Sunday, June 14, 2015

C+C+C = 350 !

நண்பர்களே,

வணககம ! வார நாட்களில் ஒரு பகுதியினைச் சொந்த வேலைகள்  நிமித்தமாய்  சென்னையில் செலவிட்டான பின்னே ஊர் திரும்பினால், சின்னதொரு இமயமலை சைசுக்குப் பணிகள் குவிந்து கிடப்பதைப் பார்க்க முடிந்தது ! ஆண்டின் எஞ்சியுள்ள நாட்களுக்கான திட்டமிடல்களையும் ; குறிப்பாக ஜூலை & ஆகஸ்ட் மாதங்களின் அட்டவணைகளையும் கையிலெடுத்த போது கிராபிக் நாவல்களைக் கண்ட நண்பர்களைப் போல உதறல் எடுக்காத குறை தான் ! பெரிய அப்பாடக்கராய் வாக்குறுதிகளை வலம்-இடமென அள்ளி விட்டு விட்டு சாவகாசமாய் ‘திரு திருவென விழிப்பது நமக்கொன்றும் புதிதல்ல என்பதால் கூடுதல் உத்வேகத்துடன் வேலைகளை முடுக்கி விடப் பழகி வருகிறேன் ! காத்திருக்கும் முதல் இதழ் தலயின் தாண்டவம் என்பதால் என் பணிகள் அந்தமட்டிற்குச் சுலபமாகின்றன! கதை ஆரம்பித்த பத்தாவது பக்கத்திலேயே வில்லன் யாரென்று அடையாளம் காட்டி விடுவது டெக்ஸின் கதாசிரியர்களின் பாணிகள் எனும் போது தம்பிக்குக் கும்பாபிஷேகம் எங்கே? எப்போது?“ என்ற கேள்விகள் மட்டுமே நம் மனதில் எஞ்சியிருப்பது வழக்கம்! அதுவும் இந்த set கதைகளில் தலயின் முஷ்டிகள் overtime வேலை பார்த்துள்ளதால் நான் பெரிதாக மண்டையைப் புரட்டி டயலாக் எழுதும் வேலைகளெல்லாம் பார்த்திட அவசியங்கள் நேர்ந்திடவில்லை! வழக்கம் போல டெக்ஸின் வரிகளில் வீரியமும்; கார்சனின் கோட்டாவில் கலாட்டாக்களையும் கொண்டு வந்ததைத் தாண்டி... ணங்... கும்... படீர்... தொபீர் என்று எழுதி வைத்ததோடு கையைத் தட்டிவிட முடிந்தது!

தலயின் சாகஸம் # 2 பிரம்மன் மறந்த பிரதேசம்! 224 பக்க நீளம் கொண்ட இந்தக் கதையின் பின்னணியில் சில பல தமிழ் சினிமாக்கள் நிலைகொண்டிருப்பது நிச்சயம்! காதல் கொண்டேன் தனுஷ் ரேஞ்சிற்கொரு வில்லன்... dynamite ஆக்ஷன்... கனடாவின் அடர்கானகப் பின்னணி; வித்தியாசமானதொரு கதையோட்டம் என நாம் ரொம்பவே ரசித்த கதையிது! அதிலும் கார்சனுக்கு டயலாக் எழுதுவதற்கு இந்த ஆல்பத்தில் லட்டுப் போல பல சந்தர்ப்பங்கள் கிட்டின என்பதால் என் பேனாவும் வெரி ஹாப்பி! பாருங்களேன் இந்த சாகஸத்தின் ஒரு சில பக்கங்களை!

எங்கள் பணிகள் சகலமும் முடிவுற்று , அச்சுப் பணிகள் திங்கள் முதல் தொடங்குகின்றன ! அட்டைப்படமும் அட்டகாசமாய் தயாராகி வந்தி்ட எல்லாமே தத்தம் இடங்களில் பொருந்திக் கொள்ளுமென்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் ! 
மேஜையிலிருந்து ஒரு ரயில் வண்டி pack off ஆகிட, அடுத்த எக்ஸ்பிரஸைக் கொணர்ந்து பார்க்பண்ணிடப் பொழுது சரியாக உள்ளது ! இம்முறை தடம் # 1 ல் காத்திருப்பது நமது முத்துவின் இதழ் # 350 என்பதை நான் சொல்லவும் வேண்டுமா என்ன? 4 தனித்தனிக் கதைகள் / இதழ்கள் அடங்கியதொரு Box Set-ல் வரவுள்ள இந்த இதழுக்கு சில மாதங்களுக்கு முன்பாகவே நடந்த பெயர் சூட்டல்களை நண்பர் ஒருவரின் உதவியோடு தேடியெடுத்துப் பார்வையிட்ட போது “The Classic Cartoon Collection என்ற பெயர் செம பொருத்தமாக இருப்பதாகத் தோன்றியது! ஆர்டினை நேற்றைக்கும்; நீல மனுஷர்களை இன்றைக்கும் தனது display-ல் சுமந்து திரியும் தீவிர கார்ட்டூன் ரசிகரான நண்பர் kid ஆர்டின் கண்ணனின் தேர்வு இது!  வாழத்துக்கள் நண்பரே! பரிசாக அந்தப் பதிவில் ஏதேனும் அறிவித்து வைத்திருந்தேனா என்பது நினைவில்லை ஆவேசப்பட்டிருக்காமல், கம்பெனிக்குக் கட்டுப்படியாகக் கூடிய பரிசாக நான் promise செய்திருந்திருக்கும் பட்சத்தில் நிச்சயமாய் அதனை நிறைவேற்றிடுவோம்!

பெயர் வைத்தாயிற்று ; கதைகள் 4-ன் தேர்வுகளும் (என்னளவில்) ஆச்சு என்றான பின்னே பணிகள் பரபரவென்று பட்டையைக் கிளப்பத் தொடங்கி வி்ட்டன! இது போன்றதொரு ஜாலி வாய்ப்பு அடிக்கடி கிட்டாதென்பதால் கதைகளின் மொழிபெயர்ப்புப் பணிகளை கருணை அவர்களோடு பகிர்ந்து கொள்ள மனமின்றி, வேதாளம் போல சகலத்தையும் என் கையிலேயே வைத்துக் கொண்டிருக்கிறேன்! பௌன்சரின் செம டார்க்கான “கறுப்பு விதவை கதையினை மேஜையின் ஒரு பக்கம் விரித்து வைத்துக் கொண்டு பேய்முழி முழித்துக் கொண்டிருக்க, மறுபக்கமோ ccc-ன் (!!!) நாயகர்கள் தான் என் நாட்களை இலகுவாக்கி வருகின்றனர்! 

இடைச்செருகலாய் இங்கே பௌன்சரின் இந்த இறுதி ஆல்பத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லிக் கொள்கிறேன்! இந்தத் தொடரிலேயே மிக violent & மிக gross ஆன கதை - காத்திருக்கும் “கறுப்பு விதவை“ தான் என்பதில் சந்தேகமே கிடையாது! இரத்தக்களரி...ரொம்பவே தூக்கலாய் adults only நெடி என்ற இந்த ஆல்பத்தை உங்களுக்கும், எங்களுக்கும் சேதாரமின்றி கரைசேர்ப்பதற்குள் ‘எர்வாமேட்டின்‘ வேட்டையில் அமேசான் கானகங்களுக்குப் போகிறேனோ இல்லையோ ; உள்ளூர் கருவேலங்காடுகளில் என்னைச் சீக்கிரமே பார்த்திட இயலுமென்று நினைக்கிறேன் ! அவசரமாய் மொழிபெயர்த்து விட்டு, நிதானமாய் உதை வாங்குவதை விட, சற்றே அவகாசம் எடுத்துக் கொண்டு முகச்சுளிப்புகளுக்கு இடம் தந்திடாது இதனைத் தயாரிக்க வேண்டுமென்ற வேட்கையில் முதல் நாளிரவு எழுதுவதை ஒரு நாள் கழித்து review செய்து திருத்தங்கள் / மாற்றங்களை அமலாக்குவது என்று முயற்சிகள் செய்து வருகிறேன்! ஆகஸ்டில் வரக்காத்துள்ள இந்த இதழ் சந்தேகமின்றி “கத்தி மேல் கதக்களி“ என்பதில் ஐயமில்லை!

இந்தக் குரங்கு வேலைகள் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க துளியும் சிரமம் தரா clean; காமெடிக் கதை கையில் சிக்கிய மறுகணம் அதைப் பிறாண்டி வைக்காத குறையாய் ஒரே நாளில் 46 பக்க ஆல்பத்தை எழுதித் தள்ள முடிந்தது சென்ற ஞாயிற்றுக்கிழமையினில் ! அவசரம்...கடைசி நேர இக்கட்டு.. என்ற சூழ்நிலைகளில் இது போல ‘ஏக் தம்‘ முயற்சிகள் செய்துள்ளோம் தான் but 46 பக்க ஆல்பத்தை ஒரே பகலில் தாண்டியிருப்பது எனக்கு இதுவே முதல் முறை ! அந்தப் பணியின் நிழல் தலைக்குள் நடனமாட, இங்கே உங்களது பின்னூட்டங்களைப் படிக்க நேர்ந்த போது ‘கிராபிக் நாவல் காய்ச்சல்‘ பற்றிக் கொஞ்சம் தெளிவாகவே புரிந்து கொள்ள முடிந்தது! என்ன தான் “வாசிப்புக்கள விரிவாக்கம்;உலக விஷயங்களை லேசாகவேணும் நுகர்ந்து பார்த்திடல்“ என்று நான் பெரிய பிஸ்தாவைப் போல காரணங்கள் கற்பித்தாலும் ஒற்றை விஷயத்தை மறைக்கவோ / மறுக்கவோ / மறக்கவோ இயலாதென்று புரிகிறது ! "பொழுதுபோக்கு" ; "சந்தோஷச் சமயங்களின் எதிர்பார்ப்புகள்" என்பனவே காமிக்ஸ் படிப்பதன் (பெரும்பான்மையான) பின்நோக்கமெனும் போது அவற்றிற்குக் கனமான கதைக்களங்கள் நியாயங்கள் செய்வது சுலபமல்ல என்பது அப்பட்டம் ! என்னையே உதாரணமாய் எடுத்துக் கொண்டால் இதோ ஒரே நாளின் பகலினில் ஒரு கார்ட்டூன் கதையை எழுதி முடிக்கும் போது நோவு விரல்களில் மாத்திரமே உள்ளது; உள்ளத்திலோ உவகை ; ஆனால் “விடுதலையே... உன் விலையென்ன ?“ கதையின் எடிட்டிங் பணிகளுக்கு மட்டுமே நான் போட்ட மொக்கை 3 நாட்களிருக்கும்! Of Course ஒரே stretch-ல் நான் எடிட்டிங் வேலையில் மூழ்கியிருப்பின் 3 நாட்கள் பிடித்திருக்காது தான் ஆனால் ஒரே stretch-ல் அதற்குள் லயித்திட சிரமமாக இருந்தது என்பது தான் நிஜம் ! 2016-ன் அட்டவணைத் திட்டமிடலில் தீவிரமாய் இருந்து வரும் இத்தருணத்தில் இந்த இதழும்; உங்களின் பகிர்வுகளும் எனக்கு மிகப் பெரிய ஒத்தாசை செய்துள்ளது என்றால் அது மிகையாகாது ! இத்தோடு கிராபிக் நாவல்களுக்கு கோவிந்தா ! என்ற ரீதியிலான அவசரத் தீர்மானமாக இதனைப் பார்த்திடல் வேண்டாமே ?! வரும் நாட்களில்  "absolute hit "  என்றாலொழிய கி.நா. க்களைப் போட்டு உங்களைச் சூடு போடப் போவதில்லை என்பதாக மட்டும் பொருள் கொண்டிடலாம் ! (மடிபாக்கத்திலும், தாரமங்கலத்திலும் லட்டு அவசரமாய் அதிரடியாய் விற்பனையாகிறதாமே ?!! மெய் தானா ? )   

ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு மாதத்து இதழ்களையும் இந்தத் தடவை போல அலசி, ஆராய்ந்து எனக்கு feedback தந்திட்டால் நிச்சயமாய் நிறைய முன்னேற்றங்களிருக்கும் guys! So please do continue the good work! அதற்காக “விமர்சகத் தொப்பியை“ இறுக்கமாய் மாட்டிக் கொண்டு, இறுக்கத்தோடு பக்கங்களைப் புரட்டச் சொல்லிட மாட்டேன்; எப்போதும் போல ஜாலியாகக் கதைகளை அணுகும் போதே உங்களுக்கு நேர்ந்திடும் நெருடல்கள்; தென்பட்டிடும் நிறைகள் பற்றிச் சொல்வதே பிரயோஜனமாக இருந்திடுமல்லவா?

அப்புறம் நான் கொஞ்க காலமாகவே நினைத்து வந்த “மாற்றி யோசி“ சமாச்சாரத்தைப் பற்றி கடந்த பதிவில் நண்பர்கள் ஜாலியாகக் குறிப்பிட்டிருந்ததை சந்தோஷத்தோடு கவனித்தேன் ! இனி வரும் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு இதழையும் படித்தான பின்னே அவற்றிற்குப் பொருத்தமான “உங்கள் தலைப்புகள்“ இங்கே முன்மொழியலாமே ? 12 மாதங்களுக்கு முன்பாக, சின்னக்கதைக் குறிப்புகளோடும்; இன்டர்நெட் ஆராய்ச்சிகளோடும் அவசரம் அவசரமாய் நான் சூட்டிடும் பெயர்கள் எல்லாத் தருணங்களிலும் perfect-ஆக அமைந்திட இயலாதென்பதில் இரகசியமேது ? So- கதையை முழுமையாக ரசித்தான பின்பு உங்கள் மனதுகளில் எழுந்திடும் ‘பளிச்‘ தலைப்புகளை இங்கே பதிவிட்டு ஜாலி மீட்டரை உயரச் செய்திடலாமே ?!

