Friday, October 18, 2013

உலகம் சுற்றலாம் வாங்க..!

நண்பர்களே,

வணக்கம். உலகைச் சுற்றி வர தம்பி சுப்பிரமணியன் மயிலேறிப் புறப்பட, அண்ணன் விநாயகரோ இருந்த இடத்திலேயே அம்மையையும், அப்பனையும் வலம் வந்து காரியம் சாதித்தது புராணங்கள் சொல்லும் கதை ! இருந்த இடத்திலிருந்தே உலகைச் சுற்றி வரும் அந்த லாவகத்தை கடந்த ஏழு நாட்கள் எனக்கும் கற்றுத் தந்துள்ளன என்று சொன்னால் மிகையாகாது ! தசரா விடுமுரைகளைத் தொடர்ந்து சின்னதாய் ஒரு விடுமுறைப் பயணம் ; சென்ற இடத்திலிருந்து இறக்குமதி செய்து வந்த ஜலதோஷமும், காய்ச்சலும் படுக்கையில் என்னைச் சாய்த்திட - இடையிடையே இங்கு எட்டிப் பார்க்கக் கூட இயலாது போனது ! ஆனாலும், தீபாவளி நெருங்க நெருங்க - 'இதழ்களின் தயாரிப்பில் சுணக்கம் நேர்ந்திடக் கூடாதே' என்ற இன்னொரு காய்ச்சலும் உள்ளுக்குள் ஓடியதால் - வரிசையாய்த் தலைமாட்டில் கதைகளின் print out கள் அணிவகுப்போடு, பணிகளையும் பார்த்திட முனைந்தேன் !

டெக்ஸ் வில்லரின் 2 தடிமனான சாகசங்கள் என் பட்டியலின் முதன்மையில் இருந்தன. பருமனான புக் என்பதால் - அச்சு ; பைண்டிங் என சகலமும் நேரத்தை விழுங்கும் சங்கதிகள் என்பதால் அதற்கு priority தருவது அவசியமாய்ப் பட்டது ! முதலாம் கதை முழுக்க முழுக்க மெக்சிகோவில் நடைபெறும் சாகசம் ! 224 பக்கங்கள் என்பதும் சரியான நீளம் என்பதால் கதை முடிவதற்குள் நானே அந்த மெக்சிகன் புழுதிக் காடுகளிலும், மேடுகளிலும் 'லோ-லோ' வென நடை போட்டது போல் தோன்றியது ! சரி - ஒரு வழியாக மெக்சிகோவிற்கு சலாம் போட்டாயிற்று - என கதை # 2 ஐக் கையில் எடுத்தால் அது அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள எவர்க்லேட்ஸ் சதுப்பு நிலங்களில் அரங்கேறும் ஒரு சாகசம் ! திரும்பிய திசையெல்லாம் சதுப்புக் காடுகள் ; முதலைகள் ; டிசைன் டிசைனான குடுமிகள் கொண்ட செமிநோல்ஸ் செவ்விந்தியர்கள் என இதுவும் ஒரு மாறுபட்ட களத்தில் என்பதால் பயணம் # 2 கூட என்னை எங்கெங்கோ இட்டுச் சென்றது ! சில மாதங்களுக்கு முன்பாய் எழுதப்பட்ட கதைகளை ஒரு சேர - ஒரே இதழாக்கிப் படிக்கும் போது ஏற்படுவது முற்றிலும் மாறுபட்டதொரு feeling  ! எழுதும் போது ஒரு நேரத்திற்கு 10 பக்கங்களை ஒரு சேர எழுதுவதே பெரும் பணி என்பதால் - இடைவெளி விட்டு-விட்டு எழுதுவதே வழக்கம். So இறுதியாய் எடிட்டிங் செய்யும் போது அவற்றை கோர்வையாக்கி - ஒரு மொத்தமாய்ப் படிக்கும் அனுபவம் ரொம்பவே வித்தியாசமானது ! 450 பக்கங்கள் டெக்ஸ் வில்லரோடு பயணித்தான பின்னர் எனது சமீபத்திய கனவுகள் கூட 'டமால்-டுமீல்-கும்-கிராக்" DTS சவுண்ட் effect சகிதம் தான் அரங்கேறுகின்றன !
சென்ற மாதம் வெளியாகியுள்ள இதழ் + DVD !  போனெல்லி நிறுவனத்தின் காமிக்ஸ் பரிணாம வளர்ச்சியினை விளக்கும் வண்ணப் பக்கங்கள் + ஒரு ஆவணப் படம் + ஒரு  48 பக்க western  வண்ண சாகசம் !
ஒரு வழியாய் டெக்சின் பயணங்களுக்கு முடிவுரை எழுதி விட்டு, எதிர்நோக்கி நின்ற கிராபிக் நாவலைக் கையில் எடுத்த போது தலைக்குள் கிரைண்டர் ஓடாத குறை தான் ! இந்த வியட்நாம் பின்னணியிலான கதை ஏறத்தாள 7 மாதங்களுக்கு முன்பாகவே பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு - நமது கருணைஆனந்தம் அவர்களால் தமிழாக்கமும் செய்யப்பட்டு ஏன் மேஜையில் துயில் பயின்று வந்த சங்கதி ! கதையின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பைப் பார்த்த கையேடு - என்னிடம் பேசியவர் - 'கதை ஏகப்பட்ட நீளத்திற்குச் செல்கிறது ; எக்கச்சக்கமான வரலாற்றுக் குறிப்புகளோடு உள்ளது ; இது நமக்கு சரி வருமா ? என்பதை யோசித்துக் கொள் !' என்று ஒரு பிட்டைப் போட்டிருந்தார் ! பிடிவாதமாக இந்தக் கதையை நான் 'டிக் ' அடித்ததைத் தொடர்ந்து, அவர் பணியைச் செய்து பிப்ரவரியிலேயே மொழிபெயர்ப்பு வந்தாகி விட்டது. தொடர்ந்து அவரது எழுத்துக்களை மெருகூட்டும் பணியை நான் கையில் எடுத்து முடித்து - டைப்செட்டிங்கில் ஒப்படைத்தால்  - மூன்றே நாட்களில் கதை தயார் என்ற நிலை ! ஆனால் எனது வேலையினைத் துவக்காமலே நான் மாதங்களைக் கடத்தி வந்திருந்தேன். இவ்வார ஆரம்பத்தில்   'இனியும் தாமதித்தால் வேலைக்கு ஆகாது மகனே !' என்ற சூழலில் ஒரு வழியாய்க் கதையைக் கையில் எடுத்த போது என்னைக்  கிறுகிறுக்கச் செய்தது இக்கதைக்கான பிரெஞ்சு to இங்க்லீஷ் மொழிபெயர்ப்பின் பரிமாணம் ! பரீட்சைப் பேபரில் சுத்தமாக 81 பக்கங்கள் கொண்ட முழு நீள ஸ்கிரிப்ட் அது ! இத்தனையையும் அடுத்த சில நாட்களுக்குள் படித்து - ஏற்கனவே கையிலிருந்த தமிழாக்கத்தில் கூட்டல் / குறைத்தல் / மெருகூட்டல் செய்தாக வேண்டுமென்று நினைத்த போதே விலகி இருந்த காய்ச்சல் U -turn அடித்தது போல் இருந்தது ! சிறுகச் சிறுக உள்ளே புகுந்திட ; கதையின் ஜீவனைப் புரிந்திட முயற்சிக்கத் தொடங்கிய போது தான் ஒரு பிரமிப்பூட்டும் படைப்பின் வாயிலில் நான் நிற்கும் விஷயம் எனக்கே புலனானது ! இந்தக் கதையை நான் வாங்கிடும் முன்னே அதன் கதைச்சுருக்கத்தை ஆங்காங்கே அலசி இருந்தேன் தான்  என்ற போதிலும், அதனை வரிக்கு வரி ; frame by single frame படித்திடும் போது தான் அதனுள் புதைந்து கிடக்கும் முத்துக்களை இனம் காண முடிந்தது!

கதையின் முதல் பகுதி அரங்கேறுவது பிரான்சின் யௌவனம் கொஞ்சும் கிராமீயப் பகுதிகளிலும் ; இரண்டாம் பாகம் நடந்தேறுவது வியட்நாமின் வயல்வெளிகளிலும் ! ' டமால்-டுமீல் ' என்ற தோட்டா முழக்கங்கள் கிடையாது ; 'விர்ரூம்ம் ' என்ற புழுதி பறக்கும் கார் விரட்டுகளுக்கு இங்கே இடமில்லை ; ஆண்மை மிடுக்கான ஹீரோக்களோ ; மிரட்டலான வில்லன்களோ இங்கு அறவே கிடையாது ! ஆனால் இங்கு சொல்லப்பட்டிருப்பது யுத்தமெனும் அர்த்தமற்ற இரத்த பலியின் இடையே சராசரி மக்கள் படும் அவஸ்தைகளும், அந்த யுத்த வெறி வெளிக் கொணரும் மிருக குணங்களுமே ! கொஞ்சம் கொஞ்சமாய் அந்த சிப்பாயின் சுவடுகளைத் தேடி நானும் பேனாவோடு பயணமாக - பிரான்சின் தூங்குமூஞ்சி கிராமங்களையும், வியட்நாமின் பரபரப்பான நகரங்களையும், பழமையில் ஊறிப் போன அதன் கிராமீயப் பிராந்தியங்களையும் தரிசித்த உணர்வு ஏற்பட்டது ! இது அதிரச் செய்யும் ஒரு கதையல்ல ; யூகிக்கக் கூடியதொரு கதைக்கருவே  என்றாலும் - சொல்லப்பட்டிருக்கும் விதம் ரொம்பவே endearing என்பது படைப்பாளிகளின் வெற்றிக்கு சான்று ! விரைவில் இதனைப் படித்திடும் நீங்களும் என்னைப் போலவே லயித்திடுவது சாத்தியமானால் - உங்களின் பாராட்டுக்கள் சேர்ப்பிக்கப்பட வேண்டியது பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு அசராமல் மொழியாக்கம் செய்து தந்த அந்த இல்லத்தரசிக்கே !! Simply breathtaking job !

'இத்தனை 'பில்டப்' இந்தக் கதைக்குத் தேவை தானா ?' என்ற சிறு சந்தேகம் மண்டையின் ஒரு ஓரத்திலும் இல்லாமல் இல்லை தான் ! நண்பர்களில் ஒரு சாராருக்கு இது மசாலாவற்றதொரு சமையலாகத் தெரிந்திடும் வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளன எனும் போது ஓவரான அலப்பரையாக இந்த அறிமுகப் படலம் தெரிந்திட சாத்தியமாகும் தான் ! ஆனால் - மொழிபெயர்ப்பை முழுமையாய் re-do செய்த கையோடு இந்தப் பதிவை நான் எழுதுவதால் - fresh from vietnam என்ற உணர்வோடு என்  எண்ணங்களைப் பகிர்ந்திடுகிறேன் ! இந்த ஒரு முறை மட்டும் - இக்கதையின் commercial வெற்றியோ-தோல்வியோ ஒரு தடுமாற்றத்தை என்னுள் விதைக்கப் போவதில்லை என்பது நிச்சயம் ! 'ஒரு நிஜமான மாறுபட்ட முயற்சியைக் கையில் எடுக்க வாய்ப்பு அமைந்ததே ! என்ற மனநிறைவு மேலோங்கி நிற்பது உறுதி ! நீங்களும் ரசிக்க வேண்டுமென்ற ஆசை எப்போதையும் விட இப்போது மிகுந்து நிற்கின்றது !Fingers crossed big time !!

அப்புறம் நமது சமீபத்திய KBT -3 போட்டிக்கு இம்முறை கிட்டத்தட்ட 50% போட்டியாளர்கள் தங்கள் ஆக்கங்களை அனுப்பியுள்ளது மிகுந்த சந்தோஷமளித்தது ! அனுப்பியதோடு மட்டும் நிற்காது - தொடரும் நாட்களில் - "Improvements ; enhancements ; changes " என வெவ்வேறு சிற்சிறு மாற்றங்கள் ; திருத்தங்களையும் செய்து அனுப்பி இருப்பது ஒவ்வொருவரின் முயற்சிகளின் தீவிரத்தை உணரச் செய்தது ! இம்முறை இரு கதைகளுமே லக்கி லூக்கின் காமெடிக் கதைகள் தான் என்ற போதிலும், 'பெண்டு' கழற்றி விட்டன என்பது தான் ஏகோபித்த கருத்து ! இவ்வார இறுதியோடு time limit நிறைவு பெறுவதால் - அதற்குள் வந்திடும் / வந்திருக்கும் மொழிபெயர்ப்புகளுள் மிகச் சிறப்பானததைத் தேர்வு செய்து - இம்மாத "ஜானி ஸ்பெஷல்" இதழின் filler pages -களாக  (முதல் கதையினை) வெளியிடவுள்ளோம் ! இம்முறை மெய்யாகவே அனைவரும் 'தம்' கட்டி திறமைகளைக் காட்டி இருப்பதால் - தேர்வு செய்யும் என் பொறுப்பு சுலபமல்ல என்பது புரிகிறது !  Great show folks !!

அதே போல் KBGD போட்டிக்கு சில பளிச் அட்டைப்படங்கள் வந்துள்ளன ! சில நண்பர்கள், சில விபரங்களைக் கோரி மின்னஞ்சல் அனுப்பி இருந்தனர்!  உடல்நலக் குறைவால் ஓய்விலிருந்த என்னால் அவற்றிற்குப் பதிலளிக்க இயலாது போயிற்று ! இன்று அவர்களுக்கும் தேவையான விபரங்கள் அனுப்பப்படும் ; so வரும் செவ்வாய்க் கிழமைக்குள் நமக்கு வந்திடும் டிசைன்களில் பெஸ்ட் தேர்வாகிடும் !
ஊடு சூன்யம் ...

ஓநாய் மனிதன் ! 
ஒரு சிப்பாயின் சுவடுகளில்...!
2014-ன் சந்தா + அட்டவணை + ட்ரைலர்களின் தயாரிப்புப் பணிகளும் ஒரு பக்கம் பெரும் சவாலாய்க் காத்திருப்பதால் - தொடரும் நாட்கள் ரொம்பவே hectic ஆக இருந்திடப் போவது புரிகிறது ! So - இப்போதைக்கு இங்கிருந்து விடைபெறுகிறேன் ! Adios amigos !! 

232 comments:

  1. அப்பாடா,

    தூங்காம காத்து இருந்தது வீண் போகலை.

