Monday, February 29, 2016

ஒரு ஸ்பெஷல் ரயில்...!!

நண்பர்களே,

வணக்கம். நேற்றைக்கே load more இடியாப்பத்தினுள் பின்னூட்டங்கள் புதைந்திடத் துவங்கி விட்டதால் - இதோ மார்ச் மாதத்து விமர்சனங்களுக்கென புதியதொரு பதிவுப் பக்கம் ! இங்கே கலக்குங்கள் !!
ஆன்லைன் லிஸ்டிங் கூட இப்போது ரெடி : http://lioncomics.in/monthly-packs/20540-march-2016-pack.html

And சந்தா ரயிலை ஜனவரியில் தவற விட்ட நண்பர்களுக்காக இப்போதொரு ஸ்பெஷல் ரயில் !! 
Why not get onboard ? Bye for now !!

224 comments:

  1. ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம்

    ReplyDelete
  2. மூன்றாவது நபராக அஐர்....

    ReplyDelete
  3. காமிக்ஸ் கடவுளே புத்தகம் கிடைக்கவில்லை கிடைத்தவுடன் படித்து விட்டு விமர்சனம் எழுதுகிறேன்

    ReplyDelete
  4. ஹல்லோ ......!
    வணக்கம் ஃபிரண்ட்ஸ்...!
    வணக்கம் எடிட்டர் சார்......!

    ReplyDelete
  5. புத்தகம் கிடைத்து விட்டது சார் ....கிர்ர்ர் ...

    ஹாட் லைன் படித்து விட்டேன் சார் ...கிர்ர்ர் ...

    தோட்டா டைம் படித்தாகி விட்டது சார் ...கிர்ர்ர் ..

    விச்சு கிச்சு ...அட்டை பட ஓவியங்கள் ..உள்ளே நான்கு இதழ்களின் அட்டகாச ஓவிய சித்திரத்தை ரசித்தாகி விட்டது சார் ....கிர்ர்ர் ...


    ஏன்....சிங்கத்தின் சிறு வலையில் ...கூட படித்தாயிற்று சார் ......கிர்ர்ர் ...



    ஆனால் ....


    ஆனால் ....


    செயலாளர் அவர்களே ...ஆசிரியருக்கு நமது போராட்ட குழு உறுப்பினர்கள் மீது உள்ள நம்பிக்கையை விட நமது பதுங்கு குழியின் மீது நம்பிக்கை அதிகம் உள்ளது ....எனவே தான் இம்முறையும் சிங்கத்தின் சிறு வயதில் காணாமல் போக செய்து விட்டார் ...இனியும் பொறுக்க முடியாது ...ஆனால் போன பதிவே சி சிறு .வயதில் ஆக இருந்ததால் இம்முறை மன்னித்து விடலாம் ...

    (வேற வழி ...;-((

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K :
      குலையில் வாழையிருக்க....
      குளத்தில் நண்டிருக்க...
      சமையலறையில் ஆயிலிருக்க...
      அடியேனுக்கு பயமேன் ?!

      Delete
    2. மீண்டும் ஒரு கிர்ர்ர் ....


      சார் ...ஆனால் அடுத்த முறை மடிப்பாக்கம் சார் ..செயலாளர் சொன்னது போல சிவகாசி போராட்டம் நடை பெற விரைவில் ஆவண செய்யப்படும் ...

      Delete
    3. //குலையில் வாழையிருக்க....
      குளத்தில் நண்டிருக்க...
      சமையலறையில் ஆயிலிருக்க...
      அடியேனுக்கு பயமேன் ?!//

      பதுங்கு குழிகள் இருக்க
      பயந்து நடுங்க தலீவர் இருக்க
      படை போல் தொண்டர்களிருக்க
      போராட்டத்தில் குதிக்க எங்களுக்குப் பயமேன்?


      கிர்ர்ர்ர்ர்...

      Delete
  6. தலைவரே....!
    "வேற வழி...."
    என்னங்க இப்படி 'பொசுக்'குனு சொல்லிட்டீங்க.?இதை இப்படியே விடக்கூடாது.நான் வாடகை சைககிள் எடுத்துட்டு வர்றேன்.சிவகாசிக்கே நேர்ல போய் கேட்டுட்டு வந்துடலாம்...!


    ஆனா சைக்கிளுக்கு பெட்ரோல் நீங்கதான் போடனும்...!

    ReplyDelete
    Replies
    1. ஜேடர்பாளையத்தாரே...ஹாஹஹா...நான் சொல்றபடி போனா காரியம் ஜெயம்..!

      போகவேண்டிய முறை பார்க்க...இங்கே'கிளிக்'

      Delete
    2. அதாவது சைக்கிள தலைவர் ஓட்ட, நானும், செயலாளரும் தோள் மேல ஏறி குந்திகினு போனா காரியம் ஜெயம்னு சொல்றீங்க..! நான் ரெடி..! தலீவர் தாங்குவாரான்னுதான் தெரியல...!?

      அப்புறம் மாயாவிஜி...! இந்த புக்க கண்ணுல பாத்து வெகு காலமாச்சு...! எடிட்டர் சார்....! கொஞ்சம் மனசு வைங்க...!(கிடைக்காதுன்னு தெரிஞ்சும்...,கேட்டுட்டேன்...)

      Delete
    3. சரவணகுமார் அவர்களே ஏன் கிடைக்காமல்..??? நிச்சயம் கிடைக்கும். இப்படியொரு அசத்தல் படைப்பு வந்ததே அவர் என்னைக்கோ மறந்திருப்பார். பின்னே பிரிக்காத ஒரு புக்கை நண்பர் RT முருகன்,பெங்களூர் சுப்பிரமணி இவங்கிட்டயிருந்து வாங்கி எடிட்டருக்கு இந்த வார ரிலீஸ் ன்னு அனுப்பினா போதும், உடனே அதிரடி அறிவிப்பு வரும்..!

      ஏப்ரலுக்கு முத்து மினி, ஈரோடுக்கு இரும்புமனிதன் ஆர்ச்சி..!
      [எப்படி நம்ம மாத்தியோசி..ஹீ..ஹீ..]

      Delete
    4. அதெப்பிடி..கேட்ட மாத்திரத்தில்,நினைத்த மாத்திரத்தில் உடனே ஒரு க்ளிக்!ஈரோட்டில் இரும்பு மனிதன்..!ஆகா ..நல்லாத்தான் இருக்கு..ஆனா...!?3

      Delete
  7. என் அபிமான இரு சூப்பர் ஸ்டார்களும் (டெக்ஸ், ஸ்பைடர் ) இணைந்து வரவிருப்தால் மனம் பரபரத்துக்கிடக்கிறது.

    ReplyDelete
  8. ஆஹா..நினைத்தேன் ..செயல் படுத்தி விட்டீர்கள் ..சார்..
    அட்டை படங்கள் டாலடிக்கின்றன...டtex ிரு வண்ணத்தில் கலக்க ..துப்பாக்கியை எடக்கலாமா.......இல்லை இல்லை.....எடுக்க வேண்டாமா என சோககவிதையாய் டெக்ஸ்...

    இனி மேலும் இதை விட சிறந்த அட்டை வந்து விடுமா என கேட்ட படி என் கரங்களில்...
    ஸ்பைடர கஒஞ்சம் அழகா வரைந்திருக்கலாமெ
    ்..ஆனாலும் அழகிய அட்டை

    ReplyDelete
  9. சார் ஒவ்வொரு மாதமும் புத்தகங்களின் விமர்சனங்களுக்கு மட்டும் என தனி லிங்க் கொடுத்து விட்டால் கதையை தாமதமாக படிப்போரும்...விமர்சனங்களை கதய படிக்காதலால் தாண்டி செல்வோரும் தாமதமாய்..சுவாரஷ்யமாய் பங்கு பெற ுதவுமே...

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : நிச்சயமாய் செய்திடுவோம் !!

      Delete
  10. நான் தான் பேர்கிர்ல்ஸ்..ச்சே..மாயாவி.சிவா...

    என்னோட கையில் இருக்கிற பெட்டிதான் அந்த பொக்கிஷம்,நான் கைபற்றியிருக்கிற பெட்டிக்குள்ள இருக்கிறதுக்குபேர்தான் காகித தங்கங்கள்..! இந்த காகித தங்கம் என்னை நேர விழாகோலம் பூண்டுள்ள வயோமிங்கின் க்ரின்ஸ்டோன் பால்ஸ் நகர கொண்டத்துல கொண்டு போய் விட்டிருக்கு,இந்த விழாவை பாக்கறதை விட, வேற ஒரு முக்கிய நபரோட இப்ப அடர்ந்த கானகபகுதியில போய்ட்டிருக்கேன். அந்த முக்கிய நபர் பேர் ரெட் டஸ்ட், ரெட் டஸ்ட் ஒரு அருமையான வேட்டைக்காரர். அவர் பொறிவைத்து முயல் பிடிக்கறதும்,அதை சமைக்கிற விதமும் ரொம்பவே ஆச்சரியமா இருக்கு. அவரோட பயணிச்சி இப்ப மாண்டனா பகுதியில் எல்லைக்கு வந்துட்டேன்..!தூரத்துல எதோ குதிரைகளோட குளம்பு சத்தம் கேட்குறதை பார்த்த அவர்ஒரு பெரிய சாகசத்தை இன்னும் சில நிமிடங்களில் சந்திக்கபோறார்ன்னு நினைக்கிறேன்..! அந்த சாகஸ அனுபவத்தை விரைவில் உங்களோடு பகிர்ந்துகிறேன்...

    டிஸ்கவரி சேனலுக்காக பேர்கிரில்ஸ்...ச்சே...சிவகாசி காமிக்ஸுக்காக மாயாவி.சிவா....

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டர் பேர் க்ரில்ஸ்....!
      அப்படியே சிட்டிக்குள்ள வந்து ரெண்டு ஸ்பைடர்களும் பாலத்து மேல சண்டை போட்டுக்கிட்டிருக்காங்க....!
      அதையும் கொஞ்சம் கவனியுங்க....!

      Delete
    2. மாயாவியாருக்கு ரெண்டு கரப்பான் பூச்சி..,நாலு கொழுத்த புழு பாா்சேல்...!!

      Delete
    3. பேர்ல்கிரில்ஸ் அய்யா.! வேட்டையாடியதை அழகா விவரித்து சொன்ணீங்க நல்லா மீம்ஸ் செய்யறீங்க.!

      Delete
  11. Dear editor,

    I am a huge fan of your comic books since many years but I have never opted for any annual subscriptions as then I would be forced to also buy and store books which I don’t prefer. Generally I buy books every month online but recently I am finding the courier charges to be almost 50% equal to the cost of the book. This month I added the march release books happily to the cart only to find that for books costing Rs. 230, I need to pay atleast Rs. 70 to have them couriered.

    Kindly analyse the logistics design of companies like flipkart,amazon or even big basket their courier charges are much lesser for a commodity value below Rs.300 unless it’s a rare item. ST courier in fact isn’t a good company. When I was out of town they cut the Minnum Maranam book with a heavy knife to find out whether the parcel could be looted.

    Please do give a thought on this issue.

    ReplyDelete
    Replies
    1. Anu : Flipkart ஆன்லைன் ஸ்டோரில் நமது இதழ்களையும் லிஸ்டிங் செய்தோம் தான் ; ஆனால் சமீபமாய் அவர்களது புத்தக விற்பனை பிரிவினில் கூரியர் கட்டணங்களை நாம் நிர்ணயம் செய்திடும் வசதியினை எடுத்துவிட்டார்கள். Free Shipping மாத்திரமே அங்கு தற்போது சாத்தியம் - புத்தகங்களைப் பொறுத்தவரை ...! விலைகூடுதலான இதழ்களை விற்கும் பொழுது அது ஒ.கே.வாகிடலாம் தான் ; ஆனால் ஐம்பது ரூபாய் விலைகளுக்கும் நாம் லிஸ்டிங் செய்கிறோம் ; ஆயிரம் ரூபாய்க்கும் லிஸ்டிங் செய்கிறோமெனும் பொழுது FREE SHIPPING என்ற ஸ்பீட் பிரேக்கரை தாண்டிட முடியவில்லை !

      தற்போது நாம் பயன்படுத்தி வரும் WORLDMART onlne platform இதழ்களின் எடைகளைக் கொண்டு ஷிப்பிங் கட்டணங்களை அதுவாகவே நிர்ணயம் செய்து விடுகிறது. So இது போன்ற சிக்கல்கள் தலைதூக்குவதைத் தவிர்க்க இயலவில்லை.

      சந்தாவின் சலுகை இந்தச் சிரமங்கள் இல்லாதது ; ஆனால் நீங்கள் சுட்டிக் காட்டுவது போல - "தேவையான இதழ்கள்".."தேவையற்றவை" என்று filter செய்திடும் வசதி இராது தான் !

      வரும் நாட்களில் "தேவையற்றவை" என்று எதுவுமே இல்லாதது போலொரு அட்டவணையை உருவாக்கப் பார்ப்போமே - சந்தா செலுத்திட சிந்திக்க அவசியங்களே இல்லா வகையில் !!

