Monday, October 08, 2012

குட்டியாய் சில கேள்விகள் !


நண்பர்களே,

வணக்கம். நாளொரு மேனி..பொழுதொரு மின்வெட்டாய், நாட்கள் வண்ணமயமாய்க் கழிந்து வருகின்றன ! இருளின் நிறம் கறுப்பு தானே ; கறுப்பென்பது - மொத்தமாய் அத்தனை வண்ணங்களின் கலவை தானே ;  So அப்படிப் பார்க்கையில் இந்தக் காரிருளும் எங்களுக்கு வண்ணமயமே ! வழக்கமாய் இது போன்ற buildup கொடுத்திடும் போது, "ஆஹா....பஞ்ச் டயலாக் வரும் முன்னே ; இதழ் லேட் ஆகப் போகின்றதென்ற அறிவிப்பு வரும் பின்னே"! என்று நீங்கள் தலையைச் சொறிந்திடுவது இயல்பான reaction ஆக இருந்திடலாம் ! ஆனால் இது சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் என்பதாலோ என்னவோ ; எங்களுக்கும் கொஞ்சம் சூப்பர் சக்தி வந்து விட்டது போலும்!! இவ்வாரம் வெள்ளிக்கிழமை பிரதிகள் (12 /அக்டோபர்) தயாராகி; கூரியரைத் தேடிப் புறப்படும் ; hopefully வார இறுதிக்கு உங்களின் பொழுதுகளை ஸ்வாரஸ்யமாக்கிட நம் பால்ய சகாக்கள் உங்களோடு இருப்பார்கள் ! Hope the welcome mat's out already !! தங்கத்தைத் தேடும் முயற்சி கூட (தி.நகரில் அல்ல!!) ஜரூராய் நிறைவை நோக்கிப் பயணமாகிக் கொண்டுள்ளது ! கேப்டன் டைகரின் "தங்கக் கல்லறை" நவம்பர் 2 தேதிக்கே தயாராகி விடும் !   

சூ.ஹீ.சூ.ஸ்பெஷல் உங்களை வந்தடையும் இவ்வார இறுதி வரை, இங்கே நம் வலைப்பதிவுப் பக்கத்தில் நித்தமும் "உள்ளேன் அய்யா" போட்டு வரும் உங்களின் பொழுதுகளை சிறிதேனும் interesting ஆக்கிட ; உங்களின் காமிக்ஸ் பொது அறிவை (!!), நினைவாற்றலை கிளறி விட சின்னதாய் ஒரு காமிக்ஸ் trivia quiz !   தீவிர லயன் சேகரிப்பாளர்களுக்கு இது நிச்சயம் சிறுபிள்ளை விளையாட்டாய் இருந்திடுமென்பது உறுதி !! So, here goes :

  1. லயன் காமிக்ஸின் முதல் மறுபதிப்பு எது ?
  2. ஆர்ச்சிக்குப் போட்டியாய் லயனில் வந்திட்ட "இரும்பு ஹீரோ" யார் ?
  3. ஒரே ஒரு கதையில் மாத்திரமே தலைகாட்டிய ஹீரோக்களில் யாரேனும் 3  பேரை லிஸ்ட் பண்ணுங்களேன் ?
  4. ஒரு சாகசத்திற்கும் ; அடுத்த சாகசத்திற்குமிடையே மிக நீ.....ண்....ட இடைவெளி விட்ட நாயகர்(கள்) யார் ?
  5. லயனில் இது வரை அதிகமான கதைகளில் தலைகாட்டியுள்ள ஹீரோ யாரோ ?
  6. கேப்டன் பிரின்ஸ் லயனில் தலை காட்டிய முதல் இதழ் எது ?
  7. லயனில் இது வரை மொத்தம் எத்தனை "ஸ்பெஷல்" இதழ்கள் வந்துள்ளன ? 
  8. லயனின் முதல் கார்ட்டூன் சாகசம் எது ?
  9. "கபாலர் கழகம்" இதழின் நாயகர் யார் ?
  10. லயனின் முதல் அறிமுகம் என்பதைத் தாண்டி மாடஸ்டி ப்ளைசிக்கு இன்னொரு பெருமையும் உண்டு ! அதென்ன ?
திருவிளையாடல் தருமியைப் போல் அடியேனுக்குக் கேள்விகள் மாத்திரமே அத்துப்படி ! விடைகளை உங்களைப் போலவே நானும் தேடித் தான் பிடித்தாக வேண்டும் !  உங்கள் பதில்களை "லயன் Quiz " என்ற தலைப்பிட்டு, தபாலிலோ ; lioncomics@yahoo.com என்ற நமது மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிடலாமே ! 10 /10 வாங்கிடும் நண்பர்களுக்கு நமது காமிக்ஸ் க்ளாசிக்சின் முதல் இதழ் gift ஆக அனுப்பிடப்படும் !  கூட்டணிகளோ ; பதில்களை பகிர்ந்து எழுதிடுவதோ வேண்டாமே ப்ளீஸ் ! Good luck !

129 comments:

  1. Replies
    1. அய்யோ அய்யோ சொக்கா இந்த கேள்விகளுக்கு எனக்கு பதில் சொல்லமாட்டாய.
      பரிசு அதனையும் எனக்கே தர மாட்டாயா.

      Delete
    2. புத்தகங்கள் அனைத்தும் சீக்கிரம் தயாராக இருக்கும் செய்தி மிக மகிழ்ச்சியாக இருக்கிறது சார்.
      உங்களுடைய குளுமினருக்கு மிகவும் நன்றிகள் சார்.

      Delete
    3. கிருஷ்ணா வ வெ : முயற்சித்துத் தான் பாருங்களேன்..!

      Delete
    4. கிருஷ்ணா தங்களுக்கு புத்தகம் உறுதியாயிற்று போல!

      Delete
    5. நண்பரே உங்கள் வாய் முகுர்த்தம் பலிக்கட்டும்.
      எல்லாம் அந்த சொக்கன் செயல்.
      நம்ம கைல என்ன இருக்கு.

      Delete
  2. Dear editor,

    இப்படியொரு வித்தியாசமான பதிவை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை! நீங்கள் கேட்டிருக்கும் கேள்விக்கான பதில்களை கொஞ்சம் நிறையவே work-out செய்தால் மட்டுமே கண்டுபிடித்திட இயலும். பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி நானா தெரியவில்லை. ஆனால், நண்பர்களிடம் அரட்டையடிக்க சில கேள்விகள் கிடைத்திருக்கிறது.
    ஓ... ஸ்டாலினோவ்....
    ஓ... சாத்தானோவ்...
    ஓ... ஆடிட்டரு ராசாவோய்...

    ReplyDelete
    Replies
    1. vijay Erode :

      "ஆனால், நண்பர்களிடம் அரட்டையடிக்க சில கேள்விகள் கிடைத்திருக்கிறது".

      அது தானே இப்பதிவின் நோக்கமே !

      Delete
    2. $$$$$$$$$$$$$$$$$கூட்டணிகளோ ; பதில்களை பகிர்ந்து எழுதிடுவதோ வேண்டாமே ப்ளீஸ்$$$$$$$$$$$$$$$ million dollar questions??????????????

      Delete
  3. ஹாய் எடிட்டர்,

    உற்சாகம் ஏற்படுத்தும் பதிவு என்பதில் சந்தேகமில்லை.. பழைய ஹீரோக்கள், இன்பமான பழைய நினைவுகளை நினைவூட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.. கேள்விகள் நல்லா இருக்கு.. ஆனால் பரீட்சை ஞாபகம் வந்து தொலைக்கிறது :). இரண்டு கேள்விகளுக்கே பதில் தெரியும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. இதழ் லேட்டாக வர பவர்-கட் உள்ளிட்ட பல காரணங்களைச் சொல்லிடமுடியுமென்றாலும், தங்களது அயராத இரவு-பகல் உழைப்பினால் 'தாமதத்திற்குப் பெயர்போன லயன் காமிக்ஸா இது!' என்ற வியப்பை ஏற்படுத்தி, குறித்த நேரத்தில் இதழ்களைத் தயார் செய்திடும் உங்கள் டீமிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
    'தங்கக் கல்லறை'யும் குறிப்பிட்ட தேதிக்கு முன்பேவா?!
    ஆஹா!!

