Sunday, April 07, 2013

குளிரூட்டும் கதிரவன்...!


நண்பர்களே,

வணக்கம் ! தலைப்பைப் பார்த்த பின்னே, "வறுத்தெடுக்கும்  வெயிலின் உக்கிரத்திற்கு இன்னொரு விக்கெட் போச்சா ?" என்ற ஐயம் அவசியமில்லை ! கதிரவன் வெப்பத்தை மாத்திரமல்ல...இதத்தைக் கூட தர வல்லது என்பதை உணர்த்திடப் போகிறது  - நம் நிறுவனத்தின் புதியதொரு குழந்தை ! வரும் நாட்களில் நமது மறுபதிப்புகளும் கூட முழு வண்ணத்தில் அழகாய் மிளிரக் காத்திருப்பதால் - வழக்கமான அந்த காமிக்ஸ் கிளாசிக்ஸ் லோகோவிலிருந்து விலகி, ஒரு புன்சிரிப்புக் கதிரவனின் குடையினடியில் தஞ்சமாகிறோம் ! SUNSHINE LIBRARY - வண்ணத்தில் வரவிருக்கும் நமது மறுபதிப்புகளை மாத்திரமன்றி, இவ்வாண்டு நாம் கூடுதலாய் திட்டமிட்டுள்ள +6 இதழ்களையும் தாங்கி வந்திடும். 

இந்த +6 இதழ்கள் லயன்-முத்து / CC சந்தாக்களின் அங்கமல்ல என்பதால் அவற்றை இது போல் பிரத்யேகமானதொரு லேபலின் கீழே கொணர்வது சிக்கலற்றது என்று ஜூனியர் எடிட்டர் அபிப்ராயப்பட, எனக்கும் அது சரியெனத் தோன்றியது ! உதயமாகும் இந்த சன்ஷைன் லைப்ரரியில் இப்போதைக்கு லோகோவைத் தவிர்த்துப் பெரியதொரு புதுமை கிடையாதென்றாலும், வரும் மாதங்களில் இதனில் சில surprises காத்துள்ளன ! 'செய்து விட்டுச் சொல்லுவோம் ' என்ற நமது தற்சமயத் தாரக மந்திரமே இங்கும் அமல் என்பதால், உங்கள் யூகங்களுக்கும், கற்பனைகளுக்கும் வேலை கொடுத்து விட்டு அடுத்த topic-குக்குத் தாவிடுகிறேன் ! 



பல நாள் எதிர்பார்ப்பான "டைகர் ஸ்பெஷல்-1" இப்போது உங்கள் முன்னே ! வழக்கம் போல் ஒரிஜினல் அட்டைப்படத்தினை improvise செய்திட முனைந்துள்ளோம் ! (அப்படியே சுடுவதில் துளியும் த்ரில் இருப்பதில்லை என்பதால் முன்னட்டைக்கு மாத்திரமேனும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நமது 'டச் ' கொணர  முயற்சிக்கிறோம் !) நேரில் பார்க்கும் பொது ரொம்பவே classy ஆகத் தோன்றுவது போல் எனக்கொரு எண்ணம் - but  அது காக்கா..பொன் குஞ்சு....சமாச்சாரமா ? என்பதை நீங்கள் தான் சொல்லிட வேண்டும் ! 

"இரும்புக்கை எத்தன்" + "பரலோகப் பாதை" (வரிசைக்கிரமம் இம்முறை சரி தானே சாத்தான்ஜி ?) கதைகளின் வண்ண மறுபதிப்புகள் தானென்ற போதிலும், முழு வண்ணத்தில் - பெரிய சைசில் பார்த்திடும் பொது, நமது black & white , நியூஸ்பிரிண்ட் பார்முலாவில் எப்படித் தான் யுகங்களாய் உழன்று கிடந்தோமோ என்ற ஆற்றமாட்டாமை எழுவதைத் தவிர்த்திட இயலவில்லை.Better late than never.. என்ற முதுமொழி தான் நினைவுக்கு வந்தது ! வண்ணத்தில் சில ஸ்கேன் பக்கங்கள் உங்கள் பார்வைக்கு இதோ :  



கதையைப் பொருத்த வரை நான் புதிதாக சிலாகிக்க விஷயம் ஏதுமில்லை என்ற போதிலும், மொழிபெயர்ப்பைப் பற்றியதொரு விஷயம் என்னை சலனப்படுத்தாமலில்லை ! இந்தாண்டு திட்டமிடப்பட்டுள்ள இதழ்களின் எண்ணிக்கை ஏகம் என்பதால், நேரமின்மை பிரதான காரணமாகவும், பழைய (ஒரிஜினல்) மொழிபெயர்ப்பே தான் வேண்டுமென்ற கோரிக்கை இன்னுமொரு காரணமாகவும் அமைந்திட்டதால் - ஈயடிச்சான் காப்பியே செய்துள்ளோம். ஆனால் அந்த முந்தைய translationகளைப் பார்த்திடும் போது, தற்சமய ரசனைக்கேற்ப இன்னமும் மெருகூட்டியிருக்கலாமே என்ற ஆதங்கம் எழாதில்லை ! உதாரணம் சொல்வதானால் - கதை முழுமைக்கும், டைகரும், ஜிம்மியும், ரெட்டும் சுத்தத் தமிழில் 'மாட்லாடுவதைப்' போல் அன்றைக்கு எழுதி இருக்கிறேன்.அதனை சற்றே பேச்சு வழக்குப் பாணிக்கு மாற்றியிருக்கும் பட்சத்தில் அந்த மண்ணின் வாசனை இன்னமும் தூக்கலாய் இருந்திருக்க வாய்ப்புண்டு என்று மனதுக்குப்  பட்டது ! தவிரவும், கதையின் முதலிரண்டு அத்தியாயங்களும் இந்த அழகுத் தமிழ் பாணியில் இருப்பதனால், தொடரும் அடுத்த இரு (புதுப்) பாகங்களுக்குமே நமது அழுக்குக் கௌபாய்களுக்கு வேறு வித பாஷையை நல்கிடுவது பொருத்தமற்றுத் தெரியும் ! So - "இரத்தத் தடம்" இதழிலும் இந்த பாணியே தொடர்வது அவசியமாகிறது ! எனினும், இயன்றளவிற்கு டைகர் & கோ.வின் கதாப்பாத்திரங்களின் தன்மையைப் பிரதிபலிக்கும் மொழிநடையை தந்திட முயற்சித்துள்ளேன் ! இந்த சங்கதியினை எழுதிடுவது அவசியம் தானா -வேண்டாமா ? என்ற தயக்கம் ஒரு நொடிக்கு என்னுள் இருந்திட்டது  நிஜமே ! ஆனால் எப்போதும் போல் மனதுக்குப்பட்டதை பகிர்ந்திடுவதில் தவறில்லையே      என்று தோன்றியது ! 

இதழின் இறுதிப் பக்கங்களில் டேரா போட்டிடுவது நமது மதி மந்திரியாரே - ஒரு மறுபதிப்புக் கதையோடு ! "இரத்த நகரம்" (லயன்) இதழில் வெளியான "கரைப்பார் கரைத்தால்.." சிறுகதை, புதியதொரு மொழிபெயர்ப்போடு - ""கண்ணா..கலீபா தின்ன ஆசையா..?" என்ற நாமகரணத்தோடு வருகிறது ! 

நேற்றைய பதிவைப் பின்தொடர்ந்து இப்பதிவும் உள்ளதால் - உங்கள் பின்னூட்டங்களை அந்தந்த இதழுக்கேற்ப இங்கும் அங்குமாய் பதிவிடக் கோருகிறேன் ! Let's keep both these posts alive ! 

ஞாயிறென்றும் பாராது, பரபரப்பாய் நமது பணியாளர்கள் சந்தாப் பிரதிகளைப் பார்சல் செய்து வருகின்றனர் - சிறிதும் முகம் சுளிக்காது ! நிஜமான team effort என்பது இது தானோ ? புதன் வரை நமது அலுவலகம் விடுமுறை என்பதால், உங்களின் போன் அழைப்புகளுக்கோ ; மின்னஞ்சல்களுக்கோ ; e-bay ஆர்டர்களுக்கோ கவனம் தந்திட எவரும் இருந்திட மாட்டார்கள். So புதன் வரை பொறுமை ப்ளீஸ் ! Happy Sunday folks ! See you soon ! 

316 comments:

  1. Vijayan sir,
    Great post. Eagerly awaiting to get this book.
    Regards,
    Mahesh kumar

    ReplyDelete
    Replies
    1. குளிரூட்டும் கதிரவன்...!
      Wow! what a poetic heading!

      Delete
  2. Vanakkam editor ,

    ithu than en muthal varukai...meendum meendum padikka thondrum unkal eluthukkalukku oru periya sabash..

    ReplyDelete
  3. நல்வரவு இளஞ் சூரியனே!

    ReplyDelete
  4. Congrats to aravind welcome abroad, logo looks like kalainyar tv logo...need to do some tinkering work. Best wishes to sunshine library

    ReplyDelete
  5. ஆழி சூழ் உலகைக் காக்கும் சூரியனைப் போன்று தங்கள் காமிக்ஸ் கதிர்களை உலகெங்கும் பாய்ச்ச வருகிறது சன் ஷைன் லைப்ரரி! நல்வரவு! ஜூனியர் எடிட்டரின் ராஜாங்கம் அருமையாக அமையப் போகிறது! வாழ்த்துக்கள் விக்ரம்! வண்ணங்களாக வாழ்வு மலர வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  6. நண்பர் விக்ரம் தமிழ் காமிக்ஸ் உலகில் இருளை கிழிக்க நான் தயார் என என வருவது போல இருக்கிறது !
    என்ன என்ன அற்புதங்கள் உள்ளனவோ அவை எல்லாம் ,புன் சிரிப்பு கதிரவன் ஒளியில் வானவில்லாய் கதைகள் ஜொலிக்க போவது உறுதி !விரைந்து வா இளம் கதிரோனே !அமர்க்களமாய் துவங்கயுள்ளது உங்களது வரவு ! சூரியன் மறைவதில்லை மேற்கு கௌபாய் உலகிலே ,அருமை ,எங்களை தூங்க விட கூடாது அவ்வளவுதான், தயங்காமல் கதைகளை போட்டு தாக்கி கொண்டே இருக்க வேண்டும் !அப்போ இனி மாதம் இரண்டு எதிர்பார்க்கலாமா ? இளம் கதிரவன் பதிலளித்தால் நன்று !

    ReplyDelete
    Replies
    1. +6 ல் நமது ஆசிரியர் கூறிய சுட்டி லக்கி இரண்டு ,டெக்ஸ் ஒன்று எனில் மீதம் மூன்றில் டின் டின் ,astrix கதைகளை எதிர்பார்த்திடலாமா ?நமது முத்து என்றாலே நினைவிற்கு வருபவர் இரும்புக்கை மாயாவி,லயன் என்றாலோ ஸ்பைடர்தாம் துவக்கத்தில் நச்சென முத்திரை பதித்த நாயகர்கள் !அது போன்ற பாண்டஸி வரிசைகளை எதிர்பார்க்கலாமா !அல்லது தற்போதைய கலக்கல் நாயகர்களான லார்கோ,ஷெல்டன் போல யதார்த்த வரிசைகளை எதிர்பார்க்கலாமா !

      Delete
    2. சார்,

      உங்களுடைய அறிவிப்பின் படி,

      +6 இதழ் #1 – சுட்டி லக்கி
      +6 இதழ் #2 – சுட்டி லக்கி
      +6 இதழ் #3 – டெக்ஸ் வில்லர்
      +6 இதழ் #4 – * அறிவிக்கவில்லை
      +6 இதழ் #5 – * அறிவிக்கவில்லை
      +6 இதழ் #6 – * அறிவிக்கவில்லை


      இதில் இதழ் # 3 டெக்ஸ் வில்லரின் 50 ஆவது இதழ். நண்பர்கள் அனைவரும் (நான் உட்பட) டெக்ஸ் இன் 50 ஆவது இதழ் ஒரு ஸ்பெஷல் இதழாக இருக்க வேண்டும் என எண்ணுகிறோம்.

