Sunday, April 13, 2014

இதுவும் கடந்து போகும் !

நண்பர்களே,

வணக்கம். ''...என்னாது - சிவாஜி செத்துப் போய்ட்டாரா ?" என்ற டயலாக் தான் நினைவுக்கு வருகிறது - எனது இன்றைய நிலையை பரிசீலனை செய்தால் !! சிவகாசியில் பங்குனிப் பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு 3 நாட்கள் விடுமுறை ; குடும்ப விசேஷம் பொருட்டு வெளியூர் பயணம் ; LMS பணிகள் ; லார்கோ மொழிபெயர்ப்பு என்று எங்கெங்கோ உலாவித் திரிந்ததால் கடந்த வாரத்தின் பெரும்பகுதிக்கு நான் இங்கு தலை காட்டவே நேரமில்லாது போனது  !  கடந்த பதிவின் கடைசி 100 பின்னூட்டங்களில் இங்கு ஏதேதோ நடந்திருப்பதை நான் துளியும் அறிந்திருக்காமல் - எப்போதும் போல் புதிய பதிவை தயார் செய்து விட்டு 'தேமே' என்று வார இறுதியினை எதிர்நோக்கிக் கிடந்தேன். ! நண்பர் சுஸ்கி-விஸ்கி என் பதிவில் தொனித்த உற்சாகமின்மையைச் சுட்டிக்காட்டி பின்னூட்டம் இட்டிருந்த போது கூட எனக்குப் பொறி தட்டவில்லை ; ஆனால் இன்று பகலில் நண்பரொருவரின் மின்னஞ்சலைப் பார்த்த பின்பு தான் அவசரம் அவசரமாய் எக்கச்சக்க "Load More " க்குப் பின்னே கடந்த பதிவின் களேபரங்களைக் கவனித்தேன் ! சிக்கலுக்குள் நுழையும் முன்பாக இங்கு அனைவருக்கும் நானொரு பொதுவான மன்னிப்புக் கோரலை சமர்ப்பிப்பது தான் முறையாகும் ! எப்போதுமே பதிவுகளின் இறுதிப் பின்னூட்டங்கள் ஜாலியான கலாய்த்தல் தோரணங்களாய் இருப்பதால் அவற்றினை நான் சாவகாசமாய், நேரம் வாய்க்கும் போது மட்டுமே பார்வை இடுவது வழக்கம். இம்முறையும் அதே எதிர்பார்ப்பில் அடுத்த பதிவு + எதிர்நிற்கும் பணிகளுக்குள் நான் புகுந்து விட்டதே இடைப்பட்ட அவகாசத்திற்குள் இங்கு நடந்த அசம்பாவிதங்களுக்கு மைய காரணம் என்ற உறுத்தல் என்னுள் மேலோங்கி நிற்கிறது ! So இங்கு வருகை தரும் நண்பர்கள் அனைவருக்கும் முதலில் எனது unconditional apologies ! 

பெருமூச்சு விடுவதைத் தாண்டி என்ன எழுதுவது என்ற சிந்தனை எனக்குள் முழுமையாய் வியாபித்து நிற்கின்றது ! சமூகவலைத்தளக் கருத்துப் பரிமாற்றங்களுக்கு நான் ரொம்ப ரொம்பத் தாமதமான வருகையாளன் என்ற வகையிலும், இந்தப் புதுயுக வாழ்க்கை முறைகளோடு முழுமையாய் ஒன்றிட இயலாத டைனோசாராக என்னை நானே பார்த்துக் கொள்வதாலும் இந்த blog எழுதத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் திருவிழாவில் தொலைந்த குழந்தையைப் போல் நான் விழித்த நாட்கள் அநேகம் ! 'படக்' என நீட்டப்படும் பூமாலைக்கு ஜாலியாய் தலையை நீட்டத் தயாராகும் கணமே, 'பொடேரென' பின்மண்டையில் விழும் சாத்தை சமாளிக்கத் தெரியாமல் தடுமாறிய தருணங்கள் நிறையவே உண்டு ! ஆனால் அது அத்தனையையும் தாண்டி இங்கு என்னால் குப்பை கொட்ட முடிவதற்கு ஒரே காரணமாய் நான் கருதுவது நாம் அனைவரும் பேசும் ஒற்றை பாஷையான - காமிக்ஸ் நேசம் மட்டுமே ! அபிப்ராயங்களை வெளிப்படுத்தும் விதங்கள் வெவ்வேறாய் இருப்பினும், அவற்றின் ஆழத்தில் இருப்பது காமிக்ஸைக் காதலிக்கும் ஒரு மனதே என்பதை சிறுகச் சிறுக உணர இயன்ற போது எனக்கு எதுவுமே பாரமாய்த் தெரியவில்லை ! என்னை இங்கோ, வேறெங்கோ காரசாரமாய் விமர்சிக்கும் நண்பர்கள் கூட அவசியமென்று கருதும் தருணங்களில் அனுப்பிடும் தனிப்பட்ட முறையிலான மின்னஞ்சல்கள் இங்கு யாரும் யாருக்கும் பகைவர்கள் அல்ல என்பதை எனக்கு அழுத்தமாகவே அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளன ! 

அதற்காக விமர்சனங்களை புன்சிரிப்போடு ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்து விட்டது ; 'இந்தக் கன்னத்தில் சாத்தினால், மறு பக்கத்தைக் காட்டும் விவேகம் பிறந்து விட்டது' என்றெல்லாம் நான் ரீல் விடப் போவதில்லை ! அவ்விதம் எவர் சொன்னாலும் அண்டப் புழுகர் சங்கத்தில் ஆயுள் உறுப்பினர் ஆகி விட்டாரென்பது நிச்சயம் ! நான் செய்திடக் கற்று வருவதெல்லாம் விமர்சனங்களுக்கு ஆளாகிட எழும் வாய்ப்புகளை மட்டுப்படுத்த இயன்றதைச் செய்வதை மாத்திரமே ! 'மொழிபெயர்ப்பில் நெருடல்' என்ற குரல் ஒலிக்கத் தொடங்கிய நாள் முதலாய் அதனில் இருமடங்குக் கூடுதல் கவனம் ; அச்சுத் தரத்தில் பிரச்னை என்ற ஆதங்கங்கள் உரக்கக் கேட்டதைத் தொடர்ந்து அச்சுப் பிரிவை  upgrade செய்ய பிரயத்தனங்கள் ; கதைத் தேர்வுகளில் ups & and downs என்ற புகார் கேட்ட போது அதனை நிவர்த்திக்க நிறைய சிந்தனைகள் என்று என் சக்திக்கு உட்பட்டவைகளைச் செய்ய முற்பட்டு வருகிறேன் ! அதற்காக குறைகள் பூரணமாய்க் களையப்பட்டு விட்டன என்ற கற்பனையில் நானில்லை ! மொழிபெயர்ப்பில் இன்னமும் நேர்த்தி கூடிட இடமுண்டு என்பது உணர்கிறேன் ; அச்சுப் பிரிவில் நொடிப் பொழுது கவனக் குறைவு நேர்ந்திடும் பட்சத்தில் கூட 'பழைய குருடி..கதைத் திறடி' தொடரலாம் என்பதை நான் அறியாதில்லை ; எத்தனை கவனமாய் கதைகளைத் தேர்வு செய்தாலும்,  ஒரு 'காவியில் ஒரு ஆவி ' ரகப் பொத்தல்கள் தொடரத் தான் செய்கின்றன என்பது என் கவனத்தைத் தாண்டுவதில்லை !  ஆனால் சதா காலமும் முயற்சித்து வருகிறேன் என்ற திருப்தி எனக்குள்  நிறையவும் , விமர்சிக்கும் நண்பர்களுக்குக் கொஞ்சமாகவேனும் பரவிட வாய்ப்புக் கிட்டும் போது "all will be well" என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன் ! 

இங்கு நம் தளத்தைப் பொறுத்த வரை - ஆற்றலில், அறிவில் யாரும் யாருக்கும் சளைத்தவர் அல்லர் என்ற நம்பிக்கை எனக்குப் பூரணமாய் இருப்பதால் எவ்வித போதனைகளுக்கும் அவசியம் இருப்பதாய் நான் நினைக்கவில்லை ! நமக்கென எந்தவொரு கட்டுப்பாடுகளையோ  ; 'இப்படித் தான் இங்கு பங்கேற்க வேண்டுமென்ற' ரீதியிலான guidelines களோ போட்டுக் கொள்ளவுமில்லை ; நண்பர்களின் கருத்துகளுக்குக் கடிவாளம் போடவும்  நான் விழைந்ததில்லை ! ஆனால் சில தருணங்களில் இங்கு வைக்கப்படும் விமர்சனங்களுக்கு  ; மாற்றுக் கருத்துக்களுக்கு - நண்பர்கள் சிலர் react செய்யும் விதம் சற்றே கூடுதல் வேகத்தில் அமைந்து விடுவதே துரதிர்ஷ்டம் ! 'இது என்னை நோக்கி எழுப்பப்பட்ட கேள்வி...இதற்கு நானே பதில் சொல்லிக் கொள்கிறேன்..நீங்கள் ஓரம் கட்டுங்கள் ப்ளீஸ் ! ' என்ற ரீதியில் என்னால் என்றைக்குமே பேச முடியாது ; பேசவும் போவதில்லை! So எழுப்பப்படும் கேள்விகள் தொடர்பான தத்தம் எண்ணங்களை நண்பர்கள் பகிர்ந்து கொள்ளும் போது  சில மன வருத்தங்கள் எழுவது தவிர்க்க இயலாது போகிறது ! இதன் பொருட்டு - 'இங்கே மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை !' ; ' சாதகமான பதிவு செய்யும் நபர்களைத் தாண்டி வேறு யாரையும் எடிட்டர் ஊக்குவிப்பதில்லை' என்ற ரீதியிலான  மனத்தாங்கல்களோடு வெளியேறிய நண்பர்கள் நிறையவே உண்டு! 'தேவையற்ற மன உளைச்சல்கள் நமக்கு ஏன் ?' என்ற சிந்தனையில் நிறைய நண்பர்கள் எதிலும் தலை நுழைத்துக் கொள்ளாமல் மௌனப் பார்வையாளர்களாய் இருந்துவிட்டுப் போவோமே என்று நாட்களை நகற்றுவதும் நடக்கிறது! இதற்கென்ன தீர்வு ? என்ற கேள்வியை என்னை நானே கேட்டுக் கொண்டேன்... ! 

என் சிற்றறிவுக்கு எட்டிய விடை இது ! எனது பதில்களை எதிர்நோக்கி எழுப்பப்படும் பதிவுகள நீங்கலாக - கதைகள் ; ரசனைகள் ; வாசிப்பு அனுபவங்கள் போன்ற அத்தனை விஷயங்களிலும் எல்லா நண்பர்களும் வழக்கம் போலவே இணைந்து கொள்ளலாம்! நமது ரசனை நண்பரது ரசனையிலிருந்து மாறுபடும் சமயங்களில் ஈகோ பார்க்காது அவரது பார்வையிலிருந்தும் பார்த்திடப் பழகுவோமே ? அவர் தரப்பின் கண்ணோட்டத்தை சற்றேனும் புரிந்து கொள்ள நாம் முயற்சிக்கும் போதே சிக்கல்களின் வாய்ப்புகள் காணாது போய் விடுமல்லவா ? அதே போல் விமர்சிக்கும் நண்பர்கள் - காரத்தின் இடத்தில் சற்றே நையாண்டி எனும் முலாம் பூசினால் உங்கள் கருத்துக்கள் சுலபமாய் சென்றடையும் வாய்ப்புகள் அதிகம் ஆகிடாதா ? காரம் கொணரும் அந்த 'சுறுக்' reactions சற்றே மட்டுப்பட்டாலே விவாதங்களுக்குள் ஆரோக்கியம் புகுந்து விடாதா ? நாம் இங்கு கூடுவது ஒரு பொது ரசனையின் மீதிருக்கும் ஈர்ப்பினாலே தான் எனும் போது - 'இங்கு யார் உசத்தி ?'... 'யார்  குறைச்சல் ?' என்ற பேச்சுக்கே இடம் கிடையாதே ! 

இது தவிர, மௌனப் பார்வையாளர்களாய் மாத்திரமே உலவிடும் நண்பர்களும் குறைந்த பட்சம் அந்தந்த மாதத்து இதழ்களின் அபிப்ராயங்களோடு இங்கே ஒரு சில பதிவுகள் இட நேரம் ஒதுக்கினால் -எனக்கு மிகவும் அவசியமான feedback கிடைக்கும் அல்லவா ? 'உங்கள் நாடியை நானறிவேனே' என்ற இறுமாப்பில் நானாகச் செய்யும் கதைத் தேர்வுகளில் சொதப்பும் வாய்ப்புகள் சொற்பமாகி - நம் ரசனைகளின் நிஜ சூழல்களை எனக்கு உங்களின் பரவலான கருத்துக்கள் தெரியச் செய்யாதா ? So please do contribute ! 

அதே போல பின்னூட்டங்களின் எண்ணிக்கையை எகிறச் செய்யும் விதமாய் ஆங்காங்கே நிறைய எண்ணங்கள் பகிரப்படும் போது  "Load More " பிரச்னை சீக்கிரமே தலைவிரித்தாடும் வாய்ப்புகள் கூடிப் போகின்றன ; அதன் பலனாய்  நிறையப் பார்வையாளர்கள் அலுத்துப் போகும் வாய்ப்புகள் அதிகம் ! So - ஒருவரிக் கருத்துகளைப் 10 இடங்களில் பகிர்வதற்குப் பதிலாக ஒரே இடத்தில் பத்தையும் பதிவிட்டால் சிரமம் கிடையாதே ! 

எல்லாம் சரி - கடந்த பதிவின் களேபரங்கள் பற்றி வாயே திறக்கவில்லையே ? என்ற கேள்வி எஞ்சி நிற்கிறது ! நான் இங்கு எழுதத் துவங்கிய நாள் முதலாய் " கருத்து கந்தசாமியாய்" இருப்பது தவிறில்லை - ஆனால் "அட்வைஸ் அய்யாச்சாமியாய்" இருத்தல் ஆகவே ஆகாது என்பதில் தீர்க்கமாய் உள்ளேன் ! எனினும் இந்த ஒரு முறை எனது நிலைப்பாடை நான் மாற்றிக் கொள்வதில் தவறில்லை என்றே நினைக்கிறேன் ! 

ஒரு தீர்க்கமான மனஸ்தாபம் உருவாக ஒரு நொடிப்பொழுதெல்லாம் பற்றவே பற்றாது என்பதே எனது அனுபவப் பாடம். சிறிது சிறிதாய் என்றென்றோ முளை விடும் சலனங்கள் சம்பந்தமில்லா ஒரு புது நாளில் பெரியதொரு முகாந்திரமும் இன்றியே  ஒட்டகத்தின் முதுகை முறிக்கும் வைக்கோலாய் மாறிட வாய்ப்புகள் உண்டு ! இங்கு நிகழ்ந்திருப்பதும் அதுவே என்பது என்பது எனது அபிப்ராயம் ! Something was rubbing the wrong way for awhile now - and இன்று அது 'பட்' டென்று சிதறி விட்டுள்ளது ! இதன் நதிமூலம் எது ? ; ரிஷிமூலம் எது ?  என்ற ஆராய்ச்சிக்குள் போவதெல்லாம் போகாத ஊருக்கான வழி (வலி ?) தேடல் என்பதால் அந்த ஆர்வக்கோளாறுக்குள்   நான் புகுந்திடப் போவதில்லை ! உறுத்தலாய் நான் நினைப்பது இரண்டு விஷயங்களை : 

1.கலாய்ப்புகள்...வேடிக்கைப் பதிவுகள் எங்கோ ஒரு கட்டத்தில் சின்னதாய் சலனங்களை ஏற்படுத்தத் துவங்கிய தருணமே சுதாரித்துக் கொண்டு - 'போதுமே..! எல்லைகள் தாண்ட வேண்டாமே நண்பர்களே !' என லேசாகக் கோடிட்டுக் காட்டி இருக்கும் பட்சத்தில் அவர்களும் பிரேக்கை போட்டிருப்பார்கள் ; உள்ளுக்குள்ளே குடி கொண்ட சலனங்கள் குமைந்து இன்று வெடித்துக் கிளம்பும் அவசியத்தைத் தவிர்த்திருக்கலாம் தானே ? 

2.கலாய்ப்புகள் ; விளையாட்டுப் பதிவுகள் எவ்வித சலனங்களையோ, சங்கடங்களையோ உண்டாக்கும் நோக்கத்தில் எழுப்பப்பட்டவைகள் அல்ல என்பது தெரிந்திருந்தாலும், அதன் மறு முனையில் இருப்பவர் காயம் பட்டு வருவதை உணராது போனதும் துரதிர்ஷ்டமானதல்லவா ? 

In hindsight, everybody is a genius என்று சொல்வார்கள் ; நாமும் அதற்கென்ன விதிவிலக்குகளா ?  பின் நாளில் நிதானமாய் யோசிக்கும் போது தானே நம் முன்னே இருந்த மாற்று உபாயங்கள் ; சேதாரம் விளைவிக்கா உபாயங்கள் ஒன்றொன்றாய்ப் புலனாகும் ? இங்கு பதிவாகும் பார்வைகளின் எண்ணிக்கைகளை விட நான் விலைமதிப்பற்றதாய்க் கருதுவது இங்கு நிலவும் நட்புணர்வையும்  , தடையற்ற அந்த உற்சாகத்தையும் மாத்திரமே ! அதைத் தொலைத்து விட்டு, இதுவொரு அரசு தாலுகா ஆபீஸ் போல அமைதியாய், சாந்தமாய், 'பெரிய மனுஷத்' தோரணையோடு இயங்குவது நிச்சயமாய் நாம் விரும்பும் ஒரு விஷயமாய் இருக்க இயலாது ! 

எது எவ்விதம் இருப்பினும், நண்பர் துளியும் தயங்காது மன்னிப்புக் கோரியுள்ளது இந்தத் தளத்திற்குப் பெருமை செய்யும் விஷயம். இங்கு காமிக்ஸ் எனும் காதலுக்கு முன்னே ஈகோக்கள் பெரிதல்ல என்பதை நிலைநாட்ட இது போன்றதொரு சங்கட சம்பவம் அவசியமாகி விட்டுள்ளதே என்பதில் தான் எனக்கு வருத்தமே ! அதிலும், ஒரு மைல்கல் ஆண்டில் இந்தக் கசப்பினை நாம் சந்திக்க நேர்ந்ததில் சின்னதாய் ஒரு வலியும் கூட ! ஆனால் 'இதுவும் கடந்து போகும்!' என்பது தானே வாழ்க்கை நமக்குக் கற்றுத் தரும் பாடம் ? Take care folks ! 

215 comments:

  1. விஜயன் சார், ஒரு வழியாக "காலத்தின் கால் சுவடுகள்" கதையை படித்து முடித்துவிட்டேன்! கதை ரொம்ப சுமார், நமது காமிக்ஸ்-ன் இரண்டாம் இன்னிக்ஸ்ல் இதுவரை வந்த கதைகளில் மிகவும் மோசமான கதை தேர்வு என்றால் அது இந்த கதை தான்! ஓவியங்கள் சில இடம்களில் மிகவும் அருமை. மொத்தத்தில் இந்த கதைக்கு பதில் வேறு ஒரு கதையை வெளி இட்டு இருக்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. I dont know why people didnt like this story, personally i loved the story line it had lots and lots of adventure and history. On the contrary i felt pictures were very ordinary, i guess i am not a fan for this kind of drawings.
      i know this is exactly opposite of majorty thought :-) but thats what i felt when i read the story.

      Delete
    2. Parani from Bangalore : இந்தத் தேர்வு நடந்தது ரோஜர் கதை வரிசைகளின் அதிஆர்வ அபிமானியானதொரு பிரெஞ்சு காமிக்ஸ் ரசிகரின் சிபாரிசின் பெயராலேயே.....! ரொம்பவே சுமாரான கதை' என்பதை நானும் உணர்ந்த போது காலம் கடந்திருந்தது !

      Delete
    3. Vijayan @ // ரொம்பவே சுமாரான கதை' என்பதை நானும் உணர்ந்த போது காலம் கடந்திருந்தது !//
      என்ன கொடுமை சார்! புரிந்து கொண்டமைக்கு நன்றி!

      Delete
  2. I'm an avid reader of Muthu/Lion comics from 1985. I'm also a regular reader of this blog. I've been following this blog since its conception. I really love the way the editor writes, as well as the readers comments. To tell the truth, I was starting to enjoy the witty comments more than the editor's blog. Slowly it started becoming a kind of addiction for me. I would love the Posts that cross the 400 mark comments. I've never got tired of 'Load More..', instead i started counting how many there were, before the next post comes. I was really saddened by the happenings of the last post. It has made me comment here for the first time. I think we should take things in a more lighter vein, than whats happening nowadays. If we're starting to doubt anyone and everyone...it will take the fun quotient out of our life. Hope you guys realise this, as it would be a downer for this blog, if we are not gonna have all your witty repartee, in the future. And it would really make my day a little bleak. - AKK

    ReplyDelete
    Replies
    1. +1 for number of coments.
      Load More does annoy me, few people suggested ways to get rid of it, editor sir please remove Load More option.

