Sunday, March 20, 2016

'தல'யும்..ஒரு தலையில்லாப் போராளியும்..!


நண்பர்களே,
            
வணக்கம். பேச்சுவழக்குத் தமிழில் ஒரு இன்றியமையாத இடம்பிடித்து விட்டிருக்கும் நடிகர் வடிவேலுவின் வரிகள் தான் கடந்த வார நாட்களில் நமது சின்ன டீமின் அங்கத்தினர்களின் உதடுகளில் இருந்திருக்கும்! குறிப்பாக மைதீனும், நமது டிசைனர் பொன்னனும் – ‘இவரென்ன பாஸா? இல்லே லூஸா?‘ என்று புருவங்களைத் தூக்கியிருப்பது உறுதியிலும் உறுதி! ஒவ்வொரு மாதமும் அட்டைப்பட டிசைனிங் என்பது கணிசமான நேரத்தையும், உழைப்பையும், பொறுமையையும் அவசியமாக்கிடும் சமாச்சாரம்! சில நேரங்களில் “கண்டேன் சீதையை!“ என முதல் முயற்சியிலேயே நாம் எதிர்பார்த்திடும் ரிசல்ட் கிடைத்துவிடுவதுண்டு – இம்மாத ‘ஆர்டினின் ஆயுதம்‘ அட்டைப்படத்தினில் நிகழ்ந்தது போல! வேறு சில வேளைகளிலோ – தெளியத் தெளிய வைத்து நமது ஆர்டிஸ்ட்களையும், டிசைனர்களையும் நான் கும்மாங்குத்து குத்திக் கொண்டே இருக்கவும் நேரிடும் – இம்மாத மெகா டெக்ஸ் அட்டைப்படப் பாணிகளில் நடந்து வந்துள்ளதைப் போல!

தலையில்லாப் போராளி“ ஏப்ரலுக்குத் தீர்மானம் ஆன பொழுதே – இதன் பொருட்டு ஒரு பிரமாதமான அட்டைப்படத்தினை உருவாக்கிட வேண்டும் என்ற முனைப்பு என்னுள்ளிருந்தது! சமீப மாதத்துப் பாணிகளின் தொடர்ச்சியாய் – ஒரிஜினல் டிசைனையே பயன்படுத்திட வழியுள்ளதாவென்று பார்த்த போது ‘ஊஹும்...!‘ என்று தலையைத்தான் ஆட்டிடத் தோன்றியது... simply becos இந்தக் கதைக்குத் தேவையெனத் தோன்றிய fire சற்றே குறைச்சலாக இருந்தது போல எனக்குப்பட்டது. சரியென்று இன்டர்நெட்டை உருட்டிய போது, இதே கதைக்கென இன்னொரு பதிப்பகம் தயார் செய்திருந்த ராப்பர் கண்ணில்பட்டது! “அட... இதை மாதிரியாகக் கொண்டு நமது ஓவியரைக் களமிறக்கினால் நம் பாணிக்கு ராப்பர் தயாரித்து விடலாமே !“ என்று பரபரவென்று வேலையைத் தொடங்கினோம். And விரைவிலேயே ஒரிஜினலின் டிசைனுக்கு சற்றும் விடுதலின்றி மாலையப்பன் ஒரு அட்டைப்படத்தைத் தயார் செய்து தந்தார். இந்த டிஜிட்டல் யுகத்தில் நகாசு வேலைகளுக்கு எல்லைகளே கிடையாதெனும் போது பெயிண்டிங்குகளிலுள்ள சரக்கை மேற்கொண்டு முறுக்காக்கிட நமது டிசைனரை உள்ளே நுழைத்தோம்! அதைத் தொடர்ந்த நாட்களில் பொன்னன் பட்ட பாடு – நிச்சயமாய் கவுண்டரிடம் செந்தில் பட்டதை விடப் பன்மடங்கு ஜாஸ்தி! 

பேக்கிரவுண்டில் இருளும்... foreground-ல் வெளிச்சமும் அவசியமென்று தோன்றியது எனக்கு ; ‘சரி‘யென்று மனுஷன் அதற்கென ஒரு வர்ணப் பின்னணியினை தயார் செய்தார். இன்னமும் ஒரு பரபரப்பு டிசைனில் தென்படக் காணோமென்றேன் ; மாற்றங்கள் அரங்கேறின! ஊஹும்... I want more emotions என்றபடிக்கு இண்டர்நெட்டை மேற்கொண்டு நானே உருட்ட – நம் கதையில் வருவது போலவே குதிரை மீது அமர்க்களமாய் அமர்ந்திருக்கும் தலையில்லா முண்டமொன்றும் சிக்கியது! ‘விடாதே.... போட்டு அமுக்கு‘; இதையும் நமது ராப்பருக்குள் இணைத்தாலே ஆச்சென' ஒற்றைக்காலில் நின்றேன்! அதன்படியும் டிசைன்(கள்) தயாராயின! அப்புறமும் மண்டைக்குள் அலையடிக்கும் மாறுபட்ட எண்ணங்கள் தொடர்ந்தன ! ‘இந்தக் குதிரை கிராபிக்ஸ் effect போல் படுகிறது ; ஓவியர் வரைந்த டிசைனில் இந்த கிராபிக்ஸ் சமாச்சாரத்தை இணைக்கும் பொழுது sync ஆக மாட்டேன்கிறதே !!‘ என்று என் தலைக்குள் குறளி சத்தம் கொடுக்க – திரும்பவும் பாயைப் பிறாண்டச் செய்தேன் பொன்னனை! 

'ஒரேயடியாய் deep blue வர்ணப் பின்னணியாகவே  முயற்சித்து வருகிறோமே – கொஞ்சம் மாற்றம் தென்பட்டாலென்னவென்று' அடுத்து வேறு திசையில் புத்தி பிரயாணம் மேற்கொண்டது! அடிக்கும் வெயிலில் லேசாக எனக்குக் கழன்றிருக்குமென்ற புரிதலோடு ஒருவித brown வர்ணப் பின்னணியோடும் டிசைன் தயாரானது! ‘ஊஹும்... இதுக்கு அதுவே மேல்!‘ என்று மண்டையை ஆட்டிய போது எனக்கே கொஞ்சம் ஓவராய் அழும்பு பண்ணுவது போலப் பட்டது! ஆனால் ஒரு புத்தம்புதிய பாணிக்குத் திறவுகோலாக அமைந்திடக்கூடியதொரு இதழுக்கென்ற பணிகளில் compromise செய்திட மனசு கேட்கவேயில்லை! இதற்கு மத்தியில் பின்னட்டைக்கும் 5 முற்றிலும் வெவ்வேறு விதத்தில் டிசைன்கள் தயாரிக்கப்பட்டிருந்தன! அவற்றுள் அந்த அடர்சிகப்பில் டெக்ஸ் கறுப்பு silhouette –ல் நிற்பதே எனக்குப் பிடித்திருக்க- பாக்கி நான்கையும் கடாசி விட்டோம்! 

அத்தனை டிசைன்களையும் டிஜிட்டல் பிரிண்ட் அவுட்களாகப் போட்டுக் கொண்டு – வீட்டுக்கு எடுத்துச் சென்று எனது தலையணைகளைக் கீழே கடாசி விட்டு வரிசையாக டெக்சைஅடுக்கிக் கொண்டு கழுத்தை இப்படியும், அப்படியுமாகக் கோணிக் கொண்டு தேர்வுப் படலத்தை நடத்திப் பார்த்தேன் ! ‘அவன் குடலை மட்டும் உருவாமல் விட்டு வைப்பானேன்?‘ என்ற நல்லெண்ணத்தில் ஜுனியர் எடிட்டரையும் அழைத்து வந்து ஏதாவதொன்றை pick செய்யச் சொல்லிப் பார்த்தேன்! ஊஹும்...! நமக்குத் தான் தலைக்குள் ஒரு மந்திக் கூட்டமே ஒட்டுமொத்தமாய் குந்திக் கிடக்கும் போது யார் சொல்வது தான் எடுபட்டிருக்கும்? சரி... ரொம்பவே விஞ்ஞானபூர்வமாய் தேர்வு முறையை நிர்ணம் செய்வோமே என ‘இன்க்கி... பின்க்கி...‘ பாடலைப் போராட்டக் குழுவினரிடமிருந்து தற்காலிகமாய் இரவல் வாங்கிக் கொண்டு நடுச்சாமத்தில் முயற்சித்தும் பார்த்தேன்! யாரேனும் அந்த நள்ளிரவில் ஜன்னல் வழியாகக் கட்டில் முழுக்க இரைந்து கிடந்த டிசைன்களை நான் மண்டையைக் கோணிக் கொண்டு பார்வையிட்டவாறே முணுமுணுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கும் பட்சத்தில் ஏர்வாடிக்கான பஸ் எத்தனை மணிக்கிருக்கும்? என்று சீரியஸாகவே விசாரித்திருப்பார்கள்! தேர்வு செய்வது எதை? என்பதை விட – நிராகரிப்பது எதை? என்று ரிவர்சில் வேலையை ஆரம்பித்தபோது கொஞ்சம் கொஞ்சமாய் தெளிவு பிறந்தது போலப்பட்டது! ஒவ்வொரு காரணத்திற்காய் ஒவ்வொன்றாய் காலி செய்துகொண்டே போன போது எஞ்சி நின்ற 2 டிசைன்களுக்கு மத்தியில் என் தேர்வை final ஆகச் செய்திட்டேன்! இதோ- கீழேயுள்ள சிலபல முயற்சிகளுக்குள் நாம் தேர்வு செய்துள்ள ராப்பரும் உண்டு! (நாம் முயற்சித்துப் பார்த்த 11 டிசைன்களுள் ஒரு பகுதி மாத்திரமே இங்கே உங்கள் பார்வைக்கு!!) தேர்வான ராப்பர் எதுவென்று any guesses guys?

எல்லாமே சுமார்... இதுக்குத் தான் இத்தனை பீற்றலா?“ என்ற மைண்ட் வாய்ஸ் ஓடக்கூடிய நண்பர்களும் உண்டென்பதை நான் அறியாதில்லை; But இந்தக் காக்கைக்கு தனது சன்னமான டீம் உருவாக்குவதெல்லாமே மோனாலிசாக்களாய் தோன்றுவது தான் நிஜம் !

