Monday, March 18, 2013

ரசனைகளின் பயணம்...!


நண்பர்களே,

வணக்கம். சிந்தனை சுதந்திரத்தின் முழு வீச்சையும் பார்த்திட எண்ணுவோருக்கு நமது கடந்த பதிவும், அதனைத் தொடர்ந்திட்ட விவாதங்கள் ; தெரிவிக்கப்பட்ட அபிப்ராயங்கள் - நல்லதொரு உதாரணமாய் அமைந்திருக்கும் !இந்த சென்சார் சங்கதியினைப் பொருத்த வரை  வானவில்லின் பல வர்ணங்களைப் போல் ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசமான point of view இருப்பதனை இந்த எண்ணச் சிதறல்கள் ரம்யமாய் சித்தரித்ததை நான் மௌனியாய் கவனித்துக் கொண்டிருந்தேன் ! உணர்வுபூர்வமாய்த் தெரிவிக்கப்பட்ட அபிப்ராயங்களின் மீது நான் எவ்விதத்திலும் comment செய்வது பொருத்தமாய் இராது என்று மனதுக்குப் பட்டதால் , இந்த சென்சார் பதிவின்  விவாதங்களில் எனது பின்னூட்டங்களை இடைச்செருகல்களாய் இடாது ஒரு பார்வையாளனாகவே இருந்திடத் தேர்வு செய்தேன் ! 

இந்த விவாதம் துவங்கிய ஆரம்பக் கட்டத்திலேயே நான் செய்த முதல் காரியம்- நமது இவ்வாண்டுக்கான இதர இதழ்களின் அட்டவணையை புரட்டியதே  ! அடுத்தடுத்து வரவிருக்கும் இதழ்களின் பாணிகளை சின்னதானதொரு டிரைலராய் தலைக்குள் ஓட விட்டுப் பார்த்தேன் !   ஏப்ரலில் வரவிருக்கும் திருவாளர் ஷெல்டனின் ஆக்க்ஷன் த்ரில்லரில் சின்னச் சின்னதான சில நகாசு வேலைகளை மாத்திரம் செய்தாலே போதும் என்பது தான் கதையின் தன்மை ! அதே போல ஜூனில் வரவிருக்கும் டேஞ்சர் டயபாலிக் கதையினிலும் பெரிதாய் எந்தவொரு வன்முறை / ஆபாச combination கண்ணில் தென்படவில்லை ! ப்ளூ ஜீன்ஸ் பில்லியனர் லார்கோவின் அடுத்த வருகை நவம்பரில் - அதுவும் ஒரு அதிரடி சாகசப் பின்னணியினில் ! இந்த இதழின் ஒரிஜினலை மீண்டுமொருமுறை புரட்டிய போது நமது வழக்கமான சென்சார் அளவுகோல்களே இங்கே போதுமானதாய் இருக்குமென்பதில் ஐயமேதும் எனக்கில்லை  ! நிஜமான பரீட்சை என்று எழுந்திடப் போவது அடுத்தாண்டு ஏப்ரலில்  லார்கோவின் "SEE VENICE " ; "AND DIE " பாகங்களைக் கையாளும் நேரம் வரும்  போதே என்று தான் தோன்றுகிறது.



கதைக் களமும் சரி ; சித்திரங்களும் சரி - நிஜமான உழைப்பை எங்களிடம் கோரவிருக்குமொரு சவாலாய் இருந்திடப் போவதை இப்போதே என்னால் உணர முடிகின்றது ! இப்போதெல்லாம் நம் வண்டியை உத்வேகத்தோடு இழுத்துச் செல்வதில் பெரும் பங்கு - நமது சமீபத்தியப் பாணி முன்நிறுத்தும் மாறுபட்ட சவால்களே எனும் போது - இது சவால் படலங்களின் லேட்டஸ்ட் அத்தியாயம் என்றே எடுத்துக் கொள்கிறேன் ! இப்போதே இந்தக் கதையினை அணுகிடும் விதம் பற்றிய சில சிந்தனைகள் தலைக்குள் ஓடத் துவங்கியும் விட்டன ! ஓரிரு மாதங்களைத் தாண்டிய திட்டமிடல் என்பதெல்லாம் நமக்குத் துளியும் பரிச்சயம் இல்லாத சங்கதிகள் என்றதொரு நிலை மாறி ; ஓராண்டுக்குப் பின்வரவிருக்கும் இதழ்களைக் கூட இன்று explore பண்ணிடும் ஒரு கொடுப்பினை நிச்சயம் ஆண்டவனின் அருள் என்றே எண்ணத் தோன்றுகிறது ! Touch wood !

Moving on to lighter things....ஏப்ரலின் Hot  n ' Cool ஸ்பெஷல் (ஏகோபித்த தேர்வு :-) ) பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன  ! . இவ்வார இறுதிக்குள் அச்சுப் பணிகள் பூர்த்தியாகி இருக்கும் - மின்னிலாக்காவின் இருள் போர்வை தொடர்ந்திடும் போதிலும்! டைகரின் க்ளாசிக்ஸ் வண்ண மறுபதிப்பு இதழின் பணிகளும் கூட simultaneous ஆக  நடந்தேறி வருகின்றன ; அவை அச்சை சந்திக்கும் வேளை - அடுத்த வாரம் ! இரு இதழ்களும் இணைந்து ஏப்ரல்  பத்துக்குள் உங்களைச் சந்திக்கக் கிளம்பிடும் ! ஒரு சமீபத்திய சந்தோஷம் - கடந்த 3 வாரங்களாய் நிறைந்து வரும் நமது க்ளாசிக்ஸ் சந்தா நோட்டின் பக்கங்கள் ! ஆறு மாதங்களாய் 72-ஐத் தாண்டிட மறுத்து சண்டித்தனம் செய்து வந்த இந்த நோட் இப்போது விறு விறுவென்று தடிமனாகி வருகிறது!Thanks guys !!!  

இப்போதைய எனது பார்வை ஓடிடுவது நமது ஜூலை வெளியீடும், லயனின் ஆண்டு மலருமான "ALL NEW ஸ்பெஷல்" மீதே !  "ஒரு வித்தியாசமான இதழ்" என்ற அந்த தேய்ந்து போன டயலாக்கை இம்முறை நிஜப்படுத்தும் ஒரு இதழாய்;இதற்கு முந்தைய நமது எந்தவொரு முயற்சியினையும் போலல்லாத,புதுமையான கதைகளை மாத்திரமே தாங்கிடும் ஒரு இதழாய்  இந்த இருநூறு ரூபாய் annual அமைந்திட வேண்டுமென்பது எனது பிரதான நோக்கம் ! NBS இதழோடு வந்திருந்த குட்டி ட்ரைலரில் 4 வெவ்வேறு (புது) கதைத் தொடர்களை விளம்பரப்படுத்தியிருந்தேன். ஆனால் அவை 2 வெவ்வேறு பிரெஞ்சுப் பதிப்பகங்களின் படைப்புகள் என்பதால், ஒரே இதழில் அவற்றை ஐக்கியப்படுத்திடுவதில் வெற்றி கிட்டிடவில்லை. 'எங்கள் வழிகள் தனித்தனியாகவே இருந்திடட்டுமே' என்று இருவருமே அபிப்ராயம் சொல்லியுள்ளதால், சின்னதாய் ஒரு ஏற்பாடு அவசியமாகிறது ! 200 ரூபாய்க்கு ஒரே இதழ் - என்பதற்குப் பதிலாக - ஸ்பெஷல் 1 ; ஸ்பெஷல் 2 என்று இரு இதழ்களாக ஜூலையினில் வரவிருக்கின்றன ! (ஒரு அட்டைப்படம் போனஸ் !)   

முதல் இதழில் டிக் ஆகிடும் முதல் ஹீரோ - JASON BRICE ! 1920-ன் லண்டனில் அரங்கேறிடும் இந்தக் கதைக்களம் நமக்குப் புதுமையானதே ! ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் கொஞ்சமாய் இந்தக் காலகட்டத்தை showcase செய்துள்ளோம் என்ற போதிலும், அந்த சித்திரங்களில் ; கறுப்பு-வெள்ளை பாணியில் அது பெரிதாய் ஒரு தாக்கத்தை உருவாக்கி இருக்க சாத்தியமில்லை தான். வண்ணத்தில் வரவிருக்கும் JASON BRICE  உலகின் மையப் புள்ளியாகத் திகழ்ந்த ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய இலண்டனின் மர்மங்களை நமக்குக் காட்டிடவிருக்கும் நாயகர்.  கதை நிகழும் arena மட்டுமல்லாது கதையின் பாணியே கூட வித்தியாசமானதென்று சொல்லலாம் ! ஆவிகளோடு பேசிட முயலும் மீடியம்கள் ; மர்மம் சூழ்ந்ததொரு plot என்று இந்த 1920's துப்பறிவாளரை ஒரு மாறுபட்ட முயற்சியில் சந்திக்கவிருக்கிறோம்.   

இவரோடு இன்னொரு புது நாயகரான ஜோனதன் கார்ட்லண்ட் அறிமுகம் செய்திட நினைத்துள்ள போதிலும், இவரை ஒரு கௌபாய் / வேட்டையர் ரகத்தில் தான் slot செய்திட இயலும் என்பது ஒரு உறுத்தல். இவரது இடத்தை பொருத்தமானதொரு புதுமுகத்தைக் கொண்டு ரொப்பிட முயற்சிகள் சில மேற்கொண்டு வருகிறேன். அவற்றில் வெற்றி கிட்டினால்"இரத்தப் படலம்" போலொரு powerful ஆன தொடர் நமக்குக் கிட்டியிருக்கும் என்பதை மாத்திரம் சொல்லிடலாம் ! Fingers crossed ! 


மூன்று பாகங்கள் கொண்ட எனது சமீபத்திய காதலான GREEN MANOR - தொடரின் முதல் பாகத்தைக் கூட "ALL  NEW ஸ்பெஷலில்" இணைத்திடலாம் ; தொடரும் ஆகஸ்டில் அதன் பாக்கி இரு பாகங்களை வெளியிடும் திட்டத்தோடு ! அடுத்த 15 நாட்களுக்குள் இது பற்றிய எனது தீர்மானங்களுக்கு ஒரு இறுதி வடிவம் கொடுத்த பின்னே - திட்டவட்டமான அறிவிப்பு வந்திடும். 

ALL NEW SPECIAL's புக் # 2 ஆக வரவிருப்பது - BATCHALO என்ற பெயரினில் உருவாக்கப்பட்டதொரு பிரெஞ்சு கிராபிக் நாவல் + ஸ்டீல் பாடி ஷெர்லக்கின் முழு நீளக் கார்டூன் ! இரண்டாம் உலக யுத்தத்தின் போது சொல்ல இயலா இன்னல்களைச் சந்தித்த நாடோடிக் கூட்டத்தின் அவஸ்தைகளை சித்தரிக்கும் BATCHALO - வித்தியாசமான வண்ணக் கலவைக்கும் நம்மை அறிமுகம் செய்திடவிருக்கிறது !    

நம் ரசனைகளின் பயணம் சீரியஸ் ஆக எங்கெங்கோ சென்றிடத் தயாராகிடும்   வேளையினில்,ஒரு ஜாலியான break கூடக் காத்துள்ளது !  உங்கள் வீட்டுக் குட்டீஸ்களுக்கும் ; அவர்கள் பெயரைச் சொல்லி நாமும் ரசித்து மகிழ - வரவிருக்கிறார் "சுட்டி லக்கி "! நிழலை விட வேகமாய்த் தோட்டா மழை பொழியும் முன்னர் - உண்டிவில்லைக் கொண்டு அதகளம் செய்த அவரது அரை டிராயர் பருவத்து சாகசம் இடைச் செருகலாய் விரைவில் வரவிருக்கிறது. எங்கே ?எப்போது? என்பது விரைவில்! உங்கள் வீடுகளிலிருக்கும் எங்களது வருங்கால சந்தாதாரர்களை -அறிமுகம் செய்திட இதுவொரு அழகான வாய்ப்பென்றே மனதுக்குப் படுகிறது ! போகோ முன்னேயும் ; சோட்டா பீம் முன்னேயும் லயித்துக் கிடக்கும் நாளைய மன்னர்களை காமிக்ஸ் எனும் நம் அற்புத உலகினுள் நுழைத்திட  தயார்படுத்தி வையுங்களேன் !
அவர்களும் இந்தப் பக்கத்தில் எழுதிடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற சந்தோஷ நம்பிக்கையோடு தூக்கத்தைத் தேடிச் செல்கிறேன் இப்போதைக்கு !  Catch you soon folks ! Bye for now ! 

341 comments:

  1. அப்பாடா... first comment போட்டாச்சு...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள்! பாண்டி அட்டாக்கர் அவர்களே!

      Delete
  2. மிகவும் சந்தோசம் சார். கிட் லக்கி தூள் கிளப்பும் கதை. உங்கள் தேர்வுகள் அனைத்தும் நன்றாகவே இருக்கும் என்று நம்புகிறோம்.

    ReplyDelete
  3. சென்சார் ஐ பொறுத்த வரை உங்கள் கருத்து என்ன என்பதை தெரிய படுத்தினால் பலரின் ஐயம் நீங்குமே. உங்கள் மௌனம் எதற்கு சம்மதம் என நாங்கள் எடுத்து கொள்வது சார்?

    ReplyDelete
    Replies
    1. புத்தக ப்ரியன் : செய்து விட்டுச் சொல்வது தானே நமது தற்சமய பார்முலா ?! So - வார்த்தைகளில் அல்லாது, செயலில் எனது கருத்துக்களை பிரதிபலிக்கச் செய்வதே சாலச் சிறந்தது !

      Delete
  4. // உங்கள் வீடுகளிலிருக்கும் எங்களது வருங்கால சந்தாதாரர்களை -அறிமுகம் செய்திட இதுவொரு அழகான வாய்ப்பென்றே மனதுக்குப் படுகிறது ! போகோ முன்னேயும் ; சோட்டா பீம் முன்னேயும் லயித்துக் கிடக்கும் நாளைய மன்னர்களை காமிக்ஸ் எனும் நம் அற்புத உலகினுள் நுழைத்திட தயார்படுத்தி வையுங்களேன் !//

    இத...இதைத்தான் எதிர்பார்த்திருந்தோம் சார்.. நன்றி..

    ReplyDelete
  5. //ஏப்ரலின் Hot n ' Cool ஸ்பெஷல் (ஏகோபித்த தேர்வு :-) ) பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன !//
    //டைகரின் க்ளாசிக்ஸ் வண்ண மறுபதிப்பு இதழின் பணிகளும் கூட simultaneous ஆக நடந்தேறி வருகின்றன//
    // இரு இதழ்களும் இணைந்து ஏப்ரல் பத்துக்குள் உங்களைச் சந்திக்கக் கிளம்பிடும் !//

    சந்தோஷமான செய்தி...இப்போதெல்லாம் ஒரு மாதம் என்பது ஒரு யுகம் போல் தெரிகிறது சார்..

    ReplyDelete
    Replies
    1. காமிக்ஸ் ரசிகன் (எ) புதுவை செந்தில் : எங்களுக்கோ நேர் மாறாய்த் தோன்றுகிறது - 30 நாட்கள் மூன்றே நாழிகைகளில் கரைந்திடுவது போலாய் !

      Delete
  6. //பொருத்தமானதொரு புதுமுகத்தைக் கொண்டு ரொப்பிட முயற்சிகள் சில மேற்கொண்டு வருகிறேன். அவற்றில் வெற்றி கிட்டினால்"இரத்தப் படலம்" போலொரு powerful ஆன தொடர் நமக்குக் கிட்டியிருக்கும் என்பதை மாத்திரம் சொல்லிடலாம் ! Fingers crossed ! //

    சரிதான்... இனிமே தூங்கினப்பலதான்... இப்பவே மணி 2 ஆகப்போகுது... இரத்தப் படலம்" போலொரு powerful ஆன அந்த தொடர் என்னனு தெரியற வரைக்கும்.. கண்ண மூடுனா கனவுல காமிக்ஸ்தான..

