Tuesday, April 01, 2014

முன்னோட்டங்களின் முன்னோடி...!

நண்பர்களே,

வணக்கம் ! கிறுக்கலாய் அல்லாது - இந்தப் பதிவின் தலைப்பு மெய்யாகவே context-க்குப் பொருத்தமாய்த் தோன்றியதால் இரவல் வாங்குவதில் தவிறில்லை என்று தோன்றியது ! (நன்றிகள் கி.கி !)  பதிவிடப் போவதே நாளைய பொழுது தான் எனும் போது  - இன்றைய இந்தத் துவக்கம் சின்னதொரு விஷயத்தை உங்களுக்குத் தெரியப்படுத்தும் பொருட்டே ! 

ஏப்ரல் இதழ்களை எதிர்பார்த்ததற்கு ஒரு தினம் முன்பாகவே பூர்த்தி செய்திட இயன்றதால் - இன்றைய மதியமே கூரியர்களிலும், பதிவுத் தபால்களிலும், வான் அஞ்சல்களிலும் மொத்தமாய் அனுப்பி விட்டோம் என்பதே இப்போதைக்குப் பகிர்ந்திட உள்ள சேதி! நாளைய பொழுதினில் உங்கள் கைகளில் புது இதழ்கள் இருந்திடும் வேளையில்  - இந்தப் பதிவை விரிவாக்குகிறேன் ! இப்போதைக்கு - கூரியர் அலுவலகத்தைப்  படை எடுப்போர் சங்கத்தின் அதிரடிகள் ஆரம்பிக்கலாம் ! ஆன்லைனில் நமது இதழ்களை வாங்க எண்ணும் நண்பர்களின் வசதிக்காக - நமது புதிய விற்பனைத் தளமான www.lioncomics.worldmart.in-ல் லிஸ்டிங்கும் துவங்கி விட்டது

இன்னுமொரு சேதியும் கூட - இன்று முதல் (ஏப்ரல் 1) Professional கூரியரின் கட்டணங்கள் எக்கச்சக்கமாய்க் கூடி விட்டுள்ளன !! சென்ற மாதம் வரை தமிழகத்தினுள் ரூ.32 என இருந்த கட்டணம் இனி ரூ.40 & பெங்களூருக்கு ரூ.40 ஆக இருந்த கட்டணம் இனி மேல்  ரூ.70 !! தலை சுற்றச் செய்யும் இந்த உயர்வை நம் சந்தாதாரர்களின் தலையில் சுமத்துவது நியாயமாகாது ; எனினும் ஆன்லைனிலும், நம்மிடமே நேரடியாகவும் அவ்வப்போது வாங்கிடும் நண்பர்கள் இந்தக் கட்டண உயர்வினை ஏற்றுக் கொண்டாக வேண்டிய இக்கட்டு !! Sorry guys !


April 2'2014 : சரி...இதற்கு மேலும் ஜவ்வாய் இழுப்பது இதழ்கள் கிடைக்கப் பெறா நண்பர்களின் பொறுமைக்குச் சோதனைகளை வைக்கும் என்பதால் - பெவிகால் பெரியசாமியை நாடு கடத்திடுவோம் ! Here goes :


ஒவ்வொரு முறையும் புதிதாய் ஒரு முயற்சிக்குள் கால் பாதிக்கும் போது - "வாய்க்குள் கட்டை விரல்...!" என்ற பில்டப் கொடுப்பது எனக்கும், உங்களுக்கும் பழகிப் போனதொரு விஷயமே ! ஆனால் - இரத்தப் படலம் முழுத் தொகுப்பின் விதிவிலக்கோடு - பாக்கி அத்தனை நேரங்களிலும் 'எப்படியும் கரை சேர்ந்திடலாம் !' என்ற ஒரு வித அசட்டுத் துணிவும், நம்பிக்கையும் என்னுள் உறைவது உண்டு ! NBS -ன் பணிகள் துவங்கிய சமயம் கூட பணிகளின் பரிமாணம் மலைப்பாய்த் தோன்றியது நிஜமே ஆயினும், அதனைத் தொடர்ந்த மாதங்களில் கழுத்துப் பிடியாய் திட்டமிடல்கள் ஏதும் இருக்கவில்லை எனும் போது - 'தக்கி-முக்கி இந்தப் பணியைப் பூர்த்தி செய்து விட்டால் தப்பிச்சோம் சாமி!' என்ற ஆறுதல் காத்து நின்றது ! ஆனால் இம்முறையோ சூப்பர் 6 ... அதன் முதல் படியான லயனின் ராட்சஸ ஆண்டுமலர் ...அதற்கு அருகாமையிலேயே 'மின்னும் மரணம்' முழுத் தொகுப்பு என்ற 2014-ன் schedule- முன்எப்போதும் நம் முன்னே கொணர்ந்திருக்கா பரிமாணத்தில் ஒரு அசாத்தியச் சவாலை உருவாக்கியுள்ளது ! So - முதல்முறையாக எனக்குள்ளே ஓடும் ஒரு மெல்லிய நடுக்கத்தை ; தாண்ட வேண்டிய உயரத்தின் பொருட்டு ஏற்படும் அந்த மலைப்பை -கொஞ்சம் கொஞ்சமாய் உணர்ந்து வருகின்றேன் கடந்த 3 வாரங்களாகவே ! 'வீராதி வீரனாக்கும் ; இதெல்லாம் பஞ்சு மிட்டாய் சமாச்சாரம் !' என்ற கற்பனையில் நிச்சயமாய் நான் இல்லை ; இந்தாண்டின் இறுதிப் பொழுது புலர்வதற்குள் எனக்கும் சரி, எங்களது சின்ன டீமுக்கும் சரி - நிறைய நரை முடிகளும், தூக்கமில்லா இரவுகளும் ஆத்ம நண்பர்களாய் இருக்கப் போவதை நன்றாகவே உணர முடிகிறது ! சரி - இந்த 'பீலா படலம்' போதும் - let's get on with it..என்ற உங்கள் உரத்த சிந்தனை எனக்குக்  கேட்பதால் - துவங்குகிறேன் லயனின் ஆண்டுமலரின் அறிவிப்போடு !

The லயன் MAGNUM ஸ்பெஷல் !!!

NBS வெளியான சற்றைக்கெல்லாம் லயனின் 30-வது ஆண்டுமலரைப் பற்றிய பேச்சு துவங்கிய சமயமே என் தலைக்குள்ளே முதலில் உதயமான பெயர் இது ! ஆனால் "Magnum " என்ற adjective அத்தனை சரளமான பயன்பாட்டில் இருந்திடும் ஒரு சொல் அல்ல என்பதால் - கொஞ்சம் எளிமையானதொரு பெயரை சிந்திக்க முயன்றேன் ; நண்பர்கள் உங்களின் முயற்சிகளையும் கோரி இருந்தேன் ! நீங்கள் அட்டகாசமாய் அனுப்பி இருந்த எக்கச்சக்கப் பெயர்களுள் நிறைய 'பளிச்' ரகத்தில் இருந்த போதிலும், LION MILESTONE SPECIAL என்று P .கார்த்திகேயன் suggest செய்திருந்த பெயரும் , "சிங்கத்தின் கர்ஜனை" என்ற ஆக்கமும் (நண்பர் பிரேம் கைவண்ணம்) என்னைக் கவர்ந்திருந்தன ! இது தவிர RIPROARING ஸ்பெஷல் (இது யாரது படைப்பு ப்ளீஸ் ??) என்ற பெயரும் பிடித்திருந்தது ! ஆனால் அத்தனையையும் தலைக்குள் போட்டு ஒரு வாரம் உருட்டிய பின்னே - எனது ஆரம்பத்துத் தேர்வான "MAGNUM ஸ்பெஷல்' தேவலை என்றே தோன்றியது ! இதன் பெயர் காரணத்தைப் பற்றி ஹாட்லைனில் விரிவாகவே எழுதியுள்ளேன் என்பதால் - மீண்டும் அதனை இங்கே ஒப்பிக்காது - short n ' sweet ஆகச் சொல்லி விடுகிறேன் ! லதீன் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு வந்துள்ள Magnum என்ற சொல்லிற்கு "கிரேட் ; ஒப்பற்ற ' என்ற ரீதியில் அர்த்தம் கொள்ளலாம் ! தவிர 'Magnum Opus' எனும் சொற்றொடருக்கு - 'படைப்புகளில் தலைசிறந்ததான' என்ற ரீதியில் பொருள்படும் ! So - இதுவரை நாம் முயற்சித்ததுள் உச்சமாய் இருக்க வேண்டுமென நான் எண்ணியுள்ள இந்த இதழுக்கு  "MAGNUM ஸ்பெஷல் " என்ற பெயர் பொருந்துமெனத் தோன்றியது ! பெயருக்கு முன்பாக 'The' என்ற இணைப்பு சேரும் போது கம்பீரமும் சற்றே கூடுவது போல் எனக்குப் பட்டதால்  - லயனின் 30-வது ஆண்டுமலருக்கு 'The லயன் MAGNUM ஸ்பெஷல்' என்ற பெயர் தீர்மானமானது ! பெயர் சூட்டும் முயற்சியினில் ஏராளமாய் நேரமும், சிந்தனையும் செலவிட்ட நண்பர்களுக்கு நமது நன்றிகள் ! அதிலும் அந்த டாப் 3 பெயர்களை suggest செய்திருந்தவர்களுக்கு ஒரு extra big thanks !!

பெயர் என் தலைக்குள்ளே ஓடிக் கொண்டிருந்த நாட்களுக்கு முன்பாகவே கதைத் தேர்வுகள் பற்றிய சிந்தனை தீவிரமாகி இருந்தது ! நவம்பர் 2013-ல் வந்த டெக்ஸ் வில்லரின் தீபாவளி மலருக்குக் கிட்டிய வரவேற்பும், தொடர்ந்த ஜனவரி சென்னைப் புத்தக விழாவினில் அந்த இதழுக்கு இருந்த அமோக வரவேற்பும் என் சிந்தனைகளை ஆக்கிரமித்தன ! மொத்தம் 775 பக்கங்களில் - 2 x  மெகா டெக்ஸ் சாகசங்கள் ; என்பது சுலபமான பார்முலாவாய்த் தோன்றியது எனக்கு ! வேலையும் கடினமாகாது ; விற்பனைக்கும் உத்திரவாதம் ! எனும் போது சபலம் தலைக்குள் 'ஜிங்கு ஜிங்கென்று ஆடியது உண்மையே !   இது தொடர்பாய்  உங்களின் சிந்தனைகளை வெள்ளோட்டம் பார்க்கும் விதமாய் இங்கு வாலை மாத்திரம் விட்டு நான் ஆழம் பார்த்தது நினைவிருக்கலாம் ! கொஞ்சப்பேர் ஒரே கதை concept -க்கு 'ஜே' போட்டாலும், பரவலாய் - 'கூட்டணி இதழுக்கே வோட்டு' என்பதை நீங்கள் தெளிவாக்கி விட்டதால் - எனது இலக்கை நிர்ணயிப்பது சுலபமாகிப் போனது ! 'ஒ.கே. - ஒரு பல்கதைக் கலவை தான் இம்முறையும் !' என்று தீர்மானம் ஆன பின்னே - தோராயமாய் ஒரு costing போட்டுப் பார்த்தேன் - எத்தனை பக்கங்கள் ; எந்த அளவில் சாத்தியம் என்றறிய ! ஆனால் இந்த ஒரு இதழுக்கு மட்டும் பெரியதொரு கணக்கு வழக்கெல்லாம் பார்த்திடாமல் - மனதுக்கு நிறைவாய் செய்வோமே என்ற உந்துதல் எனக்குள் வேகமெடுக்க, கால்குலேட்டரைத் தூரத் தூக்கிப் போட்டு விட்டு - கதைகளின் தேர்வுக்குள் ஐக்கியமானேன் ! So - இந்த இதழ் நிறைய விதங்களில் ஒரு one-off என்பதை இங்கே நான் அடிக்கோடிட்டிட விரும்புகிறேன் ! 'இத்தனை பக்கங்களுக்கு இத்தனை ரூபாய் ; இதுக்கு இன்னும் ஜாஸ்தியாக இருந்திருக்கலாம் ; அல்லது இதே பார்முலாவின்படிப் பார்த்தால் தொடரும் இதழ்களிலும் இத்தனை பக்கங்கள் இருந்தாக வேண்டுமே !' என்ற  ரீதியிலான எந்தவொரு திட்டமிடல்களும் பொருந்திடாது ! This is just an one-off !

துளித் தயக்கமும் இல்லாமல் முதலில் தேர்வானவர் டெக்ஸ் வில்லரே ! அதிலும் இது போன்றதொரு லயன் மேளாவில் அதன் டாப் நாயகருக்கு முதல் மரியாதை என்பதில் எனக்குள் தயக்கம் இருந்திடவில்லை ! 228 பக்கங்களில் ஒரு முழு நீல ; முழு வண்ண ஆக்க்ஷன் சூறாவளியாய் டெக்சின் "சட்டம் அறியா சமவெளி ' இருந்திடப் போகிறது ! அட்டகாசமான சித்திரங்கள் ; அனல் பறக்கும் கதைக்களம் என சமீப சாத்வீக டெக்சிலிருந்து வித்தியாசம் காட்டி நிற்பார் நம் நாயகர் !

டெக்ஸ் ஒருபக்கமெனில் சமீபமாய் வீறு கொண்டு எழுந்துள்ள டைகரின் அபிமானிகளின் பொருட்டு டைகரும் மறு பக்கம் நின்றால் அட்டகாசமாய் இருக்குமே என்ற என் அடுத்த சிந்தனைக்கு தற்போதைய 'இளம் டைகர்' கதைகளின் நினைவு அத்தனை ஊக்கத்தைத் தரவில்லை ! தவிரவும் ஒரு சங்கிலித் தொடராய் பயணிக்கும் கதைகளை நடுவில் பிரித்துப் போடும் தவறை இனி ஒரு முறை தொடர வேண்டாமே என வேறு மார்க்கமாய் யோசித்தேன் ! அப்போது தான் ஓவியர் வில்லியம் வாசின் மாயாஜால ஓவியங்களுடனான "மார்ஷல் டைகர்' தொடர் நினைவுக்கு வந்தது ! இரண்டே கதைகள் வான்சின் ஓவியங்களோடு ; பின்னர் நெடியதொரு இடைவெளிக்கு பின்பாய் மேற்கொண்டொரு கதை (வேறொரு ஓவியருடன்) என மொத்தமே 3 சாகசங்கள் மாத்திரமே கொண்ட தொடர் இது ! அதன் முதல் கதையினை நமது LMS -ல் முழு வண்ணத்தில் படித்திடப் போகிறீர்கள் ! "மார்ஷல் டைகர்" ஒரு சித்திர விருந்து மட்டுமல்லாது - டைகர் ரசிகர்களுக்கு ஒரு உற்சாக க்ளுகோஸ் ஏற்றும் விதத்திலான கதை !

