Saturday, August 22, 2015

பதிவொன்று....படங்கள் மூன்று !

நண்பர்களே,

வணக்கம். எக்கச்சக்கமாய் யோசித்து, நிறைய இன்டெர்நெட் ஆராய்ச்சிகளைச் செய்து  ஏதோவொரு சிந்தனைக் கோர்வையில் அமைக்கும் இதழ்கள் மொக்கைப் பீஸ்களாய் அமைந்து போய் அந்த மாதம் முகம் நிறைய அசடை அப்பிடுவது உண்டு ! அதே நேரம் எந்தவொரு கம்பு சுத்தும் அற்புதத்தையும் நாம் நிகழ்த்தாமலே வித்தியாசமான ; அழகான கதைகள் கரம் கோர்த்துக் கொண்டு ஒரே மாதத்து slot-ல் தற்செயலாய் இடம்பிடித்து எங்கள் முகங்களை fair & lovely மாடல்களாக உருமாற்றம் செய்திடுவதும் உண்டுதான்! இம்மாதம் அது போன்றதொரு fair & lovely தருணத்திற்கு வாய்ப்பு அமைந்துள்ளது இரு முற்றிலும் தொடர்பிலா கதை பாணிகளின் மார்க்கமாக!

போன மாதமே ஆஜராகியிருக்க வேண்டிய பௌன்சரின் ரணகள கௌபாய் கதை பாணி செப்டெம்பரில் ஒரு மேஜர் attraction என்றால்   ரொம்பவே வித்தியாசமானதொரு கதைக்களத்தோடு டைலன் டாக்கும் entry ஆகிடுகிறார் இம்மாதத்தில் ! “வாராதோ ஓர் விடியலே?இந்தாண்டின் முதலும், இறுதியுமான டைலன் டாக் சாகஸம் ! சென்றாண்டு LMS-ல் அமர்க்களமாக அறிமுகமான இந்த திகில் டிடெக்டிவ்வின் தொடர்ந்த மற்ற கதைகள் அதே வரவேற்பைப் பெற்றிடவில்லை என்பதில் இரகசியமில்லை! 1986-ல் உருவாக்கப்பட்ட இந்த இத்தாலிய நாயகர் தொண்ணூறுகளின் துவக்கத்தில் ‘டெக்ஸ்‘ விற்பனையையே மிஞ்சிப் பார்த்ததொரு அதிசயப் பிறவி! ஒவ்வொரு கதையும் ஒரு புது திசையில் ஒரு புது பாணியில் இருப்பதால் இவரது ‘எது மாதிரியுமிலா‘ அந்த pattern இத்தாலிய வாசகர்களைப் பெரிதும் கவர்ந்து விட்டது போலும்! ஆனால் நம்மைப் பொறுத்தவரை இவர் மீதான தீர்ப்பு இன்னமும் வாசிக்கப்படவில்லை என்பதே யதார்த்தம்! ‘வேண்டவே வேண்டாம்!‘ என்ற ரீதியில் இல்லாது போனாலும் ஹை... டைலன் கதையா?என்ற துள்ளலும் நம்மிடையே நிலவவில்லை தானே?   ஆனால்-இம்முறை அந்தி மண்டலங்களுக்குள்ளோ ; சுடுகாட்டுக்குள்ளோ தலையை நுழைத்திடது ஒரு நெகிழ்ச்சியான முகத்தை நமக்குக் காட்டவிருக்கிறார் டைலன்! ஒற்றை வரியில் சொல்வதாயின் இதில் டைலனுக்கு வேலை என்று இருப்பதெல்லாம் புது கேர்ள்-பிரண்டின் பின்னே மும்முரமாய் சுற்றித் திரிவது மாத்திரமே! And- சமீப காலத்து வரமோ சாபமோ தெரியவில்லை; இதனிலும் பச்சக்... ‘பச்சக் சமாச்சாரங்கள் உள்ளன! காமெடி நாயகனும் உம்மா விநிநோகம் செய்கிறார் சீரியஸ் நாயகனும் அதே வேலையைத் தொடர்கிறார் இப்போதெல்லாம்! In fact – 2012-க்குப் பின்பான நமது இதழ்களில் இது வரை எத்தனை இதழ் பரிசோதனைகள் நடந்தேறியுள்ளன என்பதைக் கண்டுபிடிக்கவொரு போட்டியே வைக்கலாம் போலும்! இப்போதைக்கு இந்தக் கூத்துக்குள் தலைநுழைக்காத... சாரி... சாரி... இதழ் நுழைக்காத புண்ணியவான்கள் நமது மும்மூர்த்திகளும், திருவாளர் எட்டுக்காலாருமாகத் தானிருக்க வேண்டும்
Back on track – டைலனின் இந்தக் கதையில் நடுநாயகமாய் ஆட்சி புரிவது ஜானி என்றொரு சிறு பையன்! அவனது வாழ்க்கையினில் டைலன் நுழைவதும், தொடரும் சம்பவங்களும் நிச்சயமாய் உங்களை ஒரு வித்தியாசமான வாசிப்புக் களத்திற்குக் கொண்டு செல்லப் போவது உறுதி! சமீபத்தில் நாங்கள் பணியாற்றிய இதழ்களுள் ரொம்பவே ஈடுபாட்டோடு உழைத்தது இந்த டை.டா. சாகஸத்திற்காகத் தானிருக்கும்! ஓசையின்றி வந்தாலும் பேசப்படும் ஒரு இதழாக இது அமையின் நிச்சயம் நிறைவாக இருக்கும்! இம்முறையும் நாம் பயன்படுத்தி இருப்பது ஒரிஜினல் டிசைன்களே  - முன்னட்டையிலும், பின்னட்டையிலும் ! ஓடி வரும் அந்த நாய்களின் முகங்களில் தெரியும் அந்தப் பரபரப்பு கூட ஒரிஜினல் ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்வதைப் பாருங்களேன் ! இத்தாலிய மொழியில் மட்டுமன்றி, பிரெஞ்சில் ; ஆங்கிலத்தில், என்று சாதித்திருக்கும் இந்த சாகசம் தமிழிலும் அதே வெற்றியைப் பார்த்திடுமென்று fingers crossed !
பௌன்சரைப் பற்றி ஏகமாய்ப் பேசியும், எழுதியும் விட்டோம் என்பதால் இந்த முதல் சுற்றின் இறுதி ஆல்பங்களைப் பற்றி புதுசாய் சொல்ல என்னவிருக்க முடியும்? என்ன தான் நிதானமான கதைகளையும் ; ‘நியாயமே வெல்லும்‘ பாணியிலான நார்மல் கதைகளையும் நாம் ரசிப்பது இயல்பென்றாலும் இது போன்ற சற்றே கோக்குமாக்கான கதைகளை ஆர்வமாய் ரசிக்கும் ஒரு ரகசிய அவதார் நம்முள் பதுங்கிக் கிடப்பது பௌன்சரின் புண்ணியத்தில் வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது! கிட்டத்தட்ட ஏகோபித்த ஆதரவு என்பதால் பௌன்சரின் இரண்டாம் சுற்றிலுள்ள 2 கதைகளையும் வாங்கிட முயற்சிகளைத் தொடங்கிடுவோம்! அவை வெற்றியில் முடிந்திடும் பட்சத்தில் 2016-ன் பிற்பகுதியில் பௌன்சர் ராஜ்யம் தொடர்ந்திடும்
Moving on, இந்தாண்டின் இறுதி 3 மாதங்களில் பெரியதொரு நட்சத்திரப் பட்டாளமே தலைகாட்டக் காத்திருப்பது புலனாகிறது
சுட்டி லக்கி
சாகஸ வீரர் ரோஜர்
ரிப்போர்ட்டர் ஜானி
வேய்ன் ஷெல்டன்
தோர்கல்
டெக்ஸ் வில்லர்
கமான்சே
மாடஸ்டி
இவர்களின் கதைகள் மீதான பணிகள் 60% நிறைவாகியுள்ள நிலையில் – காத்திருக்கும் இந்த variety மீல்ஸின் சுவையை எண்ணி லயிக்காதிருக்க முடியவில்லை! ஆரம்பம் முதலே இது போல ஒரு கலக்கலான; கலர்புல்லான நாயகர் பட்டாளத்தைப் பார்த்துப் பார்த்தே பழகிப் போன நிலையில் – “குறைவான நாயகர்கள் – நிறையக் கதைகள் – சீக்கிரமாய் தொடர்களை முடித்தல்“ என்ற பார்முலாக்களின் மீது மனம் ஒட்ட மறுக்கின்றது! இந்தப் “பழமை பாணிகளை“ தோளில் சுமந்து திரியாது – இன்றைய தலைமுறையின் பிரதிநிதியாக உள்ள நமது ஜுனியர் எடிட்டருக்கு இதனில் முழு ஒப்புதல் என்று சொல்ல மாட்டேன்! ஒரு தொடரை எடுத்தால் ‘டக் டக்‘கென்று போட்டு முடிக்காமல் – வருஷங்களாய் கொண்டு செல்வதன் லாஜிக் (?!!) அவருக்குப் புரிவதில்லை! Maybe கடிவாளம் கைமாறும் காலம் புலரும் போது – பாணிகளிலும் மாற்றங்களிருக்குமென்று எதிர்பார்த்திடலாம் போலும் !

லார்கோ; ஷெல்டன்; டெக்ஸ்; லக்கி லூக்; சிக் பில் போன்ற நாயகர்களின் தொடர்களில் கதைகள் அனைத்துமே stand alone ரகமென்பதால் அவற்றை ஆண்டுக்கணக்காய் நீடிக்கும் போது கூட பெரியதொரு சிரமம் தோன்றுவதில்லை ! ஆனால் ஒரே கதையின் முடிச்சை ஒரு தொடரின் முழுமைக்கும் கொண்டு செல்லும் பாணி அமலில் உள்ள கமான்சே ; (இளம்) டைகர் போன்ற series-களில் மாத்திரமே ஜு.எ. ரசிக்கும் அந்த  ‘எடுத்தோம்-முடித்தோம்‘ பாணி ஓ.கே.வாக இருக்குமோ? என்ற எண்ணம் எனக்குள் !

இம்மாதத்து இதழ் # 3 கமான்சேவின் “சாத்வீகமாய் ஒரு சிங்கம்!“ கமான்சே தொடரின் கதைகள் எல்லாமே ஒரே கோர்வையின் தொடர்ச்சி என்றில்லா விட்டாலும் கூட, 666 பண்ணையின் பின்னணி; அங்கு தோள் சேர்ந்து நிற்கும் பணியாளர்களின் ஒற்றுமை; அவர்கள் ஒன்று சேர்ந்த flash back இத்யாதிகள் தொடர் நெடுக மெல்லியதெர்ரு கிளைச்சாலையில் பயணம் பண்ணுவதைப் புரிந்திட முடிகிறது! இவற்றை ஆண்டுக்கு 2 மட்டுமே என்ற ரீதியில் கொண்டு செல்லும் போது – எனக்கே நெருடத் தான் செய்கிறது! ஆனால் அதற்கென ஓராண்டின் அட்டவணையில் ‘6 கமான்சே‘ என்று நான் போட்டுத் தாக்கினால் உங்களது முகங்கள் போகும் போக்கினை நிச்சயமாய் ரசித்திட இயலாது என்றே நினைக்கிறேன்! என்றோ ஒரு தூரத்து நாளில் – இந்தத் தொடர் ஒரு முழுமையான hit ஆகக் கொண்டாடப்படும் பட்சத்தில் 4 ஆல்பங்கள் இணைந்ததொரு தொகுப்பாய் – 4 volume-களில் மறுபதி்ப்பு செய்திடப் பார்க்கலாம்! "சா.ஒ.சி".-க்குக் கூட ஒரிஜினல் ராப்பர் டிசைனே - சற்றே வர்ண மாற்றங்களோடு ! இறுதியில் தயாரான சித்திரம் ரொம்பவே கம்பீரமாய் இருப்பது போல் எனக்குத் தோன்றியது ! பாருங்களேன் !


