Tuesday, October 29, 2013

ஒரு நவம்பர் நாயகன் !

நண்பர்களே,

வணக்கம். நண்பர் XIII ஒரு நிஜ வாழ்க்கைப் பாத்திரமாய் இருந்திடும் பட்சத்தில் -அவரது "ஞே" முழிக்கும்  ; குழப்பப் பார்வைக்கும் நிச்சயமாய் நான் விளக்கம் கோரி இருக்க மாட்டேன் ! கடந்து சென்ற ஒரு வாரத்தின் தலையைப் பிய்க்கச் செய்யும் பரபரப்பு என்னையும் கிட்டத்தட்ட அதே நிலைமையில் வைத்திருப்பதால் அவரை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிகிறது எனும் நிலை ! எழுத எழுத நீண்டு கொண்டே செல்லும் காமிக்ஸ் டைம் பக்கங்கள் ; எத்தனை முயற்சித்தாலும் இன்னும் கொஞ்சம் மெருகூட்டலாமோ என்று தோன்றச் செய்த டெக்ஸ் இதழின் ஹைலைட்டான "டேவிட் பொனெல்லியின் பேட்டி" ; 460+ டெக்ஸ் பக்கங்களில் பிழைகளைத் திருத்தம் செய்யும் வேகத்திலேயே புதிது-புதிதாய்க் கண்ணில் பட்ட கூடுதல் பிழைகள் ; சற்றே complex ஆகத் தோற்றம் தந்த  "சிப்பாயின் சுவடுகளில் "கிராபிக் நாவலை நம் ரசனைக்கு ஏற்புடையதாய் செதுக்கிட அவசியமான ஒரு வண்டி அவகாசம் ; அந்த இதழில் உச்ச முக்கியத்துவம் கொண்ட 2014-க்கான அறிவிப்புகள் ; அவற்றின் பின்னணியில் நின்ற எனது சிந்தனைகள் பற்றிய தொகுப்பு ; ஜானி ஸ்பெஷல் இதழோடு வரவிருக்கும் KBT -3 -ன் முதல் கதையின் வெற்றி பெற்ற ஆக்கத்தைத் தேர்வு செய்யும் பணிகள் ;  அடுத்த மாதம் CHICK BILL ஸ்பெஷல் பற்றிய திட்டமிடல் ; எல்லாவற்றிற்கும் மேலாய் 2014 -ன் முழு அட்டவனணயினையும் தாங்கிய குட்டி புத்தகத்தின் வடிவமைப்பு ; "இந்தக் கதைக்குப் பதிலாய் - அதைப் போட்டிருக்கலாமோ ? பாணியிலான கடைசி நிமிட யோசனைகள் நடு ராத்திரியில் எழுந்திட - பரீட்சைக்குப் படிக்கும் புள்ளையைப் போல  இறுதித் தருணத்தில் நான் படிக்க அவசியமான கதைகள்.... என மொத்தமாய் ஒரு அதகள வாரம் மங்கலான நினைவுகளாய் மட்டுமே உள்ளது !  

'வாரத்தில் குறிப்பிட்ட தினங்களில் பதிவிடலாமே !' என்ற உங்களின் சமீபத்திய பின்னூட்டங்களை அவசரமாய்ப் படிக்க நேர்ந்தது ! நானொரு முழு நேர காமிக்ஸ் எடிட்டராய் செயல்படும் சுதந்திரம் கிட்டும் நாளன்று நிச்சயமாய் இது சாத்தியமே ! ஆனால் ஒரே நேரத்தில் காமிக்ஸ் குதிரையிலும், நமது இதர முயற்சிகளிலும் சவாரி செய்திடல் அவசியமாகிடும் வரை எனது நாட்களின் திட்டமிடல் நிச்சயமாய் எனது கைகளில் இல்லை ! இந்த காமிக்ஸ் சர்க்கஸ் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க  - வெள்ளியன்று எழுந்ததொரு அவசரப் பணி நிமித்தமாய் - சனி இரவு புறப்பட்டு - நியூயார்க் நகரை ஞாயிறு மாலை  எட்டிப் பிடிக்க வேண்டிப் போனது !  மொத்தமாய் 4 மணி நேரப் பணியின் பொருட்டு - 25 + 25 மணி நேரப் பயணம் என்பதை நியூயார்க் விமான நிலைய immigration அதிகாரியிடம் விளக்கிய போது 'இது மறை கழன்ற கேஸ் !' என்று சொல்லாமல் சொன்னது அவரது பார்வை ! திங்கள் மாலை ஊரைப் பார்த்துத் திரும்பிடும் பயணம் ; விமான நிலையத்துக்குக் கிளம்பிடுவதற்கு முன்னே கிட்டிய முதல் அரை மணி நேரத்தில் இந்தப் பதிவை அரக்கப் பரக்க எழுதுகிறேன் ! 



இதோ - இது வரையில் இருந்த "சிப்பாயின் சுவடுகளில்" அட்டைப்படம் ! அடிப்படையில் வியட்நாமின் கிராமங்களில் நடந்தேறும் கதை இது என்பதால் - இதற்கு ஒரு ultra மாடர்ன் லுக் வேண்டாம் என நினைத்தேன் ! எனக்கு அழகாய்த் தோன்றிய பொன்னனின் இந்தப் படைப்பு உங்களுக்கு எவ்விதம் தோன்றவிருக்கிறதோ தெரியவில்லை ! நாளை நள்ளிரவுக்கு ஊர் திரும்பிட வேண்டும் என்பது இப்போதையப் பயண திட்டம் ! நேரம் கிடைக்கும் பட்சத்தில் அதற்கு முன்பை இந்தப் பதிவை இன்னும் தொடருவேன் ; இல்லையெனில் புதன் காலை வரை கொஞ்சமாய்ப் பொறுத்துக் கொள்ளுங்களேன் !

Before I sign out...ஒரு கொசுறுத் தகவல் : இம்மாதம் வரவிருக்கும் இதழ்களில் பிரபல நாயகர்கள் இருந்திட்டாலும் - நிஜமான ஹீரோ யார் என்பது எனக்குத் தெரியும் ! அது வேறு யாருமல்ல - எனது வலது ; இடது ; முன் ; பின் கரங்கள் சகலத்தையும் உணர்த்திடும் நமது அலுவலக மைதீன் தான் ! இந்த ஒரு வாரத்தில் நான் தூங்கிய நேரங்களை விடக் குறைவாய்த்  தூங்கியவன் மைதீன் ! துளியும் புன்னகை மாறாது - 'சரி அண்ணாச்சி' என்ற ஒற்றைச் சொல்லைத் தாண்டிய வேறு ஏதும் அறிந்திரா இந்த மௌன ஹீரோ தான் நமது நவம்பர் நாயகன் !  See you soon folks !

Part 2 : தவணை முறைகளில் பதிவுகளைப் பூர்த்தி செய்வது நமக்குப் புதிதல்ல தான் என்றாலும், இம்முறை இந்த transatlantic சங்கதி கொஞ்சம் ஓவர் என்று தான் எனக்கே படுகிறது ! செவ்வாய் பின்னிரவு சென்னை வந்து இறங்கியான பின்னே - தூங்குவதா ? - சாப்பிடுவதா ? என அறிந்திருக்கா உடம்பின் குழப்பத்தின் மத்தியினில் இங்கே எட்டிப் பார்த்தால் கிட்டத்தட்ட 130 பின்னூட்டங்கள் ! நாளைய பகலில் நேரம் கிட்டுமோ - என்னவோ என்ற சந்தேகம் எழுவதால் - ராக்கூத்தை தொடர்ந்திடுவதே உத்தமம் என்ற தீர்மானத்தில் எழுதுகிறேன் !

அனைவர் முன்னும் பெரிதாய் நிற்கும் - இம்மாத இதழ்களின் despatch நிலவரத்தைப் பற்றிய update பிரதான முக்கியத்துவம் பெறுகிறது ! டெக்ஸ் வில்லரின் "குண்டூஸ்" இதழும் ; "ஒரு சிப்பாயின் சுவடுகளில் " கிராபிக் நாவலும் புதன் (30/Oct ) மாலைக்குள் தயார் ஆகிடும் ! ஜானி ஸ்பெஷலுக்கு மேற்கொண்டு ஒரு நாள் அவசியமாகிடலாம் ! ஆனால் ST கூரியர் நண்பர்கள் 'வியாழன் புக் செய்யப்படும் பார்சல்கள் - வெள்ளியன்று கிடைக்கும் சாத்தியக் கூறுகள் 50-50 தான் !' என்று சொல்லி விட்டதால் 'மூன்றையும் ஒன்றாய் அனுப்புகிறேன் பேர்வழி ' என மொத்தத்திற்கு சொதப்புவதை விட - தயார் ஆகி  விட்ட 2 இதழ்களையாவது அனுப்பிடல் நலம் என நினைக்கிறேன் ! So - புதன் மாலை 2 இதழ்களும் கூரியரில் கிளம்பிடும்  ! 2014-ன் அட்டவணையும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த சங்கதி என்பதால் கூரியர் பயணத்தை அதுவும் சேர்த்தே செய்திடும். So - வியாழன் & வெள்ளிக்குள் அனைவரது கைகளிலும் at least  2 புது வெளியீடுகள் + தொடரும் ஆண்டின் நமது ஜாதகமும் இருந்திடும் !

2014-ன் அட்டவணை கொணரக் காத்திருக்கும் உங்களின் responses - நிச்சயமாய் தொடரும் நாட்களை ரொம்பவே விறுவிறுப்பாய் வைத்திருக்கப் போகிறது என்பது எனது யூகம் ! கடைசி வாரம் வரை mixing & matching வேலைகளை செய்த வண்ணம் இருந்தேன் என்றாலும், நிச்சயமாய் என்னுள் குழப்பங்கள் இருந்திடவில்லை  !(சொல்லப் போனால் இன்று காலை இலண்டன் விமான நிலையத்தினில் அமர்ந்து ப்ளூ கோட் பட்டாளத்தின் சாகசம் ஒன்றிற்குப் பெயர் வைக்கும்  கூத்தும் அரங்கேறியது !) இந்தாண்டின் பாடங்கள் + ஹிட்ஸ் + flops எனது திட்டமிடல்களைப் பெருமளவிற்கு செதுக்கியன என்பதால் - இந்த அட்டவணை indirect ஆக உங்களின் ஆக்கமே என்று தான் சொல்ல வேண்டும் ! இம்முறை வழங்கப்படவிருக்கும் அட்டவணையில் - 11 மாதங்களுக்கான (லயன் 30-வது ஆண்டுமலர் வெளியீடு நீங்கலாய்) புது இதழ்கள் + மறுபதிப்புப் பட்டியல்கள் உள்ளன ; ஆனால் எவை எந்த மாதங்களில் - எந்தக் கூட்டணியில் வரும் என்ற நிர்ணயம் மாத்திரம் இப்போதைக்குக் கிடையாது ! கொஞ்சமேனும் ஒரு எதிர்பார்ப்பு எஞ்சி இருக்க வேண்டுமன்றோ ?

நம் காமிக்ஸ் வரிசைக்கு 2014 ஒருப் புது ஆட்டக்காரரையும் அறிமுகம் செய்யக் காத்துள்ளது ! கிராபிக் நாவல்களின் தாக்கம் நம் அனைவரிடமும் ஒரே விகிதத்தில் இருப்பதில்லை என்பதை   இந்தாண்டின் அனுபவங்கள் தெளிவாகவே புரியச் செய்துள்ளன ! So  புதுத் திட்டமிடலின் போது கிராபிக் நாவல்களுக்கென ஒரு பிரத்யேக அரங்கினைத் தயார் செய்திடும் பட்சத்தில் - 'பிடிக்கிறதோ - பிடிக்கலியோ - சந்தாவில் இவையும் சேர்ந்தே வரும் !' என்ற கட்டாய நிலை தவிர்க்கப்படும் என்று தோன்றியது ! தவிரவும், நமது தற்சமய பாணிகளில் இருந்து விலகி நிற்கும் சில படைப்புகளை இது போன்றதொரு தனி track-ல் பயணம் செய்திடச் செய்தால் நெருடல்கள் இராது என்றும் நினைத்தேன். So "சன்ஷைன் கிராபிக் நாவல்ஸ் " எனும் நமது புது வரவு 2014 -ல் ஒரு பரீட்சார்த்த முயற்சியாகத் துவங்கிடவுள்ளது ! இன்னமும் சில படைப்பாளிகளிடம் இது தொடர்பான கதைகளுக்குப் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதால் - இப்போதைக்கு என்னால் இந்த வரிசையின் வெளியீட்டுப் பட்டியலை முழுமையாக்கிட இயலாது ! ஆகையால் இந்தப் புது வரவின் விபரங்கள் 2014-ன் தற்சமய அட்டவணையினில் இருந்திடாது ! ஏப்ரலில் துவங்கவிருக்கும் இம்முயற்சிக்கு ரூ.400 ஆண்டுக் கட்டணம் என்பது உறுதி ; so ஒரே வேலையாக சந்தாத் தொகைகளை அனுப்பிட நினைக்கும் நண்பர்கள் - 2014-ன் அறிவிக்கப்படும் தொகையோடு இந்த ரூ.400-ம் சேர்த்தே அனுப்பிடலாம் !