    ReplyDelete
  2. Replies
    1. இம்மாத புத்தகங்கள் எப்பொழுது அனுப்பப்படும் என்பது குறித்து கூற முடியுமா சார்.

      நான் தீபாவளிக்காக Oct 31 இரவு ஊரிற்கு செல்கிறேன்.

      புத்தகங்கள் 31 அன்று கிடைத்துவிட்டால் பரவில்லை அல்லது இம்மதத்திற்கு மட்டும் எனது ஊரான பழனி முகவிரி தந்தால் அங்கு அனுப்பிவிடுவீர்களா.

      விரைவில் இதற்கான முடிவு எடுக்க வேண்டும் சார்.

      ஒரு கனவு நினைவாகும் நாளை மிக ஆவலுடன் எதிர்பார்கிறேன் சார்.(டெக்ஸின் "அந்த" அளவு புத்தகம் படிப்பது பற்றி"

      முன்னுரை எனது ஆவலை பல அளவு அதிகபடுத்தி உள்ளது.

      கிராபிக் நாவலை பொறுத்த வரை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமலே படிக்க இருக்கிறேன்.

      Delete
    2. கிருஷ்ணா வ வெ : பழனிக்கு அனுப்பிடுவதில் சிரமம் ஏதும் இராது ! ஒரு போனே அடித்துச் சொல்லி விடுங்களேன் - ப்ளீஸ் ?

      Delete
  3. சிறு பதிவானாலும் எங்கள் சுறுசுறுப்பையும் அதிகரிக்கும் பதிவு. நன்றி ஆசிரியரே!

    ReplyDelete
  4. டெக்ஸ் வில்லரின் 2 தடிமனான சாகசங்கள் + ஜானி ஸ்பெஷல் எதிர்பார்கிறேன்
    கிராபிக் நாவலை பொறுத்த வரை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமலே படிக்க இருக்கிறேன்.

    ReplyDelete
  5. Sir,

    This month, print quality of both the books are very good.

    But the blue coats comic was not that great, in my opinion. The Story/Humour was ok. May be the expectation was more.

    ReplyDelete
  6. விஜயன் சார்,

    சிப்பாயின் சுவடுகளுக்கு நீங்கள் கொடுக்கும் முன்னுரை என்னுடயை எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது.
    தீபாவளி புத்தகங்கள் வந்தவுடன் இதை தான் முதலில் படிக்க முடிவு செய்துள்ளேன்.

    ReplyDelete
  7. 1. டெக்ஸ்வில்லர் பிடிக்கும்+ குண்டு புக் பிடிக்கும். அப்படியானால் குண்டு டெக்ஸ்=பிடிக்கும்ஸ்கொயர்!!

    2. சிப்பாயின் சுவடுகளுக்கு ஏற்கனவே பயங்கர எதிர்பார்ப்பிலிருக்கிறேன், இதில் நீங்கள் வேறு பில்டப் தந்து, தீபாவளிக்கு பட்டாசு எதிர்பார்த்து நாட்களைக் எண்ணிக்கொண்டிருக்கும் என் பையன் நிலைக்கு என்னையும் ஆக்கிவைக்கிறீர்கள்.

    3. ஜானி ஸ்பெஷல் கூடுதலாக வாசகப் பங்களிப்போடு! செமை!!

    ஆமா, 3 புக்ஸ் மட்டும்தானா? இல்ல... எனக்குப் போதும். மத்தவங்க காமெடி கேட்டாங்களே.. கேப்பாங்களே... மறந்துட்டீங்ங்ங்ங்ங்ங்ங்களோனு கேட்ட்ட்டேன்!

    ஈ.விஜய், காப்பாத்துங்க.. 3 புக்கு மட்டும்தானானு கேட்டதுக்கு இங்க ஒருத்தர் என்னை அடிக்கத் துரத்திகிட்டிருக்கார்!!!!!

    ReplyDelete
    Replies
    1. @ ஆதி

      ம் சீக்கிரம்! இன்னும் வேகமா ஓடிவந்து என்கூட ஜாயின் பண்ணிக்கோங்க! ;)

      Delete
    2. // ஆமா, 3 புக்ஸ் மட்டும்தானா? இல்ல... எனக்குப் போதும். மத்தவங்க காமெடி கேட்டாங்களே.. கேப்பாங்களே... மறந்துட்டீங்ங்ங்ங்ங்ங்ங்களோனு கேட்ட்ட்டேன்! //+1.
      கேட்கறதை கேட்டுடணும் கிடைகறதும் கிடைக்காததும் வேற விஷயம்,நண்பரே!

      Delete
  8. கிராபிக் நாவல் பற்றிய முன்னுரை ஆவலை அதிகரிக்க செய்கிறது!
    2014 பட்டியலை விரைவில் காண காத்திருக்கிறேன் சார்!

    ReplyDelete
  9. Unexpected post - 2 days earlier than usual schedule :)
    Looking forward to Johnny special and Tex covers and from editor's enthusiastic introduction on the graphic novel, i think its going to a treat.

    ReplyDelete
  10. டியர் எடிட்டர் ,
    அப்படியானால் இந்த தீபாவளிக்கு குண்டு டெக்ஸ் புத்தகம் , ரிபோர்ட்டர் ஜானி ஸ்பெஷல் மற்றும் சிப்பாயின் சுவடுகள் கிராபிக்ஸ் நாவல் எனும் 3 புத்தகமா ? சூப்பர் சார் ! அப்புறம் வாக்கு மாற கூடாது .

    ReplyDelete
  11. இந்த தீபாவளிக்கு எமக்கு பட்டாசு வெடி சத்தம் இருக்கோ தெரியாது ஆனால் டெக்ஸ் அன் கோ இன், டமால் டுமீல் , சத் , கிராச் , கும் , டும் கண்டிப்பாக உள்ளது என்று எடிட்டர் தனது பதிவினால் உணர்த்தி விட்டார் . சார், "சிப்பாயின் சுவடுகள் " கிராபிக்ஸ் நாவலின் பிரெஞ்சு பெயர் என்ன என்று தயவு செய்து கூற முடியுமா ?
    மேலும் நீங்கள் எமது வாசகர்களிடம் "சிறகுகள் இரவல் வாங்குவோமா "? என்று கேட்டதாக நாபகம் . எப்போது சார் அந்த கிராபிக்ஸ் நாவலை வெளியிட போகின்றீர்கள் . இங்கு நீங்கள் அறிவிப்பு போட்டதுமே அந்த நாவலை வாங்கி படித்து விட்டேன் . அது ஒரு தனி நாவலா ? அல்லது தொடரா ? ஏனெனில் அதன் முடிவு இல்லாதது போல் உள்ளது .

    இது வரை எமது லயன் , திகில் , முத்துவில் ரிப்போர்ட்டர் ஜானி இன் எத்தனை கதைகள் வந்துள்ளன . இன்னும் வெளியிடாத கதைகள் எத்தனை ? ப்ளீஸ் தயவு கூர்ந்து இன்றாவது பதில் கூறுங்கள் . எடிட்டர் என்று இல்லை எமது நண்பர்கள் யாரேனும் ????

    ReplyDelete
    Replies
    1. Thiruchelvam Prapananth : Reporter Johnny - வெளியாகியுள்ளவை 78 ...நாம் தமிழில் வெளியிட்டுள்ளது 22...!

      Delete
    2. மீதி 56 எப்போ சார் வாரும்

      Delete
  12. எடிட்டர் சார்,

    * மெக்ஸிகன் புழுதிக்காடுகள், ஃபுளோரிடா சதுப்புக் காடுகள், முதலைகள், வித்தியாசமான செவ்விந்தியர்கள் என இன்னும் கொஞ்ச நாட்களில் பளபள அட்டையோடும், குட்டியானதொரு 'அந்த' சைசிலும், ஏந்திப் படித்திடும்போது விரல்களை இன்பமாய் நோகச் செய்திடுவதாகவும், இந்த வருட 'தீபாவளி மலர்' என்ற சிறப்பு அடையாளம் தாங்கியும் வரயிருக்கும் எங்கள் 'தல' டெக்ஸின் டமால்-டுமீல் வருகைக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    * வியட்நாம் யுத்தப் பின்னணியிலான கிராபிக் நாவல் பற்றிய உங்களது அனுபவ வார்த்தைகள் எங்களுக்குள்ளும் ஏக எதிர்பார்ப்பை விதைத்திருக்கின்றன. பொதுவாகவே வரலாற்றுச் சம்பவங்கள் கொட்டாவி வரவழைத்திடும் விசயங்கள் என்றாலும், கதை சொல்லப்படும் விதமே சுவாரஸ்யத்தைக் கூட்ட வல்லது (உதாரணம்: மதனின் 'வந்தார்கள்-வென்றார்கள்') என்பது என் கருத்து. எனக்கென்னவோ 'ஒரு சிப்பாயின் சுவடுகள்'ளும், நமது காமிக்ஸ் பயணத்தில் ஒரு சிறப்பானதொரு இடம் பிடிக்கும் என்ற நம்பிக்கை மேலும் வலுவடைந்திருக்கிறது. சித்திரங்கள் வழியாக வரலாறு படித்திட ஆவலுடன் வெயிட்டிங்...

    * டெக்ஸ், லக்கி, சிக்பில், லார்கோ, வெய்ன் ஷெல்டன், ப்ளுகோட்ஸ், ஜில் ஜோர்டான், டயபாலிக், கேப்டன் டைகர், XIII, ப்ரூனோ ப்ரேசில், சுட்டி லக்கி உள்ளிட்ட நமது நட்சத்திர நாயகர்களுக்கு நீங்கள் 2014 அட்டவணையில் எவ்விதம் இடம் ஒதுக்கப்போகிறீர்கள் என்றறிய ஆவல். பட்டியலை சீக்கிரம் வெளியிடுங்கள் சார். 2014ல் வரயிருக்கும் ஓரிரு க்ராபிக் நாவலோடு, ஓரிரு திகில் கதைகளும் (ஜூனியர் எடிட்டரின் வேண்டுகோளின் பொருட்டாவது), முடிந்தால் ஒரு மென்மையான காதல் கதையும் இணைந்துகொண்டால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது. பட்டியலுக்காக வெயிட்டிங்...

    ReplyDelete
    Replies
    1. // முடிந்தால் ஒரு மென்மையான காதல் கதையும் இணைந்துகொண்டால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது. பட்டியலுக்காக வெயிட்டிங்...// +1

      Delete
    2. Erode VIJAY : //முடிந்தால் ஒரு மென்மையான காதல் கதையும் இணைந்துகொண்டால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது.//

      அடடா..மாறுபட்ட ரசனை தான் !! இதற்கு கை தூக்க இங்கு நண்பர்கள் வேறு யாரேனும் உண்டா ?

      Delete
    3. // அடடா..மாறுபட்ட ரசனை தான் !! இதற்கு கை தூக்க இங்கு நண்பர்கள் வேறு யாரேனும் உண்டா ? //

      yes, yes, yes

      Delete
    4. டியர் எடிட்டர்ஜீ !!!
      அய்யய்யோ காதல் கதையா...? வேணாமே ஸார்.அந்த கன்றாவிகளைத்தான் தமிழ் சினிமாக்களில் ரெகுலராக பார்த்து தொலைக்கிறோமே.இங்கேயுமா...?
      மீறி போட்டால் மருத்துவர் தமிழ்குடி தாங்கியிடம் பிடித்து கொடுத்துவிடுவேன்.
      உஷார்.ஹிஹி!!!

      Delete
    5. அருமையான யோசனை. காதல் கதைகள் தமிழ் சினிமா போல் அல்லாமல் கிராபிக் நாவலாக வெளிவந்தால் நன்றாக இருக்கும்.

      Delete
    6. அலோ, இந்த அகுடியாவை முதல்ல சொன்னவனே நாந்தான்! ஈ.விஜய் சொல்றா மாதிரி சொல்றதும், எடிட்டர் அதை முதல் தபா கேக்குறா மாதிரி கேக்குறதும்.. என்ன நடக்குது இங்க? பிச்சி பிச்சி!!

      :-)))))))))))

      Delete
    7. @ ஆதி

      அலோ மிஸ்டர்! நீங்க கேட்டது 'சாதா' காதல் கதை; நான் கேட்டிருப்பது 'ஸ்பெஷல் சாதா'!
      அதுவுமில்லாம, நீங்க கேட்டது போன மாசம், இது - இந்த மாசம்!

      நல்லா கேட்குறாங்கப்பா டீடெய்லு! கிர்...

      Delete
  13. கிராபிக் நாவலை வெகு ஆவலோடு எதிர்பார்க்கிறேன்…! filler pagesற்கு திகில் கதைகள் நன்றாகவே இருக்கின்றன.…! பரட்டைத் தலை ராஜாவை மறந்தே போயிட்டீங்க…! அவரைக் கலரில் பார்த்து சிரிக்க ஆவலாக உள்ளது…!

    ReplyDelete
  14. Graphic novelக்கான எனது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது!:-)

    ReplyDelete
  15. Decலாவது கேப்டன் டைகரின் வேங்கையின் சீற்றம் வெளியிட்டு விடுங்கள் எடிட்டர் சார்!

    ReplyDelete
  16. சார் புத்தகங்கள் எங்களுக்கு தீபாவளி வெடிசத்தம் கேட்பதாற்க்கு முன்பாகவே அனுப்பி வைத்தால்நல்லது.

    ReplyDelete
  17. சார் புத்தகங்கள் எங்களுக்கு தீபாவளி வெடிசத்தம் கேட்பதாற்க்கு முன்பாகவே அனுப்பி வைத்தால்நல்லது.

    ReplyDelete
  18. நாங்களும் டெக்ஸ் உடன் புழுதி காடுகளில் புரளும் பாக்கியம் பெருவோம்.

    ReplyDelete
    Replies
    1. ranjith ranjith : நிச்சயமாய் !

      Delete
  19. These kind of graphic novel efforts makes our editor as "THE REAL LION" . Thanks Editor Sir. Waiting anxiously to get my hands on.

    @ senthilwest2000@ Karumandabam Senthil
    Decலாவது கேப்டன் டைகரின் வேங்கையின் சீற்றம் வெளியிட்டு விடுங்கள் எடிட்டர் சார்!