1
2
3
4
5
6
7
Anyways – டெக்ஸ் வில்லர் & கோவுக்கென இத்தனை கூத்துக்களெனில் – உட்சிட்டியின் கும்பலுக்கோ முதல் முயற்சியினிலேயே bullseye! பாருங்களேன் – ‘ஆர்டினின் ஆயுதம்‘ இதழுக்கென பொன்னன் போட்டுத் தந்த one & only டிசைன்! Original டிசைனே கார்ட்டூன் பாணிக்கு எடுப்பாக இருந்ததால் – கொஞ்சமாய் பின்னணியை ‘பளிச்‘ ஆக்கியவுடனேயே இந்த டிசைனுக்கு thumbs up சொல்ல முடிந்தது! And இதோ- இந்தாண்டின் முதல் டாக்புல் & ஆர்டின் சாகஸத்தின் உட்பக்கங்களிலிருந்து ஒரு சின்ன preview--ம் கூட !!
பாஸா? லூசா? கேள்வி நமது DTP பணிப்பெண்களிடமும் எதிரொலித்திருந்தால் ஆச்சர்யப்படமாட்டேன்; ஏனெனில் இம்மாத இதழ்களை எடிட்டிங்கில் மறுபடியும், மறுபடியும் துவைத்துத் தொங்கப் போட்டதும் நடந்தது! சிக்பில் கதைகளின் ஒரிஜினல் நடை தூய தமிழில் எழுதப்பட்டிருந்ததால் அதனை முற்றிலுமாய் rewrite செய்திட ஒரிஜினல் ஸ்க்ரிப்ட் மீதே நுணுக்கி நுணுக்கி எழுதி வைத்திருந்தேன்! So அதனை அச்சுக் கோர்க்கும் வேளைகளில் ஏராளமாய் தப்பும், தவறுகளும் எட்டிப் பார்க்க- மூன்று முறைகள் முழுக்கதையையும் proof reading செய்வது போலாகியது! லார்கோ கதையிலும், ஒரு முறை ஸ்க்ரிப்டைச் சரி பார்ப்பது; மறுமுறை படங்களின் கண்ணியத்தை (!!!) சரி பார்ப்பது; அப்புறம் இறுதியாய் ஒட்டுமொத்த package-ஐ சரி பார்ப்பது- என ஹாட்ரிக் பணிகள்! 

சகலத்திற்கும் சிகரம் வைத்தாற் போல் அனைவரது பெண்டுகளும் (என்னதும் சேர்த்துத் தான்) கழன்றது நமது “தலையில்லாப் போராளி“ இதழினில் தான்! 4 மாதங்களுக்கு முன்பாகவே இந்தக் கதையினை நமது கருணையானந்தம் அவர்களிடம் மொழிபெயர்க்கச் செய்து வாங்கியிருந்தேன். அவரது base script மீது டெக்ஸ் & கார்சனின் பகுதிகளை நான் மாற்றி எழுதுவது வழக்கம். இம்முறையோ இந்த சாகஸத்தின் ஒரிஜினலை ஆங்கிலப்படுத்தித் தந்திருந்ததொரு இத்தாலிய நண்பி முற்றிலும் புதுசு என்பதால் மணிரத்னம் திரைப்படத்தை, பாலாவின் கதாநாயகர்களோடு பார்த்ததொரு எஃபெக்டில் ஆங்கில ஸ்க்ரிப்ட் ரொம்பவே dark ஆக இருந்தது! So தமிழாக்கத்தில் நிறையவே தொய்வு தட்டுப்படுவதை காண முடிந்தது ! வேறு வழியின்றி எடிட்டிங்கின் போது எங்கெல்லாம் எனக்கு  நெருடியதோ- அங்கெல்லாம் google translator & இன்னுமொரு software-ஐப் பயன்படுத்தித் தட்டுத்தடுமாறி மறுமொழிபெயர்ப்பை ஆங்கிலத்தில் ஏற்படுத்திக் கொண்டு- அதனை அடிப்படையாக வைத்து தமிழாக்கத்தையும் செய்ய வேண்டிப்போனது! 224 பக்கங்கள் எனும் போது- இந்த ஒட்டுமொத்த சர்க்கஸ் வேலைகளைச் செய்து முடிப்பதற்குள் இரண்டு லோடு க்ளுகோஸும்; ஒன்றரை லோடு முதுகுவலித் தைலமும் செலவாகாத குறை தான்! Fresh ஆக எழுதுவது கூட இத்தனை சிரமமாகயிராது; ஆனால் இன்னொருவரது ஸ்க்ரிப்டை செப்பனிடுவது என்பது ஹாங்காங்-ஜிம்பாப்வே கிரிக்கெட் மேட்சைப் பார்ப்பதை விடவும் படு போரான விஷயம்! ‘மாதமொரு டெக்ஸ்‘ படிக்கும் போது பிரமாதமாக உள்ளது தான்; ஆனால் அதன் making-ல் உள்ள பளு மாதாமாதம் திணறடிக்கத் தான் செய்கிறது! But அடுத்த மாதம் காத்துள்ள “டாக்டர் டெக்ஸ்“ 110 பக்க சாகஸம் மாத்திரமே எனும் போது- ஒரு சின்ன relief!

இம்மாத இதழ்களுள் மாயாவிகாரு & சிக்பில் சார்வாள் அச்சுப் பணிகள் முடிந்த நிலையில் பைண்டிங் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். And “தலையில்லா போராளி“ நேற்று முதல் அச்சாகத் துவங்கியுள்ளது! அந்த மெகா சைஸில், டெக்ஸ் & கோவைத் துல்லியமான சித்திரங்களில் ரசிக்கும் போது ஏற்படும் உணர்வுகளைத் தலைகீழாய் நின்றால் கூட என்னால் வார்த்தைகளுக்குக் கொண்டு வர இயலாது! நாளை அந்தப் பணிகளும் அச்சுப் பிரிவில் நிறைவடைந்து விடும் நிலையில், திருவாளர் லார்கோ மட்டுமே பாக்கியிருப்பார்! எவ்விதம் பார்த்தாலும் இந்த மாதத்தின் இறுதித் தேதிக்கு உங்கள் கைகளில் ஏப்ரல் இதழ்கள் சகலமும் இருப்பது நிச்சயம்!

பரபரப்பாய் நாட்கள் நமக்கு ஓடிச் செல்லும் அதே பாணியில் ஐரோப்பாவில் XIII ரசிகர்களுக்கும் ஒரு காத்திருப்பு தொடர்கிறது! 2015-ன் டிசம்பரிலேயே வெளியாகியிருக்க வேண்டிய இரத்தப் படலத்தின் ஆல்பம் # 24- வரும் ஜுன் 10-ம் தேதிக்கே வெளிவரவிருக்கிறது! ஏகமாய் எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே எகிறிக் கிடக்கிறது – இந்த இரண்டாம் சுற்றின் இறுதி ஆல்பத்தில்  கதாசிரியர் என்ன முடிச்சை அவிழ்த்திடப் போகிறார்? எதனை புதிதாய் உருவாக்கிடப் போகிறாரென்று!! ஒரிஜினல் வெளியாகும் வேளையைத் தொடர்ந்த மாதத்தில் நம்மால் இந்த இறுதி பாகத்தை வெளியிட முடிந்திடும் பட்சத்தில்- பிறமொழியில் இந்த ஆல்பத்தை முதன் முதலில் வெளியிட்ட சந்தோஷம் நமதாகும்! And- நம் நண்பர்கள் பலரின் கனவுக்கன்னி பெட்டி பார்னோவ்ஸ்கியின் ஆல்பமும் விற்பனையில் சக்கை போடு போடுகிறதாம்! பாருங்களேன் !!


“அட்டைப்படங்களே“ இவ்வாரத்தின் prime topic ஆக இருந்திடும் நிலையில்- இன்னும் சின்னதொரு preview! இதோ- மே மாதத்து மறுபதிப்பான “சதிகாரர் சங்கத்திற்கு“த் தயாராகி வரும் அட்டைப்படத்தின் ஒரு மிக ஆரம்பநிலைச் சித்திரம்!! இதுவும் கூட நமது வாசக நண்பர்களின் கைவண்ணமே என்பதால்- ஆவலாய்க் காத்துள்ளேன் - பூர்த்தியான டிசைனை ரசித்திட! சீக்கிரமே நலம் பெற்று எழுந்து வாருங்கள் .A.T.ராஜேந்திரன் சார்- நிச்சயமாய் இந்த ராப்பர் உங்கள் ரசனைக்குரியதாக இருந்திடும்! And folks - இந்த  ஓவியம் யாரது கைவண்ணம் என்று யூகித்துப் பாருங்களேன் ? 


Before I sign off- சின்னதாயொரு ஜாலியான வேண்டுகோள்! மேலேயுள்ள 7 டெக்ஸ் அட்டைப்படங்களை உங்கள் பார்வைகளில் rate செய்திடுங்களேன்? ஒவ்வொரு சித்திரத்துக்கும் நம்பரிட்டுள்ளோம் - 1-7 வரை! உங்கள் ரசனைகளோடு எங்கள் ரசனைகள் எத்தனை தூரம் sync ஆகியுள்ளது என்பதைப் புரிந்து கொள்கிறோமே? மீண்டும் சந்திப்போம் folks! Bye for now! Have a rocking Sunday !!

P.S.: இது வரையிலான நமது ராப்பர்களில் உங்கள் நினைவுகளில் ‘பளிச்‘சென்று தங்கி விட்ட ஏதேனும் Top 3 ராப்பர்களைப் பட்டியலிட ஆசையா? துவக்கம் முதலான லயன்-திகில்-மினி லயன் இதழ்களுக்குள் உங்கள் தேர்வுகளை செய்திடலாம் !  கேட்க நான் ரெடி! 

346 comments:

  1. விஜயன் சார், இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து மாதம் நான்கு புத்தகம் வந்தாலும் நாலு நாட்களில் படித்து விடுகிறேன். இந்த வருடம் இதுவரை வந்த கதைகள் அனைத்தும் சுவாரசியமாக உள்ளது ஒரு காரணம், மேலும் ஒரு காரணம் டெக்ஸ் கதையை தவிர அனைத்தும் 54 பக்க கதைகள். என்ன சொல் வருகிறேன் என்றால் மாதம் முழுவதும் காமிக்ஸ் படித்து கொண்டே இருக்க ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் 

    ReplyDelete
  2. சதிகார்கள் சங்கம் அட்டை படம் ஸ்கெட்ச் super....

    ReplyDelete
    Replies
    1. நம்ப சிக்-பில் & கோ அட்டை படம் வித்தியாசமாக உள்ளது. சூப்பர்!

      Delete
    2. தலையில்லாப் போராளி அட்டை படம் செம!!!

      Delete
    3. // இந்தக் கதைக்குத் தேவையெனத் தோன்றிய fire சற்றே குறைச்சலாக இருந்தது போல எனக்குப்பட்டது // சிவகாசியில் இல்லாத fire-ஆ :-)

      தலையில்லாப் போராளி அட்டை படத்தில் - உங்களின் உழைப்பு நல்ல பலனை கொடுத்து உள்ளது. நமது ஓவியர் மற்றும் டிசைனரிடம் வாழ்த்துகளை தெரிவித்துவிடுங்கள்!