    ReplyDelete
  5. sathiyamaga ithu enakana potti illai nanbargale start music danakudanakudanaku. king viswa, SS, kovai irumbukkai, captainHI, muthalaipattalam etc nanbargale muyarchi seiyavum

    ReplyDelete
    Replies
    1. start the music !! அதற்குள்ளே நண்பரொருவர் 10 /10 வாங்கி விட்டார் !

      Delete
    2. அதற்குள்ளாகவா?!!!! ஹூம்...
      அந்த நண்பருக்கு என் பொறாமை கலந்த வாழ்த்துக்கள்! (கர்... புர்...)

      Delete
    3. அடுத்ததாக 7 /10 !

      Delete
  6. Dear editor,

    சூ.ஹீ.சூ ஸ்பெஷல் கைக்கு கிடைத்திடும் முன், ஹாட்-லைனையாவது ஒரு குட்டிப் பதிவாய் போடுங்களேன். ப்ளீஸ்!

    ReplyDelete
    Replies
    1. vijay Erode : மெயின் picture தான் இன்னும் நாலைந்து நாட்களுக்குள் வந்திடுமே...trailer எதற்கு இப்போது ? தவிர, ஹாட்லைன் ; "சிங்கத்தின் சிறுவயதில் " பகுதிகளை இங்கே முதலில் படித்து விட்டால், இதழில் மீண்டும் படித்திடும் போது, சுவாரஸ்யம் குறைச்சலாக இருப்பதாக நண்பர்கள் சிலர் அபிப்ராயப்பட்டனர் ! அதுவும் சரி தானென்று தோன்றியது...!

      Delete
    2. திரும்பவும் நான்தான் அவுட்டா?பெங்களூரில் இருக்கும் எனக்கு எப்போ வரும்பா?ஹ்ம்ம்......பரிதாப ஜீவன் நான்.......

      Delete
  7. எப்பா இப்போதாவது தங்களுக்கு ஞானோதயம் வந்ததே! வாரம் ஒரு பதிவு கண்டிப்பாய் வேண்டும்! ஸ்பெசலில் ஆண்டு மலர் ,தீபாவளிமலர் இரும்புமனிதன் போன்றவை அடக்கமா?

    ReplyDelete
  8. விஜயன் சார்...

    இன்று காலை தங்களது அலுவலகத்தில் இருந்து எனக்கு போன் வந்தது. சந்தா தொகை குறைந்துவிட்டது என்று (ஸ்டெல்லா அவர்கள் என்று நினைக்கிறேன்).

    (வேறு ஒன்றுமில்லை.. ஸ்டாக் இல் உள்ள புத்தகங்களையும் சேர்த்து வாங்கினால் குறையத்தனே செய்யும்)

    "அடுத்த வாரம் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் இதழில் மறுபதிப்புகளுக்கான சந்தா தொகை வர உள்ளதால், அதையும் சேர்த்து கட்டி விடுகிறேன்" - என்று கூறினேன்.

    ஆனால் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் நமக்கு வர தாமதமாகிவிட்டால்? என நினைத்து உடனே மீதி சந்தா
    தொகையை (Rs. 300) தங்களது வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் அனுப்பி விட்டேன்.

    எனவே எனக்கும் வரும் வெள்ளி அன்றே சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் அனுப்பிட தங்களது டீமிடம் ஆவணம் செய்யுமாறு கேட்டு கொள்கிறேன் :)


    திருப்பூர் ப்ளுபெர்ரி


    ReplyDelete
    Replies
    1. திருப்பூர் ப்ளுபெர்ரி : வெள்ளிக்கிழமை அனைத்து சந்தாப் பிரதிகளுமே ஒரு சேர அனுப்பிடப்படும் ! Don't worry !

      Delete
    2. அனைவரும் வார விடு முறைதனை சந்தோசமாக கொண்டாடலாம் என உரக்க கூறியுள்ள தங்களுக்கு காமிக்ஸ் கலை உலக நண்பர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் -சமபந்தி விருந்து ..........ஆஹா !

      Delete
  9. hats off to entire team for early release of specials. keep it up!

    ReplyDelete
  10. சூப்பர் சார்,இந்த வாரத்திற்குள் நமது பால்ய நண்பர்களை முன்னாள் கொண்டு வந்ததற்கு தங்களுக்கும்,நமது டீமிற்கும் நன்றிகள் பல..........

    ReplyDelete
  11. வரும் ............வராது .....மாதிரி; தெரியும்.............................................தெரியாது !

    ReplyDelete
  12. இந்த போட்டிக்கு கெவ்ன் பனேகா காமிக்ஸ்பதி என்று பெயர் வைத்திருக்கலாமே சார்.அடியேனின் சிறு மூளைக்கு எட்டியவரை மேற்ப்படி கேள்விகளில் பாதிக்குகூட பதில் தெரியாது என்பதை வேறுவழியில்லாமல் ஒப்புகொள்கிறேன்.சரியான பதில் எழுதும் புண்ணியவான்களுக்கு சாத்தானின் ஆசிகளை(?)தெரிவித்துகொள்கிறேன்.(satan bless you my child.hi hi).

    ReplyDelete
  13. எவளவு பிழைகள் உள்ளதோ அதற்க்கேற்ப்ப பக்கங்களை குறைத்து கொள்ளுங்களேன்?

    ReplyDelete
    Replies
    1. But இந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.

      Delete
  14. ஓருவர்:   நம்ம எடிட்டரை நாமெல்லாம் 'ஆசிரியரே, ஆசிரியரே' ன்னு கூப்பிட்டது தப்பாப் போச்சு!

    மற்றொருவர்:   ஏன், என்ன ஆச்சு?

    ஒருவர்:  பார்ப்பவர்களிடமெல்லாம் பத்து கேள்விகள் கேட்டு, பதில் சொல்லலேன்னா பிரம்பால அடிப்பேன்னு மிரட்டுகிறாராம்!

    ReplyDelete
    Replies
    1. விஜய்,முதலிலே கூறியிருந்தால் எனது கை பழுத்திருக்காதே.............

      Delete
    2. ஹி ஹி ஹி சூப்பரப்பு :))
      .

      Delete
    3. அட்டை இல்லா புத்தகங்களுக்கு பிரவுன் அட்டை போட சொல்லுவாரோ

      Delete
  15. This is really good and interesting,

    Suresh

    ReplyDelete
  16. ----------
    இதழ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே தயார் என்பதில் உங்கள் மற்றும் உங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து காமிக்ஸ் ரசிகர்களின் (ஆம் ! அவர்கள் தானே ஒவ்வொரு இதழின் முதல் ரசிகர்கள்) உழைப்பு மற்றும் தாமதம் என்ற சொல்லை இனி பயன்படுத்தக் கூடாது என்ற வைராக்கியம் தெரிகிறது.

    மற்றும் இதழ் தயாரிப்பு பணிகளில் ஒரு Process in place என்றும் தெரிகிறது. ISO Certificate பெற்ற நிறுவனமாக பிற்காலத்தில் வருவதற்கான வாய்ப்புகள் ”பிரகாஷ”மாக இருக்கிறது.

    மேலும் கேப்டன் நவம்பர் 2-ல் வருவது உறுதி என்பது இன்னும் ஒரு நற்செய்தி..

