Sunday, October 18, 2015

பயணமே பதிவாய்.......!

நண்பர்களே,


வணக்கம். 250-வது பதிவு....அதிரடியாய் ஏதேனும் அறிவிப்பிருக்கும் என்ற எதிர்பார்ப்போடு இல்லாது - ஒரு ஜாலியான unplugged உரத்த சிந்தனைக்குத் தயாராகிக் கொண்டே மேற்கொண்டு படியுங்களேன் - ப்ளீஸ் ! ஏற்கனவே "என் பெயர் டைகர்" ஸ்பெஷல் இதழ் ; காத்திருக்கும் 2016-ன் சந்தா ; ஏப்ரலில் இன்னுமொரு சந்தா என்றெல்லாம் பிசியாய் அட்டவணைகள் காத்திருக்கும் வேளையில் இங்கே மேற்கொண்டொரு  கட்டை விரல் சால்சா நடனத்தை நான் ஆடிப் பார்த்தால் ரொம்பவே சிக்கல் ஆகிப் போகும் என்பதால் அதனில் முனைப்புக் காட்டிடவில்லை ! புரிந்து கொள்வீர்களென்ற நம்பிக்கையோடு எழுதத் தொடங்குகிறேன்....! 

இந்த வலைப்பதிவின் வயது கிட்டத்தட்ட 4 ; இது 250-வது பதிவு என்பதை நம்பச் சிரமமாகத் தான் உள்ளது! ‘நேற்றைக்குத் தான் ஆரம்பித்தது போலுள்ளது... blah ...blah ...blah’ என்றெல்லாம் நான் கதை விடப் போவதில்லை ஏனெனில் எனக்கென்னமோ கடந்த பத்து வருஷங்களாவது இதற்குள் தலைநுழைத்திருப்பது போலொரு பிரமை ! தமிழில் டைப்படிக்கத் தடுமாறிய ஆரம்ப நாட்களின் நாலு பத்திப் பதிவுகளை ஒரு பக்கம் ஒதுக்கி விட்டுப் பார்த்தால் கிட்டத்தட்ட 230+ பதிவுகளாவது உருப்படியாகத் தேறும் என்று தான் நினைக்கிறேன்! பெரியதொரு திட்டமிடல் ஏதுமின்றி பதிவிட அமர்வது; அவ்வப்போதைய இதழ்களைப் பற்றி எழுதுவது; எங்கள் தரப்பில் நடந்து வரும் விஷயங்கள் பற்றிய குறிப்புகள்; புதுக் கதைகளின் வருகைகள் பற்றிய previews என்ற ஓட்டத்திலேயே இத்தனை பதிவுகளை உற்பத்தி செய்திருப்பதை நினைத்தால் லேசான ஆச்சர்யமே மேலோங்குகிறது! ஒரு சின்ன தகவல் பலகையாக மட்டுமே இதனை ஆரம்ப நாட்களில் நான் உருவகப்படுத்தியிருந்தேன்; ஆனால் இன்றைக்கோ இணையதள touch-ல் உள்ள வாசக நண்பர்களை எட்டிப் பிடிக்கும் ஆற்றல் இதற்குள்ளதைக் கண்கூடாய்ப் பார்க்கிறேன்! கருத்துக்களைப் பறிமாறிக் கொள்ளும் vocal நண்பர்கள் ஒரு பக்கமெனில் நான் தவறாமல் பார்த்து விடுவேன் சார்; ஆனால் கலந்து கொள்வதில்லை‘ என்று சொல்லிடும் மௌன நண்பர்கள் நிறையவே! இந்த 45+ மாத பயணத்தில் நான் ஈட்டியுள்ள நட்புகளும்; விரோதங்களும் பற்றிச் சொல்லாமல் கடந்து போக முடியாதே?!

நமது comeback ஸ்பெஷலின் 2012-களில் உங்களில் பலரையும் நான் நேரில் சந்திக்கத் தொடங்கிய நாட்களில் எனக்குள் ஏகப்பட்ட mixed feelings இருந்தன! அது நாள் வரை ஆடிக்கொரு முறை அமாவாசைக்கொரு முறை நம்மை சிவகாசியில் சந்திக்க வரும் வாசகர்கள் நீங்கலாக எனக்கு யாரோடும் அதிகமாய் நேரடிப் பரிச்சயம் இருந்ததில்லை! So முதல் தடவையாகச் சென்னைப் புத்தக விழாவில் உங்களோடு கைகுலுக்கத் தொடங்கிய சமயம் எனது பேஸ்மெண்ட் ரொம்பவே வீக் தான்! சொல்லப் போனால் முதல் நாள் புத்தக விழாவுக்குள் நுழைந்து அந்த வரிசையின் மத்தியிலிருந்த நமது shared ஸ்டாலின் முன்னே நின்ற திரளைப் பார்த்த போது ரிவர்ஸ் கியர் தான் போடத் தோன்றியது! திடீரென்று நாக்கு உப்புத்தாளைப் போல நமநமக்கத் தொடங்க ஒரு பேஸ்தடித்த சிரிப்பு முகத்தில் ஒட்டிக் கொண்டது! கூச்சம் ஒரு பக்கமெனில் என்னுள்ளே குடியிருந்த மிகப் பெரிய பயமே அந்நாட்களது நமது punctuality பற்றிய கேள்விகள் எழும்பிடும் பட்சத்தில் நெளிய நேரிடுமோ  என்பது தான் ! இரத்தப் படலம் முழுத்தொகுப்பு வெளிவந்ததைத் தொடர்ந்து நாம் கிட்டத்தட்ட கடையை மூடாத குறைதான் என்ற நிலையில்  இந்த comeback ; கழுதைக்குட்டி என்ற பந்தாவெல்லாம் எத்தனை காலத்துக்குத் தொடருமோ? என்ற கேள்வி எழும்பிடும் பட்சத்தில் சத்தியமாக அதற்குப் பதில் தெரிந்திருக்கவில்லை எனக்கு!

In fact – ஆண்டுச் சந்தா கட்டலாமா ? எவ்வளவு? என்று ஸ்டாலில் வாசகர்கள் கேட்ட போது ‘பெக்கே பெக்கே‘ என்று முழிக்கத் தான் முடிந்தது! என்னமோ ஒரு மனக்கணக்கைப் போட்டு ரூ.620/- என்ற சொல்லி வைத்தேன்! நிஜம் என்னவெனில் அந்தக் கணத்தில் கூட இந்த மறுவருகையை எத்தனை காலத்துக்கு sustain செய்திட முடியுமென்ற கணிப்புக்கெல்லாம் என் வசம் ‘தம்‘ இருக்கவில்லை! அந்த வருடத்துப் புத்தக விழா விற்பனை சுமார் 1.75 இலட்சத்தைத் தொட்டது ஒரு எதிர்பாரா பூஸ்ட்! கிட்டத்தட்ட 160 முந்தைய titles கைவசம் கிடந்த நிலையில் அவற்றைப் பாக்கெட்டாக அடைத்து வண்டி வண்டியாய் விற்று கிட்டங்கிக் காலி செய்யும் வைபவத்தைத் தொடங்கியது அந்நாட்களின் உச்ச நினைவுகள்! வண்ணத்தில் Comeback Special இதழைப் பார்த்த உங்கள் சந்தோஷங்கள் ஒரு பக்கமெனில் சிறுகச் சிறுகச் சூடு பிடிக்கத் தொடங்கிய இந்த வலைப்பதிவும் நமது சக்கரங்களை தொடர்ந்து சுழலச் செய்யத் தூண்டிய காரணிகள் ! அது நாள் வரை அரைப்பக்க ஹாட்லைனில் எதையோ சால்ஜாப்பாய் சொல்லிவிட்டு இடத்தைக் காலி பண்ணி விட முடிந்திருந்தது எனக்கு! ஆனால் உங்களை நேரில் சந்திக்கத் தொடங்கிய பிற்பாடு; வலைப்பதிவில் உங்களோடு interact செய்யத் தொடங்கியதற்கு அப்புறமாய் முன்னைப் போல ‘அல்வா‘ கொடுத்துக் கழன்று கொள்வது அத்தனை சுலபமாய்ப் படவில்லை! நமது சுணக்கங்கள் உங்கள் முகங்களில் ஏற்படுத்தும் சுருக்கங்களை visualise செய்து பார்க்கத் தொடங்கிய போது தான் நம் மீதுள்ள எதிர்பார்ப்புகளின் நிஜமான பரிமாணம் எனக்குப் புரியத் தொடங்கியது!

பிரவுண் கலரில் பொட்டலம் போட்டு நாங்கள் இதழ்களை அனுப்பிக் கொண்டிருந்த புத்தகப் பார்சல்கள் முனைமடங்கிப் போய் வந்து சேர்கின்றன என்பதை நீ்ங்கள் பதிவிடத் தொடங்கியதைத் தொடர்ந்து துணிக்கவர்களைப் பயன்படுத்த ஆரம்பித்தோம். அந்தத் துக்கடா மாற்றத்தையே நீங்கள் சிலாகித்த போது தான் எனக்குள் ஒரு முரட்டுத்தனமான குற்றவுணர்ச்சி மேலோங்கத் தொடங்கியது! நிபந்தனைகளே துளியும் இல்லாது நம் மீது நீங்கள் காட்டி வந்துள்ள ஒரு டன் அன்பின் அழுத்தம் எனக்கு முழுவதுமாகப் புரியத் தொடங்கியது அன்றைக்குத் தான்! வலைப்பதிவின் ஆரம்பக் கட்டங்கள் அவை என்பதும்; நமது வண்ண அவதார் Surprise ஸ்பெஷல்;டபுள் த்ரில் ஸ்பெஷல்;Wild West ஸ்பெஷல் என்றெல்லாம் சூடுபிடிக்கத் தொடங்கிய நாட்களும் அவை என்பதால் இங்கே பதிவாகும் உற்சாகம் என்னை அழுத்தமாகத் தொற்றிக் கொண்ட நாட்களாகவும் அவை அமைந்து போயின! கைதட்டுக்களுக்குக் கிறங்கச் செய்யுமொரு சக்தி உள்ளதென்பதை வாழ்க்கையில் நான் அனுபவபூர்வமாய் உணர்ந்த வேளைகளும் அவையே ! அதற்கு முன்பாய் நம்மை எப்போதோ ஒருவாட்டி சந்திக்கும் வாசகர்களின் பாராட்டுக்களை நான் கேட்டுள்ள போதிலும் ‘டப்‘பென்று வேறு பக்கமாய் பேச்சைத் திசைதிருப்பி விடுவது எனது வழக்கம். ஆனால் இங்கே நம் வலைப்பதிவுகளில் பதிவாகி வந்த பாராட்டுக்களும் சரி, அஞ்சலில் வந்த கடுதாசிகளும் சரி ரொம்பவே intense ஆக இருந்து வந்ததால் அவற்றுக்கு அருகதையுள்ளவனாய் தொடர்ந்திடும் பொருட்டு என் சோம்பேறித்தனங்களை மூட்டை கட்டத் தீர்மானித்தேன்! ஞாயிற்றுக்கிழமைகள் பாதிப் பொழுதை படுத்துறங்கியே கழித்து வந்தவன் லார்கோக்களுடனும், டைகர்களுடனும், கேப்டன் பிரின்ஸ்களுடனும் நடனம் பயிலத் தொடங்கியது அந்த நாட்களில் தான் !

எல்லாமே வெண்ணெய் பூசிய சாலைகள் மீதான பயணத்துக்கு சமானம் போலும் என்று ஒரு சின்னக் கனவு எனக்குள்ளே குடிபுகுந்திருந்த நாட்களில் தான் செவிட்டோடு விழுந்தது சாத்து தங்கக் கல்லறை ரூபத்தில்! ஒரிஜினலின் பக்கங்களில்  இருந்த பலூன்களைப் பெருசாக்கி, அதற்குள் நீள-நீள தமிழ் வசனங்களை அடைக்க முடியும் என்பதைக் கூட நானும், நமது DTP அணியினரும் அறிந்திருக்காப் பொழுது அது! தங்கக் கல்லறையின் நமது தமிழ் ஒரிஜினல் வசனங்களை வண்ணத்தில் அந்த பலூன்களுக்குள் அடைப்பது இயலாக் காரியம் என்பதை உணர்ந்த போதே அதனை rewrite செய்திட கருணையானந்தம் அவர்களிடம் அனுப்பியிருந்தேன்! அவரும் இயன்றளவு crisp ஆக எழுதி சின்னதொரு குறிப்போடு எனக்கு அனுப்பியிருந்தார்! ‘நம் வாசகர்களிடம் இரண்டு விதமான பாணிகளிலான ஒரே கதை இருக்கப் போகிறது! நிச்சயம் சந்தோஷப்படுவார்கள்‘ என்று ! அவர் அனுப்பிய ஸ்கிரிப்டை நான் மேற்கொண்டு rewrite செய்து இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டுத் தயார் பண்ணி இறுமாப்பாய் உங்களுக்குக் கூரியர் செய்த கையோடு இங்கே வலைப்பதிவின் முன்னே அமர்ந்து காத்திருப்பைத் தொடங்கினேன்! ஆனால் சீறி வந்ததோ ஒரு சாத்து மழை!! சும்மா தெளியத் தெளிய ஷிப்ட் போட்டு ஒரு வாரம் தொடர்ந்ததல்லவா மண்டகப்படி!! ‘என்னமாய் வசனத்தை மாற்றப் போச்சு?‘ என்று பொங்கிய நண்பர்களின் ஆத்திரத்தை என்னால் இன்றைக்கே முழுசுமாய் புரிந்து கொள்ள முடியாத நிலையில் அன்றைய ‘கொழந்தைப் புள்ள‘ நாட்களில் கேட்கவும் வேண்டுமா? இன்றளவுக்கு எனக்கும், கருணையானந்தம் அவர்களுக்கும் அந்நாட்களது ஒரிஜினல் வசனநடையினை "காலத்தை வென்ற வரிகளாகப்" பார்த்திடவோ; புது version-ஐ கழிசடையாகக் கருதிடவோ துளியும் காரணங்கள் புரியவில்லை! எது எப்படியோ சமூகவலைத் தளங்களில் குளிர்காய்வது எத்தனை இதமோ; அதை விடப் பன்மடங்கு சிரமம் அதனில் எழக்கூடிய backlash-ஐ சமாளிப்பது என்பதை நான் பாடமாய்ப் படித்த முதல் தருணம் அது!

