Sunday, February 21, 2016

ஹி...ஹி...ஹி..!!

நண்பர்களே,

வணக்கம். சின்ன வயதில் நானொரு சதுரங்கப் பைத்தியம்! வாரயிறுதி புலர்ந்து விட்டாலே மனதுக்குள் ஒரு படபடப்பு... ஒரு எதிர்பார்ப்பு துளிர்விடத் துவங்கும்; ஞாயிறு காலை மணி ஒன்பது அடிக்கும் முன்பாக எங்கள் வீடிருந்த அதே வீதியிலிருந்த செஸ் க்ளப்பின் வாசலில் ‘தேவுடா‘ காக்கத் தொடங்கி விடுவேன்! இப்போதெல்லாம் அந்த நாட்கள் மறுவிஜயம் செய்தது போல உணர்கிறேன்! சனிக்கிழமை பகலிலேயே... 'ஹை... ப்ளாக்கிற்குத் தயாராக வேண்டுமே !" என்ற சிந்தனைகளும்... ஞாயிறு காலை புலரும் போதே உங்கள் எண்ணச் சிதறல்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் தூக்கத்தை தொலைக்கச் செய்து விடும்! இதோ – இந்த ஞாயிறுக்கு லீவ் லெட்டரை நேற்றே ஒப்படைந்திருந்த போதிலும் – எழுதிப் பழகிய அந்த விரல்கள் கோலம் போடத் தொடங்காத குறை தான்! நீங்களும் நேற்றைய பதிவிற்கு அதற்குள் 295 பின்னூட்டங்களை போட்டுத் தாக்கி விட்ட நிலையில் – load more பஞ்சாயத்திலேயே இந்த வாரத்தின் இதர நாட்களை ஒப்பேற்றும் சிரமத்தை உங்களுக்குத் தருவானேன் என்று தோன்றியது! அதன் பலனே இந்த back to back பதிவுகள்!

கொட்டாவி விட்டது முதல், பட்டாணிக் கடலை கொறித்தது வரை அத்தனையும் உங்களிடம் அவ்வப்போது ஒப்பித்து வரும் சூழலில் புதுசாய் என்ன எழுதுவதென்று ரொம்பவே மெனக்கெனடத் தோன்றவில்லை! சின்னச் சின்ன updates; குட்டிக் குட்டி நிகழ்வுகள் பற்றிய சேதிகள் போதாதா நமது காமிக்ஸ் ஞாயிறுகளைக் கலகலப்பாக்கிட? And அதற்கொரு ஆரம்பமாய் – மார்ச் இதழ்களில் நீங்கள் இன்னமும் பார்த்திரா டெக்ஸின் அட்டைப்பட first look இதோ! ஏற்கனவே சிலபல வாரங்களுக்கு முன்பாக இதே டிசைனுக்கு வேறொரு வர்ணக்கலவையுமான ராப்பரை உங்கள் கண்களில் காட்டியிருந்தேன்! இதோ – நீங்கள் பார்த்திடவிருக்கும் real thing-ன் preview!
அட... இதுக்கு அதுவே தேவலை!‘ என்ற எண்ணங்கள் எழக்கூடும் தான்; அந்த சிகப்பு பேக்கிரவுண்ட் பளீரென்று டாலடித்தது தான்; ஆனால் தந்தையும், மகனும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளுமொரு சாகஸத்திற்கு நிலவின் கீழான அந்த நிசப்தப் பின்னணி கூடுதல் மெருகோடு தோன்றுவதாக நினைத்தோம்! பிடித்திருந்தால் பாராட்டுக்களை சொல்லிட பொன்னனைத் தேடுங்கள்; “ஊஹும்“ எனில் பூரிக்கட்டைகளை சிவகாசிக்குக் கூரியர் செய்திடுங்கள்! கதையைப் பொறுத்தவரை – நமது இரவுக்கழுகார் ஒரு ‘ஹாட்ரிக்‘ அடிக்கும் வாய்ப்புகள் ரொம்பவே பிரகாசம் என்று சொல்லத் தோன்றுகிறது! ஜனவரி டெக்ஸ் – கலப்படமில்லா high octane ஆக்ஷன் எனில்; பிப்ரவரி டெக்ஸ் – ஆர்ப்பாட்டமில்லா டிடெக்டிவ் பாணி! இம்முறையோ ரேஞ்சர் குழு ஒட்டுமொத்தமாய் களம்காணும் சிவகாசிச் சரவெடியிது! யெஸ் – நீண்ட நெடும் காலத்திற்குப் பின்பாக டெக்ஸ், கார்சன், கிட் & டைகர் ஒட்டுமொத்தமாய் கதை முழுவதிலும் பட்டையைக் கிளப்பிடுகிறார்கள்! தந்தைக்கும்-தனயனுக்கும் மோதல் ; கிட்டின் வாழ்வில் மலர்ந்திடும் மெல்லிய காதல்; பாசமிகு தந்தையாய் நமது இரவுக் கழுகார் மௌனமாய் அனுபவிக்கும் வேதனைகள் – என மார்ச் மாதத்து டெக்ஸ் இதழும் ஒரு சிக்ஸர் for sure! அட்டகாசமான artwork வலு சேர்க்கும் போது சுமாரான கதைகளே வீரியமாகிடும் வேளைகளில் – நயமான கதைக்கு என்ன பலன் என்பது நமக்குத் தெரியாதா? And 260 பக்க நீ-ள-மா-ன சாகஸமிது! Almost a Maxi!! இதனை வெளியிடக் கோரி நினைவூட்டிய நண்பர் முதலைப்பட்டாளக் கலீலுக்கு ஒரு தேங்க்ஸ்!

Moving on – க்ளிப்டன் அச்சாகி விட்டார்; ஸ்பைடர்காருவும் தான்! கமான்சே திங்கட்கிழமை பிரிண்டிங்கிற்கு செல்கிறார் & டெக்ஸ் புதன் மாலையில் அச்சுக்குத்  தயார் நிலையிலிருப்பார்! So- வரும் வாரயிறுதியினில் இதழ்கள் நான்குமே தயாராகி விடுமென்பதால் ஒட்டுமொத்தமாய் அடுத்த ஞாயிறன்று கூரியரில் ஒப்படைத்து விடுவோம் – தொடரும் வாரத்தை நமது இதழ்களோடு நீங்கள் ஆரம்பிக்கும் விதமாய்! And சென்ற முறை DTDC-ல் சிக்கலின்றிப் பிரதிகளைப் பெற்றுக் கொண்ட நண்பர்களுக்கு அதே சேவை தொடர்ந்திடும்; சொதப்பலாகிப் போன சில வாசகர்களுக்கு ST-ல் பிரதிகளை அனுப்பிடுவோம்! So இம்முறை தலைவலிகள் இராதென்று நம்புகிறேன்! 

இன்னும் முன்செல்லும் போது – ஏப்ரலின் இதழ்களின் பணிகள் சத்தமின்றி ஒரு பக்கம் நிகழ்ந்து வருவதைப் பார்த்திட முடிகிறது! ஏப்ரலில் ஒரு கோடீஸ்வரர் தனது முரட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த யத்தனிக்கிறார்! Oh yes – நமது ப்ளுஜீன்ஸ் பில்லியனர் லார்கோ வின்ச்சின் “கடன் தீர்க்கும் நேரமிது“ ஏப்ரலில் டபுள் ஆல்பமாக வரக்காத்துள்ளது! இதன் பணிகள் சகலமும் முடிந்துள்ள நிலையில் – முதல் பாகத்தின் எடிட்டிங்கினுள் எனது காலைகளை சுவாரஸ்யமாக்கிக் கொள்கிறேன்! And நம்மவர் இம்முறை ஹாங்காங்கில் நிகழும் இந்த ஆக்ஷன் த்ரில்லரில் அனல் பறக்க சாகஸம் செய்கிறார்! லார்கோ தொடரில் ஒரு highlight இதழாக இது அமையக் காத்திருக்கிறது guys!

And “என் பெயர் டைகர்” கிட்டத்தட்ட 60% பணிகள் நிறைவுறும் நிலையில் உள்ளன ! புரட்டப் புரட்ட பக்கங்களும், படிக்கப் படிக்க வசனங்களும் பிரவாகமெடுத்து வருவதால் இதனைப் பொறுமையாக எடிட்டிங் செய்திட ரொம்பவே திணறி வருகிறேன்! அதிலும் இந்த Mister Blueberry அவதாரில் நம் உடைந்த மூக்கார் ஒரு laid back சீட்டாட்டப் பிரியராக அறிமுகம் காண்பதால் வழக்கமான விதத்தில் அவரைக் கையாள இயலவில்லை! இந்தப் புதுப் பாத்திரப் படைப்பிற்கேற்ப வசனநடைகளையும், கதையின் டெம்போவையும் நிர்ணயிக்க வேண்டி வருகிறது! And முதல் முறையாக கலர் + black & white என வரக்காத்திருக்கும் இதழினை சரியான சமயத்திற்குத் தயார் செய்வதில் எங்களது அடுத்த சில வாரங்கள் மூச்சுமுட்டும் பணிவாரங்களாக உருமாற்றம் காணப் போவது உறுதி!

அப்புறம் டிசைனிங் + மொழிபெயர்ப்பில் உதவிட நண்பர்கள் சிலர் முன்வந்துள்ளதைத் தொடர்ந்து சிறுகச் சிறுக அவர்களிடம் பணிகளை ஒப்படைக்கத் துவங்கி வருகிறோம். அவற்றின் பலன்களை தொடரும் வாரங்களிலேயே கண்டிட முடியுமென்று நம்புகிறேன்! நிச்சயமாய் ஒரு refreshing மாற்றம் நமக்குத் தென்படும் என்று நினைக்கத் தோன்றுகிறது! 

‘எல்லாம் சரி- ஏப்ரலில் அறிவிப்பதாக இருந்த சந்தா Z ன் தலைவிதி என்னவோ?‘ என்ற கேள்விளை நண்பர்கள் கடந்த பதிவிலேயே எழுப்பியிருந்தை கவனித்திருந்தேன். நிஜத்தைச் சொல்வதானால் – இந்தத் தனித்தடத்தின் பொருட்டு சிலபல கதைகளை shortlist செய்து; ஒரு சிலவற்றை மொழிபெயர்த்தும் வைத்துள்ளோம்! ஆனால் ஜனவரியின் சென்னைப் புத்தக விழா ரத்தானதன் பலனாய் சந்தா Z பக்கமான வேகத்தை லேசாக மட்டுப்படத்திக் கொள்ள நேர்ந்தது. ஜனவரியில் BAPASI விழாவில் சந்தாப்  புதுப்பித்தல்கள் + இதழ்கள் விற்பனையில் ஒரு decent ஆன தொகை வசூலாவது வாடிக்கை! BAPASI விழா ரத்தாகிட – அதன் பின்னே திட்டமிடப்பட்ட பொங்கல் விழா அந்த குறைபாட்டை ஓரளவிற்கு நேர் செய்திருந்தாலும் – ரெகுலரான விற்பனை நம்பர்களைத் தொட சாத்தியமாகவில்லை! தவிரவும் சுமார் 50 சந்தாக்கள் சென்றாண்டிலிருந்து இந்தாண்டுக்கு மாற்றம் காணத் தவறிய போது – அதன் பொருட்டும் நமது பட்ஜெட்டில் கொஞ்சம் பள்ளம் விழுந்து போனது! இதை இன்னமும் சரி செய்ய முயன்றே வருகிறோம் – மார்ச் to டிசம்பர் 2016க்கென ஒரு ஸ்பெஷல் சந்தாவின் திட்டமிடலின் மூலமாக! So- இன்னமும் நேரமுள்ளது நண்பர்களே, 2016-ன் சவாரியில் ஒட்டிக் கொள்வதற்கு! இந்த எதிர்பாரா பட்ஜெட் துண்டுகளுக்கு மத்தியினில் சந்தா Z எனும் துண்டை நான் விரித்தால் – ஆண்டின் இறுதி மாதங்களில் ரெகுலர் இதழ்களுக்கு பணம் புரட்டச் சிக்கலாகி விடுமென்பதால் இது வரை அடக்கியே வாசித்து வருகிறேன். வரும் மார்ச்சில் ஒரு பெருநகரிலும், ஏப்ரலில் சென்னையிலும் புத்தக விழாக்கள் திட்டமிடப்பட்டு வருகின்றனவாம்! அவை உறுதியாகி; அங்கே நமக்கொரு ஸ்டாலும் கிடைத்திடும் பட்சத்தில் – we would be on track with சந்தா Z! So கொஞ்சமே கொஞ்சமாய் பொறுமை காத்தோமெனில் நிலவரம் தெளிவாகிவிடும்! வீராப்பாய் எதையேனும் செய்து விட்டு – அச்சாணியை முறித்த மடைமை வேண்டாமேயென்ற முன்ஜாக்கிரதையில் தான் மௌனத்தை மொழியாக்கி வருகிறேன்! மற்றபடிக்கு புதுக்களங்களுக்குள் தலை நுழைத்திடும் பேரவா எப்போதும் போல இப்போதும் உயிர்ப்போடே உள்ளது !  Just a question of finding the apt moment for it!

