Sunday, February 01, 2015

ஆதலினால் (காமிக்ஸ்) காதல் கொள்வீர் !

நண்பர்களே,

வணக்கம். இங்கே வழக்கமாய் நான் வண்டி வண்டியாய் எழுத, நீங்கள் 'நறுக்' என  நாலு கேள்விகளை முன்வைப்பது வழக்கம் ! ஆனால் கடந்த பதிவில் நான் மல்லாக்கப் படுத்துக் கொண்டே கேட்டு வைத்த கேள்விகளுக்கு - நீங்கள் விரிவாய் பதில் எழுத ஏகப்பட்ட சிரமமும், அவகாசமும் எடுத்துக் கொண்டுள்ளது நீண்டு செல்லும் ஒவ்வொரு பின்னூட்டத்திலும் பிரதிபலித்தது ! எண்ணிக்கையில் இல்லாவிடினும், பின்னூட்ட நீளக் கணக்கில் கடந்த பதிவு தான் நமது ரெக்கார்ட் என்று சொல்லத் தோன்றுகிறது ! இதற்கு முன்பாக வேறு பதிவுகள் ஏதேனும் இத்தனை நீளத்தை அவசியப்படுத்தியுள்ள மாதிரி எனக்கு நினைவில்லை !!  புள்ளி விபரங்களைப் பற்றிய பேச்செனும் போது - பொழுது போகா ஒரு பின்னிரவில் நமது வலைப்பதிவின் சில நம்பர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன் ! இதோ - ஏதேதோ  காரணங்களுக்காக maximum பார்வைகளைப் பெற்ற நம் பதிவுகளின் டாப் 5 பட்டியல் இதோ  :
  • தல'....தளபதி.....திருவிழா..! - 6681 பார்வைகள் 
  • ஒரு பனியிரவின் உரத்த சிந்தனை ! - 5904 பார்வைகள் 
  • எட்டும் தூரத்தில் NBS - 5812 பார்வைகள் 
  • காசு...பணம்..துட்டு..money ..money ..!  - 5772 பார்வைகள் 
பார்வைகளைப் பெற்றதில் முதலிடங்கள் மேற்கண்ட பதிவுகளுக்கெனில் - பின்னூட்ட வருகையில் முன்னணி நிலவரம் இதோ :

  • ஒரு கௌபாய் வானவில்..! - 524 பின்னூட்டங்கள்
  • வரவு எட்டணா..செலவு பத்தணா ! - 518 பின்னூட்டங்கள் 
  • Kaun Banega சாலமன் பாப்பையா ? - 484 பின்னூட்டங்கள் 
  • முயற்சிக்கு மரியாதை ! - 479 பின்னூட்டங்கள் 
  • பதில்களும்..சில உரத்த சிந்தனைகளும்...! - 472 பின்னூட்டங்கள் 

"சரி..இதையெல்லாம் தெரிந்து கொண்டு நாங்கள் இப்போது பறக்க விடப் போகும் ராக்கெட் எதுவோ ??" என்ற கேள்விக்கு என்னிடம் நிச்சயமாய் பதிலில்லை ! வேண்டுமானால் அன்றைக்கு நான் பார்த்துக் கொண்டிருந்த "ரமணா" திரைப்படத்தின் தாக்கமாக  இந்தத் திடீர்   புள்ளிவிபர வாஞ்சையை எடுத்துக் கொள்ளலாம் ! 

Moving on, இதோ இம்மாதத்தைய இரண்டாவது வண்ண இதழின் அட்டைப்பட first look & உட்பக்க டீசர் ! 


ஒரிஜினல் அட்டைப்படத்தையே நம் ஓவியரைக் கொண்டு கொஞ்சமாய் மாற்றியமைத்து வரையச் செய்திருக்கிறோம் ! ஒரிஜினலில் சோகமாய் காட்சி தரும் ஷெல்டன், நம்மவரது சித்திரத்தில் ஒரு groupieபோட்டோவுக்குப் போஸ் கொடுப்பது  போல் காட்சி தருவது மட்டுமே வித்தியாசமாக இருக்கும் ! நரைமுடியும், மாண்ட்ரேக் மீசையுமாய் அட்டகாசம் செய்யும் ஷெல்டனின் one shot ஆல்பம் இது ! So நில்லாமல் பரபரக்கும் கதையும் ...பளீர்..பளீர் வர்ணங்களுமாய் ஓடக் காத்திருக்கும் இந்த இதழ் நிச்சயமாய் உங்களுக்கொரு fast paced வாசிப்பைத் தருமென்பது நிச்சயம் ! 
ஷெல்டனின் கதைகளுக்கு பின்னணி வர்ணச் சேர்க்கைகள் பெரும்பாலுமே அடர் வர்ணங்களே என்பதை இந்த டீசர் பக்கங்களிலேயே நீங்கள் உணர்ந்திட முடியும் ! So கொஞ்சம் அசட்டையாய் இருந்து விட்டால் கூட - ஓவர் 'பளீர்' என்று வர்ணங்கள் பல்லைக் காட்டிடக் கூடும் என்பதால் மிகுந்த கவனத்தோடு இதன் அச்சுப் பணிகளை செய்துள்ளோம் ! இம்முறையும் நம்மாட்கள் அழகாய்ப் பணி செய்துள்ளதாக என் மனதுக்குப் பட்டது ! இதுவரையிலும் மொத்தம் 12 கதைகள் மட்டுமே கொண்ட ஷெல்டனின் கதைத் தொடரின் மத்தியப் பகுதியில் நாம் தற்சமயம் நிற்கிறோம் ! இது ஷெல்டன் வரிசையில் ஆல்பம் # 6 ! இந்தாண்டே நம்பர் 7 & 8 இணைந்த டபுள் ஆல்பமும் வெளியாகவிருப்பதால் - 2015-ன் இறுதியில் ஷெல்டனில் எஞ்சியிருக்கப் போவது 4 ஆல்பங்களே - அதாவது 2 x  ரூ.120 இதழ்களே ! ஷெல்டனை சிருஷ்டித்தது கதாசிரியர் வான் ஹாம்மே தான் என்ற போதிலும், முதல் மூன்று கதைகளுக்கு மட்டும் பணியாற்றியவர் ஆல்பம் 4-8 வரையிலும் ஒரு பிரேக் எடுத்துக் கொண்டுள்ளார் ! பாகம் 9 முதல் அவர் மறுவருகை தந்து இன்று வரை இதன் பொறுப்பைக் கையில் வைத்துள்ளார் !கடையை மூடிடாது - ஆண்டுக்கொரு புது பாகம் என இந்தத் தொடர் பயணித்து வருவதால் - அங்கே அவர்கள் வெளியிட்ட சற்றைக்கேல்லாமே நாமும் பின்தொடரும் நிலையை எட்டிப் பிடித்திருப்போம் ! 2016-ல் லார்கோவுக்கும் கூட இதே கதை / கதி தான் என்பதால் - தொடரும் காலங்களில் புது நாயகர்களுக்கான தேடலை நாம் முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டி வரும் என்பது இப்போதே தெரிகிறது !

காலியாகப் போகும் கதைகள் /  நிறையவே ஸ்டாக் இருக்கும் கதைத் தொடர்கள் - பற்றிய பார்வையை இன்னும் கொஞ்சம் விரிவாக்கினால் இது தான் தற்போதைய நிலவரம் :

