Wednesday, September 03, 2014

சித்திரமும் பேசுமே...!

நண்பர்களே,

வணக்கம். கூரியர்கள் சகலமும் நேற்றே புறப்பட்டுவிட்டதால் இன்று உங்களின் வீட்டுக் கதவுகளை நமது புத்தகப் பார்சல்கள் தட்டுவது நிச்சயம் ! கடந்த பதிவின் பின்னூட்ட எண்ணிக்கை 230+ ஐத் தாண்டி விட்டதால் இம்மாத இதழ்களுக்கான விமர்சனங்களையும் அங்கே நுழைப்பது சிரமம் என்று மனதுக்குப் பட்டது ! So உங்களின் எண்ணங்களை இந்தக் குட்டியூண்டுப் பதிவினில் பகிர்ந்திடலாமே ? 

இம்மாத ஹைலைட்டான "தேவ இரகசியம் தேடலுக்கல்ல" இதழின் நாயகர் சந்தேகத்துக்கு இடமின்றி அதன் ஓவியர் பாவ்லோ க்ரெல்லா தான் என்பது இதழ் உங்கள் கைகளுக்குக் கிடைக்கும் போதே புரிந்திடும் ! இதோ அவரது கைவண்ணங்களில் ஒரு சில பக்கங்கள் - அவரது வலைபதிவினில் (www.paologrella.blogspot.inஇருந்து :




2011-ல் இந்த 3 பாகப் படைப்பிற்காக விருது பெற்ற போது.... 
அப்புறம் செப்டெம்பர் இதழ்கள்  மூன்றும்  நமது ஆன்லைன் விற்பனைத்தளத்தில் லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது...! அங்கே சென்றிட விரும்புவோர் இங்கே கிளிக் செய்திடலாம் : http://lioncomics.worldmart.in/index.php?categoryID=16

Folks...உங்களின் எண்ணங்களை, அபிப்ராயங்களை அறிந்திடக் காத்திருப்போம் ஆவலாய் ! Bye for now ! 

239 comments:

  1. Replies
    1. அருமையான படைப்பாக அமைந்து விட்டது தேவ இரகசியம் தேடலுக்கல்ல என்கிற இந்த கதை. நம்ம சரித்திரத்தை சாகடிப்போம் _மர்ம மனிதன் மார்ட்டினின் பாணி கதைதான் என்கிற போதிலும் மிக மிக யதார்த்தமான பாணியில் அமைந்த கதை முடியும் விதம் மிக நிறைவாக இருந்தது சார்!

      Delete
  2. வழக்கம் போல போஸ்டல்ல வர்றது லேட் தானா?

    ReplyDelete
    Replies
    1. நான் மலைபிரதசம் (yercaud)கடந்த 2012 பின் ஈரோடு புத்தகதிருவிழா வரை காமிக்ஸ் தொடர்பேயில்லாத நிலையில் இருந்தேன்....
      நீண்டகால இடைவெளிக்கு பின் புதிய வெளியிடை பெற தனி ஆளாக(?)வரிசையில் காத்திருக்கிறேன்.


      தொடர்ச்சி கீழே....

      Delete
  3. படிச்சுட்டு வர்றேன். :-)

    ReplyDelete
    Replies
    1. சேலம் நண்பர் கர்ணன் ஐ 15 நாட்களுக்கு முன்பே போன் செய்து சார் 2 பிரதிகள்..7 நாட்களுக்கு முன் போன் செய்து சார் மறந்து விடாதீர்...4 நாட்களுக்கு முன் போன் செய்து சார்... சார்... நாளை செப்டம்பர்...கிடைத்து விடுமா..


      தொடர்ச்சி கீழே....

      Delete
  4. இன்னும் கைக்கு கிட்டவில்லை... வழக்கம் போல SlowTransport கூரியர் வேலையில் ஜரூர் தான் !

    ReplyDelete
    Replies
    1. கர்ணன்:'நாளைக்கு தான் பார்சலே அனுப்புவார்கள்' 'நிச்சயம் நாளைக்கு கிடைக்கும் சார்' முதல் புக் உங்களுக்குத்தான்'
      எடிட்டர் ப்ளாக்கில் 'தேவ இரகசியம் தேடலுக்கல்ல' நாளைக்கு கிடைக்கும் என இரகசித்தை போட்டுடைக்கிறார்...மறுநாளே புத்தகங்கள் கிடைத்ததா வாசகர்களே...படித்து கமெண்ட் போடுங்கள் காத்திருக்கிறேன் என் அடுத்த பிளாக்கில்!


      தொடர்ச்சி கீழே....

      Delete
  5. Replies
    1. சிவகாசி நண்பர் செளந்தர் 2ம் தேதியே only in sivakasi பாருங்கள் fb படங்கள் போட இரத்தம் வேகமெடுக்க ஆரம்பித்துவிட்டது.கமெண்ட்கள்
      மெதுவாக வரத்துவங்கியது..3ம்தேதி பார்சலில் கிடைத்த நண்பர்கள்...அட்ரா சக்கா...அட்ரா சக்கா...அட்டைகள் சூப்பர்.கிராபிக்ஸ் சூப்பர்.கதை சூப்பர்...அது இது டமால் டுமில் கமெண்டுகள் தொடர...

      தொடர்ச்சி கீழே....

      Delete
  6. கண்டேன் சீதையை.!!!!

    (புக் கிடைச்சிருச்சு.)

    ReplyDelete
    Replies
    1. --150+60+60 = ?
      --கடந்த மாத செலவு = ரூ.550- 270= ____ இந்த மாத இலாபம்
      --But எனக்கு 925+500-270=1155
      -- 150+60+60=03092014
      -- ennayaiya kanakku idhu . Phone number ellaam potturikinga? Midiyala
      ...fb ல்.......இப்படி வரவு செலவு கணக்கு அலச...............
      --அதவிட பெரிய ஷாக் 38 லிருந்து 46 பக்கங்கள் வரை கானோம்! ஆனால் 54 வது பக்கங்களுக்கு பிறகு திரும்பவும் 47 லிருந்து 54 வரை பைண்டிங் செய்யப்பட்டுள்ளது! // உங்களுக்கு ஸ்பெஷலா non linear ஸ்டைல்ல கதைய பிரிண்ட் பண்ணியிருக்காங்க போல இருக்கு!

      தொடர்ச்சி கீழே....

      Delete
  7. எட்டாவது, புக் வாங்கிவிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. மற்றோருபக்கம்.....
      -- கார்த்திக் அப்படின்னு பெயர் வைத்தாலே ஸ்பெஷல் காபிதானாம்
      --கண்டேன் சீதையை.!!!!
      --நமக்கும் புத்தகம் வந்துவிட்டது
      --இதோ கிளமபிவிட்டேன் புக்ஸ் வாங்குவதற்காக எங்கே? சிவகாசிக்கு!!
      --தொறந்தாலே பவுடரா (வாசனையற்ற) கொட்டுது!
      --அதவிட பெரிய ஷாக் 38 லிருந்து 46 பக்கங்கள் வரை கானோம்!
      --இவருக்கு மட்டும் ''பவுடர்'' .............அப்ப எனக்கு ''சீப்பா''வது கிடைக்கும்னு நினைகிறேன் ..............
      --காதலிக்க குதிரை இல்லை .............எனக்கு படிக்க புத்தகம் இல்லை.........

      தொடர்ச்சி கீழே...

      Delete
  8. நமக்கும் புத்தகம் வந்துவிட்டது

    அனைத்தும் மிக அருமையாக இருக்கின்றது சார்
    தேவ ரகசியம் மனதை அள்ளுகிறது
    மிக்க நன்றி விஜயன் சார் :)
    .

    ReplyDelete
    Replies
    1. --யாரந்த மினி ஸ்பைடர் படித்து கொண்டு இருக்கிறேன் ..............
      --ஹைய்யா! எனக்கும் புக்ஸ் வந்தாச்சு!அட்டைப் படங்கள் மனசை அள்ளுது.
      --"தேவ இரகசியம் தேடலுக்கல்ல" இன்னொரு "The Davinci Code" movie-ஐ பார்த்த விளைவை ஏற்படுத்துகிறது.
      fb & blogல் கமெண்ட்கள் சூடுபறக்க இரவு நெருங்கிவிட்டது,காலையில் கிடைத்தது என்ற நம்பிக்கையில் தூங்கினால்....

      தொடர்ச்சி கீழே.....

      Delete
  9. இதோ கிளமபிவிட்டேன் புக்ஸ் வாங்குவதற்காக எங்கே? சிவகாசிக்கு!!

    ReplyDelete
    Replies
    1. ராஜசேகர், உங்களுக்கு என்ன சிவகாசி கூப்பிடும் தொலைவில் :-)

      Delete
    2. படித்த கமெண்டுகள் எல்லாம் மிக்சிங் ஆகி ஒரே காமிக்ஸ் கனவுகள்...குண்டு குண்டு புத்தகங்கள்...பாலித்தின் கவருக்குள்ளே...லக்க லக்க லக்க சிரிப்புடன் ஸ்பைடர் அட்டைபடம்..jumbo வை விட 2 மடங்கு சைஸ் பக்கங்கள்...பிரித்தால் எனக்கு மட்டும் ஒரு கதையே காணவில்லை...கடைக்கு ஓடினால் கடையே காணவில்லை...சரி கிடைத்ததை படிக்கலாம் என பார்த்தால்

      தொடர்ச்சி கீழே.....ம்ம்ம்ம்...புலம்பல் கீழே......

      Delete
  10. மாதம் 3 புக் எனபது யானைப்பசிக்கு சோளப்பொறி போலத்தான் இருக்கிறது. மாதம் குறைந்தது 5 புத்தகங்களாவது வந்தால்தான் எங்களைப்போன்றவர்களுக்கு திருபதியாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. கையில் புத்தகத்தை காணவில்லை...சுப்பாபாபா...எழுந்து தலைதொரிந்தால் விடிந்தேவிட்டது.
      கர்ணனுக்கு போன் ம்..உம்...கிர்ர்ர்...
      ஈரோடு விஜய் வேறு 'செங்குருதிச் சாலைகள்' புத்தகத்தில் ஈரோடு புத்தகத் திருவிழாவின்போது நண்பர்களுடன் நீங்கள் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவும்...
      நர...நர..உம்...கிர்ர்ர்....ஆண்டவா...


      புலம்பல் கீழே......

      Delete
  11. Replies
    1. //உதவுங்கள்நண்பர்களே//போட்டால்...சென்னை-மேச்சேரி-கோவை-நண்பர்கள் போன்கள்..பாண்டி-ஈரோடு-கமெண்ட்ஸ்....புக்கு வரலியே...
      நாளைக்கு காமிக்ஸ் நண்பர்களை சந்திக்க சென்னைக்கு பயணம் வேறு...எனக்கு வேணும்...எனக்கு வேணும்...சந்தா கட்டாத எனக்கு வேணும்...எஎஎஎஎஎ சொக்கா(கர்ணனா)இப்படி தனியா நீன்னு புலம்பவிட்டிடியே...நாஆஅ என்ன பண்ணுவேன்...ஐயோ....இருங்க யாரோ தூரத்துல புக்கு கொண்டுவர்றமாதிரி இருக்கு ஓடிபோய் பாத்துட்டு வந்துடறேன்....!!!

      Delete
  12. Replies
    1. நண்பர் டெக்ஸ் விஜயராகவன்-ஐ அவருடைய கடையில் சென்று சந்தித்தேன். உங்களுக்கு புக்ஸ் கிடைக்கிலையா சார்...? எடுத்தயுடனே நேராக விசயத்திற்கு வந்தார்.அவருக்கு புத்தகங்கள் குரியரில் நேற்றே வந்துவிட்டதாம்...பாருங்கள் என பார்சலை கையில் கொடுத்தார்.அவர் தயவில் 3 புத்தகங்களையும் தடவிப்பார்த்துவிட்டு கொடுத்தேன்.

      புலம்பல் கீழே......

