Sunday, August 24, 2014

விடை தேடிடும் வினாக்கள்...!

நண்பர்களே,

வணக்கம். வயசுக்கேத்த தோரணையைத் தக்க வைத்துக் கொள்ள எத்தனை தான் மொக்கை போட்டாலும், உள்ளுக்குள்ளே பதுங்கிக் கிடக்கும் திருவாளர் சிறுபிள்ளை அவ்வப்போது துள்ளிக் குதிக்கத் தவறுவதில்லை என்பதே கடந்த 2 வாரங்களில் நான் படித்த அனுபவப் பாடம் ! "LMS எனும் ஒரு மெகா முயற்சியை அரங்கேற்றியாச்சு ; இனி அடுத்த வேலைகளுக்குள் ஐக்கியமாகிட வேண்டும் ; 2015-க்கான திட்டமிடல்களைக் கவனித்தாக வேண்டும் !' என்று என் மண்டை ஏதேதோ கட்டளைகளைப் பிறப்பிக்க, வேலை செய்ய அமர்ந்தால் மனம் எனும் வானரம் தன்வாக்கில் எங்கெங்கோ ஜாலியாய்ச் சுற்றித் திரிகிறது ! 900+ பக்கங்களை ஆஞ்சநேயர் வால் போன்றதொரு நீ----ண்-----ட பட்டியலில் எழுதி வைத்துக் கொண்டு வேலை செய்த நாட்கள் திரும்பத் திரும்ப மண்டைக்குள் குறுக்கும், நெடுக்குமாய் சாலடிக்க, கையிலிருக்கும் 44 பக்க கமான்சே கதையும், ப்ளூகோட் கதையும் என்னைப் பார்த்துக் கண்ணடிப்பது போல் படுகிறது !! 'ஓஹோ..இது தான் hangover என்பதோ ? என்று தலையைச் சொரிந்து கொண்டே நிறையப் பிரயத்தனத்தின் பேரில் காத்திருக்கும் பனிகளுக்குள் என்னை ஆழ்த்திக் கொண்டேன் !   

இதோ - செப்டெம்பரின் வெளியீடு # 2-ன் preview  - கமான்சேவின் "செங்குருதிச் சாலைகள்" ரூபத்தில் ! லயனின் ALL NEW ஸ்பெஷலில் இத்தொடரின் கதை # 1 வெளியானதும், இந்தாண்டின் துவக்கத்தில் ஆல்பம் # 2 வெளிவந்ததும் நமக்குத் தெரிந்த சங்கதி தான் என்றாலும், இதன் கதை # 3 - பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது லயனில் "ஓநாய் கணவாய் " என்ற பெயரில் வெளியாகியுள்ளது சமீப வாசகர்கள் அறிந்திருக்க இயலாதென்று நினைக்கிறேன் ! வரிசைகளுக்குப் பெரியதொரு முக்கியத்துவம் தந்திடா அந்நாட்களில் ஆக்க்ஷனும், அதிரடியும் தூக்கலாய்த் தென்படும் பட்சத்தில் அக்கதை ''சட்'டென்று தேர்வாவது வாடிக்கை ! So - கமான்சே தொடரைப் பரிசீலித்த போது பாகம் 1 & 2 சற்றே சாத்வீகமான பயணப் பாதையில் இருப்பதையும், ஆல்பம் # 3 முதலாய் பரபரப்பு பற்றிக் கொள்வதையும் உணர முடிந்த மறு கணமே நேரடியாக # 3 -க்குள் டைவ் அடித்தோம் அன்று ! அதிர்ஷ்டவசமாய் கமான்சேவின் கதைகள் சகலமும் தனித் தனியாய் படிக்கக் கூடிய பாணியில் இருப்பதால் என் பாடு சற்றே சுலபமாகிறது ! 'ஓநாய் கணவாய்' இப்போது வரை நம்மிடம் ஸ்டாக்கில் இருந்த இதழ் என்பதால் அதனை மறுபதிப்பாக்காது - நேரடியாக ஆல்பம் # 4-க்குள் புகுந்திருக்கிறோம் ! இதோ நமது ராப்பரும், ஒரிஜினல் சித்திரமும் :



பின்னணி வர்ணங்களில் மட்டுமே லேசாய் மாற்றங்கள் செய்து விட்டு, ஒரிஜினல் சித்திரத்தை அப்படியே பயன்படுத்தியுள்ளோம் ! இங்கு பார்ப்பதை விட, அச்சில் இன்னும் அழுத்தமாய் நமது அட்டைப்படம் தோற்றம் தருவதைக் காணப் போகிறீர்கள் ! கதையைப் பொறுத்த வரை படு வேகமான ; ஆக்க்ஷன் த்ரில்லர் இது என்று சொல்லுவேன் ! ஓவியர் ஹெர்மனின் சித்திர நுணுக்கங்கள் அற்புதங்கள் செய்கின்றன ; பாருங்களேன் ஒரே பக்கத்தில் top angle ; close up ; overview என்று வெவ்வேறு கோணங்களிலான சித்திர அமைப்புகளை !
கடந்த வாரம் முத்து காமிக்ஸின் ப்ளூகோட் பட்டாளத்தின் "காதலிக்கக் குதிரையில்லை" இதழின் preview-ல் அதன் அட்டைப்படத்தை உங்களிடம் காட்ட விடுபட்டுப் போயிற்று ; இதோ - மீண்டுமொரு background மாற்றத்தை மட்டுமே தாங்கியதொரு அட்டைப்படம் :


இரு அட்டைப்படங்களும் எவ்விதம் அமைந்துள்ளன என்ற ஆய்வை எப்போதும் போல் உங்களிடம் விட்டு விடுகிறேன் ! கடந்த சில நாட்களாகவே எங்கள் கந்தக பூமியிலும் வருண பகவான் அதிசயமாய்  ஆட்சி செய்து வருவதால் இம்மாத இதழ்கள் செப்டெம்பர் 1-ஆம் தேதி தான் இங்கிருந்து புறப்படும். ஈர நாட்களாய் இருக்கும் சமயங்களில் அச்சுப் பணிகளை நிதானமாய்ச் செய்வது அவசியம் என்பதோடு பைண்டிங்கிலும் பொறுமை கடைபிடிக்கத் தேவையாகிறது ! So "மும்முனைத் தாக்குதல்" செப்டெம்பரின் இதழ் # 3 பற்றிய preview அடுத்த ஞாயிறிலும், இதழ்களின் டெஸ்பாட்ச் திங்கட்கிழமையிலும் அரங்கேறிடும் ! இடைப்பட்ட இந்த வாரத்தை 2015-ன் திட்டமிடலுக்கு அவசியமாகும் சில கேள்விகளுக்குப் பதில் சொல்வதில் செலவிடுவோமா ? சென்றாண்டு நவம்பரில் பெரியதொரு பழுப்புக் காகிதத்தில் கேள்விகளாய் கேட்டு உங்களுக்கு அனுப்பி இருந்தது நினைவிருக்கலாம் ; பூர்த்தி செய்யப்பட்டு வந்த பதில்களைப் படிக்க இயன்ற போது எங்களது கேள்வி கேட்கும் படலம் சற்றே தாமதமானதோ ? என்ற கேள்வி எனக்குள் எழுந்திட்டது ! So அதே தவறை இந்தாண்டும் செய்திடாமல் - 2015-ன் அட்டவணையை செதுக்கும் இறுதிக் கட்டங்களுக்கு முன்பாகவே உங்கள் அபிப்ராயங்களையும் அறிந்திடல் நலம் என்று தோன்றுகிறது !  Here goes:

  1. (இது வரையிலான) 2014-ன் TOP 3 இதழ்கள் உங்கள் பார்வையில் ? (LMS வேண்டாமே ஆட்டத்துக்கு !!)
  2. 2014-ன் 3 டப்பா இதழ்கள் ? 
  3. கௌபாய் கதைகளை ரொம்பவே துவைத்துத் தொங்கப் போடுகிறது போல் உங்களுக்குத் தோன்றுகிறதா ? பதில் 'ஆமாம்' எனில் - 'கிளம்பு நைனா..' என்று யாரை மூட்டை கட்டச் சொல்லலாம் ? (தல ; தளபதி WWF இதற்குள் கண்டிப்பாக வேண்டாமே - ப்ளீஸ் ?!)
  4. Black & white இதழ்களை வரவேற்கிறீர்களா ? இவை தொடரலாமா ? 
  5. 'Yes' எனில் அவற்றில் யாரைக் காண ஆவல் ? (ப்ளீஸ், மாட்சிமைதங்கிய மும்மூர்த்திகளை துயில் எழுப்பக் கோர வேண்டாமே ?!!)
  6. தோர்கல் பற்றிய உங்கள் அபிப்ராயம் ? 
  7. 2013 & 2014-ன் நமது காமிக்ஸ் சேகரிப்பில் பெரியதொரு ஆர்வத்தைக் கிளப்பாது போன இதழ் எது ? இப்போது வரை படிக்கவே தோன்றவில்லை என்ற ரகத்தில் ஏதேனும் ....? 
  8. தற்போதைய கேப்டன் டைகரின் இளம் பிராயத்து சாகசங்களை தொடரலாமா ? அல்லது 2015-க்கு - மின்னும் மரணமே போதுமென்று கருதிடலாமா ? (unbiased opinions ப்ளீஸ் ? ; தல, தளபதி ரசிகக் கண்மணிகளின் முத்திரைகளின்றி ?)
  9. ரிப்போர்டர் ஜானி ...? ப்ருனோ பிரேசில் ? சாகச வீரர் ரோஜர்...? இவர்களது எதிர்காலங்கள் எவ்விதமோ - நமது வாசிப்பு ரசனை வரிசையில் ?
  10. புதியதொரு தலைமுறை கொஞ்சமே கொஞ்சமாகவேனும் நமது காமிக்ஸ் குடும்பத்தில் இணைந்து வருவதைக் கவனிக்கிறேன். இந்த சூழலில் நமது எழுத்து பாணி ; மொழிபெயர்ப்பு ஸ்டைல் மாற்றங்களின்றி இப்படியே தொடர்வது பற்றி உங்களது அபிப்ராயம் ? 
  11. புதிய கதைத்தொடர்களுக்காவது - மொழிபெயர்ப்புப் பொறுப்புகளைப் புதியவர்களிடம் ஒப்படைத்து புதிய பாணியொன்றைத் தேடும் ஒரு சிந்தனையினை நீங்கள் எவ்விதம் பார்ப்பீர்கள் ?
  12. ஆண்டவன் அருளோடு 2014-ன் அட்டவணை திட்டமிட்டபடியே பூர்த்தியாகும் பட்சத்தில் இந்தாண்டில் நாம் வாசித்திருக்கப் போகும் கதைகளின் எண்ணிக்கை 50-ஐத் தொடும் ! டூ..டூ. மச் ? Your thoughts ?
  13. வரக் காத்திருக்கும் "தேவ இரகசியம் தேடலுக்கல்ல.." ; "இரவே..இருளே..கொல்லாதே..!" - உங்களில் ஏற்படுத்துவது எதிர்பார்ப்புகளையா ? அல்லது - 'முட்டைக்கண்ணனுக்கு ஏன் இந்த கொக்கு மாக்கு வேலை ? " என்ற சிந்தனைகளா ? 
  14. சிறார்களுக்கென கார்டூன்களை இன்னும் கொஞ்சம் அதிகமாய் நுழைக்கும் சிந்தனையை எவ்விதம் பார்ப்பீர்கள் ?
  15. 2015-ன் அட்டவணையில் நீங்கள் எதிர்பார்க்கப் போவது முத்திரை பதித்த நாயகர்களின் தொடர்ச்சிகளையா ? அல்லது புது வரவுகளையா ? 
உங்களின் பதில்களை இங்கு பதிவிட்டாலும் சரி ; எங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பினாலும் சரி - அவை நமது 2015 திட்டமிடலுக்கு நிறையவே பிரயோஜனப்படும் என்பது உறுதி ! So, please do spare time for this folks !!

Last minute Update : 

இத்தாலிய ரசிகர் மன்றங்கள் கலக்கலைத் தொடர்ந்து வருகின்றன !! டைலன் டாக் மன்றமும், மர்ம மனிதன் மார்டின் மன்றமும் கரம் கோர்த்துக் கொண்டு ஒரே முரட்டு பார்சலாய் LMS -ல் 110 இதழ்களுக்கு ஆர்டர் தந்துள்ளனர் !! இவர்கள் தவிர தனிப்பட்ட சேகரிப்பாளர்கள் தந்திருக்கும் குட்டிக் குட்டி ஆர்டர்களும் உண்டு !! (@கார்த்திக் : டெக்ஸ் மன்றம் என்றொன்று இருப்பதற்கான அடையாளங்களே இல்லை தான் !! சென்றாண்டு டயபாலிக் ஆர்வலர்களின் வேகத்தைப் பார்த்த போதே இந்த நினைப்பு எனக்கும் உதித்தது !!) 

மீண்டும் சந்திப்போம் folks ;  bye until then !

380 comments:

  1. Replies
    1. கமான்சேவின் "செங்குருதிச் சாலைகள்" ரூபத்தில் கதை # 3 - பதினைந்து ஆண்டுகளுக்கு
      முன்பாகவே நமது லயனில் "ஓநாய் கணவாய் " என்ற பெயரில் 144 வது இதழாக
      வெளியாகியுள்ளது. அட்டைபடம்,விவரங்களுக்கு...இங்கே'கிளிக்'

      Delete
  2. இரண்டாவது இரண்டாவது முறையாக

    ReplyDelete
  3. i am 4 th . fitst tme in 5th place. because .just now i complete my mumbai tour ... this tour i totaly i spend withLMS

    ReplyDelete
  4. கண்டிப்பாக கருப்பு வெள்ளை இதழ்கள் வேண்டும். மார்ட்டின் டெக்ஸ் கதைகள் கண்டிப்பாக கருப்பு வெள்ளையில் வேண்டும். அதிக கார்ட்டூன் கதைகள் நிச்சயம் வரவேற்கததகுந்ததே. கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்ல நாட்கள் பல ஆகும். அதனால் இந்தமுறை கடிதம் மூலமாக எண்ணங்களைத் தெரிவிக்கப்போகிறேன்

    ReplyDelete
  5. கார்டூனுக்கு மினிலயன் மூலம் மாதம் ஒன்று
    கருப்பு வெள்ளையில் மாதம் ஒரு காமிக்ஸ். ஜெஸ்லாங் க்கு வாய்ப்பளியுங்கள். சாகசவீரர் ரோஜர், ரிப்போர்டர் ஜானி, உமுதலைபட்டாளம், ஜில் ஜோர்டானு க்கு give a chance in a year,bcuz we need varieties and they r not bad.

    ReplyDelete
  6. Need black&white with top heroes like Rib Kirpy, Wing Commdr George. (if possible reprints as well :) )

    Kindly publish all Capt. Tiger stories.

    ReplyDelete
  7. 1. We can avoid Blueberry & Wyatt Earp series but should continue & complete Young Blueberry's adventures. May be 3 albums in 2015? It is better if we get them as separate albums. Most of us are collecting these books.
    2. Cowboys can continue. Apart from the 672 pages of tex special, we have appetite to read another 672 pages of tex.
    3. Lady S?
    4. Black & white is OK but only if the story don't have the Option. We don't want to miss any good stories just because it is in Black & White. I have seen XIII in color as well B&W. I think Color looked lot better than B&W.
    5. 50 is not too much. It is good number and we should continue.
    6. We should have few albums for Kids. My 5 Yo daughter loves Lucky Luke. Your current translation and writing is good. It can continue.
    7. We can get new people for translation and you should over see it though. It will give you more time to identify new stuff for us.
    8. I like Thorgal. good visual treatment and not sure about others.
    9. We should get new faces but should try to continue and complete what we have already started. Eg. Comanche, Largo and Shelton.

    Thanks.

    ReplyDelete
  8. டியர் எடிட்டர்ஜீ!!!

    நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளில் பெரும்பாலானவை நிறைய யோசிக்கவேண்டிய கேள்விகள்.சில சர்ச்சைக்குரியவை.பதில்களை இங்கே வெளியிட்டால் LOAD MORE பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதால் மெயிலில் அனுப்பிடுவதே சரி!

    ReplyDelete
  9. மை டியர் மானிடர்களே!!!

    மர்ம மனிதன் மார்ட்டினின் கட்டத்தில் ஒரு வட்டம் கதையில் கி.மு.3000 இல் ஆக்கியன் படைவீரர்கள் நுழைந்த நோஸ்ஸாஸ் நகரம் மற்றும் அங்கிருந்த புதிர் அரங்கம் போன்றவற்றை பற்றிய கூடுதல் தகவல்களை பெற கீழே க்ளிக் செய்யவும்.

    "நோஸ்ஸாஸ் புதிர் அரங்கம்"

    ReplyDelete
  10. 15. கேள்விகள்.
    அப்போ 15 பதில்கள்,
    அப்படீன்னா 15 பதிவுகள்.

    அப்பாலிக்கா ஒஸ்தானு.

    ReplyDelete
    Replies
    1. //15. கேள்விகள்.
      அப்போ 15 பதில்கள்,//

      என்ன ஒரு புத்திசாலித்தனம் :D

      D போடாட்டி ஜோக்கா எடுத்துக்க

      மாட்டேன்றாங்க .....
      (ஹ !ஹ ! கண்ணன்.....................

      விஜய் சார்க்கு நீங்கள் விட்ட

      பூமராங் மறுபடி உங்களிடமே .....



      Delete
  11. மிண்னும் மரணத்திற்க்கு பிறகு டைகர் கதைகள் கண்டிப்பாக வேனும், யாராவது தளபதியை வேண்டாம் என்று சொல்லுவாங்களா?