கௌபாய் கோட்டா ஓவர் என்ற நினைப்பு எழுந்த போது - நமது காமெடி கௌபாய் 'உள்ளேன் அய்யா !' சொல்வதை உணர முடிந்தது ! டேச்க்சுக்கு அடுத்தபடியாக லயனின் லாயத்தில் அதிக popular ஆனவர் நம் லக்கியார் தான் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாதென்பதால் - "பேய் நகரம்' கதை # 3 ஆகத் தேர்வானது ! மீண்டும் முழு வண்ணம் என்பதோடு - மீண்டும் அதிரடி ஜேன் தலை காட்டவிருக்கும் முழு நீளச் சிரிப்பு மேளா இது ! ஜாலி ஜம்பரின் லூட்டிகளும் இக்கதையின் ஒரு highlight ! So - இவரும் ஒரு கௌபாய் தான் எனினும், இவரது பாணி நகைச்சுவை என்பதால்  லக்கி பட்டியலுக்குள் சுலபமாய்ப் புகுந்து விட்டார் ! சரி, அடுத்து என்னவென்று லேசான சிந்தனைக்குள் அமிழ்ந்த போது தான் நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரிடம் இருந்து போன் வந்தது ! கடைசியாய் அனுப்பி இருந்த கதையின் மீதான பணிகள் முடிந்து விட்டதாகவும், அடுத்து எழுத வேண்டிய கதை எதுவோ ? என்றும் கேட்டார் ! நான் பதில் சொல்வதற்கு முன்பாக - 'எனக்கு சிரித்து சிரித்தே வயிறு புண்ணாகாத குறை தான் ; கடைசியாய் அனுப்பிய கதை சூப்பர் காமெடி' என்று சொன்னார் ! கிட்டத்தட்ட 10 ஆண்டுகளின் பரிச்சயத்தினில் இது போலொரு பாராட்டு அவரிடமிருந்து வந்ததே கிடையாது எனும் போது 'படக்' என எழுந்து உட்கார்ந்தேன் ! அவரைச் சிரிக்கச் செய்த பிரகஸ்பதி யாரோ என்று பார்த்தால் - அது நமது ரின் டின் கேன் தான் !! லக்கி கதைகளில் அடிக்கடி தலைகாட்டும் இந்த மந்தபுத்தி   நாலு காலாரை மு கணமே டிக் செய்தேன் - LMS -ன் இருப்புக் கோட்டாவினைப் பூர்த்தி செய்திட ! "அதிர்ஷ்டம் தரும் அண்ணாத்தே !" முழு வண்ணத்தில் வரக் காத்திருக்கும் 44 பக்கச் சிரிப்புத் தோரணம் !

'ரைட்...2 வெஸ்டெர்ன் ; 2 காமெடி ..ஆச்சு - what next ?' என்ற போது காலம் காலமாய் நாம் ஆராதித்து வரும் டிடெக்டிவ் ரகக் கதைகள் தான் நினைவுக்கு வந்தன ! சமீப மாதங்களில் நம் அணிவகுப்பில் ஒரு ரசிக்கத்தக்க டிடெக்டிவ் இல்லை என்ற குறை என்னை உறுத்திக் கொண்டே இருந்தது ! ஜில் ஜோர்டன் ; ஜெரோம் ஆகியோர் விளிம்பில்  நிற்கும் நாயகர்கள் எனும் போது - இது போன்றதொரு முக்கிய தருணத்தின் மைல்கல் இதழுக்குச் சரி வர மாட்டார்களென்று புரிந்தது ! இன்னும் கொஞ்சம் யோசிக்கும் போது கண்ணாடி + பைப் சகிதம் வந்து செல்லும் ரிப் கிர்பி ; FBI காரிகன் ஆகியோரின் பக்கமாய் நினைவலைகள் பயணித்தன ! ஆனால் VRS கொடுத்த நாயகர்களை தட்டி எழுப்புவதை விட - வாகான வாய்ப்பின்றிப் பின்னணியில் நிற்கும் CID ராபினைக் கூப்பிடுவது சாலச் சிறந்தது என்று தீர்மானித்தேன் ! ஏற்கனவே அவருக்கு வாய்ப்பு தருவதாய் நான் இங்கு promise செய்திருந்ததும் நினைவில் நின்றதால் - டிக் ஆன கதை # 5 - ராபினின் சாகசமே ! இதனையும் வண்ணத்தில் வெளியிடும் வேட்கையில் உருட்டிய போது - போனெல்லி நிறுவனம் ராபினின் கதை # 100-ஐ வண்ணத்தில் வெளியிட்டிருந்தது தெரிய வந்தது ! பிறகென்ன - முதல் முறையாய் ராபின் வண்ணத்தில் வரத் தயாராகி விட்டார் - "நிழல்களின் நினைவுகள்" வழியாக ! 95 பக்க டிடெக்டிவ் த்ரில்லர் இது !

இது வரை நம் இதழ்களின் உச்சபட்ச எண்ணிக்கையிலான கதைகள் டிடெக்டிவ் வகைகளே என்பதால் அந்த ரசனைக்கு இன்னும் கொஞ்சம் இடம் ஒதுக்கும் வேட்கை எனக்குள் இருந்தது ! ஆனால் பழைய முகங்களில் எதுவும் பெரிதாய் சோபித்தது போல் தெரியவில்லை என்பதாலும், ஒரு புதுமுக அறிமுகம் கொண்டு வரும் novelty சுவாரஸ்யம் தர வல்லதென்பதாலும் - கொஞ்ச காலமாகவே என் ராடாரில் இருந்து வந்த "ஜூலியா" வை அறிமுகம் செய்வதெனத் தீர்மானித்தேன் ! ஜூலியாவும் ஒரு இத்தாலியப் படைப்பே ; 126 பக்கங்களில் black & white -ல் சாகசம் செய்யும் ஒரு பெண்மணி ! மாடஸ்டி போல் அதிரடிகள் இவரது பாணியல்ல என்றாலும் இவரொரு பரபரப்பான நாயகியே ! மகளிரின் ஒற்றைப் பிரதிநிதியாகவும் செயல்படவிருக்கும் ஜூலியா - "விண்வெளியில் விபரீதம் ' எனும் b & w த்ரில்லர் மூலம் அறிமுகம் காண்கிறார் ! Let's give the lady a warm welcome folks !

'அரை டஜன் ஆச்சு...இனி என்ன செய்யலாம் ?' என்று யோசித்த போது - மர்மம் + ஹாரர் கதைகளின் இலாக்கா காலியாய் உள்ளதை உணர முடிந்தது ! 'மர்மம்' எனும் போது மர்ம மனிதன் மார்டினை மறத்தல் சாத்தியமாகுமா ? நிறைய நண்பர்களின் கோரிக்கைப் பட்டியலில் இருந்து வந்த இந்த -ஐ துளி சிந்தனையுமின்றித் தேர்வு செய்தேன் ! அதே வேகத்தில் 'கட்டத்தில் ஒரு வட்டம்' கதையினையும் டிக் அடித்தேன் ! கருப்பு-வெள்ளையில் ஒரு ஆக்க்ஷன் கதகழி காத்துள்ளது மார்டினின் மறுவருகையின் வாயிலாக ! 'மர்மம் ஆச்சு ; ஹாரருக்கு நான் இருக்கிறேன் !' என திகில் டிடெக்டிவ் டைலன் குரல் எழுப்ப - "நள்ளிரவு நங்கையும்' நம்மிடம் தயாராக இருக்க - வண்ணத்தில் இந்த horror thriller இணைந்து கொண்டது நம் பட்டியலுக்குள் !

புதிதாய் இன்னும் ஏதாவது ஒரு சுவையினை சேர்த்தாக வேண்டுமே என்று எனக்குள் குடைய - இருக்கவே இருக்கிறது கிராபிக் நாவல் வரிசை என்று தலைக்குள் உதித்தது ! ஆனால் இந்த சந்தோஷத் தருணத்தில் கர்சீப் தேடச் செய்யும் கனமான கதைக்களம் வேண்டாமே என்ற சிந்தனையில் - ஒரு ஆக்க்ஷன் நாவலைத் தேர்வு செய்தேன் ! கறுப்பு-வெள்ளையில் வந்த கதை தான் என்ற போதிலும், "இறந்தகாலம் இறப்பதில்லை" ஒரு அழகான கதை ! நம் LMS -ன் கதை # 9 இதுவே !

மிட்டாய்க் கடையில் ஆர்டர் பண்ணும் பாலகனைப் போல இஷ்டத்துக்குக் கதைகளை தேர்வு செய்தான பின்னே - பக்கங்களை total போட்டுப் பார்த்த போது 880+ பக்கங்களைத் தொட்டு விட்டிருந்தது பட்டியல் ! இன்னமும் நமது வழக்கமான filler pages-ஐ இணைக்கும் போது பக்க எண்ணிக்கை சுலபமாய் 900 பக்கங்களை எட்டிப் பிடித்து விடும் என்பது புரிந்தது ! தேர்வான 9 கதைகளில் ஆறு இத்தாலியப் படைப்புகள் என்பதால் அவற்றின் அளவுகள் அனைத்துமே நமது தற்போதைய டெக்ஸ் ; டயபாலிக் அளவுகள் தான் என்பதையும் உணர்ந்தேன் ! முன்பைப் போல் அனைத்துமே black & white பாணியில் வெளியாகக் காத்திருக்கும் பட்சத்தில் - நமது ஆர்டிஸ்ட்களைக் கொண்டு, வெட்டி, ஒட்டி இல்லாத பல்டிகளை எல்லாம் அடித்து பெரிய சைசுக்கு இதனை 450 பக்கங்களாய் மாற்ற முனைந்திருப்போம் ! ஆனால் இப்போதோ முழுதும் வண்ணம் ; முழுதும் கணினி எனும் போது இத்தனை பெரிய சைஸ் மாற்றம் தேவையற்ற இடியாப்பச் சிக்கல் என்பதை புரிந்து கொண்டேன் ! So LMS 900 பக்கங்களோடு - நமது டெக்சின் சைசில் ஒரு தலையணை கனத்திற்கு 9 பிரத்யேகக் கதைகளோடு வரக் காத்துள்ளது !

ஆக இது தான் கட்டிடத்திற்குப் போடப்பட்டுள்ள blueprint  ! ஏற்கனவே  இதன் மீதான பணிகளை முழு வீச்சில் துவங்கி விட்டோம் ! கல்லும், மணலும், ஜல்லியுமாய் திரும்பிய பக்கமெல்லாம் கிடக்கும் இந்த சங்கதிகளை ஒருங்கிணைத்து காலத்துக்கும் நிலைத்து நிற்கவல்லதொரு அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டும் பணி காத்து நிற்கின்றது ! அதன் ஒவ்வொரு நிலையிலும் உங்களின் ஆதரவும், உற்சாகமும் மாத்திரமே நம்மை வழி நடத்திச் செல்லவிருக்கிறது ! ஆண்டவன் அருளும், உங்கள் அண்மையும் எப்போதையும் விட இப்போது எங்களுக்கு அத்தியாவசியம் folks !! Wish us luck please !! And....மறவாது சூப்பர் 6-ன் சந்தாத் தொகையினை துரிதமாய் அனுப்பி உதவிடுங்களேன் ப்ளீஸ் ! Catch you soon guys...! இனிமேல் start music !!



363 comments:

  1. ஒரு நாள் முன்னதாகவே கைகளுக்கு நமது இதழ்கள் வந்து சேருவது மனதுக்கு அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
    வேகத்தில் இப்போது நமது காமிக்ஸ் மாடஸ்தியின் கத்தி வீச்சுக்கு இணையாக உள்ளது.

    ReplyDelete
  2. //வேகத்தில் இப்போது நமது காமிக்ஸ் மாடஸ்தியின் கத்தி வீச்சுக்கு இணையாக உள்ளது.//

    +1

    ReplyDelete
    Replies
    1. கத்தியை விட வேகமாக இதயத்தில் பாய்ந்து ஆளை வீழ்த்திடுமே... அந்தக் காந்தக் கண்ணழகியின் கடைக்கண் பார்வை! ;)

      Delete
    2. ஹ்ம்ம்ம்ம்... கத்தி வீசுவது "வில்லி கார்வின்" தான் எப்போதும். மாடஸ்டி அல்ல.... இது போன்ற பற்பல தவறான பதிவுகளால் தான் இத்தளம் சமீபமாய் நிரம்பி உள்ளது நண்பரே. எந்த ஒரு கமெண்ட்ற்கும் ஹாஸ்யம் என நினைத்து சம்பந்தமே இல்லாத பதிவை இடுபவர்கள் ஒரு சாரார் எனில் புரிந்து கொள்ளாமலேயே கணக்கில்லாத எண்ணிக்கையில் பதிபவர்கள் இன்னொரு புறம். ஆண்டவா இது என்ன சோதனை??? வெறுப்ப கெளபாதிங்க பாஸ் :(

      Delete
    3. ஸ்ஸ்... ஆ! எழுத்தாணி குத்திடுச்சி!

      Of course, just விளையாட்டுக்கு இடப்படும் பதிவுகளாக இருந்தாலும், information சற்று பிறழும்போது சுட்டிக்காட்டுவது அவசியம்தான்! அதையும் விளையாட்டாகவே செய்யலாமே.

      கனியிருப்பக் காய் கவர்ந்தற்று!

      Delete
    4. \\\\\\\\\\\\\\\\\\\ஹ்ம்ம்ம்ம்... கத்தி வீசுவது "வில்லி கார்வின்" தான் எப்போதும். மாடஸ்டி அல்ல....\\\\\\\\\\\\\\\

      யப்பா......... உலகமகா கண்டுபிடிப்புடா இது...........

      Delete
  3. one day before . super sir

    any more surprise

    ReplyDelete
  4. இப்படி திடுதிப்பென்று கூரியர் விலையை உயர்த்த வேண்டிய அவசியமென்ன...? இதில் நம்மையடித்துக்கொள்ள வேறாலு இல்லை என்பதாலா...? அதிலும் பெங்களுருக்கு ரூ.40/- to ரூ.70/- too too much...! எல்லோரும் ST-க்கு மாற வேண்டியதுதானா(னே).....?