      Delete
  13. புத்தகங்கள் கிடைத்து விட்டன. இப்பொழுது கமான்சே மட்டும் படித்துள்ளேன் .வண்ணங்கள் மற்றும் அச்சு அருமையாக வந்துள்ளது .வழக்கம் போல நமது ஆசிரியரின் டிரேட் மார்க் தமிழ் .....கமான்சேயின் அனைத்து கதைகளையும் கோர்வையாக படித்தால் இன்னும் ரசிக்கலாம் ...

    ReplyDelete
    Replies
    1. அதுக்குள்ளாற முடிச்சாச்சா ...................

      எனக்கு இன்னும் புக் வரல

      Delete
    2. மற்றொரு ஈரோடு-ல் சந்தித்த நண்பரிடமிருந்து போன்..."சேலம் ஜங்சன் போகும் வழியில் தேசன் புக் ஷாபில் கிடைக்கிறதாம்" என தகவல்களை தர டெக்ஸ் (?) இடம் விடைபொற்றுக்கொண்டு ஜிவ்வென்று கடைக்கு சென்றேன்...அங்கு மாலை மாலையாக (மலையாக அல்ல) காமிக்ஸ் புக்கு தொங்கிக்கொண்டு இருந்தன.
      அதைபார்த்ததும் அப்பாடா....

      புலம்பல் கீழே......

      Delete
  14. Replies
    1. அதைபார்த்ததும் அப்பாடா என ஒரு புன்னகை வர,கடைக்காரர் அதை கவனித்து அவர் புன்னகைத்து வரவேற்க...செப்டம்பர் மாத லயன்,முத்துகாமிக்ஸ் 2 செட் கொடுங்கள் என கேட்டேன்."தொங்கிக்கொண்டு இருப்பதில் பாருங்கள் சார்..." என ஸ்கேன் செய்ததில் அவைகள் முந்தையது.சார் இந்தமாதபுதுசு வேண்டும் என்றதும் ....

      புலம்பல் கீழே......

      Delete
  15. எடிட்டர் சார்,

    புத்தகங்கள் சரியான நேரத்தில் கிடைத்தன. மூன்று புத்தகங்களின் அட்டை படங்கள் அட்டகாசமாக உள்ளன.
    ஆனால்.. புத்தகங்களை மேலோட்டமாக புரட்டியதில் ஒரு சின்ன ஷாக்...

    செங்குருதி சாலைகள் - புத்தகம் ஏதோ பவுடர் டப்பாவுக்குள் முக்கி எடுத்தி அனுப்பிட்டிங்கபோல. புத்தகத்தை தொறந்தாலே பவுடரா (வாசனையற்ற) கொட்டுது! இது ஒன்னும் பிரச்சனையில்லை. ஒவ்வொரு பக்கத்தையும் துணியால் தொடைத்துவிட்டேன் (பிரிண்டிங் மிஷினில் பயன்படுத்தும் பவுடர் என்று நினைக்கிறேன்). இப்போ புத்தகம் சும்மா மின்னுது சார்! :)

    அதவிட பெரிய ஷாக் 38 லிருந்து 46 பக்கங்கள் வரை கானோம்! :( ஆனால் 54 வது பக்கங்களுக்கு பிறகு திரும்பவும் 47 லிருந்து 54 வரை பைண்டிங் செய்யப்பட்டுள்ளது! :(

    மற்ற இரண்டு புத்தகங்களும் முதல் பார்வையில் சூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. P.Karthikeyan : ஐயோ ; பைண்டிங்கில் பக்கங்களைத் தவுறுதலாய் சேர்த்து விட்டார்கள் போலும் ; இன்றைய கூரியரில் வேறொரு பிரதி அனுப்பிடுகிறோம் ! Sorry !!!

      Delete
    2. தங்கள் பதிலே போதும் சார். Sorry என்ற வார்த்தையெல்லாம் பயன்படுத்தி உங்கள் வாசக நண்பனை சங்கடத்தில் ஆழ்த்தவேண்டாமே சார். Please..

      Delete
    3. அடடா! இதுவே ஒரு கிராபிக் நாவலைப் படிச்ச எபெஃக்டு குடுக்குதே! ;)

      Delete
    4. இவருக்கு மட்டும் ''பவுடர்'' .............அப்ப எனக்கு ''சீப்பா''வது கிடைக்கும்னு நினைகிறேன் ..............



      Delete
    5. என்றதும் டைரி எடுத்து "உங்க செல் நெம்பர் சொல்லுங்க..." என கேட்டு பெயர்,நெம்பர் எழுதிக்கொண்டு யாருக்கோ போன்போட்டார்,(அடேங்கப்பா என்ன வேகம்...பச்சை காந்தி நோட்டை எடுத்துகொண்டு நிற்க,அவர் போனில் "இந்தமாதபுதுசு வேண்டும் மேடம்...சார் இல்லை" சரிங்க..சரிங்க...சரிங்க
      கூறிவிட்டு என்னிடம்"சார் நான் போன் செய்றேன் சார்..."என்றார்.
      நான் ஒன்றும் புரியாமல் "எதுக்கு சார்..?"என்று கேட்க....

      புலம்பல் கீழே......

      Delete
  16. இந்த மாதத்து இதழ்கள் கைகளில் அற்புதமாக ஜொலிக்கின்றன. பிரிப்பதற்கு மனமில்லாமல் பார்த்து மகிழ்வதில் சில நிமிடங்கள் கழிக்கவேண்டியிருக்கும்.

    இதை படைத்திட்ட நமது ஆசிரியருக்கும்,பதிப்பக குழுவுக்கும் நன்றிகள்!

    பிரிண்டிங், பைண்டிங், தாள்களின் தரம், அட்டைப்படங்கள் , டிசைனிங் awesome beauty.

    "தேவ ரகசியம் தேடலுக்கல்ல" அமர்க்களம். எனது ஓவிய ஆர்வத்தை கிளர்ந்தெழச்செய்கிறது. இது போன்ற philosophical(?) கதைக்கு மொழிபெயர்ப்பு மிக கவனமாக/சாதுர்யமாக கையாளப்படவேண்டியது அவசியம். ஆசிரியரின் வழக்காமான மொழிநடை இந்த கதைக்கு எவ்வளவு தூரம் பொருந்துகிறது என்பதை புத்தகம் படித்து முடித்தவுடன் பார்க்கலாம்.

    இது போன்ற oneshot கதைகளுக்கு கதைகளின் தன்மையை பொருத்து, வழக்கமான மொழிநடை தவிர்த்து , மொழிநடையில் மாற்றம் இருந்தால் நன்றாக இருக்குமா?




    ReplyDelete
    Replies
    1. "எதுக்கு சார்..?"என்று கேட்க "புக்ஸ் கேட்டிங்கல 2-3 நாள்ல கட்டாயம் வந்துரும்,வந்தவுடனே உங்கககககளுக்கு போன்ன்ன்ன்ன்ன் செய்றேன் சார்"என அவர் சொன்னது கிணற்றுக்குள்ளிருந்து கேட்பதுபோலிருந்தது..புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....காற்று இறங்கியது காட்டிக்கொள்ளாமல்....

      புலம்பல் கீழே......

      Delete
  17. Replies
    1. புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....காற்று இறங்கியது காட்டிக்கொள்ளாமல் "ஓகே ஓகே ஓகே சார்" "நான் yercaud சார் அவசியம் உங்க போன்ஐ எதிர்பார்த்துகிட்டு இருப்பேன் சார்..."என கூறி விட்டு அங்கிருந்து கிளம்பினேன்,வேறவழி.....
      இடையில் சந்தாகட்டுவது குழப்பத்தில் முடியும் இன்னுமொரு 4 மாசம்தான்...இப்படியே ஜாலிய(?)வந்து 2-3-நாள் பொறுத்து புக்ஸ் வாங்கிக்கங்க..எடிட்டர் முழு சந்தா அறிவிப்பார்,கட்டுங்க!அப்புறமென்ன விடுதேடி புக்ஸ் வரும்...என்ஜாய்ப்பான்னுங்க!!! -ன்னு....

      புலம்பல் கீழே......

      Delete
  18. புத்தகம் கிடைத்தது. உடன் பணிபுரியும் நண்பர்கள் ஆர்வமுடன் பார்த்தார்கள். இன்னும் காமிக்ஸ் என்றால் கார்ட்டூன் என்ற மனோபாவம் கொண்டவர்கள், தற்போதைய வளர்ச்சியினை விரிந்த விழிகளில் ஆச்சர்யத்துடன் பக்கத்தை புரட்டினார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்புறமென்ன விடுதேடி புக்ஸ் வரும்...என்ஜாய்ப்பான்னுங்க!!! -ன்னு நண்பர் சொன்ன அட்வைஸ் திரும்பதிரும்ப தேனாய் ஒலிக்க "சந்தா கட்டுங்க! சந்தோசமா இருங்க!!...சந்தா கட்டுங்க! சந்தோசமா இருங்க!!...சந்தா கட்டுங்க! சந்தோசமா இருங்க...!!" என பாடிக்கொண்டே வீடுதிரும்பினேன்......

      அப்புறம் நண்பர்களே 3 புக்ஸ் எப்படி போய்ட்டிருக்கு.....!!!

      Delete
  19. Replies
    1. 2nd. (நான் வெல்கம் பண்ணினதைச் சொன்னேன்)

      Delete
    2. 3nd ( புக்ஸ் 2-3-நாளில் எனக்கு கிடைக்கும் சொல்றேன்)

      Delete
  20. Replies
    1. புத்தகங்கள் தேடி என்தலையெல்லாம் ஒரே dest

      Delete
  21. ஆனந்தம்..! , மகிழ்ச்சி...!

    ReplyDelete
  22. காதலிக்க குதிரை இல்லை .....குதிரைகளை கொண்டு வரும் போராட்டம் அருமை ! அதிலும் குதிரைகளை அடக்க போராடும் கட்டங்கள் யாரையும் சிரிக்காமல் விடாது .....வழக்கம் போல ஸ்கூபி சார்கேண்டை ஓட்டும் இடங்கள் , மேலதிகாரிகள் தங்கள் சுய இலாபத்துக்காக ,சந்தோசங்களுக்காக அப்பாவி வீரர்களை பலியிட துடி[ப்பது என வழக்கமான திசையில் . வடக்கத்தியர்களின் ஏமாற்றும் குணமும், தெர்கத்தியர்கள் ஏமாறும் மனிதாபிமான காட்சிகளும் இங்கும் நிறைவாய் ! மீதி கதைகளை படித்தவுடன் !

    மீண்டும் ஒரு அற்புத கதை !

    ReplyDelete
    Replies
    1. காதலிக்க குதிரை இல்லை .............

      எனக்கு படிக்க புத்தகம் இல்லை ..............

      Delete
    2. ம.மந்திரி சொன்னதை நானும் முன்மொழிகிறேன்....

      Delete
  23. விஜயன் சார், 3 புத்தகம்களின் அட்டைபடம் அருமை, நேரில் பார்க்க மிகவும் நன்றாக உள்ளது. செ.கு.சா அட்டையின் கலர் காம்பிநேசன் அருமை, கா.கு.இ. பளீர் இன்று ஒரு கார்ட்டூன் கதைக்கு ஏற்ற வண்ணம் உள்ளது, அதிலும் பின்னால் உள்ள மஞ்சள் நிற வானம் மனதில் ஒரு மகிழ்ச்சியை கொண்டு வருகிறது! தே.ர.தே. அட்டைபடம் கசங்கி நசுங்கி வரையபட்டது போல் மிகவும் வித்தியாசமாக உள்ள இந்த ஓவியம் எனது மனதை கொள்ளை கொண்டது.

    இந்தமாத கதைகளின் அட்டைபடம் 3 "simply super"; இந்த 3 அட்டைபடம்களில் உள்ள ஒற்றுமை சிகப்பு நிறம்!

    கதைய எப்ப படிக்கமுடியும் என தெரியவில்லை :-(, படித்த பின் மற்றவை!

    இந்த பொக்கிஷம்களை தயார் செய்து எங்களுக்கு அனுப்பிய நமது அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி!