  • டெக்ஸ் வில்லர் - 640+ கதைகள் -நாம் வெளியிட்டுள்ளது சுமார் 60 கதைகள் 
  • கமான்சே - மொத்தம் 15 கதைகள் - நாம் 2015-ன் இறுதியில் கதை # 6 ஐ முடித்திருப்போம்  ; so  எஞ்சி இருக்கப் போவது இன்னொரு 3 ஆண்டுகளுக்கு ஓடக் கூடிய ஒன்பது ஆல்பம்கள் !
  • XIII - அடுத்த பாகத்தோடு தொடரே மங்களம் காண்கிறது ! நமக்கும் அதுவே நிலை !
  • கேப்டன் டைகர் - இந்தாண்டின் இறுதியில் - எஞ்சி நிற்கப் போவது இளம் டைகரின் சாகசங்களில் 11 கதைகள் ! இதனை எத்தனை ஆண்டுகளுக்கு கொண்டு செல்வது என்ற தீர்மானம் நம் கையிலேயே !
  • டைலன் டாக் - 400+ கதைகள் ! நாம் இப்போது தான் இந்தத் தொடரைத் துவக்கியுள்ளோம் எனும் போது ஏராளம் எஞ்சி நிற்கிறது !
  • மேஜிக் விண்ட் : 130 கதைகள் ! இங்கும் எக்கச்சக்கமாய் கதைக் களங்கள் காத்துள்ளன நமக்கு !
  • லக்கி லூக் : 75+ கதைகள் ; இன்னமும் நிறைய பாக்கியுள்ளன நமக்கு ! ஒரே பிரச்னை என்னவெனில் துவக்க காலத்து (Morris) classic கதைகளில் நிறையவற்றைப் போட்டுவிட்டோம் ! எஞ்சி நிற்பவை புது கதாசிரியர்களின் ஆக்கங்கள் !
  • சிக் பில் : 58+ கதைகள் - இங்கும் கணிசமாய்க் கதைகள் பாக்கியிருப்பினும், அவற்றிற்கு டிஜிட்டல் கோப்புகள் இன்னும் தயாராகியும் ஆகாமலும் உள்ள நிலை படைப்பாளிகளிடம் ! So இங்கே சற்றே go slow தான் சாத்தியம் !
  • ப்ளூ கோட் பட்டாளம் : 58+ கதைகள் ; we have loads of choices !
  • பௌன்சர் : இந்தாண்டின் இறுதியில் எஞ்சி நிற்கப் போவது 2 புதிய கதைகள் மட்டுமே.
  • ரிப்போர்டர் ஜானி : 78+ கதைகள். நிறைய இடியாப்பங்கள் இன்னமும் waiting !
  • மாடஸ்டி பிளைசி : 100 கதைகள் ! So கதை பஞ்சத்துக்கு வாய்ப்பே இல்லை !
  • சாகச வீரர் ரோஜர்  : 60 கதைகள் !
  • தோர்கல் : 35 கதைகள் !
  • மர்ம மனிதன்  மார்டின் - 200 + கதைகள் ! இன்னமும் நிறையவே சிண்டைப் பிய்த்துக் கொள்ள வாய்ப்புகள் காத்துள்ளன நமக்கு ! 
ஒன்று மட்டும் தெளிவு : இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் நமது தற்போதைய prime நாயகர்களின் முக்கால்வாசிப் பேர்  'சுப மங்களம்' என்ற போர்டை கழுத்தில் மாட்டித் திரியப் போவது நிச்சயம் ! இதே போன்ற கௌபாய் ; டிடெக்டிவ் ரகக் கதைகளைப் புதிதாய்த் தேடித் பிடிப்பது நிச்சயமாய் சுலபமாக இருக்கப் போவதில்லை ! அமெரிக்கக் கரையோரம் ஒதுங்கினால் கப்பல் கப்பலாய் சரக்குக் காத்துள்ளது தான் ; ஆனால் அவர்களது சைஸ்களுக்கு ; கதை நீளங்களுக்கு நாம் மாற்றம் காண வேண்டியது அவசியமாகும். அவர்களது காகித சைஸ்கள் இங்கு மார்கெட்டில் நமக்குக் கிடைப்பதில்லை எனும் போது அவற்றைப் பின்பற்ற நாம் நிறையவே மெனக்கெடத் தேவைப்படும் ! ஆனால் அவர்களது கதை பாணிகள் - பிரான்கோ பெல்ஜியக் கதைகளிலேயே பெரும்பாலும் சுற்றி வந்துள்ள நமக்கொரு fresh change ஆக இருக்கப் போவது நிச்சயம் ! So லார்கோக்களையும், ஷெல்டன்களையும், டைகர்களையும் இன்று சிலாகிக்கும் நாம் கொஞ்ச வருடங்கள் போன பிற்பாடு சூப்பர்மேனையும்  ; பேட்மேனையும் ; ஸ்பைடர்மேனையும் அதே போல் ரசிக்கும் நாள் புலருமோ ?  கௌபாய் கதைகளைச் சீராட்டும் நாம் - sci -fi ரகத்துக்குள்ளும் ரவுண்ட் கட்டி அடிக்கும் நாள் நெருங்கிடுமா ? INCAL தொடர்களையும், METABARON களையும் ஆர்வம் பொங்க புரட்டும் தருணம் காத்துள்ளதா நமக்கு ? "காலம் தான் பதில் சொல்லும்" என்ற cliche பன்ச் டயலாகுக்கு இடம் தராது - "காமிக்ஸ் காதல் தான் பதில் சொல்லும் ! " என்று சொல்லி இப்போதைக்குக் கிளம்புகிறேன் ! 

குடும்பத்து விசேஷம் ஒன்றினில் பங்கேற்க டெல்டா பிராந்தியத்து சிறுநகர் ஒன்றிற்கு வந்துள்ளதால் இங்கு உள்ள செம சுமாரான இன்டர்நெட் இணைப்போடு  காலை 6-00 க்குத் துவங்கிய போராட்டத்தை இதற்கு மேலும் தொடர்ந்திடத் தெம்பில்லை ! நாளைய தினம் பிப்ரவரி இதழ்கள் கூரியரில் கிளம்புகின்றன என்ற சேதியோடு நடையை  கட்டுகிறேன்  ! அதே போல நமது ஆன்லைன் விற்பனைகள் - www.lioncomics.in என்ற புதிய  தளத்தில்   முழுவீச்சில் இருந்திடும் என்பதையும் நினைவூட்டுகிறேன் ! Bye for now !! 

308 comments:

  1. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.

    ReplyDelete
  2. விஜயன் சார்,
    பௌன்செர் – ஒரு அருமையான தேர்வு! எல்லா வகையிலும் என்னை கவர்ந்த கதை! வசனம்கள் அருமை, இந்த கதையின் வெற்றிக்கு என்னை பொருத்த வரை ஒரு முக்கியமான காரணம்! இது போன்ற இரண்டு பாக அதிரடி கதைகளை தொடர்ந்து வெளி இடுங்கள். கடைசியில் (climax) வைரத்தை தனது தாயிடம் இருந்து எடுக்கும் போது குழம்பிவிட்டேன், என் என்றால் சகோதர்களின் அம்மா இறந்தவுடன் உடம்பை கிழித்து பார்த்து கிடைக்கவில்லை எனும்போது இப்பொது எப்படி கிடைத்தது என யோசித்த போது விடை கிடைத்தது! உங்களின் வசனம் வைரத்தை எங்கு இருந்து எடுத்து இருப்பார்கள் என புரியவைத்தது.
    சுவாரசியமான திருப்பம்கள், ரசிக்க வைக்கும் உத்திகள் மற்றும் தெளிவான கதை. கிராபிக் நாவல்ல் இது போன்ற கதைகளைத்தான் இதனை நாள் கேட்டு கொண்டு இருந்தேன்.

    மொத்தத்தில் பௌன்செர் ஒரு நச் கதை, பசக் என பிடித்து விட்டது.

    ReplyDelete
  3. Editor sir,
    Articia & golden city முயற்சி செய்யலாமே? If financially possible.

    ReplyDelete
  4. வந்துட்டேன்,காலை வணக்கம் நண்பர்களே.

    ReplyDelete
  5. டெக்ஸ்,bluecoat ,லக்கிலூக் ..கூடவே மர்மமனிதன் மார்டின்..கொஞ்ச காலத்திற்கு கவலை இல்லை..

    ReplyDelete
  6. GOOD SUNDAY MORNING! மர்ம மனிதன் மார்டின் இருக்க வித்தியாசமான கதைகளுக்கு பஞ்சமில்லை கவலையுமில்லை !

    ReplyDelete
  7. ராபின் இந்த லிஸ்ட்லேயே இல்லையே சார்

    ReplyDelete
  8. Hi first time in top ten list

    Sham1881 @erode

    ReplyDelete
  9. Dear editor ,

    We have the choices from old muthu comics collections

    ReplyDelete
  10. எடி சார்,அப்ப தல கத இன்னும் 580 மீதி உள்ளதா அய்யகோ,வருடத்துக்கு ஐந்து கதை என்றாலும் கதை வரிசை முடிய 116 வருடங்களாகும்,வருடத்துக்கு பத்து கதை என்றாலும் கதை வரிசை முடிய 58 வருடங்களாகும்.
    என்ன செய்ய,எங்க வாழ்நாளுக்குள தலைய படிச்சு முடிக்க முடியுமா ?
    என்ன கொடுமை சார் இது,வேறு வழியே இல்லை,வருடத்துக்கு இருபது,இருபத்தி ஐந்து சாகசங்களை வெளியிட்டு எங்கள் ஆசைகளை நிறைவேற்றுவீர்களாக.

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ravi sir.... kanndipaa thalaya full ah padikka kandippa muyarchi seiyanum....

      Delete
    2. ரவி ஜி

      டெக்ஸ்க்கு என்று ஒரு தனி வரிசை
      வரப்போவதாக மூன்று பதிவிற்கு முன்னர்
      விஜயன் சார் அறிவித்ததை பார்க்கலயா நீங்க

      மாதம் இரண்டு கதைகள் வீதம்
      மொத்தம் 24 கதைகள் வருடத்திற்கு :)
      .

      Delete
    3. வருடத்தில் 25ஆ??? காமிக்ஸ் படிப்பது வெறுத்து விட்டதா ஜீ ???

      Delete
    4. அப்படியா,தகவலுக்கு நன்றி பிரபாகர் ஜி.

      Delete
    5. ரம்மி ஜி

      கரெக்டு அந்த 25 ஆவது புக்
      ஹார்ட் பைண்ட் கலர் தீபாவளி ஸ்பெஷல்

      நாம தினமும் சாப்பிடுறோம் அதுக்காக சாப்பாடு நமக்கு வெறுத்தா போயிடுச்சு ஜி ;-)
      .

      Delete
  11. அடுத்த வருடமாவது தலைக்கு அதிக கதைகள் ஒதுக்கீடு செய்ய ஆவண செய்யுமாறு எடியை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  12. அட்டைப் படம் - அட்டைகாசம்! பின்னட்டையில் அந்த ஹெலிகாப்டரின் பின்ணனியில் தெரியும் ஒளிச்சிதறல் அருமை!

    அமெரிக்கக் காமிக்ஸை கரைத்துக் குடித்தால் அது நம் உடம்புக்கு ஒத்துக்கொள்ளுமா என்பதை ஓரிரு முறை ருசிபார்த்த பிறகே உறுதியாகச் சொல்ல முடியும்! அதற்கு முன், லயன்-மினிலயன்-திகிலின் தேர்ந்தெடுத்த சில கதைகளை மறுபதிப்பாக வெளியிட்டால் மகிழ்வோம்!

    யார் போனாலும் வந்தாலும், 'தல' நம் காமிக்ஸ் பயணத்தில் என்றென்றும் வீற்றிருப்பார்! இன்றைய இளம் வாசகர்களுக்கும், பெண்களுக்கும் கூட டெக்ஸை பிடித்திருக்கிறது என்பது ஒரு முக்கியமான பாய்ண்ட்!

    இந்த லிஸ்ட்டில் டிடெக்ட்டிவ் ராபினைக் காணோமே? பெரியதொரு ஹீரோயிஸம் இல்லாமல், குற்றப் பின்னணியை அழகாய்ச் சொல்லிடும் இதைப்போன்ற கதைத் தொடர்களுக்கும் வருடத்திற்கு ஓரிரு வாய்ப்புகளாவது கொடுக்கலாம் எ.எ.க!

    ReplyDelete
  13. Spiderman, batman, Superman போன்றோரை Already இங்கு India வில் Movies to cartoon channels துவைத்து காய போட்டுவிட்டாலும்.....
    Comics - நம்ம Style இல்.,., நம்ம ஆட்களின் கைவண்ணத்தில் ஆசிரியரின் Slang ல் படிப்பது தனி அனுபவமாக இருக்கபோவது திண்ணம்.....
    இனி அடுத்த Generation Comics readers um will come into our circle....
    This will be a new beginning....
    What say guys....??

