Saturday, September 05, 2015

காலை எழுந்தவுடன் கூரியர்....!

நண்பர்களே,

வணக்கம். என்னவோ தெரியவில்லை - கடைசி மூன்று மாதங்களாகவே நமது டெஸ்பாட்ச் தினம் ஒரு வெள்ளிக் கிழமையாகவே அமைந்து  வருகிறது ! அதிலும் இன்றைக்கு எங்கள் நகரில் காலை 9 முதல் இரவு 7 வரை முழு மின்தடை என்ற குண்டை E.B தூக்கிப் போட்டிருந்தது வியாழன் இரவினில் ! வார இறுதிக்குள் உங்கள் கைகளில் புத்தகங்கள் இல்லாது போனால் லியனார்டோ தாத்தா தனது அசிஸ்டண்டுக்குத் தரும் 'கவனிப்பு' தான் நமக்கும் கிட்டும் என்ற பரபரப்போடு பைண்டிங் பணியாளர்களையும், நமது பேக்கிங் பணியாளர்களையும் பகல் பொழுதில் சுத்தமாய்ப் பெண்டைக் கழற்றி விட, மாலை 4 மணிக்கு முன்பாகவே உங்களின் கூரியர்கள் சகலமும் கிளம்பி விட்டன - 4 இதழ்கள் அடங்கிய டப்பாக்களில் ! அசாத்திய வேலை இன்றைக்கு நம்மவர்களுக்கு !! So -நாளைக் காலையில் உங்கள் நகர் கூரியர்களின் கதவுகளின் வலிமைகளைப் பரிசோதிக்கத் தொடங்கிடலாம் ! 

And "என் பெயர் டைகர்" பற்றிய அறிவிப்பை இம்மாத இதழ்களில் ஏதேனும் ஒரு மூலைக்குள் நுழைக்க வாய்ப்பில்லாது போய் விட்டது இந்த மின்தடை சிக்கலினால் ! எங்கள் UPS தாக்குப் பிடித்த வரைக்கும் இதற்கான அறிவிப்பு + முன்பதிவுப் படிவத்தினை பிரிண்ட் அவுட் எடுத்து பிரதிகளுள் நுழைத்திருந்தோம் ; but அது ஒரு 100-ஐத் தாண்டியிராது !! So இதுவே நமது முதல்  official அறிவிப்பாய் எடுத்துக் கொள்ளுங்களேன் guys ! ஒரு முழு வண்ண deluxe பதிப்பு + ஒரு economy black & white பதிப்பு என்ற இந்த பரீட்சார்த்த பார்முலாவுக்கு பெரும்பான்மை நண்பர்கள் thumbs up தந்திருப்பதால் - we are going ahead with it as planned !! (மாயாவி.சிவா : உங்களுக்கு மட்டும் மாற்றிப் பொருள்பட்டதன் காரணம் விளங்கவில்லை எனக்கு !! ; ஏதேனும் ஒரு வடிவம் மட்டும் தான் சாத்தியமெனில் அந்த சாய்ஸை நான் வழங்கியிருக்கவே மாட்டேனே - கண்ணை மூடிக் கொண்டு குறைந்த விலையிலான economy பதிப்புக்கு அறிவிப்பே வெளியிட்டு இருப்பேனே ?!! இந்த dual edition பற்றிய உங்களின் சிந்தனைக் கோரல் தானே கடந்த பதிவின் நோக்கமே ?!)
Color Advt in the morning !! Don't have the files with me now !!
And - மிஸ்டர்.டைகர் கதைவரிசையில் 5 கதைகளா - 6 கதைகளா ? என்ற சந்தேகமும் வேண்டாமே ! இந்தக் கதைச் சுற்றில் மொத்தம் 5 பாகங்களே & இந்த சாகசம்  5 பாகங்களில் நிறைவு பெறுகிறது ! ஆனால் நான் கடந்த பதிவினில் 5+1 என்று குறிப்பிட்டுச் சென்றிருந்தது காரணத்தோடு தான் ! படைப்பாளிகள் இந்த 5 பாகக் கதையின் மையப் புள்ளிகளை ஒன்று திரட்டி ஒரு விதமான ரீமேக் செய்து ஆறாவதாய் ஒரு ஆல்பத்தை 2007-ல் வெளியிட்டுள்ளனர் ! சொல்லப் போனால் டைகர் தொடரின் இறுதி ஆல்பம் என்ற வகையில் இதுவொரு collector's edition ! ஆனால் அதே கதையைப் புதியதொரு பார்வைக் கோணத்தில் சொல்லியுள்ளது மட்டுமே வித்தியாசம் !  So இதனையும் தற்போது "எ.பெ.டை" கதையோடு இணைத்து விட்டால் ஒரே கிச்சடியை மாறி மாறிக் கிளறியது போல் ஒருவித அலுப்புத் தட்டி விடும் ! "எ.பெ.டை" வெளி வந்து கொஞ்ச அவகாசத்துக்குப் பின்பாக இந்த one shot  62 பக்க அல்பத்தை (தேவையென்று நினைப்பின்) வெளியிட்டுக் கொள்வோமே ?!

இதனில் கதாசிரியர் சார்லியரின் பங்கும் உண்டு என்பதால் - சேகரிப்பின் பொருட்டு இதற்கொரு பிரத்யேக மதிப்பிருக்கலாம் ! 

சரி...நாளைய பொழுது பௌன்சரின் பொழுதா ? டைலனின் பொழுதா ? என்ற கேள்விக்கு பதிலறியக் காத்திருப்போம் - ஆவலாய் ! படிக்கப் படிக்க ஒவ்வொரு இதழ் பற்றியும் உங்களின் அபிப்பிராயங்களைப் பகிர்ந்திடலாமே - ப்ளீஸ் ! Bye for now guys !!

P.S : மதுரைப் புத்தக விழாவின் இறுதி 3 நாட்கள் காத்துள்ளன ! காலை முதல்  நமது ஸ்டாலில் புதிய வெளியீடுகள் கிடைக்கும் ! Please do visit !!

186 comments:

  1. படித்துவிட்டு வருகிறேன்

    ReplyDelete
  2. Replies
    1. இந்த தூக்கத்தில் எழுந்து நடந்து ...ஸ்கூலுக்கு போறதை இன்னும் விடலயா ????

      Delete
  3. Dear Editor,

    வெகுநாட்களாக, பெரும்பான்மையான வாசகர்கள் வேண்டுகோள் விடுத்து, முறையாக அறிவிக்கப்பட்டு, வாசகர் கருத்துகள் கேட்டறியப்பட்டு, அதற்கு பெரும்பான்மையான வாசகர்கள் ஆதரவு தெரிவித்த, டெக்ஸ்-ன் தனி track (மாதமொருமுறை அல்லது இருமுறை) மற்றும் டெக்ஸ்-ன் மறுபதிப்புகள் பற்றிய, 2016 plan-யைத் தெளிவாக அறிவிக்க வேண்டுகிறேன்

    முன்கூட்டிய நன்றிகள்!

    ReplyDelete
    Replies
    1. +1

      Dear Editor,

      Rather than a 600 page three in one which actually gets boring towards the middle of the second story, it just might be a good time to announce a TEX channel separate - with six books a year with MAXIs forming only single albums.

      Delete
    2. +2.....
      3குண்டு புத்தகங்கள் ....
      3தனி தனு கதைகள் ......
      மேக்ஸி உங்கள் இஷ்டம் போல.....
      மொத்தம் ஆண்டுக்கு 12கதைகளாவது வேணும் சார் ....நீங்கள் வருடத்தில் எப்படி தந்தாலும் ஓகே சார் ....

      Delete
  4. சார் எ.பெ.டை இதழுக்கு HARDCOVER அட்டைபடத்தையே தேர்ந்தெடுத்ததுக்கு மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  5. மாயாவி சார் ஹா ஹா ஹா மூனு நாளா நீங்க மட்டும் சிரிச்சி எங்களை கடுப்பேத்துனிங்க,அதான் பழிக்குப்பழி ஹா ஹா ஹா ஹி ஹி ஹி ஹி

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹாஹா ஹா ஹா ஹி ஹி ஹி ஹா ஹா ஹாஹா ஹா ஹா ஹி ஹி ஹி ஹா ஹா ஹாஹா ஹா ஹா ஹி ஹி ஹி ஹி

      Delete
    2. ஹா ஹா ஹி ஹாஹா ஹா ஹி ஹி

      Delete
    3. ஹா ஹா ஹி ஹாஹா ஹா ஹி ஹி

      Delete
  6. தமிழ் காமிக்ஸ் ரசிகர்களை மட்டுமல்லாது, பிரேசில், அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட பல நாட்டு ரசிகர்களையும் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைத்த நம் 'காமிக்ஸ் கட்டப்பா'வுக்கு நன்றிகளும், வாழ்த்துகளும்! :P

    ஏனுங்க... நானும் ஒருவாட்டி லைட்ட்ட்டா சிரிச்சிக்கிடவா? ஹாஹாஹா ஹாஹாஹா...( சாரி. கொஞ்சம் ஓவராத்தான் சிரிச்சுப்புட்டேன்)
    :D

    ReplyDelete
  7. Dear Editor,

    Are you reasonably convinced that this is a prudent move given our circulation strength? Perhaps the economy edition targets book festivals too?? (That a few of us will buy both editions is a given - but only few of us).

    ReplyDelete
    Replies
    1. Raghavan : Black & White பதிப்புக்கென நாம் ரொம்ப மெனக்கெட அவசியமிராது என்பது முதல் காரணம் ; அதே கதை ; மொழிபெயர்ப்பு ; DTP ...! பிராசசிங் & அச்சில் மாத்திரமே வேறுபாடு ! And புத்தக விழாக்களின் விற்பனை சாத்தியங்கள் இரண்டாவது காரணம் !

      தற்போது நடந்து வரும் மதுரைப் புத்தக விழாவில் ஆச்சர்யமூட்டும் decent விற்பனைகள் ; அதுவும் மின்னும் மரணம் ; லயன் 250 இதழ்கள் ஓரளவுக்கு நன்றாகவே விற்பனையாகியுள்ளன ! So சென்னை ; ஈரோடு ; சேலம் பட்டியலோடு மதுரையும் இனி வரும் காலங்களில் ஒரு நம்பகமான விற்பனை மார்க்கமாக அமைந்திடும் போல் படுகிறது !

      எல்லாவற்றிற்கும் மேலாய் நீங்கள் அனைவரும் தான் உள்ளீர்களே....கரை சேர்த்து விட மாட்டீர்களா - என்ன ?