    விஜய் @ // அடடா! இதுவே ஒரு கிராபிக் நாவலைப் படிச்ச எபெஃக்டு குடுக்குதே! ;) //
    பார்த்து கடுதாசி வந்து விட போகுது!

    AHMEDBASHA TK @
    // புத்தகங்கள் கிடைத்து விட்டன. இப்பொழுது கமான்சே மட்டும் படித்துள்ளேன் //
    ஜி உங்கள பார்த்தா பொறாமையா இருக்கு! உங்களுக்கு மட்டும் எப்படி புத்தகம்களை உடனே படிக்க நேரம்&வாய்ப்புகள் அமைகிறதோ.

    ReplyDelete
    Replies
    1. Kannan Ravi @ கடந்த பதிவில் மிகவும் ரசித்த&சிரித்த சொலவடை.:-

      // கோழியடிச்சி கொழம்பு வெக்க தெரியாதவன்,
      கோட்டை மேல நின்னு கொடி புடிக்கவா போறான்.! //

      யாருகிட்டே இருந்து கத்துகிட்டிங்க, அப்ப அப்ப இதுபோல எடுத்து விடுங்க! நல்லா இருக்கு!

      Delete
    2. சொலவடையெல்லாம் சொள சொளன்னு நல்லாத்தானிருக்கு... ஆனா அது ஏங்க என்னைப் பார்த்துச் சொன்னாரு? கிர்ர்ர்... ;)

      Delete
    3. அதுக்கெல்லாம் ஒரு இது வேணும். ஜி....

      Delete
    4. Parani from Bangalore :-

      //யாருகிட்டே இருந்து கத்துகிட்டிங்க,//

      நானே சிந்திச்சேன்.
      (கோவைசரளா, வடிவேலுவிடம் சொல்வது போல் படிக்கவும்.)

      Vijay :-
      //... ஆனா அது ஏங்க என்னைப் பார்த்துச் சொன்னாரு? கிர்ர்ர்... ;)//

      அது மட்டுந்தாங்க எனக்கும் புரிய மாட்டேங்குது.!!!
      அவ்வ்வ்வ்வ்.!!!!

      Delete
    5. Vijay :-
      //... ஆனா அது ஏங்க என்னைப் பார்த்துச் சொன்னாரு? கிர்ர்ர்... ;)//

      ''பூனை''யடிச்சி கொழம்பு வெக்க தெரியாதவன்,
      பாதாளம் மேல நின்னு வேதாளம் புடிக்கவா போறான்.! ...........

      Delete
    6. ஹா ஹா! நன்றி மந்திரியாரே! ரவிகண்ணனின் சொலவடைக்கு சூப்பரா ஒரு பதில்வடை கொடுத்திட்டீங்க. உங்களுக்கு 'சீப்பு'டன் சோப்பு, ஷாம்பு, ஃபேர் அன் லவ்லி எல்லாம் கிடைக்கணும்னு வேண்டிக்கறேன். ;)

      Delete
    7. ஆனா பதில்வடையில பதம் தப்பாருக்கே.!!!

      Delete
    8. பூனை யாரை தானே கிண்டல் பண்ணினேன் ...............பய புள்ள நன்றி எல்லாம் சொல்லுறாரே ..........

      ரொம்ப நல்ல பூனை ............

      சொல வடையில் தப்பு சரி எல்லாம் ஒண்ணு தான் ...........

      ஒரு ப்ளோ வா போயிட்டு இருக்குல்ல ..............

      Delete
    9. இது பெங்களூர் பக்கத்துல இருந்து

      டிக்கட் பின்னாடி சில்லர
      பாக்கியை எழுதி வாங்கினவன்,....
      நிம்மதியா பயணம்
      செஞ்சதா சரித்தரமே இல்ல..

      Delete
    10. புக்ஸ் இல்லாமல் ப்ளாக்கில்
      கமெண்ட் மட்டுமே படிப்பவன்.....
      நிம்மதியா துங்கினதா
      சரித்திரமே இல்லை....

      இது சொந்த வடை

      Delete
    11. //இந்தமாத கதைகளின் அட்டைபடம் 3 "simply super"; இந்த 3 அட்டைபடம்களில் உள்ள ஒற்றுமை சிகப்பு நிறம்! //+1

      Delete
    12. //புக்ஸ் இல்லாமல் ப்ளாக்கில்
      கமெண்ட் மட்டுமே படிப்பவன்.....
      நிம்மதியா துங்கினதா
      சரித்திரமே இல்லை....

      இது சொந்த வடை//
      ha haa...super ji

      Delete
  24. யாரந்த மினி ஸ்பைடர் படித்து கொண்டு இருக்கிறேன் ..............

    என் பேரு ''சில்லி''...... இல்ல........... சில்வான்ஸ் என்று வில்லன் சொல்லும் இடம் சூப்பர் ............................


    வெயிட் வெயிட் ................

    கொரியர் பாய் வந்தாச்சு

    ReplyDelete
    Replies
    1. ஒரு வழியா "டீ" வந்துருச்சா.!!

      Delete
    2. இல்லன்னா யாரந்த மினி ஸ்பைடர் முழுக்கதையும் கேட்க வேண்டி இருக்கும்

      Delete
    3. //யாரந்த மினி ஸ்பைடர்// its a super story

      Delete
    4. +1
      ஒரு ஸ்பைடர் என்றாலே தூள் கிளப்பும்....இரண்டு ஸ்பைடர்கள் ஆடும் ஆட்டம் அடடா மீண்டும் வாய்க்குமா அது போன்ற காலங்கள் !

      Delete
    5. வெயிட் வெயிட்......
      இங்கே எதுவும் வரலை....

      ஆங்....இருட்டு வந்தாச்சு..!

      Delete
  25. Dear Vijayan sir, Sep'14 release - "Deva Raghasiyum Thedalukku-alla" is fantastic. its a perfect mix of brilliant story telling with awesome Drawing, Editing, coloring and story line. I would rate 5 out of 5 and certainly a top notch in 2014 so far. BTW, Blue Coats made us laughing and Comanche is ok too. Thanks a ton.

    ReplyDelete
    Replies
    1. ஆங்...english ளையும் ஒருதடவை இங்க புலம்புஓம்.....
      a b c d e f g h i j k l m n o p q r s t w x y z

      Delete
  26. ஹைய்யா! எனக்கும் புக்ஸ் வந்தாச்சு!அட்டைப் படங்கள் மனசை அள்ளுது. குறிப்பாக, (மற்ற இரு ஒல்லிபிச்சான்களோடு ஒப்பிட்டால்) குண்டான அந்த 'தே.இ.தேடலுக்கல்ல' அட்டைப்படம் ஏதோ செய்கிறது. படிக்க ஆரம்பிக்கப்போறேன்...

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...எனக்கு (சேலம் பகுதிக்கு) புத்தகங்கள் கிடைக்கவில்லை.
      நண்பர் சேலம் கர்ணன் கொடுத்தால்தான் உண்டு! நாளைக்கு கிடைக்க
      வாய்ப்புண்டு என்று என்னை சமாதானப்படுத்தியுள்ளார்..!நம்பிக்கையுடன்
      காத்திருக்கிறேன்...எடிட்டர்-உங்களின் கமெண்டுகள் இரவு என் தூக்கத்தைக்
      கெடுக்கபோகிறது என்பது உறுதியாகிவிட்டது....ம்ம்ம்ம்....

      Delete
    2. @ மாயாவி சிவா

      உங்களது ஏக்கத்தை இன்னும் அதிகரிக்க இதோ என்னால் முடிந்த ஒரு செய்தி: இந்த மாத 'செங்குருதிச் சாலைகள்' புத்தகத்தில் ஈரோடு புத்தகத் திருவிழாவின்போது நண்பர்களுடன் நீங்கள் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவும் (அளவில் சிறியதுதான் என்றாலும்) வெளியாகியுள்ளது. :)))

      Delete
    3. இப்போது கூட போன் செய்தேன்...நண்பர் சேலம் கர்ணன் போன் எடுக்கவில்லை...யாராவது உதவுங்கள் நண்பர்களே...!

      Delete
    4. ஏனிந்த அவஸ்தை? சந்தா கட்டினால் வீடு தேடி வந்து சேருமே நண்பரே?

      நீதி: சந்தா கட்டுங்க; சந்தோசமா இருங்க!

      Delete
    5. உண்மை..உண்மை...உண்மை

      Delete
    6. அதிலும் செங்குருதி சாலைகள் படிக்கும் போது.....
      நீதி நிலை நாட்டப்படுகிறது !

      Delete
    7. அதே செங்குருதி சாலைகளில் புத்தகம் இல்லாமல்
      நின்றுபாருங்கள்....-----------நடப்பட்டிருக்குப்பது தெரியும் !

      Delete
  27. மூணு புத்தகங்களையும் முறைச்சி பாத்துக்கிட்டு உக்காந்துருக்கேன்.(முணு மணி நேரமா.)
    எத மொதல்ல படிக்கிறது.?

    இங்கி பிங்கி பாங்கி
    ஃபாதர் ஹேட டாங்கி

    சரிசரி,.,

    தே..ர,.தே, ,,ஆரம்பிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இங்கு முறைச்சி பார்க்க எதுவுமில்லை.......

      Delete
  28. "தேவ இரகசியம் தேடலுக்கல்ல" இன்னொரு "The Davinci Code" movie-ஐ பார்த்த விளைவை ஏற்படுத்துகிறது. வாழ்கை மர்மங்களில் ஒன்றான இறை தூதரைப் பற்றிய ஆராய்ச்சிகள், வரும் எதிர்ப்புகள், இழப்புகள், .....

    சிறந்த கதையோட்டம் மற்றும் ஓவியங்கள்.

    கிராபிக் நாவலில் இது ஒரு மைல் கல்.

    இது போன்ற சிறந்த கதையினை மேலும் வெளியிடுங்கள் விஜயன் சார்.

    ReplyDelete
    Replies
    1. இப்போதைக்கு மீண்டும் "The Davinci Code" movie-ஐ பார்க்க போகிறேன்....
      வேறவழி புக்ஸ் இல்லையே....

      Delete
  29. LMS என்ற அதகளம் தொடர்கிறது.... என்ற caption (captain அல்ல) இதழ்களில் உபயோகப்படுத்தியிருக்கலாம்.

    3 இதழ்களும் முத்துக்களாக மின்னுகின்றன!. LMS பாதிப்பிலிருந்து தாங்கள் இன்னும் வெளியே வரவில்லையென்பது இந்த 3 இதழ்களிலும் கண்கூடாகத் தெரிகிறது!. LMS கைகளில் வாங்கியவுடன் ஏற்பட்ட அதே உற்சாகம், குதூகலம் இந்த முறையும் ஏற்பட்டது என்றால் மிகையில்லை!

    தும்பைப் பூ போன்ற வெண்மையில் ஆர்ட் பேப்பர் பளபளக்கிறது! (அட்லாண்டாவில் ஆக்ரோசம் - தாள்களும் இதே போலிருந்தன.)
    பிரிண்டிங் தரம், சித்திரங்கள், வர்ணம் எல்லாம் A1.
    முகர்ந்துப் பார்த்தல் மையின் வாசனை மயங்க வைக்கிறது.
    வருகின்றன என்ற விளம்பரங்கள் ஆவலைத் தூண்டுகின்றன.
    (டிடெக்டிவ் ஜெரோம்-க்கு மாற்றாக வரும் ஆக்சன் ஹீரோ யாரோ....?)
    அதிலும் 'மின்னும் மரணம்' விளம்பரம் அட்டகாசம்.

    கதை(கள்):
    தே. இர. தெ. - கிராபிக் நாவல், புதிய பாணியில் ஒரு நீண்ட சாகசம், பிரமிப்பான சித்திரங்களுடன், ஒரு அட்டகாசமான வாசிப்பாக அமையும் என்பது உறுதி! Enormous இதழ்.
    செ. சா. - வர்ண சேர்க்கையும், சித்திரங்களும் சூப்பர். ஓவியர், ஹெர்மன் ஹப்பன் கலக்கிடார்யா மனுஷன்.
    கா. கு. - வர்ணமும், சித்திரங்களும் சூப்பர்.

