Wednesday, February 03, 2016

பிப்ரவரிப் பயணம் !

நண்பர்களே,

வணக்கம். இன்று (புதன்) காலையிலேயே உங்களின் சந்தாப் பிரதிகள் அனைத்துமே சுறுசுறுப்பாய்க்  கூரியர்களில் கிளம்பிவிட்டன இங்கிருந்து ! இம்முறை முழுவீச்சில் DTDC கூரியரைப் பயன்படுத்தியுள்ளோம் ; சிறு நகரங்களுக்கு மட்டுமே ST கூரியர் ! So  வியாழன் காலையில் நமது மைசூர்பாகு டப்பாக்களை உங்கள் இல்லங்களில் / அலுவலகங்களில் எதிர்பார்த்திடலாம் ! தொடரும் மாதங்களில் நாம் DTDC-ல் தான் பிரதானமாய்ச் சவாரி செய்யவுள்ளதால் உங்கள் பகுதியிலிருக்கும் கிளையினை தெரிந்து வைத்துக் கொள்வது பிரயோஜனமாய் இருக்கக் கூடும் ! And எல்லாத் துவக்கங்களின் போதும் சிற்சிறு teething problems இருத்தல் சாத்தியமே என்பதால் DTDC -ஐ முதல்முறையாகப் பரிச்சயம் காணவிருக்கும் நண்பர்கள் கொஞ்சமே கொஞ்சம் பொறுமையோடு அணுகிடக் கோருகிறேன் ! 

இன்னொரு சிறு வேண்டுகோள் நண்பர்களே : சந்தாப் பிரதிகள் அனுப்பும் துவக்க நாளன்று - அவ்வப்போது பணம் அனுப்பி , நேரடியாய் ஆர்டர் செய்திடும் வாசகர்களுக்கான பிரதிகளையும்  சரி ; விற்பனையாளர்களுக்கான பிரதிகளையும் சரி - கையாள்வது ரொம்பவே சிரமம் ! முதல்நாளன்று பைண்டிங்கிலிருந்து தவணை தவணையாகத் தான் பிரதிகள் கிடைக்கும் என்ற நிலையில் - பிரதிகளைக் கைபார்த்து ; சந்தா ABCD : ABC : ABD : B என்று டிசைன் டிசைனாக உள்ள தேவைகளுக்கேற்ப பேக்கிங் செய்து அனுப்பிடவே நமது ஆட்பலம் பற்றாது போய் விடுகிறது ; இந்த சூழலில் "தனிப் பிரதிகளை இன்றே அனுப்பவில்லையா ?" என கோபிக்கும் நண்பர்களைச் சமாளிக்க நம்மவர்கள் ரொம்பவே திணறுகிறார்கள் ! ஒரே ஒரு நாள் மட்டும் பொறுமை காப்பின், மறு நாள் முதல்  routine-ஆக அனுப்பத் தொடங்கிட இயலும் ! Please folks !
And - தற்போது திருப்பூரில் நடந்துவரும் புத்தக விழாவினில் நாம் எதிர்பார்த்ததை விடவும் decent ஆன விற்பனை நடந்து வருகிறது ! Pleasant surprise indeed !! And நண்பர்கள் எப்போதும் போலவே அசாத்தியமான உதவிகள் செய்து வருவதால் நம் சக்கரங்கள் சிக்கலின்றிச் சுழன்று வருகின்றன ! Thanks a ton as always all ! 

நாளைய தினம் புது இதழ்களைப் பெற்ற கையோடு - விமர்சனங்களை இங்கு தொடங்கிடலாமே  ? See you around !! Bye for now !

P.S : பிப்ரவரி இதழ்கள் இப்போது ஆன்லைனிலும் ரெடி ! பாருங்களேன் http://lioncomics.in/monthly-packs/20301-february-2016-pack.html

244 comments:

  1. Replies
    1. Tomorrow onwards i participate my dept strike... so coming to home and enjoy this month comics.... joly joly....

      Delete
  2. February பயணம் நன்மைக்கே எடி சார்

    புக் பேர்க்கு இம்மாத புக்ஸ் எப்போது வந்து சேரும் சார்

    ReplyDelete
  3. When will this month books will reach Tirupur book fair?

    ReplyDelete
  4. நன்றி எடி சார்.காலையில் மாடஸ்டி முகத்தில்தான் விழிப்பேன்

    ReplyDelete
  5. திருப்பூர் புத்தகத்திருவிழாவில்
    லார்கோ அனைத்தும்
    அனைத்து கிராபிக் நாவல் களும்
    தோர்கல் 3 & 4 பார்ட் அனைத்தும் மற்றும்
    ஷெல்டன் கமான்சே டைகர் ன் சில பாகங்கள் ஸ்டாலில் அவுட் ஆப் ஸ்டாக்

    டெக்ஸ் தீபாவளிமலர் மற்றும் கிங் ஸ்பெஷல் (சிறிதே உள்ளது)

    மூன்று என்பெயர் டைகர் கலர்ரும்
    ஒன்று B&W ம் புக்கிங்கில்

    மூன்று ABCD சந்தாக்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளது

    காலையில் வெறிச்சோடும் புத்தகக்கண்காட்சி
    மாலையானதும் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது

    கடைசி இரண்டு நாட்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


    வரும் அனைத்து சிறார்களூம் லக்கிலூக்கையே குறிவைப்பதால் இன்னும் சில கதைகள் இருந்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. நல்ல தகவல் சம்பத்,சந்தோசமாய் இருக்கிறது!

      Delete
    2. குணா ஜி
      விற்பனை முதலில் 3நாட்கள் மந்தமாக இருந்தது

      காமிக்ஸ்கென்று தனியாக ஸ்டால் போட்ட விபரம் வெளியே தெரிய ஆரம்பித்ததும் விற்பனையில் களை கட்ட ஆரம்பித்து விட்டது

      Delete
    3. திருப்பூரில் நமது விற்பனை களைகட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது.
      பட்டையைக் கிளப்புங்க டெக்ஸ் சம்பத்!

      Delete
    4. சம்பத் ஜி..ஸ்டாலுக்கு வருபவர்களிடம் விபரங்கள் சொல்லி,அவர்களுக்கு ஊக்கத்தையும் கொடுத்து,பாா்வையாளராய் வருபவா்களும் ஒன்றிரண்டு புத்தகங்களை வாங்கிச் செல்வதும் கண்கூடாய் கண்ட ஒன்று!மீண்டும் நன்றிகள்..உங்களுக்கும்,குமாருக்கும்,முகமறியா அன்பு நண்பா் முரளி அவா்களுக்கும்..!

      Delete
    5. சூப்பர், சூப்பர்பா .....நல்ல கூட்டம், நல்ல விற்பனை-வேறென்ன வேணும் நமக்கு....
      ஸ்டாலே கதியாக இருக்கும் தம்பி குமாருக்கும்,விற்பனையில் உதவும் தம்பி சம்பத்கும், ஞாயிறு சந்திக்க இயலா நண்பர் முரளிகுமாருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்-அனைத்து சேலம் நண்பர்கள் சார்பாக....

      Delete
  6. ஐ யாம் வெயிட்டிங். :)

    ReplyDelete
  7. திருப்பூர் புத்தகத்திருவிழாவில்
    லார்கோ அனைத்தும்
    அனைத்து கிராபிக் நாவல் களும்
    தோர்கல் 3 & 4 பார்ட் அனைத்தும் மற்றும்
    ஷெல்டன் கமான்சே டைகர் ன் சில பாகங்கள் ஸ்டாலில் அவுட் ஆப் ஸ்டாக்

    டெக்ஸ் தீபாவளிமலர் மற்றும் கிங் ஸ்பெஷல் (சிறிதே உள்ளது)

    மூன்று என்பெயர் டைகர் கலர்ரும்
    ஒன்று B&W ம் புக்கிங்கில்

    மூன்று ABCD சந்தாக்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளது

    காலையில் வெறிச்சோடும் புத்தகக்கண்காட்சி
    மாலையானதும் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது

    கடைசி இரண்டு நாட்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


    வரும் அனைத்து சிறார்களூம் லக்கிலூக்கையே குறிவைப்பதால் இன்னும் சில கதைகள் இருந்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  8. ///DTDC-ல் தான் பிரதானமாய்ச் சவாரி செய்யவுள்ளதால் உங்கள் பகுதியிலிருக்கும் கிளையினை தெரிந்து வைத்துக் கொள்வது பிரயோஜனமாய் இருக்கக் கூடும் ! ///

    ST ரொம்ப ரொம்ப பரிச்சயம். DTDC ரொம்ப மட்டுமே பரிச்சயம்.
    எதுவானாலும் ஓகேதான் சார்.!

    ReplyDelete
    Replies
    1. ஆனால்., STயின் சர்வீஸ் திருப்திகரமாகவே இருப்பதாக படுகிறதே சார்.!!!???

      Delete
    2. ஆமா...ஆமா......எங்க பக்கம் செம சர்வீஸ்......

      அதுவும் எங்க ஊர்ல என் வீட்டுக்கு பின்னாடியே..ST ஆபிஸ் கம் அவரோட வீடு....விடிய விடிய வரும் பார்சல காலையில பல்லு விளக்கிட்டே தூக்கி போட்டார்னா கபால்னு புடிச்சுக்கலாம்...DTDC 100 கிமீலதான் nearest office...

      எடிட்டர் தான் சிறுநகரங்களுக்கு ST அப்டின்னு சொல்லிவிட்டாரே...

      அதுசரி...மேச்சேரி எப்போ மெட்ரோபாலிட்டன் நகரமாச்சு????:-)

      Delete
    3. செனா அனா!!!

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!!!!!
      நற .., நற.....!!!!

      Delete
    4. //அதுசரி...மேச்சேரி எப்போ மெட்ரோபாலிட்டன் நகரமாச்சு????//

      ஹாஹாஹா!செம!:)))

      Delete
    5. selvam abirami @ செம காமெடி!

      Delete
    6. ///அதுசரி...மேச்சேரி எப்போ மெட்ரோபாலிட்டன் நகரமாச்சு????:-)////--- செல்வம் ஜி..ஹா ஹாஹாஹா ஹ்ஹா...

      Delete
  9. பொழுதெப்ப விடியும்
    கூரியர் எப்ப வரும்?

    ReplyDelete
  10. @கட்டை விரல் காதலர்

    நாங்கள் திருப்பூருக்கு வந்திருந்தபோதும்,அதன்பின் நணபர்கள் சொல்லும் போதும் பள்ளி மாணவர்கள் 50 ரூபாய் கையில் வைத்துக்கொண்டு நம் புத்தகங்களை எடுத்து பார்த்துவிட்டு 15,20, 30 ரூபாய்க்கெல்லாம் புக் இல்லையா என்று கேட்கிறார்கள்.

    அப்புறம் பக்கத்து கடையில் தெனாலி ராமன் கதை,விக்ரமாதித்தன் கதை,பீர்பால் கதை 10 ரூபாய் பதிப்பு வாங்கி சென்றார்கள் என்பது வேறு.

    இதற்கு ஏதாவது பண்ணுங்களேன்.

    அப்படி குறைந்த விலை புத்தகங்களை எந்த சந்தாவிலும் சேர்க்காமல் வெளியிடுவீர்களேயானால் ,சந்தா கட்டியும் புத்தக விழாக்களுக்கு வரும் நண்பர்களுக்கு தங்களிடம் இல்லாத புத்தகங்கள் வாங்கின சந்தோஷம் கிடைக்கும்.

    குட்டி வாசகர்களும் சந்தோஷம் கொள்வார்கள்.

    சற்றே பரிசீலியுங்களேன்.

    நண்பர்களே நீங்கள் என்ன சொல்கிறீர்கள்..!!??

    ReplyDelete
    Replies
    1. ஆமோதிக்கிறேன்!