      இதழ் #3 & #4 – இரண்டையும் ஒன்று சேர்த்து பெரிய புத்தகமாக டெக்ஸ் இன் இரண்டு கதைகளுடன் ஸ்பெஷல் இதழாக Rs. 100 விலையில் வெளியிடலாமே சார் ?

      நமது ஆஸ்தான நாயகர் டெக்ஸ் இன் 50 ஆவது இதழ் உங்கள் கையில் சார் :)

      Delete
    3. Yes Sir. We need Tex super special for 50 th book..

      Delete
  7. அட்டை படம் அதனை விட குளுமையாய் இருக்கிறது ,நிஜத்தை பிரதிபலிப்பதாய் !அட்டகாசம் !சார் தங்க கல்லறையை விட அற்புதமாய் இருக்கும் போல உள்ளது வண்ணத்தின் வீரியத்தில் நன்றிகள் என்றென்றும் !

    ReplyDelete
  8. Wow. Sunshine library.. wonderful name for the book.... eagerly waiting for the book.

    SPECIAL thanks to your staff for working on Sunday to entertain us.

    Wish th3m, and you for the happy holidays....

    ReplyDelete
  9. அட்டைப் படம் மிக அருமை! ஆனால்....

    //புன்சிரிப்புக் கதிரவனின் குடையினடியில் தஞ்சமாகிறோம்//
    பெரும்பாலும் சீரியஸ் கதைகளை தாங்கி வரும் நம் இதழ்களுக்கு சுட்டி டிவி லோகோ ஸ்டைலில் இப்படி ஒரு குழந்தைத்தனமான லோகோவா?! :( :( :(

    ReplyDelete
    Replies
    1. அதுதானே இளைய தலைமுறை வாசகர்களைக் கவரும். வெறுமனே சிறுவர்களை கவர ஏற்பாடு செய்யுங்கள் என்று நாம் சொல்லிக்கொண்டேயிருந்தால் எப்படி? இப்படி ஏதாவது செய்தானே உண்டு, இல்லையா நண்பா?

      Delete
    2. மற்றபடிக்கு, Sunshine Publications என்பது உங்கள் பதிப்பகத்தின் அயல்நாட்டு தொடர்புக்கான பெயர் என்று நினைக்கிறேன்?! எனவே, Sunshine Library பொருத்தமான பெயர்தான்!! வாழ்த்துக்கள்! :)

      Delete
    3. //இந்த +6 இதழ்கள் லயன்-முத்து / CC சந்தாக்களின் அங்கமல்ல என்பதால் அவற்றை இது போல் பிரத்யேகமானதொரு லேபலின் கீழே கொணர்வது சிக்கலற்றது//
      கொஞ்சம் குழப்புகிறதே சார்?! இந்த இதழுக்கு (டைகர் ஸ்பெஷல்!) தனியே பணம் அனுப்ப வேண்டுமா? CC சந்தா கட்டியவர்களுக்கு இது கிடைக்காதா? அப்படியென்றால் தனியே Ebay மூலம் வாங்க வேண்டுமா?

      Delete
    4. Karthik Somalinga : இந்த 5 மறுபதிப்புகளுக்கு பணம் அனுப்பிடத் தேவை இல்லை ; +6 இதழ்கள் வரும் போது மாத்திரமே !

      Delete
    5. டியர் எடிட்டர்ஜீ !!!

      நண்பர் சாக்ரடீஸ் தனது மொபைலை உங்களுக்கு gift -ஆக அனுப்பிவிட்டாரா:-):)

      Delete
    6. விளக்கத்திற்கு நன்றி! காமிக்ஸ் க்ளாசிக்ஸ் ப்ராண்ட் இனி தொடருமா? அதில் என்ன வகையான கதைகள் வரும்?

      Delete
  10. SUNSHINE LIBRARY - வாழ்த்தி, வரவேற்கிறோம்!

    ReplyDelete
  11. டியர் எடிட்டர்ஜீ !!!

    சன்ஷைன் லைப்ரரி...?இந்த பெயர் பல்வேறு யூகங்களுக்கும்,கிசுகிசுக்களுக்கும் நிச்சயம் வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை:-):-) லோகோ மிக பிரமாதம் ஸார்.இந்த ஐடியாவின் பிதா"மகனாகிய" ஜூனியர் எடிட்டர் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் !!!

    ReplyDelete
  12. வண்ணத்தில் சித்திரங்கள் தெளிவாய் தெரிகிறது அட்டகாசம் !ரயில் தண்டவாளங்களை விரித்திருப்பது என ...உண்மையாக பல காலம் இருளில் மூழ்கி கருப்பு வெள்ளையை கட்டி அழுதிருக்கிறோம் என்பது புலனாகிறது !வண்ணத்தின் வீச்சு வீரியமிக்க ஒளியாய் விழிகளில் ஒளிர்வது அற்புதமே !
    பேச்சு வழக்கை விட பழைய மொழி பெயர்ப்பே சிறப்பாய் இருக்குமென படுகிறது !இல்லை,அவ்வாறு மாற்றினால் தயவு செய்து சென்னை நண்பர்கள் மன்னிக்க (குறிப்பாய் சைமன் அவர்கள்),சென்னை நடையில் மட்டும் வேண்டாம் !சாதாரண நடை தேந்தெடுங்கள் !டப்பிங்கில் சென்னை தமிழில் குதறிய ஜாக்கியின் பல படங்கள் உண்டு !

    ReplyDelete
    Replies
    1. நமது காமிக்ஸ் லைப்ரரியில் சூரியன் தொடர்ந்து ஒளி வீசும் அற்புதமான பெயர் sunshine library
      வாழ்த்துக்கள் சூரியன் போல எப்போதும் தகதகவென பிரகாசிக்க ~!

      Delete
    2. //சென்னை நடையில் மட்டும் வேண்டாம் !சாதாரண நடை தேந்தெடுங்கள் !டப்பிங்கில் சென்னை தமிழில் குதறிய ஜாக்கியின் பல படங்கள் உண்டு !//
      இன்னாப்பா நீ நம்ம மெட்ராஸ் தமிழையே கலாய்க்கிரே?

      Delete
    3. ஆஹா அப்படியெல்லாம் செய்வேனா ,நமது சென்னை தமிழ் காமிக்ஸிலும் வந்து தனது பெயரை கெடுத்துக்க வேண்டாமே என்றுதான்....

      Delete
  13. athellam sari naina! mayavi, spider, jony nero dijest enna aachu? etha ethayo ellam color la poduriye atha potta unaku punniyama povum. aasa kaati emathi putiye naina!

    ReplyDelete
  14. Dear Sir,

    ஒரிஜினல் அட்டையை விட நம் டைகர் அட்டை கலர் காம்பினேஷன் சூப்பர் சார். டைகர் கதையைத்தான் முதலில் படிக்க ஆரம்பித்துள்ளேன்.

    SUNSHINE LIBRARY நீண்ட ஆயுளுடன் கூடிய மெகா ஹிட்டாக வாழ்த்துக்கள்.

    0096 - டைகர் ஸ்பெஷல் 1 & ஒரு ஒப்பந்தத்தின் கதை - http://tamilcomics-soundarss.blogspot.in/2013/04/0096-1.html

    ReplyDelete
    Replies
    1. Soundar SS & family, தல பங்குனி பொங்கல் வாழ்த்துகள்

      Delete
    2. சௌந்தர் நீங்கள் புத்தகம் வாங்கி வந்தது மனைவிக்கு தெரியுமா?
      ஒரு ஆர்வம் தான் தெரிந்துகொள்ள.:D

      Delete
  15. சன்ஷைன் லைப்ரரிக்கு நல்வரவு.

    லோகோதான் ஒரு பிரபல மீடியா குழுமத்தினை நினைவுப்படுத்துகிறது. சிறிதளவு மாற்றுதல் நலம். நான் படிக்கும் மூன்றாவது டைகர் கதை என்பதால் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  16. நிஜமாகவே திருச்சியின் 106டிகிரி வெயில் தகிப்பில் கிடைத்த சர்பத் சார் சன்ஷைன் லைப்ரரி! வாழ்த்துக்கள்!சிறுவயதில் வாங்கி படித்து மகிழ்ச்சியாக இருந்த இளமைகாலத்தின் ரீமிக்ஸ்ஸாக இதை நான் பார்க்கிறேன்! சிவகாசி அம்மன் கோயில் விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்!இன்னும் பல புதிய கதைகள், முயற்சிகள் எடுத்து நம்ம காமிக்ஸ் குழுமம் மேன்மேலும் வளர இறைவனை வேண்டிகொள்கிறேன்!

    ReplyDelete
  17. ஆஹா! ஆஹா!

    புதிதாய் களம் காணவிருக்கும் 'SUNSHINE LIBRARY'யை வாழ்த்தி வரவேற்கிறோம்!

    அது அது நடக்கவேண்டிய நேரத்தில் நடக்குமென்பார்களே, அது இதுதான் போலிருக்கிறது! :)

    புதிய லோகோ நன்றாகவே இருந்தாலும், காமிக் லவர் கூறியதைப் போலவே, ஒரு பிரபல மீடியா குழுமத்தின் லோகோவை ஞாபகப் படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை! சரி, அதனால் என்ன, எங்களுக்குத் தேவை எண்ணற்ற காமிக்ஸ்களே; லோகோவில் என்ன இருக்கிறது! ;)

    எதிர்காலத்தில் சிறுவர்களுக்கான(என்னைப் போன்ற) கதைகள் நிறைய வர இருப்பதன் அறிகுறியாக அந்தச் 'சிரிக்கும் இளம் சூரியன்' லோகோ கண் சிமிட்டுவதைப் போலுள்ளதே?! :)

    ReplyDelete
  18. Vijayan sir and vikram sir.... reminds, Tex Willer and kid Carson....... welcome junior lion......

    ReplyDelete
  19. விஜயன் சார், உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் பணியாளர்கள் அனைவருக்கும் பங்குனி பொங்கல் நல்வாழ்த்துகள்!

    I am really missing the Virudhunagar பங்குனி பொங்கல் this time.

    ReplyDelete
  20. விஜயன் சார் @
    இந்தாண்டு திட்டமிடப்பட்டுள்ள இதழ்களின் எண்ணிக்கை ஏகம் என்பதால், நேரமின்மை பிரதான காரணமாகவும், பழைய (ஒரிஜினல்) மொழிபெயர்ப்பே தான் வேண்டுமென்ற கோரிக்கை இன்னுமொரு காரணமாகவும் அமைந்திட்டதால் - ஈயடிச்சான் காப்பியே செய்துள்ளோம்.

    I hope at least you did the spell check on this old translation.

    But I am not happy with your decision on using the same old translation for this reprint and next part of the stories.

    Sunshine Publications ->> எங்க நம்ப காமிக்ஸ்-அ "சன்" குரூப் வாங்கி விட்டதோ என பயந்து போய் விட்டேன் :-)

    ReplyDelete
  21. நமது லயன் குழுமத்தின் புதிய குழந்தை "Sunshine" ஐ மகிழ்வுடன் வரவேற்கிறோம்.

    வாழ்த்துக்கள் சார் !!! உங்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும் எங்களது ஆதரவு என்றும் உண்டு.

    புதிய குழந்தையை கைகளில் ஏந்தி மகிழ இன்னும் இரு தினங்கள் ஆகுமா ? காத்திருக்கிறோம் ...

    ReplyDelete
  22. சார்,

    உங்களுடைய அறிவிப்பின் படி,

    +6 இதழ் #1 – சுட்டி லக்கி
    +6 இதழ் #2 – சுட்டி லக்கி
    +6 இதழ் #3 – டெக்ஸ் வில்லர்
    +6 இதழ் #4 – * அறிவிக்கவில்லை
    +6 இதழ் #5 – * அறிவிக்கவில்லை
    +6 இதழ் #6 – * அறிவிக்கவில்லை


    இதில் இதழ் # 3 டெக்ஸ் வில்லரின் 50 ஆவது இதழ். நண்பர்கள் அனைவரும் (நான் உட்பட) டெக்ஸ் இன் 50 ஆவது இதழ் ஒரு ஸ்பெஷல் இதழாக இருக்க வேண்டும் என எண்ணுகிறோம்.

    இதழ் #3 & #4 – இரண்டையும் ஒன்று சேர்த்து பெரிய புத்தகமாக டெக்ஸ் இன் இரண்டு கதைகளுடன் ஸ்பெஷல் இதழாக Rs. 100 விலையில் வெளியிடலாமே சார் ?