அப்புறம் நிலக்கரி நகரிலிருந்து இம்முறையும் நமக்குக் குச்சி மிட்டாய் தான் கிட்டியுள்ளது - புத்தகவிழாப் பங்கேற்பு ரீதியினில் ! இடப்பற்றாக்குறை ; சாரி என்று கை விரித்து விட்டார்கள் ! :-(

Before I wind off, இரு நாட்களுக்கு முன்பான ஒரு குட்டி நிகழ்வின் பகிர்வு! காலையில் நமது மெயில்பாக்ஸைப் பார்த்தால் அதில் இத்தாலியிலிருந்து ஒரு மின்னஞ்சல்! டைலன் டாக்; டயபாலிக்; மர்ம மனிதன் மார்டின் ரசிகர்களின் கொள்முதல் மெயிலாக இருக்குமென்ற எண்ணத்தில் கொட்டாவியோடு திறந்து பார்த்தால் அது மர்ம மனிதன் மார்ட்டினின் படைப்பாளியான திரு.ஆல்பிரெடோ காஸ்டெல்லி அவர்களிடமிருந்து வந்திருந்த மின்னஞ்சல் ! நமது சமீப வெளியீடான “கனவுகளின் குழந்தை“ இதழ்களை நமது ஆன்லைன் ஸ்டோரில் வாங்க முயற்சித்து விட்டு- அது முடியாமல் போக- எப்படி வாங்கலாம்? என்ற கேள்வி கேட்டிருந்தார் மனுஷன்! பதறியடித்துக் கொண்டு “ஐயோ... தெய்வமே... உங்களிடமெல்லாம் பணம் வாங்கிக் கொண்டு புத்தகங்களை அனுப்பினால் ஆத்தா கண்ணைக் குத்தி விடுவாள்!“ என்றபடிக்கு எத்தனை பிரதிகள் தேவையென்று கேட்டு மெயில் தட்டி விட்டேன். மார்ட்டின் கதையில் 4 பிரதிகளும்;நித்தமும் குற்றம்“ (டயபாலிக்) இதழில் 4 பிரதிகளும் அனுப்பிட இயலுமாவென்று கேட்டார். ‘அட.... டயபாலிக்கில் இவருக்கும் ஆர்வமா?‘ என்ற ஆச்சர்யத்தோடு மின்னஞ்சலைத் தொடர்ந்து படித்தால் அந்தக் கதையின் ஆசிரியரே அவர் தான் என்றும் புரிந்தது! அவசரம் அவசரமாய் அவர் கேட்ட 8 இதழ்களையும் ஏர்-மெயிலில் அனுப்பி விட்டு அவருக்குத் தகவல் சொன்ன போது சந்தோஷத்தோடு பதில் போட்டுள்ளார். அடுத்த மார்ட்டின் கதையை நாம் வெளியிடும் தருணம் அதற்கென ஏதேனும் கட்டுரைகளோ; பிரத்தியேகச் சித்திரங்களோ தேவைப்பட்டால் அதனைப் பூர்த்தி செய்து தர ஆவலாய் உள்ளதாகவும் அவர் எழுதியிருந்ததைப் படித்த போது கால் தரையில் படவில்லை! ஒரு டாப் ஐரோப்பியக் கதாசிரியர், சில பல ஆயிரம் விற்பனை காணும் ஒரு பிராந்திய மொழிப் பதிப்பகத்தையும் மதித்து இத்தனை வாஞ்சையாய் எழுதுவது நிச்சயம் ஒரு தினசரி நிகழ்வல்ல ! நமது நெஞ்சார்ந்த நன்றிகளைச் சொல்லியதோடு - அவரது பார்வையில் அவரது Top 3 மார்ட்டின் கதைகளைத் தேர்வு செய்து சொல்லும்படிக் கேட்டுள்ளேன்! வாரயிறுதியில் ஆற அமர யோசித்து விட்டுச் சொல்லுவதாக promise செய்துள்ளார் ! காலர்களைத் தூக்கி விட்டுக் கொள்ளவொரு மெய்யான காரணத்தைத் தந்திடும் இது போன்ற தருணங்கள் நம் ஒவ்வொருவருக்கும் சொந்தம் guys ! So a big pat on the backs!

மீண்டும் சந்திப்போம்! அது வரை enjoy the day & the week ahead !

429 comments:

  1. வணக்க்க்க்கம்ம்ம்.!!!

    ReplyDelete
  2. நல்ல பதிவு! சந்தோசம் விஜயன் சார்!

    ReplyDelete
  3. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  4. // “The Classic Cartoon Collection“ என்ற பெயர் செம பொருத்தமாக இருப்பதாகத் தோன்றியது! ஆர்டினை நேற்றைக்கும்; நீல மனுஷர்களை இன்றைக்கும் தனது display-ல் சுமந்து திரியும் தீவிர கார்ட்டூன் ரசிகரான நண்பர் Kid ஆர்டின் கண்ணனின் தேர்வு இது! //
    மனம் நிறைந்த வாழ்த்துகள் கண்ணன்!

    ReplyDelete
  5. காலை வணக்கம் நண்பர்களே.,

    ReplyDelete
  6. // அடுத்த மார்ட்டின் கதையை நாம் வெளியிடும் தருணம் அதற்கென ஏதேனும் கட்டுரைகளோ; பிரத்தியேகச் சித்திரங்களோ தேவைப்பட்டால் அதனைப் பூர்த்தி செய்து தர ஆவலாய் உள்ளதாகவும் அவர் எழுதியிருந்ததைப் படித்த போது கால் தரையில் படவில்லை! ஒரு டாப் ஐரோப்பியக் கதாசிரியர், சில பல ஆயிரம் விற்பனை காணும் ஒரு பிராந்திய மொழிப் பதிப்பகத்தையும் மதித்து இத்தனை வாஞ்சையாய் எழுதுவது நிச்சயம் ஒரு தினசரி நிகழ்வல்ல ! நமது நெஞ்சார்ந்த நன்றிகளைச் சொல்லியதோடு//
    நமது காமிக்ஸ்-க்கு பெருமை தரும் விஷயம்! சந்தோஷம்!

    ReplyDelete
  7. சார், கடைசி வரையிலும் கார்ட்டூன் ஸ்பெஷலின் கதைகள் என்னவென்று சொல்லவே மாட்டீர்களா....
    லக்கியும் சிக்பில்லும் இல்லாவிட்டால் அது "கார டூன் ஸ்பெஷல்" தான்.

    ReplyDelete
  8. காலை வணக்கம் எடி சார் & நண்பர்களே.

    ReplyDelete
  9. ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்.
    டெக்ஸின் ஓவியங்கள் வித்தியாசமாக உள்ளன.

    ReplyDelete
  10. //ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு மாதத்து இதழ்களையும் இந்தத் தடவை போல அலசி, ஆராய்ந்து எனக்கு feedback தந்திட்டால் நிச்சயமாய் நிறைய //முன்னேற்றங்களிருக்கும் guys!
    தயவு செய்து இனி கிராபிக் நாவல் போடாதீர்கள் சார்...
    அப்படி கிராபிக் நாவல் வந்தே ஆகும் எனும்போது அந்த மாதத்தில் அதே விலையுடைய வேறு புத்தகம் அனுப்பி விடுங்கள்.
    சமீபத்திய பிரின்டிங் நன்றாக அமைந்து வருகிறது .டெக்ஸ் ஸ்பெஷல் இன்னும் சிறப்பாக வர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ///தயவு செய்து இனி கிராபிக் நாவல் போடாதீர்கள் சார்...///
      -1

      Delete
    2. /////தயவு செய்து இனி கிராபிக் நாவல் போடாதீர்கள்///-பாசா பாய் உங்கள் மற்றும் அநேகரின் விருப்பப்படி கிராபிக் நாவல் நிறுத்தப்பட்டு விட்டதே....என்னா ட்ரீட் ???உங்கள் ஊர் மக்கான் பேடா சுவையாக இருக்குமாமே !...ஈரோடு விழாவிற்கு நீங்கள் வரும்போது எங்களையும் அதன் சுவையை உணர வையுங்களேன் .....

      Delete
    3. விஜயராகவன் சார்...
      கண்டிப்பாக கொண்டு வருகிறேன்.

      Delete
    4. நன்றி நன்றி பாசா பாய் ....ஏற்கனவே லட்டு,, இப்போது முதல் முறை சாப்பிடப்போகும் மக்கான் பேடா...ஆகா ஆகா.. இந்த ஈரோடு விழா களைகட்ட போகுது ....கார்டூன் ஸ்பெசலையும் சேர்த்து கொண்டால் மூன்று ஸ்வீட்ஸ் .... (அப்புறம் இந்த சார் வேண்டாமே ,, ப்ளீஸ் ).

      Delete
    5. வருடத்திற்கு இரண்டு கிராபிக் நாவல்கள் போடுங்கள் சார்
      அனவைரின் விருப்பத்திற்கும் வாய்ப்பு கொடுங்கள்

      Delete
    6. கிராபிக் நாவல் முடியல சார் :(

      Delete
    7. நன்றி நன்றி பாசா பாய் ....ஏற்கனவே லட்டு,, இப்போது முதல் முறை சாப்பிடப்போகும் மக்கான் பேடா...ஆகா ஆகா.. இந்த ஈரோடு விழா களைகட்ட போகுது ....கார்டூன் ஸ்பெசலையும் சேர்த்து கொண்டால் மூன்று ஸ்வீட்ஸ் .... (அப்புறம் இந்த சார் வேண்டாமே ,, ப்ளீஸ் ).

      Delete
    8. அனைவருக்கும் சேர்த்து ஒரு ஐந்து கொண்டு வந்தால் போதுமா ஜி்....
      அதிகம் சுமக்க நம்மளால் ஆகாது .

      Delete
    9. போதும் போதும் .......பாசாபாய் போதுமானதாக இருக்கும் .....ஆசிரியர் சார் தேதியை கன்ஃபார்ம் பன்னுங்கள் சார் .

      Delete
    10. விஜயராகவன் சார்....
      ஐந்து கிலோ என்பதற்கு பதிலாக ஐந்து என்று எழுதிவிட்டேன்.
      மன்னிக்கவும்

      Delete
  11. தலையின் முதல் பக்க டீசரில் ஒரு எழுத்து பிழை உள்ளதாக தோன்றுகிறது.எடி சார் கவனியுங்கள்.

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் கிட் ஆர்டின் கண்ணன், நீங்கெல்லாம் நல்ல வருவிங்க.

    ReplyDelete
  13. Lot of information in this post.

    Top 3 Martin stories - very interested to know.
    Bouncer is getting more violent with every issue but it has something which binds you till the end

    ReplyDelete
  14. 1st 2nd pondra commenting Vida fungal vimrsanagalai pathividungal

    ReplyDelete
  15. வர வர மதியுகம் அதிகரிச்சுகிட்டே போகுது.கிராபிக் நாவலுக்கு தற்காலிகமாக விடுப்புகொடுத்ததற்கு நன்றி.!எல்லாரும் எந்திரிச்சு நின்னு ஜோரா கை தட்டி விசிலடிங்கப்பா.!அப்புறம் கார்டூன் ஸ்பெசலுக்கு போட்டி வச்சு வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்காம நீங்களே பேரு வைச்சதுக்கு ஆளுயர மாலை.!நெய்வேலியில் இடம் கிடைக்காதது வருத்தமாகத்தான் இருக்கிறது.அடுத்த வருடம் சாதிக்க முயற்சிப்போம்.அடுத்த டெக்ஸ் வில்லரின் அதிரடிக்கு சமூகம் வெயிட்டிங்.!கிராபிக் நாவல் மீதான தற்காலிக தடையுத்தரவை நிரந்தரமாக்கினால் அமிர்தாஞ்சன்,விக்ஸ் வகையராக்களுக்கான செலவு குறையும்.!

    ReplyDelete
    Replies
    1. கி. நா. தற்காலிக நிறுத்தம் என்பது நிரந்தரமானால் என்னைப்போன்ற ஏகப்பட்ட கா.கா.சிவகாசி வெடி வெடித்து கொண்டாடுவார்கள்

      Delete
    2. //கி. நா. தற்காலிக நிறுத்தம் என்பது நிரந்தரமானால் என்னைப்போன்ற ஏகப்பட்ட கா.கா.சிவகாசி வெடி வெடித்து கொண்டாடுவார்கள்//

      +1111111111111111111111111111111

      Delete
    3. //கிராபிக் நாவல் மீதான தற்காலிக தடையுத்தரவை நிரந்தரமாக்கினால்//
      //கி. நா. தற்காலிக நிறுத்தம் என்பது நிரந்தரமானால் என்னைப்போன்ற ஏகப்பட்ட கா.கா.சிவகாசி வெடி வெடித்து கொண்டாடுவார்கள்//
      -1

      Delete
    4. ////////கி. நா. தற்காலிக நிறுத்தம் என்பது நிரந்தரமானால் என்னைப்போன்ற ஏகப்பட்ட கா.கா.சிவகாசி வெடி வெடித்து கொண்டாடுவார்கள்//

      +1111111111111111111111111111111//////---நானும் கூட ஒரு திரியை கொளுத்தி மகிழ்கிறேன் காமிக்ஸ் காதலர்களே

      Delete
    5. -------222222222222222222222222222

      Delete
  16. 'CCC' எனப் பெயரிட்டு அசத்தி 'கடமையைச் செய்; பலன் என்றாவது ஒருநாள் தானே தேடிவரும்' என்பதை நிரூபித்துள்ள எங்கள் தனித்தவில் வித்துவான் கிட்ஆர்ட்டின் கண்ணன் அவர்களுக்கு ஈரோடு விஜயின் வாழ்த்துகள்! :)

    ReplyDelete
    Replies
    1. கிட் ஆர்ட்டின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.!ஆனாலும் இதைசொல்லாமல் இருக்க முடியவில்லை."" நீங்க ஒரு காமிக்ஸ் விஞ்ஞானி பாஸ்"

      Delete
  17. Currently reading கார்சனின் கடந்தகாலம், definitely only of the best in Tex. Colour printing quality is awesome except few pages.

    ReplyDelete
  18. வணக்கம் சார் . வாழ்த்துக்கள் கிட் மாமா...CCC கலக்கலாக உள்ளது டைட்டில் சார் ..

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் kid ardin

    ReplyDelete
  20. // டாப் ஐரோப்பியக் கதாசிரியர், சில பல ஆயிரம் விற்பனை காணும் ஒரு பிராந்திய மொழிப் பதிப்பகத்தையும் மதித்து இத்தனை வாஞ்சையாய் எழுதுவது நிச்சயம் ஒரு தினசரி நிகழ்வல்ல ! //
    ஒரு படைப்பாளியின் மனநிலையும், ஒரு தாயின் மனநிலையும் ஒன்றாக இருக்குமோ? எல்லா குழந்தைகளும் அவர்களுக்கு ஒன்றுதானே.

    ReplyDelete
    Replies
    1. // ஒரு படைப்பாளியின் மனநிலையும், ஒரு தாயின் மனநிலையும் ஒன்றாக இருக்குமோ? எல்லா குழந்தைகளும் அவர்களுக்கு ஒன்றுதானே.//
      அருமையாக சொன்னீங்க அறிவரசு!!

      Delete
    2. //ரவி//அருமையாக சொன்ணீங்க.!எனக்கு எல்எம்எஸ்ல் வந்த கதையை தவிர எந்ந கதையும் கவரவில்லை.ஆனால் கதைஆசிரியருக்காகவே படிக்க வேண்டும் போல் மனதில் குற்ற உணர்வு தோன்றுகிறது.!

      Delete
  21. சார் டெக்ஸ் கதையின் டீசர் அருமை.!கலர்ல சும்மா அல்லுது.!டெக்ஸ்ஸின் கதையை மெருகூட்டுவதே கார்சனின் கலாட்டாதான்.நீண்டநாள் காக்க வைத்து இப்படி சேம்பிள் காட்டுவது.,பசியோடு இருப்பனிடம் பிரியாணி வாசத்தை காட்டறமாதிரி இருக்கு.!!