      Delete
    4. தலையில்லாப் போராளி அட்டை படத்தில் முதல் டிசைன் எனக்கு மிகவும் பிடித்து உள்ளது!!!

      Delete
    5. இனிய காலை வணக்கங்கள் நண்பர்களே

      Delete
    6. /நம்ப சிக்-பில் & கோ அட்டை படம் வித்தியாசமாக உள்ளது. சூப்பர்!/

      +1

      Delete
  3. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய ஞாயிறு வணக்கம்

    ReplyDelete
  4. ஆசிரியரே போன வாரம் நடந்த போட்டியில் யார் வெற்றி பெற்றது யார் என்று அறிவிக்கவில்லை மறந்து விட்டீர்களா

    ReplyDelete
  5. சதிகாரர் சங்கம் அட்டைப்படம் நண்பர் சாரதி வரைந்ததென்று நினைக்கிறேன் சரியா ஆசிரியரே

    ReplyDelete
  6. அன்புள்ள எடிட்டர்,

    எனக்கு டெக்ஸ்-ன் அனைத்து (7) அட்டைப்படங்களுமே பிடித்துள்ளன... So, ஒரு change-க்காக, நீங்க ஏன் இந்தப் புத்தகத்தை ஏழு அட்டைப்படங்களுடன் வெளியிடக்கூடாது :) :)?

    ஆர்டின் அட்டைப்படம் சூப்பர்...

    - பெரியார்

    ReplyDelete
  7. அட்டைப் படங்கள் 2,1,7 நன்றாக உள்ளது சார். இம்மாத இறுதிக்குள் கிடைக்கும் என் ற செய்தி இனிப்பாக உள்ளது

    ReplyDelete
  8. என்னுடைய சாய்ஸ் டெக்ஸ் - ன் அந்த 7-வது அட்டைப்படம். எல்லாமே ஓகே ரகம்தான். முதல் முறையாக ஒரு நான்கைந்து அட்டைப்படங்களை random-மாக செலக்ட் செய்து வெளியாகும் இதழில் சரிசமமாக பிரிண்ட் செய்தாலென்ன...? ஒரே கதைக்கு சில பல அட்டைப்படங்கள் எனும் போது வித்தியாசமாகவும், புதுமையாகவும் இருக்குமே.?
    அப்புறம், அட்டையிலுள்ள டெக்ஸ்-சை கையிலுள்ள வின்செஸ்டரோடு அப்படியே பின்னாடி வரும் அந்த தலையில்லா முண்டம் பக்கம் திருப்பினால் இன்னும் செமையாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  9. நள்ளிரவில் இப்போது நானும் மண்டையை பிராண்டிக் கொண்டு உள்ளேன் சார் .....
    7ல் எதை நீங்கள் செலக்ட்
    செய்திருக்கலாம் என பார்க்க இப்படி ன்னா !!!!.....
    உங்கள் நிலையை புரிந்து கொள்ள முடிகிறது .....ம்ஹூம் ....
    காலையில் தெளிவாக சிந்தித்து பட்டியல் போடுகிறேன் சார் ....
    உங்கள் மற்றும் உங்கள் அணியின் மெனக்கெடல்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன சார் ....
    ஆர்டின் அட்டை சூஊஊஊப்பர் என மட்டுமே சொல்லி தற்போதைக்கு நழுவுகிறேன் சார் .....

    ReplyDelete
  10. சார் இரத்த படலம் இரண்டாம் சுற்றை இரண்டு நாட்களாய் மீண்டும் படித்தேன் ....வான்ஹேம்மேவை மிஞ்சும் வகயில்...புது கதாசிரியரும் , ஓவியரும் , வழக்கம் போல மொழி பெயர்ப்பும் பட்டய தீட்ட..வான்க்ஹேம்மேவின் பெட்டி கவரவே இல்லை..சொல்லப்போனால் கடுப்படித்தார்..ஆனால் இரண்டாம் சுற்றிலோ Xiiiக்கு இணயாக கலக்குறார்....பெட்டடி ,xiii , பஉதிய நாயகி , 3குழுக்களின் வரலாறு...ஷெரிஃப் என பக்கத்திற்கு பக்கம் விறுவிறுப்பு....ஆச்சரியம் குறித்த உங்க சந்தோச பதிவும்......ஏப்ரலுக்கே தாங்கல...இனி ஜூனுக்கும்...xiii முடியவே கூடாது....தொடர்ந்து வரட்டும்..

    ReplyDelete
  11. எடிட்டர் சார்,

    எனக்கென்னவோ 5 ஆவது அட்டைப்படத்தின் முதல் பக்கமும் 2 ஆவது அட்டைப்படத்தின் பின் பக்கமும்
    சேர்ந்து வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது :-)

    மற்ற எல்லா தலையில்லா போராளியின் படத்தைவிட 5 ஆவது படத்தில் வந்துள்ள அந்த "Sleepy Hallow" படத்தின் inspired drawing நன்றாக வந்துள்ளதாக எனக்கு தெரிகிறது.

    அந்த red back cover design அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  12. அனைத்து அட்டயும் டாப் டக்கர்...அந்த சிகப்பு பின்னட்டய முன்னட்டயா வேற கதைக்கு உபயோகிக்கலாமே..

    ReplyDelete
    Replies
    1. முதலட்டயே தூள்...ஆஆ ஓகே...ஐஆனி நீரோ சூப்பர்..வண்ணச்சேர்க்கை?

      Delete
    2. //அந்த சிகப்பு பின்னட்டய முன்னட்டயா வேற கதைக்கு உபயோக்கிலாமே//
      +100000

      Delete
  13. @ Kid ஆர்டின் Kannan :

    சென்ற பதிவின் கடைசியில் நீங்கள் சொன்ன குறி ஒன்றுகூட பலிக்கவில்லையே :-) ! என்னே உங்கள் தெய்வவாக்குக்கு வந்த சோதனை :-))

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி....... தெய்வவாக்கு மீண்டும் ரி ஜார்ஜ் ஆக எங்கள் எல்லோருக்கு கிடா வெட்டி விருந்து வையுங்க சார்.!

      Delete

  14. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய ஞாயிறு வணக்கம்

    ReplyDelete
  15. தலையில்லா போராளி அட்டைபடம் 2தான் தேர்வாகியிருக்கும் என்பது என் கணிப்பு!

    ReplyDelete
  16. XIII இரண்டு ஆல்பத்யும் இந்த ஆண்டே release செய்திடுங்கள் !

    ReplyDelete
  17. வணக்கம் எடிட்டர் சார்...!
    வணக்கம் நண்பர்களே...!

    ReplyDelete
  18. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்..

    ReplyDelete
  19. Kumbakonam Jaisri book shopil march month issue innum varavillai.

    ReplyDelete
  20. அட்டைப்படம் இரண்டாவதும்,ஏழாவதும் அசத்தல்! ஏழாவதுஅட்டைப் படமே உங்கள் தோ்வாக இருக்கும்!தலயும்,தலையில்லா போராளி என்ற தலைப்புக்கு சான்றாக உள்ளது...!

    ReplyDelete
  21. டெக்ஸின் அட்டகாச ஓவியங்களோடு வரவிருக்கும்,தலையில்லா போராளி வண்ணததில் வரவிருந்தால் கலக்கலாய் இருக்கும்..!

    ReplyDelete
  22. டெக்ஸின் அட்டகாச ஓவியங்களோடு வரவிருக்கும்,தலையில்லா போராளி வண்ணததில் வரவிருந்தால் கலக்கலாய் இருக்கும்..!

    ReplyDelete
  23. அட்டைப்படம் இரண்டாவதும்,ஏழாவதும் அசத்தல்! ஏழாவதுஅட்டைப் படமே உங்கள் தோ்வாக இருக்கும்!தலயும்,தலையில்லா போராளி என்ற தலைப்புக்கு சான்றாக உள்ளது...!

    ReplyDelete
  24. எனது தேர்வு....2....7...6...4...3....1...!

    ReplyDelete
  25. அட்டை படங்கள் எல்லாமே சூப்பராக இருக்கிறது. முதற்கண் ஓவியருக்கும் உங்கள் டீமுக்கும் என் வாழ்த்துக்கள். எதை தெரிவு செய்வது என தலையை சொறிந்து கொள்ளாத குறைதான். எனக்கென்னமோ முதலாவது அட்டையின் முன் புறமும் 7 வது அட்டையின் பின்புறமும் நன்றாக வந்துள்ளது போல தோன்றுகிறது . சதிகாரர் சங்கத்தின் கருப்பு வெள்ளை அட்டை படம் வண்ணத்தினை விட நன்றாக உள்ளதாய் எனக்கு மட்டும் படுகிறதோ ?

    ReplyDelete
  26. ஞாயிறு வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.

    ReplyDelete
  27. இத பார்க்கறாதா அத பார்க்காறாதா. 5ந்தின் முன்பக்க அட்டையும்.4 கின் பின் பக்கம் அட்டையும் இனைந்தால் நலம்.இல்லை என்றால் 7அட்டை சூப்பர்

    ReplyDelete
  28. இத பார்க்கறாதா அத பார்க்காறாதா. 5ந்தின் முன்பக்க அட்டையும்.4 கின் பின் பக்கம் அட்டையும் இனைந்தால் நலம்.இல்லை என்றால் 7அட்டை சூப்பர்

    ReplyDelete
  29. அட்டை பட வரிசை 2.7.6.1.5.4
    உங்களது தேர்வு 7. என நினைக்கிறேன்

    ReplyDelete
  30. முன் அட்டைக்கு 3ம் பின் அட்டைக்கு 2ம் என்னுடைய Choice

    ReplyDelete
  31. இந்தப் பதிவின் நாயகர்களான ஓவியர் மாலையப்பன் அவர்களுக்கும்...
    டிசைனர் பொன்னன் அவர்களுக்கும்...
    மேற்கூறியவர்களின் Nightmare ஆகிய எடிட்டர் அவர்களுக்கும்...
    இப்படியொரு ஸ்தம்பிக்கவைக்கும் அட்டைப்படங்களைப் படைத்ததற்காக (வாய் பிளக்க பிளக்க, கண்கள் வெறிக்க வெறிக்க) என்னுடைய வாழ்த்துகள் உரித்தாகட்டும்!! மூவருமே தமது அபார உழைப்பில் அசத்தியிருக்கிறார்கள்!!

    செம! செம! செம!