    LMS என்ற அதகளம் தொடர்கிறது....

    ReplyDelete
    Replies
    1. உங்க கமெண்ட் படித்தால் முத்து முத்துதாக வேற்கிறது...
      வேறவழி புக்ஸ் இல்லையே....

      Delete
  30. தேவ ரகசியம் தேடலுக்கல்ல.:-

    படித்துவிட்டேன்.,.
    வார்த்தை வரவில்லை,

    "கெவின். மெக் பிரைட்,"
    நீதான்யா ஹீரோ.!

    ஓவியம், கண்காட்சியில் வைக்க வேண்டியவை.!
    கடவுளே,

    நன்றி எடிட்டர் சார்.
    (இரண்டு மணி நேரமாக திறந்திருந்த வாய் இப்போதுதான் மூடியது.)

    மீண்டுமொரு பின்னூட்டத்தில் மீதம்.(விளக்கமாக.)

    மீண்டும் ஒரு நன்றி.,ஜூனியர் எடிட்டருக்கு.

    ReplyDelete
    Replies
    1. இரண்டு(????) மணி நேரமாக திறந்திருந்த வாய் இப்போதுதான் மூடியது

      Delete
    2. எனக்கு செங்குருதி சாலைகள் வாசிக்கவே அவ்வளவு நேரம் தேவை பட்டது .....இதற்க்கு ?

      Delete
    3. //படித்துவிட்டேன்.,.
      வார்த்தை வரவில்லை///

      ஹலோ...ஹலோ...
      இங்க புக்கே வரலை.

      Delete
  31. தேவரகசியம் தேடலுக்கல்ல இது உங்கள் தேடலில் கிடைத்த பொக்கிஷம். இதை பதிப்பித்ததற்காக உங்களுக்கு என் வந்தனங்கள். 160 பக்கங்களையும் தொடர்ச்சியாக படித்து ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. முன்று நாட்களாக தொடர்ச்சியாக தேடுறேன்....
      வெளிய புக்கே கிடைக்கலை....

      Delete
    2. நம்பிக்கைதானே வாழ்க்கை நாள் இனியதாக புலரட்டும்

      Delete
  32. டியர் எடிட்டர்,

    கிராபிக் நாவல் படித்து விட்டேன்!

    சராசரி காமிக்ஸ் கதைகளை விட நன்றாய் இருந்தது. LMS உடன் இதனை வெளியிட்டிருக்கலாம். பொருத்தமாய் இருந்திருக்கும். கதைக் களம் சில ஆங்கில நாவல்களில் கையாளப்பட்ட ஒரு தீம் தான் எனும்போதிலும் அதை சொல்லிய விதம் நன்று. ஓவியங்கள் மிகவும் கவர்ந்தது.

    முழு நேர மசாலா கதைகளால் அறியப்பட்ட லயன் brand-ல் இக்கதை வெளிவந்ததுள்ளது சற்றே வியப்பான விஷயம் - சந்தொஷமானதும் !

    A different reading - புதிய தலைமுறையிடம் மேலும் வரவேற்பிருக்கும் என்று தோன்றுகிறது - விலை தான் கொஞ்சம் அதிகம் - from their spending perspective.

    முக்கியமாக இந்த கதையைப் பிரித்து வெளியிடாமல் சேர்த்து வெளியிட்டது வரவேற்கத்தக்கது.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு புக்ஸ் கிடைத்தால் நானும் வரவேற்ப்பேன்

      Delete
  33. தேவ இரகசியம் .......
    ஒரு அருமையான படைப்பு என்பது ஒரு புறம் என்றால் கதையின் ஜீவன் கெடாமல் கதாசிரியரின் எண்ணவோட்டத்தை அப்படியே கிறகித்து மொழிபெயர்ப்பு /தமிழ் என்று அதகளப்படுத்தியிருக்கும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் ....
    முக்கியமான விஷயம்...
    நண்பர் ராகவன் சொன்னது போல இரண்டு மூன்று பாகங்களாக பிரித்து ஒன்று மறந்த பின் தான் மற்றொன்று என்ற பாலிஸியில் வெளியிட்டிருந்தீர்களேயானால் இந்த அனுபவம் கிடைத்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. /அனுபவம் கிடைத்திருக்காது /என வாசிக்கவும்

      Delete
    2. என்ன அனுபவமோ...தெரியலை...

      என்ன... எனக்கு புக்ஸ் கிடைக்கலை

      Delete
  34. கா.கு.இ
    ------------
    பறக்கும் பலூன் கதை போல அடுத்து வந்த கப்பல் கதை இல்லை. எனவே பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இந்தக் கதையைப் படிக்கத்துவங்கினேன். அற்புதம். அருமையான கதை. தேவையான அளவு சிரிப்பு, கருத்து என ஒரு அருமையான கலவையான கதை.

    கதை - 90
    ப்ரிண்டிங் -85 (சில பக்கங்கள் மிக டார்க் மற்றும் சில பக்கங்கள் மிதமான வர்ணத்திற்காக)
    அனுபவம் - 100

    செ.கு.சா
    --------------
    அருமையான ஓவியங்கள். போன பகுதி கதை போல அல்லாமல், அதிகமான கேரக்டர்கள் ஒரு சுவாரசியம். சற்றே ஆழமான கதையாக, எதார்த்தமான கதையாக எனக்கு தோன்றியது. வழமைபோல டாப் ஆங்கிள், 1/2 பக்க சித்திரங்கள் மிக.மிக.அருமை

    கதை - 85
    ப்ரிண்டிங் - 80 (சில பக்கங்கள் ஷார்ப்பாக இல்லை)
    அனுபவம் - 90

    தே.ர.தே
    -------------
    ஏற்கனவே ஆங்கிலத்தில் படித்திருந்தாலும் மிகவும் எதிர்பார்த்த கதை.
    கதை - 95
    ப்ரிண்டிங் - 100
    அனுபவம் - 70 (எனது புத்தகத்தில் 115 முதல் 132 வரையிலான பக்கங்கள் கசங்கிய தாளில் ப்ரிண்ட் ஆகி மொத்த புத்தகத்தின் வாசிப்பு அனுபவத்தை கெடுத்துவிட்டது. இதற்கு முன் லக்கி லூக் கதையில் 4 பக்கங்கள் கிழிந்து வந்தன.
    டியர் எடிட்டர் - தயவு செய்து பிரிண்டிங்கில் கசங்கிய தாளை தயவுசெய்து கடாசி விடவும். நீங்கள் பலமுறை சொன்னது போல, பணியாளர்கள் பயந்து இதனை பைண்டிங்கில் சேர்த்துவிடுகிறார்கள் என நினைக்கிறேன். அவர்களின் பயத்தினை போக்கி இது போல நடக்காமல் பார்த்துக்கொள்ளவும் :-).

    ---------------

    மொத்தத்தில் மூன்று அற்புதமான புத்தகங்கள். HATS OFF !!!!!!

    ReplyDelete
    Replies
    1. கையில்- 500
      புக்ஸ் -270
      மீதி - 230
      மீதியும் புக்ஸ்-ம் தர கர்ணன் எங்கஇருக்காருன்னு
      தெரியலையே !!!!

      Delete
  35. தீபாவளி ஸ்பெஷல்ஆக கார்சனனின் கடந்த காலம் வருவது மகிழ்ச்சியான சேதி !

    ReplyDelete
    Replies
    1. புக்ஸ் கைக்கு வராதவரை எனக்கு எல்லாம்
      சோக சேதி !

      Delete
  36. செங்குருதிச் சாலைகள் என்னவொரு அற்புதமான படைப்பு ! வண்ணங்களை வீரியமாய் காட்ட , அழகாய் வெளி படுத்த ஹெர்மன் போல ஒருவர் பிறந்து வர வேண்டும் என எங்க செய்யும் படைப்பு ! வில்லனை தேடி டுஸ்ட் குதிரையுடன் தனியாக புலம்பி திரிவதும் , அடி பட்ட/கேவல பட்ட அந்த சர்கஸ் கலைஞன் புலம்பல்களும்/வெஞ்சினமும் , என உண்மை மாந்தர்களின் யதார்த்த கோப தாபங்களை கொண்டு வசனங்கள் பின்ன பட்டிருப்பது அற்புதம் !
    ஆசிரியரின் அற்புதமான வரிகளுடன் , ஓவியங்களுடன் , அற்புதமான திட்டங்களுடன் செயல் படும் குதிரை வீரன் டஸ்ட் மூலம் இந்த கதை இது வரை வந்த கமாஞ்சே கதைகளிலே முதலிடம் பிடிக்கிறது எனது மனதில் விறு விருப்பால் !

    ReplyDelete
    Replies
    1. புத்தகங்கள் இல்லாமல் நான் குறு குருப்பில் !

      Delete
    2. மாயாவி சாப்,
      நீங்க பேசாம சிவகாசிக்கே ஒரு நடை போய்ட்டு வந்துருங்களேன்.
      இன்னொரு முக்கியமான நியூஸ்.:-

      போட்டோவுல பளிச்சின்னு இருக்கீங்க,
      உங்க தோள்மேல கைபோட்டு போஸ் கொடுத்திருக்கும் நண்பர் யார் தெரியுமா.?
      இரண்டு நாட்களாக நீங்கள் தேடியலையும் சாட்சாத் கர்ணன் அவர்களேதான்.
      ஹி ஹி ஹி

      Delete
  37. 'தேவ ரகசியம் தேடலுக்கல்ல' படித்துவிட்டேன்.

    * கால யந்திரத்தில் ஏறி 60 வருடங்களுக்கு முந்தைய உலகின் சில பகுதிகளுக்கு ஒரு' பேக்கேஜ் ட்ரிப்' போய் வந்ததைப் போன்ற உணர்வு!! இதற்கு முக்கிய காரணம் - அசாத்தியமான ஓவியங்கள்! ஓவியருக்கு விருது கிடைத்தது நியாயமானதே என்பது பக்கங்களைப் புரட்டும்போதே புரிகிறது.

    * 'டாவின்சி கோட்' படத்தை மூன்று முறை தியேட்டரில் பார்த்து (ஒவ்வொரு முறையும்) பிரம்மித்திருக்கிறேன். அந்தப் படம் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தின் அளவு இப்புத்தகத்தில் படிக்கும்போது கிடைக்கவில்லை எனினும் அதன் ஒரு பகுதியாவது நிச்சயம் கிடைத்தது. இக்கதையின் கதாசிரியர் நினைத்திருந்தால் இன்னும் பரபரப்பாகக் கொண்டு சென்றிருக்க முடியும்தான்; ஆனால் 'அதிக பிரச்சினைகளுக்கு ஆளாகி அவ௭ஸ்த்தைப்பட வேண்டாம்' நினைத்ததாலோ என்னவோ கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

    * மூன்றாவது பாகம் அடிதடி, கடத்தல், கொலை என்று வழக்கமான ஹாலிவுட் படபாணியில் பயணித்திருப்பதால் இந்த கிராபிக் நாவலிலும் தூக்கலான மசாலா நெடி!

    * இறந்துபோன பெரியவரை களிம்பு பூசி மந்திரித்து உயிர்த்தெழ வைப்பது, பிரிந்து செல்லும் உயிரைத் தூய ஆத்மாக்களைக் கொண்டுள்ளவர்கள் மட்டும் காணமுடிவது - போன்ற 'காதுல பூ' சமாச்சாரங்களும் கொஞ்சூசூண்டு உண்டென்றாலும் அவையும் கதை பயணிக்கும் பாதையில் இரசிக்கும்படியே இருக்கிறது.

    * இதில் வரும் துப்பறிவாளர் கெவின் எத்தனை முறை மற்றவர்களிடம் அடிவாங்கி மயங்கிச் சரிகிறார்? - என தாராளமாக ஒரு போட்டியே வைக்கலாம் தான்! ஆனாலும் 'அரக்கன் ஆர்டினி'யில் நம்ம ஸ்பைடர் வாங்கிக்கட்டிக்கொண்டதை விட. எண்ணிக்கையில் குறைச்சல் என்றே நினைக்கிறேன். ;)

    * மூன்று பாகங்களையும் தனித்தனி புத்தகமாக வெளியிட்டிருந்தால் நிச்சயம் இந்த வாசிப்பு அனுபவம் கிடைத்திருக்காது. எடிட்டருக்கு நன்றிகள்!

