங்களுக்கு விருப்பமில்லை..!

    ReplyDelete
    Replies
    1. //அப்புறம் இனியன் சார் சொன்னது போல் குண்டாய் ஹார்டு கவரில் ஒரு இளவரசி டைஜஸ்ட்.//

      ஜேடர் பாளையத்தாருக்கு வாயில் சர்க்கரைத்தான் போட வேண்டும்.!
      +11111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111...................

      Delete
    2. @ M.V சார்

      நடுவுல ஒரு '1' குறையுறாப்ல இருக்கே... ;)

      Delete
  19. Vintage collection vendum sir, carriogon, wing George commender,rip kirby, steel hand Wilson ...

    ReplyDelete
  20. இளவரசி தொகுப்பு, வேதாளர் தொகுப்பு,காரிகன் தொகுப்பு

    ReplyDelete
    Replies
    1. செந்தில்.!@

      // இளவரசி தொகுப்பு.!//

      ஆஹா.! ஓஹோ.! போஷ்! பேஷ் .!

      Delete
  21. 'செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
    பெருக்கம் பெருமித நீர்த்து'

    ReplyDelete
  22. காரிக்கன் மற்றும் ரிப்கெர்பி கதைகளை கனவு இதழ்கள் வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம்.

    ReplyDelete
  23. லயனில் வந்த பெரிய, பெரிய சைஸ் இதழ்களான இரும்பு மனிதன், கொலைப்படை, சதி வலை ஆகியவற்றை மீண்டும் அதே சைசில், அதே இரு வண்ணங்களில், அதே அட்டைப்படத்துடன் மூன்றும் இணைந்த ஒரு சூப்பர் டூப்பர் ஸ்பெஷலாக பார்க்க ஆசை. விலை ரூபாய் 300 என்றாலுமே சரிதான்.

    ReplyDelete
    Replies
    1. //லயனில் வந்த பெரிய, பெரிய சைஸ் இதழ்களான இரும்பு மனிதன், கொலைப்படை, சதி வலை ஆகியவற்றை மீண்டும் அதே சைசில், அதே இரு வண்ணங்களில், அதே அட்டைப்படத்துடன் மூன்றும் இணைந்த ஒரு சூப்பர் டூப்பர் ஸ்பெஷலாக பார்க்க ஆசை//

      +99999999...

      கண்டிப்பாக பலருடைய கனவாகவே இருந்து வந்துள்ளது... மேலும் கடந்த கால நினைவுகளை மீட்டெடுக்கும் என்பது உறுதி.... 500 ரூபாயாக விலை இருந்தால் பத்து பேருக்கு நானே ஸ்பான்சர் செய்கிறேன்....

      Delete
    2. நான் பத்து பேர்களில் ஒருவன்........!

      Delete
    3. + 500

      மறுபதிப்புக்கள் வரும் இந்நாட்களில் இந்த ஆசை/ஆவல் எனக்கும் உண்டு ...! ப்ளீஸ் ...

      Delete
  24. ப க ப எ அட்டையில் இருப்பது லாரன்ஸ் என்று சொன்னால், அதை டேவிட்டே நம்ப மாட்டார்.

    ReplyDelete
    Replies
    1. ஒருவேளை... படுத்துக்கொண்டிருப்பதுதான் லாரன்ஸோ என்னவோ?!! :P

      Delete
    2. ஆமா ரொம்ப குழப்பமா இருக்கு. பேசாம இதுதான் லாரன்ஸ் இதுதான் டேவிட் எழுதி அட்டை படத்திலே எழுதி அம்பு குறி போட்ருங்க...

      Delete
    3. லாரன்ஸ் பார்ப்பதற்கு ராணி காமிக்ஸ் மந்திரத்தீவு ஜேம்ஸ் பாண்ட் மாதிரியே இருக்கார். ஒரு வேளை ஒரே Artist !?

      Delete
  25. அட்டை படங்கள் அனைத்துமே அருமை . அதிலும் "வேதாள வேட்டை" க்கு புதிதாக போட்டுள்ள சித்திரம் கார்ட்ஸ் வடிவில் வசீகரிக்கிறது . எனது கனவு இதழ் முன்பு வந்தது போல்( தீபாவளி மலர் , கோடைமலர் போல ) கதம்ப குண்டு இதழ்தான் .
    ஈரோடு விஜய் , Dr .ஹரிஹரன் சார் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் .
    மனதை உலுக்கிய கோரமான பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள் . அந்த கோர அனர்த்தத்தில் வேலையினை முடித்து கொடுத்த நண்பருக்கு ஹாட்ஸ் ஆப் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரபானந்த் சார்!

      Delete
  26. 51 வது அனைவருக்கும் அதிகாலை வணக்கம். நாளை பதிவை பற்றிய ஆராய்ச்சியுடன் தொடர்கிறேன் நன்றி

    ReplyDelete
  27. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.absolute classic+gold சந்தா இரண்டிற்கும் எனக்கு ஒரு சந்தா ஒதுக்கி விடுங்கள்.சவூதியில் வேலை செய்தாலும் சம்பளம் கொடுத்து 8 மாதங்கள் ஆகிறது. ஆதலால் உடனே பணம் கட்டமுடிய வில்லை .தங்களின் ஒரு பக்க நோட்டீஸை கூட miss செய்ய மனமில்லை.நீங்கள் வேறு பிரிண்ட்ரன்,spl no அது இது வென்று சொல்வதால் ஒரு சிறு பயம்.
    இன்னும் ஓரிரு மாதங்களில் பணம் அனுப்பி விடுகிறேன்.இப்போது
    சந்தாவில் சேர்த்து கொள்வீர்களா pls.

    ReplyDelete
  28. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.absolute classic+gold சந்தா இரண்டிற்கும் எனக்கு ஒரு சந்தா ஒதுக்கி விடுங்கள்.சவூதியில் வேலை செய்தாலும் சம்பளம் கொடுத்து 8 மாதங்கள் ஆகிறது. ஆதலால் உடனே பணம் கட்டமுடிய வில்லை .தங்களின் ஒரு பக்க நோட்டீஸை கூட miss செய்ய மனமில்லை.நீங்கள் வேறு பிரிண்ட்ரன்,spl no அது இது வென்று சொல்வதால் ஒரு சிறு பயம்.
    இன்னும் ஓரிரு மாதங்களில் பணம் அனுப்பி விடுகிறேன்.இப்போது
    சந்தாவில் சேர்த்து கொள்வீர்களா pls.

    ReplyDelete
  29. கனவு இதழ்களா?
    லயன் ஆண்டுமலர்களில் வந்த மாடஸ்டி கதைகள் மட்டும் ஒரே இதழாக.

    ReplyDelete
  30. சாத்தியமான கனவு இதழ்
    இன்ஸ்பெக்டர் டேஞ்சரின் க்ரைம் க்விஸ்
    மற்றும்
    டிடெக்டிவ் டிரேக்கின் க்ரைம் டைம்
    அனைத்தையும் தொகுத்து ஒரே இதழாக வெளியிடலாம்.

    ReplyDelete
  31. சந்தா எண்ணிக்கையை அதிகரிக்க:-
    முந்தைய வெளியீடுகளில் மிகவும் அரிதான இதழை மறுபதிப்பு செய்து சந்தாதாரர் களுக்கு மட்டும் (முடிந்தால் அவர்களது பிறந்தநாள் வரும் மாதத்தில்) பரிசளிக்கலாமே.
    இதழின் பெயரை அறிவிக்காமல் இருந்தால் நன்று.

    ReplyDelete
  32. டியர் எடிட்டர் சார் ,
    தங்களுடைய இணைய தளத்தில் எல்லா நாடுகளில் உள்ள வாசகர்களும் இதழ்களை வாங்கும் வண்ணம் முகவரி இல் country எனும் இடத்தில் , இந்தியா தவிர மற்றைய நாடுகளையும் தயவு செய்து இணைக்க முடியுமா சார் ? இதனால் சந்தா எண்ணிக்கை கொஞ்சமேனும் கூடும் என்று நினைக்கிறேன் சார் . எனக்காக என்றாலும் தயவு செய்து மாற்ற முடியுமா சார் ? ப்ளீஸ் ?

    ReplyDelete
  33. Dear Editor,

    Tintin price is for the original Art, not for the comics book. Superman price is just for the comics book. You can assume what will be price for the original art of any of the first releases of Superman / Batman / Spiderman, etc...

    Thanks!

    Thanks

    ReplyDelete
    Replies
    1. Rama Karthigai : Yes, of course Tintin fetched this price for the original cover art !

      //1937 முதல் 1958 வரை வெளியாகிய டின்டின் ஆல்பம்களின் அட்டைப்பட ஒரிஜினல் டிசைன்கள் 36 லட்சத்துப் பதினெட்டாயிரம் டாலர்களுக்கு (24.25 கோடி ரூபாய் !!) விற்பனை கண்டு உலக சாதனை படைத்துள்ளன !//

      Delete
  34. நமது Century Special மறுபதிப்பிற்கான எனது கனவு இதழ் ! Waiting for Wednesday!

