Thursday, May 22, 2014

கோமான்களும்.... கோமாளிகளும் !


நண்பர்களே,

வணக்கம். கோமான்களும், கோமாளிகளும் கைகோர்த்து வெளிவரும் வேளை இது ! நேற்றைய கூரியரில் லார்கோவின் "வேட்டை நகரம் வெனிஸ்" + சிக் பில் & கோ.வின் "ஒரு பைங்கிளிப் படலம்" அனுப்பி விட்டோம் ! So பெரும்பான்மையான நண்பர்களுக்கு இரு இதழ்களுமே இன்று கிட்டிடும் என்ற எதிர்பார்க்கிறேன் ! லார்கோவின் கதை வரிசையில் இம்மாத சாகசம் சற்றே மாறுபட்டது என்பதோடு adults only  சமாச்சாரங்களும் சற்றே தூக்கலானதொன்று ! நிறைய இடங்களில் லார்கோவின் தோழியருக்கு ஆடை உபயமும், ஒரு சில இடங்களில் கோடீஸ்வரர் லார்கோவுக்குமே கூட நம் புண்ணியத்தில் உடை தானமும் செய்யப்பட்டுள்ளதை கவனிக்கத் தான் போகிறீர்கள். (ஆடை உபயங்களை இன்னமும் கொஞ்சம் நளினமாய் நமது டிசைனர் செய்திருக்கலாம் என்பது ஒரு தனிக் கதை !!) கதையின் ஓட்டத்துக்கு ; அதன் மாந்தர்களுக்கு கதாசிரியர் நிர்ணயித்திருந்த flow தனை இயன்ற மட்டிலும் பாழ் செய்திடாமல் இருக்க முயற்சித்துள்ளேன் ! எனது சென்சார் அளவுகோல்களின் மீதான உங்கள் பார்வைகள் வெவ்வேறு விதங்களில் இருக்கப் போகின்றன என்பது உறுதி ; ஆனால் அனைத்துத் தரப்பினரையும் கொஞ்சமேனும் முகம் சுளிக்காதிருக்கச் செய்யும் பொறுப்பு மட்டுமன்றி - படைப்பாளிகளின் இச்சைகளை மதிக்கும் பொறுப்பும் எனக்குள்ளதென்பதை மட்டும் சின்னதாய் அடிக்கோடிடுகிறேன் ! Please do bear that in mind !

அதே போல இம்மாத சிக் பில் கதையினையும் கொஞ்சமே கொஞ்சமாய் சென்சார் செய்யும் அவசியமும் எழுந்தது தான் கொடுமை ! கதையைப் படிக்கும் போது உங்களுக்கே அந்த இடங்கள் எதுவாக இருந்திருக்குமென்ற சங்கதி புலப்படுவது உறுதி ! 

எப்போதும் கொஞ்சம் நீளமான பதிவை நான் எழுதுவதும், அதன் பின்னே உங்கள் பின்னூட்டங்கள் பதிவாவதும் வழக்கம் அல்லவா ? முதன்முறையாக ஒரு தம்மாத்துண்டு intro உடன் நான் இடத்தைக் காலி பண்ணுகிறேன் ; தொடரும் உங்கள் பின்னூட்டங்களுக்கு பதிலாய் இந்தப் பதிவை அவ்வப்போது develop செய்கிறேன் ! Happy Reading folks...bye for now !

194 comments:

  1. புத்தகங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவ்வ்வ்வ்.. இன்றைக்கே கிடைத்தாலும் கூட நான் இன்னும் 10 நாட்கள் கழித்துதான் கண்களால் பார்க்கமுடியும். ஒரு வேலையாய் வெளியூரில் சிக்கியிருக்கிறேன். :-)))))

    ReplyDelete
  2. நேற்று தான் நினைத்தேன் அடுத்த பதிவின் தலைப்பு " கோமானும் கோமாளிகளும்" என்று...
    நினைத்தது பலித்து விட்டது...

    ReplyDelete
    Replies
    1. டியர் ரம்மி !!!

      அடுத்த பதிவின் தலைப்பு "சாமானும், சாமானியர்களும்" என்று நினைத்துவிடாதீர்கள் ;-)

      Delete
  3. யாரும் புக் வாங்கினவங்க இருக்கீக ? சீக்கிரம் ஏதாவது போட்டு ஆரம்பித்து வைங்க !

    ReplyDelete
  4. சார் , எங்க வூருக்கு இன்னும் வந்து சேரலையே !

    ReplyDelete
  5. Books not yet reached the S.T.Courier, Bangalore. It is in transit I guess, I may get tomorrow.

    ReplyDelete
  6. டியர் ஆல்,
    வழக்கம் போல இந்த மாதத்து வெளியீடுகளையும், வெளியீட்டின் மறுநாளே சுட சுட கைகளில் தவழவிட்ட எடிட்டர் & டீம் மற்றும் st கொரியர் அன்பர்களுக்கு நன்றிகள்.குறித்த இடைவெளிக்கு முன்பே புத்தகங்கள் வெளிவருவது மட்டற்ற மகிழ்ச்சியை வெளிக்கொணர்கிறது.

    மூன்று,நான்கு புத்தகங்களை கடந்த சில மாதங்களாக கனமான உரையில் பார்த்து பழகிய எனக்கு இந்த மாதம் இரண்டு புத்தகங்களின் கணம் மட்டுமே கைகளில், மீதி இதயத்தில் எனும்படியான ஒரு நிலை, கவரை பெற்றுக்கொள்ளும் போது இருந்தது.

    அட்டைப்படங்களின் பிரிண்டிங் தரம் அருமையாக இருக்கின்றன. பார்பதற்கு இரண்டுமே eye-catching.

    உள்ப்பக்கங்களில் பிரிண்டிங் தரம் அருமையாக உள்ளன.இப்போது நாம் இந்த பிரிண்டிங் விஷ்யத்தில் அடைத்துள்ள consistency நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஓன்று.சம்மந்தப்பட்டவர்களின் dedicated உழைப்பில்லாமல் இது சாத்தியப்படாது. இதற்காக வியர்வை சிந்தும் அனைவருக்கும் மனமகிழ்வுடன் வாழ்த்துக்களை வழங்குவோம் நண்பர்களே!லார்கோ ஏகப்பட்ட action உடன் கலக்குகிறார். சிக்பில் & கோ பக்கத்துக்கு பக்கம் சிரிப்பு அதிர்வேட்டை வெடிக்க விடுகிறார்கள்.

    விளம்பரங்களின் டிசைன் விஷயத்தில் ஏகப்பட்ட அக்கறை செலுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. ஒவ்வொரு விளம்பரமும் கண்களை முழுவதுமாக அதனுள்ளே கவர்ந்து விடுகின்றன. good job சார்.


    அட்டையின் கணம் குறைந்து விட்டதா அல்லது கணத்தில் அட்டைக்கு அட்டை ஒரு inconstancy உள்ளதாவென ஆசிரியர் உறுதிசெய்துகொள்ள வேண்டும். லார்கோ அட்டை சிக்பில் அட்டையை விட சற்று மெலிந்திருந்தது. சிக்பில்லின் அட்டை இதற்கு முந்தய வெளியீடுகளில் இருந்து சற்று மெலிந்து உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. பதிவு சின்னதா இருக்கேன்னு பார்த்தேன் .. வந்துடீங்க .. என்சாய் கட்டடம் கட்டிபையிங் :-)

      Delete
    2. கவலை படாதீர்கள் ராகவன் நாளை புத்தகம் நமக்கும் கிடைத்திடும் !

      Delete
    3. "சென்சார் மலர்கள்" கைக்கு கிடைக்க கொஞ்சம் பொறுமைக் காக்கவும்?

      Delete
  7. I loved this month Chick Bill story, good comedy dialogues, I really enjoyed reading the story.

    Little bit sad on Chick Bill missing the LMS, Editor sir Please do something to publish chick bill in LMS

    ReplyDelete
  8. புதிய வெளியீடுகள் பற்றிய நண்பர் சௌந்தரின் அருமையான பதிவு;: இன்னமும் புத்தகங்கள் கிடைக்காத நண்பர்களுக்காக: http://tamilcomics-soundarss.blogspot.com/2014/05/120-vettai-nagaram-venis-oru-paingkilip.html

    ReplyDelete
  9. எனக்கு புத்தகங்கள் கிடைத்துவிட்டது, THANKS TO PROFESSIONAL COURIER

    ReplyDelete
  10. புத்தகங்கள் கிடைத்தவர்களுக்கு வாழ்த்துக்கள் (நர!நர!)

    ReplyDelete
  11. ஒரு பைங்கிளி படலம் lunch hourல் 12பக்கங்கள் படிச்சாச்சு படித்தவரையில் Outright comedy நம்ம கவுண்டர்,செந்தில் பாணியில்!

    ReplyDelete
  12. Replies
    1. ஐயோ உங்க எரியாவுக்கெல்லாம் கெடச்சாச்சு ...

      Delete
    2. வேட்டை நகரம் வெனிஸில் லார்கோவின் தனி ஆவர்த்தனம்

      Delete
  13. லார்கோவின் அட்டைப்படம் பளிச் ரகம். ஆனால் சிக் பில்லின் அட்டைப்படம் அவுட் லைன் டிராயிங் வண்ணம் நிரப்பப்பட்டதால் ஒரு வித டல் பினிஷ்,

    .-> சிக் பில் கதையிலேயே சென்சாரா,,! காமெடிக் கதையில் புது விதம்? நீள(ல) மங்கையைப் பார்க்கும் போதே தெரிகிறது தங்களின் கைவண்ணம்! கதையின் ஊடே வரும் விளம்பரத்தை பார்த்தல் தெரிகிறது ஒரு வரிசையையே காலி செய்திருக்கும் சென்சாரின் மகிமை!

    -> லார்கோ கதையில் பலூனில் நீள, நீளமான வசனங்கள் சித்திரத்தை சிதைப்பதானவுள்ளன? படிக்க பொறுமை ரொம்ப அவசியம்?

    -> டெக்ஸ்க்கு பின்னால ஒரு கார் நிற்பது, இதுவரை நாம் பார்க்காத சங்கதி?

    -> கார்சனின் கடந்தக் காலம் வண்ணத்தில்தான் என்பது திண்ணமாக தெரிகிறதே? அதற்கு வெள்ளோட்டமாக வண்ணத்தில், அளவில், பிரிண்டிங்-ல் LMS-ல் டெக்ஸ் கதை அமையும்!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே டெக்ஸ் பின்னால் அல்ல , டைலன் பின்னால் ....வன் மேற்கும் , தென் கிழக்கும் சந்திக்கும் lms என்பது அர்த்தமாய் இருக்குமோ !

      Delete
  14. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Jude roshan BLUTCH :

      ஒவ்வொரு புக்கும் ஸ்ரீலங்காவுக்கு கொண்டுவர்ரதுக்கு பின்னாடி இருக்கும் நண்பர்களோட சிரமங்களும் ஒழைப்பும் ஒங்களுக்கு தெரிஞ்சா, இந்தக் கிண்டல் பேச்சு ஒங்ககிட்டருந்து வராது ப்ரெண்ட்

      Delete
    3. kavinth jeev, Jude roshan BLUTCH :வர்ர புக்குல ஒரு புக்க வாங்கிட்டு நீங்க இங்க போடற கமெண்ட்டுகள்ள என்ன நெயாயம் இர்க்க முடியும்................? ஏதோ பப்ளிஷர்ஸ் அனுப்பற புக்ஸ ஒளிச்சுவச்சுகிட்டு தரமாட்டோம்னு அவிங்க அடம்புடிக்கறமாதிரில்ல உங்க நெனப்பு.............? ஒரு புக்கு வாங்கவே நமக்கு நாக்கு தள்ளுதே.............. அவிங்க ஒரு 100 புக்காவது காசு கொடுத்து வாங்கியாராங்களே அதப்பத்தி எப்பவாச்சும் நெனச்சு பாத்ததுண்டா..............?

      Delete
    4. vithyanandh subash: nan oru book vangukiraravar alla.enidamam (periya alvil illavittalum)100 ku merpata lion,muthu collection uladhu.
      sri lankavil santha selluthum oruvaridam namathu lion attavanai koduthu athan padi selectiveaka puthakangali petru kondirukiren.anaivarukum puthagam vanthu 15-20 nattkaluku pin ingu puthagam varuvathanalaye ippadi kuripitten.editor mudhal kuriyar anupuvabar varai anai varinathu uzhaipum edhil uladhu ena enaku theriyum.anai varukum puthagam kidaithu vittalum ingu inum varvillaiye enbadhalthan ingu solkiren.sri lankavirkum varunkalathil virvaka puthgam kidaikum nall seekram pularumentru nambuvom(last 4 wordsum editorta style suttu pottadhu.hehehe!!!)

      Delete
  15. ஜூலை மாத editions Juneலேயே வருவதாலும் August மாதம் LMS திருவிழா வினாலும் July மாதம் காமிக்ஸ் உபவாச காலம் !!!!!

    ReplyDelete
    Replies
    1. LMS + other issues..so LMS can be @ aug 2nd and other issues can come @ july. let us hope...

      Delete
    2. s . august month issues will come @ july..LMS is seperate one(Super 6 special) and will come @Aug 2. :)

      Delete
  16. http://www.ubcfumetti.com/tx/387.htmகலக கண்மணிகளே, டெக்ஸ் வில்லரின் 586 பக்க சாகச கதை ஒன்று உள்ளது. இது பற்றி ஆசிரியரிடம் கூறி ஒரே புத்தகமாக வெளிவிட ஆவணம் செய்யுங்கள்-Ramesh Sundaram via facebook

    ReplyDelete
  17. புத்தகம் சூப்பர்

    ReplyDelete
  18. புத்தகம் சூப்பர்

    ReplyDelete
  19. Dear Editor,

    புத்தகங்கள் கிடைத்துவிட்டன... ஒரு பைங்கிளிப் படலம் படித்து முடித்து விட்டேன் :) அட்டகாசம்.. trade mark சிரிப்பு வெடிகள் நிறைந்துள்ளது.. good

    லார்கோ முன்னட்டை - இவ்வாண்டின் one of the best ஆக தேர்வு செய்யப்படுவது உறுதி ஒரு பைங்கிளிப் படலம் அட்டையும் good ஆனால் அட்டை thickness குறைந்துள்ளது போல உள்ளது. அத்துடன் லார்கோ புத்தகத்தை புரட்டி பார்த்ததில் ஒரு சில பக்கங்கள் 1.5Dல் (3D-ல் பாதி :) வந்துள்ளன :(

    கார்சனின் கடந்த காலம் விளம்பரத்தில், நீங்கள் முழு வண்ண மறுபதிப்பு என்று குறிப்பிடவில்லை என்றாலும் அது முழு வண்ணத்தில் தான் வரும் என்று நம்புகிறேன்

    LMS விளம்பரத்தில் இரு புத்தகங்கள் என்று குறிப்பிடவில்லை... வெவ்வேறு அளவுகளில் இரு புத்தகங்கள் என்று முடிவு செய்வதற்கு முன்பே இது design செய்யப்பட்டது என்று நினைக்கிறேன்

    சூப்பர்-6 முதல் புத்தகமும் (Book Fair ஸ்பெஷல்) இரண்டாக, டெக்ஸ் in B&W தனியாகவும், Magic Wind - முழு வண்ணத்தில் தனியாகவும் வருகிறதென்ற விளம்பரம் பார்த்தேன் சூப்பர்

    Ranger திருவிழா-வுக்கு ரெடி ஆயாச்சு :)

    ReplyDelete
    Replies
    1. இரண்டும் ஒன்றாகவே விற்கப்படும் என்ற வரி தான் உதைக்கிறது. புத்தகக் கண்காட்சிகளில் எனக்கு டெக்ஸ் மட்டும் போதும் என்று அடம் பிடிக்கப் போகிறவர்களை ஆசிரியர் எப்படிச் சமாளிக்கப் போகிறாரோ.

      Delete
    2. //கார்சனின் கடந்த காலம் விளம்பரத்தில், நீங்கள் முழு வண்ண மறுபதிப்பு என்று குறிப்பிடவில்லை என்றாலும் அது முழு வண்ணத்தில் தான் வரும் என்று நம்புகிறேன்//
      ஏமாத்திட மாட்டார்னு நினைக்கிறேன் !
      நம்பிக்கையே வழக்கை !
      நம்பினோர் கை விட படார் !
      .......................இன்னும் !

      Delete
    3. Dear எடிட்டர்,

      வேட்டை நகரம் வெனிஸ்-ம் படிச்சாச்சு... கதை as usual சூப்பர்... அனல் பறக்கும் அக்மார்க் லார்கோ அதிரடி

      Censor ரொம்ப அதிகமாகவே போயிடிச்சு :( அதுவும் திருத்தியுள்ளது தெரியும் வண்ணம், அட்டையை தவிர ... சிலையைக்கூட விட்டுவைக்கவில்லை.. :( கொஞ்சம் ஓவராத் தான் போறோமோ :)?

      அப்புறம் இந்த பெயரை, விடிnலி (டி -க்கு அப்புறம் வெறும் துணையெழுத்து மட்டும் எப்படிப்பா தனியாக type செய்வது?) எப்படி படிப்பது :)? வசனங்கள் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது, அதுவும் பெரும்பான்மையான ஓவியங்களை மறைக்கும்படி...

      விளம்பரங்கள் உள்ள பக்கங்களில் panels சுருக்கப்பட்டு விட்டனவா அல்லது தூக்கப்பட்டுவிட்டனவா?

      அத்துடன், எனது பிரதியில் ஒரு சில பக்கங்கள் 1.5Dல் (3D-ல் பாதி) வந்துள்ளன... இந்த 1.5D பிரச்சினை தொடர்கதையாகவே போகிறது, இன்னும் முழுமையாகக் களையப்படவில்லை :(

      I appreciate that the books are getting delivered well in advance nowadays. At the same time, I feel that it is important to check these kind of issues(1.5D & 3D etc.) and correct it as we have ample amount of time for the scheduled delivery.

