Sunday, May 03, 2015

மர்மத்தோடு மல்யுத்தம் !

நண்பர்களே,

வணக்கம். இந்த வாரத்தின் பெரும் பகுதிக்கு நான் மாயாவியாகிப் போனமைக்கு உருப்படியானதொரு சாக்கு வைத்திருக்கிறேன்! மின்னும் மரணம்“ தலைக்குள் ஒரு மெகா கனவாய் குடி கொண்டிருக்க - அதனை கரைசேரக்கும் வரைக்கும் வேறு நினைப்புகளே இருந்திருக்கவில்லை! ஒரு வழியாக “மி.மி“- தரையிறங்கி, பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தான பின்னே- அடுத்த பணிக்குள் நுழைந்திட முயற்சிக்க- வண்டி  லேசாக மக்கர் பண்ணியது! ஏதோ முழுப் பரீட்சை எழுதி முடித்து விட்டு ஒரு வண்டி லீவை எதிர்நோக்கும் சின்னப்பிள்ளை போல மண்டைக்குள் புகுந்த மந்தத்தை ஒரு மாதிரியாக அடித்துத் துரத்தி விட்டு மே மாத இதழ்களின் பணிகளுக்குள் மும்முரமாகிட முயற்சித்தேன்!

விண்ணில் ஒரு வேங்கை சீராய் பயணம் செய்யும் ஒரு புதுக்கதை என்பதாலும், இதனை சில, பல மாதங்களுக்கு முன்பாகவே எழுதி முடித்திருந்தேன் என்பதாலும் பெரியதொரு கஷ்டமே இல்லாது தயார் செய்ய முடிந்தது! அப்புறமாய் தான் மேஜையின் மூலையில் குவிந்து கிடந்த நமது ‘ம.ம.மாவின் கதையை தூக்கிக் கொண்டு வீட்டுக்குப் போனேன்- ராவோடு ராவாக எடிட்டிங் வேலைகளை முடித்து- சடுதியாய் அச்சிடலாமென்று! இது நமது கருணையானந்தம் அவர்கள் எழுதியிருந்த ஸ்கிரிப்ட் என்பதால் கதையைப் பற்றி எனக்குப் பெரியதொரு ஞானம் இருந்திருக்கவில்லை! பொதுவாக ரிப்போர்டர் ஜானி கதைகள் என்றாலோ; XIII ன் கதைகள் என்றாலோ ரொம்பவே உஷாராய் இருப்பது அனுபவ பாடம்! மனுஷனை கொஞ்ச நேரத்திற்குள் “காதல்“ திரைப்பட க்ளைமேக்ஸ் பரத் போல உருமாற்றம் செய்திடும் ஆற்றல் மேற்படி தொடர்களுக்கு உண்டு! அதையும் விட ஒருபடி மேலாக நமது மர்ம மனிதன் மார்ட்டின் தவறாமல் பெண்டைக் கழற்றும் ஒரு மாமன்னர் என்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே கதையை அணுக முயற்சித்தேன்! மிச்சத்தை வார்த்தைகளில் சொல்வதை விட- இந்தப் படங்கள் மார்க்கமாய் வெளிப்படுத்துவது சுலபம் என்று பட்டது!

மின்னும் மரணம் பணிகள் முடித்த சந்தோஷத்தில் நான்..! 
மி.மி. வெற்றி என்றான பின்னே நான்..! 
சரி...அடுத்த வேலைக்குள் தலையை விடுவோமா ?..மார்ட்டின் கதை waiting !
என்ன நடக்குது இங்கே ?
ஆஹா...தல எது ?...வால் எதுவென்று புரியலியே காஸ்டெல்லினி சார் !!  
ஒண்ணுமே புரியலே..உலகத்திலே...! 
வார்த்தைகளும் வேண்டுமா..?
ஆஹாஹா !! கதை ஒரு மார்க்கமா புரிஞ்சிடுச்சு !! At least புரிஞ்ச மாதிரி தோணுது !
Mr.Castellini rocks......as always !!!!
என் பணியிலேயே மிக மிகச் சிரமமான, சட்டையைக் கிழிக்கத் தோன்றும் பகுதி என்னவென்று கேட்டால்- முதல் படிவத்தை வாசித்து, எடிட்டிங் & பிழைதிருத்தம் செய்ய முயற்சிக்கும் அனுபவமே என்று தான் சொல்லுவேன்! ஒரு கத்தைப் பக்கங்களை டைப்செட்டிங் முடித்த கையோடு- கறுப்பு வெள்ளையில் பிரிண்ட் அவுட் எடுத்து, அழகாய் ஒரு tag போட்டுக் கட்டி- என் மேஜையில் மைதீன் வைத்து விட்டுப் புறப்படும் போதே எனக்கு மேல்மூச்சு ; கீழ்மூச்சு வாங்கத் தொடங்கும்! அதிலும் நான் எழுதியிருக்கா கதையாக இருக்கும் பட்சத்தில் - சிரமங்கள் இன்னமும் ஜாஸ்தி என்பதை முன்கூட்டியே மண்டை பறைசாற்றி விடும்! வறட்சியான கதைக்களமாகவோ, குழப்பமானதொரு knot கொண்டதாகவோ இருந்து - அதனை நானே மொழிபெயர்த்திருக்கும் பட்சத்தில் அந்தச் சமயங்களிலேயே சிறுகச் சிறுக மல்லுக்கட்டி கதை முடியும் தருவாய்க்குள் லேசாகப் பரிச்சயம் வளர்த்திருப்பேன் ! ஆனால் கருணையானந்தம் அவர்கள் மட மடவென்று எழுதித் தள்ளி, அப்புறம் டைப்செட்டிங் பணிகளும் அரங்கேறிய பின்னர் ஒட்டு மொத்தமாய் ஒரிஜினல் சித்திரங்கள் + ஆங்கில மொழிபெயர்ப்பு + தமிழில் பிரிண்ட்-அவுட் என ஒரு லாரி லோடு காகிதங்கள் என் முன்னே பார்க் செய்யப்படும் போது - மண்டை காய்வது வழக்கம்!

கதையைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் பொருட்டு ஒரு மேலோட்டமான வாசிப்பைத் துவங்கும் போதே பலூன்கள் இங்கும் அங்குமாய் இடம் மாறிக் கிடப்பதை கண்கள் கவனிக்கும்! அதைச் சரிசெய்ய முயற்சிக்கும் போது ஆங்காங்கே எழுத்துப் பிழைகள் நெருடத் தொடங்கும்! அதை சிகப்பில் ரவுண்ட் போடத் துவங்குவதற்குள் கதையின் கோர்வை லேசாகக் குறைவது போலப்படும்.....அதைச் செப்பனிட ஆங்கில ஸ்கிரிப்ட் அவசியம் என்பதால் - இங்கே ஒரு கண், அங்கே ஒரு கண் என்று மந்தி போலத் தாவத் தேவைப்படும் ! பிரெஞ்சு to இங்கிலீஷ் மொழிபெயர்ப்பில் மேடம் பிளந்து கட்டியிருப்பதை சில இடங்களில் தமிழாக்கம் செய்வதில் மெலிதான பிழைகள் பிசுறுகள் எழுந்திருப்பதை கவனிக்க முடிந்தால் அதை பட்டி-டிங்கரிங் செய்ய முயற்சித்தாக வேண்டும்! அதைத் தாண்டி வந்தால் ஆங்காங்கே நமது நாயகர்களுக்கு ‘பன்ச்டயலாக்குகளை நெருடலின்றி உள்ளே நுழைத்திட வேண்டியது நினைவுக்கு வரும்! ‘தலடெக்ஸ்க்கு ஒரு விதமாய் எழுதிடணும்; லார்கோவுக்கு இன்னொரு பாணியில் ; தளபதிக்கு முற்றிலும் வேறுவிதமாய் ! கார்ட்டூன்களுக்கென்றால் கேட்கவே வேண்டாம் ! So- ஏற்கனவே இந்த இடங்களிலிருக்கக் கூடிய நார்மல் டயலாக்குகளை சர்..சர்..ரென்று அடித்து விட்டு - உரமேறிய வார்த்தைகளை அங்கே திணித்தாக வேண்டும்! அதாவது இந்தக் கூத்து எல்லாமே - கதை நமக்குப் புரிந்து விட்டிருப்பின்!

இம்மாத மார்ட்டினின் சாகஸத்தைப் போலக் கதைகள் கிட்டும் நாட்களில்- ‘சேதுபடத்து விக்ரம் போலத் தான் விழிக்க வேண்டி வரும்! லேசாகப் பூசி மெழுகிடலாமென்று நினைத்தால் - இதழ் வெளியான அரை மணி நேரத்திற்குள் கூகுள் புண்ணியத்தில் ஆராய்ச்சிகளை செய்து நாம் சொதப்பிய சகலத்தையும் கிண்டிக் கிழங்கெடுத்து விடுவார்கள் என்ற ‘டர்நிறையவே இருக்கும் ! So- அடிடா கூகுளை... தேடுடா விஷயத்தை ! என்று கம்ப்யுட்டருக்குள் புகுந்து கதைகளின் பின்னணிகளை; வரலாற்று நிகழ்வுகளை ஆராய்ச்சிகள் செய்வது அவசியமாகும்! இவை சகலத்தையும் செய்து முடிக்கும் போது - அந்த பாவப்பட்ட first copy பிரிண்ட்-அவுட் இப்படித் தான் ரணகளமாய்த் தோற்றம் தரும்!



ஷப்பா.... அது போலொரு தேடலுக்குள் நுழையும் நாட்களில் தான் இத்தாலியில் நான் சந்தித்த அந்த மாமனிதனின் மகிமை முழுசாகப் புரிந்தது! நாலு டெக்ஸ் வில்லர், நாலு லக்கி லூக், நாலு தளபதியின் கதைகள் என்ற நார்மலான களங்களில் உலா வந்து விட்டு எப்போதாவது ஒரு மார்ட்டின் கதையை decipher செய்திட முயற்சிப்பதையே ஏதோ மலையேற்றம் பண்ணும் ரேஞ்சுக்கு நான் ‘பில்டப்கொடுத்து வரும் போது- வருஷம் முழுவதும் இந்தக் குழப்பக் குவியல்களே கதி என்று கதைகளை சரமாரியாய் உருவாக்கி வரும் திரு.ஆல்பிரெடோ காஸ்டெல்லினியினை நினைத்து மலைக்காதிருக்க முடியவில்லை! மனுஷன் எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்தாக வேண்டும், எத்தனை விஷயங்களை நினைவில் நினைவில் நிறுத்தியாக வேண்டும்!! Phew!!