தொடர்ந்த நாட்களில் ; ஏன் அதற்கு முந்தைய பொழுதுகளில் கூட நிறைய சலசலப்புகள்; வாசகக் கருத்து யுத்தங்கள்; முகமில்லா ஐ.டி.க்களின் சீண்டல்கள் என்று அரங்கேறியிருப்பினும் அவை ஆரம்ப வேளைகளின் teething problems என்று நான் ஓரம்கட்ட முயன்றிருந்தேன்! ஆனால் “episode தங்கக் கல்லறை“ ஒரு புதுமையான அனுபவமாகவே இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்!

அதைத் தொடர்ந்த நாட்களின் போக்கை நமது NBS-ன் தயாரிப்பு வெள்ளோட்டங்கள் ஆக்கிரமித்துக் கொண்டது என் நினைவலைகளின் ஒரு சந்தோஷ உச்சம். ‘எட்டும் தொலைவில் NBS‘ என்ற பதிவு LMS-ன் வெளியீட்டு வேளை வரைக்கும் அதிகப் பார்வைகளை சம்பாதித்த பதிவு என்ற பலகையைத் தாங்கி நின்றது! And NBS ரிலீஸ்; சென்னைப் புத்தக விழாவில் அதன் பொருட்டு அன்றைய மாலை நாம் அனுபவித்த உற்சாக வெள்ளங்கள் சுலபத்தில் திரும்பவும் கொணரவே முடியா ஒரு சூப்பர்-சூப்பர் high என்ற சொல்லலாம்! பத்துப் பேர் நின்றாலே கூட்டமாய்த் தெரியக் கூடியதொரு நடைபாதையில் 180 பேர் குழுமியிருந்தது இதர ஸ்டால்களின் ரௌத்திரத்தை சம்பாதித்ததில் துளி கூட ஆச்சரியமில்லை தான் !

சீராய்த் தொடர்ந்த நாட்களில் அடுத்த மேஜர் ஸ்பீட்-பிரேக்கரை நாம் பார்த்தது டைகரின் “இரத்தத் தடம்“ இதழின் புண்ணியத்திலேயே! நம்மவர்கள் பிரிண்டிங்கில் சுத்தமாய் சொதப்பியிருக்க அந்த இதழின் கதையும் so-so- ரகமாய் இருக்க அந்த இதழும் சரி- தொடர்ந்த சில/பல இதழ்களும் சரி என்னை சூடுபட்ட பூனையாகவே உலா வரச் செய்தன ! ஆனால் அதே ஆண்டின் ஒரு memorable moment என்று சொல்லத் தோன்றுவது க்ரீன் மேனர் (சிறு) கதைகளைத் தாங்கிய இதழ்கள் வெளியான பொழுதுகளை! முதல் வாசிப்பில் அந்தத் துண்டும், துக்கடாவுமான கதைகளோ; ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முந்தைய இலண்டனின் கதைக்களமோ; அந்த classic வசன நடைகளோ உங்களைப் பெருசாய் impress செய்திருக்கவில்லை என்பது நினைவில் உள்ளது! In fact அந்த வருடத்தில் இறுதியில் இதழ்கள் பற்றிய உங்களது அபிப்பிராயங்களைக் கோரியிருந்த பொழுது நிறையப் பேர் டயபாலிக்கையும், க்ரீன் மேனர் கதைகளையும் கழுவிக் கழுவி காக்காய்க்கு ஊற்றியிருந்தனர்! ஆனால் அந்தக் கதைகள் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தின் ஆழங்களைப் பின்நாட்களில் தான் புரிந்து கொள்ள முடிந்தது! ‘இதே போல வேறு கதைகள் இல்லையா?‘ என்று நண்பர்கள் கோரும் நிலை கூட எழுந்தது ஒரு கட்டத்தில்!

2014-ன் பயணம், LMS என்ற ஈரோட்டுத் திருவிழா – அந்த சமயத்திலான ‘தல-தளபதி-திருவிழா' பதிவு என்பதெல்லாம் மறக்க இயலா வழித்தடங்கள் என்றே சொல்வேன்! In fact, நமது பதிவுகளின் all time high பார்வைகளைப் பெற்றது இது தான்! இதோ நமது Top 5 – இதுவரையிலான பார்வைகளின் அடிப்படையில்:
தேதி           தலைப்பு                                       பார்வைகள்
2.8.14      தல...தளபதி...திருவிழா                              6897
6.2.12      எட்டும் தூரத்தில் NBS                                5932
16.11.13    இது வேங்கையின் வேளை                          5872
7.6.13      காசு...பணம்...துட்டு...Money                             5849

இங்கு இன்னுமொரு உற்சாக உச்சம் எழுந்தது திருவாளர் குட்டி லக்கியின் துவக்கக் கதையினைத் தொடர்ந்த நாட்களில்! அதனில் எதேச்சையாக நான் பயன்படுத்தியிருந்த "நாக்கார்-மூக்கார்' பாஷை ஒரு விதமாய் உங்களின் ஈர்ப்பை ஈட்டியிருக்க, தொடர்ந்த பதிவில் ரகளைகள் ரவுண்ட் கட்டியடித்தன ! அது போன்ற தங்கு தடையில்லா உற்சாகம் இங்கே அரங்கேறியது இந்தப் பதிவுப்பயணத்தின் ஒரு அழகான தருணம்!

LMS-ன் வெளியீட்டு வேளையில் அதனில் இடம்பிடித்த 9 கதைகளையும் ஒவ்வொரு ஞாயிறுக்கும் preview செய்வதென்று ஆரம்பித்த அந்த Sunday பதிவுப் பழக்கம் 1¼ ஆண்டுகளாகத் தொடர்வது எனக்கொரு ஆச்சர்யமே! எத்தனையோ பொழுதுபோக்கு அம்சங்களோடு போட்டி போட வேண்டியதொரு ஞாயிறு காலையை நமது காமிக்ஸ் சார்ந்த கலந்துரையாடல்களுக்கும்; அதன் தொடர்ச்சியாய் நண்பர்களின் ஜாலிப் பின்னூட்டங்களும் ஓரளவுக்கு ஆக்கிரமிக்க முடிந்திருப்பது – காமிக்ஸ் மீது நாம் கொண்டுள்ள காதலுக்கொரு பறைசாற்று! வாசிப்பு, சேகரிப்பு என்ற நிலைகளைத் தாண்டி நிஜ வாழ்க்கையின் நட்பு வட்டங்களை விரிவாக்கிக் கொள்வதற்கும் இந்தக் காமிக்ஸ் காதல் பெருமளவிற்கு உதவுகிறது என்பது ஒவ்வொரு புத்தக விழாவின் சந்திப்பின் போதும் நான் பார்க்கத் தான் செய்கிறேன்! கலரிலும், கறுப்பு-வெள்ளையிலும் “பொம்மை பட” புக்குகளாகப் பார்க்கப்படும் இந்தப் புத்தகங்களின் பின்னே இப்படியுமொரு பரிமாணம் ஒளிந்திருப்பது நாம் மட்டுமே அறிந்த இரகசியம் தானே?

On the same breath, இணையதள விரோதங்களுக்கும் பஞ்சமில்லை என்பதை இந்த 250 பதிவுப் பயணப் பாதையில் நான் பார்க்கவும் தான் செய்கிறேன்! பின்னணி நோக்கங்கள் என்னவாகயிருப்பினும் – காயப்படுத்தும் எழுத்துக்களின் வீரியத்தை ஏதோவொரு தருணத்தில் நம்மில் நிறையப் பேர் நிச்சயமாய் உணர்ந்திருப்போம் தான் ! வலியின் அளவுகோல்கள் ஆளுக்கு ஆள் மாறுபட்டிருக்கலாம் ; அதனைத் தாண்டிச் செல்லும் பக்குவம் ஒவ்வொருவரிடமும் ஒரு விதமாய் இருந்திடலாம் தான் – ஆனால் அவை ஏற்படுத்தும் ரணங்கள் வெளிச்சிரிப்புகளைத் தாண்டி உள்ளே வடுவாகும் ரகம் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை!

ஏதோ காரணங்களின் பொருட்டு நேரும் காயங்கள் ஒரு விதமெனில் – எனது தளநிர்வாக சொதப்பல்களின் காரணமாய் ஆங்காங்கே நண்பர்களில் சிலருக்குக் கிட்டும் சங்கட அனுபவங்கள் இன்னொரு ரகம் ! குறிப்பிட்ட அந்தக் கணத்தைத் தாண்டிச் சென்றான பின்பு ; சூழ்நிலையின் தாக்கம் மனதளவில் சற்றே குறைந்தான பிறகு – நிதானமாய் யோசிக்கும் தருணங்களில் – ‘அடடா... அதை அப்படிச் செய்திருக்கலாமோ?‘ என்றும் ‘இதை வேறு மாதிரிக் கையாண்டிருக்கலாமோ?‘ என்றும் நினைக்கத் தோன்றிடும் தான்! ஆனால் என்னால் இங்கே தினமும் எட்டிப் பார்ப்பதும்; கருத்துப் பரிவர்த்தனைகளில் active ஆகப் பங்கெடுத்துக் கொள்வதும் இயலாத சூழலில் – தளக்கட்டுப்பாட்டை அமல்படுத்த திணறத் தான் செய்திருக்கிறேன் என்பதில் நிச்சயம் எனக்கு மாற்றுக் கருத்துக்கள் கிடையாது! My sincere apologies guys!

அதே போல – “என் கருத்துக்குக் காது கொடுக்கவில்லையே?” என்ற ஆதங்கங்களும்; “அவருக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறதோ?” என்ற சந்தேகங்களும் உங்களுள் நிறையப் பேரை அவ்வப்போது சங்கடப்படுத்துகிறதும் நான் அறியாதில்லை! பாகுபாடுகள் பார்வைகளில் மாத்திரமே தவிர, யதார்த்தத்தில் கிடையாது என்பதை உணர்த்த ஏதாவதொரு சுலப வழிமுறை இருக்கும் பட்சத்தில் – அதற்கு ஆயுள் சந்தா கட்டியிருப்பேன் இந்நேரத்துக்கு! End of the day – இங்கே வரும் எவரும் சங்கடத்தோடு திரும்பக் கூடாது என்பதே என் ஆசை! ஆனால் ஆசைப்படும் அத்தனையும் சுணக்கமின்றி நிறைவேறுவது இலட்சங்களில் யாரோ ஓரிருவருக்கு மட்டும் தானே? நாமெல்லாம் அந்தத் 99,998ல் குடியிருக்கும் ஜனங்கள்!! Without sounding too mushy or sentimental – இங்கே சகஜ சூழலும் , நட்பும் நிலவுவது தான் எனக்குப் பிரதானம்! லார்கோக்களும், டைகர்களும், வில்லர்களும் சில வளமான கற்பனைகளில் உருவான ராட்சஸர்கள்! அந்த ராட்சஸர்களின் தடங்களைத் தொடரும் நம்மிடையே நிஜவாழ்வில் எழும் சிற்சிறு முட்டல்களும், மோதல்களும் மட்டும் சமனப்பட்டுப் போனால் – all will be well ! மௌனமாய் உள்ள நண்பர்களும் சரி; மௌனத்தைத் தழுவ வேண்டிப் போன நண்பர்களும் சரி – சந்தித்திருக்கக் கூடிய சங்கடங்களைப் புறம் தள்ளி விட்டு “காமிக்ஸ் ரசனை” என்ற குடைக்குக் கீழே மீண்டும் தஞ்சமாகிடும் வேளை புலர்ந்தால் அட்டகாசமாக இருக்குமல்லவா? ஏதேதோ தருணங்களில் – ஏதேதோ காரணங்களுக்காக விலகி நிற்கத் தீர்மனித்த எல்லா நண்பர்களும் இங்கே மீள்வருகை செய்தால் இந்தத் தளம் மட்டுமின்றி – அதன் மூலம் ரீசார்ஜ் ஆகிடும் நம் இதழ்களும் அதிர்ந்திடாதா? We need each one of you guys!! மாயாவிக்கு மின்சாரம் எத்தனை அவசியமோ - அத்தனை அவசியமே இந்தத் தளமும், நீங்களும் - நம் இதழ்களுக்கு !  

எனக்கு மட்டும் காலத்தில் பினனோக்கிப் போகிட நம் சட்டித் தலையன் ஆர்ச்சியின் கால இயந்திரம் கிடைக்கும் பட்சத்தில் எத்தனையோ விஷயங்களை வேறு மாதிரியாகக் கையாண்டிருப்பேன்! நிச்சயமாய் நிறைய காயங்கள் நிகழவொரு முகாந்திரமாய் நான் இருந்திருக்க மாட்டேன்! ஆனால் சட்டித் தலையன் அந்த இயந்திரத்தை வாடகைக்கு விடும் உத்தேசத்தில் இல்லை என்பதால் என்னால் பின்னேயும் போக முடியாது; வருஷமாய் சிறுகச் சிறுக வளர்ந்திருக்கக் கூடிய சங்கடங்களை ‘ஏக் தம்மில்‘ ரப்பரைக் கொண்டு அழிக்கவும் முடியாது! என்னால் முடிந்த ஒரே விஷயம் – காயப்பட்ட ஒவ்வொரு நண்பரையும் நோக்கிக் கைகூப்பி எனது வருத்தங்களையும், மன்னிப்பையும் ஒப்படைப்பது மட்டுமே ! Causing hurt has never been my intention !! எல்லாவற்றையும் தாண்டி தொடர்ந்து என் மீது அன்பும், நம் இதழ்கள் மீது அபிமானமும் காட்டி வரும் உங்களுக்கு ஒரு HUGE THANK YOU சொல்வதே இந்தப் பதிவின் மையம் !! 

