Saturday, November 16, 2013

இது வேங்கையின் வேளை !

நண்பர்களே,

வணக்கம். ஆண்டின் இறுதி மாதங்கள் எப்போதுமே எங்களுக்குக் கொஞ்சம் பிசியான சமயங்களாக இருப்பது வழக்கமே ; இம்முறையோ   டிசம்பரில் 1+3 = 4 வெளியீடுகள் என்ற அட்டவணையும் தற்செயலாய் அமைந்து விட்டதால் நெட்டி கழன்று   விட்டது ! ஒவ்வொரு மாதமும் இதழ்களின் தயாரிப்புப் பணிகளை கடைசி நிமிடம் வரை ஜவ்வாய் இழுத்துச் சென்று விட்டு - அச்சுப் பணிகள் நடந்தேறும் சமயங்களில் நான் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு எங்காவது புறப்பட்டுச் செல்வதே வாடிக்கையாகிப் போய் வர -  -printing ல்  நேர்ந்திடும் குளறுபடிகளுக்கு ஒரு வகையில் நானும் பொறுப்பாகி வந்து கொண்டிருந்தேன். இம்முறை அதே தவறைத் தொடர்ந்திடாது, மூச்சு விட அவகாசத்தோடு பணிகளை முடித்து ; அச்சு வேலைகளையும் கொஞ்சமேனும் உடனிருந்து கவனிக்க முடிந்தால் நலம் என்ற வெறியில் செயல்பட்டதால் இவ்வாரம் முழுவதும் எங்கள் டீமுக்கு சிவராத்திரிகளே ! கடந்த 15+ நாட்களாய் நாளொன்றுக்கு 6-7 மணி நேர மின்தடையும் அமலில் உள்ளதால் அதன் பொருட்டு நேரிட்ட விரயச் செலவுகளும், தலைவலிகளும் தம் பங்கிற்கு எங்கள் உறக்கங்களுக்கு உலை வைத்தன ! பொதுவாய் இங்கு நம் வலைப்பதிவினில் நான் எட்டிப் பார்ப்பது இரவு வேளைகளில் ! ஆனால் இந்த ஒரு வாரமாய் வீடு திரும்பும் வேளை கொட்டாவிகளின் ஆர்ப்பரிப்பைச் சமாளிக்கவே இயலாத ஆவிகளின் நடமாட்ட வேளை என்பதால் தாக்குப் பிடிக்க முடியவில்லை ! So ஐந்தாறு நாட்களாய் இங்கு ஆஜராக முடியாது போனதற்கு சாரி guys ...but  சில சமயங்களில் பணிகள் 'கட கட'வென   ஓடிடும் போது நாமும் அந்த flow-ல் இணைந்து கொள்ளாவிட்டால் சிக்கலாகி விடுகிறது !   இங்கு தலை காட்ட இயலாது போன இவ்வொரு வாரத்தினில் - 2013-ன் இறுதி மறுபதிப்பான சிக் பில் இதழையும் ; டைகரின் "வேங்கையின் சீற்றத்தையும் " முடித்து விட்ட திருப்தி கிட்டியுள்ளது ஒரு சின்ன ஆறுதல் ! அவற்றின் அச்சுப் பணிகளும் அடுத்த 3 நாட்களுக்குள் முடிந்திடும் நிலையை எட்டி விட்டதால் கொஞ்சமாய் தலை பாரம் குறைந்துள்ளது போன்ற feeling இன்றைக்கு ! தேசத்தின் விடுதலைக்காகப் பாடுபட்டு ; தியாகங்கள் பல செய்த தீரனாக இந்தப் பத்தியை நான் எழுதிடவில்லை ! ஆண்டின் அட்டவணையினில் -  பெரும்பான்மையான இதழ்களை இறுதி 3 மாதங்களுக்கு ஒதுக்கிய எனது  கோணங்கித்தனமான திட்டமிடல் மாத்திரமே இந்த 'விழி பிதுங்கும் படலத்தின் ' சூத்ரதாரி என்பது தெளிவாய்ப் புரிகிறது ! ஷெரிப் டாக்புல் அடிக்கடி ஆர்டினின் டிக்கியில் விடும் பாணியிலான 'படீர் ' உதையை எனக்கு நானே விட்டுக் கொள்ளவொரு மார்க்கம் இருக்கும் பட்சத்தில், எப்போதோ அதை செயலாக்கி இருப்பேன் ! பணிகளின் பளு ஒருபக்கமெனில் - ஒட்டு மொத்தமாய் 3 அல்லது 4 இதழ்களுக்கு ஒரே மாதத்தில் பேப்பர் வாங்கும் போதும் ; ராயல்டி பணம் அனுப்பிடும் போதும் நேரும் தலைசுற்றல் - தலைமுறைக்கும் நினைவிருக்கும் ரகம் ! ஆனால் ஏதேதோ குட்டிக் கரணங்களும், அந்தர் பல்டிகளும் அடித்தாவது  2013-ன் அறிவித்த எண்ணிக்கையிலான இதழ்களை, உரிய சமயத்தில் பூர்த்தி செய்திடுவோம் என்ற நிம்மதி - சிரமங்களை சிரத்திலிருந்து சிறகடிக்கச் செய்கின்றது ! (அடடே...கவிதை ?!) 

இதோ டிசெம்பரின் ஒரு வெளியீட்டின் அட்டைப் படம் + முன்னோட்டம் : 
Original Cover

டைகரின் அட்டைப்படம் தன் முதலாம் பிறந்த நாளைக் கொண்டாடும் வேளையில் தான் வெளியுலகைப் பார்த்திடும் வாய்ப்புப் பெறுகிறது ! Yes - இந்தாண்டின் முதல் வெளியீடான NBS -ன் அட்டையில் டைகரைப் போடுவது என்று தீர்மானித்த பின்னே - நமது ஓவியரைக் கொண்டு மொத்தம் 3 டிசைன்கள் வடிவமைத்தோம். அவற்றுள் ஒன்றே இப்போது "வேங்கையின் சீற்றத்தின் " அட்டையாக வந்துள்ள டிசைன் ! டைகரின் "எடுப்பான" நாசி துவாரம் closeup -ல் கொஞ்சம் டெரராக இருப்பது போல் பட்டதால் NBS -க்கு இதைப்  பயன்படுத்திடவில்லை ! (NBS -க்கு பயன்படுத்திய டிசைனுக்கு இதுவே தேவலாம் என்ற கருத்துக்கள் நிச்சயம் வரும் என்பதும் எதிர்பார்த்திடாதில்லை!)  பின்னட்டையைப் பொறுத்த வரை - சமீப மாதங்களது பாணியைப் பின்பற்ற இயலாது போனதில் எனக்கும் வருத்தமே ! நமது டிசைனர் பொன்னன் ஆண்டின் இறுதி என்பதால் ரொம்பவே பிஸி ஆகி விட்டதால் - பின்னட்டைக்காக இன்னொரு காத்திருப்புக்கு 'தம்' இல்லை நம்மிடம் ! So நேரம் இன்னமும் விரயம் ஆகிட வேண்டாமே என்ற வேகத்தில் back cover -ல் Heathcliff -க்கு வாய்ப்பளித்துள்ளோம் ! அடுத்த இதழ் முதல் - we will be back to the recent patterns !NBS உடனான ஒட்டுதல் இந்த இதழின் அட்டைக்கு மாத்திரமில்லாது, கதைக்கும்  உண்டு தானே ?! NBS-ல் துவங்கிய 'இருளில் ஒரு இரும்புக் குதிரை"  கதையின் concluding part இது ! So  ஜனவரியின் தொங்கல் - மாதம் # 12-ல் ஒரு முடிவுக்கு வருகிறது ! டைகரின் வழக்கமான பரபரப்பு ; மாறுபட்ட ஓவிய பாணிகள் ; வண்ணச் சேர்க்கைகள் என இதுவொரு ரசிக்கச் செய்யும் இதழாய் அமையுமென்பது உறுதி ! இந்த இதழோடு 2013-ன் பிளஸ் 6 முயற்சி நிறைவுறுகிறது ! வெவ்வேறு சைஸ்கள் ; விலைகள் ; கதைகள் என செயலாற்ற இந்த வரிசை எனக்கு சுதந்திரம் தந்த வகையில் மகிழ்ச்சியே ! பார்க்கலாமே - 2014-ன் பொழுதுகள் மீண்டும் இது போலொரு கதவைத் திறக்கும் சக்தியை நமக்குத் தருகிறதா என்று :-)

2014-ன் அட்டவணைத் தேர்வில் - "கா.க.கா " வண்ணத்தில் என்ற கோரிக்கையைத் தாண்டி நிறைய மாற்றுக் கருத்துக்கள் எழுந்தது இரு விஷயங்களின் பொருட்டு :

1.சிக் பில்லின் "நிழல் 1..நிஜம் 2 " மறுபதிப்புக் கதையின் தேர்வு நிறைய புருவங்களை உயர்ந்திடச் செய்துள்ளது ! இதன் பின்னணியில் உள்ள லாஜிக் ரொம்ப ரொம்ப சிம்பிள் ! தற்போது சிக் பில் வரிசையில் வண்ண டிஜிட்டல் files தயாராக இருப்பது மொத்தம் 14 கதைகளுக்கு மாத்திரமே ! இவற்றுள் நாம் சென்றாண்டு வெளியிட்ட "கமபளத்தில் கலாட்டா" + "ஒரு கழுதையின் கதை" + இப்போது வெளியிடவிருக்கும் "விற்பனைக்கு ஒரு ஷெரிப் "சேரும். So  எஞ்சி இருப்பது 11 ; அவற்றுள் 4 கதைகள் 1958-ல் வெளியான புராதனங்கள் என்பதால் அவற்றை நான் இப்போதைக்குத் தொடப் போவதில்லை ! பாக்கியுள்ள 7 கதைகளில் 6 நாம் இது வரை வெளியிடாத புதுசுகள் எனும் போது மறுபதிப்புப் பட்டியலுக்கென எஞ்சி இருப்பது ஒன்றே ஒன்று தான் ! அது தான்  - "நிழல் 1..நிஜம் 2" ! மேற்கொண்டு கதைகளை வண்ணக் கோப்புகளாய் மாற்றிடும் பணிகளை 2016 வரை அவர்கள் செயல்படுத்திடப் போவதில்லை என்றும் அறிய நேர்ந்தது ! ஆகையால் சிக் பில் மறுபதிப்புக்கு வேறு தேர்வுகள் ஏதும் இல்லை என்ற ஒரே காரணமே - நி.1..நி.2 தேர்வின் பின்னணி !