    வேறு என்ன எழுதுவது (ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் - கடைசிக் கேள்வி) பதில் தெரிவதால், 10/10 வாங்கி, காமிக்ஸ் பரிசை வெல்லும் தோழர்களுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :)
    ----------

    ReplyDelete
  17. இதெல்லாம் ஏற்கனவே தெரிஞ்சிருந்தா ...நாங்க ஏன் சார் மறுபதிப்பு கேக்க போறோம்
    நீங்க கேட்டிருக்கிற பல கேள்விகளுக்கு அந்த கதைகள் மறுபதிப்பு வந்தால் தான் எனக்கு விடையே தெரியும் ...

    ReplyDelete
  18. அப்புறம் ஒரு வேண்டுகோள்... சென்னை டிஸ்கவரி புக் பேலஸ்க்கும் கொஞ்சம் முன்னரே புத்தகங்களை அனுப்பி விடுங்களேன்...போன முறை ரொம்ப நாளாகி விட்டது .

    ReplyDelete
    Replies
    1. Lucky Limat : சந்தாப் பிரதிகளுக்கு priority என்ற போதிலும், விற்பனையாளர்களுக்கும் அடுத்த ஓரிரு நாட்களுக்குள்ளாகவே இதழ்களை அனுப்பிடுவோம் - அவர்கள்தம் ஆர்டர்கள் கிடைக்கப் பெற்றிருப்பின் ! தாமதங்கள் நிச்சயம் எங்களால் அல்லவே...!

      Delete
    2. நானும் ரெண்டு மூன்று தடவை அவர்களிடம் சீக்கிரம் கொடுக்குமாறு கேட்டுப் பார்த்து விட்டு சந்தாவுக்கு மாற்றிவிட்டேன். அவர்களிடம் இருந்து நான் அறிந்து கொண்டது, அவர்கள் புத்தங்களை சிவகாசியில் இருந்து சென்னைக்கு கொண்டு வரும் ட்ரவல்ஸ் மிகவும் தாமத படுதிவிடுகிரார்கள் என்பதே. சுமார் 10 ௦ நாள் கழித்து தான் அங்கு கிடக்கிறது.

      Delete
  19. கேள்வி எண் நான்கிற்கான விடைகளில் விஜயன் சார் பேரையும் சேர்த்துக்கொள்ளலாமா?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே தயவு செய்து பதிலை வெளியிடவேண்டாமே,ஒவொருவரும் பதிலை கூறினால் ஆசிரியர் பாவம்தானே!அப்புறம் அனைவருக்குமல்லவா புத்தகம் தர வேண்டியிருக்கும் .ஆனால் மிக சரியான பதிலை இப்படி வெளிப்படையாக வெளியிட்ட தங்களை ஆசிரியர் எப்படி தண்டிக்க போகிறாரோ ?உருமிக்கொண்டிருப்பதாக கேள்வி! பதுங்கியே இருங்கள் !அப்பாடி ஒரு பதில் கிடைத்து விட்டது .

      Delete
    2. ஹாஹாஹாஹா...ஸ்டீல்கிளா நண்பரே (கைப்புள்ள ஸடைலில் படிக்கவும்)வாசகர்கள் : லேட்டா வராத லயன் காமிக்ஸ் எங்கருக்கு? ஆசிரியர் : அது போன வருஷம்...நான் சொல்றது இந்த வருஷம்....

      Delete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. என்ன கொடுமை சார் இது? வெள்ளியன்று முக்கியமான வேலையாக சென்னை செல்ல வேண்டியுள்ளது...அனேகமாக சூ.ஹீ.ஸ்பெஷலும் அன்றுதான் கொரியரில் எனக்கு வருமென நினைக்கிறேன்...ஐய்யோ எனக்கு வேலையே ஓடாதே...திங்கள் வரை காத்திருந்துதான் படிக்கணுமோ...நெவர்...வியாழன் அன்று உங்கள் அலுவலகத்தில் நேரடியாக வந்தால் வாங்கிக் கொள்ளலாமா சார் ப்ளீஸ்

    ReplyDelete
    Replies
    1. என்னவொரு துணிச்சல்,இதற்க்கு பிறகுமா?போங்க போங்க ,காத்திருக்கும் உங்கள் பதிலுக்காகவே !

      Delete
    2. ஹலோ மைக் 1 காலிங் மைக் 2 முதல் இதழை பிறர் வயிறெரிவது மாதிரி முதலில் நேரில் வாங்கும்வரை இந்த மேட்டரை சீக்ரட்டாக வைத்துக்கொள்ளவும் ஓவர்ஓவர்...

      Delete
    3. Raja Babu : Sorry, வெள்ளி மதியம் தான் பெற்றுக் கொள்ள முடியும் !

      Delete
    4. மைக் 2 : கிடைத்ததை வெளியில் சொல்லாதீங்க ஓவர் ,உங்களிடமிருந்து தட்டி பறிக்க ஒரு கும்பல் காத்திருக்கு ஓவர் ஓவர்

      Delete
    5. மைக் 1 மைக்2 அவ்வ்வ்வ்வ்...ஆசிரியரே குண்டைப் போட்டுவிட்டார்...திங்கள் கிழமை ஊர் திரும்பி புக் கையில் கிடைக்கும்வரை தூக்கம் வராது...ஓவர்ஓவர்

      Delete
  22. கேப்டன் டைகரின் மாஸ்டர் பீஸ் மின்னும் மரணம் என்பது என் அபிப்ராயம்...ஆனால் ஆசிரியரிடம் ஒருதடவை நேரில் பேசியபோது தங்க்கல்லறை அதைவிட சூப்பராக இருக்கும் என்று சொன்னார்.நான் தங்கக் கல்லறை படித்ததில்லை...ஆனால் ஆசிரியரின் தேர்வு பொய்த்ததில்லை...எனவே மின்னும் மரணத்தை மிஞ்சப்போகும் தங்கக் கல்லறையை மிகமிகமிகமிகமிக ஆவலோடு எதிர்பார்க்கிறேன்...எக்ஸ்கியூஸ்மி...நவம்பர் 2 தேதிக்கு இன்னும் எத்தனை நாள் இருக்குது? வருசமா? ஆசிரியர் இப்பல்லாம் முன்னமாதிரி இல்ல...அதனால 2012தான்...நோ லேட்...என்னது...24 நாள் இருக்கா...சரி அது வரும்வரை NBS கன்டினியூட்டிக்காக இளமையில் கொல் & இயந்திரப்படை ரெண்டையும் படிக்க வேண்டியதுதான்...

    ReplyDelete
  23. எடிட்டர் அவர்களே,

    அறிவிப்பினைப் பார்த்த உடன் ஆர்வம் தாங்காமல் ஐந்நூறு ரூபாய் சந்தா அனுப்பிட்டேன். இ-பே அறிவிப்பு வரும் வரை காத்திருக்க பொறுமை இல்லை. லிஸ்ட் விவரம் இன்று மாலைக்குள் இ-மெயில் அனுப்பி விடுகிறேன். எனக்கும் வெள்ளி அன்றே கூரியர் செய்யவும் :)

    மற்றும் நமது நெடு நாளைய சென்னை வாசகர் முருகனிடம் பேசியது மகிழ்ச்சி. இரத்தப்படலம் கிடைக்க உதவினார். அடுத்த வாரம் சந்திக்கவிருக்கிறேன்.

    ReplyDelete
  24. இன்னும் சில 7 /10 ; ஒரு 9 /10 ! ஸ்டார்ட் தி மியூசிக் !

    ReplyDelete
    Replies
    1. இவளவு பேர்தானா ?நமது நண்பர்கள் சீரியசாக படித்து கொண்டிருக்கிறார்கள் போல ,எப்படியும் பாசாகி விட வாழ்த்துக்கள்

      Delete
  25. சார்,இரண்டாவது முறை கலந்து கொள்ள வாய்ப்புண்டா?