      Delete
    2. மதுரை பரவாயில்லையா.!அப்பாடா.!நமது வாசகர் வட்டம் விரிவடையும் போது.!விலை பிரச்சனை,கி.நா,தனி சந்தா ,என்று எல்லா பிரச்சனைகளும் வராது.!
      வாசகர்களான நாமும் முடிந்த அளவு பழைய வாசகர்களை உள்ளே இழக்க முயற்ச்சி செய்ய வேண்டும்.!பழைய வாசகர்கள் அனைவரும் நம் வட்டத்தில் ஐக்கியமாகி விட்டால் .,அப்புறம் என்ன?,"காற்றுக்கென்ன வேலி கடலுக்கு என்ன மூடி என்று தூள் கிளப்பலாம்.!அப்புறம் மாடஸ்டிக்கும் கதைகளுக்கு கூட தனி சந்தா கேட்கலாம்.!

      Delete
    3. காலை வணக்கம் அக்காவை விட மாட்டிங்களா&

      Delete
    4. காலை வணக்கம் அக்காவை விட மாட்டிங்களா&

      Delete
    5. Madipakkam Venkateswaran & விஜயன் சார் @
      வரும் வருடம்களிலும் மாடஸ்டி தொடர்ந்து வந்தால் போதும்! குறைந்தது வருடத்திற்கு 2 கதைகள் எனக்கு வேண்டும்!

      Delete
    6. பரணி@சார்.!கடலை தாண்ட நினைதால்தான் கிணற்றை தாண்ட முடியும்.!ஹிஹிஹிஹி................!

      Delete
    7. Madipakkam Venkateswaran @ நம்ப ஆசிரியரிடம் கிணற்றை தாண்டனும் சொன்னா போதும் நம்மை கடலையே தாண்ட வச்சிடுவார் :-)

      Delete
    8. பரணி சார்.@அது என்னவோ வாஸ்துவம்தான்.!


      சென்ற வருடம் மாடஸ்டிக்காக நீங்கள் அனைவரும் குரல் கொடுத்து இரண்டு சீட் வாங்கியதை மௌனபார்வையாளனாக இருந்த வெளியே சத்தம் வராத கண்ணாடிக்கூண்டில் இருந்து கத்தியது போல் அவஸ்தை பட்டதை என்றும் மறக்கமாட்டேன்.!இந்த தளத்திற்கு வர காரணமாக ஊக்குவித்த ஈரோடு விஜய் அவர்களையும் மற்றும் தமிழில் டைப்செய்ய சொல்லிக்கொடுத்த மாயாவி அவர்களையும் நான் மறக்க மாட்டேன்.!_____/\_____

      Delete
    9. காலை வணக்கம் அக்காவை விட மாட்டிங்களா&

      Delete
    10. காலை வணக்கம் அக்காவை விட மாட்டிங்களா&

      Delete
  8. என்னங்க நடக்குது

    ReplyDelete
  9. கடைல வாங்கரவங்கள என்ன பண்ணுவாங்க ..? நாம் அனைவரும் இரண்டையும் வாங்க நிர்பந்திப்பது போல இருக்கு ...! இப்படி இந்த இதழ் வரவேண்டிய அவசியம் என்ன ..? கேட்ட நீங்க வாங்க வேண்டாம்னு சொல்லுவிங்க .பேசாம இது முத்து 350 கவே வந்துருக்கலாம் 300ஓட போயிருக்கும் .ஏற்கனவே தல தீபாவளி மலர்னு ஒரு 25 ரூபாய் போச்சு ஒரு அட்டை போச்சு .தனியா வந்தாலே ரூபாய் 100+75=175 .குட்ட குட்ட குனியறவர் நல்லவர் குனிய குனிய குட்ட்றவர் நல்லவர்

    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்றீங்க? உங்களுக்கு எது சரிப்பட்டு வருதோ அதை மட்டும் வாங்கலாமே? இரண்டையும் வாங்க அவர் யாரையும் கட்டாயப் படுததவில்லையே? நான் கலர் மட்டும் தான் வாங்கப் போகிறேன்.

      Delete
    2. palanivel arumugam : //கடைல வாங்கரவங்கள என்ன பண்ணுவாங்க ..?//

      கடைக்காரர் எதை வாங்கி வைத்திருக்கிறாரோ - அதனைப் பிடித்தால் வாங்கப் போகிறார்கள் !

      And உங்கள் கணக்கில் அநியாயத்துக்குப் பிழை தெரிகிறதே...! 5 பாகம் கொண்ட இதழ் ; கடைசிப் பாகத்தில் பக்கங்கள் வழக்கத்தை விட அதிகம் எனும் போது - 60+60+60+60+70 = ரூ.310 என்பது விலையாக இருந்திருக்கும். Hardcover அட்டைக்கு ஒரு 30 ரூபாய் சுமாராய் சேர்த்துக் கொண்டால் விலை ரூ.340 ஆகிறது ! பேக்கிங் + கூரியருக்கு ரூ.50 போட்டுக் கொள்ளுங்கள் - மொத்தம் ரூ.390 ஆகிறதல்லவா ?

      அதைத் தான் தற்போது ரூ.450 விலைக்கு - குறைவான print run -ல் திட்டமிட்டிருக்கிறோம். வித்தியாசம் அறுபது ரூபாய் மாத்திரமே தவிர, நீங்கள் நினைப்பதைப் போல இருநூறு / முன்னூறு கிடையாது !

      And இரண்டையும் வாங்கும் நிர்பந்தம் எங்கிருந்து எழுகிறது ?? சொல்லப் போனால் - எதையுமே வாங்கிடாது போகும் உரிமையும், சுதந்திரமும் தானே இங்கே பிரதானமாய் உள்ளது ?? சந்தாவில் சேர்த்திருப்பின் - பிடித்தாலும், பிடிக்காது போனாலும் வாங்கியே தீரும் நோவு உண்டு ! தற்போது..??

      Delete
    3. சூப்பர் சூப்பர் சார் .....அருமையான விளக்கம் சார் ......

      Delete
    4. ஸார்...உங்க கணக்கு சூப்பர்...மூனு நாளா ஒரே பயமாயிடிச்சி...காரணம் மின்னும் மரணத்தின் கடைசியில,படிச்சவங்க கைகொடுங்கன்னு சொல்லிட்டு லாஸ்ட்டா...இனி இப்படி ஆகாது இப்படி ஆயிரம் ரூபாய்க்கு customized imprint எல்லாராலையும் வருஷ வருஷம் முடியாதுன்னு...சென்னீங்க...!
      அது விலைக்கு மட்டும் தான் அந்த திட்டத்துக்கு இல்லைன்னு புக்ஸ் வந்தப்போவே நண்பர்கள் கிட்ட ஸ்ராங்க சொன்னேன். நண்பர்கள் நச்சரிக்காமலே...நீங்களே திரும்ப customized imprint திட்டம் கொண்டு வந்ததுல...கட்டப்பா...ஹேப்பி அண்ணாச்சி..!

      திரும்ப நீங்க யோசிக்க ஆரம்பிச்சதும்...கறுப்பு வெள்ளைன்னு சொன்னதும்...குட்டையை குழப்பிட்டங்களோன்னு கிலி ஆயிடிச்சி..! சேலம் கழுகு...காமன்சே படிக்க ஆரம்பிச்சுட்டேன்... முடிச்சிட்டு...ஹீ..ஹீ...!

      Delete
    5. ஆசிரியரே,
      நண்பர் பழனிவேல் சொன்ன கணக்கு எ.பெ.டை உடையது அல்ல. டெக்ஸ் தீபாவளி மலர் மற்றியது. முதலில் இரண்டு தனித்தனி இதழ்களை வெளியிடுவதாக இருந்தது. அது இப்போது ஒரே புத்தகம் ஆகி விட்டதல்லவா? 100 + 75 என்று அறிவிக்கப்பட்டது இப்போது சேர்ந்து ஒரே புத்தகமாக 200 விலையில் ஒரே அட்டையில் (தனித் தனியாக வந்தால் இரண்டு அட்டையல்லவா?) வருகிறது என்பதே பழனிவேல் சொல்வது (நான் சொல்லவில்லை. எனக்கு இந்த விபரங்கள் ஞாபகம் இல்லை).

      Delete
    6. டியர் எடிட்டர்,

      உங்கள் கணக்கு : 60+60+60+60+70.

      தனியே வந்திருந்தால் ஒரு புத்தகத்திற்கு 10 ரூபாய் லாபம் வைத்திருந்தாலும், இப்போது சேர்ந்து வருவதால் தனி இதழ் லாபம் தவிர்த்து, making cost:

      50+50+50+50+60 = 260
      ஹர்ட் கவர் அட்டையுடன் = 290 (நீங்கள் சொன்னது 30)
      பக்கிங் அண்ட் கூரியர் சேர்த்து = 340 (நீங்கள் சொன்னது 50)
      வருமான வரி ஒரு புக்குக்கு = 10 (ஹி ஹி )

      மொத்தம் = 350
      உங்கள் அறிவிப்பு = 450

      ஆக உங்கள் லாபம் = 100

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. @Raghavan, தனித்தனிஇதழ்கள் & தொகுப்பு - இவற்றின் தயாரிப்பு செலவை வைத்து Flat'ஆக லாபத்தை கம்பேர் பண்ணுவது பொருந்தாது. டைகர் கதைகளின் விற்பனை ரிஸ்க் மற்றும் Possible (காகித) விலையேற்றங்கள் பற்றி சென்ற பதிவுகளில் வந்த தகவல்களின் மூலம் புரிவது என்னவென்றால்.... Private auto factor dominated the share auto factor for this particular set of stories inevitably :P

      Btw, thanks for supporting the B&W version. I believe blueberry and few rare stories stands even better on b&w.

      Delete
    9. @ ரமேஷ் குமார்,

      லாபம் கோபம் எல்லாம் பொருந்தாதுன்னு தெரியும் .. இங்க என்னென்னெமோ எழுதி எடியோட optionகளைக் கூட கேள்விக்குறி ஆக்குறாங்க - நான் சும்மா எனக்கு தெரிஞ்ச கணக்கா தட்டிவிட்டேன் :-)

      BTW "டைகர்" (பக்கத்துக்கு வீடு நாய் தான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது ;-)) கதைக்கு மட்டுமல்ல - பொதுவாகவே I am a big fan of black and white comics. கலர் என்றால் XIII போல natural coatல இருக்கணும். டைகர் (லொள் லொள் !!) கொஞ்சம் பஞ்சு மிட்டாய்க் கலவை .. ஒரிஜினலில் !

      சில பிரின்ஸ் கதைகள் கூட கலரில் கலக்கும் !

      Delete
    10. முதல் முறையாக ஒரு b & w குண்டு புக் hard cover-ல் வரயிருக்கிறது? அது தல தீபாவளி குண்டு புக்கு என்பதை நான் சொல்லவும் வேண்டுமா...?