    ReplyDelete
  12. 2014ன் டாப் 3 கதைகள் 1.விரியனின் விரோதி 2.நில்!கவனி!சுடு 3.எஞ்சி நின்றவனின் கதை !

    ReplyDelete
  13. DO consider including one of the following for 2015 sir

    Thief of Thieves
    Lady S
    One Night in Rome
    Blake and Mortimer(if possible in B/W as monthly low prize edition)
    Long John Silver

    ReplyDelete
    Replies
    1. for me following hero's gave us different(in good way) reading experience Edit, I look forward to see more of them in comming years:

      Comanche: he is different, earns respect do bring him in.
      XIII Veeriyanin Virothi: no commands, all readers know this book raise bar in terms of quality(story, graphics used ).
      Magic Wind: he created lots of expectation, waiting for second book-fair spl to give verdict


      rest as a mail to you edit .....

      Delete
    2. humble suggestion Edit:

      Edit more கருப்பு வெள்ளை low price இதழ்கள் கண்டிப்பாக வேண்டும், use it with perfect balance of variety(detective, thrillers, cowboy stunts) if possible bring one or two best classics reprint(in low price) during book-fair to attract our new readers, YA age group readers.

      Delete
    3. Satishkumar S @ // Edit more கருப்பு வெள்ளை low price இதழ்கள் கண்டிப்பாக வேண்டும், use it with perfect balance of variety(detective, thrillers, cowboy stunts) if possible bring one or two best classics reprint(in low price) during book-fair to attract our new readers, YA age group readers. //

      இதற்கு எனது முழு ஆதரவு உண்டு!

      Delete
    4. I don't have a copy of 'ஓநாய் கணவாய்' , what is the answer you have for me. i like comanche SUDDENLY JUMPING THE EPISODE ? not fair Edit. otherwise make 'ஓநாய் கணவாய்' available in world mart.

      Delete
  14. Cowboy கதைகளை சிறிது காலத்திற்கு ஒய்வு கொடுக்கலாம் ! ஏனெனில் cowboy genre stories streao type ஆக உள்ளது ! தேவ இரகசியங்கள் தேடலுக்கு அல்ல பாணி கதைகள் அவசியம் தேவை ! captain tiger இளம் பிராய கதைகளை வெளியிட்டு முடித்து விடுங்கள் ! மொழி பெயர்ப்பு பொறுத்தவரை NO COMMENTS!

    ReplyDelete
    Replies
    1. //தேவ இரகசியங்கள் தேடலுக்கு அல்ல பாணி கதைகள் அவசியம் தேவை !//

      +1

      Edit plz consider publishing this type of small albums(3 or 4 episodes) as a single edition. It will create best of reading experience i believe.

      Delete
  15. எடிட்டர் சார் !

    15 கேள்விகள் .......

    யோசிக்க ....எழுத ....நேரம் ...தரவும் ..

    கடிதம் ...... அல்லது

    ஈமெயில் ...... சால சிறந்தது ....


    ReplyDelete
    Replies
    1. உங்க மனசில உள்ளதை குமுறும் ..........குமுறி தாரும் ..........

      Delete
  16. திரு விஜயன் அவர்களுக்கு,
    எனக்கும்(எங்களுக்கும்)LMS க்கு பின் அதே அனுபங்கள் தான் சார்!
    //உள்ளுக்குள்ளே பதுங்கிக் கிடக்கும் திருவாளர் சிறுபிள்ளை அவ்வப்போது துள்ளிக் குதிக்கத் தவறுவதில்லை//
    //வேலை செய்ய அமர்ந்தால் மனம் எனும் வானரம் தன்வாக்கில் எங்கெங்கோ ஜாலியாய்ச்
    சுற்றித் திரிகிறது !//
    இதே சமஅனுபவங்கள் எல்லோருக்கும் ஏற்ப்பட்டது LMS க்கு கிடைத்த வெற்றி விருதுகள் !!!

    அழமான 15 கேள்விகள்! தமிழ் காமிக்ஸ் உலக பயணத்தை அருமையாக திட்டமிட காமிக்ஸ்
    பிரியர்களுக்கு முன் வைக்கப்பட்ட தேர்வு தாள் !!! பதில்கள் விரைவில் சார்....

    ReplyDelete
  17. To: Editor,

    //புதியதொரு தலைமுறை கொஞ்சமே கொஞ்சமாகவேனும் நமது காமிக்ஸ் குடும்பத்தில் இணைந்து வருவதைக் கவனிக்கிறேன். இந்த சூழலில் நமது எழுத்து பாணி ; மொழிபெயர்ப்பு ஸ்டைல் மாற்றங்களின்றி இப்படியே தொடர்வது பற்றி உங்களது அபிப்ராயம் ? //

    //புதிய கதைத்தொடர்களுக்காவது - மொழிபெயர்ப்புப் பொறுப்புகளைப் புதியவர்களிடம் ஒப்படைத்து புதிய பாணியொன்றைத் தேடும் ஒரு சிந்தனையினை நீங்கள் எவ்விதம் பார்ப்பீர்கள் ?//

    சீர்செய்து தர உங்களது பேனா தாயாராக இருக்கும்போது புதியவர்களிடம் மொழிபெயர்ப்பை தருவது வரவேற்கத்தக்கதே! இது உங்களுக்கும் சிறிய நேரத்தை ஒதுக்கித்தரும் - புதிய கதைகளையும் களங்களையும் தேடுவதற்கு!

    'மேக்னம் ஸ்பெஷல்' இதழில் 'ரின் டின் கேன்' - ஜூனியர் எடிட்டரின் கைவண்ணம்தானே? லக்கியின் கதையிலும் அவரது எழுத்து நடை தெரிந்தது, ஆயினும் உங்களது பேனாவும் விளையாடியிருந்ததுபோல ஒரு எண்ணம். கணிப்பு தவறாக இருக்கும் பட்சத்தில் உங்களது எழுத்துப்பாணியில் சிறிது மாற்றம் செய்திருக்கிறீர்கள் என்பது சரியாக இருக்கலாம்! இது உங்களுக்கும் சிறிய நேரத்தை ஒதுக்கித்தரும் - புதிய கதைகளையும் களங்களையும் தேடுவதற்கு!

    ReplyDelete
  18. //சிறார்களுக்கென கார்டூன்களை இன்னும் கொஞ்சம் அதிகமாய் நுழைக்கும் சிந்தனையை எவ்விதம் பார்ப்பீர்கள் ?//

    நுழையுங்கள்... நுழையுங்கள்... தனியாக ஒரு ப்ராண்ட்டில் வெளியிட்டால் இன்னும் நல்லது. வாங்கிக் கொடுக்கும் பெற்றோருக்கும் இலகுவாக இருக்கும். 'அதிரடிப்படை'. 'பெருச்சாளிப் பட்டாளம்' போன்ற யுத்தகாலக் கதைகளையும் வெளியிட்டால் இளையவர்களை அவை ஈர்க்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  19. எங்கள் வீட்டு குழந்தைகள் விரும்புவது பேச்சு தமிழ் ..............

    இயல்பாக படிக்க ஆசை படுகிறார்கள் .................

    இல்லையெனில் தமிழ் இன்னும் அதள பாதாளம் சென்று விடும் ...........

    சிந்திக்காதீர்கள் செயல்படுங்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்றது மெய்யாலுமே

      சர்தான் .............

      பி.கு .. வறுத்த கறி மிச்சமிருக்கா ?....

      எலும்பு துண்டாவது ......??

      Delete
    2. ...........கேட்டா இது தான் கிடைக்கும்

      டுமீல் ...............டுமீல்

      Delete
  20. சார் ...இரண்டு அட்டை படங்களும் கலக்கல் ... போன முறை "காதலிக்க குதிரை இல்லை " ஒரிஜினல் அட்டை படம் தாங்கள் வெளி இட்ட போதே இதே அட்டை படத்தை தாங்கள் வெளி இட்டால் நன்றாக இருக்கும் என நினைதிருந்தேன்.அதே போல .......சூப்பர்....

    தங்கள் வினாக்களுக்கு எனது பதில் :

    முதல் இரண்டு வினாக்களுக்கான பதில் ஒரு "ட்ரையல் " பார்த்து விட்டு தான் சொல்ல முடியும் .ஆனால் "தோர்கள் " எதிர் பார்த்த படி ( என்னை) திருப்தி படுத்த வில்லை என்பது மட்டும் உண்மை .

    ***************************************
    கௌபாய் கதைகளை ரொம்பவே துவைத்துத் தொங்கப் போடுகிறது போல் உங்களுக்குத் தோன்றுகிறதா ? பதில் 'ஆமாம்' எனில் - 'கிளம்பு நைனா..' என்று யாரை மூட்டை கட்டச் சொல்லலாம் ? (தல ; தளபதி WWF இதற்குள் கண்டிப்பாக வேண்டாமே - ப்ளீஸ் ?!) #

    கண்டிப்பாக நோ ....என்றுமே சலிப்பதில்லை "கௌ பாய் " சாகசங்கள்....

    ********************************************

    Black & white இதழ்களை வரவேற்கிறீர்களா ? இவை தொடரலாமா ?
    'Yes' எனில் அவற்றில் யாரைக் காண ஆவல் ? (ப்ளீஸ், மாட்சிமைதங்கிய மும்மூர்த்திகளை துயில் எழுப்பக் கோர வேண்டாமே ?!!) #

    கண்டிப்பாக வரவேற்க்கிறேன் ...என்ன கொஞ்சம் குண்டாக இருந்தால் இன்னும் சந்தோஷம் ....

    மார்டின் ....மாடஸ்தி....ராபின் ....ரிப் ....மற்றும் டெக்ஸ் ....

    **********************************************
    தோர்கல் பற்றிய உங்கள் அபிப்ராயம் ? #

    என்ன சொல்றது என்று தான் தெரியலை சார் ..( உண்மையாகவே )

    ************************************************
    2013 & 2014-ன் நமது காமிக்ஸ் சேகரிப்பில் பெரியதொரு ஆர்வத்தைக் கிளப்பாது போன இதழ் எது ? இப்போது வரை படிக்கவே தோன்றவில்லை என்ற ரகத்தில் ஏதேனும் ....? #

    அப்படி ஏதும் இல்லை ..போரான கதைகள் இருக்கலாம் ....படிக்கவே தோன்ற வில்லை என்பது எல்லாம் நமது நிறுவனத்தில் வராது ...( என்பது என் கருத்து )

    ************************************************
    தற்போதைய கேப்டன் டைகரின் இளம் பிராயத்து சாகசங்களை தொடரலாமா ? அல்லது 2015-க்கு - மின்னும் மரணமே போதுமென்று கருதிடலாமா ? #

    தொடரலாம் ....ஆனால் "பிச்சு பிச்சு " கதைகள் எனில் வேண்டாம் ....

    ***********************************************
    ரிப்போர்டர் ஜானி ...? ப்ருனோ பிரேசில் ? சாகச வீரர் ரோஜர்...? இவர்களது எதிர்காலங்கள் எவ்விதமோ - நமது வாசிப்பு ரசனை வரிசையில் ? #

    ரோஜர் எதிர் பார்த்து கடைசியில் மிகுந்த ஏமாற்றத்தை தான் அளித்துள்ளார் .அனால் ஜானி ...ப்ருனோ தொடரலாம் ..

    **************************************************

    புதியதொரு தலைமுறை கொஞ்சமே கொஞ்சமாகவேனும் நமது காமிக்ஸ் குடும்பத்தில் இணைந்து வருவதைக் கவனிக்கிறேன். இந்த சூழலில் நமது எழுத்து பாணி ; மொழிபெயர்ப்பு ஸ்டைல் மாற்றங்களின்றி இப்படியே தொடர்வது பற்றி உங்களது அபிப்ராயம் ?
    புதிய கதைத்தொடர்களுக்காவது - மொழிபெயர்ப்புப் பொறுப்புகளைப் புதியவர்களிடம் ஒப்படைத்து புதிய பாணியொன்றைத் தேடும் ஒரு சிந்தனையினை நீங்கள் எவ்விதம் பார்ப்பீர்கள் ? #

    நமது வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமே ..மொழி ஆக்கம் தாம் என்பது கண் கூடு ..புதியவர்களுக்கு வாய்பளிக்கும் அதே நேரத்தில் நமது "பழைய பாணியில் "இருந்து முற்றிலும் விலகாமல் இருந்தால் புதிய முறை ஓகே .

    *****************************************************
    ஆண்டவன் அருளோடு 2014-ன் அட்டவணை திட்டமிட்டபடியே பூர்த்தியாகும் பட்சத்தில் இந்தாண்டில் நாம் வாசித்திருக்கப் போகும் கதைகளின் எண்ணிக்கை 50-ஐத் தொடும் ! டூ..டூ. மச் ? Your thoughts ? #
    ஆமாம் சார் ...டூ ..டூ ...மச் .....தான் .....50 எல்லாம் பத்தாது .....அடுத்த வருடம் ஆவது இன்னும் முன்னேறுவோம்...

    ***************************************************
    வரக் காத்திருக்கும் "தேவ இரகசியம் தேடலுக்கல்ல.." ; "இரவே..இருளே..கொல்லாதே..!" - உங்களில் ஏற்படுத்துவது எதிர்பார்ப்புகளையா ? அல்லது - 'முட்டைக்கண்ணனுக்கு ஏன் இந்த கொக்கு மாக்கு வேலை ? " என்ற சிந்தனைகளா ? #

    இரண்டுமே ..இல்லை......"என்னமோ போங்க " என்ற சிந்தனை தான் ... :-)

    ***********************************************************
    சிறார்களுக்கென கார்டூன்களை இன்னும் கொஞ்சம் அதிகமாய் நுழைக்கும் சிந்தனையை எவ்விதம் பார்ப்பீர்கள் ?
    2015-ன் அட்டவணையில் நீங்கள் எதிர்பார்க்கப் போவது முத்திரை பதித்த நாயகர்களின் தொடர்ச்சிகளையா ? அல்லது புது வரவுகளையா ? #

    சிறுவன் என்ற முறையில் இன்னும் "கார்டூனை " அதிகம் எதிர் பார்க்கிறேன் சார் ....

    முத்திரை பதித்த நாயகர்கள் 80 % புது வரவு 20 %

    *****************************************************

    ReplyDelete
  21. lms எனும் ராட்சத சுனாமி அலையில் இருந்து மீண்டு வர சற்றே காலம் ஆகும் என்பது தாங்கள் அறியாத ஒன்றல்லவே சார். என்ன நண்பர்களே அனைவரும் நலமா ?. 15நீண்ட பதில்கள் கடிதம் வாயிலாக சார். தற்போதை உடனடி தேவை "தலை"தீபாவளி சார். அதற்கு ஆவண செய்து விட்டு 2015ல் நுழைய வேண்டி கேட்டு கொள்கிறேன் சார். எங்களை சந்தோஷமாக பட்டாசு வெடிக்க வைப்பது உங்கள் கையில் சார். பிளீஸ் இந்த சோதனை எல்லாம் தீபாவளிக்கு வேண்டாமே சார். மன்றம் இல்லைனா என்ன ? என்ன குறை தலைக்கி ?

    ReplyDelete
    Replies
    1. தீபாவளிக்கு டெக்ஸ் கண்டிப்பாக வேண்டும்..

      Delete
    2. இதை நான் வழிமொழிகிறேன்.

      Delete
    3. சில விஷயங்கள் பழகி போச்சு சார் ...

      சாண்ட்விச் .....னா ...எக்ஸ் ..

      பிரியாணி .......னா ...லெக்ஸ் ...

      ஜல்ப்பு .....னா ...விக்ஸ் ....

      தீபாவளி ...னா ..டெக்ஸ் ...

      சும்மா போடுங்க சார் .....


      Delete
    4. selvam laxmi @ டி.ஆர் மாதிரி கலக்குறிங்க.

      // பிரியாணி .......னா ...லெக்ஸ் ...// ஹா ஹா

      Delete
    5. I Support Tex Willer for Deepavali.....

      Delete
  22. Black & white இதழ்களை வரவேற்கிறீர்களா ? இவை தொடரலாமா ?
    'Yes' எனில் அவற்றில் யாரைக் காண ஆவல் ? (ப்ளீஸ், மாட்சிமைதங்கிய மும்மூர்த்திகளை துயில் எழுப்பக் கோர வேண்டாமே ?!!)

    லாரேன்ஸ் டேவிட் ...........புதுசு

    இரட்டை வேட்டையர் ..........


    பேய் வீரர் செக்ஸ்டன் ...........

    ஸ்பைடர் மனசு கேக்கலை

    ReplyDelete
  23. தற்போதைய கேப்டன் டைகரின் இளம் பிராயத்து சாகசங்களை தொடரலாமா ? அல்லது 2015-க்கு - மின்னும் மரணமே போதுமென்று கருதிடலாமா ? (unbiased opinions ப்ளீஸ் ? ; தல, தளபதி ரசிகக் கண்மணிகளின் முத்திரைகளின்றி ?)


    கண்டிப்பா வேணும் ............நோ பிச்சிங்

    ReplyDelete
  24. ரிப்போர்டர் ஜானி ...? ப்ருனோ பிரேசில் ? சாகச வீரர் ரோஜர்...? இவர்களது எதிர்காலங்கள் எவ்விதமோ - நமது வாசிப்பு ரசனை வரிசையில் ?

    எஸ் எஸ்

    ReplyDelete
  25. சிறார்களுக்கென கார்டூன்களை இன்னும் கொஞ்சம் அதிகமாய் நுழைக்கும் சிந்தனையை எவ்விதம் பார்ப்பீர்கள் ?

    நாங்களே இன்னும் டௌசெர் போட்டுட்டு தானே சுத்துறோம்

    ReplyDelete
    Replies
    1. சுட்டி லக்கி பபடிக்கும்போது ....

      அத கூட போடாம .........