    +1

    ReplyDelete
  20. எடிட்டர் சார்,

    ஒரு எட்டுபக்கக் கதைக்கான மொழிபெயர்ப்பை நாக்குத் தள்ள தள்ள செய்து முடித்த கையோடு இரத்தப் பயணத்தின் புதிய அத்தியாயத்தை படித்தபோதுதான் 'மொழிபெயர்ப்பு' என்ற வகையில் உங்களது பணி எத்தனை அசாத்தியமானது என்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது! உண்மையாகவே மிகக் கடினமான பணிதான், hats-off sir! (மொட்டையடித்திருக்கிறேன் என்பதால் நிஜமாகவே hat off தான்). ஆனால் லார்கோ கதைகளில் நீங்கள் பிரயோகிக்கும் உங்கள் பாணி 'வார்த்தை விளையாட்டுகள்' இதிலே கொஞ்சம் மிஸ்ஸிங் என்றே நினைக்கிறேன்.

    இரத்தப்படலத்தின் இன்னொரு ஆச்சர்யம்- இதன் சித்திரங்கள்!! அதிலும் குறிப்பாக - 'கலரிங்'!! பல சமயங்களில் கதையை விட்டு என்னையறியாமல் விலகி நின்று லயிக்க வைத்துவிட்டது! அட்டகாசம் போங்கள்!!

    மீண்டும் ஒரு குழப்பமான பாதையில் பயணிக்கும் கதையை நினைத்தால்தான் கொஞ்சம் பயம்வருகிறது. கதையை படித்து முடித்துவிட்டு ஏன்?ஏன்?ஏன்? என்று மனதுக்குள் எழும் கேள்விகளுக்கு விடைதெரிய இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டுமோ?! ஹம்...

    ReplyDelete
    Replies
    1. XIII மட்டுமல்ல காமிக்ஸ் தொடர்களிலிருக்கும் ஒரு சின்ன சிக்கல் இது! எழுத்தோ, டிவி சீரியலோ மாதத் தொடர்களை, வாரத் தொடர்களை கூட பார்க்கும் பொறுமை இல்லாது தினத்தொடர்களுக்கு நாம் எப்போதோ வந்துவிட்டோம். இதில் வருடத்தொடர்கள் என்பது கொஞ்சமல்ல, ரொம்பவே டூ மச்தான்! இக்காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது இக்கதைகளின் மைனஸ்தான். ஆயினும் முன்கதை, அதிலிருந்த வசீகரம், வரவேற்பு, வியக்கவைக்கும் ஓவியங்கள் என அவற்றை ரசிக்க ஏராளமான காரணங்கள் இருக்கின்றன அல்லவா? கதை முழுமையடைந்தால்தான் திருப்தி என என்னைப்போல நினைக்கும் ஆட்கள் அவ்வப்போது வரும் பாகங்களை பிற காரணங்களுக்காக ரசித்துப் பின் மறந்து விடுவது நல்லது. இன்னும் 5 வருசமோ, 10 வருசமோ கதை முடிந்தபின்பு மொத்தமாக இன்னொரு முறை முழுமையாக படித்துக்கொண்டால் போயிற்று!! XIII ஆவது இனிமேல்தான் தயாரிக்கப்படவே வேண்டும். ஆனால் ’கமான்சே’வின் நிலை? நமது காமிக்ஸ் மார்கெட், சூழல் சார்ந்து மெதுவாக காத்திருந்துதான் ரசிக்கவேண்டும்!! வேறு வழியில்லை.

      Delete
    2. @ ஆதி
      // இன்னும் 5 வருசமோ, பத்து வருசமோ கதை முடிந்த பிறகு //
      அவ்வளவு சீக்கிரம் முடிஞ்சுடும்னு நினைக்கிறீங்களா? என்ன ஒரு பேராசை!! :)
      அனேகமாக, இத்தொடரின் இறுதிப்பாகம் வெளிவரும்போது எனக்கு கண்தெரியாத காரணத்தால் என் பேரக்குழந்தையிடம் படிக்கச் சொல்லி கதை கேட்கும் ('போங்க தாத்தா, Its so boring") நிலை வரலாம்.... அல்லது, 'இறுதி பாகத்தை எதிர்பார்த்திருந்தே தன் இறுதி மூச்சை விட்ட பெரியவர்' என்று என்று என் கல்லறையில் எழுதப்பட்டிருக்கலாம்... யார் கண்டது? :)

      // 'கமான்சே'வின் நிலை //
      அடடே! இதை எப்படி மறந்தேன்?!!. எடிட்டரிடம் ஒரு சுற்று பேச்சு வார்த்தை நடத்திவிட்டு 'கமான்சே மீட்புக் குழு'ன்னு புதுசா ஒரு போராட்டத்தை அறிவிச்சுட வேண்டியதுதான்! ;)

      Delete
    3. @ ஈரோடு விஜய் // // 'கமான்சே'வின் நிலை //
      அடடே! இதை எப்படி மறந்தேன்?!!. எடிட்டரிடம் ஒரு சுற்று பேச்சு வார்த்தை நடத்திவிட்டு 'கமான்சே மீட்புக் குழு'ன்னு புதுசா ஒரு போராட்டத்தை அறிவிச்சுட வேண்டியதுதான்! ;) //+1

      அடுத்த வருடம் "காமன்சே" கதைகள் எத்தனை என்பதை பொறுத்து "மீட்பு குழு" பற்றி சிந்திக்க(சிந்தித்தே ஆக ) வேண்டும்.

      Delete
    4. @ Siva subramanian

      'க.மீ.கு' (கமான்சே மீட்புக் குழு)வின் வியூகங்களைப் பார்த்துட்டு சிங்கமுத்து வாத்தியார் முழிக்கப்போற முழி இருக்கே... :D
      முதல் நடவடிக்கையே செம அதிரடிதான் (போராட்டக்குழுவின் தலைவர் தாரமங்களம் பரணிதரனை விட்டு நாலு பக்கத்துக்கு கடுதாசி எழுதச் சொல்லிடலாம்! அழுதுக்கிட்டே கமான்சேவின் மொத்த பாகங்களுக்கும் ஓ.கே சொல்லிடுவாரு நம்ம வாத்தியாரு)

      எப்பூடி?

      Delete
    5. @ friends : யுத்தம் உண்டு.... எதிரி இல்லை...!

      விரைவில் புரியும் இதற்கான பொருள்..!

      Delete
    6. Erode VIJAY : //ஆனால் லார்கோ கதைகளில் நீங்கள் பிரயோகிக்கும் உங்கள் பாணி 'வார்த்தை விளையாட்டுகள்' இதிலே கொஞ்சம் மிஸ்ஸிங் என்றே நினைக்கிறேன்//

      லார்கோ கதாப்பாத்திரம் one of a kind ! அவருக்குப் பிரயோகிக்கும் எழுத்து நடை சற்றே exclusive ஆக இருத்தல் நலம் என்று நினைத்தேன். தவிர, நமது மறதி ஆசாமியோ ஒரு அழுத்தமான strongman ! மௌனமே அவரது தாய்மொழி எனும் போது வார்த்தை சிலாகிப்புகள் அவருக்கு அந்நியமாய்ப் படுமே என்றும் நினைக்கத் தோன்றியது !

      Delete
    7. என்னது ......மொட்டையா? .... உங்க ஃஃபேஸ் புக் ஐ.டி கொடுங்க......ப்ரொஃபைல் ஃபோட்டோ அப்டேட் பண்ணிட்டீங்களா?

      Delete
    8. @ ஈரோடு விஜய்
      // @ friends : யுத்தம் உண்டு.... எதிரி இல்லை...!

      விரைவில் புரியும் இதற்கான பொருள்..!//

      யுத்தம் உண்டு.... எதிரி இல்லை...!

      இதற்கான பொருள் அடுத்த காமன்சே கதையின் தலைப்பு என்பதா?

      Delete
    9. @ Siva subramanian
      // யுத்தம் உண்டு... எதிரி இல்லை... //

      நானும் மல்லக்க - குப்புற - சைடு வாங்கி படுத்து யோசிச்சுப் பார்த்துட்டேன். ம்ஹூம் எதுவும் புரியலை! இறுதியாக, அந்த வரிகளை எடிட்டர் அதீத காய்ச்சலின் பிடியில் உளறியதாக எடுத்துக்கொண்டுவிட்டேன். :)

      (எதிரியே இல்லன்னா வீணா எதுக்காக யுத்தம் பண்ணிட்டுத் திரியணும்? நீங்களே சொல்லுங்க!)

      Delete
    10. யுத்தம் நம்மோடு, நமக்குள்ளெனில்..?

      Delete
  21. Eagerly waiting for Tex + Reporter Johnny + Graphic novel. Please release the books before diwali

    ReplyDelete
  22. வாவ் 3 புத்தகங்களா சூப்பர், நீண்ட காலமாக "ஓநாய் மனிதன்" வண்ணத்தில் கான ஆ​சை, தீபாவளி அன்று நி​ரை​வேறுகிறது.​

    ReplyDelete
  23. தீபாவளி வரை தினமும் டெக்ஸ் கனவுகள் தான்,எனக்கு. "எமனின் திசை மேற்கு" என்னிடம் ஏற்படுத்திய பாதிப்பு,மிக அதிகம், எனவே இந்த கிராபிக் நாவலை அதிகமாக எதிர்பார்கின்றேன்.

    ஜானியின் கதைகள் அதிகம் படித்ததில்லை. "சாத்தானின் சாட்சிகள் " விறுவிறுப்பான கதை,எதிர்பார்க்காத முடிவு.

    ReplyDelete
  24. எனக்கும் thriuchelvam prapananth அவர்களின் இந்த கேள்விக்கான விடை அறிய ஆவல். நண்பர்களே?

    // இது வரை எமது லயன் , திகில் , முத்துவில் ரிப்போர்ட்டர் ஜானி இன் எத்தனை கதைகள் வந்துள்ளன . இன்னும் வெளியிடாத கதைகள் எத்தனை ? ப்ளீஸ் தயவு கூர்ந்து இன்றாவது பதில் கூறுங்கள் . எடிட்டர் என்று இல்லை எமது நண்பர்கள் யாரேனும் ???? //

    ReplyDelete
  25. ennathu athukulle 30 natkal mudinju pocha??? kalakkaringa sir! udal nalathaiyum; velaikku sappattaiyum maintain pannunga please!

    ReplyDelete
    Replies
    1. // udal nalathaiyum; velaikku sappattaiyum maintain pannunga please!// +1.

      Delete
  26. namma niruvanam sarbilum oru documentary DVD try pannalame sir???

    ReplyDelete
    Replies
    1. // namma niruvanam sarbilum oru documentary DVD try pannalame sir???// "சிங்கத்தின் சிறுவயதில்" தொகுப்பு வெளிவரவே ஒரு சங்கம் அமைத்து போராடுகின்றோம், இன்னும் முடியலை!? இப்ப DVDயா?

      Delete
    2. 'சி.சி.வ' போராட்டக் குழுவின் உறுப்பினர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதால், போராட்டக் குழு தன் இலட்சியத்தை விரைவில் வென்றடையும்! :)

      Delete
    3. Siva Subramanian & Erode VIJAY : உண்ணாவிரதப் பந்தலுக்கு வெகு அருகாமையிலேயே நண்டு ப்ரை சல்லிசாய்க் கிடைப்பதாய்த் தகவல் ...!

      Delete
    4. @ Vijayan : நான் சைவம்,விஜயன் சார். நண்டு பிரை - காக போராடத்தை கைவிட மாட்டேன். :))

      Delete
  27. Blue Coats en maganum, en thangai maganum potti pottu rasiththanar sir! really best story 50+ comics galaiyum ungal kaivannaththil rusikka miga virumbugiren! aduththa book viriavil veliyidungal sir! chick bill special varathu ponathil enakkum varuththame! aanal johny special pottu aachariyap paduthi vitteergal! mikka nanri!

    ReplyDelete
  28. // 'ஒரு நிஜமான மாறுபட்ட முயற்சியைக் கையில் எடுக்க வாய்ப்பு அமைந்ததே ! என்ற மனநிறைவு மேலோங்கி நிற்பது உறுதி ! நீங்களும் ரசிக்க வேண்டுமென்ற ஆசை எப்போதையும் விட இப்போது மிகுந்து நிற்கின்றது !//

    சராசரியான கதைகள் மட்டுமல்லாது,எங்கள் ரசனைகளையும் பார்வைகளையும் அகன்று விரிந்த ஆகாயம் போல பரவிட செய்யும் உங்கள் முயற்சிக்கு எனது நன்றிகள். இது போன்ற முயற்சிகளுக்கு கிடைக்கும் வெற்றிகளே மேலும் பல புதிய களங்களுக்கு நம்மை இட்டு செல்லும்.

    ReplyDelete
    Replies
    1. likeக்கு! likeக்கு! :)

      Delete
    2. +1 அந்த கிராபிக் நாவலுக்காக ரொம்பநாள் Wait பண்ணிட்டோம்!

      Delete
  29. டியர் விஜயன் சார்,

    அடுத்த மாதம் மூன்று புத்தகங்கள், ஐந்து கதைகள்; கிட்டத்தட்ட 675 பக்கங்கள் என்று நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது! இன்னமும் படிக்கத் துவங்காத XIII ஒருபுறம், கடந்த சில மாதங்களில் வாங்கிய ஆங்கில காமிக்ஸ்கள் மறுபுறம்; இவை போதாதென்று ஈரோட்டில் வாங்கிய / கிடைத்த காமிக்ஸ் அல்லாத வேறு புத்தகங்கள் என்று, புத்தககங்கள் மலை போல் குவிந்து கிடக்கின்றன! படிக்கும் ஆர்வம் தான் தற்காலிகமாக மங்கி விட்டது! எவ்வளவு அ(ப)டித்தாலும் தாங்கிய மாணவப் பருவம், இனி திரும்ப வராது தான்! :)

    KBT2-வில், 36 பேர் பங்கேற்று, கிட்டத்தட்ட அதில் பாதி பேர் ஸ்க்ரிப்ட் அனுப்பியிருந்ததாக கூறியிருந்தீர்கள்! KBT3-யில் இணையம் தாண்டிய வாசகர்களும் பங்கேற்கலாம் என்ற அறிவிப்பால், குறைந்தது 100 பேராவது பங்களிப்பார்கள் என நினைத்திருந்தேன்! அந்த வகையில், "மொத்தம் 39 போட்டியாளர்களில், 50% மட்டுமே ஸ்க்ரிப்ட் அனுப்பினார்கள்" என்பது மிகவும் குறைவான எண்ணிக்கையாகவே தெரிகிறது!

    ReplyDelete
    Replies
    1. Even I haven't read the X111 book yet

      Delete
    2. புத்தககங்கள் மலை போல் குவிந்து கிடக்கின்றன!// ஐயா கார்த்திக் அவர்களே.. ஏதோ காமிக்ஸ் நமக்குத் திகட்டத் திகட்டக் கிடைத்துக்கொண்டிருக்கிறது என்பது போல ஒரு மாயத்தோற்றம் ஏற்படுகிறது உங்கள் கூற்றில்!! தனிப்பட்ட நபர்கள், அவரவர் ரசனை மாற்றம், சூழல் சார்ந்து அப்படி எண்ணலாம்.