கிளம்பும் முன் சின்னதாயொரு வேண்டுகோள்! நமது சந்தா நண்பர்களுக்கான டி-ஷர்ட்களை வரும் வாரத்தில் ஆர்டர் செய்யவுள்ளோம்! அதன் முகப்பில் – சின்னதாய், classy ஆக ஆங்கிலத்திலோ;தமிழிலோ ஏதேனும் வாசகம் இடம்பிடித்தால் சிறப்பாக இருக்குமென்று தோன்றியது! ‘ஈஈஈ‘ என்று இளிக்கும் ஸ்பைடரையோ, குழந்தைப் புள்ளைகளைக் கவரும் ஸ்மர்ஃப்களையோ டி-ஷர்டில் போட்டு நம் வயதுகளுக்கு ஏற்பில்லா தோற்றத்தை உருவாக்கிட வேண்டாமே என்று நினைத்தேன்! So- ‘பளிச்‘ என ஏதாவது suggest செய்திடலாமே நண்பர்களே? முடிந்தால் அதை டிசைனாகவே அனுப்பி விட்டால் உங்களுக்கு எங்கள் ஆபீஸின் சாலையில் குட்டியானதொரு சிலை வைத்து விடுவோம்!

ஞாயிறை இலகுவாக்கிட இதோ நெடு நாளைக்குப் பின்பாகவொரு caption எழுதும் போட்டி! (கடந்த முறை வென்ற நண்பர் ‘உருவுது‘ சரவணனுக்கு ஏற்கனவே ஒரு மினிலயன் இதழ் அனுப்ப வேண்டியுள்ளது!!) இம்முறை வெற்றி காணும் நண்பருக்கு தற்போதைய flavor ஆன “இரத்தப் படலம்“ Cinebookன் முதல் ஆல்பத்தைப் பரிசாகத் தந்திடலாமா? ஆளுக்கு மூன்றே வாய்ப்புகளே - போட்டிக்கோ; லூட்டிக்கோ! (இதே சித்திரத்தைக் கொண்டு ஏற்கனவே போட்டி-கீட்டி ஏதும் வைத்து விட்டோமா ? அப்படியே இருப்பினும், புதுசாய் எதையேனும் எழுதி தலை தப்பிக்கச் செய்யுங்களேன் ?! )

மீண்டும் சந்திப்போம் guys! அது வரை – have an awesome weekend! Bye!

P.S : விடியற்காலை ஐந்தரைக்கு - "எங்கே ஞாயிறு பதிவைக் காணோம் ??"என்ற வாட்சப் சேதி - சீனியர் எடிட்டரிடமிருந்து !! வெள்ளியிரவே நானிங்கு ஆஜராகி - அந்தக் கச்சேரி 300 பின்னூட்ட நீளம் சென்றுள்ளது - ஞாயிறுக்கே பழகிப் போனவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை தான் !! So அந்தக் குறையையும் வைப்பானேன் என்று நினைக்கத் தோன்றியது !! 


314 comments:

  1. இனிய காலை வணக்கம் எடிட்டர் சார்!!!
    இனிய காலை வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
  2. @Editor sir:
    பழைய பதிவுக்கு கமெண்ட்ஸ் படிக்கலாம்னு வந்தா இன்ப அதிர்ச்சியாக புது பதிவு :-):-):-):-)

    ReplyDelete
  3. இனிய காலை வணக்கம் சார் ....படித்து விட்டு வருகிறேன் ..;--)

    ReplyDelete
  4. புதிய பதிவுக்கு நன்றி ஆசிரியரே எனக்கு உங்கள் பதிவு இல்லையென்றால் ஞாயிறு சுறு சுறுசுறுப்பாக இருக்காது

    ReplyDelete
  5. ஹை நானும் 10 என்றதுக்குள

    ReplyDelete
  6. ஹல்லோ...பதிவு போட்டு ரொம்ப நேரமாச்சு எங்கே இன்னும் ஒருத்தரையுமே காணோம்...கேப்ஷன் போட்டி லாம் வேற வெச்சிருக்கார் எடிட்டர்...சீக்கிரம் வாங்க நண்பர்களே!!!

    ReplyDelete
  7. தனித்தனி வர்ண இதழ்கள்; ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் 4 இதழ்கள் என்பதே சரியாக இருக்கும்.
    தற்போதைய விலையில் வெளியிட்டால் 19 x 60rs = 1140 என்பது அனைவரும் வாங்க கூடிய விலையாக இருந்திடும். மேலும் சரியான விளம்பரங்கள் மூலம் வாசகர் வட்டத்தை விரிவுபடுத்த ஒரு வாய்ப்பாக இருக்கும். இல்லாவிட்டால் காமிக்ஸ் என்ற குறுகிய வட்டத்தில் இருக்கும் அதிதீவிர வாசகர்கள் என்ற மிகச்சிறிய வட்டத்துக்காக மட்டும் collector edition வெளியிடுவதும் தொடர்ந்திடும். வாங்க விருப்பம் இருந்தும் விலை காரணமாக மற்றவர்கள் தள்ளி நின்று பார்ப்பதும் தொடர்ந்திடும்....


    My suggestion is release first four single issues as a boxed set. After sold everything release the second boxed set.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா..மறுபடியும் முதல்ல இருந்தா..இப்பவே கண்ணைக் கட்டுதே :p

      Delete
  8. டெக்ஸ் பின்னழகு வீரனாகி விட்டாரோ...இப்போது எல்லாம் அடிக்கடி முகம் காட்டாமலே அசத்துகிறார் ...;-)

    ReplyDelete
    Replies
    1. @தலைவரே:
      ஹா..ஹா..செம தலைவரே :-)
      இதையே பட்டி டிங்கரிங்க் பார்த்து கேப்ஷன் போட்டிக்கு ன்னு போட்டு ஆரம்பித்து வையுங்கள் தலைவரே...

      Delete
    2. //டெக்ஸ் பின்னழகு வீரனாகி விட்டாரோ...//

      ஹாஹாஹா! பின்றீங்க தலீவரே! :))))

      Delete
  9. ஹய்யா எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டாங்க :-)

    ReplyDelete
  10. தோ! வந்துட்ட்ட்ட்டேன்ன்ன்!!!

    ReplyDelete
  11. வாவ்! துளியும் எதிர்பாரா புதிய பதிவைப் போட்டுத் தாக்கி இந்த ஞாயிறையும் அர்த்தமுள்ளதாக்கியதற்கு நன்றிகள் எடிட்டர் சார்!

    டெக்ஸின் அட்டைப்படம் - செம! பின்ணணி கொள்ளை அழகு + பொருத்தம்! இருவண்ணங்களில் அந்த TEX லோகோ - வித்தியாசம்! கீழ்ப்பகுதியில் அந்த நீலவண்ணத்திற்குப் பதிலாக ( ஒருவேளை இதுதான் ஊதாவா இருக்குமோ?) சிவப்பு இடம்பெற்றிருந்தால் நிலைமையின் தீவிரத்தை உணர்த்துவதாக இருந்திருக்கும்! பொன்னருக்கு என் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. //கீழ்ப்பகுதியில் அந்த நீலவண்ணத்திற்குப் பதிலாக ( ஒருவேளை இதுதான் ஊதாவா இருக்குமோ?) சிவப்பு இடம்பெற்றிருந்தால் நிலைமையின் தீவிரத்தை உணர்த்துவதாக இருந்திருக்கும்//
      +1000

      Delete
    2. //வாவ்! துளியும் எதிர்பாரா புதிய பதிவைப் போட்டுத் தாக்கி இந்த ஞாயிறையும் அர்த்தமுள்ளதாக்கியதற்கு நன்றிகள் எடிட்டர் சார்!//
      +1

      Delete
    3. விஐய் சிகப்பு உக்கிரம்...எதிரிகளை எதிர் கொள்ள சரி...ஆனால் முகம் காட்ட முடியாமல் முதுகு காட்டி நிற்கும் தந்தையின் மனநிலையை ...பின்னணி நிலவாலும்...கருமைக்கு மாறி கொண்டிருக்கும் ஊதாவாலும் சோகத்தை குழைத்து தந்திருக்கும்் அட்டை ..இது வரை வந்ததிலே..அருமை

      Delete
  12. ஆசிரியரே & நண்பர்களே எனக்கு கேப்ஷன் போட்டியில் கலந்துகொண்டு பரிசை வெல்லும் திறமையோ நல்ல கற்பனை வளமோ இல்லை இருந்தாலும் முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  13. Hello Vijayan sir,

    "Raththa padalam" in color, is such a good idea.
    Even if it become bit more costlier (it can be around 2.5K), I wish to have 3 hard bound books, in bit bigger format.
    I wish you to reprint books came in late 80s too.
    Vettaiyar stories,
    Super Reporter Johnny stories,
    Adhiradi padai stories,
    etc. etc... are too needed.

    Regards,
    Mahesh


    ReplyDelete
    Replies
    1. //even its costlier i wish to buy//
      +1133557799

      Delete
    2. May be in the size of cinebook titles.. Or our own Rathapadalam 5,6 size.

      Delete
  14. //ஆளுக்கு மூன்றே வாய்ப்புகளே - போட்டிக்கோ; லூட்டிக்கோ! ///

    எதிர்காலத்தில் கமெண்ட்டு போடுவதற்கும்கூட இப்படியொரு கட்டுப்பாடு கொண்டுவந்துவிடுவீர்களோ...? ஐயோ.. இப்பவே பயமா இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY @ எல்லாம் நம்ப லூட்டி தாங்க முடியாமதான்!

      Delete
  15. ஞாயிறு விடியல் உங்கள் பதிவுடன்
    தொடங்கினாலே மகிழ்சி.
    அனைத்து நண்பர்களுக்கும்
    ஈரோடு விஜய்க்கும் காலை மற்றும்
    ஞாயிறு வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. வ..வணக்கம் துரை அவர்களே! கேப்ஷன் போட்டியில் வெற்றிபெற என் அட்வான்ஸ் வாழ்த்துகள்! :)

      Delete
  16. கார்சன்- டெக்ஸ் அங்க யாரோ ஒரு பொண்ணு வருது பார்
    டெக்ஸ்-(மனதிற்குள்)அட கபோதி கிழவா அங்க ஒரு எருமைமாடு வருது உன் கண்ணுக்கு பொண்ணு மாதிரி தெரியுதா
    இந்த லட்சணத்துல துப்பாக்கிய தூக்கிட்டு வேற வந்துர்ற

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் நண்பரே :-)
      //துப்பாக்கியத் தூக்கிட்டு வேற வந்துடுறே//
      அந்த பினிஷிங்க் டச் செம!!!

