Thursday, February 14, 2013

ஒரு காதல் தின அத்தியாயம் !


நண்பர்களே,

வணக்கம். புதியதொரு பதிவின் மீது (இது வரை )3077 பார்வைகள்....விழி பிதுங்கச் செய்யும் 516 பின்னூட்டங்கள்...கடந்த 3 தினங்களாய்  ரகளையாய் வந்திடும் புதிய காமிக்ஸ் க்ளாசிக்ஸ் சந்தாக்கள்...மும்மூர்த்திகளின் தளரா விசிறிகளிடமிருந்து காரசாரமாய் கண்டன எழுத்துக்களைக் கொணரும் ஒரு சில ஊதா நிற இன்லண்டு கடிதங்கள் !! Phew ..... குட்டியாய் ஒரு பதிவு உண்டாக்கிய தாக்கத்தின் சக்தி எத்தகையது என்பதை இதை விட அதிரடியாய் வெளிப்படுத்திட இயலாதெனும் விதமாய் அமைந்து விட்டன கடந்த சில நாட்கள்...! இந்த "load  more " இம்சை மாத்திரம் இல்லாதிருப்பின், பின்னூட்ட எண்ணிக்கை இன்னமும் எகிறி இருக்குமென்று சொல்லத் தோன்றுகிறது ! Anyways - காமிக்ஸ் எனும் காதல் நம்மில் எத்தனை ஆழமாய் ஐக்கியம் ஆகியுள்ளதென்பதைப் பறைசாற்ற இந்தக் கலப்படமில்லா உத்வேகத்தின் பிரவாகம் போதாதா ?! உலகமே காதலைக் கொண்டாடும் ஒரு அழகான தினத்தில் - நம் காமிக்ஸ் காதலின் லேட்டஸ்ட் அத்தியாயத்தை களம் இறக்கிடுகிறோம் ! யெஸ்...லக்கி லூக்கின் "வில்லனுக்கொரு வேலி" இன்று ஒரு மொத்தமாய் (14th.Feb) டெஸ்பாட்ச் ஆகின்றது. இதோ இதழின் வண்ண அட்டைப்படம் ! 


இது இன்னொரு லக்கி லூக் கதைக்கான ஒரிஜினல் டிசைனை தழுவி, நமது ஓவியர் உருவாக்கியதொரு சித்திரம்.


நமது சமீபத்திய சற்றே refined look அட்டைப்படங்களில் இருந்து மாறுபட்டு - துவக்க காலத்து மினி லயன் பாணியில் இது இருப்பதாக எனக்குப் பட்டது.'கதைக்குத் துளி சம்பந்தமும் இல்லா டிசைன்' என்று New Look Special மீது விழுந்த குற்றச்சாட்டு இதற்குப் பொருந்தாது என்பது மாத்திரம் நிச்சயம் ! முழுக்க முழுக்க காமெடித் தோரணம் கண்டிடும் ஒரு இதழுக்கு இந்த ராப்பர் ஒ.கே.வா என்பதை தொடரவிருக்கும் உங்கள் பின்னூட்டங்கள் சொல்லிடும் என்பது உறுதி. லக்கி லூக்கின் இந்த இதழுக்காக ஒரிஜினலாய் தயாரிக்கப்பட்ட ராப்பர் ரொம்பவே weak ஆக இருந்திட்டதால் இம்முறை அதனை பயன்படுத்திட மனது வரவில்லை ! பாருங்களேன் அவர்களது பிரெஞ்சு இதழின் அட்டைப்படத்தினை :


72 பக்கங்கள் கொண்டிட்ட இந்த இதழில் ஒரு 46 பக்க லக்கி லூக் முழு வண்ண சாகசத்தைத் தொடர்ந்து மதியில்லா மந்திரியின் இரு எட்டுப் பக்க சாகசங்கள் + குட்டீஸ் கார்னர் & வழக்கமான பகுதிகள் இடம் பெறுகின்றன !  கிட்டத்தட்ட 78 கதைகள் கொண்ட லக்கி லூக் தொடரில் நாம் இது வரை வெளியிட்டுள்ளவை எத்தனை என்ற கணக்குப் போட்டு சொல்பவர்களுக்கு ஜாலி ஜம்பரின் சார்பில் ஒரு கூடை காரட் பரிசு ! (carrotகள் தான்....மினுமினுக்கும் caratகள் அல்லவே !)

ம.மந்திரியின் ஒரு சாகசம் வண்ணத்தில் - மற்றது black & white -ல் என்பது இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும் ! But - வண்ணமின்றியும் மந்திரியார் 'பளிச்' என்று காட்சியளிக்கிறார் என்று தான் சொல்லுவேன் ! ம்.மந்திரியைப் பற்றிப் பேசிடும் போது, நேற்றைய தினம் கூரியர் மூலம் ஒரு 8 பக்க சிறுகதையின் பக்கங்களை "Kaun Banega Translator" போட்டியின் பொருட்டு - மொழிபெயர்த்திட அனுப்பியுள்ளோம்.18-பிப்ரவரிக்குள் எங்களுக்குக் கிட்டிடும் வகையினில் உங்களின் மொழிபெயர்ப்புகளை அனுப்பிடல் அவசியம். முழு முகவரியின்றி, வெறும் மின்னஞ்சல் மாத்திரம் அனுப்பியுள்ள நண்பர்களுக்கு இந்த வாய்ப்பு தந்திடப்படவில்லை ! அதே போல் அயல் நாட்டிலிருந்து இதனில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்த நண்பர்களுக்கு நாளை மின்னஞ்சல் மூலம் PDF file அனுப்பிடப்படும்.

தொடரவிருக்கும் மாதத்து வெளியீடான "துரத்தும் தலைவிதி" (லார்கோ வின்ச்) பணிகளும் படு சுறுசுறுப்பாய் நடந்தேறி வருகின்றன. இதற்குத் தயாராகியுள்ள ராப்பர் ரொம்பவே வித்தியாசமானது என்று எனக்குத் தோன்றியது ! மார்ச் 15 வரைக் காத்திருக்க அவசியமின்றி - இந்த இதழினை முன் கூட்டியே அனுப்பிடுவோம் என்பது உறுதி !

அப்புறம், கொஞ்ச காலத்திற்கு முன்னே இங்கே நான் கேட்டிருந்த நமது காமிக்ஸ் தொடர்பான quiz போட்டிக்கான பதில்கள் (ஒரு வழியாக) இதோ : (சரியான விடைகளை அனுப்பிய நண்பர்களின் குட்டிப் பட்டியலை நாளைக் காலையில் இந்தப் பதிவோடு இணைத்திடுகிறேன் !) 



1.லயன் காமிக்ஸின் முதல் மறுபதிப்பு எது ?  

பழிவாங்கும் பொம்மை - ஸ்பைடர் - Title # 99.

2.ஆர்ச்சிக்குப் போட்டியாய் லயனில் வந்திட்ட "இரும்பு ஹீரோ" யார் ?

மிஸ்டர் ஜெட் 

3.ஒரே ஒரு கதையில் மாத்திரமே தலைகாட்டிய ஹீரோக்களில் யாரேனும் 3  பேரை லிஸ்ட் பண்ணுங்களேன் ?


மிஸ்டர் ஜெட்

அதிரடி வீரர் ஹெர்குலஸ் 
பீட்டர் பாலண்டைன்

கம்ப்யூட்டர் மனிதன்.     

டயபாலிக்
ஜேசன்

& many more..! 


4.ஒரு சாகசத்திற்கும் ; அடுத்த சாகசத்திற்குமிடையே மிக நீ.....ண்....ட இடைவெளி விட்ட நாயகர்(கள்) யார் ?  


மீட்போர் ஸ்தாபனம் - 1984 "கபாலர் கழகம் " (இதழ் நம்பர் 6) to "பெர்முடா படலம்"  (இதழ் நம்பர் 149) 




5.லயனில் இது வரை அதிகமான கதைகளில் தலைகாட்டியுள்ள ஹீரோ யாரோ ?

டெக்ஸ்வில்லர்

6.கேப்டன் பிரின்ஸ் லயனில் தலை காட்டிய முதல் இதழ் எது ?

ஒரு திகில் பயணம் 

7.லயனில் இது வரை மொத்தம் எத்தனை "ஸ்பெஷல்" இதழ்கள் வந்துள்ளன ?

இந்த ஒரு கேள்விக்கான விடை - கேள்வி எடுத்துக் கொள்ளப்படும் அர்த்தத்தைப் பொருத்தது என்பதால், இதனை seriousஆக எடுத்திடத் தேவையில்லை என்று நினைக்கிறேன். நான் கேட்டிருந்தது "வழக்கமான விலைகளில் அல்லாது - சிறப்பு விலைகளில் வந்திட்ட ஸ்பெஷல்  இதழ்கள் எவை ? என்ற தொனியினில். நாம் நிறைய தடவைகள் வழக்கமான இதழ்களுக்கும் கூட "ஆண்டு மலர் " என்று அடைமொழிகள் ஓட்டுப் போட்டு உள்ளதால் - நிறைய நண்பர்கள் அவற்றையும் பட்டியலில் இணைத்து அனுப்பி இருந்தனர்.  So இந்த ஒரு கேள்வி reject !

8.லயனின் முதல் கார்ட்டூன் சாகசம் எது ?

பயங்கர பொடியன்லக்கி லூக் சாகசம் - 1987 லயன் தீபாவளி சூப்பர் ஸ்பெஷல் !

9."கபாலர் கழகம்" இதழின் நாயகர் யார் ?  

மீட்போர் ஸ்தாபனம்.

10.லயனின் முதல் அறிமுகம் என்பதைத் தாண்டி மாடஸ்டி ப்ளைசிக்கு இன்னொரு பெருமையும் உண்டு ! அதென்ன ?

நமது லயனில் ஒரே ஹீரோயின் இவர் மட்டுமே .மற்றவர் அனைவரும் ஆடவர்கள்.