இங்கே எனக்கு எழும் கேள்வி இது தான்:

ஆண்டுக்கு 2 அல்லது 3 என்று வெளியிடும் நமக்கே லேசான சிக்கலெனில் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் ஒரே ஒரு புது ஆல்பம் என்ற ரீதியில் 25 அல்லது 30 வருடங்களைத் துளியும் ஜெர்க்கின்றி படைப்பாளிகள் கடந்து செல்வது தான் எப்படி? பிரெஞ்சு ரசிகர்களால் அத்தனை பொறுமை காக்க முடிவது எவ்விதமோ?

Before I sign off, இதோ இம்மாதத்தின் இதழ் # 4-ன் ராப்பர் ! சைத்தான் துறைமுகம் வண்ணத்தில் நிஜமாகவே தூள் கிளப்புகிறது என்று தான் சொல்ல வேண்டும் ; அச்சு முடிந்த நிலையில் பக்கங்கள் ஒவ்வொன்றும் டாலடிக்கின்றன ! நண்பரின் ராப்பர் டிசைன் பற்றி தகவல் ஏதும் இல்லாது போன காரணத்தால் ஒரிஜினல்களை நாமே தயார் செய்து கொள்ளும் நெருக்கடி ! மீண்டும் ஒரிஜினல் டிசைன்கள் நமது டிசைனரின் மெருகூட்டல்களோடு ! 

அச்சு ; தயாரிப்புப் பணிகள் தொடரும் நாட்களில் முழுவீச்சில் நடைபெற்று - புது இதழ்கள் நான்கும் செப்டெம்பர் 2-ம் தேதி உங்களைத் தேடித் புறப்படும் ! அந்த வேலைகளில் என்னை மும்முரமாக்கிக் கொள்ள நான் இப்போது கிளம்புகிறேன் ....மீண்டும் சந்திப்போம் ! See you around for now folks ! Bye for now !

P.S : குட்டி updates :
  • மதுரையில் ஆகஸ்ட் 28 முதல் நடைபெறவிருக்கும் புத்தக விழாவில் நமக்கு ஸ்டால் கிட்டியுள்ளது ! நமது ஸ்டால் நம்பர் : 238 ! 
  •  நிறைய, நிறைய புதிய சூப்பர் தொடர்கள் நமக்கு எட்டும் தூரத்தில் நெருங்கிக் காத்துள்ளன ! 2016-ல் அவற்றைக் களமிறக்குவதா ? அல்லது கொஞ்சம் அடக்கி வாசித்துப் போவதா என்ற dilemma இப்போது  !!  'இப்போதைக்கு வேண்டாமே !' - என நாசூக்காய் ஒரு சில "big name" தொடர்களைக் கூட நாமே தவிர்க்கும் சூழல் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் !! 

374 comments:

  1. Replies
    1. வாழ்த்துக்கள் நண்பரே...

      Delete
    2. முத்து @ நல்வரவு! அப்படியே காமிக்ஸ் பற்றி ரெண்டு வார்த்தைகள் எழுதவும்!

      Delete
  2. Replies
    1. அலோ சார் இந்த ஒரு வார்த்தை யை தவிர வேறு டைப்ப கூடதுன்னு ஏதும் விரதமா ????

      Delete
  3. சைத்தான் துறைமுகம் அட்டை படம் அருமையாக உள்ளது ஆசிரியரே.

    ReplyDelete
  4. இரவு வணக்கம் ஆசிரியர் மற்றும் இரவு கழுகுகளே

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. டியர் எடிட்டர்,

    ஜானி ப்ரீக் ஒரு சிறந்த கதை. கருப்பு வெள்ளையில் நன்றாக இருந்தது. நம்மவர்களுக்கு பிடிக்கும் என்றே தோன்றுகிறது.

    கார்டூன் ஸ்பெஷல் விஞ்ஞானி தாத்தா கதையை இரண்டாம் முறை படித்தேன் - humor அபாரம். So was it with Clifton. All in all, கார்ட்டூன் ஸ்பெஷல் ஒரு நல்ல முயற்சி - மீண்டும் முயற்சிக்கலாம் - may be in January 2016 for Chennai Fair ??

    மறுபடியும் அச்சுப் பிழைகள் (எழுத்துப் பிழைகள்) தலை தூக்குகின்றன. கவனம் தேவை ப்ளீஸ். இல்லேன்னா சின்ன பசங்க ஸ்டிக்கர் புக் மாதிரி ஆகிடப் போவுது :-) :-)

    Comic Lover

    ReplyDelete
  7. தோட்டம் கட்டாமல் வந்துள்ள கேப்டன் ப்ரின்ஸ் அட்டை (without the Border design) நன்றாகவே உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. +1
      தோட்டம் கட்டாமல் பிற பின்னட்தைகளும் வந்திருக்கலாம்

      Delete
    2. +1
      தோட்டம் கட்டாமல் பிற பின்னட்தைகளும் வந்திருக்கலாம்

      Delete
    3. +1
      தோட்டம் கட்டாமல் பிற பின்னட்தைகளும் வந்திருக்கலாம் சார்

      Delete
  8. க்ளாசிக் கார்ட்டூன் கலெக்ஷன் ஸ்பெஷல்: எனது பார்வையில்…..

    முதலில் சில சரி செய்யப்படவேண்டிய விஷயங்கள் (இவற்றை சரி செய்யாவிட்டாலும் காமிக்ஸ் தொடர்ந்து வரும், நாமும் படிப்போம் தான். ஆனால், சரி செய்தால், நம்முடன் சேர்ந்து இன்னமும் சில பேர் அதிகமாக படிப்பார்கள்).

    பாக்ஸ் செட் என்ற பாணி அறிமுகமானது நல்ல விஷயம். ஆனால் அவை வடிவமைக்கப்பட்ட விதம் தான் எனக்கு உறுத்தியது. அவற்றில் எனக்கு மூன்று விஷயங்கள் உறுத்தியது.
    1. பாக்ஸ் செட்டின் ஆக்கமும், வடிவமைப்பும் பட்டாசு பார்சலைப்போலவே இருந்தது. காமிக்ஸ் புத்தக பெட்டி போல தெரியவே இல்லை (நம்ம சிவகாசி ஊர் ஸ்பெஷாலிடி என்று ஏதாவது Tribute செய்வதாக இருந்தால், வேறு விஷயத்தில் செய்யுங்கள் சார், இதில் வேண்டாம்).
    2. பாக்ஸ் செட்டின் அட்டையில் இருக்கும் 350 என்ற எண் வடிவமைக்கப்பட்ட விதம் அது 50 என்பதை உரக்க கூறியது. ஆனால், 350 என்பதை தெரிந்துக்கொள்ள நிறைய நேரம் ஆனது.
    3. இந்த க்ளாசிக் கார்ட்டூன் கலெக்ஷன் ஸ்பெஷல் இதழுக்கு பெயர் சூட்டும் போட்டியை (?!?!?!) நீங்கள் இங்கே ப்ளாக்கில் அறிவிட்த்ஹ போது, அந்தப்பெயரை பரிந்துரைத்தவர் மேச்சேரி ரவி கண்ணன் அவர்கள் (என்று நினைக்கிறேன்). அவரது பெயரை எங்கேயேணும் குறிப்பிட்டு இருக்கலாம். ஒருவேளை வேலைச்சுமையால் மறந்து இருந்தால், அடுத்து வரும் இதழில் இதனை சொல்வீர்கள் (3ன்று நம்புகிறேன்).

    இனிமேல் கதைகளுக்கு வருவோம்.

    1. சிக் பில் கதையான மாறிப்போன மாப்பிள்ளையை எனது நண்பருக்கு பரிசளித்து இருந்தேன். அவருக்கு இந்த கதையை விவரிப்பதற்குள் எனக்கு நாக்கு தள்ளி விட்டது. May be, பின்னட்டையில் சிக் பில் யார், ஷெரிப் யார் என்பதை விளக்கி இருந்தால், புதியவர்களுக்கு உதவியாக இருக்கும். நண்பர் கேட்ட முதல் கேள்வி, கதை எங்கே நடக்கிறது? என்பதை என்னைப்போன்ற புதியவர்கள் எப்படி புரிந்துக் கொள்வது? ஷெரிப் என்றால் யார்? அல்லது என்ன? (7 நாட்களில் எமலோகம் போல பின்னட்டையில் சிறு குறிப்பு அளித்திருக்கலாம்).

    2. அதே சமயம், நமது காமிக்ஸை படிப்பவர்கள் 80 சதவீதம் பேர் பழைய ஆட்களே என்பதால், அவர்களுக்கு இது உறுத்தலாக இருக்கலாம். ஆனால், புதிய வாசகர்களை நாடிச்செல்லும் இவ்வேளையில், இது போன்ற விஷயங்களை நாம் கருத்தில் எடுத்துக் கொள்ளலாமே?


    3. இதழின் எடிட்டோரியலின் பின்னணியில் நீங்கள் 350 என்ற எண்ணை பெரிய சைசில் போட்டு இருப்பது, அந்த பக்கங்களை படிக்கையில் மிகவும் உறுத்தியதோடில்லாமல், இடைஞ்சலாகவும் இருந்தது. For a change, அடுத்து வரப்போகும் ஏதாவது ஒரு இதழின் ஹாட் லைனை / காமிக்ஸ் டைமை இது போன்ற பின்னணி வேலைப்பாடுகள் இல்லாமல் கொடுத்துப் பாருங்களேன்?

    4. ஸ்மர்ஃப் மற்றும் தாத்தா லியானார்டோவின் கதைகள் இரண்டுமே பொடியர்களுக்கு படிக்க, கதை சொல்ல அருமையாக இருந்த்து. ஆகையால், இந்த பேக்கேஜில் சிக் பில் கதை தேவையா? என்ற ஒரு சந்தேகமும் எழுந்த்து. ஆனால், வைப்பது ஒரே ஒரு சாம்பார் தான். அதில் மேலா எடுத்தால், ரசம். நடுவில் எடுத்தால் சாம்பார். கீழே எடுத்தால், கூட்டு என்ற நிலைப்பாடில் அனைவரையும் மகிழ்விக்க நீங்கள் செய்யும் முயற்சி என்பது புரிகிறது. இருந்தாலும், இவை தனியே பொடியர்களுக்கு என்றே வந்திருக்கலாம்.