ஞாயிறும், அதுவுமாய் ‘நொச நொச‘வென்று இதற்கும் மேல் சென்டிமெண்ட் ராகத்தில் லயிப்பது எனக்கே தாங்கலை என்பதால் – ‘பளிச்‘ விஷயங்கள் பக்கமாகத் தாவுவோமா? இதோ- நமது நவம்பர் இதழின் highlight-ன் முதல் பார்வை! இது இன்னமும் பூர்த்தியாகா ராப்பர் என்பதால் – நிறையவே நகாசு வேலைகள் அதனில் பாக்கியுள்ளது! இதோ- தீபாவளி with Tex-ன் அட்டைப்படம்!
இதனில் இன்னமும் பணியுள்ளது ....முதல் பார்வைக்கு மட்டுமே..!

இது ஒரு டெக்ஸ் ஒரிஜினல் ராப்பரின் தழுவல்; நமது கிராபிக்ஸ் ஜோடனையோடு ! வழக்கமாய் ஒற்றை ஆளாய் ‘தல‘ ராப்பரில் நடுநாயகமாய் காட்சி தருவது கொஞ்சம் போரடித்துப் போய் விட்டதால் இம்முறை முழு டீமையும் அட்டையில் இறக்கி விட்டுள்ளோம்! பின்னட்டையோ டெக்ஸின் pinup போஸ்டர் ஒன்றின் தழுவலில் நாம் போட்ட ஓவியம்! But இதனைத் தீட்டியது நமது ஆஸ்தான மாலையப்பன் அல்ல! சிவகாசியில் காலண்டர்களுக்கு சாமி படங்கள் வரையும் ஒரு மிக மூத்த – மிகப் பிரபலமான ஓவியர் ஒருவரின் ஓய்வு நேரங்களில் போட்டு வாங்கிய டிசைன் இது! கிட்டத்தட்ட 3 ½ ஆண்டுகளுக்கு முன்பாக உருவான இந்தப் படம் வெளிச்சத்தைப் பார்க்கக் காத்திருப்பது எதிர்வரும் மாதத்தில் தான்! கதைகளைப் பொருத்த வரை – புதிதாக நான் சிலாகிக்க அவசியம் தான் ஏது? டெக்ஸின் கதைகளில் என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ அவை எல்லாமே கச்சிதமாக அமையப் பெற்றுள்ளன இந்த 2 சாகஸங்களிலும் என்பதை மட்டும் சொல்லி விடுகிறேன்! 576 பக்கங்கள்!!

Before I sign off 2016-ன் அட்டவணையைப் பற்றி..! எல்லாம் தயாராகி விட்டுள்ள நிலையில் நவம்பரின் துவக்கத் தேதிகளில் இதழ்களை அனுப்பும் வரைக்கும் அட்டவணையைத் தொடரச் செய்வதை விட – அடுத்த வாரப் பதிவில் அதனை unveil செய்திடலாம் என்று உள்ளேன்! So ஏதோவொரு மாமாங்கத்தில் ஆரம்பித்த உங்கள் யூகங்களுக்கு அடுத்த ஞாயிறன்று பதில் காத்துள்ளது! தொடரும் ஆண்டின் சந்தா விபரங்கள் முழுமையையும் அடுத்த வாரம்  இங்கே பார்த்திடலாம் ! 

அதற்கு முன்பாய் – புத்தாண்டின் பொருட்டு நமக்குத் தோன்றிய ஒரு சில திட்டங்களின் preview இதோ! இவற்றை மேம்படுத்த; இன்னும் வாசகர் friendly ஆக்கிட உங்களிடம் ஏதாவது யோசனைகள் இருப்பின் – would love to hear! மீண்டும் சந்திப்போம்... அது வரை enjoy the day folks!


315 comments:

  1. வணக்கம் சார்....250வது பதிவுக்கு வாழ்த்துகள் சார்....250ஏதாவது விசேசம் இருக்கும் படித்துவிட்டு வருகிறேன் சார்......

    ReplyDelete
  2. 250 பதிவுக்கு நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. 250! Great archivment!! And a nice post.

    ReplyDelete
  4. தல அட்டைபடம் வண்ணங்கள் பிரமாதம்!

    ReplyDelete
  5. 2016 முன்னோட்டத்திற்கு Waiting with crossed fingers!

    ReplyDelete
  6. ஹாவ் வ்ஹாஃவ் ஹாவ் Good night

    ReplyDelete
  7. இந்த பதிவே ஆர்ச்சியின் கோட்டை போல் இருந்தது சார். ஒரு நான்கு வருடம் பின்னோக்கி பயணம் செய்து வந்தது போல் இருந்தது. காமிக்ஸ் என்பதே எங்களது இனிமையான இளமை காலத்தை இணைக்கும் பாலமாக இருக்கிறது. அதனை தொடர்ந்து வழங்கி வரும் உங்களூக்கு எனது நன்றிகள் சார்.

    ReplyDelete
  8. தீபாவளிக்கு போட்டுள்ள டெக்ஸ் இன் அட்டை படங்கள் கலக்கின்றன . அது என்ன டைனோசர்களா? சந்தாகளை பரிசு கொடுப்பது மிகவும் நல்ல யோசனை சார் !

    ReplyDelete
    Replies
    1. Thiruchelvam Prapananth : டைனோசர்களே தான் சார் - எலும்புக் கூடுகளாய் ! TEX -ன் 345 பக்க சாகசத்தில் இதுவொரு அங்கம்...!

      Delete
    2. 345 பக்கம், 550 பக்க சாகசம்னு சொல்லி சொல்லி எங்க ஆசையை கிளப்பி விட்டு விடுங்கள் சார்....ஆனால் பிறகு அது பற்றி மறந்து விடுகிறீர்கள் ....அடுத்த தீபாவளி க்கு அந்த அந்த 550 பக்க சாகசத்தை கருப்பு வெள்ளையில் காண்பியுங்களேன் சார்....

      Delete
    3. சேலம் Tex விஜயராகவன் : அது 560 பக்க ஒற்றை சாகசம் அல்ல நண்பரே ! ஒரு முக்கிய வில்லனோடு டெக்ஸ் மோதும் சில பல சாகசங்களின் தொடர் தொகுப்பு !

      Delete
    4. அது 560 பக்க ஒற்றை சாகசம் அல்ல நண்பரே ! ஒரு முக்கிய வில்லனோடு டெக்ஸ் மோதும் சில பல சாகசங்களின் தொடர் தொகுப்பு !
      Vijayan sir,
      Super. Good to know.
      Then it won't be boring. Looking forward to get that 560 page collection of tex stories in 2016.
      Regards,
      Mahesh

      Delete
    5. எலும்பு கூடுகளா ஸார்? இது வரை வராத காட்சிகள். எதிர்பார்ப்போடு காத்துள்ளேன்.

      Delete
    6. இத இத இதை தானே எதிர்பார்த்தோம்
      பெரிய மனசு பன்னி தலீவர ரிலீஸ் பன்னுங்க சார்..

      Delete
  9. வாழ்த்துக்கள் பாஸ்!

    ReplyDelete
  10. நல்லதொரு பின்னூட்டம் ஆசிரியரே,அவ்வப்போது பழம்நினைவுகளை திரும்பி பார்ப்பதும்,அசை போடுவதும் அலாதியான அனுபவம் தான்.நல்லதை நினைப்போம்,கெட்டதை கடப்போம்.

    ReplyDelete
  11. டெக்ஸ் முன்னட்டையில் அசத்துகிறார் ஆசிரியரே,டெக்ஸின் அருமையான ரேப்பர்களில் ஒன்றாக கண்டிப்பாக இது அமையும்,தீபாவளிக்கு தல அதகளம்தான்,இந்த தீபாவளிக்கு தல+தல என டபுள் டிரீட்தான்...

    ReplyDelete
  12. விற்பனையில் தல விறுவிறுப்பான ஒரு சாதனை படைத்தாலும் அதில் வியப்பேதும் இல்லை.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் எடி.சார்.
    250 பதிவுகள். அவை 500,1000,2000 என போகப்போவது திண்ணம்.


    தலையோட தடாலடிய பார்க்க இப்பவே
    மனசுகுள்ள டமால் டுமீல் சத்தம்.

    ReplyDelete
  14. டெக்சின் அட்டைப்படம் அருமை! பழைய நினைவலைகளை திரும்பிபார்ப்பது எங்களுக்கும் சுவாரசியமாகவே இருக்கிறது.gift subscription idea super(,கை தட்டல் படங்கள் ).

    ReplyDelete
  15. நமது காமிக்ஸ் ஐ பிறந்த நாள் பரிசாக அளிக்கும் முறை குறித்து ஈரோடு புத்தக திருவிழாவில் கடந்த ஆண்டு நான் வைத்த கோரிக்கையை இப்பொழுது செயல் படுத்திய எடிட்டருக்கு நன்றி .நன்றி . இது ஓரு சிறந்த பரிசாக இருக்கும் .

    ReplyDelete
    Replies
    1. POSTAL PHOENIX : சின்ன விஷயமாக இருப்பினும் அதற்கொரு எதிர்காலம் இருப்பதை அன்றைக்கே மனதின் ஒரு ஓரத்தில் ஸ்டோர் பண்ணிஇருந்தேன் சார் ! நன்றிகள் !!

      Delete
  16. காலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  17. நெகிழ்ச்சியான பதிவு ஆசிரியரே...
    உங்களுக்கே உரித்தான நடையில் மலரும் நினைவுகளின் அழகான அலசல் ..
    நிறைவான ஞாயிறுப்பதிவு ..

    ReplyDelete
  18. காலை வணக்கங்கள் எடி சார்
    மிக அருமையான பதிவு எந்த ஒரு ஈகாே வும் இன்றி சுய பரிசோதனை செய்த பதிவு நம் நண்பர்களின் இடையே உள்ள சிறு ஊடல்களை நீக்கும்
    2016 ல் வேகமாய்ச்செல்லும் ஸ்பீட் போட் ரக கதைகளுடன் முழு நிலா இரவில் அமைதியான ஏரியில் மெதுவாக துடுப்பு படகில் ரசித்துச் செல்லும்படியான கதைகளுக்கும் சில இடங்களை தந்திருப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி

    ReplyDelete
    Replies
    1. sai vignesh : நண்பரே, ஈகோ இல்லையென்று சொன்னால் அது ரீல்... ! ஈகோவினைத் தாண்டி வர முயற்சித்து வருகிறேன் என்று சொன்னால் அது ரியல் !

      Delete
    2. Yes every body do that for betterment of our loved ones

      Delete
  19. 250-வது பதிவிற்கு என்னுடைய சந்தோஷங்களும் வாழ்த்துகளும் விஜயன் சார் !

    ReplyDelete
    Replies
    1. Madipakkam Venkateswaran : //காலை வணக்கம்.! சார்.!//

      மன்னிக்க வேண்டும் நண்பரே, நான் ஈமெயில் வாசகன் என்பதால் இந்தப் பதிவு வேறு யாருக்கோ என்று நினைத்து விட்டேன். அதனால் தான் நான் ஒவ்வொரு முறையும் பெறுநர் பெயரிட்டு என் பதில்களை அளிப்பதைப் பழக்கமாகக் கொண்டுள்ளேன். மாலை வணக்கம் Mv சார் :-))

      Delete
  20. 250 வது பின்னூட்டத்திற்கு வாழ்த்துக்கள் எடி சார்

    தலை க்காக வெய்டிங்

    ReplyDelete
  21. சார் அசத்தும் அட்டைப்படத்திற்க்கு நன்றிகள்......
    தீபாவளி மலர்தானே.....
    மீண்டும் பின்னோக்கி சென்ற உணர்வு ...
    ஆஹா அடுத்த வாரம்தானா ....

    ReplyDelete
  22. ராப்பரில் உள்ள சித்திரம் சூப்பர். வண்ணத்தில் violet-க்கு பதிலாக வேறொரு கலரும், அதைப்போல் கீழே வெண்பஞ்சு போன்ற வெள்ளை நிறத்திற்கு பதிலாக வேறு வர்ணமும் கொடுத்தால் இன்னும் எடுப்பாக தெரியும் போலிருக்கிறதே..!

    ReplyDelete
  23. 250 வது பதிவுக்கு நமக்கு நாமே வாழ்த்துகள்.... உற்சாகமான பதிவு...

    ReplyDelete
  24. 250 வது பதிவிற்கு மகிழ்ச்சியான வாழ்த்துக்கள் ஆசிரியரே,தலயின் ரேப்பருக்கு நடுவில் உள்ள அந்த (தீபாவளி வித் டெக்ஸ்) டிஸைன் நன்கு எடுப்பாக உள்ளது.ஒரு கம்பிரத்தையும் கொடுக்கிறது.

    ReplyDelete
  25. இந்த தீபாவளி தல தீபாவளி தான் (டபுள் மீனிங்கேதான்)

    ReplyDelete
    Replies
    1. தல தீபாவளி வாழ்த்துக்கள். இதுவும் டபுள் மீனிங்குக்குதான்

      Delete
  26. அனைவருக்கும் வணக்கம். டெக்ஸ் அருமை. Thala always rocking. அடுத்த பதிவிற்கான எதிர்பார்ப்பை அதிகபடுத்தியுள்ளீர்கள். சென்ற பதிவிலேயே Lms போன்ற கதம்ப ஸ்பெசலுக்கு நண்பர்கள் ஆதரவு தெரிவித்திரூந்தனர். 2016 லும் Lms போன்று இதழ்கள் வேண்டும் Please sir

    ReplyDelete
    Replies
    1. +11111
      கண்டிப்பாக கிடைக்கும் நண்பரே.

