Tuesday, October 23, 2012

மூர்த்திகளும்...கீர்த்திகளும்.....!


நண்பர்களே,

வணக்கம். தாண்டிச் சென்ற வாரம் நிறையப் பயணங்கள் ; நிறைய அலைச்சல்கள் ; கொஞ்சம் ஜலதோஷம் ; இ-மெயிலில் காமிக்ஸ் proof reading என்று ஒரு தினுசாய்ச் சென்றிட்டது ! இடைப்பட்ட நாட்களில் இங்கே நமது சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் இதழ் கிடைக்கப் பெற்ற பின்னர் (எதிர்பார்த்தபடியே ) எக்கச்சக்கமான விமர்சனங்கள் ; அலசல்கள் ; பதிவுகள் ; கருத்துகள் என்று மின்னிலாக்காவின்  மொக்கையைத் தாண்டியும் களம் சூடாகிக் கிடப்பதைக் காண முடிந்தது ! அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் தனித்தனியே பதில் சொல்லிடுவதற்குப் பதிலாய் - பதில்களையே மொத்தமாய் ஒரு பதிவாக்கிட்டால் என்னவென்று தோன்றியது ! பலன் ? பதிவு எண்:62! 

அள்ளி முடிந்த குடுமியும்  ; வெற்றிலை சொம்புமாய் தீர்ப்புச் சொல்லப் புறப்படும் நாட்டாமையாக என்னை நானே ஒரு கணம் visualise செய்து பார்த்தேன் ; "உள்ளதுக்கே வழியைக் காணோம்..இதில் அள்ளி முடிய ஆசை வேறா?" என்று என் கேச வளம் தந்திட்ட mind voice எச்சரிப்பு  லேசாகக் காதில் விழுந்ததால், 'இந்த நடுவர் வேலைகளெல்லாம் சாலமன் பாப்பையா ரேஞ்சுக்கு உள்ளவர்கள் செய்ய வேண்டிய வேலை !' என்று ஒரு மனதாய் ஏற்றுக் கொண்டேன் ! ஆகையால் இந்த "சூப்பர் ஹீரோஸ் கதைகளை ரசிக்க வயது தடையா..? தடையல்லவா ?" என்ற பட்டிமன்றத்தின் தீர்ப்புச் சொல்லிடும் நடுவராக அல்லாது....இந்த சங்கதியில் ஒரு வாசகனாய்...ஒரு எடிட்டராய்...ஒரு வியாபாரியாய்(!!)எனது எண்ணங்கள் என்னவென்று பகிர்ந்து கொள்வதே என் நோக்கம் ! 

நமது சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலின் நதிமூலம் - ரிஷிமூலம் இந்நேரத்திற்கு நாம் அனைவரும் அறிந்ததொரு சங்கதியே ! நமது வண்ணமயமான இரண்டாவது வருகை COMEBACK ஸ்பெஷல் வாயிலாகத் துவங்கிய சமயமே திட்டமிடப்பட்ட ; அறிவிக்கப்பட்ட இதழ் இது ! சொல்லப்போனால் நமது COMEBACK ஸ்பெஷல் என்று நான் முதலில் மண்டைக்குள் வடிவமைத்து வைத்திருந்தது இந்த மும்மூர்த்திகளின் கூட்டணியையே !இடையே எழுந்த வேறு சிந்தனைகளின் பலனே வண்ணத்தில் லக்கி லூக் & பிரின்ஸ் கதைகளோடு நமது Comeback ஸ்பெஷல் glitzy ஆக அவதரிக்கக் காரணம் ! புதியதொரு பாணி துவக்கம் கண்டதால், இந்த மும்மூர்த்தி கூட்டணி தற்காலிகமாய் கொஞ்சம் பின்னே செல்ல நேரிட்டது !நமது புதுப் பாணி சாத்தியப்படுத்தித் தந்த முன்னேற்றங்கள் ; அது திறந்து விட்ட புதுக் கதவுகள் ; எப்போதையும் விட அசாத்திய உத்வேகமாய் உங்கள் ஒவ்வொருவரின் அக்கறையான பங்களிப்புகள் என்று ஏராளமான புதுச் சங்கதிகள்,தொடர்ந்த மாதங்களில் அரங்கேறியதும் நீங்கள் அறியாததல்ல ! பத்து மாதமென்பது ஒரு மகவை ஈன்று எடுத்திட மட்டுமல்ல ; பல mindsetகளையும் மாற்றிட ,வல்லதென்பதையும் உணர்ந்திடும் வேளையும் வந்தது!அட்டையில் ஆர்ச்சியும், ஸ்பைடரும் ; மாயாவியும் இருந்தால் போதும் ; அது அதிரடி வெற்றிக்கு உத்திரவாதமென்று சொல்லக் கூடிய நாட்கள் நமது நினைவுகளில் மாத்திரமே இனி நீடிக்க வல்லவை ; இன்றைய ரசனை இவர்களைத் தாண்டிப் பயணித்து விட்டதென்று எனக்குள் தோன்றியதால் தான் சூ.ஹீ.சூ.ஸ்பெ.வின் வெளியீட்டுத் தேதியில் சுணக்கம் காட்டினேன். ஆனால் தொடர்ந்திட்ட ஆதங்க அலை என் மண்டையிலிருந்த சந்தேகச் சிலந்தி வலைகளைக் களைந்து தந்ததால், நம் வலை மன்னன் முன்னட்டையில் சிலந்தி வலை கட்டிடும் நாளும் நிஜமானது!இதழ் வெளியான பின்னர் வந்திருக்கும் reactions களின் ரகம் இரண்டல்ல - மூன்று என்பேன் ! இங்கு பதிவுகளாக மாத்திரம் அல்லாது ; வெவ்வேறு காமிக்ஸ் blog களிலும் பரிமாறப்பட்டு வரும் எண்ணங்களின் தொகுப்பு என்னை இவ்விதம் சொல்லச் செய்கிறது என்று சொல்லலாம் ! 
  • "ஆஹா..அற்புதம் ! " என்று மிகப் பெரிய thumbs up !
  • "ஆஹா...இதுக்குத் தானா இத்தனை பில்டப் ?காதிலே பூ தாங்கலைடா சாமி" என்ற ரகக் கருத்துக்கள் !
  • "கதைகள் சுமார்..குறைகள் அதிகம்...ரசித்திட முடியவில்லை " என்ற ரீதியிலான reservations.


இதில் 'பதில் சொல்கிறேன் பேர்வழிஎன்று சுலபமாய் அல்வா கொடுக்க சிறந்த வழி- எந்தக் கருத்துக்கு maximum சதவீதத்தினர் நிஜமாக வோட்டளித்துள்ளனர் என்று பார்த்திடுவதே ! ஆனால் அது போங்கு ஆட்டமாகிப் போய்விடுமென்பதால் அந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்கப் போவதில்லை  !

நமது மும்மூர்த்திகளுக்குள் basic ஆக ஒரு வேற்றுமை உண்டு ! இரும்புக்கை மாயாவி ஒரு '100 சதவீத சூப்பர் ஹீரோ' என்று சொல்லிட இயலாது ! அவரது உலோகக் கரம் ; அதன் அதிசய ஆற்றல்கள் ; அவரது மாயத்தன்மை என்பவை 40 ஆண்டுகளுக்கு முந்தையதொரு தலைமுறையினாலே கூட ஏற்றுக் கொள்ள முடிந்தது எனும் போது, அந்தக் கதாப்பாத்திரத்தில் ; அவரது கதைகளில் 'fantasy ' என்ற ஒற்றை வார்த்தையைத் தாண்டியதொரு வலு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும் ! தவிர அவரது ஆரம்ப கால 13 கதைகளுமே ஏதாவது ஒரு விதத்தில் action ; adventure ; துப்பறியும் த்ரில்லர் பாணியிலானவை ! பின்னே நகர நகர கதைகளில்ன் தரம் குறைந்ததில் சந்தேகமே கிடையாது - ஆனால் ஆரம்பத்தில் மாயாவி பதித்த அந்த முத்திரை அவரை என்றைக்குமே நமக்குப் பிடித்தமான ஒரு பால்ய நண்பனாகவே வைத்துள்ளது என்று சொல்லலாம் !

நமது "தல" ஸ்பைடரும் ; சட்டித் தலையன் ஆர்ச்சி சங்கதிகளும் முற்றிலும் வேறு ! இருவருமே super ஆற்றல்கள் நிறைந்த அடாவடி சூப்பர் ஹீரோக்கள் ! ஸ்பைடர் ஒரு உளவுப்படை எஜெண்டாகவோ ; ஆர்ச்சி ஒரு ஜேம்ஸ் பாண்டாகவோ எந்தக் காலத்திலும் இருந்திட்டதில்லை ! நியூயார்க் நகரையே கயிறு கட்டித் தேர்த்திருவிழா போல் இழுத்திட நினைக்கும் வில்லனை முறியடித்து அறிமுகமானவன் தானே..ஸ்பைடர் ?!கப்பல்களைத் தூக்கிக் கடாசிய கடோத்கஜன் தானே ஆர்ச்சி ? So - ஆரம்பம் முதலே துளியும் சந்தேகத்துக்கு இடமின்றி இவ்விருவருமே out and out fantasy heroes என்பது establish ஆனதொரு சங்கதி.இங்கேயும் மாயாவிக்கு நேர்ந்த அதே  பிரச்னை தான் ஸ்பைடருக்கும் கூட ! முதல் 13 கதைகளின் பெரும்பான்மை ஓரளவிற்கு சுவாரஸ்யமான கதைக்களங்கள் ; வில்லன்கள் என்று அமைந்தவை ! மாயாவியின் 13ம் சரி ; ஸ்பைடரின் துவக்கப் 13ம் சரி ; Fleetway நிறுவனத்தின் Stupendous Series -ன் படைப்புகள். ஒரு குறிப்பிட்ட நீளத்திற்குள் அடங்கிடும் கதைகள் ; விறுவிறுப்பான - அதே சமயம் மாறுபட்ட plot கள் இருந்திட வேண்டுமென்று முதலிலேயே பதிப்பகத்தினர் கதாசிரியர்களிடம் stress செய்திருக்க வேண்டும் ; கதைகளில் அதன் பலன் பிரதிபலிக்கின்றது ! பின்னர் வந்திட்ட மாயாவி ; ஸ்பைடர் ; (& ஆர்ச்சி) கதைகள் அனைத்துமே அவர்களது வார இதழ்களில் 2 பக்கத் தொடர்களாக நீண்டு சென்றவை ! குறிப்பிட்ட காலக்கெடு ஏதுமின்றிப் பயணித்த படைப்புகள் இவை என்பதால், இக்கதைகளின் பெரும்பான்மை - முதல் 13 -ன் முன் நிச்சயம் தோற்றிடும் ! "பழி வாங்கும் பொம்மை"சுவாரஸ்யப்படுத்திய  அளவிற்கு "அரக்கன் ஆர்டினி" மிளிரவில்லை என்பதற்குக் காரணம் இதுவே ! நாயகர்கள் ஒன்றாக இருந்திடும்போதிலும், முன்னது ஒரு திட்டமிடப்பட்ட திரைப்படம் போல ; பின்னது நீண்டு ஓடும் இரவு பத்து மணி டி.வி. தொடர் போல ! So - கதைகளின் பாணிகளில் ; தரங்களில் வேறுபாடுகள் இருந்திடுவது தவிர்க்க இயலா விஷயமே ! ஸ்பைடர் mania உச்சத்தில் இருந்திட்ட போதிலும் கூட, "விண்வெளிப் பிசாசு" கதையினை நான் தொடராக வெளியிட்டது இதுவல்லாது வேறு என்ன காரணத்திற்காக இருந்திட இயலும் ?? "அரக்கன் ஆர்டினி" கதையில் ஸ்பைடர் வாங்கும் செம மாத்துக்களின் எண்ணிக்கையை வேண்டுமெனில் நான் edit செய்திருக்க இயலுமே தவிர கதையின் போக்கையல்லவே ?!எஞ்சியுள்ள ஸ்பைடர் (புதுக்) கதைகளுள் இந்த ஒன்று தான் "ஏதோ தேவலை ரகம்" எனும் போது,எனது சிரமம் சிறிதேனும் புரிந்திடுமென்று நினைக்கிறேன் !



ஆர்ச்சியின் கதைகளைப் பொருத்த வரை அவை ஆல்பம் வடிவில் என்றைக்குமே உருவானவையல்ல ! அனைத்துமே தொடர்கதைகளாய் வந்த பக்கங்களின் தொகுப்புகள் என்பதால், அன்றைக்கும், இன்றைக்கும் நெருடலான வேறுபாடுகள் தென்பட சாத்தியமில்லை ! அன்றைக்கு ஆர்ச்சியின் சேஷ்டைகளை ரசித்திருந்தால், இன்றும் பெரிதாய் முகம் சுளிக்கச் செய்திருக்க மாட்டான் சட்டித் தலையன் ! செந்தில்-கவுண்டமணி ஜோடியின் 'சட்டித் தலையா..பரோட்டா மண்டையா.' காமெடி உச்சத்தில் இருந்திட்ட '80களின் மத்தியில் அறிமுகமான ஆர்ச்சி கதைகளில் ஆங்காங்கே இந்தக் காமெடி bit களை இணைத்திடத் தீர்மானித்தவன் நானே ! ஆங்கில ஒரிஜினலில் இல்லாத நகைச்சுவை கதையின் ஓட்டத்திற்கு தமிழில் உதவிடும் என்பது இந்தப் பொடியனின் அந்தக் காலத்து சிந்தனை ! அதே பாணியை இன்றும் தொடர்வது புதிதாய்ப் படித்திடும் நண்பர்களுக்கு எரிச்சல் எற்படுத்திட வாய்ப்புண்டு என்ற போதிலும் faithful ஆர்ச்சி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்திடும் எண்ணத்திலேயே அந்தப் பாணியைத் தொடர்ந்துள்ளோம்.So - கதைகளின் களத்தில் ; வளத்தில் ஸ்பைடர் & ஆர்ச்சியில் நிச்சயம் ஒரு கேப்டன் டைகரின் மதிநுட்பத்தையோ ; லார்கோ வின்ச்சின் திருப்பங்களையோ தேடிடல் பலனற்றது. சட்டியில் இன்று போட முடிந்ததே கையிருப்பில் உள்ள சுமாரான சரக்கு மாத்திரமே எனும் போது - அகப்பையில் முன்பு பரிச்சயமான சுவையோடு பதார்த்தம் வந்திடல் எவ்விதம் சாத்தியமாகும் ? 'மொழிபெயர்ப்பு சுமார் ; பிழைகள் உண்டு ; எழுத்துக்கள் சிறிதும்,பெரிதுமான அளவுகளில் உள்ளன' என்ற குற்றச்சாட்டுக்கள் - fair enough ! மொழிபெயர்ப்பின் தரம் பற்றிய நிலைப்பாடு ஒவ்வொருத்தரின் மாறுபட்ட அளவுகோல்களுக்கேற்ப வேறுபடுபவை என்பதால், மற்ற இரு பிரச்னைகள் பற்றி இங்கே எழுதிட வேண்டும் !

இந்தக் கதைகளுக்கான பணிகள் துவங்கியது 2011 -ல் ! கம்ப்யூட்டர் மூலம் அச்சுக் கோர்ப்பது மாத்திரமுமின்றி, முன்பு நமது ஆர்டிஸ்ட்கள் செய்து வந்த பணிகளையும் கணினி மூலமே முடிப்பதென்பது தீர்மானமான பின் துவக்கப்பட்ட முதல் batch கதைகள் இவை ! நவீன டிசைன் யுக்திகள் ; கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் தலை தூக்கிய தருணமும், ஆர்டிஸ்ட்கள் எனும் சில ஜீவன்கள் நிர்மூலமானதும் ஒருங்கே நிகழ்ந்தவை ! என்ன சம்பளம் கொடுத்தாலும் இன்று சிவகாசியில் ஓவியர் யாரும் சிக்கிட மாட்டார்கள் - for the simple reason that there are none at all !ஒரு காலத்தில் ஓவியர்களாய்ப் பணியாற்றிய ஜீவன்களில் பிழைக்கத் தெரிந்தவர்கள் சின்னதாய் கம்ப்யூட்டர் டிசைனர்களாகவும் ; பி.தெ.யா ஜீவன்கள் திருமணத் தரகர்களாக ; அச்சகங்களில் வாட்ச்மேன்களாக ஜீவனம் செய்கிறார்கள் ! So - நாங்கள் நவீனத்தை அரவணைத்தோம் என்று சொல்வதை விட ; அரவணைக்கத் தள்ளப்பட்டோம் என்பது தான் நிஜம் ! இன்று நமது அட்டைப்பட ஓவியர் கூட கோவில்களில் சுவர்களில் ; உத்திரங்களில் சித்திரம் போடும் நேரம் போகவே தான் நமக்குப் பணியாற்றுகிறார் ! So - எல்லாம் கம்ப்யூட்டர் மயம் என்பது காலத்தின் கட்டாயம் என்பதை நாங்கள் தாமதமாகவே உணர்கிறோம். உங்களில் பலரும் பரிச்சயப்பட்டிருக்கும் ஒரு professional - MNC பணிச் சூழலில் சிவகாசி இயங்குவது கிடையாது !இன்றளவும் இங்கே அனுபவமே பிரதானமான ஆசானே தவிர, கல்லூரிகளோ ; அவை தரும் பட்டப்படிப்புகளுமல்ல ! சிவகாசி எனும் போது ஒரு hi -tech உலகம் என்ற சிந்தை வெளியே உலவினாலும் கூட, நிஜம் அதுவல்லவே ! 2 கோடி பெறுமானமுள்ள அச்சு இயந்திரத்தை நிர்வகிக்கும் தொழிலாளிகளில் பலர் பள்ளிப் படிப்பைப் பூர்த்தி செய்திருக்கா அனுபவ மாணாக்கர்கள்! நமக்கு அச்சுக் கோர்க்கும் கம்ப்யூட்டர் பணியாளர்களுமே சின்னதாய் ஒரு டிப்ளோமா படித்து விட்டு, வீட்டில் ஒரு கம்ப்யூட்டர் வைத்து அனுபவத்தில் முன்னேறும் திறமைசாலிகளே தவிரே, இதில் முறையான படிப்பும், பரிச்சயமும் பெற்றவர்களல்ல !முறையான கல்வியும், பயிற்சியும் துணை கொண்டு இன்று கம்ப்யூட்டர்களில் உலகுக்கே பாதைகள் வகுத்துக் கொடுக்கும் உங்களில் பலருக்கும் சுலபமாய்த் தோன்றிடும் கம்ப்யூட்டர் சங்கதிகள், எங்களுக்கோ அனுபவத்தில்..trial & error மூலமே பரிச்சயமாகின்றன என்று சொல்வதில் எனக்கு நிச்சயம் கூச்சம் கிடையாது ! We are honest triers though...!

So - எங்களுக்குச் சாத்தியப்பட்ட ஒரு சின்ன வட்டத்துக்குள் முதல் முறையாகத் துவங்கிய பணிகள் இந்த சூ.ஹீ.சூ.ஸ்பெ. கதைகளுக்கான அச்சுக் கோர்ப்புகள் ! 2011 -ல் துவங்கிய போதிலும், காரணங்கள் பலவால், பரணில் போடப்பட்ட இக்கதைகள்  - மீண்டும் கடந்த மாதமே மீட்கப்பட்டவை ! முதன் முதலாய் ; இந்தப் பணிகளில் சிறிதும் பரிச்சயம் எற்பட்டிருக்கா சமயத்தில் செய்யப்பட்ட பணிகள் என்பதால் பிழைகள் நிறையவே இருந்தன !கொஞ்சம் கொஞ்சமாய் திருத்தங்களை செய்திட முயன்ற போதிலும், 14 மணி நேர மின்வெட்டு - எங்களது பணிகளுக்கு பிராணனை வாங்கும் சிக்கல்களை உருவாக்கியது ! அடுத்தடுத்து பணிகள் தேங்கி நிற்கும் பதட்டம் ஒரு பக்கம் பொறுமையை சோதிக்க, 'இந்த இதழை முடித்தால் போதுமடா..சாமி!' என்ற நிலைக்குக் கொண்டு வந்து விட்டது ! பிழைகள் மிகுந்து இருப்பதற்குக் காரணங்கள் இவையே ! இதனையும் கூட நான் சப்பைக்கட்டாகச் சொல்லிடவில்லை ; நாட்கள் செல்லச் செல்ல -எங்களது சின்ன டீமின் பணிகளில் ஒரு மெருகு கூடி வருவதை நான் ஒவ்வொரு மாதமும் கவனித்துக் கொண்டு தான் வருகின்றேன்! இந்த இதழ்களில் மிகுந்திட்ட பிழைகள் நேரமின்மையின் பொருட்டே தவிரே ; நமது பணியாளர்களின் திறமைக் குறைவுகளால் அல்லவே !Reaction # 3 நிச்சயம் justified என்பதில் சந்தேகமே இல்லாத நிலையில் பிரதானப் பிரச்னைகளின் பக்கம் கவனத்தைத் திருப்பிடுவோமே..!