    சிக் பில் கதையைப் பற்றி…

    கதை மிகவும் வேகமாக பயணித்தது. ஆனால், உறுதியாக இது பழைய சிக் பில் standardஇல் இல்லை என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள். அதே சமயம், சமீப இதழ்களில் இதுவே நல்ல சிக்பில் கதை என்ற அளவிற்கு இது இருந்தது. சமீபத்தில் பார்த்த ஐ படத்தின் கதையை ஒத்தே இது இருந்ததால், ஒரு கூடுதல் ஈர்ப்பும் இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. கர்னல் க்ளிப்டன் ஏழு நாட்களில் எமலோகம்:

      முதலில் சில உறுத்திய விஷயங்கள்:

      மிகவும், சாதாரணமான அடைப்படம். ஏகப்பட்ட சிகப்பு நிறம் மிகவும் உறுத்தியது. அதனால் தான் இதனை ஸ்மர்ப்ஸ் மற்றும் லியானார்டோவுடன் சேர்த்திருக்க வேண்டாம். மனோதத்துவ நிப்ய்ணர்கள் கூறுவது என்ன என்றால், சிவப்பு நிறம், அது சார்ந்தவற்றை சிறுவயதில் குழந்தைகளுக்கு அதிகமாக expose செய்யக்கூடாது என்பதே. (அதனால் தான் ஸ்மர்ப்ஃஸ் டிசைனை நீங்கள் ஒரு லோகோ டிசைன் செய்யும் நிறுவனத்திடம் ஆர்டர் செய்து, வாங்கியது என்னை உறுத்துகிறது. தவறான வண்ணக்கலவை).

      கதை இரண்டு தளங்களுக்கு இடையில் பேலன்ஸ் செய்தது போல இருக்கிறது (த்ரில்லர் + காமெடி). முடிவு? இது த்ரில்லராகவும் இல்லை, காமெடியாகவும் இல்லை. 12ஆம் பக்கத்தில் இருப்பது போல பல இடங்களில் வண்ணக்கோர்வை கண்ணை உறுத்தியது. Sharpness missing.

      ஆனால், கதை படிக்க விறுவிறுப்பாகச் சென்றது என்பதை மறுக்கவே முடியாது.

      நடு நடுவில் (மொக்கை கதையை) மெறுகேற்றியது சில பல வசனங்கள். அதற்காகவே உங்களுக்கு ஒரு பாராட்டு.

      இந்தக் கதை நிச்சயமாக காமெடி கர்னல் அள்விற்கு இல்லையென்றாலும், கண்டிப்பாக அடுத்த கதையை எதிர்நோக்க வைத்துவிட்டார் கப் கேக் கர்னல்.

      Delete
    2. //பாக்ஸ் செட்டின் ஆக்கமும், வடிவமைப்பும் பட்டாசு பார்சலைப்போலவே இருந்தது.//

      me too felt same about Perl yellow box!

      Delete
    3. Arun SowmyaNarayan :

      தங்களின் தொடர் விமர்சனங்ளை, இங்குப் பதிவிடும் தங்களின் பின்னூட்டங்கள் வாயிலாக மிகுந்த ஆர்வத்துடன் படித்து வரும் நான், உங்கள் விமர்சனப் பதிவுகளுக்கான ரசிகனாகவே மாறி விட்டேன் :-)

      ஏற்கனவே கார்த்திக் சோமலிங்கா, ரஃபிக் ராஜா, கிங் விஸ்வா, லூfoலூபை, ரமேஷ் குமார், காமிக்லவர் ராகவன், விஸ்கி-சுஸ்கி etc., ஆகியவர்கள் இங்கு எழுதும் விமர்சனப் பதிவுகளுக்கு மஹா ரசிகன் நான். தற்போது தங்களின் பதிவுகளைப் படிக்கும் போது அவர்களையும் மிஞ்சி விடுவீர்களோ என்ற ஐயம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை :-)) தொடர்ந்து பதிவிடுங்கள் :)

      Delete
    4. சூப்பர் அருண் சார் ....தொடருங்கள் தொடர்கிறோம்

      Delete
  9. இரவு வணக்கம் நண்பர்களே. வாழ்க்கையில் முதல் முறையாக முதலாவதாக வந்திருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. வரவு நல்வரவு ஆகட்டும்!

      Delete
    2. @ Alan muthu @Manoj

      உங்களை இந்த காமிக்ஸ் உலக வலைதளத்திற்கு வருக..வருக..அனைவரின் சார்பாக வரவேற்கிறேன் நண்பர்களே..!

      Delete
  10. பிரின்ஸ் கதை அட்டை படம் சூப்பர் சார்

    ReplyDelete
  11. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  12. நம்முடைய மறுபதிப்புகள் எல்லாம் கடந்த கால ஞாபகங்களை மீண்டும் வரவழைப்பதை தவிர்க்க முடியவில்லை இப்போது தேவை படுவது ஒரு டைம் மெஷின் தான் ஆசிரியரே கிடைக்குமா !!!!

    ReplyDelete
  13. பிரின்ஸ் அட்டை படம் சூப்பர்.... டைலானின் இந்த கதை உண்மையிலேயே சூப்பர் தான்...
    பௌன்சர் எக்கசக்க எதிர் பார்ப்புடன் உள்ளேன்....

    ReplyDelete
  14. வணக்கம் எடி சார் அண்ட் பிரண்ட்ஸ்

    ReplyDelete
  15. விஜயன் சார், அடுத்த வருடம் மறுபதிப்பில் நமது மும்மூர்த்திகளுக்கு ஒரு பிரேக் கொடுத்து விட்டு (அல்லது இவர்களில் கதை 6 மட்டும் மேலும்) மற்ற சில பழைய கதை நாயகர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்! முடிந்தால் மினி/ஜூனியர் லயன் காமிக்ஸில் வந்த சிறந்த கதைகளை மறுபதிப்பு செய்யலாம்.

    ReplyDelete
    Replies
    1. @ பரணி சார் சூப்பர் ஐடியா.!அப்படியே மாடஸ்டி கதைகளையும் சேர்த்துக்கொண்டால் இன்னும் அட்டகாசமாய் இருக்கும்.!

      Delete
    2. சூப்பர் ஐடியா பாலா சார்...

      Delete
    3. நமது வாசகர் வட்டம் விரிவடைந்தால் நமது ஆசிரியர் கண்டிப்பாக மறுபதிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

      Delete
    4. 52மும்மூர்த்திகள் இதழ்கள் ஒரு செட்டாக வாங்கி இருப்பதால் அவற்றை முதலில் வெளியிட்ட பிறகே மற்றவைகள் என பலமுறை ஆசிரியர் தெளிவு படுத்திய பின்பும்....மனம் தளரா விக்ரமாதித்யன் மாதிரி மற்ற கதைகளை கேட்கும் நண்பரே...பரணி,, உங்களுடன் நானும் கரம் கோர்க்கின்றேன்.....

      Delete
    5. சேலம் Tex விஜயராகவன் @

      // பலமுறை ஆசிரியர் தெளிவு படுத்திய பின்பும் // இதனை மறந்து விட்டேன். முடிந்தால் முயற்சிக்கவும்.

      Delete
    6. நிச்சயமாக முயற்சி திருவினையாக்கும் ......பால் போட்டு கொண்டே இருப்போம் ....விக்கெட் எப்பவாச்சும் விழும் தானே...

      Delete
  16. நிறைய, நிறைய புதிய சூப்பர் தொடர்கள் நமக்கு எட்டும் தூரத்தில் நெருங்கிக் காத்துள்ளன ! 2016-ல் அவற்றைக் களமிறக்குவதா ? அல்லது கொஞ்சம் அடக்கி வாசித்துப் போவதா என்ற dilemma இப்போது !! 'இப்போதைக்கு வேண்டாமே !' - என நாசூக்காய் ஒரு சில "big name" தொடர்களைக் கூட நாமே தவிர்க்கும் சூழல் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் !!

    கால் கட்டை விரலை தரையிலிருந்து இடம்பெயர்ப்பது என்பது ஒன்றும் வித்தியாசமான காட்சி இல்லையே .... நம்மை பொறுத்த மட்டிலும்.....

    ReplyDelete
  17. மூன்று அட்டைப்படங்களுமே 'வாவ்' சொல்ல வைக்கின்றன! பின் பக்கங்களில் எதை பற்றியும் எந்த விதமான சித்தரிப்புமில்லாமல் எளிமையாகவுள்ளதேனோ...? அடுத்த வாரப் பதிவுக்கு எதையும் பாக்கி வைக்காமல் இந்த ஒரே பதிவில் மூன்று படங்களையும் போட்டு தாக்கிவிட்டீர்களே...! அப்போ, அடுத்த பதிவு ஏதாவது சம்திங் ஸ்பெஷல் ?

    ReplyDelete
  18. Sir information about new comic heroes will be a good option for coming year (2016). Please introduce some more heroes.

    This months (August 2015) boss received 3 days back. Awesome reading experience. Hats off. Colonel Clipton, smurfs and Leonardo had a very good and colourful beginning. Surely they will rule our heart including kids.😀😀👧

    ReplyDelete
  19. Also the classical hero's done a decent job. The first book I read this month is the great STEEL CLAW and SPIDER.

    ReplyDelete
  20. Chick Bill is the last but not least. Love that Artin's England king family dialogues. Simply superb

    ReplyDelete
  21. விஜயன் சார், 2016 புதிய கதைகள் தேர்வு செய்யும் போது "மிக" சிறந்த கதைகளை மட்டும் வெளி இடவும்; கடந்த நான்கு வருடம்களில் நமது வாசகர்களின் ரசனை உங்களுக்கு ஓரளவு பிடிபட்டு இருக்கும் என்பதால் இந்த வேண்டுகோள். அதே நேரம் நமது தற்போதைய (ஹிட்) நாயகர்களின் சிறந்த கதைகள் அதிகம் வருமாறும் பார்த்துக்கொள்ளவும்.

    என்னை பொறுத்தவரை நமது பௌன்சர் கதைகளுக்கு அடுத்தவருடம் மட்டும் பிரேக் கொடுத்துவிட்டு அந்த இடத்தில் புதிய நாயகர்கள் கதைகளை முயற்சி செய்யலாம்!

    ReplyDelete
    Replies
    1. ஆம் சார் ...அந்தரத்தில் தொங்கும் பெளன்சர் 2ம் சுற்று முடிந்து பிறகு நாமும் போடலாமே ......அதிலேயும் ஏதாவது ஒரு கட்டப்பா கத்தி குத்தி இருந்து .....அதற்கான விடை தெரியாமல் மண்டை உடைய வேணாமே சார் .....

      Delete
    2. //அதிலேயும் ஏதாவது ஒரு கட்டப்பா கத்தி குத்தி இருந்து ....//
      இரண்ட்டம் சுற்று - இரண்டு ஆல்பம் (8&9)-ஒரே கதை. கதை அதிரடி...

      Delete
  22. இவ்வருடம் ஜூ எ அறிமுகபடுத்திய ஒரு புது வரவு ஒன்றை சிறிது காலமுன்று ஒரு பதிவில் கூறிய கதை இவ்வருLம் வருகிறதா சார். ஒரு பாலத்தில் ஒரு விபத்து ஹீரோ காரில் வந்து இறங்கி ஷாட் கன் கையில் வைத்து சுடுவது போல ஆக்சன் காமிப்பாரே.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கிருஷ்ணா! தொடர்ந்து பதிவிடுங்கள்!