      Delete
    2. AKK : நம்மை மகிழ்வூட்டுவோரும் அவ்வப்போது களைப்பாகத் தான் செய்வார்கள் ; so மௌனப் பார்வையாளர்களாய் தொடராது அவ்வப்போது நாமும் வெளி வரும் பட்சத்தில் அவர்களது சுமை பகிரப்படும் அல்லவா ?

      Delete
  3. Leave it sir...its nothing...Kandipaga "இதுவும் கடந்து போகும்!"

    ReplyDelete
    Replies
    1. Dasu bala : துரிதமாய்க் கடந்து போய் விட்டால் நிச்சயம் சந்தோஷமே !!

      Delete
  4. விஜயன் சார்,
    //எனது பதில்களை எதிர்நோக்கி எழுப்பப்படும் பதிவுகள நீங்கலாக - கதைகள் ; ரசனைகள் ; வாசிப்பு அனுபவங்கள் போன்ற அத்தனை விஷயங்களிலும் எல்லா நண்பர்களும் வழக்கம் போலவே இணைந்து கொள்ளலாம்! //

    சரியாக கருத்து! இங்கு எழும் மனஸ்தாபம் மற்றும் நண்பர்கள் அமைதியாக செல்வதற்கு இது ஒரு முக்கிய காரணம்!


    // நமது ரசனை நண்பரது ரசனையிலிருந்து மாறுபடும் சமயங்களில் ஈகோ பார்க்காது அவரது பார்வையிலிருந்தும் பார்த்திடப் பழகுவோமே ? //
    100/100 உண்மை. ரசனை மனிதனுக்கு மனிதன் மாறுபடும், அடுத்தவர்களின் ரசனைக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் .. பழக வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. காலம் தான் மனதில் ஏற்பட்ட காயம்களுக்கு சரியான மருந்து, காலம் இதை சரி செய்துவிடும்!

      Delete
    2. Parani from Bangalore : நிச்சயமாய் !

      Delete
  5. /இது தவிர, மௌனப் பார்வையாளர்களாய் மாத்திரமே உலவிடும் நண்பர்களும் குறைந்த பட்சம் அந்தந்த மாதத்து இதழ்களின் அபிப்ராயங்களோடு இங்கே ஒரு சில பதிவுகள் இட நேரம் ஒதுக்கினால் -எனக்கு மிகவும் அவசியமான feedback கிடைக்கும் அல்லவா ? 'உங்கள் நாடியை நானறிவேனே' என்ற இறுமாப்பில் நானாகச் செய்யும் கதைத் தேர்வுகளில் சொதப்பும் வாய்ப்புகள் சொற்பமாகி - நம் ரசனைகளின் நிஜ சூழல்களை எனக்கு உங்களின் பரவலான கருத்துக்கள் தெரியச் செய்யாதா ? So please do contribute !/
    இது போன்ற ஒன்று கடைசியாக எப்பொழுது நடைபெற்றது என்பது நண்பர்களுக்கு தெரிந்தால் பகிரவும். feedback சொல்லியவர்களின் பரிதாப நிலை எல்லோரும் ஆரம்பம் முதல் அறிந்ததே.
    /அதே போல பின்னூட்டங்களின் எண்ணிக்கையை எகிறச் செய்யும் விதமாய் ஆங்காங்கே நிறைய எண்ணங்கள் பகிரப்படும் போது "Load More " பிரச்னை சீக்கிரமே தலைவிரித்தாடும் வாய்ப்புகள் கூடிப் போகின்றன ; அதன் பலனாய் நிறையப் பார்வையாளர்கள் அலுத்துப் போகும் வாய்ப்புகள் அதிகம் ! So - ஒருவரிக் கருத்துகளைப் 10 இடங்களில் பகிர்வதற்குப் பதிலாக ஒரே இடத்தில் பத்தையும் பதிவிட்டால் சிரமம் கிடையாதே ! /
    வேணாம் பாஸ், அது கஷ்டம் பாஸ். எத்தனை தடவை சொன்னாலும் இந்த பாயிண்ட் மட்டும் ஒரு சில(வ)ருக்கு விளங்கவே விளங்காது :( இதுக்கும் பத்து கமெண்ட் போட்டு ரிப்ளை வருவது) சத்திய சோதனை பாஸ்!!!.
    /1.கலாய்ப்புகள்...வேடிக்கைப் பதிவுகள் எங்கோ ஒரு கட்டத்தில் சின்னதாய் சலனங்களை ஏற்படுத்தத் துவங்கிய தருணமே சுதாரித்துக் கொண்டு - 'போதுமே..! எல்லைகள் தாண்ட வேண்டாமே நண்பர்களே !' என லேசாகக் கோடிட்டுக் காட்டி இருக்கும் பட்சத்தில் அவர்களும் பிரேக்கை போட்டிருப்பார்கள் ; உள்ளுக்குள்ளே குடி கொண்ட சலனங்கள் குமைந்து இன்று வெடித்துக் கிளம்பும் அவசியத்தைத் தவிர்த்திருக்கலாம் தானே ? /
    சம்பந்தமே இல்லாத வேடிக்கை (என நினைத்து பதியப்படும்) பதிவுகளால் தான் பிரச்சனையே. எதற்கும் ஒரு அளவுகோல் இருத்தல் நலம்.
    /இங்கு காமிக்ஸ் எனும் காதலுக்கு முன்னே ஈகோக்கள் பெரிதல்ல என்பதை நிலைநாட்ட இது போன்றதொரு சங்கட சம்பவம் அவசியமாகி விட்டுள்ளதே என்பதில் தான் எனக்கு வருத்தமே ! / அதானே! இந்த காமிக்ஸ் காதலுக்காக எவ்வளவோ அசிங்கத்தையே தாங்கிக்கிறோம். இதுல்லாம் ஜூஜூபி பாஸ்!!!
    மீண்டும் மீண்டும் ஹாஸ்ய பதிவுகளால் இந்த நாட்டின் குட்டீஸ் அனைவரையும் சிரித்து மகிழ வைப்பதற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் பாஸ்.
    ஆசிரியருக்கு: என்ன சொல்ல வரிங்க? சத்தியமா புரியல??? :(

    ReplyDelete
    Replies
    1. டியர் நவீன வள்ளுவன் , நம்முடைய ஆசிரியரின் உள் மனதில் இருந்து மிகுந்த வலியுடன் வெளிவந்த பதிவாகவே இதனை பார்க்கிறேன் ! இதனை பூத கண்ணாடி வைத்து ஆராய்ச்சி செய்யாமல் ,இந்த பதிவில் உள்ள வலியை மட்டும் உணருங்கள் !

      Delete
    2. ஆசிரியருக்கு: என்ன சொல்ல வரிங்க? சத்தியமா புரியல??? :(
      தலைப்பிலே இருக்கே ! இதுவும் கடந்து போகும் !
      இதுவும் உங்களது வழி(லி)யை உணர்த்துகிறது ~! பரவாயில்லை கடந்து போகிறோம் !

      Delete
  6. இங்கு எடிட்டர் பதிவிடும் தளம்,அதற்கு நாம்பதில் சொல்லாம் கேள்விகள் கேட்கலாம் அதை விட்டு இங்கு வரும் சில பேர் அவர்களின் சொ
    ந்த கதையை பேசி விட்டு பிறகு சின்ன குழந்தை போல் அங்கிள்,அங்கிள் இந்த பையன் என்னை கிள்ளிட்டான் என சொல்வதுபோல் உள்ளது .

    ReplyDelete
    Replies
    1. ரஞ்சித் அப்படியே எடிட்டரிடம் கேட்கபடும் கேள்விக்கு எடிட்டார் மட்டும் பதில் அளிக்கட்டும் என்பதை விட்டுவிட்டீர்கள்

      Delete
  7. Replies
    1. ஆதி தாமிரா : ஆஹா....இது ஏதேனும் -default setting-ஆ ?

      Delete
  8. டியர் ஈரோடு விஜய் , உங்களின் ஜாலியான பதிவுகள் எனக்கு பிடித்திருந்தாலும் , 300 கமெண்ட்களில் குறைந்த பட்சம் தங்களுடையது 50 க்கும் குறையாது என்றே நினைக்கிறேன் ! மொபைல் ல் ப்ளாக் பார்க்கும் நண்பர்களால் load more பிரச்சனை இருப்பதால் 200 கமெண்ட் க்கு மேல் பார்க்கும் வசதி இல்லாததால் , விஜயன் sir ன் சில பல பதில்களை படிக்க இயலவில்லை !
    எனவே உங்கள் மீது சிலர் பாசமாக (!!) இருந்து இருக்கலாம் !!! இதில் முடிவு எடுக்க வேண்டியது நீங்கள்தான் ! உங்களின் ஹாஸ்ய நடையை சற்று நீளமான கமெண்ட் மூலம் தொடரலாம் என்பதே ஒரு நண்பனாய் என்னுடைய கருத்து ! இதன் மூலம் load more க்கு உங்களின் பங்களிப்பு குறைவாகவே இருக்கும் !
    ஏங்க எத்தனையோ சாப்ட்வேர் புலிங்க இங்க இருக்கீங்க இந்த load more க்கு ஒரு solution கண்டு பிடிக்கலாமே !!

    ReplyDelete
  9. ”நான் மன்னிச்சுருவேன், ஆனா மன்னிக்க யாருக்கும் உரிமையில்ல” இந்த டயலாக்தான் சார் , பஞ்சாயத்துல கூடினவங்கள ரொம்ப கடுப்பேத்தி... கடைசில்... சிரிக்கதான் வெச்சது! :) சூனா.பானா னா சும்மாவா???? :)

    ReplyDelete
    Replies
    1. cap tiger : Let's move on please...

      Delete
    2. //"நான் மன்னிச்சுருவேன், ஆனா மன்னிக்க யாருக்கும் உரிமையில்ல"//

      சிக்கலான தருணங்களில் நண்பர்கள் யார் வேண்டுமானாலும் இந்த டயலாகை பயன்படுத்திக்கொள்ள உரிமம் தருகிறேன்.

      Licensed under a creative commons attribution 3.0 International License.

      :D

      Delete
  10. டியர் விஜயன் sir , இங்கு ஒரு நண்பர் காயப்பட்டபோது , உங்களின் இந்த பதிவே அவருக்கு மருந்தாக இருக்கும் !!
    but சில காலத்திற்கு முன்பு சம்பந்தமே இல்லாமல் சிலர் காயப்பட்டபோது ,, அப்போதும் நீங்கள் இந்த நிலைபாட்டை எடுத்து இருந்தால் என் கரங்கள் ஒரு பூங்கொத்தை இப்போது உங்களுக்கு நீட்டி இருக்கும் !!
    ஏன் சார் ?

    ReplyDelete
    Replies
    1. மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் வரையில் பிரச்சினைகள் இத்தளத்தில் தொடரும்

      Delete
    2. Dr.Sundar,Salem. : இந்த இரண்டரை ஆண்டுகளில் நேர்ந்த அனுபவங்களில் நீங்கள் குறிப்பிடுவது எதனை என்று அடையாளம் காண எனக்குத் தெரியவில்லை. நான் அன்று மௌனம் காத்திருக்கும் பட்சத்தில் யாரேனும் இன்னும் அதிகமாய்க் காயம் பட்டுவிட வேண்டாமே என்ற ஆதங்கத்தினில் இருந்திருக்கலாம் ; ஆனால் இம்முறையோ கண்ணுக்குப் புலப்படாததொரு பிரச்னையின் பொருட்டு நடந்த சங்கடங்கள் தான் என் மௌனத்தைக் கலைத்தது !

      On a personal note - சங்கடங்களை நிவர்த்திக்க முயற்சிக்கும் என் ஆர்வத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியாதிருக்க வாய்ப்பில்லையே ? அத்தோடு இன்னொரு விஷயமும் கூட : காயங்கள் பின்னூட்டமிடுவோருக்கு மாத்திரமே சொந்தமாகிடும் சொத்தல்ல - பதிவிடுபவனுக்கும் நிகழக் கூடியதே என்பதை நினைவூட்டலாமா ?

      Delete
    3. விஜயன் சார், இந்த முடிவை இது போன்ற நிகழ்வுகள் முதல் முறை நடந்த போது எடுத்து இருந்தால் இன்று இந்த குழப்பம் ஏற்பட்டு இருக்காது, பல நண்பர்கள் இது போன்று மனவருத்தம் அடையாமல் இருந்து இருப்பார்கள் . இப்பவாது இது பற்றி தங்கள் கருத்துக்களை கூறியது வரவேற்கதக்கது. வரும் காலம் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இந்த தளம் அமைத்து கொடுக்கட்டும் என நம்பிக்கையுடன் செல்வோம்.

      Delete
    4. Parani from Bangalore : பதிவில் எழுதியது எனக்கும் பொருந்தும் தானே நண்பரே : In hindsight everybody is a genius ! நானென்ன விதிவிலக்கா ?

      Delete
  11. டாக்டர் சுந்தர் - சேலம்:

    //மொபைல் ல் ப்ளாக் பார்க்கும் நண்பர்களால் load more பிரச்சனை இருப்பதால் 200 கமெண்ட் க்கு மேல் பார்க்கும் வசதி இல்லாததால் , விஜயன் sir ன் சில பல பதில்களை படிக்க இயலவில்லை !//

    நண்பரே,

    நம்முடைய கமெண்ட் பெட்டியின் கீழே Notify Me என்றொரு சிறிய Ticker Box இருப்பதை கவனியுங்கள்.

    அதனை ஒரு முறை டிக் செய்தாலே போதும். அதன்பிறகு இந்த பதிவில் வரும் கமெண்ட்டுகள் அனைத்துமே உங்களது மின்னஞ்சலுக்கு வந்துவிடும். இதனால் நீங்கள் ஒவ்வொரு முறையும் பதிவுக்கு வந்து கமெண்ட் படிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

    ஆகையால், Notify Meயை க்ளிக் செய்யுங்கள், கமெண்ட்டுகளை மின்னஞ்சலில் படியுங்கள்.

    இதன்மூலம் நண்பர்கள் தங்களின் கமெண்ட்டுகளை குறைக்கவேண்டிய அவசியம் கிடையாது. நமக்கும் லோட் மோர் பிரச்சினை போன்றவையும் கிடையாது.

    தேவையுள்ள பின்குறிப்பு: டாக்டர் சுந்தர் என்னுடைய நண்பர் என்று கருதியதாலே இந்த பதில். அவரும் கோபித்துக்கொள்ள மாட்டாரென்று இந்த கமெண்ட்.

    ReplyDelete
    Replies
    1. King Viswa : "தேவையுள்ள பின்குறிப்புகள்"......phew !!

      Delete
  12. /இதன் பொருட்டு - 'இங்கே மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை !' ; ' சாதகமான பதிவு செய்யும் நபர்களைத் தாண்டி வேறு யாரையும் எடிட்டர் ஊக்குவிப்பதில்லை' என்ற ரீதியிலான மனத்தாங்கல்களோடு வெளியேறிய நண்பர்கள் நிறையவே உண்டு! 'தேவையற்ற மன உளைச்சல்கள் நமக்கு ஏன் ?' என்ற சிந்தனையில் நிறைய நண்பர்கள் எதிலும் தலை நுழைத்துக் கொள்ளாமல் மௌனப் பார்வையாளர்களாய் இருந்துவிட்டுப் போவோமே என்று நாட்களை நகற்றுவதும் நடக்கிறது! இதற்கென்ன தீர்வு ? என்ற கேள்வியை என்னை நானே கேட்டுக் கொண்டேன்... ! /
    இங்கிருந்து சென்றவர்கள் ஆதங்கத்தினாலேயே அன்றி வேறு காரணம் இல்லையே. ஒரு உதாரணம். மறுபதிப்பு என்னன்னு ஊர் முழுவதும் கேட்ட பின்னர் சந்தா வாங்கிய பிறகு, கதை பழசு புக் & ரசனை புதுசு, நாம மாறணும்னு இத்யாதி இத்யாதி கதை சொல்லி அனைவரின் விருப்பத்திற்கும் எதிராக தனது விருப்பத்திற்கு தற்போது வந்தவைகளையே பதிப்பிக்கும் பழக்கத்தை என்னன்னு கொள்வது? (முகமற்ற கண்கள் யாருங்க பாஸ் கேட்டது? நீங்க எது போட்டாலும் நாங்க வாங்கி படிப்போம் அப்படின்னா???)
    /உங்கள் நாடியை நானறிவேனே' என்ற இறுமாப்பில் நானாகச் செய்யும் கதைத் தேர்வுகளில் சொதப்பும் வாய்ப்புகள் சொற்பமாகி/ மேலே உள்ள கருத்துக்கு இது தானே பதில்? யாரோ ஒரு நண்பர் கார்சனின் கடந்த காலம் கலரில் வேண்டும் என கூறிய போது நீங்கள் "கருப்பும் ஒரு கலர் தானே சார்!!!" & "நெய் சாதம் வைத்தாலும் கருநிறத்தார் தானே வருவார்" என்ற பதில் எல்லாம் ஹாஸ்யம் or நையாண்டி etc இதில் எது என கொள்வது???
    சுருங்க சொன்னால், தற்போதைய கதைகள் "நியூ wine இன் a நியூ பாட்டில்" மட்டுமே.
    பழையவை "ஓல்ட் wine இன் a ஓல்ட் பாட்டில்" போல.
    இனிமேலாவது (மறுபதிப்பு) வாக்குறுதிகளை அள்ளி விட்டு இந்த அபலை வாசகர்களை நோகடிக்காதிங்க பாஸ். உங்களுக்கு புண்ணியமாக போகும்.

    ReplyDelete
    Replies
    1. நவீன வள்ளுவன் : இந்தாண்டின் அட்டவணையில் தான் மறுபதிப்புப் பட்டியலில் "முகமற்ற கண்கள் " வர இருப்பதாய் தெளிவாய்க் குறிப்பிடப்பட்டுள்ளதே ? இதில் நான் நடுவில் மாற்றம் செய்யும் சிக்கல் எவ்விதம் எழுகிறது ? தவிர "கார்சனின் கடந்த காலம்" மறுபதிப்பைப் பற்றி நாம் விளம்பரம் செய்திருப்பதற்கும், எனது நிலைப்பாட்டிற்கும் என்ன வேறுபாடு எழுந்துள்ளது ?

      இன்னொரு விஷயத்தை நீங்கள் கவனத்தில் கொண்டீர்களா என்பது எனக்குத் தெரியவில்லை ... ! 2013-ன் அட்டவணையில் மறுபதிப்புகளுக்கு இருந்த இடங்களையும் , 2014-ன் அட்டவணையில் உள்ள slot களையும் சற்றே நிதானமாய் பாருங்களேன் - மறுபதிப்புகளின் நிஜமான நிலைமை புரியும்.

      ஒயின் பழையதா - புதியதா ? என்பது சுவைப்போரின் கண்ணோட்டத்தைச் சார்ந்தது ; ஆனால் லேபிலில் உள்ளது மாத்திரமே பாட்டிலிலும் உள்ளது என்ற வரைக்கும் எனக்குத் தெரியும்.

      Delete
    2. நவீன வள்ளுவன் அவர்களே , ஆசிரியர் முன் பதிவு போதிய அளவு இல்லை என்றே அப்போது மறு பதிப்பு புத்தகங்களை அதாவது ஸ்பைடர் , மாயாவி ,ஜானி என பல முறை மறுபதிப்பு செய்த கதைகளை நிறுத்தி வைத்தார் , தற்காலிகமாய் ! அது போல பலர் மறுபதிப்பில் விடாத புத்தகங்களை கேட்டதும் அதிகம் ! இந்த கதையும் அதே வரிசையில் வந்தது நண்பரே ! மேலும் முகமற்ற கண்கள் வேண்டாம் என யாரும் கூறவில்லையே ! வில்லியம் வான்சின் வண்ண கதைகளுக்காக காத்திருப்போர் ஆயிரம் நண்பரே ! இவை அனைத்தும் உங்களுக்கு தெரியும் ! இருந்தாலும் புதிதாய் பார்த்து கொண்டிருப்பவர்களை ஏன் ஆசிரியர் இக்கதைகளை விடுகிறன் என்று சொல்லி விட்டு விடவில்லையோ என கேட்டதால் இது குறித்து நான் கருத்து கூற வேண்டி வந்தது ! மன்னியுங்கள் நண்பரே !

      அப்புறம் கார்சனின் கடந்த காலம் வண்ணத்தில் என ஆசிரியர் தயாராகி விடுவார் நமது உற்ச்சாகத்தை கூட்ட ! எப்படியும் நமது வழிக்கு ஆசிரியர் வந்து விடுவார் ! நாம் கேட்கும் வகையில் கேட்டால் !
      அது போல ஓரளவு நடக்க பழகி விட்டால் அதாவது இப்போது விற்பனை தேவையான அளவு எட்டி விட்டால் அந்த மறு பதிப்பு கோரிக்கைகளை ஆசிரியர் நிறைவேற்றுவேன் என கூறியுள்ளார் ! ஒரு வேளை அதை நீங்கள் படிக்கவில்லையோ என கருதியே இந்த பதிலும் !