    எப்படியோ, ஒரு நாள் முன்பாகவே புக் நம் கைகளில் என என்னும் போது உற்சாகம் இன்னும் கொப்பளிக்கிறது. அப்போ நாளை ஒரே கல்லில் இரண்டு மாங்காய். இங்கு டீசரும், கையில் புக்கும். வாவ்.
    பெ, பெ, -யை வெளியே அனுப்பிவிட்டு ஓ. உ. எங்கிருந்தாலும் பதிவுக்கு வரவும்.

    ReplyDelete
  5. ஹைய்யா! நாளைக்கே புத்தகங்கள்!! நன்றி எடிட்டர் சார்!
    // பதிவிடப் போவதே நாளைய பொழுதுதான் //
    நாளைய பொழுதுக்கு இன்னும் சில நிமிடங்களே பாக்கி இருப்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    இந்தப் பதிவுக்குப் பொருத்தமான தலைப்பை வைத்த கி.கி.ஷல்லூமிற்கு எனது வாழ்த்துக்கள்! அவரது ஏமாற்று வேலைக்கு பலியான முதல் ஆள் நான் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதே தலைப்பை (அதுவும் இன்றைக்கே) சூட்டி, எனக்கு முட்டாள் பட்டம் கட்டப்படவிருந்ததை சமயோஜிதமாகத் தடுத்து/தகர்த்து எறிந்திருக்கிறீர்கள். கோடானு கோடி நன்றிகள் சார்! :)

    30வது ஆண்டு மலருக்கான கதை வரிசைகள்... சூப்பர்-6 கதைகள்.... ஐயோ சீக்கிரமா அந்த 'பப்ளிஷ்' பட்டனை அழுத்துங்களேன்...

    ReplyDelete
    Replies
    1. குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலியாம்..... கிர்ர்ர்

      Delete
    2. ஆமாம் சார் சீக்கிரம் அமுத்துங்க சார்

      Delete
    3. ஆமாம் நேற்று விஜய் மீசைய எடுத்து ...ட்டார் !

      Delete
  6. கிறுக்கல் கிறுக்கனாருக்கு நன்றி, சிவகாசிக்கு வண்டி கட்டவேண்டியதானே JI!

    ReplyDelete
  7. தேர்தல் மாதத்தில் மட்டுமல்லாது அனைத்து மாதங்களிலும் தொடரட்டும்! தேர்தல் கமிஷன் கண்களில் இந்த பதிவு பார்வையில்படாமல் இருக்க கடவது!;-)

    ReplyDelete
  8. எதிர் பாராது விருந்து நன்றி சார் . சீக்கிரம் அப்டேட் பன்னுங்க சார். பார்த்துவிட்டுத்தான் தூங்கவே போகனும், கம்மான் சார்

    ReplyDelete
  9. என்ன தொடரட்டும்னு கேக்கிறிங்களா? வெளியிடும் வேகம், மின்சாரமும்! சரிதானா நண்பர்களே?

    ReplyDelete
  10. ஹ்ம்ம்ம்ம்... கத்தி வீசுவது "வில்லி கார்வின்" தான் எப்போதும். மாடஸ்டி அல்ல.... இது போன்ற பற்பல தவறான பதிவுகளால் தான் இத்தளம் சமீபமாய் நிரம்பி உள்ளது நண்பரே. எந்த ஒரு கமெண்ட்ற்கும் ஹாஸ்யம் என நினைத்து சம்பந்தமே இல்லாத பதிவை இடுபவர்கள் ஒரு சாரார் எனில் புரிந்து கொள்ளாமலேயே கணக்கில்லாத எண்ணிக்கையில் பதிபவர்கள் இன்னொரு புறம். ஆண்டவா இது என்ன சோதனை??? வெறுப்ப கெளபாதிங்க பாஸ் :(

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், பெயரை நவீன நக்கீரன் என்று வைப்பது நலம்.

      Delete
    2. ஃ பெர்னாண்டஸ் அப்போ முன்னோட்டத்தின் முன்னோடி நீங்கள்தான் !

      Delete
    3. \\\\\\\\\\\\\\\\\\\ஹ்ம்ம்ம்ம்... கத்தி வீசுவது "வில்லி கார்வின்" தான் எப்போதும். மாடஸ்டி அல்ல....\\\\\\\\\\\\\\\

      யப்பா......... உலகமகா கண்டுபிடிப்புடா இது...........

      Delete
  11. சார் , இன்றே புத்தகம் ... ஆகா மொத்தமாய் முட்டாள் பட்டம் சத்தமில்லாமல் கட்டி விட்டீர்கள் ! மாபெரும் (இன்ப)அதிர்ச்சி ! மெய்யாலுமே அற்புதமான நாள் நேற்று !

    ReplyDelete
    Replies
    1. இரண்டு புத்தகங்களையும் விற்பனை தளத்தில் ஓட்டுக்காய் பார்க்கும் போது ஒரே வண்ணம் அட்டைகளில் அருமையாக உள்ளது !

      Delete
  12. சொல்லிவிட்டு செய்யோம் என்பதை மீண்டும் நிருபித்து விட்டிங்க, நன்றி!

    ReplyDelete
  13. // இன்று முதல் (ஏப்ரல் 1) Professional கூரியரின் கட்டணங்கள் எக்கச்சக்கமாய்க் கூடி விட்டுள்ளன !! சென்ற மாதம் வரை தமிழகத்தினுள் ரூ.32 என இருந்த கட்டணம் இனி ரூ.40 & பெங்களூருக்கு ரூ.40 ஆக இருந்த கட்டணம் இனி மேல் ரூ.70 !! தலை சுற்றச் செய்யும் இந்த உயர்வை நம் சந்தாதாரர்களின் தலையில் சுமத்துவது நியாயமாகாது ; //

    ஆனாலும் இத்தகைய பாரத்தை, உங்கள் தலையினில் மட்டும் சுமத்துவது கூட நியாயமாகாது என்றே தோன்றுகின்றது!

    வாசகர்கள் நாங்கள் எங்கள் பங்கில் இதில் செய்ய கூடியது ஏதேனும் உள்ளதா,விஜயன் சார் ?

    ReplyDelete
  14. நண்பர்களே இந்த முறையும் எனது கை'க்கே முதலில் !

    ReplyDelete
    Replies
    1. கொண்டாட்டங்கள் முடிவதில்லை லயனின் பாத சுவடுகளிலே !
      அட்டை படங்கள் இரண்டும் போட்டி போடுகின்றன !
      லக்கியின் அட்டை படத்துக்கு மயங்காதவர் ரசிகரில்லை !உங்கள் கண்களை கட்டி போடும் !
      ஷெல்டன் நேரில் இன்னும் கிளாஸ் ! துப்பாக்கியை காட்டி கவர்ச்சியாய் புன்னகைக்கிறார் !
      ஹாட் லைன் நார்டரில் கண்ணுக்கு விருந்து !
      ஆண்டு மலர் கதைகளின் தலைப்பு அட்டகாசம் !
      சொல்ல உண்டு நிறைய ! ஆனால் அந்த வாய்ப்பை ,நீங்கள் நேரில் கானவும், ஆசிரியர் அவர் நடையில் எழுதினால் நானும் ரசிப்பேனே என்று இடம் விடுகிறேன் !

      ஆடுங்கள் ! பாடுங்கள் !!
      தூள் !

      Delete
    2. ஹேய்! வாழ்த்துக்கள் ஸ்டீல் க்ளா!

      Delete
    3. நண்பரே உங்களைதான் நினைத்தேன் ! வாங்க போகலையா !!
      பட்டய கிளப்புது புத்தகங்கள் !

      Delete
    4. STEEL, Always you are getting the book first!

      Delete
    5. வயிற்றெரிச்சலுடன் வாழ்த்துக்கள்...........
      படித்ததை உடனே பதிவிட்டு எங்கள் ஆர்வத்தை குறைத்துவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

      Delete
    6. //வயிற்றெரிச்சலுடன் வாழ்த்துக்கள்...........
      படித்ததை உடனே பதிவிட்டு எங்கள் ஆர்வத்தை குறைத்துவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். //

      + 111111111111111111111111110000000000000000000000000000000000000 :)

      Delete
    7. பரணி எல்லாம் stc மக்கள் நான் தரும் டார்ச்சரை தாங்கி கொண்டு அவர்கள் பணி செய்து கொண்டிருக்கும் போதும் எனக்கு புன்சிருப்புடன் எடுத்து கொடுப்பதே !
      நண்பர்களே உங்கள் முகவரி தந்தால் வயிற்ரெரிச்சல் தீர ulgel அனுப்பி வைக்கிறேனே !

      Delete
  15. விஜயன் சார்,
    S.T கூரியர் சர்வீஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை என்றால் அவர்களிடம் கொடுக்கலாம், இதில் சம்மந்தபட்ட சந்தாதார்கள் விருப்பட்டால்! S.T கூரியர் சேவை இப்போது நன்றாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. +1. இது நல்ல யோசனை தான் பரணி சார்! எனக்கு இதில் சம்மதமே!

      Delete
    2. Friends, my parcel has been reached ST Courier, Bangalore, they will be delivering my parcel during lunch hours!

      Note: Changing to ST courier especially for people outside Tamilnadu; because the difference is more.

      Delete
    3. எஸ் டி கொரியர் நிர்வாக குளறுபடி உள்ள ஒரு நிறுவனம். நமது காமிக்ஸ் சரியான நேரத்திற்கு கிடைப்பதற்கு உத்தரவாதமில்லை. கூடுதலாக ஆகும் தொகையை வாசகர்களிடமே பெற்றுக் கொள்ளலாமே...

      Delete
  16. நான் தூங்கும் சமயங்களை தவிர மற்ற சமயங்களில் அரை மணிக்கு ஒரு முறை நமது தளத்தை பார்வை இட வந்தாலும் தமிழில் இங்கு பதிவிட வர கணினியை நாடி வரும் சூழல் பல சமயம் உடனுக்குடன் எனது கருத்தை தெரிவிக்காமல் செய்து விடுகிறது .ஆனாலும் செல் பேசி மூலம் தமிழில் பதிவிட உதவிட தனது பணியையும் ..,காலத்தையும் செலவு செய்து எனக்காக நேரில் வந்த எங்கள் போராட்ட குழு இனிய செயலாளர் ஈரோடு விஜய் அவர்களுக்கு எனது நன்றியை மனமார முதலில் தெரிவித்து கொண்டு போன பதிவின் நண்பர்களின் கருத்துக்கு எனது எண்ணம் இங்கே ...


    # சிவ சுப்ரமணியம் : சிங்கத்தின் சிறு வயதில் தொகுப்பு வெளி ஈடு இனி எப்போது என்பதே போராட்டம் ..... அப்படி போடுங்க தலைவரே ..#

    நண்பர் சிவ சுப்ரமணியம் போல வலுவான கரங்கள் எங்கள் சங்கத்துக்கு பின் புலமாக இருக்கும் போது எங்களுக்கு கவலை என்ன ...

    # முகுந்தன் குமார் : மின்னும் மரணம் கௌ -பாய் ஸ்பெஷல் புத்தகத்திற்கு போராட்டகுழு ஆதரவு கொடுத்தால் நாங்களும் ரெடி ...#

    நண்பரே மி .மரணம் ஆள் ரெடி ஓகே என்பதால் உங்கள் ஆதரவு கரத்தை உடனடியாக நீட்டலாம் ..

    ஆனாலும் நண்பர்களின் எண்ண படி இன்னும் பல பாகங்கள் வந்தவுடன் "தொகுப்பை " வெளி இடலாம் என்ற கருத்து சரியாக இருப்பதால் நாங்கள் காத்திருக்க தயார் .மேலும் கோவை ஸ்டீல் அவர்களின் பட்சியை தவிர மற்ற பட்சிகள் அனைத்தும் " தொகுப்பு " கண்டிப்பாக புத்தகமாகவும் வரும் என சொல்லுவதால் நம்பிக்கை உடன் காத்திருக்கிறோம் .

    # ஈரோடு விஜய் : தொகுப்பு புத்தகம் வரும் நாளில் அனைவருக்கும் மிட்டாய் வழங்கி விடலாம் தலைவரே #

    சங்க செயலாளர் அவர்களே என்ன இப்படி சொல்லி விட்டர்கள்...நமது சங்கம் ஆரம்பித்ததே இதற்காக தானே ...பல சங்கங்கள் ஆரம்பித்தவுடன் காணாமல் போய் விடுகின்றன ..இல்லை என்றால் உறுப்பினர்கள் பலர் வெளி வருகின்றனர் அப்படியும் இல்லை என்றால் " டைகர் " கதை பாகங்களை போல பலவாக பரவுகின்றன...ஆனால் நமது சங்கம் ஆழ மரம் போல வளருகின்றது .ஆனாலும் நமது சங்கம் அபராதத்தில் ஓடினாலும் நோக்கம் நிறைவேறும் அந்த தொகுப்பு வரும் வேலையில் 50 பைசா மிட்டாய் கொடுத்தால் மக்கள் என்ன நினைப்பார்கள் ..சங்கத்தை இழிவாக நினைக்க மாட்டார்களா ? எனவே புத்தகம் வரும் அந்த திரு நாளில் நமது சங்கத்தை அடகு வைத்தாவது கொண்டாடுவோம் .எனவே மதிப்பே இல்லாத 50 பைசா மிட்டாய் பதிலாக 1 ரூபாய் மதிப்புள்ள " சுவிங்கத்தை " வழங்கி அனைவரையும் ஆனந்த படுத்துவோம் ...

    ReplyDelete
    Replies
    1. மின்னும் மரணத்துடன், ரத்தக் கோட்டையும் இணைந்து கௌபாய் ஸ்பெசலாக வேண்டும் என்பதே என் மற்றும் புனித சாத்தானின் கோரிக்கை.
      மேலும் சிங்கத்தின் சிறுவயது கோரிக்கைக்கு என்னுடைய முழு ஆதரவு எப்போதும் உண்டு. அதில் ஒரு வேண்டுகோள் இன்னும் சிறிது காலம் பொறுத்திருந்தால், எடிட்டரின் இளமைகால படங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் எடுத்த படங்கள் என அனைத்தையும் இணைத்து ஒரு மெகா இதழாக வந்தால் நன்றாக இருக்குமே என்பதுதான்.

      சிசிவ வெளியாகும் அன்று எனது சார்பில் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் 1 கிலோ திருநெல்வேலி அல்வா வழங்க தயாராக உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

      அல்வாவை காரணமாக வைத்து சங்கத்திற்கு புதிய உறுப்பினர்களை அதிகமாக சேர்க்க வேண்டாம் என்று பீதியுடன் கேட்டுக் கொள்கிறேன்.