      ஆனால், நம் சமூகத்தின் காமிக்ஸ் தேவை என்பது ஆனையளவு, நம்மிடம் பூனையளவைக்கூட இன்னும் நெருங்கவில்லை. ஆகவே, இது உங்களுடைய தனிப்பட்ட கருத்துதான் எனினும் பொதுத் தளங்களில், குறிப்பாக இங்கே சொல்லாதீர்கள். அசந்து மறந்து, தப்பித் தவறி விஜயன் சார் மனதில் இந்தக் கருத்து பதிந்துவிட்டால் என்ன ஆகும்? கெட்டதே கதை!! :-))))))))))))))))

      //50% மட்டுமே ஸ்க்ரிப்ட் அனுப்பினார்கள்" என்பது மிகவும் குறைவான எண்ணிக்கையாகவே தெரிகிறது!//

      மண்ணு கவ்வுவதில் உள்ள வாய்ப்பு நமக்குக் குறைகிறதே என்ற கோணத்தில் இதைப் பார்க்கலாமே.. ஹிஹி, எதிலும் பாஸிடிவ் விஷயங்களை மட்டுமே பார்க்கும் சங்க உறுப்பினர்!! :-))))))))))))

      Delete
    3. //ஹிஹி, எதிலும் பாஸிடிவ் விஷயங்களை மட்டுமே பார்க்கும் சங்க உறுப்பினர்!! //

      இன்னெரு Positive விஷயம் ஆசிரியரும் ஒரே கதையை 36 தடவைக்கு பதிலாக ~18 தடவை படித்தால் போதும்! :D

      Delete
    4. 3 புக் படிக்க 3 நாள் லீவ் கொடுத்து இருக்காங்க!! டெக்ஸ் வந்தாலும் மனசு டைகர் & டியாபோலிக்க எதிர்பாக்குது!!! ((எத்தன புக் வந்தாலும் தல டெக்ஸ் புக் தான் முதல படிப்போம்)). நம்ப தல(Editor sir) நமக்கு தீபாவளி போனஸ் தருவாருன்னு தோணுது!!

      Delete
    5. Karthik Somalinga //படிக்கும் ஆர்வம் தான் தற்காலிகமாக மங்கி விட்டது! எவ்வளவு அ(ப)டித்தாலும் தாங்கிய மாணவப் பருவம், இனி திரும்ப வராது தான்! :)//

      அது மட்டுமல்லாது இந்த டெக்னாலஜி யுகத்தில் நமது patience thresholds கணிசமாய்க் குறைந்து விட்டன என்பதும் ஒரு காரணம் என நினைக்கத் தோன்றுகிறது ! சானலுக்கு சானல் ரிமோட்டின் புண்ணியத்தில் சொய்ங் -சொய்ங் எனத் தாவுவதாகட்டும் ; ஒரே நேரத்தில் மூன்று வேலைகளை செய்ய முனையும் multi -tasking ஆகட்டும் ; இன்றைய பரபரப்பின் அடையாளங்கள் ஆகிப் போய் விட்டன ! So ரொம்பவே பிடித்தமான கதையாகவோ ; அல்லது அலுப்புத் தட்டாது பயணமாகும் இலகு ரகக் கதைகளாகவோ ; அல்லது நமது ஆர்வத்தைக் கிளப்பும் ஏதேனும் புது அறிமுகமாகவோ இருந்திடா பட்சத்தில் - காமிக்ஸ் வாசிப்பில் ஒரு சின்ன அயர்ச்சி நேர்வது புரிந்து கொள்ளக் கூடியதே என்பேன் !

      நீங்களாவது ஈரோடு புத்தக விழாவின் தொங்கலில் இருக்கிறீர்கள் ; நானோ COMIC CON -ல் வாங்கிய காமிக்ஸ்களிலேயே இன்னமும் பாக்கி வைத்திருக்கிறேன் :-)

      2014-ன் திட்டமிடலில் இந்த "அயர்ச்சி factor " தலை தூக்கிடாது இருக்க இயன்றதை செய்துள்ளேன் !

      Delete
  30. டியர் சார்,
    உங்கள் உடல்நலக்குறைவையும் பொருட்படுத்தாது எங்களுக்காக சொன்ன நேரத்துக்குள் புத்தகங்களை தவறாது அனுப்பிடவேண்டும் என்ற நோக்கத்துடன் முனைப்பாக செயல்படும் உங்களுக்கு நன்றிகள். உங்களுக்கு இந்த DEMANDING தருணத்தில் ஒரு EXTRA ENERGYயை இறைவன் அருளவேண்டும். எங்களுக்கு இந்த தீபாவளி எங்களுக்கு மிகப்பிடித்தமான நாயகர்களுடன் கொண்டாட போவதால் அன்றைய நாள் ஒரு மறக்கமுடியாத திருநாளாக மலரப்போகிறது.

    அட்டைப்படத்தை டிசைன் செய்யும் நண்பர்களின் கவனத்துக்கு! பின்னட்டையில் ஒரு QR CODE டை இணைத்தால் அது மிகப்பயனுள்ளதாக அமையும். அந்த CODE டில் நமது URL, ADDRESS ,TEL NO ,SUBSCRIPTION DETAILS மேலும் பல சங்கதிகளை இணைக்கலாம். ஒரு ஸ்மார்ட் போன் கையில் இருந்தால் ஒரு சில வினாடிகளில் அந்த புத்தகத்தை பற்றிய வரலாறு மற்றும் பிற சங்கதிகளை QR CODE SCAN மூலம் அறிந்துகொள்ளலாம். இந்த CODE டை GENERATE செய்வதற்கு http://goqr.me/ இந்த தளத்தை அணுகவும்.

    ReplyDelete
    Replies
    1. விஸ்கி-சுஸ்கி : Good suggestion....இந்த Code ஒன்றினை NBS சமயத்தில் விக்ரம் தயாரித்துக் கொடுத்திருந்தான் - but அன்றிருந்த அவசரத்தில் அதற்க்கு அதிக சிந்தனையை ஒதுக்கிட இயலாது போயிற்று !

      Delete
    2. முன்பே ஜூனியர் எடிட்டர் QR-CODE மேல் ஆர்வம் கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது சார்! SAMSUNG/NOKIA/APPLE களிடம் உலகத்தையே பார்க்கும் இன்றைய இளைய தலைமுறையை ஈர்க்க/ அவர்களிடையே INFORMATION கொண்டு சேர்க்க இது ஒரு சிறந்த/சுலபமான வழியாக எனக்கு படுகிறது. தவறாமல் நமது விளம்பரங்களிலும் இதனை இடம்பெற செய்தால் அதன் REACH கூடும்.

      இந்த காலத்தில் யாருக்கு சார் பொறுமை இருக்கு.. நீளமான URL லை TYPE செய்ய??? மொபைல் கேமராவின் கண்களுக்கு இந்த CODE லேசாக சிக்கினாலே அது தீயாக வேலை செய்யும் ஆச்சர்யம் உண்மையில் பெரிய வியப்பு!

      Delete
  31. விஜயன் சார், கடந்த 4 மாதம்களாக நமது காமிக்ஸ் புத்தகம்களின் படம்களை மட்டும் பார்த்து வந்த நான் இந்த மாத 2 புத்தகம்களையும் படித்துவிட்டேன்! XIII கதை வண்ணத்தில் பார்ப்பது மனதில் புதிய துள்ளலை ஏற்படுத்தி உள்ளது என்றால் மிகையில்லை, அருமையான வண்ணகலவை மற்றும் அட்டகாசமான ஓவியும்கள். அடுத்து அடுத்து என்ன என பரபரப்பாக பக்கம்களை புரட்ட செய்த கதை, நம்ப XIII பழைய படி ஏதோ சிக்கலில் மாட்டி அவன நிம்மதி இல்லாமல் அலைய வைக்க போறாங்க இன்னு முதல் 10 பக்கம்களை படிக்கும் போது தோன்றியது இவனுக்காக நான் ஏன் இப்படி வருத்தபடுறேன் என நினைத்ததை மறைக்க விரும்பவில்லை! இவன் நமது வாழ்வில் ஒன்றாகி போன ஒரு மனிதன்! இந்த புதிய அத்தியாயம் பழையதை விட விறுவிறுப்பாக அட்டகாசமாக உள்ளது !

    இது நாள் வரை XIII கலெக்டர் ஸ்பெஷல் வண்ணத்தில் தேவை இல்லை என கூறி வந்த நான் இந்த புத்தகத்தை படித்த பின் கலெக்டர் ஸ்பெஷல் வண்ணத்தில் உடன் தேவை என அன்புடன் கேட்டு கொள்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. Parani sir change his mind.most of our readers will ask the same in near future

      Delete
    2. Parani from Bangalore & Jude roshan BLUTCH : இங்குள்ள நண்பர்களுள் எத்தனை பேர் (புது) இரத்தப் படலத்தைப் படித்து விட்டார்கள் என ஒரு வோட்டெடுப்பு நடத்திப் பார்த்தால் சுவாரஸ்யமான முடிவுகள் கிட்டும் எனத் தோன்றுகிறது !!

      நண்பர் XIII -க்கு இருந்த ஒரு novelty factor இன்று missing என்பது தான் எனது அபிப்ராயம் !

      Delete
    3. //நண்பர் XIII -க்கு இருந்த ஒரு novelty factor இன்று missing என்பது தான் எனது அபிப்ராயம் ! //

      உண்மை உண்மை. என்னால் இன்னுமா? என்ற கேள்வியினை தவிர்க்க முடிய வில்லை. பழைய கதையின் அதே வேகத்தில் நகர்வது அயர்ச்சியை தருகிறது. நாம் லார்கொ, ஷெல்டன் என்று அதிவேகத்தில் போன பிறகு கொஞ்சம் ஸ்லோவாக போவதும் , "மறுபடியும் மொதல்ல இருந்தா ?" என்ற கேள்வியும் அயர்ச்சியை தருகின்றன.

      Delete
    4. //நண்பர் XIII -க்கு இருந்த ஒரு novelty factor இன்று missing என்பது தான் எனது அபிப்ராயம் ! //

      இந்த கருத்து என்னை பொறுத்தவரை டெக்ஸ் வில்லர்ரை தவிர அனைத்து ஹீரோக்களுக்கும் பொருந்தும். லக்கி ,சிக்பில்லில் கூட அன்றிருந்த ஒரு novelty factor இன்று இல்லை./************ ஆனாலும் ரசிப்பதற்கு ஏராளமான விஷ்யங்கள் உண்டு.*********/ பழைய வாசகர்கள் அல்லாது புதிதாக இந்த தொடரை படிப்பவர்களுக்கு, பதினைந்து/இருபது ஆண்டுகளுக்கு முன் நாம் அடைந்த சந்தோச வாசிப்பு அனுபத்தை அவர்களுக்கு இந்த புத்தகம் கொடுக்கும் சாத்தியக்கூறுகள் ஏராளமாக உள்ளன. இன்றைய நிலையில்கூட ஒரு வசீகரம் XIII க்கு EXCLUSIVEவாக உண்டு. நான் முதலில் படித்தது XIII னின் கதையையே!

      இப்போது புதிதாக ஆரம்பித்துள்ள தொடர், ஓவியத்தில் இது வரை நமது புத்தகங்கள் தொடாத ஒரு சிகரத்தை தொட்டுள்ளது. கதை நிச்சயம் நமது மற்ற எந்த தொடருக்கும் சளைத்தது அல்ல. நமது எதிர்ப்பார்ப்பு இந்த கதையில் கூடிக்கொண்டே போவது இந்த அயர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம்.புத்தகத்தின் தரம்/ஆக்கம் எந்த விதத்திலும் மற்றதற்கு சளைத்தது அல்ல.

      நமது நண்பர்களுடைய SO CALLED அயர்ச்சி மொத்தமாக காமிக்ஸ் மேல் அவர்களுக்கு உள்ள அயர்ச்சியை காட்டுவதாக உள்ளது.புத்தகத்தை படித்துவிட்டு விமர்சனம்(POSITIVE /NEGATIVE) செய்வதே அதை நமக்கு வியர்வைசிந்தி படைத்த படைப்பாளர்களுக்கு / பதிப்பகத்தாருக்கு நாம் செய்யும் சிறிய THANKS GIVING. அதை செய்ய முடியாவிட்டால் அமைதியாக இருப்பது சாலச்சிறந்தது.

      புத்தகம் வாங்கிவிட்டேன் ஆனால் படிப்பதற்கு MOOD/TIME இல்லை எனபது போன்ற COMMENTS REALLY REALLY UPSETS MANY! அதற்க்கு அந்த புத்தகத்தை வாங்காமலே இருக்கலாம்.

      இது போன்ற COMMENTS தவறான முடிவுகளுக்கு வழிவகை செய்துவிடுகிறது. ஆசிரியரின் இத CONCLUSION அதை ஒட்டி அமைவதாக நான் கருதுகிறேன். இனி வரப்போகும் மற்ற புதிய XIII பாகங்கள் வெளிவர இது போன்ற CONCLUSION தடையாக இருந்துவிடக்கூடாது எனபதே எனது பயம்.

      Delete
    5. நண்பர் XIII -க்கு இருந்த ஒரு novelty factor இன்று missing என்பது தான் எனது அபிப்ராயம் !

      விஜயன் சாருக்கு வணக்கம்,
      நான் பதிவிற்கு புதியவன். இரத்தபடலம் 20-21 சிறந்த கதை எனது மதிப்பெண் - 90%.

      Delete
    6. I'm not accepting with editor sir and raj muthu kumar.we ll see the response of other readers.

      Delete
    7. // நண்பர் XIIIக்கு இருந்த ஒரு novelty factor இன்று missing //

      இருக்கலாம். அழுத்தமான கதைத் தொடர்கள் பல இப்படியான சிறு தொய்வுடன்தானே ஆரம்பிக்கின்றன?! அடுத்தடுத்த பாகங்கள் வெளிவரும்போது இந்த தொய்வுநிலை நீங்கக்கூடும்.