நாளைய மதியப் பொழுதில் இந்தப் பதிவினில் ஒரு சந்தோஷச் சேதியும் update ஆகிடும் என்ற நம்பிக்கையோடு குட்டியான இந்தப் பதிவுக்கு இப்போதைக்கு 'சுபம்' போட்டிடுகிறேன் ! !! Fingers crossed! See you soon folks ! 

நம் சிவகாசி நண்பரும், காமிக்ஸ் பதிவருமான சௌந்தரின் காமிக்ஸ் காதலைப் பற்றி நாம் அறிவோம் ! ஆனால் நண்பரின் இன்னொரு காதல் முகமானது இன்று திருமணம் எனும் சந்தோஷ பந்தம் வரை அவரை இட்டுச் சென்றுள்ளது  !! உலகக் காதலர் தினத்தன்று காதலித்தவரைக் கரம் பிடித்த சௌந்தருக்கும், அவர்தம் துணைவிக்கும் வாழ்த்துச் சொல்லிடுவோமே !!! லக்கி லுக்கும், ஜாலி ஜம்பரும் போல் ; லார்கோவும், சைமனும் போல் ; மாயாவியும், இரும்புக்கரமும் போல் -  என்றும் இணை பிரியாது சகல நலன்களோடும் புதுத் தம்பதியினர் வாழ்ந்திட நம் அனைவரின் வாழ்த்துக்களும் உரித்தாகுக !

370 comments:

  1. Replies
    1. அகா எம்புட்டு அழகா இருக்கு என் முகம் அடடடடடடட................ தான்கு அரசே!

      Delete
  2. ரூ 50 விலையில் வெளிவரும் முதல் வண்ண இதழ் இது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. Please add this book in ebay to buy online ..

    ReplyDelete
  4. மும்மூர்த்திகளின் தளரா விசிறிகக்காக ஒரு கேள்வி.
    இவர்களுடைய(ஸ்பைடர், ஆர்ச்சி,மாயாவி, ஜானி நீரோ பிற) சாகஸங்கள் ஒன்று கூட கலரில் இல்லையா?

    டெக்ஸின் சாகஸங்கள் கலரில் இருந்தால் அதனை டெக்ஸ் ஸ்பெஷல் இதழில் போடலாமே. (இப்படிக்கு டயலாக்கை கூட கலரில் கேட்கும் சங்கம்.)

    ReplyDelete
    Replies
    1. டயலாக்கை கூட கலரில் கேட்கும் சங்கம் ,உங்கள் கேள்வி அருமை !மனதில் பலமாய் ஆவலை கிளப்புகிறது !

      Delete
    2. நன்றி. கோவை மாயாவி சார்.

      Delete
    3. http://www.facebook.com/photo.php?fbid=190283691117680&set=o.426173210776571&type=3&permPage=1

      Delete
  5. //கடந்த 3 தினங்களாய் ரகளையாய் வந்திடும் புதிய காமிக்ஸ் க்ளாசிக்ஸ் சந்தாக்கள்..//
    நல்ல சேதிதான்!

    ஒரிஜினல் அட்டையில் வில்லனும் இருக்கிறார், ஒரு வேலியும் இருக்கிறது! ஆனால் ரொம்பவே டல்லடிக்கிறது! இந்த ஒரிஜினல் அட்டையையே இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாமோ?

    எது எப்படியோ, நீங்கள் குறிப்பிட்டது போலவே மினி லயன் பாணியில் - உங்கள் ஓவியரின் கைவண்ணமும் பிரமாதமாகத்தான் இருக்கிறது! பின்புற பச்சை டிசைன் NBS லார்கோவை நினைவுறுத்துகிறது!

    //10.லயனின் முதல் அறிமுகம் என்பதைத் தாண்டி மாடஸ்டி ப்ளைசிக்கு இன்னொரு பெருமையும் உண்டு ! அதென்ன ?
    நமது லயனில் ஒரே பெண் ஹீரோயின் இவர் மட்டுமே .மற்றவர் அனைவரும் ஆடவர்கள்.//

    தவறு!!! இன்னமும் ஒரு பெண் ஹீரோயின் லயனில் வந்துள்ளார்!! சரி அது என்ன பெண் ஹீரோயின்?! :D ஹீரோயின் என்றாலே பெண்தானே?! ;)

    ReplyDelete
    Replies
    1. தூங்கி போன டைம் -பாம் கதையின் ஒரு பெண் ஆனால் இந்தக்கதை லைன் / முத்து காமிக்ஸ்-ஆ என்ன தெரியவில்லை!!!

      Delete
    2. ஆம் கார்த்திக் ,சாகச தலைவி ,அதிரடி படை தலைவர் கொள்ள பட இவர் அந்த இடத்திற்கு வருவார் !
      பரணி Code-Name-Minal வரவில்லை !
      மிஸ்டர் ஜெட் இரண்டு கதைகள் வந்ததை நியாபகம் !நினைவில் உள்ள நண்பர்கள் பகிர்ந்து கொள்ளலாமே !

      Delete
    3. @ஸ்டீல் க்ளா:
      //சாகச தலைவி ,அதிரடி படை//
      சரியான விடை!!! :)

      @பரணி:
      //தூங்கி போன டைம் பாம்//
      இந்த புக்கை சத்தியமாக நான் இன்னமும் படித்து முடிக்கவில்லை!!! :D

      Delete
    4. //தூங்கி போன டைம் பாம்//
      இந்த புக்கை சத்தியமாக நான் எவ்வளவு முயற்சித்தும் படிக்க முடிக்கவில்லை!!!

      Delete
    5. படிக்கும் நாமும் தூங்கிப்போகிறோமே. அப்புறம் எப்படி படிப்பதாம்?

      Delete
    6. இந்த புக்கை சத்தியமாக நான் இன்னமும் படித்து முடிக்கவில்லை!! -> Me TOO! Editor could have asked a question like, "the story which was not completely read by anyone for long time" :-)

      Delete
  6. Sir

    I do agree with your comment last week about over-dozing with continuous stories of same heroes. At the same time, If you have all stories available, can you make it a policy to make sure, open ended stories will have the next part coming within next 6 months. I'm happy to see irumubukkai Ethan's end coming, that too in color. That was a riveting story.

    I will second Saint Satan's comment on Ratha Padalam. Don't you feel it is too early to reprint it after Jumbo. Can't we give it a 3-5 years gap

    One story which scared me when I was a kid was, Johny's "Marana Pattiyal". Is it possible to reprint the story in color in the next 3-5 years, I know you have plans for upto 2014.

    Great services by three of you to the Tamil Community and I will never dare to question your selection or options. But these are my humble opinion and requests.

    Prem
    Minneapolis

    ReplyDelete
  7. 10.லயனின் முதல் அறிமுகம் என்பதைத் தாண்டி மாடஸ்டி ப்ளைசிக்கு இன்னொரு பெருமையும் உண்டு ! அதென்ன ?

    நமது லயனில் ஒரே பெண் ஹீரோயின் இவர் மட்டுமே .மற்றவர் அனைவரும் ஆடவர்கள்.

    தவறு என்று நினைக்கிறேன். லயனின் 53 வது வெளியிடான "சாகசத் தலைவி" ஒரு புதிய ஹீரோயின் கதை.

    ReplyDelete
  8. Dear Vijayan Sir,

    Wrapper artwork superb... it will draw many kids...
    Our comics becoming more attracting one...
    Thank you somuch for releasing a seperate issue for children... This has to be continued...

    I myself also missed evergreen heroes(Mayavi, Spider, Lawrence & David, Johny Nero) reprints, though i am happy about your new decision on making color reprints.. I love both...
    Hope you will bring those reprints before next year book fair.

    I support XIII reprint (with our friend Steelclaw Ponraj..)as it is the masterpiece of great artist William Vance...
    It will be a first class visual treat for the tamil comics lovers.... XIII reprints should be always with us (possible with all the 9 parts(x2 stories))... for the sake of attracting new comers....

    Regarding CC subcription, i delayed both subscription due some other reasons.... not because of superheroes...

    some clarifications on the Quiz...?

    //3.ஒரே ஒரு கதையில் மாத்திரமே தலைகாட்டிய ஹீரோ... - ஈகிள் மேன்//
    Eagleman appeared twice in our lion comics...

    //6.கேப்டன் பிரின்ஸ் லயனில் தலை காட்டிய முதல் இதழ் எது ? "ஒரு திகில் பயணம்" //
    captain prince appeared in our lion super special(Issue no.42) "Visithira Paadam"

    //7.லயனில் இது வரை மொத்தம் எத்தனை "ஸ்பெஷல்" இதழ்கள் வந்துள்ளன ?

    So இந்த ஒரு கேள்வி reject //
    I didnt send the answer just because of this unsure question....

    thanx & regards
    Udhay

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே இப்போதுதான் நினைவில் வந்தது ஈகிள் மேன் வண்ணத்தில் ஒன்றும் ,கருப்பு வெள்ளையில் ஒன்றும் வெளி வந்தது !

      Delete
    2. eagle man-n, KADATHAL VALAI Padikka villaya Neengal?

      Delete
    3. EAGLE MAN-IN 2 BOOKS LAYUM NADALIYA THAAN HEROIN.

      Delete
  9. COMICS KADHALARGALUKU KADHALAR DHINA NALVATHUGAL! lucky luke matrum mathiyila manthiriyai varverka aal uyara maalaiyodu 15m thedhi courier nanbarin varugaiku kathirikirom-inganam comicsku thuyil marapoor sangam!

    ReplyDelete
  10. WE EXPECT CLASSIC COMICS TO BE PUBLISH SOON WITHOUT ANY DELAY!

    ReplyDelete
  11. //நாளைய மதியப் பொழுதில் இந்தப் பதிவினில் ஒரு சந்தோஷச் சேதியும் update ஆகிடும்//

    என்னவா இருக்கும்!........

    ReplyDelete
  12. சிகப்பாய் ஒரு சொப்பனம் அட்டை படம் மாதிரி ஒரிஜினல் அட்டையிலேயே வண்ணங்களை கூட்டி தயார் செய்து இருக்கலாம்!