    ReplyDelete
    Replies
    1. //பசியோடு இருப்பனிடம் பிரியாணி வாசத்தை காட்டறமாதிரி இருக்கு.!!///

      :) +1

      Delete
    2. ஹா ஹா உண்மை உண்மை,எனக்கு பிரியாணி மிகவும் பிடிக்கும்.
      +1

      Delete
    3. ////பிரியாணி வாசத்தை காட்டறமாதிரி இருக்கு.!!///- வெறும் பிரியாணி மட்டுமா ?? ஸ்பெசல் சில்லி சிக்கன், மட்டன் பெப்பர் பிரை, வஞ்சரம் வருவல் கட்ட கடைசியாக ஒரேயொரு சிக்கன் லாலிபாப் இப்படி ஃபுல் மீல்ஸ் வாசம் அல்லவா -தி லயன் 250 தலை ஸ்பெசலைப்பார்த்து ஞாபகம் வருணும். ...ஹி..ஹி.

      Delete
    4. சேலம் டெக்ஸ் விஜய்.!ஆக மொத்தம் நாம் பசியோட மிலிட்டரி ஓட்டல் முன்னாடி உட்கார்ந்துஇருக்கோம்.!

      Delete
  22. //// 2016-ன் அட்டவணைத் திட்டமிடலில் தீவிரமாய் இருந்து வரும் இத்தருணத்தில் இந்த இதழும்; உங்களின் பகிர்வுகளும் எனக்கு மிகப் பெரிய ஒத்தாசை செய்துள்ளது என்றால் அது மிகையாகாது ! இத்தோடு கிராபிக் நாவல்களுக்கு கோவிந்தா ! என்ற ரீதியிலான அவசரத் தீர்மானமாக இதனைப் பார்த்திடல் வேண்டாமே ?! வரும் நாட்களில் "absolute hit " என்றாலொழிய கி.நா. க்களைப் போட்டு உங்களைச் சூடு போடப் போவதில்லை என்பதாக மட்டும் பொருள் கொண்டிடலாம் ////?--- சரியான சசமயத்தில் எடுக்கப்பட்ட சரியான தீர்வு சார் . இருகரம் தட்டி வரவேற்கிறேன் சார் . ......
    ஆக கார்ட்டூன் ஸ்பெசல்க்காக பலியாகும் முதல் இதழ் ஏற்கனவே ரூபாய் 100விலையில் அறிவிக்கப்பட்ட கருப்பு வெள்ளை கிராபிக் நாவல் தான் என சொல்லிடவும் வேண்டுமா நண்பர்களே?!!! ....

    ReplyDelete
    Replies
    1. //சரியான சசமயத்தில் எடுக்கப்பட்ட சரியான தீர்வு சார் .//
      //ஆக கார்ட்டூன் ஸ்பெசல்க்காக பலியாகும் முதல் இதழ் ஏற்கனவே ரூபாய் 100விலையில் அறிவிக்கப்பட்ட கருப்பு வெள்ளை கிராபிக் நாவல் தான் என சொல்லிடவும் வேண்டுமா//
      -1

      Delete
    2. என்ன செய்வது பாலா சார் ! பெரும்பாலான நண்பர்களின் விருப்பத்தை ஆசிரியரும் நிறைவேற்றி வைக்க வேண்டும் அல்லவா??. கிரீன் மேனர்ரின் வசீகரத்துடன் ஒரு கி.நா. கிடைக்கும் வரை காத்திருப்பதில் தவறில்லயே.

      Delete
    3. //பெரும்பாலான நண்பர்களின் விருப்பத்தை//
      பெரும்பாலான...?

      Delete
    4. நிச்சயமாக பெரும்பாலான நண்பர்களின் விருப்பம் தற்போதைய ட்ரெண்ட்ஸ்ல கி.நா. வேண்டாம் என்பதே நண்பர்களின் கருத்துக்கள் எதிரொளிக்கும் செய்தி...

      Delete
  23. கார்ட்டூன் ஸ்பெஷல் என்ற விதையிட்டு தொடர்ந்த அதுபற்றிய கமெண்ட்ஸ் எனும் நீர் ஊற்றி மகசூல் கண்டு அதற்கு CCC. எனற பெயர் வைத்து பரிசு பெறும் காமிக்ஸ் கிஸான் ரவி கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .....

    ReplyDelete
  24. காலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. காலை வணக்கங்கள் வலை மன்னரே.

      Delete
  25. என்னைப் பொறுத்தவரை விடுதலையே உன் விலை என்ன-இதழ் ரசிக்க கூடிய வகையிலேயே இருந்தது.ஆர்ட் வொர்க்கும்,அட்டை படமும் நச் ரகம்,கதையின் ஓட்டம் சைபிரியக் கண்டத்தின் தரிசனத்தையும்,பனியின் குளிர்ச்சியையும் கொஞ்சமேனும் அளித்தது உண்மை.மொத்தத்தில் இந்த சாகசத்தை சுமார் என்றும் ஒதுக்கிவிட முடியாது,சூப்பர் என்றும் புகழ்ந்துவிட முடியாது.ஆனால் மாறுபட்ட ரசனைக்கு உரிய ஒரு மாறுபட்ட சாகசம்.

    ReplyDelete
    Replies
    1. //சைபிரியக் கண்டத்தின் தரிசனத்தையும்,பனியின் குளிர்ச்சியையும் கொஞ்சமேனும் அளித்தது உண்மை.மொத்தத்தில் இந்த சாகசத்தை சுமார் என்றும் ஒதுக்கிவிட முடியாது,சூப்பர் என்றும் புகழ்ந்துவிட முடியாது.///

      +1

      Delete
    2. +1.//சுமார் என்றும் கூறிவிட முடியாது,சூப்பர் என்றும் கூறிட முடியாது.//சரிதான்.ஸ்டார் வேல்யூ கதைகளை படித்துவிட்டு இக்கதையை படிக்க தயக்கமாக முதலில் இருந்தது.!

      Delete
    3. ஒரு கொலை கூட இல்லாத உப்புச் சப்பான இது போன்ற கதைகள் எப்படி ரசிக்க முடியும் ???. இதே ஒரு கிரீன் மேனரின் அழுத்தமான , அடுத்து என்ன வகையில் கொலை நடக்குமோ என்ற எதிர் பார்ப்போ , இ.இ.கொ.தேயின் அசுர கிளைமாக்சோ , பெளன்சரின் அராத்து முரட்டு தனங்களோ இருந்து இருந்தால் வெற்றிக்கு உத்தரவாதம் அல்லவா !!!.......

      Delete
    4. //இந்த சாகசத்தை சுமார் என்றும் ஒதுக்கிவிட முடியாது,சூப்பர் என்றும் புகழ்ந்துவிட முடியாது.ஆனால் மாறுபட்ட ரசனைக்கு உரிய ஒரு மாறுபட்ட சாகசம்.//

      +1
      உண்மை, இந்த புத்தகம் compare செய்யாமல் படிக்கும்போது உங்களின் கருத்து தான் என்னுடையதும்.

      Delete
    5. // ஒரு கொலை கூட இல்லாத உப்புச் சப்பான இது போன்ற கதைகள் எப்படி ரசிக்க முடியும் ???. //
      கொலைகள் மட்டுமே விறுவிறுப்பை கூட்டி விடுமா நண்பரே,கதையின் போக்கும்,மையக்கருவும் கூட விறுவிறுப்பை கூட்ட உதவலாம் அல்லவா?

      Delete
    6. மையக்கரு கடைசி வரை இந்த சைபீரிய கதையில் கிடைக்கலயே நண்பரே............அந்த இளவரசி இவ்வளவு அப்பிராணியா இருந்துவிட்டு கட்ட கடைசியில் இந்த பூனையும் பால் குடிக்குமா ..என யூஜின் உடன் சேர்ந்து கொண்ட ஒரு ஃப்ரேமை தவிர ....மீதம் ஒரு கதையின் போக்குவரத்தும் கண்ணில் படலயே .....

      Delete
    7. அப்புறம் நேரம் கிடைக்கும் போது கிரீன் மேனர் மற்றும் மனதில் மிருகம் வேண்டும் இன்னொரு முறை படித்து பாருங்களேன் ............கி.நா.ன்னா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவைகள் ஒரு பென்ச் மார்க்குகள் ......

      Delete
  26. // அடுத்த மார்ட்டின் கதையை நாம் வெளியிடும் தருணம் அதற்கென ஏதேனும் கட்டுரைகளோ; பிரத்தியேகச் சித்திரங்களோ தேவைப்பட்டால் அதனைப் பூர்த்தி செய்து தர ஆவலாய் உள்ளதாகவும் அவர் எழுதியிருந்ததைப் படித்த போது கால் தரையில் படவில்லை.//
    எடி சார் மார்ட்டின் கதைகள் நன்றாகவே உள்ளன,எப்போதுமே ஒரே நேர்கோட்டில் செல்வது அது வாழ்க்கையாக இருந்தாலும் சரி,கதையாக இருந்தாலும் சரி எந்தவித சுவாரஸ்யத்தையும் தராதே.
    எனவே மார்ட்டின் கதைகளை ஆண்டிற்கு இரு கதைகளேனும் கொடுக்கவும்.மார்ட்டின் கதையின் ஆசிரியர் இதில் கவனம் செலுத்தி இருப்பது மகிழ்ச்சிக்கு உரியது.
    என்னை பொறுத்தவரை கனவின் குழந்தைகள் ஒரு அற்புதமான சாகசம்,அதை டைப்பினால் கை நோவெடுக்கும் என்றே அசட்டையாக விட்டுவிட்டேன்.மார்ட்டினை தயவுசெய்து கைவிட்டு விடாதிர்கள்.

    ReplyDelete
    Replies
    1. //,எப்போதுமே ஒரே நேர்கோட்டில் செல்வது அது வாழ்க்கையாக இருந்தாலும் சரி,கதையாக இருந்தாலும் சரி எந்தவித சுவாரஸ்யத்தையும் தராதே.
      எனவே மார்ட்டின் கதைகளை ஆண்டிற்கு இரு கதைகளேனும் கொடுக்கவும் ///

      +1

      Delete
  27. ///(மடிபாக்கத்திலும், தாரமங்கலத்திலும் லட்டு அவசரமாய் அதிரடியாய் விற்பனையாகிறதாமே ?!! மெய் தானா ? ) ///--- தலீவரே மற்றும் MV சார் அவர்களே ஈரோடு விழாவில் லட்டு உண்டு தானே ??? . அந்த சின்ன பூந்தி ஆரஞ்ச் கலர் ஸ்பெசல் லட்டு மிகவும் சுவையாக இருக்கும் ......

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் அசைவ பிரியர் என்று கேள்விப்பட்டேன் .லட்டு மட்டும் போதுமா.?(வீட்டில் வறுத்த கறி சமைத்தால்.,உங்கள் நினைவும் கார்சன் நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை.!

      Delete
    2. ஹி,ஹி டெக்ஸ்சின் புகழ் மடிப்பாக்கம் வரை எட்டிவிட்டதா சூப்பர்.
      நண்பரே வறுத்தகறி சமைத்தால் அப்படியே எங்களையும் கொஞ்சம் மைண்ட்ல வெச்சிக்குங்க.

      Delete
    3. வறுத்த கறி ஃபவரைட் தான் MV சார் . ஆனால் அவ்வப்போது கலகலப்பூட்டும் கிட் ஆர்டின் ,லக்கி காமெடி போல அந்த ஸ்பெசல் லட்டுகளை மாதம் ஒருமுறை சுவைப்பது வழக்கம் .......

      Delete
  28. துணைக்கு வந்த தொல்லை-இதுவரை வந்த ஜில்லாரின் சாகசங்களில் இதுதான் நல்ல சாகசம் என்று தோன்றுகிறது.மொழிபெயர்ப்பு பிரமாதம்,கதை ரசிக்கவும்,சிரிக்கவும் வைத்தது.
    முடிந்தவரை இதுபோன்ற தேர்ந்தெடுத்த கதைகளை போடவும்.
    அட்டைபடம்,ஆர்ட் வொர்க்,பின்னணி வர்ணச்சேர்க்கைகள் பிரமாதம்.

    ReplyDelete
  29. ப்ளுகோட் சாகசம் இன்னும் படிக்கவில்லை சார், இன்று மாலை படித்துவிட்டு பதிவிடுகிறேன்.

    ReplyDelete
  30. மர்மமனிதன் மார்டின் quotaவை அதிகரிக்கவும்! கிராபிக் நாவலுக்கு get outஆ என்ன சார் இப்படி பண்றிங்களே ! தேவரகசியம் தேடலுக்கு அல்ல , வானம் எங்கள் வீதி, Bouncer போன்ற கதைகள் கிராபிக் நாவலில் வந்து hit அடித்தவை என்பதை நண்பர்கள் நினைவில் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் !

    ReplyDelete
    Replies
    1. //கிராபிக் நாவலுக்கு get outஆ என்ன சார் இப்படி பண்றிங்களே ! தேவரகசியம் தேடலுக்கு அல்ல , வானம் எங்கள் வீதி, Bouncer போன்ற கதைகள் கிராபிக் நாவலில் வந்து hit அடித்தவை என்பதை நண்பர்கள் நினைவில் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் !//

      +1

      Delete
    2. செந்தில் சார் பெளன்சரை பொறுத்த வரை அதை நாங்கள் கிராபிக் நாவலில் சேர்க்க வில்லை ..அட்டகாசமான கெளபாய் ஸ்டோரி அல்லவா அது :)

      Delete
    3. //கிராபிக் நாவலுக்கு get outஆ என்ன சார் இப்படி பண்றிங்களே !//
      +1111111111111111111111111111
      // தேவரகசியம் தேடலுக்கு அல்ல , வானம் எங்கள் வீதி, Bouncer போன்ற கதைகள் கிராபிக் நாவலில் வந்து hit அடித்தவை என்பதை நண்பர்கள் நினைவில் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் !//
      +1

      Delete
  31. கார்ட்டூன் ஹீரோ கிட் ஆர்டின் ரசிகரான கார்ட்டூன் வாசகர் கிட் ஆர்டின் அவர்களுக்கு மனமார்ந்த பாரட்டுக்கள் ..ஆழமான வாழ்த்துக்கள் ...


    கிராபிக்ஸ் நாவல் ...இனி மிக சிறந்ததை தேர்ந்துடுத்து #

    உண்மையிலேயே மிக மிக மிக சந்தோசம் சார் ..பழைய மாதிரி தற்பொழுது கிராபிக்ஸ் நாவல் அழுகாச்சி காவியமாக இல்லாவிட்டாலும் ..அருமை என்று உறுதியாக சொல்லாமலும் மொக்கை என்றும் சொல்ல தோன்றாவிட்டாலும் காமிக்ஸ் ரசிகராக ஒரு திருப்தி தரவில்லை என்பதே உண்மை .காரணம் மற்ற இதழ்களை படித்தவுடன் ஓர் நிறைவான உணர்வு ..முடித்தவுடன் நேரம் கிடைத்தால் மீண்டும் ஒரு முறை படிக்கலாம் என்ற எண்ணம் எல்லாம் கிராபிக்ஸ் நாவலில் எழ விடுவதில்லை ...அதுவே மிக பெரிய குறை ..மற்ற இதழ்களை படித்தவுடன் தூக்கி வீசி விடுகிறோம் ..ஆனால் நமது காமிக்ஸ் இதழ்களை எத்தனை முறை படித்தாலும் பாதுகாப்பாக சேர்த்தி வைக்கிறோம் .காரணம் மீண்டும் மீண்டும் படிக்க தோன்றுவதால் ...