    ReplyDelete
  7. என் பெயர் லார்கோ.
    யாதும் ஊரே..யாவரும் எதிரிகள்.
    கான்கிரீட் கானகம் நியூயார்க்.
    சுறாவோடு சடுகுடு.
    துரத்தும் தலைவிதி.
    விதியோடு விளையாடுவேன்.

    நீங்கள் வைக்கின்ற ஒவ்வொரு தலைப்புமே கதை சொல்கிறதே... (இது வரை லார்கோ கதைகளில் "ஒரு" என்ற வார்த்தை வரவில்லை :-))

    SEE VENICE... AND DIE. இதற்கு நீங்கள் வைக்கப்போகும் தலைப்புகள் என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் இருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. பட்டியலில் "ஆதலினால் அதகளம் செய்வீர் " (நவம்பர் 2013) தலைப்பையும் சேர்த்துக் கொள்வோமா :-)

      Delete
    2. செத்தாலும் வெனிச பாத்துட்டு சாகணும்!
      வெனிச பாரு பின்னாடி செத்துப்போ நயினா!
      வெனிச கண்டுகிட்டு செத்துப் போ மாமே! ஹி ஹி ஹி இப்படில்லாம் தலைப்பு கொடுத்துவிட்டு நாங்க தப்பிச்சு ஓடிடுவோம்! மற்றவை தங்களின் கற்பனையில்! ஹி ஹி ஹி கறுப்புக் கிழவிக்கு ஒரு இடம் கொடுக்கலாமே? இல்லைன்னாலும் திகில் ஸ்பெஷல் ஏதாவது கணக்குல சேர்த்துக்கலாமே தலைவரே?

      Delete
    3. வெனிசைப் பாரு! வேதாளம் ஆகு!
      ஹி! ஹி! ஹி!

      Delete
    4. உயிரின் எல்லை 'வெனிஸ்',

      காட்சி எல்லை 'வெனிஸ்',

      வெனிசில் ஓர் உயிர்கொள்ளை.

      ஆதி வெனிஸ், அந்தம் வெனிஸ்.

      வெனிஸ்- 'இன்றே கடைசி'.

      வெனிஸ்- 'உள்ளே வராதே... அபாயம்'

      மரணம் நெருங்கும் இடம் - வெனிஸ்

      மரணம் தொடும் தூரம் - வெனிஸ்.

      மரண கண்காட்சி - வெனிஸ்.

      Delete
  8. ரசனைகளின் பயணம்! என்ன ஒரு தலைப்பு... தலைப்புக்கேற்றவாறு அதில் எழுதியுள்ள வர்ணஜாலங்கள் செய்ய காத்திருக்கும் காமிக்ஸ் ரசிகர்களுக்கேற்ற விதவிதமான வித்தியாசமான கதைக்களம் கொண்ட புத்தகங்கள் அடடா...ஆசிரியரை பாராட்டாமல் இருக்கவேமுடியவில்லை. ஒவ்வொரு வாசகர்களின் கருத்தை பொறுமையாய் படித்த ஆசிரியருக்கு...அந்த தகுதியை...அவரைவிட்டால் வேறு எந்த ஆசிரியருக்கும் இந்த தகுதி வரவேவராது. மேலும் தங்கள் அறிவித்துள்ள அனைத்து கதைகளையும் புத்தகமாய் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்(றோம்). சுட்டி லக்கியை சிறுவர்களுக்காக தனி இதழ்களாய் வெளியிடப்போகிறீர்களா அல்லது முத்து,லயன் இதிலேயே வெளியிடப்போகிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. Karnan L : தனி இதழுக்கு இன்னமும் நாம் தயாராகிடவில்லை ...So "சுட்டி லக்கி" லயனில் தான் வரவிருக்கிறார் !

      Delete
  9. உற்சாகம் மூட்டும் செய்திகள் . பதிவின் தலைப்பைப் போன்றே தேர்ந்தெடுத்திருக்கும் கதைகளிலும் பலதரப்பட்ட ரசனைகளின் வெளிப்பாடு தெரிகின்றது .

    ReplyDelete
    Replies
    1. Meeraan : கால் நூற்றாண்டுக்கு முந்தைய ரசனைக்கு ஸ்பைடர் ; ஆர்ச்சியின் KFC fast foods ரகக் கதைகள் போதுமானதாய் இருந்தன ; இன்றைய நம் அசுரப் பசிக்கு - நிறையவே அவசியமே ?!

      Delete
  10. இப்படி எல்லாப் பதிப்பகத்தார்களும் 'எங்கள் வழி தனி வழியாக இருந்திடட்டுமே' என்று கருதிடும்பட்சத்தில், இனிவரும் காலங்களில் 8 அல்லது 10 கதைகள் உள்ளடக்கிய (நமது ஸ்பெஷாலிட்டியான) குண்டு இதழ்கள் கிடைத்திடுமா என்ற பயம் எழுகிறதே?

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அதே பயம்தான்.

      Delete
    2. Erode VIJAY : நமது சமீபத்திய NBS கூட ஏராளமான கதைகளின் கலவை தான் - ஆனால் அவை அனைத்துமே ஒரு குடையின் கீழே பிரசுரமாகும் பல பதிப்பகங்களின் படைப்புகள் ! அவற்றை ஒன்றிணைப்பதில் சிரமம் ஏதும் கிடையாது !

      அவர்களது கதை கிட்டங்கியில் இன்னமும் நிறையவே சரக்கு பாக்கி இருப்பதால் பயம் வேண்டாமே !

      Delete
  11. உண்டிவில், லாலிபாப், கோடு போட்ட டவுசர் கணக்கா 'சுட்டி லக்கி' வந்து இறங்கிட்டார்னா, இனிவரும் புத்தகங்களை நம்ம வீட்டுச் சுட்டிகள் முழு ஆக்கிரமிப்புச் செஞ்சுடுவாங்களே?! அப்புறம் பெரிசுங்க (நாங்கதான்) எதைப் படிக்கிறதாம்?

    அச்சச்சோ...

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : அடடா.."சுட்டி லக்கி"க்கு நான் மனதில் கொண்டிருந்த யூத் வாசக வட்டத்தின் தலைவரே நீங்கள் தானே ?!! So - பெருசுங்க பட்டியலுக்குள் உங்களுக்கென்ன வேலை ??

      Delete
    2. ஆங்! சரியாச் சொன்னீங்க சார்! இப்பவே போய் ஒரு பாக்கெட் லாலிபாப்பும், கொஞ்சம் கேரமெல்லும் வாங்கியாந்திடரேன்! ;)

      Delete
    3. Erode VIJAY : பூனையார் புதுசாய் ஒரு அவதாரம் எடுத்துள்ளது போல் தெரியுதே !!

      Delete
    4. அதே பூனைதான் சார்! சென்ற இதழின் 73ம் பக்கத்தை எதேச்சையா பார்த்துட்டு இப்படியாகிடுச்சு! :)

      Delete
  12. எடிட்டர் சார்,

    'லார்கோ ஆக்ஸன் ஸ்பெஷலில்' லார்கோ, சைமன், கதாசிரியர், ஓவியர் இவர்களையும் தாண்டி நிஜமான ஹீரோவாக புத்தகம் முழுக்க வியாபித்திருந்தது அசர வைத்திடும்; 'இப்படியெல்லாம்கூட முடியுமா' என்று வியக்கவைத்திடும் உங்களது மொழிபெயர்ப்பே!!!

    மொழிபெயர்க்கும்போது எத்தனை முறை உங்களுக்கு கண்ணைக் கட்டுச்சோ தெரியலையே! இந்த அசுர உழைப்பு நிச்சயம் பலனளிக்கும்.

    என்னா ஒரு மொழிபெயர்ப்பு!

    சூப்பர்!!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : Erode VIJAY : முயற்சிகள் கவனிக்கப்படும் போது, அவற்றின் பின்னணிச் சிரமங்கள் காணாது போய் விடுவதும் வாழ்க்கையின் மாயாஜாலம் தானோ ? :-)

      லார்கோவைப் பொருத்த வரை - நீங்கள் பாராட்டிட வேண்டிய முதல் ஆசாமி,இதனை Cinebooks ஆங்கிலப் பதிப்பிற்காக பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்திட்ட ஜாம்பவானையே ! ஸ்பஷ்டமாய் அது போலொரு ஆங்கில ஸ்கிரிப்ட் கிட்டி இருக்காவிடின் எனது தமிழாக்கம் நிறையவே சிரமப்பட்டிருக்கும் !

      தவிரவும் லார்கோவின் ஸ்பெஷாலிடியே - காடோ, மலையோ ; மேடோ, பள்ளமோ - நம்மையும் அவரோடு இழுத்துச் சென்றிடும் ஒரு வசீகரம் ! எழுதும் போதும் சரி ; படிக்கும் போதும் சரி - அவரோடு ஒன்றிடாது இருத்தல் சாத்தியமல்ல ! So - கதையோடு ஐக்கியமாகிச் செல்லும் வேளைகளில், வார்த்தைகளின் பிரயோகம் பாங்காய் அமைவது சுலபமாய் நேரும் சங்கதி என்பதை லார்கோ மூலம் நானும் உணர்ந்திட முடிந்தது !

      தற்போது தமிழாக்கம் செய்து வரும் GREEN MANOR கதைகள் கூட இந்த ரகம் தான் என்பேன் ! இன்னுமொரு அற்புதமான ஆங்கில ஸ்கிரிப்ட் !

      Delete
    2. // GREEN MANOR கதைகள்கூட இந்த ரகம் தான் என்பேன் //

      am waiting... :)

      Delete
  13. Looking forward to the World war 2 based graphic novel, picture looks amazing. And green manor kindles lot of interest with its mystery plot.
    Cant wait to see the All New special.

    ReplyDelete
  14. விஜயன் சார், அந்த கிட்டங்கி கிட்டங்கி இன்னு சொல்லும் போது அதை பார்க்க ரொம்ப ஆசை! சிவகாசி பக்கம் வந்தால் உங்க கிட்டங்கி பார்க்க ஆசை! சின்ன சின்ன ஆசை .....காமிக்ஸ் கிட்டங்கி பார்க்க ஆசை!!

    so we will be getting one additional book on this year :-)

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : ஜால்ரா பாயின் தொந்தி போல் இருந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முந்தைய எங்களது "கிட்டங்கி" - தற்சமயம் நிறையவே மெலிந்து, ஒல்லிப்பிச்சான் லக்கி லூக் போல் காட்சி தருகின்றது !

      Always welcome !

      Delete
  15. To: Editor,

    'கிட் லக்கி' அவரது ஆரம்ப சாகசத்திலிருந்து வர ஆரம்பிப்பாரா? அல்லது இடை நடுவில் ஏதேனும் கதையோடு நுழைவாரா?

    ReplyDelete
    Replies
    1. Podiyan : ஆரம்பம் முதல் !

      Delete
  16. To: Editor,

    //தற்போது தமிழாக்கம் செய்து வரும் GREEN MANOR கதைகள் கூட இந்த ரகம் தான் என்பேன் ! இன்னுமொரு அற்புதமான ஆங்கில ஸ்கிரிப்ட் !//

    15ஆம் திகதி வாசகர் போட்டிக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்திருந்தீர்கள்........

    ReplyDelete
  17. டியர் சார்...
    all new speciel 1 & 2 நல்ல முயற்ச்சிதான் ஆனால் தாங்கள் முன்பு அறிவித்த மாதிரி ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் நான்கு கதைகள் ஆல் நியூ ஸ்பெஷலில் வெளிவரும் என்று தாங்கள் கூறி விட்டு,
    தற்போது இடைச்சொறுகளாக ஸ்டீல் பாடி ஷெர்லாக் ஹோம்ஸ் காமெடிக் கதையை தாங்கள் நுழுப்பது ஏன்? சார். தற்போது வித்தியாசமான கதைகள் எதுவும் தங்களிடம் கைவசம் இல்லையா? காமெடி கதைகளையும் ஆக்‌ஷன் கதைகளையும் ஒன்றாக இணைத்து வெளியிடும் போது, சென்ற மாதம் வெளிவந்த லார்கோ கதையில் எழுந்த பிரச்சனை மீண்டும் எழாதா? சார் அதனால் காமெடிக் கதைகளை தனியாகவும், ஆக்‌ஷன் கதைகளை தனியாகவும் ஸ்பெஷலாக வெளியிட்டால், பயப்படாமல்(சிறுவர்கள்) படிக்க ஏதுவாக இருக்கும். மற்றும் தாங்கள் அறிவித்துள்ள கிட் லக்கி கதை euro books-ல் oklahoma jim என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது. இந்த கதை தமிழில் வெளிவராதா என்று பல நாட்கள் எண்ணியதுண்டு. விரைவில் வெளியிட முயற்ச்சியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. I believe kid lucky and okahoma jim both are diferent stories

      Delete
    2. ப்ரூனோ ப்ரேசில் : ஸ்டீல்பாடி ஷெர்லாக் தானே ஒரிஜினல் தேர்வு..NBS ட்ரைலரில் கூட அவரைத் தானே சித்தரித்திருந்தோம் !

      Delete
  18. சுவாரசியமான அறிவிப்புகள்! உலகப்போர் தொடர்பான கதைகள் பிடிக்கும் என்பதால் Batchalo-வை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்!

    ஸ்பெஷல் 1 - கதை 2 : //"இரத்தப் படலம்" போலொரு powerful ஆன தொடர்//
    :-)
    :-(

    ReplyDelete
  19. கிட் லக்கி...? வி ஆர் வெரி லக்கி…! புதிய புதிய கதைத் தொடர்களும் புதிய ஹீரோக்களும் எங்களை ரொம்பவே எதிர்பார்க்க வைக்கின்றனவே… தினசரி செய்தித்தாள் போல தினசரி காமிக்ஸ் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

    ReplyDelete
    Replies
    1. வருடம் ஒருமுறை இருமுறை மும்முறை என்பது மாறி மாதமொருமுறை ஆகிவிட்டதுபோல் மாதம் இருமுறை மும்முறை என முன்னேறி வரட்டும்

      Delete
    2. விடாமுயற்சி……விஸ்வரூப வெற்றி…

      Delete
  20. இந்தப் பதிவின் எழுத்துக்களின் நிறம் கண்களை ரொம்ப நோகடிக்கிறது சார்... ஒருவேளை என் மொபைலில்தான் கோளாறோ என்னவோ தெரியவில்லை…

    ReplyDelete
  21. என்ன கோவை இரும்புக்கையார் மாயமாயிட்டாரா????

    ReplyDelete
  22. திரு விஜயன் சார்,

    சென்ற இதழில் வெளிவந்திருந்த ‘மியாவி’ எனது இரண்டரை வயது மகனை மிகவும் கவர்ந்து விட்டது. இரு முறை நான் அந்த பக்கத்தை வைத்து கதை சொல்லி கொடுக்க, பக்கத்து வீட்டு வாண்டுகளுக்கு இவன் சொல்லி கொடுக்க ... அடடா அற்புதமான தருணம் ...

    நீங்கள் கூறியது போல உங்களது ‘வருங்கால சந்தாதாரர்’ ஒருவர் எனது வீட்டில் உருவாகி கொண்டு இருக்கிறார்

    உங்கள் வருங்கால சந்தாதாரர் கேட்ட கேள்வி:

    "அந்த அங்கிளுக்கு தலை எங்கப்பா ?" (மியாவி பக்கத்தில்)


    நீங்கள்தான் சார் இதற்க்கு பதில் சொல்லணும் :)


    ReplyDelete
    Replies
    1. திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : குழல் இனிது...யாழ் இனிது என்பர் ....தம் மக்கள் கதை சொல்வதைக் கேளாதவர் :-)

      Delete
    2. உண்மை சார் !!! என்ன விலை கொடுத்தாலும் இதற்க்கு ஈடாகாது ....

      Delete
  23. கிட் லக்கி என்பதிலும், லக்கி சுட்டி என்பது நன்றாக எடுபடும் போலிருக்கே....

    உலகம் எத்தனைதான் மாறினாலும் காமிக்ஸ் என்ற இரசனை என்றுமே மாறாது, என்னே அது வெளிவரும் ஊடகம் மாத்திரம் மாறலாம்....