2.மர்ம மனிதன் மார்டின் + CID ராபின் கதைகளைத் தேர்வு செய்யாத காரணத்தால் 2014-ன் அட்டவணையே சொதப்பல் என நண்பர்கள் சிலர் அபிப்ராயப்பட்டிருந்ததையும் கவனித்தேன் ! சில நேரங்களில் ஒவ்வொரு கதையின் பின்னேயும் ஒரு சொல்லப்படா கதை இருப்பது உண்டு ! நான் நிறைய விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டாலும், சிற்சில சந்தர்ப்பங்களில் என் பக்கத்துச் சிரமங்களை முழுமையாய் வெளிப்படுத்துவது கிடையாது தான் ! ஏற்கனவே சின்னதான வாசகர் வட்டம் நாம் எனும் போது - 'நொய்-நொய்' என 'இதில் கஷ்டம் ; அதில் பிரச்னை' என நானும் பஞ்சப்பாட்டை வாசிப்பது வாடிக்கையாகிப் போய் விட்டால் உங்களுக்கும் ஒரு அயர்ச்சி தோன்றிடும் தானே ? ஒற்றை வரியில் சொல்வதானால் - black & white இதழ்களை ரூ.60 விலைகளில் வெளியிடும் பட்சத்தில் கூட கையைக் கடிக்கும் சூழ்நிலை இன்று ! சமீப TEX தீபாவளி ஸ்பெஷல் இதழின் costing போட்டுப் பார்த்தால் சிகப்பு மசியில் தான் ரிசல்ட் வருகின்றது ! 2 மாதங்களுக்கு ஒரு முறை 15% வரை விலை கூடும் இந்த ரகத் தாள்களை நம்பி ஓராண்டுக்கு முன்பாக நாம் விலை நிர்ணயம் செய்வது தற்கொலைக்கு சமமாய் உள்ளது ! So 'அத்தியாவசியம்" என்ற கதைகளைத் தாண்டி black & white தொடர்களைக் கொஞ்ச காலத்துக்கேனும் விலக்கி வைத்திருப்போம் என்ற தீர்மானத்தின் பலனே - மர்ம மனிதன் மார்டின் + ராபினின் புறக்கணிப்பின் பின்னணி ! 2014-ல் சந்தாக்கள் ; விற்பனைகள் சற்றே நிலை கொண்டு விட்டால் - 2015 முதல் black & white நாயகர்களை மறு பிரவேசம் செய்யச் செய்திடலாமே என்பது தான் எனது சிந்தனையின் சாராம்சம். 'அப்படியானால் டெக்ஸ் ; மர்ம மனிதன் மார்டின் ; ராபின் - என முழுப் பட்டாளத்தையும் வண்ணத்துக்கே கொண்டு செல்வது தானே ?' என்ற கேள்வி எழுப்பும் சிரமத்தை விட்டு வைக்காது - அதற்கான பதிலையும் சொல்லிடுகிறேன் ! இத்தாலியப் படைப்புகளின் சகலமும் அளவில், கதைநீளத்தில் - பிரெஞ்சு பாணிகளில் இருந்து ரொம்பவே மாறுபட்டவை ! நமது தற்போதைய சைஸ்கள் ; விலைகள் ; தயாரிப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பிரெஞ்சு பாணிக்கு ஒத்துப் போவதால் அதனிலிருந்து மாறுபடும் போது விலைகளில் ஆரம்பித்து, நெடுக நிறைய சிக்கல்கள் எழுகின்றன ! ஆகையால் தான் இத்தாலிக்கு கருப்பு-வெள்ளை என்ற ஒதுக்கீடு! 

சில updates : 
  1. 2014-ன் சென்னை புத்தகத் திருவிழா ஜனவரி 10-22 தேதிகளில் நடக்கவிருக்கிறது ! சென்றாண்டு அமைந்திருந்த அதே நந்தனம் மைதானத்தினில் ! நமக்கொரு ஸ்டால் தந்திட அமைப்பாளர்களின் சம்மதம் கிட்டுமென்ற நம்பிக்கையில் காத்துள்ளோம் ! Fingers & toes crossed !!
  2. இம்மாத இதழ்களின் E-Bay விற்பனையில் சிறிதும் வாய்ப்பே தராது டெக்ஸ் முன்னணி வகிக்கிறார் ! 'சி.சு'.52 பிரதிகள் ; டெக்ஸ் : 90 பிரதிகள் ! 
  3. டிசம்பரில் டயபாலிக் இதழ் # 2 வரவிருக்கும் விஷயம் லேசாகத் தெரியத் துவங்கியதுமே - இத்தாலியில் இருந்து விசாரிப்புகள் குவியத் துவங்கி விட்டன ! டயபாலிக் சேகரித்து வைத்துள்ள ரசிகர் பட்டாளம் பிரமிக்கச் செய்கிறது ! 
  4. தொடரும் மாதத்தில் 'புதிய தலைமுறை' இதழில் முழுப் பக்க வண்ண விளம்பரம் செய்வதாக உள்ளோம் ! நண்பர்கள் அதற்கான டிசைன் செய்து அனுப்பினால் - as always would be most welcome !!
  5. Breaking நியூஸ் : வாழைப்பூ வடைப் போராட்டக் குழுவின் தலைவர் கிராபிக் நாவலுக்கும் சேர்த்தே நேற்றைக்கு சந்தா செலுத்தி விட்டார் என்பதால் - போராட்டம் வாபஸ் ஆகிறதாம் ! வாழைப்பூக்கள் தப்பித்தன !! 
  6. 2014-ன் அட்டவணை finalize செய்யப்பட்டுள்ள நிலையில் - எஞ்சி நிற்பது நமது லயனின் 30-வது ஆண்டுமலரின் திட்டமிடல்களே ! கதைகளை பற்றிய விவாதங்களுக்குள் இறங்கிடும் முன்னே அந்த மெகா இதழுக்கொரு பெயர் சூட்டும் படலம் அவசியமாகிடும் அல்லவா ? என் மனதில் ஒரு பெயர் fix ஆகியுள்ளது - ஆனால் அதையும் விட அட்டகாசமாய் உங்களின் suggestions இருப்பின் நிச்சயம் பரிசீலனை செய்வோம் ! Get those thinking caps on people !! Bye for now ! 

330 comments:

  1. மேலே குறிப்பிடப்பட்டுள்ளதைப்போலவே அருமையான வண்ணங்களில் இனி வரும் இதழ்கள் அமைந்துவிட்டால் அதுவே சிறந்த புத்தாண்டுப்பரிசாக இருக்கும் அன்பு ஆசிரியரே

    ReplyDelete
  2. முதல் அஞ்சுக்குள் நானும் வந்துட்டேன்!

    ReplyDelete
  3. டைகர் அட்டை கொஞ்சம் கிளாச்சிக் ஸ்டைல் தான்! But நல்ல இல்லைன்னு சொல்ல முடியாது! இதுவும் சூப்பரு...

    ReplyDelete
  4. அட்டைப் படம் துரித கதியில் தயாரிக்கப் பட்டது போலுள்ளது, ஆனால் அதனை கதை நிறைவு செய்து விடுமென நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Suganthan P : துரித கதியில் தயாரிக்கப்பட்டது பின் அட்டை டிசைன் மாத்திரமே ! முன்பக்கம் சாவகாசமாய் ஓராண்டுக்கு முன்பாய் போடப்பட்டது !

      Delete
  5. சார் கோவையில் நவம்பர் 29 தொடங்கி டிசம்பர் 09 வரை கைத்தறி மைதானத்தில் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது .ஏதாவது யோசனை உள்ளதா உங்களிடம் ...நீங்கள் சரி என்றால் தீயாய் வேலை செய்திட நாங்கள் உண்டு .இது போன்ற நகரங்களில் புத்தக கண்காட்சியில் பங்கேற்பது நமது காமிக்சிற்கு மிகவும் உதவும் .இல்லையேல் வேறு ஏதாவது பதிப்பகத்துடன் கை கோர்த்து பங்கேற்கலாம் ...உங்கள் பதிலை எதிர்பார்க்கும் காமிக்ஸ் இரசிகன் ...

    ReplyDelete
    Replies
    1. anand kumar : தகவலுக்கு நன்றிகள் ! அதனை நடத்துவது யார் என்று அறிந்திட வாய்ப்பிருக்கும் பட்சத்தில் - ஸ்டால் எடுக்க இன்னும் அவகாசம் உள்ளதா என்று அறிந்திடலாம். நிச்சயமாய்ப் பங்கேற்க ஆவன செய்வோம் !

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. வேங்கையின் சிற்றம் அட்டை படம் கலக்கல்

      Delete
  7. அட்டைப்படம் சுமார் ரகம். எதிர்பாராத குளறுபடியால் அடுத்தாண்டுதான் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிக் பில்லின் மறுபதிப்பு இப்போதே வருவதற்கு மல்லுகட்டுகிறதே! வருவது 'விற்பனைக்கொரு ஷெரீப்' தானே? இதழின் 'விற்பனை'யும் நன்றாக இருக்க வேண்டுவோம்!

    2014-ன் புத்தகக் கண்காட்சியில் எதாவது ஸ்பெஷல் வெளியீடுகள் உண்டுதானே....?

    +6 வரிசையை 2014-லும் எதிர்பார்க்கிறோம். GN அவ்விடத்தை பிடித்துக்கொண்டதால் +6-ன் கதி எங்களைக் கதிகலங்க வைக்கிறதே....!

    ReplyDelete
  8. Replies
    1. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : நிரந்தரமாய் கால் கட்டை விரல் தரையினில் இருந்திட வேண்டாமென்று பார்த்து விடீர்கள் !!

      Delete
  9. 30th Issue name could be"LION MEGA BLASTER SPECIAL'....!

    ReplyDelete
  10. 30 வது ஆண்டு மலருக்கான எனது பெயர் தெரிவு - Lion's "Super Pearl Special" (30 வது ஆண்டு நிறைவை Pearl Anniversary என்பார்கள்)

    NBS போல SPS எனவும் அழைக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. Suganthan P : நல்லதொரு பெயரே ; ஆனால் PEARL என்பது தமிழில் "முத்து" என்று பொருள்படுவதால் 'லயன்-முத்து ஸ்பெஷல் ' என்பது போன்ற தோற்றத்தைத் தரக்கூடுமே !

      Delete
  11. எத்தனை கதைகள் வந்தாலும் டைகர் கதைக்கு ஈடு இணை எதுவும் இல்லை. புதிய தலைமுறையில் வண்ணத்தில் விளம்பரம் என்பது நல்ல முடிவு.
    மாதம் 4 கதைகள் சாத்தியம் எனும்போது 60 விலையில் வாரம் ஒரு புத்தகம் என்பதும் சாத்தியமே.

    ReplyDelete
    Replies
    1. Mugunthan kumar : சந்தாக்கள் 1200 என்ற எண்ணைத் தொட்டு விட்டால் - சகலமும் சாத்தியமே ! சிக்கலே அங்கு தானே !

      Delete
  12. டியர் எடிட்டர் ,

    "வேங்கையின் சீற்றம் " அட்டை படம் சூப்பர் . மறுபடியும் வண்ணத்தில் டைகர் காண ஆவலாக உள்ளேன் . சித்திரங்களும் அருமை . மின்வெட்டுடன் போராடி வாக்களித்தபடி +6 இனை வெளியிட நீங்களும் எமது அலுவலக ஊழியர்களும் , அச்சுக்கூட பணியாளர்களும் உழைத்த உழைப்புக்கு ஒரு Hats Off . மலரும் புத்தாண்டில் +12 இனை எதிர் பார்க்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. Thiruchelvam Prapananth : மேலே சொன்ன பதிலையே மீண்டும் ஒரு முறை அடிக்கோடிடுகிறேன் சார் ! விற்பனை / சந்தா சற்றே கூடும் பட்சத்தில் எல்லாமே எட்டும் தூரத்திற்கு நெருங்கிடும் !

      Delete
  13. சினிமா போஸ்டர் பாணியிலான அட்டைபடம்! ஓகே!

    ReplyDelete
  14. 30வது ஆன்டு மலருக்கு லயன் மெக பிளாக் பஸ்டர் ஸ்பெஷல் என்று பெயர் வைக்காலம் சார்

    ReplyDelete
  15. 1. லயன் 30 th .- Notout Special !

    2. லயன் 30 th - Milestone Special !

    3. லயன் 30 th - Ultimate Special !

    ReplyDelete
  16. P.Karthikeyan : Milestone Special கொஞ்சம் வித்தியாசமாய் உள்ளது !

    ReplyDelete
  17. இந்த முறை தூய தமிழில் ஒரு பெயரினை லயன்-30 வது ஆண்டு மலருக்கு சூட்ட வேண்டும் என வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. SIV : அதன் முதல் முயற்சி உங்களிடமிருந்து துவங்கட்டுமே ?

      Delete
    2. அது தோன்றி இருந்தால் தான் சொல்லி இருப்பேனே சார்..

      மூளைய கசக்கி யோசிச்சு யோசிச்சு (???) கிடைத்த தலைப்புக்கள்:
      1. லயன் 30 கொண்டாட்ட சிறப்பிதழ்
      2. லயன் 30 முத்தார சிறப்பிதழ்

      பிளீஸ் இதுக்கு மேல என்னால யோசிக்க முடியல...