      XIIIன் புதிய படைப்பாளர்கள் மீண்டும் ஒரு பிரம்மாண்டத்துக்கு அஸ்திவாரம் போட்டிருப்பதற்கான அறிகுறிகள் கதைநெடுக தெரிகின்றன. ஏற்கனவே மாபெரும் வெற்றிபெற்ற ஒரு கதையை  மீண்டும் ஒருபுதிய பாதையில் பயணிக்கச்செய்ய இதன் புதிய படைப்பாளிகள் செய்யவேண்டிய அசாத்திய திட்டமிடலையும், சிந்தனையின் செறிவையும் நினைத்தாலே பிரம்மிப்பாய் இருக்கிறது.

      இத்தொடரிலிருக்கும் இரண்டு பிரச்சனைகளாக நான் நினைப்பது:
      1. அடுத்தடுத்த பாகங்களுக்கான இடைவெளி மாதக்கணக்கிலோ, வருடக்கணக்கிலோ இருந்திடும்போது,  புதிதாய் வெளியானதொரு பாகத்தைப் படித்திட அதன் முந்தைய பாகங்களை சற்றேனும் நினைவுகூர்ந்திட/படித்திட வேண்டியதிருக்கிறது.
      2. XIIIன் இந்த இரண்டாவதுகட்ட தேடல் படலம் ஒரு முடிவுக்கு வர இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க நேருமோ என்று நினைத்தால் தோன்றிடும் ஒரு வகை அயர்ச்சி!

      நான் முன்பே கூறியிருந்ததுபோல, ஈரோடு புத்தகத்திருவிழாவில் தினமும் மிகக் கணிசமான எண்ணிக்கையில் "ஏங்க, இரத்தப்படலம் முழுத் தொகுப்பும் எனக்குத் தேவை. கிடைக்குமா ப்ளீஸ்?" என்ற கேள்வியை சந்திக்க நேரிட்டது. இந்த ஆர்வமும், இந்தத் தேடலும் பல மடங்கு அதிகரித்த காலகட்டமென்பது இரத்தப்படலம்  'கலெக்டர்ஸ் ஸ்பெஷலாக' வெளிவந்த பின்னர்தான் என்பது என் கருத்து! ஒரு முழுத் தொகுப்பாக வெளிவந்த பின்னரே இக்கதையின் வீரியம் எத்தகையதென்பது நம்மில் பலருக்கு புரியவந்திருக்கிறது.

      எனவே, இன்றைய காமிக்ஸ்கூறும் நல்லுலகில் நமது நண்பர்களில் சிலருக்கு இந்த இரண்டாவது இன்னிங்ஸை படித்திட இப்போது ஆர்வமில்லாமல் போயிடினும், சேர்த்துவைத்து மொத்தமாகப் படிக்கும்போது முதல் 18 பாகங்கள் தந்திட்ட பிரம்மிப்பைப் போலவே இதுவும் பிரம்மிக்கச் செய்திடும் என்பது என் உறுதியான நம்பிக்கை!

      Delete
    8. @ சேலம் கே. இளமாறன்

      நல்வரவு நண்பரே! இப்பொழுதாவது இங்கே பின்னூட்டமிட வேண்டுமென்று தோன்றியதே?!! தொடர்ந்து உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்! :)

      Delete
    9. XIII-ன் நமது முந்தைய ஈர்ப்புக்குக் காரணம், நிஜமாகவே XIII-ன் Identityஐத் தெரிந்து கொள்வதில் இருக்கும் ஆர்வம்தான். ஆனால் 21வது பாகத்திலும் XIII-ன் பழைய விஷயங்களுக்கான evidences-ஐ கதாசிரியர் இயன்றவறையில் அழிக்க முயல்வது தெரிகிறது. மேலும் புதிய Action-களுக்கு முக்கியத்துவமும், முன்பிருந்த Emotional touches குறைவதும்கூடத் தெரிகிறது. வரும் பாகங்களில் கதைக்களம் XIII-ன் பிறப்புக்கு முந்தைய காலங்களுக்கு Expand ஆகும்பட்சத்தில் பழைய வாசகர்களுக்கு நிச்சயம் ஆர்வம் குறைந்துவிடும் - ஆனாலும் புதிய வாசகர்களுக்கு OK என்று தோன்றுகிறது.

      Delete
    10. // XIIIக்கு இருந்த ஒரு novelty factor இன்று missing //

      //Erode VIJAY
      இத்தொடரிலிருக்கும் இரண்டு பிரச்சனைகளாக நான் நினைப்பது:
      1. அடுத்தடுத்த பாகங்களுக்கான இடைவெளி மாதக்கணக்கிலோ, வருடக்கணக்கிலோ இருந்திடும்போது, புதிதாய் வெளியானதொரு பாகத்தைப் படித்திட அதன் முந்தைய பாகங்களை சற்றேனும் நினைவுகூர்ந்திட/படித்திட வேண்டியதிருக்கிறது.
      2. XIIIன் இந்த இரண்டாவதுகட்ட தேடல் படலம் ஒரு முடிவுக்கு வர இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க நேருமோ என்று நினைத்தால் தோன்றிடும் ஒரு வகை அயர்ச்சி!//

      ஓட்டு பெட்டியில் மூன்றாவது ஆப்சனை தெரிவு செய்தவன் நான். தங்க முட்டை இடும் வாத்து என்றாலும் கூட, மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தா எப்படி நண்பர்களே...

      நண்பர் ரமேஷ் குமார் சொன்னது போல் இவ்வாறான இன்னொரு நெடும் தேடல் பிளான் செய்தால், முந்தைய எவிடன்ஸ் அனைத்தையும் பொய் ஆக்கிட அல்லது அழித்திட வேண்டும்.

      இன்னொரு பத்து, பதினைந்து வருட காத்திருப்பு எல்லாம் நமக்கு தாங்காது சாமி...

      Delete
  32. Replies
    1. நெடும் தேடல்... என்பது XIIIக்கு மீண்டும் என்னும்போது நிறைய எதிர்வினைகள் வருகின்றன..! ஆனால், நமக்கு போன XIII எவ்வளவு தாமதங்களுடன் வந்தது.."விரைவில்..!" இந்த வார்த்தைகள் நம்மை எத்தனை முறை சோதித்திருக்கின்றன..? ஒரு பாகம் படிக்கும்போது தானாகவே முந்தைய கதை நம் நினைவில் வந்துவிடும்..! அதற்காக நாம் ரொம்பவெல்லாம் சிரமப்பட்டதில்லை..! ஆனால், அப்போதெல்லாம் இல்லாத ஒரு சலிப்பு வரக் காரணம்... ஒன்று - நமக்கெல்லாம் வயதாகிவிட்டது...!ஞாபக சக்தி குறைந்துவிட்டது..! (என்னோடு சண்டைக்கு வருபவர்கள் - கதையை ஞாபகப் படுத்திக்கொள்வது கடினம் என்று சொல்ல முடியாது..!) இரண்டாவது - நமக்குப் பொறுமை போய்விட்டது..! (எதுவாயினும் உடனே... உடனே... முடிவு தெரிய வேண்டுமென்று எண்ணுகிறோம்..! - கருவிலிருக்கும் குழந்தை ஆணா / பெண்ணா என்று அறியும் சோதனை சட்டவிரோதமல்ல... என்று அரசு அறிவித்தால், எத்தனை பேர் அதனைச் செய்யாமல் விட்டுவிடுவீர்கள்..? ) ஏதோ சொல்லணும்னு தோணுச்சு... சொன்னேன்..! அம்பூட்டுதேன்... எனக்கும் லேட் ஆகிறது கஷ்டமாத்தான் இருக்கு... ஆனா, அதுக்காக, தங்க முட்டையிடும் வாத்தை வயிற்றை அறுத்துப் பார்க்க நான் தயாரில்லை..!

      Delete
  33. Sir please make sure that we are receiving the books before diwali..

    ReplyDelete
  34. ஆர்ட் பேப்பரில் இல்லாமல் நார்மல் கலரில் பழைய மினி லயன்
    கதைகளை பில்லர் பேஜ் ஆக 100 (1 ஸ்டோரி) அல்லது 200 (2 ஸ்டோரி)அல்லது 200 (3 ஸ்டோரி) விலை புத்தகளுடன் இணைத்து வெளிஇடலாமே (எ. கா. என் பெயர் லார்கோ + திகில் முதல் இதழ் )
    டெக்ஸ் கதைகளை A4 சீட்டில் வெளிஇட முடியுமா
    *****************எடிட்டர் அவர்களுக்கு அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்***************
    by
    R. Ganesh
    Assistant Prof.,
    Department of Computer Science.
    N.M.S.S.V.N college,
    Madurai.

    ReplyDelete
  35. SMS from Salem TEX Vijayaraghavan
    ---------------------------------------------------
    டியர் சார், உடல் நலம் தேறிட இறைவனை வேண்டுகிறேன்!
    மக்களில் பெரும்பாலானோர்க்கு புத்தாடை, பலகாரங்கள், பட்டாசுகள், அசைவ உணவுகளில்லாமல் 'தீபாவளி' என்பது இல்லை. சிலருக்கு இத்துடன் கொஞ்சம் 'தண்ணி'யும், அன்று ரிலீஸ் ஆகிடும் சினிமாவும்கூட சந்தோஷம் சேர்த்திடும் சங்கதிகளே!
    ஆனால், எங்களுக்கோ 'லயன் தீபாவளி மலர்' வெளிவரும் நாளே 'தலைத் தீபாவளி' போன்றது. டம், டமால், டுமீல், படீர், பட்-படார் உடன் எங்கள் 'தல' டெக்ஸை வரவேற்க உற்சாகத்துடன் காத்திருக்கிறேன்....

    # சேலம் 'டெக்ஸ்' விஜயராகவன்.

    ReplyDelete
    Replies
    1. To : சேலம் 'டெக்ஸ்' விஜயராகவன் through Erode VIJAY : பாவம் சார் மாமனார் ..! இன்னமும் "தலை தீபாவளி" என்று பேச்செடுத்தால் மனுஷன் அரண்டு விடப் போகிறார் !!

      Delete
  36. Dear Editor, புதிய புத்தகங்கள் தீபாவளிக்கு முன்பே எங்களுக்கு கிடைக்க ஆவண செய்வீர்களாக.

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கருத்தை அவ்வளவு சீரியஸாக காதில் போட்டுக்கொள்ளவேண்டாம் எடிட்டர் ஸார்! வாரம், பத்து நாள் லேட்டானும் பரவாயில்லை.

      (என்னா கொலவெறி!! என்று துரத்த வருகிறீர்களா? எப்படியும் டிஸ்கவரி மூலமாக எங்களுக்கு வர ஒரு வாரம் தாமதமாகத்தான் போகிறது. அதெப்படி நீங்கள் மட்டும் புத்தாடை உடுத்திக்கொண்டு, அதை இங்கு வேறு வந்து சொல்லி பீற்றிக்கொண்டிருப்பீர்கள், நாங்கள் மட்டும் பரிதாபமாக அதை பின்னூட்டமாகப் படித்துக்கொண்டிருப்போம். விஸ்கி-சுஸ்கி ஒவ்வொரு பகுதியையும் ரசித்து விளக்கி இன்னும் எரியுற நெருப்பில் எண்ணை ஊற்றுவார். அதான் இந்த கொலவெறி நடவடிக்கை!! ஹிஹி!!)

      Delete
    2. ஆதி தாமிரா : என்னா ஒரு தயாள சிந்தனை !! அடடா..பேஷ் பேஷ் :-)

      Delete
  37. எலிக்கு ATM CARD கிடச்ச மாதிரி ரொம்ப சந்தோஷமா இருக்கு.....

    ReplyDelete
    Replies
    1. உங்க கிட்ட நெறைய எதிர்பார்கிறேன்,மந்திரியரே!(இந்த மாதிரி ஒரு லைன் இல்லாம)

      நீங்க வராமல் போன இந்த காலகட்டத்துல உங்களோட பெங்களூர் பயண பதிவை தேடி பிடித்து படித்து கொண்டு இருந்தேன்,தெரியுமா?

      நல்வரவு ,நண்பரே!

      Delete
    2. தீபாவளி சமயத்தில் PIN Number-ம் கிடைத்துவிடும்!

      Delete
    3. சொல்லி வாய் மூடலை .....வீட்டுல PINண்ணிட்டாங்க .......
      சொல்லி வாய் மூடலை .....வீட்டுல PINண்ணிட்டாங்க .......

      ஏம்பா இந்த கலகலா எப்படி செய்றது......?
      ஏம்பா இந்த கலகலா எப்படி செய்றது......?

      கலகலப்பா காமிக்ஸ் படிச்சுட்டு இருந்தேனா....அப்ப பொலிர்னு ஒரு சப்தம்(இந்த இலக்கணத்து ஒண்ணும் குறைச்சல் கிடயாது....)என்னோட கண்ணத்துல இருந்து தான் இந்த சப்தம் வந்தச்சுனா நீங்க நம்பவா போறீங்க....
      கலகலப்பா காமிக்ஸ் படிச்சுட்டு இருந்தேனா....அப்ப பொலிர்னு ஒரு சப்தம்(இந்த இலக்கணத்து ஒண்ணும் குறைச்சல் கிடயாது....)என்னோட கண்ணத்துல இருந்து தான் இந்த சப்தம் வந்தச்சுனா நீங்க நம்பவா போறீங்க....

      விஜயன் சார் filler pagela கலகலா செய்வது எப்படினு போட்டா பரவாயில்ல...
      விஜயன் சார் filler pagela கலகலா செய்வது எப்படினு போட்டா பரவாயில்ல...

      கொச்சின் கேட்ட என்னை இப்படி பதில் தேட வச்சுடாங்களே.....
      கொச்சின் கேட்ட என்னை இப்படி பதில் தேட வச்சுடாங்களே.....

      Type அடிக்கும் போது ரெண்டு ரெண்டா தெரியது.....
      Type அடிக்கும் போது ரெண்டு ரெண்டா தெரியது.....

      மேல உள்ளது ரெண்டு ரெண்டா தெரிஞ்சா.....உங்களுக்கும் PIN கிடச்சதா அர்த்தம்
      மேல உள்ளது ரெண்டு ரெண்டா தெரிஞ்சா.....உங்களுக்கும் PIN கிடச்சதா அர்த்தம்.......

      ஞஞஞஞஞஞஞஞஞஞஞ......

      Delete
    4. என்ன என்ன சிவா சிவா சார் சார் double ஆ double ஆ தெரியுதா தெரியுதா.....

      Thanks for support
      Thanks for support

      Delete
    5. மேடையில் கவிஞர்கள் எதையுமே இரண்டிரண்டு தடவை வாசிப்பார்களே... அஅப்ப்பபடிடி உஉள்ள்ளளதுது..