'ரசனைக்கும் வயதுக்கும் சம்பந்தம் உண்டா....?'... சின்ன வயதில் படித்து ரசிக்க முடிந்த இந்த சூப்பர் ஹீரோக்களை இன்று அதே வாஞ்சையோடு ரசித்திடுவதில் நெருடல்கள் தோன்றுவது ஏனென்ற கேள்வி நியாயமானதே ! ஒவ்வொருத்தரும் இதற்கு தத்தம் விளக்கங்களை வழங்க முற்பட்டிருக்கும் போது இந்த சங்கதியை நான் பார்த்திடுவது ரொம்பவே சுலபமான கோணத்தில் ! துவக்கம் முதல் நமக்கு ஒரு நல்ல காமிக்ஸ் இதழின் பிரதான எதிர்பார்ப்பு - சுவாரஸ்யமானதொரு கதைக் களம் தான். உலகின் எத்தனையோ காமிக்ஸ் மார்கெட்களில் ஒரு பிரசித்தி பெற்ற ஓவியர் ; கதாசிரியரின் படைப்பென்றாலே - அந்தத் தயாரிப்பின் தரத்தை பெரிதாய் அலசிடாமல் கண்ணை மூடிக் கொண்டு அந்த இதழில் சில லட்சங்களை வாங்கிக் குவிக்கும் வாசக வட்டங்கள் உண்டு ! ஒரு வியாபார நோக்கில் பார்க்கும் போது அது உற்சாகமூட்டும் சங்கதியாய் எனக்குத் தோன்றினாலும், ஒரு வாசகனாய் அதன் லாஜிக் புரிந்திட்டதே கிடையாது ! சின்னதாய் உதாரணம் சொல்லிட வேண்டுமெனில் JES LONG எனும் ஒரு துப்பறியும் நாயகரின் கதைகளை நாம் முன்பு வெளியிட்டு வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அவரது தொடரில் ஒரு சில நல்ல கதைகளும் ; நிறையவே "அய்யோடா சாமி" ரகக் கதைகளும் உண்டு. "நண்டுக் குகை மர்மம்" என்று தமிழில் நாம் விளம்பரமெல்லாம் செய்திட்டதொரு இதழ் உங்களில் எத்தனை பேருக்கு ஞாபகம் உள்ளதோ தெரியாது - எனக்கு மனதில் நிற்க  ரொம்பவே காரணங்கள் தந்திட்ட கதை அது. நிறைய பணம் கொடுத்து உரிமைகளை வாங்கி...பிரெஞ்சு ஒரிஜினல்களில் இருந்து மொழிபெயர்ப்பெல்லாம் செய்து ; முன்னக்கூடியே அட்டைபடமெல்லாம் அச்சிட்டு வைத்து - தமிழுக்கு மொழிமாற்றம் செய்திட நான் முனைந்த போது எனக்கு நேர்ந்த கிறுகிறுப்பை விவரிக்க வார்த்தைகள் தேடிடல் அவசியமாகிடும். கிளைமாக்ஸில் பஞ்சு மிட்டாய் செய்யும் மிஷின் போல எதோ ஒன்றை வைத்துக் கொண்டு வில்லன் (!!!) ஒரு குகைக்குள் அமர்ந்து விளையாடிக் கொண்டிருப்பார் ! அப்படியே தூக்கி பரணில் மூட்டை கட்டிப் போட்டு ஆண்டுகள் பத்தைத் தாண்டியாச்சு ! ஆனால் - இந்த இதழும் கூட பெல்ஜிய மார்க்கெட்டில் சரளமாய் விற்பனை ஆகிட்ட கதை எனும் போது எனக்கு அந்த லாஜிக் புரிபடவே இல்லை  ! இன்னொரு உதாரணம் சொல்லிட வேண்டுமெனில் "CODENAME மின்னல்" என்ற புதியதொரு தொடரும் கூட நம்மை இதே பாடு தான் படுத்தி எடுத்தது !

So - நமக்கு என்றைக்குமே "பெரிய பெயர்கள்" ஒரு பொருட்டல்லவே...!கதைகள் சோபிக்கவில்லை எனில் அது பிரசித்தி பெற்ற நாயகனின் சாகசமாய் இருந்தால் கூட - "குப்பை - குப்பையே" தீர்ப்புக்குத் தான் ஆளாகிடுவார் ! BATMAN கதைகளை நாம் வெளியிட்டு வந்த காலகட்டங்களில் நான் DC காமிக்ஸ் அலுவலகத்தில் இருந்து எத்தனை வண்டி Batman இதழ்களை வரவழைத்திருப்பேன் என்பது எனக்கும் ; air -parcel அனுப்பியே ஓய்ந்து போயிருக்க வேண்டிய அவர்களது despatch பிரிவுக்கும் மாத்திரமே தெரிந்த சங்கதியாக இருக்கும் ! BATMAN ஒரு சூப்பர் ஹீரோ என்ற போதிலும் இயன்ற வரை அவரை ஒரு 'காதிலே பூ' ரக நாயகராய்ச் சித்தரிக்கக் கூடாதென்பதில் ; அவரது அடிப்பொடி ராபின் எங்குமே தலைகாட்டி குழப்பிடக் கூடாதென்பதில் ; கதைகளின் பெரும்பான்மை ஒரு ஏற்றுக்கொள்ளக் கூடிய களத்தில் அரங்கேறும் விதத்தில் இருந்திட வேண்டுமென்பதில் எனது முழுக் கவனமும் இருந்திட்டது. 50 ஒரிஜினல் இதழ்களைப் புரட்டினால் நம் ரசனைக்கு ஏற்றவாறு ஒன்றே ஒன்று தேறும் என்பது தான் நிதர்சனம்! Catwoman ; அந்த Man ; இந்த Man என்று தினுசு தினுசாய் தலை காட்டும் வில்லன்களை சுத்தமாய் வடிகட்ட வேண்டுமென்பதில் ரொம்பவே தீவிரமாய் இருந்தேன். சுமார் 25 ஆண்டுகளுக்கு முந்தைய நம்"சூப்பர் ஹீரோ"ரசனைக்கே இந்த ஓவரான"தரக் கட்டுப்பாடுகள் " எனும் போது - இன்றைய தேதிக்கு இந்த mixed reactions எனக்கு ஆச்சர்யத்தைத் தந்திடவே இல்லை தான்.

இளம் வயதில், அயல்நாட்டு காமிக்ஸ் படைப்புகளின் பெரியதொரு பரிச்சயம் இல்லாத சமயத்தில் ; பரபரப்பான இந்த சூப்பர் ஹீரோ கதைகளை மனது ஏற்றுக் கொண்டது - சுலபமாய் ! ஆனால் இன்றோ - வயதிலும், ரசனைகளிலும் அடுத்த படிக்குச் சென்றிருக்கும் வேளையில் மனம் அதே லாவகத்தோடு, 'அலசி ஆராயத் தேவை இல்லை' என்ற அதே பாணியில் அடி பணிவது-எல்லோருக்கும் சுலபமாய் சாத்தியப்படக் கூடிய விஷயமல்லவே !. இங்கே நான் சொல்லிட நினைக்கும் சங்கதியை சுலபமாய் கொணர சின்னதாய் ஒரு விஷயத்தை highlight செய்தால் பொருத்தமாய் இருக்குமென்று நினைக்கிறேன் ! Fleetway நிறுவனம் அன்று வெளியிட்டு வந்த Top கதைத் தொடர்கள் அத்தனைக்கும் (யுத்தக் கதைகள் நீங்கலாக) எனது தந்தை உரிமைகள் வாங்கி வைத்திருந்தார்கள் - ஸ்பைடரின் கதைகளுக்கும் சேர்த்துத் தான் ! ஆனால் - மாயாவி ; லாரன்ஸ் டேவிட் ; ஜானி நீரோ கதைகளை தைரியமாக வெளியிட இயன்ற போது அவருக்கு ஸ்பைடர் மாத்திரமே ஒரு நெருடலாய்த் தோன்றியதால் தான் பின்னாளில் "எத்தனுக்கு எத்தன்" ஆக நமது லயனில் வந்திட்ட ஸ்பைடர் கதையை பத்திரமாக 14 ஆண்டுகளாய்ப் பூட்டி வைத்திருந்தார் - நான் ஆட்டையைப் போடும் வரை !ஸ்பைடர் கதை வெளியாகி, அசாத்திய வெற்றி பெற்ற பின்னர், நான் நேரடியாக Fleetway நிறுவனத்திலிருந்து எஞ்சி நின்ற அத்தனை ஸ்பைடர் கதைகளையும்  சரமாரியாக வாங்கிய போது,என் தந்தைக்கு ஆச்சர்யம் தாளவில்லை தான் ! (நானோ ஒரு போட்டியாளனின் மனோபாவத்தோடு - நான் தருவித்து வரும் கதைகளின் முழு விபரங்களையும் என் தந்தையிடம் பகிர்ந்து கொண்ட நாட்கள் ரொம்ப சொற்பமே..என்பது ஒரு தனிக் கதை !)17 வயது எடிட்டருக்கு (!!) ரசித்திட இயன்ற அந்த 'காதிலே பூ' பாணிக் கதை - 40 + வயதான எடிட்டருக்கு தேறாத கேசாகத் தோன்றியது - இந்த ரசனைகளில் வயதுக்கு இருந்திடும் சம்பந்தத்தைத் தவிர வேறு எதனால் இருந்திட முடியும் ?

பத்தில் ஏழு பேர் "காமிக்ஸா ? இன்னுமா அதெல்லாம் படிக்கிறாய் ?" என்று கேட்கும் ரகம் என்றால் ; எஞ்சி இருக்கும் அந்த காமிக்ஸ் ரசிக மூவரில் - ஒருத்தர் fantasy ரசிகராகவும் ; மீத இருவர் அதை வினோதமாய்ப் பார்த்திடும் ரகமாகவும் இருந்தால் அது ரசனைகளின் வேறுபாடுகளை மாத்திரமே காட்டுகின்றது !காமிக்ஸ் என்பது பில்டர் காபி குடிப்பதற்கு ஒத்ததொரு ரசனை ! காலையில் எழுந்து ரெண்டு மைல் தள்ளி இருக்கும் கடைக்குப் போய் பில்டர் காபி குடிப்பவருக்கு மாத்திரமே அதன் பிரத்யேக சுவை தெரியும். நாம் அனைவருமே அது போன்ற ரசிகர்கள் ! இந்த fantasy கதைகளை இன்றும் தொடர்ந்து ரசிக்கும் பாக்கியம் பெற்றுள்ள நம் நண்பர்கள், அந்த பில்டர் காபியிலும் ஒரு ஸ்பெஷல் ரகத்தை ரசிக்கத் தெரிந்த ஆற்றல் கொண்டவர்கள் என்றே சொல்லிடுவேன்!

இந்த ரகக் கதைகளைத் தொடர்வதில் ஒரு எடிட்டராய் எனது  நிலைப்பாடு  என்னவென்று கேட்கும் நண்பர்களுக்கு :

'நிச்சயம் தொடர்வேன்...ஆரம்பகாலத்துத் தரத்தில் இனியும் ஸ்பைடர் ; மாயாவியின் புதிய கதைகள் கிடைத்தால் !

"நிச்சயம் தொடர மாட்டேன் ...இப்போதைய தரத்தை விடவும் சுமாரான   கதைகள் மாத்திரமே எஞ்சி இருக்கும் காரணத்தால் !"


ஒரு வியாபாரியாய் (!!) நான் என்ன செய்திடுவேன் என்ற கேள்வி மாத்திரம் எஞ்சி நிற்கிறது....! நம்ப சிரமம் தான் என்றாலும், இது வரை இந்த ஆண்டில் வெளி வந்த இதழ்களிலேயே - அசாத்திய விறுவிறுப்போடு E -Bay -யிலும் சரி ; நமது முகவர்களிடமும் சரி, விற்பனை கண்டுள்ள  இதழ் நம் சூ.ஹீ.சூ.ஸ்பெஷல் தான் !! குறிப்பாக இந்த இதழின்  E -Bay விற்பனையின் வேகம் இது வரை நாங்கள் கண்டிராததொரு சங்கதி !! இப்போது சொல்லுங்களேன் - ஒரு வியாபாரியாக நான் என்ன செய்திட வேண்டுமென்று ?!!!


நிறைய புரிந்தது போலவும் ; படித்து முடித்த பின்னர் எதுவுமே புரியாதது போலவும் தோன்றினால் - நாளைய தின விடுமுறை தான் உள்ளதே திரும்பவும் வந்து ஒரு முறை அலசிப் பார்க்க !! அனைவருக்கும் எங்களது ஆயுத பூஜை தின வாழ்த்துக்கள் ! Take Care people !

281 comments:

  1. Replies
    1. ஆசிரியர் திரு.விஜயன் அவர்களுக்கு,

      "சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்" வழக்கம் போல கண்டேன் ரசித்தேன். பணியின் பளுவினால் உங்களுக்கு விமர்சனம் எழுத தோன்றவில்லை. அதையும் தாண்டி உங்களுக்கு இப்போது எழுதும் இந்த விமர்சனம் உங்களுடைய வலைப்பதிவை பார்த்தபின்னர் நான் எடுத்த முடிவு தான். சூ ஹீ.சூ.ஸ்பெ உண்மையில் காதில் பூ சுற்றும் ரகமாக இருந்தாலும் இதைவிட சிறந்த கதைத்தளங்கள் மாயவிக்கோ spideruko archikko கிடைக்காது என்பது என் கருத்து. ஒரு அபூர்வ சக்தி உடைய ஹீரோவை இப்படிதான் காட்ட வேண்டும்.

      பணி சிறக்க வாழ்த்துக்கள்!

      நன்றி உங்கள் குழுவிற்கு!


      இவண்
      பூபதி இல
      9962770888

      Delete
  2. படித்து விட்டு வருகிறேன் - ரெட் கலர் துண்டு! ;)

    ReplyDelete
    Replies
    1. //இப்போது சொல்லுங்களேன் - ஒரு வியாபாரியாக நான் என்ன செய்திட வேண்டுமென்று?!!!//
      புதிய தரமான கதைகளுடன் (fantasy genre உட்பட!) புதிய வாசகர்களை சென்றடையும் முயற்சியில் மும்முரமாக இறங்கலாம்! :)

      Delete
    2. முக்கிய குறிப்பு: SHSS பற்றி கீழே சொல்லியிருக்கும் கருத்துக்கள் காட்டமாக இருந்தால் நண்பர்கள் மன்னிக்கவும். இந்த காரணத்தினாலேயே ரொம்ப நாட்களாக பின்னூட்டமிடாமல் இருந்தேன்!

      "சூப்பர் ஹீரோ சூப்பர் சொதப்பல்" இதழ் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய, வழக்கொழிந்த காமிக்ஸ் நாயகர்களைத் தாங்கி, சில (பல?) 'பழைய' வாசகர்களின் கட்டாயத்தின் பேரில், கடனே என்று வெளியாகியிருக்கிறது! ஸ்பைடர் மற்றும் ஆர்ச்சி கதைகளை மேலோட்டமாக படித்தேன். மாயாவி கதையைப் படிக்க பொறுமை இல்லை, படித்தாலும் விமர்சிக்கப் போவதில்லை. நான் இந்த நாயகர்களை குறை கூறவில்லை அந்த காலகட்டத்தில் இவர்கள் சூப்பர் ஸ்டார்கள்தான் - அதில் சந்தேகமில்லை, நானும் இவர்களை ரசித்தவன்தான் - மறுக்கவில்லை! ஆனால் இவர்களையே பிடித்துக்கொண்டு கடந்த காலத்திலேயே உழன்று கொண்டிருப்பது சரிதானா?!

      இனிமேல் மாயாவி, ஜானி நீரோ, லாரன்ஸ் டேவிட், ஸ்பைடர், ஆர்ச்சி போன்ற நிகழ்காலத்திற்கு சற்றும் ஒவ்வாத நாயகர்களை காமிக்ஸ் கிளாசிக்ஸில் மட்டும் வருமாறு ஒதுக்கி வைப்பது நலம் (அவற்றில் வருவதே வீண் வேலைதான்!). அப்படித்தான் ஆசிரியர் விஜயனும் முடிவெடுத்திருக்கிறார் என்றாலும், ஆளாளுக்கு ஆஹா... ஓஹோ... என்று SHSS-ஐ புகழ்ந்து தள்ளி அவர் மனதை மாற்றி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது (அது நடந்தே விட்டது இந்தப் பதிவில் இருந்து தெரிகிறது!). இங்கு வரும் சில பின்னூட்டங்களை படித்தால் குழந்தைப் பருவதிலேயே நமது வாசகர்கள் பலர் விருப்ப ஓய்வு எடுத்துவிட்டதாக தெரிகிறது. வயதில் உள்ள முதிர்ச்சி, நண்பர்களின் கருத்துகளில் காணாமல் போனது வியப்பே!

      ஒருவேளை இக்கதைகளின் கதாசிரியர்களும், ஓவியர்களும் இன்னமும் உயிரோடு இருக்கும் பட்சத்தில் அவர்கள் கண்களில் SHSS மற்றும் ஏனைய கிளாசிக்ஸ் இதழ்கள் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்! உலக காமிக்ஸுகளில் கடைசி முறையாக அவர்களின் புராதனப் படைப்புகள் இன்னமும் இங்கே வெளியாகிக் கொண்டிருப்பதை அறிந்தால், அந்த ஆனந்த அதிர்ச்சியிலேயே அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது! ;) இன்றைய தலைமுறையினருக்கும் இக்கதைகள் பிடிக்கும் என இன்னும் சில 'பழைய' வாசகர்கள் திடமாக நம்புவது நகைப்புக்குரியது! காலம் மாறி சில காலமாகி விட்டது நண்பர்களே...!

      காமிக்ஸ் கிளாசிக்ஸ் முதற்கொண்டு நமது பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிடும் அனைத்து இதழ்களையும் வாங்குவதற்கு முக்கிய காரணம், நான் ஒரு தமிழ் காமிக்ஸ் சேகரிப்பாளன் என்பதே! ஏதாவது ஒரு அரிய தருணத்தில் பழைய நினைவுகளை அசை போட உதவும் என்பது நான் காமிக்ஸ் கிளாசிக்ஸ் வாங்குவதற்கான உப காரணம். அனுபவித்து செய்ய வேண்டிய ஒன்றை வெறும் சடங்காய் செய்தால் சலித்து விடும் (என் காமிக்ஸ் சேகரிப்பும் கொஞ்சம் அந்த ரகம்தான்!). என்னுடைய சேகரிப்பு சிறிதுதான் என்றாலும் அனைத்து பழைய கதைகளையும் தேடித் பிடித்து படித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. CC-யில் தேர்ந்தெடுத்த தரமான கதைகளை வெளியிடாமல் வெறுமனே மாயாவி, நீராவி என்று வண்டியை ஓட்டினால் ரொம்ப நாள் தாங்காது!

      புதிய வாசகர்கள் சேரும் இவ்வேளையில் இப்படியான விஷப் பரிட்சைகள் தேவைதானா? நம்முடைய பழைய காமிக்ஸ் மோகத்துக்கு எஞ்சியிருக்கும் ஒரே தமிழ் காமிக்ஸ் பதிப்பகத்தின், மின்வெட்டு போக மிஞ்சியிருக்கும் விலை மதிப்பற்ற நேரத்தை வீணடிப்பது முறைதானா?! நான் யாருடைய ரசனையையும் குறை கூறவில்லை, ஆனால் புதிய கதைகள் வர தடைக்கற்களாக அல்லது வேகத்தடையாக இருக்கும் காமிக்ஸ் கிளாசிக்ஸ் நமக்கு தேவைதானா?! இந்த விசயத்தில் வாசகர்கள் நிர்பந்தத்திற்கு ஆளாகாமல் ஆசிரியர் சுயமாக முடிவெடுத்தல் நலம்! கதைத்தேர்வு ஒத்து வரவில்லை என்றால் CC-ஐ மூட்டை கட்டுவதே மேல்!

      வருடத்திற்கு 7 டைஜெஸ்டுகள் வீதம் (ஒன்று கலரில் வேறு!) இது போன்ற அரதப் பழைய கதைகளை வெளியிடுவதில் பொன்னான நேரத்தை வீணடிக்காமல், கொட்டிக்கிடக்கும் புதிய காமிக்ஸ் படைப்புகளை அறிமுகப்படுத்துவதிலும், மொழிப்பெயர்ப்பு தரத்தை மேம்படுத்துவதிலும் விஜயன் அவர்கள் தமது சக்தியை செலவழிக்கவேண்டும் என்பதே அக்கறையுள்ள ஒவ்வொரு தமிழ் காமிக்ஸ் ரசிகனின் விருப்பமாய் இருக்கக் கூடும். காலத்திற்கேற்ப மாற்றம் பெற்றுள்ள புதிய சூப்பர் ஹீரோ கதைகளை (உதாரணம் பேட்மேன்) வெளியிடுவதற்கு அதீத ராயல்டி ஒரு தடையாக இருக்குமானால், பக்கங்களைக் குறைக்கலாம்! 50 வண்ணப் பக்கங்களில் புதிய, தரமான ஒரு கதையை தமிழில் படிக்க ரூ.75 கூட கொடுக்கலாம்!

      கடைசியாக ஒரு கருத்து! இந்த வருடத்தில் வெளிவந்த மோசமான முன்னட்டை SHSS உடையதாகத்தான் இருக்க வேண்டும்! மட்டமான கலர் காம்பினேஷன், லிப்ஸ்டிக் பூசிய உதடுகளுடன் ஸ்பைடரின் முகம் கிட்டத்தட்ட கறுப்புக் கிழவியை ஞாபகப்படுத்தியது! ஆனால், பின்னட்டை சூப்பர்! நல்ல வேளையாக டிராப்ட் கவரில் இருந்த "புத்தம் புதிய சாகஸங்கள்" என்ற காமெடியான tagline-ஐ ஆசிரியர் எடுத்து விட்டார்! :)

      Delete
    3. இன்னொன்று புரிகிறது! ஸ்பைடர், ஆர்ச்சி & மாயாவி - இவர்களின் தரமான(!) முதல் 13 கதைகளை மட்டும் போட்டு விட்டு பிறகு டைஜெஸ்டை மூட்டை கட்டி விடுவீர்கள் அப்படிதானே?! ;)

      Delete
    4. Karthik Somalinga :// "அனுபவித்து செய்ய வேண்டிய ஒன்றை வெறும் சடங்காய் செய்தால் சலித்து விடும்"//

      நூற்றுக்கு நூறு நான் ஆமோதிக்கும் சங்கதி ! பழைய இதழ்களை சேகரிக்கும் வேட்கையில் நிறைய பணமும், நேரமும் செலவிடும் நண்பர்களை நான் சந்திக்கும் போதெல்லாம் கேட்கும் கேள்வி இது தான் ! ஆனால் ஒவ்வொருவரும் இதில் ஒரு வித சென்டிமென்டான ஈடுபாட்டோடு இருப்பதால் - அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்திட வேண்டியது அவசியமாகின்றது !

      உங்களது பதிவில் பல விஷயங்கள் நண்பர்களின் உஷ்ணத்தை உயர்த்திடுமென்பது obvious எனும் போதிலும் உறுதியாக கருத்துக்களைப் பதிவு செய்தது ஒரு gutsy attempt !

      //" இது போன்ற அரதப் பழைய கதைகளை வெளியிடுவதில் பொன்னான நேரத்தை வீணடிக்காமல், கொட்டிக்கிடக்கும் புதிய காமிக்ஸ் படைப்புகளை அறிமுகப்படுத்துவதிலும், மொழிப்பெயர்ப்பு தரத்தை மேம்படுத்துவதிலும் விஜயன் அவர்கள் தமது சக்தியை செலவழிக்கவேண்டும் என்பதே அக்கறையுள்ள ஒவ்வொரு தமிழ் காமிக்ஸ் ரசிகனின் விருப்பமாய் இருக்கக் கூடும்"//

      No worries ....இதில் எனது நேரடி கவனத்தை அவசியப்படுத்தும் விஷயங்கள் அதிகம் இல்லை. இந்த 6 DIGEST இதழ்களுமே முந்தைய ஒரிஜினல்களின் "ஈயடிச்சான் காபி" களாகவே இருந்திடப் போகின்றன ! எனது focus எங்கே இருந்திடல் அத்தியாவசியம் என்பதில் நிச்சயம் எனக்குத் தடுமாற்றம் இல்லவே இல்லை !

