Saturday, August 08, 2015

Chalo ஈரோடு !!

நண்பர்களே,

வணக்கம். பல நேரங்களில் வண்டியில் ஏறியமர்ந்த பின்னே எஞ்சினை ஸ்டார்ட் செய்து, கியரை மாற்றினாலே சவாரி துவங்கிடுவது வழக்கம்டிஜிட்டல் கோப்புகள் வந்து சேர்வதில் தாமதம் ; அட்டைப்பட டிசைன்கள் செட் ஆகாது போவது  ; அச்சுப் பிரிவில் பணியாட்கள் பற்றாக்குறை ; இயந்திரப் பழுதுகள் போன்ற சிக்கல்கள் தலைதூக்குவதுண்டுதான்; ஆனால் அவற்றை சமாளிப்பது பெரியதொரு பிரயத்தனமாக இராது.

ஆனால்-

சில தருணங்களில் வண்டி ஸ்டார்டே ஆகாமல், கீழே இறங்கி, வேஷ்டியை மடித்துக் கட்டிவிட்டு ‘ஏலேலோ ஐலசா‘ என்று ‘தம்‘ கட்டித் தள்ளினாலும் அங்குலம் அங்குலமாய் வண்டி நகரும் அனுபவங்களும் உண்டு! இம்மாத இதழ்களின் பணிகள் ‘ஏலேலோ‘ ரகத்தைச் சார்ந்ததாய் அமைந்து போனதில் தான் எங்களின் திருவாளர் முதுகார்கள் புண்ணாகிப் போய் கிடக்கின்றனர் ! மறுபதிப்பு இதழ்களான ‘உறைபனி மர்மம்& ‘எத்தனுக்கு எத்தன்‘ பெரிதாய் மெனக்கெடல்கள் ஏதுமின்றித் தயாராகி நிற்க- புதுவரவுகளோ ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நம் பொறுமைகளுக்குப் பெரும் சோதனைகளை முன்வைத்தன!

ஆரம்பத்தில் சிக்கல்கள் துவங்கியது நமது அட்டைப்பட டிசைன் பணிகளில்! CCC-க்கு மாத்திரமே தேவைப்பட்ட டிசைன்களின் எண்ணிக்கை மொத்தம் 10! (4 இதழ்களுக்கு முன் & பின் என 8 டிசைன்களும்; அவற்றிற்கான box-க்கு இருபக்கங்களது டிசைன் என a total of 10!) இது தவிர இம்மாதத்திற்கென முதலில் திட்டமிட்டிருந்த பௌன்சர் இதழுக்கென 2 டிசைன்கள் + கடைசி நிமிட மாற்றமான மேஜிக் விண்டாருக்கென 2 டிசைன்கள் என பட்டியல் நீண்டு கொண்டு 14-ல் சென்று நின்றது! நமது டிசைனர் பொன்னன் நல்ல திறமைசாலியெனினும், timeline என்றதொரு பதத்திற்கு அவரது அகராதியில் பொருளே வேறு! ஒவ்வொரு மாதமும் கடைசி நிமிடத் தாண்டவங்கள் தான் நமக்கு நடைமுறை ! ஆனால் இம்முறையோ மொத்தம் 14 டிசைன்கள் எனும் போது கடைசி வார ராக்கூத்துகளில் இத்தனையையும் திருப்தியாக செய்து முடிப்பது இயலாக் காரியம் என்பதால் ஜுலையின் நடுவிலிருந்தே என் நச்சரிப்புகளைத் தொடங்கி விட்டேன். ஆனால் மனஷனுக்கு வேறு நெருக்கடியான வேலைகளும் இருந்தனவோ என்னவோ தெரியவில்லை- இம்முறை நம் பணிகளின் பக்கம் கவனம் செலுத்துவதற்கான அறிகுறிகள் கூட கண்ணில் தட்டுப்படவில்லை. வழக்கம் போல என் வெண்கலத்தொண்டையை உச்சஸ்தாயிக்குக் கொண்டு சென்று பார்த்தும் தேர் எல்லையை விட்டே நகன்ற வழியைக் காணவில்லை. சரி- இதற்கும் மேல் கைகளைக் கட்டிக் கொண்டு பொறுமையின் ரூபமாய் தொடர்ந்தால் இந்த மாதம் சட்னி தான் என்பது புரிந்து போக- emergency நடவடிக்கைகளைத் தொடங்கினோம். இத்தனை காலமாகியும்  சித்திரப் பணிகளுக்கென ஒரு ஓவியரையும் ராப்பர் டிசைனிங்கிற்கென பொன்னனையும் தாண்டி நாமொரு second line உருவாக்கியிருக்கவில்லை என்பது ரொம்ப காலமாகவே என்னை உறுத்தி வரும் விஷயம்! இம்மாதம் அந்த அஜாக்கிரதைக்கான பலன்களை ஒட்டுமொத்தமாகவே உணர முடிந்தது! 'அங்கே-இங்கே' என ஓடி உள்ளுரில் இன்னொரு டிசைனர்; சென்னையில் அந்த image branding நிறுவனம் என தேடிப் பிடித்துப் பணிகளை ஒப்படைத்தோம். ஜுனியர் எடிட்டர் தன் பங்கிற்கு வலையில் தேடல்களைத் தொடங்கிட - சென்னையில் இன்னுமொரு அனுபவசாலி graphic designer கிட்டினார்! ஆளாளுக்கு இரண்டல்லது மூன்று option-களுடன் ராப்பர் டிசைன்களை அனுப்பி வைக்க - திரும்பிய திசையிலெல்லாம் கர்னல் கிளிப்டன்களும், லியனார்டோ தாத்தாக்களும் தான் தென்பட்டனர் - கலர் கலரான பின்னணிகளில் ! அவற்றிலிருந்து filter செய்து ராப்பர்களை ஒருவழியாகத் தேர்வு செய்யும் வேளையில் பொன்னனும் மீண்டும் ஜோதியில் கலந்திட  ஒரே அட்டைப்பட மேளா தான்! நடுவே ஸ்மஃர்ப் நிறுவனத்தினர்  'ராப்பரில் கிளை வேண்டாம்; புதர் வேண்டாம்; பழம் வேண்டாமெனinstructions வழங்கிட CCC-ன் டிசைன்களும், மற்ற 2 இதழ்களின் அட்டைகளும் தயாராவற்குள் எனக்கு ஒன்றிரண்டு அகவைகள் சட்டென்று அதிகமாகிப் போய்விட்ட மாதிரியொரு உணர்வு!

இதில் CCC-ன் box நமக்கும் ஒரு முதன்முறை என்பதால் டப்பா செய்வதற்கான நபரைப் பிடித்து அதற்கென ஒரு பிரத்தியேக die செய்தும் வாங்க வேண்டியிருந்தது. வழக்கமான நமது பணி வட்டத்திற்குள் உள்ள நபர்களுக்கு நாம் எப்போதுமே காலில் வெந்நீரை ஊற்றித் திரியும் அரை லூசுகள் என்பது தெரியும்தான்; ஆகையால் முகம் சுளிக்காது நமது அவசரமோ அவசரங்களுக்கு இயன்றளவு ஒத்துழைப்பது வாடிக்கை. ஆனால் இவரோ புதியவர்! இவரிடமும் போய் ராக்கூத்தடிக்க நேரிட்டது தான் கொடுமையோ கொடுமை! ஒரு மாதிரியாக அவரையும் தாஜா செய்து டப்பாக்களைத் தயார் செய்து வாங்கி வந்தால்  smurf பக்கங்களின் approval-க்கான காத்திருப்பு தொடங்கியது! ஒரு வழியாக அந்த ஸ்பீட் பிரேக்கரையும் தாண்டி, அச்சுப் பணிகளை முடித்திருந்த போது வெள்ளிக்கிழமை காலை (நேற்றைக்கு) புலர்ந்திருந்தது!

வியாழன் இரவு நான் முடிந்திருந்த  இதழ்களை ஒருசேரக் கையில் வைத்துப் புரட்டிக் கொண்டிருக்க தற்செயலாகக் கர்னல் க்ளிப்டனின் சில பக்கங்களில் லயித்து நின்ற என் கண்கள் மொச்சக்கொட்டை சைசுக்கு அகன்று நின்றன! அந்த இரண்டு பக்கங்களிலும் ‘லி‘ என்ற எழுத்துக் காணாமல் போகும் வியாதியானது மறுபடியும் தலைதூக்கியிருப்பது புரிந்தது! ‘ஜோலி‘ ‘ஜோ‘ என்றும்; ‘டாலி‘ ‘டா‘ என்றும் என்னைப் பார்த்துப் பல்லிளிக்க கதிகலங்கிப் போய் ஒரிஜினல் file-களைத் தேடிப் பிடித்து சரி பார்த்தோம்! எங்களது கலர் கோப்புகளில் எல்லாமே சரியாக இருக்க பிராசஸிங்கிற்கு அனுப்புவதற்கு முன்பாக பணி முடித்த அந்த file-களில் ஒருசிலவற்றை  curve செய்திட நமது புது DTP பணிப்பெண் மறந்து போயிருந்ததும்; அதன் பலனாய் Coreldraw மென்பொருளின் வெவ்வேறு versions காரணமாய் ‘லி‘ ஸ்வாஹா ஆனதும் புரிந்தது! சும்மாவே பழுக்கும் முதுகு இப்படியொரு சொதப்பலில் தாக்கே பிடிக்காது என்பதால் ராவோடு ராவாக ஸ்டிக்கர்கள் செய்ய ஓடினோம் வியாழன் பின்னிரவில் ! வெள்ளிக்கிழமை காலை ஆபீஸில் நம்மவர்கள் அத்தனை பேரும் ஸ்டிக்கர் ஒட்டி விளையாடும் குழந்தைகளாய் உருமாறிப் போனது தான் நடந்தது ! அந்தப் பணிகளை முடித்து விட்டு இதழ்களை CCC-ன் box க்குள் நுழைத்து விட்டு அப்புறமாய் பாக்கி 3 இதழ்களையும் சேர்த்து ஆக மொத்தம் 7 இதழ்களை கூரியர் டப்பாக்களுக்குள் போட்டு pack செய்து despatch செய்வதற்குள் எல்லோருக்குமே போதும் போதுமென்று ஆகிப் போனது ! And இது மறுபடியும் ஒரு "வெள்ளிக்கிழமை despatch தினம்" என்பதால் கூரியர் நண்பர்கள்  பட்டுவாடாவில் சொதப்பினால் திங்கட்கிழமை வரை காத்திருக்க வேண்டிய கடுப்ஸில் நண்பர்களின் அர்ச்சனைகளும் நமக்குக் காத்திருக்குமென்பதை அறியாதில்லை! So- பணிகள் முடிந்தனடா சாமி!என்று பெருமூச்சு விடுவதா? ; ‘ஸ்மஃப் ஒப்புதலின் காரணமாய் ஒரு வார தாமதம் நிகழ்ந்து விட்டதே!‘ என்று ஆதங்கப்படுவதா? 'உருண்டோ-புரண்டோ இத்தனை இதழ்களையும் கரைசேர்த்து விட்டோமே!!' என்று பெருமிதப்பட்டுக் கொள்வதா ?  அல்லது 'எனக்கு புக் கிடைக்கவில்லை !!' யென சனிக்கிழமை மாலைகளில் காத்திருக்கும் சாத்துகளுக்காக brace செய்வதா ?என்று துளியும் புரிதலின்றி ஒரு மந்தகாஸமான நிலையில் உள்ளேன் ! But please be sure we have given it our everything ! இதே CCC- 4 தனித்தனி இதழ்களாகப் பிரித்திருக்கும் அவசியமின்றி ஒரே தடி புக்காகப் போட முடிந்திருக்கும் பட்சத்தில் - அட்டைப்பட டிசைன்; பிரிண்டிங்; பைண்டிங் என பலயிடங்களில் நேரமும்; பணமும் மிச்சமாகியிருக்குமே என்ற ஆதங்கமும் தலையின் இன்னொரு பக்கம்! But as always - இந்தப் பணிகள் தந்த அனுபவங்களையும் உள்வாங்கிக் கொள்கிறோம்!

And finally on to the real thing! இதோ இன்று (சனி) உங்களைத் தேடி வர வேண்டிய இம்மாத இதழ்களின் இறுதி வடிவங்கள் & previews! ஏற்கனவே அவ்வப்போது முழுவதும் முற்றுப் பெற்றிரா ராப்பர்களை உங்கள் கண்களில் காட்டியிருந்தாலும் இவையே final versions!
BOX

இதழ் # 350 ஆக CCC-ன் ஆட்டத்தைத் தொடங்கி வைப்பது நமது வுட்சிட்டி கோமாளிகள் தான்! So - "காமிக்ஸ் டைம்" பகுதி இடம்பிடித்திருப்பதும் இந்த இதழில் மட்டுமே! வழக்கமான உட்சிட்டி கூத்துக்கள்; வழக்கமான ஆர்டினின் அட்டகாசங்கள் என்று ஓடும் இந்தக் கதையில் பல காலம் கழித்து சிக் பில்லுக்கு சற்றே வெயிட்டானதொரு ரோல் உண்டு! So அந்த சந்தோஷத்தில் மனுஷனும் ஒரு ‘உம்மா‘ frame-ல் புண்ணியம் தேடிக் கொள்கிறார்!


அடுத்ததாய் உங்களை நோக்கிச் சீறிப் பாய்ந்து வருவது நமது கர்னல் க்ளிப்டன்!  ‘ஏழு நாட்களில் எமலோகம்‘ செம racy ஆக்ஷன் த்ரில்லர்க்ளிப்டனின் கதைகள் எல்லாமே ஆக்ஷன் த்ரில்லர் ரகங்களே சொல்லப்பட்ட விதங்களில் நயமான காமெடிப் பூச்சோடு! And கார்ட்டூன் பாணிச் சித்திரங்களும் இங்கே அமல் என்பதால் சுலபமாய் படித்து ரசிக்க முடிந்திடும்! அப்புறம் ஜாலியாக நகற்றப்பட்டிருக்கும் இந்தக் கதைக்கு லைட்டான மொழிபெயர்ப்பு treatment மாத்திரமே தந்துள்ளோம்! So இங்கே Operation பூதக்கண்ணாடி‘க்கு அவசியம் வேண்டாமே - please ?

தொடர்வது புதுவரவான லியனார்டோ! இவரொரு பரீட்சார்த்த முயற்சி தான் என்பதில் ஐயமில்லை- ஆனால் ரொம்பவே முக்கியமான பரீட்சை இது என்பதிலும் எனக்கு சந்தேகமில்லை simply becos இது தான் பிரான்கோ-பெல்ஜியக் கதைவரிசைகளுள் ரொம்பவே பிரசித்தமான ஒற்றைப் பக்கம் / 2-3 பக்க நகைச்சுவைக் கதம்பங்களின் முதல் முயற்சி தமிழில்! முழுநீளக் கதைகள் மட்டுமே நம் தட்டுக்களில் பரிமாறப்பட்டு வந்திருக்கும் நிலையில் மதியில்லா மந்திரி; லக்கி லூக் சிறுகதைகள்; ஸ்டீல்பாடி ஷெர்லாக் போன்ற 4/5 பக்கக் கதைகளைக் கூட நாம் இலைகளின் முனைகளில் ஸ்வீட்களாக மாத்திரமே பாவித்துப் பழகி வந்துள்ளோம்! முதன்முறையாக அதுவே ஒரு முழு நீள விருந்தாகப் பரிமாறப்பட உள்ள இத்தருணத்தில் இவற்றிற்கு உங்களது reactions எவ்விதமிருக்குமென்று அறிந்திட ஆர்வமாய் உள்ளோம்! ‘லியனார்டோ‘ தொடரானது பிரெஞ்சில் ரொம்ப ரொம்பப் பிரசித்தம் இது வரை 46 ஆல்பங்கள் வெளிவந்துள்ளன இந்த வரிசையில்! And இந்த gags கள் பெரும்பாலும் லாஜிக் ஏதும் பார்த்திடா ஜாலி சமாச்சாரங்கள் என்பதால் just sit back; relax & enjoy please! சித்திரங்களின் பின்புலத்தில் ஒரு பூனையும், எலியும் ஆங்காங்கே தனி ஆவர்த்தனம் நடத்தித் திரிவதையும் பார்த்திடலாம்; So நிதானமாய் சித்திரங்களையும் ரசித்திட நேரம் எடுத்துக் கொள்ளுங்களேன்! Again இது லைட்டான களம் என்பதால் மிக லைட்டான மொழிபெயர்ப்பு பாணி மாத்திரமே இங்கேயும் !

And தொடர்வது நமது நீலப் பொடியர்கள் தான்! Smurfs பற்றி நிறையவே பில்டப் தந்து; நிறைய எழுதித் தள்ளி விட்டதால் அதே மாவை மறுஅரவை செய்யப் போவதில்லை! மாறாக இந்த இதழின் அமைப்பே படைப்பாளிகளின் உந்துதல்களால் stylish ஆக அமைந்திருப்பதைப் பற்றித் தான் highlight செய்திடப் போகிறேன்! “இதுவொரு ஊதா உலகம்“ என்ற தலைப்பு இருப்பினும் அட்டைப்படப் பின்புலன் 'பளீர்' மஞ்சளாக இருப்பது ஏனோ? என்ற கேள்வியை மட்டும் ஓரம்கட்டி விட்டு இதழுக்குள் புகுந்திட்டால் உங்களுக்கு அந்த style மாற்றம் தென்படலாம்! படைப்பாளிகளின் அறிமுகம்; கதை ; தொடரக் காத்திருக்கும் smurf விளம்பரங்கள் என்று சிம்பிளாக முடிந்திடும் இதழிது! கதைக்குள் முதன்முறையாகப் புகுந்திடவிருக்கும் நண்பர்களுக்கு இந்த நீலக் குட்டி மனுஷன்கள் பேசும் ‘பொடி ஸ்மர்பி' பாஷை சற்றே விநோதமாகப் படலாம்! ஆனால் படிக்கப் படிக்க இதுவே இந்தத் தொடரின் மேல் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும் காரணியாக அமையப் போவது நிச்சயம் ! And இந்த ‘பொடி‘ பாஷையை அமைக்க நமது வாசக நண்பர் லக்கி லிமட்டுக்கு இங்கேயொரு extra big thanks ! ஏகப்பட்ட மெனக்கெடலொடு நண்பர் இந்த "மொழியினை" உருவாக்கியிருப்பது கண்கூடு ! படைப்பாளிகளின் நிபந்தனைகளின்படி ‘ஸ்மர்பி‘ பாஷைக்கும் அவசியமிருப்பதால் நண்பர் லக்கி பாணியில் நம்மால் 100% செயல்படுவது சாத்தியமாகவில்லை ; ஆனால் இந்தப் ‘பொடி ஸ்மர்பி‘ பாஷையின் புண்ணியத்தால் வரும் நாட்களில் நமது அகராதிகளில் பல புதிய வார்த்தைகள் இடம்பிடிக்கும் சாத்தியக் கூறுகள் பிரகாசம் என்பேன்! இந்த நீலப் பொடியர்களை நிதானமாய் ரசிக்க அவகாசம் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு frame தனிலும் சிற்சிறு சித்திர ஜாலங்களில்  ஓவியர் கொணர்ந்திருக்கும் லேசான முகமாற்றங்களை கவனித்துத் தான் பாருங்களேன்! லேசான உதட்டுக் கோடுகளை இப்படிப் போட்டு புன்சிரிப்புகளையும்; அப்படிப் போட்டு கோபதாபங்களையும்; இன்னும் கொஞ்சம் மாற்றி பயங்களையும் ஓவியர் படைத்துள்ள லாவகம் அட்டகாசம்! And தவறாது உங்கள் வீட்டு சுட்டீஸ்களின் கண்களில் இந்த இதழையும் ; லியனார்டோவையும் காட்டிடுங்களேன் please!