    ReplyDelete
  32. ஒருமுறை உற்று உற்று பார்த்துவிட்டு அட்டைப் படங்களை வரிசைப் படுத்த ஒரேயடியாக திணறிக் கொண்டிருக்கிறேன்...

    அப்படியொன்னும் சுளுவான வேலையாத் தெரியலை!

    ReplyDelete
  33. அனைவருக்கும் வணக்கம்
    முத்து மினி யின் கதைகளைப்பற்றி
    ஒன்னுமே காணோம் அப்புறம்
    அட்டைப் படம் அனைத்தும் அருமை செலக்ட் பன்னின உங்களுக்கே இந்த பாடு என்றால் வரைந்தவர்களுக்கு.?
    பொன்னன் .மைதீன் இருவருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  34. //And folks - இந்த ஓவியம் யாரது கைவண்ணம் என்று யூகித்துப் பாருங்களேன் ? //

    போன பதிவின் சிக்ஸ்பேக்ஸ் ஸ்பைடரை வரைந்தது யார்னு முதல்ல சொல்லுங்க எடிட்டர் சார்...

    கேள்வி கேக்குற வாத்தியார்களுக்கு பதில் சொல்லவும் தெரியணுமில்ல?

    ReplyDelete
    Replies
    1. //போன பதிவின் சிக்ஸ்பேக்ஸ் ஸ்பைடரை வரைந்தது யார்னு முதல்ல சொல்லுங்க எடிட்டர் சார்...

      கேள்வி கேக்குற வாத்தியார்களுக்கு பதில் சொல்லவும் தெரியணுமில்ல? //

      +1

      Delete
    2. @ ALL : சிக்ஸ் பேக் ஸ்பைடர் உபயம் : கடல் கடந்த பொடி வாசகர் !!

      Delete
  35. dear vijayan sir,,உங்கள் தேர்வு எண் ;7 தானே ;-)

    ReplyDelete
  36. காலை வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.

    அன்புள்ள ஆசிரியரே, உங்களின் தூக்கம் தொலைத்த இரவுகளே, எங்களின் துக்கம் நீக்கி இனிமை சேர்த்த நாட்களாகும் என்பதை இந்த பதிவு உறுதி செய்துள்ளது. மிக்க நன்றி சார்.

    ReplyDelete
    Replies
    1. கம்பம் ஜெய்கணேஷ் : தூங்கா இரவுகள் நம் அனைவருக்கும் பொது தானே நண்பரே !

      Delete
  37. ஆரம்ப காலங்களில் மேட்டு குடியினர் டீ
    துளை வேகவைத்து துளை மட்டும் சாப்பிட்டுவிட்டு வேகவைத்த நீரை அடிமைகளுக்கு கொடுப்பார்களாம்.அதே மாதிரி நான் நான் சிறுவயதில் காமிக்ஸ் வாங்கியவுடன் அட்டையை கிழித்து தூக்கி எறிந்துவிடுவேன்.(ஏனென்றால் புதியதாக இவ்வளவு புத்தகம் வாங்கியது வீட்டிற்கு தெரிந்துவிடும் என்பதற்காக .மாதம் ஒரு புத்தகம் வாங்க மட்டுமே அனுமதி என்பதால் மீதியை பழசாக்குவேன்.) அதை நினைத்து இந்த பதிவை படிக்கும்போது மனசு கனத்தது.!

    எனக்கு என்னவோ எல்லா ராப்பர்களும் அட்டகாசமாய்தான் உள்ளது போல் தோன்றுகிறது.!

    ReplyDelete
    Replies
    1. என்ன மாதிரி நிகழ்வு? அதற்கு என்ன மாதிரி உதாரணம்? :-)))))))))

      Delete
    2. ஆதி தாமிரா சார்.!

      அட்டை படங்களின் அருமை ஆரம்ப காலங்களில் எனக்கு சுத்தமாக தெரியாது.கததைகளுக்கு பாதிப்பு இல்லாமல் மொத்த பக்கங்களும் இருந்தால் மட்டுமே போதும் என்று கருதுவேன்.எனது கலெக்ஷன்கள் அனைத்தும் அட்டையில்லாமல் இருப்பதைக் கண்டு அதை பார்வையிட வந்த நண்பர் அதிர்ச்சி அடைந்தார்.அப்போது ஏன் என்று புரியவில்லை.!இப்போது இந்த தளங்களில் கதைகளுக்கு இணையாக ராப்பர்களுக்கு, எடிட்டரும் மற்ற நண்பர்களும் முக்கியத்துவம் கொடுப்பது எனக்கு திகைப்பாகத்தான் உள்ளது.!

      சின்னத்தம்பி படத்தில் கவுண்டமணி அவர்கள் மனைவியுடன் நைட் ஷோ ரஜினி படம் பார்த்து விட்டு ஸீப்பரபில் என்று கை தட்டுவாரே அதைப்போன்றுதான் எனக்கும் உள்ளது.!

      Delete
  38. நண்பர்களே எனக்கொரு சந்தேகம்.!

    தலையில்லா போராளி பெரிய சைஸ் புத்தகம் என்று அறிவித்து இருந்தாரே.?

    பெரிய சைஸ் என்றால் லார்கோ,ஷெல்டன் போன்ற 120 &65 ரூபாய் சைசா .?

    அல்லது ஸ்பைடரின் கொலைப்படை ,ஜான் மாஸ்டரின் சதிவலை போன்ற சைசிலா. ?

    ReplyDelete
    Replies
    1. எங்கு என்னமோ ரெகுலர் டெக்ஸ் புக் சைஸ்தான் பக்கங்கள் தான் அதிகம் என்பதை தான் எடி பெரிய சைஸ் புக்குனு சொல்லியிருபரோனு தோணுது.

      Delete
    2. டெக்ஸ் ரேப்பர் டிசைன் 2 முகப்பு நன்றாக உள்ளது. ஆனால் பின்புற சிவப்பு டிசைன் மேட்ச் ஆகாத மாதிரி தோணுது. எல்லாரும் சண்டைக்கு வராதிங்கப்பா....

      Delete
    3. ஜி...! சந்தேகம் கேட்டதே கேட்டீங்க..!
      அப்டியே நம்ம ஜான் மாஸ்டரோட சதிவலை பெரிய சைஸ்ல ரீபிரிண்ட் வருமான்னும் கேட்டிருக்கலாமே....?
      (இதுக்குப்பேர்தாங்க பக்கத்து இலைக்கு பாயாசம்...!)

      Delete
    4. @ ALL : பதிலறிய பத்தே நாட்கள் !

      Delete
  39. டெக்ஸ் 1,4,5,6 சூப்பா் 10/10
    ஆா்டினின் ஆயுதம் அட்டைப்படம் mass
    My top 3
    1)காலத்தின் கால்சுவடுகளில்,நித்தமும் குற்றம்
    2)மர்மா கத்தி,நடக்கும் சிலை மர்மம்
    3)அப்போலோ படலம்,சூ...மந்திர....காளி(ம.ம)

    ReplyDelete
  40. என் நண்பர் மைதீன் கடின உழைப்பாளி குரு பக்தி உடையவர் அதனால் நீங்கள் அவரை என்ன வேலை வாங்கினாலும் உங்களை விளையாட்டுக்கு கூட அவர் தவறாக நினைக்க மாட்டார் உங்கள் மேல் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார் இது நான் நேரில் கண்ட உண்மை

    ReplyDelete
  41. எடிட்டர் சார் வணக்கம். தாங்கள் எங்களில் ஒருவர் எனபதாலும்,நம் எண்ணங்கள் ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பதாலும் ரசனைகளில் மாற்றம் இருக்காது என எண்ணுகிறேன்.அடுத்த மாத டெக்ஸ் இதழ் அளவில் சிறியது என்பதுதான் வருத்தம் அளிக்கிறது .சிறந்த கதைகளை தேர்வு செய்வது போல் அளவில் பெரிய கதைகளை தேர்வு செய்யுங்கள். நன்றி. குளித்தலை ந.மணிகண்டன்

    ReplyDelete
  42. மேலும் ஒரு வேண்டுகோள் .முத்துகாமிக்ஸ் Reprint ல் சார்லி, ரிப்கெர்பி,கதைகளையும் வெளியிடுங்கள்.ரிப்போர்ட்டர் ஜானி,லக்கி,கதைகளையும் அதிக அளவில் வெளியிடுங்கள்.

    ReplyDelete
  43. டியர் சார்..!

    சென்ற வார ஸ்பைடர் கேப்ஷன் போட்டியில் வெற்றி பெறப்போகும் நண்பர் யார் என்பதை அறிந்துகொள்ள ஆர்வமாய் இருந்தேன்...!

    அதுபற்றி ஒன்றும் சொல்லவில்லையே...?

    ReplyDelete
    Replies
    1. ஜேடர்பாளையம் சரவணகுமார் : அடுத்த ஞாயிறில்...!

      Delete
  44. ஏழு மைசூர் பாகு துண்டுகளை அழகாய் ஒரு தட்டில் பரப்பி வைத்து , இதில் எது நன்றாய் இருக்கிறது என்று கேட்டால்...., என்னவென்று பதிலுரைப்பது..?

    அனைத்துமே அட்டகாசம்தான்...!

    ReplyDelete
  45. தலயோட Book rappersல் எண்2ம் எண்7ம் மிக சிறப்பாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. rajaram.k.Kathalingam : நன்றிகள் சார் !

      Delete
  46. அட்டைப் படத்துக்கு இவ்வளவு மெனக்கெடலா.?நம் காமிக்ஸ் புத்தகத்தை முதனமுதலில் பார்ப்பவர்களின் வாய் பிளக்கச்செய்வதன் மூலம் உங்கள் உழைப்பு புரிகிறது.!

    ReplyDelete
    Replies
    1. Madipakkam Venkateswaran : இன்றைய வாசக வட்டத்தின் சுவாரஸ்யத்தைத் தக்க வைக்க நிறையவே முயற்சிகள் தேவை நண்பரே ! And செய்யும் வேலையை நேர்த்தியாய் செய்ய முடிந்தால் அந்த சந்தோஷம் அலாதி தானே !