      அப்புறம்...நான் என்றைக்குமே ஒரு சிறந்த வியாபாரியாக இருந்திடப் போவதில்லை - at least நமது காமிக்ஸ்களைப் பொறுத்த வரை ! :-)

      Delete
    5. Karthik Somalinga : Digest இதழ்களின் விற்பனையே அவற்றின் ஆயுளைத் தீர்மானிக்கும். பார்க்கலாமே..!

      Delete
    6. //இந்த 6 DIGEST இதழ்களுமே முந்தைய ஒரிஜினல்களின் "ஈயடிச்சான் காபி" களாகவே இருந்திடப் போகின்றன//
      புதிய பதிப்பாக / மொழிப்பெயர்ப்புகளாக இருந்திடும் பட்சத்தில் உங்கள் டீமுக்கு நிறைய வேலை வைத்துவிடும் என்று நினைத்தேன்!

      //எனது focus எங்கே இருந்திடல் அத்தியாவசியம் என்பதில் நிச்சயம் எனக்குத் தடுமாற்றம் இல்லவே இல்லை!//
      மகிழ்ச்சி சார்! :)

      //அப்புறம்...நான் என்றைக்குமே ஒரு சிறந்த வியாபாரியாக இருந்திடப் போவதில்லை - at least நமது காமிக்ஸ்களைப் பொறுத்த வரை ! :-)//
      இருக்கலாம் தவறில்லை, புதிய வாசகர்களை சென்றடைய ஒரு சிறந்த வியாபாரியால் மட்டுமே இயலும்! :)

      //உங்களது பதிவில் பல விஷயங்கள் நண்பர்களின் உஷ்ணத்தை உயர்த்திடுமென்பது obvious//
      உங்களை கோபப் படுத்தவில்லை என்ற மட்டில் மகிழ்ச்சி! ;) சொல்ல வந்த கருத்துக்களை புரிந்து கொண்டதற்கு நன்றி சார்!

      Delete
    7. Karthik Somalinga : சிறந்த வியாபாரி இந்நேரத்திற்கு சூ.ஹீ.சூ.Spl -2 க்கு ரவுண்ட் கட்டி இருப்பார் !

      Delete
    8. அந்த மாதிரியான "சிறந்த வியாபாரி" நீங்கள் இல்லை என்பதை அறிவதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்! :)

      SHSS 2 இனி இல்லை - தப்பித்தது தலை! :D

      Delete
    9. டியர் கார்த்திக் , உங்களின் பதிவில் உள்ள காட்டத்தை, சிறிது குறைத்து இருக்கலாம் . சூப்பர் heros யை ,சிறிய வயதில் ரசித்த mentality யோடு தற்போது அணுக இயலவில்லை என்பதே கசப்பான உண்மை .
      எடிட்டர் சொன்னதுபோல் ,பழிவாங்கும் பொம்மை யை ரசித்தது போல் ,அரக்கன் ஆர்டனியை ரசிக்க முடியவில்லை ! இருந்தாலும் என் பால்ய காலத்து மறக்க முடியாத ஹீரோக்கள் என்ற முறையில் , tiger கதை 2 copy வாங்கினால் , சூப்பர் ஹீரோஸ் யை 1 copy யாவது வாங்குவேன் be genuine , எடிட்டர் இவ்வளவு சொன்ன பிறகு , திரும்பவும் முதலில் இருந்து ,ஆரம்பித்து ,சூப்பர் ஹீரோஸ் பிடிக்க வில்லை என்று சொல்வது முறைதானா கார்த்திக் !
      இனிமேல் பழைய ஹீரோஸ் கிளாச்சிக் ல் மட்டும் தான்,என்று எடிட்டர் உறுதியாக சொல்லிருக்கிறார். உங்களுக்கு விருப்பம் எனில் வாங்கலாம் , இல்லை எனில் please ignore it !
      காமிக்ஸ் கிளாச்சிக் யையும் வாங்கிவிட்டு , ஐயோ மொக்கையான கதை என புலம்ப வேண்டாம் , ஒரு உபரி தகவல் ,எடிட்டர் கிளாச்சிக் ல் அறிவித்துள்ள சார்லி ன் குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் பாக்கெட் சைஸ் ல் வந்த 40 பக்க மரண மொக்கை கதை , இருந்தாலும் வாங்குவேன் !

      Delete
    10. நன்றி கார்த்திக். இதையே தான் நானும் சொல்ல நினைத்தேன். அனைத்தும் அப்பட்டமான உண்மை. லயனின் எதிர்காலம் புதிய வாசகர் வட்டத்தைச் செல்வதிலேயே உள்ளது. அது இது போன்ற SHSP மூலம் நடவாது.

      எங்கள் அன்பின் எடிட்டரும் அடிப்படையைப் புரிந்துகொண்டமை மகிழ்ச்சி தருகின்றது.

      Delete
    11. @uthaman
      //காமிக்ஸ் கிளாச்சிக் யையும் வாங்கிவிட்டு , ஐயோ மொக்கையான கதை என புலம்ப வேண்டாம்//
      நான் சொன்னதன் சாராம்சம் கதை மொக்கை என்று புலம்புவது அல்ல! :) CC வெளி வருவதால் நமது புதிய லயன் / முத்து வெளிவருவதில் தாமதம் ஏற்படக் கூடாதே என்பதும், 7 CC வெளிவரும் இடத்தில புதிய கதைகள் தாங்கிய 7 லயனோ அல்லது முத்துவோ வெளிவரலாமே என்ற ஆதங்கமும்தான்!

      Delete
    12. @Mayooresan
      //எங்கள் அன்பின் எடிட்டரும் அடிப்படையைப் புரிந்துகொண்டமை மகிழ்ச்சி தருகின்றது.//
      ஆம், மகிழ்ச்சியளிக்கும் விஷயம் அது! :)

      Delete
    13. டியர் கார்த்திக்,

      புதிய வாசகர்கள் வருவதர்க்கு நல்ல கதையும், அதற்கு தகுந்த பேப்பர் மற்றும் presentation மட்டுமே தேவை, Lord of the Rings கதை 1949 ல் எழுதப்பட்டது, இன்றளுவும் அனைவராலும் விரும்பி படிக்கும் புத்தகம், படமாகவும் வந்து வெற்றி பெற்றதாகும்.

      கோல்டன் ERA of comics இப்பொழுது வரும் comics கள் அல்ல.

      Cinebook போன்றவர்கள் அதை உணர்ந்து பழைய கோல்டன் era கதைகளை மட்டுமே பிரசுரித்து வெற்றி கண்டுள்ளனர்.

      பழைய புத்தகங்களை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை கூறி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


      Delete
    14. @Suresh:
      உங்களுக்குகான பதில் இந்த வரிகளில் உள்ளது!
      //மாயாவி, ஜானி நீரோ, லாரன்ஸ் டேவிட், ஸ்பைடர், ஆர்ச்சி போன்ற நிகழ்காலத்திற்கு சற்றும் ஒவ்வாத நாயகர்களை//

      //CC-யில் தேர்ந்தெடுத்த தரமான கதைகளை வெளியிடாமல் வெறுமனே மாயாவி//

      ------------------

      //புதிய வாசகர்கள் வருவதர்க்கு நல்ல கதையும்//

      அந்த நல்ல கதைகள் எவை என தீர்மானிப்பதில்தான் பிரச்சனையே! இங்கு எத்தனை பேர் மினி லயன், திகிலில் வந்த நல்ல கதைகளை CC-இல் கேட்கிறார்கள்?! அல்லது முத்து மற்றும் லயனில் வந்த மாயாவி, ஸ்பைடர், ஆர்ச்சி வகையறாக்கள் தவிர்த்த கதைகளை கேட்கிறார்கள்?!

      //Lord of the Rings// & //லக்கி லுக், சிக் பில், ரிப்போர்டர் ஜானி கதைகளும் பழைய கதைகளே//
      கௌபாய், நகைச்சுவை, புராண மற்றும் பாண்டஸி கதைகள் காலத்தை தாண்டியவை! ஹாலிவுட்டில் 50 வருடங்களுக்கு முன்பு வந்த படங்களை / கதாபாத்திரங்களை அப்படியே வெளியிடாமல், ரீமேக் / ரெப்ரெஷ் / ரீலோட் செய்து வெளியிடுவது எதனால்? இரசனை மாறி விட்டதுதான் காரணம்! ரிப்போர்டர் ஜானி காலத்திற்கேற்ப அப்டேட் ஆனவர்! :)


      //புதிய வாசகர்கள் வருவதர்க்கு நல்ல கதையும்//
      காலத்திற்கேற்ற என்பதை சேர்த்துக் கொள்ளுங்கள்!

      உங்களால் தியாகராஜ பாகவதர் படங்களை உட்கார்ந்து பார்க்க முடியுமா?! அவர் அந்நாளைய சூப்பர் ஸ்டார்!


      //தான் ஒவ்வொரு தமிழ் காமிக்ஸ் ரசிகனின் விருப்பத்தை கூறுவதாக சொல்வது சரியல்ல//
      ஒத்துக்கொள்கிறேன்! இவை என் கருத்துக்களே! :)

      Delete
    15. உங்கள் கருத்துகளுக்கு நன்றி புத்தக பிரியன்! (அவருடைய கமெண்டுகள் கீழே!)

      //மூட்டை கட்டி விட கங்கணம் கட்டி கொண்டு அலைகிறார்//
      ச்சே ச்சே! ;)

      //அவற்றை படித்து பார்த்தால் தான் அதன் அருமை புரியும்//
      CC-யில் தேர்ந்தெடுத்த தரமான கதைகளை வெளியிடாமல் வெறுமனே மாயாவி & கோ. கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தவறு என்று தெளிவாக சொல்லி இருக்கிறேனே! நான் மேலே சுரேஷ்க்கு அளித்த பதிலையும் பாருங்கள் பிரியன்!

      //புதிய வாசகர்கள், புதிய வாசகர்கள் என புலம்புவது தேவை அற்றது//
      இது மிகவும் தவறான அணுகுமுறை!

      //இப்போது உள்ள வாசகர் வட்டம் பெரும்பாலும் பழைய வாசர்கள் தான்//
      அதுதான் பிரச்சினையே!

      //புது வாசகர்கள் வருவர், அவர்கள் எல்லோரும் ஒரு வருடம் ஒரு புக் வர வில்லை என்றால் நம்மை போல் வெயிட் பண்ணி கொண்டு இருப்பார்களா//
      நாம் வெய்ட் செய்த காரணத்தினால் நமக்குதான் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என கருதுவது சரியா? தவிரவும் இப்போது மாதம் தவறாமல் புத்தகங்கள் வருகின்றன! புதிய வாசகர்களை ஈர்ப்பதே எந்த ஒரு பதிப்பகத்தாருக்கும் வியாபார ரீதியாக நல்லது!

      //பழைய நல்ல கதைகள் கண்டிப்பாக புதிய வாசகர்களை ஈர்க்குமே ஒழிய குறைக்காது. //
      & //"rise of தி planet apes "//
      நான் மேலே சுரேஷ்க்கு அளித்த பதிலை பாருங்கள் பிரியன்!

      //அவ்வாறு பார்த்தால் காமிக்ஸ் படித்தல் என்பதே பலரின் பார்வையில் முதிர்ச்சி இன்மையை குறிக்கும்//
      அது அவ்வாறு சொல்பவர்களின் முதிர்ச்சியின்மையைக் குறிக்கிறது! ஆனால் இந்த வயதில் நீங்கள் எந்த காமிக்ஸ் படிக்கிறீர்கள் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியதொன்று! ;)

      //நிர்பந்தத்தின் மேல் இயங்க கூடியவர் நமது விஜயன் சார் அல்லர்//
      உண்மை! :) SHSS-2 இல்லை எனும் போதே கண்கூடாக அது தெரிகிறது! ;)

      //ஒரு நல்ல வியாபாரியால் உணர்வு பூர்வமான வாசகர் வட்டத்தை பெற்று இருக்க முடியாது நண்பரே//
      உண்மை!

      //மனிதத்தை விட்டு விடு என்று சொல்வதை போல் உள்ளது உங்கள் எண்ணம்//
      புரியவில்லை! பெரிய வார்த்தைகள்! :)

      //வேணாமே..//
      அதைதானே நான் சொன்னேன்! :D

      Delete
  3. மஞ்சள் சட்டை...சிகப்பு துண்டு...பச்சை யாராச்சும் உண்டா அடுத்து ? :-)

    ReplyDelete
  4. I hope at least the Super Hero Digests will be coming as planned/advertised even if it will not be printed with the regular series.

    நான் இப்போது பச்சை T-Shirt அணிந்துள்ளேன் :)

    ReplyDelete
    Replies
    1. CLASSICS DIGESTS ARE ALREADY UNDERWAY IN THE PRODUCTION FRONT ! THEY WILL BE PUBLISHED FOR SURE !

      Delete
    2. Periyar : ரைட் ...பச்சையும் ஒ.கே. ..அடுத்து ப்ளூ ?

      Delete
  5. Mr. Editor purinja mathiri irukuthu puriyatha mathiriyum iruku kamalhasan paechai kta feeling. Neenga kamalhasan rasigar ��

    ReplyDelete
  6. அடக்கடவுளே! இத்தனையும் சொல்லிவிட்டு கடைசியாகப் போட்டீர்களே ஒரு போடு! எதிர்பாராத திருப்பத்துடன் முடியும் ஒரு சிறுகதையைப் போல இப்பதிவினை முடித்திருக்கிறீர்கள் சார்!

    ஒரு சிறு ஆலோசனை! (சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றினால் மன்னிக்கவும்)
    நீங்கள் சொல்லியிருப்பது போலவே மறுபடியும் தரமான ஆர்ச்சி, ஸ்பைடர், மாயாவியின் சூப்பர் கதைகள் கிடைத்து அதைப் பதிவிடும்பட்சத்தில் இரண்டு வண்ணக்கதைகளுடன் நம் சூப்பர் ஹீரோக்களில் யாரையாவது கருப்புவெள்ளையில் இணைத்துவிட்டால் ( உதாரணத்துக்கு, 2 லார்கோ கதைகள்+ ஒரு ஆர்ச்சி கதை) இருதரப்பு வாசகர்களையும் சந்தோஷப்படுத்திவிட ஒரு வாய்ப்புள்ளதே?
    (எத்தனைபேரிடம் வாங்கிக்கட்டிக்கொள்ளப் போகிறேனோ தெரியவில்லை!)

    ReplyDelete
    Replies
    1. vijay Erode : மறுபடியுமா..? முதல்லே இருந்தா ??

      Delete
    2. ஹைய்யா! அப்போ நான்தான் blue!

      Delete
  7. Nalla explanation unmayaga ithu rasanai matrum sammantha patta visayam. Largo, tiger idam ethirparkum visayathai nam Super hero idam ethirparpathu nam editor idam udane rathapadalam colouril ethirparpathuku samam. Shss nichayamaga ilavayathu vasagargalai namaku tharum.

    ReplyDelete
  8. Dear edi 10/10 kuttiyai some questions result ennachu. Answer poduvingala maatingala

    ReplyDelete
    Replies
    1. மஞ்சள் சட்டை மாவீரன் : மாவீரரே...இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க வலைக்கு அப்பாற்பட்ட நண்பர்களும் ஆர்வம் தெரிவித்துள்ளார்கள் ! So - வரவிருக்கும் "தங்கக் கல்லறை" இதழில் இந்தக் கேள்விகளும் இடம் பெறும்..! அதன் பின்னர் இங்கே விடைகளை வெளியிடுவோமே ?!

      Delete
  9. எடிட்டர் சார்!

    டிசம்பரில் டெக்ஸ் வருகிறாரா இல்லையா? நிறையப் பேர்களின் கேள்வி இது. பதில் ப்ளீஸ்!

    ReplyDelete
    Replies
    1. vijay Erode : சாரி விஜய் ! டெக்ஸின் அடுத்த சாகசம் - பெப்ரவரி 2013 -ல் தான் ! ரூபாய் பத்து விலையில் வரவிருந்த "காவல் கழுகு" தற்சமயத்திற்கு postponed ! டிசம்பரில் "மரணத்தின் நிசப்தம் " மாத்திரமே !

      Delete
    2. ஆ! அகில உலக டெக்ஸ் ரசிகர்களின் ஏகோபித்த கண்டனத்தை சம்பாதித்துள்ளீர்கள் சார்! இந்த மாபெரும் இழப்பை ஈடுகட்டும் வகையில் அடுத்த வருடம் 'குட்டியானதொரு கட்டில் ஸைசில்' டெக்ஸை வெளியிட்டு பரிகாரம் தேடிக்கொள்ளுங்கள்.

      Delete
  10. \\காமிக்ஸ் என்பது பில்டர் காபி குடிப்பதற்கு ஒத்ததொரு ரசனை ! காலையில் எழுந்து ரெண்டு மைல் தள்ளி இருக்கும் கடைக்குப் போய் பில்டர் காபி குடிப்பவருக்கு மாத்திரமே அதன் பிரத்யேக சுவை தெரியும். நாம் அனைவருமே அது போன்ற ரசிகர்கள் ! இந்த fantasy கதைகளை இன்றும் தொடர்ந்து ரசிக்கும் பாக்கியம் பெற்றுள்ள நம் நண்பர்கள், அந்த பில்டர் காபியிலும் ஒரு ஸ்பெஷல் ரகத்தை ரசிக்கத் தெரிந்த ஆற்றல் கொண்டவர்கள் என்றே சொல்லிடுவேன்!\\

    இந்த நான்கு வரிகள் போதும் சார், நீங்க இவ்வளுவ பெரிய பதிவா பதில் சொல்லியிருக்க தேவையில்லை. Cold காபி, இன்ஸ்டன்ட் காபின்னு சாபிட்ரவங்க மத்தியில எனக்கும் பில்ட்டர் காபினா ரொம்ப பிடிக்கும். மீண்டும் இதே சுவையோட பில்ட்டர் காப்பிய எதிர்பாக்கிறேன்.

    ReplyDelete
  11. சார்,
    என்னைப் பொறுத்தவரை ரசனைகளில் எந்த மாற்றமுமில்லை, முன்பு வந்த சூப்பர் கதைகளை விட இப்போது உள்ள கதைகள் சொதப்பியதே காரணம்.
    மற்றப்படி அவர்கள்மேல் உள்ள பற்று, நேசம் எல்லாம் அப்படியேதான் உள்ளது. இதைப்போல் இனி எத்தனை புத்தகங்கள் வந்தாலும் வாங்கி அடுக்கி வைத்துக் கொள்வோம். பீனிக்ஸ் பறவையைப்போல் எழுவார்கள் மறுபதிப்பின் மூலம்.
    அப்புறம் டிராகன் நகரம், சைத்தான் சாம்ராஜ்யம், கார்சனின் கடந்த காலம், மர்மக் கத்தி, சைத்தான் வீடு, பனி மண்டலக்கோட்டை etc., போன்றவை அடுத்த வருட லிஸ்ட்டில் இல்லாது போனதால் எப்போது வெளியிடுவதாக உத்தேசம்?

    ReplyDelete
    Replies
    1. MH Mohideen : வரவிருக்கும் "தங்கக் கல்லறை" இதழையும் ; தொடரவிருக்கும் NEVER BEFORE ஸ்பெஷலையும் பாருங்கள்...எதிர்நோக்கி இருக்கும் 2013 -க்கு நான் திட்டமிட்டு வரும் புதிய கதைகள் ; தொடர்கள் ; நாயகர்கள் பற்றிய கலக்கல் தோரணங்கள் காத்துள்ளன ! நம் கவனத்தையும்; ஆர்வத்தையும் அதில் செலவிட்டால் இன்னுமொரு அதிரடி ஆண்டு உருவாகிட வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளன !

      Delete
  12. Thank u for bringing , LARGO WINCH in Tamil Sir ... And also thank u for online eBay shopping ... I bought two largo comics and presented one to my brother . Wild west also superb , quality colorful comics . My first comics bought here is ratha padalam - XIII , but now I am a big fan to largo largo largo ....thank u sir for these wonderful comics ( sorry I am commenting from my iPhone , so I am unable to type in tamil

    ReplyDelete
    Replies
    1. karthik : The best of Largo is yet to come....! 2013 will showcase more of Largo !

      Delete
    2. there is a good free app named 'TYPE TAMIL' in app centre ,after typing in tanglish it will convert in to tamil and we can copy paste it in any where (facebook ,twitter, messages etc) but when comes to replying in a blog I can't copy and paste ... but there is a solution to it unicode keyboard for an iphone but I don't know how to use it...
      Thank u Vijayan sir for your reply... waiting for LARGO WINCH MORE

      Delete
  13. Thiru
    Karthik somalinga:

    adi pinnittinka..!

    unkal karuthukale
    enathu karuthukalum....

    Vijayan sir

    SHSS pola innoru muyarchi ini vendam.....

    puthu puthu kathai thodarkalai tamilukku arimukam seyya muyarci edunkal...

    Pona matham niraiya puthiya vasakarkal kidaithu iruppathal
    athika virpanaiyil viyappu illai....

    ReplyDelete
  14. ஆசிரியரது பதிவு அவரது உள்ளத்திலிருந்த கருத்துக்களை மடைபோல கொட்டியிருக்கிறது. அத்தனை தரப்புக் கருத்துக்களுக்கும் மதிப்பளித்துப் பொறுமையாகப் பதிலளித்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.

    ஓவியர்கள் நிலை குறித்த உங்களது பதிவு மனதைக் கலங்கடிக்கிறது. வசதி, வாய்ப்பு, படிப்பு உள்ளவர்கள் மாற்றுவழியைத் தேடி தங்கள் கலையை விடாமல் பிடித்து நவீனத்தோடு இணைந்துவிட்டார்கள். அந்த வழிகள் இல்லாதவர்கள் நிலை சோகம்தான். இது அவர்களுக்கான அழிவு அல்ல... அருமையான ஓவியக் கலையின் அழிவே... நெஞ்சம் கனக்கிறது....

    ReplyDelete
  15. //No worries ....இதில் எனது நேரடி கவனத்தை அவசியப்படுத்தும் விஷயங்கள் அதிகம் இல்லை. இந்த 6 DIGEST இதழ்களுமே முந்தைய ஒரிஜினல்களின் "ஈயடிச்சான் காபி" களாகவே இருந்திடப் போகின்றன ! எனது focus எங்கே இருந்திடல் அத்தியாவசியம் என்பதில் நிச்சயம் எனக்குத் தடுமாற்றம் இல்லவே இல்லை !//

    Dear Vijayan:

    Please do not neglect your long time readers like myself just because one reader asked you to discard the old Fleetway stories. Please do release the digests that you have already promised, and do continue the series after the first 6 digests are out. I would like to get all the fleetway stories that came out in the horrible pocket size classics to be reissued in the normal digest size.