      Delete
    2. பணி நிமித்தம் யுனைட்டட் கிங்டம் சென்றுள்ள நண்பர் கிருஷ்ணா , அவரது ப்ராஜெக்ட்ல சிறப்பாக வெற்றி ஈட்டி வர அனைத்து டெக்ஸ் ரசிகர்கள் சார்பாகவும் வாழ்த்துகிறேன் .....

      Delete
    3. கண்டிப்பாக முயற்சிசெய்கிறேன் சார்.

      நன்றிகள் விஜய் சார்.

      Delete
  23. புதிய நாயகர்களை வரவேற்கிறேன்

    ReplyDelete
  24. புதிய நாயகர்களை வரவேற்கிறேன்

    ReplyDelete
  25. சாத்விகமாக ஓர் சிங்கம் அட்டைபடம் ஒரிஜினல் விட நம் வண்ணசேர்கை கவர்கிறது. CCC பொறுத்தவரையில் என்னை கவர்ந்தவர்கள் தாத்தா லியானார்டோவும், கிளிப்டனும் 3வது இடத்தில் சிக்க்பில் கூட்டணி . Smurfவை பொறுத்தவரை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

    ReplyDelete
  26. எடிட்டர் & நண்பர்கள் இது என் முதல் பதிவு தங்களின் ரிபிரிண்ட் முயர்ச்சியால் பல பழைய கதை படிக்க முடிந்தது நன்றி -மான்டிரேக் கதை ரிபிரிண்ட் செய்யும் வாய்ப்பு உள்ளதா? மான்டிரேக் கதைக்களின் ரசிகன் நான் தமிழில் அவ்வளவாக படித்ததில்லை நான் தமிழில படித்த ஒரே மான்டிரேக் கதை காற்றில் கறைந்த பாலர்கள் மட்டூமே My Favorite Hero's Tex, Blueberry (Tiger),Martin, Madasthi, Magic wind, Mandreak, Dylon, Mayavi, largo......etc நான் சரியாக தமிழ் படிக்க கற்றுகொண்டதே காமிக்ஸ்ல் இருந்துதான் கடந்த ஒரு வருடமாய் தான் நமது காமிக்ஸ் வெளிவிருதரிந்து வாங்கிகொண்டிருக்கிரேன் இரத்தபடலம் ரிபிரிண்ட்க்கு பதிலாக பழைய டெக்ஸ்யை முயற்சிக்கலாமே மேஜிக் விண்ட் எனக்கு இது போன்ற பேண்டசி + கௌபாய் கதைகள் மிகவும் பிடிக்கும் ஆனால் இது கருப்பு வெள்ளையில் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் தனிபட்ட கருத்து
    @MV sir நானும் இளவரசியின் ரசிகன் தான் அவர் அளவுக்கு நடிகைகள் கூட என்னை கவர்ந்ததில்லை. என் பெயர் டைகர் கண்டிபாக வெளியிடவும். டைலன் கதைகள் என்னை பொறுத்தவரை I always warmly. Welcomed him +1

    ReplyDelete
    Replies
    1. மனோஜ் சார்.!வாங்க!வாங்க.!உங்கள் முதல் வருகையே தூள் பறக்குதே.!உங்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன்.!

      Delete
    2. மானோஜ் சார்.! மாடஸ்டியின் ரசிகரும் மௌன பார்வையாளருமான நீங்கள் இன்று களம் இறங்கியது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது.இதைப்போலவே மற்ற மாடஸ்டி ரசிகர்களும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ள இங்கு வரவேண்டும்.இல்லையேல் ஊமை கண்ட கனவுபோல் பயன் இல்லாமல் போய்விடும்.! "அழத பிள்ளை பால் குடிக்கும்" என்பதே இங்கு நியதி.! நான் இங்கு வரும் நோக்கமும் இதுவே.!

      Delete
    3. Manoj, Warm welcome! please do write regularly.

      Delete
  27. இப்போதைக்கு வேண்டாம் என்றும் சொல்லும் அந்த big name யாராக இருக்கும் ம் ம் ? நண்பர்களே any guess ?

    ReplyDelete
    Replies
    1. யாராவது குதிரையில் போய் ....துப்பாக்கி சுட்டா போதும் ..அரிசோனாவில் போகும் யாரா இருந்தாலும் ஓகே...

      Delete
    2. //அந்த big name யாராக இருக்கும் ம் ம் ? // சிம்பிள் விடை: batman

      Delete
    3. பேட்மேன்.?ஓ...........நிறையபேர் காதில் புகை வருவது நிச்சயம்.எனக்கு இவர் கதைகள் மனசில் ஒட்ட வில்லை.அதனால் அவர் வந்த என்ன?வராட்டி எனக்கென்ன?.எங்கள் தங்கத்தலைவி இந்த லிஸ்டில் இல்லாமல் இருந்தால் அது போதும்.!எடிட்டர் மனதில் இருக்கும் 2016 ப்ளுபிரிண்ட் லிஸ்ட்ல தங்க தலைவி வந்த போதும்.!

      Delete
    4. @ FRIENDS : பேட்மேன் big name அல்ல - HUGE HUGE NAME !! 'பிறகு பார்த்துக் கொள்ளலாம் !' என அவரை ஓரம் கட்டிட நாம் மட்டுமல்ல ; உலகின் எந்தவொரு பதிப்பகமும் தயாராக இராது என்பது சர்வ நிச்சயம் !

      Delete
  28. comanche அட்டைப்படம் ஒரிஜினலைவிட அருமையாக வந்துள்ளது

    ReplyDelete
  29. ஆசிரியர் மற்றும் நண்பா்களுக்கு காலை வணக்கம்...

    ReplyDelete
  30. //அல்லது கொஞ்சம் அடக்கி வாசித்துப் போவதா என்ற dilemma இப்போது !! 'இப்போதைக்கு வேண்டாமே !' - என நாசூக்காய் ஒரு சில "big name" தொடர்களைக் கூட நாமே தவிர்க்கும் சூழல் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் !! //

    :) சில NAMEகளை பகிரலாமே எடிட் சார் ?

    ReplyDelete
    Replies
    1. Satishkumar S : வரவுகளை சிலாகிக்கலாம் ; ஓரம் கட்டுவதை ஓசையின்றி வைத்து விடுவோம் !

      Delete
    2. "big name" என்பதால் அறிந்து கொள்ள ஆவலால் அந்த கேள்வி எடிட். புரிகிறது Edit sir

      Delete
  31. எடிட்டர் சார்.!சூப்பர் டூப்பர் கதைகளாக இருந்தாலும்.,தொடர் என்றால் வேண்டவே வேண்டாம்.தொடரும் என்ற வார்த்தையை பார்த்தவுடன்.,ஊட்டியில் இரவில் தூங்கும்போது பச்சைத்தண்ணீரை தலையில் ஊற்றியது போல் உணர்வு ஏற்படுகிறது.!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார் ...தொடர்னா பெளன்சர் மாதிரி ஒரே வருடத்தில் முடிவதாக இருந்தால் ....வெல்கம் வித் வணக்கம்

      Delete
  32. அட்டகாசமான அட்டைப்படங்கள்..
    சமீபத்தியவைகளில் இதைப்போல் பார்த்ததில்லை....
    ஸ்பெஷல் வெளியீடுகளில் வரவேண்டியவை இவை...

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து 5நிமிடங்கள் விசில் அடித்து காதை பிளக்கும் படங்கள் பத்து

      Delete
    2. AHMEDBASHA TK : ஒரிஜினல்கள் வீரியமாய் அமைந்திடும் போது end result அற்புதமாய் அமைந்து விடுகின்றன !

      Delete
  33. எடிட்டர் சார்.!புது கதாநாயகர் மற்றும் தொடர்கள் மொத்தத்தில் 25% மேல் செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..!அது என்னைப்போன்ற "அரைத்த மாவை அரைப்போமா?,துவைத்த துணியை துவைப்போமா.?என்ற கொள்கை உடையவர்களுக்கு கொஞ்சம் நன்றாக இருக்கும்.!

    ReplyDelete
    Replies
    1. Madipakkam Venkateswaran : MV சார் - ஹை-கோர்ட்டில் எப்போதிலிருந்து கிரைண்டரைப் போட்டார்கள் ?!!

      Delete
  34. சார் ..அட்டை படங்கள் அனைத்துமே இம்முறை அட்டகாச படுத்துகிறது ....பாராட்டுகள் ...டைலன் (பாதி ..) ..பெளன்சர் ...கமான்சே ...பிரின்ஸ் என நான்குமே என் மனதை கவர்ந்த ஹீரோக்கள் ..வரும் மாதம் அட்டகாச காமிக்ஸ் மாதமாக அமைய போகிறது ...என்பது உண்மை ...

    **********

    இனி வரும் மாதங்களில் வரும் ஹீரோக்களின் லிஸ்டில் சுட்டி லக்கி ...தோர்கல் தவிர மற்றவர்களை மிக ஆவலுடன் வரவேற்க காத்திருக்கிறேன் ..:)

    ReplyDelete
  35. அல்லது கொஞ்சம் அடக்கி வாசித்துப் போவதா என்ற dilemma இப்போது !! 'இப்போதைக்கு வேண்டாமே !' - என நாசூக்காய் ஒரு சில "big name" தொடர்களைக் கூட நாமே தவிர்க்கும் சூழல் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் !! //
    எடிட்டர் சார் காலை வணக்கங்கள்
    காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை எனவே நல்ல தொடர்களை தள்ளிப்போடாமல் இயன்ற வரை விரைவாக வெளியிட்டு எங்களின் யானபை்பசிக்கு சோளப்பொரி போடவும் நன்றி

    ReplyDelete
  36. சா.ஒ.சி சை.து அட்டை படங்கள் கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போல் மிக அருமையாக உள்ளது

    ReplyDelete
  37. கைக்கு எட்டும் தூரத்தில் உள்ள புது ஹீரோக்கள் யார் யார் என்று சொன்னால் வரும் வருடமே இடலாமா ..இல்லை தள்ளி வைக்கலாமா என நண்பர்கள் முடிவு செய்வார்களே சார் ..என்னை பொறுத்த வரை அந்த நாயகர்கள் நாம் ஏற்கனவே நமது இதழ்களில் அலங்கரித்து இருந்தால் கண்டிப்பாக ஹிட் நாயகர்களாக தான் இருப்பார்கள் .அப்படி இருந்தால் கண்டிப்பாக இவ்வருடமே அவர்களை தலை காட்ட வையுங்கள் ...:)

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : புது வரவுகள் தலை மட்டும் காட்ட நேரிடுவது தான் சிக்கலே தலீவரே !!

      Delete
  38. இந்தத் தொடர் ஒரு முழுமையான hit ஆகக் கொண்டாடப்படும் பட்சத்தில் 4 ஆல்பங்கள் இணைந்ததொரு தொகுப்பாய் – 4 volume-களில் மறுபதி்ப்பு செய்திடப் பார்க்கலாம்!