    நமது ஆஸ்தான நாயகர் டெக்ஸ் இன் 50 ஆவது இதழ் உங்கள் கையில் சார் :)

    ReplyDelete
    Replies
    1. இதை நான் வழி மொழிகிறேன் ..

      Delete
    2. நண்பர் ப்ளூவின் ஆசையை நானும் ஆமோதிக்கிறேன்; மிகப் பலமாக!

      ஆனால், அதில் ஒரு லாஜிக் மிஸ்டேக்! அடுத்தடுத்த மாதங்களில் இரண்டு 'சுட்டி லக்கி' வந்தால்கூட ஜூன் முடிந்து, ஜூலையில்தானே டெக்ஸ் +6ல் அடியெடுத்து வைக்கமுடியும்?அதற்கு முன்பே ஜூனில் 'லயனில்' வெளிவரவிருக்கும் 'பூதவேட்டை'தானே டெக்ஸுக்கு 50வது இதழாகப் போகிறது?

      Delete
    3. ஆசிரியர் ஏற்கனவே 360 பக்க டெக்ஸ் அடுத்து என அறிவித்துள்ளாரே !இப்போதைய தரத்தில் திக்கான புத்தகத்தை நினைத்தாலே ....அடடா ...ஏற்கனவே படைப்பாளிகளே வியந்த நமது புத்தக வடிவமைப்பு ,அட்டை படம்,தரம் ஆக இப்போது இந்த 50 வது இதழ் சொல்லவும் வேண்டுமோ !அந்த அட்டை படத்தை அடித்து கொள்ள முடியாது ,இப்போது அதை விட சிறப்பாக எனும் போது ஆவலை கிளப்புகிறது !அவர்களும் கூட எதிர் நோக்கி காத்திருக்கலாம் !

      Delete
    4. // 360 பக்க டெக்ஸ் அடுத்து என அறிவித்துள்ளாரே//

      அது 2014 ஜனவரியில்!

      Delete
    5. ஆம் நண்பரே அதுதான் அடுத்த டெக்ஸ் கதை என கூறியதாய் ஞாபகம் !

      Delete
    6. 480 பக்கங்களில் டெக்ஸின் 50வது இதழ் வேண்டுமென்று கேட்டபோது எடிட்டர் கூறிய பதிலது!

      Delete
    7. ஆம் எனக்கென்னவோ இதுதான் முதலில் என்றே தோன்றுகிறது !

      Delete
    8. we need Tex 50th mega special book

      Delete
  23. இந்த இரண்டு அட்டை படத்தில் எது பெஸ்ட் என போட்டி வைத்தால் குழப்பம் தான் மிஞ்சும் என்பது கண் கூடு .இங்கே பார்த்து விட்டே சூப்பர் என்றால் புத்தகத்தில் .....

    எப்படியோ அழுது ,அழுது கேட்டும் புத்தகம் வந்தவுடன் இரும்பு கை எத்தன் & பரலோக பாதை என்று சரியாக பாகம் வைத்து கூறி எனது வயற்றில் பாலை வார்த்திர்கள்....:)

    ஆனால் ஒன்று சார் ...டைகர் கதையை வந்தவுடன் இந்த முறை ரசிப்பது சித்தரத்தை மட்டும் தான் .படிப்பது கிளைமாக்ஸ் பாகமும் வந்தவுடன் தான் .

    இரண்டு புத்தகத்திலும் மந்திரி கதை போனஸ் ஆக வருவதிலும் மிக்க மகிழ்ச்சி .

    ReplyDelete
  24. வெல்கம் சன்ஷைன் லைப்ரரி !

    வரவிருக்கும் இ. கை எ & ப. பா. இரண்டையும் வண்ணம் + சைஸ் + தரம் என்று ஒட்டுமொத்தத்தையும் பிரம்மிப்போடு பார்த்துவிட்டு 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கதைகளையா அந்த தரத்தில் படித்தோம் என்று நொந்து போக அதிக வாய்ப்புண்டு ?

    இதயம் பலவீனமானவர்கள் எதற்கும் கொஞ்சம் உஷார்!

    எதையும் தாங்கும் இதயம் வேண்டுவதைவிட, வேறென்ன செய்ய..?

    25 ஆண்டுகளுக்கு முன்பு இதுப்போல் கிடைக்கலையே என்று வருந்துவதா? அல்லது இப்போதாவது கிடைக்கிறதே என்று எண்ணி மகிழ்வதா? இப்போ நான் என்ன செய்ய...?

    ReplyDelete
    Replies
    1. சாரி, ரொம்ப உணர்ச்சி வசப்பட்டதால 16 ஆண்டுகளுக்கு பதில் 25 ஆண்டுகள் என்று தவறுதலாக பதிவாகிவிட்டது! பொறுமை ப்ளீஸ்

      Delete
  25. நமது புதிய வருகை "Sunshine Library" இதழுக்கு என் வாழ்த்துக்கள்.

    டைகர் ஸ்பெஷல் அட்டைப்படம் top. உண்மையிலேயே ஒரிஜினல் நீல கலர் பேக் கிரௌண்டை விட இந்த டார்க் ப்ரௌன் கலர் சூப்பராக உள்ளது.இந்த டார்க் ப்ரௌன் கலரில் ஏதோ ஒரு வசீகரம் உள்ளது (உதாரணம் : சிகப்பாய் ஒரு சொப்பனம் அட்டைப்படம் இப்போது டைகர் ஸ்பெஷல், நமது ஓவியரும் டிசைனரும் கலக்குகிறார்கள்)

    ReplyDelete
  26. Welcome sunshine.
    Congrats and thanks to junior editor Vikram.

    By the way vijayan sir, +6, +5 and the fitment of these into the subscription concept is confusing.
    whether we should send additional money to +5. because +6 and +5 is different ? If so how much ?
    Please clarify.

    ReplyDelete
  27. By naming it as sunshine library - it gives a proper name for these continous stories.

    As everyone else had mentioned logo remains the popular media - but I think if you do anything with sun then automatically it will remind sun group because there are everywhere.

    ReplyDelete
  28. Editor sir,
    Cover art is again top notch, because these books are going to be as a separate sunshine library issues - character introduction will be a good idea to have. So that people who doesn't know about capt blueberry can benefit from that introduction.

    ReplyDelete
  29. அப்புறம் மேலே நமது லயன் லோகோ உள்ளது ,முத்து உள்ளது sunshine library லோகோவையும் இணைத்து விடுங்கள் !

    ReplyDelete
    Replies
    1. லோகோ நன்றாகவே உள்ளது ,எனினும் நமது தனிதன்மை வேண்டும் என நண்பர்கள் கூறுவது போல இருந்தால் ன்றாய் இருக்கும் !லோகோவிலோ அல்லது லோகோவின் வண்ணத்திலோ நமது தனித்தன்மை பளிச்சிட்டால் நன்றாய் இருக்குமே !

      Delete
  30. எனக்கென்னவோ... SunShine Library அடுத்த வருடம் ஒரு முழுமையான சிறுவர் மாத இதழாக மாறிவிடும் சாத்தியக்கூறு அதிகமிருப்பதாக உள் மனசு சொல்கிறது! ;)

    ReplyDelete
    Replies
    1. அந்த பட்ச்சியின் சூப்பை குடித்ததன் விளைவு தெரிகிறது !

      Delete
    2. அதேசமயம், +6 இதழ்களும் அடுத்த வருடங்களில் லயனில் ஒரு அங்கமாக அமுங்கிப்போய் விடுமோ என்ற பயமும் எனக்கு கூடவே எழுகிறதே?

      ஐய்யோ... விஜயன்னு பேர் வச்சிருக்கும் யாராவது எனக்கு ஒரு ஆறுதல் சொல்லுங்களேன்...

      Delete
    3. // பட்சியின் சூப்பைக் குடித்ததன் விளைவு தெரிகிறது //

      ம்... பானைக்குள்ளே இருக்கும் தண்ணியை கூழாங்கற்களைப் போட்டு நிரப்பித் தண்ணி குடிக்கணும் போலிருக்கே எனக்கு...

      Delete
    4. @Erode Vijay,
      So is my understanding correct...
      From 2014 it will be like this

      lion and muthu = 12 issues per year
      The current so called +6 will become + 12 = 12 issues per year
      sunshine library which is the so called +5 = 12 issue per year
      and subscriptions are separate for each of them

      so we will get total 36 issues per year
      and we will get a bumper nbs style issue which is once in a year.

      Delete
    5. Organicyanthiram,
      இது மட்டும் நிறைவேறினால் ஆஹா - 3 புத்தகம் ஒரு மாதத்தில்.

      Delete
    6. சென்ற வருடம் மாதம் ஒன்றே !இந்த வருடம் இனி மேல் மாதம் இரண்டு, அடுத்த வருடம் மாதம் மூன்று !ஆஹா !

      Delete
    7. @v Karthikeyan and Steel claw.
      உண்மையிலேயே , இது ஒரு மகிழ்ச்சியான செய்தி . அடுத்த வருடத்திலிருந்து 3 காமிக்ஸ்கள். Great. Great. Great.

      Delete
    8. ஆர்கானிக் யந்திரத்தைப் போலவே, சிவகாசியின் அச்சு இயந்திரமும் பிஸியாக இருந்தால் கொண்டாட்டம்தானே! :)

      Delete
    9. mtuhalla koodangulatha open pannungappaaa.. appo than 3 sathiyamagum....

      Delete
  31. sunshine library நிரம்பிப் பெருக வாழ்த்துகிறேன்.வாசிப்புப் பழக்கம் அருகி வரும் இக்காலத்தில் மூன்றாம் தலைமுறையாக கத்திமேல் பயணம் போல காமிக்ஸ் வாசிப்பை மட்டுமே நம்பி ஒரு இதழ் வருகிறதென்றால் அதற்கு வெறும் வியாபார சிந்தனைகள் மட்டுமல்லாது கட்டுக்கடங்கா காமிக்ஸ் நேசிப்பு இருந்தாலே இது சாத்தியம்..உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் இந்த காமிக்ஸ் ஆர்வம் இருப்பது தெரிந்த விசயம்..ஆனால் உங்கள் மகன் விக்ரமிற்கும் இதே காமிக்ஸ் நேசிப்பு இருந்ததாயின் என்னைப் போன்ற தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே... ஏன் இவ்வளவு விரிவாகச் சொல்கிறேனென்றால், என் மகளையும் மகனையும்(முறையே 13 & 10 வயது) எந்தவொரு கதைப் புத்தகத்தையும் படிக்க வைக்குமுன் பெரும்பாடு படவேண்டி உள்ளது.. இப்போதுதான் அவர்களுக்கு மதியில்லா மந்திரி,லக்கிலூக்,சிக்பில் போன்ற கதைகளை நகைச்சுவையாக வாசித்துக் காட்டி ஒருவழியாக சில கதைகளை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறேன்..இயற்கையாகவே வாசிப்புத் தேடல் உள்ள குடும்பத்தில் பிறப்பது ஒரு வரமெனவே கருதுகிறேன் சார்…

    ReplyDelete
  32. # எனக்கு புக்ஸ் ரொம்ப ரொம்ப பிடிக்கும் .அதுக்கு அப்பா தான் காரணம் .டிவி பார்க்கிற நேரத்தில் புக்ஸ் படிக்கச் சொல்லுவார் .காமிக்ஸ் தான் முதலில் படிக்க ஆரம்பித்தன்.படங்களோட கதை சொன்ன விதம் ரொம்பவே பிடித்தது .#

    s .ராம கிருஸ்ணனின் சிறு கதைகளை ஆங்கிலத்தில் மொழி ஆக்கம் செய்த 8 வயது சிறுமி பேட்டி .

    நண்பர்களே ,உங்கள் வாரிசுகளுக்கும் இவரின் அப்பா போல ....கஷ்டப்பட்டாவது காமிக்ஸ் படிக்கும் வழக்கத்தை பழக்க படுத்துங்கள் .உங்கள் வாரிசுகளின் பேட்டியும் விரைவில் ....

    ReplyDelete
  33. நண்பர் விஜயராகவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் அவர் எல்லா வளமும் பெற்று நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இந்த நாளில் நமது புத்தகமும் புதிதாய் பிறந்த ஒன்று அவரை சென்றடைய புறப்பட்டுள்ளது !பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே !

      Delete
  34. இன்று தனது 38வது பிறந்த நாளை தனது குடும்பத்துடன், ஷெல்டனுடன் (ஹாட் அங்கிள்!), கேப்டன் டைகருடன், வுட்சிட்டி கோமாளிகளுடன் கொண்டாடவிருக்கும் இனிய நண்பர் சேலம் 'டெக்ஸ்' விஜயராகவன் அவருகளுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் டெக்ஸ் விஜயரகாவனுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்களும் !!

      Delete
    2. அருமை நண்பர் சேலம் டெக்ஸ் விஜயராகவன் அவர்களுக்கு புனித சாத்தானின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!

      Delete
  35. புத்தகங்களின் முன்னோட்டம் சௌந்தரின் பதிவில் பார்த்தது எனது ஆவலை மேலும் அதிக படுத்திவிட்டது.

    சன் ஷைன் லைப்பரரி அறிமுகத்திற்கு எனது வாழ்த்துக்கள் சார்.
    முன்னோட்டத்தின் படி மறுபதிப்புகள் மற்றும் +6 இரண்டுமே சன் ஷைன் லைப்பரரியில் வருவதாகவே தெரிகிறது.

    அதற்கு பதில் மறுபதிப்புகளை சன் ஷைன் லைப்பரரி யிலும் சுட்டி லக்கி மற்றும் தர +6 கதைகள் மினி லயன் அல்லது மேலும் மற்றொரு லோகோ விழும் வதால் வாங்குவதற்கு
    வசதியாக இருக்கும் என தோன்றுகிறது சார்.

    ReplyDelete
    Replies
    1. மற்றும் +6 காண தொகை எவ்வளவு யெற்று தெரிந்தால் செலுத்தி விடுவேன் சார்.

      Delete
    2. பணம் செலுத்த நானும் ரெடி!

      Delete
  36. ஆசிரியர் விஜயன் & family மற்றும் சிவகாசி லயன் காமிக்ஸ் அலுவலக நண்பர்களுக்கும் இனிய திருவிழாக்கால வாழ்த்துக்கள்!

    ஒரு தனி இதழ் தனி சாகசமாக என்ற வடிவம் கொண்டுள்ள கிராபிக் நாவல்களின் தாக்கம் வழக்கமான தொடர் சாகசங்களை விட அதிக வலிமை வாய்ந்தது.இது போன்ற தனி சாகச கிராபிக் நாவல்களில் கதாசிரியரின் உழைப்பும் ஓவியரின் உழைப்பும் அசாத்தியமான ஒரு MASTER PIECE ஆக இருப்பது கண்கூடு.

    சென்ற ஆண்டின் "எமனின் திசை மேற்கு" இதற்கு ஒரு சிறந்த உதாரணம். லார்கோ, ஷெல்டன் மற்றும் டைகர் கதைகளுக்கு இணையாக வாசகர் மனங்களில் ஒரே கதையில் பிறந்து மடியும் இந்த ஒட்டறைகை கௌபாய் ஏற்படுத்திய தாக்கம் ஆலாதியானது.

    நமது புதிய சன் ஷைன் லைப்ரரி யில் தொடர்கள் மேல் அதிகம் கவனம் செலுத்தாமல் இது போன்ற தனி கதைகள் மீது கவனம் செலுத்தவேண்டும் எனபது எனது தாழ்மையான வேண்டுகோள்.

    "லயன் ஆல் நியூ ஸ்பெஷல்" ளை மிக ஆவலுடன் எதிர்பார்கிறேன். அதற்கான ஒரு TEASER ரை வெளியிடலாமே...

    ReplyDelete
    Replies
    1. ஆம்,மிக சிறந்த மாந்த்ரீகனின் கதை,ஒரு வீரனின் கதை போன்ற கதைகளும் கொணரலாம் ,வரலாற்று பின்னணி கொண்ட அரசர்கள் ,மாயா வினோதங்கள் கூட ....

      Delete
    2. @friends : தற்சமய ஓராண்டுத் திட்டமிடல் ; ஆண்டுச் சந்தா முறையினில் - இது நாள் வரை என்னிடமிருந்த "லெப்டில் இன்டிகேட்டர் போட்டு, ரைட்லே கையைக் காட்டி விட்டு, நேராய்ப் போகும் " சுதந்திரம் மட்டுப்பட்டதாய் படுகிறது ! சன்ஷைன் லைப்ரரியில் பெரிதாய் ஒரு தொலைநோக்குத் திட்டமிடலின்றி, மனதில் அவ்வப்போது தோன்றுவதை செயலாக்கிட விழைகிறேன் !

      Delete
    3. அப்படியே தூள் கிளப்புங்கள் சார் ,தெளிவான திட்டமிடலுக்கு லயன்,முத்து அதிரடியாய் அடித்து தூள் கிளப்ப sunshine library !அட்டகாசம் !

      Delete
  37. அல்லது... கிராபிக் நாவல்களுக்கென்றே STAR SHINE LIBRARY என்ற ஒன்றை ஆரம்பித்தாலும் சரிதான்! :)

    ReplyDelete
  38. நேற்று புத்தகம் அனுப்பி இருந்தால் இன்று யாராவது கை பற்றி விட்டீர்களா ....நேற்றே அனுப்பி விட்டார்களா ,இல்லை இன்று காலைதான் அனுப்பினார்களா ....

    ReplyDelete
  39. விஜயன் சார்,
    பதிவு தபால் மூலம் பெரும் வாசகர்களுக்கு இதழ்கள் எப்போது அனுப்படும் சார்?
    எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

    ReplyDelete
  40. சிறு குறிப்புக்கள்:
    1. WOW! This is top class.... Twin effect...

    2. கிரீன் மனோர் மொழிபெயர்ப்பு கிடைக்க பெற்ற அன்பர்கள் சத்தத்தையே காணோம்? எனக்கு வந்து விட்டது, in progress.. Target date என்ன?

    3. Sunshine library - மறுபதிப்பு மற்றும் ஸ்டாக் prints க்கு மட்டும் இருந்தால் போதும் என்று என் அபிப்ராயம்

    4. +6 வழமை போல் லயன்/முத்து logo வில் வெளிவரவேண்டும்

    5. டைகர் front page இல் தண்டவாளம் ஏன் வளைந்து இருக்கிறது?

    6. Sunshine library மற்றும் அதன் caption பார்க்கும் போது ("sun never sets இன் the west") sunshine cowboy கதைகளுக்கு மட்டும் தானா?

    7. Captionஇல் logistic தவறு உள்ளதா? (Sun never sets in the East என்று East India company பற்றி ஒரு universal truth & கிழக்கில் பிரிட்டிஷ் ஆதிக்கம் என இரு facts சேர்த்து இரட்டுறமொழிதல் அணி வகையில் கூறுவர்.ஆனால் நம் caption இல் அதுபோல் கூற இயலாதல்லவா?

    8.லோகோ சன் குழுமம் லோகோ போல் உள்ளது, மற்றும் லைப்ரரி என்பது பொதுப்படையாக உள்ளது, காமிக்ஸ் என்று specific காக இல்லையே?

    ReplyDelete
    Replies
    1. சுமாரா எத்தனை பேர் இதுக்கு reply போடுவாங்க ?
      A : விஜயன் சார்
      B: ஸ்டீல் கிளா மற்றும் ஈரோடு விஜய் மட்டும்
      C: மற்றும் பலர்
      D: ஒருவரும் இல்லை

      Delete
    2. //. டைகர் front page இல் தண்டவாளம் ஏன் வளைந்து இருக்கிறது?//
      ஸ்கேன் செய்யும் போது காகித முடிவில் சில சமயம் தவிர்க்கமுடியாமல் படம் முழுவதும் வளைந்து ஸ்கேன் ஆகி விடும். இது ஸ்கான் செய்யும் போது ஏற்படும் ஒரு விளைவு. அட்டையில் அவ்வாறு இருக்காது என்று நினைகிறேன்.

      Delete
    3. அல்லது, கதைப்படி செவ்விந்தியத் தாக்குதலுக்கு உள்ளான தண்டவாளமோ என்னவோ? (என்ன நேர்த்தியா வளைச்சிருக்கானுக, பயபுள்ளைக!)

      Delete
    4. ரயிலுக்கு பாதுகாப்பாக ஏன் அந்த செவிந்தியர் வருகிறார் !

      Delete
    5. //கிரீன் மனோர் மொழிபெயர்ப்பு கிடைக்க பெற்ற அன்பர்கள் சத்தத்தையே காணோம்//
      பரவாயில்லையே? விஜயன் சார் உங்களுக்கு மொழிபெயர்த்தே அனுப்பி விட்டாரா? ஜாலிதான்! ;) வந்த அடுத்த நாளே பெயர்தாயிற்று! இருந்தாலும் இந்த தடவை அர்ஜென்ட் ஆக அனுப்பி வைக்க வேண்டாம் என்று சற்று டிங்கரிங் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

      //டைகர் front page இல் தண்டவாளம் ஏன் வளைந்து இருக்கிறது?//
      அது ஒரே அட்டையின் எதிரெதிர் பிரதிபலிப்பு (ச்சே! என்ன வார்த்தை இது? எனக்கே புரிய மாட்டேங்குது!). தண்டவாள டிசைன், புல் மற்றும் குதிரையின் இடது முன்னங்கால் அப்படியே அந்த சைடிலும் reflect ஆவதை கவனிக்கவும்! :)

      Delete
    6. @ friends : மொழிபெயர்ப்புப் போட்டிக்கு இம்முறை வந்துள்ள முதல் ரெஸ்பான்ஸ் 'பிரமாதம் ரகம்' என்று சொல்லுவேன் ! இவ்வார இறுதி last date !

      Delete
    7. அப்போ கலந்து கொண்ட நண்பர்களே நன்கு பட்டி பார்த்து,டிங்கரிங் செய்து பொறுமையாக ஆனால் இந்த வார இறுதிக்குள் அனுப்பி விடவும் !

      Delete
    8. @ஸ்டீல் க்ளா:
      KBT2-க்கு பட்டி, டிங்கரிங், அலைன்மெண்ட் எல்லாம் முடித்து அனுப்பியாயிற்று! :D

      Delete
  41. டியர் விஜயன் சார்,



    குளிரூட்டும் கதிரவன் என்ற பெயரே அதெப்படி என்று ஒரு கொக்கியை போட்டது. உள்ளே புது வரவு இருந்தாலும் அதை அனுபவிக்க விடாதபடி ஒரு மனக் கிலேசம் இல்லாமல் இல்லை. லோகோவைப் பார்த்து பயந்து போனது உண்மை.



    இது நண்பர்கள் பலர் மனதில் இருந்தாலும் யாரும் கேட்ட மாதிரி தெரியவில்லை. நேரடியாகவே கேட்டு விடுகிறேன். சன் குழுமம் நம் காமிக்ஸ் பிராண்டை வாங்குவதற்கு முயற்சி நடக்கிறதா ? லோகோவை பார்ததில் இருந்து மனம் மிக கிலேசமடைந்து இருக்கிறது.



    இது எங்கள் இதழ் என்ற உரிமையுடன் கேட்டிருக்கிறேன். தயவு செய்து பதில் சொல்லுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. Raj Muthu Kumar S : சன் டிவி யை உங்களுக்கு எத்தனை தெரியுமோ - அத்தனை தான் எனக்கும் தெரியும் - என் வீட்டு டிவியினில் ஒரு அழகான சேனலாய் ! அப்படியே என்றைக்காவது அவர்கள் காமிக்ஸ் உலகினுள் நுழைந்திட எண்ணினாலும் - நம் முதுகில் சவாரி செய்யும் அவசியம் நிச்சயம் அவர்களுக்கு இருந்திடாது ! கால் பாதிக்கும் களங்களில் எல்லாம் அதகளம் செய்யும் ஜாம்பவான்களுக்கு நாமெல்லாம் சுண்டைக்காய்கள் அளவு கூடக் கிடையாது ! So கவலையே வேண்டாம் !