      Delete
  47. தாமதமான காலை வணக்கம் எடிட்டர் சார். தோழர்களுக்கும் காலை வணக்கம். உங்களது அன்பான வாழ்த்தும், நமது தோழர்களின் பரிவும் இருக்கும் வரை எனக்கென்ன கவலைசார்? ஓடிக்களைத்த கால்கள் சற்று ஓய்வெடுக்கிறது. உன் முகத்துக்கு காட்டும் அக்கறையை எனக்கும் கொஞ்சம் காட்டு இல்லையேல் உன்னை நடக்கவிட மாட்டேன் என்று கொஞ்சம் மக்கர் பண்ணுகிறது அவ்வளவுதான். ஒரு அட்டைபடத்துக்கு நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளை விவரிக்கும் போது உங்களின் பிறந்த நாளையே மறந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.சரியா சார்? நாங்கள் ஒரு வரியில் பிரமாதம் என்று சொல்லப்போகிற ஒருவார்த்தைக்கு பின் இவ்வளவு உழைப்பா!! உடல் சிலிர்க்கிறது சார். உங்களுக்கும் உங்களுடன் சேர்ந்து உழைக்கும் அத்தனை சகோதர சகோதரிகளுக்கும் ஒரு பெரிய வாழ்த்துக்களும் நன்றிகளும் நம்தோழர்களுடன் சேர்ந்து சொல்லிக் கொள்கிறேன் சார். ஒவ்வொரு அட்டைபடத்தின் பின்னாலும் இத்தகைய உழைப்பு கண்டிப்பாக இருக்கும். சில அட்டைபடத்துக்கு கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.ஆனால கடின உழைப்பென்று ஒன்று இருப்பது உண்மைதானே? நான் ஒரே வரியில் குறை சொன்ன காலத்தை எண்ணி இந்த நேரத்தில் வெட்கப்படுகிறேன் சார்.

    ReplyDelete
    Replies
    1. //நான் ஒரே வரியில் குறை சொன்ன காலத்தை எண்ணி இந்த நேரத்தில் வெட்கப்படுகிறேன் ///--- பிரியாணி செய்ய 3மணிநேரம் கடினமான முயற்சி வேணும்,,ஆனா மூன்றே வாய் சாப்பிட்டு விட்டு நல்லாயில்லைனு சொல்லிக்கொண்டே ,இரண்டு தட்டாக உள்ளே தள்ளுவது இல்லையா அதுபோல தான் இதுவும் ...பீ கூல் ATR sir.....

      Delete
    2. @ FRIENDS : எல்லா முயற்சிகளின் பின்னணியிலும் நம்மவர்களின் உழைப்பு எத்தனை சதவிகிதம் உள்ளதென்பதை highlight செய்திடவே இந்த வாரப் பதிவு !

      ஆனால் அதே சமயம் - ஒவ்வொரு முறையும் வெற்றி பலனாகிடுவதும் கிடையாது ; விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக நம்மை ஆக்கிடவும் செய்யாது ! So நன்றாக இல்லாத சமாச்சாரங்களையும் ரசிக்கும் அவசியம் நிச்சயம் கிடையாது !

      Delete
  48. ப்ளான்டி என்ற ஒரு பக்க காமிக்ஸ் ஒன்றில் .... மீனா?மட்டனா ???..
    என லேடி ப்ளான்டியின் கேள்விக்கு முடிவெடுக்க முடியாமல் புலம்பி கொண்டே பட்டினியாக செல்லும் மேல் ப்ளான்டி யின் நிலை தான் இப்போ.....

    7ல் எது டாப் ? எது டாப்??..
    2வது 50%...
    7வது 50%... சமவாய்ப்பு இரண்டுக்கும் அட்டையாக வருவதற்கு ...

    மற்றபடி...வரிசையாக
    ......அடுக்குவது ...
    ......டுக்குவது......
    ......க்குவது .......
    ......குவது ........

    இன்னொரு முறை படித்தால் குவாண்டம் பிசிக்சே எனக்கு புரிய ஆரம்பித்து விடும் போல ....வுடு ஜூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஏஊஊஊஊஊஊட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட.....

    ReplyDelete
  49. எனது டாப் 2 ராப்பர்கள்.!

    1) பூமிக்கொரு பிளாக்மெயில்

    2)காட்டேறி கானகம்

    3) கொலை செய்ய விரும்பு.

    அட்டை படங்களும் சரி ஓவியங்களும் சரி,கதைகளும் சரி அனைத்தும் சாமுத்திரிக லட்சணங்களாக பட்டையை கிளப்பிய எவர் கிரீன் புத்தகங்கள்.!

    ReplyDelete
    Replies
    1. ஆரம்பிச்சுட்டார்பா.....

      இந்த டாப்3 தேர்வுகளில் ஆசிரியர் ஒரு கன்டிசனை போடனும் --"அவுங்கவுங்க நெ1 ஹீரோஸ் அந்த லிஸ்ட்ல வரப்படாது "-- என ....
      அப்பத்தான் உண்மையான ,நேர்மையான ,நடுநிலையான தேர்வுகள் வெளிப்படையாக தெரிய வரும் .....

      Delete
    2. ஜி....! புல்லரிக்க வெச்சுட்டீங்க...??!!

      Delete
  50. Present Sir...!
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்.(லேட்)

    ReplyDelete
  51. எடிட்டர் சார் டெக்ஸ் அட்டை படத்துக்கு உங்களது தேர்வு 7ஆக இருக்குமென்று தோன்றுகிறது. என்னை கேட்டால் 5 ன் முன் அட்டையும் 7ன் பின் அட்டையும் இணைந்தால் நன்றாக இருக்குமென தோன்றுகிறது. 5ன் முன் அட்டையில் இரவின் நிலா வெளிச்சம், தூரத்தில் தெரியும் அச்சமூட்டும் மாளிகை, அசாதாரண சூழலில் வானத்தில் தெரிக்கும் மின்னல், தலையில்லா உருவம் தன்மீது சவாரிசெய்வதனால் உண்டான அச்சத்தையும், மிரட்சியும், அதனால் உண்டான வெறியையும் கண்ணில் வெளிப்படுத்தும் குதிரை இவை அத்தனையும் அச்சமூட்டும் சூழ்நிலையை நன்கு விவரிக்கிறது. அப்படியே பின்பக்கம் திருப்பினால் இரத்தம் தோய்ந்த இரவை விவரிக்கும் சிவப்பு நிறம், இருட்டில் நிற்கும் டெக்ஸ், கீழே முன் அட்டையில் உள்ள அதே தலையில்லா உருவம், குதிரையின் வெறி முன்னட்டையில் நமக்குள் உண்டாக்கிய பீதியை இன்னும் சற்று பெரிதாக விவரிக்கிறது. சூப்பர் சார். இது
    கனமான அட்டையுடன் வரவேண்டிய ஓவியம் என்பது மட்டும் நிச்சயம். மொத்தத்தில் Johnny Depp நடித்த Sleepy Hollow திரைபடத்தை முதன்முறையாக பார்க்கும் போது நமக்குள் உண்டாகும் இனம் புரியாத அச்ச உணர்வு இப்போதும் ஏற்படுவது நிஜம்.

    ReplyDelete
  52. எனது வரிசை - 1...6...5...3...4...7...2

    ReplyDelete
  53. I wish you all to gather here based on lion comics

    ReplyDelete
  54. டாப்3அட்டைகள் - டெக்ஸ்...

    1.பவளசிலை மர்மம்
    2.டிராகன் நகரம்
    3.தலைவாங்கி குரங்கு

    லயன் டாப்3...

    1.லயன் சூப்பர் ஸ்பெசல்
    2.தீபாவளி மலர் 1987
    3.லயன் சென்சுரி ஸ்பெசல்

    ReplyDelete
    Replies
    1. இந்த அட்டைகளை செலக்ட் செய்ய என்னிடம் உள்ள பழைய இதழ்கள் 50யும் எடுத்து மாறி மாறி பார்த்து கொண்டு இருந்தேன் .....
      என்னையே கவனித்து கொண்டு இருந்த என் வீட்டம்மா , அடிக்கிற வெயிலில் நம் வீட்டு காரர்க்கு ஏதோ ஆயிட்டு என லெமன் ஜீஸ் நிறைய போட்டுவந்து குடிக்க வெச்சுட்டா.....
      உசார் நண்பர்ஸ் அட்டைகளை பார்க்கும்போது தனியாக கதவை சாத்தி கொள்ளுங்கள் ....இல்லைனா எல்லா ஊர்கள்ல இருந்தும் ஏர்வாடி க்கு பஸ்கள் ஃபுல் ஆக ஆரம்பித்து விடும் .....

      Delete
    2. ஹிஹிஹி............


      அதனால்தான் நான் மனகணக்கிலே டாப் 3 அட்டைப்படத்தை செலக்ட் பண்ணிட்டேன்.!

      Delete
  55. எடிட்டர்சார் சதிகார ர் சங்கம் பூர்த்தியாகாத அட்டைபடமென்றாலும் நன்றாகவே உள்ளது. பெய்ரூட்டில் ஜானி அட்டை படத்தில் ஜானியை தேடியநான் சதிகார ர்சங்கத்தில் சட்டென கண்டுபிடித் துவிட்டேன். ஆனால் ஒரு வருத்தம்.(எங்க இவன் திருந்திட்டானே என்று பார்த்தால் அப்படியேதான் இருக்கிறான் என நினைக்காதீர்கள்) சதிகார ர்கள் முகத்தை இருட்டடிப்பு செய்த து சரிதான். ஆனால் ஒவ்வொரு கதையிலும் ஜானியின் தோளோடு தோளாய் நின்று அவருடைய வெற்றியில் பங்கு கொள்ளும் ஸ்டெல்லாவை இருட்டடிப்பு செய்யாமல் அவர்முகத்திலும் கொஞ்சம் வெளிச்சம் காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும். பின் அட்டையில் பழைய அட்டைப்படம் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். மற்றபடி இதை வரைந்த ஓவியர் வாசக தோழர் யாரென தெரியவில்லை. பொடியனாரின் திறமையே சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன்.இதை வரைந்தவர் அவராகவும் இருக்கலாம், ஸ்பைடர் படத்தை லைன் ட்ராயிங்கில் வரைந்த தோழராகவும் இருக்கலாம். அவர் யாரென்று நீங்கள் சொல்லவேயில்லை.

    ReplyDelete
  56. தோழர் மாயாவிசிவா அவர்களை காணோமே! எங்கே சார் இருக்கிறீர்கள்? வழக்கமாக நிறைய "க்ளிக்" குகளை போடுவார். பணிசுமையின் காரணமாக வர இயலவில்லையா? தோழரே சதிகார ர் சங்கம் பழைய அட்டைபடம் தங்களிடம் இருந்தால் சமயம் கிடைக்கும்மோது ஒரு "க்ளிக்" கை போடுங்களேன். உங்கள் மூலம் பால்ய நினைவுகளை மீட்டெடுக்கலாமே என்ற ஆசைதான்.

    ReplyDelete
  57. ஆறு வித்தியாசம் போல மிகச்சிறிய வித்தியாசங்கள் கொண்ட படங்களை அடுக்கிவிட்டு எது சிறப்பு என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? இது மிக நுண்மையான ரசனையின் பாற்பட்டு தேர்ந்தெடுக்கப்படக்கூடிய, அதனால் பெரிய மாற்றுக்கருத்து எதையும் ஏற்படுத்தாத காரியமாகும்.

