Wednesday, July 11, 2012

பதிவாய் ஒரு பதில் !


நண்பர்களே,

ஞாயிறு இரவு எப்போது கண்ணயர்ந்தேன் என்று எனக்கே தெரியாது...உங்களின் உற்சாகப் பதிவுகள், தொலைபேசி அழைப்புகள் என்று நிஜமானதொரு ரகளையான பொழுதாய் அன்றைய தினம் கழிந்தது. திங்களும், செவ்வாயும் பிரயாணங்கள் ; இன்டர்நெட் மல்யுத்தம் என்று சென்றிட்டதால் இப்போது வரை இங்கே தலைகாட்டிட முடியவில்லை  ! இப்போதும் கூட இரு வரிகள் டைப் செய்ய இருபது நிமிடங்களுக்கு மேலாய் மொக்கை போட்ட கதை தான் !  

நண்பர் ராஜ்குமார் ஆதங்கத்தோடு NEVER BEFORE ஸ்பெஷல் ன் விலை குறித்து  பதிவிட்டதும், தொடர்ந்து for and against பலவிதக் கருத்துப் பரிமாற்றம் நடந்தேறிடுவதையும் இப்போது தான் பார்த்திட்டேன். ஒவ்வொரு பதிவிற்கும் தனிப்பட்ட பதிலளிக்க நான் தயார் என்ற போதிலும் "இம்சை அரசன் இன்டர்நெட் " அதனை இன்றிரவு அனுமதிக்காது என்றே தோன்றுகிறது ! 

நமது காமிக்ஸ் பயணத்தின் வயது 28 என்பதை இம்மாத நியூ லுக் ஸ்பெஷல் நினைவூட்டிடும். (இந்த இதழ் ஜூலை 18 முதல் அனுப்பிடப் படுமென்பதை இந்த சைக்கிள் gapல் சொல்லிவிட்டால் ஒரு வேலை முடிந்த மாதிரி ஆச்சு !) 

இந்தப் பயணத்தில், நாம் விலைகளில் செய்திட்ட பரிசோதனைகள், குட்டிக் கலாட்டாக்களை சத்தியமாய் இந்தியாவில் வேறு எந்தவொரு பதிப்பகமும் செய்திருக்குமென்று எனக்குப் படவில்லை. ஒரு ரூபாய்க்கு மினி லயன் ; இரண்டு ரூபாய்க்கு ஜூனியர் லயன் - (அதுவும் முழு வண்ணத்தில் லக்கி லூக் கதையோடு ) ; டிக்ஷனரி சைசில் 5௦௦+  பக்கங்களோடு லயன் தீபாவளி மலர் ரூபாய் 10 விலையில் ;  விசித்திரமானதொரு ஒடுக்க  சைசில் திகில் இதழ்கள் மூன்று ரூபாய் விலைகளில் ; எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார் போல 852 பக்கங்களில் இரத்தப் படலம் தொகுப்பு ரூபாய் 2௦௦ விலையில் என்று குரங்கு கிளைக்குக் கிளை தாவியது போல் நாம் விலைகளில் துளியும் நிரந்தரமின்றித் தாவி வந்தது எல்லோருக்கும் பரிச்சயமே. சொற்ப விலையினில் இதழ்களை வெளியிட்டு நாட்டுக்குச் சேவை செய்ததாக மார்தட்டிடுவது எனது நோக்கமல்ல ; நான் சொல்ல வருவது என்னவெனில் விலைகளைப் பொறுத்த வரை, we have come a full circle !

2012 வரை எனது ஒரே நோக்கம், குறிக்கோள் , எல்லாமே  நமது காமிக்ஸ்கள் பரவலாய் வாசகர்களைச் சென்றடைந்திட வேண்டும் ; விலை இதற்கொரு தடையாக இருந்திடக் கூடாதென்பதே ! அடிக்கடி சைஸ் மாற்றும் யுக்திகள் எல்லாமே  விலையேற்றத்தைத் தவிர்த்திட, அல்லது தள்ளிப்போட்டிட நான் செய்த குட்டிக்கரணங்கள் தான். தரத்தை உயர்த்த வழியின்றி, சர்வதேசப் பதிப்பகங்களின் காமிக்ஸ்கள் ஒரு பக்கம்  ஜொலிக்கும் போது, நியூஸ் பிரிண்டில் பரிதாபமாய் நாம் காட்சியளித்தாலும் உடும்புப் பிடியாய் அந்த format ஐ விட்டு அகலாமல் பிடிவாதம் பிடித்தவன் நானே. ஆனால் ஒரு நிலையில் இனி இதழ்கள் வெளியிடுவதேன்பதே சாத்தியமல்ல என்று மனதளவில் மூட்டை கட்டியது எனக்கு மட்டுமே தெரிந்த சங்கதி. விற்பனையில் தேக்கம் ; வசூலில் பரிதாபம், தமிழகத்திற்குள் ஊருக்குக் குறைந்தபட்சம் இரு முகவர்களிடமாவது பணத்தை முழுவதுமாய் இழந்த ஆற்றாமை ...கையில் தேங்கி நின்ற முந்தைய இதழ்களின் சுமை என்று திரும்பிய பக்கமெல்லாம் தெரிந்தது இருளே ! 

முழுவதுமாய் நம்பிக்கை  இழந்ததொரு பிற்பகலில் பாரிஸ் நகரில் நம் பதிப்பகத்தினரை சந்திக்க வேண்டியதொரு அவசியமான சூழலில் ; அவர்களை எதிர்கொள்ளவே அஞ்சிக்கொண்டு (ராயல்டி கட்டணங்கள் எக்கச்சக்கமாய் பாக்கி இருந்தது அப்போது !!)அவர்களது அலுவலகத்தின் அருகாமையில் இருக்கும் ஒரு மழலையர் பள்ளியின் பார்க்கில் அமர்ந்து எவ்வளவு நேரம் மருகி இருப்பேன் என்பது எனக்கும், என்னை வினோதமாய்ப் பார்த்து அகன்றிட்ட அந்தக் குட்டீஸ்களுக்கும் மட்டுமே தெரிந்திருக்கும்.  பணம்  சம்பாதிக்கும் முயற்சியில் தோற்றிடும் போது கூட எனக்கு இத்தனை வலி இருந்தது கிடையாது ; அடுத்த முறை விட்டதைப் பிடித்துக் கொண்டிடலாமென்ற நம்பிக்கையும், தைரியமும் என்னுள் உண்டு. ஆனால் இதுவோ வேறு விதமான வலி ....நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமானதொரு விஷயத்தை முழுவதும் உதறிட வேண்டிய நாள் நெருங்கிட்டதோ என்ற தடுமாற்றம் ! சந்தோஷ  வேளைகளில் மூளை தெளிவாய் செயல்பட்டிடுவதும், கிலியில் இருந்திடும் போது அதுவும் உறைந்து போய்விடுவதை உணர்ந்தேன். 