      Delete
    2. " மெகா இதழாக வந்தால் " - டபுள் ஓகே

      Delete
    3. // மின்னும் மரணத்துடன், ரத்தக் கோட்டையும் இணைந்து கௌபாய் ஸ்பெசலாக வேண்டும் என்பதே என் மற்றும் புனித சாத்தானின் கோரிக்கை. //

      நாங்களும் இருக்கோம் நண்பரே !!!!!

      Delete
    4. // மேலும் சிங்கத்தின் சிறுவயது கோரிக்கைக்கு என்னுடைய முழு ஆதரவு எப்போதும் உண்டு. //

      கண்டியப்பாக ...

      Delete
  17. @ஸ்டீல் க்ளா!

    எனக்கு கொரியர் வரவில்லையாம்,ஸ்டீல் க்ளா!

    இனி விஜயன் சார் மனது வைத்தால் இங்கயே அறிவுப்புகளை பார்த்து கொள்ள வேண்டியது தான்!

    ReplyDelete
  18. நண்பர் மரமண்டை அவர்களின் கருத்துக்கு பதில் அளிக்கலாம் என்று நினைத்திருக்கும் போது அவர் மீண்டும் அஜய் அவர்களின் திறமையை உணர்ந்துள்ளதால் அதை விட்டு விலகி விடலாம் .ஆனாலும் ஒன்றை மட்டும் அவருக்கு நினைவு படுத்துவதில் தவறு இல்லை என்றே எண்ணுகிறேன் .நண்பர் மரமண்டை அவர்களே அவர் எதில் வரைந்திருந்தாலும் ஆசிரியரின் முகத்தை கெடுக்காமல் வரைந்து உள்ளாரே ..அதை தான் நாம் முக்கியமாய் உணர வேண்டும் .நானும் கத்து குட்டி ஓவியன் என்ற முறையில் சொல்லுகிறேன் .நானும் பல முறை சிங்கத்தின் சிறு வயதில் வேண்டி அவரை வரைய முயன்று உள்ளேன் .ஆனால் வரைந்து முடிந்து பார்த்தால் அவர் ஆசிரியர் விஜயனா ....இல்லை வீர விஜயனா ...இல்லை நம்ம வீரா சாமியா என்று எனக்கே குழப்பம் வந்து விட்டதால் அதை விட்டு விட்டேன் .கற்பனை யான உருவங்களை கூட வரைந்து விடலாம் ..ஆனால் நிஜத்தில் இருக்கும் ஒருவரை ..அதுவும் நேரில் அதிகம் பார்க்காத ஒருவரின் முகத்தை அப்படிய வரைவது அசாத்திய திறமை .வெல்டன் அஜய் சார் ..

    ஆசிரியருக்கு இதில் ஒன்றை நினைவு படுத்த கடமை பட்டு உள்ளேன் .இப்படி பட்ட விவாதங்கள் எழும் ஏற்படும் நிலை " முழு நீள மொழி ஆக்க போட்டியில் " நண்பர்களின் படைப்புகளிலும் ஏற்படலாம் .இதனால் படைத்தவருக்கும் ..,விமர்சித்த நண்பருக்கும் மனவருத்தம் ஏற்படலாம் என்பதை தாங்கள் அறிவித்த போதே தெரிய படுத்தி இருந்தேன் .

    அடுத்தும் நண்பர் மரமண்டை அவர்களுக்கு தான் ..." தொகுப்பு " இணைப்பு சூப்பர் ..உங்கள் உழைப்புக்கு எனது பாராட்டுகள் நண்பரே ...எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் அடிக்கடி அங்கே வருவேன் நண்பரே ..நன்றி .அதே சமயம் நாம் ஒரு புத்தகத்தை கையில் புரட்டி படிக்கும் இன்பத்தை " இணையம் " எனக்கு கொடுப்பதில்லை ( எனக்கு மட்டும் தானா ) எனவே இணையத்தில் வந்தாலும் காலம் சென்றாலும் ஆசிரியர் " புத்தகமாக " வெளி இட வேண்டும் என்று வேண்டி கொண்டு கண்டிப்பாக வரும் என்ற நம்பிக்கையில் எங்கள் போராட்ட குழு " மெளனமாக " இனி நடை போடும் .



    ReplyDelete
    Replies
    1. // நாம் ஒரு புத்தகத்தை கையில் புரட்டி படிக்கும் இன்பத்தை " இணையம் " எனக்கு கொடுப்பதில்லை ( எனக்கு மட்டும் தானா ) //
      எனக்கும் தான்,நண்பரே!

      // எனவே இணையத்தில் வந்தாலும் காலம் சென்றாலும் ஆசிரியர் " புத்தகமாக " வெளி இட வேண்டும் என்று வேண்டி கொண்டு கண்டிப்பாக வரும் என்ற நம்பிக்கையில் எங்கள் போராட்ட குழு " மெளனமாக " இனி நடை போடும் .//

      தலைவர் எவ்வழியோ நானும் அவ்வழியே!

      Delete
    2. இணையத்தைவிட புத்தகம்தான் என்று சிறந்தது. அது கண்டிப்பாக வேண்டும்.
      ஆனாலும் பயணத்தின்போதோ, வெளியூர்களில் இருக்கும் போதோ போன் வாயிலாக இணையத்தில் படிக்க மரமண்டையின் முயற்சி உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
      ஆகையால் இரண்டும் வேண்டும்.

      Delete
  19. தல உங்க பேச்சை நம்பி ஊருக்கு கிளம்பி வந்துட்டேன்!!! கடைசியா இப்படி பண்ணு கொடுத்து கலாய்ச்சிடிங்கலே... இருந்தாலும் உங்க வேகம் அசத்தலானது!!! தொடர்க உமது பணி.. எல்லாருக்கும் நாளைக்கு காலைல புக் கிடைக்க சிறப்பு பிரார்த்தனை செய்ய உள்ளேன்.. நட்புகள் மன்னிப்பார்களாக!!

    ReplyDelete
  20. Replies
    1. Erode VIJAY : நம்பர்களோடு நாட்டியம் ஆடும் தினமோ ?! 9..! 900...!

      Delete
    2. My guess 9 new books, 900 pages special - correcta?

      Delete
    3. @ V karthikeyan

      அப்படீன்னா, இதுக்கும் விளக்கம் சொல்லுங்க பார்ப்போம்...

      568...
      332...
      228...
      1320...

      ஹி ஹி! :)

      Delete
    4. 568 -> Lion King Special!
      1320 -> B & W Special!!

      Delete
    5. 322(Color) + 568 (B&W)= Magnum Special for Rs.500

      Delete
    6. King Special is Sixer#6
      Millinium Special is Sixer#3
      2 more Sixers for Book Fairs
      1 Sixer for Deepawali Special...

      Is this correct?

      Delete
  21. விஜயன் சார்,
    நான் கீழ்க்கண்ட மாற்றங்களை எதிர்பார்க்கிறேன்.
    1) புத்தகங்களை அனுப்பும்போது ஒரு குறுஞ்செய்தி, இன்னின்ன புத்தகங்கள், இவ்வளவு தொகை, இந்த கொரியர், எப்போது கையில் கிடைக்கும் என
    2) பணம் செலுத்தியவுடன், பெற்றுக்கொண்டதற்கான ஒரு குறுஞ்செய்தி
    3) நிறையக் கடைகளில் காமிக்ஸ் கிடைப்பதில்லை. சரியான வலைத்தொடர்பை உருவாக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. இக்கருத்தை வழிமொழிகிறேன்

      Delete
    2. அதே......... அதே.............

      Delete
    3. இதை நானும் ஒத்துக்கொள்கின்றேன்.

      Delete
  22. ஹைய்யா புக்கு கெடச்சுடுச்சு! இனிமேதான் ஓபன் பண்ணப்போறேன்...

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Mugunthan kumar : கார்வினுக்குக் கத்தியும், மாடஸ்டிக்குக் காங்கோவும், நமக்குப் பொறுமையும் - பெருமை சேர்க்கும் சமாச்சாரங்கள் ! ஆக்க்ஷன் கதைகளில் மட்டுமே இருந்து விட்டுப் போகட்டுமே நண்பரே !

      Delete
  24. books courier office படையெடுத்து பெற்று கொண்டேன் ! Super Six நிஜமாலுமே சூப்பர் 6தான்!எடிட்டர் suspense ஒடைக்கும்வரை அடக்கி வாசிக்கிறேன்! Books கிடைக்கபெற்ற நண்பர்கள் facebookலும் ரகசியம் காக்கவும் !

    ReplyDelete
  25. எடிட்டர் சார், இப்ப நீங்களே பதிவு போடறீங்களா இல்லை நானே எல்லா விசயத்தையும் போட்டு உடைக்கவா?

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் சார் வேண்டாம்.... எங்கள் ஆர்வத்தை குறைத்து விடாதீர்கள்.
      இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த பதிவில் எதையும் வெளியிட்டு விடாதீர்கள்.

      Delete
    2. Erode VIJAY : பூனைக்குப் பொறுமை அழகு...இன்று மதியம் ஒ.வா.உ. ஆஜராகிடுவார் !

      Delete
    3. Mugunthan kumar : அயல்நாட்டு நண்பர்கள் பாடு திண்டாட்டமாகிப் போகுமே !!

      குறைந்த பட்சம் இன்றிரவு வரை ஒ.வா.உ. தலைமறைவாக்கி விடுவோமா ?

      Delete
    4. ஈரோடு விஜய் !

      நீங்களே சொல்லிடுங்க,ப்ளீஸ்! நான் இன்னும் புக் வாங்கவில்லை.

      Delete
    5. விஜயன் சார்,
      இன்று மாலைக்குள் சொல்லிடுங்களேன் ! சஸ்பென்ஸ் தாங்கலை

      Delete
    6. திருவாய் மலர்ந்தருள மதியப் பொழுதில் இச்சபைக்கு வரயிருக்கும் எங்கள் பெருமதிப்புக்குரிய அண்ணன் திரு. ஓ.வா. உலகநாதன் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்! (ஃபெவிகால் பெரியசாமியை யாராவது நாடு கடத்திட்டா தேவலையே!)

      Delete
    7. @ கிருஷ்ணா, சிவ சுப்ரமணியன்

      இதுவரை ஆக்கப் பொறுத்துவிட்டோமில்லையா...? எடிட்டரே அறிவிக்கட்டும். அதுதான் அழகு! அதுவே சிறப்பு! அதுவே கொண்டாட்டம்! அதுதான் குதூகலம்!

      Delete
    8. cant wait for two more days, need now. I am awake in the middle of the night here in US to see the updates, but still nothing came out :(

      Delete
  26. எனக்கு மாடஸ்தி மற்றும் டைகர்தான் பிடிக்கும். அதனால் அவர்களைதான் உவமானம் காட்ட முடியும்.
    மேற்கொண்டு கார்வினைவிட மாடஸ்தி பெயர்தான் பெருத்தமாக இருக்கும் என்பதால்தான் மாடஸ்தி பெயரை சேர்த்தேன்.

    ReplyDelete
  27. Mugunthan kumar : தமிழகத்தினுள் இல்லையா நீங்கள் ? நேற்று மதியமே அனைத்துப் பார்சல்களையும் ஒப்படைத்து விட்டோமே ?!

    ReplyDelete
    Replies
    1. சார், எனக்கு கோவில்பட்டி professional கொரியர் தான், இன்னும் வரலை-ன்னு தான் சொல்லுறாங்க! என்ன கொடுமை சார் இது !

      Delete
    2. Siva Subramanian : தவழ்ந்து வந்திருந்தாலே இந்நேரம் உங்களை எட்டிப் பிடித்திருக்க வேண்டுமே !!

      Delete
  28. சார்,

    இந்த குரியர் option இல்லாம நம்ம மாண்ட்ரேக் மாதிரி நீங்க அங்க ஒரு பட்டன தட்டினா, இங்க எல்லோரோட வீட்டிலேயும் அடுத்த செகண்ட் புக்ஸ் வந்து விழற மாதிரி ஏதாவது பண்ணுங்க சார் ...

    சுஸ்பென்ஸ் தாங்க முடியல :)

    ReplyDelete
    Replies
    1. //சுஸ்பென்ஸ் தாங்க முடியல :)//

      சஸ்பென்ஸ் தாங்க முடியல :)

      Delete
  29. " லயன் magnum ஸ்பெஷல் "

    அட்டகாசம் சார் ...

    பர பர வென மனது துடித்தாலும் இன்று இரவு வரை நான் இந்த பக்கம் வர போவதில்லை ..காரணம் வீட்டில் " எதிர் வீட்டு எதிரிகள் " காத்து கொண்டு இருக்கிறார்கள் .அங்கே சந்தித்து விட்டு இங்கே வருகிறேன் .

    ReplyDelete
  30. சாக்லெட் கோட்டிங் செய்யப்பட்ட சுவையான ஐஸ் யாருக்கெல்லாம் வேண்டும்? ;)

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : உசுப்பி விட்டே ரணகளம்...!

      Delete
  31. ஆகஸ்ட் மாதம் நண்பர்களில் பலர் உருண்டு புரண்டு சிரித்தே உடைகளைக் கிழித்துக்கொள்ளப் போவது உறுதி...

    ஒரு மாவீரர் பராக்... பராக்... பராக்...

    ReplyDelete
  32. // .இன்று மதியம் ஒ.வா.உ. ஆஜராகிடுவார் ! //

    மதியம் ஆகிவிட்டது என்பதை புத்தகம் கிடைக்க பெறாதவர்கள் சார்பாக நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம் ...

    மதியம் ஆகிவிட்டது என்பதை புத்தகம் கிடைக்க பெறாதவர்கள் சார்பாக நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம் ...


    ReplyDelete
  33. See the update on the first page from editor Vijayan Sir!!

    ReplyDelete
  34. க்ளோஸ்-அப்பில் பார்த்தாலும் குரூரமா இருக்காது - ஒருத்தரோட முகம் - ஆகஸ்டில் மட்டும்! ;)

    ReplyDelete
  35. ஒரு நிஜம் எப்போதும் சில நினைவுகளைக் கொண்டிருக்கும்...

    ஆனால், நிழலுக்கு நினைவுகளுண்டோ?....

    ReplyDelete
  36. நிகழ்காலம் ஒரு நொடிக்குப் பின்னே இறந்த காலமாகிறது...

    ஏற்கனவே இறந்த காலம்?...

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : இனி ஆரம்பிக்கலாம் உங்கள் கச்சேரியை !

      Delete
  37. Replies
    1. என் மனக் குரலை அப்படியே வெளிப்படுதிட்டிங்க!

      Delete
  38. Replies
    1. +1.என் மனக் குரலை அப்படியே வெளிப்படுதிட்டிங்க!

