Tuesday, September 03, 2013

மாற்றமே...நீ மாறாயோ ?

நண்பர்களே,

வணக்கம். வியட்நாமின் கானகங்களை எதிர்பார்த்திருக்கும் உங்களுக்கு பர்மாவின் திகைக்கச் செய்யும் வனம் காத்துள்ளது ! யெஸ், நவம்பரில் வரவிருந்த நமது ப்ளூ ஜீன்ஸ் பில்லியனர் - சின்னதாய் ஒரு ஜம்ப் செய்து இம்மாதமே உங்களைச் சந்திக்கத் தயாராகி விட்டார் ! ALL NEW SPECIAL ; தொடர்ந்த மாதத்தில் "மனதில் மிருகம் வேண்டும்" ; அடுத்ததாய் "ஒரு சிப்பாயின் சுவடுகள்" ; அக்டோபரில் "ரத்தப் படலம்" என அட்டவணை அமைந்திடும் பட்சத்தில்  - நமது அதிரடி ரகக் கதைகளின் ரசிகர்களிடையே கொஞ்சமாய் தொய்வு நேர்ந்திடுமே என்ற சலனம் என்னுள் சமீபமாய் எழுந்தது ! ஈரோட்டுப் புத்தகத் திருவிழாவின் போதும் நம் நண்பர்கள் பரவலாய் கிரீன் மேனர் & பிரளயத்தின் பிள்ளைகள் " கதைகளை சிலாகித்து வந்த போதிலும், மௌனமாய் நின்று, சந்தர்ப்பம் அமைந்த போது - 'நடு நடுவே ஆக்ஷன் கதைகளையும் போட மறந்துடாதீங்க சார் !' என சன்னமாய் வேண்டுகோள் விடுத்த அன்பர்களும் இல்லாதில்லை ! கிராபிக் நாவல்களின் வெற்றி நிச்சயம் நம்மை பாதை மாற்றிடப் போவதில்லை என்பதை வார்த்தைகளில் சொல்வதை விட - அழுத்தமாய் ஒரு அதகள சாகசத்தின் மூலம் சொல்வது வலிமையாய் இருக்குமென்று அன்றே மனதுக்குப் பட்டது ! So  ஊருக்குத் திரும்பியதும் செய்த முதற்பணி - லார்கோவின் மொழியாக்கத்தைக் கையில் எடுத்துக் கொண்டதே ! எப்போதுமே பரபரப்புக்குக் குறை வைத்திடாத நமது LW - இந்தப் படலத்தில் எடுப்பதோ ஒரு விஸ்வரூபம் என்பதை - ஆங்கிலத்திலும், இதர மொழிகளிலும் இதனைப் படித்திருக்கக் கூடிய நண்பர்கள் அறிவர்..! புதியவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே - தலைப்புக்கு நூற்றுக்கு நூறு நியாயம் செய்திடும் சாகசம் இது ! 

அட்டைப்படத்தின் பொருட்டு நிறையவே மெனக்கெட்டொம் ! லார்கோவின் ஒரிஜினல் ராப்பர்கள் கதைகளின் அசாத்திய வேகத்தைத் துளியும் வெளிக்காட்டாத விதங்களில் 'தேமே' என்றிருப்பது வழக்கம் ! ஆனால் நமக்கு அந்த பாணி ஒத்து வராதே....! மாலையப்பனின் ஓவியத்தை நிறைய நகாசு வேலைகளோடு தயாரிக்க முனநிதோம் ! பாருங்களேன்...!
ஓவியரின் கைவண்ணம் + கணினியில் பொன்னனின் லாவகம் ! 


தொடரும் இரு டிசைன்களும் நாங்கள் முயற்சித்த அரை டஜனில் ஒரு சில !
செய்திட்ட சில முயற்சிகளின் மாதிரிகள்...!
மூச்சிறைக்கச் செய்யும் துரிதத்தோடு தட தடக்கும் இந்த சாகசத்தில் - லார்கோவின் பல பரிமாணங்களைப் பார்த்திடப் போகிறீர்கள் ! நண்பனுக்காக எதையும் இழக்கத் துணியும் உறுதி ; காதலில் உருகும் இதம் ; மரணத்தை எதிர்நோக்கும் போதும் இழந்திடா மதியூகம் என it's a largo show all the way ! பர்மா பஜாரை அடுத்த முறை நீங்கள் கடக்கும் போது கூட லார்கோவின் நினைப்பு உங்களை வியாபிக்காதிருப்பது சிரமமே என்று சொல்லும் அளவுக்கு புர்மவோடு நாம் ஐக்கியம் ஆகவிருக்கிறோம் ! இதழின் பின்னட்டையில் ஓவியர் + ஆசிரியர் கூட்டணியின் போட்டோக்களை பிரதானமாய் அமைக்க எண்ணியுள்ளேன் - தொடரும் மாதங்களில் ! லார்கோவோடு இம்முறை லக்கி லூக்கின் ஒரு குட்டி சாகசம் வருகின்றது ! "சூரப்புலி ஸோ-ஸோ " நமது ஜூனியர் எடிட்டரின் மொழிபெயர்ப்பு முயற்சிக்கு ஒரு சின்ன பிள்ளையார் சுழி என்பது கொசுறுச் சேதி ! சின்ன சின்ன திருத்தங்கள் ; சேர்க்கைகள் என எனது பேனாவின் ஊடுருவலும் இதனில் உள்ளது - but மையம் விக்ரமின் கைவண்ணம் ! திடுமென லார்கோவின் பணிகள் குறுக்கே புகுந்த காரணத்தினால், +6 வரிசையில் இம்மாதம் வரவிருந்த கார்ட்டூன் அறிமுகம் அக்டோபருக்கு transfer ! அதே போல, வியட்நாம் கிராபிக் நாவலான "ஒரு சிப்பாயின் சுவடுகள்" - நவம்பரில் வருகிறது ! So - நிகழ்ந்திருப்பது schedule-ல்  சின்னதொரு இடமாற்றம் மாத்திரமே !

இம்மாதத்து சக இதழான "CAPTAIN PRINCE ஸ்பெஷல் -1 " பற்றி ஏற்கனவே எழுதி இருந்தேன் ! இதோ அதன் அட்டைப்படங்கள் + ஒரிஜினல்களின் மாதிரிகள் + சில டிசைனிங் முயற்சிகள் ! 
நமது ஓவியர் மாலையப்பன் in action - முன் + பின் அட்டைகளும் ! 

An attempted cover...
எழுத்துகளின் சேர்க்கையைத் தாண்டி இம்முறை கணினியின் பங்களிப்பு அதிகம் கிடையாது ! முழுவதுமே நம் ஓவியரின் தூரிகையின் ஜாலங்கள் ! நமது முந்தைய நாட்களை நினைவு படுத்தும் விதமாய் இவை அமைந்துள்ளது போல் எனக்குத் தோன்றியது ! 'ஒரிஜினலையே பயன்படுத்தி இருக்கலாமே ?' என்ற வினவல்களும் நண்பர்களிடையே நிச்சயம் இருந்திடும் என்பதை அறிவேன் ; ஆனால் நாம் செய்திருப்பது அவற்றை சற்றே மெருகூட்டுவது மாத்திரமே என்பதால் ஒரிஜினல்களின் அழகும் சிதைந்து போய் இராது என்ற நம்பிக்கை எனக்கு ! இதழை நாளைக் காலை பார்த்திடும் போது உங்களின் அபிப்ராயங்களைப் பகிர்ந்திடுங்களேன் ? சந்தாப் பிரதிகள் சகலமும் எப்போதும் போலவே ஒரு மொத்தமாய் இன்று புறப்பட்டு விட்டன  - வெவ்வேறு மார்க்கங்கள் மூலமாய் ! பதிவுத் தபால்கள் நீங்கலாய் பாக்கி அனைத்தும் நாளைய காலை உங்களைத் தேடி வந்திட வேண்டுமென எதிர்பார்க்கிறோம் ! பிரின்ஸ் ஸ்பெஷலில் filler pages ஆக ஒரு குட்டி (புது) திகில் த்ரில்லர் இடம் பிடித்துள்ளது ! ஆர்ட் பேப்பரில் , black & white -ல் வந்துள்ள இந்த மினி கதையை ரசிக்க முடிந்தது எனக்கு ! துவக்க நாட்களது திகில் காமிக்ஸை நினைவூட்டும் விதத்தில் இருந்தததாய் எனக்குத் தோன்றியது ! படித்துப் பார்த்து விட்டு - மறவாமல் உங்கள் அபிப்ராயங்கள் ப்ளீஸ் !

நாளைய தினம் கூரியர் டெலிவரி நண்பர்களுக்கும் சரி ; நமக்கும் சரி - ஒரு பிஸியான தினமாய் அமைந்திடவிருப்பது உறுதி ! As always, fingers crossed !  

245 comments:

  1. வாவ் ... சூப்பர். படித்துவிட்டு வருகிறேன் சார்.

    ReplyDelete
    Replies
    1. மாற்றம் ஒன்றே எப்போதும் நம்மிடையே மாறாத ஒன்று என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இந்த மாற்றம் நான் மட்டுமல்ல, யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். இருந்தாலும் இதை நான் வறவேற்கிறேன். மொத்ததில் இந்த மாதம் ஒரு “அதிரடி ஸ்பெஷல்” மாதம்தான்.

      முன் அட்டை மற்றும் பின் அட்டைகள் சூப்பர் சார் !

      //லார்கோவோடு இம்முறை லக்கி லூக்கின் ஒரு குட்டி சாகசம் வருகின்றது//

      ஆஹா இன்னொரு லட்டா !!! சூப்பர்...

      //ஜூனியர் எடிட்டரின் மொழிபெயர்ப்பு முயற்சிக்கு ஒரு சின்ன பிள்ளையார் சுழி என்பது கொசுறுச் சேதி//

      ஜூனியர் எடிட்டருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !

      Delete
    2. ” மாற்றமே...நீ மாறாயோ ? “

      இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி கொடுப்பதாக இருந்தால், மாறவேண்டாமே !

      //பிரின்ஸ் ஸ்பெஷலில் filler pages ஆக ஒரு குட்டி (புது) திகில் த்ரில்லர் இடம் பிடித்துள்ளது//

      ஆவலுடன் காத்திருக்கிறேன்.

      Delete
  2. சார்..

    கலக்கிடீங்க...

    ReplyDelete
  3. அப்போ இந்த மாதம் எந்தெந்த புத்தகங்கள் வருகின்றன? எப்போது அனுப்பப்படும்?

    அட்டைப்பட designs அவ்வளவாகக் கவரவில்லை

    ReplyDelete
    Replies
    1. மேலேயுள்ள எனது அட்டைப்படம் பற்றிய கருத்து(இதைப் பதிவிடும்போது லார்கோ பற்றிய விவரங்கள் மட்டுமே இருந்தன), லார்கோ புத்தகத்துக்கு மட்டுமே.

      கேப்டன் பிரின்ஸ் அட்டைகள் fine.

      Delete
  4. ஆஹா.. ஆஹா.. லார்கோ கதையை நினைத்தாலே ஆஹா..

    கதையை படிக்க இப்பொழுதே முடியாதா....

    சொக்கா... லார்கோவும் ப்ரின்சுமாம்..

    படிக்க படிக்க...

    ஐயோ.. இப்படி புலம்ப விட்டுட்டாரே..

    ReplyDelete
  5. அட்டகாசம். புத்தகங்கள் அனுப்ப்பட்டு விட்டதா சார்?

    ReplyDelete
  6. சார்.. e-bay லிஸ்டிங் போட்டாச்சா..

    ப்ளீஸ்... சீக்கிரம்.. சார்...

    ReplyDelete
    Replies
    1. இன்னும் e-bay லிஸ்ட்டிங் வரல்ல.. ரமேஷ்..

      சார்.. வேணாம்.. அழுதுருவேன்..

      Delete
    2. இப்போது Ebayல் புத்தகங்கள் வந்துட்டூ... :)

      Delete

    3. போட்டாச்சு.. போட்டாச்சு..

      e-bay லிஸ்டிங் போட்டாச்சு..

      Delete
  7. வந்தாச்சு...! வந்தாச்சு...!

    த டைகர் ஆஃப் மாய்க்கிலிங்க் படிக்க நாங்க ரெடி....

    ReplyDelete
    Replies
    1. ஒரு நிமிஷம் மேல போயிட்டு வர்றதுக்குள்ள 3 பேர் முந்திக்கிட்டாங்களே....
      பரவாயில்ல பத்துக்குள்ள வந்துட்டதால பாதகமில்ல..!

      Delete
    2. Welcome ஜூனியர் எடிட்டர் சார், வழக்கம்போல வந்தாரை வாழ வைக்கிற தமிழகத்துல இருந்தாலும், கொஞ்சம் சரியில்லைன்னாலும் கழுவிக் கழுவி ஊத்திருவாங்க நம்மாளுங்க..! ஆனால், இந்த எச்சரிக்கையெல்லாம் உங்களுக்குத் தேவைப்படாது..! ஏன்னா,

      முதல்வன் படத்துல கடைசியில அர்ஜூன் சொல்ற டயலாக் தான்!!!
      "உங்க 20 வருட அனுபவம் + என்னோட 1 வருட அனுபவம் சேர்த்து 21 வருட அரசியல்வாதி ஆயிட்டேன்"
      அந்த மாதிரி, உங்க அனுபவங்களின் மேல் எங்களுக்கு நிறைய நம்பிக்கை உண்டு..!!!!!!!!!
      அப்புறம்,

      ரொம்ப நாளைக்கப்புறமா ஒரு நண்பனைப் பாக்கப் போகும்போது வரும் ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு...
      பிரின்ஸ், பார்னே & ஜின் ஜோடிக்காக..!