    ReplyDelete
    Replies
    1. கதை முடிந்த பிறகு எடிட்டரின் 'பின் குறிப்பு'ம் அதில் கொடுக்கப்பட்ட வெப்சைட் லிங்குகளும் வரவேற்கப்படவேண்டிய அம்சம்! (ஏனோ கார்த்திக் சோமலிங்காவின் ஞாபகம் வந்ததைத் தவிர்க்க முடியவில்லை)

      Delete
    2. ஏனோ இங்கு எனக்கு புத்தகங்கள் கிடைக்கலை என்று
      சொல்வதை தவிர்க்க முடியவில்லை

      Delete
  38. விஜயன் சார், LMS- ச.அ.ச கதையை முழுமையாக படிக்கவில்லை, படித்த சில (7௦) பக்கம்களில்
    1. வண்ணத்தில் டெக்ஸ் & கோ அருமை, அச்சு தரம் மிகவும் நன்றாக உள்ளது.
    2.. மொழிபெயர்ப்பு மனதை நெருடியது, இதற்கு முன் வந்த டெக்ஸ் கதைகளுடன் ஒப்பிடும் போது இதன் மொழிபெயர்ப்பு அந்த அளவு என்னை கவரவில்லை.
    அ. ஒரு இடத்தில் டெக்ஸ் மகன் கார்சனை பார்த்து பேசும் வசனம், ஏதோ டெக்ஸ் பேசுவது போல் இருந்தது; அதாவது வழக்கமாக அன்கிள் அல்லது மரியாதையை கலந்த கிண்டலுடன் இருக்கும். இந்த முறை அது மிஸ்ஸிங்.
    ஆ. டெக்ஸ் கார்சனிடம் சில இடம்களில் பேசுவது எதிரியை பார்த்து பேசுவது போல் உள்ளது
    2. சில இடம்களில் பில்லின் பெயர் பால் என உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதம் கா.கு படித்த 3௦ பக்கம்கள் வரை:
      சிப்பாய்களுக்கு வந்த சம்பள பணத்தின் ஒரு பகுதியை கொண்டு குதிரை வாங்க முடிவு எடுக்கும் இடம், ஒரு உண்மை நிகழ்வை அருமையாக வெளிப்படுத்தி இருந்தது. பணத்தை கொண்டு குதிரை வாங்கி விட்டால் சிப்பாய்களுக்கு சம்பளம் எப்படி கொடுப்பது என்னும் போது, சில நாட்களில் நாம் போருக்கு செல்ல போகிறோம், எப்படியும் 4 நான்கில் ஒரு பகுதி சிப்பாய்கள் போரில் இறந்து விடுவார்கள் அதனை வைத்து சமாளித்து விடுவோம் என மேல் அதிகாரி சொல்லவது, அதிகாரத்தில் உள்ள பெரிய மனிதர்கள் தனக்கு கீழ் உள்ளவர்களை பற்றி கவலை படுவதில்லை என்பதை முகத்தில் அறைந்து சொன்னது போல் இருந்தது.

      Delete
    2. //எப்படியும் 4 நான்கில் ஒரு பகுதி சிப்பாய்கள் போரில் இறந்து விடுவார்கள் அதனை வைத்து சமாளித்து விடுவோம் என மேல் அதிகாரி சொல்லவது, அதிகாரத்தில் உள்ள பெரிய மனிதர்கள் தனக்கு கீழ் உள்ளவர்களை பற்றி கவலை படுவதில்லை என்பதை முகத்தில் அறைந்து சொன்னது போல் இருந்தது.//

      அச்சா பாய் !

      Delete
    3. //இடம்களில் பில்லின் பெயர் பால் என உள்ளது//
      இடம்களில் அல்ல இடங்களில் என்பதே சரி....
      பில்லி-பால் பெயர்களை சரிபார்க்க புக்ஸ் இல்லையே....

      Delete
  39. சிறு குழப்பம்:

    'காதலிக்க குதிரையில்லை'யின் முதல் பக்கத்தில் 'மின்னும் மரணம்' விளம்பரம் 'தமிழ் காமிக்ஸ் உலகின் முதல் Collector's Edition' என்ற Captionஉடன் வெளியாகியுள்ளது. ஆனால், முதல் Collector's edition என்பது 'ரத்தப்படலம் தொகுப்பு' தானே?!!

    ReplyDelete
    Replies
    1. தம்பி விஜய் அவர்களே அந்த குழப்பமே எனக்கு இல்லை ! இனிதானே இரத்தபடலம் Collector's edition வர போகிறது !


      அதனை கொஞ்சம் விளக்கமாகவே சொல்லி விடுகிறேனே ....அதாவது மின்னும் மரணம் இறுதி பாகம் இதுவரை வரவில்லை என்பதனை கருத்தில் கொண்டு இந்த புத்தகம் முழு தொகுப்பாக வருகிறது . அது போலவே இரத்த படலமும் ஒரு இறுதி பாகம் புலன் விசாரணை வரவில்லை நினைவிருக்குமே ,,,,அதனை இணைத்து முழு Collector's edition விட்டால்தானே ஆசிரியர் மனதில் நிம்மதி பூவும் , நமது முகத்தில் மலர்ச்சி பூவும் பூக்கும் ! இரண்டாம் Collector's edition இரத்தபடலம்தான் என்று ஆசிரியர் இதை எல்லாம் நேரிடையாக விளக்குவாராக்கும் .....நாம்தான் புரிந்து கொள்ளவேண்டும் நண்பரே !

      ஏனுங்க நான் சொல்றது ...சரிதானே சார் ?

      Delete
    2. :D

      எய்யப்படும் ஒவ்வொரு அம்பையும் உங்களுக்கு சாதகமா திருப்பிவிட்டுக்கறீங்களே... எப்படிங்க ஸ்டீல் இப்படியெல்லாம்!! என்னவோ போங்க!! :))

      Delete
    3. ஹலோ...ஹலோ..இங்க கர்ணன் என்ன ஆனார்கிறதே
      பெரிய குழப்பமா இருக்கு....

      Delete
    4. // இனிதானே இரத்தபடலம் Collector's edition வர போகிறது ! // +1 true true! in world class color print!

      Delete
  40. ஆசிரியர் அவர்களுக்கு தேவ ரகசியம் தேடலுக்கு அல்ல அற்புதமான ஓவியங்கள் ,கை தேர்ந்த மொழிநடை மற்றும் அசராடிகும் கதையுடன் வந்துள்ளது ஜூனியர் ருக்கு சுற்றி போடுங்கள் இந்த கதையை தேர்ந்து எடுததெற்கு வாழ்த்துக்கள் இது பிளாக் பஸ்ட்டர் OF 2014.2015 இலும் இது போன்ற கதைகளை எதிர் பார்க்கிறோம் ஏமாற்றி விடாதிர்கள்

    ReplyDelete
    Replies
    1. புத்தகங்கள் கைக்கு கிடைத்ததும் நான் சுற்றி போடுகிறேன்

      Delete
    2. //2015 இலும் இது போன்ற கதைகளை எதிர் பார்க்கிறோம் ஏமாற்றி விடாதிர்கள் //
      +1 do consider Edit! expectation level raising !

      Delete
  41. காதலிக்க குதிரையில்லை...

    ஸ்கூபி-ரூபி கூட்டணி இதிலும் வயிறுவலிக்கச் சிரிக்க வைக்கிறார்கள். இதற்கு முன் வந்த மற்ற இரு கதைகளைப் போல் அல்லாமல், இதில் இரத்தம் தெறிக்கும் காட்சிகள் ரொம்பவே குறைவு என்பதால் (இக்கதையை மட்டும்) 'Black humour' வகையறாவில் சேர்க்காமல் விதிவிலக்குக் கொடுக்கலாம் என்பது என் கருத்து!

    'சி.சி.வயதில்' - 87களில் முத்துகாமிக்ஸுக்கு கதை கிடைக்காமல் அல்லாடிய நாட்களைப்பற்றியும், லயன்-50வது இதழாக டெக்ஸின் 'டிராகன் நகரம்' உருவான கதையைப்பற்றியும் நினைவுகூர்ந்து நம்மையும் 'தாய விளையாட்டு' நாட்களை நினைவுபடுத்துகிறார்.

    மற்றொரு நிறைவான இதழ்!

    ReplyDelete
    Replies
    1. விஜயன் சார், சி.சி.வயதில் 'டிராகன் நகரம்' கதை பற்றி எழுதி விட்டு அதை எப்போது மறுபதிப்பு செய்ய போறிங்கன்னு சொல்லாம விட்டது சரி இல்லை! முடிந்தால் அடுத்த வருடம் டிராகன் நகரம், பவள சிலை மர்மம், திகில் நகரில் டெக்ஸ், இன்னும் சில கதைகளை இணைத்து ஒரு கருப்பு வெள்ளை கலெக்டர் எடிசன் ஆக போட்டால் (இன்னமும் இந்த கதையை படிக்காத) நாங்கள் படித்து சந்தோஷபடுவோம்.

      Delete
    2. // அடுத்த வருடம் டிராகன் நகரம், பவள சிலை மர்மம், திகில் நகரில் டெக்ஸ், இன்னும் சில கதைகளை இணைத்து ஒரு கருப்பு வெள்ளை கலெக்டர் எடிசன் ஆக போட்டால் (இன்னமும் இந்த கதையை படிக்காத) நாங்கள் படித்து சந்தோஷபடுவோம்.//

      ஆமாஞ்சாமி.(+1)

      Delete
    3. எனக்கும் இந்த இதழ் மறக்கவே முடியாத இதழ்...
      சி.சி.வயதில்' - 87களில் முத்துகாமிக்ஸுக்கு கதை கிடைக்காமல்
      அல்லாடிய நாட்களை போலவே மீண்டும் இன்று அல்லாடினேன்..

      Delete
    4. //முடிந்தால் அடுத்த வருடம் டிராகன் நகரம், பவள சிலை மர்மம், திகில் நகரில் டெக்ஸ், இன்னும் சில கதைகளை இணைத்து ஒரு கருப்பு வெள்ளை கலெக்டர் எடிசன் ஆக போட்டால் (இன்னமும் இந்த கதையை படிக்காத) நாங்கள் படித்து சந்தோஷபடுவோம்//
      +1 million

      Delete
    5. //முடிந்தால் அடுத்த வருடம் டிராகன் நகரம், பவள சிலை மர்மம், திகில் நகரில் டெக்ஸ், இன்னும் சில கதைகளை இணைத்து ஒரு கருப்பு வெள்ளை கலெக்டர் எடிசன் ஆக போட்டால் (இன்னமும் இந்த கதையை படிக்காத) நாங்கள் படித்து சந்தோஷபடுவோம்//
      +1111111111111111111111

      Delete
  42. @ மாயாவி சிவா

    ஹாஹாஹா! நான் சிரிச்சாலும் உண்மையாகவே 'தேடும் படலம்' ஒரு சோகமான கிராபிக் நாவல்தான்! நாளை அல்லது நாளை மறுநாள்(தான்) நான் சேலம் வருவேன். முடிந்தால் சந்திப்போம்!

    ReplyDelete
    Replies
    1. அட்ராசக்க..அட்ராசக்க...ஒருவழியா
      உங்க வாயாலே வர்றேன்னு
      சொள்ளவெச்சுடேன்....

      ஏற்கனவே வங்கசொன்ன புக்ஸ்
      கொண்டுவ்ரமறந்துரதிங்க....

      Delete
  43. இங்க இருக்கிற கமென்ட்ஸை எல்லாம் பாத்தா, புக்கு இன்னும் கிடைக்காதவங்க எவ்ளோ கடுப்பாவாங்கனு புரிஞ்சிக்கமுடியுது..