      எங்களது நிறுவனங்களின் பெரும்பான்மையில் சூரியனின் லோகோ உண்டு (பிரகாஷ் = வெளிச்சம் = சூரியன்) என்ற ரீதியினில் ! So அதன் தொடர்ச்சியே இது :-)

      Delete
    2. சார் புத்தகங்களை நேற்றே அனுப்பி விட்டீர்களா அல்லது இன்று காலைதான என கூறினால் கொரியர் நிறுவனத்தை தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும் !

      Delete
    3. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : நேற்றே நாங்கள் அனுப்பி விட்டோம் ; ஆனால் அவர்களது பட்டுவாடா நாளை தான் துவங்கும் என்று நினைக்கிறேன். உங்கள் ஏரியா ST கூரியருக்கு எதற்கும் ஒரு போன் அடித்துப் பாருங்களேன் !

      Delete
    4. காலையிலேயே head ஆபீசுக்கு போனேன் சார் !அவர்கள் இன்னும் வரவில்லை என கூறினார்கள் !அப்போ நாளைதான் வரும் போல !தகவலுக்கு நன்றி சார் !

      Delete
    5. மனம் சற்று நிம்மதியானது. விளக்கத்துக்கு நன்றி. இப்போது என் முழு மனதுடன் இளஞ்சூரியனை வரவேற்கிறேன். அது என்ன லைப்ரரி ? பெயர்க் காரணம் உண்டா ?



      அட்டைப்படத்தில் நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு இந்த அட்டைப் படம் சாட்சி. நீங்கள் இதே படங்களை முன்னொரு பதிவில் வெளியிட்டு இருந்தீர்கள். ஒப்பிடும்போது மிகுந்த முன்னேற்றம் தெரிகிறது. ஓவியருக்கு வாழ்த்துக்கள்.



      கவ் பாய் கதைகள் ஒரிஜினலை அடிப்படையாக வைத்துக்கொண்டு நகாசு வேலைகள் செய்தால் மிக நன்றாக வருவதாக தோன்றுகிறது. உதாரணதிற்கு WW ஸ்பெஷல் மற்றும் இந்த புத்தகம்.

      Delete
    6. இன்னொன்றையும் மறந்து விட்டீர்களே சிகப்பாய் ஒரு சொப்பனம் !

      Delete
  42. இந்த சன் , சூரியன் , இந்த மாதிரி பேர்களை கேட்டாலே உடம்பு ஆட்டோமேட்டிக்கா ஷிவரிங் ஆகுது......[ தமிழில் இதுபோல் அசிங்கப்படுத்தப்பட்ட பல நல்ல சொற்கள் உண்டு .......மாமா , மச்சினி , ஒன்பது , புரட்சி , கழகம் ...இன்னபிற. .........[சன்னும் சூரியனும் தமிழ்ச்சொல்லா...... அப்படின்னெல்லாம் கேட்கக்கூடாது] .....]


    எனினும் நம் குழுமத்தின் புதிய வரவை வாழ்த்தி வரவேற்கிறேன்..........

    ReplyDelete
  43. Replies
    1. போன் செய்தேன் இன்னும் வரலை என்றார்கள் !அப்போ மாலை வண்டியில் அநேகமாய் வரலாம் !நீங்கள் எந்த ஊர் !

      Delete
    2. அப்போ நிதானமாக பெங்களூர் வரும் நமது புத்தகங்கள் உங்களை இந்த முறை முன்னரே வந்தடைந்து விட்டது !பரணியும் கை பற்றியிருப்பார் என நினைக்கிறேன் !கொண்டாடுங்கள் !

      Delete
    3. Thanks....great editions....l m traveling to my village this evening to feel it.....

      Delete
    4. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் @

      இல்லை தலைவா!! நமக்கு அதிர்ஷ்ட மச்சம் இல்லை!

      Delete
    5. விடுங்கள் நண்பரே ,நாளை வரை பொழுது பரபரப்பாய் செல்லும் !

      Delete
  44. டியர் எடிட்டர்,

    கருப்பு-வெள்ளைதான் காமிக்ஸ் என்ற அடையாளம் மாறி  வண்ணத்தின் ஜாலங்களில் மனதைத் தொலைக்க ஆரம்பித்துவிட்டோமே!
    கருப்பு-வெள்ளையின் மீதான காதல் கொஞ்சம் கொஞ்சமாக குன்றி வருவதாக (உங்களிடமும் கூட) தோன்றுகிறதே? எதிர்காலங்களில்  இந்த கருப்பு-வெள்ளை கதைகள் சொற்ப எண்ணிக்கையாகக் குறைக்கப்பட்டு, பின்பு முழுவதுமாகக் காணாமல் போய்விடுமோ என்ற கிலேசத்தையும் ஏற்படுத்துகிறதே?

    நூற்றுக் கணக்கான டெக்ஸ் கதைகள் கருப்பு-வெள்ளையில் இதுவரை வெளியிடப்படாமல் உள்ளதே? அவைகளின் கதி?

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : வேக வைத்த ஆப்பிள்கள் நிச்சயம் வீண் போகாது ! Relax !

      Delete
    2. நன்றி சார்! அப்படினா, நான் இப்பவே எனது இத்தாலிய குடியுரிமையை கேன்சல் பண்ணிடுறேன். :)

      Delete
  45. வாத்யாரே! நான் இன்னும் காசே கட்ல நமக்கு எதனா புக் அம்ச்சிக்கீரிங்கலா?

    ReplyDelete
  46. வேக வைத்த ஆப்பிள்கள் வீண் போகாது! nice punch. thala!

    ReplyDelete
  47. சார் ,புதிய லோகோவில் அந்த மஞ்சள் வர்ணத்தை மட்டும் சிறிது மாற்றினால் போதும் .அந்த நிறுவனத்தின் நினைவு வராது .

    புதிய லோகோவில் "காமிக்ஸ்"என்று முடிவது போல இருந்தால் புதிய,இளைய வாசகர்கள் கடைகளில் பார்க்கும் பொழுது குழப்பம் இல்லாமல் வாங்குவார்களே சார்...

    ReplyDelete
  48. //@ friends : மொழிபெயர்ப்புப் போட்டிக்கு இம்முறை வந்துள்ள முதல் ரெஸ்பான்ஸ் 'பிரமாதம் ரகம்' என்று சொல்லுவேன் ! இவ்வார இறுதி last date !//

    15 நாள் அவகாசம் என்று சொல்லப்பட்டது ஒரு வாரமாகக் குறைந்துவிட்டது. அதிலும் கடல் கடந்த வாசகர்களுக்கு இன்னமும் அனுப்பப்படவில்லை. இம்முறை வாய்ப்பில்லை... அடுத்தமுறையாவது....

    ReplyDelete
  49. விஜயன் சார், சன் குழுமம் போல் பல வெற்றிகள் பெற வேண்டும் (என்ற உங்கள் எண்ணம் போல் வெற்றி பெற) வாழ்த்துகள் -)

    ReplyDelete
  50. AMMAN FESTIVAL GREETINGS TO OUR EDITOR & ALL HIS TEAM MEMBERS!

    ReplyDelete
  51. Not much in hot line this time.editor sir....some of us following this blog, but many other are there to read our famous calum called HOT LINE.... with out that it seems something empty...

    ReplyDelete
  52. விஜயன் சார், புதிய லோகோவில் அந்த மஞ்சள் வர்ணத்துக்கு பதில் "நீல வர்ணம்" கொடுத்தால் "குளிரூட்டும் கதிரவனுக்கு" மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பது எனது எண்ணம்!!

    Our comics staff's are very committed now-a-days, that will be the main key for our comics success in the last 1.5 years. Kudo's to them.....

    ReplyDelete
  53. I want graphic novel & tiger novel only. I dont like Other storys

    ReplyDelete
  54. I want graphic novel & tiger novel only. I dont like Other storys

    ReplyDelete
  55. நாளை அநேகமாக அட்டையில் புரட்சி செய்யும் போராளி ஷெல்டனால் நமது முந்தய போஸ்ட் அதிரும் என நினைக்கிறேன் !

    ReplyDelete
  56. இம்மாத புத்தகங்கள் வந்து சேர்ந்து விட்டன!

    சன் லைப்ரரி வழங்கும் டைகர் ஸ்பெஷல்!:
    முன் & பின் அட்டைப் படங்கள் ***படு பிரமாதம்*** (இரண்டு சிறிய செவ்வகங்கள் நீங்கலாக!) :) இந்த இதழில் லயன் / முத்துவில் இருப்பது போன்று தனியே ஆசிரியர் பகுதி இல்லை! சன்ஷைன் லைப்ரரியின் முதல் இதழ் என்ற அடிப்படையிலாவது ஒரு சிறிய அறிமுகம் கொடுத்திருக்கலாம்! முழுவண்ண இதழ்களான ஆக்ஷன் & ஹாட்கூல் ஸ்பெஷல் - இவற்றோடு ஒப்பிட்டால் இதில் 8 பக்கங்கள் குறைவு - 106 பக்கங்கள் மட்டுமே! உள்ளட்டை CC சந்தா விளம்பரம் புதிய வாசகர்களை நிச்சயம் குழப்பும்!

    ஹாட் & கூல் ஸ்பெஷல்!:
    முன்னட்டை அதிகம் கவராததிற்கு ஷெல்டன் அணிந்துள்ள கோட் சூட்டின் வெறிக்கும் பச்சை நிறம் ஒரு காரணம்! பின்னட்டை சித்திரத்தில் தெளிவில்லை, ஆனால் கிளாசிக்! ஷெல்டன் கதையின் நீளம் சற்று அதிகம் (54 பக்கங்கள்) என்பதால் காமிக்ஸ் டைமை, மியாவியின் தலை மேல் வைத்து சுருக்கமாக முடித்து விட்டார் ஆசிரியர் - நைஸ் டெக்னிக்! :) இதே காரணத்தால் சிங்கத்தின் சிறு'வலை' பகுதியும் இந்த இதழில் இல்லை.

    ஜூனில் பூத வேட்டை - ₹50 விலையில்! எனவே டெக்ஸின் 50வது இதழ் பற்றிய தலையணை சைஸ் வண்ணக் கனவுகளுக்கு நண்பர்கள் தற்காலிக ஓய்வு கொடுக்கலாம்! அதே மாதம் வெளியாகவிருக்கும் டயபாலிக் இதழின் விலை ₹40 மட்டுமே - புதிய அளவிலா?

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ,இளம் சூரியனால் பெங்களுர்வாசிகளின் தலையில்தான் விடி(ரி)ந்துள்ளன போலும் இவ்விதழ்கள் !நீங்களும் பெங்களூர் என்பதை மறந்து விட்டேன் !
      கார்த்திக் பூத வேட்டை ஐம்பதாவது இதழ் என குறிப்பிட பட்டுள்ளதா ?அவ்வாறில்லையெனில் .....
      மாற்றம் ஒன்றே மாறாதது !

      Delete
    2. எனவேதான் தற்காலிக ஓய்வு என்று எழுதியுள்ளேன்! :)

      (+5 + டெக்ஸ் 50 = +6) * (2) = +12 என ஆசிரியர் டெக்ஸ் சர்ப்ரைஸ் பதிவை போட்டாலும் போடுவார்! :D

      என்னுடைய +2 கணக்கைப் பார்த்து எனக்கே தலை சுற்றுகிறது! :)

      Delete
  57. டைகர் ஸ்பெஷல் அட்டை படம் ஒரிஜினல் அட்டை படத்தை விட சிறப்பாக வந்துள்ளது.
    15 வருடங்களுக்கு மேலாக காக்க வைத்த கதை சோடை போகாது என்பது நிச்சயம்.
    அதே போல் உச்சத்தில் இருந்த டைகர். வெய்ன் ஷெல்டன், லார்கோ போன்றவர்களின்
    வருகையால் பின்னுக்குத் தள்ளப்பட்டது நிஜம் அல்ல. மிண்ணும் மரணம், இளமையில் கொல்.
    இருளில் ஒரு இரும்புக்குதிரை போன்ற கதைகளை தனித்தனியாக துண்டாடப்பட்டதால் கதையில்
    சற்று தொய்வை ஏற்படுத்தி விட்டது என்பதுதான் நிஜம். இனி வரக்கூடிய டைகர் கதைகளையாவது
    பிரித்து போடாமல் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரியான கருத்து...துண்டு போடாமல் ஒரே கதையாக வெளியிட்டால் படிக்க அற்புதமான அனுபவமாக இருக்கும்.