      Delete
    3. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : நன்றிகள் இரும்புக்கையாரே !! நானொரு முறை டைப் செய்து விளக்கும் சிரமத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டமைக்கும், கோர்வையாய் பதிவைத் தயாரிக்க மெனக்கெட்டதற்கும் !

      Delete
    4. சார் இது எனது கடமை ! இனி கோர்வையாகவே பதில்களை வைக்கிறேன் !

      Delete
    5. //அப்புறம் கார்சனின் கடந்த காலம் வண்ணத்தில் என ஆசிரியர் தயாராகி விடுவார் //
      ==>confirm color....super...

      Delete
  13. ஒரு போஸ்டுல ஒருத்தர் நான்கு அல்லது ஐந்து காமென்டுக்கு மேல் போட வேண்டிய அவாசியம் என்ன வந்தது மற்றவர்கள் கருத்து கூறுகள் கூறுங்கள்னு சொன்னால் போதாது கொஞ்சமாவது வழி விடவேண்டும் இதனால்தான் என் போன்றவர்கள் பார்ப்பதோடு செரி அப்படி எதாவது கமென்டு போட்டாலும் கருத்து சொல்லுரேன்னு யாராவது கெளம்பிடுராங்க....

    ReplyDelete
    Replies
    1. Ganesh K : நண்பரே...யாரது கருத்துக்களையும் இருட்டடிப்பு செய்வதோ, புதியவர்களின் குரல்களை மழுங்கச் செய்வதோ நிச்சயமாய் இங்கு யாரது எண்ணமும் அல்ல என்பதை நான் நன்கு அறிவேன்.

      நிறையப் பதிவுகள் இடும் நண்பர்களுக்கு ஒரு வரம்பை நிர்ணயித்தால் மாத்திரமே, உங்களைப் போன்ற புதியவர்களுக்கு இடமிருக்கும் என்பதும் சரியான கண்ணோட்டம் ஆகாது ! The more..the merrier ! நேற்று வரை இந்தப் பக்கங்களை உற்சாகமாய் வைத்திருக்கச் செய்த நண்பர்கள் இன்றும் அதே மாந்தர்களே என்பதை நாம் மறக்க வேண்டாமே !

      Delete
  14. எடிட்டர் தேவையில்லாத கமெண்ட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டாம் என்று சொல்லியும் அதை யாரும் கேட்காமல் இருப்பது அவரின் வருத்தத்தை அதிகரிக்கவே செய்யும் நண்பர்களே... ஆகவே இனி பதிவுக்கு சம்பந்தமுள்ள கமெண்ட்களை மட்டுமே போட்டால் புதிய வருகையாளர்களுக்கும் எளிதாக இருக்கும்... மேலும் மௌன பார்வையாளர்கள் கமெண்ட் போட அவர்களுக்கும் ஆவல் ஏற்படலாம்...

    ReplyDelete
  15. gold vel : வருத்தமா ? கிடையவே கிடையாது ! இது ஒவ்வொருவரும் தம் வீட்டைப் போல் நினைக்கக் கூடியதொரு தளமாய் இருக்க வேண்டுமென்பதே என் அவா ! சிற்சிறுப் பதிவுகளாய் பின்னூட்டங்களின் எண்ணிக்கை கூடும் போது Load More ரூபத்தில் தலைவலி வருவது தான் பிரச்னையே !

    ReplyDelete
    Replies
    1. +1 for more comments.
      We just need to figure out a way to remove load more option. Asking people to reduce their comments is not a solution for load more .

      Delete
    2. V Karthikeyan : அதற்கொரு உபாயம் தெரிந்தால் தான் பிரச்னை தீர்ந்ததே !!

      Delete
    3. பதிலளித்தற்கு ஆசிரியருக்கு நன்றிகள். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதைப் போல அளவுக்கு மீறிய சில கமெண்டுகளும் ஒருவரை பாதிக்கக் கூடும் என்பதை நடந்த கலவரத்தின் விளைவாக இங்கு வரும் அனைவரும் தெரிந்து கொண்டார்கள். ஒரு பதிவில் நகைச்சுவை உணர்வுக்காக இடப்படும் கமெண்ட்டுகளே ஒருவரை பாதித்து உள்ளது எனும்போது, அதைப்படிக்கும் ஒரு சிலர் தம்முடைய கமெண்ட்டும் இவ்வாறு கேலிப்பொருளாக மாறிவிடலாம் என்று நினைத்து வெறுமனே படிப்பதோடு மட்டும் நிறுத்தி விடக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். நகைச்சுவை ஒரு பதிவில் நன்றாக இருக்கும், அதே ஒவ்வொரு பதிவிலும் தொடரும் போது இம்மாதிரி பிரச்சினைகள் எழக்கூடிய சூழல் எளிதில் உருவாகிடும்.
      திருவாளர் அழைக்க முடியா பெயரை வைத்துக் கொண்டிருப்பவர் கணேஷ் அவர்களுக்கு பதிலளிக்கையில் இது என்ன அஜித் பட தியேட்டரா, நீங்கள் வருவீர்கள் என்று நாங்கள் வழிவிட என்று கோபமோ, அது போன்ற ஏதோவொரு உணர்ச்சியாலோ தூண்டப்பட்டு கமெண்ட் இட்டு விட்டார். இப்போது அதைப் படிக்கும் புதியவர்கள் மனதில் என்ன தோன்றும். பதிலளிக்க வேண்டும் என்ற அவசரத்தில் விடப்படும் ஒவ்வொரு வார்த்தையும் எக்காலத்திலும் திருப்பி எடுக்கவே முடியாது என்ற எண்ணத்தையும் மனதில் கொண்டு அனைவரும் இங்கு பதில் சொல்ல வேண்டும்... யாரும் யாரையும் இங்கு நோகடிப்பதற்காக வரவில்லை. ஆசிரியர் சொல்வது போல வீட்டைப் போல் நினைக்கக் கூடிய தளமாக இருக்க வேண்டுமே தவிர, பிரச்சினைகள் நிரம்பியதொரு வீடாக மாறி விடக் கூடாது என்பதை இங்கு கமெண்ட் இடும் ஒவ்வொருவரும் தன் மனதில் பதிய வைத்தாலே போதும். கேலிக்காக சொன்னாலும் எதிரில் இருப்பவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை நேரிலிருக்கும் போதே கண்டறிய முடியா சூழலில் வாழும் நாம், இங்கு முகம் அறியா நண்பர்களிடம் எவ்விதம்தான் பேசுவது? அதனால் நகைச்சுவை கமெண்ட் சில நேரங்களில் கை கொடுக்குமே தவிர, எவர் ஒருவரையும் கண நேரத்தில் ஆவேசப்படவும் வைக்கும் என்பதை தெளிவாக போன பதிவின் கமெண்ட்டுகளின் மூலமாக தெரிந்து கொண்டோம். முடிந்தவரை பதிவுக்கு சம்பந்தமான கமெண்டுகளின் எண்ணிக்கையை கூட்ட முயல்வதின் மூலம் நம் தளத்தை அடுத்த எல்லைக்கு அழைத்து செல்ல முயல்வோம்.ஆரோக்கியமான விவாதங்களை அதிகரிப்போம். இங்கு கமெண்டுகளின் சிறு வார்த்தை கூட யார் மனதையும் புண்படுத்தா வண்ணம் கமெண்ட்டுவோம்.

      Delete
    4. gold vel : 'நடப்பவை நன்மைக்கே' என்று நம்பச் செய்கின்றன உங்களின் எழுத்துக்கள் ! இங்கு சலனங்கள் சில எழுந்திருக்காவிடின் உங்களைப் போன்ற அழகான சிந்தனையாளர்கள் மௌனிகளின் பட்டியலிலேயே தொடர்ந்திருப்பீர்களே ?!

      Delete
    5. //gold vel : 'நடப்பவை நன்மைக்கே' என்று நம்பச் செய்கின்றன உங்களின் எழுத்துக்கள் ! இங்கு சலனங்கள் சில எழுந்திருக்காவிடின் உங்களைப் போன்ற அழகான சிந்தனையாளர்கள் மௌனிகளின் பட்டியலிலேயே தொடர்ந்திருப்பீர்களே ?! //
      +++++++++++++++++++++++

      Delete
  16. பிரம்மாதம்.

    அடுத்தவர் மனதை நோகாதபடி கமெண்ட் போட்டு நம்ம ஆட்கள் பின்னுகிறார்கள்.

    //ஒரு போஸ்டுல ஒருத்தர் நான்கு அல்லது ஐந்து காமென்டுக்கு மேல் போட வேண்டிய அவாசியம் என்ன வந்தது மற்றவர்கள் கருத்து கூறுகள் கூறுங்கள்னு சொன்னால் போதாது கொஞ்சமாவது வழி விடவேண்டும்//


    யார் வேண்டுமென்றாலும் எவ்வளவு கமெண்ட் வேண்டுமானாலும் போடலமே? இதில் யார் யாரை தடுத்து விட்டார்கள் கோவை கணேஷ் சார்?

    நீங்கள் கமெண்ட் போடாமல் இருந்ததற்க்கும் மற்றவர்கள் கமெண்ட் அதிகமாக போட்டதற்க்கும் என்ன சார் சம்பந்தம்?

    இதில் மற்றவர்கள் வழி விடவேண்டும் என்று எல்லாம் சொல்லி இருக்கிறீர்கள். இது என்ன சார், அஜித் படம் ரிலீஸ் ஆகும் தியெட்டரா? நீங்கள் வருவீர்கள் என்று நாங்கள் வழிவிட?

    மற்றவர்கள் என்ன கமெண்ட் போட்டால் நமக்கென்ன? நம்ம கமெண்ட்டை நாம் இட்டுவிட்டு செல்லவேண்டியதுதானே?

    எடிட்டர் + நமது ந்ண்பர்களின் கவனதிற்க்கு: இப்படி ஒரு கமெண்ட்டை நான் இங்கே இட்ட்டே இருக்க மாட்டேன். ஆனால் திரு கோவை கணேஷ் அவர்கள் இப்படி ஒரு கமெண்ட்டை இட்டு ஏற்கனவே இங்கு ரெகுலர் ஆக கமெண்ட் இடும் நமது நண்பர்களை சங்கடத்திற்க்கு ஆளாக்கி இருக்கிறார்.

    திரு கோவை கணேஷ் சார், நான் சொன்னது தவறாக இருப்பின் மன்னிக்கவும்.

    அப்புறம் ஒரு சின்ன கேள்வி: நீங்கள் இட்டுள்ள கமெண்ட்டை பின்பற்றி நீங்களே உங்களின் நான்கு கமெண்ட்டுகளையும் ஒரே ஒரு கமெண்ட்டாக இட்டு இருக்கலாமே என்ற எண்ணம் உங்களுக்கு வரவே இல்லையா? அப்படி நான்கு கமெண்ட்டுகளை இடவேண்டிய அவசியம் உங்களுக்கு இருந்து இருப்பதைப்போலவே தானே மற்றவர்களுக்கும் இருந்திருக்கும்?

    ReplyDelete
    Replies
    1. லூசு - father of லூசு பையன் : ஒரே கணத்தில்..ஒரே கருத்தைப் பதிவு செய்துள்ளோம் !

      சின்னதாய் ஒரு வேண்டுகோள் : அழகாய் நம் இயற்பெயர்களிலேயே வலம் வருவோமே ? உங்களுக்குச் சங்கடமாய்த் தோன்றாத போதிலும் கூப்பிடும் போது எனக்கு நெருடுகிறது !

      Delete
    2. //////////////சின்னதாய் ஒரு வேண்டுகோள் : அழகாய் நம் இயற்பெயர்களிலேயே வலம் வருவோமே ? உங்களுக்குச் சங்கடமாய்த் தோன்றாத போதிலும் கூப்பிடும் போது எனக்கு நெருடுகிறது !/////////////

      எனக்கும் அதே பிரச்சினைதான். இவரும் மரமண்டையும் தங்களது இயற்பெயரில் வந்தால் மகிழ்ச்சி.

      ///////////////லூசு - father of லூசு பையன்///////////////

      கமெண்ட் அதிகம் பற்றி உங்களது கருத்துகள் அனைத்தும் நச் என்று நெற்றிப் பொட்டில் அறைந்தார்போல் இருந்தது.

      Delete
  17. Dear Sir,

    சில காலம் முன்பே இப்பிரச்சனைகளையும் அதற்கான அடிப்படைக் காரணங்களையும் (தனிமனித துதி + தனிப்பட்ட விதத்தில் அடிக்க வேண்டிய அரட்டைகளை இங்கே அடிப்பது) சுட்டிக் காட்டிய பின்னும் இன்று வரை புரியாதவர்களே இங்கு அதிகம்.

    இப்போதும் நீங்கள் கூறுவது போல், பத்து கமெண்ட்களை ஒரே கமெண்டில் இட்டாலும் லோட் மோர் ஆகத்தான் செய்யும் என்பது தாங்கள் அறியாததல்ல.

    என் போன்ற வாசகர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் தங்களின் பதிவு தொடர்பான அளவான கருத்துக்களே அன்றி, நீநீநீநீளமான .... வழ வழா சுயபுராணங்கள் அல்ல.


    ஆசிரியர் உங்களைப் மேலே இரு வரிகளிலும், கீழே ஒரு வரியிலும் புகழ்ந்து விட்டு (என்ன ஒரு PLANNING?! :-) ), மற்ற வரிகளில் தங்களைப் பற்றிய சுயபுராணங்களைப் பாடும் நபர்களே இங்கு அதிகம்.

    உங்களின் இந்த பதிவிற்குப் பின்னும் இங்கே மாற்றம் ஏற்படும் என்று எனக்குத் தோன்றவில்லை. மாற்றம் ஏற்பட்டால் மகிழ்ச்சி + மாற்றம் ஏற்படுத்தும், தங்களை மாற்றிக் கொள்ளும் நண்பர்களுக்கு என் முன் கூட்டிய நன்றிகள்.

    அவ்விதமான மாற்றங்கள் ஏற்படும் பொழுதில் புதிய வாசகர்களும், கருத்துக்களும் உறுதியாக வந்தடையும்.

    பி.கு.: அன்பிற்குரிய விஜயன் சார், தயவுசெய்து உங்களைப் போற்றி புகழ்ந்து போடப்படும் போலியான கமெண்ட்களுக்கு இனி பெரிய NO சொல்லி SKIP செய்து சென்று விடுங்கள். நீங்கள் அது போன்ற போலியான கருத்துக்களுக்கு செவி சாய்ப்பது (பதில் அளிப்பது) கூட பல சமயங்களில் சிலருக்கு, சில தேவையில்லாத வேலைகள் புரிய பச்சைக் கொடி காட்டுவதாக அமைகிறது.

    ReplyDelete
    Replies
    1. TSI-NA-PAH : இது ரொம்பவே விசாலமானதொரு statement ! ஒட்டு மொத்தமாய் நண்பர்களை இத்தகையதொரு முத்திரையின் கீழ் அடைப்பதென்பது நியாயமாகாது ! இங்கு இரண்டு விஷயங்களை உங்களுக்குச் சுட்டிக் காட்ட விழைகிறேன் :

      போற்றிப் புகழ்ந்து சொல்லப்படும் கருத்துகளுக்கு நான் தலை அசைப்பதாய் உள்ள மாயை நிச்சயம் எனது பகுத்தறிவுத் திறனுக்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகாது !

      இரண்டாவது, என்னைத் துதி பாடுவதன் மூலமாய் யாருக்குத் தான் லாபம் என்ன கிட்டிட முடியும் ? சிவகாசியில் ஒரு சின்ன மூலையில் அமர்ந்துள்ள ஒரு முகமில்லா இந்த மனிதனை - காமிக்ஸ் படிக்கும் ஓராயிரம் வாசகர்களைத் தாண்டி யாருக்குத் தெரியும் ?? அப்படி இருக்கையில் எனது good books -ல் இடம் பிடிக்க நண்பர்களில் ஒருசாரார் முயற்சிக்கும் பட்சத்தில் அதனை இயற்கையானதொரு நட்பின் வெளிப்பாடாய் பார்ப்பதில் தான் ஏன் இத்தனை தயக்கங்கள் ?

      அதே போல விமர்சனங்களை முன்வைப்போர் மாத்திரமே நிஜமானவர்கள் என்பதாகவும் , இதர பதிவாளர்கள் போலிகளாகவும் பொருள்படும் விதத்தில் உள்ள உங்கள் பின்னூட்டத்தின் இறுதிப் பகுதி நிச்சயமாய் காயங்களை ஏற்படுத்தக் கூடியவை ! உங்களின் துவக்க வரிகளில் பலவற்றில் எனக்கு பூரண உடன்பாடு உள்ள போதிலும் - ரொம்ப காலமாய் அங்கே-இங்கே பதிவாகும் இந்த 'துதி பாடல்' விஷயம் எனக்கு நிச்சயமாய்ப் புரிபடவில்லை !

      இங்கு இயங்கும் நண்பர்களில் பெரும்பான்மை - வசதிகளிலும், வாய்ப்புகளிலும் , வெளியுலகப் பரிச்சயங்களிலும் என்னை விடப் பன்மடங்கு ஆற்றலில் மிகுந்தோர் என்பதும் நான் அறியாததல்ல ! So நியாயமாய்ப் பார்த்தால் நான் தான் அவர்களைக் 'காக்காய்' பிடிக்க முயற்சிக்க வேண்டும் !

      அன்பின் வெளிப்பாட்டை ஒவ்வொரு முறையும் உரசிப் பார்ப்பது நிச்சயம் பண்பாகாது நண்பரே !

      Delete
    2. +100 ஆசிரியரே உங்கள் பதிலுக்கு. சௌந்தர் ஒரு தீவிர காமிக்ஸ் ரசிகர் என்பதில் ஐயம் இல்லை. அவர் வலைத்தளப் பதிவுகளே இதற்கு சான்று. ஆனால் அவருக்கும் இன்னும் சிலருக்கும் ஏதோ சில காரணங்களால் இந்த அன்பான புகழுரைகள் பிடிப்பதில்லை. உடனே "ஜால்ரா கோஷ்டி" என்று முத்திரை குத்தி விடுகிறார்கள். இது எல்லோர் மனதிலும் (என் மனதிலும் கூட) எழுவது தான். எமக்கு சில குறைகள் அப்பட்டமாக தெரியும் போது பிறர் அதனை "ஆஹா... ஓஹோ..." என்று புகழ்ந்தால் மனதில் கொஞ்சம் நெருடல் வரும் தான். ஆனால் "இவர்களும் நமது சிறிய வாசகர் வட்டத்தில் உள்ளனர். அவர்களின் அன்பு மிகுதியால் வெளிப்படும் கருத்துக்களை, எமக்கு பிடிக்காமலே போனாலும் கடந்து போவோம்" என்று கடந்து போய் விடலாமே?

      Delete
    3. டியர் எடிட்டர்,

      அட்டகாசமான பதில்.

      இப்போதாவது பலருக்கும் “உணமை” புரிந்திருக்கும்.

      +5.5

      Delete
    4. Prunthaban : //எமக்கு சில குறைகள் அப்பட்டமாக தெரியும் போது பிறர் அதனை "ஆஹா... ஓஹோ..." என்று புகழ்ந்தால் மனதில் கொஞ்சம் நெருடல் வரும் தான்.//

      எனக்கு இதனில் துளி மாற்றுக் கருத்தும் கிடையாது ! எனது வேண்டுகோள் என்னவெனில் அங்கேயே ரசனைகளின் மறு பக்கத்தையும் நயமாய்ப் பதிவிட்டுவிடுங்கள் என்பதே.. !

      ஒவ்வொரு முறையும் நான் கதைகளைப் பற்றிய அபிப்ராயங்களைத் தொடர்ந்து கோரி வருவதே மௌனம் கடைபிடிக்கும் வாசகர்களின் மனதை அறியும் ஆர்வத்திலேயே ! Please do open up guys !

      சௌந்தரை ஒரு காமிக்ஸ் காதலராய்...நல்ல மனிதராய்..நண்பராய் எனக்குத் தெரியும் ! அவரது அபிப்ராயங்கள் எப்போதுமே நம் நன்மைகளை மனதில் கொண்டே இருக்கும் என்பதையும் நானறிவேன் ! So பார்வையின் கோணத்தில் சின்னதாய் வேறுபாடு இருப்பினும், அவரது அபிப்ராயங்கள் உதாசீனப்படுத்தப் படாது !

      Delete
    5. டியர் எடிட்டர்,

      //இங்கு இயங்கும் நண்பர்களில் பெரும்பான்மை - வசதிகளிலும், வாய்ப்புகளிலும் , வெளியுலகப் பரிச்சயங்களிலும் என்னை விடப் பன்மடங்கு ஆற்றலில் மிகுந்தோர் என்பதும் நான் அறியாததல்ல ! So நியாயமாய்ப் பார்த்தால் நான் தான் அவர்களைக் 'காக்காய்' பிடிக்க முயற்சிக்க வேண்டும் !

      அன்பின் வெளிப்பாட்டை ஒவ்வொரு முறையும் உரசிப் பார்ப்பது நிச்சயம் பண்பாகாது நண்பரே ! //

      +5.5

      Delete
    6. நண்பர் Prunthaban அவர்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      //எமக்கு சில குறைகள் அப்பட்டமாக தெரியும் போது பிறர் அதனை "ஆஹா... ஓஹோ..." என்று புகழ்ந்தால் மனதில் கொஞ்சம் நெருடல் வரும் தான்.// இதுவே நிதர்சனம்.