நாளை இரவு உங்களின் பின்னூட்டங்களுக்குப் பதில் தரும் முயற்சியில் இறங்கிடுகிறேன் ! தூங்க முயற்சிக்கப் புறப்படும் முன்னே - இதோ இம்மாத இதழ்களின் அட்டைப்படங்களில் நாங்கள் செய்த எக்கச்சக்க முயற்சிகளில் சில samples !ஒரு மெல்லிய rustic look இக்கதைக்குப் பொருத்தமாய் இருந்திடும் என எனக்குத் தோன்றியதால் - action sequences கொண்ட டிசைன்களைத் தேர்வு செய்திடவில்லை ! அதே போல் ஒரு நல்ல நாளும், பொழுதுமாய் வெளியாகும் இதழின் அட்டையில் அடுக்கிக் கிடக்கும் சவப்பெட்டிகள் வேண்டாமே என்று மண்டைக்குள் ஒரு சிந்தனை ஓட, ஒரிஜினலின் அந்த சவப்பெட்டி ராப்பருக்குக் கல்தா கொடுத்தேன் ! Anyways - கதைக்கு இது ஒரு முகவுரை மாத்திரமே என்பதால் நிஜத் தேர்வு அட்டையினை விட - தொடரும் உட்பக்கங்களில் தான் என்று சொல்வேன் ! Bye for now guys !




269 comments:

  1. Replies
    1. பாஸ்..இப்போ தான் முதன் முதலா ஒரு போஸ்ட் ...அதுவும் first a...விடுங்க பாஸ்

      Delete
  2. I am the very First visitor Our of new updated web site

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. அட்டைப்படம் பற்றி சொல்வதெனின் ....... ஒரே ஒரு வார்த்தை: மரணம்

    ReplyDelete
    Replies
    1. @விஸ்வா
      //அட்டைப்படம் பற்றி சொல்வதெனின் ....... ஒரே ஒரு வார்த்தை: மரணம் //
      ooooooopps! ஏன்னு தெரிஞ்சுக்கலாமா சார்??? நீங்க உணர்வுகளின் எல்லைக்கே போயிடீங்கன்னு நினைக்கறேன்.
      அந்த சிப்பாயின் முகத்தில் ஓவியர் வெளிப்படுத்தியுள்ள ஒரு RESOLVE சட்டென்று என்மனதில் படிகிறது.மஞ்சளும் சிவப்பும் கலந்த BG யுத்தத்தின் OFFICIAL நிறமாக அதை REPRESENT செய்கிறது. முதலாவதாக உள்ள படத்தில் போரினால் ஈடுபட்டுள்ள மனிதர்களின் அவலம் வெளிப்படுகிறது.GRAPHICAL GIMMICKS இல்லாமல் ப்ளைன் ஓவியங்களை கொண்டு அட்டையை வடிவமைத்துள்ள விதம் அருமை. CONGRATS பொன்னன்!

      Delete
    2. விஸ்கி - சுஸ்கி,

      மனித வாழ்க்கையின் உச்சமாக நான் கருதுவது மரணத்தையே. அதுவே நமது வாழ்வின் ஹைலைட் என்பதால் ஒரு குறிப்பிட்ட விஷயம் / சங்கதி என்னை கவர்ந்துவிட்டால், அதனை பற்றி கருத்து கேட்கும்போது என்னுடைய பொதுவான பதில் : மரணம்.

      உதாரணமாக ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் எப்படி? - மரணம்.

      அதனால்தான் இந்த அட்டைப்படம் பற்றிய என்னுடைய அவதானிப்பு அப்படி இருந்தது.

      ஏன் என்னை இந்த அட்டைப்படம் கவர்ந்தது என்பதற்கான காரணத்தை நீங்கள் அழகாக வெளியிட்டு விட்டீர்கள்.

      Delete
  5. 2014இல் விலை மாற்றம் இருக்குமா சார் , அப்படி இருந்தால் அதையும் சேர்த்து அட்டவனைஇல் குறிப்பிடவும், சந்தா விவரங்களையும் சேர்த்து வெளிஇடவும்

    ReplyDelete
  6. சார் எங்கள் கைகளில் 30ந் தேதி புத்தகங்கள் கிடைக்குமா ?

    ReplyDelete
  7. உச்சபச்ச அவசரத்திலும், கிடைத்த சில நிமிடங்களில் எங்களுக்காக பதிவொன்றை வீசிச் சென்றிருக்கும் உங்களுக்கு நன்றிகள் சார்!

    பிழை திருத்தும் பணிகள், மெருகூட்டும் பணிகள், புதிய சிந்தனைகள் என்று உங்களது கடந்தவாரப் பரபரப்பான அனுபவங்களை நீங்கள் விவரித்திருப்பதன்(!) வாயிலாக, நாங்களும் அப்பரபரப்பின் ஒரு துளியையேனும் உணர்ந்திட முடிகிறது!
    கூடவே, இந்தவார இறுதிக்குள்ளாகவே காமிக்ஸ்கள் திட்டமிட்டபடி நம் கைகளை அடைந்திடுமா என்ற ஐயமும் துளியூண்டு எட்டிப் பார்ப்பதையும் தவிர்த்திட இயலவில்லை!

    மைதீனுக்கு காமிக்ஸ் ரசிகர்ளின் ஒட்டுமொத்த வாழ்த்துக்களும், நன்றிகளும் சென்று சேரட்டும்!

    'சிப்பாயின் சுவடுகளில்'- மஞ்சள் நிற முன்னட்டை அசத்துகிறது! பின்னட்டை எனக்குக் கொஞ்சம் 'சுமார்' ரகமாகவே தோன்றுகிறது. சரித்திரப் பின்னணியிலான இக்கதையைப் படித்திட ஆவலாய் இருக்கிறேன்.

    உங்களின் விரிவான பதிவுக்காகக் காத்திருக்கிறேன்......

    ReplyDelete
    Replies
    1. //'சிப்பாயின் சுவடுகளில்'- மஞ்சள் நிற முன்னட்டை அசத்துகிறது! பின்னட்டை எனக்குக் கொஞ்சம் 'சுமார்' ரகமாகவே தோன்றுகிறது. சரித்திரப் பின்னணியிலான இக்கதையைப் படித்திட ஆவலாய் இருக்கிறேன். //

      இந்த புத்தகம் ebay லிஸ்டிங்கில் இல்லையே???

      Delete
    2. பின் அட்டையில் அந்த வயதான முன்னாள் சிப்பாயின் படம் வரையப்பட்டுள்ளது. அவர் தனது கடந்த காலத்தை நினைவு கூர்கிறார்.

      Delete
    3. @செந்தில்
      வயதான சிப்பாயா ?? நீங்க இந்த கதைய ஆங்கிலத்தில படிச்சிருக்கீங்களா?? எனக்கு என்னமோ அந்த சிப்பாயின் சுவடுகளை தேடிவந்த பத்திரிக்கயாளரை போல தெரியுது!

      Delete
  8. எடிட்டர் சார்,

    தங்களின் கடின உழைப்பு என் போன்றோர்களை பிரமிக்க வைக்கிறது. காமிக்ஸ் மேலுள்ள காதலினால் எப்படியெல்லாம் தங்களை வருத்தி எங்களுக்கு அருமையான புத்தகங்களை வழங்கிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கமும் நன்றிகளும்.

    மேலும் மைதீன் போன்ற பணியாளர்கள் இக்காலத்தில் கிடைப்பது மிகவும் அரிது. அவருக்கும் எங்களின் நன்றிகளை சொல்லிவிடுங்கள்.

    ReplyDelete
  9. பல மாதங்களுக்குப் பின் அட்டைப் படத்துடன் ஒன்றிப் போகும் எழுத்திலே தலைப்பு! இந்த அட்டை என்னைக் கேட்டால் அட்டகாசம் என்று தான் சொல்லுவேன்.

    ReplyDelete
  10. அட்டைப் படம்...அட்டகாசப் படம்.

    ஆந்தை முழியார் அமெரிக்காவிலா.... என்றேனும் சிகாகோ வருவதாய் இருந்தால் ஒரு ஆந்தையின் காலில் செய்தியோலை அனுப்பவும், (செண்டை மேளம்முழங்க, தாரை தப்பட்டைகள் பிளிற இல்லாவிட்டாலும்), தகுந்த வரவேற்பு அளிக்கப்படும். நண்டு பொரியல் இல்லாவிட்டாலும், வீட்டு காளான் பிரியாணியுடன் துருக்கியின் இறால் ஸவர்மா நிச்சயம். "கார்சனின் கடந்த காலம்" வண்ணத்தில் வருமெனில் கவனிப்பும் சற்றே கூடுதலாக இருக்கும் என்பது தங்களின் கனிவான கவனத்திற்காக.

    ReplyDelete
  11. இந்த அட்டை படம் பிரமாதமாக உள்ளது!

    எங்களுக்கு நல்ல புத்தகங்கள் கிடைக்க உங்களின் ஒவ்வொரு நாள் கடின உழைப்பு தெரிந்ததே என்றாலும், உங்களின் பதிவு அதை மேலும் உறுதியாக்குகிறது. உங்களுக்கு assistants யாராவது தேவை எனில் நம் வாசகர்கள் நிறய பேர் (நான் உள்பட) ஆர்வமாக இருப்பார்கள் என்று நினைக்கிறன் :)

    ReplyDelete
  12. By reading today's post, we can also get the urgency/madness beyond the 4 books preparation.

    @Editor
    I can understand the urgent visit to NY, next time please let us know in advance - would love to meet you here in person.
    Once i had done like a 3 day India trip that itself confused my biological calendar very bad, not sure how did you manage this 4 hours trip - this short trip warrants its own travel post :)

    ReplyDelete
  13. Good Job Vijayan Sir.. Cover is quite good. best wishes for your safe trip.. ADVANCE HAPPY DIWALIIIIIIIII..!!!!!!!!!

    ReplyDelete
  14. மை டியர் மானிடர்களே !!!
    இன்னும் இரண்டொரு நாளில் புகழ்பெற்ற சாப்பாட்டுராமன்கள் இருவர் நமது வீடு தேடி வரவிருக்கிறார்கள்.வறுத்தகறியும்,வேகவைத்த ஆப்பிளும் அல்லது பீன்ஸ் கறியும் ,வேகவைத்த உருளைக்கிழங்கும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.
    இல்லையேல் உங்களுக்கு "கெட்ட சுகி" ஆகிவிடும் அபாயம் உள்ளது .
    உஷார்.ஹிஹி...!!!

    ReplyDelete
    Replies
    1. நேற்று நிஜம்மாகவே ஒரு ஆப்பிள் தின்றேன் ......வேக வைத்த ஆப்பிள் போல இருந்ததால்......என் அன்னையிடம் வினவினேன் ,,,,,,டெக்ஸ்ன் வருகைக்காக இயற்கையாகவே வேக வைக்க பட்டுள்ளதோ எனும் எண்ணம் மேலோங்க !

      Delete
  15. அட்டை படம் அபாரம் ! ஆக இந்த தீபாவளி மூன்று அட்டை படங்கலாலும் அலங்கரிக்க பட்டு விட்டது ! அட்டையில் மஞ்சள் நிறத்தின் ஆக்கிரமிப்பு அதிகமிருந்தாலும் மங்களகரமாய் ஒரு வசீகரம் உள்ளது ! அட்டை படங்கள் இந்த மாதம் ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் உள்ளது ! அனைத்திற்கும் நன்றிகள் சார் !