      Delete
  8. அருமை, அட்டகாசமா இருக்கு

    ReplyDelete
  9. ஆஹா!!! இன்ப அதிர்ச்சியுடன், வரவேற்கத் தகுந்த மாற்றத்தை கொடுத்து அசத்தியிருக்கிறீர்கள் சார்! அடுத்தடுத்த சீரியஸ் டைப் கதைகளால் நமது நண்பர்களில் சிலர் சற்றே துவண்டிருந்தது உண்மையே! நிச்சயம் அனைவரையும் உற்சாகத்தில் துள்ள வைத்திடும் மாற்றம் இது! :)

    ஜூனியர் எடிட்டரின் புதிய அத்தியாயம் துவங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது! ('சுட்டி சிங்கத்தின் சிறு வயதில்' தொடரை எப்போ ஆரம்பிக்கறீங்க விக்ரம்?)

    அட்டைப் படம் நேரில் காணும்போது இன்னும் அசத்துமென்று நம்புகிறேன்!

    ReplyDelete
  10. லார்கோ + ப்ரின்ஸ் better combination. அதகளத்தில் கொஞ்சம் கூட குறையே இருக்காதே...!
    ==ஜூனியர் எடிட்டரின் மொழிபெயர்ப்பு முயற்சி==
    பார்க்க ஆவலுடன் உள்ளோம்.

    ==பிரின்ஸ் ஸ்பெஷலில் filler pages ஆக ஒரு குட்டி (புது) திகில் த்ரில்லர் இடம் பிடித்துள்ளது ! ஆர்ட் பேப்பரில் , black & white -ல்==

    SURPRISE...!

    ReplyDelete
  11. attakaasamaana virunthu kathirukku nanbargale enjoy!

    ReplyDelete
  12. பிரின்ஸ் ஸ்பெஷலில் filler pages ஆக ஒரு குட்டி (புது) திகில் த்ரில்லர் இடம் பிடித்துள்ளது !--Ahaa Ahaa Ahaa sooper o Sooper! Thank u Sir!

    ReplyDelete
  13. ஹையா!! லார்கோ கதை முன்னதாகவே! இனிய அதிர்ச்சி தான் விஜயன் சார்.

    ReplyDelete
  14. புதிய கார்ட்டூன் கதை அடுத்த மாதத்திற்கு தள்ளிப்போனது - சிறுவர்களுக்கு இழைக்கப்படும்....

    இல்லை, இல்லை பெரியவர்களுக்கு கிடைத்த முதல் மரியாதை! :P

    ReplyDelete
  15. சார், கேப்டன் பிரின்சின் அட்டை சான்சே இல்லை !தூள் !

    ReplyDelete
  16. டியர் விஜயன் சார்,

    பிரின்ஸ் ஸ்பெஷலில் நமது ஓவியரின் கைவண்ணம் அமர்க்களமாக இருக்கிறது! லார்கோ பின்னட்டை அதகளமாக இருக்கிறது, ஓவியர்களின் அறிமுகம் மற்றும் கதைச் சுருக்கத்தைக் கொண்ட இந்தப் பின்னட்டை பாணி, இனி வரப்போகும் அனைத்து இதழ்களிலும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும். ஜீனியர் எடிட்டர் விக்ரம் அவர்களின் பங்களிப்பு இடம் பெறுவது வரவேற்புக்குரியது!

    ReplyDelete
    Replies
    1. // ஓவியர்களின் அறிமுகம் மற்றும் கதைச் சுருக்கத்தைக் கொண்ட இந்தப் பின்னட்டை பாணி, இனி வரப்போகும் அனைத்து இதழ்களிலும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.//

      ஆமாம் ,சார்.நானும் இதை தொடர வேண்டுகிறேன்

      Delete
    2. // கதைச் சுருக்கத்தைக் கொண்ட இந்த பின்னட்டை பாணி//

      ஆமாம் சார்! இந்த பாணி தொடர்ந்தால் நலம்! குறிப்பாக லேண்ட்மார்க் போன்ற இடங்களிலும், புத்தகத் திருவிழாக்களிலும் இந்தக் 'கதைச் சுருக்கம்' பொதுமக்களுக்கு நிறையவே உதவும்!

      Delete
  17. வாத்யாரே! இத்த தான் வுன்னாண்ட அய்யா கேக்கறது,சும்மா கபால் கபால்னு ஷாக் குடுக்குற பார் வாத்யாரே சூப்பரு.. சரி வாத்யாரே நாளிக்கே லேன்ட் மார்க் ல நம்ம புக் கடிக்குமா வாத்யாரே?

    ReplyDelete
    Replies
    1. ரெண்டுமே கடிக்கும்! பிரின்ஸ் கதையின் முன்னட்டையில் ஒட்டகம் கடிக்கும், பின்னட்டையில் முதலை கடிக்கும்! :D

      Delete
    2. யப்பா மெய்யாலுமே நீ சூப்பரா கடிக்கிரப்பா,இத்த தான் கடி கடி ன்னு சொல்றாங்களா?

      Delete
    3. @ Ramesh kumar

      செம டைமிங்! அட்டகாசம்! :D

      Delete
  18. சார், எனக்கும் தோன்றியது ; எப்படி கேட்பது என நினைத்திருந்தேன் ,தொடர்ந்து மூன்று மாதங்கள் அதிரடி இன்றி, வித்தியாசம் என ஒரு சிறு அலர்ஜி எனக்கும் உருவானது! அதை உணர்ந்து (பிற நண்பர்களால்) இந்த அதிரடி மாற்றத்தை கொண்டு வந்ததற்கு ஆதலால் தாங்களும் அதகளம் செய்தீர்கள்! அருமை ,ளார்கோ வர இரண்டு மாதங்கள் என எண்ணி,எண்ணி கொண்டிருந்தேன்.ளார்கோ வந்தால்தானே நமக்கு தீபாவளி! சூப்பர் சார் இதனை விட பெரிய இன்ப அதிர்ச்சி தங்களால் தர இயலாது! இன்பத்தின் உச்சம்!

    ReplyDelete
    Replies
    1. ளார்கோ அந்த நீல வண்ண அட்டை பிரமாதம் ,பின்னட்டை முதல் அட்டை அட்டகாசம்!

      Delete
  19. // சந்தாப் பிரதிகள் சகலமும் எப்போதும் போலவே ஒரு மொத்தமாய் இன்று புறப்பட்டு விட்டன - வெவ்வேறு மார்க்கங்கள் மூலமாய் ! பதிவுத் தபால்கள் நீங்கலாய் பாக்கி அனைத்தும் நாளைய காலை உங்களைத் தேடி வந்திட வேண்டுமென எதிர்பார்க்கிறோம் ! //
    நான் இன்றே கூரியர் ஆபீஸ்- இல் சொல்லி விட்டேன். எனக்கு கவர் வரும் என்று.!


    பிரின்ஸ் ஸ்பெஷலில் filler pages ஆக ஒரு குட்டி (புது) திகில் த்ரில்லர் இடம் பிடித்துள்ளது ! ஆர்ட் பேப்பரில் , black & white -ல் வந்துள்ள இந்த மினி கதையை ரசிக்க முடிந்தது எனக்கு ! துவக்க நாட்களது திகில் காமிக்ஸை நினைவூட்டும் விதத்தில் இருந்தததாய் எனக்குத் தோன்றியது ! படித்துப் பார்த்து விட்டு - மறவாமல் உங்கள் அபிப்ராயங்கள் ப்ளீஸ் !// திகில் காமிக்ஸ்-ஐ தவற விட்ட எனக்கு போனஸ் சந்தோசம்,விஜயன் சார்.

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் திகில் அருமை!திக் திக் என இதயம் நாளை பொழுதின் மயக்கத்திலே

      Delete
  20. எடிட்டர் சார்,சில வாரங்களாய் களைஇழந்துகிடந்த இத்தளம் உங்கள் அறிவிப்பால் BOOST குடித்த குழந்தை போல் குதுகாலமாய் உள்ளது இது போல் மாற்றங்கள் எங்களுக்கு அடிக்கடி தேவைப்படும்,

    ReplyDelete
  21. ஜூனியர் எடிட்டருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! குட்டோ,பாராட்டோ தயக்கமின்றி வரும்! தயாராக இருங்கள் விக்ரம்!

    ReplyDelete
  22. Dear Editor,

    Is is possible to DHL both the books to Muscat ASAP? Hope i have enough funds in my account.

    Regards,

    Aldrin from Muscat

    ReplyDelete
  23. எடிட்டர் சார்,சில வாரங்களாய் களைஇழந்துகிடந்த இத்தளம் உங்கள் அறிவிப்பால் BOOST குடித்த குழந்தை போல் குதுகாலமாய் உள்ளது இது போல் மாற்றங்கள் எங்களுக்கு அடிக்கடி தேவைப்படும்,

    ReplyDelete
  24. ENNATHU....

    LARGOVA.....

    SUPER...SUPER...SUPER...

    ATTAKAASAM...ATTAKAASAM...ATTAKAASAM...

    AMARKALAM...AMARKALAM....AMARKALAM....

    Ungalai appadiya kattipidikanum pola irukku sir....

    Iyyo...Sokkaa...book eppo kaiku kidaikum....

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் உங்களை போன்ற நண்பர்களின் காரணமாய் .....ஆகவே தங்களுக்கும் நன்றி நன்றி நன்றி

      Delete
  25. ப்ரின்சுடன் திகில் அருமை, நாளை எப்போதடா வரும் என எங்க வைத்து விட்டீர்கள்! ப்ரின்சை நினைத்து காத்திருந்தால் பிசினஸ் கிங்கையும்,அதிரடி கிங்கையும் கைகோர்த்து அனுப்பி உள்ளீர்கள்! எத்துணை கோடி இன்பம் வைத்துள்ளாய் இறைவா என கூத்தாடுகிறது மனது! நாளை கொரியர்காரர்களுக்கு திண்டாட்டம்தான் நமது கொண்டாட்டத்தால்!

    ReplyDelete
  26. இந்த மாதம் அதிரடிதான்!

    முன்னட்டையை பார்டர் டிசைன்கள் போட்டு சிறிதாக்குவதை விட முழுமையாக ஓவியத்தால் நிரப்புவதே (கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல்போல) நன்றாக இருக்கும். லார்கோவில் உங்களுக்கு அப்படி என்ன கோபம்?

    ReplyDelete
  27. ப்ரின்சுடன் திகில் அருமை, நாளை எப்போதடா வரும் என எங்க வைத்து விட்டீர்கள்! ப்ரின்சை நினைத்து காத்திருந்தால் பிசினஸ் கிங்கையும்,அதிரடி கிங்கையும் கைகோர்த்து அனுப்பி உள்ளீர்கள்! எத்துணை கோடி இன்பம் வைத்துள்ளாய் இறைவா என கூத்தாடுகிறது மனது! நாளை கொரியர்காரர்களுக்கு திண்டாட்டம்தான் நமது கொண்டாட்டத்தால்!

    ReplyDelete
  28. பிரின்ஸ் கதைகள் படித்ததில்லை ,நான்.மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றேன்.

    இரு கதைகளின் அட்டைப்படங்களும் சூப்பர்.
    // முழுவதுமே நம் ஓவியரின் தூரிகையின் ஜாலங்கள் ! நமது முந்தைய நாட்களை நினைவு படுத்தும் விதமாய் இவை அமைந்துள்ளது போல் எனக்குத் தோன்றியது ! //

    எனக்கு இவை மிகவும் பிடித்து இருக்கின்றது. ஓவியர்களுக்கு என் வாழ்த்துக்கள்,சார்.

    ReplyDelete
    Replies
    1. இன்னொரு லார்கோ,சைமன் என வைத்து கொள்ளுங்கள் நண்பரே! நான்கு பேர் அல்ல ,ஒரு சிறுவனும் சேர்த்து ஐந்து என அதகளம் புரிய போகிறார்கள்!

      Delete
    2. நன்றி நண்பரே! எனவே இந்த மாதம் அதிரடி அதகள மாதமாக இருக்க போகிறது.

      Delete
  29. செய்யறதெல்லாம் செஞ்சுட்டு "மாற்றமே...நீ மாறாயோ ? " ன்னு மாற்றத்தின் மேலயே ஒரு பழி! நியாயமா இது ??

    ஜோக்ஸ் அபார்ட்...நல்ல முடிவு! இது போல தொடர் கதைகளுக்கு அதிகம கேப் விடறது சில சமய சுவராஸ்யத்தை குறைச்சிடும்.

    பிரின்ஸ் அட்ட அமர்க்களம் வந்திருக்கு ! நீங்க கொடுத்திருக்கற அட்டைப்பட சாய்ஸ் ல உங்க selection தான் நல்ல இருக்கு சார்!

    வாங்க லார்கோ சார்! கடசியா துரத்தும் தலைவிதியில பாத்தது.ஒரே சோக மயமா bye சொன்னதா நியாபகம்! : (

    அட்டைப்படம் அருமைய வந்திருக்கு. திரு பொன்னன் சாரோட மெருகு கூடிகிட்டே வருது! ரெண்டு அட்டையுமே அருமை!

    சிப்பாயின் சுவடுகளுக்கு நவம்பர் வரை காத்திருக்கனுமா??

    நாளை சந்திப்போம் !

    ReplyDelete
    Replies
    1. துரத்தும் தலை விதி சோகம் அல்ல நண்பா ! அது அதற்க்கு முந்திய கதை!

      Delete
    2. சுறாவோடு சடுகுடு - தான் சோகமான போஸ்!

      "விதியோடு விளையாடுவேன்" ப்ளைட்டை வெடிக்க வைக்கும் காட்சி. அனைவரும் அதிர அமைதியாக லார்கோ நிற்பார். இரண்டுமே எனக்கு பிடித்தவை.

      Delete
  30. நன்றி கிபுகு விஜய்!

    ReplyDelete
    Replies
    1. வி-சு:

      // கிபுகு விஜய் //

      கிபூகு விஜய்-னு வரணும்; ஆனா எப்படி உச்சரிச்சாலும் என்னமோ கெட்டவார்த்தை மாதிரியே இருப்பதால் 'கி.பூ.கு' அடைமொழியை இக்கணம் முதல் கைவிடுகிறேன். :)

      Delete
    2. ஹா.. ஹா....

      அடைமொழியை விட்டு வந்த அண்ணன் 'ஈரோடு விஜய்'...