    I still haven't received the SHSS special, but I don't care much because I am only interested in the Fleetway Stupendous series and secret agent series. The Mayavi stories that came in the valiant magazine (such as the one in SHSS) are not that good in quality. So if you wish you can discontinue the SHSS type of stories and concentrate only on the Fleetway super library stories.

    ReplyDelete
    Replies
    1. BN USA : It is not a question of me discarding something or continuing something just because a reader feels strong about it. I go entirely by my gut feel & I have always made it very clear where my priorities lay.

      The future of the CLASSICS DIGESTs depends solely on their sales & success. If they indeed do well at the turnstiles, there will be more reprints in the following year & thereon. But we do need to wake up to the fact that life exists beyond the Fleetway series.

      The DIGESTs - if they do well will focus on more titles from Lion Comics ; Thihil & Junior Lion as well. They will not be the exclusive domain of just the (Muthu Comics) Fleetway reprints.

      Delete
    2. எடிட்டர் மற்றும் நண்பர்களே,

      SHSS ஒரு மகத்தான வியாபார வெற்றி என அறிய முடிகின்றது. எனவே வருடத்திற்கு ஒரு முறை இவ்வாறு ஒரு SHSS வெளியிட்டால் அனைவரும் மறுபடியும் வாங்கிடுவார்கள் என்பது திண்ணம். அப்படி வாங்காமல் விடுபவர்களால் நஷ்டம் எற்பட்டிடாது என நினைக்கத் தோன்றுகிறது.

      மற்றபடி, புதிய முயற்சிகலான Largo Winch போன்றவை மிகச்சிறப்பாக இருந்கின்றன.

      I would say so much discussions about SHSS reminds me of the cliche "Much ado about nothing"..!

      SHSS was absolutely welcome, was different and enjoyable and would still be a super hit if it is done once more. After all, we need to take time in life, to go back to our childhood fantasies and memories .. rekindle them occasionally and SHSS did exactly that ...!!

      நான் பலமுறை பின்னூட்டமிட்டது போல் ரியலிசம் தழுவிய காமிக்ஸ்கள் வரும் அதே வேளையில் ஓரிரு fantasy கதைகளும் சேர்வதே - appears to be the right mix!

      Delete
    3. Editor Sir:
      "It is not a question of me discarding something or continuing something just because a reader feels strong about it. I go entirely by my gut feel & I have always made it very clear where my priorities lay"
      I appreciate your justification Sir...

      Comics Lover:
      "SHSS ஒரு மகத்தான வியாபார வெற்றி என அறிய முடிகின்றது. எனவே வருடத்திற்கு ஒரு முறை இவ்வாறு ஒரு SHSS வெளியிட்டால் அனைவரும் மறுபடியும் வாங்கிடுவார்கள் என்பது திண்ணம். அப்படி வாங்காமல் விடுபவர்களால் நஷ்டம் எற்பட்டிடாது என நினைக்கத் தோன்றுகிறது"
      முற்றிலும் உண்மை நண்பரே

      Delete
    4. I too second that. Editor: Please continue the Comics classics/Digest - reprints with all the Spider, Archie and Maayaavi stories.

      Delete
  16. Hi BN USA,

    I support 100% every word of yours in this post. What we are looking for is the original fleetway digest books. To be precise, the three 'foundations' of Muthu comics in their original format. Not bothered about the so-so Mayavi stories of the Valiant and Vulcan series!

    ReplyDelete
  17. டியர் எடிட்டர் சார்.
    எந்த ஒரு படைப்புமே எல்லோரையும் திருப்தி படுத்தாது. இது மனித ரசனைகள் சம்பந்தப்பட்டது. இது வரை இந்த ஆண்டில் வெளி வந்த இதழ்களிலேயே - அசாத்திய விறுவிறுப்போடு E -Bay -யிலும் சரி ; முகவர்களிடமும் சரி, விற்பனை கண்டுள்ள இதழ் நம் சூ.ஹீ.சூ.ஸ்பெஷல் தான் !! குறிப்பாக இந்த இதழின் E -Bay விற்பனையின் வேகம் இது வரை தாங்கள் கண்டிராததொரு சங்கதி !! என்று சொல்லி உள்ளீர்கள். இதிலேருந்து தெரிகிறது மும்முர்த்திகளின் மேல் வாசகர்களுக்கு உள்ள கிரேஸ்! எனவே புத்தம் புதிய இதழ்களுடன் மாயாவி, ஆர்ச்சி, ஸ்பைடர் கதைகளையும் தாங்கள் தொடர வேண்டும் என மும்மூர்த்தி ரசிகர்களின் சார்பில் கேட்டு கொள்கிறேன். நன்றி.

    எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

    ReplyDelete
    Replies
    1. jayakanthan : மாயாவி கதைகளில் மிச்சம் மீதி ஏதும் இல்லை ! ஸ்பைடரைப் பொறுத்த வரை இனி எஞ்சி நிற்கும் கதைகள் - 'நிச்சயம் ஜீரணிக்கவே இயலாதவை' ரகத்தில் உள்ள 150 + பக்க சங்கதிகள். இதனை வெளியிடுவது என்பது வாசகர்களை தூங்கிடச் செய்யும் சுலபப் பாதையாக அமைந்திடுமே தவிர - அதனை படித்து ரசிக்க வாய்ப்புகள் சொற்பமே.

      எஞ்சி இருக்கும் ஆர்ச்சி கதைகளில் மோசமில்லாத ஒரு சிலவற்றை - பல நாயகர்கள் இணைந்து வெளியாகும் ஸ்பெஷல் வெளியீடுகளில் பார்த்திடலாம்.

      Delete
  18. We are honest triers though...! really awesome words..i loved it..
    This is your best blog!

    Regarding the shss-> ரஜினி படம் சார்..don't expect logic ..as long as they are in the digest..
    "அவர்கள் வழி தனி வழி"...this is the best option we have...

    Then age factor-> As far as i know, comics doesn't have any age factor, but graphic novels do...

    shss -> in one word 'Super Hit'..but the critics won't love it....



    ReplyDelete
  19. விஜயன் சார்

    என்னை பொருத்தவரை நீங்கள் எடுத்துள்ள முடிவு மிகவும் சரியே ....

    புதிய கதைகள் (லயன் / முத்து) ஒரு வரிசையிலும், பழைய கதைகள் (காமிக்ஸ் கிளாசிக்) மறுபதிப்புகளாக ஒரு வரிசையிலும் என்பது சரியான முடிவே.

    திருப்பூர் ப்ளுபெர்ரி

    ReplyDelete
  20. dear editor,

    பின்வரும் வினாவிற்கு ஆம்/இல்லை என்று பதிலளிக்கவும். ஆம் என்ற பதிலிற்கு முழுமதிப்பெண்கள் வழங்கப்படும.

    2013 க்கான அறிவிப்பில் அட்டகாசமான தீபாவளி மலர் இடம் பெற்றுள்ளதா? இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. vijay Erode : காத்திருப்பதும் ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கென்பது என் அபிப்ராயம் ! ஆமோதிப்பவர்களுக்கு 10/10 !

      Delete
    2. இந்த வருட தீபாவளியே இன்னும் முடியல.. அதுக்குள்ள அடுத்த தீபாவளி வெளியீடுபத்தி கேட்கிறாங்களே... முடியல... முடியல...

      ஆசிரியரே: ஆமோதிக்கிறேன். 10க்கு 10 உண்டா?

      ஊர்ல கரண்ட் இருக்குபோல....

      Delete
    3. Podiyan : நேற்றும், இன்றும் தமிழகம் முழுவதும் விடுமுறை தினங்கள் தானே..So - தொழிற்சாலைகள் ஏதும் இயங்காதென்பதால் மின்வெட்டுக்கும் விடுமுறை ! நாளை நாங்கள் கடமையைச் செய்யப் புறப்படும் போது மின்னிலாக்காவும் தங்கள் கடமையைச் செய்யத் தயாராகி விடுவார்கள் !

      Delete
    4. ஓ.... லாப் டாப்பில் தட்டுவதற்கு உங்களுக்கும் நேரமும் கிடைத்திருக்கிறது; மின்சாரமும் இருக்கிறது - ஒப்புநோக்கும் வேலையும் (ஃப்ரூப் ரீடிங்) நடப்பதாக பட்சி சொல்கிறதே....?

      Delete
    5. Podiyan::

      இப்போதிருந்தே கேட்டு வைத்தால்தானே அடுத்த தீபாவளிக்காவது தயாராகும் நண்பரே! NBS க்குப் பிறகு ஒரு மெகா இதழ் தயாரித்திட நிறைய அவகாசம் இருப்பதால் ஆசிரியரிடம் இது ஒரு நினைவூட்டல் தொடர்பான கேள்வியே! தவிர, அழுகின்ற குழந்தைக்குத்தானே பால் கிடைக்கும்?!

      Delete
  21. டெக்ஸ் ஐ நட்டாற்றில் விட்டதால் நான் வெளிநடப்பு செய்கிறேன்

    ReplyDelete
  22. ஆசிரியருக்கு:
    எத்தனையோ ஹீரோக்கள் - நவீன வடிவிற்கு மாறிக்கொண்டிருக்கும்போது, ஏன் நமது ஆர்ச்சி, ஸ்பைடர், இரும்புக்கை மாயாவி போன்றவர்களை பதிப்பாளர்கள் அந்தக்காலத்துலயே தவிக்கவிட்டிருக்கிறார்கள்? அவர்களை ட்ரை பண்ணவே இல்லையா? இல்லை... முயற்சித்து சொதப்பிவிட்டதா?

    ReplyDelete
    Replies
    1. Podiyan : மாயாவி - முயற்சித்து சொதப்பி விட்டது ! தவிரவும் அவர்களது ரசனைகள் இடம் மாறி விட்டன...!

      Delete
    2. ஆங்... கவச உடை, முகமூடி என்று மாயாவி அப்டேட் ஆனார்.. ஞாபகம் இருக்கிறது. இப்போது சூஹீசூஸ் இலும் அப்படி வருகிறார் என்று கேள்விப்பட்டோம். புத்தகம் இன்னும் இங்கே வரவில்லையாதலால் காத்திருக்கிறோம்.

      Delete
  23. மீதம் இருக்கும் spider கதைகளில் ஒன்றை தனியாக பிரசுரித்து பாருங்களேன். நிச்சயமாக நல்ல விற்பனை இருக்கும் என நம்புகிறேன். காதுல பூ சுத்திர ரகமா இருந்தாலும் spider&Co கதைகளை நான் மீண்டும் எதிர்பார்கிறேன்.

    நண்பர்களே மீண்டும் நம் காமிக்ஸில் spider கதைகளை எதிர்பார்ப்போர் இங்கே தங்கள் ஆதரவை reply மூலம் பதிவு செய்யுமாறு கேட்டுகொல்கிரேன்

    ReplyDelete
    Replies
    1. மகேஷ்,

      கண்டிப்பாக ஸ்பைடர் கதைகள் அனைத்தும் Comics Classic Digest ஆக வரவேண்டும்

      Delete
    2. Editor Sir, dont give up Spider...

      Delete
    3. Yes. All the Spider, Maayaavi and Aarchchi stories should come in the Comics Classic Digest. I too want them all.

      Delete
    4. இதை நான் ஆமோதிக்கிறேன்! வேண்டும் வேண்டும் ஸ்பைடர் வேண்டும்!

      பூபதி இல
      9962770888

      Delete
  24. //Edi: வரவிருக்கும் "தங்கக் கல்லறை" இதழையும் ; தொடரவிருக்கும் NEVER BEFORE ஸ்பெஷலையும் பாருங்கள்...எதிர்நோக்கி இருக்கும் 2013 -க்கு நான் திட்டமிட்டு வரும் புதிய கதைகள் ; தொடர்கள் ; நாயகர்கள் பற்றிய கலக்கல் தோரணங்கள் காத்துள்ளன ! நம் கவனத்தையும்; ஆர்வத்தையும் அதில் செலவிட்டால் இன்னுமொரு அதிரடி ஆண்டு உருவாகிட வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளன ! //

    மாற்றத்துக்காகக் கிடைத்திருக்கும் வரவேற்பு, உங்களைச் சில பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்க ஊக்குவித்திருக்கிறது என்று தெரிகிறது. எந்தக் கதாநாயக, நாயகியாகவும் இருக்கட்டும் - வெறுமனே, வர்ண ஓவியங்களுக்காக மட்டுமல்லாமல் - நல்ல, தெளிவான, விறுவிறுப்பான கதையம்சங்கள் கொண்ட காமிக்ஸ்களை தேர்ந்தெடுத்து தாங்கள் வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதற்காகக் காத்துமிருக்கிறோம்.

    ReplyDelete
  25. //வரவிருக்கும் "தங்கக் கல்லறை" இதழையும் ; தொடரவிருக்கும் NEVER BEFORE ஸ்பெஷலையும் பாருங்கள்...எதிர்நோக்கி இருக்கும் 2013 -க்கு நான் திட்டமிட்டு வரும் புதிய கதைகள் ; தொடர்கள் ; நாயகர்கள் பற்றிய கலக்கல் தோரணங்கள் காத்துள்ளன ! நம் கவனத்தையும்; ஆர்வத்தையும் அதில் செலவிட்டால் இன்னுமொரு அதிரடி ஆண்டு உருவாகிட வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளன //


    சார்,

    NEVER BEFORE முன்பதிவு நிலவரம் எப்படி உள்ளது ?

    "காவல் கழுகு" எப்பொழுது வரும் ? (டெக்ஸ் வரும் பத்து ரூபாய் கடைசி இதழ் இது... சொல்லபோனால் பத்து ரூபாய் புத்தகங்களுக்கு GOOD BYE சொல்ல போகும் இதழ்) ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  26. Dear Edi pls do reply for this vanaranger joe, vedhalar stories nam comics il varuma varatha. Varum aana varathu nu mattum sollidathinga

    ReplyDelete
  27. டியர் சார்,

    //" இது போன்ற அரதப் பழைய கதைகளை வெளியிடுவதில் பொன்னான நேரத்தை வீணடிக்காமல், கொட்டிக்கிடக்கும் புதிய காமிக்ஸ் படைப்புகளை அறிமுகப்படுத்துவதிலும், மொழிப்பெயர்ப்பு தரத்தை மேம்படுத்துவதிலும் விஜயன் அவர்கள் தமது சக்தியை செலவழிக்கவேண்டும் என்பதே அக்கறையுள்ள ஒவ்வொரு தமிழ் காமிக்ஸ் ரசிகனின் விருப்பமாய் இருக்கக் கூடும்"//

    கார்த்திக் மிக அழகாக தனது கருத்துக்களை வெளிபடுத்தியுள்ளார் ஆனால் அது அவருடைய கருத்தாக மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும், தான் ஒவ்வொரு தமிழ் காமிக்ஸ் ரசிகனின் விருப்பத்தை கூறுவதாக சொல்வது சரியல்ல. எனக்கு தெரிந்து சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் வந்த புத்தகங்களில் நல்ல புத்தகம்

    என்னால் இந்த புத்தகத்தை எனது குழந்தைகளுடன் படிக்க முடிகிறது,
    லக்கி லுக், சிக் பில், ரிப்போர்டர் ஜானி கதைகளும் பழைய கதைகளே அவைகளை அரதப் பழைய கதைகளாக ஒதுகிவிடுவது எவ்வளவு பெரிய தவறாக இருக்குமோ அதுபோலவே தான் இதுவும்.

    தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் அனைவரும் இங்கு தங்களது கருத்துக்களை தெரிவிப்பதில்லை ஆகவே தங்கள் முடிவு புத்தக விற்பனையை வைத்து முடிவு செய்வதாக இருக்கட்டும்.

    சுரேஷ்

    ReplyDelete
  28. SHSS simply super, பழைய படங்களை இப்பொழுது பார்ப்பது இல்லையா அல்லது கர்ணன் படம்தான் நூறு நாள் ஓட வில்லையா, ரசனைகல் மாறுபடும், பழைய படங்களை புதிய படங்களுடன் ஒப்பிட கூடாது. old is gold என்பதை உணர வேண்டும் காமிக்ஸ் கிளாசிக் தொடர வேண்டும்.

    ReplyDelete
  29. //என்னுடைய சேகரிப்பு சிறிதுதான் என்றாலும் அனைத்து பழைய கதைகளையும் தேடித் பிடித்து படித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.//கார்த்திக் கிற்கு digest இதழ்கள் மேல் அப்படி என்ன கோவம் என்று தெரிய வில்லை. அதை மூட்டை கட்டி விட கங்கணம் கட்டி கொண்டு அலைகிறார். அவற்றை படித்து பார்த்தால் தான் அதன் அருமை புரியும். அவர் "நெப்போலியன் பொக்கிஷம், சிறை மீட்டிய சித்திரக்கதை,வைரஸ் X, ஜூம்போ, முகமூடி வேதாளன், பிரமிட் ரகசியம் etc etc" போன்ற கதைகளை படித்து உள்ளாரா என தெரிய வில்லை. அவ்வாறு இருப்பின் இப்படி கூற இயலாது. தேடி படித்து பாரும் நண்பரே, நீங்களும் ஒத்து கொள்வீர்கள் என் கருத்தை.
    //புதிய வாசகர்கள் சேரும் இவ்வேளையில் இப்படியான விஷப் பரிட்சைகள் தேவைதானா? // புதிய வாசகர்கள், புதிய வாசகர்கள் என புலம்புவது தேவை அற்றது. இப்போது உள்ள வாசகர் வட்டம் பெரும்பாலும் பழைய வாசர்கள் தான். majority 30 + என்பது நிதர்சனம். புக் fair இல் மட்டுமே புது வாசகர்கள் வருவர், அவர்கள் எல்லோரும் ஒரு வருடம் ஒரு புக் வர வில்லை என்றால் நம்மை போல் வெயிட் பண்ணி கொண்டு இருப்பார்களா என்ன? மேலும் நல்ல கதைகளுக்கு வர்ணம் அத்தியாவசியம் அல்ல என்பது நம் பழைய வாசகர்களே சான்று கூறுவர். பழைய நல்ல கதைகள் கண்டிப்பாக புதிய வாசகர்களை ஈர்க்குமே ஒழிய குறைக்காது.
    //இனிமேல் மாயாவி, ஜானி நீரோ, லாரன்ஸ் டேவிட், ஸ்பைடர், ஆர்ச்சி போன்ற நிகழ்காலத்திற்கு சற்றும் ஒவ்வாத நாயகர்களை காமிக்ஸ் கிளாசிக்ஸில் மட்டும் வருமாறு ஒதுக்கி வைப்பது நலம் (அவற்றில் வருவதே வீண் வேலைதான்!)// மீண்டும் தவறான எண்ணம். நமது நண்பர் பாம்பு தீவு,கொரில்லா சாம்ராஜ்யம், சதிகாரர் சங்கம், மூளை திருடர்கள், பனி கடலில் ஒரு பயங்கர எரிமலை,காணாமல் போன கடல் (லயன்), பழி வாங்கும் பொம்மை, பாதாள போராட்டம், யார் அந்த ஜூனியர் ஆர்ச்சி,ஆர்ச்சிகோர் ஆர்ச்சி போன்ற கதைகளை படித்தால் அவர் தன எண்ணத்தை மாற்றி கொள்ள கூடும். வசூலில் பின்னிய "rise of தி planet apes " எப்போது வந்த படம்? அதை அதிகம் ரசித்தது டீன் ஏஜ் தானே? எனக்கும் இந்த shss கதைகள் பிடித்தம் இல்லை, ஆனால் சூப்பர் ஹீரோ களின் அனைத்து கதைகளும் பிடித்தம் இல்லை என்பதில் துளியும் உடன்பாடு இல்லை.
    //வயதில் உள்ள முதிர்ச்சி, நண்பர்களின் கருத்துகளில் காணாமல் போனது வியப்பே!// அவ்வாறு பார்த்தால் காமிக்ஸ் படித்தல் என்பதே பலரின் பார்வையில் முதிர்ச்சி இன்மையை குறிக்கும். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அவர்களை திருப்தி படுத்த நாம் படிக்காமல் இருந்து விடலாமா?
    //இந்த விசயத்தில் வாசகர்கள் நிர்பந்தத்திற்கு ஆளாகாமல் ஆசிரியர் சுயமாக முடிவெடுத்தல் நலம்! கதைத்தேர்வு ஒத்து வரவில்லை என்றால் CC-ஐ மூட்டை கட்டுவதே மேல்!// நிர்பந்தத்தின் மேல் இயங்க கூடியவர் நமது விஜயன் சார் அல்லர். பழைய வாசகர்கள் எங்களிடம் அவரது "i am the boss" என்று அவர் ஆபீஸ் ரூம் door இல் ஒட்டிய ஸ்டிக்கர் போன்ற அவரின் செயல்பாடுகள் நிரம்ப பிடிக்கும். அதை ஆணவம் என்று கொண்டாலும் அதுவே அவரது தனி தன்மை. இல்லையேல் நமது காமிக்ஸ் இப்போது மீண்டிருக்க வாய்ப்பே இல்லை.
    //இருக்கலாம் தவறில்லை, புதிய வாசகர்களை சென்றடைய ஒரு சிறந்த வியாபாரியால் மட்டுமே இயலும்! :)// ஒரு நல்ல வியாபாரியால் உணர்வு பூர்வமான வாசகர் வட்டத்தை பெற்று இருக்க முடியாது நண்பரே. அவரது bangalore "comi con" பதிவை திரும்பவும் வாசித்து பாருங்கள். அவர் பார்வையில் வாசகர்கள் யார் என்று புரிந்து கொள்ள முடியும். மனிதத்தை விட்டு விடு என்று சொல்வதை போல் உள்ளது உங்கள் எண்ணம்.
    என்ன தான் அந்த 7 புத்தகங்களுக்கு பதில் புதிய கதைகள் வந்தாலும் அவை "ஆசிரியர் அறிவித்த கதைகளுக்கு என்றும் ஈடாகாது". ஒரு decision எடுத்து schedule போட்டு அவர்கள் டீம் வொர்க் பண்ணும் போது திரும்பவும் முதல்ல இருந்தா ஆரம்பிக்கணும்? வேணாமே...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கான பதில்கள் மேலே! :)

      Delete
    2. நானும் உங்கள் கருத்தை வழி மொழிகிறேன் புத்தக பிரியன். மிக அருமை.