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அதிரடி பணியினூடே எங்களை நினைவு வைத்திருப்பதற்கு நன்றிகள் கூறினாலும் , தொந்தரவு செய்கிறோமோ என்ற நியாயமான வருத்தமும் எட்டி பார்க்கிறது ! சென்ற வாரம் உங்களுக்கு அதிரடி வாரமாக இருப்பினும் , இந்த வாரம் எங்களுக்கு அதிர்வெடி வாரமாய் இருக்க போவது உறுதி என்பது மைதீன் அவர்களுக்கு தாங்கள் அளித்த பாராட்டு பத்திரம் உறுதி செய்வதால் எங்களது நன்றிகளையும் , பாராட்டுகளையும் ஒருங்கே அவருக்கு அறிவித்து விடுங்கள் !

      Delete
    2. முன்னட்டை பின்னட்டை இரண்டுமே அருமை . கட்டங்களுக்குள் அடைக்க பட்ட படங்கள் என்னை ஈர்த்ததில்லை இது வரை ; இது அதற்க்கு விதி விலக்கு போலும் . பொன்னன் அவர்களுக்கும் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் !

      Delete
    3. புத்தகம் நாளை மாலையே அனுப்ப பட்டு விட்டால் நவம்பர் நாயகனுக்கு கூடுதலாய் ஒரு ஜே!

      Delete
    4. //புத்தகம் நாளை மாலையே அனுப்ப பட்டு விட்டால் நவம்பர் நாயகனுக்கு கூடுதலாய் ஒரு ஜே! //
      +1

      Delete
  16. சார்,
    இந்த மாதம் வரவிருக்கும் மூன்று அட்டைப்படங்களும் ஒன்றுக்கொன்று மிஞ்சும் விதத்திலுள்ளன!. காமிக்ஸ் படிப்பது வேண்டுமானால் சிறுப்பிள்ளை விளையாட்டாகயிருக்கலாம், ஆனால் அதனை நடத்திடுவது அப்படியல்ல என்பது தங்களின் வரிகளைப் படிக்கும் பொழுது உணர முடிகிறது! எப்படியும் இதழ்களை இம்மாத 31-ல் டிஸ்பாட்ச் செய்வதற்காக தாங்கள் கங்கணம் கட்டிக்கொண்டு இயங்குவது கண்கூடாகத் தெரிகிறது!

    2014-ன் வெளியீடுகளைத் தாங்கி வரும் அட்டவணையில் லயன் மற்றும் முத்து காமிக்ஸ் மட்டுமா அல்லது +6 / மறுப்பதிப்பு வெளியீடுகளும் இடம் பெறுமா..?

    Mr. மைதீன் இவன் ரொம்ப நல்லப் பையன்!

    ReplyDelete
    Replies
    1. //2014-ன் வெளியீடுகளைத் தாங்கி வரும் அட்டவணையில் லயன் மற்றும் முத்து காமிக்ஸ் மட்டுமா அல்லது +6 / மறுப்பதிப்பு வெளியீடுகளும் இடம் பெறுமா..?//
      ஹ ஹ ஹா தீபாவளிக்கு முன்னரே கொளுத்தி போட்டு விட்டார் பட்டாசை

      Delete
    2. இதழ்கள் வந்தவுடன் இன்னும் என்ன வெடியெல்லாம் வெடிக்கயிருக்கிறதோ?

      Delete
  17. சார் அப்படியே அந்த குட்டி புத்தகத்தின் பக்கங்களையும் இங்கே வெளியிடலாமே எனும் எண்ணமும் , இல்லை கரங்களுக்குள் புத்தகமாய் பார்த்தால் இன்னும் உற்ச்சாகமாய் இருக்குமே என்ற எண்ணமும் எழுவது தவிர்க்க இயலவில்லை . நீங்களும் மண்டையை பிய்த்து ஏதேனும் ஒரு சிறந்த முடிவை எடுத்து எங்களை உற்ச்சாக படுத்துங்கள் என கேட்டு கொள்கிறேன் !

    ReplyDelete
    Replies
    1. // நீங்களும் மண்டையை பிய்த்து ஏதேனும் ஒரு சிறந்த முடிவை எடுத்து எங்களை உற்ச்சாக படுத்துங்கள் என கேட்டு கொள்கிறேன் !// +1

      Delete
  18. Sir,srilankan fans still not received the October release,why,is there any particular reason?

    ReplyDelete
    Replies
    1. I don't see any possibility of editor's reply in his busy schedule..... did u checked with kogulam rc....? Do u have any ideas of their payment methods....?

      Delete
    2. Yes I have checked with them also.but there is no proper reply.hope editor will give the answer soon.here we are not subscribe usually.because we have some other problem if we subscribe indian tamil books.i think you all know about it.

      Delete
    3. I got my book at 12th Oct in Colombo.

      Delete
    4. Where?I have checked in usual book shops.please let me know if you find any book there.

      Delete
    5. I get my books directly from Prakash Publishers. They sent it to me through post. I haven't seen any comics books in stores for atleast a year.

      Delete
    6. At Colombo.there are 3 shops,some agents directly imported from India.

      Delete
  19. @ விஜயன் // இந்த ஒரு வாரத்தில் நான் தூங்கிய நேரங்களை விடக் குறைவாய்த் தூங்கியவன் மைதீன் ! துளியும் புன்னகை மாறாது - 'சரி அண்ணாச்சி' என்ற ஒற்றைச் சொல்லைத் தாண்டிய வேறு ஏதும் அறிந்திரா இந்த மௌன ஹீரோ தான் நமது நவம்பர் நாயகன் ! //

    அவருக்கு சொல்ல நன்றி என்ற ஒரு சொல் போதுமா? என தெரியவில்லை.

    உங்கள் பதிவுகள் தாமதம் ஆகும் ஒவ்வொரு தருணத்திலும் அதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளவே விரும்புவேன்,நான். மிக சரியான காரணம் இன்றி பதிவுகள் தாமதம் ஆவதில்லை. பல்வேறு பணிகளுக்கு இடையில் எங்களுடன் நேரம் செலவிடுவற்தற்கு நன்றிகள் பல

    ReplyDelete
  20. சிப்பாயின் முன்னட்டைப்படம் சிறப்பு!

    என்னதான் இத்தனை கடினமான பணிகள் இருக்கும் என அனுமானிக்க முடிந்தாலும், நீங்கள் லிஸ்ட் போடுகையில் ஆவ்வ்வ்.. என வியப்பதைத் தவிர வேறி வழியில்லை. ரொம்பக் கஷ்டம்தான்! உங்கள் சிரமம் உணர்கிறோம். இதற்கிடையில், பதிவெங்கே பதிவெங்கேனு இங்கே கத்திக்கொண்டிருக்கும் எங்களையும் கவனிப்பதென்றால் சிரமம்தான், உணர்கிறோம். இதைத்தான் காலில் கட்டிய குண்டு என முந்தைய பதிவில் சரியாக சொல்லியிருக்கிறேன் என நினைக்கிறேன். :-)))))))

    என்ன திடீர் நியூயார்க் பயணம்? ஹிஹி!! தனிப்பட்ட பயணம் என்றால் கேள்விகள் இல்லை எங்களுக்கு! ஆனால், ஏதாவது 2014 கொள்முதல் எனில்.... அவ்வ்வ்வ்வ்வ்.. ஒரு ஆர்வம்தான்!!

    புக் எப்போ வரும்னு சொல்லாம, இவ்ளோ கஷ்டங்களை பட்டியலிட்டதில் தீபாவளிக்கு முன் புக்ஸ் வருமாவென வயிற்றில் புளி கரைக்கிறதே! ஆனாலும் சஸ்பென்ஸ் விளையாட்டில் உங்களை மிஞ்ச ஆளில்லை.

    குண்டு டெக்ஸ், கிராபிக் நாவல், ஜானி, 2014 பட்டியல், சந்தா விபரம், KBT3முடிவு (மண்ணா, பொன்னா விளையாட்டில் நானும் இருக்கேனே!) என ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறிப்போய் கிடக்கிறது. :-)))))))))))

    ReplyDelete
    Replies
    1. //புக் எப்போ வரும்னு சொல்லாம, இவ்ளோ கஷ்டங்களை பட்டியலிட்டதில் தீபாவளிக்கு முன் புக்ஸ் வருமாவென வயிற்றில் புளி கரைக்கிறதே! ஆனாலும் சஸ்பென்ஸ் விளையாட்டில் உங்களை மிஞ்ச ஆளில்லை.// +10000000

      Delete
    2. // என்ன திடீர் நியூயார்க் பயணம்? ஹிஹி!! தனிப்பட்ட பயணம் என்றால் கேள்விகள் இல்லை எங்களுக்கு! ஆனால், ஏதாவது 2014 கொள்முதல் எனில்.... அவ்வ்வ்வ்வ்வ்.. ஒரு ஆர்வம்தான்!! //

      ஒருவேளை BATMAN கதைகளுக்கு பதிப்பு உரிமை வாங்க சென்றிருப்பாரோ

      ஏதோ நம்மால முடிஞ்சது ;-)
      .

      Delete
  21. சென்ற வருடம் WAYNE SHELDON in 'எஞ்சி நின்றவன்' வருவதாக கூறி இருந்திர்கள். அதைப்பற்றி மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தேன். கண்டிப்பாக அது wayne sheldon in flashback ஆக இருந்திருக்கும். தயவு செய்து இந்த வருட அட்டவனையில் அதை இணைத்து விடவும்.

    ReplyDelete
  22. டியர் விஜயன் சார்,

    டைட்டில் எழுத்துக்களும், பின்னட்டையும், அதில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளும் மிகவும் நன்றாக உள்ளன. ஒரிஜினலில் இந்த இதழுக்கு மூன்று அட்டைகள் வந்துள்ளதாய்த் தெரிகிறது. அவற்றில் நீங்கள் வெளியிட்டிருப்பதும் ஒன்று; பசுமையான நெல் வயல்களுக்கு அருகே ஒரு சிப்பாய் நிற்க, கீழ்வானம் மஞ்சளாகவும், மேல்வானம் இளஞ்சிவப்பாகவும் காணப்படும் இரண்டாம் பாகத்தின் அட்டை! அதை, நமது ரசனைக்கு ஏற்ப (!) தலைகீழாக மாற்றி (மேலே மஞ்சள், கீழே சிகப்பு), எக்ஸ்ட்ராவாக இரண்டு படங்களை, உள்டப்பிகளுக்குள் இணைத்து இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்! :)

    //எனக்கு அழகாய்த் தோன்றிய பொன்னனின் இந்தப் படைப்பு உங்களுக்கு எவ்விதம்/
    அட்டை ஓகே தான் என்றாலும், பின்னட்டைக்கு மட்டுமே இத்தகைய பெட்டி போட்ட டிஸைன்கள் எடுப்பாக இருக்கின்றன 80 N கருத்து! :)

    ஒரிஜினல்களில் என்னை மிகவும் கவர்ந்தது, சவப்பெட்டிகளுக்கு அருகே ஒரு முதியவர் சோகமாக நிற்கும் முதல் பாகத்தின் அட்டை தான்! இதன் Integral Edition-ன் அட்டையும் நன்றாக இருக்கும்! நான் ரசித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இக்குறிப்புகள்!

    //"சிப்பாயின் சுவடுகளில் "கிராபிக் நாவலை நம் ரசனைக்கு ஏற்புடையதாய் செதுக்கிட//
    கதையில் அதிக மாற்றங்கள் நேர்ந்திருக்காது என நம்புகிறேன்.

    //நண்பர் XIII ஒரு நிஜ வாழ்க்கைப் பாத்திரமாய் இருந்திடும் பட்சத்தில்//
    XIII என்றதும் நினைவுக்கு வருகிறது. வார இறுதியில் 'தொடரும் ஒரு தேடலை' படித்து முடித்தேன். நண்பர்கள் சிலாகித்தது போல சித்திரங்கள் மிக அருமையாக உள்ளன! கார்களும், அவைகளின் முகப்பு விளக்குகளும் நிஜமானவை போலவே தோற்றம் தருகின்றன! திரைப்படங்களில் எது கிராபிக்ஸ், எது நிஜம் என்று நமக்கு குழப்பம் வருவது போல; கிராபிக் நாவல்களிலும் டிஜிட்டல் சித்திரங்கள் புகுந்திருப்பது தெரிகிறது! அவை அளவோடு இருக்கும் வரை, அதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. கதை இப்போது தான் துவங்கி இருப்பதால், அதைப் பற்றிப் பேச பெரிதாக ஏதும் இல்லை. XIII-ஐ முன்பே அறிந்தவர்கள் யூகிக்க கூடிய திருப்பங்கள் நிறைந்து இருக்கின்றன.