      Delete
  39. onnu onnum sollamae amaidiya irukkanum
    illaenna fulla sollanum

    ipdi ambi konjam neram
    anniyan konjam neram apdinnu suthunnaaaaa


    sutthi irukkurae engalukku tension aagudappa

    nanbargal ellam book kidaichu padichittu irukkanga pola adan orey amaidiya irukko

    ReplyDelete
  40. Mr. Fevicol oru oru sippukkum one hour gap kuduthha eppadippaaa

    haiyo haiyo

    indha anniyan mattum en kayila kidaiychaaaaa

    Mr. Fevicol konjam neram thunga ponga enga Ottai vai Ulagai urakka pesa vidungal.........

    ReplyDelete
    Replies
    1. அந்நியனுக்கும் வயிற்றுக்குப் பெட்ரோல் அவசியம் தானே !

      Delete
  41. Sarva நிச்சயமாக

    தயவு செய்து புல் டங்க் பண்னுங்கள்

    atleast today நோ மொர் ப்ரெக்s

    engallukku indrae mudi vellaiyaiyidum pola irukkae


    Kaathirundu Kathirundhu Kaalangal pogudhadi....

    ReplyDelete
  42. இவரும் சீரியல் பார்க்க ஆரம்பிச்சுட்டார் போல இருக்கே

    ReplyDelete
    Replies
    1. சத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும் : ஒரு பக்கம் டைப் அடிக்க ; மறு பக்கம் சாப்பாட்டில் கை நனைக்க ; இன்னொரு பக்கம் போன் பேச என்று நான் இன்று அடித்த கூத்து சொல்லி மாளாது !

      Delete
  43. விஜயன் சார், 30 ஆண்டு மலரில் தொடர்கதைகளை வெளி இட வேண்டாம்! இது போன்ற சிறப்பு இதழ்களில் இனி முழுமையான கதைகளை மட்டும் வெளி இட வேண்டும் என மன்றாடி கேட்டு கொள்கிறேன்!

    ReplyDelete
  44. ஆசிரியருக்கு .....நானல்லாம் காமிக்ஸ்னு ஒன்னு வந்தாலே போதும்னு நினைக்கிற ஆள் ...உங்கள் கதை தேர்வுகள் இதுவரை அருமையாகவோ அல்லது நன்றகவோதான் இருந்திருக்கின்றன[என்னை பொறுத்த வரை ] ...ஆனால் மேக்னம் இதழில் //மொத்தம் 775 பக்கங்களில் - 2 x மெகா டெக்ஸ் சாகசங்கள் ; அதுவும் முழு வண்ணத்தில் என்பது சுலபமான பார்முலாவாய்த் தோன்றியது எனக்கு//இப்படி வந்தாலே நன்றாக இருக்கும் என்று நினைத்திருந்தேன்.....இந்த இதழ் கதை தேர்வுகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது எனக்கு ....நன்றி ....சொல்ல மறந்துட்டேன் சந்தா நாளைக்கு அனுப்பி விடுவேன் ....

    ReplyDelete
  45. @ E1Singesi

    thodarndhu neengal bittu bittai update viduvadhal

    Indru muzhuvadhum adutha ovvaru 20 nimidathirukkum oru update neengal seiyaa vendum endru indha court theerpalikkiradhu

    thavarinaal innum rendu gundu special poda court utharividugiradhu

    ReplyDelete
  46. இன்று மதியம் புத்தகங்களை பெற்றுக்கொண்டேன். மீண்டும் ஒரு முறை நங்கள் கன் பார்டிகள் என்று எங்கள் பகுதி ST கொரியர் நண்பர்கள் நிரூபித்து காட்டிவிட்டார்கள். :-)! good job guys!

    லக்கியின் எதிர் வீட்டு எதிரிகள் அட்டைப்படம் average ரகம். ஒரு கார்ட்டூன் புத்தகங்களுக்கே உரித்தான bright அண்ட் sharp டிசைன் இல்லாமல் டல்லடிக்கிறது.பின்னட்டை நன்றாக உள்ளது.swap செய்திருக்கலாம்.
    இந்த கதையின் விளம்பரங்களில் ஓவியங்கள் சுமாராக இருந்தாலும்(விளம்பரங்களில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் ஆகா இருந்தது எனக்கு மட்டும் தானா ??) புத்தகத்தில் top class olden classic தரம்.குறை சொல்ல முடியாத பிரிண்டிங் தரம் ஓவியங்களுக்கு icing!
    ஏ...கப்பட்ட விளம்பரங்கள் ,அறிவிப்புகள்.திரும்ப திரும்ப அதே பக்கங்களை புரட்டத்தூண்டுகின்றன.

    முன்னட்டையின் பின்னே சந்தா படிவம் யாருக்கு பயன் பட போகிறது சார்?? யாரும் அட்டையை கிழித்து fill செய்து அனுப்பப்பவதில்லை. அந்த பகுதியில் விளம்பரம்/அறிவிப்புக்கு உபயோகப்படுத்தி உள் பக்கங்களில் சந்தா படிவத்தை பிரிண்ட் செய்திருக்கலாம்.

    ஷெல்டனின் அட்டைப்படம் மீசை வைத்த ஜேம்ஸ் பாண்டை நினைவு படுத்துகிறது. : -). பின்னட்டை அபாரமாக உள்ளது.again swap செய்திருக்கலாம்.
    கனமான இந்த புத்தகத்தில் பக்கத்துக்கு பக்கம் action sequence உள்ளது. பிரிண்டிங் தரம் awesome! ஓவியங்கள் அற்புதமாக வந்துள்ளன.முதல் பக்கம் முதல் கடைசி பக்க வரை, கதை முழுமையாக, புத்தகத்தை ஆக்கிரமித்துள்ளது. எந்த filler இல்லாமல் வந்துள்ள இந்த புத்தகம் ஒரு முழுமையான உணர்வை கொடுக்கிறது. இது போன்ற ஸ்டைல் எனக்கு ஏனோ ரொம்ப பிடித்துள்ளது.

    புத்தகங்களை குறித்த காலத்தில் தயாரித்து அனுப்பிய விஜயன் சார் & டீமுக்கு நன்றிகள்!

    இனி எந்த புத்தகத்தை முதலில் எடுப்பது என்ற குழப்பத்துடன் பெரும் போராட்டம் நடத்திக்கொண்டே விடை பெறுகிறான்! : -)!

    ReplyDelete
    Replies
    1. // முன்னட்டையின் பின்னே சந்தா படிவம் யாருக்கு பயன் பட போகிறது சார்?? யாரும் அட்டையை கிழித்து fill செய்து அனுப்பப்பவதில்லை. அந்த பகுதியில் விளம்பரம்/அறிவிப்புக்கு உபயோகப்படுத்தி உள் பக்கங்களில் சந்தா படிவத்தை பிரிண்ட் செய்திருக்கலாம். //
      +1

      Delete
    2. விஸ்கி-சுஸ்கி : சந்தா கூப்பனுக்கு இடமே இல்லது போனதால் தான் அட்டை உட்பக்கத்தை உபயோகம் செய்யும் அவசியம் நேர்ந்தது !

      உட்பக்கங்களில் அச்சிடும் போதும், இது வரை எவரும் அதனை வெட்டி அனுப்பிட நான் பார்த்தது கிடையாது ! So xerox எடுக்க இது சுலபம் என்றே தோன்றுகிறது !

      Delete
  47. ஹய்யா.....எங்கள் ஆதர்ச நாயகர்கள் அனைவரும் ஒரே புக்கிலா? டெக்ஸ் வில்லரும் டைகரும்!!!!அட்டகாசம்.அப்படியே அதன் விலையையும் சொல்லிவிடுங்களேன். ஏனெனில் நேற்று நான் அனுப்பிய பணம் இதற்கும் சேர்த்து பத்துமோ ......பத்தாதோ! (இதுபோன்றதொரு தருணத்தில் தாங்கள் நிற்க நேரமின்றி ஓடிக்கொண்டிருப்பீர்கள் என்று தெரியும்.ஆனால்,எங்களது மெயிலில் உள்ள தகவல்களை வாசித்து எல்லாம் ஓகேவா? இல்லை மேலும் ஏதேனும் தேவையா? என்பவற்றை நீங்களே அறியத்தந்தால்தான் எங்களுக்கு நிம்மதியாக இருக்கும் சார்.
    (நீங்க எல்லாம் ஓகே! புக்ஸ் வந்து சேரும்னு சொல்லும் வரை நாங்க இங்க முடியை பிச்சுகிட்டிருப்போம்!)

    ReplyDelete
    Replies
    1. suji jeya : உங்களின் மின்னஞ்சல் கிட்டியது ; தொகை வரவான விபரம் பற்றியும், இதழ்களின் despatch பற்றியும் நாளை அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் வந்திடும் உங்களுக்கு ! Don't worry..!

      Delete
    2. Thank you ....Thank you ........Thank you...........Thank you....Thank you....Thank you....Thank you...Thank you....Thank you....Thank you....Thank you.....Thank you 100 thanks to you sir. Now we are dancing! jumping! oh my god ! thank you! now, we can sleep without worry! i'll waiting for your email. :D

      Delete
  48. Sir,

    What is the subscription amount for Super 6 (ST courier)? also what is the amount for LMS (ST courier)?

    ReplyDelete
  49. Wat is the price for+6&lion Magnum special?

    ReplyDelete
  50. Sr,
    I bought 3 books(jaffna)thks 4 ur reply.waiting 4 LMS.

    ReplyDelete
  51. எஞ்சி நின்றவனின் கதை ! [ தல vs தளபதி ]

    நண்பர்களே,

    நம்முடைய 'தல அஜித்' தற்போதைய கெட்டப்பில் உணர்ச்சிவசப்பட்டு, நம்முடைய 'இளைய தளபதி விஜய்' க்காக உருவாக்கப்பட்ட ஒரு கதையில் நடித்தால் அந்த தமிழ் சினிமா எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது இந்த மாதத்து வேய்ன் ஷெல்டனின் - எஞ்சி நின்றவனின் கதை :)

    கதையில் நிறைய ஓட்டைகள் ; சினிமாத்தனமான நீட்டல்கள் ; ஏகப்பட்ட காட்சி திணிப்புகள் என ஒரு தமிழ் மசாலா படம் பார்த்து விட்டு, தலைவலியோடு வெளியே வந்தது போன்றே எனக்கு ஒரு feeling :) அதிலும் கதையில் வரும் பயங்கர வில்லன் 'ஹூக்கர்' நம் தமிழ் சினிமா வில்லன் நடிகரான 'பிரகாஷ்ராஜை' காட்சி தோறும் நமக்கு நினைவுப்படுத்தி தலையை சொரிய வைக்கிறார்.

    பக்கம் 68, 69ல் சைக்கிள், சைக்கிள் என்றே வருகிறது. ஆனால் 'மொபெட்டில்' வந்தவன் 'மொபெட்டில்' தான் போகிறான்.

    மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த எனக்கு இந்த கதை - முதல் வாசிப்பில் சற்று ஏமாற்றத்தை தருவதாகவே அமைந்து விட்டது. என்ன இருந்தாலும் நம் தற்போதைய சூப்பர் ஸ்டார் 'லார்கோ வின்ச்'ற்கு முன்னால் இந்த அஜித் ஸ்டைல் - ஷெல்டனால் தொடர்ந்து ஈடு கொடுக்க முடியவில்லை என்பதே இந்த கதை சொல்லும் நீதி. 'லார்கோ'வை ஒப்பிடும் போது இந்த 'வேய்ன்' - வெற்றிப் படிக்கட்டில் பல படிகள் கீழேத் தான் நிற்கிறார் என்பது என் கருத்து.

    இது ஒரு அக்மார்க் தமிழ் மசாலா படம் :)

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டர் மரமண்டை : சின்னதொரு caution : லார்கோவின் அனைத்துக் கதைகளும் uniform standards அல்ல !

      Delete
    2. @மிஸ்டர் மரமண்டை, எல்லா கதைத்தொடர்களிலும் நடுவில் ஒரு low stage வரும் / வரலாம். வான் ஹாமே மாதிரி கதாசிரியர்களுக்கே இது நிகழும்போது மற்ற கதைத்தொடர்களில் இவை இன்னும் சகஜம்! இதுக்குதான் ஹீரோக்களை வைத்து தரம் பிரிப்பதைவிட, தனிக் கதைகளின் தரத்தை எடைபோடுவது அவசியமாகிறது ;)

      Delete
  52. புத்தகங்கள் கிடைத்துவிட்டன.எதிர்வீட்டில் எதிரியின் அச்சுத்தரம் அருமை... வெய்ன் ஷெல்டன் அச்சுத்தரம் ஓ கே ரகம் தான்...
    புது அறிவிப்புகள் அமர்க்களம்...

    ReplyDelete
    Replies
    1. AHMEDBASHA TK : சார்..அச்சுத் தரத்தைத் தாண்டியும் கதைகள், நாயகர்களென விமர்சிக்க நிறைய விஷயங்கள் இருக்கும் போது - அச்சுத் தரத்தை சரி பார்ப்பதோடு என் நிறுத்திக் கொள்ள வேண்டும் ?

      Delete
  53. டியர் விஜயன் சார்,

    இன்று மதியம் புத்தகங்கள் கையில் கிடைத்தவுடன் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அரக்கப் பரக்க விளம்பரங்கள் ; ஹாட்லைன்'கள் ; லயன் Magnum ஸ்பெஷல் கதைத் தேர்வுகள் ; சூப்பர் சிக்ஸ் அறிவிப்புகள் என மீண்டும் மீண்டும் படித்து ஒரு பரவசத்தில் திளைத்து விட்டேன் என்றே கூறலாம். விருந்தில் பலவகையான சைடு டிஷ் - களோடு மட்டன் பிரியாணியை மூக்கு பிடிக்க சாப்பிட்டத் திருப்தி :)

    ஆனால் ஒரே ஒரு சிறிய ஏமாற்றம். அது 'The லயன் MAGNUM ஸ்பெஷல்' புத்தகத்தின் அளவு மட்டுமே :( அதற்கான காரணத்தை விளக்கமாக நீங்கள் புத்தகத்தில் விளக்கி இருந்தாலும் - என் மனம் சமாதானம் அடைய மறுக்கிறது. எப்படி இருந்தாலும் வரபோவது 'தீபாவளி மலர்'ன் சிறிய அளவில் தான் என்பது நிச்சயமாகி விட்டதால் அந்த ஏமாற்றம் எனக்கு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். NBSன் பெரிய அளவில் எதிர்பார்த்திருந்த வாசகர்கள் அனைவருக்கும் இந்த மனோநிலை நிச்சயமாக ஒரு ஓரமாக இருந்து கொண்டே இருக்கும் என்பது என் கருத்து !