      Delete
  58. sunshine libraryயின் மாஸ்டர் பீஸாக 'இரத்தப் படலம்' ஜம்போ ஸ்பெஷலை கலரில் இரண்டு அல்லது மூன்று புத்தகங்களாக வெளியிடுங்களேன்… உண்மையில் கலரில் நம் காமிக்ஸ்களைப் படித்த பிறகு எவ்வளவு ஹிட்டான கதைகள் என்றாலும் B&Wல் படிக்க ஒருமாதிரி அயர்ச்சியாக உள்ளது... அந்த வகையில் நமது வாசகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற ரத்தப் படலம்,மின்னும் மரணம் ஆகிய கதைகளை கலரில் படிக்க மிகுந்த ஆவலாக உள்ளது… NBS போல மெகா ஸ்பெஷல் reprintகளை(மொழிபெயர்ப்பு கூட பழையதே போதும்) வருடம் இருமுறை வெளியிட்டால் சூப்பரா இருக்குமே..

    ReplyDelete
  59. மிக்க நன்றி நண்பரே .

    ReplyDelete
  60. புத்தகம் இன்னும் கைக்கு வராவிடினும் நண்பர்களின் கூற்று படி சிறந்த அட்டைபடம் ,அருமையான கதைகளம் எனினும் என்னை பொறுத்த வரை ஏமாற்றம் தான் .காரணம்

    1) ஒரு புத்தகத்தில் ஹாட் -லைன் இல்லாதது .

    2)அடுத்த புத்தகத்திலும் குறுகிய ஹாட் -லைன் .

    3)சிங்கத்தின் சிறு வயதில் இல்லாதது .

    புத்தகம் கைக்கு வந்தவுடன் இன்னும் என்ன ஏமாற்றமோ ? :(

    ஆசிரியர்க்கு சின்ன வேண்டுகோள் ...தயவு செய்து இனி வரும் புத்தகத்தில் ஆவது இந்த குறைகளை தவிர்க்க பாருங்கள் .

    ReplyDelete
    Replies
    1. சரியாச் சொன்னீங்க பரணிதரன்!

      Delete
    2. உண்மை !ஹாட் லைன் ,காமிக் டைம் ....sunshine library க்கு ....????????????????????????????????????????????????????????????????????????

      Delete
  61. KBT-2 க்கு விருப்பம் தெரிவிச்சிருந்தும் இதுவரை எனக்குக் கதை வந்து சேராத காரணம் விளங்கலையே!!

    ஏக வருத்தத்தில்,
    ஈரோடு விஜய்

    ஏக குஷியில்,
    வாசக நண்பர்கள்

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : உங்களுக்கும் அனுப்பி ஒரு வாரத்திற்கும் மேலாகி விட்டதே - ST கூரியரின் மூலமாய் ???

      Delete
    2. Dear Editor,

      S T Courier always delays :-)

      Delete
    3. தகவலுக்கு நன்றி, எடிட்டர் சார்!

      STகூரியரில் விசாரிக்கிறேன்.

      Delete
    4. What one week before... white papers of the stories :-)

      Delete
  62. நேரில் அட்டை படம் ஆளை அடிக்கிறது இன்னும் பலமாய் !நண்பர் சுஸ்கி விஸ்கி கூறியது போல தண்டவாளம் வளையவில்லை !டெக்ஸ் எப்படி கலக்கியதோ அதற்க்கு இணையாக வரையப்பட்ட அட்டை !கதையின் தலைப்புகளை முன்னாலும் தந்திருக்கலாம் !இந்த முறை பின்னட்டையும் வண்ணத்தின் சேர்க்கை பின்னணியிலும் இணையாய் இருப்பதால் அட்டகாசமாய் வந்துள்ளது !லோகோவும் அற்புதம் !sunshine library என்பது வெளியே தெரியவில்லை !மேலே பாதி ,கீழே பாதி என கொடுத்தால் கொஞ்சம் பெரிதாய் தெரியலாம் !

    ReplyDelete
  63. டியர் எடிட்டர்,

    இந்த பிளஸ் சிக்ஸ் வரிசையில் முதல் இரண்டு புத்தகங்கள் எப்போது வரும் என்று சொல்லிடலாமே ப்ளீஸ்!

    இந்த வருடம் முடிவதற்கே இன்னும் கிட்டத்தட்ட பிளஸ் சிக்ஸ் [+ 2] மாதங்களே உள்ளதால் .. ஹி ! ஹி !!

    ReplyDelete
  64. டியர் விஜயன் சார்
    இரவு கழுகாரின் 50 வது இதழை இரண்டு கதைகளுடன் மெகா சைஸ் புத்தகமாக வழங்க வேண்டும் என வாசகர்களின் சார்பில் அன்புடன் கேட்டு கொள்கிறேன். டெக்ஸ் வில்லர் 50 வது இதழை சிறப்பாக வெளியிட வேண்டும் என்ற நிறைய வாசகர்களின் அன்பு கோரிக்கைக்கு தங்கள் செவி சாய்பீர்கள், நல்ல பதிலை சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்!.
    எஸ். ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

    ReplyDelete
    Replies
    1. சுமார் 25 வருட காலமாக காமிக்ஸ் ரசிகர்களை தன் ஒப்பற்ற செயல்வேகத்தாலும், அசாத்திய தைரியத்தாலும், மரணத்தை அதன் இருப்பிடத்திற்கே சென்று வெற்றி கொண்டவரும், பல பெண் வாசகிகளையும் தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் வீர தீர புருஷனும், இத்தாலிய மக்களில் இலட்சக்கணக்கானவர்களை ரசிகர்களாக கொண்டவரும், லயன் காமிக்ஸின் முடிசூடா மன்னனுமாகிய டெக்ஸ் வில்லரின் 50 இதழ் மிகப் பிரம்மாண்டமாய் அமைவதே அந்த நெஞ்சுரம் மிக்க நவஜோ தலைவனுக்கு தமிழ் காமிக்ஸ் உலகம் செய்திடும் சிறப்பு என்பதை நானும் நண்பர் ஜெயகாந்தனோடு இங்கே வலியுறுத்தி, எடிட்டர் தன் கடைக்கண் பார்வையை டெக்ஸ் மீது (சற்றே அழுத்தமாய்) பதியும்படி வேண்டுகிறேன்!

      Delete
    2. நானுன் வரிக்கு வரி வழி மொழிகிறேன்,தலையணை இல்லாமல் அவதிப்படும் விஜய்க்கு மாற்று தலையணையாய் அடுத்த மாதமே வருமா ?

      Delete
    3. நானும் அப்படியே வரிக்கு வரி வழி மொழிகிறேன், படுத்துறங்க மெத்தை இல்லாமல் அவதிப்படும் விஜய்க்கு, ஒரு குர்லான் மெத்தை சைசுக்கு தயார் செய்து அனுப்பவும் சார் ...

      Delete
    4. Agreeing with the above comments . Make Tex 50th issue a memorable one

      Delete
    5. We need Tex Mega Mega Special like "இரத்த படலம்" book...

      Delete
  65. உஸ்ஸ்..ப்பா புத்தகம் வந்து விட்டது. ஆசிரியர் கூறியது போல் இரு புத்தகங்களின்
    அட்டை படங்களும் கலக்கலாக வந்துள்ளது. ஆசிரியரின் ஹாட்-லைன் இடம் பெறாததுதான்
    மிகப் பெரிய குறை. அதே போல் மதியில்லா மந்திரி (சிறிய கதைகள்) கதைகளேயே அனைத்து
    கதைகளிலும் இடம் பெறச் செய்யாமல். கேப்டன் பிரின்ஸ், ரிப்போட்டர் ஜானி, இரட்டை வேட்டையர்கள்
    இது போன்றவர்களின் கதைகள், சிறு கதைகளாக நிறைய கதைகள் உள்ளன. அவர்களுக்கும்
    வாய்ப்பளித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மந்திரியார் மிளிர்கிறார்!கலரில் அசத்துகிறார் ,இரட்டை வேட்டையர்கள் இருந்தால் அவர்களுக்கும் வாய்ப்பு வழங்குங்கள் சார் !

      Delete
  66. டியர் எடிட்டர்ஜீ !!!
    புத்தகங்கள் அடியேனுக்கு வந்து சேர்ந்துவிட்டது.இன்னும் படிக்கவில்லை. நாளை அமாவாசை சாத்தானுக்கு உகந்த நாள் என்பதால் இன்றைக்கு படிக்கவில்லை.
    டைகர் ஸ்பெசல் அட்டைப்படங்கள் மிக அருமை.ஷெல்டன் அட்டைப்படத்தில் இன்னும் கூடுதல் மெருகேற்றி இருக்கலாமோ என்று தோன்றுகிறது.எனினும்,ஒரே நாளில் இரண்டு 100 ரூபாய் புத்தகங்கள் கிடைத்த மகிழ்ச்சியில் இம்மாதிரி சின்ன சின்ன குறைகள் பெரிதாக எடுத்து கொள்ளவேண்டியதில்லை.தொடரட்டும் மாதாமாதம் உங்களின் "இரண்டு லட்டு"சேவை!!!(அடுத்த ஆண்டிலிருந்து "மூன்று லட்டு"வழங்கவும்.ஹிஹி!!!)

    ReplyDelete
    Replies
    1. வீட்டில் இருந்து போன், வேறென்ன புத்தகம் வந்து விட்டதாம் :)

      Delete
  67. சற்று முன்பு புத்தகங்கள் கைக்கு கிடைத்தது!

    எதிர் பார்த்ததைவிட இரு புத்தகங்களின் அட்டைப் படங்களுமே சக்கை போடு போடுகின்றன. இந்தத் தரத்திலான புத்தகங்களைக் கையில் ஏந்தும்போதே சந்தோஷத்தோடு, கூடவே ஒரு வகையான பெருமிதமும் ஒட்டிக் கொள்கிறதே!

    இரண்டே வரிகளில் ஹாட்லைனை ரொம்ப ஷார்ட் லைனாக முடித்துக்கொண்டு விடைபெற்ற எடிட்டருக்கு என் கடும் ஆட்சேபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு குறையாவது இருக்கட்டுமே என்று நினைத்தீர்களா? கர்... புர்...

    ஹாட் லைனைக் காணாமல் கடும் சினத்திலிருந்த என்னை, குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்தது அதே பக்கத்திலிருந்த மியாவி! அந்த ஜோடி மியாவிகளின் முகபாவங்களைப் பாருங்களேன்; என்ன ஒரு கொஞ்சல்ஸ்; என்ன ஒரு குலாவல்ஸ்; பிறகு என்ன ஒரு மூர்க்கம்! வாவ்! தினசரி நமது வீட்டிலே நடப்பதை மியாவி வடிவில் பார்ப்பைப் போலிருக்கிறது!

    முதலில், வுட்சிடி கோமாளிகளைப் புரட்டவிருக்கிறேன்....


    ReplyDelete
  68. //முதலில், வுட்சிடி கோமாளிகளைப் புரட்டவிருக்கிறேன்.... //
    கர் புர்.....

    ReplyDelete
  69. நண்பர்களே புத்தகம் வந்து விட்டது .super மொழிபெயர்ப்பு அட்டகாசம் .மொத்தத்தில் நிறைவான இதழ்

    ReplyDelete
  70. பெயர் விட்டுபோய்விட்டது.முருகன்

    ReplyDelete
  71. @ நண்பர்களுக்கு :Ebay -ல் லிஸ்டிங் துவக்கியாச்சு !

    ReplyDelete
  72. டியர் எடிட்டர்,

    மே 1 லீவு நாள் என்பதால் அடுத்த டைகர் கதையினை 29 ஆம் தேதி அனுப்பிட இயலுமா? மற்றும் 'இருளில் ஒரு இரும்புக்குதிரை' பாகம் இரண்டு சீக்கிரம் வெளியிடவும்.

    நாளை அதிகாலை வெளியூர் செல்ல ஏர்போர்ட் போகணுமே - எப்படி விழித்துகொள்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன் - இப்போது 'in-flight' ரீடிங் செய்ய இரண்டு புக்ஸ் ! சில நேரங்களில் தாமதம் கூட வேலை செய்கிறது. [ஆனாலும் ST Nasty தான் :-) :-)].