    ஆனால் கிராபிக் நாவல்களை பாதுகாத்து வைத்தாலும் மீண்டும் அதை தொடவே தோன்றுவதில்லை (என்னை பொறுத்த வரை )...


    மார்ட்டின் கதை ஆசிரியர் செய்தியை படிக்கும் பொழுது மனதிற்கு மிகவும் நிறைவையும் ..சந்தோசத்தையும் அளிக்கிறது சார் ..

    ReplyDelete
    Replies
    1. :)

      //கார்ட்டூன் ஹீரோ கிட் ஆர்டின் ரசிகரான கார்ட்டூன் வாசகர் கிட் ஆர்டின் அவர்களுக்கு மனமார்ந்த பாரட்டுக்கள் ..ஆழமான வாழ்த்துக்கள் ...
      //
      வாழ்த்துக்கள் Kannan!

      //மார்ட்டின் கதை ஆசிரியர் செய்தியை படிக்கும் பொழுது மனதிற்கு மிகவும் நிறைவையும் ..சந்தோசத்தையும் அளிக்கிறது சார் ..//
      +1

      Delete
    2. தலீவரே கி.நா.க்களின் தற்போதைய நிலவரத்தை சும்மா நச்சுனுசொன்னீங்க, சூப்பர் சூப்பர்

      Delete
  32. டெக்ஸ்சின் பட்டைய கிளப்புது சார்,நாளுக்குநாள் ஆர்வம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது,இந்த மாத இறுதியிலேயே தல தரிசனத்தை காட்டுங்களேன் சார்.

    ReplyDelete
  33. இன்று 'உலக வலைப் பதிவர்கள் தினம்'!
    தனது இடையறா பணிகளின் நடுவேயும் நம்பொருட்டு இங்கே ஒவ்வொரு வாரமும் பதிவிட்டு, 'ஞாயிற்று கிழமை'க்கு உற்சாகம் பொங்கிடும் புதியதொரு அர்த்தத்தை நம்மிடையே விதைத்திருக்கும் வலைப்பதிவர்/எடிட்டர் விஜயன் அவர்களுக்கும்...
    ஆண்டாண்டு காலமாய் தொடர்ந்து காமிக்ஸ் சார்ந்த உற்சாகப் பதிவுகளை அரங்கேற்றிவரும் நமது காமிக்ஸ் நண்பர்களுக்கும் 'பதிவர் தின' நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. :)

      'பதிவர் தின' நல்வாழ்த்துகளை நானும் உரித்தாக்குகிறேன்!

      Delete
    2. from net : June 17: காய்கறி வாங்குவோர் தினம் :D

      Delete
    3. அட்வான்ஸ் வாழ்த்துகள் சதீஸ்குமார்! :D

      Delete
    4. நல்வாழ்த்துகளை நானும் உரித்தாக்குகிறேன் Vijay! :)

      Delete
    5. என்னது பதிவர் தின நாளா ...அதையும் செயலாளர் கண்டுபிடிச்சுட்டாரா ...

      என்னமோ போங்க மாதவா ....


      ஆனாலும் ..

      வாழ்த்துக்கள் சார் :):)

      Delete
    6. பதிவர் தினமா ?? நானும் வாழ்த்துகிறேன் சார் ....
      விஜய் சமீபத்திய டுபாங்கூர் பிறந்த நாள் போல அல்ல தானே ???

      Delete
  34. // அவரது பார்வையில் அவரது Top 3 மார்ட்டின் கதைகளைத் தேர்வு செய்து சொல்லும்படிக் கேட்டுள்ளேன்! வாரயிறுதியில் ஆற அமர யோசித்து விட்டுச் சொல்லுவதாக promise செய்துள்ளார் ! காலர்களைத் தூக்கி விட்டுக் கொள்ளவொரு மெய்யான காரணத்தைத் தந்திடும் இது போன்ற தருணங்கள் நம் ஒவ்வொருவருக்கும் சொந்தம் guys ! So a big pat on the backs!//
    மகிழ்ச்சியான தருணம் ! :)
    சரியான கேள்வியை உதவியாக கேட்டீகள் Edit sir.

    // இத்தோடு கிராபிக் நாவல்களுக்கு கோவிந்தா ! என்ற ரீதியிலான அவசரத் தீர்மானமாக இதனைப் பார்த்திடல் வேண்டாமே ?! வரும் நாட்களில் "absolute hit " என்றாலொழிய கி.நா. க்களைப் போட்டு உங்களைச் சூடு போடப் போவதில்லை என்பதாக மட்டும் பொருள் கொண்டிடலாம் !//

    2015 கி ந quota குறைத்திருப்பதாக நான் கருதுகிறேன், 2016 கி ந quotaவை 2015 புத்தக விமர்சனத்தை வைத்து தீர்மானிக்க வேண்டாம் என கோருகிறேன். நான் அதிக (நல்ல) புத்தகங்களை இந்த quota வில் எதிர்பார்கிறேன் . இந்த quota வை குறைக்க வேண்டாம் மாறாக அதிகபடுதும்படி கோரிக்கை வைக்கிறேன் Edit sir.

    rest i send as mail to you edit sir.

    ReplyDelete
    Replies
    1. கி.நா எதிர்ப்புக்குழுவினர் அனைவரும் சாக்குப் பையை எடுத்துக்கிட்டு ஓடியாங்க... இங்கே ஒருத்தர் சிக்கியிருக்கிறார்... :D

      Delete
    2. அப்போ கோழி றெக்கையும் தாரும்? :-P

      Delete
    3. சாக்குபையா .....நமது சங்கத்தை அடகு வச்சாவது ABT பார்சல் லாரியே கொண்டு வருகிறேன் .காத்திருங்கள் செயலாளரே:)

      Delete
    4. தலிவரே நீங்களுமமமா.....!

      நீங்க கி ந விசிறி ஆயிடீங்கனு புறா சொன்னது பொய்யா ஆ .ஆவ்....

      Delete
    5. //2015 கி ந quota குறைத்திருப்பதாக நான் கருதுகிறேன்//
      +1
      //2016 கி ந quotaவை 2015 புத்தக விமர்சனத்தை வைத்து தீர்மானிக்க வேண்டாம் என கோருகிறேன்.//
      +1
      //நான் அதிக (நல்ல) புத்தகங்களை இந்த quota வில் எதிர்பார்கிறேன் . இந்த quota வை குறைக்க வேண்டாம்//
      +1

      Delete
    6. //ஈரோடு விஜய்//ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ.......................இரண்டு சாக்கு பைகள் வைத்துக்கொண்டு காத்துக்கொண்டு இருக்கிறேன்.!(ஒன்று கார்த்திக் சோமலிங்காவுக்கு)

      Delete
    7. மூன்று சாக்கு பைய்கள் ரெடி பண்ணுங்க M.V.

      Delete
  35. என்னதான் கார்ட்டூன் கதைகளைத் தாங்கிவந்தாலும் 'முத்து காமிக்ஸின் 350வது இதழ்' என்பதே பிரதானப் படுத்தப்படவேண்டிய முக்கிய அம்சமாக இருந்திடும் என்று (எடிட்டர் பாணியில்) யோசித்ததால் என்னுடைய ( அதாவது நான் ரொம்பவே மெனக்கெட்டு இரவுபகலாக யோசித்த) ' The முத்து-350' டைட்டில் துரதிர்ஷ்டவசமாக தோல்வியைத் தழுவியிருக்கிறது என்பதை சபையினரிடம் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்! :D

    ReplyDelete
    Replies
    1. ஆழ்ந்த வாழ்த்துக்கள் செயலாளர் அவர்களே :):)

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. // ' The முத்து-350' டைட்டில் துரதிர்ஷ்டவசமாக தோல்வியைத் தழுவியிருக்கிறது என்பதை சபையினரிடம் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்! :D//

      தலிவரே சங்க கூட்டத்தில் இந்த title செலக்ட் செய்யாதுக்கு ஒரு கண்டன தீர்மானமும், Ravi Kanan title இக்கு வாழ்த்து தீர்மானமும் கொண்டு வரவேண்டும் தலிவரே.

      :D

      Delete
    4. நண்பர்களின் கேலியும் கிண்டலும் மேலும் வருத்தமளிக்கிறது. 'முத்து-350'க்கு முன்பாக ஒரு 'The'யை சேர்க்க நான் பட்டபாடு சொல்லி மாளாது! இதற்காக எத்தனை இரவுகள் தூக்கமின்றி யோசித்திருப்பேன் என்பதை நீங்கள் அறிந்திருக்க நியாயமில்லைதான்! :D

      Delete
    5. அச்சச்சோ எனக்கு தானே 2ம் பரிசு என கனவு கண்டு கொண்டிருந்தேன் .......அதுவும் போச்சா ...

      Delete
    6. ஆழ்ந்த அனுதாபங்கள் பூனையாரே.

      Delete
  36. Good morning to all,,, eagarly waiting for tex,, and cartoon special...

    ReplyDelete
  37. //வழக்கம் போல டெக்ஸின் வரிகளில் வீரியமும்; கார்சனின் கோட்டாவில் கலாட்டாக்களையும் கொண்டு வந்ததைத் தாண்டி... ‘ணங்...’ ‘கும்...’ ‘படீர்...’ ‘தொபீர்’ என்று எழுதி வைத்ததோடு கையைத் தட்டிவிட முடிந்தது!//

    :)

    ReplyDelete
  38. Sir, விடுதலையே உன் விலையென்ன என்ற ஒரு இதழை கருத்தில் கொண்டு, கி.நா. குறித்து முடிவு எடுக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். அவ்வாறு முடிவு எடுக்கும் பட்சத்தில், இறந்த காலம் இறப்பதில்லை, இரவே இருளே கொள்ளாதே, தேவ ரகசியம் தேடலுகல்ல..போன்ற வித்தியாசமான கதைகள் எவ்விதத்தில் எங்களை வந்து சேரும்....

    குழந்தைக்கு எது பிடிக்கும் என்று புரிந்து/அறிந்து, கேட்டு கேட்டு, பிடிதததை மட்டும் வாங்கி தரும் ஒரு தந்தையாக மட்டும் நடந்து கொள்ளாமல், காமிக்ஸ் இல் அனைத்து கலவையிலும் புத்தகம் வெளியிடும் தற்போதையே விஜயன் ஆரியராகவே நீங்கள் என்றும் இருந்திட/தொடர்ந்திட வேண்டும் என்று விரும்புகிறேன்....

    என்னுடைய இந்த கருத்து, கிராபிக் நாவல்களுக்கு மட்டும் அல்ல, அனைத்து விதமான காமிக்ஸ்கும் சேர்த்து தான்....

    ReplyDelete
    Replies
    1. இறந்த காலம் இறப்பதல்லை - ரிலீஸ் ஆன போதே கி.நா.களின் காலம் இறக்க ஆரம்பித்து விட்டது நண்பரே......கி.நா.களின் கழுதை நெறித்த பெருமை கடந்த 2மாதம் மற்றும் இந்த மாதம் வந்த இரு கி.நா களையே சாரும் ....

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. இந்த வருட கி ந தேர்வுகள் வாசகர்களை கவராததிர்க்கு கதை தேர்வும் ஒரு கரணம். இவை தொகுப்பு கதைகள் அல்ல என்பதும் கவனிக்க தக்கது. 2016இல் தொகுப்பு கி ந கதைகளை(>3) எதிர்பார்கின்றேன் Edit sir.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. இறந்த காலம் இறப்பதல்லை - ரிலீஸ் ஆன போதே கி.நா.களின் காலம் இறக்க ஆரம்பித்து விட்டது நண்பரே......கி.நா.களின் கழுதை நெறித்த பெருமை கடந்த 2மாதம் மற்றும் இந்த மாதம் வந்த இரு கி.நா களையே சாரும் ....

      Delete
  39. Sir, இந்த பதிவில், கி.நா. குறித்த உங்கள் கருத்துக்கு -1111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111

    ReplyDelete
  40. Dasu bala கருத்துடன் உடன்படுகிறேன்.Lmsல் வந்த கிராபிக் நாவல் பிடித்திருந்தது.அதனை போன்ற சுவாராஸ்யமான கிராபிக் நாவல்களை, முயற்சிக்கலாம் என்பதே என் கருத்து.Dasu bala கருத்துக்கு+2.

    ReplyDelete
    Replies
    1. ///அதனை போன்ற சுவாரஸ்யமான ///------ ஏதும் லென்ஸ் வைத்து பார்த்து கண்டு பிடித்தீர்களா சார் ...

      Delete
  41. எடிட்டர் சார்.!இந்த வருட கோட்டா அனைத்து தரப்பினரையும் சந்தோசப்படுத்தியது.!இதைப்போலவே கொஞ்சம் கூடகுறைந்தால் பரவாயில்லை.!

    ReplyDelete
  42. எடிட்டருக்கும் , வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் _/\_ :-)

    ReplyDelete
  43. டியர் விஜயன் சார்,

    கிராஃபிக் நாவல் முத்திரையுடன் வந்த "இரவே இருளே கொல்லாதே, விண்ணில் ஒரு வேங்கை, விடுதலையே உன் விலை என்ன" உள்ளிட்ட சில one-off கதைகள் படு சுமாராக இருந்தன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே போல, கார்ட்டூன் கதைகள் வரிசையில் வந்த, இம்மாத ஜில் ஜோர்டான் & ப்ளூகோட்ஸ் கதைகளும் படு மொக்கை ரகம் (sorry, சுத்தமாக சிரிப்பே வரவில்லை). அதற்காக இனி கார்ட்டூன் கதைகளே வேண்டாம் என்று நான் சொல்ல முடியுமா? கதை, ஓவியம், மொழிபெயர்ப்பு, கலாச்சார இடைவெளி போன்ற ஏதோ ஒரு காரணத்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை பிடித்தோ பிடிக்காமலோ போகலாம்!

    காமிக்ஸோ, கிராஃபிக் நாவலோ - பிறமொழி இணைய விமர்சனங்களை(யும்) கருத்தில் கொண்டு, ஓரளவுக்கு சுவாரசியமான கதைகளாகத் தேர்ந்தெடுத்து வெளியிட்டாலே போதுமானது. அதை விடுத்து, கிராஃபிக் நாவல் மீதான சில வாசகர்களின் அபிப்ராயத்தை மாற்றியே தீர்வேன் என்று முனைப்புடன் நீங்கள் கதைகளைத் தேர்ந்தெடுப்பதும், அவற்றிக்கு பக்கம் பக்கமாக "முன்னெச்சரிக்கை" முன்னுரைகள் அளிப்பதும் தேவையற்றது.