    ReplyDelete
    Replies
    1. // ஆனால் ஒரே ஒரு சிறிய ஏமாற்றம். அது 'The லயன் MAGNUM ஸ்பெஷல்' புத்தகத்தின் அளவு மட்டுமே :( அதற்கான காரணத்தை விளக்கமாக நீங்கள் புத்தகத்தில் விளக்கி இருந்தாலும் - என் மனம் சமாதானம் அடைய மறுக்கிறது. எப்படி இருந்தாலும் வரபோவது 'தீபாவளி மலர்'ன் சிறிய அளவில் தான் என்பது நிச்சயமாகி விட்டதால் அந்த ஏமாற்றம் எனக்கு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். NBSன் பெரிய அளவில் எதிர்பார்த்திருந்த வாசகர்கள் அனைவருக்கும் இந்த மனோநிலை நிச்சயமாக ஒரு ஓரமாக இருந்து கொண்டே இருக்கும் என்பது என் கருத்து ! //

      I had exact same thought - from editor's explanation this size is the best he can do right now.

      Until now NBS is still #1 on special issues, lets wait and watch whether Magnum can beat it :)

      Delete
    2. மிஸ்டர் மரமண்டை : கதைகள் பிரதானமா ? புத்தகத்தின் அளவு பிரதானமா ? என்ற கேள்வி எழும் போது என் இடத்தில் இருப்பின் உங்களின் தீர்மானம் என்னவாக இருந்திருக்கும் ?

      Delete
  54. Hi Edi,

    Kindly try for HARD BOUND book - this special is literally a life time book for us and milestone for you.

    ALL THE BEST.

    Appurama plz andh 900 pagesai 1000 pages aakkidunga

    1000 PORKASUGALA!!!! apdinnnu nanga react panrom


    ReplyDelete
    Replies
    1. //Appurama plz andh 900 pagesai 1000 pages aakkidunga//
      +1

      Delete
  55. Sr,
    Don't forget to send lion magnum special to jaffna!!!

    ReplyDelete
  56. @ edi AKA Singesi

    When will the super six subscription be available in www.lioncomics.worldmart.in
    or should i go ahead and transfer as usual?

    ReplyDelete
  57. டியர் எடிட்டர்ஜீ!!!

    சூப்பர் 6 அறிவிப்புகள் அபாரமாக அமைந்துவிட்டது.லயன் மேக்னம் ஸ்பெசல் கதை தேர்வுகளில் குறிப்பாக கருப்பு&வெள்ளை கதை தேர்வுகள் அற்புதம்.மார்ட்டின் அடியேனை கவராதவர் என்றபோதிலும் இந்த கதம்ப மேளாவில் அவருக்கு ஒரு ஸ்லாட் ஒதுக்கியதை நான் குறை கூறப்போவதில்லை.என்றாலும் இந்த முறை அடியேன் ஆட்சேபிக்கப் போவது வண்ணக்கதை தேர்வுகள் குறித்து.

    முதலாவது...CID ராபினும்,டைலான் டாக்கும் கருப்பு வெள்ளை ஆசாமிகள்.இவர்களின் படைப்புகளில் உள்ள பிரத்யேக வண்ண கதைகளை இப்போது இந்த ஸ்பெசலில் வெளியிடுவது நிச்சயம் வரவேற்க்கப் படவேண்டிய ஒன்றே எனினும் ஒரே இதழில் இரு டிடெக்டிவ் ஆசாமிகள் சற்று ஓவராக படுகிறது.எனவே ஒருவரை கழற்றிவிட்டு நமது உட்சிட்டி போலீஸ்காரர்களை களம் இறக்கினால் தேவலாம்.9 கதைகளில் 3 கதைகள் கார்ட்டூன் ரகம் என்பது அப்படியொன்றும் பஞ்சமா பாதகம் என்று எவரும் கூறமாட்டார்கள்.பெண்களுக்குத்தான் 33 சதவிதம் இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை.பெண்களும்,குழந்தைகளும் பெரிதும் விரும்பும் கார்ட்டூன் கதைகளுக்காவது 33 சதவிதம் இட ஒதுக்கீடு செய்யலாமே ஸார் ...?

    இரண்டாவது...கேப்டன் டைகரை மீண்டும் துண்டு போடுவது.மார்சல் டைகர் உள்ளதோ மூன்று கதைகள்.அதை ஒரே இதழாக சூப்பர் 6 இதழ்களில் வெளியிடலாமே ஸார்..? மீண்டும் மீண்டும் ஒரே தவறை ஏன் செய்கிறீர்கள் என்று புரியவில்லை.( இதில் பூனையாரின் சதி கிதி ஏதேனும் உள்ளதா;-) டைகர் கதைகளை இப்படி கைமா செய்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..மரியாதைக்குரிய அண்ணன் சேலம் கர்ணன் அவர்கள் விஷயம் கேள்விப்பட்டால் ரொம்ப நொந்து போய்விடுவார்.

    மாற்றம் ஒன்றே மாறாதது.வெளிவரவுள்ள வரலாற்று சிறப்புமிக்க LMS இதழில் கதை தேர்வுகளில் சில மாற்றங்களை நிச்சயம் செய்வீர்கள் என நம்புகிறேன்!!!

    ReplyDelete
    Replies
    1. //கேப்டன் டைகரை மீண்டும் துண்டு போடுவது.மார்சல் டைகர் உள்ளதோ மூன்று கதைகள்.அதை ஒரே இதழாக சூப்பர் 6 இதழ்களில் வெளியிடலாமே ஸார்..? மீண்டும் மீண்டும் ஒரே தவறை ஏன் செய்கிறீர்கள் என்று புரியவில்லை.( இதில் பூனையாரின் சதி கிதி ஏதேனும் உள்ளதா;-) டைகர் கதைகளை இப்படி கைமா செய்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..//
      +1..
      dont split the stories sir

      Delete
    2. +1

      Please publish complete Marshal blueberry series and make the special 1000 pages sir.

      I have sent my subscription fees of Rs.1320 for super six

      Delete
    3. சாத்தான்ஜி & friends :

      சற்றே பொறுமையோடு ஹாட்லைன்-2 ஐப் படிக்க முனைந்திருக்கும் பட்சத்தில் நிச்சயமாய் இந்த சலனம் உங்களுள் எழுந்திருக்காது ! மார்ஷல் டைகரின் முதல் இரண்டு கதைகள் மாத்திரமே ஓவியர் வான்சின் ஆக்கங்கள் & அவை தொடர்கதைகளுமல்ல ! கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் வருட இடைவெளியினில் தயாரிக்கப்பட்ட தனித் தனிக் கதைகள் இவை. So இது போன்றதொரு combo -வில் முதல் கதையினை இணைப்பதால் சிக்கல் ஏதும் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை !

      தவிர இத்தொடரின் கதை # 3 - ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பின் புதியதொரு ஓவியரின் கைவண்ணத்தில் வெகு சுமாராய் வெளி வந்து அத்தோடு மூட்டையும் கட்டப்பட்டது ! ஆகையால் இவை மூன்றையும் ஒன்றாகவே இணைக்கும் அவசியம் நிச்சயம் கிடையாது ; அவ்விதம் நிகழப் போவதுமில்லை !

      மாற்றமின்மை கூட நம்மைப் பொருத்த வரை ஒரு மாற்றம் தானே ?

      Delete
    4. //...ஒருவரை கழற்றிவிட்டு நமது உட்சிட்டி போலீஸ்காரர்களை களம் இறக்கினால் தேவலாம்...//

      நானும் வுட் சிட்டி கோமாளிகளின் பரம ரசிகன் தான் .... ஆனால் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டதில் யாரையும் கழற்றி விடவேண்டாம்.. புதிதாக கிட் ஆர்டின் + டாக் புல் & ஒரு சூப்பர் மாடஸ்டி கதை சேர்த்து 1000 பக்கங்களில் வந்தால் மிக்க மகிழ்ச்சி

      Delete
  58. லக்கி லூக் கதை மட்டும் படிக்க நேரம் கிடைத்தது. வசனங்கள் Fluent'ஆக / நன்றாக இருந்தது, ஜுனியர் எடிட்டர் deserves more contributions!

    @விஜயன் சார், லயன் 30 ஆவது ஆண்டுமலரின் சைஸ் (அகலம்) குறைவது டெக்ஸ் / போனெலி கதை வரிசைகளுக்குப் பொருந்தினாலும் மற்ற கதைகளுக்கு ரிஸ்க் எடுக்கிறோமோ எனத்தோன்றுகிறது. வில்லியம் வான்ஸ் சித்திரங்களுடன் வரும் டைகர் கதை, லக்கி லூக் கதை மற்றும் ரின்டின் ஆகிய மூன்றும் பெரிய சைஸில் வராமல் போவது ஒரு இழப்பாகத் தோன்றுகிறது. ஏதாவது செய்யமுடியுமா சார்?

    வான்ஸ் வரைந்த டைகர் கதைகள் இரண்டும் தனித்தனி கதைகளா சார்? அப்படி இருந்தால் ஒரேவொரு கதையை ஸ்பெஷலில் பயன்படுத்துவது பரவாயில்லை, ஆனால் தொடராக இருப்பின் இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து வெளியிடலாம் அல்லது ஸ்பெஷலிலிருந்து பிரித்துவிடலாம். ஸ்பெஷல் என்கிற வழிமுறை வாசிப்பை Enhance செய்வதாக அமைந்தால் சிறப்பு - இல்லாவிட்டால் Valuable'ஆன கதைகள் சற்று சுருதி குறைந்து வாசகரை சென்றடையும்.

    ReplyDelete
    Replies
    1. //@விஜயன் சார், லயன் 30 ஆவது ஆண்டுமலரின் சைஸ் (அகலம்) குறைவது டெக்ஸ் / போனெலி கதை வரிசைகளுக்குப் பொருந்தினாலும் மற்ற கதைகளுக்கு ரிஸ்க் எடுக்கிறோமோ எனத்தோன்றுகிறது. வில்லியம் வான்ஸ் சித்திரங்களுடன் வரும் டைகர் கதை, லக்கி லூக் கதை மற்றும் ரின்டின் ஆகிய மூன்றும் பெரிய சைஸில் வராமல் போவது ஒரு இழப்பாகத் தோன்றுகிறது. ஏதாவது செய்யமுடியுமா சார்?//
      +1

      Delete
    2. Ramesh Kumar : எதிர்பார்த்த எண்ணச் சிதறல்களே...! ஆனால் சாத்தியமான practical தீர்வு கிடையாதெனும் போது - சின்னதான compromise அவசியமே !

      Out and out இத்தாலிய ஸ்பெஷலாக உருவாக்கலாமெனில் - அவர்களிடம் காமெடி cupboard சுத்தமாய்க் காலி ! பிரான்கோ பெல்ஜிய அளவுகளுக்கு டெக்சும் சரி ; மார்டின் ; ராபின் குழுவும் சரி - ஒத்து வர மாட்டார்கள் என்பதால் அந்த மார்க்கமாய்த் திரும்புவதும் இயலாக் காரியம் !

      பிரான்கோ பெல்ஜியக் கதைகள் தான் நாம் day in day out பார்த்து வரும் கதைகளும் கூட என்பதால் - ஒரு ஸ்பெஷல் இதழில் திரும்பவும் அவற்றையே கலந்தடித்து repeat செய்வதில் பெரியதொரு ஈடுபாடு எனக்குத் தோன்றவில்லை !

      Delete
    3. Ramesh Kumar : //லக்கி லூக் கதை மட்டும் படிக்க நேரம் கிடைத்தது. வசனங்கள் Fluent'ஆக / நன்றாக இருந்தது, ஜுனியர் எடிட்டர் deserves more contributions!//

      கனிவான வார்த்தைகள் ! Thanks indeed !

      Delete
    4. // பிரான்கோ பெல்ஜியக் கதைகள் தான் நாம் day in day out பார்த்து வரும் கதைகளும் கூட என்பதால் - ஒரு ஸ்பெஷல் இதழில் திரும்பவும் அவற்றையே கலந்தடித்து repeat செய்வதில் பெரியதொரு ஈடுபாடு எனக்குத் தோன்றவில்லை! //

      +1 ஏழு வெவ்வேறு genre / color கதைகளுக்கு இடமளிக்க முடிந்ததே ஒரு rare opportunity - utilized well! ;)

      Delete
  59. அறிவிப்புகள் எல்லாமே கலக்கல்... என்னை போன்ற பதிவு தபால் பாவிகளுக்கான இந்த updation க்கு ஒரு நன்றி...
    900 பக்கங்கள்... நினைத்தாலே இனிக்கிறது.... 3 நாள் தூக்கம் போய்விடும்...(ரத்த படலத்திக்கு முழுதாக 102 மணி நேரம் பிடித்தது)
    கதைகள் ஒவ்வொன்றும் ஆர்வத்தை தூண்டுகிறது... புது வரவுகளுக்கும், மீள்வரவுகளுக்கும் காத்‌த்திருக்கிறேன்....சில குறைகள் (மனக்குறை தான்) இல்லாமல் இல்லை..

    மாடஸ்தி, காரிகான், ரிப் கிர்பி இல்லாதது ஒரு ஏமாற்றம் ... ( கடைசிக்கு ஒரு VRS ஸ்பெஷல் அறிவிப்பு இருந்தாலும் ok தான்...)

    அப்புறம் தங்க தலைவனுக்கு வெறும் 44 பக்கத்தை மட்டும் ஒதுக்கியது... (மார்ஷல் புளுபெர்ரியின் 3 கதைகளையுமே போட்டு ரௌன்ட்டாக 1000 பக்கமாக செய்திருக்கலாம்... மின்னும் மரணத்தின் பொருட்டு இந்த இருட்டடிப்பை பொறுத்து கொள்கிறோம்)
    ஆயிரம் இருந்தாலும் சரி , 900 மாகவே இருந்தாலும் சரி... இந்த தூக்கத்தை கெடுக்க போகும் தலையனைக்காக காத்திருக்க ஆரம்பித்த்து விட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. //அப்புறம் தங்க தலைவனுக்கு வெறும் 44 பக்கத்தை மட்டும் ஒதுக்கியது... (மார்ஷல் புளுபெர்ரியின் 3 கதைகளையுமே போட்டு ரௌன்ட்டாக 1000 பக்கமாக செய்திருக்கலாம்//
      +1

      Delete
    2. //மாடஸ்தி, காரிகான், ரிப் கிர்பி இல்லாதது ஒரு ஏமாற்றம் ... ( கடைசிக்கு ஒரு VRS ஸ்பெஷல் அறிவிப்பு இருந்தாலும் ok தான்...)//
      Super 6 la last story for tehm only

      Delete
    3. //மாடஸ்தி, காரிகான், ரிப் கிர்பி இல்லாதது ஒரு ஏமாற்றம் ... ( கடைசிக்கு ஒரு VRS ஸ்பெஷல் அறிவிப்பு இருந்தாலும் ok தான்...)//

      RIP கிர்பி ஸ்பெஷல் போடலாம்! :D

      Delete
    4. // RIP கிர்பி ஸ்பெஷல் //

      ஹா ஹா ஹா! ;D

      Delete
  60. LMS ஐ நேரில் புத்தக கண்காட்சியில் ஆசிரியர் கையால் வாங்கலாம் என்றிருந்தேன் ... சந்தா கட்ட வேண்டியது தானா???