    ReplyDelete
    Replies
    1. @ காமிக் லவர்

      ஃப்ளைட்டுக்குள் நீங்க 'ஒரு கழுதையின் கதை'யை படிச்சிட்டு சிரிக்கும்போது குலுங்கற குலுங்கல்ல அவனவன் ஃப்ளைட்டுக்குள்ளேயே பூகம்பம் வந்திடுச்சோன்னு நினைச்சுட்டு ஜன்னல் கண்ணாடியை ஒடைச்சிட்டு வெளியே குதிக்கணும்!

      அப்புறம், மறக்காம அந்த ஏர்-ஹோஸ்டஸை நான் விசாரிச்சதா சொல்லுங்க! ;)

      Delete
  73. டியர் எடிட்டர்,

    Sunshine லைப்ரரி வரிசையினில் :

    1) மறுபதிப்புக்கள் வரும் பொது - குறிப்பிட்ட கதை முதலில் எப்போது நம் காமிக்ஸில் வந்தது - அப்போதைய வரவேற்பு குறித்த எண்ணங்கள் - இதனை பதிப்பிக்கத் தூண்டிய எண்ணங்கள் ஆகியவை பற்றி ஒரு முன்னுரை எழுதிடலாமே.

    2) புதிய வரவேனில் - குறிப்பிட்ட கதையின் ஒரிஜினலின் வரவேற்பு எப்படி - ஏற்பட்ட தாக்கம் என்ன - போன்றவை குறித்து ஒரு முன்னுரை எழுதிடலாம் - இது நமது இப்போதைய காமிக் டைம் பாணியே.

    ReplyDelete
  74. Marvellous!!!

    I appreciate the new look and feel!

    As I always say, I am happy with your new publications and reposts - but still I recommend to have some reposts of Lawerance & David, John Silver, Archie, Spider and Tex comics.

    I know that you have mentioned that many people here are not interested in that, but still you can plan to have at least one or two reposts per year. It is my humble request.

    ReplyDelete
    Replies
    1. Lawrance & David, John Silver விளம்பர படுத்திய கதைகளை வெளியிடலாம் ,இப்போது கருப்பு வெள்ளைக்காக வெளியிட தயாரான பக்கங்கள் கூட வண்ணத்திற்கு ஒதுக்க பட்டு விட்டன !மாற்றங்கள் ஒன்றை விட ஒன்று சிறப்பாய் இருப்பதால் நமது சத்தங்கள் அமுங்கியே போய் விடுகின்றன !நமது come back spl ல் Lawrance & David ன் விளம்பர படுத்த பட்ட பனியில் ஒரு அசுரன் குறித்த உங்களது முடிவுகளை தெரிய படுத்துங்களேன் !அது போல டயபாலிக் நாற்பது ரூபாயில் என்பதற்க்கு பதில் ஐம்பது விலையில் ஜோக்கர் போன்ற கதைகளை இணைக்கலாமே !அல்லது முன்பு போல திகில் கதைகள கருப்பு கிழவியின் கதைகளை சேர்காலாமே காமிக்ஸ் வடிவிலோ அல்லது எழுத்துருவிலோ உள்ள கதைகள் !

      Delete
  75. டியர் எடிட்டர்,

    ஒரு சிறு குழப்பம்! நமது sunshine libraryல் இப்போது வெளியாகியிருக்கும் 'டைகர் ஸ்பெஷல்-1'ன் அடுத்த/இறுதி பாகமான 'ரத்தத் தடம்' வரயிருப்பது 'முத்து காமிக்ஸில்'!  ஒரு சில மாதங்களுக்குப் பின் ஏதாவது ஒரு புத்தகக் கண்காட்சியில் மொத்தக் கதையையும் வாங்க நினைக்கும் ஒரு சாமான்ய/புதிய வாசகருக்கு 'இரும்புக் கை எத்தன் + பரலோகப் பாதை'யின் தொடர்ச்சிதான் 'இரத்தத் தடம்' என்பது எப்படிப் புரியும்? வேறு வேறான லோகோக்கள் குழப்பிவிடாதா?
    முன் அட்டையைப் பார்த்த மாத்திரத்திலேயே 'இதன் தொடர்ச்சிதான் அது' என்பதை அந்த சாமானிய வாசகன் எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறான்?

    நான் குழம்பியிருக்கிறேனா? அல்லது உங்களைக் குழப்புகிறேனா?

    குழப்புகிறேனென்றால் மன்னிக்கவும்!

    ReplyDelete
  76. இது என்னுடைய கருத்து அல்ல .ப்ளாக் பக்கம் வராத ,படிக்காத நண்பர் ஆட்டையாம்பட்டி (சேலம் ) ராஜ் குமார் அவர்களின் கருத்து .கண்டிப்பாக இதை கூறுமாறு வேண்டியதால் எனது பெயரில் ....

    "எவ்வளவுக்கு எவ்வளவு ஆர்வமா இந்த மாத புத்தகத்தை எதிர் பார்த்தேனோ,அவ்வளவு ஏமாற்றம் .என்னப்பா ...புத்தகத்தை திறந்தால் கதையை தவிர ஒன்றுமே இல்லை .ஆசிரியர் பக்கத்தை காணோம் ..,விரைவில் வருகிறது விளம்பரம் காணோம் ..,சிங்கத்தின் சிறு வயதில் கட்டுரை காணோம் ..சி.சி .வலையில் காணோம் ..போப்பா ...இனியும் இப்படி வந்தால் நான் வெறுத்து விடுவேன்.
    அதே போல பின் பக்க அட்டைப்படத்தை ஏன் ஒவ்வொரு முறையும் கட்டம் கட்டி போடுகிறார் .முன் பக்கம் போல முழுவதுமாக வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் ." மறவாமல் சொல்லி விடுங்கள் நண்பரே .

    சொல்லி விட்டேன் .

    இது அவருடைய கருத்து என்றாலும் ஏற்கனவே கூறியபடி நானும் இதில் ஒருமித்து போகிறேன் .நன்றி .


    ReplyDelete
  77. டைகரின் அட்டைபடம் சூப்பர் .உள்ளேயும் இதுவரை வந்த டைகரின் கதையை விட இம்முறை வண்ண கலவை அசத்தல் ரகம்.கதையை பற்றி சொல்ல தேவை இல்லை .பல வருடங்களுக்கு முன்னரே சொல்லி விட்ட படியால் :) இதன் கிளைமாக்ஸ் பாகமும் விரைவில் வந்து விட்டால் முழு விமர் சனத்தையும் எதிர் பார்க்கலாம் .மந்திரி இன் மறு பதிப்பும் அருமை .
    ஹாட் &கூல் ஸ்பெஷல் இன்று தான் படிக்க வேண்டும் .


    ReplyDelete
    Replies
    1. //உள்ளேயும் இதுவரை வந்த டைகரின் கதையை விட இம்முறை வண்ண கலவை அசத்தல் //
      அதுவும் கதை துவங்கும் அந்த பக்கம் ,சிறிது நீண்ட அற்புதமான விளக்கங்களும் பணியில் ஈடு பட்டுள்ளோரும் காண காண ஏதோ ஒரு ஏக்கம் வருவதை தவிர்க்க முடியவில்லை !உற்ச்சாகமான பர பரப்பான அந்த தொழில் புரட்சி காலத்தின் துவக்கத்தை பார்த்து விட்டு அப்படியே வைத்துள்ளேன் இன்று மாலை படிக்க !வண்ணத்தின் அற்புதத்தால் இதனை நாம் முழுவதும் அனுபவிக்கும் ,காண கிடைக்காத புத்தகம் மூலம் கண்ட அந்த காலம் ஆசிரியருக்கு டைகரின் அனைத்து கதைகளும் வண்ணத்தில் கோரிக்கை வைக்க வேண்டும் என மனது கேட்கிறது , ஆனால் எதனை வெளியிட எதனை விடாமல் விட என திகைக்கும் ஆசிரியரை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது ........

      Delete
    2. கடல் நீர் முழுவதையும் கூட குடிக்கும் அளவிற்கு காமிக்ஸ் தாகம் !தீர்ப்பாரா !

      Delete
  78. இதில் இன்னொரு வேதனை யான விஷயம் .எப்பொழுதும் புத்தம் புதியதாய் வரும் புத்தகம் இம்முறை சிவகாசியில் நன்றாக pack செய்து அனுப்பி இருந்தாலும் கொரியரின் பாதிப்பால் எனக்கு கிடைத்த போது ...பார்த்தால் கண்ணீர் விடுவீர்கள் .


    ReplyDelete
  79. பதிவு தபால் மூலம் என்பதால் புத்தகம் இன்னும் வந்து சேரவில்லை. ஓவ்வொரு முறையும் 3 அல்லது 4 நாட்கள் கழித்து தான் புத்தகம் கிடைக்கிறது. i am waiting!
    எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

    ReplyDelete
  80. கலீபா தின்ன ஆசையா !அருமை !மந்திரிக்கு தொடர்ந்து கை கொடுக்கும் சதி திட்டங்கள் ,அவரே பலியாவதும் ரசிக்கும் படியான மொழி பெயர்ப்பும் முடிவில் உள்ள கேள்விகளும் அருமை !

    ReplyDelete
  81. சி.சி.வயதில் ரொம்ப miss பண்ணுகிறோம்...புத்தகம் வந்தவுடன் படிப்பது ஹாட் லைனும் சி.சி.வயதில் தான்..இதில் அதை miss பண்ணுகிறோம்..

    ReplyDelete
  82. என்னது விளம்பரத்தில் டெக்சு புத்தகம் வந்து இருக்கிறது அப்போ 50 வது இதழ் தலையணை என்ன ஆச்சு...sir...

    ReplyDelete
  83. comic conல் புது புத்தகம்(reprints of classics like ..mayavi..spider,johnny nero...) வருகிறதா...sir...ஏற்கனவே சொல்லி இருந்த மாதிரி... இன்னமும் குறைந்த நாட்களே உள்ளன bangalore comic con...(June 1&2)...

    ReplyDelete
    Replies
    1. முக்கியமாய் அந்த முதல் நான்கு மினி லயன் மற்றும் டிடக்டிவ் ஸ்பெஷல் (ரிப்கெர்பி,காரிகன் ,சார்லி கலந்த கதைகள்)

      Delete
  84. விஜயன் சார்,2 புத்தகம்களும் நேற்று கிடைத்தது!! நன்றி, மீண்டும் மீண்டும் நமது காமிக்ஸ் சொல்லிய நாளில் கிடைத்ததுக்கு!!!

    சிக்-பில் கதை முதல் பக்கத்தில் இருந்து சிரிப்பு மழைதான்! சமிபத்தில் வந்த சிக்-பில் கதைகளில் அதிகமாக சிரிக்க வைத்தது இதுதான்! ஆனால் இந்த கதைக்கான அட்டை படம் சுமார் :-( படம் தெளிவாக இல்லை, வர்ணம்கள் சரியாக இல்லை !!! நமது ஆர்டிஸ்ட்/ஆசிரியர் சில்-பில் குரூப்-அ அலட்சியம் செய்தது போல் உள்ளது :-(

    New Look Special (Lucky-Luke) அட்டை படமும் இதே போல் தான் இருந்தது! ஆசிரியர் நமது காமெடி ஹீரோ கதைகளுக்கான அட்டை படம்களுக்கும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்!

    ReplyDelete
  85. 'ஒரு கழுதையின் கதை'யை இப்பொழுதுதான் படித்து முடித்தேன். அடடா, என்ன ஒரு காமெடி! ஷெரிப் டாக்புல் கதை முழுக்க காமெடித் திருவிழா நடத்துகிறார். பல இடங்களில் ஷெரிப்பின் முகபாவங்களும், டயலாக்குகளும் உருண்டு புரண்டு சிரிக்க வைக்கின்றன! ( "அடேய் மாங்கா மடையா... வாயிலே ஓடற அந்த அருவியை மூடிட்டு அந்தப் பொண்ணோட கையைப் பிடிச்சுக் கூட்டிட்டுப் போ!" )

    'மொழி பெயர்ப்பாளரின்' நகைச்சுவை உணர்வுக்கு ஒரு மலர்க்கொத்து!!