    அன்றோயிட்டிலும், ஆப்பிளிலும் ’லயன் காமிக்ஸ்’ என்ற ஆப்ஸை டவுன் லோடு செய்து நம்ம காமிக்ஸை படிக்கும் காலம் வரத் தான் போகிறது. :)

    ReplyDelete
    Replies
    1. Suganthan P : ஆயிரம் கனவுகள் கண்டால் அவற்றில் ஒரு நூறாவது நிஜம் ஆகிடும் நாளும் வாராது போகுமா - என்ன ?!!

      Delete
  24. காமிக்ஸ் கிளாச்சிக்ஸ் நோட்டில் என் பெயரையும் பொரித்து விட்டேன். புது ஹீரோக்களுக்கு என் வரவேற்பு.

    லார்கோ ஆக்சன் ஸ்பெஷலில் இருந்த மொழிபெயர்ப்பை மிகவும் ரசித்தேன். லார்கோ மற்றும் சைமனின் நக்கல் வசனங்கள் அருமை. சென்சாரில் தப்பிய பக்கங்கள் மட்டுமே நெருடலான விஷயம்.

    சென்சார் விசயத்தில் எல்லோருக்கும் ஏற்ற தீர்வை கொடுக்க முடியும் என்று உங்களை நம்புகிறேன்.

    ReplyDelete
  25. BATCHALO, சில பக்கங்கள் பார்க்க கிடைத்தது, நன்றாகா உள்ளது. வித்தியாசமான வண்ணகலவை. வெஸ்டேர்ன் கதை மாதிரி. கதையும் வித்தியாசமாக இருக்கும் போல தெரிகின்றது. கிட் லக்கி லுக், கண்டிப்பாக சிறுவர்களை கவரும். தனிக்கதையகா கொண்டுவாங்க. JASON BRICE உடன், தோர்கள் அல்லது அல்டிபரேன் கதைகளை கொண்டுவாருங்கள். வாசக நண்பர்கள் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    ReplyDelete
  26. //அடுத்தாண்டு ஏப்ரலில் லார்கோவின் "SEE VENICE " ; "AND DIE " பாகங்களைக் கையாளும் நேரம் வரும் //
    2014 ஏப்ரல் மாதத்து இதழ் இப்பொழுதே THINKING PROCESS'ல். இதை பார்க்கும் போது நமது திட்டமிடுதலின் வீச்சு ஒரு வருடத்தையும் தாண்டிவிடுகிறது.நமது FOCUS & COMMITMENT க்கு இது ஒரு சின்ன சான்று. நமது பயணம் சரியான பாதையில் சரியான வேகத்தில் பயணிக்கிறது என்பதில் எள்ளவும் ஐயமில்லை. LETS ROCK THE PRESENT & FUTURE GENERATION WITH THE BEST COMICS IN THE WORLD. : )


    //இப்போதெல்லாம் நம் வண்டியை உத்வேகத்தோடு இழுத்துச் செல்வதில் பெரும் பங்கு - நமது சமீபத்தியப் பாணி முன்நிறுத்தும் மாறுபட்ட சவால்களே எனும் போது - இது சவால் படலங்களின் லேட்டஸ்ட் அத்தியாயம் என்றே எடுத்துக் கொள்கிறேன் !//

    WELL SAID SIR !

    //இரு இதழ்களும் இணைந்து ஏப்ரல் பத்துக்குள் உங்களைச் சந்திக்கக் கிளம்பிடும் !//

    மிகவும் ஆவலுடன் ஏப்ரல் மாதத்து கோடை மலரான "HOT N' COOL " ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

    //இப்போதைய எனது பார்வை ஓடிடுவது நமது ஜூலை வெளியீடும், லயனின் ஆண்டு மலருமான "ALL NEW ஸ்பெஷல்" மீதே ! //

    தடியான புத்தக கனவு போச்சே!! : ( சமீபத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட GREEN MANOR , ஷெர்லாக் ,இப்போதய JASON BRICE ஆகிய இவையனைத்தும் 1920 இங்கிலாந்தை மையப்படுத்தியே சுழலும் கதைக்கலாம். ஒரே பாணி கதைகள் சற்று OVERDOSE ஆகிவிடாதா?.
    குளிக்காத கௌபாய் ,இங்கிலாந்து ஜென்டில்மேன் துப்பறிவாளர், அமெரிக்க அடிதடி ஹீரோ இவை தவிர காமிக்ஸ்சில் வெறு கதைகளங்கலே கிடையாதா ??? ALL NEW SPECIAL லில் FANTASY மற்றும் SCI -FI கதைகள் வந்தாலே அது உண்மையான ALL NEW SPECIAL லாய் வாசகர்களின் மாறுபட்ட ரசனையை அறிய உதவும்.நமது காமிக்ஸ்சில் இருந்த கொஞ்ச நஞ்ச FANTASY யும் SPIDER & ARCHI யை மூட்டை கட்டி வைத்த நாள் முதல் காணமல் போயே போச்சே...?? : (
    BTW உலக போர் கதைகள் ஒரு நல்ல தொடக்கம் !

    FRANCO-BELGIAN, BRITISH ,AMERICAN கதைகளை விடுத்து OTHER COUNTRY COMICSசை EXPLORE செய்யலாமே சார்...INDIAN,JAPANESE,CHINES THIS POINT IS FOR THE KIND ATTENTION TO OUR JUNIOR EDITOR MR.ARAVIND VIJAYAN.

    //அவர்கள் பெயரைச் சொல்லி நாமும் ரசித்து மகிழ - வரவிருக்கிறார் "சுட்டி லக்கி "!//
    சுட்டி லக்கி வரும் நாள் எந்நாளோ?? அந்த அட்டைபடம் ஓன்று போது கதைகளின் தன்மையை பற்றி கூற. VERY VERY INTERESTING NEWS .

    அப்புறம் KBT-2 பற்றி ஏன் ஒரு மௌனம் சார். அதைபற்றிய அறிவிப்பு ஒன்றும் இல்லையே இந்த பதிவில்???

    ReplyDelete
  27. டியர் எடிட்,

    அதிரடி அறிவிப்புகள் கொண்ட பதிவு அட்டகாசம்.

    // ஆறு மாதங்களாய் 72-ஐத் தாண்டிட மறுத்து சண்டித்தனம் செய்து வந்த இந்த நோட் இப்போது விறு விறுவென்று தடிமனாகி வருகிறது! //

    வண்ண மறுபதிப்புகள் அறிவிப்புக்கு கிடைத்த வரவேற்பு என்று எடுத்து கொள்ளலாமா ?

    // ஒரே இதழ் - என்பதற்குப் பதிலாக - ஸ்பெஷல் 1 ; ஸ்பெஷல் 2 என்று இரு இதழ்களாக ஜூலையினில் வரவிருக்கின்றன ! (ஒரு அட்டைப்படம் போனஸ் !) //

    நிரம்ப நாட்களாக நான் தொடர்ந்து வழியுறுத்தும் ஒரு விடயம். இதை ஆண்டு இதழில் மட்டும் கடைபிடிக்காமல், இனி எப்போதும் 100 ரூபாய் இதழ்களையே ஸ்டான்டர்டாக வைத்து கொள்ளுங்களேன். ஒவ்வொரு புத்தகமும் ஒரே அளவில் ஒரே விலையில் வருடம் முழுவதும் வெளிவரும் நாளை நானும் என்று தான் காண போகிறேனோ ?

    // மூன்று பாகங்கள் கொண்ட எனது சமீபத்திய காதலான GREEN MANOR - தொடரின் முதல் பாகத்தைக் கூட "ALL NEW ஸ்பெஷலில்" இணைத்திடலாம் //

    வழமை போலவே இதற்கு என்னுடைய சைடில் இருந்து ஆட்சேபனைகளை தெரிவித்து கொள்கிறேன். தனி இதழ்களை மட்டுமே மசாலா ஸ்பெஷல்களில் எக்ஸ்ல்யூசிவாக வெளியிடுங்களேன். தொடர்கள் தனி தனி இதழ்களாக வருவதே அதற்கும் சிறப்பு, கலெக்ஷன் என்ற பார்வையிலும் சரிவரும். இவ்விஷயம் லார்கோ, ஷெல்டன், க்ரீன் மேனார் போன்ற பலவற்றிக்கும் சரிவரும்.

    Cartland, Batchalo மற்றும் JASON BRICE போன்ற தொடர்களையும் முதல் முறையாக படிக்க ஆவலுடன் உள்ளேன்... கூடவே Kid Lucky ஒரு சிறந்த தேர்வு. நீங்கள் கூறியபடி, இளவட்ட வாசகர்களை நம் இதழ்கள் பக்கம் இழுக்க இது ஒரு முக்கிய காரணமாக அமைய போவது உண்மை. ஆங்கிலத்தில் வெளிவராத (Kid Lucky தவிர) இப்படிபட்ட தொடர்களை தொடர்ந்து வெளியிடுங்கள். தமிழ் காமிக்ஸ்களில் நாங்கள் எதிர்பார்ப்பது அதை தான்.

    கடைசியாக ஒரு கேள்வி (நெடுநாளாக கேட்க எண்ணி இருந்தது): சமீப காலமாக சினிபுக் ஆங்கில மொழிபெயர்ப்பை பற்றி நீங்கள் சிலாகித்து கூறுவது கண்டு மகிழ்ச்சி. உங்களிடம் நான் மிகவும் எதிர்பார்த்த ஒரு பதில் அதுதான், கூடவே உண்மையான அங்கீகாரம் உரியவருக்கு சென்று சேரும் விதமும் மகிழ்சசியே.

    என் கேள்வி என்னவென்றால், புத்தக உரிமைகளை ப்ரஞ்சு பதிப்பகத்தினரிடம் இருந்து வாங்குவதை போல, ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்கும் சினிபுக் நிறுவனத்திரிடமிருந்து தனியாக உரிமம் வாங்கி கொள்வீர்களா... இல்லை அதையும் ப்ரஞ்சு பதிப்பகமே தனி விலையில் உங்களுக்கு தந்து உதவுகிறதா ?

    ReplyDelete
    Replies
    1. இனிய பிறந்த நாள் வாழ்ததுகள் விஜயன் சார்

      என்னுடைய பிந்தை குறிப்புபடி இது தான் சரியான தேதி என்று நினைக்கிறேன். தவறாக இருந்தால் உண்மையான தேதியையும் குறிப்பிடவும். :)

      Delete
    2. முன்பு நான் கூறியிருந்தபடி எடியை தவிர மற்றவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களில் நான் இறங்க போவதில்லை. மேலே உரிமம் சம்பந்தமாக நான் கேட்கபட்ட கேள்வி அவருக்கு, அதற்கு பதில் அவர் தருவதும் தராததும் அவர் உரிமை. மற்றவர்களின் பதில்களின் மேல் எனக்கு அக்கறை இல்லை.

      உரிமைகளை வாங்கி இருக்கிறீர்களா என்று கேட்பதற்கு நீர் என்ன பங்குதாதாரா என்று கேட்பவர்களுக்கும், இன்னொரு புத்தக கம்பனியின் ஏஜென்டா என்று மறைமுகமாக கேள்வி கேட்டவர்களுக்கும், சில இறுதி பதில்கள் :

      உரிய உரிமைகளை வாங்கி தான் என் புத்தகம் வெளிவருகிறது என்று எடி பெருமையாக கூறினால், அதற்கு முதலில் சந்தோஷபடுவது நானாக தான் இருக்கும்.

      • XIII கலர் எடிஷன்களின் தன் மொழிபெயர்ப்பு அனுமதி இல்லாமல் வெளிவருகிறது என்று எடியே குறை கூறி இருக்கிறார்.
      • அவர் அனுமதி இல்லாமல் தனிபட்ட முறையில் அவர் இதழ்களை பிரதி எடுத்து விற்பவர்களை பற்றி குறை சொல்லி இருக்கிறார்.

      அப்போது, நமது இதழ்கள் இக்குறைகளை கலைந்து தான் வெளிவருகிறதா என்று கேட்டு தெரிந்து கொள்ள ஒரு ரசிகன் ஆவல்பட கூடாதா... இல்லை உரிமத்திற்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என்று தான் கேள்விகள் கேட்கபட்டதா ?

      காமிக்ஸ் வெளியிட்டு வட்டாரங்களில் இவ்வளவு மனம் திறந்து ரசிகர்களுடன் உறவாடும் ஆசிரியரை நான் கண்டதில்லை. அவரே மனமுவந்து குறைகளை கழைய எண்ணினாலும் தீவித ரசிகர்கள் கூட்டம் கும்மிகள் மற்றும் முகஸ்துதிகள் செய்தே அவரின் எண்ணபோக்கை மாற்றி அமைக்க முயலுவது, எஞ்சியிருக்கும் ஒரே தமிழ் காமிக்ஸ் நிறுவனத்திற்கு நாமே இறங்குமுகத்திற்கு வழிவகுக்கும் செயலாக மாறி விடும்.

      மொழிமாற்றங்களில் ஏற்பட்ட ஏற்பட்டு கொண்டிருக்கிற குழப்பங்கள் சம்பந்தமாக எழ வேண்டிய ஆக்கபூர்வமான விவாதங்கள் மங்க செய்து விட்டது போல, இதுவும் மழுங்கடிக்கபடும் அறிகுறிகள், இங்கு விழும் கும்மிகளில் இருந்தே நன்றாக தென்படுகிறது.

      ஒன்று மட்டும் சொல்லி முடித்து கொள்கிறேன். விலைக்கு விற்கபடும் எந்த ஒரு பொருளும் விமர்சனத்திற்கு உட்பட்டதே. அது விற்பனை நிறுவனத்திற்கும், வாசகனுக்கும் இடையில் உண்டான உரிமை.

      Delete
    3. நண்பர் ரபீக்,

      மொழிபெயர்ப்பு ஒட்டிய பல கருத்துக்களையும் அதில் சிலவற்றில் எனக்குள்ள ஒவ்வாமையையும் இங்கு நானே தெரிவித்திருக்கிறேன். அதில் இன்னும் நாம் சிறிது தூரம் செல்ல வேண்டி உள்ளது என்பதும் எனது கருத்துக்களில் ஒன்று - ஆனால் எல்லா கதைகளுக்கும் அல்ல - குறிப்பாக சில மொழிகளிலிருந்து மாற்றம் செய்யப்படுபவை பற்றியது.

      அதே நேரத்தினில் எடிட்டர் தமது படைப்புகளுக்கு எங்கு உரிமைகள் வாங்குகிறார் என்பதும் யாருக்கு என்ன பட்டுவாடா செய்கிறார் என அறிவதும் பொதிவில் அதுவும் ஒரு வலை தளத்தினில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் அல்லவே?

      இந்த விவரங்கள் அவரிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை மற்றும் பரிச்சியம் அவருடன் இருப்பின், தனி மின்-மடல் மூலமாகவோ, தொலைபேசி / கை - (அலை)பேசி மூலமோ கேட்டிடும் வகையைச் சார்ந்தது என்பது என் தாழ்மையான கருத்து.

      மேலும் வர்த்தக விவரங்கள் பொதுவில் விவாதிப்பது - அவர் நம்முடன் அடிக்கடி உரையாடிடும் எடிட்டர் என்றபோதிலும் - does not make an acceptable business practice.

      எனவே பல விஷயங்கள் நீங்கள் அவரிடம் தனிப்பட்ட முறையில் கேட்டாலும் இது பொது மேடை என்பதால் மற்றவராலும் விவாதிக்காமல் அல்லது வினா எழுப்பாமல் இருக்க முடியாது நண்பரே!

      Delete
  28. // Hot n ' Cool ஸ்பெஷல் (ஏகோபித்த தேர்வு :-) ) பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன ! . இவ்வார இறுதிக்குள் அச்சுப் பணிகள் பூர்த்தியாகி இருக்கும் .... டைகரின் க்ளாசிக்ஸ் வண்ண மறுபதிப்பு இதழின் பணிகளும் கூட simultaneous ஆக நடந்தேறி வருகின்றன ; அவை அச்சை சந்திக்கும் வேளை - அடுத்த வாரம் ! இரு இதழ்களும் இணைந்து ஏப்ரல் பத்துக்குள் உங்களைச் சந்திக்கக் கிளம்பிடும் //

    மகிழ்ச்சியான செய்தி :)

    புது ஹீரோக்களின் பற்றிய அறிவிப்பு/விளக்கம் அருமை - ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    Kid Lucky-யை தனியாக (மினி / ஜூனியர் லயன்) வெளியிட்டால் நன்றாக இருக்கும்

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  29. ஆசிரியர் திரு.எஸ்.விஜயனுக்கு உளம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. இனிய பிறந்த நாள் வாழ்ததுகள்.....