      Delete
  12. இம்மாத பார்சலை ஆவலுடன் வாங்கி பிரித்தேன் சார் ....
    உங்கள் சொற்படியே டெக்ஸ்ஸ்ஸ்ஸ் கதை மிக நீஈஈஈளம் தான் சார் ...
    ஊற்றெடுக்கும் குற்றாலத்தை ஒதுக்கி விட்டு பக்கங்களை புரட்டினால் அருமையான ஓவியங்கள் அசத்திவிட்டன...
    அதிலும் அந்த செவ்விந்தியர் முகங்கள் அருமை ....நீண்ட நாள் கழித்து மனநிறைவு வோடு படிக்கலாம் ....
    அட்டகாச அட்டை கமான்சே கலக்குது ....
    டெக்ஸ் பின்அட்டை 2ம் இடம் ....
    3வது கூர்மண்டையனின் முன் அட்டை ...
    பாவம் கிளிப்டன் அட்டையும் சரியில்லை ,உள்ளேயும் ஆளை அடிக்கும் ஆரஞ்சு மிட்டாய் குவியல் .....
    கமான்சே அட்டையை விட உள்பக்க ஓவியங்கள் இன்னும் ஒருபடி மேலே,ஸ்டன்னிங் .....
    கலரில் கமான்சே வுக்கும் ,காதல் இளவரசன் கிட்டுக்கும் நடுவே எதை எடுக்க என தடுமாற்றம்....

    ReplyDelete
  13. சார் ஆச்சரியங்கள் தொடர்கின்றன.... ாத்தூர் இ.ரவி விமர்சனங்கள் வருகிறதா...படித்து கொண்டிருக்கிறாரா (எங்க ஊர்காரர்) என நினைத்தான்...அவரின் அற்புத விமர்சனம் அவரும் படித்து கொண்டிருக்கிறார்...அவர் கேட்டத போல காரிகன்..கெர்பி...

    ReplyDelete
  14. நான்கு புத்தகங்கள் இருந்தாலும் வழக்கம் போல" வருகிறது "-விளம்பங்களே எதிர்பார்ப்பை எகிற வைக்கின்றன....
    மெகா சைசில் டெக்ஸின் -தலையில்லா போராளி- ,
    வின்ச்ன் கடன் தீர்க்கும் வேளை,
    எல்லாவற்றையும் மிஞ்சும் என் ஆல்டைம் பேவரைட்டில் ஒன்றான "கடத்தல் குமிழிகள் " என அடுத்த மாதம் அசத்தல் மாதம் .... இந்த பிரியாணிகள் போதாது என நினைத்தால் ,



    டைகரின் "என் பேர் டைகர் "-ம் ஏப்ரல் 15ல் தனிபார்சலாக ...அட அட டா ...
    அடுத்த மாதம் அடிதடி மாதம் தான்...
    லயன் காமிக்ஸ்ன் தற்போதைய டாப் 3நாயகர்கள் Tex,Tiger, Largo மோதும்-என்ற பேனர்தான் மனசிலே ஓடும் ....

    ReplyDelete
    Replies
    1. சிங்கத்தின் சிறுவயதில் -நஹி நஹி ... போராட்ட குழுவை பார்த்தால் சிப்பு சிப்பா வருது...

      Delete
    2. வெரி வெரி வெரி கிர்ர்ர் .....;-((

      Delete
    3. தலைவரே .!

      நான்கூட மூன்று புத்தகங்களையும் புரட்டோ புரட்டுன்னு புரட்டி பார்த்தேன் .சி.சி.வ.நஹி....

      நான் முதலில் ஹாட்லைன் படிப்பேன் இரண்டாவதாக சி.சி.வ. படிப்பேன். சி.சி.வ. படிக்கும்போது ஆர்ச்சியின் கோட்டை எந்திரத்தில் ஏறி எடிட்டருடன் ஒரு ரவுண்ட் வந்த உணர்வு ஏற்படும்.இதை தவிர வாழ்க்கை படிப்பினையும் எனக்கு ஒரு பாடம்.( உதாரணமாக :எடிட்டரின் தாய்வழி தாத்தா கற்றுத்தந்த கறாறாக கணக்கு பார்க்கும் பழக்கம் தொழிலில் எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் பனியன் தொழிலில் நஷ்டம் அடைந்ததுதான் ஞாபகம் வந்தது.

      Delete
    4. சி.வ ஓரு comicsல் இருக்கிறது

      Delete
  15. இந்த மாதத்து 4 இதழ்களில்
    No.1 TEX விதி போட்ட விடுகதை
    No.2 மான்சே சாத்தானின் உள்ளகையில்
    No.3 கர்னல் நில்..சிரி..திருடு!
    No.4 ஸ்பைடர் டாக்டர் டக்கர்
    இது எனது பார்வையில்

    ReplyDelete
  16. மதிய வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.

    ReplyDelete
  17. விமர்சனங்களுக்கு தனிப்பதிவு அருமையான யோசனை சார்.நேற்றுதான் நினைத்தேன் லோடு மோரில் எப்படி விமர்சனம் இடுவது என்று.

    ReplyDelete
  18. Sir Tex in our thalivan our sagaptham eppothu.ivory pathivilum Tex Patrick sollavum migaum suvarshyamaga irukirathu.

    ReplyDelete
  19. அனைவருக்கும் மாலை வணக்கங்கள்.

    ReplyDelete
  20. இம்மாம் பெரிய பதிவ எப்படி படிக்கிறதுன்னு ஒரே ரோசனையாக்கீது....

    ReplyDelete
    Replies
    1. என்னாலயும் தான் நண்பரே ...;-(

      Delete
    2. ரொம்ப கஷ்டம்தான்....!
      பொடியன் பில்லிக்கு கதை சொன்ன தாத்தாவை கூப்பிட்டு படிக்கச்சொல்வோமா....?

      Delete
  21. சாத்தானின் உள்ளங்கையில் ....

    அட்டைபடமே வித்தியாச படுத்துகிறது ...ஒரு வில்லனின் புகைப்படத்தை முன்னிலை படுத்தி நாயகனை ஒப்புக்கு கூட காட்டாத முதல் கதை இது தானா என்று தெரிய வில்லை ....ஆனால் அழகு .....

    அமைதியான நகரத்தை பிடிக்காமல் தம் நண்பர்களை விட்டு விலகும் டஸ்ட் ஒரு ஆச்சர்ய நாயகனே ....அமைதிக்கு ஏங்கி கொண்டு இருந்த நாயகன் இம்முறை அமைதியை சுமக்க விரும்பாமல் வேறு போக்கிடம் நாடி செல்கிறான் ...

    புது எல்லையை வந்தடைந்ததும் கதை டெக்ஸின் குதிரை போல பாய்ந்தோடி செல்கிறது ....இடையிடையே அழகான வசனங்களுடன் அற்புதமான சித்திரங்களுடன் டஸ்ட் அதகள படுத்துகிறார் ..
    ஓவியங்களை கூர்ந்து கவனித்து படிக்க வேண்டும் என்பது டெக்ஸ்டரின் சீட்டு கோபுரம் கட்டும் வித்தை மூலம் டஸ்ட் அவரின் திறமையை பகிர்ந்தவுடன் தான் புரிந்தது ...

    "சில விசயங்களை மறந்திட நாம் எத்தனை தான் முயற்சித்தாலும் அதனை நினைவூட்ட யாரேனும் இல்லாது போக மாட்டார்கள் "

    என டஸ்ட் சொல்வது சத்தியமான உண்மை ...படித்ததும் தெரிய வில்லை ...முடித்ததும் தெரிய வில்லை பரபர வென சென்று விட்டது ..சாத்தானின் உள்ளங்கையில் ...இதுவரை வந்த கமான்சே கதையில் இது முதலிடத்தை பிடித்து விட்டது எனில் மிகையல்ல ....சித்திரங்களோடு ஒன்றி படிக்கும் பொழுது டஸ்ட் ...டெக்ஸ்டர் ..அவர் மகள் என அவர்களுடனே குழுமி இருப்பது போல ஒரு உணர்வு ....

    அவர்கள் விடை பெற்றவுடன் மனதில் மகிழ்ச்சி எனினும் இவ்வளவு விரைவில் விடை பெற்று விட்டார்களே என்ற வருத்தமும் மேலோங்கியது ...

    மொத்ததில் முதலில் படித்த இந்த இதழ்

    அட்டகாஷ் .....

    அடுத்த இதழை படித்து விட்டு மீண்டும் வருகிறேன் ....

    ReplyDelete
    Replies
    1. உடனுக்குடன் சூடான பதிவு,சுடச்சுட விமர்சனம்.
      -உபயம் தாரை பரணி.

      Delete
    2. அட்டைபடமே வித்தியாச படுத்துகிறது ...ஒரு வில்லனின் புகைப்படத்தை முன்னிலை படுத்தி நாயகனை ஒப்புக்கு கூட காட்டாத முதல் கதை இது தானா என்று தெரிய வில்லை ....ஆனால் அழகு .....
      Tigers irumbukkai yethan

      Delete
  22. HELLO VIJAYAN SIR.PL OPEN WHATSAPP OR TELEGRAM PAGE

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. அது பற்றிய தகவல் ஏதும் இல்லை AT sir.....மினி காமிக்ஸ் பற்றி வலைக்கு அப்பால் உள்ளவர்கள் அறிய வாய்ப்புகள் இன்றும் வாகாக வரவில்லை போலும் ....

      Delete
  24. Sir trichy book fairla namaku stall iruka?

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக புத்தகம் இன்னும் வரல... கரூருக்கு மட்டும் எப்பவும் லேட்டாதான் வருமோ... பதிவுகளை படித்த பின் புத்தகம் கிடைக்காதது பெரிய ஏமாற்றமாக இருக்கிறது... சந்தா கட்டியும் புத்தகம் லேட்டாக கிடைப்பதால் அடுத்த வருடம் சந்தா கட்டுவதற்கு மறுபடியும் ஒரு முறை யோசனை செய்ய வேண்டும் போலுள்ளது..

    ReplyDelete
    Replies
    1. கரூர் சரவணன்..ஜி..புத்தகம் வந்து விட்டது!காலை ஒன்பது மணிக்கே புத்தகப் பாா்சலை பெற்றுக் கொண்டு விட்டேன்!அங்கே உங்களது பாா்சலையும் கண்டேன்!

      Delete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. காத்திருப்போம் விரைவில் நல்ல தகவல் வரும்.

      Delete
    2. நீங்களும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறீா்கள்..! பலனென்னவோ பூஜ்ஜியம் தான்..!

      Delete
    3. Rajendran A.T. : சார்...ஒவ்வொரு இதழின் திட்டமிடலின் பின்னேயும் நமது உழைப்புகள் போக - இதர சூழல்களின் பங்களிப்பும் நிறையவே உண்டு ! அவற்றினால் நேரும் சிற்சிறு மாற்றங்கள் நமது திட்டமிடல்களையும் பாதிக்கும்.

      ஏப்ரலில் சென்னையில் புத்தக விழா பற்றி அமைப்பாளர்கள் இன்னமும் ஒரு தீர்மானமான முடிவுக்கு வராத நிலையினில் - சந்தாவில் சேர்ந்திடாத இந்த முத்து மினி காமிக்ஸ் இதழ்களை அறிவிப்பதில் அவசரம் காட்டி நாம் என்ன சாதிக்கப் போகிறோம் ? தேர்தல் காரணமாய் விழா ஜூன் மாதத்துக்குச் செல்லவும் கூடுமென்ற பேச்சு அடிபடும் தருணத்தில் சற்றே பொறுமை காக்க நினைப்பது தவறில்லை தானே ?

      நிச்சயம் வரும் சார்..... அறிவிப்பும்...இதழ்களும் ! Please do wait !

      Delete
    4. Guna Karur : பூஜ்யமோ....நூறோ.....பதில் தரும் அவகாசத்தை எனக்குத் தாருங்களேன் ; மார்க் போடுவதை அதன் பின்னே வைத்துக் கொள்ளலாமே ? மௌனங்கள் எல்லா நேரங்களிலும் பதில்களில்லா காரணங்களினால் அல்லவே !

      Delete
    5. சில வினாக்களுக்கு மெளனத்தையே பதிலாக தருகிறீர்கள்..!அந்த இடத்தலே உங்கள் மனவோட்டங்களை ஒரு கோடு போட்டுக் காட்டினால் கூடப் போதும்..நாங்கள் சமாதானமாகிப் போவோம்..!அந்தக் கேள்விகள் அத்தோடு முடிந்து போகும்,..!

      Delete
    6. Guna karur : எல்லா நேரங்களிலும், எல்லா மனவோட்டங்களையும் நான் பகிர்ந்திடல் சாத்தியமாகுமென்று தோன்றுகிறதா நண்பரே ?

      Delete
    7. புாிகிறது சாா்..சில நேரங்களில் அடக்கி வாசிக்க மறந்து போகிறது..!ஆா்வக் கோளாறு தான்!!

      Delete
  28. நண்பர்களே,

    'சி.சி.வயதில்' இம்மாதமும் வெளியாகாததைக் கண்டித்து ஒரு நிஜமான போராட்டத்தை செயல்படுத்திடத் தேவை எழுந்துள்ளது. அதன்பொருட்டு ஒரு எளிமையான செயல்திட்டம் தயார் நிலையில் உள்ளது. போராட்டக்குழு அங்கத்தினர்கள் தங்களது ஆதரவை நல்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஒரு '+1'ஐ இங்கே பின்னூட்டமிட்டு உங்களது ஆதரவை உறுதிப்படுத்த வேண்டுகிறேன்!