      Delete
    2. புடிங்க ''பீடிங் பாட்டில்''

      Delete
  26. கௌபாய் கதைகளை ரொம்பவே துவைத்துத் தொங்கப் போடுகிறது போல் உங்களுக்குத் தோன்றுகிறதா ? பதில் 'ஆமாம்' எனில் - 'கிளம்பு நைனா..' என்று யாரை மூட்டை கட்டச் சொல்லலாம் ? (தல ; தளபதி WWF இதற்குள் கண்டிப்பாக வேண்டாமே - ப்ளீஸ் ?!)

    யாரும் கிளம்ப வேண்டாம் ..........

    முடிஞ்சா மஞ்சள் சட்டையை நிறம் மாற்றவும்............

    நிறம் மாறா பூக்கள்

    ReplyDelete
  27. தோர்கல் பற்றிய உங்கள் அபிப்ராயம் ?

    வரிசை கிரமமாக போடாமல் ............சுவையின் அடிப்படையில் போடவும் .....

    யானை கல்லறை இரண்டாம் பாகம் ...........முதலில் வந்த போல ..............

    ReplyDelete
  28. கண்டிப்பாக கருப்பு வெள்ளை இதழ்கள் வேண்டும். மார்ட்டின்ரிப்போர்டர் ஜானி . ப்ருனோ பிரேசில் சாகச வீரர் ரோஜர், டெக்ஸ் கதைகள் கண்டிப்பாக கருப்பு வெள்ளையில் வேண்டும். அதிக கார்ட்டூன் கதைகள் நிச்சயம் வரவேற்கததகுந்ததே.//சிறுவன் என்ற முறையில் இன்னும் "கார்டூனை " அதிகம் எதிர் பார்க்கிறேன் சார்//me too.
    //.50 எல்லாம் பத்தாது .....அடுத்த வருடம் 100

    ReplyDelete
  29. இவ்வளோ கேள்விக்கும் பதில் வந்த பிறகு ஜகா வாங்க கூடாது ...............

    கருப்பு வெள்ளை ஹீரோவுக்கு ஓட்டெடுப்பு முறை நல்லது ..........

    கள்ள வோட்டேர்ஸ் ரெடியா

    ReplyDelete
  30. நானே இவ்வளோ எழுதிட்டேனே .............இரும்பு கை வந்தால் .................

    ReplyDelete
  31. Tiger must continue even after Minnum Maranum .... Diabolik , Martin and Robin can be published in B&W .. One mega Tex special must be there every year ... Johnny must be continued but Roger and Bruno Brazil can be limited ... Regarding graphic novels they can be judged only after reading full story.. Try publishing that graphic novel based on our freedom fighters sir ... It ll be nice to have a indian based story in our list ....

    ReplyDelete
    Replies
    1. //Johnny must be continued but Roger and Bruno Brazil can be limited ..//

      +1

      Delete
  32. டெக்ஸ், லக்கி, பிரின்ஸ், போன்றவர்கள் வராத மாதங்களில் புத்தகம் வாங்கும் ஆர்வம், மன சந்தோஷம் குறையத்தான் செய்கிறது.. தீபாவளிக்கு டெக்ஸ் கதை வேண்டும் கண்டிப்பாக...

    ReplyDelete
  33. B&W புத்தகங்களில் ஒவ்வொரு மாதமும் சிறுவயதில் ரசித்த ஹீரோக்கள் வேண்டும்..

    ReplyDelete
  34. செங்குருதிச் சாலைகள் & காதலிக்கக் குதிரையில்லை - இரண்டு கதைகளின் அட்டை படம் அருமை! இந்த அட்டைபடங்கள் பல புதிய வாசகர்களை நம் பக்கம் இழுக்க வாய்புகள் அதிகம். நமது ஆஸ்தான ஓவியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து விடுங்கள்!

    ReplyDelete
  35. விஜயன் சார், தீபாவளி வெளிஈடாக் வரும் கிராபிக் நாவல் உடன் நம் அனைவருக்கும் பிடித்த ஒரு காதநாயகர் கதையும் சேர்ந்து வந்தால் "தீபாவளி" முழு திருப்தி கிடைக்கும், இதனை ஆவன செய்வீர்களா?

    ReplyDelete
  36. 2015 இல் தங்கள் மதிப்பெண் எவ்வளவோ ஆனால் இந்த வருட தீபாவளிக்கு " தல " வர வில்லை என்றால் நான் கண்டிப்பாக தீபாவளி அன்று தலைக்கு குளிக்க மாட்டேன் .இது "டெக்ஸ் " மீது ஆணை....

    எங்கள் போராட்ட குழுவின் அடுத்த கட்ட போராட்டம் இது ......ஆசிரியர் சார் .....மறந்து விடாதீர்கள் ...

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் நண்பரே,போராட்ட குழுவின் அடுத்த கட்ட போராட்டம் இது .ஆசிரியர் சார். மறந்து விடாதீர்கள் .

      Delete
    2. //கண்டிப்பாக தீபாவளி அன்று தலைக்கு குளிக்க மாட்டேன் .//

      நான் அடுத்த தீபாவளி வரை

      குளிக்கவே மாட்டேன் .....

      Delete
    3. //கண்டிப்பாக தீபாவளி அன்று தலைக்கு குளிக்க மாட்டேன் .//
      // நான் அடுத்த தீபாவளி வரை குளிக்கவே மாட்டேன் .//

      ஊருக்குள்ள தண்ணி பிரச்னை இருக்கிறத இப்படி கூட மறைக்கலாமா? நல்ல ஐடியாவா இருக்கே :-)

      Delete
  37. செப்டம்பரின் மூன்றாவது கதை ? BW ல் மார்டின்..மாடஸ்டி தொடரட்டும்

    ReplyDelete
  38. அன்புள்ள ஆசிரியரே....
    2014-ல் இதுவரை LMS- ஸை தவிர அனேக இதழ்கள் உங்கள் தமிழுக்காக மட்டுமே வாசித்தேன் என்பது தான் உண்மை.கருப்பு வெள்ளை வந்தாலே போதும் இன்னும் ஆழமாக சித்திரங்களை ரசித்து படிக்கலாம் என்ற எண்ணம் தோன்றிவிட்டதற்கு காரணம் என்னவாக இருக்க முடியும் ..?
    நில் கவனி சுடு.. இதழின் முன் அட்டைப்படத்தின் உள் பகுதியில் "விரியனின் விரோதி"ஒரு பக்க விளம்பரம் கருப்பு /வெள்ளையில் வெளியிட்டிருந்தீர்கள்.அதில் இருந்த துல்லியம் வண்ணத்தில் சுத்தமாக இல்லை .அற்புதமான கதை அது .உங்கள் தமிழுக்காக மட்டும் ஒரே ஒரு முறை வாசித்தேன் .மற்றவர்களின் மொழிபெயர்ப்பு /தமிழ் இப்படிப்பட்ட சூழ்நிலையில் கைகொடுக்குமா என்று யோசியுங்கள்.
    2.கருப்பு /வெள்ளை நிச்சயம் தேவை .விலை கட்டுக்குள் இருக்கும் /அதிகமான வாசகர்களை சென்றடையும் .ரிப் கிர்பி ,ரோஜர் ,ஜெஸ்லாங் ,ஜானி ஆகியோரை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும் .
    3.வருடத்தில் மூன்று அல்லது நான்கு முறை LMS - அச்சுத்தரத்தில் அருமையான வண்ணக்கதைகளையும் மற்ற மாதங்களில் கருப்பு /வெள்ளை என அட்டகாச தரத்தில் வெளியிடலாம்.விலைகளை ஏற்றவும்,மாற்றி அமைக்கவும் அதிக சுதந்திரம் கிடைக்கும் .சொதப்பலான வண்ண அச்சுதரத்திலிருந்து நமக்கும் ஒரு நல்ல மாறுதல் கிடைக்கும் .
    4.சிறுவர்களுக்கான கார்ட்டூன் உங்கள் /எங்கள் நெடுநாள் ஆசை .தனி இதழ் என்னுடைய சாய்ஸ்.
    5.கமான்சே போன்ற தொடர்களில் ஒரு கதையை நாம் சுத்தமாக மறந்தபின் தான் அடுத்த கதை என்ற அளவிற்கு ஜவ்வாக இருக்கிறீர்கள்.ஒரு கதையை முழுமையாக ரசித்த அனுபவம் கிடைப்பதில்லை .
    6.காமிக்ஸ் என்றாலே கௌபாய்கள் தான்.நம்முடைய. வாழ்க்கையில் பார்த்திராத பாலைவங்களும் குதிரைகளும் ,நூற்றாண்டுகளுக்கு முந்தைய கலாச்சாரங்களும் கௌபாய் கதைகளில் மட்டுமே கிடைப்பதாகையால் ...கௌபாய்கள் என்றுமே முதல் சாய்ஸ்.சலிக்கவேமாட்டார்கள்.
    7.கிராபிஃக் நாவல்கள் கிலி ஏற்படுத்துகின்றன .அதிலும் மட்டமான 3D எஃபெக்ட்ஸ் அச்சுதரத்தில் அமைந்து விட்டால் அவ்வளவு தான்.விரக்தியின் எல்லைக்கு கொண்டு போய்விடும் .
    கதம்....கதம்

    ReplyDelete
    Replies
    1. // காமிக்ஸ் என்றாலே கௌபாய்கள் தான்.நம்முடைய. வாழ்க்கையில் பார்த்திராத பாலைவங்களும் குதிரைகளும் ,நூற்றாண்டுகளுக்கு முந்தைய கலாச்சாரங்களும் கௌபாய் கதைகளில் மட்டுமே கிடைப்பதாகையால் .//
      +1

      Delete
  39. காமிக் ஆசானை மயக்க நமக்கு தேவை
    1.யூரி பார்வை
    2.நிலா ''கல்''

    ReplyDelete
    Replies
    1. இதை புரிந்து கொள்ள கண்டிப்பாக வெள்ளையாய் ஒரு வேதாளம் படித்திருக்க வேண்டும்

      Delete
  40. Replies
    1. @ Parani from Bangalore
      // எங்களை சிறு வயதில் கவர்ந்த ஆர்ச்சி/ஸ்பைடர்/லாரன்ஸ்/ஜானிநீரோ போன்ற துப்பறியும், பாண்டஸி, எளிதில் புரியும் கதைகள் இன்றைய சிறுவர்களுக்கும் பிடிக்கும் என்பது எனது எண்ணம். //

      +1

      Delete
    2. ஜில் ஜோர்டன் கதை வருடம் ஒன்றாவது வேண்டும்.

      Delete
    3. எந்த ஒரு நாயகர்களின் கதைகளும் "பிச்சு பிச்சு " எனில் வேண்டாம்; முக்கியமாக டைகர், என்னை இவர் அதிகம் கவராமல் இருக்க ஒரு காரணம் இவரின் சகாசம்களை ஒரே இதழாக வெளி இடாதது. ஒவ்ஒரு வருடமும் இது பற்றி சொன்னாலும், தொடர்ந்து இது போன்ற சம்பவம் நடைபெறுவது வருத்தமான ஒரு விஷயம்; சமீபத்தில் உள்ள உதாரணம் L.M.S இதழில் வந்த டைகர் கதை!

      Delete
    4. //முக்கியமாக டைகர், என்னை இவர் அதிகம் கவராமல் இருக்க ஒரு காரணம் இவரின் சகாசம்களை ஒரே இதழாக வெளி இடாதது. ஒவ்ஒரு வருடமும் இது பற்றி சொன்னாலும், தொடர்ந்து இது போன்ற சம்பவம் நடைபெறுவது வருத்தமான ஒரு விஷயம்; சமீபத்தில் உள்ள உதாரணம் L.M.S இதழில் வந்த டைகர் கதை! //
      +1

      if there is only 3 ,4 episodes in a story try to make it as 2 editions or if possible one edition Edit.
      "பிச்சு பிச்சு " வேண்டாம்!

      Delete
  41. ஹா ஹா ஹா... எடிட்டர் சார், இப்போதுதான் மொழிபெயர்ப்பு பற்றிய சிந்தனை வந்ததா உங்களுக்கு?

    ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை - கிராதகர்கள் - விரியன்கள் - துஷ்டர்கள் - அவ்வப்போது தலைகாட்டும் பழைய சினிமா பாடல் வரிகள் - திருக்குறள் வரிகள்....
    இவைகள் எல்லாம் பல்லிடுக்கில் மாட்டிய பீட்சா துகள் போன்றுதான் இருக்கின்றன

    ரின்டின்கேன் மொழிபெயர்ப்பு கதை படிக்கும் சுவாரசியத்தை பதம் பார்த்தது உண்மை.

    கமான்சே வரிசையில் 3-வது கதை படிக்காத என் போன்ற ஆசாமிகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?

    தங்கக்கல்லறை மற்றும் சட்டம் அறிந்திரா சமவெளி ஆகிய இரண்டு கதைகளையும் மனத்திரையில் கொண்டு வந்து விட்டு, பின்னர் மோட்டுவளையைப் பார்த்து சிந்தித்து விட்டு, பின்னர் மார்ஷல் டைகர் பற்றி முடிவுக்கு வாருங்கள். (2015 முழுக்க டைகர் என்று மட்டும் கூட நீங்கள் முடிவுக்கு வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை)... நம்மமாளுங்கல்லாம் ஜோரா கைதட்டுங்கப்பா...

    ரிப்போர்ட்டர் ஜானியை எப்படி தவிர்க்க முடியும்?

    மார்ட்டின், ஜீலியா கதைகள் கருப்பு வெள்ளையில் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆகவே தொடரலாம்...

    தோர்கல் - இப்போதுதான் சுவாரசியமாப் போக ஆரம்பித்திருக்கிறது... எதற்காக நிறுத்த வேண்டும்?

    கருப்பு வெள்ளையில் புதிய கதைகள் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. //தங்கக்கல்லறை மற்றும் சட்டம் அறிந்திரா சமவெளி ஆகிய இரண்டு கதைகளையும் மனத்திரையில் கொண்டு வந்து விட்டு, பின்னர் மோட்டுவளையைப் பார்த்து சிந்தித்து விட்டு, பின்னர் மார்ஷல் டைகர் பற்றி முடிவுக்கு வாருங்கள். (2015 முழுக்க டைகர் என்று மட்டும் கூட நீங்கள் முடிவுக்கு வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை)... நம்மமாளுங்கல்லாம் ஜோரா கைதட்டுங்கப்பா...
      //
      +1

      Delete
    2. டைகர் டெக்ஸ் இருவருமே நமது காமிக்ஸிற்கு இரு கண்களை போன்றவர்கள்
      இங்கு நடக்கும் சண்டையினைப் பார்த்து நீங்கள் எந்த முடிவிற்கும் வந்து விட வேண்டாம்
      இதெல்லா சும்மா லுலுலுலு....

      Delete
  42. அன்பு எடிட்டர்

    ஐம்பது இதழ்கள் கூடுதலாக கொடுத்தாலும் வாங்கவும்,படிக்கவும் ரெடி

    வேறு ஒருவரின் மொழிபெயர்ப்பு கதைகளின் தொடரோட்டத்தில் லயிக்க உதவுமா என்று

    தெரியாததால், அப்படி ஒரு சிந்தனை வேண்டாமே ப்ளீஸ்...

    தோர்கல்... ஆரம்பித்தாயிற்று ...ம் ..அரைகுறையாக விட்டுவைப்பானேன்.....

    காமிக்ஸ்= கௌபாய் என்பது வரலாறு ....போரடிக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை....

    மோசமான இதழ் என்று எதுவுமில்லை.... இன்னொருமுறை படிக்கதூண்டத இதழ்கள் என்றும்

    எதுவுமில்லை (டைகர் கதைகளை தவிர)

    குழந்தைகளுக்கான இதழுக்கு நிச்சயம் வரவேற்ப்பு உண்டு ...ஆங்கில மீடியத்தில் படிக்கும் குழந்தைகள்

    தமிழின் சுவை உணர இது ஒரு வரப்பிரசதமாக இருக்கும்...

    கருப்பு வெள்ளை அவசியம் தேவை..... மாடஸ்டி,ஜானி, மார்டின்,முதலை பட்டாளம், ரிப், மாண்டிரெக் கதைகள்

    அவற்றில் இடம்பெறலாம்......

    இ.இ.கொ, தே.ர.தே போன்றகதைகள் ஆவலை தூண்டுகின்றன....இது போன்ற கதைகள் ஒரு மாறுதலை

    தரும் என்பதில் ஐயமில்லை...

    டைகர் கதைகள் தொடரலாம் (செலக்டிவாக)

    புதியவர்களுக்கு இடம் கொடலாம்


    ReplyDelete
    Replies
    1. //இ.இ.கொ, தே.ர.தே போன்றகதைகள் ஆவலை தூண்டுகின்றன....இது போன்ற கதைகள் ஒரு மாறுதலை

      தரும் என்பதில் ஐயமில்லை...//

      +1

      Delete
  43. கருப்பு வெள்ளையில் தல டெக்ஸ் , உள்ளம் கவர் கள்வன் டைய பாலிக் மேலும் மர்ம மனிதன் மார்டின் தொடர்ந்து வந்தால் மகிழ்ச்சி!!!!

    ReplyDelete
  44. 1. 2014 TOP 3:
    - பூம்பூம் படம்
    - பிரபஞ்சத்தின் புதல்வன்,
    - விரியனின் விரோதி

    2. 2014-ன் 3 டப்பா:
    - சாகமறந்த சுறா (Super Flop)
    - முகமற்ற கண்கள் (ஐயோ)
    - காலத்தின் கால் சுவடுகளில் (...)

    3. கௌபாய் கதைகள்: No Problem

    4&5. Black & white கதைகள் Yes' எனில் அவற்றில் யாரைக் காண ஆவல்? No Idea. Depends on the availability of stories.