      வாழ்க.. வாழ்க..

      தன்மான தங்கம் அண்ணன் 'ஈரோடு விஜய்'...

      வாழ்க.. வாழ்க..

      Delete
    3. //ஹம்ம்...//

      (With Sivaji's accent):
      பூனைக்குட்டிக்கு பயம் வந்துடுத்து... பாய்ந்து ஓடிடுத்தூ...

      Delete
    4. @ஈரோடு விஜய்:
      "கிறுக்கும் பூனைக் குட்டி ஈரோடு விஜய்" என்ற முழுநீள அடைமொழிப் பெயரை விட, "விஜய்" என்ற பெயரே சிக்கென்று சூப்பராக இருக்கிறது விஜய்! :) எல்லாம் "சுட்டி லக்கி" ஸ்டைல் செவ்விந்தியப் பெயர்களால் வந்த வினை! :D

      Delete
    5. @ கார்த்திக்

      // "விஜய்" என்ற பெயரே //
      நன்றி கார்த்திக்! :)
      ஆரம்பத்திலிருந்தே எனக்கு பல அடைமொழிகளை அடை அடையாக வைத்து அழகு பார்த்ததே நீங்கள்தானேசிச கார்த்திக்?;)
      // சிக்கென்று சூப்பராக இருக்கிறது //

      எனக்கு அந்த 'கமான்சே' பெண் ஞாபகம் வந்துடுச்சு, ஹம்... ;)

      Delete
    6. @ Muthu kumaran

      சொல்லிக் குடுத்தபடியே சரியாச் சொல்லீட்டிங்க; ஆனால் 'அஞ்சா நெஞ்சன் ஈரோடு விஜய்'யை விட்டுட்டீங்களே? அதானால பேமன்ட் கிடையாது இந்தமுறை! :)

      Delete
    7. உங்க அன்பும் நட்பும் தான் payment... விஜய்..

      அத நான் வாங்காம விடமாட்டேன்...

      நண்பரே..

      Delete
    8. அன்பும், நட்பும் நிறையவே ஸ்டாக் வச்சிருக்கேன் நண்பரே! ஈரோடுக்கு நீங்க வந்தால் இவைகளோடு சூடாக ஒரு கப் காபியும் தருகிறேன்! :)

      Delete
    9. கண்டிப்பாக..

      விரைவில் சந்திப்போம்...

      Delete
  31. ளார்கோ முன்னாள் அந்த புதிய ஹீரோ மேலிருந்த ஆர்வம் அப்படி பல அடிகள் தள்ளி பொய் விட்டது சார்! அடுத்த மாதம் காத்திருக்கிறோம்!

    ReplyDelete
  32. சென்ற முறை லார்கோவுக்கு இணையாக கலக்கிய சைமன் இம்முறையும் அதகளம் செய்வார் என எதிர்பார்கின்றேன்.

    ReplyDelete
  33. நூறு ரூபாய் செலவில் பர்மா செல்லவிருக்கிறோம் நண்பர் சைமனுடன்! அருமை !

    ReplyDelete
  34. //எழுத்துகளின் சேர்க்கையைத் தாண்டி இம்முறை கணினியின் பங்களிப்பு அதிகம் கிடையாது ! முழுவதுமே நம் ஓவியரின் தூரிகையின் ஜாலங்கள் ! நமது முந்தைய நாட்களை நினைவு படுத்தும் விதமாய் இவை அமைந்துள்ளது போல் எனக்குத் தோன்றியது ! //
    சார் மாலையப்பன் அவர்களுக்கு முதற்கண் எனது நன்றிகளை தெரிவியுங்கள்! கலக்கி விட்டார் கலக்கி வண்ணங்களின் சேர்க்கையால் !

    ReplyDelete
  35. இம்மாத இதழ்களுக்கு "எடிடர் ஸ்பெஷல்"என்று பெயர் வைத்திருக்கலாம்...ஸ்பெஷல் மாற்றங்கள் மூலம் இம்மாதத்தை உண்மையிலேயே ஸ்பெஷல் ஆக்கிவிட்டீர்கள் நன்றி...

    ReplyDelete
  36. Nalla matrangal marave vendam sir. Surprice. Oviyangal anaithume migavum arumaiyaga ullathu. Paraparappana valkaiyin pakkangalai alagakkum ungalukku nanrigal..

    ReplyDelete
  37. உற்சாகமூட்டும் பதிவு. அதிரடியாக மாற்றம் செய்ததற்காக பாராட்டுக்கள் ஆசிரியரே! விக்ரம் தடகளத்தில் இறங்கிவிட்டார்! அவருக்கு இனிய வரவேற்புகள்!//லார்கோவோடு இம்முறை லக்கி லூக்கின் ஒரு குட்டி சாகசம் வருகின்றது ! "சூரப்புலி ஸோ-ஸோ " நமது "ஜூனியர் எடிட்டரின்" மொழிபெயர்ப்பு முயற்சிக்கு ஒரு சின்ன பிள்ளையார் சுழி என்பது கொசுறுச் சேதி !//

    ReplyDelete
  38. உண்மையிலேயே வரவேற்கத்தக்க எதிர்பார்க்காத மாற்றம்!

    ReplyDelete
  39. போட்டாச்சு.. போட்டாச்சு..

    e-bay லிஸ்டிங் போட்டாச்சு..

    ReplyDelete
  40. வாவ் இது உண்மையிலே ஸ்பெஷல் தான். பிரின்ஸுடன் கைகோர்த்து வரும் லார்கோ இது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தான், இம்மாதம் இரண்டு அதிரடி நாயகர்களின் அதகளத்தை காண(படிக்க0 ஆவலுடன் காத்துள்ளோம்...

    ReplyDelete
  41. Largo winch wrapperல் 3 வதாக இடம்பிடித்துள்ள அட்டைபடம் பிரமாதம்! முயற்சித்த மாலையப்பன் அவர்களுக்கும் designer பொன்னன் அவர்களுக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  42. மிக சமயோஜிதமான மற்றும் சரியான முடிவு.
    கண்டிப்பாக நமக்கு இப்பொழுது ஒரு கமர்சியல் கதை தேவை.

    நவம்பரில் ஏற்கனவே டெக்ஸ்சின் சரவெடி உள்ளதால் அத்துடன் சிப்பாயின் சுவடுகள் வந்தால் பெரிய பாதிப்பு இருக்காது.

    //ல், +6 வரிசையில் இம்மாதம் வரவிருந்த கார்ட்டூன் அறிமுகம் அக்டோபருக்கு transfer ! அதே போல, வியட்நாம் கிராபிக் நாவலான "ஒரு சிப்பாயின் சுவடுகள்" - நவம்பரில் வருகிறது ! So - நிகழ்ந்திருப்பது schedule-ல் சின்னதொரு இடமாற்றம் மாத்திரமே !//

    போன பதிவில்

    //அக்டோபரில் இரத்தப் படலம் + பிளஸ் 6 வரிசையின் (புது) கார்டூன் அறிமுகம் ! நவம்பர் & டிசெம்பரில் தலா 3 இதழ்கள் ! (ஒரு லயன் / முத்து இதழ் ; ஒரு மறுபதிப்பு மற்றும் +6 வரிசைகளின் இவ்வாண்டுக்கான இறுதி 2 இதழ்கள் ) //

    அப்போ அடுத்த மாதம் 3 கதைகள் சரியா சார்?

    நாளைய தினத்துக்காக ஆவலுடன்...:)

    ReplyDelete
  43. என் மனதில் சின்னதாக ஒரு நெருடல் இருந்தது , இன்று அது நிஜமாகி விட்டது... ஆனாலும் லார்கோ கதையினை நிச்சயம் எதிர்பார்கவில்லை.... இக்கதையினை ஆங்கிலத்தில் படிக்கும் பொழுதே அவ்வளவு அருமையாக இருந்தது. இப்பொழுது தமிழில் , சொல்லவே வேண்டாம் , எங்க தல பிரின்ஸ் கூட வருகிறார்.... இந்த மாதம் கண்டிப்பாக ஒரு மாஸ் ஹிட் ஆக்சன் மாதமாக கண்டிப்பாக அமைந்திடுவது உறுதி...

    விக்ரம் அவர்களுக்கு நல்வரவு... அவருடைய பங்களிப்பு நமது வெளியீடுகளில் சிறிது சிறிதாகவேணும் அமைந்திட வேண்டும் என்ற எனது (தனிப்பட்ட) எதிர்பார்ப்பு நிஜமாகிடுவதில் மிக்க மகிழ்ச்சி.

    On largo the blue design is excellent... :)

    ReplyDelete
  44. // பிரின்ஸ் ஸ்பெஷலில் filler pages ஆக ஒரு குட்டி (புது) திகில் த்ரில்லர் இடம் பிடித்துள்ளது //

    ஆஹா - திகில் ரசிகர்கள் இதை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றோம்

    ReplyDelete
  45. ada adaaa..i thought night message will come...83rd....:)

    ReplyDelete
  46. thaaanggaaa mudiyaalllaaa.. thangaaa mudiyalaaa..superoo super....

    ReplyDelete
  47. nijam thanaa ithuu....spetember masam sirappu masama amainchuduchuu...

    ReplyDelete
  48. நம்பினால் நம்புங்கள், நேற்றுதான் NBS உடன் வந்த 16 பக்க கதை முன்னோட்டம் படிக்கும் பொழுது - இந்த Largo கதை சீக்கரம் வந்தால் நல்ல இருக்கும் என்று நினைத்தேன்.

    ReplyDelete
    Replies
    1. @ V Karthikeyan

      'லயன் 30வது ஆண்டு மலர்' சிறப்பிதழும் அடுத்த மாசமே கிடைச்சா நல்லாயிருக்கும்ணு நினையுங்களேன், ப்ளீஸ்?! ;)

      Delete
    2. @Erode Vijay (previously கிறுக்கும் பூனையார்)

      அதெல்லாம் தானா தோணனும் :)

      Delete
  49. எடிட்டர் சார்,

    வழக்கத்தை விடவே பெண்டு கழற்றிடும் பணியான லார்கோ கதையின் மொழிபெயர்ப்புடன் ஒரு முழுப்புத்தக வடிவத்திற்கு கொண்டு வந்திட நிறையவே மெனக்கெடும் விசயங்களும் இருந்திடும்போது, ஈரோடு புத்தகத் திருவிழாவிற்குப் பிறகான மிகக்குறுகிய (சுமார் 15) நாட்களில் இந்த 'மாற்றத்தை' செயல்படுத்தி குறித்த நேரத்திற்குள் முடித்தும் காட்டிய இந்த அசாத்திய தைரியத்தை எங்கிருந்து கிடைக்கப் பெற்றீர்கள்?!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. Unga photo rompa close up la eduthittinga Poonaiyaare.. Sorry Erode vijayare!

      Delete
    2. @Sarathi T.P பூனையின் கண்கள் உற்று நோக்குவது நம்மையல்ல, முகத்துக்கு நேரே மீன் கூட்டம் இருக்கிறது பாருங்கள்!

      Delete
    3. சாரதிகிட்ட சரியாச் சொன்னீங்க, ரமேஸ்குமார்! நோக்கு வர்மத்தாலே தாக்கி அந்த குட்டி மீன்களை சிதைச்சுகிட்டிருக்கேன். ஏக பசி எனக்கு! ;)

      Delete
  50. சந்தோசம் பொங்குதே...சந்தோசம் பொங்குதே.....ஆசிரியர் tuesday பாருங்கன்னு சொன்னதும் திக் குனு ஆயுடுச்சு...ஒரு கதை குறைஞ்சுடுமொன்னுட்ட்டு...ஆனால் black & white extrava போட்டு சந்தோசத்த பல மடங்கு கூட்டிட்டாரு..சொக்கா...அந்த ST courier ஒழுங்கா கொடுக்கணுமே நாளைக்கு...

    ReplyDelete
  51. சூப்பர் விஜயன் சார் ... சூப்பர் ஸ்டார்! லார்கோ வின்ச் ஸ்பெஷல் .. எனக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தான் சார் நன்றி .. நன்றி .. நன்றி .. நன்றி ..

    ReplyDelete
  52. இந்த மாதிரி சந்தோச செய்திகளால் ....காதல் செய்வீர்கள்.. நமது comics களை

    ReplyDelete
  53. நன்றி!! இந்த மாதிரி இன்ப அதிர்ச்சிகள் வரவேற்க்கப்படுகின்றன . முதல் வேலையாய் ebayல் ஆர்டர் செய்தாயிற்று.

    ReplyDelete
  54. ட்ரைலர் :

    நண்பர்களே, இங்கு ட்ரைலர் என்பது ஆசிரியரின் இந்த பதிவையே குறிக்கிறது. திடுதிடுப்பென, இதோ உங்களை இந்த மாதமே லார்கோ சந்திக்க வருகிறார் அதுவும் நாளை காலை 10 மணிக்குள் என்ற அதிரடியை படித்தவுடன் நம்மில் ஆடிப்போகாதவர் யாருமே இங்கு இருந்திருக்க முடியாது. ஆதலினால் அதகளம் செய்வீர் என்ற தலைப்பின் பெயர் வசியமே எடிட்டர் விஜயன் அவர்களின், இந்த யாருமே எதிர்பாராத அதிரடிக்கு காரணமாக இருக்க முடியுமேயன்றி, அவரை அவ்வாறு ஆட்க்கொண்ட சக்தி வேறு என்னவாக இருக்க முடியும் ?!

    இப்படிப்பட்ட சஸ்பென்ஸ் ஒன்றை வெளியிட்டு எங்களை, காமிக்ஸ் வாசகர்களை திக்குமுக்காட செய்த எமது எடிட்டர் விஜயன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ! இதுபோன்ற கிடைப்பதற்கரிய சந்தர்ப்பத்தின் பயனை வாசகர்களாகிய நாங்களும், அதை செயலாக்கிய நீங்களும் அனுபவிக்க வேண்டிய காலத்தை வெறும் 12 மணிநேரமாக சுருக்கிவிட்டது ஏனோ ?