    ReplyDelete
  13. அந்தந்த கதைக்கு அந்தந்த ஒரிஜினல் அட்டைகளே பொருத்தமாக இருக்கும்!

    ReplyDelete
  14. USHAARA IRUNTHAATHAAN INGE PINNOOTTAM IDA & SUBSCRIBE BY E-MAIL SEYYA MUDIYUM POLA!?????
    LUCKY LUKE WRAPPER VERY SUPER SIR! I LIKE IT VERY MUCH! EAGERLY WAITING FOR THE UPDATE! HAVE A NICE DAY FOLKS!

    ReplyDelete
  15. ஆஹா..லக்கி லூக்கோடு மதியில்லா மந்திரியின் இரண்டு சாகசங்களா? சூப்பர்…! கண்ணா இன்னோரு லட்டு தின்ன ஆசையா?

    ReplyDelete
  16. சார், NBS போல நானூறு விலையில் கலக்கலான ஒரு தீபாவளிமலர் வெளியிட முன்பதிவை ஆரம்பியுங்களேன் ப்ளீஸ்…

    ReplyDelete
    Replies
    1. Raja Babu : ஏற்கனவே நான் எழுதி இருந்த சங்கதியே இது ...ஒரு குறிப்பிட்ட சந்தாத் தொகை நிர்ணயம் செய்த பின்னே இடைச்செருகல்களாய் புதிதாய் இதழ்களை இணைப்பது சிரமம் ! மீண்டுமொருமுறை அத்தனை பேரும் பணம் அனுப்பிட வேண்டிய சிரமத்திற்கு உள்ளாக வேண்டும். சிக்கல் அது தான்.

      Delete
    2. // சிக்கல் அதுதான் //

      சிக்கலா? அது சந்தோஷமான விஷயமாயிற்றே!!

      Delete
    3. Sir -- That's How special issues were always done, if the special issues are announced along with regular subscription then it's not a special issue. And this model is followed by all the publishers vikatan, kumudam, etc.. Diwali specials were never part of the subscription.

      Special issue provides more fun and enjoyment because of the following reasons
      1. Starts from the advertisement for multiple stories
      2. Cutting the coupon and sending the money for the special issue
      3. More stories in a single issue, which would last during the diwali holidays
      4. Variety of stories in a single book.
      5. As a default it will become a collector's issue.

      So please give some thought on a separate DIWALI issue.

      Delete
  17. காமிக்ஸ் காதலர்களுக்கு அருமையான அறிவிப்பு! அடுத்த இரண்டு நாள் கொரியர் பசங்கள துரத்த வேண்டியதுதான் நம்ப வேலை!! தயவு செய்து "எல்லாருக்கும்" இன்றைக்கு அனுப்புகள், இல்லை என்றால் அடுத்த வாரம்தான் கிடைக்கும்!

    எடிட்டர் சார், உங்களிடம் இந்த பதிவுக்கு "காமெடி காதல்" என்ற தலைப்பை எதிர் பார்த்தேன்
    :-)

    ReplyDelete
    Replies
    1. டியர் பரணி !!!அநேகமாக கோவை இரும்பு கையாரும்,ஈரோடு இளைய தளபதியாரும் இன்றிரவு தூங்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.பெட்டி படுக்கையோடு கூரியர் அலுவலகத்தில் செட்டில் ஆகிவிடுவார்கள்.பாவம் ,கூரியர் பாய்.இவர்களிடம் மாட்டிகொண்டு அல்லல்படுவார்.
      ///எடிட்டர் சார், உங்களிடம் இந்த பதிவுக்கு "காமெடி காதல்" என்ற தலைப்பை எதிர் பார்த்தேன் :-)
      தற்காலத்து காதல் காமெடியாகத்தானே இருக்கிறது :-)ஹி ஹி !!!

      Delete
    2. இல்லை நண்பரே கொரியர்காரர் வேலை செயட்டும் என்ற நண்பர் கோரிக்கை காரணமாக வீடிற்கு வரும் வரை காத்திருப்பேன் !எப்படியும் மாலைதானே படிக்க போகிறேன் !

      Delete
    3. காமெடி காதல் என்பதால்தானே காமெடி நாயகர் ஆக்கிரமிக்கிறார் !

      Delete
    4. saint satan @
      தற்காலத்து காதல் காமெடியாகத்தானே இருக்கிறது :-)ஹி ஹி !!! ->> LOL

      அவங்க ஏரியா கூரியர் ஆபீஸ் எல்லாம் 2 நாள் விடுமுறைன்னு கேள்விபட்டேன்! போற போக்குல நம்ப காமிக்ஸ் வர்ற நாட்கள கூரியர்காரங்க official விடுமுறைன்னு அறிவிச்சாலும் ஆச்சரியம் இல்லை!!

      Delete
  18. //தற்காலத்துக் காதல் காமெடியாகத்தானே இருக்கிறது //

    சாத்தானிஜியின் அந்தக்காலத்துக் காதல் படு சீரியஸ் ரகமோ?! ஹிஹி!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : கரடி கந்தசாமி பரணிற்குப் பயணம் ஆகி விட்டார் போல் தெரிகிறதே ?!

      Delete
    2. கரடி கந்தசாமி, பெண் கரடி பொன்னுத்தாயியுடன் காதலர்தின கொண்டாட்டத்திற்காக ஊர் சுற்ற கிளம்பிவிட்டார். ;)

      Delete
  19. எடிட்டர் சார்!

    அட்டைப்படத்தில் மாற்றங்கள் செய்திருக்கும்விதம் அருமை! டல்லான ஒரிஜினல் அட்டைப்படத்தை அப்படியே பயன்படுத்தாமல், மிளிரச்செய்திருக்கும் இந்த மெனக்கெடல் உங்கள் ரசனைக்குச் சான்று!

    //ரகளையாய் வந்திடும் சந்தாக்கள்//
    இந்தப் பதிவின் மிக மகிழ்ச்சியான விஷயம்!

    //18 பிப்ரவரிக்குள் உங்கள் மொழிபெயர்ப்பினை எங்களுக்கு அனுப்பிடல் வேண்டும்//
    - இந்தப் பதிவின் டென்ஷனான விசயம்! ஏன் இந்த அவசர கதி?!

    //நாளை மதியம் மகிழ்ச்சியானதொரு சேதி//

    என்னோட guess; +6 அறிவிப்பு! :)

    ReplyDelete
    Replies
    1. இல்லை நண்பரே நான் சரியாக கணித்து விட்டேன் என்றே நினைக்கிறேன் ....ஆசிரியரும் கோடிட்டிருக்கிறார் ...நாளை ஆசிரியரே வெளியிடட்டும் அப்போது ....

      Delete
    2. I guess முன்பு அறிவித்தது போலவே CC-digestகள் (இரும்புக்கை, ஸ்பைடர், ஆர்ச்சி, மாடஸ்டி, லாரன்ஸ் & டேவிட், ஜானி நீரோ) வரும் :)

      :) :) Advance thanks to Editor! :) :)

      Delete
    3. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் --> அது என்ன? ஆசிரியர் மாதிரி நீங்கள் suspense வைக்க வேண்டாம்!

      என்னை பொறுத்தவரை இந்த இரண்டில் ஒன்றாக இருக்கும்
      1) இந்த மாதம் மேலும் ஒரு புத்தகம் வரபோகுது!
      2) அல்லது சிறுவர்களுக்கான புத்தக அறிவிப்பு!

      உலகக் காதலர் தினத்தன்று காதலித்தவரைக் கரம் பிடித்த சௌந்தருக்கு >> வாழ்த்துகள் நண்பரே!

      Delete
    4. ஆஹா அப்படியா !எனது வாழ்த்துக்களும் நண்பரே !இன்னொரு கரத்தில் காமிக்ஸ் வளமனைத்தும் பெற்று வாழவும் வாழ்த்துக்கள் !
      நான் நினைத்தது சரியா என ஆசிரியர் வெளியிட்டவுடன் கூறுகிறேன் !cc குறித்தே !

      Delete
    5. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் --> அந்த அறிவிப்பு நண்பர் சௌந்தரின் காதல் கல்யாண அறிவிப்பு!

      Delete
    6. இல்லை நண்பரே இன்னொரு சந்தோசமான அறிவிப்பும் உண்டு வெயிட் !

      Delete
    7. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் @
      போங்க பாஸ்! காமெடி பண்ணாதிங்க! :-)

      Delete
  20. ஆசிரியர் அவர்கலுக்கு காமிக் காதலர் தினமாக நாம் கொண்டாடும் நாளான இன்று நமது மனம் கவர்ந்த பாலைநில ரோமியோவை(காமிக்ஸ் ரசிகர்களின்) சரியாக தேர்வு செய்துள்ளீர்கள் !அட்டைபடம் துள்ளலாய் வண்ணகலவையாய் காட்சி அளிப்பது மனதிற்கு இதமாய் உள்ளது !இந்த அட்டை படமும் அட்டகாசம்,காதலர் தினம் ஆதலால் மயக்கும் வண்ணமாய் உள்ளது !மந்திரியாரை காண ஆவல் அதிகரிக்கிறது !கருப்பு வெள்ளை ஒன்றே சிறிது நெருடல் !புத்தகத்தை வாங்கிய பின்னர் அது குறித்து கூறுகிறேன் !இப்போது கருப்பும் கூட அழகு என்று கண்டு கொண்டேன் டெக்ஸாலே....ஆனால் மந்திரியார் வண்ணத்தின் நாயகரல்லவா !
    பின்னட்டை மட்டும் பொட்டிக்குள் தள்ளாமல் அந்த பக்கம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும் என மனதிற்கு படுகிறது !
    வண்ண சிதறல்களை ,வயிறு குலுங்க சிறக்க வைக்கவிருக்கும் காதலர் தின நாயகனுக்காக காத்திருக்கிறேன் !

    ReplyDelete
    Replies
    1. அட்டை பழைய மினி லயனை நினைவு படுத்துவது உண்மை !

      Delete
    2. லார்கோ ஒன்றாம் தேதியே கிடைத்தால் கூடுதல் சந்தோசம் !