    ReplyDelete
  35. எனக்கு எப்பவுமே எங்கள் சூப்பர் ஸ்டார் ஸ்பைடர் தான், அதுவும் ரீபிரிண்ட்க்கு வாய்ப்பில்லாத மெகா சாகசங்களை ஒரே டைஜஸ்ட் ஆக வந்தால் அதை விட சந்தோசம் வேறு ஏதும் இல்லை. நீங்கள் அழுதாலும் பரவாயில்லை, ஆனால் வாசகர்களை அழ வைக்க வேண்டாமே.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீதர் ஜீ உங்களுக்கு மட்டுமல்ல ஸ்பைடர் எங்களுக்கும் சூப்பர் ஸ்டார் தான்

      Delete
    2. \\ஸ்ரீதர் ஜி உங்களுக்கு மட்டுமல்ல ஸ்பைடர் எங்களுக்கும் சூப்பர் ஸ்டார்தான்//
      செந்தில் சத்யா..!

      அதே....அதே....!

      Delete
    3. +1000+ தடவை ஆமோதிக்கிறேன்

      Delete
    4. Srithar Chockappa : (பெரும்பான்மை) வாசகர்களை தேம்பித் தேம்பி அழ வைக்க வேண்டாமே என்று தான் நான் முன்கூட்டியே அழுது பார்க்கிறேன் !

      Delete
  36. இன்றைய சூழலில் "ஒரு கனவு இதழ்" என்று நீங்கள் உருவகப்படுத்துவதாயின் - அது என்னவாக இருக்கும் ?


    வேற என்ன ? தலயோட அந்த 550 பக்க மெகா சாகசம் தான் சார் .தயவுசெய்து அந்த கதையை வெளியிடுங்கள் சார் ...தல & மெபிஸ்டோ கூட்டணியில் வந்த லயன் 150 ஆவது இதழ் "மந்திர மண்டலம் " சூப்பர் ஹட்டான கதை தானே சார். அப்பறம் ஏன் உங்களுக்கு தயக்கம் ...தயவுசெய்து அத்த சாகசத்தை வெளிடுங்கள் சார்

    ReplyDelete
  37. எனக்கு கனவு இதழ் சாய்சாக எதை கூறுவது என்றே தெரியவில்லை. 'மின்னும் மரணம்' மாதிரி எது வந்தாலும் ஓ.கே.
    எனக்கு டெக்ஸ் கதைகளில் அவ்வளவு ஈர்ப்பு இல்லை என்பதால் திபாவளி மலருக்கு எனக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை..

    ReplyDelete
  38. குருநாயருக்கும் ஹரிகரன் சாருக்கும் வாழ்த்துகள் பல.!

    ReplyDelete
    Replies
    1. நன்றிகளும் பல, KOK அவர்களே!

      Delete
    2. என்னுடைய வாழ்த்துக்களும் இருவருக்கும்...

      Delete
  39. கனவு இதழ் - சுஸ்கி விஸ்கி பயங்கர பயணம்.

    ReplyDelete
  40. கனவு இதழ் :-
    ஒன்றல்ல நிறைய இருக்கின்றனவே.!

    1. இதுவரையிலும் நாம் பார்த்திராத புது நாயகரோ நாயகியோ கொண்ட, ஒரு தொடர் (இரத்தப்படலம், பௌன்சர், கமான்சே மின்னும் மரணம் மாதிரி) முழுத் தொகுப்பாக முற்றிலும் புதிதாக ஒரே இதழில் தொடங்கி தொடர் முடிய வேண்டும். உதாரணத்திற்கு ,இரத்தப்படலம் மாதிரியே பிரெசிடென்ட் கொலையை மையப்படுத்தி ஒரு ஐந்து பாகங்கள் கொண்ட தொடரை ஒருமுறை விளம்பரப் படுத்தி இருந்தீர்களே அதுபோல.. அல்லது நம்ம ராமையா போல. .ஆனால் முதல் முறையிலேயே முழுத்தொகுப்பாக. வேண்டும். பிரித்துப் போடுவதோ, மறுபதிப்போ கூடாது.! முக்கிய குறிப்பு - ஒரே இதழில் கதைத்தொடர் முடிந்திருக்க வேண்டும். எத்தனை பில்லியன் செலவானாலும் பரவாயில்லை. :-)


    2. LMS. .. மீண்டும் ஒரு பெரிய்ய்ய் கதம்ப ஷ்பெசல். குறைந்தது 12 கதைகள் கொண்டது.அனைத்தும் புதிய அறிமுக நாயகர்களைக் கொண்டு ஒன்று.நமது ஆதர்ஷ நாயகர்களான டெக்ஸ் டைகர் லக்கி ஆர்டின் போன்றோரைக் கொண்டு ஒன்று. இதிலும் சங்கிலித் தொடரின் ஓரிரு ஆல்பங்கள் மட்டும் இடம்பெறாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். (டைகருக்கு சிங்கிள் ஆல்பம் சிரமம்தான்)

    3. ந்தா வந்துட்டேன்மா. .! (அடி விழறதுக்குள்ள போய் என்னன்னு கேட்டுட்டு அப்பாலிக்கா வந்து சொல்றேன்.)

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN //எத்தனை பில்லியன் செலவானாலும் பரவாயில்லை. :-)//

      அட்ரா சக்கை ! அட்ரா சக்கை !

      Delete
  41. கனவு இதழ் தீபாவளி மலர்1987, அட்னடப்படம் அருனம....
    தலயின் தீபாவளி ராப்பர் காட்டினால் நல்லா இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. yazhisai selva : புதன்கிழமை தான் புத்தகத்தையே கண்ணில் காட்டி விடுவோமே ?

      Delete
  42. கனவு இதழ்? டைகர் இளவயது சாகசங்கள் அனைத்தும் சேர்ந்த ஒரு டைஜஸ்ட்.

    ReplyDelete
  43. ஹரிஹரன் சாருக்கு வாழ்த்துகள்..!!!

    @ ஈனாவினா ...

    உங்களுக்கு எத்தினி தபா வாழ்த்து சொல்றது???

    பழைய வாழ்த்துகளிலிருந்து ஏதாவது ஒன்றை உருவி எடுத்து கொள்ளவும்.:-)

    ReplyDelete
    Replies
    1. //உங்களுக்கு எத்தினி தபா வாழ்த்து சொல்லுவது ??//

      அதானே.??? கசப்பான ,கஷ்டமான விஷயங்களைக்கூட இனிப்பாக ஹாஸ்யமாக சொல்லும் உங்கள் இயல்பான குணத்திற்கு ஒரு சிறு பரிசு.!

      உண்மையில் ஒரு நல்ல பேராசிரியரை இச் சமூகம் இழந்துவிட்டது.குன்றில்லிட்ட விளக்காய் இருக்கவேண்டிய நீங்கள் குடத்தில் இட்ட விளக்காய் போனது மணவர் சமுதாயத்திற்கு பேரிழப்பு.!

      Delete
    2. @ செனா அனா

      //உங்களுக்கு எத்தினி தபா வாழ்த்து சொல்றது???//

      சலிக்காம நன்றி சொல்றோமில்ல? பின்னே வாழ்த்துச் சொல்றதுக்கு என்னவாம்? ;)

      @ M.V சார்
      நிஜமாத்தான் சொல்றீங்களா?!! ஆனாலும் 'பேராசிரியர்' ஆகும் ஆசையெல்லாம் எனக்கில்லை! இங்கே ஒருத்தர் 'ஆசிரியர்'ன்ற பேர்ல படாதபாடு படுறதைப் பார்த்ததுக்கப்புறமும் அப்படியொரு ஆசை வந்துடுமா என்ன? ஹிஹி! ;)

      Delete
    3. அட...ஒரு வேளை அந்த உத்தியோகப் பெயரில்தான் வில்லங்கத்தின் வித்தே உள்ளதோ ? பேசாமல் "காமிக்ஸ் போஸ்ட்மேன்" ; அல்லது "காமிக்ஸ் chef " என்று பெயர் மாற்றிக் கொள்ளலாமோ ?

      Delete
  44. My dream:our muthu 1 to 100 as single book. Nothing else can beat this.

    ReplyDelete
  45. காலை வணக்கம் விஜயன் சார் மற்றும் நண்பர்களே _/\_
    .

    ReplyDelete
  46. ஹரிஹரன் சாருக்கு வாழ்த்துகள்..!!!

    @ ஈனாவினா ...

    உங்களுக்கு எத்தினி தபா வாழ்த்து சொல்றது???

    பழைய வாழ்த்துகளிலிருந்து ஏதாவது ஒன்றை உருவி எடுத்து கொள்ளவும்.:-)

    மிக்க நன்றி செனா அனா ஜி _/\_
    .