      Delete
    3. 30ம் ஆண்டு கதம்ப வெளியீடு

      கதம்ப மலர் என்று வைக்க முடியாது
      கதம்பம் என்றாலே மலர்களின் தொகுப்பு தானே

      Delete
  18. டியர் விஜயன் சார்,

    Never After Special - NAS

    பி.கு: "இதுபோன்ற கதம்ப ஸ்பெஷல் வருவது இதுவே கடைசி முறை" என்ற இரட்டை அர்த்தம், நிச்சயமாக இதன் பின்னணியில் இல்லை! ;-) ஒரு வேளை இதை விட குண்டாக 2015-ல் மிக்ஸ்-ஸ்பெஷல் நீங்கள் வெளியிட்டாலும் கூட, "Better Than Before Special - BTBS" என்று பெயர் வைத்து சமாளிஃபிகேஷன் பண்ணி விடலாம்! :D

    மிஸ்டர் சண்டியர்: //ஃபேனின் முன்னே வெயில் நாட்களில் ஓய்வாக தூங்குவது பூனைகளுக்கு பிடித்த சங்கதியாம்! இங்கே நமக்கே கரெண்ட் இல்லாத போது இதெல்லாம் நடக்கிற கதையா?!//

    ஒரு சிவகாசி மைந்தரின் சோகக் கதா! :D

    ReplyDelete
    Replies
    1. எப்போதுமே Never After சரியாக வராது நண்பரே! :-))))))

      Delete
  19. Karthik Somalinga : காதைக் கொண்டு வாருங்கள் : அடியேனது retirement -க்கு முந்தைய மாதத்து இதழுக்கு இப்போதே பெயர் வைத்தாகி விட்டது - "NEVER AGAIN SPECIAL " என்று ! So அது வரையில் அந்த பெயர் இருக்கும் சீட்டில் நம் தமிழர் வழக்கப்படி கர்சீப் போட்டாகியாச்சு ! Maybe விக்ரம் பொறுப்பேற்ற பின்னே Solo Specials ஆகப் போட்டு தாக்கட்டும் !

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா :) Never Before முத்துவுக்கு ஜோடியாக, Never After (Never Again) லயன் இருக்கட்டுமே என்ற நல்லெண்ணம் மட்டுமே இதன் பின்னணியில் உள்ளது! :P நீங்கள் உங்களுடைய retirement special-க்கான பெயரை எல்லாம் இவ்வளவு சீக்கிரமாக அறிவித்து, எனக்கு தர்ம அடி வாங்கிக் கொடுக்காமல் ஓய மாட்டீர்கள் போலிருக்கிறதே?!!! :D இனிமேல் இங்கே கதம்பம் பற்றிய பேச்சை வேடிக்கைக்கு கூட எடுக்காமல், அதற்கு கதம் கதம் சொல்லுவதே என் உடலுக்கு நன்மை பயக்கும் என நினைக்கிறேன்! :) :)

      Delete
    2. Karthik Somalinga : :-) ஏதோ ஒரு நல்ல நாளும் பொழுதுமாய் நம்மால் ஆன சின்னதொரு தொண்டு தான் !

      Delete
    3. @விஜயன் சார்:
      //Karthik Somalinga : :-) ஏதோ ஒரு நல்ல நாளும் பொழுதுமாய் நம்மால் ஆன சின்னதொரு தொண்டு தான் ! //
      என்னே ஒரு காசோபிமானம்! ;)

      என்ன ஆச்சு?!!! என் கண்களுக்கு இந்த ப்ளாக் திடீரென்று மஞ்சள் மஞ்சளாகத் தெரிகிறதே?! எனக்கு வந்திருப்பது ம.கா. நோயோ? அல்லது சி.சு. அட்டையையே 2 வாரங்களாக வெறித்துக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட மாயையோ?! :D

      @P.Karthikeyan:
      //KARTHIK ESCAPE SPECIAL! :-D //
      உங்களுக்கு ஏன் சிரமம், நானே சில பெயர்களை பரிந்துரைக்கிறேன்:
      UKS - உள் குத்து ஸ்பெஷல்
      KKS - கும்மாங் குத்து ஸ்பெஷல்
      MAS - மரண அடி ஸ்பெஷல்
      DAS with DTS - தர்ம அடி ஸ்பெஷல் (DTS சவுண்டு எஃபெக்ட்டுடன்!)

      ஸ்... முடியல :)

      @senthilwest2000@ Karumandabam Senthil:
      // 30 ஆண்டுமலருக்கு எனது பெயர் சூட்டல் MIND BLOWING SPECIAL சுருக்கமாக MBS!:-) //
      அட்டகாசமான பெயர்! :) நண்பர் கோபித்துக் கொள்ள மாட்டார் என்ற நம்பிக்கையில், அவர் சூட்டியிருக்கும் பெயரில் ஒரு சிறிய சேர்க்கை:

      Mind and Brain Blowing Special (MBBS)

      :) :)

      Delete
    4. // உள் குத்து ஸ்பெஷல்
      கும்மாங் குத்து ஸ்பெஷல் //

      Typical அரசியல் பத்திரிகைகளின் அட்டைப்பட Caption! :D

      Delete
    5. // Mind and Brain Blowing Special (MBBS) //

      தடியான புத்தகம் கொரியரில் வந்து சேரும்போது "ஆங், ஆர்டர் பண்ணியிருந்த புத்தகம் வந்தாச்சு. இனிமே நான் MBBS படிக்கப் போறேன்"னு வீட்ல சொல்லி அதிர்ச்சியடைய வைக்கலாம்! ;)

      Delete
  20. LION UNIVERSAL SPECIAL !

    LION GALAXY SPECIAL !

    LION 30th MASTERPIECE SPECIAL !

    ReplyDelete
  21. Sad to tell you,we have not receive October and November release yet sir,still we are waiting.

    ReplyDelete
    Replies
    1. Dear Friend, Diwali Special (November Issue) available @ Colombo. Don't you know that? Very sad.

      Delete
    2. We got that book with a nice book mark.

      Delete
    3. Jude roshan BLUTCH : Your worries are over then !

      Delete
    4. Only Diwali issues!then we have missed blue coats and xiii

      Delete
    5. Kokulam RC did not put this status in their FB page,I will check it now.thank u

      Delete
  22. 30 ஆண்டுமலருக்கு எனது பெயர் சூட்டல் MIND BLOWING SPECIAL சுருக்கமாக MBS!:-)

    ReplyDelete
  23. மேச்சேரி ரவிக்கண்ணாவிடமிருந்து எடிட்டருக்கு:-
    -----------------------------------------------------------------------

    எடிட்டர் சார்,

    இந்த வருடத்தோடு ஒப்பிட்டால், அடுத்த வருடம் கதைகளின் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்திருக்கிறதே! சந்தா பற்றி கவலை இல்லை சார், தயவு செய்து இன்னும் நான்கு-ஐந்து புத்தகங்கள் வெளியிடலாமே? குறிப்பாக, நான் விரும்பிப் படிக்கும் லக்கி-லூக், சிக்-பில் கதைள் இன்னும் ஒன்றிரண்டாவது அதிகப்படுத்துங்களேன், ப்ளஸ்? உடனே இல்லை என்றாலும், இன்னும் ஒரு 6 மாதங்கள் கழித்தாவது (30வது ஆண்டு மலருக்கான அறிவிப்பு வெளியாகும்போது) +6 போல மறுபடியும் திட்டமிட்டீர்கள் என்றால் மொத்தமாக அதற்கும் சேர்த்து பணம் அனுப்பிடத் தயாராக இருக்கிறேன். ஏதாவது செய்யுங்கள் சார்!

    # ரவி கண்ணா, மேச்சேரி

    ReplyDelete
    Replies
    1. செய்திப் பரிமாற்றம் செய்யும் டை கட்டிய பூனையார் வாயிலாக மேச்சேரி ரவி கண்ணனுக்கு : 2013-ஐ ஒப்பிடுகையில் 2014-ல் நமது இதழ்களின் எண்ணிக்கை சற்றே குறைவு தான் என்பது நிஜமே...! ஆனால் கூரியர் கட்டணங்களும் ; தயாரிப்ப்புச் செலவுகளும் இணைந்து இப்போதே சந்தவை ரூ.2300-ல் கொண்டு நிறுத்தியுள்ளன ! இதற்கு மேலும் அதிகம் செய்து உங்களின் பர்ஸ்களைப் பொத்தல் போடத் தயக்கமாக உள்ளது !

      Delete
  24. Intha andu muluvathaiyum colorful aaga matriya aasiriyaruku nantrigal. Comeback specilil aarampitha intha payanam endrendrum thodara en prarthanaigal. Nedunal printha uyir nanpanai thirumpa santhitha magilchi comeback special parthapothu earpattahu. Varum 2014 aandirkana kathai thervugal anaithum arumai. Pakkangal ennikkai kuraivathu mattum kavalaiyaga irukirathu.

    ReplyDelete
  25. டியர் எடிட்டர்ஜீ !!!

    அடியேனின் ஒரே தமிழ் தலைப்பு !

    "வன வேந்தர் சிறப்பு மலர்!"



    ReplyDelete
    Replies
    1. சாத்தான்ஜி : தூய தமிழே சில வேளைகளில் நமக்கு அன்னியமாய்த் தெரிவது தான் கலிகாலம் என்பதோ ?!

      Delete
    2. தூயதமிழ் மட்டுமல்ல, வழக்கத்திற்கு மாறான ஆங்கிலப் பெயர்களும் அந்நியமாகத் தோன்றக்கூடும்! எளிய பெயர்கள் எளிதாக சென்றுசேரும்:

      ஆண்டுமலர் - 2014
      Lion Birthday Special - 2014

      (ஹி ஹி, இதை யாராவது கேட்டாங்களா என்று நாலு பேர் என்னைத் துரத்தும்முன் - escape..!)

      Delete
    3. // எளிய பெயர்கள் எளிதாக சென்று சேரும் //

      உண்மைதான்! ஆனால் வெறுமனே 'ஆண்டு மலர்-2014' என்பதும் இந்த மாதிரியான ஒரு மெகா ஸ்பெசல் இதழுக்கு ரொம்பவே சாதாரணமாயிருக்குமே? பெயர் simpleஆக இருப்பதோடு கொஞ்சம் unique ஆகவும் இருப்பதே சிறப்பு எ.எ.க! :)

      Delete
  26. லயன் 30 வது ஆண்டு அமுதசுரபி ஸ்பெஷல்
    லயன் 30 வது ஆண்டு விஸ்வரூப ஸ்பெஷல்
    லயன் 30 வது ஆண்டு நாட் அவுட் ஸ்பெஷல்
    லயன் 30 வது ஆண்டு மெகா கலக்கல் ஸ்பெஷல்
    லயன் 30 வது ஆண்டு எவர் கிரீன் ஸ்பெஷல்
    லயன் 30 வது ஆண்டு மைல் ஸ்டோன் ஸ்பெஷல்
    லயன் 30 வது ஆண்டு ஒன் அண்ட் ஒன்லி ஸ்பெஷல்
    லயன் 30 வது ஆண்டு டோன்ட் வொர்ரி பீ ஹாப்பி ஸ்பெஷல்

    ReplyDelete
  27. லயன் வேங்கை ஸ்பெசல்
    lion 30-
    லயன் break through ஸ்பெசல்

    ReplyDelete
  28. லயன் master blaster ஸ்பெசல் .......................சச்சின் நினைவாக

    ReplyDelete
    Replies
    1. இது சரியா வரும் ......அவர் நினைவாகவும் ....என்றென்றும்

      Delete
    2. புதுசா கடையில பாக்குறவங்க ஏதோ Sports பத்திரிகைனு நினைச்சுப்பாங்க மந்திரி! :D

      அப்போ விஸ்வநாதன் ஆனந்தின் நினைவாக அடுத்த வருடம்: Grand Master Special-ஆ?!

      Delete
    3. உட்டா ஆரம்பம் ஸ்பெசல் ............ஜில்லா ஸ்பெசல் உட சொல்லுவீங்க போல ............

      Delete
  29. லயன் land mark ஸ்பெசல்

    ReplyDelete
  30. டியர் எடிட்டர்ஜீ !!!

    அடியேனின் 10 ஆங்கில தலைப்புகள் !

    1.LION MOST WANTED SPECIAL !

    2.LION GREEN LAND SPECIAL !

    3.LION FANTACY SPECIAL !

    4.KING 'S BIRTHDAY SPECIAL !

    5.LION EXCELLENT SPECIAL !