    கிளாசிக் காமிக்ஸ்களுக்கு தனி சந்தா என்பது போல, கிராஃபிக் நாவல்களுக்கும் தனி சந்தா என்று தானே இருக்கிறது?! எனவே, அனைத்து வயதினருக்கும் / ரசனைகளுக்கும் ஏற்ற "மச மச" வகையறாக் கதைகளை "கிராஃபிக் நாவல் சந்தா"-வில் வெளியிடாமல், கொஞ்சம் போல்டான கதைகளாக தேர்ந்தெடுத்து வெளியிடுங்கள்.

    அம்மாதிரிக் கதைகள் ஒவ்வொன்றும், நான் உள்ளிட்ட அனைவருக்கும் நிச்சயம் பிடித்து விடும் என்று சொல்வதற்கில்லை தான். இருந்தாலும், வழக்கமான கதைகளில் இருந்து கொஞ்சம் மாறுபட்டக் கதைகளைப் படித்தோம் என்ற திருப்தியாவது மிஞ்சும். கிராஃபிக் நாவல் தனி வரிசை இங்கே அறிமுகப் படுத்தப் பட்டதும் இதே நோக்கத்தில் தானே?!

    ReplyDelete
    Replies
    1. //காமிக்ஸோ, கிராஃபிக் நாவலோ - பிறமொழி இணைய விமர்சனங்களை(யும்) கருத்தில் கொண்டு, ஓரளவுக்கு சுவாரசியமான கதைகளாகத் தேர்ந்தெடுத்து வெளியிட்டாலே போதுமானது. அதை விடுத்து, கிராஃபிக் நாவல் மீதான சில வாசகர்களின் அபிப்ராயத்தை மாற்றியே தீர்வேன் என்று முனைப்புடன் நீங்கள் கதைகளைத் தேர்ந்தெடுப்பதும், அவற்றிக்கு பக்கம் பக்கமாக "முன்னெச்சரிக்கை" முன்னுரைகள் அளிப்பதும் தேவையற்றது.

      கிளாசிக் காமிக்ஸ்களுக்கு தனி சந்தா என்பது போல, கிராஃபிக் நாவல்களுக்கும் தனி சந்தா என்று தானே இருக்கிறது?! எனவே, அனைத்து வயதினருக்கும் / ரசனைகளுக்கும் ஏற்ற "மச மச" வகையறாக் கதைகளை "கிராஃபிக் நாவல் சந்தா"-வில் வெளியிடாமல், கொஞ்சம் போல்டான கதைகளாக தேர்ந்தெடுத்து வெளியிடுங்கள்.
      //

      அருமை அருமை உண்மை special +1

      // வழக்கமான கதைகளில் இருந்து கொஞ்சம் மாறுபட்டக் கதைகளைப் படித்தோம் என்ற திருப்தியாவது மிஞ்சும். கிராஃபிக் நாவல் தனி வரிசை இங்கே அறிமுகப் படுத்தப் பட்டதும் இதே நோக்கத்தில் தானே?!//

      அப்படி கேளுங்க சார் ....
      :)

      Delete
    2. உண்மை உண்மை! கதைத் தேர்வுகளில் சற்று அதிகக் கவனம் செலுத்தி 'தனி சந்தாவாக' அறிவிக்கப்பட்டாலே போதும்! வழக்கமான 'நங், கும், சத்' வகையறா கதைகள் நம் வாசிப்பு ரசணையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லாது!
      எவ்வளவுதான் கதைத் தேர்வில் கவனம் செலுத்தினாலும் நான்கில் ஒரு கி.நா'வாவது வாசகர்களுக்குப் பிடிக்காமல் போய்விடும் என்பது உலக நியதி! அதில் தவறும் இல்லை!

      Delete
    3. //Vijay: வழக்கமான 'நங், கும், சத்' வகையறா கதைகள் நம் வாசிப்பு ரசணையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லாது! //

      உண்மை விஜய், எடிட் இன் கிழ்க்கண்ட இந்த வார்த்தைகள் என்னை ஆச்சரியபடுத்தவில்லை

      //Edit: வழக்கம் போல டெக்ஸின் வரிகளில் வீரியமும்; கார்சனின் கோட்டாவில் கலாட்டாக்களையும் கொண்டு வந்ததைத் தாண்டி... ‘ணங்...’ ‘கும்...’ ‘படீர்...’ ‘தொபீர்’ என்று எழுதி வைத்ததோடு கையைத் தட்டிவிட முடிந்தது!//

      Delete
    4. //காமிக்ஸோ, கிராஃபிக் நாவலோ - பிறமொழி இணைய விமர்சனங்களை(யும்) கருத்தில் கொண்டு, ஓரளவுக்கு சுவாரசியமான கதைகளாகத் தேர்ந்தெடுத்து வெளியிட்டாலே போதுமானது. அதை விடுத்து, கிராஃபிக் நாவல் மீதான சில வாசகர்களின் அபிப்ராயத்தை மாற்றியே தீர்வேன் என்று முனைப்புடன் நீங்கள் கதைகளைத் தேர்ந்தெடுப்பதும், அவற்றிக்கு பக்கம் பக்கமாக "முன்னெச்சரிக்கை" முன்னுரைகள் அளிப்பதும் தேவையற்றது//
      +1

      Delete
    5. +1. இதை விட தெளிவாக இதை சொல்ல முடியாது. பௌன்செர், XIII, எல்லாமே கிராபிக் நாவல்தான். கி. நா. வேண்டாம் என்றால் பௌன்செர், XIII, எல்லாம் நமக்கு கிடைத்திருக்காது.

      Delete
  44. 'காமெடி கிங்' கிட் ஆர்ட்டின் கண்ணன் அவர்களின் தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டதிற்கு எனது வாழ்த்துக்கள்...விரிவான ஒரு பதிவுடன் மதியம் வருகிறேன்..!
    அதுவரை ஜாலிக்கு ஒரு...இங்கே'கிளிக்'

    ReplyDelete
  45. அறைக்கதவை தாளிட்டுக் கொண்டு ஹஹஹா, ஹிஹிஹி, ஹோஹோஹோ என்று கூவிகொண்டு, எகிறி குதித்து, கும்மாளமிட்டு, குட்டிக்கரணம் போட்டு, ஆஹா, ஆஹா என்று கொண்டாடி தீர்க்கவேண்டிய சமாச்சாரம். எப்படியோ மொத்தத்தில் கி.நா.வுக்கு பால் ஊற்றியாகி விட்டது.

    அப்புறம், வாழ்த்துக்கள் ஸ்மர்ப் படம் போட்ட கிட்ஆர்டின் கண்ணன்....

    ReplyDelete
    Replies
    1. //அறைக்கதவை தாளிட்டுக் கொண்டு ஹஹஹா, ஹிஹிஹி, ஹோஹோஹோ என்று கூவிகொண்டு, எகிறி குதித்து, கும்மாளமிட்டு, குட்டிக்கரணம் போட்டு, ஆஹா, ஆஹா என்று கொண்டாடி தீர்க்கவேண்டிய சமாச்சாரம்.//

      :D

      // எப்படியோ மொத்தத்தில் கி.நா.வுக்கு பால் ஊற்றியாகி விட்டது.//


      தவறான புரிதல் நண்பரே //இத்தோடு கிராபிக் நாவல்களுக்கு கோவிந்தா ! என்ற ரீதியிலான அவசரத் தீர்மானமாக இதனைப் பார்த்திடல் வேண்டாமே//என்று ஆசிரியர் கூறியுள்ளார் .
      தலிவரும் அவ்வபோது கி ந வை ஆதரித்து வந்திருக்கிறார் என்பதும் கவனிக்க தக்கது.

      Delete
    2. ஹாஹா.. சதீஷ், எடிட்டர் என்னதான் கி.நா. காதலராக இருந்தாலும், விற்பனை மற்றும் வரவு செலவு கணக்குகளைப் பார்வையிடும் தருணத்தில், கி.நா.க்களை கைகழுவிட ஏற்றதொரு தருணம் கிடைக்கும் பட்சத்தில் பயன்படுத்திக் கொள்ளத்தானே செய்வார்.

      Delete
    3. // எப்படியோ மொத்தத்தில் கி.நா.வுக்கு பால் ஊற்றியாகி விட்டது.//

      கி.நா'ன்றது ஒரு அனகோண்டா பாம்பு'னு தெரியாம அதுக்குப் பால் ஊத்திட்டீங்களே வெங்கடேஷன் அவர்களே... ;)

      Delete
    4. Vijay, எப்படி சார் இப்படி யோசிகிறீங்க , உங்களின் timing காமெடி கண்ணில் நீர் வழிய சிரிப்பு

      :D

      Delete
    5. வெங்கடேஸ் என்று பெயர் இருந்தாலே கி.நா. பிடிக்காது போல்உள்ளது.!

      Delete
    6. ஒரு வெங்கடேஸ் -சுத்த சைவம் ,........
      ஒரு வெங்கடேஸ் -வறுத்த கறி விரும்பி ...
      ஆனால் இருவரும் கி.நா.களின் எதிரிகள் .....இதைப் போலவே தாங்க கி.நா.வும் ..........ஒன்று சூப்பர் ஹிட் ஆக அமையுது .........ஒன்று மகா மெகா ப்ளாப் ஆக அமையுது ......ஆழ்ந்த தேடல் தான் அட்டகாசமான கி.நா.கிடைக்க ஒரே வழி......அப்படி கிடைத்த ஒன்று ஆர்ப்பாட்டமாக ரெடியாகிக்கொண்டு உள்ளதாமே .......இதைப்படித்து விட்டு இருவரும் இ.இ.கொ. படித்த மாதிரி ரியாக்ஷன் கொடுத்தால் கம்பனி பொறுப்பல்ல .....

      Delete
  46. // கிராபிக் நாவல்களை பாதுகாத்து வைத்தாலும் மீண்டும் அதை தொடவே தோன்றுவதில்லை (என்னை பொறுத்த வரை )...//

    சங்க உறுப்பினர்களோட உணர்வை சரியா பிரதிபலிக்கறீங்க தலீவரே... அதனாலதான் நீங்க தலீவரா இருக்கறிங்க தலீவரே...

    ReplyDelete
  47. ப்ளுகோட் பட்டாளத்தின் -தங்கம் தேடிய சிங்கம் பகபகவென்று சிரிக்கவைக்கா விட்டாலும் அங்காங்கே கிச்சு கிச்சு மூட்டிய உணர்வை தந்தது.வழக்கம்போல் மொழிபெயர்ப்பு,அட்டைப்படம்,ஆர்ட் வொர்க்,பின்னணி வர்ணச்சேர்க்கைகள் ஓகே.
    ஜில் ஜோர்டனை விட ப்ளுகோட் சாகசத்திற்கு பின்னிணியில் வர்ணங்கள் ஏன் மிக அடர்த்தியாக உள்ளன.ஒருவேளை கதைக்களம் தான் காரணமோ ?
    மொத்தத்தில் ப்ளு கோட் ஓகே எடி சார்.

    ReplyDelete
  48. @ ALL : ஞாயிறு வணக்கங்கள் guys ! விடிய விடிய விஞ்ஞானியை விடிந்த நேரம் முதலாய் எழுதிக் கொண்டிருப்பதிலிருந்து ஒரு குட்டி பிரேக் எடுத்துக் கொண்டு இங்கே வந்தால் கச்சேரி களை கட்டி நிற்பதைப் பார்க்க முடிகிறது ! கி.நா. காதலர்களோ ; கி.நா.கல்தா ஆதரவாளர்களோ - இரு அணிகளுக்குமே நான் பதிவில் சொல்லியிருந்த ஒரு விஷயத்தை அடிக்கோடிட விரும்புகிறேன் !

    இது கி.நா.வுக்கொரு முடிவுரை அல்ல ..... !

    கி.நா.க்கள் வரும் நாட்களிலும் தொடரும் - but அவற்றிற்கென உள்ள தனித் தண்டவாளத்தில் மாத்திரமே ! கி.நா. வெளியிட வேண்டுமே என்ற கட்டாயத்துக்காக இனி கதைகள் தேர்வாகிடாது என்பதே நான் சொல்ல நினைத்த சேதி ! ABSOLUTE HITS என்ற தைரியத்தை தந்திடும் கதைகளை மாத்திரமே இனி தேர்வு கண்டிடும் !
    இங்கே சின்னதாயொரு கொசுறுச் சேதியும் கூட - அத்தகையதொரு தொடர் ஏற்கனவே தேர்வாகி - ஓசையின்றி அதன் பணிகளும் நடந்து வருகின்றன ! நிச்சயமாய் எழுந்து நின்று நாமனைவரும் ஆரவாரம் செய்திடப் போகும் தொடர் இது என்பதில் எனக்கு 200% நம்பிக்கையுள்ளது ! And இதுவொரு அழுகாச்சிக் காவியமும் அல்ல !

    "விடுதலையே உன் விலையென்ன ?" இதழைப் பொறுத்த வரை அது ரெகுலர் சந்தாவினில் இடம் பிடித்தது தான் தவறாகப் பார்க்கத் தோன்றுகிறது ! And yes , கதையில் ஆழம் பற்றாது என்பதும் ஒரு குறையே ! இது போன்ற கதைகளைத் தவிர்த்து - with better story selections- we should be fine !

    ReplyDelete
    Replies
    1. இப்படியாக, மீண்டும் தர்மமே வென்றது! :)

      Delete
    2. // நிச்சயமாய் எழுந்து நின்று நாமனைவரும் ஆரவாரம் செய்திடப் போகும் தொடர் இது என்பதில் எனக்கு 200% நம்பிக்கையுள்ளது ! And இதுவொரு அழுகாச்சிக் காவியமும் அல்ல ! //

      இது போன்ற முன்னுரைகளும், ஒரு சிலரை மட்டுமே மனதில் கொண்ட கதைத் தேர்வுகளும் வேண்டாம் என்பது தான் அடியேனும் அடிக்கோடிட விரும்பிய விஷயம்! :) குறிப்பிட்ட சில வாசகர்களுக்கு அழுகாச்சி காவியங்கள் பிடிக்காமேலேயே போகட்டுமே - அதனால் இப்ப என்னவாம்?! :) "அழுகாச்சி = கி.நா." என்பதான பொதுப்படுதலை விட்டு வெளியில் வாருங்களேன் ப்ளீஸ்!

      //"விடுதலையே உன் விலையென்ன ?" - இது போன்ற கதைகளைத் தவிர்த்து - with better story selections- we should be fine !//
      நல்ல முடிவு!