      Delete
  30. இது எனது எண்ணம் மட்டுமே. ஒட்டு மொத்த வாசர்களின் எண்ணம் அல்ல அல்ல. இணையத்தில் ஒரு சொற்ப சதவீதம் பேர் மட்டுமே உள்ளோம் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.

    ReplyDelete
  31. Siler virumbum .,siler virumbatha herogaluku pala ennagul...but anaivarum virumbum, idu varai originalil 500 kum mal vantha engal SUPER STAR TEX ku 10 rooba bookil koda vara thuguthi illaiya ? Idu edirkatchigalin thitamita SATHI.

    ReplyDelete
  32. //அள்ளி முடிந்த குடுமியும் ; வெற்றிலை சொம்புமாய் தீர்ப்புச் சொல்லப் புறப்படும் நாட்டாமையாக என்னை நானே ஒரு கணம் visualise செய்து பார்த்தேன் ; "உள்ளதுக்கே வழியைக் காணோம்..இதில் அள்ளி முடிய ஆசை வேறா?" என்று என் கேச வளம் தந்திட்ட mind voice எச்சரிப்பு லேசாகக் காதில் விழுந்ததால், 'இந்த நடுவர் வேலைகளெல்லாம் சாலமன் பாப்பையா ரேஞ்சுக்கு உள்ளவர்கள் செய்ய வேண்டிய வேலை !' என்று ஒரு மனதாய் ஏற்றுக் கொண்டேன்//

    Ha ha ha ha.... can't stop laughing, very funny. Me too imagined you in a typical (nattamai) actor vijayakumar get-up.

    ReplyDelete
  33. editor sir! comics clasics la vethalar story podalame! antha 7th book la. yosinga sir pls!

    ReplyDelete
  34. Replies
    1. devil : இப்போதைக்கு அவர் நம் ராடாரில் இல்லை !

      Delete
  35. super hero super special is very nice! we are expecting lot of spider , mayavi and satti thalayan stories. pinkuripu: neengal kuzhanthai paruvathu ithayathai petrirunthal mattume SHSS ungaluku pidikum! ippa sollunga yaruku SHSS Pidikala? hi hi!

    ReplyDelete
  36. டியர் சார்,

    ஸ்பைடர் கதைகள் சரியில்லை என்று கூறிவிட்டு இதுவரை வெளிவராத ஒரு ஸ்பைடர் கதையின் still களை போட்டு உசுப்பேத்திரிங்களே சார்,

    சரியான நாரதர் சார் நீங்க :)

    CC digest வரிசையில் இதுவரை வெளிவராத ஸ்பைடர் கதைகளும், வின்வெளிபிசசும் future இல் கண்டிப்பாக கொண்டுவாங்க சார்

    never Before Special போல புக்கிங் அறிவிங்க , உங்க அளவுகோள் போல புக்கிங் வந்தாள் வெளியிடுங்க 2014 ஜனவரி புக்காக இருக்கட்டும்

    ஸ்பைடர் இன்றும் சூப்பரா இல்லையாங்கறது தெரிஞ்சிடும் :)

    ReplyDelete
    Replies
    1. "CC digest வரிசையில் இதுவரை வெளிவராத ஸ்பைடர் கதைகளும், வின்வெளிபிசசும் future இல் கண்டிப்பாக கொண்டுவாங்க சார்

      never Before Special போல புக்கிங் அறிவிங்க , உங்க அளவுகோள் போல புக்கிங் வந்தாள் வெளியிடுங்க 2014 ஜனவரி புக்காக இருக்கட்டும்

      ஸ்பைடர் இன்றும் சூப்பரா இல்லையாங்கறது தெரிஞ்சிடும் :)"

      புக்கிங் முறையில் ஸ்பைடர் கதைகளை(அப்படியாவது...? ஹிம்.... ஸ்பைடருக்கா இந்த நிலை?) வெளியிட கோரியுள்ள உங்கள் யோசனை வரவேற்க தக்கது.. ஆசிரியர் முடிவு என்ன என பார்ப்போம்..

      Delete
  37. ரசனை மாறி விட்டது என்று எல்லோரும் சொல்லுகிறார்கள்.
    அந்த ரசனையையும் மேம்படுதியதும் உங்களுடைய எழுத்துக்களும் ,காமிக்ஸ்களுமே .
    இந்தப் பதிவு உங்களுடைய அனுபவத்தின் வெளிப்பாடே .
    சென்ற வாரம் மதுரைக்கு வந்த பிரெஞ்சு சுற்றுலாப் பயணி ஒருவர் அவர்களது நாட்டு படைப்புகள் நமது மொழியில் வருவதைக் கண்டு மிகுந்த பெருமிதமும் சந்தோசமும் அவருள் .
    என்னிடம் WILD WEST SPL இன் ஒரு காப்பியை எடுத்துக் கொண்டார்.
    ஒரு கத்திரி போடுபவராக (அதாங்க எடிட்டராக ),மொழி பெயர்ப்பாளராக ,பண்பாளராக உங்களுக்குத்தான் எத்தனை வெற்றி முகங்கள் .நீங்கள் பழைய பதிவில் கூறியது போல் "ஆர்வம் இல்லையேல் எதிலும் ஜொலிக்க முடியாது " என்பது மீண்டும் உறுதியாகிறது.இதை எந்த ஒரு MNC பணி சூழலும் பெற்று தராது.
    இதுக்கு மேல முடியாதுப்ப எவ்வளுவு பொற்காசு வருதுன்னு(மறுமொழி ) பார்ப்போம் .
    வணக்கத்துடன் .........

    ReplyDelete
    Replies
    1. தனபாலன்,மதுரை : பொற்காசுகள் வழங்கும் 'பாண்டிய மன்ன' வசதி அடியேனிடம் கிடையாதென்பதால் எங்களது நன்றிகளை அந்த இடத்தில் ஏற்றிக் கொள்ளுங்களேன் - அன்பான வார்த்தைகளுக்காக !

      Delete
  38. ஸ்பைடர் , மாயாவி படங்களை புத்தக அட்டையினில் பார்த்தால் மட்டுமே அது படக்கதை என்று நம்பும், காமிக்ஸ் நண்பர்கள் இன்றும் இருக்கவே செய்கிறார்கள். பார்பதற்கே கேவலமாக இருக்கும் வேறு சில பதிப்பகத்தின் படக்கதை (படிப்பதற்கு அதைவிட மோசம்) கூட, விலை கம்மி, அல்லது காமிக்ஸ் மோகம் போன்ற பல காரணங்களால், சில இன்றும் விற்பனை ஆகிக்கொண்டு தான் இருக்கிறது.

    ரசனைகள் வேறு, விருப்பங்கள் வேறு, என இருக்கும் சகலத்தையும் சமாளிக்கும் ஆற்றல் இருந்தால் மட்டுமே வெற்றி. அது நமது எடிட்டர் வசம் மிகுதியாக உள்ளது. ஆன்லைன் புத்தக விற்பனை அறிமுகமானதில் இருந்து, நமது தேர்வு இன்னும் எளிமையாகி விட்டது. முழு வருடத்தின் கதை தேர்வு, முழுமையாக பிடித்திருந்தால், முழு சந்தா தொகை..இல்லையெனில் தேவையான பிரதிகளை மட்டும் Ebay யினில் வாங்குவது.

    "வியாபார ரீதியாக பார்த்தால் சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் 2 என்ற அறிவிப்பு வரலாம், ஆனால் நான் வியாபாரி மட்டுமே அல்ல " என ஆசிரியர் கூறியுள்ளார். ஆனால் பிடிக்கவில்லை என்பதை பிடிக்கவில்லை என்றுதானே சொல்லிட முடியும். அதற்காக நமது நிறுவனத்தின் வியாபாரம் தடை படுவதையும் நான் விரும்பவில்லை.

    ஆகையால் நான் விரும்பும் நாயகர்கள், கதைகள் என்பதை காட்டிலும், வெளியாகும் கதைகளில் , நாயகர்களில் எனது விருப்பத்தேர்வை செய்திடுவது எளிமையான ஒன்று. அது பலவித விவாதங்களுக்கும் வேலை இல்லாமல் செய்து விடும்.

    ReplyDelete
  39. எனக்கு ஆரம்ப காலத்திலிருந்தே காது நீண்டவன் கதை சுத்தமாக பிடிப்பதில்லை. ஆனால் நண்பர் சேலம் குமார் மேலும் இரண்டு பிரதிக்கு பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு வருக்கும் மாறுபட்ட சிந்தனைகள்.
    மாயவியை பொறுத்தமட்டிலும் மாயத்தன்மை அடையும் மனிதராக இருந்தால் மட்டுமே ரசிக்க முடியும் . ஆதீத ஆற்றல் பெற்றவராக மாறும்பொழுது சுவாரசியம் இல்லாமல் போய்விடும்.

    ReplyDelete
  40. கதையம்சம் இல்லாத கதைகள் மும்மூர்த்திகளாக இருந்தாலுமே வேண்டாமே...நமது எவர்கிரீன் ஹீரோக்களின் எவர்கிரீன் கதைகளை டைஜெஸ்ட்டில் மட்டும் படிப்போமே...நமது லயனின் வளர்ச்சி இனி WWS போன்ற புதிய கதையோட்டமுள்ள காமிக்ஸ்களும் லார்கோவின்ச் போன்ற மாடர்ன் ஹீரோக்களும் இனி வெளியாகவிருக்கும்(நம்புவோமாக) தோர்கல்,ஆஸ்ட்ரிக்ஸ்,டின்டின்,மார்ட்டின் ,டெக்ஸ்,டைகர் கதைகளுமே ஆகும்...

    ReplyDelete
  41. இங்கே SHSS வந்து இருக்கும் நம் மும்மூர்த்திகளின் கதைகளை விமர்சிபர்வகளுக்கு என்னுடைய தாழ்மையான கருத்து: (simba, Erode Stalin, Raja Babu)


    தயவு செய்து மேலே புத்தக ப்ரியன் அவர்களின் கருத்தை படியுங்கள், அது தவிர வியாபார ரீதியாக அமோக வெற்றி பெற்ற ஒரு புத்தகத்தையும் அதில் உள்ள கதைகளையும் விமர்சிப்பது தப்பில்லை, அதை வேண்டாம் என்று கூறுவதை தவிருங்கள் ப்ளீஸ். தங்களுக்காக மட்டும் எந்த ஒரு கதையும் பிரசுரமாவதில்லை அடுத்தவர்களின் ரசனையையும் மதியிங்கள் ப்ளீஸ்.

    ReplyDelete
  42. நண்பர் மகேஷ் அவர்களே, தனிப்பட்ட ஒருசிலருகாக இங்கு எந்த கதையும் பிரசுரமாவதில்லை. மேலே நான் பதிந்துள்ள கருத்தை நான்றாக படியுங்கள். நன்றாக வியாபாரம் ஆகிறது என்றால் , அச்சமயம் ஒரு வியாபாரியாக இருப்பதில் தவறில்லை.

    அதாவது சூப்பர் ஹீரோ ஸ்பெசல் இரண்டாம் பாகம் வந்தால் கூட அதனை நான் எதிர்க்கவில்லை. எனக்கு பிடிக்கவில்லை என்றால் நான் புத்தகம் வாங்காமல் ஒதுங்கிக்கொள்கிறேன். அவ்வாறு செய்வதால், வியாபாரமும் பாதிப்படையாது, கருத்துவேருபாடுகளுக்கும் இடமிருக்காது என்று தான் நான் பதிந்துள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் சிம்பா அவர்களே ஒரு புத்தகம் நன்றாக வியாபாரம் ஆகிறது என்றால் அந்த புத்தகம் பலரது மனதை கொள்ளை கொண்டது என்றது தான் அர்த்தம். அதே சமயம் நம் எடிட்டர் அவர்கள் வியாபாரத்திற்காக மட்டும் இந்த புத்தகத்தை பிரசுரிக்கவில்லை என்பதை நீங்கள் ஒத்துகொள்ள தான் வேண்டும் அதை தவிர அவர் வெறும் வியாபாரியும் அல்ல. இது தங்களுக்கும் தெரிந்திருக்கலாம் இருந்தாலம் நீங்கள் மேல் குரிய கருத்திற்காக இதை தங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். இந்த ஒரு காரணத்திற்காக தான் தங்களுடிய பெயரை மேலே குறிப்பிட்டிருந்தேன்.

      Delete
    2. நண்பரே இன்னமும் எனது கருத்தினை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. இதுவே சிலவருடங்களுக்கு முன்னாள் என்றால், இங்கு பதிவதை போஸ்ட் கார்டு மூலமாக பதிப்பகத்துக்கு அனுப்பியிருப்பேன். அடுத்த முறை இவ்வாறன புத்தக பதிப்பு வருகையில் எனக்கு பிடிக்கவில்லை என்றால் நான் வாங்கிடாமல் தவிர்த்துவிடுவேன்.

      அதே நேரத்தில் என்ன தான் நமக்கு பிடித்து ஒரு தொழில் செய்தாலும், சிறிய லாபமேனும் எதிர்பார்ப்போம். ஆவ்வாரக லாபம் கிடைத்தால் அந்த சமயத்தில் வியாபாரியாக இருப்பதில் தவறில்லை. என்பொருட்டோ அல்லது என்னைப்போல் சில நண்பர்களின் பொருட்டோ இவ்வாறன லாபம் தரும் முயற்சிகளை தள்ளிபோட அல்லது கைவிட வேண்டியதில்லை.

      எடிட்டர் தமது பாதையை முன்பே தீர்மானித்து அதன் வழி செல்கிறார். இங்கு பதிவிடும் கருத்துக்கள் எவ்விதத்திலும் அவருக்கு தடைகளாக இருக்கப்போவதில்லை. உடன் பயணிப்பது என்பது அவர் அவர் விருப்பத்தை பொருத்து.

      Delete
    3. மனிதர்கள் பலவிதம், ஒவோருவர் ரசனையும், கருத்தும் ஒருவிதம்

      Adios Amigo

      Delete
  43. நீண்ட பயணங்களை முடித்துவிட்டு ஆரோக்யமாக திரும்பியிருக்கும் ஆசிரியருக்கு நல்வரவு ...சூ ஹீ சூ ஸ் வை பலவாறு அலசியாயிற்று ....தங்கக்கல்லறை,எப்பொழுது ரெடியாகும் ?டிசம்பரில் வெளிவரும் இதழ் என்ன?இம்முறை நான் .தங்கக்கல்லறை,க்காக காத்துக்கொண்டிருப்பதில்லை ...நேரடியாக சிவகாசி வந்துவிடலாமா...என்றுயோசித்துக்கொண்டிருக்கின்றேன் ...நவம்பரில் எந்த தேதியில் இதழ் ரெடியாகும் ...ஆசிரியர் அவர்களே.. ?

    ReplyDelete
  44. ஆசிரியருக்கு,நண்பர்களுக்கு வணக்கம்!
    மிகவும் எதார்த்தமான ஒரு பதிவு இந்த "பதிவாய் ஒரு பதில் பார்ட் 2". மீண்டும் ஒரு முறை திரு.விஜயன் அவர்கள் அவரது யதார்த்தமான நிலையை ஒளிக்காமல் மறைக்காமல் நான் பெரிய அப்பாடக்கர் என்று பில்ட்-அப் கொடுக்கமால் மிக எளிமையாக இனிமையாக இங்கே பதிவிட்டுள்ளார். அதற்காக வாசகர்கள் சார்பாக நன்றியையும் வாழ்த்துக்களையும் உரித்தாக்குவோம்.

    “ஒவ்வொரு புத்தகமும் விமானமும் ஆகும்! புகைவண்டியும் ஆகும்! பாதையும் ஆகும்!புத்தகமே நாம் போய் சேரும் இடமும் ஆகும், நாம் மேற்கொள்ளும் பயணமும் ஆகும்.புத்தகமே நாம் மிகவும் நேசிக்கும் நம் வீடும் ஆகும்.” -அன்னா கியின்ட்லேன்.

    நமது ஒவ்வொரு லயன் புத்தகத்திலும் ஒரு quality இருக்கும். மேல் சொன்ன வாசகத்தில் எதாவது ஒரு இடத்தில பொருந்தும். அந்த புத்தகத்தை அந்த இடத்தில பொருத்தி ரசிக்க முடியுமே!!. அனைத்து குணங்களும் கொண்ட ஒரு புத்தகம் கிடைப்பது மிகவும் அரிது!

    சூ.ஹி.சூ.ஸ் இதழை பொறுத்தவரை ஆசிரியர் அதில் தவிர்கமுடியாத காரனத்தால் இடம் பெற்றுவிட்ட சிறு பிழைகளை இதழ் வருவதற்கு முன்பே acknowledge செய்துவிட்டார் இல்லையா?? அப்படி செய்ததோடு நில்லாமல் அதற்கு பொறுபேற்று வருத்தத்தையும் பகிர்ந்துகொண்டார்.

    இதை மீண்டும் இங்கே சில நண்பர்கள் கிளறுவது எந்த விதத்தில் நியாயம்?? ஒவ்வொரு இதழுக்கு அடுத்த இதழ் மெருகு கூடிகொண்டே வருவது கண்கூடு!! இங்கு உள்ள ஓவ்வொரு வாசகருக்கும் அவரது கருத்துக்களை தெரிவிக்க முழு உரிமை உண்டு. அதற்காக தவறுகளை acknowledge செய்த பின்னும் அதையே சுட்டிகாட்டுவது சரியில்லைதானே ?? தயவு செய்து DEMORALISE செய்வது போன்ற COMMENTS'ய் தவிர்க்கலமே!

    சூ.ஹி.சூ.ஸ் இதழின் அட்டை நமது சிவகாசி அதிரடி ஸ்டைல்.இந்த வர்ணஜாலத்தை நாம் பல ஆண்டுகளாக ரசித்து வருகிறோம். இப்பொது நமது ரசனை சற்று CORPORATE PROFESSIONAL ஸ்டைலுக்கு மாறிவிட்டதென்பதோ உண்மை.அதற்காக நமது பழைய ரசனையை பழிக்கலாமா?? இது போன்ற வர்ணஜாலத்துக்கும் ரசிகர்கள் அதிகம்.W.W.S இது போன்ற அட்டை HORRIBLE ஆக இருந்திருக்கும். ஆனால் இது சூ.ஹி.சூ.ஸ் இதழ். அதற்காகவாவது இந்த ஜோதியில் ஐக்கியமாககூடாதா??

    ஸ்பைடர் கதையை பொறுத்தவரை பார்ட் பார்ட் ஆக வந்த கதைகளை ஒரே புத்தகமாக இதற்கு முன்பு கூட ரசித்துள்ளோமே?? "ஸ்பைடர் படை","கொலை படை","பாட்டில் பூதம்",ETC...அப்போது "அரக்கன் அர்டினி" போன்ற கதையமைப்பு கொண்ட கதைகளை ரசித்து படித்த நாம் இப்பொது ரசிக்க முடியாததற்கு நமது ரசனை மாற்றத்தை தவிர வேறு என்ன காரணமாக இருக்க முடியும்?? ஸ்பைடர் கதைகளில் எஞ்சி இருப்பது "The Sinister Seven" (பார்க்க ஸ்டில்),"The snake","Island of Menace",'Robot Archi Vs The Spider","Vicious circle".(நன்றி MuthuFan/KingViswa) இதில் முதல் மூன்றை தவிர மற்றவை தவிர்க்கப்பட வேண்டியவை.
    இவற்றில் நமது தல ஸ்பைடர் நிச்சயம் கதை முழுவதும் யாரிடமாவது அடி வாங்கிகொண்டு கெஞ்சுவது இல்லை. ஆனால் வழக்கமான காதில் பூசுற்றும் ரகமான கதைகலே! பேன்டசியை மிக பிரம்மாண்டமாக ரசிக்க காமிக்ஸ் என்ற ஊடகத்தை தவிர வேறு எதால் முடியும்?? சினிமாவுக்கு கூட சில limitations உண்டு. எந்த எல்லைகளும் அற்ற கமிக்ஸ்சில் அதன் முழு பரிணாமத்தையும் பயன்படுத்தி அதை ரசிக்கலாமே! Reality fiction ஐ ரசிக்க பல வழிகள் உள்ளன.பேன்டசியை முழுமையாக ரசிக்க காமிக்ஸ்ய் விட்டால் வேறு வழி கிடையாது!!! சோ மற்ற மூன்று கதைகளும் வெளிவர நண்பர்கள் உதவுங்கலேன்??
    இப்படி சொல்வதால் Reality fiction க்கு நான் எதிரானவன் என்று என்னை கட்டம் கட்டி விடாதீர்கள். Reality fiction ஐ மிகவும் ரசித்து படிப்பவன் நான். XIII கதைகளில் வரும் frame by frame continuity (உ.ம்: பாகம் ஐந்தில் பெட்சி ஒரு இயந்தர துப்பாகியால் ஒரு குடிசைக்குள் புகுந்து அங்கே இருக்கும் ஒரு கும்பலை சுடும் இடம்: அந்த காட்சி பல கோணங்களில் வான்ஸ் வரைந்து அசத்தி இருப்பார். ஒவ்வொரு கோணத்திலும் மற்ற நபர்களை சுற்றி உள்ள பொருட்களை அதே கோணத்தில் அதே இடத்தில preserve செய்துள்ள அற்புதம்!!!),சமீபத்தில் வந்த W.W.S டைகர் கதையில் முதலில் Clean shaven ஆக வரும் டைகர் கொஞ்சம் கொஞ்சமாக தாடையில் முடி வளரும் continuity... என்று ரசிக்க ஏராளம் உள்ளன.

    இது போன்ற விசயங்களை இந்த ரக கதைகளில் ரசிக்கலாம்!

    சூப்பர் ஹீரோ வில் வரும் அதிரடி அட்டகாசத்தை அதில் ரசிக்கலமே???








    ReplyDelete
  45. தனிப்பட்ட முறையில் SHSS எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் அதே சமயம் Digest க்கு எனது முழு ஆதரவு உண்டு. சிறப்பான கதைகளை நீங்கள் ஏற்கனேவே வெளியிட்டு விட்டர்கள். அதனால் பழைய கதைகளுடன் ஒப்பிடும்போது SHSS நன்றாக இல்லை. அதை தவிர சிறு வயதில் நமது மனம் சிறகடித்து பறந்தது போல இப்பொழுது இல்லை என்பதும் கரணம் தான்.
    fleetway super-library-secret-agent-series
    fleetway-super-library-stupendous-series என வந்தவை அனைத்தையும் digest format இல அதே அட்டை படங்களுடன் வெளியிடவும். மூன்று கதைகளை ஒரே digestல் வெளிட்டாலும் ஒவ்வொரு கதையின் ஆரம்பத்திலும் original அட்டை படங்களை வெளியிடவும்.

    concentrate reprints on digest and new stories like largo winch போன்றவற்றை regular 100Rs format லும்

    வெளியிடவும். ஒன்று மற்றொன்றை affect பண்ணாத வரையில் எந்த குழப்பமும் வேண்டாம். மற்றொன்று. ஒரு series இல உள்ள கதைகளை தனியாக வெளிடவும். மற்றதுடன் வெளியிட என்ன அவசியம். ex: you planned to add largo winch story on 400 Rs issue. i thought of keeping largo winch as a separate collection. now because of this that idea is not possible. then what is the necessity to add 19th part of xiii on the 400 Rs special. instead you could have tried to introduce some new heroes on that issue to get the opinion from readers. if you want to release martin mystery release it in the same format like Dark Horse comics.