இதோ- ஒரு வழியாகக் களம்காணக் காத்திருக்கும் மார்ட்டினின் ‘கனவின் குழந்தைகள்’ இதழின் அட்டைப்படம்! ஐரோப்பியப் பதிப்பின் ஒரிஜினலை அப்படியே பயன்படுத்திக் கொண்டு பின்னணிக் கலரிங்கில் மட்டுமே லேசாக மாற்றங்கள் கொண்டு வந்துள்ளோம் என்பதால் ராப்பரில் மார்ட்டின் செம ஸ்மார்ட்டாக இருப்பதைக் காணலாம்! பின்னட்டை நமது தயாரிப்பு ! கதையைப் பற்றி எக்கச்சக்கமாய் எழுதி விட்டதால் மேற்கொண்டும் ஓட்டுச் சேர்க்கும் அவசியம் இல்லையென்றே தோன்றுகிறது ! முதல் வாசிப்பிலேயே conquer செய்து விடலாமென்ற அவாக்களின்றி உள்ளே புகுந்தீர்களெனில் இந்தக் கதை நிச்சயமாய் உங்களை மெய்மறக்கச் செய்யும்! நிறைய தலைமுடிச் சேதாரம் நிகழும் தான்; ஆனால் பூமியின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் காத்திருக்கும் ஆண்டவனின் அதிசயங்களை எண்ணி வியக்காதிருக்க இயலாது! இந்தக் கதையின் களம் ஆஸ்திரேலியா! So - ஒரு down under பயணத்துக்குத் தயாராகிக் கொள்ளுங்கள் boss!

மே மாதத்து மீத 2 இதழ்களும் ‘தேமே என்று துளிச் சிரமும் தராது தயாரான மறுபதிப்புகள் ! மார்ட்டினோடு மல்லுக்கட்டி முடிக்கும் போது தான் ஆர்டினியின் கூர்மண்டை முதலாளியும், ஸ்டெல்லாவின் கூலிங் கிளாஸ் முதலாளியும் எத்தனை சாதுவானவர்கள் என்பது புரிகிறது! அவர்களது ராப்பர்கள் & preview (!!!) அடுத்த சில நாட்களில் இதழ்களை நாங்கள் அனுப்பிடும் தினத்துப் பதிவில் உங்கள் கண்களில் காட்டுகிறேன்!

அப்புறம் லயனின் 250வது இதழின் பெயர் சூட்டலுக்கு வந்துள்ள பெயர் பிரவாகத்தைக் கொண்டு அடுத்த 10 ஆண்டுகளுக்கான ஸ்பெஷல் இதழ்களுக்குப் பெயரிடலாம் என்று தெரிகிறது! Wow !! என்னவொரு ரகளை! ஆனால் நண்பர்களுள் பலரும் இது ‘தலடெக்ஸின் சூப்பர் இதழ் என்பதை மட்டுமே focus செய்திருப்பதும்; லயனின் 250வது இதழ் என்ற மைல்கல்லை பெயரில் நினைவூட்டத் தவறியிருப்பதும் தெரிகிறது ! ‘தல வரும் நாளெல்லாம் நமக்கு தீபாவளியே ; ஆனால் "250வது இதழ்" என்பது ஒரு பிரத்யேகத் தருணமல்லவா? So- `The லயன் 250 என்ற சிம்பிளான பெயரையே வரவிருக்கும் நமது மைல்கல் இதழின் தலைப்பாகத் தேர்வு செய்கிறோம்! இதனை முன்மொழிந்த நமது பாசத்திற்குரிய தலீவருக்கும், மாயாவியாருக்கும் நமது வாழ்த்துக்களோடு- டெக்ஸின் கதாசிரியர் பொசெல்லியின் autograph தாங்கிய டெக்ஸ் இதழ்களைப் பெற்றுத் தர உறுதி சொல்கிறோம்! செம ஆர்வத்தோடு பங்கேற்ற அத்தனை நண்பர்களுக்கும் ஒரு ராட்சஸ thanks!!

Moving on-கார்ட்டூன் ஸ்பெஷல்“ இதழ் இந்தாண்டில் உறுதி என்பதோடு- அதனையே நமது முத்து காமிக்ஸின் இதழ் #350 ஆகவும் அமைத்திட்டாலென்னவென்று தோன்றியது! ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற கதையாகிடுமே என்ற சூப்பர் சிந்தனை பிரசன்னமானதன் பலனாக - முத்துவின் அடுத்த மைல்கல் தருணத்தை சிரிப்பலைகளோடு கொண்டாடிடலாமே ?! கதைகளுக்கான சில ஏற்பாடுகள், சில முயற்சிகள் செய்து வருகிறேன் ! அவற்றைத் துரிதப்படுத்தி - ஜூலை 31-ல் துவங்கும் ஈரோட்டுப் புத்தகத் திருவிழாவின் நடுவே ஒரு ஞாயிறின் போது இந்த இதழை unveil செய்திட முயற்சிப்போம் ! So- ஜூலையில் லயன் #250, ஆகஸ்டில் முத்து #350 என நமக்குக் காத்திருக்கும் பல precious moments-களை நம்மால் இயன்றளவுக்கு அட்டகாசமாக்கிடும் பொருட்டு ரசித்துப் பணியாற்றும் ஆர்வத்தோடு நடையைக் கட்டுகிறேன் ! 

தொடரும் 3 நாட்கள் எங்கள் ஊரின் இரண்டாவது அம்மன் கோவில் திருவிழாவையொட்டி விடுமுறைகளே என்பதால் - தொடரும் வெள்ளியன்று புது இதழ்கள் இங்கிருந்து புறப்படும்! கொஞ்சம் ‘மி.மி hangover; கொஞ்சம் ‘ம.ம.மா புண்ணியம்; கொஞ்சம் விடுமுறைகளின் தாக்கம் என்ற கலவையால் இம்மாத இதழ்கள் சற்றே தாமதம் காண்பதற்கு apologies! இதனை ஈடு செய்யும் விதமாய் ஜூனின் இதழ்கள் மே 31-ல் உங்கள் கைகளில் இருக்கச் செய்வோம் ! See you around guys! Bye for now !

348 comments:

  1. ஆஹா... இன்னைக்கு ஆசிரியர் எல்லாருக்கும் சூப்பு வச்சு குடுத்துட்டாரா? நள்ளிரவே பதிவு 'டாண்'னு வந்துடுச்சே! சூப்பர்ர்ர்ர்....!!!

    ReplyDelete
    Replies
    1. தூங்காமல் என்னம்மா இப்படி
      பன்றிங்களேம்மா

      Delete
    2. Podiyan : இந்த வாரத்தில் நிறைய லீவ் போட்டு விட்டேன் அல்லவா..? So அதனை சரி செய்யும் அவசியம் !

      Delete
  2. Good morning sir... Nice post.. Welcome u friends.. Have a nice Sunday....

    ReplyDelete
  3. Replies
    1. Thanks bharani sir.. due to studies, exams I can't come here often.. thanks for ur welcome.

      Delete
  4. First time I read Minnum Maranam.. Its a wonderful story.. masterpiece in comics history.. no words to explain.. thanks to editor for this book.. expects this kind of Legendry collections more and more..

    ReplyDelete
    Replies
    1. 'மி.ம' ஒரு அற்புதப் படையல் என்பதில் சந்தேகமில்லை. மற்றைய விடயங்கள் அனைத்தையும் கடந்து, அதன் அச்சுத் தரம் பிரமிக்க வைக்கிறது!

      Delete
  5. கனவின் குழந்தைகள் அட்டைப்படம் அருமையாக உள்ளது. அச்சில் இன்னும் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. Eagerly waiting for this post from yesterday

    ReplyDelete
  7. //முத்துவின் அடுத்த மைல்கல் தருணத்தை சிரிப்பலைகளோடு கொண்டாடிடலாமே ?! //
    பட்டாச கொழுத்தி போடுங்கப்பா.....!! டப..டப...டப்....!

    ReplyDelete
  8. Cartoon special = muthu 350

    This is foul game, please change your judgement, expecting two mega books, didn't expect this announcement, please consider sir.

    ReplyDelete
  9. குட் மார்னிங் ஓ கே அப்ப தீபாவளி ஸ்பெஷல் என்ன????

    ReplyDelete
  10. 5 புத்தகத்தை எதிர்பார்த்தோம்
    1 லயன் 250
    2 முத்து350
    3கார்ட்டூன் ஸ்பெஷல்
    4லயன் தீபாவளி
    5முத்து தீபாவளி

    ReplyDelete
    Replies
    1. Cartoon Special <>Muthu 350
      Please make it separately.

      Delete
    2. ஊஹூம்..அட்டவணையின் கனமும் சரி, நம் கிட்டங்கியின் இருப்பின் கனமும் சரி ; நம் வங்கியிருப்புகளின் கனமின்மையும் சரி...இதற்கு மேல் இந்தாண்டுக்கு இதழ்கள் வேண்டாமே என்று சொல்கின்றன !

      Delete
  11. ஆஹா! ஜூலை ஆகஸ்டில் அதிரடி அதகளம்! அற்புதம்! அற்புதம்! சூப்பர் சார்!

    ReplyDelete
    Replies
    1. இல்லியா பின்னே ! சும்மா பேரை பார்த்தாலே அதிருதில்ல. நீங்கள் லோக்கல் ஆ அல்லது வெளிநாடா? உள்ளூர் எனில் ஈரோடு விழா வர வாய்ப்பு உள்ளதா ?

      Delete
  12. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்

    ReplyDelete
  13. கனவின் குழந்தைகள் முன் பின் அட்டை படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    ReplyDelete
  14. யூலையில் லயனின் 250 இதழ், ஆகஸ்டில் முத்தின் 350 இதழ் ஆகர, ஆகர யமரயுங்கள் ஸர்ர் .

    ReplyDelete
  15. மர்மமனிதன் மார்டின் அட்டை படம் சூப்பர்.
    The லயன் 250 - கச்சிதமான தலைப்பு

    ReplyDelete
  16. July and August is going to be great

    ReplyDelete
  17. மர்மமனிதன் மார்டின் எதிர்பார்ப்பு எகிருது

    ReplyDelete
  18. மர்ம மனிதன் மார்டின் அட்டை படம் பிரமாதம். முத்து 350 & கார்ட்டூன் ஸ்பெஷலையும் ஒன்றாக்க வேண்டாம் ! தனித்தனியாகவே வெளியிடவும் !

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil : ஊஹூம்..அட்டவணையின் கனமும் சரி, நம் கிட்டங்கியின் இருப்பின் கனமும் சரி ; நம் வங்கியிருப்புகளின் கனமின்மையும் சரி...இதற்கு மேல் இந்தாண்டுக்கு இதழ்கள் வேண்டாமே என்று சொல்கின்றன !

      Delete
  19. * தலைப்புப் போட்டியில் பங்குகொண்டு ஒரிஜினல் இத்தாலிய டெக்ஸ் புக்கை பரிசாகப் பெறவிருக்கும் 'இங்கே க்ளிக்' புகழ் மாயாவி அவர்களுக்கும், எங்கள் போராட்டக்குழு தலீவர் அவர்களுக்கும் பொறாமை கலந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்!

    * மார்ட்டினின் அட்டைப்படம் மிரட்டலாகவும், நமது வழக்கமான கலரிங் பாணியில் அசத்தலாகவும் இருக்கிறது! புத்தகக் கண்காட்சிகளில் 7ம், 77ம் தங்களது தேர்வுகளை சுலபமாக்கிக்கொள்ள அட்டைப்படத்திலுள்ள அந்த வினோத மிருகம் நிறையவே உதவிடும்!

    * முத்து-350தே 'கார்ட்டூன் ஸ்பெஷல்'ஆக வரயிருப்பது 'எதிர்பார்த்த' மகிழ்ச்சி! ( அட! கிட்ஆர்ட்டின் கண்ணனின் யூகம் சரியாகிவிட்டதே!!)