    ReplyDelete
  14. Dear vijayan sir,வெளியிட வேண்டிய கதைகளே, இன்னும் 2,3ஆண்டுகளுக்கு தாங்கும் எனும்போது, இப்போதே அடுத்த கதைதொடருக்கான தேடல்Too earlyயோ என தோன்றுகிறது. ..மேலும் இரத்தபடலம் முடிந்துவிட்டது என்று நினைத்தபோது, எதிர்பார்க்காத திசையிலிருந்து அடுத்தபாகம்ஆரம்பிக்கவில்லையா, எனவே நம் ஆதர்ச நாயகர்களுக்கு அவ்வளவுசீக்கிரம் படைப்பாளிகள் Endcard போடமாட்டார்கள் என்றே நினைக்கதோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. டாக்டர் ஜி
      என்ன அப்படி சொல்லிட்டீங்க

      இப்படி தேடும்போது நல்ல கதைகள் கிடைத்தால்

      Super 6 வந்த மாதிரி

      புதுசா ஏதாவது பேர போட்டு களத்துல
      இறக்கலாமுல்ல

      அப்படி நடந்தா நமக்கு தானே நல்லது :)

      Delete
    2. இப்படி தேடும்போது நல்ல கதைகள் கிடைத்தால்

      Super 6 வந்த மாதிரி

      புதுசா ஏதாவது பேர போட்டு களத்துல
      இறக்கலாமுல்ல

      Delete
  15. நாளைய இதழுக்கு காத்து கொண்டே இருக்கிறேன் ....

    ReplyDelete
    Replies
    1. தலைவரே

      நாளை மறுநாள் தான் புத்தகம் வரும் :(

      Delete
  16. இனிய காலை வணக்கம் Vijayan Sir :)
    இனிய காலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  17. அப்படியே ஒரு வேதாளர் மறுபதிப்பு தொகுப்பு உங்கள் சிந்தனையில் வையுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. +1 கலரில வந்தால் நன்றே

      Delete
    2. இத ஆட்டத்துக்கு என்னையும் சேர்த்துகொங்கபா :-)

      Delete
    3. //இத ஆட்டத்துக்கு என்னையும் சேர்த்துகொங்கபா :-)//
      +1

      Delete
    4. இத ஆட்டத்துக்கு என்னையும் சேர்த்துகொங்கபா :-)

      Delete
  18. காலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  19. டயபாலிக்கை விட்டிட்டீங்களே!?

    ReplyDelete
    Replies
    1. Diabolik is becoming too villainous recently. Having a anti hero is ok but having a villain as hero is not acceptable.

      Delete
  20. Batman Comics நன்றாக இருக்கும்
    மற்ற sci-fi நாவல்கள் try பண்ணலாம்

    but love Franco-Belgium comic guys....கேப்டன் டைகர் and டெக்ஸ் வில்லர்
    என்றைக்குமே top

    ReplyDelete
    Replies
    1. Agree, compared to franco Belgium, American Comics are very ordinary.
      American Comics are o.k. to read for first time but no way you can do re-read as their stories doesn't have the depth.
      This is just my opinion.

      Delete
  21. 60 டெக்ஸ் கதைகளை வெளியிட/படித்திட நமக்கு 30 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது!! மீதமுள்ள 580+ கதைகளில் ஒரு 80 கதைகள் 'தேறும்' என்று வைத்துக் கொண்டாலும், அத்தனையையும் தமிழில் காண இன்னும் ஒரு இருபது வருடங்களாகிவிடுமே என்று நினைத்தாலே பகீர் என்கிறது! (அதற்குள் டெக்ஸின் 1000வது இதழ் வேறு இத்தாலியில் வந்து தொலைத்திருக்கும்!) . இவற்றையெல்லாம் காண்பதற்குள் 'காலன் தீர்த்த கணக்கில்' நானும் ஒரு அங்கமாகிவிடுவேனோ என்ற பயம் லேசாய் எட்டிப்பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை! ;)

    ReplyDelete
    Replies
    1. ஆசான்,நல்ல முடிவு எடுப்பார் என நம்புவோமாக.

      Delete
    2. // டெக்ஸின் 1000வது இதழ் வேறு இத்தாலியில் வந்து தொலைத்திருக்கும்!) . இவற்றையெல்லாம் காண்பதற்குள் 'காலன் தீர்த்த கணக்கில்' நானும் ஒரு அங்கமாகிவிடுவேனோ //

      நம்பிக்கையுடன் ஆசிரியரின் கதவை தட்டுங்கள்

      ஏதாவது ஒரு கதவை ( தனி டிராக் )
      திறப்பார் :))

      Delete
  22. வணக்கம் சார் . தல கதையில் இன்னும் 90% மீதமுள்ளது என்ற நல்ல செய்தியை சொல்லி வயிற்றில் பாலை வார்த்தீர்கள் சார் . உலகிருக்கும் வரை சூரியன் இருக்கும் , நாங்கள் இருக்கும் வரை தலையும் இருப்பார் அப்படித்தானே சார் ?. இதை விட வேறு என்ன வேண்டும் நண்பர்களே !!. இத்தாலியில் வெளியான கதைகளில் 2அல்லது 3ஐ இணைத்து தான் நாம் பெரிய கதைகள் சிலவற்றை வெளியிட்டுள்ளது ,அவர்கள் தளத்தில் உலவியதில் இருந்து தெரிய வந்தது நண்பர்களே .எப்படி ஆயினும் ஒரு 100கதைகள் தாண்டி இருக்கலாம் , இன்னும் 500க்கும் மேல் உள்ளன . அவைகளை நாங்கள் தள்ளாத வயது வருவதற்குள் எங்களுக்கு வழங்க ஏதேனும் எண்ணம் உள்ளதா சார் ?. இல்லை இப்போது எங்களுக்கு சராசரியாக 40வயது என கொண்டால், இன்னும் ஒரு 150கதைகளோடு ஓவர்கள் தீர்ந்து போய் விடுமோ சார் ?. நான் பால்யத்தில் காமிக்ஸ் ,ஏன் கதை புத்தகங்கள் கூட படித்தது இல்லை சார் . ஆகவே கடந்த பதிவில் இருந்து பல கேள்விகளுக்கு எனக்கு விடை தெரியாது சார் .நண்பர்கள் கலக்கல் அருமை .

    ReplyDelete
  23. // INCAL தொடர்களையும், METABARON களையும் ஆர்வம் பொங்க புரட்டும் தருணம் காத்துள்ளதா நமக்கு ? "காலம் தான் பதில் சொல்லும்" என்ற cliche பன்ச் டயலாகுக்கு இடம் தராது - "காமிக்ஸ் காதல் தான் பதில் சொல்லும் ! " //

    good question and best answer Edit sir!

    ReplyDelete
  24. சமீபத்தில் மணியம் செல்வம் நமது காமிக்ஸ் வெளியீடு நிகழ்வில் பங்கேற்றது பற்றி அறிவோம். பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக முயன்று தோற்று போனவர்கள் அதிகம். ஏன் அதனை காமிக்ஸ் வடிவில் முயன்று பார்க்கக்கூடாது? அதில் யாரேனும் வெற்றி கண்டால் சர்க்குலேசன் மிகவும் எகிறும் .அது லயன் காமிக்சாக இருக்கட்டும்......

    ReplyDelete
    Replies
    1. Super idea. And recently somebody started PS in animation.
      If this could happen that will be great but our editor is not in Comics creation business

      Delete
    2. dayaa @ வரவு நல்வரவாகட்டும்!

      Delete
    3. 16 பக்கமாக சுருக்கினால் முடியலாம் - ஆனால் கதை அதற்குப் பொருந்தவே பொருந்தாது! Same problem with cinema too.

      நல்லவேளை இதுவரையில் யாரும் பொன்னியின் செல்வனை திரைப்படமாக மாற்றவில்லை. எழுத்துவடிவில் வாசிக்கும்போது கிடைக்கும் கற்பனையான வரலாற்று உலகத்தின் பிம்பம் எல்லா ஃப்ரேமும் படமாகக் காட்டப்படும்போது நீர்த்துவிடும்.

      காமிக்ஸ் வடிவிலும் அதே சிக்கல்தான். தவிர, காமிக்ஸ் வடிவில் செய்வதற்கு நம்மூரில் வேறொரு பிரச்சனை உள்ளது. ஏற்கெனவே நூற்றுக்கணக்கான தேர்ந்த ஆர்டிஸ்டுகள், ஸ்க்ரிப்ட் ரைட்டர்களைக் கொண்ட, காமிக்ஸ் இன்டஸ்ட்ரி / ஸ்கில்செட்ஸ் வளர்ந்த நாடுகளிலேயே இம்மாதிரி காம்ப்ளெக்ஸான கதைகளை கையாள்பவர்கள் ரொம்ப ரேர். மற்றும் வரலாற்று ரெஃபரென்ஸ் எடுப்பதற்கே ஏகப்பட்ட உழைப்பும் திறனும் வேண்டும். இல்லாவிட்டால் நிச்சயமாக கன்னித்தீவு கதையாகிவிடும்! (மிகப்பெரிய சிக்கல், 1000 ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கை முறை, மக்களின் உடை, பழக்கவழக்கங்கள் சார்ந்த டீடெய்ல்களை கதையின் பலத்துக்கு இணையாக விஷுவலாகக் காட்டவேண்டுமென்றால் ஏகப்பட்ட பழைய ரெஃபரென்ஸ்கள் வேண்டும் - This may sound easy but will require few times more hardwork than what Mr Kalki did).

      Delete
  25. ப்ளூ கோட் பட்டாளம், லக்கி லூக்_கை மிஞ்சிகிறது.(என் அக்கா மகன் ப்ளூ கோட் பட்டாளம்_தான்
    விரும்பி படிக்கிறான்)

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. ஒரிஜினிலை சற்று மேம்படுத்தியிருக்கலாம். ஆனால் அதற்காக ரீட்ரா செய்து பச்சைகலரு, மஞ்சக்கலருனு ஜிங்குச்சா பண்ணியிருக்கவேண்டாம். :-)))) ஷெல்டன் முன்னட்டையைச்சொல்கிறேன். பின்னட்டை சூப்பர்!