    ReplyDelete
  46. ஐயோ, கொல பண்றாங்க கொல பண்றாங்க

    ReplyDelete
  47. MAPPIL MANDHIRI.....indha padhivu yellaam padichu mudicha udanae mandhirikku BODHAI VANDHUDUCHU....Yedho TASMAK kadayai thoorathilla irundhu paartha madhiriyae irukku ....yennaba idhu aal aalukku BAR pottu BAR pottu Yeluthi irukeenga....Yethanai BAARU....SHSS classicla pottudunga ..vijayamaharaja....Yenga veetu number kooda a+b/2ab....ada yenga veetula kooda BAR irukkae.....SSHS oru BOTHAI ...adhu yengalukku THEVAI....

    ReplyDelete
  48. // "நிச்சயம் தொடர மாட்டேன் ...இப்போதைய தரத்தை விடவும் சுமாரான கதைகள் மாத்திரமே எஞ்சி இருக்கும் காரணத்தால் !"//

    தரமான கதைகளையே நீங்கள் இனிமேல் கொடுப்பீர்கள் என்ற உத்திரவாதம் ஒன்றே எங்களுக்கு போதும்.

    நீங்கள் சொன்ன மூன்று வகையில் மூன்றாவது வகைதான் நான். அதாவது
    "கதைகள் சுமார்..குறைகள் அதிகம்...ரசித்திட முடியவில்லை ". நான் மறு பதிப்பிற்கு எதிர்ப்பானவன் இல்லை (ஆனால் அவற்றில் ரசிக்க கூடிய கதைகள் வரும்போது). ஆனால் SHSS வாசித்த பிறகு வலி மிகுந்த ஏமாற்றம் தான் மிஞ்சியது.

    நீங்கள் சொன்னதைப்போல மும்மூர்த்திகளின் முதல் 13 கதைகளின் இருந்த சுவாரசியம் அதற்கு பின் வந்த கதைகளில் இல்லை எனில் அவற்றை வெளியிடாமல் இருப்பதே நலம்.

    //சிறந்த வியாபாரி இந்நேரத்திற்கு சூ.ஹீ.சூ.Spl -2 க்கு ரவுண்ட் கட்டி இருப்பார் ! //

    அப்புறம்...நான் என்றைக்குமே ஒரு சிறந்த வியாபாரியாக இருந்திடப் போவதில்லை - at least நமது காமிக்ஸ்களைப் பொறுத்த வரை ! :-)//


    EBAY - யில் SHSS விற்பனை அதிகம் என்றதும் வந்த மகிழ்ச்சிக்கு பின் வந்த கலக்கம், உங்கள் இந்த பின்னுட்டதிர்க்கு பிறகு போய் விட்டது.

    இந்த பழைய புத்தக மறு பதிப்பு, புதிய கதாநாயகர்களை அறிமுக படுத்துவதில் தாமதம் ஏற்படுத்தும் என்ற வாதமும் உங்கள் உழைப்பை அந்த 6 டைஜெச்ட்டுகளும் விழுங்காது என்ற வரையில் அடி பட்டு போனது.

    மறு பதிப்பை எதிர்ப்பவர்களிடம் இப்படிப்பட்ட ரெண்டு பதில்கள் நிச்சயம் இருக்கும்.

    1 ) ரொம்ப சின்ன பிள்ள தனமா ரொம்ப மொக்கையா இருக்கு.
    2 ) பழைய புக்கயே போட்டுக்கிட்டு இருந்தா, தினம் ஒண்ணா வந்து கலக்கிகிட்டு இருக்கும்
    புது புது கதாநாயகர்கள் வரிசையை நாம் எப்படி தமிழில் பார்ப்பது.

    ஏற்கனவே மொழி பெயர்க்கப் பட்ட (உங்கள் நேரத்தை விழுங்காது) நல்ல கதைகளை கொடுத்தால் இந்த இந்த ரெண்டு புகார்களையும் களையலாம்.

    மறுபதிப்பை எதிர்ப்பவர்களும் அதில் முன்னம் வந்த நல்ல கதைகள் வந்தால் ஏற்று கொள்வார்கள். இப்போது கூட பிடிக்காது என்று சொல்லி கொண்டே வாங்கி சும்மாவது வைத்திருப்பவர்கள், நல்ல கதைகள் வந்தால் வேணாம் என்றா சொல்ல போகிறார்கள். புதுசோ பழசோ நல்லா இருந்தா எப்பவும் ஓடும்.

    லயன் என்றாலே இந்த மும்மூர்த்திகள் நினைவுக்கு வருவது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை
    இவர்களின் கதைகளை விடவும் மிக நல்ல கதைகள் வந்திருக்கின்றன என்பதும். அவற்றை CC யில் வெளியிடலாமே.

    அப்படி வெளியிட்டால் ரெண்டாவது வகை வாசகர்களான "ஆஹா...இதுக்குத் தானா இத்தனை பில்டப் ?காதிலே பூ தாங்கலைடா சாமி" என்பவர்களும் முதல் வகையான "ஆஹா..அற்புதம் ! " என்று மிகப் பெரிய thumbs up ! சொல்லுவது உறுதி.

    ReplyDelete
  49. என்னைப்பொறுத்தவரையில் சூ.ஹீ.சூ. ஸ்பெஷலின் சொதப்பலுக்கு முக்கிய காரணம் கதைகளின் தேர்வுதான்........................[அல்லது no better options]...சூப்பர் ஸ்டாராகவே இருந்தாலும் கதை நன்றாக இல்லாவிட்டால் படம் ஓடாது.......மாயாவி மற்றும் ஸ்பைடரின் பல கதைகள் அருமையானவை.......ஆகவே நான் காமிக்ஸ் கிளாசிக்ஸ் வெளியீட்டை வரவேற்கிறேன்.....


    சில நண்பர்கள் சூ.ஹீ.சூ. ஸ் -ன் விற்பனையை பற்றி சிலாகித்திருந்தார்கள்....அதற்கு காரணம் presentation.....உள்ளடக்கமல்ல.......இதழ்களை யாரும் படித்துவிட்டு வாங்குவதில்லை......


    தியாகராஜ பாகவதர் காலம் தொட்டு இன்றைய மாற்றான் வரை ,பில்ட் -அப் பலமாக இருந்து பிளாப் ஆன [அல்லது சுமாரான வெற்றி பெற்ற] பல படங்கள் உண்டு.....சூ.ஹீ.சூ. ஸ் ..அந்த வகை என்று எடுத்துக்கொண்டு மேலே நடப்போம்............. its all in the game laa.....

    ReplyDelete
  50. நண்பர்களே,

    இரு மாதங்களுக்கு முன்பு ஈரோடு புத்தகத் திருவிழாவில் நிகழ்ந்த நமது காமிக்ஸ் நண்பர்களுடனான அந்த குதூகலமான சந்திப்பைத் தொடர்ந்து, மீண்டும் அம்மாதிரியானதொரு சந்திப்பு நிகழ்ந்திடாதா என மனம் ஏங்கிக்கொண்டிருந்த வேளையில், நண்பர் ஸ்டாலின் தூண்டுதலால் மீண்டும் அம்மாதிரியானதொரு சந்திப்பு திட்டமிடப்பட்டு, செயல்வடிவம் கண்டிடவுமிருக்கிறது.

    நாள்     :  28/10/2012 ஞாயிறு காலை 10 மணி

    மேலும் விவரங்களை நண்பர் ஈரோடு ஸ்டாலினின் கீழ்காணும் வலைப்பூவில் காணலாம்:

    http://tamilcomicskadanthapaathai.blogspot.in/2012/10/blog-post.html

    பரஸ்பர அறிமுகங்கள், கலந்தாய்வு, கருத்துப் பரிமாற்றங்கள், காமிக்ஸ் பற்றிய இனிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுதல் போன்றவற்றை உள்ளடக்கியதாக இச்சந்திப்பு நிகழவிருக்கிறது.

    ஈரோடு மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்கள் மட்டுமின்றி, விருப்பமுள்ள நண்பர்கள் யாராயினும் இச்சந்திப்பில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்!

    வாருங்கள், கொண்டாடுவோம்!

    ReplyDelete
  51. மறு பதிப்போ புது பதிப்போ அவரவருக்குத் தேவையான பிடித்த காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிக் கொள்வோம். மற்றவர்கள் காமிக்ஸா இன்னுமா? என்று கேட்பதால் நமக்குப்பிடித்த காமிக்ஸ்சை நாம் படிக்காமல் இருக்கப் போகிறோமா என்ன ?
    விஜயன் சார் அவர்களுடைய நேரத்தை மறுபதிப்பு எடுத்துக்கொள்ளாது.
    புது பதிப்புகள் தொடரும் என்று உறுதி அளித்த பின்னரும் அதே டாபிக்கில் நண்பர்கள் கமெண்ட்ஸ் அளிப்பது ஏன் எனத் தெரியவில்லை.

    ReplyDelete
  52. நண்பர்களே! சமீபத்தில் திரையரங்குகளில் வெளியிட்ட கர்ணன் திரைப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியதை நியூஸ் பேப்பரில் படித்திருக்கலாம்.
    இன்னும் இதே போல பல திரைப்படங்கள் வரவிருக்கின்றனவாம்.
    எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால் சொதப்பலான புது கதைகளை விட மறுபதிப்பு மேல். !!!
    காலத்தின் ஓட்டத்தில் மிஸ்ஸான பழைய காமிக்ஸ்கள் பறுபடி கிடைத்தால் வேண்டாம் என்று கூறுபவர் உள்ளார்களா என்ன? நல்ல கதை தான் முக்கியம்.

    ReplyDelete
  53. One doubt sir did I need to advance book next year 'muthu comics - never before special ' or can I wait and buy the special edition through eBay comics store ... Plz reply me Sir

    ReplyDelete
    Replies
    1. sokka : NEVER BEFORE SPECIAL is against pre-bookings and it will not get listed on E-Bay at least until end of January 2013.

      Delete
    2. Thanks for your reply sir , I will try to money order as soon as possible

      Delete
  54. டியர் கார்த்திக்,
    நான் இதுவரை இந்த வலைத்தளத்தில் எந்த ஒரு எதிர்மறையான கமெண்ட் யாரைப்பற்றியும் அடித்ததில்லை. உங்கள் கமெண்ட் எங்களைபோன்ர பழைய முத்து ஹீரோ பிரியர்களை மனம் நோக செய்கிறது. உங்கள் //காலத்திற்கேற்ப மாற்றம் பெற்றுள்ள புதிய சூப்பர் ஹீரோ கதைகளை (உதாரணம் பேட்மேன்)// வரிகள் //மாயாவி, ஜானி நீரோ, லாரன்ஸ் டேவிட், ஸ்பைடர், ஆர்ச்சி போன்ற நிகழ்காலத்திற்கு சற்றும் ஒவ்வாத நாயகர்களை// வரிகள் இரண்டையும் இனைதுப்படியுங்கள். பேட் மேன், spider மேன் கதைகள் நம்பும்படியான கதைகளா ?

    ReplyDelete
    Replies
    1. //மனம் நோக செய்கிறது//
      மன்னிக்கவும் நண்பரே, என் நோக்கம் அதுவல்ல! ஆசிரியர் ஏற்கனவே தன் நிலைப்பாட்டை கூறிவிட்டதால் இந்த விஷயத்தை இத்துடன் விட்டு விடுவோமே, ப்ளீஸ்! உங்களுக்காக, என் பின்னூட்டத்தில் இருந்து ஒரு சில வரிகள்:
      //நான் இந்த நாயகர்களை குறை கூறவில்லை அந்த காலகட்டத்தில் இவர்கள் சூப்பர் ஸ்டார்கள்தான் - அதில் சந்தேகமில்லை, நானும் இவர்களை ரசித்தவன்தான் - மறுக்கவில்லை!//

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. James Nila : பாராட்டோ...குறைகளைச் சுட்டிக் காட்டுவதோ...ஒவ்வொன்றும் அவர்தம் கண்ணோட்டமே...! அவரவர் point of view என்னவென்று விவரிக்கும் உரிமை நிச்சயம் மதிக்கப்பட வேண்டிய ஒன்று !

      நண்பர் கார்த்திக் சோமலிங்கா தெரிவித்திருந்த கருத்துக்கள் அவரது உள்ளத்தின் வெளிப்பாடு...! அதனில் உங்களுக்கு உடன்பாடு உண்டோ ; இல்லியோ - கடினமான வார்த்தைப் பிரயோகங்களோடு பதில் பதிவிட்டது நிச்சயம் நல்லதொரு முன்னுதாரணம் அல்லவே ! ஆகையால் உங்களது இந்தப் பின்னூட்டத்தை நீக்கியுள்ளேன் !

      பொதுவாக இத்தளத்தில் நிறைகளை மாத்திரமே மிகைப்படுத்தி நண்பர்கள் பதிவிடுகிறார்கள் என்று சமீப வாரங்களில் என்னிடம் போனில் பேசிடும் போது நிறைய வாசகர்கள் அபிப்ராயப்பட்டிருந்தனர் ! இது போல் மாற்றுக் கருத்துக்களைப் பதிவிடும் நண்பர்களை நோகச் செய்தால் மேற்படிக் குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் விதமாய் நாமே செயல்பட்டது போல் ஆகிடும். ஆரோக்யமான விவாதங்களும் ; அவசியமான சுட்டிக்காட்டல்களும் நெடிய பயணத்தில் நிச்சயம் நமக்கு உதவிடப் போகும் விஷயங்களே. ! Please let's be sportive guys !

      And to Karthik Somalinga : Our Apologies !

      Delete
    4. Hats-off to you sir! I really appreciate the way you treated this situation in a justified manner.
      We are  proud of being a comic reader with a great personality as our editor!

      Delete
    5. @Vijayan:
      There is absolutely no need for you to apologize, Sir! And thanks for taking my comments in the right spirit!

      Delete
    6. @Editor:

      நிறைகளை மிகைப்படுத்துகிறார்கள் என்பதை விட நிறைகளின் தாக்கம் மிகுந்திருக்கிறது என்றும் கொள்ளலாமே. காமிக்ஸ் என்பதே ஒரு passionate reading அனுபவம் தானே. இதில் உள்ள குறைகளை வாரப் பத்திரிகைகள் range-kku அலசுவதில் என்ன லாபம்?

      Delete
  55. சார், biggles,centaures, Alpha போன்ற லேட்டஸ்ட் காமிக்ஸ்கள் அறிமுகப்படுத்தலாமே? வித்தியாசமான ராணுவகதைகளும் ஓகேதான்!

    ReplyDelete
    Replies
    1. cap tiger : "செய்து விட்டுச் சொல்வோம்" என்பது தானே நமது இப்போதைய தாரக மந்திரம்...NEVER BEFORE ஸ்பெஷல் வரைக் காத்திருங்கள்...2013 -ன் line up என்னவென்று முழுமையாகப் பார்த்திடலாம் !

      Delete
    2. நீங்களே சொல்லி விட்டீர்கள்! கண்டிப்பாக வித்தியாசமான கதை நாயகர்களையும், கதைகளன்களையும் அறிமுகப்படுத்துவீர்கள் என்று தெரிகிறது. நன்றி சார்!

      Delete
  56. 100 பின்னூட்டங்களை கடந்த பின்பும், இன்னும் நம்ம நண்பர் ஸ்டீல் க்ளாவைக் காணலியே!

    திருவிழாவில்  தொலைஞ்சுபோன நம்ம பாலாஜி சுந்தர் இன்னுமா வீடு வந்து சேரல?

    ReplyDelete
  57. நண்பர் ஸ்டீல்க்ளா மற்றும் பாலாஜி சுந்தர் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.!!

    ReplyDelete
  58. =====================================================================================================
    அமைதி அமைதி அமைதி அமைதி அமைதி அமைதி
    =====================================================================================================

    ரொம்ப நேரமா இங்க மோதல் நடக்குது போல இருக்கு. இங்க என்னோட கருத்துகளையும் (ஆலோசனைகள்) சொல்றேன்.

    பள்ளிக்காலத்தில் காமிக்ஸ் வாங்கி படித்து மகிழ்ந்த பின்னர், கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பின்னர் சமீபத்தில் வெளியான இதழ்களை அனைத்தும் வாங்கிப் படித்துக் கொண்டிருக்கிறேன்(இடையில் நமது காமிக்ஸ் முடங்கிப் போன விசயமும் இந்த சமயத்தில்தான் தெரியும்).

    Lion Come Back ஸ்பெஷல் - தற்செயலாக பார்த்து வாங்கியது(இதனால் இப்போது தொடர்ந்து வாங்கிக்கொண்டிருக்கிறேன்) சூப்பர்.
    DOUBLE THRILL ஸ்பெஷல் -DOUBLE சூப்பர்.
    New Look ஸ்பெஷல் - அருமை.
    என் பெயர் லார்கோ - புது நாயகன் கவர்ந்து விட்டான்.
    Wild West ஸ்பெஷல் - படித்துக் கொண்டிருக்கிறேன், பிடித்திருக்கிறது. ஓவியங்கள் அருமை.

    சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் - பிடிக்கவில்லை :( மேலே உள்ள இதழ்களுக்கு அருகில் கூட வரமுடியவில்லை.

    எனக்கும் சூப்பர் ஹீரோக்களுக்கும் எந்த பகையும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். சிறு வயதில் நானும் இவர்கள் கதைகளை விரும்பி படித்தவன்தான். இப்போது இவர்களை ரசிக்க முடியவில்லை. இனிமேல் இவர்கள் புதிய ஹீரோக்களுடன் போட்டி போடுவது கஷ்டம்தான்.

    நமது எடிட்டரே இந்த இதழை பற்றிய கருத்தை ஒத்துக்கொண்டார்.

    எடிட்டர் அவர்களே,

    இந்த சூப்பர் ஹீரோக்கள் கதைகள் CC-யில் வருவது நல்லதுதான்(விற்பனையை பாதிக்காத வரையில்). சூப்பர் ஹீரோ கதைகளை விரும்புபவர்கள் எப்போதும் இந்த இதழ்களை வாங்குவார்கள். கீழே உள்ள விஷயம் சூப்பர் ஹீரோ கதைகளை விரும்பாதவர்களை குறிவைத்தும் CC வெளியிடுவது.
    நீங்கள் இதில் ஒரு நல்ல காரியம் ஒன்றை செய்யலாம். என்னவென்றால், CC வெளியிடும்போது, அந்த இதழில் இரண்டு-மூன்று நாயகர்கள் கதைகளை(மாயாவி+ஸ்பைடர்+ஆர்ச்சி) கலக்காமல் ஒரே நாயகரின் பல நல்ல கதைகளை(முதல் மாதம் மாயாவி கதைகள், இரண்டாம் மாதம் ஸ்பைடர் கதைகள், மூன்றாம் மாதம் ஆர்ச்சி கதைகள், நான்காம் மாதம் XXXXXX கதைகள்,.......) வெளியிடலாம். இப்படி செய்வதால் ஒரு நன்மை உள்ளது. சிலருக்கு என்னதான் சூப்பர் ஹீரோக்களை பிடிக்காவிட்டாலும், அவர்களுக்கு ஒரு சில ஹீரோக்கள் பிடிக்கும். உதாரணத்திற்கு எனக்கு இவர்களில் மாயாவியை பிடிக்கும். எனவே நீங்கள் CC வெளியிடும்போது மாயாவி கலக்சன் வரும்போது அவற்றை தேடித் பிடித்து வாங்கிக்கொள்வேன். என்னைப் போலவே இங்கு சிலருக்கு ஒரு சில சூப்பர் ஹீரோக்களை பிடித்தவர்கள் உண்டு, அவர்களும் வாங்குவார்கள். இது உங்கள் விற்பனையை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு. மேலை நாடுகளில் இந்த முறையைதான் பின்பற்றுகிறார்கள்(கலக்சன் எடிசனுக்கு), இது உங்களுக்கு தெரிந்த விசயம்தான்.

    எடிட்டர் அவர்களுக்கு முக்கிய கேள்வி.
    #######################################################################################################
    இரத்தப்படலம் 18 பாக புத்தகம் மறுபடியும் எப்போது வரும். இப்போது உங்கள் வசம் கையிருப்பு இருந்தால் சொல்லுங்கள், நான் பணம் கட்டி வாங்கிக்கொள்கிறேன். தயவு செய்து எனக்கு அந்த புத்தகத்தை அனுப்பவும்.

    கடைசியாக, நமது அடுத்த இதழுக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.

    கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.

    =====================================================================================================

    ReplyDelete
    Replies
    1. Thatraja, I also hit this blog recently - four months ago. All the XIII - iraththap patalam books have been sold out. However some Lion fans have more than a copy. I was lucky to receive it from R.T.Murugan. There was another Lion fan by name Parani who also offered me a copy of XIII. You may contact him to see - he has posted several comments on this blog.

      I just finished reading all 18 volumes of RP and it is really a great collection!

      Delete
    2. Hello Comic Lover,

      Could you please give me his contact number? I'm new here. Please help me to get that book.

      Thanks a ton in advance.

      Delete
    3. Hi,

      Parani has commented right below in this blog but I am not sure of his email address. Since blogs are not generally secure I am not sure how the communication can happen - not really a place to type phone numbers / email ids.

      What you could do is create an email id for this purpose alone and share it on the forum and ask folks having multiple copies of RP to contact you including posting a reply to Parani. Then also it becomes your personal responsibility to verify address, content etc.

      This is the best way I could think of!