    ReplyDelete
  26. ம்ஹூம்... எனக்கு ரொம்பக் கஷ்டம்! எவ்வளவு யோசிச்சும் பிரயோஜனமில்லை.
    இதைவிட எளிதான வழி, பேசாம எடிட்டர் அறிவிச்ச அந்த முதல் காமிக்ஸ் க்ளாசிக்ஸ் இதழை சந்தா கட்டியே வாங்கிக்கறேன்.

    (இவ்வளவு பிரம்மாண்டமாய் கேள்விகள் கேட்டுவிட்டு, இந்தப் பதிவிற்கு நம்ம எடிட்டர் வச்ச தலைப்பு 'குட்டியாய் சில கேள்விகளாம்'!!) கர்... புர்...

    ReplyDelete
  27. கடவுள் எனக்குக் கொடுத்த பெரிய கிப்ட் என் ஞாபகமறதிதான்...அதனாலேயே நமது காமிக்ஸ்களின் கதைப் பெயர்களும் சிலசமயம் கதைகளுமே மறந்துவிடும்...எனவே வருடமொருமுறை எனது ஃபேவரிட் கலெக்ஷன்களை படிக்கும்போதும் புதிதாக படிப்பதுபோலவே இருக்கும்...எனவே என்னால் போட்டியில் கலந்துகொள்ளும் அளவு நினைவுசக்தி இல்லை என்று கூறி அப்பீட்டு ஆகிக் கொள்கிறேன்...ஆமா நீங்கள்லாம் யாரு?நான் யாரு?இதையெல்லாம் ஏன் உங்ககிட்ட சொல்றேன்?நான் நல்லவனா கெட்டவனா?(XIII எஃபெக்ட்)

    ReplyDelete
  28. இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் சொன்ன தேதிக்கு முன்னமே கொடுக்கும் உங்களை / உங்கள் குழுவை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. சொன்ன தேதிக்கு முன்னமே கொடுப்பதில் இருந்து, லயன் காமிக்ஸுக்கு/எங்களுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் தெரிகிறது. முத்து நெவெர் பிபோர் ஸ்பெஷலும் தாமதமின்றி வர வாழ்த்துகிறேன். :-)

    கேள்விகளுக்கு சத்தியமாக 5 மார்க்கு கூட வாங்க முடியாது. அதனால் ஆணியே பிடுங்க வேண்டாம் என்று விட்டு விட்டேன். :-)

    ReplyDelete
  29. நீங்க எவ்வளோ புப்ளிஷ் பண்ணாலும் அதா வாங்க நாங்க ரெடியா இருக்கோம் அதானால் நீங்க புப்ளிஷ் பண்ணிட்டே இருங்க நாங்க வாங்கிட்டே இருக்கோம்

    ReplyDelete
  30. குட்டியாய் சில கேள்விகள் - தலைப்பை படித்து 'ஆசிரியர் இப்படி கெட்டுபோய்டாரே' ன்னு ரொம்ப கவலையாய் பதிவை படித்தால்.... என் சட்டி மூளைக்கு எட்டாத 10 கேள்விகள்.

    எல்லா கேள்விக்கும் பதில் தெரிந்தாலும் 10 எனக்கு ராசியில்லாத நம்பர். அதனால சொல்லமுடியாது. :-)

    ReplyDelete
  31. என்னோட மார்க் என்னன்னு எப்படி தெரிஞ்சிகிறது சார் ?

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவு மதிப்பெண் என்று ஒரு பதில் மெயில் அனுப்புங்கள் சார்.

      Delete
    2. இவ்வார இறுதியில் சரியான பதில்களை இங்கேயே அறிவித்தால் போச்சு !

      Delete
  32. கழுத்துல போடுற டாலர்,டைம் டேபிள் ,கி செயின் டி- ஷர்ட் குடுத்தா மட்டுமே மந்திரி ஆட்டத்துல கலந்துகுவாரு ........................(அதாகப்பட்டது பதில் தெரியலைன்னு என் வாயால எப்பிடி சொல்லுறது ....)
    இந்த வாரம் குங்குமத்தில்......................................... சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் அதிரடி ரிலீஸ்.. சிங்கம் அதிரடி பேட்டி...உயீஈஈஈஈஈஇ (விசில்)
    சிங்கம் பெரு வயதில் வீறு நடையும் போடுவதின் ரகசியம் என்ன ....?

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. தலைவா இது என்ன சோதனை?. அனைவரும் பின்னிவிடுவார்களே! ...............ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் ...... இந்த பரிசு எனக்கு இல்லை......

    ReplyDelete
    Replies
    1. நிறைய 8 /10 க்கள் !

      Delete
    2. கோவையில் நீண்ட நாட்களுக்கு பின் நல்ல மழை ! சிவகாசியில் மதிப்பெண் மழை!

      Delete
  35. ம்ஹும் , சுத்தம். ப்ரீயா புத்தகம் கிடைக்காட்டி பரவாயில்ல. மாசத்துக்கு நாலு புத்தகம் காசுக்கு கொடுத்துடுங்க, அது போதும் எங்களுக்கு.

    ReplyDelete
  36. answer sheet ய் submit செய்யாதவங்க எல்லாம் பெஞ்ச் மேலே ஏறுங்க ................ஸ்டாலின் அங்கே என்ன வேடிக்கை ?

    ReplyDelete
    Replies
    1. பெஞ்ச் மேல என்ன; பில்டிங் மேல வேணும்னாலும் ஏறத் தயார். ஆனா, எந்த answer sheetம் submit பன்ன முடியாது.
      (நாங்கல்லாம் ஸ்க்கூல் examsல கேட்கப்பட்ட கேள்வியையே பதில்மாதிரி பலதடவை எழுதி பாஸ் செஞ்ச ஆளுங்க!)

      Delete
    2. லீடர் ஸ்டாலின் போர்டில் எழுதுகிறார்

      விஜய்--------மிக மிக ................அடங்கவில்லை ....

      Delete
  37. // "ஆஹா....பஞ்ச் டயலாக் வரும் முன்னே ; இதழ் லேட் ஆகப் போகின்றதென்ற அறிவிப்பு வரும் பின்னே"! //

    Punch Dialogukkellam punch ithu... Super

    Glad to hear next issue is already ready. I will try to send the answers whatever i know.