    ரொம்ப நாளுக்குப் பிறகு ஒரு கவுண்டமணி படத்தைப் பார்த்த திருப்தி! :)

    ReplyDelete
    Replies
    1. 'ஆர்ஹியூ'வுக்கு அர்த்தமில்லையென்றாலும், தேவையான இடங்களில் அளவாகப் பயன்படுத்தியிருப்பதால் அதுவும் சிரிக்க வைக்கிறது. 'ஆர்ஹியூ'- ஆர்ட்டினின் டயலாக் என்றாலும், ஷெரிப் நக்கலடிக்கும் போதெல்லாம் சிரிப்பை வரவழைக்கிறது! :)

      Delete
  86. "WHY WE ARE REINVENTING THE WHEEL"

    டியர் சார் ,

    ரெண்டு புத்தகம் வந்தது ஒரு சிந்தனையை கிளறி விட்டது. அட்டைப் படத்துக்கான சிந்தனைதான் அது.

    டைகர் ஸ்பெஷல் அட்டைப்படம்.- கிளாசிக் லுக்குடன் மிக நன்றாக இருந்தது WW ஸ்பெஷல் போலவே.

    ஷெல்டன் அட்டைப் படம்.- நன்றாக இருந்தது. அதுவும் அந்த பின்னணி படத்தை தூக்கி விட்டது என்றே சொல்லலாம். ஆனால் படத்தை மட்டும் பார்க்கும் போது எனக்கு ஒரு ஆங்கில வார்த்தை நினைவுக்கு வந்தது "Re-inventil the wheel".

    நாம் ஏன் மறுபடி மறுபடி அந்த கேரக்டர்களை வரைந்து மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறோம்?

    உதாரணத்திற்கு NBS இதழில் வந்த லார்கோவின் படம். லார்கொவை படித்த எங்களாலேயே அது ளார்கோ என்று முதல் பார்வையில் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்படி இருந்தது படம்.

    அதற்குப் பதில் ஒரிஜினல் அட்டையில் அல்லது புத்தகத்தினூடே இருக்கும் ஒரு ஸ்டில்லை எடுத்து நகாசு வேலை பார்த்து அட்டை படமாக கொடுக்கலாமே? ப்ரொபெசனலாக இருக்கும் அல்லவா? படத்தின் பிண்ணனி எவ்வளவு தூரம் ஒரு படத்தை தூக்கி கொடுக்க முடியும் என்பதற்கு இப்போதைய ஷெல்டன் அட்டைப் படம் சாட்சி.

    நாமே வரைந்த ஓவியங்களை பார்க்கும் போது பழைய புத்தகங்கள் அட்டைப்படங்கள் நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.தாளில், வண்ணத்தில் மாற்றம் கண்டுள்ள நாம் அட்டைப்பட விசயத்திலும் மாற்றம் கண்டால் மிக நல்லது. ஏனென்றால் அட்டைப் படமே பாதி விற்பனைக்கு காரணம் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.. காமிக்ஸ் என்றாலே சின்ன பய சமாசாரம் என்று நினைக்கும் உலகில் இன்னமும் பழைய மாதிரி அட்டைப் படத்தை வரைந்து போட்டுக் கொண்டிருந்தால் இன்னமும் உதாசீனப் படுத்த படுவோம் என்றே தொன்றுகிறது. எனக்கு என்னவோ மீண்டும் (நமக்கு 100% முழுமையாக முடியாத) கரெகடர்களை வரைந்து கொண்டிருப்பது வேண்டாத வேலை என்றே தோணுகிறது.

    கணினி தெரியாது என்று சொல்லிக் கொண்டு கையால் எங்கள் எல்லோருடைய முகவரியையும் எழுதியதில் இருந்து இப்போது கணினியில் பிரிண்ட் அவுட் எடுத்து முகவரி ஒட்டி வரும் மாற்றத்தை போல இதுவும் நம்மால் முடியும்.

    இது குறித்து உங்கள் கருத்து என்ன ?

    ReplyDelete
    Replies
    1. டியர் ராஜ்,
      ஆசிரியரிடம் நீங்கள் கேட்ட நேரடிக்கேள்விக்கு எனது இந்த பின்னூட்டத்தை பதிலாக கருத வேண்டாம். ஏற்கனவே அட்டைப்படத்தை பற்றி காரசாரமாக ஒரு பின்னூட்டத்தை நேற்று பதிந்திருந்தேன். அட்டை படத்தின் தரத்தை பற்றி நீங்களும் கேள்வியை எளுப்பியிருப்பதால என்னுடைய கருத்தை உங்களுடன் SHARE செய்வதே எனது நோக்கம்.

      H & C இதழுக்கான ஷெல்டனின் அட்டைபடம் ஒரிஜினல் அட்டைப்படத்தின் முழுமையான தழுவல். இந்த அட்டையில் நனது பங்கு அந்த இரண்டு காரெக்டர்களை அப்படியே நமது அட்டைக்கு IMPORT செய்து சற்று LIGHTING EFFECTS சை சேர்த்து பின்னணியை முழுமையாக மாற்றியது மட்டுமே.

      இங்கே உள்ளது அதற்கான ஒரிஜினல் அட்டை

      என்னை பொறுத்தவரை CHARACTER PROPORTION களிலும் POSITION களிலும் ஒரு சில BASIC குறைபாடுகள் எப்போதும் நமது அட்டைகளில் உள்ளன .இந்த செல்டன் அட்டையில் ஒரிஜினலிலேயே ஒரு இடம் கண்ணை உறுத்தும்படியாக வரையப்பட்டுள்ளது. நம்மால் அதில் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது.

      ஆனால் இந்த அட்டையை பொறுத்த வரை உங்களை பெரிது கவர்ந்த பின்னணி டிசைன் என்னை சுத்தமாக கவர வில்லை. : (

      இதை போல் வட்டங்களையும் கோலங்களையும் பின்னணியில் சேர்ப்பது எனக்கு பழைய பாக்யா புத்தகத்தை ஞாபகப்படுத்துகிறது. காமிக்ஸ் க்கான அட்டைபடத்தில் ஓவியரின் கைவண்ணமே முழுமையாக இருக்கவேண்டுமென்பது எனது கருத்து. கணிப்பொறி உதவியுடன் செய்யும் நாகாசு வேலைகள் சற்றும் வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வதே ஒரு கிளாச்சிக் அட்டைக்கு உதாரணமாக இருக்க முடியும்.

      ஒரிஜினல் அட்டைப்படங்கள் 99 சதவீதம் அவ்வாறே அமைகிறார்கள். படத்துக்கு/SITUATION க்கு சம்மந்தமில்லாத பின்னணியை ஒருபோது சேர்ப்பதில்லை.

      இதில் நண்பர்களின் கருத்து பெரும்பாலும் மாறலாம். : )

      Delete
    2. Raj Muthu Kumar S :

      உங்களின் கேள்விக்கு நண்பர் சுஸ்கி-விஸ்கி பதில் தர முனைந்துள்ளார் என்ற போதிலும், உங்களது வினவலுக்கு அவரது பதிவில் பதில் முழுமையாக இல்லை என்பதே நிஜம்.

      ஒரிஜினலில் வந்திடும் அட்டைப்பட டிசைன்களை நாம் சில நேரம் திரும்பவும் re-draw செய்வதற்கான காரணம் ரொம்பவே சிம்பிள் !

      மேற்கத்தியா ஒரிஜினல்களுக்கு அட்டைப்படங்களில் பெரிதாய் ஒரு ஈர்ப்பு எல்லா நேரங்களிலும் அவசியமென்று அவர்கள் நினைத்திடுவதில்லை. தவிரவும் அவர்களது பாணியோ என்னவோ - சிம்பிள் லைன் டிராயிங் சித்திரங்களில் color filling செய்வதோடு திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள். இம்மாதிரியான color filling -கள் flat ஆகவே இருந்திடும் ; லைட் & டார்க் gradations பார்த்திட இயலாது .

      உதாரணத்திற்கு - டெக்ஸ் வில்லரின் "சிகப்பாய் ஒரு சொப்பனம்" இதழுக்கு நாம் வரைந்த ஓவியமும், அவர்களது ஒரிஜினல் ஓவியத்தையும் பார்த்தாலே புரிபடும். பின்னணியில் உள்ள நீலத்தில் ஆகட்டும் ; டெக்ஸ் முகத்தில் தெரியும் flesh tone -ல் ஆகட்டும் - ஒரு சப்பையான வண்ணக் கலவை மாத்திரமே இருந்திடும் - இத்தாலிய ஒரிஜினலில். கம்ப்யூட்டர் உதவியுடன் பின்னணிகளை மாற்றி அமைப்பது சுலபமே - தட்டையான நீல வானிற்குப் பதிலாய் வெவ்வேறு effects தரக்கூடிய sky backdrops கொணர்ந்திடலாம்.

      ஆனால் நகமும் சதையுமான மனிதர்களின் முகங்களில், realistic gradations பார்த்திட விரும்பினால் நாட வேண்டியது ஓவியரையே.தற்சமய pre -press முறைகள் நிரம்பவே மாற்றம் கண்டுவிட்டன - ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை - இந்த இரு வகை வண்ணப் பிரிப்புகளுக்கு பயன்படுத்தப்பட்ட நெகடிவ் ரகங்களே கூட தனித்தனி !

      முகங்களில் flat texture இருந்தால் போதுமெனும் சந்தர்ப்பங்களில் ஓவியரின் சித்திரங்கள் தேவைப்படாது ; உதாரணம் - சிக் பில் & லக்கி லூக் கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் ! லார்கோவின் ஒவ்வொரு ஒரிஜினல் டிசைனும் simplicity -ன் உச்சம் எனலாம் ; அவற்றை என்ன நகாசு செய்தாலும் நமது பாணிக்குப் கொணர்வது அசாத்தியமே.

      தவிரவும், ஒவ்வொரு நாட்டு மார்க்கெட்டுக்கும் ; ஒவ்வொரு பதிப்பகத்திற்குமென ஒரு வித ஸ்டைல் உண்டு ! இது நமது பாணி என்று பார்த்திடலிலும் தவறில்லேயே ? It isn't a question of re-inventing ; it's a case of adapting !

      Delete
    3. விஸ்கி-சுஸ்கி : ///H & C இதழுக்கான ஷெல்டனின் அட்டைபடம் ஒரிஜினல் அட்டைப்படத்தின் முழுமையான தழுவல். இந்த அட்டையில் நனது பங்கு அந்த இரண்டு காரெக்டர்களை அப்படியே நமது அட்டைக்கு IMPORT செய்து சற்று LIGHTING EFFECTS சை சேர்த்து பின்னணியை முழுமையாக மாற்றியது மட்டுமே.///

      தவறான யூகம் ! ஒரிஜினலின் அட்டைப்பட டிசைனை நமது ஓவியர் முழுசாய் re -draw செய்துள்ளார் !இன்றிரவு அல்லது காலையில் அதன் ஸ்கேன் copy இப்பதிவினில் upload செய்கிறேன் !

      Delete
  87. ஹாட்& கூல் ஸ்பெஷல் முடித்து விட்டேன் .

    "ஹாட்" கதையை படித்த வுடன் ஒன்று தான் சொல்ல தோன்றுகிறது ....."வாவ் "
    வசன நடை அனைத்தும் அருமை .அதுவும் அந்த திருக்குறள் எடுத்து காட்டு அழகு .நரைத்த ஹீரோ லார்கோ விற்கு சவால் விடும் அளவு அட்டகாசம் .படித்தவுடன் என்ன ஒரு வருத்தம் என்றால் இந்த மூன்று பாக அருமையான கதையை மீண்டும் படிக்க தோன்றினால் ஒரு "பெரிய " புத்தகத்தை மீண்டும் தூக்க வேண்டும் .:-)

    "கூல் "கதையை படித்தவுடன் ஒன்று மட்டும் சொல்லி கொள்ள விரும்புகிறேன் .
    இதுவரை வந்த சிக் பில் & ஆர்டினி கதையில்" தி பாஸ் "இது . வாய் விட்டு சிரிக்க வைத்த அழகான காமெடி கதை.."லக்கி ஜாக்கிரதை "

    டைகர் கதையை இப்பொழுது படிக்கலாமா ? அல்லது அடுத்த நிறைவு பாகமும் வந்தவுடன் படிக்கலாமா ?என ஒரே குழப்பம் ..:-(

    ReplyDelete