      Delete
  21. 'வில்லனுக்கொரு வேலி' அட்டைப் படம் அருமை. ஒரிஜினல் அட்டைகளையே பயன்படுத்துவதனால், 'லேண்ட்மார்க்' போன்ற பெரிய கடைகளில் காட்சிப்படுத்தப்படும்போது ஆங்கில கதைகளுக்கும் அதே அட்டை, தமிழுக்கும் அதே அட்டை என்றால் நமது இதழ்களுக்கு தனித்துவம் இல்லாமல்போய்விடுகிறது. அட்லீஸ்ட், ஒரு சில கதைகளுக்காவது நமது ஆர்ட்டிஸ்ட்டின் கைவண்ணத்துக்கு வாய்ப்பளித்து மிளிரச்செய்வது வரவேற்கத்தக்கதே!

    ReplyDelete
  22. To Editor:

    //அப்புறம், கொஞ்ச காலத்திற்கு முன்னே இங்கே நான் கேட்டிருந்த நமது காமிக்ஸ் தொடர்பான quiz போட்டிக்கான பதில்கள் (ஒரு வழியாக) இதோ ://


    //8.லயனின் முதல் கார்ட்டூன் சாகசம் எது ?

    பயங்கர பொடியன் - லக்கி லூக் சாகசம் - 1987 லயன் தீபாவளி சூப்பர் ஸ்பெஷல் !//

    'பயங்கரப் பொடியன்' மினி லயனில் வந்த கதையில்லையா?



    10.//நமது லயனில் ஒரே ஹீரோயின் இவர் மட்டுமே .மற்றவர் அனைவரும் ஆடவர்கள்.//

    அப்போ, 'சாகஸத் தலைவி?'

    (கேள்வியில் குழப்பமுள்ளதே!)

    ReplyDelete
    Replies
    1. //'பயங்கரப் பொடியன்' மினி லயனில் வந்த கதையில்லையா?//
      இல்லை !

      Delete
    2. To: கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்

      நண்பரே, அப்போ இது?

      http://www.facebook.com/photo.php?fbid=192501914229191

      Delete
    3. ஒரு வேளை இரண்டு பதிப்பு வந்ததா? லயன், மினி லயன்? புத்தகம் கைவசம் இல்லாததால் குழப்புகிறது ஞாபகம்!!!

      Delete
    4. குழப்புதே !பொடியனை வைத்து இரண்டு கதைகள் வந்தது !

      Delete
    5. helo! mini Lion-la Vandhadhu Re-Print.

      Delete
    6. இல்லை நண்பரே,Re பிரிண்ட் வந்தது மினி லயனில்.என்னிடம் அந்த புத்தகம் இருந்தது.
      அதன் இரண்டாம் பாகம் அதிரடி பொடியனும் மினி லயனில் வந்தது.

      Delete
    7. There was no re-print in Minilion. The first issue "Bayangara Podiyan" published in " Lion Deepavali Super Special and the second one 'Bayangapra Podiyan Part II" published in Mini lion.

      Delete
    8. @Radja.There was a reprint in Minilion.
      I was having that book and also Lion Diwali Special.

      Delete
    9. 'நீ என்ன கேட்டே?'

      'எண்ண கேட்டேன்!'

      'ஓ எண்ணெய் கேட்டியா?'

      'ஆமாப்பா.. கடலெண்ணெய் கேட்டேன்..'

      'கடலெண்ணெயா? இருப்பா தர்றேன்.... இந்தப்பா கடலெண்ணெய்...பிடி..'

      'ஆமா... இது நல்லெண்ணெதானே??'

      'ஐயய்யோ... நான் ஊருக்குப்போறேன்... எனக்கு டிக்கெட் எடுத்துத்தாங்க...'

      Delete
    10. இதில் கலந்து கொண்ட அனைவரும் நீங்கள் நான் கேட்ட கேள்வியை கேட்டதாய் நினைத்து கொள்ளுங்களேன் !

      Delete
    11. BAYANGARA PODIYAN-II DHAANPA ADHIRADI PODIYAN, ENNA THALA VUNKOODA ORE BEJAARAPOCHE! IVLO NAALA INDHA BOOKSA PATCHITTU VUNNUM ADHU EDHU ENNANNU KETTUKINU IRUNDHOMNA NAMMALA MATHAVANGALAN KALAAIPPANGAPPAA. PUBLIC...PUBLIC..

      Delete
  23. மந்திரி .........லைலா ................எஸ் சார்
    லைலா .........இச்
    மந்திரி.......... மைலா ................எஸ் சார்
    மைலா ..........இச்
    மந்திரி ...........ஜோயலா ..........எஸ் சார்
    ஜோயலா ........இச்
    மந்திரி .............மொயலா ........எஸ் சார்
    மொயலா.........இச்

    மந்திரி ..............தைலா ............எஸ் சார்
    தைலா ..............இச்
    மந்திரி ...............சொயலா .......எஸ் சார்
    சொயலா ...........இச்
    மந்திரி.................முயலா ............எஸ் சார்
    முயலா ...............இச்
    மந்திரி .................சைலா ..............எஸ் சார்
    சைலா .................இச்
    மந்திரி ..................பயலா ..................எஸ் சார்
    பயலா ..................இச்
    ஒன்றுமில்லை தாக்பாத்தில் காதலர் தினத்தை கொண்டாடிக்கொண்டு இருக்கிறேன் .

    ஏன்பா உங்களுக்கெல்லாம் காதலிகளே கிடையாதா ...
    shame shame puppy shame

    ReplyDelete
    Replies
    1. நான் உங்களது வார்த்தை விளையாடலின் ரசிகன்

      உங்களது நகைச்சுவை ததும்பிய பின்னூட்டங்களை சிரித்துக்கொண்டே ரசிப்பேன்

      உங்களது humour sense எனக்கு பிடித்துள்ளது

      Delete
    2. நன்றிகள் பல நண்பரே.........................ஆனால் இது நான் நன்றி சொல்லும் முறை அல்ல.

      யாரங்கே ............நண்பர் .Mohammed Roseleenக்கு ஜைலாவின் ஆயிரம் முத்தங்கள் அடங்கிய S.T .கொரியர் மூலம் அனுப்பிவிடுங்கள் ............... அப்பத்தான் வர லேட்டாகும்.

      Delete
    3. ha ha... super mathiyilla manthiriyaarreee

      Delete
    4. டெக்ஸ் கிட் ......................இன்றைக்கு அண்ணியார் என்னை கரித்து கொட்ட போகிறார்கள் ...........

      Delete
  24. sir ple, தயவு செய்து, லார்கோ கதை எண் வரிசை எண் VARA vendum

    ReplyDelete
  25. ரைட் ல இன்டிக்கேடர் போட்டாரு போகல ............லேபிட் ல இன்டிக்கேடர் போட்டாரு போகல ................ நேரா இன்டிக்கேடர் போட்டாரு போகல..........

    அடடடா ...........மனுஷன் ரிவர்சில வாராரு டோய் .........
    மீண்டும் ''பழம் பெரும் நாயகர்கள் வர போறாங்க'' டோய்.

    மந்திரியின்......... ராஜ்யத்தில் ................உய்யலாலா ..............

    ReplyDelete
  26. டியர் எடிட்,

    லயன் முத்துவின் புதிய பிரவாகத்தின் பின்பு முதல்முறையாக நமது கிளாசிக் பாணியில் வெளியாகியிருக்கும் இந்த அட்டைபடம் மனதை கொள்ளை கொள்கிறது. இரு அட்டைபடங்களை ஒருங்கே இணைத்து, அதை அசல்தனம் பிசிறாமல் செய்வது ஒரு மிகப்பெரிய கலை, நமது ஆர்டிஸ்ட் பெண்டு நிமிர்த்தி எடுத்திருக்கிறார்.

    லார்கோ, வெய்ன் போன்ற ஆக்ஷன் சாகஸ கதைகளுக்கு தனி பாணி, இது போல கார்டூன் கதைகளுக்கு தனி பாணி என்று இனியும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

    ஆனால், ஓரு குட்டும் உண்டு... மதியில்லா மந்திரியின் இரு கதைகளையும் கலரில் வெளியிடாமல் போனதற்கு. அதற்கு பதிலாக ஒரே கதையை மட்டும் வெளியிட்டிருக்கலாமே. இஸ்நோகுடின் அட்டகாசங்கள் கலரில் இல்லாமல் பார்ப்பது ஒரு கொடுமை அல்லவா. கலர் இதழ்களில் முடிந்த வரை கருப்பு வெள்ளை பக்கங்களை தவிர்க்க போவதை பற்றி முடிவெடுக்கிறேன் என்று நீங்கள் முன்பு கூறியதாக நியாபகம். அதை தொடர தான் போகிறீர்களா ?

    இம்முறையாவது புத்தகம் நேரத்திற்கு வந்து சேருமா என்ற எண்ணத்தோடு காத்திருக்கிறேன். பார்ப்போம்.

    பி.கு.: 10 கேள்விகளுக்கு பதிலளிக்கும் அளவிற்கு நமது இதழ்களின் அனைத்தையும் படித்தவன் இல்லை என்பதால், விடைகளை மட்டும் கிரகித்து கொண்டேன். இப்பதில்களை நியாபகமாக கேட்டு பெற்ற Suresh Natarajan வென்றாரா இல்லையா ?

    ReplyDelete
    Replies
    1. நன்றி எடிட்டர்,

      Thanks Rafiq,

      இந்த பதில்களே எனக்கு வெற்றி :)


      எடிட்டர் பதில் நான் அனுப்பிய பதில் ஒப்பிடும்பொழுது சில தவறு

      என்னுடைய பதில்கள்
      Answers
      1.Pazi vangum Bommai – Lion no 99
      2.Mr Z – Lion 52
      3. Agent 327, Jo Silver, Danger diabolic, கராத்தே டாக்டர் - Dr. பெஞ்சமின்
      4. ஜார்ஜ், டிரேக்
      5.Tex willer
      6. Oru thigil Payanam – Lion 101
      7.32
      8.Payangara Podiyan – Lion Super Specila
      9. Meetpor sthabanam
      10.Lady James bond

      Delete
  27. //ம.மந்திரியின் ஒரு சாகசம் வண்ணத்தில் - மற்றது black & white -ல் என்பது இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும் ! But - வண்ணமின்றியும் மந்திரியார் 'பளிச்' என்று காட்சியளிக்கிறார் என்று தான் சொல்லுவேன்//

    கலரோடு மறுபடியும் கறுப்பு - வெள்ளையா? ஏன் சார்?