இம்மாதப் புது இதழ் பட்டியலின் இறுதியில் வந்திடும் மேஜிக் விண்ட் பற்றி! அடக்கமான சைஸ்; வசியம் செய்திடும் அட்டைப்படம் ; நேர்கோட்டுக் கதைக்களம் என இதுவும் ஒரு easy read தான்! நிச்சயமாய் cartoon போட்டிகளுக்கு மத்தியிலும் இதுவும் score செய்திடுமென்று நம்புகிறோம்!

இன்றைய பொழுதும், ஞாயிறின் காலைப் பொழுதும் ஈரோட்டுப் புத்தகவிழாவினில் camp என்பதால் ( 8 & 9 ஆகஸ்ட் ) உங்களை சந்திக்கும் ஆர்வத்தோடு ஜு.. சகிதம் நமது ஸ்டால் நிர்: 152-ல் காத்திருப்போம்! Please do visit us folks! அப்புறம் சென்னையில் ‘மின்னும் மரணம்‘ வெளியான சமயம் நாம் பரீட்சித்துப் பார்த்த சிறு அரங்கம் சில மணி நேர நண்பர்கள் சந்திப்பு முயற்சியை இம்முறை ஈரோட்டிலும் தொடரவிருக்கிறோம் (பக்கத்து ஸ்டால்களுக்கு இடைஞ்சல் தராது ஓரம் கட்டிக் கொள்வோமே என்ற முன்ஜாக்கிரதை தான்!!).

புத்தக விழா நடைபெறும் V.O.C. பூங்காவின் நுழைவு வாயிலில் உள்ள LE JARDIN ஹோட்டலில் ஞாயிறு காலை 11-30 முதல் மதியம் 1-30 வரை சிறு ஹால் ஒன்றினை எடுத்துள்ளோம். ஜாலியான அரட்டைகளுக்கும், 2015-ன் இதுவரையிலான review & 2016-க்கான suggestions-க்கு இந்த சந்திப்பு பயன்பட்டால் சந்தோஷமே! The welcome mat is out guys! உங்கள் வருகைகள் நம் பயணத்துக்கு பெரிதும் வலு சேர்க்கும்அவசியம் வந்திடுங்களேன்! See you around! Bye for now!

P.S : வெள்ளி மாலைக்குள் உங்கள் சந்தாப் பிரதிகள் எல்லாமே கூரியரில் கிளம்பி விட்டன ; அவற்றின் ரசீதுகள் எங்களுக்கு சனி மாலை தான் ஒட்டுமொத்தமாய்க்  கைக்குக் கிடைக்கும் ! So கூரியர் tracking நம்பர் கோரி பகலில் போன் அடிப்பதில் பிரயோஜனம் இராது - சற்றே பொறுமை அவசியமாகிடலாம்- ப்ளீஸ்  ! 

And ஆன்லைன் விற்பனைகளுக்கான லிஸ்டிங்கும் தயார் : http://lioncomics.in/monthly-packs-july-2015/15684-august-2015-pack.html

321 comments:

  1. Replies
    1. டபுள் ஆச்சர்யம்.!கிங் விஷவா சார்.!காலை வணக்கம்.!

      Delete
  2. அப்பாடா காத்திருந்த எங்களுக்கே இவ்வளவு டென்ஷன் என்றால் உங்கள் கதை கந்தலாகிப் போனதில் ஆச்சரியமில்லை சார்
    கடினமான ஏழு பரிட்சைகளை எழுதிவிட்டு பின் அதன் தாக்கம் தீராத மசமசப்பில் இருந்து நீங்காத நிலையிலும் ஈரோட்டை நாடி ஓடி வரும் எடி சார் குழுவின் கடின முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சார், முதலில் வெவ்வேறு படைப்பாளிகளைப் பார்த்து அவர்களிடம் மற்ற நிறுவனத்தின் கதைகளை ஒன்றாக இணைத்து வெளியிட அனுமதி வாங்க வேண்டுமென்பதே நமக்கு இப்போதுள்ள தலையாயக் கோரிக்கை!. தனித்தனி இதழ்களாக வெளியிடுவதால் அதிலுள்ள சிரமங்கள், வேலைப்பளு, காலதாமதம் போன்றவற்றைக் களைய ஏதுவாகயிருக்கும். அது மட்டுமில்லாமல், இதுவரை ஸ்பெஷல் வெளியீடுகளில் குண்டு புக்ஸை பார்த்து பழகிய நாம், முதல்முறையாக தனித்தனி இதழ்களாக ஸ்பெஷல் இதழ் வெளிவரும் போது அதனுடைய தாக்கம் எவ்விதம் இருக்குமோ..? let wait and see, a day to go...

    ஆடி மாதத்தில் இதழ்கள் வெளிவருவதால், உங்களை இந்தளவிற்கு தயாரிப்புப் பணிகளில் ஆட்டம் காண செய்துள்ளதோ...? (மவனே, இனிமேல் இதுப்போலொரு பாக்ஸ் செட்டைப் பற்றி பேசுவே...?!) சார், ஆனாலும் உங்கள் பொறுமை யாருக்கு வருமோ...? நானாகயிருந்தால், எப்போதோ கைகளைத் தட்டிவிட்டியிருப்பேன்...!

    ReplyDelete
  4. நம்பவே முடியலை. திடீர் பதிவு. நான் 5.

    ReplyDelete
  5. ஆசிரியர் மற்றும் நண்பா்களுக்கு இனிய காலை வணக்கம்....

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே &
    வணக்கம் சார் &
    வெல்கம் டூ ஈரோடு சார் ....
    வார்ம் வெல்கம் டூ ஜூனியர் எடிட்டர் டூஊ ...

    ReplyDelete
  7. அன்புள்ள எடிட்டர் சார் உங்களை ஈரோட்டில் எதிர் பார்த்து நாங்கள் வெயிட்டிங் .தம்பி விக்ரமுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அன்புள்ள எடிட்டர் சார் உங்களை ஈரோட்டில் எதிர் பார்த்து நாங்கள் வெயிட்டிங் .தம்பி விக்ரமுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. டேட்ட டட்டட டேட்ட டைங்
    டேட்ட டட்டட டேட்ட டைங்
    டேட்ட டட்டட
    டேட்ட டட்டட
    டேட்ட டட்டட
    டைங்.!!!
    சொப்பன சுந்தரி வச்சிருந்த கார்ல சேந்தம்பட்டி கோஷ்டி கச்சேரிக்கு இன்னும் ஓரிரு மணித்துளிகளில் கிளம்பத் தயாராகி வருகிறது.
    அது சமயம் ரசிகர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரையும் தவறாமல் மெடலோடு வந்து கண்டு களிக்குமாறு கேட்டுக் கொளகிறோம்.!!!

    பின் குறிப்பு. : இந்த முறை ஆட்டத்தில் ஒன்றிரண்டு புது ஐட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
    அந்த மாரியாத்தா உங்க எல்லாரையும் நல்லா பாத்துக்கட்டும்.!!!!!

    ReplyDelete
    Replies
    1. காலை வணக்கங்கள் நண்பர்களே..!
      எடியுடன் இரண்டு நாள்..!
      ஈரோடுக்கு கிளம்பியாச்சி..!

      Delete
    2. உள்ளூர் ஆட்டக்காரனை வெளியூர் ஆட்டக்காரன் மதிக்கிறதுதான் மரியாதை. இந்தாங்க ஒரு நாலஞ்சி மெடல்களை வைச்சிகுங்க..

      நாங்க அங்க வரமுடியாததுக்கு காரணம், பம்பாய் பார்ட்டியில் ஆட அவசரமாக கூப்டதுதான் ஒரே காரணம் என்பதை இங்கே தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

      Delete
    3. @ ஆதி தாமிரா

      ஆடத்த முடிச்சிட்டு தூங்கிட்டு..இப்பதான் முழிச்சேன்..! ஒருதபா பொரண்டு குட்டி தூக்கம் போடனும் போல இருக்கு. உங்க அஞ்சி மெடலையும் சித்த தூங்கி வந்து எல்லாருக்கும் குத்திவிட்டுடறேன்..!
      அதுசரி பாம்பேன்னா ஆயீரம் பார்ட்டி நடக்கும், அரசனை நம்பி..இந்த சேந்தம்பட்டி கரகாட்ட கோஷ்டியை கைவிட்டுடிங்களே.. :-((( உங்களுக்காக வாங்கின மாலையை கடைசியா...எடிக்கு போடவேண்டியதா போச்சி..! இப்படி பண்ணிட்டிங்களே ஆதி..! (வண்டு கடிச்சி..வெறியாய் குதிக்கும் sumrf படம் இஸ்டத்துக்கு)

      Delete
  10. கச்சேரி சிறப்புடன் நடக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.!

    ReplyDelete
  11. எடிட்டர், ஜு.எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவர்களுக்கும் காலை வணக்கங்கள்.. மூன்று மாதமாக காத்திருந்து ஈரோட்டு புத்தக விழாவில் காமிக்ஸை சிறப்பிக்க வரும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்..

    ReplyDelete
  12. வெல்கம் எங்க ஈரோடு விஜயன் சார்

    ReplyDelete

  13. ஈரோடு மாநகரத்திற்கு வருகைபுரிந்துள்ள எங்கள் மதிப்புக்குரிய மாதவா (aka) ஓ.வா.உலக நாதன் (aka) ஆந்தை விழியார் (aka) சிங்கமுத்து வாத்தியார் (aka) தமிழ்நாட்டின் முதன்மை காமிக்ஸ் காதலர் திரு. S. விஜயன் அவர்களையும்...

    மதிப்புக்குரிய junior மாதவா (aka) junior ஓ.வா.உலக நாதன் (aka) junior ஆந்தை விழியார் aka junior சிங்கமுத்து வாத்தியார் (aka) தமிழ்நாட்டின் முதன்மை கி.நா காதலர்(!) திரு. V. விக்ரம் அவர்களையும்...

    நேற்றிரவே பயணம் மேற்கொண்டு, இன்று அதிகாலையில் ஈரோடு வந்தடைந்திருக்கும் நமது நண்பர்கள் அனைவரையும், உற்சாகமாய் தற்போது வீட்டிலிருந்து கிளம்பிக்கொண்டிருக்கும் நண்பர்களையும்...

    அனைத்திந்திய தமிழ் காமிக்ஸ் வாசகர் பேரவை, சேந்தம்பட்டி கோஷ்டியினர், போராட்டக்குழுவினர் சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்! __/|\__ _/|\_

    ReplyDelete
  14. பாக்ஸ் செட்டு உங்கள இப்படி பேஜார் பண்ணிடுச்சா?
    நீங்கள் சமாளித்த விதம் இதற்காகவே உங்களை என்ன சொல்லி பாராட்டினாலும் தகும் சார

    அனைத்து காமிக்ஸ் நண்பர்களையும் இன்முகத்தோடு வரவேற்க சேந்தம்பட்டி கரகாட்டக்குழு ஈரோட்டில் வெய்டிங்
    உடன் சேர்ந்து காரைத்தள்ள தோள் கொடுங்க தோழர்களே

    இனிமையான அந்த 2 நாளை மிஸ் பண்ண வேண்டியதொரு சுழல்

    கலக்குங்க ப்ரண்ட்ஸ்

    ReplyDelete
  15. கொாியா் வாங்கியாச்சு பொடியாா்களை பொடித்துவிட்டு வருகிறேன்

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. தமிழில் இன்று பிறந்தநாள் காணும் ஸ்மர்ஃப்ஸ் க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... :)

    நன்றி விஜயன் சார்

    ReplyDelete
  18. தமிழில் இன்று பிறந்தநாள் காணும் ஸ்மர்ஃப்ஸ் க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... :)

    நன்றி விஜயன் சார்

    ReplyDelete
  19. இந்த நாக்கு தள்ளும் படலம் பற்றியே தனி காமிக்ஸ் போடலாம் போலிருக்கே....தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் முதல் முறையாக வரும் box set க்கு ஆவலுடன் வெய்டிங்க்.... தங்களுக்கும் , டீமுக்கும் ஹேட்ஸ் ஆஃப் சார்....

    ReplyDelete
  20. நாங்களும் ஈரோடு கிளம்பியாச்சு....!!!!!

    ReplyDelete
  21. இனிய காலை வணக்கம் நண்பர்களே.

    ReplyDelete
  22. சார் புத்தகங்களை காலையிலே கைப்பற்றி விட்டேன். அருமை .இது போல பாக்ஸை சந்தாதாரர்களுக்கு மட்டும் என மாதம் தோரும் அருளினால் சந்தா கொஞ்சம் உயரலாம் .....

    வருகிறது விளம்பரங்கள் ......அருமை . முதலில் நான் படிக்க நினைத்தது கறுப்பு காகிதங்களையே.... ஆனால் தலையங்கம் மனதை மாற்றி ஸ்மர்பை ஸ்மர்ப்ப செய் வதால் அதனுள் ஸ்மர்ப்ப போகிறேன். இப்போது டிவியில் பிரபலமடைந்துள்ள ஸ்மர்ப்களை புத்தக திருவிழா வாயிலில் குழந்தைகளை வரவேற்க்க ஸ்மர்ப்பாக நிறுத்தினால் .....நெல்லுக்கு பாயும் நூர் புல்லுக்கும் பாயுமே....நண்பர்கள் மன்னிக்க நமக்கு நெல் வேறு ....புதியவர்களுக்கு நெல் வேறு.....


    அப்புறம் உங்களது இந்த முயற்ச்சி புரட்ச்சி தீ ஆசிரியரை நினைவு படுத்துகிறது ....நீங்களும் அது போல உயர காலம் தன் கடமையை செய்யட்டும்..... மனம் நிறைய நன்றி கலந்த வாழ்த்துகளுடன் என்றும் உங்கள் ஸ்மர்ஃப் ஸ்மர்ஃதான் .

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. வாங்கியாச்சே....பார்சல்...வாங்கியாச்சே.....
    முதல் முறை பாக்ஸ் செட்.....பழைய வீடியோ கேசட்.....என்ன கொஞ்சம் பெபபபபபரிய வீடியோ கேசட் .....இதுவும் ஒரு வித்தியாசமான குண்டு அல்லாத குண்டு புக்.......இனிமேல் இதுதான் ட்ரெண்ட் டோ .....கேசட்டின் இரு பக்க படங்கள் ரியலி சூப்பர் சார் ....முதல் புரட்டலில் அனைவரும் நன்றாகவே உள்ளனர்.....தாத்தாவ்ஸ் தான் டாப்பான வண்ணக்கலவையாக எனக்கு தெரிகிறது ......பொடியர்களும் பொடியாக பொடிக்கிறார்கள் .....அட்டைப்படம் கிட்டை அடித்து கொள்ள ஆள் இல்லை ....உள் பக்கங்களில் கிட்டின் சிகப்பும் ...கிளிப்டனின் அடர் வண்ணமும் அடித்து தூள் பரத்துகின்றன சார் . .......கறுப்பு காகிதங்கள் - புரட்டலுக்கே அற்புதமான லுக் சார் ...ஓல்டு பாய்ஸ் ஓல்ட் லுக்கில் லைட்டா மனசை வருடுகிறார்கள் சார் ......மேற்கொண்டு ...அப்புறம் சார் ...

    ReplyDelete
  26. STILL WAITING FOR THE BOOKS. NOT YET RECEIVED. HAI ERODE VIJAY.

    ReplyDelete
  27. Nanbergal anaivarukum vanakkam.erode santhipil tex xiii poratam marantgu Vida vendam

    ReplyDelete
  28. யாராவது புக் பேர் அப்டேட் பொடிங்களேன்

    ReplyDelete
  29. Nice to know on the despatches - Eagerly awaiting my copies !

    ReplyDelete
  30. ஒவ்வொரு முறையும் இதுபோல கடினமான சவால்களை எதிர்கொண்டுவிட்டு நீங்கள் புலம்புவதைக் கேட்பதே சுவராசியமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. அடுத்தவன் கஷ்டப்படுறத கேட்க என்னவொரு ஆனந்தம்? ஹிஹி!

    வேட்டிய மடிச்சிக்கட்டிகிட்டு வண்டிய நீங்க தள்ளுரதைப் படிக்கிறப்போ உங்க பட்டாபட்டி அண்டிராயர் தெரிய மடிச்சிக்கட்டுவதாக கற்பனை பண்ணிக்குவேன். பக்கத்துல குட்டி அண்டிராயர் விக்ரமும் கூட. ஒரே சிரிப்புதான்! :-)))))

    போன ஆண்டு, வீட்டு சூழல் ஈரோடு வர இயலவில்லை. இங்கே, அலுவல் டிரிப் என்று புளுகியது வேறு விஷயம். இந்த ஆண்டு நிஜமாகவே வரவேண்டும் என மிக ஆசை. குடும்பத்தோடு வர (அங்கு வேறு சில நண்பர்களையும் சந்திக்க திட்டமிருந்ததால்) திட்டமெல்லாம் போட்டு தயாராக இருந்தாலும் கடைசி நேரத்தில் அடிபுடியாக ஒரு சைட் வேலை வந்துவிட, அழ அழ ஆபீசில் வண்டி ஏத்திவிட்டுவிட்டார்கள். சேந்தம்பட்டி குழுவினரின் கரகாட்டம் கண்முன்னால் தோன்றிட, டான்ஸாட வாய்ப்பு கிடைக்காத கனகா போல கடுப்பில் இப்போ குஜராத், பரூச்சில் இழுவிக்கொண்டு உட்கார்ந்துகொண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் போட்டோ போட ஆரம்பிச்சிருவாங்க.. அதப் பாத்து வேற கடுப்பாவணும். அவ்வ்வ்வ்!!

    பற்றாதென வீடு வந்திட்ட இதழ்களைக் காண இன்னும் ஒரு வாரம் வேறு காத்திருக்கவேண்டும். க்ர்ர்ர்ர்!!