    டெக்ஸ் மாதிரி கைநிறைய******* என்றில்லாமல், கொஞ்சமிருந்தாலும் கோஹினூர் போல ஜொலிக்கும் டைகர், லார்கோ, ஷெல்டன்களின் சிறப்பு அதிகமே! ஹிஹி! டெக்ஸ்ரசிகர்களை சுரண்டிவிட்டு ரொம்ப நாளேச்சே.. அதான்!

    ஜோக்ஸ் அபார்ட்,

    டெக்ஸ், லக்கிலூக், மாடஸ்டி போன்ற பழைய முகங்கள் மற்றும் ப்ளூகோட்ஸ், டைலன், மேஜிக்விண்ட் போன்ற பழகிய முகங்கள் இன்னும் நிறைய இருக்கையில் நாம் ஏதும் சட்டென்ற மாற்றத்தால் பாதிக்கப்படப்போவதில்லை என்றுதான் தோன்றுகிறது. அதே நேரம் புதிய ஜெனர்களைத் தேடும் வாய்ப்பு நமக்கு இருப்பதும் ஒருவகையில் நல்லதுதானே!

    @டெக்ஸ் பேன்ஸ்,
    சும்மா ஜாலிக்குதான், நோ டென்சன். இப்போது அஸ்ஸாம் சைட்டில் குளிரில் வாடுகையிலும் வல்லவர்கள் வீழவ்தில்லை, கார்சனின் கடந்த காலம் ரெண்டையும்தான் துணைக்கு எடுத்து வந்திருக்கிறேன். :-))

    ReplyDelete
    Replies
    1. அடடே! வாங்க வாங்க! என்ன இந்தப் பக்கம்?

      Delete
    2. பக்கத்தூரு பெரியமனுஷன் மாதிரியே கேக்குறீரே ஓய்? :-))))

      ‘ஆமாங்க, உங்கள பாக்கத்தான். பாத்து கொஞ்சம் கைமாத்து வாங்கிட்டு போலாம்னு வந்தேன். ஹிஹி!’

      Delete
    3. //கொஞ்சம் கைமாத்து வாங்கிட்டு போலாம்னு ///

      உங்கமேல இருக்குற கடுப்புக்கு செமமாத்து வேணா தரேன்! :)

      Delete
    4. ஆதி தாமிரா ஸ்வாமி.... final ah tex kitta surrender ஆகிட்டீங்களே....

      Delete
    5. சும்மா ஜாலிக்குதான், நோ டென்சன். இப்போது அஸ்ஸாம் சைட்டில் குளிரில் வாடுகையிலும் வல்லவர்கள் வீழவ்தில்லை, கார்சனின் கடந்த காலம் ரெண்டையும்தான் துணைக்கு எடுத்து வந்திருக்கிறேன். :-))அது

      Delete
  28. இனிய காலை வணக்கம் நண்பர்களே!!!
    இனிய காலை வணக்கம் எடிட்டர் சார்!!!

    ReplyDelete
  29. நமது புதிய தளமான http://lioncomics.in/ க்கு ஒரு விசிட் அடித்துவிட்டு, ஒரு account யும் create செய்தாகி விட்டாச்சு...:)
    நல்ல ரசனையான design...நல்ல நல்ல color combination use பண்ணியுள்ளது, நல்ல நல்ல templates use பண்ணியுள்ளது really superb...
    online ல் ஆர்டர் செய்பவர்களுக்கு தளத்தை உபயோகிக்க easy ஆக உள்ளது போலவும் வடிவமைக்கப் பட்டுள்ளது பாரட்டத்தக்கது...:):):)

    அதேபோல் ஒரு சில very small suggestions...
    1. கீழே நமது முகவரியும், e-mail address ரொம்ப சின்ன எழுத்துக்களில் உள்ளது, அதனுடைய font size ஐ கொஞ்சம் கூட்டலாம்...
    2. அதேபோல், மேலயே "Contact us" என போட்டு அதை click பண்ணினால், நமது முகவரிக்கும், e-mail address க்கும் எடுத்துச் செல்வது போல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்...
    3. மேலே right top corner ல், அமெரிக்காவின் கொடி உள்ளது... :(

    ReplyDelete
    Replies
    1. //மேலே right top corner ல், அமெரிக்காவின் கொடி உள்ளது... ///

      'நாம அமெரிக்கக் காமிக்ஸுக்கு மாறப் போறோம்'னு சிம்பாலிக்கா சொல்றாரோ என்னவோ! ;)

      Delete
    2. அது ஆங்கில மொழியினைத் தேர்வு செய்ய தளத்திலுள்ள option சாமியோவ் ! ஒபாமா ரேஞ்சுக்குப் போக அங்கே சரக்கு ஏதும் இல்லை ! :-)

      Delete
  30. டியர் எடிட்டர் சர்ர்,
    நரன் 59 வது சர்ர். மேலே போய்விட்டு வருகிறேன்.

    ReplyDelete
  31. Please increase reporter Johnny and Martin stories.

    ReplyDelete
  32. Dear Editor Sir, This is my first reply to you in this blog. I have'nt ordered anything online before. I tried to order minnum maranam and few other books in http://lioncomics.in But no Mastercard/Visa options are available. (Only Paypal). So I ordered through www.lioncomics.worldmart.in. But I found delivery charges varying in both sites for delivery inside Tamilnadu (for Karsonin kadantha kaalam). Also the delivery options cannot be changed and its 'outside TN' by default. please update the site accordingly.

    ReplyDelete
    Replies
    1. பிரபு @ வரவு நல்வரவாகுக!

      Delete
    2. prabu : worldmart தளத்தில் நிறைய குறைபாடுகள் உள்ளதால் அது மெது மெதுவாய் ஓரங்கட்டப்படும் ! புதுத் தளத்தில் தான் தற்போது சகல ஆன்லைன் விற்பனைகளும் நடந்து வருகின்றன ; please do check again !

      Delete
    3. Yes, current website is fine. While selecting multiple books, shipping charge automatically changing accordingly. But this was not happening in worldmart. Thanks...

      Delete
  33. 1972 ல் ஆரம்பித்த பழக்கம்
    மாயாவி, லாரன்ஸ் டேவிட் ஜானி என்று ஆரம்பிச்சு
    இப்ப பௌன்சர் வரைக்கும் பார்த்தாச்சு
    காமிக்ஸ் என்பது பரந்த உலகம்
    தேடல்கள்
    இருக்கும் வரை இந்த பந்தம் நிச்சயம் தொடரும்
    காமிக்ஸுக்கு அழிவு இல்லை

    ReplyDelete
  34. சார் ...பேட்மேன் கதைக்கு இப்பவே ஆதரவு உண்டு ..

    கதை பற்றாக்குறை எனில் வேதாளர் மறுபதிப்பாகவும் களம் இறக்கவும் ...

    என்னை பொறுத்த வரை டெக்ஸ் சாகசத்தை இன்னும் கூட்டலாம் ....

    இதை எல்லாம் மீறி உங்களுக்கு கதையே கிடைக்க வில்லை என்றால் இருக்கவே இருக்கு மினிலயன் ...திகில் ...முத்து 200 வரை ...லயன் 100 வரை என மறுபதிப்பு ...

    அப்புறமா ரொம்ப நாள் கழித்து ஆதி ன்னு யாரோ வீட்டு பக்கம் வந்திருக்காங்க ...அவருக்கு வணக்கம் .சண்டை போட்டு ரொம்ப நாள் ஆச்சு ...

    ReplyDelete
  35. சார் . . . இரத்தப்படலம் Collector's Edition (in color) முன்பதிவு எப்பொழுது ஆரம்பம் . . . ?

    ReplyDelete
    Replies
    1. @ FRIENDS : புதுசுகளை முதலில் படித்து முடித்துக் கொள்வோம் !! அப்புறமாய் ஒரு கணிசமான கால அவகாசம் ஓடி முடியட்டும் ! பின்னர் யோசிப்போம் அந்த வண்ண மறுபதிப்பைப் பற்றி !

      Delete
    2. Thanks you sir for your confirmation...

      Delete
  36. ஜில் ஜோர்டன் லிஸ்ட்லயே கிடையாதா?

    500 கதைக்கும் மேலேயே டெக்ஸ் இருக்கார்னு கிளப்பி வுட்டுட்டீங்களே... (கூடவே, கொஞ்சம் தைரியத்த வரவழைச்சுக்கிட்டு, ரேப்பரும், டைட்டிலும் மட்டும் தான் மாறும், கதைல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும்னும் சொல்லியிருந்திருக்கலாம்)

    அப்புறம் ஜனவரி மாத கதைகளுக்கான ஒன் லைன் கமெண்ட்ஸ்.....

    மாடஸ்டியும், ஒரு லைம் டீயும் ஒரு நாள் காலைப்பொழுதை (5 மணி) சுறுசுறுப்பாக்கினார்கள்... விலை, பக்கக்குறைவு போன்ற எதுவும் மனதில் படவில்லை.

    ஜென்டில்மேனின் கதையில் வரும் செவ்விந்தியன் சாம் ஒரு அட்டகாசம்... செவ்விந்தியன் சாம் போன்று தனிக்கதைகள் ஏதேனும் இருந்தால் கூட ரசிக்கலாம்

    பெளன்சர்... என்னத்தைச் சொல்ல? ஒரே வக்கிரகுப்பை.

    மறுபதிப்புகள்... டவுசர்பயல்களாய் இருந்த போது ரசித்த கதைகள்... ஆகவே இப்போது அதைப்பற்றி ஏதும் சொல்வதற்கில்லை

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் ஜி, சூப்பர்ஜி.... சூப்பர்ஜி.......