    ReplyDelete
  38. ஆல் இந்தியா ரேடியோ .காமிக்ஸ் செய்திகள் வாசிப்பது கோயபல்ஸ் பிரியன்.
    நாட்டின் காமிக்ஸ் உற்பத்தி வரும் ஆண்டில் பதினெட்டு சதவீதம் உயரும் என மத்திய காமிக்ஸ் அமைச்சர் சிவகாசி சிங்கமுத்து வாத்தியார் தெரிவித்துள்ளார்.சிவகாசியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் அந்நிய நேரடி காமிக்ஸ்களை இந்தியாவில் தருவிப்பதின் மூலம் நாட்டின் காமிக்ஸ் தட்டுப்பாடு விரைவில் நீங்கி அனைவருக்கும் காமிக்ஸ் என்பது வருங்காலத்தில் சாத்தியமாகும் என்றும் அவர் கூறினார்.எண் பதிமூன்றை வண்ணமயமாக்குவது தற்போது சாத்தியமல்ல என்றும்,அதே நேரத்தில்" பளபளக்கும் சாவை "வண்ணத்தில் வெளியிட தன்னுடைய ஆதரவை தெரிவிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
    சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றும் திரு.ஜான் சைமன் என்பவரது வீட்டில் நேற்றிரவு நடந்த கொள்ளை சம்பவத்தில் பதினான்கு லயன் காமிக்ஸ்களும்,இருபது முத்து காமிக்ஸ்களும் திருட்டு போயிருப்பதாக நமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.திருட்டுபோன காமிக்ஸ்களின் மொத்த மதிப்பு சுமார் ஐநூறு ரூபாய்களாக இருக்கும் என்றும்,திருடர்களை பிடிக்க நாற்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் நமது நிருபரிடம் ஜான் சைமன் தெரிவித்தார்.காவல் துறையை சேர்ந்தவரின் வீட்டிலேயே காமிக்ஸ் கொள்ளை நடந்திருப்பது வேதனை தருவதாக மாநகர கமிசனர் ப்ளுபெர்ரி கூறியுள்ளார்.குற்றவாளிகள் விரைவில் பிடிக்கப்பட்டு தண்டிக்கபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
    கோவை சேர்ந்த பிரபல காமிக்ஸ் ரசிகர் இரும்புக்கையாரின் வீட்டில் மத்திய காமிக்ஸ் துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.வருமானத்திற்கு அதிகமாக காமிக்ஸ் குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் வந்துள்ளதாகவும்,அதைதொடர்ந்தே இந்த சோதனைகள் நடைபெற்றதாகவும் ,சோதனையில் கட்டுகட்டாக காமிக்ஸ்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கோவையிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.தன்மீதான இந்த குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க பொய்யானதேன்றும்,இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றும் கோவை இரும்புக்கையார் நம்மிடம் தெரிவித்தார்.
    பள்ளிபாளையத்தில் நேற்றிரவு நடந்த கோரவிபத்தில் நான்கிற்கும் மேற்ப்பட்ட முத்து காமிக்ஸ்களின் அட்டை படங்கள் கிழிந்தன.சுமார் முப்பதுக்கும் மேற்ப்பட்ட லயன் காமிக்ஸ்கள் கசங்கி சேதமடைந்தன.இடிபாடுகளுக்கிடையில் மேலும் பல காமிக்ஸ்கள் சேதமுற்றிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.மின்தடையால் மீட்ப்பு பணிகள் பாதிக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த விபத்திற்கு மனித தவறே காரணம் என மீட்ப்பு படை அதிகாரி நல்ல பிசாசு தெரிவித்தார்.இந்த விபத்திற்கு ஈரோடு ரஷ்ய சர்வாதிகாரி,கணக்கரசர்,இளைய தளபதி,பிசி பிசி ,ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் நேராவண்ணம் காமிக்ஸ்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கவேண்டும் என சேலம் குமார்,டாக்டர் சுந்தர் ஆகியோர் தாங்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர்.
    வானிலை அறிக்கை;பிரான்ஸ்,பெல்ஜியம்,இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து பெரும் காமிக்ஸ் அழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று இந்தியாவை நோக்கி நகர்ந்து வருவதாகவும்,இதன்காரணமாக தமிழ்நாட்டில் விரைவில் பலத்த காமிக்ஸ் மழை பொழிய போவதாகவும் சிவகாசியிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.இத்துடன் காமிக்ஸ் செய்திகள் முடிவடைந்தன.முடிக்காவிட்டால் என்னை முடித்து விடுவார்கள்.வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே

      அருமை .... பாராட்ட வார்த்தைகள் இல்லை ... (நாங்கெல்லாம் கொஞ்சம் யோசிக்கவே ரொம்ப குழம்பிடுவோம்)

      இதுவரை தாங்கள் இட்ட பதிவுகளில் நான் மிகவும் ரசித்த பதிவு... (படிக்க படிக்க சிரிப்பை நிறுத்த முடியவில்லை)

      சூப்பர் ....

      நான் திருப்பூர் ப்ளுபெர்ரி யா ? கமிசனர் ப்ளுபெர்ரி யா ?

      அய்யயோ நானே கன்பியூஸ் ஆயிட்டேன் :(

      Delete
    2. ஹ ஹா ஹ ஹா ...........முடியல முடியல .............கலக்குங்க ...

      Delete
    3. வாவ்! அட்டகாசமான க்ரியேடிவிடி! தேர்ந்த உலக ஞானம்! திறமையாக வார்த்தைகளை கையாளும் திறன்!
      கொஞ்ச நாள் இடைவெளிக்குப் பிறகு இது ஒரு அட்டகாசமான comeback!

      சிரிப்பைக் கட்டுப்படுத்த ரொம்பவே கஷ்டப்பட்டேன்.
      அகில உலக சாத்தான் ரசிகர் மன்றம் ஆரம்பித்துவிடலாம் என்று நினைக்கிறேன்.

      Delete
    4. மீட்ப்பு படை அதிகாரி நல்ல பிசாசு
      என்பதுதான் உதைக்கிறது.....தூள்...டாப்..டக்கர் ..... சும்மா பின்னிடீங்க

      ******************** பெரும் காமிக்ஸ் அழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று இந்தியாவை நோக்கி நகர்ந்து வருவதாகவும் *****************************பாராட்ட காமிக்ஸ் இல்லை

      Delete
    5. சாத்தானின் அட்டகாசம் பாகம் ஒன்று.

      Delete
    6. ******************சுமார் முப்பதுக்கும் மேற்ப்பட்ட லயன் காமிக்ஸ்கள் கசங்கி சேதமடைந்தன.இடிபாடுகளுக்கிடையில் மேலும் பல காமிக்ஸ்கள் சேதமுற்றிருக்கலாம் *************சாத்தானின் அட்டகாசம் பாகம் ஒன்று************
      கிருஷ்ணா புதயல சேகரிக்க ஆரம்பித்து விட்டார் போல!

      Delete
    7. ரத்த படலம் என்கிட்ட ரெண்டு இருக்கு ........அதை நான் வாங்கினதே ரெண்டு புக்குக்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க தான் ... (முன்று வித்தியாசம் தான் இது வரை கண்டுபிடிச்சு இருக்கேன் ) தயவு செய்து ராத்திரி வந்து புடுங்கிட்டு போய்டாதீங்க ...எதுனால்லும் ''ஆபீஸ் ரூம்ல'' வச்சு பேசிக்கலாம்.
      சாத்தான் சேதி சூப்பர் அப்பு ....

      Delete
    8. ஹி ஹி ஹி சூப்பரப்பு
      படிக்க படிக்க சிரிப்பை நிறுத்த முடியவில்லை

      //காவல் துறையை சேர்ந்தவரின் வீட்டிலேயே காமிக்ஸ் கொள்ளை நடந்திருப்பது வேதனை தருவதாக மாநகர கமிசனர் ப்ளுபெர்ரி கூறியுள்ளார்.குற்றவாளிகள் விரைவில் பிடிக்கப்பட்டு தண்டிக்கபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.//

      கண்டுபிடித்து கொடுத்தால் அனைத்து காமிக்ஸ் புத்தகமும் படித்து முடித்த பின் தான் தரப்படும் என மாநகர கமிசனர் ஒப்பந்த அடிப்படையில் தேடலை தொடர்ந்ததாக நமது நண்பர் ஜான் சைமன் சொன்னார் ( off the record )
      .

      Delete
  39. saint satan: எவ்வளவு வேலை கெட்டாலும் இதனை என்னால் பாராட்டி பதில் போடாமல் இருக்கமுடியவில்லை ..... அதீதமான ஆர்வம் இருந்தால் மட்டுமே உங்களால் இது முடியும் . இது போன்ற நகைச்சுவை உணர்வை அடிக்கடி வெளிக்கொண்டாருங்கள்....வாழ்த்துக்கள். ( அப்பாடி........ பிசாசு கொடுத்த காசுக்கு மேலேயே கூவியாச்சு.... :-) ஹி... ஹி.... )

    ReplyDelete
  40. 1 .கேப்டன் டைகர்

    2.இரும்புக்கை மாயாவி

    3 .ஜானி நீரோ

    4 .ஸ்பைடர் மேன்

    5 .சிக்பில்

    6 .மதியில்லா மந்திரி

    அவர்களுக்கு என் முதல் வணக்கம்...