      Delete
    2. ///அப்படி குறைந்த விலை புத்தகங்களை எந்த சந்தாவிலும் சேர்க்காமல் வெளியிடுவீர்களேயானால் ,சந்தா கட்டியும் புத்தக விழாக்களுக்கு வரும் நண்பர்களுக்கு தங்களிடம் இல்லாத புத்தகங்கள் வாங்கின சந்தோஷம் கிடைக்கும்.///

      +1 மிஸ்டர் கிறுக்கலாரே!!!
      (நான் நென்ச்சேன். நீங்க சொல்ட்டீங்க)

      Delete
    3. Happened at Chennai too - lot of students and kids who pored through our books, did not buy them because they were priced at 50+ INR after discounts.

      Delete
    4. ஷல்லும் ஜீ ..அழகான யோசனை .
      தமக்கு வராத காமிக்ஸ் இதழ்கள் புத்தக காட்சியில் கிடைக்குமெனில் நண்பர்களின் வருகையும் அதிகமிருக்கும் ....

      Delete
  11. @கட்டை விரல் காதலர்

    நாங்கள் திருப்பூருக்கு வந்திருந்தபோதும்,அதன்பின் நணபர்கள் சொல்லும் போதும் பள்ளி மாணவர்கள் 50 ரூபாய் கையில் வைத்துக்கொண்டு நம் புத்தகங்களை எடுத்து பார்த்துவிட்டு 15,20, 30 ரூபாய்க்கெல்லாம் புக் இல்லையா என்று கேட்கிறார்கள்.

    அப்புறம் பக்கத்து கடையில் தெனாலி ராமன் கதை,விக்ரமாதித்தன் கதை,பீர்பால் கதை 10 ரூபாய் பதிப்பு வாங்கி சென்றார்கள் என்பது வேறு.

    இதற்கு ஏதாவது பண்ணுங்களேன்.

    அப்படி குறைந்த விலை புத்தகங்களை எந்த சந்தாவிலும் சேர்க்காமல் வெளியிடுவீர்களேயானால் ,சந்தா கட்டியும் புத்தக விழாக்களுக்கு வரும் நண்பர்களுக்கு தங்களிடம் இல்லாத புத்தகங்கள் வாங்கின சந்தோஷம் கிடைக்கும்.

    குட்டி வாசகர்களும் சந்தோஷம் கொள்வார்கள்.

    சற்றே பரிசீலியுங்களேன்.

    நண்பர்களே நீங்கள் என்ன சொல்கிறீர்கள்..!!??

    ReplyDelete
    Replies
    1. \\குட்டி வாசகர்களும் சந்தோஷப்படுவார்கள் //

      பரிசீலிக்கப்பட வேண்டிய கருத்துதான்.....!
      15,20 ரூபாய் விலைக்குத்தகுந்தபடி குறைந்த பக்கங்ளில் முடியக்கூடிய கதைகளை வெளியிட்டால் நன்றாக இருக்கும்....!

      இதுபோல ளெியிடக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றனவா எடிட்டர் சார்...?

      Delete
    2. 'மாணவர்களுக்கான மலிவுவிலை பதிப்பு' பற்றி ஏற்கனவே நாம் எடிட்டரிடம் பேசியிருக்கிறோம். இதைச் செயல்படுத்திடும் நாள் விரைவில் வருமென்று நம்புவோமாக!

      Delete
  12. எங்கள் காமிக்ஸ் உலக அண்ணா விஜயன் சாருக்கும் மற்ற நண்பர்களுக்கும் வணக்கம்

    ReplyDelete
  13. என் தேவதை மாடஸ்டி யை காண ஆகலாம் உள்ளேன்

    ReplyDelete
    Replies
    1. \\\ தேவதை மாடஸ்டி ///

      ஆஹா சூப்பர்ஜி சூப்பர்ஜி ....

      அப்படியே காதுல சொல்லிக்கிட்டே இருங்ஜி..தேனாட்டம் பாயுது....!

      Delete
    2. நண்பரே இந்த இதழோடு தேவையை எப்போது சந்திக்க போகிறோமோ கவலையாக உள்ளது

      Delete
  14. ஆசிரியரே இரட்டை வேட்டையர்கள் இல்லை என சொல்லி விட்டீர்கள் இரண்டே கதைகளில் வந்தாலும் கலக்கிய சி.ஐ.டி.ஜான் மாஸ்டர் கதைகளாவது
    வர வாய்ப்பிருக்கிறதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார்...!

      சில பல பதிவுகளுக்கு முன்பு ஒருசமயம் வாகான சமயம் அமையும்போது வெளியிடலாம் என கூறியிருக்கிறீர்கள்..!

      Delete
  15. Editer Sir,
    I hope u may know that, u have some of Christian and Muslim readers following on ur comics circle.
    when u published "deva..." graphic navel, v thought unfortunately u may published.
    DO u know, how much wounded v have got in our hearts.
    Sir u want to play on ur own readers emotions. Still u didn't feel sad about on this issue.
    and r u getting happy, based on our sadness.
    this is one kind of wildness, applied on very small groups.
    V believe, in future v will not see this kind of error on ur publish.
    This "Deva..." navel made few unwanted comments, thats not easy to accept the religious values and religious mysteries.
    Sir,
    TRY to avoidthis kind of navels to create opposite thoughts among all ur religious people gathering on comics circle.
    There is lot of graphic navels to publish...
    And finally
    as a leader, u should be model of among readers ...

    ReplyDelete
  16. விஜயன் சார், புத்தகம்களுடன் லக்கி-லூக் படம் போட்டு ஏதோ உள்ளது? அது என்ன? புக் மார்க்கா?

    ReplyDelete
    Replies
    1. Lucky Lukeதான் இம்மாத கார்ட்டூன் நாயகன்

      Delete
  17. Dtdc courierல் இது எனக்கு 2வது package

    ReplyDelete
  18. காலை வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.
    ஆவலுடன் இன்று காலையை எதிர்நோக்குகிறேன்.

    ReplyDelete
  19. எஸ்.டி.பூரியா் நன்றாகத் தானே இருக்கிறது..ஏன் கல்தா..??

    ReplyDelete
    Replies
    1. S t courier (உங்களுக்கு மட்டும் பூரியர்) விலையேற்றம் கா ரணம் ஆக இருந்திருக்கலாம்

      Delete
    2. @ டெக்ஸ் சம்பத் ..!

      தம்பி குணாவின் வாழிடம் பாக்தாத் நகருக்கு ஷிஃப்ட் ஆகும்போதெல்லாம் S.T.பூரியர்தான்....!

      டெக்ஸாஸூக்கோ,அரிஸோனாவுக்கோ மாறும்போது கயேண்டா டிரேடிங்போஸ்டிலிருந்து தந்தி வரும்.....!!!!!

      Delete
    3. அடடே
      எப்படி இருந்த தம்பி இப்படி! ஆகீட்டாரே

      Delete
  20. Tirupoor special next year release onnu plan pannungal sirm

    ReplyDelete
  21. திருப்பூர் வாழ் நண்பர்களுக்கு

    திருப்பூர் புக் பேரில்

    பிப்ரவரி மாத புத்தகங்கள்
    இன்றே வந்தாச்சு

    ReplyDelete
  22. எங்கள் ஊரில் dtdc எங்கு இருக்கிறது என எங்ளுக்கு தெரியாது.நிங்கள் stபோட்டுஇருந்தால் இந்நேரம் வாங்கி இருப்பேன்.எனக்கொ dtdc வேண்டாம் அடுத்த முறை st அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

    ReplyDelete
  23. எடிட்டர் சார்
    தயை செய்து இனிமேல் DTDC கொரியரில் சந்தாவை அனுப்பவேண்டாம்

    எங்களது ஊரில் DTDC யால் மிகுந்த ப்ரச்சினைகள்

    யார் கொரியர் அனுப்பினாலும் எங்களை வந்து சேர (குறைந்தபட்சம்) ஏழு நாட்களாகிவிடும் (அதிகபட்சம் தெரியவில்லை)

    அதற்கப்புறம் புத்தகங்களை வாங்கி படிப்பதில் என்ன சந்தோஷம் இருக்கப்போகிறது

    எஸ் டி கொரியர் என்றால் எங்களுக்கு மறுநாளே கிடைத்துவிடும்
    கடைகளில் நான்கைந்து நாட்களிலேயே கிடைத்துவிடுகிறது

    மேலும்
    ஒருமாதம் காத்திருந்து
    ஆவலுடன் காலை ஐந்து மணிக்கே கொரியர் ஆபிஸ் சென்று முதல் ஆளாய் படிப்பதில் உள்ள சுகம் வேறெதிலும் கிடையாது

    இன்று காலை கொரியர் வாங்க போனபோதுதான் கொரியர் மாற்றிய விபரம் தெரிய வந்தது
    ( திருப்பூர் ரையும் நான் சிறுநகரம் என நினைத்ததுவிட்டதுதான் காரணம் ) நன்றி

    ReplyDelete
  24. @ ALL : பிப்ரவரி இதழ்கள் இப்போது ஆன்லைனிலும் ரெடி ! பாருங்களேன் : http://lioncomics.in/monthly-packs/20301-february-2016-pack.html

    ReplyDelete
  25. ஒருமணி நேரம் லேட்டாக பார்சல் வந்து கிடைத்தது....நாட் பேட் ஃபார் DTDC.....

    முதல் பார்வையில் 1990களோ என நினைக்க வைத்து விட்டது சார்...
    நிறைய கருப்பு வெள்ளை பக்கங்கள், சொற்பமாக கலர்....மிகுந்த சந்தோசமாக உணர்கிறேன் சார், கல்லூரி நாட்களில் காமிக்ஸ் களை தேடி அலைந்ததை மீண்டும் நினைவு படுத்தி விட்டத...
    வருடத்தில் இருமுறை யாவது இப்படி அமையும் படி பார்த்துக் கொள்ளுங்கள் சார்....
    என்னதான் கலர் என்றாலும் ,கருப்பு வெள்ளை டீவியில் ,தூர்தர்சனில் பார்த்த கிரிக்கெட்டில் இருந்த ஏதோ ஒன்று இப்போது குறைவதாக படுகிறது, காமிக்ஸ் க்கும் அப்படியே என்பதில் உண்மை இல்லாமல் இல்லை சார்...

    ReplyDelete
  26. 4 அட்டை படங்களில் லக்கியே டாப் சார்..
    2ம் இடம் இளவரிசியின் சாகசத்தின் பின் பக்க அட்டையே( again b&w scored over color- for me only)....
    டெக்ஸ் அட்டைப்படம் 3ம்இடமே...
    மஞ்சள் பூ- நோ கமெண்ட்ஸ்.. ஹி..ஹி..

    இங்கி பிங்கிக்கு இடமே இல்லாமல் திகில் நகரில் பிரவேசிக்கிறேன் சார்....

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : பிரவேசித்த நகர் தேவலையா சார் ?

      Delete
    2. இத்தனை நாள் திகில் நகரில் பிரவேசிப்பதை தள்ளிபோட்டமைக்கு கடுமையான கண்டனங்கள் சார்....
      பிராயச்சித்தமாக க.வெ. ஆயிர பக்க மலரில் மாடஸ்தி சாகசம் கண்டிப்பாக இடம் பெறவேண்டும் சார்...அந்த மாடஸ்தி ரசிகர்கள் , மனசை கவர்ந்து விட்டார்கள் சார்.... டெக்ஸுக்கு பிறகு இனி இளவரிசி கதைகளுக்கே இரண்டாம் இடம்...

      Delete
  27. பார்சலை கேட்ச் பண்ணியாச்சே!!!!

    வழக்கம்போல ST கூரியர் ஆபிஸ்ல போய் நின்னதும் எதுவும் வர்லிங்களே என்றனர்.
    சரி என்று DTDCயை தேடி ஓடினேன் ஓடினேன் ஊரின் எல்லைக்கே ஓடினேன் (அவுக ஆபீசு அங்கனேதேன் இருக்கு) . அதுக்குள்ள அவங்க என்னைத்தேடி வீட்டுக்குகே வந்துட்டாங்க.!!!
    DTDC சர்வீசும் சூப்பர்தான்.!
    சிறுநகரங்களுக்கு மட்டும் ST யாம்., எங்க ஊருக்கு DTDC ல வந்திருக்கே.,? அப்போ நாங்களும் பெருநகரந்தான் போலிருக்கே!!:-)

    பின்குறிப்பு :-

    செனா அனா.,என்னுடைய புரொஃபைல் போட்டோவில் இருக்கும் சிரிப்பு., உங்களைப் பார்த்து இல்லைன்னு நான் சொன்னா நீங்க நம்பணும்.! ஹிஹிஹி!!!