    ReplyDelete
  31. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்

    பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாளாக இந்த இனிய நாள் அமைய மற்றும் நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லா வளமும் நலமும் பெற இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  32. 2014ல் மின்னும் மரணம் series மொத்தமாக colourல் மறு பதிப்பு எதிர்பார்க்கலாமா, எடிட்டர் சார் ? ரத்த படலம் அடுத்த பாகங்கள் எப்போது சார் ?

    ReplyDelete
  33. மர்மக் கதைகள், பழங்கால சரித்திரக் கதைகள் இரண்டுமே எனக்குப் பிடித்த சப்ஜெக்ட்கள்... இரண்டையும் சேர்த்து வரும் ஜேஸன் கதைத் தொடர்களைக் காண ரொம்ப ஆர்வமாக உள்ளேன்.. மேலும் நீங்கள் குறிப்பிட்ட ஆவிகளுடன் தொடர்பு கொள்ள முயலும் மீடியாக்கள் என்ற வரி என்னை ரொம்ப இம்ப்ரெஸ் செய்தது... ஏனெனில் நானும் ஒரு மீடியாவே…(இப்போது அதிகம் ஆவிகளுடன் தொடர்பு கொள்வதில்லை)

    ReplyDelete
    Replies
    1. // ஏனெனில் நானும் ஒரு மீடியாவே... //

      ஆஆஆ....

      (என் profile picture இந்த முறை ரொம்பவே பொருந்திப் போகுதே! பார்க்கிற இடமெல்லாம் புகையா கிளம்புற மாதிரி இருக்கே!)

      Delete
    2. நம்ம காமிக்ஸுக்கு மீடியா பப்ளிசிட்டி வேணும், மீடியா பப்ளிசிட்டி வேணும்னு அடிக்கடி சொல்வேனே...

      இப்படியொரு மீடியாவை நான் எதிர்பாக்கலையே...

      Delete
    3. ஹாஹாஹா… தெய்வமே… நீங்க எங்கியோ போயிட்டீங்க……!

      Delete
    4. ராஜா பாபு : நானும் கூட ஒரு காலத்தில் மீடியம் தான் :)
      தங்களின் ஆவி மீடியா மூலம் என்னையும் தொடர்பு படுத்த முடியுமா ? :)

      Delete
    5. நீங்கள் என்ன அர்த்தத்தில் கேட்டீர்களோ எனக்குத் தெரியவில்லை, ஆனால் என் சில அமானுஷ்ய அனுபவங்களைப் பற்றி இங்கே ஆசிரியரின் வலைப்பூவில் பகிர்வது உகந்ததொரு செயலல்ல... எனவே இப்போதைக்கு "பேழையில் ஒரு வாளாக" சில ரகசியங்கள் என் மூளையிலேயே(???) உறங்கட்டும்…

      Delete
    6. எ.. என்ன? அ..அமானுஷ்ய அனுபவங்களா?

      வீஈஈல்....

      Delete
    7. தங்கள் மூலம் கடந்த " காலத்திற்கொரு பாலம் ' ஏற்படக்கூடும் என்று நினைத்தே கேட்டேன். பராவாயில்லை, 'அமானுஷ்ய அலைவரிசை' விஷயங்களை இந்த தளத்தில் பதிவேற்றாமல் இருப்பதே நமக்கு நல்லது :)

      Delete
  34. Dear Editor,

    As 'Surprise Special' is OUT OF STOCK, is there any idea to collect the released "Largo Winch" issues in a single book (first 6 issues) or just reprint that book itself in future (may be for next 'book festival')?

    -Sankar

    ReplyDelete
  35. ஈரோடு மற்றும் அதன் சுற்றுப்புற வாழ் நண்பர்களே!

    ஈரோடு பஸ் நிலையத்தில் கீழ்கண்ட நமது காமிக்ஸ்கள் தற்போது விற்பனையில் உள்ளன. தேவைப்படுவோர் வாங்கிப் பயனடையலாமே!

    * New look special
    * super hero super special
    * NBS
    * வில்லனுக்கொரு வேலி
    * சிவப்பாய் ஒரு சொப்பனம்
    * மரணத்தின் நிசப்தம்
    * லார்கோ ஆக்ஸன் ஸ்பெஷல்

    ReplyDelete
  36. @ நண்பர்களுக்கு,

    பிறந்த நாளன்று ஒரு சந்தோஷத் தொனிப் பதிவு அமைந்ததும், அதற்கு அழகான வரவேற்பு கிட்டியதும் இந்த நாளுக்கு மெருகூட்டியது என்றே சொல்லத் தோன்றுகிறது ! வாழ்த்துக்களுக்கு நன்றிகள் guys !!!

    Am truly humbled !!

    ReplyDelete
    Replies
    1. அட! இன்றுதான் பிறந்தநாள் என்பது உறுதிப்படுத்தப் பட்டு விட்டது! :) உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்! :)

      Delete
    2. ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!

      Delete
    3. இனிய (46வது?)பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்... கடவுள் என்றும் உங்கள் துணை நிற்க வேண்டுகிறேன்…

      Delete
    4. Dear Editor,

      Happy Birthday To You ...wish you more of joys in life and may your brainchild (Lion Comics) conquer dizzying heights in the times to come ...!

      Delete
    5. பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

      Delete
    6. எப்பவோ சொன்னோமில்ல... யாரும் நம்பல... இப்ப சரியா?

      Delete
    7. அருமை ஆசிரியருக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

      Delete
    8. தேதியில் ஏற்பட்ட சிறு குழப்பம் காரணமாக நேற்றிரவே (சென்ற பதிவில்) ஒரு early bird வாழ்த்தை பதிவு செய்துவிட்டு இப்போது 'லைட்டாக' அசடு வழிகிறேன். :)

      இதோ, இன்றைய வாழ்த்து...

      "இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் எடிட்டர் சார்!"

      Delete
    9. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

      Delete
    10. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

      Delete
    11. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார். நம் காமிக்ஸ் கவிஞர்கள் படிக்கும் பாட்டை கேட்டு புன்முறுவல் வருகிறது. நீண்ட காலம் நன்றாக இருந்து எங்களுக்கு காமிக்ஸை அள்ளி அள்ளி தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிரேன்.

      Delete
    12. விஜயன் சார் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

      Delete
    13. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு. விஜயன்.

      Delete
  37. டியர் எடிட்டர்,

    நல்ல அறிவிப்புக்கள்.

    ஒரு வருடத்திற்கு முந்தைய திட்டமிடல் மகிழ்ச்சி அளிக்கிறது - thinking about how occupied your team is going to be :)

    ALL NEW SPECIAL இரண்டு புத்தகங்களாக வருவதும் நன்று. என்னைப் பொருத்தவரை ஒரே ஒரு குண்டு புத்தகத்தினை எடுத்தால் அசுர வேகத்தில் படித்து பட்டென்று முடித்து விடுவேன். அதே பல புத்தகங்களாய் வந்திட்டால் பல நாட்கள் வைத்திருந்து படிக்கலாம் - இந்த வகையினில் - I am happy.

    சமீபத்தை நெருங்கும் பெங்களூர் காமிக் கான் 2013க்கு வருகிறீர்களா? அதற்காக சில ஸ்பெஷல் பதிப்புக்கள் [மாயாவி, ஸ்பைடர் வகைகள்] உண்டா? தெரியப்படுத்தினால் நாங்கள் ரிசர்வ் செய்து கொண்டு வர வகையாக் இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. ஸ்பெஷல் பதிப்புக்களை [மாயாவி, ஸ்பைடர், லாரன்ஸ் & டேவிட்] ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

      கடந்த முறையைப்போல் பெங்களூர் காமிக் கான் 2013க்கு வருகிறீர்களா?

      Delete
  38. பதிவு சம்பந்தமாக ஒரு பதிவு (1)

    சந்தோஷம் : ஆனந்தம் : எதிர்பார்ப்பு : இன்றைய நம் அசுரப் பசி :


    1. CC சந்தா அதிகரித்து வருவது !

    2. ஸ்பெஷல் 1 ; ஸ்பெஷல் 2 ; ஒரே அளவு, ஒரே விலை !

    3. டைகர் முழு வண்ண மறுபதிப்பு - ஏப்ரல் பத்து தேதிக்குள் !

    4. JASON BRICE - ஆவிகளோடு பேசிட முயலும் மீடியம்கள் !

    5. இரத்தப் படலம்" போலொரு powerful ஆன தொடர் !

    6. குட்டீஸ்களுக்கு ஜாலியான break - சுட்டி லக்கி "!

    7. ஜூனில் வரவிருக்கும் டேஞ்சர் டயபாலிக் !

    8. GREEN MANOR - தொடரின் முதல் பாகம் !

    9. BATCHALO என்ற பிரெஞ்சு கிராபிக் நாவல் !

    10. ஸ்டீல் பாடி ஷெர்லக்கின் முழு நீளக் கார்டூன் !

    ReplyDelete
  39. வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் (1)

    Me the first, மற்றும் TOP 10 வரும் அன்பான, துடிப்பான, விழிப்பான வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் ! தங்களின் கடமை முடிந்தவுடன், பழைய பதிவில் உதாரணமாக "புதிய பதிவு - ரசனைகளின் பயணம்...!" என்று ஒரு கமெண்ட் பதிவிட்டால் என் போன்ற அப்பாவி email வலைத்தள வாசகர்களும் புதிய பதிவில் சிறிதளவாவது பங்கெடுக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம் !

    செய்வீர்களா, வருங்கால டாப் 10 கமெண்ட் தோழர்களே ?

    ReplyDelete
  40. பதிவு சம்பந்தமாக ஒரு பதிவு (2)

    1. ஏகோபித்த தேர்வு : வெறும் 103 வோட்டுகள் பெற்ற தலைப்பு எப்படி ஏகோபித்த தேர்வாகும் ?

    குறை கூறவில்லை. தலைப்பை விரும்பாமலில்லை, அருமையான தலைப்பு, கதைகளுக்கு சரியான பொருத்தம் ! ஆனால் இங்கு பதிவிடும் கருத்துகள் மட்டுமே நம் ஏனைய வெளியுலக வாசகர்களின் கருத்துகளாக ஏற்கப்படுமா ? தலைப்புக்கு சரி என்போம், அதற்கே ஆதரவும் தருவோம், ஆனால் மற்றைய கருத்துக்களுக்கு, உதாரணமாக வாசகர் மொழிபெயர்ப்பு, ரத்தபடலம் வண்ண மறுபதிப்பு போன்றவைகளுக்கும் இதுவே ஏன் அளவுகோலாக ஏற்கபடுகிறது ?

    P.S: இது அனைவரின் சிந்தனைக்கு உடன்பாடான ஒரு உதாரண கேள்வி !!!

    ReplyDelete
    Replies
    1. "ஆனால் இங்கு பதிவிடும் கருத்துகள் மட்டுமே நம் ஏனைய வெளியுலக வாசகர்களின் கருத்துகளாக ஏற்கப்படுமா ?"
      இந்த கருத்தில் உடன்படுகிறேன்.

      Delete
  41. பதிவு சம்பந்தமாக ஒரு பதிவு (3)

    1. ரசனைகளின் பயணம்...!

    அருமையான தலைப்பு, நம் நிகழ்கால சிந்தனைகளின் வெளிப்பாடு, ஆசிரியரின் பிறந்தநாள் பதிவின் எதிர்கால திட்ட மேம்பாடு, ஆசிரியர் கடந்து வந்த காலத்தின் 30 வருடகால காமிக்ஸ் காலச்சுவடு, எழுத்தில் வடிக்க முடியாத வாசகர்களின் எண்ணங்களின் எதிரொலிப்பு !!!

    அமைதியான ஆர்ப்பரிக்கும் தலைப்பு. வரவேற்கிறேன் !!!

    ReplyDelete
  42. மர்மமனிதன் என்ற மார்ட்டின் !

    மெய்யா? பொய்யா? கவலையில்லை, நிழலா? நிஜமா? தேவையில்லை. எல்லைகளற்ற கற்பனைகளுக்கும், அந்த கற்பனைகளுக்கும் ஒரு எல்லை கோடாக, காமிக்ஸ் கதைகளாய் கற்பனைகள் கசிந்துருகி, தகிக்கும் தணலில் தவியாய் தவிக்க, கானல் நீரும் தாகம் தணிக்க, சுவாரசியமாக மெய்யும் பொய்யாக, பொய்யும் மெய்யாக, நிழல் நிஜமாகி, நிஜம் நிழலாகி மெய்சிலிர்க்க, சிறு மூளையும் பெருமூளையும் குழம்ப பவனி வரும் மர்மமனிதன் மார்ட்டின் கதைகள் வண்ணங்களில் வரும் நாளும் எந்நாளோ? அறிந்தவர் அறியவைக்கும் அந்த நன்னாளும் எதுவோ?

    வாசகர்களின் கற்பனைவளம் கருதி வெளியிடுவோர் ;

    இவண் ;

    1. ( ம ம ர ம ) : மர்மமனிதன் மார்ட்டின் ரசிகர் மன்றம்
    2. ( க க க ) : கடல்தாண்டிய கற்பனை கழகம்
    3. ( ம ச வி பே ) : மார்ட்டின் சமுதாய விழிப்புணர்ச்சி பேரவை
    4. ( கொ ந மூ ச ) : கொஞ்ச நஞ்ச மூளைக்குவேலை சங்கம்

    ReplyDelete
  43. லாலாக்கு டோல் டப்பிமா :)

    காமிக்ஸ் அரட்டை அரங்கத்தின் புதிய தலைவரும், நவீன நாட்டாமையும், சலசலவென்று அருவிபோல் கமெண்டிட்டு காட்டாறுபோல் சீறிப்பாய்ந்து கமெண்ட் எண்ணிக்கையை எகிற வைக்கும் இரும்புக்கையை போன்ற Mr.ஸ்டீல் ஐ இரண்டு நாட்களாக காணவில்லை. அடிக்கடி கரண்ட் கட்டாகும் தமிழ்நாட்டில் அவர் மாயாவியாக மாற சந்தர்ப்பம் சிறிதளவும் இல்லை என்பதால், அவர் கமெண்டிடாத காரணம் இங்கே புரியாத மர்மமாகவே இருக்கிறது. முழுதாய் நாள் ஒன்று முடிந்தும் கமெண்ட் எண்ணிக்கை 200 ஐ தாண்டாத வருத்தம் வலைத்தளத்தை வாட்டுகிறது !

    am waiting... :)

    ReplyDelete
  44. ஜூனில் வரவிருக்கும் டேஞ்சர் டயபாலிக் - ok

    TEX WILLER - ??????

    அடுத்த பதிவில் TEX இன் மெகா சாகசத்தை பற்றிய அறிவிப்பை எதிர் பார்க்கலாம் (குட்டி தலையணை SIZE)

    ReplyDelete
  45. பதிவு சம்பந்தமாக ஒரு பதிவு (4)

    ALL NEW SPECIAL's புக் # 2 ஆக வரவிருப்பது - BATCHALO : : : : : : : : :

    BATCHALO - பழைய 'ஹிந்தி' சினிமா பட பெயர் போல் உள்ளது :)

    ReplyDelete
  46. ஜூனில் டேஞ்சர் டயபாலிக் ,அந்த படிக்கட்டில் ஏறிச்செல்லும் கார் இன்னும் என் நினைவில் ,எப்போது அடுத்த கதைகள் வரும் என அந்த நாயகரின் பெயரில் இருந்த கவர்ச்சி இன்னும் நிழலாய் நினைவில் ,நிஜமாய் ஜூனில் எனும் போது ஒரு குபீர் சந்தோசம் வெடித்து கிளம்பினாலும் அன்று எப்படியெல்லாம் எதிர்பார்த்தோம் அன்று கிடைக்கவில்லையே என ஒரு சின்ன ஏக்கம் இப்போதும் மனதில் எட்டி பார்க்கிறது ....பெரு மூச்சு வெளி படுகிறது !ஆனால் இப்போது மேம்பட்ட தரத்தில் என்பது கூடுதல் சந்தோசம் !