      Delete
    11. இந்த லாபம் நட்டம் கணக்கை நாம் ஆசிரியரிடம் விட்டுவிடுவோமே? நாம் நமது காமிக்ஸ் வாசிப்பை மட்டும் தொடருவோம்!

      இதுநாள் வரை இந்த காமிக்ஸ் நமக்கு கிடைப்பதற்கு நமது ஆசிரியரின் தீராத காமிக்ஸ் காதல்! அது தொடரவேண்டும்.

      Delete
    12. This comment has been removed by the author.

      Delete
    13. @ராகவன்
      டைலன் டாக் படிக்கும் போது உங்களுக்கு '.....' ஞாபகம் வராதா...? ஏன் டைகர்..? எங்க ஊர்ல ...... ஜிம்மின்னு தான் கூப்பிடுவோம்! புலியை மட்டும்தான் டைகர்-ன்னு கூப்பிடுவோம்.

      Delete
    14. //இந்த லாபம் நட்டம் கணக்கை நாம் ஆசிரியரிடம் விட்டுவிடுவோமே? நாம் நமது காமிக்ஸ் வாசிப்பை மட்டும் தொடருவோம்! //
      +1. குன்றேறி யானைப் போர் காணும் நமக்கு யானையின் வலி தெரியாது.

      Delete
    15. @ MH Mohideen : /* டைலன் டாக் படிக்கும் போது உங்களுக்கு '.....' ஞாபகம் வராதா */

      வந்திச்சே .. நைலான் நாய் அப்டீன்னு தமிழுக்கு தலைப்பு கூட யோசிச்சு வெச்சிருந்தேன் .. எடி முந்திகிட்டாரு .. டைகர் குடுத்த அனுபவமோ :-)

      @ Parani from Bangalore

      /* இந்த லாபம் நட்டம் கணக்கை நாம் ஆசிரியரிடம் விட்டுவிடுவோமே */

      நானா மொதல்ல கணக்கு போட்டேன் .. அவரு போட்டாரு நான் பதிலுக்கு போட்டேன் .. அதான் டமாசுன்னு சொல்லிட்டனே :-) [இப்போ smilie கூட போட்டாச்சே]

      @ Mahendran Paramasivam,

      /* குன்றேறி யானைப் போர் காணும் நமக்கு யானையின் வலி தெரியாது */

      நவம்பர் டிசம்பர் இதழ்கள் மொழிபெயர்க்க ஒரு கை குறைகிறது என்று பேசிக்கிறாங்க ! நீங்க OKவா? ;-)

      Delete
    16. Raghavan @ பொதுவாக சொன்னேன்! தவறாக எண்ண வேண்டாம்! :-) [இப்போ smilie கூட போட்டாச்சே]

      Delete
    17. //இந்த லாபம் நட்டம் கணக்கை நாம் ஆசிரியரிடம் விட்டுவிடுவோமே? நாம் நமது காமிக்ஸ் வாசிப்பை மட்டும் தொடருவோம்! //
      +1

      Delete
    18. //நவம்பர் டிசம்பர் இதழ்கள் மொழிபெயர்க்க ஒரு கை குறைகிறது என்று பேசிக்கிறாங்க ! நீங்க OKவா? ;-)//

      ஏன் நல்லாதானே போயிடு இருக்கு..எதுக்கு இந்த கொலவெறி... :)

      Delete
  10. கண்ணா ரெண்டு லட்டு திங்கலாம்
    ஹைய்யா

    ReplyDelete
  11. // So -நாளைக் காலையில் உங்கள் நகர் கூரியர்களின் கதவுகளின் வலிமைகளைப் பரிசோதிக்கத் தொடங்கிடலாம்.

    ஏங்க, நீங்களே இப்பிடி கொரியர் ஆபீஸ் கதவை ஒடைக்கச் சொல்லி ஐடியா குடுக்கலாமா இப்பிடி? :P :D கதவைத் தட்டி விட்டு யாராவது வெளிய வந்து பார்சல் வந்துச்சான்னு பார்த்து எடுத்துக் கொடுக்கற வரை வெளியவே நிக்கறது தானே நியாயம். ;-) :P

    ReplyDelete
    Replies
    1. நண்பரே.!சென்னையில் பக்கத்து வீட்டுகாரனுக்கே பக்கத்தில் யார் வசிக்கிறார்கள் என்று தெரியாது.!ஆனால் என்போட்டோவை மட்டும் ஏரியா கூரியர் ஆபிஸில் காட்டினால் கரெக்ட்டாக வீட்டில் கொண்டுவந்து விட்டுவிடுவார்.!

      Delete
    2. Madipakkam Venkateswaran @ போட்டோ விசயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க :-)

      Delete
  12. அஸ்ஸலாமு அலைக்கும் ....ஆசிரியரே
    ஏற்கனே ரொம்ப லேட்'டாய் வரும் டப்பா கூரியர்+ உங்கள் பங்குக்கு ஒரு ஞாயிறு என கிட்ட தட்ட ஒரு வாரத்துக்குள் ரீச் ஆகும் படி புத்தகங்களை அனுப்பி திரிசங்கு சொர்க்த்தில் என்னை உலவ விட்டதற்கு (நற..நற..)நன்றி

    ...

    ReplyDelete
    Replies
    1. AHMEDBASHA TK : DTDC -க்கு மாறியது முதலாக பெங்களுருவில் உங்களைத் தவிர பாக்கி அனைவருக்குமே மறு தினப் பட்டுவாடா கிடைத்து வருகிறது நண்பரே..! அவர்களது தலைமையகம் பெங்களூரு தான் என்பதால் அங்கே அவர்களது சர்வீஸ் நன்றாகவே உள்ளது ! உங்கள் ரூட்டில் வரும் டெலிவரி பையனுக்கு அந்த மக்கன் பேடாவைக் கொஞ்சம் கண்ணில் காட்டி வையுங்கள் - maybe இன்னும் துரிதமாய் வேலை செய்வான் !!

      Delete
    2. எனக்கு பொதுவாக 2-3 தினம்கள் ஆகிறது!

      Delete
    3. ///உங்கள் ரூட்டில் வரும் டெலிவரி பையனுக்கு அந்த மக்கன் பேடாவைக் கொஞ்சம் கண்ணில் காட்டி வையுங்கள் - maybe இன்னும் துரிதமாய் வேலை செய்வான் !!///

      கண்டிப்பாக கொடுத்துவிடுகிறேன் ஸார்.....

      நல்ல ஐடியா...

      Delete
    4. @ பரணி...எனக்கு பொதுவாக 2-3 வாரங்கள் ஆகிறது! (சோகமான ஜோக்கர் போட்டோக்கள் பல).

      Delete
    5. மேற்கிலிருந்து ம. ராஜவேல் @ கடந்த வருடம் வரை இதற்காக கவலைபட்டேன். தச்சமயம் இதனை பற்றி கவலைபடுவது இல்லை. ஏன் என்றால் குடும்ப சூழ்நிலையின் நமது புத்தகம்களை உடனே படிக்க முடிவது இல்லை! நேற்று தான் நமது மின்னும் மரணம் படித்து முடித்தேன் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்!

      Delete
  13. திரு விஜயன் அவர்களே காலை வணக்கங்கள்..!

    நீங்க என்னமோ சொல்றிங்க..பட் தலைப்பு தவிர எதுவும் சரியா தெரியலை..காரணம்...
    மணக்கும் தங்கம் கைபற்றப்பட்டுவிட்டது...ஹாஹா...இங்கே'கிளிக்'

    ReplyDelete
    Replies
    1. mayavi. siva : வாழ்க ST கூரியர் !!

      Delete
    2. சைக்கிளிங் போக வேண்டியது நள்ளிரவு 4மணிக்கு .....ஹூம் நாங்கள் லாம் தூங்கிட்டு இருக்கும் போதே புக்கை வாங்கிட வேண்டியது ...இங்கே க்ளிக் ஐ போட்டு காதில் புகையை வர வைக்க வேண்டியது ....க்ர்ர் .....அடுத்த மாதம் 1ம் தேதி யே அந்த சைக்கிளை ஆட்டைய போட்டுவிட்டு போயிட போறேன் ......கன்ஃபார்ம்டுங்க....

      Delete
    3. சிவா, நீங்கள் நல்லா வருவிங்க!

      Delete
    4. என்னப்பா..இன்னுமேவா யாருக்கும் புக்ஸ் வரலை...ரெண்டு புக்ஸ் படிச்சி முடிச்சி ஒரு பதிவு போடவே நான் தயாராயிட்டேன்...! ஹாட் லைன்,மினி ஹாட் லைன்,சஜஷன் for மேச்சிரிட்டி ரீடர்ஸ்...இத பத்தியாவது யாராவது எழுதுங்களேன்..!

      Delete
    5. சிவா, நீங்கள் இன்னும் நல்லா வருவிங்க!

      Delete
  14. என்னை பொறுத்த வரையில் கலரா பிளாக்& வொயிட்டா என்பதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை...
    தங்கம் சங்கிலியாக இருந்தால் என்ன... மோதிரமாக கிடைத்தால் என்ன....

    ReplyDelete
    Replies
    1. ரிட்டையர் ஆக போகிறவர்களுக்கான...........
      பிரிவு உபசார விழா எப்பவுமே கொஞ்சம் பலமாக தான் இருக்கும் ....என்சாய் ........இனிமேல் மலரும் நினைவுகள் மட்டும் தான் ......."ஏதோ நினைவுகள் மலருதே ......"ன்னு பாடிட்டு இருங்கள் என் பெயர் டவுசரு ச்சே என் பெயர் டைகரை கையில் வாங்கும் வரை..........ஹெ ஹெ......

      Delete
    2. Rummi XIII @
      // தங்கம் சங்கிலியாக இருந்தால் என்ன... மோதிரமாக கிடைத்தால் என்ன //

      செம கமெண்ட்!

      Delete
    3. செரிப்:கிரிமினல்-சைக்காலஜி பாடம்..!
      என்ன இழவு கொர்சோ..? சோதாப்
      பயல்களுக்கு சுயநலத்திலும் சுய முன்னே
      ற்றத்திலும் தான் அக்கறை...மற்றபடி
      துப்பாக்கி விசையை இழுக்கக் கூட
      விரல்களில் திராணி கிடையாது..!

      தோற்று விடுவோமோ என்ற பயம்
      என்னை விடாது அலைகழித்துக்
      கொண்டிருக்கிறது டஸ்ட்...உன்னைத்
      தான் மலை போல் நம்பி
      கொண்டிருக்கிறேன்...

      யப்பா...சாத்விகமாய் ஒரு சிங்கம் என்னவொரு பொருத்தமான தலைப்பு..! கொட்டுற மழையில என்னவொரு சூடா டையலாக்...படிக்கறப்போ...வம்புக்கு இழுக்கதிங்க டவுஸ்...ச்சே..டெக்ஸ்...!