      Have fun while you anticipate :)

      Delete
  59. சார் இந்த மாதிரி பூ சுற்றல் கதைகள் எனக்கு பிடிக்கவில்லை.என்னதான் லாஜிக்கை கழற்றிவிட்டு படித்தாலும் சுத்தமாக கதைக்குள் ஒன்ற முடியவில்லை. காமிக்ஸ்சை நான் நேசிப்பதால் அதனை ஊக்குவிக்க
    நீங்கள் வெளியிடும் எந்த புக்கையும் வாங்கிக்கொள்வேன். CC -ல் ஸ்பைடர்,மாயாவி,ஆர்ச்சி கதைகள் நீங்கலாக
    மற்ற பழைய கதைகளை வெளியிடலாம்.புதிய வெளியீடுகளில் கலக்குங்க சார்..புதிய டைகர், டெக்ஸ்வில்லர், எமனின் எல்லை போன்ற கதைகளை நிறைய எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  60. இன்டர்நெட்டில் கமெண்ட்ஸ் பதிவிடும் வாசகர்கள் நிறைய பேர் தற்போது அதிகரித்துள்ளது மகிழ்ச்சியான விஷயம்.

    ஒரு சிலரின் கமெண்ட்ஸ்கள் ரசிக்கத்தக்கவையாகவே உள்ளன. அவர்களை பாராட்டும் பொருட்டு வாசகர்கள் கடிதம் பகுதியை அதிகரித்து பிடித்த கமெண்ட்ஸகளை அச்சில் போடலாமே!

    அதே சமயம் இன்டர்நெட் வசதி இல்லாதவர்களும் கமெண்ட்ஸகளை படிப்பார்களல்லவா? --

    ReplyDelete
  61. ஹலோ விஜயன் சார், சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் ஹ்ம்ம்ம் என்ன சொல்வது இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் நன் ரசித்த அந்த ஹீரோகலை என்னால் இன்று சிறிதளவும் ரசிக முடியவில்லை, இன்னும் ஸ்டீல் claw ஸ்டோரியை இன்னும் படிக்க வில்லை படிக்க பிடிக்கவும் இல்லை :( . நான் காமிக்ஸ் classics வருவதை பெரிதும் வரவேறிகிறேன் ஆனால் தயவு செய்து மாயாவி digest மறு பரீசிலனை செயுங்கள் ப்ளீஸ். instead you can choose lots of good stories from other heroes. I beileve கொள்ளைக்கார மாயாவி was recently published in commics classics seems, again the same story?, no please. மாயாவி தவிர்த்து நீங்கள் ஏன் டெக்ஸ் வில்லேர் digest வெளி விட கூடாது, ப்ளீஸ் திந்க் அபௌட் இட். இது ennudaya தனிப்பட்ட கருத்து அண்ட் ஆவலும் கூட. As you said, I am expecting some amazing stories in 2013. I believe you will satisfy us 100%, no second thought in it. They way we journey now is the best, I am so happy about it. I pray to god to continue your work with the same energy as ever. Thanks :)

    ReplyDelete
    Replies
    1. இன்று திகில் reporter Johnny in விண்வெளி படையெடுப்பு மற்றும் மினி lion லில் வெளிவந்த சிவப்பு மலை மர்மம் படித்தேன் அற்புதமான கதை களம், பத்து பதினைந்து வருடங்களாக என் பெட்டியில் துங்கி கொண்டிருந்த புத்தகங்கள் இவை, இன்றும் படிக்க படிக்க திகட்டாத புதையல் இந்த kathaykal எல்லாம். Please choose these kind of stories for comics classics sir. Reporter johnny digest , கேப்டன் பிரின்ஸ் Digest , சிக் பில் Digest , லக்கி luke Digest , etc.... லீவ் மாயாவி அண்ட் Spider stories for some time. Thanks ...

      Delete
    2. கிரிதரன் மற்றும் folks,

      2012 முழுவதும் நாம் பிரின்ஸ், ஜானி, லக்கி லூக், மாயாவி, டைகர் ஆகிய ஹீரோக்களை பார்த்து விட்டோம். அடுத்த வருடம் வருகின்ற பன்னிரண்டு இதழ்களிலும் பெரும்பகுதி வேறு ஹீரோக்கள் வந்தால் அதுவும் அருமையாய் இருந்திடுமே.

      - டெக்ஸ் வில்லர், கில் ஜார்டன், பேட்மேன், சிக் பில், மதியில்லா மந்திரி, ஆஸ்டெரிக்ஸ், பெரும்பான்மை ஆதரவு பெற்றதால் ஒரு புதிய டைகர் சாகசம் (வேறு வழியில்லை :)), அங்கிள் ஸ்க்ரூஜ், லாரன்ஸ் மற்றும் டேவிட், வண்ணதினில் மாடஸ்டி இவர்களைக் காண ஆவலாய் உள்ளது. மறுபடியும் அதற்கு அடுத்த வருடம் மாமூல் ஹீரோக்களை சந்திக்கலாமே. எடிட்டர் இப்படி ஏதாவது வைத்திருப்பார். Lets wait for Never Before Special.

      Delete
    3. Comic Lover : "தங்கக் கல்லறை" வரைக் காத்திருங்களேன்...2013 -க்கான ஒரு மினி ட்ரைலர் காத்துள்ளது ! NEVER BEFORE ஸ்பெஷலில் முழுப் பட்டியலை பார்த்திடலாம் !

      Delete
  62. // 'நிச்சயம் தொடர்வேன்...ஆரம்பகாலத்துத் தரத்தில் இனியும் ஸ்பைடர் ; மாயாவியின் புதிய கதைகள் கிடைத்தால் !

    "நிச்சயம் தொடர மாட்டேன் ...இப்போதைய தரத்தை விடவும் சுமாரான கதைகள் மாத்திரமே எஞ்சி இருக்கும் காரணத்தால் !" //

    மீண்டும் இந்த கதை படிக்க அமர்ந்தேன்,மெதுவாக ரசித்து ஓய்வில் படித்தால் அற்புதமான கதைதான்!விண்வெளியில் சில சோதனைகள்/சாதனைகள் ,நினைத்த உடனே கதையின் போக்கு வலை மன்னனுக்கு சாதகமாக திரும்புவது (முடிவு சட்டென சப்பையாக முடிந்ததாலும்,முடிவில் பல்டி அடித்ததாலும் ) போன்ற சில சொதப்பினாலும் கதை தரமான புத்தக வடிவமைப்பு ,ஓவியங்கள் என ரசிக்கும் படிதான் உள்ளது!ஆர்டினிக்கு அடி போதாது,இவளவுதான் தண்டனையா ?சதுரங்க வெறியன் போல முடிவில் சரியாக தண்டிக்க தவறியதும் இக்கதையின் தோல்விக்கு காரணம் !சில/பல நண்பர்களை முழுதுமே கவர்ந்துள்ளது.ரசனைகள் பலவிதம்!சிலருக்கு மாடர்ன் ஆர்ட் பிடிக்கும் ,என்னை கேட்டால் ம்ஹூம்ம்ம்....அதிலும் இங்கே நீங்கள் விளம்பர படுத்திய ஸ்பைடர் நீங்கள் வியாபாரியாய் மாறினால் என்ன என கேட்க வைக்க தூண்டுகிறது என்னை! ரசித்து செய்யாத எந்த காரியமும் சுவைக்காது என்ற தங்கள் கருத்தை ஏற்று கொள்கிறேன் !ஆனால் தாங்கள் ரசிக்கும் ஒரு காலமும் வரும் அப்போது இந்த, அடேங்கப்பா 150 பக்க பொக்கிசத்தை எங்கள் முன்னே படையுங்களேன்,விறு விருப்பான கதை எனில் பூசுற்றலாக இருப்பினும் !

    ReplyDelete
    Replies
    1. 80 சதவீத ரசிகர்களின் போக்கை ஆதரியுங்கள் !கலையை வளர்க்க போகிறேன் என்று பாதை மாற வேண்டாமே ! இந்த விற்பனை மட்டுமே அளவு கோள் அல்ல ஏற்று கொள்கிறேன் .கதை எதிர்பார்ப்பில் வாங்கிய நண்பர்களும் ,காமிக் கானிற்கு பின்னர் புதிதாய் வந்த பழைய நண்பர்களும் ,தங்கள் கடந்த கால நினைவுகளை தேடும் நண்பர்களாலும் இருக்கலாம் ,அனைவரின் கருத்துகளும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் தங்களுக்கு கிட்டி விடும் ,அதன் பிறகே வெற்றி/தோல்வி தீர்மானிக்க இயலும் . கார்த்திக் போன்ற நண்பர்களின் கருத்துக்களை வணங்கி ஏற்று கொள்கிறேன் ,பிற நண்பர்களும் கண்டிப்பாக ஏற்று கொள்வோம்,நமக்கு பிடித்தால் எப்படி நமது கருத்தை கூறுகிறோமோ ,அதை போல அவர்களுக்கும் தங்கள் கருத்தை கூற தடையில்லா உரிமை உண்டு என்பது போல இருக்கட்டும் சூப்பர் ஹீரோக்களின் ரசிகர்களின் பதில்களும் ,தங்களது முதிர்ச்சியை காட்டுங்கள் இந்த விசயத்தில் .பெரிய நடிகர்களின் படங்களும் சொதப்பி உள்ளன , கண்டிப்பாக அவர்களின் ரசிகர்கள் கண்ணை மூடி கொண்டு ரசிப்பதால் அதே போல வெளி விட்டால் நட்டம் நமக்குதானே!சிலர் மட்டும் படித்தால் மீண்டும் பழைய நிலைதான் !கொஞ்ச காலத்தில் அலுத்து விடும் ..... படித்து கொண்டிருக்கும் நண்பர்கள் தயங்காமல் தங்கள் கருத்துகளை கூறி ஆசிரியரின் பணி சிறக்க உதவுங்களேன்.தற்போது இந்த வருட கதைகள் ஓவொன்றும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் உள்ளன!லார்கோ பிடிக்கவில்லை என்று ஒரு ரசிகரும் வாசகர் கடிதத்தில் குறை பட்டுள்ளார் !எனக்கு பெரும் வியப்பு/அதிர்ச்சி அனைவருக்கும் இருக்கும் என நினைக்கிறேன் !ஆனால் ரசனை என்று வந்து விட்டால் உயர்ந்த /தாழ்ந்த என்று ஏதுமில்லை!அல்லவா? அழகு /தரம் என்பது ஒவொருவரின் பார்வையில் ஒவொரு மாதிரி!100 % யாரையும் திருப்தி படுத்த முடியாது!ஏக்கங்கள் ஒவொருவருக்கும் ஒரு விதம்!இங்கே வெளிப்பட்டது சில ரகம்!அதிகம் பேரை கவர்ந்தால் அது வெற்றி பெற்றதாகத்தான் அர்த்தம். உயர்ந்த /தாழ்ந்த ரசனை என்ற பேதம் அடி பட்டு போகும் ,கருத்து கூறும் யாரையும் திட்டினால் இதற்க்கு பயந்தே யாரும் எதற்க்கடா வம்பு ஆசிரியர் எதை கொடுத்தாலும் வாங்குவோம் என்று வாங்கி வாங்கி அலுப்படைந்து விடுவார்கள் அல்லவா ......

      மறு பதிப்புகளால் இப்போதைய தரமான கதைகளுக்கு பாதிப்பு என்றால் மிக கடும் ஆட்சேபம் என்னிடமிருந்தும் வெளி பட்டிருக்கும் ! இவற்றுக்கு தடை இல்லை எனில் மறு பதிப்பை ஆதரிக்கும் நண்பர்கள் உடனே பணம் அனுப்புங்கள் ,அது ஒன்றே தடையாக இருக்கும் அதனை தாண்டி விட்டால் சிறந்த கதைகள் பல உண்டு கொண்டாடவும் ,நமது ஏக்கங்களை தீர்க்கவும் !

      தங்களது அடுத்த வருட தொடர் நாயகர்களை நினைத்து இப்போதே ஏங்க துவங்கி விட்டேன் ,ஸ்பைடரை மிஞ்ச ஒருவரா ,நம்ப இயலவில்லை? டெக்ஸ்சை மிஞ்ச ஒருவரா ? நடக்குமா ? சந்தேகம் தெளியவில்லையா? டைகரை மிஞ்ச ஒருவரா மா பெரும் கேள்வி ?ஆனால் கண்டிப்பாக விடை இருக்கும் தங்களிடம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை எனக்கும் நண்பர்களுக்கும் . 13 ய் மிஞ்சும் தொடரா ?லார்கோ அசத்தவில்லையா ? ஆனால் அவ்வப்போது வியாபாரியாக இருங்கள் தப்பே இல்லை !காமிக்ஸ் என்பது உன்னதமான கனவுகளை வெளி படுத்தும் ஒரு இடம்தானே !அதுவே உற்ச்சாகத்தினை பாய்ச்சும் ........... தங்களது இந்த முறை பயணம் பல நல்ல கதைகளின் உரிமைகளை நமக்காக கொண்டு வருவதிலும் இருந்திருக்கும் என நினைக்கிறேன் .............காத்திருக்கிறோம் தங்களது உன்னத படைப்புகளுக்காக !தங்களது நீண்ட சுவாரஸ்யமான பதில்களுக்கு நன்றி!நன்றி!!நன்றி!!!

      Delete
  63. ஆங்! அப்படித்தான்! இதுக்குத்தான் ஸ்டீல் க்ளா வேணும்கிறது! பாருங்க, அரங்கமே நிரம்பி வழியுது பாருங்க!

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹா ஹா .......எனது பதில்கள் இல்லாமல் மொத்தமாக ஒரே நாளில் படித்தது நமது புத்தகங்களை வாசிப்பது போலவே உள்ளது......ஒவொருவரும் பின்னி பெடலெடுக்கிரார்கள் ,புதிய நண்பர்களும் மீண்டும் பழைய நண்பர்களும் வந்தது மாபெரும் மகிழ்ச்சி !மனதை திறக்கும் ஒவ்வொருவரின் வரிகளும் அற்புதம் ....ஆசிரியர் கொட்டி விட்டார் போங்கள்.....

      Delete
  64. பேட் மேன் கதைகள் தேர்வில் தங்களது கடின உழைப்பு ,வாசகர்களுக்கு தரமான கதைகள் தர வேண்டும் என்ற தாகம் புரிகிறது! தங்களை போன்ற ரசிகரை, வியபாரியாக இல்லாமல் பெற்றது எங்களது பெரும் பேறே !வேறென்ன சொல்ல.......தங்களது நேர்மை மாபெரும் வெற்றி பெற்றுள்ளது....வெற்றி எளிதாக இருக்கலாம்...சந்தோசமான வெற்றி அரிதல்லவா ....இதை விட பல சந்தோசமான வெற்றிகள் காத்துள்ளன தங்களுக்கு ...............எங்களுக்கும் கூட தங்களை தொடர்வதால்.....

    ReplyDelete
  65. வெல்கம் பேக் ஸ்டீல்க்ளா. :-)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ..............காணாமல் போனவர்கள் லிஸ்டில் சேர்த்து விட்டீர்கள் போலுள்ளதே !

      Delete
  66. எடிட்டர் மற்றும் நண்பர்களே,

    நமது கோயம்புத்தூர் ஸ்டீல் க்ளா காணாமல் போய் திரும்பியது போல மாயாவியும் மீண்டும் லயனில் வருவார் என்று எதிர்பார்ப்போம் :)

    இன்றுதான் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் படித்து முடித்தேன். இடையில் இரத்தப் படலம் படித்துக் கொண்டிருந்ததால் தாமதம். மாயாவி கதை நீளமாய் இருந்தாலும் நன்றாகவே உள்ளது.

    Spider கதை மறுபடி வாசிக்கப்போகிறேன்.

    எடிட்டர் அவர்களே,

    ராபின் இணைந்த கதைகளிலும் முத்துக்கள் உண்டு. 'டெத் இன் பாமிலி' படித்துப் பார்க்கவும். நெஞ்சைப் பிசையும் கதைக் களம் கொண்ட ஒரு அருமையான காமிக்ஸ். அது ஒரு Batman, Robin and Joker சாகசம். முடிவில் ஜோக்கர் பேட்மேனுக்கு விரித்த வலையில் இரண்டாவது ராபின் - ஜேசன் டாட் சிக்கிவிடுவார். வாசகர்களிடம் முடிவெடுக்க விட்டார்கள். ராபின் உயிர் பிரிந்திட Batman செய்வதறியாது தவிக்கும் தருணத்தினில் முடியும் அந்த கதை பேட்மேன் கதைகளில் ஒரு சூப்பர் ஹிட்.

    ReplyDelete
  67. நண்பர்களே,

    இருபத்தைந்து ஆண்டுகளாய் லயன் காமிக்ஸ் வாசகனாய் இருந்திட்டாலும் - திகில், மினி லயன், ஜூனியர் லயன் சேர்த்து - நான் முத்து காமிக்ஸ் அதிகம் படித்ததில்லை.
    நான் படித்த முதல் முத்து காமிக்ஸ் - லார்கோ வின்ச். மாயாவி கதைகள் முன்பு வாங்கியதில்லை - என் தாய் மாமா நிறைய முத்து காமிக்ஸ் மற்றும் மாயாவி கதைகள் வைத்திருந்தார் - அப்போது கூட மேண்ட்ரேக் மற்றும் பாண்டம் படித்திருந்தாலும் கூட மாயாவி படித்ததில்லை.

    உண்மையைச் சொன்னால் நியூ லுக் ச்பெசியலில் இருந்த மாயாவி கதை தான் நான் முதலில் படித்தது. ஒரு முறை எடிட்டரிடம் தொலை பெசியினில் பேசியபோது கூட நான் முத்து வாசகனாய் இருந்ததில்லை என்று சொல்லி இருக்கிறேன்.

    இந்த பிண்ணனியை வைத்துக் கொண்டு பார்த்தால் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் நான் படித்த இரண்டாவது மாயாவி கதை. அதனால் எனக்கு இந்த கதை பிடித்திருந்தது. சொல்லப் போனால் பக்கம் நூறில் இருந்து நூற்றி முப்பது வரை வரும் அந்த quiz மாஸ்டர் விளையாட்டுக்கள் அட்டகாசம். It was like really playing an X-Box game. Good page turner.

    நாம் வளர்ந்து விட்டோம் என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொண்டு நம்மை முதிர்ச்சி அடைந்தவர்களாய்க் காட்டிக் கொள்ளலாம் எனினும் இது மாதிரி கதைகளை அவ்வப்போது படித்திட மனம் ஒன்று மட்டுமே தடையாய் இருந்திடும்.
    இன்னொரு விதத்தில் பார்த்தால் இன்று சாடிலைட் டிவி பார்த்து வளரும் சிறார்களுக்கு சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் போன்ற புத்தகங்கள் தமிழ் மீது ஒரு புரிதல் வரவும் உதவிடலாம்.

    நம் வயது மற்றும் முதிர்ச்சி (என் வயது முப்பத்தேழு) மட்டுமே கணக்கில் கொள்ளாமல் we got to look at it from all angles!

    Also what is maturity? "நான் வளர்ந்து விட்டேன் - சரடு விடும் கதைகள் எனக்கு பிடிப்பதில்லை - நான் இனி வாங்கமாட்டேன்" என்று கூறுவது முதிர்ச்சியா அல்லது "எனக்கு பிடித்த கதைகள் வருடத்திற்கு பதினோரு மாதங்கள் வருகின்றன. ஓரிரு மாதங்கள் fantasy கதைகள் வந்தால் அதுவும் நன்றே. அதற்கும் ஆதரவு அளித்திடலாம்" என்ற நிலைப்பாடு முதிர்ச்சியா? சிந்திப்பீர் !

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்களுக்கு நன்றி நண்பரே! maturity பற்றிய உங்களது கேள்வி கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது! எல்லோரும் சிந்தித்தால் நலம். இப்போதைய ஸ்டைலில் இரு வண்ணக் கதைகளோடு ஒரு fantasy type கதையும் கருப்பு வெள்ளையில் வந்திடும்பட்சத்தில், பிடிக்காதவர்கள் அந்த fantasy கதையை மட்டும் படிக்காமல் தவிர்த்துவிட முடியுமே? பிடித்தவர்களுக்கோ இரட்டை ஜாக்பாட்!
      இதை நான் நம் எடிட்டரிடம் கேள்வியாக எழுப்பியபோது (இதே postல் மேலே) அவர் அளித்த பதிலை ('மறுபடியுமா? முதலில் இருந்தா?') என்னால் இப்போதுவரை விளங்கிக் கொள்ள முடியவில்லை. யாராவது விளக்க முடியுமா?

      Delete
    2. மாயாவியின் அசத்தலான கதைகள் பல உண்டு நண்பரே....காத்திருங்கள்!அதுவும் முன்பை விட தரமான தாளில் ,சைசில்....

      Delete
    3. @Comic Lover

      --
      உங்கள் கருத்து பலவற்றிற்கு நானும் உடன்படுகிறேன்.
      ஆனால் 11 மாதங்கள் எனக்குப் பிடித்த கதை வந்து 1 இதழ் எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், கார்த்திக் தன் கமெண்டில் சொன்னது போல, கண்டிப்பாக அந்த 1 இதழை வாங்காமல் இருக்கமாட்டேன். படிக்கவிட்டாலும் கலெக்‌ஷனுக்காக.
      --

      நேற்று மாயாவி கதையைப் படித்து முடித்தேன் (கொஞ்சம் கஷ்டப்பட்டே). சற்றே யோசித்துப்பார்க்கையில், அந்தக் கதையில் ரசிப்பதில் என்ன பிரச்சினை என்று யோசித்தேன்.

      - இரும்புக்கை ரிமோட் கண்ட்ரோலில் வேலை செய்வது 40 வருடங்களுக்கு முன் அதிசயமானது. ஆனால் இன்று பிறந்த குழந்தை கூட ரிமோட் ஆபரேட் செய்கிறது. அதனால் அது ஒரு வியப்பாக இருப்பதில்லை.

      - கதையில் வரும் ஹீட் சென்சார், இப்பொழுது இரவு நேரங்களில் கண்காணிக்க உதவும் கருவியில் உபயோகப்படுத்தப் படுகிறது

      - ரோபாட்கள் கதை முழுவது வருகின்றன. இன்றைய உலகில் பல விஷயங்கள் நிஜமாகவே ஆகிவிட்டது. ஆள் இல்லா ராணுவ டாங்க் இப்பொழுது நிதர்சனம்.

      இப்படிக் கதையில் வரும் பல விஷயங்கள் நிஜமாகிவிட்ட இன்றைய சூழலில், சிறு வயதில் படிக்கும் போது, இப்படி எல்லாம் நடக்குமா என்ற வியப்பின் வழிவந்த ஆர்வம் இன்றைக்கு இல்லை.

      அதனாலேயே.. பெரும்பால மாயாவி கதையில் வரும் சம்பவங்கள் ஆர்வம் + வியப்பு என்ற எல்லையைக் கடந்து தினம் படிக்கும் செய்தித்தாளில் வரும் நியுஸ் ஐயிட்டம் போல ஆகிவிட்டது.