    ReplyDelete
    Replies
    1. சிபி அவர்களே...

      இப்பவும் 'வாழ்த்த வயதில்லை'யாக்கும்? கிர்ர்ர்ர்...

      Delete
  47. எடிட்டர் சார்,

    'வேதாள வேட்டை' என்று டெரர் டைட்டிலை வைத்துவிட்டு, ஒரு அமுல்பேபி வில்லனை ராபின் துரத்திக்கொண்டு வருவதைப் போன்ற அட்டைப்படத்தைப் பார்க்க சற்றே காமெடியாய் இருக்கிறது! வரைந்திருக்கும் விதத்தில் புராதன வாடையும் சற்றே தூக்கல்! சீட்டுக்கட்டு பாணியிலான DTP வேலைப்பாடு நன்று! ( சீட்டின் அடிப்புறத்தில் 'வேதாள வேட்டை' எழுத்துக்கள் தலைகீழாக பிரின்ட் செய்யப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்!)

    எனது மெகா கனவு:

    * 5000 பக்கங்களில் ஒரு 'தல' ஸ்பெஷல்

    குட்டிக் கனவுகள் :

    * முழு வண்ணத்தில் ஒரு ஸ்பைடர் & ஆர்ச்சி இதழ்!
    * கருப்பு ஆயாவின் கதைகள் - தொகுப்பாய்!
    * டிஸ்னியின் இதழ்கள் - மீண்டும் தமிழில்!
    * லயன் & முத்து - 1 to 100 எல்லா இதழ்களும் - மறுபதிப்பாய்!

    * 80 களின் எல்லா தீபாவளி மற்றும் கோடை மற்றும் இன்னபிற சிறப்பு மலர்கள் - அதே வடிவத்தில், அதே வாசனையுடன்!

    ReplyDelete
    Replies
    1. அது... ஈனா. வினா. கிளம்பிட்டாரு.. இன்னிக்கு எத்தினி பட்டாசு ச்சே சிரிச்சு சிரிச்சு வயிறு வெடிக்க போகுதோ... தலிவரே.. உடனே வந்து கவுண்டர் ஒண்ணு போடுங்கோ...

      Delete
    2. தீபாவளி மற்றும கோடை மலர்கள் மற்றும் சிறப்பு மலர்கள் அனைத்தும் அதே வாசனையுடன் மட்டும். வடிவத்தில் புது வடிவம் ஏ.4.சைசில். வேண்டும்.

      Delete
    3. @ ஈரோடு விஜய்
      ஆஹா...சூப்பர்...!
      உங்கள் குட்டிக்கனவுகள் ஒவ்வொன்றிற்கும் பல ஆயிரம் ப்ளஸ் போட்டுக்கொள்கிறேன்.ஒருக்கால் இது மட்டும் நிஜமாகிவிட்டால் என் ஜென்மம் சாபல்யம் அடைந்துவிடும்.

      Delete
    4. Erode VIJAY : //5000 பக்கங்களில் ஒரு 'தல' ஸ்பெஷல்//

      ஒரு விக்ரமன் ; KS ரவிக்குமார் ரேஞ்சுக்கு கனவு காணச் சொன்னால் நீங்கள் டைரக்டர் ஷங்கர் ரேஞ்சுக்கு கண்டு வைத்தால் எப்படி ?

      Delete
  48. Absolute classic பணம் கட்டியவர்களின் Photo எப்போது என்ன size ல் அனுப்ப வேண்டும்?
    மேலும் ஓரு வேண்டுகோள் AC யில் முன் பக்கத்தில் பணம் செலுத்திய வரின் புகைபடமும். பின் பக்கத்தில் எதாவது ஓரு பணம் கட்டியவர்களின் வெளி வருமாறு செய்ய முடியுமா???
    உதாரணமாக எனக்கு வரும் பிரதியில் என்னுடைய photo முன்பக்கம் பின்புறத்திலும், சேலம் டெக்ஸ் photo பின்புறத்திலும் வருவது போன்று வெளியிட முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. நண்பர் கணேஷ்சின் ஐடியா சூப்பரா இருக்கே சார்...
      அந்த ட்ராகன் நகரத்தின் முன் பக்கத்தில் பணம் கட்டிய நண்பர்கள் புகைப்படம், பின்பக்க கருப்பு வெள்ளை பக்கத்தில் எங்களின் மரியாதைக்குரிய மூத்த ஆசிரியர்,
      அன்பின் ஆசிரியர்,
      எங்கள் பிள்ளைகளின் ஆசிரியர் என மூன்று எடிட்டர்கள் இணைந்துள்ள போட்டோவும் இடம்பெற வாய்ப்பு உண்டா சார்..

      Delete
    2. Ganeshkumar Kumar : Nopes...முன்பக்கம் அவரவரது போட்டோக்களை அச்சிட்டுப் பத்திரமாய் அவரவரிடம் ஒப்படைப்பதே பெரும் சவாலாக இருந்திடும் ! இதில் மேற்கொண்டு காம்பினேஷன்ஸ் நடைமுறைக்கு சாத்தியமாகாது !

      Delete
    3. சேலம் Tex விஜயராகவன் : சார்...இது உங்கள் இதழ் என்ற வகையில் உங்கள் போட்டோக்கள் மட்டுமே இடம்பிடிப்பது தான் பொருத்தம் ! THE GODFATHER படத்து டான் குடும்பம் போல நாங்கள் போஸ் கொடுப்பது சரியாக இராது !

      Delete
    4. நீங்க பார்காத சவால?? முயற்சி செய்யுங்கள் Edi.

      Delete
    5. இந்த முறை இந்த பரிட்சை வேண்டாம். அடுத்த AC அப்ப முதல் பக்கம் பின்புறம் எதாவது ஓரு வாசகர் படம் போடலாம்.(எற்கனவே எங்கள் படம் போட்ட இதழ் எங்களிடம் இருக்கும்).

      Delete
  49. தீபாவளி மற்றும கோடை மலர்கள் மற்றும் சிறப்பு மலர்கள் அனைத்தும் அதே வாசனையுடன் மட்டும். வடிவத்தில் புது வடிவம் ஏ.4.சைசில். வேண்டும்.

    ReplyDelete
  50. நண்பர்களுக்கும் ஆசிரியருக்கும்
    வணக்கம்

    ReplyDelete
  51. எனது கனவு இதழ் பழைய கோடைமலர்கள் அதே கதைதொகுப்புகளோடு மீண்டும் கிடைப்பதே. சைஸ் மட்டும் இப்பொழுதைய மறுபதிப்பு அளவில்.

    ReplyDelete
    Replies
    1. கிருஷ்ணா வ வெ : பழைய கோடை மலர்களின் வசீகரத்துக்கு - அந்தப் பாக்கெட் சைஸ் ஒரு முக்கிய காரணம் என்பேன் !

      Delete
    2. சூப்பர் சார்... அப்போ பாக்கெட் சைஸில் வந்த ஸ்பெஷல் இதழ்கள் எங்கள் சாய்ஸ் ஆக இருந்திடும்...

      Delete
  52. இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில்
    ஆடுது என் மனமே..
    கனவுகளின் சுயம்வரமோ, கண் திறந்தால்
    சுகம் வருமோ..
    இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
    இன்பத்தில் ஆடுது என் மனமே....

    மகிழ்ச்சி பெருமிதத்தில் மனம் பூரிப்படைகிறது சார்...
    கண்கள் ஆனந்தத்தில் பணிக்கின்றன..

    //பற்றாக்குறைக்கு இங்கே நமது
    வலைப்பதிவினில் வந்து பார்த்தால் - சேலம்
    டெக்ஸ்விஜயராகவன் அந்நாட்களது தீபாவளி
    மலர்களை வரிசைப்படுத்தி இருக்க, கால்
    கட்டைவிரலில் ஒரு பரிச்சயமான நமைச்சல்
    தோன்றியது ! மண்டைக்குள் சிலபல சக்கரங்கள்
    சுழலும் சத்தம் லியனார்டோ தாத்தா
    பாணியில் எனக்கும் கேட்க - இதோவொரு
    கேள்வி உங்களுக்கு :
    இன்றைய சூழலில் " ஒரு கனவு இதழ் "
    என்று நீங்கள் உருவகப்படுத்துவதாயின் -
    அது என்னவாக இருக்கும் ?///....

    இந்த வரிகளில் என்னுடைய ஒரு மாத உழைப்பில் நான் எழுதிய தீபாவளி மலர்கள் பற்றிய கட்டுரைக்கு நீங்கள் தந்துள்ள அங்கீகாரத்திற்கு ஆயிரம் நன்றிகள் சார்...
    பல மாதங்களாக நண்பர்கள் கேட்டுவந்த ஆயிரம் பக்க கனவு இதழுக்கான துவக்கம் பெற , நீங்கள் வெளியிட்ட முந்தைய மெகா ஹிட்மலர்களை உங்களுக்கு மீண்டும் நினைவு படுத்த என்னுடைய வரிசைப் படுத்துதல் காரணம் என அறியும் போது உற்சாகம் சும்மா பிச்சிகிது சார்...