      ரம்மி ...நீங்க மாடஸ்டி வந்ததும் ரொம்பவே மாறிட்டிங்க..! இப்பெல்லாம் சங்கிலியில மோதிரம் கோர்த்து போட்டுகிறதுதான் பேஷன்..ஹாஹா..!

      Delete
    4. இந்த கெடா விருந்துக்கு போனம்னாக்கா......அங்கே ஒரு ஆட்டை நல்லா கழுவி விட்டு மஞ்சள் ,குங்குமம் போட்டு ....பெரிதாக மாலையை போட்டு இருப்பார்கள் .....அதுவும் நல்லா தலையை நிமிர்ந்த நிலையில் போஸ் தந்து கொண்டே இருக்கும் .....எல்லார் பார்வையும் அது மேலேயே இருக்கும் .....பூசாரி ஒரு பக்கம் படையில் போடுவாரு .....கசாப்பு கடைப்பையன் ஒரு சின்ன கட்டையை எடுத்து வந்து , கத்தி எல்லாம் எடுத்து வைத்து ரெடியா இருப்பான் .......சமையல் காரங்க இந்த வெங்காயம் எல்லாம் உரித்து வைத்து தேங்காய் ஆட்டிகொண்டே... , தண்ணீர் கொதிக்க வைத்து அரிசியை போட ஆரம்பித்து விடுவார்கள் ........இப்படி பல விதமான முஸ்தீபுகள் அந்த ஆட்டை நோக்கியே இருக்கும் ............இதற்கு மேலும் நான் ஏதும் டைப்ப வேணுமா என்ன........

      Delete
  15. விஜயன் சார்,
    // தற்போது நடந்து வரும் மதுரைப் புத்தக விழாவில் ஆச்சர்யமூட்டும் decent விற்பனைகள் ; //
    இதனை கேட்பதற்கு சந்தோசமாக உள்ளது! அப்படியே நீங்கள் மதுரைக்கும் ஒரு விசிட் அடித்தால் நமது வாசகர்கள் சந்தோசம் அடைவார்கள், விற்பனை இன்னும் அதிகரிக்கும்! ப்ளீஸ்! இந்த முறை முடியவில்லை என்றால் அடுத்த வருடம் நீங்கள் மதுரைக்கு ஒரு விசிட் அடிக்க வேண்டும்.

    ReplyDelete
  16. மாயாவி சிவா.! எப்படீங்க உங்களுக்கு மட்டும் இவ்வளவு
    சீக்கிரம் கிடைக்கிறது.? சான்சே இல்லை .!ஆபீசே 9 மணிக்குதானே ஓப்பன் பன்றாங்க .!கூரியர் வேனையே மடக்கி விடுகிறீர்களா.?அந்த ரகசியத்தை எங்களுக்கும் கூறுங்களேன்.!
    நான் புறநகர் பகுதியில் இருப்பதால் லோடே 11 மணிக்குத்தான் வருகிறது.ஹும் வந்தாலும் அழகுதான் பார்க்க முடியும்.! இன்று அரசு விடுமுறை என்பதால் மனைவி& பிள்ளைகள் வீட்டில் .!
    இந்த தளமே அமைதியாக உள்ளது. பௌன்சர் புயலுக்கு முன் உள்ள அறிகுறிகள் மாதிரி தெரியுது.!ஒ.கே.சேலோ கூரியர் கூரியர் ஆபிஸ்.......

    ReplyDelete
  17. சார் இந்த இரண்டு இதழ்களும் சென்னை புத்தக காட்சியி்ல் கிடைத்து விடுமா ....(அல்லது ) கறுப்பு வெள்ளை ....மட்டுமா...

    ..............


    இங்கே டைப்ப டைப்ப எஸ்டி கொரியர் போன்.... சூப்பரு .....


    ReplyDelete
  18. ஒரே கதை, ஒரே நேரத்தில், அதுவும் கஸ்டமைஸ்டு பிரிண்டில், முதல் முறையாக, இரண்டு எடிஷன்களில் வெளியாகும் ஒரு சாதனை எங்கள் தளபதியால் மட்டுமே சாத்தியம் என்பதை இறுதியாக நீங்கள் உணர்ந்தமைக்கு நன்றி எடிட்டர் சார்!

    ReplyDelete
    Replies
    1. அட..இந்த நன்றி சொல்ல யாருக்காச்சி தோணிச்சா...நீர் ரசிகரய்யா..!

      Delete
    2. ஆதி தாமிரா : நல்ல வேளைக்கு ஊசிப்பட்டாசு பற்றிக் கொள்ளவில்லை இம்முறை!!

      Delete
    3. டைகரின் பலவீனத்தை பலமா காட்டி பிட்டு போடறீங்களே...

      வேற மாதிரி கொளுத்திப் போட்டுருக்கேன்.. பார்ப்போம் :)

      Delete
  19. என்னை பொறுத்த வரையில் கலரா பிளாக்& வொயிட்டா என்பதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை...
    தங்கம் சங்கிலியாக இருந்தால் என்ன... மோதிரமாக கிடைத்தால் என்ன....

    ReplyDelete
    Replies
    1. ஆதி தாமிரா& ரம்மி உங்களின் டைகர் பாசம் மனதில் மகிழ்ச்சியை கொடுக்கிறது.! ____/\____

      Delete
    2. கண்ணீர் கசியும் படங்கள் பத்து - இதையும் சேர்த்து கொள்ளலாம்

      Delete
  20. புத்தகங்கள் வந்து சேர்ந்தன விஜயன் சார்

    டைலன் அட்டைப்படம் அசத்துகிறது சார்

    முதன் முறையாக டைகர்
    அட்டகாசமாக

    கலர் மற்றும் கறுப்பு வெள்ளையில் களம் இறங்கப்போகிறார்

    முன்பதிவு படிவமும் வந்தது

    நன்றி
    .

    ReplyDelete
  21. பார்சலை கைப்ற்றியாச்சு.!

    ReplyDelete
  22. DEAR MR . VIJAYAN SIR IF I PURCHASED COL & BKWT TIGER WHAT WILL BE THE COURIER CHRGES ?450+200=650/-OK

    ReplyDelete
  23. விஜயன் சார், அடுத்த வருடம் கடந்த சில பதிவுகளில் நண்பர்கள் பலர் குறிபிட்டது போல் அடுத்த வருடம் முதல் புதிய கதைகளை "customized print" வெளி இட வேண்டும். குறிப்பாக தோர்கல், 5 கதைகள் சேர்ந்து ஒரு குண்டு புத்தகமாக வரட்டும்!

    ReplyDelete
  24. GOOD MORNING TO ALL & GOOD POST

    SHAM1881@ERODE

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்! உயர்ந்த நண்பரே!

      Delete
  25. நண்பர்களே @ ஆசிரியர் ஒரு புதிய விசயத்தை எ.பெ.டை. கையில் எடுத்து உள்ளார், இதனை பற்றி மேலும் அலசாமல் நமது முழு ஆதரவையும் கொடுத்து, மிக பெரிய வெற்றி பெறசெய்வோம்.

    ReplyDelete
    Replies
    1. நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்போம் என்றென்றும் ...
      பிரிண்டிங் அருமையாக வருமாறு கவனித்துக்கொள்வது ஆசிரியர் பொறுப்பு........
      (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே..
      ஹா...ங்)

      Delete
  26. இன்று பிறந்த நாள் காணும் யது குல தலைவர் , கோபியர் கொஞ்சும் ரமணர் , துவாரகையின் பேரரசர் அருமை நண்பர் வாசுதேவ கிருஷ்ணரை வாழ்த்த வயதில்லை.வணங்குகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தி ஒரிஜினல் கௌபாய் :-) அன்னாரது லீலைகளை காமிக்ஸாக வெளியிட ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் !

      Delete
    2. ராகவன் சார்.!ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ..................!

      Delete
    3. @ ragavan ...

      You amaze me again and again with your sense of humor ...

      Delete
    4. டியர் ராகவன் !!!

      //தி ஒரிஜினல் கௌபாய் :-) அன்னாரது லீலைகளை காமிக்ஸாக வெளியிட ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் !//

      அமர் சித்ர கதைகளாக முன்பே வந்திருச்சே ஸார் .ஒருவேளை,நீங்க சொல்ற "லீலைகள் " அந்த கதைகளில் இல்லையோ ? சரி விடுங்க ஸார்.இருக்கவே இருக்கார் நம்ம எடிட்டர். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை."கிருஷ்ண லீலா" ன்னு ஒரு பக்கா கிராபிக் நாவல் போட வச்சிரலாம்.hard cover. விலை ரூ.....( அதை இப்ப சொன்னா வெட்டுக்குத்து ஆயிறும்)))) நம்ம பூனையார் வேற ரொம்ப நாளா ரொமாண்டிக் லவ் ஸ்டோரி கேட்டுட்டு பக்கத்து வீட்டு பூனையை பிராண்டிட்டு இருக்காரு ;-))) அந்த பக்கத்து வீட்டு அப்பாவி பூனையை காப்பாத்தவாச்சி அந்த புக்க போட்டே ஆவணும்.போட்டே ஆவணும்.ஹிஹி !!!

      Delete
    5. டியர் ராகவன் !!!

      //தி ஒரிஜினல் கௌபாய் :-) அன்னாரது லீலைகளை காமிக்ஸாக வெளியிட ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் !//

      அமர் சித்ர கதைகளாக முன்பே வந்திருச்சே ஸார் .ஒருவேளை,நீங்க சொல்ற "லீலைகள் " அந்த கதைகளில் இல்லையோ ? சரி விடுங்க ஸார்.இருக்கவே இருக்கார் நம்ம எடிட்டர். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை."கிருஷ்ண லீலா" ன்னு ஒரு பக்கா கிராபிக் நாவல் போட வச்சிரலாம்.hard cover. விலை ரூ.....( அதை இப்ப சொன்னா வெட்டுக்குத்து ஆயிறும்)))) நம்ம பூனையார் வேற ரொம்ப நாளா ரொமாண்டிக் லவ் ஸ்டோரி கேட்டுட்டு பக்கத்து வீட்டு பூனையை பிராண்டிட்டு இருக்காரு ;-))) அந்த பக்கத்து வீட்டு அப்பாவி பூனையை காப்பாத்தவாச்சி அந்த புக்க போட்டே ஆவணும்.போட்டே ஆவணும்.ஹிஹி !!!

      Delete
    6. யாம் உரைக்கும் லீலைகள் அறிய கீத கோவிந்தம் வாசிக்கவும் ;-)

      Delete
  27. லட்டுகள் கிடைச்சிருச்சு..!அட்டை படங்கள் புத்தகங்கள் சூப்பராக உள்ளது.!