    ReplyDelete
  31. மாதம் தோறும் பார்சல் வாங்குகின்றோம்.இதில் என்ன புதுமை என்று பார்த்தால்............வாவ்!! என்ன அருமையான அழகான கிஃப்ட் பார்சல்.!!! நான் ஒரு நான்கு செட் வாங்க போறேன் பிறந்த நாள் பரிசாக சிறுவர்களுக்கு கொடுத்தால் நிச்சயம் குதுகலம் அடைவார்கள்.அவ்வளவு அழகு.!(எடிட்டர் ரூம் போட்டு யோசித்து இருப்பார் போலும்.!)
    கிஃப்ட் பார்சலில் கோபத்துடன் ஸ்மாஃப்ஸ் கதையை எடுத்தேன். .அவர்கள் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?என்று பார்த்தேன்.ஓவியங்கள் மற்றும் அதன் தரத்தை பார்த்தவுடன் ஓ......உண்மையில் அவர்கள் பெரிய அப்பாடக்கர்தான் என்று உணரந்தேன்.!படைப்பாளிகள் பலாப்பழம் போல் முள்ளாக இருந்தாலும் கதைகள் பலாச்சுளை போல் சுவையாகத்தான் உள்ளது.முதல் கதையை பொடித்து விட்டேன்.லக்கி லூக் கதைக்கே சவால் விடும் போலிருக்கே.!என் மகன் ஸ்மார்ப்ஸ் புத்தகத்தை பிடிங்கி அவன் பொடிச்சுக்கிட்டு இருக்கான்.இந் நேரம் ஈரோட்டில் நண்பர்கள் எடிட்டரிடம் ஸ்மர்ப் பொடிஞ்சுக்கிட்டு இருப்பார்கள்.நான் மற்ற புத்தகங்களை ஸ்மார்ப் பொடிஞ்சுட்டு பின்னர் வருகிறேன்.!

    ReplyDelete
  32. Got the books....My son was very happy while seeing Smurf book...

    ReplyDelete
  33. திருமண விஷேசத்தில் , உறவினர்கள் அனைவரும் திருமண மண்டபத்திற்கு செல்லும்போது, வீட்டிற்கு பாதுகாப்பாய் ஒருவரை விட்டுச்செல்வார்கள்.மற்றவர்கள் கல்யாண வீட்டில் சந்தோசமாக ஜாலியாக இருப்பார்கள்.அது போல் தனியே உட்கார்ந்து புலம்பின்டு இருக்கேன்.!ஆதி தாமிரா சார்.!ஹும் என்னமோ போடா மாதவா.!
    மற்ற கதைகளையும் புரட்டி பார்த்தேன்.!என்ன அருமையான ஓவியங்கள்,தரம்,தெளிவு யப்பா.!சான்சே இல்லை.!!!
    இந்த புத்தகங்களின் தரத்தின் மத்தியில் நமது ஓல்டு ஹீரோக்கள் டம்மி பீசாக தெரிவது எனக்கு மட்டும்தானா.?

    ReplyDelete
    Replies
    1. MV சார் .. துணைக்கு நாங்களும் இருக்கோம் உங்க கூட.. கவலைப்படாதீங்க.. ஈரோடு 2016 விழாவுக்கு நாம எல்லாரும் மிஸ் பண்ணாம போகலாம்.

      கோவைல எதுவும் இந்த மாதிரி புத்தக விழா இல்லையா?

      Delete
    2. மகேந்திரன் பரமசிவம் சார்..!வணக்கம் சார்.!உங்கள் ஒரு பக்க விமர்சனம் வெளியாகி உள்ளது.!(காமெடி கர்னல் கதையில்)

      Delete
    3. ஓ.. அப்படியா...சந்தோசம். முதல் தடவை இது...

      Delete
  34. யாராவது புக் பேர் அப்டேட் பொடிங்களேன்

    ReplyDelete
  35. யாராவது புக் பேர் அப்டேட் பொடிங்களேன்

    ReplyDelete
  36. டெக்ஸ் சம்பத் சார்.!இன்று இரவு யாரேனும் வரலாம் , அதுவரை நாட் ரீச்சபில் தான்.!

    ReplyDelete
  37. இன்று புத்தக விழாவில் மாயாவி,பெர்னாண்டஸ் விஜய் ஸ்டாலின் கார்த்திக் சோமாலிங்கா அகமது சாரதி குமார் ஆகியோரையும் நமது எடி சாரையும் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது நன்றி மாயாவி
    நன்றி பெர்னாண்டஸ் for sharing a book .

    ReplyDelete
  38. மூனு பொடிகளையும் பொடிஞ்சுட்டேன்.!படிக்க எளிமையாகவும் அருமையாகவும் பொடிஞ்சுது.!இனி இந்த பொடியன்கள் அடிக்கடி பொடிய எடிட்டர்தான் மனசு வைத்து பொடியனும்.! என் வீட்டு பொடியனுக்கு பொடுசுகள் ரொம்ப பொடிஞ்சு போச்சு.டி.வி.யில் ஏற்கனவே பொடிந்து கொண்டிருப்பதால் மனதில் ஈசியாக எனக்கும் என் மகனுக்கும் பிடித்து பொடிஞ்சுருச்சு. மற்ற நண்பர்கள் ஈரோட்டில் எடிட்டருடன் பொடிந்து கொண்டிருப்பதால். இன்னும் இந்த புத்தகத்தை பொடியவில்லை போலும்.!சீக்கிரம் பொடியுங்கள்.!

    ReplyDelete
  39. Surprise post, All the best for Erode Book Fair, Sir.

    ReplyDelete
  40. டியர் எடிட்டர்

    இம்மாத இதழ்கள் வந்து சேர்ந்தன

    நிறைகள் ::

    * அனைத்து இதழ்களுக்காகவும் உங்கள் டீமின் அயராத உழைப்புக்கு ஒரு salute
    * பாக்ஸ் செட் நன்றாக வந்திருக்கிறது - makes it easier to carry and read as well
    * SMURFs இதழ் தயாரிப்பில் உங்களின் மெனக்கெடல் நன்றாய் வெளிவந்துள்ளது - நமது இரண்டாம் வரவில் மிக நேர்த்தியாய்த் தயாரிக்கப்பட்ட கலர் இதழ் இதுவென்று படுகிறது - உங்கள் டீமுக்கு வாழ்த்துக்கள்
    * பொடி பாஷையின் official தழுவல் SCANLATION மீதான "இது ஒரிஜினல் விற்பனைக்கு வேட்டு வைக்குமோ" என்ற வகையிலான அச்சங்கள் / ஐயங்கள் களைந்த வகையில் ஒரு சமாதானம்


    குறைகள் ::


    * SMURFகளின் பாஷை - ஒன்று சமர்பியாகவோ அல்லது பொடியாகவோ விட்டிருக்கலாம் - சில இடங்களில் சமர்பி நன்றாய் வந்துள்ளது ("ஸ்மையோ") - பொடி பாஷை தனியே வரும்போது உள்ள வீச்சு, லாவகம் நாம் அறிந்ததே - ஆனால் இரண்டும் சேர்ந்த போது இந்த நடைக்கு ஒரு uniqueness இல்லாமல் சொதப்பி விட்டது கண்கூடு. (உதாரணமாக லக்கி லிமாட் versionல் பொடியர்களின் ஊருக்கு பொடிச்சூர் என்று பெயர். பொடிச்சூர் எக்ஸ்பிரஸ் என்ற கதையே உண்டு). "பொடி சமர்பி" அந்தக் கால ஜுனூன் தமிழ் போல ஒரே trackல் ஒன்றிச் செல்ல மறுக்கிறது.
    * நண்பர் லக்கி லிமாடுக்கு ஒரு சன்மானமும் உங்கள் நிறுவன மொழி பெயர்ப்பு அணியில் ஒரு consulting இடமும் அளித்திருந்தால் அவரது உழைப்புக்கான நிஜ கவுரவமாய் இருந்திருக்கும் !!! [நம் உடன் வரும் நண்பர்கள் இது போன்ற காமிக்ஸ் திறமையாளர்களும் தானே].

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. A warm welcome to Leonardo - மிக நன்றாய் வந்துள்ளது. குண்டு காமிக்ஸ் க்ளப் விசுவாசிகள் "இதென்ன சார் ரெண்டு பக்க துணுக்கு" என்று சொல்லக்கூடும் ஆபத்து உள்ளது!

    ReplyDelete
  43. அதிக விளம்பரங்கள் பழைய நினைவுகளை தூண்டி விட்டது.மேஜிக் விண்ட் கதையில் ஆசிரியரின் எழத்துக்கள் இல்லாததால் ஒருமாதிரி வெறுமையாக தோன்றியது.
    ஸ்பைடர் மற்றும் மாயாவி கதைகளின் கடைசி பக்கங்களில் விச்சு&கிச்சு கதைகளை பார்க்கும்போது பழைய நினைவுகள் சிறகடித்து மனதை இலேசாக்கியது.இது தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.!

    ReplyDelete
    Replies
    1. //மேஜிக் விண்ட் கதையில் ஆசிரியரின் எழத்துக்கள் இல்லாததால் ஒருமாதிரி வெறுமையாக தோன்றியது.//
      Same feel +1

      Delete
  44. CCC பாக்ஸ் செம தூள் !!!!!

    கடுமையான உழைப்பினை நல்கிய

    மொத்த டீமுக்கும் ஷொட்டு !!!!

    இதய பூர்வ பாராட்டுகள் !!!!

    ReplyDelete
  45. received books.. Happy annachiii....

    ReplyDelete
  46. After 3 months rush I think you and your team may have time to breath till deepavali.

    ReplyDelete
  47. CCC பாக்ஸ் செம தூள் !!!!!

    கடுமையான உழைப்பினை நல்கிய

    மொத்த டீமுக்கும் ஷொட்டு !!!!

    இதய பூர்வ பாராட்டுகள் !!!!

    ReplyDelete
  48. Kudiyaviraivil meedum oru puthiya muyarchiyil thangalai kaana aaval

    ReplyDelete
  49. இதய பூர்வ பாராட்டுகள்.....! மனைவியை விட்டு நகர முடியவில்லை.... ! வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. நானும் அந்த stage தான் இப்போது நண்பரே !

      Delete
  50. சார்,
    CCC பாக்ஸ் செட் அட்டகாசம். இது வரை கேள்விப்பட்ட பாக்ஸ் செட்டை நேரில் பார்த்ததும் அசந்துவிட்டேன்!
    well done. நீங்களும், உங்க டீமும் பட்ட சிரமங்கள் வீண் போகவில்லை. பாக்ஸ் செட்டில் துவங்கி உள்ளே உள்ள ஒவ்வொரு இதழ்கள் வரைக்கும் உள்ள தரம் first class ரகம். இந்த பாக்ஸ் செட் படலம் தொடருமா....? தொடருமென்றால், அந்த ஸ்பெஷல், இந்த ஸ்பெஷல் என்று பார்த்துவிட்டோம். கோடை மலர் மட்டுமே பாக்கி நமது ver.2 வில், அடுத்தாண்டு கோடை மலரை இதுப்போல் ஒரு 6 கதைகளை இணைத்து பாக்ஸ் செட்டில் வெளியிடலாமே...?

    (ஒரு மிட் நைட் மினி கவிதை...)
    உள்ளத்தைக் கவர்கிறது பாக்ஸ் செட்டு
    சந்தோஷத்தில் ஜோராக கைகளைத் தட்டு
    சிவகாசிக்கு அனுப்பிடு ஒரு கிலோ லட்டு
    இல்லேனா ஆத்தா ஆக்கிடுவா உன்னை புட்டு!

    PS:கிளிப்டன் இதழ் வாசகர் கடிதத்தில் என் விமர்சனம், oh what a surprise, surprise. Thanx
    முன்பு கருப்பு/வெள்ளையில் வந்த நம் சிலபல இதழ்களில் என் விமர்சனம் வந்த அந்த நினைவுகள் இப்போது என் கண்முன்னே நிழலாடுவதேனோ....?!

    ReplyDelete
    Replies
    1. //PS:கிளிப்டன் இதழ் வாசகர் கடிதத்தில் என் விமர்சனம்//

      :) congrats Mhohideen sir!

      Delete
  51. நான் CCCஇற்கான தவமிருக்கின்றேன். அட்டைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ரகம். வரழ்த்துக்கள் ஸார். நீங்களும் உங்கள் ரீமும் கஷ்டங்கள் பல பட்டாலும் கலக்கீடீங்கள் போங்கள்.

    ReplyDelete
  52. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.. ஈரோட்டில் இணைந்துள்ள அனைத்து இதயங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.. மு.பாபு..

    ReplyDelete
  53. பொடியர்களையும் விஞ்ஞானியையும் பொடிஞ்சாச்சு.
    பொடியர்கள் - அட்டகாசமான வரவு. கண்டிப்பாக சிறுவர்களை ஈர்க்கும் தொடர். பெரிவர்கள் என்ற போர்வையில் ஊரில் உலாவிக்கொண்டிருக்கும் சிறுவர்களுக்கும் (அட நம்ம காமிக்ஸ் ரசிகர்களை தான்) கண்டிப்பாக பிடிக்கும்.
    ஆனால் "நாதாரி", "மூடிகிட்டு வா" போன்ற வார்த்தைகள் நெருடுகிறது

    விஞ்ஞானி - பரவாயில்லை ரகம்.

    ReplyDelete
  54. CCC காக waiting , All the best for EBF ! வருடா வருடம் குண்டு புத்தக EBF ! தொடர வாழ்த்துகள் !

    // ஞாயிறு காலை 11-30 முதல் மதியம் 1-30 வரை சிறு ஹால் ஒன்றினை எடுத்துள்ளோம். ஜாலியான அரட்டைகளுக்கும், 2015-ன் இதுவரையிலான review & 2016-க்கான suggestions-க்கு இந்த சந்திப்பு பயன்பட்டால் சந்தோஷமே! //

    சங்கம் சில பல நல்ல கோரிக்கைகளை ஆசிரியரிடம் நிறைவேற்றிவர வாழ்த்துகள் நண்பர்களே !
    திகில் தொடரில் கருப்பு கிழவியை யாராவது கேளுங்கப்பா!, சில நல்ல one shot குண்டு புத்தகத்தையும் கேட்டு வாங்குங்க நண்பர்களே ! தல யின் த்ரில் தொடர் குண்டாக கொண்டுவாங்க நண்பர்களே!

    குண்டு குண்டாக நல்ல புத்தக வேட்டை நடக்க all the best நண்பர்களே ! ஓட்ட வாய் உநா வெளிவர பிரத்தனை !


    ReplyDelete
    Replies
    1. அப்படியே அடுத்த வருடம் இளவரசி கதைகளும் நிறைய இடம் கிடைக்க வேண்டுகிறேன்.!

      Delete
  55. மீட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.நிதி அமைச்சரின் பட்ஜெட் அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கும் பிசினஸ் மேன் போல் ஆவலுடன் எடிட்டர் அறிவிப்பை கேட்க வாசகர்கள்.!

    ReplyDelete
  56. சார் முதல் கதையை பொடிச்சுட்டேன் .
    ஸ்ருமை. இந்த கதை பக்கத்தை புரட்டும் போது ஏதோ இனம் புரியாத ஒன்று என்னை கட்டிபோட்டு விட்டது. கண.ணை கவரும் பொடியர்களின் ஸ்மர்ஃப் நிறமா ...அவர்கள் பல்லில்லாமல் பொக்கைவாய் திறக்கும் போது வெளிப்படும் குழந்தைகள் தனமா .....உளதா நிறம் வெளியெங்கும் ஜொலிக்க குழந்தைகள் நடுவே சந்தோசக் கும்மாளம் எனது நிலை .வண்ணங்கள் கட்டிப்போட்டதெனில் மிகையில்லை .அதிலும் அந்த கருப்பன் ஊதாமை பூசி ஸ்படிக்கும் இடம் அற்புதமான குழந்தைகள் வில்லத்தனம் ..
    ஒவ்வொரு கட்டமும் நீங்கள் கூறியபடி கோடுகளால் வாயசைப்புகள் அழகுற எளிமையில் கூட என்ன அழகென வியக்காமலிருக்க ஸ்முடியல....கடவுள் சந்தோசமாய் இருக்கும் போது ரசித்துப் படைத்த ஊதா குள்ளர்கள் . உலகில் தொடர்ந்து உலவ நானும் தயார் .
    மாறிமாறி கடிக்க நானும் மாறிமாறி சிரிக்க கடைசியியில் ஸ்மர்ஃபானந்தா அருளால் ஊதா நிறம் திரும்ப ஏக்கத்துடன் முதல் கதை முடிந்தது .....நிச்சயம் குழந்தை மனத்தை மூட்டெடுக்க உதவிய அந்த ஓவியரின் குடும்பத்தாலுக்கு நன்றி சொல்லி விடுங்கள் மேலும் பெருமை கொள்ளட்டும் அந்த படைப்பாளி மீது ....
    பிழையா பொடி பண்ணியாகணும்.....பொடியணும் அல்லவோ...

    ReplyDelete
  57. மக்கன் பேடா....மக்கன் பேடா....ஸ் ஆ.....டேஸ்ட் அருமை....நண்பர் அகமது பாசாவின் அன்பும் சேர்ந்து அதற்கு தனி டேஸ்ட் கூட்டி விட்டது என்றே...சொல்லலாம் ....நான் மட்டுமே 5பீஸ்கள் சாப்பிட்டேன்....மிக்க நன்றி பாசா பாய் ...இன்று புத்தக விழா வந்த நண்பர்கள் அனைவரும் நாவில் இனிப்புடன் ....கார்ட்டூன் ஸ்பெசிலின் இனிப்புடன் சேர்ந்து இரட்டை சுவையை உண்டு களித்தனர் .....

    ReplyDelete
    Replies
    1. பொன்ராஜ் சார்.!அருமை ஏதோ ஒரு ஈர்ப்பு அதை தெளிவாக கதையை படித்தவர்களின் மனதை அப்படியே சொல்லிட்டீங்க.!சூப்பர்.!
      டெக்ஸ் விஜயராகவன்.!ஐந்து மக்கன் பேடா.வையும் நீங்களே சாப்பிட்டு விட்டீர்களா.?.................?என் பங்கும் அம்புடுதானா...................?கர்ர்ர்ர்.........அதுசரி.,எடிட்டர் மாடஸ்டியை பற்றி ஓட்டைவாய் உலகநாதனாக ஏதாவது கூறினாரா.?மாடஸ்டிக்கு அடுத்த வருடம் மரியாதை உண்டா.?இல்லை மனதில் மட்டும் இடமா.?(மாடஸ்டி உண்டு என்று செவிவழிச்செய்திகள் வந்தது அது உண்மையா.?)