    6. தோர்கல்: ஒரிஜினல் Art work நல்ல தரத்தில் Sharp'ஆக இருந்தால் தொடரலாம்.

    7. 2013 - 14 இப்போது வரை படிக்கவே தோன்றவில்லை என்ற ரகத்தில் ஏதேனும் ....?
    - சாகமறந்த சுறா
    - முகமற்ற கண்கள்

    8. தற்போதைய கேப்டன் டைகரின் இளம் பிராயத்து சாகசங்களை தொடரலாமா?
    No idea

    9. ரிப்போர்டர் ஜானி ...? ப்ருனோ பிரேசில் ? சாகச வீரர் ரோஜர்...?
    - ரிப்போர்டர் ஜானி - OK
    - ப்ருனோ பிரேசில் - No idea
    - சாகச வீரர் ரோஜர் - Only selective stories or reprints please

    10 & 11 மொழிபெயர்ப்பு:
    வாசகர்களின் Nostalgia மற்றும் தனித்துவமான லயன் பிராண்ட் மொழிபெயர்ப்பு - இந்த இரண்டைக் கடந்து படைப்பாளர்களின் நோக்கிலும், கதைக்களத்துக்கு / பாத்திரங்களுக்கு பொருத்தமான தமிழிலும் மொழிபெயர்ப்புநடை அமைந்தே ஆகவேண்டிய பொதுவான தேவை நமக்கு உள்ளது. So it is upto you to decide sir!

    12 இந்தாண்டில் நாம் வாசித்திருக்கப் போகும் கதைகளின் எண்ணிக்கை 50-ஐத் தொடும் ! டூ..டூ. மச் ? Your thoughts ?
    இந்த எண்ணிக்கை போதுமானது.

    13 தேவ இரகசியம் தேடலுக்கல்ல.." ; "இரவே..இருளே..கொல்லாதே..!"
    Personally I am no longer a fan of Graphic Novels! :D

    14 சிறார்களுக்கென கார்டூன்
    எவ்வளவு கதைகள் கிடைத்தாலும் போடலாம் சார்! தேவைப்பட்டால் தனி பிராண்ட் / தனி சந்தாவும்.

    15. 2015-ன் அட்டவணையில் நீங்கள் எதிர்பார்க்கப் போவது
    முத்திரை பதித்த நாயகர்கள் = 2/3
    புது வரவுகள் = 1/3

    ReplyDelete
  45. "செங்குருதிச் சாலைகள்" இதழின் பின்னட்டை சித்திரம் வெள்ளை பேக்ரவுண்டில் நன்றாக உள்ளது. அதையே (பெரிய சைஸில் கிடைத்தால்) முன்னட்டைக்கு Attractive ஆக இருக்கும்! முன்னட்டையிலுள்ள பயங்கரமுகம் (நம்மூரில்) விற்பனையை பாதிக்கக்கூடும்!

    :D

    ReplyDelete
    Replies
    1. //செங்குருதிச் சாலைகள்" இதழின் பின்னட்டை சித்திரம் வெள்ளை பேக்ரவுண்டில் நன்றாக உள்ளது. ்//

      Delete
  46. selvam laxmi :

    Dasu bala :

    நண்பர்களே, என்னுடைய ஈமெயில் id க்கு, தாங்கள் இருவரும் தங்களின் விலாசத்தை அனுப்பி வைக்க வேண்டுகிறேன். அடுத்த மாதம் முதல் வாரத்தில் தங்களுக்கான NBS - dtdc கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். நன்றி !

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டர் மரமண்டை ......

      அளவில்லா ஆனந்தத்தில் மனம்

      துள்ளி ஆடுகின்றது .......

      நன்றிகள் பல .........

      நாளையே என் முகவரியை

      உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் ..

      :)..:)):))
      .


      Delete
    2. நன்றிகள் பல Mr.M

      Delete
    3. கிடைக்கவே கிடைக்காது என்று நினைத்த ஒரு புத்தகம் இப்போ கிட்டும் தூரத்தில் இருக்கிறது என்று நினைக்கும் போதே மனம் துள்ளுகிறது..i have sent mail to you...thanks

      Delete
  47. 2014ன் வெளியீட்டு லிஸ்டைத் தந்தால் பதில் சொல்ல இன்னும் வசதியாக இருந்திருக்கும். ஷெல்பில் கடந்த ஆண்டுகளின் மொத்த இதழ்கள் நிரம்பியிருக்கின்றன. அட்டைகளிலோ, உட்புறமோ மாதம், வருடம் பற்றிய குறிப்பும் கிடையாது. :-))))))))))))))))

    கமான்சே தொடர் ஏற்கனவே மிக நீண்ட இடைவெளியில் வெளியாவதால் அதன்மீது ஆர்வமே ஏற்படுவதில்லை, அதோடு ரொம்ப எளிதாக ஒரு அத்தியாயத்தை சட்டென ஜம்ப் செய்வது இன்னும் அநீதி! ஓநாய் கணவாயை இன்னும் படிக்காத வாசகர்களுக்கு தங்கள் பதில் என்ன?

    ReplyDelete
    Replies
    1. //கமான்சே தொடர் ஏற்கனவே மிக நீண்ட இடைவெளியில் வெளியாவதால் அதன்மீது ஆர்வமே ஏற்படுவதில்லை, அதோடு ரொம்ப எளிதாக ஒரு அத்தியாயத்தை சட்டென ஜம்ப் செய்வது இன்னும் அநீதி! ஓநாய் கணவாயை இன்னும் படிக்காத வாசகர்களுக்கு தங்கள் பதில் என்ன? //
      +1
      I don't have a copy of 'ஓநாய் கணவாய்' ,SUDDENLY JUMPING THE EPISODE ? not fair Edit. otherwise make 'ஓநாய் கணவாய்' available in world mart.

      Delete
    2. இதற்கும் பதிவிலேயே விளக்கம் இருக்கிறதே

      //அதிர்ஷ்டவசமாய் கமான்சேவின் கதைகள் சகலமும் தனித் தனியாய் படிக்கக் கூடிய பாணியில் இருப்பதால் என் பாடு சற்றே சுலபமாகிறது//

      Delete
    3. @Prunthaban, ஓநாய் கணவாய் (ஓராண்டுக்கு முன்) படிக்கும்போது ஏதோவொரு குழம்பிய மனநிலையில் படித்த ஞாபகம் எனக்கு.

      யு.உ.எ.இ படிக்கும்போது கண்டிப்பாக அடுத்த பாகத்துடன் இணைத்து வெளியிட்டிருக்கலாமோ என்ற எண்ணமே எழுந்தது. இந்த ரேஞ்சில் சென்றால் 5-6 பாகங்கள் வெளிவரும்போதே கமாண்சே சொதப்பல் என்ற அடையாளத்தை பெற்றுவிடும். வாய்ப்புள்ளது. அதாவது 2016'ல் :D

      Delete
  48. விஜயன் சார், கடந்த சில பதிவுகளில் தங்களின் வாசகர் உரையாடல் குறைந்து உள்ளது, ஏன் இந்த மாற்றம்?

    ReplyDelete
  49. //2014ன் வெளியீட்டு லிஸ்டைத் தந்தால் பதில் சொல்ல இன்னும் வசதியாக இருந்திருக்கும். ஷெல்பில் கடந்த ஆண்டுகளின் மொத்த இதழ்கள் நிரம்பியிருக்கின்றன. அட்டைகளிலோ, உட்புறமோ மாதம், வருடம் பற்றிய குறிப்பும் கிடையாது.//

    +1
    http://lion-muthucomics.com ல் கூட 2014ன் வெளியீட்டு லிஸ்ட் தனியாக இல்லை Vijayan sir .....

    ReplyDelete
  50. ///மனம் எனும் வானரம் தன்வாக்கில் எங்கெங்கோ ஜாலியாய்ச் சுற்றித் திரிகிறது ! 900+ பக்கங்களை ஆஞ்சநேயர் வால் போன்றதொரு நீ----ண்-----ட பட்டியலில் எழுதி வைத்துக் கொண்டு வேலை செய்த நாட்கள் திரும்பத் திரும்ப மண்டைக்குள் குறுக்கும், நெடுக்குமாய் சாலடிக்க,////

    So வருடத்திற்கு ஒரு 1000 பக்கம் புத்தகம் கண்டிப்பாக தருவீர்கள் என்ற நம்பிக்கையை தருகிறது..

    தயவு செய்து வருடத்திற்கு ரெண்டு Limited edition புத்தகமாக 800/1000 பக்கங்களில் வெளியிட வேண்டுகிறேன்....

    ReplyDelete
  51. அட்டைகளிலோ, உட்புறமோ மாதம், வருடம் பற்றிய குறிப்பும் கிடையாது---

    இனிவரும் இதழ்களில் இருந்தாவது அச்சிட்டால் உபயோகமாக இருக்கும்.

    ரொம்ப எளிதாக ஒரு அத்தியாயத்தை சட்டென ஜம்ப் செய்வது இன்னும் அநீதி! ஓநாய் கணவாயை இன்னும் படிக்காத வாசகர்களுக்கு தங்கள் பதில் என்ன?

    +11111111111111111111111111111111111111111111

    ReplyDelete
    Replies
    1. //ரொம்ப எளிதாக ஒரு அத்தியாயத்தை சட்டென ஜம்ப் செய்வது இன்னும் அநீதி! ஓநாய் கணவாயை இன்னும் படிக்காத வாசகர்களுக்கு தங்கள் பதில் என்ன?//

      +1

      Delete
  52. Replies
    1. //(இது வரையிலான) 2014-ன் TOP 3 இதழ்கள் உங்கள் பார்வையில் ? //

      1.விரியனின் விரோதி
      2.நில் கவனி சுடு + பூம்பூம் படலம்
      3.எஞ்சி நின்றவனின் கதை+காவியில் ஒரு ஆவி

      Delete
    2. 3=(1)+(2)+(2)

      3=(3)+(2)

      3=3

      கண்ணன் ! ராமானுஜன்

      படம் பாத்தீங்களா ?...சமீபத்தில் .....

      புது கணக்கு ஃபார்முலா கண்டு

      பிடிச்சிட்டீங்க -னு நினைக்கிறேன் ...;)

      Delete
    3. Selvam.:-

      ஏங்க. T.vயில மட்டும் Topten அப்படீன்னு சொல்லிப்புட்டு ,முதல் இடத்தை ரெண்டு படத்துக்கு குடுப்பாய்ங்க.!
      அப்புறம் புதுவரவுன்னு ஒரு அஞ்சாறு படத்தை காட்டுவாய்ங்க.! கணக்கு போட்டு பாத்தீங்கன்னா பதினஞ்சு படம் வந்துரும்.
      அந்த ஃபார்முலா வெச்சிதான் டாப் 3யை போட்டேன்.
      Top ten -15
      Top three -5
      சர்தானே சாரே.?

      Delete
    4. X= [B1] + [B2, B3] + [B4, B5]

      X= [B1] + [B2, B3] + " பணால்! "

      X= [B1] + [B2 <= டிஷ்யூம்! => [B3]

      X = [B1] + [B2] + [B3] <== ஜொய்ங்க்!

      X = 3B

      Delete
    5. // நவீன ராமானுஜர் //

      நல்லதொரு Username! :D

      Delete
  53. http://m.youtube.com/watch?v=HZ9NI9h1DTY

    //அட்டைகளிலோ, உட்புறமோ மாதம், வருடம் பற்றிய குறிப்பும் கிடையாது.//

    @sathya ....

    @S.V.VENKATESH .....

    இதுபற்றி எடிட்டர் சாரே விளக்கம்

    அளித்திருக்கிறார் ...

    அதற்கான YouTube URL மேலே கொடுக்க

    பட்டுள்ளது ......

    ReplyDelete
    Replies
    1. சரியான காரணம்தான். இணைப்பு தந்தமைக்கு நன்றி நண்பரே!

      Delete
  54. //2014-ன் 3 டப்பா இதழ்கள் ? //

    1.காலத்தின் கால்சுவடுகளில்+பனிக்கடலில் ஒரு பாழும்தீவு
    2.பயங்கரப் புயல்
    3.முகமற்ற கண்கள்

    ReplyDelete
    Replies
    1. Comicspriyan@
      அவற்றை டப்பா என்று சொல்ல முடியாது.சுமாரான கதைகள் என்று சொல்லலாம்.மேற்குறிப்பிட்ட கதைகள் மறுமுறை வாசிக்க விருப்பமில்லா கதைகள் என்றும் சொல்லலாம்.
      (நான் ரொம்ப ரசித்த கதைகளை டப்பா என சில நண்பர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள், அவரவர் விருப்பம் வேறுபடலாம்தானே.?)

      Delete
  55. //கௌபாய் கதைகளை ரொம்பவே துவைத்துத் தொங்கப் போடுகிறது போல் உங்களுக்குத் தோன்றுகிறதா ? பதில் 'ஆமாம்' எனில் - 'கிளம்பு நைனா..' என்று யாரை மூட்டை கட்டச் சொல்லலாம் ? //

    காமிக்ஸில் டாப்பான வகை கௌபாய் கதைகளே.
    கதை தேர்வுகள் சரியாக இருக்கும்பட்சத்தில் கௌபாய் கதைகள் என்றைக்கும் சலிப்பூட்டும் வாய்ப்பில்லை என்பது என் கருத்து.

    ReplyDelete
  56. //Black & white இதழ்களை வரவேற்கிறீர்களா ? இவை தொடரலாமா ?//

    நிச்சயமாக வரவேற்க்கிறேன்.இன்னும் கூடுதலாகவே தொடரலாம்.
    அடுத்த வருடம் க./வெ.க்கு மாதம் ஒரு இடம் ஒதுக்குங்கள் சார்.

    ReplyDelete
  57. //'Yes' எனில் அவற்றில் யாரைக் காண ஆவல் ? (ப்ளீஸ், மாட்சிமைதங்கிய மும்மூர்த்திகளை துயில் எழுப்பக் கோர வேண்டாமே //

    க./வெ என்றால் மும்மூர்த்திகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை.

    டெக்ஸ்
    ராபின்
    மார்ட்டின்&டயபாலிக்.(ஒன்றுக்கு மேல் வேண்டாம்.
    லாரன்ஸ்&டேவிட்.(வாய்ப்புண்டா சார்.)
    ஜூலியா (வருடம் ஒன்று.)
    இ.கா.இறப்பதில்லை போன்ற அபார களங்களில் உள்ள கதைகள்.
    விங் கமாண்டர் ஜார்ஜ்

    (இரண்டு மூன்று கதைகள் இணைத்து குண்ண்டு புக்கா வந்தா டபுள் சந்தோஷம்.)

    ReplyDelete
  58. //தோர்கல் பற்றிய உங்கள் அபிப்ராயம் ? //

    பரவாயில்லைக்கும் கீழே.!

    ReplyDelete
  59. //2013 & 2014-ன் நமது காமிக்ஸ் சேகரிப்பில் பெரியதொரு ஆர்வத்தைக் கிளப்பாது போன இதழ் எது ? இப்போது வரை படிக்கவே தோன்றவில்லை என்ற ரகத்தில் ஏதேனும் ....?//

    டயபாலிக்கின் இரண்டு கதைகளும்.(கும்பலோட கோவிந்தா போட்டுக்கிட்டு இருக்கு.)
    தோர்களும் அப்படியே.!
    படிக்கவே தோன்றவில்லை.(ஒரு முறைக்கு மேல்.)
    காலத்தின் கால் சுவடுகளில்.
    பயங்கரபுயல்.(பிரின்ஸ் ஷ்பெஸலும் கூட.)
    முகமற்ற கண்கள்
    சாக மறந்த சுறா

    இவைகளை இரண்டாம் முறை பார்க்கவே தோன்றவில்லை.

    (எவ்வளவு கலாய்த்தாலும் டைகர் கதைகள் கூட இரண்டாம் முறையும் படிக்க தோன்றுகிறது.)

    ReplyDelete
  60. //தற்போதைய கேப்டன் டைகரின் இளம் பிராயத்து சாகசங்களை தொடரலாமா ? அல்லது 2015-க்கு - மின்னும் மரணமே போதுமென்று கருதிடலாமா ? (unbiased opinions ப்ளீஸ் ? ; தல, தளபதி ரசிகக் கண்மணிகளின் முத்திரைகளின்றி ?)//

    டைகருக்கு தொல்லையே இங்கேதான் தொடங்குகிறது.
    மைக் S டோனாவன் (எ) ப்ளுபெர்ரி அவர்களின் இளம்பிராயத்தை எப்போது படிக்க ஆரம்பித்தோம்.,இப்போது எந்த இடத்தில் நிற்கிறோம்.,ம்ஹூம் எதுவுமே நினைவில்லை.
    விறுவிறுப்பான திரைக்கதையை வருடத்திற்க்கு ரெண்டு ரீல் முன்னுக்குப்பின் முரணாக பார்க்கும் உணர்வே மிஞ்சுகிறது.
    டைகரின் இளம்பிராயம் வருவதில் ஆட்சேபனை ஏதுமில்லை.
    ஒரே ஒரு வேண்டுகோள்.:-
    இரத்த கோட்டை.,வண்ணத்தில் முழுத்தொகுப்பாக 2016ல் கட்டாயம் வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. :)

      //இரத்த கோட்டை.,வண்ணத்தில் முழுத்தொகுப்பாக 2016ல் கட்டாயம் வேண்டும்//

      +1

      Delete
    2. --மைக் S டோனாவன் (எ) ப்ளுபெர்ரி அவர்களின் இளம்பிராயத்தை எப்போது படிக்க ஆரம்பித்தோம்.,இப்போது எந்த இடத்தில் நிற்கிறோம்.,ம்ஹூம் எதுவுமே நினைவில்லை.--

      //இரத்த கோட்டை.,வண்ணத்தில் முழுத்தொகுப்பாக 2016ல் கட்டாயம் வேண்டும்//

      +111111111111111111

      Delete
  61. 1. (இது வரையிலான) 2014-ன் TOP 3 இதழ்கள் உங்கள் பார்வையில் ? (LMS வேண்டாமே ஆட்டத்துக்கு !!)
    1. நினைவுகளைத் துரத்துவோம்!
    2. நில்... கவனி.. சுடு..!
    3. கப்பலுக்குள் களேபரம்!
    4. பூம்... பூம்.. படலம்..
    5. அட்லாண்டாவில் ஆக்ரோஷம்!