      Thanks.

      Delete
  20. டியர் ஆல்,
    வேட்டை நகரம் வெனிஸ் ஒரு அற்புதமான லார்கோ அதிரடி திருவிழா அரங்கேறும் மைதானம்.முதலில் வரும் அந்த சேசிங் காட்சிகள் matrix படத்தை அப்படியே ஞயாபகப்படுத்துகிறது. டெலிபோன் லைன் மற்றும் கூலிங் கிளாஸ்/சூட் அணிந்த எஜென்ட்ஸ் என அப்படியொரு பொருத்தம்.

    அற்புதமான மொழிபெயர்ப்பில் வசனங்கள் சில இடங்களில் செம ஷார்ப்.ரசிக்கும்படியான கட்டங்கள் பல உண்டு. மொழிபெயர்ப்போடு costume designing பொறுப்பையும் சில இடங்களில் இந்த கதையில் நாம் ஏற்றுள்ளோம். நமது costume designer அவரது பொறுப்புக்கு அளவே இல்லை எனும்படியாக செம குஷியாகி சிலைக்கெல்லாம் துணி தைத்து மாட்டிவிட்டு விட்டார். :-))!

    ஒரு எச்சரிக்கை என்னவெனில் புத்தகத்தை கையில் எடுப்பதற்கு முன் அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்கும்படியாக பார்த்துக்கொள்ளவும்.ஆரம்பித்துவிட்டால் பாதியில் முடிக்காமல் வைப்பதற்கு அவ்வளவு கடுப்ஸ் ஆப் இந்தியா ஆகிறது. பரிட்சைக்கு படிக்கும் போது கூட தொந்தரவுகளை தாங்கிக்கொள்வோம். காமிக்ஸ் படிக்கும் போது தொந்தரவுகள் வந்தால் ஏதோ உலகமே நமக்கு எதிராக சதி செய்வதை போல ஒரு கோபம் வருகிறது. :-)))!

    பெயர்களில் மட்டும் விடிnலி/விடாலி என மாற்றி மாற்றி உச்சரிக்கப்படுகிறது. ஒரு consistency இல்லை.தொடரும் இது போன்ற சிறிய விஷ்யங்களில் இன்னமும் கொஞ்சம் கவனம் தேவை.

    ReplyDelete
    Replies
    1. //நமது costume designer அவரது பொறுப்புக்கு அளவே இல்லை எனும்படியாக செம குஷியாகி சிலைக்கெல்லாம் துணி தைத்து மாட்டிவிட்டு விட்டார். :-))!//
      ஹ ஹ ஹா ... கொடை வள்ளல் கர்ணன் வெற்றி பெற்று விட்டார் !
      சுட்டெரிக்கும் சூரியனின் வீரியத்தின் முன்னே வெள்ளையர்களின் சிலையை கூட உடையுடன் நடமாட வைத்து வெள்ளையர் கலாச்சார சீரழிவை வெற்றி கரமாக நிறைவேற்றிய பாவம் நம்மை பீடித்து விட்டது !

      Delete
  21. விளம்பரங்களுக்கு ஒரு விமர்சனம்

    வேட்டை நகரம் வெனிஸ் புத்தகத்தில் மொத்தம் 6 பக்கங்களில் 16 +(மேக்னம் ஸ்பெஷல் உட்பட) கதைகளுக்கு விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு விளம்பரங்களும் நம்மை ஏதோ ஒரு வகையில் கவர்கின்றன. அது ஏன் என்று பார்போம்.

    கமான்சேவின் செங்குருதிச்சாலைகள் விளம்பரம் அரைப்பக்கத்துக்கு ஆளை அசத்துகிறது. குதிரைகளோடு பாலத்தில் இருந்து விழும் அந்த கொச்சுவண்டியின் ஓவியம் அவ்வளவு தத்ரூபம். வெடியால் சிதறும் பாறைகள், மரண பயத்தில் பாயும் குதிரைகள்,மேலிருந்து குதிக்கும் வண்டியோட்டி என பரபரப்பான தருணத்தில் புயல்வேகமெடுக்கும் காலத்தின் ஒரு மைக்ரோ வினாடியை அப்படியே freeze செய்து நான்கு கட்டங்களுக்குள் சிறைபடுத்தியது அற்புதமான ஒரு ஓவியத்திறமை. ஒரு முழு பக்கத்துக்கு அந்த ஓவிய விளம்பரம் வெளியிடப்படவில்லையே எனும் ஏக்கம் அதை கடக்கும் போது இழுத்துப்பிடிக்கிறது.

    அதனடியில் காலனின் கைக்கூலி விளம்பரம்.ஸ்டீவ் ராலண்ட் இளமையாக காட்சியளிக்கிறார். அந்த முதல் இரண்டு ஓவியங்கள் செவ்விந்தியன் செல்லுமிடத்தி கிம் ராலண்ட்டை சந்திக்கும் போது நிகழ்பவை அல்லவா? ஜனாதிபதியை சுட்டுவிட்டு புகை கசியும் துப்பாக்கியுடன் உள்ள அந்த படத்தில் .ஸ்டீவ் ராலண்ட் மிகவும் இளமையாக தெரிகிறார். அந்த கண்ணாடி அணிந்த நபர் கல்வின் வாக்ஸ் அல்லவா?இந்த விளம்பரமும் பல நினைவுகளை கிளறி விடுகிறது.

    சூப்பர் சிக்ஸ் கான ஒரு பக்க விளம்பரத்தில் உபயோகப்படுத்தியிருக்கும் டெக்ஸ் படம் நிலவொளியில் ஒரு நரபலி கதைக்கான ப்ரொமோட்டர் ஓவியமாக தெரிகிறது.ஆங்கில படத்துக்கான விளம்பரம் போல அந்த ஓவியம் அசத்துகிறது.

    அடுத்து "ஒரு ரேஞ்சர் திருவிழா" வுக்கான ஒரு பக்க விளம்பரத்தில் டெக்ஸ்சும் கார்சனும் அட்டகாசமாக போஸ் கொடுப்பது அசத்தல்.

    மேக்னம் ஸ்பெஷல் "சட்டம் அறிந்திரா சமவெளி டெக்ஸ்சின் வண்ண ஓவியங்கள் wonderful ரகம். இதற்கு முந்தய வண்ண இதழான நி.வொ.ஒ.ந.ப இதழில் ஓவியங்கள் அவ்வளவு ATTRACTIVE வாக இல்லை. இந்த கதைக்கான ஓவியங்கள் அசத்தல் ரகம்.

    நிழல்களின் நினைவுகள் ஓவியங்கள் அவ்வளவாக கவரவில்லை.

    அந்தி மண்டலம்( நள்ளிரவு நங்கை) இதுவரை நாம் பார்த்திராத ஒரு HORROR DIMENSION ஓவியங்கள். பாதி முகம் புழுக்களாய் மாறி விகாரமாயிருக்கும் அந்த நபரின் இடது கண்ணை கவனித்தீர்களா?

    விண்வெளியில் ஒரு விபரீதம் நேர்த்தியான ஓவியங்களால் PROMISING தொடர் போல தெரிகிறது.

    கட்டத்தில் ஒரு வட்டம் ராட்சஸ நாகம்,பழங்கால கட்டிடம் என ஒரு த்ரில்லருக்கு நம்மை தயார் படுத்துகிறது.ஓவியங்கள் அசத்தல்.

    இறந்தகாலம் இறப்பதில்ல கிராபிக் நாவல் பழமையான ஓவியங்களால் பெரிதாக எதிர்பார்ப்பை கூட்டவில்லை.

    மார்ஷல் டைகர் ஓவியங்கள் வான்சின் கைவண்ணத்தில் அதகளம் செய்கின்றன. கதையில் தேறினால் அட்டகாசமாய் இருக்கும்.

    லக்கியின் பேய் நகரம் தலைப்பு நமது எதிர்பார்ப்பை ஈர்க்கிறது. முந்தய தீபாவளி மலருக்கு ஒரு பொடியன் பில்லியை போல இந்த மக்னம் இதழுக்கு இந்த கதை அமைய வேண்டுமென மனம் விரும்புகிறது.

    அதிர்ஷ்டம் தரும் அண்ணாதே இன்னொரு சுட்டி லக்கியாக நகைசுவையில் கலக்கப்போவதாக தெரிகிறது.

    ஆத்மாக்கள் அடங்குவதில்லை விளம்பர ஓவியங்கள் அட்டகாசமாக உள்ளன.

    காவல் கழுகு நீண்ட நாட்கள் காக்க வாய்த்த ஒரு புத்தகம்.ஸ்டாண்டர்ட் டெக்ஸ் ஓவியங்கள். டெக்ஸ் இன் அந்த புன்னகை அதிகம் காணக்கிடைக்காது.

    வீரியனின் விரோதி ஓவியங்கள் அவ்வளவாக கவரவில்லை.இளவயது மங்கூசின் கதை போல தெரிகிறது.

    கடைசியாக பூம் பூம் படலம் மறுபதிப்பு விளம்பரம் ஒரு TRADE MARK லக்கி கதையை நினைவுபடுத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. அருமை, நீ ரசிகன் தம்பி !
      இன்றாவது கிடைக்குமா , உங்களுக்கு கிடைத்து எனக்கு இன்னும் கிடைக்கவில்லையே !

      Delete
    2. விளம்பர விமர்சனம் - புதுமை!

      நானும் ரசிக்க இன்னும் புத்தகம் வரவில்லை! :( ஏதோ செளந்தரின் புண்ணியத்தில் சில பக்கங்களை பார்க்க முடிந்ததில் துளியூண்டு மகிழ்ச்சி!(நன்றி செளந்தர்)

      புத்தகம் கிடைச்சதும் நாங்களும் ரசிப்போம்ல?...

      Delete
  22. ஆஹா ...வாங்கிட்டேன் ! வாங்கிட்டேன் ! வாங்கிட்டேன் !
    பரணி உங்களுக்கு கிடைத்ததா !
    நேற்று கோவையில் எனக்கும் , கணேஷ் என்ற ஒருவருக்கும் தவிர அனைவருக்கும் கிடைத்து விட்டது என stc ல் கூறினார்கள் !

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இன்னும் கிடைக்கவில்லை ஸ்டீல். எஸ்.டி கொரியர் நண்பர் இன்னும் புத்தகம் வரவில்லை

      என்று கூறிவிட்டார்.மீண்டும் போன் செய்யவேண்டும்..

      Delete
    2. ஏன் ? ஏன் ? நமக்கு மட்டும் அதுவும் இந்த லார்கோ வரும் நேரம் இப்படி ?

      Delete
    3. ஸ்டீல் & செந்தில், ஒரு வேலை உங்களுக்கு (என்னை போன்று) புத்தகம்கள் நேற்று அனுப்பி இருந்ததே இன்று புத்தகம்கள் கிடைக்க காரணமாக இருக்கலாம் :-(

      Delete
  23. சார் இரண்டு அட்டைகளும் அருமை ! விளம்பரங்களில் அதிக கவனம் செலுத்தியது மேலும் அருமை ! அதிலும் டெக்ஸ் அருமை ! அந்த கார்சன் டெக்ஸ் இணைந்து தோன்றும் விளம்பரம் டெக்சின் அறிமுக விளம்பர காலத்திற்கே அழைத்து சென்று விட்டதெனில் மிகை அல்ல !

    ReplyDelete
  24. இன்று தங்கள் திருமண நாளைக் கொண்டாடும் ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் தம்பதிக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள் !! God bless !!

    ReplyDelete
    Replies
    1. டியர் ஷல்லூம்!!!

      "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என்று வாழ்த்த வயதில்லை.வணங்குகிறேன்.

      Delete
    2. திருமண நாள் தம்பதிக்கு வாழ்த்துக்கள்!

      தனியே உயர பறப்பது உங்களது வாழ்கையின் லட்சியமாக இருக்குமானாலும்,நேரடியாக பறப்பதற்கு முயற்சி செய்யாதீர்கள்.உங்களிடம் இறக்கைகள் இல்லாததால் எவ்வளவு முயற்சித்தாலும் உங்கள் இலக்கை தவற விடுவீர்கள்.இலக்கை தவற விடுவது சுலபமாக தோன்றுவதால் சுவரின் மேல் ஏறி தரையை இலக்காக கொண்டு குதிக்கும் போது இலக்கை தவற விடுங்கள். நீங்கள் பறப்பீர்கள் அல்லவா??

      இப்போது பறப்பது சுலபமாக தோன்றுகிறது அல்லவா??

      நமது life partner ரை மகிழ்ச்சிப்படுத்த சில வேலைகளில், நடப்பதற்கு வாய்வில்லாத விஷயங்களையும் ஒரு optimistic viewவில், இவ்வாறு பேசுவது நம்மை பெரும் சண்டை, துன்பங்களில் இருந்து காப்பாற்றும் என அறிந்துகொள்வது, மகிழ்ச்சியான மன வாழ்க்கைக்கு உத்தரவாதமானது :-))))!.

      Delete
    3. இங்கும் அங்கும் எங்கும் வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி

      Delete
  25. இன்று தங்கள் திருமண விழா நாளைக் கொண்டாடும் ஃபெர்னாண்டஸ் தம்பதிக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  26. priyamana editorji.புத்தகங்கள் கிடைத்துவிட்டன by regd post... ஒரு பைங்கிளிப் படலம் படித்து முடித்து விட்டேன் .அருமை !

    ReplyDelete
  27. எனக்கு புத்தகங்கள் 21-05-2014 அன்று இரவு 8.45 மனி அளவில் வந்து விட்டது என்று நான் புத்தகம் வாங்கும்கடைக்காரர் அலை பேசியில் தகவல் சொல்ல, நன்றி வெளியூரில் இருந்து நேற்று இரவு தான் வந்து, ஆவலுடன் புத்தகங்களை வாங்கி, ஆர்வத்துடன் பிரித்து ஒவ்வொரு பக்கங்களாக பார்த்து இரசித்து...... அட போங்கப்பா இதெல்லாம் சொன்னா புரியாது, அனுபவச்சாத்தான் புரியும். ஆனால் ஒரே ஒரு குறை, ஜூன் மாதம் என்ன புத்தகங்கள் வரும் என்று எடி சார் கடைசி வரை சொல்லவே இல்லை. மற்றபடி LMS, விளம்பரம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. Srithat Chockkappa : நண்பரே, உங்கள் கைகளில் தற்போது இருப்பவை தானே ஜூன் மாதத்து இதழ்கள் ??

      Delete
  28. நண்பர்களே, எனது புத்தகம் இபோது தான் கிடைத்தது. காரணம் எனக்கு புத்தகம்கள் நேற்றுதான் நமது காமிக்ஸ் அலுவலகத்தில் இருந்து அனுப்பி உள்ளார்கள்; இதனை S.T. கூரியர் ரசீது மூலம் அறிந்து கொண்டேன். நேற்று புத்தகம் கிடைக்காத நண்பர்களே இதுதான் காரணம் என நினைக்கிறன். கடந்த மாதமும் இது போன்ற காரணத்தினால்தான் எனக்கு நமது புத்தகம் மற்றவர்களை விட 2 நாட்கள் தாமதமாகவே கிடைத்தது என நினைக்கிறன்.

    விஜயன் சார், முடிந்தால் அனைவருக்கும் சந்தா பிரதிகளை ஒரே நாளில் அனுபவும். இதனை சரி செய்வது மிகவும் அவசியம்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : தவறான அனுமானம் ! நாங்கள் இதழ்கள் அனைத்தையும் ஒரே நாளில் - ஒட்டு மொத்தமாய் கூரியரில் ஒப்படைத்து விடுவது தான் கடந்த ஆறேழு மாதங்களது நடைமுறை ! ஆட்பற்றாக்குறை காரணமாய் அவர்கள் முதல் நாள் ஒரு பகுதியையும்,மறு நாள் மீதத்தையும் அனுப்புவதாய்த் தெரிகிறது !

      Delete
    2. விஜயன் சார், விளக்கத்திற்கு நன்றி, அவர்கள் என்னிடம் கை எழுத்து வாங்கிய ரசீதில் 22/05/2014 என குறிப்பிட்டு இருந்தது.

      நீங்கள் சொல்வது போல் இருக்கலாம், எனவே அவர்களை ஒரே நாளில் அனைவருக்கும் அனுப்பும் படி சொல்லவும்; இதனை அவர்களை சரி செய்ய சொல்வது நன்று.

      Delete
  29. புத்தகம் நேற்று 10 மணிக்கே கைகளில் கிடைத்துவிட்டது. உடனே படித்துமுடித்துவிட்டேன். இன்னும் கிடைக்காதவர்களுக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள்........ புத்தகங்கள் பற்றிய விமர்சனம் ஒரே வரியில்
    /////////கோமான் மிரட்டல்//////// கோமாளி மகிழ்ச்சி////////
    அப்ப அடுத்து?

    ReplyDelete
  30. இதழ்கள் அருமை . புக்ஸ் பேர் சிறப்பு இதழ் பற்றி கோடு காண்பிக்கலாம் சார்
    அல்அல்ணை

    ReplyDelete
  31. ஜூன் 20ந்தேதிக்குள் இன்னும் இரண்டு, புத்தகங்கள் வந்தால் மிகவும் மகிழ்ச்சி. மாதா மாதம் லயன்,முத்து, சன்ஷைன் லைப்ரரி,சசன்ஷைன் கிராபிக் நாவல், கருப்பு & வெள்ளை புக் என்று 5 புத்தகங்கள், 3 மாதங்களுக்கு ஒருமுறை LMS வடிவில் 500 பக்கங்களுக்கு குறையாமல் ஒரு புத்தகம்.