      Delete
  58. Nanparkaly attakasamaana intha tharunathil erodu sella mudiyavillaiyay endra kavalai ennai vaattukirathu ebf il nam staal virpanai nilavaram enna sendra aandu polavay ivvarudamum joraaga ullathaa kala nilavarangalai erodu sendririkkum nanparkal udanukkudan pakiravum nandri

    ReplyDelete
  59. Nanparkaly attakasamaana intha tharunathil erodu sella mudiyavillaiyay endra kavalai ennai vaattukirathu ebf il nam staal virpanai nilavaram enna sendra aandu polavay ivvarudamum joraaga ullathaa kala nilavarangalai erodu sendririkkum nanparkal udanukkudan pakiravum nandri

    ReplyDelete
  60. ஆறு கோடி தமிழ் நாட்டு மக்களில் பத்து பர்செண்ட் காமிக்ஸ் படிச்சாலும் அருபதாயிரம்தான் சர்க்குலேசன் வரும்.இந்த சிறிய களத்தில் இயங்க இத்தாலி,பிரஞ்சிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து,அதை மறுபடியும் தமிழுக்கு மொழி பெயர்க்க வேண்டும்.அதற்கு பேசாமல் ஆங்கிலத்திலேயே காமிக்ஸ் ஒன்றை துவக்கிவிடலாமே.!டெல்லி,மும்பையைவிட சிவகாசியில் பிரிண்ட் செய்யும் செலவு குறைவு.!எங்கும் நீக்கமற நிறையும் ஆங்கிலத்தில் வெளியிடுவதன் மூலம் புதிய இளையதலைமுறை வாசகர்கள் கிடைப்பார்கள்.அரங்கில் ஆங்கிலத்தில் காமிக்ஸ் இல்லையா எனக்கேட்டு எத்தனைபேர் திரும்பி செல்கிறார்கள்.நூற்று இருபது கோடியில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஐம்பதுகோடி எனில் அதில் பத்து பர்செண்ட் பேர் வாங்கினாலும் எண்ணிக்கை இலட்சத்தில் அல்லவா நிற்கும்.!இதை சொன்னா நம்மளை.!!!!!!

    ReplyDelete
  61. டியர் எடிட்டர்,

    2016ல் 48 புஸ்தகம் - திகில் சந்தா D, என் பெயர் டைகர் - தனி சந்தா என்று ஈரோட்டிலிருந்து அடுக்கிக்கொண்டு செய்திகள் வந்து கொண்டிருப்பதால் இப்பொழுதே CITIBANK மேலாளரிடம் சந்தா loan சம்பந்தமாக பேசிக் கொண்டிருக்கிறேன் :-) :-) :-)

    ReplyDelete
  62. Aaru kodiyila 10% Arupathu aayirama???

    ReplyDelete
  63. இரண்டுநாள் காமிக்ஸ் கொண்டாட்டம் ஒரு முடிவுக்கு வந்து பறவைகள் தங்கள் இறக்கைகளைத் தயார் செய்துகொண்டிருக்கின்றன. இந்த அழகான அனுபவங்களைப் பற்றி எடிட்டரே தன் நடையில் ஒரு பதிவாகப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பிருப்பதால், நான் அடக்கியே வாசிக்கிறேனே! :)

    ReplyDelete
  64. லீஜார்டின் ஒட்டலில் ஆசிரியர் ஏற்பாடு செய்த மதிய உணவுவிருந்து நல்ல ஏற்பாடுதான்.ஆனால் அதற்கான தாமதம்தான் சகிக்கமுடியாததாக இருந்தது.பாதி பேர் சாப்பிடுவதை மீதிப்பேர் வேடிக்கை பார்க்கும் வித்தியாச நிகழ்வாக அமைந்துவிட்டது.அன்டைம் என்பதால் அந்த குளறுபடிகள் நேர்ந்திருக்கலாம்.!மீதிபேருக்கு உலை வைத்திருப்பார்களோ என்றோரு சந்தேகம் அடிக்கடி மனதில் எட்டிப்பார்த்தது.நல்லவேளையாக எல்லோரும் சுவாராஸ்யமான அரட்டையில் இருந்ததால் நேரம் போனது தெரியவில்லை.கடைசியில் ஒரு சப்பாத்தியும் தொட்டுக்கொள்ள ஒன்பது கிண்ணங்களும் வந்து சேர்ந்தன.அதன்பின் திவ்யமான சாப்பாடு.பருப்புக்கடைசலில் உப்பு போட சமையல் மாஸ்டர் மறந்துட்டாரு போல.!அதேபோல் தயிருக்கும் உப்பு வைக்க மறந்துவிட்டார்கள்.பசி மயக்கத்தில் பாயாசத்துக்கும் சாம்பாருக்கும் வித்தியாசம் தெரியாமல் சாதத்தில் ஊற்றி சாப்பிட்டாகி விட்டது.அட அதுவும் நல்லாத்தான்யா இருக்கு.!உட்கார்ந்தவுடன் சாப்பாட்டு தட்டு வந்தவர்கள் பாக்கியவான்கள்.!மற்றவர்கள் பொறுமைசாலிகள்.!மாட்டு வண்டி சக்கரம்,மண்விளக்கு,மூங்கில் ஒலைகள் என கிராமிய அட்மாஸ்பியர் ரெஸ்டாரண்டுக்கு வேறு லுக்கை கொடுத்தது.பில்லை யார் கொடுத்தாங்கன்னு கடைசிவரை யாரும் கேட்காமயே கிளம்பிட்டோம்.!பில் கொடுத்த புண்ணியவானுக்கு நன்றி.!

    ReplyDelete
  65. ஆறு கோடி தமிழ் நாட்டு மக்களில் பத்து பர்செண்ட் காமிக்ஸ் படிச்சாலும் அருபதாயிரம்தான் சர்க்குலேசன் வரும்.இந்த சிறிய களத்தில் இயங்க இத்தாலி,பிரஞ்சிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து,அதை மறுபடியும் தமிழுக்கு மொழி பெயர்க்க வேண்டும்.அதற்கு பேசாமல் ஆங்கிலத்திலேயே காமிக்ஸ் ஒன்றை துவக்கிவிடலாமே.!டெல்லி,மும்பையைவிட சிவகாசியில் பிரிண்ட் செய்யும் செலவு குறைவு.!எங்கும் நீக்கமற நிறையும் ஆங்கிலத்தில் வெளியிடுவதன் மூலம் புதிய இளையதலைமுறை வாசகர்கள் கிடைப்பார்கள்.அரங்கில் ஆங்கிலத்தில் காமிக்ஸ் இல்லையா எனக்கேட்டு எத்தனைபேர் திரும்பி செல்கிறார்கள்.நூற்று இருபது கோடியில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஐம்பதுகோடி எனில் அதில் பத்து பர்செண்ட் பேர் வாங்கினாலும் எண்ணிக்கை இலட்சத்தில் அல்லவா நிற்கும்.!இதை சொன்னா நம்மளை.!!!!!!

    ReplyDelete
    Replies
    1. // ஆறு கோடி தமிழ் நாட்டு மக்களில் பத்து பர்செண்ட் காமிக்ஸ் படிச்சாலும் அருபதாயிரம்தான் சர்க்குலேசன் வரும்.இந்த சிறிய களத்தில் இயங்க இத்தாலி,பிரஞ்சிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து,அதை மறுபடியும் தமிழுக்கு மொழி பெயர்க்க வேண்டும்.அதற்கு பேசாமல் ஆங்கிலத்திலேயே காமிக்ஸ் ஒன்றை துவக்கிவிடலாமே.! //

      Very good suggestion! I feel it may take some time, because it needs lot of investment.

      Delete
  66. ஈரோடு விஜய்.!ஒ..........அதுதான் எல்லோரும் அடக்கி வாசிக்கறீங்களா.?அதுவும் சரிதான்.எல்லோரும் களைப்படைந்து விட்டீர்கள் என்று கருதுகிறேன்.பொறுமையுடன் காத்திருக்கின்றோம்.!
    என் ஸ்மர்ப்ஸ் புத்தகத்தை என் பத்து வயது பையன் தன் நண்பர்களுடன் சேர்ந்து கதை படித்துக்கொண்டு என் புத்தகத்தை கண்டம் ஆக்கிகொண்டு இருக்கின்றான். நுனிகூட மடங்காமல் புத்தகத்தை பாதுகாக்கும் எனக்கு எரிச்சலாக உள்ளது.என்ன செய்வது அடுத்த தலை முறையினருக்கு வழி விட்டுத்தானே ஆகனும்.!ஹும்......!

    ReplyDelete
    Replies
    1. Same sitaution in my house too MV sir..4 kutties doing attakasam with the books...summa vedikai mattum thaan paarkamudiyudhu ennalll...

      Delete
    2. Same sitaution in my house too MV sir..4 kutties doing attakasam with the books...summa vedikai mattum thaan paarkamudiyudhu ennalll...

      Delete
    3. இதுக்கு தான் நான் ஒன்னுக்கு ரெண்டா வங்கி விடுகிறேன் MV சார். தாசு பாலா சார் - உங்களுக்கு இந்த ஐடியா செல்லுபடியாகாது...)

      Delete
  67. NANPR KARTHIK AVARKALAY UNGALUKKU EAN INTHA KOLAI VERI EAKELLAAM TAMIL MATTUMAY THERIYUM TAMILLIL TYPE PANNA KOODA INNUM SARI VARATHERIYAVILLAI ATHANAALTHAAN IPPADI TYPPUKIRAYN AANGILATHILTHAAN CINE BOOKS ENDRORU COMICS BOOK INDIYAAVIL KIDAIKKIRATHAAMAY ATHU THERIYAATHAA UNGALUKKU? TAMILAI VIRUMPUM EM PONDRAVARKALIN AARVATHIL THAYAVU SAITHU MANNAI ALLI PODAATHEERKAL UNGAL PATHIVAI VANMAIYAAI KANDKKIRAYN THAYAVU SAITHU UNGAL ENNATHAI MAATRIKOLLUNGAL THE HINDU VAY IPPOTHU TAMILIL VARUKIRATHU TAMILAI MARANTHA ORU THALAI MURAIYAI URUVAAKI NAM PILLAIKALAI ORU KOOTAM KUTTICHUVARAAKI VAITHULLATHU THAI MOLIYAI MARANTHAAL PINPU NAAM TAMILAN ENDRA ADAIYAALTHAI ELANTHU THUNPURUVOM ITHANAI EN ANNAI THAMILLIL ELUTHAVAY ENAKKU AASAI AANAALTHERIYA VILLAI ATHARKAAKA ENNIMANNTHU VIDUNGAL ENNIDAM SMART PHONE ILLAI COMPUTRE CENTREIL IRUNTHAY ITHANAI ELUTHUKIRAYN KARTHIK AVARKALAY UNGAL KARUTHU EN PONDRA THAMILAI SUVAASIPPAVAKALIN NANATHAI PUN PADUTHIVITTATHU ITHUPOL INNORUMURAI THAYAVU SAITHU ENNIVIDAATHEERKAL EN PATHIVIL EATHAVATHU THAVARU ERUNTHAAL COMICS NANPARGAL ANAIVARIN MUNPAKA KAIKOOPI MANNPPU KAYTTUKOLKIRAYN NANDRI

    ReplyDelete
    Replies
    1. நணபர் @ராஜராஜு ராஜா வணக்கம்.!நீங்கள் கூறுவது மிகவும் சரியே.!அது அவருடைய தனிப்பட்ட கருத்து.!நாம் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்.பணத்தை மட்டுமே அளவுகோலாக வைத்து பார்த்தால் நிறைய விஷயங்கள் புரியாது.!

      Delete
    2. @ராஜா சார்.!ஆர்வம் மட்டுமே போதும்.!எனக்கும் கம்ப்யூட்டர் மற்றும் டைப்பிங் சம்மந்தமாக ஒரு வாப்பாடும் தெரியாது. கம்ப்யூட்டர் சம்மந்தப்பட்ட விஷயங்கள் அனைத்தும் என் மனைவிதான் உதவிசெய்வாள்.!நான் இந்த தளத்திற்கு வர உதவி செய்தது நமது நண்பர் மாயாவி சிவாதான்.தமிழில் டைப் செய்ய உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் நமது குருநாதர் மாயாவி சிவா விடம்உதவி கேளுங்கள் முகம் சுழிக்காமல் உதவி செய்வார்.!

      Delete
  68. நான் சொன்னதை நீங்கள் தப்பாக புரிந்து கொண்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.எனக்கும் இங்கிலீஸில் எத்தனை எழுத்துகள் என்று இன்றுவரை தெரியாது.நான் தமிழில் வெளியிடுவதை நிறுத்தச்சொல்லவில்லையே.கூடுதலாக ஆங்கிலத்திலும் வந்தால் நல்லதென்றுதானே சொல்கிறேன்.தமிழகத்திற்குள் மட்டுமே கொடி நட்ட வேண்டாம்.டெல்லியிலும்,மும்பையிலும் இருக்கும் காமிக்ஸ்களுடன் போட்டியிடுவது பெருமைதானே.!நிறுவனம் பெரிதாக வளர,கல்லா நிரம்ப ஒரு வியாபாரியாக எனக்குத் தோன்றியதை சொல்லியிருக்கிறேன்.எனக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியாது.அதனால் தாழ்வுணர்ச்சியும் கிடையாது.அது ஒரு மொழி! அவ்வளவே.!அதுவே அறிவு என்று நினைப்பது மதியீனமல்லவா.?என் யோசனையில் எந்த தவறும் இருப்பதாக தோன்றவில்லை.தவிரவும் ஆசிரியர் உடனே தமிழில் காமிக்ஸ் வெளியிடுவதை நிறுத்திவிட்டு ஆங்கிலத்தில் வெளியிடப்போவதும் இல்லை.ஹேப்பீ ரீடிங்.!தமிழுக்கு சப்போர்ட் பண்ணிய உங்கள் பின்னூட்டத்தை நீங்கள் ஆங்கிலத்தில் டைப்புவதும்,ஆங்கிலத்திலும் வெளியிடுங்கள் என்று கேட்கும் நான் தமிழில் டைப்புவதும் நகைமுரண் அல்லவா.?

    ReplyDelete
  69. மறக்கவே முடியாத அருமையான காமிக்ஸ் தின கொண்டாட்டகள் இருநாளும் ..ஒரே வருத்தம் ..

    வெளிநாட்டு காமிக்ஸ் நண்பர் ஒருவரையும் ..காமிக்ஸ் ஓவிய நண்பர் ஒருவரையும் வழி அனுப்பி விட்டு ஆசிரியரிடம் சொல்லி விட்டு கிளம்பலாம் என நினைத்து திரும்பிய பொழுது அதற்குள் ஆசிரியரும் கிளம்பி விட்டார் ..

    மற்ற படி ஆசிரியருடனும்..நண்பர்களிடமும் இந்த இரு தீபாவளி பண்டிகை போல கொண்டாடிய இந்த இரு நாட்களின் அனுபவமும் விரைவில் ...:)

    ReplyDelete
  70. இன்று எடிட்டருடனான சந்திப்பில் ஒவ்வொரு கதையின் காப்பிரைட்டு உரிமையை வாங்க பணம் எவ்வளவு முடக்கப்படுகிறது என்று விளக்கியபோதுதான் இதைப்பற்றி யோசித்தேன்.தமிழ்,ஆங்கிலம் இரண்டிலும் வந்தால் அவரது சுமை குறையும்,பரவலான கவனத்தை இந்திய அளவில் பெறும் என்ற எண்ணத்திலேயே அதை பதிந்தேன்.மொழிமீது பற்று இருக்கலாம்.வெறி இருக்கக்கூடாது.அந்த வெறி உண்டாக்கிய அரசியலை தமிழகம் ஏற்கனவே சந்தித்திருக்கிறது.தமிழ் என் தாய் என்றால் மற்ற மொழிகள் என் சகோதரர்களே.!

    ReplyDelete
  71. விஜய் சார் ஷல்லும் சார் ரெண்டு பேரும் எடிட்டர் கூட பேச வெப்பிங்கனு காத்திருந்தேன் ப்ப்ப்பச் முடியல ஓகே முடிஞ்சா அடுத்த முறை பார்ப்போம் சார் நன்றி

    ReplyDelete
  72. நண்பர் கார்த்தி அவர்களே ..

    மதிய உணவு பில்லை யார் கொடுத்தார்களோ என்ற அங்கலாய்ப்பு தங்களுக்கு ஏனோ ..விழா ஏற்பாட்டளர்கள் அனைவரையும் உணவருந்த அழைத்தார்கள் .அப்பொழுது அவர்கள் தான் பில்லை செலுத்துவார்கள் என்பதை நண்பர்கள் அனைவருமே அறிவார்கள் ..அவரவர் சாப்பிட்ட பில்லை அவரவரே தருவதற்கு விழா ஏற்பாட்டாளர்கள் எதற்கு அனைவரையும் விருந்துக்கு அழைக்கிறார்கள் .சாதரண என்னை போன்ற பாமரனுக்கே இது தெரியும் பொழுது பல யுக்திகளை பலருக்கு சொல்லி தரும் தங்களுக்கு அது தெரியாமல் இருப்பது ஆச்சர்யமே ...

    அதே போல திருமணம் போன்ற விழாக்களிளிலேய விருந்து கொஞ்சம் தாமதம் குளருபடிகள் ஏற்படும் பொழுது ஒரு புது முயற்சியில் திடீர் ஏற்பாட்டில் எத்தனை பேர் உணவருந்துவார்கள் ..என்றே தெரியாத சூழ்நிலையில் இது போன்ற நிகழ்வுகள் சாதாரணமானவை ..தங்கள் எழுத்துக்கள் எப்பொழுதும் நண்பர்களை இழுக்க வைப்பதாக பாருங்களேன் .தள்ளி வைக்கும் படி எழுதினால் தான் சிறப்பு என்பதை கொஞ்சம் மாற்றி கொள்ளுங்கள் .

    ஆங்கில காமிக்ஸ் பற்றி சொன்ன தங்கள் கருத்து ஓகே .ஆனால் சொன்ன விதம் எரிச்சலை தான் ஏற்படுத்தியது .அதுவும் என்னை போன்ற ஆங்கிலம் தெரியாதவனுக்கு கடுப்பை தான் கிளப்புகிறது .அதிலியே தாங்கள் தமிழில் வெளியிடும் பொழுது ஆங்கிலத்திலும் கொஞ்சம் முயற்சித்து பாருங்கள் சார் என்று சொன்னால் தமிழில் டைப்படிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் அந்த நண்பர் தங்களுக்கு ஆங்கிலத்தில் வருந்தி பதில் சொல்லி முரணபாட்டை ஏற்படுத்தி இருக்க மாட்டார் ..

    தனித்து தெரிவது சிறப்பு .உண்மை .ஆனால் அது ..நண்பர்களின் நட்பையும் ..ஆனந்தத்தையும் ஏற்படுத்தி தந்து தனித்து தெரிய வேண்டும் .உதாரணமாக எங்கள் வேண்டாம் பெயரை சொல்ல விரும்ப வில்லை ..ஆனால் உங்கள் ஈரோட்டுகாரர் தான் .மற்றவரை தன்னிடம் நெருங்க முடியாத அளவிற்கு தனித்து நீங்கள் தெரிய வேண்டும் என்பதை மாற்றி கொண்டால் நீங்களே அனைவருக்கும் முதல் நண்பர் .