    1 .ஆசிரியர் விஜயன் (சாதுர்யம்,தளராத தனிநபர் காமிக்ஸ் போராட்டம்)

    2 .கோயம்பத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா (விடாமுயற்சி)

    3 .comic lover

    4 .புனித சாத்தான் (கில்லாடித்தனம்- சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை )

    5 .லூசு பையன் (வெகுளித்தனம்)

    6 .மதியில்லா மந்திரி.

    ஆதாரம் இந்த வலைத்தளம்....

    ReplyDelete
    Replies
    1. இந்த வலைப் பதிவினில் எழுதுவது ஒரு வழக்கமாகிட்டது. காமிக்ஸ் - அதுவும் நமது பிரியமான லயன் காமிக்ஸ் பற்றிய செய்தி மற்றும் nibbles இல்லையெனில் பொழுது கழிவதில்லை.

      இந்த ரேட்ல போனா எப்படியும் எடிட்டர் பிரிண்டிங் மஷின் தொழிலை விட்டுவிட்டு முழு நேர காமிக்ஸ் எடிட்டர்-ஆகும் வரை நாம் உடனிருந்து தோள் கொடுக்க வேண்டும். அதற்கு ஆண்டவன் நமக்கு சக்தியினையும் துட்டினையும் தந்திட்டால் நலம்.

      எடிட்டர் நோக்குக: இரும்புக்கை எத்தன் மற்ற பாகங்கள் வரும் மாதமோ அதற்கு முன்போ பழைய பாகங்களை மறுபதிப்பு செய்திடலாமே - அனைவரும் ஒப்புக்கொண்டால். கேப்டன் டைகரின் மற்றைய கதைகளுக்கு கூட இப்படிச் செய்திடலாமே! வண்ணதினில் வந்திட்டால் நலம் - இல்லை என்றாலும் நலமே - ஒரு continuity இருக்குமே.

      Delete
    2. Steel Claw, எண்ணங்கள் as in ...?

      Sample-க்கு சில எடுத்து விடவா? எடிட்டர் போன் செய்து திட்டப் போகிறார். இருந்தாலும் ...

      - XIII வண்ணத்தினில் மிக அற்புதமான ஒரு காவியம் [நாராயண நாராயண :)] - ஆங்கிலப் பாதிப்பினைக் கண்டிட்டதனால் சொல்லுகிறேன்
      - பல பாகங்களாக வெளி வந்த கதைகள் புதுப் பாகங்கள் வரும்பொழுது பழையவை ரீப்ரின்ட் செய்தல் நலம்
      - மழை பொய்த்தாலும் லயன் போய்க்கக் கூடாது (இது நமது விவசாய நண்பர்களைத் தூற்றும் முயற்சி அல்ல. அப்படிக் கொண்டிட்டால் அதற்காக வருந்துகிறேன்) - லயன் காமிக்ஸ் மீது ஒரு காதல்
      - நீங்கள் அனைவரும் எடிட்டருடன் சேர்ந்து எந்த வெளியீட்டினைக் கொண்டு வந்தாலும் அடியேன் வாங்குவதற்கு சித்தம். சிறு வயதினில் பிடிக்காத சில கதைகள் கூட இப்போது மிகவும் பிடித்திருக்கின்றது - இதுவே அனைத்தினையும் வாங்கிடக் காரணம்
      - புதிய நாயகர்கள் பட்டியலில் - Asterix முயன்றிட வேண்டும் - இதன் humour content தமிழாக்கத்திற்கு ஒரு பெரிய சவால்
      - Batman டைஜெஸ்ட் கண்டிப்பாய் வேண்டும் - சிரித்துக் கொல்ல வேண்டும், Batman கிறுக்கனா, (ஏதோ ஒரு) பௌர்ணமி title மற்றும் பிற Batman கதைகளைக் மறுபதிப்பு செய்திடல் நன்று

      Delete
    3. நண்பரே,நாரதர் கலகம் நன்மையில் முடியுமா ?

      Asterix -விரைந்து பணிகளை தொடங்கினால் ஆஹ்ஹா ,இந்த வருடம் நமது லயன் புலி பாய்ச்சல் பாய்ந்துள்ளது,அடுத்த வருடம் சிங்க நடை போட இது உதவலாம் ,ஆசிரியர் கவனிப்பாரா ?

      சிங்க நடை போட்டு சிகரத்தில்........................

      Delete
    4. // (ஏதோ ஒரு) பௌர்ணமி title //
      பௌர்ணமி வேட்டை நண்பரே :))

      // எடிட்டர் நோக்குக: இரும்புக்கை எத்தன் மற்ற பாகங்கள் வரும் மாதமோ அதற்கு முன்போ பழைய பாகங்களை மறுபதிப்பு செய்திடலாமே - அனைவரும் ஒப்புக்கொண்டால். //

      என்னுடைய ஆதரவு இதற்கு கண்டிப்பாக உண்டு நண்பரே :))
      .

      Delete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. 1.லயன் காமிக்ஸின் முதல் மறுபதிப்பு எது ? மறுபதிப்பு என்றாலே ரெண்டாவது பதிப்பு தானே அப்புறம் எப்பிடி ''முதல் மறுபதிப்பு''..confusion .......மந்திரி confused
    2.ஆர்ச்சிக்குப் போட்டியாய் லயனில் வந்திட்ட "இரும்பு ஹீரோ" யார் ? ''சிட்டி ரோபோ ''
    3.ஒரே ஒரு கதையில் மாத்திரமே தலைகாட்டிய ஹீரோக்களில் யாரேனும் 3 பேரை லிஸ்ட் பண்ணுங்களேன் ?தலைய மட்டுமா உடம்பையும் சேர்த்து தானே காட்டுறாங்க ?
    4.ஒரு சாகசத்திற்கும் ; அடுத்த சாகசத்திற்குமிடையே மிக நீ.....ண்....ட இடைவெளி விட்ட நாயகர்(கள்) யார் ? சாட்சாத் நம்ம தலைவரு தான்..
    5.லயனில் இது வரை அதிகமான கதைகளில் தலைகாட்டியுள்ள ஹீரோ யாரோ ? ஸ்டீவ் ராலன்ட் என்ற ஜேசன் மக்லேன் என்ற ராஸ் டானர் , கெல்லி பிரைன் என்ற நீல் என்ற ..உஸ் அப்பாடா.... பதினெட்டு பாகம் கொண்ட ரத்தகரை (போட்டி நிபந்தனைகளுக்காக கதை பெயர் மாற்றப்பட்டுள்ளது )
    6.கேப்டன் பிரின்ஸ் லயனில் தலை காட்டிய முதல் இதழ் எது ? பரலோகத்தின் பாதை பச்சை( எனக்கு முதல் இதுபா)
    7.லயனில் இது வரை மொத்தம் எத்தனை "ஸ்பெஷல்" இதழ்கள் வந்துள்ளன ? 999 .3/4
    8.லயனின் முதல் கார்ட்டூன் சாகசம் எது ? ''பரட்டை தலை ராஜா ''
    9."கபாலர் கழகம்" இதழின் நாயகர் யார் ? ''மண்டை ஓடு''
    10.லயனின் முதல் அறிமுகம் என்பதைத் தாண்டி மாடஸ்டி ப்ளைசிக்கு இன்னொரு பெருமையும் உண்டு ! அதென்ன ? கையில் காங்கோ வைத்திருப்பது
    விஜய்மஹராஜா, ..."மந்திரியே ....இனி இந்த ப்ளாக் பக்கம் வராமல் இருக்க இந்த பிடி 1000 ருபாய் மதிப்புள்ள '' ரத்தகரை கதை வண்ணத்தில்'' .''மாஸ்டர் சொந்தமா பதில் எழுதின இப்பிடி தான் ...''பின் குறிப்பு ...ஏதுனும் ஒரு பதில் சரியாய் இருந்துச்சுன்னா மந்திரி சிவகாசிக்கு பொய் மொட்டை போடுவார்

    ReplyDelete
    Replies
    1. 5ம் கேள்விக்கான பதில் தூள்! :-)

      Delete
    2. மதியில்லா மந்திரி அவர்களே நீங்கள் ஏன் உங்கள் பெயரை மதியுள்ள மந்திரி என்று மாற்றி கொள்ள கூடாது

      அனைத்தும் அருமை :))
      .