      Delete
    6. அடடா.........நீங்களும் வீட்ல மொத்து வாங்கினதால double dobleஆ தெரியுதுனு சொல்லுங்க SAMAALIFICATIONAA....?

      Delete
    7. :P

      நேயர்களே... உங்களுடைய TV volume-ஐ குறைத்தால் அனைவருக்கும் Double Tripple-ஆக கேட்பதைத் தவிர்க்கலாம்....

      Delete
    8. வாய் விட்டு சிரிக்காமல் இப்பிடி cama,full stop போட்டு சிரித்தால் அதுக்கு பேரு கோணங்கித்தனமான சிரிப்பு ....

      Delete
    9. T.V
      T=தாலிகட்டின
      வ=வீட்டுக்காரம்மா னு அர்த்தம் ........
      எங்க இப்ப T .V volume ஐ குறைக்க சொல்லுங்க பாப்போம்................

      Delete
    10. மேல உள்ள கமெண்டுகளை படிக்க கண்டிப்பா 2 D glass தேவை ........(3 D இல்லை )

      Delete
    11. 2 D வாங்க முடியாதவர்களா நீங்கள் ..............ரெண்டு ரெண்டா தெரிகிறதா .....?
      ஒரு கண்ணை மூடிகொண்டு படிக்கவும் ..................

      Delete
  38. குழந்தைகள் சந்தோஷப்படறத பார்த்திருக்கீங்களா? அவங்க ஆசைப்பட்டது கிடைச்சிட்டா அதையே அவங்க உலகமா நினைச்சு சந்தோஷத்துல துள்ளிக்குதிப்பாங்க. எல்லாத்தையும் மறந்த உண்மையான சந்தோஷம் அது!

    இந்த மாதிரியான சந்தோஷங்கள் நாம் வளர்ந்த பிறகு நமக்கு பெரும்பாலும் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதை முழுசா அனுபவிக்க முடியாம வேறு ஏதோ கஷ்டமோ பிரச்சினையோ மனசுல ஓடிக்கிட்டே இருக்கும்.

    சின்னவயசுல சந்தோஷமா கொண்டாடின தீபாவளி திரும்ப வரவே இல்ல! ஆனா ரொம்ப நாளைக்குப்பிறகு இந்த தீபாவளி சந்தோஷமா இருக்கும்னு தோனுது. காரணம் டெக்ஸ்வில்லரோட தீபாவளி இதழ்! அதைக்கையில் வாங்கிப்பார்க்கும்போது ஒரு குழந்தைக்குக்கிடைக்கிற உண்மையான சந்தோஷம் கொஞ்சநேரமாவது எனக்கும் கிடைக்கும்னு நம்பறேன்.

    அப்பப்ப இந்த மாதிரியான சந்தோஷங்களைத்தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ் சார்..!

    ReplyDelete
    Replies
    1. காமிக்ஸ் ரசிகன் (எ) புதுவை செந்தில் : இப்போதெல்லாம் தீபாவளிக்கு பட்டாசுகள் ஒரு பெரிய சமாச்சாரமாய் யாருக்குமே தோன்றுவது இல்லை போல் தெரிகிறதே - நிஜம் தானா ?

      Delete
  39. @ அன்புள்ள விஜயன் அவர்களுக்கு
    // நாளை பகலில் சிப்பாயின் சுவடுகளில் + ஜானி ஸ்பெஷல் இதழ்களின் preview பக்கங்கள் upload செய்வேன் !//

    ப்ரிவிவுகாக காத்திருகின்றோம் ! ரிப்போட்டர் ஜானி ஸ்பெஷல்-ஐ முன்னிட்டாவது இந்த கேள்விக்கான பதில் அளிக்க வேண்டுகிறேன்.

    // இது வரை எமது லயன் , திகில் , முத்துவில் ரிப்போர்ட்டர் ஜானி இன் எத்தனை கதைகள் வந்துள்ளன . இன்னும் வெளியிடாத கதைகள் எத்தனை ? //

    ReplyDelete
    Replies
    1. Siva Subramanian : // இது வரை எமது லயன் , திகில் , முத்துவில் ரிப்போர்ட்டர் ஜானி இன் எத்தனை கதைகள் வந்துள்ளன . இன்னும் வெளியிடாத கதைகள் எத்தனை ? //

      Reporter Johnny - வெளியாகியுள்ளவை 78 ...நாம் தமிழில் வெளியிட்டுள்ளது 22...!

      Delete
  40. I have a doubt if the rathapadalam art work is for real or is it digitally enhanced photo. That afghan hills, helicopter, tractor, facial expressions and accuracy in anatomy makes me feel it might not be hand drawn. Anyone researched abt this? Need explanation editor sir..

    ReplyDelete
    Replies
    1. Yes, I felt the same. Some of the background illustrations of Pakistan, Afghan etc feels like converted from photo to outline and then colored. May be we feel that way because of photorealistic artwork; but for a comics this approach isn't impressive - after certain level.

      Delete
    2. •சார் ஒரம் மடங்கி
      •நடுபக்கம்அழுக்கா இருக்கு
      •நண்பருக்கு புக்கு கலர் நல்லா இருக்கு எனக்கு மட்டும்....நற...நற...
      •எனக்கு ST courier
      •அவருக்கு மட்டும் PROFESSIONAL COURIER
      •ஆறாம் பக்கம் அறுவை
      •ஏழாம் பக்கம் ஏழ்ரை
      இதெல்லாம் கவனிக்கவே எனக்கு நேரம் பத்தலை
      ஓ......இனி இத வேற நான் கவனிக்கணுமா?......
      ஆனாலும் vasan eye care ஆசாமிகள் தான்....
      சிச்சிகினே படிங்க....

      Delete
    3. சூப்பர் விஜய் : Definitely hand drawn ! There are some more series where the art works are mind bogglingly realistic ! Of course digital assistance is a factor - but we are talking about the skill levels of some supremely talented people.

      Delete
    4. இதுவரை கதைகளில் நாம் காணாத ஒரு clear /crisp perfection இந்த தொடர் ஓவியங்களில் காணக்கிடைக்கிறது. உண்மை.attention to details இந்த கதையில் marvelous.ஒவ்வொரு ஓவியத்திலும் கவனிப்பதற்கு ஏராளமான விசயங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

      இதில் கவனிக்கப்படவேண்டிய இன்னொரு விஷயம் இந்த photo perfection ஓவியங்களில் ஒரு artistic ஸ்டைல் மிஸ்ஸிங். இயந்திரத்தனமான அசுர படைப்பிதுவென்றாலும் ஒரு soft artistic soft touch மிஸ்ஸிங்/hiding காக எனக்கு படுகிறது.

      இயல்பாக போட்டோ realism எனபது ஓவியங்களில் ஒரு மிகப்பெரிய achievement என்றாலும் ஒவ்வொரு ஓவியரும் தனக்கென சொந்தமாகக்கொள்ளும் ஒரு exclusive artistic style/touch மட்டுமே நமது ரசிப்புத்திறனுக்கு மேலும் உணர்வு சேர்க்கிறது. இது முதல் புத்தகமாக இருப்பதால் நம்மால் இதை உணரமுடியவில்லை போலும். விரைவில் நாம் அதை கண்டுபிடிக்கலாம். அப்போது ஓவியங்களில் நமது ஆர்வம் இன்னமும் கூடும்.

      Delete
  41. KBT3 போட்டிக்கான என் மொழிபெயர்ப்பு அரைகுறையாய் என் மேஜை மேல் துயில் கொண்டுள்ளன... வரிசையாய் விடுமுறை நாட்கள் வந்திடுனும், பிற அலுவல்கள் என் நேரத்தைச் சாப்பிட்டுவிட ஆரம்பித்த மொழிபெயர்ப்பு நடுவிலேயே நின்றுபோய்... I miss you KBT3!

    ReplyDelete
  42. தீபாவளி ஸ்பெஷல் டெக்ஸ்காக தவம் இருக்கிறோம். தல கொஞ்சம் சீக்கிரமா 2014 சந்தா தொகைய சொல்லிடிங்கன்னா ரெடி செய்ய ஈசியா இருக்கும்!! நியூயிற்கு டெக்ஸ், டயபோலிக் புக்ஸ் கொடுத்தா ரொம்ப சந்தோசம்!!

    ReplyDelete
  43. அப்போப்ப உங்க உடல்நலத்தையும் கவனித்து கொள்ளுங்கள் தல!! நியூ இயர் ஸ்பெஷல் டெக்ஸ் & டையாபோலிக் மறந்துடாதிங்க!! முடிஞ்சா பொங்கல் ஸ்பெஷல் டைகர் கதைய கொடுங்க தல !!

    ReplyDelete
    Replies
    1. balaji ramnath : தீபாவளிக்கு இந்த 450+ பக்க டெக்ஸ் வில்லர் கதைகளைத் தயார் செய்தே நாக்குத் தொங்கிப் போய் விட்டது ; இதில் புத்தாண்டுக்கும் மீண்டும் டெக்ஸ் என்றால் சலித்துப் போய் விடும் ! நிச்சயமாய் இரவுக் கழுகாருக்கும் ; அவரது குதிரைகளுக்கும் (அப்படியே நமக்கும்) ஒரு சின்ன பிரேக் அத்தியாவசியம் !

      Delete
    2. டெக்ஸ்.கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுப்போம்!! அப்போ தல டையபோலிக்கு ஓகே சொல்லிட்டாரு.. Am happy!!

      Delete
  44. // நாளை பகலில் சிப்பாயின் சுவடுகளில் + ஜானி ஸ்பெஷல் இதழ்களின் preview பக்கங்கள் upload செய்வேன் !//உங்களின் மேலதிக பதிவிற்காக காத்துள்ளோம் .

    ReplyDelete
    Replies
    1. Thiruchelvam Prapananth : இன்று காலை 9 மணிக்கு துவங்கிய பவர் shut down - மாலை 7 மணி வரை மின்சாரமில்லா நகராய் சிவகாசியை மாற்றி விட்டது ! So -நாளை பகலில் upload செய்கிறேன் !

      Delete
    2. ரொம்ப நன்றி சார் . மின்வெட்டினை யார்தான் என்ன செய்ய ?

      Delete
  45. எடிட்டர் சார் கிட் ஆர்டின் மற்றும் லக்கி லுக் இதுவரை மொத்தம் எத்தனை கதைகள் வந்து உள்ளன, நீங்கள் எத்தனை கதைகள் வெளி இட்டு உள்ளீர்கள்

    ReplyDelete
    Replies
    1. lion ganesh : Chick Bill வெளியாகியுள்ளவை மொத்தம் 70.. நாம் தமிழில் இது வரை வெளியிட்டுள்ளது (எனது கணக்கு சரியாக இருக்கும் பட்சத்தில்..) 25 !

      Delete
    2. Vijayan Sir & ComiRades,

      Here is the detailed list of All Chick Bill Stories Which were published in Our Publications.

      http://tamilcomicsulagam.blogspot.in/2011/02/chick-bill-wonderful-comics-character.html

      The Latest 2 Books (Never Before Special & Double Thrill Special) which were Published in the Last 2 Years were not added in this list, As this post was done in 2011 :)

      Delete
  46. அன்பு ஆசிரியருக்கு,

    2014 ப்லான்னிங் என்று நீங்கள் எழுதியவுடன் எனது மனதில் தோன்றிய என் மனதில் தோன்றிய சிறு ஆசை அல்லது எதிர்பார்ப்பு அல்லது வேண்டுகோள் என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்,

    அதாவது நமக்கான ரெகுலர் புத்தகங்கள் மட்டும், ஒரு ஒரு மாதமும் 200 பக்கங்கள் கொண்டவையாக பிளான் செய்தால் என்ன??

    இதற்கான வழிவகை அல்லது சாத்தியகூறுகள் எதுவும் உள்ளதா?

    ReplyDelete
  47. சிம்பா : எதுவுமே ஒரு அளவோடு இருக்கும் வரை தான் அழகு ! காமிக்ஸ் ஓவர்டோஸ் ; விண்ணைத் தொடும் சந்தாத் தொகைகள் என நாமே நம்மைக் காலில் சுட்டுக் கொள்ளும் முயற்சிகள் வேண்டாமே ?

    ReplyDelete
    Replies
    1. எடி சார், சந்தா தொகை சற்று யோசிக்க வேண்டிய விசயமே.. நேற்று நமது பழைய ஸ்பெஷல் வெளியீடான Top 10 Special , புத்தகம் மீண்டும் படிக்க எடுத்தேன். அதில் வெளிவந்த லக்கி லூக் கதை போல், கலர் பக்கங்கள் அந்த வகை காகிதத்தில் வெளியிட்டால் என்ன...

      எனக்கு இந்த பேப்பர் விசயத்தில் விஷய ஞானம் 0. நாம் இப்பொழுது பயன்படுத்தும் reflective வகை பேப்பர் இல்லாமல், அந்த பழைய வகை கலர் பக்கங்கள் பயன்படுத்தினால், மதிப்பு மாறுபடுமா?

      Delete
  48. ஆசிரியர்க்கு ..,

    முதலில் உங்கள் உடல் நலத்தையும் மீறி எங்கள் தீபாவளி பரிசுக்காக உங்களின் உழைப்பிற்கு எங்களின் பாசமான நன்றி சார் .

    நீங்கள் "கிராபிக் நாவலுக்காக "என்ன முன்னோட்டம் கொடுத்தாலும் சரி .அது உண்மையாகவே இருந்தாலும் சரி .ஆனால் எங்கள் முதல் பார்வை "டெக்ஸ் இன் குண்டு புத்தகத்திற்கு " தான் என்பதை மறந்து விடாதிர்கள் .

    ReplyDelete
    Replies
    1. //முதல் பார்வை "டெக்ஸ் இன் குண்டு புத்தகத்திற்கு " தான் //
      I AGREE WITH PARANITHARAN ஒத்துகொள்கிறேன்

      Delete
  49. ஆனாலும் ......உங்கள் எண்ணம் போலவே "கிராபிக் நாவலுக்கான "எண்ணம் எனக்கும் ஏற்பட்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் சார் . காத்திருக்கிறேன் .

    ReplyDelete
  50. சார் ...மீண்டும் எனக்கு ஒரு சந்தேகம் .இதற்கு தங்கள் பதிலை ஆவலோடு எதிர் பார்ப்பேன் .