    * ///So- ஜூலையில் லயன் #250, ஆகஸ்டில் முத்து #350 என///
    லயன்-250 ஜூனில் வெளிவரும் என்று முன்பொரு சமயம் கூறியிருந்தீர்களே எடிட்டர் சார்? எங்கள் 'தல'யை தரிசிக்க இன்னுமொரு மாதம் எங்களைக் காத்திருக்க வைப்பதில் அப்படியென்ன சந்தோசம் கிடைத்துவிடுகிறது உங்களுக்கு? கிர்ர்ர்ர்...

    * அப்புறம்... 'மி.ம' ஏற்படுத்தவிருக்கும் ரெக்கார்டு -என எடிட்டர் குறிப்பிட்டது எதை? இப்ப யாராவது சொல்லப்போறீங்களா இல்லையா... கிர்ர்ர்ர்... (இன்னிக்கு ஓவரா டென்ஷனாகுதே...)

    ReplyDelete
    Replies
    1. பொறாமை கலந்த நன்றி செயலாளர் அவர்களே :)

      Delete
  20. //So- `The லயன் 250’ என்ற சிம்பிளான பெயரையே வரவிருக்கும் நமது மைல்கல் இதழின் தலைப்பாகத் தேர்வு செய்கிறோம்! இதனை முன்மொழிந்த நமது பாசத்திற்குரிய தலீவருக்கும், மாயாவியாருக்கும் நமது வாழ்த்துக்களோடு- டெக்ஸின் கதாசிரியர் பொசெல்லியின் autograph தாங்கிய டெக்ஸ் இதழ்களைப் பெற்றுத் தர உறுதி சொல்கிறோம்!//
    அருமையான தேர்வு. நண்பர் மாயாவி சிவாவின் அந்த அட்டைப்படத்தை கவனித்தீ்ர்களா ஆசிரியரே...?
    அட்டகாசமாய் இருந்தது ...

    ReplyDelete
    Replies
    1. நன்றி அகமத் பாஷா ஜீ ...:)

      Delete
  21. மாயாவி சிவா மற்றும் தாராபுரம் பரணிதரன் @ வாழ்த்துகள்! இதுபோல் பல போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. எங்களது தாரமங்கலம் தலீவரை தாராபுரத்திற்குக் கடத்திச் சென்ற பொங்களூர் (நன்றி: மாயாவி) பரணியை வன்மையாகக் கண்டிக்கின்றோம்! :)

      Delete
    2. எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது...!

      Delete
    3. நன்றி பெங்களூரு பரணி ஜீ:)

      Delete
  22. வணக்கம் சார் . The லயன் 250- தான் இதழ் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் நம் அனைவருக்கும் தெரியுமே? சிறப்பான பெயர் வைத்து தலையை கெளரவிக்க போகிறீர்கள் என்ற அறிவிப்பும், ஆர்வமும் தான் இத்துனை பெயர்களை நண்பர்கள் வெளிக்கொணர தூண்டிற்று . இப்போது தி லயன் 250- பேர் சும்மா ஆட்டைய கலைங்கப்பா? - ...........என்ன சொல்வது என்றே தெரியவில்லை சார் !?!?!?. நண்பர்களின் ஆர்வத்திற்கு மதிப்பு என்ன ? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை சார் . இந்த பேரை வையுங்கள் ஆனால் தயவுசெய்து இதை வைத்ததற்காக பரிசெல்லாம் குடுத்து மற்ற நண்பர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது வேண்டாம் என்பதே என் வேண்டுகோள் சார் . ஒரு மாதம் லேட்டாக ஜூலைக்கு தந்தால் ஆண்டு மலராகவும் ஆகிடும் என்று புரிகிறது சார் . முன்பே அறிவிக்கப்பட்ட இரு ஸ்பெசல் இதழ்களை தங்களுடைய பார்வைக்கு வந்த சிற்சிறு-இந்த இது விலைக்கு ஒர்த்தா?, மேல் அட்டை கடையில் வாங்கினால் இல்லையா ? ....என்பது போன்ற மொக்கை காரணங்கள் காரணமாக ட்ராப் செசெய்துவிட்டீர்களா சார் ? .
    இப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ள கார்டூன் ஸ்பெசல்-முத்து 350க்கு தனியாக பணம் எவ்வளவு என்ற அறிவிப்பு காணவில்லை . இப்படி பல கேள்விகள் இந்த பதிவை படித்த உடன் தோன்றுவது எனக்கு மட்டுமா??????? சூட்டபுள் ஆன படத்தை இங்கே போட்டுக்கொள்ளுங்கள் சார் .

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : நிதானமாய் யோசிங்களேன் சார் : '

      தல' வரும் நாட்களெல்லாம் தீபாவளி தான் ; ஆனால் 'தல தீபாவளி' ஆயுசுக்கு ஒருமுறை மட்டும் தானே ?

      அந்த "தல தீபாவளி" போலத் தானே 250 எனும் மைல்கல்லும் ? So தலைப்பின் focus அதன் மீதிருப்பது தானே லாஜிக் ?

      Delete
    2. உண்மை தான் சார் . ஆனால் Theலயன் 250- ..............................
      -- நண்பர்கள் அனுப்பி உள்ளவற்றில் த பெஸ்ட் எதுவோ அதையும் செலக்ட் செய்து அதையும் சேர்த்து படித்தால் அங்கே 250யும் போகஸ் ஆகும் , தலையும் போகஸ் ஆவரார் , போட்டியும் ஒரு அர்த்தம் பெறும் , கலந்து கொண்டவர்களுக்கு மனநிறைவு தரும் , மிக முக்கியமாக பரிசு உண்மையான வெற்றுயாளருக்கு போகும் சார் . வெறும் எண்ணிக்கை மட்டுமே இது குறிக்கிறது என்பதை உங்களால் மறுக்க முடியாதல்லவா சார் . அப்ப 40ஆவது ஆண்டு மலர் , 30ஆண்டு மலர் னு விட்டுருக்கலாமே முனபு . NBS, LMS ன்னு போகஸ் செய்யவேண்டிய அவசியம் என்ன சார் ? . அதே அவசியம் தானே இப்பொழுதும் சார் .

      Delete
    3. // 40ஆவது ஆண்டு மலர் , 30ஆண்டு மலர் னு விட்டுருக்கலாமே முனபு . NBS, LMS ன்னு போகஸ் செய்யவேண்டிய அவசியம் என்ன சார் ? //

      மிகச்சரியான நேரத்தில்
      மிகச்சரியான கேள்வி விசயராகவன் சார்

      Delete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. விஜயன் சார், மர்ம மனிதன் மார்டின் கதையின் அட்டை படம் நன்றாக உள்ளது.

      நமது மைல்கல் இதழ்களுக்கு லயன் 250 முத்து 350 என்ற பெயர்களை தேர்வு செய்தது சரியான முடிவு.

      நமது மறுபதிப்பு இதழ்கள் பற்றி: இதுவரை வந்த மறுபதிப்பு இதழ்களில் (இ.கை.மாயாவி தவிர)
      வார்த்தை பிழைகள் சற்று அதிகம்; இதில் கொஞ்சம் கவனம் செலுத்தி, இந்த குறைகள் இல்லாதபடி பார்த்து கொண்டால் மறுபதிப்புகள் இன்னும் சிறப்பாக இருக்கும்.

      Delete
    2. Parani from Bangalore : வரும் ஆண்டில், இதற்கென நேரம் ஒதுக்கி, முழுசுமே புது மொழிநடைக்கு வழிசெய்தால் தான் தேவலை என்று தோன்றுகிறது ! ஏற்கனவே உள்ள புராதன வரிகளைப் பட்டும் படாமலும் பட்டி-டின்கெரிங்க் பார்ப்பதில் முக்கால் ஜீவன் வற்றி விட, பிழை திருத்தங்களுக்கு கூடுதல் கவனம் தருவதில் சிரமம் நேர்கிறது !

      Delete
    3. // பிழை திருத்தங்களுக்கு கூடுதல் கவனம் தருவதில் சிரமம் நேர்கிறது ! //
      How about using our comics friends for this?

      Delete
    4. Parani from Bangalore : அதற்கு நேரம் கிட்டுவதில்லையே ? வெள்ளியிரவு முடிந்த ஜானி நீரோ கதை சனியன்று இரவு அச்சுக்கு செல்வதே நடைமுறை ! நண்பர்களுக்குக் கூரியர்களில் பக்கங்களை அனுப்பி, பின்னர் அவற்றைத் திரும்பப் பெற்று செயல்படுத்துவது என்பது நம் அவசரங்களுக்கு நடைமுறையில் சாத்தியமில்லா விஷயங்கள் - unless it's somebody who lives right here !

      Delete
    5. We can use email for urgent works sir. Please try once.

      Delete
  24. 'மி.ம' ஒன்பதாவது பாகம் படித்துக்கொண்டிருக்கிறேன். கோடை வெயிலுக்கு இதமாக பாலைவனப் பரப்புகளை கதைநெடுக கண்டுகளிப்பது சுகம்! இந்த வருடத்தின் 'கோடை மலராக' மி.ம'வை தாராளமாகச் சொல்லலாம்! பக்கத்திற்குப் பக்கம் எடிட்டர் மற்றும் குழுவினரின் உழைப்பை கண்கூடாய் உணரமுடிகிறது. அட்டகாசமான அச்சுத்தரம், வண்ணங்கள்! இப்படியொரு இதழைக் கையில் கொடுத்திருப்பதற்கு மீண்டும் ஒரு முறை பல நூறு நன்றிகள் எடிட்டர் சார்!

    சிறு குறை: வண்டி வண்டியான வசனங்களால் வேறு வழியில்லாமல் டயலாக் பலூனும் பெரிதாக்கப்பட்டிருப்பதால் அழகான சித்திரங்களும் மறைக்கப்பட்டிருப்பதோடு, பல சமயங்களில் ( ஒரே ஃப்ரேமிற்குள் நிரம்பி வழியும் பலூன்களால்) எந்தெந்த டயலாக் யார் பேசுவது என்ற குழப்பம் சற்று அதிகமாகவே தலை காட்டுகிறது!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : வசனங்கள் தான் இக்கதையின் முதுகெலும்பே எனும் போது அவற்றை குறைப்பதோ - எடிட் செய்வதோ சாத்தியப்படவில்லை ! இந்த பாகங்களின் first copy -ஐ நீங்கள் பார்த்திருக்கணும்....phew !!! இரத்தக் களறி தான் !

      Delete
  25. இவ்வளவு பெண்டை கழட்டினால் மார்ட்டினின் கதை நன்றாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.250இதழுக்கு போட்டி வைத்திருக்க வேண்டியதில்லை.தேர்ந்தெடுத்த டைட்டீல் உப்பு சப்பின்றி ஒரு பெப் இல்லாமல் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. "பெப்"-னா இந்த இந்த ஸ்கூட்டி பெப் ப்ளஸ்ஆ ?

      Delete
  26. THE. LION 250 சந்தாவில் கிடைத்துவிடுமா? முன்பணம் அனுப்ப வேண்டுமா சார்?

    ReplyDelete
    Replies
    1. Jagath Kumar : சந்தாவின் ஒரு அங்கம் தான் நண்பரே..!

      Delete
  27. வாழ்த்துகள் மாயாவி & தலீவர்.