    ReplyDelete
    Replies
    1. தம்பி எனக்கு டீ இன்னும் வரலை...[நற..நற..&*%$#(@ ]

      Delete
    2. எனக்கும் இன்னும் வரல..! அழுவாச்சியா வருது..!

      Delete
    3. அட டா.....
      என் கடைக்கு வாங்க மாயா சார்..
      சமோசா வித் டீ சாப்பிட்டு விட்டு ,நான் திகில் நகரில் புக் படிப்பதையும் பார்த்து , புகை விட்டு செல்வீங்களாம்....

      Delete
    4. அவ்வ்வ்வ்வ்....கர்ர்ர்ர்..கர்ர்ர்ர்...!
      [படிக்கறாங்க...கடுப்பில் புகைச்சல் புகை...ன்னு சேர்த்து படிங்க..! நமக்கு சாம்ராணி புகையே அலர்ஜி..ஹீ..ஹீ.. ;) ]

      Delete
    5. "பெருநகரவாசியாகி " விட்ட கண்ணன் அவர்களுக்கு லக்கி லூக்கும் நீ்ங்களும் /;-)/ எப்படி சிரித்தாலும் நானும் பதிலுக்கு "எச சிரிப்பு" சிரிப்பேன்...என் ஹாம்லெட்டுக்கு(கிராமம்)7 மணிக்கு பார்சல் வந்துடுச்சே....



      Delete
  28. மாந்தோறும் மாடஸ்டி


    ஒரு மாதத்துக்கு 6 பக்கங்கள்.11மாதத்துக்கு 66 பக்கங்கள்.இந்த மாதம் மாடஸ்டியின் சட்டமும் சுருக்குகயிரும் புக்கை முதல் 6 பக்கங்கள் மட்டும் படிக்க போறேன்

    ReplyDelete
    Replies
    1. இந்த அளவு மாடஸ்தி மேல் ஐ மீன் கதை மேல் பிரியம் இருந்தால் ,11 மாதமும் இதையே ரிப்பீட் ஆக படிக்கலாமே.......

      Delete
    2. ஒரே பபிள் கம்மை திரும்ப திரும்ப சாப்பிட்டா டேஸ்ட் இருக்காது.கொஞ்சம்
      கொஞ்சமா மாடஸ்டியை ரசித்தால்தான்
      அடுத்த மாடஸ்டி புக் வரும்வரை இனிக்கும்.ஐ மீன் மாடஸ்டி கதையை

      Delete
    3. ஹாஹா...நீங்கள் இப்டீன்னா!!!..
      MVசார்& மாடஸ்தி செல்வகுமார் சார் இருவரும், தினம் ஒவ்வொரு கட்டம் மட்டுமே படிப்பார்களோ??????......

      Delete
  29. @ FRIENDS : சிலபல ஆண்டுகளுக்கு முன்பாய் புரபஷனல் கூரியரில் மட்டுமே சவாரி செய்து வந்த நாம், தவிர்க்க இயலாச் சூழலில் ST கூரியர் பக்கமாய் படையெடுத்த துவக்க நாட்களில் நிறையவே ஆதங்கக் குரல்கள் நண்பர்களிடையே ஒலிக்காதில்லை !! ஆனால் காலப்போக்கில் ST -ன் சர்வீஸ் பழகிப் போன பிற்பாடு மூன்று ஆண்டுகள் அவர்களோடு குப்பை கொட்டி விட்டோமல்லவா ?

    அதே போல சென்றாண்டின் மையப் பகுதியிலிருந்தே பெங்களூருக்கு PFC கட்டணங்கள் தலை தெறிக்கும் உச்சங்களைத் தொட்ட பின்னே DTDC பக்கமாய்த் தான் நாம் ஒதுங்க வேண்டியானது ; and சிக்கலின்றி வண்டி ஓடி வருகிறது !

    தற்போதைய முழுவீச்சிலான DTDC மாற்றமும் கூட தவிர்க்க இயலா சூழலிலேயே என்பதால் ஆரம்பத்து சிற்சிறு திகட்டல்களினை சமாளித்து விட்டோமெனில் நிச்சயமாய் இவர்களது சேவையிலும் குறை இராதென்று சொல்லத் தோன்றுகிறது ! எங்கேனும் சிரமங்கள் எழுந்திடும் பட்சத்தில் சொல்லுங்களேன் - களைய இயன்றதைச் செய்து விடுவோம் !

    ReplyDelete
    Replies
    1. கரூருக்கு இன்னும் பார்சலே வரலயாம் சார்...

      Delete
    2. ஆமாங்கய்யா..ஆமாம்..!

      Delete
  30. சென்னை டிஸ்கவ்ரி புக் பேலசிற்கு ஏன் புத்தகங்கள் அனுப்பப்படுவதில்லை?

    ReplyDelete
    Replies
    1. Arun SowmyaNarayan : விற்பனைக்குத் தயாராகவுள்ள பொருளினை, விற்பனை முனைக்கு அனுப்பிடாது போயின் அதன் பின்னணியினில் வழக்கமாய் என்ன காரணங்கள் இருக்குமோ - அவையே தான் !

      Delete
  31. எடிட்டர் சார் வணக்கம். ஒரு சிறிய வேண்டுகோள். என்னுடைய புத்தக பார்சலில் CUDDALORE என்று டைப் பண்ணாமல் KADDALORE என்று டைப் செய்து அனுப்புகிறார்கள். இரண்டு மாதமாக சரி செய்ய கூறியும் இந்த மாதமும் தவறாகவே இருக்கிறது. இத்தனை வருடமும் என்னுடைய முகவரியில் வராத தவறு இப்போது தொடர்ந்து வருகிறது. கூரியர் ஆஃபீசில் தொடர்ந்து சரிசெய்ய நச்சரிக்கின்றனர். தயவுசெய்து இதனை சரிசெய்ய வேண்டுகிறேன். என் பெயர் டைகர். முன் பதிவு நீங்கள் நீங்கள் வெளியிட்ட பட்டியலில் என்னுடைய ஊர் தமிழில் கூடலூர் என்றிருந்த காரணத்தை தங்கள் அலுவலக ஊழியர்களிடம் கூறியிருந்தேன். அந்த மாதம் முதல் புத்தகம் அனுப்பும் போது தவறாக டைப் செய்து அனுப்புகிறார்கள். தாங்கள் உடனே இதனை சரி செய்ய வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Rajendran A.T : Done சார் ; தவறை சரி செய்து விட்டார்கள் ! இனி இந்தச் சிக்கல் இராது !

      Delete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. வாசகர் கடிதம் இன்னும் படிக்க வில்லை ...ஆனால் அதற்கான நண்பரின் இந்த விளக்கவுரையை ஆராவாரத்துடன் ஆமோதிக்கிறேன் சார் ...

      டெக்ஸ் ஆவது சலித்து போவதாவது...இங்கே சலிப்பு வந்தாலே புது டெக்ஸ் இதழ் இல்லா சூழ்நிலையில் பழைய டெக்ஸ் கதையை எடுப்பது தான் அதிகம் ...

      எனவே ....டெக்ஸ் இப்போது போல எப்போதும் இனி தொடருங்கள் ...

      Delete
    2. ஒவ்வொரு வரிக்கும் ஒரு like கொடுக்கலாம் ராஜேந்திரன் அவர்களே! சூப்பர்!

      @ தலீவரே, ஒருவரின்னாலும் நச்'னு சொல்லிப்புட்டீங்க போங்க!

      Delete
    3. எல்லா வித கருத்துக்களுக்கும் வாய்ப்பு கொடுங்க சாமிகளா...
      அது அவரோட பாயிண்ட் ஆஃப் வியூ...
      எல்லா பாலும் சிக்ஸாவே அடிச்சா போர் ஆகிடுமே....
      லோ ஸ்கோரிங் ஆட்டங்களும் சுவாரஸ்யமானவையே....
      அந்த கடித நண்பர் எச்சரிக்கை விடுத்துள்ளவாறு -போனெல்லியின் கதை நகர்த்தும் யுக்தி நாம் யூகிக்கா வண்ணம் மொழி பெயர்ப்பில் அல்லது பிரசன்டேசனில் ஆசிரியர் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினால் போதுமே.....சுவாரஸ்யம் கூடுமே

      Delete
    4. தலை வாங்கி குரங்கு- கதை போகும் நகர்வு எளிதில் யூகிக்க முடிவதாலே,அதில் சுவாரஸ்யம் குறைவு என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் நண்பர்களே.....
      நண்பரின் "அந்த" பயத்தில் உள்ள எச்சரிக்கை ஆசிரியருக்கு மட்டுமே என எடுத்து கொள்வோமே......
      ஆசிரியரும் 12 கதைகளும் 12 வித ப்ளாட்கள் என தொடர்ந்து சொல்லி வருவதும் இதன் பொருட்டே.......அதாவது ஒரு வருடம் பின்பு டெக்ஸ் சலிப்பூட்டிவிடுவாரோ என்ற அர்த்தம் அற்ற பயம் வேண்டாம் -என்பதே....

      Delete
    5. வாசகர் கடிதம் இன்னும் படிக்க வில்லை ...ஆனால் அதற்கான நண்பரின் இந்த விளக்கவுரையை ஆராவாரத்துடன் ஆமோதிக்கிறேன் சார் ...

      டெக்ஸ் ஆவது சலித்து போவதாவது...இங்கே சலிப்பு வந்தாலே புது டெக்ஸ் இதழ் இல்லா சூழ்நிலையில் பழைய டெக்ஸ் கதையை எடுப்பது தான் அதிகம் ...

      எனவே ....டெக்ஸ் இப்போது போல எப்போதும் இனி தொடருங்கள் ...

      Delete
  33. ஒரு பட்டா போட்டி தொடங்கியாச்சே!!!

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : அட..காஸ்மோபாலிடன் கிட் ஆர்ட்டின் அதற்குள் லோகோவையும் மாற்றியாச்சா ?

      Delete
  34. வழக்கம் போல எஸ்டி கொரியரில் இன்று புத்தகம் வந்த தகவல் சற்று முன் கிடைத்து விட்ட படியால் இன்று மாலை கெத்துடன் சென்று கதகளி ஆடியபடி புத்தகத்தை கைப்பற்றி காமிக்ஸ் ரஜினி (முருகன் )டெக்ஸ் அவர்களுடன் குழும போவதால் போராட்ட குழு நண்பர்கள் யாராவது தாரை தப்பட்டையுடன் கொண்டாட வருமாறு கேட்டு கொள்கிறேன்...;-)

    ReplyDelete
  35. ஆஹா....அற்புதம்.
    ஆசிரியர் கூறியிருந்தது அப்படியே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
    "ஒரு பட்டா டோட்டி"உலக தரம்.Razor Sharp print.
    மிக ரம்யமான வண்ணங்கள் என ஒரே கலக்கல்.
    பிப்ரவரி ஒரு சூப்பர் ஹிட் மாதமாகி விட்டது.உற்சாகம் பீறிடுகிறது.

    ஆசிரியரே....!மற்ற அட்டைப்படங்கள் வெகு சுமார்.அதிலும் லாரன்ஸ்&டேவிட்டுக்கு ஏதேனும் வியாதியோ என தோன்றும் அளவிற்கு அஷ்டகோண முகங்கள்.அட்டைப்படங்களே இப்படி இருந்தால் புதிதாக வாங்குபவர்கள் என்னமோ ஏதோன்னு தெறிச்சி ஓடிவிடுவார்கள்.கவனம் ப்ளீஸ்.....!