      அத்தோடு நண்பரே முகநூல் முன்னோர்களால் ஜால்ராக்கள் என்று முத்திரை குத்தப்பட்டதில் முதன்யமையான இடம் வகிப்பவர்களில் நானும் ஒருவன் (குறிப்பாக விஜயன் சாரின் தீவிர ஜால்ரா என்று என் மிக நெருங்கிய நண்பர்களாலேயே) என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

      விஜயன் சாரின் கருத்துக்களில் எனக்கு எப்போதும் உடன்பாடு (அவரை சந்திக்கையில் அவரின் தெளிவான விளக்கங்களைக் கேட்டறிவதால்.) உண்டு.

      ஒரு சில என்றால் ஓகே. வழி நெடுக என்றால் எப்படி கடந்து செல்வது? :-) இருந்தாலும் இப்போதெலாம் கம்மெண்ட்களைப் படிக்கும் வழக்கம் இல்லை என்பதால் எனக்கு பிரச்சனை இல்லை.

      //அவருக்கும் இன்னும் சிலருக்கும் ஏதோ சில காரணங்களால் இந்த அன்பான புகழுரைகள் பிடிப்பதில்லை // விஜயன் சாரின் இந்த பதிவின் மெனக்கெடலுக்குப் பின்னாவது மாற்றம் நிகழ்ந்தால் மகிழ்வுடன் வாழ்த்தி வரவேற்போரும், மற்றவர்களின் கருத்துக்களைப் புரிந்து கொண்டு தங்களை மாற்றிக் கொண்ட நண்பர்களுடன் கைகுலுக்க முன்னனியில் நிற்போரும் நாங்களே.

      எல்லாம் நலமாக அமைய வேண்டுதல்களுடன் இப்பதிவிலிருந்து விடைபெறுகிறேன் நண்பரே.

      நண்பர் Prunthaban அவர்களின் கருத்துக்களுக்கு மீண்டும் ஒருமுறை என் நன்றிகள்.

      Delete
    7. TSI-NA-PAH : //ஜால்ராக்கள் என்று முத்திரை குத்தப்பட்டதில் முதன்யமையான இடம் வகிப்பவர்களில் நானும் ஒருவன் (குறிப்பாக விஜயன் சாரின் தீவிர ஜால்ரா என்று என் மிக நெருங்கிய நண்பர்களாலேயே) என்று//

      பார்த்தீர்களா அல்லவா - எனது அண்மை சம்பாதித்துத் தரும் சங்கதியை ?!!

      :-) :-)

      Delete
  18. டியர் எடிட்டர் சார்,

    வணக்கம். இந்த பதிவுக்கும் என்னுடைய பின்னூட்டத்திற்க்கும் சம்பந்தமே கிடையாது. ஆகையால் பொறுமையாக கூட படியுங்கள்.

    சென்னையில் நடைபெறவிருக்கும் புதிய புத்தக கண்காட்சியில் நீங்கள் ஸ்டால் எடுத்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடர்ந்து நீங்கள் அனைத்து கண்காட்சிகளிலும் பங்கேற்க்க வாழ்த்துக்கள்.

    கேள்வி 1: இந்த புத்தக கண்காட்சியில் நமது மே மாத புத்தகங்கள் மூன்றும் கிடைக்குமா? அட்லீஸ்ட் கடைசி நாட்களிலாவது? கிடைக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை, கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறேன்.

    கேள்வி 2: இரண்டு புத்தக கண்காட்சி ஸ்பெஷல் புத்தகங்களை சூப்பர் சிக்ஸில் விளம்பரப்படுத்தி இருக்கிறீர்கள். அவை எப்போது? (கண்டிப்பாக இந்த கண்காட்சிக்கு கிடையாது என்று தெரியும், ஆனால் எந்த கண்காட்சிக்கு என்று தகவல் அளிப்பீர்களா? இப்போதைய நிலையில் முடிவெடுத்து விட்டீர்களா? இல்லை, இன்னமும் எந்த கண்காட்சி என்று முடிவாகவில்லையா?).

    ReplyDelete
    Replies
    1. லக்ஷ்மி நாராயணன் : பதிவுக்குத் துளிச் சம்பந்தமும் இல்லாப் பின்னூட்டம் என்ற போதிலும் பதில் சொல்லுகிறேன் மகிழ்ச்சியோடு : யெஸ், சென்னைப் புத்தகச் சங்கமத்தின் நடுவினில் நமது மே மாத இதழ்கள் அனைத்துமே கிடைக்கும்.

      BOOK FAIR SPECIALs ஜூனுக்குப் பின்வரும் ஏதேனும் புத்தக விழாக்களில் வெளியாகும் ; இப்போதைக்கு 2014 -ன் பின்பகுதிக்கான புத்தக விழா அட்டவணைகள் ஏதும் வெளியாகவில்லை என்பதால் உறுதிபடச் சொல்ல முடியவில்லை !

      Delete
  19. பதில் அளித்தமைக்கு நன்றி விஜயன் சார்
    எனது லிமிட் எது என தெரியும் நன்பர்லுசு-father நான் சொல்லவருவது முதல் 200 கமென்ட் வரை நண்பர்கள் பொருமைகாத்தால் மற்றவர்கள் கமென்ட் போட வாய்பளிகீகும் அல்லவா என் கமென்ட் அஜித் படமும் அல்ல அதர்கு இடம் தந்தே ஆக வேண்டிய அவசியமும் அல்ல நான் கூரியது போல் கேட்கபடும் கேள்விகளுக்கு எடிட்டர் பதில் அளித்தால் நன்றாய் இருக்குமே புதியவர்கள் பதிவிட்டால் வழி விடுவதில் என்ன பிரச்சினை உள்ளது நண்பரே ஒரு வரிடம் கேட்கப்படும் கேள்விக்கு மற்றவர் பதிலளிப்பது எவ்வித நியாயம் உள்ளது

    ReplyDelete
    Replies
    1. நண்பர் கோவை கனேஷ் சார்,

      //நன்பர்லுசு-father நான் சொல்லவருவது முதல் 200 கமென்ட் வரை நண்பர்கள் பொருமைகாத்தால் மற்றவர்கள் கமென்ட் போட வாய்பளிகீகும் அல்லவா//

      நீங்கள் எப்போது வருவீர்கள்/ உங்கள் கமெண்ட் எப்போது வரும் என்பது மற்றவர்களுக்கு எப்போது தெரியும் சார்? அதைத்தான் நான் அஜித் படம் என்று சொன்னேன்.

      ஆகவே, உங்கலுக்கு நேரம் கிடைக்கும்போது வந்து நீங்கள் கமெண்ட் இடுவதைப்போலெவே மற்றவர்களும் அவர்களுக்கு நேரம் கிடைக்கும்போது வந்து கமெண்ட் இடுகிறார்கள். அப்படி இருக்க கோவை கணேஷ் சார் வந்து கமெண்ட் இடவில்லை, பழனி குமார் சார் வந்து கமெண்ட் இடவில்லை, பெங்களூர் பரமசிவம் வந்து கமெண்ட் இடவில்லை என்றெல்லாம் அட்டவனை இட்டு காத்திருக்க முடியுமா சார்? இது நடைமுரையில் சாத்தியமா?

      //என் கமென்ட் அஜித் படமும் அல்ல அதர்கு இடம் தந்தே ஆக வேண்டிய அவசியமும் அல்ல நான் கூரியது போல் கேட்கபடும் கேள்விகளுக்கு எடிட்டர் பதில் அளித்தால் நன்றாய் இருக்குமே புதியவர்கள் பதிவிட்டால் வழி விடுவதில் என்ன பிரச்சினை உள்ளது//

      உங்கள் கேள்விகளுக்கு எடிட்டர்தான் பதில் அளிக்க முடியும் சார். ஆனால் பொதுவாக வைக்கப்படும் சில கேள்விகலுக்கு அனைவருமே பதில் அளிக்கலாம்.

      உதாரணமாக, புதிய வாசகர்கள் சிலர் சந்தா பற்றியோ, ஆன்லைன் விறபனை பற்றியோ கேட்கும்போது நெடு நாள் வாசகர்கள் பதில் அளிக்கலாம்தானே? இதற்கெல்லாம் எடிட்டர்தான் வந்து பதில் அளிக்கவேண்டும் என்று காத்திருக்கலாமோ?

      அப்படி பதில் அளிக்கவ்ருபவர் உங்கள் மீது உள்ள மரியாதையால் தான் பதில் அளிக்கிறார் என்பதை நினைவில் கொள்ள்வேண்டும்.


      //நண்பரே ஒரு வரிடம் கேட்கப்படும் கேள்விக்கு மற்றவர் பதிலளிப்பது எவ்வித நியாயம் உள்ளது//

      மிகவும் சரியான கேள்வி. ஆனால் பதில் அப்படிப்பட்டது என்பதை பொறுத்தே இதற்க்கான பதில் அமையும்.

      அதேபோல ஒருவர் இத்தனை கமெண்ட் தான் இடவேண்டும், இத்தனை முறைதான் இங்கே வரவேண்டும் என்பதெல்லாம் கொஞ்சம் ஒவராக உங்களுக்கே தெரியவில்லை கணேஷ் சார்?

      Delete
    2. Ganesh k : அனைவருக்கும் போலவே உங்களுக்கும் நமது வரவேற்பு எப்போதும் உண்டு ! தூள் கிளப்புங்கள் தயக்கமின்றி !

      Delete
    3. நீங்கள் பதிவிடும் முறையிலே எடி ஏன் வருத்தப் படுகிறார் என புரிகிறது இதற்கு மேல் இதை விவாதிக்க விரும்பவில்லை மீண்டும் மௌன வாசகனாக இருக்கவே விரும்புகிறேன் நன்றி நண்பர் லூசு பாதர் லூசு பையன்

      Delete
    4. நன்றி விஜயன் சார் என் பதிவை படித்து விட்டு தேவையில்லா விமர்சனங்களை எழுப்பாமல்பொமைருயாக கடந்துததங்கள் பதிவிட்ட நண்பர்களுக்கு நன்றிகள்

      Delete
  20. கனேஷ் ஒரு லூசுக்கு பயந்து போனால் எப்படி?

    ReplyDelete
    Replies
    1. இதில் பயந்து ஓட என்ன உள்ளது ரஞ்சித் என் கேள்விகளுக்கு விஜயன் சார் பதில் அளித்துவிட்டார் வீன் விதண்டாவாதம் செய்தால் என்ன பயன் யாரும் யாருக்கும் சளைத்தவர் அல்ல இது புரிந்தாலே போதும்

      Delete
    2. ஸ்ரீபெரும்புதூர் ரஞ்சித்,

      உங்களது இந்த கமெண்ட்டை “அடுத்தவர்களை ஏத்தி விடுதல்” என்ற வகைறாவில் சேர்க்கலாம்தானே?

      இப்படி அடுத்தவர்களை உசுப்பேத்தி உசுப்பெத்தி இங்கே பிரச்சினைகளை பெரியதாக்க வேண்டாம் என்றுதானெ எடிட்டர் இந்த பதிவையே இட்டு இருக்கிரார். அப்படி இருக்க நீங்கள் மறுபடியும் அதே அடாத செயலை செய்யலாமா?

      உங்களுக்கு இது அடுக்குமா? நேரில் பார்க்கும்போது களையாக, கனிவாக பேசிய நீங்களா இப்படி? கொஞ்சம் கூட யோசித்து பார்க்கமுடியவில்லை.

      இனிமேலாவது இப்படி அடுத்தவர்களை உசுப்பேத்தி விடுவதை விட்டுவிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

      அப்புறம், உங்க அடையில் வியாபாரம் எப்படி இருக்கிறது? வெய்யில் பரவாயில்லையா?

      Delete
    3. சார் அடுத்தவர்களை நான்காவது உசுப்பேத்தி விடவில்லை,அவர் போட வந்த கமெண்ட்களுக்கு நிங்கள் கூறியாதால்தான் நான் அப்படி சொன்னேன், மற்றபடி அடை இல்லை கடை,என திருத்தி கொள்ளுங்கள் சார் வியாபாரம் நான்றாக உள்ளது .வெயில் ஜாஸ்திதான் சார் உங்கள் புண்ணியத்தில் ஒரு ஏசி மாட்டினால் நான்றாக இருக்கும்

      Delete
  21. 2015 ல் இந்த blog இருக்காது, 2016ல் புக்கே வராது என பெற் கட்டிய நண்பர்களுக்கு இப்போது குளுகுளுன்னு இருக்குமே .

    1.ஐயோ என் முதுகை யாரும் சொறிவதில்லை, யாராவது சொறியுங்களேன் என கேட்டு வாங்கி விட்டு இப்போது வலிக்குதேன்னு சொன்னா அது யாரோட தவறு....
    2.யாராவது துதிபாடல்கள் என்பது எவையென விளங்கினாள் நலம்.
    3.நேர்மறை கருத்துகள் எல்லாவற்றையும் துதியாக நினைத்தால் அது உங்கள் தவறு.

    ReplyDelete
    Replies
    1. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : //2015 ல் இந்த blog இருக்காது, 2016ல் புக்கே வராது என பெற் கட்டிய நண்பர்களுக்கு இப்போது குளுகுளுன்னு இருக்குமே .//

      சவால்கள் தானே இப்போது நாம் சவாரி செய்யும் வாகனத்தின் பெட்ரோல் ?

      :-)

      Delete
    2. 2015 ல் இந்த blog இருக்காது, 2016ல் புக்கே வராது என பெற் கட்டிய நண்பர்களுக்கு இப்போது குளுகுளுன்னு இருக்குமே .

      நீங்கள் கூறியது உண்மையானால் அப்படி பெட் கட்டியவர்கள் டெக்ஸ் பாசையில் ஈனப்பிறவிகளாகத்தான் இருப்பார்கள்.

      Delete
    3. Sundar Raj : இரவுக் கழுகாரின் வசனங்கள் அவருடையதாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே !! இரவல் வாங்குவதாய் இருப்பின் அவரது பெருந்தன்மையை தேர்வு செய்வோமே !

      Delete
    4. நண்பர் ஷல்லும் ஃபெர்னாண்டஸ்!

      அதிரடி சரவெடி!

      அதான் எடிட்டரே “புரியும்படி” பதில் சொல்லீட்டாரே?

      மத்தபடி உங்க கமெண்ட்டுக்கு ஒரு +5.5

      Delete
    5. நண்பர் ஷல்லும் ஃபெர்னாண்டஸ்!

      //ஐயோ என் முதுகை யாரும் சொறிவதில்லை, யாராவது சொறியுங்களேன் என கேட்டு வாங்கி விட்டு இப்போது வலிக்குதேன்னு சொன்னா அது யாரோட தவறு.//

      +5.5

      Delete
    6. ஃ பெர்னாண்டஸ் நீர் கிறுக்கன் இல்லையா ! அப்படியே புட்டு வைத்து விட்டீரே ! மௌன பார்வையாளர்கள் மௌனம் கலையுமா ! இங்கு யாரையும் யாரும் நிரந்தர எதிரிகளாய் பார்ப்பதில்லை !

      Delete
  22. ஒருவர் இத்தனை கமெண்ட்தான் இடவேண்டும் என்பது சிறிதும் ஏற்றுக் கொள்ளமுடியாது. அது நடைமுறைக்கு சிறிதும் ஒத்துவராதது.
    இங்குள்ள பலருக்கு நமது தளத்தின் மீதுள்ள வருத்தம் என்னவென்றால் மிக சுமாரான படைப்பையும் எடிட்டரிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக ஆகா ஓகோ என்று புகழ்வதுதான். அதை எடிட்டர் நம்புவதுதான் வருத்தமளிக்கிறது. இது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் அதை குறை கூற விரும்பவில்லை.
    ஆனால் இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் இதனால் தரமான படைப்புகள் வெளிவருவது மிகவும் குறைந்து வருகிறது. ஒருசில கண்டனங்கள் வந்ததால்தான் ஸ்டீல்பாடி, ஜெரோம், ஜில்ஜோர்டான் போன்ற கதைகள் நின்றது. இல்லையென்றால் இந்த வருட சந்தாவில் தலா 2 என்று 6 கதைகள் கண்டிப்பாக வந்திருக்கும்.
    ஆகையால் நான் வேண்டுவது என்னவென்றால் இங்கு பதிவிடும் அனைவருமே நமது நண்பர்கள்தான். ஒருசாரார் எதையும் புகழ்ந்து எழுதினாலும் அதைப்பற்றி மற்றவர்கள் கவலைப்படாமல், தங்களது கருத்துக்களை நிறைகளாக இருந்தாலும் சரி, குறைகளாக இருந்தாலும் சரி உங்கள் கருத்துக்களை தயங்காமல் பதிவிட்டு வாருங்கள். அப்பொழுதுதான் நமக்கு தரமான கதைகள் தொடர்ந்து கிடைக்கும். நீங்கள் பதிவிட தயங்கினால் இழப்பு நமக்குதான். அதனால் எடிட்டர் நமது பதிவுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற எண்ணத்தை துடைத்து எறிந்துவிட்டு உண்மையை தொடர்ந்து பதிவிட்டு பல தரமான கதைகள் வெளிவர உதவி செய்வோம்.
    (மறுபதிப்பு குறித்து) மறுபதிப்பை ஆண்டு சந்தாவில் சேர்த்ததே சரியான முடிவல்ல. மறுபதிப்புகளை தனியாக வெளியிட்டு இருக்கலாம். பிடித்தவர்கள் வாங்கி கொள்வார்கள். காமிக்ஸ் கலெக்டர்கள் ஒரு சிலர் தங்கள் கலெக்சனில் ஏதாவது ஒரு புத்தகம் தொலைந்துவிட்டாலோ அல்லது கிழிந்து விட்டாலோ உடனே அவர்கள் நமது தளத்தில் மறுபதிப்பு கோரிக்கை வைத்துவிடுகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக சில நண்பர்களும் பதிவிட உடனே அந்த கதை மறுபதிப்பு வந்துவிடுகிறது. ஆகையால் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க நாம் தொடர்ந்து பதிவிடுவதே நன்று.

    ReplyDelete
    Replies
    1. Sundar Raj : //இங்கு பதிவிடும் அனைவருமே நமது நண்பர்கள்தான். ஒருசாரார் எதையும் புகழ்ந்து எழுதினாலும் அதைப்பற்றி மற்றவர்கள் கவலைப்படாமல், தங்களது கருத்துக்களை நிறைகளாக இருந்தாலும் சரி, குறைகளாக இருந்தாலும் சரி உங்கள் கருத்துக்களை தயங்காமல் பதிவிட்டு வாருங்கள்//

      நிறைவான கருத்து !

      Delete
    2. உங்கள் கமெண்ட் உடன் எனக்கு உடன்பாடு தான். இரண்டு விஷயம் மட்டும் நெருடுகிறது. என் மனதில் பட்டதை சொல்கிறேன்.

      // இங்குள்ள பலருக்கு நமது தளத்தின் மீதுள்ள வருத்தம் என்னவென்றால் மிக சுமாரான படைப்பையும் எடிட்டரிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக ஆகா ஓகோ என்று புகழ்வதுதான். அதை எடிட்டர் நம்புவதுதான் வருத்தமளிக்கிறது. //
      உங்களுக்குச் சுமாராகத் தெரியும் ஒரு கதை அடுத்தவருக்கு அற்புதமாய்த் தெரியலாம் என்ற ஒரு சாதாரண புரிதல் இருந்தாலே இப்படியான எண்ணக் குழப்பங்களை சரி செய்து விடலாம். இப்படி நல்ல பெயர் எடுப்பதற்காக மட்டுமே (ஆசிரியர் என்ன இந்திய ஜனாதிபதியா இல்லை அவர்களுக்குப் படியளக்கும் முதலாளியா? நல்ல பெயர் எடுத்து அவர்கள் காணப் போவது என்னவோ?) அவர்கள் பதிவிடுகிறார்கள் என்ற எண்ணத்தை விலக்கி வைத்து விட்டாலே சஞ்சலங்கள் இருக்காது.

      இந்தத் தளத்தில் கமெண்ட்ஸ் போடுவது ஒரு 50 பேர். நமது காமிக்ஸ் விற்பனை நிச்சயம் 1000+. ஒரு பதிப்பாளருக்கு விற்பனை இலக்கங்களை விடச் சிறந்த 'பெட்பக்' வேறு என்ன இருக்க முடியும்? நாம் ஒரு 50 பேர் சொல்வதை வைத்து ஆசிரியர் நிச்சயம் முடிவு எடுக்கப் போவதில்லை. நாம் சொல்வதும் ஒரு சிறு பங்களிப்பைச் செய்யும் தான். ஆனால் அதுவே இறுதி அட்டவணைக்குக் காரணம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆசிரியர் தெளிவு படுத்தட்டும்.