    என் பங்குக்கு:

    கிராபிக் நாவல்களிலேயே தே.ர.தே ஒரு மாஸ்டர் பீஸ்! (நான் இன்னும் படிக்கவில்லை. ஹிஹி! கிளான்ஸ் பாத்த எஃபக்ட்! ஓவியம் ஒண்ணு ஒண்ணையும் கண்ணுல ஒத்திக்கலாம்)

    அப்பால,

    கிங் ஸ்பெஷல்னா யாரோ டெக்ஸுனு புலம்பிகிட்டு இருந்தாமாதிரி தெரிஞ்சிது. ஆனா விளம்பரத்துல அப்படி இல்லையே.. விளம்பரத்துல இருந்த கதை என்னான்னு யாருக்கும் அகுடியா இருக்கா?

    அப்பால,

    வழக்கமான டிஸைனாக இல்லாமல், எளிமையாக, வலிமையாக, வித்தியாசமாக இருந்த மின்னும் மரணம் விளம்பரம் ஸ்டன்னிங். பிரமிப்பு. அந்த பேஜையே அஞ்சி நிமிஷம் வைச்ச கண்ணு எடுக்காமல் ரசித்தேன். அந்த விளம்பரமே மிச்சம் 300 சொச்ச முன்பதிவை கொண்டுவந்துடும். நோ டவுட்!

    அப்பால,

    கா.க.கா இம்மாம் சீக்கிரமே அடுத்த மாசமே வரப்போவது செம மகிழ்ச்சி. டைலன் டாக் இரண்டு விளம்பரங்களில்.. தொடர்ந்து வரவிருப்பதாக தெரிகிறது. அதுவும் மகிழ்ச்சி. லார்கோ கொஞ்சம் கேப் விழுந்துடுச்சு. தொடர்ந்து ரெண்டு குட்டிகுண்டு புக் போட்டு தலையை ஃபார்முக்கு கொண்டுவரவும். வேய்ன் ஷெல்டனைக் காணோம், விஜயன் சார்.. கவனம்!

    அப்பால,

    இரவே இருளே கொல்லாதே.. ஒண்ணு விளம்பரம் போடாதீங்க, இல்லைனா சீக்கிரம் புக்கைத் தாங்க. ஓவியம்லாம் செமை மாடர்னா, போட்டோ மாதிரி, ஹாலிவுட் த்ரில்லர் பட போஸ்டர் மாதிரி இருக்கு. காத்திருக்க முடியல!

    ReplyDelete
    Replies
    1. என் பங்குக்கு ஹாலிவுட் த்ரில்லர் பட ரேஞ்சிக்கு தேடியும்
      புத்தங்களும் கர்ணனையும் கண்டுபிடிக்க முடியவில்லையே...!

      Delete
    2. என் பங்குக்கு ஹாலிவுட் த்ரில்லர் பட ரேஞ்சிக்கு தேடியும்
      புத்தங்களும் கர்ணனையும் கண்டுபிடிக்க முடியவில்லையே...!

      Delete
  44. தேவ இரகசியம் தேடலுக்கல்ல !

    மூன்று பாகமும் ஒரே புத்தகமாக - கலெக்டர்ஸ் ஸ்பெஷல் இதழாக வெளிவந்துள்ள சாதனைக்காகவும் ; அற்புதமான, அழகான ஓவியங்களை காமிக்ஸ் வடிவில் நமக்கு ரசிக்கத் தந்த, அகண்ட காமிக்ஸ் தேடலுக்கும் ; கைக்கு அடக்கமான குண்டு புக்கிற்கும் ; படிக்க படிக்க கதை சட்டென முடிந்து விடாமல் பக்கங்கள் நகர்ந்து கொண்டே இருப்பதற்கும் ; மறுமுறை படிக்கத் தூண்டும் கதைக் களத்திற்கும் - முதலில் என் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் ! இந்த கிராபிக் நாவலை, ஒவ்வொரு பாகமாக வெளியிடத் தீர்மானித்து இருந்திருந்தால், அடுத்த பாகத்தை வெளியிடும் அளவிற்கு நம் காமிக்ஸ் வாசகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்குமா என்பது சந்தேகமே !

    மழையோடு சேரும் மண்வாசம் நம்மை மெய்மறக்க செய்வதைப் போல் ; காற்றோடு கலக்கும் பூ வாசம் நம்மை பரவசமாகுவதைப் போல் ; சாயும் பொழுதோடு தேயும் நிலவொளி நம்மில் ஏகாந்தத்தை விதைப்பது போல் - அற்புதமான ஓவியங்கள் இயற்கையோடு கைகோர்க்கும் போது அங்கே காமிக்ஸ், பொக்கிஷமாகிறது ! அதுவே கதைக் களத்தோடு ஒன்றிவிடும் போது காமிக்ஸ் ராஜ்ஜியம் நமக்கு சொந்தமாகிறது !

    ReplyDelete
  45. ---க்கும்,-----க்கும்-----க்கும்-----க்கும் நானும் பாராட்ட....
    -----போல-----போல-----போல-----போல நானும்
    கைகோர்க்க...
    சொந்தமாகிக்க.....
    புத்தகங்கள் கைக்கு வரலையே...!

    ReplyDelete
  46. நண்பர்களே .............
    ஏறத்தாழ ...........
    கருப்பு வெள்ளை நாயகர்களை .........
    கேட்டு கேட்டு ..........


    ஸ்ஸ்ஸ்ஸ் முடியல ..........

    எனவே விடை பெறுகிறேன் .............

    அனைத்து நண்பர்களுக்கும்................. அன்பும் நன்றியும்

    ReplyDelete
  47. காமிக்ஸ் உலக ரசிக பெருமக்களே,
    கனவான்களே,
    பிரங்கிகளே,
    மேலே கமெண்ட் போட்ட எல்லோரிடமும்
    ஒருவர் விடாமல் சோகம் பரிமறிவிட்டேன்.
    விடுபட்ட நண்பர்கள் தெரிவித்தால்
    புலம்பல் தொடர வசதியாக இருக்கும்.....

    ReplyDelete
    Replies
    1. we understand your feeling Sivakumar, but its overflowing now !? :)

      Delete
    2. Same here brother,in srilanka we are getting book after 1 month,so don't worry

      Delete
  48. யாராவது மாயாவி கையில இருக்குற Tabஅ பிடுங்கிட்டு வாங்களேன்..!
    என்னோட புக்க. வந்து வாங்கிக்கோங்க!
    உங்களுக்கு கெடச்சதும் திருப்பி குடுங்க போதும்.
    வேற என்ன செய்ய முடியும்.!?

    ReplyDelete
    Replies
    1. மாயாவி சிவா.!:-
      வேடிக்கை அல்ல நண்பரே.!
      உங்களுக்கு இயலும் என்றால் வாங்கிக்கொள்ளுங்கள்.
      உங்கள் பிரதி கைக்கு கிடைத்த பிறகு திருப்பித்தந்தால் போதும்..
      உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது நண்பரே.!!

      Delete
    2. இந்த பதிலை தான் காலையில்
      இருந்து போராடுகிறேன்...
      நன்றிகள் நண்பரே..!

      Delete
  49. தேவ இரகசியம் தேடலுக்கல்ல !

    மூன்று பாகமும் ஒரே புத்தகமாக - கலெக்டர்ஸ் ஸ்பெஷல் இதழாக வெளிவந்துள்ள சாதனைக்காகவும் ; அற்புதமான, அழகான ஓவியங்களை காமிக்ஸ் வடிவில் நமக்கு ரசிக்கத் தந்த, அகண்ட காமிக்ஸ் தேடலுக்கும் ; கைக்கு அடக்கமான குண்டு புக்கிற்கும் ; படிக்க படிக்க கதை சட்டென முடிந்து விடாமல் பக்கங்கள் நகர்ந்து கொண்டே இருப்பதற்கும் ; மறுமுறை படிக்கத் தூண்டும் கதைக் களத்திற்கும் - முதலில் என் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் ! இந்த கிராபிக் நாவலை, ஒவ்வொரு பாகமாக வெளியிடத் தீர்மானித்து இருந்திருந்தால், அடுத்த பாகத்தை வெளியிடும் அளவிற்கு நம் காமிக்ஸ் வாசகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்குமா என்பது சந்தேகமே !

    மழையோடு சேரும் மண்வாசம் நம்மை மெய்மறக்க செய்வதைப் போல் ; காற்றோடு கலக்கும் பூ வாசம் நம்மை பரவசமாகுவதைப் போல் ; சாயும் பொழுதோடு தேயும் நிலவொளி நம்மில் ஏகாந்தத்தை விதைப்பது போல் - அற்புதமான ஓவியங்கள் இயற்கையோடு கைகோர்க்கும் போது அங்கே காமிக்ஸ், பொக்கிஷமாகிறது ! அதுவே கதைக் களத்தோடு ஒன்றிவிடும் போது காமிக்ஸ் ராஜ்ஜியம் நமக்கு சொந்தமாகிறது !

    உங்கள் தேடல் தொடரட்டும்,
    எங்கள் மனம் குளிரட்டும்.

    வாழ்த்த வயதுவராதாதல்,??
    வணங்குகிறேன்.

    Thanks to Editor and Junior Editor

    ReplyDelete
  50. சிவா சாரை போல புலம்பும் நண்பர்களே : சந்தா கட்டவும் , சந்தோஷமாக படிக்கவும்

    ReplyDelete
  51. நண்பரே சிவா, முகூர்த்தம் சீசன் என்பதால் 16ம் தேதி வரை என்னால் படிக்க இயலாது. நாளைக்கு கடைக்கு வாங்க . என் பிரதிகளை எடுத்து போங்கள் சார். தேசன் போன் வந்த பிறகு எனக்கு ஒரு செட் வாங்கி தாருங்கள். இப்படி புலம்புவீர் என காலையில் தெரிந்து இருந்தால் அப்போதே தந்து இருப்பேன் உங்கள் கையில் !

    ReplyDelete
    Replies
    1. நாளைக்கு சென்னை சென்று வந்த கையோடு
      கடைக்கு வந்து ரகசியமாக ஸாரி அவசியமாக
      பெற்றுகொள்கிறேன்....நண்பரே...!!!

      Delete
  52. Replies
    1. ச்சோ! ஒரு டெஸ்ட் கமெண்ட்டு கூட போட விடமாட்டேன்றாங்களே...!!

      இதுக்கு எங்க ஊரில ஒரு சொலவடை உண்டு:
      'சுருண்டு கெடக்குதாம் சும்மாடு
      வெறிச்சுப் பாக்குதாம் வெள்ளாடு'

      Delete
    2. தலையில வெச்சி கட்றது சும்மாடு
      இலயில வெச்சி கட்றது வெள்ளாடு.

      (சொலவடை,யோட சித்தப்பனுக்கே சொலவடையா.?)

      இருந்தாலும் ஷோக்கா சொன்னீங்க வாத்யாரே.!

      Delete
    3. //வெத்தல வெத்தல பாக்கு வெத்தலயாம் .....
      .கொல்லைக்கு போக தண்ணி பத்தலயாம் ..//

      Delete
    4. //வெத்தல வெத்தல பாக்கு வெத்தலயாம் .....
      .கொல்லைக்கு போக தண்ணி பத்தலயாம் ..//

      ச்சோ!!! இருக்கற தண்ணிய வச்சு எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணுங்க பாட்ஷா ஜி!

      Delete
    5. என்னமோ டிஷ்யூ பேப்பராமே, அது கெடைக்குதான்னு பாருங்களேன்.!?

      Delete
    6. //பொரிகடல ,நிலகடல ,வேர்கடல ...
      நீங்க சொன்னத கேட்டு எனக்கு சிரிப்பே வரல ...//

      Delete
  53. தேவ இரகசியம் தேடலுக்கல்ல ...
    சில வசனங்கள் ...
    //இவருக்குள் ஆன்மா இன்னமும் துடிப்பு வியாபித்து நிற்கிறது ....
    பலவீனமடைவது ஸ்தூல சரீரம் தான்.ஆன்மா அல்ல .எத்தனை முதியதாய் இருப்பினும் ....//
    இப்படி எழுதி தான் முப்பதாண்டுகளாக என்னை வசப்படுத்தி வைத்துள்ளார் .
    பிரமிக்க வைக்கும் தமிழாக்கம் ...