    ReplyDelete
  28. இனிய காமிக்ஸ் காதல் (வெறி) தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. என் மனைவி இன்று என்னிடம் அதிகாலையில் கேட்ட கேள்வி இது

      "இந்த உலகில் என்னைத்தவிர வேறு யாரையும் மிகவும் ஆசைப்பட்டு காதலித்தது உண்டா"

      நான் " ஆமாம், நான் சின்ன வயதில் காதலித்துள்ளேன். ஆனால், இப்பொழுதும் காதலித்துக்கொண்டு இருக்கிறேன்" என்றேன்

      எனது பக்கத்தில் ஒட்டிக்கொண்டு இருந்த என் மனைவி சற்று தூரப்போய் கோபப்பார்வையுடன் "அது யாரு எனக்கு தெரியாமல், எவ அவ " என்று கேட்டாள். கேட்ட தோரணையே வேறு மாதிரியாக இருந்தது

      நான் சிரித்துக்கொண்டே, எனது தலையணை அருகில் இருந்த NBS ஐ அவளிடம் காட்டினேன்

      புரிந்து கொண்டு சமாதானமாகி மறுபடியும் ஒட்டிக்கொண்டு விட்டாள்

      Delete
  29. Hello Mr. Vijayan,

    Good Day to you!!!

    //ரகளையாய் வந்திடும் சந்தாக்கள்//
    Very very good news. So, we can expect to have our beloved heros (L&D, Johny Nero, Steel Claw, Archie, and Spider) back. Please confirm.

    BTW, Please please try to re-publish the following:
    1. உலகப் போரில் ஆர்ச்சி
    2. புரட்சித் தலைவன் ஆர்ச்சி
    3. Flight 731
    4. காணாமல் போன கடல்
    5. CID John Master Stories
    6. ட்ராகன் நகரம்
    7. கார்ஸனின் கடந்த காலம்
    8. பளிங்கு சிலை மர்மம்
    9. ரத்த முத்திரை
    10. ஜானி இன் லண்டன்
    11. Steel claw story which came in color

    May be you can think of some CCS (Comics Classics Special) edition similar to NBS. You may set out a competition to provide a title to this special edition. We are ready.


    //18 பிப்ரவரிக்குள் உங்கள் மொழிபெயர்ப்பினை எங்களுக்கு அனுப்பிடல் வேண்டும்//
    It is good. But better to have some for time for this. I think I'll receive this today only. It would be extremly difficult to send it back to you within tomorrow. Let me try my level best.

    //நாளை மதியம் மகிழ்ச்சியானதொரு சேதி//
    Going to become a sleepless night today :-(

    Catch you again soon

    ReplyDelete
    Replies
    1. //May be you can think of some CCS (Comics Classics Special) edition similar to NBS. You may set out a competition to provide a title to this special edition. We are ready.
      //
      வந்தால் எப்படி இருக்கும் !கனவுலகம் கூட ஈடாகாதே !

      Delete
    2. Flight 731 ஏற்கனவே CCயில் வந்ததாய் நியாபகம்... ஜானி In லண்டனும்...

      Delete
    3. super idea ..editor sir .. Plea........ssssse .....

      Delete
  30. பெண்ணின் மனதின் ஆழம் 1,382,614,277 கிலோ மீட்டர் ...........
    விஜ் சாரின் மனதின் ஆழம் 1,382,614,277.37 கிலோ மீட்டர் ...........(லார்கோவுக்கு நன்றி)

    ReplyDelete
  31. எடிட்டர் சார்,
    நமது ஓவியரின் அட்டைப்படம் நன்றாக உள்ளது. மூல அட்டைப்படத்தில் வெறும் grey background மட்டும் உள்ளது உங்களை உறுத்தி இருக்கக்கூடும் என நினைக்கிறேன்.

    மூல அட்டையில் உள்ள காட்சி, இந்த கதையின் உச்சகட்டம் (Not climax!) அல்லவா? காஸ் காஸி (மற்றும் அவரது ஒட்டுமொத்த படையும்.) வேலிகளை அறுக்க ஆயுத்தமாகும் சமயம், நமது வீரர், தீரர், சூரர் லக்கி லூக்கின் துப்பாக்கி கையாளும் திறமையில் நிராயுதபாணியாக முழி பிதுங்கி, (of course, பாவமாக!) நிற்கும் இந்த காட்சி apt for cover என்பது எனது தாழ்மையான கருத்து!

    அப்புறம், லக்கி லூக் இதுவரை 19 லயன், 5 மினி லயன் 1 ஜூனியர் லயன் புத்தகங்களில் (கவனிக்க, கதைகளில் அல்ல!) உலா வந்திருக்கிறார். :-)

    ReplyDelete
  32. ஆசிரியர் அவர்களே,

    இந்த வருடம் ஸ்பெஷல் இதழ்கள் வருவதற்கு சந்தா ஒரு தடையாக இருக்கலாம், அனால் அடுத்த வருடம் முதல் இதழாகவோ அல்லது lion 30th ஆண்டு மலராகவோ ஒரு ஸ்பெஷல் இதழை வெளியிடலாம், அடுத்த இரு மாதங்களுக்குள் தாங்கள் கதைகளை தேர்வு செய்துவிட்டு ஒரு விளம்பரம் வெளியிடலாம், NBS-யை விட சிறப்பாகவும், பெரியதாகவும் இருக்குமாறு திட்டமிடுங்கள். எங்கள் ஆதரவு இன்றும் உங்கள்ளுக்கு உண்டு.

    ReplyDelete
    Replies
    1. எங்கள் ஆதரவு இன்றும் என்றும் உங்களுக்கு உண்டு.

      Delete
    2. i have already proposed 2 or 3 times that we wanted the excitement similar to kodai malar, aandu malar which we used to have in the 80s. we can call whatever name , but editor sir, please issue NBS style or even better that that 2 times a year apart from the regular subscriptions.

      Delete
    3. எனது ஆதரவும் உண்டு !1000 விலைக்கு குறையாமல் வந்தால் !

      Delete
    4. @கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்
      ருபாய் 1000 என்றால் , எல்லோரும் வாங்குவார்களா என்பது தெரியவில்லை. It becomes 2000 for 2 releases. அதற்க்கு பதில் ருபாய் 400 என்று இரண்டு முறை வெளியிடலாம். So it is only Rs 800 for 2 releases. One Christmas/New year and another one during May (Kodai malar)

      Delete
    5. நம்ம தல ஒரு ஸ்பெஷல் போட்டாலே, நூறு ஸ்பெஷல் போட்டதருக்கு சமம்

      Delete
  33. டியர் சார்...
    லயனில் வந்த முதல் பிரின்ஸ் கதை ஒரு திகில் பயணம் என்பது தாங்கள் கூறுவது தவறு.
    அதற்கு முன் லயன் சூப்பர் ஸ்பெஷலில் வந்த விசித்திரப் பாடம் தான் லயனில் வந்த முதல் பிரின்ஸ் கதை..

    ReplyDelete
    Replies
    1. Yes, I agree with Bruno Brazil because I have sent the same anwser for this question (hi hi hi - Thanks Mr St. Satan).

      Delete
  34. I guess முன்பு அறிவித்தது போலவே CC-digestகள் (இரும்புக்கை, ஸ்பைடர், ஆர்ச்சி, மாடஸ்டி, லாரன்ஸ் & டேவிட், ஜானி நீரோ) வரும் :)

    :) :) Advance thanks to Editor! :) :)

    ReplyDelete
  35. எல்லாம் சரி... CC பழைய மாறி வரப்போகுதா??? சொல்லுங்க எடிட்டர் சார்!!!!...

    ReplyDelete
  36. DEAR SIR,

    KIND REQUEST TO YOU..

    01. PLEASE USE CLOTH COVER’S FOR PACKING BOOKS.
    BECAUSE JANUARY 3RD WEEK I GOT 3 NBS BOOKS WITH NORMAL PAPER PACKING..
    ONE BOOK FULLY DAMAGED.
    OTHER TWO BOOKS ARE PARTLY DAMAGED.
    Already I WAS INFORMED TO OUR OFFICE STAFF.
    BUT THEY ARE SEND NEXT BOOK ALSO NORMAL PAPER PACKING..(TEX BOOK)..
    TRY TO USE CLOTH COVER..
    TRY TO USE CLOTH COVER..

    02. ANOTHER REQUEST IS SEND BOOKS AT WEDNESDAY OR THURSDAY ..
    IF COURIER DELAY’S ATLEAST WE WILL GET BOOK AT SATURDAY..
    THANK YOU..

    ReplyDelete
  37. Dear Sri Vijayan

    Time to have a re-thinking. Instead of spending on re-printing old heroes (whose time are up), concentrate your time and energy on the new books, which are in tune with the current interest. Further you can come up with one annual number each year with out linking the same to subscription. A number with a cover price in the range of Rs 500/- will be price optimal and the contents will sustain the interest. Too much could cause indeigestion.Best of luck.

    tgopalakrshnan

    ReplyDelete
  38. அட்டை படம் அருமை சார். ஆனாலும் வேலியையும் சேர்த்து இருக்கலாம். ஒரிஜினலிலும் லக்கியின் முக பாவனை அருமை.