    கனவு நனவானால் மெத்த மகிழ்சி சார்...

    என்னுடைய கனவு ,
    1.மேலே நண்பர் அருண் குறிப்பிட்டுள்ள அந்த 3பெரிய இதழ்களின் தொகுப்பு

    2.பெருவாரியான நண்பர்கள் கேட்கப்போகும் டெகஸின் அந்த 550பக்க மகாஆஆஆஆஆ கதை...

    3.கிட் மாமா சொல்லியுள்ள சூப்பர் ஸ்பெசல் & LMS வரிசையில் டெக்ஸ்,இளவரசி,ஸ்பைடரின் பெஸ்ட் கதை, ப்ரின்ஸ், இளம் டைகரின் முதல் 3பாகங்கள் மற்றும் சில பழைய ஹீரோக்கள் கொண்ட ஒரு பிரம்மாண்டமான குண்ண்ட்ட்டு புக்.
    ....இதில் எது நனவாயினும்.....

    ReplyDelete
    Replies
    1. கனவு இதழ் எது போட்டாலும் சேந்தம்பட்டிக்கு நான் தான் ஸ்பான்சர்... மொத்தமா ஆர்டர் பண்ணுறோம்.. கெடா வெட்டோடு கொண்டாடுறோம்...

      Delete
    2. சூப்பரு...
      உங்கள் அன்புக்கு இந்த காமிக்ஸ் நாடே ச்சே சேந்தம்பட்டியே அடிமை சரவணன்சார்....

      ஓவா ஆயிரம் விலையில் கனவு இதழ் பிளான் பண்ணுங்க ஆசிரியர் சார்...(பிரியாணியை பார்த்த ரின் டின்- பார்வை படங்கள் பலநூறு)

      Delete
    3. சேலம் Tex விஜயராகவன் : ஓவா ஆயிரத்துக்குத் திட்டமிட்டு, இன்னுமொரு facial வாய்ப்பைத் தட்டிப் பறித்த பாவத்துக்கு ஆளாகவா நான் ? என்ன கொடுமை விஜயராகவன் சார் ?

      Delete
  53. My only dream to See Vethaalar speaking Tamil Again . Edi Sir I will be the most happiest man If My Hero gets a Come back...🐱

    ReplyDelete
  54. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ///இரத்தப் படலம் (Deluxe edition) - சொல்பேச்சே கேக்கமாட்டோம் ///

      ஹா ஹா ஹா! ஆமா ஆமா!

      Delete
    2. கனவு இதழ்:

      1. இரத்தப் படலம் (Deluxe edition) - சொல்பேச்சே கேக்கமாட்டோம் ;)
      2. Torpedo (comics)
      3. 50 RS(6 books) Action series continuously for a year.
      4. Hand picked Manga
      5. 50 RS கார்ட்டூன்


      கீழ்'கண்டவை வருமான்னு தெரியல இருப்பினும்
      6. The Airtight Garage by Moebius
      7. Northlanders
      8. Asterix

      Delete
    3. Dr.Hariharan, EV இருவருக்கும் பொன்னால் ஆனா ஆடையை மானசீகமாக போர்த்தி வாழ்த்துக்கள் கூறி மகிழ்கிறேன் :D

      Delete
  55. நண்பர் ஈரோட் விஜய் அவர்களுக்கும், ஹரிஹரன் அவர்களுக்கும் சாந்தாவை ஓ... சந்தாவை பரிசாக பெற்றமைக்கு வாழ்த்துகள்!!! :-)

    ReplyDelete
    Replies
    1. நன்றி பொடியன் அவர்களே!

      வாய் தவறி நீங்க சொன்ன மாதிரி அவரும் கைதவறி அனுப்பிட்டார்னா சந்தோசம் தான்! ஹிஹி! ;)

      Delete
    2. Erode VIJAY : கையும்..வாயும் தவறுவது போலவே சில பல பூரிக்கட்டைகளும் தவற கூடும் ! பரவாயில்லையா ?

      Delete
    3. அப்புறம் எந்தக் கூரியரில் சாந்தாவை....சீய்...சந்தாவை அனுப்புவது ? என்ற விபரத்தைச் சொல்ல மறந்திடாதீர்கள் !

      Delete
    4. அனுப்பிச்சுடுவார்.. நிச்சயம் அனுப்பிச்சுடுவார்.... !!!! :-P

      Delete
  56. Instead of asking Tex stories as dream special, think differently friends. Tex stories anyway our editor is going to publish. So dream something else. Next two weeks I will be typing in English friends.

    ReplyDelete
  57. எனது கனவு இதழ்... இளவரசியின் ஆரம்பக் கால ஐந்து (வரிசைபடி) கதைகள்..... ஒரே குண்டு இதழாக.... கண்டிப்பாக வண்ணத்தில் இல்லை.... Customized printsஆக இருந்தாலும் மகிழ்ச்சியே....

    ReplyDelete
    Replies
    1. AKK : "இ.மு.க."விற்கு கரூரிலும் கிளை உண்டா ? பார்டா !!

      Delete
  58. மற்றுமொரு ஆசை.... Valerian & Laureline.... தமிழ் பேச வேண்டும்..... 😊😊😊

    ReplyDelete
    Replies
    1. AKK : டாக்டர் சார்....அதற்கு அதிகக் காத்திருப்பு அவசியமிராது என்றே சொல்லுவேன் ! 2017-ன் கேட்லாக்கில் சந்தா E விளம்பரங்களுக்கு அடுத்த பக்கத்தைக் கொஞ்சம் கவனமாய்ப் பாருங்களேன் !

      Delete
  59. "உங்களிடம் சிரிக்க வைக்கும் சக்தி இருப்பின் அதனை எல்லா இடத்திலும் பயன்படுத்துங்கள் ...உலகமே அதற்காக தான் காத்து கொண்டு இருக்கிறது .."


    என்ற இந்த கபாலியின் இன்றைய விளம்பர வாசகபடி எடுத்து காட்டாக இருக்கும் எங்கள் செயலாளர் அவர்களுக்கும் ..டாக்டர் ஹரிஹரன் சார் அவர்களுக்கும் போராட்ட குழுவின் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : இவரு ஊதுறதையும்...அவரு ஆடுறதையும் பாக்குறப்போ அந்த "தில்லானா மோகனாம்பாளே' பாக்குற மாதிரியே எனக்கொரு பீலிங்கு !

      Delete
    2. ஹா..ஹா....:-)))))

      இருந்தாலும் உங்களுக்கும் குசும்பு அதிகம் சார்..:-)

      Delete
    3. நன்றி தலீவரே! பதுங்கு குழியில படுத்துக்கிட்டே கபாலி படத்தை பலமுறை பார்த்துட்டீங்க போலிருக்கே? ;)

      Delete
  60. 9வது லயன் தீபாவளி மலர்...

    9வது தீபாவளி மலர் பல விதங்களில் சிறப்பானது......
    1992 அக்டோபரில் ரூபாய் 10விலையில் ரெகுலர் டெக்ஸ் சைசில் 244பக்கங்களில் வெளியானது.

    இந்த இதழ் வெளியான ஆண்டு பர்சனலாக நம் அன்பின் ஆசிரியருக்கும் மிக முக்கிய ஒன்று. ஆம் நீங்கள் ஊகிப்பது சரிதான் இந்த ஆண்டுதான் அவரின் திருமணம் நடைபெற்றது.
    இந்த இதழ் அவரின் திருமணவிழாவிற்கான அழைப்பிதழை தாங்கி வந்திருந்தது. நம் மரியாதைக்குரிய மூத்த ஆசிரியர் திரு செளந்திரபாண்டியன் அய்யா அனைவரையும் அழைத்து இருந்தார்கள். சற்றே தாமதமான திருமண வாழ்த்து சொல்வோமா நண்பர்களே???

    "கழுகு வேட்டை" - என்ற டெக்ஸின் ஆல் டைம் பெஸ்ட் லிஸ்டில் இடம் பிடிக்கும் வலுவான நீண்ட கதை& ரிப் கெர்பியின் த்ரில்லான "வெறியனைத்தேடி" என்ற கதையும் இடம்பெற்றிருந்தன.
    அட்டைப்படத்தில்
    ஆர்ப்பாட்டமான அகோரமான வில்லன் , இரு கைகளிலும் துப்பாக்கிகளை ஏந்திய டெக்ஸ் உடன் ஒரு பக்கம் இடம்பிடித்தது. ஒற்றைக்கு ஒற்றை சவால் காட்சியின் படம் மறுபக்கம்.