    ReplyDelete
  47. ஆசிரியர் அவர்களுக்கு எங்களது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  48. 'ALL NEW ஸ்பெஷல் ' இரண்டாய் பிரிவது மிக பெரிய வருத்தமளிக்கிறது !கொழு கொழு குண்டு புத்தகத்தை அதுவும் முழுமையான ,புதுமையான களம் கொண்ட புத்தகத்தை எதிர்பார்த்த எனக்கு பெரிய அதிர்ச்சி !
    ஆனால் போனசாய் இரண்டு அட்டைகள் என்பது ஒரு சிறிய ஆறுதலாய் வேண்டுமானால் இருக்கும் !ஏனென்றால் குண்டு புத்தகங்கள் இருந்தால்தான் அவை ஸ்பெசல் என்பது சிறுவயதிலே ஆழ்மனதிலே பதித்து விட்டதே !என்ன செய்ய !ஏதேனும் மாறுபாடு வேண்டுமே வழக்கத்தை விட்டு !


    JASON BRICE ஆவிகளுடன்,மர்மக்கதைகள் கொண்ட புத்தகங்கள் என்பது அட்டகாசம் ,நன்றி சார் பழைய திகில் ஜானி கதைகளுக்கு தாங்கள் தந்திருப்பீர்களே பீதியை கிளப்பும்,ஏகத்திற்கு எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜானியின் கதை தலைப்புகள் அதே எண்ணம் மனதில் !மீண்டும் காலபயணம் பின்னோக்கி 1980களுக்கு ,அருமை !அப்போ நிஜமாய் 1920 கால கட்டங்களுக்கு அழைத்து செல்ல போகிறீர்கள் !அற்புதம் !அமானுஷ்யம் !
    ஜோனதன் கார்ட்லண்ட் வேட்டையர் என்பது ,என்ன சொல்ல கேட்க நினைக்கும் அத்தனையும் கிடைக்கிறதே சொக்கா என ஆனந்த கூத்தாட தோன்றுகிறது !
    இரத்தபடலத்திற்கு இணையாய் இன்னொரு கதையா,நடக்குமா .......சீக்கிரம் ஆவன செய்யுங்கள் சார் !என்ன இப்படி போட்டு தாக்குகிறீர்கள் .....சந்தோசத்தில் திக்கு முக்காடி போனேன் !தொடர் அறிவிப்புகளால் !
    அட்டகாசம் !அட்டகாசம் !!அட்டகாசம்!!!

    ReplyDelete
  49. ஆசிரியர் அவர்களுக்கு

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!!
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!!
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!!

    வாழ்க வளமுடன் !!!

    ReplyDelete
  50. ஜோனதன் கார்ட்லண்ட் அட்டைபடம் அபாரம் !BATCHALO நாடோடி கூட்டம் மீண்டும் இதயத்த கனக்க செய்யும் போலுள்ளது !அவல சுவை !நமது காமிக்ஸ் பல்சுவை விருந்துகள் /மருந்துகள் படைக்க காத்துள்ளது ! அட்டை,நீரிலே நாட்டியமாடும் பிரதிபலிப்புகள் என அசத்தல் விருந்தை பிரதிபலிக்கிறது !
    காத்திருப்போம் கனவுகளுடன் ,கைப்பற்றுவோம் நாளைய புத்தகங்களை !
    லார்கோ மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில் cinebook மூலமாய் அற்புதம் விளைத்தாலும் தங்களது எழுத்து நடையே கதை தேனாய் இனிக்க முக்கிய காரணம் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை !இதே சுவை மூலத்திலும் இருந்திருக்குமா என வியக்கிறேன்!
    //தங்களது லார்கோவைப் பொருத்த வரை - நீங்கள் பாராட்டிட வேண்டிய முதல் ஆசாமி,இதனை Cinebooks ஆங்கிலப் பதிப்பிற்காக பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்திட்ட ஜாம்பவானையே ! ஸ்பஷ்டமாய் அது போலொரு ஆங்கில ஸ்கிரிப்ட் கிட்டி இருக்காவிடின் எனது தமிழாக்கம் நிறையவே சிரமப்பட்டிருக்கும் !//

    இது தங்களது தன்னம்பிக்கையை காட்டுகிறது !மீண்டும் மீண்டும் அதே உத்வேகத்தை கிளப்பும் எழுத்து பிரளயத்தை படைக்க தங்களுக்கு அற்புதமான ,வளமான கதைகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் ,அதை தாங்கள் தொடர்ந்து படைக்க வேண்டும் ,நாங்கள் அதை தொடர்ந்து படித்து களிக்க வேண்டும் !
    தொடர்ர்வோம் .....காத்திருக்கிறேன் அடுத்த மாத ஹாட் n கூல் காக வருவது லார்கோவுக்கு ஈடாய் போட்டியிடும் ஷேல்டனல்லவா !

    ReplyDelete
  51. இன்று பிறந்தநாள் காணும் காமிக்ஸ் உலகின் முடிசூடா மன்னர் திரு விஜயன் அவர்களுக்கு என் இனிய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  52. திரு விஜயன்: 1988 ன் மே மாதத்தில் முதன் முதலில் உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த பொழுது உங்களிடம் ஆட்டோகிராப் கேட்டதும் மிகவும் சங்கோஜப்பட்டு " இதெல்லாம் நான் போடுவதும் இல்லை போட்டதும் இல்லை " என பதிலலித்து . அதனையும் மீறி ஆட்டோகிராப் வாங்கியது மட்டுமில்லாமல் உங்களின் பிறந்த நாள் தேதியையும் அன்புக்கட்டளையுடன் அதில் எழுதி வாங்கியது இன்றும் எனது மனதில் பசுமரத்தானிபோல் பசுமையாக உள்ளது ( உங்களிடம் முதன்முதலாக ஆட்டோகிராப் வாங்கிய நபர் என்ற மகிழ்வும் கூட ) இவ்வளவு வருடங்கள் கழித்து இன்றுதான் அந்த தேதியில் வாழ்த்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    மனம் நிறைத்த பிறந்த நாள் நல்வாழ்துக்கள்
    ம.ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர்

    ReplyDelete
  53. இனிய பிறந்த நாள் வாழ்ததுகள் விஜயன் சார்

    ReplyDelete
  54. அன்பு நண்பர் எடிட்டர் விஜயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  55. Many more happy returns of the day, dear Vijayan Sir!

    ReplyDelete
  56. ராயல்டி மற்றும் மொழிபெயர்ப்பு கட்டணங்கள் போன்ற தொழில் முறை கணக்கு வழக்குகளை தெரிந்து கொள்ள நாம் லயன் காமிக்ஸின் சந்தாதார்களா?
    இல்லை பங்குதாரர்களா?

    இதைப்போன்ற கேள்வி எழுப்ப படுவதின் அவசியம் என்ன?

    இது போன்ற தொழில் சூத்திரங்களை நமது நெருங்கிய நண்பரிடமோ? அல்லது தனியாக தொழில் புரியும் நம்முடைய உடன்பிறந்த சகோதரிடமோ கூட நம்மால் கேள்வி எழுப்பி ஒளிவு மறைவு அற்ற பதிலை பெற முடியுமா?

    இதைப் பற்றி கவலைப்பட வேண்டியது பதிப்பகத்தாரே அன்றி வாசகன் அல்ல .

    ReplyDelete
    Replies
    1. //இதைப் பற்றி கவலைப்பட வேண்டியது பதிப்பகத்தாரே அன்றி வாசகன் அல்ல .//
      நமது கவலை சிறந்த கதைகள் வருதல் குறித்ததாய் இருக்கட்டும் !

      Delete
    2. //இதைப்போன்ற கேள்வி எழுப்ப படுவதின் அவசியம் என்ன?//
      சரியான,அவசியமான கேள்வி நண்பரே !

      Delete
    3. why do you constantly ask questions, largo?your kind the long noses always ask questions.
      அதற்க்கு cinebook லார்கோ பதில்
      because ,like them ,i want to know and to understand
      இது cinebook மொழி பெயர்ப்பு !
      நீயும்தான் ஏன் கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டேயிருக்கிறாய் லார்கோ ? கேள்விகளின் மீது ஏன்
      இந்த தீராத காதல் ?
      நமது லார்கோ ,"தெரியாததைத் தெரிந்து கொள்ள வேண்டும், என்ற தேடல்தான் ! "

      நமது ஆசிரியரின் உயிர்ப்பான மொழி பெயர்ப்பு இது !அப்படியே சுவாரஷ்யமின்றி மொழி பெயர்த்தால் எப்படி இருக்கும் !மொழி பெயர்ப்பாளர் இங்கே தனது சிந்தனைகளை ஏற்றியதில் அழகு ஜொலிக்கிறது என்பது இன்னொரு நண்பருக்கும் புரிந்திருக்கும் !
      ஆகவே ஆசிரியர் சிறிது பாராட்ட வேண்டும் என நினைத்து கூறியதை துடுப்பாய் பற்றி கொண்டு cinebook நிறுவனத்தின் மீது பற்று கொண்டு அவர்களுக்கு ஏதேனும் பிடுங்கி தர வேண்டும் என்று அந்த புத்தக நிறுவனர் போல செயல்படுவதென்பது இதுதான் விதியின் விளையாட்டா!இல்லை சிலரின் சதியின் விளையாட்டா !
      நான் கூறியதை இப்போது செய்தீர்கள் அதனால்தான் சூப்பராய்ய் இருக்கிறது ,நான் சொன்னது போல செய்ய வேண்டும் இவை எல்லாம் சின்ன குழந்தைக்கு மிட்டாய் வாங்கி தந்து, பாத்தியா உன் மேல் எனக்குதான் அக்கறை உன் தாய் தந்தையரை விட என கூறுவது போல இருக்கிறது !

      Delete
    4. //அப்படியே சுவாரஷ்யமின்றி மொழி பெயர்த்தால் எப்படி இருக்கும் !மொழி பெயர்ப்பாளர் இங்கே தனது சிந்தனைகளை ஏற்றியதில் அழகு ஜொலிக்கிறது //
      இங்கே ஆசிரியர் மூலத்தின் நிலை பிறளாது தனது சிந்தையை ஏற்றி உள்ளதும் தெரியும் !

      Delete
    5. ஆசிரியர் இதற்க்கு முன்னர் புத்தகமே வெளியிடவில்லையா ?தடுமாறும் குழந்தையா ?

      Delete
    6. Well said Meeran!

      There is always a fine line as to what we can ask an Editor and what we should NOT ask a Business Owner. We need to be judicious while we ask.

      Delete
    7. அப்படி ஆசிரியரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை தனியாக ஆசிரியரிடம் கேட்கலாமே !இங்கே ஏன் பொதுவில் !ஆசிரியரின் 13 போன்ற கதைகளை வண்ணத்தில் வெளியிட்டவர்களின் ஆதிக்கம் இப்போது குறைந்துள்ளதோ !அவர்கள் இப்போது பணம் பண்ண இயலாமல் தவிக்கிறார்களோ !ஆசிரியர் சிலவற்றை கூறினால் தர்மசங்கடமாய் இருக்காதோ !இங்கே கலந்துரையாடல் என்பது மறந்து விட்டதோ !ஆசிரியரின் நேரடி மொழி பெயர்ப்பை திருடி விற்றவர்களுக்கான கேள்விக்கான பதிலை இங்கே ஆசிரியரிடம் எதிர்பார்ப்பது ,ஆசிரியர் மேல் சுமத்துவது ஏனோ !அந்த கதையா அப்படியே e அடிச்சான் காபியாக கொடுக்கவில்லையே !
      அக்பர் ,பீர்பால் கதை தெரியுமா நண்பரே !எங்கோ தொலைவில் இருந்து பெற்ற ஒளியால் நடுக்கும் குளிரை தவிர்த்து கொண்ட ஒருவனை என் அரண்மனை விளக்கின் ஒளி மூலம் வெப்பபடுத்தி கொண்டாய் என்பதில் என்ன திறமை உண்டோ ,அது போலவே இதுவும் !

      Delete
    8. நல்ல ,இனிமையான கதைகள் கிடைக்கிறதா சந்தோசபடுங்கள் ,பெருமை படுங்கள் !

      Delete
    9. மூல புத்தகத்திர்க்கே கொடுத்த பின்னர் cinebook ற்கு எதற்கு .....ஆசிரியர் பாராட்டகூடாதா ! மூலத்திற்கு பணம் கொடுத்தாயிற்றே ! சிறிது உதவினால் எல்லாமே அதுவெ ஆகி விடுமோ !

      Delete
    10. எங்கோ வீசிய ஒளி என்னை மனதளவில் வெப்ப படுத்தியது ,என்ற கூற்றுக்கும் அங்கேயே வெப்பத்தை எடுத்து கொண்டாய் எடு பணத்தை என்று சொன்னால் .....யாரையும் பாராட்டகூடாதோ !

      Delete
    11. இப்படி யாராவது துளைத்தெடுக்கும் குதர்க்கமான கேள்வி கேட்டாலோ, பேட்டி எடுத்தாலோ சற்றும் சளைக்காமல், தயங்காமல் பொறுமையாக, எவர் மனமும் புண்படாமல் பதில் சொல்லும் நம் விஜயனை போல் எவரையும் அடியேன் சந்தித்ததில்லை இதுவரை...

      Delete
  57. ஆசிரியருக்கு என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்க்கள்!


    முன்பு பரலோகப் பாதை கதையின் பின்னட்டையில் கணவாய்க் கதைகள் என்று விளம்பரம் செய்யப்பட்டு பின்பு வராமல் போனது. என்னக்கென்னவொ அந்த விளம்பரத்தில் நிற்பவர்தான் இன்று மறுஅவதாரமாக 'ஜோனதன் கார்ட்லண்ட்' டாக அவதரிக்கவுள்ளதாக ஒரு சிறு சந்தேகம்! என்ன சரியா ?


    சார், பச்சை விடுதி மர்மம் மொழிபெயர்ப்பிற்கு எப்போது அனுப்பப்படும்?

    cc - ல் சிக் பில் & ஜானி கதைத் தேர்வுகள் முடிவாகிவிட்டதா.?

    ReplyDelete
  58. ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு இனிய 16 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!! :-))

    ReplyDelete
  59. This comment has been removed by the author.

    ReplyDelete
  60. GREEN MANOR - பச்சை பங்களா!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஜி! நல்லா இருக்கே!

      Delete
  61. அன்புக்குரிய ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு பிரியமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்! அட்டகாசமான அறிவிப்புகளோடு எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டீர்கள். மேலும், கண்டிப்பாக, எமது சிங்கம் டெக்ஸ் வில்லர் அவர்களின் சிறப்பு வெளியீடு பற்றிய அறிவிப்பை அடுத்த பதிவில் வெளியிடுமாறு கேட்டுகொள்கிறேன்!

    ReplyDelete
  62. சொல்லுக்கு மாடஸ்தியாய்.....
    செயலுக்கு கார்வினாய் .....
    திறமைக்கு லார்கோவாய் .....
    நட்புக்கு சைமன் ஆக....
    பார்வைக்கு செல்டன் ஆக....
    நிஜத்தில் டெக்ஸ் வில்லர் ஆக ....
    உள்ளத்தில் லக்கி ஆக ....
    உறுதியில் டைகர் ஆக ...
    தாமதத்தில் மாயாவி ஆக ...
    பதிவில் இரவு கழுகாய் ....
    பதிப்பில் சிங்கமாய் .....
    மனதிலோ முத்து வாய் ....
    மொத்தத்தில்
    ஆசானாக (ஜான்)மாஸ்டராய் ...
    சிங்க நடை
    போட்டு சிகரத்தில் ஏற
    வாழ்த்த வயது உண்டு ....
    தகுதி இல்லை .....
    இதே வயதில்
    என்றும் வாழ ....
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ..