    சுகர் பேஸண்ட் முன்னாடி , லட்டு வைத்திருப்பது போல் ,ஜொள் ளோடு படிக்க காத்துக்கொண்டிருக்கின்றேன்.!

    ReplyDelete
  28. காலை எழுந்தவுடன் கொரியர்......
    தலைப்பே பல கதைகள் சொல்லுதுங் சார்.
    வழக்கமாக 10.15க்கு கடைக்கு போகும் நான் மாயாவி சாரின் உசுப்பேற்றல் காரணமாக 9:55க்கே கடை வாசலில் போய் நின்றேன் ......
    கொரியலர் வரும் கொரியர் வரும் என....இன்றுனு பார்த்து அவன காணல....ஹூம் ...கடையை திறந்து ...பூசை போட்டு டீயை குடிக்க 11.15க்கு வர்ரானே .. அந்த கொரியர் பய....சாரின்னா ....இன்று ஏக கவர்,, அதான் லேட்டுன்னான்...பார்சலை வாங்கி ....நிமிர்ந்தால் ...ஒரு ஹீரோ கூலிங் கிளாஸ் மின்ன பைக்கில் வந்து நிற்கிறார் .....புக் எனக்கு வர்லனா சந்தாசப் படலாம்னு வந்த ஹீரோ , என் பார்சலை பார்த்து விட்டு உடனே ஜூட்டு .....பார்சலை பிரித்தேன் ...உடனடியாக ரசித்தேன் ....4அட்டைப்படங்களுமே....ஜூப்பர் .....ஆனால் டாப் டைலன் அட்டை .....அந்த கண்ணுக்கு குளிர்ச்சியான இலேசான வண்ணங்களில் கமான்சேயும் பிரின்ஸ் மறுபதிப்பு அட்டைப்படமும் ரொம்ப நேரம் பார்க்க வைத்தன.....
    டைலன் கருப்பு வெள்ளை போதும்னு சொன்ன வுடன் தீயாய் வேலைப்பார்த்து உள்ளார்கள் போல....அந்த LMSல் அசத்திய அதே வண்ணத்தில் இப்போதும் டைலன் அசத்துகிறார்.....பிரின்ஸ்ன் மறுபதிப்பு டைலனை விட அட்டகாசமான அடர் வண்ணத்தில் மின்னுகிறது ...வாவ்....இதையே இனிமேல் டைலனுக்கும் ,விண்டுக்கும் பாலோ செய்யுங்கள் சார் ...ப்ளீஸ் .....பெளன்சர் வழக்கமான அந்த கதைக்குரிய காம்பினேசன் கலரில் உள்ளார் ....ஆங்காங்கே சில கட்டங்கள் கட் செய்யப்பட்டு உள்ளன ,, ஏற்கெனவே ஆசிரியர் குறிப்பிட்ட வாறே .....காமான்சே கதையில் பாதிக்குமேல் மழையிலேயே நனைகிறது , ......கோகுலா .....(சொக்காவுக்கு பதில் ) எதை முதலில் படிப்பது ....ஒரு வழியாக பெளன்சர் கிளைமாக்ஸ்சே இங்கி பிங்கி பாங்கியல் வென்றது .....இன்று அரசு விடுமுறை ரோட்டில் ஒரு ஆளும் இல்லை ...கஸ்டமர் தொந்தரவு இல்லாமல் பெளன்சர் படிக்க போகிறேன் .....அவ்வப்போது எட்டி பார்க்கிறேன் .....

    ReplyDelete
  29. 76, படித்து விட்டு வருகிறேன்.

    ReplyDelete
  30. மதுரை விற்பனை பரவாயில்லை என்பதும் எமது வாசகர் வட்டம் கொஞ்சமாக என்றாலும் கூட வழி ஏற்படுகிறது என்பது மகிழ்ச்சியான செய்தி. முன் பதிவு கூப்பனுக்கும், 2 எடிசனில் எ. பெ. டை வருவதுக்கும் நன்றிகள் ஷார்.

    ReplyDelete
  31. ஹைய்யா! எனக்கும் புத்தகங்கள் வந்துவிட்டதாம்! அள்ளி எடுத்து உச்சிமோந்திட மாலையாகிவிடுமே...
    அப்புறம் எந்தக் கதையை முதலில் படிப்பதுனு வேற ஒரு குழப்பம் வருமே... இங்கி பிங்கி பாங்கி...

    ReplyDelete
  32. மதிய வணக்கங்கள்..! சைத்தான் துறைமுகம் விமர்சனம்..!!

    மனுசங்களுக்கு புதுவிஷயம் எதுமேல் திடீர்ன்னு ஆர்வம் அதிகமாகுதோ...அந்த சப்ஜெக்ட் ஆரோக்கியமான போட்டியா...பல படைப்புகள் சவால் விட்டு கிளம்புற புரட்சி...எல்லா காலகட்டத்துலையும், எல்லா விஷயத்திலையும் நடந்துட்டு தான் வருது. புதுசா ஒரு ஜீன்ஸ் வந்த...அதுக்கு போட்டியா பலது, புதுசா ஒரு டிவி சேனல் வந்தா...போட்டியா பலது, புதுசா ஒரு கார் வந்தா அதுக்கு போட்டி பலது...என மக்களை எது கவர்ந்தாலும், அதுக்கு ஈடுகொடுக்க படைப்புகள் கொட்டுவது தவறாமல் நடக்கும் பரிணாமம்..!

    அப்படித்தான் இங்க 1985 to 1990 வாக்கில் பல காமிக்ஸ்கள் படையெடுத்து..! அதேபோல ஐரோப்பாவில 1965 to 1975 ல காமிக்ஸ் படைப்புகளை நோக்கி ஒரு படையெடுப்பு நடந்தது..! அந்த டைம்ல வந்தவைகள் அதிஅற்புதமான படைப்புகள், கதைகள், ஓவியங்கள்..! அப்படி பிரான்ஸ்,பெல்ஜியம்ல உருவான, சரித்திரம் படைச்ச, காமிக்ஸ் உலகத்துல என்னிக்கும் பேசப்படும் கதாபாத்திரம்& ஓவியர்கள் டின் டின்,கேப்டன் டைகர்,XIII,லக்கிலுக்,கேப்டன் பிரின்ஸ்,ஆஸ்டின் அண்ட் ஒப்பிளிஸ்,கமான்சே,ரிப்போர்ட் ஜானி, சிக்பில் என நமக்கு தெரிந்தவை.

    அன்று உருவான படைப்புக்கு நிகராக...அவர்களாலே இன்று உருவாக்கமுடியவில்லை என்பதே நிஜம்..! முதல் இடத்துல இருக்குற tintin,Asterix பக்கத்துல நாம போகமுடியலைன்னாலும்...இரண்டாம் இடத்துல இருக்குற William Vance[XIII],Jean Giraud[கேப்டன் டைகர்], hermann huppen[கேப்டன் பிரின்ஸ்,காமன்சே],Morris [லக்கிலுக்] இவர்களின் படைப்புகள் திரு விஜயன் அவர்களின் முயற்சி மூலமா நமக்கு கிடைச்சது பெரிய லக்..!

    அதுவும் ஓவியர் ஹெர்மெனின் படைப்புகள், அவர் தேர்தெடுக்கும் கதைகளம் யாருடனும் ஒப்பிடவே முடியாது..! அதுக்கு நல்ல உதாரணம் சைத்தான் துறைமுகம்..! 1986 ம் வருடம்...வெளிஉலகம் பற்றிய அதிக தகவல்கள் தெரியாத, எழுத்துக்களாலும், ஒரு சில போட்டோகள், DD டிவி மூலமாக பார்த்த ஓரிரண்டு காட்சிகள் தாண்டி...பனிகடல் பற்றிய தகவல் தெரியாத காலகட்டம்..! பனிமண்டலக்கோட்டைகிற முதல் பிரின்ஸ் கதையில...படுபயங்கர கந்தகமலைகுகைகளும், சதையை கிழிக்கும் குத்து பாறைகளும், உடலை ஊனமாக்கும், வாயுக்கள் கசியும்..முடிவேயில்லாத குகைபாதையும் என் வாழ்வில் முதல் முறையாக காமிக்ஸ் படங்களில் பார்த்திருந்த சமயம்...!

    அந்த மூச்சு மூட்டும் குகையின் சூடேகுறையாம...அதே நினைவுல இருந்தப்போ வந்த சைத்தான் துறைமுகத்தின் பயங்கர பனி காத்து...இப்ப நினைச்சாலும் ஊசியா எலும்புல குத்துறது..! அந்த 14 வயசுல படிச்ச கதை எனக்குள்ள தோணின கலர் கனவுவை, நான் என் கற்பனையில வரைஞ்ச ஒரு கலர் ஆர்ட் என்றுமே மறக்கமுடியாத படைப்பு..! இன்று அதை எடுத்து பார்த்தபோது...நானா அதை வரைஞ்சேன்னு ஆச்சரியமா இருக்கு..! அதை பார்க்க...இங்கே'கிளிக்'

    அப்புறம் கதை விமர்சனம்...இதெல்லாம் விமர்சனத்துக்கு அபாற்பட்ட பொக்கிஷம்...விமர்சனமாவது மண்னவுது...!
    அச்சுத்தரம்: சாலவை ரூபா நோட்டு...!

    ReplyDelete
    Replies
    1. ///நான் என் கற்பனையில வரைஞ்ச ஒரு கலர் ஆர்ட் என்றுமே மறக்கமுடியாத படைப்பு..! ///

      அடடே! அப்பவே அட்டகாசமா வரைஞ்சிருக்கீங்களே!!

      ////இன்று அதை எடுத்து பார்த்தபோது...நானா அதை வரைஞ்சேன்னு ஆச்சரியமா இருக்கு////

      உங்களுக்காவது ஆச்சரியமாத்தான் இருக்கு! எங்களுக்கெல்லாம் டவுட்டாவே இருக்கே?! :D

      Delete
    2. @ இத்தாலி விஜய்

      எனக்கும் முதல்ல சந்தேகமா தான் இருந்திச்சி..! நல்லவேளையா..பெயர் எழுதி கையெழுத்து போட்டிருக்கேன்.மந்திர ராணி,தங்க நகரம்ன்னு ரெண்டு மந்திராஜால கதைகள் வந்தது.அப்போ ஹீமேன், ஆர்னால்ட் ரொம்பவே பேமஸ், இப்போ தோர்கால் விளம்பரம் பார்த்தா எனக்கு அந்த மந்திராஜால கதைகள் தான் நியாபகம் வருது..! ஏன்னா அப்போ நான் வரைஞ்ச ஓவியம் தான்..! ஒருபக்கம் இது தம்பட்டமா தோணும்..ஆனா நான் தான் 'மாத்தியோசி' பார்டியாச்சே..! அந்த வயசுல இருந்த திறமை இப்ப எங்க போச்சின்னு தான் தேடுறேன்..! இல்லாததை இருக்குன்னு சொல்றதும், இருக்கிறதை மறைக்கிறதும் ரெண்டுமே தப்பு..! ஆனா திறமையிருக்கா இல்லையாங்கிற குழப்பம் எனக்கே வர்றது ரொம்பவே தப்புதானே...சேம்பிளுக்கு இந்த படம் பார்த்துட்டு சொல்லுங்களேன்...இங்கே'கிளிக்'

      Delete
    3. டைலன் டாக்..'வாராதோ ஓர் விடியலே ? குட்டி விமர்சனம்..!