ஒரு மாதிரியாக தைரியத்தை வரவைத்துக் கொண்டு பதிப்பகத்தினரின் அலுவலகத்திற்குள் நுழைந்தேன் ; பஞ்சப் பாட்டுப் படித்து, பாக்கிகளை செலுத்திட அவகாசம் கேட்டிட்டேன். மிகவும் தன்மையான நபர்கள் என்பதாலும் பல வருடப் பரிச்சயமானவன் என்பதாலும் முகம் சுளிக்காமல் அவகாசம் கொடுத்தனர் ; கூடவே கொஞ்சம் சமீபத்திய பிற மொழிப் பிரசுரங்களின் மாதிரிகளையும் எடுத்துக் கொள்ள அனுமதி  தந்தனர். பாரிஸின் மெட்ரோ ரயிலில் அவற்றைப் புரட்டப் புரட்ட என் ஆற்றாமை அதிகமானது! இந்தோனேசிய மொழியில் லக்கி லூக் கதைகள் ; சிக் பில் என்று அற்புதத் தரத்தில் முழு வண்ணத்தில், hard cover ல் அவர்களது பதிப்புகள் அற்புதமாய் இருந்தன. 'எதைத் தினால் பித்தம் தெளியுமோ ? ' என்ற நிலையில் இருந்த எனக்கு, 'குறைந்த விலை ; நிறைய வாசகர்களைச் சென்றடைவது " என்ற concept ல் சொதப்பியாகி விட்டது ; இனி தரமாய் ; அழகாய் செய்ய முயற்சிப்போமே..முகவர்களுக்குக் கடன் என்பதே வேண்டாம்; முடிந்தளவு  நேரடி விற்பனையில் முயற்சிப்போமே என்று தோன்றியது. 

இது என் தலைக்குள் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், சென்னை புத்தகத் திருவிழாவின் தேதிகள் நெருங்கி இருந்தன ; விஷ்வாவும் , நண்பர்களும் பல நாட்களாய்  நம்மை அங்கே stall எடுத்து விற்பனை முயற்சிகளைச் செய்திடக் கோரிய வண்ணமே இருந்தனர். 'சரி...முயற்சித்துத் தான் பார்ப்போமே'  என்று சென்னைக்கு புறப்பட்டது ; வாசகர்களை நேரடியாகச் சென்றடைய ஒரு வலைப்பதிவு சுலபமான வழி என்று எனது மகன் எனக்கு உபதேசிக்க, "சரி..அதையும் ஏன் விட்டு வைப்பானேன்' என்று நான் டிசெம்பர் இறுதியில் எழுதத் துவங்கியது  .... எனது 'பாரிஸ் போதிமரம்' தந்த தெளிவின்  பலனாய் "லயன் Comeback ஸ்பெஷல் உருவாக்கியது - என்று ஒரே சமயத்தில் பல புதுக் கதவுகள் திறக்கப்பட்டன ! தொடர்ந்த நிகழ்வுகளுக்கு நாம் எல்லோருமே இங்கு சாட்சிகளே !

இந்த sentiment segment இப்போது உங்களின் அனுதாபங்களையோ ; ஆறுதல்களையோ சேகரித்துத் தந்திடும் பொருட்டு அல்லவே அல்ல ...விலைகளில் நாம் இன்று கண்டிருப்பது ஒரு விதமான பரிணாம வளர்ச்சி ; நம் மேல் திணிக்கப்பட்ட வளர்ச்சி என்பதை சுட்டிக் காட்டிடவே ! இன்றைக்கு திரும்பவும் பத்து ரூபாய்க்குச் சென்றிடுவது தற்கொலை முயற்சி ; அதே போல் இந்த ரூபாய் 25 விலை என்பது 'இங்குமில்லை ; எங்குமில்லை' என்றதொரு திரிசங்கு சொர்க்க நிலை . அந்த விலையில் வண்ணத்தில் வெளியிடுவதென்றால் நிச்சயமாக எந்த ஒரு பிரபல ஹீரோவின் முழுக் கதையினையும் இன்று நாம் செய்து வரும் தரத்திலோ ; வண்ணத்திலோ ; சைசிலோ செய்திட இயலாது. குறைந்த பட்சம் ரூபாய் நாற்பது என்று விலை வைத்திட அவசியப்படும் - ஒரு முழு நீளக் கதையினை மட்டும் கொண்ட இதழாக வெளியிட்டிட. மாதந்தோறும் நாற்பது ரூபாய்க்கு ஒரு இதழ் ரெகுலராக வந்தால் போதுமென நீங்கள் அபிப்ராயப்பட்டால் அது சாத்தியமே ; சுலபமுமே..! ஆனால் 'பொசுக்'கென்று படித்து முடித்து விட்டது போல் தோன்றிடும் ஒரு வெறுமையை தவிர்த்திடுவது சிரமம் என்பது எனது கருத்து. ஆகையால் தற்சமயம் நாம் செய்து கொண்டிருக்கும் நூறு ரூபாய் எனும் format ஐ மாற்றிடுவதாய் எண்ணமில்லை. அது இப்போது போலவே தொடர்ந்திடும். 

இரு தினங்களுக்கு முன்னர் ஒரு முகவர் நம் இதழ்களை விற்பனை செய்யும் பொருட்டு நண்பரொருவர் மூலம் என்னிடம் பேசிய போது 'எவ்வளவு கமிஷன் தந்திடப்படும் ?' என்று கேட்டார்...'இருபது சதவீதம்' என்று சொன்னேன் ! 'இது குறைவாச்சே..இன்னும் கூடுதலாக கொடுக்க முடியாதா ?' என்று கேட்ட போது நான் அவருக்கு நமது நேரடி விற்பனை முறைகளைப் பற்றி விளக்கிச் சொல்லி விட்டு, நமது தற்சமய இதழ்களின் costing-ல் விற்பனையாளர்கள் கமிஷன் என்று எதுவும் செலவினமாக கணக்குப்  போட்டிடுவது  கிடையாது ; அந்தக் கிரயத்திற்க்கும் சேர்த்து பக்கங்களை ; தரத்தை மேன்படுத்திவிடுகிறோம் என்று புரியச் செய்தேன். இதை நான் இங்கே சொல்லிடக் காரணம் - நம் இதழ்களில்  ஒவ்வொரு முறையும் - நீங்கள் கொடுக்கும் காசுக்கு முழு நியாயம் செய்திட எங்களால் இயன்றதை செய்திடுவோமென்பதை வலியுறுத்தவே. நூறு ரூபாய் இதழாக இருப்பினும் ; நானூறு ரூபாய் இதழாக இருப்பினும் உங்கள் பணத்திற்கு நிச்சயம் ஈடானதொரு புக் உங்களுக்குக் கிடைத்திடுவதே எங்கள்  priority ல் தலையாயது.