    ReplyDelete
    Replies
    1. @ Paranitharan k

      ஆஹா! கவிதை! கவிதை!

      Delete

    2. கலக்கல் கவிதை படைத்த உங்கள் காமிக்ஸ் நேசத்திற்கு வணக்கங்கள் நண்பா!

      Delete
    3. பலமுகங்களை படைத்த ஆசிரியருக்கு அற்புதமான வாழ்த்துக்கள் நண்பரே !அருமை !

      Delete
    4. தாமதத்தில் மாயாவி ஆக .............??
      கவிதையிலேயே வேண்டுகோளும் வைத்துள்ளீர்களே!!
      (தாமதம் வேண்டாம்(மாயாவியும் தான்)
      எப்படி நண்பரே உங்களால் மட்டும் இப்படி முடிகிறது?

      Delete
    5. உங்கள் கவிதை (?) அருமை :D

      Delete
    6. சூப்பர் அப்பு .............

      Delete
    7. அருமையான வார்த்தை வருணங்கள் நண்பரே!

      Delete
  63. "நம்மால் முடியாதது
    யாராலும் முடியாது ....

    யாராலும் முடியாதது
    நம்மால் முடியும் .."

    2014 மாதம் ஒரு LION ...,முத்து..கொண்டு வர உங்களால் முடியும் ...வாங்க எங்களால் கண்டிப்பாக முடியும் .....

    ReplyDelete
    Replies
    1. @ பரணிதரன்

      இப்படியெல்லாம் எழுத உங்களால் முடியும்...
      இதையெல்லாம் படிக்க என்னால்... :)

      Delete
  64. தரணி போற்றும் தங்கத் தலைவனுக்கு பிறந்த நன்னாள் வாழ்த்துக்கள்! வணக்கங்கள்! நீடூழி வாழ்ந்து தமிழ் காமிக்ஸ் உலகுக்கு பெருமை சேர்த்து வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்! தலைவா! வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழியவே! வாழியவே!வாழியவே!
    டமால்! டுமீல்! படார்! தடார்! பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!பூம்!

    ReplyDelete
    Replies
    1. ஜானி ஜி, உங்கள் குழந்தை மனது உங்கள் கம்மேண்டில் வெளிப்படுகிறது. நான் ரொம்ப ரசித்தேன். :D

      Delete
    2. @ ஜான் சைமன்

      அதென்ன வாழ்த்துச் சொல்லிட்டு அப்புறம் 'பூம் பூம்'னு வெடி வக்கிறது?

      எல்லாப் போலீஸ்காரங்களும் இப்படித்தான் வாழ்த்துச் சொல்லுவீங்களா?

      யீயீ...க்...

      Delete
    3. ஹி! ஹி! ஹி! மத்தவங்க சர வெடி கொளுத்தி போடுவாங்க! நாமல்லாம் யாரு? மேக்கால பாலைவனத்துல மனசை வெச்சிக்கிட்டு அலையற கூட்டம். அப்புறம் டைனமைட் வெடிச்சி கொண்டாடலன்னா எப்படி நண்பா??? தலைவரே! கேக் வெட்டியாச்சா? ஜாலியா நிறைய புது கதைகளை களமிறக்குங்க காத்திருக்கும் எங்க கலவரக் கும்பல்! டுமீல்! டமார்! படார்! டொம்ம்!

      Delete
  65. Dear Vijayan Sir

    மெனி மெனி ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் த டே.
    Wishing you all the best in all your activities.

    Wishing that you will bring atleast 2 comics every month. that is turn lion muthu into a regular fortnightly and bring NBS style bumper issue once in 3 months.
    Once in a while please also bring in Mayajala kathaigal in comics format in our comics. I used to read those kind in a magazine rathnabala.

    ReplyDelete
  66. Belated Birthday wishes, Sir...

    WOW ! செம கலக்கல்... நமது காமிக்ஸ் வீச்சு பிரமிக்கவைக்கிறது...
    இங்கு ஒருவர் கூறியது போல All New ஸ்பெஷல் இல் action/thriller சேர்த்து தனியாக, கார்ட்டூன் சேர்த்து தனியாக வெளியிடலாமே..

    ReplyDelete
  67. பதிவு சம்பந்தமாக ஒரு பதிவு (5)

    ரசனைகளின் பயணம்...! ஆசிரியரின் பிறந்தநாள் பதிவான இந்த தலைப்பில் ஒரு விஷயத்தை தெளிவாக கூறுவது வாசகர்கள் அனைவருக்கும் மிகவும் பெருமை சேர்க்கும் செயலாக அமையும் என்பதால் இந்த அவசியப் பதிவு !!!

    இதுகாறும் நாம் சிலரை விவரமானவர்கள் என்று எண்ணி வந்திருப்போம். ஆனால் திடிரென அவர்களில் சிலர் " நோ, நான் விவரமில்லாதவன் " என்று பகிரங்கமாக கூறினால் எப்படி இருக்கும் ? அவர்களுக்கு வரும்காலத்திலும் பதிலாக அமைய வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில் எழுந்த சிந்தனையின் சிதறல்களே இந்த அழகான பதிவு !!!

    நான்கு மாத காலமாக ஓடி, ஆடி, ஒளிந்து, திரிந்து, மறைந்து 'பயம்' என்பதே இல்லாமல் தனி ஒருவனாக, ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு ஆதரவாக, மேலும் ஆதரவாக இடைவிடாமல் பதிவிட்டு வந்த நான், திடிரென சில காலம் மறைந்து போகவேண்டிய நாட்கள் நெருங்கி வருவதால், நான் இல்லாத போது எம்மீது தரக்குறைவான விமர்சனங்கள் ஏற்படாவண்ணம் இருக்க எண்ணிய எண்ணத்தால் இங்கு எழுச்சி பெற்ற பதிவு !!!

    சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் இந்த பதிவு ஒரு சினிமா உதாரணத்தை கொண்டது !

    அடுத்து வருவது : ஜங்.. ஜங்.. ஜால்ராக்களா ? இல்லை தோள் கொடுக்கும் தோழர்களா ?

    ReplyDelete
    Replies
    1. அதற்குமுன் ஒரு பகிரங்க சவால் !!!

      என்மீது இனிமேலும் அவதூறு சுமத்த நினைக்கும் நபர்களுக்கு ;

      நான் என்ற மரமண்டை, "எல்லா வலைத்தளத்தின்" புதிய வாசகன், 10.11.12 அன்று முதன் முதலாய் பதிந்த முதல் கமெண்ட் லிருந்து இன்றுவரை பதிவேற்றிய பதிவுகளில் ஏதாவது ஒரு பதிவையாவது "ஆசிரியர் விஜயனுக்கு" எதிராக இருப்பதாக மேற்கோள் காட்டினால், நான் வெட்கி தலை குனிபவனாவேன், சதித்திட்டம் மனதில் கொண்டவனாவேன்.

      அப்படி உங்களால் முடியாவிட்டால், நீங்கள் " நோ, நான் விவரமில்லாதவன், ஆனால் பொறாமை தீயால் தினம் தினம் வெந்து அழிந்துக்கொண்டிருப்பவன் " என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்டதற்கு இங்கு உள்ள அனைவருமே சாட்சியாகும்.

      நான் ஆசிரியர் விஜயனின் வெளிப்படையான ஆதரவாளன் !!
      அவரின் அனைத்து முயற்சிக்கும் தோள் கொடுக்கும் வாசக தோழனாவேன் !!

      மறுக்க முடியுமா உங்களால் ?
      வெட்டி பேச்சு வேலைக்கு ஆகாது, ஓவர் ஷோ ஒடம்புக்கு ஆகாது தம்பி...!!!

      Delete
    2. இதுவும் ஒரு இடைச் செருகல் !

      நிறைவேறாத கனவுகளில் வாழ்வதால் நாம் அதன் காதலனாக மாறிவிடுவதில்லை. கடல் தாண்டி வாழ்வதால் நம் இயற்கை புத்தி மாறுவதில்லை. இடையில் புகுந்து குழப்புவதால் அறியாமை கொண்டவர்களும், முட்டாள்களும் வேண்டுமானால் உம்மை நம்புவர் !!!

      Delete
    3. 1. ஜங்.. ஜங்.. ஜால்ராக்கள் : உதாரணம் : 16 வயதினிலே "பரட்டை" ரஜினி :

      அந்த படத்தில் வரும் பரட்டை, அடுத்தவரை நக்கல், நய்யாண்டி, கேலி, கிண்டல் செய்து விட்டு " இது எப்படி இருக்கு? " என்று கேட்க அங்கே கூடியிருப்பவர்கள் ஹ ஹ ஹா ஹா ஹா ஹ ஹ... என்று கைத்தட்டி சிரிப்பார்கள். அதுவே கும்மி கூட்டம், அதுவே கும்மி குடிலரங்கம். அதுபோல் யார் எங்கே செய்தாலும், எவர் யாரை புண்படுத்தினாலும் அதுவே கும்மி, கும்மிகள் கூட்டம், ஜால்ராக்களின் முகவரி !!!

      2. தோள் கொடுக்கும் தோழர்கள் : உதாரணம் : " மாணிக் பாட்ஷா " ரஜினி :

      பாட்ஷா படத்தில் மாணிக்கம் ரஜினி " மாணிக் பாட்ஷா " வாக மாறும்போது, அநியாயத்தைக் கண்டு வெகுண்டெழுந்து, பின்னாலிருக்கும் கூட்டத்திலிருந்து அவருக்கு ஆதரவு தர முன்னேறி வரும் நான்கு தைரியசாலி களைப் போன்றது !!!

      தங்க கல்லறை 'லக்னர்'களே, இனி கும்மிக்கும் ஆதரவுக்கும் சரியான விளக்கம் உங்களுக்கு கிடைத்திருக்கும் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன். அப்படியும் உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டால் இந்த இரண்டு படக்காட்சிகளையும் YouTube மூலம் பார்த்து அதன் பிறகும் புரியாவிட்டால் அடுத்தவரை கேட்டு புரிந்துக் கொண்டு கும்மி, ஜால்ராக்கள் என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன் :)

      Delete
  68. மற.ந்ததும்,
    நல்ல பிள்ளையாய் இட்ட பதிவுகள்
    மெல்ல அள்ளித் தந்ததே, சில
    அறிந்தும் அறியா வாசகர்களின் பதில்களை!

    அதனால்,
    மெல்ல துளிர்த்தது தைரியம், அது
    நல்ல பண்பு மீரானை.யும் பயமின்றி
    சொல்ல ம்புகளால் நோக வைத்ததே!

    ஆனால், இரும்புக்.
    கரம் ஆதரித்த அப்பண் பாளரின்
    சிரம் உருண்டபோதும் பதறாத பொன்.மனம்,
    மற.வாமல் ஒருவர்க்கு இசைவாய் மண்டை.யாட்டுதே?!

    தொடர்கின்றனவே,
    உள்ள முவந்த உயர் நவிற்சிகள்
    அல்ல அல்ல! அவை ஆழ்
    மனதின் சதி விளையாடல்கள்!

    முன்னர்,
    பட்டும் திருந்தா உள்ளங்கள், இதைச்
    சுட்டும் இப்பா தனை படித்தபின்
    மட்டும் திருந்திடுமோ? துரத்தும் தலைவிதி!

    ReplyDelete
    Replies
    1. தமிழ் நல்லாத் தெரியும்னு நினைச்சிருந்த என் அகம்பாவம் ஒழிஞ்சது!

      Delete
  69. கட்டை விரல் காதலனுக்கு.....தாகபாத் அரசின் வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  70. Books பின்வருமாறு தனி தனி புத்தகங்களாக வெளியிட்டால் எப்படி இருக்கும்?

    1- JASON BRICE - 50 Rs
    2- BATCHALO - 50 Rs
    3- Green Manor - 50 Rs
    4- cartland - 50 Rs
    5- Kid Lucky - 50 Rs

    ReplyDelete
  71. டியர் எடிட்டர்ஜீ அவர்களுக்கு புனித சாத்தானின் இனிய (சற்று தாமதமான)பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!தாங்களும்,தங்கள் குடும்பமும் வளமுடன் வாழ நண்பர்கள் சார்பாக இறைவனை பிரார்த்திக்கிறேன்.
    BATCHALO ?
    இது ஜிப்ஸிகளை பற்றிய கதையா...?விபரமறிந்த நண்பர்கள் குறிப்பிடவும்.ஜிப்ஸிகளின் பூர்வீகம் எகிப்து என்று படித்ததாக ஞாபகம்.வேறுசிலர் இந்தியா என்கிறார்கள்.இதைப்பற்றி சர்வதேச அளவில் ஒரு சர்ச்சை உண்டு.ஹிட்லரால் "ஜெர்மானிய பகைவர்"களாக சித்தரிக்கப்பட்டு கடும் இன்னலுக்கு இந்த சமூகம் ஆளானதாக புவியியல் ....ச்சே...ஸாரி ...வரலாறு சொல்கிறது.
    அட்டைபடம் மனதை மயக்குகிறது.இதையே நமது இதழுக்கும் பயன்படுத்தலாமே..?

    ReplyDelete
  72. Hello Vijayan Sir,

    Wishing you a very Happy Birthday.

    Dayavu seidhu little luckyyai mini lionin maru pravesatthuukku veyyungall.

    Waiting for that day:-)

    Inda varudam diwali special must be just named "Diwali special"
    rooooooooomba varusam acchu diwali special diwali speciala vandu:-)

    Just a thought - it is beginning to be boring to see that every book is being named special. It is time we start using just the book titles and for actual specials (rs.200) we can retain using specials.


    Also there is a old issue which was a diwali special priced at 5 and was a super hit issue. Kindly consider during comics classics reprint.

    Regards,
    Sathya

    ReplyDelete
  73. Belated birthday wishes Vijayan sir.. and your birthday i can remember easily sir....

    ReplyDelete
  74. விமர்சனம் என்பது இங்கு எழுப்ப படும் கேள்விகளுக்கும் உண்டு .
    தேவையற்ற கேள்வி கேட்பவர்களுக்கு தேவையான பதில் என்னவாக இருக்க முடியும்?

    விற்பனைக்கு வரும் அனைத்துமே விமர்சனத்துக்கு உட்பட்டதே .அது விற்பவர்க்கும் வாங்குபவர்க்கும் உள்ள உரிமை ....உண்மைதான் விமர்சனம் என்பது கதையை பற்றி என்பதாகவோ அல்லது மொழிபெயர்ப்பு பற்றியது என்பதாகவோ இல்லாமல் இதற்க்கான கட்டணத்தை யாரிடம் தருவீர்கள் என்பது விமர்சனமா? சிறுபிள்ளை தனமா?

    சினிமாவை பார்த்து விட்டு அதை விமர்சிக்கிறேன் என்றபோர்வையில் அதன் தயாரிப்பாளரிடம் அந்த படதுனுடைய சம்பள பட்டுவாடாவை எவ்வாறு செய்தீர்கள் என்று கேட்க முடியுமா? அல்லது அதன் நடிகரிடம் நீங்கள் சம்பளத்தை வெள்ளையாக பெற்றீர்களா? அல்லது கருப்பாக பெற்றீர்களா? என்று கேட்க முடியுமா?

    யாருடைய தயவும் இன்றி தமிழ் காமிக்ஸ் (லயன் குழுமம் ) அதன் ரசிகர்களால் என்றும் தலைநிமிர்ந்து நடக்கும்.


    ReplyDelete
    Replies
    1. //XIII கலர் எடிஷன்களின் தன் மொழிபெயர்ப்பு அனுமதி இல்லாமல் வெளிவருகிறது என்று எடியே குறை கூறி இருக்கிறார்.
      • அவர் அனுமதி இல்லாமல் தனிபட்ட முறையில் அவர் இதழ்களை பிரதி எடுத்து விற்பவர்களை பற்றி குறை சொல்லி இருக்கிறார்.//

      இதை ஒருவரியில் விளக்குவது என்றால் முறையாக சினிமா எடுப்பவர்களையும் திருட்டு dvd தயாரிப்பவர்களுயும் ஒன்றுபடுத்தி கேள்வி கேட்பதுபோல் உள்ளது.