    /// ஆனால் "250வது இதழ்" என்பது ஒரு பிரத்யேகத் தருணமல்லவா? So- `The லயன் 250’ என்ற சிம்பிளான பெயரையே வரவிருக்கும் நமது மைல்கல் இதழின் தலைப்பாகத் தேர்வு செய்கிறோம்! ///

    உலகம் என்றால் என்ன.?
    அம்மையப்பன் என்றால் என்ன.?
    அம்மையப்பன்தான் உலகம்., உலகம்தான் அம்மையப்பன்.

    புள்ளையாரு மாம்பழம் வாங்குன கதைதான் ஞாபகம் வருது. :) (D)

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிட் ஆர்டின் அவர்களே ..

      உங்கள் நினைவுகள் தவறு அல்லவே ...


      அம்மையும் ..அப்பனுமே உலகம் ..

      இதை மறப்பது மனித கொடுமை அல்லவா :)

      Delete
  28. மி.மரணம் சிறப்பாக இருந்த போதும் சில குறைகள் இல்லாமல் இல்லை.மூன்றாம் பாகத்தின் இறுதியில்1869அக்டோபர்5ல் பதவி விலக்கப்படும் டைகர்ஆறுமாதம் கழித்து பிரான்சிஸ்வில் சிறையில்ஆகஸ்டு மாதம் இருப்பதாக வருகிறது.மார்ச் அல்லது ஏப்ரல் வர வேண்டும்.விகோவிடம் பேரம் பேசும் போது காவலாளி "பேசிமுடித்துவிட்டு அழையுங்கள்."என்கிறான்.பிறகு நேரமாச்சு! வெளியே வாங்க.!என்று முன்னுக்கு பின்னாக பேசுதல்,பதினொன்றாம் பாகத்தில்."யூமாவில் இன்று மூன்றாம் உலகயுத்தம் நடக்கப்போகிறது "என்ற வசனம்.கதை நடக்கும் காலகட்டத்தில் ஒரு உலகப்போரும் நடந்தில்லை.பெரிய கலவரம் என்று வந்திருக்க வேண்டும்.சில இடங்களில் எழுத்துப்பிழையும் இருந்தது.கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம்.கடைசிபாகம் திருஷ்டிபரிகாரம்.மற்றபடி சூப்பர்.!

    ReplyDelete
    Replies
    1. karthik karthik : பிழையில்லா ஆக்கம் என்பதே லட்சியம் ; ஆனால் நடைமுறையில் அதுவொரு கனவாகவே இருந்து வருகிறது ! ஆனால் கவனமின்மை தான் காரணம் என்பதில் நான் உடன்பட மாட்டேன் - நமக்கு சாத்தியமான சகலத்தையும் அதனில் மூலதனமாக்கியுள்ளோம் ! The bottomline is that our best is still short of the real best !

      Delete
  29. //* முத்து-350தே 'கார்ட்டூன் ஸ்பெஷல்'ஆக வரயிருப்பது 'எதிர்பார்த்த' மகிழ்ச்சி! ( அட! கிட்ஆர்ட்டின் கண்ணனின் யூகம் சரியாகிவிட்டதே!!)///

    நன்றி இத்தாலி இசைக்குயில் அவர்களே.!
    எடிட்டர் சார்.,
    இந்த துல்லியமான கணிப்புக்கு ஏதேனும் பரிசு கிடையாதா சார்.???

    நீங்க கையெழுத்து போட்டு ஒரு ஜூனியர் லயன் இதழை (பழசு) அனுப்பி வைத்தால் மகிழ்ச்சியாகவும் மிகப்பெரிய கௌரவுமாகவும் இருக்கும் சார்.

    சத்தியமா (D) தானுங்கோ.!!!:):):)

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : கையெழுத்து நிறையவே இருக்குதுங்கண்ணா....ஆனாக்கா அந்த ஜூ.ல. இல்லிங்களே !!

      Delete
    2. நான் என்னிடம் அதிகப்படியாக இருக்கும் ஜீ.லயன் ஒன்றை உங்களுக்கு அனுப்புகிறேன் எடி சார்

      அதனில் உங்கள் ஆட்டோகிராப்பை இட்டு
      திருவாளர் கிட் ஆர்டின் கண்ணன் சார்க்கு அனுப்பிடுங்களேன்

      நமது காமிக்ஸ் வாசகர் முகத்தில் புன்சிரிப்பை கான எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்ததாக எண்ணுகிறேன்

      Delete
    3. ஆஹா.!.ஆஹா.!
      ஜெயசேகர் சார். மிக்க மகிழ்ச்சி.! மிக்க மகிழ்ச்சி.!!
      (நிறைய நன்றிகளும் கூடவே)

      Delete
    4. புக் மட்டும் கையில கிடைக்கட்டும்.
      புன்சிரிப்பு என்ன சார் புன்சிரிப்பு ..., குமரிமுத்து.,PS வீரப்பா எல்லாம் பயப்படுற அளவுக்கு கோடையிடி சிரிப்பே சிரிச்சிடுறேன்.! :-)

      Delete
    5. வாழ்த்துக்கள் ஜெயசேகர் ஜி
      தங்களின் பெரிய மனதுக்கு

      கலக்குறீங்க கண்ணன் ஜி :))

      இதுலயும் வட போச்சா :((
      .

      Delete
    6. கிட் ஆர்டின் சார்,அடா!இதுதான் அதிர்ஷடமோ! ஜெயசேகர்சாருக்கு நல்ல மனசு!

      Delete
  30. நீங்கள் பட்ட அவஸ்தையை, காமிக்ஸ் மாதிரி படத்துடன் எழதியது அருமை.

    ReplyDelete
    Replies
    1. Madipakkam Venkateswaran : இடுக்கண் வருங்கால்... :-)

      Delete
    2. //நீங்கள் பட்ட அவஸ்தையை, காமிக்ஸ் மாதிரி படத்துடன் எழதியது அருமை.
      //
      +1

      Delete
  31. //முதல் வாசிப்பிலேயே conquer செய்து விடலாமென்ற அவாக்களின்றி உள்ளே புகுந்தீர்களெனில் இந்தக் கதை நிச்சயமாய் உங்களை மெய்மறக்கச் செய்யும்! நிறைய தலைமுடிச் சேதாரம் நிகழும் தான்; ஆனால் பூமியின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் காத்திருக்கும் ஆண்டவனின் அதிசயங்களை எண்ணி வியக்காதிருக்க இயலாது! இந்தக் கதையின் களம் ஆஸ்திரேலியா! So - ஒரு down under பயணத்துக்குத் தயாராகிக் கொள்ளுங்கள்//

    intriguing lines Edit sir... waiting for the book...

    ReplyDelete
  32. Edit one doubt , when are you going to reprint Wild West Special(it was announced that it will be reprinted)...

    ReplyDelete
    Replies
    1. Satishkumar S : கொஞ்ச காலம் போகட்டும்...இப்போதைக்கு பாக்கெட்டுக்குள் காற்று மட்டுமே ஸ்டாக்கில் உள்ளது !

      Delete
    2. Accepted Edit sir, will remind after July !

      Delete
  33. தலீவருக்கும், மாயாவியாருக்கும் நமது வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. The Lion 250 appropriate title ..!

      Delete
    2. நன்றி சதிஷ் குமார் ஜீ ...

      நிஜமாகவே ....சதிஷ் ஜீ:)

      Delete
  34. அள்ள அள்ள குறையாத, படிக்க ,படிக்க, தெவிட்டாத,மகளிர்களின் ஆதரவு பெற்ற ஒரு அற்புதமான கதையான டெக்ஸ்வில்லரின் கதையை 7 மாதங்கள் காக்க வைப்பது கொடுமை சார்.

    ReplyDelete
    Replies
    1. Madipakkam Venkateswaran : சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை ஜரூராய் நடப்பது போல் தெரிகிறதே..பேஷ்...பேஷ் !

      Delete
  35. இவ்வளவு கஷ்டபட்டு இதழ்கள் தயாரித்தாலும் தவறுகள் வந்துவிடுகிறது.(நம் வாசகர்கள் வட்டத்தில் வாத்தியார்கள் அதிகம் போல் தெரிகிறது.விடைத்தாள்களை திருத்தம் போது ஆசியரியர்களுக்கு தவறுகள் மட்டுமே முதலில். கண்களில் தெரியும்.

    ReplyDelete
  36. பரிசு பெறும் மாயாவிஜி ,பரணீதரன் இருவர்க்கும் வாழ்த்துக்கள் ...:-)

    ReplyDelete
    Replies
    1. கர்ர் ....க்ராரா . ....க்ர்ர் . வாழ்த்துக்கள் -னு மட்டும் சொல்லுங்கள் . பரிசு பெறும் ... விடிய விடிய உட்கார்ந்து தலைப்பு யோசித்தவங்க வவயிற்றெரிச்சலை கிளப்பாதீங்க சார்

      Delete
    2. சேலம் Tex விஜயராகவன் : ஒய் திஸ் கொலை வெறி ?

      உங்கள் ஆசைக்கே வேறு எந்தத் தலைப்பு தேர்வாகியிருப்பினும் பாக்கி அத்தனை தலைப்புகளுக்கும் பிரயோஜனம் இன்றித் தானே போயிருக்கும் ?

      Delete
    3. கொலை வெறி எனக்கு ஒரு போதும் இல்லை சார் . நாம் இப்போது வைத்திருக்கும் போட்டியே லயன்250" க்கு பேர் வையுங்கள் என்பதே சார் . அதுதானே கொஸ்டியன் பேப்பர் . கெஸ்டியன யே 2பேர் எழுதி வைத்து உள்ளார்கள் , நீங்களும் அதையே செலக்ட் செய்து உள்ளீர்கள். அப்போது மற்ற நண்பர்கள் விழுந்து விழுந்து யோசித்து வைத்த பெயர்கள் எல்லாம் வீண்தான் என்ற எண்ணம் தான் காரணம் சார் .

      Delete
    4. ////லயன் 250க்கு பெயர் சூட்டுங்கள் என்று சொல்லிவிட்டு, லயன் 250யே, வெற்றிபெற்ற டைட்டில்////---- போட்டியே பொருத்தமான ஒன்றாக இல்லாமலும் போய் விடக்கூடாது என்று நினைத்ததாலும் சார் .

      Delete
    5. நன்றி செல்வம் அபிராமி ஜீ;)

      Delete
  37. டாலர் ராஜ்ஜியம் கிடைத்து விட்டது. நாளை படிக்கலாமென்று இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ந.கொ.ப.க.என்ற படத்தில் வருவது போல்"என்னது எம்ஜிஆர் செத்துடாரா?"

      Delete
  38. Good morning sir,

    Please, please, please don't publish # muthu 350 as #cartoon special, I don't recall any cartoon stories published in muthu comics how can you even imagine such a thing, please reconsider your decision sir.

    ReplyDelete
    Replies
    1. Mahesh you have a point friend!

      special +1

      Delete
    2. Mahesh : ப்ளூ கோட் பட்டாளம் ?

      Delete
    3. Oh god, irumbu kai maayavee is not a cartoon character? I thought it was...:-)

      Delete
    4. Podiyan : ஆட்டோக்கள் கடல் கடந்து வர வாய்ப்பில்லை என்ற தைரியமா ? ஆஹா !!