    ReplyDelete
    Replies
    1. //ஜீவிதமெனும் சக்கரம் சாஸ்வதமாய் சுழன்றிட இது உதவுகிறது .தேவலோகம் வழங்கியதை பூலோகம் திரும்ப ஒப்படைக்கும் சடங்கைத்தான் நீங்கள் இப்போது பார்த்தீர்கள் ...//
      //தீமையின் சித்தாந்தங்களை பரவ அனுமதிப்பது தெய்வ நிந்தனை ..//
      //பிரிந்து செல்வது சரீரங்கள் தானே அன்றி ஆன்மாக்கள் அல்ல //
      One man show நடத்தியிருக்கிறீர்கள் ஆசிரியரே ...உங்களுடைய ஆக்கங்களில் இதுவும் ஒரு Master piece ..

      Delete
  54. எல்லோருக்கும் தெரிந்தது
    சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையை காண வந்த புறநானூற்று புலவர்
    மோசிகீரனார் வழிநடை களைப்பால் ராஜ முரசு வைக்கும் கட்டிலில் படுத்துறங்க
    மரணதண்டனை விதித்திருக்க வேண்டிய மன்னன் வெண்சாமரம் வீசினான் .

    இது சில பேருக்கு தெரியாமல் இருக்க கூடும்
    மோசிகீரா !உன்னை ஒருமையில் அழைப்பதற்கு மன்னிப்பாயாக ...
    உன் புறநானூற்று கவிதைகளில் ஒன்றேனும்.
    நான் படித்ததேயில்லை ...ஆயினும் ...
    அரசாங்க கட்டிடத்தில் முதலாவதாக தூங்கிய மனிதன்
    என்ற வகையில் உன்னை என் நினைவில் வைத்து இருப்பேன் ........
    (ஞானக்கூத்தன் கவிதைகளிருந்து )
    அதெல்லாம் சரி .....இதற்கும் இந்த தளத்திற்கும் என்ன சம்பந்தம் ?..........
    தமிழக தபால் துறையில் எங்கெங்கே மோசிகீரனார்கள் இருக்கிறார்கள் என
    தெரியவில்லை .என் பதிவு தபால் புத்தகங்கள் வந்து சேரவில்லை .....

    ReplyDelete
  55. 1: book reached home!
    2: I am far from home! no chance to lay my hand on our art book till monday :( till then Nara Nara .....! :X

    ReplyDelete
    Replies
    1. //தமிழக தபால் துறையில் எங்கெங்கே மோசிகீரனார்கள் இருக்கிறார்கள் என
      தெரியவில்லை .என் பதிவு தபால் புத்தகங்கள் வந்து சேரவில்லை .....//

      இப்பத்தான் ஒருத்தர் புலம்பல நிறுத்தினாரு.!

      (எல்லா கமெண்ட்டுக்கு கீழேயும் நம்பர் போட்டுட்டு இருந்தாரு, ஏனோ பாதியில நிறுத்திட்டாரு..)

      நாலடியார்,(அப்போ.)
      புறநானூறு,(இப்போ.)

      போளந்து கட்றிங்களே Friend, .!!

      Delete
    2. "பொளந்து." அப்டீங்கற வார்த்த கொஞ்சம் வேகமா வந்ததால "போளந்து."ன்னு ஆயிடிச்சி.

      Delete
    3. ஹ !ஹா !கண்ணுக்கும் கருத்துக்குமினியாள் வர காலம் தாழ்த்துகையில்
      மெய்யது பதறுவதும் இதய பையது கதறுவதும் சகஜம்தானே நகைச்சுவை
      க(மன்)ண்ணரே !
      ஆனால் இது புலம்பல் அல்ல ...காத்திருப்பின் சுகம் ....
      after all love is but a game of waiting ....................

      Delete
    4. விழி இமைக்கும் நேரமதில்
      வழி தவறிப்போமோ என்றஞ்சி
      இமைகளிரண்டை இணையவிடாது,

      செவியிரண்டை சீராக்கி
      சிந்தைதனை நேராக்கி
      "சார் போஸ்ட்." எனும்
      மோகனராகமதை மனங்குளிர கேட்க காதலோடு காத்திருக்கும் கவியரசே.!
      இருண்டு கிடக்கும் இவ்வானம்
      விடியலை சங்கமிக்கும் வேளைதனிலே -உங்கள் விழிகளுக்கான விருந்து வந்து சேர வாழ்த்துகிறேன்.

      Delete
    5. என்னா ஒரு கவிதை!!! பொளந்து கட்றீங்களே!!!!

      ம்ஹூம். இதுக்கு மேலயும் நான் 'குரு'வாக அசடுவழிய தயார் இல்லை. பதவியை ராஜினாமா செய்கிறேன். புதிய குருவாக மரமண்டையை பரிந்துரைக்கிறேன். அவர் ரொம்ப பிகு பண்ணினால் விஸ்கி-சுஸ்கிட்ட கேட்டுப்பாருங்க. ப்பா! கோனார் தமிழ்உரை கணக்கால்ல இருக்கு!!

      Delete
    6. +1
      you people making a simple post as தமிழ் கவிதை சோலை! friends ! :)
      one from my end :)

      காத்திருப்பு by ஷேக் அலாவுதீன்

      இரவெல்லாம்
      விடியாமல்
      நீண்டுகொண்டே
      இருக்கிறது...
      நாளை உன்னை
      பார்க்கத் துடிக்கும்
      என் மனதின் வேதனை
      அறியாமல்!
      விடிவது
      முக்கியமல்ல...
      உன் விழிகளில்
      நான் விழுவதே
      முக்கியம்..!

      Delete
    7. அட! இந்தச் சொலவடையும் சூப்பராக்கீதே... :p

      Delete
  56. புத்தகங்கள் வர தாமதமாகும் நேரங்களில் spoiler comments -க்கு பயந்து blog -ஐ விட்டு
    ஒதுங்கி இருக்கும் செயலை விட்டு விடுவதுதான் நல்லது போலும் ..............................................
    சித்திர கலை பற்றி அடிப்படை அறிவாவது தெரிந்து கொள்வோம் என மெல்ல அதனுள்ளே
    நுழைந்த போதுதான் அக்கலையின் கற்பனைக்கும் எட்டாத பிரமாண்டம் கண்முன்னே
    காட்சியளிக்கிறது .கோடுகளில் மட்டுமே hatching ,stippling என எத்தனை வகைகள் .................
    ஒரு skilled artist -இடம் எத்துனை துறைகளின் மேதமை தனம் தேவை படுகிறது ???.....
    மனித ,விலங்குகளின் ஆழமான உடற்கூறியல் ,கணிதவியல் ்,கட்டிடவியல் என பட்டியல்
    நீண்டு கொண்டே போகிறது .இருபரிமாண பொருள்களை உயிர்களை ஒரு பரிமாணத்தில்
    பல்வேறு கோணங்களில் துல்லியமாக கொண்டு வர ஓவியர்கள் செய்யும் பகீரத முயற்சிகள்
    இந்த கலையின் ஆர்வம் அவர்களது ஆன்மாவில் கலந்திருப்பதற்கான சாட்சிகள் ..............
    சிரிக்கும் மனித முகம் வரையவே அதற்கு எத்தனை முக தசைகள் தேவை படுகிறது அவை
    எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது எந்த வகையான சிரிப்பு (ஆணவமா ்,ஆனந்தமா ...etc )
    கார்ட்டூன் வரைகலையும் புள்ளியில் ஆரம்பித்து இன்றும் விரிவடைந்து கொண்டிருக்கும்
    பேரண்டம் போல் ஆதி அந்தம் இல்லாத பெரும் பொருளாக உள்ளது ...(நமது Paolo grella வும்
    hell boy cartoon comics -ன் கவர்ஆர்ட் வரைந்துள்ளார் )............................................................ .
    மரபு வழி ,இலக்கண மீறல்கள் ,நவீனத்துவ சித்திரங்கள் என அப்பப்பா ......
    Creator ஆக இருப்பதை விட critic ஆக இருப்பதற்கு மிக உயர்ந்த ஞானம் வேண்டும் போல ..
    ரசிப்பதற்கான ஞான தேடலுக்கே என் அறிவுக்கு இந்த ஜன்மம் போதாது .......
    பின் குறிப்பு :விஸ்கி -சுஸ்கி ...நீங்கள் அடிப்படை ஓவிய இலக்கணம் கற்றவர் என
    கருதுகிறேன் .சமீபத்தில்தான் உங்களது 14வருடங்களுக்கு முந்தைய முதியவர் ,தெரஸா
    பிற ஓவியங்களை பார்க்க நேர்ந்தது ....அற்புதமான ஓவியங்கள் ......

    ReplyDelete
    Replies
    1. +1
      i feel its most relevant post for the Topic "சித்திரமும் பேசுமே...! "

      3D in 2D, its artistic album that we are holding(as comics) this month, not just another comics!

      //மரபு வழி ,இலக்கண மீறல்கள் ,நவீனத்துவ சித்திரங்கள் என அப்பப்பா ......//
      all great creations happens by breaking the convention's ! even though we haven't seen enough of "Paolo grella", he shares the great list!

      //Creator ஆக இருப்பதை விட critic ஆக இருப்பதற்கு மிக உயர்ந்த ஞானம் வேண்டும் போல ..//
      ha ha ... :D
      any one can be critic!, மிக உயர்ந்த ஞானம் வேண்டும் to understand, enjoy details of art, It can be improved only by expose our self to such great art work, thanks to our Edit we are able to enjoy the world class art in tamil comics in world class quality.
      yes the same is required to be a quality critic also!

      Delete
  57. காதலிக்க குதிரையில்லை.:-

    புளுகோட் பட்டாளம்,காமெடி கதை வரிசையில் வராது, என எடிட்டர் சொல்வது ஏனென்றே தெரியவில்லை.

    இதற்க்குமேல் என்ன காமெடி வேண்டும்.
    ஸ்கூபியின் நக்கல் வசனங்கள் அட்டகாசம்.
    புளிச்,த்தூ என இரண்டே வசனங்களுடன் கதை முழுக்க கலக்கியிருக்கும் பிரான்கோ பென்னி. ,வயிற்றுவலி உண்டாக்குகிறார்.மனிதரின் விடாமுயற்ச்சியையும் குதிரைகளின் மீது கொண்ட காதலையும் கண்டு சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
    எடிட்டர் சார்,
    தயவுசெய்து இனியொரு முறை புளூகோட்ஸில் நகைச்சுவை குறைவு என்று ஸ்டேட்மெண்ட் தராதீர்கள்.
    2015 அட்டவணையில் புளூகோட்ஸ்க்கு குறைந்தது மூன்று இடங்களாவது ஒதுக்குங்கள்.
    இதுவரை வந்த மூன்று புளூகோட்ஸ் கதைகளுமே நிறைவானவையே.!!

    ReplyDelete
    Replies
    1. கண்ணன் !எடிட்டர் சொல்ல வந்ததை நீங்கள் முழுமையாக புரிந்து கொள்ள வில்லை .
      யுத்தம் ,இரத்தம் ,மரணம் ,வலி இவற்றின் பின்புலத்தில் வரும் நகைச்சுவை .....
      யுத்தத்தின் கோர முகத்தை subtle message ஆக கொண்டவை ......
      (soldiers இறந்தால் சம்பளம் குறையும் என்பது எவ்வளவு குரூரமானது (பரணி from
      பெங்களூரு )(எனக்கு spoiler :( )இதைத்தான் விஜய் black humor என குறிப்பிட்டார் ).
      ஆ.அட்டகாசம் வந்த போதே விஸ்கி சுஸ்கி இதைப்பற்றி மிக நீண்ட பதிவு எழுதி
      இருந்தார் .எடிட்டர் கூற வந்தது இவற்றை "முழுமையான "நகைச்சுவை கதைகள்
      என எடுத்து கொள்ள கூடாது என்பதுதான் .......