      Delete
    3. அப்பாட இந்த மாதிரி டெர்ரர் கிராபிக் நாவல்களை படித்து(பலவந்தமாக) ஒரு நாள் கண்டிப்பாக ரத்தம் கக்கி சாகப்போறோம் என்று நினைத்து நடுங்கி வந்தேன்.
      ஹையா...
      இனி தனி சந்தா தாரர்களுக்கு மட்டுமே அனுப்புவாங்களாம்...
      மாசத்திற்கு மாசம் கிராபிக் நாவல்களை படித்து இன்புற இருக்கும் அன்பு நண்பர்களை வாழ்த்தி விட்டு நாம ஸ்கேப்டா சாமி.....;-)

      Delete
    4. //இங்கே சின்னதாயொரு கொசுறுச் சேதியும் கூட - அத்தகையதொரு தொடர் ஏற்கனவே தேர்வாகி - ஓசையின்றி அதன் பணிகளும் நடந்து வருகின்றன ! நிச்சயமாய் எழுந்து நின்று நாமனைவரும் ஆரவாரம் செய்திடப் போகும் தொடர் இது என்பதில் எனக்கு 200% நம்பிக்கையுள்ளது ! //
      special +1

      Karthik Somalinga சொன்னது போல் அழுகாச்சிக்/அல்லாத என்று வகை படுத்தாது publish செய்தல் கி ந வின் தனி சந்தவிற்கு மேலும் பெருமை சேர்க்கும். (I am not lover of sad ending still கதையின் சுவாரசியம் முடிவு எப்படி இருக்குமோ என்பதில் தான் அது சில நேரத்தில் miss ஆவதாக படுகிறது )

      //மீண்டும் தர்மமே வென்றது! //
      Erode VIJAY:நீங்க உற்சாக பதிவிடும் போது forum கலக்கல் தான் நண்பரே ! :)

      Delete
    5. நெற்றி பொட்டில் அடித்தாற்போல் எடிட்டர் தனிச்சந்தா என்று கூறிவிட்டார்.இனிமேல் கர்சீப் வைத்துக்கொண்டு அழங்கள்,பூசனிக்காயை சமைப்பதை தவிர என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.கதை முடிவை அவரவர் இஷ்டத்துக்கு பிடித்தமாதிரி வைத்துக்கொள்ளுங்கள்.எங்களுக்கு தலைவலி தைலம் மிச்சம்.!(ஆனாலும் கி.நா.நண்பர்களுக்காக வழக்கம் போல் இரண்டு புத்தகங்கள் வாங்குவேன்.ஈரோடு விஜய் கூறியது போல் பின்னர் தாத்தா ஆனபின் புரியுமோ?என்னவோ.?

      Delete
    6. //இது போன்ற முன்னுரைகளும், ஒரு சிலரை மட்டுமே மனதில் கொண்ட கதைத் தேர்வுகளும் வேண்டாம் என்பது தான் அடியேனும் அடிக்கோடிட விரும்பிய விஷயம்!//
      +1

      Delete
    7. //ஈரோடு விஐய்//தர்மம் என்றால் உங்க பாஷையில் என்ன?,"வைகாசி பொறந்தாச்சு"படத்தில் ஜனகராஜ் மாதிரி வேறு அர்த்தம் வைத்துள்ளீர்களோ.!!அப்பாடா.!மழைபேஞ்சு ஓய்ந்தமாதிரி இருந்தது.!

      Delete
    8. Edit Sir,
      one shot/new genre கதைகளின் quotaவை 2016இல் அதிகபடுத்த கோரிக்கை வைக்கின்றேன்.

      Delete
    9. @ M.V

      ///தர்மம் என்றால் உங்க பாஷையில் என்ன?,"வைகாசி பொறந்தாச்சு"படத்தில் ஜனகராஜ் மாதிரி வேறு அர்த்தம் வைத்துள்ளீர்களோ.!! ///

      'பதிவர்கள் தினத்தை' முன்னிட்டு எடிட்டர் கொஞ்சம் சந்தோசமா இருக்கட்டுமேன்னு 'மீண்டும் தர்மமே வென்றது'னு ஒரு வார்த்தைய சொல்லிட்டு ஒரு குட்டித் தூக்கம்போட அடுப்படிக்கு போயிருந்தேன். நீங்க அதையப்போயி சீரியஸா எடுத்துகிட்டு...

      @ Satishkumar

      ந..நன்றி நண்பரே! :)

      Delete
    10. Dear Editor...every comics or cartoon series will have Average and Below average stories. However we welcome that you will be putting more efforts in selection of stories. I hope Most of us will support the selection of GN in the future whether it is on regular subscription or separate subscription...

      Delete

    11. எடி சார்,

      Jason Brice கிராபிக் நாவல் வரும் வாய்ப்பு இருக்கிறதா. அமானுஷ்யம் மற்றும் அருமையான சித்திரங்கள்.

      Delete
  49. // ஆகஸ்டில் வரக்காத்துள்ள இந்த இதழ் சந்தேகமின்றி “கத்தி மேல் கதக்களி“ என்பதில் ஐயமில்லை! //

    வாவ் சூப்பர் விஜயன் சார்
    அப்ப ஆகஸ்டுல அதிரடி மற்றும் காமடி சரவெடிகள் காத்திருக்குன்னு சொல்லுங்க

    // அவரது பார்வையில் அவரது Top 3 மார்ட்டின் கதைகளைத் தேர்வு செய்து சொல்லும்படிக் கேட்டுள்ளேன்! //

    யாஹூ ஜி மெயில் எப்புடி வேண்டுமானாலும் சொல்லிக்கலாம்

    அப்பாடி அடுத்த வருடம் மார்டின் கதைகள் 3 வரப்போகுது
    அடி தூளு ;-)
    .

    ReplyDelete
  50. // “The Classic Cartoon Collection“ என்ற பெயர் செம பொருத்தமாக இருப்பதாகத் தோன்றியது! ஆர்டினை நேற்றைக்கும்; நீல மனுஷர்களை இன்றைக்கும் தனது display-ல் சுமந்து திரியும் தீவிர கார்ட்டூன் ரசிகரான நண்பர் Kid ஆர்டின் கண்ணனின் தேர்வு இது! வாழத்துக்கள் நண்பரே! //

    அருமையான தேர்வு சார்

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் KiD ஆர்டின் KannaN அவர்களே
    ( பூனையாரே கிர்ர்ர் கிர்ர்ர் கிர்ர்ர் )
    .

    ReplyDelete
  51. போன மாதத்து மார்டின் கதை அறுமை, ஒரு காமிக்ஸ் எப்படி இருக்க வேண்டும் என்ற நியதிப்படி இருந்தது. பெட்டர் நீங்கள் மாதம் ஒரு மார்ட்டின் கதையை கறுப்பு வெள்ளையில் வெளி இடலாம். கண்டிப்பாக செம ஹிட் ஆகும்.விடுதலையே உன் விலையென்ன 10 பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. கிராபிக் நாவல் என்றாலே தாங்க முடியாத மொக்கை என்று மனதில் அழுத்தமாக பதிந்து விட்டது, இந்த் மாதிரி கதைகளை படிப்பதால் :(

    ReplyDelete
  52. கா.கா. அனைவருக்கும் வணக்கம். நான் நீண்ட நாட்களாக சொல்ல விரும்பிய ஒரு விசயத்தை இன்று கொட்டிவிடுகிறேன். தினம் தினம் ஏகப்பட்ட பணி சுமையாலும், பலவிதமான மன அழுத்தங்களாலும், சுற்றிலும் நீக்கமற நிறைந்துவிட்ட வன்முறைக்களங்களையும் மறந்து நாம் வாழும் வாழ்க்கையில் சிறிது உற்சாகம் கொள்ள என்னைப்போனறபல நண்பர்கள் கையில் எடுப்பது காமிக்ஸ் புத்தகங்களைத்தான். (எனக்குத்தெரிந்த கா.காதலர்களில் 90சதவீதம் டாஸ்மாக் உள்ளிட்ட எந்த பழக்கங்களுக்கும் ஆட்படவில்லை). சமீப காலமாக நினைக்கவும் தயங்கும் அளவுக்கு வன்முறை நிறைந்த தொடர்களை வெளியிடுகிறீர்கள். (உதாரணம் பவுன்சர்). தயவு செய்து இனிமேல் இப்படி ஒரு தொடரை தேர்வு செய்யவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நாம் எப்போதுதான் குண்டு சட்டிக்குள்ளிருந்து வெளிவருவது என்பது சில நண்பர்களின் கேள்வி. பலஇன்னல்களை அனுபவித்து ஒரு மாற்றத்தை விரும்பி புத்தகத்தை கையில் எடுத்தால் அதிலும் அழுகையும் வன்முறையும் தாங்கவியலாத துன்பத்தை தரக்கூடிய சம்பவங்களையும் காணும்போது மனது மிகவும் சலிப்படைவதோடு வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. சாதரணமாக மனித மனம் தன்னால் செய்ய முடியாத விசயங்களை பிறர் செய்வதை கேட்பதையோ பார்ப்பதையோ படிப்பதையோ விரும்புகிறது. இத்தகைய உணர்வினை கெளபாய் கதைகளும் டிடெக்டிவ் கதைகளும், கார்ட்டூன் கதைகளும் வெற்றி பெறுகின்றன. ஒரு சில நண்பர்கள் மனதளவில் முதிர்ச்சிடைந்து அதனால் வித்தியாசமான சில உணர்வுகளை விரும்பலாம். அதற்காக வன்முறையையே அடிப்படையாகக்கொண்ட கதைக்களங்களைத் தவிர்த்தால் பெரும்பாலான கா.காதலர்களிம் மனம் சந்தோசமடையும். நம் காமிக்சை படிக்கும் ஒன்றிரண்டு இளம் தலைமுறையும் நம்மால் கெட்டுப்போகவில்லை என்ற சந்தோசத்தையும் நாம் பெறமுடியும். மேலும் இளைய தலைமுறையின் கவனத்தை Tv, cellphone, cinema போன்றவற்றின் மேலிருந்து நம் பக்கமாக திருப்ப வேண்டுமானால் சில தியாகங்களை செய்தால்தான் முடியும். அதில் ஆசிரியரின் பங்குதான் அதிகம். மேல்தட்டு வர்க்கத்தைவிட நடுத்தர, ஏழைகளிடம் மட்டுமே இன்னும் படிக்கும் வழக்கம் அழியாமல் உள்ளது. அதனால் அவர்களையும் கவனத்தில் கொள்ளுங்கள். ஒரே வரி சொல்ல வந்து என்னவெல்லாமோ சொல்லிவிட்டேன். எங்களுக்கு தேவை மன ஆறுதல், மாற்றம், சிறிய சந்தோசம். அவ்வளவே. அது காமிக்ஸ் வழியாக இருக்கவேண்டும் என்பதே எங்கள் ஆசை. சொல்ல வந்ததை தெளிவாக சொல்லிவிட்டேனா என்பது தெரியவில்லை.மேலும் ஏதாவது ஆட்சேபனைக்குறிய விசயங்களை சொல்லியிருந்தால் மன்னிக்கவும். நன்றி நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக சொன்னது பாராட்டுதலுக்கு உரியது நண்பரே!

      Delete
    2. //ஆட்சேபனைக்குறிய விசயங்களை சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.//

      பவுன்சர் வன்முறை நிறைந்த தொடர் தான். இது உங்களுக்குமான இடம் சொல்ல நினைத்ததை சொல்லுவதற்கு மன்னிப்பு எல்லாம் வேண்டம் நண்பரே.

      Delete
    3. கூர்த்து பார்த்தல் அனைத்து cowboy கதைகளும் ரத்தம் சிதறும் கதைகளே இங்கு background detail உடன் கலர் பிரிண்ட் வருகிறது. சில B/Wஇல் அல்லது ரதத்தையும் முழு background detailலும் காட்டுவதில்லை.

      Delete
    4. நீங்கள் கூறுவது உண்மைதான்.!ஆனாலும் ஒட்டகங்கள் ஒருவகை முள் செடியில் உள்ள இலைகளை, முள்குத்தி ரத்தம் வடிந்தால் கூட விடாமல் அந்த இலைகளை ருசித்து உண்ணுமாம் அதைபோலவே பௌன்சர் கதைகள் அராத்து கதைகளாக இருந்தாலும் படித்து ரசிக்காமல் இருக்கமுடியவில்லை.

      Delete
    5. @Rajasekaradeha

      அழகான தன்னிலை விளக்கம்! இத்தளம் இன்னுமொரு 'உள்ளது உள்ளபடி' நண்பரைக் காண்பதில் மகிழ்ச்சியடைகிறது. உங்கள் ஒருவருக்காகவே எல்லா கி.நா'களையும் நிற்கவைத்து சுட்டுத்தள்ளிவிட்டால்கூட எனக்கும் சந்தோசமே!

      Delete
    6. . எங்களுக்கு தேவை மன ஆறுதல், மாற்றம், சிறிய சந்தோசம். அவ்வளவே. அது காமிக்ஸ் வழியாக இருக்கவேண்டும் என்பதே எங்கள் ஆசை #

      அழகாக ...தெளிவாக உள்ளது உள்ள படி சொல்லி ஊள்ளிர்கள்...பாராட்டுகள் நண்பரே ...

      Delete
    7. ராஜசேகர்வேதிகா... காமிக்ஸ் என்பதற்கான அர்த்தத்தை மிகவும் நேரடியாக எளிமையாக சொல்லி இருக்கிறீர்கள்... நன்றாகவும் எழுதி இருக்கிறீர்கள்... அவ்வப்பொழுது பதிவு இடுங்களேன்....

      Delete
    8. ////எங்களுக்கு தேவை மன ஆறுதல், மாற்றம், சிறிய சந்தோசம். அவ்வளவே. அது காமிக்ஸ் வழியாக இருக்கவேண்டும் என்பதே எங்கள் ஆசை. ////

      காமிக்ஸ் என்பது நம் உலகம் .
      தனி உலகம்.
      கோடான கோடி பணம் கொடுக்க முடியாத சந்தோஷத்தை, இனிமையான பால்ய நினைவுகளை கொண்டு வருவது காமிக்ஸ் வாசிப்பு.
      அதுவே டார்ச்சராக மாறும்போது ஏற்படும் விரக்தி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒன்று.
      நமக்கு நம்ம லயனும், முத்துவும்,
      விஜயன் என்கிற அந்த மந்திர பெயரும் போதும்.
      எந்த கிராபிக் நாவல் Experiment- ம் தேவையில்லை.

      Delete
  53. கி.நா - எனக்கு வேண்டும்! தனி சந்தாவாக வருவது அனைவரையும் சந்தோஷபடுத்தும் விஷயம்! எனது ஆதரவு இதற்கு உண்டு!

    ReplyDelete
  54. CCC சரியரன தலைப்பு. வரழ்த்துக்கள் கிட் ஆர்டின் சர்ர். இன்று "பதிவர் தினமர?" அனைவருக்கும் என் வரழ்த்துக்கள்.

    ReplyDelete
  55. 'கெக்கேபெக்கே'னு விழுந்து விழுந்து சிரிக்கும்படியான கி.நா ஏதாச்சும் இருக்குங்களா எடிட்டர் சார்?