    //ஒரு சந்தோஷச் சேதியும் update ஆகிடும் என்ற நம்பிக்கையோடு //
    எனக்கென்னவோ quiz இல் வென்றவர்களின் பெயர்கள் வெளியாகும் கூடவே பரிசுடன் என்று தோன்றுகிறது

    ReplyDelete
  39. //
    //தொடரவிருக்கும் மாதத்து வெளியீடான "துரத்தும் தலைவிதி" (லார்கோ வின்ச்) பணிகளும் படு சுறுசுறுப்பாய் நடந்தேறி வருகின்றன. இதற்குத் தயாராகியுள்ள ராப்பர் ரொம்பவே வித்தியாசமானது என்று எனக்குத் தோன்றியது !//


    ஆமாம் ரொம்ப வித்தியாசமானது, நான் பார்த்தேன் சிவகாசியில்

    ReplyDelete
  40. லூக் போல புத்தகம் ஒல்லி பிச்சானாக வருகிறது !

    ReplyDelete
  41. எடிட்டர் சார்! தங்களின் updateற்காக காத்திருக்கிறோம் ! விழிகள் பூத்துவிட்டன!

    ReplyDelete
  42. //நாளைய மதியப் பொழுதில் இந்தப் பதிவினில் ஒரு சந்தோஷச் சேதியும் update ஆகிடும் என்ற நம்பிக்கையோடு //

    எடிட்டர் சொல்லியிருக்கிறார் 'நாளைய மதியம்' என்று. இன்று நள்ளிரவு தாண்டியபின் வந்த பதிவு என்பதால், இன்றுதான் வந்திருக்கிறது அவரது பதிவு... எனவே அவர் குறிப்பிட்டதன்படி நாளை மதியம், அதாவது வெள்ளிக்கிழமை.... யாருப்பா அது பிய்ஞ்ச செருப்பால வீசுனது... ஒரு செருப்பு மட்டும்தான் வந்திருக்கு... அடுத்ததையும் வீசுனா யூஸ்பண்ணிக்கலாம்!

    ReplyDelete
  43. //நம் சிவகாசி நண்பரும், காமிக்ஸ் பதிவருமான சௌந்தரின் காமிக்ஸ் காதலைப் பற்றி நாம் அறிவோம் ! ஆனால் நண்பரின் இன்னொரு காதல் முகமானது இன்று திருமணம் எனும் சந்தோஷ பந்தம் வரை அவரை இட்டுச் சென்றுள்ளது !! உலகக் காதலர் தினத்தன்று காதலித்தவரைக் கரம் பிடித்த சௌந்தருக்கும், அவர்தம் துணைவிக்கும் வாழ்த்துச் சொல்லிடுவோமே !!! லக்கி லுக்கும், ஜாலி ஜம்பரும் போல் ; லார்கோவும், சைமனும் போல் ; மாயாவியும், இரும்புக்கரமும் போல் - என்றும் இணை பிரியாது சகல நலன்களோடும் புதுத் தம்பதியினர் வாழ்ந்திட நம் அனைவரின் வாழ்த்துக்களும் உரித்தாகுக !//

    வாழ்த்துக்கள் நண்பர் சௌந்தர்!!! வாழ்க வளமுடன்!!!

    ReplyDelete
    Replies
    1. அட! மனமார்ந்த வாழ்த்துக்கள் சௌந்தர்! :)

      Delete
    2. நண்பர் சௌந்தர் அவர்களுக்கும் அவருடன் இணைந்துள்ள அவரது வாழ்க்கை துணைவியாருக்கும் அவர்களது இல்லறம் சிறக்க வாழ்த்துக்கள்!

      சொல்லவே இல்ல...! முன்னமே சொல்லியிருந்த நண்பர்கள் எல்லாம் அவர்களது collection இருந்து ஒரு vintage book கை present பண்ணி வாழ்த்து சொல்லியிருப்போமே!

      Delete
  44. அப்டேட் வந்திடுச்சு!

    ReplyDelete
  45. மனமார்ந்த வாழ்த்துக்கள் சௌந்தர்! :)

    ReplyDelete
  46. இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் சௌந்தர் :))

    வாங்க வந்து நம்ம ஜோதியில ஐக்கியமாகுங்க ;-)
    .

    ReplyDelete
  47. ஆஹா அப்படியா !எனது வாழ்த்துக்களும் நண்பரே !இன்னொரு கரத்தில் காமிக்ஸ் வளமனைத்தும் பெற்று வாழவும் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  48. நண்பர் சௌந்தர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  49. திரு சவுந்தர் மற்றும் அவரது துணைவியாருக்கும் இனிய திருமண நல்வாழ்த்துக்கள்! இறைவன் துணையோடு இனிய இல்லறம் அமைய வாழ்த்துகிறேன்! நமது வில்லன்னுக்கொரு வேலி அட்டைபடம் வரைந்த ஓவியரின் கைவண்ணதுக்கு எனது உளமார்ந்த பாராட்டுக்கள்!

    ReplyDelete
  50. நண்பர் சௌந்தர் அவர்களுக்கு திருமண நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  51. Awesome cover page . The only thing that was black spot is " cigarette in Lucky Luke mouth " . Thank god Ramadoss is not a follower of our comics :)

    ReplyDelete
  52. என்னடா ஆசிரியர் ஒரு காதல் தின அத்தியாயம் என்று தலைப்பிட்டுவிட்டு பதிவு லக்கி லுக்கையும் "quiz" யும் பற்றி பேசுகிறதே என்று நினைத்தேன்.
    ஆசிரியர் சரியாகத்தான் தலைப்பிட்டு இருக்கிறார்.

    வாழ்வில் எல்லா நலமும் பெற சௌந்தர் தம்பதிகளை வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  53. விஜயன் சார் சில சந்தேகங்கள்

    1. 4.ஒரு சாகசத்திற்கும் ; அடுத்த சாகசத்திற்குமிடையே மிக நீ.....ண்....ட இடைவெளி விட்ட நாயகர்(கள்) யார் ?

    ரிப்போர்ட்டர் ஜானி ( முதல் சாகசம் லயன் டாப் 10 வெளிவந்தது மே 1995 அடுத்து DOUBLE THRILL SPEICAL ஆகஸ்ட் '12 இடைவெளி பதினேழு வருடங்கள் மூன்று மாதங்கள் )

    ஆனால் கபாலர் கழகம் வெளிவந்தது நவம்பர் '84 அடுத்தது பெர்முடா படலம் வந்தது ஏப்ரல் '99 இடைவெளி பதினான்கு வருடம் ஐந்து மாதம்

    ஆகையால் இதற்கு பதில் ரிப்போர்ட்டர் ஜானி தான்

    2. 6.கேப்டன் பிரின்ஸ் லயனில் தலை காட்டிய முதல் இதழ் எது ?

    நமது நண்பர்கள் சொல்லியது போல 42. லயன் சூப்பர் ஸ்பெஷல் விசித்திர பாடம்

    3. 10.லயனின் முதல் அறிமுகம் என்பதைத் தாண்டி மாடஸ்டி ப்ளைசிக்கு இன்னொரு பெருமையும் உண்டு ! அதென்ன ?

    அதிக ஆண்டு மலர் மற்றும் ஸ்பெஷல் இதழ்களில் வந்துள்ளார் மற்றும் டெக்ஸ் வில்லருக்கு அடுத்தபடியாக இதுவரை 27 கதைகளில் வந்துள்ளார்

    சொக்கா அரசர் தரும் பரிசினை எனக்கே தருமாறு அருள் புரியமாட்டாயா :))

    .

    ReplyDelete
    Replies
    1. நீண்ட இடைவேளையின் பின் ஜானியின் திசை திரும்பிய பில்லி சூனியம் 2005இல் வெளிவந்தது நண்பரே.

      Delete
    2. நன்றி நண்பரே
      ஆனால் அது முத்து காமிக்ஸில் வந்ததாயிற்றே நண்பரே இது லயனில் லயனிற்கான போட்டி அல்லவா ;-)
      .

      Delete
  54. 'வில்லனுக்கொரு வேலி' இதழுக்கு அறிவித்த 64 பக்கங்களை விட 10 பக்கங்கள் அதிகமாக கொடுத்த நமது ஆசிரியருக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  55. நண்பர் சௌந்தருக்கு திருமண நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  56. காதல் வாழ்க்கையைப் போலவே கல்யாண வாழ்க்கையும் வெற்றிகரமாய் அமைந்திட வாழ்த்துக்கள் செளந்தர்!

    ReplyDelete
  57. அரே கியா பாத் ஹய்............................... பயிருக்கு வேலி போடலாம் ஜி .........ஆனால் வில்லன் உயிர்க்கு வேலி போடலாமா............

    ReplyDelete
  58. காதலர் தின சிறப்பு மொக்கை ..........
    சுறாவோடு சடுகுடுவில் .....சுறாவை.......... காணோம்......
    கான்க்ரீட் கானகத்தில் .............கான்க்ரீட் மரத்தை ...........காணோம் ...
    எதிரிகள் எராளத்தில் நாலு அஞ்சு எதிரி மட்டுமே கண்ணில் பட்டனர் .....
    கம்பளத்தில் கலாட்டாவில் கம்பளத்தில் அப்பிடி ஒன்றும் யாரும் சண்டை போடவில்லை .......
    ஒரு பயணத்தின் கதையில் ..........''ட்ரக் ''தன வரலாறை கூறவில்லை .............
    இருளில் ஒரு இரும்பு குதிரையில் ..........இரும்பு குதிரை காணோம் ...............
    அட வாங்க பாஸ் ஜாலியா சிரிக்கலாம் ..................

    ReplyDelete
    Replies
    1. மொத்ததுல என்ன கூட கொஞ்ச நாளா காணோம் பாஸ்!

      Delete
    2. ''உங்களை காணோம்னு''.................. நீங்களே உங்க ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்துடுங்க ..........how is it ?

      Delete
    3. என்னாது கிணத்த காணோமா ? ;-)
      .