    ReplyDelete
  32. இது தான் எங்கள் சின்ன, சின்ன ஆசை. இந்த ஆசைகளை எடிட்டர் சார் கட்டாயம் நிறைவேற்றவேண்டும்.

    ReplyDelete
  33. விஜயன் சார், இரண்டு புத்தகம்களின் அச்சுதரம் நன்றாக உள்ளது, குறிப்பாக லார்கோவின் அச்சுதரம் மிகவும் அருமை. இந்த உழைப்பை கொடுத்து எங்களை சந்தோஷபடுத்திய உங்கள் பணியாளர்கள் அனைவர்க்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். We are rocking!

    ReplyDelete
  34. சார் இந்த மாதம் வந்த புத்தகங்களின் அச்சு தரம் படு மோசம் அதிலும் வேட்டை நகரம் வெனிஸ் குறித்து சொல்லவே தேவை இல்லை , படு மோசமான வர்ண கலவை பச்சை, ஊதா, சிவப்பு என எல்லா கலர்களையும் கலந்து அடித்து கிரயோன்ஸ் வைத்து வரைந்த மாதிரி இருந்தது, பல பக்கங்கள் மங்கலாக வேறு :( . ஒரே ஒரு நல்ல விஷயம் balloonil உள்ள வசனங்கள் தெளிவாக இருந்ததுதான். என் பெயர் லார்கோவில் இருந்த அச்சு தரம் இப்போது வரும் புத்தகங்களில் சுத்தமாக இல்லை என்பதுதான் நிதர்சனம். LMS எனும் புதிய சாதனை படைக்க இருக்கும் இந்த தருணத்தில் வரும் இந்த மாதிரி அச்சு தரமற்ற புத்தங்கள் கவலையை ஏற்படுத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் அற்புதமான எழுத்தாற்றல் ஒன்றுதான் இந்த புத்தகங்களை படிக்க தூண்டியது இல்லை என்றால் நிச்சயம் படித்திருக்க மாட்டேன்.
      ஒரு பைங்க்ளிபடலம் - அருமையான நகைச்சுவை விருந்து
      வேட்டை நகரம் வெனிஸ் - பர பர ஆக்சன் த்ரில்லெர்
      தோர்கல் மிக அருமையாக உள்ளது, ஒரே ஆல்பமாக வந்தால் சூப்பராக இருக்கும் :)

      Delete
    2. டியர் கிரிதரன்,
      உங்களுக்கு வந்துள்ள புத்தகங்களின் பிரிண்டிங் தரம் உங்களது எதிர்பார்ப்புக்கு நிகராக இல்லை எனபது வருத்தமளிக்கிறது. எனக்கு வந்த புத்தகத்தின் பிரிண்டிங் தரம், ஒன்றிரண்டு பக்கங்களில் லேசான கலர் SHIFTING ஆல் DULL ஆக இருந்தாலும் ACCEPTABLE ஆகவே எனக்கு படுகிறது.உங்கள் புத்தகம் படுமோசமாக இருக்குமானால் REPLACEMENT கேட்டுப்பாருங்களேன்.

      //இல்லை என்றால் நிச்சயம் படித்திருக்க மாட்டேன். //

      இது கொஞ்சம் மிகைப்படுத்துதலாக எனக்கு படுகிறது.:-(! .DEVELOPING COUNTRY யான நமது இந்தியாவில் பல அடிப்படை தேவை விஷ்யங்களில் கூட தினந்தோறும் நாம் பல வகைகளிலும் COMPROMISE செய்துகொண்டு தான் வாழ்ந்து வருகிறோம்.

      உதாரணத்துக்கு DDT மற்றும் ENDOSULFAN போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு, அதன் கடுமையான விஷ தன்மையால், ஏறக்குறைய அணைத்து உலக நாடுகளும் தடைவிதித்திருக்கும்போது நாம் இன்னமும் உபயோகத்தில் வைத்திருக்கிறோம். நாம் பயன்படுத்தும் காய்கறிகள் இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளில் தினந்தோறும் முக்கியெடுக்கப்படுவதால் நான் இனிமேல் உணவருந்தமாட்டேன் என சொல்ல முடியுமா?

      நாம் practical ஆக பார்போமே.முதலில் இருப்பதில் உயரிய தரத்தில் உள்ள/பெரும்பலோனோருக்கு வந்துள்ளதை போன்று ஒரு புத்தகத்தை replacement கேட்டு வாங்குங்கள். அதிலும் திருப்தியில்லை என்றாலும், improvement எனபதற்கு அணைத்து விஷயங்களுக்கும் எப்பொதும் வாய்ப்புகள் இருப்பதால் தற்போதைய தரத்தில் இருந்து இன்னமும் உயர target வைப்போம். அதற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போமே.

      Delete
    3. நண்பர் சுஸ்கி விஸ்கி அவர்களே...
      என் பெயர் லார்கோ"விலும் மற்ற 2012 ம் ஆண்டு இதழ்களிலும் இருந்த தரம் இப்போழுது இல்லையே என்று ஏங்கி தான் ஆசிரியரிடம் முறையிடுகிறோம்....2012 ம் ஆண்டு இதழ்களையும் இப்போதையதையும் ஒரு முறை பார்வையிடுங்கள் புரிந்துவிடும்...
      ஏன் இப்படியாகிவிட்டது என்பது தான் புரியவில்லை..
      பிரின்டிங் மெஷீன் மாற்றிவிட்டார்களா..?
      வண்ணங்கள் கர்ண கொடுமையாகிவிட்டன..

      Delete
    4. AHMEDBASHA TK : அச்சுக் கலையைப் பற்றி சின்னதாய் ஒரே ஒரு விஷயம் மட்டுமே : முந்தய காலத்து நெகடிவ் எடுத்து அச்சிடும் நாட்களில் ஒரு படத்தின் வர்ண அளவுகளை கூட்டவோ ; குறைக்கவோ இயந்திரத்தில் பணி செய்வோருக்கு முடியும். ஆனால் புது யுகத்து டெக்னாலஜி வந்தான பின்னே, சகலமும் கணினிகள் நிர்ணயிக்கும் அளவுகள் ; பிளஸ் (or ) மைனஸ் 10% க்குள் ! ஆகையால் அவற்றை நாங்கள் "கர்ண கொடுமை" ஆக்குவது impossible !

      ஒரிஜினல் வர்ணங்கள் சகலமும் dark & bright shades எனும் போது, அவை ஆர்ட் பேப்பரில் இன்னும் கூடுதல் வீரியத்தோடு தெரியும். ஒரிஜினல் பிரெஞ்சு இதழ்களும், சினிபுக் இதழ்களும் அச்சாவது matt finish கொண்ட வளவளப்பற்ற காகிதத்தில் என்பதால் அதனில் எத்தனை பளிச் வர்ணங்களை அப்பினாலும், காகிதம் அதன் ஒரு சதவிகிதத்தை உறிஞ்சிக் கொள்ளும் ; எஞ்சி இருக்கும் வர்ணமானது கண்ணை உறுத்தாது ! ஆனால் நாம் பயன்படுத்தும் ரக உயர்தர ஆர்ட் பேபர்கள் மசியை உறிஞ்சாது ; அப்படியே தக்க வைத்துக் கொள்ளும் என்பதால் தான் அந்த மினுமினுப்பு தெரியும்.

      ஒவ்வொரு கதைக்கும் வர்ணச் சேர்க்கை செய்யும் பாணி ஒரே விதமாய் இருப்பதில்லை ! "என் பெயர் லார்கோ" வில் பயன்படுத்தப்பட்ட கலரிங் பாணி வேறு ; வேட்டை நகரம் வெனிசில் உள்ள பாணி வேறு ! நாமென்ன செய்யக் கூடும் இதன் பொருட்டு ?? என்பது நான் விடை அறியாக் கேள்வி !

      Delete
    5. டியர் விஸ்கி-சுஸ்கி,
      //இல்லை என்றால் நிச்சயம் படித்திருக்க மாட்டேன். //

      இது கொஞ்சம் மிகைப்படுத்துதலாக எனக்கு படுகிறது.:-(! .DEVELOPING COUNTRY யான நமது இந்தியாவில் பல அடிப்படை தேவை விஷ்யங்களில் கூட தினந்தோறும் நாம் பல வகைகளிலும் COMPROMISE செய்துகொண்டு தான் வாழ்ந்து வருகிறோம்.

      மொத்தம் மூன்று விஷயங்கள்
      1) //உங்களின் அற்புதமான எழுத்தாற்றல் ஒன்றுதான் இந்த புத்தகங்களை படிக்க தூண்டியது இல்லை என்றால் நிச்சயம் படித்திருக்க மாட்டேன்//. - இதற்க்கு அர்த்தம் COMPROMISE இல்லையா ?
      2) நிறை குறைகளை கூறுவதற்க்க்குத்தானே இந்த தளம்?
      3) கேள்வி உங்களிடம் கேட்கப்படவில்லையே? :)

      Delete
    6. //சகலமும் கணினிகள் நிர்ணயிக்கும் அளவுகள் ; பிளஸ் (or ) மைனஸ் 10% க்குள் ! ஆகையால் அவற்றை நாங்கள் "கர்ண கொடுமை" ஆக்குவது impossible ! //
      எனக்கு வந்த புத்தகத்தில் எல்லா வர்ணங்களும் மிகுந்த வீரியமாக வந்திருந்தது , உதரணமாக நீலம் பிரதானமாக ஒரு பக்கத்தில் இருக்குமேயானால் அதே வர்ணம் முழு பக்கத்திலும் ரொம்ப வீரியமாக வியாபித்து இருந்தது, மற்ற வர்ணங்களுக்கும் அதே கதிதான். பாதி பக்கங்கள் ப்ளர் ஆக வேறு இருந்தது.2013ல் வந்த 70 % புத்தங்களில் இதே கதிதான் ஆனால் ஒரு தடவை கூட கூறை கூறியது கிடையாது.
      we are not blaming anything here however we are trying to notify you the issues that we are facing here with the quality of the books.
      26, 27 வருடங்களாக உங்களின் எழுத்து நடையிலும் காமிக்ஸ் காதலிலும் வாழ்ந்து வரும் நாங்கள் உரிமையுடன் கூறை கூறுவது எங்கள் செல்ல பிள்ளை லயனை மாத்திரமே :). எதேனும் தவறு இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்.

      Delete
    7. மிகவும் சரியாகச்சொன்னீர்கள் கிரி...
      நமது ஆசிரியரின் தமிழுக்கு நாங்கள் என்றென்றைக்கும் முதல் வரிசை அடிமைகள்...
      உயிருள்ளவரை இன்ஷா அல்லாஹ் இது தொடரும்....
      இனி பிரச்சனைப்பற்றி..
      சமீபத்திய இதழ்களில் ஏதேனும் ஒரு பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட வண்ணம் சற்று அதிகமாக இருந்துவிட்டா..ல் அந்த பக்கமுழுவதும் அதே வண்ணம் வியாபித்துவிடுகிறது.

      Delete
    8. தொடருகிறது....
      மஞ்சள் என்றால் முழுவதும் மஞ்சள்..
      நீலம் என்றால் முழுவதும் நீலம்...
      கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த பிரச்சினைகள் 2012 ல் சுத்தமாக இருந்ததில்லை...
      நமது ஆசிரியர் கவனிக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கைகள் ...
      மற்றபடி மிகவும் குதூகலமாகத்தான் ரசிக்கிறோம்.

      Delete
    9. டியர் கிரிதரன்,
      //இதற்க்கு அர்த்தம் COMPROMISE இல்லையா ?//

      யாருக்கும் யாரையும் compromise செய்யசொல்லும் உரிமையில்லை. infact நாம் எதற்காக அடுத்தவர்களுக்காக compromise செய்ய வேண்டும். compromise செய்ய விருப்பமில்லாத போது அதை நிராகரித்தும் செல்லும் உரிமை நமக்குள்ளது. யாருடைய நிர்பந்தமும் இல்லாமல் ஒரு விஷயத்தில் நமது தேவைகளுக்காக compromise செய்துவிட்டு, பிறகு ஒரு சமயத்தில் அதை பெருமையாக/சாதனையாக சொல்வதில் என்ன அர்த்தம் உள்ளதென்று விளங்கவில்லை.

      //நிறை குறைகளை கூறுவதற்க்க்குத்தானே இந்த தளம்? //

      exactly! இதில் யாரும் யாருக்கும் தடை போடா முடியாது.ஒரு கருத்தை பிடிக்கிறது என கூறுபவருக்கு எவ்வளவு உரிமையுள்ளதோ அதே போல ஒரு கருத்துக்கு மற்று கருத்து கூறுபவருக்கும் அதே உரிமையுள்ளது தானே?

      // கேள்வி உங்களிடம் கேட்கப்படவில்லையே? :)//

      உங்களை போலவே ஒரு sarcastic டோனில் இதற்கு பதிலளிக்க வேண்டுமானால் இப்படி பதில் கூறலாம்.

      நீங்கள் சார் என பொதுப்படையாக விளித்து (இங்கே நிறைய சார்கள் உள்ளார்கள் அல்லவா ?), வெளியிட்ட ஒரு கருத்துக்கு நான் உங்கள் பெயருக்கு பதில் கூறியபோது, எந்த உரிமையில் நண்பர் அஹமத் எனக்கு பதிலளித்தாரோ, அஹமத் எனக்கு கூறிய பதிலுக்கு ஆசிரியர் அஹமதுக்கு எந்த உரிமையில் பதிலளித்தரோ, ஆசிரியர் அஹமதுக்கு கூறிய பதிலுக்கு நீங்கள் எந்த உரிமையில் பதிலளிதீர்களோ அதே உரிமையில் நானும் பதிலளித்துள்ளேன். :-))!

      but இது போன்ற வார்தைவிளையாடுக்களில் எனக்கு நிச்சயம் ஆர்வமில்லை. மேற்சொன்ன வரிகளுக்கு மன்னிக்கவும்.

      இந்த தளத்தில் ஆரம்பித்த நாள் முதல் இது சமயம் வரை, ஆசிரியர் டு வாசகர் & வாசகர் டு ஆசிரியர் என ஒரு one to one interaction பாணியில் செயல்பட்டதில்லை என அனைவரும் அறிவார்கள். இங்கு ஆசிரியரின் பதிவு மட்டுமல்ல, பதிவுக்காக இடப்படும் விமர்சனங்களும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கபடுகின்றன என்பதை நீங்கள் அறியாதவர் அல்லவே?

      நீங்கள் உங்கள் விமர்சானம் விமர்சிக்கப்பட கூடாது என விரும்பும் sensitive நபராக இருக்கும் போது ஆசிரியருக்கு ஒரு மின்னஞ்சல் மூலமாக உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். இப்படி அனைவரும் படிக்கும் படியாக வெளிப்படுத்துவதை தவிர்க்கலாம்.

      உங்கள் பிரச்னைக்கு எனக்கு தெரிந்த ஒரு solution னை தெரிவிப்பது மட்டுமே எனது பதிலின் நோக்கமோ தவிர உங்கள் கருத்தை counter செய்வதல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

      Delete
    10. அப்பா...ட ...!நண்பர்கள் விஸ்கி சுஸ்கி மற்றும் கிரிதரன் அவர்களின் புண்ணியத்தால் களம் ஒருவழியாக சூடு பிடித்துவிட்டது என்று நினைத்தால் இன்னும்...
      செத்த பாம்பு கணக்கா படுத்துக்கொண்டுள்ளதே..ஓய்.

      Delete
    11. டியர் எடிட்டர்

      காமிக்ஸ் மீது சலிப்பு ஏற்பட்டுவிட்டதா என்ற கேள்விக்கு ஆமாம் என்று கூற முடியவில்லை. அதே நேரம் எனக்கு சற்றே சலிப்பு ஏற்பட்டுவிட்டது. காரணங்கள்

      - அச்சுத்தரம் மற்றும் புத்தகமாக்கம்
      --------------------------------------------------------

      கம்பேக் ஸ்பெஷல், என் பெயர் லார்கோ, மரண நகரம் மிசௌரி/எமனின் திசை மேற்கு, ஆல் நியூ ஸ்பெஷல், க்ரீன் மேனர், நியூ லுக் ஸ்பெஷல், நெவர் பிஃபோர் ஸ்பெஷல்
      புத்தகங்களைக் கையில் எடுத்துப் பார்த்தால், தற்போது வரும் ரூ 120 புத்தகங்கள் பிரிண்டிங் தரத்திலும், அட்டைக் கனத்திலும் வேறுபட்டிருக்கிறது. நீங்கள் பல முறை, உபயோகப்படுத்தும் அட்டையின் கனம், பயன்படுத்தும் தாள், பைண்டிங் முறை 2012-ல் இருந்து மாற்றம் இல்லை என்று தெரிவித்திருக்கிறீர்கள். எனினும், கையில் எடுத்துப் படிக்கும் போது வேறுபாடு தோன்றுவது ஏன் என்று தெரியவில்லை.

      பிரிண்டிங் - இரத்ததடத்திற்கு முன் - பின் என்று கண்டிப்பாக தரம் பிரிக்கலாம். இப்பொழுது எல்லாம் வரும் புத்தகங்களின் ஒவ்வொரு பக்கத்தின் பிரிண்டிங் பார்க்கும் முன் திக்..திக் என்று திகில் பட ரேஞ்சுக்கு இருக்கிறது. ஒவ்வொரு புத்தகம் வந்த பிறகு பிளாஸ்டிக் ஷீட் போட்டு கவர் போட்டு பத்திரப் படுத்துவேன். ஆனால் இரத்தத் தடத்திற்குப் பிறகு கவர் போடுவதற்கு மனம் வரவில்லை. எதாவது ஒரு பக்கத்தின் பிரிண்டிங் அல்லது பக்கங்களின் பிரிண்டிங் குறை இருக்கிறது. கலர்களைப் பற்றி சொல்லவில்லை.
      - 3டி போன்ற பிரிண்டிங்
      - மங்கலான பிரிண்டிங்
      - கசக்கப் பட்ட / கிழிந்த காகிதத்தில் பிரிண்டிங்
      - கருப்பு நிற கை ரேகைகள்
      - மை கொட்டியது போல பிரிண்டிங் ( நிலவோளியில் நரபலி புத்தகம்)

      என்னைப் பொருத்தவரை ரூ 60 இதழ்கள் ..ம்ம்... சற்றும் கவரவில்லை. ஆனால் வேறு வழியில்லை என்பதனை புரிந்து கொள்ள முடிகிறது.