      Delete
    2. பார்ரா...திருவிளையாடல் படத்தில் பாட்டு வராதுன்னு பானபத்ரரால் விரட்டப்பட்ட சடை பட்டைய கிளப்பின மாதிரியே,....
      எழுத வராத செந்திலாரே இப்படி தாக்கினா,இன்னும் க்ளிக்கார்,குடல்உருவியார்,பாம்பாம் பிக்காலோ,இத்தாலிக்காரர்,பெங்களூர்பரணி ,கிட் மாமா..... இன்னும் இன்னும் பல நண்பர்கள் எப்படி தாக்குவாங்களோ!!!!!!........

      Delete
    3. சத்யா & டெக்ஸ் நன்றி நண்பர்களே
      எதோ கத்துக் குட்டி போல் முயற்சி செய்துயிருக்கிறேன் பரிசு கிடைக்கா விட்டாலும் போட்டியில் கலந்து கொண்டதே போதும்

      Delete
  17. விஜயன் சார், பதிவுக்கு நன்றி!

    ஒரு வேண்டுகோள்: z வருமோ வராதோ, நீங்கள் வேகம் எடுத்து கொண்டு இருக்கும், பல நண்பர்களை கவர்ந்த தோர்கல் கதையை தாமதம் இல்லாமல் வெளி இட வேண்டும். தயவு செய்து அவரை இந்த வருடம் தொங்கலில் விட்டு விடாதிர்கள்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் தேர்கல் ரொம்ப பிடித்த கதை.நானும் சந்தா Z விரைவில் வரும் என எதிர்பார்க்கிறேன்.

      Delete
    2. தோர்கில் கண்டிப்பாக வேண்டும்.

      Delete
    3. ஆமாம் சார் அட எனி சேஞ்ச் தோர்கல் அவசியம் வரணும்......எதுவும் அகப்படலைனா ஆண்டு மலரின் இடத்தில் தோர்கல் 4பாகத்தையும் திடீர் மலராக போட்டுவிடுங்கள்....

      Delete
    4. // எதுவும் அகப்படலைனா ஆண்டு மலரின் இடத்தில் தோர்கல் 4பாகத்தையும் திடீர் மலராக போட்டுவிடுங்கள் //

      ++++++++++100
      அல்லது எதுவும் அகப்படலைனா ஆண்டு மலரின் இடத்தில் தோர்கல் 6 பாகத்தையும் திடீர் மலராக போட்டுவிடுங்கள்

      Delete
    5. ஆமாம் எடிட்டர் ஸார் நண்பர்கள் சொல்வது போல் தோர்கல் வராவிட்டால் உங்களை மூன்றாம் உலகத்தில் தள்ளிவிட்டுவிடுவோம்.

      Delete
    6. தோர்கல் கண்டிப்பாக வேண்டும்

      Delete
    7. சேலம் Tex விஜயராகவன் @ "திடீர் மலராக" இந்த பெயர் கூட சொக்கா இருக்கே! விஜயன் சார் இத நோட் பண்ணுங்க!

      Delete
  18. ஞாயிறு வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.

    ReplyDelete
  19. CAPTION
    கார்சன்: ஆதோ அந்த இடத்துல தான்என்னேட 12 காதலிய 23 தடவை பார்த்தது....
    டெக்ஸ்: "நீ பார்த்தது இருக்கட்டும் அந்த பொண்ணு உன்னை பார்தூச்சா'

    ReplyDelete
  20. /// நீண்ட நெடும் காலத்திற்குப் பின்பாக டெக்ஸ், கார்சன், கிட் & டைகர் ஒட்டுமொத்தமாய் கதை முழுவதிலும் பட்டையைக் கிளப்பிடுகிறார்கள்! //

    அட்டகாசம் சார்! சமீப நாட்களில் இதுவொரு குறையாகவே இருந்தது. தற்போது மொத்த டீமும் களமிறங்குவது பள்ளிக்கூட காதலியை திருவிழாவில் பார்த்ததைப்போலொரு சந்தோசத்தைத் தருகிறது!

    //தந்தைக்கும்-தனயனுக்கும் மோதல் ; கிட்டின் வாழ்வில் மலர்ந்திடும் மெல்லிய காதல்; பாசமிகு தந்தையாய் நமது இரவுக் கழுகார் மௌனமாய் அனுபவிக்கும் வேதனைகள் –///

    குடிலில் வயசுக்கு வந்த பையனை வச்சுக்கிட்டு காலாகாலத்துல ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்க்கலேன்னா எல்லா அப்பாக்களும் இதான் கதி!

    BTW, ஒரு பாசமிகு தந்தையாய் பரிமளிக்கப்போகும் டெக்ஸைக் காண மிகுந்த ஆவலோடு இருக்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. //பள்ளிகூட காதலியை திருவிழாவில் பார்த்த சந்தோசம்.!//

      ஹாஹாஹா..........

      ஏற்கனவே மெக்ஸிகோ படலத்தில் ஒரு காதல் பணால் ஆச்சு இப்போ இங்கேயுமா.? கிட்டையும் கிட் கார்ஸன் ஆக்கிவிடுவார்களோ ?

      Delete
    2. //கிட்டையும் கிட் கார்ஸன் ஆக்கிவிடுவார்களோ ?///----டெக்ஸ்க்கே கூட இன்னும் மார்க்கெட் இருக்கும் போல...ஹி..ஹி..ஹி....

      Delete
  21. விஜயன் சார், இரத்த படலம் இதனை அடுத்த வருடம் ஜனவரிக்கு வைத்து விடலாம்! இந்த வருடத்தில் முத்து மினி, மற்றும் Absolute classic comics இவைகளில் கவனம் செலுத்தலாம்; இது போக ஏற்கனே அறிவித்த z உள்ளது.

    இரத்த படலம் - எப்படி (2 புத்தகமாகவோ, 3x4 புத்தகமாகவோ, 1x12 புத்தகமாகவோ) வெளி இட இருந்தாலும் அவரை ஒரே நேரத்தில் வெளி இட வேண்டும். இதனால் இதன் சுவாரசியம் குறையலாம் சுவைக்க முடியும்.

    ReplyDelete
    Replies
    1. இது கூட நல்ல யோசனையாக உள்ளதே.

      Delete
    2. Z சந்தாவா அல்லது இரத்த படலமா என்று கேட்டால் எனது choice z சந்தா தான்.

      Delete
    3. பரணிசார்.! &குமார்

      +1111
      இஸட் சந்தா வேண்டும் சார்.! இரத்த படலத்தை அப்பால பாத்துக்கலாம்.!

      Delete
    4. ///Z சந்தாவா அல்லது இரத்த படலமா என்று கேட்டால் எனது choice z சந்தா தான்.///..+1000000

      Delete
    5. சந்தா Z யே முதலில் வரட்டும்...
      இரத்தப்படலம் பொறுமையாகவே வரட்டும்...
      எனக்கும் டபுள் ஓ.கே!!!

      ஆனால் எப்ப வந்தாலும் ஒரேரேரே...(ஐய்யோ டெக்ஸ் மாம்ஸ் ஆபர் வேற அப்ப அப்ப கண்ணு முன்னால வந்து போகுதே!!!)

      Delete
    6. பரணி சார்..!
      என் எண்ணமும் இதுவே..!
      முத்து மினி, க்ளாஸிக் கலக்ஷனா இல்லை இரத்தப்படலம் தொகுப்பா எனும்போது என் தேர்வு நிச்சயம் இரத்தப்படலமாய் இருக்காது.

      Delete
    7. I agree! முத்து மினி, க்ளாஸிக் first! இரத்தப்படலம் next!

      Delete
    8. ஹப்பாடா..!எல்லாரும் ஒரு முடிவுக்கு வந்துட்ட மாதிாி தொியுது..! சந்தோசம் சந்தோசமே..! அப்புறம்.. தோா்கல்!சந்தா z-ல் எத்தனை கதைகள் வெளியிட உள்ளீா்களோ தொியாது..ஆனால் வெளிவரும் கதைகளில் பாதி தோா்கலுக்கு..! ஓ.கே!!

      Delete
  22. Nice going this year, expecting subscription Z soon. XIII can be split into 3-4 books with hard bound as a box set in special collector's edition box with some bonus items for pre-order.

    ReplyDelete
    Replies
    1. எடை என்பது ஓரு மைனஸ் என்று இருந்தாலும். ஓரு குண்டு புக் என்பது ஓரு வகையில் சுவாரஸ்யம் தரும் விஷயம்.மின்னும் மரணம் நான் பஸ்ஸில் படித்த போது இரண்டு, மூன்று பேர் அதை என்னிடம் வாங்கி பிரம்மிப்பாக பார்க்க வைத்து மி.ம தரம் மற்றும் அது அவ்வளவு பெரியதாக குண்டாக இருந்தது தான்.அதனால் நாம் ஓரே குண்டு புத்தக மா கேட்போமே.

      Delete
    2. குமார் @


      உண்மை சார்.! மின்னும் மரணம் புத்தகத்தை பார்ப்பவர்கள் ஆ வென்று வாயை பிளப்பார்கள்.! இரத்தப்படலம் அதைவிட குண்டாக வந்து அசத்த வேண்டும். இரண்டாக பிரித்தால் அதற்கு மதிப்பு குறைந்துவிடும்.!

      Delete
    3. @Ganesh & M.V.:
      +100000000000000

      நானும் இரதப்படலம் ஒரே புக்காக வேண்டும் என்று கேட்பதன் பிண்ணனியே நீங்கள் சொல்லும் காரணங்கள் தான்...

      இதையும் சற்றே சிந்தித்து பாருங்கள்:
      1. ஏற்கனவே படித்த கதை தான் என்றாலும் 'மின்னும் மரணம்' புத்தகத்தை பல நண்பர்களை வாங்க செய்தது ஒரே புக்காக வந்த அதனுடைய பிரமிப்பு தான்

      2. அந்த ஒரே புக்காக பெரிய குண்டு புக் தந்த பிரமிப்பு தான் தி.மு.க. வின் ஸ்டாலின் அவர்களை எத்தனையோ காமிக்ஸ் இருந்தும் மின்னும் மரணம் புக்கை வாங்கச் செய்தது

      3. அது மட்டுமல்லாமல் இனி எடிட்டர் எத்தனையோ குண்டு புக் ஸ்பஷல் புக் வெளியிடலாம் தான். ஆனால் மின்னும் மரணம், இரத்தப்படலம் போல் ஒரே தொடர்ச்சியான நீ...ண்ட கதை வரப்போவதில்லை...So அப்படிப்பட்ட கடைசியாக நம்மிடம் இருக்கும் ஒரே கதை இரத்தப்படலம் தான்.
      4. முத்தாரம் புக்கில் ரொம்ப வருடங்களுக்கு முன் சின்னஞ்சிறு கோபு என்னும் வாசகர் தமிழில் மிகப் பெரிய சிறுவருக்கான புத்தகம் (காமிக்ஸ்) வெளி வந்தது லயன் 87 தீபாவளி மலர் (புக் பெயர் சரியாக ஞாபகம் இல்லை) தான் என்று குறிப்பிட்டு இருந்ததாக ஞாபகம்...
      அதந் பிறகு சொல்லிக் கொள்ளும்படி பெரிய்ய்ய்ய காமிக்ஸ் எதுவும் வரவில்லை என்று சொல்லி ஆதங்கப் பட்டிருந்தார்...அதன் பிறகு ரொம்ப வருடங்கள் கழித்து தான் இரத்தப்படலம் b&w ம் மின்னும் மரணமும் பெரிய்ய்ய்ய புக்காக வெளி வந்தன...