      //முதல் முறையாக 'happy reading' என்று சொல்லி sign off செய்திடப் போவதில்லை- மாறாக 'soulful reading' என்றவாறே புறப்படுகிறேன்!// என மினி ஹாட்லைன் வரிகள்...'வராதோ ஓர் விடியலே?' படித்து முடிக்கும்போது, புரிந்து, மனம் கனத்துவிட்டது..!
      பொதுவாகவே வெளிநாட்டவர்களுக்கும்...பாசம்,பரிவு,பச்சதாபத்திற்கும் கொஞ்சம் தூரம். அதுவும் மனவளர்ச்சியற்ற..உடல் ஊனமுள்ள...சராசரி மனிதர்களிடமிருந்து விலகி இருப்பவர்கள் மீது அவர்களுக்கு உள்ள தூரம் பற்றி சொல்லவே வேண்டியதில்லை..! ஆனால்..ஆனால்...'டைலன் டாக்' இந்த கதையில் காட்டும் அவருடைய இன்னொரு பக்கம்...பல அபிப்பிராயங்களை தவிடுபொடியாக்கியாக்கி...மனதை என்னமோ செய்துவிட்டார்..! அருமை என சம்பிரதாயமாய் சொல்வதை விட... என் கை கால்களை ஒருமுறை மெதுவாக தடவிதொட்டு பார்த்துக்கொண்டேன்...என்பதை தாண்டி வரிகள் வரவில்லை..!

      Delete
    4. மாயாவி சார்.!ஓவியங்கள் சூப்பர்.!ஓ.!நீங்கள் 14 வயதிலேயே அப்படியா.?

      Delete
    5. @ இத்தாலி விஜய் @ MV

      மின்னும் சார்ச், தங்க புத்தர், ஆஸ்டின், கிறிஸ்மஸ் தாத்தா, லயன் கிங் சிம்பா,மன்னன் மகள் என நிறையவே இருக்கு ..ஆனா நம்பத்தான் முடியாது..! அதை விட்டு தள்ளுங்கள்...அட்டகாசமான 'காமன்சே' தொடரில் இதுவரையில் வந்த கதைகள் பற்றிய கதைசுருக்கம், அதன் ஓவியர்,எழுத்தாளர் பற்றிய அசரடிக்கும் தகவல்கள்...கண்ணை பறிக்கும் படங்கள் என ஒரு பிரம்மாண்டமான பதிவு தயார் நிலையில் உள்ளது..! 'சாத்விகமாய் ஒரு சிங்கம்' மழையில் நனைச்சபடி முழுமையா அனுபவிச்சி படிக்கனும்ன்னா...அதோட முன் கதைகளை ஒரு முறை படிச்சிட்டனும்..! முந்தய புக்ஸைஒருமுறை குறைஞ்சது எடுத்து புரட்டவைக்கும் ஒரே நோக்கில் தான் அந்த பதிவை தயாரிச்சிருக்கேன்..! அதை எப்போ போடலாம்...சொல்லுங்க..!

      Delete
    6. @ மாயாவி

      உங்கள் ஓவியத் திறமை ஆச்சர்யமளிக்கிறது! பின்னொரு காலத்தில், காட்டுக்குள்ளிருக்கும் உங்களது மண்டையோட்டு குகை வசிப்பிடத்தின் சுவர்களில் இந்த ஓவியங்கள் அனைத்தையும் ஒட்டிவைத்து ஒரு கண்காட்சி நடத்திவிடும் திட்டமிருக்கிறது எனக்கு! பார்க்கலாம்!

      கண்ணுக்கு விருந்தாகும்; கருத்துக்கு மருந்தாகும் ; இன்னும் என்னென்னவெல்லாமோ ஆகவிருக்கும் 'கமான்சே' பற்றிய உங்கள் பதிவை ( நாளை எடிட்டரின் பதிவு ஏதேனும் வர வாய்ப்பிருக்கிறதா எனப் பார்த்துவிட்டு) இன்னும் ஓரிரு நாட்களுக்குப் பிறகு ( திங்கள்?) போடுவதே சரி என்பது அடியேனின் தாழ்மையான கருத்து!

      Delete
    7. mayavi.siva : இரு பிரான்கோ -பெல்ஜிய ஜாம்பவான்கள் இணைந்து பணியாற்றிய 2 தொடர்கள் இம்மாதம் ஒருசேர வெளியானதொரு சந்தோஷ coincidence ! அதிலும் ஹெர்மனின் அந்த ஓவிய பாணி just awesome !

      Delete
    8. @மாயாவி.. நானொரு சாதாரண கிராமத்தான் என சொல்லிக் கொண்டு பின்னு பின்னுன்னு பின்றீங்களே. ஓவியம் அருமையாக உள்ளது...

      Delete
    9. @ திரு விஜயன்

      yes ஸார்...இந்த இருவர் கூட்டணியில் வந்த மாபெரும் சூப்பர் ஹிட் ஹீரோஸ் ரெண்டு பேரும் இந்த மாதம் ஒருசேர வருவது என்னை பொறுத்தவரையில் சரியான வேட்டை..!

      இன்னொரு ஒற்றுமை இதே செப்டம்பரில் தான் சைத்தான் துறைமுகம் முதன்முதலில் ஐரோப்பாவில் 1978ல் வந்தது.அதைவிட சூப்பர் முத்துகாமிக்ஸ் & கமான்சே தொடர் இரண்டும் ஒரே ஆண்டு,ஒரே மாதத்தில் துவங்கப்பட்டது.

      கேப்டன் பிரின்ஸ், கமான்சே உருவாக்கிய...கதாசிரியர்Greg (Michel Régnier) தான் நம் புருனோ பிரேசில் உருவாக்கி...முழுகதையும் எழுதியவர். கிட் ஆர்ட்டின் கதைகள் கூட பலது இவர் எழுதியது தானே சார்...!

      @ இத்தாலி விஜய்

      ஜாதகம் பார்த்து நேரம் குறித்து தந்தமைக்கு நன்றிகள்..!

      @ மகேந்திரன் பரமசிவம்

      நான் சாதாரண கிராமத்தானே..! பலரும் அவர்கள் திறமையை வெளிக்காட்டுவதில்லை..நான் பாலகனாய் என்னிடமுள்ள ரெண்டு ஆரஞ்சு மிட்டாயை அரைடவுசரில் இருந்து எடுத்து காட்டுகிறேன்...பலர் பிரிஜ்ஜை திறந்து கேட்பரிஸ் சாக்லேட்டை எடுக்க...இல்லை இல்லை...இருக்குன்னு சொல்லவே கூச்சபடுறாங்க.. ஹீ..ஹீ..! :P

      Delete
  33. payed the amount through net-banking and send details in mail Edit, waiting for subscription number,acknowledgement mail.

    and its Baby Girl friends ...! :)

    ReplyDelete
    Replies
    1. :) thanks ம. ராஜவேல் sir!

      Delete
    2. அட...கோகுல கண்ணன் பிறந்தநாளில் உங்களுக்கு லக்ஷிமி பிறந்திருகிறாள்..! வாழ்த்துக்கள் சதிஷ் குமார்..!

      Delete
    3. @ Sathiskumar

      வாழ்த்துகள் நண்பரே! :)

      Delete
    4. Sathiskumar @ வாழ்த்துகள் சதிஷ் :)

      Delete
    5. வாழ்த்துக்கள் சதீஷ் குமார் .....கோகுலாஷ்டமி நாளில் லஷ்மி ...அற்புதம் ...

      Delete
    6. வாழ்த்துகள் சதீஷ்

      Delete
    7. வாழ்த்துக்கள் சதீஸ்குமார் :)

      Delete
    8. வாழ்த்துக்கள் சதிஷ் சார்...,,:-)

      Delete
    9. வாழ்த்துக்கள் - நம் தரப்பிலிருந்தும்...!! :-)) :-))

      Delete
    10. நன்றி தலிவரே ,Tex Sampath சார். வாழ்த்துகளுக்கு நன்றி MP, MV சார் . சேலம் விஜயராகவன் நன்றி சார். நன்றி Parani, EV சார். மிக்க நன்றி selvam abirami, mayavi.siva, Vijayan சார் !

      Delete
  34. Just finished reading this month's issues except bouncer and I enjoyed all the three. I think even Dylan's story deserves a 'for mature readers only' tag this time.

    ReplyDelete
    Replies
    1. Vallavaraiyan Vandhiyathevan @ வரவு நல்வரவு ஆகட்டும்!

      Delete
    2. Vallavaraiyan Vandhiyathevan : டைலன் வரிசையில் இதுவொரு one off என்று சொல்லலாம் சார் !

      Delete
  35. சைத்தான் துறைமுகம் படித்து விட்டேன்.அருமையான கதை .நானும் பிரின்சுடன் வடதுருவ பனியில் மாட்டிக்கொண்ட உணர்வு.ஓவியங்கள் அட்டகாசம்.! லாரக்ஸ் கதாபாத்திரம் அருமை.முதல் பக்கத்தில் ரயில் கிளம்ப சிவப்பு கொடியல்ல காட்டுகிறார்.!பச்சை கொடியல்ல காட்டனும்.!நானும் கி.நா.படிக்க படங்களை கண்களில் விளக்கெண்னை விட்டு பார்த்து ட்ரைனிங் எடுத்துகிட்டுவருகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. Madipakkam Venkateswaran : //நானும் கி.நா.படிக்க படங்களை கண்களில் விளக்கெண்னை விட்டு பார்த்து ட்ரைனிங் எடுத்துகிட்டுவருகிறேன்..//

      பின்றீங்களே சார் !