      Delete
  27. // So ஏதோவொரு மாமாங்கத்தில் ஆரம்பித்த உங்கள் யூகங்களுக்கு அடுத்த ஞாயிறன்று பதில் காத்துள்ளது! தொடரும் ஆண்டின் சந்தா விபரங்கள் முழுமையையும் அடுத்த வாரம் இங்கே பார்த்திடலாம் ! //
    புது பட ரிலீசுக்கு காத்து கொண்டிருக்கும் ரசிகனின் மனநிலைக்கு கொண்டு வந்து விட்டேர்களே,ஆவலுடன் நாக்கை சுழற்றும் படங்கள் நூறு.

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi : Box Office hit-ஆக அமைந்தால் கடவுளுக்கு நன்றி !

      Delete
    2. நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும் சார்.!

      Delete
  28. அனைவருக்கும் வணக்கம். டெக்ஸ் அருமை. Thala always rocking. அடுத்த பதிவிற்கான எதிர்பார்ப்பை அதிகபடுத்தியுள்ளீர்கள். சென்ற பதிவிலேயே Lms போன்ற கதம்ப ஸ்பெசலுக்கு நண்பர்கள் ஆதரவு தெரிவித்திரூந்தனர். 2016 லும் Lms போன்று இதழ்கள் வேண்டும் Please sir

    ReplyDelete
    Replies
    1. ricky_tbm Ramesh : LMS -கொரு முகாந்திரம் இருந்தது நண்பரே - லயனின் 30-வது ஆண்டு மலராக ! அது போல் ஏதேனும் முக்கியத் தருணங்களுக்கு அவ்வித முயற்சிகளை வைத்துக் கொண்டால் சிறப்பாக இருக்குமல்லவா ?

      Delete
    2. //அது போல் ஏதேனும் முக்கியத் தருணங்களுக்கு அவ்வித முயற்சிகளை வைத்துக் கொண்டால் //

      நாமெல்லாம் சாதாரணமாக முக்கினாலே அது முக்கிய தருணம் ஆகிவிடுமே எடிட்டர் சார்...? :D

      Delete
    3. //அது போல் ஏதேனும் முக்கியத் தருணங்களுக்கு அவ்வித முயற்சிகளை வைத்துக் கொண்டால் //
      +1 சரியான முடிவு.

      Delete
    4. Erode VIJAY : மியாவி ரகத்தில் மூஞ்சை வைத்திருக்கும் பூனை - கார்பீல்ட் ரகத்துக்குப் பண்ணும் குசும்புகள் இருக்கே....!!!

      Delete
    5. //அது போல் ஏதேனும் முக்கியத் தருணங்களுக்கு அவ்வித முயற்சிகளை வைத்துக் கொண்டால் //
      2017 ல் தானே வந்து விட்டு போகுது விஜய்....முத்து 400 கன்பார்ம்...போன வாரம் தான் கணக்கு போட்டு பார்த்தேன் , அடுத்த ஆண்டு முடிவில் முத்து 390ஐ தாண்டி விடும்....2017 ல் NBS மாதிரி வந்துதானே ஆகணும்....2018 ல் லயன்300.... தருணங்கள் இனி தானே வரும்.....நாக்கில் அருவி கொட்டும் படங்கள் ஆறு...

      Delete
    6. சேலம் Tex விஜயராகவன் : ஆஹா...கணக்குப் புலி தான் !!!

      Delete
  29. விஜயன் சார், மனதை தொடும் பதிவு. சந்தோஷ நிகழ்வுகளை கொண்டாடுவோம், மற்றவைகளை மனதில் இருந்து தூக்கி ஏறிவோம்.

    டெக்ஸ் அட்டைபடம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. இணைய தளத்தில் 250 பதிவுகள் என்பது என்னை பொறுத்தவரை ஒரு இமாலய சாதனை! தொடரட்டும்.

      Delete
    2. Parani from Bangalore : ஊர் கூடித் தேர் இழுப்பதன் கண்முன்னேயான உதாரணம் தானே இது !!

      Delete
  30. காலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  31. விஜயன் சார், தோர்கல் படித்தபின் எனது வீட்டில் இருந்து வந்தவை
    நல்லா இருந்தது. சூப்பர்! கடைசியில் எல்லாரும் இறந்தது போல் காட்டி இருக்க வேண்டாம். ஆசிரியா என்ன ஆனா? தண்ணியில் தான அடிச்சிட்டு போய் இருக்கா அப்படினா அனேகமா அடுத்த பாகத்தில் குழந்தையோட வந்துடுவா. அடுத்த பாகம் எப்ப வரும்? இந்த கதை எப்ப எழுதுனது? இவ்வளவு அருமையா எழுதி இருகாங்க.

    அடுத்த வருடம் தோர்கல் கதையை ஒரு குண்டு புத்தகமாக வெளி இட சொல்லுங்க. இல்லேன்னா மாதம் ஒரு கதை வரும்படி புத்தகம் வெளி இட சொல்லுங்க.

    இதே போல் வேற மாயலோக கதைகள் இருந்தாலும் வெளி இட சொல்லுங்க.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : //இதே போல் வேற மாயலோக கதைகள் இருந்தாலும் வெளி இட சொல்லுங்க//

      ஆஹா...தோர்கலுக்கும் ஒரு தனிச் சந்தா கோரிக்கை இல்லாத வரையிலும் ஒ.கே. தான் !!

      Delete
    2. முடிந்தால் தோர்கல் கதையை அடுத்த 2 வருடத்திற்குள் முழுவதுமாய் வெளி இட்டு முடிக்க சொல்லுங்க. முழுகதையை எப்போது படித்து முடிப்போம் என இருக்கிறது.

      Delete
    3. // ஆஹா...தோர்கலுக்கும் ஒரு தனிச் சந்தா கோரிக்கை இல்லாத வரையிலும் ஒ.கே. தான் !! //
      தனிச் சந்தா - அப்படி நினைத்துத்தான் சொன்னாங்களாம்.

      Delete
    4. //ஆஹா...தோர்கலுக்கும் ஒரு தனிச் சந்தா கோரிக்கை இல்லாத வரையிலும் ஒ.கே. தான் !! //

      ஏன் கூடாது எடிட்டர் சார்?!! (சில spin-off ஆல்பங்களையும் சேர்த்து) சுமார் 45 பாகங்களைக் கொண்ட தோர்கல் தொடரை இன்னும் எத்தனை வருடங்களுக்கு இழுக்க உத்தேசித்திருக்கிறீர்கள்?

      Delete
    5. Erode VIJAY : 1977-2015 என்ற 38 ஆண்டுகளின் output தானே இந்த 45 கதைகளும் ! அவற்றை நாமொரு நான்கே ஆண்டில் கடக்க நினைப்பது சாத்தியமாகுமா ? முக்கியத்துவம் தருவோம் அதன் continuity கெட்டிடாமல் கதையின் டெம்போ சீராய்த் தொடரும் விதத்தில் !

      அப்புறம் தலீவருக்குத் தெரியாமலே புதுப் போராட்டத்தைக் கையில் எடுக்க செயலாளர் நினைப்பது புதுச் சங்கத்தின் அடையாளமோ ?

      Delete
    6. 45 பாகம்களா? நான் 25 அப்படின்னு வீட்டுல சொல்லி இருக்கேன்! அப்ப தோர்கல் கண்டிப்பாக ரெகுலர் சந்தாவில் வரவே வேண்டாம்.

      Delete
    7. /// 38 ஆண்டுகளின் output தானே இந்த 45 கதைகளும் ! அவற்றை நாமொரு நான்கே ஆண்டில் கடக்க நினைப்பது சாத்தியமாகுமா ? ///

      எடிட்டர் சார், இதுமாதிரி சமாதானத்தையெல்லாம் இனிமேல் நாங்கள் ஏற்றுக்கொள்வதாய் இல்லை! 10 வருடங்கள் இரவுபகலாக உழைத்து எடுத்த AVATAR படத்தை நான் இரண்டே மணிநேரத்தில் பார்த்து முடித்திருக்கிறேன் தெரியுமா உங்களுக்கு?

      வருடம் 10 பாகங்களாவது போட்டு அடுத்த 4 வருடங்களில் முடிச்சிக்கிடற வழியைப் பாருங்கள் . இல்லாவிட்டால் பதுங்கு குழியிலிருந்து எங்க தலீவர் வெளியே வராமாதிரி ஆகிடும்! :D

      Delete
    8. // இதுமாதிரி சமாதானத்தையெல்லாம் இனிமேல் நாங்கள் ஏற்றுக்கொள்வதாய் இல்லை! //
      // வருடம் 10 பாகங்களாவது போட்டு அடுத்த 4 வருடங்களில் முடிச்சிக்கிடற வழியைப் பாருங்கள் //
      +1

      Delete
  32. அட்டகாசமான மலரும் நினைவுகள் எடிட்டர் சார்! வெளிப்பார்வைக்கு கொஞ்சம் விரைப்பாகக் காட்டிக்கொண்டாலும் சில பல சம்பவங்களை எவ்வளவு உணர்வுப் பூர்வமாக உள்வாங்கியிருக்கிறீர்கள் என்பதைப் படிக்கும்போது வியக்காமல் இருக்கமுடியவில்லை!
    உங்களது ஞாபகசத்தியும் ஆச்சர்யப்படுத்துகிறது!

    250வது மைல்கல் பதிவுக்கு வாழ்த்துகள்! 500வது பதிவுக்கு 5000 பக்கங்களில் ஒரு டெக்ஸ் கதம்ப ஸ்பெஷலை அறிவித்து எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவீர்கள் என நம்புகிறேன்!

    'தீபாவளி வித் டெக்ஸ் ' அட்டைப்படம் அசத்துகிறது! அன்றைய நாட்களில் தீபாவளி என்று நினைத்தாலே குபீர் என்று ஒரு சந்தோஷம் வந்து ஒட்டிக்கொள்ளுமே... அந்த 'குபீர்' இந்த அட்டைப்படத்தைக் காணும்போது உடனே வந்து ஒட்டிக்கொள்கிறது! பலப்பல வண்ணங்கள் 'பண்டிகை' என்பதற்கான அடையாளமாய் அமைந்து அசத்துகின்றன! புத்தகமாய் கைகளில் ஏந்திப் பார்க்கும்போதும் இதே எஃபெக்ட் கிடைக்கவேண்டும் என்பதே இப்போதைய பிரார்த்தனை! இரண்டுவருடத்திற்கு முந்தைய 'டெக்ஸ் தீபாவளி மலரை'போல சற்றே மங்கலான அட்டைப்படமாய் அமைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் சார்! வண்ணங்கள் அடர்த்தியாய் அமையவேண்டியது தீபாவளி போன்ற கலர்ஃபுல் பண்டிகைக்கு அவசியமானதில்லையா?

    அடுத்தவாரப் பதிவு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது! அடுத்த ஞாயிறுவரை எங்களைக் காக்க வைக்காமல் 'ஆயுத பூஜை சிறப்புப் பதிவாக'ப் போட்டுத் தாக்கினால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறோம்? ;)

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : 500வது பதிவுக்கு 5000 பக்கங்களில் போடுகிறோமோ இல்லையோ - விசேஷமாய் எதாச்சும் செய்து விடுவோம் - உறுதியாய் !!

      Delete
    2. Erode VIJAY @ //அடுத்தவாரப் பதிவு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது! அடுத்த ஞாயிறுவரை எங்களைக் காக்க வைக்காமல் 'ஆயுத பூஜை சிறப்புப் பதிவாக'ப் போட்டுத் தாக்கினால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறோம்? ;)//

      நமது ஆசிரியர் சொல்லாமல் செய்யப்போகும் விஷயம் அதுதான்

      Delete
    3. //ஆயுத பூஜை சிறப்பு பதிவு //
      சூப்பர் யோசனை +1

      சுண்டலும் பொரியும் ஸ்நாக்சை விட நல்ல காம்பினேசன் கொரித்துக்கொண்டே சுவராசியமாக இந்த தளத்தை பார்வையிடலாம்.! டி.வி.யின் சிறப்பு நிகழ்ச்சியை விட நன்றாக இருக்கும்.! ஞாயிறு ஐந்து நாள் விடுமுறையின் இறுதிதினம் எனவே ஒரு சோர்வு இருக்கும்.! எனவே ஆயுத பூஜை சிறப்பு பதிவே சிறந்தது.!

      Delete
    4. ஞாயிறு ஐந்து நாள் விடுமுறையின் இறுதிதினம் எனவே ஒரு சோர்வு இருக்கும்.! எனவே ஆயுத பூஜை சிறப்பு பதிவே சிறந்தது.!////--- +111222333444555

      Delete
    5. டெக்ஸ் விஜயராகவன்.!@ அடடே!வாங்க .!பக்கத்து சீட் காலிதான் வந்து பக்கத்தில் உட்காருங்க.! சுண்டலும் பொரியும் நல்ல காம்பினேசன்.!
      சாப்பிட்டு கொண்டே ரசிப்போம்.!

      Delete
    6. வந்துட்டேன் வந்துட்டேன், MV சார்

      Delete
    7. சரஸ்வதி பூஜை அன்று புத்தாண்டு கொண்டாட்டத்தின் அறிவிப்பு இருக்குமானால் நிச்சயம் அனைவரும் நிதானமாக ரசித்து அனுபவிக்கலாம்

      Delete
  33. "Gift a comics" & "Gift a subscription" - நல்ல முயற்சி! கண்டிப்பாக முயற்சிப்போம்.