    6.LION MARVELLOUS SPECIAL !

    7.LION ELITE SPECIAL !

    8.LION SUPERB SPECIAL !

    9.LION SUPERIOR SPECIAL !

    10.SEVEN DONKEY AGE SPECIAL ! (ஹிஹி!!!)

    ReplyDelete
  31. நண்பர்களே காமிக்ஸ் படிக்க புது வாசகர் ஒருவர் எனக்கு பிறந்துள்ளார், அவரை கவனிக்க சென்ற வாரம் முழுதும் கூட இருந்ததால் இங்கு வர இயலவில்லை!! இந்த மாதம் டையபோலிக் வருவது மகிழ்ச்சியே..

    ReplyDelete
    Replies
    1. @ Balaji Ramnath

      வாழ்த்துகள் நண்பரே! இன்னும் நிறைய எண்ணிக்கையில் நமக்கு வாசகர்கள் தேவை என்பதை மறந்துவிடாதீர்கள்! :)

      Delete
    2. balaji ramnath : வாழ்த்துக்கள் நண்பரே ! இப்போதே அடுத்த சந்தாதாரர் நம் பார்வைக்கு வந்தாச்சு !

      Delete
    3. வாழ்த்துகள் கூறிய அனைவர்க்கும் மனமார்ந்த நன்றிகள்.. அடுத்த வருட சந்தா இந்த மாத முதல் தேதியிலேயே செலுத்தியாகிவிட்டது!! ஆனால் கிராபிக்கு இனிமேல் தான் கட்டனும்.(வான் ஹாமேக்காக)

      Delete
    4. // இப்போதே அடுத்த சந்தாதாரர் நம் பார்வைக்கு வந்தாச்சு//

      ஆ..ஹா...! இந்த வரிகளுக்கான அர்த்தத்தை கொஞ்சம் லேட்டாத்தான் புரிஞ்சுகிட்டேன். ஹி ஹி (வெட்கம்...)

      எடிட்டர் சார், அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்கோ! :)

      Delete
    5. ஈரோடு விஜய் சார் !!! Really you are a spontaneous superior!! Anyhow always one is better..

      Delete
    6. தல என் குழந்தைக்கு வாழ்த்துகள் சொல்லிட்டாரு..

      Delete
  32. டைகரின் அட்டைப்படம் நன்றாகவே உள்ளது. கோச் வண்டியும், குதிரைகளும் ஓடுவதைப் போன்ற படம் மட்டும் கீழ்ப் பகுதியில் இல்லாதிருந்தால்... அப்பப்பா நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது (பின்னே? க்ளோஸ்-அப்பில் போடும் மூஞ்சியாங்க அது?). ஹீரோன்னா ஒரு ரொமே..ன்டிக் லுக் குடுக்க வேண்டாமா?;இப்படி வில்லத்தனமா குருகுருன்னு பார்த்தா? ஓ... புரிஞ்சு போச்சு! அப்படீன்னா இதுலயும் பல செவ்விந்தியர்களை பொறி வச்சுப் போட்டுத்தள்ளப் போறார் போலிருக்கு! அதான் இந்த வில்லத் தனம்!!
    (எடிட்டர் சார், அது ஏன் பெரும்பாலான அட்டைப் படங்களில் நம்ம ஹீரோக்கள் தங்கள் கையில் வச்சிருக்கும் துப்பாக்கியை ஒரு இலக்கில்லாம மேல் நோக்கிச் சுடுற மாதிரியே இருக்கு? ஒருவேளை, வானத்திலிருக்கும் தேவர்களைச் சுடறாங்களோ என்னவோ?) ;)

    ReplyDelete
    Replies
    1. நண்பரே
      உண்மையான கதாநாயகன்கள் எப்பவுமே அழகாக இருக்கமாட்டார்கள். அவர்களது செயல்தான் நன்றாக இருக்கும்.

      Delete
    2. டைகர் அந்த வகையை சேர்ந்தவர்

      Delete
    3. @Mugunthan kumar, மேலேயிருக்கும் பூனைக்கு ஆழ்மனதில் டைகரைப் (புலியை) பிடிக்கும் - டெக்ஸ் "வில்லனை"த்தான் பிடிக்காது... ஆனால் இப்படி மாற்றிப்பேசி நம்மை ஏமாற்றப்பார்க்கிறது!

      Delete
    4. @ Mugunthan kumar

      இருக்கலாம்! கொலைவெறி குடிகொண்டிருக்கும் அந்தக் குரூரமான கண்களைக் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்களேன். அலிஸ்டரின் அடியாளாக மாறி ஆயிரம் செவ்விந்தியர்களை அழித்த பிறகுதானே முகபாவங்களில்கூட இத்தனை வில்லத்தனம்?
      (ஹி ஹி டைகர் ரசிகர்களை கொஞ்சம் கடுப்பேத்தலாமேன்னு...)

      Delete
    5. ரமேஸ் குமார் பூனையும் புலியும் ஒரே இனம் தானே

      Delete
    6. ஒரு வேளை, மதில் மேலிருக்கும் பூனையைச் சுடுகிறாரோ என்னவோ..?

      Delete
    7. @ mugunthan kumar
      //பூனையும் புலியும் ஒரே இனம் //

      இன்னும்; இன்னும் எதிர்பார்க்கிறேன் உங்ககிட்ட! :D

      @ MH Mohideen
      // ஒரு வேளை, மதில் மேலிருக்கும் பூனையைச் சுடுகிறாரரோ என்னவோ..?//

      பூனையை, எலியை எல்லாம் சுட்டுத் தள்ளும் அளவுக்கு கொலைவெறி முற்றிவிட்டதா அவருக்கு? :)

      Delete
    8. // ஒரு வேளை, மதில் மேலிருக்கும் பூனையைச் சுடுகிறாரரோ என்னவோ..?//

      புலன் விசாரணை Report #234:

      1. டைகர் அந்தத்துப்பாக்கியின் விசையை பின்னோக்கி இழுக்கவே இல்லை (விரல் முன்பக்க பகுதியை ஒட்டியவாறே இருப்பது அதற்கு சான்று)

      2. துப்பாக்கியின் குழலிலிருந்து குண்டு வெடிக்கவில்லை. மாறாக திரி வைத்து தீபம் ஏற்றியிருக்கிறார் (அட்டையை உற்றுப்பாருங்கள், அது மேல் நோக்கி எரியும் கார்த்திகை தீபம்!)

      ஆகவே பூனைகளை சுட்டுக்கொல்லும் கயவரல்ல டைகர்! :P

      Delete
    9. // திரி வைத்து தீபம் ஏற்றியிருக்கிறார் //

      ஹா ஹா ஹா! திறமையான புலனாய்வு! :D

      ஓ... NBSன் அட்டைப்படத்தில் கூட இதுமாதிரி கார்த்திகை தீபம் ஏற்றி விளையாடும்போது தான் அவரது உடலைச் சுற்றித் தீப்பற்றிக் கொண்டிருக்குமோ? ;)

      Delete
    10. டை கட்டிய பூனை அவ்வப்போது சத்தியராஜ் ஆவது எப்படி ? புதிய புலனாய்வுத் தலைப்பு # 235 !

      Delete
    11. ஈரோடு விஜய் )( இன்னும்; இன்னும் எதிர்பார்க்கிறேன் உங்ககிட்ட! :D
      டெக்ஸ்ம் பிடிக்கும் என்ற காரணத்தால் டெக்சை குறை கூற விரும்பவில்லை. ஆனால் ஒரு விசயம் பூனைக்கும், புலிக்கும் எலியை (டெக்ஸ்) பிடிக்காது என்பது ஊரறிந்த விசயம்.

      Delete
    12. சாட்டையாள அடிக்கவே இல்ல ஆனா குதிரை ஓடுது ..............................ஸ் ஸ் ஸ் ஸ்

      Delete
    13. // சாட்டையாள அடிக்கவே இல்ல ஆனா குதிரை ஓடுது //

      அது ஏற்கெனவே விழுந்த அடிக்காக ஓடுது...

      ஆனா இந்த rule துப்பாக்கிக்கு பொருந்தாது, அது almost instantaneous! (நிழலை விட வேகமாக சுடவேண்டுமல்லவா?!)

      Delete
    14. நண்பர் Ramesh kumar, உங்களது புலன் விசாரணை Report #234, தமிழக சட்டசபை விளக்கங்களுக்கு சவால் விடும் வகையில் உள்ளன. வாழ்த்துக்கள் (கும்பிடு போட்டபடி) .

      Delete
  33. லயன் 'முத்து' ஆண்டு மலர்!
    இது 30-வது ஆண்டு. முத்தான ஆண்டு!

    ReplyDelete
  34. LION MILLENNIUM SPECIAL
    LION KNOCK OUT SPECIAL

    ReplyDelete
  35. 1. லயன் 30-வது ஆண்டு சூப்பர் டூப்பர் ஸ்பெஷல்.
    2. லயன் 30-வது ஆண்டு அதகளம் ஸ்பெஷல்.
    3. லயன் 30-வது ஆண்டு AMAZING ஸ்பெஷல்.
    4. லயன் 30-வது ஆண்டு GIANT ஸ்பெஷல்.
    5. லயன் 30-வது ஆண்டு MAMMOTH ஸ்பெஷல்.
    6. லயன் 30-வது ஆண்டு MARATHON ஸ்பெஷல்.
    7. லயன் 30-வது ஆண்டு LARGER THAN LIFE ஸ்பெஷல்.

    ReplyDelete
  36. நல்ல பிசாசின் "அக்கப்போர்" தொடர்கிறது!!!

    11. LION YOUNG &YOUTH SPECIAL !!!

    12.LION EVERGREEN YOUTH SPECIAL !!!

    13.LION FAVORITE SPECIAL !!!

    14.LION LONG LIVE SPECIAL !!!

    15.LION ENJOY SPECIAL !!!

    16.LION HIGH JUMP SPECIAL !!!

    17.LION INDO -OVERSEAS SPECIAL !!!

    18.LION FUN & FANCY SPECIAL !!!

    19.LION ACTION & COMEDY SPECIAL !!!

    20.LION KING 'S SAFARI SPECIAL !!!

    உஸ்ஸ் .....இப்பவே கண்ண கட்டுது....!!!

    ReplyDelete
    Replies
    1. saint satan....எனக்கும் தான் :-)

      Delete
    2. எனக்கு எல்லா தலைப்பும் பிடுசிருக்கு

      Delete
  37. கேள்வி: லயன் முத்து காமிக்ஸ் பற்றி மூன்று காலங்களில் விளக்கி எழுதுக:-

    பதில்:-
    1990- இறந்த காலம்; டாக்டரின் மகனும் காமிக்ஸ் படித்தான்; வங்கி அதிகாரியின் மகனும் காமிக்ஸ் படித்தான்,: கூலிக்காரன் மகனும் காமிக்ஸ் படித்தான்; குப்பை கூட்டுபவரின் மகனும் காமிக்ஸ் படித்தான்;

    2013- நிகழ் காலம்; டாக்டர் மட்டுமே காமிக்ஸ் படிக்கிறார்; வங்கி அதிகாரி மட்டுமே காமிக்ஸ் படிக்கிறார்.; மென்பொருள் நிபுணர் மட்டுமே காமிக்ஸ் படிக்கிறார்; போஸ்ட் மாஸ்டர் மட்டுமே காமிக்ஸ் படிக்கிறார்.

    2015- எதிர்காலம்; ஆசிரியர் விஜயன் மட்டுமே காமிக்ஸ் படிப்பார் ; பிரகாஷ் குமார் மட்டுமே காமிக்ஸ் படிப்பார்; ஜூனியர் எடிட்டர் மட்டுமே காமிக்ஸ் படிப்பார்; இராதா கிருஷ்ணன் மட்டுமே காமிக்ஸ் படிப்பார்.

    பொதுவாக ஒரு பொருள் வருடத்திற்க்கு 10% முதல் 50% விலை ஏறுவது நியாயமானது. 2011ல் 10 ரூபாய் விற்ற நமது காமிக்ஸ் இன்று 1100% விலை ஏறி இன்று 120 ரூபாய் ஆகிவிட்டது. வருடத்திற்க்கு 100% விலை ஏற்றினாலும் இன்றைய விலை ரூ; 80 தான் இருக்க வேண்டும்.