    ReplyDelete
  36. டெக்ஸின் கிரைம் நாவல் அருமை சார்.லக்கி லூக்கில் அரசியல் வசனங்கள் வேண்டாம் சார்.மற்றபடி பட்டாப் போட்டி பட்டை கிளப்பிடுச்சு சார்

    ReplyDelete
  37. எடிட்டர் சார். இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்தே தாங்கள் வெளியிடும் இதழ்கள் சூப்பர். மூன்று மாதங்களில் இது வரை ஒரு மொக்கை இதழ் கூட வரவில்லை. இந்த நிலையே இந்த ஆண்டு முமுவதும் தொடர்ந்தால் கண்டிப்பாக இந்த ஆண்டு மொக்கை இதழ் இல்லாத ஆண்டாக அமையப்போகப்போகிறது. கதை தேர்வில் ஜூனியர் எடிட்டர் பங்கும் உள்ளதா? அப்படி இருக்குமானால் அவருக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ///கதை தேர்வில் ஜூனியர் எடிட்டர் பங்கும் உள்ளதா? அப்படி இருக்குமானால் அவருக்கு என் வாழ்த்துக்கள்////---இதற்கு நாம் சந்தாZவரை காத்து இருக்கனும் சார்....தற்போதைய கி.நா.க்கள் பெரும்பாலும் ஜூ.எ.யின் சிபாரிசு களே என ஆசிரியர் ஏற்கெனவே சொன்னதாக ஞாபகம்...

      Delete
    2. Rajendran A.T : ஜூனியரின் track தனி ....எனது ரெகுலர் பணிகளுள் மூக்கை நுழைப்பதில்லை !

      Delete
  38. எடிட்டர் சார். இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்தே தாங்கள் வெளியிடும் இதழ்கள் சூப்பர். மூன்று மாதங்களில் இது வரை ஒரு மொக்கை இதழ் கூட வரவில்லை. இந்த நிலையே இந்த ஆண்டு முமுவதும் தொடர்ந்தால் கண்டிப்பாக இந்த ஆண்டு மொக்கை இதழ் இல்லாத ஆண்டாக அமையப்போகப்போகிறது. கதை தேர்வில் ஜூனியர் எடிட்டர் பங்கும் உள்ளதா? அப்படி இருக்குமானால் அவருக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  39. எடிட்டர் சார். இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்தே தாங்கள் வெளியிடும் இதழ்கள் சூப்பர். மூன்று மாதங்களில் இது வரை ஒரு மொக்கை இதழ் கூட வரவில்லை. இந்த நிலையே இந்த ஆண்டு முமுவதும் தொடர்ந்தால் கண்டிப்பாக இந்த ஆண்டு மொக்கை இதழ் இல்லாத ஆண்டாக அமையப்போகப்போகிறது. கதை தேர்வில் ஜூனியர் எடிட்டர் பங்கும் உள்ளதா? அப்படி இருக்குமானால் அவருக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. பொட்டி வந்திரிச்சி டோய்!! but very very disappointing wrapper picture for both Tex & Lawrence books........

    ReplyDelete
  42. விஐயராகவன் சார் அனைவரின் கருத்துக்கும் மதிப்பு தரவேண்டும் என்ற உங்கள் கருத்தை ஏற்று என் கருத்தை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். காலம்தான் பதில் சொல்ல வேண்டும். டெக்ஸ் 12மாதங்களில் சலித்து விடுவாரா என்று. இதற்கான பதில் இந்த ஆண்டின் இறுதியில் விடை கிடைத்துவிடும். வடிவேலு ஜோக்கில் வருவது போல அதற்கு இவன் சரிப்பட்டு வருவானா? என்று

    ReplyDelete
  43. நன்றி எடிட்டர் சார்.

    ReplyDelete
  44. பெட்டி வந்துரிச்சி(DTDC).....ஆனா.. வரலை..(எனக்கு)
    பெட்டி இருக்கு(DTDC).......ஆனா.. இல்லை..(எனக்கு)

    இன்றைக்கு நம்ம தியேட்டர்ல படம் ரத்து சாமீயோ...!

    ReplyDelete
  45. சந்தா பிரதிகள் அனைத்தும் அனுப்பியாகி விட்டது என்பது மகிழ்ச்சியான செய்தி ஸார். "திருப்பூர் புத்தக விழாவினில் எதிர்பாராத விற்பனை இரட்டிப்பு சந்தோஷம்.ஹ ஜாலி ஜாலி!

    ReplyDelete
  46. இது வரை சந்தா புத்தகங்கள் எனக்கு வரவில்லை, திருப்பூரில் யாருக்காவது வந்துள்ளாதா..???

    ReplyDelete
  47. விஜயராகவன் சார் ஒரே ஒரு திருத்தம். நீங்கள் ரஜனி படம் பார்த்து வளர்ந்து வந்தது போல நான் கமல் படம் பார்த்து வளர்ந்தவன். அவ்வளவுதான்

    ReplyDelete
    Replies

    1. ராஜேந்திரன் சார்! நானும்தான்.
      ஆனால் ஒரு சின்ன திருத்தம்.
      நான் இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறேன் :-)

      (விஜயராகவன் ரஜினி ரசிகரெல்லாம் இல்லை என்பதை ஏனோ சொல்லத் தோணிச்சி) .

      டெக்ஸ் வில்லரையும் டைகரையும் நம்ம லோக்கல் ஹீரோஸூடனௌ ஒப்பிடுவது முறையா., சரியா என்பதை நண்பர்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

      Delete
  48. Sir though now a days we publish all d reprints of Iron claw, spider, johny Nero and lawrence.. We want to have some more reprints of TeX, Luck, Prince and other classical hits from 80s to Mid 90s. When will it happen sir???

    ReplyDelete
  49. எனது இதழ்கள் இதுவனர வரவில்னல. சந்தா எண்:251 பதிவு அஞ்சலில்அனுப்ப கோரி இருந்தேன்.

    ReplyDelete
  50. நண்பர்களுக்கான தகவல்கள்
    திருப்பூர் புத்தக திருவிழா

    இன்றோடு மொத்தம் ஆறு சந்தாக்கள் புதிப்பிக்கப்பட்டுள்ளது

    என் பெயர் டைகர் 5 கலரும்
    க/வெ 2 ம்
    புக்காகி உள்ளது

    வரும் மூன்று நாட்களும் நமது
    Lion-muthu Comics ஸ்டால் " களை " கட்டப்போவது உறுதியாகிவிட்டது

    நாளை முதல் ஜீனியர் எடிட்டர் ஸ்டாலில் இருப்பார்

    டெக்ஸ் + லார்கோ வின்ச் All + தோர்கல் + பௌன்சர் All + கிராபிக் நாவல் All அவுட் ஆப் ஸ்டாக் + மற்றும் மாடஸ்டி ஆகியோர் கதைகள்
    நல்ல (ம) எதிர்பார்க்காத & ஆச்சர்யமூட்டும் விற்பனை

    ஸ்டாலுக்கு வரும் பெரும்பாலானவர்களின் கேள்வி
    LMS என்றொரு புத்தகம் வந்துள்ளதாமே அது எங்கே என்றுதான்

    இரும்பு கையார் + லாரன்ஸ் டேவிட் பட்டையை கிளப்புகிறார்கள்
    ஸ்பைடரின் நிலைதான் பரிதாபம்

    பிப்ரவரி இதழ்கள் முதல்நாளிலேயே நல்லவிற்பனை
    ( விளம்பரங்கள் மற்றும் நண்பர்கள் வாயிலாக தகவல் அனைவரையும் சென்றடைந்ததால் )

    திருப்பூர்க்கு மற்றுமொரு ஏஜண்டாய் வர (பழைய ஏஜண்ட்) ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளார்

    இது திருப்பூர் (ம) அதன் சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல செய்தியாகும்

    ReplyDelete
  51. நண்பர்களுக்கான தகவல்கள்
    திருப்பூர் புத்தக திருவிழா

    இன்றோடு மொத்தம் ஆறு சந்தாக்கள் புதிப்பிக்கப்பட்டுள்ளது

    என் பெயர் டைகர் 5 கலரும்
    க/வெ 2 ம்
    புக்காகி உள்ளது

    வரும் மூன்று நாட்களும் நமது
    Lion-muthu Comics ஸ்டால் " களை " கட்டப்போவது உறுதியாகிவிட்டது

    நாளை முதல் ஜீனியர் எடிட்டர் ஸ்டாலில் இருப்பார்

    டெக்ஸ் + லார்கோ வின்ச் All + தோர்கல் + பௌன்சர் All + கிராபிக் நாவல் All அவுட் ஆப் ஸ்டாக் + மற்றும் மாடஸ்டி ஆகியோர் கதைகள்
    நல்ல (ம) எதிர்பார்க்காத & ஆச்சர்யமூட்டும் விற்பனை

    ஸ்டாலுக்கு வரும் பெரும்பாலானவர்களின் கேள்வி
    LMS என்றொரு புத்தகம் வந்துள்ளதாமே அது எங்கே என்றுதான்

    இரும்பு கையார் + லாரன்ஸ் டேவிட் பட்டையை கிளப்புகிறார்கள்
    ஸ்பைடரின் நிலைதான் பரிதாபம்

    பிப்ரவரி இதழ்கள் முதல்நாளிலேயே நல்லவிற்பனை
    ( விளம்பரங்கள் மற்றும் நண்பர்கள் வாயிலாக தகவல் அனைவரையும் சென்றடைந்ததால் )

    திருப்பூர்க்கு மற்றுமொரு ஏஜண்டாய் வர (பழைய ஏஜண்ட்) ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளார்

    இது திருப்பூர் (ம) அதன் சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல செய்தியாகும்

    ReplyDelete
    Replies
    1. Nice update....Wondering why spider lags behind.?.??.

      LMS out of stock.?? Good news..

      For the first time Junior Editor is going to be present in the stall Without being eclipsed by his father...pray to have good times......

      ....thanks for the post sampath.

      Delete
    2. உற்சாகமளிக்கும் தகவல்களுக்கு நன்றி டெக்ஸ் சம்பத்!
      கி.நா'கள் விற்பனையில் களைகட்டுவது ( கி.நா'வைப் போலவே புதிரான) ஆச்சர்யமளிக்கிறது!

      ஜூ.எடியை நல்லா கவனியுங்க சம்பத் & குமார! ( அவருக்குக் கொஞ்சம் கூச்சசுபாவம்... என்னிய மாதிரியே!) ;)

      Delete
    3. நல்ல செய்தி...திருப்பூர் டீமுக்கு கைதட்டல் படங்கள் பலப்பல.....
      ஜூ.எடி, எப்போதும் ஆசிரியர் கூடவே இருப்பதால் சாம்பார் சாதம் தான் சாப்பிடுறார்...
      தனியாக சிக்கியுள்ளார், நல்லா "அசைவமாக"கவனிச்சு அனுப்புங்கய்யா....

      Delete

    4. // ஜூ.எடியை நல்லா கவனியுங்க சம்பத் & குமார! //

      என்னது "கவனிப்பு" பலமா இருக்கணுமா ??
      ஏதாவது வில்லங்கமாகி
      அவங்க எங்களை நல்லா கவனிச்சிட்டா என்ன பண்றதுன்னே

      Delete
  52. வாசகர் கடிதத்தில் அந்த நண்பர் அவருடைய கருத்தையும் விருப்பத்தையும் சொல்லியிருக்கிறார் அவ்வளவே!

    என்னுடைய விருப்பத்தை கேட்டால்
    மாடஸ்டி., மேஜிக் விண்ட்., மும்மூர்த்திகள் மற்றும் முக்கியமாக ஸ்பைடர் வேண்டவே வேண்டாம் என்பேன்.! இது என்னுடைய கருத்து மட்டுமே (ஆட்டோ அனுப்பிடாதீக அப்பு)

    இப்படி நான் எழுதிவிட்டால் எடிட்டர் மறுபதிப்பை நிறுத்திவிடுவாரா என்ன? பரவலான ரசிகர் வட்டத்தையும் கணிசமான வசூலையும் அள்ளித் தரும் இதழ்களை எப்படி நிறுத்த முடியும்??