    இந்த பதிவை நீங்கள் இரண்டு நாட்களுக்கு முன்பாக, அதாவது 1.9.13 அன்று பதிவிட்டிருந்தால் What if என்ற முறையில் யோசித்து தான் பாருங்களேன் ? வசந்த காலம் கூட கூட வானம்பாடிகளின் கீதம் அதிகமாகும் என்பதை ஏன் தான் மறுத்து (மறந்து) விட்டீர்கள் என்றே தெரியவில்லை !?

    ReplyDelete
  55. எடிட்டர் விஜயன் :

    தங்களின் தமையன் ஜூனியர் எடிட்டர் விஜய விக்ரமன் அவர்களின் மொழிபெயர்ப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தங்களின் தங்கு தடையற்ற அறிவிப்பை, அவரின் மொழிபெயர்ப்பு திறமைக்கு நீங்கள் அளித்துள்ள சான்றாகவே எடுத்துக்கொள்கிறேன். இன்றைய வண்ணம் நாளைய ஓவியம் என்ற கோட்பாட்டின்படியும், சூரப்புலி ஸோ-ஸோ என்ற தலைப்பே பேர்சொல்லும்படி அமைந்துள்ளதாலும் விக்ரமன் அவர்களை பாராட்டி வரவேற்கிறேன் !

    அதுமட்டுமல்ல , கூடிய விரைவில் இந்த வலைத்தளத்தின் பொறுப்பை, நீங்கள் வெளிநாடு செல்லும்போது நிர்வகிக்கப்போகும் ஜூனியர் எடிட்டர் விஜய விக்கரமன் அவர்களுக்கு என்போன்ற காமிக்ஸ் வாசகர்களின் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் ! தொடரும் வெற்றிகள் உங்கள் அனைவருக்கும் என்றும் மகிழ்ச்சியை தருவதாக அமையட்டும் !

    ReplyDelete
  56. வாவ் !!!

    இன்ப அதிர்ச்சி சார்!

    ReplyDelete
  57. சார்,
    இரண்டு அட்டைப்படங்களுமே அட்டகாசம்! இந்த வருடத்தின் பெஸ்ட் காம்போ இதழ்கள் இவையென்றால் மிகையல்ல! என் அபிமான பிரின்ஸ் வண்ணத்தில் கலக்கயிருப்பதும், இதுவரை செய்ந்ததெல்லாம் அதகளமல்ல இப்போது செய்யவிருப்பதே அதகளமென வரும் லார்கோ ஆகட்டும், மொத்தத்தில் ஒரு முழுமையான, நிறைவான இதழ்களாக அமையபோவது உறுதி.

    ReplyDelete
  58. அனைத்து அட்டை பட வடிவமைப்பும் சரி வண்ணங்களும் சரி அருமையாக உள்ளது."அதகளம்" என்ன ஒரு அற்புதமான வார்த்தை.இரண்டு கதைமே அட்டகாசமான ஹீரொகளின் கதைகள் என்பது படுஉட்சாகம் தரும் செய்தி.ஜூனியருக்கு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  59. Exciting...! Amazing....! Enchanting and enhanced cover artworks...! Hats off to dear Malaiyappan Iyya!
    Wonderful art direction from creative head Vijayan Sir! Prince and Barne going to steal the fame for the year...
    I am really feeling good like the return of our favorite thigil comics.
    As per the Largo covers it is 100 times better than the previous covers... (except the never before special) and the original too... be careful Sir, as the publisher of Largo winch might possibly envy at you.... thanks for all your efforts... I am very happy as well as curious to see my favorite hero Prince.

    Dear vikram,
    You are cordially welcome to the stage... hope you enjoyed being part of making of our comics...

    ReplyDelete
  60. டியர் எடிட்டர் ,
    தங்களின் அதிரடி பதிவினை பார்த்து சந்தோசத்தில் துள்ளி குதித்தபடி உள்ளேன் . லார்கோவின் "ஆதலால் அதகளம் செய்வீர் "+ நமது பிரின்ஸ் குழுவினரின் ஸ்பெஷல் இரு கதைகள் + நமது ஜூனியர் எடிட்டர் இன் மொழிபெயர்ப்பில் ஒரு கதை + திகில் ஸ்பெஷல் இணைப்பு , அட அட அட ,சும்மா சொல்ல கூடாது , கலக்கிட்டிங்க போங்க !!!!!! செப்டம்பர் மாதம் சும்மா அதிருமெல்ல !!!!! லார்கோவின் எல்லா அட்டை பட சித்திரங்களும் அருமை . ஓவியர் மாலையப்பனுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள் . இன்றே அனைத்து சந்தா பிரதிகளும் அனுப்பி விட்டாயிற்று என்ற செய்தியும் எமது காதில் தேன் பாய்ந்தது போலுள்ளது . இது போல் தொடரட்டும் உங்கள் அதகள அதிரடி . அய்யோ !! முதலில் எதை படிப்பது என்று நான் சிண்டை பிய்க்க போவது மட்டும் உறுதி . தேங்க்ஸ் சார் !

    ReplyDelete
  61. Sir,

    Very surprising to hear divali in September Thank you very much, waiting for the courier.

    ReplyDelete
  62. ஹாய் நண்பர்களே! 2 புத்தகம் கையில் வாங்கியாச்சு! அட்டைபடம் இரண்டும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஆபீஸ்-இல் ஆடிட்டிங் இன்று. எனவே புத்தகத்தை புரட்டி பார்க்க கூட முடிய போவதில்லை! கைக்கு எட்டியது கண்களுக்கு கிடைக்கவில்லை! ஹ்ம.

      Delete
  63. Replies
    1. சூப்பர் நண்பரே! பிரின்ஸ் -இன் அட்டை படம் அருமையாக உள்ளது. ஓவியர்கள் கலக்கி விட்டார்கள்.

      Delete
    2. நேரில் இரண்டு அட்டைகலுமே தூள்! முதன்முறையாக முன், பின் அட்டைகள் நான்குமே கலக்கல்! வாழ்த்துக்கள் மாலையப்பன் அவர்களுக்கும், பொன்னன் அவர்களுக்கும்.அதுவும் பார்னே முகத்தில் காணப்படும் அதிர்ச்சி, அருமை ஓவியரே!

      Delete
    3. // அதுவும் பார்னே முகத்தில் காணப்படும் அதிர்ச்சி, அருமை ஓவியரே!// அதே தான் நண்பரே! டாப் கிளாஸ்!

      Delete
    4. ஆம் நண்பரே! ஆசிரியர் கூறியது போல காலச்சக்கரம் பின்னோக்கி சுழன்றது போல உள்ளது! பரிசின் அட்டை பார்த்தவுடன் அந்த கால கட்டத்திற்கே சென்று விட்டேன் துள்ளலான நாட்களுக்கு!ஓவியருக்கு மிகவும் கடன் பட்டிருக்கிறோம்! அருமை!

      Delete
  64. ராஜ்குமார் :சார், மாற்றத்தையே மாற்றுகிறீர்கள் என்று சில சமயம் உங்கள் மேல் குறை படுவது உண்டு. ஆனால் இந்த மாற்றம் ஆகா, எங்கள் பாசை பர்மாவில பார்க்கப் போகிறோம் என்று நினைக்கையில், என் மனதில் லார்கொவின் அதிரடியும், பர்மாவின் இயற்கை சித்திரங்களும் மிகப் பெரிய எதிர் பார்ப்பாக இருக்கின்றன.

    ராஜ்குமார் : சார் ஒரிஜினல் அட்டையே போட்டிருக்கலாமோ ?

    ராஜ்குமாரின் மனசாட்சி : டேய், ஒனக்கு கொஞ்சம் கூட நான் இல்லையான்னு யாராவது கேக்குரதுகுள்ள நான் வந்துட்டேன். ஆமா என்ன கேட்ட ஒரிஜினல் அட்டை வேணுமா ?

    மனசாட்சி: எடிட்டர் சார், இனிமே நான் தான் கமெண்ட் போடப் போறேன் கேட்டுக்குங்க.

    ஓவியர் மாலையப்பனும், போட்டோசாப் பொன்னனும் கலக்குகிறார்கள். போட்டோசாப் பொன்னனும் மிக வேகமாக, கரண்ட் ட்ரெண்டை பிடித்துக் கொண்டார். நிராகரிக்கப் பட்ட கவர்கள் கூட நன்றாக இருக்கிறது.

    ரெண்டு அட்டையுமே நன்றாக இருக்கிறது.

    லார்கோ அட்டை
    ===============

    பின்னட்டையில் கதாசிரியர் மற்றும் ஓவியர் அறிமுகம் + கதை சுருக்கம் கொடுப்பது நல்ல முயற்சி . இதே மாதிரி தொடரலாமே. ஒரு இன்டர்நேஷனல் லுக் கிடைப்பது உறுதி. "திரைப்படமாய் ஐரோப்பாவில் வெளியான ஆக்சன் த்ரில்லர்" என்ற கேப்சன் நிறைய பேர் புருவங்களை உயர்த்த வைத்து வாங்க வைப்பது உறுதி. ஆனால் பிரின்ஸ் அட்டையில் மேலே இருக்கும் பிலிம் ரீல் டிசைனை லார்கோ அட்டைக்கு உபயோகப் படுத்தி இருந்தால், அந்த கேப்சனை சப்போர்ட் பண்ணுகிற மாதிரி இருந்திருக்கும். நீல வண்ண பின்னணில் வரையப் பட்ட அட்டையும் எனக்கு பிடித்திருக்கிறது.

    பிரின்ஸ் அட்டை
    ===============

    ஒரிஜினலில் இல்லாத சூரியன் பிரின்ஸ் கவரை மேலும் சூடாக்குகிறது. மாலையப்பன் கலக்குகிறார்.

    ரெண்டு ஹீரோக்களுக்கும் என் நன்றி. லார்கோவையும், பிரின்சையும் சொல்லவில்லை. மாலயப்பனையும் , பொன்னனையும் சொல்கிறேன். ஹேட்ஸ் ஆப் டு யு.

    புத்தகதை படித்து விட்டு சொல்கிறேன். லார்கொவும், ப்ரின்சும் ஏமாற்ற மாட்டார்கள் என்று உறுதியாக நம்பலாம்.

    ராஜ் குமார் : என்ன இருந்தாலும் ....

    மனசாட்சி : தே சும்மா கிடக்க மாட்ட :D

    ReplyDelete
    Replies
    1. :D ஆஹா! ராஜ் குமாரின் ஒரு மினி பதிவை படிச்ச எஃபெக்ட்! :)

      Delete
  65. நண்பர்களே,

    இங்கே பெரும்பாலானோர் இந்த கடைசி நேர குட்டிகர்ணத்தை ரசித்துள்ளது தெரிகிறது. என்னை பொறுத்தவரை இந்த மாற்றம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றானாலும் இந்து மிகவும் காலம் தாழ்ந்து எடுக்கப்பட்ட முடிவாகவே தெரிகிறது.

    நமது வெளியீடுகள் அனைத்து இறுதி நேர மாற்றங்களுக்கு உட்பட்டது என்றாலும் அதற்கான காரணம் ஓன்று தவிர்க்கமுடியாததாக இருக்க வேண்டும் அல்லது அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்க வேண்டும்.

    நமது ஆசிரியர் இதற்காக சொன்ன காரணம் புத்தக திருவிழாவில்/ப்ளாக்கில் சில நண்பர்கள் கிராபிக் நாவல்கள் போன்ற புத்தகங்கள் தொடர்ந்து வருவது அவர்களுக்கு அயர்ச்சியை ஏற்படுத்துவதாக அவர்கள் வெளியிட்ட கருத்து என்கிறார்.

    இது ஏற்றுக்கொள்ளும்படி இருந்தாலும் நாம் அனைவரின் கருத்தாக இதை எடுத்துக்கொள்ள முடியாது. அடுத்த முறை அட்டவணை தயாரிக்கும்போது இது போன்ற கருத்துக்களை INPUTS ஆகா கொண்டு தயாரிக்கலாம். ஆனால் இந்த கருத்துக்களை கொண்டு அறிவித்த புத்தகங்களை மாற்றுவது சரியான முடிவாக படவில்லை.அதற்கான சில காரணங்கள்

    1.இந்த கடைசிநேர மாற்றம் வலையுலக வாசிகளான நமக்கு மட்டுமே தெரிகிறது. வலைக்கு வெளியே உள்ளவர்கள் "சிப்பாயின் சுவடுகள்"லை எதிர்பார்தே புத்தக கவரை பிரிக்கும்போது அவர்கள் ஏமாற்றம் அடைவதை தவிர்க்க முடியாது. இந்த தளத்தில் அனைவரின் பாராட்டை பெற்ற ஒரு கதையே திடீரென சிலரிடம் குட்டு வாங்குகிறது. நமது ரசனைகள் பலவாறாக இருக்கும்போது "லார்கோ" புத்தகம் அனைவரையும் சமாதானப்படுத்திவிடும் என்ற கருத்து அடிபட்டு போகிறது.
    நமக்கு ஒரு புத்தகம் பிடிக்கவில்லை என்றாலும் முன்பே அறிவிக்கப்பட்டது என்பதால் அனைவரையும் COMPROMISE செய்துவிடலாம். ஆனால் அறிவிக்கப்பட்ட ஓன்று தவிர்க்கமுடியாத காரணத்தால்(???) மாறுகிறது என்கிறபோது அதனால் வரும் ஏமாற்றத்தின் வலிமை சிலருக்கு முன்னதை விட பெரியது.

    2.கடைகளில் புத்தகம் வாங்குபவர்கள் "சிப்பாயின் சுவடுகள் " வந்துவிட்டதா என்றே கேட்பார்கள். அங்கே ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க முடியாது.

    நமது ஆசிரியர் இதை ஓரு அதிரடி மாற்றமாகவே பார்கிறார். அறிவிக்கப்பட்ட இடத்தில கூடுதலான புத்தகங்கள் வருவது கூடுதலான கதைகளை தாங்கி வருவதே என்னை பொறுத்தவரை அதிரடி மாற்றம். நாம் ஹோட்டலில் இனிப்பு சாப்பிட அமரும் வேலையில் சிக்கன் 65 கொண்டுவந்து வைப்பது போலுள்ளது இந்த மாற்றம்.