      சினிமாவின் சில காட்சிகள் வசனங்கள் வேறுமொழி படத்தின் சாயலில் உருவாக்கப் படுவதும் திருட்டு dvd தயாரிப்பதும் ஒன்றா?

      இதை கூட புரிந்து கொள்ள முடியவில்லையா? அல்லது நோக்கம் வேறா?

      கலர் காமிக்ஸ் பற்றி ஆசிரியர் கவலைப்படுகின்றார் என்றால் அது அவருடைய தொழில். அதை பாதிக்கும் எந்த போலிகளைப்பற்றியும் அவர் வருத்தம் தெரிவிக்கத்தான் செய்வார்.

      அதனால் இதை சொன்னீர்களே அப்படியானால் இதைப்பற்றியும் பதில் சொல்லுங்கள் என்பதைப்பற்றி என்ன சொல்ல?

      Delete
  75. சார்...,புதிய ஹீரோக்களும் ,புதிய கதைகளும் படை எடுப்பதில் மிகுந்த மகிழ்ச்சி .
    ஒரு சிறு கோரிக்கை ....,
    புதிய ஹீரோகளின் பெயர் வாயில் நுழையும் படி இருந்தால் ஓகே . இல்லை எனில் ஜானி , லாரன்ஸ்-டேவிட் போல உங்கள் பெயர் சூட்டும் படலம் மீண்டும் தொடரட்டும் ...ப்ளீஸ் ...

    ReplyDelete
  76. மீண்டும் ஒரு சிறு கோரிக்கை சார் ..,இது பல முறை உங்களிடம் வினவ தோன்றி மறந்து போனது .
    நமது கதாபாத்திரங்களின் பெயர் (ஹீரோ அல்ல )பல கதைகளில் நீளமாக வரும் போது எடுத்துகாட்டாக "ஜோன் வில்லியம் பிரபு "எனில் ஒரு பக்கத்தில் ஜோன் என்றும் ஒரு பக்கத்தில் வில்லியம் என்றும் மாறி மாறி வருவதை தவிர்த்து ஒரே பெயராக கொண்டு வந்தால எங்களுக்கு சிறிது குழப்பம் குறையும் . (தவறாக இருப்பின் மன்னிக்கவும் )

    ReplyDelete
  77. @ நண்பர்களுக்கு :

    நிறைய சமயங்களில் நான் நிலைநாட்டிட விழைவது ஒரே ஒரு விஷயத்தினையே ! காமிக்ஸ் எனும் அழகானதொரு பொழுதுபோக்கை ராக்கட் சயின்ஸ் ரேஞ்சிற்கு அலசி ஆராய்வதில் கிட்டிடப் போகும் சுவையோ ; பலனோ தான் என்னவாக இருந்திட இயலும் ?

    லார்கோவின் சமீபத்திய இதழினில் ஸ்கார்பாவின் வீட்டினில் உள்ள பணிப்பெண் தலைகாட்டும் sequence-ல் மொழிபெயர்ப்பில் வேறுபாடு நேர்ந்துவிட்டதாகவும் ; அதனை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் நம் நண்பர் ஒருவர் எனக்கு இன்று மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். ஸ்கார்பா ஒரு பெண்பித்தர் என்பதை நிலைநாட்ட வந்த கட்டத்தை நான் தவறாக மொழிபெயர்த்து விட்டதாகவும் ; அவசரத்தில் எழுதும் என் பாணியே இதற்குக் காரணமென்றும் நண்பர் இலங்கை பிரச்னை ரேஞ்சிற்கு எழுதி இருந்தார்.

    எனது பிழைகள் என்னவாக இருப்பினும், 26 எழுத்துக்கள் கொண்ட பரங்கிகளின் அந்த மொழியில் எனது பரிச்சயம் நிச்சயம் இன்னமும் மங்கிடவில்லை என்பது எனக்குத் தெரியும். கதைக்கு அவசியப்படா விஷயங்களையும் கூட வரிக்கு வரி ஈயடிச்சான் காப்பி அடிப்பது தான் ஒரு மொழிபெயர்ப்பாளனின் கடமை ; நாசுக்காக திசை மாற்றிடும் பாணி ஒரு குற்றம் ; தவறு என்று பார்க்கப்படுமெனில் - அந்தக் "கொலைப் பாதகத்தை" காலமெல்லாம் நான் செய்திடத் தான் போகிறேன் ! இது ஆணவமானதொரு வாக்கியமாய்ப் பார்த்திடப்படலும் சாத்தியம் என்ற போதிலும், நிஜத்தை சொல்லிட ஒரு நாளும் நான் தயங்கப் போவதில்லை.

    நண்பர் ரபிக் ராஜா மொழிபெயர்ப்பு உரிமைகள் குறித்து கேள்வியினை எழுப்பியது அவரது உரிமையே ; விற்பனைக்கு வந்திடும் எந்தப் பொருளுக்கும் விமர்சனங்கள் எழுவது இயல்பென்ற அவரது சிந்தையிலும் எனக்கு பூரண உடன்பாடே ! ஆனால் நண்பர் ராகவன் குறிப்பிட்டிருப்பது போல் ஒரு தொழிலின் பின்னணிகளை இது போன்றதொரு திறந்த களத்தில் நான் பகிரங்கப்படுத்திடப் பிரியப்படாத காரணத்தினாலேயே பதிலளிக்கவில்லை. அப்படியிருக்க cinebook -ன் ஜெராக்ஸ் தானே நாம் என்று ஒற்றை வரியினில் ஒரு தீர்ப்பினை வெளியில் எழுதுவது - ஜூரி இல்லாததொரு விசாரணைக்கு ஒத்ததாகாதா ?

    எனது பிழைகளுக்கு முதல் விமர்சகன் நானே ; அவை கொணரக்கூடிய பரிகாசங்களோ; விமர்சனங்களோ என்னை ஒரு போதும் சலனப்படுத்திடப் போவதில்லை . ஆனால் எனது தொழிலையும், ஒழுக்கத்தையும் பரிகசிக்கும் எழுத்துக்களுக்கு நிச்சயம் நான் ரசிகனல்லவே ! இதுவும் கூட இந்தப் புது யுகத்தின் விமர்சனப் பாணியினொரு அங்கமெனின் - நான் ஒரு தலைமுறைக்கு முந்தையப் புராதனமாய் இருந்திடுவதில் துளியும் வருத்தம் கொண்டிடப் போவதில்லை.

    உலகை வெற்றி காணும் ஒரு எடிட்டராகவோ ; மொழிபெயர்ப்பில் ஒரு சண்டியராகவோ என்னை நான் ஒரு நாளும் பார்த்திடுவதில்லை ; பார்க்கப்பட விழைவதுமில்லை ! நான் நேசிக்குமொரு கலையை, எனக்கிருக்கும் சக்திகளின் எல்லைக்குள் ஆராதிக்க முயன்றிடும் ஒரு சராசரி மனிதனே!

    அந்த சக மனிதனுக்கான அனுசரணை எனக்கு நல்கப்பட்டாலே நிரம்ப பெருமிதப்படுவேன் ! Good night guys !

    ReplyDelete
    Replies
    1. 1. ஆனால் எனது தொழிலையும், ஒழுக்கத்தையும் பரிகசிக்கும் எழுத்துக்களுக்கு நிச்சயம் நான் ரசிகனல்லவே !

      2.இதுவும் கூட இந்தப் புது யுகத்தின் விமர்சனப் பாணியினொரு அங்கமெனின் - நான் ஒரு தலைமுறைக்கு முந்தையப் புராதனமாய் இருந்திடுவதில் துளியும் வருத்தம் கொண்டிடப் போவதில்லை. //

      ஆசிரியர் அவர்களுக்கு, என் போன்ற சாதாரண எண்ணற்ற காமிக்ஸ் ரசிகர்கள் தங்களின் பின்னால் இருப்பதை எண்ணி பெருமிதம் அடைகிறோம். தங்களின் காமிக்ஸ் எங்களின் வாழ்க்கை சிரமத்தை இலகுவாக்குகிறது என்றால் அது மிகையல்ல. காதலை போன்ற ஒரு தேடலை, எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு அவஸ்தையை எங்களுள் நித்தம் நித்தம் விதைத்துக்கொண்டிருப்பது தங்களின் தமிழ் காமிக்ஸ் தவிர இன்று வேறொன்றில்லை. Good night விஜயன் Sir !!!

      Delete
    2. 3. கதைக்கு அவசியப்படா விஷயங்களையும் கூட வரிக்கு வரி ஈயடிச்சான் காப்பி அடிப்பது தான் ஒரு மொழிபெயர்ப்பாளனின் கடமை ; நாசுக்காக திசை மாற்றிடும் பாணி ஒரு குற்றம் ; தவறு என்று பார்க்கப்படுமெனில் - அந்தக் "கொலைப் பாதகத்தை" காலமெல்லாம் நான் செய்திடத் தான் போகிறேன் //

      இந்த மொழிபெயர்ப்பு தானே சார் எங்களை போன்ற எண்ணற்ற தீவிர காமிக்ஸ் ரசிகர்களை தங்களின் லயன் முத்து காமிக்ஸ் மீது தீராத காதலை ஏற்படுத்தி என்றும் கலையாமல், கலைந்துவிடாமல் கட்டி போட்டுள்ளது?! இந்த தங்களின் உறுதியே அரசனை போன்ற ஒரு கௌரவத்தை, கம்பீரத்தை தங்களுக்கு அளித்து எங்களை மரியாதை செய்ய வைக்கிறது?!

      Delete
    3. 4. நிறைய சமயங்களில் நான் நிலைநாட்டிட விழைவது ஒரே ஒரு விஷயத்தினையே ! காமிக்ஸ் எனும் அழகானதொரு பொழுதுபோக்கை ராக்கட் சயின்ஸ் ரேஞ்சிற்கு அலசி ஆராய்வதில் கிட்டிடப் போகும் சுவையோ ; பலனோ தான் என்னவாக இருந்திட இயலும் ? //

      இது புரியாத வரை காமிக்ஸ் ன் உன்னதமான சுவையை, கற்பனைகளின் எல்லைகளை இவர்கள் கனவிலும் ரசிக்கவோ, சுவைக்கவோ முடியாது. கள்ளம் கபடமற்ற சந்தோஷத்தை காமிக்ஸ் மூலம் பெறுதல் என்பது என்றுமே கானல் நீர் தான் இவர்களுக்கு !!!

      Delete
    4. 5. இது ஆணவமானதொரு வாக்கியமாய்ப் பார்த்திடப்படலும் சாத்தியம் என்ற போதிலும், நிஜத்தை சொல்லிட ஒரு நாளும் நான் தயங்கப் போவதில்லை.//

      இது ஆணவமல்ல ஸார், ஒரு தலைவனுக்குள்ள கம்பீரம், உறுதி, தன்னம்பிக்கை !!

      Delete
    5. ரசிகராய் இருந்தவர்கள் ,விமர்சகர்கலாய் மாறி விட்டதன் விளைவே அவர்களும் ரசிப்பதில்லை ,விமர்சிக்க என வருகிறார்கள் ....மழை பெய்கிறது ரசி என்றால் ,மழயில் நனைந்தால் சளி பிடிக்கிறது என்பவர்களை என்ன சொல்ல !மழையில் நனைந்தால் உடல் நல குறைவு வருமே என்கிறீர்களா ,,வீட்டிற்குள் பத்திரமாக அமர்ந்து கொள்ளுங்களேன் !

      Delete
    6. //இது ஆணவமல்ல ஸார், ஒரு தலைவனுக்குள்ள கம்பீரம், உறுதி, தன்னம்பிக்கை !//
      லார்கோவுடன் முதியவர் வாதிடுவாறே பர்மா காடுகளில் அது போல !ஒவ்வொருவரின் கருத்துக்களுக்கும் திரும்பி கொண்டிருந்தால் நீங்களும் புத்தகம் வெளியிட இயலாதே !

      Delete
    7. நண்பர்களே,

      ஆசிரியரின் இந்த பின்னூட்டம் எவ்வளவு வேதனையுடன் எழுதப்பட்டது என்பது இதை படிக்கின்ற பொழுதே உணரலாம். ஆசிரியர் நமது கருத்துக்களை கேட்டு அவருக்கு ஏற்ற கருத்துகளை உள்வாங்கியும் கொள்கிறார். ஆனால் நாம் சுதந்திரம் உள்ளது என எண்ணி, நமது எல்லையை மீறி ஆசிரியர் அவர்களை சங்கடப்படுத்துவது தவறு.

      வேறு எங்கும் இது போல நமது கருத்துகளை யார் காது கொடுத்து கேட்கிறார்கள். எல்லாமே ஒரு வழி பாதைதான். இங்கு மட்டுமே இருவழி பாதை. இதை நல்ல முறையில் பயன்படுத்துவோம், நம்மால் ஆசிரியர் அவர்களுக்கு சங்கடம் ஏற்படாமல் இருக்க செய்வோம்.

      தனிப்பட்ட முறையில் ஆசிரியரிடம் ஏதேனும் கேட்க நினைத்தால், அதை ஒரு மின்னஞ்சல் அனுப்பி கேட்டிடலாம். மேலும் ஏற்கனவே ஆசிரியர் கூறியது போல "பதிலளிக்க இயலாத பொழுது மௌனம் ஒன்றே அவரது பதிலாகவும் இருக்காலாம்". எனவே நாம் கேட்க கூடிய எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என எதிபார்த்து காத்திருக்க வேண்டாம்.

      Delete
    8. 6. அப்படியிருக்க cinebook -ன் ஜெராக்ஸ் தானே நாம் என்று ஒற்றை வரியினில் ஒரு தீர்ப்பினை வெளியில் எழுதுவது - ஜூரி இல்லாததொரு விசாரணைக்கு ஒத்ததாகாதா ? //

      இதைத்தானே இவர்கள் கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் அவரவர் பதிவுகளில் தொடர்ந்து கடைப்பிடித்து உங்களுக்கு இழைத்த அநீதி. மனரீதியாக உங்களை டார்ச்சர் செய்வதல்லவா இவர்களின் தலையாய பணியாக இருந்து வருகிறது? அபாண்ட பழிகளும், அடுக்கடுக்காய் வீண் குற்றச்சாட்டுகளும் தங்கள் மீது சுமத்தி அதில் இன்பம் காண்பதல்லவா இவர்களின் குறிக்கோள். தரம் தரம் என்று தராதரம் இல்லாமல் கூப்பாடு போட்டு உங்களின் கௌரவத்தையும், சுயமரியாதையையும் வட்டியின்றி அடகு வைக்க அல்லவா முயன்றனர்?

      Delete
    9. சினிமா போன்று பலருக்கு காமிக்ஸ் கூட கவலைகள் மறந்து சிறிது நேரம் ஒரு கனவுலகினில் சஞ்சரிக்க உதவிடும் ஒரு ஊடகமே!

      1. இதில் இன்னும் முன்னேற பல விஷயங்கள் இருந்தாலும் ஏற்கனவே முன்னேற்றப்பட்ட பல விஷயங்களை நாம் சிந்திக்கிறோமா?

      2. நம்மை நாமே சில விஷயங்களில் திருத்திக்கொள்ள கூட நமது பணியிடங்களில் ஓராண்டு நேரம் கொடுத்து ஒரு வருட சம்பளமும் (அதுவும் IT தொழிலில் லட்சக்கனக்கினில்) கொடுப்பதில்லையா? அப்படித் திருத்திக்கொள்ளும் நாம் வேறு புதிய தவறுகள் செய்வதில்லையா? இங்கே இந்த சின்ன விஷயத்தினில் மட்டும் ஓரிரு இதழ்களில் எல்லாம் நேராக வேண்டும் என்பது ஏன்?

      3. ஒரு சினிமா பார்க்கும்போது "படம் நல்லா இல்ல. வசனம் மோசம். பெரியவங்க சமாச்சாரமா இருக்கு" என்றெல்லாம் சொல்ல நமக்கு உரிமை இருந்தாலும் "வசனத்துக்கு கதாசிரியர் உரிமை வாங்கினாரா?அவருக்கு காசு குடுத்தாரா?" என்று தொழில் நேர்த்திகளைக் நோண்டுகிரோமா?