    ###$$$######

    வேண்டாம் சார் இந்த கொலை வெறி ...:(

    ReplyDelete
    Replies
    1. why this kolaveri Edit sir............. it will be better if you give at least one 3 in one album chance for Comanche in 2016 schedule edit sir

      Delete
    2. பரணி! காலை வணக்கங்கள்! நாயகனின் அழகு வடியும் முகத்தைக் கண்டு மிரண்டு போய் விட்டீர்கள் போல? அட அந்த கமான்சே புள்ளைக்காகவாவது நீங்கள் இதனை ஆமோதித்தே ஆகணும்! ஹி ஹி

      Delete
    3. முதலில் நண்பர்கள் கேட்கும் மினிலயன் , டெக்ஸ் மற்றும் இரத்த படலம் மறுபதிப்புகளை போட வழி பாருங்கள் சார் .......கமான்சே ஒரு பதிப்பே போதும் .....

      Delete
  39. எடிட்டருக்கும், நண்பர்களுக்கும் உற்சாகமான ஞாயிறு காலை வணக்கங்கள்!

    மூன்று அட்டைப் படங்களுமே அசத்தலாக அமைந்திருக்கின்றன. டைலனின் அட்டைப் படத்தில், பற்றி எரியும் அந்தப் பங்களா பின்னணியில் பிரம்மாண்டமாய் மிரட்ட; டைலன் சிறுவனைத் தூக்கிக்கொண்டு நாய்களுடன் ஓடுவது... அடடா அடடா...பார்க்கும் யாரையும் வாங்கிப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிடும்! அந்திமண்டலத்திற்குப் பிறகு அவ்வளவாய் சோபிக்காத டைலன் இக்கதையிலாவது கோலோச்சினால் மகிழ்ச்சியே (ஃபார்மை இழந்து தொடர்ந்து சொதப்பினாலும் , ஒரு சென்சுரி அடித்துவிட்டால் ஒரு வருசத்துக்கு இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் இந்திய கிரிக்கெட் ப்ளேயர்களைப் போல!)

    ஆங், கிரிக்கெட் என்றதும் ஞாபகத்துக்கு வருகிறது... இந்தியா டெஸ்ட் தரவரிசையில் 'நம்பர்-1' இடத்தைப் பிடிக்கும்போது ஒரு சிறப்பு வெளியீடுக்கு உறுதிமொழி அளித்திருக்கிறார் நமது எடிட்டர்( காமிக் லவர் ராகவனிடம் இந்த உறுதிமொழியை அளித்ததாக ஞாபகம்)! சீக்கிரமே தரவரிசையில் நம்பர்-1ஐ அடைய நமது போராட்டக்குழு சார்பாக இந்திய அணிக்கு ஒரு கோரிக்கை மனு தலீவரால் அனுப்படும். ;)

    சாத்வீகமாய் ஒரு சிங்கம் அட்டைப்படத்தில் மழைத் தூறலும், சாலையில் தேங்கிநிற்கும் மழை நீரும் வரையப்பட்ட விதம் - அடடா அடடா! பின்னட்டையில் அந்த குரூப் ஃபோட்டோ கெளபாய்ஸ் மாதிரி இல்லாமல் சேரி பாய்ஸ் மாதிரி காட்டியிருப்பது யதார்த்தம். அந்தத் துடுக்குப் பெண் கமான்சே'யை மட்டுமாவது கொஞ்சம் அழகாக வரைந்திருக்கலாம் ஓவியர்... ஹூம்!

    சைத்தான் துறைமுகம் - முன்னட்டையைவிட பின்னட்டை ஒரு மார்க் கூடுதலாகப் பெறுகிறது. பின்ணணியில் நிலவைப் போல காட்சியளிக்கும் சூரியனும், தரையை மூடிய பனிக்குவியலும் - அடடா அடடா!

    காலங்காத்தால ஒரு கலா ரசிகரை எழுப்பிவிட்டுட்டீங்க போங்க! ;)

    ReplyDelete
    Replies
    1. //இந்தியா டெஸ்ட் தரவரிசையில் 'நம்பர்-1' இடத்தைப் பிடிக்கும்போது ஒரு சிறப்பு வெளியீடுக்கு உறுதிமொழி அளித்திருக்கிறார் நமது எடிட்டர்//

      ஆஹஹா !
      1.5 மில்லியன் special pending, 2மில்லியன் ஹிட்ஸ் வேற வரபோகுது சங்கத்து ஆளுங்க போராட்டம் நடத்தி சில பல கூண்டு கள வங்குங்கபா !

      Delete
    2. //காலங்காத்தால ஒரு கலா ரசிகரை எழுப்பிவிட்டுட்டீங்க போங்க! //

      "கலா "ரசிகர் அப்டின்னா ? ;-)

      Delete
    3. @செனா அனா

      கிர்ர்ர்ர்ர்ர்...
      ஒரு கலாரசிகரை காலங்காத்தால கட்டுப்போட்ட ரசிகராக்கும் உங்கள் முயற்சி புரியாமலில்லை! ;)

      Delete
    4. ஈரோடு விஜய்.!இவ்வளவு நாளும் உங்களை மடஸ்டி ரசிகர் என்று காலரை தூக்கி விட்டு பெருமை பட்டுக்கொண்டிருந்தேனே.?அப்போ நீங்கள் கலா ரசிகரா.?சொல்லவேயில்லை.!

      Delete
    5. "விஜய்"-ன்னு பேர் இருந்தாவே அவுக கலா ரசிகர் தானே அதில் ஒன்றும் ரகசியம் இல்லையே...(கண் சிமுட்டும் படங்கள் ஐந்து ). .....விஜய் அந்த உறுதி மொழி ஆசிரியர் அளித்தது என்னிடம், அந்த ஸ்கிரீன் சாட்டை உங்களுக்கு அனுப்புகிறேன்... ....ராகவன் ஜி யிடம் வேறு சில உறுதிகளை ஆசிரியர் அளித்துள்ளார் சென்னை விழாவில் .....

      Delete
    6. //....விஜய் அந்த உறுதி மொழி ஆசிரியர் அளித்தது என்னிடம் ///

      உண்மைதான் விஜயராகவன்! என் ஞாபக சக்தியில் இடிவிழுந்து.... போன ஜென்மத்து ஞாபகங்கள் திரும்பட்டும் ( ம்யாவ்?.... அல்லது Woof woof?!) ;)

      Delete
    7. Erode VIJAY & others: //சீக்கிரமே தரவரிசையில் நம்பர்-1ஐ அடைய நமது போராட்டக்குழு சார்பாக இந்திய அணிக்கு ஒரு கோரிக்கை மனு தலீவரால் அனுப்படும். ;)//

      இலங்கையில் முதல் டெஸ்ட் மேட்சைப் பார்த்தான பின்னே, இன்னும் கூட நிறைய வாக்குறுதிகளை 'தெகிரியமாய்' அள்ளி விடலாமென்று தோன்றுகிறது !!

      Delete
    8. Vijayan @ லொள்ளு! உங்க காட்டில் மழைதான்!

      Delete
  40. //நிறைய, நிறைய புதிய சூப்பர் தொடர்கள் நமக்கு எட்டும் தூரத்தில் நெருங்கிக் காத்துள்ளன ! //

    :)

    Edit sir, please increase new genre quota for 2016 schedule....
    keep some slots for one shots too edit sir.


    Comanche, Captain prince covers looks good, waiting to see it in hand to give any opinion !

    ReplyDelete
  41. ‘பச்சக்‘... ‘பச்சக்‘ சமாச்சாரங்கள் உள்ளன! காமெடி நாயகனும் ‘உம்மா‘ விநிநோகம் செய்கிறார் – சீரியஸ் நாயகனும் அதே வேலையைத் தொடர்கிறார் இப்போதெல்லாம்- இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்தமைக்கு பிடியுங்கள் உங்களுக்கு ஒரு உம்மா!

    ReplyDelete
    Replies
    1. // இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்தமைக்கு பிடியுங்கள் உங்களுக்கு ஒரு உம்மா! //
      உங்கள் லொள்ளு தங்கள ஜானி.

      Delete
  42. "இந்தப் “பழமை பாணிகளை“ தோளில் சுமந்து திரியாது – இன்றைய தலைமுறையின் பிரதிநிதியாக உள்ள நமது ஜுனியர் எடிட்டருக்கு இதனில் முழு ஒப்புதல் என்று சொல்ல மாட்டேன்! ஒரு தொடரை எடுத்தால் ‘டக் டக்‘கென்று போட்டு முடிக்காமல் – வருஷங்களாய் கொண்டு செல்வதன் லாஜிக் (?!!) அவருக்குப் புரிவதில்லை! Maybe கடிவாளம் கைமாறும் காலம் புலரும் போது – பாணிகளிலும் மாற்றங்களிருக்குமென்று எதிர்பார்த்திடலாம் போலும் !"
    இது அவசரங்களின் உடனடி உணவுகளின் காலம் என்பதனைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார். நிச்சயம் பெரிதாக வெல்வார்.

    ReplyDelete
  43. விஜயன் சார், நமது லார்கோ மற்றும் செல்டன் கதைகளை போல் கமான்சேவின் 2 கதைகளை இணைத்து அடுத்தவருடம் முதல் ஒரு புத்தகமாக வெளி இட வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. +1

      நானும் அதே கோரிக்கை Edit sir!

      Delete
    2. Parani from Bangalore : லார்கோவின் கதை வேறு....அங்கு எல்லாமே 2 பாகக் கதைகள் ; ஆகையால் அவற்றை இணைத்து ஒன்றாக வெளியிடும் அவசியம் ! ஷெல்டன் தொடரில் 2 பாகக் கதைகள் + one shots உண்டு ; so சூழ்நிலைக்கேற்ப ஷெல்டனை இணைத்தும், தனித்தனியாகவும் வெளியிட்டுள்ளோம்.

      கமான்சே தொடரிலோ ஒரே knot - ஆனால் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லா கதைக் களங்கள் என்பதால் அவற்றை தனித்தனியாகவே வெளியிடுகிறோம் !

      Delete
    3. இவரின் கதைகளை அதிகபடுத்தவேண்டும் என்பதற்கான யோசனையே 2 கதைகளை இணைத்து ஒரு புத்தகமாக போடுங்கள் என்றேன்!

      Delete
  44. வணக்கம் சார் பச்சக் பச்சக் ஓ கே ஓகே2016 அட்டவனை எப்போது?

    ReplyDelete
    Replies
    1. Anandappane Mariappan : அக்டோபர் இறுதியில்..!