    நன்றி ..தவறாக எழுதி இருந்தால் மன்னிக்கவும்.இனிய நினைவுகளால் உறங்கலாம் என இருந்த பொழுது உங்கள் எழுத்து மிகுந்த கடுப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்தியதால் இந்த பதில் .இதற்கு பதில் உங்கள் எழுத்தை படித்தவுடன் மனதில் புன்முறுவல் வருவது போல அமைக்க பாருங்களேன் ..:)

    ReplyDelete
    Replies
    1. பின் குறிப்பு .

      ஸ்மைல் குறி போட்டது ஒரு பாதுகாப்பிற்கே என்பதை ஒப்பு கொள்ள மாட்டேன் என்று சொல்ல மாட்டேன் :(

      Delete
    2. தலைவரே.!எப்படி தலைவரே!, என் மனதில் தோன்றியதை அப்படியே எழதிவிட்டீர்கள்.ஆங்கிலத்தில் படித்தால் அது செய்தி போலத்தான் தோன்றும்.இங்கே பெரும்பாலானோர் ஆங்கிலத்தில் முன்னரே காமிக்ஸை படித்தாலும் தமிழை தேடி வருவது முழமையாக ஆத்ம திருப்தியுடம் தமிழில் படித்து ரசிப்பதற்காகத்தான்.!
      நண்பரின் எழத்து நெஞ்சில் முள் போல் குத்தியது உண்மைதான்.(விருந்தில் நம் வீட்டு விஷேசம் என்று நண்பர் உணரவில்லையே என்று வருத்தம்தான்.!)

      Delete
    3. //இங்கே பெரும்பாலானோர் ஆங்கிலத்தில் முன்னரே காமிக்ஸை படித்தாலும் தமிழை தேடி வருவது முழமையாக ஆத்ம திருப்தியுடம் தமிழில் படித்து ரசிப்பதற்காகத்தான்.!//
      +1

      Delete
  73. This comment has been removed by the author.

    ReplyDelete
  74. Editor Sir,

    அடுத்த தலைமுறையை, நமது காமிக்ஸ் வாசிப்புகுள் அழைத்து வரவும், அவர்கள் எங்களுக்கு பிறகு உங்களுக்கு உருதுணையாய் இருக்கவும், நமது Smurfs Comic book வெளியீடு ஒரு திறவுகோல் என்று சொன்னால் அது மிகையன்று..

    Smurfs approval கு உங்களின் நீண்ட காத்திருப்பு and கடைசி நேர உழைப்புக்கும் பலன் என் வீட்டு சிறார்களின் மகிழ்ச்சியே சான்று..

    They enjoyed a lot on seeing and hearing the story via me. Also it was very easy to convey this kind of short story to kids instead of lengthy stories.

    Hats off to you, vikram and for your team sir...

    ReplyDelete
  75. க்ளிப்டன் : 7 நாட்களில் எமலோகம்

    கதை: தவறானத் தகவலால் சூப்பர் கம்ப்யூட்டர் எனும் மெஷின் 2 ஏஜெண்ட் மூலம் சூரப்புலி க்ளிப்டன் உடலுக்கும், உயிருக்கும் எண்ணி 7 நாட்களுக்குள் குறிவைக்கப்படுகிறது. அதிலிருந்து, க்ளிப்டன் தப்பித்தாரா...? தவறான தகவல் அளித்த மர்ம நபர் யார்? ஏன்? என்பதை கொஞ்சம் காமெடி மற்றும் விறுவிறுப்புடன் சொல்கிறது.

    பேனல்களில் க்ளிப்டன் முகத்தை விட, கழுத்தில் கட்டும் bow போலுள்ள அவரது மீசையே நிரம்பியிருக்கிறது! கதை ஆரம்பித்த சில பக்கங்கள் லேசான வர்ணத்தில் ஆரம்பித்து, பின்பு அடர்ந்த வர்ணங்களில் மாறி விறுவிறுப்புடன் கதையின் கடைசி வரை பயணிக்கிறது. இது ஒரிஜினலில் மூன்றாவது ஆல்பமாக ஜனவரி 1979-ம் ஆண்டு வெளிவந்தது. கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்கு முன்பே வர்ணத்தில் அழகாக அமைந்தது பிரம்மிப்பான விஷயம் தானே..! நமக்கு ஏன் இது முதல் ஆல்பமாக தேர்வானது என்ற ஆராய்ச்சி தேவையா என்ன...?

    ReplyDelete

  76. இதுவொரு ஊதா உலகம்

    உலகம் முழுக்க70 நாடுகளில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் இந்த ஆல்பங்களை மிகுந்த சிரத்தையின்பேரில் தமிழில் அறிமுகப்படுத்தியுள்ள எடிட்டர் அவர்களுக்கு நிச்சயமாக ஒரு 'சபாஷ்' போடலாம்!

    8 முதல் 15 வரையுள்ள சிறுவர்களுக்கு இந்த ஸ்மர்ஃபுகள் ரொம்பவே பிடித்துப் போய்விடக்கூடும்! சித்திரங்கள், கதைக்களம், வசனங்கள் - எல்லாமே இந்தக் குறிப்பிட்ட வயதுடையவர்களை டார்கெட் செய்து ஏற்படுத்தப்பட்டவை என்பதையும் நன்றாக உணரமுடிகிறது. அன்று நாம் டவுசர் போட்ட நம் பள்ளி நாட்களில் சுஸ்கி-விஸ்கியையோ, அங்கிள் ஸ்குரூட்ஸையோ , லக்கிலூக்கையோ முதன்முதலில் படித்தபோது ஏற்பட்ட ஒருவகையான பரவச அனுபவம் இந்த ஸ்மர்ஃப்ஸை படிக்கும்போது இந்நாளைய சிறுவர்களுக்கும் ஏற்படப்போவது நிச்சயம்! அப்படி ஏற்பட்டால் கொஞ்ச அளவிலாவது நாளைய சந்தாதாரர்கள் ரெடியாகிவிடவும் வாய்ப்பிருக்கிறது! ஆகவே, வளர்ந்து ஆளாகிய குழந்தைகளான நாம் செய்யவேண்டியதெல்லாம் ... நம்மால் இயன்றவரை இந்த ஸ்மர்ஃபுகளை நம் குழந்தைகளுக்கோ, நண்பர்கள்/உறவினர்களின் குழந்தைகளுக்கோ (ஒரு பரிட்சார்த்த முயற்சியாகவாவது) அறிமுகப் படுத்துவதே!

    (அதெல்லாம் சரிதான் ஈ.வி... உனக்குப் பிடிச்சுருக்கா?)

    சொல்கிறேன். என்னைப் பொருத்தவரை, இன்று 'கார்ட்டூன்' என்ற ரூபத்தில் வெளியாகிக்கொண்டிருக்கும் லக்கிலூக்குக்கோ, சிக்பில்லுக்கோ, ரின்டின்கேனுக்கோ, ப்ளூகோட்ஸுக்கோ எந்தவகையிலும் ஈடானதாக இந்த ஸ்மர்ஃபுகளை என்னால் கருதமுடியவில்லை! மொத்தப் புத்தகத்திலும் பல இடங்களில் ஊதாப் பொடியர்கள் செய்யும் குறும்புகளை ரசிக்க முடிந்தாலும்... எந்த இடத்திலும் சிரிப்பு வரவில்லை! சுருக்கமாச் சொல்லவேண்டுமென்றால்... "ஹைய்யா! எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு" என்றும் சொல்லமுடியவில்லை ; "ய்யே! புடிக்கலீங்க!" என்று ஒதுக்கவும் முடியவில்லை! ஆனால், ஊதாப் பொடியர்களுக்கான அந்த இயற்கையான, அழகான, சின்னஞ்சிறு உலகத்தில் எனக்கும் ஓர் இடம் கிடைத்துவிடாதா என்று ஏங்க வைத்திருப்பது மட்டும் நிஜம்!

    கூடவே, 'மினி-லயன்' என்ற அடையாளத்துடன் களமிறங்கி கலக்கவேண்டிய ஒரு கதைத் தொடர் 'முத்து' என்று முறை மாறி வந்துசேர்ந்திருக்கிறதோ என்ற ஆதங்கமும்!

    ReplyDelete
  77. நீங்களும் சொல்லீட்டிங்களா தலைவரே.!விஜய்யும் இதையேதான் சொல்கிறார்.ரைட்டிங் ஸ்டைலை மாத்துங்க என்று.!என்ன செய்வது இரண்டு வருடமாக ஒரு புலனாய்வு இதழில் பகுதிநேர நிருபராக வேலை செய்கிறேன்.அவர்கள் எனக்கு கொடுத்த பயிற்சிமுறைகள் அப்படி.நிறைகளை எழுதாதே.!குறைகளை தேடு.அதைத்தான் சமூகம் விரும்புகிறது.உள்ளூர இருக்கும் சமூக கோபங்களும் ஒன்று சேர வார்த்தைகளில் வெடிக்கிறேன்.அது பத்திரிக்கைக்கு சரி வரலாம்.!இங்கு அது எடுபடாதே.!ஸோ இனி ப்ளாக் பக்கம் வருவது சிரமமே.!யாராவது மனம் புண்பட்டிருந்தால் ஸாரி காய்ஸ்.!எனக்கான களத்தில் நான் முழுவீச்சில் செயல்பட்டுக் கொள்கிறேன்.என் சிறுவயது கனவது.!அதைவிட இயலாது.!சொல்லப்போனால் அதில் எழுதுவதன் மூலமாகவே மன அழுத்தமின்றி இருக்கிறேன்.காமிக்ஸ் வாசிப்பதும் அதன் அங்கமே.!இல்லையென்றால் பிரச்சனைக்குரிய மனிதனாகத்தான் இருப்பேன்.இப்போதும் இலேசாக அப்படித்தான்.!

    ReplyDelete
  78. ஆக இங்கே ஒருவர் தனக்கு தோன்றிய கருத்தை சொல்வதற்கு முன்பாக மற்றவர்களிடம் அனுமதி வாங்கியாக வேண்டும் என்பது மறுபையும், மறுபடியும் உறுதியாகிறது.

    இங்கே இருக்கும் கமெண்ட்டுகள் பதிவை விமர்சிப்பதை விட்டு விட்டு, போடப்படும் கமெண்ட்டுகளை விமர்சிப்பதில் தான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.

    கார்த்துஇக் என்பவர் ஒரு கருத்து சொல்கிறார். சரியோ, தவறோ, ஆனால் அந்த கருத்து நமது காமிக்ஸ் மீது இருக்கும் காதலின் வெளிப்பாடே ஒழியே வேறில்லை. அப்படி இருக்க, .....

    நீ கருத்தை இப்படி சொல்லாதே, அப்படி சொல்லாதே என்று அவரை நேரிடையாக விமர்சிப்பது எந்த வகையில் நியாயம் என்று எனக்கு தெரியவில்லை. மேலும், அப்படி விமர்சிக்கும் பரணிதரன், போகிர போக்கில் ஒரு கிசு கிசு பாணியிலான (எனக்கு சுத்தமாக புரியாத) ஏதோ ஒரு விஷயட்தைச் சொல்லிவிட்டுப் போகிறார். அது எதற்கு என்பதும் தெரியவில்லை. அதற்கும் கார்த்திக் அவர்களின் கருத்துக்கும் என்ன தொடர்பு என்பதும் புரியவில்லை.

    ஆக, இங்கிருக்கும் So called சீனியர் கமென்ட்டுக்காரர்கள் மறுபடியும் Made sure that they forced another one out here.

    Cheers, Guys.

    ReplyDelete
  79. விஜயன் சார்,
    //உருண்டோ-புரண்டோ இத்தனை இதழ்களையும் கரைசேர்த்து விட்டோமே!!' என்று பெருமிதப்பட்டுக் கொள்வதா ? //
    கண்டிப்பாக பெருமையான விஷயம்! மிக பெரிய விஷயம்!! எங்களுக்காக நீங்கள் அடிக்கும் அந்தர் பல்டிகள் அதிகம்! ரொம்ப நன்றி! நமது அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!

    கடந்த இரண்டு தினம்களாக, 20 வருடம் கழித்து எனது கல்லூரி நண்பர்கள் உடன் நடந்த சந்திப்பு காரணமாக இந்த முறை ஈரோடு வரமுடியவில்லை!

    நமது புத்தக திருவிழா மற்றும் எனது நண்பர்கள் சந்திப்பு இரண்டும் முக்கியம், இரண்டிலும் பங்கு பெறுவது முடியாத விஷயம்! அடுத்த புத்தக திருவிழாவில் வழக்கம் போல் ஆஜராகிவிடுவேன்!

    ReplyDelete
  80. நண்பர் அருண் அவர்களுக்கு ...

    நண்பரே ...கார்த்தி அவர்கள் எழுதிய சீண்டலுடன் உள்ள குறையை (அல்லது )அவ்வாறு தோன்றும் குறையை நீங்கள் எழுதியிருந்தால் கண்டிப்பாக தாண்டி போயிருப்பேன் .காரணம் உங்களை பற்றி எனக்கு தெரியாது .என்னை பற்றி உங்களுக்கு தெரியாது .பிறகு கடுமையான முறையில் சாடுவதற்கே என்றே வருபவர் எழுதியிருந்தாலும் தாண்டி சென்று தான் இருப்பேன் .ஆனால் நண்பர் கார்த்திக் அவர்களை தனிப்பட்ட முறையில் முகம் பார்க்காமலே அறிந்தவன் என்ற முறையிலும் .ஈரோட்டில் அந்த குறையும் நிவர்த்தி செய்தி பார்த்து பேசியவன் என்ற முறையிலும் என்னை அவர் அறிவார் அவரை நான் அறிவேன் .என்னை புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கையில் அவருக்கு பதில் அளித்துள்ளேன் .அவ்வளவுதான் ..பிறகு கிசுகிசு எழுதும் அளவிற்கு நான் அவ்வளவு வொர்த் இல்லை சார் ..அப்படி இருந்தால் ஊரையே சொல்லி இருக்க மாட்டேன் .நான் சொன்ன நபரை அவர் மட்டுமல்ல இங்கு வருபவர் அனைவருமே புரிந்து கொண்டு இருப்பர் .நன்றி ..


    அடுத்து நண்பர் கார்த்தி அவர்களுக்கு ..


    உங்கள் நிருபர் பணியின் தண்மையை ..உணருகிறேன் சார் .நீங்கள் சொல்வது சரி தான் ..சமூக சீர்கேடுகளையோ...ஊழல்களையோ ..ரவுடியிசத்தையோ தங்கள் பாணியில் விமர்சித்தால் அப்பொழுது ஆவது அவர்களுக்கு நெற்றி பொட்டில் உறைக்காதா ..சரியா எழுதியிருக்கான்யா என வாசிக்கும் நண்பர்கள் உணர்வதுடன் பெருமையாக நினைப்பார்கள் .அதே சமயம் ஒரு கொண்டாட்டமான நிகழ்வு ..ஆதரவற்றோருக்கு உதவி வழங்கும் நிகழ்வு ..ஒரு சேவை நிகழ்வு ...தான நிகழ்ச்சி போன்ற செயல்பாடுகள் நிகழ்வும் இடங்களில் கண்டிப்பாக சிற்சில குறைபாடுகள் நடந்தேறும் .அதை தன்மையுடன் குறிப்பிட்டு எழுதினால் வாசிப்பவர்கள் மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் கூட ..

    அட ..ஆமாய்யா ..சரியா சொல்லி இருக்கான் ..அடுத்த முறை இதை நாம் திருத்தி கொள்ள வேண்டும் என்று மகிழ்வதுடன் மனதினால் எழுதியவரை பாராட்டுவும் செய்வார்கள் .ஆனால் அங்கேயும் மேலே உள்ளது போல எழுதினால் ..இவங்களுக்கு வேற வேலையே இல்லை ..குறை சொல்வத்ற்கு என்றே வருவான்கள் போல இருக்கு என்று தாண்டி செல்லும் நிலை ஏற்படும் .அது தங்களுக்கு ஏற்படாமல் எப்போதும் போல வாருங்கள் ...குறைகளை சொல்லுங்கள் ..


    அதை குறை இல்லாமல் சொல்லுங்கள் .உங்கள் அடுத்த பதிவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் .


    ReplyDelete
    Replies
    1. தலீவா...பின்னிட்டிங்க..! சீர்கேட்டையும்விழாக்களையும் பார்க்க வேண்டிய பார்வை பற்றிய அருமையான விளக்கம்..! அருமை நண்பர் ஈரோடு கார்த்திக் எங்கிருந்தாலும்..மேடைக்கு வந்து, தலீவர் கருத்தை சரியான கோணத்தில்..உள் வாங்கியதை தெரிவியுங்கள்..!

      Delete
    2. வேண்டம் வேண்டம் move on மாயாவி சார் ! lets focus on EBF !

      Delete
    3. //.பிறகு கிசுகிசு எழுதும் அளவிற்கு நான் அவ்வளவு வொர்த் இல்லை சார் ..அப்படி இருந்தால் ஊரையே சொல்லி இருக்க மாட்டேன் .நான் சொன்ன நபரை அவர் மட்டுமல்ல இங்கு வருபவர் அனைவருமே புரிந்து கொண்டு இருப்பர் .நன்றி //

      நானும் இங்கு வருபவன் தானே? எனக்கு அது யாரென்று புரியவில்லையே? அது ஏன்?

      கிசுகிசு எழுத தகுதி எல்லாம் தேவையே இல்லை என்றால், நீங்கள் குறிப்பிட்ட அந்த ஆள் யாரென்று சொல்லுங்களேன், உங்கள் மனதில் தவறான எண்ணம் இல்லையென்று அனைவருமே புரிந்துக்கொள்ளட்டுமே?

      Delete
  81. டியர் அருண், இங்கே நீங்க உங்களுக்கு தோன்றிய கமெண்டை போடுவதற்கு, யாரிடம் அனுமதி வாங்கினீர்கள்:-).சும்மா, தவறு சொல்லவேண்டும் என்பதற்காக, சொல்லாதீர்கள். நீங்கள், ஆரம்பத்தில் சொன்ன கருத்துகளில், சிறிதளவாவது நம்பகத்தன்மை இருந்தது.இப்போதும் அது தொடர்கிறதா என்பது கேள்விகுறியே.
    பிளாக் ஆரம்பித்த புதிதில், சார் இப்படி செஞ்சா நல்லாயிருக்குமே, என்று சிறு சிறு ஆலோசனை சொன்ன குரல்கள் எல்லாம் இப்போது, இப்படித்தான் காமிக்ஸ் கொண்டுவரவேண்டுமே என்று கட்டளைகுரல்களாக ஒலிப்பது , விஜயன் சாரின் துரதிஷ்டம் என்றே சொல்லவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. //டியர் அருண், இங்கே நீங்க உங்களுக்கு தோன்றிய கமெண்டை போடுவதற்கு, யாரிடம் அனுமதி வாங்கினீர்கள்:-).சும்மா, தவறு சொல்லவேண்டும் என்பதற்காக, சொல்லாதீர்கள். நீங்கள், ஆரம்பத்தில் சொன்ன கருத்துகளில், சிறிதளவாவது நம்பகத்தன்மை இருந்தது.இப்போதும் அது தொடர்கிறதா என்பது கேள்விகுறியே.// சுந்தர் சரியான கேள்வி..!!! கை கொடுங்கள் சூப்பர்..!