நானூறு ரூபாய்க்கு ஒரு இதழ் என்பது நாற்பது ஆண்டுகானதொரு கொண்டாட்டமாகவே தவிர, உங்கள் பாக்கெட்களில் பொத்தல் போடும் முயற்சியாக அல்லவே ?!! மளிகைக் கடையினில் பாக்கி இருக்கும் போதும் கூட பண்டிகை வந்திட்டால் வீட்டில் மைசூர்பாகு செய்திடுவது இயல்பு தானே ??பொங்கலுக்கு  ஊருக்குச் செல்லும் ஆசையில் ஆம்னி பஸ்ஸில் இரு மடங்குக்கு பணம் கொடுத்தாவது டிக்கெட் எடுக்கத் தானே செய்கிறோம் ?? போத்திஸ்களிலும்  ; ஜாய் ஆலுகாஸ்களிலும்  வரிசையில் நின்றிடுபவர்கள் அனைவருமே ஏ.சி அறையின் சொகுசில் அமர்ந்து ஏராளமாய் சம்பாதித்து ஆன்லைனில் பணம் அனுப்பிடும் பாக்கியவான்கள் அல்லவே ! 'சிரமங்கள் நித்தம் ; சிறப்பு நாட்கள் எப்போதாவதென்று' மனதைத் தேற்றிக் கொண்டே பணத்தை சந்தோஷமாய்  எண்ணுபவர்களும்  நாம் தானே !

அதுவும் நமக்கு முழுதாக ஆறு மாதங்கள் அவகாசமும் உள்ளன ...இந்த இதழுக்கான பணத்தினை அனுப்பிட ! அவசியமெனில்  இரு பிரிவுகளாகப் பிரித்து அனுப்பிட்டாலும்  நாங்கள் பெற்றிடத் தயாரே !  வாழ்க்கையின் சிரமங்களை ; பணப் பிராண்டல்களின் வலிகளை மெய்யாக உணர்ந்து வளர்ந்திட்டவன் நான் ; பணத்தின் அருமையும், அதனை சேகரிக்க அவசியப்படும் உழைப்பையும் அறியாதவன் நானல்ல... ! இனி ஒரு சந்தர்ப்பம் இது போல் எழுந்திட பத்து வருடங்கள் ஆகிடும் ; அத்தி பூத்தாற் போல் வந்திடும் ஒரு சிறப்பு நாளுக்கு இத்தனை கிலேசம் அவசியம் தானா ?

அப்புறம் இந்த 'குறைந்த விலைக்கு கருப்பு வெள்ளையில்  சாதா edition, கூடுதல் விலைக்கு வண்ணத்தில் தரமான பதிப்பு' என்பது பற்றி எல்லாம்  சிந்திக்கவே நான் தயாரில்லை. 'இந்த மைசூர்பாகு விலை குறைந்தது - இதில் சக்கரையும் கிடையாது, நெய்யும் கிடையாது - கிலோ நூறு ரூபாய் தான் ' ; 'இது கிலோ நானூறு - சூப்பர் taste' என்று போர்டு போடுவதற்குச் சமானம் அது ! நாமே நம்மிடையே ஏற்ற தாழ்வுகளை வெளிச்சம் போட்டுக் கொண்டிடுவதற்குச் சமானமான அது போன்ற முயற்சிகளை எந்த ஒரு சூழ்நிலையிலும் நான்encourage செய்திடப் போவதில்லை !  

  பதிலாய்த் துவங்கியதொரு சங்கதி, பதிவாய் மாறிப் போனது - நீளம் கருதி ! 4096 எழுத்துக்களுக்கு மேல் டைப் செய்தால் அதனை ஒரு reply ஆக ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது இணையதளம் ! 



நாளை சிந்திப்போம் folks !  


  

274 comments:

  1. Thank you for such a heart-felt post. Fully agree on the current format of Rs.100 or more for specials, and/alternating with smaller comics with lesser price. And waiting for the Rs.400 Never-before Special. Will send the booking amount tomorrow.

    ReplyDelete
  2. உங்கள் இதயங்களில் இருந்து வந்த வார்த்தைகள் எங்கள் மனதை ஏதோ செய்கிறது.
    உங்களது வார்த்தைகள் நண்பர்களுக்கு ஒரு தெளிவான மன நிலையை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
    நீண்ட விளக்கத்திற்கு நன்றி சார்.

    ReplyDelete
    Replies
    1. கலரில் வந்துள்ள விளம்பர படங்கள் அருமையாக உள்ளன.
      Side gapil நியூ லுக் spl தேதியை சொன்னதற்கு நன்றி.
      ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

      Delete
    2. //தற்சமயம் நாம் செய்து கொண்டிருக்கும் நூறு ரூபாய் எனும் format ஐ மாற்றிடுவதாய் எண்ணமில்லை//

      ஆனாலும் லக்கி லூக் , சிக்பில் ஆகியோரின் கதைகள் 48 பக்கங்களில் முடிந்து விடும்.
      அவைகளை நாம் 50rs இதழ்களாக வெளியிடலாம் எனபது எனது கருத்து.
      இதனை நாம் ஏற்கனவே செய்துவருவது தானே.
      இரண்டு கதைகளாக இணைத்து தருவதற்கு பதிலாக ஒரு கதையாக தரலாமே.

      ஸ்பெசல் தருணங்களில் ஸ்பெசல் இதழ்கள் 100rs வருவதை நான் மறுக்கவில்லை.
      மற்ற தருணங்களில் 50 ருபாய் ௦ இதழ்கள் வெளியிடலாமே சார்.

      Delete
  3. சிங்கத்துக்கு இப்படி ஒரு சோக பிளாஷ்பேக்கா? :(

    // நூறு ரூபாய் எனும் format ஐ மாற்றிடுவதாய் எண்ணமில்லை//
    எப்படியோ முடிவை சொல்லிடீங்க! என்னை பொறுத்தவரை நல்ல முடிவுதான்!

    //நாமே நம்மிடையே ஏற்ற தாழ்வுகளை வெளிச்சம் போட்டுக் கொண்டிடுவதற்குச் சமானமான அது போன்ற முயற்சிகளை எந்த ஒரு சூழ்நிலையிலும் நான்encourage செய்திடப் போவதில்லை ! //
    இந்த விஷயத்தில் உங்களுடைய மாறுபட்ட பார்வை வாசகர் மீதான அபிமானத்தை காட்டுகிறது! நான் ஏற்ற தாழ்வுகளை வெளிச்சம் போடும் அர்த்தத்தில் சொல்லவில்லை என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்! ஏற்கனவே நடை முறையில் இருக்கும் ஒரு முறையை சொன்னேன்! நன்றி சார்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்கையின் நெருக்கடியான சூழல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி! முத்து 40 ஸ்பெஷலில் உங்கள் தந்தையின் எண்ணங்களை, அனுபவங்களை அறிய ஆவலுடன் இருக்கிறோம்!

      //இன்டர்நெட் மல்யுத்தம்//
      அப்புறம் மொதல்ல கனேக்ஷன் மாத்துங்க சார்! :) எவ்ளோ நாள்தான் நாங்க இதையே கேட்கிறது! :D

      Delete
    2. //அப்புறம் மொதல்ல கனேக்ஷன் மாத்துங்க சார்//

      :)))))

      இன்னும் சிவகாசிக்கு bsnl தவிர மற்ற சர்வீஸ் provider கள் இல்லை போலிருக்கிறது.

      Delete
    3. Karthik Somalinga ; இரவுக்கழுகு : சிவகாசியில் இருந்திட்டால் தான் பிரச்னையே கிடையாதே ! அருமையான BSNL Broadband பட்டையைக் கிளப்பிடும் !