      ஒவ்வொரு புத்தகத்தையும் படித்து பாதுகாத்து பிற்காலத்தில் என் மகனைப் படிக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்திலிருக்கும் எனக்கு, இதைப் போன்ற குறைகள் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

      கதைகள்
      --------------
      சிறு வயதில் ரஜினி ரசிகன் நான். இப்பொழுது கதையம்சம், வித்தியாசங்களால் கமலஹாசனின் படத்தில் ஈர்ப்பு. அது போல டெக்ஸ் கதைகளை என்னால் ரசிக்க முடியவில்லை. டைகர், க்ரீன் மேனார், லார்கோ போன்ற ஆழமான, ரியலிசம் உள்ள கதைகள் மட்டுமே படிக்கப் பிடிக்கிறது. இது எனது ரசனையில் ஏற்பட்ட மாற்றம். அதற்கு தங்களைக் குறை சொல்ல முடியாது.

      உங்களின் கதைத் தேர்வை விமர்சிக்க எனக்கு வயது போதாது. 2012-ல் இருந்து ஒரு சில கதைகளைத் தவிர அனைத்துக் கதைகளும் பிடித்தமானவையே.அதனால் கதைகளைப் பொருத்தவரை எனக்கு பெரிய குறைபாடுகள் இல்லை. ஆதலால் காமிக்ஸ் ஆர்வம் குறையவில்லை.


      பிரிண்டிங் மற்றும் பைண்டிங் தரம் நன்றாக இருந்தால், மறுபடியும் ப்ளாஸ்டிக் உறைக்குள் புத்தகங்களைப் பாதுகாக்க நான் ரெடி. அதிக புத்தகங்கள் வருவதால் காமிக்ஸ் ஆர்வம் எனக்கு குறையவில்லை.

      Delete
  35. டியர் ஆல்,
    வுட் சிட்டி கோமாளிகளின் "ஒரு பைங்கிளி படலம்" ரிலாக்ஸ் ஆனா ஒரு மாலைப்பொழுதில் SNACKS கொறிப்பதை போன்ற ஒரு அனுபவத்தை கொடுத்தது. சீரியஸான நகைசுவையும் அல்ல, தவிர்க்கப்பட வேண்டிய மொக்கையும் அல்ல. படித்து முடித்த பின் ஒரு லேசான உணர்வை நமது மனத்தால் உணர முடியும்.

    டாக்-புல் ரேக்ஸ்சோனாவை கவர அடிக்கும் கூத்துக்கள் பெரும்பாலோரை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் சீன்கள். SHE IS MINE /SHE IS NOT MINE என ஆர்ட்டின் துடப்பத்தின் ஒவ்வொரு STRANDடையும் நாள் முழுவதும் வாசலில் அமர்ந்து பிய்த்து எறியும் காட்சிகள் CUTE & GUARANTEED சிரிப்பு வெடி கட்டங்கள்.:-)))))!

    மொழிபெயர்ப்பு வழக்கம் போல நகைசுவை சரவெடி என்றாலும் ஆசிரியர் தனது FULL POTENTIAL லை இந்த புத்தகத்தில் வெளிப்படுத்தவில்லை என சொல்லலாம். ஒரு சில கட்டங்களில் இன்னமும் ஷார்ப்பான நகைசுவை வசனங்களுக்கு வாய்புகள் இருந்தும் முழுமையாக அதன் சாதகங்களை பயன்படுத்திக்கொள்ள வில்லை.

    பிரிண்டிங் FABULOUS தரம். கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போன்ற பக்கங்கள். அற்புதமான ஆர்ட் வொர்க் மற்றும் கலரிங். பளிச் என்ற ப்ரிண்டிங்கின் வண்ணக்கலவை புத்தகத்தை பிரிக்கும்போது நம்மை புத்தகத்தினுள் சிறைப்படுத்தும் முதல் சுனாமியலையாக தாக்குகிறது. லார்கோ புத்தகத்தில் அழுத்தமான கலரிங் ஸ்டைலால்/பிரிண்டிங் போது எற்படும் மெல்லிய கலர் SHIFTING ஆல், ஒன்றிரண்டு கட்டங்கள் பிரிண்டிங்கில் டல் அடித்தாலும் தனது கார்ட்டூன் பாணி பளிச் சித்திரங்களால் இந்த புத்தகம் வாசகர் மனங்களில் தனக்கென ஒரு தனி இடம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  36. some of the pages in the largo book printing is not good.

    ReplyDelete
  37. டியர் ஆல்,

    Silence doesn’t mean your performance left her speechless என சொல்வார்கள். நமது தளம் இவ்வளவு அமைதியாக இருப்பது,அதுவும் ஒரு புத்தக வெளியீட்டின் போது என்பது, எல்லாம் நல்லபடியாக நடக்கிறது என்பதற்கு அர்த்தமாகாது.ஆசிரியர் கூட இந்த பதிவை இரண்டு பத்திகளுக்குள் சுரத்தையில்லாமல் முடித்துக்கொண்டது வருத்தமளிக்கிறது.is there some thing wrong ?

    ஒரு கலைஞனுக்கு பெரிய அங்கீகாரம் நமது விமர்சனங்களும் பாராட்டுக்களும் மட்டுமே. lets open up guys.

    ReplyDelete
    Replies
    1. விஸ்கி-சுஸ்கி : 'அப்பாடா' - என இன்று இங்கு நான் பெருமூச்சிடுவது இரண்டாவது முறையாக !

      கொஞ்ச நாட்களாகவே இங்கு நிலவும் 'லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்து பாணியிலான gentlemanly silence ' நெருடலாய் தோன்றுவது எனக்கு மட்டும் தான் போலும் என்று எடுத்துக் கொள்வதைத் தாண்டி எனக்கு வேறு மார்க்கம் தெரியவில்லையே !

      'எதைச் சொல்லலாம் ? எதைச் சொல்லக் கூடாது ? ...

      'நண்பர்களிடம் நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய உரிமைகளின் அளவுகோல்கள் என்ன ?'....

      'அடக்கி வாசிக்காவிட்டால் பத்தி பத்தியாய் கண்டனம் தெரிவிக்க திடீர் regulators அவதாரம் எடுப்பார்களோ ?....
      "புதியவர்களின் வருகைக்கு நமது அதீத ஆர்வமான பங்களிப்பு தான் ஒரு தடையோ ?.....

      "மௌனமாய் இருப்போர் இங்கு அரங்கேறி வந்த ஜாலி அரட்டையை ரசித்து வந்தோரா - அல்லது சகித்து வந்தோரா ?....

      "ஆழமான ; தீர்க்கமான விஷயங்களைத் தாண்டி - இங்கு மனதில் தோன்றும் இலகுவான சிந்தனைகளை பகிர்வது இ.பி.கோ.பிரிவுகளின் கீழ் தண்டனைக்கு உரியதோ ?.....

      "காமிக்ஸ் மீதான காதலில் மட்டுமே இங்கு சங்கமித்து, பரஸ்பர நட்பை வளர்த்துக் கொள்ள வரும் வேளையில் - எதிர்பாரா பரிசாய்க் கிடைக்கும் மன உளைச்சலுக்கு மருந்து கிடைப்பது எந்த மெடிக்கல் ஷாப்பில் ?....

      "யார் காலில் எப்போது இடறிடுவோமோ ? என்ற அச்சம் விக்ரமாதித்தன் தோளில் சயனம் செய்யும் வேதாளத்தைப் போல சதா நேரமும் தொடர்கிறதே...இந்தப் பயம் போக எந்தக் கோவிலில் தாயத்துக் கட்டுவது ?!....

      மேற்சொன்ன கேள்விகள் நம் நண்பர்களின் மனதுகளில் அரித்து வரும் வினாக்கள் என்பது ஊர்ஜிதம் ஆகினால் - உங்கள் மனதுகளை ஓரளவிற்காவது படித்தறியும் தேர்ச்சி எனக்கு உள்ளது என்று சந்தோஷப்பட்டுக் கொள்வேன் !

      Delete
    2. Contd :

      மௌனத்தின் கனம் எப்போதையும் விட இப்போது பிரதானமாய்த் தெரிவது மேற்சொன்ன காரணங்களுக்காக மாத்திரமே என்றால் கூட ஒரு விதத்தில் எனக்கு மகிழ்ச்சியே ; ஏனெனில் இன்னொரு சாத்தியமான பதில் - 'காமிக்ஸ் மீதே லேசான சலிப்புத் தட்டிப் போய் விட்டதால் கொஞ்சமாய் ஒதுங்கி நிற்கிறோம் ' என்பதாகத் தானிருக்க முடியும் ! பின்னது தான் நிஜமெனில் முட்டையிடும் வாத்தைப் பிரியாணி போடும் கட்டத்தை எட்டி இருக்கிறோம் என்பது தவிர்க்க இயலா conclusion ஆக இருந்திடும் !

      //ஆசிரியர் கூட இந்த பதிவை இரண்டு பத்திகளுக்குள் சுரத்தையில்லாமல் முடித்துக்கொண்டது வருத்தமளிக்கிறது//

      கைதட்டல் கேட்க இரு கரங்கள் அவசியமல்லவா நண்பரே ? நான் மாத்திரமே கை வீசிக் கொண்டிருந்தால் வருவது காற்றாகத் தானிருக்கும் - கரவோசையாக அல்ல !

      கொஞ்சம் காலம் முன்பாக நாம் விளம்பரம் செய்திருந்த (இது வரை வெளி வராத) இதழின் பெயர் தான் தற்போதைய இத்தளத்தின் நிலையை உணர்த்தப் பொருத்தமான பெயராக இருக்கும் ! அது என்னவாக இருக்குமென்பதை கண்டு பிடிக்கும் ஆற்றல் நிச்சயம் உங்களிடம் உண்டென்பதை நானறிவேன் !

      Delete
    3. நிச்சயமாக 'நமது நண்பர்களின் மனதுக்குள் அரித்து வரும் வினாக்களாக' எடிட்டர் சொல்லியிருக்கும் காரணமே இங்கு நிலவும் மெளனத்திற்கும் காரணம் என்பதை என் கருத்தாக இங்கே பதிவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

      அன்றி, 'காமிக்ஸ் மீதான சலிப்பு' என்பதை துளியும் ஏற்க முடியாது. 30+ ஆண்டுகளாக இதுவரை சலித்துவிடாத மிகச்சில விசயங்களில் காமிக்ஸும் ஒன்று!

      Delete
    4. காமிக்ஸ் மீது ஆர்வம் குறைந்து விட்டதாய் இதை எண்ண முடியவில்லை :

      1) சொல்ல வேண்
      2) முன்பு மாதம் ஒரு இதழ் வந்த பொழுது - பின்னர் சற்றே தடிமனாய் நூறு பக்க டபுள் ஆல்பம் வந்த பொழுது ஆற, அமர படித்து விவாதித்திட நமக்கு ஒரு மாத கால அவகாசம் இருந்தது. இப்பொழுது மாதம் மூன்று கதைகள் மற்றும் அவ்வபோது ஸ்பெஷல் இதழ்கள் என தொடரும்போது படிக்க எடுக்கும் நேரம் சற்றே அதிகம். இதன் பின்னர் கலந்துரையாட இருந்திடும் கால இடைவெளி குறைவு.

      எடிட்டர் சொன்ன பிற காரணங்களில் சிலதுகளிலும் உண்மை இல்லாமல் இல்லை, Looks to be a collective progression.

      புத்தகங்களில் வரும் கருத்துகள் காமிக்ஸ் உற்சாகம் கூடி இருப்பதையே காட்டுகிறது!டிய நிஜமான கருத்துக்கள் தவிர ஏனைய கருத்துக்கள் பிறரால் பதிக்கப் படுவதை பார்த்து மௌனமாய் இருக்கலாம்

      Delete
    5. டியர் எடிட்டர்ஜீ!!!

      //ஏனெனில் இன்னொரு சாத்தியமான பதில் - 'காமிக்ஸ் மீதே லேசான சலிப்புத் தட்டிப் போய் விட்டதால் கொஞ்சமாய் ஒதுங்கி நிற்கிறோம் ' என்பதாகத் தானிருக்க முடியும் ! //

      நிச்சயமாய் இல்லை ஸார்.இங்கு நிறைய கமெண்ட்ஸ் போட்டுவந்த நண்பர்கள் ஈரோடு விஜய், கார்த்திக் சோமலிங்கா, ஸ்டீல் க்ளா போன்றவர்களை தேவையில்லாமல் சில "புண்ணியாத்மாக்கள்" வம்புக்கிழுத்து அவர்களை நோகடித்துவிட்டார்கள். சில போலி ஐ.டி.காரர்களின் திடீர் பிரவேசமும்,அவர்களின் போலி மேதாவித்தனம் நிறைந்த மொழிநடையும் சமீபத்தில் இங்கே சில குழப்பங்களை அரங்கேற்றின. இதனால் கமெண்ட் இடுவது குறித்து அடியேனுக்குக்கூட சிறிது சலிப்பு ஏற்பட்டதும் நிஜம். இது கமெண்ட் இடுவது குறித்தான சலிப்பே தவிர, காமிக்ஸ் மீதான சலிப்பல்ல.ஆகவே, பிரியாணி போடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

      இனி யார் என்ன பேசினாலும் சரி.வசைபாடினாலும் சரி.கமெண்ட்ஸ் இடும் நமக்குள்ள உரிமையை நாம் பயன்படுத்துவதற்கு சிறிதும் தயக்கம் காட்டாமல் இருக்குமாறு அனைத்து நண்பர்களுக்கும் கேட்டுகொள்கிறேன்.

      இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!!!

      Delete
    6. "காவல் கழுகு"

      Delete
    7. //கைதட்டல் கேட்க இரு கரங்கள் அவசியமல்லவா நண்பரே ? நான் மாத்திரமே கை வீசிக் கொண்டிருந்தால் வருவது காற்றாகத் தானிருக்கும் - கரவோசையாக அல்ல ! //

      //பின்னது தான் நிஜமெனில் முட்டையிடும் வாத்தைப் பிரியாணி போடும் கட்டத்தை எட்டி இருக்கிறோம் என்பது தவிர்க்க இயலா conclusion ஆக இருந்திடும்//

      இந்த இரண்டு வரிகள் மிகவும் கடினமானவைகளாக, அழுத்தம் நிறைந்தவைகளாக ஒருவித வலியை மனதினுள் விதைகின்றன. தவிர்த்திருக்கலாம் சார்.

      இங்கே நிலவு அமைதி மிகவும் தற்காலிகமானது என்பதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன். நண்பர்கள் பெரும்பாலோனோர் தங்களது day to day பிரச்சனைகளுள் மூழ்கியுள்ளதால் இங்கே பதிவிட நேரமின்மையால் தவிப்பது மட்டுமே ஒரே காரணமாக இருக்க முடியும்.

      புதிய நண்பர்களின் பங்களிப்பு கூடி இங்கே வருகைப்பதிவு அதிகமாகும் போது இவ்வகை சுணக்கம் இருக்காது. lets look at the things optimistically and take steps forward .

      Delete
    8. காமிக்ஸ் மீது சலிப்பு...?
      இதென்ன புது கதை..?
      இந்த எந்திர உலகில் நமக்கு மட்டுமே சொந்தமாகவும் ஒரு தனி உலகமாகவும் வயது வித்தியாசங்களை தாண்டி சிறு பிள்ளைகளைப்போல குதூகலிக்க நமக்கிருக்கும் ஒரே மார்க்கம் இந்த காமிக்ஸ் தான்....
      சமயத்தில் சில பல வேலைப்பளுவாலும் இன்னபிற காரணங்களினாலும் சில நண்பர்கள் பதிவிடாமல் இருக்கலாம்...அதற்காக நீங்கள் சட்டத்தை கையிலெடுத்துக்கொள்ளாதீர்கள்..ஆசிரியரே..

      Delete
  38. டியர் எடிட்டர்,

    இம்மாத இருவிதழ்கள் அச்சுத்தரத்தினில் அருமை.

    பைங்கிளிப் படலம் படித்து முடித்தேன். சிக் - பில்லின் பழைய கதைகள் போலல்லாது இக்கதையில் ஒரு தேக்கம் நிலவுவது தெரிகிறது. டாக்-புல், கிட் ஆர்டின் காமெடி ஓரிரு இடங்களில் சிரிக்க வைக்கிறது எனினும் - பொதுவாய் இந்தக் கதை ஒரு predictable இழுவை.

    அந்தக் கால தமிழ்ப் படங்களில் வில்லனின் மகள் ஹீரோவை காப்பாற்றுவது போன்ற கதை.

    வளரும் சிறுவர்களைக் இக்கதை கவரக்கூடும். Chik-Bill is steadily moving towards classics reprint queue !

    கடினமான பணிகளுக்கிடையே அச்சுத் தரத்தினை மேல் நிறுத்தும் உங்கள் பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

    லார்கொ இன்னும் படிக்கவில்லை - ஒரு மசாலா அதகளம் waiting என்றறிவேன்.