      Delete
    3. 'பெட்பக்' இல்லை, feedback என்று படிக்கவும் :)

      Delete
    4. prunthaban : நீங்கள் என்னுடைய கருத்தை தெளிவாக புரிந்து கொள்ளவில்லை.
      இங்கு பதிவிடும் பெரும்பாலானோர் தங்கள் பதிவுகளுக்கு ஆசிரியர் பதிவிடவேண்டும் என்று விரும்புகின்றனர். அதனால்தான் சில சாதாரண படைப்புகளையும் மிகைப்படுத்தி விமர்ச்சிக்கிறார்கள். இதை மனதில் வைத்துதான் சொன்னேனே ஒழிய வேறொன்றுமில்லை. (அதனால் எடிட்டர் நமது பதிவுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற எண்ணத்தை துடைத்து எறிந்துவிட்டு உண்மையை தொடர்ந்து பதிவிட்டு பல தரமான கதைகள் வெளிவர உதவி செய்வோம்.) இந்த வரியை சற்று கவனித்திருந்தால் உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும்.
      நீங்கள் குறிப்பிட்டது போல் இங்கு 50 பேர் பதிவிடவில்லை. மிக மிக குறைவே.....

      Delete
    5. //உங்களுக்குச் சுமாராகத் தெரியும் ஒரு கதை அடுத்தவருக்கு அற்புதமாய்த் தெரியலாம் என்ற ஒரு சாதாரண புரிதல் இருந்தாலே இப்படியான எண்ணக் குழப்பங்களை சரி செய்து விடலாம். இப்படி நல்ல பெயர் எடுப்பதற்காக மட்டுமே (ஆசிரியர் என்ன இந்திய ஜனாதிபதியா இல்லை அவர்களுக்குப் படியளக்கும் முதலாளியா? நல்ல பெயர் எடுத்து அவர்கள் காணப் போவது என்னவோ?) அவர்கள் பதிவிடுகிறார்கள் என்ற எண்ணத்தை விலக்கி வைத்து விட்டாலே சஞ்சலங்கள் இருக்காது.//

      அப்படி பதிவிடுபவர்களுக்கு தெரியாதா இதனால் நமக்கு நல்லது நடை பெறாது என்று ! பிடித்ததை புகழ்கிறார்கள் ! அவ்வளவுதான் ! என்னை ஒரு நண்பர் கேட்டார் , ஒரிஜினல்களே நன்றாக இருக்கும் அட்டை படங்களுக்கு என்று ! இதோ இங்கே அட்டை படம் முகமற்ற கண்கள் ஒரிஜினல்தானே பெஸ்ட் என்று ! நமது பழைய அட்டை படம் அதனை விட பெஸ்ட் என எனக்கு தோன்றியது தவறா ! எதை வைத்து சும்மா இங்கு உள்ளவர்களை ஜால்ரா என்கிறார்களோ தெரியவில்லை ! பிடிக்கவில்லை என்றால் இங்கே பிடிக்கவில்லை என கூறுவோரும் அதிகம் முன் அட்டை முதல் பின் அட்டை வரை !
      விமர்சனங்களை பிறர் மேல் வைப்பதை விட்டு நாம் எனக்கு இது பிடிக்கவில்லை என எழுதலாமே !

      Delete
    6. //இங்கு பதிவிடும் பெரும்பாலானோர் தங்கள் பதிவுகளுக்கு ஆசிரியர் பதிவிடவேண்டும் என்று விரும்புகின்றனர். அதனால்தான் சில சாதாரண படைப்புகளையும் மிகைப்படுத்தி விமர்ச்சிக்கிறார்கள். //
      இது மாபெரும் குற்ற சாட்டு என்பதை தவிர சான்று இல்லை !

      Delete
  23. இந்தத் தளம் மில்லியன் ஹிட்ஸ் ஐ நெருங்கி வருகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் பின்னூட்டங்களே! நான் மட்டும் ஒவ்வொரு பதிவுக்கும் சராசரியாக நூறு முறை 'refresh' செய்கிறேன். ஏன்? கமெண்ட்ஸ் இல்லை என்றால் ஒரு முறை வாசித்து விட்டுப் போய் விடுவேனே? எனவே இங்கு ஹாஸ்யமாய் பதிவிடும் அனைத்து நண்பர்களும் விலகிப் போய் விட்டால் நான் (என்னைப் போல் பலரும்) refresh செய்யும் அளவு நிச்சயம் குறைந்து போகும். அப்புறம் மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல் அடுத்த வருஷம் தான் :)

    ReplyDelete
    Replies
    1. Prunthaban : இந்தத் தளத்தில் என் பங்கு மிகக் குறைவே என்பது தான் யதார்த்தம் ; எனது ஓரிரு நாட்களது தலைகாட்டலுக்குப் பின்னே இங்கு நண்பர்கள் கட்டும் ஜாலி தோரணம் தான் இந்தப் பதிவை நகற்றிச் செல்கிறதென்பதில் ஐயமில்லை !

      கவலை வேண்டாம் - சின்னதாய் இந்த சலனமும் நன்மைக்கே என்று நாம் மகிழும் நாள் சீக்கிரமே புலரும், புன்னகைகள் மீட்டெடுக்கப்படும் !

      Delete
  24. விஜயன் சார், உங்களின் இந்த பதிவு பல வாசகர்களை பதிவிடவைத்துள்ளது, மேலும் அவர்கள் பதிவிடாத காரணத்தை அறிந்து கொள்ள முடிந்துள்ளது! இது மிக பெரிய விஷயம்! இதன் முலமாவது அனைவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தெளிந்த மனதுடன் நமது கோபதாபம்களை மறந்து மீண்டும் நமது காமிக்ஸ் பயணத்தை தொடருவோம்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : வெளிச்சமான பக்கத்தைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள் !! இன்னமும் இதர மௌன நண்பர்கள் தங்கள் இறுக்கத்தைத் தளர்த்திக் கொள்ள இதுவொரு தருணமாய் அமைந்தால் மகிழ்ச்சியே மிஞ்சும் !

      Delete
    2. முடித்த அளவு இந்த பதிவில் நண்பர்களின் மன குமறல்களுக்கு நீங்கள் பதில் அளிப்பதன் மூலம் அவர்களை இங்கு தொடர்ந்து பதிவிட செய்ய முடியும் என நம்புகிறேன்!

      Delete
    3. Parani from Bangalore : நிச்சயமாய் முயற்சிப்பேன் !

      Delete
  25. நண்பர்களே, இந்த தளத்தில் எனது எண்ணம்களை பதிவிட முதலில் தயங்கினேன், பின்னர் நான் தயங்காமல் பதிவிட காரணம்... முகம்கள் தெரியாத இவர்களும் நம்மை போன்ற காமிக்ஸ் அன்பர்களே என புரிந்து கொண்டதனால், இந்த நண்பர்களை புத்தக திருவிழாக்ககளில் சந்தித்த போது இருந்த தயக்கம் முழுவதுமாக மறைந்து போனது.

    ReplyDelete
  26. காமிக்ஸ் உலகத்தில் நாமெல்லாம் குழந்தைகளாகிக் குதூகலிப்பதால், மற்றவர்களைக் கிள்ளுவது, தள்ளுவது, மூஞ்சியில் துப்புவது, அடிப்பது, சில நேரங்களில் கல்லால் அடிப்பது, மிரட்டுவது, உருட்டுவது - என்று எல்லாமே சிறுபிள்ளை விளையாட்டுக்களாகவே எடுத்துக்கொள்கிறோம்.

    விளையாட்டு முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் பிட்டத்தில் ஒட்டியிருக்கும் மண்ணைத் தட்டிவிட்டு எழுந்து போய், மறுநாள் எந்தவித கோபதாபங்களுமின்றி வருவதுபோல் நாமும் இந்தக் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின்னர் வருவோம், வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அது எல்லா சந்தர்ப்பத்திலும் வாய்ப்பதில்லை.

    ஒவ்வொருவரும் அந்தப் பொழுதில் இருக்கும் மனநிலையின் அடிப்படையில் அவ்வப்போது கோபங்களும், வலிகளும் ஏற்பட்டுவிட, மோதல்களும் வலிகளும் கிளர்ந்துவிடுகின்றன.

    ஆசிரியர் தெரிவித்திருப்பதுபோல ஒவ்வொருவரும் தங்கள் பின்னூட்டங்களைப் பதிவிடும்போது, மற்றவர்களை எங்காவது அது காயப்படுத்திவிடுமா என்பதை சிந்தித்து பதிவிட்டால் மனஸ்தாபங்களும், காயங்களும் ஏற்பட வாய்ப்பிராது. இங்கே பதிவிட்டுவரும் நண்பர்கள் 'வேறு புனை' பெயர்களில் திடீரென்று வந்து பதிவுகளை இடவேண்டிய அவசியமும் வராது. ;-)

    ReplyDelete
    Replies
    1. Podiyan : //ஒவ்வொருவரும் அந்தப் பொழுதில் இருக்கும் மனநிலையின் அடிப்படையில் அவ்வப்போது கோபங்களும், வலிகளும் ஏற்பட்டுவிட, மோதல்களும் வலிகளும் கிளர்ந்துவிடுகின்றன. //

      நூற்றில் ஒரு வார்த்தை !

      Delete
    2. Podiyan : //இங்கே பதிவிட்டுவரும் நண்பர்கள் 'வேறு புனை' பெயர்களில் திடீரென்று வந்து பதிவுகளை இடவேண்டிய அவசியமும் வராது. ;-)//

      ஆயிரத்தில் ஒரு வார்த்தை !!

      Delete
  27. kanini paluthaal innamum palaya padivin commentsai 200 ku mayl innamum padikka iylavillai neenda naalgalukku piragu aasiriyarin varuthamana padivu.

    naanum ini mouna paarvaiyalanai irunthu vidalama ena thondrugirahu.

    aanaal adhnaal "grapic naaval" adigam vanthu vidumo endra bayamum varugirathu.

    idhil ippadi patta prachnaigal ullathal "iduvum maranthu pogum" endra nambikaiyil palya,puthiya,paathikapattor,padaathor anaivarum namathu "comics veetil"( blogil) ullaasamaga sutruwom. vaarungal tholaray.naalai namathay.

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : "அந்த" பயம் இருக்கும் வரை நீங்கள் மௌன விரதம் கடைபிடிக்க இயலாது பரணி !!

      Delete
  28. @Vijayan Sir,

    எதிர்பார்க்கவேயில்லை! Much respect the fact that you are concious about these complex thing! :)

    [இதை போதுமான நேரம் இருந்தால் / Relaxed ஆக இருந்தால் மட்டும் படிக்கவும். ஒன்று முழுதாகப் படிக்கவும் அல்லது படிக்கவே வேண்டாம் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்]

    @Friends.

    நண்பர்களிடம் ஒரு Insider'ஆக நான் பகிறவேண்டியதை அளவுக்கதிகமாவே பகிர்ந்துவிட்டேன் - சண்டையோடு (Sorry for the over dose friends! :D)

    இருப்பினும் Blog'ன் மௌன பார்வையாளனாக / வாசகனாக மட்டுமே நான் ஆரம்பத்தில், ஒருகட்டத்தில் இருந்தேன் என்கிற வகையில் எனக்கு இரண்டாவது பார்வையும் உண்டு. இது கொஞ்சம் Sensitive என்பதால் யாரையும் புண்படுத்தாமல் அதேநேரம் என் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் முடிந்தவரை பகிர்ந்துவிடுகிறேன் - ரசனை சார்ந்த களங்களில் இதுவும் ஒரு கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் என்பதால்.

    Positive'ஆன விஷயம் என்கிற ஒரே காரணத்தினால் எல்லாமே ஏற்கத்தக்கதாக அமைந்துவிடுவதில்லை. பிடித்தவிஷயத்தைப் பற்றிய பகிர்தல்களும், பாராட்டுகளும், கொண்டாட்டங்களும் நிச்சயம் ஒரு Positive'ஆன விஷயம் - நகைச்சுவையைப்போல. அதேநேரம் உலகில் கிட்டதட்ட அனைத்து மனிதர்களும் வெறுப்புணர்வோடும் / அருவருப்போடும் நோக்கும் விஷயங்களின் வரிசையிலும் இவை உள்ளன என்பதுதான் நடைமுறை யதார்த்தம். (எனவே அதனை வில்லத்தனம் என்று கருதிவிடாதீர்கள் Be careful! :D )

    அவ்வப்போது அத்தி பூத்தார்ப்போல் / சந்தேகத்துக்கிடமான சில பதிவுகள் வரும்போது அவை குறிப்பிடும் விஷங்களுள் ஒன்று "ஜால்ரா / சுயதம்பட்டம்" போன்ற விஷயங்கள் இங்கே தூக்கலாக இருப்பதாக. நான் ஆரம்பத்தில் பார்வையாளனாக மட்டுமே இருந்த நேரங்களில் என்னையும் ஒரு வகையில் இது உறுத்திக்கொண்டுதான் இருந்தது. ஆனாலும் நண்பர்களுடன் பழகியவுடன் அது ஜால்ராவாகத் தெரிந்ததில்லை. அருவருப்பு உணர்வெல்லாம் கிடையாது.

    இதெல்லாம் ஒரு பிரச்சனையா? மத்தவங்க என்னைப்பற்றி என்ன நினைத்தால் என்ன? நான் வெகுளி என்கிற மனப்போக்கில் செயல்படாமல் மற்றவர்களின் இருப்பை மனதில்கொண்டு / அவர்களுக்கு அருவருப்புணர்வைத் தூண்டிவிடாமல் Awareness'உடன் செயல்படும் பண்புக்கு தமிழில் ஒரு பெயர் இருக்கிறதென்று நினைக்கிறேன் - "கண்ணியம்?". இந்த Blog பழைய வாசகர், புதுவாசகர், தீவிரவாதிகள், மிதவாதிகள் என எல்லோருக்கும் பொது என்பதால் இங்கே கண்ணியமும் எதிர்பார்க்கப்படும் விஷயம் அவசியமல்லவா?

    சமீபத்தில் நான் பார்த்த ஒரு கண்ணியக் குறைவுதான் நான் சண்டைபோடக் காரணம், மன்னிக்க மறுத்ததற்கும் காரணம். ஒரு Insider மனப்பாங்கோடு நண்பர்களின் கொண்டாட்டங்களை ரசிக்க முடிந்த என்னை - இவர்களின் (இரண்டுபேரின்) அருவருப்பான செயல்கள் Outsider'ஆக அந்த மனப்பாங்கோடு மட்டும் இருந்துவிடுவதே Better என யோசிக்குமளவுக்கு செய்துவிட்டன. அது வேறொன்றும் இல்லை - எனக்கு குண்டு புக் பிடிக்காது என என்னையே நம்பவைக்க முயற்சித்தார்கள் LOL :D எதற்கு? இவர்கள் எந்தளவுக்கு குண்டு புக் Format'ஐ ஆராதிக்கிறார்கள் என்பதை ஊருக்குப் பறைசாற்ற. (என்பது என் மனதில் பதிந்துவிட்டதால்)

    @ஈரோடு விஜய்,
    அதென்ன அந்த மர்மமான "மன்னிக்க உரிமையில்லை" என்கிற எனது நிலைப்பாடு? அது அவசரத்தில் சொன்ன வறட்டு வார்த்தை! :D

    காரணம் வேறொன்றுமில்லை, கவனக்குறைவுகள் ஒன்றிரண்டு நிகழவில்லை. தொடர்ந்து நிறைய நிகழ்ந்தேறின Passion என்கிற பெயரில். கண்டிப்பாக சில ஓவரான பெரிய பெரிய வார்த்தைப் பிரயோகங்கள் / புத்தகத்தை தான் ஆராதிப்பது பற்றிய சுயதம்பட்டங்கள் போன்றவை - நம்மைப்போன்றே காமிக்ஸ் மீது ஆர்வம் கொண்ட வாசகர்களை முகம் சுழிக்க வைக்கிறது என்று தெரிந்தும், காமிக்ஸ் மீதே தேவையில்லாமல் அந்நியத்தை விளைவிக்கிறது எனத்தெரிந்தும் அதை கொஞ்சம்கூட குறைத்துக் கொள்ளாமல் விட்டால் - அந்த அலட்சியத்துக்கு என்னிடமிருந்து மன்னிப்பு கிடையாதுதான். நீங்கள் ஒரு Regular Commenter'ஆக இருப்பதால் மட்டுமே இதைக்குறிப்பிடுகிறேன் :D (எல்லோரையுமல்ல)

    எது எப்படி இருந்தாலும் நமது கமெண்ட் Section மட்டும் என்னைப்பொருத்தவரையில் கண்ணியக்குறைவாக தோன்றுவதால் இங்கே மட்டும் நான் இனி எட்டிப்பார்க்கப்போவதில்லை.

    ஒரேவொரு பாராட்டு: (I never did this)
    @Friends, எடிட்டர் விஜயன் அவர்களை ஒரு காமிக்ஸ் ஆர்வலராக மட்டும் அல்லாமல் ஒரு நல்ல Entrepreneur'ஆகவும் கூட நாம் பார்க்கவேண்டும். நமது சந்தையில் பெரிய Demand இல்லாத ஒரு பொருளை / Survive பண்ண கிட்டதட்ட வாய்ப்புகளே இல்லாத ஒரு வழிமுறையை, Balance பண்ணி தொடந்து செல்வது Passion இல்லாத மனிதர்களுக்கு சாத்தியமே இல்லை. செயலில் வெளிப்படும் Passion யாருக்கும் எந்தவிதத்திலும் அருவருப்பைத் தருவதில்லை! :)

    ReplyDelete
    Replies
    1. //@ஈரோடு விஜய்,
      அதென்ன அந்த மர்மமான "மன்னிக்க உரிமையில்லை" என்கிற எனது நிலைப்பாடு? அது அவசரத்தில் சொன்ன வறட்டு வார்த்தை! :D //
      அதனை யாரும் பெரிதாய் எடுத்து கொள்ளவில்லை ! ஏன் ? நீங்களே கூறி விட்டீர்கள்
      //காரணம் வேறொன்றுமில்லை, கவனக்குறைவுகள்//
      நண்பர் என நினைத்ததால் வந்த கவன குறைவு ! விடுங்கள் இனி அவர் அவர் வழியில் , நீங்கள் உங்கள் வழியில் !
      உற்ச்சாகம் தரும் உங்கள் பதிவுகள் எப்போதும் வரவேற்பை பெரும் ! பிறரை குற்றம் சாட்டுவதை தொடராமல் வந்து கொண்டிருந்தால் !

      Delete
    2. //காரணம் வேறொன்றுமில்லை, கவனக்குறைவுகள்//

      // நண்பர் என நினைத்ததால் வந்த கவன குறைவு ! விடுங்கள் இனி அவர் அவர் வழியில் , நீங்கள் உங்கள் வழியில்! //

      @ஸ்டீல், இதுவே ஒரு கவனக்குறைவுதான். நீங்கள் அந்த Para'வை முழுதாகப் படித்திருந்தால் இந்த பதில் வந்திருக்க சாத்தியமில்லை.

      விஜய் அல்லது Atleast ஆதி தாமிரா அன்று ஒரு Topic'ன் முதல் இரண்டு கமெண்டுகளை சரியாகப்படித்திருந்தால் எடிட்டர் இந்த பதிவைப்போடுமளவுக்கே வந்திருக்காது.

      Regular Commenter need more understanding about other's post :)

      Anyway Bye! ;)

      Delete
    3. @ramesh kumar - Ok bye.

      Hopefully we will hear from you after 1 or 3 or 6 months or never, my wish is to see your comments tomorow itself :-)

      @Erode vijay and @Adhi, where are you?

      Delete
    4. @V Karthikeyan,

      The fact is, I should stop commenting atleast for a month or so. Not as a personal decision but you people deserve a recovery from this - no more confusions. I aware how much damage / distractions I made so far.

      Delete
    5. ரமேஷ் ஆதியோ , விஜயோ கூறிய அனைத்துமே நட்புணர்வு தந்த உற்ச்சாகத்தின் விளைவே !
      இனி அவர்களை குறித்து விமர்சித்து ஒன்றும் ஆக போவதில்லை ! நீங்களோ நானோ ! அவர்கள் எதையும் மனதில் வைத்து கொள்ள போவதில்லை ! வந்து விட்டார்கள் ! பழைய நிலைக்கே மீண்டு வருவார்கள் ! நீங்களும் வந்தால் சரி ! anyway take care ! bye !

      Delete
    6. Ramesh Kumar : மனித மனம் எத்தனை complex ஆனதொரு படைப்பு என்பதை அவ்வப்போது புரியும் வாய்ப்புகள் கிட்டுகின்றன.......

      இன்றைய பொழுதில் உங்கள் பார்வையில் "அருவருப்பு"..."கண்ணியம்" போன்ற சொற்கள் தரும் பொருட்கள் ஒரு தூரத்து நாளில் சற்றே சாத்வீகமாய்த் தோன்றாது போகாது என்பது எனது அபிப்ராயம் !