    ReplyDelete
    Replies
    1. Rummi XIII : அங்கேயும் ஒரு பிரதி வாங்கி விட்டால் போச்சு ?!

      Delete
  61. FROM MURUGAN AKA SPIDER,
    SIR I RECEIVED THE BOOKS TODAY EVENING.WHAT A SURPRICE AS I EXPECTED THESE ONLY APRIL 3RD.IT TOOK NEARLY 3 HOURS FOR ME TO COME OUT OF THIS EXTRAORDINARY ANNOUNEMENT.MY GOD 900 PAGES FOR JUST 500 RUPEES....U ALONE CAN DO THESE WONDERS.I NEVER EVER THOUGHT ANYONE CAN SURPASS THE QUALITY AND QUANTITY OF ONE AND ONLY JUMBO SPECIAL INCLUDING US{LION COMICS}.THOUGH THE LAND MARKS ARE FOR SURPASSSING THIS IS SOO TOUGH FOR ME TO BELEIVE.QUITE AN COMIC TREAT IS AWAITING FOR THE DIE HARD COMIC FANATICS LIKE ME.I HAVE NO WORDS TO THANK FOR THIS LMS.I AM SHELL SHOCKED.EAST OR WEST OUR EDI IS BEST.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் முருகன் !

      ST கூரியர் இம்முறை உங்களையும், எங்களையும் கவிழ்க்கவில்லை என்பதில் கூடுதல் சந்தோஷம் !

      Delete
    2. // MY GOD 900 PAGES FOR JUST 500 RUPEES....U ALONE CAN DO THESE WONDERS //

      +1

      ஹா ஹா! இப்பதான் (தாமதமாக) விலை கண்ணில் பட்டது! 568 Color + 332 B&W Pages!

      Delete
  62. நான் சொல்வதெல்லாம் உண்மை !

    டியர் விஜயன் சார்,

    என் மனதில் எழும் காமிக்ஸ் எண்ணங்களையும் ; அதன் ஆதங்கங்களையும் வேறு எவரிடம் தான் நான் கூற முடியும் ? ஏனெனில், என் வீட்டில் தமிழ் காமிக்ஸ் படிப்பது நான் ஒருவன் மட்டுமே. லயன் காமிக்ஸ் என் வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் என்றால் அதுவே சரியான உதாரணமாக இருக்க முடியும். எனவே தான் இந்த பதிவு !

    இன்று எனக்கு புத்தகம் கிடைத்த முதல் 7200 நொடிகளில் என் எண்ணம் எல்லாம் - 900 பக்கங்களில் வெளிவரவிருக்கும் 'The லயன் MAGNUM ஸ்பெஷல்' புத்தகத்திற்கு எத்தனை சந்தா கட்டலாம் என்ற சிந்தனையில் தான் அலைபாய்ந்து கொண்டிருந்தது. உள்ளது உள்ளபடி கூற வேண்டுமெனில், 7ற்கு பணம் கட்டலாமா அல்லது 5ற்கு பணம் கட்டலாமா என்ற குழப்பத்தின் உச்சியில் இருந்தேன் என்பதே சத்தியமான வார்த்தைகள். [என்னிடம் NBS 8 புத்தகங்கள் உள்ளது ]

    எத்தனை (ஒரே) காமிக்ஸ் புத்தகம் என் வீட்டிற்கு வந்தாலும் எனக்கு எந்த பிரச்சனையும் என் வீட்டில் ஏற்படாது என்பதை, எனக்கு கடவுள் அளித்த வரமாக கருதுகிறேன். ஆனால் தொடர்ந்த 7201 நொடியில் தான் புத்தகத்தின் அளவை பார்த்தேன் ; உண்மையில் என் மனம் நொந்தே போய்விட்டது என்பது உண்மையிலும் உண்மை. தற்போது என் முடிவில் எத்தகையை மாற்றத்தை எடுப்பது என்ற சிந்தனையில் என் மனதில் அமைதி என்பதே இல்லாமல் போய் விட்டது. நானே 7 அல்லது 5 புக்ஸை வாங்கலாமா அல்லது 4 அல்லது 2 வாசகர்களுக்கான சூப்பர் 6 ! - புத்தகத்திற்கான சந்தா கட்டி விடலாமா என்று மனதினில் எழுகின்ற எண்ணத்தை தவிர்க்க இயலவில்லை.

    எனவே வேறு யாரவது இங்கு விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கான 2014 - சூப்பர் 6 ! - ற்கான சந்தா தொகையினை [ 4 x 1320 ] கட்டி என் மனதில் அமைதி காண விழைகிறேன். என் ஆசை நிறைவேறினால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். பொதுவில் விருப்பம் தெரிவிக்க தயக்கம் கொள்ளும் நண்பர்கள் என்னுடைய email முகவரியான - maramandaiii@gmail.com ல் விருப்பம் (விலாசத்துடன்) தெரிவித்தால் அவர்களுக்கான 2014 - சூப்பர் 6 ! - தமிழக சந்தா தொகை [ 1320 ] - மே மாதம் முதல் வாரத்தில் அந்தந்த வாசகர் பெயரில் செலுத்தப்படும் என்பதை இங்கு உறுதி கூறுகிறேன். நன்றி !

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. டியர் மரமண்டை!!!

      என்ன சொல்வதென்றே தெரியவில்லை.காமிக்ஸ் மீதான தங்கள் காதல் மெய்சிலிர்க்க வைக்கிறது.மற்ற நண்பர்கள் பெயருக்கு சந்தா செலுத்துவதைவிட தங்கள் ஊரிலுள்ள நூலகத்திற்கு ஒரேயொரு சந்தா செலுத்தலாமே ஸார்...?நமது காமிக்ஸ்களை பலரும் படிக்க அது உதவிகரமாக இருக்குமே!!!

      Delete
  63. சார், சிங்கத்தின் சிறு வயதில் தொகுப்பு எப்போது., போராட்டக்குழு உறுப்பினர்கள் ஆரம்பிக்கலாம்.

    ReplyDelete
  64. சிக்பில் இல்லாதது குறையே...

    ReplyDelete
    Replies
    1. ESS : காரணம் இல்லாதில்லை ! சந்தர்ப்பம் அமையும் போது அறியச் செய்வேன் !

      Delete
  65. டியர் விஜயன் சார்,

    சூப்பர் 6-ல் என்னைக் கவர்ந்த அறிவிப்புகள்:
    > இரண்டு புக் ஃபேர் ஸ்பெஷல்கள் - நான்கு தனித் தனி இதழ்களாக... அருமை!
    > மேக்னம் ஸ்பெஷல் - பெயர் நன்றாக உள்ளது!

    மில்லியன் ஹிட்ஸ், தீபாவளி & கிங் ஸ்பெஷல் - இவை மூன்றும் கதம்பமாக இல்லாமல், மூன்று பாக (மில்லியன் & தீபாவளி) அல்லது முழு நீள டெக்ஸ் (கிங்) தனிக் கதைகள் அடங்கிய ஸ்பெஷல் இதழ்களாக வந்தால் சிறப்பாக இருக்கும்! ஹாவ்.... கொர்...

    பின் குறட்டை: 900 பக்க 'ஒரு செடி, ஒன்பது flower' ஸ்பெஷலை விரித்து வைத்துப் படிக்க வசதியாக புக் ஸ்டாண்ட்டும்; அதில் இடம் பெறும் மூன்று பெல்ஜிய ஆல்பங்களைப் படிக்க ஒரு பூதக் கண்ணாடியும் ஃபிரீயாகத் தருவீர்களா சார்?! :)

    ReplyDelete
    Replies
    1. Karthik Somalinga : டைஜெஸ்ட் format -லும் பிரான்கோ பெல்ஜியக் கதைகளை வெளியிடும் படைப்பாளிகளிடமோ , இதர மொழிப் பதிப்பகங்களிடமோ பூதக் கண்ணாடி ஸ்டாக் நிச்சயமாய் இருக்கும் ; கதைகளைத் தருவிக்கும் போது அவற்றில் கொஞ்சத்தையும் சேர்த்துக் கேட்டால் மாட்டேன் என்றா சொல்லப் போகிறார்கள் ?

      "பூதக் கண்ணாடி- handle with care !" என்ற சீல் அடித்து பத்திரமாய் அனுப்ப ஒரு கூரியரைத் தேடினால் பிரச்னை தீர்ந்தது !

      Delete
    2. டெக்ஸ் வில்லர் கதைக்குள் பூதம் Include செய்யப்படாதவரை இல்லாதவரையில் சந்தோஷம் :D

      Delete
    3. டியர் விஜயன் சார்,

      கதம்ப ஸ்பெஷல்களைப் பற்றிய, பதில் தெரிந்த கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்பதன் மூலம் என் நேரத்தையும், அதற்கு பதில் சொல்ல நேரும் உங்களின் நேரத்தையும் பாழாக்க வேண்டாம் என்பதில் தீர்மானமாக இருந்தேன்! இருந்தாலும், மேக்னம் ஸ்பெஷலின் Format மற்றும் Content Selection-க்கான எதிர்ப்பை நாசூக்காக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக, sarcastic tone-ல் சின்னதாக ஒரு கமெண்டு போட்டேன்! மற்றபடி, No offense meant! :)

      PS (Post Sarcasm): புத்தக ஸ்டாண்டாக, என்னுடைய லாப்டாப் ஸ்டாண்டையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்! :) பாக்கெட் சைஸிலும் பெல்ஜிய ஆல்பங்களை படித்த முன்னனுபவம் இருப்பதால் பூதக்கண்ணாடியும் கேன்சல்! ;) இலவசம் தவிர்ப்பீர், நெஞ்சம் நிமிர்வீர்! :D

      Delete
  66. 500 ரூபாய்க்கு 900 ம் பக்கங்கள் என்பது தேர்தல் இலவசங்களை விடவும் கவர்ச்சிகரமான அறிவிப்பாக உள்ளது. பிக் பாஸ் டெக்ஸுக்கு 228 பக்கங்கள் என்பது குறைவானதுதான்; என்றாலும் ''மேக்னம் ஸ்பெஷல்'' அறிவிப்பு சந்தோஷமான செய்தி. மிக்க நன்றி சார் !

    ReplyDelete
  67. Dear எடிட்டர்,

    லயன் ஆண்டு மலர் (Lion Magnum ஸ்பெஷல்) கதை அறிவிப்புகள் அருமை, அட்டகாசம் ... அத்துடன் கிட் ஆர்டின் + டாக் புல் & ஒரு சூப்பர் மாடஸ்டி கதை சேர்த்து 1000 பக்கங்களில் வந்தால் இன்னும் சூப்பர் :)

    சூப்பர் 6 - அறிவிப்புகளும் சூப்பர்... சந்தா அனுப்பியாயிற்று

    லக்கி லூக் - எதிர் வீட்டு எதிரிகள் - trade mark காமெடி quotent சிறிது கம்மியாக (எனக்கு மட்டும் தானா?) இருந்தாலும், மொழிபெயர்ப்பு நன்றாக வந்துள்ளது. திரு விக்ரம்/திரு பிரகாஷ் மொழிபெயர்ப்பு serious, action கதைகளுக்கு இன்னும் better ஆக இருக்குமோ?

    வேய்ன் ஷெல்டன் - எஞ்சி நின்றவன் கதை - மிக விறுவிறுப்புடன், ஹாலிவுட் action movie போல நன்றாகச் சென்றது ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன்

    ReplyDelete
  68. ஆகஸ்ட் மாதம் மலரவிருக்கும் லமேஸ் இதழ் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.NBS போல இந்த இதழும் நிச்சயம் ஒரு மைல் கல் இதழாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

    உங்கள் வாக்கு லமேஸுக்கே !!!

    ReplyDelete
  69. அருணாசலம் படத்தில் வரும் சிங்கம் ஒன்று புறப்பட்டதே என்ற பாடல் தான் அறிவுப்புகளை பார்த்தால் பாட தோணுது, 500 விலை அறிவிப்பு ஒரு இன்ப அதிர்ச்சி தான்

    ReplyDelete
  70. டியர் எடிட்டர்,

    நிஜமாகவே அசத்திவிட்டீர்கள்!!!!
    * 900+ பக்கங்கள்
    * 9 கதைகள்
    * 3 ல் 2 பங்கு வண்ணத்தில்
    * மாறுபட்ட genreக்களில்
    * மெய்யாலுமே 'தலையணை சைசில்'
    * மீண்டும் ராபின் - அதுவும் வண்ணத்தில
    *  தொடர்கள் அல்லாத தனிக் கதைகள்
    'வழக்கத்தைவிட ரொம்பவே உற்சாகமா இருக்கீங்களே விஜய்! வீட்டிலே எல்லோரையும் ஊருக்கு அனுப்பிட்டீங்களோ?' என்று மற்றவர்கள் கேட்குமளவுக்கு இன்று முழுக்கவே உற்சாகத்தில் மிதந்து கொண்டிருக்கிறேன்.
    * மேக்னம் ஸ்பெஷல் - மிகப் பொருத்தமான, க்யூட்டான தேர்வு!
    * 900+ பக்கங்கள் என்பதை சத்தியமாகக் கனவிலும் நினைக்கவில்லை! 9 கதைகள் என்பதும் இன்ப அதிர்ச்சியே! நம் வாசக நண்பர்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிகமான பக்கங்கள் மற்றும் கதைகளைக் கொடுத்து வியப்பில் ஆழ்த்தியிருக்கிறீர்கள். நன்றிகள் பல!

    இனி, சிறு குறைகளாகத் தெரிவன:
    * வழக்கமான பெரிய சைஸ் இல்லாதது
    * முத்துவின் முடிசூடா மன்னன் கேப்டன் டைகர் போட்டியின்றி தேர்வானதும், வுட்சிட்டியின் அப்பாவிக் கும்பல் அநியாயமாக வெளியேற்றப்பட்டிருப்பதும
    * The Lion magnum special என்ற தலைப்பில் 'The' என்பது (உச்சரிக்கப்படும்போது) சற்றே ஒட்டாமல் தெரிவது

    மேற்கூறிய சிறிய குறைகளும்கூட உங்கள் தரப்பு நியாயத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருக்கின்றன.