    கழுகு வேட்டை சுருக்கம்.....

    வின்கேட் கோட்டை டூ நவஜோ குடியிருப்பு எல்லை வழித்தடத்தில்,
    வெள்ளையர்களுக்கும் நவஜோக்களின் தலைவர் டெக்ஸுக்கும் இடையேயான ஒப்பந்தப்படி பணம், கம்பளி போர்வைகள்& உலர்ந்த மாமிசங்களை ஏற்றிக்கொண்டு டைகர்ஜாக்கும், ஒரு நவஜோவும் நவஜோ கிராமத்திற்கு திரும்பி வருகின்றனர். வழியில் 4முரடர்கள் கொண்ட கும்பல் வழிமறித்து இவர்களிடம் வம்பு செய்கிறது. தட்டிகேட்கும் டைகர் கடுமையாக தாக்கப்படுகிறான்.

    துப்பாக்கி எடுக்கப்பாயும் மற்றொரு நவஜோவின் முதுகில் ஒரு முரடனான ஸ்கார்பேஸ் என்ற செவ்விந்தியன் கத்தியை பாய்ச்சுகிறான். அப்படியும் சுட பார்க்கும் நவஜோவை மற்றொரு முரடன் சுட்டுத் தள்ளுகிறான். கொந்தளித்த டைகர் ஒரு முரடனை காலை வாரி மோத, இருவர் பிடித்து கொண்டு டைகரை சரமாரியாக குத்தி மயக்கமுறச் செய்கின்றனர்.

    மயக்கம் தெளியவைக்கப்படும் போது தலையிடும் கர்ணகொடூர தீக்காயம்பட்ட முகத்தையுடைய முரடர்களின் பாஸ் தலையிட்டு , டெக்ஸுக்கு ஒர் சவாலை விடுக்கிறான். பியூப்லோபெலிஸிலுள்ள பூட் ஹில்ஸ்க்கு ஒரு வாரத்தில் டெக்ஸ் வந்தால் எதற்கும் அஞ்சாத எல்மியூர்டோ என்ற தன்னை எதிர்கொள்ளலாம் என கூறி சரக்குகளை விரட்டி அடித்து , நவஜோவின் சடலத்துடன் ஒரே குதிரையில் டைகரை ஏற்றி அனுப்புகிறான்.

    குற்றுயிராக கிராமம் வரும்டைகர் டெக்ஸிடம் நடந்ததை சொல்ல, அப்படி ஒரு அங்க அடையாளமோ, பெயரையோ கொண்ட நபரை தனக்கு தெரியாதே என டெக்ஸ் குழம்புகிறார். எப்படியாயினும் சவாலை ஏற்க டெக்ஸ் கிளம்புகிறார். அடுத்த நாள் வின்கேட் நகர செரீப்பை சந்தித்து எல்மியூர்டோ கும்பலை பற்றி டெக்ஸ் விசாரிக்கிறார். வின்கேட் கோச்சு வண்டியில் வரும் தன் மகன் கிட்டை வரவேற்க டெக்ஸ் ஆயத்தமாகும்போது, ஒரு மணிநேரம் முன்பாகவே வண்டி அறக்கபறக்க வந்துசேருகிறது.

    "டாக்டரை கூப்பிடுங்கள்" என்ற முழக்கத்திற்கு இடையே காயம்பட்ட கிட்வில்லரை கண்டு டெக்ஸ் மனம்பதைத்து விசாரிக்க , டெக்ஸை அடியோடு வெறுக்கும் எல்மியூர்டோ தான் தாக்குதலுக்கு தலைமை தாங்கினான் என சொல்லிட்டு கிட் மயக்கமாகிறான். டாக்டரிடம் கிட்டை விட்டுட்டு, வண்டியோட்டியிடம் நடந்ததை டெக்ஸ் விசாரிக்கிறார். 15மைல் தொலைவேயுள்ள கிழவன் டங்கனின் குடிசை அருகே கோச்சு வண்டி மடக்கப்பட்டதாகவும், பயணிகள் பாதுகாவலன் சுடப்பட , கிட் போராடியதாகவும் , முரடர்களில் ஒருவன் கிட்டை சுட்டதாகவும் அவன் தெரிவிக்கிறான். மூன்று தினங்களில் பூட்ஹில்ஸில் தன்னை சந்திக்கலாம் என எல்மியூர்டோ சொன்ன சவாலையும் தெரிவிக்கிறான். எக்கோ ஹில்ஸ் வழியே சென்று எல்மியூர்டோ கும்பலுக்கு முன் சந்திப்பு இலக்கை அடைய டெக்ஸ் முடிவுசெய்கிறார்.

    அடுத்த நாளில் குறுக்கு வழியே பலமலைத்தொடர்களை கடந்து , பாலைவனப்பரப்பில் பயணித்து,
    கடும்சவாலான பயணத்தின் முடிவே, பாழடைந்த பியூப்லோ பெலிஸக்கு முன் உள்ள மக்கள் வாழும் கடைசி நகரான ஸன்செட்வில்லாவை டெக்ஸ் அடைகிறார். அந்நகர செரீப் லார்க்கை சந்தித்து எல்மியூர்டோ கும்பலை பற்றி எச்சரிக்கிறார். அங்கேயிருக்கும் ஒரே ஓட்டலான எலிபண்ட் பால்ஸ்சில் தங்கி வெந்நீர் குளியலை அனுபவித்து உடைமாற்றும் சமயம், ஆம் அதே தான் டூமீல், டூமீல் எதிரொலிக்கிறது.

    விரைவாக கிளம்பும் டெக்ஸ் லார்க்கை அந்த விரியன்கள் கொன்றதை அடுத்து சலூனில் ஆர்ப்பாட்டம் பண்ணுவதை அறிந்து, அவர்களை எதிர்கொள்ள சலூனுக்கு போகிறார். அதிரடியாக அவர்களை மடக்கும் டெக்ஸ் ஒருவன் கையை சுட்டு காயப்படுத்துகிறார். பார்மேன் ரேட்கிளிப்பை முரடர்களின் துப்பாக்கியை பறிக்க டெக்ஸ் பணிக்க, முட்டாள் தனமாக அவன் எல்மியூர்டோவுக்கும் டெக்ஸ்க்கும் இடையே போக அவனை பணயக்கைதியாக்கும் எல்மியூர்டோ, அடுத்த நாள் சூரியஸ்தமன வேளையில் பூட்ஹில்ஸில் மோதலாம் என சொல்லிட்டு தப்பி செல்கிறான்.....

    ReplyDelete
    Replies
    1. ....அடுத்த நாள் க்ரிக்னர் என்ற நபருடன் ப்யூப்லோபெலிஸ் செல்லும் டெக்ஸ், கற்றாழை புதரில் தள்ளப்பட்டு கிடக்கும் பார்மேனை மீட்டு இருவரையும் வில்லாவிக்கு திருப்பி அனுப்பிட்டு தன் வழியே பயணிக்கிறார். ப்யூப்லோ செல்லும் மலைப்பாதை வழியில் திடீரென டெக்ஸ் துப்பாக்கி முனையில் வரவேற்கப்படுகிறார். டெக்ஸால் காயம்பட்ட முரடன் மற்ற முரடர்களுடன் பழிவாங்க இந்த தாக்குதலை செய்கிறான். டெக்ஸ் சுடப்பட இருக்கும் தருணத்தில் திடீரென தலைப்படும் டைகர் உதவியுடன் போக்கிரிகளை போட்டு தள்ளிட்டு இருவரும் பியுப்லோவை அடைகின்றனர்.

      பூட்ஹில்ஸில் சவக்குழி ஒன்று தோண்டிக்கொண்டு இருக்கும் எல்மியூர்டோவை டெக்ஸ் எதிர்கொள்கிறார். எல்மியூர்டோ டெக்ஸை பழிதீர்க்க முயல்வதேன் என டெக்ஸ் கேட்க , அருகருகேயுள்ள இருசமாதிகளை பார்க்க சொல்கிறான் அவன். 2லும் உள்ள பெர்னாண்டோ ஆர்டோனஸ், டியகோ ஆர்டோனஸ் பேரைப்பார்த்த உடன் டெக்ஸ்க்கு மின்னல் வெட்டாக இவன், 3வது இளைய பகோ ஆர்டோனஸ் என நினைவு வருகிறது.

      அதையடுத்து 5ஆண்டுகளுக்கு முன் நடந்த ஓவர்லேண்ட் கோச் கொள்ளை சம்பவத்தை எல்மியூர்டோ விவரிக்கிறான். கோச் பயணிகளை சகோதரர்கள் 3பேரும் வழிமறித்து கொள்ளை அடிக்கும்போது பகோ , லிண்டா என்ற பெண்ணிடம் இருந்து திறந்தால் இசை ஒலி எழுப்பும் டாலரை பறிக்கிறான். அதை விட்டுத்தர மறுக்கும் அவள், பகோவின் முகமூடியை அகற்றி விட , பகோ திகைத்து நிற்க கோச் வண்டியோட்டி இவனை அடையாளம் தெரிந்து கொள்கிறான். வேறு வழியில்லாமல் பயணிகள் அனைவரையும் சுட்டுக்கொள்கின்றனர்.