    வாசகர் எண்ணிக்கை உயர வேண்டும் என ஆசிரியர் விரும்புகிறார் , ஆனால் இன்றைய தேதிக்கு ஒரு கூலிக்காரரின் மகனோ, அல்லது ஒரு ஆட்டோ ஓட்டுனரின் மகனோ, ஒரு பெட்டிகடைகாரரின் மகனோ காமிக்ஸ் வாங்கி படிக்கும் வகையில் அதன் விலை இல்லை.

    இந்த நிலை என்று மாறும்?........

    ReplyDelete
    Replies
    1. sundaramoorthy j : பதில்களும் தொட்டு விடும் தூரத்திலேயே இருக்கும் போது ; அவை உங்களுக்குமே தெரியும் எனும் போது - 'இவற்றிற்கு பதில் சொல்கிறேன் பேர்வழி' என நான் நிச்சயம் தம் கட்டப் போவதில்லை நண்பரே !

      எது எப்படியாகினும் - தொடரும் காலங்களில் நானும் எங்களவர்களும் மாத்திரமே காமிக்ஸ் படிக்கப் போகிறோம் என்றானாலும் சந்தோஷப்படுவேன் தான் - ஏனெனில் அன்றைக்கு ஒரு unique வாசகர் கிடைத்திருப்பாரே ! ராதாகிருஷ்ணன் மழை நாளில் கூட நமது இதழ்களைப் புரட்டியதாய்ச் சரித்திரம் கிடையாது ; 2015-ல் அவர் படிக்கப் போகிறார் எனில் மிகுந்த சந்தோஷமே !

      Delete
    2. //ராதாகிருஷ்ணன் மழை நாளில் கூட நமது இதழ்களைப் புரட்டியதாய்ச் சரித்திரம் கிடையாது// sir, அப்போ ஸ்டெல்லா அக்காஆ :))))

      Delete
    3. @ sundaramoorthy j: One small doubt sir... As you said yearly 100% raise will lead to a price of 80re only for this year.... fact u factu.... So if this continues for next year then the price should be @ 160.... Edy Sir plz note this point...

      Delete
    4. Dear St.Satan & Sundaramoorthy J,

      I believe Mr.Sundaramoorthy J is spoken a valid point only. At the same time, we don't forget the quality and quantity of books we're receiving today. For this type of Quality Paper and Printing we're paying reasonable amount only. Here, we don't need any comparison between Taste and Rate!

      Earlier, We've tasted the same heroes for Rs.10/- and Rs.30/- also. (Mr.Sundaramoorthy too). Now, we're enjoying them for Rs.60/- and Rs.120/-. When comparing to English Comic Books we're somehow gifted for this price and quality.

      Flashback : When it comes to marketing most of us First look at the price tag and then hero, quality all other items. Still I remember, the day, when I was 13 yeras old - I'm unable to buy the Lion Century Special in 1993-94 (somewhere). The main reason is I don't have Rs.20/- at that time. I left the shop with 10 rupees in my pocket and the image of Modesty in that cover.

      There is no relationship between Taste & Rate. If the number of subscriptions increased, then we can demand Editor for less costlier books. We should give much focus to this area. Promote comics and reading habit to your children and friends. Speak to them about comics loudly. Relate the incidents to day-to-day life. Then the quantity comes automatically, rate will down. (I'm not a marketing person, I am a comic fan alone).

      by
      Boopathi

      Delete
  38. அன்புள்ள சார் ...எனக்கு பதில் அளித்ததற்கு நன்றி.சென்னை ,ஈரோடு போன்ற ஊர்களில் நீங்கள் ஏற்கனவே தலை காட்டியுள்ளதால் அந்த அந்த ஊர்களில் உள்ள நமது பழைய வாசகர்கள் ஓரளவுக்கு நமது காமிக்ஸின் மறுவரவையும் ,வெற்றிகரமாக வந்து கொண்டிருப்பதையும் அறிந்திருப்பார்கள் ..அதேபோல் பெரிய கோவை போன்ற நகரங்களிலும் லயன் மற்றும் முத்துவிற்கு தீவிர வாசகர்கள் உண்டு என்பது நீங்கள் தெரிந்ததே ...நம் மறுவரவை அறிந்திராத வாசகர் வட்டம் இது போல கண்காட்சிகள் மூலமாகவே அறிய வாய்ப்புண்டு என்பதும் தாங்கள் அறிந்ததே ..எனவே சிரமம் பார்க்காமல் பங்கேற்க வேண்டுமாறு கோவை லயன் ,முத்து வாசகர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் ...நன்றி .காமிக்ஸ்இரசிகன் ...இந்த கண்காட்சியை யார் நடத்துவது எனப் பல விவரங்களை என்னால் முடிந்த மட்டும் விசாரித்து சொல்கிறேன் ...

    ReplyDelete
  39. ஆங்கிலத்தில் வரும் மற்ற காமிக்ஸ் விலைகள் பற்றி முதலில் சில வாசகர்கள் புரிய வேண்டும், பொருளின் தரம் நன்றாக இருந்தால் விலை அதிக மாகவே இருக்கும் , எடிட்டர் பல முறை சொல்லிய பிறகும் (தாள்களின் விலை உயர்வு, ராயல்டி, டாலர் விலை உயர்வு ) ஏன் மீண்டும் இதே கேள்விகளை கேட்டு கொண்டு இருப்பீர்கள், அன்று வாங்கிய அதே பாக்கெட் மணி 1 ரூபாய் யாரும் இப்போது வாங்குவது இல்லை , அன்று வாங்கிய 500, 1000 சம்பளம் யாரும் இப்போது வாங்குவது இல்லை, பெட்ரோல் விலை 1987 இல் 11 ரூபி. அதே விலையில் இப்பொழுது வாங்க முடியுமா. தமிழில் வருவதே ஒரே ஒரு காமிக்ஸ் அதுக்கும் மங்கலம் பாடி விடாதிர்கள்

    ReplyDelete
    Replies
    1. லயன் கணேஸ் / தமிழில் வருவதே ஒரே ஒரு காமிக்ஸ் அதுக்கும் மங்கலம் பாடி விடாதிர்கள்

      சரியாக சொன்னீர்கள் கணேஸ்.
      ஏற்கனவே ஒரு சிறிய இடைவெளியில் நமது காமிக்ஸ் வராத போது எனது வீட்டிற்கும் ஈரோடு பஸ் நிலையத்தில் உள்ள புத்தக கடைக்கும் தினமும் நடையாய் நடந்ததை நினைத்தால் இன்றும் என் மனதில் ஒரு அச்சம் ஏற்படுகிறது.

      Delete
  40. சார்...sundaramoorthy j அவர்கள் கூறியது போல விலையேற்றம் தற்போது அனைத்து பொருட்களிலும் உண்டு ..ஆனால் நமது காமிக்சிற்கு இது கொஞ்சம் அதிகம் போல தோன்றினால் பேசாமல் நமது பழைய அளவில் ஓரளவு தரமான தாளில் ரூபாய் 30 விலையில் வெளியிட முடியுமா என்பதை சொல்லுங்கள்.தற்போது தமிழில் வெளிவரும் ஒரே காமிக்ஸ் இதுதான் எனும்போது மறுக்கவும் முடியாது அதே சமயம் ஒதுக்கவும் முடியாத விஷயம் இது .வருங்காலத்தில் அனைவரும் கடைகளில் வாங்கி காமிக்ஸ் படிக்க வேண்டும் ..ஒருவர் கூட விலை அதிகம் என்று வாங்காமல் இருந்து விடக் கூடாது ..எனவே எல்லோருக்கும் ஏற்ற வகையில் ஒன்றை நீங்கள் முடிவெடுக்க வேண்டும் ..காமிக்ஸின் பழைய பொற்காலம் திரும்ப வேண்டும் ..நம் வாசகர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை படிக்க ஊக்குவிக்க வேண்டும் .நாமும் பல பல காமிக்சுகளை நமது ஆசிரியர் மூலம் படிக்க வேண்டும்..எக்காலத்திலும் நமது லயன் முத்து தொடர்ந்து வெளிவர வேண்டும்..அதற்கு ஆசிரியர் அவர்கள் ஆவன செய்ய வேண்டும் ..காமிக்ஸ்இரசிகன்

    ReplyDelete
    Replies
    1. anand kumar : Relax....சிறு சலனம் எழும் ஒவ்வொரு முறையும் தோளுக்குப் பின்னே திரும்பிப் பார்த்துக் கொண்டே செல்வதாயின் காமிக்ஸ் பயணம் என்றில்லை - தெரு முனைக்குச் செல்லும் படலம் கூட ஒரு திகில் அனுபவமாகி விடும் ! ரூ.10 விலையில் நாம் இதழ்களை வெளியிட்டுக் கொண்டிருந்த போது எத்தனை இலட்சம் பிரதிகள் விற்பனையாகி வந்தன - இன்று விலையின் பொருட்டு வெகு ஜன அண்மை கிட்டவில்லையே என நாம் வருந்துவதற்கு ? கடைசியாய் வெளியான "வெள்ளையாய் ஒரு வேதாளம்" அச்சிட்டதே 4000 பிரதிகள் ; அவற்றில் ஸ்டாக் கிடந்தது 1500 ! இது தான் நிஜ சூழல் ! அன்றைக்கு எந்தத் தடைகள் இருந்தன - பரிதாபமான அந்த விற்பனை எண்ணிக்கைகளை விளக்கிட ?

      2011-ல் பத்து ரூபாய் விலைக்கு விற்பனை செய்த அதே சரக்கை இன்று 120 ரூபாயில் நாம் போணி செய்ய முனைந்தால் இந்தக் குறைபாடுகள் சகலமும் நியாயமானவைகளாய் இருந்திருக்கும். ஆனால் அது இல்லை சூழல் எனும் போது இந்த comparisons துளியும் வலு இல்லாது போகின்றன !

      'முதல் வார வசூல் 100 கோடி' என்ற செய்திகளை வாசிக்கும் அதே தமிழகத்தில் தானே நமது இதழ்களும் விற்பனையாகின்றன ! முழு வட்டத்தையும் நாம் பார்த்தாகி விட்டோம் ! 'துவங்கிய இடமே தேவலை' என ஒவ்வொரு முறையும் நாம் சிந்திப்பதாயின் நிறையப் பயணம் செய்த பிரமை இருக்கலாம் - ஆனால் இருந்த இடத்தையே செக்கு மாடாய் சுற்றி வந்திருப்போம் ! நம் அனைவரின் நோக்கம் நிச்சயமாய் அதுவல்ல என்பதை நானறிவேன் !

      Delete
    2. தெளிவான, தீர்க்கமான பதில்!

      // ரூ.10 விலையில் நாம் இதழ்களை வெளியிட்டுக் கொண்டிருந்தபோது எத்தனை லட்சம் பிரதிகள் விற்பனையாகின?//

      நண்பர்கள் புரிந்துகொண்டால் நல்லது!

      Delete
  41. குமுதம், ஆனந்த விகடன், .... போல 1 லட்சம் பிரதிகள் விற்றால் பிரதிக்கு 1 ரூபாய் லாபம் வைத்தால் போதும், அனால் வெறும் 2500 பிரதிகள் என்றல் எப்படி சாத்தியமாகும் . பொருளின் விற்பனை கூட கூட விலை தானாக குறையும் என்பதுதான் பொதுவான கருத்து.

    ReplyDelete
    Replies
    1. சரியான கருத்து. இன்று காலையில்தான் சந்தா எண்ணிக்கை 1200ஐ கூட தொடவில்லை என்று ஆசிரியர் சொல்லியிருந்தார்.