    ReplyDelete
  34. விஜயன் சார், தற்சமயம் குடும்பத்திற்கு அடுத்தபடியாக எனக்கு சந்தோசத்தை கொடுத்து வருவது இளையராஜாவின் இசை மற்றும் உங்களின் இந்த பதிவுகளும் நமது காமிக்ஸ் மட்டுமே. மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  35. Plz add now itself November month issue on online


    ReplyDelete
  36. டியர் விஜயன் சார்,
    Comeback special ஐ வார்த்தைகள் வராமல் வாயை பிளந்து புத்தகத்தை புரட்டி புரட்டி பார்த்துக் கொண்டுருந்ததும் , NBS கையில் கிடைத்ததும் ஆனந்ந அதிர்ச்சியில் உறைந்து போய், பிறகு எனது நண்பர்கள்/ சொந்தங்களிடம் ஏதோ நானே அச்சிட்டு வெளியிட்டது போல் பெருமை அடித்துக் கொண்டிருந்நதும் என்றுமே மறக்க இயலா தருணங்கள்..... Hats off to you Sir.....
    இன்றும் வாழ்வின் சில கடினமான தருணங்களை கடக்க உதவும் லயன்/முத்துவிற்க்கும், அதற்கு கருவியாக இருக்கும் தங்களுக்கும் நன்றிகள் கோடி....

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் அறிமுகப்படுத்திய Pandemonium series படித்தேன்....(இன்னும் படித்திராத நண்பர்களுக்காக சிறு அறிமுகம்)
      மிக வித்தியாசமான கதை களம் - ஒரு காச நோய் மருத்துவமனையில் 1920/50 களில் நடக்கும் சம்பவங்களே கதை..
      ஒரு தாய் தனது மகளை அந்த மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்க்கிறாள்.... அந்த சிறுமிக்கு சில அமானுஷ்ய அனுபவங்கள் நிகழ்கின்றன.... தாய் தனது மகளை காப்பாற்ற போராடுகிறாள்....எதிர்பாராத முடிவுடன் கதை முடிகிறது....
      அட்டகாசமான சித்திரங்கள்.. நல்ல வேகத்துடன் செல்லும் கதை.... தமிழில் வெளி வர முடியாமல் போனால் காமிக்ஸ் ரசிகர்களுக்கு இழப்பே....
      ஆனால் எடிட்டர் சொன்ன காரணங்கள் முற்றிலும் நியாயமானவை....

      விஜயன் சார், வித்தியாசமான புத்தகங்களை இதேபோல் தொடர்ந்து அறிமுகப்படுத்துங்கள்.... நன்றிகள் பல.....அறிமுகத்திற்கும் , அறிமுகப்படுத்த போவதற்க்கும்......

      Delete
  37. Romba nalla varuveenga sir... expected a trailer for the next year books and plans.. need need to wait for one more week.

    ReplyDelete
  38. My name is tiger ... hope we can expect in Jan 16, and I hope the booking status is improving fast.

    ReplyDelete
  39. டியர் விஜயன் சார், 250வது பதிவுக்கு, மனமார்ந்த வாழ்த்துகள் சார். அப்படியே 2500வது பதிவுக்கும்:-)

    லைப்ரரி, மருத்துவமனைகளுக்கு, 25சத கழிவு அருமையான ஐடியா சார். இது மருத்துவமனைகளுக்கு, எந்தளவு பொருந்துமோ,தெரியவில்லை.ஆனால், லைப்ரரி, மற்றும் பள்ளிகளுக்கு அற்புதமாக பொருந்தும்.

    என் மகளின் பிறந்த நாளுக்கு, சாக்லேட்டுடன் சேர்த்து, அவள் நட்பு வட்டாரங்களுக்கும் காமிக்ஸ் பரிசளிப்பதை வழக்கபடுத்தி வருகிறேன்.அதன்மூலம், ஒரிரு சந்தாக்களாவது, எண்ணிக்கையில் கூட வேண்டும் என்பதுதான் என் பேரவா.

    தீபாவளி வித் டெக்ஸுக்காக வெயிட்டிங்.,

    விஜயன் சார், மறுபதிப்பு கதைகளை,வெளியிடும்போது, அதன் ஒரிஜினல், வெர்சன் வந்தபோது, வாசகர்களிடம் கிடைத்த வரவேற்பு ,மற்றும் சில பல சுவாரஸ்ய நிகழ்வுகள் இத்தியாதிகளையும்., ஒரு பக்கத்தில் பகிர்ந்து கொண்டால், நன்றாக இருக்குமே சார். செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா

    ReplyDelete
    Replies
    1. Dr.Sundar,Salem. : //மறுபதிப்பு கதைகளை,வெளியிடும்போது, அதன் ஒரிஜினல், வெர்சன் வந்தபோது, வாசகர்களிடம் கிடைத்த வரவேற்பு ,மற்றும் சில பல சுவாரஸ்ய நிகழ்வுகள் இத்தியாதிகளையும்., ஒரு பக்கத்தில் பகிர்ந்து கொண்டால், நன்றாக இருக்குமே//

      சார்....ஆனானப்பட்ட அரசியல் அரங்கே இன்று மாற்றம்-முன்னேற்றம் என புதுப் பாதைகளில் ; பளிச் உடுப்புகளில் நடை போடுவதைப் பார்க்கத் தானே செய்கிறோம்....! புதியதொரு தலைமுறையின் வருகை பதிவாகியிருப்பதும், அதற்கேற்ற மாற்றங்கள் அவசியம் என்ற புரிதல்களும் புலரத் தொடங்கி இருப்பது தானே அவற்றின் பின்னணி ?! So நாமும் கூட அதனிலிருந்து கொஞ்சமாய் எதையேனும் கற்றுக் கொள்வோமே ? போடுவது தான் மறுபதிப்பு என்றாகி விட்டது ; அதனிலும் இன்னமும் மலரும் நினைவுகளைப் புகுத்த வேண்டுமா - என்ன ?

      Delete
    2. ஆனால் நாளுக்குநாள் நம் எடிட்டரின் செயல்பாடுகளில் "ஹ௬லோ... நாங்களும் யூத்துத்தேன்!" என்ற தொணி நிரம்பியிருப்பதைக் கவனித்தீர்களா நண்பர்களே? ;)

      Delete
    3. // ஆனால் நாளுக்குநாள் நம் எடிட்டரின் செயல்பாடுகளில் "ஹ௬லோ... நாங்களும் யூத்துத்தேன்!" என்ற தொணி நிரம்பியிருப்பதைக் கவனித்தீர்களா நண்பர்களே? ;) //

      எல்லாம் இந்த ஜூனியர் எடிட்டரோட தாக்கம் :)

      Delete
  40. Dear Editor Sir

    First a big thanks for bringing the world comics to our doorsteps. With out you we might not have known all the great names of the comic world...

    Your contribution to Tamil comic world is immense and no one can dispute that..

    Keep up the good work sir and bring more new comics to us...

    We will sure see 10000 issues of this blog :)...

    I was not lucky enough to meet you two times I came to your office at Sivaksi..hopefully next time I will get to meet you...

    Thanks

    Anand

    ReplyDelete
    Replies
    1. Anand Vaitheeswaran : 10000 பதிவுகளா ? ஆஹா....ஏதோவொரு தூரத்துப் பொழுதில் ஏதாவதொரு முருங்கை மரத்திலிருந்து 'லொட் லொட்' என்று சத்தம் கேட்பின் - அது வேதாளமாய் அங்கே அமர்ந்து நான் டைப் அடிக்கும் ஓசையாகத் தான் இருந்தாக வேண்டும் !!

      Delete

    2. ///ஏதோவொரு தூரத்துப் பொழுதில் ஏதாவதொரு முருங்கை மரத்திலிருந்து 'லொட் லொட்' என்று சத்தம் கேட்பின் - அது வேதாளமாய் அங்கே அமர்ந்து நான் டைப் அடிக்கும் ஓசையாகத் தான் இருந்தாக வேண்டும்////

      :D

      அதற்கு சற்றே தள்ளியிருக்கும் ஒரு புளியமரத்தில் கூட்டமாய் தொங்கியபடி சில குட்டிச்சாத்தான்கள் காமிக்ஸைக் கையில் வைத்துக்கொண்டு அலப்பறை செய்துகொண்டிருந்தால், அது நாங்களாகவும் இருக்கக்கூடும்! ;)

      Delete
    3. Erode VIJAY : விடாது கறுப்பு !!

      Delete
    4. எதிர் பக்கம் இன்னொரு மரத்திலிருந்து .. கொஞ்சம் vocal voice ஒண்ணு லைட்டா கேக்க ஆரம்பிக்கும் .. அது .. ஹி ஹி !! :-) ;-)

      Delete
    5. "புளியமரப் படலம் " !!!

      Delete
  41. My name is tiger ... hope we can expect in Jan 16, and I hope the booking status is improving fast.

    ReplyDelete
  42. 250 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ..சார் ..

    அதிரடி அறிவிப்பு ஏதும் இல்லை எனினும் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பதிவு .உங்கள் முன் செல்லும் நினைவுகளின் எழுத்துக்கள் அந்த காலகட்டங்களை மனதில் பசுமையான நினைவுகளாய் மலர செய்தது... இந்த தளத்தில் எங்களின் வருகை உங்களுக்கு எவ்வளவு கிரியா ஊக்கியாக பயன்படுகிறது என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளீர்கள் .கண்டிப்பாக இனி இங்கே மெளனம் என்பது இப்போது தொடர்ந்து வருபவர்கள் உறுதியாக இனி கடைபிடிக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன் ...

    நன்றி சார் ....

    ReplyDelete
  43. இவ்வருட தீபாவளி..... காமிக்ஸ் ரசிகர்களுக்கு அதிரடி ஆனந்த்த்தை அளிக்க போகிறது என்பதை டெக்ஸின் அட்டை படமே முன்னோட்டமாக விளங்க வைத்து விட்டது.செம அட்டகாசம் சார் ...இன்னும் முழுமையாக நிறைவேறாத இந்த அட்டை படமே செம கலக்கல் ...ஓவியருக்கு பாராட்டுக்கள் சார் ..இரண்டு பக்க அட்டைபடமும் மனதை கவர்கிறது.

    இப்படி பட்ட மொத்த குண்டு புத்தகம் இவ்வளவு பக்கங்களில் இவ்வளவு விலை குறைவாக வரும் பொழுது டெக்ஸ் ன் இப்படி பட்ட கருப்பு வெள்ளை இதழ்கள் அடுத்த வருடம் ஒரு ஐந்தாவது இந்த முறையில் வர கூடாதா என ஏங்க செய்கிறது...

    ReplyDelete
  44. 250 பதிவிற்க்கு வாழ்த்துக்கள் சார். யானை வரும் பின்னே! மணி ஒசை வரும் என்பது போல அடுத்த வாரம் 2016 அட்டவணை வரும் என கூறி உள்ளிர்.மகிழ்ச்சி சார் ,அதைப் பற்றி இந்த பதிவில் ஒரு கோடவாது போட்டு காண்பிக்க கூடாதா

    ReplyDelete
    Replies
    1. Ranjith : கோடு என்ன - ரோடே போட்டு விடுவோம் அடுத்த வாரம் !

      Delete
  45. எடிட்டர் சார், ஆர்ச்சியின் கால எந்திரத்தில் ஏறி ஒரு "ஷார்ட் டிரிப் " அடித்த சந்தோசம்.!


    ஆனாலும் , இந்த பதிவை படித்தவுடன் , முகத்தில் நவரசங்களையும் வரவழைத்து விட்டீர்கள்

    இந்த பதிவு 250 வது பதிவு என்றவுடன் ஆச்சர்யம்.!

    அடுத்த வாரம் 2016 பட்டியல் வெளிவரும் போது அதில் மாடஸ்டி கதை இருக்குமா.? இருக்காதா .?என்ற பயம்.!

    எங்களுக்காக எவ்வளவு மெனக்கெடுகிறீர்கள் என்று வியப்பு.!

    எங்களுக்கு பாராட்டு பத்திரம் வாசித்த போது "பிரீசரில் " எங்களை உட்காரவைத்த மாதிரி ஒரு சிலீர்ப்பு.!

    ஏதோ ஒரு காரணத்தால் நம்மைவிட்டு விலகிபோன நண்பர்களை நினைத்தும் , காமிக்ஸ் வருமா ? வராதா ? என்று உங்களுக்கே தெரியவில்லை என்றதும் எங்களு க்கு சோகம்.!

    நண்பர்கள் விலகிசென்றதற்காக நீங்கள் வருத்தப்பட்டது ,எங்களுக்கு வருத்தம்.!

    இரவே! இருளே ! கொல்லாதே.!என்று இந்தமுறை எங்களை கொல்லாமல் டெக்ஸ் கதையை கொடுத்து அட்டை படத்தையும் காட்டி யதில் எங்களுக்கு டபுள் சந்தோசம்.!


    மொத்தத்தில் படித்துவிட்டு ஒரு பத்து நிமிடம் " மந்திரித்து விட்ட கோழி " மாதிரி உட்கார்ந்து இருந்தேன் என்பது நிஜம்.!

    ReplyDelete
    Replies
    1. :D

      'நவரசங்கள்' அருமை, MV அவர்களே!

      Delete
    2. ஹா ..ஹா ...அருமை ....MV சார் !!!

      Delete
  46. இந்த பதிவை படித்து விட்டும் மாயாவி சிவா அவர்கள் வரவில்லை என்றால் ...................? கர்ர்ர்ர்............

    ReplyDelete
    Replies
    1. Madipakkam Venkateswaran @ இது போன்ற கோரிக்கைகள் சிலநேரம் சில நண்பர்களுக்கு தேவையில்லாத ஒரு pressure கொடுப்பதுபோல். அவர்களை அவர்கள் பாதையில் சிலகாலம் விடுவோம், காலம் அவர்களில் காயம்களை மருந்திட்டு ஆற்றிவிடும்.