      மேலேயுள்ள எனது பதிவின் ஒரு சிறு பகுதியை மீண்டும் உங்கள் பார்வைக்கு வைப்பதைத் தாண்டி நான் வேறேதும் செய்வது உசிதமாகாது :

      //In hindsight, everybody is a genius என்று சொல்வார்கள் ; நாமும் அதற்கென்ன விதிவிலக்குகளா ? பின் நாளில் நிதானமாய் யோசிக்கும் போது தானே நம் முன்னே இருந்த மாற்று உபாயங்கள் ; சேதாரம் விளைவிக்கா உபாயங்கள் ஒன்றொன்றாய்ப் புலனாகும் ?//

      Delete
  29. விஜயன் சார், உங்களுக்காக இங்கு வைக்கபடும் (பொதுவான கேள்விகளை தவிர) கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொன்னால் பல குழப்பம்கள் தீரும்! அந்த கேள்விகளுக்கு விடை கிடைக்காவிட்டால் அதே கேள்வியை உங்களின் அடுத்த பதிவில் அல்லது நண்பர்கள் மின் அஞ்சல் அனுபலாம் என்பது எனது எண்ணம்! இந்த பதிவில் இருந்து விடை பெறுகிறேன்!

    Good night friends!

    ReplyDelete
  30. காமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும் சித்திரை திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் நண்பரே ! உங்களுக்கும் நமது வாழ்த்துக்கள் !

      Delete
  31. டியர் விஜயன் சார்!
    என்னுடைய முந்தய பதிவின் பின்னூட்டத்தில், அந்த பதிவு வழக்கமான பதிவின் உற்சாகம் தொனிக்காது சற்றே இறுக்கமாக இருப்பதாக எனக்கு தோன்றியதால், சென்ற வாரத்தில் இந்த தளத்தில நடந்த பின்னூட்ட கலாட்டாக்கள் உங்களை சலிப்பு கொள்ள செய்து, அதுவே பதிவு சற்றே உற்சாகம் இழந்ததற்கு காரணமாக இருக்கும் என தவறாக புரிந்துகொண்டேன். apologies for the misunderstanding!

    ஹ்ம்ம்...இரு நண்பர்களுக்கு நடுவுல வந்த ஒரு சின்ன misunderstandingக ரொம்பவே கிளரிகிட்டிருக்கோமுன்னு படுது.

    ஆசிரியரே தேவைக்கு அதிகமான சீரியஸ்னெஸ்சோட இந்த பதிவப்போட ,நண்பர்கள் அத இன்னமும் சீரியஸா எடுத்துகிட்டு போயிட்டிருக்காங்க!

    இந்த டாபிக்க இப்படியே விட்டுட்டு அடுத்த விஷயத்துக்கு change ஆனா நல்ல இருக்கும். அது நம்ம தல கைல(புதிய பதிவு ஹி ஹி ஹி! ) தான் இருக்கு.

    அப்புறம்...ரொம்ப நாலா மிஸ் ஆனா நண்பர்கள் சிலர இந்த பதிவுல பாக்க முடியுது. ஹாய்!

    இந்த பதிவ optimistic க பாக்கனமுன்ன..."ஆசிரியர் காணாம போன நண்பர்கள திரும்ப எப்படி இங்க கொண்டுவருவது என்பத பத்தி நேத்திக்கு யோசிச்சிருப்பரோ ?? " அப்படின்னு யோசிச்சு வைக்கலாம்.:-)))

    ReplyDelete
    Replies
    1. காமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும் சித்திரை திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

      Delete
    2. விஸ்கி-சுஸ்கி : வெள்ளைக் கொடிகளுக்கான வேளைகள் கடந்து விட்டன என்பதை உணர முடிந்ததால் தானோ என்னவோ, சற்றே சீரியஸ் ரகத்தில் பதிவிட அவசியமானது ! Anyways சில மௌன விரதங்களை உடைக்க இது போலொரு நிகழ்வு உதவி உள்ளது என்பதை இதன் சந்தோஷ மறுபக்கமாய் பார்த்து விட்டுப் போவோம் !

      கவலை வேண்டாம் - அடுத்த பதிவையும் சீக்கிரமே போட்டுத் தாக்கினால் போச்சு !!

      Delete
  32. மறு பதிப்பே போடாதீர்கள் சார், நீங்கள் மறுபதிப்பு போடுறதால எத்தனை பேருடைய வியாபாரம் பாதிக்கும் தெரியுமா...?


    அது போல் ஒரு கதை எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்ல எனக்கு உரிமை உண்டு, அந்த கதையே குப்பை என்று சொல்ல எவருக்கும் உரிமை இல்லை.

    ReplyDelete
    Replies
    1. அதுக்குள்ள இந்த கருத்தையும் பதிவு செஞ்சுட்டீங்ஙளா அருமை கி.கி ஷ

      அது போல் ஒரு கதை எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்ல எனக்கு உரிமை உண்டு, அந்த கதையே குப்பை என்று சொல்ல எவருக்கும் உரிமை இல்லை. 

      - fact

      Delete
  33. Android phone வைத்திருப்பவர்கள் boat browser ஐ உபயோகியுத்தால் 500 கமெண்ட் என்றாலும் load more பண்ணி படிக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : இன்றைய தகவல் ! பயனுள்ள தகவல் !

      Delete
  34. feedback for april book wayne shelton - 9/10 luckyluck -5.5/10

    ReplyDelete
    Replies
    1. Giri : கொஞ்சமே கொஞ்சம் விரிவாக - பிடிக்காது போன சங்கதிகளைப் பற்றிய உங்கள் எண்ணங்களை அறிய முடிந்தால் இன்னும் பிரயோஜனமாய் இருக்கும் எனக்கு !

      Delete
  35. தல இப்படி ஒரு பதிவ உங்கள எழுத வெச்சதுக்காக ஒரு பெரிய apology !! நீங்க சொன்ன மாதிரி எதுவும் கடந்து போகும் , ஆனா எங்க காமிக்ஸ் நேசமும் உங்க மேல உள்ள பாசமும் கடந்து போகாது!!

    ReplyDelete
    Replies
    1. balaji ramnath : Apology எல்லாம் தேவை இல்லையே ப்ரோ ! நண்பர் பொடியன் பதிவிட்டிருந்தது போல குழந்தைகள் விளையாட்டின் போது அடித்துக் கொள்ளுவது, கிள்ளுவது போன்ற சேஷ்டைகளாய் இதனையும் பார்த்து விட்டால் போச்சு !

      Delete
  36. ஹாய் எவ்ரிபடி! வேலை விஷயமாய் வெளியூரில் இருப்பதால் அனைத்தும் மொபைலில்தான். மொபைலில் டைப் செய்வது மட்டும்தான் கடியாக இருக்கிறது. அதனால்தான் 'for follow up'. வேறொன்றும் நினைத்துக்கொள்ளவேண்டாம். அத்தோடு இடையில் 20,21ம் தேதிகள் மட்டுமே சென்னையில் இருக்கக்கூடும் என நினைக்கிறேன். ஆக இந்த புத்தகக் கண்காட்சியையும் நான் பெரும்பாலும் தவறவிடக்கூடும். அவ்வ்வ்வ்!!

    எடிடருக்கு ஒரு சிறிய முன்னறிவிப்பு: வழக்கமான ஜனவரி பபாஸி புத்தகக்கண்காட்சியைப் போல தாங்கள் இந்த இடையில் நிகழும் பிற கண்காட்சிகளை நினைத்துவிடவேண்டாம். மக்களிடம் வரவேற்பு சற்று குறைவாகத்தான் இருக்கும். ஆனால் பிற ஊர்க் கண்காட்சிகளை விட சற்று பெரிதாக இருக்கும் என நம்பலாம். (குறிப்பாக ரொம்பத்தான் பீற்றிக்கொள்ளும் ஈரோடு கண்காட்சியை விட! ஹிஹி!!)

    இந்தப் பதிவே ஒரு அவசியமில்லாத பதிவுதான்! இதன் மூலம் இஷ்யூ பெரிதாக்கப்பட்டுள்ளது. அல்லது சிறிய விஷயத்துக்கு அதிக வெளிச்சம் தரப்பட்டுள்ளது. ஒன்றுதான் அப்பட்டமாக மீண்டும் புரிகிறது. தாங்கள் எடிட்டராக மட்டுமின்றி, இந்த எளிய க்ரூப்பின் மீது உண்மையான நேசமும், நட்பும் கொண்டவராகவும் இருக்கிறீர்கள்.

    பதிவில் நீங்கள் தெளிவாக கூறியது போல, இத்தனை நாள் கேலி, கிண்டல்களை எல்லாம் ஏற்பவர் என்பது போல ஜாலியாக இருந்துவிட்டு, திடீரென ஏதோ ஒரு கமெண்டுக்கு ரமேஷ்குமார் பொங்கியது எல்லாம் சற்றும் பொருத்தமில்லாத செய்கை. இதில் உண்மையில் அதிர்ச்சியும், காயமுமடைந்தது ஈரோடு விஜயாகத்தான் இருக்கும். குண்டு புக்குக்கு எதிரான மனநிலை என்பதே இங்கு யாருக்கும் கிடையாது. அதைக் கையாளுவது, உருவாக்கம் மற்றும் விநியோகம் (இது கூட எடிட்டருக்கு மட்டும் இருக்கவேண்டியது, நாம் உரிமையோடு அவருக்கும் சேர்த்து கவலைப்படுகிறோம்) ஆகியவற்றில் இருக்கும் சிரமங்களைப் பற்றி மட்டும்தான் கவலை கொள்பவராக இருக்கிறோம். இதைக்கூட புரியாதவனில்லை நான். அப்படியிருக்க, ரமேஷை, அதுவும் நண்பராகக் கருதியவரை எப்படி குண்டு புக்குக்கு எதிரானவர் என்பதாக நாங்கள் புனைய முயல்வோம்? இதைப்போன்ற பல கருத்துகளை இதற்கு முன்னர் வெளியிட்ட பிறரின் கருத்துரைகளுக்கு நான் பதிலிட்டது கூட கிடையாது. ரமேஷ் என்பதால் மட்டுமே கலாய்ப்பதற்காக விஜய் என்னை கருத்துரையில் அழைத்தார். நானும் வந்து பிச்சி பிச்சி என கருத்திட்டேன். இந்த எளிய விஷயத்தை இந்தத் தளத்துக்கு வரும் எத்தனையோ நண்பர்கள் புரிந்துகொண்டிருக்க, நாங்கள் யாரிடம் உரிமையிருக்கிறது என நினைத்தோமோ அவர் மட்டும் புரிந்துகொள்ளாமல், இன்னும் ”என்ன கையைப் புடிச்சி இழுத்தியா...” ரேஞ்சுக்கு விடாமல் இந்தப் பதிவிலும் கூட தொங்கிக்கொண்டிருப்பதையும் பார்க்கும் போது சிரிக்காமல் என்ன செய்ய.? இணையம் மூலம் கிடைப்பது முகமறியா நட்புகள்! எத்தனையோ நல்ல நண்பர்களை, ரசனையின் பாற்பட்டு நேரிலும் கூட பல நட்புகளைத் தந்தது இந்த ஐந்தாண்டு இணையப் பழக்கம். ஆனாலும் கூட சமயங்களில் சில ஏமாற்றங்கள் நேரத்தான் செய்திருக்கிறது. ஏதோ காரணத்துக்காக நாம் விரும்பாத நபர்கள் நம்மை மதிப்பதும், நம் நட்பை தேடிப் பெறும்போதும் சற்று வெட்கமாகத்தான் இருக்கும். போலவே நாம் மதித்து விரும்பும் நபர், நம்மை உதாசீனப் படுத்தினால் கூட பரவாயில்லை, அவமானப் படுத்திவிடுகையில் ஏமாற்றம் நேரும். அத்தகைய ஒரு சமயம்தான் இதுவும் எனக்கு. ஆனால் சட்டென என்னைச் சமாதானப்படுத்திக்கொள்ளும் வழியறிந்தவன் நான்! `;-)))))))))))

    நண்பர் ஸ்டீல்கிளாவின் பரிதவிப்பும், நண்பர்கள் உடைந்துவிடக்கூடாது, தளம் களை இழந்துவிடக்கூடாது என்ற உண்மையான அவர் நினைப்பும் அவரை ஒரு சின்னக்குழந்தை போல காட்டுகிறது. அவர் மீது ஒரு தனி மரியாதை வரவைத்தது. ஸ்டீல்: அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது. பி ச்சீயர்ஸ்!!

    இதான் சாக்கு என்று, ’இப்படி ஆகும்னு நான் முன்னமே நினைச்சேன்’ என்றும், ‘ஜால்ரா கும்பல்’ என்றும், ‘எங்களுக்கும் வழி விடுங்கள்’ என்றும், ஏதோ இங்கு பலரும் வழியை அடைத்துக்கொண்டு நிற்பது போன்ற கமண்டுகள் வருவதும்..... அவர்களையும் காயப்படுத்தவேண்டாமென பொறுமையாக எடிட்டர் பதில் சொல்வதும்..... முடியலைடா சாமீ..!!!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துடன் நூற்றுக்கு நூறு ஒத்துப் போகிறேன். அதே வேளை மாற்றுக் கருத்துடையவர்களும் வந்து விட்டுப் போகட்டும். அவர்கள் உங்களையும் ஈரோடு விஜய் ஐயும் கமெண்ட்ஸ் போட விடாமல் செய்யவா முடியும்? நீங்கள் இருவரும் தொடர்ந்து வர வேண்டும் என்பதே எம் அனைவரதும் விருப்பம்.
      யோசித்துப் பார்க்கிறேன். ஒருவர் திடீரெனெக் கோபப்பட ஆயிரம் காரணம் சொல்லலாம். "என்னை எப்படி ஆந்தை விழியார் என்று அழைக்கலாம்?" என்று ஆசிரியர் கோபப் படலாம், "என்னை எதற்கு எடுத்தாலும் கடிதம் எழுதுபவன் என்று கிண்டல் செய்ய உங்களுக்கு என்ன உரிமை?" என்று பரணீதரன் கேட்கலாம், "என்னை ஓல்ட் காப்பர் என்று எப்படிச் சொல்லலாம்?" என்று நீங்கள் சண்டைக்குப் போகலாம், "துருத்தகரகரத்தார் என்று எப்படி அழைக்கலாம்?" என்று ஸ்டீல் மனஸ்தாபப் படலாம், இப்படி எவ்வளவோ செய்யலாம். இவை எதனையும் செய்யாமல் சில நேரங்களில் கொஞ்சம் மனம் புண்பட்டாலும் "கோழி மிதித்துக் குஞ்சு சாகுமா?" என்ற மன நிலையில் கடந்து போவதே சிறந்த நட்பு. அது ரமேஷ் குமார் அவர்களிடமும் நிறையவே இருந்தது தான் இத்தனை நாளும். திடீரென ஏதோ பொங்கி விட்டார். உணர்ந்து திரும்பி வருவார் ஒரு நாள் என்று நம்புவோம்.

      Delete
    2. என்னுடையதும் இதே கருத்துதான். வேறு யார் இப்படி கோபித்துகொண்டிருந்தாலும் நான் ஆச்சரியபட்டிருக்க மாட்டேன். ஆனால் தெளிவான சிந்தனையுடைய, எல்லாருடனும் நட்பு பாராட்டும் , யாரையும் தேவையில்லாமல் காலாய்க்காத, ரமேஷ் குமார் இப்படி செய்தது எனக்கு மிகுந்த வியப்பை அளிக்கிறது. கண்டிப்பாக அவர் திரும்பிவருவார்.

      Delete
    3. ஆதி இந்த தளம் மிக மிக குறைவான , தமிழிலே காமிக்ஸ் என்பது ஏறத்தாள அழிந்து விட்ட நிலையிலிருந்து மீண்டு வந்த சிறு இனத்திர்க்கானாது ! ராணி,அசோக்,பொன்னி,லயன் , முத்து ,திகில், மினி லயன்,ஜூனியர் லயன், பைகோ கிளாசிக்ஸ், மாலை மதி காமிக்ஸ் என பல நாடுகள் , நகரங்கள் இருந்து வந்தன , அவற்றில் மீண்டும் தளிர் விட்டு புத்துயுயிர் பெற்று வந்த நகரம், நாகரிகம் நமது ! தகுதி உள்ளன தப்பி பிழைக்கும் என்பதற்கு உதாரணம் இது !அந்த தகுதி படுத்துதலின் ஒரு படியே ஆசிரியரின் நீண்ட விளக்கங்களும் ! விமர்சனம் வேண்டுமே என்பது ஆசிரியரின் வேண்டு கோள் தான் செல்லும் பாதை சரியா என உணர்ந்து கொள்ள ! ....அதிலே உள்ள விரல் விட்டு எண்ண கூடிய சிலரை இழந்து விட்டால் யாருக்கென்ன லாபம் ! ஆனால் தகுதியான சாபமில்லா , நல்லெண்ணம் கொண்ட , சாடுதல் இல்லா விமர்சனங்கள் வரட்டுமே என்பதே என்னை /நம்மை போன்றவர்கள் நிலை ! தவறான புரிதல்கள் கொண்டவர்களுக்காக அவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமே என்றே இவ்வளவு மனக்கெடல்களும் !

      Delete
    4. @ஆதி தாமிரா,

      மிச்சமிருக்கும் சில நெருடல்களைக் குறைப்பதற்காகவாவது நான் உங்களுடன் பேசவேண்டியிருக்கிறது. கண்டிப்பாக இதேபோன்ற விளக்கங்களுடன் நான் நீட்டிக்கமாட்டேன்! (வெறுப்புணர்ச்சியை காட்டமாட்டேன் என்று எடுத்துக்கொள்ளுங்கள்! :D)

      - பட்டிமன்றம் லெவலுக்கு ஒரு ஒன்றுமில்லாத சப்ஜக்ட் (குண்டு) போனவுடன் நான் பயந்துதான் போனேன். நேரங்கெட்ட நேரத்தில் சில டாபிக்குகள் Escalate ஆகி, மனதில் சாதாரண விருப்பங்களுடன் "தெமே" என்று இருந்த சில நண்பர்களையும் "குண்டுபுக்குக்கு Alternatives" என்ற ரீதியில் யோசிக்கவைத்து ஒரு Side உருவாக்கியது. நான் சொல்லவந்தது வேறு ஆனால் இங்க நடப்பதுவேறாக இருக்கிறதென்ற பீதியும் உங்கள் மேலும் விஜய் மேலும் கடுப்பும் வந்தது.

      - "பிச்சிபிச்சி" என்றுதான் நானும் புரிந்துகொண்டேன். Offensive'ஆக எடுக்கவில்லை. என்னைப்பொருத்தவரையில் Offensive என்பது:பொதுவில் தன் Passion'ஐ ஊதிப்பெரிதாக்கிக் காட்டுவது. குறையாக சொல்லவில்லை, எனக்கு எப்போதும் Visitor'கள் எப்படி இதை பார்க்கிறார்கள் என்பதே முக்கியம். நானும் நீங்களும் லேசாக எடுத்துக்கொள்வது Obvious! In fact I love your extreme end of expression! :D

      - விஜய் "கூலாக விடுங்க" என்றதும் நிம்மதியாகவே நானும் முடித்துவிட்டேன். அது முடிந்தேவிட்டது.

      - அதன்பிறகு விஜய் போட்ட "டவுனு பிள்ளைக" கமெண்ட் எந்த சப்ஜக்டுடன் ஒட்டாமல் கிட்டதட்ட எடிட்டரிடம் எதையோ கம்ப்ளைண்ட் செய்யும் தொனியில் இருந்தது. அதன் அவசியம் என்ன கேள்விதான் - யாருமே என்னை கன்வின்ஸ் செய்யமுடியாத அளவுக்கு கொண்டுபோனது.

      @விஜய்,
      நான் பண்ணிய வேலைகளுக்கு உங்களிடம் மன்னிப்பு கேட்பதுகூட நியாயமில்லை. என்னை மன்னித்துவிடாதீர்கள். I deserve pain! :D கண்டிப்பாக இனிமேல் அச்சுருத்தலாக இருக்கமாட்டேன்! :)

      Delete
    5. Ramesh Kumar : காயம் ஆறிட காலம் உறுதுணை செய்யும்...நம்பிக்கையோடு காத்திருப்போம் !

      Delete
  37. நண்பர் விஸ்வாவிற்க்கு,

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !!

    இந்த நன்னாளில் வளமான தொழிலும்,நிறைந்த செல்வமும் ,மனம் முழுக்க மகிழ்ச்சியும் பொங்கிட உளமாற வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் விஸ்வாவிற்க்கு,

      இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !!

      Delete
    2. நண்பர் விஸ்வாவிற்க்கு,

      இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !!

      Delete
  38. நில் கவனி சுடு அட்டைபடம் பார்க்க ஆவல் !

    ReplyDelete
  39. சில மாத நாவல்களை எடுத்துகொண்டால், வாசகர்களின் குறைகளை தொகுத்து சம்பந்தபட்ட எழுத்தாளரிடம் கொடுத்து, அவரது பதில்களை மறு மாத இதழில் வெளியிடுவார்கள். ஆனால் நமது வலைப்பூவில் கதைகளில் உள்ள குறைகளை பற்றி பதிவிடும் வாசகர்கள் “ ரசனை இல்லாதவன்” என்று முத்திரை குத்தபடுகிறார்கள். அவர் கூறிய குறைகளை பற்றி விமர்சிப்பதை விட்டு விட்டு , சம்பந்தபட்ட வாசகரையே விமர்சிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்த போக்கு முதலில் மாற வேண்டும்.