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் கிட் ஆர்ட்டின் கண்ணனும் சேர்ந்து எழுதினால் தான் உண்டு. நீங்க கி. நாவுக்கு எதிரியா நண்பரா...? நல்லவரா... கெட்டவரா? ஒண்ணுமே புரியலையே. நாயகன் கமல் மாதிரி குழப்புறிங்களே.

      ரவி கண்ணன் - வாழ்த்துகள்.

      Delete
    2. :-) :-) :-)

      அப்படி இருந்தால் நான்தான் முதல் கிராபிக் நாவல் ரசிகன் ....

      Delete
    3. //நீங்க கி. நாவுக்கு எதிரியா நண்பரா...? நல்லவரா... கெட்டவரா? ஒண்ணுமே புரியலையே. ///

      குட் கொஸ்டின்! அதாவது... 'நீங்களே ஒரு நடமாடும் கி.நாவா'னு கேட்கவரீங்க... அதானே? ;)

      Delete
    4. Paranitharan K // அப்படி இருந்தால் நான்தான் முதல் கிராபிக் நாவல் ரசிகன் ....//

      தலீவரே என்ன இது பால் மார்றீங்க... (அப்ப வேற வழியில்ல... நாமளும் மாறிடனும்...)

      Delete
    5. @ ALL : 2016-ல் தலீவரே "I want more கி.நா. " என்று அடம் பிடிக்கப் போகிறாரா-இல்லியா பாருங்களேன் !!

      Delete
    6. ///தலீவரே "I want more கி.நா. " என்று அடம் பிடிக்கப் போகிறாரா-இல்லியா பாருங்களேன் !!///---அதுதானே எங்கள் பயமும் கூட சார் . சமீப காலங்களில் கால்பந்து உலகின் ஸ்லாங் தான் நமக்கு நடக்கு "often hyped matches always fall flatter "..

      Delete
  56. Dear Editor ...We eagerly wait for the July - Tex Willer edition... But at the same time, we wish to inform you that one promise is long pending. That is reprint of the Wild West Special...waiting since Jan 2015. Any plan to release that in July..??

    ReplyDelete
    Replies
    1. Comic Rider Arul : மன்னிக்கணும்...இந்தாண்டின் இறுதியை அறிவிக்கப்பட்ட நார்மல் இதழ்களோடு தாண்டுவதே தம்பிரான் புண்ணியம் என்ற நிலையில் மறுபதிப்புகளில் பணமுடக்கம் சாத்தியமாகாது ! ஈரோட்டில் நமக்கு ஸ்டால் கிடைத்து ; விற்பனை நன்கு அமைந்தால் maybe possible....if not that's for 2016 only !

      Delete
  57. Erode VIJAY14 // இப்படியாக, மீண்டும் தர்மமே வென்றது! :) //

    ஹ்ஹ்ம்ம்... அப்ப மறுபடியும் கிநா வரப்போவுதா? என்ன கொடுமைடா சாமி இது?

    நம்ம மடிப்பாக்கத்தார் சொன்ன மாதிரி தர்மம்ங்கிறதுக்கு வேற அர்த்தம் இருந்தா பரவாயில்லையாத்தான் இருக்கும்...

    ஆனாலும் 'கெக்கேபெக்கே'னு விழுந்து விழுந்து சிரிக்கும்படியான கி.நா ஏதாச்சும் வந்தா நானும் கி.நா. ஆதரவு பார்ட்டியா மாறறதுக்கு ரெடிதான்

    ReplyDelete
    Replies
    1. SV VENKATESHH : //'கெக்கேபெக்கே'னு விழுந்து விழுந்து சிரிக்கும்படியான கி.நா ஏதாச்சும் வந்தா நானும் கி.நா. ஆதரவு பார்ட்டியா மாறறதுக்கு ரெடிதான்//

      SMURFS கதைகளுக்கு அதன் ஆங்கிலப் பதிப்பகம் இட்டிருக்கும் பெயர் - "கி.நா." தான் ! வேண்டுமானால் அதையே நாமும் பின்தொடரலாம் ! :-) :-)

      Delete
  58. திடீர்னு ஒருநாள் எல்லா படைப்பாளிகளும் ஒரு காமிக்ஸ்-மீட் போட்டு " டெக்ஸ், டைகர், ஷெல்டன், லக்கிலூக் உள்ளிட்ட அனைத்து நாயகர்களின் கதைகளும் இனி கி.நா பாணியில் மட்டுமே வெளிவரும்" அப்படீன்னு ஒரு அறிவிப்பை வெளியிட்டால் நம்ம 'கி.நா எதிர்ப்பு குழு'வின் நிலைமை என்னவாகும்?!! ஹிஹி!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : இப்போவே நமது active நாயகர்களுள் ஒருவரது கதைத் தொடர் புதியதொரு பாணியில் களம் இறங்கியுள்ளது - சென்ற மாதம் முதலாய் ! அடுத்த ஞாயிறு அதைப் பற்றி எழுதுகிறேன் !

      Delete
    2. //இப்போவே நமது active நாயகர்களுள் ஒருவரது கதைத் தொடர் புதியதொரு பாணியில் களம் இறங்கியுள்ளது - சென்ற மாதம் முதலாய் ! //

      ரிப்போர்டர் ஜானி?

      Delete
  59. பெண்கள் TV சீரியல்களைப் பார்த்து கதறியழுது தங்கள் சோகங்களுக்கு ஆறுதல் தேடிக்கொள்வதைப்போல நாமும் ஏன் கி.நா படித்து நம் சோகங்களைத் தணித்துக் கொள்ளக்கூடாது? - என்பதே என் கேள்வி!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : சேதி தெரியுமோ ? இப்போதைய trend டப்பிங் சீரியல்கள் தானாம் ! அதிலும் ஹிந்தியில் எடுக்கப்படும் colorful சீரியல்கள் தான் ஹிட் அடிக்கின்றனவாம் ! அதில் வரும் ஆடம்பரமான செட்கள் ; ஆடையலங்காரங்கள் இப்போதெல்லாம் பெண்கள் மத்தியில் கவனிக்கப்படுகின்றனவாம் ! குமுறிக் குமுறி அழச் செய்யும் சீரியல்கள் எல்லாம் மேக்கி நூடுல்ஸ் போலாகிடும் போல் தெரிகிறது !

      Delete
  60. கிராபிக் நாவல்கள் !?

    ATM மையத்திற்குச் செல்லும் நபர், தனக்குத் தேவையான பணத்தை தன்னுடைய கணக்கிலிருந்து எடுத்து விட்டப் பின்பும், அந்த ATM மெஷினில் உள்ள மொத்தப் பணத்தையும், தன் பராமரிப்பில் வைத்துக் கொள்ள நினைக்கும் எண்ணம், எப்படி நகைப்புக்குரியதோ, அது போலத் தான் இங்கு நாள் முழுவதும் பதிவிடப்படும் பின்னூட்டங்கள் முகைநரண் கொண்டிருப்பதாக தோன்றுகிறது !

    அதுபோலவே, அடுத்த வருடம் 2016 ல் கிராபிக் நாவல்கள், தனிச் சந்தாவில் மட்டுமே பிரசுரிக்கப்படும் என்று எடிட்டர் அறிவித்தப் பின்பும், கிராபிக் நாவல்கள் தேவையே இல்லை என்ற தர்க்கமும், விதாண்டா வாதமும் ! காமிக்ஸ் காதலர்களில், வெறும் - டெக்ஸ் வில்லர், லக்கி லூக் வாசகர்கள் மட்டுமே இல்லை, மாறாக கிராபிக் நாவல் ரசிகர்களும் அதிக அளவில் இருக்கிறார்கள் ; அதற்காகவே ஒவ்வொரு வருடமும் சந்தாவை புதுப்பிக்கிறார்கள் ! எனவே, அனைவரின் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் மட்டுமே ஒரு பதிப்பகம், தன்னுடையத் தேர்வுகளை அமைக்க முடியும் அல்லவா ?!

    இன்று, இப்படி ஒரேயடியாக பதிவிடப்படும் பின்னூட்டங்களில், ஒரு பத்து சதவீதம் கூட புத்தகம் நமக்குக் கிடைத்த வாரங்களில் பதிவிடப்பட்டதில்லை. இந்தக் கதை சரியில்லை என்ற விவாதங்களோ ; பின்னூட்டங்களோ பதிவிடப்படும் நிலையில், கதைத் தேர்வில் அதிக கவனம் செலுத்தியிருக்க முடியும் அல்லது தற்போதைய வாசகர்களின் இரசனைச் சார்ந்த விஷயங்களை, படித்தறிந்திருக்க முடியும். எனவே, கதைச் சார்ந்த நம் எண்ணங்களை அவ்வப்போது, இங்குப் பதிவிட்டு வந்தால் இப்படி ஒரே நேரத்தில் அனைவரும் கொந்தளிக்கும் நிலை வராது என்பது என் தாழ்மையான கருத்து !

    பி.கு : நான் கிராபிக் நாவல்களை எதிர்க்கும் வாசகன் அல்ல !

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டர் மரமண்டை : சில மௌனங்கள் மாயமாகிட உதவியமட்டிற்கு இந்தப் பதிவினை நான் சந்தோஷத்தோடு நோக்குகிறேன் ! And yes , இயன்ற சமயங்கள் நண்பர்களது விமர்சனங்கள் / எண்ணங்கள் இங்கோ ; மின்னஞ்சல்கள் வாயிலாகவோ பகிரப்பட்டால் எனக்கவை பெரும் உதவி செய்திடும் என்பதில் ஐயமே கிடையாது !

      Delete
  61. நான்... நமது... 2016..! பார்ட் - 1

    வணக்கம் நண்பர்களே.. சென்ற வருடம் போலவே மிகவும் தாமதமான பதிவு ! காரணம் பெரிதாக எதுவுமே இல்லை தயக்கத்தை தவிர ! ஒரு வாசகனாய் எழுதுவதும், யோசனை கூறுவதும் மிகவும் எளிதான விஷயமாக இருந்தாலும் - பதிப்பகத்தாரின் கஷ்ட நஷ்டங்களோ ; வியாபார நிர்பந்தங்களோ நமக்குப் புரிவதில்லை. ஆனால், இதுபோன்ற நம் சிந்தனைகள் பல சமயம், பயணத்தின் வழிக்காட்டியாக இல்லா விட்டாலும் - சில சமயம் திசைக்காட்டும் கைகாட்டியாக, ஒரு ஓரத்தில் கைகட்டி நிற்கும் வாய்ப்பாவது கிடைக்கும் என்ற நப்பாசையால் மீண்டும் ஒரு முறை தொடர எண்ணுகிறேன் !

    சென்னை போன்ற பெரு நகரங்களில், தற்போதெல்லாம் தோட்டத்துடன் கூடியப் புதிய வீடுகளைப் பார்ப்பதே அரிதாகி விட்டது. அப்படியே இருந்தாலும், நிச்சயமாக கிணறு என்று ஒன்று இருப்பது குதிரைக் கொம்பு தான். காலமும், வாழ்க்கை முறையும், தட்பவெப்ப நிலையும் , விலைவாசியும் வெகுவாக மாறிவிட்டதே இதற்கான காரணம். முன்பெல்லாம் 1/2 கிரவுண்ட் இடமாவது, மரங்கள் நாடுவதற்கும், பூச்செடிகள் பயிருடுவதற்கும் ஒதுக்கி, அதில் நீர் வற்றாத ஒரு கிணறும் அமைந்து இருக்கும். சுற்றிலும் தென்னை மரங்களும், வகைக்கு ஒன்றாக அரச மரம், புங்கை மரம், வேப்பமரம் என்று போக, இலவம்பஞ்சு மரங்களும், மாமரங்களும், முருங்கை மரங்களும், அசோக மரங்களும் ; அவரை, பாவக்காய், கோவக்காய் கொடிகளும் ; பசலைக் கீரையும், இலந்தை செடிகளும் ; செம்பருத்தி, அரளி, ரோஜா பூச்செடிகள் என காலி இடம் முழுவதும் தோட்டமாக, சொர்க்கம் நிறைந்திருக்கும் !

    அவற்றிற்கு, முறைவைத்து வாளியில் தண்ணீர் இறைத்து வரும் அவ்வீட்டு வாரிசுகளின் உடலும், உள்ளமும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும். காலம் ஓடியதே தெரியாமல் திடிரென்று மரம், செடி, கோடி என்று எல்லா தாவரங்களும் வளர்ந்து நின்று பயன் தர ஆரம்பித்திருக்கும். இளநீராகட்டும் ; மா, பலா, காய்கறி, கீரையாகட்டும் ; மல்லி, செம்பருத்தி, ரோஜா, மருதாணி என எதுவாகட்டும் - நம் குடும்பத் தேவைக்கும் பல மடங்கு அதிகமாக, தினம் தினம் கைமேல் பலனாக கிடைத்து, நம்மை திணறடித்து விடும். 'கொடுக்குற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுவதுப் போல்' வரும் அபரிதமான வரவை, அனுபவத்தால் மட்டுமே உணர்வுப் பூர்வமாக புரிந்து கொள்ள முடியும் !

    தொடர்கிறது..

    ReplyDelete
    Replies
    1. நான்... நமது... 2016..! பார்ட் - 2

      அதுபோலத் தான் நாம் செய்து வரும் தொழிலும், வியாபாரமும் ! தொடக்கத்தில் மிகவும் சிரமத்தையும், வருமான நெருக்கடிகளையும் தந்து, நமக்கு அனுபவத்தை அளவுக்கு மேல் அள்ளித் தெளித்து - திடிரென்று ஒருநாள், பணம் கொட்ட ஆரம்பிக்கும். அப்போது தான் நமக்கே தெரியும் - எத்தனை உயரத்தில் நாம் வந்து சேர்ந்திருக்கிறோம் என்று ! இந்நிலைக்கு தான் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்ற சொற்றொடர் வந்திருக்குமோ என்னவோ ?!

      இதை ஏன் சொல்கிறேன் என்றால், எந்த ஒரு வியபாரமாகட்டும் ; தொழிலாகட்டும் நாம் தொடர்ச்சியாக செய்து வந்தால், திடிரென ஒரு நாள் நாம் அத்தொழிலில் அசைக்க முடியாத உயரத்தில் அமர்ந்திருப்போம். பெயர் ; புகழ் ; செலவம் என்று எதிர்பார்க்கும் அளவிற்கு மேலேயே வந்து குவிய ஆரம்பிக்கும் என்பது மிகவும் சாத்தியமான உண்மை ! அது போல், நம் ஆசிரியர் விஜயன் அவர்களுக்கும், காலம் கூடி வருவதை என்னால் உணர முடிகிறது. இன்றைய இக்கட்டான நிலை நாளை இருக்காது என்பதில் எனக்கு ஐயமே இல்லை என்று கூறி என் முன்னுரையை நிறைவு செய்கிறேன் !