      Delete
  39. MM is art paradise, i coudnt read fast seeing single page have so much to notice nothing enough to praise the amaze of Jean Giraud and Charlier combo.. twists and turns its legendary no doubts. thanks for deciding to re-edit the book I think that stitches plot as it is in original, thanks once more for the quality of the print Edit sir.

    i am in 3rd chapter book runs with so many twists already....
    ReplyDelete

    ReplyDelete
  40. //EV: * அப்புறம்... 'மி.ம' ஏற்படுத்தவிருக்கும் ரெக்கார்டு -என எடிட்டர் குறிப்பிட்டது எதை?//
    edit same question..!

    ReplyDelete
  41. டியர் விஜயன் சார்,மார்ட்டினின் மிஸ்டரியை மையமாக கொண்ட கதைகள் என் ஆல்டைம் பேவரெட்.ஜாலி ஸ்பெசலில் வந்த பழி வாங்கும் ரா, பலமுறை படித்து வியந்த கதை.லயன் 250 பேர் சூட்டும் போட்டியில் பரிசு பெற்ற நண்பர்கள் மாயாவி சிவா, மற்றும் தாரை பரணியை பாராட்டுகிறேன்.மனதில் உள்ள நெருடல் என்ன வென்றால், லயன் 250க்கு பெயர் சூட்டுங்கள் என்று சொல்லிவிட்டு, லயன் 250யே, வெற்றிபெற்ற டைட்டில் என்பது எந்த வகை நியாயம் என்று தெரியவில்லை சார்.,பலரும் நேரத்தை செலவழித்து டைட்டில் சொன்னதெல்லாம் வேஸ்ட்டா சார்.சரி,லயன் 250தான் பரிசுகுறிய டைட்டில் என்றால், அதை முதலில் சொன்னது., யாரென்று கமெண்டில் முன்னோக்கி தேடிபார்த்தால் அதில் என்பெயர் இருக்கும் சார். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Dr.Sundar,Salem. : அட...அப்படியா ? தேடித் பார்த்து விட்டால் போச்சு !

      மீண்டும் பதிவிடுகிறேன் : இது 'தல' பங்கேற்கும் 'தல தீபாவளி' ! So இங்கே guest -ஐ விட அந்த occasion தான் பெரிதென்று நினைத்தேன் ! இதனில் இத்தனை சங்கடங்கள் அவசியம் தானா ?

      Delete
    2. Dr.Sundar,Salem. : உங்களின் தலைப்பும் இதுவாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாய் போசெல்லி 3 ஆடோகிராப்கள் போடச் செய்து விடுவோம் !

      Delete
    3. சூப்பர் விஐயன் சார்

      அப்படியே அந்த புத்தகம் வாங்க ஆசப்பட்ட இந்த பச்சமண்ணு (சத்தியமா நான்தான் சார் ) க்கும்

      ஒரு புத்தகம் அனுப்புங்களேன் சார்

      நன்றி சார் _/\_

      Delete
    4. வாங்குர புக்கை எனக்கு அனுப்பிடூங்க பிரபாகர் சால்

      Delete
  42. சார் ....நன்றி..நன்றி .....

    முதல் முறையாக பரிசு பெறுகிறேன் ...சிறு வயதில் ஒரு பேனா பாக்ஸ் பரிசு வாங்கியதும் தோழி பேரில் ....
    .டெக்ஸ் முன்னிருத்தி பல தலைப்புகளை நான் சொல்லி இருப்பினும் நீங்கள் சொன்னது போல லயன் 250 என்ற மைல் கல் இதழுக்கு அவை கொஞ்சம் மந்த படுத்தியது போலவே இருந்த காரணத்தினால் லயன் காமிக்ஸ் 250 என்ற இதழுக்கு

    " தி லயன் 250 " என்பதையும் இணைத்து இருந்தேன் ..மற்ற தலைப்பை விட இது எனக்கு வெற்றி பெற்றது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது..மீண்டும் நன்றி சார் ...

    அப்புறம் பரிசாக அனுப்பும் புத்தகத்தில் நான் படம் பார்க்க மட்டுமே செய்வேன் என்பதால் அந்த ஆசிரியரின் கையெழுத்து உடன் உங்கள் கையெழுத்து யும்ம் மறவாமல் அனுப்புங்கள் சார் ..அப்பொழுது தாம் அவை பொக்கிஷமாய் பார்க்கப்படும் ...

    ReplyDelete
    Replies
    1. தலிவரே

      டீ இன்னும் வரல :(
      .

      Delete
    2. // அப்புறம் பரிசாக அனுப்பும் புத்தகத்தில் நான் படம் பார்க்க மட்டுமே செய்வேன் //

      தலீவரே

      பப்ளிக் பப்ளிக் :))
      .

      Delete
  43. " கனவின் குழந்தைகள் " அட்டைபடம் கலக்கல் சார் ...

    உண்மையில் மீண்டும் ஒரு பழைய முத்து காமிக்ஸ் அட்டைப்படத்தை பார்ப்பது போன்ற உணர்வும் ...ஒரு புது இதழுக்கான புதுயுக அட்டைபடம் பார்ப்பதும் போன்ற உணர்வும் ஒரு சேர ஏற்படுத்துகிறது .....

    உங்களின் பிழை திருத்த பணிகளை பார்க்கும் பொழுது தான் தெரிகிறது எவ்வளவு அசரடிக்கும் பணி என்பது ....ஹும்.....இன்னமும் காமிக்ஸ்.... குழந்தைகள் புத்தகம் என்ற நினைப்பில் இருப்பவர்களை பார்த்தால்...எரிச்சல் தான் வருகிறது ....

    ReplyDelete
  44. good morning all.... good morning vijiyan sir.......

    ReplyDelete
  45. கனவின் குழந்தைகள் அட்டைப்படம் மிகவும் அருமையாக அமைந்துள்ளது எடி சார்

    டெக்ஸ்ஸையே கடவுளாக வணங்கி வாழும்!!! தாரமங்கலம் பரணீதரன் சார்க்கும்
    அருமையான தலைப்பை தேர்ந்தெடுத்த மாயாவி சிவா சார்க்கும்
    டெக்ஸ் இத்தாலி புத்தகங்களை பெற்றமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. //டெக்ஸ்ஸையே கடவுளாக வணங்கி வாழும்!!! தாரமங்கலம் பரணீதரன் சார்க்கும் ///
      டெக்ஸ் - நம்ம தலீவருக்கு சைடு கடவுளுங்க! மெயின் கடவுள் ஒருத்தர் இருக்கார்... அவரை 'தமிழ் சினிமாவின் டெக்ஸ்' என்று சொல்லலாம்! ;)

      Delete
    2. ஏங்க எவரைப் போய் எது கூட கம்பேர் பன்றீங்க ....உவ்வே ...

      Delete
    3. விசயராகவன் சாரு என்னை மன்னிச்சு

      Delete
    4. டெக்ஸ்ஜீ. வாந்தி வருவது உடலுக்கு நல்லது ...:)

      Delete
  46. பரிசு பெறும் மாயாவிஜி ,பரணீதரன் இருவர்க்கும் வாழ்த்துக்கள் ...:-)

    ReplyDelete
  47. attai padam super...

    martin ku hearty welcome...

    lion - 250

    muthu - 350.....

    dheivamey nama engayooooo poitom nu feel pana thonudhu thaleeva,,,

    ReplyDelete
  48. முத்து காமிக்ஸ் 350 வது இதழ் கார்டூன் ஸ்பெஷல் இதழா ...சூப்பர் சார் ......

    எதிர் பார்த்த ரவிகண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ...

    முதல் முறையாக முத்துவில் ஒரு நகைசுவை கலாட்டா ......

    எத்துனை பக்கம் . எத்துனை கதைகள் ..எந்த எந்த நாயகர்கள் என்பதை அறிய கரக்காட்ட குழுவுடன் ....போராட்ட குழுவும் இணைந்து காத்திருக்கிறது சார் ..

    ReplyDelete
  49. வீட்டில் அனைவரும் விடுமுறைக்கு சென்று விட்டதால் இன்று மதியம் அலுவலகம் முடிந்து இல்லம் திரும்பிய பின் ஒரே மூச்சில் மின்னும் மரணத்துடன் மூழ்க போகிறேன் சார் ...

    இதற்க்கு தானே ஆசை பட்டாய் பரணி தரா ... :-)

    ReplyDelete
    Replies
    1. தங்கமணீணீ...... என்ஜாய்ய்......!!!

      Delete
    2. மடிப்பாக்கம் வெங்கடேஷ் ஜீ

      :):):)

      Delete
  50. இனிய காலை வணக்கங்கள் விஜயன் Sir :)
    இனிய காலை வணக்கங்கள் comics நண்பர்களே

    net connection problem for 2 weeks so couldn't be come here properly

    மார்டினை இம்மாதம் ரொம்ப எதிர்பார்கிறேன்
    எனக்கு கதைகள் ரொம்ப பிடிக்கும்

    தாங்கள் Martin கதைக்கு மிகுந்த சிரமம் மேற்கொண்டு உள்ளீர்கள்
    உங்களுடைய சிரமத்தை humor sense-உடன் விவரிக்கும் விதம் உங்கள் எழுத்து நடையில் எனக்கு பிடித்தது

    அட்டை படம் நன்றாக உள்ளது Sir :)


    ReplyDelete
    Replies
    1. SeaGuitar9 : மாலை வணக்கங்கள் ரம்யா ! பின்னூட்டக் குவியலுள் உங்கள் வரவைக் கவனிக்கவில்லை ! மார்ட்டின் எல்லோருக்குமே பிடிக்கும் தான் - கோர்வையாய்ப் படிக்க சாத்தியமாகும் பொழுது ! அதன் பின்னே தான் சிரமங்களே ஒளிந்துள்ளன !!

      Delete
  51. தலைப்பு போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்து சொன்ன அனைத்து காமிக்ஸ் நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றி ....

    எதிர்த்த ஒரே ஜீவன் டெக்ஸ் விஜய ராகவன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி ...

    விடுங்க டெக்ஸ் விஜய்...உங்கள் ஆதங்கம் புரிகிறது ..இப்படி பட்ட டெக்ஸ் சிறப்பதழில் டெக்ஸ் என்ற பேரை காண வில்லையே என்பது தானே உங்கள் குறை ...நாம் என்ன டைகர் போல ஒரே சிறப்பிதழ் உடன் நின்று விடுகிற போகிறமா என்ன ...இன்னும் டெக்ஸ் சிறப்பிதழ் எத்துனை உள்ளது ..அதில் டெக்ஸ் பேரை இணைத்து கலக்கி விடுவோம் நண்பரே .. :-)

    ReplyDelete
    Replies
    1. //நாம் என்ன டைகர் போல ஒரே சிறப்பிதழ் உடன் நின்று விடுகிற போகிறமா என்ன ...இன்னும் டெக்ஸ் சிறப்பிதழ் எத்துனை உள்ளது ..அதில் டெக்ஸ் பேரை இணைத்து கலக்கி விடுவோம் நண்பரே .. :-)//

      நீங்க சொன்னா சரியாத்தானிரு க்கும் தல.!!!
      அப்பிடியே செஞ்சிபோடலாமுங்கோ.!!!

      Delete
    2. //நாம் என்ன டைகர் போல ஒரே சிறப்பிதழ் உடன் நின்று விடுகிற போகிறமா என்ன ...///
      :D
      சூப்பரு தலீவரே!

      Delete
    3. ஆலை இல்லாத ஊர்.....

      Delete
    4. // நாம் என்ன டைகர் போல ஒரே சிறப்பிதழ் உடன் நின்று விடுகிற போகிறமா என்ன? //

      அதானே!