      Delete
  45. comic sunday - ஙே :(

    //2012-க்குப் பின்பான நமது இதழ்களில் இது வரை எத்தனை “இதழ் பரிசோதனைகள்“ நடந்தேறியுள்ளன என்பதைக் கண்டுபிடிக்கவொரு போட்டியே வைக்கலாம் போலும்! இப்போதைக்கு இந்தக் கூத்துக்குள் தலைநுழைக்காத... சாரி... சாரி... இதழ் நுழைக்காத புண்ணியவான்கள்//

    இதுவரை வாசகர்களின் பின்னூட்டங்களில் மட்டுமே காணக் கிடைத்த இது போன்ற 'ஜொள்ளு' வசனங்கள் / வார்த்தைகள் தற்போது நம் ''மதிப்பிற்குரிய'' ஆசிரியர் விஜயனின் பதிவுகளிலும் சரளமாக தெறித்து விழுகிறது. போகிற போக்கில் ஆசிரியரின் பதிவுகளைப் படிக்கும் போது - குமுதம், குங்குமம், ஆனந்தவிகடன் கிளுகிளுப்புச் செய்திகளைப் படிக்கும் அனுபவத்தை தராமல் இருந்தால் ஆச்சரியம் தான் :) அதுவரைக்கும் கூட பரவாயில்லை, அவரின் எழுத்துகள் ''டைம் பாஸ்'' ரேஞ்சிற்கு மாறாமல் இருக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் :))

    ReplyDelete

  46. அப்புறம்... EBFன் போது டாக்டர் சுந்தர் ஒரு விசயம் சொன்னாரு... கார்ட்டூன் புக்கை ஆசையாக வாங்கிப் புரட்ட முயற்சிக்கும் அவரது குழந்தைக்கு அதிலிருந்து வரும் மையின் அடர் நெடி பிடிக்கவில்லையாம்... நம்மைப் போன்ற பெரிசுகளுக்கு இந்த மை நெடி ஒரு சுகந்தமான வாசனையாக மாறிப்போயிருந்தாலும், குழந்தைகளுக்கு 'ய்யே'வாக உள்ளதை மாற்ற ஏதேனும் வழி உள்ளதா எடிட்டர் சார்? அதாவது... மையில் சாக்லெட் வாசனை, ஸ்ட்ராபெரி வாசனை- இப்படி ஏதாவது சேர்க்க முடியுமா? ( குறைந்த பட்சம் ஸ்மர்ஃப் இதழ்களுக்காவது). ஆனால் இதிலும் ஒரு பிரச்சினை இல்லாமலில்லை! பசியிலிருக்கும் குழந்தைகளிடம் இந்தப் புத்தகங்கள் கிடைத்தால் பிறகு 'அவுக் அவுக் லபக்' தான்! ( எனக்கும்கூட சாக்லெட்னா ரெம்ம்ப்ப்பப் பிடிக்கும் ஹிஹி) ;)

    அப்புறம்... 'தீபாவளி மலர்' போன்ற ஏதாவதொரு சிறப்பிதழின் அட்டைப்படம் Holographic effectல் வர வாய்ப்பிருக்கிறதா என்பதை அறிந்திடவும் ஆவல்!

    ReplyDelete
    Replies
    1. இந்த வருட தீபாவளி மலர் அட்டை கூட இந்த முயற்சிக்கு காத்துள்ளதேங் சார்

      Delete
    2. அப்புறம் படிச்சு முடிச்சிட்டு பால்ல முக்கி எடுத்து மில்க் ஷேக் குடிக்கலாம்னுவீங்க .. அப்புறம் டெக்ஸ் புக் அட்டைல pizza பேஸ் வச்சி செஞ்சா படிச்சப்புறம் சாபிடலாம்னுவீங்க .. என்னங்கய்யா .. அவரு ஒரு பேக்கரி ஆரம்பிக்கணும் போல இருக்கே :-D ;-)

      Delete
    3. Erode VIJAY : அச்சு மையின் முக்கிய மூலப்பொருள் எண்ணெய் ! and அச்சிடும் சமயம் பயனாவது ஆல்கஹால் ! So சுடச் சுட அச்சாகி உங்களை வந்து சேரும் இதழ்களில் ஒரு அடர்நெடி இருப்பது நிச்சயம் ! ஆனால் நாலைந்து நாட்கள் போயின் அந்த நெடி காணாது போய் விடும் !!

      Delete
    4. Raghavan : "புரட்சி தீ" எடிட்டர் தான் நினைவுக்கு வருகிறார் !! :-)

      Delete
    5. ஹா....ஹா...ராகவன் ஜி....சூப்பர் ஐடியா ....

      Delete
  47. comic sunday - ஙே :(

    //ஆண்டுக்கு 2 அல்லது 3 என்று வெளியிடும் நமக்கே லேசான சிக்கலெனில் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் ஒரே ஒரு புது ஆல்பம் என்ற ரீதியில் 25 அல்லது 30 வருடங்களைத் துளியும் ஜெர்க்கின்றி படைப்பாளிகள் கடந்து செல்வது தான் எப்படி? பிரெஞ்சு ரசிகர்களால் அத்தனை பொறுமை காக்க முடிவது எவ்விதமோ?//

    ரொம்பவே சிம்பிளாகக் கூற வேண்டுமானால், சென்ற வாரம் வெளிவந்த 'சூப்பர் ஹிட்' திரைப் படங்களைத் தற்போதைய ட்ரெண்டில் பார்க்காமல் - அடுத்த வருடம் வரை காத்திருந்து பார்ப்பதற்கும் ; அடுத்த வருடம் வெளிவரவிருக்கும் ''ரஜினி'' நடிக்கும் சூப்பர் ஹிட் சினிமாவிற்காக காத்திருப்பதற்கும் - உள்ள வித்தியாசம் தான் அந்தப் பொறுமை :)

    இதில் பிரெஞ்சு ரசிகர்கள் ; நம்மவர்கள் என்ற பாகுபாடு எங்கும் இல்லையே சார் :-)

    ReplyDelete
  48. // Moving on, இந்தாண்டின் இறுதி 3 மாதங்களில் பெரியதொரு நட்சத்திரப் பட்டாளமே தலைகாட்டக் காத்திருப்பது புலனாகிறது! //
    மாடஸ்டி, சுட்டி லக்கி, சாகஸ வீரர் ரோஜர், ரிப்போர்ட்டர் ஜானி, வேய்ன் ஷெல்டன், தோர்கல்,டெக்ஸ் வில்லர்
    கமான்சே.

    இந்த லிஸ்டில் சாகஸ வீரர் ரோஜர் இவர் மட்டும் தான் கொஞ்சம் கிலி கிளப்புகிறார். பார்க்கலாம் இந்த முறை இவர் சாதிப்பாரா என்று.

    ReplyDelete
  49. Flipkartஇல் நமது புத்தகங்கள் இன்னும் காணோமே எடிட் ?

    சார் WILD WEST SPECIAL இன்னும் வரவில்லை,நான் இந்த அறிவிப்பு(http://lion-muthucomics.blogspot.in/2014/11/blog-post_9.html) வந்ததிலிருந்து காத்திருப்பு கவிதை வசிக்கிறேன்.
    black market issue வை ஓழிக்க நீங்கள் துவங்கிய இந்த அறிவிப்பு தொடருமா?
    2016ல் Wild west SPL regular பிரிண்டில் வருமா?

    request: Reprintன் விலை இந்த கால விலைக்கு தகுந்ததாக மாற்றி வெளிஇடுங்கள் sir .

    ReplyDelete
    Replies
    1. Satishkumar S :ஒரே இதழுக்கு ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு விலையை நாமே நிர்ணயிப்பின் அது நிச்சயம் சரி வராது !

      எங்குமே ஸ்டாக் இல்லாத மாயாவி, ஸ்பைடர் இதழ்களை total remake -ல் மறுபதிப்புகளாய் வெளியிடும் தருணங்களில் புது விலைகளை அமைக்கும் கதையே வேறு ! ஆனால் இரண்டே ஆண்டுகளுக்கு முன்பானதொரு இதழை விலையை மட்டுமே மாற்றி நாம் விற்கத் துவங்கினால் - ஓசையின்றி ஆங்காங்கே முகவர்களும் அந்த வேலையைச் செய்திடக் கூடியதொரு ஆபத்துள்ளது !

      Delete
    2. எனில் அதேவிலையில் மறுபதிப்பு ?

      Delete
    3. சதீஸ் குமார் .!உங்களுக்கு வைல்டு வெஸ்ட் கதைதானே வேண்டும்.? படித்து விட்டு தருவதாக இருந்தால் என்னிடம் உள்ளதை தருகிறேன்.!

      Delete
    4. நன்றி நண்பரே, அனால் பெரும்பன்மைஆன நண்பர்கள் 2012 ஆரம்பத்தில் வந்த கதைகள் எதுவும் இல்லை என்பதால் கேட்டேன் நண்பரே !

      உதவிக்கு மிக்க நன்றி MV சார் !

      Delete
  50. //"இந்தப் “பழமை பாணிகளை“ தோளில் சுமந்து திரியாது – இன்றைய தலைமுறையின் பிரதிநிதியாக உள்ள நமது ஜுனியர் எடிட்டருக்கு இதனில் முழு ஒப்புதல் என்று சொல்ல மாட்டேன்! ஒரு தொடரை எடுத்தால் ‘டக் டக்‘கென்று போட்டு முடிக்காமல் – வருஷங்களாய் கொண்டு செல்வதன் லாஜிக் (?!!) அவருக்குப் புரிவதில்லை! Maybe கடிவாளம் கைமாறும் காலம் புலரும் போது – பாணிகளிலும் மாற்றங்களிருக்குமென்று எதிர்பார்த்திடலாம் போலும் !"//


    நீங்களே பென்சர்-ல் ட்ரை செய்த விஷயம் தான் எடிட், மேலும் முயன்றால் தான் காமிக்ஸ் கடலில் சிறிதாவது explore செய்ய முடியும் என்பது உங்களுக்கும் தெரியும் எடிட் சார்,
    நல்ல விசயம் அப்பபாவே நடந்தா எல்லோருக்கும் நன்மைதானே எடிட் சார் ! :)

    குண்டு புத்தகம் பறக்கும் சூச்சுமம் இதில் இருக்கிறதோ ?

    ReplyDelete
  51. சார் அடுத்தமாதவிதல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டன. அட்டைபடங்கள் அனைத்தும் அதிஅற்புதம். அதிலும் சைத்தான் துறைமுகம் ஆஹா!
    அடுத்த மாதம் ஒரு அதிரடி என சாதாரணமான காத்திருந்தால் பெரிதும் எதிர்பார்ப்பில் இல்லாத டயலன் பார்ப்போம் என ஏங்க வைக்கிறார் உங்கள் அறிவிப்பால்...
    ஸார் வரும் வருட காத்திருப்புகள் 80களில் நம்மை கலக்க போவது உறுதி என நினைக்கிஃறேன்.
    அதிரடி கதைகள் அதிகமிருந்தால் ...அடடா....

    ReplyDelete
    Replies
    1. //அதிரடி கதைகள் அதிகமிருந்தால் ...அடடா....//

      +1

      Delete
    2. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : அதிரடியில்லா ஆண்டா ?!!

      Delete
  52. //நிறைய, நிறைய புதிய சூப்பர் தொடர்கள் நமக்கு எட்டும் தூரத்தில் நெருங்கிக் காத்துள்ளன ! 2016-ல் அவற்றைக் களமிறக்குவதா ? அல்லது கொஞ்சம் அடக்கி வாசித்துப் போவதா என்ற dilemma இப்போது !! 'இப்போதைக்கு வேண்டாமே !' - என நாசூக்காய் ஒரு சில "big name" தொடர்களைக் கூட நாமே தவிர்க்கும் சூழல் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் !! //
    சார்.. அண்ணாந்து பார்த்து ''ச்சீ..ச்சீ.. இந்த பழம் புளிக்கும்..'' என்று இருந்த காலம் போய், இப்போது காலம் கனிந்து வருகிறது. பழைய தொடர்கள் ஒரு புறமிருக்க, கொண்டுவாருங்கள் புதிய கதைகளை, களங்களை... ஆவலோடு காத்திருக்கிறோம்.... ப்ளீஸ்..!!