    வரைவுத்திட்டம் இன்றிரவு தெரிவிக்கப்படும்!

    அட்வான்ஸ் நன்றிகள்!

    ReplyDelete
    Replies
    1. மாதம் 4வகையான ஜானர்கள் , இடையே சிறப்பிதழ்கள் ,மினி செட்கள் என ஆசிரியருக்கு வேலைப்பளு அதிகம் போல....
      சென்னையில் நேரில் ஆசிரியரை சந்தித்து விளக்கம் கேட்கும் வரை பொறுத்து பார்க்கலாமே நண்பர்களே!!!!....

      Delete
    2. +1

      முக்கிய குறிப்பு: கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு அப்புறம் போடுற முதல் +1 இதுங்கிறது தான் அந்த குறிப்பு. இது பதுங்கு குழி வீரர்களுக்காக இல்லிங்கோ.பாயும் பூனை இத்தாலி விஜய்க்காகங்கோ..!

      Delete
    3. டியர் விஜய்....!
      உங்களுக்காக ஒரு
      +1

      Delete
    4. நானும் திரும்பத் திரும்ப நெறயாவாட்டி ப்ளஸ் ஒன்னு..!

      Delete
    5. +1

      நான் இரண்டாவது மீள் வருகையின்போது.,பழைய இதழ்களை சுமார் 10 முறைக்கு மேல் சிவகாசிக்கு பணம் அனுப்பி புத்தகங்கள் பெற்றேன்.அதில் 5,6 ரூபாய் மிச்சம் வரும் .நான் சிறு தொகை என்பதால் கண்டுகொள்ளவில்லை.திடீரென்று ஒரு கடிதம் அதில் இராதகிருஷ்ணன் அண்ணாச்சி எழதியிருந்தார் இதுவரை நீங்கள் அணுப்பிய பணத்தின் மிச்சம் 87 ரூபாய் வரவு ஆகியுள்ளது இதை நீங்கள் விருப்பம்போல் புத்தகங்கள் வாங்கிக்கொளளலாம் என்றுகடிதம் எழதி அணுப்பியிருந்தார். பின் அந்த பணத்திற்க்கும் புத்தகங்கள் வாங்கிக்கொண்டேன்.! சிறு தொகையானலும் கணக்கு வைத்து திருப்பி ஒப்படைத்தது ஆச்சர்யத்தை கொடுத்தது.இதற்கு காரணம் தாய்வழி தாத்தாவின் கறாறாண கணக்கு நிர்வாகம்தான் காரணம் என்று சி.சி.வ.படித்தபோது தெரிந்துகொண்டேன். பழைய புத்தகங்களை புரட்டும்போது நினைவு அஞ்சலி படத்தில் அவரது புகைப்படைத்தை பார்க்கும்போது என் மனதில் அவர் மீது தனி மரியாதை வந்தது.!

      Delete
    6. ஆமாம் சார்...!
      சிறு தொகையானாலும் கணக்கு வைத்து நாம் மறந்திருந்தாலும் ஞாபகப்படுத்தி திருப்பி ஒப்படைத்திருப்பார்கள்.நேர்மையில் நம்பர் ஒன்.!

      Delete
    7. அப்பேர்பட்டவர்களிடமே "ஆட்டையை போடுகிறீர்களா " என ஒருவர் கேட்ட கொடுமையை எங்கே போய்ச்சொல்ல...?

      Delete
  29. நாளைக்கு தான் புக் வாங்கனும்

    ReplyDelete
  30. காலத்தின் சுழற்சிக்கு ஏற்ப நம்மை நவீனங்களின் வழி மாற்றிக் கொள்வது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
    ஒவ்வொரு பதிவுகளும் அதை உணர்த்துகிறது.

    ReplyDelete
  31. புக் வந்துவிட்டது விமர்சனங்கள் விரைவில்.

    ReplyDelete
  32. ஒருவழியாக புத்தகங்கள் மதியம் கிடைத்தது! Front officeல் சிறப்பாக பணிபுரிகின்றனர் ! Telephonic conversationல் மிக சரியாக பதிலளிகின்றனர் !பாராட்டுக்கள் !

    ReplyDelete
  33. காமன்சே இதழில் காமன்சே வரவில்லை!!!. சித்திரங்கள் super. தொடரும் இதழ்களில் இன்னும் விருவிருப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  34. ஸ்பைடா் அட்டையில் காமெடியாகத் தொிகிறான்..முகத்திலே அசரடிக்கும் ஆணவச் செருக்கும்,அந்த சிடுமூஞ்சியும் மிஸ்ஸிங்!! மீண்டும் ஒரு சொதப்பல் அட்டைப்படம்!

    ReplyDelete
    Replies
    1. அட என்னப்பா இப்படி சொல்லீட்டே..!
      ச்சும்மா புது மாப்பிள்ளை கணக்கா தலைவர் 'ஜம்'முனு இருகார்னு ஈனா வினா சொல்லியிருக்காரு ...!

      Delete
  35. குற்றச் சக்ரவா்த்தி கனம் குறைவாகத் தொிகிறான்..காகிதத்தில் கெட்டித் தன்மை ஒரு மாற்று குறைந்துள்ளது..! ஏனிந்த மாற்றம்..????

    ReplyDelete
    Replies
    1. //காகிதத்தில் கெட்டித் தன்மை ஒரு மாற்று குறைந்துள்ளது..! ஏனிந்த மாற்றம்..????//
      டெக்ஸும் தான். பேப்பர் தரம் பழைய அளவுக்கு இல்லை.

      Delete
    2. உண்மைதான் நண்பரே..!புத்தகங்களை கைககளில் தாங்கியவுடன் "பொசுக்" என்ற உணா்வே மேலோங்கியது..,சென்ற மாத இதழ்களில் இருந்த வசீகரமும்,கவா்ச்சியும் இந்த மாத இதழ்களில் நெல் முனையளவு கூட இல்லை..!

      Delete
    3. நான் சொல்வது கருப்பு-வெள்ளை இதழ்களை..!

      Delete
    4. அவ்ளோ சன்னமாவா இருக்கு.........துதுது.......!

      Delete
    5. @ கரூர் குணா

      நீங்க ரொம்பவும் சேர்த்து சொல்றிங்க..! காகித கெட்டி தன்மையில் குறைகூறும் அளவிற்கு அவ்வளவு வித்தியாசம் ஏதுமில்லை நண்பரே, படிப்பதில் எந்த குறையுமில்லை. அதுசரி இவ்வளவு நுட்பமாக கவனித்த நீங்க அந்த சின்ன குறைபாடு வரவேண்டிய காரணத்தை கவனித்தீர்களா காமிக்ஸ் பிரியரே..? அந்த கட்டாயம் ஏன் ஏற்பட்டதுன்னு கண்டுபிடிச்சிங்களா குணா..?

      Delete
    6. அதைக் கண்டு பிடத்தச் சொல்லத்தான் உங்களைப் போன்ற ஜாம்பவான்கள் இருக்கிறாா்களே..!நீங்களே சொல்லி விடுங்களேன்..!காரணம் தொிந்து கொள்ளத் தானே எனது அந்த வினா..?!

      Delete
    7. அப்புறம்..கதையிலோ,ஓவியத்திலோ,படிப்பதிலோ குறைபாடு உள்ளதென்று நான் சொல்லவே இல்லையே..? புத்தக பருமன் குறைந்ததற்கான காரணம் வினவியிருந்தேன் அவவளவே..!!

      Delete
    8. @ குணா கரூர்

      விடை ரொம்பவே எளிது குணா..! 100 ரூபாய் 'திகில் நகரில் டெக்ஸ்' மொத்தபக்கங்கள் 228. 'விதிபோட்ட விடுகதை' விலையும் அதே 100 ரூபாய் தான்,ஆனால் பக்கங்கள் கவனித்தீர்களா நண்பரே..? 20% அளவிற்கு கூடுதல், மொத்தபக்கங்கள் 268.

      ஒரு புத்தகம் 'பொசுக்' என தோன்றும் கைகளுக்கு....மறுபுத்தகம் 40 பக்க உழைப்பும் காகிதங்களும் கூடுதலாக அதே விலையில் 'புஷ்டியாய்' வந்திருப்பது, அதே கண்களுக்கு தெரியாதது ஏனோ...?????

      Delete
    9. நன்று..! ஸ்பைடா்..??

      Delete
    10. @ குணா கரூர்

      அதுதான் ஒரு கண்களுக்கு என சொல்லிவிட்டேனே..! நீங்க பாஸ்ஆவது பெரிசா..? பெயில் ஆவது பெரிசா..? ன்னு கேக்கறிங்க, சரி உங்கபாயிண்டுக்கே வர்றேன்.

      கொள்ளைகார மாயாவி
      ப்ளைட் 731
      பாம்பு தீவு
      டாக்டர் டக்கர்

      இந்த நாலுமே எடுத்து வெச்சிபாருங்க, சில விஷயங்கள் உங்களுக்கே புரியும் நண்பரே..!

      Delete
    11. விளக்கங்களுக்கு நன்றிகள்!நிறைகளே குறைகளாகத் தொிந்த என் கண்களுக்கு கண்ணாடி போடுவது அவசியம் என நினைக்கிறேன்!குறைகள் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பதிவிடவில்லை..ஏனோ எனக்கு அப்படித் தோன்றியது..!மன்னித்துக் கொள்ளுங்களேன்!இனி கவனமாக இருப்பேன்!!

      Delete
    12. This comment has been removed by the author.

      Delete
    13. Guna Karur & Friends : நண்பர்களே, சில நேரங்களில் உள்ளங்கையை முழுவதுமாய்த் திறந்து காட்டியே பழகிப்போவதில் சிக்கல்கள் இல்லாதில்லை தான் ! அவற்றுள் ஒன்றே தற்போதைய 'பேப்பர் பருமனாகயில்லை ' என்ற கேள்வி !

      நண்பர் மாயாவி.சிவா சுட்டிக் காட்டியுள்ளது போல இம்மாதத்து டெக்ஸ் வில்லரில் பக்கங்கள் கணிசமாகவே கூடுதல் என்பதால் அதனில் சென்ற முறை பயன்படுத்தியே அதே ரகக் காகிதத்தை எட்டிப் பிடிக்க முடியவில்லை ! ஆனால் ஸ்பைடர் கதைக்கு ஏன் பருமன் குறைவு ? என்ற கேள்விக்கு பதில் சொல்லி விடுகிறேனே...!

      முதல் பார்வைக்கு போன மாதத்து மறுபதிப்பும், இம்மாதத்து (ஸ்பைடர்) மறுபதிப்பும் கனத்தில் மாறுபட்டவையாகத் தோன்றக் கூடும் தான் ; ஆனால் எல்லா தருணங்களிலும் தோற்றங்கள் முழுக் கதைகளையும் சொல்வதில்லை என்பதற்கு இதுவும் கூடவொரு உதாரணமே !

      10 பிரதிகள் ஸ்பைடரையும் ; 10 பிரதிகள் "மஞ்சள் பூ மர்மம்" இதழ்களையும் துல்லியமாய் எடை போட்டுத் தான் பாருங்களேன் - ஒரு சுவாரஸ்யமான நிஜம் புரிந்திடும் - இரண்டுமே ஒரே எடை தானென்று ! Yes - சென்ற மாதம் பயன்படுத்திய காகிதத்தின் எடையும், இம்மாதக் காகிதத்தின் எடையும் ஒன்றே ; விலையும் ஒன்றே ! ஆனால் அது book பிரிண்டிங் என்ற ரக முரடான கூளில் (pulp ) தயாரிக்கப்பட்ட பேப்பர் ; தற்போது பயன்படுத்தியுள்ளதோ மழுமழுப்பான கூளில் தயாரான மேப்லித்தோ என்ற ரகம். முன்னது மொக்கையாய் ; விறைப்பாய்த் தோற்றம் தரும் ; பின்னது மிருதுவாய், குழைவாய் இருக்கும்.

      பைண்டிங் பணிகள் துவங்கும் பொழுது விறைப்பாய் நிற்கும் ரகக் காகிதங்களை மிஷினில் 32 பக்கங்களாக மடிக்கும் போது ஏகப்பட்ட சிரமங்களும், வேஸ்டும் நேர்வதால் எக்கச்சக்கமாய்க் கையைக் கடிக்கிறது. இந்தக் குழைவான தாளில் அந்தச் சிக்கலில்லை !

      சரி, இதற்கு முன்பான மாதங்களில் அந்த விறைப்பான பேப்பரை எவ்விதம் கையாண்டீர்களாம் ? என்ற கேள்வி மனதில் உதிக்கிறதா ? அதற்கும் பதிலைச் சொன்னால் போச்சு ! மடிக்கும் பொழுது காகிதங்களை அப்படியே முழுசாய் மடித்தால் 32 பக்கங்கள் கிடைக்கும். So ஒரு 128 பக்க புக்கிற்கு 4 முழுத் தாள்கள். ஆனால் இந்த 32 பக்க மடிப்பு சிக்கல் ஆகி வந்ததால் - முழுசாய் அச்சிட்டு - அதன் பின்னே ஒன்றுக்கு இரண்டாய் வெட்டி - 16 பக்கங்கள் கொண்ட துண்டுகளாய்க் கையால் மடித்து வந்தனர். இந்த முறையில் 128 பக்க புக்கிற்கு 8 துண்டுத் தாள்களை இணைத்தே ஒரு புக்காக்கிட முடியும். So பைண்டிங்கில் கட்டணங்கள் இரு மடங்காகத் தந்து வந்தோம் இதுவரையிலும் . அதுவும் சரி , நேர்ந்திடும் வேஸ்டுகளும் சரி - தாக்குப் பிடிக்க இயலவில்லை என்ற நிலையைத் தொட்டு விட்டதால் பேப்பர் ரகத்தினில் மாற்றம் செய்துள்ளோம். இது தான் பின்னணிக் கதை !