    Comic Lover

    ReplyDelete
    Replies
    1. Raghavan : //பைங்கிளிப் படலம் படித்து முடித்தேன். சிக் - பில்லின் பழைய கதைகள் போலல்லாது இக்கதையில் ஒரு தேக்கம் நிலவுவது தெரிகிறது//

      அப்பாடி ...! என் சிந்தனையோடு ஒத்துப் போகும் கருத்து !

      'சிக் பில் கதை சூப்பர் !' என நண்பர்களில் பெரும்பான்மையினர் இங்கு பதிவிட்ட போது நான் மண்டையை பர பர வெனச் சொரிந்தது தான் நிஜம் ! பைங்கிளிப் படலத்தில் நகைச்சுவையைப் புகுத்த வேண்டி வசனங்களில் நான் ரொம்பவே மெனக்கெட்டேன் என்பதை என் மொழிபெயர்ப்பிற்கொரு பீற்றலாய் நான் சொல்வதை விட - சிக் பில் கதைகளில் குன்றி வரும் இயல்பான நகைச்சுவைக்கொரு எடுத்துக்காட்டாகவே பதிவிட விரும்புகிறேன் !

      கடந்த பதிவில் நண்பர் ரபிக் 'LMS -ல் சிக் பில்லை இணைக்க வாய்ப்புள்ளதா ?' என்ற கேள்வியை எழுப்பிய போது நான் - "10 நாட்களில் பதில் சொல்லுகிறேன்" என அவகாசம் வாங்கியதும் precisely for this reason !

      சிக் பில்லின் சமீப கதைகள் நாம் எதிர்பார்க்கும் சீரான உயர்தரத்தில் இருப்பதில்லை என்பதை நான் கொஞ்ச காலம் முன்பாகவே உணர்ந்ததால் தான் LMS -ன் திட்டமிடலில் வுட்சிடியின் ஆசாமிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை ! பைங்கிளிப் படலத்தின் தலையங்கத்தை மீண்டுமொரு முறை படித்துப் பார்த்தீர்களானால் கூட - உள்ளே காத்திருக்கும் கதையின் ஒடிசலான கதைக்களத்தைப் பற்றி மெல்லியதொரு கோடு போட்டிருப்பேன் ! அதற்காக "பைங்கிளிப் படலத்தை" ரசித்த நண்பர்களின் ரசனைகளை மட்டம் தட்டுவதாய் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை ! சிக் பில் & கோ -விடம் நாம் எதிர்பார்க்கும் சூப்பர் - டூப்பர் natural humor இதில் குறைச்சல் என்பது தான் எனக்குப் பட்டது !

      1970 & '80 களில் உருவாக்கப்பட்ட கதைகளை டிஜிட்டல் பைல்களாய் படைப்பாளிகள் சீக்கிரமே தயாரித்தால் தேவலை என்பது தான் bottom line !

      Delete
    2. அச்சச்சோ! ஸ்டீல்பாடியாரின் வரிசையில் இப்போது வுட்சிட்டி கோமாளிகளுமா? வேதனை! :(

      Delete
  39. Largo usual actiion v.good but avoid too much censor.sir i m very eager to see tex separate issue every month and xiii mystery.kkk i hope to see a color version.thank u.

    ReplyDelete
    Replies
    1. Sridhar : அவசியமற்ற சங்கதிகளைத் தாண்டி - கதைக்கு தேவையான எதிலும் கை வைக்க நான் முனையவில்லை என்பதால் சென்சார் அளவுகோல்களை நீங்கள் எவ்விதம் பார்த்திடுகிறீர்கள் என்பது தெரியவில்லை ! விரசம் எனும் விஷயம் எட்டிப்பார்க்க வாய்ப்பளித்தால் - நிறைய வீடுகளுக்குள் உரிமையோடு நாம் நுழையும் சுதந்திரத்தையும் இழந்திட நேருமே ?

      Delete
    2. விஜயன் சார்,

      // விரசம் எனும் விஷயம் எட்டிப்பார்க்க வாய்ப்பளித்தால் - நிறைய வீடுகளுக்குள் உரிமையோடு நாம் நுழையும் சுதந்திரத்தையும் இழந்திட நேருமே ? //

      +1 நல்ல விஷயம்.

      Delete
  40. dear sir,adutha pathi epothu sir.ungal pathivai parka matume nan avapothu internet rc seikiren pala san
    mayam naliravu varaikuda kathirunthu padipen.

    ReplyDelete
  41. விஜயன் சார், சிக்-பில் கதை படித்துவிட்டேன், நகைச்சுவை அதிகம் இல்லை என்றாலும் மோசம் என சொல்ல முடியாது. வில்லனை கடுப்பு ஏற்ற இந்த கோமாளிகள் செய்யும் இடம்கள், குறிப்பாக டாக்-புல் மேல் முட்டை எறிந்து கலாட்ட செய்த இடம்கள் வாய்விட்டு சிரித்தேன். தொடரட்டும் இவர்களின் காமெடி.

    காமிக்ஸ் என்பது எனக்கு என்றுமே சலிக்கபோவது இல்லை, இளையராஜாவின் இசையை போல்!

    ReplyDelete
  42. அப்பாடா... ஒரு வழியா இன்னிக்கு புக்ஸ் வந்துடுச்சு! கிடைக்குமோ கிடைக்காதோன்னு காத்திருந்து கைப்பற்றுவதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்யுது. ன்னான்றீங்க?

    ReplyDelete
  43. காமிக்ஸ் மீதான சலிப்பு என்பது நடக்கவே இயலாதது. வேண்டுமானால் விருந்து சாப்பாடு ருசித்ததால் அடுத்த விருந்துக்கான பசியெடுக்க விருந்து சாப்பிடுபவர்கள் ஓய்வெடுக்க சென்றுள்ளார்கள் என கொள்ளலாம் !

    ReplyDelete
  44. எடிட்டர் சார்!

    தங்கல் கருத்தை படித்து வருத்த மாக இருந்தது. காமிகசின் மேல் சலிப்பு உண்மையான ரசிகர்கலுக்கு எப்படி ஏரபடும்?

    அரசியல் பேசி நண்பர் ராகவனிடமும் பீட்டர் விட்டு புனித சாததானிடமும் குட்டு வாங்கினேன்.அவர்கலின் மோதிர கையால் குட்டு வாங்கியதாகவே எண்னுகிரேன். blog-ல் புதிதாக வருவோர் சீனியர்கல் சொல்வதை வழிகாட்டுதலாக
    கருத வேண்டுகிரேன்.

    நண்பகர்கலுகுல் ஏர்படும் கருத்து முரண்பாடு காமிக்சின் மேல் மனம் வைக்கும் ஈடுபாட்டை ,அன்பை சிதைக்க வல்லது அல்ல.

    வாத்து பிரியானி என நீங்கல் நினைக்குமவண்ண்ம் லயன் காமிக்சின் நேசர்கல் மன முதிர்ச்சி இல்லாதவரகல் அல்ல.

    சமீப காலம் வரை மௌன பார்வையாலன் என்ர வகையில் blog ரசிக்க வைதததே தவிர சகிக்க வைதததில்லை.

    சில சீனியர் பொருமை காப்பதர்க்கு நேரமின்மை வேலைச்சுமை காரண்மாய் இருக்கலாம் அல்லவா?

    sir ! COMICS LESSON THE AGE. EVEN IF IT'S NOT SO LION FANS ARE MATURED ENOUGH NOT TO ALLOW DIFFERENCE OF

    OPINIONS TO MEDDLE NOT ONLY LION COMICS BUT THIS BLOG TOO.

    THE BOND OF LOVE OF FANS TO LION COMICS IS MUCH STRONGER THAN YOU BELEIVE.

    YOUR STATEMENT OF WEARINESS TOWARDS COMICS , லயன் காமிக்ச் வாத்து பிரியானி TOO MUCH TO BEAR WITH

    ReplyDelete
    Replies
    1. டியர் லக்ஷ்மி செல்வம்!!!

      உங்கள் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட அழகாக இருக்கிறது.ஆங்கிலத்தில் டைப் அடித்தப்பின் வரும் ஆப்சன்களில் உள்ள சரியான தமிழ் வார்த்தைகளை தேர்ந்தெடுக்க சற்று மெனக்கெடவேண்டும்.KEEP IT UP. SIR !!!

      Delete
    2. நன்றி திரு புனித சாத்தான் . விரைவில் பிழை யின் றிக்கி ஆங்கிலம் கலவாது எழுத பழகிடுவேன்.

      Delete
    3. வாழ்த்துக்கள்............செல்வம்

      Delete
  45. டியர் எடிட்டர்,

    லார்கோ கதை இப்போதுதான் படித்து முடித்தேன். வழக்கமான அதிரடி - வில்லன் யார் என்பது நல்ல சஸ்பென்ஸ்.

    லார்கோவின் கதைகள் வருடத்திற்கு இரண்டு (டபுள்) ஆல்பம்கள் என்ற முடிவு சரியானது 80 N கருத்து.

    அச்சுத் தரமும் நன்று.

    நீங்கள் கூறியது போல ஆர்ட் பேப்பர் என்பதால் வண்ண அடர்த்தி ஒரு சுற்று மிகைதான். இனி வரும் Thorgal இதழ்களிலும் இவ்வாறான வண்ணக் கலவைகள் உண்டு.

    thorgal மற்றும் லார்கொ கதைகள் மட்டும் மேட் finish ஒரே முறை முயற்சித்து பார்க்கலாம். ஆனால் இரு வகை தாள்களுக்கும் விலை வித்யாசம் அதிகமில்லை என்னும்போது ஒரே விலையில் வரும் மேட் finish (iso ஆர்ட் பேப்பர் - வழவழ) - வாசகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது தான் ஒரே விஷயம்.

    ReplyDelete
  46. வாத்து, பிரியாணி எனும் சொற்பதப் பிரயோகங்கள் சற்றே வருத்தத்தை அளித்தன ஸார். நிச்சயம் அதற்கு அவசியமில்லை. இந்த சந்தேகம் இங்கே கருத்துரைகள், விவாதங்கள் குறைந்ததால் ஏற்படவில்லை, ஏற்படக்கூடாது என விரும்புகிறேன். ஏனெனிலும் பின்னூட்டப்பங்களிப்பு என்பது தற்காலிகமானது. நூறு பேர் நூறு கமெண்ட் இடுவது சிறந்ததா? அல்லது 20 பேர் 400 கமெண்ட் இடுவது சிறந்ததா? இரண்டாவதைத்தான் ஆசிரியர் விரும்புகிறாரா? நகைச்சுவை, கொண்டாட்டங்கள் பின்னூட்டங்களில் நிகழ்வது இத்தளத்தின் சுறுசுறுப்புக்கு உகந்ததுதான். ஆனால் அது கட்டாயமன்று. நண்பர்களின் நேரம், அந்தந்த நேரத்து சக நண்பர்களின் கம்பெனி போன்றன அவற்றுக்குக் காரணமாகலாம். அது குறையும், கூடும். அதை வைத்து வேறெந்த பெரிய முடிவுகளும் எடுக்கப்பட்டுவிடக்கூடாது.

    நம்மைப்போல முன்னாள் காமிக்ஸ் ரசிகர்கள் மட்டுமே இப்போதும் காமிக்ஸை ஆதரித்துவருகிறோம், நம்மால்தான் இது நடந்தேறிவருகிறது எனில் இந்த சந்தேகம் அவ்வப்போது ஏற்படுவதை, அத்னால் நம் ஊக்கம் பாதிக்கப் படுவதை தவிர்க்கவே இயலாது. பலரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயமான புதிய வாசகர்களை ஈர்ப்பது, குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினரை ஈர்ப்பதுதான் இதற்கு ஒரே தீர்வாக இருக்கமுடியும். மேலும், நம் தலைமுறையின், இன்னும் நமது இப்போதைய எழுச்சியை உணராத மீதமிருக்கும் நண்பர்களையும் நாம் சென்றடைந்தாக வேண்டும். அதைச்செய்ய, நமது விளம்பரங்கள், டிஸ்ட்ரிபியூஷன் வழிமுறைகள் எல்லாவற்றிலும் ஒரு பெரும் எழுச்சி நிகழ்ந்தாகவேண்டும். இதை மீண்டும் மீண்டும் சொல்லி ஆசிரியரை கடுப்பேற்றுவது என் நோக்கமில்லை எனினும் நம்முன் இருக்கும் ஒரே தீர்வு அதுதான். இதை நிறுனத்தின் பிசினஸ் வளர்ச்சி என்றவகையில் மட்டும் பார்க்காமல், வாசிப்பை அடுத்த தலைமுறைக்கு ஏற்படுத்தும் நற்செயலில் நம்மாலான பங்கு எனும் ஒரு அற்புதமான சேவை என்ற கண்ணோட்டத்திலும் பார்க்கவேண்டுமாய் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இன்னொன்றும் கூட.. இது பெரிய ரிஸ்க் எனினும் இதை நம் நிறுவனத்தால் நிச்சயம் சாதிக்கமுடியும் எனவும் நம்புகிறேன். எந்த நம்பிக்கையில், கடந்த மூன்றாண்டுகளாய் இத்தனை பெரும் எழுச்சியை ஏற்படுத்தமுடிந்தது? இதிலும் பெரும் ரிஸ்க் இருக்கத்தானே செய்திருக்கும்?

    கதைத்தேர்வுக்குறைகள், அச்சுக்குறைபாடுகள், சேவைக்குறைபாடுகள் பற்றி எப்போதுமே ஒரு 20% கமெண்டுகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதை உணரமுடியும். மீதம் 80% கமெண்டுகள் எந்தக்குறைபாடுகளும் இல்லை எனவும், கதைத் தேர்வு அற்புதம் எனவும் தெரிவிக்கின்றன. குறை சொல்பவர்கள் எப்போதும் குறையே சொல்வார்கள் என்பது இதன் அர்த்தமல்ல. ஒரு மாதம் நான் 20ல் இருந்தால் அடுத்த மாதம் 80ல் இருப்பேன். இவ்வாறான நிலை இருந்துகொண்டேதான் இருக்கும். உதாரணமாக, 2 வருடங்களுக்கு முன்பு வந்த கதையை ரீபிரிண்ட் செய்ய முடிவு செய்தாலும் அதை வரவேற்க ஆட்கள் இருப்பார்கள். 40 வருடங்களுக்கு முன்வந்த ஒரு அட்டகாசமான கதையை ரீப்பிரிண்ட் செய்ய முடிவு செய்தாலும் அதை மறுதலிக்கவும் ஆட்கள் இருப்பார்கள்.

    குறைகளை களைய முயற்சி செய்து அந்த 20சதவீதத்தை குறைக்கும் முயற்சி தொடர்ந்து நடந்துகொண்டேயிருப்பது நம் தரம் முன்னேற மிக அவசியம். அதற்கு தேவையான ஊக்கம் வழங்க இருக்கவே இருக்கிறது 80%. இந்த விஷயத்துக்கான இன்புட்டை வழங்குவது மட்டுமே பின்னூட்டங்களின் பங்களிப்பாக இருக்கவேண்டுமே தவிர பிற முக்கிய முடிவுகள் எடுக்க காரணியாக பின்னூட்டங்களின் எண்ணிக்கை அமைந்துவிடக்கூடாது. இப்போதைய நமது சிறிய சர்குலேஷனுக்கு மட்டுமே நமது இதழ்கள் என்றாகிவிட்டால், வாத்து பிரியாணி கதை ஒரு நாள் நிஜமாகிவிடக்கூடும். அதை நடக்கவிடாமல் தடுக்க நீங்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சியிலும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்ற உறுதியை மட்டும்தான் எங்களால் தரமுடியும்!!

    ReplyDelete
    Replies
    1. /* நூறு பேர் நூறு கமெண்ட் இடுவது சிறந்ததா? அல்லது 20 பேர் 400 கமெண்ட் இடுவது சிறந்ததா? */

      +1000

      Delete
    2. /* குறைகளை களைய முயற்சி செய்து அந்த 20சதவீதத்தை குறைக்கும் முயற்சி தொடர்ந்து நடந்துகொண்டேயிருப்பது நம் தரம் முன்னேற மிக அவசியம். அதற்கு தேவையான ஊக்கம் வழங்க இருக்கவே இருக்கிறது 80%. இந்த விஷயத்துக்கான இன்புட்டை வழங்குவது மட்டுமே பின்னூட்டங்களின் பங்களிப்பாக இருக்கவேண்டுமே தவிர பிற முக்கிய முடிவுகள் எடுக்க காரணியாக பின்னூட்டங்களின் எண்ணிக்கை அமைந்துவிடக்கூடாது */

      + 1000

      Delete
    3. தெளிவான சிந்தனை!

      Delete
  47. டியர் உடுப்பு ஆசான் ...............
    நீங்கள் செய்ததது சரியே ......
    லார்கோ சில இடங்களில் ரொம்ப மோசம் சாரே............
    நீங்கள் உடுப்பு மாத்திரம் கொடுக்கிலங்கில்.........
    அக்கதையை நாங்கள் பாத்ரூமில் தான் படிக்கணும் சாரே........
    அல்லங்கில் யான் ''விரச நகரம் வெனிஸ்னு''பேர் விளிக்கும் சாரே .........
    காலியாக கண்ணன் சாரே நீங்கள்.........
    சாரி
    கலியுக கண்ணன் சாரே நீங்கள்..........
    ஆர்ட் பேபரில் ஆர்ட் போட்ட சாரே ...........
    நீங்கள் நன்னாயிட்டு(NUN அல்ல )இருக்கணும்.........


    இறுக்கி அணைச்சு ஒரு உம்ம (கதை நல்ல விறுவிறுப்புனு அர்த்தம் )
    கிரேட் அப்பளம் சாரே ......(APPLAUSE )

    ReplyDelete
    Replies
    1. :D ரகளை பண்றீங்க மந்திரியாரே...