      இந்த வருடம், வந்ததும் தெரியாமல் செல்வதும் தெரியாமல் இறக்கைக் கட்டிக் கொண்டு, பார்த்துக் கொண்டிருக்கும் போதே பறந்துச் செல்கிறது. ஒவ்வொரு மாதமும், புத்தகம் கிடைத்த ஒரு வாரத்திற்குள்ளாகவே காமிக்ஸ் தாகம் அளவுக்கு மீறி எடுக்கிறது ; அடுத்த மாதம் எப்போது வரும் என்ற காத்திருப்பு யுகமாக கழிகிறது ! புத்தகம் இல்லாத இந்தப் பாலைவன நாட்களில், ஆசிரியர் விஜயன் அவர்களின் ஞாயிறுப் பதிவுகள் மட்டுமே பாலைவனச் சோலையாக நம்மை இளைப்பாற வைக்கிறது. இந்நிலையில் 2016ஐ எப்படி அமைத்தால் நன்றாக இருக்கும் என்ற சிந்தனையைக் கொஞ்சம் ஓடவிட்டுப் பார்ப்போமே :-)

      தொடர்கிறது..

      Delete
    2. //திடிரென ஒரு நாள் நாம் அத்தொழிலில் அசைக்க முடியாத உயரத்தில் அமர்ந்திருப்போம். பெயர் ; புகழ் ; செலவம் என்று எதிர்பார்க்கும் அளவிற்கு மேலேயே வந்து குவிய ஆரம்பிக்கும் என்பது மிகவும் சாத்தியமான உண்மை ! அது போல், நம் ஆசிரியர் விஜயன் அவர்களுக்கும், காலம் கூடி வருவதை என்னால் உணர முடிகிறது. ///

      நம்பிக்கையளிக்கும் உற்சாக வரிகள்!

      Delete
  62. @ FRIENDS : கி.நா..கதைத் தேர்வுகள்...தனி தண்டவாளம்..இத்யாதி பற்றியக் கருத்துப் பிராவகங்களின் மத்தியில் அடியேனின் two cents : And இது கி.நா. ஆதரவாயோ ; எதிர்ப்பக்கமானதோ அல்ல !

    பொதுவாக நல்ல பசியோடு ஒரு ஹோட்டலுக்குப் போய் மெனுவைப் பார்க்கும் போது - சாப்பிட முடிகிறதோ இல்லியோ எல்லாமே கவர்ச்சியாகத் தோன்றுவது இயல்பு தானே ? 'இட்லி சொல்லுவோம்' என்ற நினைப்பில் உள்ளே நுழைந்து விட்டு ; இடியாப்பம் கூட நல்லாத் தான் இருக்குமோ ? என்று அலைபாய்ந்து விட்டு, பக்கத்து டேபிளுக்கு வரும் சோளா பட்டூராவைப் பார்த்து எச்சில் விழுங்கிக் கொண்டு, இறுதியாக சிலோன் கொத்து புரோட்டா ஆர்டர் செய்வதும் நடப்பது உண்டு தானல்லவா ? சில வேளைகளில் எனது நிலைமையும் அதைப் போலத் தான் !

    கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாய் சில லட்சம் ஆல்பங்களை உருவாக்கியுள்ள காமிக்ஸ் அசுரர்களின் முன்னே அமர்ந்து அவர்களது கேட்லாக்கை புரட்டோ புரட்டென்று புரட்டும் போது - 'ஹாய்..இது சூப்பராத் தெரியுதே..' ; 'அட..இது பிரமாதம்..' ; 'இதை மிஸ் பண்ணவே கூடாது !" என்ற ரீதியில் எண்ணங்கள் அலைபாய்வது வாடிக்கை ! 'தம்' பிடித்து அந்த வேளையின் சபலங்களைத் தாண்டி வரும் கலையை இந்த ஏழரைக் கழுதை வயதுகள் கற்றுத் தந்திருப்பதால் அந்த முதல்கட்டக் கவர்ச்சிகளிலிருந்து ஒரு பட்டியலைப் போட்டு ; அதனை இன்டர்நெட்டில் ஆராய்ச்சி செய்து ; கதைச் சுருக்கங்களைப் படித்து நிதானமாய் தான் செலக்ட் செய்திடுவேன் ! இருப்பினும், சின்ன சிக்கல்கள் இங்கேயும் இல்லாதில்லை !

    என்ன தான் நெட்டில் ஆராய்ச்சி ; கதைகள் பற்றிய விமர்சனங்கள் என்பனவற்றை தேடித் பிடித்து எனது தேர்வுகளைச் செய்தாலும் - அவை சகலமும் வேற்று மொழியில் உள்ளதொரு படைப்பு என்பதை நினைவில் கொண்டிட வேண்டுமல்லவா ? ஆங்கிலத்தில் நேரடியாக ஒரு கதையை முழுமையாய் நான் படிக்க சாத்தியமாகி அதன் அடிப்படையில் அந்தக் கதையின் மீதொரு தீர்மானத்துக்கு வருவது என்பது கோயில் யானையை கிட்டே சென்று பார்ப்பது போல் ச்பஷ்டமானது ! ஆனால் பிரெஞ்சிலோ ; இத்தாலிய மொழியிலோ ; இன்னபிற அயல் மொழிகளிலோ உள்ள கதைகளைப் பற்றிய தகவல் சேகரிப்பும், அனுமானமும் மட்டுமே எனது தேர்வுகளின் அடிப்படைகளாக அமையும் தருணங்கள் கண்ணைக் கட்டிக் கொண்டு அதே யானையைத் தடவிப் பார்ப்பதற்கு ஒப்பானது ! சில வேளைகளில் தும்பிக்கை சரியாய்ச் சிக்கி விட்டால் ஆசீர்வாதம் கிடைக்கலாம் ; பல வேளைகளில் வாலைப் பிடித்துப் பார்த்தால் பலன் வேறு விதமாய் இருக்கலாம் !

    Contd :

    ReplyDelete
    Replies
    1. Continuation :

      இந்தச் சிக்கல் ஒருபுறமெனில் - ரசனைகளின் பன்முகத்தன்மை சிக்கல் # 2 ! ஒரே கதையை ஒரு பிரெஞ்சு வாசகர் ரசிக்கும் விதத்துக்கும், நமது மதிப்பீடுகளுக்கும் ஒரு உலக வேற்றுமை இருந்திடக்கூடும். சின்ன உதாரணத்துக்கு - இம்மாத ப்ளூகோட்ஸ் கதையைச் சொல்லலாம் ! அதன் படைப்பாளிகளின் TOP 5 பட்டியலுக்குள் உள்ள கதை இங்கு நம்மில் 100% அபிமானத்தை ஈட்டியுள்ளதா என்றால் - நிச்சயம் இல்லை ! இம்மாத ஜில் ஜோர்டான் கதைக்கு அங்கு கிட்டிய மதிப்பெண்கள் 90/100 ரகம் ; ஆனால் நாமோ 60/100 போட்டிருந்தாலே பெருசு தானே ? So இந்த இன்டர்நெட் அலசல்கள் ; வாசக அபிப்பிராயங்கள் ஒவ்வொரு மொழிக்கும் ; ஒவ்வொரு மார்கெட்டுக்கும் பிரத்தியேகமானது எனும் போது அதனை ஒரு நம்பகமான ஊன்றுகோலாய் நான் கருதுவது எல்லா வேளைகளில் வெற்றியில் முடிவதில்லை !

      கி.நா. கதைகளுக்கு மட்டும் தானன்றி - ரெகுலரான கதைத் தொடர்களுக்குமே இது போன்ற சிரமங்கள் உண்டு தான் ! ஆனால் ஒரு 50-60 கதைகள் கொண்ட தொடர் எனும் போதே அதனில் நிச்சயமாய் ஒரு 20-30 ஆண்டு அவகாச அனுபவம் பதிந்திருப்பது நிச்சயம் என்று எடுத்துக் கொள்ள முடியும் ! So ரசனை மாற்றங்கள் ; அபிப்பிராய பேதங்கள் இருப்பினும் அவற்றை மீறியும் 30 ஆண்டு இடைவெளியைத் தொடர் ஒன்று தாண்டியிருக்கும் போது அதனில் நிச்சயமாய் சரக்கு இருக்குமென்று எடுத்துக் கொள்ளலாம் ! So அங்கேயும் சிரமங்கள் இருந்தாலும் கூட அவற்றைத் தாண்டிடுவது comparatively easier ! ஆனால் இந்த one -shot கதைகளிலும், கி.நா. வரிசைகளிலும் அந்த luxury பெரும்பாலும் இருப்பதில்லை ! பல சமயங்களில் அந்தக் கணத்தில் தோன்றும் உணர்வுகளுக்கு செவி சாய்ப்பதே என்முன்னே இருக்கும் மார்க்கம் !

      இந்த மாதத்து 'விடுதலையே..உன் விலை என்ன ? கதையினை சென்றாண்டு பாரிசில் படைப்பாளிகளின் ஆபீசில் இருந்த சமயம் நான் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். GRAND EVASION - அதாவது "மாபெரும் தப்பிப்புப் படலங்கள்" என்ற கான்செப்டை கொண்டு உருவாக்கப்பட்ட 8 கதைகள் கொண்டதொரு தொடரின் ஆல்பம் # 8 இது. என்னை முதலில் சுவாரஸ்யத்தில் ஆழ்த்தியது இதே தொடரின் ஆல்பம் # 7 தான் ; பெர்லினில் கம்யூனிச ஆதிக்கம் இருந்த நாட்களில் ஊருக்கு மத்தியில் நின்ற மதிலுக்கு அடியில் ஒரு சுரங்கப்பாதை அமைத்து 65 கைதிகள் தப்பிய சாகசத்தின் கதையாக்கம் அது ! ஆனால் ஓவிய பாணி ரொம்பவே சுமாராய் தோன்றியதால் அதனை வேண்டாமென்று சொல்லி விட்டு, இந்தக் கதையைப் புரட்டினேன். சைபீரியா என்ற புதிய களம் ; பனியில் இரயில் என்ற ஒரு புதுமை ஈர்ப்பாகத் தோன்றியதால் இது பற்றிய ஆராயிச்சிகளை எப்போதும் போலவே செய்தேன் ! சுவாரஸ்யமான ஆல்பம் என்று விடை கிட்டியதால் தான் தேர்வு செய்தேன் ! But ஒரு பூரண இதழாக தமிழில் படிக்கும் போது தான் அதன் நிறை-குறைகள் மீது வெளிச்சம் விழுவது புலப்பட்டது ! காலம் கடந்துவிட்டதல்லவா அந்நேரத்துக்குள் ?

      இதனை ஒரு சப்பைக்கட்டாய் நான் சொல்ல வரவில்லை ; எனது பணியே இது போன்ற சவால்களைத் தாண்டி வருவது தான் எனும் போது இவற்றைக் காரணங்களாய்ச் சொல்லிடும் முகாந்திரம் நியாயப்படி என்னது அல்ல தான் ! But கதைத் தேர்வுகள் சில வேளைகளில் சொதப்பிடுவதன் பின்னணியை பகிர்ந்து கொள்ளவே இதை எழுதினேன் ! Thanks for reading !

      Delete
    2. //But ஒரு பூரண இதழாக தமிழில் படிக்கும் போது தான் அதன் நிறை-குறைகள் மீது வெளிச்சம் விழுவது புலப்பட்டது ! காலம் கடந்துவிட்டதல்லவா அந்நேரத்துக்குள் ?

      இதனை ஒரு சப்பைக்கட்டாய் நான் சொல்ல வரவில்லை ; எனது பணியே இது போன்ற சவால்களைத் தாண்டி வருவது தான் எனும் போது இவற்றைக் காரணங்களாய்ச் சொல்லிடும் முகாந்திரம் நியாயப்படி என்னது அல்ல தான் ! But கதைத் தேர்வுகள் சில வேளைகளில் சொதப்பிடுவதன் பின்னணியை பகிர்ந்து கொள்ளவே இதை எழுதினேன் !//

      எல்லா நேரமும் நமது instinct correct ஆகா இருபதில்லை உங்கள் சிறமங்கல் புரிகிறது எடிட் சார் , நீங்கள் இந்த சிரமத்திலும் வாசகர்களுக்கு சிறந்ததை தருகிரீர்கள்,நீங்கள் இத்தகைய சிரமத்தை எடுக்காவிட்டால் நாங்கள் தமிழ் காமிக்ஸ்இல் எந்த உலக தயாரிப்பையும் பார்த்திருக்கமுடியாது உங்களுக்கு எங்கள் நன்றி !

      Delete
    3. //எல்லா நேரமும் நமது instinct correct ஆகா இருபதில்லை உங்கள் சிறமங்கல் புரிகிறது எடிட் சார் , நீங்கள் இந்த சிரமத்திலும் வாசகர்களுக்கு சிறந்ததை தருகிரீர்கள்,நீங்கள் இத்தகைய சிரமத்தை எடுக்காவிட்டால் நாங்கள் தமிழ் காமிக்ஸ்இல் எந்த உலக தயாரிப்பையும் பார்த்திருக்கமுடியாது உங்களுக்கு எங்கள் நன்றி !//
      +1

      Delete
    4. //எல்லா நேரமும் நமது instinct correct ஆகா இருபதில்லை உங்கள் சிறமங்கல் புரிகிறது எடிட் சார் , நீங்கள் இந்த சிரமத்திலும் வாசகர்களுக்கு சிறந்ததை தருகிரீர்கள்,நீங்கள் இத்தகைய சிரமத்தை எடுக்காவிட்டால் நாங்கள் தமிழ் காமிக்ஸ்இல் எந்த உலக தயாரிப்பையும் பார்த்திருக்கமுடியாது உங்களுக்கு எங்கள் நன்றி !//----சத்தியமான வார்த்தைகள் .

      Delete
  63. //எல்லா நேரமும் நமது instinct correct ஆகா இருபதில்லை உங்கள் சிறமங்கல் புரிகிறது எடிட் சார் , நீங்கள் இந்த சிரமத்திலும் வாசகர்களுக்கு சிறந்ததை தருகிரீர்கள்,நீங்கள் இத்தகைய சிரமத்தை எடுக்காவிட்டால் நாங்கள் தமிழ் காமிக்ஸ்இல் எந்த உலக தயாரிப்பையும் பார்த்திருக்கமுடியாது உங்களுக்கு எங்கள் நன்றி !//
    +1

    ReplyDelete
  64. விஜயராகவன் சார்....
    ஐந்து கிலோ என்பதற்கு பதிலாக ஐந்து என்று எழுதிவிட்டேன்.
    மன்னிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. ஐந்து கிலோவா .......தொம்....(வெறும் மயக்கம் தான்) ...பணம் அதிகம் ஆகிடுமேங்க பாசா பாய் . உங்களுக்கு சிரமங்கள் ஏற்படாத அளவு முக்கியமாக தூக்குவது .... உங்கள் அன்புக்கு ஈரோட்டில் பலப் பல அடிமைகள் உதயம் ஆகப்போவது நிச்சயம் .....வாழ்க காமிக்ஸ் வளர்க காமிக்ஸ் நேசம் ...

      Delete