      தவறாக என்ன வேண்டாம். உங்கள் அலைபேசி எண் இல்லை என்பதால் இங்கு பதிவிட்டு உள்ளேன்.

      Delete
  47. டியர் எடிட்டர்,

    நான்காண்டுப் காமிக்ஸ் பயணம் என்பது எண்பதுகளில் சற்றே எளிதாய் இருந்திருக்கலாம் .. ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் சிரமமானதே. உங்களின் வாசகர்கள் (உங்களால் காமிக்ஸ் உலகில் லயித்தவர்கள்) தேசங்கள், காலங்கள் பல கடந்து .. காமிக்ஸ் வாசிப்புக்கள் விரிந்து .. மீண்டும் இங்கே ஐக்கியமாகிடும் பொழுதுகளில் எண்ணப் பரிமாற்றங்கள் சில வேளைகளில் இணையாத தடங்களில் செல்வது இயல்பே. இருப்பினும் உங்களோடு நாங்களும், எங்களோடு நீங்களும் தொடர்ச்சியாக இந்த நான்கு ஆண்டுகள் ஈடு கொடுக்க முயற்சித்து பல வேளைகளில் வெற்றியும் கண்டிருக்கிறோம்.

    எனினும் as you said rightly, இணைந்ததொரு காமிக்ஸ் பயணம் என்ற நோக்கில் இரு கருத்துக்கள் இல்லை.

    "Best friends are those who fight it out fiercely in the front, forging their fists together so deeply in the back .." :-) :-) :-) [நெட்டில் சுடாத பழமொழி]

    Coming back to context :

    - Gift wrap option ஒரு நல்ல ஐடியா - நண்பருக்கு டெக்ஸ் இதழ்கள் அடிக்கடி வாங்கிக் கொடுப்பவன் என்ற முறையில் - ஹி ஹி - நண்பருக்கு தனிச் சந்தா (டெக்ஸ் மட்டுமே) அளிக்கும் வசதி 2016ல் உண்டா ???? :-) ;-)

    - Gift சந்தாக்கள் பெருக வேண்டுமெனில் - கார்ட்டூன் track, Tex Track என்று தனியாய் தேர்ந்தெடுத்து அறிவிக்கவும் - சில இடங்களில் சில கதைகளை display செய்ய இயலாது என்பதனால் இந்த கோரிக்கை - உதாரணம்: ஆஸ்பத்திரியில் bouncer !

    ReplyDelete
    Replies
    1. அடடே .. 250 பதிவுல 100வது கமெண்ட் நம்மளுது :-p

      Delete
    2. Raghavan : //இணைந்ததொரு காமிக்ஸ் பயணம் என்ற நோக்கில் இரு கருத்துக்கள் இல்லை//

      Oh yes !!

      Delete
  48. 250 பதிவுகளையும் சுருக்கி ஓரே பதிவில் சாராம்சமாக தந்து விட்டீர்கள் சார்..... ஒவ்வொரு வரியும் இங்கே 2012 லிருந்து நடத்தவற்றை அப்படியே அந்த டைம் மெசினில் சென்று பார்க்க வைத்து விட்டீர்கள் சார்.... உங்கள் மெனக்கெடல்கள் ஆச்சரியத்தை அளிக்கின்றன் சார்... எதற்காகவும் மாற்ற இயலா வழக்கங்களை எங்களின் பொருட்டு மாற்றி கொண்டது நிச்சயமாக சாதாரண நிகழ்வல்ல சார்....
    முந்தைய தருணங்களில் நடந்தவற்றுக்கு நீங்கள் மட்டுமே வருத்தம் தெருவிப்பது சரியல்லவே, எங்களுக்கும் சம பங்கு உள்ளதல்லவா???....
    தீபாவளி வித் டெக்ஸ் - அட்டைப்படம் அசத்தல் சார்... இன்றே தீபாவளி வந்தததைப் போன்று உணரவைத்து விட்டீர்கள் சார .....கடந்த ஆண்டின் வித்தியாசமான சதக் சதக் தீபாவளி மலர், தரத்தவறிய உற்சாகத்தை இந்த மலர் பல மடங்கு உயர்த்த போவது நிச்சயம் சார்....
    இதழ்க்காக காத்திருக்கும் இந்த 15நாட்கள் புரட்டாசி விரதத்தை விட கடுமையான நாட்களாக அமையப்போகிறது சார்...
    2016 அட்டவணை எதிர்பார்ப்புகளை எகிறச் செய்துள்ளது சார்.... அட்டவணை யை அலசி ஆராய்ந்து ஓய்ந்த பின் தீபாவளி வித் டெக்ஸ் என்ற விருந்தை பரிமாறும் உங்கள் ஐடியா சிம்ப்ளி சூப்பர் சார்...
    வார மத்தியில் எதிர் பார்க்கலாமா சார்???...

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் விஜயராகவன்.!@

      சூப்பர்! எல்லோர் மனதில் உள்ளவைகளையும் அப்படியே படம் பிடித்து சொல்வது போல் உள்ளது.!

      Delete
    2. // 250 பதிவுகளையும் சுருக்கி ஓரே பதிவில் சாராம்சமாக தந்து விட்டீர்கள் சார்.. //

      அதே அதே

      Delete
  49. சார், வணக்கம். அட்டைப்படம் அருமை. ஆனால் தீபாவளி இதழ்க்கு, பொருத்தமாக தெரியவில்லை. காரணம், முன் அட்டையில் பள, பள வண்ணங்கள் மிஸ்ஸிங். ஊதா கலர் ரொம்ப மைல்டாக உள்ளது. பின்னட்டையில் டெக்ஸ் கழுத்தை ஒருவர் நெறிக்கிறார். இதை எப்படி ஏற்று கொள்ள முடியும், ஒரு டெக்ஸ் சிறப்பிதழில். மேலும் கார்சன் கொஞ்சம் சைடாக பார்க்கிறார். கொஞ்சம் ராக்கெட், புஸ்வாணம் எல்லாம் போடுங்க சார் ப்ளீஸ். டெக்ஸ் தீபாவளியை கொண்டாட வேண்டாமா, சார்.

    ReplyDelete
    Replies
    1. // கொஞ்சம் ராக்கெட், புஸ்வாணம் எல்லாம் போடுங்க சார் ப்ளீஸ். டெக்ஸ் தீபாவளியை கொண்டாட வேண்டாமா, சார்.//
      ஐடியா நல்லாதானிருக்கு :)

      Delete
  50. அடுத்த வருட மொத்த சந்தா தொகை மட்டும் எவ்வளவு என்று கோடிட்டு காட.டினால் உடனடியாக சந்தா கட்ட வசதியாக இருக்குமே சார் .....

    ReplyDelete
  51. நெஞ்சை நெகிழ வைக்கும் பதிவு.

    ஆரம்பம் முதல் தற்சமயம் வரை நடந்து கொண்டிருக்கும் தள நிகழ்வுகளை இவ்வளவு அருமையாக யாரும் பதிவிட முடியாது.

    நான்கு வருடங்களின் நிகழ்வுகளை இரத்தின சுருக்கமாய் பதிவு செய்து விட்டீர்கள்

    இன்று போல் என்றும் நமது காமிக்ஸ் காதல் தொடர்ந்து கொண்டிருக்கட்டும்

    ReplyDelete
  52. Hi friends . . . visiti my Blog http://tamilcomicseries.blogspot.in/

    ReplyDelete
  53. அன்பு Vijayan அய்யா......

    காமிக்ஸ் குல திலகம்.....

    நீண்ட ஆயுட்காலம் மனநிறைவுடன் பல்லாயிரம் ஆண்டு வாழ்நந்து....

    1000000000000000 பதிவுகள் இட இறைவனை வேண்டும்

    ஆசிரியரின் விழுதுகளல் ஒன்று ........

    ReplyDelete
    Replies
    1. PRABHU tex viller rasigan.....! நண்பரே, அன்புக்கு ஏகமாய் நன்றிகள் - ஆனால் "திலகப்" பட்டங்கள் வெள்ளித் திரைக்கும், அரசியல் அரங்குக்கும் தான் ஒத்து வரும் ! நமக்கெல்லாம் "ஆ.வி." ; "பெ.பெ.' ; 'ஒ.வா.உ. 'போன்ற பட்டங்கள் தான் சரிப்படும் !!

      Delete
  54. Vijayan sir,

    Deepavali with Tex.

    அட்டை படங்கள் அசத்தலாக உள்ளன.எதிர்பார்ப்பை கிளறி விட்டுள்ளன. Awaiting for this feast.

    Regards,
    Mahesh

    ReplyDelete
  55. சூப்பர் பதிவு விஐயன் சார்

    ReplyDelete
    Replies
    1. ஹை !!! மந்திரி !!! எங்க சார் போயிருந்தீங்க ???

      உங்க லோகோவை தேடி தேடி அலுத்து போய் விட்டேன் ...

      உங்க சிரிப்பு மூட்டும் கமெண்ட்ஸ் நிறைய மிஸ் பண்ணியிருக்கேன் ..

      மறுபடியும் பதுங்கிக்காம நிறையா எழுதுங்க !!!!!!!!

      Delete
    2. மந்திரியாரின் மீள்வரவு மகிழ்ச்சியளிக்கிறது! :)

      Delete
    3. வெல்கம் மந்திரி ஜி......உங்கள் இன்னசென்ட் சோக்குகளுக்கு நான் ரசிகன்.....தொடருங்கள் நிறைய....

      Delete
  56. Now a good way of presenting the 250 article. Same way Tex colouring seems to be attracting. My journey with lion muthu comics almost nearing 25 years.. All the best EDI sir...long way to go...

    ReplyDelete
  57. ///தற்போதைய
    நிலவரம்: 105 வண்ண இதழ்கள் + 12
    b&w இதழ்கள்
    என்பதே!! திங்கட்கிழமை அந்த early
    birds லிஸ்டை இங்கே upload செய்து
    விடுகிறேன்! இன்னமும் புக்கிங்
    செய்திருக்கா நண்பர்கள் கொஞ்சம்
    வேகம் காட்டினால் சூப்பராக
    இருக்கும்!/////---- போன திங்கள் போய்...அடுத்த திங்களே வரப்போகுதெ....சார்...அந்த ஏர்லி பேர்ட் லிஸ்ட்டை காணோமே...???

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : Oops !!!! நாளை செய்து விடுவோம் !!

      Delete
  58. எடிட்டர் சார்

    மனதை தொடும் நிதர்சனமான பதிவு.

    உங்களின் வெற்றிக்கு இந்த வெளிப்படையான கருத்து பரிமாற்றமும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.

    டெக்ஸ் வில்லர் அட்டைப்படம் அருமையாக வந்துள்ளது. கொஞ்சம் கலர் காம்பினேஷனை மாற்றினால் இன்னமும் சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. Radja : 'ஆளை அடிக்கும் பளீர் நிறங்களைக் கொஞ்சமாய் மாற்றிப் பார்ப்போமே !' என்று நமது டிசைனர் கோரிக்கை வைப்பது தான் இந்த mild கலரிங்கின் பின்னணி சார் !

      Delete
  59. 250வது பதிவுக்கு வாழ்த்துகள். ஒரு நீண்ட நாள் நண்பருடன் ஒரு தெளிந்த ஓடையின் அருகில் அமர்ந்து அளவளாவிய அனுபவம் மற்றும் உணர்வு இந்த பதிவில்.

    2016 இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் மற்றும் ஆசைகள்.

    ReplyDelete
  60. நூலகம் மற்றும் பள்ளிகளுக்கு பரிசளிப்பது சூப்பர் ஐடியா. நண்பர்கள் தேவைப்படும் பள்ளி மற்றும் நுலகங்களின் பட்டியல் தயாரிக்க உதவ முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. மகேந்திரன் சார்.!@

      " அந்த வானத்தைப் போல மனம் படைத்த மன்னவனே." என்று உங்களை பார்த்து பாடத்தோன்றுகிறது.!

      Delete
    2. நீங்க வேற...இங்க இருப்பவர்களுக்கு பள்ளி, நூலகங்களை தொடர்பு கொள்வது சிரமம். பட்டியல் பலருக்கு உதவியாய் இருக்கும். இயன்றவர்கள் ஆளுக்கு ஒரு பள்ளிக்கூடம் எடுத்தால் கூட போதுமே. நான் டிசம்பரில் கோவை வருகிறேன்.கண்டிப்பாக நான் படித்த பள்ளியை அணுகுவது என்று இருக்கிறேன்.

      Delete
    3. சென்னை புத்தக கண்காட்சியில் பங்குபெற வாய்ப்பு உள்ளதா சார்.?

      Delete
    4. ஜனவரி 15வரை விடுமுறையோடு வாருங்கள் மஹி சார்.....9,10தேதிகளில் சென்னை விழாவில் ஆட்டம் போட்டு விட்டு போகலாமே நீங்களும்.....

      Delete
    5. டெக்ஸ் விஜயராகவன் நீங்கள் சொன்னது சரிதான் .!

      Delete
    6. Mahendran Paramasivam : அவரவர் பள்ளிகளையோ ; இன்று அவர்தம் சுட்டீஸ் படிக்கும் பள்ளிகளையோ target செய்தாலே ஒரு பெரும் விஷயமாகிடும் அல்லவா ?

      Delete
  61. 250வது பதிவுக்கு வாழ்த்துக்கள். அப்படியே அட்வான்சாக 1000வது பதிவுக்கும். ஆமாம் அந்த Texசந்தா என்ன ஆச்சு சார்? தனி சந்தா இல்லைன்னாலும் பரவால்ல ஒரு 550 பக்க கதை ,ரெண்டு 450பக்க கதை, மூணு350பக்க கதை, நாலு 250பக்க கதை, ஒரே ஒரு கதை எத்தனை பக்கமா இருந்தாலும் கதம்பத்தில். இந்த வருடம் இது மட்டும் போதும் சார். நன்றி

    ReplyDelete
  62. கிட் ஆர்டின் கண்ணன்.!@

    அதெப்படிங்க சார் நீங்கள் மட்டும் இதை 250 வது பதிவு என்று முன்னரே கண்டுபிடித்தீர்கள் ? தி கிரேட் கிட் ஆர்ட்டின் கண்ணன்.!