    பை தி வே, இரண்டாவது பின்னட்டை சிந்தாமல் சிதறாமல் முன்னட்டையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், செமையாக இருந்திருக்கும்..

    இல்லை, கொடுக்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றால், கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு, கூர்ந்து நோக்கி, பல விஷயங்களையும் எடை போட்டு, ஆராய்ச்சி செய்து, துப்பறிந்து..

    5,2,7,1,3,2,4,6 என தீர்ப்பளிக்கிறேன்.

    (ஈவி: எப்படி ஆதி இப்படி ஆராய்ச்சி பண்றீங்க?

    ஆதி: காதைக்கொடுங்க, இங்கயும் அதே இங்கி பிங்கி பாங்கிதான்!)

    ReplyDelete
    Replies
    1. ///GMT+5:30
      ஆறு வித்தியாசம் போல மிகச்சிறிய வித்தியாசங்கள் கொண்ட படங்களை அடுக்கிவிட்டு எது சிறப்பு என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? இது மிக நுண்மையான ரசனையின் பாற்பட்டு தேர்ந்தெடுக்கப்படக்கூடிய, அதனால் பெரிய மாற்றுக்கருத்து எதையும் ஏற்படுத்தாத காரியமாகும்////

      +111111111111

      Delete
    2. ஆதி தாமிரா & Erode VIJAY : தேசத்தின் பல முனைகளிலும், நிலைகளிலும் "இ; பி.பா." வின் மகத்துவம் விஸ்வரூபம் எடுத்து நிற்பதை உணரும் போது புல்லரிக்கின்றது !

      Delete
  58. "Everybody Listen, he is on a mission
    In same style and pose in 7 different rappers"
    Well he is cool n awesome...Love Tex

    அனைத்து ராப்பர்களும் superb, ஆகையால் தங்களுது நடுச்சாமத்தின் விஞ்ஞானபூர்வமாய் தேர்வு முயற்சியான "இன்க்கி... பின்க்கி..." ஏன் என்று புரிகிறது
    அசைந்தால் சுட்டு விடுவேன் என்று நிற்கிறார்

    my choice... 2, 4, 3, 5, 7, 6 , 1

    தங்களின் 2 & 4 என்பது my guesses

    ReplyDelete
    Replies
    1. SeaGuitar9 : பத்தே நாட்களில் விடை தெரிந்து விடும் ! :-)

      Delete
  59. எனது வரிசை 1,7,2,5,6,4,3. Hope editor choice is 7

    ReplyDelete
  60. சிறந்த அட்டை 1 . விதி போடும் விடுகதை
    2 . கௌபாய் ஸ்பெசல்
    3 . யார் அந்தமினி ஸ்பைடர்

    ReplyDelete
  61. முதலாவது அட்டை என்னை கவர காரணம்:
    1) இந்த நீல வண்ணத்தில் அமைந்தது, மிக குறைந்த அட்டைபடம்களே இது போன்ற வண்ணத்தில் வந்துள்ளன.
    2) பின் அட்டை நேவி ப்ளு, ஜீன்ஸ் கலரில். முன் மற்றும் பின் இரண்டும் நீல நிறம் தான் ஒன்று அடர் நிறம் மற்றொன்றும் மிதமான நிறம். மிக சரியான கூட்டணி.
    3) தலை இல்லாத போராளி கையில் இருக்கும் வாள், மின்னுவது.
    4) ரியலிஸ்டிக்கான அந்த போராளியின் உருவம், அந்த குதிரை.
    5) பின்புறம் உள்ள நிலா, வழக்கமான பால் போன்ற நிறத்திற்கு பதில் உபயோகபடுத்தி இருக்கும் அடர் நீலம்.
    6) டெக்ஸ் மற்றும் போராளி இருவருக்கும் பின்னால் உள்ள கிராமம் அருமையாக வந்து உள்ளது.
    7) இந்த அடர் வண்ண சேர்கை அச்சில் வரும் போது மிகவும் சிறப்பாக வரும் எனபது எனது நம்பிக்கை.
    8) பின் அட்டை என்னை கவர முக்கிய காரணம் நேவி ப்ளு, ஜீன்ஸ் வண்ணம்.
    9) முன் அட்டையில் உள்ள கதையின் பெயரை ஒரே பொன்ட் (Font) ஸ்டைலில் சிகப்பு வண்ணத்தில் பிரிண்ட் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

    நான் கல்லூரியில் படித்த சமயம் தூத்துக்குடியில் சாந்தா ஆர்ட்ஸ் என்ற பெயரில் விளம்பர பலகைகள் ஒருவர் வரைவார். அவர் விளம்பர படம்களின் சிறப்பு அவை ரியலிஸ்டிக்காக மற்றும் வண்ண சேர்க்கைகள் அருமையாக இருக்கும். அவர் வரைந்த விளம்பர பலகைகள் உள்ள கடை என்றால் ஒரு தனி மவுஸுதான். இந்த அட்டை படம் எனது பழைய நினைவுகளை தூண்டிவிட்டது என்றால் மிகையில்லை. 

    ReplyDelete
    Replies
    1. இவ்வாறான சிறப்புகள் பெற்ற அட்டயை போட்டால்...

      Delete
    2. /இவ்வாறான சிறப்புகள் பெற்ற அட்டயை போட்டால்.../

      மிக நன்றாக இருக்கும் :)

      Delete
    3. Parani from Bangalore : இத்தாலியில் பொனெல்லியில் டெக்சில் ஆரம்பித்து தூத்துக்குடிக்கு, சாந்தா ஆர்ட்சுக்குப் பயணமாகி விட்டீர்களே !!

      Delete
  62. வெயில் காலத்துக்கு ஏற்ற கலர் தான் , ஆனால் அதிகபடியான red அடிக்குது
    இது என்னோட தனி கருத்து

    அட்டை படத்திற்கு நான் முன்பு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததில்லை
    ஆனால் அட்டை படத்தை பார்த்து கதையை கெஸ் பண்ண முயற்சி செய்வேன், வேற ஒரு கதை மனதில் ஓடும், படிக்கும் பொது கதை வேறாக இருக்கும், படித்த பின்பு அட்டை படம் ரசிப்பேன்

    தாங்கள் அட்டை படத்திற்கு இவ்வளவு hardwork பண்ணுவதை பார்க்கும் , வெயில் காலத்தில் கண்கள் வேர்கின்றன, அதுவும் விஞ்ஞானபூர்வமாய் கூட தேர்வு முயற்சி நடுந்துள்ளது (நடுச்சாமத்தில் எதுவும் நடக்கும், just mind voice :D)

    சிக் பில் & கோ-வின் அட்டை படம் மிக அருமையாக உள்ளது

    இந்த வாரம் ராப்பர் வாரம்

    ReplyDelete
    Replies
    1. I mean 7th rapper has too much Red, but most will love that

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. ATR & SS : நண்பர்களே, ஆளாளுக்கு கீழே விழ , தூக்கி விட என்ற routine -ஐ ஆரம்பிப்பானேன் ? சகஜமாய், இயல்பாய் எழுதுங்கள் - அதுவே ரசிக்கும் விதமாய் இருந்து விட்டுப் போகட்டும் !

      Delete
  63. இனிய மதிய வணக்கம் எடிட்டர் சார்!!!
    இனிய மதிய வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
  64. 'தல' யின் 'தலையில்லாப் போராளி' யின் ஒவ்வொரு அட்டைப்படமும் அட்டகாசம்!!!
    சும்மா மனசை அள்ளுகிறது!!!

    ReplyDelete
  65. 1 ஆம் நம்பரின் முன் அட்டைப்படமும் 2 ஆம் நம்பரின் பின் அட்டைப்படத்தையையும் உபயோகிங்கள் எடிட்டர் சார்!!!

    ReplyDelete
  66. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. //முதலில் எனது தேர்வை எழுதிவிட்டேன். தற்போது திரும்ப பார்க்கும் போது அட முதலில் நாம் சொன்னது. தவறோ? அதுவாக இருக்குமோ அல்லது இதுவாக இருக்குமோ பின்னே எதுவாக இருக்கும்?? கேள்விகள் மண்டைக்குள் மினி மாவு மெஷினை ஓட்டிக்கொண்டுள்ளது.//

      Yep, it does

      //(பின்பு எப்படித்தான் தோழர்கள் அளித்த மாபெரும் பட்டத்துக்கு அடியேன் அருகதையில்லாதவன் என்று நிரூபிப்பதாம்!!!)//

      hmmmmmmmm

      Delete
    2. காமிக்ஸ் நண்பி க்கு மதிய வணக்கம் கமெண்ட்கள் பின்னியெயெடுக்கிறீர்கள் இதைத்தான் நான் எதிர் பார்த்தேன் இந்த வாரம் போலவே வருகின்ற பதிவுகளிலும் ஆக்டிவாக இருங்கள்

      Delete
    3. @Senthil Sathya

      நன்றி சகோதரரே :)

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. ATR : இணையத்தில் பதிவிடும் ஆரம்ப நாட்களில் எல்லோருக்குமே பொதுவாய் எழும் தடுமாற்றம் தானிது ! நாட்கள் செல்லச் செல்ல - நண்பர்களின் நாடித்துடிப்பை ஓரளவு கணிக்கவும், நமது ரசனைகளை அவற்றோடு sync செய்து கொள்ளவும் பழகிவிடும் !

      Delete
  67. பிறமொழியில் இந்த ஆல்பத்தை முதன் முதலில் வெளியிட்ட சந்தோஷம் நமதாகும்!
    கனவுக்கன்னி பெட்டி பார்னோவ்ஸ்கியின் ஆல்பமும் விற்பனையில் சக்கை போடு போடுகிறதாம்!
    மிக்க மகிழ்ச்சி சார் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  68. அட்டை படங்களை தொடர்ந்து பார்த்து கொண்டே இருந்தால் ,நிறைய "mix n match" தோன்றுகிறது
    2-ஆம் நம்பரின் முன் அட்டையும், 7-ஆம் நம்பரின் பின் அட்டையும் சேர்த்தால் நல்லா இருக்கும்
    இது நடு சாமம் இல்லை, ஆனாலும் பயங்கர குழப்பங்களும், வித்தியாசமான யோசனைகளும் தோன்றுகின்றன
    ரொம்பவே மூழ்கிட்டொமொ ?????