    ஆனால், நான் குறிப்பிட்டு சொல்ல விரும்பிய விஷயம் இக்கதையின் அருமையான மொழிபெயர்ப்பு!!! லார்கோவுக்கு இணையாக இந்தக் கதை உங்கள் பொறுமையை ஏகத்துக்கும் சோதித்திருக்கும் என்பது புரிகிறது. நீள நீளமான வசனங்கள், எக்கசக்க குறிப்புகள், தகவல்கள், பெயர்கள் என, ஊன்றிப் படிக்காவிட்டால் கதை குழப்பும் என்பது சர்வ நிச்சயம்! எனக்கு ஏற்பட்ட குழப்பமும் அத்தகையதே! நேரம் கிடைக்கும் போது, இன்னொரு முறை பொறுமையாக படித்துப் பார்க்க வேண்டும்! இப்போதைக்கு, ஒரு ஹாலிவுட் ஆக்ஷன் படத்தை பார்க்கும் மனோ நிலையில், அதிக எதிர்பார்ப்புகள் இன்றி படித்தேன் - அதனால் எனக்கு இந்த இதழ் பிடித்திருந்தது! :) 'அதை ஏன் இவ்வளவு சுற்றி வளைத்துச் சொல்ல வேண்டும்?; என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்காமல் இல்லை! :) வேறென்ன, எல்லாம் XIII எஃபெக்ட் தான்! ;)

    //நியூயார்க் நகரை ஞாயிறு மாலை எட்டிப் பிடிக்க வேண்டிப் போனது//
    அமெரிக்கா போனது தான் போனீர்கள், பேட்மேன் லைசன்ஸை பேரம் பேசியாவது வாங்கி வந்திருக்கலாமே?! :)

    //மைதீன் - இந்த மௌன ஹீரோ தான் நமது நவம்பர் நாயகன் !//
    இவரைப் பற்றி NBS-யிலும் குறிப்பிட்டு இருந்தீர்கள்! வாழ்த்துக்கள் மைதீன்!

    ReplyDelete
    Replies
    1. // //மைதீன் - இந்த மௌன ஹீரோ தான் நமது நவம்பர் நாயகன் !//
      இவரைப் பற்றி NBS-யிலும் குறிப்பிட்டு இருந்தீர்கள்! வாழ்த்துக்கள் மைதீன்!// +1.

      Delete
    2. பொன்னன் அவர்களின் இந்த முன்-அட்டைப்பட டிசைனில் உள்டப்பி காட்சிகள் சுவாரஸ்யம் சேர்ப்பதற்கும், ஒரிஜினலில் தெரியும் ஒரு வெறுமையைப் போக்கவும் பயன்பட்டாலும், அந்த டப்பி காட்சிகள் இல்லாதிருந்தால் அட்டைப்படம் இன்னும் கொள்ளை அழகாய் இருந்திருக்கும் என்பது என் கருத்து! என்னங் நாஞ் சொல்றது?

      Delete
    3. இன்னாபாது டப்பி டப்பிங்கறிங்கோ? ஒரு சந்தேகம், டப்பாக்கும் டப்பிக்கும் இன்னாங்க வித்தியாசம்? :D

      Delete
    4. @ Ramesh kumar

      டப்பி = மூடியிருக்கும் டப்பா
      டப்பா = திறந்திருக்கும் டப்பி

      ;)

      Delete
    5. itegral edition அட்டை இவற்றில் சிறப்பாக உள்ளது! எனினும் இந்த மூன்றை விட நமது பொன்னனின் கை வண்ணம் அழுத்தமாய் உள்ளது ! மங்கும் வெயிலின் நிறமும், அந்த காலணியின்றி பரிதாபமாய் , போரின் திணிப்பை வேறு வழியின்றி , வலியுடன் ஏற்று கொண்ட சிப்பாயின் எண்ணத்தை வண்ணம் காட்டுவதாய் எனக்கு படுகிறது நண்பர்களே ! வீடு நோக்கி செல்லும் பறவைகளும் ஏதோ ஒரு சோர்வை விதைக்கின்றன ,சிப்பாய் கூட்டணியில் , வண்ண வெது வெதுப்பில் மனது பதை பதைக்கிறது!
      சார் முடியல........ சீக்கிரமா புத்தகத்த அனுப்புங்க !

      Delete
    6. //கதையில் அதிக மாற்றங்கள் நேர்ந்திருக்காது என நம்புகிறேன்.//
      I'M WORRIED TOO!

      Delete
    7. // அமெரிக்கா போனது தான் போனீர்கள், பேட்மேன் லைசன்ஸை பேரம் பேசியாவது வாங்கி வந்திருக்கலாமே?! :) //

      இதையே தான் நானும் மேலே சொல்லியிருக்கிறேன் நண்பரே ;)
      .

      Delete
    8. // டப்பி = மூடியிருக்கும் டப்பா
      டப்பா = திறந்திருக்கும் டப்பி //

      அய்யகோ .... என்ன இது :)

      Delete
    9. // டப்பி = மூடியிருக்கும் டப்பா
      டப்பா = திறந்திருக்கும் டப்பி //

      அப்பாடி! ஆப்போ மூடிதான் வித்தியாசமா?!

      குழப்பக்கலக்கத்தில் Google-ல் தேடிப்பார்த்தால் டப்பா, டப்பி மற்றும் குப்பி கூட இந்தி வார்த்தைகள் என்ற உண்மை தெரிகிறது! பெட்டி மற்றும் பேழை மட்டுமே நம்மளுடையது. ஆனாலும் டப்பா / டப்பியின் வித்தியாசத்தைப்பற்றி உறுதியான தகவலைப்பிடிக்க முடியவில்லை :D

      Delete
    10. டப்பி = மூடியிருக்கும் டப்பா
      டப்பா = திறந்திருக்கும் டப்பி//

      ஆஹா.. என்னே ஒரு விளக்கம்! புல்லரிக்கிறது. இத நம்பாம, நம்ப ரமேஷ் சீரியஸா அர்த்தம் தேடியிருக்கார் பாருங்களேன்! என்ன அநியாயம்! :-)))))))

      Delete
  23. மைதீன் அவர்களுக்கு நன்றி. பின்னட்டையிலும் மஞ்சள் வியாபிக்காமல் கரும் சிகப்பு அல்லது பிரவுன் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கம் என்பது என் எண்ணம். ப்ளூ கோட்ஸ் இதழ் அட்டைபடம் அருமை. அதிலும் மஞ்சள் வியாபித்து இருந்தது. இந்த இதழ் கண்ணை கவரும் என்பதில் சந்தேகமில்லை.

    தீபவளிக்கு முன் புத்தகம் கையில் கிடைக்குமா? எப்பொழுது அனுப்பவிருக்கிறீர்கள்?

    உங்களுக்கும் காமிக்ஸ் நண்பர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. //உங்களுக்கும் காமிக்ஸ் நண்பர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்//

      உங்களுக்கும் எங்களது வாழ்த்துக்கள் நண்பரே !!! தீபாவளியை டெக்ஸ் உடன் சேர்ந்து நீங்களும் துப்பாக்கி வாங்கி வெடித்து அதகளம் செய்யுங்கள் :)

      Delete
  24. நமது அட்டைபடம் ஒரிஜினல்களை விட சூப்பர்..

    ReplyDelete
  25. தீபாவளிக்கு முன்னாடியே இதழ்கள் வந்திடுமா? இல்ல அப்புறமா? ஆவலா எதிர்பாத்துக்கிட்டு இருக்கேன்

    ReplyDelete
  26. அட்டைப்படம் தரமாய் இருக்கு

    ReplyDelete
  27. அட்டை படம் எனக்கு மிகவும் பிடித்து உள்ளது சார் ....

    கதையும் அவ்வாறே அமைந்து இருந்தால் (எனக்கு )இன்னும் மகிழ்ச்சி ...

    நண்பர் மைதீன் அவர்களுக்கு எங்கள் சங்கத்தின் சார்பாக கோடி நன்றிகள் ...

    அவரை நினைத்தால் எங்கள் மனம் குறு ,குறு என்கிறது .எங்கள் ஆபீஸ் இல் நாங்கள் வேலை புரியும் கடமையை நினைத்தால் ... (ஹி ..ஹி ..)

    ReplyDelete
    Replies
    1. //நண்பர் மைதீன் அவர்களுக்கு எங்கள் சங்கத்தின் சார்பாக கோடி நன்றிகள் ...//

      +1

      Delete
  28. ஒரே வார்த்தை ......


    அழகு .

    ReplyDelete
  29. வணக்கம் எடிட்டர் சார்,
    அப்பப்பா என்ன ஒரு வேகம். பயண நேரத்திலும் பதிவா?அந்த அவசரத்திலும் தனக்கு உதவியாய் இருந்தவருக்கு பாராட்டா? சான்சே இல்ல சார் . உங்களின் சின்சியாரிட்டி மற்றும் dedication உங்களை மேலும் மேலும் உயர்த்தும். அதுமட்டுமின்றி உங்களின் பணி பற்றிய விவரங்கள், உங்கள் லாப நட்டங்கள் அனைத்தையும் ஒரு நண்பன் போல எங்களிடம் பகிர்ந்து கொள்ளும் எளிமை. அனைத்திற்கும் ஒரு ராயல் சல்யுட் சார். நீங்கள் வெறும் எடிட்டர் அல்ல,எங்களின் நண்பர், தெய்வ நண்பர். thank you for updating sir.

    ReplyDelete
    Replies
    1. குற்றச்சக்கரவர்த்தி உங்கள் கருத்துடன் நானும் இணைகிறேன்!!

      Delete
  30. தீபாவளி / நவம்பர் புத்தகங்கள் இன்று அல்லது நாளை அனுப்பப்பட்டு விடுமா?

    ReplyDelete
  31. ''விளக்கை தேய்காமலே வந்த பூதம் தான் மொய்தீன் ...............''
    அவர் அலைபேசி எண் இருந்தால் ஒரு SMS தட்டி விடலாம்

    ReplyDelete
  32. Take care about your health sir, same goes for Moidheen and all those involved in production. Hope and wish all of you to do the same jobs in a relaxed way from 2014! :)

    ReplyDelete
  33. சார் நீங்கள் வந்தவுடன் அனுப்பி விடுவீர்களா ?

    ReplyDelete
    Replies
    1. //ஆரிய கூத்தடினாலும் //
      இது "திராவிடக்"கூத்து....! : D !

      Delete
    2. ஹ ஹ ஹா நான் எழுதனும்னு நினைத்தேன் ,,,,,பிறகு தவிர்த்து விட்டேன் ....உனது எண்ணத்தால் எனது எண்ணமும் வெளிப்பட்டு விட்டது நண்பா

      Delete
    3. திராவிட குத்து = உள் குத்து
      ஆரிய குத்து = வெளிக் குத்து

      Delete
    4. // திராவிட குத்து = உள் குத்து
      ஆரிய குத்து = வெளிக் குத்து //
      ha ha haa

      Delete

    5. நீங்கள் மாத்தி போட்டதால் த்ராவிடவை (ஹிக்)விக்கி பார்ததில் என் அரிவு விருத்தி ஆனது தான் மிச்சம் - நம்ம நினைக்கிற மாதிரி இல்லிங்க்கோவ்!!

      Delete
  34. டைடிலில் "சிப்பாயின்" என்ற வார்தைய்க்கு முண்டாசு போல எதொ இருப்பது நெருடலாய் உள்ளது
    front cover "வியெட்னம் யுத்த பின்னனியில் ஒரு க்ரப்பிக் நாவல்" என்பதில் "வியெட்னம் யுத்த" என்பது mattum palich endru terigiradhu "பின்னனியில் ஒரு க்ரப்பிக் நாவல்" என்பது பின்னனியிlaeyae irukkiradhu

    appuram "வியெட்னம் யுத்த பின்னனியில் ஒரு க்ரப்பிக் நாவல்" right alignment badhilai centre align seidhu irukkalam

    அது ஒன்னும் இல்லிங்கனா சின்ன பிள்ளைங்களூக்கு எதித்து பேச ரொம்ப பிடிக்கும்

    ReplyDelete
    Replies
    1. பின்னட்டையில் வெளியிடுவோர் என்று blogsite போட்டு இருப்பது - கனெக்க்ஷன் மிஸ்ஸிங்க்

      Delete
  35. எடிட்டார் சார் அனேகமா இப்ப ஃப்ளைட்டுல பறந்து வந்திட்டிருப்பாருன்னு நினைக்கிறேன். சார், வர்ற வழியில ஏதாவது இடத்துல டீ குடிக்க ஒரு பத்து நிமிசம் ஃப்ளைட்ட நிறுத்துனாங்கன்னா, அங்கேர்ந்து ஒரு பதிவுபோடுங்க சார்! புத்தகங்கள் எப்ப அனுப்பப்படும்னு எழுதினாக்கூட போதும்! இன்னான்றீங்க? ;)

    ReplyDelete
    Replies
    1. அதை விட கோவை வழியே சென்றால் இரண்டு புத்தகங்களை ஜன்னல் வழியே போடுங்க சார் ! யார் எடுத்தாலும் என்னிடம் சேர்பித்து விடுவார்கள் ! இன்னொன்று நண்பர் சுஸ்கிக்காக .....