    ஆசிரியருக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். இது போன்ற கடைசிநேர குட்டிகர்ணங்களை கூடுமானவரை தவிர்ப்பது நலம்!


    இன்னமும் எனக்கு புத்தகம் வரவில்லை. வந்தவுடன் ஒரு REVIEW செய்திடுவோம்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். இணையத்துக்கு அப்பாலுள்ளவர்கலுக்கு சிறிது குழப்பம் மற்றும் ஏமாற்றம் / பெருமகிழ்ச்சி கிடைக்கப் போவது உண்மைதான். இனி திட்டமிடும்போது ஆக்சன் கதைகள் இரு மாதம் விட்டு ஒரு மாதம் கிடைக்கிற மாதிரி திட்ட மிடலாம்.

      Delete
    2. ஏன் நண்பா பத்து ரூபாயை எதிர்பார்த்து போனால் நூறு ரூபாய் கிடைத்தால் சந்தோஷ பட மாட்டாயா!
      இதற்க்கு பெயர் இன்ப அதிர்ச்சி!
      நிச்சயம் நூறு சதம் திருப்தி படுத்த இயலாது !
      ஆனால் அந்த புத்தகம் பார்த்து அறுபது சதம் சந்தோஷ படுவார்கள் எனில் இதனை பார்த்து என்பது சதம் சந்தோஷ படுவர்!
      இதற்க்கு அத்தாட்சி உங்கள் ஒருவரை தவிர பிற வந்துள்ள அனைவரும் ஏற்று கொண்டதே! நிச்சயம் நூறு சதம் திருப்தி படுத்த இயலா விடினும் தொன்னூருக்கு மேல் திருப்தி என்பது உங்களது பதிலிலே உள்ளது!
      படிக்கிற வேலைய பாரு தம்பி! சிரிக்காத!

      Delete
    3. புக் வரலையா ! நேரே stc போ! வாங்கி சந்தோஷ படுவியா அத வுட்டுட்டு!

      Delete
    4. நமக்கு ஒரு நாள் முன்னாலே தெரிந்து விட்டது, இல்லையென்றால் வாங்கியவுடன் உனக்குத்தான் முதல் phone செய்திருப்பேன்! குதித்து கொண்டிருப்பார்கள் மாற்றம் அறியாமல் கவரை பிரிப்பவர்கள்!

      Delete
    5. //புக் வரலையா ! நேரே stc போ! வாங்கி சந்தோஷ படுவியா அத வுட்டுட்டு! //

      ஏது நண்பா ஏக குஷியாக இருக்கறமாதிரி தெரியுது??: என்ஜாய் ! : )

      இதுக்கு முன்னாடி ஒரு தடவ ஷெல்டன் கதையில இது மாதிரி ஒரு மாற்றாத பண்ணார். அதுக்கே ஒரு நண்பர் நம்ம ப்ளாக்'ல காட்டமான ஒரு விமர்சனத பதிவு பண்ணார். அப்போ முத ஆளா நான் தான் ஆசிரியருக்கு சப்போர்ட் பண்ணேன்.அப்போ அவர் சொன்ன காரணம் நூறு சதம் ஏத்துக்க கூடியது.

      பட் இப்போ இதுக்கு சொல்ற காரணம் அவ்வளவு ஸ்ட்ரோங்கா இல்ல. இதை தவிர்த்திருக்கலாம். ஏன் மீண்டும் நான் இதை சொல்றேன்னா ஷெல்டன் சிக்கலை போல தவிர்க்கமுடியாத சிக்கல்கள் எதிர்காலத்துல வரலாம். அப்போ அறிவிக்கப்டட்ட புத்தகங்கள மாத்த வேண்டிய சிக்கல் வரும். அது போன்ற வேளைகளில இந்த cushion யூஸ் பண்ணலாம். இப்போ இன்னொருவாட்டி நாம புத்தகங்கள மாத்துன நம்ம விற்பனை முகவர்கள் கூட சலிச்சுக்குவாங்க. "இவரு சொல்றது ஒன்னு செய்யறது ஒன்னு" அப்படிங்கற அவப்பெயர் வேண்டாமே!
      : ) : )

      Delete
    6. @விஸ்கி,

      உங்கள் கருத்தை ஏற்கமுடியாது. கடைசி நேர மாற்றங்கள்/சர்ப்ரைஸும் ஒரு கூடுதல் சுவைதான்.

      அதோடு மெஜாரிடிய பாருங்க ஸார்! ஒரு ஓட்டு கூட வாங்குனாலே ஆட்சியமைக்கமுடியும். இங்க மோர் தென் 90% இதற்கு/இதைப்போல எல்லா மாற்றங்களுக்கும் தயாராகவே இருக்கிறோம். ஆக, நவ் யுவார் இன் லூஸர் சைட்! லெட்ஸ் என்ஜாய் தி சர்ப்ரைஸ் ட்ரீட்!!

      Delete
    7. //கடைகளில் புத்தகம் வாங்குபவர்கள் "சிப்பாயின் சுவடுகள் " வந்துவிட்டதா என்றே கேட்பார்கள். அங்கே ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க முடியாது.//

      புத்தகக்கடைகளில் யாராவது "சிப்பாயின் சுவடுகள்" வந்துவிட்டதா என்றோ "சிகப்பாய் ஒரு சொப்பனம்" வந்துவிட்டதா என்றோ கேட்பதில்லை. அப்படிக்கேட்டால் புத்தகக் கடைக்காரர் முதல் சுற்றுப்பட்டு எட்டு மீட்டர் Surrounding மக்களும் அதிர்ச்சியடைந்து விடுவார்கள்!

      லயன் காமிக்ஸ் (அ) முத்து காமிக்ஸ் வந்துவிட்டதா என்று கேட்பதுதானே நமது பாரம்பரிய அணுகுமுறை?! :D

      Delete
    8. //லயன் காமிக்ஸ் (அ) முத்து காமிக்ஸ் வந்துவிட்டதா என்று கேட்பதுதானே நமது பாரம்பரிய அணுகுமுறை?! :D//

      உங்களுக்கு கொஞ்சம் விளக்கமா சொன்ன புரியும்ன்னு நினைக்கறேன். : )

      முதல்ல எல்லோரும் அப்படிதான் கேட்போம். உடனே கடைகாரர் லார்கோவை எடுத்து நீட்டுவார். ஒரு ஆச்சர்யம் அங்கே எழுந்தாலும் தலையங்கத்தை படிக்காதவரை நம்ம நண்பருக்கு நடந்தது என்னன்னு தெரியாது.எல்லோரும் கடையிலேயே புத்தகத்தை படிக்கறோமா என்ன ??இயற்கைய அந்த மாதம் அறிவிச்ச புத்தகம் எங்கேன்னு தேடமாடோமா ?? கடைகாரர் கிட்ட "சிப்பாயின் சுவடுகள்" அப்படிங்கற ஒரு புது புத்தகம் வந்துச்சா இல்லையான்னு வேற ஏப்படி கேட்க முடியும் ???

      Delete
    9. @ Ramesh kumar

      நமது பாரம்பரிய அணுகு முறை பற்றி அழகாகக் சொல்லியிருக்கிறீர்கள்! :) உண்மை! உண்மை!

      @ வி-சு

      இப்படி வச்சுக்கலாமா?;
      இன்ப அதிர்ச்சி அடைவோர் : 80 %
      ஏமாற்றம் அடைவோர் : 1 %
      எந்த ரியாக்சனும் இல்லாதோர் : 19 %

      Delete
    10. @விஸ்கி-சுஸ்கி, உண்மைதான், இந்த மாதம் கடைக்காரர்களுக்கும் சில வாசகர்களுக்குமிடையே புதிய வினா-விடைகள் உதயமாகும்! :D

      Off Topic, இன்றைக்கு பெரிய பிள்ளைகளாகிவிட்ட நாம் ஒரு கதையை படிப்பதற்கு பலமாதங்கள் முன்பே ஒருமாதிரி எதிர்பார்ப்போடு ரெடியாகிறோம் - தேவையில்லாமலேயே! ஆனால் சிறுவயதில் நடந்ததோ... ஹி ஹி! நான் சிறுவயதில் கதையின் பெயரையோ, ஹீரோவின் பெயரையோகூட தெரியாமல் தத்துபித்தென்று ஆனால் ஆர்வத்தோடு படித்ததுண்டு! :D

      கொடுமையின் உச்சம்: முழுக்கதையையும் படித்துவிட்டபின் கூச்சமே இல்லாமல் அப்பாவிடம் சென்று "இதுல ஹீரோ இவரா இல்லை அவராப்பா?" என்றும், கதையின் முதல் பக்கத்தையும் வேறொரு பக்கத்தையும் காட்டி "இது ரெண்டும் ஒரே ஆளா இல்ல வேற வேறயாப்பா?" என்று கூச்சமே இல்லாமல் Technical Questions கேட்ட நாட்களும் உண்டு!

      Delete
    11. Adding to relevant thread....

      @Ramesh Kumar:
      //லயன் காமிக்ஸ் (அ) முத்து காமிக்ஸ் வந்துவிட்டதா என்று கேட்பதுதானே நமது பாரம்பரிய அணுகுமுறை?! :D//
      அதே, அதே!!! :) சன் ஷைன் வந்துருச்சான்னு கேட்டா கூட கடைக்காரர் அதிர்ச்சியாத்தான் பார்ப்பார்! திருப்பி, சாஷேவா பாட்டிலான்னு கேக்காத வரைக்கும் சந்தோஷம்தான்! ;) முத்து & லயனுக்கு இருக்கும் பிராண்ட் வால்யூ மிக மிக அதிகம் - அந்தப் பெயர்களையே உபயோகப் படுத்தி இருக்கலாம்! முத்து லயன் லைப்ரரி அல்லது இன்னமும் ரைமிங்காக இருக்க வேண்டுமானால் "லயன் முத்து லைப்ரரி"!

      @விஸ்கி-சுஸ்கி:
      அடுத்த வெளியீடு இதுதான் என்று அறிவிக்கப்படும் போதே வாசகர்கள் மன ரீதியாக அதற்கு தங்களை தயார் படுத்தி இருப்பார்கள்! இது போன்ற அதிரடியான(?!) மாற்றங்கள் சிலருக்கு ஏமாற்றத்தையும், சிலருக்கு சந்தோஷத்தையும் தரும் என்பது ஒத்துக் கொள்ள வேண்டிய விஷயம்தான். ஒரு உதாரணத்திற்கு, லார்கோவை முதலில் அறிவித்து, பிறகு அது வேறு ஒரு கிராபிக் நாவலாக மாறி இருந்தால் இந்நேரம் கதையே மாறி இருக்கும்! :) இனி வரும் காலத்தில் இது தொடராமல் இருந்தால் சரிதான்!

      என்னைப் பொறுத்த வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட புத்தகங்கள் வந்திருந்தால் எந்த அளவுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்குமோ அதே அளவு மகிழ்ச்சிதான் இவற்றிற்கும்! At the end of the days 2 books per month is what really counts, and anything above that can only be called a இன்ப அதிர்ச்சி! :)

      ஆனால் ஒன்று... லயன் முத்துவின் அடுத்த வெளியீடு விளம்பரங்களை வைத்து, யாராவது ஒரு காமிக்ஸ் சேகரிப்பாளர் அவற்றை ஆர்கனைஸ் செய்ய முயன்றாரென்றால் அந்த 'அடுத்த வெளியீட்டை' அவரது வாழ்க்கை முழுக்க தேடி கொண்டிருக்க வேண்டியதுதான்! :D

      @Erode VIJAY:
      //எந்த ரியாக்சனும் இல்லாதோர் : 19 %//
      கிர்ர்... :)

      Delete
    12. //எந்த ரியாக்சனும் இல்லாதோர் : 19 %//

      சிறுவர்கள்! :P

      Delete
    13. //இன்ப அதிர்ச்சி அடைவோர் : 80 %// எப்படியோ போங்க ! ஹையா !எனக்கு புக்கு வந்தாச்சு ! இன்ப அதிர்ச்சிய அனுபவிக்க போறேன் ! : )

      Delete
    14. @ Ramesh kumar

      உங்க கமெண்டுக்கு மேலே ஒரு 'சிறுவர்' கிர்ர்... னு உறுமுறார் பாருங்க! :D

      Delete

    15. // எப்படியோ போங்க! ஹையா! எனக்கு புக்கு வந்தாச்சு! இன்ப அதிர்ச்சிய அனுபவிக்கப் போறேன்! //

      மகா ஜனங்களே! 'உலக மகா பல்டியடிப்பவரை பார்கணும்' அப்படீங்கற உங்க நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறிடுச்சுதானே? :D

      Delete
    16. //உங்க கமெண்டுக்கு மேலே ஒரு 'சிறுவர்' கிர்ர்... னு உறுமுறார் பாருங்க! :D//

      Revision:
      சிறுவர்கள் (Age group of 7-13) மற்றும் ஒருவேளை காமிக்ஸ் ஞானிகள்! :D

      Delete
    17. நண்பர்களே, ஆசிரியர் 2013 அட்டவணையை வெளிஇடும் போதே இந்த கதைகளின் வரிசையில் சில மாற்றம்கள் (தேவைபட்டால்) உண்டு என எழுதியதாக ஞாபகம்! மேலும் கடையில் வாங்குபவர்களை சமாளிக்க கடைக்காரர் தேவையான விளக்கத்தை கொடுத்து விட்டால் இந்த குழப்பத்தை சரி செய்து விடலாம்!

      2012 வருடத்திற்கு முன் நமது காமிக்ஸ் சரியாக வரவில்லை, ஆனாலும் நாம் தொடர்ந்து நமது காமிக்ஸ் என்று வரும் என்றும் வரும் கதையை வாங்கி படிபடித்து பழகிய நமக்கு (இன்னும் சொல்ல போனால் இது போன்று பல பல்டிகளை பார்த்து பழகிய நமக்கு) இது போன்ற சிறிய விசயத்தை சிறிதாக பார்ப்பது நலம் என்பது எனது கருத்து.