      Delete
  42. கூலிகாரர்கள் முதல் டாக்டர்கள் வரை இன்று யாரும் குறைவாக சம்பளம் வாங்கவில்லை. அதனால் யாரும் வாங்கும் தரத்தில் குறைந்தவர்கள் இல்லை. எனக்கு தெரிந்து கூலிக்காரர்களின் பிள்ளைகள்தான் 50 ருபாய் சினிமா டிக்கெட்டை பிளாக்கில் ரு500 கொடுத்து வாங்கி படம் பார்க்கிறார்கள். ஆகையால் அனைவரும் வாங்கும் விலையில்தான் நமது காமிக்ஸ் விலை உள்ளது.
    எப்போதும் ஒரு தேவைக்கு கோரிக்கை வைக்கலாமே அன்றி சாபம் விடுவது போன்ற வார்த்தைகளை தவிர்ப்பது நலம்.

    ReplyDelete
    Replies
    1. // சாபம் விடுவதைப் போன்ற வார்த்தைகளை தவிர்ப்பது நலம் //

      +1

      Delete
  43. டியர் சுந்தரமூர்த்தி !!!

    உங்கள் வாதம் சற்றே மேலோட்டமாக இருக்கிறது. ஒரு கூலிக்காரரின் மகனோ, அல்லது ஒரு ஆட்டோ ஓட்டுனரின் மகனோ, ஒரு பெட்டிகடைகாரரின் மகனோ காமிக்ஸ் வாங்கி படிக்கும் வகையில் அதன் விலை இல்லை என்று கூறுவதைத்தான் சொல்கிறேன்.காமிக்ஸ் வாசிப்பு என்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு சிறப்பான ரசனை.அது அனைவருக்கும் வாய்க்காது.
    காமிக்ஸை நேசிப்பவர் அதன் விலையை பற்றி பொருட்படுத்தமாட்டார் என்பதை ஈரோடு புத்தக கண்காட்சியில் ஒரு வாசகர் எங்களுக்கு நிருபித்தார்.அவர் கட்டுமான தொழில் செய்யும் சாதாரண கூலி தொழிலாளி.நமது ஸ்டாலில் அவர் வாங்கிய புத்தகங்கள் ரூ.1000+ மதிப்புடையவை.ஆனால்,படித்த மேல்தட்டு சமூக பின்னணி உள்ள பலர் வாங்கியதோ ரூ.40,50 விலையுள்ள புத்தகங்களே !!!

    ஆக ,பிரச்னை விலையில் இல்லை.ரசனையில்தான் உள்ளது நண்பரே !!!

    ReplyDelete
    Replies
    1. // பிரச்னை விலையில் இல்லை. ரசணையில்தான் உள்ளது //

      சூப்பரா சொன்னீங்க சாத்தான்ஜி!

      Delete
  44. குறைவான விலை என்பது புதிய வாசகர்களை உள்ளே இழுக்கத்தான் ..எடுத்தவுடன் 100,120 என்னும்போது புதிய வாசகர் வாங்குவதை தவிர்க்க நேரிடலாம் ...எனவே இப்போது ஆசிரியர் அறிவித்துள்ள 60 என்னும் விலை புதிய வாசகரை முதலில் வாங்கத் தூண்டும் .படிப்படியாகத்தான் வாசகர் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் ,வேண்டும் .குறைவான விலை நிறைய வாசகர்கள் .. வாசகர்கள் அதிகரித்த பின்பு ஆசிரியர் எந்த தைரியமான முயற்சியையும் நம்பி எடுக்கலாம் .

    ReplyDelete
    Replies
    1. 100, 120 என்ற போதும் சரியாக marketing செய்து சுலபமாக சரியான கடைகளில் கிடைக்குமாறு செய்தாலே வாசகர்கள் மற்றும் விற்பனை உயரும் !

      Delete
  45. Lion Roaring Special (LRS)
    Lion Roaring Riders Special(LRRS)
    Lion Riders Special

    ReplyDelete
  46. முதலில் கதைகளை தேர்வு செய்தால் அதன் பிறகு அதை அடிப்படையாக வைத்து பெயர் வைக்கும் போது சிறப்பாக அமையும்

    ReplyDelete
  47. The lion's roar -30th anniversary (LRS - LION ROAR SPECIAL)

    ReplyDelete
  48. 1. அட்டைப்படம் நன்றாக இல்லை. அமெச்சூர்! :-(( ஒரிஜினலில் கொஞ்சம் கணினி வேலைகள் பார்த்தாலே சிறப்பாக இருக்கும் என எண்ணுகிறேன். ஓவியம் எப்போதுமே, சென்ற மாத டெக்ஸ் இதழ் போல அமைந்துவிடுவதில்லை.

    2. 30ம் ஆண்டு ஸ்பெஷல் இதழின் பெயர், அடேங்கப்பா.. நண்பர்கள் வாரிக்குவித்துவிட்டார்கள். பலதும் நன்றாக இருக்கிறது. ஆசிரியரின் தேர்வு எதுவெனக் காண ஆவலாக உள்ளேன்.

    3. சென்னை புத்தக விழாவையும், அதற்கான நமது சிறப்பு வெளியீட்டையும் ஆவலாக எதிர்நோக்குகிறேன்.

    4. விலை பற்றிய கருத்து: சில பிராடக்ட்ஸ் விலை மலிவாகவெல்லாம் வரமுடியாது. காமிக்ஸ் காஸ்ட்லியான கலையா என்றால் ஆம்தான் அதற்குப் பதில்! பூ வேறு! பொன் வேறு! கசந்தாலும் உண்மை அதுதான். இத்தனை நாள் 10 ரூ இதழ்கள் என்பதெல்லாம் ஒருவகையில் தரமில்லா சேவைதான். மோசமான தாள், அச்சுக்குறைபாடு என காமிக்ஸ்கள் அப்படிப் படிக்கப்படவேண்டியவையே அல்ல. இப்போதைய இதழ்கள்தான் காமிக்ஸ் படைப்புக்கு நியாயம் செய்வதாய் இருக்கின்றன. இதிலும் விலை சார்ந்து நம் எடிட்டர் மிகவும் கவலைகொண்டு/கவனம் கொண்டே இயங்கிவருகிறார் என்பது மிகத்தெளிவு. ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல ஏழைகள்தான் சினிமா அரங்குகளிலும், டாஸ்மாக்குகளிலும் ஒரு வாரத்துக்கு நூற்றுக்கணக்கில் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். மிக மிக சிறுபான்மையான ஒரு கூட்டம் விலையினால் பாதிக்கப்படலாம்தான், எல்லா நல்ல காரியங்களுக்குப் பின்பும் ஒரு எதிர்வினை இருக்கத்தான் செய்யும். அதற்காகவெல்லாம் யோசித்துகொண்டே இருந்தால் எந்தக் காரியத்தையும் செய்யவும் முடியாது. பெரும்பான்மைக்கு அது துரோகமாகவும் முடியும். பயந்துகொண்டே 10 ரூபாய் கூட்டுவது, அடுத்த டிஸம்பருக்குள் பேப்பர் என்ன விலை ஆகப்போகிறதோ, சொன்ன விலையில் தரமுடியுமா என்ற கவலையோடு பணிபுரிவது என இதெல்லாம் நம் சூழலின் சாபக்கேடு!

    சந்தா 1200 வந்தால் கூட பல விஷயங்களைச் செய்யலாம் என ஆர்வமாய்ச் சொல்கிறார் எடிட்டர். ஆயின் அதுவேகூட ஒரு எட்டமுடியா எண்ணிக்கை என்று புரிகிறது. வெட்கக்கேடு!

    ReplyDelete
    Replies
    1. @ ஆதி
      point no.4 - அட்டகாசம்!!
      // ஏழைகள் தான் சினிமா அரங்குகளிலும், டாஸ்மாக்களிலும் ஒர் வாரத்துக்கு நூற்றுக்கணக்கில் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள் //

      // இப்போதைய இதழ்கள் தான் காமிக்ஸ் படைப்புக்கு நியாயம் செய்வதாய் இருக்கின்றன. இதிலும் விலை சார்ந்து நம் எடிட்டர் கவலைகொண்டு/கவனம் கொண்டே இயங்கிவருகிறார் மிகத்தெளிவு.//

      இதைப் புரிந்துகொள்ளாதவர்கள் இருக்கும் வரை இன்னும் சில காலத்திற்காவது இதுபோல சிறு சலனங்களும் இருந்துகொண்டுதான் இருக்கும்!
      :(

      Delete
    2. வாயில் உறிஞ்சப்பட்டு, நுரையீரலில் நிக்கோடினை நிரப்பி, புகையாய் காற்றில் கரையும் சிகரெட்டுக்காக இந்த 'ஏழைகள்' தினமும் சராசரியாக 50 ரூபாய் செலவழிப்பார்களாம்...

      Delete
    3. அதிரவைக்கும் ஒரு காமிக்ஸ் சர்வே:

      1. தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7.4 கோடி
      2. கல்வியறிவு பெற்றவர்கள் ->80%
      3. தமிழ்நாட்டின் மொத்த மாவட்டங்கள் 32
      4. தமிழ்நாட்டிலுள்ள மொத்த குடும்பங்கள் சுமார் 14800000 (குடும்பத்துக்கு 5 பேர் வீதம்)
      5. அதில் வறுமையின் கோட்டின் கீழ் 21% (3108000 குடும்பங்கள்) (so 14800000 - 3108000 = 11692000)
      6. 11692000 குடும்பங்களில் .10% காமிக்ஸ் வாங்கினால் கூட 11692 சந்தாக்களாவது தேற வேண்டும்!
      7. ஆனால் நாம் வெறும் 1200 சந்தாக்கள் அடைவதற்கு தண்ணீர் குடிக்க வேண்டிய நிலைமை.
      8. அதிர வைக்கும் இந்த காமிக்ஸ் சர்வே நமக்கொரு நிச்சயம் ஒரு வேதனையானது மற்றும் வெட்கக்கேடானதும் கூட.

      (காமிக்ஸ் மக்களிடையே அந்தளவிற்கு சென்றடையாதற்கு காரணம் என்னவாக இருக்கும்?
      கீழுள்ளவற்றில் டிக் செய்யவும்)
      1. சின்னப்புள்ள தனம், 2. பணம், 3. காமிக்ஸ் பற்றிய அறியாமை. 4. விளம்பரமின்மை etc.

      Delete
    4. 'பணம்' என்ற விசயத்தைத் தவிர மற்ற எல்லாமே காரணம். அதோடு, பொதுவாகவே புத்தகம் படிக்கும் பழக்கம் மக்களிடம் வெகுவாக குறைந்திருப்பதும் ஒரு காரணம் - என்பது என் கருத்து!

      Delete
    5. விளம்பரமின்மையால் ஏற்பட்டுள்ள அறியாமை

      Delete
    6. பணமிருந்தும் வாங்காதோர் தானே அதிகம்?

      Delete
    7. காமிக்ஸ் குழந்தைகளுக்கானது என்கிற தவறான கண்ணோட்டம் பலர் மனதில் பதிந்துள்ளது. இதுவே முதல் கரணம். Are you still reading comics, என்று பலரும் என்னோடு கேட்கிறதே இதற்க்கு எடுத்துகாட்டு.

      பணம் எல்லாம் கரணம் கிடையாது. When you are addicted to something, you will get it at any cost. How many of us saved or stole money to buy or read comics in the 90's.

      In the 90's, I will save all the money i get like 10ps or 25ps and there was shop on the roadside. For standing and reading the book there he will charge Rs.1/-. I have done that. We can buy that book at 1/2 price and sell it back to him at 1/4 price. I have done that. #Feeling Nostalgic

      Delete
  49. Good to see Tiger to rock again. Thanks Vijayan Sir

    ReplyDelete
  50. குமுதத்துல வந்த போஸ்டர் லிங்க் போடுங்களேன் ரமேஷ்

    ReplyDelete
    Replies
    1. மந்திரிக்காக ......................சூப்பர் வாபஸ் ...............................

      Delete
    2. மந்திரி... அந்த சர்க்கரை நோய் treatment-ஐ செய்து கலீபாவை காலி பண்ணலாமே...

      Delete
    3. புரியுது உங்க வில்லத்தனம் ....................அந்த ஆப்பு திருப்பி யாருக்கு வரும்னு இங்க உள்ள எல்லாத்துக்கும் தெரியும்...................

      Delete
  51. புத்தகங்கள் தொடர்பான விலை ஒரு பிரச்சினை அல்ல .. கதைகளில்,புத்தகங்களில் தரம் வேண்டும் ...