      Delete
    5. தலீவரே நீங்கள் வெற்றி பெற்றதை எதிர்க்கல . போட்டி(?) நடந்த முறை தான் ....அதைவிடுங்க. எவரெஸ்ட் சிகரத்தில் பல பேர் ஏறுகிறார்கள், தலை என்னும் எவரெஸ்ட் ல லயன் 250 ஒரு பனிக்கட்டி தான் . தலைக்கு ஒராயிரம் ஸ்பெசல்கள் உலகெங்கும் வருது.

      Delete
    6. அப்புறம் ட்ரீட் எப்ப தலீவரே .

      Delete
    7. அப்புறம் ட்ரீட் எப்ப தலீவரே .//

      பாவம் ரம்மி ஜி :((
      .


      Delete
    8. டெக்ஸ் ஜீ ....ட்ரீட் கண்டிப்பாக உண்டு ...

      உங்கள் இல்லத்திலேயே ...உங்கள் துணைவியார் பறிமாற ....

      எங்கள் போராட்ட குழு பார்ட்டிகள் அனைத்தும் இவ்வாறே நடை பெறுகிறது ...சந்தேகம் இருப்பின் செயலாளர் அவர்களை அனுகவும் ..:)

      Delete
    9. ரத்த படலம் பாகம் 4ல் பெட்ஷி மெசின் கண்ணை வைத்து ஒரு டயலாக் பேசும் தலீவரே " இந்த விருந்தை உண்டு ஜீரணிப்பவன் யராரோ " என . பல நாள் அந்த மெசின் கன் மாதிரி தான் என் வீட்டுக்காரி கரண்டியை கையாள்வாள் . விருந்துக்கு எப்ப வர்ரீக தலீவரே . உங்களை எல்லோரும் தலீவரே தலீவரே -என்றே அழைப்போம் .

      Delete
  52. I think you fave finalised your decision on muthu 350 its a big disappointment for me. I expected to mega books. Sad.

    Please guys vote for separate books, one last try to convince EDI sir.

    ReplyDelete
  53. //And by the way - தல தாண்டவமாடும் இந்த லயன் இதழ் # 250-க்கு ஒரு பொருத்தமான பெயராக suggest பண்ணுங்களேன் ? //

    மேலே உல்ல வரிகளுக்கு நீங்கள் சூட்டிய பெயர் நியாயம் செய்ததாக தோன்றவில்லை.

    அப்படி இந்த பெயருக்கு தான் பரிசென்றால் அந்த பரிசு உங்களுக்கே சேர வேண்டும்.
    // இந்த லயன் இதழ் # 250-க்கு ஒரு பொருத்தமான பெயராக suggest பண்ணுங்களேன் ? //

    ReplyDelete
  54. டைமிங்காக தலைப்பு கொடுத்து பரிசை தட்டிச்செல்லும் மாயாவி சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.(மாடஸ்டி போஸ்டர் இன்னும் வரலேயே சார்.)ஆகஸ்டில் ஈரோட்டில் கிடைக்குமா ?

    ReplyDelete
    Replies
    1. Madipakkam Venkateswaran : மாடஸ்டி போஸ்டரா ? இரத்தப் படலம் வண்ணத் தொகுப்பு வரும் சமயம் பார்ப்போமா ?! :-)

      Delete
    2. சார்,மி.ம.வெளியீடடு விழாவில் , விழா முடிந்த பின்னே,பிறந்த நாள் விழாவில் விழாமுடிந்த பின்,அங்கு தோரணமாக கட்டபட்ட பலூனை ஆளுக்கு ஒன்று எடுத்துசெல்வார்களே , அதைப்போல ,விழாவில் ஒட்டப்பட்ட அழகிய மாடஸ்டிபோஸ்டரை ஆட்டைபோட்டேன்.அதை பிடுங்கி
      கொண்டு ,(அது அவருடையதுதான்)அ





      தைவிட அழகான போஸ்டர் தருவதாக வாக்களித்தார் .அதுதான் கேட்டுகொண்டிருக்கின்றேன்.

      Delete
  55. ஆனாலும் எடி சார்
    எனக்கு ஒரு மனக்குறை
    இது எண்ணம் ஏற்படுவது எனக்கு மட்டும்தானா?

    பாரம்பரியம்மிக்க * முத்து காமிக்ஸ் * 350வது இதழுக்கு வெளியிட

    தமிழ் காமிக்ஸ் ஜாம்பாவானாகிய உங்களுக்கு போயும் போயும் மினிலயன் எனும் காமடி இதழ்தானா கிடைத்தது?

    இது என் மனதிற்கு நன்மகிழ்ச்சியை தரவில்லை

    350து இதழ் வெளியிட ஒரு ஸ்பெஷல் இதழ் தான் வேண்டும் என்பதல்ல
    முத்துவில் வெளிவந்து சூப்பர்ஹிட் கொடுத்த ஏதாவது ஒரு கதையையாவது மறுபதிப்பாக வெளியிட்டு விடலாமே

    மினிலயன் ரிடர்ன் என்று அதற்குத்தனியாக விழா எடுத்திருக்கலாம்

    பின்குறிப்பு : லயன் கதாநாயகன் டெக்ஸ்ஸின் முதன் முதலாய் இருகதைளாய் வெளிவந்த 2013 தீபாவளி மலரை சன்ஷைன் லைப்ரரியில் வெளியிட்டு டெக்ஸ்ஸின் மதிப்பை கெடுத்ததுபோல்
    முத்துவில் மினிலயனை வெளியிட்டு முத்துவின் பாரம்பரியத்தை கெடுத்துவிடாதீர்கள் என்பது முத்துவின் பழமை வாசகனாகிய எனது தாழ்மையான கருத்து

    எடிசார்
    எனது கருத்து உங்ளை வருத்தமளிக்கச் செய்தால் என்னை மன்னிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. இது என் தனிப்பட்ட கருத்தாகும்
      யாரையும் மனவருத்தபடுத்துவதற்காக அல்ல

      Delete
    2. எங்களுக்கு சந்தோஷம் .எங்கே ஒரு மைல்கல் இதழிலில் மொக்கை கதையை போட்டு விட்டு கழவி கழவி ஊற்ற வேண்டிய கஷ்டத்தை கொடுத்து விடுவாரோ என்று பயந்தேன்.

      Delete
    3. ஜெய சேகர் சார்,உங்கள் கருத்து சரிதான் என்றாலும்,இரும்பு கை எத்தன் கதையில் 2பாகங்களும் அவ்வளவு அருமையான கதை நெடுநாள் வாசகரான உங்களுக்குத்தெரியும். மூன்றாம் பாகத்தை வெளியிடச்சொல்லி காரசாரமாக 8 வருடத்தில் பலமுறை எடிட்டருக்கு கடிதம் எழதினேன்.ஆனால் இரத்தத்தடம் வெளியிட்ட பின்னரே காரணம் புரிந்தது.

      Delete
    4. எனவே கார்ட்டூன் ஸ்பெஷல் வெளியிட ஏதாவது காரணம் இருக்கும் . காரணத்தை சொன்னால் கழதையை தோளில்வைத்து சுமந்த கதையாகி விடும்

      Delete
    5. Jaya Sekhar : பார்வைக் கோணங்கள் எல்லோருக்கும் ஒரே பாணியில் இருப்பது சாத்தியமில்லை என்பதை நான் ஏற்றுக் கொள்ள வேண்டியது எத்தனை நிஜமோ - அத்தனை அவசியமே அதனை நீங்களும் புரிந்து கொள்வது !

      கார்ட்டூன் போட்டால் முத்து காமிக்ஸின் பாரம்பரியம் போச்சு ; சன்ஷைனில் வந்ததால் டெக்சின் மவுசு போச்சு போன்ற சிந்தனைகளின் பின்னணி லாஜிக்கை புரிந்து கொள்ளும் ஆற்றல் சத்தியமாய் என்னிடமில்லை !

      முத்து காமிக்ஸில் தானே இன்றைய லார்கோ வலம் வருகிறார்...வண்ணமயமான பட்டாம்பூச்சிகளோடு..? டைகரின் காதல் லீலைகளுடனான "கானலாய் ஒரு காதல் " ஒரு அங்கமான இன்றைய மின்னும் மரணம் கூட முத்து காமிக்ஸின் மெகா இதழ் தானே ? மாற்றங்கள் காலங்களின் கட்டளை என்பதை அப்போதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியும் போது - ஒரு கார்ட்டூன் தொகுப்பை முத்து காமிக்ஸில் வெளியிடுவதன் மூலம் அதன் புனிதம் / பாரம்பரியம் போயே போச்சென்று ஆதங்கம் கொள்வது ஏனென்பது விளங்காப் புதிரே ! இத்தனைக்கும் அதனில் வரக்காத்திருக்கும் கதைத் தொகுப்புகள் என்னவென்ற அறிவிப்பு கூட வந்த பாடில்லை !

      சன்ஷைனில் வெளி வந்ததால் மவுசைத் தொலைத்த டெக்ஸ் தான் ஆறே மாதங்களில் sold out என்ற போர்டைத் தொங்கச் செய்தார் அந்த தீபாவளி மலருக்கு ! ஒரு லோகோவோ / லேபிளோ தான் ஒரு இதழின் தலைஎழுத்தை மாற்றியமைக்கப் போவதாக நீங்கள் நம்பினால் அங்கே இரண்டே விஷயங்கள் தான் சாத்தியம் : ஒன்று அந்தக் கதையின் நாயகனொரு முதல்தரப் புல்தடுக்கிப் பயில்வானாக இருந்திட வேண்டும் ;அல்லது நீங்கள் பிடிவாதமாய் மாற்றங்களை வெறுக்கும் mindset கொண்டவராக இருந்திட வேண்டும் ! முன்னது நிஜமில்லை என்பதை நீங்களும் அறிவீர்கள் ; நானும் அறிவேன் !

      அப்புறம் மினிலயன் உங்களுக்குப் பிடிக்கிறதா - இல்லையா என்ற கேள்விக்குள்ளேயே வராது - "போயும் போயும் கார்ட்டூன் கதைகளா ?" என்ற கேள்வியின் தொனி சத்தியமாய் ஒரு காமிக்ஸ் வட்டத்துக்குப் பெருமை சேர்க்கும் கருத்தாய் இருக்கப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம் !

      இங்கு போடப்பட்டுள்ள வட்டங்களும், கட்டங்களும் இயற்கை அமைத்த நியதிகளல்ல நண்பரே - மாற்றங்கள் ஒரு தெய்வகுற்றமாகிப் போவதற்கு ! Just relax..!

      Delete
  56. இ.இ.கொ.என்னும் கி.நா லில் இன்னும் என்னால் புரிந்து படிக்க முடியவில்லை.ஆனால் ஒரு வாசக நண்பர் தன் மனைவியிடம் இந்த கதையை படிக்க கொடுத்துள்ளார் அவர் அந்த கதையை ஏக் தம்மில் படித்து முடித்து விட்டு,அட்டகாசமான கதை என்று பாராட்டிவிட்டு இதைப்போல் கதை இருந்தால் கொடுக்கும்படி கேட்டு உள்ளார் .இத்தனைக்கும் அவர் காமிக்ஸ் ரசிகை அல்ல.