      Delete
  4. RS 100 OK SIR

    muthu 400 specile i
    varaverkiren.!

    ReplyDelete
  5. தரமான புத்தகம் அதனால் விலையேற்றம் என்பது காலத்தின் கட்டாயம் என்கிற உங்கள் பதிவின் சாராம்சம் தெளிவாக புரிகிறது. தனிப்பட்ட முறையிலும் எனக்கு இந்த அனுபவம் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் வசித்து வந்த காலத்தில் அங்கே இருந்த சில காமிக்ஸ் ஆர்வலர்களுடன் தொடர்பிருந்தது. என்னதான் நாம் இப்போதும் அவர்களுடைய கதாபத்திரங்களை படித்து வந்தாலும் புத்தக தரம் என்று வந்துவிட்டால் நம்முடைய புத்தகங்களை அவர்களிடம் காட்டுவது கொஞ்சம் தர்மசங்கடமானதுதான். முதலில் நமது புத்தகங்களை பார்த்தவர் நேராகவே சொல்லிவிட்டார். அறுபதுகளிலும், எழுபதுகளிலும் நாங்கள் பிரிண்ட் செய்த தரத்தில் நீங்கள் இப்போது பிரிண்ட் செய்கிறீர்கள் என்று. அதன் பின்னர் நான் யாரிடம் புத்தகங்களை காட்டுவதென்றாலும் கையோடு மெகா ட்ரீம் ஸ்பெஷலும் கொண்டு செல்வது வழக்கம். முதலில் அதை காட்டி விட்டு எல்லாரும் படிக்க வேண்டும் என்பதற்காக குறைந்த விலையில் மட்ட பேப்பரில் போடுவதும் வழக்கம் என்று சொல்லி சமாளிப்பேன்.

    சென்னை புத்தக கண்காட்சியில் நான் கண்கூடாக பார்த்ததும் ஏறக்குறைய அதேதான். பிரபலங்கள் முதல் சாதாரண வாசகர்கள் வரை பார்க்க விரும்பியது உயர்தர பேப்பரில் வண்ணத்தில் புத்தகங்கள். முக்கியமாக பழைய வாசகர்கள் நிறைய பேர் தமது பள்ளிக்கு போகும் மகன் மற்றும் மகள்களுடன் வருவார்கள். அப்படியே மலரும் நினைவுகளில் மூழ்கிப்போய் அவர்களிடம் "நான் உன்னை மாதிரி இருக்கும்போது மாயாவி கதையெல்லாம் படிப்பேன்" என்று சொல்லி அங்கே இருந்த விண்வெளி கொள்ளையர், களிமண் மனிதர்கள் புத்தகத்தை காட்டுவார்கள். அந்த புத்தகம் வேண்டுமா என்று கேட்பார்கள். அதற்கு அந்த சிறுவர்களிடம் ஒரு ரெஸ்பான்சும் இருக்காது. ஆனால் அதே சிறுவர்கள் கம் பாக் ஸ்பெஷலை பார்த்து விட்டு இதுமட்டும் வேண்டுமானால் வாங்கலாம் என்று சொல்வார்கள். நான் நமது ஸ்டாலில் இருந்த நான்கு நாட்களில் தினமும் பார்த்த சங்கதி இது. என்னை மிகவும் ஆச்சரிய படுத்திய இன்னொரு விஷயம், ஆங்கில காமிக்ஸ் புத்தகம் படிக்கவும் யாரும் ஆர்வம் காட்டவில்லை. ஒரு சிலர் மட்டும் லயன் காமிக்ஸின் ஆங்கில பதிப்பின் நான்கு மற்றும் ஐந்தாம் புத்தகங்களை வாங்கிச்செல்வார்கள். அவற்றில் உள்ள கதைகள் குட்டிகதைகள் என்பதாலா அல்லது அவற்றில் சிலபக்கங்கள் வண்ணத்தில் இருந்தன என்பதாலா என்று எனக்கு தெளிவாக தெரியவில்லை. இது போன்ற வாசகர்களுக்கு இப்போது வண்ணத்தில் வரும் கதைகளை தங்களுடைய வாரிசுகளுக்கு மார்க்கெட்டிங் செய்வது சுலபம். இதற்கு விலை விலையேற்றம்தான் என்றால் அதனை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

    நேற்றுதான் என் வீட்டிற்க்கு ஜெரோம் வந்து சேர்ந்தார். இன்னமும் படிக்கவில்லை. பல தளங்களில் விமரிசனங்களை பார்த்து விட்டதால் இந்த புத்தகத்தை படித்து விட்ட உணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை. உடனடியாக படிக்கும் ஆர்வம் இல்லை. இதற்கு என்ன செய்யலாம் என்பதற்கு பதிலும் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. //மெகா ட்ரீம் ... காட்டி விட்டு .. குறைந்த விலையில் மட்ட பேப்பரில் போடுவதும் வழக்கம் என்று சொல்லி சமாளிப்பேன்.//
      :) :) :)

      //நான் உன்னை மாதிரி இருக்கும்போது மாயாவி கதையெல்லாம் படிப்பேன்" என்று சொல்லி அங்கே இருந்த விண்வெளி கொள்ளையர், களிமண் மனிதர்கள் புத்தகத்தை காட்டுவார்கள்//
      நமக்கு பிடித்த பல விஷயங்கள் இன்றைய சிறுவர்களுக்கு பிடிப்பதில்லை என உணரும்போது, என் பெற்றோர்கள் பலதடவை சிலாகித்து சொன்ன விசயங்களை கவனிக்காமல் தவிர்த்தது பிளாஷ்பேக்காய் வந்து போகிறது! :)

      //பல தளங்களில் விமரிசனங்களை பார்த்து விட்டதால் இந்த புத்தகத்தை படித்து விட்ட உணர்வு .. இதற்கு என்ன செய்யலாம் என்பதற்கு பதிலும் இல்லை//
      சிம்பிள், விமர்சனங்களை படிப்பதை தவிர்க்கலாம்! :)

      Delete
    2. நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களது ஒரு பின்னுட்டம்,
      Welcome back நண்பரே.

      Delete
    3. முத்து விசிறி : ஜெரோம் கதையினைப் படிக்க ஆர்வம் தொலைந்து போனது பற்றி நீங்கள் எழுப்பி இருந்தது நியாயமானதொரு ஆதங்கமே !

      இதழ்கள் வெளியாகிய முதல் ஒரு வாரத்திற்காவது நண்பர்கள் தத்தம் வலைப்பதிவுகளில் விரிவான விமர்சனங்களை எழுதிடாமல் இருந்தால் கொஞ்சம் சுவாரஸ்யம் தாக்குப் புடித்திடுமென்று தோன்றியது ! தாமதமாய்ப் படிக்கும் சூழ்நிலையில் உள்ள நண்பர்களுக்கு இது போன்ற சங்கடம் மட்டுப்பட்டிட உதவிடக் கூடும் !What say guys ?