    ReplyDelete
  52. 2014 லயன் காலேண்டர் வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. ஆம் .காலண்டர் வேண்டும். விலைக்கு தான்.
      நண்பர்களுக்கு புத்தாண்டு பரிசாக தரலாம்.
      காமிக்ஸ் பற்றி தெரியாத நண்பர்களுக்கு ஒரு அறிமுகமாக இருக்கும்.

      Delete
    2. அது பாட்டுக்கு ஒரு வருஷம் தொங்கும் ..............
      தினசரி என்றால் இன்னும் சிறப்பு .....
      ஒரு நாள் டெக்ஸ்
      ஒரு நாள் கார்சன்
      ஒரு நாள் மந்திரி ஹி ஹி ஹி ...........
      அப்பிடி கிழிக்க வசதியா இருக்கும்

      Delete
  53. டியர் சார் ,
    இந்த மாதம் நான்கு புத்தகங்கள் எனும்போது, புத்தகங்களை ஒன்றாக அனுப்பும்போது கூடுதல் எடைக்காக தபால் கட்டணம் கூடும் என்றால் , இரண்டு இரண்டு புத்தகங்களை தனியாக அனுப்பும்போதும் ஒரே செலவு என்றால் , முதல் இரண்டு புத்தகங்கள் தயார் ஆனவுடன் அனுப்ப முடியுமா?? புத்தகங்கள் தபாலில் கசங்காமல் வரவும் இது உதவும். : )

    சுந்தரமூர்த்தியின் கருத்து more or less , நாம் "மங்கல்யான் " செயற்க்கைகோளை வெற்றிகரமாக ஏவியபோது மேற்கத்திய மீடியாக்கள் நமது நாட்டின் ஏழ்மை பக்கத்தை பெரிதுபடுத்தி இந்தியாவுக்கு இதெல்லாம் தேவையா என்று criticize செய்வதை போல உள்ளது. ஏழ்மை நிலையை முன்னேற்ற வேண்டும் எனபது நமக்கு முதல் priority என்று இருந்தாலும் முன்னேற்றங்களுக்கு அதுவே ஒரு தடையாக இருந்துவிடக்கூடாது என்பதும் முக்கியமே.

    நமது தர முன்னேற்றமே நம்மை இந்த தொழிலில் நீண்ட காலத்துக்கு நிலைபெற்றிருக்கு உதவும் எனும் போது, நமது priority நமது survival சார்ந்தே இருக்க வேண்டும். நாம் நல்ல நிலையில் வரும்போது மலிவுவிலை பதிப்புக்களுக்கு ஆசிரியர் கவனம் கொடுப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

    facts எல்லாம் தெரிந்தும் நண்பர்கள் இவ்வாறு கேள்வி எழுப்புவது தங்கள் கருத்துக்கு எல்லோரும் பதில் போடவேண்டும் என்ற நோக்கத்திலா என்று சந்தேகம் வருகிறது : (! நாம் இப்படி பதில் கொடுக்க கொடுக்க இத்தகைய கேள்விகளை நாமே ஊக்குவிக்கிறோமா என்ற சந்தேகமும் இம்சிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. +1

      வரம்பு மீறிடும், 'சாபம்' தரும் இதைப்போன்ற முறையற்ற கேள்விகளுக்கு எடிட்டர் பதில் அளிக்காமல் தாண்டிச் சென்றுவிடுவதுதான் சரியென்று நானும் நம்புகிறேன். :(

      Delete
    2. // முறையற்ற கேள்விகளுக்கு எடிட்டர் பதில் அளிக்காமல் தாண்டிச் சென்றுவிடுவதுதான் சரியென்று //

      எடிட்டர் பதில் போடுவது வேறு விஷயம், இதில் சம்பந்தமில்லாத நாம் skip செய்து சென்றாலே போதும். நம்முடைய spare time இரசிப்பதற்கே!

      Delete
    3. // நம்முடைய spare time இரசிப்பதற்கே //

      ஒருவர்கூட கண்டுகொள்ளலாமல் கூட்டமாகத் தாண்டிச் சென்று நம் குதூகலத்தைக் கன்டினியூ பண்ணலாம்; வீணா எதுக்கு டென்ஷன் - அப்படீன்றிங்களா? அதுவும் சரிதான்!

      Delete
    4. @Erode VIJAY, அதேதான்!

      மேலே காட்டப்பட்டுள்ள டைகர் கதையின் உள்பக்க artwork உற்றுப் பாருங்கள்.. அந்த ஒரேவொரு பக்கத்தில் 6 panel-களுக்குள் ஒவ்வொரு Character-ன் position, துப்பாக்கிகளின் type, கைவிரல்கள் பிடித்திருக்கும் விதம்...

      ஆராய்வதற்கு ஆயிரம் நல்ல விஷயகள் உள்ளன!

      Delete
    5. // கைவிரல்கள் பிடித்திருக்கும் விதம் //

      டைகர் தன்னோட வலது கையை விரிச்சு நம்மகிட்ட காட்டினார் என்றால், ஐந்து விரல்களும் ஒரே உயரத்தில் சமமாக அமைந்திருக்கும் அதிசயத்தைக் காணமுடியும்! என்ன ஒரு விந்தையான மனிதர் இவர்!! :p

      Delete
    6. அப்புறம், அந்த கோச் வண்டி ஓட்டுபவர் உயரத்தில் மூன்றடியே இருந்தாலும் என்னவொரு லாவகமாக குதிரையைச் செலுத்துகிறார், பார்த்தீர்களா? ;)

      Delete
    7. அதோடு, டைகர் தன் கையில் வச்சிருக்கும் துப்பாக்கியின் வாய்ப்பகுதியை இன்னும் ஓரிரு அங்குலத்திற்கு நீட்டிகொண்டுவிட்டால் போதும்; உடனே அது ரைஃபில் வகையறாவாக மாறிவிடும்! டைகரின் எண்ணற்ற யுத்த தந்திரங்களில் இதுவும் ஒன்று என்று டெக்ஸாஸ் மக்களால் பரவலாகப் பேசப்படுகிறது. :)

      Delete
    8. டைகர் என்னிக்காவது எதிரிய குறி வச்சு சுடுகிறாரா ...................வாயிலேயே வாத்தியம் வாசிக்கிறாரு ..........தீபாவளிக்கு கூட வாய் வலிக்கும் வரை சுட்டு இருப்பாரு ...............

      Delete
  54. How is this sir

    Muthirai mupathu special (MMS)

    ReplyDelete
  55. மங்கல்யான் பொறுத்தவரை எத்தனை நபர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேற்ற போகிறார்கள் ????மங்கல்யான் பொறுத்தவரை ஏனோ 2012 படம் கிளைமாக்ஸ் ஞாபகம் வருகிறது !

    ReplyDelete
  56. வாழைப்பூ வடை போராட்டம் என்று அடிக்கடி செய்தி வருகிறதே என்று இன்று வீட்டில் செய்ய சொல்லி சாப்பிட்டேன் மிளகாய் சட்னிக்கும் வடைக்கும் ப்பா செம ருசி.
    எனக்கு ஒரு டவுட்
    இந்த போராட்டம் காமிக்ஸ்க்காக நடக்கிறதா? இல்லை வடையை ருசிப்பதற்காகவா?

    ReplyDelete
    Replies
    1. ருசித்துக்கொண்டே ரசிப்பதற்காக. ஒரே கல்லில் ரெண்டு வடை! ;)

      Delete
  57. லயன் சூப்பர் 30 ஸ்பெஷல்
    லயன் 30 நாட் அவுட் ஸ்பெஷல்
    லயன் NBS 2014 (NEVER BEFORE SPECIAL)

    ReplyDelete
  58. லயன் 30 காமிக்ஸ் திருவிழா

    ReplyDelete
  59. Again Nizhal 1 Nijam 2 :-( :-( :-(
    Is it possible to replace with some other story sir. As per the many posted comments( for other posts), We all have this recently published story.

    ReplyDelete
  60. லயன் 1-1/2 டன் ஸ்பெசல்.........

    ReplyDelete
  61. ஆசிரியரின் பதிலை எதிர்பார்த்து நான் பதிவை இடுவதில்லை. 2011ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் தற்போதைய காமிக்ஸின் தரம் மிக மிக உச்சத்தில் இருக்கிறது. விலை ஏற்றம் என்பது தவிர்க்கமுடியாதது...... ஆனால் இதை படிப்படியாக செய்திருக்கலாம். 2011 ஆம் ஆண்டு இறுதியில் ஆசிரியர் சொன்னது என் நினைவுக்கு வருகிறது. “ இனி வரும் இதழ்கள் 25 விலையில் உயர் தர காகிதத்தில் வண்ணத்தில் வெளிவரும்” அதற்காகதானே 620 கட்டினோம்,,,, பின்னர் நடந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும். திடீரென்று தரத்தையும் விலையும் ஒரெயடியாக உயர்த்திவிட்டு இனிமேல் இப்படித்தான் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்.

    டாஸ்மாக்கிலும் சினிமா தியேட்டரிலும் காசை இறைப்பவன் ஒரு நாளும் புத்தகம் படிக்கமாட்டான். நான் பேசுவது இந்த பழக்கங்கள் ஏதும் இல்லாத புத்தகம் படிக்க விரும்புகிற நடுத்தர வர்க்கத்தை பற்றி....

    சாபம் இடுவதற்க்கு நான் ஒன்றும் மகா முனிவனும் அல்ல , சக்திமானும் இல்லை......

    ரசிகனுக்கும் தீவிரவாதிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நான் காமிக்ஸ் ரசிகன்.

    காமிக்ஸ் தீவிரவாதி இல்லை.

    ReplyDelete
    Replies
    1. why this kolaivery .. mr.s,moorthy.. avaravar itathil irunthaal thann ellam purium.. & kelvi ketpathu mukavum elithu nanba ...

      Delete
    2. //டாஸ்மாக்கிலும் சினிமா தியேட்டரிலும் காசை இறைப்பவன் ஒரு நாளும் புத்தகம் படிக்கமாட்டான்.//

      ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, என்று பாட்டு எழுதியவரை போல் எத்தனை பேரை மறந்து விட்டீர்களா..உங்கள் பார்வையில் உள்ள ஏழைகள் எப்படியோ, ஆனால் எனக்கு தெரிந்து ஏழை என்பவன் கூட தினமும்,85 ருபாய் சரக்கு (சைடு டிஷ் தனி) செலவு செய்கிறான்.

      ஏற்கனவே ஆசிரியர் எதோ ஒரு காரணத்தில் 120 ருபாய் தனி இதழை, இரண்டாக பிரித்து 60 ரூபாய்க்கு இரண்டு இதழ் என்று செய்து விட்டார். இனியும் இங்காவது, ஏழை, வாங்கும் திறன் போன்ற வார்த்தைகளை, உபயோகித்து Speed Breaker போட வேண்டாமே ப்ளீஸ்.

      Delete
    3. 100 ரூபாய்க்கு யாரவது 450 பக்க டெக்ஸ் வில்லேர் தர முடியுமா .................நம்ம காமிக்ஸ் ஆசான் தந்திருக்கார்ல...........

      Delete
  62. சில தமிழ் பெயர்கள்

    லயன் 30-வது ஆண்டு விஜய (ன் ) சிறப்பிதழ்

    லயன் 30-வது ஆண்டு ஆரவார சிறப்பிதழ்

    லயன் 30-வது ஆண்டு விஜய ஸ்பெஷல்

    லயன் 30-வது ஆண்டு ஆரவார ஸ்பெஷல்

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் பெயரை போடுவதற்கு பதிலாக நிறுவனத்தை தொடங்கிய அவரது தந்தை பெயரில் சிறப்பிதழ் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்.