    ReplyDelete
    Replies
    1. Madipakkam Venkateswaran : ம.ம.மா. இதழைக் கொடுத்துப் பாருங்கள் சார் !

      Delete
  57. ம.ம.மா கதைகளை வருடத்திற்கு ஆறு புத்தகங்களாவது வெளியிடுங்களேன் எடி சார்

    ReplyDelete
    Replies
    1. Jaya Sekhar : ஆண்டுக்கொரு இதழுக்கே நாக்கு தொங்குகிறது...6 என்பது அம்மாடியோவ் !

      Delete
  58. மாயாவி சிவா சார்,ஹலோ ,ஹலோ.ஹல்ல்ல்லோ!.

    ReplyDelete
    Replies
    1. மாயாவி.. அவுட் ஆஃப் ஸ்டேசன் மாடஸ்டி சாரே.!!
      நாளைக்கு லைனில் வருவாரு.!

      Delete
  59. " The முத்து350 "

    எல்லாரும் பார்த்துக்கோங்க... முத்து #350க்கு மிகச் சரியான டைட்டிலை வைத்து நான் ஜெயிச்சுட்டேன்! ஜெயிச்சுட்டேன்! ஜெயிச்சுட்டேன்! நாங்களும் பெரிய டைட்டில்காரவுக தான்!

    எடிட்டர் சார், எனக்கான பரிசை என்னோட இந்திய முகவரிக்கே அனுப்பிடுங்க ப்ளீஸ்! ;)

    ReplyDelete
    Replies
    1. The முத்து 350. நானும் சார் . 2வதுபரிசு எனக்கு ஐய் வெற்றி வெற்றி

      Delete
    2. செல்லாது செல்லாது

      விஜயன் சார்தான் போட்டி அறிவிக்கணும்
      அப்புறந்தான் தலைப்பு வைக்குறது எல்லாம்

      இது போங்கு ஆட்டம் :))
      .

      Delete
    3. டெக்ஸின் தீவிர வாசகர்கள் அனைவரும் டெக்ஸை மையமாக கொண்டே யோசித்தோம்.லயன் இதழின் ஒரு மைல்க
      ல் என்பதை கணக்கில் கொள்ளவில்லை.மாயாவி மட்டுமே மாத்தியோசித்தார்.

      Delete
    4. பூனையாரே உங்கள் தலைப்பில் சிறு தவறு உள்ளது.
      " The முத்து350 " தவறு
      " The முத்து350 spl " இது தான் சரி.
      எங்கே என் பரிசு எங்க என் பரிசு

      Delete
    5. இத்தாலி விஜய், நீங்களுமா???

      Delete
    6. @ M.V
      எ..ஏன்? நான் பரிசு பெறத் தகுதியில்லாதவனா? தலைப்பெல்லாம் சரியாத்தானே வச்சிருக்கேன்? :D

      Delete
  60. அடடா வட போச்சே :((
    .

    ReplyDelete
    Replies
    1. விடுங்க சிபிஜி.!
      லயன் 300
      முத்து 400 ன்னு நிறைய வரும்.
      அப்போ வடைய விடாமே கெட்டியமா பிடிச்சுக்குவீங்களாம்.

      உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட தத்துவம்ததான்
      "த்ரிஷா இல்லேன்னா திவ்யா."

      Delete
  61. வாழ்த்துக்கள்

    மாயாவி ஜி

    தலிவரே

    சுந்தர் ஜி :))
    .

    ReplyDelete
  62. சார் எனக்கு மூணா வது குழந்தை பிறக்கப்போகுது ஒரு நல்ல பேரா வைங்க பரிசு உண்டு
    அப்படியா..அதை வைங்க...இதை வைங்க...
    அதெல்லாம் வேணாம் சார் பேசாம மூணா வது குழந்தை ன்னே வச்சிடுங்க சூப்பரா இருக்கும்
    சபாஷ்...மூணா வது குழந்தை ..அருமையான பேரு பிடிங்க பரிசை
    இனிமே யாராச்சும் பேரு வைக்க வருவீங்க ?

    ReplyDelete
    Replies
    1. selvas : வீட்டுக்கு ஒரு புது வரவென்பது கடவுளின் வரம் ; என் மேலுள்ள கடுப்பை வெளிப்படுத்த வேறு உபாயங்கள் இல்லாதா போய் விடும்..?

      Delete
  63. Sir

    At least we expect 4 mega issues a year.

    ReplyDelete
    Replies
    1. Srinivas Nagarajsethupathi : அளவோடு இருக்கும் வரை தான் எல்லாமே ஸ்பெஷல் சார் !!

      Delete
  64. "THE LION 250" செம கெத்தா இருக்கு சார். அதையே யூஸ் பண்ணுங்க. ................................. மேலும், Muthu 350'ஐ கார்ட்டூன் ஸ்பெஷலாக போட வேண்டாம். 351'னிலிருந்து கார்ட்டூன் போடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜெகத் குமார் சார் ...

      Delete
  65. எடி சார் கார்டுன் ஸ்பெஷலில் வெளிவரும் கதைகள் என்ன என்ன?
    விளக்குங்களேன்

    ReplyDelete
    Replies
    1. Jaya Sekhar : வெவ்வேறு கதைகளின் combination -களில் முயற்சிகள் ஓடி வருகின்றன... ஒரு இறுதி வடிவம் தயாராகும் வேளைக்கு இன்னும் கொஞ்சம் தூரமுள்ளது ! சொல்கிறேனே..!

      Delete
  66. விஜயன் சார், வரும் மாதம் கௌபாய் இல்லாத மாதமாக அமைய உள்ளது சந்தோசமாக உள்ளது! அதே போல் ஜூன் மாதம் முடிந்தால் நமது காமெடி நாயகர்கள் கதை ஏதாவது ஒன்றை களத்தில் இறக்கிவிட்டால் நன்றாக இருக்கும்; சில மாதம்களாக சிரியஸ் ரககதைகள் படித்ததில் இருந்து ஒரு பிரேக் கிடைத்தது போல் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : ஜூனில் ப்ளூ ...!

      Delete
  67. முத்து 350 கார்டூன் ஸ்பெசல்- ரைமிங்காதான் இருக்கு சார் . என்ன விலை சார் ? ரூபாய் 350 என இருந்தால் இன்னும் கொஞ்சம் ஒன்றி வருமே சார் . முன்பதிவு எப்போது ஆரம்பம் சார் ?

    ReplyDelete
  68. வெற்றி பெற்ற தலைவர் அவர்ட்கும், மரயரவி சிவர அவர்கட்கும் என் வரழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி திருச்செல்வம் ப்ரபானந்த் சார் ...:)

      Delete
  69. அடுத்த வருடமே மின்னும் மரணத்திற்கு இந்த நிலை வரலாம் மிஸ் பண்ணிடாதீங்க மி.மி..... த்தை http://www.ebay.in/itm/XIII-COMPLETE-COLLECTION-/221758370115?aff_source=vizury

    ReplyDelete
    Replies
    1. R.Anbu : விற்பனை செய்ய முனைவது அதன் ஓனரின் உரிமை தான் ; ஆனால் அந்த முயற்சியின் மீது கவனத்தை கொண்டு செல்ல நாமே ஒரு கருவியாய் இருந்திட வேண்டாமே ?!

      Delete
    2. sir
      so v want that book in color

      Delete
  70. கர்ர்டூன் ஸ்பெஷல் முன்பதிவர ஸர்ர் ? அப்படி என்றரல் முன்கூட்டியே அஅறிவியுங்கள் ஸர்ர் பிளீஸ்.

    ReplyDelete
  71. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் என்ன சம்பந்தம்? முத்துகாமிக்சுக்கும் கா.காமெடி ஷ்பெஷலுக்கும் என்ன சம்பந்தம்

    ReplyDelete
    Replies
    1. சப்போர்ட் +1 ராஜசேகர்வேதிகா சார்

      Delete
    2. +1

      Editor sir its true Blue coats was published under Muthu brand, but Blue coats are not a real cartoon type, some are for adults i believe.
      Muthu brand had all serious actions including our latest MM..., Muthu350 with comedy special its just not jelling is my humble opinion.

      Delete
    3. rajasekarvedeha : NBS -ல் சிக் பில்லுக்கு என்ன சம்பந்தமிருந்ததோ - அதே சம்பந்தமே !

      Delete
    4. rajasekarvedeha : விச்சு & கிச்சு க்களுக்கும், கபிஷ்களுக்கும் ; அதிமேதை அப்புக்களுக்கும் ; ப்ளூ கோட் பட்டாளங்களுக்கும் என்ன தொடர்புள்ளதோ முத்து காமிக்ஸுடன் - அதே தொடர்பே என்றும் எடுத்துக் கொள்ளலாமே ?

      Delete
    5. LMS லயன் காமிக்ஸில் டைகர் வந்தாரே அதை விட்டு விட்டீர்களே!!

      Delete
    6. //LMS லயன் காமிக்ஸில் டைகர் வந்தாரே அதை விட்டு விட்டீர்களே!!//

      மாடஸ்டி சார்,
      சீட்டாட்டத்துல ரம்மின்னு ஒருவகை உண்டு. அதுல. , ஜோக்கரை எங்க வேணாலும் யூஸ் பண்ணுவாங்க.!

      (இதுக்கும் டைகருக்கும் சம்பந்தம் இல்லீங்...……………)

      Delete
    7. //LMS லயன் காமிக்ஸில் டைகர் வந்தாரே அதை விட்டு விட்டீர்களே!!//

      மாடஸ்டி சார்,
      சீட்டாட்டத்துல ரம்மின்னு ஒருவகை உண்டு. அதுல. , ஜோக்கரை எங்க வேணாலும் யூஸ் பண்ணுவாங்க.!

      (இதுக்கும் டைகருக்கும் சம்பந்தம் இல்லீங்...……………)

      Delete
  72. டெக்ஸ் விஜய் சொன்னது போல இது லயன் 250 வது இதழ் என்றோ ..பத்தாம் ஆண்டு மலர் என்றோ முப்பதாம் ஆண்டு மலர் என்றோ பெயர் சூட்டி நாங்கள் பெயர் வைக்க வில்லையே ..

    தி லயன் 250 என்ன கம்பீரமான பெயர் ..
    விடை வினாவிலேயே இருக்கலாம் ..அதை அதிலிருந்து திறம்பட எடுத்துரைப்பதிலும். ஒரு அழகு உள்ளது ..மேலும் நானே அதை மட்டுமா தேர்வு செய்திருந்தேன் ..டெக்ஸ் பெயரை இணைத்து எத்தனை தலைப்புகள் ...

    அனைவரும் டெக்ஸ் என்ற பெயரில் ஈடுபாடு காட்டினாலும் 250 இதழுக்கு என்பதை கொஞ்சம் பின் தள்ளி விட்டார்கள் .என்னை பொறுத்த வரை எனது டெக்ஸ் பெயரை இணைத்து நான் சொன்ன தலைப்பை தேர்ந்தெடுத்தால் கூட இவ்வளவு மகிழ்ச்சி கிடைத்திருக்காது ...எனவே பஞ்சாயித்தால் பரிசு கிடைக்காவிட்டாலும் மற்ற பெயரை விட இந்த பெயரை அந்த இதழ் தாங்குவதையே பெரும் பரிசாக எண்ணுகிறேன் ..நன்றி ..வணக்கம் ..🙏🙏🙏:)

    ReplyDelete
  73. கார்ட்டூன் கதைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என முதன்முதலில் அச்சாரம் போட்டு பின்னர் கார்ட்டூன் ஸ்பெஷல் பற்றிய எண்ணத்தை ப்ளாக் மற்றும் எடிட்டர் மனங்களில் அழுத்தமாக ஏற்படுத்தியவர் என்ற வகையில் ICL (Indian Comics League )சார்பாக கண்ணன் ரவி அவர்களுக்கு CSK (Cartoon Special Kannan )என்ற பட்டத்தை அளிப்பதில் பேருவகை அடைகிறேன் ...