      Delete
    2. // புத்தகங்கள் எப்ப அனுப்பப்படும்னு எழுதினாக்கூட போதும்! இன்னான்றீங்க? ;) //

      பூனையார் கேட்டால் சரியாகத்தான் இருக்கும் ;-)
      .

      Delete
    3. // அதை விட கோவை வழியே சென்றால் இரண்டு புத்தகங்களை ஜன்னல் வழியே போடுங்க சார் ! யார் எடுத்தாலும் என்னிடம் சேர்பித்து விடுவார்கள் ! இன்னொன்று நண்பர் சுஸ்கிக்காக ..... //

      நம்மள மறந்து விட்டீர்களே பாஸு :((
      .

      Delete
    4. சிபி அதுக்குத்தான் அப்பப்போ அட்டேனன்ஸ் போடனும்கிறது ! இருந்தாலும் உங்கள மறக்க முடியுமா ! அப்போ திருப்பூர் வரும்போது ஒரு பார்சல்!

      Delete
    5. ஓ! நிறைய நண்பர்கள் இருப்பதால் ஆசிரியரே stc வாயிலாக அனுப்பட்டும்!

      Delete
  36. கிராபிக் நாவல் அட்டைப்படம் புதுமையாக நன்றாகவே இருக்கிறது. டெக்ஸ் குண்டு புத்தகத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். தீபாவளிக்கு முன்னமே கிடைத்தால் நன்றாக இருக்கும். ஊருக்குப்போகும்போது கூடவே எடுத்துச்சென்று நண்பர்களிடம் காண்பித்து சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் செந்தில்.. எனக்கும் அதே ஆசைதான்.. எடிட்டர் ஆவன செய்வாரா..

      Delete
    2. // தீபாவளிக்கு முன்னமே கிடைத்தால் நன்றாக இருக்கும். //

      புதன் அல்லது வியாழன் அன்று கிடைத்தால் சந்தோசம் .... இல்லையெனில் :( அடுத்த வாரம்தான் படிக்க முடியும் ...

      Delete
    3. நாளை மாலை அனுப்பினால்தான் அனைவருக்கும் ஒரு நாள் தாமதம் ஆனாலும் தீபாவளிக்கு கிடைக்கும்!

      Delete
  37. கடுமையான பணிச்சுமைக்கிடயேயும் இங்கே ஒரு பதிவ போட்டதற்கு நன்றிகள் சார். இது போன்ற கடினமான ROUND THE CLOCK, AROUND THE WORLD, CONFLICTING TIME ZONE பிரயாணங்கள் பலசமயம் நமது உடலின் சமநிலை செயல்பாடுகளை கெடுத்துவிடுக்கூடும். பண்டிகை காலங்களில் உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை சார்! TAKE CARE! : )!

    // நானொரு முழு நேர காமிக்ஸ் எடிட்டராய் செயல்படும் சுதந்திரம் கிட்டும் நாளன்று நிச்சயமாய் இது சாத்தியமே !//

    WAITING! அப்படியொரு நாளை நாம் அடையும் போது நாமே நமது காமிக்ஸ் நாயகர்களை உருவாக்கும் ஆற்றலை அடைந்திருப்போம்.அந்த நாள் நிஜத்தின் சாயலை இப்போதே கனவுகண்டு களிப்புறுகிறேன்! : )

    "சிப்பாயின் சுவடுகளில்" அட்டைப்படம் எடுப்பாக உள்ளது.இதை பல கதைகளிடயே கதம்பமாக சேர்க்காமல் தனி புத்தகமாக வடிவமைததற்க்கு நன்றிகள் சார்.

    ஆல் IN ஆல் மொய்தீன் சாருக்கு நன்றிகள்!இங்கே பெரும்பாலான நண்பர்களுக்கு NBS மூலம் அவரைப்பற்றிய அறிமுகம் கிடைத்திருந்தாலும் இந்த பதிவை அப்டேட் செய்வதாக இருந்தால் அவரின் புகைப்படத்தை இணைக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. யாரேனும் கவனித்தீர்களா உள்ளே நுழையும் வழியாக அம்பு குறி போட்ட நூறு ரூபாய் கட்டணத்தை !

      Delete
    2. @ ஸ்டீல்

      ஹா ஹா! ஃபுல் பார்முக்கு திரும்பிட்டீங்க நீங்க! :)

      Delete
    3. எல்லாம் ஆர்வத்தை எகிற செய்த வரவிருக்கும் தீபாவளி புத்தகங்களும் ......ஏகத்திற்கும் ஆர்வத்தை அதிகரித்த அட்டை படங்களும் , உங்களை போன்ற நண்பர்களுமே !

      Delete
    4. // @ ஸ்டீல்
      ஹா ஹா! ஃபுல் பார்முக்கு திரும்பிட்டீங்க நீங்க! :) //

      இதைதான் நாங்களும் எதிர் பார்க்கிறோம் :)

      Delete
    5. நண்பரே அப்படியெல்லாம் கூறி நீங்கள் தப்ப முடியாது ! நீண்ட காலமாய் காணோமே ! வந்து ஜோதியில் ஐக்கியமாகுங்கள் ! விஜய் நீங்கள் நினைப்பது போலல்ல!

      Delete
  38. சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் நண்பர் மைதீனுக்கும் நமது மற்ற அலுவலக நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  39. // பரீட்சைக்குப் படிக்கும் புள்ளையைப் போல இறுதித் தருணத்தில் நான் படிக்க அவசியமான கதைகள //

    நாங்களும் அப்படித்தான் ஆனால் சற்றே ஒரு சிறு வித்தியாசம்
    தேர்வு முடிவை எதிர் பார்த்து காத்திருக்கிறோம் சார் :))

    // விமான நிலையத்துக்குக் கிளம்பிடுவதற்கு முன்னே கிட்டிய முதல் அரை மணி நேரத்தில் இந்தப் பதிவை அரக்கப் பரக்க எழுதுகிறேன் ! //

    மிக்க நன்றி விஜயன் சார், இது போல இன்னமும் நிறைய எதிர் பார்க்கிறோம் சார் :)

    // நமது நவம்பர் நாயகன் மைதீன் //

    நவம்பர் நாயகனுக்கு எங்களது மனமுவந்த வாழ்த்துக்களை மறக்காமல் சொல்லிவிடுங்கள் சார் :))
    .



    ReplyDelete
    Replies
    1. //நவம்பர் நாயகனுக்கு எங்களது மனமுவந்த வாழ்த்துக்களை மறக்காமல் சொல்லிவிடுங்கள் சார் :))//

      எஸ் சார், வலது, இடது, முன், பின் என கூறிய பொழுதே புரிகிறது, மைதீனின் பணியை வார்த்தையால் சொல்ல முடியவில்லை என ... கிரேட் மைதீன் !!!! வாழ்த்துக்கள் !!!!

      Delete
  40. Dear Sir,
    Your hard work always inspiring me ... Even in that busy schedule you posted this.. thank you very much for the post..பேராசை தான் இருந்தாலும் தீபாவளிக்கு முன் இன்னுமொரு பதிவிட்டால் மிகவும் மகிழ்ச்சி ..
    நவம்பர் நாயகன் மொய்தீன் ஆக இருந்தாலும் என்னை பொறுத்த வரையில் எல்லா மாதத்தின் நாயகரும் நீங்களே !!

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. எடிட்டர் சார்,
    எந்த மொழியில் வந்தாலும் வாங்கும் டெக்ஸ்சின் வெறி பிடித்த ரசிகர்கள்/கலெக்டர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள். அதே போல் தான் டேஞ்சர் டயபாலிக் ரசிகர்களும். இப்போது வரும் இதழைப்பற்றிய செய்திகள் அந்த ரசிகர்களை காமிக்ஸ் பாரம்கள் மூலம் எட்ட செய்யலாமே ஒரு ஐம்பது இதழ்கள் அப்படி போனால் கூட லாபம் தானே. நம்முடைய இருப்பை பற்றி அவர்களும் அறிந்த மாதிரி இருக்கும். செய்வீர்களா?

    இணையம் மூலம் உலகமே சிறு குடைக்குள் வந்து விட்ட பொழுது நம் முக நூல் பக்கத்தை இத்தாலியில் இருக்கும் ஒரு டெக்ஸ் ரசிகன் லைக் பண்ணுவது சாத்தியமே என்ற நிலையில், அவர்களிடம் சென்றடைவது மட்டுமே நாம் செய்யக்க் கூடிய சிறிய வேலை.

    ReplyDelete
  43. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு சிப்பாயின் சுவடுகள் அட்டைபடம் சூப்பர் நன்றிகள் உங்களுக்கும் மைதீனுக்கும் .எப்ப சார் எங்களுக்கு புக் கிடைக்கும் ?!

    ReplyDelete
  44. Apologies for typing in english.
    unable to do google transliterate to tamil. In my screen, the drop down menu in google transliterate is blank.

    My comment now.
    Vijayan sir, the cover photo is fantastic. very eagerly waiting for the books.
    Your hard work inspires us as equally as the comics that you publish which we all know is not that easy in tough times like this.
    Thanks to all the staff and deepavali wishes to all. we are ready to support you in whatever ways we can
    Deepavali wishes to all the friends here who make this blog an absolute joy.

    ReplyDelete
    Replies
    1. down load தமிழ் கூகிள் input..........install............நெட் ஆப் ஆனாலும் இது வேலை செய்யும் ......u can use in word excel also.
      ctrl,shift 2 times அழுத்தினால் தமிழ் இங்கிலீஷ் என்று உடனே மாறி விடும்.No more transliteration needed............

      Delete
    2. http://www.youtube.com/watch?v=-NtK8DQiSz8

      Delete
    3. நானும் இன்னொருவருமாக நான்கு ஆண்டுகளுக்கு முன் செய்த இந்த மென்பொருள் இன்றும் பயனுள்ளதாக இருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
      http://googleindia.blogspot.com/2010/01/google-transliteration-ime-available-in_28.html
      http://googleindia.blogspot.com/2010/05/google-transliteration-ime-for-windows.html

      Delete
  45. "சிப்பாயின் சுவடுகளில்" பின் அட்டைப்படம் மிகவும் எடுப்பாக உள்ளது.

    முன்அட்டைப்படத்தில் படங்களை இடம், வலம், மேல், கீழ் என தோதுவான இடத்தில் மாற்றி இருந்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.

    ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இந்த அட்டைபடம் சாதாரண காமிக்ஸ் புத்தகத்திற்கு வரும் அட்டைபடம் மாதிரி கண்டிப்பாக இல்லை.ஏதோ புகழ் பெற்றவர்கள் வெளியிடும் படைப்புகளின் அட்டைபடம் மாதிரி உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. //ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இந்த அட்டைபடம் சாதாரண காமிக்ஸ் புத்தகத்திற்கு வரும் அட்டைபடம் மாதிரி கண்டிப்பாக இல்லை.ஏதோ புகழ் பெற்றவர்கள் வெளியிடும் படைப்புகளின் அட்டைபடம் மாதிரி உள்ளது.//

      Delete
  46. டியர் சார்,

    “ஒரு சிப்பாயின் சுவடுகளில்” அட்டைப்படம் அருமை! எனக்கு பிடித்திருக்கிறது!

    இந்த மாத இதழ்ளை தீபாவளிக்கு முன்பே ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்! நன்றி !

    ReplyDelete
  47. புத்தகங்கள் என்றைக்கு அனுப்பப்படும் என்று
    சொல்லவே இல்லையே சார்...
    உங்களுடைய இன்த புதிய பதிவில் நான் மிகவும் எதிர்பார்த்தது அதைத்தான்..