      Delete
    4. இதை ஏற்புடையதாக இல்லை என்பது என் கருத்து! என்னை பொறுத்த வரையில், நான் விமர்சனம் எழுதுவதற்கும், காமிக்ஸ் பற்றி எழுதுவதற்கும் passion-ஐ தாண்டி இன்னொரு சமாசாரம் உண்டு! அது காமிக்ஸ் படிக்காத பலரை இப்பதிவுகள் சென்றைடைய வேண்டும் என்பதே (திரட்டிகள் மூலமாக)! முடிந்த வரையில் என் விமர்சனங்களில் கதையின் முக்கிய பகுதிகளை தவிர்க்கிறேன், குறைந்த பட்சம் ஒரு "Spoiler Alert" வைக்கிறேன்! இதழைப் பற்றி அறிய விரும்பாத காமிக்ஸ் வாசகர்கள் வலைப்பூ விமர்சனங்களை படிக்காமல் தவிர்க்கலாமே? விரும்பினால் புத்தகத்தை படித்து முடித்ததும் பிறர் கருத்தை அறிய, தம் கருத்தை பகிர விமர்சனங்களை படிக்கலாம்!

      புத்தகம் கைக்கு கிடைப்பதற்கே பத்து நாட்களுக்கு மேல் ஆகி விடும் நிலையில் நீங்கள் சொல்லும் ஒரு வார அளவு கோலை ஏற்கனவே தாண்டியதாகிவிட்டது! ;)

      விமர்சனத்தை உடனுக்குடன் படிக்க விரும்பும் காமிக்ஸ் வாசகர்களும் இருக்கிறார்கள்! மேலும் சுட சுட வெளிவராத விமர்சனத்தில் சுவாரசியம் எது?! Avengers திரைப்பட விமர்சனத்தை இப்போது எழுதினால் யாரவது படிப்பார்களா? அப்படிதான்! :)

      Delete
    5. ஆனால் நண்பர்கள் யாரும் கதையை கூறவில்லை.
      அனைவருமே ஜெரோமே இன் மூலம் மற்றும் இக்கதையின் சில பக்கங்களின் ஸ்கேன் மட்டுமே வெளியிட்டார்கள் எனபது எனது கருத்து.அவைகள் அனைத்துமே இக்கதைகளை படிக்கச் தூண்ட செய்தவையே தவிர வேறு காரணத்திற்காக அல்ல.

      Delete
    6. நண்பர் கார்த்திக் மற்றும் இரவுக்கழுகு ஆகியோர் கூறிய கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன்.

      பதிவிடும் தோழர்கள் யாரும் முதல் பத்துநாட்களுக்குள் கதையை சொல்லியதாக தெரியவில்லை. இது ஏதோ எனக்கு மட்டும் ஏன் தாமதமாக இதழ் கிடைக்கிறது என்று குற்றம் சாட்டுவது போல்தான் தெரிகிறது. வெறும் Trailer பதிவே உங்களுக்கு கதையைப் படித்த உணர்வைத்தருமானால், தங்களுக்கு புத்தகம் கிடைக்கும் வரை, பதிவுகளைப் பார்ப்பதை தவிர்ப்பதே மிகச்சிறந்த வழி. வெறும் ஒன்றிரண்டு பக்க ஸ்கேன்களை வைத்து கதையையே புரிந்து கொள்வது எல்லோருக்கும் கை வராத கலை.

      புத்தகம் கிடைத்த மகிழ்ச்சியில் அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மட்டுமே பதிவிடுகிறார்கள். உதாரணத்திற்கு புதிய வெளியீடு பற்றிய எனது வழக்கமான பதிவில்,

      " வழக்கம் போல் கதையைப்பற்றி நான் கூறப்போவதில்லை." - இது நான் எப்பொழுதும் கதையைப் பற்றிய பிரிவில் பயன்படுத்தும் வாக்கியம்.

      இதில் எங்கே கதையைப்பற்றி படிக்கும் சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது என்பது எனக்குத் தெரியவில்லை.

      நான் கூறியதில் தவறு ஏதும் இருந்தால் ஆசிரியர் அவர்கள் மன்னிக்கவும்.

      Delete
    7. ப்ளாக்குகளில் எழுதும் விமர்சனங்களைப் படிக்கவேண்டும் என்ற கட்டாயம் யாருக்கும் இல்லையே?

      புத்தகத்தை வாசித்தபின்தான் விமர்சனங்களைப் படிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அதன்படியே விமர்சனங்களை படிக்காமல் விட்டுவிடலாமே? புத்தகங்களை வாசித்தபின்னர் விமர்சனங்களைப் படிக்கலாம்.

      அத்தோடு விமர்சனம் எழுதும் யாரும் புத்தகத்தை முழுவதுமாக வரிக்கு வரி எழுதிவிடுவதும் இல்லை. ஒண்றிரண்டு ஸ்கேன்கள் போடுவதோடு சில வரிகளும் எழுதுகிறார்கள். இது, காமிக்ஸ்ஸை வாசிக்கத் தூண்டுகிறதேயொழிய - தடுப்பதில்லை.

      பரவலாக காமிக்ஸ்கள் பற்றி பலரும் எழுதிவருவதால்தான் புதியவர்களுக்கும், காமிக்ஸ் வருவதுபற்றி தெரியாதவர்களுக்கும் 'அடடே இந்தப் புத்தகம் வந்துவிட்டாதா?'என்று அறியக்கிடைக்கிறது. அவற்றையும் நிறுத்திவிட்டால்... எடியின் இந்த ப்ளாக்குக்கு வருபவர்களுக்கு மட்டுமே புத்தகங்கள் வந்துவிட்டன என்று தெரியும்.

      எனவே, எழுதுங்கள் நண்பர்களே.. எழுதுங்கள்...!!!

      புத்தகங்கள் வந்து பலவாரங்கள் கழித்து கிடைக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு உங்கள் எழுத்துக்களே சுவாரஸ்யத்தைக் குறையாமல் வைத்திருப்பவை!

      Delete
    8. என்னயா சொல்றாரு முத்துவிசிறி? பல காமிக்ஸ் பதிவுகளின் விமர்சனங்களே , என்னை போன்ற தாமதமாக புத்தகம் வாங்குபவர்களின் நாட்களின் வெறுமையை நிரப்புகின்றன! இன்னும் அந்த கதாபாத்திரங்கள், ஆசிரியர்கள், ஓவியர்கள் பற்றி தெரிந்துகொள்ளமுடிகிறது, அதனால் காமிக்ஸ் மீதான ஆர்வமும் அதிகரிக்கிறது!விஸ்வா, கார்த்திக், சௌந்தர், ரபீக்,கனவுகளின் காதலன், கருந்தேள்,முத்துவிசிறி மற்றும் பல பதிவர்கள் எல்லோருமே அவரவர் பாணியில் விமர்சனங்களும், தகவல்களும் தருகிறார்கள்! இது வரவேற்க வேண்டிய விஷயமே!அவர்கள் மாங்கு,மாங்கு என்று ஸ்கேனிங் செய்து,நெட்டிலிருந்து தகவல்கள் திரட்டி அழகு தமிழில் காமிக்ஸ் பற்றியும், அதன் பின்புலன்கள், நிறைகுறைகளை கூறி ஒரு பதிவை உருவாக்குகிறார்கள். அதை உட்கார்ந்த இடத்திலிருந்தே நாம் படித்தும் விட்டு,இல்லை அந்த பதிவை படித்ததால் எனக்கு புத்தகம் படிக்க தோன்றவில்லை என்று கூறுவது எந்த வகை நியாயம்? அதுவும் ஜெரோம் போன்ற துப்பறியும் கதைகள் இரண்டே இரண்டு பக்க ஸ்கேன் வைத்து தீர்மானிக்க முடியாத வகையாகும்!