      So குறைந்த விலையிலான பேப்பருக்குள் தலைநுழைத்து கணிசமாய் நாம் மிச்சம் பிடிக்கும் எண்ணத்தில் இதனை செயல்படுத்திடவில்லை !

      Delete
    14. @ திரு விஜயன்

      ஸார்...பக்க அளவிலோ, எடை அளவிலோ எந்தவிதமான வித்தியாசமும் இல்லை, என்ன...

      எத்தனுக்கு எத்தன்
      இரட்ச குள்ளன்
      உறைபனி மர்மம்
      மஞ்சள் பூ மர்மம்

      இதெல்லாம் பார்க்க கொஞ்சம் புஷ்டியா இருக்கு,

      கொள்ளைகார மாயாவி
      ப்ளைட் 731
      பாம்பு தீவு
      டாக்டர் டக்கர்

      இதெல்லாம் பார்க்க சராசரியா இருக்கு அவ்வளவுதான்,மத்தபடி எந்த வித்தியாசமும் இல்லை. இதை புரியவைக்க ஏற்கனவே எடைபோட்டு ரெடிஆயிட்டேன். என்ன நம்ம 'ஸலூம்' வருவாருன்னு நினைச்சேன், நீங்களே வந்துட்டிங்க...நண்பர்களே இதுக்காக மஞ்சள் பூ மர்மம் பத்து புக்ஸ் வாங்கி சிரமபடாதிங்க, பிடிங்க...இங்கே'கிளிக்'

      Delete
    15. எடிட்டா் சாா்! ஒரு கணிதப் பாடமே நடத்திவிட்டீா்கள்..!நன்றி! மாயாவியாரே என் மீது ஏதும் கோபம் இல்லை தானே..!

      Delete
    16. குணா...உங்கள் மீது நான் எதற்கு கோபட வேண்டும்..??? இதை உங்களிடம் கேட்க வேண்டும் என்று எனக்கு தோன்றவேயில்லை பாருங்கள்..! ஏன் தெரியுமா சந்தேகம் ஒரு பொதுசொத்து,நாளை நானும் விடை தேடும் கேள்வியை இங்கு வைப்பேன். நீங்கள் எனக்கு பதில் சொல்வீர்கள் நண்பரே..! கோபப்படுவது என்னளவில் ஒரு உயிர் கொல்லி..!மற்றவை நேரில்..!!

      Delete
    17. நன்றி மாயாவியாரே!(நிம்மதிப் பெரு மூச்சு!)

      Delete
    18. கோபப்படுவது என்னளவில் ஒரு உயிர் கொல்லி சபாஷ் மாயாவி சிவா அருமையான பதில்

      Delete
    19. //விடை ரொம்பவே எளிது குணா..! 100 ரூபாய் 'திகில் நகரில் டெக்ஸ்' மொத்தபக்கங்கள் 228. 'விதிபோட்ட விடுகதை' விலையும் அதே 100 ரூபாய் தான்,ஆனால் பக்கங்கள் கவனித்தீர்களா நண்பரே..? 20% அளவிற்கு கூடுதல், மொத்தபக்கங்கள் 268.

      ஒரு புத்தகம் 'பொசுக்' என தோன்றும் கைகளுக்கு....மறுபுத்தகம் 40 பக்க உழைப்பும் காகிதங்களும் கூடுதலாக அதே விலையில் 'புஷ்டியாய்' வந்திருப்பது, அதே கண்களுக்கு தெரியாதது ஏனோ...?????//
      எனது ஆசை இன்னும் சற்று விலையை கூட்டியிருந்தாலும் எனக்கு ஓகே தான்.
      100 என்பது 120 ஆகியிருக்கலாம். சித்திரத்தரம் அற்புதமாக இருக்க கதையும் அதனுடன் போட்டி போட பேப்பர் குழைவான தன்மை சற்று வித்யாசம் காண்பித்த்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். எடி &மாயாவி சார்ஸ்.
      நாம் புத்தகத்தரத்தினில் பல மடங்குகள் உயர்ந்துள்ளோம் என்பது தான் உண்மை.
      மற்றபடி குறை கூற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அறவே இல்லை

      Delete
    20. @காமிக்ஸ் பிரியரே

      புத்தக அளவுக்காக:
      புத்தகஅளவை குறிப்பிட்ட அளவில் மாற்றவேண்டுமென்பதற்காக தலைவாங்கி குரங்கு மறுபதிப்பில் படங்களின் அகலத்தை குறைத்து உயரத்தை உயர்த்தி நீட்டப்பட்டது.

      புத்தக பக்கங்களுக்காக:
      புத்தகபக்கங்களை குறிப்பிட்ட அளவில் முடிக்கவேண்டுமேன்பதற்காக கார்சனில் கடந்த காலம் படங்களின் உயரத்தை குறைத்து,அகலத்தை மேலும் அகலமாக்கி நீட்டப்பட்டது.
      அதேபோல் குறிப்பிட்ட பக்கஅளவில் முடிக்க நட்புக்கு நிறமில்லை..! பாதிகதையே கத்தி போடப்பட்டது. கமான்சே மூன்றாம் பகுதி 'ஓநாய் கணவாய்' சில பக்கங்கள் கத்தி போடப்பட்டது.

      இதுபோல் கதையை குறைக்கும் கத்திரிபோட்டாமல், படங்களை நீட்டி கெடுக்காமல், 40 பக்கங்களுக்கு விலையும் கூட்டாமல், முன்பக்க மை பின்பக்கம் தெரியாத, உறுத்தல் ஏற்ப்படாத சற்றுகனம் குறைந்த காகிதத்தை தேர்ந்தெடுத்து [என்னதான் சற்றுகனம் குறைத்தாலும் செலவில் நிச்சயம் துண்டு விழுந்திருக்கும்] கச்சிதமாக முடித்த அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதே என் ஆதங்கம் மற்றபடி... அவர் ஏதும் கூட்டல் கழித்தல் செய்திருந்தால் நிச்சயம் நானே அதை சர்வதேச பிரச்சினையாக ஐ.நா.வரை கொண்டு சென்றிருப்பேன்.

      காமிக்ஸ் பிரியரே நீங்களும் குணாவும் இதை பற்றி கேள்வி வைக்காமல் இருந்திருந்தால் பலருக்கும் உண்மை நிலவரம் தெரியாமலேயே புதைந்து போயிருக்கும். இது குறையல்ல, Mr.விஜயன் போட்ட விடுகதை..!

      இதே நாற்பது பக்கம் சுவாக ஆகியிருந்தால் 1000 கமெண்ட்ஸ் தாண்டி Load More போய் எடியின் பட்டாபட்டி கிழிந்திருக்காது. ஆப்ரேஷன் இ.பி.பாங்கி போராட்டத்துக்கெல்லாம் 'ஓ' போடும் ஒரு நண்பர்கள் கூட, ஒருவரி திரு விஜயன் அவர்களை உற்சாகபடுத்தி ஒரு சின்ன ஸல்யூட் கூட வைக்காதது ஏனோ..???

      பணம் தாண்டி செலவு கையை கடித்ததை காட்டிகொள்ளாமல், படைப்பை கொடுத்தற்காக எடிட்டருக்கு ஒரு 'ஓ' போடுங்க நண்பர்களே...ப்ளிஸ்.!!!

      Delete
    21. காமிக்ஸ் வெளியிடுவது பெரிய லாபகரமான தொழில் அல்ல என மற்றவர்கள் ஒதுங்கியிருக்கும் போது
      நம் எடிட்டர் எனது உயிரான காமிக்ஸை வெளியிடுவதே ஒரு தவம்.
      அதில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதை மற்றவர்கள் அறிய ஒரு விரிவான மேக்கிங் ஆப்
      கொடுத்த மாயாவிஜிக்கு என் பாராட்டுக்கள்.

      சிங்கத்தின் சிறுவயதில் அடிக்கடி பாரின் டிரிப் போகும் தொழிலதிபராக மட்டுமே நினைத்த நம் எடிட்டரிடம்
      ஒரு லார்கோவின்ச், ஒரு கேப்டன் டைகர், ஒரு சி.ஐ.டி. ராபின். உள்ளே உள்ளார்கள் போலும். ;-)

      எடிட்டர் சார். இவ்வளவு விஷயங்களையும் எப்படி மேனேஜ் செய்கிறீர்கள் சார்?

      Delete
  36. தோா்கல்..? ஏனிந்த பந்தயக்குதிரையை இன்னும் பதுங்கு தளத்திலேயே வைத்துள்ளீா்கள்..?! சந்தா இஸட் என்ற வழித்தடத்தில் இந்தப் பந்தயக் குதிரையை தனியனாக ஓட விடுங்களேன்! எப்படியும் இதற்கு பதில் கிட்டப்போவதில்லை..இருந்தாலும் கேட்டுத்தான் வைப்போமே..!

    ReplyDelete
    Replies
    1. ஃபேன்டஸிக்கு ஸ்பைடரும் ஆர்ச்சியுமாய் ரசித்த எங்களை புதுமையான மாயாலோகத்தை காட்டியவனல்லவா....?
      விரைந்து புரவியிலேறி வா தோர்கல்....!

      Delete
    2. Guna Karur : நண்பரே, ஒற்றை நாளில் அத்தனை ரோமாபுரியும் கட்டப்பட்டதல்ல...! எங்கள் தரப்பின் சாத்தியங்கள் ; சந்தர்ப்பங்கள் என பலதரப்பட்ட விஷயங்களைக் கருத்தில் கொள்ளாமல் அறிவிப்புகளை அள்ளிப் பறக்க விடும் வயதிலோ, நிலையிலோ நானில்லை ! இது தேர்தல் காலம் தான் - அதற்காக அவசரமாய் வாக்குறுதிகளை வழங்கிடும் அணியில் நாமும் ஐக்கியமாகிடல் தேவையா - என்ன ?

      Thorgal வருவார் - சரியான வேளையினில் !

      Delete
    3. டியர் சார்...!
      இரத்தப்படலம் எனும் மெகா ப்ராஜெக்ட்டுக்கே உங்கள் தரப்பின்சாத்தியங்கள்,சந்தர்ப்பங்கள் எல்லாம் கை தூக்கி தயாராய் நிற்கின்ற போது தோர்கலுக்கு(சந்தா இஸட் ) என்ற குழப்பத்தில் கேட்கப்பட்ட கேள்வி குணாவினுடையது.
      \\தோர்கல் வருவார் சரியான வேளையினில்//

      போன முறை மாதிரியே இம்முறையும் வருடக்கடைசியில் ந்து கலக்குவார் என்று சொல்கிறீர்கள்...! சந்தோஷம்...!

      Delete
    4. "என் பெயர் டைகர" முன்பதிவுகளுக்கு முதலில் உங்களிடம் அந்த இதழினை ஒப்படைத்து விடுகிறேனே - புதிதாய் எதனுள்ளும் இறங்கிடும் முன்பாக ?

      இது இன்னமும் வெளிவந்திருக்கா இதழ் என்பதைக் கவனிக்கத் தவறிய நிலையில் -ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு 'புக்கை அனுப்பாமல் ஆட்டையைப் போடுகிறீர்களா ? ' என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் ரேஞ்சுக்கு கேள்விகள் கேட்டுள்ளார் வாசகர் ஒருவர் ! So இழுத்துக் கொண்டே செல்லும் அந்த இதழை நிறைவு செய்யாது புதுசாய் அறிவிப்புகள் ; வசூல்கள் எனச் செய்திட மனம் ஒப்பவில்லை !

      Delete
    5. \\\புக்கை அனுப்பாமல் ஆட்டையை போடுகிறீர்களா.?///
      ஆண்டவா...! இப்படிக்கூடவா ,கொஞ்சமும் நாகரீகமின்றி கேட்பார்கள்?
      மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது சார்...!
      கம் பேக் ஸ்பெஷல் வெளிவந்த சமயம்..
      ஒரு போஸ்ட் கார்ட் நமது அலுவலகத்தில் இருந்து வந்தது.உங்கள் பணம் ரூ.64 இன்னும் வரவாக உள்ளது என்று.ஆனால் எனக்கோ பணம் இருப்பதே தெரியாது .அது போலவே ஜெரோமின் இரு பாக கதைகளில் முதல் புக்கை மட்டும் அனுப்பி இருந்தார்கள்.போன் செய்து இரண்டாவது புக்கை ஏன் அனுப்பவில்லை என கேட்டதற்கு "சார் உங்கள் கணக்கில் பத்து ரூயாய்தான் இருந்தது அதனால்தான் ஒரு புக்கை மட்டும் அனுப்பினோம் என்றார்கள்.ஆச்சர்யமாக இருந்தது.நம் நிறுவனத்தை நினைத்து பெருமையாகவும் இருந்தது.
      என் பெயர் டைகர் அறிவித்ததில் இருந்தே பல கசப்பான அனுபவங்களை சந்தித்து வருகிறீரகள் என்பதை நினைத்தால் மிகவும் சங்கடமாக இருக்கிறது.