    அதைப்போலவே டெக்ஸ் வில்லரும். நீண்ட நெடுங்காலத்திற்கு பின்னடைவு என்ற வார்த்தையே வில்லர் அகராதியில் இடம்பெறாது.!!!

    ReplyDelete
  53. This sunday only i bought the book in erode

    ReplyDelete
  54. About me
    My name.s.akkil
    Favr hero.daibolik and roger
    I am studing 9th std in navarasam
    my what's app number 8903132348

    ReplyDelete
    Replies
    1. Welcome Akkil! :)

      @ நண்பர்ஸ்

      ஈரோட்டில் 9ஆம் வகுப்புப் படிக்கும் அகிலின் காமிக்ஸ் ஆர்வம் அளப்பறியது! நமது இதழ்கள் அனைத்தையும் தவறாமல் படிப்பதோடு, தன் நண்பர்களுக்கும் புத்தகங்களைப் படிக்கக்கொடுத்து சுமார் 20க்கும் மேற்பட்டவர்களைக் காமிக்ஸ் ரசிகர்களாக மாற்றியிருக்கிறார்!

      வெல்டன் அகில்! மிகவிரைவில் நேரில் சந்திப்போம்! :)

      Delete
    2. வெல்கம் அகில்...தம்பி அகில் நல்லா வரையரார்பா,நிறைய பார்த்து உள்ளேன் அவர் வரைந்தவைகளை...

      Delete
  55. Last month mark
    M.m 10/10
    Shelton 9/10
    Tex 9.5/10
    Steel claw 9/10

    ReplyDelete
  56. Replies
    1. daibolik akkik : இளம் டயபாலிக் ரசிகருக்கு நல்வரவு !

      Delete
  57. ஹல்லோ... எங்களுக்கும் கொரியர் வந்துடுச்சு. அதுவும் DTDCல! நாங்களும்...மெட்ரோபாலிடவுன் காரவுக தான்!

    ReplyDelete

  58. ஒரு பட்டாப் போட்டி'...

    'ஒரு வரலாற்று நிகழ்வை ஜாலியாய் சொல்ல முனைந்துள்ள கதையாக இதைக் கருதினால் ஒரு அழகான வாசிப்பு அனுபவம் கிடைத்திடும்' என்று எடிட்டர் தனது ஹாட்லைனில் கூறியுள்ளதை மனதில் வைத்துக் கொண்டு படிப்பது நல்ல பலன் தரும்!

    (+) அட்டைப் படம்
    (+) பிரிண்ட்டிங் தரம்
    (+) முற்பாதி
    (+) ரகளையான காமெடி வசனங்கள்

    (-) பிற்பாதி
    (-) (சற்றே சோகமான) க்ளைமாக்ஸ்!

    ஸ்டார் ரேட்டிங் : 4/5 . எடிட்டரின் ரகளையான காமெடி வசனங்களுக்கு கூடுதலாக 0.5 . ஆகமொத்தம் 4.5/5 !

    ReplyDelete
    Replies
    1. 'ஒரு பட்டாப் போட்டி' எனப் பெயர் சூட்டியது நண்பர் கார்த்திக் சோமலிங்கா என்று ஞாபகம்! அவ்வாறிருப்பின்,ஹாட்லைனில் குட்டியாக ஒரு க்ரெடிட் கொடுத்திருக்கலாம்!வேலைப்பளுவில் மறந்துட்டீங்களா எடிட்டர் சார்?

      Delete
  59. இப்போல்லாம் 'சிங்கத்தின் சிறு வயதில்' கண்ணில் படுவதே இல்லையே...

    @ தலீவர்

    புக்காப் போடுங்கன்னு கேட்டு போராட்டம் நடத்தறதெலலாம் ஒருபக்கமிருக்கட்டும் தலீவரே... பிட்டுபிட்டா வந்துக்கிட்டிருந்ததே இப்ப நின்னுபோச்சே...?

    போராட்டக்குழுவின் வலிமையை எதிராளிகளுக்குப் புரியவைத்து விடுவோமா? ன்னான்றீங்க?!

    ReplyDelete
    Replies
    1. ///
      போராட்டக்குழுவின் வலிமையை எதிராளிகளுக்குப் புரியவைத்து விடுவோமா? ன்னான்றீங்க?!///-- மாதாமாதம் சரியாக வந்து கொண்டு இருந்ததையும் போராடி நிறுத்தி போட்டீக....
      போராட்ட குழுவின் வல்லமைக்கு இந்த அத்தாட்சி போதாதா.....ஹாஹாஹாஹாஹஹாஹாஹாஹாஹா ..........

      Delete
  60. பக்கத்திற்கு பக்கம் இடிஇடிக்கும் சிரிப்பு வெடிகளை எல்லா கதைகளுக்குள்ளும் புகுந்திடல் நிரம்ப சிரமமே என்பதை நினைவில் இருத்தி கொண்டு- ஒரு வரலாற்று நிகழ்வை செம ஜாலியாய் சொல்ல முனைந்துள்ள கதையாக இதனை கருதி புறப்பட்டால்...

    என்ற எடிட்டரின் முன் குறிப்புடன் படிக்க துவங்கினேன். "ரெண்டு மாட்டு வண்டி நிறைய பாசிமணி, ஊசிமாணிகள்கிற அருமையான பேரத்துக்கு செவிந்தியர்களிடமிருந்து ஒட்டன்சத்திரம் நிலபகுதி..ச்சே.. 'ஒக்லஹோமா' நிலபகுதி அமெரிக்க அரசு திரும்ப வாங்கியது.." என கலட்டாவுடன் துவங்கும் கதை, அந்த மொத்தமுழுநிலபரப்புலேயும் யாரும் துண்டு விரிக்காம, பாதுகாக்கும் பொறுப்பை 'மஞ்சள்சட்டை காமெடி' வீரனிடம் அரசாங்கம் ஒப்படைகிறது.

    எடுத்தஎடுப்பிலேயே ஒருவன் வீடுகட்டிக்கொண்டிருப்பதை நம்ம மஞ்சள்சட்டை காமெடி வீரன் கண்ணில் பட, அவன் வீட்டில் அவனையே சிறைவெச்சி அதையே முதல் சிறைசாலையா அறிவிச்சிட்டு...நடமாடும் 'டாஸ்மாக்' ...ச்சே... பாஸ்மாக் கொச்சுவண்டியை நடமாடும் ஜெயிலா மாத்தி, சிக்கினவங்களை புறாவும் கைதிபண்ணி தள்ளிட்டே போறதுன்னு செம லூட்டிய கதை ஆரம்பிக்குது.

    பல காட்சிகள் நினைவுக்கு திரும்ப திரும்ப வந்து குபீர் சிரிப்பை வரவெக்குது,அதுல முதல் இடம்: மொக்கையோட 'பாஸ்' குதிரை வாலில் சமையல் பாத்திரம் கட்டின குதிரையை மாத்தி ஓட்டிட்டு போகும் சீன் செம காமெடி..! க்ளிக்...க்ளிங்..ட்டிங்... சத்தமும் மொக்கை 'பாஸ்' அதை கேட்டு முழிக்கிற முழியும் திரும்ப திரும்ப மனசுல தோணி சிரிப்பா சிரிக்கவைக்குது...ஹாஹாஹா...!

    பல இடத்துல காமெடியை அருமையா பின்னியிருக்கிறார் ஓவியர்&ஆசிரியர். உதரணமா: பட்டா போட்டிக்கான நாள் விடிஞ்சதும், அந்த நிமிஷம் சூரியன் உதயத்தை அறிவிக்க சேவல் 'கொக்கரக்கோ'ன்னு கத்தின அடுத்த நொடியே...அதோட வேலைமுடிச்சதுன்னு தெரிவிக்கற விதமா, அடுத்த காட்சி அந்தகோழி நெருப்புல சிக்கன் ப்ரை ஆகிறகாட்சி [படம் பார்த்து புரிஞ்சிக்கணும்] குபீர் சிரிப்பை வரவைக்கும் ரசனையானகாட்சி..!

    அடுத்து, இடம் பிடிச்சவங்களோட நிலத்துல அவங்கவங்க வெச்சிருக்கிற எச்சரிக்கை போர்டு, அதுல எழுதிவெச்சிருக்கிற வாசகம் எடிட்டரின் கைவண்ணம் கிச்சு கிச்சு மூட்டிட்டே இருக்கு..! சில வாசகம்:

    அத்துமீறிபவன் அடங்கிடுவான் ஆறடிப் பள்ளத்திலே..!

    கால் வைப்பவனுக்கு காத்துள்ளது பரலோகம்.!

    வில்லங்கம் பண்ண நினைத்தால் விடுதலை கிடைக்கும் உலகத்திலிருந்து.!

    பூமியில் தானியமும்,அத்துமீறிபவனின் தொப்பையில் ஈயத்தையும் விதைப்பதாக உத்தேசம்.!


    அதேமாதிரி தேர்தல்வாக்குறுதிகளை போர்டில் எழுதிவெச்சிருக்கிற வாசகங்களும் பட்டையை கிளப்புது.! சில வாசகம்:

    உங்கள் ஒட்டு பலூன் பார்னேக்கே! புஸ்டியானவன் பொய் சொல்லமாட்டான்!

    மாற்றம்! முன்னேற்றம்! உங்கள் ஒட்டு ஜோன்சுக்கே!

    விடியட்டும்! மலரட்டும்! மார்ட்டினுக்கே ஒட்டு!


    மின்னல் வேகத்தில் தேர்தல், அதிரவைக்கும் அதிர்வெடிசிரிப்பை வரவைக்கும் தேர்தல் முடிவுகள், பதவி கைக்கு வந்ததும் நடக்கும் கலாட்டாக்கள், நொடியில் பாலைவனமாகும் நகரம். நேற்று 5000 டாலர் சாமியோவ் இன்று 10 டாலர் என அந்தர்பல்டி அடிக்கும் ரியல்எஸ்டேட் என கதை முழுசும் ஒரே ரவுஸுதான் போங்கள்..!

    'ஆங்' சொல்ல மறந்துட்டேன்..!
    நான் விமர்ச்சிக்கும் கதை பெயர் 'ஒரு பட்டா போட்டி!'
    மீண்டும் இந்த கதை நினைவுக்கு வரும் காலம்: அடுத்த மூன்று மாதங்கள் தொடர்ந்து.! காரணம் தமிழக தேர்தல் செய்திகளை படிக்கும்போதெல்லாம் ஹாஹா...இந்த கதை நியாபகம் வந்திட்டே இருக்கும்..!

    மீண்டும் படிக்க எடுக்க தோன்றும் காலம்: இரண்டே மாதங்களில்..! காரணம், தேர்தல் உச்சகட்ட டைம்ல நடக்கற காமெடிகள் இந்த கதையை திரும்ப படிக்கவைக்கும்..ஹீ...ஹீ..!

    'ஆங்' சொல்ல மறந்துட்டேன்..! தொடரும்....

    ReplyDelete
    Replies
    1. ரகளையான விமர்சனம் மாயாவி அவர்களள! ரசிச்சுப் படிச்சிருக்கீங்க! :)))))

      Delete
    2. நான் எழுதினதை நீங்க ரசிச்சி படிச்சிருக்கீங்ககிறது மெய்..! இருந்தாலும்கூட உங்க பாராட்டை ஏத்துக்கறேன் இத்தாலிகார்..!

      இந்த மாத புத்தகங்கள் எல்லோரும் குறிப்பிடுவது போல ஒரு புதுமாப்பிள்ளை மாதிரி பாலிஷ் தெரிகிறது. அட்டைபெட்டி,உள்கவர்,புத்தக அட்டைகள் என எல்லாவற்றிலும் ஒரு பங்கு நேர்த்தியும் தரமும் கூடியிருக்கு,உண்மையில் நிறைவான படைப்புகள்..! இதேபோல் இன்னும் வரும் நாட்களில் குவாலிடி டாலடிச்சி ஏறிபோய்ட்டே இருக்கணும்..!