    தாங்கள் "மறு பதிப்பு " புத்தகம் வெளி இடுவதை "திகில் முதல் புத்தகம் ....(மறு பதிப்பு )"போல வெளி இட முடியாதா சார் ..? அதாவது அந்த புத்தகத்தில் ..,அப்பொழுது வந்த விளம்பரம் ,அப்பொழுது வந்த உங்கள் "ஹாட் -லைன் "என அப்படியே வெளி இட்டால் எங்களுக்கு அப்பொழுது காணாமல் போன "பொக்கிஷம் " இப்பொழுது அப்படியே புத்தம் புதிதாய் கிடைக்குமே ..ஆவன செய்வீர்களா சார் .



    ReplyDelete
  51. போனெல்லி நிறுவனத்தின் காமிக்ஸ் போல ஒரு package ஆக வண்ணமயமாக புத்தகங்களை கொடுக்க முயற்சி செய்யலாம். DVD இல்லாவிட்டலும் பரவாயில்லை. CHIP, DIGIT போன்ற பத்திரிக்கைகள் இதுபோல வழங்குகின்றன.

    ReplyDelete
  52. தலைவா ....உடம்பை பாத்துக்க ......

    இந்த தீபாவளிக்கு "காடே " பட்டாசு கிளப்ப போறது உறுதி . அதான் எங்க காவலர் "டெக்ஸ் "வர போறார்ல .

    ReplyDelete
    Replies
    1. கரடியார் பயப்படாம இருந்த சரி..

      Delete
  53. ஸ்கூபிடு, பாப் ஐ போன்ற கார்ட்டுன் தொடர்கள் காமிக்சாக வெளிவருகிறதா? அப்படி வெளியானால் நமது பில்லர் பேஜுக்கு அதை வெளியிடலாமே. கிராபிக் நாவலை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். தீபாவளிக்கு முன்னர் அனுப்பி விடவும்.

    ReplyDelete
  54. வியட்நாம் கதையின் தலைப்பை அறிய விரும்புகிறேன் .
    எப்போது வெளிவரும் ?

    ReplyDelete
  55. ST COURIERன் புண்ணியத்தில் 15 ஆம் தேதி புத்தகங்கள் கிடைக்க பெற்றேன்.( அடுத்த வருடத்தில் இருந்து professional courierல் அனுப்புங்கள்) இரத்தபடலம் - புதிய கதாசிரியர், ஓவியர் கூட்டணி என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. தத்ரூபமான சித்திரங்கள், சட் சட்டென்று மாறும் காட்சிகள், 1- 18ன் சில சம்பவங்களை லாவகமாக இணைத்திருக்கும் விதம் ... அனைத்தும் அருமை. ஆகாயத்தில் அட்டகாசம் - எதிர்பார்த்த அளவில் இல்லை. மேலும் சமகால திரைப்பட வசனங்களை சேர்க்கவேண்டாம். நமது லயனின் தனித்தன்மையை கெடுப்பது போல் இருக்கிறது.

    நீங்கள் கொடுத்த முன்னுரையை படித்த பிறகு.... கிராபிக் நாவலையும் , ஜானி ஸ்பெசலையும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  56. நாம் ஏன் இன்னும் “ தாஜ்மகாலையும் தஞ்சை பெரிய கோயிலையும் இடித்து கட்டாமல் இருக்கிறோம்?

    நாம் ஏன் இன்னும் “ திருக்குறளையும் , புறநானுறையும், சிலப்பதிகாரத்தையும், தேம்பாவணியும் படித்துகொண்டிருக்கிறோம்.?

    நாம் ஏன் இன்றும் தொலைகாட்சியில் “ சபாபதி “ பராசக்தி” போன்ற படங்கள் போட்டால் மற்ற வேலைகளை விட்டு அமர்ந்து பார்க்கிறோம்?.

    ஏனென்றால் நாம் பழைமையை விரும்புகிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய திருக்குறளை படிக்கும் நம்மால் இருபது ஆண்டுக்கு முன்பு எழுதியதை படிக்க முடியாதா?

    தாமதம் ஆனாலும் பரவாயில்லை....... சிக் பில் ஸ்பெசல் அறிவித்தபடி வெளிவரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சுந்தர மூர்த்தி சார் ...இதை தான் பல முறை நானும் வினவுகிறேன் .யாரும் கேட்டா தானே ....

      Delete
  57. மர மண்டை எங்கே ரொம்ப நாளாக காணோம்?............

    ReplyDelete
  58. இரத்தப்படலமெகா இதழில் விடுபட்ட ,நீங்கள் குறிப்பிட்ட டாக்குமென்ட்ரி போன்ற பாகம்13 கதாபாத்திரங்கள் பின்னணி, தொடரில் மர்மமாகவே நிலைக்கும் சம்பவங்கள் பற்றி பக்கம் பக்கமாக பந்திகளும்,சிறு சிறு சித்‌திர கதைகளுமாய் குறிப்பிடப்படுவது மிக வித்தியாசமாக இருப்பதாக பட்சி சொல்கிறது.மொழிபெயர்ப்பு,டைப் பிரச்சினையை சமாளிக்க முடியுமெனில் [மட்டும்] 30ம் ஆண்டு மலரில் XIII பணியை பாராட்டி இணைப்பது குறித்து ஆராயவேண்டுகிறேன்.

    ReplyDelete
  59. சிவசுப்பிரமணியம் /// முடிந்தால் ஒரு மென்மையான காதல் கதையும் இணைந்துகொண்டால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது.
    அருமையான யோசனை. காதல் கதைகள் தமிழ் சினிமா போல் அல்லாமல் கிராபிக் நாவலாக வெளிவந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் ஈரோடு விஜய் என்பதற்கு பதிலாக சிவசுப்பிரமணியம் என்று பதிவிட்டதற்கு

      Delete
    2. அந்தக் காலத்துல நம்ம எடிட்டர் எப்படியெல்லாம் வழிஞ்சிருப்பாருன்னு ( அவர் வசனங்கள் மூலமாக ) தெரிஞ்சுக்கவும் இது ஒரு வாய்ப்பில்லையா? ஹி ஹி! ;)

      Delete
    3. அப்ப பல உண்மைகள் வெளிவரும் என்று நினைக்கிறேன்.

      Delete
  60. இப்பெல்லாம் திரைபடங்களில் அக்கா தங்க்சிக்கு பேன் பாக்குற சீன் இல்லைங்கறதால ''பேன்'' குறஞ்சு போச்சோ இல்ல ''பாசம்'' குறஞ்சு போச்சோ தெரியலை ............ஓநாய் மனிதன் ...ஊடு சூன்யம் தருவதால் உங்க பாசம் குறையலனு தெரியுது.
    இதை பாராட்டி உங்களுக்கு ஒரு lap top வெடி தரலாம்னு ஐடியா.....

    குறிப்பு ; Lap top மடியில் வைத்து வெடிக்க கூடாத வெடி....ஹிஹஈஈஈ

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா! (இப்படி சத்தமா சிரிக்காம ஸ்மைலி மட்டும் போட்டால் மந்திரியாருக்கு கோவம் வந்துடும்னு எனக்குத் தெரியுமே! ) ;)

      Delete
    2. விஜய் சரியான...கேடி ராம்போ–கில்லாடி அர்னால்டு நீங்கள்....அதான் அவரு ரெண்டு smiley போட்டு இருக்கார்ல....

      Delete
  61. சார் .....மறுபதிப்பை "திகில் 1 " போலே அப்படியே வெளி இட முடியாதா ? "

    ம்ஹும் ....வராது ..வராது ..வராது .....

    ஆசிரியர் கிட்ட பதில் வராது ...

    நானும் இங்கே வராம இருக்க முடியாது ...

    ஹையோ ..ஹையோ .....

    சங்க செயலாளர் விஜய் அவர்களே உடனடியாக ஒரு கொயர் நோட் புக் ..,நாலு பேனா சங்க செலவில் வாங்கி அனுப்பவும் .

    பதில் வராம நான் விட போறதில்லை ....

    ReplyDelete
    Replies
    1. சங்க பொருளாளர் காச லவட்டிட்டாராம் அப்புறம் எப்படி வாங்குறது பேனா நோட்டு எல்லாம்

      Delete
    2. என்னது......சங்க பொருளாளர் சுருட்டிட்டு போய்ட்டாரா ...? என்ன கொடுமை இது ..?

      "தலைவர் " இருப்பதே எல்லோருக்கும் மறந்து விட்டதா ?

      ( ஆமா ..நம்ம பொருளாளர் யாரு செயலாளரே ..?ஒரு 10 ரூபாய் கடன் வாங்கி ஆவது அனுப்பவும் )

      Delete
    3. போராட்டக்குழு தலைவர் பரணிதரன் அவர்களே!

      மறுபதிப்பு வேணும்னு கேட்டா அதிலே ஒரு நியாயம் இருக்கு! ஆனா, பழைய ஹாட்-லைன்தான் வேணும்கறது கொஞ்சம்கூட சரியில்லை. பழைய ஹாட்-லைனில் 'மெகா-ட்ரீம் ஸ்பெஷல் பற்றிய அறிவிப்புக்கு நண்பர்களிடமிருந்து ஏகோபித்த ஆதரவு வந்தவண்ணமிருக்கிறது. சிறப்பு இதழ்கள் தவிர, ரெகுலராக வரும் நமது இதழ்கள் அனைத்தும் இனி ஒரே மாதிரியான சைஸிலும், விலை ரூ.10 ஆகவும் இருந்திடும்' - அப்படீன்னு இருந்தா புதுசா படிக்கிறவங்க ஏகத்துக்கும் குழம்பிட மாட்டாங்களா?
      விட்டா, அதே பழைய 'வருகிறது' விளம்பரங்களும், 'தற்போது கைவசமுள்ள பிரதிகள்'உம் கேட்பீங்க போலிருக்கே?!! ;)

      ஒரு கடுதாசிக்காரரை போராட்டக்குழு தலைவரா வச்சுக்கிட்டு நாங்க படும் பாடிருக்கே... ஐயய்யய்யய்ய்யோ... :)

      Delete
  62. சார் விரைவில் பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன் !
    ஒவ்வொரு முறையும் நான் மிக எதிர் பார்ப்பது ஒன்று , பெரிதும் சுவாரஷ்யமின்றி எதிர்பார்ப்பது ஒன்று !
    இந்த முறையும் அப்படிதான் டெக்ஸ்,ஜானியை எதிர்பார்த்தால் , மனதை அள்ளும்ம் சித்திரங்கள், மொழி பெயர்ப்பு என அனைத்து வகையிலும் எதிர்பார்ப்பை எகிற வைத்து விட்டீர்கள் சிப்பாயின் சுவடுகளின் ஒரு பாத சுவட்டை வெளியிட்டு!
    ஆகா தித்திக்கும் தீபாவளி, உண்மைதான் தீபாவளி பட்டாசுகளின் மேல் ஆர்வம் குறைந்து விட்டது, ஆனால் நமது காமிக்ஸ் மேல் இருந்த மோகம் இப்போதும் அன்று போலவே!
    அது போல இப்போதைய பதிமூன்று அனைத்து வகையிலும் அற்புதமே, குறை சொல்ல இயலா வண்ணம் செல்லும் கதை, இங்கே ஒன்றே ஒன்று மாறுகிறது , பரிதாபம் தோன்றுவது குறைகிறது . ஆலன் தம்பதி, ஸ்டீவின் மனைவி , தந்தை என என்ன நடக்கும் என்று தேடினோம் ! இனி தொடரும் கதை அவ்வாறு பயணிக்கலாம் ....இப்போது அதனை மறந்து பயணித்தால் அதற்க்கு சிறிதும் சளைத்ததல்ல இந்த கதை என்பதற்கு ஒரே உதாரணம் புத்தகத்தை முடித்து விட்டுதான் அகன்றேன்!

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதிரி காமிக்ஸ் பத்தி எதுவுமே வரமாட்டேங்குதே நமக்கு.......!ம்ம்ம்....
      ஆச்சர்ய குறிக்கும்...கேள்வி குறிக்கும் கீழே புள்ளி இருந்தாலும்....அதுனால full stop போட முடியலையே.......

      Delete
    2. @ ஸ்டீல்
      // இங்கே ஒன்றே ஒன்று மாறுகிறது; பரிதாபம் தோன்றுவது குறைகிறது //

      சரியாச் சொன்னீங்க ஸ்டீல்! "ஏம்பா பதிமூனனூ... அதான் நீ யாரு, உங்கொப்பன் பேரென்ன, நீ எங்க படிச்ச, ஏன் பதிமூனா மாறுன - இப்படி எல்லாக் கேள்விகளுக்கும் விடைதெரிஞ்சதுக்கப்புறமும் ஏன்யா சைக்யாட்ரிஸ்ட் கிட்டேல்லாம் போய் 'நான் யாரு? நான் யாரு?'னு கேட்டு நின்னுக்கிட்டிருக்க? (அந்த சைக்யாட்ரிஸ்ட் பொண்ணு வேற லேசா உம்மேல ஒரு கண்ணு வைக்குது! மச்சம்யா!)
      பேசாம அந்த கர்னல் ஜோன்ஸ் கருங்குட்டிக்கு ஒரு ஃபோனப் போட்டு வரச்சொல்லி, கடற்கரையில நண்டு பிடிச்சு விளையாடலாமில்ல?" - அப்படீன்னு அந்த XIIIகிட்டே நறுக்குனு நாலு கேள்வி கேட்கணும் போல இருக்கு எனக்கு! கிர்...

      Delete
    3. விஜய் இவை அனைத்தும் பிறர் சொல்லித்தான் தெரியவேண்டும் என்ற பரிதாப நிலை நம் நண்பருக்கு ; ஏன், உங்களது முகத்தை காலையில் கண்ணாடியில் சென்று பார்க்கும் முன்னர் ஒரு சர்ஜரி செய்து மாற்றி இருந்தால் கண்ணாடியை பார்க்கும் போது எப்படி இருக்கும் , அதனை விட ஒரு படி மேலே போய் இது என் முகம்தானா என்று தெரியவில்லையே எனும் அளவில் நினைவுகளை இழந்தால்...... , அவரது நினைவுகள்.....ஏதோ மின்தூண்டல் அது இது என்கிறார்களே அப்படி ஏதும் தூண்டி என் கடந்த காலம் என்ன என பார்க்க துடிக்கிறார் நமது நண்பர்.....ஏன் பல பேர் பழைய புத்தகங்களை தேடுவதும் இது போன்ற இனிய நினைவுகளை மீட்டெடுக்கவே .....நமக்கு கதை நன்றாக , போரடிக்காமல் செல்கிறதா .....அதுதானே தேவை .....உங்களை இந்த புத்தகம் வெகுவாக கவர்ந்துள்ளதே.....புதிதாய் படிப்பதை நினைத்து படித்தாலும் இனிக்கும்.....பழைய கதயுடன் தொடர்பு படுத்தி படித்தாலும் இனிக்கும்.....ஆக மொத்தம் படித்தாலே இனிக்கும்.....நினைத்தாலோ நினைவுகளை வருடி செல்லும் ...