      இறக்கும் முன் லிண்டாவின் கணவனால் தோளில் சுடப்படுகிறான் பகோ. ஊரார் அறியாமல் இரவில் பகோவை தங்கள் ஆற்றோரம் உள்ள குடிசைக்குத் தூக்கிசென்று , காயம் அடைந்தது தெரியாமல் இருக்க பரணில் வைத்து வைத்தியம் செய்கின்றனர். கோச்வண்டி பயணிகள் கொல்லப்பட்ட சம்பத்தை விசாரிக்க வரும் டெக்ஸ் , ஆர்டோனஸ் சகோதரர்கள் தான் இதற்கு காரணம் என விசாரித்தறிந்து அவர்களை கைது செய்ய அந்த கேபினுக்கு அஸ்தமன வேளையில் வருகிறார்.

      இரு ஆர்டோனஸ்கள் போக்கர் ஆடிக்கொண்டிருக்கும்போது வரும் டெக்ஸ் , கொலைக்குற்றத்தை அவர்கள்மேல் சுமத்துகிறார். சரண்டைய மறுக்கும் ஆர்டோனஸ், டேபிளை கவிழ்த்து டெக்ஸ்சுடன் மோத ஒருவனை டெக்ஸ் சுட்டு வீழ்த்துகிறார். மற்றவன் டெக்ஸின் பிஸ்டலை சுட, டெக்ஸ் அவன் காலை வாரிவிட இருவரும் கடும் மோதலில் ஈடுபடுகின்றனர். டெக்ஸின் கழுத்தை பற்றி நெரிக்கும் அவனது மரணப்பிடியில் தவித்து, அவரின் துப்பாக்கி கைக்கு கிடைக்க அவனை சுட்டு வீழ்த்துகிறார்.

      கவிழ்ந்த விளக்கினால் பற்றும் தீயில் குடிசை பற்றி எரிகிறது. உத்திரங்கள் டெக்ஸ் மேல் விழுந்து அமுக்கப்பார்க்க, அப்போது வரும் உள்ளூர் செரிப் குழு டெக்ஸை காப்பாற்றுகிறது. இதற்கிடையே தீயில் கதறும் பகோ , நிலவரையை திறக்க தீ அவன் முகரையை பொசுக்குகிறது. மேற்கூரையை வெட்டி தப்பும் பகோ பலத்த தீக்காயம் அடைகிறான். ஆற்று நீரில் குதிக்கும் அவன் ஒரு மரக்கட்டையை பிடித்து தப்ப, காப்பாற்றும் செவ்விந்தியர்களின் மூலிகை வைத்தியத்தில் காயங்கள் குணமாகிறான்.

      டெக்ஸை பழிதீர்க்க, கடுமையான துப்பாக்கி சுடும் பயிற்சியில் தேறி சிகுவாகுவாவிலேயே அனைவரும் பயப்படும் போக்கிரியாக , நடமாடும் பிணம் (எல்மியூர்டோ) என்ற பேரில் கொலைகாரனாக மாறுகிறான். தன்னைப்பழிதீர்க்கும் முயற்சில் அவன் உயிரையே பணயம் வைத்திருப்பதை டெக்ஸ் கூற, டெக்ஸை வீழ்த்தும் வல்லமை தனக்கு இருப்பதாக கூறுகிறான்.

      ஒற்றைக்கு ஒற்றை மோதலில் இருவரும் எதிரெதிரே நிற்க, அந்த இசையெழுப்பும் டாலர் தண்ணீரில் நனைந்ததால் திறந்து சில நிமிடங்கள் கழித்தே இசைக்கும் எத்தனை நிமிடங்கள் என சரியாக தனக்கும் தெரியாது;அது இசைக்கும் போது சுடலாம், இது சரியான ஏற்பாடாக இருக்கும் என சொல்லி எல்மியூர்டோ அருகே மாட்டி வைக்கிறான். நிமிடங்கள் 3,4,5என யுகங்களாக கழிகின்றன. இருவர் கைகளும் பரபரப்பில் இறுகி இருக்க எல்மியூர்டோ வேர்த்து வழிகிறான், டெக்ஸோ கல்லில் வடித்தது போல அமைதியாக இருக்க......
      திடீரென மரணகீதம் இசைக்கிறது, இருவர் துப்பாக்கிகளும் முழங்க, டெக்ஸின் குண்டு அவனை வீழ்த்துகிறது. டெக்ஸுக்கு தோளில் சிராய்ப்பு மட்டுமே. தான் வெட்டிய குழியிலேயே எல்மியூர்டோ விழுகிறான், மரணராகம் இசைத்த டாலரை டெக்ஸ் சுட்டு சிதறடிக்கிறார்.

      "துப்பாக்கி எடுத்தவனுக்கு துப்பாக்கியாலே சாவு"

      ---என்பது மீண்டும் நிரூபிக்கப்படுகிறது---

      Delete
  61. ஆங் மறந்தே போச்சு! என்னோட குட்டிக் கனவுகளில் ஒன்று... ஆஸ்ட்ரிக்ஸ் & ஓப்லிக்ஸை தமிழில் படித்துவிடுவது! ( கொஞ்சம் காஸ்ட்லியான கனவுதான்!)
    சிலபல வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு லென்டிங் லைப்ரரியில் இக்கதைகளில் சிலவற்றை ஆங்கிலத்தில் படித்தபோது "ஆஹா!! நம்ம எடிட்டரின் ரகளையான மொழிபெயர்ப்பில் இது தமிழில் வெளிவந்தால் எப்படியிருக்கும்?" எனக் கனவு கண்டிருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. Erode vIJAY : தமிழ் பேசச் செய்வது அதனை சுலபமல்ல ; தற்போதைய பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் சூப்பர் ஸ்டார்கள் அவர்களே ! சமீபமாய் வெளியான புதிய ஆல்பத்தின் விற்பனைப் புள்ளி விபரங்களைப் பற்றி நமது படைப்பாளிகள் சொல்லக் கேட்ட போது, தலைக்குள் கொஞ்ச நேரம் 'கொய்ங்க்க்க்க்' என்ற சத்தம் மட்டுமே மிஞ்சியது !! பிரெஞ்சுப் பதிப்பு மட்டுமே சுமார் 30 இலட்சம் + விற்பனையாம் !! And இதழ் வெளியான முதல் நாளன்று ஒற்றைப் புத்தகக் கடையில் மட்டுமே 200,000 பிரதிகள் விற்றுள்ளதாம் !!

      உரிமைகளை வாங்குவதை விடவும் பெரிய சவால் அந்த மொழிபெயர்ப்பே என்பேன் ! அதனை ஆங்கிலத்தில் செய்துள்ள (துவக்க நாட்களது) டீமுக்கு ஒரு கோவில் கட்டினால் தப்பில்லை !

      Delete
    2. 'முழு வண்ணத்தில் ஒரு டெக்ஸ் கதை'யை தமிழில் படித்துவிடவேண்டும் என்பதும், 'மாதம் ஒரு டெக்ஸ்' என்பதும் கூட சிலவருடங்களுக்கு முன்புவரை நாங்கள் கண்ட கனவாகத்தானே இருந்தது எடிட்டர் சார்... இப்போது அவை நனவாகவில்லையா?

      அதுபோலவே ஆஸ்ட்ரிக்ஸ் & ஓபிலிக்ஸும் தமிழில் ரகளை செய்யும் நாளொன்று வரும்! எங்கள் கனவுகளைச் சாத்தியமாக்கிடப் பல பல்ட்டிகள் அடிக்கத் தெரிந்த வித்தைக்காரர் ஒருவர் சிவகாசியில் இருக்க, எங்களுக்குக் கவலை எதற்கு? ;)

      Delete
    3. அதே அதே!!
      தமிழில் அதுவும் லயனில் எப்படியாவது ஆஸ்ட்ரிக்ஸ் வகையறாக்களை படித்திட வேண்டுமென்பது ரொம்ப நாள் ஆசை. .ம்ம்ம். . .
      காலம் என்றைக்கு கணிந்திடுமோ
      கண்ணன் மனம் அதுவரை பொறுத்திடுமோ. . .!!