      மற்றபடி இது போல மும்மூர்த்திகளின் கதைகளை காமிக் க்ளாஸிக்சில் இனி வந்தால் (வருகிறது) பலருக்கு ஆட்சேபணை இல்லை.

      இங்கு இந்த இதழ் பற்றி குறை கூறிய பலருக்கு இருக்கும் (இருந்த) ஒரே கவலை, மும்மூர்த்திகளின் கதைகள் லயன்/முத்துவில் தொடர்ந்து வந்துவிடுமோ என்ற பயமே.. ஆனால் எடிட்டர் இந்தப் பதிவில் தெளிவாக விளக்கமளித்துவிட்டார்; மும்மூர்த்திகளுக்கு காமிக்ஸ் ஸ்பெஷல் என்று.

      Delete
    4. சரியாக சொன்னீர்கள் ராம்! Fantasy கதைகள் மற்றும் சரடு விடும் கதைகள் எனக்கு பிடிக்காது என்று நான் எங்கே சொன்னேன்?! இல்லையே?!! ஒவ்வொருவரும் என்னுடைய கருத்துக்களை முழுதாய் படிக்காமல் ஒவ்வொரு கோணத்தில் அணுகுவது தெரிகிறது! ;) காதில் டன் கணக்காய் பூச்சுற்றுங்கள், பரவாயில்லை - ஆனால் (தரமான) புதிய பூவாய் சுற்றுங்கள் என்றே சொல்கிறேன்! ;) வாடி வதங்கி, காய்ந்து சருகாகிப் போன பூவையே எத்தனை நாள்தான் காதில் வைத்துக்கொண்டு சுற்றுவது!!! ;)

      நான் முதலில் இட்ட கருத்துக்களையே மேற்கோள் காட்டிக் காட்டி எனக்கு ரொம்பவே போர் அடிக்கிறது ;) இருந்தாலும் இன்னொரு முறை:
      //மாயாவி, ஜானி நீரோ, லாரன்ஸ் டேவிட், ஸ்பைடர், ஆர்ச்சி போன்ற நிகழ்காலத்திற்கு சற்றும் ஒவ்வாத நாயகர்களை காமிக்ஸ் கிளாசிக்ஸில் மட்டும் வருமாறு ஒதுக்கி வைப்பது நலம்//

      ஜானி நீரோ, லாரன்ஸ் டேவிட் போன்றவர்கள் ஒன்று fantasy கதாநாயகர்கள் இல்லையே?! நான் இவர்களையும்தானே வேண்டாம் என்றேன்?! அதற்கான ஒரே காரணம் அக்கதைகள் / கதாபாத்திரங்கள் / கதை நடக்கும் காலகட்டம் மற்றும் இன்ன பிற விஷயங்கள் வழக்கொழிந்துவிட்டன என்ற நிதர்சனமான உண்மையே! இதை ஏற்றுக்கொள்வதும், ஏற்க மறுப்பதும் அவரவர் விருப்பம்! ;)

      Delete
    5. @Karthik Somalinga, Why do you take as if the points are directed at you mate?

      பலரது பின்னூட்டங்களைப் பார்த்த பின் தான் எனது கருத்துக்களை எழுதினேன். பலரும் பலவிதமான கருத்துக்களைக் கொண்டிருந்தார்கள்/இருப்பார்கள். எனவே உங்களை நோக்கி திரும்பியதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களது காமிக்ஸ் கிளாசிக்ஸ் கருத்து மிகச் சிறந்த ஒன்றே. விஜய் ஈரோடு தெரிவித்த யோசனையும் நன்றே. பலவாறு நாம் யோசிப்பதற்க்காகதானே இந்த ப்ளாக் களம்.

      Delete
    6. @Comic Lover:
      Buddy, what difference does it make whether I take them as if they were directed me or at anyone else with similar thoughts?! :)

      //பலவாறு நாம் யோசிப்பதற்க்காகதானே இந்த ப்ளாக் களம்//
      நான் உங்களின் இந்தக் கருத்தை மிகவும் வரவேற்கிறேன்! பலவாறு யோசிப்பதற்கும், மாற்றுக் கருத்துக்களை வரவேற்பதிற்கும் (அல்லது) விவாதிப்பதிற்க்கும் ஆசிரியரின் இந்த அற்புதமான தளத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே என்னுடைய விருப்பமும்!

      Delete
    7. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா : ///மாயாவியின் அசத்தலான கதைகள் பல உண்டு நண்பரே....காத்திருங்கள்!அதுவும் முன்பை விட தரமான தாளில் ,சைசில்....///

      அப்படியா ??

      Delete
    8. ஹா..ஹா.. அவமானப் பட்டுட்டாரு இரும்புக் கையரு. அதனாலதான் ஆசிரியரே பல தடவை சொல்லியிருக்கிறார்: 'சும்மா ரூமர்ஸ் க்ரியேட் பண்ணாதிங்கப்பா"ன்னு. சிலருக்கு அது ஒட்டிக்கிச்சு- போகாது போல....

      Delete
    9. எப்படி ஸ்டீல் க்ளா உங்களால மட்டும் இப்படியெல்லாம் முடியுது?! பாருங்க, நம்ம ஆசிரியரே அதிர்ச்சியடைஞ்சுட்டார்!!

      Delete
  68. நீல நீலமாய்.....ஹிஹி ....சாரி ...நீள நீளமாய் எழுதுவதில் comic lover ஒரு ஜூனியர் கோயமுத்தூர் ஸ்டீல் க்ளா -வாக மாறிவருகிறார்.அண்ணாருக்கு வயது முப்பத்தி ஏழாம்.என்னை விட இருபத்தி ஓரு வயது மூத்தவர்.(சாத்தான் என்றும் பதினாறு வயது ஆசாமி.ஹிஹி).

    ReplyDelete
    Replies
    1. Ha! Ha! உங்கள் humor-க்கு ஒரு அளவே கிடையாதா? :) :)

      Delete
  69. My Personal opinion:
    According to me, there is nothing like I am matured/grown up so i am not able to read these kind of stories ... and not not acceptable. It is how you are going to take them, it is how you are keeping your heart.. it should be young always :-)

    When we talk about maturity, our comments should not hurt anyone, we should put them in nice manner and also it make the things happen.

    Editor clearly explained what it is the cause of the SHSS, so there is no point in discussing the same here again and again. If there is a major issue I would like to raise always. One such thing is with growing number of readers I would like our editor to get in touch with/listen us always as he is doing now-a-days. I hope he do this for ever!!

    Here many people are having their own blog that could be one reason why I see lot of big comments, when I read their comments I imagine the Sun TV Sunday movie review program which comes on Sunday :-)

    ReplyDelete
    Replies
    1. Since you mention about bloggers here, I am certain that you are taking a dig at me (and other fellow bloggers!) ;)

      and not to forget, Vijayan Sir himself is officially a blogger now ;)

      //when I read their comments I imagine the Sun TV Sunday movie review program//
      now you are taking a dig at Sun TV as well, I like your humor sense! ;) Keep them coming!!!

      //Sunday movie review program which comes on Sunday :-)//
      ROFL ;)

      ---

      And on a serious note, blogging about Tamil comics (and that too in Tamil) is the one of the best ways to reach out to large number of Tamil speaking (or should I say reading?) people and to spread the word about our beloved comics! And I am happy about my self and proud about my fellow Comic bloggers for doing just that!

      Delete
    2. Karthik Somalinga : I don't quite think I qualify as a blogger..! I'm probably using this an interactive website for our comics !

      So digs if any - aren't aimed in my direction :-)

      Delete
  70. //ஒரு வியாபாரியாய் (!!) நான் என்ன செய்திடுவேன் என்ற கேள்வி மாத்திரம் எஞ்சி நிற்கிறது....! நம்ப சிரமம் தான் என்றாலும், இது வரை இந்த ஆண்டில் வெளி வந்த இதழ்களிலேயே - அசாத்திய விறுவிறுப்போடு E -Bay -யிலும் சரி ; நமது முகவர்களிடமும் சரி, விற்பனை கண்டுள்ள இதழ் நம் சூ.ஹீ.சூ.ஸ்பெஷல் தான் !! குறிப்பாக இந்த இதழின் E -Bay விற்பனையின் வேகம் இது வரை நாங்கள் கண்டிராததொரு சங்கதி !! இப்போது சொல்லுங்களேன் - ஒரு வியாபாரியாக நான் என்ன செய்திட வேண்டுமென்று ?!!!
    // ?????????

    ReplyDelete
  71. நண்பர்கள் விவாதிக்கவும் ,ஆசிரியருடன் கலந்துரையாடவும்,தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவும் தொடங்க பட்டதே இந்த ப்ளாக் ........இதன் வெற்றி எந்த ப்லோகிலும் இல்லை ........ நண்பர்களின் ஆர்வங்களே பங்களிப்புகள்! இது எனது எண்ணம் மட்டுமே...

    ReplyDelete
  72. Just received the Super Hero Special. I am stuck in my house for the next two days due to monster hurricane Sandy hitting my state of new jersey. New York city is shutting down, so I cant go to work. Good time to have the comics to keep company....

    ReplyDelete
  73. மினு மினுக்கும் தீபாவளி விருந்து தயாரா?சொன்ன தேதியில் அனுப்பி விடுவீர்களா?

    ReplyDelete
    Replies
    1. இது ஒரு ஞாயமான கேள்வி... அநேகமாக 6 or 7 தேதிக்குள் நமது கையில் மின்னும் என்று நம்புவோமாக..

      Delete
    2. தங்கக் கல்லறை சந்தாக்கான பிரதிகள் நவம்பர் 2 -ம் தேதி கூரியர்களில் (மொத்தமாய்ப்) புறப்படும். இதழ் நன்றாக வந்திருப்பதாக மனதுக்குப் படுகின்றது...! Fingers crossed..!

      Delete
    3. super....super......நன்றாக வந்திருப்பதை தயக்கத்துடன்தான் கூற வேண்டுமோ?

      Delete
    4. அது பற்றிய தங்களது சூப்பர் பதிவும் இன்று இரவே உண்டல்லவா?

      Delete
    5. மின்துறையின் சதிகளை முறியடித்த நமது நண்பர்களின் செயல்கள் ,அதுவும் மொத்தமாக ஆஹா .......போன முறை தாமதமாக பெற்ற நண்பர்கள் கொண்டாட தயாராகலாம் ..................ஆஹா ....ஆஹா

      Delete
    6. தினமும் பகல் 12 - மாலை 6 வரை மின்சாரம் கிடையாது ; அதன் பின்னர் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் ஒரு மணி நேரம் வெட்டு ! ஆக மொத்தம் ஒரு நாளில் எத்தனை மணி நேரம் மின்சாரம் உள்ளதென்று கணக்குப் போட்டுச் சொன்னால் - இரும்புக்கை மாயாவி எங்கள் ஊர்ப் பக்கமே தலை காட்டவே மாட்டார் ! திடுதிடுப்பென எதாச்சும் நிழல்படைப் பணி வந்து சேர்ந்தாலும் மனுஷன் மின்சாரம் வரும் வரை "தேமே' என்று அமைதி காக்க வேண்டியது தான் !

      Delete
    7. Good to see our editor at this time in the blog.. think he is preparing a new article tonight.. But really happy to receive blue berry this week itself... tnx for the effort sir :)

      Delete
    8. இதை இப்படி சொன்னால் அட இங்கே வேலை நடை பெறுகிறதே என்று அதனையும் நிறுத்தி விட போகிறார்கள் !

      சிறந்த, சீரிய பணிக்கு வாழ்த்துக்கள் நண்பர்களுக்கு !

      Delete
    9. //ஒரு நாளில் எத்தனை மணி நேரம் மின்சாரம் உள்ளதென்று கணக்குப் போட்டுச் சொன்னால் - இரும்புக்கை மாயாவி எங்கள் ஊர்ப் பக்கமே தலை காட்டவே மாட்டார்// Hahahahaha ROFL :)

      Delete
  74. thanga kallarai 2nd November 2012 ethir parkalama Editor Sir? Word Verification process eduthadalame Sir!? Mobilela comment pannumpothu periya thalai vazhiya iruku... Please remove word verfication!

    ReplyDelete
  75. ஆமாம் நண்பர்களே,

    நானும் நெடு நாட்களாய் கேட்டிடலாம் என்றிருதேன். இன்று மடை திறந்த வெள்ளம் போல பதிவுகள் போட்டுக்கொண்டிருக்கின்றேன். அதனால் இதுவும் ...!

    காமிக்ஸ் தரம் உயர்ந்து கொண்டிருக்கின்றது. கதைகள் அட்டகாசமாய் அமைகின்றது. ஆனால் கதைத் தலைப்பு மட்டும் இன்னும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னிட்ட:

    - எட்டுக்கர எத்தன்
    - பத்துக்கர பித்தன் :)
    - மேற்கே ஒரு மாமன்னர்
    - கிழக்கே ஒரு கோமணாண்டி :)
    - மரண ராகம்
    - ஜனன ஓலம்

    இப்படி டப்பிங் பட வாடையுடன் வந்துகொண்டிருக்கின்றதே. இதனை மாற்றும் யோசனை இல்லையா? புதிய, முதிர்வு கொண்ட தலைப்புக்களை சூட்டிடலாமே. பெரும்பாலும் ஆங்கில தலைப்புக்களை அப்படியே மொழிமாற்றம் செய்தால் நன்றாகவே வந்திடும். விதி விலக்கும் உண்டு.

    மற்றும் தலைப்புக்களுக்கு அவ்வப்போது போட்டிகள் வைக்கலாமே.

    ReplyDelete
    Replies
    1. எட்டுகர எத்தன் ....பத்துகர பித்தன் .....ஹா ....ஹா ....ஹா...

      Delete
    2. ஆறு, ஏழு மாதங்களுக்கு முன் இக்கருத்து முன்வைக்கப்பட்டபோது அதை ஏற்ற ஆசிரியர் ஓரிரு கதைகளுக்கு சற்றே மாறுதலாக பெயர் சூட்டினார் - அப்புறம் ஏனோ அதை மறந்து விட்டு பழைய ரக தலைப்புகளையே சூட்டி மகிழ்கிறார்! ;)

      //மற்றும் தலைப்புக்களுக்கு அவ்வப்போது போட்டிகள் வைக்கலாமே.//
      இதழ்களுக்கு (கதைகளுக்கு அல்ல) தலைப்பு வைக்கும் போட்டி ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது, ஆனால் வடைதான் போய்ச் சேர்கிறதா எனத் தெரியவில்லை! :) :)

      Delete
    3. தலைப்புகளில் இதுவரை குறை ஏதும் இருப்பதாக எனக்குத்தோன்றவில்லை. கதைக்கேற்ற தலைப்புகளும், அந்தத் தலைப்புகளில் தனி பாணியைக் கொண்டிருப்பதும் நமது காமிக்ஸின் சிறப்புகளில் ஒன்றாகவே நினைக்கிறேன்.

      Delete
    4. //தலைப்புகளில் இதுவரை குறை ஏதும் இருப்பதாக எனக்குத்தோன்றவில்லை.//
      99 அல்ல 101 ம் அல்ல சரியாக 100 % ஆதரிக்கிறேன் நண்பரே.....பத்து கர பித்தன் இதுவும் நல்ல இருக்கே ?

      Delete
  76. காமிக் லவ்வரின் கருத்தை நான் ஏற்க்கவில்லை.நமது காமிக்ஸ்களின் தலைப்பு பாணியை மாற்றவேண்டிய அவசியமில்லை.என் பெயர் லார்கோ தலைப்பையே பலர் ஏற்க்கவில்லை.புதிய பாணி வேண்டாமே சார்.(சாத்தான் ஒரு பழமைவாதி.ஹிஹி).

    ReplyDelete
  77. நண்பர்களே ......மறுப்பதிவு அறிவிப்பில் இடம்பெற்றிருக்கும் வான்வெளிக் கொள்ளையர் இப்பொழுது பதிப்பாக வருவது எத்தனையாவது முறை தெரியுமா ?யாருக்கு தெரியும் பதில் ...?இங்கு பதிவு செய்யுங்களேன் ப்ளீஸ் ?

    ReplyDelete
  78. ஸ்டீல் க்ளா அவர்களே..comic lover .பரணி சார் ,khaleel சார் ,saint satan ,karthik somalinga அவர்களே ....நான் மேலே கேட்டிருக்கும் கேள்விக்கு பதில் உள்ளோர் யாருமில்லையா......?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே ,நான் நான்காவது அல்லது ஆறாவது படிக்கும் போது வந்ததாக நினைவு ...அதுவே மறு பதிப்பா என தெரியாது ஆனால் அதற்க்கு பின்னர் நிச்சயம் வரவில்லை !ஆசிரியரை லிஸ்டில் விட்டு விட்டீர்களே!

      Delete
  79. நண்பரே .. ஆசிரியர் அவர்களுக்கு பதில் தெரியாமல் இருக்குமா?.நாளைவரை அவகாசம் ....நம் வாசக நண்பர்களின் ஞாபக சக்திக்கு ஒரு போட்டியாகவே இருக்கட்டும் ?? நானும் உங்களைப்போலவே தீவிர வாசகனாக்கும் ........

    ReplyDelete
    Replies
    1. நண்பர் அஹமத் பாஷா அவர்களே.அஸ்ஸலாமு அலைக்கும்.வான்வெளி கொள்ளையர் கதை ஒரே ஒருமுறை மட்டுமே மறுபதிப்பாக வந்துள்ளது.முத்து காமிக்ஸ் இதழ் எண்;21 முதல் பதிப்பாகவும்,இதழ் எண்;146 மறு பதிப்பாகவும் வந்துள்ளது என தெரிகிறது.ஆனால் பெரும்பாலான வாசகர்கள் ,நான் உட்பட அக்கதையை படிக்கவில்லை.(உனக்கு படிக்கக்கூட தெரியுமா?என்கிறீர்களா.ஹிஹி௦.)

      Delete
  80. 2013- FEBRUARY TEXWILLER KAVAL KALUGU?
    THE LAST 10Rs BOOK?
    ITHUTHAN ADVANCE THINKING??!!

    ReplyDelete
    Replies
    1. COMICSPRIYAN : 2013 - February - Tex Willer - 256 pages - Rs.50

      Delete
    2. Such a great news sir :) wowwwwwwwwwwwwwwwwww

      Delete
    3. எடிட்டர் சார்,

      எனக்கொரு சந்தேகம். முன்பு நீங்கள் கூறியிருந்த 'குட்டியானதொரு தலையனை சைஸில் டெக்ஸ்வில்லரைக் கண்டிடப் போகிறீர்கள்' என்பது இந்த 256 பக்க புத்தகத்தையா அல்லது இதைவிடவும் பெரிய கதைகள் வரவிருக்கின்றனவா? (எனக்கு 5000 பக்கங்களில் வந்தாலும் சந்தோஷமே!)

      Delete
    4. ஏது கட்டில் சைசில் கேட்டீர்கள் இப்போது கப்பல் சைசில் கேட்கிறீர்களே!

      Delete
  81. மூர்த்திகளும்...கீர்த்திகளும்.....!


    புரிந்தது

    சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் என்னை போன்ற வாசகரை பொருத்தவரை ஆஹா..அற்புதம் ! எடிட்டரை பொருத்தவரை விற்பனையில்.

    Fleetway நிறுவனத்தின் Stupendous Series -ன் படைப்புகள் விறுவிறுப்பானவை. அதன் பிறகு வார இதழ்களில் வந்தவை அதற்க்கு ஒப்பில்லை.

    லைன்-முத்து காமிக்ஸ் படிப்படியாக கம்யூட்டர் யுகத்துக்கு மாறிவருகிறது.

    தரமான கதைகளே எப்பொழுதும் வெளியிடப்படும். "குப்பை - குப்பையே"

    புரியாதது

    ரசனைக்கும் வயதுக்கும் சம்பந்தம் உண்டா....?'
    எடிட்டர் வியாபாரியாக எப்பொழுது இருந்தார்? அல்லது வியாபாரியாகதான் அவரால் மாற முடியுமா?


    ReplyDelete
    Replies
    1. //எடிட்டர் வியாபாரியாக எப்பொழுது இருந்தார்? அல்லது வியாபாரியாகதான் அவரால் மாற முடியுமா?//

      நண்பரே

      எனக்கு தெரிந்து எந்த புத்தகத்திருக்கும் இல்லாத சிறப்பு நமது லயன்-முத்து இதழ்களுக்கு உண்டு.

      மற்ற புத்தகங்கள் அனைத்தும் ஒரு இடை நிலையாலரின் (புத்தக கடைகள்) மூலம் நமக்கு கிடைக்கும். வேறு எந்த வித தொடர்பும் இருக்காது.

      ஆனால் நமது லயன்-முத்து புத்தகங்கள் ஒரு பாசப் பிணைப்பில் நம்மை பிணைத்திருக்கும்.

      இது நமது எடிட்டர் வியாபாரியாக இல்லாத காரணத்தினாலேயே அன்றி வேறு எதுவும் இல்லை.

      நேற்று ஈரோடு நகரில் நண்பர் ஸ்டாலின், விஜய், புனித சாத்தான், ராஜா, சிபி இன்னும் நிறைய நண்பர்கள் சேர்ந்து ஒரு காமிக்ஸ் சந்திப்பு ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தியும் உள்ளனர். இது நமது எடிட்டர் வியாபாரியாக இல்லாத காரணத்தினாலேயே.

      எனவே நீங்கள் கூறியது முற்றிலும் உண்மையே :)

      திருப்பூர் ப்ளுபெர்ரி

      Delete
  82. Sir,

    When we will expect KAAVAL KAZHUKU book ? This is last in our Rs. 10 book series.

    Hope to get this book soooooooooooooooooooooooon.

    Thanks

    ReplyDelete

  83. Vijayan24 October 2012 01:20:00 GMT+05:30
    vijay Erode : சாரி விஜய் ! டெக்ஸின் அடுத்த சாகசம் - பெப்ரவரி 2013 -ல் தான் ! ரூபாய் பத்து விலையில் வரவிருந்த "காவல் கழுகு" தற்சமயத்திற்கு postponed ! டிசம்பரில் "மரணத்தின் நிசப்தம் " மாத்திரமே !

    ReplyDelete
  84. நண்பர்களின் கருத்து பரிமாற்றங்களை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது. நான் சூப்பர் ஹீரோக்களின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். எனது சூப்பர் ஹீரோக்கள் 'சண்டி' புயலால், நியூயார்க்கில் சிக்கித்தவிக்கிறார்களாம்...!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ராஜவேல் அவர்களே அங்கு நிலைமை எவ்வாறு உள்ளது. இரண்டு நாட்களுக்கு விடுமுறையாமே... அவ்வளவு மோசமான வானிலை மாற்றமா?

      Delete