    லயன் 350 தான் கார்ட்டூன் ஸ்பெஷல் என முன்னரே கூறியதால் "காமிக்ஸ் ஜோதிட கலா ரத்னா "என்ற மற்றுமொரு பட்டமும் அளிக்கிறேன் ...

    பி.கு ..அப்படியே ஈரோடு விஜய் கையில் ஜொள் போட்டு ..சாரி மை போட்டு பார்த்து ஸ்டெல்லா (ஜானி நீரோவுக்கு தெரியாமல் )போன் நம்பர் பாத்து சொல்ல முடியுமா ???

    ReplyDelete
    Replies
    1. லயன் 350»»»முத்து 350(திருத்தம் )

      Delete
    2. //பி.கு ..அப்படியே ஈரோடு விஜய் கையில் ஜொள் போட்டு ..சாரி மை போட்டு பார்த்து ஸ்டெல்லா (ஜானி நீரோவுக்கு தெரியாமல் )போன் நம்பர் பாத்து சொல்ல முடியுமா ???//

      ஜானி நீரோவோட நம்பர் வேணா தரேன் செல்வம். .அவருகிட்ட கேட்டீங்கன்னா., ஸ்டெல்லாவோட நம்பர் அட்ரஸ் எல்லாம் தருவாரு. கூடவே சில கும்மாங்குத்துகளும் கிடைக்கக்கூடும் .அது உங்க அதிர்ஷ்டத்தை பொருத்தது...

      மைண்ட் வாய்ஸ் :-
      இந்த அண்ணாத்தைக்கு ஆசைய பாரேன். நம்பர் கிடைச்சா., மத்தவங்களுக்கு தருகிற ஆளுங்களா நானும் விஜயும். :):):)

      Delete
    3. selvam abirami : காத்திருக்கும் மறுபதிப்பில் அம்மணி பிகினியில் வேறு வருகிறார்.....ஒரு டப்பா மையோடு முற்றுகை இடுங்கள் சார் !

      Delete
    4. // கண்ணன் ரவி அவர்களுக்கு CSK (Cartoon Special Kannan )என்ற பட்டத்தை அளிப்பதில் பேருவகை அடைகிறேன் ...//

      நெம்ப டேங்ஸுங்க செல்வம்.!!!
      கார்ட்டூன் கதையை வாசிக்கிறப்போ என்ற வயசு கொறைஞ்சி இஸ்கூல் ஸ்டூடண்டு மாதிரி ஆயிடுறேனுங்க.
      (மெய்யாவே நானு சின்ன வயுசு பையந்தானுங்க)

      Delete
  74. அடாடாடா
    என்னமோ போங்கப்பா
    250
    350
    எல்லாம் சரிதான்
    ஆனா எல்லாரும் ஆளாளுக்கு ஒரு புது கஸ்டமர் சேத்து விடனும்
    இருக்குரவங்கலே போதும்ன்னு இருக்ககூடாது

    ReplyDelete
  75. நானும் மின்னும் மரணத்தை வாங்கி பதினைஞ்சு நாளாச்சிங்க.
    திருப்பி திருப்பி முன்னேயும் பின்னேயும் பொரட்டி பொரட்டி பாத்ததுல பொஸ்தவத்துல மிகப்பெரிய்ய்ய குறை இருக்காப்போலவே தோணுச்சிங்க.
    ஒருவழியா இப்பத்தேன் குறைய கண்டுபுடிச்சேனுங்க.
    ஒரு நல்ல கவிராயரோட நெறியான கவிதைய பிரசுரிக்காமே., இருட்டடிப்பு செஞ்சிட்டு., பொஸ்தவத்தை ரிலீஸ் பண்ணிபோட்டாங்க.
    இத்தினி நாளா முடிய பிச்சி., என்ன செய்யலாமின்னு ரோசனை பண்ணி., இப்பத்தேன் தீர்மானம் செஞ்சேனுங்க.
    படபடன்னு பேனாவை எடுத்து அந்த கவிச்சக்கரவர்த்தி., டைகரப்பத்தி எழுதியிருந்த மூணு உலகப்புகழ் பெற்ற கவிதைகளையும் நானே மின்னும் மரணம் பொஸ்வத்துல என்ற கையாலயே எழுதிபோட்டேனுங்க.
    இப்பத்தேன் அந்த பெசலு பொஸ்தவமே பூரணமாச்சுதுங்க. வுப்போ ஒரு கொறையுமில்லீங்கோ.?!

    ( அந்த கவிஞரு ஆருன்னுதானே கேக்குறீங்க.???.. .. .. ஹிஹிஹி. . . . அது நாந்தானுங்கோ.! அது நாந்தானுங்கோ.!!)

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : ஆனாலும் அந்த அவையடக்கம் பேஷ் பேஷ்..!

      Delete
    2. எடிட்டர் சார் நீங்க எந்த ஒரு கருத்தை கூறினாலும்
      முத்து 350 இதழில் கார்டுன் ஸ்பெஷல் வருவதை அறவே வெறுக்கிறேன்

      முத்து காமிக்ஸ்ஸின் பாரம்பரியத்தை நீங்க கெடுக்கறீங்க

      நீங்கள் வியாபாரத்தை மட்டும் கணக்கில வச்சுக்கறீங்க

      வாசகர்கள் மதிப்பிற்கு நீங்கள் மதிப்பு தர மறுக்கறீங்க

      வாசகனோட கூற்றுக்கு உங்க மதிப்பு இவ்வளவுதானா??


      நீங்க சொல்வது சரியான காரணமாய் எனக்கு படவில்லை

      நீங்கள் செய்வது சரியில்லை

      இதற்குமேல் உங்கள் இஸ்டம்
      மமுதல் போடுவது நீங்கள்
      நாங்க சொல்லியா நீங்க மாறிட போறிங்க. ??

      Delete
  76. இரவு வணக்கங்கள் நண்பர்களே..!

    பெயர் சூட்டும் போட்டியில் பரிசை அறிவித்த எடிட்டருக்கும், வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..! வாழ்த்துசொன்ன ஒவ்வொரு நண்பருக்கும், போ.கு.தலீவர் சுற்றி சுற்றி வந்து (கணபதி சிக்ஸ் விளம்பரத்தில் வரும் சுட்டி போல) 'டண்ட தக்கிட தா' என குதித்து,குதித்து எனக்கும் சேர்த்தே நன்றிகள் பல சொல்லிவிட்டதால்...தலீவரை தாண்டி நான் தனியாக ஆட்டம் போடவேண்டியதில்லை..ஹீ..ஹீ..!

    மற்றபடிக்கு போட்டி, தேர்வு, பதில், பரிசு என பயணித்து, இது என்ன வகை அங்கீகாரம்? என்பதை தாண்டி பெங்களூர் பரணி குறிப்பிட்டதுபோல் "250 & 350 பிரதானமாக தெரியும் போது சிறப்பு பெயர்கள் எதற்கு?" என்ற சிந்தனை சிறப்பை பெற்றுள்ளதாகவே கருதுகிறேன்..! என்ன பெயர் வைத்தாலும், 250 க்கு இந்த பெயரா என்ற கேள்வி.."இது என்னப்பா டிரைவர் சீட் வழியா பெசன்ஜரை ஏறிப்போக சொல்றங்க..?" கிற கணக்கா ஒவ்வொருத்தரும் காலத்துக்கும் கேட்பாங்களே..! எடிட்டர் சொன்னது போல "தல' வரும் நாட்களெல்லாம் தீபாவளி தான் ; ஆனால் 'தல தீபாவளி' ஆயுசுக்கு ஒருமுறை மட்டும் தானே ?" என்பது சரியான கோணமல்லவா..! மேலும் இந்த பரிசை போட்டியில் வென்றதற்காக தரப்பட்டதாக நான் எடுத்து கொள்ளவில்லை...
    குழாயடிசண்டை போல, சட்டையை கிழித்து கொள்ளாத குறையாக, சத்தமாக பேசிக்கொண்டு...கடைசியில் நட்பு பாராட்டிக்கொண்டதற்கும், "இங்கே சண்டை போடறவங்களை சந்தோச மா தான் பாப்பேன் ...காரணம் அவர்கள் என்னை விட தீவிர காமிக்ஸ் வெறியர்கள்.." என சக நண்பரின் கோபத்தை உயர்வாக பார்க்கும் நல்ல கண்ணோட்டத்தை, தலீவர் சொல்ல (நானும் ஒரு) காரணமாக இருந்தற்கும் தரப்பட்ட மரியாதையாகவே பார்க்கிறேன்..!

    எனக்கு இன்று பெரிய சந்தோஷம் என்னவென்றால்..ஆசையாய் வாய்திறந்து நண்பர் கிட் ஆர்ட்டின் கண்ணன் எடிடரை கேட்க...மினி லயன் ஒரு புத்தகமும் இல்லையே என ஆசிரியர் நெளிய...முகமே தெரியாத கோபிச்செட்டிப்பாளையம் நண்பர் ஜெய சேகர் "மினி லயன் ஒன்னற நான் தருகிறேன்.." என முன் வந்ததுதான் சூப்பர்...! குமரிமுத்து.,PS வீரப்பா எல்லாம் பயப்படுற அளவுக்கு 'கிட் ஆர்ட்டின்' சிரிக்க போகும் கோடையிடி சிரிப்பை பார்க்க போகிறேன் என்பதே அந்த சந்தோஷம்..!

    விடாமல் "அட்டை சூப்பர், ஆசிரியருக்கு அனுப்புங்கள்...எடிட்டர் ஸார் அதை பார்த்தீர்களா.." என ரசித்து கேட்டும் நண்பர் அகஹமாத் பாஷாவுக்கு நன்றியும், ஒரு வார்த்தையும்..."அது ஒரு அழமான படைப்பல்ல, ஜஸ்ட்டு பாஸ் ராகமே, அதை எடிட்டர் பார்த்திருப்பார்...இரண்டு மாதங்களுக்கு பின் வரப்போகும் சஸ்பென்சை இன்று பார்ப்பதில் என் சுவையிருக்கும்..? அந்த மைல் கல் இதழின் அட்டைபடத்தை எல்லோரும் பார்த்த ஒன்றாக இருப்பதை விட, யாரும் பார்க்காத ஒன்று தானே சுவையாக இருக்கும்..!"

    விடுபட்ட குறிப்பு: என் குட்டி வயது நண்பர்கள்... பதினைந்து வருடங்களுக்கு பின், அவர்கள் குட்டிகளுடன்(70 பேர்) வந்த get together நிகழ்ச்சியின் சின்ன பொறுப்பில் இருந்ததால் இங்கு சரியாக பங்குகொள்ளமுடியவில்லை...ம.வெங்கடேஸ்வரன்...ஹீ..ஹீ..! :-)))




    ReplyDelete