      Delete
  62. சார் அட்டை படங்கள் இரண்டும் தூள் பரத்துது...இரண்டும் ஒன்றையொன்று விஞ்சுது...அருமை....கனவு இதழ் எனச் சொன்னதும் என் நினைவில் வந்தது கொலைப் படை அதே போல சிறிதும் மாற்றமின்றி வேண்டும்...ஆனால் அடுத்து தோன்றியது sinsters sevenதான் ..கீழே வந்தால் அதற்கும் அணை போட்டு விட்டீர்களே...எப்புடி சார்

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : //கீழே வந்தால் அதற்கும் அணை போட்டு விட்டீர்களே...எப்புடி சார்//

      எப்படி கேட் போட்டாலும் அங்கே ரயில் ஓட்டுவது தான் உங்களுக்குக் கைவந்த கலையாச்சே நண்பரே ?

      Delete
    2. 😂 சார்...கொலைப் படையாவது வருமா...அதே போல மாற்றமின்றி

      Delete
    3. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : ஒட்டு மொத்தமாய் நண்பர்கள் அனைவரின் கனவுகளையும் தெரிந்து கொண்டு விடுவோமே முதலில் ?

      Delete
    4. Steel @ all our spider, mayavi, archies, larance & david, jhony & stella stories are going to come in next 3 years. So think differently. My dream is muthu 1 to 100 ithalkal as double book.

      Delete
  63. ராபினின் பிண்ணனி டிசைன் அருமை எனில் லாரன்ஸ் அட்டைப்படம் அதனை விட அருமையாக அமைந்துள்ளது சார் ..இதனில் ஒன்று இன்னமும் இந்த இதழை நான் படிக்காத ஒன்று என்பதால் இன்னமும் கொண்டாட்டம் இம்மாதம் அதிகம் என்பதும் உண்மை ..காத்திருக்கிறேன் ..:-)

    ReplyDelete
  64. கனவு இதழ் ....

    பல வருடங்களுக்கு முன்னர் ஆடிக்கு ஒன்று அமாவாசைக்கு ஒன்று என இதழ்கள் படையெடுக்கும் பொழுது ச்சே மாதா மாதம் தவறாமல ஒன்றாம் தேதி இதழ்கள் வந்தால் எப்படி இருக்கும் என கனவு காண்பதுண்டு ....

    அது பலித்து விட்டது ...


    ஹீம் ...திடீர் சிறப்பு இதழ்கள் மட்டுமல்லாமல் அடிக்கடி பெரிய அளவில் இதழ்கள் வந்தால் எப்படி இருக்கும் என கனவு காண்பதுண்டு ...

    அது பலித்து விட்டது ...


    ஆங்கில இதழ்கள் போல நமது இதழ்களும் வண்ணத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என கனவு கண்டதுன்டு ..

    அதுவும் பலித்து விட்டது ....


    சின்ன சைஸ் குண்டு புக் பார்த்தது உண்டு ...இதுவே பெரிய அளவிலும் குண்டாக வெளிவந்தால் எப்படி இருக்கும் என கனவு கண்டதுண்டு ...


    அதுவும் பலித்து விட்டது ..


    அதே பெரிய குண்டு இதழ் வண்ணத்தில் வருமாயின் அடேங்கப்பா ...கனவா அது ..

    ஆஹா ...அதுவும் பலித்து விட்டது ...


    கெளபாய் நாயகர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் ஒரு கெளபாய் சிறப்பிதழ் வந்தால் எப்படி இருக்கும் என கனவு கண்டு அப்பொழுது ஒருமுறை தங்களுக்கு கடிதம் கூட எழுதி அனுப்பினேன் ..

    அந்த கனவும் பலித்து விட்டது..


    இரத்தப்படலம் பாகம் ...7....8...9 படிக்கும் பொழுதெல்லாம் இந்த தொடர் தொகுப்பாக வருமாயின் எப்படி இருக்கும் எனவும் கனவு காண்பதுண்டு..

    அடடா...அதையும் பலிக்க வைத்து விட்டீர்கள் சார்...

    இப்படி எல்லா கனவையும் நிறைவேற்றி வைத்த தங்களுக்கு நன்றியை தெரிவித்து கொண்டு இன்னும் ஒரே ஒரு கனவு சார் ..அது பலிக்குமா ...?


    தொடரும் ...

    ReplyDelete
  65. குண்டு புக் ...மெகா புக் ...வண்ண புக் ..மாதம் ஒரு டெக்ஸ் புக் ..என அனைத்தும் நிறைவேறி வர மீதம் உள்ள ஒரே ஒரு கனவு ....


    க்ளாசிக்ஸ் மெகா ஸ்பெஷல் ...சார் ..


    இதுவரை மறுபதிப்பு காணாத ( சி.சியில் )பழைய பழைய கதைகள் பெரிய அளவிலோ அல்லது இப்போதைய மறுபதிப்பு அளவிலோ கூட மெகா ட்ரீம் ஸ்பெஷல் போல பக்கங்களில் ...


    மேலே நண்பர் அருண் அவர்கள் சொல்லியபடி அந்த மறுபதிப்பு இதழோ

    அல்லது ..

    இதுவரை நமது முத்துவில் வந்த வேதாளர் கதைகள் அனைத்தும் ஓரே தொகுப்பாகவோ ...

    அல்லது ..

    நமது திகிலில் வந்த பேட்மேன் கதைகள் அனைத்தும் ஒரே தொகுப்பாக ..


    அல்லது ...


    தனி இதழ்களாக நான்கு மட்டுமே வந்து பிறகு மினிலயனில் இணைந்த ஜீனியர் லயனின் கதைகள் அனைத்துமே ( சிறுசிறு கதைகளாக இருப்பதால் )ஒரே தொகுப்பாக ...


    அல்லது ...


    மினிலயனில் வந்த மறுபதிப்பு காணாத சிறப்பு இதழ்கள் அனைத்தும் ஒரே தொகுப்பாக ...


    இப்படி ஏதாவது ஒன்று ...


    மொத்தத்தில் ...


    மெகா க்ளாசிக் ஸ்பெஷல் ....


    உங்களுக்கேற்ற படி

    இந்த கனவு எப்பொழுது பலிக்கும் சார் ..


    ஆவலுடன் ...;-)

    ReplyDelete
  66. பரிசாகக் கிடைத்த சந்தாவை யாருக்குக் கொடுப்பது.....?

    இதுவரை காமிக்ஸ் வாசனையே இல்லாத ஒரு நண்பருக்கு இதைப் பரிசளித்து ( ஒருவேளை அவர் படிக்காதுபோனால்) மொத்த சந்தாவும் முடங்கிப்போவதைவிட, இத்தளத்திற்கு வருகைதரும் 'தேவையிருக்கும்' நண்பர் ஒருவருக்கு இதைப் பரிசளித்தால் என்னவென்று தோன்றியது!

    அதிகம் யோசிக்க அவசியமில்லாமல் உடனே ஞாபகத்துக்கு வந்தவர் 'விலை' குறித்து அவ்வப்போது தன் கருத்துக்களைத் தெரிவிக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த நண்பர் Sridhar அவர்களே! !
    அவர் இதுவரை சந்தா ஏதும் செலுத்தியிராதபட்சத்தில் இப்பரிசை அவருக்கே கொடுக்க விரும்புகிறேன்! A,B,Cக்களில் ஏதாவது ஒன்றை அவரே தேர்வு செய்துகொள்ளும் உரிமையை வழங்கும்படி எடிட்டர் சமூகத்தை வேண்டிக்கொள்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : கும்பகோணத்தைச் சேர்ந்த நண்பர் Sridhar இதனை வாசித்திடும் பட்சத்தில் - கை தூக்கிடுங்களேன் ப்ளீஸ் !

      Delete
  67. வணக்கம் அய்யா.விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.தங்கள் பதிவுகள் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.எனது கனவு இதழ் 1000 to 1500 pages. 400 to 500 page டெக்ஸ்.லக்கி,மாட்ஸ்டி,ரிப்போர்டர் ஜானி ( இரத்தக் காட்டேரி மர்மம் மாதிரி ),சுஸ்கி&விஸ்கி,மார்டின்,ரிப்கெர்பி,தோர்கல்,சுட்டி பயில்வான்,+கெளபாய்.....etc.....!தங்களுக்கும், அலுவலக நண்பர்களுக்கும் நன்றி + அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  68. "உங்களிடம் சிரிக்க வைக்கும் சக்தி இருப்பின் அதனை எல்லா இடத்திலும் பயன்படுத்துங்கள் ...உலகமே அதற்காக தான் காத்து கொண்டு இருக்கிறது .."


    என்ற இந்த கபாலியின் இன்றைய விளம்பர வாசகபடி எடுத்து காட்டாக இருக்கும் எங்கள் செயலாளர் அவர்களுக்கும் ..டாக்டர் ஹரிஹரன் சார் அவர்களுக்கும் போராட்ட குழுவின் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
    Replies
    1. தலீவரே...ஆனாலும் DTS எபெக்டில் 1 மணி நேரம் கழித்தும் எதிரொலிக்கச் செய்யும் யுக்தியை எங்கே பிடித்தீர்கள் ?

      Delete
    2. ஹா ஹா ஹா!