      Delete
    2. Selvam laxmi..,
      எங்கிட்ட இருக்குற கெட்ட பழக்கங்கள்ல இதுவும் ஒண்ணு.சொல்ற விசயத்த சரியா புரிஞ்சிக்கறதேயில்ல.
      தூக்கம் கலைக்க கோழிகூவறத நம்ம விருப்பத்துக்கு மாத்தி புரிஞ்சிக்கிட்டா மாதிரி.

      அதாவது.(ஹி ஹி சொலவடையேதான்.)

      கொக்கரக்கோன்னு கூப்புட்டுச்சாம் கோழி
      இப்பவே அறுத்துடறேன்னு கெளம்புனாளாம் தோழி.

      Delete
    3. "சொலவடைகள் 1000" என்பது மாதிரியான புத்தகத்தை 24 மணிநேரமும் பாக்கெட்டில் வைத்திருக்கிறீர்களா அல்லது தங்களுடைய அக்கம்பக்கத்தில் பாரதிராஜா படத்தில் வரும் திண்ணையோர பாட்டிகள் அதிகமோ?!

      Anyway, keep up the good work with சொலவடை distribution! :D

      Delete
    4. //"சொலவடைகள் 1000" என்பது மாதிரியான புத்தகத்தை 24 மணிநேரமும் பாக்கெட்டில் வைத்திருக்கிறீர்களா //

      பொஸ்தகத்துல படிச்சி வர்ரதில்லிங். ,
      புத்திரோசனையில்..,,,,,,,,,(அதுவா வருது.)

      Delete
  58. அப்பாடா ஒரு வழியாக பிரான்ஸ் க்கு வந்து சேர்ந்தாகிவிட்டது. இந்தியாவில் இருந்தபோது நேரமின்மை காரணமாக இந்தப் பக்கம் வர முடியவில்லை.

    LMS திருவிழாவில் கலந்து கொண்டது மிகவும் பெருமையாக இருக்கிறது. பல புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். நான் எடுத்த போட்டோ மற்றும் வீடியோ ஆகியவற்றை இந்த வார இறுதியில் upload செய்கிறேன்.

    இங்கு LMS ஐ பிரெஞ்சு நண்பர் ஒருவருக்கு கொடுத்தபோது, டைலன் டாக் கதையை பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டார். பிரான்ஸ் ல் கூட இதுவரை டைலன் டாக் கதையை வண்ணத்தில் பார்த்ததில்லை என்று கூறினார். இந்த விலையில் இப்படி ஒரு தரமான புத்தகமா என்று கேள்விமேல் கேள்வி. எல்லா புகழும் goes to Editor and his team.

    தேவ ரகசியம் தேடலுக்கல்ல இந்த ஞாயிறு வந்து விடும். நண்பர்களின் கருத்துக்களை பார்க்கும்போது, உடனே படிக்க வேண்டும் போல் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. @ Radja

      பழகுவற்கினிய உங்களைச் சந்தித்ததில் ஈரோடு விஜய் பெருமையடைகிறான். பிஸியான பல குடும்ப வேலைகளின் நடுவிலும் அதிகாலையிலேயே புத்தகத் திருவிழாவில் ஆஜராகிக் காத்திருந்த அந்த காமிக்ஸ் நேசத்திற்கு நன்றி சொல்றான். "அந்தப் பொன்னாள்... அது போலே வருமா இனிமேலே"னு பாட ஆரம்பிக்கிறான்.

      //நான் எடுத்த போட்டோ மற்றும் வீடியோ ஆகியவற்றை இந்த வார இறுதியில் upload செய்கிறேன்.
      //

      காத்திருக்கிறோம்....

      Delete
    2. //காத்திருக்கிறோம்.....//

      நானும்,........(+1)

      Delete
    3. //இங்கு LMS ஐ பிரெஞ்சு நண்பர் ஒருவருக்கு கொடுத்தபோது, டைலன் டாக் கதையை பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டார். பிரான்ஸ் ல் கூட இதுவரை டைலன் டாக் கதையை வண்ணத்தில் பார்த்ததில்லை என்று கூறினார். இந்த விலையில் இப்படி ஒரு தரமான புத்தகமா என்று கேள்விமேல் கேள்வி. எல்லா புகழும் goes to Editor and his team.//

      +1 we wish to see LMS as starting point, and we know our Edit follows the quote " best is (always)yet to come!"

      Delete
  59. செங்குருதிச் சாலைகள்...

    வழக்கம்போலவே அட்டகாசமான சித்திரங்கள்; சில/பல இடங்களில் மூச்சை ஸ்தம்பிக்கச் செய்யும் அளவுக்கு!

    வசனங்களும் பல இடங்களில் புருவத்தை உயர்த்துகின்றன. உதாரணத்திற்கு,
    ||| எனது வாடிக்கையாளர்களில் பலருக்கும் பலவீனமான ஆயுள்ரேகைகள் இருக்கும் காரணத்தால் கடன் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது ||||| எனும் ஆயுத வியாபாரியின் கோட்பாடும்,

    ||| இரையைக் கடிக்காதே... ஆபத்தாகிவிடும் என்று எச்சரித்தால் மீன் கேட்குமா என்ன? ||| எனும் ரெட்டின் ஆதங்கமும்,

    ||| சர்க்கஸில் பற்களால் சுடுபவர்களுக்குத்தான் இப்போது மவுசு ஜாஸ்தியாம் ||| என்ற வில்லத்தனமும்...

    இப்படி நிறைய்ய...

    குறை: 'கமான்சேவின் கெளபாய் சாகஸம்' என்று அட்டையில் கொட்டையாய் போட்டுவிட்டு எட்டாம் பக்கத்தில் மட்டும் துக்கடாவென தலைகாட்டிப் போகும் கமான்சே! (அடுத்த தபாவாவது அந்த துடுக்குப் பொண்ணுக்கு கொஞ்சம் அதிகமா சான்ஸ் கொடுங்க சார்)

    இப்படிக்கு,
    கமான்சே ரசிகன்.

    ReplyDelete
  60. //(அடுத்த தபாவாவது அந்த துடுக்குப் பொண்ணுக்கு கொஞ்சம் அதிகமா சான்ஸ் கொடுங்க சார்)

    இப்படிக்கு,
    கமான்சே ரசிகன்.//

    அது எத்தன பக்கத்துல வந்தா என்னங்க.,?

    அந்த புள்ள சுத்த சைவம்.

    நம்ம ஜாங் ஜியி (தே..ர..தே..) எப்புடி., அதுக்கு ஒரு மன்றம் ஆரம்பிங்க பாஸு,..

    ReplyDelete
  61. செங்குருதி சாலைகளின் சித்திரங்கள் ..அந்த 23 ம் பக்கம் ரயன் குடும்பத்தினரின் இல்லம்..
    மலை முகடுகளின் இடையே நெளிந்து செல்லும் சிற்றாறு தனிமையை நாடி நிற்கும் குடில்.
    பாவப்பட்ட ஜீவன்கள் ஐயோ பாவம் என்று பரிதவிக்கும் கருணை உள்ளம் ..தொலை தூ ரத்தில்
    விரைந் தோ டிவரும் பெண்..அற்புதம்..இதை எல்லாம் அணு அணு வாய் ரசித்துவிட்டு கிராபிக்ஸ்
    காமிக்ஸ் ஐ பார்க்கும்போது கோச்சடையன் ரஜினியின் உணர்ச்சி அற்ற தோற்றத்தை பார்ப்பது போல்
    ஒரு ஏமாற்றம்..ஆனால் கதை என்று வரும்போது தேவ ரகசியம் ஒரு அற்புதமான ஆங்கில படத்தை
    இரண்டரை மணி நேரம் பார்த்த திருப்தி..bluecoat பட்டாளம் வழக்கம் போல் காமெடி heroes
    மூன்று கதைகளும் முத்துக்கள்.அக்டோபரின் கார்சனின் கடந்த காலத்தை வண்ணத்தில் பார்க்க
    இப்போது இருந்தே காத்திருக்கிறேன் டோப்ஸ் ,மற்றும் ரே .வெ ல்கம் வில்லன்ஸ் ..

    ReplyDelete
  62. காதலிக்க குதிரையில்லை - பல இடங்களில் சிரிக்க வைத்தது!
    ரூபி-ஸ்கூபியின் அலம்பல்களும் புலம்பல்களும் ரொம்பவே ரசித்தேன்!

     “ப்ளூகோட்ஸ், ஏனோ என்னைக்கவர வில்லை” - சென்ற பதிவில் நான் இட்டிருந்த இந்த கருத்தை உடனடியாக வாபஸ் வாங்கிக்கொள்கிறேன் சார்!


    செங்குருதிச்சாலைகள் – ஓவியர் ஹெர்மானின் அசாத்தியமான ஓவியத்திறமைக்கு மற்றுமொறு சான்று! பலவிதமான கோணத்தில் அற்புதமான, துல்லியமான சித்திரங்களில் மனிதர் பின்னி எடுத்திருக்கிறார்! 


    தேவ ரகசியம் தேடலுக்கல்ல – ரசிக்கும்படியான ஓவியங்கள், வித்தியாசமான கதையமைப்பு என ஒரு புதிய அனுபவத்தை பெற முடிந்தது! படித்து முடித்தபிறகும் மனதை விட்டு அகலாத ஓவியங்கள், ஒரு திரைப்படக்காட்சியினைப்போல் கண்முன்னே விரிந்து கொண்டிருகின்றன!



    மூன்று இதழ்களையுமே நான் ரசித்தேன். ஒரு மாதத்தின் அனைத்து இதழ்களையும் ஒரே மூச்சில் (ஒரே நாளில்!)
    படித்து முடித்தது இதுவே முதல் தடவை!

    புதிய அறிவிப்புகளில் "கிங் ஸ்பெஷல்" அதிகம் எதிர்பார்க்க வைக்கிறது. கார்ஸனின் கடந்த காலம் - எனது நெடுநாள் கனவு. அடுத்த மாதமே நிறைவேற போகிறது!

    ReplyDelete
  63. செங்குருதிச்சாலைகள் - எல்லா விதத்திலும் Excellent!

    இதைப்படித்ததும் ஏனோ கேப்டன் பிரின்ஸ் கதைகளை மீண்டும் வாசிக்கும் ஆவல் ஏற்படுகிறது. மேலும் ஓவியர் Hermann Huppen'ன் பிற படைப்புகளை தேடுவதையும் தவிற்க இயலவில்லை! ஜெரெமியா என்ற 34 பாக சீரிஸ் அங்கே நல்ல வரவேற்பை பெற்றதாகத் தெரிகிறது, நமது ரசனைக்கு அது ஒத்து வருமா சார்?

    ReplyDelete
    Replies
    1. //ஜெரெமியா என்ற 34 பாக சீரிஸ் அங்கே நல்ல வரவேற்பை பெற்றதாகத் தெரிகிறது, நமது ரசனைக்கு அது ஒத்து வருமா சார்?//
      நானும் இப்போது பார்த்தேன்.
      தனித்தனி கதைகளாகவும் படிக்க முடியுமாமே.!
      நல்ல வரவேற்ப்பை பெற்ற கதைவரிசை,
      நமக்கு சரிபட்டு வருமா சார்.?(+1)

      Delete

    2. ஜெரெமியா - நமக்கு சரிபட்டு வருமா சார்.?(+1)

      Delete
  64. விஜயன் சார், "செங்குருதிச்சாலைகள்" புத்தகத்தில் உள்ள ஹாட்-லைனில் அடுத்த மாதம் வரும் காலனின் கைக்கூலி ரூ.65 எனவும் அதே புத்தகத்தின் பின் பகுதியில் உள்ள "காலனின் கைக்கூலி" விளம்பரத்தில் ரூ.60 எனவும் அச்சிடபட்டுள்ளது; இந்த விலையின் முரண்பாடு வாசகர்கள் மத்தியில் விலை பற்றிய குழப்பத்தை உண்டாக்கலாம், விலை பற்றிய அறிவிப்புகளில்/விளம்பரம்களில் கொஞ்சம் கவனம் தேவை.

    ReplyDelete