      Delete
    2. S.V.VENKATESHH //ஜென்டில்மேனின் கதையில் வரும் செவ்விந்தியன் சாம் ஒரு அட்டகாசம்... செவ்விந்தியன் சாம் போன்று தனிக்கதைகள் ஏதேனும் இருந்தால் கூட ரசிக்கலாம்//

      சாமுடன் வரும் சொட்டை பட்லர் இன்னமுமொரு கதையில் தலை காட்டுகிறார் ! அடுத்தாண்டுப் பட்டியலில் அதை இணைக்க முயற்சிப்போம் !

      //மறுபதிப்புகள்... டவுசர்பயல்களாய் இருந்த போது ரசித்த கதைகள்... ஆகவே இப்போது அதைப்பற்றி ஏதும் சொல்வதற்கில்லை//

      :-)

      Delete
  37. மாலை வணக்கம்
    விஜயன் சார் & நண்பர்களே :)

    ஷெல்டன் அண்ணாத்தே நம்ம ஓவியர் கைவண்ணத்தில்
    அசத்துகிறார்
    நல்ல முடிவு எடுத்து செயல்படுத்தியது
    சோடை போகவில்லை விஜயன் சார்

    அப்ப நாளை மறுநாள்
    கூர் மண்டயர பாக்க
    குரியர் ஆபீஸ் படைஎடுக்க வேண்டும் ;-)
    .

    ReplyDelete
  38. அடுத்து களமிறங்குபவர்கள் லிஸ்டில்

    சிக் பில்
    மார்டின்
    டைலான் டாக்
    ரிப்போர்ட்டர் ஜானி
    மேஜிக் விண்ட்

    இவர்களுக்கு சற்றே கூடுதலாக ஸ்லாட்
    ஒதுக்கலாமே சார் :)

    ReplyDelete
  39. Dear TEX fans I 2 love his stories.... But 2 b frank all his stories r more or less equal... V can't able 2 expect d versatility of LARGO or Sheldon in TeX standards.. Any how its high time 4 Edi to rethink about new heroes... Apart from COMANCHE, BLUECOAT V don't have promising superstars and v can't able 2 read 10 stories of TeX in a year....

    ReplyDelete
    Replies
    1. குமரேசன் @ வரவு நல்வரவாகுக!

      Delete
  40. good evenig to all. காமிக்ஸ் என்றாலே கௌபாய் கதைகளுக்கு தனி இடம் உண்டு. எனவே புது கௌபாய் கதைகள் இருந்நால் முயவ்சிக்கலாமே. சிஸ்கோ கிட் கதைகள் உள்ளனவா..............னே

    ReplyDelete
    Replies
    1. சிஸ்கோ கிட் கதைகள் உள்ளன தான் ! But அவை சகலமும் தினசரி செய்தித்தாட்களுக்காக உருவாக்கப்பட்ட strips-களின் தொகுப்புகள் மாத்திரமே ! முழு நீள ஆல்பங்கள் அல்ல ! அவற்றை நமது சைஸ்களுக்கு மாற்றியமைப்பது சமீப மாடஸ்டி பாணியில் சிக்கல்களை உருவாக்கும் !

      Strips களை நாம் மாற்றியமைத்து வெளியிடுவதெனில் நிறைய அவகாசம் தேவை ; தற்சமயத்து மாதம் 4 இதழ்கள் போன்ற அட்டவணைகளுக்குள் அந்த வேலைகளை இணைத்தால் அவற்றிற்குரிய நியாயம்செய்தல் சிரமமே !

      Delete
  41. பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்புதான்... எனவே புதிய கதைகளுக்கு எதாவது திட்டம் உள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. ricky_tbm Ramesh : நம்மவர்களின் பழமைக் காதல் ரொம்பவே பிரசித்தம் எனும் போது மாற்றங்கள் நிதானமாகவும், நெருடல் தரா விதங்களிலும் இருத்தல் அவசியமாகும் ! So 'திடும்' திடும்' அறிவிப்புகளாய் இல்லாது - மென்மையான இடைச்செருகல்களைத் தான் எதிர்பார்த்திட இயலும் இங்கு மட்டும் !

      Delete
  42. //INCAL தொடர்களையும், METABARON களையும் ஆர்வம் பொங்க புரட்டும் தருணம் காத்துள்ளதா நமக்கு ?//
    தாராளமாக try பண்ணலாம் சார்...ஆனால் overdose ஆக போகாமல் பார்த்துக் கொள்வதும் நலம்...

    ReplyDelete
  43. INCAL தொடர்களும், METABARON களும் எப்படியிருக்குமென்று "http://www.humanoids.com/" சென்று மேலோட்டமாக பார்க்கையில் வேறு சில படைப்புகளும் என்னைக் கவர்ந்தன...
    அவை,
    1. Son of the Gun
    2. Bad Break
    3. The Sword of Glass (நமது சுட்டீஸ்களுக்கு இது பிடித்துப்போக வாய்ப்புண்டு...சுட்டீஸ் வாசகர்களைக் கவர்வதற்கு இது ஒரு நல்ல சாய்ஸ் ஆக இருக்கும் என்று தோன்றுகிறது...
    ஆனால் இது அங்கயே மார்ச் 2015 ல் தான் ரிலீஸ் போல?!)
    4. Pandemonium

    "Pandemonium" கதையின் ஒரு பாகம் இலவசமாக படிக்க "http://www.humanoids.com/digital/listFree" ல் இருந்தது...
    படித்தவுடன் மிகவும் பிடித்தது...INCAL & METABARON ஆகிய தொடர்களோடு இவைகளைம் முடிந்தால் ட்ரை பண்ணலாமே எடிட்டர் சார்!!!

    ReplyDelete
    Replies
    1. Pandemonium - இந்த கதை 3 பாகங்கள் . அழுத்தமான ஆனால் மிகவும் விருவிறுப்பான கதை. சித்திரங்கள் மிகவும் அருமை. ஆனால் முடிவு மனதை பிசைகிறது.

      Delete
    2. Sathiya & Ezhil Arasu : ஒற்றை இரவினில் ரசனைகளின் ஒட்டு மொத்த மாற்றம் சாத்தியம் அல்ல ; அதனை எதிர்பார்ப்பதும் நியாயமல்ல தானே ?! பொறுமையான ; மெதுவான எட்டுக்களை எடுத்து வைப்போம் - புதுப் புதுக் களங்களையும் / காலங்களையும் நோக்கி !

      Delete
  44. இந்த பதிவில் சதம் அடித்தது நானே..






    ReplyDelete
  45. So d fact is Apart from Loadfull of TeX and Dylan stories and a good number of Lucky Luke , Comanche, Johny & Bluecoart v don't have standard names .... LARGO & Sheldon r big shoes 2 fill .. I am eagerly waiting for EDIs next selections....

    ReplyDelete
    Replies
    1. kumaresan Ts : புது வரவுகளின் வருகைகளுக்கு இன்னமும் 2 ஆண்டுகளாவது உள்ளன ! So லார்கோவும், ஷெல்டனும் அது வரைக்கும் நம்மை பிசியாகவே வைத்திருப்பர் ! No worries !

      Delete
  46. சாகச வீரர் ரோஜர் கதைகள் நன்றாகவே உள்ளது . . . (என்னுடைய பார்வையில்...)

    ReplyDelete
    Replies
    1. Shanmuga Sundaram.S : ஜூ.எ.வின் favorite கூட ரோஜர் தான் ! பார்ப்போமே இந்தாண்டின் ரோஜர் ரிபோர்ட் கார்ட் எவ்விதம் அமைகின்றதென்று !

      Delete
  47. வேதாளர் கதைகள் எதிர்பார்க்கலாமா . . . . விஜயன் சார்?

    ReplyDelete
    Replies
    1. Shanmuga Sundaram.S : சுலபமல்ல ! But முயற்சிப்போம் !

      Delete
    2. ஆஹா.. நீங்க முயற்சிப்போம்னு சொன்னாலே அது வந்துட்ட மாதிரிதான்... நன்றி சார்...!

      Delete
  48. விஜயன் சார்,
    // Vijayan7 December 2014 at 20:11:00 GMT+5:30
    தவிர, இவற்றின் வண்ண ஆல்பம்கள் - அமெரிக்க (ஆங்கிலப்) பதிப்பிற்காகத் தயார் செய்யப்படுபவை ; இது வரை 4 ஆல்பங்கள் தான் வண்ணத்தில் வந்துள்ளன ! So இந்தத் தொடரை நாம் நிதானமாய்க் கையாள்வதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம் ! //
    VS
    // மேஜிக் விண்ட் : 130 கதைகள் ! இங்கும் எக்கச்சக்கமாய் கதைக் களங்கள் காத்துள்ளன நமக்கு ! //

    இந்த முரண்பட்ட விசயம்கள் புரியவில்லை.

    அப்படி என்றால் மற்ற கதைகள் எல்லாம் கருப்பு வெள்ளையா? அவைகளை தயங்காமல் களத்தில் இறக்கிவிடவும்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : உங்களின் இரு copy & paste வாசகங்களிலேயே விஷயங்கள் தான் உள்ளனவே ?! தொடரின் மொத்த கதை எண்ணிக்கை 130 ; அவற்றுள் வண்ணம் கண்டு வரும் கதைகளின் எண்ணிக்கை 4 மட்டுமே !

      அதே போல, கதைகளை எவ்விதம் வெளியிடுவது உசிதம் என்ற தேர்வுகள் எல்லா வேலைகளிலும் நம் கையில் இருப்பதில்லை ! வண்ணத்தில் துவங்கும் ஒரு தொடரை வண்ணத்திலேயே தொடரவே படைப்பாளிகளும் விரும்புகிறார்கள். ஒருக்கால் நாம் அவர்களது வண்ண வெளியீட்டு ஏற்பாட்டு வேகத்தை விடவும் துரிதமாய் மேஜிக் விண்ட் கதைகளை வெளியிடத் தொடங்கினால் அதனை கருப்பு-வெள்ளையில் வெளியிட அனுமதிக்கக் கூடும் !

      Delete
  49. விஜயன் சார், ஷெல்டன் கதையின் முன் அட்டைபடம் சுமாருக்கும் கீழ்! இதற்கு பதில் ஒரிஜினல் அட்டைப்படத்தை அப்படியே உபயோகபடுத்தி இருக்கலாம்.