      அருண் என் பங்குக்கு...

      இந்த செடியில் எவ்வளவு அழகாக பூக்கள் என போகிறபோக்கில் முகர்ந்து ரசித்ததாகவும் தெரியவில்லை...
      இந்த செடிக்கு அடியில் இவ்வளவு வேர்களா..!! என வியந்து,ஆராய்ந்ததாகவும் தெரியவில்லை..! அழகான பூ செடியில் முள்ளுக்கு என்ன வேலை..? என்பது போன்ற விதமாக உள்ளது உங்கள் தேடல்..!

      Delete
    2. வேண்டம் வேண்டம் move on மாயாவி சார் ! lets focus on good part of EBF friends! waiting for news, announcements 2016 fat book announcements? any youtube links of the events?

      Delete
    3. டாக்டர் சுந்தர்,

      // சும்மா, தவறு சொல்லவேண்டும் என்பதற்காக, சொல்லாதீர்கள்..//

      அப்படியா? நான் சொன்னதில் என்ன தவறு என்று நீங்கள் விளக்கினால் யாம் மகிழ்வோம். இல்லையென்றால், ..........

      Delete
    4. சிவா,

      என் பங்கிற்கு எல்லாம் உங்களிடம் நான் எதுவுமே கேட்பதாக இல்லை. ஏனென்றால், இரண்டு பதிவுகளுக்கு முன்பு இதே கமெண்ட் பகுதியில் என்னை வக்கிரம் பிடித்தவன் என்று சொல்லிவிட்டு, நான் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்காமல் ஓடியவர் நீங்கள் தானே?

      இனிமேல் உங்களிடம் எனக்கு எந்த கேள்வியும் இல்லை.

      Delete
  82. அனைத்து காமிக்ஸ் நண்பர்களுக்கும் ..

    நாம் இங்கே குறுகிய வட்டம் ...இங்கே ஒவ்வொரு வருக்கும் ...ஒவ்வொரு ரசனை ..அனைவரும் ஒரே நேர் கோட்டில் கண்டிப்பாக பயணிக்க முடியாது ..அனைவருமே ஒரே கருத்தையும் கொண்டு இருக்க முடியாது ..பலர் நினைப்பது போல ...அதாவது என்னை போல ..அதாவது ஜால்ரா. போடறான்டா என்றெல்லாம் நினைப்பது போல எல்லாம் தாங்கள் எழுத வேண்டாம் நண்பர்களே ...நிறை குறைகளை சொலபவர்களும் ..குறைகளை மட்டுமே சொலபவர்களும் கண்டிப்பாக வாருங்கள் நண்பர்களே ..அது இதழ்களின் நிறை குறைகளாகவும் ..அதை தேவையானவர்கள் உணர்வது போலவும் ...நண்பர்கள் தனிப்பட்ட சீண்டாத வகையிலும் இருந்தால் எதிரெதிர் கருத்து கொண்டவரும் ஒரே குடையின் கீழே காமிக்ஸ் குடையின் கீழே வரலாமே ..இது தானே ஆசிரியர் விருப்பமும் ..வாருங்கள் நண்பர்களே ...

    ReplyDelete
    Replies
    1. தலிவரே அறிவிப்பு ஒன்றும் EBFஇல் லீக் ஆகவில்லையா ? கொஞ்சம் தகவல் பதியலாமே நண்பரே ? ஆர்வமுடன் பலரும் waiting ...!

      Delete
  83. This comment has been removed by the author.

    ReplyDelete
  84. ஆரம்பிச்சிட்டாங்க
    இது எங்க போய் முடியப்போகுதோ

    ReplyDelete
  85. //2016ல் 48 புஸ்தகம் - திகில் சந்தா D, என் பெயர் டைகர் - தனி சந்தா என்று ஈரோட்டிலிருந்து அடுக்கிக்கொண்டு செய்திகள் வந்து கொண்டிருப்பதால் இப்பொழுதே CITIBANK மேலாளரிடம் சந்தா loan சம்பந்தமாக பேசிக் கொண்டிருக்கிறேன் //

    Ragavan sir, thanks for info.

    நண்பர்களே தகவல் வேறு ஒன்றும் காணவில்லையே ! எல்லோரும் பெவிகால் பெரிய சுவாமி ஆகியது ஏனோ ....?

    ReplyDelete
    Replies
    1. @ சதிஷ்

      எடியுடன் இரண்டு நாள்..நிகழ்ச்சியில் எல்லோரும் மன நிறைவில்..கொண்டாட்டத்தின் நினைவுகளை நினைத்து,எதை முதலில் சொல்வது எதை...எங்கிருந்து ஆரம்பிப்பது என,ஒரு சேர யோசிச்சிட்டு இருக்காங்க..! கொஞ்ச பொறுங்க..! சொல்ல அவ்வளவு இருக்கு..! (எனக்கும் சேம் பிளட்..!)

      Delete
    2. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !

      Delete
    3. //வேண்டம் வேண்டம் move on மாயாவி சார் ! lets focus on good part of EBF friends! waiting for news, announcements 2016 fat book announcements? any youtube links of the events?// (கட்டை விரல் உயர்த்திகாட்டும் படம் + வாயில் ப்ளாஸ்டர் படம்)

      நன்றிகள் சதிஷ் ....EBF நிகழ்வுகள்.பற்றி துவக்குகிறேன்..!

      EBF பற்றிய முக்கிய..மையபுள்ளி...
      வாசகர் சந்திப்பில் எடிட்டர் கேட்ட கேள்விகள்...பதில்கள்...முடிவுகள்...

      1. வருடம் 48 அதிகமா ? சரியா ? குறைவா ?

      நண்பர்கள்: சரி ! குறைவுதான்..! கூட்டலாம்..!

      எடி: 12 மறுபதிப்புகள்...36 இதழ்கள் இந்த எல்லையை தாண்ட எனக்கு சக்திஇல்லை..! குடோனில் எடமும் இல்லை..!

      நண்பர்கள்: அப்போ திகில் அறிவிப்புகள்..? டெக்ஸ் தனி சந்தா ?

      எடி: திகில்கள் 44 பக்க சிறு கதைகள்..அதில் நாயகன் நாயகி வில்லன் என எதுவும் கிடையாது...இதை மொத்தமாக வெளியிடலாமா..? 200 பக்கம் 200ரூபாய்...இதை வரவேற்பிற்களா..?

      நண்பர்கள்: இதன் மாதிரி ரிஸ்க் வேண்டாம் ஸார்..! all நியூ ஸ்பெஷல் மாதிரி ஆகிடும்..!

      எடி: அப்போ 12 லயன் 12முத்து12 திகில் ஓகேவா..?

      நண்பர்கள்: பயங்கர கூக் குரல்கள்...ஒரு சேர கத்தல்...வேண்டாம்..வேண்டாம்..வேண்டாம்...வேண்டாம்...வேண்டாம்...

      எடி: 48 வெளியிடுகள் தாண்ட கூடாதுகிறதுல நான் உறுதியா இருக்கேன்..! (அவர் முகமே பெரிய மடக்கிய முஷ்டியாக மாறியது)
      தொடரும்...

      Delete
    4. ஆசிரியருடன் சந்திப்பு ....நண்பர்களுடன் சந்திப்பு...நேற்றைய மீட்டிங்கின் அமோக வெற்றி ....ஒரு தீர்க்க தரிசியின் வஞ்சக எண்ணத்திற்கு மாறாக தென்னிந்தியா முழுதும் இருந்து எல்லா ஊர்களில் இருந்தும் நண்பர்கள் மீட்டிங் வருகை ...தென்னிந்திய நண்பர்கள் மட்டுமே அல்லாமல் இந்த மீட்டுக்காவே வருகை புரிந்த வெளிநாட்டு நண்பர்கள் என.....நமது காமிக்ஸ் நண்பர்கள் வருகை மனநிறைவை தந்தது.....மனம் அதிலியே லயித்து உள்ளது .......அங்கே ஆசிரியர் அறிவித்த அறிவிப்புக்கள் மற்றும் எதிர்வரும் திட்டங்களை அவர் பாணியில் சொல்வதே...நன்றாக இருக்கும் .....எனவே அடுத்த பதிவுக்கு ...நானும் காத்து உள்ளேன் ....ஓன்றே ஒன்று மட்டுமே ....ஹி...ஹி.....என்னைப்போலவே பெரும்பாலான நண்பர்களுக்கும் ...பழி வாங்கும் புயலே பிடித்து உள்ளதில் நான் இப்போஇப்போ ரொம்ப ஹேப்பி ....

      Delete
    5. :) proceed your excellency....!

      Delete
    6. ஏன் விஜயராகவன் சார்? ஏன்?

      //ஒரு தீர்க்க தரிசியின் வஞ்சக எண்ணத்திற்கு மாறாக//

      ஏன் இப்படி இன்னமும் கிசுகிசு பாணியிலேயே எழுதுகிறீர்கள்.

      ஒன்று எழுதாமல் விட்டு விடுங்கள், அல்லது எழுதுவதை அனைவரும் புரியும்படியாக பெயரைச் சொல்லி எழுதுங்கள். ஏற்கனவே மாயாவி சிவாவின் வேலைகளை கடந்த இரண்டு மூன்று பதிவுகளில் பார்த்தோமே? நான் மதிக்கும் நீங்களுமா அப்படியே எழுத வேண்டும்?

      Delete
    7. இல்லை அருண் சார் ...நான் சொல்லியுள்ளது....கிசு கிசு அல்ல....இங்கே ஒரு முகமூடி அணிந்த நண்பர் சொன்ன கருத்து அது.....அந்த கருத்தை அனைவரும் அறிவர்....மேலும் இங்கே யாருடனும் வாதம் செய்ய கூடாது என்ற முடிவில் இருப்பதாலேயே பேர் சொல்ல இயலவில்லை ........உங்களுக்கு நிச்சயமாக தெரியாது எனில் உங்களுக்கு தனியாக சொல்கின்றேன் அதை...இங்கே பொதுவில் அந்த நண்பரின் எண்ணத்தை போடவே எனக்கு சங்கடமாய் உள்ளது...மன மகிழ்ச்சியாக உள்ள இந்த தருணத்தில் அது வேண்டாம் அவ்வளவே....

      Delete
    8. நன்றி விஜயராகவன் சார்.

      Delete
    9. Arun SowmyaNarayan, and friends.

      lets move on. I feel this is not a time to discuss forum issues.just now EBF got over its celebration time, ppl are in joyful mood,don't play spoil spot now.

      I dont think any one want to see a discussion on issues and spoil the mood now!

      Delete
    10. yes I agree with u sathish ji....let's enjoy the occasion ....

      Delete
    11. yes I agree with u sathish ji....let's enjoy the occasion ....

      Delete
    12. sathish kumar s,

      Am ready to move on. in fact i have moved away from this page for a longer time when the editor himself said make your comments shorter.

      However when certain things do happen, and if you do not raise your concern against that or for that matter, not register these trhings, then things will be taken for granted.

      For example, this siva. He has caused so many issues, and gave me names etc. Now he is coming and commenting as a saint as if nothing has happened.


      Am just following the following:

      Never, ever be afraid to do what's right, Especially if the well being of a person or animal is at stake.

      Society's punishment's are small compared to the wounds we inflict on our soul when we look the other way.

      Delete
    13. தொடர்-2

      நண்பர்கள்: பௌன்சர்+ கி.நா வுக்குன்னு இருக்கற சந்தா B யை என்ன செய்யபோறிங்க..? எங்களுக்கு பதில் வேணும்...50பக்ககதை...50 ரூபாய்க்கு ஒரு புக்குனாலும் 800ரூபாய்க்கு (சந்தாB) தாரளாமா 14 புக்கு போடலாமே..! ஸார் இருங்க..ஒரு டவுட், 48 வெளியிடுகளா..? இல்லை 48 கதைகளை தாண்ட மாட்டிங்களா..? அதை கிளியர் பண்ணுங்க..ப்ளிஸ்...

      எடி: கதைகள் எண்ணிக்கையை நான் சொல்லலை...36+12 வெளியிட்டை மீறாம இருக்கணும்கிறதுதான்...! பௌன்சர் அடுத்து வர்ற கதையோட முடியுது...8&9 வேற கொஞ்சம் நிறையவே சென்ஸார் பிரச்சனை இருக்கு...அதுமட்டுமில்லாம...காபிரைட் வேறவங்க கையில இருக்கு...சாந்த B இடத்துல திகில் போடலாம்தான்..உங்க ஆதரவு...?

      நண்பர்கள்: இப்ப வர்ற...ஒரு வருஷ புக்கு எண்ணிக்கை கூட்டலாமா...சரியான அளவா..ன்னு கேட்டுட்டு...இப்ப எதுவும் கூட்ட எண்ணமில்லைன்னா என்ன அர்த்தம்..?? சாந்த B திகில் போடுங்க..!!! லயன் 18 முத்து 18 மறுபதிப்பு 12 ஆக 48 இல்லமா திகில் 12 ன்னு தனியா போடுங்க..

      எடி: ஒகே முதல் அறிவிப்பு- திகில் தனி சந்தா..! ஒரு மாத இதழா...இரு மாதத்திற்கு ஒரு இதழா என்பது மட்டும் கணக்கு போட்டு பின்னர் அறிவிக்கப்படும்..! திகில் ஒரு முழு கலர் புக்..!

      நண்பர்கள்: அப்போ கிராபிக்ஸ் கதைகள் கதி என்ன..? அதை நிறுத்திட போறிங்களா..?

      தொடரும்...

      Delete
    14. சிக்கிரம் தொடருங்கள் .....

      Delete
    15. தொடர்-3

      2. கிராபிக்ஸ் நாவல்களை இதே எண்ணிக்கையில் தொடரலாமா...குறைக்கலாமா...நிறுத்திவிடலாமா..?

      நண்பர்கள்: கட்டாயம் தொடரலாம்...நிறுத்தாதிங்க..! ஒரேமாதிரி உலகப்போர்...வரலாற்று பின்னணின்னு ஒரே தடம் வேண்டாம்..வகை வகையா கலந்து..நல்லதா 3 & 4 கொடுங்க..ஸார்...

      எடி: கி.நா. வாஆஆஆ வேண்டாம் சார்...ன்னு கண்ணீர் விட்டு பக்கம் பக்கமா எழுதற போ.கு.தலைவர் என்ன வாய் பேச மாட்டேங்கிறார்...! மடிப்பாக்கம் வெங்கடேசன் ஸார் வந்திருக்காரா..இல்லையா...நீங்க சொல்லுங்க...தலீவரே...

      தா.பரணிதரன்: ஸார் இப்பெல்லாம் கி.நா.என்னடியோ படிச்சுடறேன்...நல்லதான் இருக்கு..ஆனா...திரும்ப படிக்கணும்னு தோணலை..அதுமாதிரி இல்லாம பாத்துகங்க...திரும்பவும் படிக்கற மாதிரியான கதையா போடுங்க...நிறுத்தவேண்டாம் ஸார்..!

      நண்பர்கள்: கற்பனையான சம்பவங்கள், கதாபாத்திரங்கள்...சூப்பர் பவர் உள்ள நாயகர்கள் வரிசை கதைகள் காமிக்ஸ்கள்...நடந்த சம்பவம்,நிகழ்வை மையமா வெச்சி எழுதப்பட்ட கதைகள் கி.நா...! அந்தவிதத்துல XIII டைகர் கதைகள் கி.நா தான்...! ஆனா திரும்ப திரும்ப படிக்கனுன்னு தோணுது..! அது மாதிரி ஜீனியர் விக்ரம் தேடிபிடிச்சி தரணும்னு இங்க கேட்டுகிறேன்...அதே சமயம் தொடரா இருக்கற நீளகதைகளை தொடரா போடாம...மொத்தமா போடுங்க..!

      எடி: வா.எ.வீதி & பௌன்சர் ன்னு தொடரா நிக்கிறதை அடுத்த வருஷம் முடிச்சிடுறேன்...தொடரா இல்லாத...முடிஞ்ச தொடர்களை மொத்தமா போட முயற்சிக்கிறேன்..!

      அறிவிப்பு இரண்டு: சில வருடம் கி.நா. எண்ணிக்கை குறைக்கப்படும். தொடர்கள் தவிர்க்கப்படும். பௌன்சர் மாதிரி ரொம்பவே தூக்கலா இல்லாம... சூப்பர் ஹிட் கௌபாய் கதை மூன்று பாக தொடர் ஓன்னு ஒரே புக்கா அடுத்த வருஷம் வெளிவரும்..!

      தொடரும்...

      Delete
    16. தொடருங்கள் .....

      Delete
    17. 3. 'தல' டெக்ஸ் வில்லர் கதையை மறுபதிப்புல..கலர்ல போட நான் முன் வந்தா..எந்த கதையை முதல்ல போடலாம்..?

      நண்பர்கள்: பிரின்ஸ்...ஜானி கதையெல்லாம் மறுபதிப்புல கலர்ல போடுறிங்க...'தல' டெக்ஸ் கலர்ல மறுபதிப்புகள் போட்டே ஆகணும் ஸார்..!!!

      எடி: ஒகே...ஒகே...ஒரே ஒரு கதை மறுபதிப்புல போடலாம்...குண்டாஇருக்கிற கதையா சொல்லுங்க...

      நண்பர்கள்: பவளசிலை மர்மம்...பழிவாங்கும் பாவை..இரத்த முத்திரை...டிராகன் நகரம்...பழிவாங்கும் புயல்...கழுகு வேட்டை..பழிக்கு பழி...

      எடி: போதும் இந்த லிஸ்டுல இருந்து நான் மூனு புக் செலக்ட் பன்றேன்...அதுல ஒன்னு சொல்லுங்க...டிராகன் நகரம்..சைத்தான் சாம்ராஜ்யம்...பழிவாங்கும் புயல்...(இத்தாலி விஜய்:ஆசிரியருக்கிறதை இப்ப நான் ஒத்துகிறேன் பார்க்க...இங்கே'கிளிக்')இதுல ஒன்னு செலக்ட் பண்ணுங்க...!