      Delete
  36. இங்கி பிங்கி பாங்கியில் வென்ற பெளன்சரை படிக்க ஆரம்பித்தேன் சார் ........
    எந்தவித கூச்சமும் இல்லாமல் வழக்கம் போல தலைகள் சீவப்படுகின்றன....அப்பாடி ....கொலை செய்வதை ரசித்து ருசித்து படிக்கும் எனக்கே....லைட்டா ஜர்க் ஆகுதுங் சார் .....ஸ்கூல் பயல்கள்லாம் கூசாம கழுத்தை சீவுகிறான்கள்.....யப்பாடி .....கதை அட்டகாசமாக பின்னப்பட்டுள்ளது .....இம்முறை யும் டீச்சரில் இருந்து கதை ஆரம்பிக்கிறது....சேத்துக்கு ஒரு டீச்சர் ...இப்ப பெளன்சருக்கும் ஒரு டீச்சர் ....
    டீச்சரின் சகோதரி இருக்கும் அத்துணை வகையான அடியாட்களையும் வைத்து கொண்டு முந்தைய கதையில் இறந்து போன கூப்பரின் ஆசையை தொடர்கிறாள் ....வித்தியாசமான முயற்சியில் ......முதல் பாகம் போனதே தெரியல .....இதற்கு மேல் கதை சொன்னால் அப்புறம் புக் வராதவர்கள் சபிக்க கூடும் .....முழு விமர்சனம் இன்று இரவு படித்து விட்டு நாளை .....

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : //இம்முறையும் டீச்சரில் இருந்து கதை ஆரம்பிக்கிறது....சேத்துக்கு ஒரு டீச்சர் ...இப்ப பெளன்சருக்கும் ஒரு டீச்சர் ....//

      அட...ஆமாம்லே ?

      Delete
  37. Dear Editor sir,

    வணக்கம்.
    Bouncer கதை படித்து முடித்தேன்.
    Script and flow என்ற விதத்தில், அந்த genre-ல் சிறப்பான கதை.

    ஆனால் அனைவருக்கும் ஏற்புடையதாகத் தோன்றவில்லை எனக்கு !
    "இதோ இந்த இதழைப் படித்துப் பார்" என்று ஒரு நண்பரிடம் நீட்டவும் சரியானதாகப் படவில்லை.!!

    இந்த வருடம் சந்தா, Class A, Class B and Class C என்று மூன்று விதமாக அமைந்தது போல , அடுத்த வருட சந்தாவில்.......
    "BOUNCER கதைகள் தவிர்த்து அனைத்து இதழ்களும்" - என்று ஒரு Class D-ம் சேர்த்தால் நன்றாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. //இதோ இந்த இதழை படித்துப்பார்//
      எடிட்டரே புத்தக கண்காட்சியில் விற்கலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்.!-(--உபயம் சா.ஒ.சி.ஹாட்லைன்)
      என்னவோ பௌன்சர் கதைகளில் ஒரு வசியம் இருக்கிறது.அது என்ன கார்த்திக் சோமலிங்கா சார்? பிளேடு வில் ஒரு கவர்ஸ்டோரி போடுங்களேன்.!

      Delete
    2. CFC : No worries....பௌன்சரில் எஞ்சி நிற்பது இன்னமும் 2 ஆல்பம்களே - so மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரே ஒரு இதழ் தான் அது நம் தொகுப்பினில் !

      And ஏற்றுக் கொள்கிறேன் - இது சிரமமானதொரு கதையே -புதியவர்களுக்கு justify செய்திட !

      Delete
  38. நண்பர்கள், புது கதைகளின் விமர்சனங்களை, ஓரிருநாட்கள் கழித்து போடலாமே, என்னை போல் கூரியர் வராத அதிர்ஷ்டசாலிகளுக்கு, எரிச்சல் வருகிறது சார் 😊

    ReplyDelete
    Replies
    1. saravanan srinivasan : ஆதங்கம் புரிகிறது நண்பரே - ஆனால் அந்த துவக்கத்து உற்சாகத்தை நண்பர்கள் விவரிப்பதுமொரு அழகான அனுபவம் தானன்றோ ?!

      Delete
    2. சரவணன் சார்.!!நான் சிறு வயதில் கடையில் புத்தகம் வாங்கியவுடன் அங்கேயே ஓரமாக உட்கார்ந்து படித்து விட்டுதான் கிளம்புவேன்.! தற்போது குடும்ப சுமை காரணமாக கையில் கிடைத்தாலும் உடனே படிக்க முடியவில்லை.!எனக்கு புத்தகத்தை எடுத்து படிக்கும்போது நானும் கதையில் புகுந்து ஒன்றிடவேண்டும் இதில் இடையூறுகளை பொறுத்துக்கொள்ள மாட்டேன் எனவேதான் படிப்பதை விட்டு செல்போனில் உள்ளேன்.!

      Delete
  39. இந்த மாதம்...
    நான்கு 'லயன் காமிக்ஸ்' (அடடே! ஆச்சரியக்குறி!!)
    ஆனால்... ஆனால் ...
    ஒன்றில் கூட
    காணவில்லை
    'சிங்கத்தின் சிறுவயதில்' (அடடே! அதிர்ச்சிக்குறி!!)

    எனது பலத்த கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்! ( கடுப்புக்குறி!)

    ReplyDelete
    Replies
    1. @ALL : இங்கும் சரி ; ஹாட்லைனிலும் சரி, எழுதோ - எழுதென்று எழுதித் தள்ளுவது ஒருவித overkill போல் எனக்கே தோன்றுகிறது ! அதனால் தான் சமீப இதழ்களில் "சி.சி.வ." பகுதியினை பார்க்க இயலாது போயுள்ளது ! Maybe from the next month onwards....

      Delete
  40. Dear Editor,

    The Captain Prince story is a treat for our eyes in color - a captain prince album (of classic stories) must come in HARD BOUND COLOR next year. (Pani Mandalak kOttai and some other old albums?)

    ReplyDelete
    Replies
    1. Raghavan : இந்த ஆல்பத்தின் கலரிங் அட்டகாசம் தான் !!! கொஞ்சம் கொஞ்சமாய் பிரின்ஸ் கதைகளை வண்ணங்களுக்கு கொணர முயற்சிப்போம் !

      Delete
  41. அற்புதம்... அட்டகாசம்...
    இம்மாத இதழ்கள மாலை வந்தடைந்தன.

    ஒவ்வொன்றும் முழு வண்ணங்களில் டாலடிக்கின்றன....

    சார்....

    வேறு மெஷின் வாங்கி வாங்கி விட்டீர்களா சத்தமில்லாமல்....?

    வாயடைத்து ரசித்துக்கொண்டிருக்கின்றேன்.
    முத்து 350 ல் வந்து பட்டை கிளப்பி இருக்க வேண்டியவை இவை.
    அதிலும் "சைத்தான் துறைமுகம்" கண்களுக்கு விருந்து...
    வாழ்த்துக்கள் ஆசிரியரே...
    உங்களும்,உங்கள் டீமுக்கும்....

    ReplyDelete
    Replies
    1. //வேறு மெஷின் வாங்கி வாங்கி விட்டீர்களா சத்தமில்லாமல்///-- அப்படித்தான் தோணுது பாசா.....
      இனிமேலாவது இப்படி டாலடிக்கும் பிரிண்ட் களாகவே வரணும் .......
      இதே மாதிரி டாலடித்தால் என் பெயர் டைகரும் கூட தூள் கிளப்புமே....

      Delete
    2. பாஸா சார்.!மக்கன் பேடா வேலை செய்துவிட்டது போலும்.!அசத்துங்க.!

      Delete
    3. AHMEDBASHA TK : மிஷினெல்லாம் அதே தான் சார் ; ஒரிஜினல்களில் வர்ணமும் , வீரியமும் அட்டகாசமாய் இருக்கும் போது - அச்சில் அதுவும் பிரதிபலிப்பது இயற்கை தானே !

      Delete
    4. என் பெயர் டைகர் எல்லாம் எந்த மிஷினில் போட்டாலும் பளிச்சென்று வராது. :P
      சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். டைகர் கதை எல்லாம் ராகவன் சொல்வது போல் பஞ்சு மிட்டாய் கலர் தான். ஆஹா ஓஹோ ரகம் எல்லாம் இல்லை.

      Delete
  42. எடிக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அப்படி போடு ......அதானே..... ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் சார் ....

      Delete
    2. @ FRIENDS ; அட...இதற்கெல்லாம் நமக்கு அருகதையுண்டா தெரியலையே but நன்றிகள் ஒரு டன் நண்பர்களே !!

      Delete
    3. தெரிந்தோ தெரியாமலோ எங்களை காமிக்ஸ் படிக்க வைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லாது போனால் இந்த காமிக் உலகம் எங்களை மன்னிக்காது!! (குறிப்பு : நானே ஒரு ஆசிரயராக இருக்கும் போது நீங்கள் ஏன் தல ஆசிரயராக இருக்க கூடாது)

      Delete

  43. எடிட்டர் அவர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்!! ( நினைவூட்டலுக்கு நன்றி பாலாஜி ராம்நாத் அவர்களே!)

    ஆசிரியர் தினத்தன்று நம்ம ஆசிரியருக்குக் கொடுக்கணும்னு ஒரு கிரிட்டிங் கார்டு வச்சிருந்தேன்... ஆங்! அப்படித்தான்! நல்லா ஊதுங்க எடிட்டர் சார் !

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : அந்தப் பூனையும் என்னமாய் உட்கார்ந்து ரசிக்கறது ....!!!

      Delete
    2. நண்பர்களுக்குள் நன்றி நவிலல் நன்றன்று..

      Delete
  44. விஜயன் சார், அடுத்த வருட பிரின்ஸ் மறுபதிப்பில் நதியில் ஒரு நாடகம் & கொலைகார கானகம் & எரிமலைத் தீவில் பிரின்ஸ் போன்ற கதைகளை வண்ணத்தில் ஒரு கலெக்டர் edition ஆக போட்டால் நன்றாக இருக்கும். ப்ளீஸ்!

    ReplyDelete
  45. Dear Editor,

    ///....

    வெகுநாட்களாக, பெரும்பான்மையான வாசகர்கள் வேண்டுகோள் விடுத்து, முறையாக அறிவிக்கப்பட்டு, வாசகர் கருத்துகள் கேட்டறியப்பட்டு, அதற்கு பெரும்பான்மையான வாசகர்கள் ஆதரவு தெரிவித்த, டெக்ஸ்-ன் தனி track (மாதமொருமுறை அல்லது இருமுறை) மற்றும் டெக்ஸ்-ன் மறுபதிப்புகள் பற்றிய, 2016 plan-யைத் தெளிவாக அறிவிக்க வேண்டுகிறேன்

    முன்கூட்டிய நன்றிகள்! ..//

    I can see that you are carefully avoiding this comment/question which I am posting it from your last post. It's OK but I will continue post this same question in every one of the next posts till you answer :) Don't take me wrong

    நீங்கள் இந்தப் பின்னூட்டத்தைக் கவனமாகத் தவிர்க்கிறீர்கள் என்று தெரிகிறது. பரவாயில்லை, ஆனால் நீங்கள் இதற்கு பதிலளிக்கும் வரை தொடர்ந்து வரும் தங்களது ஒவ்வொரு பதிவிலும், நான் இதே பின்னூட்டத்தை இடுவேன் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைத் தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம் :)

    ReplyDelete
    Replies
    1. Periyar @ நம்ப ஆசிரியர் அமைதியா கடந்து போறார் அப்படினா ஏதோ "பெரிய" திட்டம் இருக்கு அப்படி என்று அர்த்தம்!