    2. 2014-ன் 3 டப்பா இதழ்கள் ?
    சுமார் ரகங்கள்:
    1. காலத்தின் கால் சுவடுகளில்.
    2. காவியில் ஒரு ஆவி.
    3. சாக மறந்த சுறா!

    3. கௌபாய் கதைகளை ரொம்பவே துவைத்துத் தொங்கப் போடுகிறது போல் உங்களுக்குத் தோன்றுகிறதா ? பதில் 'ஆமாம்' எனில் - 'கிளம்பு நைனா..' என்று யாரை மூட்டை கட்டச் சொல்லலாம் ? (தல ; தளபதி WWF இதற்குள் கண்டிப்பாக வேண்டாமே - ப்ளீஸ் ?!)
    மேஜிக் விண்ட் B/W-ல் முயற்சிக்கலாம், கேப்டன் டைகருக்கு தற்காலிக ஓய்வளிக்கலாம். (பார்க்க விரிவான பதில் Q. No. 8) அந்தயிடத்தில் தங்கள் கைவசமுள்ள புதிய நாயகர் Jonathan Cartland-டை கொண்டு வரலாமே..?

    4. Black & white இதழ்களை வரவேற்கிறீர்களா ? இவை தொடரலாமா ?
    வரவேற்கிறேன்! இதைதான் நான் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன்! ஆனால் வர்ணம் என்ற (புதிய) காற்றாற்று வெள்ளத்தில் கருப்பு/வெள்ளை எடுபடாமல் போயிற்று!

    5. 'Yes' எனில் அவற்றில் யாரைக் காண ஆவல் ? (ப்ளீஸ், மாட்சிமைதங்கிய மும்மூர்த்திகளை துயில் எழுப்பக் கோர வேண்டாமே ?!!)
    ம. ம. மார்டின், CID ராபின், ஜூலியா, டைலன், மேஜிக் விண்ட், மாடஸ்டி, சிட்கோ கிட், ஜான் ஸ்டீல் மற்றும் ரிப் கெர்பி. தனித்தனி இதழாகயில்லாமல் COMBO-வில் வெளியிடலாம்! i, e., 200 பக்கங்களில் ம. ம. மார்டின் + CID ராபின், ஜூலியா + டைலன் டாக் போன்ற COMBO PACKAGE- ல் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்!

    6. தோர்கல் பற்றிய உங்கள் அபிப்ராயம் ?
    தோர்கல் ஒரு நீளமான தொடரென்பதால் அதை ஆரம்பித்ததே சரியன்று? வருடத்திற்கு 2 கதையென்றால் எப்போது இதை நிறைவு செய்வது? (வந்த 2 கதைகளை நான் இன்னும் வாங்கவேயில்லை!) இவையெல்லாம் குறைந்தது 5-6 பாகங்கள் ஒன்றாக வெளிவந்தால் மட்டுமே சுவராஸ்யம் கிடைக்கும், ஆனால் அதுப்போல் வெளிவருவதற்கான சாத்தியமுண்டா....? ஆகையால் இத்தோடு தோர்கல் மூட்டைக்கட்டுதல் நலம்.

    7. 2013 & 2014-ன் நமது காமிக்ஸ் சேகரிப்பில் பெரியதொரு ஆர்வத்தைக் கிளப்பாது போன இதழ் எது ? இப்போது வரை படிக்கவே தோன்றவில்லை என்ற ரகத்தில் ஏதேனும் ....?
    பிரளயத்தின் பிள்ளைகள், ஒரு சிப்பாயின் சுவடுகளில்…

    to be continued.....

    ReplyDelete
    Replies
    1. //தோர்கல் ஒரு நீளமான தொடரென்பதால் அதை ஆரம்பித்ததே சரியன்று? வருடத்திற்கு 2 கதையென்றால் எப்போது இதை நிறைவு செய்வது? (வந்த 2 கதைகளை நான் இன்னும் வாங்கவேயில்லை!) இவையெல்லாம் குறைந்தது 5-6 பாகங்கள் ஒன்றாக வெளிவந்தால் மட்டுமே சுவராஸ்யம் கிடைக்கும், ஆனால் அதுப்போல் வெளிவருவதற்கான சாத்தியமுண்டா....?//
      +1

      ?. Edit Same question

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. வரும் காலம்களில் இது சாத்தியம் என்பது எனது எண்ணம், நமது ஆசிரியர் இவைகளை "Collector Edition" ஆக வெளி இட வாய்புகள் அதிகம்! இதனை நான் ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

      Delete
    4. // ம. ம. மார்டின், CID ராபின், ஜூலியா, டைலன், மேஜிக் விண்ட், மாடஸ்டி, சிட்கோ கிட், ஜான் ஸ்டீல் மற்றும் ரிப் கெர்பி. தனித்தனி இதழாகயில்லாமல் COMBO-வில் வெளியிடலாம்! i, e., 200 பக்கங்களில் ம. ம. மார்டின் + CID ராபின், ஜூலியா + டைலன் டாக் போன்ற COMBO PACKAGE- ல் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்! //
      இதில் மாடஸ்டி கதையும் சேர்த்து கொண்டால் எனது ஆதரவு உண்டு :-)

      Delete
  62. 8. தற்போதைய கேப்டன் டைகரின் இளம் பிராயத்து சாகசங்களை தொடரலாமா ? அல்லது 2015-க்கு - மின்னும் மரணமே போதுமென்று கருதிடலாமா ? (unbiased opinions ப்ளீஸ் ? ; தல, தளபதி ரசிகக் கண்மணிகளின் முத்திரைகளின்றி ?)

    2015-ல் மின்னும் மரணம் இதழுக்குக்கப்புறம் டைகர் கதைகளுக்கு ஒரு பிரேக் கொடுக்கலாம்?
    இப்போது தொடராக நீளும் டைகரின் இளம் பிராயத்து கதைகளில் உள்ள பெரிய பிரச்சனை என்னவென்றால், அவைகள் முழுமையாக வெளிவராமல் பிட்டு பிட்டாக installment-ல் வெளிவந்து அதை நாம் படிக்க நேருவதுதான். (முழுமையாக வெளிவருவதற்கான சாத்தியங்கள் குறைவுவென்பது வேறு விஷயம்) பிட்டு பிட்டாப் படிப்பதினால் கதையின் ஜீவனையிழந்து அதில் நாம் ஒன்றமுடியாமலும், ஒரு கோர்வையில்லாமல் சுவராஸ்யமற்றுப் போகிறது.

    டைகரின் இளம் பிராயத்து கதைகளில் அடுத்து வரவிருக்கும் 11 பாகங்களில், நாம் வருடத்திற்கு 2 இதழ்கள் என்றாலும் கூட அதை முடிக்க 5-6 வருடங்களாகிவிடும். இப்படி நாம் installment-ல் படித்துவிட்டு கொடுக்கும் review ஒன்று கதை மொக்கை அல்லது சொதப்பல் என்பதாகத்தானிருக்கும். ஆகையால் இவருடைய slot-டை வேறொரு நாயகருக்கு கொடுக்கும் பட்சத்தில் பிரயோஜனமாகயிருக்கும். டைகருக்கு என்றுமே நெஞ்சிலே இடமுண்டுதானே....!

    9. ரிப்போர்டர் ஜானி ...? ப்ருனோ பிரேசில் ? சாகச வீரர் ரோஜர்...? இவர்களது எதிர்காலங்கள் எவ்விதமோ - நமது வாசிப்பு ரசனை வரிசையில் ?
    ஜானி கதைகள் ஓகே. ப்ருனோ பிரேசில் & ரோஜர் waiting list-ல் வைக்கலாமே!

    10. புதியதொரு தலைமுறை கொஞ்சமே கொஞ்சமாகவேனும் நமது காமிக்ஸ் குடும்பத்தில் இணைந்து வருவதைக் கவனிக்கிறேன். இந்த சூழலில் நமது எழுத்து பாணி ; மொழிபெயர்ப்பு ஸ்டைல் மாற்றங்களின்றி இப்படியே தொடர்வது பற்றி உங்களது அபிப்ராயம் ?
    வேறு பாணியில் முயன்றுதான் பார்ப்போமே! மோசமென்றால், இருக்கவே இருக்கிறது பழைய குருடி, கதவை திறடி....

    11. புதிய கதைத்தொடர்களுக்காவது - மொழிபெயர்ப்புப் பொறுப்புகளைப் புதியவர்களிடம் ஒப்படைத்து புதிய பாணியொன்றைத் தேடும் ஒரு சிந்தனையினை நீங்கள் எவ்விதம் பார்ப்பீர்கள் ?
    புதிய பேனா, புத்தி சிந்தனை வரவேற்கத்தக்கதுதான். புதியவர்கள் மொழிபெயர்ப்பு என்னும் குதிரையில் வேகமாக பயணித்தாலும், குதிரையைக் கண்காணிப்பதும், அதன் கடிவாளம் உங்கள் கைகளில் இருப்பதும் பிரச்சனைக்கு வழி வகுக்கா!

    12. ஆண்டவன் அருளோடு 2014-ன் அட்டவணை திட்டமிட்டபடியே பூர்த்தியாகும் பட்சத்தில் இந்தாண்டில் நாம் வாசித்திருக்கப் போகும் கதைகளின் எண்ணிக்கை 50-ஐத் தொடும் ! டூ..டூ. மச் ? Your thoughts ?
    ஆண்டவனின் அருளோடு 2015-ன் அட்டவணையில் கதைக்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாகட்டும்!

    13. வரக் காத்திருக்கும் "தேவ இரகசியம் தேடலுக்கல்ல.." ; "இரவே..இருளே..கொல்லாதே..!" - உங்களில் ஏற்படுத்துவது எதிர்பார்ப்புகளையா ? அல்லது - 'முட்டைக்கண்ணனுக்கு ஏன் இந்த கொக்கு மாக்கு வேலை ? " என்ற சிந்தனைகளா ?
    புதிய களம், புதிய பாணி, இதுவரை பார்த்திடாத புதிய ஹீரோ போன்ற கிராபிக் நாவல்களை வருடத்திற்கு 2 இதழ்கள் வெளியிடலாம். ஆனால் அவைகள் ஆக் ஷன், க்ரைம், சஸ்பென்ஸ், திகில் போன்ற ஜானர்களில் இருப்பது அவசியம். (சோகம் நிழலாடும் காவியங்கள் வேண்டாம்)

    14. சிறார்களுக்கென கார்டூன்களை இன்னும் கொஞ்சம் அதிகமாய் நுழைக்கும் சிந்தனையை எவ்விதம் பார்ப்பீர்கள் ?
    Always Welcome. 2015 ஆண்டு முதல் மீண்டும் மினி லயனை கொண்டுவருவதன் மூலம் கார்டூன் நாயகர்களை அழகாக மாதம்தோறும் ஒன்றென்று அணிவகுக்கச் செய்யலாம். மினி லயன், நமது மற்ற brand-களை disturb செய்யாமல் தனி track-ல் கார்டூன் கதைகளை கொண்டு செல்ல ஏதுவாகயிருக்கும்!

    15. 2015-ன் அட்டவணையில் நீங்கள் எதிர்பார்க்கப் போவது முத்திரை பதித்த நாயகர்களின் தொடர்ச்சிகளையா ? அல்லது புது வரவுகளையா ?
    75% முத்திரை பதித்த நாயகர்களின் கதைக்களுக்கும், மீதம் 25% புது வரவுகளுக்கும் வாய்ப்புக்கள் வழங்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. // ஜானி கதைகள் ஓகே. ப்ருனோ பிரேசில் & ரோஜர் waiting list-ல் வைக்கலாமே!//

      +1

      Delete
    2. // புதிய களம், புதிய பாணி, இதுவரை பார்த்திடாத புதிய ஹீரோ போன்ற கிராபிக் நாவல்களை வருடத்திற்கு 2 இதழ்கள் வெளியிடலாம். //

      +1

      Delete
  63. //ரிப்போர்டர் ஜானி ...? ப்ருனோ பிரேசில் ? சாகச வீரர் ரோஜர்...? இவர்களது எதிர்காலங்கள் எவ்விதமோ - நமது வாசிப்பு ரசனை வரிசையில் ?//

    ரிப்போர்ட்டர் ஜானி ஓ.கே.
    மற்ற இருவரையும் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தல் நலம்.
    அதிலும் ரோஜர்./உடன் அண்ணந்தண்ணியே புழங்க வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. ரோஜர் கதை இந்த முறை சற்றே சொதப்பல் ...............
      இதற்கு முன் வந்தவைகள் அருமை

      Delete
  64. Black & white இதழ்களை வரவேற்கிறீர்களா ? இவை தொடரலாமா ?
    'Yes' எனில் அவற்றில் யாரைக் காண ஆவல் ? (ப்ளீஸ், மாட்சிமைதங்கிய மும்மூர்த்திகளை துயில் எழுப்பக் கோர வேண்டாமே ?!!)
    -மர்ம மனிதன் மார்ட்டின், டைலன் டாக் சார்.
    தோர்கல் பற்றிய உங்கள் அபிப்ராயம் ?
    இவர் ஒரு விசித்திர நாயகன்! தொடரட்டும் தன் ஆட்டத்தினை........
    2013 & 2014-ன் நமது காமிக்ஸ் சேகரிப்பில் பெரியதொரு ஆர்வத்தைக் கிளப்பாது போன இதழ் எது ? இப்போது வரை படிக்கவே தோன்றவில்லை என்ற ரகத்தில் ஏதேனும் ....?
    அப்படி எதுவும் இல்லை சார்!
    தற்போதைய கேப்டன் டைகரின் இளம் பிராயத்து சாகசங்களை தொடரலாமா ? அல்லது 2015-க்கு - மின்னும் மரணமே போதுமென்று கருதிடலாமா ? (unbiased opinions ப்ளீஸ் ? ; தல, தளபதி ரசிகக் கண்மணிகளின் முத்திரைகளின்றி ?)
    அதெல்லாம் முடியாதுங்க டைகரின் சின்ன வயசு சாகசங்களுக்கும் அடுத்த வருடம் இடம் தந்தே ஆக வேண்டும்!
    ரிப்போர்டர் ஜானி ...? ப்ருனோ பிரேசில் ? சாகச வீரர் ரோஜர்...? இவர்களது எதிர்காலங்கள் எவ்விதமோ - நமது வாசிப்பு ரசனை வரிசையில் ?
    அதே வரிசைதான் தலைவா!
    புதியதொரு தலைமுறை கொஞ்சமே கொஞ்சமாகவேனும் நமது காமிக்ஸ் குடும்பத்தில் இணைந்து வருவதைக் கவனிக்கிறேன். இந்த சூழலில் நமது எழுத்து பாணி ; மொழிபெயர்ப்பு ஸ்டைல் மாற்றங்களின்றி இப்படியே தொடர்வது பற்றி உங்களது அபிப்ராயம் ?
    மாற்றம் ஒன்றுதான் மாறாதது. உங்கள் இஷ்டப்படி அடித்து நொறுக்குங்கள் தலைவரே!
    புதிய கதைத்தொடர்களுக்காவது - மொழிபெயர்ப்புப் பொறுப்புகளைப் புதியவர்களிடம் ஒப்படைத்து புதிய பாணியொன்றைத் தேடும் ஒரு சிந்தனையினை நீங்கள் எவ்விதம் பார்ப்பீர்கள் ?
    மிக அருமையான முடிவு சார். நிறைய பேருக்கு வாய்ப்புகள் உருவாகும்!
    ஆண்டவன் அருளோடு 2014-ன் அட்டவணை திட்டமிட்டபடியே பூர்த்தியாகும் பட்சத்தில் இந்தாண்டில் நாம் வாசித்திருக்கப் போகும் கதைகளின் எண்ணிக்கை 50-ஐத் தொடும் ! டூ..டூ. மச் ? Your thoughts ?
    அது உண்மைதான் சார். ஆனால் ஆதரவு அலையும் பெரிதாயிற்றே! அவர்களது ரசனைக்குத் தீனி போட இத்தனை கதைகள் மட்டும் போதுமா என எண்ணிட வேண்டுகிறேன்.
    வரக் காத்திருக்கும் "தேவ இரகசியம் தேடலுக்கல்ல.." ; "இரவே..இருளே..கொல்லாதே..!" - உங்களில் ஏற்படுத்துவது எதிர்பார்ப்புகளையா ? அல்லது - 'முட்டைக்கண்ணனுக்கு ஏன் இந்த கொக்கு மாக்கு வேலை ? " என்ற சிந்தனைகளா ?
    ஹீ ஹீ ஹீ சோகம் ஒரு சுகம் என்பதே கிராபிக் நாவலில் கண்ட காமிக்ஸ் மொழி. இன்னும் தொடர்வது அழுகாச்சி ரசிகர்களது ஆதரவிலேயே உள்ளது. மெகா சீரியல்களுக்கு தினம் தினம் வேற வழியே இல்லாமல் துணைவியாரின் சப்பாத்திக் கட்டையடிக்கு பயந்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் அழுகாச்சி காவியங்களை ரசிக்க வைப்பது கதையின் போக்கிலேயே உள்ளது சார்.
    சிறார்களுக்கென கார்டூன்களை இன்னும் கொஞ்சம் அதிகமாய் நுழைக்கும் சிந்தனையை எவ்விதம் பார்ப்பீர்கள் ?
    ஓரளவு அவர்களை திருப்திப்படுத்தினால் ஓகே தான் சார். ஓவர் டோஸ் வேண்டுமா என தாங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
    2015-ன் அட்டவணையில் நீங்கள் எதிர்பார்க்கப் போவது முத்திரை பதித்த நாயகர்களின் தொடர்ச்சிகளையா ? அல்லது புது வரவுகளையா ?
    இரண்டிலும் பிப்டி பிப்டி!
    வாழ்க வளமுடன் சார்.
    (அதென்ன முதல் சில கேள்விகள் காணோம்னு நினைக்காதீங்க நமக்கு லயன் குடும்பத்தின் அனைத்து புத்தகங்களும் மிக அருமையானவை அதில் சூப்பர், சூப்பர் டூப்பர், சூப்பரோ சூப்பர் என்கிற வரிசை மட்டுமே தெரியும்! சோ, கேள்விகளை நண்பர்களுக்கு பாஸ் செய்கிறேன்!)