      Delete
    18. விஸ்கி-சுஸ்கி @
      // நமது ஆசிரியர் இதற்காக சொன்ன காரணம் புத்தக திருவிழாவில்/ப்ளாக்கில் சில நண்பர்கள் கிராபிக் நாவல்கள் போன்ற புத்தகங்கள் தொடர்ந்து வருவது அவர்களுக்கு அயர்ச்சியை ஏற்படுத்துவதாக அவர்கள் வெளியிட்ட கருத்து என்கிறார்.

      இது ஏற்றுக்கொள்ளும்படி இருந்தாலும் நாம் அனைவரின் கருத்தாக இதை எடுத்துக்கொள்ள முடியாது. அடுத்த முறை அட்டவணை தயாரிக்கும்போது இது போன்ற கருத்துக்களை INPUTS ஆகா கொண்டு தயாரிக்கலாம். // I also ECHO the SAME.

      Delete
  66. சார், +6 வரிசையில் வர உள்ள அந்த மென்மையான கிராபிக் நாவல் சிறகுகளை இரவல் வாங்குவோமா பதிவில் இடம் பிடித்த அந்த சிறுவர் மாயாஜால இதழ்தானே!

    ReplyDelete
  67. அட்டகாசமான மாற்றம். அருமையான கதைகள். புதியவர்களில் நம்பர் 1 லார்கோயும், முந்தையவர்களில் நம்பர் 2 ப்ரின்ஸையும் (ஹிஹி.. பர்சனல் நம்பர் 1 டைகர்) ஒரு சேரப் பார்க்கப்போவதில் கொண்டாட்டமாக உணர்கிறேன். புதிய புதிய சர்ப்ரைஸுகள் இந்தப் பதிவில், விக்ரமின் வரவு உட்பட!

    நன்றி, நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பா. நீங்களும் டைகர் பேன் என்று அறிந்ததில் மகிழ்ச்சி.

      Delete
  68. Suski&viski :

    kandipaaga inaiya arivippu thariyaamal covarai piripavargal 99% aanatha nadanam aaduvargal enbathu than unmai.

    Idai adithu kurugiren.

    ReplyDelete
  69. Check with courier they will deliver it today...:)

    ReplyDelete
  70. லார்கோவின் முதல் பக்கத்திலேயே (பக். 5) "உன் சீட்டு கிழிக்கப்படுகிறது" என்பது, "உன் வேலை முடிந்தது" என்றிருக்க வேண்டுமென்று தோன்றுவது தவறல்லவே..!

    ReplyDelete
    Replies
    1. ரெண்டாவது,

      அடுத்த அத்தியாயத்துக்கு அட்டை ஸ்கேன் பண்ணிப் போடும்போது, அதில் இருக்கும் கரன்ஸி நோட்டை எடுத்திருக்கலாம் என்பதும் தவறல்லவே..?

      Delete
  71. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. @ கார்த்திக்

      // ஷாஸேவா பாட்டிலான்னு கேட்காத வரைக்கும் சந்தோஷந்தான் //

      :D LOL

      Delete
  72. ஏன்? என்னாச்சு? கார்த்திக் சோமலிங்கா ஜீ...

    ReplyDelete
    Replies
    1. கமெண்ட் டெலிட் பண்ணதை கேக்குறீங்களா அருண்?! அதை தூக்கி மேலே அது தொடர்பான டிஸ்கஷன் நடக்கற இடத்துல republish பண்ணியாச்சு! :)

      Delete
  73. i like everything with lion muthu and the creations,except the shipping amount while buying through ebay.

    if i buy 2 comics same time its multiplies the shipping prices(its wrong right they going to ship once and not twice),even though they were come in same parcel.

    Editor must please look into it.

    Thanks
    D Naveen Rahul

    ReplyDelete
    Replies
    1. yes thats correct friend ... pls editor do something for this pleaseeeeeeeeeeeeeeee

      Delete
  74. இந்த மாத அதிரடி இன்பஅதிர்ச்சி ஸ்பெஷல் சற்றுமுன் ஏன் மேசை தேடி வந்தடைந்தது!

    ST கொரியர் அன்பர்கள் இந்த மாதம் சொதப்பாமல் ப்ரோம்ப்ட்டாக பட்டுவாடா செய்துவிட்டு சென்றார்கள்! நன்றிகள்!

    ஆதலினால் அதகளம் செய்வீர் அட்டைபடம் இணையத்தில் அருமையாக தோற்றம் அளித்தாலும் ஓவியத்தை சுற்றியுள்ள கருமை வண்ணம் முழுவதும் கருமையாக இருந்திருந்தால் இன்னமும் அட்டகாசமாக இருந்திருக்கும்.கருமை இருள் வண்ணத்தின் மேல் இருக்கும் ஒரு DARK GREY TEXTURE அவ்வளவாக ஓவியத்துக்கு உதவிசெய்யவில்லை!

    பின்னட்டை நச்!

    புத்தகத்தில் ஓவியங்களின் அச்சு தரத்துக்கு THUMBS DOWN! ஓவியங்களில் ஒரு SHARPNESS மிஸ்ஸிங்! என்ன ஆச்சு சார் ?? : (

    KBT-3 அறிவிப்பு அட்டகாசம். முதல் பரிசு "நாடோடி ரெமி" புத்தகம் வெற்றியாளருக்கு! வாவ் ! இங்கே ஒரு சின்ன கோரிக்கை!எப்படியும் அது எனக்கு கிடைக்க போறதில்ல,அதனால அப்படியே ஆறுதல் பரிசு ஒன்னு பங்கேற்பாளர்களுக்கு...ஹி ஹி ... : D

    அதிகமா ஒன்னும் நாங்க எதிர்பார்கல...

    PARTICIPANTSகள்ளுக்கு அந்த மாத புத்தகத்தில் "உங்கள் பங்களிப்புக்கு நன்றி" அல்லது "BEST WISHES" S .விஜயன் அப்படின்னு உங்க கையால பர்சனல்லா ஒரு ACKNOWLEDGEMENT கூட போதும். போடியாளர்களின் எண்ணிக்கை பிச்சுக்கும்! : D

    பிரின்ஸ் அட்டைய பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு ! செம கலக்கல் !

    ReplyDelete
    Replies
    1. //புத்தகத்தில் ஓவியங்களின் அச்சு தரத்துக்கு THUMBS DOWN! ஓவியங்களில் ஒரு SHARPNESS மிஸ்ஸிங்! என்ன ஆச்சு சார் ?? : (//

      Delete
  75. விஜயன் சார்,
    2 புத்தகம்களும் கிடைத்து விட்டன (வாழ்க S.T கொரியர்). பிரின்ஸ் அட்டைப்படம் அருமை! லார்கோ பின் அட்டை அருமை! முன் அட்டைப்படம் ஏதோ காதல் கதைக்கான அட்டைப்படம் போல் உள்ளது, சிறந்த ஒரு ஆக்சன் படத்தை அட்டைப்படமாக போட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் :-(. அதே போல் முன் அட்டைபடத்தில் கொடுத்து உள்ள கருப்பா / பிரவுன் வண்ணமா என குழப்பமாக மற்றும் அது அட்டைப்படத்தின் வசீகரத்தை குறைத்து விட்டது! என்னை பொறுத்தவரை 3-வதாக உள்ள அட்டைப்பட டிசைன் அருமை (நீல நிற பிண்ணனி).

    ReplyDelete
    Replies
    1. //...லார்கோ பின் அட்டை அருமை! முன் அட்டைப்படம் ஏதோ காதல் கதைக்கான அட்டைப்படம் போல் உள்ளது, சிறந்த ஒரு ஆக்சன் படத்தை அட்டைப்படமாக போட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் :-(. அதே போல் முன் அட்டைபடத்தில் கொடுத்து உள்ள கருப்பா / பிரவுன் வண்ணமா என குழப்பமாக மற்றும் அது அட்டைப்படத்தின் வசீகரத்தை குறைத்து விட்டது! ..//


      +1

      Delete
  76. எனது சிஸ்டம் பழுதானதன் காரணமாக சில நாட்களாக இங்கு வர இயலவில்லை...எனவே லேட்டஸ்ட் நிலவரம் தெரியவில்லை......இன்று மதியம் வீட்டுக்கு சென்றவுடன் இன்ப அதிர்ச்சி..... மேஜையில் நம் பார்சல் ..பிரித்தால் உள்ளே லார்கோ.......தொடர்ந்த இன்ப அதிர்ச்சிகள் தாங்காமல் மயங்கிவிடும் நிலைக்கு சென்றுவிட்டேன்.... லார்கோவை ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன்...சான்ஸே இல்லை.....லார்கோ லார்கோதான்..... மீதி கதைகளையும் பிரின்ஸையும் இன்று இரவு படித்துவிட்டு நாளை மீண்டும் சந்திப்போம் நண்பர்களே......

    ReplyDelete
  77. அற்புதமான இதழுக்கு திருஷ்டியாக படு மோசமான ப்ரின்டிங் ...நொந்து விட்டேன்...தயவு செய்து "இரத்தப்படலம்"மாவது சிறப்பாக வரட்டும்..

    ReplyDelete
  78. இந்த மாற்றம் எனக்கு முழு மகிழ்ச்சிதான். இருந்தாலும் ஒரு சிப்பாயின் சுவடுகள் கதையை எதிர்பார்த்து காத்திருந்த எனக்கு சிறிது ஏமாற்றம்தான். இரண்டு புத்தகங்களும் அற்புதமான படைப்பு. ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன்.

    லார்கோ 3 முன்பக்க அட்டைகள் உங்கள் கைவசம் இருக்கும் பொழுது நீங்கள் அழகான ஒன்றை சிறப்பாக தேர்வு செய்திருக்கலாம்.

    இதே அளவில் மாதம் 2 (லயன், முத்து) புத்தகம்,
    3 மாதத்திற்கு ஒரு முறை 500 மதிப்புள்ள குண்டு புத்தகம் (திபாவளி மலர், பொங்கல் மலர், கோடை மலர், ஆண்டு மலர்)
    அவ்வப்போது இடையிடையே +6, சன்சைன் லைப்ரேரி என்று ஆண்டு முழுவதும் வெளிவந்தால் நன்றாக இருக்கும்.
    இது கோரிக்கையை நான் வைப்பதுக்கு காரணம் நான் மாதம் 4 அல்லது 5 புத்தகம் படிக்கும் சுயநலத்தில் இல்லை. நமது எடிட்டரும் அவரது நிர்வாகத்தில் பணிபுரியும் அனைவரும் தினமும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்னும் பொதுநலத்தில்தான்.

    மாதம் இத்தனை புத்தகம் வந்தால் நாம் எப்படி படிப்பது என்று வாசகர்கள் அனைவரும் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டாம்.நமது எடிட்டருக்காக இதை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்ளவும்.

    ReplyDelete
    Replies
    1. //இது கோரிக்கையை நான் வைப்பதுக்கு காரணம் நான் மாதம் 4 அல்லது 5 புத்தகம் படிக்கும் சுயநலத்தில் இல்லை. நமது எடிட்டரும் அவரது நிர்வாகத்தில் பணிபுரியும் அனைவரும் தினமும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்னும் பொதுநலத்தில்தான்.//

      ஹா.. ஹா.. ஹா..

      Delete
    2. //நமது எடிட்டரும் அவரது நிர்வாகத்தில் பணிபுரியும் அனைவரும் தினமும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்னும் பொதுநலத்தில்தான்.//

      Customerகள் அடிக்கடி இந்தமாதிரி உசுப்பேற்றி (நல்ல எண்ணத்துடன்தான்) ரணகளத்துக்கு வழிகாட்டுவதை சொந்த அனுபவம் அபாய சங்கு ஊதி ஞாபகப்படுத்துகிறது!:D

      பிஸியாக இருப்பது நல்ல விஷயம்தான் ஆனால் அதே சமயம் எந்த பணியும் மனித உழைப்பை சார்ந்திருப்பதனால் சரியான ஓய்வும், வேலைப்பளுவை சீர் செய்து Consistancyஐ உறுதிப்படுத்துவதும் அவசியம்; மேலும் இதை ஒரு Slow & Steady Processஆக செய்வதுதான் சாத்தியம். சர்க்குலேஷன் ஓரளவுக்கு உயரும்வரை Heavyஆன ஸ்பெஷல்களையும், அதீத எண்ணிக்கைகளையும் துறப்பது அவசியம்தான் என்று தோன்றுகிறது.

      Delete

  79. இரண்டு மாதமாக லயன்-முத்து காமிக்ஸை இரண்டு, மூன்று நாட்கள் காலதாமதமாக தந்த கூரியர் இன்று மதியமே டாண் என்று வந்துவிட்டது.

    லார்கோ வின்ச்சை கையில் எடுத்தவுடனே பரபரப்பு தொற்றிகொண்டது. மியன்மார் காடுகள், பனிப்பிரதேசம் என்று பரபரப்புடன் கீழே வைக்காமல் ஒரே மூச்சில் படித்து முடித்தவுடன் ஒரே அசதி.

    கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல்-1 முன் அட்டைப்படம் மிகவும் பிரமாதம்.

    எனது அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள லேண்ட்மார்க் நுங்கம்பாக்கத்தில் லயன்-முத்து காமிக்ஸ்கள் புதிதாக அடுக்கிவைக்கப்பட்டிருப்பதை பார்ப்பது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. முத்து காமிக்ஸின் 40 வது ஆண்டு மலர் NEVER BEFORE ஸ்பெஷல் இரண்டு புத்தகங்கள் அங்கே உள்ளது. ஏற்கனவே NBS முழுவதும் விற்றுவிட்டதால் EBAY-யிலோ முத்து காமிக்ஸ் அலுவலகதிலோ விற்பனைக்கு இல்லை என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //எனது அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள லேண்ட்மார்க் நுங்கம்பாக்கத்தில் லயன்-முத்து காமிக்ஸ்கள் புதிதாக அடுக்கிவைக்கப்பட்டிருப்பதை பார்ப்பது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.//
      லேண்ட்மார்க் நுங்கம்பாக்கத்தில் INDHA MAADHA BOOKS VANDHU VITTADHAA?