    இந்த பதிவில் சுவாரசியமான விஷயமாக எனக்குபடுவது, நமது தளத்திற்கு வந்துள்ள புதிய காமிக்ஸ் நண்பர்களின் பதிவுகள்.

    ReplyDelete
  50. காமிக்ஸ் விளையும் பூமியிலிருந்து கதிர் விளையும் பூமிக்கு சென்று இருக்கும் எடிட்டர் சார் !!!!

    டைட்டில் நாயகர்கள் ,சீரிஸ் என்றல்லாது தேவ ரகசியம் தேடலுக்கு அல்ல ,இ.இ.கொ .போன்ற ஒன் ஷாட் கதைகள் நிறைய வெளியிடலாம் ....

    டெக்ஸ் இதழ்கள் வருடத்திற்கு 7-க்கு மேல் ரெகுலர் குறைந்த விலை இதழ்கள் மிகாமல் பார்த்து கொள்வது நல்லது என தோன்றுகிறது ..

    தீபாவளி -க்கு சற்றே பருத்த ஓர் சிறப்பிதழ் வெளியிடலாம் ...

    கோடை விடுமுறையில் ஓர்நாளை வருடத்தில் ஓர் நாள் டெக்ஸ் தினம் என அறிவித்து ஒரு மகா குண்டு இதழை லிமிடெட் எடிஷன் என வெளியிடலாம் ..

    7+1+1.....இது அனைத்து தரப்பினரையும் திருப்தி படுத்தும் என தோன்றுகிறது ...

    புது கதைகளில் எங்களுக்கு எது பிடிக்கும் என்பது உங்களுக்கு தெரியாததா சார் ?

    பெரம்பலூர் புக்பேர் பற்றி எழுதுவீர்கள் என நினைத்தேன் சார் .....

    எல்லா புக்பேர்களிலும் பங்கு பெறுவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது .......

    ReplyDelete
    Replies
    1. பேட்மேன் ,சூப்பர் மேன் ,ஸ்பைடர்மேன் நிறைய மற்ற மீடியங்கள் பங்களிப்பு செய்து விட்டது போல் எனக்கு ஒரு பிரமை ..

      Delete
    2. selvam abirami : //டைட்டில் நாயகர்கள் ,சீரிஸ் என்றல்லாது தேவ ரகசியம் தேடலுக்கு அல்ல ,இ.இ.கொ .போன்ற ஒன் ஷாட் கதைகள் நிறைய வெளியிடலாம் ....//

      வெளியிடலாம் தான் ; ஆனால் நம்மவர்களுக்கு one shots கதைகளானவை - புளியோதரை ; வெஜ் பிரியாணி ; லெமன் சாதம் போல் நடுநடுவே ருசிக்க ஏற்ற variety rice வகைகளாகவே இருந்து வருகின்றன ! நீண்டு செல்லும் ஒரு நாயகரின் தொடரானது அன்றாடத்து அன்னம் போல ! So ஒரு தொடரை ரசிக்கும் அதே வாஞ்சையோடு தொடர்ச்சியாய் one shots களை ரசிப்பார்களா என்ற கேள்வி என்னுள் உள்ளது !

      (டெல்டாவின் தாக்கமோ - அரிசி பற்றிய அலசல் !!)

      Delete
  51. //... டெக்ஸ் வில்லர் - 640+ கதைகள் -நாம் வெளியிட்டுள்ளது சுமார் 60 கதைகள் ...//
    தல டெக்ஸ்-க்கு தனி track ஆரம்பிக்க சரியான நேரம் இது ... மாதமிருமுறை கருப்பு வெள்ளையில் (வழக்கமான, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட வண்ண வெளியீடுகள் + ஸ்பெஷல்-கள் தவிர்த்து :)

    //....கமான்சே - மொத்தம் 15 கதைகள் - நாம் 2015-ன் இறுதியில் கதை # 6 ஐ முடித்திருப்போம் ; so எஞ்சி இருக்கப் போவது இன்னொரு 3 ஆண்டுகளுக்கு ஓடக் கூடிய ஒன்பது ஆல்பம்கள் ! ...//
    அத்துடன் ஓநாய்க் கணவாய் - மறுபதிப்பு - please?

    //.... டைலன் டாக் - 400+ கதைகள் ! நாம் இப்போது தான் இந்தத் தொடரைத் துவக்கியுள்ளோம் எனும் போது ஏராளம் எஞ்சி நிற்கிறது ! ...//
    டைலன் டாக் அவ்வளவு கவரவில்லை. கருப்பு வெள்ளையில் வெளியிடமுடியுமா?

    //..மர்ம மனிதன் மார்டின் - 200 + கதைகள் ! இன்னமும் நிறையவே சிண்டைப் பிய்த்துக் கொள்ள வாய்ப்புகள் காத்துள்ளன நமக்கு ! ...//
    சூப்பர்.. மர்ம மனிதன் மார்டின் கதைகள் ஆண்டு வெளியீட்டு எண்ணிக்கையை அதிகரிக்கலாம்

    //..மேஜிக் விண்ட் : 130 கதைகள் ! இங்கும் எக்கச்சக்கமாய் கதைக் களங்கள் காத்துள்ளன நமக்கு !..//
    மேஜிக் விண்ட் - கதைகள் ஆண்டு வெளியீட்டு எண்ணிக்கையை அதிகரிக்கலாம்

    //..லக்கி லூக் : 75+ கதைகள் ; இன்னமும் நிறைய பாக்கியுள்ளன நமக்கு ! ஒரே பிரச்னை என்னவெனில் துவக்க காலத்து (Morris) classic கதைகளில் நிறையவற்றைப் போட்டுவிட்டோம் ! எஞ்சி நிற்பவை புது கதாசிரியர்களின் ஆக்கங்கள் ! ..//
    மீதமுள்ளவை தொடரட்டும்

    //.. சிக் பில் : 58+ கதைகள் - இங்கும் கணிசமாய்க் கதைகள் பாக்கியிருப்பினும், அவற்றிற்கு டிஜிட்டல் கோப்புகள் இன்னும் தயாராகியும் ஆகாமலும் உள்ள நிலை படைப்பாளிகளிடம் ! So இங்கே சற்றே go slow தான் சாத்தியம் ! ...//
    எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டியதிருந்தாலும் பரவாயில்லை.. அனைத்து சிக் பில் - கிட் ஆர்ட்டின் - டாக் புல் கதைகளும் வேண்டும்.. அப்புறம் மறுபதிப்பு list-யையும் கொஞ்சம் கவனிக்கவும் ;) நீலப்பேய் மர்மம், விண்வெளியில் ஒரு எலி etc.

    //... ப்ளூ கோட் பட்டாளம் : 58+ கதைகள் ; we have loads of choices ! ..//
    கண்டிப்பாக தொடரட்டும்

    //.. ரிப்போர்டர் ஜானி : 78+ கதைகள். நிறைய இடியாப்பங்கள் இன்னமும் waiting ! ..//
    சூப்பர் ... ரிப்போர்ட்டர் ஜானி கதைகள் ஆண்டு வெளியீட்டு எண்ணிக்கையை அதிகரிக்கலாம்

    நமது நெடுநாள் கோரிக்கையான மறுபதிப்பு track-யையும் (மும்மூர்த்திகள் + கூர்மண்டையர் track போலவே :) plan பண்ணினால் balanced-ஆக புது வெளியீடுகளைத் தொடர ஏதுவாக இருக்கும்

    அத்துடன் கீழ்க்காணும் புதிய கதைகளை/தொடர்களை முயற்சிக்கலாமா?
    Ramiro - by William Vance
    Batman - Selected

    ReplyDelete
    Replies
    1. //... ப்ளூ கோட் பட்டாளம் // கண்டிப்பாக தொடரட்டும்
      //.. ரிப்போர்டர் ஜானி & ..மர்ம மனிதன் மார்டின் // எண்ணிக்கையை அதிகரிக்கலாம்
      //.. சிக் பில் // அப்புறம் மறுபதிப்பு list-யையும் கொஞ்சம் கவனிக்கவும் ;) நீலப்பேய் மர்மம், விண்வெளியில் ஒரு எலி etc.

      //..லக்கி லூக் : // கண்டிப்பாக தொடரவேண்டும்!

      // மேஜிக் விண்ட்// கதைகள் ஆண்டு வெளியீட்டு எண்ணிக்கையை அதிகரிக்கலாம்

      Delete
    2. Periyar : டெக்ஸ் கதைகள் இந்தாண்டே நிறைய இடத்தை ஆக்கிரமித்து வரும் தருணத்தில் பிரத்யேக டெக்ஸ் வரிசை நிச்சயமாய் overkill ரகத்தில் தானிருக்கும் !

      //.. ரிப்போர்டர் ஜானி & ..மர்ம மனிதன் மார்டின் // எண்ணிக்கையை அதிகரிக்கலாம்//

      சுவாரஸ்யமான கருத்து ! நண்பர்களுள் இதற்கு உடன்பாடு இருக்கும் பட்சத்தில் we are ready !

      Delete
    3. சிக் பில்
      மார்டின்
      ரிப்போர்ட்டர் ஜானி +1
      ரிப்போர்ட்டர் ஜானி +1
      ரிப்போர்ட்டர் ஜானி +1

      Delete
    4. //.. ரிப்போர்டர் ஜானி & ..மர்ம மனிதன் மார்டின் // எண்ணிக்கையை அதிகரிக்கலாம்//
      +11111111111

      Delete
    5. Vijayan sir,

      Reporter Johnny is one of the good story lines we have. Please reprint his old stories too (books got published in Thigil). Eagerly awaiting to read his stories.

      I have read one page of Reporter Johnny story, in Kungumam tamil weekly very long back (it had your name as translator or editor), I was not fortunate enough to read that story completely, please publish that story, if possible.

      Not sure, how many regular readers got chance to read that story that time.

      Delete
    6. As of now Reporter Johnny is our #1 detective hero.
      All of his stories has a good plot, very fast screenplay, huge twist in the end.
      Drawings are amazing....