    ReplyDelete
  65. //புதியதொரு தலைமுறை கொஞ்சமே கொஞ்சமாகவேனும் நமது காமிக்ஸ் குடும்பத்தில் இணைந்து வருவதைக் கவனிக்கிறேன். இந்த சூழலில் நமது எழுத்து பாணி ; மொழிபெயர்ப்பு ஸ்டைல் மாற்றங்களின்றி இப்படியே தொடர்வது பற்றி உங்களது அபிப்ராயம் ? //

    இப்போதைய எழுத்துப்பாணியும், மொழிபெயர்ப்பு ஸ்டைலும் பிடிக்கப்போய்தானே புதிய தலைமுறை உள்ளே நுழைகிறது. எனவே இப்படியே தொடரலாம்.
    (வசனங்கள் மட்டும் இன்னும் கொஞ்சம் பேச்சுத்தமிழில் இருந்தால் அட்டகாசமாக இருக்கும். சில இடங்களில் செந்தமிழ் உறுத்தலாக இருக்கிறது.)

    ReplyDelete
    Replies
    1. //(வசனங்கள் மட்டும் இன்னும் கொஞ்சம் பேச்சுத்தமிழில் இருந்தால் அட்டகாசமாக இருக்கும். சில இடங்களில் செந்தமிழ் உறுத்தலாக இருக்கிறது.)//

      +1

      Delete
  66. //புதிய கதைத்தொடர்களுக்காவது - மொழிபெயர்ப்புப் பொறுப்புகளைப் புதியவர்களிடம் ஒப்படைத்து புதிய பாணியொன்றைத் தேடும் ஒரு சிந்தனையினை நீங்கள் எவ்விதம் பார்ப்பீர்கள் ?//

    நல்ல முடிவு.(எப்படியும் பட்டி டிங்கரிங் பார்க்க உங்கள் பேனா தயார் நிலையில் இருக்கும்போது என்ன கவலை.)
    ஏற்கனவே இது நடைமுறையில் இருக்கும் ஒன்றுதானே.?

    உங்களுக்கு வேலைபளு குறையும், எங்களுக்கு மேலும் நிறைய இதழ்கள் கிடைக்கும்.

    எனவே புதிய பாணியும் வரவேற்க்கப்படுகிறது.

    ReplyDelete
  67. //ஆண்டவன் அருளோடு 2014-ன் அட்டவணை திட்டமிட்டபடியே பூர்த்தியாகும் பட்சத்தில் இந்தாண்டில் நாம் வாசித்திருக்கப் போகும் கதைகளின் எண்ணிக்கை 50-ஐத் தொடும் ! டூ..டூ. மச் ? Your thoughts ?//

    அடுத்த ஆண்டின் திட்டமிடலில் கதைகளின் எண்ணிக்கை 50க்கு குறையாமல் இருக்க ஆண்டவன் அருள்புரியட்டும்.

    (அம்ம்ம்பதுன்னு ஏன் இழுக்கிறீங்க,50ன்னு சுருக்குங்க.
    500ஐ தொடும்போது வேணுமின்னா டூ டூ மச்/!ன்னு சொல்லுங்க சார்.)

    ReplyDelete
  68. //வரக் காத்திருக்கும் "தேவ இரகசியம் தேடலுக்கல்ல.." ; "இரவே..இருளே..கொல்லாதே..!" - உங்களில் ஏற்படுத்துவது எதிர்பார்ப்புகளையா ? அல்லது - 'முட்டைக்கண்ணனுக்கு ஏன் இந்த கொக்கு மாக்கு வேலை ? " என்ற சிந்தனைகளா ? /

    அய்யய்யோ.! திறந்த வாய் மூடாமல் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

    அந்த கோக்கு மாக்கு வேலைகளை இன்னும் அதிகமா செஞ்சா நல்லாருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. //அந்த கோக்கு மாக்கு வேலைகளை இன்னும் அதிகமா செஞ்சா நல்லாருக்கும். //
      +1

      Delete
  69. //சிறார்களுக்கென கார்டூன்களை இன்னும் கொஞ்சம் அதிகமாய் நுழைக்கும் சிந்தனையை எவ்விதம் பார்ப்பீர்கள் ?//

    மிகவும் சந்தோஷமாக பார்க்கின்றோம்.
    கார்ட்டூனுக்கு தனிவெளியீடு(ஜூனியர் லயன்)
    வருவது என்போன்ற பச்சிளம் பாலகர்களின் பலநாள் கனவு.(பகல் கனவு ஆக்கிவிடாதீர்கள் ப்ளீஸ்.)

    ReplyDelete
    Replies
    1. எஸ் .............(மேஜர் சுந்தர்ராஜன் )

      Delete
    2. Yes. .,ஆமா ..(இதுதான் மேஜர் சுந்தர்ராஜன்.)

      Delete
    3. @ all : பார்க்கலாம்...let's see !!

      Delete
  70. //2015-ன் அட்டவணையில் நீங்கள் எதிர்பார்க்கப் போவது முத்திரை பதித்த நாயகர்களின் தொடர்ச்சிகளையா ? அல்லது புது வரவுகளையா ? //


    ஒரு 70:30 ஓ.கே.

    முத்திரை நாயகர்கள் யார்யாரென்பதை பொருத்தும்.,புதுவரவுகள் எப்படிப்பட்டவை என்பதை பொருத்தும் விகிதாச்சாரத்தை மாற்றிக்கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. Kannan Ravi : நமது தற்போதைய பட்டியலில் முத்திரை நாயகர்கள் யாரென்ற கணிப்பு ரொம்பவே சுலபமாச்சே !!

      புது வரவுகள் சுவாரஸ்யமானவர்களாய் இருப்பார்கள் ! பொறுத்திருந்து பாருங்களேன்...!

      Delete
  71. நேற்று கொஞ்சம் செலவழித்து .....இந்த வருட இதழ்களை ஆராய்ந்த போது முதல் இரண்டு விட்டு போன வினாக்களுக்கு ஆன விடை ......

    டாப் 3 :

    நில் கவனி சுடு ......

    விரியனின் விரோதி .....

    எஞ்சி நின்றவனின் கதை ....

    டப்பா 3 :

    என்பதை விட சுமார் 3 என பார்த்தால்....

    தோர்கள்......

    சிப்பாயின் சுவடுகளில் ......

    காலத்தின் கால சுவடுகளில் ....

    ReplyDelete
    Replies
    1. //சிப்பாயின் சுவடுகளில் ......//
      அந்த கதை மேல அவ்ளோ கடுப்பா தலைவரே.!

      அது எந்த வருசம் வந்துச்சின்னு கூட ஞாபகம் இல்லையா.?

      என்னத்த சொல்ல.?

      Delete
    2. //சிப்பாயின் சுவடுகளில் ......//அவரே மறக்க நினைக்கிறாரு அத்த போய் திருப்பியும் ஞாபக படுத்திகிட்டு

      Delete
  72. மாடஸ்தி ,லாரென்ஸ் ,மார்டின் ,டயபாலிக் COMBO PACKAGE- ல் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்!

    ReplyDelete
    Replies
    1. // மாடஸ்தி ,லாரென்ஸ் ,மார்டின் ,டயபாலிக் COMBO PACKAGE- ல் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்! //
      கைய கொடுங்க ம.ம. இன்னைக்குதான் ஒரு உருப்படியான யோசனை சொல்லி இருக்கீங்க! எனது ஆதரவு உங்களுக்குதான்!

      Delete
    2. மதியில்லா மந்திரி : துரதிர்ஷ்டவசமாய் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு பதிப்பகத்தின் உடைமை ; இந்த combo -க்கு தடா போட்டு விடுவார்கள் !

      Delete
  73. இந்த பதிவே தப்பு .............

    எல்லா ஹீரோவுக்கும் வாய்ப்பு .............

    புத்தகங்களின் எண்ணிக்கை உயர்த்துங்கள் ...........

    REGULAR சந்தா ஒரு புறம் ........

    TAILORED /CUSTOMISED சந்தா ஒரு புறம் ...........

    எப்ப தான் நீங்க MASK OF ZORRO மாதிரி............... இரண்டு குதிரைகளில் மேல் ஒய்யாரமா நின்று ................பயணம் செய்வதை நாங்கள் பார்ப்பது ..............?????????

    தாங்கி பிடிக்க தான் தமிழ் ,இத்தாலி ரசிகர்கள் இருக்கோம்ல .............

    ReplyDelete
    Replies
    1. இது போக அதிரடி ஸ்பெசல் சந்தா

      Delete
    2. // தாங்கி பிடிக்க தான் தமிழ் ,இத்தாலி ரசிகர்கள் இருக்கோம்ல //

      உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பெல்லாம்... புல்லரிக்கிறது! ஹி ஹி!

      Delete
    3. Tailored சந்தா கட்ட எந்த டைலர்ட்ட

      போனும் ?......

      //இது போக அதிரடி ஸ்பெசல் சந்தா//

      இது அழுகுணி ஆட்டம் ........

      அப்டினா மூணு குதிரை வருது ......
      .

      Delete
    4. //Tailored சந்தா கட்ட எந்த டைலர்ட்ட

      போனும் ?......//

      எலிசபெத் டைலர் வம்சத்துல வந்த யார்கிட்டயாவது

      Delete
  74. டைகர் ரசிக கண்மணிகளுக்கும் டெக்சு கண்மணிகளுக்கும் சண்டையா .................

    அப்பிடி யாராவது சண்டை நடப்பதை ............

    நான் இது வரை கேட்டது கூட இல்லை

    ReplyDelete
    Replies
    1. அடுப்பு கரி வாங்கலையோ

      அடுப்பு கரி ....
      .

      யாரோ வித்த மாதிரி இருந்துச்சே ....

      Delete

    2. பைசாவுக்குகு போணியிகல.!,

      தூக்கி கடாசிட்டு "அ.கொ.தீ.க."வுல சேந்துட்டாருன்னு கேள்விப்பட்டோம்.!

      Delete
    3. காத கொண்டாங்க பாயிஸ் ...............நமக்கு தேவ புக் தான் ............நிறைய நிறைய இன்னும் நிறைய ...........நம்ம வழுக்கு மண்டை சண்டைய(குடுமி சண்டைக்கு எதிர்பதம் ) அப்பால பாத்துக்கலாம் .................

      Delete
    4. குடுமிக்கு எதிர்ப்பதம் = வழுக்கை

      (நன்றி, 1 மார்க் வினாக்களுக்கு உதவும்)

      Delete
    5. வர வர குமுதம் ரேடிங் மாதிரி என் நிலைமை மாறிடுச்சு

      Delete
  75. ஏங்க கொஞ்சி கொஞ்சி பேசி , கதை டிஸ்கசன் பன்ரது பார்த்து சண்டை னு ஆசிரியர் சார் தப்பா புரிந்து கொண்டார் , பாருங்கள் நண்பர்களே இனிமே மூக்கு பத்தீ பேசாதிர்.

    ReplyDelete
  76. 1.எல்லாமே டாப்புதான் எனக்கு,
    2.எல்லாமே டப்பாதான் சிலருக்கு,
    3.கௌபாய் கதைகளே வேண்டாம் (யாராவது ஒரு ஆள் எதிர்கருத்து சொன்னால் தானே நம்பள கவ்னிப்பாங்க )
    4.,5.B&W வரவேற்பு விற்பனையில் தெரிகிறதே. எது வந்தாலும் சரியே (35 ரூபாய் காவல் கழுகு அதிக பள்ளி மாணவர்களால் வாங்கப்பட்டு காலியானது)
    6. தோர்கல் தொகுப்பா போடுங்கோ..
    7.nothing
    8.Young Blueberry தொகுப்பா போடுங்கோ
    9.வரட்டும்…. கொஞ்சமா
    10.&11. நன்றாக இருந்தால் நலமே (உங்கள் மொழிபெயர்ப்புக்கென ரசிகர் உள்ளதை மறக்க வேண்டாம்)
    12.தேவையற்ற கேள்வி
    13.நல்லது
    14. இன்னும் கொஞ்சம் வேண்டவே வேண்டாம்






    அதிகமாக நுழையுங்கள்
    15.எல்லாமே

    ReplyDelete
  77. கன்னியாகுமரி புத்தக திருவிழா மேலே தேதிகள் அதாவது UPDATES

    • முதல் நாள் நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை அதிகாரி மணிவண்ணன்(S.P) தனது சிறு வயதில் கிடைக்கும் காசில் முத்து காமிக்ஸ் வாங்கினதை குறித்து பேசிவிட்டு, நமது கடையை தேடினார்…. கண்டுபிடிக்க முடியவில்லை… ஹீ…
    • இரண்டாம் நாள் நமது ஸ்டால் வந்த பிறகு, விடுமுறையாக இருந்தபோதிலும் பகல் முழுவதும் ஸ்டால்கள் வெறிச்சோடின… மாலையில் பெரிய கூட்டமே வந்தது… ஸ்டாலுக்கு அல்ல… கலைநிகழ்ச்சி அரங்கிற்கு….
    • மூன்றாம் நாள் சிறிது முன்னேற்றம் இருந்தது மக்கள் வரவு அதிகரித்ததால்…
    • அடுத்த இரண்டு நாட்களுக்கு பத்திரிக்கைகளில் செய்தி வரும் அளவுக்கு பள்ளி மாணாக்கரால் மட்டும் புத்தக ஸ்டால்கள் நிரம்பி வழிந்தன…. அவர்கள் கண்களுக்கு புத்தகங்கள் வெறும் காட்சிப்பொருளாகவே தெரிந்தன… (வியாபாரம் ஹீ… ஹீ… ஹீ…)
    • ஆறாம் நாள் மக்களையும் வியாபாரத்தையும் மழை அடித்து சென்றது…
    • ஏழு மற்றும் எட்டாம் நாட்கள் ஏதோ கொஞ்சம் பரவாயில்லை… நமது ஸ்டாலுக்கு சில பெயர் தெரியா பிரமுகர்கள் வந்தது மகிழ்வை தந்தது….
    • ஒன்பதாம் நாள் ஸ்டால்களில் மக்கள் வெள்ளம் அலைமோதியது… திருநெல்வேலியில் கிடைத்த பத்து நாள் வசூலை ஒன்பதே நாட்களில் தாண்டிய விற்பனை மழையில் நனைந்தோம்… பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் நடிகருமான Dr.G.ஞானசம்பந்தன் அவர்கள் நமது ஸ்டாலுக்கு வந்து காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கியது மற்ற ஸ்டால் விற்பனையாளர்களை நம் பக்கம் திரும்பி பார்க்கச் செய்தது….

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்... கன்னியாகுமரி புத்தகத் திருவிழாவிற்கு இன்னும் அதிக விளம்பரம் தேவைப்படுகிறது போலிருக்கே!

      Delete
    2. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : நெல்லையை முந்தி விட்ட வகையில் ஒ.கே. தான்...!! தவிர இது அப்பகுதிக்கொரு அறிமுகம் என்ற வகையில் டபுள் ஒ.கே. ! ஸ்டாலில் தொடர் உதவிகள் செய்தமைக்கு நமது நன்றிகள் !!

      Delete
  78. Mr Ramesh Kumar .....

    I must convey my thanks and apologies

    To you ...

    Your profile has no email address ..

    How can i communicate with you if i want

    To ?.........(granted you are willing )

    ReplyDelete
    Replies
    1. Just added email id on my blogger profile. Feel free to contact.

      But I couldn't remember any pending reasons to apologize with me, so I am Confused! lol :D

      Delete
  79. டியர் விஜயன் சார்,

    விடை தேடும் வினாக்களுக்கு, SurveyMonkey போன்ற ஆன்லைன் Survey Website-களை உபயோகப் படுத்தினால், பின்னூட்டங்களுக்கு இடையே விடைக்களைத் தேடாமல் இருக்கலாம்! ColonD

    01) 2014-ன் LMS தவிர்த்த Top 3+ கதைகள்: (மேலோட்டமான நினைவுகளில் இருந்து) லார்கோ, வேய்ன் & டெக்ஸின் ஒரு சில கதைகளுடன், மங்கூஸின் விரியனின் விரோதி!
    02) 2014-ன் Flop 3: மு.க., கா.க.சு., சா.ம.சு. & ரைமிங்கிற்காக, ஒ.சி.சு. :D
    03) கௌபாய் / வெஸ்டர்ன்: மேலும் சிலரை அறிமுகப் படுத்தலாம்!
    04) Black & white: நிச்சயமாக.
    05) B&W-ல் யார் யார்?: இத்தாலியர்கள்.
    06) தோர்கல்: வரட்டும்... தொகுப்பாக மட்டும்.
    07) 2013-14 ஆர்வம் & படிக்கத் தோன்றாத இதழ்: தொடர் கதைகள் யாவும்!
    08) இளம் கேப்டன் டைகர்: தொகுப்பாக வருவது நலம்!
    09) ரி. ஜானி, ப். பிரேசில், சாவகாச வீரர் ரோஜர்: எப்போதாவது ஓகே!
    10) புதிய தலைமுறைக்கான எழுத்து பாணி: இயல்பான பேச்சுத் தமிழ்!
    11) புதிய கதைகளுக்கு, புதிய மொழிபெயர்ப்பாளர் / பாணி: வரவேற்கிறேன்.
    12) 2014ல் 50 கதைகள்: B&W இதழ்கள் துணையுடன், எட்டும் தொலைவில் 75!
    13) கிராஃபிக் நாவல்கள்: 75ல், ஏழு எட்டாவது வரட்டுமே?
    14) சிறார்களுக்கென அதிக கார்டூன்கள்: வரலாம்.
    15) 2015-ல் ஹிட் (அ) புது நாயகர்கள்?: இவர்களுடன், Sci-Fi போன்ற புது Genre-களும்.