      Delete
    9. கதையை முழுவதும் சொல்லாமல் அதை பற்றிய சிறப்பு தொகுப்பை மட்டும் (அனைவருக்கும் புத்தகம் கிடைக்கும் வரை) வெளியிடும் நண்பர்களின் சேவை கண்டிப்பாக தேவை என்பது எனது கருத்து.ஜெரோம் கதை நன்றாக இருந்திருக்குமோ என யோசிக்க வைத்தது நண்பரின் வண்ண பதிவிர்கப்புறமே.ஆசிரியர் அடுத்த இரண்டு பத்து ரூபாய் புத்தகங்களும் தேவைதானா என யோசித்தால் நலம். ஜெரோம் கதை நன்றாக இருந்தாலும் ,பொறுமையை சோதித்தது.அதே சமயம் நண்பர்கள் பதிவில் வண்ணத்தில் பார்த்து அசந்து விட்டேன்,மிதமான ,இதமான வண்ணக்கலவை அது.வண்ணத்தில் வெளி வந்திருந்தால் ,நம்மை ஈர்த்து மெதுவாக நகர்ந்த கதை (வண்ணத்தின் உதவியால் ) ,நம்மை கட்டி போட்டு ரசிக்க வைத்து மெதுவாக நகர்வதை மறைத்திருக்கலாம் .

      மீண்டும் அனைத்து கதைகளையுமே வண்ணத்தில் பார்க்க துடிக்கும் நமக்கு மீதமுள்ள பத்து ரூபாய் கதைகள் தேவைதானா?

      மேலும் ஆர்ட் பேப்பரில் தலை வாங்கியில் stretch பண்ணியதன் விளைவே அந்த பதிவின் சொதப்பல் .அடுத்த வெளியீடு விளம்பரத்தில் வந்த சூப்பர் ஹீரோ

      ஸ்பெஸல் எடுத்து பாருங்கள் அசத்தலாக இருக்கும் .

      இதிலிருந்து நான் சொல்ல விரும்புவது தரமே நன்று .தரமானவற்றை பெற தரமான விலை தர யோசிக்க வேண்டாம் நண்பர்களே.

      Delete
    10. முத்து விசிறி - Everyone taste different, you should not keep that in mind! You should read it and enjoy. Even I read all review of movie and books but I will put all their comments behind and enjoy what I like.

      Delete
    11. //இதழ்கள் வெளியாகிய முதல் ஒரு வாரத்திற்காவது நண்பர்கள் தத்தம் வலைப்பதிவுகளில் விரிவான விமர்சனங்களை எழுதிடாமல் இருந்தால் கொஞ்சம் சுவாரஸ்யம் தாக்குப் புடித்திடுமென்று தோன்றியது ! தாமதமாய்ப் படிக்கும் சூழ்நிலையில் உள்ள நண்பர்களுக்கு இது போன்ற சங்கடம் மட்டுப்பட்டிட உதவிடக் கூடும் !What say guys ?//

      ஜெரோமை இதுவரை வாங்கவில்லை.

      திரு முத்து விசிறி அவர்களுக்கு, ஜெரோமின் கதைகளில் ஆர்வம் குறைந்ததற்கு காரணம் கதையின் தொய்வான தன்மையாலோ அல்லது ஜெரோமின் சவ சவ கேரக்டராலோ இருக்கலாம். ஜெரோம் ஒரு ரிப் கெர்பி போன்றவரோ? தெரியவில்லை. வாசகர்கள், ஜெரோம் கதை சரியில்லை என்று வலைப்பதிவிட்டிருந்தாலும், உண்மை அதுவாக இருக்கும் பட்சத்தில் வலைபதிவிட்டவர்களை குற்றம் சொல்வது சரியில்லை. என்னைப் பொறுத்தவரை வாசகர்கள் கொஞ்சம் தெளிவாகவே இருக்கின்றார்கள். இதுவரை என் விமர்சனங்களை இங்கு பதிவேற்றுவதில்லை. என் விமர்சனங்களை எனது வலைப்பூவிலே மட்டுமே பதிவேற்றுகின்றேன். இங்கு விமர்சனம் செய்தால் அது புத்தக விற்பனையை பாதிக்கும் என்பது எனது உறுதியான கருத்து.

      இந்த கதைகள் ஜெரோமுடையதாக இல்லாமல், டெக்ஸ் வில்லர், கேப்டன் டைகர், கேப்டன் ப்ரின்ஸ் மற்றும் லார்கோ வின்ச்சினுடையதாக இருந்திருந்தால், அந்த கதையின் முழு விவரங்களும் வலைத்தளத்தில் படித்திருந்தாலும், திரு முத்து விசிறி சுவாரசியமாக படித்திருப்பார் என்பது எனது அனுமானம். ஜெரோம் புத்தகத்தை படிக்காமல் என்னால் அந்த கேரக்டரைப் பற்றி ஏதும் கூற முடியவில்லை.

      ஒன்று வேண்டுமானால் சொல்லலாம். அதாவது ஜெரோமை முதலில் பார்த்தால் பிடிக்காது, பார்க்க பார்க்கத்தான் பிடிக்குமோ என்னவோ!

      அன்புடன்,
      பாலாஜி சுந்தர்.
      www.picturesanimated.blogspot.com

      Delete
    12. வாசக நண்பர்களுக்கு ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றேன். வலைப் பதிவர்களிலேயே மூத்தவர், திரு முத்து விசிறி,நெடுநாட்களாக வலைப்பதிவிடுகிறார். ப்ளாக்ஸ்பாட்.காம் உருவாவதற்கு முன்பிருந்தே அவர் வலைப்பதிவிட்டு வருகிறார். இவர்தானா அந்த பழைய முத்து விசிறி என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். ஒரு பழைய காமிக்ஸ் ரசிகர் தன் உணர்வை வெளிப்படுத்துகின்றார் என்றால் அவருடைய உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.

      Delete
    13. Balaji Sundar : இவர் தான் அவர் ..அவர் தான் இவர் ! வலைப்பதிவுகளில் நமக்கெல்லாம் முன்னோடி ; ஆழ்ந்த காமிக்ஸ் ஆர்வலர் ; உலகம் சுற்றும் சேகரிப்பாளார் ; நமது காமிக்ஸ்களை வலையுலகிற்கு அறிமுகம் செய்திட்ட நண்பர் !