    ReplyDelete
    Replies
    1. +2

      there is enormous support for new genre, bring it on with confidence Edit sir!

      Delete
    2. Podiyan & others : சிக்கலே நமக்கிருக்கும் அந்தக் குறிப்பிட்ட இதழ் எண்ணிக்கை + slot தான் ! அதனுள் பழசு ; புதுசு என சகலத்தையும் அடைப்பதே சவாலாக உள்ளது !

      Delete
    3. //சிக்கலே நமக்கிருக்கும் அந்தக் குறிப்பிட்ட இதழ் எண்ணிக்கை + slot தான் ! அதனுள் பழசு ; புதுசு என சகலத்தையும் அடைப்பதே சவாலாக உள்ளது ! ///

      பேசாம ஜூனியர் எடிட்டரின் கோபத்தை சீண்டிவிட்டு ஒரு தனி காமிக்ஸ் ஆரம்பிக்க வச்சுடுங்க சார்.
      48 + 48 = 96 இதழ்கள்... வருடத்திற்கு!

      ஜூப்பரா இருக்கும்ல? ;)

      Delete
    4. சன் ஷைன் லைப்ரரியை தூசு தட்ட நேரம் வந்தாச்சு சாா்.

      Delete
    5. ஆஹா...பல பெளன்சர்கள் கிடைக்குமே ...

      Delete
  53. அட்டைப்படங்கள் மூன்றுமே அசத்தல்!!!

    ReplyDelete
  54. ////நிறைய, நிறைய புதிய சூப்பர் தொடர்கள் நமக்கு எட்டும் தூரத்தில் நெருங்கிக் காத்துள்ளன ! 2016-ல் அவற்றைக் களமிறக்குவதா ? //
    கடல் சார்ந்த சாகசங்கள் என்றும் ஒரு இனிய வாசிப்பு அனுபவத்தை தருகிறது, நமது கடல் நாயகன் கேப்டன் பிரின்ஸ் அவரை போல நாம் சிலரை 2016இல் முயற்சி செய்து பார்கலாமே ? கடல் கொளையர்களை(pirates adventures?) மையப்படுத்தி ஏதேனும் அதிரடி புது தொடர் ரேடார்ரில் இருக்கிறதா எடிட் சார்?


    ReplyDelete
    Replies
    1. Satishkumar : இல்லியே....இப்போதைக்காவது !

      Delete
    2. //இப்போதைக்காவது //

      2016இல் கடல் நாயகன் digest மட்டும் என்றல்(எடிட் mind வாய்ஸ் அக்டோபர் வரைக்கும் பொருங்கபா ...! :P) இதற்கான தேடல் 2017க்கு பயன் தரும் எடிட் சார்.

      Delete
  55. கடந்த பதிவின் இறுதியில் கனகராசன் பதிவு வருத்தம் தந்தது .முதன் முதல் நமது காமிக்ஸ் -ல் ரசிகர் ஒருவரின் அட்டை படம் வரும் வாய்ப்பு நழுவி போனது ..

    அவருக்கு லயன் மூலம் வந்து இருக்க கூடிய பெருமிதம் ,அவரால் ரசிகர்கள் அனைவருக்கும் வந்து இருக்க கூடிய பெருமிதம் கைநழுவி போனது ...

    வருத்தமே !!!!!

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே, இரண்டு தடவைகள் வாசகர்களது அட்டைப்பட டிசைன்கள் நமது காமிக்ஸ்களில் இடம்பிடித்திருந்தன நண்பரே! 3 வது வாய்ப்பு தவறிப்போனதுதான் வருத்தமாக உள்ளது.

      Delete
    2. 1st Design - http://lioncomics.in/reporter-johnny/2908-johnny-special-1.html

      2nd Design - http://lioncomics.in/captain-prince/2877-payangarap-puyal.html

      Delete
    3. அறியாமைக்கு வருந்துகிறேன் பொடியன் ! அவை எந்த இதழ்கள் ?

      Delete
    4. இதுதான் நண்பர் கனகராஜின் அந்த டிசைன்!:
      http://2.bp.blogspot.com/-lsmGzKGj_UA/UqcFjriGNWI/AAAAAAAACVk/1EhbuCRqlPs/s1600/Kanakarajan%252C+Pollachi.JPG

      Delete
    5. மேலே இணைப்புகள் கொடுத்துள்ளேன் நண்பரே:
      1. ரிப்போர்டர் ஜானி ஸ்பெஷல் -01
      2. கேப்டன் பிரின்சின் - பயங்கரப் புயல்

      Delete
    6. @ Friends : எனக்கும் வருத்தமே....in fact சென்னைப் புத்தக விழாவினில் நண்பரை சந்தித்த போதும் இது பற்றிப் பேசி இருந்தேன் ! துரதிர்ஷ்டம் - நண்பர் கடந்த வாரப் பதிவைப் பார்க்காது போனது !

      Delete
    7. விஜயன் சார்,
      // எனக்கும் வருத்தமே....in fact சென்னைப் புத்தக விழாவினில் நண்பரை சந்தித்த போதும் இது பற்றிப் பேசி இருந்தேன் ! துரதிர்ஷ்டம் - நண்பர் கடந்த வாரப் பதிவைப் பார்க்காது போனது ! //

      அப்படியென்றால் கனகராஜை புத்தக திருவிழாவில் பார்த்தீர்களா? வருத்தம்தான் அவரின் அட்டை படம் புத்தகத்தில் வராமல் இருப்பது.

      Delete
  56. ஜூனியர் எடிட்டர் உடன் ஆலோசித்து புதிய நாயகர்கள் ,கதைவரிசைகளை களத்தில் இறக்கி விடுங்கள் சார் !!!

    ReplyDelete
  57. @பொடியன் ! நன்றி நண்பரே !!

    ReplyDelete
  58. எடிட்டர் சார்.! யாரவது காமிக்ஸ் புத்தகத்தை படிக்க இரவல் கேட்டால்.,தஙகளின் குடோனில் ஸ்டாக் உள்ள புத்தகத்தை கொடுப்பது வழக்கம்.#லயன்250 இதழை செ.பு.க.வாங்கிக்கொள்ளலாம் என்று எண்ணியுள்ளேன்.!இதைப்போல ஸ்பெஷல் புத்தகங்கள் எண்ணிக்கை கையிருப்பு குறைந்தால் கொஞ்சம் இங்கே தெரியப்படுத்தவும்.சென்ற முறை அசால்ட்டாக இருந்து எல்.எம்.எஸ்ஸை இழக்க பார்த்தேன்.!

    ReplyDelete
  59. சிக்கலே நமக்கிருக்கும் அந்தக் குறிப்பிட்ட இதழ் எண்ணிக்கை + slot தான் ! அதனுள் பழசு ; புதுசு என சகலத்தையும் அடைப்பதே சவாலாக உள்ளது ####

    சார் அதற்கு தான் ஈரோட்டிலேயே சொன்னேன். இந்த சவால் நமக்கு வேண்டாம் சார் ..நமக்கு நிறைய சவால் இருக்கும் பொழுது இந்த 48 என்ற குறுகிய சவால் தேவையில்லை என்பது எனது கருத்து .எனவே 48+12 என இனைத்து அந்த சவாலை கேன்சல் செய்வது நலமே ...12 என்பது மறுபதிப்பு ..மீதி 48 உங்கள் சாய்ஸ் ...:)

    ReplyDelete
  60. திரு விஜயன் அவர்களுக்கு...!

    //பௌன்சரின் இரண்டாம் சுற்றிலுள்ள 2 கதைகளையும் வாங்கிட முயற்சிகளைத் தொடங்கிடுவோம்! அவை வெற்றியில் முடிந்திடும் பட்சத்தில் 2016-ன் பிற்பகுதியில் பௌன்சர் ராஜ்யம் தொடர்ந்திடும்!//

    * 'இரத்த்படலம் கலரில் சார்..ப்ளிஸ்..' என்ற கணக்காய் "பௌன்சர் கடைசி பாகம் சார்...ப்ளிஸ்..ப்ளிஸ்..." என செமத்தியாக உங்கள் பின்னால் சுத்தப்போகிறேன்னு நெனச்சேன்..! நல்லவேளை தப்பிச்சேன் சாமியோவ்..!

    // “குறைவான நாயகர்கள் – நிறையக் கதைகள் – சீக்கிரமாய் தொடர்களை முடித்தல்“ என்ற பார்முலாக்களின் மீது மனம் ஒட்ட மறுக்கின்றது! இந்தப் “பழமை பாணிகளை“ தோளில் சுமந்து திரியாது – இன்றைய தலைமுறையின் பிரதிநிதியாக உள்ள நமது ஜுனியர் எடிட்டருக்கு இதனில் முழு ஒப்புதல் என்று சொல்ல மாட்டேன்!//

    * சட்டுன்னு முடிஞ்ச்சிடவும் கூடாது...ஜவ்வா இழுத்துடவும் கூடாது..கிற அந்திமண்டலத்துல என்னோட யோசனை நிக்குது..! 1972 to 2002 வரைக்கும் என 30 வருஷத்துல வந்த மொத்த 'கமான்சே' கதையே பதினைந்து தான்..! ரெண்டு வருஷத்துக்கு ஒன்னு கணக்கா பிரான்சுல வந்ததை... நாம வருஷம் ரெண்டு கணக்கா படிக்க ஆரம்பிச்சிருக்கோம்..! இந்த கணக்குபடி 2020 ம் வருஷம் முடியபோகும் இந்தகதை 36 வது ஆண்டுமலரா வருனம்கிறது என்னோட ஆசை..! ஏன்னு பின்னால விளக்கம் சொல்றேன்...! திரு விஜயன் அவர்களுக்கு இங்க ஒரு விண்ணப்பம்..!

    29(28)வது ஆண்டுமலர்ல துவங்கின இந்த கௌபாய் சகாப்தம்...30(29)வது ஆண்டுமலராகவும் வந்தது..! லயன்250 & முத்து350 ஜோர்ல இப்ப 31 வது ஆண்டுமலர் லேபிளை மறந்துட்டோம்..! அதை கமான்சே கதைக்கு கொடுத்து கௌரவிக்க இங்க கேட்டுகிறேன் ஸார்..! [பின்னட்டையில் சின்னதா வழக்கமான சிங்கம்,கேக்,மெழுகுவர்த்தி logo...வாய்ப்பிருந்தால் ப்ளிஸ்..]

    அப்புறம்...ம்...அப்புறம் வர்றேனே...!

    ReplyDelete
  61. சிக்பில் நன்றாக இருந்தது. ஆனால் சயனம், கனகாபிஷேகம், விதூஷகன், பிதாம்பரம் போன்ற யாரும் கேள்விப்படா சொற்களை படிக்கையில் அன்னியமாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. SIV : இது போன்ற கருத்துக்களில் எனக்குப் பூரண உடன்பாடென்று நான் சொல்ல மாட்டேன்..!