    ReplyDelete
    Replies
    1. :)
      //13) கிராஃபிக் நாவல்கள்: 75ல், ஏழு எட்டாவது வரட்டுமே?//
      +1

      Delete
    2. // கிராஃபிக் நாவல்கள்: 75ல், ஏழு எட்டாவது வரட்டுமே //

      கிராஃபிக் நாவல் என்றாலே ஏழரைதானா?

      Delete
    3. Karthik Somalinga : //கிராஃபிக் நாவல்கள்: 75ல், ஏழு எட்டாவது வரட்டுமே?//

      யாரோ தாரமங்கலத்தில் இப்போதே கடிதம் எழுத ஆரம்பித்து விட்டாராமே...!! CC முகவரியில் கூட உங்கள் பெயரைப் பார்த்ததாக நம்பத் தகுந்த சேதிகள் கசிகின்றன..!!

      Delete
  80. 1.TOP 3கதைகள்

    a.பூம்பூம் படலம்
    b.விரியனின் விரோதி
    c.நில் ..கவனி ...சுடு ....

    2TOP டப்பா கதைகள்

    a.முகமற்ற கண்கள்
    b.சாக மறந்த சுறா
    c.பயங்கர புயல்

    3.கௌபாய் கதைகள் ...

    இதே நிலை தொடரலாம் ....

    4B&W.......தொடரலாம் ....

    5.ஜூலியா போன்ற புதியவர்கள் ,டெக்ஸ்

    6.தோர்கல் ...தொகுப்பாக ..

    7.அப்படி ஒன்றும் இல்லை ..

    8.இளம் டைகர் .வேண்டும் ...

    9.ஜானி ,ப்ருனோ உள்ளே

    10 ப்.மொழிபெயர்ப்பு ...

    இப்படியே தொடரவும் ...

    11.புதியவர்களிடம் மொழிபெயர்ப்பு

    வேண்டாம் ........

    12.டூர்..டூ ...மச் ...50..இதழ்கள்

    50+2 limited edition ....

    13.எதிர்பார்ப்புகளை

    14.சிறார் கார்ட்டூன்

    சிறிதே அதிகபடுத்தலாம

    15.2015 அட்டவணை

    பழசு :புதுசு =60:40


    அம்புட்டுதான்

    .
    .



    ReplyDelete
    Replies
    1. //13.எதிர்பார்ப்புகளை //
      +1

      Delete
  81. ஆசிரியர் அவர்களுக்கு top 3
    1.எஞ்சி நின்றவனின் கதை 2. நில் கவனி சூடு 3.விரியனின் விரோதி flop 3: 1.முகமற்ற கண்கள் 2.காலத்தின் காலடி சுவடு 3.சட்டம் அறிந்திர சமவேளி
    3.cowboy கதை போதும் வேற gener try பண்ணவும்
    4.black and white வேண்டும் ஆனால் கலர் அதிகமாக வேண்டும்
    5.texwiler,மார்ட்டின்,julia ok, நோ for rip kirby,robin,madesty நோ ஜில் ஜோர்டேன்
    6.தோர்கள் ok
    7.நோ one
    8.எஸ் for டைகர்
    9.johny ok remaining two வேண்டாமே

    10.புதிய மொழி பெயர்போர் தேவை we need a change
    11.no டூ much
    12.இந்தமாதிரி கதைகளை வரவேற்கிறோம் நிறைய வந்தால் நன்று. (தேவragasiyum தேடல்லுக்கு அல்ல)
    13.மினிlion is பெஸ்ட் option
    14.இரண்டும் 50;50

    ReplyDelete
    Replies
    1. //12.இந்தமாதிரி கதைகளை வரவேற்கிறோம் நிறைய வந்தால் நன்று. (தேவragasiyum தேடல்லுக்கு அல்ல)//
      +1

      Delete
  82. பட்டூஸ்
    ஜானியின் ..............
    ஓநாய் மனிதன் அட்டை படம் டிசைன் பண்ணின புள்ளையாண்டானை கேட்டா கரீக்ட்டா சொல்லுவார்பா ................

    ReplyDelete
  83. பூம்பூம் விரோதி .............
    சுறா படலம் ........
    நில் ..கவனி........புயல் ...........
    .பாழும் தீவின் கண்கள் ...........
    வேட்டை நேரம் அடங்குவதில்லை ............
    முகமற்ற பைங்கிளி ...........
    எதிர் வீட்டில் எஞ்சி நின்றவன் .............
    காவல் சுடு ...........
    கப்பலுக்குள் ஒரு ஆவி ............

    போன்ற கதைகளை அடிக்கடி வெளியிடவும்

    ReplyDelete
    Replies
    1. சுருக்கமா சொல்லனும்னா மந்திரியார் நிறைய டைகர் கதைகளை வெளியிட சொல்கிறார்.(கன்பூசிஸோபதி.)

      Delete
    2. ha ha ha! Super juggling! இல்லா மந்திரியின் மதி! :D

      Delete
    3. :D

      இவ்வளவு அற்புதமா யோசிக்கும் திறனிருந்தும் மந்திரியாரால இன்னும் கலீபா ஆகமுடியலயே... ;)

      Delete
  84. //சதா சர்வ காலமும் தாண்டும் உயரங்களை அதிகரித்துக் கொண்டே செல்வதில்தானே வாழ்க்கையின் சுவாரஸ்யங்களே அடங்கியுள்ளன.//
    எடிட்டரின் இந்த தத்துவத்தின் அடிப்படையில் நாம் அறிந்து கொள்ளவேண்டியது யாதெனின்
    இந்த வருசம் 50ன்னா, அடுத்த வருசம் 80,.
    எப்பூடீ.,,,,,,,,,,,,,,,,,.,.,........

    ReplyDelete
    Replies
    1. இன்னும் கொஞ்சம் மேல வாங்க .............

      Delete
    2. டௌசெர் கிழியும் வரை ..........நாம் உயரங்களை அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும்

      Delete
    3. Kannan Ravi : நீங்கள் வசிப்பது தோர்கலின் மாய உலகிலா - 30 ஆண்டுகளாய்க் கூடுகின்றன ஒவ்வொரு 365 நாட்களுக்கும் ?

      Delete
  85. பேசாம EXCEL SPREAD SHEET போட்டுட்டா ..........................குழப்பம் இல்லாம பார்த்துக்கலாம் ...........

    ReplyDelete
  86. வினாக்களுக்கு எனது விடைகள் (பார்த்து மார்க் போடுங்க சார்)

    1.(இது வரையிலான) 2014-ன் TOP 3 இதழ்கள் உங்கள் பார்வையில் ? (LMS வேண்டாமே ஆட்டத்துக்கு !!)
    2014-ன் 3 டப்பா இதழ்கள் ?

    TOP : 1. விரியனின் விரோதி 2. எஞ்சி நின்றவனின் கதை 3. நில் கவனி சுடு

    FLOP : 1. மியாவி என்ற பெயரில் வந்த மிகப்பெரிய கொட்டாவி 2. மியாவிக்கு போட்டியா வந்த ஆவி - காவியில் ஒரு ஆவி 3. மீன் மார்கெட்டில் சுறா மீனை பார்த்தாலே ஓடவைத்த - சாக மறந்த சுறா :D

    2&3. கௌபாய் கதைகளை ரொம்பவே துவைத்துத் தொங்கப் போடுகிறது போல் உங்களுக்குத் தோன்றுகிறதா ? பதில் 'ஆமாம்' எனில் - 'கிளம்பு நைனா..' என்று யாரை மூட்டை கட்டச் சொல்லலாம் ? (தல ; தளபதி WWF இதற்குள் கண்டிப்பாக வேண்டாமே - ப்ளீஸ் ?!)

    ஒரே பதில்தான் NO..... (இன்னொறு வாட்டி இந்த கேள்விய கேட்டிங்க... )

    4&5. Black & white இதழ்களை வரவேற்கிறீர்களா ? இவை தொடரலாமா ?
    'Yes' எனில் அவற்றில் யாரைக் காண ஆவல் ? (ப்ளீஸ், மாட்சிமைதங்கிய மும்மூர்த்திகளை துயில் எழுப்பக் கோர வேண்டாமே ?!!)

    கண்டிப்பாக சரிசமமாக வேண்டும், அதில் டெக்ஸ், டயபாலிக் & புது முயற்சி

    6. தோர்கல் பற்றிய உங்கள் அபிப்ராயம் ?

    நான் ஒரு தோர்கல் ரசிகனாக்கும் - இதான் பதில் !

    7. 2013 & 2014-ன் நமது காமிக்ஸ் சேகரிப்பில் பெரியதொரு ஆர்வத்தைக் கிளப்பாது போன இதழ் எது ? இப்போது வரை படிக்கவே தோன்றவில்லை என்ற ரகத்தில் ஏதேனும் ....?

    ஒன்னே ஒன்னுதான் “மியாவி” (அதுலதான் வசனமே இல்லையே அப்புரம் எங்க படிக்கிறது :D) !

    8. தற்போதைய கேப்டன் டைகரின் இளம் பிராயத்து சாகசங்களை தொடரலாமா ? அல்லது 2015-க்கு - மின்னும் மரணமே போதுமென்று கருதிடலாமா ? (unbiased opinions ப்ளீஸ் ? ; தல, தளபதி ரசிகக் கண்மணிகளின் முத்திரைகளின்றி ?)

    போனாப்போகுது இருக்கிறத போட்டுடுங்க (என்ன ஒன்னு தேவையில்லாம எடத்த அடைச்சிக்கும்) :D

    9. ரிப்போர்டர் ஜானி ...? ப்ருனோ பிரேசில் ? சாகச வீரர் ரோஜர்...? இவர்களது எதிர்காலங்கள் எவ்விதமோ - நமது வாசிப்பு ரசனை வரிசையில் ?

    வரும் ஆண்டில் மூவருக்கும் ஒரே ஒரு சான்ஸ் கொடுக்கலாம் ! (மூவரையும் ஒரே மாசத்துல வரவச்சுடாதிங்க, அப்புரம் நான் இந்தியாவை விட்டு ஓடவேண்டி வரும். அந்த பாவம் உங்களுக்கு வேனாம், ஆமா ! :D)

    10. புதியதொரு தலைமுறை கொஞ்சமே கொஞ்சமாகவேனும் நமது காமிக்ஸ் குடும்பத்தில் இணைந்து வருவதைக் கவனிக்கிறேன். இந்த சூழலில் நமது எழுத்து பாணி ; மொழிபெயர்ப்பு ஸ்டைல் மாற்றங்களின்றி இப்படியே தொடர்வது பற்றி உங்களது அபிப்ராயம் ?

    இதற்கு நான் பதில் சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் மொழிபெயர்ப்பு புலியும் அல்ல, அதற்கு எனக்கு தகுதியும் இல்லை. இருந்தாலும் சொல்கிறேன்....
    யார் மொழிபெயர்த்தாலும் சரி, எளிய மொழி நடையில் இக்காலத்துக்கு உகந்ததாக மொழிபெயர்த்தால் சரி !

    11. புதிய கதைத்தொடர்களுக்காவது - மொழிபெயர்ப்புப் பொறுப்புகளைப் புதியவர்களிடம் ஒப்படைத்து புதிய பாணியொன்றைத் தேடும் ஒரு சிந்தனையினை நீங்கள் எவ்விதம் பார்ப்பீர்கள் ?

    படிக்க கேள்வி எண் 8 க்கான பதிலை ! :D

    12. ஆண்டவன் அருளோடு 2014-ன் அட்டவணை திட்டமிட்டபடியே பூர்த்தியாகும் பட்சத்தில் இந்தாண்டில் நாம் வாசித்திருக்கப் போகும் கதைகளின் எண்ணிக்கை 50-ஐத் தொடும் ! டூ..டூ. மச் ? Your thoughts ?

    என்னாது... ஐம்பதைத்தான் தொடுமா...... போதாது சார் போதாது ஆமா சொல்லிபுட்டேன் !

    13. வரக் காத்திருக்கும் "தேவ இரகசியம் தேடலுக்கல்ல.." ; "இரவே..இருளே..கொல்லாதே..!" - உங்களில் ஏற்படுத்துவது எதிர்பார்ப்புகளையா ? அல்லது - 'முட்டைக்கண்ணனுக்கு ஏன் இந்த கொக்கு மாக்கு வேலை ? " என்ற சிந்தனைகளா ?

    இதற்கான பதில் வேண்டுமாயின் ஆண்டு கடைசி வரை பொறுங்கள் !

    14. சிறார்களுக்கென கார்டூன்களை இன்னும் கொஞ்சம் அதிகமாய் நுழைக்கும் சிந்தனையை எவ்விதம் பார்ப்பீர்கள் ?

    மீண்டும் “மினி லயன்” பேனரில் டொனால்டு, அலிபாபா, சுட்டி லக்கி, சிக் பில், யாகாரி என்று பட்டாசி கொளுத்தலாம் !

    15. 2015-ன் அட்டவணையில் நீங்கள் எதிர்பார்க்கப் போவது முத்திரை பதித்த நாயகர்களின் தொடர்ச்சிகளையா ? அல்லது புது வரவுகளையா ?

    பழசும் வேனும், புதுசும் வேனும் அவ்ளோதான் ! (என்னதான் லிங்கா, விஸ்வரூபம் என்று பழையவர்கள் பட்டையை கிளப்பினாலும் சூது கவ்வும், சதுரங்க வேட்டை என்று புதுசாகவும் இருந்தால்தான் சுவராஸ்யமாக இருக்கும்)

    ReplyDelete
    Replies
    1. //வினாக்களுக்கு எனது விடைகள் (பார்த்து மார்க் போடுங்க சார்)//

      105/100

      Extra five marks for good handwriting.!

      Delete
    2. P.Karthikeyan : மார்க் உங்களுக்கு மட்டுமல்ல - எக்கச்சக்கமான நண்பர்களுக்கும் போட்டாக வேண்டும் - ஏராளமான மின்னஞ்சல்கள் நம் inbox -ல் !! அடுத்த பதிவே - இந்த பதில்களை base செய்ததாகத் தானிருக்கும் போல் தோன்றுகிறது ! Thanks a lot !!

      Delete
  87. இந்தியாவில் மாத ஊதியமாக ரூ2000 முதல் 20,000 வரை பெறுபவர்கள் 87 சதவீதம். 20,000 க்கு மேல் 50,000க்குள் பெறுபவர்கள் 10 சதவீதம். 50,000 க்கு மேல் ஒரு லட்சத்துக்குள் பெறுபவர்கள் 2.6 சதவீதம். ஒரு லட்சத்துக்கு மேல் ஊதியமாக பெறுபவர்கள் 0.4 சதவீதம். இது ஹிந்து தமிழ் நாளிதழ் அதிகாரபூர்வமாக வெளியிட்ட கருத்து கணிப்பு. தமிழ்நாட்டில் காமிக்ஸ் படிப்பவர்கள் 10,000 பேர் என்று வைத்துக்கொண்டால் , எத்தனை பேர் மேற்கண்ட பிரிவுகளில் வருவார்கள்...? நிச்சயமாக 90 சதவீதம்பேர் முதல் பிரிவில் இருப்பார்கள். 10 சதவீதம் பேர் மீதமுள்ள 3 பிரிவுகளில் இருக்கலாம்.

    நமது தளத்தில் ஒருவர் இப்படி கூறினார்....” குறைந்த வருமானம் உடையவர்கள் காமிக்ஸின் விலையை குறைக்க வேண்டும் என்று கேட்பதை விடுத்து, தங்களின் வருமானத்தையும் , வாழ்க்கைதரத்தையும் உயர்த்திக்கொள்ள வேண்டும்” கைபேசி சேவை அளிக்கும் நிறுவனங்கள் இப்படி நினைத்திருந்தால்? பெரும் செல்வந்தர்கள் கையிலும் , நடிகர்கள் கையிலும் தவழ்ந்த கைபேசி இன்று மாடு மேய்ப்பவன் கையில் வந்திருக்குமா? சந்தாதாரரின் எண்ணிக்கையை உயர்த்த நினைத்த கைபேசி நிறுவனங்கள் , வரும் அழைப்புகள் நிமிடத்திற்க்கு 2 ரூபாய் என்று இருந்ததை இலவசம் என்று மாற்றின, செய்யும் அழைப்புகள் 3 ரூபாய் என்று இருந்ததை நொடிக்கு ஒரு பைசா என்று மாற்றின..... இன்று பட்டி தொட்டி எங்கும் கைபேசிகள்.