      Delete
    2. வாய் விட்டு சிரித்தமைக்கு நன்றி ..........................
      இப்பிடி நீங்க எல்லாரும் களேபரம் பண்ணினால் ...........
      உடுப்பு ஆசான்...........கடுப்பு ஆசனா ...............
      மாறி
      என்னை .................
      சீறி.............
      சின்னா பின்னம் பண்ண வேண்டும் அதானே உங்கள் ஆசை...........நல்லா இருங்கப்பு...........

      Delete
    3. சூப்பர்ன்னு... மலையாளத்தில் நாங்கள் பனி(ஐஸ்) வைத்தால் மந்திரிக்கு தெலுங்கு பனி(காய்ச்சல்)

      வரும் பரவயில்லையா?

      Delete
    4. எனக்கு ''சளியில் ஒரு சனி'' இருக்குனு நினைகிறேன்............(விளக்கம் தேவயா என்ன...? )

      Delete
  48. சார் ....எனக்கு வந்த இரண்டு புத்தங்களின் அச்சு தரமும் நன்றாகவே உள்ளது .சில நண்பர்களின் கூற்று படி எனது புத்தகத்திலும் நீல வண்ணம் ஆரம்ப பக்கங்களில் உண்டு தான் .ஆனால் அது இரவு வேளையில் நடை பெரும் சம்பவங்கள் என்பதால் ஓவியர் அந்த பாணியை கடை பிடித்து உள்ளார் என்று தான் நான் நினைத்து கொண்டு இருக்கிறேன் .ஆனால் நண்பர்களுக்கு அது குறையாக தெரிகிறது .

    இதில் யார் நினைப்பது சரி ..?

    லார்கோ கதையை பொறுத்த வரை கதையும் சரி ..,சித்திர பாணியும் சரி ..,மொழி ஆக்கமும் சரி அதிரடி சரவெடி .....அதுவும் இந்த முறை வெளி வந்த " விளம்பர ஓவியங்கள் " அனைத்தும் கண்ணை கவர்ந்தது .

    சிக் பில் கதையை பொறுத்த வரை ரொம்ப சந்தோஷ படுத்தவும் இல்லை .ஏமாற்றமும் அளிக்க வில்லை .பரவாயில்லை ரகம்.

    ஆனால் தங்கள் இந்த " பதிவு " மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்பது மட்டும் உண்மையோ ..உண்மை .

    ReplyDelete
  49. வாத்து பிரியாணி நல்ல இருக்குமா ...?
    நான் ஒரு சைவ பட்சினி.........?

    நான் கமெண்டை குறைத்து கொண்டதற்கு பிறகு புதிதாய் நிறைய பேர்களை பார்க்க முடிகிறது
    மீண்டும் ஒரு கூட்டணி அமைத்து கள கட்டிடுவோம் பாருங்கள்.......

    எதற்கும் ஈமுவையும் வாங்கி வையுங்கள்..........(நான் பார்பதோடு சரி )

    ReplyDelete
  50. பதினாறு வரிகளுக்கு மிகாமல் பதிவை போடுக னு யாரவது கடுதாசி போட்டு இருப்பர்களோ ...........
    எனக்கு என்னம்மோ P P P மேல ஒரு டௌட் (பின் பக்க பிறான்டியார்................
    அப்பாடி வம்பிழுத்து எம்புட்டு.................................................................... நாளாச்சு........... )

    ReplyDelete
    Replies
    1. இல்ல நானூறு பேர் சேர்ந்து கால் கால் கமெண்ட் போடறது சிறந்ததா .......?
      இல்லஇருநூறு பேர் சேர்ந்து அரை அரை கமெண்ட் போடறது சிறந்ததா .......?
      இல்ல ஐம்பது பேரு சேர்ந்து ரெண்டு ரெண்டு கமெண்ட் போடறது சிறந்ததா .......?
      இல்ல இருபத்தி அஞ்சு பேர் சேர்ந்து நாலு நாலு கமென்ட் போடறது சிறந்ததா .......?
      ஹி ஹி ஹி
      சிரிக்க மட்டுமே ...........
      கண்டிப்பாக சிந்திக்க கிடையாது ..........
      சொல்லுங்க எஜமான் சொல்லுங்க
      சொல்லுங்க எஜமான் சொல்லுங்க

      Delete
    2. லார்கோவின் தோழிகள் உடை போல............................ பதிவை போட்ட காமிக் ஆசானுக்கு ஒரு குட்டு

      Delete
    3. சிக்பில் கதையை விட மந்திரியின் கமென்ட்டுகலின் வீரியம் விலா நோக சிரிக்க வைக்கின்ரது

      Delete
    4. //சிக்பில் கதையை விட மந்திரியின் கமென்ட்டுகலின் வீரியம் விலா நோக சிரிக்க வைக்கின்ரது//

      உண்மை தான். ஒரிஜினல் "மதியில்லா மந்திரியை" விட இந்தப் போலி (ஹி ஹி.. போலி என்று சொல்வதற்கு மன்னிக்கவும்) மதியில்லா மந்திரிக்குத் தான் நான் ரசிகன் :)

      Delete
    5. .............. துரதிஷ்டம் பிடிச்ச வைரக்கல் ஒன்னு prunthabanக்கு பார்சல்............. (நன்றின்னு சொன்னேன் சார் )

      Delete
  51. ஹாலிவுட் பிரபல மோசன் கேப் ஷரிங் நிறுவன தலைவர் பில் ஸ்டீல் கோ " கோச்சடையான் " படத்தை பார்த்து விட்டு தெரிவித்த கருத்து....

    இந்த படத்தை சிலர் குழந்தைகள் படம் என்கிறார்கள் என்கிறார்கள் .அது அவர்களின் அறியாமையை காட்டுகிறது . அவர்கள் அனைவரும் " கிராபிக் நாவல் மற்றும் காமிக்ஸ் " படிக்க தவறியதால் தான் இப்படி எல்லாம் பேசி கொண்டு இருக்கிறார்கள் .

    அப்ப நமக்கு ..? :-)

    ReplyDelete
  52. மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். லார்கோ வழக்கம் போல பட பட பட சட சட சட சட அடி தூள் சார். கடந்த 2மாசமாத்தான் தல , லார்கோன்னு சூடு பிடித்து உள்ளது. பள்ளி ஆரம்ப வாரம் சார் , நம் நண்பர்களில் பலர் அதில் பிசியோ என்னவோ ?. அதற்குள் பிரியாணி வருகறி புரோட்டான்னு ஏன் டென்சன் ஆகின்றீர்கள் சார். கடுமையான கண்டனங்கள் சார்.

    ReplyDelete
  53. லயன்படித்து வாழ்வாரே வாழ்வார் பிறர்வாழ்வில்
    பயனிலையே அவர்செய் பாவம் என்கொல்?

    துஞ்சிடுமோ விழியிரண்டும் தூரத்தே ஆகஸ்ட் 2
    அஞ்சிடுமே மனமதுவும் அதுவரையில் வலி தாங்க
    கெஞ்சிடுமே மிஞ்சிடுமே கேடு கெட்ட பேராசை.ஆம் !
    நெஞ்சினிலே லயன் மேக்னம்.

    முத்தெடுக்க பல தமிழர் கடல் மூழ்க சௌந்தரபாண்டியனார்
    முத்தெடுத்தார் நிலமீதில் நீடு வாழ்வார் அவர் வாரிசோ
    அங்கமதை தான் வருத்தி தங்கமதை தேடாது
    சிங்கமதை கொணர்ந்த்திட்டார் சீருடனே வாழியவே

    தப்புபல தான் திருத்தி தாமதபேய் விரட்டி
    ஒப்பிலா தமிழ்நடையால் ஊரார் மனம் மயக்கி
    முப்பதாம் அகவையிலே முன்செல்லும் சிங்கமதை
    எப்போதும் இறவாவரம் பெற இறைவனை இறைஞ்சுகிரோம்.

    முதியோர் பின் வருவார் முனைப்புடனே கருத்துரைப்பார்
    புதியோரே வருக! மேல்போர்த்த நாணம்எனும் ஆடை துறந்து
    தளத்தினை பலப்படுத்த தாரனியோர் வாய்பிளக்க
    உளமது கூறுவதை ஊரறிய உரைக்க வா!

    யாரிவர் அவர் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யாது
    ஊர்கூடி தேர் இழுப்போம் உவகை கொளவோம்
    பார் அதிர படையெழுமின்! பட்டாசு சிவகாசி
    ஊர் அதிர உண்மை பேச வா! நண்பா! வா!




    ReplyDelete
    Replies
    1. ச்செல்லம்....................
      என்ன சொல்ல வர்ராருணா லயன் காமிக்ஸ் வள்ளுவன்,நாலடியார் காலத்து முதலே தொன்று தொட்டு இருந்து வருகிறது என்பதற்கு சான்று பகிர்கிறார்...........
      காமிக் ஆசனானின் பூட்டனார் கந்தர்வ பாண்டியனார் அவர்கள்.................
      பல குகைகளில் சித்திர படக்கதை வரைந்து பின்வரும் சந்ததிக்கு............
      லயன் காமிக்ஸை விட்டு சென்றுள்ளார் என்பதற்கு மேற்கண்ட செய்யுளில்ஆதாரம் காண முடிகிறது............

      என்ன ச்செல்லம் ............சரி தானே நான் சொல்லறது............

      Delete
    2. அட அட அட! சினிமாலதான் ஹீரோ ஒரே பாட்டுக்கப்புறம் கோடீஸ்வரன் ஆவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். இங்கே நிஜத்துல போன பதிவுல ஆங்கிலத்துல கமெண்ட் போட்டு இந்த பதிவுல தமிழ் டைப் பண்ணவே சிரமப்பட்ட நம்ம லக்ஷ்மி செல்வம், இப்போ புலவர்களுக்கு இணையாக செய்யுள் இயற்றி , அத பிழையில்லாம பதிவேற்றி அதகளம் பண்றாரே!

      இதை தான் கடுமையான உழைப்புன்னு சொல்லனும்.The early bird might get the worm, but the second mouse gets the cheese என்பதை போல இத்தனைநாள் இங்க குப்பை கொட்டி அங்கும் இங்கும் நெளியற புழுக்கள கொதிட்டிருந்தோம். நம்ம லக்ஷ்மி இப்போ வந்து சீஸ் கட்டிய எடுத்துட்டு போயிட்டார்.

      அருமையான மொழி வளம். வாழ்த்துகள் லக்ஷ்மி! தொடர்ந்து கலக்குங்க.

      Delete
    3. @ Lakshmi selvam

      நான் ஏழாப்புப் படிக்கும்போது எழுதிவச்சுத் தொலைஞ்சுபோன செய்யுள் ஒன்று, இத்தனை வருசங்களுக்குப் பிறகு எங்கிட்டயே வந்துருச்சு! ;)

      @ மந்திரி

      //பல குகைகளில் சித்திரப் படக் கதை வரைந்து பின்வரும் சந்ததிக்கு லயன் காமிக்ஸை விட்டுச் சென்றுள்ளார் //

      ஹா ஹா ஹா!

      Delete
    4. நன்றி பல! விஸ்கி சுஸ்கி! அழகி+ மென்பொருள தரவிறக்கம் செய்து அதனுடனே

      போராட்டம். அழகியுடன் போராடுவது லார்கோ மற்றும் சைமனுக்கு மட்டுமே கைவந்த

      கலையா என்ன? இச்சமயம் திரு புனித சாத்தான் அவரினை அன்புடன் நினைவு

      கூர்கிறேன். என் சோம்பல் விடுத்து செந்தமிழின்பால் வழிநடத்தியமைக்கு.

      Delete
    5. lakshmi selvam : அற்புத சொல்வளம் நண்பரே ! நம் தமிழுக்குத் தான் என்னவொரு வசீகரம் !!

      Delete
  54. uyar raga art paperku bathil valavalapparra matte paperil irunthal originality irukkum ena enbathu en karuthu.
    colours in art paper looks garish most of the times.
    is it very costly to print in matte paper?

    ReplyDelete
    Replies
    1. event horizon : Matte பேப்பர் மொத்தமாய் இறக்குமதி செய்தால் மட்டுமே கிடைக்கக் கூடிய ரகம். மொத்த இறக்குமதி என்பது பல லட்ச முதலீட்டைக் கோரும் விஷயம். So நடைமுறையில் சாத்தியமில்லை !

      Delete
    2. thank you for your kind reply. this was my first post to you. i ve been silent spectator of this blog for long. i posted because to show you there are lot of fans without participating actively in the discussion. please keep going sir. all the best wishes for your endeavours.

      Delete
  55. விஜயன் சார்,

    லார்கோ - நல்ல அதிரடியான கதை வழக்கம் போல ஆனால் சைமன் இல்லாமல் இருப்பதால் எதோ ஒன்று மிஸ் ஆனது போல தோன்றுவது எனக்கு மட்டும் தானா?

    கோமாளிகள் - சிக்பில் வரிசையில் இன்னுமொரு ஓகே ரக கதை. மந்திரியார் கதைகள் பார்த்து ரொம்ப நாளாயிற்றே சார் ... அவரையும் கொஞ்சம் கவனிக்கலாமே ...






    ReplyDelete
    Replies
    1. திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : சைமன் விட்ட குறை, தொட்ட குறை அனைத்தையும் அடுத்த சாகசத்தில் தீர்த்து வைத்து விடுவார் ! மனுஷன் அடுத்த பாகத்தில் ஒரு டி.வி. நடிகராய் துவம்சம் செய்யக் காத்திருக்கிறார் !

      மந்திரியாரைப் பொறுத்த வரை - அவரது கதைகளின் மைய நகைச்சுவையே வார்த்தை விளையாட்டுக்களில் உருவாகும் விஷயங்கள். ஆங்கில puns பல நேரங்களில் தமிழுக்கு மொழிமாற்றம் ஆவதில்லை ! So ரொம்பவே தேடிப் பிடித்து தான் , இவரது கதைகளை பயன்படுத்த முடியும் !

      Delete
  56. அன்பு ஆசிரியர்

    லார்கோ அருமை இரவில் நடக்கும் நிகழ்வுகளை ப்ளூ கலரில் காண்பித்தது, இன்ப்ரா கதிர்களை கொண்டு

    எதிரியை இனம் கண்டு சுடும் காட்சியில் பச்சை நிறம் வருவது, மாளிகை விருந்தில் தீப்பந்தங்களின்

    ஒளியை போன்று மஞ்சள் நிறம்....என்று கலரிங் ஆர்டிஸ்ட் அசத்தியிருக்கிறார்.. சித்திரங்கள் அற்புதம்..

    நியூயார்க் அலுவலகத்தில் சேசிங் , வெனிஸ் கடலில்,கால்வாய்களில் சேசிங் என்று அதகளம்

    செய்கின்றன. விஸ்தாரமாக, நிதானமாக திட்டமிட்டு பொறியை தயாரிக்கும் காட்டன் மனதை

    கவர்கிறார். பாரிஸ்,வெனிசில் சுற்றி பார்க்கும் துல்லியத்தை சித்திரங்களில் ஏற்படுத்த முடிந்ததில்,

    கதையின் ஊகிக்க இயலா காட்சியமைப்புகளில் மனம் நிறைந்தது என்றே சொல்லவேண்டும்

    என்னை சிக்பில் கதைகள் என்றுமே கவர்ந்ததில்லை அதனால் பைங்கிளியை பற்றி

    சொல்ல ஏதுமில்லை..

    அப்புறம் வாத்து,பிரியாணி என்பதெல்லாம் மனதை நோகடிக்கிற வார்த்தைகள்.தயவுசெய்து அந்த

    வார்த்தைகளை திரும்ப பெறுங்கள்..காமிக்ஸ் எங்களுக்கு எப்போதுமே அலுக்காது...

    எங்கள் ரசனையும் உயிர் உள்ளவரை மாறாது. யாருக்கும் பயந்து நாங்கள் அமைதியாக இல்லை..

    எங்களால் இங்கே அமைதியின்மை வேண்டாம் என்பதோடு உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்துபவர்கள்

    ரெகுலர் பதிவர்கள்தான் என்ற பொய்யையும் உடைக்கவேண்டியிருந்ததும்தான் இங்கே நிலவும்

    அமைதிக்கு காரணம். எங்கள் தலைவர் பு.சா சொன்னதை போல் உரிமையை உரிய நேரத்தில்

    பயன்படுத்துவோம்.








    ReplyDelete
    Replies
    1. Senthil Madesh : //கலரிங் ஆர்டிஸ்ட் அசத்தியிருக்கிறார்.. //

      +11

      Delete
  57. எடிட்டர் சார், இந்த மாதத்தின் வேட்டை நகரம் வெனிஸ் ஒரே மூச்சில் படிக்க தூண்டும் கதை. ஒரு பைங்கிளிப் படலமும் நன்றாக உள்ளது. LMS இல் சிக்பில் கோஷ்டி இருந்தால் மிகவும் திருப்தியான புத்தகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  58. அன்பு ஆசிரியரே..
    வரும் நாட்கள் ஏதாவாவது ஒன்றில் உங்களிடம் தொலைபேசியில் உறையாட எங்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்துங்களேன்...
    ஒரேயொரு முறை..

    ReplyDelete
    Replies
    1. AHMEDBASHA TK : தொலைபேசியில் பேச முயன்றது நண்பர்களுக்குத் தந்த சந்தோஷத்தை விட - வழங்கிய கடுப்பே ஜாஸ்தி என்பதால் தான் அதனை தொடரவில்லை ! ஏராளமாய்ப் பேசும் ஆர்வத்தில் ஒவ்வொரு நண்பரும் அளவளாவிக் கொண்டிருக்கும் போது, பின்னணியில் கேட்கும் call wait பீப்..பீப் கள் என் B.P -ஐ எகிறச் செய்தது தான் நிஜம். பேசியது பத்துப் பேரிடம் ; பேச முடியாது கடுப்பேற்றியது 20 பேரை என்பது தான் அந்த முயற்சி தந்த பலன் !