      டெக்னாலஜிய சரியா யூஸ் பண்றதுல உங்களுக்கு நிகர் நீங்கதான் தலீவரே! :)))

      Delete
    3. ஙே ...

      மேலே விட்டத்தை முழித்து பார்க்கும் படங்கள் பலப்பல ...:-(

      Delete
  69. டியர் எடிட்டர்ஜீ !!!

    நமது இதழ்களில் வந்த இரும்புக்கை நார்மனின் கதைகளை ஒரே புத்தகமாக ரீபிரிண்ட் போடுங்களேன்.கனவு இதழ் என்பதை விட அடியேனின் கனவு நாயகர் நார்மன் என்பதால் இந்த கோரிக்கை சார்!!!

    ReplyDelete
    Replies
    1. saint satan : அட...நார்மனுக்கும் ஒரு ரசிகர் மன்றமா ?

      Delete
    2. என்ன சார், அப்படி சொல்லி விட்டீர்கள்... மனித எரிமலையை பிடிக்கத்தவர்களும் இருக்க முடியுமா?

      Delete
    3. @ சாத்தான்ஜி +1

      @ udhay
      //என்ன சார், அப்படி சொல்லி விட்டீர்கள்... மனித எரிமலையை பிடிக்கத்தவர்களும் இருக்க முடியுமா?//

      அதானே?!

      Delete
    4. நார்மன் கதைகளை சமீபத்தில் வாசித்ததில்லை (கையில் பழைய புக்குகள் இருந்தால்தானே?!) என்றாலும் முன்பு வாசித்தபோது அவை மற்ற யுத்தக்கதைகளிலிருந்து போரடிக்காமல் மாறுபட்டிருந்ததாக நினைவு.

      உலகப்போர் தொடர்புடையது என்பதனால் இன்றைய வாசிப்புக்கு ஒத்துப்போகக்கூடும் எனத்தோன்றுவதால் நார்மன் கதைக்கு ஒரு சீரியஸ் +1

      Delete
  70. கனவு இதழ் :-

    3 . நீண்ட நாள் கோரிக்கையான 1000 பக்கங்ளைத் தாண்டிய ஒரு முழுவண்ண டெக்ஸ் தொகுப்பு.
    அந்த 550
    ஒரு 330
    ஒரு 220
    கூட்டிக் கழிச்சி பெருக்கி வகுத்து எப்படியாவது ஒரு ஷ்பெசல் ப்ளீஸ். .!!

    4 . (இது கொஞ்சம் ஓவர்தான். இருந்தாலும் கேட்டு வைப்போமே)
    2 புதிய லக்கிலூக் + ஒரு மறுபதிப்பு
    2 புதிய சிக்பில் + ஒரு மறுபதிப்பு
    ஒரு அறிமுக கார்ட்டூன் கொண்டதொரு இதழ்.

    5 . (இந்த கனவிற்கு சாத்துகள் விழும் சாத்தியக்கூறுகள் ஏராளம் என்றாலும் கேட்பதை நிறுத்தவே மாட்டேன்)
    ஒரு 1000 பக்கங்களுக்கு குறையாமல் ஒன்ஷாட் கிராபிக் நாவல்கள் ஏழெட்டை இணைத்து வண்ணத்தில் பெரிய சைசில் (பிரான்கோ பெல்ஜிய) ஒரு இதழ் வரவேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய கனவு. !!

    ReplyDelete
    Replies
    1. //ஒரு 1000 பக்கங்களுக்கு குறையாமல் ஒன்ஷாட் கிராபிக் நாவல்கள் ஏழெட்டை இணைத்து//

      ஆலன் மூரின் வாட்ச்மென், வீ ஃபார் வென்டேட்டா மற்றும் சிலவற்றை இணைத்தால் 1000 பக்க க்ராஃபிக் நாவல் டைஜஸ்ட் ரெடி.. சிலருக்கு அது நைட்மேராகத் தோன்றலாம்!

      Delete
  71. கனவு இதழ் என்றால் என்னைப்பொருத்தவரையில் பரட்டைத்தலை ராஜா, விச்சு கிச்சு, குண்டன் பில்லி போன்ற சிறுகதைத் தொகுப்புகள்தான். தற்போதைய ஆர்ட் பேப்பரில், முழு வண்ணத்தில், தெளிவான கருப்புக்கோடுகளுடன் வந்தால் இவை காமிக்ஸ் என்ற அடையாளம் தாண்டி இன்றைக்கும் மக்களுக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டர்களாக உதவும்.

    சிறுவர்மலரில் வந்த பலமுகமன்னன் ஜோ, சோனிப்பையன், பேய்ப்பள்ளி, எக்ஸ்ரே கண் போன்ற கதைகள் அல்லது அம்மாதிரியான இன்றைய காலத்துக் கதைகள் ஏதுமிருப்பின் அவையும் என் கனவு இதழ்கள்.

    ReplyDelete
  72. dear Editor,
    why dont we try something super sci-fi mega size new album?. we are already experiencd with spider, archie the robot and judge dred (Neethi Devan No.1). even now spider is the all time favorite for many readers. and i think it may be the right time to try in sci fi genure in a special issue. if it comes true may it will be Dream issue for many. pls think about that.

    ReplyDelete
  73. ஒரு சின்ன ரோசனை. .

    கனவு இதழ் என்றதும் அரைத்த மாவையே அரைக்காமல், அந்த காலத்துல அண்ணன் எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா என்பது போன்ற பழைய கதைகளை மறுபதிப்பு கேட்காமல்,
    முற்றிலும் புதிதாக, இன்னும் சொல்லப்போனால் நமக்கு இதுவரை அறிமுகமே இல்லாத ஒரு கதைத்தொகுப்பாக இருந்தால் இந்த கனவு இதழ் தொடக்கம் காலத்துக்கும் நிலைத்து நிற்கும் அல்லவா?
    இன்னும் நாம் பார்த்திராத எத்தனையோ மின்னும் மரணங்களும் இரத்தப் படலங்களும் அந்தக் கடலில் கொட்டிக் கிடக்கும்போது நாம் ஏன் இன்னும் அன்னிக்கு படிச்சோம் செம்மயா இருந்துச்சி இன்னிக்கும் அதையே போடுங்கன்னு மறுபதிப்புகளையே கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். (என்னையும் சேர்த்தே சொல்கிறேன்.)

    "பழையன கழிதலும் புதியன புகுதலும் நற்றவ வாயினும் நனிசிறந்தனவே "

    ReplyDelete
    Replies
    1. absolutely. this is what i said exactly. editor sir i hope you heard us.

      Delete
  74. வாழ்த்துக்கள் ஹரிஹரன் சார்
    வாழ்த்துக்கள் ஈரோடு விஜய் சார்

    ReplyDelete
  75. கனவு இதழ்....

    வேதாளர் கதை - 1 (எதாக இருந்தாலும்)
    ரிப்கிர்பி கதை - 1 (எதாக இருந்தாலும்)
    இரண்டாவதாக வெளியிடப்பட்ட இளவரசி கதை - 1 (தலைப்பு மறந்து விட்டது - MV சார் ப்ளீஸ்)
    ஒரு நாணயத்தின் கதை - 1
    ஜான் சில்வர் கதை - 1 (எதாக இருந்தாலும்)
    மற்றும் ஒரு (கொலை செய்யப்பட்ட தங்களது நண்பரின் மரணத்திற்குப் பழி வாங்க இரண்டு நண்பர்கள் ஒரு டிரக்கை எடுத்துக் கொண்டு கிளம்பும் - எனக்கு தலைப்பு மறந்து விட்ட) கதை - 1

    உடன் ஹாட்லைன், விச்சுகிச்சு போன்ற பேஜ் ஃபில்லர்கள்
    இவைகளையெல்லாம் கருப்பு வெள்ளையில் ஒரு குண்டுபுக்காக வெளியீட்டால் அதுவே எனது கனவு இதழ்....

    ReplyDelete
  76. டெக்ஸ்'சின் "மரண தூதர்கள்" கதை சுமார் 15 வருடங்களுக்கு முன்பு பாக்கெட் சைஸில் வெளிவந்தது. அட்டகாசமான கதை. ஒவ்வொரு பிச்சரும் பிரமாதமான ஆக்ஷனை வெளிப்படுத்தியது. அது பாக்கெட் சைஸில் இருந்ததால் கைக்கு அடக்கமாக வைத்து படிக்க-புரட்ட-படிக்க-புரட்ட செம விறுவிறுப்பை தந்தது. அந்த கதையை மறுபதிப்பாக முழுவண்ணத்தில் வெளியிட்டால், அதே பாக்கெட் சைஸில் வெளியிடுங்கள். "மரண தூதர்கள்" முழுவண்ணத்தில் ஒரு பாக்கெட் சைஸ் புத்தகமாக வெளிவந்தால் இன்னும் பரவசமாக இருக்கும்.

    ReplyDelete