      Delete
    7. //As of now Reporter Johnny is our #1 detective hero.//
      /.. ரிப்போர்டர் ஜானி & ..மர்ம மனிதன் மார்டின் // எண்ணிக்கையை அதிகரிக்கலாம்//
      +111111111111111

      Delete
  52. விஜயன் சார்,
    // டைலன் டாக் // என்னை பொறுத்தவரை வண்ணத்தில் ரசிக்க இந்தக்கதை அந்த அளவுக்கு ஒர்த்த் இல்லை, எனவே இந்த கதைகளை கருப்பு வெள்ளையில் வெளி ஈட முடியுமா? இதனால் விலை குறைய வாய்புகள் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : அந்தி மண்டலம் - பிரமாத வரவேற்பு ; வீதியெங்கும் உதிரம் : சுமார் ; நள்ளிரவு நங்கை : வித்தியாசமான முயற்சி.

      இவையே இது வரையிலான டைலனின் ஸ்கோர் ஷீட் !

      400+ கதைகள் கொண்டதொரு தொடர்; ஒரு தருணத்தில் இத்தாலியில் டெக்ஸ் கதைகளை விட அதிகமாய் விற்பனையான கதை தொடர் ; திரைப்படமாய் வந்ததொரு ஆக்கம் என்ற பெருமைகளுக்குச் சொந்தம் கொண்டாடும் ஒரு சமீப வரவுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம், தான் தந்து பார்ப்போமே ? Anyways தற்சமயத்து வண்ணத்தை black & white -க்கு மாற்றுவதால் ரூ.60 விலை என்ற புக் ரூ.35 அல்லது ரூ.40 விலைக்கு வருவதை பெரும் மாற்றமென கருத முகாந்திரம் இருப்பதாய்த் தோன்றவில்லையே ?!

      Delete
    2. விஜயன் சார்,
      நான் கதை பிடிக்க வில்லை என சொல்லவில்லை. நமது மற்ற கதைகளில் உள்ள சித்திரம்கள் வண்ணதில் வரும்போது ரசிக்கும் படி உள்ளது, ஆனால் இதில் சித்திரம்களுக்கு அந்த அளவு முன் உரிமை ஓவியர் கொடுத்த மாதிரி தெரிய வில்லை, டைலன் கதையில் கதைக்கு தான் முக்கியத்துவம் அதிகம் என்பது எனது எண்ணம்.

      // புக் ரூ.35 அல்லது ரூ.40 விலைக்கு வருவதை பெரும் மாற்றமென கருத முகாந்திரம் இருப்பதாய்த் தோன்றவில்லையே ?! //
      விலை குறைப்பு என்ற எனது ஆதங்கம் - அப்படியாவது நமது காமிக்ஸ் பலரை சென்று அடைந்து நமது வாசகர் வட்டம் விரிவடைய சாத்தியம் உண்டா என்பதே!

      Delete
  53. // டெக்ஸ் வில்லர் - 640+ கதைகள் -நாம் வெளியிட்டுள்ளது சுமார் 60 கதைகள் //

    (விளையாட்டுக்கு..)

    டெக்ஸ்வில்லரின் ஒவ்வொரு படைப்பாளரும் வாழ்நாளில் அதிகபட்சம் வாசித்தது: 100 கதைகள்
    எடிட்டர் அதிகபட்சம் வாசித்து முடித்தது: 100 கதைகள்
    உபயோகப்படும் அளவுக்கு உள்ள நல்ல கதைகள்: 640/10 = 64
    மீதமுள்ள கதைகள்: 4

    ஐயோ பாவம் டெக்ஸ்! :D

    ReplyDelete
  54. Engal delta ooril net connxn slowa? Cellai paakkamal aruvadaikku thayaraaga irukkum nellai paarungal sir. Manasu kulirum

    ReplyDelete
    Replies
    1. Dr.Hariharan : நெல்லைப் பார்க்கும் கண்கள் குளிர்கின்றன தான் டாக்டர் ; ஆனால் transliteration -ல் ஆங்கில சொற்களை டைப் அடித்து விட்டு கொட்டாவியோடு காத்திருக்கும் கண்களில் நீரும் கொட்டுகிறதே !! சிக்கலே அங்கே தானே !!

      Delete
  55. அட்டைப்படத்தில் இந்தமுறை தேவையில்லாத உழைப்பு & ஒரிஜினலை வீணடித்த உணர்வு.

    நம்பமுடிகிறதோ இல்லையோ, ஒரிஜினல் அட்டையின் ஃபீல் & ஃபினிஷிங் தற்கால புதியவாசகர்களுக்கு நன்றாகவே செட்டாகும். ஒய் திஸ் கொலை வெறி ஆன் ஒரிஜினல்? :)

    ReplyDelete
    Replies
    1. ஒரிஜனலில் இருட்டரையில் ஸ்பாட் லைட் அடித்து பிணைக்கைதிக்கான சூழலை செய்திருக்கிறார்கள் (அதுதான் நோக்கம்). அதில் பிணைக்கைதி (ஷெல்டன்) மட்டுமே ஃபோகஸ். மற்ற இருவரும் லேசான இருளில் தெளிவில்லாமல் காட்டப்படுவதுதான் யதார்த்தமும்.

      நாம என்ன பண்ணியிருக்கோம்னா எல்லார் மேலையும் தெள்ளத்தெளிவா லைட் அடிச்சி ஃபோகஸ் லைட் ஃபீலே போச்சு! இப்போ பின்னால் திரை இருந்தாலும் ஒன்னுதான் சும்மாவாச்சும் ஒரு முரட்டு லாரி, ஹெலிகாப்டர் இருந்தாலும் ஒன்னுதான்! (Back to 70s Muthu Comics?)

      Delete
    2. //அட்டைப்படத்தில் இந்தமுறை தேவையில்லாத உழைப்பு & ஒரிஜினலை வீணடித்த உணர்வு.//

      +1

      Delete
    3. @ FRIENDS : ஒரிஜினல் ரொம்பவே dull தோற்றத்தில் இருந்தது ! தவிர கதையை நாளைப் படிக்கும் போது கதையின் மூடுக்கு நமது தற்போதைய ராப்பர் ஒ.கே. என்றே தோன்றக் கூடும் !

      Delete
    4. i liked the new cover, it gives the lion/muthu authenticity :)

      Delete
  56. saar,அட்டை படம் இரண்டுமே தூள் . இருந்தாலும் வண்ணச்சேர்க்கை அவர்களது சற்றே தூக்கல் நாமத்தை விட .ஷேல்டனும், லார்கோவுள் ,பதிமூன்றும் குறைந்து வருவது பகீர்.இப்போதே சிறுக சிறுக ஸ்பைடர் மென் , சூப்பர் மேன்களை திணித்து எங்களை தயார் படுத்தலாமே .

    ReplyDelete
    Replies
    1. ஆனால் ளார்கோ., ஷேல்டனுக்கு இணையாய் யாரேனும் வேண்டும் .அன்று ஸ்பைடரை இழந்தது போல ....ஏதோ வெறுமை தெரிகிறது ....வான் ஹாம்மேயின் பிற வெளியீடுகளை தொடரலாம்.

      Delete
    2. வாங்க ஸ்டீல் கிளா ஜி

      ரொம்ப நாளைக்கு அப்புறம்

      களத்துல இறங்கியிருக்கீங்க :))
      .

      Delete
    3. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : THORGAL கூட வான் ஹாம்மேவின் படைப்பு தானே !

      Delete
  57. என்னப்பா நடக்குது இங்க

    விஜயன் சார் அவர்கள் ரெண்டு நாளா வரவில்லை
    ஈரோடு விஜய் அவர்கள் ரெண்டு நாளா வரல
    கிட் ஆர்ட்டின் கண்ணன் அவர்களை கொஞ்ச நாளா காணலை

    ஏரியா ரொம்ப அமைதியா இருக்குபா

    நல்லாவே இல்ல :(
    .

    ReplyDelete
    Replies
    1. நான் எங்கே போயிடப்போறேன் சிபி அவர்களே... இங்கேதான் எங்காவது மூலையில் உட்கார்ந்துகிட்டு நகங்களைக் கூர் தீட்டிக்கிட்டிருப்பேன்!

      நீங்க இப்போல்லாம் கொஞ்சம் அடிக்கடி எட்டிப் பார்க்கறீங்களே, அதுதான் ஆச்சர்யம்!

      கிட் ஆர்ட்டின் கண்ணன் அடுத்த பதிவுக்குதான் இங்கே வருவாராம்!

      மற்றபடி, எடிட்டர் பற்றி எனக்கு எதுவும் தெரியாது! ஒருவேளை, மங்கா வாங்கிவர சப்பானுக்கு போயிட்டாரோ என்னவோ! ;)

      Delete
    2. Prabakar T & Erode VIJAY : சிறுநகர இன்டர்நெட் இணைப்புகளுடனான மல்யுத்தங்கள் உடம்புக்கும், மனதுக்கும் ரொம்பவே சேதத்தை விளைவிக்கக் கூடியவை என்பதை நேற்று உணர்ந்ததால் புறமுதுகிட்டு ஓட்டம் பிடித்து விட்டேன் ! இன்று டெஸ்பாட்ச் தினம் என்பதால் பகல்பொழுது அதனில் செலவாகிப் போனது !

      இதோ - சாமக் கூத்துக்கு ஆஜர் !

      Delete
  58. பேட்மேன் ,சூப்பர் மேன் ,ஸ்பைடர்மேன் கதைகள் எனக்கு வேண்டாம்பா!

    ReplyDelete
    Replies
    1. Paranifrom Bangalore & FRIENDS : 'உங்கள் ரசனை உங்களது' என்ற முறையில் இந்தப் பகிர்வில் நிச்சயமாய் தவறில்லை தான் ! But இது நிச்சயமாய் இது மேம்போக்கானதொரு கருத்தாய் மட்டுமே இருக்க முடியும் ..!