    இந்த தளத்தில் அடிக்கடி பதிவிடும் 20 பேரின் பதிவுகளை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் நமக்கு ஒரு உண்மை விளங்கும். இவர்கள் எந்நேரமும் பதிவிடுவார்கள். பரபரப்பான அலுவல் நேரத்தில் கூட,..... காலை 10.00 மணி , 12.00 , 1.00 , மதியம் 2.00 , 3.00 , 5.00 மணி .....எப்போதும்..... எந்நேரமும்...... பிஸியான அலுவல் நேரத்தில் ஒருவர் நிறுத்தி நிதானமாக சமூக வலைதளத்தில் பதிவிடுகிறார் என்றால் அவர் எந்த மாதிரியான வேலையில் இருப்பார், என்ன சம்பளம் பெறுவார் என்று யூகித்து கொள்ளலாம். இவர்களால் காமிக்ஸ் என்ன விலையில் விற்றாலும் வாங்க முடியும்.

    ஒரு சின்ன ப்ரேக். ஒரு காமெடி காட்சியை பார்ப்போம்.

    சாலையில் செல்லும் ஒருவர்:- அடி கொடுத்த கைப்புள்ளக்கே ஒடம்புல இவ்வளவு காயம்னா .......! அடி வாங்குனவன் உசுரோட இருப்பான்னு நெனக்கிறியா நீயி...?

    வடிவேலு;- இப்படி உசுபேத்தி உசுபேத்தியே ஒடம்ப ரணகளம் ஆகிட்டாங்க.... இந்த ஊரூ இன்னமுமா நம்பள நம்புது....?

    வடிவேலுவின் நண்பர்:- அது அவங்க விதி....!

    மேலே சொல்லப்பட்ட 20 அதி பதிவர்கள் உசுபேத்தி உசுபேத்தி நம்ம ஆசிரியரை ரணகளம் ஆக்கிவிட்டார்கள்.

    நான் கைபேசி நிறுவனத்தை பற்றி குறிப்பிட்டது ஒரு உதாரணத்திற்கு மட்டுமே. காமிக்ஸ் சந்தாதாரர் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு ஆசிரியர் நல்ல ஒரு உபாயத்தை கண்டுபிடிக்க வேண்டும்.

    என்னை பொறுத்தவரை நமது காமிக்ஸுக்கு ஏற்ற சைஸ் பூத வேட்டை சைஸ் தான். வழுவழுப்பான காகிதத்திற்கு பதில் LMS ல் இடம் பிடித்த கருப்பு வெள்ளை காகிதம் உபயோகிக்கலாம். அந்த காகிதத்தில் வண்ணத்தில் வெளியிடலாம். ரூபாய் 50 விலையில் , மாதம் 3 புத்தகம் , லயன் ஒன்று , முத்து ஒன்று, க்ராபிக் நாவல் ஒன்று. கருப்பு வெள்ளை என்றால் அதிக பக்கங்கள், வண்ணத்தில் என்றால் குறைந்த பக்கங்கள். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. விற்பனையை பெருக்க ஆசிரியர் இது போல, அல்லது வேறு மார்க்கங்கள் ஏதாவது செயல்படுத்துவது நல்லது.




    ReplyDelete
    Replies
    1. //பிஸியான அலுவல் நேரத்தில் ஒருவர் நிறுத்தி நிதானமாக சமூக வலைதளத்தில் பதிவிடுகிறார் என்றால் அவர் எந்த மாதிரியான வேலையில் இருப்பார், என்ன சம்பளம் பெறுவார் என்று யூகித்து கொள்ளலாம். இவர்களால் காமிக்ஸ் என்ன விலையில் விற்றாலும் வாங்க முடியும். //

      இலேசாக ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனால் வேலை நேரம் / மொக்கை போடும் நேரம் மாதிரியான விஷங்களை வைத்து ஒருவரது வசதியை எடைபோடமுடியாது. என்னைப்பொருத்தவரையில் சொந்த தொழில், எப்போது Idle time வருமென்பது சொல்லமுடியாது. அந்தநேரங்களில் காதில் ரத்தம் வருமளவுக்கு மொக்கை போட நேரம் இருக்கும்.

      ஒரு அடிப்படை விஷயம், தயாரிப்பு செலவு என ஒரு Bottom Limit இருக்கும்போது விலையை குறைசொல்வது சரிப்படாது. ஒரு ஆட்டோகாரர் தன் சக்திக்கு குறைந்த விலையில் Micromax போனை வாங்க முடியும். ஒரு டேக்ஸி டிரைவர் அதே Mircromax கம்பெனியின் அதிகவிலை போனை வாங்கமுடியும். நாம் Micromax கம்பெனியையோ டாக்ஸி டிரைவரையோ குறை சொல்வது நியாயமாகாது. எப்போது குறை சொல்வது நியாயமாகுமென்றால், ஆட்டோகாரர் வாங்கக்கூடிய போன் விற்பனையை வேண்டுமென்றே நிறுத்தும்பட்சத்தில்தான்.

      சமீபத்தில் 35 ரூபாய் B&W கதை முயற்சிகளும் நடைபெறுவதை பார்த்தும் ஏன் இவ்வளவு வருத்தப்படவேண்டும். ;)

      Delete
    2. sundaramoorthy j : விலை பற்றிய அபிப்ராயங்களை நீங்கள் முன்வைப்பதும் சரி ; அவற்றின் சாத்தியங்கள் / அசாத்தியங்கள் என்னவென்று ஆங்காங்கே நான் சுட்டிக் காட்டி வருவதும் சரி - தொடரும் ஒரு படலமே..! ஆகையால் உங்களின் புதிய பின்னூட்டத்தைப் பழையதொரு பதிலால் நீளச் செய்வதில் எவருக்கும் பிரயோஜனம் இருப்பதாய் நான் கருதவில்லை.

      ஒவ்வொருவருக்கும் ஒரு பிரத்யேகப் பார்வைக்கோணம் இருப்பதும் , அதன் நியாயங்கள் அவர்கட்கு அப்பட்டமாய்த் தெரிவதும் இயல்பே ; ஆனால் அந்த ஒற்றைப் பார்வையே இறுதி வார்த்தையாய் இருத்தலோ ; அந்த விஷயத்திற்கு இன்னுமொரு கோணம் சாத்தியமாகாது போதலோ அவசியமில்லை என்பதை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.

      தினமும் பைக்குள் கைவிடும் அவசியமும் ; கொள்முதல்களுக்குப் பெரும்தொகைகளைப் புரட்ட வேண்டிய பொறுப்பிலும் இருப்பவனுக்கும் நிச்சயமாய் விலை பற்றிய விஷயங்களில் மிகுந்த கவனம் இருக்குமென்ற நம்பிக்கை கொண்டால் சந்தோஷமே ! உசுப்பி விட 20 பேரோ ; 200 பேரோ - கடன்களுக்குப் பதில் சொல்லும் வேளைகளில் இந்த ஒற்றை நபரே முன்னிற்க வேண்டும் என்பது ஒரு நாளும் என் சிந்தனைகளிலிருந்து தொலைவில் இராது !

      Delete
  88. நமது மாணவர்களுக்கு என்ன தேவை?
    நமது பள்ளிகள், நவீன
    அடிமைகளை உற்பத்தி செய்யும்
    தொழிற்சாலைகளாக மாறிவிட்டன
    என்று பிரபல குழந்தை இலக்கிய
    எழுத்தாளரும், கல்வியாளருமான
    ஆயிஷா நடராசன்
    வேதனை தெரிவித்துள்ளார்.
    கடலுாரில் தனியார்
    பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றும்,
    இரா.நடராசன், ஆயிஷா நடராசன் என,
    இலக்கிய உலகில் எல்லோராலும்
    அன்போடு அழைக்கப்படுபவர்.
    இவரது ஆயிஷா என்ற குறுநாவல், அரசுப்
    பள்ளிகளில் அறிவியல் ஆர்வமுள்ள
    மாணவர்களை எப்படி நடத்த வேண்டும் என
    காட்சிப்படுத்திய துயர காவியம்.
    பல்வேறு இயக்கங்களாலும்,
    தன்னார்வலர்களாலும், ஆயிஷா நாவல்,
    நுாற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு பரிசாக
    வழங்கப்பட்டது. இவர் எழுதிய 72
    புத்தகங்களில்,
    அதிகமானவை குழந்தை இலக்கிய
    புத்தகங்கள்தான். இந்த ஆண்டுக்கான, பால
    சாகித்ய விருது இவரின், விஞ்ஞான
    விக்கிரமாதித்தன் கதைகள் என்ற
    புத்தகத்திற்கு வழங்கப்பட்டது.
    அதை முன்னிட்டு அவருடன்
    உரையாடியதில் இருந்து...
    வாசகர்களின் உயிரை உருக்கிய
    ஆயிஷா நாவல் வெறும்
    புனைக்கதைதானா?
    பாம்புக் கடிக்கான மருந்து,
    பாம்பிலே உள்ளது, அதை கண்டுபிடிக்க
    வேண்டும் என முயற்சி செய்த மாணவன்,
    தனது பாம்பை தன்னை கடிக்க விட்டான்;
    மருந்து வேலை செய்யவில்லை.
    இறந்து போனான். தோற்பவர்கள் யாரும்
    விஞ்ஞானிகள் இல்லையா? அந்த
    விஞ்ஞானி தோற்றுப் போனான்.
    30 ஆண்டுகளுக்கு முன், இந்த
    செய்தியை நாளிதழில் படித்தபோது,
    ராத்திரி முழுக்க எனக்கு துாக்கம்
    வரவில்லை. அதை புனைக்
    கதையாக்கினேன். மற்ற
    அனைத்து சம்பவங்களும்,
    வகுப்பறை கொடுத்தவை. ரோஸ் குறுநாவல்,
    குழந்தைகளின்
    உரையாடலையே அடிப்படையாக
    வைத்து எழுதப்பட்டது. அவர்களின் சொற்கள்
    மிக நுட்பமாக அதில்
    பதிவு செய்யப்பட்டுள்ளன.
    இது எப்படி சாத்தியமானது?
    நான் ஆசிரியனாக, பணிபுரிபவன் அல்ல;
    ஆசிரியனாகவே வாழ்பவன். இரண்டுக்கும்
    வேறுபாடு உண்டு. குழந்தைகளின்
    உலகத்தை, அவர்களின் உலகத்துக்குள்
    சென்று பார்த்தால் மட்டுமே உணர முடியும்.
    அதற்கு அர்ப்பணிப்பு தேவை. இந்த 27
    ஆண்டுகால ஆசிரியர் பணியில்,
    மாணவர்களிடமிருந்து தினந்தோறும்
    புதிதாக எதையாவது கற்று வருகிறேன்.
    உண்மையில் எங்கள் மாணவர்கள்தான்,
    எனக்கு ஆசிரியர்கள்.
    விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்,
    குழந்தைளுக்கான நுால்கள் எழுதுவோர்
    குறைந்து போனது ஏன்?
    குழந்தைகள், காலம்தோறும்
    மாறக்கூடியவர்கள். பெரியவர்களுக்கான
    இலக்கியம், எப்போதும் ஒரே நேர்க்கோட்டில்
    நிற்கும். அதனால்,
    குழந்தைகளை ஒவ்வொரு காலகட்டத்திலும்
    முழுமையாக புரிந்தால் மட்டுமே சாத்தியம்.
    அவர்களின் இன்றைய காலகட்ட மொழி,
    பழக்க வழக்கங்கள் இதை எல்லாம்
    கூர்ந்து கவனித்தால், குழந்தை இலக்கியம்
    சாத்தியம். இதை கவனிக்காததால்,
    குழந்தை இலக்கியம் எழுதும் ஆட்கள்
    குறைந்து விட்டனர். எடுத்துக்காட்டாக,
    ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான்
    என்று எழுதினால், அடுத்த வரி,
    அவனுக்கு இத்தனை மனைவிகள் என,
    பெரியவர்களுக்கு எழுத வேண்டும்.
    அந்த மன்னன் மிகவும் ஒல்லியாக
    சோர்ந்து காணப்பட்டான் என,
    குழந்தைகளுக்கு எழுத வேண்டும்.
    பள்ளி மாணவர்கள், ஜாதிக்கான கயிறுகள்
    கட்டி வரும் வகையில் கலாசாரம்
    மாறிவிட்டது. இந்த நிலையில்,
    குழந்தை இலக்கியங்கள்
    எப்படி மாணவர்களை மாற்றும்?
    அடிப்படை கல்விக் கோட்பாட்டிலேயே சிக்கல்
    உள்ளது. நவீன
    அடிமைகளை உற்பத்தி செய்யும்
    தொழிற்சாலையாக, பள்ளிகள் மாறிவிட்டன.
    தேர்வுக்கான மதிப்பெண் அடிப்படையில்,
    கல்வி முறை இருப்பதால்,
    இயந்திரமாகவே மாணவன்
    மாறிவிடுகிறான். இதில், ஜாதியும்,
    மதமும், அந்த கல்விமுறை என்ற
    இயந்திரத்தில் பிணைக்கப்பட்ட
    சிறுபாகங்கள். அடிப்படை மாறினால்,
    அனைத்தும் மாறும்.
    உலகத்தில், இரும்புக்கை மாயாவியும்,
    துப்பறியும் சாம்புவும்
    எப்படி சாத்தியமாகும் என,
    நினைக்கிறீர்கள்?
    ஏன் சாத்தியமாகாது? கார்ட்டூன் சேனல்கள்,
    தமிழக குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்
    கொண்டவை இல்லை. அவை அமெரிக்க
    நிகழ்ச்சிகளின் மொழிபெயர்ப்புகள்.
    அடிப்படையிலேயே சிக்கல் ஏற்படுகிறது.
    அதுமட்டுமின்றி, இன்றைய வணிக
    உலகில், குழந்தைகள்
    தனித்து விடப்பட்டுள்ள சூழ்நிலையில்,
    காமிக்ஸ் புத்தகங்கள் வந்தால்
    குழந்தைகளிடம் பெரும்
    வரவேற்பை பெறும்.

    ReplyDelete
  89. Must read the last paragraph please....

    ReplyDelete
  90. காமிக்ஸின் முக்கியத்துவம் பற்றி மேலே உள்ள பதிவில் கூறியுள்ளார் பால சாகித்ய அகாடெமி விருது பெற்ற குழந்தைகள் எழுத்தாளர்..

    ReplyDelete
    Replies
    1. Sankar R. அழகாகக் கருத்து சொல்லி இருந்தார்...இன்றைய தினமலரில் படித்த போது சந்தோஷமாக இருந்தது !

      Delete
  91. உஸ்ஸ்ஸபா... ஒரு பின்னூட்டம் கூட போட முடியாதபடிக்கு ஆபீஸில் ஏகப்பட்ட வேலை (நண்பர் sundaramoorthy j கவனிக்க)

    எனது டாப்-3 இதழ்கள்:

    1. விரியனின் விரோதி - ஒரு வில்லனின் பின்னணியை இவ்வளவு அழுத்தமான சம்பவக் கோர்வைகளோடு இதற்குமுன் படித்ததில்லை! (உலகமக்களை நடுநடுங்கச் செய்யவேண்டுமென்ற முனைப்புடன் இருந்த நம்ம 'குற்றவியல் சக்கரவர்த்தி' ஸ்பைடருக்கும் இப்படியொரு flash-back இருந்தால் சூப்பராய் இருந்திருக்குமென்ற ஆவலையும் கட்டுப்படுத்த முடியவில்லை)

    2. a.நில் கவனி சுடு b. பூம்பூம் படலம்

    3. a. நினைவுகளைத் துரத்துவோம் - முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை பரபரப்பாய் நகரும் கதையும், அதற்கு உறுதுணையாய் அமைந்திட்ட அடர்த்தியான வண்ணக்கலவையும்! b. எஞ்சி நின்றவனின் கதை

    நேயர்களே, அடுத்ததாக நீங்கள் காணவிருப்பது இவ்வாண்டின் டப்பா-3:

    1. காலத்தின் *%€¢®©£ (நன்றி: ஜேன்) - சித்திரங்களைத் தாண்டி இரசிப்பதற்கு எதுவுமில்லாத காரணத்தால்.

    2. காவியில் ¢€©^°π%# (நன்றி: ஜேன்)- ஒரு சீரியஸான டிடெக்டிவ் கதையாகவும் இல்லாமல், ஜாலியான காமெடியாகவும் எடுத்துக்கொள்ள முடியாமல் அல்லாட வைப்பதே இதன் பலவீனம். 'அலைகளின் ஆலிங்கன(ம்)'த்துடன் ஒப்பிட்டால் இது ரொம்பவே சுமார் ரகம்!

    3. முகமற்ற கண்கள் - அந்தக் காலத்தில் பிரம்மிக்கச் செய்த கதைகளுள் ஒன்றுதான் என்றாலும், இக்காலத்துக்குப் பொருந்தவில்லை.ஙே!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : //நம்ம 'குற்றவியல் சக்கரவர்த்தி' ஸ்பைடருக்கும் இப்படியொரு flash-back இருந்தால் சூப்பராய் இருந்திருக்குமென்ற ஆவலையும் கட்டுப்படுத்த முடியவில்லை//

      சரியாப் போச்சு...."ஊருக்கே விரோதி" என்று ஸ்பைடருக்கொரு கிராபிக் நாவலைக் கற்பனையில் வடிவமைத்துப் பார்த்தேன்...கூர்மண்டைகளின் வடிவில் மங்கூசும், ஸ்பைடரும் ஒத்துப் போக - அதே அட்டைப்பட டிசைனை நண்பர் அஜய் சாமியைக் கொண்டு பட்டி டிங்கரிங் செய்தால் ராப்பரும் ரெடி ஆகி இருக்கும் ! ஷப்பா..!!

      Delete
  92. நீண்ட நாட்களுக்குப் பிறகு கமெண்ட் செக்ஷனுக்குள் தலைகாட்டியிருக்கும் எடிட்டர் அவர்களை போராட்டக்குழு சார்பாக வருக வருக என வரவேற்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : தலையை நுழைப்பதா ?? 190 பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்ல ராவணனைப் போல எக்கச்சக்கமான தலைகள் தேவைப்படுகிறதே !!

      Delete