      5. எடை அதிகம் வரும் என்ற ஒற்றைக் காரணத்திற்காக மட்டுமே இரத்தப்படலைத்தைப் பிரித்து வெளியிட வேண்டாமே... பல நண்பர்களுக்கு இது ஒரு காமிக்ஸ் சேகரிப்புக்கே என்றாகிப் போகும்போது
      ஒரே புக்காக பிரமாண்டமாக வெளிவருவது தானே சிறப்பு...
      வைரமுத்து சொல்லியது போல் மனதுக்குப் பிடித்த பொருளை கையிலேந்தும்போது அதனுடைய எடை தெரியாது என்பது போல்...இரத்தப்படலத்தின் பிரமாண்டம் அதனுடைய எடையை மறைத்து விடும்.
      6. எல்லாத்தையும் விட முக்கியமாக 1-18 புக்கில் b&w லேயே பார்த்த XIII ந் கதை நாயகிகளை குறிப்பாக 'பெட்டியை' மொத்தமச்க color ல் பார்க்கும்போது அடடா...!!!

      So இரத்தப்படலம் எவ்வளவு லேட்டா வெளியான லும் ஒரே புத்தகத்தில் தான் பல நன்மைகள்...

      போதும் இந்தப் பதிவிலும் மறுபடியும் இரத்தப்படலம் புராணம் தொடர விரும்பவில்லை...ஆகையால் இரத்தப்படலம் புராணத்தை இத்தோடு நான் நிறுத்திக் கொள்கிறேன்...

      சந்தா Z, மினி முத்து போன்றவைகளின் மீது சிந்தனை செய்வோம்...

      Delete
    4. @ஸ்டீல் க்ளா:
      நன்றி நண்பரே!!!

      நான் இவ்வளவு தூரம் சொல்வதற்குக் காரணமே, என்னால் முடிந்த வரை அனைத்து நண்பர்களையும் கன்வின்ஸ் செய்து அனைவரின் ஆதரவோடும் இரத்தப்படலம் வெளிவர வேண்டும் என்பதற்காகவே...

      நமது காமிக்ஸின் tag line eh 'ஒவ்வொரு முகத்திலும் ஒரு சந்தோஷ புன்னகை' எனும் போது...என்ன தான் இரத்தப்படலம் கலரில்,ஒரே புக்காக வெளிவந்தாலும் அதில் சில நண்பர்களுக்கு மட்டும் சந்தோஷம், சில நண்பர்களுக்கு சந்தோஷமில்லை,ஆர்வமில்லையென்றால் அது வெளிவந்து மட்டும் என்ன பிரயோஜனம்...

      அனைத்து நண்பகளின் ஆதரவோடும்,கரகோஷங்களோடும் 'மின்னும் மரணம்' வெளீயிடு போலவே 'இரத்தபடலம்' வெளியிடப்பட வேண்டுமென்பதே எனது விருப்பம்...

      அனேக நண்பர்களின் விருப்பம் பிரித்து தான் வெளியிட வேண்டுமென்றால்...எனக்கும் ஓ.கே.

      இத்தனை வருடங்களாக ஏதோ ஒரு வகையில் நம்மைக் கட்டுண்ட செய்த XIII நாயகன் க்கு நல்ல முறையில்(கேப்டன் தைகருக்கு மின்னும் மரணம் போல) Tribute செய்தாலே போதும்!!!

      Delete
    5. சத்யா வருத்தம் வேண்டாம் ஆசிரியர் நல்ல முடிவாக எடுப்பார்,சாதனை படைக்கும் வகையில் இதழ் வெளியானால் அனைவருக்கும் அதில் மகிழ்ச்சியே.
      மின்னும் மரணம் இதழைப் பார்க்கும் போதெல்லாம் எனது வதனத்தில் மகிழ்ச்சி பரவுகிறது நண்பரே.
      பெருமிதப்படைப்பல்லவா அது.நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

      Delete
  23. Z சந்தா பின்னோக்கி போவது வருத்தமான விஷயம்,ஜனவரியில் விட்ட வசூலை ஏப்ரல் புத்தக கண்காட்சியில் கண்டிப்பாக ஈடு செய்து விடலாம் ஆசிரியரே,அதற்கு நம் வாசகர்களும் ஒத்துழைப்பு நல்குவார்கள்.எனவே Z சந்தாவை தள்ளிபோட வேண்டாமே.
    மறுபதிப்புகளில் கவனம் செலுத்தும் அதே நேரம் புது வரவுகளையும் பாதிக்க வண்ணம் திட்டமிடுதல் அவசியமாகிறது.
    சவாலான இரட்டை குதிரை சவாரிதான்,கவனமாய் சென்றால் பயணம் சிறப்பாய் அமையும்.

    ReplyDelete
  24. Appaaaaa... ippo thaan i am feeling happy on seeing sunday post...Sunday without editor sunday post is a dull day.

    Thanks Paranitharan for info

    ReplyDelete
    Replies
    1. பாலா சார் . உண்மை.!

      இன்று வரமாட்டேன் என்று கூறினாலும்.அதிகாலையில் செக் செய்தபின் ஏமாந்து போனேன்.ஞாயிறு பதிவு இல்லையென்னறால் மனது சோர்வடைகிறது என்பது உண்மை.!

      Delete
  25. விதி போடும் விடுகதை அட்டைபடம் சிறப்பாக அமைந்துள்ளது.தந்தைக்கு எதிராய் தனயன்.இது போன்ற வித்தியாசமான களங்களே டெக்ஸ்சின் திறமைக்கு மேலும் வலுசேர்க்கின்றன.
    நல்லதொரு சாகசமாக இது அமையும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  26. சார் டெக்ஸ் அட்டை படங்களிலே இதுதான் அதிசிறந்ததாய் தோணுது .போன்னன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவிப்பதுடன் இதை விட சிறப்பாய் யாராலும் தரமுடியாது என்றும் கூறிடுங்கள் . ஆனால் லயன்250??????

    ReplyDelete
    Replies
    1. இப அட்டை இப்போதே துவங்கிட சொல்லுங்கள்...என்ன செய்வாரோ /வீர்களோவண்ணச்சேர்க்கயும் படமும் பின்னிப் பெடலெடுக்கோணும்

      Delete
    2. ///நன்றியை தெரிவிப்பதுடன் இதை விட சிறப்பாய் யாராலும் தரமுடியாது ///--- களம் இறங்கி உள்ள நம் நண்பர்கள் இதை விட சிறப்பாக செய்வார்கள் நண்பரே க்ளா...
      நமக்கு நல்ல அட்டைப்படங்கள் கிடைப்பது உறுதி....

      Delete
  27. எடிட்டர் சார்.!

    //டி சர்ட் ல் யாரோட படம் போடுவது.???///

    இதென்ன கேள்வி ? எங்கள் இளவரசியை தவிர வேறு யாருக்கு அந்த தகுதி உள்ளது .???

    ReplyDelete
    Replies
    1. அதானே.. இளவரசி படத்தை போட்டாலே ஆயிரம் கவிதை போட்டது மாறி இருக்கும்..

      Delete
    2. ஆமா ஆமா MV சார்.கூடவே கார்வின் படத்தை போட்ராதிங்க. தூரமா ஓரு ஓராம வேனா சின்னதா வேன கார்வின் இருக்கட்டும்

      Delete
    3. முன்னாடி இளவரசிபடம் ....
      முதுகில் டெக்ஸ் படம்...
      வாய்ப்பு உண்டாங் சார்??????

      Delete
    4. கரூர் சரவணன் & குமார். @

      மிக்க நன்றி.!
      இளவரசியின் போட்டோ டி.சர்ட் ல் அச்சிடுவதால் உள்ள நன்மை ;

      1) அழகாக இருக்கும்

      2) பார்ப்பவர்களின் மனம் கவரும் .( யார் இந்த அழகு பெண் என்று காமிக்ஸ் சம்பந்தம் இல்லாதவர்களும் விசாரிப்பார்கள் காமிக்ஸுக்கு விளம்பரங்கள் கிடைக்கும்.!

      3) சிறு பிள்ளைத்தனம் என்று யாரும் குறை கூற முடியாது.!

      4) மற்ற மூஞ்சிகளை பார்க்க சகிக்காது.
      (காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதுபோல் அவரவர் ஹீரோக்கள் அவர்களுக்கு மட்டுமே அழகாய் தோன்றுவார்கள்.! மற்றவர்களுக்கு (எதிரே வருபவர்களுக்கு)............?? அட சாமி...என்று முகம் சுழிக்கக்கூடும்.)

      5)நமது காமிக்ஸின் முதல் ஹீரோயினிக்கு மரியாதை கொடுத்த மாதிரி இருக்கும்.!

      6) நமக்கு இளவரசியை தவிர வேறு பெண் ஹீரோயின்கள் கிடையாது.!

      7) அழகான மாடஸ்டி டி.சர்டை அனைவரும் பார்க்கும் போது கொசுறாக என்னை மாதிரி சுமார் மூச்சி குமாரையும் கவனிப்பார்கள்.

      8) ஜிம்முக்கோ ஜாக்கிங் கோ செல்லும்போது இளவரசியை பார்த்தால் அரைமணிநேரம் அதிகமாக ஜிம் செய்யலாம் அல்லது இரண்டு ரவுண்ட் அதிகமாக ஓடலாம்...............................................

      Delete
    5. என்ன M.V சார் இதெல்லாம் ரூம் போட்டு யோசிச்சிங்களா?
      ஹா,ஹா,ஹா நல்லாத்தான் யோசிச்சிருக்கிங்க.

      Delete
    6. மி.ம "சிகுவாகுவ சில்க்" போட்ட கூட நல்ல தான் இருக்கும்

      Delete
    7. Attakasamana idea ji. I agree a million with u.

      Delete
    8. Attakasamana idea ji. I agree a million with u.

      Delete
  28. ஞாயிறு வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  29. கேப்சன் போட்டி-1,
    கார்சன்:நண்பா அதோ தூரத்துல ஒரு கடை இருக்கறமாதிரி தெரியுது.அங்க போய் வறுத்தகறி இருக்கான்னு பாத்துட்டு வரலாம் வர்றியா?
    டெக்ஸ்:அடே ஆட்டுதாடி,நானே கிட்டை இன்னும் காணோம்னு கடுப்புல இருக்கேன்,இதுல நீ வேற.

    ReplyDelete
  30. ஞாயிறு பதிவு கிடையாதே என அதிகாலை9மணிக்கெல்லாம் வழக்கம் போல எழுந்து ,போனை பார்க்காமலே (எப்பவும் செல்லை பார்ப்பேன்,பதிவுக்காக) மீன் கடைக்கு சென்று வந்து அசால்டா பார்த்தால் ......

    அய் திடீர் பதிவு ,ச்சை இல்லை இல்லை ரெகுலர் பதிவு, ஏதோஒண்ணு வந்தா சரித்தான்...ஹி..ஹி..ஹி..

    ReplyDelete
  31. கார்சன் ** டெக்ஸ் இந்த தேர்தல்ல நம்ம
    ஓட்டு அய்யாவுக்கா ?? அம்மாவுக்கா??