      Delete
    6. தோா்கல் வருவாா்.. சரியான வேளையில்..!இந்த பதில் போதும்..!

      Delete
    7. @ திரு விஜயன்

      ஆன்லைன் மார்கெட்டில் ஒரு குறை என்னெவென்றால், பணம் கட்டினால் காட்டாயம் வரும்... தவறினா வாராமலும் போகும்... என ஒரு சின்ன ரிஸ்க் எடுத்துதான் எந்த ஒரு பொருளையும் வாங்க முன்பணம்கட்டுகிறார்கள். இது ஒரு நம்பிக்கையில் சூடாக நடக்கும் நவீன வியாபார மேடை..! அங்கு நம்பகத்தன்மை குறையும் விதத்தில் ஒரு சிறு தகவல் குறைந்தாலும் பணம் கட்டியவன் வார்த்தைகளில் படையெடுக்க தயாராகிவிடுகிறான்.

      ஆன்லைனில் மார்கெட்டிங் செய்ததில் நம்பக்கம் சொல்லவேண்டிய ஒரு சின்ன தகவல் சொல்லாமல் விடுபட்டுள்ளது. அது எந்த தேதியில் அந்த *Advanced Booking: En Peyar Tiger - Color (Within TN) புத்தகம் கிடைக்கும் என்ற விவரம் சொல்லபடவில்லை.

      தயவுசெய்து கிடைக்கும் தேதியை அப்டேட் செய்யுங்கள் ஸார்..!

      Delete
  37. விதிபோட்ட விடுகதை நல்ல விறுவிறுப்புடன் சென்றது.டெக்ஸும் கிட் டும் நேரிடையாக மோதும் காட்சியில் மந்திர மண்டலம் மாதிரி கடுப்பேற்றும் என்று நினைத்தேன்.நல்லவேளை சூப்பராக இருந்தது.லிட்டில் மூனை கொன்றது வருத்தம்.இதுவரை டெக்ஸ் கதையில் லிட்டில் மூனைப்போல் அழகான ஓவியங்கள் பெண் யாரும் வரையவில்லை.அட்டகாசமான கதை.!

    ReplyDelete
    Replies
    1. எம்.வி.சாா்..இளவரசியை விடவா அழகு..!

      Delete
    2. குணா சார்.! இளவரசிக்கு இணையாகாதுதான் சார்.

      அது என்னவோ தெரியலை... ,தற்காலத்தில் மாடஸ்டி மாதிரி அழகும் அறிவும் துணிச்சலும் கொண்ட பெண்கள் கட்டியவன் உயிரை பிடுங்கி எடுப்பதை கண்டு சோர்வடைந்த சமயத்தில் தன் மனம் கவரந்தவனுக்காக உயிரையே கொடுக்கும் அழகு அன்பு தியாகம் கொண்ட கதாபாத்திரமான லிட்டில் மூன் பற்றிய நினைவு நேற்று முழுக்க இருந்தது.!

      Delete
  38. பல காத தூரம் பயணப்பட்டு வந்ததைப் போலவே தொியவில்லை..! புதுப் பெண் போலவே ஜொலிக்கிறாள்..!இந்தமாத பாா்சல்..!!

    ReplyDelete
    Replies
    1. ஒன்றன்கீழ் ஒன்றாய் எழுதியிருந்தால் இதுவொரு ஹைக்கூ! ( அடடே... ஆச்சர்யக்குறி!)

      Delete
  39. இனிய இரவு வணக்கங்கள் எடிட்டர் சார்!!!
    இனிய இரவு வணக்கங்கள் நண்பர்களே!!!

    ReplyDelete
  40. @எடிட்டர் சார்:
    இன்று எனக்கும் புக் வந்துடுச்சே :-)
    'விதி போட்ட விடுகதை' & 'சாத்தானின் உள்ளங்கையில்' அட்டைப்படங்கள் இரண்டயையும் நேரில் பார்க்கும்பொழுது கொள்ளை அழகு சார்!!!

    'தானைத்தலைவர்' ஸ்பைடர் அவர்களைத் தான் (அட்டைப்படத்தில்) காமெடி செய்து விட்டீர்கள்...

    அப்புறம் சார், இன்றி கூரியரில் எனக்கு வந்த டெக்ஸ் புக்கில் 140 ஆம் பக்கம் முதல் 150 ஆம் பக்கம் வரை உள் பக்கம் மடங்கி கசங்கி வந்துள்ளது சார்...

    இதனால் பெரிய அளவு பாதிப்பு இல்லை தான்...ஆனால் ஆசை ஆசையாக புத்தகம் வாங்கிப் பார்க்கும்போது இப்படி பக்கங்கள் கசங்கி வருவது மனதுக்கு சங்கடம் தருகிறது சார்...கொஞ்சம் கவனம் வையுங்கள் சார் ப்ளீஸ்!!!

    ReplyDelete
    Replies
    1. Sathiya : நாளை வேறொரு பிரதி அனுப்பிடுவோம் சத்யா ! சாரி !!

      Delete
    2. @எடி சார்:
      உங்களுக்குத் தெரியாமல் நடந்த இச்சிறு தவறுக்கெல்லாம் எதற்கு சார் சாரி...

      நீங்கள் இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கெல்லாம் 'சாரி' சொல்வதாயின் இம்மாதிரி விஷயங்கள் இனி மெயிலில் மட்டும சார்...

      And புத்தகம் அனுப்ப வேண்டாம் சார்...
      நான் இன்னொரு செட் ஆன்லைனில் ஆர்டர் செய்து விட்டேன் சார்...

      Delete
  41. @எடி சார்:
    என்ன சார் ஒரே பதிவா போட்டு தாக்குறீங்களே சார்..ஆஹா அருமை அருமை :-):-):-)

    நான்கு வருடங்களுக்கு ஒரு முறை வரும் என்பதால் இதுவொரு 'Leap Year' பதிவு சார் :-):-):-)

    ReplyDelete

  42. புறக்கணிப்புப் போராட்ட அறைகூவல்

    வழக்கம்போலவே இந்த மாதமும் 'சி.சி.வயதில்' தொடருக்கு தயவுதாட்சண்யமின்றி கல்த்தா கொடுக்கப்பட்டிருப்பதாலும், எதிர்தரப்பிலிருந்து இதுகுறித்து தகுந்த விளக்கம் ஏதும் அளிக்கப்படாததாலும் இந்தப் போராட்டக்குழு கடுமையான அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஒருசேர சந்தித்துள்ளது!

    இதையடுத்து போராட்டக்குழு உறுப்பினர்கள் சார்பாக, தலீவரின் மானசீக நல்லாசியுடன் ' புறக்கணிப்புப் போராட்டம்' செயல்படுத்தப்படுகிறது!

    செயல்திட்ட வரைவு:

    * 'சி.சி.வயதில்' தொடர் மீண்டும் தொடரும்வரை மாதம் ஒரு புத்தகத்தைப் படிக்காமல் புறக்கணிக்க வேண்டியது

    * புறக்கணிக்கவேண்டிய அந்தப் புத்தகத்தை தேர்வுசெய்ய இங்கி-பிங்கி-பாங்க்கி முறை அல்லது அதற்கு ஈடான ஏதேனும் ஒரு முறையைக் கடைபிடிக்கவேண்டியது

    * இம்மாத புத்தகங்களில் ஒன்றிரண்டை ஏற்கனவே படித்துவிட்ட நண்பர்கள் மீதமுள்ள புத்தகங்களுக்கு மேற்கூறிய வழிமுறையை கடைபிடிக்கவேண்டியது

    * போராட்டம் வெற்றியடைந்த பிறகு, அதுவரை படிக்காத புத்தகங்களை எடுத்துவைத்து வெறிபிடித்தாற்போல் படிக்கவேண்டியது



    கண்ணெதிரே காமிக்ஸ் இருந்தும் கடுகளவும் அதைப் பொருட்படுத்திடா நம் மனவுறுதியை 'எதிரணிக்கு' உணர்த்திடுவோம் தோழர்களே!

    ஒன்றுபட்ட போராட்டம்
    ஒன்றே நமது துயரோட்டும்!

    ReplyDelete
    Replies
    1. ஏங்க இதெல்லாம் நடக்கிற காரியமா?
      போராட்டத்துல கலந்துகிட்டாச்சு !
      வேற வழி..?
      வெற்றி வேல்.....!
      வீரவேல்....!

      Delete
    2. ஏம்ப்பா, ஈரோட்காா் சாியாத்தான் பேசறாரா..? பந்தியில குந்த வச்சிட்டு இலையையே பாா்த்துகிட்டு இருக்க சொல்றாரே..?

      Delete
    3. புறக்கணிப்புப் போராட்ட அறைகூவல்...
      செயல்திட்ட வரைவு...
      ஒன்றுபட்ட போராட்டம்...
      ஒன்றே நமது துயரோட்டும்...


      செல்ப்பி மைண்டுவாய்ஸ்: பேனர் பார்த்தா இது ஏதோ ஈழதமிழர் பிரச்சனை போல, நாம தாண்டிபோய்டுவோமே...இன்னும் மூனு புக்ஸ் வேற படிக்கணும்.

      Delete
    4. விஜய ஷேங்கர் & ஜேடர் பாளையத்தார்.!

      பிரியாணி முன்பு பசியோடு உட்கார்ந்து உண்ணாவிரதம் இருப்பதைப்போல...........ஒ.கே.ஒ.கே....

      Delete
    5. @ FRIENDS : அட ..ஏப்ரல் மாதத்து இங்கி-பின்கி-பாங்கி சுவாரஸ்யமாக இருக்கும் போலிருக்குதே..!!

      ஒரு லார்கோ ; ஒரு மெகா டெக்ஸ் ; ஒரு சிக் பில் ; ஒரு மாயாவி !!

      அப்புறம் காத்திருக்கும் மாதங்களில் ரின்டின்கேன் சோலோ சாகசம் ; அப்புறம் லக்கி லுக் கதை முழுக்க கலக்கிடும் சாகசம்...அப்புறம் டாக்டர் டெக்ஸ்....அப்புறம்...அப்புறம்....!

      அப்புறம்..."மன்னன்" படத்தில் தலைவரும்..நமது கவுண்டரும் உண்ணாவிரதப் பந்தல் முன்னே அமர்ந்து கொண்டு நண்டுக் குழம்பை வாசம் பிடிக்கும் காட்சி எனக்கு ஞாபகத்துக்கு வந்ததுக்கும், இதுக்கும் சத்தியமா எந்தச் சம்பந்தமும் கிடையாது மகா ஜனங்களே !!

      Delete


    6. " மீன் கருவாடு ஆகலாம் , ஆனால் கருவாடு மீன் ஆகாது.! "

      Delete
    7. @ எடிட்டர்.... ஹா...ஹா..ஹா..

      @mvசார்...ஹா..ஹா.."இவங்க என்னை விட மாட்டேங்கறாப்பா"அப்டினு முடிச்சிடவேண்டியதுதானே...:-)

      Delete
  43. விதி போட்ட விடுகதை அருமை.
    + சித்திரம்,விறுவிறுப்பு,அட்டைபடம்
    -எதிர்பார்த்தபடி முடிவு

    அப்புறம்
    அட்டையில் கிட் செவ்விந்திய உடையிலும்,பின்னணியில் செவ்விந்தியர் கூடாரங்கள் இல்லாமலும் இருந்திருந்தால் இன்னும் அழகாய், பொருத்தமாய் இருந்திருக்கும் எ.எ.க

    ReplyDelete
  44. டாக்டர் டக்கர் :

    அட்டைப்படம் செம. அட்டையிலுள்ள பின்னணி வர்ணக்கலவை அதைவிட செம. உள்ள நச் சென்று இருக்கும் அழகான சித்திரங்கள் அதைவில் செம. ஸ்பைடர் வாலா பறக்கும் தட்டில் ஹெலி-காருடன் வந்திறங்கும் ஓபனிங் அதைவிட செம. சும்மா 2 பக்கங்கள் படிக்கலாமென்று ஆரம்பித்து, முதல் அத்தியாயம் முடியும் 28 – ம் பக்கத்தில் வந்த போதுதான் உறைத்தது, ஹாஹா கதையைப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை. வலுகட்டாயமாக ப்ரேக் போட்டு நிறுத்துவதற்குள் போதும், போதுமென்று ஆகிவிட்டது. மொத்தத்தில் செமையோ செம. கதையாசிரியர் மற்றும் ஓவியரின் பெயர்களை அட்டையில் கிரெடிட் செய்திருக்கலாம்.

    க்ளிப்டன்:

    2 கதைகள் அடங்கிய ஒரே தொகுப்பு. சித்திரங்களும், வர்ணமும் அழகூட்டுகின்றன.

    காமன்சே / ரெட் டஸ்ட்:

    மீண்டுமொருமுறை ஹெர்மன் கைவண்ணத்தில் வில்லனை பிரதானமாக கொண்ட அட்டைப்படம் சரி, உள்ளே உள்ள சித்திரங்களும் சரி, அட்டகாசம் செய்கின்றன. மாயாஜாலம் புரியும் ஹெர்மன் – ன் விரல்களை எண்ணி பிரமிக்காமல் இருக்க முடியவில்லை. He has done his job awesome as always.