      Delete
  63. "Lion's Prime Special"
    I think it will reflect how lioncomics in its prime with its rebirth from 2012 with color and new variety of stories. Prime also means plenty of other stuffs, like main, key paramount, dominant etc. It will reflect how lioncomics is the dominant key player in tamil comic market. It also means lion is in its prime 30 years.

    or "

    ReplyDelete
  64. நண்பர்களே, வெற்றி வெற்றி வெற்றி. தமிழில் மீண்டும் நெடு நாட்களுக்கு பிறகு டைப் செய்கிறேன். நான் எல்லாவற்றையும் சரியாக செய்துவிட்டு, டாஸ்க் பாரில் இருக்கும் லாங்குவேஜ் பட்டனை செலக்ட் செய்யாமல் விட்டுவிட்டேன்.
    தோர்கள் உண்மையிலேயே பிரமிப்பாக இருக்கிறது. மிக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.
    அப்புறம், இந்த டைகர், ப்லுபெர்ரி போன்றவர்கள் எப்பிடி அந்த தண்ணீரில்லாத பாலைவனத்திலும் மிக டிப் டாப்பாக இருக்கிறார்கள். சென்னைவாசிகள் இவர்களிடம் இருந்து அந்த சீச்ரெட்டை தெரிந்து கொள்ளவேண்டும்
    அப்புறம், நான் பத்து நாட்களுக்கு முன்பு ட்ரெயினில் ஒரு ஐநூறு கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டேன். அப்பொழுது ஒரு ஐந்து முத்து-லயன் கமிக்ஸ்களை படித்து கொண்டே சென்றேன். நம் காமிக்ஸ் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. i think the current style is the best for now. As sathanji says, it is your taste. An extremely poor guy spends150 rs for a ticket and sees atleast 4 movies in a month. Labourers earn 400 Rs per day nowadays. So it is not a question of affordability. it is a question of taste. Even if you reduce the rate to 5 Rs, people who don't have the taste wont buy.

    ReplyDelete
    Replies
    1. // Even if you reduce the rate to 5 Rs, people who don't have the taste wont buy//

      +1111

      Delete
    2. காமிக்ஸ் குழந்தைகளுக்கானது என்கிற தவறான கண்ணோட்டம் பலர் மனதில் பதிந்துள்ளது. இதுவே முதல் கரணம்.

      Another reason is alarmingly less rate of book reading among our people.

      Delete
    3. // காமிக்ஸ் குழந்தைகளுக்கானது என்கிற தவறான கண்ணோட்டம்... //

      என்னப்பாது இதே பாட்டையே நாம் திரும்பத் திரும்ப பாடிக்கொண்டிருக்கிறோம்... உண்மையில் நம்மூரில் குழந்தைகளுக்குக்காகக்கூட காமிக்ஸ் தயாரிக்கப்படுவதில்லை - குழந்தைகளுக்குக்கூட காமிக்ஸை வாங்கித்தரும் பழக்கம் இங்கில்லை! :D

      Delete
  65. // Even if you reduce the rate to 5 Rs, people who don't have the taste wont buy//

    Factu!

    ReplyDelete
  66. சிங்கத்தின் கர்ஜனை ஸ்பெஷல்

    துயிலேழுந்த சிங்கம் ஸ்பெஷல்

    சிங்கம் 30, நாட் அவுட் ஸ்பெஷல்

    ReplyDelete
  67. ஸ்பெஷலுகோர் ஸ்பெஷல்

    லயன் சரவெடி ஸ்பெஷல்

    லயன் மறுபிறப்பு கொண்டாட்டம்

    ReplyDelete
  68. லயன் + காமிக்ஸ் = 30 ஸ்பெஷல்

    லயன் பிரைம் டைம் கொண்டாட்டம்

    லயன் யுரோ ஸ்பெஷல்

    ReplyDelete
  69. கானக வேந்தன், சிங்கம் ஸ்பெஷல்

    முப்பதினால் அதகளம் செய்வீர் ஸ்பெஷல்

    சிங்கத்துக்கு முப்பது, உங்களுக்கு முப்பொழுது ஸ்பெஷல்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா!
      'சிங்கத்துக்கு 30, சிங்கமுத்து வாத்தியாருக்கு 47 ஸ்பெஷல்' ok? :D

      Delete
    2. முரட்டு சிங்கம் முப்பது!
      முப்பதாம் முரட்டு சிங்கம்!
      முப்பதில் மூப்பாகா சிங்கம்!

      Delete
  70. @Vijayan Sir,

    சீக்கிரமாக 30ஆவது ஆண்டுமலருக்கு ஒரு Title-ஐ அறிவித்துவிடுங்கள்!

    :D

    ReplyDelete
    Replies
    1. இது தாண்டா லயன் 30..........

      Delete
    2. இதையே வச்சுடுங்க ஸார்

      Delete
    3. அப்புறம் ................முப்பது கதை .............ம் ம் ம் ...................முப்பது கிலோ ..............முப்பது சென்டிமீட்டர் உயரம் ..........ஜோன்ஸ் இன் அட்டைபடம் ஹி ஹி ஹி ................

      Delete
  71. //2014-ன் சென்னை புத்தகத் திருவிழா ஜனவரி 10-22 தேதிகளில் நடக்கவிருக்கிறது ! சென்றாண்டு அமைந்திருந்த அதே நந்தனம் மைதானத்தினில் ! நமக்கொரு ஸ்டால் தந்திட அமைப்பாளர்களின் சம்மதம் கிட்டுமென்ற நம்பிக்கையில் காத்துள்ளோம் ! Fingers & toes crossed !!//

    டியர் சார், நண்பர்களே, இந்த புத்தக திருவிழாவில் எதாவது ஸ்பெஷல் இருக்கிறதா ? லயன் முப்பதாவது ஆண்டு மலர் ரிலீஸ் செய்யபடுமா ?

    ReplyDelete
    Replies
    1. @ Organicyanthiram

      இந்த புத்தகத் திருவிழாவில் புதிய அவதாரமான 'சன் ஷைன் கிராபிக் நாவல்' தனது முதல் இதழை 'தோர்கல்' மூலம் தொடங்குகிறது.

      லயன் 30வது ஆண்டு மலர் ஜனவரியில் ரிலீஸ் இல்லை!

      Delete
    2. // இந்த புத்தக திருவிழாவில் எதாவது ஸ்பெஷல் இருக்கிறதா? //

      ஸ்பெஷல் மசாலா கிடையாது. ஸ்பெஷல் சாதா உண்டு!

      Delete
  72. நன்றி திரு Erode VIJAY. This is a great news. ஆனால் ஒவ்வொரு சென்னை புத்தக திருவிழாவிலும் ஒரு NBS style ரிலீஸ் இருந்தால், it would be great. தயவு செய்து இதை பற்றி சற்று யோசியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. // தயவுசெய்து இதைப் பற்றி சற்று யோசியுங்கள் //

      நான் யோசித்து என்ன செய்ய, நண்பரே? அது அந்தக் கட்டைவிரல் காதலரின் கால்களில் அல்லவா இருக்கிறது?!
      பார்ப்போம்... ஒருவேளை, கார்சன் தனது கடந்தகால நினைவுகளைச் சுமந்துகொண்டு புத்தகத் திருவிழாவுக்கு வந்து சேருவாரோ என்னவோ? ;)

      Delete
    2. நான் யோசித்து என்ன செய்ய, நண்பரே?//

      தெய்வம் மனசு வைப்பது இரண்டாவது அல்லவா? முதலில் பூசாரி மனசு வைக்கட்டும் என்று நண்பர் நினைக்கிறாரோ என்னவோ..

      என்னால் தொடர்ச்சியான சிந்தனை ஓடுவதை கட்டுப்படுத்தமுடியவில்லை..

      சிங்கமுத்து அய்யனார் கோயில்:

      விஜயாண்டி பீடத்துக்கு முன்னால் ஈ.விஜய் பெரிய கடாமீசையோடு சகலசம்பத்துகளோடு சாமியாடி முடித்து நிற்கிறார். பக்தர்கள் வரிசையாக வருகின்றனர்.

      பெ.கார்த்திக் (இடுப்பில் துண்டுடன்): ஐயா, இந்தத்தொடர்கதைகளை மிக்ஸ் பண்ணிப் போடுற வழக்கம் எப்பங்கையா சரியாகும்?

      பூசாரி: அதெல்லாம் இன்னும் 2-3 வருசத்துக்கு நீ அனுபவிச்சிதான் ஆவணும். போ, இப்பத்தைக்கி கிடைக்கிறத படிச்சி சந்தோசப்படு. போய்ட்டுவா!

      ஆ.தாமிரா: சாமீ, இந்த குண்டு புக்கு வரவே மாட்டிங்குதே, நீங்கதான் மனசு வைக்கணும்..

      பூசாரி: நீ மட்டும் நல்லா தின்னு குண்டாவணும்னு நினைக்காத, ஊரு ஒலகத்துல எல்லாருக்கும் வேண்டாமா? எல்லாம் நடக்கும், நல்லதா நினை.

      வி.சுஸ்கி: போன கதையில சாமீ, 234ம் பக்கத்துல அந்த உணர்ச்சி பிரவாகமிக்க வசனமும், ஓவியமும் என் மனசை புழிஞ்சிடுச்சி சாமீ. இதோட உள்ளர்த்தம் என்னான்னா..

      பூசாரி: மத்தவங்க படிக்கிறதுக்கு முன்னாடி, நீ அடிக்கடி சஸ்பென்ஸை உடைக்கிறே, அய்யனார் கண்ணக் குத்திப்புடுவாரு, ஜாக்கிரதையா இருந்துக்கோ.. இந்தா துண்ணூரு..

      பரணீ: சாமீ, கொஞ்ச நாளா இந்த கிராஃபிக் நாவல்னு சொல்லி, கொடுமைப் படுத்துறாங்க சாமீ.. இதுலயிருந்து எங்களுக்கு விடிவே கிடையாதா?

      பூசாரி: எனக்கும் உன் பிரச்சினைதான். நானும் சாமிய கேக்காத நாளில்லை.. அய்யனார் மனசிரங்கணும்னு வேண்டிக்க, உன் சார்பா நானும் துண்ணூரை வாயில போட்டுக்குறேன்..

      பலரும்:
      சாமீ, ஜனவரியில என்ன புக்கு?
      2014ல புக்கு குறைஞ்சி போச்சி..இன்னும்..
      டெக்ஸைக் காணோம், கண்டுபிடிச்சிகுடு அய்யனா..
      டைகர், டைகர்..
      விலை கூடிப்போச்சே, ஐயா.. மனசு..
      அப்பப்போ ப்ரிண்டிங் கோளாறூ..
      புக்கு முனை மடங்குது சாமீ..

      பூசாரி: சாமி மலையேறப்போவுது.. ஒண்ணும் கவலப் படாதீங்க.. உங்க குறையெல்லாம் அய்யனார் பாத்துப்பார், நான் சொல்றேன்.. போய் அமாவாசை விரதமிருந்து, சாராயம் வைச்சி, கோழியடிச்சி கும்பிட்டு சந்தோசமா இருங்க.. அய்யனாரே, புள்ளைகளை காப்பாத்துய்யா!!!

      Delete
    3. @ஆதி

      ஹா ஹா ஹா! கலக்கிப்புட்டீங்க போங்க! :D

      கூட்டாஞ்சோறு இதழ் வேணாம்னு அடம்பிடிச்சவரின் துண்டை பூசாரி கடுப்பிலே உருவி எறிஞ்சுடற மாதிரி ஒரு சீன் வச்சிருந்தா ரொம்ப இயல்பா இருந்திருக்கும்... :D

      Delete
    4. ஸ்பைடரின் கடைசிக் கதை கலரில் வேணும்னு அடம்பிடிச்ச கோவை ஸ்டீலாரை, அய்யானாரின் கையிலிருந்த அருவாளைப் பிடிங்கி எடுத்துக்கிட்டு, பூசாரி ஓட ஓட விரட்டுறமாதிரியும் ஒரு சீன் வச்சுடுங்க ஆதி! :)

      Delete
  73. KBT 3 result என்ன ஆச்சு ?

    ReplyDelete
    Replies
    1. அதானே? இதுக்கும் ஒரு போராட்டக்குழுவை ஆரம்பிச்சாத்தான் சரிப்படும் போலிருக்கே? கிர்ர்ர்....

      Delete
  74. லயன் பொக்கிஷம் மலர்

    லயன் பொக்கிஷம் ஸ்பெஷல் (30ம் ஆண்டு மலர்)

    ReplyDelete