      (ஒரே கூச்சல்..குழப்பம்...இங்கே'கிளிக்')

      இத்தாலி விஜய்: ப்ரண்ட்ஸ் அமைதி..அமைதி...இதுக்கு ஒரே வழி...வாக்கெடுப்பு...! டிராகன் நகரம் கை தூக்குங்க...next சைத்தான் சாம்ராஜ்யம்...கை தூக்குங்க...இப்ப பழிவாங்கும் புயல் கை தூக்குங்க...ஏய்ய்ய்ய்...வெற்றி பெற்ற அந்த குண்டு புக் 'பழிவாங்கும் புயல்' ஒகே தானே எடிட்டர் ஸார்..!!! இங்கே'கிளிக்'

      எடி: அறிவிப்பு மூன்று-அடுத்தவருஷம் 'பழிவாங்கும் புயல்' கலர்ல மறுபதிப்பா வரும்..!

      தொடரும்...

      Delete
    18. //தொடருங்கள் .....//
      +1.

      Delete
    19. This comment has been removed by the author.

      Delete
    20. //எடி: அறிவிப்பு மூன்று-அடுத்தவருஷம் 'பழிவாங்கும் புயல்' கலர்ல மறுபதிப்பா வரும்..!//

      2016 தீபாவளி மலர் இப்போதே கண்களில் தெரிகிறது !

      தொடருங்கள் .....

      Delete
    21. சபையில் திடீர் சலசலப்புகள்....

      புனிதசாத்தன்/திருப்பூர் நாகராஜ்/ரம்மி/மா.வி./சுந்தர்: போராடுவோம்...போராடுவோம்...'தளபதி'க்காக போராடுவோம்...அறிவிப்பு செய்(யுங்கள்)...தளபதிக்கும் அறிவிப்பு செய்(யுங்கள்)..!

      4.தளபதி டைகர் கதையில பாக்கியிருக்கிறது ரெண்டு தொடர்...ஒன்னு யங் டைகர்..இன்னொன்னு மிஸ்டர் டைகர்...எதை எப்படி போடலாம்..?

      நண்பர்கள்: தயவுசெஞ்சி எது போட்டாலும் முழுசா போடுங்க ஸார்..! அட்லாண்டாவில் ஆக்ரோஷம் எங்க ஆரம்பிக்குது...எதுலமுடியுதுன்னே தெரியலை..! பிரிச்சி போட்டு சோதிச்சிறாதிங்க...(நிறைய பேர் எடியை பார்த்து கும்பிட்டனர்..)

      எடி: யங் டைகர் பாக்கி 11 கதைகள்..மிஸ்டர் டைகர் 5... இதை எப்படி போடலாம்..?

      மா.சி: எடிட்டர் ஸார் ஒரு கேள்வி...1000 ரூபாய்க்கு ஒரு புக் போட்டதுல உங்களுக்கு என்ன இழப்பு..என்ன வரவேற்ப்பு..?

      எடி: என்னோட 30 வருஷ சர்விஸ்ல..எவ்வளவோ விலையில..சைஸ்ல புக்ஸ் போட்டிருக்கேன்..! 2ரூபாய் போட்டா எவ்வளவு போகும்..? 5 ரூபாய் போட்டா எவ்வளவு போகும்..?ன்னு பல ஸ்பெஷல் பத்தி துல்லியமா கணிச்சிருக்கேன்...ஆனா..ஆனா..இந்த 1000 ரூபாய் மேட்டர் மட்டும் இன்ன வரைக்கும் என்னால கண்டுபிடிக்கவே முடியலை..! ஒரு ஐம்பது,அறுபது ரூபாய் புக்ஸ் விக்கறதை விட...சாதாரணமா மி.மா. விற்பனையாகறது எப்படின்னே தெரியலை..! இந்த மாசம் புக்ஸ் வந்துட்டா...போன மாசம் புக்ஸை எந்த ஏஜெண்டும் கேக்கவே மாட்டாங்க..! ஆனா இப்ப வர்ற ஒவ்வொரு ஆடருக்கும் பின்னால மி.மா. ரெண்டு,நாலுன்னு ஆடர் வந்துட்டேதான் இருக்கு..!

      நண்பர்கள்: அப்புறம் என்ன ஸார்...1000 ரூபாய் புக்கே அடிச்சிட்டு போறப்போ...500 ரூபாய் புக்கு ஈஸியா பிச்சிட்டு போகும் ஸார்...முன் பதிவை ஆரம்பிங்க...முழு செட் போடுங்க...

      எடி: ஆனா கதை மி.மா மாதிரி சூப்பர் டுப்பர் ஹிட் கிடையாது...அப்புறம் கதை அதுமாதிரி இல்லைன்னு..

      நண்பர்கள்: அதெல்லாம் பரவாயில்லை...போடுங்க ஸார்...எங்களுக்கு 'தளபதி' சீரியல் போட்டு முடிங்க...

      எடி: ஒகே...அறிவிப்பு நாலு:முன்பதிவுக்கு என் பெயர் டைகர் ஐந்துகதைகள் ஒரே புக் வரும் 2016-ல்...!

      தொடரும்....

      Delete
    22. 3 tex stories (டிராகன் நகரம்..சைத்தான் சாம்ராஜ்யம்...பழிவாங்கும் புயல்)in a single book.. this is not correct we should fight for this..

      Delete
    23. 5.வருஷம் ஒரு முன்னாள் நாயகனை கௌரவிக்க..ஒரு 'டைஜஸ்ட்' போடலாம்ன்னு இருக்கேன்...உங்க தேர்வு யார்..?

      நண்பர்கள்: லக்கி லூக்...ரிப்போர்ட்டர் ஜானி...சிக்பில்...கேப்டன் பிரின்ஸ்...ஸார்..ஸார்..இருங்க..இது ரீபிரிண்டா..? புது கதைகளா..?

      எடி: புது கதைகள்...

      மீண்டும் கூச்சல் குழப்பம்...

      இத்தாலி விஜய்: ப்ரண்ட்ஸ் அமைதி..அமைதி...இங்கே'கிளிக்'
      இதுக்கு ஒரே வழி...மறுபடியும் வாக்கெடுப்பு...! லக்கிலுக்..கை தூக்குங்க...46%...அடுத்து ஜானி கை தூக்குங்கள்..16%..ம்...சிகப்பில்...86%...கடைசியா கேப்டன் பிரின்ஸ்..வாவ்...54%...எடிட்டர் ஸார் உங்க அறிவிப்பை சொல்லுங்க..!

      எடி: கேப்டன் பிரின்ஸ் கதைகள் ஹிட் எல்லாமே போட்டாச்சி..! விடுபட்ட முதல் கதையான பனி மண்டல கோட்டையும் கூட ஒரு கதையும் போடலாமா..? பிரின்ஸ் கேப்டனா கப்பல் ஓட்டுறதுக்கு முன்னால என்ன செஞ்ச்சிட்டிருந்தார்...அப்படிங்கிறத குட்டி குட்டி சாகசங்கள் பத்து பதினைந்து இருக்கு...அதை போடலாமா..?

      நண்பர்கள்: புது கதைகள்...புதுகதைகள்...புதுகதைகள்...புதுகதைகள்...இங்கே'கிளிக்'

      எடி: சரி..ஒகே...அறிவிப்பு ஐந்து:கேப்டன் பிரின்ஸ் கதைகள் ஒரு 'டைஜஸ்ட்' வரும் 2016-ல் ஒன்று..!

      Delete
    24. திருத்தம்; சிக்பில்..46%

      Delete
    25. விளம்பர இடைவேளை ஒன்று...இங்கே'கிளிக்'

      Delete
    26. விளம்பர இடைவேளை இரண்டு...இங்கே'கிளிக்'

      Delete
    27. விளம்பர இடைவேளை மூன்று...இங்கே'கிளிக்'

      Delete
    28. விளம்பர இடைவேளை நான்கு...இங்கே'கிளிக்'

      Delete
    29. விளம்பர இடைவேளை ஐந்து...இங்கே'கிளிக்'

      Delete
    30. //அறிவிப்பு ஐந்து:கேப்டன் பிரின்ஸ் கதைகள் ஒரு 'டைஜஸ்ட்' வரும் 2016-ல் ஒன்று..!//

      :)) :))

      //அறிவிப்பு நாலு:முன்பதிவுக்கு என் பெயர் டைகர் ஐந்துகதைகள் ஒரே புக் வரும் 2016-ல்...!//

      :)) :)) :))

      Delete

  86. நைட்டு ரைட்டிங் ஸ்டைல மாத்தனுமான்னு கேட்டு செம திட்டு.இன்னைக்கு ரைட்டிங் ஸ்டைலை மாத்தச்சொன்னா மாத்துவே.?நாளைக்கு சம்சாரத்த மாத்த சொன்னா மாத்துவீயா.?அவன் மாதிரி எழுது.!இவன் மாதிரி கருத்து சொல்லுன்னா உன்னோட ஸ்டைலு,ஒரிஜினாலிட்டியும் எங்கே.?ஒரு நிகழ்ச்சிய வெளியிலிருந்து மூன்றாவது மனிதனாக பார்த்து எழுதுன்னா உன் வீட்டு விசேசத்துலயும் அதே நிருபர் உடையோடதான் இருப்பியா.?செம பரேடு.!J.k எல்லாம் எழுதுனதுக்கு மன்னிப்பு,வருத்தம் கேட்டாரா.?உன் எழுத்து,கருத்துமேல உனக்கே நநம்பிக்கை இல்லைன்னாத்தான் மன்னிப்பு கேட்கனும்.!உரைக்கிற மாதிரிதான் சொல்லியிருக்காரு.சர்ச்சைகுரிய கருத்தை கட்டுரையின் கடைசிபபத்து பக்கத்தில் வைக்கும் கெட்ட பழக்கம் பின்னூட்டத்திலும் பின்னாடியே வருது.!கடைசியா உன்னமாதிரி காரசாரமா எழுத யாரு இருக்கா என்ற சமாதானத்தில் முடிந்தது.!விட்ருங்கப்பா.!நான் சொன்னதை வைத்து புதைத்த பிணத்தை தோண்ட வேண்டாம்.நாற்றம் தாங்க முடியாது.!சும்மா இருப்பதால்தானே வம்பிழுக்கிறாய் என்று ரெண்டு அசைண்மெண்டை பனிஸ்மெண்டாக வாங்கியதுதான் மிச்சம்.!

    ReplyDelete
    Replies
    1. //ஒரு நிகழ்ச்சிய வெளியிலிருந்து மூன்றாவது மனிதனாக பார்த்து எழுதுன்னா உன் வீட்டு விசேசத்துலயும் அதே நிருபர் உடையோடதான் இருப்பியா.?//

      கார்த்திக் இப்படியே எழுதினா எங்கிட்ட செமத்திய வாங்க போறிங்க..!!! முடிவா நீங்கள் என்ன சொல்ல வர்றிங்க..???? வீட்டு விசேசத்துக்கு யூனிபார்ம்ல வந்தது தப்பு... ஸாரி பாஸ்..! இதை தானே சொல்லவர்றிங்க..! ஆமாம்..ன்னு ஒத்தவரியில..அது கூட வேண்டாம்..+1 மட்டும் போட்டு மேட்டரை முடிங்க..!

      Delete
  87. மேலே என்னை திட்டியது என் எடிட்டர்.!என் ரைட்டிங் ஸ்டைலை மாற்றியமைத்த குரு.வெல்விஷர்.

    ReplyDelete
  88. நான் சொல்ல வந்ததை நீங்க சொல்லிட்டீங்க.!பதினைந்து நிமிசத்துல பத்து பக்கங்களை எந்த தரவுகளும் இல்லாமல் எழுதிக்குவிக்கும் என்னால் நினைப்பதை செல்லில் டைப்ப முடியாமல் போவதுதான் சோகம்.சிந்தனை தடுமாற்றங்களும் வார்த்தை மாற்றங்களும் இணைந்து வெவ்வேறான அர்த்தங்களை வாசிப்பவர்களுக்கு தந்துவிடுவதை தவிர்க்க முடிவதில்லை.!பேசுவதை அப்படியே உள்வாங்கி தமிழ் எழுத்துகளாக மாற்றும் சாப்ட்வேரை யாராவது கண்டு பிடிங்கப்பா.!இதைகூட கூகுள் ஹேண்ட் ரைட் இன்புட்டை பயன்படுத்தி விரலால் டைப்புகிறேன்.ஸ்பீடு பத்தலை.!என் செய்வேன்.!

    ReplyDelete
  89. // இந்த ‘பொடி‘ பாஷையை அமைக்க நமது வாசக நண்பர் லக்கி லிமட்டுக்கு இங்கேயொரு extra big thanks ! ஏகப்பட்ட மெனக்கெடலொடு நண்பர் இந்த "மொழியினை" உருவாக்கியிருப்பது கண்கூடு ! //

    வாழ்த்துகள் லக்கி லிமட்டு!

    ReplyDelete
  90. மை டியர் மானிடர்களே !!!

    ஒரு சந்தோஷமான தகவல்.

    அமர் சித்திர கதைகளை வெளியிடும் ACK மீடியாவின் சென்னை முகவரை ஈரோடு புத்தக கண்காட்சியில் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.டிங்கிள் ஸ்டார் தமிழ் புத்தகத்தின் வெற்றியை தொடர்ந்து பல கதைகள் அடங்கிய தொகுப்புகள் விரைவில் தமிழில் வெளியிட உள்ளதாக கூறினார்.சுப்பாண்டி கதைகள் தயாரிப்பு முடிந்து இவ்வருட இறுதியில் வெளியிட தயாராகிவிட்டதாம்.அடுத்த ஆண்டில் மஹாபாரதம் மற்றும் ராமாயணம் கதைகள் பாக்ஸ் செட்டாக வெளியிடும் பணிகள் நடந்து வருவதாகவும் அவர் நம்மிடம் தெரிவித்தார்.கபீஷ்,காக்கை காளி,சுப்பாண்டி போன்ற நமது அந்நாளைய தோஸ்த்துகள் மீண்டும் தமிழ் பேச வருகிறார்கள் என்ற இனிய தகவலை கூறி வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.ஈரோடு புத்தக கண்காட்சி பற்றிய அப்டேட்களை பூனையார் விரைவில் ஸ்மர்ஃபுவார் என நம்புவோம்.மியாவ் மியாவ்;-)

    ReplyDelete
    Replies
    1. //கபீஷ்,காக்கை காளி,சுப்பாண்டி போன்ற நமது அந்நாளைய தோஸ்த்துகள் மீண்டும் தமிழ் பேச வருகிறார்கள் என்ற இனிய தகவலை//////

      சாத்தான்ஜி !

      மிகவும் இனிப்பான சேதிதான் ...

      குறிப்பாக கபிஷ் கதைகளை தமிழில் படிக்க மிகவும் ஆவல் .!!!!!

      Delete
  91. ஆஹா அருண் சார். .

    ஏங்க திட்டறதுக்கு தான் மறைப்பை பயன்படுத்துவார்கள் ..நான் பாராட்டி சொல்றதுக்கு பயமாங்க ...அதற்கான பதிலை ..புரிதலை ..நபரை ..கார்த்திக் அவர்களே அவரே கமெண்ட்ஸ் ல் தெரிவித்து விட்டாரே

    ஸ் அப்பா..இதெல்லாம் உனக்கு தேவையாடா பரணி ...

    ReplyDelete
  92. அட டே ! 1.5 மில்லியன் ஹிட்ஸ் கடந்ததை இப்போது தான் கவனித்தேன் 1,526,163


    :)

    ReplyDelete
  93. டியர் விஜயன் சார்,

    இந்த மாத கூரியர் எனக்கு இன்று தான் கிடைத்தது. வாசகர் கடிதம் - பகுதியில் மிஸ்டர் மரமண்டை என்ற என் பெயரையும் பார்த்தவுடன், எனக்குத் தலைகால் புரியாத சந்தோஷ தருணமாக அமைந்து விட்டது. ஒருவருடம் முன்பே தாங்கள் இதுபோன்ற நடைமுறையை கூறியிருந்திருந்தாலும், தற்போது தான் முதல் முறையாக blog வாசகர்களின் விமர்சனத்தை '7 நாட்களில் எமலோகம்' காமிக் புத்தகத்தில் வெளியிட்டு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டீர்கள். இதனால், இந்த ப்ளாகில் கதை விமர்சனம் எழுத மிகப்பெரிய உத்வேகம் கிடைத்தது போல் இருக்கிறது !

    மிக்க நன்றி விஜயன் ஸார் !

    ReplyDelete
    Replies
    1. //காமிக் புத்தகத்தில் வெளியிட்டு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டீர்கள். இதனால், இந்த ப்ளாகில் கதை விமர்சனம் எழுத மிகப்பெரிய உத்வேகம் கிடைத்தது போல் இருக்கிறது !//

      ! :)

      congrats friend !

      Delete
  94. comic sunday ! முத்து 350. 351. 352. 353. 354. லயன் 251. 252.

    இம்மாத காமிக்ஸ் புத்தகங்களின் பின் அட்டையில், புதிய தொடக்கமாக அமைந்து இருக்கும் வெளியீட்டு வரிசை எண் அற்புதமாக இருக்கிறது. இன்னும் கூட சற்றே பெரிய அளவில் இருந்தால், இன்னும் கூட அட்டகாசமாக இருக்கும் !

    ''இப்போது விற்பனையாகிறது'' விளம்பர டிசைன் அமர்க்களமாக இருக்கிறது சார். இந்த இரண்டு மாற்றங்களும் சென்னையில் உள்ள அந்த image branding நிறுவனம் / புதிய கிராபிக் டிசைனர் மூலம் கிடைத்து இருந்திருந்தால் நீங்கள் இந்த மாதம் பட்ட கஷ்டங்களுக்கான பலன் ஒரு 30 சதவீதம் கிடைத்து விட்டது என்றே எடுத்துக் கொள்ளலாம் :)

    Box set அருமையாக இருக்கிறது விஜயன் சார் !

    ReplyDelete

  95. @ தலீவரே

    நேத்திக்கு நாங்கல்லாம் கெஞ்சிக் கேட்டும்கூட கடவாய்பல்லுல வலி கண்டமாதிரி கமுக்கமா இருந்துட்டிருக்கீங்க... இங்கே வந்து எங்க கண்ணுகள்ல வேர்க்கிற மாதிரி எழுதிக் கலக்குரீங்க... என்னமோ போங்க!

    @ சாத்தான்ஜி

    EBF கொண்டாட்டங்களைப் பற்றி எடிட்டரே எழுதினா எல்லோரும் சந்தோசப்படுவாங்களேன்னு நினைச்சேன். இதோ, நம்ம மாயாவியே இங்கேக்ளிக்ல பின்னிப் பெடலெடுக்க ஆரம்பிச்சுட்டார்!

    @ மாயாவி

    'இங்கே க்ளிக்'குடன் கூடிய உங்களது விவரிப்புகள் அருமை! நேற்றைய தினத்தின் உற்சாகத்தை மீட்டெடுக்கிறது! சூப்பர்!