      Delete
    2. இந்தமாத புத்தகங்கள் லேண்ட்மார்க் நுங்கம்பாக்கத்தில் இன்னும் வரவில்லை.

      Delete
  80. எனது சந்தா எண் 50 . . ஆனால் கடந்த இரு முறையும் ஒரு வாரம் கழித்தே புக் கைக்கு கிடைக்கிறது . . இந்த முறையும் டிட்டோ . . . அலுவலகத்தில் அனுப்பியாச்சு என்கிறார்கள் . . . என்னமோ ..
    நடத்துங்க சார் . .

    ReplyDelete
  81. சார்,
    பிரின்சின் அட்டைப்படம் அட்டகாசம் போங்கள். கொள்ளையழகு! லார்கோ அட்டைபடம் ஓகே ஆனால் கடந்த 3 இதழ்களின் அட்டைப்படங்களும் பிரவுன் நிறத்திலேயே சுழலுவது ஏனோ? மாதமொரு வண்ணம் பின்பற்றலாமே?
    பிரின்சின் 2 கதைகளும் வண்ணத்தில் ஜொலிக்கிறது! நம்ம ஜானியை பின்னுக்கு தள்ளி ஒரு மாதத்திற்கு முன்பே சிக்பில் முந்துவதன் காரணமென்னவோ?

    டைகரின் ஒரு வேங்கையின் சீற்றம் இந்தாண்டு schedule ல் இல்லையா? மீண்டும் நவம்பரில் ஒரு மாற்றத்தை எதிர்பார்கிறேன்.

    ReplyDelete
  82. Dear Sir,

    புத்தகம் கையில் வந்ததும் தோன்றிய முதல் எண்ணம் "ஏன் இந்த திடீர் எடை குறைவு + அட்டையின் மெல்லிய, வளையும் தன்மை", உள்ளே திருப்பிய பின் இருபுத்தகங்களிலும் சித்திரங்களின் பிரிண்டிங் எப்போதும் போல் இல்லாமால் ஆங்காங்கே மங்கலாக இருப்பது வருத்தமளித்தது. (மீண்டும் ஒரு இரத்தத்தடம்?). ஏன் சார் இப்படி????????

    முதலில் படித்தது "சாலையில் ஒரு சலனம்" :
    ========================================

    எனக்கு பிடித்திருந்தது. கதையின் ஆரம்பத்திலும் முடிவிலும் கறுப்புக் கிழவியை விட்டு விட்டார்களோ என்று தோன்றியது. கருப்புக்கிழவி கதை படித்த நினைவு. மொழி பெயர்ப்பு பலகாலத்திற்கு முன்பே செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது. பழைய லயன் முத்து காமிக்ஸ் படித்த உணர்வு தோன்றியது. (சமீபத்தில் காணப்படுவது போல் கொக்கிகள் ("?") மொழிபெயர்ப்பில் ஓரிடத்தில் கூட கண்ணில் படவில்லை :-).)

    ReplyDelete
  83. சுஸ்கி விஸ்கி சொன்னது மாதிரி லார்கோ அட்டைப் படம் முழுமையாக கருப்பு வண்ணத்தில் இருந்திருக்கலாம். திப்பி திப்பியாக என்னமோ மாதிரி நேரில் பார்க்கும் போது இருக்கிறது.

    நல்ல சாப்பாட்டை, கூடுதலாக போடப் பட்ட உப்பு கெடுத்து விடுவது மாதிரி இருந்தது லார்கோ புத்தகத்தின் அச்சு முறை. கதையின் வேகத்தை அனுபவிக்க முடியாமல் போய்விட்டது. தயவு செய்து சரி செய்யுங்கள்.

    ReplyDelete
  84. பிரின்ஸ் அட்டை இணையத்தில் பார்த்ததை விட அசத்தலாக இருந்தது. லக்கியின் குட்டி கதையில் ஒரு சமுதாய மொழி வழக்கு ஆங்காங்கே வருகிறது. திடீரென படிக்கும்போது கொஞ்சம் என்னடா இது வெஸ்ட்டில் இப்படியா பேசுவார்கள்? என்று யோசித்து விட்டு பின் தொடர வேண்டியுள்ளது. சிரிப்புக்காக பயன் படுத்துகிறேன் என்று திணித்த மாதிரி தெரிகிறது.

    ரெண்டு புத்தகங்களும் ஜெட் வேகத்தில் எங்களை இழுத்து சென்றன.

    ReplyDelete
  85. To: Editor,
    அச்சுப் பதிப்பின் தரம் அவ்வப்போது அல்லாடுவது குறித்து நண்பர்கள் இங்கே குறிப்பிடும்போது கடந்த பதிவில் நான் இட்ட பின்னூட்டமும் அதற்கு ஆசிரியரின் பதிலும் ஞாபகம் வந்தது:

    //விலையேற்றம் என்பது சில சந்தர்ப்பங்களில் தவிர்க்கவியலாததுதான்! ஆனால், விலை உயரும்போது அதற்கு ஏற்ப கதைத் தேர்வுகளும் அச்சுத்தரமும் இருந்திடவேண்டுமென்ற எதிர்பார்ப்பும் வாசகர்களிடம் ஏறிவிடும் என்பதையும் கவனியுங்கள்.

    Editor's Reply: தரத்தின் மீதான எதிர்பார்ப்புகள் விலையேற்றம் இல்லாத போதிலும் எங்கும் விலகிப் போகப் போவதில்லையே ! அது 24/7 நம்மோடு ஜீவிக்கும் ஒரு சங்கதியன்றோ ?//

    விலை அதிகரிப்பு என்பதை எவ்வாறு வாசகர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ, அதற்கு ஏற்ப கதை, மொழிபெயர்ப்பு, தாள், அச்சு, பொதி செய்வது.. என்று அனைத்திலுமே தரத்தைப் பேணவேண்டியது (அவ்வப்போது சறுக்குவதும் இனி அப்படி நடக்காது என்ற வாக்குறுதியும் ஏற்கனவே சில பதிவுகளில் வந்தாச்சு!) அவசியமாகிறதே!

    அதிலும், நேரடியாக நுகர்வோரோடு உற்பத்தியாளர் உரையாடுவது சாத்தியமாகியுள்ள நமது காமிக்ஸ் வட்டத்தில் நிறையக் கணைகளைச் சந்திக்க ஆசிரியர் தயாராக இருக்கவேண்டியதும் கட்டாயமே!

    விலை அதிகரிக்க அதிகரிக்க அதற்கு ஏற்ற பலனை எதிர்பார்ப்பதும் இயல்புதானே? ஆனால், அப்போதும் இப்படியான அச்சுப் பதிப்புச் சொதப்பல்கள் நடக்கத்தான் போகிறது என்பது எனது (தனிப்பட்ட) 'எதிர்பார்ப்பு'!!

    ReplyDelete
    Replies
    1. //விலை அதிகரிக்க அதிகரிக்க அதற்கு ஏற்ற பலனை எதிர்பார்ப்பதும் இயல்புதானே? ஆனால், அப்போதும் இப்படியான அச்சுப் பதிப்புச் சொதப்பல்கள் நடக்கத்தான் போகிறது என்பது எனது (தனிப்பட்ட) 'எதிர்பார்ப்பு'!!//

      இந்த எனது எதிர்பார்ப்பு பொய்யாகிப் போகுமானால் மகிழ்ச்சியே!

      Delete
  86. அன்பு ஆசிரியரே...இம்மாத இதழ்களின் அச்சுத்தரம் பற்றி என்னிடம் பேசிய வாசகர்கள் அனைவரும் மிகவும் வருத்தப்பட்டார்கள்.இந்த வருடத்தில் நான்கு அல்லது ஐந்தாவது முறை இப்படி சிறந்த இதழ்களை ரசிக்க முடியாமல் போயிவிட்டது..இதற்க்கு முடிவே கிடையாதா..?

    ReplyDelete
  87. புத்தகத்தை இன்னும் நான் காணவில்லை. எனினும், அச்சுத்தரம் பற்றி பல நண்பர்களும் கண்டனங்கள் தெரிவித்துள்ளதைப் பார்க்கும்போது ஒரு விஷயம் தோன்றுகிறது. நேரம், பணம், மனிதர்கள், எந்திரங்கள், பொருட்கள், செயல்முறைகள் என பல விஷயங்களைப் பொறுத்து மாறுபாடுகள் நிகழக்கூடியதுதான் அச்சுத்துறை. வண்ணக் குறைபாடு, தேவையான அழுத்தமின்மை, ப்ளர் (இரண்டு அச்சுக்களிடையே ஒத்திசைவின்மை) போன்றன பெரும்பாலும் அச்சுத்துறையில் மனிதர்களால் நிகழக்கூடிய தவறுகளாகும். ஒரு தயாரிப்பைப்போல இன்னொன்று இருந்துவிடவே முடியாது. ஆயினும் கன்ஸிஸ்டன்ஸி என்பது மிக முக்கியம்தான், அதில் குறைவென்பது குறைபாடுதான். ஹிண்டு போன்ற பெரிய நிறுவனங்களே சமயங்களில் நெளிய நேர்கையில், நமது நிறுவனத்துக்கான நெருக்கடிகளை நாம் புரிந்துகொள்ள முயலவேண்டும். விஜயன் ஸாரின் நோக்கம் நேர்மையானது, ஆகவே தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது மென்மையைக் கடைபிடிப்பதும், உடனிருந்து பொறுமை காக்கவேண்டியதும் அவசியம் என்று கருதுகிறேன்.

    ReplyDelete
  88. எடிட்டர் சார்,

    அட்டகாசமான அட்டைப்பட டிசைன்களிருந்தும், சூப்பரான ஆக்சன் கதைக்களமிருந்தும், துள்ளலான மொழிபெயர்ப்பிருந்தும், ஆங்காங்கே பிசிரடிக்கும் அச்சுத் தரத்தால் ஒரு அருமையான இதழ் 'டிஸ்டிங்ஸன்' வாங்க முடியாமல் தடுமாறுகிறதே?!

    ஆதலினால் ஏதாவது செய்வீர்!

    ReplyDelete
  89. லார்கோவை சற்று முன்னர் அதகளம் செய்து முடித்தேன்.ஒரு அற்புதமான காமிக்ஸ் அனுபவம் படிப்பவர்களுக்கு காத்துள்ளது! ஒரு காமிக்ஸ் புத்தகம் தானே மேம்போக்காக செயல்படாமல் ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் அசாத்திய கவனம் செலுத்தியுள்ள படைப்பாளர்களை என்னவென்று சொல்வது ??காமிக்ஸ் அசுரர்கள் ???

    பர்மாவில், அல்ப்ஸ் மலையில், நியூயார்க்கில்,தாய்லாந்தில் என காட்சிகள் சட் சட் கதையோட்டத்தில் மாறி மாறி ஒரு தரமான ஹாலிவுட் படத்தயே தனது வேகத்தில்/விறுவிறுப்பில் தோற்கடிக்கிறது.

    அசாத்தியமான கதை தொடருக்கு அசாத்தியமான மொழிபெயர்ப்பு! பட் இதற்கும் முந்தய தொடர்களில் மொழிபெயர்ப்பில் இருந்த ஒரு சுருதி இதில் குறைவதாக தோன்றுகிறது. நம் எதிர்பார்ப்பு கதைக்கு அடுத்த கதை கூடிக்கொண்டே போவது கூட இதற்க்கு காரணமாக இருக்கலாம். உண்மை எப்படி இருந்தாலும் கதையில் லார்கோ வியர்வை வழிய, ரத்தம் சிந்தி, எலும்பு நொறுங்கி, உடைகள் கிழிபட்டு ஒரு வெற்றியை கதைமுடிவில் ஈட்டுவதைபோல, நமது ஆசிரியர் இது போன்ற தொடர்களுக்கு ஒவ்வொருமுறையும் மொழிபெயர்ப்பில் இதற்குமுன்பு செய்ததை போல் அல்லது அதையும் மிஞ்சும் வகையில் சாகசம் செய்தலோ ஒழிய நமது வாசகர்களை வரும் காலங்களில் திருப்திபடுத்த முடியாது. : )

    இந்த கதையில் அச்சுதரம் சற்றே குறைவாக இருந்தாலும் கதையின் வேகம் இது போன்ற குறைகளை போக்கடித்து விடுகிறது.அது ஒரு பெரிய குறையாக தெரியவில்லை. ஓவியங்களை பல இடங்களில் வேகத்துக்கு பிரேக் போட்டு நிதானித்து ரசிக்க முடிகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் "இன்னமும் ஓவியங்கள் கொஞ்சம் தெளிவாக இருந்தால் அட்டகாசமாக இருந்திருக்குமே" என்ற ஆதங்கத்தை தவிர்க்க முடியவில்லை.

    NEVERTHELESS இந்த மாத லார்கோ ஒரு ROCKING ENTERTAINER. புத்தகத்தை ஆக்கமாகி எங்கள் கைகளில் தவழவிட்ட ஆசிரயர் விஜயன் மற்றும் டீம் முக்கு நன்றிகள் பல!.

    ReplyDelete
  90. To: விஸ்கி-சுஸ்கி,

    உங்களைப்போன்ற நண்பர்களின் Review களைப் பார்க்கும்போது கடல் தாண்டிக் காத்திருக்கும் என்போன்றவர்களுக்கு ஏகத்துக்கும் இதயத்துடிப்பு எகிறுவதை உணர முடிகிறது நண்பரே!

    ReplyDelete
  91. @ Friends :

    அனைவரிடம் மன்னிப்புக் கோருவது இன்று அவசியமென்று தோன்றியது ! ஒவ்வொரு மாதமும் நமது இதழ்களை எதிர்நோக்கி நீங்கள் எத்தனை ஆர்வமாய் காத்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன் ! இந்நிலையில் அச்சுத் தரக்குறைவினால் இம்மாதம் உங்களுக்கு நேர்ந்திருக்கும் ஏமாற்றம் என்னைத் தலைகுனியச் செய்துள்ளது !