      Delete
  59. சௌந்தரின் திருமண வாழ்க்கை என்றென்றும் இனிமையாய் நடைபோட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிகொள்கிறேன்! நல்லா இருப்பாய் தோழா! வாழ்த்துக்கள்! அன்பே ஆயுதமாக, அறமே வாழ்வு நெறியாக, தர்மமே கைகொண்டு சீரும் சிறப்புமாக வாழ எங்கள் அனைவரது வாழ்த்துக்களும் உரித்தாகுக! பல்லாண்டு பதினாறு பெரு வளங்களும் பெற்று வாழ்க வாழ்க வாழ்கவென வாழ்த்தும் எங்கள் நெஞ்சங்கள்!

    ReplyDelete
  60. எனக்கான புத்தகம் கோவை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் .சரக்குகளோடு சரக்குகலாய் .....
    லாரி வீர்ர்ர்ரர்ர்ர்ர் .....என வந்து கொண்டிருந்தால் நம்ம லக்கி டக் ..டக் ...டக்.. என விரைந்து வருவதுடன் லாகோ அடுத்த வெளியீடு எனும் நற்செய்தி தாங்கி வருவாரே ,என்ன செய்ய நாமும் நகரதுவங்குவோமா எதிர்கொண்டழைக்க !

    ReplyDelete
  61. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. பழமொழி சொன்னா அனுபவிக்கனும், ஆராய கூடாது.... அப்போவே எங்க அண்ணாத்த சொன்னாரு... பாஸ் என்ன மன்னிச்சிடுங்க.... ஒரு ஆர்வக்கோளாருல எனக்கும் மொழிபெயர்க்க பக்கங்களை அனுப்புங்கனு சொல்லிட்டேன்.

      இன்னிக்கு வந்த கவரை பிரிச்சு படிச்சதும் தான் தெரிந்தது , தமிழ் வாசிப்புக்கு பின்னாடி எவளோ கஷ்டம் இருக்கு என்று....

      எட்டு பக்கத்தை என்பது தடவை படிச்சுட்டேன்..... ஆனா நாலு வரி கூட சரியாய் மொழி பெயர்க்க முடியல.... ஆவ்வ்வ் .....

      Delete
    2. ''அனுபவிச்சுப்பாருங்கடா பயல்களா..''னு ஒரு திட்டத்தோடதான் ஆசிரியர் அனுப்பிச்சிருப்பாரோ?

      Delete
    3. ஹா ஹா! ஆனா இது நிஜமாவே ஒரு ஷோக்கான அனுபவம்தான்! உலகக் காமிக்ஸ்களில் முதன் முறையாக ஒரு Xeroxlation! மொழி பெயர்ப்பு முடிஞ்சது, காலையில குரியர் பண்ண வேண்டியதுதான் பாக்கி! :) :) :)

      Delete
    4. // ''அனுபவிச்சுப்பாருங்கடா பயல்களா..''னு ஒரு திட்டத்தோடதான் ஆசிரியர் அனுப்பிச்சிருப்பாரோ?//

      @ Podiyan : இதுக்கு பேரு தான் அழகுல மயங்குறது... :)

      // மொழி பெயர்ப்பு முடிஞ்சது, காலையில குரியர் பண்ண வேண்டியதுதான் பாக்கி!//

      @ Karthik Somalinga : நண்பா நீங்க தெய்வப்பிறவி .... ஆமா என்ன வச்சு காமடி ஏதும் பண்ணலையே ;)

      Delete
    5. @சிம்பா:
      ஆப்ராகாடாப்ரா - எங்கே இதை தமிழில் மொழிப்பெயருங்க பார்ப்போம்! ஹி ஹி ஹி! ;)

      Delete
    6. Karthik Somalinga and சிம்பா
      All the very best guys :-)

      Delete
    7. புதிய,வித்தியாசமான அனுபவம் காத்திருக்கு !வாழ்த்துக்கள் தோழர்களே !எதிர் பார்ப்புகளுடன்...

      Delete
    8. // @சிம்பா:
      ஆப்ராகாடாப்ரா - எங்கே இதை தமிழில் மொழிப்பெயருங்க பார்ப்போம்! ஹி ஹி ஹி! ;) //

      இன்னாது அப்பா டாக்டரா ;-)

      நாங்களும் மொழி பெயர்ப்பு பண்ணுவோம்ல :))
      .

      Delete
    9. @Cibi:
      //ஆப்ராகாடாப்ரா - அப்பா டாக்டரா//
      தப்பு, இதுக்கு ஆப்பிரிக்க மொழியில் "நீ என்ன பெரிய அப்பாடக்கரா?'ன்னு அர்த்தம்! ;)

      Delete
  62. நண்பர் சௌந்தருக்கும், அவர்தம் துணைவிக்கும் திருமண நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக!

    ReplyDelete
  63. Guys our Editor's view on tinkle coming to Tamil is published in the following link.

    http://www.deccanchronicle.com/130213/lifestyle-booksart/article/cutting-across-age-and-language

    ReplyDelete
  64. Our Cover art is wonderful, way better than the original cover.

    Greetings and Best Wishes to soundar.

    ReplyDelete
  65. The cover looks really good and perfect! Example the SALOON is written in glass, inside from the SALOON if you look NOOLAS. Great!

    ReplyDelete
    Replies
    1. ஆம் !இப்போது வண்ண கலவைகளால் கலக்கும் நமது ஓவியர் இது போல கூர்ந்து கவனிக்கும் விசயங்களிலும் கவனம் செலுத்துவது மேலும் வலு சேர்க்கிறது புத்தக தரத்திற்கு !லார்கோ வித்தியாசமான அந்த அட்டை படமும் ஏகத்திற்கு எதிர்பார்ப்பை உயர்த்தி உள்ளதே,எப்போது வரும் என வழக்கம் போல.,... !

      Delete
  66. வாழ்த்துக்கள் சௌந்தர், எங்களையும் அழைத்திருக்கலாமே????!!!!!!

    ReplyDelete
  67. வழக்கம் போல stc அலுவலகத்தை திறந்து பொறுமையாக நின்று பொறுப்பாக புத்தகத்தை கை பற்றி விட்டேன் !போன முறை ஏன் வரவில்லை என்ற விசாரிப்புகளுக்கு மத்தியில் புத்தகத்தை வாங்கி விட்டேன் !
    புத்தகத்தை வாங்கியவுடன் அட்டை படம் சூப்பராக இருந்தும் இளைத்து போன நண்பனை பார்த்து கலங்குவது போல ஏனோ பகீரென்றது மனது !ரொம்பவே இளைத்து பாதியானால் .....

    ReplyDelete
    Replies
    1. ada pongappa ungalukku mttum udane vanthududhu..book..

      Delete
    2. இல்லை நண்பரே stc head off ஒரு ரெண்டு km தான் எனக்கு அதனால்தான் !பல நண்பர்களை அடைந்திருக்கும் இந்நேரம் !

      Delete
    3. நண்பரே லக்கி நமக்கும் வந்துட்டாருங்கோவ் :))
      .

      Delete
    4. எனக்கும் book வந்துவிட்டது...

      Delete
    5. நம்ம எல்லோருக்குமே லக்கி தான் கோவைக்காரரே ;-)
      .

      Delete
  68. CC சந்தா கட்டியாச்சு..5 X Rs.100 கலர் இதழகள்... நினைத்தாலே இன்னிக்கும்....

    So every month regular issue கூடவே cc யும் வருமா?

    எடிட்டர் க்கு extra burden தான்.. சமாளிக்க முடியுமா ? ரெகுலர் issue வும், CC யும் ஒரே நேரத்தில் தயாராக வேண்டும், இல்லையென்றால் சந்தா தொகை கட்டுபடி ஆகாது.

    Dear எடிட்டர் சார் , குடுதலாக பணம் அனுப்ப தயார், உங்களை வருத்தி கொள்ளாதிர்கள், சந்தா அதிகரிக்கும் என்பதற்காக.

    ReplyDelete
    Replies
    1. *சந்தா தொகை அதிகரிக்கும் என்பதற்காக

      Delete
  69. Every alternate month என்பதால் பரவாஇல்லை..

    அப்பறம் , +6 அறிவிப்பு எப்போது ?

    ReplyDelete
  70. கொங்கு தமிழ் , நெல்லை தமிழ், சென்னை தமிழ் போல இது "கூகுள் தமிழ்."

    ReplyDelete
  71. இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  72. Replies
    1. Tex Kit: Which courier service? Professional or ST? My book not yet reached Bangalore (ST), I may get tomorrow!!

      Delete
    2. Cool! But it my case always takes two-three days!! Really bad!!

      Delete
  73. அப்புறம் நண்பர் பரணிதரனின் வேண்டுகோளும்,அன்பு கட்டளையும் தவிர்க்க கூடாதென நானும் வேண்டுகோள் வைக்கிறேன்....

    ReplyDelete
  74. வாழ்த்துக்களோடு அன்பான அறிவுரைகளும் வழங்கிய அன்பு ஆசிரியர் அவர்களுக்கு என் நன்றிகள்.

    வாழ்த்துக் கூறிய அனைத்து நண்பர்கள் மற்றும் சகோதரர்களுக்கும் மிக்க நன்றி :-)

    கடந்த பத்து நாட்களுக்குள் நிறைய பிரச்சனைகளுடன் ஆரம்பித்து சுபமாக முடிந்து விட்டது நண்பர்களே.

    தீடீர் திருமணம் என்பதால் நண்பர்கள் பலருக்கு முன்பே தெரிவிக்க இயலவில்லை மன்னிக்கவும்.

    குறைந்தது 2 மாதத்திற்கு வலைப்பூ பக்கம் வருவது கடினம்தான். :-)

    மீண்டும் ஒரு முறை,

    அன்பு ஆசிரியர் அவர்களுக்கும், அனைத்து நண்பர்கள் மற்றும் சகோதரர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    0090 - லயன் காமிக்ஸ் - வில்லனுக்கொரு வேலி - http://tamilcomics-soundarss.blogspot.in/2013/02/0090.html

    ReplyDelete
    Replies
    1. சூரிய கதிர்கள் நிதம்தோறும் ஆசீர்வதிக்கவும்
      நிலவொளி நிம்மதியைதரவும் ....
      மீண்டுமொருமுறை மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே !
      உங்களுக்கு திருமண பரிசாக ஆசிரியர் டைகரின் cc விரைந்து வெளியிடுவாராக என வேண்டுகிறேன் !