    ReplyDelete
  96. மிஸ்டர் மரமண்டை.! இணைய தளத்திற்கு அப்பாற்பட்ட வாசகர்கள் உங்கள் பெயரை பார்த்து ஆச்சர்யப்படபோகிறார்கள்.!!!
    நீங்கள் சந்தோசப்பட்டது எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது.!(புத்தர் படம் ........நீங்கள் ஜென் துறவி மனநிலையில் இருப்பீர்கள் என்று நினைத்தேன்.!)
    @நண்பர்களே.!நம் செய்யும் வேலையில்தான் துரோகம்,பாலிடிக்ஸ்,குற்றம் குறை,வீட்டில் மனைவி மகன்களை சமாளிப்பது ,பணப் பிரச்சினைகள் என்று பல பிரச்சினைகள் குதித்து கும்மாளம் போடும் போது.,இங்கு வந்தால்.............இங்கேயுமா.?.........?
    நண்பர்களே.! எதிர்மறையான சிந்தனைகளை தூக்கி எறிந்துவிட்டு ஸ்மர்ப்வில்லா என்னும் ஊரில் இருக்கும் ஸ்மர்ப்கள் போல் இங்கு சந்தோசமாய் இருப்போமே.!ப்ளீஸ்.!!!

    ReplyDelete
  97. 3 tex stories (டிராகன் நகரம்..சைத்தான் சாம்ராஜ்யம்...பழிவாங்கும் புயல்)in a single book.

    ReplyDelete
  98. கொஞ்ச நாட்களுக்கு முன்னால் சில நண்பர்கள் சொந்த ஆர்வத்தின் காரணமாக அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக காமிக்ஸ்களை மொழிபெயர்த்து எடிட்டரின்எச்சரிக்கையாலும்,வேண்டுகோளாலும் நிறுத்தினார்கள்.குறிப்பிட்டநண்பரின் பெயரை குறிப்பிட்டு ஸ்மர்ப்க்கு அவரது மொழிபெயர்ப்புக்கு உதவியதாக கூறி நன்றி சொல்வது சட்டவிரோத காரியத்தைஊக்குவிப்பது போல் ஆகாதா?ஏம்பா.!நான் சரியாத்தான் பேசறனா.?பாண்டே மாதிரி வந்துவிடுவேனா.?அடுத்த சண்டைய ஸ்டார்ட் பண்ணுங்க.! அந்த நண்பருடன் எனக்கு தனிப்பட்ட விரோதங்கள் கிடையாது.!

    ReplyDelete
    Replies
    1. ///மொழிபெயர்ப்புக்கு உதவியதாக கூறி நன்றி சொல்வது சட்டவிரோத காரியத்தைஊக்குவிப்பது போல் ஆகாதா?////---- சக நண்பரை இந்த வார்த்தை கொண்டு விமர்சித்ததை வன்மையாக கண்டிக்கிறேன் ......முடிந்து போன விசயத்தை மீண்டும் கிளறுவது இப்போது தேவைஅல்லவே......கார்த்தி உங்களுக்கு அபரிமிதமான திறமை இருந்தால் ஒரு கதையை விமர்சியுங்கள்....அதைவிடுத்து இந்த மாதிரி வேலையை ஏன் செய்கிறீர்கள் ....இந்த விசயத்தில் பார்க்க வேண்டியது நண்பரின் காமிக்ஸ் ஆர்வம் மட்டுமே ......
      வெளிநாட்டு பொருட்களின் காப்புரிமை சட்டம் இந்தியாவில் எந்த அளவு பொருந்தும் என்ற விசய ஞானம் துளியும் இல்லாமல் இப்படி ஏன் எழுதுகிறீர்கள் ??...
      உங்கள் ஊரில் தானே இனிமையான விழா நடந்தது ......அதன் நிறைவை யாரும் அனுபவித்து மகிழ கூடாது என்று கங்கணம் கட்டி கொண்டீர்களா கார்த்தி ???....

      Delete
  99. சார் ...இப்பொழுது தான் நமது இம்மாத இதழ்களை புரட்டி பார்த்து அனைத்து புத்தகங்களையும் ரசித்து ரசித்து பார்த்து கொண்டு இருக்கிறேன் .சனி கிழமை கொரியர் வந்தாலும் ஈரோடு வந்து விட்டதால் அங்கேயே காத்திருந்தது நமது இதழ்கள் .இன்று அழுவலுகம் முடிந்து திரும்பியவுடன் தான் கொரியர் பார்சலை வாங்கி வந்து வீடு சேர்ந்தேன் .ஈரோட்டில் அவசரவசரமாக புரட்டி பார்க்க வேண்டாம் என்ற எண்ணத்தில் புத்தக காட்சியில் நமது மேல் கவரை ரசித்ததுடன் சரி ..உள்ளே வீட்டில் சென்று தான் பொறுமையாக ரசித்து பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கே இதழ்களை கண்டு கொள்ளாமல் இருந்தேன் ..அருமை சார் ...கொரியர் கவரை திறந்ததும் காமிக்ஸ் மழை கொட்டுவது போல காமிக்ஸ் கொட்டியது அப்படியே சந்தோசத்தை விதைத்தது ..

    அட்டை முன் பின் அனைத்தும் சிறப்பாக இருந்தாலும் ஸ்பைடரின் பின் அட்டை சொதப்பி விட்டது போல இருந்தது சார் .ஆனால் முன் அட்டை செம கலக்கல் .மாயாவி அட்டைபடம் மற்ற புது கதைகள் அட்டை படங்கள் அனைத்தும் அருமை .அதே போல நான்கு இதழ்களிலும் பில்லர் பேஜ் இருந்தது மகிழ்ச்சி அளித்தது .அடுத்த வெளீயீடு விளம்பரங்கள் அனைத்தும் பட்டையை கிளப்புகிறது .மனதில் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது .வேய்ன் ஷெல்டன் ...டெக்ஸ் ...ஜானி ...ரோஜர் ..பெளன்ஷர் ..சமர்ப் என விளம்பரங்கள் மனதை அள்ளுகிறது .இப்படி தான் ஆசைப்பட்டேன் பரணிதரா என கத்த தோன்றுகிறது .

    உள்ளே சித்திர தரங்கள் ..அச்சு .வண்ணம் அனைத்தும் ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டி பார்க்கும் பொழுது குறை ஏதும் கண்ணுக்கு புலப்பட வில்லை .

    கதைகளை நாளை படிக்க ஆரம்பிக்க வேண்டும் .பிறகு தான் பந்தயத்தில் எவை முந்துகின்றன் என பார்க்க வேண்டும் .மிக்க நன்றி சார் ...

    ReplyDelete
  100. Sir, I am eagerly waiting for pali vaangum puyal. Till now I don't read this story- once In blog I comment blue berry's THANGA KALLARAI might be the best cow boy classic in Tamil.... Immediately lot of Tex fans reply -" palivayum puyal" will be the no1 book. From that day itself I am eagerly waiting for the book... Thanx EDI for selecting my most awaiting reprint -

    ReplyDelete
  101. Friends can any one tell - palivangum puyal comprises of how many pages???

    ReplyDelete
    Replies
    1. @ kumaresan Ts

      குமரேசன் உங்களுக்காகவே....இங்கே'கிளிக்'

      Delete
  102. Hi friends & editor vijayan sir
    Simply missed erode book fair celebrations due to an unavoidable business trip. :-(
    Feeling excited about the reprint of PAZHI VAANGUM PUYAL. this is one of favourite story in TEX series.eagerly expecting in color ASAP.

    Thanks to one and all who made this comics meet - a CELEBRATION

    mayavi siva sir, ur ingae-clicks r awesome. made me feel as if i was in the celebration.great work.expecting more clicks from u.
    Cheers friends.i will be with u all during any such comics meet in the future. :)

    ReplyDelete
  103. மாயாவிஜீ இந்த தெளிவு உங்கள எங்கியோ கொண்டுபோகப்போவுது.எனக்கு உங்களின் பதிலில் திருப்தி. பெருந்தலைகளே டவுட்டை கிளியர் பண்ணுங்க!பரணிஜீ உங்களின் பதிலில் ஒருவிசயம் பிடித்திருந்தது.சமூகத்திற்கு நன்மை ததரும் விசயத்தை இனி கடுமையாக விமர்சனம் செய்வதை தவிர்க்கிறேன்.!புத்தக கண்காட்சிபற்றிய கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிறேன்.ஏழு குறைகளை கடுமையாக எழுதியிருந்தேன்.அதை மாற்றி நாசூக்காக எழுத வைத்து விட்டீர்கள்.அரங்கின் முன் வைக்கப்பட்ட பெட்டியிலிருக்கும் நிறை,குறை கடிதங்களை படித்தபின்பே கட்டுரை முழுமை பெறும்.!அடுத்தது டெக்ஸ் விஜயராகவன்.!யாரோ எழுதிய கவிதை நான் வாங்கிய புத்தகத்தில் ஏன் இடம்பெற வேண்டும்? என்று கேட்டதை டெக்ஸ் மறந்துவிட்டால் செலக்ட்டீவ் அம்னீசியா வந்திருக்க வேண்டும்.எனக்கு இங்கு எதிரிகள் கிடையாது.!பேஸ்புக்கில் ப்ரண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்தும் அக்செப்ட் பண்ணாத போதுதான் டெக்ஸ் என்னை எதிரியாகப் பாவிப்பது எனக்கு தெரியும்.உணர்வுகளை மறைக்கத்தெரியாமல் அப்படியே கொட்டும் டெக்ஸை எனக்கு பிடிக்கும்.என் சிந்தனைகள் அவருக்குப் பிடிக்காது.சண்டைகள் போட்டாலும் நேரில் பேசிக்கொள்ளும் அசாதாரண உறவுக்கு இருவரும் சொந்தக்காரர்கள்.இந்த கமெண்டை போட்டுவிட்டு பேஸ்புக்கில் ரிக்வெஸ்ட் அனுப்புவேன்.அக்செப்ட் பண்ணுங்க பார்ப்போம்.!இங்கு லோடுமோர் பிரச்சனை இருப்பதால் இதே ஸ்டேட்டஸை போட்டு கமெண்டி விளையாடுவோம்.இல்லை வாட்ஸ்அப்பிற்கு வாருங்கள்.பேசுவோம்.என் எண்கள் 9092470450,எதிரிகளைநண்பனாக்கும் வித்தை இதுவே.இதுவொரு நல்ல வித்தைதானே.!

    ReplyDelete
  104. மாயாவிஜீ இந்த தெளிவு உங்கள எங்கியோ கொண்டுபோகப்போவுது.எனக்கு உங்களின் பதிலில் திருப்தி. பெருந்தலைகளே டவுட்டை கிளியர் பண்ணுங்க!பரணிஜீ உங்களின் பதிலில் ஒருவிசயம் பிடித்திருந்தது.சமூகத்திற்கு நன்மை ததரும் விசயத்தை இனி கடுமையாக விமர்சனம் செய்வதை தவிர்க்கிறேன்.!புத்தக கண்காட்சிபற்றிய கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிறேன்.ஏழு குறைகளை கடுமையாக எழுதியிருந்தேன்.அதை மாற்றி நாசூக்காக எழுத வைத்து விட்டீர்கள்.அரங்கின் முன் வைக்கப்பட்ட பெட்டியிலிருக்கும் நிறை,குறை கடிதங்களை படித்தபின்பே கட்டுரை முழுமை பெறும்.!அடுத்தது டெக்ஸ் விஜயராகவன்.!யாரோ எழுதிய கவிதை நான் வாங்கிய புத்தகத்தில் ஏன் இடம்பெற வேண்டும்? என்று கேட்டதை டெக்ஸ் மறந்துவிட்டால் செலக்ட்டீவ் அம்னீசியா வந்திருக்க வேண்டும்.எனக்கு இங்கு எதிரிகள் கிடையாது.!பேஸ்புக்கில் ப்ரண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்தும் அக்செப்ட் பண்ணாத போதுதான் டெக்ஸ் என்னை எதிரியாகப் பாவிப்பது எனக்கு தெரியும்.உணர்வுகளை மறைக்கத்தெரியாமல் அப்படியே கொட்டும் டெக்ஸை எனக்கு பிடிக்கும்.என் சிந்தனைகள் அவருக்குப் பிடிக்காது.சண்டைகள் போட்டாலும் நேரில் பேசிக்கொள்ளும் அசாதாரண உறவுக்கு இருவரும் சொந்தக்காரர்கள்.இந்த கமெண்டை போட்டுவிட்டு பேஸ்புக்கில் ரிக்வெஸ்ட் அனுப்புவேன்.அக்செப்ட் பண்ணுங்க பார்ப்போம்.!இங்கு லோடுமோர் பிரச்சனை இருப்பதால் இதே ஸ்டேட்டஸை போட்டு கமெண்டி விளையாடுவோம்.இல்லை வாட்ஸ்அப்பிற்கு வாருங்கள்.பேசுவோம்.என் எண்கள் 9092470450,எதிரிகளைநண்பனாக்கும் வித்தை இதுவே.இதுவொரு நல்ல வித்தைதானே.!

    ReplyDelete
    Replies
    1. நான் பேஸ்புக்கில் தனியாக நண்பர்களிடம் உரையாடுவதில்லை கார்த்தி ....உங்களதும் சேர்த்து 52ரிக்வெஸ்ட்கள் உள்ளன...சாரி....பேஸ்புக் குரூப்களில் மட்டுமே அவ்வப்போது ஆக்டிவ் ,பெரும்பாலும் மெளன பார்வையாளன் .....
      கவிதை விசயம் நான் மறக்க வில்லை ......நான் இப்போதும் அதையே சொல்கிறேன் .....கவிதை எனக்கு எப்போதும் பிடிக்காது ...அது எனக்கு வேப்பங்காய்....கவிதை பிரியர்கள் மன்னிக்கவும்.....அதனாலேயே அதை எதிர்த்தேன் ....இன்று நீங்கள் போட்டுள்ளது அந்த நண்பர் மனதை நோகடிக்கும் விசயம் ....அது நிச்சயமாக தவறு .....அந்த கமெண்டை விலக்கி கொண்டீர்கள் என்றால் சந்தாசம் கார்த்தி ......இன்று நண்பர் அருண் மேலே ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளது போல நானும் அனைத்தும் தாண்டி செல்லவே பிரியப்படுகிறேன் கார்த்தி ....ஆனால் இதை போன்ற விசயங்கள் இங்கே பதிவு செய்யப்படும் போது அதை அப்படியே ஏற்று கொள்ள இயலவில்லை .....எதிர்ப்பை தெரிவிக்காவிட்டால், அவைகள் சரியென்றாகிவிடும் அல்லவா ????.... உங்களை எதிரியாக நான் நினைத்து இருந்தால் நேற்று ஸ்டாலின் ஜி வீட்டில் ஒன்றாக டிபன் சாப்பட்டு இருக்க மாட்டேன் கார்த்தி ....உங்களிடம் போர்டில் எழுதி மார்க்கரும் வாங்கி வர சொல்லி இருக்கமாட்டேன்...

      Delete
  105. லயனின் மறுபிறப்பை தொடர்ந்து சென்னை,ஈரோடு புத்தகத் திருவிழாக்கள் லயன்-முத்து காமிக்ஸ் யுனிவர்ஸின் பொங்கல், தீபாவளி போல் காட்சியளிக்கின்றது.

    ஸ்பெஷல் வெளியீடுகள்,நண்பர்கள் சந்திப்புக்கள்,எடிட்டரின் அறிவிப்புக்கள் என கலந்து கொள்வோரின் உற்சாகம்,ஆர்வம் நடப்பதை அறியும் பிறரையும் தொற்றிக் கொள்கிறது என்றால் அது மிகையல்ல.

    இம்முறையும் என்ன நடந்தது என்று ஓரளவு அறிந்தாலும் இப்போது வரை யானைப் பசிக்கு சோளப்பொறி உண்டது போல் இருப்பதால் எடிட்டர் மற்றும் நண்பர்களின் விரிவான பிளாக்,FB பதிவுகளுக்காக வெயிட்டிங்கு :)

    லக்கி லிமட் நண்பர்களை கலகலப்பாக வைத்திருக்க எடுத்த கடினமுயற்சிக்கு எடிட்டர் மூலம் கிடைத்த அங்கீகாரம் மிகவும் சிறப்பாக உள்ளது.ஸ்மர்ப்களின் பொடி பாஷையை வியக்காமல் இருக்க முடிந்ததில்லை. :)

    மாயாவி சார் கிளிக்குகள் வழமை போல் அருமை :)

    ReplyDelete
  106. எனக்கு அதிக திறமையிருப்பதாக டெக்ஸ் சொல்வது பொய்.நான் எவ்வளவு பெரிய முட்டாள் என்பதை நான்மட்டுமே அறிவேன்.கதையை விமர்சனம் செய்வது ஒரு கலை.அது க நா.சுவோடு அழிந்துவிட்டது.இப்போது வருவதெல்லாம் விமர்சனமே அல்ல.நான் செய்வதையும் சேர்த்து.!

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களுக்கு என்ன தெரியுமோ அதை வைத்து தான் விமர்சனம் செய்ய இயலும் ......அதற்காக சுப்புடு மாதிரி திறமை உள்ளவர்கள் மட்டும் தான் விமர்சனம் செய்ய வேண்டும் சொல்வது நகைப்புக்குரியது......நான் எதற்காகவும் பொய் பேச வேண்டிய அவசியம் இல்லை கார்த்தி ....உங்களுக்கு அபரிமிதமான திறமை உள்ளது உண்மை ....ஆனால் நீங்கள் இங்கே அதை பயன்படுத்தும் விதம்தான் தவறு .....விளக்கு எரிக்க வேண்டிய தீயை கொண்டு வீட்டை எரித்து வருகிறீர்கள் ....அதை புரிந்து கொள்ளுங்கள் ......உங்கள் தொழில் புலனாய்வு ..என்றால் அதையும் இங்கே கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் என்னவோ ??.......ஒவ்வொருவரும் அவரவர் தொழிலையா இங்கே காண்பிக்கிறார்கள்...???...இனிமேலும் பத்திரிகையாளன் என்ற அடையாளம் இங்கே உங்களுக்கு தேவையில்லையே ......நடுநிலையான காமிக்ஸ் ரசிகனாக விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன் உங்களிடம் இருந்து .....

      Delete
  107. எடிட்டர் மற்றும் ஜூனியர் எடிட்டர் அத்தோடு காமிக் ரசிக நண்பர்கள் அத்துணை பேரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி.நன்றி.

    ReplyDelete
  108. நண்பர்களே, அவர் அவர் கருத்துகளை சொல்வதற்கே இந்த தளம், ஒருவரின் கருத்தை நம்பால் ஏற்று கொள்ள முடியாவிட்டால் அதனை தாண்டி செல்வது நலம்! கைகளில் 5 விரல்களும் ஒன்று போல் இருப்பது இல்லை. எனவே அடுத்தவர் கருத்துகளை கண்ணாடி போட்டு ஆராய்சி செய்து பதில் அளிப்பதை தவிர்த்தல் நலம்!

    ReplyDelete