    டெக்ஸ்:
    அட்டைப்படம் stunning. 110, 220, 330 போன்ற பக்கங்களில் டெக்ஸ் கதைகளை படித்தாயிற்று!. முதல் முறையாக இப்போது இந்த புதுமையான 262 பக்க டெக்ஸ் கதை. கிளாடியோ + கிளாடியோ இணையும் புதுமை,. டெக்ஸ் அண்ட் கிட் மோதும் புதுமை.
    (எப்போதும் டெக்ஸ் கதைகள் 220 பக்கங்களிலோ அல்லது 330 பக்கங்களிலோ இருக்கும். ஆனா, இந்த கதை 262 பக்கங்கள் எனும் போது 220 பக்கக் கதையை இழுத்து 262 பக்கத்திற்கு கொண்டு வந்துவிட்டார்களே என்று சந்தோசப் படுவதா, அல்லது 330 பக்கக் கதையை இப்படி 262 பக்கத்திலேயே முடித்துவிட்டார்களே என் வருத்தப்படுவதா.? ஒரே confusion...)

    ReplyDelete
    Replies
    1. அருமையான விமர்சனங்கள் நண்பரே...!
      அதிலும தானைத்தலைவனின் கதையைப்பற்றிய விமர்சனம் செமையோ செம..!

      Delete
    2. @ மொய்தீன் MH

      நாலுமே படிச்சாசா..??? அவுக், ஆனால் உங்களிடம் ஒரு வருத்தம் கலந்த வேண்டுகோள்..! நீங்க இப்படி நாலு புக்கையும் ஒரு சாட்ல பொசுக்குன்னு முடிச்சது எனக்கு வருத்தமே.நீங்கள் கதை படித்துவிட்டு விமர்சிக்கும் கண்ணோட்டம், உண்மையில் பலரை படிக்க தூண்டும் விஷயம் மட்டுமல்ல உங்கள் கண்ணில்படும் சில விஷயபகிர்வுகள் 'அட ஆமாயில்ல' என திரும்ப ஒரு முறை எடுத்துபார்க்கவைக்கிறது.

      அன்புகூர்ந்து கடந்தமுறை செய்ததுபோலவே தனித்தனியா ஒவ்வொரு கதைக்கும் விமர்சியுங்கள் மொய்தீன்..ப்ளிஸ்..!!

      Delete
    3. @ மாயாவி

      மொய்தீன் அவர்கள் கதையை விமர்ச்சிக்கவில்லை. புத்தகத்தை வாங்கிப் புரட்டியதும் தனக்கு ஏற்பட்ட உணர்வுகளையே இப்போது எழுதியிருக்கிறார்.

      விரிவான விமர்சனம் விரைவில் வரக்கூடும். காத்திருப்போம்....

      Delete
    4. @ இத்தாலிகார்

      ஹை..! நல்ல செய்தி சொன்னிங்க, அதுக்கு காத்திருக்கேன்..அவுக்..அவுக்..!!!

      Delete
    5. @ நண்பர்களே! நன்றி

      @ ஈ. வி. - சரியாக கணித்த உங்களுக்கு ஒரு சிங்கள் டீ அண்ட் ஒரு பன் பார்சல்...
      @ மாயாவி - ஒரே நாளில் நான்கு கதைகளா...? அதையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் அனுபவிக்க கூடாது, பொறுமையா keep & read பண்ணனும். அதான், த்ரில்லே!

      Delete
  45. கிளிப்டன் இரண்டு கதையும் செம காமெடி. அதுவும் கதையில் வரும் ஒவ்வொரு character பெயர் வைத்த விதம் அதுவே ஓரு கமெடி பட்டாசு.மொழிபெயர்ப்பு வேலை பெண்டு எடுப்பதாக ஆசிரியர் ஓரு பதிவில் கூறி இருந்தார். நல்ல சிரன கதையோட்டம்.நல்ல மொழிபெயர்ப்பு.

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ///. உங்களது நேர்மையை புரிந்து உங்களுடன் என்றும் பயணிக்கும் தோழர்களின் சார்பாக நீங்கள் பயணிக்கும் தூரம்வரை பின்தொடர்ந்து வர நாங்களிருக்கிறோம் சார். இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கிறது. வாருங்கள் சந்தோஷமாக பயணிப்போம் நம் தோழர்களுடன் ////

      ஆத்மார்த்தமான வரிகளுக்கு 1000 லைக்ஸ்! __/\__

      Delete
  47. This comment has been removed by the author.

    ReplyDelete
  48. செயலாளர் அவர்களே நானும் ஒரு ப்ளஸ் ஒன் போட்டு கொள்கிறேனே ....சி.சி .வயதிற்காக ...


    மாயாஜீ ..நீங்கள் பதுங்கு குழி வீரர்களுக்காக போட்டாலும் சரி ....பாயும் புலிக்காக போட்டாலும் சரி ப்ளஸ் ப்ளஸ் ஆகதான் இருக்குமே தவிர மைனஸ் ஆக போகாது ..எனவே நோ ...ப்ராபளம் ....;-)

    ReplyDelete
  49. செயலாளர் அவர்களுக்கு ...

    உங்கள் போராடத்தை மனம் உவந்து ஏற்று கொள்வதால் அடுத்த சிங்கத்தின் சிறு வயதில் படிக்கும் வரை நான்கு புத்தகங்களில் ஒன்றை உங்கள் கோரிக்கையின் படி படிக்க போவதில்லை ...பயணத்தின் போது படிக்க வைத்திருக்கும் மறுபதிப்பு இதழ்கள் இனி என்னை போலவே பதுங்கி கொண்டு இருக்கும் அடுத்த சி.சி .வயதிற்காக ...அடுத்த மாதமும் வர வில்லை எனில் பதுங்கு குழியில் அடுத்த மறுபதிப்பு இதழுமே பதுங்கி கொள்ளும் என உறுதி அளிக்கிறேன் ....

    ReplyDelete
    Replies
    1. தலைவரே.! நானும் மர்மமனிதன் மார்ட்டின் படிக்காமல் இருக்கபபோறேன்.!என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன்.

      Delete
    2. மடிப்பாக்கம் சார் ...;-)))

      Delete
  50. கர்னல் கிளிம்ப்டன் அட்டைபடம் பழைய மினி லயனை நினைவு படுத்தியது ..ஒன்றுக்கு இரண்டு கதைகளாக வந்திருந்தாலும் கதை ஒரு துப்பறியும் நாயக இதழாக தோன்றியது திருப்தி அளித்தாலும் நகைச்சுவை என்ற விதத்தில் எனக்கு குறைவாகவே பட்டது ...

    அதற்கான காரணம் ....

    போன முறை கிளிம்ப்டன் ஏற்படுத்திய அதீத எதிர்பார்ப்பா....


    அல்லது ...

    சமீபத்தில் லக்கி அளித்த அட்டகாச போட்டி இன்னும் மனதில் மறையாத தாக்கதினாலா ...

    அல்லது ...


    ஒரு கடுப்பான மன நிலையால் அதனை மறக்கவே காமெடி இதழை எடுத்து அந்த மன நிலையினிலேயே படித்த காரணத்தினலா ...


    புரிய வில்லை ....கதை நன்று ..சித்திரம் நன்று ....மனது விட்டு சிரிக்க தான் இம்முறை கர்னல் மனது வைக்க வில்லை ....;-(



    அடுத்து


    டாக்டர் டக்கர் ...

    என்னடா அதற்குள் சபதம் காணாமல் போய் விட்டதா என செயலாளர் பதற வேண்டாம் ...

    இது அட்டை படத்திற்காக ...பின் அட்டை படம் முன் அட்டையில் இடம் பெற்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும் சார் ...பள்ளிகூட சிறுவன் மாறுவேட போட்டிக்கு வந்து அப்படியே ஒப்பனையை கலைக்காமல் ஓட்ட பந்தயத்திற்காக வந்து தயாராக நிற்பது போல போஸ் கொடுப்பது போல ஸ்பைடர் நிற்பதை பார்த்தால் இந்த வருட சுமாரான அட்டை படத்திற்காக நமது மறுபதிப்பு நாயகர் தயாராக உள்ளார் சார் ...


    கதையை பற்றி ......

    அடுத்த சிங்கத்தின் சிறு வயதில் பகுதியை படித்தவுடன் ....;-)

    ReplyDelete
    Replies
    1. தலைவரே.!

      டெக்ஸ் விஜயராகவன் அவர்கள் கூறிய மாதிரி டெக்ஸ் கதை 40 பக்கங்கள் அதிகரித்ததால் எடிட்டர் வண்ண புத்தகத்தில் பக்கங்களில் கை வைத்துவிட்டார். அதனால் சி.சி.வ. விட்டுபோயிருக்கும். எனவே போர்கால அடிப்படையில் போராட்டத்தை ஒரு மாதம் தள்ளி வைப்போமே.?

      Delete
    2. செயலாளர் அவர்களே ..மடிப்பாக்கம் சார் சொல்வதும் சரி தான் போலுள்ளது ...எனவே அடுத்த மாதம் வரை ஆசிரியரை மன்னித்து விடலாமா ...அதுமட்டுமல்லாமல் ..

      "ஒரு லார்கோ ; ஒரு மெகா டெக்ஸ் ; ஒரு சிக் பில் ; ஒரு மாயாவி !!

      அப்புறம் காத்திருக்கும் மாதங்களில் ரின்டின்கேன் சோலோ சாகசம் ; அப்புறம் லக்கி லுக் கதை முழுக்க கலக்கிடும் சாகசம்...அப்புறம் டாக்டர் டெக்ஸ்....அப்புறம்...அப்புறம்....! "

      என ஆசிரியர் அப்புறம் அப்புறம் என சொல்வதால் உங்கள் முன் ஆசிரியர் வாழை இழையை பரப்பி வாழைபூ வடையை கொத்து கொத்தாக வைப்பது போல இருப்பதால் கொஞ்சூன்டு உங்கள் மேல் எனக்கு டவுட் வந்து விட்டால் ..

      வராது ..வராது ...

      ஆனா ..நாலு கால் நாயகரை உங்கள் முன் பரிமாற இருப்பதால் தான் கொஞ்சம் கொஞ்சம் ....

      அதனால் ...போராட்டத்தை அடுத்த மாதம் முதல் தள்ளி வைத்து விடலாமே ....ஆனால் நீங்கள் ஒத்து கொள்ளும் வரை ஸ்பைடரை தீண்ட மாட்டேன் என உறுதி அளிக்கிறேன் ...;-(

      Delete
  51. மாலை வணக்கம் எடி சார் ம நண்பர்களே

    லயனின் 266 இதழாய் இம்மாதம் வந்திருக்கும்

    TEX
    IN
    " விதி போட்ட விடுகதை "

    மிகவும் அற்புதமானதொரு ஒரு கதைகளம்

    மிக நீண்ட நாட்களாய் இப்படி ஒரு சாகஸத்தைத்தான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்
    இந்த நால்வர் குழுவின் வழக்கமான கிண்டல் கேலிகளுடனே ஆரம்பித்து
    லிட்டில் கொலராடொ நதியிலிருந்து டொன்காவா வுடன் வேகம் பிடிக்க ஆரம்பித்து புல்லட் ரயிலின் வேகத்தில் பயணித்து
    நேசம்
    காதல்
    பொறாமை
    தவறான ஆளுமை
    நல்ல நட்பு
    சோகம்
    அதிரடி வஞ்சகம்
    எதிர்பாராத தருணங்கள்
    என
    பயணித்து மிகுந்த சோகங்களுடனே கதை முடிகிறது

    மிக மிக மிக முக்கியமான தருணத்தில் ( மனித மன தின் அனைத்தையும் உள்ளடக்கிவாறு) இக்கதை வெளியாகி உள்ளது

    அனைவருக்கும் இக்கதை பிடிக்கும்

    Lion-muthu Comics Editor Thiru. Vijayan சார்க்கு ஒரு ராயல் சல்யூட்

    டெக்ஸ் ன் பாசம்
    கார்ஸன் ன் நட்பு
    டைகர் ன் விசுவாசம்
    லிட்டில் மூனின் காதல்
    ரெட்புல் லின் ஆளுமை
    இவைகளைபற்றிச்
    சொல்ல வார்த்தைகள் இல்லை

    டெக்ஸ் டாப் கதை வரிசைகளில் இக்கதையும் ஒன்றாக திகழும்

    கிட் சுயநினைவை இழந்து தந்தையையே எதிரியாக நினைத்து அவர்மேல் கத்தியுடன் பாயும் காட்சி
    நான் எதிர்பாராத ஒன்று ( இது மந்திரமண்டலத்தை ஞாபகப்படுத்தியது )
    &
    ஜென்ட்ரி கிட்டை சுடும் போது
    லிட்டின் மூன் கிட் முன் பாய்ந்து குண்டை தன் நெஞ்சில் வாங்கி தான் உயிருக்குயிராய் நேசித்த தன் காதலன் கிட்டை காப்பாற்றும்
    காட்சி எதிர்பாராதது மற்றும் மனதை கனக்கச் செய்யும் காட்சிகள்

    கிட் வில்லர் சோகத்துடன் செல்வது போல் கதை முடிவது நமக்கு புதிதான ஒன்று

    இதில் வரும் காட்சிகள் சில பழைய கதைகளை நமக்கு ஞாபகப்படுத்தும்

    எனது மார்க் : 10 க்கு 8.5

    ( 53 பக்கம் வலது மேல் மூலையில் "இத்தாலி" மொழியில் டைப் ஆகியிருப்பதும்,
    பின் பகுதியில் சில்வர் மூனின் பெயர் லிட்டில் மூன் என பிரிண்ட் ஆகியுள்ளதும்,
    171 ம் பக்கம் "அண்டவனுக்கு நன்றி"
    வாசகம் **போல்ட் லெட்டரிலும்** தவறாக ப்ரிண்ட் ஆகியிருப்பதும் நான் கண்ட பிழைகள் )

    ReplyDelete
  52. மீண்டும் கிச்சா கிச்சா தாம்பாலம்,கிய்யா கிய்யா தாம்பாலம் விளையாடி வந்தது போல் உள்ளது..!(ஸ்பைடா்)

    ReplyDelete
  53. போராட்டக்குழுவினரின் மனவுறுதியை ஆட்டிப் பார்க்க இங்கே எதிரணித் தலைவர் பலமாக முயற்ச்சித்திருப்பது கண்கூடு! அந்தோ பரிதாபம்; அதில் சில விக்கெட்டுகள் வீழ்ந்து கிடப்பதும் விதி செய்த சதியே!