      Delete
    2. லக்கி வரும் இந்த மாதம் உங்களுக்கும் லக்கிதான் ......

      Delete
    3. Soundar, we can understand! Wishing again for happy married life!

      குறைந்தது 2 மாதத்திற்கு வலைப்பூ பக்கம் வருவது கடினம்தான். :-) only two months :-(

      Delete
  75. //
    ஏப்ரல் 15ல் வருகிறது: (ஒரே இதழில்!)
    வேய்ன் ஷெல்டன் - ஒரு ஒப்பந்தத்தின் கதை
    +
    சிக் பில் - ஒரு கழுதையின் கதை
    //

    ஏன் இந்த திடீர் மாற்றம்?! முன்பு அறிவித்திருந்தபடியே, இரண்டு வேய்ன் ஷெல்டன் பாகங்களையும் (ஒரு ஒப்பந்தத்தின் கதை & எஞ்சி நின்றவனின் கதை) ஒரே இதழாக வெளியிடுங்கள்!!!

    டைகர் & XIII - இவர்களின் தொடர்களை பல வருடங்களாய் அந்தரத்தில் தொங்கவிட்டது போல, லார்கோ / வேய்ன் கதைகளையும் கொத்துக்கறி போட வேண்டாமே ப்ளீஸ்?! :(

    //ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் ஒவ்வொரு ஸ்டைல் ; இது நமக்குப் பரிச்சயமாகிப் போனதொரு 'கங்னம் ஸ்டைல்' என்று வைத்துக் கொள்வோமே :-) //
    உங்களின் இந்த கங்னம் ஸ்டைல் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை! :(

    ReplyDelete
    Replies
    1. Karthik Somalinga :

      ஷெல்டனின் கதையினில் பாகம் 3 & பாகம் 4 ஒன்றுகொன்று தொடர்பில்லா தனிக் கதைகள் என்பதையும், பாகம் 4 & 5 சேர்ந்து ஒரு முழு சாகசமாகிறது என்பதையும் சமீபத்தில் தான் அறிந்து கொண்டேன். So முதலில் அறிவித்திருந்தபடி பாகம் 3 & 4-ன் கலவையோடு ஒரு இதழ் உருவாக்கினால் - மீண்டுமொரு அந்தரத் தொங்கல் நிகழ்ந்திடும் என்பதாலேயே இந்த alteration.

      மாற்றத்தின் பின்னணி என்னவென்று வினவிய பின், எனது விளக்கத்தில் திருப்தியில்லாது போயின் உங்களின் reactions -ஐப் பதிவிட்டால் நலம்.

      Delete
    2. நண்பரே வெய்னேவின் முதல் சாகசம் முதல் இரு பாகத்தோடு முடியவில்லை மூன்றாவது பாகத்திலும் தொடர்கிறது
      நான்காவது மற்றும் ஐந்தாவது பாகங்கள் இரண்டும் வேறு கதை களங்கள்

      ஆகையால் ஆசிரியர் செய்வது சரியே

      வெய்னே தனியாக வராமல் சிக் பில்லுடன் வருவது மிக்க மகிழ்ச்சி தானே நண்பரே ;-)
      .

      Delete
    3. நன்றி நண்பர் பரணி அவர்களே :))
      .

      Delete
    4. நானும் இப்போதுதான் ஆங்கிலதில் (cbr format) வந்ததை படித்து பார்த்தேன். 3 முன்னர் வந்த 2ன் தொடர்ச்சிபோல்தான் உள்ளது.

      Delete
  76. உங்கள் இணைப்புப்பதிவிர்க்காக காத்துக்கொண்டிருக்கின்றேன் ஆசிரியரே ....

    ReplyDelete
  77. // கரடி கந்தசாமி, பெண் கரடி பொன்னுத்தாயியுடன் காதலர்தின கொண்டாட்டத்திற்காக ஊர் சுற்ற கிளம்பிவிட்டார். ;) //

    மேற்கண்ட இருவரையும் தேடி சென்ற நமது நண்பர் விஜய் அவர்களை கடந்த இரு நாட்களாக காணவில்லை

    ஒரு வேளை காதலர் தின கொண்டாட்டம் ஓவராகி எங்காவது சரிந்து விட்டாரோ ;-)
    .

    ReplyDelete
  78. டியர் எடிட்டர்,
    இந்த 2013-ம் வருஷத்துக்கான எடிட்டோரியல் காலண்டர ஏற்கனவே ஒரு குட்டி புத்தகமா வெளியிட்டு, அந்த எதிர்பார்ப்பில் தானே சந்தா கட்டியிருக்கிறேன் இப்படி அடிகடி கதை வரிசைகளை மாற்றி ஏமாற்றாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. //ஷெல்டனின் கதையினில் பாகம் 3 & பாகம் 4 ஒன்றுகொன்று தொடர்பில்லா தனிக் கதைகள் என்பதையும், பாகம் 4 & 5 சேர்ந்து ஒரு முழு சாகசமாகிறது என்பதையும் சமீபத்தில் தான் அறிந்து கொண்டேன். So முதலில் அறிவித்திருந்தபடி பாகம் 3 & 4-ன் கலவையோடு ஒரு இதழ் உருவாக்கினால் - மீண்டுமொரு அந்தரத் தொங்கல் நிகழ்ந்திடும் என்பதாலேயே இந்த alteration.

      மாற்றத்தின் பின்னணி என்னவென்று வினவிய பின், எனது விளக்கத்தில் திருப்தியில்லாது போயின் உங்களின் reactions -ஐப் பதிவிட்டால் நலம். // - விஜயன்

      திரு ரத்தன் சூர்யா , கடந்த டிசம்பர் மாதம் ஆசிரியரின் "எட்டும் தூரத்தில் NBS " பதிவில் இல் இருந்து

      //எனது காமிக்ஸ்டைம் நீங்கலாய் NBS -ன் இதர ஆக்கப் பணிகள் நிறைவுறும் கட்டம் என்பதால், இப்போது எனது கவனம் முழுவதும் இதழோடு நாம் வழங்கவிருக்கும் 2013 -ன் ட்ரைலர் மீதுள்ளது ! ஆர்ட் பேப்பரில், முழு வண்ணத்தில் 16 பக்க booklet ஆக வரக் காத்திருக்கும் இந்த முன்னோட்டத்தில் 2013 -ன் சாகசக் குழுக்களின் முழு விபரங்களும், விளம்பரங்களும் இடம் பெறுகின்றன ! எந்தெந்த மாதங்களுக்கு எந்த வெளியீடுகள் என்பது பற்றி என் தலைக்குள் கிட்டத்தட்ட ஒரு schedule தயாரே ஆகி விட்டதென்ற போதிலும், இறுதி நேர மாற்றங்களுக்கு உட்பட்டவை என்பதால் இந்த ட்ரைலரில் ஒவ்வொரு இதழின் வெளியீட்டு மாதம் மட்டும் குறிப்பிட்டிருக்காது ! சஸ்பென்சானதொரு அறிவிப்பும் இந்த ட்ரைலரில் இடம் பிடிக்கின்றதென்பதால் ஒரு உற்சாகத் துள்ளலுக்கு உங்களைத் தயாராக்கிக் கொள்ளுங்கள்//

      //இறுதி நேர மாற்றங்களுக்கு உட்பட்டவை என்பதால்//

      சந்தா கட்டுவதற்கு முன் இதை படித்துவிட்டு தானே கட்டுகின்றீர்கள்?? பின் இங்கே யார் உங்களை ஏமாற்றியது ?? இங்கே பின்னூட்டம் இடுவதற்கு முன் சற்று டைப் செய்ததை படித்துவிட்டு, அர்த்தத்தை உணர்ந்து பின் பதிவேற்றம் செய்வது நலம் !!

      Delete
  79. எடிட்டர் சார்,
    கௌன் பனேகா Translator போட்டிக்காக, மந்திரியாரின் சிறுகதை கொண்ட Xerox parcel நேற்று மதியம் வந்து சேர்ந்தது. இரவு வரை முயன்று மூன்று பக்கங்களை மட்டுமே மொழி பெயர்த்திருக்கிறேன்! நண்பர் சிம்பா பதிவிட்டதை போல, ஜம்பமாக எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க என்று ஈமெயில் தட்டி விட்டது எவ்வளவு தவறு என்று இப்போதுதான் தெரிகிறது. :-(

    வார்த்தைகளில் ஒரு easy flow இருக்க வேண்டும், அதுவும் பலூனிற்குள் அடங்க வேண்டும், படிக்கும் போதே சிரிப்பு பீறிட வேண்டும்.. (காஸ் காஸியை மட்டன் மர்டாக் ஆக்கியது இதற்கு ஒரு stellar example!) இது போல இன்னும் எத்தனையோ டும்.. இதையெல்லாம் சமாளித்து ஒரு கதையை வெளிக்கொணர்வது எவ்வளவு கடினம்..? :-(

    அப்புறம், ஜூனியர் எடிட்டர் என்று தங்கள் புதல்வன் பெயர் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது! Hearty congratulations Vikram :-)

    ReplyDelete
  80. Translation? Pdf? நமக்கு கோவிந்தாவா சார்?

    ReplyDelete
  81. //சரியான விடைகளை அனுப்பிய நண்பர்களின் குட்டிப் பட்டியலை நாளைக் காலையில் இந்தப் பதிவோடு இணைத்திடுகிறேன் !) //

    எப்பொழுது அந்தப் பட்டியல் வரும் என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  82. ----------

    வாழ்த்துக்கள் ஜீனியர் எடிட்டருக்கு.

    எடிட்டர் சார்.. ஜூனியர் எடிட்டர்.. வேலை செய்யாமல் டபாய்க்கப் போகிறார்.. அதனால் உடனடியாக மினி/ஜீனியர் லயன் ஒன்றை ஆரம்பித்து அவரிடம் முழுப் பொறுப்பையும் தந்துவிடுங்கள் :-).

    -----------

    ReplyDelete