    நான் சில கடுமையான விமர்சனங்களை கடந்த காலங்களில் பதிவிட்டபோது, ஒரு சிலர் என்னை கடுமையாக விமர்சித்தார்கள். அப்போதெல்லாம் ரமேஷ் குமார் சில நியாயமான கருத்துகளை பதிவிட்டிருந்தார். கதைகளை பற்றிய கருத்துகளில் அவருடைய நடுநிலையான கருத்துகள் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

    அவர் மீண்டும் இங்கே தொடரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

    ஒரு விஷயத்தை எடிட்டர் அவர்கள் தெளிவுபடுத்தவேண்டும்......! இந்த கதை டப்பா ....... இந்த கதை மொக்கை........
    இதைவிட சிறந்த கதை எங்களுக்கு வேண்டும் என்று கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறதா...? இல்லையா....?
    அல்லது எதை கொடுத்தாலும் நாங்கள் அதை படிக்கவேண்டுமா....?

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் உரிமை உண்டு. ஆசிரியர் அனைவரது விருப்பத்தையும் கேட்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் அந்த விருப்பங்கள் அனைத்தையும் நிறை வேற்ற வேண்டும் என்று சொல்ல முடியாது. அவர் பெரும் பான்மை வாசகர் விருப்பப்படி தானே நடக்க முடியும்? இதுவும் ஒரு வகை ஜனநாயகம் தான். எனக்குப் பிடித்த கட்சிக்கு நான் ஓட்டு மட்டும் தான் போட முடியும். அவர்கள் ஆட்சிக்கு வருவார்களா இல்லையா என்பது என் கையில் மட்டும் இல்லை.
      எப்படி என் கட்சி தான் சிறந்தது என்று சமூகத் தளங்களில் விவாதம் நடக்கிறதோ அப்படியே ஒரு கதை மொக்கையா இல்லையா என்று இங்கும் விவாதிக்கலாம், அது அடுத்தவரை கீழ்த்தரமாக விமர்சித்தல் என்று முடியாத வரை. "ரசனை கெட்டவன்" என்று விமர்சிப்பது தவறு தான். ஆனால் எமக்கு பிடித்த நடிகர் ரஜினி என்றால் எமது நண்பன் கமல் ரசிகன் என்றால் அவனிடம் கமலிடம் இல்லாத குறையெல்லாம் கண்டுபிடித்துச் சொல்லி வெறுப்பேற்றும் சாதாரண மனிதர்கள் தானே நாம்? தவறுகள் செய்வோம். அது தவறு என்று தெரிந்தால் மன்னிப்புப் கோரி விலகியும் கொள்வோம் :)

      Delete
    2. ஒரே பதில் ஆசிரியர் நிழல் எது நிஜம் எது விடுவேன் என கூறிய போது அதனை வேண்டாம் என போராடியது இங்கே தொடர்ந்து வரும் நண்பர்கள் கூட ! ஆசிரியர் பிடிக்கவில்லை என்று கூறியதால் திடுமென மாற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்ததும் வரலாறே ! விமர்சியுங்கள் , விமர்சனங்களும் விமர்சிக்க படலாம் ...ஆனால் விமர்சகர்கள் விமர்சிக்க பட வேண்டாம் இனி மேலாவது ....சாபங்களும் வேண்டாம்

      Delete
    3. Steel @ Well Said!

      //விமர்சியுங்கள் , விமர்சனங்களும் விமர்சிக்க படலாம் ...ஆனால் விமர்சகர்கள் விமர்சிக்க பட வேண்டாம்//

      Delete
    4. //விமர்சியுங்கள் , விமர்சனங்களும் விமர்சிக்க படலாம் ...ஆனால் விமர்சகர்கள் விமர்சிக்க பட வேண்டாம்//

      அதே............. அதே................

      Delete
    5. sundaramoorthy j : //இந்த கதை டப்பா ....... இந்த கதை மொக்கை........
      இதைவிட சிறந்த கதை எங்களுக்கு வேண்டும் என்று கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறதா...? இல்லையா....?
      அல்லது எதை கொடுத்தாலும் நாங்கள் அதை படிக்கவேண்டுமா....?//

      அவகாசம் கிடைக்கும் போது மேலேயுள்ள எனது பதிவை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்களேன்...உங்கள் கேள்விக்கு நிச்சயம் விடை இருக்கும் !

      Delete
  40. ஏப்ரல் மாத புத்தகங்கள் இன்னும் லேண்ட் மார்க் ஷோரூம்க்கு வரவில்லை........ என்ன காரணம் ....? எப்போது வரும்?அல்லது புத்தக கண்காட்சியில் கிடைக்குமா?.....

    ReplyDelete
    Replies
    1. sundaramoorthy j : லேண்ட்மார்க்கின் மத்திய கேந்திரம் செயல்படுவது பூனா நகரில் இருந்து என்பதால் - அங்கிருந்து ஆர்டர்கள் எழுப்பப்படாதவரை எங்களால் சப்ளை செய்திட இயலாது. கண் காட்சியில் நிச்சயம் கிடைக்கும்.

      Delete
  41. காமிக்ஸைப்பற்றி பேசலாமா நண்பர்களே....
    இந்த வருடம் தொடங்கியது மீண்டும் அமர்க்களமான அவதாரம் எடுத்திருக்கும் நம் இதழ்கள் வரும் மாதங்களில் பெரும் சாதனைகளை படைக்கவிருப்பதை எண்ணும் பொழுதே புல்லரிக்கிறது...இந்நேரத்தில் எந்த ஒரு நண்பர் சொல்லும் கருத்தும் படு தமாஷாக இருக்கு எனக்கு.... அனுபவிக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. AHMEDBASHA TK : (வடிவேல் modulation -ல் ) : இங்கே என்ன நடந்திட்டு இருக்கு...நீங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க ?

      Delete
  42. நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

    ReplyDelete
  43. இனிய ஆசிரியருக்கும் அன்பு நண்பர்களுக்கும் இனிப்பான புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  44. எடிட்டர், அலுவலக ஊழியர்கள்
    மற்றும்
    ஸ்டீல் உள்பட அனைத்து காமிக்ஸ் வாசகர்களுக்கும்

    ///////////////////////////////////இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்/////////////////////////////////

    இந்த புத்தாண்டின் ஆரம்பத்திலேயே நமது தளத்தில் பதிவிடுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
    இந்த எண்ணிக்கை வருடம் முழுவதும் தொடர்ந்து அதிகரிக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

    ///////////////////////////////////////////////////////////////////////நன்றி///////////////////////////////////////////////////////////////////////

    (பி.கு) ஈரோட்டு பூனை இந்த புத்தாண்டு நாளில் வந்து சிறிது பிறாண்டிவிட்டு சென்றால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Mugunthan kumar : //இந்த புத்தாண்டின் ஆரம்பத்திலேயே நமது தளத்தில் பதிவிடுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.//

      இதைப் படிக்கும் பொது புன்னகை மன்னன் கமல் போல சிரிப்பையும், சோகத்தையும் கலந்து ஒரு லுக் விட முயற்சித்துப் பார்த்தேன்...கவுண்டரின் 'ரொமாண்டிக் லுக்' தான் பலனாய்க் கிட்டியது !!

      உங்களுக்கும், இதர நண்பர்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ! பூனையை புத்தாண்டில் மறுபிரவேசம் செய்ய வைக்க கைவசம் ஓர் யுக்தி உள்ளது..! பொறுத்திருந்து பாருங்களேன்..!

      Delete
  45. ஆசிரியருக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் மற்றும் இனிய காமிக் நண்பர்களுக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!!!

    ReplyDelete
  46. அது முத்து காமிக்ஸில் வெளிவந்த விண்வெளிக் கொள்ளையர்!

    ReplyDelete
    Replies
    1. டியர் விஸ்வா சார்!
      தமிழர்களுக்கு சித்திரை போல தமிழ் சித்திரக்கதை ரசிகர்களுள் முதன்மையாகத்திகழ இன்று பிறந்தநாள் காணும் விஸ்வாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! :-)))!


      //அது முத்து காமிக்ஸில் வெளிவந்த விண்வெளிக் கொள்ளையர்! // i thought so ! thanks!

      Delete
    2. King Viswa : பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஷ்வா !

      Delete
  47. ////////////////////டியர் எடிட்டர்//////////////////

    நேரம் போகாமல் நெட்டில் துலாவி சமயத்தில் ஐபேன்பாய் என்ற இணையத்தில் டாப் 5 கௌபாய் காமிக்ஸ் நாயகர்கள் பட்டியல் வெளியிட்டிருந்தார்கள் அதன் வரிசை இதோ.............

    1) Jonah Hex 2) Blueberry 3) The Rawhide Kid 4) Bat Lash 5) Dusty Star

    இந்த வரிசையில் டெக்ஸ் பெயர் இல்லையே. மேலும் 2வது இடம் பெற்றுள்ள டைகர் நமக்கு அறிமுகமானவர்தான் மேலும் western Fictioneers என்ற இணைய தளத்தில் டாப் 30 நாயகர்கள் பட்டியல் உள்ளது அதிலும் டெக்ஸ் இல்லை. நம் டைகருக்கு 10வது இடம் அளித்துள்ளார்கள். கமான்சே 26வது இடத்தை பிடித்துள்ளார். அதன் விபரம்........

    1) Jonah Hex 2) Bat Lash 3) The Rawhide Kid 4) Kid Cold 5) Two Gun Kid 6) Desperadoes 7) Lone Ranger
    8) Boys Ranch 9) The Ghost Rider 10) Blueberry 11) (Son of) Tomahawk 12) Cheyenne Kid 13) Firehair
    14) Graveslinger 15) Ringo Kid 16) Gunhawks 17) Johnny Thunder 18) El Diablo 19) Bouncer
    20) Amargo 21) Ken Parker 22 Scalphunter 23 The Presto Kid 24. Loveless
    25 The Kents 26 Comanche 27 White Indian 28 Nighthawk 29 Outlaw Kid
    30 Pow-wow Smith 31 Black Rider 32 Trigger Twins 33 Lobo 34) Jim Cutlass

    Durango Kid, Buck Jones இவர்கள் தனி.

    இந்த பட்டியலில் 10 இடத்திலுள்ள டைகர், 26வது இடத்தில் உள்ள கமான்சே, பட்டியலிலேயே இல்லாத டெக்ஸ் ஆகியோரை நாம் ரசிக்கும்போது, மற்றவர்களும் நமது காமிக்சில் வரிசைகட்டி அடித்தால் எப்படி இருக்கும். நினைத்தாலே இனிக்கிறதே.............

    இவர்கள் நமது காமிக்சில் இடம்பெற வாய்ப்புள்ளதா?
    கௌபாய்க்கென்றே ஒரு தனி இதழ்............. சும்மா ஒரு கோரிக்கை

    ReplyDelete
    Replies
    1. Mugunthan kumar : யெஸ், இது வலைத்தளத்தில் காணக் கிடைக்கும் பட்டியலே. இந்தத் தரவரிசையை நிர்ணயிப்பது - விற்பனை எண்ணிக்கைகளும், இணையதளத்து வாசகர்களின் வோட்டுக்களுமே ! So இதனை ரசனை சார்ந்ததொரு complete பட்டியலாகவோ ; இதே வரிசைகளோடு நம் ரசனைகளும் உடன்பட்டுச் செல்லும் என்ற எதிர்பார்ப்புடனும் பார்த்தல் சரியாக இராது என்றே நினைக்கிறேன். BOUNCER போன்ற டாப் படைப்புகளும் 19-ம் இடத்திலிருக்கும் போது - இது ரசனைகளின் வேற்றுமையை பிரதிபலிப்பதாகவே எனக்குப் படுகிறது !

      தவிர, இந்தப் பட்டியலின் பெரும்பான்மை அமெரிக்கக் காமிக்ஸ் ஆக்கங்களாய் இருப்பதைக் கவனிக்கலாம் ! நம் எல்லாரையும் விட (ஐரோப்பியப் பதிப்பகங்களையும் சேர்த்துத் தான்) அன்றைய WILD WEST -ஐப் பற்றி வாஞ்சையாய் நினைவு கூர்ந்திடும் வாய்ப்பு அமெரிக்கர்களுக்கே அதிகம் அல்லவா ? நமக்கெல்லாம் இது ஒரு தூரத்துக் கற்பனைப் பிரதேசமெனில், அவர்களுக்கோ அது கொல்லைப்புறம் ! So வெஸ்டேர்ன் கதைகளில் அவர்களது படைப்புகள் மிகுந்திருந்ததும், அதிகம் வாசிக்கப்பட்டதும் - இப்பட்டியலில் அவர்களது ஆக்கிமிப்புகளுக்கு ஒரு முக்கிய காரணம் !

      Delete
    2. விருது பெற்ற திரைபடங்கள் சில அருமை என தோன்றும் , பல என்னடா என தலையை பிய்த்து கொள்ள வைக்கும் ! அது போல சில ஆச்சரிய படுத்தும் ! இந்த ஓட்டளிப்பில் கலந்தவர்கள் எத்தனை பேருக்கு டெக்ஸ் தெரியுமோ ! டெக்ஸ் இத்தாலிய படைப்பு என்பது ஒரு புறம் இருந்தாலும் அறுநூறு கதைகள் ! பெரும்பாலும் நீண்ட கதைகள் ! அடேங்கப்பா ! டெக்ஸ்க்கு இங்கே ஓட்டளிக்க வைத்தால் என்ன நடக்கும் என்பதும் தெரிந்ததே !

      சரி அதனை விடுத்து , எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என கேட்டுள்ள முகுந்தனின் வேண்டுதல் பலித்து நாம் மகிழ வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன் ஆசிரியர் முன்னால் நானும் இணைந்து ! இந்த நாயகர்களில் சிறந்தவற்றை ஆசிரியர் பயணங்களின் பொது மீட்டு வந்து தமிழ் நாட்டிலே உலவ விட்டால் நாங்களும் துப்பாக்கியை தூக்கி கொண்டு கனவுகளிலாவது திரிவோம் !

      Delete
  48. எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஈரோடு விஜயின் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    இப்பதிவின் நாயகர்களில்(!) நானும் ஒருவன் என்பதால் இங்கே சிறிது சுயதம்பட்டம்/சுயபுராணம் இயற்றிக் கொள்வது அவசியமாகிறது. சற்றே நீளமான இப்பின்னூட்டத்தைக் பொறுத்துக்கொள்ளுமாறு நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    நண்பர் ரமேஷ்குமாரை கோபப்படுத்திய காரணி எதுவென்று தெரிந்துகொள்ளவே எனக்கு நான்கைந்து நாட்கள் பிடித்தது என்பதுதான் உண்மை. பிரச்சினையின் சாராம்சத்தைப் புரிந்துகொள்ள அதிக வாய்ப்புக் கிடைக்காமல், சென்ற வாரத்தின் முழுமையும் குடும்பத்துடன் வெளியூர் பயணங்களில் பிஸியாக இருந்ததும் ஒரு காரணம்.

    ஒரு விளையாட்டு இவ்வளவு காயப்படுத்தும் என்று நான் கற்பனையிலும் எண்ணவில்லை! நான் நண்பர் ரமேஷை தெரியாமல் காயப்படுத்தியிருக்கிறேன்; அவர் தெரிந்தே காயப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது மட்டுமே வித்தியாசம்! :(

    எடிட்டர் இப்பதிவில் கூறியிருப்பதுபோல ஒரு நொடிப் பொழுதில் எந்த பூசல்களும் தலைவிரித்தாடி விடுவதில்லைதான். நான் என்றோ விதைத்தது இன்று மரமாகியிருக்கிறது என்றே நினைக்கிறேன். சில மாதங்களுக்கு முன் நண்பரொருவர் "எடிட்டரின் ப்ளாக்கில் நீங்கள் எல்லோரிடமும் நட்புடன் இருக்க நினைக்கிறீர்கள் விஜய்! ஆனால், எல்லோரிடமும் 'நல்லவன்' என்று பெயரெடுப்பது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாத ஒன்று" என்று கூறியிருந்தார். அது எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் என்பதை இன்று உணருகிறேன்!

    நான் முன்பே கூறியதுபோல, நண்பர் ரமேஷ் குமார் இத்தளத்தில் நான் மதிக்கும் நண்பர்களில் ஒருவர். நடுநிலையானவர். எதையும் ஒரு வித்தியாசமான கோணத்தில் விளக்கிச் சொல்லி ஆச்சரியப்படுத்துபவர். அப்படிப்பட்ட மதிப்பு மிகுந்தவரை என் விளையாட்டுத்தனமான கமெண்ட்டுகள் எனக்கே தெரியாமல் காயப்படுத்தியிருப்பதை எண்ணி இப்பொழுதும் வருந்துகிறேன். அவர் இந்தப் பிரச்சினையை ஒரு பொருட்டாகக் கருதாமல் மீண்டும் இங்கே தன் மதிப்புமிக்க கருத்துக்களை எடிட்டரிடமும், நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்பதே என் விருப்பம். என் கமெண்ட்டுகளால் இனி அவருக்கு எந்தவொரு தொந்தரவும் இருக்காது எனவும் உறுதி கூறுகிறேன்.

    நான் இங்கே பின்னூட்டமிட ஆரம்பித்த இந்த இரண்டு வருடங்களில், இந்த காலகட்டம் எனக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. ஒருபுறம் 'பாசாங்கு செய்பவன்', 'நாடகத்தன்மை கொண்டவன்' என்ற கசையடிகள் ஒருபுறமிருக்க, 'விஜய் யாரையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டவரல்ல' என்று நண்பர்களின் ஆறுதலான வார்த்தைகள், அந்த கசையடிக்கு மருந்தாய் அமைந்திருந்தன. நன்றி நண்பர்களே!! என் மீதான புரிதலுக்கும், அன்புக்கும் என்றென்றும் கடன் பட்டிருக்கிறேன்...

    (அடுத்த பின்னூட்டத்தில் முடிச்சுக்கறேனே, ப்ளீஸ்?...)

    ReplyDelete
    Replies
    1. 'ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர் வினை உண்டு' என்ற நியூட்டனின் விதியும், 'அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சாகும்' என்ற பழமொழியும் என் விசயத்தில் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இத்தளத்திற்கு வருவது ஒவ்வொரு முறையும் கொண்டாட்டமான அனுபவமாக இருக்கிறதென்ற என் சொந்த ஆசையோடு, இத்தளம் எல்லா நாட்களிலும் தொடர்ந்து activeஆக இருக்கவேண்டுமென்ற உந்துதலாலேயே இத்தனை நாளும் கமெண்ட்டுகளை அள்ளித் தெளித்துவந்தேன். தோராயமாக வாரம் ஒருமுறை என்ற வீதத்தில் இங்கே இடப்படும் எடிட்டரின் ஒவ்வொரு பதிவும் இத்தளத்தை முதல் இரண்டு நாட்களுக்காவது பரபரப்பாய் வைத்திருக்கும்; என்றாலும், வாரத்தின் மற்ற நாட்களிலும் இங்கே உற்சாகம் நிரம்பியிருக்க வேண்டுமென்று விரும்பினேன்/விரும்புகிறேன். அள்ளித்தெளிக்கப்பட்ட என் கமெண்ட்டுகளுக்கு இதுவே காரணம். ஆனால், என்னுடைய இந்த நோக்கத்தின் பின்ணணியில் 'load more' என்ற பிரச்சினையும் ஒளிந்துள்ளதை நான் வெகு சமீபமாகவே உணர்ந்தேன். (அழகாகப் புரிய வைத்த Dr.சுந்தர் அவர்களுக்கு நன்றி!). தெரிந்தோ, தெரியாமலோ நண்பர்கள் பலருக்கும் (எடிட்டருக்கும் தான்) தொந்தரவாக இருந்துவரும் 'load more'க்கு ஒவ்வொரு பதிவிலும் குறிப்பிடத்தக்க அளவில் நானும் ஒரு காரணமாய் இருந்துள்ளேன். அதற்காக வருந்துகிறேன். இனி என்னால் இந்த பிரச்சினை வராது எனவும் உறுதி கூறுகிறேன்.

      எடிட்டரின் ஒவ்வொரு பதிவிலும், அதனைப் பற்றிய என் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதோடு, மிகவும் அவசியப்பட்டால் மட்டுமே இங்கே பின்னூட்டமிடுவேன்.  இது 'load more' பிரச்சினையால் பாதிக்கப்படும் நண்பர்களுக்கு சிறிதேனும் உதவிடும் என்பதோடு, இனி எதிர்காலத்தில் எனக்கு 'கண்ணியமில்லாதவன்', 'அருவருப்பான செயல்களைச் செய்பவன்' என்ற பட்டங்கள் கிடைக்காமல் தப்பித்துக் கொள்ளவும் உதவியாக இருக்குமில்லையா?

      பிரச்சினைக்குரிய என்னுடைய 'டவுனு புள்ளை டவுனு புள்ளைகதான்' கமெண்ட்டை முந்தைய பதிவில் மிக அழகாக விளக்கிக்கூறியிருந்த நண்பர் மீரான் அவர்களுக்கும், எனக்காக ஆறுதலாய் பரிந்துபேசிய Radja, prunthaban, steel, mugunthan, sundaramurthy, Gogul c, senthil madesh, v karthikeyan, shallum, விஸ்கி-சுஸ்கி, ஆதி-தாமிரா மற்றும் தொலைபேசியில் ஆறுதல் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!!