    ReplyDelete
  48. தல நீங்கள் நாளை அனுப்பினால் கண்டிப்பாக சாந்தவில் உள்ள எங்களுக்கு st கூரியர் புண்ணியத்தில் வெள்ளிகிழமை கைகளில் கிடைக்கும்.. இல்லையெனில் இந்த தீபாவளி டாமல் டுமில் இல்லா தீபாவளிதான்!!

    ReplyDelete
    Replies
    1. இப்பிடியெல்லாம் நெகடிவா பேசகூடாது ! அழுதுருவேன் , ஆமா !

      Delete
    2. ஸ்டீல் நானும் கூட.......

      Delete
  49. அனைத்து காமிக் ரசிக உள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். தல இன்று போல் என்றும் நமக்காக சிறப்பு புத்தகங்களை கொடுத்துகொண்டே இருக்க வேண்டுகிறேன்!! (என்ன ஒரு நல்லெண்ணம்??!!) தல முடிஞ்சா அப்பப்போ வீட்டுக்கும் போய்வாருங்கள்!!

    ReplyDelete
  50. சிறு வயதில் படித்த ஜானி கதைகள் மீண்டும் கலரில் பார்க்க போகிறோம் என்பதை நினைத்தாள் டைம் மிசினில் 1986இக்கு மீண்டும் செல்ல போகிறோம் என்ற இனம் புரியாத சந்தோசம் உண்டாகிறது

    ReplyDelete
  51. Waiting for Tex. actually can't wait for tex. No patience at all

    ReplyDelete
  52. அன்பு நண்பர்களே !!!


    இனிய (அட்வான்ஸ்) தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் ....



    ஒரு சிறிய வேண்டுகோள் :-


    எனது வீட்டு சுட்டி லக்கி செய்த வேலையால், எனது மொபைலில் உள்ள அனைத்து நண்பர்களது நம்பர்களும் ஸ்வாகா செய்யப்பட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

    எனவே, நண்பர்கள் அனைவரும் சிரமம் பாராமல் உங்களது மொபைல் என்னை உங்களது பெயருடன் 9994773647 என்ற எண்ணுக்கு SMS செய்யவோ அல்லது tiruppurblueberry@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவோ வேண்டுகிறேன்.


    Thanks
    திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்

    ReplyDelete
    Replies
    1. நண்பரே ....

      எந்த வகுப்பில் படிக்கும் பொழுது வாங்கியது இவைகள் எல்லாம் :)

      Delete
    2. பள்ளியில் முதன் முறை சேர்த்த பொது நான் எழுதி பாராட்டு பெற்ற நம்பர்கள் இவை நண்பரே!

      Delete
    3. ஹா ஹா ஹா! கலக்குறீங்க ஸ்டீல்! :D

      Delete
  53. எடிட்டார் சார் அனேகமா இப்ப ஃப்ளைட்டுல பறந்து வந்திட்டிருப்பாருன்னு நினைக்கிறேன். சார், வர்ற வழியில ஏதாவது இடத்துல டீ குடிக்க ஒரு பத்து நிமிசம் ஃப்ளைட்ட நிறுத்துனாங்கன்னா, அங்கேர்ந்து ஒரு பதிவுபோடுங்க சார்! புத்தகங்கள் எப்ப அனுப்பப்படும்னு எழுதினாக்கூட போதும்! இன்னான்றீங்க? ;)

    ReplyDelete
  54. சார் உங்களது அதிரடி பதிவிற்கு நன்றிகள் ! சுட சுட வெடிக்கும் புத்தகங்களை , மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள இரண்டு புத்தகங்களையும் அனுப்புவதற்கு மேலும் நன்றிகள் ! வந்தவுடன் நாளை பதிவிட இயலுமோ எனும் நிலையில் , உண்ணாமல் உறங்காமல் எங்களுக்காக நேரம் ஒதுக்கியதற்கு மேலும் , மேலும் நன்றிகள் !
    2014 ல் தாங்கள் ஹய் லைட்டாக கருதும் இதழை கூறுங்களேன்! மேலும் கிராப்பிக் நாவலுக்காக தனி இதழ் ! அருமை ! இந்த சிப்பாயின் சுவடுகள் பரநிதரனை வாசிக்க வைக்குமென நினைக்கிறேன் !
    ஜானியின் புத்தகங்கள் அனுப்பவில்லை என கோபம் வரவில்லை ! உங்களது எண்ணத்தினால் !
    தீபாவளிக்குள் எங்களுக்கு புத்தகம் கிடைக்க வேண்டும் என பாடுபடும் உங்களது எண்ணங்களுக்கும் நன்றிகள்!
    நேரத்திற்கு சாப்பிடுங்கள் !
    நன்றி ! நன்றி !! நன்றி !!!

    ReplyDelete
    Replies
    1. // ஜானியின் புத்தகங்கள் அனுப்பவில்லை என கோபம் வரவில்லை ! உங்களது எண்ணத்தினால் !
      தீபாவளிக்குள் எங்களுக்கு புத்தகம் கிடைக்க வேண்டும் என பாடுபடும் உங்களது எண்ணங்களுக்கும் நன்றிகள்!
      நேரத்திற்கு சாப்பிடுங்கள் !
      நன்றி ! நன்றி !! நன்றி !!!// +1

      Delete
  55. அட்டை படங்கள் இரண்டும் , மூன்றும் அருமை !
    ஆனால் உங்களது செலேக்சனே டாப் !
    டெக்ஸ் அந்த அட்டை படமே அசத்தல்!

    ReplyDelete
  56. சார்..

    அப்படியே அந்தே e-Bay லிஸ்டிங் போட்டுடீங்கன்னா ரோம்ப நல்லா இருக்கும்.. நாங்கெல்லாம் அந்த group ஆச்சே.. (இன்றே)

    (அடுத்த வருஷம் மொத வேலை சந்தா கட்டறதுதான்.. ஒன்னுக்கு ரெண்டா கட்டிரவேண்டியதுதான்....)

    ReplyDelete
  57. Sir, for me please send all the books together, otherwise postage charges for Colombo will be bit too much. I am willing to stretch my patience for another 1 or 2 days.

    ReplyDelete
  58. Dear editor what about +6 subscription if u informed that also it is easy for us to do.wish u Happy dipawali to edotor and all lion folks?!

    ReplyDelete
  59. //So - புதன் மாலை 2 இதழ்களும் கூரியரில் கிளம்பிடும் ! 2014-ன் அட்டவணையும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த சங்கதி என்பதால் கூரியர் பயணத்தை அதுவும் சேர்த்தே செய்திடும். So - வியாழன் & வெள்ளிக்குள் அனைவரது கைகளிலும் at least 2 புது வெளியீடுகள் + தொடரும் ஆண்டின் நமது ஜாதகமும் இருந்திடும் !//

    சுப்பர் சார். நாளை முதல் வேலை கொரியர் ஆபீஸ் தான்.

    "சன் ஷைன் -கிராபிக் நாவல்" ஐடியா மிகவும் அருமை. ஆனால் ரூபாய் 400/- என்றால் 4 நாவல்கள் தானா? தனி லேபிளின் கீழ் வருவதால் குறைந்தது 6 புத்தகங்கள் தர இயலலுமா,சார் ?

    ReplyDelete
  60. டியர் எடிட்டர்,

    கடல் கடந்த நீண்ட பயணத்தொலைவின் அலுப்பிலும், 'ஜெட் லேக்'கிலிருந்து விடுபடாத உடல் அவஸ்த்தையின் நடுவிலும் நண்பர்களுடன் உங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள நினைக்கும் உங்கள் கடமை உணர்வு மிகுந்த ஆச்சர்யம் தருகிறது!

    'சன்சைன் கிராபிக் லைப்ரரி' குறித்த அறிவிப்பும் மிகுந்த உற்சாகமளிக்கிறது! (நண்பர்களில் சிலர் இது குறித்த கோரிக்கையை பல மாதங்களுக்கு முன்பே எழுப்பியிருந்ததை நினைவுகூர்கிறேன்) ஒவ்வொருமுறையும் உங்கள் கட்டைவிரல் காதலை நீங்கள் நிரூபிக்கும்போதெல்லாம் அது எங்களுக்கு ஒரு கொண்டாட்டமான நிகழ்வாகத்தானே இருக்கிறது?! இம்முறையும் அப்படியே! ஏற்கனவே இந்தத் தீபாவளி புத்தகங்களாலும், 2014 அட்டவணையினாலும் களைகட்டியுள்ள இந்த நேரத்தில் 'சன்சைன் கிராபிக் லைப்ரரி' குறித்த இந்த அறிவிப்பும் கூடுதலாய் குதூகலமேற்படுத்துகிறது! எங்களின் மேலும், எங்கள் இரசணைகள் மேலும் நீங்கள் கொண்டுள்ள அளவில்லா நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றிட முயற்ச்சிப்போம். இதுபோன்ற 'கிராபிக் நாவல்'களுக்கென்றே தனி சந்தாவும் அறிவித்திருப்பது பரணிதரன் போன்ற ஒரு சில நண்பர்களுக்கு நிம்மதிப் பெருமூச்சுவிட வைத்தாலும், அவர்களும் நிச்சயம் 'சனசைன் கிராபிக் நாவல்'களுக்கு சந்தாதாரர் ஆகிடுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். ஏனென்றால், சில அரிய பொக்கிஷங்களை இழந்திட யாருக்குத்தான் மனது வரும்?!

    'ஜானி ஸ்பெஷல்' அடுத்தமாத இதழுடன்தான் கிடைக்கும் என்று நீங்கள் மறைமுகமாக உணர்த்துவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பரவாயில்லை சார்! இதற்கென்று ஆகிடும் 'கூரியர் கட்டணம்' என்ற சுமையை தவிர்த்திடும் பொருட்டு உங்களுக்காக இதை நாங்கள் தாங்கிக்கொள்ள மாட்டோமா என்ன?

    அட்டைப்பட முயற்சிகள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு விதத்தில் அழகாய் அமர்களப்படுத்துகின்றன. (ஒரு புத்தகத்து நான்கு-ஐந்து அட்டைப்படங்கள் வச்சுக்கக்கூடாதா சார்? ;))
    குறிப்பாக, டெக்ஸின் முன்அட்டைப்படம் பார்த்தவுடனே ஒரு பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.(இதை ஒரிஜினல் இதழின் பின்னட்டையாகக்கூட பயன்படுத்தியிருக்கலாம்)

    ஹம்... இன்னும் என்னவெல்லாம் செய்து எங்களை (இன்பமாக) வதைக்கப் போகிறீர்களோ தெரியவில்லை!!! :)

    ReplyDelete
    Replies
    1. // (ஒரு புத்தகத்து நான்கு-ஐந்து அட்டைப்படங்கள் வச்சுக்கக்கூடாதா சார்? ;))//

      Delete
    2. மேல் உள்ள நண்பர் ஈரோடு விஜய் அவர்கள் சொன்ன கருத்துகளை எனது பெயரை போட்டு மீண்டும் அனைவரும் படித்து கொள்ளவும் .

      Delete
    3. கண்டிப்பாக சந்தாவில் 400 ரூபாய் இணைத்தே அனுப்புவேன் சார் ...கிராபிக் நாவலுக்காக இல்லை என்றாலும் உங்கள் "ஹாட் -லைன் "காக ....

      Delete
  61. Tamaal....domil...tamaal...domil....dum...dumdum...dush....tomil...tamaaal.....Tex-na summava....

    ReplyDelete
  62. @ Prunthaban //நானும் இன்னொருவருமாக நான்கு ஆண்டுகளுக்கு முன் செய்த இந்த மென்பொருள் இன்றும் பயனுள்ளதாக இருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
    http://googleindia.blogspot.com/2010/01/google-transliteration-ime-available-in_28.html//

    பாரேன் நமக்குள்ளேயும் ஒரு சயிடிஸ்ட் இருந்துஇருக்காப்ல...

    good work Prunthaban....

    ReplyDelete
  63. டியர் சார்,
    அடங்காத அலுப்பிலும் விடாது பதிவிடும் உங்கள் சின்சியாரிட்டிக்கு முதலில் பிடியுங்கள் ஒரு பொக்கே!
    இனி கண்டனங்கள்:

    1.மூன்று புத்தகங்களையும் ஒன்றாக அனுப்பாமல் எங்களை ஏமாற்றியதற்கு முதல் கண்டனம். இதன் மூலம் நீங்கள் இன்னும் முழுதாய் form க்கு வராத "சேவாக்" என்று முத்திரை குத்தப்படும் அபாயம் உள்ளது.