    டெக்ஸ் ## இது மாதிரி சப்தம் போட்டால்
    நமக்கு வேட்டுதான்@@

    ReplyDelete
  32. தி நகரில் டெக்ஸ் அட்டகாசம். சீற்றத்தின் நிறம் சிகப்பும் தூள்

    ReplyDelete
  33. இன்னும் ஒரே வாரம் தானா ....டெக்ஸ் தீபாவளியை காண ....சூப்பரோ சூப்பர் ...மாதம் ஒரு டெக்ஸ் வந்தாலும் மீண்டும் ஒரு புது சாகசத்தில் டெக்ஸ் என்ற முன்னோட்டம் வந்தாலே மனம் கூதுகலம் அடைகிறது சார் ..ஆவலோடு காத்திருக்கிறேன் ...;-)

    ReplyDelete
  34. கேப்சன் போட்டி-2,
    கார்சன்:டெக்ஸ் அங்கே பாரு,குதிரையில் ஒருத்தன் வரான்.நாம எதிர்பார்க்கிற ஆள் அவனாத்தான் இருக்கனும்.
    டெக்ஸ்:அப்படி இருந்தா நான் தப்பிச்சேன்,மொட்டை வெயிலில் மண்டை காயறதும் இல்லாம நீ போடுற மொக்கையை எவ்ளோ நேரம்தான் தாங்குறது.

    ReplyDelete
  35. டி சர்ட் பாக்கட் வைக்கும் இடத்தில் பெரிதாக இல்லாமல் ஒரு சிறிய வட்டத்தில் டெக்ஸ் புகைப்படம் இருப்பது போல அமைந்தால் சிறப்பாக இருக்கும் சார் ...;-)

    ReplyDelete
    Replies
    1. தலைவரே யார் படம் இடம் பெருகிறோ இல்லையோ எனக்கு லயன் காமிக்ஸ் முத்து காமிக்ஸ் இரண்டு பெயர்களும் சிங்கம் படமும் போட்டே ஆகனும்

      Delete
  36. கேப்சன் போட்டி-3,
    கார்சன்:நல்லவேளை அந்த பக்கமா நாம போகலை,இல்லைன்னா இப்படி சொகுசா உட்கார்ந்து இருக்க முடியுமா? ஹி,ஹி.
    டெக்ஸ்:யோவ் கிழம்,எப்ப பாரு உட்காருவது,தின்பது,தூங்குவதுன்னு உனக்கு இதே நினைப்புதான்,வயசானாலே இப்படித்தானோ?

    ReplyDelete
  37. இப முழு தொகுப்பாக மட்டுமே வேண்டும் within this year.
    மறுவேளியிடு அனைத்து புத்தகமும் வேண்டும்..

    ReplyDelete
  38. டெக்ஸ் முன்அட்டைப்படம் அசத்தல்,பின் அட்டைப்படம் அருமை.மற்றவர்களுக்கு எப்படியோ மாதாமாதம் இரவுகழுகாரின் வரவு,வாழ்தல் இனிது என்பதை மெய்ப்பிக்கிறது.மறுபதிப்புகள் ஏற்படுத்திய எண்ணங்களைத் தாண்டி மாதம் ஒரு டெக்ஸ் சாகசம் என்பதை நினைக்கும்போதே தித்திப்பு நெஞ்சில்...டெக்ஸ் தனித்தண்டவாளம் எப்போதும் தொடர வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. //மாதாமாதம் இரவுகழுகாரின் வரவு,வாழ்தல் இனிது என்பதை மெய்ப்பிக்கிறது.மறுபதிப்புகள் ஏற்படுத்திய எண்ணங்களைத் தாண்டி மாதம் ஒரு டெக்ஸ் சாகசம் என்பதை நினைக்கும்போதே தித்திப்பு நெஞ்சில்///

      அழகான வரிகள்! என் நிலையும் இதுவே! :)

      Delete
    2. அருமையான ஆழ்ந்த வரிகள் நண்பரே...
      இரண்டு ப்ளேட் வறுத்தகறி சாப்பிட்ட ஃபீலிங்....

      Delete
    3. திருமா @

      அருமையான வரிகள்.!சூப்பர்.!

      Delete
    4. Super Boss! Many of us feel the same!

      Delete
  39. ஞாயிறு பதிவின் தலைப்பு நச்...ஹாஹாஹாஹாஹா

    ReplyDelete
  40. ///இம்முறையோ ரேஞ்சர் குழு ஒட்டுமொத்தமாய் களம்காணும் சிவகாசிச் சரவெடியிது! யெஸ் – நீண்ட நெடும் காலத்திற்குப் பின்பாக டெக்ஸ், கார்சன், கிட் & டைகர் ஒட்டுமொத்தமாய் கதை முழுவதிலும் பட்டையைக் கிளப்பிடுகிறார்கள்! ///---
    ஸ்டீவ் ப்ராட் பால்ல ஆறுக்கு 6 சிக்ஸர் அடிச்சிபோட்டு ,7வதா ஏதும் போனஸ் பால் போடுவாங்களான்னு பார்த்த யுவராஜ் மாதிரி......... வெயிட்டிங் சார்....

    ReplyDelete
  41. டீ-சர்ட்டில் நமது ரெகுலர் வசனம் (7 முதல் 77 வரை அனைவருக்கும் காமிக்ஸ்) இதை வைக்கலாமே.
    வேற மாதிரி வேணும்னா கூட யோசிக்கலாம்.
    1. எங்கும் காமிக்ஸ்,எதிலும் காமிக்ஸ்.
    2. காமிக்ஸ் உலகம்.
    3. Comics Come-Back.
    மொக்கையா இருந்தா நட்புக்கள் மன்னிச்சூ.

    ReplyDelete
  42. Dear editor
    It's nice to get reprints
    But XIII probably out best book ever is gonna cost 2300 in color avatar and all said/done it's one story.
    Would it not be better off to get atleast 30 titles of other coveted books which v missed in the past for when say 3000 rupees instead of investing in one story?
    Regards
    Arvind

    ReplyDelete
  43. Dear editor
    It's nice to get reprints
    But XIII probably out best book ever is gonna cost 2300 in color avatar and all said/done it's one story.
    Would it not be better off to get atleast 30 titles of other coveted books which v missed in the past for when say 3000 rupees instead of investing in one story?
    Regards
    Arvind

    ReplyDelete
  44. Give us atleast 25 reprints per year
    Even if each costs around 50 to to rupees it is gonna be only less than 1000 rupees per year and nostalgia fans can afford that easily.

    ReplyDelete
  45. Give us atleast 25 reprints per year
    Even if each costs around 50 to to rupees it is gonna be only less than 1000 rupees per year and nostalgia fans can afford that easily.

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. ஞாயிறு பதிவுக்கு என் முதற்கண் நன்றிகள்!

    டி-சர்ட்-க்கு பாக்கெட் இருந்தால் நல்லது! ஒன்று, இரண்டு அல்லது பல ஹீரோக்களின் படங்கள் இருந்தாலும் நல்லது

    ReplyDelete
    Replies
    1. +1 நமதது பழைய விளம்பரங்கள் போல ..அனைத்து நாயகர்களயும் வரிசையாக நிறுத்தி விடுங்களேன்

      Delete
  48. டீ-சர்ட்டில் புகைப்படங்கள் பதியும் யோசனை இருந்தால், 12 கதைநாயகர்களின் படத்தை தேர்ந்தெடுத்து பாக்கெட் சைஸ்ல போடலாமே.முன்னாடி 6,பின்னாடி 6 படங்கள் ஓகேவா?

    ReplyDelete
    Replies
    1. நான் T-SHIRT டை நல்ல விளம்பரமாக செய்யும் ஓரு பொருள் என்ற கண்ணோட்டத்தோடு தான் பார்க்கிறேன்.
      காமிக்ஸ் நாயகர்களை நமக்கு தெரியும் ஆனால் மற்றவர்களுக்கு. அதே மாடஸ்டி படம் என்றால்16 வயதுக்கு மேல் அனைத்து ஆண்களும் படத்தில் உள்ள மடஸ்டியின் hairstyle நல்ல இருக்கு என்று பெண்களும் பார்க்க வாய்ப்புள்ளது. அப்படியே சின்னதா நம்ம லோகோ வையும் போட்டு விட்டால்.புத்தக கண்காட்சி வருபவர்கள் என்றதான் இருக்கும் என்று வாங்கி பார்க்க வாய்புள்ளது.

      Delete
  49. காா்சன்:"ஹே..!டெக்ஸ்..அங்க வர்ரது என் அத்தை மாதிாி தொியுதே..!" டெக்ஸ்:"இந்தக் கொளுத்தற வெயில்லயும்,இந்தப் புழுதியிலயும் எப்படித்தான் இந்தக் கிழவனுக்கு இப்படியெல்லாம் தோணுதோ!"

    ReplyDelete
  50. T-SHIRT படத்துக்கு இரண்டு வாரம் டைம் கொடுக்க முடியுமா?
    மாடஸ்டி படம் போட வாய்ப்புள்ளது என்றால் நல்ல ஓரு anatomy மற்றும் angelலில் வரைந்து அனுப்புகிறேன்.
    வேறு மாதிரி என்றாலும் குறைந்த பட்சம் இரண்டு வாரம் தேவை.
    அட்டை பட பேட்டிக்கு தாங்கள் அனுபிய inputs மெயில் வந்துள்ளது. கூடிய விரைவில் முடித்து அனுப்பி வைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நமதது பழைய விளம்பரங்கள் போல ..அனைத்து நாயகர்களயும் வரிசையாக நிறுத்தி விடுங்களேன்

      Delete
    2. குமார் சார்.!

      சூப்பர் ! சூப்பர்.! உங்கள் சேவை நாட்டுக்கு தேவை.!

      நான் பேஸ் புக் கில் மாடஸ்டியின் படத்தை வைத்தபோது , காமிக்ஸ் பற்றி அறியாத பலர் மாடஸ்டியை உயிர் உள்ள பெண் என்று நினைத்து ஆர்வமும் கேட்டனர்.(கற்பனை கதாபாத்திரம் என்றவுடன் புஸ்ஸ் என்று ஆனார்கள் என்பது வேறுவிஷயம் ) என் மனைவியின் தோழிகள் கூட அந்த அழகான கண் பற்றி விசாரித்தனர்.!

      "அழகு ஒரு சிபாரிசு கடிதம் " என்று அன்றே ஒரு அறிஞர் கூறியுள்ளார்.!

      டி சர்ட் டில் விளம்பரம் நோக்கம் உண்டு என்றால் கண்டிப்பாக மாடஸ்டி வேண்டும்.!பெண்கள் இல்லாமல் ஒரு மார்க்கெட்டிங்கா ?


      டெக்ஸ் விஜய ராகவன் .!

      //முன்னாடி மாடஸ்டி பின்னாடி டெச்ஸ் .//

      டெக்ஸ் விஜயராகவன், பட் உங்க டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு.!

      Delete
  51. காா்சன்:"டெக்ஸ்..!அங்கே பாரேன்..இரத்தப்படலம் கலர்ல கேட்டுக்கிட்டு ஒரு குரூப் வா்ர மாதிாி தொியுது..!" டெக்ஸ்:'அடக் கிழவா வாயை மூடித் தொலை..! அப்புறம் நமக்கும் ஒரு குண்டு புக்கு கேட்டு ஒரு குரூப் கிளம்பிடும் ..அப்புறம் எடிட்டர் பாடு திண்டாட்டம் ஆயிடும்!!

    ReplyDelete
  52. டி-சர்ட்:முன்னாடி லயன் லோகோ..பின்னாடி முத்து லோகோ..!

    ReplyDelete
  53. CAPTION
    விதி போட்ட விடுகதையில் வருவது பேல்

    கிட்: உன்னோட பையன் அந்த பக்கம் இருந்து சுடுவான இல்லை இருந்து சுடுவான?!!! ஓரே குழப்பமா இருக்கே.