      நாம் எழுதும் பாணியை இன்றைய நடைமுறைக்கு ஏற்ப அமைப்பது தேவலை என்று அபிப்பிராயப்படுகிறீர்கள் ! அதே சமயம் தமிழின் நமது வார்த்தை அகராதியை துளியூண்டு அதிகரிக்க முயன்றால் தப்பில்லையே என்பது தான் எங்களது நிலைப்பாடு ! ஒரு செம்மொழியின் கணக்கிலா வார்த்தைக் கிட்டங்கியினை இது போல் சிறிது சிறிதாக ஆராய முற்படுவதும் ஒரு விதப் புது அனுபவம் தானே ? "விதூஷகனை" - காமெடி பீஸ் என்று எழுதிச் செல்ல அதிக நேரம் பிடிக்காது ; ஆனால் நம் மொழியில் உள்ள அழகானதொரு சொல்லை அங்கே நாம் பயன்படுத்தும் வாய்ப்பைப் புறக்கணித்தல் அத்தனை அவசியம் தானா ?

      Yo man...dude...lol...btw ...என எண்ணற்ற "நவீனக் கண்டுபிடிப்புகளை" நம்மை அறியாது உள்வாங்கிக் கொண்டே இருக்கிறோம் தினசரி வாழ்வினில்...! தாய் மொழியின் தூய சொற்களோடு கைகுலுக்கிடக் கிடைக்கும் இது போன்ற சின்னஞ்சிறு சந்தர்ப்பங்களையும் தூரக் கொண்டு போவது தீர்மானமாய் அவசியம் தானா ? அதற்காக இலக்கிய நடையில் எழுதப், பேச நான் சொல்ல வரவில்லை ; 100% நடைமுறை பாஷையினுள்ளே மாத்திரமே நடமாடுவதெனில் ரொம்பவே மெர்சலா கீதேன்னு பாத்தேன் !

      Delete
    2. நிச்சயம் இது வரவேற்கத் தக்கதே! ரைட்டு, லெஃப்ட்டு, அப்பு, டவுனு எல்லாம் 'தமிழ்' என்றாகிவிட்ட நிலையில், இப்படியெல்லாம சொற்கள் உள்ளன என்பதை ஞாபகமூட்ட இத்தகைய பிரயோகங்கள் அவசியமே! அரிய தமிழ்ச் சொற்களை சினிமாப் பாடலில் கவிஞர்கள் புகுத்தினால் எமக்குப் பிரமிப்பாகவும், அதையே வேறு படைப்புகளில் கொண்டுவந்தால் 'புலியலையே' என்று வெறுப்பாகவுமிருப்பது வருந்தத்தக்கது. அதேவேளை, வட மொழியின் தாக்கத்தினால் புகுந்த 'ஹ', 'ஷ' போன்ற எழுத்துக்களை விடுத்து தூய தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தவும் முயலலாம்.

      Delete
    3. உங்கள் point of view புரிகிறது சார். சிறுவர்களை டார்கெட் செய்யும் கதைகளில் தவிர்க்கலாம் என்பது எண் எண்ணம். பேச்சுவழக்கில் இல்லாத சமஸ்கிருத வார்த்தைகள் கதையை ரசிக்க தடையாக இருப்பதாக (எனக்கு மட்டும் தானா) எனக்கு தோன்றுகிறது. அரிதான தமிழ் வார்த்தைகள் most welcome sir.

      Delete
    4. அன்புள்ள ஆசிரியர் ஐயா,

      முன்குறிப்பு: "டியர் விஜயன் சார்" என்று விளித்தால் இந்தப் பின்னூட்டத்தின் நோக்கமே அடிபட்டு விடும் என்பதால் தான் அப்படி அழைத்துள்ளேன்... ;-)

      //"விதூஷகனை" - காமெடி பீஸ் என்று எழுதிச் செல்ல அதிக நேரம் பிடிக்காது..... ஆனால்..... தாய் மொழியின் தூய சொற்களோடு கைகுலுக்கிடக் கிடைக்கும் இது போன்ற சின்னஞ்சிறு சந்தர்ப்பங்களையும் தூரக் கொண்டு போவது தீர்மானமாய் அவசியம் தானா ? //

      அதெல்லாம் சரி தான்... ஆனால், "காமெடி பீஸ்" மட்டுமல்ல, விதூஷகனும் கூட, நம் செம்மொழியின் கணக்கிலா தூய வார்த்தை கிட்டங்கியில் கிடையாது என்பது தான் கருப்பியல் காமெடி! ;-) வழக்கில் இல்லாத சமஸ்கிருத அல்லது வடமொழிச் சொற்களைப் பயன்படுத்துவதை விட, அவற்றுக்கு இணையான, எளிதில் புரியக் கூடிய தமிழ் சொற்களைப் பயன்படுத்தலாமே? (அது இயலாத வேளையில் பலருக்கும் புரியக் கூடிய ஆங்கிலத்தைக் கூட பயன்படுத்தலாம் எ.எ.க.)

      விதூஷகன் - கோமாளி
      சயனம் - துயில் / உறக்கம்
      கனகாபிஷேகம் - பொன்முடிசூட்டு / பொன்முழுக்கு விழா
      பீதாம்பரம் - பொன்னாடை
      பாஷை - மொழி
      சாஸ்வதம் - அழிவின்மை

      தமிழில் ஏற்கனவே கணக்கிலடங்கா வடமொழிச் சொற்கள் கலந்து விட்டிருக்கின்றன; பல சொற்கள் பிரித்தறிய இயலா வகையில் தமிழுடன் பின்னிப் பிணைந்தும் விட்டன! அவ்வளவு ஏன், நான் மேலே "மொழிபெயர்த்துள்ள" சொற்கள் கூட, தூய தமிழ்ச் சொற்கள்தானா என்பதை தமிழ் அறிஞர்கள் தான் ஆராய்ந்து சொல்ல வேண்டும்.

      தமிழ் காமிக்ஸில், "தனித் தமிழ்" எல்லாம் எதிர்பார்க்கவில்லை... குறைந்த பட்சம் வழக்கொழிந்த அல்லது சிலருக்கு மட்டுமே புரியக் கூடிய "கஷ்டமான" வடமொழிச் சொற்களையாவது தவிர்க்கலாமே?

      பின்குறிப்பு 1: அப்புறம், நீங்கள் இப்போதெல்லாம் அடிக்கடி பயன்படுத்தும் ப்ரோவிற்கான தமிழாக்கம்:
      ப்ரோ - சகோ

      பின்குறிப்பு 2: "இந்த மாத காமிக்ஸ்களில் கலந்திருக்கும் 'வழக்கில் இல்லா வடமொழிச் சொற்கள்' - ஒரு பட்டியல் இடுக" - என்று மாதாமாதம் ஒரு போட்டி வைத்தால் வலைப்பூ கலகலப்பாக இருக்கும்! ;-)

      Delete
    5. தேவனின் கதைகள் ஞாபகம் வருகின்றது .

      Delete
    6. சும்மா ஒரு பேச்சுக்கு !
      கருணாநிதி,ஜெயலிலதா,வாசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், ராமதாஸ், தினமலர்,தினதந்தி, தினகரன்,அஜித், விஜய், தயாநிதிமாறன்,கலாநிதிமாறன், அவ்வளவு ஏன் சிவகாசி..... சமஸ்கிருதம்தான்....

      திராவிட மொழிகளின் தாய் தமிழ் எனில் தந்தை சமஸ்கிருதம்தான்.

      தமிழில் வழக்கொழிந்த பல வார்த்தைகள் மலையாளத்தில் புழக்கத்தில் உள்ளன.

      கன்னட, தெலுங்கில் சமஸ்கிருத தாக்கம் அதிகம்.

      சமஸ்கிருதம் வடமொழி அல்ல என பரவலான கருத்து உண்டு

      கலைஞரின் குறளோவியம் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.அது குறிப்பிட்ட பிரிவினரின் மொழியும் அல்ல.

      சங்க காலத்தில் கலித்தொகை, தேவாரம் ,திருவாசகம் ஆகியவற்றிலும் சமஸ்கிருத வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.

      பாரதிதாசன் தனது கவிதையில் பத்திரிகை என எழுதியுள்ளார்(இதழ் என இல்லை)

      ஜெயகாந்தனின் கருத்து கீழே உள்ள இணைப்பில் உள்ளது.

      உபயோகபடுத்தினால்தானே அவை புழங்கும் வார்த்தையாக மாற கூடும்?


      கீழே உள்ள இணைப்பு படிக்க சுவாரஸ்யமானது. நேரமிருப்பின் படிக்கவும் சார்!


      எதிர்வாதம் என இதை பார்க்க வேண்டாம் சார்!


      தெனாலிராமனை அரண்மனை விதூஷகன் என சொல்வதற்கும் , கோமாளி என சொல்வதற்கும் இடைவெளி குறைவு எனினும் ஏதோவொரு வித்தியாசம் இருக்கிறதல்லவா?

      http:// www.tamilhindu.com/2009/07/sanskrit-few-questions/


      Delete
  62. ஆமாம்.!ஆமாம்.!எங்களை மாதிரி இந்தக்கால பசங்களுக்கு புரிய மாட்டேன் என்கிறது.!

    ReplyDelete
  63. தனியே ஒரு வேங்கை @ மாயாவிகொர் மாயாவி

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. திருத்தம்: மாயாவிகொரு சவால்

      Delete
  64. அடுத்த மாத வெளியீடுகளுக்கு வாழ்த்துகள்...!

    ReplyDelete
    Replies
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் @ தொடர்ந்து பதிவிடுங்கள்!

      Delete
  65. அட்டை படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளன ஸார்.

    ReplyDelete
  66. இப்படில்லாம் அட்டைப் படம் போட்டுட்டு மின்னும் மரணம் மாதிரி இதழுக்கு அப்படி ஒரு அட்டைபடமா? இது நியாயமா சார்? மனசு ஆற மாட்டேங்குது

    ReplyDelete
  67. ஸார் என்னுடைய சந்தா இலக்கம் என்ன என்றும் மிகுதி எவ்வளவு உள்ளது என்றும் தயவு ஊர்ந்து சொல்ல முடியுமா பிளீஸ்? நான் மறந்து போய்விட்டேன். மறதிக்கு என் தற்போதைய வருத்தம்தரன் காரணம் ஸார். தப்பான நினைக்க வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. அலுவலக மின்னஞ்சலுக்கு ஒரு விசாரணைக் கடிதத்தை தட்டிவிடுங்கள். பதில் வந்திடும்.

      Delete
    2. Thiruchelvam Prapananth : சார்..இன்னும் 2 ஆண்டுகளுக்காவது நீங்கள் மேற்கொண்டு பணம் அனுப்பும் அவசியமே இராது ; so relax !

      Delete
  68. தோர்கல் கதைகள் can be given retirement and the above said big Heros stories can be inserted.

    ReplyDelete
    Replies
    1. டயபாலிக் stories are much better than தோர்கல் .

      Delete
    2. தோர்கல் மேல் ஏன் இந்த கொலவெறி :)

      நம்மிடம் உள்ள ஒரே மாயாஜால கதை தோர்கல்தான்

      Delete
  69. மதுரை புத்தக திருவிழாவில் தங்களது வருகை உண்டா சார்.

    ReplyDelete
  70. மதுரை புத்தக திருவிழாவில் தங்களது வருகை உண்டா சார்.

    ReplyDelete
  71. நான் தான் 200. சூப்பர்.

    ReplyDelete