      Delete
    3. சிபி சார் உங்க ஐடியா புரியுது அப்பால...என்னை திருப்பியும் மதியில்லாதவர்னு கூப்பிட தானே ....பிம்பிலிகா பிளாப்பி....

      Delete
    4. ஒலிக்கும் பாடல்.....
      மதியில்லாத மந்திரியா .............

      மந்திரி இல்லாத விஜய் ராஜாவா ................

      Delete
    5. நாங்களும் சொல்லுவோம்ல
      ஸ்டீல் கிளா இல்லாமல் மின்சாரமா .........
      மதியில்லா மந்திரி இல்லாமல் லயன் காமிக்ஸ்சா .........
      .

      Delete
  43. சார் இதுக்கு பேர் தான் குட்டியாய் சில கேள்விகளா ??

    நண்பர் கிருஷ்ணா அவர்களே சொக்கனிடம் கேட்டு வாங்கிய அந்த பதில்களை எனக்கு தரக்கூடாதா ?
    உங்களுக்கு இரண்டு எனக்கு ஒண்டு ஒன்று ( கதையை சொன்னேன் )
    .

    ReplyDelete
  44. // அடியேனுக்குக் கேள்விகள் மாத்திரமே அத்துப்படி ! விடைகளை உங்களைப் போலவே நானும் தேடித் தான் பிடித்தாக வேண்டும் ! //

    சார் இப்படி சொல்லிவிட்டு உடனே ஒருவர் 10/10 வாங்கிவிட்டார் என்று சொல்லிவிட்டீர்களே அது எப்படி ;-)
    ( நாங்களும் குட்டியாய் சில கேள்விகள் கேப்போம்ல ஹி ஹி ஹி (நன்றி புனித சாத்தான் அவர்களே )
    .

    ReplyDelete
    Replies
    1. எத்தனையோ பேர் வாசிச்சும், பின்னூட்டம் போட்டும் - கவனிக்காம விட்ட பாயின்ட்டப் பிடிச்சீங்க பாருங்க, நீங்கதான் துப்பறியும் சிங்கம்!

      Delete
    2. super..neega oru thuppariyum puli

      Delete
    3. ஹி ஹி ஹி ரொம்ப கூச்சமாக இருக்கிறது நண்பர்களே ( பொடியன் மற்றும் சிவ் )
      நான் அப்புடியெல்லாம் இல்லீங்கோ உண்மையை சொல்லனும்னா நான் ஒரு அப்பிராணிங்கோவ் :))
      .

      Delete
  45. சாத்தானின் ஏட்டிக்கு போட்டி கேள்விகள் ;
    1.fleetway -இன் முதல் மறுபதிப்பு எது?
    2.ஸ்பைடருக்கு போட்டியாய் வந்திட்ட ஜூனியர் ஹீரோ யார்?
    3.இரண்டு கதைகளில் மட்டுமே தலைகாட்டிய ஆறு ஹீரோக்களின் லிஸ்ட் தயார் செய்யுங்களேன்?
    4.ஒரு காமிக்சுக்கும் ,அடுத்த காமிக்சுக்கும் நீண்ட இடைவெளி விட்ட நாயகர் யார்?
    5.முத்துவில் இதுவரை அதிகமாக காலை காட்டியுள்ள வில்லன் யார்?
    6.காப்டன் டைகர் முத்துவில் தலைகாட்டிய முதல் இதழ் எது?
    7.முத்துவில் இதுவரை எத்தனை ஸ்பெசல் இதழ்கள் வந்துள்ளன?
    8.முத்துவில் முதல் கார்டூன் சாகசம் எது?
    9.கபால முத்திரை கதையின் நாயகர் யார்?
    10.முத்துவில் முதல் அறிமுகம் என்பதைத்தாண்டி மாயாவிக்கு இன்னொரு பெருமையும் உண்டு.அதென்ன?
    விடையை சரியாக எழுதும் வாசகர்களுக்கு சிறு அன்பளிப்பாக ரூபாய் .1,0000000000000000000000000000000000000000000000000.மட்டும் அனுப்பிவைக்கப்படும்.முந்துங்கள்.போட்டியில் வெல்லுங்கள்.(சாத்தானின் நண்பர்கள் போட்டியில் கலந்துகொள்வதை தவிர்க்கவும்.ஹிஹி).

    ReplyDelete
    Replies
    1. நான் தங்களது நண்பர் ஆகையால் பார்வையாளர் மட்டுமே...அந்த 10 பைசா பரிசு பெரும் துரதிர்ஷ்டசாலி யாரோ ?

      Delete
    2. கேள்விகளுக்கு கேள்விகளையே பதிலாய் அமைத்த சாத்தானின் சமயோஜிதத்தை என்னவென்பது?!!

      நீங்கள் புனித சாத்தான் அல்ல, புத்திச்சாலி சாத்தான்!

      Delete
    3. ம்ஹ்ம்ம் இவர் ஏட்டிக்கு போட்டி சாத்தான் ;-)
      .

      Delete
    4. சிபி பிசி இல்லையா , களத்தில் குதிதாயிற்று போல ,வாருங்கள் வாருங்கள் ...............

      Delete
  46. *********************
    வண்ணத்தின் வலிமையை ; அழகினை ரசிக்கும் அதே சமயம், black & white கதைகளின் மாறுபட்டதொரு அழகையும் நாம் மறந்திடாதிருத்தல் அவசியமென்பதாலேயே, நமது ஸ்பெஷல் இதழ்களின் பின்பக்கங்களில் தொடர்ந்து b&w சாகசங்களை வெளியிட்டு வருகிறோம் ! அடுத்த ஆண்டில் சாகசம் செய்யத் தயாராகி வரும் டெக்ஸ் வில்லர் ; மர்ம மனிதன் மார்ட்டின் ; C.I.D. ராபின் ஆகியோர் black & white நாயகர்கள் என்பதால் இவர்களுக்காகவாது நாம் "கறுப்பு தான் எனக்கு புடிச்ச கலரு " என்று கானம் பாடிடுவது அவசியம் ஆகும் !('டெக்ஸ் கலரில் கிடையாதா ?'என்ற கேள்வி நிச்சயம் எழுந்திடுமென்று அறிவேன் ; டெக்ஸ் இதழ்களின் மறுவரவு துவங்கிடும் சமயத்தில் அதனை அலசிடுவோம் !)******************************

    ***************************

    2013 க்கான காலண்டரில் டெக்ஸ் வில்லர் ; மார்ட்டின் ; சிக் பில் ; லக்கி லூக்; கேப்டன் டைகர் ; லார்கோ வின்ச் ஆகியோருடன், புதிதாய் அறிமுகமாகவிருக்கும் டிடெக்டிவ் கில் ஜோர்டான் ; அப்புறம் மதியில்லா மந்திரி ; சாகச வீரர் ரோஜர் என்று ஒரு பரபரப்பான பட்டாளமே தயாராகி வருகின்றது ! 1987 -ல் நமக்கு நேர்ந்திட்ட "எதை வெளியிடுவது ? ; எதை ஒத்தி வைப்பது ?" என்ற அந்த சந்தோஷமானதொரு குழப்பம் கால் நூற்றாண்டுக்குப் பின் மீண்டும் தலை தூக்கிடும் போல் தெரிகின்றது ! டெக்ஸ் கதைகளை நீளம் கருதாமல் ஒரே இதழாக வெளியிடுவது ஒரு option என்பதால் குட்டியானதொரு தலையணை சைசில் டெக்ஸின் இதழ்களைக் கண்டிடப் போகிறீர்கள் !
    *********************************