    அப்புறம்... ஒரு சிறு வேண்டுகோள்:
    * ஆனது ஆச்சு, 900+ பக்கங்களோடு இன்னும் கொஞ்சம் சேர்த்து 1000 பக்கங்கள் என்றால் 'தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் முதல் முறையாக ஆயிரம் பக்கங்களில் ஒரு காமிக்ஸ் புத்தகம்' என்ற வரலாற்றுச் சிறப்பையும் சேர்த்துக் கொள்ளலாமே? 9 கதைகளோடு இன்னும் ஒன்றைச் சேர்த்து 'பத்து கதைகள், ஆயிரம் பக்கங்கள்' என்றாக்கிக் கொள்ளுங்களேன்? விலை சற்று கூடினாலும் வருத்தமில்லை!

    மொத்தத்தில் - மனசு நிறைஞ்சு கெடக்குது போங்க! :)

    ReplyDelete
    Replies
    1. // 9 கதைகளோடு இன்னும் ஒன்றைச் சேர்த்து 'பத்து கதைகள், ஆயிரம் பக்கங்கள்' என்றாக்கிக் கொள்ளுங்களேன்? விலை சற்று கூடினாலும் வருத்தமில்லை! // +1.

      இந்த யோசனையை செயல்படுத்திட முடியுமா,விஜயன் சார்?

      // So - இந்த இதழ் நிறைய விதங்களில் ஒரு one-off என்பதை இங்கே நான் அடிக்கோடிட்டிட விரும்புகிறேன் ! 'இத்தனை பக்கங்களுக்கு இத்தனை ரூபாய் ; இதுக்கு இன்னும் ஜாஸ்தியாக இருந்திருக்கலாம் ; அல்லது இதே பார்முலாவின்படிப் பார்த்தால் தொடரும் இதழ்களிலும் இத்தனை பக்கங்கள் இருந்தாக வேண்டுமே !' என்ற ரீதியிலான எந்தவொரு திட்டமிடல்களும் பொருந்திடாது ! This is just an one-off ! // என்று நீங்கள் முதலிலேயே சொல்லி இருந்தாலும்

      N.B.S போலவே 10 கதைகள் லயன் ஆண்டு மலரிலும் இருக்கும் என்றே எதிர்பார்த்திருந்தேன்

      Delete
  71. LMS அறிவிப்புகளில் பார்த்தவுடன் 'அட!' சொல்ல வைத்த தலைப்புகள்:

    * சட்டம் அறிந்திரா சமவெளி
    * இறந்த காலம் இறப்பதில்லை
    * அதிர்ஷ்டம் தரும் அண்ணாத்தே... (தலைப்பே சிரிக்க வைக்கிறது) :)

    ReplyDelete
    Replies
    1. // அதிர்ஷ்டம் தரும் அண்ணாத்தே... //

      ரின்டின் அண்ணாத்தை கதையின் டைட்டில்தான் என் Favourite :D

      Delete
  72. பரணில் போடப்பட்ட டெக்ஸின் 'காவல் கழுகு' - சூப்பர் சிக்ஸில் மீண்டு வந்திருப்பதும் எதிர்பாரா இன்ப அதிர்ச்சியே!

    ReplyDelete
  73. அடுத்த மாத வெளியீடுகள் டெக்ஸ் + தோர்கல் + முதலைப் பட்டாளம் = 340 பக்கங்கள் (approx) என்பதும் கூடுதல் இன்ப அதிர்ச்சியே!

    டெக்ஸ் 'சம்மர் ஸ்பெஷல்' என்ற டைட்டிலை தாங்கி வருகிறாரா சார்?

    ReplyDelete
  74. * LMS அறிவிப்பு தூள் - கதைகளில் நல்ல ஒரு variety
    * 900 பக்கங்கள் 9 கதைகள் மிக அருமை
    * 3 புது வரவுகள் - Dylan Dog, Detective Julie, Rin Tin Can
    * Dylan Dog, Detective Robin, Detective Julie, மர்மமனிதன் மார்டின் - நீண்டநாள் Detective stories கோரிக்கை நிறைவேற்றியதற்கு நன்றி
    * Rs 500 - கவர்ச்சியான விலை, 900 பக்கங்கள் 500 ரூபாயுக்கு நிச்சயமாக Bargain
    * ஒரே minus சைஸ் தான்

    * Super Six - கலக்கல் அறிவுப்புகள்.

    ReplyDelete
  75. எடிட்டர் சார்,

    சூப்பர் 6 விளம்பரங்கள் துள்ளி குதிக்க வைக்கிறது. எண்பதுகளின் இறுதிதான் காமிக்ஸின் பொற்காலம் என்பது போய் இதுதான் காமிக்ஸின் பொற்காலம் என்று சொல்ல தோன்றுகிறது.

    ReplyDelete
  76. Excellent announcement! You are rocking sir.. Transferred money to your account :-)

    A BIG Thank You for all your efforts.

    ReplyDelete
  77. சார் அட்டகாசமான கதைகளுடன் , அருமையான பெயர் தாங்கி வரும் மேக்னம் ஸ்பெசல் அருமை ! விளம்பரங்களை மட்டும் எடுத்து எடுத்து பார்த்து கொண்டிருந்தேன் ! அந்த காலம் அற்புதமாய் தெரிகிறது கோடையில் கூட வசந்தமாய்!

    எல்லோரும் கூறி விட்டார்கள் எனினும் எனது எண்ணமும் தங்களுக்கு தெரிய வேண்டுமே !
    ஐநூறு விலையில் தொள்ளாயிரம் பக்கங்கள் , வண்ணம் , கருப்பு வெள்ளையில் ஜாலங்கள் அசத்தி விட்டீர்கள் !
    ஒரே குறை சிறிய சைஸ் ! டெக்ஸ் இதில் வண்ணத்தில் பெரிதாய் தெளிவாய் பார்க்கலாம் என இருந்தேன் ! பரவா இல்லை ! ஆனால் டைகர், ரின் டின் , லக்கி லுக் போன்ற கதைகள் சுருக்க படுவது வருத்தமளிக்கிறது ! ஆனால் இந்த மெகா இதழுக்காக தாங்கி கொள்கிறேன் ! இனி மேல் பெரிய பக்கம் கொண்ட கதைகளை சுருக்கி விடாதீர்கள் !
    நீங்கள் கேட்க வேண்டாம் என கூறினாலும் என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை ! ஒரு மாபெரும் கொண்டாட்டத்தில் ஸ்பைடர் , ஆர்ச்சி இல்லை என்றால் எப்படி ! கடவுள் இல்லாமல் கோயிலா ! ஸ்பைடரின் அந்த கதையில் ஏக்க பார்வை கொண்டு மனம் கனத்து கடந்து செல்கிறேன் !
    மாற்றமே என்றும் மாறாதது என்பதற்கிணங்க டைகருக்கு லயனின் மனதில் மட்டும் இடம் ஒதுக்காமல் புத்தகத்தில் இடம் ஒதுக்கிய தங்களுக்கு ... சிங்கத்தின் சிறு வயதில் நீங்கள் கூறியது போல தீபாவளி சூப்பர் ஸ்பெசலுக்கு யாரை தேர்வு செய்து அசத்தலாம் என திணறிய பொது கை கொடுத்த லாரன்சும் டேவிட்டும் இரு கண் கொடுக்க தவறி விட்டார்களே எனும் பொது ஆற்றாமையாய் பெருமூச்சு வெளி படுகிறது !
    சிகத்தின் சிறு வயதில் அருமை ; ஒரே புத்தகத்திற்கு எத்தனை பக்கங்கள் எழுதுகிறீர்கள் ! சுவாரஸ்யமாய் நீட்டி செல்லும் உங்களது உழைப்பு, துணிச்சல் கலந்த நீளும் அந்த பக்கங்கள் உங்கள் எழுத்தின் வலிமையையும் , காமிக்ஸ் மேல் நாங்கள் கொண்ட நேசத்தையும் காட்டுகிறது !
    சூப்பர் சிக்சில் கார்சனின் கடந்த காலம் ,
    கார்சனின் கடந்த காலம் ,
    கார்சனின் கடந்த காலம் ,
    கார்சனின் கடந்த காலம் ,
    கார்சனின் கடந்த காலம் ,
    கார்சனின் கடந்த காலம் இடம் பெற வாய்ப்பில்லை எனும் போது நீர்த்து போன சூப்பர் சிக்ஸ் சூப்பர் ஃ பைவ் என அடர்த்தியாக்க பட்டு வந்தால் அக மகிழ்வேனே !

    ReplyDelete
  78. 900 பக்கங்கள், அதுவும் 500 ரூபாய் விலையில்??? பத்திரிகை உலகின் பிரமாண்டம்மான சாதனையாக இருக்க போவது உறுதி. நீங்கள் காமிக்ஸ் உலகின் சச்சின் என்பதை மறுபடியும் நிருபித்து விட்டீர்கள். இன்னும் சாதனை பல செய்ய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார். Hats off to you Vijayan sir.:) :) :)

    ReplyDelete
  79. இரவு புத்தகத்தை பார்த்தவுடன் அளவில்லா சந்தோசம் ......
    lms அறிவிப்பை பற்றிய எனது எண்ணங்கள் ...

    500 விலையில் 900 பக்கங்கள் ...வாவ் ...அட்டகாசம் சார் ..எனக்கு பெரிய சைஸ் இல்லை என்ற வருத்தம் இல்லை .இந்த அளவில் குண்டு புத்தகத்தை பார்க்க ஆவலோடு காத்து கொண்டு இருக்கிறேன் .என்ன 900 பக்கம் என்பதால் பைண்டிங்கில் ப்ராப்ளம் இல்லமால் பார்த்து கொள்ளுங்கள் சார் .பிரித்து படிக்கும் போது வசதியாக இருந்தால் சரி .

    கதை முடிவுகளை பற்றிய எனது கருத்து....
    டெக்ஸ் ......சொல்ல தேவை இல்லை ...எனது சூப்பர் ஸ்டார் அவர் ....200 பக்கம் மேல் அதுவும் வண்ணத்தில் ....சூப்பர்

    ராபின் ......முதன் முறை வண்ணத்தில் ஆவலோடு காத்து கொண்டு இருக்கிறேன் .ராபின் கதை அனைத்தும் நான் விரும்பியவை...என்ன ஒன்று அப்போது சில ராபின் கதைகள் சித்திரம் சுமாராக இருக்கும் ..சில அதகள படுத்தும் ...இந்த முறை " சித்திரம் " அட்டகாசமாக இருந்தால் ஓகே ...

    லக்கி ....சொல்ல தேவை இல்லை ...அனைவரின் ஓட்டு இவருக்கு எப்போதும் உண்டு ...

    ரின் -டின் .....இவரையும் ஆவலோடு காத்து கொண்டு இருக்கிறோம் ...அதுவும் ஹாட் -லைனில் உங்கள் கருத்தை பார்த்தவுடன் எதிர் பார்ப்பு அதிகம் ..
    டைகர் ......முத்து ஹீரோ என்றாலும் ஓகே ..இரண்டு ..மூன்று பாகம் என நீங்கள் சொன்னது தான் இங்கே குழப்பம் ..தனி தனி கதை என்றால் ஓகே .இனி விளம்பரத்தில் "டைகர் " கதையில் முழு நீள சித்திரக்கதை என்று விளம்பரம் செய்தால் எங்களுக்கு குழப்பம் வராது ..

    ஜூலியா ....புது ஹீரோயின் ..ஓகே தான் ..ஆனால் இவருக்கு பதிலாக " மாடஸ்தி " வந்து இருக்கலாமோ என்ற எண்ணமும் வருகிறது ..

    மார்டின் ....ஒரு சில கதையை தவிர எனக்கு இவரின் மீது விருப்பம் இல்லை என்றாலும் இந்த விளம்பர படம் ஆவலை தூண்டுகிறது.

    புது த்ரில்லர் நாயகர் "டைலன் ' அவர்களையும் ஆவலோடு எதிர் பார்க்க வைக்கிறார் .

    கிராபிக் நாவலா என்று திகைக்கும் பொது கூட " ஆக்சன் " என்று இணைத்தீர்களே ...அங்கே தான் நீங்கள் நிற்கிறீர்கள் ...

    மொத்தத்தில் எனக்கு இதில் எந்த குறையும் தெரிய வில்லை ...ஒரே குறை இந்த ஆகஸ்ட் மாதம் எப்போது வரும் என்பது தான் ...

    இந்த மாதம் வந்த இதழ்களை இரவு முழுவதும் " கதையை தவிர மற்ற பக்கங்களை பார்க்க தான் கண்கள் சென்றதால் படித்த பின் தான் கதைகளை பற்றி சொல்ல வேண்டும் .உள்ளே சித்திர தரம் ..அச்சு தரம் அனைத்தும் ஓகே ..படித்து விட்டு மீண்டும் வருகிறேன் சார் ..

    ReplyDelete
    Replies
    1. //கிராபிக் நாவலா என்று திகைக்கும் பொது கூட " ஆக்சன் " என்று இணைத்தீர்களே ...அங்கே தான் நீங்கள் நிற்கிறீர்கள் ...//
      உங்கள் கடிதத்துடன் திகிலாய் ஆசிரியர் நிற்கிறார் என திருத்தி கொள்ளுங்கள் !

      Delete

  80. விஜயன் சார், லக்கி லூக் கதை இன்று காலை அலுவலகம் புறப்படும் முன் படித்து முடித்தேன், வித்தியாசமான கதை! விக்ரமின் மொழி பெயர்ப்பு அருமை, அவரின் ஸ்டைல் சில இடம்களில் அருமையாக பொருந்தி உள்ளது! இந்த ஸ்டைல் குழத்தைகளை கவரும்...ஏன் நமக்கும்தான்! அடுத்து வரும் லக்கி லூக் மற்றும் ரின்-டின் கதைகளுக்கு விக்ரம்க்கு வாய்பு கொடுக்கலாம்! Good job adn Good Start Vikram!

    குறைகள்:
    =======
    பக்கம் 30-ல் (சரியாக ஞாபகம் இல்லை) முதலில் வரும் போர்டுல் ஒ-வாரன்க் என்பதற்கு பதில் ஒ-வில்லிமயம்ஸ் (அதாவது ஒ-வில்லிமயம்ஸ் போர்டு-ஐ மாற்றுவதற்கு முன்னால் ஒ-வில்லிமயம்ஸ் என போர்டுல் இருந்ததை) இருந்த தவறை தவிர வேறு பிழைகள் இல்லை!

    ReplyDelete