    யார் எப்படி (நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு) திசை மாறிடினினும் எனக்குக் கவலையில்லை! தனி மனிதனாக உறுதியுடன் கடைசிவரை போராடிப் பார்த்திடத் துணிந்துவிட்டேன்.

    கொரியர் வந்துவிட்டதாகத் தகவல் வந்ததையடுத்து புத்தகங்களைக் கைப்பற்ற விரைத்துகொண்டிருக்கிறேன். என் குழந்தையை கீரவாணி ராகத்தில் இங்கி-பிங்கி-பாங்கி பாடவைத்து இன்றிரவே 'புறக்கணிப்பு புத்தகம்' தேர்வு செய்யப்பட்டு ஒரு உம்மா + சில துளி கண்ணீருடன் பரணில் வைக்கப்படும்!

    இது உறுதி!

    ( 'ஆப்பரேசன் இங்கி-பிங்கி-பாங்கி'க்கு தொடர்ந்து ஆதரவளித்துவரும் அனைத்து கண்மணிகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! __/\___)

    ReplyDelete
    Replies
    1. இத்தாலியாரே...இந்த வாழைப்பூ வடை, நண்டு ப்ரை, ரத்தபொரியல் இதெல்லாம் எதிர்வரும் லயன்,முத்து காமிக்ஸுக்கு முன்னாடி பைசா தேறாது..! இந்த இங்கி-பிங்கி-பாங்கி போட்டு தேர்ந்தெடுக்கற தப்பை செஞ்சி சூன்யம் ஏதும் வச்சிகாதீங்க..! அப்படியே போராட்டம் பண்ணியே தீருவேன்னு சொன்னா....ரோசனையே பண்ணாம டபக்குன்னு அந்த மறுபதிப்பை பதுங்கு குழியில போட்டுட்டு, ஹாயா மற்றதை படிச்சி சிந்தனையை தெளிவா வெச்சிகங்கிறது ரொம்பவே முக்கியமுங்க..!!! கீரவாணி ராகத்தில் ஏதும் தப்பு பண்ணி, நீங்க இன்னொரு கிறுக்கானந்தாவா மாறிட்டா இந்த தளம் தாங்காது..! அவுக்..அவுக்..!!

      Delete
    2. செயலாளர் அவர்களை ஆப்ரேஷன் இங்கி பாங்கி க்கு நம்ம தல டெக்ஸ் அவர்களை தவிர்த்து விடுங்கள் ...என வேண்டி கொள்கிறேன் ...அவர் பொம்மை புத்தகத்தின் அங்கமல்ல ...நமது வாழ்க்கையின் ஒரு அங்கமல்லவா ....

      Delete
    3. ஈரோடு விஜய் .!

      நல்லவேளை போராட்டத்தை இந்த மாதத்தில் இருந்து ஆரம்பித்து உள்ளீர்கள்.! சென்ற மாதம் என்றால் எங்கள் இளவரசியும் அல்லவா இங்கி பிங்கி பாங்கியில் சிக்கும் அபாயம் இருந்திருக்கும்.!


      அப்படியே இப்படி ஒரு கோரிக்கையும் வைத்துவிடுங்கள்.!அதாவது எத்தனை மாதங்கள் சி.சி.வ. இல்லையோ அத்தனை மாடஸ்டி கதைகள் அடுத்த ஆண்டு சந்தாவில் சேர்க்கவேண்டும்.இதற்கு நான் ரெடி.! செல்போன் கோபுரத்தில் ஏறனுமா.?அல்லது நாட்டை விட்டு வெளியேறனுமா.? சொல்லுங்கள் அல்லாத்துக்கும் தயார்..!

      Delete
    4. சின்னதா ஒரு கேப் கிடைச்சாலும் அதில் மாடஸ்டியை வச்சு ரொப்பிடறீங்களே M.V அவர்களே...! :)))

      Delete
  54. This comment has been removed by the author.

    ReplyDelete

  55. தலீவரே,

    மடிப்பாக்கத்துல வெங்கடேசு சொன்னாஹோ... சேலத்துல விசயராகவன் சொன்னாஹோ... சப்பான்ல சாக்கிசான் சொன்னாஹோ... ன்னு யார் எதைச் சொன்னாலும் ஏன் இப்படி பதுங்குகுழியே தஞ்சம்னு கிடக்கறீங்க? உங்கள் மனவுறுதியை சில பொம்மை பொஸ்தவங்கள் சிதைக்க அனுமதிக்கலாமா?

    'சி.சி.வயதில்' தனித் தொகுப்பாக வேண்டுமென்பது நம் லட்சியப் போராட்டங்களுள் ஒன்றல்லவா? 'தனித்தொகுப்பு ' என்ற நம் கனவு ஒருபுறமிருக்க, இப்போது சிங்கிள் எபிஸோடுகளுக்கே சீட்டியடிக்கும் (அபாய) நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது உங்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தவில்லையா?

    நாங்கள் பார்த்த 'பொங்கியெழும் தலீவராக' மீண்டும் உங்களை எப்போது காண்போம்?

    காத்திருக்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. வேற வழியில்லை காசை வெட்டிபோட்டு வேண்டிக்கவேண்டியதுதான்...

      ஆண்டவரே...வேண்டாம்... சாத்தானின் உள்ளங்களில கூட சில சமயம் கருணை நிழல் படிஞ்சிருக்கும், ஆகையால சாத்தானே..! எப்படியாச்சும் அந்த பூனையார் இங்கி-பிங்கி-பாங்கி விளையாடி தொடர்ந்து டெக்ஸ் புக்கா செலக்ட் ஆகி, படிக்காம தவிக்கற மாதிரி பாத்துக்க சாத்தானே..! அப்பத்தான் காமெடியா ஏதும் எழுதிட்டே இருப்பாரு..!

      Delete
    2. @ மாயாவியாரே

      நல்லவர்களின் பக்கம் ஆண்டவன் மட்டுமல்ல; சாத்தானும் துணையிருப்பான்! ( நம்ம புனிதசாத்தானையும் சேர்த்துத்தான் ஹிஹி! )

      புத்தகங்களை வாங்கியாச்சு. இன்னும் சற்று நேரத்தில் இங்கி-பிங்கி-பாங்கி ஆரம்பமாகும்...

      திக்..திக்..தடக்...

      Delete
  56. செயலாளர் அவர்களே ...

    என்னை மன்னியுங்கள் ....நீங்கள் இவ்வளவு தீவிரமாக போராடும் பொழுது நான் கொடுத்த வாக்கை மீற போவதில்லை ...டாக்டர் டக்கரே ஏதாவது மாய்மாலம் செய்தாலும் சி.சிறு வயதில் தொடரை காணாமல் நான் வலை மன்னனை ஏந்த போவதில்லை ....


    வெற்றி வேல் ....சிங்க வேல் .....

    ReplyDelete
  57. விதி போட்ட விடுகதை .....


    அட்டை படமே அசத்தலாக இருக்கும் பொழுது ....உள்ளே சித்திர தரங்கள் பட்டாசாக வெடிக்கும் பொழுது ....சொல்லவும் வேண்டுமா ...முதல் பக்கத்திலியே டெக்ஸ் அவர்களுடன் நிரம்ப நாட்கள் காணாமல் போட கிட் ..கார்சன் ..டைகர் ....என அனைவருமே என்ட்ரி கொடுக்கும் பொழுதே நினைத்தேன் ஆரம்பித்தால் நிறுத்த முடியாது என்று ...அதே போலவே முதல் பக்கத்தில் ஆரம்பித்த ஓட்டம் பரபர ..சுறுசுறுவென ஒரு மணி நேர கெளபாய் உலகில் சுழன்ற அந்த கனவுலகம் ....வாவ் ...அந்த பயணத்தின் ஊடே எத்தனை கலவையான உணர்ச்சிகள் எமக்கே ....கிண்டல் ..வீரம் ...சோகம் ...காதல் ...அதிர்ச்சி..அச்சம் ....

    ஹூம் ...டெக்ஸ் ...மாதாம் மாதம் அல்ல தினமும் இங்கே நடை பயின்றாலும் அவருடன் நிழலாக இருக்க நாங்கள் ரெடி ...கதை சுருக்கமோ ....கதை மாந்தர்கள் பற்றியோ ...களத்தை பற்றியோ எதுவும் சொல்ல போவதில்லை நண்பர்களே ..ஏதும் அறியாமலே .அந்த கெளபாய் உலகில் நடை பயின்று வாருங்கள் ....அந்த மகிழ்ச்சிக்கு ஈடேது .....

    எதுவும் சொல்ல விரும்ப வில்லை .....

    ஒன்றே ஒன்றை தவிர .....




    டெக்ஸ் .....டெக்ஸ் தாய்யா .......வேறொன்னும் சொல்றதுக்கு இல்ல ...

    ReplyDelete
  58. இம்மாத இதழ்களில் அட்டைபடம் கதை ஓவியம் அனைத்திலும் முதலிடம் பெறுவது தல டெக்ஸ

    ReplyDelete
  59. சாத்தானின் உள்ளங்கையில் கதையும் சூப்பர்

    ReplyDelete
  60. 'ஆப்பரேசன் இங்கி-பிங்கி-பாங்கி'

    Mission - 1


    குறித்த நேரத்துக்கு முன்பே குழந்தை தூங்கிவிட்டதால் வேறுவழியின்றி இ.பி.பா பாடலை நானே இசைக்க வேண்டியதாகிவிட்டது...

    பரப்பி வைக்கப்பட்ட நான்கு புத்தகங்களுக்கு முன்பாய் நான் அமர்ந்திருக்க, இ-பி-பா இசைக்கப்பட்டது! "ஐயோ இதெல்லாம் என்னமாதிரியான ஜீவராசின்னே தெரியலையே.." என்ற தொணியில் என் வீட்டம்மா ஏறிட்டுப்பார்த்துக் கொண்டிருக்க, பாடலின் இறுதியில் என் விரல் சுட்டிக்காட்டிய புத்தகம் - 'சாத்தானின் உள்ளங்கையில்' !!!

    பக்கங்கள்கூடப் புரட்டப்படாமல் சிறிதுநேரம் வெறுமனே என் கைகளில் வீற்றிருந்த அப்புத்தகம், அதன்பிறகு பரணுக்கு பார்சல் செய்யப்பட்டது!

    Operation - I.P.P
    Mission-1 executed successfully!



    ReplyDelete
    Replies
    1. @ E. V.

      ஏற்கனவே, சி. சி. வ. வெளிவராமலிருப்பதால் நொந்து, நூடுல்ஸ் ஆகியிருக்கிறீர்கள்!. இப்போ அதில், ரெட் டஸ்ட்-டையும் சேர்த்தாகிவிட்டதா..! "என்னம்மா, இப்படி பண்றீங்கலேம்மா....." ரத்தத்துக்கு ரத்தாம் தீர்வாகாது, வேறு எதையாவது சிந்தியுங்கள் பாஸு. எப்படியும் ஆபரேஷன் சொதப்பல் என்பதை விரைவில் உணர போகிறீர்கள்.

      இல்லையென்றால், டி. வி. -ல் வரும் பெப்சி ad-ல் உண்ணா(குடிக்கா)விரதம் போராட்டத்தில், ஒருவர் சைலென்ட் டா பெப்சியை குடிப்பதுப் போல், நீங்களும் நைசா ரெட் டஸ்ட் கதையை படித்து போராட்டத்தை வெற்றிகரமா முடிச்சிருங்கோ....(ஹெர்மன்-மாயாஜாலம் உங்களை விட்டு வைக்காதென்று நம்புகிறேன்.) அதுதான் உங்களுக்கு நல்லது, இல்லைனா, அடுத்த மாதம் இ.பி.பா. ல டெக்ஸ் - ன் மெகா சைஸ் கதை கண்டிப்பா மாட்டிக்கும், அப்போ ஃபீல் பண்ணி பிரயோஜனமில்லை.