    2. டெக்ஸ் வில்லர்,லக்கி லூக், மற்றும் எங்கள் evergreen சூப்பர் ஸ்டார் spider போன்ற ஜாம்பவான்களுக்கு கொடுக்காத தனி மரியாதை, இந்த அழுது வடியும் கிராபிக் நாவல்களுக்கு கொடுப்பதை எதிர்க்கிறேன். கிராபிக் நாவல்களுக்கு தனி காமிக்ஸ் கொண்டு வரவேண்டாம் என்று உரிமையுடன் கேட்டு கொள்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. // ஜாம்பவான்களுக்கு கொடுக்காத தனி மரியாதை, இந்த அழுது வடியும் கிராபிக் நாவல்களுக்கு கொடுப்பதை எதிர்க்கிறேன் //

      மீண்டும் ஒருமுறை பதிவைப்படித்துப்பாருங்கள். நீங்கள் கூறுவதுபோல கிராபிக் நாவல்கள் Special கவனிப்புக்கு உட்படுத்தப்படவில்லை. மாறாக Main Tack-கிலிருந்து விலகி Experiment Piece-ஆக வைக்கப்பட்டுள்ளது! இதில் தவறில்லையே! :D

      Delete
    2. இருக்கட்டுமப்பா. குற்றச்சக்கரவர்த்தின்னா குற்றம் சொல்லாம இருக்க கூடாது இல்லையா? அதற்க்கு தான் இந்த எதிர்ப்பு .மற்றப்படி எதை கொடுத்தாலும்,எப்படி கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராகவே உள்ளேன் நண்பரே!

      Delete
    3. //குற்றச்சக்கரவர்த்தின்னா குற்றம் சொல்லாம இருக்க கூடாது இல்லையா?//

      என்ன ஒரு பொருப்புணர்சி :- )



      Delete
    4. ஓ...இது ஸ்பைடர் பாணியா.. அப்ப சரி!

      Delete
    5. டெக்ஸுக்கே தனி புக் இல்ல, இதுல ஸ்பைடருக்கா? ஹிஹி! சும்மா கிச்சுகிச்சு மூட்டாதீங்க... கு.சக்கரவர்த்தி!

      Delete
    6. //டெக்ஸுக்கே தனி புக் இல்ல, இதுல ஸ்பைடருக்கா?//
      ஆதி சார்,
      ஆதியில் எங்கள் குற்றச்சக்கரவர்த்தி மட்டும் இல்லையென்றால், இன்று நீங்கள் டெக்ஸ் வில்லரை, பிரெஞ்சு அல்லது ITALI மற்றும் இங்கிலீஷ்-ல் தான் படிக்கவேணும். ஆதி என்ற பெயர் வைத்துள்ள நீங்கள் ஆதியை மறக்கலாமா?

      Delete
  64. PLEASE UPDATE IN EBAY AS SOON AS POSSIBLE

    ReplyDelete
  65. 30ம் தேதியன்று புக்ஸ் அனுப்பியமைக்கு நன்றி! 2014க்கு chickbill special postpone பண்ணினால் நல்லது அதாவது original files complete digitalisation பிறகு ! அப்போதுதான் மறுபதிப்பில் ஒரு value இருக்கும்! அனேகரிடம் இல்லாத கதைகள் வெளியிட்டாலே நலம் ! எடிட்டர், வாசகர்கள், பணியாளர்களுக்கு அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  66. போராட்டுக்குழுத் தலைவர் பரணிதரன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல் (கடுதாசிக்கே கடுதாசியா?) :

    'தீபாவளியை ஒரு நான்கு நாட்களுக்கு ஒத்திவைக்கக் வேண்டும்' என்ற கோரிக்கையுடன் நம் இந்திய அரசாங்கத்திற்கு நீங்கள் இரண்டுபக்கத்திற்கு உருக்கமான கடுதாசி ஒன்றை எழுத இயலுமானால், அதன் பலனாக நமக்கு 3 புத்தகங்களுமே ஒன்றாகக் கிடைக்க வாய்ப்பிருக்கிறதல்லவா? யோசிப்பீர்!

    ஒரு சில மாதங்களுக்கு முன் 'கிராபிக் நாவல்கள்' குறித்த உங்களது கடிதம் நம் எடிட்டரையே கதி(கண்?)கலங்க வைத்த சம்பவமும் நாம் அறிந்ததே! எடிட்டர் சும்மா இருக்காமல் அக்கடிதத்தை இங்கே பதிவிட்டதன் மூலம், இத்தளத்திற்கு வருகை புரியும் பல நூறு பேர்களும் கண்ணீர் சிந்திய நாட்களை நாம் எப்படி அதற்குள் மறந்துவிடமுடியும்?  இதோ, இன்று 'சன்சைன் க்ராபிக் லைப்ரரி' என்ற ஒரு பூ புதிதாய் மலர்ந்திட நீங்கள் அன்று போட்ட (கடுதாசி) விதையும், அதைத் தொடர்ந்து உரமான எங்கள் கண்ணீரும்தானே முக்கியக் காரணமாயிருக்க முடியும்? விதைபோட்ட நீங்களே கிராபிக் நாவலை விலக்க நினைப்பது எவ்விதம் நியாயமாகிடும்? யோசிப்பீர்! க்ராபிக் நாவல்களை ஆதரிப்பீர்!!

    ReplyDelete
    Replies
    1. // ஒரு திறந்த மடல் //

      இந்தமாதிரி கடுதாசியையெல்லாம் மூடி சீல் வச்சி அனுப்புங்கப்பா. திறந்திருந்தால் தப்பித்தவறி Postman படிச்சி பாத்துட்டு Center-Fresh சாப்ட மாதிரி ஆகிடுவாறு!

      Delete
    2. @ Ramesh kumar

      // மூடி சீல் வச்சி அனுப்புங்கப்பா //

      ஏங்க... மூடி சீல் வச்சு அனுப்ப நாங்க என்ன 'டென்டர்'ரா விடுறோம்? இது உணர்வுப் பூர்வமான 'கடுதாசி'ங்க!
      (பரணிதரன்ட்ட சொல்லி உங்களுக்கு ஒரு தனிப்பட்ட கடுதாசி போட்டாத்தான் சரிபடுவீங்க போலிருக்கு. கிர்...)

      Delete
    3. தீபாவளியை தேதியை தள்ளிப்போடுமளவுக்கு உணர்வுப் பூர்வமாயிட்டுதேன்னுதான்... ஹி ஹி!

      Delete
    4. @ ஸ்டீல்

      // ஆஹா யூரியா உரம் கலந்த தண்ணீர் //

      நீங்க குறிப்பிட்டது 'கண்ணீர்'-ஐ தானா? ;)

      Delete
    5. சாட்சாத் கண்ணீரைத்தான் நண்பா ! விசை நீங்கள் நினைத்தது அல்லன்னு பின்னால் சிறு குறிப்பு போடா மறந்துட்டேன்!

      Delete
  67. சங்க செயலாலர் ஈரோடு விஜய் அவர்களுக்கு .....
    நீங்கள் சொன்ன காரணம் உண்மையாக இருப்பின் உடனடியாக நாளையே "டெக்ஸ் வில்லர் "காக நாலு பக்க கடிதம் ஆசிரியருக்கு அனுப்ப ரெடி ...

    "சன் ஷைன் கௌ -பாய் காமிக்ஸ் ".

    நான் ரெடி .....நீங்க ரெடியா ...?

    ReplyDelete
  68. வெற்றி, வெற்றி!!

    கிராஃபிக் நாவல்களுக்கு தனி இதழ்! நான்கோ, ஆறோ, பனிரெண்டோ தனியிதழ் வரவைச்சோம்ல.. வரவைச்சோம்ல.. எப்பூடி? இப்போதைக்கு நாலுன்னாலும் அதை பன்னெண்டா ஆக்க ரொம்ப நேரம் ஆகாது, பாத்துக்கலாம்! வரவேற்பைப் பாருங்கள் எப்படி இருக்குதுனு? காமிக்ஸ் சிறுபிள்ளைத்தனமென எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு புதிய வாசகர் கூட்டம் கிராஃபிக்ஸ் நாவல்களைத் தேடி வரும். பின்பு அது அனைத்துக்கும் வாசகர்களாகும். சன்ஷைன் கிராஃபிக்ஸுக்கும் பெரியதொரு வரவேற்பு!!!!!

    ஏற்கனவே பல எதிர்பார்ப்புகள், அதையும் மீறிய புது சர்ப்ரைஸையும் தந்துகொண்டேதான் இருக்கிறீர்கள். நன்றி எடிட்டர் ஸார்!!

    ReplyDelete
    Replies
    1. // காமிக்ஸ் சிறுபிள்ளைத்தனமென எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு புதிய வாசகர் கூட்டம் கிராஃபிக்ஸ் நாவல்களைத் தேடி வரும். பின்பு அது அனைத்துக்கும் வாசகர்களாகும். //

      அனைத்துக்கும் வாசகராகாவிட்டாலும், புதியவர்கள் கிராபிக் நாவலை மட்டும் வாசித்தால் கூட அது OK தான்.

      Delete
  69. எடி சார், எப்பொழுது புத்தகங்கள் அனுப்ப படுகிறது... இங்கு கூரியர் ஆட்கள் பெரும்பாலானோர் நாளை முதலே விடுமுறை எடுக்கின்றனர். வெள்ளி காலை இங்கு பார்சல் வரவில்லை என்றால் அடுத்த செவ்வாய் தான் கிடைக்கும் போல... plz intimate the date of despatch

    ReplyDelete
    Replies
    1. சந்தாதாரர் அல்லாத சென்னை மக்கள் எப்படிக் கத்தினாலும், கதறினாலும் 10 நாள் கழிச்சிதான் டிஸ்கவரி, ஈபே, லேண்ட்மார்க் மூலமா கிடைக்கப்போவுது. அதனால இப்படியெல்லாம் பல குளறுபடிகள் நடந்து பலருக்கும் தீபாவளிக்கு முன்னர் புக்கு கிடைக்காமல் டென்ஷனாகி, இங்கே புலம்பல்கள், அழுகைகள் அரங்கேறினால்.. எங்களுக்கு ஒரு சிறு ஆறுதல்! ஹிஹி!! பேஸிகலி எனக்கு தங்கமான குணம் யு ஃநோ!!

      Delete
    2. ஆதி சார்,
      இப்போ நான் உங்க பக்கம்.( என்ன ஒரு நல்ல எண்ணம்)

      Delete
    3. // பேஸிகலி எனக்கு தங்கமான குணம் யு ஃநோ!! //

      ஹா ஹா ஹா! :D

      Delete
    4. நாளைக்கு நாங்கெல்லாம் புத்தகத்த வாங்கிருவோமே ! எனக்கும் தங்கமான குணம்தானே!

      Delete
  70. என்ன இருந்தாலும் புக் வந்த உடனே பெட்டி கடைக்கு சென்று காசு கொடுத்து புக்ஸ் வாங்கி கொண்ட பிறகு, கடைக்காரர் ஏமாந்த நேரமாக பார்த்து "விற்பனையாகிறது" போஸ்டரையும் தள்ளி கொண்டு வந்து அழகு பார்க்கும் சந்தோஷமே தனி!
    இன்னமும் என்னிடம் கோடை மலர் 87" போஸ்டர் உள்ளது. எல்லாம் அப்போ அடிச்சது.

    ReplyDelete
    Replies
    1. அதோட ஒரு காப்பிய இங்கே இனச்சிங்கன்னா நாங்களும் பார்த்து பேரு மூச்சு விடுவோம்ல!

      Delete
  71. டியர் காமிரேட்ஸ்,

    ஒரு சுவையான சம்பவம்:

    நமது காமிக்ஸ் வெளியீடுகளின் தீபாவளி இதழ்களுக்காக பணம் கட்டுவதற்காக எங்கள் வீட்டருகே இருக்கும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிக்கு சென்றேன். வழக்கமாக அங்கே பணம் செலுத்தும் கவுண்ட்டரில் இருப்பவர் (பணி நிமித்தமான அழுத்தத்தால்) முகத்தை நமது ஸ்பைடர் போல வைத்து இருப்பார். கடந்த ஒரு வருடத்தில் அவரிடம் சினேக பாவத்தையே நான் பார்த்தது கிடையாது என்றால் மற்றதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

    நமது பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவன அக்கவுண்ட்டிற்கு பணம் செலுத்த ஃபார்ம்'ஐ பூர்த்தி செய்து பணத்துடன் அவரிடம் கொடுத்தேன் (இந்த மாதிரி அக்கவுண்ட்டில் பணம் செலுத்துவது எனக்கு இதுவே முதல் முறை).