      புத்தக விழாக்கள் தான் நிறைய காத்துள்ளனவே ! அங்கு பேசிக் கொள்வோமே!

      Delete
  59. வேட்டை நகரம் வெனிஸ் பரபர action திருவிழா ! Colour composing பிரமாதம் ! இந்த series எப்படி hollywoodல் விட்டு வைத்திருகிறார்கள் ?? வாத்து பிரியாணி என அசைவ பிரியர்களான comicsரசிகர்களையும் சைவத்திற்கு மாற வைதுவிடிர்களே நியாமா? இனி எப்போது பிரியாணி சாப்பிட நினைத்தாலும் தங்கள் dialogue காரணமாக புளியல் பிரியாணிதான் !!!!

    ReplyDelete
  60. சார்,

    வணக்கம், தங்களின் அடுத்தப் பதிவு 'வாத்து, முட்டை மற்றும் பிரியாணி' என்று தலைப்பாகி விடுமோ என்பது தான் இப்போது என் மைண்ட் வாய்ஸ்- சாக இருக்கிறது? காமிக் சலிப்பென்பது ஏற்புடையதல்ல..! சலிப்பென்பது எல்லா விஷயங்களிலும் வரக்கூடியதுதான். அதைப் புதுமையிலும், வித்தியாசமான முயற்சியாலும் மாற்றலாமென்பது எ. த. க.

    . குண்டுச் சட்டியில் குதிரையை ஓட்டுவதுப்போல் மாமூலான நாயர்களைக் கொண்டு மாதா மாதம் வளம் வரச் செய்வதை விட புது புது நாயகர்களின் கதைகளை வெளியிடலாம். (2015-ம் ஆண்டு இதைப் பரிசீலித்துப் பார்க்கலாம்? (ஜூலியா, ரின் டின் கேன், டைலன், மேஜிக் விண்ட் மற்றும் புது வரவுகள்)

    . நமது ‘A’ லிஸ்ட் நாயகர்களான டெக்ஸ், டைகர், லார்கோ, ஷெல்டன், லக்கி லூக், காமான்சே போன்றவர்களை spl. வெளியீடுகளில் மாத்திரம் வளம் வரச் செய்யலாம்.

    1. அதாவது, டெக்ஸ் காம்போ ஸ்பெஷல் (228+228) வருடத்திற்கு 2 புக்.
    2. கேப்டன் டைகர் 3/4 பாகங்களைக் கொண்டு ஸ்பெஷல் புக் ஒன்று.
    3. லார்கோ நான்கு பாக சாகசம் ஒரே இதழாக.
    4. ஷெல்டன் நான்கு பாக சாகசம் ஒரே இதழாக...
    5. கார்டூன் ஸ்பெஷல் - லக்கி லூக், ஜோர்டான், ப்ளூ கோட், சிக் பில் ஒரே இதழாக...
    6. காமான்சே 2 பாகங்கள் ஒரே இதழாக...

    வருடத்திற்கு spl. புக் 6 போக மீதமுள்ள 6 மாதங்களை புது நாயகர்களைக் கொண்டு நிரப்பிவிடலாம்.
    லார்கோ மற்றும் ஷெல்டனை அதே சைசில் B/W-ல் முயற்சிக்கலாம்? (தர்ம அடி காத்திருக்கிறது...?)
    B/W இதழ்களுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்கலாம்.
    ஒருவகையில் இதுப்போல் மாற்றங்களிருந்தால் காமிக்ஸில் நமது ஆர்வம் அதிகரிக்கும் என்பது எ. த. க.

    ReplyDelete
    Replies
    1. அருமையான யோசனையாக தெரிகிறது.

      Delete
    2. யோசனை நல்லது(கறை நல்லது)

      Delete
    3. MH Mohideen : அழகானதொரு அட்டவணை தான் ; ஆனால் நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் ஏராளம்!

      ஆண்டுக்கு ஆறு ஸ்பெஷல் என்பது சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டது என்பது ஒருபக்கமிருக்க - புதுக் கதைகளை just like that வாங்குவது இயலாக் காரியம் ! ஒவ்வொரு பதிப்பகமும் தத்தம் தொடர்களின் உரிமைகளை வழங்கும் போது 'ஆண்டுக்கு குறைந்த பட்சம் இத்தனை கதைகள் வாங்கியாக வேண்டும் !' என்ற நிபந்தனை விதிப்பது சகஜம். So வெளியிடுகிறோமோ -இல்லையோ கதைகளை வாங்கி பீரோவுக்குள் பூட்டியாவது வைக்கும் நிர்பந்தம் நமக்கு உண்டு ! இதில் புது நாயகர்களை இன்னமும் முனைப்பாய் அறிமுகம் செய்ய நாம் விரும்பும் பட்சத்தில் பீரோ மட்டுமன்றி நம் பட்ஜெட்டும் ரொம்பப் பெரிதாக இருந்தாக வேண்டுமே !

      தவிர சின்னதொரு புள்ளி விபரம் :

      லார்கோ அறிமுகம் : 2012
      ஷெல்டன் அறிமுகம் : 2013
      டயபாலிக் அறிமுகம் : 2013
      சுட்டி லக்கி அறிமுகம் : 2013
      ப்ளூ கோட் பட்டாளம் அறிமுகம் : 2013
      கமான்சே அறிமுகம் : 2013
      தோர்கள் அறிமுகம் : 2014
      ஜூலியா ; டைலன் டாக் ; மேஜிக் விண்ட் ; ரின் டின் கேன் அறிமுகம் : 2014

      கிட்டத்தட்ட அனைவருமே ஓராண்டுக்கு அதிகமான timeline -க்கு உட்பட்டவர்களல்ல எனும் போது இவர்களுக்கு இன்னமும் "புதியவர்கள்" என்ற லேபில் பொருந்தும் தானே ?

      Delete
  61. அன்பு ஆசிரியரே..
    வரும் நாட்கள் ஏதாவாவது ஒன்றில் உங்களிடம் தொலைபேசியில் உறையாட எங்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்துங்களேன்...
    ஒரேயொரு முறை..

    ReplyDelete
  62. எனக்கு மே மாத இதழ்களுடன் மியாவி தொகுப்பு இதழ் வந்து சேர்ந்தது . 25ரூ விலையில் குழந்தைகளுக்கு என்று வெளியிட்டுள்ளது ஓகே தான்

    ஆனால் ஒரே மாதிரி மியாவியாக மட்டும் இல்லாமல் 6வித்தியாசம், இரத்த வெறியன், புதிர்கள், துணுக்குகள் கலந்து இருந்திருந்தால்(மறு பதிப்பாக இருந்தாலும் ஓகே)

    ஸாரி டுஸே மியாவி கொட்டாவி ;-(

    ReplyDelete
  63. ஒரு பைங்கிளிப் படலம் :

    புதிதாய் ஒரு பெண் டெபுடி - அவளது ரகளைகள் - காதல் வயப்படும் டாக்புல் - ஏங்கித் தவிக்கும் கிட்ஆர்டின்- காதல் மயக்கங்கள், சோகங்கள், வழிதல்கள், காதலுக்கான மோதல்கள் என்று 'ஒரு கழுதையின் கதை'க்குப் பிறகு மீண்டும் அதகளம் செய்திருக்கிறார்கள். முற்பாதியில் பக்கத்துக்குப் பக்கம் சிரிக்க வைக்கிறார்கள். பிற்பாதியில் சிக்பில்-குள்ளனுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே 'பழிவாங்கும் படலத்தில்' பயணிக்க வைத்ததால் ஒரு தொய்வு நிலை ஏற்பட்டுவிட்டதாய்த் தோன்றுகிறது.

    மற்ற சந்தர்ப்பங்களை விடவும், காதல் வயப்படும் ஆர்டின்-டாக்புல் ஜோடி முகபாவங்களாலும், ஒருவரையொருவர் சரமாரியாய் கலாய்ப்பதிலும் சக்கைப்போடு போடுகின்றனர். குறிப்பாக டாக்புல்லின் முகபாவங்களையும் (ஒரே பக்கத்திலேயே எத்தனை விதமான முகபாவங்களைக் காட்டுகிறார் மனிதர்!!), அதற்குத் தோதான வசனங்களையும் படிக்கும் யாரும் சிரிக்காமலிருந்தால் ஆச்சர்யம் தான்! காமெடி வசனங்களுக்காக எடிட்டர் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் என்பது கண்கூடு.

    அதிகமுறை சிரிக்க வைத்ததால் லக்கியின் 'எதிர் வீட்டில் எதிரி'யை பந்தயத்தில் பின்னுக்குத்தள்ளியிருக்கிறார்கள் இந்த வுட்சிட்டி கோமாளிகள் என்பது என் கருத்து!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : சின்னதொரு விஷயத்தைக் கவனியுங்களேன் விஜய் : சிரிப்பு மூட்ட ஷெரிப் அடிக்கும் கூத்துக்களோ ; அல்லது ஒரு அழகிய பெண்ணின் வரவோ அவசியமாகிக் கொண்டே வருவது தான் சிக் பில்லின் தற்போதைய template ஆக இருந்து வருகிறது ! பைங்கிளிப் படலத்தின் பின் பாதி செம ஜவ்வு என்பது அப்பட்டம் !

      துவக்க நாட்களது சிக் பில் கதைகளில் ஒரு இயல்பான கதைக்களம் நம் முன்னே திரை அகல - அதனுள் நண்பர்கள் செய்யும் லூட்டிகள் நிஜமான சுவாரஸ்யத்தை உண்டு பண்ணின ! விண்வெளியில் எலி ; இரும்புக் கவ்பாய் ;நட்புக்கு நிறமில்லை போன்ற கதைகளை தற்போதைய கதையோடு ஒப்பிட்டுப் பாருங்களேன்..?

      Delete
    2. ம்ம்ம்.... சிக்பில் குழுவினருக்கு 'THE END' கார்டு போட முடிவு செஞ்சுட்டீங்க போலிருக்கே? :(

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  64. //எங்கள் ரசனையும் உயிர் உள்ளவரை மாறாது. யாருக்கும் பயந்து நாங்கள் அமைதியாக இல்லை..//
    +11111111111111

    ReplyDelete
  65. வாய் விட்டு சிரிக்க வைப்பதில் வார்த்தை சித்தர் மந்திரியாரே நீவீர் !!!!

    ReplyDelete
  66. வாயில் அல்வா வைத்து பேசினாலும் உச்சரிக்க முடியவில்லை. அமெரிக்க

    உயர்தர ரெஸ்ட்டாரன்டின் மெனு கார்டு போன்ற பிரமையை ஏற்படுத்தும்

    அனைத்து பெயரினையும் ஒன்றன் கீழ் ஒன்றடக்கினால்.
    சிறார் பலருக்கு அது கடினமாக தெரியாதா ? ஜெர்மானிய இத்தாலிய குரோக்ஷிய ஸ்லோவேக்கிய பெயரினை ஆங்கில பெயராக மாற்றுவது கதை களத்தின் பின்புலத்தில் நெருடலை ஏற்படுத்தினாலும் சிரமம் குறையும் அல்லவா?

    66-ம் பக்கத்தில் ஒரேயொருமுறை வரும்
    பெயர் டுஸ்ஸல்டார்ப் மற்றும்
    டோஹ்ஜ்
    ஸன் ஜியோ வானி பவேலா

    இன்னும் பிற.

    பேன்கா டி காமர்சியோவின் தலைவர் என்பதை இத்தாலிய வங்கி குழும தலைவர்

    என சொன்னால் யாவர்க்கும் புரியும் அல்லவா?

    [ முப்பது வருட சிங்கத்திடம் நேற்று பெய்த மழையில் வந்த காளன் மொழி பெயர்ப்பு

    பற்றி பேசுகிறது. எல்லாம் நேரம்தான்.)

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் சார்!
      லார்கோ கதையில் வரும் கதாபாத்திர பெயர் பலவும்

      Delete
    2. lakshmi selvam : ஒவ்வொரு கதையின் பின்புலத்திலும் உள்ள உழைப்பு, research - சிற்சிறு விஷயங்களின் மீதும் கதாசிரியர் காட்ட முனையும் நுணுக்கங்களின் பிரதிபலிப்பு ! நீங்கள் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பெயருக்கும் பின்னே கதையின் ஓட்டத்தோடு ஒரு மெல்லிய சம்பந்தம் இருப்பது கண்கூடு ! வாய்க்குள் நுழைய சுலபப் பெயர்களாய் இருக்கட்டுமே என்று நான் அவற்றை மாற்றுவது கதாசிரியரின் உழைப்பை ஓரம் கட்டுவது போல் ஆகாதா ? லார்கோவின் கதைகளைப் படிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்ட நாம் ; அதன் சர்வதேசக் களத்தை ரசிக்கக் கற்றுக் கொண்ட நாம் ; அதன் மாந்தர்களின் பெயர்களையும் ஏற்றுக் கொள்ளத் தடுமாறப் போகிறோமா என்ன ?

      Delete
  67. டியர் எடிட்டர்ஜீ!!!

    ஒரு பைங்கிளி படலம் இன்றுதான் படித்தேன். வுட்சிட்டி போலீஸ்காரர்கள் வழக்கம்போல வயிறுவலிக்க சிரிக்கவைத்தார்கள். செரீப் டாக்புல் அழுகிய முட்டையால் அடிவாங்கும் காட்சியில் "இந்த ஆசாமி எங்கள் ஹீரோ கிட் ஆர்டினை எத்தனை முறை பின்பக்கம் உதைத்திருப்பார். இவருக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்" என்று நினைத்தபடி சிரித்தேன்.நல்லவேளை, பாப்லோ பிக்காசோ உயிரோடு இல்லை. இருந்திருந்தால் உங்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடுத்திருப்பார்.எக்ஸலன்ட் நக்கல் ஸார்:-)

    அருமையான கதைக்கு மோசமான அச்சுத்தரம் ஒரு திருஷ்டி பொட்டு. புத்தகத்தின் 10 மற்றும் 30 ஆம் பக்கங்கள் மட்டுமே அச்சுத்தரத்தில் சென்டம் வாங்குகின்றன.மற்ற பக்கங்கள் 35 டு 40 பார்டர் மார்க் மட்டுமே எடுத்துள்ளன.இந்த குறைபாட்டை அடுத்தடுத்த இதழ்களில் களைவீர்கள் என நம்புகிறேன்.(கடும் பணிசுமையால் லார்கோ விஞ்ச் புத்தகத்தை இன்னும் பிரித்துக்கூட பார்க்கவில்லை)

    ReplyDelete
  68. மன்னிக்கவும் ! சின்ன குளறுபடி. எனவே மறுபடியும்...................

    எடிட்டர் சார்!
    லார்கோ கதையில் வரும் கதாபாத்திர பெயர் பலவும்

    வாயில் அல்வா வைத்து பேசினாலும் உச்சரிக்க முடியவில்லை. அமெரிக்க

    உயர்தர ரெஸ்ட்டாரன்டின் மெனு கார்டு போன்ற பிரமையை ஏற்படுத்தும்

    அனைத்து பெயரினையும் ஒன்றன் கீழ் ஒன்றடக்கினால்.
    சிறார் பலருக்கு அது கடினமாக தெரியாதா ? ஜெர்மானிய இத்தாலிய குரோக்ஷிய ஸ்லோவேக்கிய பெயரினை ஆங்கில பெயராக மாற்றுவது கதை களத்தின் பின்புலத்தில் நெருடலை ஏற்படுத்தினாலும் சிரமம் குறையும் அல்லவா?

    66-ம் பக்கத்தில் ஒரேயொருமுறை வரும்
    பெயர் டுஸ்ஸல்டார்ப் மற்றும்
    டோஹ்ஜ்
    ஸன் ஜியோ வானி பவேலா

    இன்னும் பிற.

    பேன்கா டி காமர்சியோவின் தலைவர் என்பதை இத்தாலிய வங்கி குழும தலைவர்

    என சொன்னால் யாவர்க்கும் புரியும் அல்லவா?

    [ முப்பது வருட சிங்கத்திடம் நேற்று பெய்த மழையில் வந்த காளன் மொழி பெயர்ப்பு

    பற்றி பேசுகிறது. எல்லாம் நேரம்தான்.)


    ReplyDelete
  69. நாள முழுதும் கடமைகள. பின்னிரவில் மனையாட்டியின் கோபப் பார்வையை மஞ்சு

    விரட்டு வீரன் போல் எதிர் கொண்டு பிற நண்பரின் பின்னூட்டமதை படித்து நமது

    எண்ணத்தை பதிவு செய்து ........தாவு தீர்கிறது.( 4 வயது குழந்தை சொன்னதாம் என்

    வாழ்க்கையிலே இவ்வளவு மழை பாத்ததில்லே. ) தளத்திற்கு நான் வந்து 2 நாள கூட

    ஆகவில்லை. இப்போது புரிகிறது ரெகுலர் பதிவர்தமை ஆசிரியர் சிலாகிப்பது ஏன் என்று.

    ReplyDelete
  70. நண்பர் Lakshmi Selvam அவர்களின் கருத்திற்கு உடன்படுகிறேன்.

    லார்கோவின் 'W' குழுமத்தின் உறுப்பினர்களின் பாத்திரங்களும், பதவிகளும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியவில்லை. மேலும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் புது புது கதாபாத்திரங்கள் (வில்லன்கள் மற்றும் தோழிகள்) அறிமுகப் படுத்தப்படுகின்றனர். இத்தனைக்கும் லார்கோ தொடரை முதலில் இருந்து படித்து வரும் எனக்கு சற்றே அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. என்னதான் * போட்டு 'பார்க்க "என் பெயர் லார்கோ" ' என்று கூறினாலும், கதைகளுக்கு இடையேயான இடைவெளிகளின் காரணமாக நினைவிற்கு வரவில்லை (அடியேனின் வயதும் ஒரு காரணமே....ஹிஹிஹி).