    அப்படியே " நம்ம விஷயத்தை " மறந்துவிடாதீர்கள் .! அதிர பழங்கதையை ஏன் மர்மமுடிச்சுகளை அவிழ்த்தீர்கள் என்று யாரும் கேட்க போவது கிடையாது.! விலாவாரியாக சிக்கலான இடத்தை நன்கு விவரிக்கவும்.!(கதைமட்டும் போதும்.! வரலாறு வேண்டாம் ,வரலாறு எனக்கு தெரியும் கார்த்திக் சோமலிங்க விவரித்து உள்ளார்) நேரம் கிடைக்கும் போது பதிவிடுங்கள்.! நன்றி.!

    ReplyDelete
  63. டியர் விஜயன் சார்,

    1.//உங்கள் பள்ளிகளுக்கோ ; கல்லூரிகளுக்கோ ; க்ளப்களுக்கோ..............
    2.உள்ளூர் நூலகங்களில்..........
    3.பிசியானதொரு மருத்துவரா நீங்கள்............
    4.உங்கள் பிரியமானவர்களை வாழ்த்திட............
    5.சின்னதாய் ஒரு பரிசளிக்க............
    6.காமிக்ஸ் எனும் விதைகளைப் புது வயல்களில் விதைத்திட.......//

    //புத்தாண்டின் பொருட்டு நமக்குத் தோன்றிய ஒரு சில திட்டங்களின் preview இதோ! இவற்றை மேம்படுத்த; இன்னும் வாசகர் friendly ஆக்கிட உங்களிடம் ஏதாவது யோசனைகள் இருப்பின் – would love to hear! //

    2012ல் இரண்டு சந்தாக்கள் செலுத்தி comeback ஸ்பெஷலின் மூலம் மீண்டும் காமிக்ஸ் பயணத்தில் இணைந்த என் காமிக்ஸ் பயணம், 2013ல் மூன்று சந்தாக்களுடன் சந்தோஷமாக பயணித்தது. வருடம் 2014ல் பயனாளிகளின் பட்டியலின் சகாயத்தால் 5 சந்தாக்களுடன் ஆரவாரமாக பயணித்தது. 2015லும் 5 சந்தாக்கள் மற்றும் ஸ்பெஷல் வெளியீடுகள் 7 / 8 என்று இவ்வருடத்தை நிறைவு செய்தாலும் 2016ல் என்ன செய்வது என்ற குழப்பம் சில மாதங்களாகவே எனக்குள் இருப்பதை மறுக்க மனம் மறுக்கிறது !

    2016 ஆம் வருடமும் என் மூலமாக குறைந்தது 5 சந்தாக்கள் நிச்சயம் எனும் போது, அதுமட்டுமே என்னைப் போன்ற வாசர்களுக்கு ஆத்ம திருப்தியை அளிப்பதாக இருக்கிறதா என்ற கேள்வியும் எழாமலில்லை... என்னைப் போன்ற பல காமிக்ஸ் வாசகர்களின் நலன் கருதியும், தங்களின் காமிக்ஸ் பயணம் இன்னும் சற்று வேகம் எடுக்கவும், ஏன் நீங்கள் சில வழிவகைகளை தங்களின் மேலான கவனத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற சிந்தனையும் என் மனதை சிதைக்காமலில்லை தான் சார் !

    contd...

    ReplyDelete
    Replies
    1. (2) டியர் விஜயன் சார்,

      என்ன தான் எதிர்ப்பலைகள் எழுந்தாலும், நாம் மிக வேகமாக மாற்றத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டு தான் இருக்கிறோம் என்பதில் தங்களுக்கும் மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை. மறுபதிப்புகள் குறிப்பிட்ட காலத்திற்குள்ளாக, சீக்கிரமே தன் பயணத்தை / இலக்கை எட்டி விடும் பட்சத்தில், மாற்றத்தை தவிர வேறு மார்க்கம் இருப்பதாகவும் எனக்குத் தோன்றவில்லை. அங்ஙனம் நேரும் பட்சத்தில் மறுபதிப்பு கோரிக்கைகளும், முழு வண்ண மறுபதிப்பு கோரிக்கைகளும் பத்தாம்பசலியாக கூட தோன்ற ஆரம்பிக்கலாம் அல்லவா ?!

      எனவே இன்றைய பெரும்பாலான வாசகர்களின் ஆர்வத்திற்கு தாங்கள் ஏன் தடையாக இருக்க வேண்டும் என்ற கேள்வியும் என்னுள் எழாமலில்லை சார்...முதல் உதாரணமாக ''இரத்தப்படலம்'' முழு வண்ண மறுபதிப்பு படலத்தை முன் வைக்கலாம் என்று கருதுகிறேன். நாளை எப்படி இருக்கும் என்ற ஆராய்ச்சியின் பயன் யார் கையிலும் இல்லாத போது, இன்றைய ''கலாக்காய்'' கூட நம் காமிக்ஸ் பசியைப் போக்கும் நிவாரணியாக இருக்கலாம் அல்லவா ?!

      அதிகம் வேண்டாம் சார், என்னைப் போன்ற தீவிர காமிக்ஸ் வாசகர்களுக்காவது வெறும் 300 எண்ணிகையிலான முன்பதிவு திட்டத்தை - ''இரத்தப்படலம்'' முழுவண்ண மறுபதிப்பிறகாக அறிவிக்கலாமே விஜயன் சார்?!

      contd...

      Delete
    2. (3) டியர் விஜயன் சார்,

      சரியான நேரத்தில் எடுக்கப்படும் தவறான முடிவுகளும், தவறான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவுகளும் நம்மை வீழ்த்தி விடும் ப்ரம்மாஸ்திரமாக செயல்படும் என்பதில் இங்கு யாருக்கும் எந்தவித சந்தேகமும் இருக்கப் போவதில்லை. மிக மிகச் சிறிய உதாரணமாக - இந்த வருடம் மாற்றத்திற்கு உள்ளான ''என் பெயர் டைகர்'' அட்டவணையை அப்படியே விட்டிருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ''என் பெயர் டைகர்'' தன் பயணத்தை அழகாக நிறைவு செய்திருக்கும். அதுமட்டுமல்லாமல் ''ஸ்மர்ப்''ன் அறிமுகமும் 2016ல் களை கட்டியிருக்கும். இந்த வலைதளம் மட்டுமே தங்களுக்கு வியாபார உண்மையை எடுத்துரைப்பதாக எக்காலமும் அமைந்து விடாது என்பது என் தாழ்மையான கருத்து விஜயன் சார் !

      contd...

      Delete
    3. (4) டியர் விஜயன் சார்,

      ''என் பெயர் டைகர்'' வெளியிட்டப் பிறகு, ''இரத்தப்படலம்'' - box setற்கு தாங்கள் நிச்சயம் செவி சாய்க்க வேண்டிய தருணம் வந்து விட்டதாகவே கருதுகிறேன் சார்.... 2016ல் முன்பதிவை தொடங்கி, தங்களுக்கும் தங்கள் டீமிற்கும் இயலுமான சந்தர்ப்பத்தில் 'இரத்தப்படலம் - Box set - 18 அல்லது 1x 2 = 9 புத்தகளுக்கான முன்பதிவை ஆரம்பித்து வைப்பீர்கள் என்று நம்புகிறேன். அதன் விலை ரூபாய் 3000 / 4000 / 5000 ஆக எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டுமே சார்...

      பள்ளிகளுக்கோ ; கல்லூரிகளுக்கோ ; க்ளப்களுக்கோ ; உள்ளூர் நூலகங்களிற்கோ ; மருத்துவமனைக்கோ ; பிறந்தநாள் பரிசாகவோ - காமிக்ஸ் பரிசளிக்க தயாராக இருக்கும் பல காமிக்ஸ் வாசக நண்பர்களுக்கும், இந்த விலை ஒரு சுமையாக நிச்சயம் இருக்கப் போவதில்லை விஜயன் சார் !!

      இந்தக் கோரிக்கையை நிச்சயம் நீங்கள் பரிசீலிக்க வேண்டும் என்ற கட்டாயம் தங்களுக்கு இல்லை, அதே நேரம் இந்த விண்ணப்பத்தைத் தங்களிடம் சமர்ப்பிக்க, ஒரு காமிக்ஸ் வாசகனாக எனக்கு கொஞ்சமாவது உரிமை இருக்கிறது என்று நம்புகிறேன். ஏற்பதும், ஏற்க இயலாமல் போவதும் தங்களுக்கு அமையப்போகும் சூழ்நிலையைப் பொருத்தது என்பதால், என் எண்ணத்தை பதிவிட்டதுடன் என் மனம் அமைதிப் பெற்றுவிடும். கிடைப்பதும் கிடைக்காததும் என்றும் நம் கையில் இல்லை. நன்றி விஜயன் சார் :)

      Delete
    4. ///2015 ல்5 சந்தாக்கள் //

      வாவ்.!5 சந்தாக்களா ? நானும் நண்பர்களுக்கு கொடுக்க மூன்று இதழ்கள் வரை வாங்குவேன்.! யோசிக்காமல் பட் என்று தூக்கி கொடுத்தால் தான் உண்டு.தாமதித்தால் எனக்கு கொடுக்க மனசு வராது.! கௌபாய் ஸ்பெஷல் முதல் மூன்று இதழ்கள் வாங்கி நண்பர்களுக்கு கொடுப்பது வழக்கம்.ஆனால் ஸ்பெஷல்களை மட்டும் கொடுக்க மனசு வராது.!இரத்த படலம் நான்கு வைத்துள்ளேன்.!ஆனாலும் கொடுக்க மனசு வரமாட்டேன் என்கிறது.! அப்படி மனசை கல்லாக்கி எல்.எம்.எஸ். ஒருவருக்கு மூன்றில் ஒன்றை பரிசாக கொடுத்தேன்.!அதை இன்று தூங்கும் போது இரவில் நினைத்தால் கூட தூக்கம் வரமறுக்கிறது.!

      மற்ற புது இதழ்கள் வருவதற்கு இடைஞ்சல் இல்லாமல் இருந்தால் இரத்த படலம் கலரில் எனக்கும் ஒ.கே.தான்.!

      Delete
    5. இரத்த படலம் பாக்ஸ் செட்.???

      கர்ர்ர்ர்...............
      -------குண்டு புத்தகம் வேண்டுவோர் சங்கம்.!

      Delete
    6. //வாவ்.!5 சந்தாக்களா ? //

      அதில் இரண்டு எனக்கானது ; அதில் இரண்டு என் உறவினர்களுக்கானது ; ஒன்று மட்டுமே வெளி நபருக்கானது என்பதால் இதில் வியப்படைய ஏதுமில்லை Mv சார்.

      //எல்.எம்.எஸ். ஒருவருக்கு மூன்றில் ஒன்றை பரிசாக கொடுத்தேன்.!அதை இன்று தூங்கும் போது இரவில் நினைத்தால் கூட தூக்கம் வரமறுக்கிறது.!// ஹா ஹா ஹா... சூப்பர் :))

      //இரத்த படலம் நான்கு வைத்துள்ளேன்.!//

      இப்படியா வெள்ளந்தியாக இருப்பீர்கள் நண்பரே?! இதை போய் இப்படி வெளிப்படையாகச் சொல்லலாமா ?! இனி உங்கள் மொபைல் ஃபோன் எப்பொழுதும் பிஸியாகத் தான் இருக்கப் போகிறது :))

      Delete
    7. //இரத்த படலம் பாக்ஸ் செட்.?? கர்ர்ர்ர்...............
      -------குண்டு புத்தகம் வேண்டுவோர் சங்கம்.!//

      குண்டுப் புத்தகத்தை எப்போதும் படிக்க முடியாது Mv சார்... Box set என்றால் ஒரு நாளைக்கு ஒரு புத்தகம் என்று தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு படிக்க வசதியாக இருக்கும். கைவலியும் இருக்காது, புத்தகமும் கிழியாது !

      Delete
    8. ////இரத்த படலம் நான்கு வைத்துள்ளேன்///..-- ஏங்க ஒருவரே 4காப்பிகள் வைத்து கொண்டால் .....மற்றவர்களுக்கு எப்படி கிடைக்கும்..?????...... இரண்டு காப்பிகளாவது இல்லாத நண்பர்களுக்கு நீங்கள் தரவேண்டும் சார்...... கலரில் இரத்த படலம் வெளி வந்தால் இந்த கருப்பு வெள்ளை 4ம் வீண்தானே!!?? ..கொஞ்சம் யோசியுங்கள்.....

      Delete
    9. ///கை வலியும் இருக்காது புத்தகமும் கிழியாது.!//

      நான் இரத்த படலம் , மின்னும் மரணம் , எல்.எம்.எஸ். போன்ற குண்டு புத்தகங்களை, "பல்லாண்டு வாழ்க " படத்தில் எம்.ஜி.ஆர். ஒன்றே குலம் என்று போற்றுவோம் என்னும் பாடலை பாடும்போது பயபக்தியுடன் ஒரு புத்தகத்தின் முன் அமர இருப்பார் அல்லவா .? அது போன்ற பொசிசனில் உட்கார்ந்து படிப்பேன்.!