      திகில் நகரில் டெக்ஸ் அட்டையில் டெக்ஸ்கண்களில் தெரியும் திகில் இதுவரையில் பார்த்திராத திகில்..! டெக்ஸ் முகத்தில இப்படி ஒரு ரியாக்ஷனை ஏத்துக்க முடியலை.மெய்யாலுமே இத்தாலியில இதுமாதிரிதான் வந்ததா..? இல்லை நம்ம ஆர்டிஸ்ட் கைவண்ணமா..? தெரியலை.

      'ஆங்' சொல்ல மறந்துட்டேன்..! வழக்கம்போல் நேத்து காலையில 'பொக்கிஷ பார்சல்' கொரியர்பாய் கொடுத்திட்டு போனார். ST,DTDC சர்வீஸில் எந்த மாறுதலும் தெரியலை. சொல்லபோனா அட்டைபெட்டி அடிவாங்காம ஜம்முனு வந்தமாதிரிதான் தெரியுது..!

      Delete
  61. இன்று DTDc போன் நெம்பரை தேடி கண்டு பிடித்து போன் செய்தேன்.அவர்களிடம் நேற்று வரவேண்டிய புக்பார்சல் வரவில்லை -என கூறினேன்.அதற்கு அவர்கள் பார்சல் வந்தால் போன் செய்வார்களாம்,நான் தேடி போய் வாங்கி கொள்ள வேண்டுமாம் என்ன கொடுமை இது என்று தெரிய வில்லை, சார் என்னை பொருத்த வரை எனது ஊர் சிறிய ஊர்தான் அடுத்த தடவை தயவு செய்து stயில் அனுப்பி வைக்குமாறு தழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

    ReplyDelete
  62. நேற்று அனைத்து இதழ்களையும் கைபற்றி ஆகி விட்டது ..முதலில் அட்டைபடங்களை பற்றி சொல்ல வேண்டுமானால் இந்த முறை முதல் இடத்தை பிடிப்பது ..லக்கி ..அந்த மேக வண்ணத்தில் எந்த பிண்ணனியும் இல்லாமல் லக்கியின் அந்த பயண புகைப்படம் மனதை கவர்கிறது ...அழகு ....


    இரண்டாம் இடத்தை பிடிப்பது ...

    திகில் நகரில் டெக்ஸ் ...போன முறை பட்டையை கிளப்பிய டெக்ஸ் இந்த முறை இரண்டாம் இடத்திற்கு தள்ளியதன் காரணம் கண்டிப்பாக சித்திர குறைபாடு அல்ல ...எவருக்குமே அஞ்சாத அந்த சிங்கம் ...இதுவரை தைரியம் ...துணிவு ...நெஞ்சம் நிமிர்த்தி ...நிமிர்ந்து நில் பாணியிலேயே பார்த்து கொண்டு இருந்த டெக்ஸ் முதன் முறையாக ஒரு அச்ச உணர்வை முகத்தில் கொண்டு வந்த இந்த அட்டைபட பாணி தான் அதனை இரண்டாம் இடத்திற்கு தள்ளி விட்டது ...இந்த கதைகளனுக்கு இது ஓகே எனினும் அட்டை படத்தில் எதற்கும் அஞ்சாத சிங்கத்தையே பார்க்க துடிக்கிறோம் ...பதுங்கி கொண்டு இருக்கும் புலியை அல்ல ...சார் ...


    மூன்றாம் இடம் ...

    மாடஸ்தி ...கார்வின் ....கார்வின் அட்டைப்படமாக ஆக்‌ஷன் கோதாவில் தனது கெத்தை காட்டினாலும் நேரில் பார்க்கும் பொழுது இளவரசி தனியாக பின் அட்டையில் கலக்கி கொண்டு உள்ளார் ....முன் அட்டைக்கு ஏற்ற படமாக இருந்தாலும் சென்சார் ப்ராபளம் போல .....பின்னுக்கு வந்து விட்டார் ....


    கடைசி இடத்தை பிடிப்பது மறுபதிப்பு நாயகர்கள் ...

    இந்த முறை சுமார் ரகத்தில் மிரட்டுகிறார்கள் ...

    நன்றி

    ReplyDelete
  63. அடுத்து பில்லர் பேஜ் பக்கங்களை பற்றி ....

    டெக்ஸ் வரிசையில் ஆரம்ப இதழில் மட்டுமே "தோட்டா டைம் "வரும் போல என்ற எண்ணத்தில் இருந்த பொழுது இனி அனைத்து டெக்ஸ் இதழுமே தோட்டாவோடு தொடரும் என்ற எண்ணத்தை விதைத்ததற்கு முதலில் நன்றி ..சார் ..இது எப்பொழுதும் போல அதாவது சி.சி.வயதில் போல அல்லாமல் ஹாட் லைன் போல எப்பொழுதும் தொடர வேண்டுகிறேன் ...அடுத்த வெளியீடு விளம்பரங்கள் அதுவும் ஒன்றுக்கு இரண்டாய் டெக்ஸ் அவர்களின் புது வெளியீட்டு விளம்பரம் இப்பொழுதே ஆவலை தூண்டுகிறது ..அதுவும் மெகா சைசில் ...200 பக்க அளவில் என்ற அறிவிப்பு ...எப்பொழுது ..எப்பொழுது என குதிக்க தோன்றுகிறது ...

    மறுபதிப்பு இதழில் விச்சு கிச்சு இதுவரை காணாத ஒன்று போல இருந்ததால் புதிய சுவையாகவும் தோன்றியது ...அட்டைபடம் ஏமாற்றம் அளித்தாலும் உள்ளே சித்திரங்கள் இந்த தரத்தில் தெளிவாக ..உயிரோட்டமுடன் உள்ளது .....

    லக்கி இதழில்
    அடுத்த மாதம் வரவிருக்கும் அறிவிப்புகள் மீண்டும் நான்கு இதழ்களுமே ஆவலை தூண்டுவது போல அடுத்த வெளியீட்டு விளம்பரங்கள் ...அமைந்துள்ளன ..வாசகர் கடிதம் பற்றி நான் ஏதும் சொல்ல விரும்ப வில்லை ...நடைமுறை நிஜத்திற்கு மாற்றாக இருக்கும் கருத்திற்கு என்ன பதில் சொல்வது ...(டெக்ஸ் பற்றிய கருத்திற்கு மட்டுமே )..ஆனால் அதற்காக தொடரும் போட்டு தொடர்வது எல்லாம் ...ஊஹீம ...


    அப்புறம் எப்பொழுதும் போல சிங்கத்தின் சிறு வயதில் காணாமல் போன செய்ததிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை ..ஒவ்வொரு முறையும் சுட்டி காட்டுகிறேன் ...ஆனால் ஒவ்வொரு முறையும் ஏமாற்றமே மேலோங்கி நிற்கிறது ...இதற்கு காரணம் இந்த பகுதி பற்றி நண்பர்கள் யாரும் கேள்வி கேட்பதில்லை என தாங்கள் நினைத்தால் ..

    ப்ரெண்டஸ் ...தயவுசெய்து நீங்கள் சி.சிறு வயதில் தொடரை விரும்பி படிக்கும் பட்சத்தில் அது வராத பொழுது தங்களின் ஏமாற்றத்தை பதிவு செய்யுங்கள் ....

    அல்லது ஆசிரியர் சார் இந்த வருட சந்தா நண்பர்களுக்கு இலவச சிக்பில் மறுபதிப்பு கதை போல மற்றவர்களுக்கு விற்பனை போல அடுத்த வருட சந்தாவில் இந்த சிங்கத்தின் சிறு வயதில் தொகுப்பை முழுமையாக அமைத்து கொடுங்கள் ...சந்தா நண்பர்களுக்கு ...அப்படி எனில் இப்படி விட்டு விட்டு தொடருங்கள் ....இல்லையெனில் விடாமல் தொடருங்கள் ....

    இரண்டையும் தாங்கள் மறுத்தால்

    போராட்ட குழு இனி மறைமுக போராட்டத்தில் ஈடுபடாது நேரடியாக சிவகாசி நோக்கி பயணமாக நேரிடும் அபாய சூழல் ஏற்படலாம் ...காத்திருங்கள் ...

    நாங்கள் அடுத்த மாத இதழில் காத்திருக்கிறோம் ....சிங்கத்தின் சிறு வயதிற்காக ....

    ReplyDelete
  64. நண்பர் ரவிகண்ணன் அவர்களுக்கு....

    நமது ஹீராக்களை லோக்கல் ஹீரோக்ளுடன் ஒப்பிடுவது தவறு அல்ல சார் ...இங்கே நமக்கு லோக்கல் ஹீரோவாக இருக்கும் சூப்பர் ஸ்டார் தான் ஜப்பானில் இருக்கும் ரசிகர்களுக்கு சூப்பர் ஹீரோ ....இங்கே நமது மனம் கவர்ந்த ஹீரோக்களை அந்த நாயகர்களுடன் ஒப்பிடும் பொழுது அந்த ஹீரோக்கள் இன்னமும் நம்முடன் ஒன்றி போவார்கள் ...

    மேலும் உங்கள் வாத படி பார்த்தால் ...இங்கே சூப்பர் ஹீரோக்களாக தோன்றும் டெக்ஸ் ..டையபாலிக் எல்லாம் இத்தாலியில் லோக்கல் ஹீரோக்கள் தானே ....

    இது பெருமை சார் ...

    பிரபுதேவாவை இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்பது போல ...தான் இதுவும் ....லக்கியை வடிவேலுடன் ஒப்பிடுங்கள் ...ஷெரிப் ..கிட் ஆர்ட்டினை கவுண்டமனி செந்தில் உடன் ஒப்பிடுங்கள் ...டெக்ஸை ரஜினி உடன் ஒப்பிட்டு பாருங்கள் ...அவர்கள் உங்களே நோக்கி இன்னமும் நெருக்கமாக நடை போட்டு வருவார்கள் ....;-)

    ************

    ReplyDelete
  65. செயலாளர் அவர்களே ...

    சிங்கத்தின் சிறு வயதில் தொடருக்கு இனி இடைவெளி விட்டால் போராட்ட குழுவின் போராட்டம் விரைவில் கலவர மேகமாக சூழம் அபாயம் ஏற்படும் என்பதை அவருக்கு உணர வைப்போம் ....

    போராட்ட குழுவின் இன்னொரு முகத்தை ஆசிரியர் காணும் சூழலை அவர் ஏற்படுத்தி கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன் ...அடுத்த மாதம் வரை காத்திருப்போம் ....காத்திருங்கள் ....அதுவரை மேப் ...வாக்கி டாக்கியுடன் பதுங்கு குழியில் ஆலோசனை செய்வோம் வாருங்கள் ...;-)

    ReplyDelete
  66. [அக்கக்கா...சிக்கிட்டாருய்யா கைபுள்ள...]

    65 வருஷமாய் மாதம் தவறாது கால்சீட் கொடுத்து நடிக்கும் டெக்ஸ் வில்லரை, மூனு வருஷத்துக்கு ஒரு படம் கால்சீட் தந்து நடிக்கற ரஜினியோட...இன்னுமொரு மூனு படத்துக்கு கால்சீட் தரப்போகும் தள்ளாத வயதுகரனோடு ஒப்பிடுறதை வன்மையா கண்டிக்கிறேன்..!மாசம் ஒரு ரஜினி படம் வந்தா லோக்கல் சேனல்ல ஸும்மா கொடுத்தா கூட போட்டமாட்டங்க..!டெக்ஸ் அப்படியா..!!!!!!!!!!