    டெக்ஸ்: மகனே கிட், பட்டுன்னு இந்த கிட்டொட மண்டையில பெட்டுன்னு சுட்டு பட்டுன்னு மேல அனுப்பிடு. இந்த ஆளோட தொல்லை தாங்கள....

    ReplyDelete
  54. Caption போட்டி இன்னும் சுறுசுறுப்பாக போனால் நன்றாக இருக்குமே...நிறைய Captions வந்தா அதுல கொஞ்சம் இதுல கொஞ்சம் ன்னு உறுவலாம்னு பார்த்தா...ம்ஹூம்ம்ம்...

    ReplyDelete
  55. Caption 1:

    கிட் கார்ஸன்: அதோ அந்த பொண்ணு ஓ.கே.வா டெக்ஸ்...இதோ இந்த மஞ்சக் காட்டு மைனா ஓ.கே. வா...அந்த வறுத்தக் கறி சமைக்குதே அந்தப் பொண்ணு எப்படி?

    டெக்ஸ் (மனதுக்குள்): அடப்பாவி ஆட்டுத்தாடிக் கிழவா, 'கிட்' டுக்கு ஒரு நல்லா பொண்ணா பாரு ன்னு கூட்டிட்டு வந்தா, இவன் என்னாடான்னா இவனுக்கு ஏத்த மாதிரியே பார்த்துட்டுருக்கானே!!!

    ReplyDelete
    Replies
    1. 'கிட்'டுக்குன்னு நான் சொன்னத ஒரு வேளை 'கிட் கார்சன்' ன்னுக்குன்னு நினைச்சுட்டான்னோ...

      Delete
    2. Super கலக்கிட்டிங்க...

      Delete
  56. Replies
    1. T-Shirt - நமது காமிக்ஸ் பட ஹீரோ போட்டால் யார் படத்தை போடுவது, அதில் எந்த படத்தை போட்டால் நன்றாக இருக்கும் என ஆயிரம் குழப்பம்கள் வரும். எனவே நமது காமிக்ஸ் பட ஹீரோ போட்டு T-Shirt என்பதை தவிர்ப்பது நலம்.

      முன்பக்கத்தில் பாக்கெட் வரும் இடத்தில முத்து லோகோ, பின் பக்கத்தில் லயன் லோகோ. பின் பக்கத்தில் ஒரு காமிக்ஸ் caption (Comics for all or Comics the life giver) உடன் வந்தால் சிறப்பாக இருக்கும்.

      Delete
  57. நண்பர் ஆதி தாமிரா ஒரு பதிவில் சொன்னதை இங்கே ஆசிரியர் பார்வைக்கு மீள்பதிகிறேன்: "என் பெயர் டைகர்" வண்ண இதழுக்கும் கறுப்பு/வெள்ளை இதழுக்கும் வேறு வேறு அட்டைப் படம் தயார் செய்ய முடியுமா? இது இரண்டையும் வாங்குபவர்களுக்கும் ஒரு incentive ஆக இருக்கும்.

    ReplyDelete
  58. எடிட்டர் ஐயா,
    நீண்ண்ண்ண்ண்ட நாட்களுக்கு பிறகு டெக்ஸ்+கார்ஸன்+கிட் கூட்டணி சேர்ந்திருப்பது மகிழ்ச்சியே.சமீபமாக வந்த கதைகளில் டெக்ஸ் ன் தனி ராஜ்ஜியமாவே இருந்துகொண்டிருக்கிறது.கார்ஸன் கூட கவுரவ வேடத்தில் வந்து போகிறார்.ஆக மார்ச் டெக்ஸ் கூட்டணி மெகா மாஸ்ஸாக இருக்கும்.

    ReplyDelete
  59. ஏப்ரலில் என்னென்ன புக்ஸ்தான் வரப் போகுது,ஏதேதோ டிரெய்லர்கள் மண்டைக்குள் வரிசையாய் மல்லுக் கட்டுகிறதே.

    ReplyDelete
  60. கார்சன்: யோவ் டெக்ஸ், அதோ வர்றது, அரிசோனாவுல இருந்து என்ன மாப்பிள்ளை பார்க்க வர்றதா சொன்ன குரூப்புதான?
    டெக்ஸ்: ஆமா, கேக்காத காதுக்கு ஹெட்செட்டாம், பாயாசம் குடி்க்கிறதுக்கு பல்செட்டாம்

    ReplyDelete
  61. CAPTION
    கிட்: அதோ யாரோ வர்ரா மதிரி தெரியுது....
    டெக்ஸ்: வேற யாரு LM edi விஜயன் தான் z சந்தாவா இல்லை இரத்த படலமான்னு யோசிச்சு இப்படி ஆயிட்டாரு... பாவம்.

    ReplyDelete
  62. This comment has been removed by the author.

    ReplyDelete
  63. கார்சன்: டெக்ஸ், வர வர காலம் கெட்டு போச்சி. ஆ ஊன்னா இந்த செவ்விந்தியனுங்க கத்தி கம்ப தூக்கிகிட்டுக் கிளம்பிட்றானுங்க
    டெக்ஸ்: மொதல்ல கண்ணாடி போட்டு தொலை கிழவா, பங்குனி வெயில் பளீர்னு பல்ல காட்டுது,செவ்விந்தியனுங்களாம் !

    ReplyDelete
  64. கண்டிப்பாக டி சர்ட் பாக்கட் வைக்க சொல்லுங்கள் சார் ..பாக்கட் இல்லா டி சர்ட் பயணங்களில் அதிகம் பயன்படுவதில்லை என்னை போன்றோர் க்கு ....;-)

    அதே போல நண்பர்கள் சொல்வது போல மாடஸ்தி புகைப்படம் சரியான யோசனையாக உள்ளது சார். .மற்ற நாயகர் எனில் காமிக்ஸ் சார்ந்தவர்கள் மட்டுமே அறிவர் ...மாடஸ்தி எனில் யார் இவர் என கேட்டு உற்று நோக்குபவர் பலர்...;-)

    ReplyDelete
  65. கார்ஸன்- (பாட்டு)அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
    டெக்ஸ்- ஐயோ இந்த கிழவன் பாட்டைக் கேட்டா நான் சாக வேண்டும்

    ReplyDelete
  66. கார்ஸன் - அதோ வர்றரே அவர்தான் என் பிரண்ட் தாஸ்
    டெக்ஸ் - உன் பிரண்டுன்னா அவன் தாஸா இருக்க மாட்டான் லாடு லபக்கு தாஸா இருப்பான்

    ReplyDelete
  67. டெக்ஸ்; சொல்ல சொல்ல கேட்காம லீனாவுக்கும் டோனாவுக்கும் குதிரைகளை கொடுத்துட்டு இப்படி கட்டை மேல உட்கார வெச்சுட்டானே கட்டைல போறவன்....!

    கார்சன்: அட..வுடுப்பா இதுக்குப்போயி கோவிச்சுகிட்டு....அதோ கிழக்கே போகும் ரயில் வருது .....! நாம அதுல போய்டலாம்....!

    ReplyDelete
  68. டெக்ஸ்; அப்படி யாரைத்தான் எதிர்பார்த்திட்டிருக்கானோ ?

    கார்ஸன்: பொறுப்பா.....! இந்த உடஞ்ச மூக்குப்பய ஆறு மணிக்கு வா டீ வாங்கித்தரேன்னான்...இன்னும் காணோமே.....?.!

    ReplyDelete
  69. இரத்தப்படலம் முழுத்தொகுப்பைவிட என் ஆர்வம் அதன் இறுதி பாகத்தின் மீதுதான் ..!
    எடிட்டர் சார் எப்பொழுது என்று சொல்லமுடியுமா?

    ReplyDelete
  70. சார் வேங்கை மைந்தனுக்காக காத்திருக்கிறேன்...டெக்ஸ் அட்டை...கதை லார்கோவை விட ெதிர் பார்ப்பை கூட்டி விட்டது...
    ஸ்மர்ஃஸ் எப்போ....
    அப்போ டைகர் இயல்பான மொழி பெயர்ப்பில் தூள் கிளப்ப போவது உறுதி

    ReplyDelete
  71. கார்ஸன் ;

    டெக்ஸ் அதோ அங்கே கடைசிய போற பொண்ணு மாடஸ்டி தங்கச்சி மாதிரி டக்கரா இருக்கா பாரு.?

    டெக்ஸ் (மனதினுள் );


    காலம் போன காலத்தில , குட்டி சுவத்தில உட்கார்ந்து ஹாயா சைட் அடிக்கும் காலேஜ் பசங்க மாதிரி ரவுசு பன்றியே பெரிசு.!
    தாங்க முடியலே .!

    ReplyDelete
    Replies
    1. கேப்ஸன் (2)

      கார்சன் :

      அடடே! நம்ம மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன் போட்டுஇருக்கிற மாடஸ்டி படம் போட்ட டி சர்ட் அட்டகாசமா இருக்கில்ல.?

      டெக்ஸ்:

      கடைசியா எடிட்டர் நமக்கு மனசுல மட்டும் இடம்ன்னு அல்வா கொடுத்திட்டாரே.!ஹும்.!

      Delete
    2. கார்சன் :

      அதோ தெரிகிறதே மலை.,அந்த வழியாகத்தான் ஆவியின் பாதையில் கதையில் கொள்ளையர் பாதையில் மாடஸ்டியுமம் கார்வினும் சென்ற பாதை.!

      டெக்ஸ் :

      இதெல்லாம் நல்லா ஞாபகம் வைச்சுக்கோ,ஆனா நவஜோ கிராமத்துக்கு செல்லும் வழியே மட்டும் மறந்திடு.!

      Delete
    3. ஆஹா...M.V.sir,
      24 மணி நேரமமும் தங்கத் தலைவி நினைப்புத்தானா :-):-)

      Delete
    4. MV sir எப்படி உங்களால மட்டும் மாடஸ்டி வைச்சு கற்பனையில submarine கட்ட முடியுது. பின்றிங்க போங்க.

      Delete
    5. இத பார்த்த சாதாரண ரசிகனோட கமெண்ட்'ஆ தெரியல!
      நாடி நரம்பெல்லாம் மாடஸ்டி மாடஸ்டினு முறுக்கேறி திரியற ஒரு முரட்டு வாலிபரால மட்டும் தான் இப்படி எல்லாம் யோசிக்க முடியும் !

      (நம்ம பாஷா ஸ்டைல்ல சொன்னா...)
      ஹே! ஹே! ஹே!
      நம்ம MV சார் மாடஸ்டி பத்தி நூறு முறை யோசிச்சா.....ஒரு முறை யோசிச்ச மாதிரி!

      நீங்க கலக்குங்க பாஸு :)

      Delete
  72. டெக்ஸ்: இந்த டைகர் பய ரெண்டு தடவை கலெக்டர் எடிஷன்ல வந்த ஒரே ஹீரோ நான்தான்னு கடுப்பேத்திட்டுப்போய்ட்டானே..? கிர்ர்ர்...

    கார்ஸன்: ஃப்ரெண்டு....ஃபீலாய்ட்டாப்லே....எவனாவது ஒரு முரட்டு பீஸ் சிக்கி., நடு மூக்குல நச் சுனு குத்துனா கூல் ஆய்டுவாப்லெ.....!

    ReplyDelete
  73. Edi sir, U r fixing around 2300/- for the upcoming IRATHA PADALAM though its the great news for us Rs 2300/- seems to be a bit high . I just want to know whether the customized print runs required for this book !!! bcoz already the hype and demand for the proposed edition is very high for this particular issue. May it not applicable to MINNUM MARANAM or EN PAER TIGER I hope that the pre orders would be comparatively high for this book and apart from serious comic collectors it would not reach the normal comic readers. Any chances for Re consider ur views on print runs???