      நீங்கள் சொல்லிடுவது போல், இதே கதை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பான ஹீரோவின் சாகசமாய் இருந்திருக்கும் பட்சத்தில் படித்திடும் ஆர்வம் தூக்கலாய் இருந்திருக்குமென்று நினைக்கத் தான் தோன்றுகிறது ! Anyways,

      Delete
    14. எடிட்டர் சார்,
      திரு முத்து விசிறி அவர்களின் பழைய ப்ளாகில் (ப்ளாக்ஸ்பாட்டில் அல்ல)ஒரு பின்னூட்டமிட்டு இருக்கிறேன், வேறு பெயரில். 2001ம் ஆண்டோ அல்லது 2002ம் ஆண்டோ சரியாக நினைவில்லை. ஏறத்தாழ 10 வருடத்திற்கு முந்தய அந்த பின்னூட்டம் இன்னும் அப்படியே இருக்கின்றது. சமீபத்தில் கூட அதைப் பார்த்து ஒரு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ரொம்ப பத்திரமாக கம்யூட்டரிலோ அல்லது போனிலோ சேகரித்து வைத்திருக்கிறேன். இப்போது என்ன பிரச்சனை என்றால் அந்த பைலை ரோம்ம்ம்ம்ப பத்திரமாக வைத்துவிட்டேன். இப்போது நானே தேடியும் எனக்கு கிடைக்கவில்லை.

      Delete
    15. இதுக்குதான் நான்ன் அப்பவே சொன்னேன்(விகேஆர்) :) மெக்னாஸ் கோல்ட படத்துல வர செவ்விந்திய தாத்தா மாதிரி மேப் போட்டு வைங்கன்னு! இப்ப பாருங்க, அது மாயமான புதையல் ஆகிடுச்சு!! :)) சும்மாச்சும்மா!

      Delete
  6. காமிக்ஸ் உலகத்தை ரசித்த என் ஒரு சில நண்பர்களுக்கும் பெரும்பாலும் தெரிந்தது ஸ்பைடர்மேனும், சூப்பர்மேனும் தான் . அதுவும் பெரும்பாலும் அமெரிக்காவை ராட்சச மனிதர்களிடமிருந்து காப்பாற்றும் கதைகள்! ஆனால் அவர்களிடமிருந்து என்னையும், என் ரசனைகளையும் பிரித்து காட்டியது நீங்கள் எங்களுக்கு அறிமுகப்படுத்திய பிராங்கோ-பெல்ஜிய, பிரிட்டிஷ் காமிக்ஸ்கள்தான். ஆனால் ,50 ரூபாய்க்கு 50 பக்களுக்கு என் நண்பர்கள் தொடர்கதைகளாய் அந்த மேன் கதைகளை படித்து கொண்டிருந்த 90’களில் நான் 7 ரூபாய்கும், 10 ரூபாய்கும் முழு நீள கதைகளை படித்து வந்ததை நினைத்து பெருமை கொள்கிறேன். என்னை போன்ற காமிக்ஸ் ரசிகர்களின் ரசனையை காசாக்க விரும்பாமல் அத்தகைய ரசனைகளை இன்றளவும் வளர்க்க உதவியது உங்கள் காமிக்ஸ் விலைப்பட்டியல்கள் என்றால் மிகையாகாது. அதனால் நீங்கள் பட்ட நஷ்டங்களை அறிந்த வாசகர் வட்டம்தான் உங்களின் இந்த புதிய காமிக்ஸ் அத்தியாயத்திற்கு தோள் கொடுக்க தயாராக உள்ளது. நீங்கள் எதற்கும் கலங்கவேண்டாம்! பாலைவனத்தில் தண்ணீருக்காக அலையும் டைகர் அசாத்திய மனவுறுதியுடன் நடந்து கற்றாழை செடியை கண்டிபிடித்து தண்ணீர் அருந்தும் ஒரு நல்ல நிலையில் நம் காமிக்ஸ் இன்று உள்ளது. அதற்கு என்றும் உறுதுணையாக நாங்கள் இருப்போம் சார்!

    ReplyDelete
  7. Dear Vijayan,

    1. We all know our comics is not published by a business minded person, but a comics lover, some heroes you bring in may be flop, but it is necessary to expand our resources.

    2. Please stay with the quality first, price next policy.

    3.The main thing is, as in old days the comics should be released in a particular date every month which will encourage the mindset of the readers.

    4. It is a re-birth to our comics, you are the first person who should not loss your heart to any negative comments regarding pricing, quality and selection of stories.

    5. Although you may publish comics for passion and love, you should also think about rigorous marketing tactics which can bring in new readers and reach the older comic fans. I feel there may be a hundreds of our old comic fans who doesn't know the publishing of our comics.

    6. It would be a nice idea to spend money on cover advertising and even telemarketing in TV channels. Please think hard about it. "IT IS BETTER TO REACH FOR OUR DESIRE THAN WAIT FOR IT TO COME TO US".

    I hope i am not typed too much, please take this is as kind suggestions.

    thanks and regards,
    S.Mahesh

    ReplyDelete
    Replies
    1. hi...magesh

      3rd point is excatly correct.

      senthil (muscat)

      Delete
  8. ஆசிரியரது கருத்துக்கள் மனதைத் தொடுகின்றன. சிறுவயதில் நாங்கள் படித்து, ரசித்து, கற்பனைகளில் மிதந்து களித்த நம் காமிக்ஸ்களுக்கு ஈடாக எதையும் சொல்லிட முடியாது. துன்பங்களின்போது நம் கரம்பிடித்து தைரியம் சொல்லி அழைத்துவந்தவர்கள் அவர்கள்! தலையணையை அணையாக வைத்துக்கொண்டு வேதாளர்போலவும், டெக்ஸ், சிஸ்கோ கிட் போலவும் கற்பனை செய்துகொண்டு வெறுங்கையால் துப்பாக்கி சுட்டு விளையாடியவர்கள் எங்களில் பலர் இருக்கிறார்கள் என்பது தெரியும். எமது காமிக்ஸ்களின் பரிணாம வளர்ச்சியும், அதற்காக ஆசிரியரும் அவரது குழுவினரும் எடுத்துக்கொண்ட முயற்சிகளும், பரீட்சார்த்த முயற்சிகளில் வாங்கிய அடிகளின் வலிகளும் நாம் அறியாததல்ல.

    எந்தவொரு புத்தகமாக இருந்தாலும் அதனை அச்சிட்டுவிட்டு அதன் விற்பனை ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் வெளியீட்டாளர்களுக்குத்தான் தெரியும் பதிப்பிப்பின் வேதனை. திரைப்படங்களை வெளியிட்டுவிட்டு படம் ப்ளாப்பா, ஸக்ஸஸா என்று தவித்திருக்கும் தயாரிப்பாளர்களை நாங்கள் இன்று சகஜமாகச் சந்திக்கிறோம். அதையும் இதையும் கான்ஸெப்ட் அளவில் ஓரளவுக்கு ஒப்பிட்டுப்பார்க்கலாம். ஆனால், ஒரே ஆறுதல் - காமிக்ஸ்களை காலம் கடந்தும் விற்றுக்கொள்ளலாம் முழுவதுமாக. ஆனால், அதற்கான ஒரு காலம் இப்போது மட்டுமே கனிந்திருக்கிறது. இவ்வளவு நாட்களும் பதிப்பகத்தில் பழைய இதழ்களை கட்டுக்கட்டாக அடுக்கிவைத்துக்கொண்டு - திருமணமாகாத முதிர் கன்னிகளை வீட்டில் வைத்துக்கொண்டு தவிக்கும் பெற்றோரைப்போல - ஆசிரியரும் அவரது குழுவினரும் நாள்தோறும் எவ்வளவுதூரம் கவலைப்பட்டிருப்பார்கள் - வருந்தியிருப்பார்கள் என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், அந்த வேதனை புரியும்.