    60 to 70 கள்ல டெக்ஸ் வந்திருந்தா எம்.ஜி.ஆர்.யோடையும்...
    70 to 80 கள்ல டெக்ஸ் வந்திருந்தா ஜெய்சங்கரோடையும்...
    80 to 90 கள்ல டெக்ஸ் வந்திருந்தா ரஜினிகாந்த்தோடையும்...
    2000 to 2010 கள்ல டெக்ஸ் வந்திருந்தா 'தல' அஜீத்தோடையும்...
    10 to 20 கள்ல டெக்ஸ் வந்திருந்தா[அடுத்த ஸ்டார்] XYZ ளோட ஒப்பிடுற மாதிரி ஏறிப்போற அப்டேட் நாயகன் 'டெக்ஸ்'..! எடி'சன்' பிறக்காதா நாளுக்கு முன்னாடி வந்த 'முத்து' படம் ஜப்பான்ல ஓடிச்சிங்கிறதால, ஜப்பானுக்கே ரஜினி தான் சூப்பர் ஹீரோன்னு சொல்றது செம காமெடி..! உலகிலேயே அதிகம் விக்கற ஜப்பான் 'மங்கா' காமிக்ஸ் சொல்லும் அவங்களுக்கு யார் சூப்பர் ஹீரோன்னு..!

    ஸும்மா 'டூப்' போட்டு சீன் போடுறவரோட டெக்ஸ்-ஐ கம்பேர் பண்ணி சீண்டிட்டு..! [கும்..டும்..டம்..கும்..]

    ReplyDelete
    Replies
    1. அனுபவத்த விவரிக்கறது வேற...அபிப்பிராயத்தை தெரிவிக்கறது வேற...

      இத்தாலி விஜய் உங்களையும் சேர்த்துதானே திருப்பூர் விழாவைபத்தி விவரிப்பார்ன்னு போட்டார். நீங்க ஒத்தவரி கூட எழுதகாணமே..??? அதுதான் ஏன்னு புரியலை, என்னமோ சம்திங் இருக்குன்னு ஒன் ஸ்டெப் போக்ல போய்ட்டேன்..! அதைவிட டைம் கிடைக்கலைங்கிறதுதான் உண்மை. அம்புட்டுதான்..!!

      மத்தபடி ரஜினி மேட்டரெல்லாம் தமாஸு..தமாஸு..[தல ஸ்டைலில் படிங்க ;) ]

      Delete
    2. நான் எழுதலயா..கர்ர்ர்...
      போன பதிவை நல்லா படிங்க சார்..
      யாரும் கேள்வி கேட்டால் எப்படி எஸ்கேப் ஆவது!!!!...-அனுகுங்கள் மாயா சார்...

      Delete
    3. @ டெக்ஸ்

      அடகடவுளே..எவ்ளோ அப்டேட் கொடுத்திருகிங்க...'ங்'..'அவுக்'...
      தப்பு என் பேர்லதான்,அன்னைக்கு காலையில இருந்து நைட்வரை எந்த ஆன்லைன் தொடர்பும் பார்க்கலைங்கிறது உங்களுக்கு நல்லா தெரியும்..! பொதுவா notify me கொடுத்திட்டு சாவகாசமா மெயில்ல படிச்சிகுவேன்..! அந்த பதிவுக்கு கொடுக்கலை, உங்க போன்ல மதியம்வரையான கமெண்ட்ஸை படிச்சிட்டதால விட்ட இடத்துல இருந்து படிச்சேன். நீங்க மேல reply கமெண்ட்ஸ் போட்டத்தை பார்க்கவேயில்லை...ஹீ..ஹீ...[முகத்தில் டன்கணக்கில் அசடுவழியும் அதே எடிட்டர் போடும் போட்டோக்கள் திருப்பூர் வரை..]

      மத்தபடி ஈஸ்கேப் ஆவது எப்படின்னு தெரிஞ்சிக்க நீங்க அணுகவேண்டியது, வழக்கம்போல் இந்த ப்ளாக் அட்மினைதான்...! நன்றி.! வணக்கம்..!!

      Delete
    4. மாயா ஜி
      யார் பதிவு போட்டிருந்தாலும் போடாவிட்டாலும் சரி

      திருப்பூர் புக் பேர் பற்றிய உங்கள் பதிவை நீங்கள் போட்டிருக்கணும்

      உங்க பதிவை எதிர்பார்த்த
      நிறைய பேர்
      ஸ்டாலிலும் கேட்டார்கள்

      நீங்க கண்டிப்பா பதிவு போடறீங்க அ போட்டேயாகணும்

      Delete
    5. யாருப்பா அது மாயா ஜி..?
      வந்து எதையாவது கிறுக்கி கிளிக்கி தொலையும்..!அந்த கூத்தை படிச்சி [புரிஞ்சா] தெரிஞ்சிகறோம்..!

      [போதுமா டெக்ஸ் சம்பத்..? என் பங்கு நான் சொல்லிட்டேன்.அந்த கடைசி வரி வருத்தபடாத வாலிபர் சங்க சிவகார்த்திகேயன் ஸ்டைல்ல தானே படிக்கணும்...]

      Delete
  67. மாயாஜீ ...

    ரஜினி கிழடு தட்டி போயிருக்கலாம் ...ஆனால் இப்போதும் அவர் தான் சூப்பர் ஸ்டார் ....அவரே தான் வசூல் சக்ரவர்ததி ...மக்கள் திலகம் ஒன்று தான் ..மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களும் ஒன்று தான் ...தல ..தளபதி யார் ...வந்தாலும் சூப்பர் ஸ்டார் ஒருவர் தான் ...அன்று முதல் இன்று வரை...அதே போலவே காமிக்ஸ் சூப்பர் ஸ்டார் எனில் எத்தனை லார்கோ ..ஷெல்டன் வந்தாலும் டெக்ஸ் தான் சூப்பர் ஸ்டார் ....

    இன்னும் விரிவாக எடுத்துரைக்க ஆசை தான் ...ஆனால் ரஜினி மோதல் வாட்ஸ்அப் குழுவோடு போகட்டும் காமிக்ஸ் ப்ளாகில் அதுவும் ஆசிரியரின் ப்ளாகில் வேண்டாம் என்பதால்

    உலகிலேயே மிக வலிமையான ஆயுதம் மெளனமே ....என்பதால் ..


    நடிகர்களின் சம்பாஷனையை இத்துடன் முடித்து கொள்கிறேன் ...இனி தொடர்ந்தாலும் ....;-)

    ReplyDelete
  68. See my new post "Lucky Luke - oru comedy kundan" in tamilcomicseries.blogspot.com

    ReplyDelete
  69. தோழர்களே நடிகர்கள் காமிக்ஸ் நாயகர்கள் இவர்களை ஒப்பிடுவதால் தேவையில்லாத வீண்விவாதங்களை உருவாக்கும். நான்கு மாதங்களுக்கு முன்பு தேவையில்லாத விவாவதங்களின் சூட்டை தணிக்க நமது எடிட்டர் ஞாயிறுபதிவை நிறுத்தப் போவதாக அறிவித்திருந்த்தை நாம் இன்னும் மறந்திருக்க மாட்டோம். மறுபடி அந்த சூழ்நிலை உருவாக நாம் காரணமாக இருக்கவேண்டாமே. எல்லா நடிகர்களும் பணத்துக்காக மட்டுமே நடிக்கின்றனர். இதில் யார் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற ஒப்பீடே அவசியமற்றது. எடிட்டரின் இந்த ப்ளாக்கை நம் காமிகஸ் தோழர்கள் மட்டுமல்லாமல் ஏனையோரும் பார்க்க வாய்ப்புள்ளதால் நம் காமிக்ஸ் வட்டம் பெரிதாக செய்யவேண்டியதை பற்றியோ நம் காமிக்ஸின் நிறை குறைகளை அலசுவதிலோ பயன்படுத்தலாமே. நானும்கூட சமயத்தில் ஓட்டைவாய் உலகநாதனாக பதிவிட்டிருக்கிறேன். நம் கருத்து தோழர்களை பாதிக்கிறது என தெரிந்தால் உடனே என் பதிவை நீக்கிவிடுவேன். இனி யார் மனதும் புண்படுமாறு என் பதிவு அமையக்கூடாது என்பதில் உறுதியாயிருக்கிறேன். சினிமாவையும் காமிக்ஸையும் கலக்க வேண்டாமே. Please.

    ReplyDelete
    Replies
    1. உண்மை... உண்மை.. உண்மை..
      ராஜேந்திரன் சார்...உங்கள் வழியே நானும், அத்தகைய 3 ஒப்பீடு கமெண்ட்ஸ் களை நீக்கி விட்டேன்...
      இனி ஒருபோதும் இந்த ஒப்பீடுகளில் இறங்க மாட்டேன் எனவும் உறுதி கூறுகிறேன்....

      Delete
    2. ///. நம் கருத்து தோழர்களை பாதிக்கிறது என தெரிந்தால் உடனே என் பதிவை நீக்கிவிடுவேன். ///

      ராஜேந்திரன் சார்... உங்க கருத்து அப்படியே லேசா என்னைப் பாதிக்கிறாப்ல இருக்கே! :D ;)

      Delete
  70. Replies
    1. 1.விதிபோடும் விடுகதை - டெக்ஸ்
      2.டாக்டர் டக்கர் - ஸ்பைடர்
      3.சாத்தானின் உள்ளங்கையில்- கமான்சே
      4.நில் சிரி திருடு - கர்னல் க்ளிப்டன்

      Delete
  71. Feb books received yesterday.. Thanks to dtdc. Fast delivery. All four books are wonderful. Jan and Feb totally fantastic. But the stories are small.. Could finish in one day. Don't know what to do for the balance 30 days. Tex AS usual top, lucky 2nd, modesty and David 3rd... Now waiting for march issues

    ReplyDelete
    Replies
    1. N.Arul : கதைகளின் நீளங்கள் மாறிடவில்லை நண்பரே ; நாம் படிக்கும் வேகங்களில் தான் மாற்றங்களே !

      Delete
    2. Yes... interesting books are read fast.

      Delete
  72. ஒருநாள் தாமதமாய் இன்று கிடைத்து விட்டது..! தொடரும் மாதங்களில் இந்த ஒருநாள் தாமதமும் சரி செய்யப்படும் என நம்புகிறேன்!

    ReplyDelete
  73. அட்டைப் படத்தில் லக்கியாருக்கே முதலிடம்! இரண்டாமிடத்தில் டெக்ஸ். இளவரசியின் பின்னட்டைப்படம் கலக்கல்..முன்னட்டை சொதப்பல்! மஞ்சள் பூ மர்மம் அட்டை சுமார் ரகமே..!

    ReplyDelete
  74. எடிட்டர் சாா்...! இளவரசியாருக்கு 14-ம் பக்கம் தொட்டு,அடுத்தடுத்த ஒரு சில பக்கங்களுக்கு கோடு போட்ட பனியன் தைக்கும் வைபவம் நடத்தியிருப்பது போல் தெரிகிறதே ..!!

    ReplyDelete
    Replies
    1. Guna Karur : கொடும் போடவில்லை..பனியனும் போட்டுவிடவில்லை சார் ! உள்ளதே அது தான் ; so தைரியமாகப் படியுங்கள்.

      Delete
    2. இளவரசியின் தாராளமயம் கூடுதல் சுவாரஸ்யம்..!

      Delete
    3. அதென்ன..தைாியமாகப் படியுங்கள் என்று...எக்கச்சக்க தைாியத்தை எங்கள் பெளன்ஸா் அண்ணாா் கொடுத்திருக்கிறாா்..!அக்காங்..!

      Delete
    4. இளவரசியின் தாராளமயம் கூடுதல் சுவாரஸ்யம்..!

      Delete
  75. ஸ்பைடரை ஆவலோடு எதிா் நோக்குகிறேன்..!

    ReplyDelete
  76. நண்பர் ராஜேந்திரன் அவர்களுக்கு ...


    உண்மை ...எனவே தான் தெளிவாகவே அறிவித்து விட்டேன் ....


    "இன்னும் விரிவாக எடுத்துரைக்க ஆசை தான் ...ஆனால் ரஜினி மோதல் வாட்ஸ்அப் குழுவோடு போகட்டும் காமிக்ஸ் ப்ளாகில் அதுவும் ஆசிரியரின் ப்ளாகில் வேண்டாம் என்பதால்

    உலகிலேயே மிக வலிமையான ஆயுதம் மெளனமே ....என்பதால் ..