    ReplyDelete
    Replies
    1. முன்பதிவுதான் நிர்ணயிக்கப் போகிறது எண.ணிக்கையை நண்பரே

      Delete
  74. Edi sir, U r fixing around 2300/- for the upcoming IRATHA PADALAM though its the great news for us Rs 2300/- seems to be a bit high . I just want to know whether the customized print runs required for this book !!! bcoz already the hype and demand for the proposed edition is very high for this particular issue. May it not applicable to MINNUM MARANAM or EN PAER TIGER I hope that the pre orders would be comparatively high for this book and apart from serious comic collectors it would not reach the normal comic readers. Any chances for Re consider ur views on print runs???

    ReplyDelete
  75. Replies
    1. தொடர்ச்சி.....

      கதை சுருக்கம்.கனடா எல்லை அருகே வீனஸ் என்னும் மருத்துவ மனையில் மனதை அமைதி படுத்தும் சிகிச்சை நடத்துவதாக கூறி அவர்களை அறியாமலே அவர்களது இரகசியம் அந்தரங்கங்களை ஹிப்னாட்டிஸம் மூலம் தெரிந்து கொண்டு கோடிக்கணக்கில் மோசடி செய்வதும் இதை நிரூபிக்க முடியாமல் சிஐ.ஏ.அதிகாரிகள் தடுமாறுவதும்.அதற்கு ஏதாவது ஆதாரங்களை கண்டறிய மாடஸ்டியை அனுப்புவதும்,கார்வின்( மரண மாமாவில் இறக்கும்) கோடிஸ்வரர் மகளான மர்லினுடன் ஏதேச்சையாக அங்கு இருக்க பின் இருவரும் சேர்ந்து மோசடிக்கான ஆதாரங்களான மைக்ரோ பிலிமை வீனஸ் மருத்துவமனையில் இருந்து லவட்டிக்கொண்டு இருவரும் வெவ்வேறு திசைகளில் ஒடுகின்றனர்.கார்வினை மைக்ரோ பிலிமுடன் ஒடவிட்டு மாடஸ்டி மட்டும் எதிரிகளை எதிர்கொள்கிறார்.அப்போது மாடஸ்டியின் டி.சர்ட் மட்டும் எதிரி கையில் சந்தர்பவசமாக சிக்குகிறது.அந்த டி.சர்ட்டில் துப்பாக்கி துளைகள் இட்டு இரத்தம் தோய்ந்த சட்டையை கார்வினிடம் ஒப்படைத்து மாடஸ்டியை கொன்று விட்டதாக நம்பச் செய்கின்றனர் ஆத்திரப்பட்டு பழிவாங்க வரும் கார்வினை பிடித்து சித்ரவதை செய்து மைக்ரோ பிலிமை பிடுங்குவதற்கு திட்டம் தீட்டுகின்றனர்.அதே சமயத்தில் நாட்டு எல்லையை தாண்டியதாக மாடஸ்டி போலீசாரால் முடக்கப் படுகிறார்.! கார்வின் மைக்ரோ பிலிமை பத்திரப் படுத்தி விட்டு வில்லன்களை பழிவாங்க கத்தி மட்டுமின்றி துப்பாக்கியையும் (???)எடுத்துக்கொண்டு எதிரிகளின் கோட்டைக்குள் புகுந்து துவம்சம் செய்கிறார்.எதிரிகள் அனைவரையும் கொன்றாலும் கேப்ரியல் மட்டும் தப்பிவிடுகிறார்.!

      சீட்டின் நுனியில் உட்கார்ந்து ஹாலிவுட் படம் போல் மெய்சிலிர்க்க வைக்கும் கதையிது.மொழி பெயர்ப்பு வசனங்கள் தூள் கிளப்பும் கதை.!

      தொடர்ச்சியாக.......

      Delete
  76. திகில் நகரில் டெக்ஸ் / நடுக்கத்தில் ஒரு நகரம்! / துப்பறியும் டெக்ஸ்!:

    வணக்கம், சென்ற வாரமே தயாராகி விட்ட விமர்சனம். ஆனால், போன வாரம் அடித்த மலிவு விலை மறுபதிப்பு பற்றி அறிவிப்பு என்ற சூறைக்காற்றில் இதைப் பதிவிட்டிருந்தால் கரை சேர்ந்திருக்குமோ என்ற சிறு சந்தேகம். ஆகையால், தாமதமாக வந்திருக்கிறது. இனி, தாமதிக்காமல் திகில் நகரில் நுழைவோமா...!

    கதை: கொலராடோ கிளென்வுட் நகரம், நவஜோக்களின் குதிரைகளை மந்தையோடு திருடி சென்றவர்களை தேடி நகருக்கு வரும் டெக்ஸ், அதில் ஒருவனை கண்டு பிடிக்கிறார். அதற்கு முன்பாக, அந்த நகரில் ஷெரிப் – ன் மரணத்தையும், அதன் தொடர்ச்சியாக மங்கைகளுக்கு நிகழும் தொடர் கொலைகளையும் பற்றி அறிகிறார். திடீரென்று, சந்தர்ப்ப சூழ்நிலையில் ஷெரிப் ஆவதுடன் துப்பு துலங்க துவங்குகிறார்! அதில் கொலையாளி யாரென்று கண்டுப்பிடித்தாரா என தி. ந. டெக்ஸ் சொல்கிறது.

    கதை காற்றாற்று வெள்ளம் போலில்லாமல், தெளிந்த நீரோடைப் போன்று அமைதியாகவே செல்கிறது. இந்த கதையில் ஆக்சன் என்றுப் பார்த்தல், ஹோல்டனோடு மோதும் மோதல் மட்டுமே! அதுக்கூட, கதையோடு இல்லாமல் கிளைக் கதையாகத்தான் வருகிறது. கதையின் கடைசிவரை கொலையாளி யாரென்று யூகிப்பது சிரமம்தான் எனினும், ஒரு 30-40 பக்கங்களை குறைத்து சொல்லியிருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும்.

    கதையின் ப்ளஸ் பாயிண்ட் என்று பார்த்தால்...
    ->அழகான சித்திரம்
    ->டெக்ஸ்-ன் முதல் முறையாக வரும் ஷெரிப் அவதார்.
    ->டெக்ஸ்-ன் நண்பராக வரும் பத்திரிகை செய்தியாளர் ஹெர்பர்ட்.
    ->ஹெர்பர்ட் ஃபுல் போதையில் அடிக்கும் ஒரு கமெண்ட் – “எனக்கு சரக்கடிக்கவும் தெரியும், வீட்டுக்குப் போகவும் தெரியும், ஆனால், என் கால்கள்தான் டான்ஸ் ஆடுகின்றன”. ஹா ஹா.....
    ->கொலையாளி யாரென்று யூகிக்க முடியாமல் கதையின் கடைசி வரை கொண்டு சென்ற லாவகம்.

    என பல ப்ளஸ்கள் இருந்தாலும், எனக்கென்னவோ சில மைனஸ்கள் தான் அதிகமாக தெரிகின்றன.
    ->டெக்ஸ் ஷெரிப் ஆனவுடன் எதுவும் அதிரடியாக செய்யாதது.
    ->வெறும் இரண்டு துண்டு சீட்டின் கையெழுத்தை வைத்து சாதரணமாக கொலையாளியைக் கண்டு பிடிப்பது. (அதுவும் வேறொரு நபர் மூலமாக)
    ->மேயர், டெக்ஸ்-சை மக்கள் முன் ஷெரிப்-பாக பிரகனம் செய்யாமல், ஜஸ்ட் லைக் தட் டெக்ஸ்-சை ஒரு நான்கு சுவற்றுக்குள் ஷெரிப் ஆக்குவது.
    ->(அதனாலே) ஒரு பிரச்சினைலிருந்து சல்லி என்ற பெண்ணை காப்பாற்ற, அந்தப் பெண் டெக்ஸ்-சைப் பார்த்து நன்றி ஷெரிப், உங்கள் பெயர் என்னவென்று கேட்பது! ( டெக்ஸ்-க்கு நெஞ்சின் இடதுபுறத்தில் ஷெரிப் என்ற முத்திரையை வழங்கியவர்கள், வலதுப் புறத்தில் ஒரு Name badge வழங்காதது.)
    ->ஹோல்டனோடு மோத துணைக்கு டெக்ஸ் ஆட்களை சேர்க்கும் போது, ஒரு மேயரான பொலார்ட் அதில் இணையாமல் பின்வாங்குவது.
    ->கொலையாளி கடைசியில் தன் வாயாலேயே நான்தான் கொலையாளி என்று எந்த வித முகாந்திரமுமில்லாமல் சொல்வது.
    ->கொலை செய்யும் போது, கொலையாளியின் சித்திரம் ஒரு ஆடவனைப் போல் காட்டியிருப்பது.
    ->க்ளைமாக்ஸ்–ல் ஒரு பரபரப்பே இல்லாமல் சப்பென்று கதையை ஆக்சன் இல்லாமல் முடித்திருப்பது.

    இந்த கதையில் கிளைமாக்ஸ்-சை கொஞ்சம் மாற்றி, அதாவது, கொலையாளி மற்றொரு பெண்ணைக் கொலை செய்யும் தருணத்தில், டெக்ஸ் அங்கு வந்து அந்த கொலையாளியுடன் மோதி, மற்றொரு பெண்ணைக் காப்பற்றி, கொலையாளியைக் கையும் களவுமாக பிடித்திருந்தால், கிளைமாக்ஸ் இன்னும் ஆக்சனோடு முடிந்திருக்கும்.

    சென்ற மாதத்து டெக்ஸ்-வுடன் இதை ஒப்பிடும் போது, இந்தக் கதை ஒரு சுமார் ரகத்தில் இடம் பிடிக்கிறது. அடுத்த இதழில் டெக்ஸ் விதியோடு எப்படி விளையாடுகிறார் என்று பார்ப்போமே...!

    ReplyDelete
    Replies
    1. மக்கள் முன் பிரகடனம்..அதிரடி எல்லாம் காட்டி இருந்தால் இன்னும் பக்கங்கள் நீண்டிருக்கலாம்....டெக்ஸுக்கு அதிரடி விளம்பரம் இனி தேவையா...?அந்த கையெழுத்து கண்டு பிடித்தது யதார்த்தம் நண்பரே...அதனால்தான் வித்தியாசம்.....அற்புதம் என்னை பொருத்தவரை

      Delete
    2. \\அற்புதம் என்னை பொருத்தவரை\\
      எனக்கும் வித்யாசமான இந்த டெக்ஸ் கதை ஓரு அற்புதம் தான்.

      Delete
    3. சூப்பர் விமர்சனம்!

      Delete
    4. // வெறும் இரண்டு துண்டு சீட்டின் கையெழுத்தை வைத்து சாதரணமாக கொலையாளியைக் கண்டு பிடிப்பது. (அதுவும் வேறொரு நபர் மூலமாக) //

      கதையின் மிகப்பெரிய ஓட்டை இதுதான்! சும்மாவே மூக்குவியர்த்து குற்றவாளி பற்றி முதல் சில பக்கம்களில் ஆருடம் சொல்லும் டெக்ஸ் இதில் மிஸ்ஸிங் :-)

      அதே போல் அந்த முன்னால் ராணுவ வீரர் டெக்ஸ் & கோவிற்கு உதவிக்கு வருவது, பின்னர் வில்லன் கும்பலால் மரணத்தை தழுவுவது என்பது இந்த கதைக்கு தேவை இல்லாத சொருகல்.