      Delete
  63. விட்டா ..."விரைவில் வருகிறது விளம்பரங்களும் ,கை வசம் உள்ள பிரதிகளும் 'அதுவும் வர வேண்டும் என்பீர்கள் போல உள்ளது .

    அதே ....அதே ....

    அதையும் தான் ....செய லாளரே .....

    ReplyDelete
  64. XIII arputhamana sithirangal. I love Blucoats. Aagayathil attagasam alagana aarambam. Comics moolamaga engalakum ulagam sutra vaippu tharum aasiriyarukku Nantrikal.

    ReplyDelete
  65. Wen can we expect the diwali specials to be dispatched?

    ReplyDelete
  66. 'வாரணம் ஆயிரம்' படத்தில் நடித்த சமீரா ரெட்டியின் ஒரு பாடல் காட்சியைப் பார்த்தபோது, அவளிடம் நம் இளவரசி 'மாடஸ்டி'யின் சாயல் நிறையவே இருப்பதாக உணர்ந்தேன். எனக்கு மட்டும்தான் இப்படித் தோன்றுகிறதோ?....

    ReplyDelete
    Replies
    1. டியர் விஜய் !!!
      நமது இளவரசி மாடஸ்டியின் சாயல் உள்ள ஒரே நடிகை சாண்ட்ரா புல்லாக் (sandra bullock) மட்டுமே என்பது அடியேனின் தாழ்மையான அபிப்ராயம்.(அம்மையாருக்கு வயது 49 என்பது கூடுதல் தகவல்)
      ஞாபக மறதி நண்பர்களுக்கு: speed படத்தில் ஹீரோயினாக வருவாரே(அந்த படத்தில் ரொம்ப ஷோக்காக இருப்பார்.ஹிஹி!!!)அவர்தான்.

      Delete
    2. சாத்தான் ஜி ...............என்னோட சாய்ஸ் ''அன்ஜெலினா ஜூலி'' ..............டக்கர் பிகர், பாட்டு பைட் சூப்பர்......

      Delete
    3. // சாத்தான் ஜி ...............என்னோட சாய்ஸ் ''அன்ஜெலினா ஜூலி'' // +1.
      டூம்ப் ரைடர் - கதாபாத்திரம் மாடஸ்டி-கு பொருந்தும்.

      "கருப்பு முத்து" என்னும் கதையில் (நமது லயன் காமிக்ஸ்-ஆ என்று நினைவில்லை) மாடஸ்டி புத்த பிட்சுகளின் உதவியுடன் குணமடைவார்.
      "டூம்ப் ரைடர் " திரைப்படம் முதல் பாகத்திலும் இது போன்ற காட்சி ஒன்று வரும்.

      Delete
    4. ஆமாம் ஆமாம் ஆமாம் .......ச்சோ ஸ்வீட் ஜூலி

      Delete
  67. சிறு ஊடல் காரணமாக இத்தளத்திற்கு வருவதில்லை என்றாலும், தொடர்ந்து காமிக்ஸ் உலகிற்கு தனது பங்களிப்பைச் செய்துவரும் நமது நண்பர் காமிக் லவர் ராகவன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!

    Happy birthday Raghavanji!! :)

    ReplyDelete
    Replies
    1. நமது நண்பர் காமிக் லவர் ராகவன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

      Delete
  68. Dear vijayan sir,
    Hope you might have completed the 2014 calendar by this time or may be in mostly completed stage. 2013 went off well so far. There may be some mixed reactions when a graphic novel had come, All new special and about manathil mirugam vendum. Also when stories selection had been changed. But we can very well say that 2013 is much much better than 2012, where we started this new style journey. It started with come back special, Larco, New look spl, Double thrill special, Captain Tiger’s Thanga kallarai, Super hero super special in 2012. Except Larco, all other stories are from well known heroes. But in contrast, 2013 is totally a different experience. It started off with Never before special, tex, lucky luke, captain tiger, lucky special. Suddenly got speed up with danger diabolic, graphic novel & all new special, then it become diverted into diff direction by +6 with tex in colour. Now with Blue coats, tex double story & with old classics from captain prince, reporter jonney & chik bill. Based on the above, we can say 2013 had mixed, varieties & surprises to fulfill its comics lovers. But the setback is we are not able to see B&W heroes like Detective robin, Martin. We are all waiting for a great 2014 with much more varieties & in nos also. Numbers means no of books. We are expecting some where around 40 minimum no of books. 50 is also okay for us. But whatever the nos, Lion’s 30th year special is a must with a unforgettable special. For Muthu, it is never before special & for Lion, it should be unforgettable special. You can consider “Unforgettable special” as name for the same.
    Since it is a 30th year, it can contain 30 stories from 30 heroes. As I had already posted my views like this & also suggested that you can pay tribute to the top 5 heroes (Mayaavi, Lawrence & David, Johnny nero, Spider and Archie). It should be a bigger size & It can be of price Rs. 500. Out of which, worth of Rs.300 should be in color with around 320 t0 340 pages. & worth of Rs.200 should be in B&W (we can plan around 540-560 pages in B&W). Totally it will be around 900 pages which is more than jumbo special. The stories can be of mix of old & new. But all stories should be separate & it should not be a continuation of previous one & it should not continue in the subsequent issues (Larco, Wayne Sheldon, Captain tigers chain stories are not preferred. When we read, it should give a complete satisfaction. That satisfaction is not there when we read the Never before special. This unforgettable special should avoid that & it should overcome that. The story selection can be like this:
    1. Mayaavi – in B&W
    2. Lawrence & David – Paniyil oru asuran (new story) in B&W or Kanamal poona kadal
    3. Johnny nero – Bairootil jonney or malai kottai marmam in B&W
    4. Spider – in B&W
    5. Archie – in B&W
    6. Tex – in B&W
    7. Lucky luke – in color
    8. Reporter jonnie - in Color
    9. Chick & bill - in color
    10. Captain prince - in color
    11. Captain tiger - in B&W
    12. Blue coats - in color
    13. Jill Jordan - in color
    14. Comanche - in color
    15. Graphic novel - in B&W/Color
    16. Detective robin – in B&W
    17. Marma manithan Martin – in B&W
    18. Bruno brazil – in B&W
    19. Rib Kirby – in B&W
    20. Secret agent Corrigan - in B&W
    21. Cisco kit - in B&W
    22. Wing commander Jorge - in B&W
    23. Vana ranjer joe - in B&W
    24. CID John master – Sathi valai (can be republished)
    25. Rettai vettaiyargal – again a republishing story
    26. Irrumbukkai Uzhavali Norman - again a republishing story
    27. Agent john steel – in B&W
    28. Mandrake – in B&W
    29. James bond – in B&W
    30. Detective Julian – in B&W
    This list can be modified with missed out heroes. But 30 heroes & 30 stories is a must requirement.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா......30 பேருக்கு வாய்ப்பு .....பெரிய மெத்தை போல இருக்கும் .......வருமா.....??????

      Delete
    2. @ குபேரன்

      சற்றே அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கும் உங்களது ஆசை ஈடேறுமோ இல்லையோ தெரியாது; ஆனால் படிக்கும்போதே உற்சாகம் பீறிடுகிறது!

      ஆழமான காமிக்ஸ் காதலின் அழகான வெளிப்பாடு! :)

      Delete
    3. Kuberan : 'விண்ணுக்குக் குறி வைத்தால் மரத்திலாவது அம்பு பாயும்' என்று கேள்விப் பட்டுள்ளேன்... ஆனால் இது ஈரேழு பிரபஞ்சங்களைத் தாண்டிய குறி பார்த்தலாய் இருப்பது தானே சிக்கலே !!

      ஆண்டுக்கு 40 புக்..50 புக் என்பதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் ஆகுமா சார் ? வாரம் ஒரு இதழ் என்றால் - தயாரிக்கும் அசுரப் பணி ஒருபுறமிருக்க ; சந்தாவோ ; விற்பனையோ விழி பிதுங்கச் செய்து விடாதா ?

      அதே போல் உங்களின் 30 நாயகர்கள் - 30 கதைகள் பட்டியலுக்கு ஈடு கொடுப்பதெனில் இதழின் விலை ரூ.1500 க்கு மேற்பட்டதொரு எண்ணமாக இருக்க வேண்டி இருக்கும் !! இது எத்தனை பேருக்கு affordable ?

      தவிரவும் மாறி வரும் ஒரு உலகின் முச்சந்திப்பில் நாம் இப்போது நிற்கிறோம் ; இன்னமும் மாயாவி ; ஸ்பைடர் ; ஆர்ச்சி & கோ.விற்கு சமர்ப்பணம் என்பதெல்லாம் nostalgia -விற்கு விருந்து படைக்கலாமே தவிர, இன்றைய வாசிப்பு அனுபவங்களுக்கு நீதி செய்யாது ! Let's move on with the times please .....!

      கொஞ்சமாய் பொறுங்கள் சார்...உங்களின் கற்பனை இதழின் விஸ்தீரணத்தில் இல்லாது போனாலும் ஒரு மறக்க இயலா அனுபவத்தை - லயனின் 30-வது ஆண்டுமலர் நிச்சயம் தந்திடத் தவறாது !

      உங்களின் ஆர்வத்துக்கும், உத்வேகத்திற்கும் ; இத்தனை நேரம் எடுத்து உங்களின் சிந்தனைகளைப் பரிமாற எண்ணியமைக்கும் ஒரு லட்சம் நன்றிகள் !

      Delete
    4. // கொஞ்சமாய் பொறுங்கள் சார்...உங்களின் கற்பனை இதழின் விஸ்தீரணத்தில் இல்லாது போனாலும் ஒரு மறக்க இயலா அனுபவத்தை - லயனின் 30-வது ஆண்டுமலர் நிச்சயம் தந்திடத் தவறாது ! //
      அதில் எங்களுக்கு எவ்வித மாற்று கருதும் இல்லை,விஜயன் சார்.

      // உங்களின் ஆர்வத்துக்கும், உத்வேகத்திற்கும் ; இத்தனை நேரம் எடுத்து உங்களின் சிந்தனைகளைப் பரிமாற எண்ணியமைக்கும் ஒரு லட்சம் நன்றிகள் ! //

      ஒரு மறக்க இயலா அனுபவத்தை தந்திட போகும் - லயனின் 30-வது ஆண்டுமலர்-ஐ தந்திடும் உங்களுக்கு தான் எனது ஒரு லட்சம் நன்றிகள் ,சார்

      Delete
    5. என்ன ஸார் செய்வது .........ஒவ்வொவொரு முறையும் இந்த நீர்க்குமிழிகள் பாறையை மோதி உடைக்கத்தான நினைகின்றன.............ஒரு நாள் பாறை நீர்குமிழிக்கு வழி விடாதா என்ன....?


      என்னாச்சு எனக்கு ........நேத்து கிரிகெட் விளையாண்டோம்..........பால் வந்துச்சா .................................அப்புறம் என்ன வந்த பால்ல காபி போட்டு குடுச்சுட்டு திருப்பியும் கிரிகெட் விளையாண்டோம்..................
      என்னாச்சு .........நேத்து கிரிகெட் விளையாண்டோம்..........பால் வந்துச்சா .................................அப்புறம் என்ன வந்த பால்ல காபி போட்டு குடுச்சுட்டு திருப்பியும் கிரிகெட் விளையாண்டோம்..................
      என்னாச்சு .........நேத்து கிரிகெட் விளையாண்டோம்..........பால் வந்துச்சா .................................அப்புறம் என்ன வந்த பால்ல காபி போட்டு குடுச்சுட்டு திருப்பியும் கிரிகெட் விளையாண்டோம்..................

      Delete
    6. // ஒரு மறக்க இயலா அனுபவத்தை லயனின் 30வது ஆண்டுமலர் தந்திடத் தவறாது//

      ஹூர்ரே! அப்படியானால் லயன் 30வது ஆண்டு மலர் மிகப் பிரம்மாண்டமாக வரப்போவது உறுதியாகிடுச்சு! :)
      டெக்ஸ், லக்கி, ஜில்ஜோர்டான், ப்ளுகோட்ஸ், சிக்-பில், ப்ரூனோ-ப்ரேசில், ஒரு சூப்பர் க்ராபிக் நாவல் உள்ளிட்ட ஒரு அட்டகாசமான கதம்பம் காத்திருக்கிறது நமக்கு!!! :)

      Delete
    7. சூப்பர் விஐய்......கனவு மெய்பட வேண்டும்

      Delete
    8. பாதி வண்ணம் , பாதி கறுப்பு வெள்ளை என வியப்புறும் வண்ணம் .....ஆயிரம் விலை என்றால் ஐநூருக்கு கருப்பும் வெளுப்பும்....மீதிக்கு வண்ணமெனவும் இருந்தால் குண்டு புத்தகம் ஒன்றும் மெகா குண்டாய் இன்னொன்றும் என தூள் கிளப்புமே...

      Delete
  69. சார், அப்புறம் அந்த டெக்சின் பக்கங்கள் மிஸ் ஆகுதே......அடுத்த பதிவா ?

    ReplyDelete
    Replies
    1. @ ஸ்டீல் க்ளா! தலைவர் டெக்ஸ் தனியாகவே (தனி பதிவாகவே ) வரட்டும்,நண்பரே!

      Delete
  70. @ குபேரன்
    "Since it is a 30th year, it can contain 30 stories from 30 heroes"
    "The stories can be of mix of old & new. "
    "But all stories should be separate & it should not be a continuation of previous one & it should not continue in the subsequent issues (Larco, Wayne Sheldon, Captain tigers chain stories are not preferred."

    I support your comment totally and in specific the above three comments


    SUPERO SUPER நீங்க சொல்ற மாதிரி புக் ஆறு மாசத்துக்கு ஒன்னு வந்தாலும் OKதான்

    ஆசிரியர் சொல்வது புரிந்தாலும் எனக்கு இந்த புக் atleast கனவில் வர பிரார்த்திக்கிறேன்

    ஆசிரியரே எப்படி புரிந்து கொண்டாலும் சரி - பெற்ற மனது பித்து பிள்ளை மனது கல்லு

    எப்படி இருக்கு என் சொல்லு

    ReplyDelete
  71. Dear Editor,

    Thanks for the great news about 30th anniversary edition. It should be a HUGE one.(MEGA KUNDU PUTHAGAM)

    ReplyDelete