      4. விமர்சனம் தவறல்ல. அவை எதிர்மறையாய் இருந்தாலும் தவறல்ல. விஷயத்தை நோக்காமல் ஒரு தனி மனிதரின் - அதுவும் முகம் மறைக்காத ஒருவரின் - தொடர்பறுக்காத ஒருவரின் தனிப்பட்ட தொழில் கணக்குகளைக் கேட்க முனைவது எப்படி சரியாகும்? அவரது தொழில் பண்பு நலன்கள் சார்ந்த விஷயங்களை பொதுவில் கேள்வி கேட்பது எப்படி சரியாகும்?

      Another man's liberty begins, where our liberties end ....!

      Delete
    10. 7. உலகை வெற்றி காணும் ஒரு எடிட்டராகவோ ; மொழிபெயர்ப்பில் ஒரு சண்டியராகவோ என்னை நான் ஒரு நாளும் பார்த்திடுவதில்லை ; பார்க்கப்பட விழைவதுமில்லை ! நான் நேசிக்குமொரு கலையை, எனக்கிருக்கும் சக்திகளின் எல்லைக்குள் ஆராதிக்க முயன்றிடும் ஒரு சராசரி மனிதனே! அந்த சக மனிதனுக்கான அனுசரணை எனக்கு நல்கப்பட்டாலே நிரம்ப பெருமிதப்படுவேன் ! //

      ஒரு பண்புள்ள மனிதன் பணிவுகொள்ளும் போது மலையளவு உயர்கிறான். அவனே தங்களை போல் சாதனையாலனாகவும் இருந்து விட்டால் இமயம் போல் உயர்கிறான். விஜயன் ஸார், இன்றல்ல ஆனால் என்றோ நீங்கள் தமிழ் காமிக்ஸ் வாசகர்களின் நெஞ்சங்களில் இமயமென உயர்ந்தே தான் இருக்கிறீர்கள் !!!

      Delete
    11. மேலுள்ள பின்னூட்டங்களுடன் உடன்படுகிறேன் .

      Delete
    12. "கதைக்கு அவசியப்படா விஷயங்களையும் கூட வரிக்கு வரி ஈயடிச்சான் காப்பி அடிப்பது தான் ஒரு மொழிபெயர்ப்பாளனின் கடமை ; நாசுக்காக திசை மாற்றிடும் பாணி ஒரு குற்றம் ; தவறு என்று பார்க்கப்படுமெனில் - அந்தக் "கொலைப் பாதகத்தை" காலமெல்லாம் நான் செய்திடத் தான் போகிறேன்"

      "... பரிகாசங்களோ; விமர்சனங்களோ என்னை ஒரு போதும் சலனப்படுத்திடப் போவதில்லை . ஆனால் எனது தொழிலையும், ஒழுக்கத்தையும் பரிகசிக்கும் எழுத்துக்களுக்கு நிச்சயம் நான் ரசிகனல்லவே ! இதுவும் கூட இந்தப் புது யுகத்தின் விமர்சனப் பாணியினொரு அங்கமெனின் - நான் ஒரு தலைமுறைக்கு முந்தையப் புராதனமாய் இருந்திடுவதில் துளியும் வருத்தம் கொண்டிடப் போவதில்லை."

      நெத்தியடி!

      Delete
  78. cinebook -ன் ஜெராக்ஸ் தானே நாம் என்று ஒற்றை வரியினில் ஒரு தீர்ப்பினை வெளியில் எழுதுவது - ஜூரி இல்லாததொரு விசாரணைக்கு ஒத்ததாகாதா ?

    இந்த வரிகள் மனதை ஏதோ செய்கின்றன சார் . . .

    ReplyDelete
  79. ஒப்பிடுதலும், பிழை தேடுதலும் மண்டைக்குள் புகுந்துகொண்டுவிட்டதால், ரசித்தல் என்பது இல்லாமல்போய்க்கொண்டிருக்கிறது. ரசனையை முன்னிலைப்படுத்தவேண்டியது இப்போதைய எமது முக்கிய தேவை.

    ReplyDelete
  80. vijayan sir , face book கும்மிகளுக்கு எல்லாம் பதில் கொடுத்து கொண்டு இருந்தால் ,முடிவே கிடையாது . just avoid them . மற்றவர்களை தாழ்த்துவதே அவர்களின் முழு நேர வேலை . உங்கள் மேல் நம்பிக்கை கொண்ட இணணயத்தின் வாசனையே படாத பல வாசகர்கள் உள்ளனர் . உங்கள் நேரத்தை வீணாக்கும் இது போன்ற கேள்விகளை avoid செய்து விடுங்கள்

    ReplyDelete
  81. //நண்பர் இலங்கை பிரச்னை ரேஞ்சிற்கு எழுதி இருந்தார். //

    ஓர் உதாரணத்திற்குத்தான் என்றாலும், இதனை நீங்கள் எழுதாமலிருந்திருக்கலாம் ஆசிரியர் அவர்களே! எங்கள் பிரச்சனைகள் பற்றி அண்டை நாட்டு உறவுகளுக்கு இன்னமும் ஒரு தெளிவு பிறக்கவில்லை என்பதையே இவ்வாறான எடுத்துக்காட்டல்கள் சுட்டுகின்றன. நாங்கள் எப்போதோ செத்துவிட்டோம். இப்போது இருப்பது எங்கள் சடலங்கள் மட்டுமே. அதை வைத்து அரசியல் செய்பவர்களின் பிரச்சாரங்களைக் கேட்டு எங்களைத் தாழ்த்தாதீர்கள். செத்துப்போன பின்பும் கிடைக்கும் வேதனையிது...

    ReplyDelete
    Replies
    1. Podiyan : அறியாமல் நேர்ந்த பிழைக்கு உளமார்ந்த மன்னிப்புகளை சமர்ப்பிக்கிறேன் ! நிச்சயம் இனி ஒரு முறை இது போல் எழுதிட மாட்டேன்..!

      Delete
    2. சுட்டிக்காட்டி உங்களை வேதனைப் படுத்தும் எண்ணமில்லை. எங்களை வைத்து சமீப நாட்களாய் நடக்கும் சம்பவங்களின் வேதனையின் வெளிப்பாடே. உங்களைப் போன்றவர்களிடமே உரிமையோடு கேட்க முடியும், எம்மைப் புரிந்துகொள்ளுமாறு....

      Delete
    3. உங்கள் மொழிபெயர்ப்பில் தமிழ் பேசிய வீரக் கதைகளைப் படித்தும் களத்துக்கான உத்வேகம் ஏற்றிக்கொண்டவர்கள்தான் எங்கள் வீரர்கள்.

      Delete
    4. உடனடி பதிலுக்கு மிக்க நன்றிகள்.

      Delete
    5. Podiyan : ஒரு யுத்தத்தின் வலிகளை ; இழப்பின் பரிமாணங்களை ; அதன் மத்தியினில் வசிப்போரிடமிருக்கும் தாக்கத்தின் ஆழத்தை உணர்தல் வெளியில் பார்வையாளர்களாய் நிற்போருக்கு ஒருப்போதும் சாத்தியமல்ல என்பதை அறிவேன்.

      வரலாற்றின் கரும்புள்ளியான இரண்டாம் யுத்தத்தின் அடையாளமொன்று போலந்து நாட்டின் Auschwitz -Birkenau நகரில் உள்ளது. யூத இனத்தை நிர்மூலமாக்கிட ஹிட்லரின் ஜெர்மானியர்களால் நிர்மாணிக்கப்பட்ட அந்த சித்திரவதை முகாமிற்கு பத்தாண்டுகளுக்கு முன்பு - ஒரு போலந்து நாட்டு யூத நண்பருடன் செல்லும் அனுபவம் கிட்டியது.மியூசியத்தின் நுழைவாயிலில் எழுதப்பட்டிருந்த வாசகம் இன்னமும் என் நினைவில் தங்கியுள்ளது....

      "வரலாற்றை மறந்திடுவோர்க்கு அதனை மீண்டுமொருமுறை வாழ்ந்து அனுபவிப்பதே விதிக்கப்படும் தலையெழுத்தாகும்" - என்பது அதன் சுருக்கமான மொழிபெயர்ப்பாகக் கொண்டிடலாம். வார்த்தைகளில் அடக்க இயலா வேதனையை அனுபவித்து மரித்துப் போன தம் குடும்பத்தின் நினைவில், ஆண்டுகள் 50 கடந்த பின்னரும் கூட கண்ணீர் சிந்திடும் சக மாந்தர்களின் வலி கண் முன்னே விரிந்த போது நான் உணர்ந்திட்ட இயலாமை இன்றளவிற்கும் நினைவில் உள்ளது. உலகின் இன்னொரு கோடியினில், நமக்கு துளியும் பரிச்சயமற்றதொரு இனத்தின் இழப்புகளே நெஞ்சைப் பிசையும் போது, கூப்பிடு தொலைவில் இருக்கும் உறவுகளின் வேதனைகளை பரிவோடு அணுகுவது கடமையே ! மாறாக எனது வார்த்தைகள் அதனை கிளறி விட்டது நிச்சயம் தவறு தான் !! Apologies again !

      யுத்தப் பின்னணியில் உள்ள untold stories சிலவற்றையாவது என்றேனும் ஒரு நாள் நம் இதழ்களில் வெளியிட வேண்டுமென்று என்னுள் ஒரு அவா தோன்றியது போலந்தில் நான் செலவிட்ட அந்த மதியப் பொழுதினில் தான். அது நாள் வரை பிரிட்டிஷார் நாஜிக்களைக் காக்கைகள் போல் சுட்டுத் தள்ளும் யுத்தக் கதைகளைத் தாண்டி பெரிதாய் வேறு எதையும் பரிசீலிக்கும் அவா என்னுள் இருந்ததில்லை. சொகுசின் மடியில் வாழும் பாக்கியம் கிட்டிய நாம் வாழ்கையின் கறும்பக்கங்களை நேரில் பார்த்திட நேரும் துரதிர்ஷ்டசாலிகளின் வேதனையினில் ஒரு துளியையேனும் உணர்ந்திட சித்திரக் கதைகளும் ஒரு வழி என்று அன்று தோன்றியது. இவ்வாண்டு வரக் காத்திருக்கும் "BATCHALO " + "ஒரு சிப்பாயின் சுவடுகள்" அதன் பிரதிபலிப்புகளே.

      Delete
  82. நெஞ்சத்தில் அன்பை நிறைத்துகொண்டால், குறை காணலும் குற்றம் சாட்டலும் கூட கனிவான விண்ணப்பமாக மாறிவிடும்!

    ReplyDelete
    Replies
    1. "நெஞ்சத்தில் அன்பை நிறைத்துகொண்டால், குறை காணலும் குற்றம் சாட்டலும் கூட கனிவான விண்ணப்பமாக மாறிவிடும்!"

      நம் வாசக நண்பர்கள் அநேகர் அப்படிப்பட்ட அன்பினால் நிறைந்திருப்பது கண்கூடு!

      Delete
    2. சத்தியமான வார்த்தைகள்!

      Delete
  83. கிட்-லக்கி தொடர் உண்மையில் மிக அருமையான ஒன்று. கவண் வைத்து விளையாடும் லக்கியின் சிறுவயது சாகசங்கள் ரசிக்க வைப்பவவை. சிறுவயது டால்டன்களையும் அங்கே பார்க்கலாம் என்பது இன்னுமொரு சிறப்பம்சம். அந்நத் தொடருக்குரிய அறிவிப்பு வந்திருக்கிறது, புதிய கதைகள் இன்னும் பல வரப்போகின்றன. அவற்றை வரவேற்கவும் வாசித்து ரசிக்கவும் தயாராகவேண்டி நேரத்தில் சர்ச்சைகளோடும் வீண் முரண்பாடுகளோடும் முட்டிக்கொண்டிருக்கிறோம் நாம். மொழி பெயர்ப்பில் மையக் கருத்து சிதைக்கப்பட்டால் அதை எதிர்க்கும் பட்டியலில் நானும் இருப்பேன். ஆனால், வார்த்தைக்கு வார்த்தை அப்படியே வரவேண்டுமென்பதை எதிர்பார்ப்பது சரியென்று படவில்லை. ஆங்கில கெட்ட வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தமுடியுமா என்ன? கம்பனே ராமாயணத்தை மொழிபெயர்த்தபோது செய்யாத கலாச்சார அமைவுகளா? நமக்கு எது ஏற்றதோ அது பொருத்தமாக வரவேண்டும்; அவ்வளவே!

    ReplyDelete
  84. நண்பர்களே பல நாட்கள் என் உள்ளகிடக்கையின் வெளிப்பாடு எனது இந்த பதிவு.
    இத்தனை நாட்கள் இங்கே நடைபெறும் அமளிகளையும் வாதங்களையும் ஒரு ரசிகனாய் பார்த்து வந்தேன் இன்று மொழிப்பெயர்ப்பு மற்றும் எடிட்டிங் பற்றிய என் கருத்தினை சொல்ல விரும்புகிறேன்.
    உதாரணத்துக்கு: ஒரு தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்ய உரிமை பெறுகிறேன் என்று வைத்து கொள்வோம் அந்த படத்தை தமிழுக்கு தகுந்த மாதிரி மக்கள் விரும்பும் வகையில் அந்த படத்தின் மூலகரு,திரைக்கதையில் எந்த பாதிப்பும் ஏற்படாதவகையில் தமிழுக்கு தகுந்தவாறு மொழிபெயர்த்து தேவையான இன்ன பிற நகாசு வேலைகளை பார்த்து வெளியிடுவோம்.
    பிறமொழியில் உள்ளதை அப்படியே ஈயடிச்சான் காப்பி அடிக்க அந்த மொழியில் தேர்ச்சி பெற்ற வல்லுனர் போதுமே பிறகு எதற்கு எடிட்டிங் பணி. அப்போ நம் எடியை வேலை பார்க்கவேண்டாம் என்கிறார்களா:-)
    புத்தகத்தின் தாய்பதிப்பை நம் மொழிப்பெயர்ப்பின் ஒவ்வொரு வார்த்தையுடன் ஒப்பிட்டு அங்கே BANG BANG என்பதற்கு பதில் இங்கே டுமீல் டுமீல் என்று இருக்கிறது என்று சொன்னாலும் சொல்வார்கள்.

    ReplyDelete
  85. ஆசிரியருக்கும் நமக்கும் உள்ள அன்பே நமது காமிக்ஸின் ஒவ்வொரு பின்னடைவின் போதும் பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் மீண்டும் புத்துணர்வோடு மேலே எழ வைக்கிறது. இதுதான் நம் லயன் முத்து குடும்பத்தின் வலிமை!

    ReplyDelete
  86. ்@ ரஃபிக் ராஜா

    எடிட்டருக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி சந்தோஷப்படுத்திவிட்டு, ஒரு தர்ம சங்கடமான கேள்வியையும் இந்தப் பொது இடத்தில் கேட்டு கஷ்டப்படுத்திப் பார்த்திட உங்களுக்கு எப்படித்தான் மனது வந்ததோ?!!

    சரி, நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்; எடிட்டரின் பதிலில் இழையோடும் வேதனையைக் கவனித்திருப்பீர்களே? அவர் சொல்லியதன் அர்த்தம் உங்களுக்குப் புரிந்திருக்கும்பட்சத்தில் மீண்டும் இதுபோன்ற சங்கடப்படுத்தும் கேள்விகளைத் தவிர்த்துவிட்டு ஒரு சராசரி காமிக்ஸ் ரசிகனாக இங்கே உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள், நிறைகளைப் பாராட்டுங்கள், குறைகளை சுட்டிக்காட்டுங்கள். ஒரு நல்ல மனிதரின் மனதைப்  புண்படுத்திடும் நோக்கமல்லாது நீங்கள்  கேட்டிடும் ஞாயமான கேள்விகளுக்கும், அர்த்தமுள்ள பதிவுகளுக்கும் நானும் அடிக்கிறேன்...

    'கும்மி'! ;)

    ReplyDelete