      எப்படி இருந்தாலும் மிகவும் ரசித்த கதை... விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை.

      Delete
  77. ஏகப்பட்ட செலவாயிடுச் சிப்பா ..ஊர்லே என் ப்ரண்டோட கொள்ளுப்பேத்தி சடங்காயிட் டா அதுக்கு வேறே செலவிருக்கு ..அதான் இந்த தடவை சந்தா கட்ட முடியலே ..
    அட கிழவா ..அதுக்குதான் எடிட்டர் மார்ச் டு டிசம்பர் தனி சந்தா போட்டிருக்காரே .. அதிலே கட்டிக்கோ புலம்பாதே ..

    ReplyDelete
    Replies
    1. உங்ககிட்ட இருந்து இன்னும் அதிகம் எதிர்பார்கிறேன் வீரையா :-)

      Delete
  78. கார்சன்: டெக்ஸ், வர வர காலம் கெட்டு போச்சி. ஆ ஊன்னா இந்த செவ்விந்தியனுங்க கத்தி கம்ப தூக்கிகிட்டுக் கிளம்பிட்றானுங்க
    டெக்ஸ்: மொதல்ல கண்ணாடி போட்டு தொலை கிழவா, பங்குனி வெயில் பளீர்னு பல்ல காட்டுது,செவ்விந்தியனுங்களாம் !

    ReplyDelete
  79. கார்ஸன்:டெக்ஸ்.உன்னோட சுருட்டு புகையை சமிக்ஞைனு தப்பா புரிஞ்சுட்டு டைகர் பதில் புகை சமிக்ஞை அனுப்றான் பார்
    டெக்ஸ்: அட அது அவன் லவருக்கு அனுப்புற புகை சமிக்ஞை

    ReplyDelete

  80. டெக்ஸ்(மனதிற்குள்):கிட் குதிரைகளுடன் வருவதாக சொல்லிவிட்டு சென்றவன் இன்னும் வரவில்லையே?
    கார்ஸன்:அதோ பார் டெக்ஸ் தொலைவில் தூசு படலம் எழும்புகிறது வருவது கிட்டாகத்தான் இருக்கும்.

    ReplyDelete
  81. அட நம்ம favourite ஜோடி is back !!!

    Caption 1:
    -------------

    கார்சன்:

    அந்த காலத்துல நானும் லீனாவும் ஒரே குதிரைய(ல) ஒன்னா ஓ(ஒ)ட்டிக்கிட்டு doubles போவோம் பாரு ! ஹ்ம்ம்....
    (சத்தமாக)
    அது ஒரு நிலா காலம் !
    குதிரைகள் கனா காணும் !
    பாலை ஓரம்......
    நீயும் நானும்.............

    டெக்ஸ்:
    (மனதிற்குள்)
    "ஐ ஐ ஐயோ....மறுபடியும் முதல்ல இருந்தா.....
    கெழவன் 'கார்சனின் கடந்த காலம் part III' க்கு அடிபோடரர் போல..."
    (சத்தமாக)
    சரி..சரி..
    கடவாய் ஓரம் வழியுற ஜொள்ள துடை!
    ஈ மொக்கிது பாரு !




    ReplyDelete
  82. Caption 2:
    -------------

    கார்சன்:

    அப்போ எல்லாம் அந்த ஏரியா பச்சை பசேல்னு இருக்கும் பாரு !
    நான் எல்லாம் இங்க ரெண்டு நாளு தங்காம போனதே இல்ல !

    டெக்ஸ்:

    (மனதிற்குள்)
    என்னாது!
    இந்த பாலைவனம் பச்சை பசேல்னு இருந்துச்சா ?
    ஆஹா... சந்தேகமே இல்ல...
    இந்தாளுக்கு கண்டிப்பா 95 வயசுக்கு மேல தான்...
    சும்மா எப்ப பாரு
    "எனக்கு 65 உனக்கு 55"ன்னு பீலா விட்டுக்கிட்டு திரியரபுல!


    ReplyDelete
  83. கிட்: நண்பா எனக்கு கல்யாணம் பண்றத பத்தி தானே யோசிச்சுட்டு இருக்கே?

    டெக்ஸ்: அட ஆண்டவா, அடிக்கிற வெயில்ல இந்த கிழவனுக்கு வயசு திரும்பிடுச்சோ!

    ReplyDelete
  84. டெக்ஸ்-(அப்பப்ப கையை தூக்கிட்டு,அம்பயர் கணக்கா என்னமோ பண்றானே..என்னவா இருக்கும்..?!) காா்சன்-"ஏம்ப்பா டெக்சு..நானும் அப்பாலிக்கா புடிச்சு கைய தூக்கி அவுட்,அவுட் னு கத்தறேன்..இந்த டைகர் பய புள்ள மைதானத்த வுட்டு போகமாட்டேங்குறானே..அவுட் பண்ண வேற வழி ஏதாச்சும் இருக்குதா..?!

    ReplyDelete
  85. எதிர்பாராத மகிழ்ச்சியான பதிவு. Editor sir getting ready for April feast which includes என் பெயர் டைகர் as main dish!

    ReplyDelete
  86. சார் இபத்திற்க்கு 20பக.கங.கள் தனியாக ொதுக்குங்கள்....வாய்ப்பிருந்தால் வான்ஹாம்மே பேட்டி இந்த ஒரே தொகுப்பு பற்றி அப்படியே லார்கோவுக்கு அப்ளிகேசன்......நண்பர்களின் கை வண்ணங்கள்..சிறப்பு பார்வைகள்....அனுபவங்கள்...வலையில் கிடைக்கும் இதழ் குறித்த சிறப்பு தகவல்கள்...ஆராய்ச்சிகள் அலங்கரிக்கலாமே

    ReplyDelete
  87. சார் சனியன்று புத்தகம் கிடைத்தாள் ஞாயிறு நன்றாயிருக்குமே

    ReplyDelete
  88. Dear Editor sir, for TShirt, we may print our lion comics logo or a cowboy image in left chest accompany with a word " I AM A COMIC LOVER" or "PROUD TO BE A COMIC READER" or something like that. We can use it in book fairs as well as in comics friends get together's and also we can express our interest/love about the comics to everyone. I let font colour, style to your idea, because you are the one knows our pulse(love of comics) very much than anyone and so we believe in you.

    ReplyDelete
  89. T-Shirtல மாடஸ்டி படம் போடுறதபத்தி பேசுறது எல்லாம் சரிதான், அதே நேரத்தில் வீட்டில் ஒரு வார்த்தை சொல்லிடுங்க நண்பர்களே! அதே நேரம் வீடு சுத்தம் பண்ணுறதவெச்சி நமக்கு பூசை நடப்பதில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதை பற்றியும் கொஞ்சம் கவனத்தை செலுத்தலாம் :-)

    ReplyDelete
    Replies
    1. இந்த பொண்ணோட படத்தை போட்டது editorதான். இந்த பொண்ணு யாருண்னே தெரியாது அப்படின்னு சமாளிக்க வேண்டியது தான்

      Delete
    2. ஹாஹாஹா............ அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.........!(கவுண்டமணி பாணியிலே போயிட்டே இருக்க வேண்டியதுதான்.!)

      Delete
    3. குமார் சார் @


      சூப்பர் ஐடியா.! எடிட்டர் மீது பழியை போட்டுவிடவேண்டியதுதான்.!

      Delete
  90. விஜயன் சார், வர உள்ள மினி முத்து மற்றும் absolute comics classic இவைகளில் நமது சீனியர் எடிட்டர் அவர்கள் தங்கள் காமிக்ஸ் அனுபவத்தை எழுத சம்மதித்து விட்டார்களா என்பதை தெரிந்து கொள்ள ஆசை!

    ReplyDelete
  91. விதி போட்ட விடுகதை அட்டைபடம் சிறப்பாக உள்ளது! நமது வாழ்த்துகளை ஓவியர் திரு.பொன்னன் அவர்களிடம் தெரிவித்துவிடுங்கள்!

    ReplyDelete
  92. விதி போட்ட விடுகதையின் அட்டைபடம் சூப்பர்.

    ReplyDelete
  93. Caption 3:

    கார்சன்:

    ஏப்பா!

    என்னப்ப்பா நீய் ! இப்பிடிடி பண்ணற ஏப்ப!

    இன்னுமா உனக்கு தெரியல!

    அதா அந்த மல தெரியுது பாரு...
    அதுக்கு அந்த பக்கம் ஒரு நீரோட தெரியுதா?
    அதுக்கு மேல கூட ரெண்டு வெள்ள புறா ஜோஈங்குனு பறக்குதே !
    அதுக்கு அந்தாண்ட வராங்க நம்ம கிட்டும் டைகரும் !
    அதுவும் நம்ம கிட்டோட வெள்ளை குதிரையோட நெற்றில இருக்கற 'கருப்பு' மச்சம்....அப்பப்பா...கண்ணே கூசுது போ.....!!!

    டெக்ஸ்:

    (மனதிற்குள்)
    அடப்பாவி !
    வயசானா கண்ணு சரியா தெரியாதுன்னு ஒரு பேச்சுக்கு சொன்னா....
    இவன் நம்மளையே கலர் கலரா கலாய்கரானே!!!

    ReplyDelete
  94. அன்பு ஆசிரியரே....
    லார்கோ வின்ச் வரிசையில் பல தளங்களில் பயணித்தோம்.அதிலும் குறிப்பாக ஷேர் மார்க்கெட் என்ற உலகின் விஸ்வரூபத்தை விவரித்த அதன் ஆசிரியரும் அதை அட்சரம் பிசிராமல் தமிழில் நீங்கள் கொண்டுவந்ததும் நம் காமிக்ஸ் பயணித்தின் நிகரற்ற ஒரு சாதனை மைல்கல். நம் ஊர் professor ஒருவருக்கு வாசிக்க கொடுத்தேன்.இரண்டே நாட்களில் நம் வீட்டிற்கு வந்து ,இந்த வரிசையில் உள்ள அனைத்தையும் கேட்டு வாங்கி வாசித்தார்.
    இம்மாத வின்ச் செய்தி ஒரு சூப்பர் உற்சாகமான செய்தி....!

    ReplyDelete
  95. //ரத்த படலம் முழு தொகுப்பாக வருவதே நன்று என எண்ணுகிறேன். இருப்பினும் அதன் எடை அதிகமாக இருக்கும் என நினைத்தால் இரண்டு புத்தகமாக வெளியிடலாம்.

    ஈரோடு புத்தக திருவிழா (ஆகஸ்ட் என்பதால் இன்னும் ஆறு மாதம் அவகாசம் உள்ளது) இதை வெளியிட சரியான சந்தர்ப்பமாக இருக்கும்...

    அடுத்து நண்பர்கள் கூறியது போல இரத்த கோட்டை (கலர்) மறுபதிப்பு பற்றி தாங்கள் யோசிக்கலாமே ...

    //இந்த மீடியமா பிடிக்கும் ஹீரோஸ், பிடிக்காது ஆனால் உறுதியாக படிப்போம் என்ற வகை ஹீரோஸ் கதைகள்லாம் எப்ப வரும் சார்??. இவைகளுக்கு என ஏதாவது திட்டம் உள்ளதா????...
    என் சாய்ஸ்...
    1.முத்து முதல் 3..
    2.லயன் முதல் 3..
    3.திகில் முதல் 3..
    4.மினி லயன் முதல் 3..
    ...இப்படி வருடம் 4 செட்கள்...
    சில வருடங்களில் அனைத்து இதழ்களும் எங்களிடமும் இருக்கும்....//

    இதை நானும் ஆமோதிக்கிறேன் :)

    //

    Thanks நாகராஜன் sir.


    Edit me too having same opinion about XIII reprint.

    ReplyDelete