    ReplyDelete
    Replies
    1. ///இது நடு சாமம் இல்லை, ஆனாலும் பயங்கர குழப்பங்களும், வித்தியாசமான யோசனைகளும் தோன்றுகின்றன
      ரொம்பவே மூழ்கிட்டொமொ ????/////

      :)))))))

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. A T R சார்.! காதில் ரத்தம் வந்த நண்பர்களுக்காக ஒரு இடைவெளி அவ்வளவுதான்.!


      மாடஸ்டிக்கு குரல் கொடுக்க மட்டுமே நான் இங்கு வருகிறேன். என் ரசனைகள் அனைத்தும் எடிட்டர் உருவாக்கியதுதான்.ஆதனால் அவரது தேர்வுகள் அனைத்தும் எனக்கு ஒத்துப்போகும்.!அதனால் எனக்கு வேறு எந்த வேறு எதிர்பார்ப்பும் கிடையாது.!(கி.நா.தவிர!) ஆனால் மாடஸ்டி போன்ற கதைக்கு ஆதரவை வாய்விட்டு கத்தினால்தான் பெறமுடியும் என்பதால் மட்டுமே இங்கு வருகிறேன்.!


      சமீபத்தில் டெக்ஸ் தனி சந்தாவை பெற சில நண்பர்கள் கையாண்ட யுக்தி என்னை கவர்ந்தது.அதாவது.,கமல் மாதிரி , " ஆத்தா வையும் சந்தைக்கு போகணும் காசு கொடு " என்று கீரல் விழுந்த ரெக்கார்டு மாதிரி ஒரே கமெண்ட்டை திரும்ப திரும்ப பேஸ்ட் செய்து காதில் எரிமலை குழம்பை வர வைத்து வெற்றி பெற்றனர்.அப்போது காதில் எரிமலை குழம்பு வராமல் இருக்க பிடிக்காத கமெண்ட்களை நான் படிக்காமல் தாண்டிபோவது வழக்கம்.


      இதே முறையை பிடிக்காத நண்பர்கள் பின்பற்றலாம்.எடிட்டரின் கவனத் தை எப்படியாவது ஈர்க்க ஏதாவது செய்யவேண்டியது உள்ளது.என் உரிமை என் கடமை.!மாடஸ்டி வேவ் லென்த் கொண்ட நண்பர்களை ஒருங்கிணைப்பது அவசியமாக உள்ளது நண்பர்களே.!


      மேற்கத்திய கலாச்சாரத்தில் உருவாக்கப்பட்ட மாடஸ்டி கதைகளை ஒரிஜினலைஅப்படியே " ரா " வாக படித்தால் அவர்மேல் உள்ள இமேஜ் டேமேஜ் ஆக வாய்ப்பு உள்ளது.ஆகவே நான் விஜயன் சார் மாடஸ்டியை மட்டும் படிக்கவிரும்புகிறேன்.!நன்றி.! தவறாக எழதியிருந்தால் மன்னியுங்கள்.! கொஞ்சம் கேப் விட்டு வருகிறேன்.!

      Delete
    6. /மேற்கத்திய கலாச்சாரத்தில் உருவாக்கப்பட்ட மாடஸ்டி கதைகளை ஒரிஜினலைஅப்படியே " ரா " வாக படித்தால் அவர்மேல் உள்ள இமேஜ் டேமேஜ் ஆக வாய்ப்பு உள்ளது.ஆகவே நான் விஜயன் சார் மாடஸ்டியை மட்டும் படிக்கவிரும்புகிறேன்.!/

      +9

      Delete
    7. ///சமீபத்தில் டெக்ஸ் தனி சந்தாவை பெற சில நண்பர்கள் கையாண்ட யுக்தி என்னை கவர்ந்தது.அதாவது.,கமல் மாதிரி , " ஆத்தா வையும் சந்தைக்கு போகணும் காசு கொடு " என்று கீரல் விழுந்த ரெக்கார்டு மாதிரி ஒரே கமெண்ட்டை திரும்ப திரும்ப பேஸ்ட் செய்து காதில் எரிமலை குழம்பை வர வைத்து வெற்றி பெற்றனர்.அப்போது காதில் எரிமலை குழம்பு வராமல் இருக்க பிடிக்காத கமெண்ட்களை நான் படிக்காமல் தாண்டிபோவது வழக்கம்.////-------
      .....அபாண்டமான குற்றச்சாட்டு நடுவர் அவர்களே.......
      அனைவரும் அந்த போராட்டங்களை ரசித்து முழு ஆதரவு தந்ததன் பலனே மாதம் ஒரு டெக்ஸ்.....

      கவனிக்க ////மாதம் ஒரு டெக்ஸ்////...சந்தா Bயில் 9+ சந்தா Aல் 2+மறுபதிப்பு Dல் 1ஒன்று என மாதம் ஒன்று ..... தனிசந்தா அல்லா ,
      அடுத்த ஆண்டு தனிசந்தா பெறுவதே எங்கள் நோக்கம் ,கொளகை ,லட்சியம் ,,...அதற்கு உடன்படும் எந்த அணியுடனும் ச்சே நண்பருடனும் கூட்டணி வைப்போம் ....

      Delete
    8. MV சார் - இப்போது தான் கீழே - இளவரசி ரசிகர் மன்ற கொ.பா.செ. ATR சாரின் பதிவில் விரிவாய் பதிவிட்டு வந்திருக்கிறேன் - இதே சமாச்சாரம் தொடர்பாய் ! So கீழ்சென்று பாரீர் !

      Delete
    9. SeaGuitar9 : நீங்கள் இங்கே பார்த்துக் கொண்டிருக்கும் 7 டிசைன்கள் - 11 முயற்சிகளிலிருந்து நான் செய்த mix & match க்கு அப்புறமானவைகள் ! பதினொன்றையும் கண்ணில் காட்டியிருப்பின் - ஏர்வாடி பஸ்ஸில் ஜாலியாகப் புளியோதரை சாப்பிட்டுக் கொண்டே எல்லோரும் புறப்பட்டிருக்கலாம் !

      Delete
  69. ஒரே கதைக்கு ஒன்றிற்கு மேற்பட்ட வெவ்வேறான அட்டைப்படங்களை உபயோகிப்பதில் என்னென்ன பிரச்சினைகள் எழுமென்பது எனக்குத் தெரியாது... ஆனால் இந்த அட்டைப் படங்களைப் பார்க்கும்போது அப்படியொரு ஆசை எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!

    சமூகம் என்ன சொல்லுமோ?

    ReplyDelete
    Replies
    1. சகோதரரே, இந்த வாரமும் ஆசிரியரை காணோம்

      /ஒரே கதைக்கு ஒன்றிற்கு மேற்பட்ட வெவ்வேறான அட்டைப்படங்களை உபயோகிப்பதில் என்னென்ன பிரச்சினைகள் எழுமென்பது எனக்குத் தெரியாது... ஆனால் இந்த அட்டைப் படங்களைப் பார்க்கும்போது அப்படியொரு ஆசை எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!/
      இந்த idea எனக்கு பிடித்திருக்கிறது

      Delete
    2. Erode VIJAY & SeaGuitar9 : பிரதான பிரச்சனை - யாருக்கு எந்த ராப்பர் ரொம்பப் பிடிக்கும் ? ; சந்தா கவரில் அவர்கள் ரசனைக்குரிய அட்டைப்படம் தாங்கிய பிரதியை சரியாக வைத்து அனுப்புவது எத்தனை சிரமமான வேலை என்பதே !

      "மஞ்சள் நிழல்" கேட்டவருக்கு - "மஞ்சள் பூ மர்மம்" அனுப்பப்பட்டதும் உண்டெனும் போது - "ஆரணிக்கு சிகப்பு ; உசிலம்பட்டிக்கு ப்ளூ ; பட்டுக்கோட்டைக்கு அடர் பச்சை" என ரகம் பிரிப்பதில் நமது front office சின்னப் பெண்கள் கண்ணில் ஜலம் விட்டு விடுவார்கள் !!

      "எது கிடைத்தாலும் ஒ.கே.!" என்ற நிலை நண்பர்களுள் நிலவினால் - dual covers சாத்தியமே !

      Delete
  70. சிக் பில் பின்அட்டையிள் 269 என்று உள்ளது ஆனால் முன்அட்டையிள் முத்து காமிக்ஸ் என்று உள்ளது முத்துவில் 350 தான்டியச்சே????????????????!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. diabolik akkik : இவை எல்லாமே டிசைன்கள் மட்டுமே அகில் ; இன்னமும் அச்சுக்குச் செல்வதன் முன்பாக சகலமும் சரி பார்க்கப்படும் ; சரி செய்ய்பப்படும் !

      Delete
  71. வெயில் காலத்தில் அப்படி தான் தோன்றும்

    ReplyDelete
  72. என்னுடைய தெரிவுகள் 1,7,2,4,5,3,6.ஆனாலும் எல்லாமே சிறப்பாக உள்ளது போல தோன்றுகின்றது .உங்களின் கஷ்டம் எனக்கு நன்றாக புரிகிறது சார் .அனைத்தும் கடின உழைப்பு . உங்களுக்கும் ஓவியருக்கும் உங்களின் டீம் இற்கும் மீண்டும் என் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  73. //ஒரிஜினல் வெளியாகும் வேளையைத் தொடர்ந்த மாதத்தில் நம்மால் இந்த இறுதி பாகத்தை வெளியிட முடிந்திடும் பட்சத்தில்- பிறமொழியில் இந்த ஆல்பத்தை முதன் முதலில் வெளியிட்ட சந்தோஷம் நமதாகும்!//சந்தோசம் எமக்கும் கூடத்தான் சார் . இரட்டிப்பு சந்தோசம். கூடவே பெட்டி,பெலிசிட்டி இன் மிஸ்ட்ரி ஆல்பம்களும் வந்தால் அடடா . சந்தோஷத்தில் ஆனந்த கூத்தாட தோன்றும்.

    ReplyDelete
    Replies
    1. Thiruchelvam Prapananth : சார்...ஆண்டவன் அருளோடு நீங்கள் நிஜமாக ஆனந்தக் கூத்தாடும் நாள் உங்கள் வாழ்வில் நிச்சயம் சீக்கிரமே பிறக்கும் ! அன்றைக்கு XII என்ன ; பெட்டி என்ன ; பெலிசிட்டி என்ன - நீங்கள் கேட்கும் சகலத்தையும் நான் நிஜமாக்குவேன் !

      Delete
  74. 2015-mennum maranam
    2016-en peyar tiger
    2017-XIII
    2018- ????

    ReplyDelete
    Replies
    1. ...........

      ...........