      பல்லாயிரம் பக்கங்களைத் தாண்டிய epicகதைத்தொடர்களான இவற்றுள் நாம் வாசித்திருக்கக் கூடிய சதவிகிதம் எத்தனையாக இருந்திட இயலும் ?? Maybe 0.5% ; 1% ? அதனைக் கொண்டே ஒட்டு மொத்தமாய் ஒரு தொடரை trash bin -க்கு அனுப்புதல் சரி தானா ?

      இக்கதைகளை நாம் வாங்கி விட்டோம் என்றோ - வாங்கப் போகிறோம் என்ற பின்னணியிலோ நான் இதனைச் சொல்லவில்லை ! ரசனைகளின் விரிவாக்கம் காணும் இந்நாட்களில் ஒரு திறந்த மனதோடு ஒவ்வொரு புதுத் தொடரையும் அணுகிப் பார்ப்போமே என்றரீதியில் மட்டுமே நான் இதனைச் சொல்ல விழைகிறேன் !

      Delete
    2. விஜயன் சார்,
      நேற்று எனது கமெண்ட் பின்னால் உள்ள காரணம் இதுதான் (விரிவாக எழுதாததால் வந்த குழப்பம்)
      தற்சமயம் நமது ரசனைகள் மாறிவருகிறது, மேலும் நமது (இன்று வரும் மறுபதிப்பு) மூம்மூர்த்திகள் கதைகள் எனக்கு பிடிக்க ஒரு காரணம் சிறுவயதில் படித்து மனதிற்கு நெருக்க மானத்தால். இன்று அதுபோல் உள்ள "சூப்பர்" மேன்களின் கதை படிக்கும் ஆர்வம் இல்லை, காரணம் பூ சுத்தல் அதிகமாக இருக்கும் என்ற காரணமும் உண்டு; சமீபத்திய உதாரணம் டயபோலிக் கதைகள்.

      எதையும் படித்த பின் முடிவு செய்வது நலம் என்பதில் மாற்று கருத்து இல்லை.

      இந்த கதைகள் நமது காமிக்ஸில் வரும்போது கண்டிப்பாக படிப்பேன், படித்த பின் பிடித்தாலும் பிடிக்கலாம்.

      Delete
  59. லயன் NBS -படித்துக்கொண்டிருக்கின்றேன் .
    கான்க்ரீட் கானகம் ...வண்ணங்களும் துல்லியமான அச்சும் ....
    ஹூம் ....
    அது ஒரு கனாக்காலம் ...

    ReplyDelete
    Replies
    1. AHMEDBASHA TK : நியூ யார்க்கின் கானகம் மாத்திரமல்ல - உங்களது அபிப்பிராயங்களில் சிலவுமே கான்க்ரீட்டில் ஆனவை எனும் போது அவற்றோடு மல்யுத்தம் செய்திடும் ஆற்றல் குறைவே எனக்கு ! So ஒவ்வொரு பதிவிலும் அவற்றையே திரும்பத் திரும்பப் போட்டுத் துவைப்பதன் சுவாரஸ்யம் என்னவிருக்கப் போகிறது ?

      Delete
  60. Dear basha,அச்சுதரத்தில் 2012,ஒரு மணிமகுடம்தான்.அந்த அச்சுதரம் இனிவரும் காலங்களில், கனாகாலமாக இல்லாமல்,இனிய நிகழ்காலமாக அமைய வேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆசையும்.

    ReplyDelete
    Replies
    1. டாக்டர் சார் ...
      எவ்வளவு மன்றாடினாலும் ஆசிரியர் கவனிக்க மாட்டாரே ......

      Delete
  61. டியர் எடிட்டர் சர்ர்,
    எனக்கு அட்டை படம் பிடித்துள்ளது சர்ர். வெய்ன் ஷெல்டன் எப்படி வந்தாலும் எனக்கு பிடிக்கும்.

    ReplyDelete
  62. டியர் எடிட்டர் சர்ர்,
    போனொல்லி நிறுவனத்தில் ரெக்ஸ் கதைகளுக்கு பஞ்சம் இர்ரது. புது நரயகர்கள் இப்போது இருந்தே தேட வேண்டுமர சர்ர்? இது முன்கூட்டியே " வெள்ளம் வருமுன் அணை போடும்" உபரயமர?

    ReplyDelete
  63. டியர் எடி சார் நமது வாசகர்களின் சராசரி வயதை வைத்து மற்ற ஹீரோ க்களின் புத்தகங்களுக்கு உரிமை பெறுங்கள்
    ஸ்பைடர்மேன் சூப்பர்மேன் பேட்மேன் ஆகியவை அஜீரண கோளாறை உண்டுபண்ணக்கூடும்

    ReplyDelete
    Replies
    1. sai vignesh : பேட்மேன் கதைகளின் ஆழத்தை உணர கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டால் உங்கள் அபிப்பிராயத்தை நிச்சயமாய் மாற்றிக் கொள்வீர்கள் நண்பரே ! ஒரு லோட் BATMAN கதைகளைப் படித்த போது அது புரிந்தது ! அதே போல சூப்ஸ் / ஸ்பைடி கதைகளுள் புதைந்து கிடக்கும் புதையல்கள் எத்தனையோ - யாரறிவர் ?

      நாளைக்கே நாம் அவற்றின் உரிமைகளை வாங்கிடப் போவதாகவோ ; அதற்கான தயார் நிலைக்கு நம் வந்து விட்டதாகவோ நான் சொல்லப் போவதில்லை ! But still an open mind will help !!

      Delete
  64. டியர் எடிட்டர் சர்ர்,
    லர்ர்கோவின் மறுபதிப்பரன "என் பெயர் லர்ர்கோ" புத்தகத்தில் சர்பிரைஸ் மறுபதிப்பு-2 என்று திகிலின் ஆரம்ப கரல 3 புத்தங்களை மறுபதிப்பு செய்வதாகவும் விளம்பரம் பின்னரல் உள்ளதரயும் ஹரட்லைனில் தரங்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள். முதலில் துள்ளிக்குதித்த நரன், எங்கு தேடியும் அதன் விளம்பரத்தை கரணோம். எனக்கு அனுப்பிய பிரதியில் மட்டும்தரன் இப்படியர? கரற்று போன பலூனரகி விட்டேன் சர்ர். நீங்கள் அறிவித்தது உண்மைதரனே சர்ர்? பிஸீஷ் அறியர விட்டரல் வேதரளம் போல் என் தலையே வெடித்து விடரதர சர்ர்?

    ReplyDelete
  65. டியர் எடிட்டர் சர்ர்,
    மரடஸ்டி பிளைஸி கடைசியாக வந்தது , அதன் சித்திரங்களுக்கரக பலத்த விமர்சனத்துக்கு உள்ளரனதே சர்ர்? ர்ரயல்ரி கொஞ்சம் அதிகமில்லையர சர்ர்? பல வெளியீடுகள் இன்னும் இருந்தும் கூட . எப்படி வந்தாலும் நரன் வரங்குவேன் சர்ர்.

    ReplyDelete
  66. பெரம்பலூர் புக்பேர் சென்று இருந்தேன் .....

    வறண்ட மாவட்டங்களில் ஒன்றான இந்த மாவட்டத்தில் பெரிதாக எதுவும் எதிர்பார்க்க முடியாதுதான் ..

    விற்பனை குறித்து கேட்டபோது அருணின் முகத்தில் மலர்ச்சி இல்லை ...

    மற்ற பதிப்பகத்தார்களும் சிலாகிக்கும்படி ஏதுமில்லை எனவே சொன்னார்கள் ....

    கலெக்‌ஷனில் விட்டு போன அகதா கிறிஸ்டியின் cards on the table வாங்க books world பதிப்பகத்தின்
    உள்ளே நுழைந்து போது நமது டைலன் டாக்கின் பெயருக்கு காரணமான டைலன் தாமசின் selected poems 'புக்கை பார்த்த போது அட !என தோன்றியது

    என் பெயர் லார்கோ ,டபுள் த்ரில் ஸ்பெஷல் ,கா.க.கா ,வ.வீ வாங்கி வெளியில் வந்தேன் ..

    தங்க கல்லறை இன்னும் வரவில்லை ...

    wild west special -ம் ....


    ஆனால் விற்பனை என்றல்லாது இதுபோன்ற உள் மாவட்டங்களில் பங்கு பெறுவது இப்போது பலன் குறைவாக இருந்தாலும் எதிர்காலத்தில் நல்ல பயன் அளிக்கும் என நம்புவோம் ...

    ReplyDelete
    Replies
    1. selvam abirami : பெருநகர் தாண்டிய இரண்டாம் / மூன்றாம் நிலை நகர்களின் புத்தக விழாக்கள் ரொம்பவே குறைவான சுரத்தில் உள்ளன ! விடாப்பிடியாய் அவற்றைப் பற்றிக் கொண்டு முயற்சிக்க ஆண்டவன் பிரத்யேக ஆற்றல் தர வேண்டும் போலும் !!

      Delete
  67. பெருநகர் தாண்டிய இரண்டாம் / மூன்றாம் நிலை நகர்களின் புத்தக விழாக்கள் ரொம்பவே குறைவான சுரத்தில் உள்ளன ! விடாப்பிடியாய் அவற்றைப் பற்றிக் கொண்டு முயற்சிக்க ஆண்டவன் பிரத்யேக ஆற்றல் தர வேண்டும் போலும் !! DONT WORRY EDITOR SIR, these are the better basement for our hike. we will rocz soon

    ReplyDelete
  68. @Vijayan sir:

    I am glad you brought up the Incal and Metabaron names. It would be a great addition and might bring up a radical change in our way of perceiving sci-fi genre or even comics in general. But given the type of scissors you use in the operation theatre for Largo and Modesty, I cant help but think we might only get to see only 60% of the whole of Incal! For as sensitive a circle as us, Incal would be too much, at least for a few years anyway. Though i hope you bring them in soon.

    About Batman, Spiderman, Superman..

    Batman is completely human and is driven by the need to fight crime with a fair bit of assistance of his detective prowess. So i think his stories are more reasonable and will work for us. The other two are aided by their powers, their stories are basically driven by the instinctive thinking of having to showcase how fast they can fly or move around. So i doubt the superheroes' longevity with our audience.

    ReplyDelete