      Delete
    10. @ ALL : போகும் ஊருக்கு வழி தேடுவோமே - ப்ளீஸ் ? 300 பேருக்காக ஒரு 18 பாக இதழ் என்றால் அதற்கான விலை நிச்சயம் தலைசுற்றச் செய்யும் ஒரு நம்பராகத் தான் அமைத்திட வேண்டி வரும் !அத்தகைய விலைகளைத் தர 300 பேர் தயாராக இருந்தாலும் அதனை நிர்ணயம் செய்யும் மனம் எனக்கு ஒரு நாளும் வரப் போவதில்லை !

      தவிர, கிட்டத்தட்ட 5 மாதங்களது புது இதழ்களுக்கு ஈடான உழைப்பினை முன்னூறே பேரின் சேகரிப்பு ஆர்வத்தின் பொருட்டு ஒரு மறுபதிப்பினுள் முதலீடு செய்திடும் வயதிலும் நான் இல்லையே !

      Delete
    11. // முன்னூறே பேரின் சேகரிப்பு ஆர்வத்தின் பொருட்டு ஒரு மறுபதிப்பினுள் முதலீடு செய்திடும் வயதிலும் நான் இல்லையே ! //
      மிகவும் சரியான நிலைப்பாடு!

      Delete
    12. //நான் இரத்த படலம் , மின்னும் மரணம் , எல்.எம்.எஸ். போன்ற குண்டு புத்தகங்களை, "பல்லாண்டு வாழ்க " படத்தில் எம்.ஜி.ஆர். ஒன்றே குலம் என்று போற்றுவோம் என்னும் பாடலை பாடும்போது பயபக்தியுடன் ஒரு புத்தகத்தின் முன் அமர இருப்பார் அல்லவா .? அது போன்ற பொசிசனில் உட்கார்ந்து படிப்பேன்.!//

      MV சார், சிரிப்பை அடக்க முடியவில்லை. அட்டகாசம் :-))))

      Delete
    13. மிஸ்டர் மரமண்டை.!@

      // வெள்ளந்தியாக உள்ளீர்கள் //

      எனக்கும் எனது மனைவிக்கு சண்டை வரும் போது அவள் என்னிடம் " வெளியில் நீங்கள் அப்பாவி போல் நடந்து கொண்டாலும் உண்மையில் நீங்கள் காமிக்ஸில் கார்சனின் கடந்த காலத்தில் வரும் "அப்பாவிகள் " என்ற உண்மை எனக்கு மட்டும்தானே தெரியும்.! நீங்கள் அப்பாவி கிடையாது " அப்பாவிகள் " என்பாள்.! அந்த கூற்று உண்மையோ அல்லது பொய்யோ எனக்கு தெரியாது.! ஆனால் காமிக்ஸ் என்றால் உண்மையில் " அப்பாவிகள் " ஆகிவிடுவேன்.!

      Delete
  64. //அதிகம் வேண்டாம் சார், என்னைப் போன்ற தீவிர காமிக்ஸ் வாசகர்களுக்காவது வெறும் 300 எண்ணிகையிலான முன்பதிவு திட்டத்தை - ''இரத்தப்படலம்'' முழுவண்ண மறுபதிப்பிறகாக அறிவிக்கலாமே விஜயன் சார்?! //
    //ஒரு காமிக்ஸ் வாசகனாக எனக்கு கொஞ்சமாவது உரிமை இருக்கிறது என்று நம்புகிறேன்.//
    +111111111111111111111111

    ReplyDelete
    Replies
    1. Dasu Bala : ஒவ்வொரு வாசகருக்கும் ஒவ்வொரு இதழின் தேவையிருக்கக் கூடும் ; நிச்சயம் அதனைக் கோரும் உரிமையும் இருக்கக் கூடும் தான் ! ஆனால் அவை சகலத்தையும் நிறைவேற்றும் "ஆற்றல்" என்றொரு விஷயம் எங்களுக்கும் அவசியமாகிடாதா ?

      கேட்ட பணத்தைத் தர உங்களுக்கு சாத்தியமும் ஆகிடலாம் தான் ; ஆனால் பணம் என்பதையெல்லாம் தாண்டி இதனில் "உழைப்பு" என்றொரு விஷயத்துக்கு சில limitations உண்டே ?

      Delete
  65. இரத்தப்படல வர்ணப் பதிப்புக்குத்தான் சில வருடங்கள் காத்திருப்பது என்று எப்போதோ போராட்டக் குழுக்கள் அனைத்தும் முடிவெடுத்தாயிற்றே. இப்போ என்ன திடீரென்று பூதத்தைக் கிளப்பி ஆசிரியரைப் பயமுறுத்தறாங்க? அடுத்தடுத்த வருடங்களில் நிறைய புது வரவுகள் இருக்கும்போல தெரியுது. அவற்றை நமக்கு கொண்டுவர ஆசிரியர் தெளிவா இருக்கோணும். அவரைக் குழப்பி காரியத்தைக் கெடுத்துடாதீங்க நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துடன் முழுவதும் உடன்படுகிறேன்!

      Delete
    2. +1. 2020 வரை காத்திருப்போம்.

      Delete
    3. எடிட்டர் கூறுவது நடைமுறை உண்மை.!

      ஆனால் தற்போது கலரில் பார்க்கும்போது , மிஸ் பண்றோமோ? என்று மனதின் மூலையில் ஒரு ஆசை&ஏக்கம்.அது மனதை நகத்தால் பிராண்டு போல் உள்ளது.!

      ஊதுகின்ற சங்கை ஊதுவோம். விடியும் போது
      விடியட்டும்.!

      2020 +1111111111111..........

      Delete
    4. என்னிடம் ஐந்து பெட்டிகளில் காமிக்ஸை வைத்து பரணில் வைத்துள்ளேன்.! அதை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வொன்றாக எடுத்து படிப்பது வழக்கம் . தற்போது பழைய கறுப்பு வெள்ளை புத்தகங்களை படிக்கவே தோன்றுவது இல்லை (மாடஸ்டி , டெக்ஸ் விதிவிலக்கு ) பொடி எழத்துக்களை படிக்க சிரமப்படுவது ஒருபக்கம் என்றாலும் ,நல்ல தரமான கலருக்கு பழக்கப்பட்டு விட்டேன் என்பதுதான் நிஜம்.!

      மாடஸ்டி கதைகளுக்கு ஒரு மாற்றம் வரதா என்று. விடியட்டும் என்று காத்துள்ளேன்.!

      Delete
    5. பொடியன் சார் கருத்துக்களை ஆதரிக்கிறேன் ....இரத்த படலத்தை விட்டு வெளியே வருவது ஆசிரியருக்கு மட்டுமல்லாமல் நமக்கும் நலன் பயக்கும் ஒன்றே ....

      Delete
  66. 2016 சந்தா விவர அறிவிப்பு அடுத்த வாரம் வரபோகுதா?! யப்பா, தலைவர் சூப்பர்ஸ்டார் படம் ரீலீஸ் ரேஞ்ச்க்கு இப்பவே த்ரில்லிங்கா இருக்கே! இன்னமும் டிசைன் வேலைகள் முடிவுறா நிலையில் இருப்பின் இந்த அட்டைபட டிசைனில் உள்ள கார்சனின் தலை, உடல் பகுதி சரியான விகிததில் இருக்குமாறு ஓவியரிடம் சொல்லவும். :)

    ReplyDelete
  67. 250 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சார் ! கடந்து வந்த பாதை பற்றிய பார்வையும்,குறிப்புக்களும்,ஆதங்கங்களும் அழகாக கூறி உள்ளீர்கள். :)


    தீபாவளி இதழின் அட்டை டிசைனும் அருமையாக உள்ளது.தனி ஒருவரை விட குழுவாக அல்லது முக்கிய கதாபாத்திரங்கள் இப்படி முன்னட்டையில் இல்லாவிடினும் பின்னட்டையிலாவது இடம்பிடிக்கும் போதெல்லாம் எப்போதும் நன்றாக இருப்பதாக ஓர் பீலிங் எனக்கு வருகின்றது. :)

    ReplyDelete
  68. அன்புள்ள எடிட்டர்,

    மலரும் நினைவுகள் ... அருமையாக ஒரே பதிவில் ...

    அடுத்த வாரம் முன்னோட்டத்தில், தல தனிச் சந்தாவை மறந்துவிட வேண்டாம்.. :)

    வெகுநாட்களாக, பெரும்பான்மையான வாசகர்கள் வேண்டுகோள் விடுத்து, முறையாக அறிவிக்கப்பட்டு, வாசகர் கருத்துகள் கேட்டறியப்பட்டு, அதற்கு பெரும்பான்மையான வாசகர்கள் ஆதரவு தெரிவித்த, டெக்ஸ்-ன் தனி track (மாதமொருமுறை அல்லது இருமுறை) மற்றும் டெக்ஸ்-ன் மறுபதிப்புகள் பற்றிய, 2016 plan-யைத் தெளிவாக அறிவிக்க வேண்டுகிறேன்

    முன்கூட்டிய நன்றிகள்! ..

    ReplyDelete
    Replies
    1. வழமை போலவே நானும் என்னுடைய ஆதரவ தெரிவிச்சுக்கிறேன்

      Delete
  69. இன்று பிறந்த நாள் காணும் தம்பி டெக்ஸ் சம்பத் , இன்று போல் என்றும் கைநிறைய காமிக்ஸ் உடன் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகிறேன்....

    ReplyDelete
    Replies
    1. கண்குளிர வாசகர்களுக்கு ஸ்டில் போட்டு அசத்தும் நம் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .! வாழ்த்த வயதில்லை வணங்குறேன்.
      ____/\____

      Delete
    2. டெக்ஸ் சம்பத்துக்கு என்னுடைய வாழ்த்துகளும்!

      Delete
    3. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சம்பத் !!!!! :-)

      Delete
    4. வாழ்த்துக்கள. சம்பத் சார் ....;-)

      Delete
  70. மடிப்பாக்கம் மாடஸ்தி சார் ...நான் அதிகம் மறுமுறை படிப்பது கைக்கு அடக்கமான கறுப்பு வெள்ளை இதழ்களை தான் ...

    ReplyDelete
  71. Happy birth day சம்பத் பிரதார்

    ReplyDelete
  72. தலைவரே.!

    சமீபகாலமாக கலர் புத்தகங்களையே அதிகம் படிக்கின்றேன்.! சார்.! (உஜாலாவுக்கு மாறிட்டேன் என்கிறமாதிரி ) கடந்த பத்து நாட்களாக அனைத்து லார்கோ கதைகளையும் ஒன்றாக சேர்த்து வைத்து படித்து வருகிறேன்.!ஓவியங்களின் நுட்பமான அழகை ரசித்து வருகிறேன்.!எவ்வளவு கவனமாக திறமையாக வரைந்துள்ளனர்.கமான்சே போன்று இல்லாமல் கதையும் அட்டகாசம்.!
    அனைத்து லார்கோவையும் ஒரே புத்தகங்களாக பைண்டிங் செய்ய தெருதெருவா வண்டியில் வலம் வருகிறேன். எல்லோரும் இதை மொத்தமாக பைண்டிங் செய்யவேண்டும் என்று கூறியவுடன் , மேலும் கீழம் பார்த்துவிட்டு ,ஒரு ஜந்துவை போல் பார்க்கின்றனர்.! சென்னை நண்பர்கள் யாரவது உதவுங்களேன்.?

    ReplyDelete
  73. தலைவரே .! உங்களிடம் லயன்& முத்து காமிக்ஸ் முழு கலெக்ஷனும் உள்ளதா.?

    ReplyDelete
    Replies
    1. மடிப்பாக்கம் மாடஸ்தி சார் .....

      நான் காமிக்ஸ் படிக்கும் ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரை எனது மிக பெரிய ஆசை ...கனவு எல்லாம் நமது லயன் முத்து காமிக்ஸ் முழுவதுமாக சேர்த்து மீண்டும் ஒவ்வொரு இதழாக ஒவ்வொரு நாளும் படித்து அந்த ஆரம்ப நாட்களுக்கு பயணம் செய்ய வேண்டும் என்பதே ...ஏன் லட்சியம் என்று கூட சொல்லலாம் ..எனக்கு பிறகு அதை பாதுகாத்து. எனது மகனுக்கு ஒவ்வொன்றையும் அந்த முத்துக்களை படிக்க வைக்க வேண்டும் என்பதும் கனவு ..

      ஆனால் இது வரை கனவாகவே இருக்கும் இந்த நிலை கனவாகவே போக கூடிய சூழ்நிலை தான் அதிகம் என்பதை உணர்ந்தும் அதிக காலமாகி விட்டது .

      ஆனால் என்ன..... அடிக்கடி நமது. இதழ்கள் அனைத்தும் கிடைப்பது போல கனவு வந்து அடுத்த நாளை வெறுப்பேற்றி விடுவது தான் நிரம்ப கடுப்பேற்றுகிறது. சார் ... ;-((

      Delete
    2. ஆனால் எப்படியோ லயன் நூறில் இருந்தும் ...முத்து 200ல் இருந்தும் கஷ்டப்பட்டு ...கடினப்பட்டு ...சேகரித்து பாதுகாப்பாக வைத்துள்ளேன் சார் ...அதுவரைக்கும் கொஞ்சம் சந்தோசம் தான் ....;-)

      Delete
    3. .

      /// இதழ்கள் அனைத்தும் கிடைப்பது போல் கனவு ///

      தலைவரே.! இதேபோல் முன்பு அடிக்கடி வரும்.! தற்போது சர்க்கரை பந்தலில் தேன் மாரி பொழிவது போல் மாதம் மாதம் ஒழங்காக காமிக்ஸ் வருவதால் ஆழ்மனம் திப்தி அடைந்துவிட்டது என்று கருதுகிறேன்.! கனவுகள் வருவது தற்போது குறைந்து உள்ளது.!

      Delete
    4. சரியான விளக்கம் MV சார்..... எனக்கும் இந்த வகை கனவுகள் சமீபமாக குறைந்து விட்டன.....

      Delete