    மேலே காண்பவை நீங்கள் கறுப்பு தான் எனக்கு புடிச்ச கலரு ! என்ற தலைப்பில் ஆகஸ்டில் வெளியிட்ட வைர வரிகள்,டெக்ஸ் கலரில் கிடையாதா ?'என்ற கேள்வி நிச்சயம் எழுந்திடுமென்று அறிவேன் ; டெக்ஸ் இதழ்களின் மறுவரவு துவங்கிடும் சமயத்தில் அதனை அலசிடுவோம் ,இப்போது அலசலாமா?நமது டெக்ஸ் ன் கதைகள் பவளசிலை மர்மம்,தலை வாங்கி குரங்கு போன்ற சிறிது அகன்ற சைசில் வரும் காலங்களில் பதிவிட தாள்களின் ஸ்டாண்டர்ட் சைஸ் உதவினால் அந்த சைசில் வெளியிட இயலுமா? கண்ணை அல்லும் சித்திரங்கள்?மேலும் நண்பர் கிருஷ்ணாவின் பதிவில் வண்ணத்தில் சில பக்கங்களை காட்டியுள்ளார்,அற்புதம்,கருப்பு வெள்ளையும் சூப்பேரே !அந்த சைசில் இருந்தால் ,தரத்திற்கு நாம் தாவி வருடமாக போகிறது.technical problem எதுவும் இல்லை எனில் அந்த சைசில் வெளியிடலாமே........விலை சிறிதுதானே அதிகரிக்கும்.......சிறந்த கதைகள் வண்ணத்தில் சாத்தியம் எனில் ,விலை பொருட்டாக இருந்தால் இப்போதைய வழுவழுப்பான தாள் கூட தேவை இல்லை,இந்த கதைகளுக்கு மட்டுமாவது..............மனம் தளராத விக்கிரமாதித்தன்.........இதற்க்கு பதில் தெரிந்தும் கூறாவிடில் கேள்விகனைகள் தொடரும் ,பல ஆயிரங்களை சிதறும் ஆசிரியரே..............

    நண்பர்களே ஆசிரியர் பதில் வர தாமதமாயினும்..................வேறென்ன குத்தி தள்ளுங்கள் உங்கள் எண்ணங்களை ,இதுவே சரியான தருணம்....இன்னும் மூன்று மாதங்களே உள்ளன ஆசிரியர் மனதை தயார் படுத்த ..........தெளிவாக படியுங்கள்,ஒன்று கூட விட படலாகாது....அப்போது யாரும் இதனை வெகுவாக கேட்கவில்லை.....இப்போதாவது நண்பர்களே,காலம் கடக்கும் முன்...........

    ReplyDelete
  47. vanamayamana palapalakum savai 2013l santhika thunithuviten. thunai nirka virumbum tholargal anithiralvir!

    ReplyDelete
  48. Please put super hero super special on Ebay. I prefer that. Thangakkallari too

    ReplyDelete
  49. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா விற்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் எப்போதும் பெருசு பெருசஆஆஆஆ கமெண்ட் போடுவது இருக்கட்டும். அதில் என்ன சொல்ல வருகிறிர்கள் என்று சாமி சத்தியமா புரியல ஐயா.
    நாங்கள் எல்லாம் இன்டர்நெட் சென்டர் இல் போய் பார்க்கும் ஆட்கள் . எங்கள் நேரமும் பணமும் விரையம் ஆக்காதீர்கள் ப்ளீஸ். .
    தயவு செய்து டைப் பண்ணிய பின்னர் படித்து பார்த்து விட்டு பதிவேற்றுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் வண்ணத்தில் வேண்டுமா ? நண்பர்களின் எண்ணத்தை கூறலாமே ?ஆசிரியர் முயன்றால் இயலுமா?இவ்வளவுதான் நண்பரே
      இனி மேல் சரி செய்து கொள்கிறேன்,தங்கள் எண்ணங்களை பகிர்ந்த கொண்டமைக்கு நன்றி!

      Delete
  50. 2013-Year of VISWAROOP(AM) not only because VISWAROOPAM movie release and also of our NEVER BEFORE SPECIAL Release . Both release on January. What a coincidence!

    ReplyDelete
  51. பவர் கட் ஜாஸ்தியான இந்த சமயத்துல இருட்டுல படிக்கறதுக்கு brailey முறையில் ரத்த படலம் போட்டால் நன்றாக இருக்கும் ......(இருட்டிலும் காமிக்ஸ் படிக்க விரும்புவோர் சங்கம்...அது சரி )

    ReplyDelete
    Replies
    1. Anna super! Looks like you are in good form :-)

      Delete
    2. மதியில்லா மந்திரிக்கு 10 லைக்கு போடுங்க :)

      Suresh

      Delete
  52. இன்று வெள்ளிக்கிழமை.அநேகமாக புத்தகங்கள் ரெடி ஆகி வெளிவந்துவிட்டிருக்கும்.முதலில் இதழை பார்க்கும் அதிர்ஷ்டசாலி நண்பர் யாரோ ?இங்கு பதிவு செய்யலாமே?பெங்களூர் வந்து சேர ஒரு வாரம் ஆகிவிடுகிறது.இப்படித்தான் போய்க்கொண்டிருக்கு வாழ்க்கை ........

    ReplyDelete
  53. I am not satisfied with the wraper picture which is available in ebay.

    ReplyDelete
  54. இன்று மதியம் புனித சாத்தானின் வீட்டிற்கு என் நண்பர் விஸ்வாவுடன் சென்று இருந்தேன் . காமிக்ஸ் பல கண்டேன் . நல்ல நண்பரையும் கண்டேன் . சில காமிக்ஸ் படிக்க எடுத்து வந்துள்ளேன் . புரட்சி தீ -லக்கிலுக் , நதியில் ஒரு நாடகம் -பிரின்ஸ் ., கொடுத்த நண்பருக்கு நன்றி .
    விஜயன் சார் , இது போன்ற சுருக்கமான பதிவுகள் வேண்டாமே ப்ளீஸ் . தங்களின் நீண்ட பதிவுக்கு நான் அடிமை . எத்தனை முறை உங்களின் நீண்ட பதிவுகளை படித்து இருப்பேன் என்று கணக்கே கிடையாது .
    இந்த பதிவு படிபதற்குள்ளேயே முடிந்து விடுகிறது ., அடுத்த முறை சிறிது நீளமான பதிவாக போடுங்கள் சார் .

    ReplyDelete
  55. ஸார், வெளிநாட்டு வாசகர்களுக்கு விசேட திட்டத்தின் அடிப்படையில், 10க்கு 10 எடுக்காவிட்டாலும், முன்னிலை பெறுபவர்களுக்கு ஏதாவது பார்த்து போட்டுக்கொடுக்கலாமே? :)
    ஏனென்றால் தொடர்ச்சியாக உங்கள் அத்தனை இதழ்களையும் பெறும் வாய்ப்புக் கிடைத்தவர்கள் மிகச்சிலரே இருக்கக்கூடும் (ஒருவேளை யாரும் இல்லாமலும் இருக்கலாம்!)

    ReplyDelete
  56. This comment has been removed by the author.

    ReplyDelete
  57. செம போட்டி தான்

    ReplyDelete