      2017-இரத்த கோட்டை (தோட்டா தலைநகரம் -சேர்த்து )

      2018-XIII -18பாகம் கலரில் -18வது வருடம் 18பாக வண்ண ஆல்பம்

      Delete
    2. @சேலம் டெக்ஸ் விஜயராகவன்:
      //XIII -18பாகம் கலரில் -18வது வருடம் 18பாக வண்ண ஆல்பம்//
      சூப்பர் மாம்ஸ்...
      +100000000000000...

      Delete
  75. Mayavi vanthaar, enrum neenga maatchimaiudan vaalherar. Tex neethi arasaraai anrum chaivar, avarathu mudiatchiyai edu seiya evarum ellai.
    Palaivanam naduvey tiger mudi sudaa mannanaai enrum erukherar.
    Anaal Tex enru neethi sakkaravarthiyai erukkerar.
    Per year 12 + ____ books
    No one can break this record

    Again Tex will break this record


    ReplyDelete
  76. தொடர்ந்து சில வாரமாக ஆசிரியர் இங்கே வராமல் இருப்பதற்கு "சன்ன"மான எதிர்ப்பை பதிவு செய்கிறேன் ......

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : இப்போது தான் இதே போன்ற கருத்துக்குப் பதில் போட்டு விட்டு வருகிறேன் சார் - கீழே ஸ்க்ரோல் செய்து பாருங்களேன் !

      Delete
  77. This comment has been removed by the author.

    ReplyDelete
  78. 7 வது அட்டைப்படம் உங்களது தேர்வாக இருக்கலாம் ஆசிரியரே.

    ReplyDelete
  79. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இணையத்தின் கணையத்தில் பழுது ஏற்பட்டு விட்டதோ..??!!

      Delete
    2. அழுக்குப்பய டைகர், எடிட்டரை பெண்டு நிமித்திக்கிட்டிருக்கார்னு நினைக்கிறேன்...! அதனாலதான் எடிட்டர் இன்னைக்கும் எட்டிப்பாக்கமாட்டேங்கிறார்...!

      Delete
    3. ஜேடர்பாளையம் சரவணகுமார் : +1001

      Delete
  80. // எவ்விதம் பார்த்தாலும் இந்த மாதத்தின் இறுதித் தேதிக்கு உங்கள் கைகளில் ஏப்ரல் இதழ்கள் சகலமும் இருப்பது நிச்சயம்!//
    அருமை,மகிழ்ச்சியான விஷயம்.ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  81. @Editor sir:
    7 வது அட்டைப்படம் உங்களது தேர்வாக இருக்குமென்று நினைக்கிறேன்...

    ஆனால் எனக்கு என்னமோ 1 வது அட்டைப்படத்தை அப்படியே உபயோகித்துவிட்டு...அனைவரையும் கவர்ந்த அந்த சிவப்பு நிற அட்டைப்படத்தை வேறு ஏதேனும் டெக்ஸ் சாகத்திற்கு முன் அட்டைபடமாக உபயோகித்து விடுங்கள் சார்...

    அந்த சிவப்பு நிற அட்டைப்படம் அட்டகாசம்!!!
    அதை பின் அட்டையாக போட மனம் ஏத்துக்கொள்ள மறுக்கிறது...

    அதுவுமில்லாமல் முன் அட்டை ப்ளூ கலர் பின் அட்டை சிவப்பு நிறம் கொஞ்சம் odd ஆக தெரிகிறது...

    அந்த சிவப்பு நிற அட்டைப்படத்தை வீணடிக்க வேண்டாமே...வேறேதேனும் டெக்ஸ் கதைக்கு முன் அட்டைப்படமாகவே போட்டு விடுங்கள் சார்!!!

    ReplyDelete
    Replies
    1. அன்புத் தம்பியின் கோரிக்கையில் அர்த்தம் இருக்கிறது!

      Delete
    2. Sathya & all : அட...கற்பனைகளுக்கு எல்லைகளும் கிடையாது ; அதனில் வறட்சி ஏற்படும் நாளும் புலராது என்று நம்புவோம் guys ! இந்தச் சிகப்பை விடவும் சூப்பராய் டிசைன்களை பொன்னனும் சரி ; நமது வாசக ஓவியர்களும் சரி - தொடரும் காலங்களில் நிச்சயம் உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது !

      So பெம்மிகனை இரவுக் கழுகாரின் குழு பத்திரமாய்ச் சுமந்து திரிந்து பாலைவனங்களில் சாப்பிடுவதைப் போல - அழகான டிசைன்களை நாம் பத்திரப்படுத்திக் கொள்ளும் அவசியம் நிச்சயம் கிடையாது ! ஜமாய்த்து விட மாட்டோமா ?

      Delete
  82. z சந்தா பற்றிய விவாதம் தள்ளிப்போவது ஏனோ?
    நிதர்சன வாழ்வில் நித்தமும் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் புத்தகங்களே நல்லதொரு இளைப்பாறல்,கடும் வெயிலில் அலைந்து ஒரு மரத்தின் நிழலை கண்டதுபோல நம் காமிக்ஸ்கள் எனக்கு தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi : சந்தா Z -ஐ மர்மம் சார்ந்த கதைகளின் சங்கமமாய் அமைத்திட நினைத்ததாலோ என்னவோ - அது இன்னமும் மர்மமாகவே தொடர்கிறதோ ?! :-)

      Delete
  83. எனது வரிசை 2,3,4 சிவப்பு வர்ண பின் அட்டை முன்அட்டையாக மாறினால்் நிச்சயம வித்தியாசமாக இருக்கும்

    ReplyDelete
  84. // யாரேனும் அந்த நள்ளிரவில் ஜன்னல் வழியாகக் கட்டில் முழுக்க இரைந்து கிடந்த டிசைன்களை நான் மண்டையைக் கோணிக் கொண்டு பார்வையிட்டவாறே முணுமுணுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கும் பட்சத்தில் ஏர்வாடிக்கான பஸ் எத்தனை மணிக்கிருக்கும்? என்று சீரியஸாகவே விசாரித்திருப்பார்கள்! //
    உங்களுக்குள்ளும் இன்னும் பால்யம் தொலைந்து போய்விடவில்லை போலும் ஆசிரியரே.

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi : கம்பியூட்டர் ஸ்க்ரீனில் 7 டிசைன்களைப் பார்க்கும் போதே உங்களுக்குச் சிண்டைப் பிய்த்துக் கொள்ளத் தோன்றும் போது - பெரிய சைஸ் பிரிண்ட் அவுட் மொத்தம் 11-ஐ கட்டிலில் கடாசி விட்டுப் பார்த்தால் ஒரே நேரத்தில் பால்யம்...டீனேஜ் ...வயோதிகம்...என சகலமும் கண் முன்னே தெரியும் சார் !!

      Delete
    2. SeaGuitar9 & all : "என் பெயர் டைகர் " & முத்து மினி காமிக்ஸ் மறுபதிப்புகளின் முதல் சுற்றும் முடிந்து கொள்ளும் வரை எனது தலைமறைவைப் பொருட்படுத்தாதீர்கள் ரம்யா & friends !

      அதன் பின்பாய் - மாதத்தில் ஏதேனும் ஒரு ஞாயிறு பகலை ஒரு open house போல் நடத்திடுவோமே - தொடர்ச்சியாய் 2 அல்லது 3 மணி நேரங்கள் ஆன்லைன் இருந்து - உடனுக்குடன் உங்கள் பதிவுகளுக்கு நான் ரியாக்ட் செய்யும் விதத்தில் !

      Delete
  85. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. சார் ; உரக்க ஒலிக்கும் குரல்களுக்கு கேட்டது மறுப்பின்றிக் கிடைப்பது போன்று தோன்றுவதெல்லாமே ஒரு மாயை தான் ! இங்கு பதிவாகும் குரல்களைத் தாண்டி எனது சிந்தனைகளையும், தீர்மானங்களையும் வசீகரிப்பதில் கீழ்க்கண்ட விஷயங்களுக்கு முக்கிய பங்குண்டு :

      1.வலைக்கு அப்பாலுள்ள வாசகர்களின் கருத்துக்கள்.
      2.ஒவ்வொரு புத்தக விழாவினில் நமக்குக் கிடைக்கும் விற்பனைப் புள்ளிவிபரங்கள்.
      3.ஒவ்வொரு முகவரும் ஆர்டர்கள் தருவதில் தென்படும் ஒரு ஒற்றுமை.
      4.நமது ஆன்லைன் ஆர்டர்களின் வேகமோ ; வேகமின்மையோ..!

      இவை சகலத்துக்கும் பின்பாய் எனது gut feel !

      உங்களது குரல்கள் + மேற்சொன்ன 4 விஷயங்கள் + எனது gut feel - என அரை டஜன் ரயில்வண்டிகளும் ஒரே தடத்தில் பிரயாணிக்கும் போது 'சட்டென்று' ஊர் வந்து விடுவது இயல்பு ! இவற்றில் ஏதேனும் ஒன்றோ, இரண்டோ குறைந்தால் கூட - எக்ஸ்ப்ரஸ் வண்டி - பேசஞ்சர் ஆகிப் போகும். இது தான் யதார்த்தம்.

      2016-ல் அமலாகியிருக்கும் விசேஷ சுவைகள் "தனி டெக்ஸ் " + "கார்டூனுக்கென தனித் தொடர்" தானே ? இவையிரண்டின் விஷயங்களிலும் 6/6 ஸ்கோர் பூரணமாய் கிடைத்திருப்பது ஒரு திறந்த இரகசியம் தானே ? இப்போது நடந்து முடிந்த திருச்சி புத்தக விழாவினில் கூட டாப் விற்பனை கிட்டியது : மாயாவி + டெக்ஸ் வில்லர் + கார்ட்டூன் கதைகளுக்குத் தான் ! So அவர்கள் நம் அட்டவணையில் பிரதானமாய்த் தெரிவதில் வியப்பில்லை அல்லவா ? And அவை நடைமுறையாகியிருப்பது இங்கு நண்பர்கள் எழுப்பிடும் உரத்த குரல்களின் பொருட்டு மட்டுமே தான் என்ற சிந்தையும் தவறே ! குரல்களுக்கு நிச்சயமாய் மதிப்புண்டு ; but அவற்றோடு பாக்கி 5 விஷயங்களும் இணையும் போது தானே வீரியமும், வேகமும் பெறுகின்றது ?

      இளவரசி விற்பனையில் பட்டத்து அரசியாகக் கோலோச்சும் நாள் வரும் பொழுது நான் மறுப்பே சொன்னாலும் கூட - கதவைத் தகர்த்துக்கொண்டு உள்ளே கம்பீரமாய் நுழைந்திட மாட்டாரா ?

      Delete
    2. கேப்ஷன் போட்டியில் வெற்றி பெற்றது யார் ஆசிரியரே ஒரு வேளை யாருமே வெற்றி பெறவில்லையா

      Delete