    நடிகர்களின் சம்பாஷனையை இத்துடன் முடித்து கொள்கிறேன் ...இனி தொடர்ந்தாலும் ....;-)


    நன்றி .....;-))

    ReplyDelete
  77. தோழர் ஈரோடு விஜய் அவர்களே என்னுடைய பதிவு உறுதியாக கூறுகிறேன் உங்களை குறிப்பிடவில்லை என்று. அப்படி உங்களுக்கு தோன்றினால் அதற்காக. மன்னிக்கவும். நாமெல்லாம் வெவ்வேறு ஊர்களில், பலவித வயது வித்தியாசங்களுடன், பல்வேறு மதங்களை சேர்ந்திருந்தாலும், நேரில் சந்திக்காமலிருந்தாலும் காமிக்ஸ் என்ற குடும்பத்து உறுப்பினர்கள் என்று நினைக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியை விவரிக்க இயலவில்லை. இது தொடரவேண்டும். எனக்கு வயது 55. நம் காமிக்ஸின் கருணையால் எனக்கு இன்னும் வயது 20 என்பதாக உணர்கிறேன். என் வயதை நீங்கள் எல்லாம் எட்டும் சமயம் நானிருப்பது நிச்சயமில்லை. ஆனால் நமது காமிக்ஸ் என்ற சிறிய குடும்பம் எனது ஆயுட்காலத்திற்குள் இன்றிருப்பதைவிட பலமடங்கு பெருகிவிட்டால் அதைவிட சந்தோஷம் எனக்கு வேறொன்றில்லை

    ReplyDelete
    Replies
    1. ராஜேந்திரன் அவர்களே ஸும்மா வார்த்தைகளில் அனுபவம் கலந்து அடிச்சி விளையாடுறீங்க..! நான் கணித்துபோலவே இந்த ப்ளாக்கில் வரும் விரல் விட்டு என்னும் 50 வயது தாண்டிய சீனியர்களில் நீங்களும் ஒருவர். ஒவ்வொரு சொல் விச்சிலும் அனுபவமுதிர்ச்சி தெறிக்கிறது..! உங்களை போன்ற அனுபவஸ்தர்களோடு கைகோர்த்து இந்த காமிக்ஸ் உலகில் பயணிப்பது ரொம்பவே ஆரோக்கியமானது..!
      //நம் காமிக்ஸின் கருணையால் எனக்கு இன்னும் வயது 20 என்பதாக உணர்கிறேன். //என்ற எனக்கு பிடித்த ,உணர்ந்த கருத்தை சொல்லி என்னை சாய்த்து விட்டிர்கள் ஸார்..! ஒரு சின்ன தகவல் சொல்லமுடியுமா..? நீங்கள் உள்ள ஊர் என்னவென்று கோடுகாட்ட முடியுமா..? வரும் ஏப்ரலில் எடியுடன் சென்னையில் ஒரு சந்திப்புக்கு வழிஉண்டா ஸார்..?

      Delete
    2. ராஜேந்திரன் சார்! மகிழ்ச்சியும்,நெகிழ்ச்சியும் ஒரு சேர..! உங்கள் நினைவுகளும், பதியம் போட்ட பதிவுகளும் எப்போதும் எங்களோடு உண்டு..!

      Delete
    3. //ஆனால் நமது காமிக்ஸ் என்ற சிறிய குடும்பம் எனது ஆயுட்காலத்திற்குள் இன்றிருப்பதைவிட பலமடங்கு பெருகிவிட்டால் அதைவிட சந்தோஷம் எனக்கு வேறொன்றில்லை ///

      நிச்சயமாய் அந்த சந்தோசம் கிடைக்கப் பெறுவீர்கள் ராஜேந்திரன் சார்!

      மற்றவர் மனம் நோகக்கூடாதென்ற உங்கள் எண்ணம் வாழ்க!
      உங்களை நேரில் சந்தித்துப் பேச நேர்ந்தால் அது என் பாக்கியமே! ஏப்ரலில் அது நிகழ்ந்தால் மகிழ்வேன்!

      Delete
    4. ராஜேந்திரன் சார்! மகிழ்ச்சியும்,நெகிழ்ச்சியும் ஒரு சேர..! உங்கள் நினைவுகளும், பதியம் போட்ட பதிவுகளும் எப்போதும் எங்களோடு உண்டு..!

      Delete
    5. நன்றிகள் A.T.R அவர்களே..! அடிச்சிபட்டையை கிளப்பும் மெகா காமிக்ஸ் மாநாடாய் ஏப்ரலில் ஒரு கும்மாளம் போடுவோம்..!

      Delete
  78. Any plan for thighil comics this year?

    ReplyDelete
  79. Editi sir you have any chance to reprint roger(nadakum selai marmam)and bruno brazil(apolo marmam)

    ReplyDelete
  80. தோழர் மாயாவி சிவா அவர்களே நான் கடலூரை சேர்ந்தவன். நம் தோழர்களை நேரில் சந்திக்க பலமுறை சென்னை வர முயற்சித்து முடியாமல் போய்விட்டது. கண்டிப்பாக ஏப்ரலில் எடியுடன் சந்திப்போம் என்ற நம்பிக்கை இந்தமுறை உள்ளது

    ReplyDelete
    Replies
    1. வாவ் சூப்பர் ,ராஜேந்திரன் சார் ....ஏப்ரலில் உங்களை சந்திக்க இருப்பது ஆவலை கிளப்பி உள்ளதுசார்......

      Delete
  81. நானும் நம் நண்பர்களை சந்திக்க
    ஆவலாய் உள்ளேன்.
    அனுமதி உண்டா?
    இதுவரை நான் யாரையும் சந்தித்தது
    இல்லை.

    ReplyDelete
    Replies
    1. @ Durai kvg

      என்ன நண்பரே இது அனுமதியெல்லாம் கேட்டுக்கிட்டு! வாங்க சந்திப்போம். உங்களைச் சந்திக்க நானும் ஆவலாய் இருக்கேன்! :)

      Delete
  82. தோழர்களே ஏப்ரலில் எல்லோரும் கொண்டாடுவோம். காமிக்ஸின் பெருமை சொல்லி. அது என்றென்றும் வாழ்கவென்று

    ReplyDelete
  83. ஒரு பட்டா போட்டி :-

    அமர்க்களமான காமெடி விருந்து.
    ஓக்லஹோமாவில் சீரியஸாக சொல்லியிருந்த கதையை எக்கச்சக்க நகைச்சுவைகளோடு செம்ம ஜாலியாய் சொல்லியிருக்கிறார்கள்.

    செவ்விந்திய பெருந்தலைகளிடம் பேரம் பேசி (கண்ணாடி பாசி மாலைகளுக்கு) நிலத்தை வாங்குவதில் தொடங்குகிறது சிரிப்பு.
    எல்லோருக்கும் முன்னதாய் திருட்டுத்தனமாக வாகான இடத்தில் சலூனை கட்டத்துடிக்கும் ஆசாமிக்கு உதவி செய்து கட்டி முடிக்கும்போது அதையே ஜெயிலாக்கி அந்த ஆசாமியையே கைதியாக்கும் போதே லக்கி கிச்சுகிச்சு மூட்டத் தொடங்கிவிடுகிறார்.
    பாஸ்மார்க் (ஹிஹிஹி! எப்புடி சார் இப்புடி) வண்டி யில் ரோந்து போய் ஊடுறுவல் பேர்வழிகளை அரெஸ்ட் செய்வதிலும் செம்ம லூக் ஸ்டைல்!!!

    அடுத்ததாக போட்டியாளர்களைப் பற்றி சொல்லியே ஆகணும்.!
    போட்டி தொடங்க சில வாரங்கள் ஆகும் எனத்தெரிந்தும் குதிரைமீது தயாராய் ஆடாமல் அசையாமல் நிற்கும் ஸ்பீடி ஜோன்ஸ் காமெடி பீசு என்றால்., ஒலிம்பிக்கில் ஓடப்போவது போல ஒரு காலைத் தூக்கியபடி நிற்கும் அவனது குதிரை டபுள் காமெடி பீசு.!(போட்டி தொடங்கும் போது குறட்டை விட்டபடி தூங்கி போயிடுதுங்க பக்கிக)

    சக்கர நாற்காலிக்கு எண்ணெயெல்லாம் விட்டு பந்தயத்துக்கு தயாராகும் தாத்தாஸ் . (ஆனாலும் இவர்தான் முதலில் இடம்பிடிக்கிறார்)

    ஏமாளி மொக்கை மோர்கனை யூஸ் பண்ணி இடம் பிடிக்கத்துடிக்கும் வில்லி வில்லன்.
    அமாவாசை இருட்டில் கறுப்பு மையை தடவிக்கொண்டு நைசாக உள்ளே நுழைய துடிக்கும்
    ஐயாம் பர்ஸ்ட் ஐசக் (ஹாஹாஹா!! செம்ம பேரு சார்)
    கூவுன சேவலோட குரல் அடங்குறத்துக்குள்ள மசாலா தடவி தீயில் வாட்டும் பெயர் தெரியாத நபர் என போட்டியாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு சிரிக்க வைக்கிறார்கள்.

    ஒவ்வொருவரும் இடம்பிடித்ததும் அயலாரின் அத்துமீறலை தடுக்க போர்டில் எழுதி வைத்திருக்கும் வாசகங்கள் சூப்பரப்பு! (செம்ம சார்)

    பூம்வில் நகரில் இடம்பிடித்து அவசர கதியில் கட்டிடங்களை எழுப்பவதிலும் காமெடிதான் . பாதையே இல்லாமல் கட்டுவதாட்டும். நுனி மரச்சட்டத்தில் அமர்ந்து கொண்டு நடுச்சட்டத்தை அறுப்பதாகட்டும் (படத்தை கவனிக்கவும்) . ஷலூன் கட்டிமுடிக்கும் முன்னரே ஆர்டர் கொடுக்க தயராக நிற்பதிலாகட்டும்
    கதை மாந்தர்கள் அனைவருமே காமெடிக்கு பொறுப்பேற்கிறார்கள்.

    மேயர் எலக்ஷன் , தேர்தல் வாக்குறுதிகள் இவற்றை விட ரிசல்ட் செம்ம ரகளை.

    சோகமான முடிவுன்னு யாரோ எழுதிய ஞாபகம். (யாரா இருந்தாலும் நினைவில்லை. ஸாரி) .
    செவ்விந்தியர்களிடம் பாசிமணிக்கு வாங்கிய இடத்தை அதே பாசிமணிக்கு அவங்களுக்கே வித்திடுறாங்க. (என்ன கொஞ்சம் குறைச்சலான பாசிமணிக்குத்தான். அதாவது ஒண்ணே ஒண்ணு)
    இடம்பிடித்த மக்களோ., வேற இடத்தை பிடிக்க போயிடுறாங்க.! இதில் சோகமெல்லாம் ஒண்ணுமில்லீங் சார். (வாழ்க்கை ஒரு வட்டம்னு சொல்ல வரேன்) .

    இன்னும் குறிப்பிட நிறைய இருந்தாலும் , இதுவே போரடிச்சிடுமோன்ற பயத்தோட., இத்தோட நிப்பாட்டிக்கிறேன்.

    மொத்தத்துல மிக நிறைவான மறுவாசிப்புகளுக்கு (பலமுறை) மிகத் தகுதியான மற்றொரு லக்கி லூக் சாகசம்.!!!

    ReplyDelete
  84. இன்றைய கோட்டா "திகில் நகரில் டெக்ஸ் ". ஆனா எப்ப முடிப்பேன்னு தெரியாது.!

    அப்புறம் நானும் சென்னைக்கு வந்தா எல்லோரையும் சந்திக்க முடியுமா? எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம். அதிகமா பேசமாட்டேன். அதான் தய்க்கமா இருக்கு. அனுமதி கிடைக்குமா நண்பர்களே??? (வூட்டுல பர்மிசன் வாங்குறத்துக்கே ஏகப்பட்ட விழுப்புண்களை பெற வேண்டியிருக்கு.)
    நீங்க எல்லாம் ரொம்ப சாதாரணமா கெளம்பிடுவிங்க போல இருக்கே! !!

    ReplyDelete