    அதே காகிதம் ; அதே இயந்திரம் ; அதே ink ; அதே பணியாளர்கள் - ஆனால் தரத்தில் வேறுபாடு என்பதற்கு நமது அச்சுப் பிரிவில் தற்சமயமுள்ள அனுபவமின்மையைத்த் தவிர வேறு எவ்வித சாக்கு போக்கும் நிச்சயமாய் சாத்தியமில்லை ! ஒவ்வொரு முறையும் நாம் பயன்படுத்துவது உயர்தர ink ரகங்களே ; ப்ராசஸ் முறைகளிலோ ; காகிதங்களிலோ எவ்வித compromise -ம் செய்வதில்லை ! ஆனால் குறையும் ஒரே அம்சம் - அனுபவசாலிகளான பிரிண்டர்கள் மாத்திரமே ! இது யாரையும் குறை காணும் முயற்சியோ ; பழியை இன்னொரு சிரத்தில் சுமத்தும் நோக்கிலான மழுப்பலோ அல்ல ; உங்களைப் போலவே வேதனைப்படும் ஒருவனின் ஆதங்கம் மாத்திரமே ! எல்லாப் பொறுப்புகளும் இறுதியில் என்னையே சாரும் என்பதால் இந்த சங்கடத்திற்கும் நானே பொறுப்பேற்கிறேன் !

    அச்சுப் பணிகள் நடந்தேறும் எல்லா சமயங்களிலும் உடனிருப்பது முடிவதில்லை ! பல நேரங்களில் சரியாகச் செயல்படும் அச்சு டீம் ; ஒரு சில சந்தர்ப்பங்களில் சொதப்புவது வேதனை தருகிறது ! அதிலும் இவர்கள் அனைவரும் நம்மிடம் நாலைந்து ஆண்டுகளாய் பணியாற்றி வருபவர்கள் என்ற வகையில் அவர்களிடம் இந்த வேதனையைத் திசை திருப்புவதும் முறையாக இராது ! அனுபவமின்மையைத் தாண்டி அனைவரும் நேர்மையான, பண்பான பணியாளர்களே ! So அவர்களது திறமைகளை வளர்க்க எவ்விதம் திட்டமிடுவது என்பதைத் தான் சிந்திக்க வேண்டியுள்ளது.

    ஒரு இதழின் பணிகளுக்காக மாதத்தில் 20 நாட்கள் மெனக்கெட்டுவிட்டு ; இரண்டே நாட்களில் அது அத்தனையும் வீண் போவதைப் பார்க்க நேரிடும் போது பொங்கும் ஆற்றமாட்டாமையும் , வேதனையும் எத்தகையது என்பதை சங்கடத்தோடு உணர்கிறேன் ! இப்போதைக்கு மன்னிப்புக் கோருவதைத் தாண்டி நான் ஏதும் சொல்லிடப் போவதில்லை ! இது மீண்டும் நிகழ்ந்திடாதிருக்க என்ன செய்வதென்பதில் கவனம் செலுத்த சற்றே அவகாசம் கோருகிறேன் guys !

    ReplyDelete
    Replies
    1. குறைகூறியதற்க்கு மன்னியுங்கள் அன்பு ஆசிரியரே...உந்கள் எழுத்துகளை சுமந்து வரும் காமிக்ஸ் தான் நம் சந்தோஷங்களில் பிரதானமானது என்று ஆகிவிட்ட நிலையில் நம் எதிர்ப்பார்ப்புகளும் கூடிவிட்டது....உங்கள் பதில் நெகிழ்ச்சியாக உள்ளது...

      Delete
    2. டியர் சார்..

      its ok.. Sir.. இங்கு நாங்கள் அனைவரும் காமிக்ஸ் காதலர்கள்..

      எங்களுக்கு நீங்கள் செய்து வரும் உபகாரமானது அளப்பரியது..

      எவ்வளவோ நீங்கள் எங்களுக்கு செய்துள்ளதற்கு, இதை இதை பொறுத்துக்கொள்ள மாட்டமா..?

      மன்னிப்பது கேட்பதெல்லாம் தேவையற்றது என்பது என் கருத்து..

      இரண்டு இதழ்களும் கலக்கிவிட்டன.. அதிலும் லார்கோ வின் மொழிபெயர்ப்பு.. அட்டகாசம்..

      பணியாளர்களிடம் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு, உங்களது ராஜபாட்டையில் தொடர்ந்து நடை போடுங்கள்.. சார்..

      எங்கள் ஊர்வலம் உங்கள் பின்னே..

      Delete

    3. "அனைவரிடம் மன்னிப்புக் கோருவது" ****** "தலைகுனியச் செய்துள்ளது" போன்றவை பெரிய பெரிய வார்த்தைகள்.

      "இது மீண்டும் நிகழ்ந்திடாதிருக்க என்ன செய்வதென்பதில் கவனம் செலுத்த சற்றே அவகாசம் கோருகிறேன்"
      என்பதே சரியான பதில்.

      Delete
    4. மன்னிப்புக் கேட்குமளவுக்கெல்லாம் இது பெரிய குறையில்லை சார்!

      வேணுமின்னா இதுக்குப் simple பரிகாரமாக, வருகிற ஜனவரிக்கு ரூ.500 விலையில் 'printing quality compensation special' (PQCS) அப்படீன்னு ஒரு இதழைத் தயார் பண்ணிடுங்களேன்? ;)

      Delete
    5. சார்..
      நான் ஒரு research scholar at Pondicherrry Central University.

      இன்று மதியம் தான் e-bay இல் ஆர்டர் செய்திருந்த இதழ்கள் கிடைத்தன..

      அப்போது அருகிலிருந்த நண்பர் -அவரும் ஒரு scholar தான்- பார்த்துவிட்டு அசந்து விட்டார் என்றே சொல்லவேண்டும்..

      '100 ரூபாயில் இவ்வளவு அழகான கதையக்கமா.. வண்ணபுத்தகமா...'

      'உலகத்தரத்தில் அதுவும் தமிழில் இப்படியான காமிக்ஸ்கள் வருகிறதா..' என அவர் மயங்கி விலாத குறைதான்..

      எதற்கு இதை கூறுகின்றேன் என்றால், நீங்கள் செய்த சாதனை அத்தகையது.. சில சங்கடங்கள் அவ்வப்போது நேருவது சகஜம் தானே..
      அதுவும் நாமெல்லாம் மனிதர்கள் தானே..

      நீங்கள் இந்தளவுக்கு feel செய்திருப்பதே, உங்களின் காமிக்ஸ் நேசமும், எங்களிடம் உங்களுக்கு உள்ள நேர்மையும், எங்களுக்கு தரமானதை, தவரில்லாததை தரவேண்டும் என்கிற அக்கறையும் தெரிகிறது.. சார்..

      We are waiting for 'ரத்தபடலம்'.......

      Delete
    6. @ Erode Vijay:

      //வேணுமின்னா இதுக்குப் simple பரிகாரமாக, வருகிற ஜனவரிக்கு ரூ.500 விலையில் 'printing quality compensation special' (PQCS) அப்படீன்னு ஒரு இதழைத் தயார் பண்ணிடுங்களேன்? ;)//

      Like.

      Delete
    7. @ Erode Vijay:

      //வேணுமின்னா இதுக்குப் simple பரிகாரமாக, வருகிற ஜனவரிக்கு ரூ.500 விலையில் 'printing quality compensation special' (PQCS) அப்படீன்னு ஒரு இதழைத் தயார் பண்ணிடுங்களேன்? ;)//


      கேப்புல கிடா வெட்டுன்னு சொல்றது இதுதானா விஜய்

      Delete
    8. ஈரோடு விஜய்@;வழக்கம் போல தவறாமல் கேப்லே வெட்டிவிடீர்கள் கெடாவை..

      Delete
    9. ஷல்லூம் ஃபெர்னான்டஸ் ஸார்... ஓரே நேரத்தில் ஓரே மாதிரியான பதில் ......ஹா...ஹா...

      Delete
    10. @ ஷல்லூம், AHMEDBASHA

      "அடேய் பேராண்டி, நீ எப்பவும் கிடாவுக்கு ஆசைப்படு; அப்பத்தான் ஒரு கோழிக்குஞ்சாவது அகப்படும்" அப்படீன்னு சொல்லிட்டு செத்துப்போன எங்க தாத்தாவின் அறிவுரையை நான் எப்படி மறப்பேன்? :D

      Delete
    11. //இது மீண்டும் நிகழ்ந்திடாதிருக்க என்ன செய்வதென்பதில் கவனம் செலுத்த சற்றே அவகாசம் கோருகிறேன் guys !//

      Sure sir! :)

      புதிய ஹீரோக்களின் கதைகளிலோ அல்லது சற்று Unique ஆன கிராபிக் நாவல்களிலோ அச்சுத்தரம் Accidental ஆக குறையும்பட்சத்தில் வாசகர் மத்தியில் கதைகளின் Receptionனையே மாற்றிவிடும் Risk உள்ளது.

      Delete
    12. மன்னிப்பு, தலைகுனிவு போன்ற பெரிய பெரிய வார்த்தைகள் தேவையில்லாதது சார்! தமிழ்காமிக்ஸ் ஜாம்பவானான உங்கள் பெருந்தன்மையை வெளிப்படுத்தினாலும் உங்களுக்கு அது அழகல்லவே!

      அவசரகதியில் செய்வதாலேயே இவ்வாறு தவறுகள் ஏற்படுவதாக கருதுகிறேன்!

      ஃபிரியா விடுங்க சார் பாத்துக்களாம்!

      Delete
  92. To: Editor,

    உங்களது நேரடியான இந்த வார்த்தைகள் எமக்குச் சங்கடத்தைத் தருகின்றன. இதோபோலத்தான் முதலிலும் ஒரு தடவை நீங்கள் உங்கள் பணியாளர்களுக்காய் மன்னிப்புக் கோரியிருந்தீர்கள் - ஒரு நல்ல கேப்டனாக.

    என்னுடைய சிறியதொரு அச்சு இயந்திரங்களோடான பழக்கத்தில், தனித்தனியே நான்கு பிளேடுகள் போடப்பட்டு 4 வர்ணங்கள் ஒன்றாய்ச சேரும் ப்ராஸஸ் (இப்போது பிளேட் மேகிங்கே இல்லாமல் நேரடியாக கணினியிலிருந்து வெப் மெஷினுக்கு ப்ராஸஸ் நடக்கிறது இல்லையா?) நடக்கும்போது - வரவேண்டிய கலர் பக்கங்களை நல்ல ரெஷல்யூஷனில் கம்பயூட்டரில் ப்ரிண்ட செய்து அச்சு இயந்திரத்துககு பக்கத்தில் ஒரு போர்டில் ஒட்டிவிடுவார்கள். ப்ராஸஸில் அதில் உள்ளது போன்றே நான்கு கலர்களும் ரிஜிஸ்டர் ஆகி வரும்வரை விடாமல் முயற்சிபபார்கள். 96-98 வீதம் துல்லியம் கிடைத்ததுமே அச்சுப்பணியை ஆரம்பிப்பார்கள்.

    ஒருவேளை உங்கள் அச்சகத்திலும் இவ்வாறு 4 ப்ளேட்கள் கொண்டு அச்சுப்பணி நடக்குமாயின், மெஷின் மெய்ண்ட்டர்களுக்கோ சூப்பர் வைசருக்கோ, ஒரிஜினல் எப்படி இருக்கிறது என்பது தெரியாமலிருக்கலாம். கணினியில் பார்ப்பதைவிட ப்ரிண்ட் செய்து கொடுப்பது அவர்களுக்கும் ஒரு 'கைட்' ஆக இருக்கும். அந்த க்வாலிட்டி வர முயற்சிப்பார்கள். நீங்களும்ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அருகிலிருக்கவேண்டிய அவசியமிராது.

    அட்டைப்படம் அச்சிடுவதில் இப்படியொரு நடைமுறையை நீங்கள் கைக்கொள்வதாக இருக்கலாமென்று நினைக்கிறேன். பெரும்பாலும் அவை இப்படி சொதப்புவதோ 3டி எபெக்ட் காட்டுவதோ இல்லை. அதையே உள் பக்கங்களுக்கும் நடைமுறைப்படுத்தலாமே? (இத்துடன் எனது அதிகப் பிரசங்கித்தனம் முடிகிறது. உங்களுக்கே பாடம் எடுப்பதாக நினைத்துவிடாதீர்கள். எனது அறிவுக்குப் பட்டது. பகிர்ந்திருக்கிறேன். அம்புட்டுதேன்!)

    ReplyDelete
    Replies
    1. Podiyan : ஒற்றை ஒற்றை வண்ணமாய் அச்சிடுவது புராதன முறை ! ஆனால் சொல்லப் போனால் ஒவ்வொரு வர்ணமும் உலர அவகாசம் தந்து அச்சிடும் அந்தப் பழமையான முறையே best !

      இன்றெல்லாம் நவீன ஆப்செட் இயந்திரங்களில் ஒரே நேரத்தில் 4 வண்ண அச்சு நடைபெறுகிறது ! பணியாளர்கள் அனுபவசாலிகளாக இல்லையெனில் - எந்த வண்ணம் அதிகமாயுள்ளது ; எதை மிதப்படுத்த வேண்டுமென்ற நிதானம் தவறாகி விடும் ! எல்லா நேரங்களிலும் அச்சுக்கு வரும் முன்னே 4 கலர் printouts வழங்கப்படுவது அச்சுத் துறையில் ஒரு மாமூலான procedure !

      உங்களின் இன்னொரு வினவல் - அட்டைப்பட அச்சில் குளறுபடி நேர்வதில்லையே என்பது பற்றி ! இருப்பதில் சுலபம் - கனத்த காகிதங்களில் / அட்டைகளில் அச்சிடுவது ! இருப்பதில் பெரிய மண்டை நோவு - ஆர்ட் பேப்பரில் அச்சிடுவது !

      Delete
  93. Let's make "Raththa Padalam" Rock next Month with Nice Printing Sir!

    ReplyDelete