      Delete
    2. //எப்படியும் ஆபரேஷன் சொதப்பல் என்பதை விரைவில் உணர போகிறீர்கள். //

      நோ ..ஓ.ஓஓ... ! ஈ.வி'யின் ஈ.பி.பா - ஒ.போ.வீ.போ! ( ஒருபோதும் வீணாப் போனதில்லை)

      Delete
    3. ஈரோடு விஜய்.!

      சூப்பர்.நானும் உங்களை பின்பற்றுகிறேன்.!


      கமான்சே கதையை பொருத்தவரை ,காதலர்கள் மணிக்கணக்கில் அரட்டை அடிப்பார்கள் ஆனால் மற்றவர்கள் கூப்பிட்டு என்ன சப்ஜெக்ட் பேசிணீர்கள் என்றுகேட்டால் சொல்லத்தெரியாது.பேசியதும் மறந்து போயிருக்கும்.

      அதேபோல் இரண்டு வருடங்கள் ஒரு சுவராசியமாக சீரியல் பார்க்கும் பெண்ணிடம் இது என்ன கதை என்றால் சொல்லத்தெரியாது. (முடியாது.)

      ##### இந்த ரகத்தை சேர்ந்தது இந்த கமான்சே கதைகள்.#########

      Delete
    4. ஆதரவுக்கு நன்றி M.V அவர்களே! நமது போராட்டம் வலுபெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது!

      எதிரணித் தலைவரின் வயிற்றில் இந்நேரம் புளியைக் கரைக்க ஆரம்பித்திருக்கும்! ஹா ஹா ஹா... ஹோ ஹோ ஹோ...

      Delete
    5. செயலாளர் அவர்களே,

      போராட்டத்தில் நானும் குதிக்க முடிவு பண்ணிவிட்டேன். ஒரு சின்ன மாற்றத்துடன். அதாவது, எந்த புத்தகத்தையும் வெளிவந்தவுடன் படிக்காமல், ஒரு மாதம் கழித்து படிப்பதாக உள்ளேன். இந்த கண்டிஷன் உங்களுக்கு ஓகே வா?

      Delete
    6. @ Radja

      கிர்ர்ர்ர்... உர்ர்ர்ர்...

      Delete
  61. ஆசிரியரே புத்தகங்கள் கிடைத்தது விதி போட்ட விடுகதையில் பக்கம் 66 லிருந்து 74 வரை பக்கம் 237 லிருந்து 250 வரை கசங்கி சற்று சேதமடைந்திருந்தது இதற்கு முன்பு சிகப்பாய் ஒரு சொப்பனம் கடைசி 8 தாள்கள் தனியே பிய்ந்து வந்திருந்தது இரத்தத் தடம் அட்டையில் நிறைய கீறல்களோடு வந்தது தயவுசெய்து இந்த குறைகள் வராமல் பார்த்து கொள்ள முயற்சி செய்யுங்கள் ஆசிரியரே

    ReplyDelete
  62. செயலாளர் அவர்களே ..


    கண்ணில் ஒரு துளி கண்ணீருடன் .....




    ஆழ்ந்த வாழ்த்துக்கள் .....;-(

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு கண்ணிலும் தலா ஒரு துளியா.. அல்லது ரெண்டு கண்ணுக்கும் சேர்த்தே ஒருதுளி தானா, தலீவரே?

      உங்களுக்கு மட்டும் ஒரு சீக்ரெட் சொல்றேன் தலீவரே! நேத்திக்குவரைக்கும் எனக்கு இந்த இ.பி.பா பாட்டே தெரியாது. YouTube ல் பார்த்துத்தான் கத்துக்கிட்டேன். சும்மா சொல்லக்கூடாது தலீவரே, செம சாங்! :)

      Delete
  63. அட்டைபடம்
    1)கமான்சே அட்டை சூப்பா் 9.9/10
    2) டெக்ஸ்சும் super 8/10
    3)க்ளிப்டனின் அட்டை டக்கா் போங்க8.7/10
    4)ஸ்பைடா் முன்அட்டை மொக்கை பின்அட்டை சுமாா் 6/10

    ReplyDelete
  64. This comment has been removed by the author.

    ReplyDelete
  65. இம்மாத அட்டைப் படங்களில் டெக்ஸ் - அபாரம்! மனதைக் கொள்ளை கொள்கிறது! அழகான பின்னணி சேர்த்து மெருகூட்டிய பொன்னருக்கு மீண்டும் எனது வாழ்த்துகள்!

    கிளிப்டன் அட்டைப்படம் - ஓகே ரகம்!

    ஸ்பைடர் - அட்டைப்படம் பற்றி ஏற்கனவே கழுவி ஊற்றுயாகிவிட்டலும் இன்னுமொரு முறை கழுவுவதில் தவறில்லை என்று தோன்றுகிறது. ஸ்பைடரின் முகபாவத்தைப் பார்க்கும்போது 'டாக்டர் டக்கர்' என்பதற்குப் பதிலாக 'ஸ்பைடருக்கு கல்யாணமா?' என்றிருந்தால் பொருத்தமாய் இருந்திருக்கக்கூடும்! ;)

    கமான்சே அட்டைப்படம் பற்றி எழுதுவது ஆப்பரேசன் இ.பி.பா கொள்கைகளுக்குப் புறம்பானது!

    ReplyDelete
  66. இம்மாத இதழ்கள் வரிசை என்னுடைய கணிப்பில்
    1.விதி போட்ட விடுகதை
    2.சாத்தானின் உள்ளங்கையில்
    3.நில் திரி திருடு

    ReplyDelete
  67. மாயாஜீ ....

    ஆசிரியர் எப்பொழுதாவது சிறப்பான முறையில் புத்தகம் வெளியிட்டால் அந்த சமயம் எல்லாம் ஓ போடலாம் தான் ...ஆனால் ஒவ்வொரு முறையும் சிறப்பாகவே கொடுத்து கொண்டு இருந்தால் நண்பர்கள் ஓ போடுவது சலித்து போயிருக்கலாம் ..அது தவறல்ல ...

    மனைவியின் சுவையான உணவை உண்டு அதனை பற்றி எதுவும் தெரிவிக்காத கணவன் தான் ஒரு நாள் உப்பு காரம் குறைந்தாலும் அதிகரித்தாலும் உடனடியாக தெரிவிப்பார்கள் ....அது போல தான் இதுவும் ;-)

    ReplyDelete
    Replies
    1. @ பரணிதரன் K

      தினசரி சுவையாக சமைத்து பரிமாறும் மனைவிக்கு ரசித்து, சாப்பிடும் கணவனின் முகமேபாவமே பெரும் பாராட்டுதான்..! ஆனால் சிறுக சிறுக சில்லறையை மிச்சம் பிடித்து சேர்த்துவைத்து,ஒரு நன்னாளில் கொஞ்சம் பாயசம்,இனிப்பு,தயிர்வடை என தலைவாழைஇலையில் பரிமாறும் போது முகபாவம் தாண்டி "இவ்வளவு செலவுக்கும் மத்தியில எப்படி டி மிச்சம் பிடிச்சே..? இந்த மிச்சம் பிடிச்சி விருந்துவைக்கும் உன்னோட சேமிப்பு குணத்துக்காகவே எழு ஜென்மமும் உனக்கே வாழக்கை படனும் டி.." கிற அன்புகூவல் அடுத்த தடபுடல் விருந்துக்கு அஸ்திவாரம் அன்றோ பரணி..!!!

      Delete
  68. நமது அன்பிற்குரிய ஆசிரியர் விஜயன் சார் தன்னுடைய மதிய உணவு நேரத்திலும் எனக்காக நேரம் ஒதுக்கி உரையாடி மகிழ வாய்ப்பளித்தார்கள்.இன்று மதியம் சிறு வேளையாக சிவகாசி போனபோது நம் ஆசிரியர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது நண்பர்களே. பல வேலைகளுக்கு மத்தியிலும் என்னை சந்தித்து அன்புடன் உரையாடிய ஆசிரியருக்கு நன்றிகள் பல.மிக்க நன்றி சார்

    ReplyDelete
    Replies
    1. வாவ்..ராஜசேகர் உங்க கூச்சம் குறைந்து ஆசிரியரை பார்த்ததில் சந்தோஷம்..! கோவில்பட்டி கடலை மிட்டாய் கொடுத்திங்களா..??? அப்போ ஏதும் போட்டோ எடுத்திருந்தா அப்டேட் பண்ணுங்க..!

      Delete
    2. சார் போட்டோ அப்டேட் செய்வது எப்படி என்பது தெரியவில்லை. உங்களை நேரில் சந்திக்கும்போது கண்டிப்பாக எனக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் சார். பசி வேளையாயிருந்தாலும், தலைக்கு மேல் வேலைப்பழு இருந்தாலும் அவற்றையெல்லாம் காட்டாமல் அன்புடன் வரவேற்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அன்புடன் உரையாடினார்கள். நிச்சயம் நான் இதை எதிர்பார்க்கவில்லை. இந்த மாத Tex புத்தகத்தில் சாரின் கையெழுத்தையும் பெற்றுக்கொண்டேன். என் குடும்பம் மற்றும் குழந்தையையும் பற்றி அன்புடன் விசாரித்து அறிந்து கொண்டார்கள். உண்மையிலேயே இன்று எனக்கு சந்தோசமான நாளாக அமைந்தது.

      Delete
    3. இது உண்மையில் இன்று எடுத்த போட்டோ தானா..!!! ஏன்னா ஒரு 40 பக்கம் எடி உடம்புல காணம் அதுதான்,பார்க்க...இங்கே'கிளிக்'

      Delete
    4. நன்றி மாயாவி சார்.ஒருவேளை சாப்பாட்டு நேரம் பசி காரணமாக இருக்கலாமோ

      Delete
  69. இம்மாத இரவுக்கழுகாரின் சாகசம் வாசித்தபின் அனைவரையும் கவர்ந்துவிட்டது என்பது மேற்கண்ட பதிவுகளை வாசிக்கும்போது புலனாகிறது,என்றாலும் வாசிக்கும்முன்பே அடியேனுக்கு மறக்க இயலா இதழாக மாறிவிட்டது.
    டெக்ஸ் வில்லரின் சாகசத்தை துளித்துளியாய் சுவைக்க எண்ணி,தந்தையும் தனயனும் பகைவர்களாக காட்சி தரும் முன் அட்டைப்பட எழிலை ஐந்து நிமிடம் ரசித்துவிட்டு,முதல் பக்கத்தில் எடிட்டரின் தோட்டா டைமை வாசிக்க ஆரம்பிக்கும்போது இறுதியில் ஏற்படப்போகும் இன்ப அதிர்ச்சி,பல ஆயிரம் காமிக்ஸ் வாசகர்களான உங்களில் யாருக்கும் ஏற்படாது.(நம்ம பெருமைய நாமதானே சொல்லிக்கணும்)
    ஆம் கடந்த வாரம் ஒவ்வொரு மாதமும் டெக்ஸின் படைப்புகள் ஏற்படுத்தும் வாசிப்பின்பத்தின் எதிர்பார்ப்பைப் பற்றி நம் பிளாகில் பதிவிட்டிருந்தேன்.அதனை எடிட்டர் நினைவுகூர்ந்து,அவ்வரிகளையும் குறிப்பிட்டு இருந்ததை படித்தவுடன்,வங்கியில் சேலரி க்ரெடிட் ஆன உணர்வு.எடிட்டருக்கு அடியேனின் அன்பு. அதெல்லாம் சரிதான்,கதை எப்படி என்கிறீர்களா... இனிமேதான் வாசிக்கணும்..ஹி...ஹி...

    ReplyDelete
    Replies
    1. அப்படியொரு இன்ப அதிர்ச்சிக்கு உங்களுடைய அந்த ஆத்மார்த்தமான வரிகள் தகுதியானவையே! வாழ்த்துகள்! :)

      Delete
  70. மாயாஜீ ..உண்மை ...

    ஆனா ..அப்படி யாராவது மனைவியை பாராட்டற மக்கள் .....இருந்தால் ....மகிழ்ச்சியே ..;-)

    ************
    அந்த எழுத்துக்கள் உங்களுடையது தானா நண்பரே ..வாழ்த்துக்கள் ...உங்கள் கருத்தும் ..ஆசிரியர் கூற்றும் உண்மையோ உண்மை ..


    **************

    ஆசிரியர் சார் ...

    தலைமை போராட்டத்தை விட செயலாளர் போராட்டதிற்கு வெளிநாட்டு குழு நண்பர்கள் எல்லாம் இனைவதை பாரத்து கொண்டு இருப்பீர்கள் என நம்புகிறேன் ...

    ஒரே காரணத்திற்காக ..

    இங்கி பாங்கி. புறக்கணிப்பு போராட்டம் ...


    மறுபதிப்பு புறக்கணிப்பு போராட்டம் ....


    ஒரு மாத தாமத (?) போராட்டம் ...


    என போராட்டம் உச்ச கட்டத்திற்கு சென்று கொண்டே செல்கிறது ...இந்த அஹிம்சை போராட்டம் வன்முறை போராட்டமாக மாற நீங்கள் இடம் கொடுக்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன் ....

    ReplyDelete
  71. அடக் கொடுமையே விமர்சனம் போடறதுக்கு தனிப்பதிவு போட்ட அதுவே லோட்மோர் ஆகப்போகுதே,ம் இருந்தாலும் கடமையை செய்வோம்.

    ReplyDelete