      மூச்சுவிட நேரமில்லாத பணிகளின் இடையே கிடைத்த ஒரு ஞாயிறு ஓய்வையும் நண்பர்களிடையேயான சிறு பிரச்சினைக்காக வருந்தி, 'இதுவும் கடந்து போகும்' என்ற ஆறுதலாகப் பதிவிட்டு, அழகான விளக்கமளித்திருக்கும் எடிட்டர் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

      எதுவும் கடந்து போகும் - நம் காமிக்ஸ் நேசம் தவிர! :)

      Delete
    2. Erode VIJAY : பூமியை ஆராய பூனைக்கு முகாந்திரமில்லை....அண்ணாந்து பார்த்தால் ஆகாயமும், புது வெளிச்சமும் தெரியும்......வலியும் கடந்து போகும்...!

      Delete
    3. விஷயம் ஒரு தனிநபர் பிரச்சனை அல்ல. ஏதோ சாதாரண மனஸ்தாபம் இப்படி ஆனதாக நினைத்து நான் சுட்டிக்காட்டிய விஷயத்தை மிஸ் பண்ணவேண்டாம் Please. இதில் ஆதி தாமிராவும் உங்களுடன் சேர்ந்து என் மூலமாக காயம்பட்டிருப்பதை கவனியுங்கள்.

      1. இந்த பிரச்சனை ஆரம்பிக்கும் முன்பே நான் ஒரு விஷயத்தை குறிப்பிட்டேன், அது: விளையாட்டுக்காக குரூப் பிரித்து பட்டி மன்றம் அளவுக்கு போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்பது. இதனால் சாதாரண விஷயங்கள் கூட சம்பந்தமில்லா திசையில் Escalate ஆகி சற்று யோசிக்கவைக்கிறது.

      2. இரண்டாவது, ஒரு கருத்தை முன்வைக்கும்போது அதை தெரிவிப்பரின் Personal விருப்பு வெருப்புகளை ரொம்பவும் ஆராயாமல் கடந்து செல்வது அவசியம். எந்த நண்பரிடமும் இதை செய்யாதீர்கள் என்பதுதான் என் வேண்டுகோள்.

      3. மூன்றாவது, நாம் அளவுக்கதிகமாக சில விஷயங்களை ஆராதிக்கும்போது, பார்ப்பவர்கள் அனைவரும் ஒரேமாதிரி எடுத்துக்கொள்வதில்லை என்கிற கண்ணோட்டம் நமக்கு தேவை. இது நடைமுறையில் கஷ்டமானது என்றாலும், இதை நாம் செய்வது காமிக்ஸ் மீது ஆர்வமுள்ள / மாற்று மனக்கருத்துள்ள நண்பர்களை அந்நியப்படுத்தி விடாமல் இருப்பதற்காக செய்கிறோம் என்ற விஷயமும் உள்ளது.

      சத்தியமாக தனிப்பட்ட காரணங்களால் உங்களை குற்றம் சாட்டுமளவுக்கு நீங்கள் மோசமாக நடந்துகொண்டதில்லை என்பதையும் நான் சொல்லியாகவேண்டும். நான் நொந்துகொண்டதெல்லாம் ஒரே விஷயத்தால்தான். மேற்குறிப்பிட்ட விஷயங்களில் நீங்கள் கவனக்குறைவையும் அலட்சியத்தையும் மட்டுமே காட்டினீர்கள் என்பது.

      நம்மை விட Community பெரியது. நம்முடைய Personal கொண்டாட்டங்கள் பற்றிய நிலைப்பாடுகளைவிட பொது நண்பர்களின் பார்வை முக்கியமானது. 4 பேர் கொண்டாடுவதற்காக 400 பேர் வெறுத்து வெளியேறுவது என்னை கவலையுறச்செய்தது.

      Delete
    4. //4 பேர் கொண்டாடுவதற்காக 400 பேர் வெறுத்து வெளியேறுவது என்னை கவலையுறச்செய்தது.//
      !?

      Delete
    5. இது வரை ஒரு முறை கூட அந்த நானூறில் பத்து பேர் கூட சொல்லவில்லை என்பது உங்களுக்கு ஏன் தோன்றவில்லை நண்பரே !

      Delete
    6. நண்பர்களுக்கும், ஆசிரியருக்கும் எமது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

      இந்த வலை தளத்திலும் வேறிடங்களிலும் பல முறை [ஏன் இன்று காலை - இரண்டு மணி நேரத்துக்கு முன் கூட] காரசாரமான கமெண்ட்கள் பல இட்டிருக்கிறேன் - இவ்வலைத்தள கோட்பாடுகளின்படி பண்பில்லாத அத்தகைய கமெண்ட்கள் பல நான் இட்டிருந்தாலும் - இதன் அடிப்படை காரணம் என்பதானது - கடந்தவிறு தினங்களில் இங்கு எடிட்டர் அவர்களாலும் மற்றும் பல நண்பர்களாலும் நன்கு விளக்கப்பட்டுவிட்டது !

      நாம் எடிட்டர் அவர்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு ஓயாமல் மற்றவர் பதில் தந்து கொண்டே இருந்தால் ஒரு சமயத்தில் நம்முள் அடைத்து வைக்கப்படிருக்கும் எண்ணங்கள் - விடை தெரியா வினாக்கள் - வெடித்து விடுகின்றன! அதிலும் என்போல பண்பு குறைந்தவர்களை இவ்வகைச் சீற்றம் தாக்கும்போது உணர்ச்சி வேகத்தில் வார்த்தைகள் தெறித்து விடுகிறது :-( :-(

      எனினும் நான் மிக நடுநிலையாளர் என்று நினைத்த - நான் கடும் வாதங்களை முன்வைத்த பொழுது, எடிட்டர் அவர்கள் பக்க நியாயங்களை நிலை நிறுத்திய ரமேஷ்குமார் அவர்களும் - நான் மிக innocent ஆகக் கருதிய [அடிக்கடி ஓவராய் தமுக்கடித்து என்னிடம் போனில் வாங்கிக் கட்டிக்கொண்டாலும் :-)] ஈரோடு விஜய் அவர்களும் மனஇறுக்கம் கொண்டு நிலவும் பொழுது என்னைப் பற்றி என்னையே கொஞ்சம் யோசிக்க வைத்தது :-( கபடமற்ற இவ்விருவருக்குள் மனத்தாங்கல் எங்கனம் சாத்தியம் ஆனது? அப்போது என்னைப் பற்றி நானே ஒரு மீள் ஆய்வு செய்திடல் வேண்டும் அல்லவா? அதுவே முறையல்லவா?

      இந்த மைல் கல் ஆண்டில் இவைகள் கடந்து நம் காமிக்ஸ் இவ்வாண்டு தொடக்கத்தில் கண்ட பொலிவுடைய அச்சுத்தரம் போன்று எல்லா முனைகளிலும் பிரகாசிக்க இறைவனை வேண்டி - நான் இங்கேயும் எங்கேயும் பண்பற்று நடந்ததற்கும் எனது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்!

      ஆயிரம் சங்கடங்கள் இருந்தும் நம்மை காமிக்ஸ் என்ற இழையால் இணைக்கும் எடிட்டர் விஜயன் அவர்களிடமும் அவரை நோகச்செய்ய நேர்ந்தமைக்காக - அவரிடம் I tender my apologies too !!

      [ செய்வதை எல்லாம் செய்து விட்டு இவன் என்னடா ஒத்தை வரி apology குடுக்கறான் என்று நினைப்பவர்களுக்கு: எல்லாம் கடந்த பின்னர் நம்மிடம் எஞ்சி இருப்பது உண்மையான காமிக்ஸ் மீதான காதல்தான் - அக்காதலை முன்னிறுத்திட ஒற்றை வரி போதுமென்று நினைக்கிறேன் - முடிவை எடிட்டர் அவர்களிடம் விட்டு விடுகிறேன் !]

      பி.கு: நான் அடிக்கடி வந்து இம்சிக்க மாட்டேன் - எப்போவாவது வருவேன் - ஆனால் டெய்லி வந்து இனிமே வரமாட்டேன்னு சொல்ல மாட்டேன் :-) :-) :-) [ஹி ஹி - நய்யாண்டி கூடவே பொறந்ததுங்கோ]

      Delete
    7. !!!!!!
      மிஸ்டர்! யார் நீங்க? 'காமிக் லவர்' பேரச் சொல்லிக்கிட்டு இங்கே கமெண்ட் போட என்ன ஒரு தைரியம் உங்களுக்கு?
      எங்கே உங்களுக்கான code-wordஐ சொல்லுங்க பார்ப்போம்? :D

      ஹா ஹா! வெல்கம் பேக் நண்பரே! ரமேஸ் கூட நான் லடாய் வச்சுக்கிட்டா இங்கேர்ந்து பிரிஞ்சு போனவங்க எல்லாம் திரும்பி வருவாங்கன்னா, நான் தினமும் அவருடன் சண்டைப் போடத் தயார்! :D

      Delete
    8. //இது வரை ஒரு முறை கூட அந்த நானூறில் பத்து பேர் கூட சொல்லவில்லை என்பது உங்களுக்கு ஏன் தோன்றவில்லை நண்பரே!//

      அதன் அர்த்தம் 400 Silent Visitors :)

      நானுறுபெர் கமெண்ட் போட்டா எடிட்டர் படிக்கவே நேரமிருக்காது. 400 பேரும் 10 Comment போட்டா யாராலுமே படித்துமுடிக்க முடியாது! :D

      @Comic Lover, Welcome Back! Nice to see you here! :)

      Delete
    9. அதன் அர்த்தம் 400 Silent Visitors :)
      என்ன நடந்தாலும் பார்த்து ரசிப்பார்கள் என்று அர்த்தம் கொள்ளலாமா !
      பிடிக்கவில்லை என்றால் அவர்களும் வெடிப்பார்கள் நண்பரே !
      ராகவன் அவர்கள் வரவு நல வரவாகுக !

      Delete
    10. Comic Lover @ Welcome Ragavan! Good to see you are back!!! I hope all will be well here onward!

      Delete
    11. Comic Lover : ஒரு பொதுத் தளத்தில் கடுமையைப் பதிவிடுவது சுலபம் ; ஆனால் அதற்கொரு மருந்திடுவது எத்தனை கடினம் என்பதை உணராதவன் அல்ல நான் ! சூழ்நிலைகள் மாறலாம் - பார்வைகள் மாறலாம் - ஆனால் மனிதர்கள் அடிப்படையில் மாறுவதில்லை என்பது எனது அபிப்ராயம். எனக்கு இரண்டாண்டுகளுக்கு முன்பாய் பரிச்சயமான நண்பர் ராகவன் இன்றும் அதே நண்பராகவே தொடர்கிறார் !

      நண்பரே, நம் வீட்டினுள் நுழைய நமக்கு அனுமதிகளும் தேவையா - என்ன ? Welcome back !!

      Delete
    12. welcome back comic lover...or am i missed in the previous blogs

      Delete
    13. சிங்கம் களமிரங்கிடிசிடோய்!!!

      Delete
    14. @ஈ.விஜய்,

      ”...ஆகையால் பெரியோர்களே, தாய்மார்களே.. லோட் மோர் சின்னத்தில் வாக்களிக்கும் படி உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்....” என்பது மாதிரி இருந்தது உங்கள் கமெண்ட். சோடா வேணுமா? :-)))))

      வழக்கமா அலப்பறை பண்ணுகிற ரகுவரனுக்கு, ராமராஜன் டயலாக் கொடுத்த மாதிரி இருந்தது. :-))))))))))

      இதுல லோட் மோரே உங்களால் வருது என்ற அரிய கண்டுபிடிப்பு வேற! என்ன கோவமா இருக்கியளா? கோவமா இருக்குறதுக்கு என்னைமேரி டெரரா இருக்கணும். அதெல்லாம் உங்களுக்கு சரியா வராது. பிஞ்சி மூஞ்சி! :-))))))))))

      @பிருந்தாபன் உட்பட பிற நண்பர்களுக்கு,

      ரமேஷ் வரமாட்டேனு சொல்லிவிட்டு ஒரு கமெண்ட் விடாம பதில் விளக்கம் குடுத்துகிட்டுதான் இருக்கார். குடும்ப டூரில் இருந்தும் வந்து மெனக்கெட்டு குட்டி எல்ஐசி கட்டிட்டுதான் போயிருக்கார் விஜய். என் பங்குக்கு நானும் கமெண்ட் போட்டுகிட்டுதான் இருக்கேன். நாங்க ரெண்டு பேரும் கோச்சிகிட்டு போறோம்னு சொல்லவே இல்லை. அதுக்குள்ள போயிராதீங்க, போயிராதீங்க.. ஏன் கையைப் புடிச்சி இழுக்குறீங்க? :-)))))))))))) அப்படியாவது பெண்கள் மாதிரி ரிவர்ஸ்ல அர்த்தம் பண்ணிகிட்டு ஓடிற மாட்டாங்களானு எண்ணமா? நான் வேலை நிமித்தம் குஜராத்ல இருக்கேன். சைட் சர்வீஸ் பணி. 10 நாளு செமையா மொக்கை போட டைம் இருக்கும். திடீர்னு பிசியாயிடுவேன். அதான் என் கமெண்டுல கன்சிஸ்டன்ஸி இருக்காது. மத்தபடி அவ்வளவு ஈஸியா விரட்டிர முடியாது என்னைய!. ஹிஹி!!!

      Delete
    15. Welcome dear Ragavan ji..
      We missed u a lot..
      Feeling charged now..

      Delete
    16. @ரமேஷ்,

      உங்கள் பாய்ண்டுகளை காப்பி பேஸ்ட் பண்ண நேரமில்லை. ஸாரி, ஆனால் பொதுவாகப் பார்த்தால்,

      ”அதைக் கவனத்தில் கொள்ளுங்கள், இதைக் கவனியுங்கள், இந்தக் கண்ணோட்டம் அவசியம் தேவை, அவர்கள் அப்படி நினைக்கலாம், இந்த நினைப்பு கூடவே கூடாது...”

      ஏங்க இப்படி? எங்களுக்கும் இடம் பொருள் ஏவல் தெரியும்ங்க.. நாங்களும் எல்லாத்தையும் யோசிச்சுதாங்க செயல்படுறோம்ங்க!!........ என்று மட்டும் சொல்லி இந்த சிற்றுரையை முடித்துக்கொள்கிறேன்.

      Delete
  49. உண்மையை சொல்லுங்க விஜய் எடிட்டர் உங்களை வரவழைக்க வாழைப்பூ வடை கொடுத்தாரா?
    இல்லை பூனை புலியாகட்டும் என்று சூடு போட்டாரா?
    மறைக்காமல் தெரியப்படுத்தவும்.

    ReplyDelete
    Replies
    1. @ Mugunthan kumar

      காக்காய் உட்கார பனம்பழம் விழுந்திருக்கிறது நண்பரே! எடிட்டரின் யுக்தி 'டெக்ஸ் அட்டைப் படத்துடன் கூடிய அடுத்த பதிவு' என்பது என் கணிப்பு! இன்று இரவுக்குள் எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

      Delete
    2. விஜய் கார்சனின் கடந்த காலமும் இணைந்து வருமோ !

      Delete
    3. அன்பு நண்பர் விஜய் : 30வது ஆண்டு மலரின் அதிக 100பக்கங்களில் Tex ன் கருப்பு வெள்ளை சாகசம் வரப்போகிறது, என்ற ஆசிரியரின் தூண்டில் புழு தானே காரணம் ?

      Delete
    4. வருருருருருருரும்.......ஆ.....

      Delete
    5. கார்சனின் கடந்த காலம் in color :)

      Delete
  50. எவ்வளவோ எழுத நினைத்தாலும் இதை மீண்டும் வளர்க்க இஷ்டப்பட வில்லை...

    உண்மையாக அடி மனத்தின் ஆழத்திலிருந்து ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.....(blog ன் ரெகுலர் visitor என்ற முறையில்...



    அடுத்த பதிவே போடுங்கப்பா!!!!... ஒரே போர் அடிக்குது...!!

    ReplyDelete
    Replies
    1. Rummi XIII : Why blood ? Same blood !!

      Delete
    2. சீக்கிரமா blood ஐ துடைச்சுட்டு மருந்த ( post ) போடுங்க சார்... இங்கே ஒரே ரண களமா இருக்கு!!!

      Delete
  51. நண்பர் ரமேஷ் அவர்கள் வாசகரின் வினாவிற்கு தெளிவாக..,விவரமாக பதில் சொல்பவர் .அவர் ஏதும் மனதில் வைக்காமல் தொடர்ந்து வர வேண்டும் என விரும்புகிறேன் . " கிராபிக் நாவல் " பற்றி எனது கருத்து இங்கே பதிவாக ஆசிரியர் இட்ட போது நண்பர் ஆதி தாமிரா அவர்கள் கூட ( கொஞ்சம் ) காட்டமாக பதில் சொன்னதாக நினைவு .அதை அவரிடமே உங்கள் கருத்தை தாரளமாக சொல்லலாம் சார் .நான் தவறாக நினைக்க மாட்டேன் என சொன்ன பிறகு இன்னும் ஜாலியாக எனது பதிவிற்கு பதில் சொல்கிறார் .அப்படி சீரியசான ஆசாமியே அப்படி என்றால் எப்பவுமே நம்ம காமெடி மனிதர் " ஈரோடு விஜய் " சொல்லியதற்கு கோபித்து கொள்ளலாமா சார் ...வாருங்கள் ...எப்பொழுதும் போல உரையாடலாம் .

    உங்கள் வருத்தம் எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சயை அளிக்கிறது சார் என்ற உண்மையும் வருத்ததுடன் :-) கூறி கொள்கிறேன் .பாருங்கள் நமது வீட்டிற்க்கு புது ..,புது விருந்தினர்கள் ...,கோபித்து சென்ற உறவினர்கள் அனைவரும் இப்போது கூடி இருக்கிறார்கள் .நீங்களும் ..விஜய் அவர்களும் ..இப்போது வந்த விருந்தினர் அனைவரும் தொடர்ந்து வர வேண்டும் என்பதே எனது ஆவல் .

    இன்னும் கோபம் உங்களுக்கு தீர வில்லை என்றால் ஒரு ரகசியம் ....

    எங்கள் சங்கம் பழைய ஆட்களை மீண்டும் இங்கே வர வைக்க நாங்கள் நடத்திய நாடகம் இது ...பலித்து விட்டது .உங்களை பலி கடா ஆக்கியதிர்க்கு எங்கள் சங்கம் மன்னிப்பை வேண்டி கொள்கிறது எங்கே .நீங்களும் ..,விஜயும் கார்த்தி ( பெங்களூர் கார்த்தி அல்ல ) தமன்னா போல கையை கோர்த்து டூயட் பாடுவது போல ஓடி வாருங்கள் பார்க்கலாம் .

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : வில்லங்கமான சங்கம் அய்யா !!!

      Delete
  52. நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

    ReplyDelete
  53. இந்த மாதம் வாரம் இரண்டு பதிவுகள் என கொண்ட அதிரடி மாதம் ! அது போல புத்தகங்கள்...

    ReplyDelete
    Replies
    1. 4 books in every month.. that is our next target...

      Delete
    2. முகமற்ற கண்களை நினைத்தால் கிலியடிக்குது....
      நில் கவனி சுடுவை நினைத்தால் கண்ணு வேர்க்குது.

      Delete
  54. அடுத்த post அது ஒரு கடந்த காலம்!!!

    ReplyDelete
  55. எஞ்சி நின்றவன் கதை:

    + துவக்கம் முதல் இறுதி வரை அதிரடி சரவெடி (லார்கோ போலவே)
    + மொழிபெயர்ப்பு
    + சித்திரங்கள்
    + ஷெல்டன் பார்க்க படையப்பா ரஜினி போலவே இருக்கார் (மாண்ட்ரேக் மாதிரி உருவத்தில்)

    - வேறு எந்த பகுதிக்கும் இடம் இல்லாததது (கதம்பம் தான் சார் பிடிக்கிறது:)

    எதிர் வீட்டில் எதிரிகள்:

    + சூப்பர் சிக்ஸ் அறிவிப்புகள்
    + லயன் ஆண்டு மலர் அறிவிப்பு
    + மொழிபெயர்ப்பு (வாழ்த்துக்கள் ஜூனியர் எடிட்டர்)
    + கதையை படிக்கும் பொழுது சிரிப்பை அடக்க முடியவில்லை

    ReplyDelete
  56. Dear Editor Sir,

    எஞ்சி நின்றவன் கதை

    Really super nice thriller, action story just like a movie , சித்திரங்கள் very descriptive , expecting more from this new star

    I received a phone call regarding my subscription , your staff was very polite , courteous , thank you very much

    ReplyDelete
  57. வணக்கம் நண்பர்களே
    நானும் வரலாமா ?

    ReplyDelete
    Replies
    1. வர வேண்ட்டம் என்றால் போய் விடுவீர்களா ? வாருங்கள் நண்பரே !

      Delete
  58. Welcome karnan ji..
    Sri Ram Sir, prasanna, kaleel bai, giridharan ..
    Mis u guys..

    ReplyDelete