    பெல்ஹாம் மற்றும் ஆர்டினியுடன் சதா சர்வகாலமும் மல்லுகட்டும் ஸ்பைடர் முகத்தில் புன்சிரிப்பை பார்த்தது போல அவர் முகத்தில் திடீரென்று ஒரு வெளிச்சப் புன்னகை. சற்றே முகத்தை உயர்த்தி "சார், பிரகாஷ் பப்ளிஷர்ஸ் என்றால், நம்ம லயன் காமிக்ஸ் ஆபீஸா சார்?" என்று வினவினார். "இன்னமும் முத்து காமிக்ஸ் எல்லாம் வருதா சார்? அடேயப்பா, இரும்புக் கை மாயாவி, ஜானி நீரோ, லாரன்ஸ் அப்புறம் அவர் கூட ஒரு பாடி பில்டர் (டேவிட்), ரிப் கிர்பி, மாண்ட்ரேக், காரிகன், மாடஸ்டி பிளைசி ......இவங்களை எல்லாம் மறக்கவே முடியாது சார். ஏதாவது புக் இருந்தால் கொடுங்கள் சார்" என்று தந்தையிடம் முதல் முதலாக சந்தைக்கு வந்த சிறுவன் போல முகமெங்கும் பொங்கும் சந்தோஷத்துடன் அந்த 45+ வயது குழந்தை பேச தொடங்கியது.

    பிறகென்ன? இந்த வருடத்திய இதழ்களை எல்லாம் ஒரு கேரி பேக்கில் போட்டு அவருக்கு கொடுத்து விட்டு வந்து மன நிறைவுடன் இதனை டைப்புகிறேன். நெவர் பிஃபோர் ஸ்பெஷலை பார்த்தவுடன் அவரது கண்களின் முழு அகலத்தையும் பார்க்க முடிந்தது.

    இதற்க்கு முன்பாக சதர்ன் ரெயில்வே ட்ரைன் ஓட்டுனர், பெங்களூருவில் என்னுடைய Cab ஓட்டுனர், கோவையில் என்னுடைய பணி நிமித்தமாக நான் சந்தித்த தொழிலதிபர், எங்கள் வீட்டிற்கு வரும் Vet டாக்டர் என்று பலரும் இதுபோல காமிக்ஸ் ஆர்வலர்களாக இருந்து என்னை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்கள்.

    வாழ்கையின் ஒவ்வொரு துளியிலும் ஆச்சர்யத்தின் நிழல் நம்மையறியாமல் பின்தொடர்வது ஒரு சுவாரஸ்யமான விஷயமே.

    Feeling Very, Very Happy :)

    ReplyDelete
    Replies
    1. நானும் Feeling Very, Very Happy :)
      இது போல பலரை வியப்படைய செய்துள்ளேன்!
      எல்லாம் நம்ம இனம் இருக்கிறார்களே என்ற சந்தோசம்தான் ! இல்லையா ?

      Delete
    2. எனக்கு இந்தமாதிரி Surprise ஏதும் நடக்கமாட்டேங்குதே! நானும் எங்க ஊர் ICICI Bank-ல் Try பண்ணி பார்க்கிறேன்! :D

      Delete
    3. ஊஹூம் ....அதெல்லாம் tmb ல் மட்டும்தான் ! சாரி வேறு கிளைகள் இல்லை !

      Delete
    4. காமிரேட் ரமேஷ்குமார்,

      நாம் எதிர்பார்த்து நிகழ, ஆச்சரியங்கள் ஒன்றும் நடைமுறை நிகழ்வுகள் அல்லவே?

      Anyway, முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்.

      So, Keep on Trying.......

      Delete
    5. சூப்பர்!!

      ஆனால், அந்த கேஷியரிடம் இரண்டு புத்தகங்களை மட்டும் சாம்ப்பிளுக்கு படிக்கக் கொடுத்துட்டு 'மீதப் புத்தகங்களை சந்தா கட்டி வாங்கிக்கோங்க'னு நீங்க சொல்லியிருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன்! ;)

      Delete
  72. ஊய்..................புத்தகத்த அனுப்ப போறாங்களாம் ......டும் டும் டும் ....

    ReplyDelete
  73. ஏற்கனவே நம்மிடம் கிடப்பில் கிடக்கும் பெயர்களை விடுத்து புதிதாக சன்ஷைன் லைபிரரி, சன்ஷைன் கிராபிக் நாவல் என புதிதாக பெயர் வைப்பது எதற்காக.

    லயன்/ முத்து காமிக்ஸ் என்பது நமது அடயாளம், ஒரு பாரம்பரியம், அதற்கு துளியும் இந்த பெயர்கள் நீதி செய்ய வில்லை, இந்த பெயர்களுக்கு ஒரு ஈர்ப்பு இல்லை, ஒரு individuality இல்லை.

    மினி லயன் - கார்டூன் கதைகளுக்கு
    கிளாச்சிக் காமிக்ஸ் - ரீ-பிரிண்ட்ஸ்களுக்கு
    ஜூனியர் லயன் காமிக்ஸ் or முத்து காமிக்ஸ் - கிராபிக் நாவல்.

    கடையில் லயன் காமிக்ஸ் / முத்து காமிக்ஸ் இருக்கா என்று ஈஸியா கேட்கலாம், ஆனால் சன்ஷைன் லைப்ரரி?

    மார்கட்டிங் உலகில் பிரண்ட் வேல்யு என்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும், சமீபத்தில் கூட Coca-Cola Apple இடம் முதலிடத்தை இழந்தது பிரண்ட் வேல்யு வில் என்று நியூஸ் வந்தது.
    அதுபோல கண்டிப்பாக பிரண்ட் வேல்யு உள்ள ஒரு லோகோவை / பெயரை விடுத்தது புதிதாக ஒரு பெயரை தேர்வு செய்வது கண்டிப்பாக மார்கடிங்க்கு உதவாது. அப்படியே புது பெயரை தேர்வு செய்ய வேண்டுமெனில் நமது legendary brand ஐ நினைவு படுத்த வேண்டும். எனக்கு என்னவோ இந்த பெயர்கள் ரொம்பவும் அன்னியமாக இருக்கின்றன.. (நாளை புது வெளியிடுகளின் அமர்க்களத்தில் இந்தபின்னூட்டம் எடுபடாமல் போகலாம் ஆயினும் என் மன உறுத்தலை பதிவு செய்கிறேன்)

    ReplyDelete
  74. @விஜயன் சார்:
    //"சன்ஷைன் கிராபிக் நாவல்ஸ் " எனும் நமது புது வரவு 2014 -ல் ஒரு பரீட்சார்த்த முயற்சியாகத் துவங்கிடவுள்ளது//
    நல்ல முடிவு! 7 முதல் 77 வரை என்ற ஸ்லோகன் ஏற்படுத்தும் தர்ம சங்கடங்களை இதன் மூலம் ஓரளவுக்கேனும் தவிர்க்கலாம்! இதற்கான லோகோவும் அதையே பிரதிபலிப்பது நலம் - அந்த 'சிரிக்கும் குழந்தைச் சூரியன்' வேண்டாமே?! ஒவ்வொரு இதழிலும் ஒரே ஒரு கதை, பில்லர் பக்கங்கள் ஏதும் இன்றி, உங்கள் முன்னுரையுடன் கூடிய ஒரு முழு நீள கிராபிக் நாவல் என்று இதன் அடையாளத்தை மிகவும் தனித்துவமாக வைத்திருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

    //டெக்ஸ் வில்லரின் "குண்டூஸ்" இதழும் ; "ஒரு சிப்பாயின் சுவடுகளில் " கிராபிக் நாவலும் புதன் (30/Oct ) மாலைக்குள்//
    குண்டு இதழ் புண்ணியத்தில் சிப்பாயின் கழுத்து முறியாமல் இருந்தால் சரிதான்! :) ஏன் என்றால், இரண்டும் வெவ்வேறு அளவு மற்றும் பருமன்கள் கொண்டவை! அவற்றை ஒரே பேக்கிங்கில் அனுப்பும் போது பெரிய அளவிலான இதழ் (சிப்பாய்) நெளிந்து போகும் வாய்ப்புக்கள் குண்டாக இருக்கிறது! :D

    //நம் காமிக்ஸ் வரிசைக்கு 2014 ஒருப் புது ஆட்டக்காரரையும் அறிமுகம் செய்யக் காத்துள்ளது//
    அது, அந்தரத்தில் பல ஆண்டுகள் தொங்கப் போகும் மற்றுமொரு நீ...ளமான தொடராக இல்லாத வரை சந்தோஷமே! ;) தொடராக இருந்தால், அதை லயன் 30வது ஆண்டு மலராகப் போட்டு, ஒரே இதழில் காலி செய்ய வேண்டுகிறேன்! ;)

    @Prunthaban:
    //நானும் இன்னொருவருமாக நான்கு ஆண்டுகளுக்கு முன் செய்த இந்த மென்பொருள் இன்றும் பயனுள்ளதாக இருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.//
    அது என்றுமே பயனுள்ளதாக இருக்கப் போகிறது பிருந்தாபன்! தவிர, இனி Tamil Transliteration செய்யும் போதெல்லாம் உங்கள் பெயரும் கூடவே நினைவுக்கு வரப் போகிறது! மிக்க நன்றி!!!

    @Ramesh Kumar:
    //டப்பாக்கும் டப்பிக்கும் இன்னாங்க வித்தியாசம்? :D//
    இவை இந்திச் சொற்கள் என்பதால் அந்த வித்தியாசத்தை கண்டு பிடிப்பது சுலபமே! :) "ஆ" என்ற உச்சரிப்பில் முடிவதால், டப்பா - ஆண்பால்! "இ" என்ற உச்சரிப்பில் முடிவதால், டப்பி - பெண்பால்! :) அதற்காக "குப்பி" என்ற சொல்லின் ஆண்பால் "குப்பா"-வா என்றெல்லாம் கேட்கப் படாது! :D

    @ஆதி தாமிரா:
    //ஆஹா.. என்னே ஒரு விளக்கம்! புல்லரிக்கிறது//
    விஜய் கொடுத்திருக்கும் 'திறந்து மூடிய' விளக்கத்தை நம்பாதீர்கள் ஆதி! :) அந்த காலத்தில் ரகு தாத்தாவிடம் ஹிந்தி டியூஷன் படித்து காமெடி பண்ணியது வேறு யாருமல்ல, நம்ம ஈ.விஜயே தான்! ;)

    @Cibiசிபி:
    //பேட்மேன் லைசன்ஸை - இதையே தான் நானும் மேலே சொல்லியிருக்கிறேன் நண்பரே ;)//
    ♪ ♫ ♬ யார் சொல்லி வந்தால் என்ன சி(ப்)பி?
    முத்துக்குள் பேட்மேன் வந்தாலே நான் ஹேப்பி! ♪ ♫ ♬

    (நாங்களும் மொக்க போடுவோம்ல?) ;)

    @Siva Subramanian:
    //400/- என்றால் 4 நாவல்கள் தானா?//
    50 பக்க கிராபிக் நாவல்கள் என்றால், அதிக பட்சம் எட்டு இதழ்கள் வரை கிடைக்கும் என நினைக்கிறேன் நண்பரே! இவை தனித்தனி இதழ்களாக வருவதே சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து. :)

    ReplyDelete
    Replies
    1. // குண்டு இதழ் புண்ணியத்தில் சிப்பாயின் கழுத்து முறியாமல் இருந்தால் சரிதான்! //
      ஆஹா என்ன ஒரு சிந்தனை !
      உங்களுக்குதான் முன்ஜாக்கிரதை முத்தனா என்ற பட்டம் சாலப் பொருந்தும் ! கோவை வந்தால் வந்து (கவிதை) வாங்கி செல்லவும் நண்பரே !

      Delete
    2. @ கார்த்திக்

      //யார் சொல்லி வந்தால் என்ன சி(ப்)பி?
      முத்துக்குள் பேட்மேன் வந்தாலே நான் ஹேப்பி! //

      அடக்கடவுளே! அந்த 'எடிட்டரோமேனியா' உங்களையும் தாக்கிடுச்சா? :D

      Delete