    எனவே ஒவ்வொரு இதழிலும் ('என் பெயர் லார்கோவில் அறிமுகப்படுத்தியது போல) ஒரு 'list of characters' முதல்/கடைசி பக்கத்தில் இணைத்தால் நன்றாக இருக்கும். மேலும் இத்தகைய தொடர்கதைகளை புதிதாய் வரும் வாசகர்களும் ஓரளவிற்கு புரிந்து கொள்ள உதவியாய் இருக்கும்.

    # பின்னுட்ட திருவிழாவில் கலந்து கொள்ளாமல், சற்றே ஒதுங்கி மௌனச்சாமியாய் (ஆசாமி) இருப்பதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, எனக்கு இதழ்கள் வந்து சேர்வது 10-15 நாட்கள் கழித்தே. அதற்குள் நம் நண்பர்கள் அவர்களின் விமர்சங்களை ஊறப்போட்டு, துவைத்து, பிழிந்து, ஆறப்போட்டு விடுகிறார்கள். மேலும் அடுத்த இதழ்களை பற்றிய அடுத்தடுத்த பதிவுகளும் அரங்கேறி விடுகின்றன. நீங்கள் 'கோமான்களை' பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, நான் 'எஞ்சி நின்றவனை' பற்றி பேசினால் எப்படி இருக்கும் (பி.கு. வெளிநாடு வாழ் வாசகர்கள் எப்போதும் எஞ்சி நின்றவர்களே...!?)

    இரண்டாவது, பின்னூட்ட கழக உறுப்பினர்களில், சிலர் திடீரென கலக-உறுப்பினர்களாகி அச்(சச்சோ)மூட்டுவதால், சற்றே விலகி இருக்கவே தோன்றுகிறது.

    ஆனாலும் ஒவ்வொரு கதையின் பின் இருக்கும் உங்களின் மற்றும் நம் குழும அங்கத்தினர்களின் உழைப்பைப் பார்க்கும் பொழுது, இனி வரும் இதழ்களின் நிறை- குறைகளை வலைபதிவில் அல்லாமல் ஒரு மின்னஞ்சலில் தெரிவித்து விடுகிறேன்.

    கடைசியாக, இந்த வாத்து-பிரியாணி எண்ணங்களை களைந்து விடுங்கள். நீங்கள் எத்தனை கதைகள் வெளியிட்டாலும் எனக்கு திகட்டவே திகட்டாது. ஆனால் வெவ்வேறு genre-களை கொண்டுவரும் முயற்சிக்கு நீங்கள் தலைகீழாய் நின்று தண்ணீர் குடிப்பது நன்றாகவே தெரிகிறது. ஒரு சாதாரண வாசகனாய் என்னால் +2 சந்தாக்களை மட்டுமே கூட்ட முடியும். சில நண்பர்கள் கூறியது போல, சந்தா தவிர்த்து மற்ற வழிகளில் வாசகர்களை எட்ட முடிந்தால் விஸ்வரூப வெற்றியே.

    ReplyDelete
  71. திரு ராஜ வேல் தங்கள் கருத்தை தயை கூர்ந்து மாற்றி கொள்ளவும் .ஆசிரியர்க்கு தாங்கள் மின்னஞ்சல் அனுப்பினால் உங்கள் கருத்தை நாங்கள் எப்படி அறிவோம் . நாரதர் கலகம் நன்மையில் முடியும் .பழக வாங்க .

    Lakshmi. Selvam என்கிற abirami selvam.

    இரட்டை வேடதாரி அல்ல .smart phone ல்

    alternate identity ல் log செய்ய தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. எந்த i d இருந்தால் என்ன .............
      இனிமேல் நான்'' ச்ச்செல்லம்னு'' தான் கூப்பிடுவேன்..............
      சொல்லிபுட்டேன்
      ஒரு கேரக்டர் லோகோ ஒன்னு வச்சுகோங்க ...........

      Delete
  72. மேற்கிலிருந்து. திரு ராஜவேல் கிழக்கில் இரு ந்து கிருபாகரன தெற்கில் இருந்து. தினகரன்
    வடக்கில் இருந்து வந்தியத்தேவன். என தீவிர
    காமிக்ஸ் ஆர்வலர்கள் தளம் விட்டு விலக எண்ணினால் என்னை போன்ற புதிய அரைவேக்காட்டுத்தனம் மாறாத பாலகர்கள்
    எப்படி வளர்வார்கள்.

    என்னை பொறுத்தவரை சுயமரியாதை சட்டை
    அணிய தேவையில்லாத நிர்வாண சிறுவனாக
    இத்தளத்தில் உலவ விரும்புகிறேன் .அப்படியே மன்தில் உணர்கிறேன் .

    கருத்து வேறுபாடு காயப்படுத்தும் என எனக்கு
    தெரியாது .
    என்ன செய்தாலும் நான் போக மாட்டேன்பா.

    உளிதாங்கி கல்லதுவும் உருவச்சிலை ஆகிடுமே. வலிதாக்கி வலிதாங்கி வண்ணசிலையாக அல்ல வழிபாதைகல்லாக
    இருந்திடுவேன். யான் அறிந்தவரை யார் நெஞ்சிலேயும் நஞ்சு இல்லை

    சி

    ReplyDelete
  73. நேற்று தான் பைங்கிளி படிச்சு முடிச்சேன் ...................
    சரியான சிரிப்பு ...............
    நீண்ட நாள் கழித்து நான் வாய் விட்டு சிரித்தேன்..........

    டாக்புல்லுக்கு ஒரு ஓட்டை ஊஞ்சல் ................
    அதில அவருக்கு முக்கியமான இடத்தில லேபில் போட்டது சரி .........
    ஆனால்
    வலது அக்குள்.............
    இடது அக்குள்.....
    தொப்புள் .....
    கழுத்து............
    என ஏகத்துக்கு லேபில் போட்டதை பார்த்ததும் என்னால் சிரிப்பை அடக்க முடியல.............
    ஒரு மனுஷனுக்கு அங்கமெல்லாம் கூட அசிங்கமா இருக்குமா என்ன..............ஹி ஹி ஹி


    மந்திரினியின் சிறு வயதில் ......(போச்சுடா............இவனுமா ......)
    பிளாக் ஸ்கேலட்..............
    எஸ்.......
    ஆர்ட்டின் மரணம் முதல் கதையில் பார்த்த முகமா இது..........ஹி ஹி ............
    இருபது ஆண்டு கழித்து ஒரு வில்லனை பார்ப்பது அதுவும் இந்த கோலத்தில் .........
    ஒரு வேளை ஆர்ட்டின் அவன் மண்டையில் கூஜா மூலம் போடுவாரே ஒரு போடு ......
    அதனால இப்படி இசகு பிசகு ஆயிடுச்சா ......ஹி ஹி ஹி

    ReplyDelete
    Replies
    1. மதியில்லா மந்திரி : டாக்புல்லாரின் பிரதான பிரதேசங்களுக்கு ஆடை உபயம் தான் நம் கைங்கர்யம் ! அவரது உடலில் ஆங்காங்கே ஒட்டி இருக்கும் சமாச்சாரங்கள் ஒரிஜினலில் உள்ளவை !

      Delete
    2. Welcome back sir..
      Very very happy to see you responding here ...

      Delete
    3. ஆனாலும் என்னால் சிரிப்பை இன்னும் கூட அடக்க முடியலை சார்

      Delete
  74. நண்பர்களே ....இந்த பதிவு மீண்டும் கலவரங்களுக்கு வித்திட்டால் அதற்க்கு நான் மட்டுமே பொறுப்பு கிடையாது .இங்கு வரும் அனைவரும் தான் என்ற உறுதி மொழியோடு இதை தொடங்குகிறேன் .

    ஆசிரியர் அறிவித்த " ஒரு கை ஓசை சத்தம் " என்ற தத்துவத்தில் நான் உடன் படுகிறேன். அவர் கூறுவது உண்மை தான் .இங்கு வந்த பலரில் சிலர் இப்பொழுது காணாமல் சென்றதும் ..,பதிவுக்கு ஒரு பதில் என்ற கட்டுப்பாடும் சில நண்பர்கள் இப்பொழுது கடைபிடிப்பது கண்கூடு .ஆனால் அதற்க்கு வித்திட்ட நவீன நண்பர்கள் அளித்த காரணம் உண்மையாக இருப்பின் அவர்கள் சொன்ன காரணத்தை நண்பர்கள் கடைபிடித்த பின் அவர்கள் வழக்கம் போல மீண்டும் வந்து தமது என்ணத்தை பகிர்ந்து இருந்தால் அவர்கள் வாதத்தில் உண்மை இருக்கலாம் .இப்பொழுது வருபவர்களையும் காணோம்...அவர்களையும் காணோம் .இதன் " உள்ளர்த்தம் " என்ன ? அவர்கள் விரும்புவது இங்கு " அமைதி " மட்டும் தானா ?

    இதன் காரணமாக இங்கு அமைதியானது நாம் மட்டுமா நண்பர்களே ? ஆசிரியரும் தாம் என்பது இந்த பதிவின் நீளத்தை பார்த்தாலே தெரியும் .ஒரு வேளை இதை தான் அவர்கள் விரும்பினார்களா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் .இப்படியே போனால் இனி ஆசிரியர் புத்தகம் வரும் நாள் முன்னர் " நாளை உங்களுக்கு புத்தகம் கிடைக்கும் .பார்த்து படித்து விமர்சனம் அளியுங்கள் " என்பதோடு ஒவ்வொரு மாதமும் பதிவை முடிப்பார் என நினைக்கிறன் . அப்புறம் பேச் புக்குல சொன்னாக..,மௌத் புக்குல சொன்னாக ன்னு " கட்டுப்பாடு " கடைபிடிக்கிறது நல்லாயில்லை .அவர்களுக்கு பிடிக்க வில்லை என்றால் அவர்கள் வராமல் இருக்கட்டும்...அதற்காக நாமும் வர கூடாதா என்ன ? இப்பொழுது என்னை கூட எடுத்து கொள்ளுங்கள் .நான் அந்த கலவர பதிவில் பதில் அளிக்கும் போது "என் எழுத்து இவ்வளவு பேமஷ் ஆகி விட்டதா ?அப்ப நான் சிறு கதையை கூட எழுதலாம் என்றேன் .உடனே நவீனமான சிலர் இது தான் உச்ச பட்ச "தற்பெருமை " என கிண்டல் செய்தார்கள் .நான் வெறும் வார்த்தை விளையாட்டிற்கு அளித்த பதில் .உண்மையாகவே ஒரு அழகான விறுவிறுப்பான சிறுகதை எழுத நான் பெங்களூர் கார்த்திக் அல்லவே ..?இவர்கள் இப்படி சொல்லி விட்டார்களே என்று நான் மூலையில் ஒதுங்கி கொண்டால் நஷ்டம் அவர்களுக்கு அல்லவே ..எனக்கு தானே ? என்ன நஷ்டம் என்கிறேர்களா எனது கருத்தை சொல்லாமல் விட்டால் இன்னேரம் ஒரு பத்து கிராபிக் நாவலை வெளி இட்டு என்னை கண்ணீர் கடலில் தத்தளிக்க விட்டு இருப்பார் ஆசிரியர் .

    அதே சமயம் நண்பர் ஆதி தாமிரா சொன்னது போல குறைவான நண்பர்கள் நல்ல கருத்தை வெளி இட்டால் போதும் என்றால் கூட நண்பர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் .விளையாட்டு மைதானத்தில் கொடி அசைத்து துவக்கி வைக்கும் நடுவருக்கு ( ஆசிரியருக்கு ) பார்வை யாளர்கள் அதிகமாக வந்தால் மட்டும் மகிழ்ச்சி கிடையாது .மைதானத்தில் வீரர்களும் அதிகம் கலந்து விளையாட்டு நடை பெற்றால் தான் நடுவர் மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் மகிழ்ச்சி என்பதை எப்பொழுது உணருவீர்கள் நண்பர்களே ? வெறும் மைதானம் பார்வையாளர்கள் இருப்பதால் மட்டும் மகிழ்ச்சியை அளிக்காது என்பதை உணருங்கள் நண்பர்களே ...மைதானதிற்கு வெளியே கூச்சல் போடும் நண்பர்களுக்கு கட்டுப்படும் தாங்கள் மைதானத்தில் விளையாடும் வீரர்களும்...விளையாட்டு நடுவரும் சொல்ல வருவதை ஏன் புரிந்து கொள்ள மறுத்து கொண்டு இருக்கிறேர்கள் .புதிதாய் வந்த லக்ஷ்மி செல்வம் அவர்கள் புரிந்ததை தாங்கள் புரிந்து கொள்ளாதது மடமை அல்லவா ?

    எனவே இனியாவது பழைய படி எப்பொழுதும் போல எந்த கட்டுப்பாடும் அல்லாமால் இந்த ஈரோட்டுகாரர் ..கோயமுத்தூர் காரர் ..,பெங்களூர்காரர்...இந்தி காரர் ...ரமேஷ் காரர் .. பழைய பதிவு காரர்கல் .மற்றும் எல்லாகாரரும் வந்து இந்த மைதானத்தை சந்தோஷ படுத்துங்கள் கட்டுப்பாடு இல்லாமல் ....அதே சமயம் அடுத்தவரை காயபடுத்தாமல்.......

    ReplyDelete
    Replies
    1. இத இத தான் எதிர்பார்த்தேன் ..............
      நாட்டமை ரமேஷ் வாங்கோ............
      தார் ரோட்டுக்காரர் வாங்கோ .......
      இரும்பு கையார் வாங்கோ...........
      அட எனக்கு போர் அடுக்குது சாமி ......

      ''ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாளும் எனக்கொரு கவலை இல்ல''
      இது தான் நம்ம குல மியூசிக்
      நானூறு கமெண்ட் போட்டா தானே சீக்கிரம் மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெசல் வாங்கலாம்..................

      Delete
    2. @ பரணிதரன்

      இதுவரை இருந்த மௌனம் அர்த்தமுள்ளது நண்பரே... ரெகுலர் பதிவர்களின் மீது உள்ள குற்றச்சாட்டு

      என்ன?...

      இவர்களின் அதீத உற்சாகம் காரணமாக புதியவர்கள் உள்ளே நுழைவதில் தயக்கம் காட்டுகிறார்கள்

      இவர்கள் ஏகமாக பதிவிட்டு புதிதாக நுழைபவர்களுக்கு வழி(!!) விடாமல் இருக்கிறார்கள்

      ரெகுலர் பதிவர்களுக்கு மட்டும் எடிட்டர் ஊக்கமளிக்கிறார்

      எடிட்டரை இம்ப்ரஸ் செய்வதற்கே இவர்கள் பதிவிடுகிறார்கள்.. குறைகளை சொல்லுவதில்லை

      இந்த குற்றச்சாட்டுகளுக்கு நமது மௌனம் பதிலளித்துவிட்டது...குற்றச்சாட்டுகள் அனைத்தும்

      இட்டுக்கட்டப்பட்ட, கற்பனையான ஒன்று என்பது தற்போது அனைவருக்கும்

      தெரிந்துவிட்டது .... நமது பொறுமையே உண்மையை வெளிக்கொணர்ந்தது என்பது நமது நண்பர்களின்

      வெற்றிதான்..

      இந்த தளத்தை முடக்குவதுதான் அவர்களின் நோக்கம் என்று சொன்னபோது நமது நண்பர்களே

      அதை நகைப்புக்குரிய கருத்து என்றனர் என்பது நினைவிருக்கிறதா உங்களுக்கு? ஆனால்

      நடந்தது என்ன? சமீப காலங்களில் தளம் உயிர்துடிப்பு இல்லாமல்தானே இருந்தது ...... ஏறக்குறைய

      முடங்கியது என்றுதான் சொல்லவேண்டும்.... (எடிட்டரே வருத்தபடும் அளவு )

      தடைகள் நீங்கி விட்டதால் இனி வழக்கம் போல் தொடர்வோம்

      Delete
  75. well said parani it is poring with out erode vijay ,steel karthik somalinga ,ramesh et al. come on folks and make the block rock

    ReplyDelete
  76. யாரேனும். இருக்கிறீர்களா? ஏன் ? இந்த நீண்ட மிக நீண்ட.......... நிசப்தம் .gravity -ல்
    Sandra bullock அனுபவிப்பது. போல அண்ட வெளியின். அந்தகார மௌனம் .

    அல்லது புதிய பதிவு எதிர்பார்த்து இனிய ஊமை மொழியா ?

    ReplyDelete
  77. load. More -பிரச்சினையை. எப்படி தீர்ப்பது என நண்பர்கள் கலந்து உரையாடியது கண் முன தோன்றுகிறது .தள பதிவு குறைந்து அந்த பிரச்சினை இப்படியா தீரவேண்டும் என
    கருதுகையில் நெஞ்சிலும் கண்ணிலும் குருதி
    வழிகிறது

    ReplyDelete
    Replies
    1. டியர் செல்வம்.,
      நேற்றைய பகல் பொழுதினில் ஆசிரியர் பதிவேற்றிய புதிய பதிவு இது கூர்மண்டயர் வாரம் . அங்கே வாங்க, தொடர்ந்து பழகுங்க! :-)

      //load. More -பிரச்சினையை. எப்படி தீர்ப்பது என நண்பர்கள் கலந்து உரையாடியது கண் முன தோன்றுகிறது //

      ஹா ஹா ஹா ! நம்ம நண்பர்கள பத்தி உங்க அபிப்பிராயம் ரொம்ப தப்பு!

      Delete