      Delete
    2. ///நீங்கள் இந்தப் பின்னூட்டத்தைக் கவனமாகத் தவிர்க்கிறீர்கள் என்று தெரிகிறது. பரவாயில்லை, ஆனால் நீங்கள் இதற்கு பதிலளிக்கும் வரை தொடர்ந்து வரும் தங்களது ஒவ்வொரு பதிவிலும், நான் இதே பின்னூட்டத்தை இடுவேன் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைத் தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம் :)////

      இந்த விஷயத்தை ஆசிரியர் செயல் வடிவம் கொடுக்கும் வரை பெரியார் அவர்களுடன் தொடர்ந்து சேர்ந்து குரல் கொடுப்போம்...
      வாருங்கள் நண்பர்களே..

      Delete
    3. நம்மைப்போன்ற தீவிர வாசகர்கள்களுக்கு தனி சந்தா ஓ.கே.தான். சில வாசகர்கள் வருடத்திற்கு தற்போது உள்ள தொகையை அதிகம் என்றுஎதிர்ப்பு தெரிவித்தது அவரை யோசிக்க வைத்து இருக்கலாம். எ.பெ.டை.போன்று தேவைப்படுவோர் வாங்கிக் கொள்ளட்டும் என்று வாசகர்கள் சாய்ஸில் டெக்ஸ்வில்லரின் கதைகளுக்கு பொருந்தாது அல்லவா.? வாசகர்கள் இதை சாய்ஸில் விடமாட்டார்கள்.!மேலும் நம் குறுகிய வட்டத்தில் பலதரப்பட்ட ரசனை உள்ளவர்கள் குவிந்து காணப்படுகின்றனர்.எல்லோரையும் திருப்திபடுத்தும் கடமை எடிட்டருக்கு உண்டல்லவா.?மேலும் நம் ரசனைகள் புது தேடல்களிலும் விரிவடையவேண்டும் என்று நினைக்கிறார்.அதுவும் வாஸ்துவம் தானே ஓவராக டெக்ஸ் கதைகளை படித்து அலுத்து போய்விடக்கூடாது அல்லவா.?
      ஆனாலும் இவ்விஷயத்தில் கணிக்க முடியாது.!ஆட்டோ விவேக் மாதிரி, ரைட்ல கையை காமித்து லெப்ட்ல இண்டிகேட்டர் போட்டுவிட்டு, நேராக போய்க்கொண்டே இருப்பார்.!ஏதாவது ஐடியா செய்வார்.!அது என்னுடைய கருத்து மட்டுமே.

      Delete

  46. ***** வாராதோ ஓர் விடியலே? ******

    டைலன் டாக்கிடமிருந்து இப்படியொரு மாறுபட்ட கதையை எதிர்பார்க்கவில்லை! 'அந்தி மண்டலம்' கதைக்கு அடுத்த கதையாய் இது வெளியாகியிருக்குமானால் 'டைலன் டாக் ரசிகர் மன்றம்' என்ற ஒன்று இந்தியாவிலும் இந்நேரம் உருவாகியிருக்கக்கூடும்! துரதிர்ஷ்டவசமாக 'வீதியெங்கும் உதிரம்', 'நள்ளிரவு நங்கை' ஆகியவை சுமார் ரகத்தில் வந்து இந்த 'மன்ற முஸ்தீபுகளை' சற்றே ஒத்திவைத்திருக்கின்றன.

    * துளிகூட அமானுஷ்ய சங்கதிகள் ஏதுமின்றி டைலனின் கதைகளைப் படிப்பது ஒரு வித்தியாசமான அனுபவம்! கதையின் முதல் பக்கத்திலிருந்தே அந்தப் பையன் 'ஜானி' ஒட்டுமொத்தமாக நம் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறான் (பார்க்கில் நாய்களோடு நாய்களாக உணவைப் பங்கிட்டுக்கொள்வது... த்சொ பாவம்! ).
    ஆனால் அதற்காக டைலனும், அவனது டாவும் நினைத்தமாத்திரத்தில் எமோஷனலாகி பொசுக் பொசுக் என்று கண்ணீர் சிந்துவதுதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்!

    * அழுத்தமான கதை என்பதாலோ என்னவோ வண்ணங்களும் அழுத்தமாகவே அமைந்து அழகு சேர்த்திருக்கின்றன.

    * இந்தக் கதைக்குப் பிறகுதான் டைலனுக்கு 'டைலன் டாக்' என்று பெயர் வந்ததோ என்னமோ?! கதை நெடுக அவ்வளவு நாய்கள்!

    * 'பிறவி செவிட்டு ஊமை'யாக டாக்டரால் பரிசோதித்தறியப்படும் ஒருவன், நன்றாக ஓவியம் வரையும் திறமையைக் கொண்டிருப்பதில் ஆச்சர்யமில்லைதான்! ஆனால், நன்றாக க்ளாரிநெட் வாசிப்பது - எவ்வளவு பெரிய லாஜிக் ஓட்டை?!!

    கதையின் அழுத்தத்திற்கேற்ற கவித்துவமான தலைப்பு!

    இதுமாதிரியான கதைகள் நிறைய்ய்ய வேணும் எடிட்டர் சார்!

    ReplyDelete
    Replies
    1. ஈரோடு விசை,

      நான் டைலன் டாக் கதைகளில் முதலில் படித்ததே இந்தக் கதை தான். இரண்டாவது அந்தி மண்டலம். அப்போது இருகதைகளும் ஏற்ப்படுத்திய தாக்கம் எப்படி இருந்திருக்க வேண்டும்? எனவேதான் சில சுமார் கதைகள் (இதை விட) வந்த போதிலும் பொறுத்திருந்தேன். 'நள்ளிரவு நங்கையும்' எனக்கு பிடித்தே இருந்தது.

      டைலான் மீண்டும் கலக்குவார் .. வெயிட் அண்ட் சீ !!

      Delete
  47. என் பெயர் டைகர் deluxe பார்சல்!

    ReplyDelete
  48. வாராதோ ஒரு விடியலே .....

    ஆத்மாவை தொடும் கதை ..........

    அங்கஹீனமான குழந்தையை தாயுமா வெறுப்பாள் ???

    பொதுவாக தாய்மை தனது குழந்தைகளில் பலவீனமான ஒன்றின் மேல்தான் அதிக கவனம் செலுத்தும் .........(மனிதர்களில் ....விலங்குகளில் கதையே வேறு ..)


    டைலனின் மனிதாபிமானத்திற்கு ஒரு ஷொட்டு .......


    ஆரம்பத்தில் முரண்பாடு என தெரிந்தது ...


    பிறவியிலேயே காது கேளாத வாய்பேசாத ஜானி "மொசார்ட் "கிளாரினெட்டில் வாசிப்பது தான் .....(கதையின் பின்பகுதியில் ஹியரிங் எய்ட் மூலம் காது கேட்பதாக சொல்லபடுவதும் பொருத்தமில்லை )

    மொசார்ட் -ன் contemporary composer பீத்தோவன் -ன் மிக சிறந்த இசை படைப்புகள் அவருக்கு காது கேட்காமல் போன பின்பு உருவாக்க பட்டவைதான் என்ற போதும் அதற்கு முன் அவருக்கு காது நன்றாக கேட்டது என்பதால் அவர் சிம்பொனி அமைத்ததை நம்மால் புரிந்து கொள்ள முடியும் ....

    but for a born deaf mute ???????

    It seems quite possible ........

    They can learn music not by hearing ...but by feeling vibrations ...they can feel the rhythm ...even can tell the pitch ....

    ஜானி ஒரு அருமையான பாத்திர படைப்பு ...


    கதை நகர்த்த பட்ட விதம் அருமை ...


    டைலன் வைத்த ஜானி என்ற பெயர் கடைசி வரை உபயோகம் செய்ய படுவது விந்தை ...

    உண்மையில் வித்தியாசமான கதை ....

    ReplyDelete
    Replies
    1. //
      They can learn music not by hearing ...but by feeling vibrations ...they can feel the rhythm ...even can tell the pitch .... //

      'மொழி' படத்துல ஜோதிகா ஸ்பீக்கர்ல கையை வச்சு ம்மீசிக்கை உணர்வது போலவா?!

      Delete
    2. ஹா ..ஹா ..

      but what I wrote is science ....possibilities are there ...

      We can accept johny playing clarinet ..but what we can't accept is "jhony's understanding of speech after wearing hearing aid ....

      Because music is universal but .


      Language is not .......

      Delete
    3. ஹா ..ஹா ..

      but what I wrote is science ....possibilities are there ...

      We can accept johny playing clarinet ..but what we can't accept is "jhony's understanding of speech after wearing hearing aid ....

      Because music is universal but .


      Language is not .......

      Delete
  49. என் பெயர் டைகர் Economy /Deluxe முயற்சிக்கு வாழ்த்துகள். கருப்பு வெள்ளையில் இருக்கும் கம்பீரம் கலரில் இல்லை என்பது என் தனி பட்ட கருத்து

    ReplyDelete
  50. ஆனாலும் ஞாயிறு காலை கண்விழிக்கும்போது ஒரு பதிவு இல்லேன்னா எதையோ மிஸ் பண்ற மாதிரியேஏஏ... ஒரு ஃபீலிங்கு!

    ReplyDelete
  51. Aasiriyar avarkalukku vanakkam.............

    ReplyDelete
  52. சா.ஒ.சி.ஓவியங்கள் வழக்கம் போல் அட்டகாசம்.கதை.! சுமார்தான்.! கௌபாய் துப்பாக்கி தொடாமல் இருப்பது மிலிட்டரி ஓட்டலில் உட்கார்ந்து சைவம்தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடித்தது போல் எரிச்சலை கொடுத்தது.!

    பௌன்சர் கதையை தனிமையில் யார் தொந்தரவு இல்லாமல் ரசித்து படிக்க வேண்டும்.!அதற்கான சூழ்நிலைக்கு வெயிட்டிங்.!

    ReplyDelete
  53. 2016 மறு பதிப்பில் யார் யார் சார் வாராங்க மான்ட்ரேக் .வேதாளர். ரிப்கெர்பி இவங்களை கண்ணுல காட்டுங்க சார் இவர்களால்தான் இன்னும்நாங்கள் காமிக்ஸ் ரசிகர்களாக உள்ளோம்ம்

    ReplyDelete
    Replies
    1. +1111 My son and Myself are diehard fan of Phanthom. Senthilnathan K, Madipakkam.

      Delete