    இவ்வளவு சங்கடமான காலகட்டத்தைக் கடந்துவந்திருக்கும் நமது காமிக்ஸ்களுக்கு இப்போதைய இந்த ஏறுமுக கிராஃப்ட் உண்மையில் வாசகர்கள் கொடுத்திருக்கும் காலம் கடந்த பரிசு! ஆனால், இந்த அதீத வரவேற்பை ஆசிரியர் சற்று கட்டுப்பாட்டோடும், சில பதில் - மாற்று ஏற்பாட்டோடும் அணுகினால் நல்லது என்பது தற்போது எமது நண்பர்கள் சொல்லிவரும் கருத்துக்களை வைத்துப் பார்க்கும்போது தோன்றுகிறது. எல்லா இதழ்களையும் எல்லாரையும் வாங்க வைக்க நினைப்பது சரியான காரியமல்ல என்பதே பலரதும் கருத்து. ஆனால், அதற்கு ஏற்பவே ஆசிரியரும் முத்து நாட் அவுட் 40 ஸ்பெஷல் இதழை தனியாக - சந்தாவிற்குள் வராமல் - முன்பதிவின்மூலம் வழங்கிட ஏற்பாடு செய்திருக்கிறார். விரும்பியவர்கள் - இயலுமானவர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்கிற பாணியில். ஆனாலும், இதிலும் நம் நண்பர்களால முன்வைக்கப்படும் கருத்து: ஏற்கனவே தனி இதழ்களாக வந்தவற்றின் பாகங்களை இந்த ஸ்பெஷலில் இணைத்தால், எல்லாருமே கட்டாயமாக வாங்கியே ஆகவேண்டிய நிலை வந்துவிட்டதே! என்பதுதான். அது உண்மைதான்.


    நமது இதழ்களின் நீண்டகால வாசகர்கள் யாரும் இந்த ஸ்பெஷலை ஸ்கிப் செய்யவியலாத நிலை ஏற்பட்டுள்ளது (ஸ்கிப் செய்ய விரும்பமாட்டார்கள் என்பது ஒருபக்கமிருக்கட்டும்!). எனவே, ஆசிரியர் திட்டமிட்டே இவ்வாறு அனைவரையும் வாங்கச்செய்ய இப்படி தொடர்களையும், லயன் நாயகர்களையும் இந்த முத்து இதழினுள் இணைத்திருக்கிறார் என்கிற வாதங்கள் நண்பர்கள் மத்தியில் எழுந்திருக்கின்றன. இதனைத் தவிர்க்க, எதிர்காலத்தில் இப்படியான ஸ்பெஷல் இதழ்களை ஆசிரியர் வெளியிடும்போது, தனிக் கதைகளைமட்டுமே தொகுக்கவேண்டும் என்ற கோரிக்கையை அனைவர் சார்பிலும் முன்வைக்கிறேன். அப்படியான தனி டைஜஸ்ட்டை விரும்புபவர்களிடமிருந்து முன்பதிவை ஏற்றுக்கொள்ளலாம். (முதலில் முன்பதிவு செய்யாவிட்டாலும் இதழ் வெளிவந்த பின்னர் அடித்துப்பிடித்து அனைவரும் வாங்குவது நம் நண்பர்களுக்கு வழமைதானே?). அதேநேரம், நீண்ட காலமாக தாக்குப்பிடித்து ஆசிரியரின் பதிவு சொல்வதுபோலவும், நாம் அனுபவப்பட்டதுபோலவும் - இடையில் நின்றுபோயிருக்கக்கூடிய (நின்றேபோயிருந்த!) - இப்போது மீளவும் எழுச்சிபெற்றிருக்கும் நம் முத்துவிற்கு கொடுக்கக்கூடிய - செலுத்தக்கூடிய - நன்றிக்கடனாக நாங்கள் இந்த இதழை வரவேற்கவேண்டியது - நம் கடமை என்றே நான் கருதுகிறேன். அந்த அளவுக்கு எமது சிறுவயதுப் பராயத்தில் முத்து காமிக்ஸ்இனால் நாம் அடைந்தவைகள் ஏராளம்! இதை யாரும் மறுக்கமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.

    அதேபோல, இன்றைய சிறுவர்களைக் கவர்வதற்கும் - அவர்களை வாங்கச் செய்வதற்கும் - லக்கிலூக், சிக்பில், மற்றும் நமது மினிலயனில் வந்த சூப்பர் டுப்பர் (விஸ்கி சுஸ்கி, அலாவுதீன்,...) போன்றவர்களின் கதைகளை முழு வர்ணத்தில் 45 - 50 பக்கங்கள் கொண்ட இதழ்களாக தனியே வெளியிடலாம். இது, அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களை நமது காமிக்ஸ்களுக்குள் ஈர்க்கும். நமக்கும், சிறுவயதுக் குதூகலங்களை மீண்டும் அனுபவிக்க ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தித் தரும். இத்துடன் முடிகிறது எனது அதிகப்பிரசங்கித்தனமான பின்னூட்டம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. //நமது இதழ்களின் நீண்டகால வாசகர்கள் யாரும் இந்த ஸ்பெஷலை ஸ்கிப் செய்யவியலாத நிலை ஏற்பட்டுள்ளது (ஸ்கிப் செய்ய விரும்பமாட்டார்கள் என்பது ஒருபக்கமிருக்கட்டும்!). எனவே, ஆசிரியர் திட்டமிட்டே இவ்வாறு அனைவரையும் வாங்கச்செய்ய இப்படி தொடர்களையும், லயன் நாயகர்களையும் இந்த முத்து இதழினுள் இணைத்திருக்கிறார் என்கிற வாதங்கள் நண்பர்கள் மத்தியில் எழுந்திருக்கின்றன.//
      ஆசிரியர் சொன்னது போல் பளிச் என்று ஒரு star cast இல்லை என்றால் ஸ்பெஷல் எப்படி விற்கும்? அனைவரையும் வாங்கச் செய்ய நல்ல கதைகளைக் கொடுப்பது நல்ல உத்திதானே? அதில் ஏதும் தவறு இருப்பதாகத் தெரியவில்லையே? வார, மாத இதழ்கள் தொடர்கதை வெளியிடும் போது அடுத்த இதழை வாங்கச் செய்வதற்காக ஒரு எதிர்பாராத திருப்பத்துடன் தொடரும் போடுவது போல்தான் இதுவும் என்றே எனக்குப் படுகிறது.
      அப்படியே உங்களுக்கு இது தவறாகப் பட்டாலும், கவலை வேண்டாம். நமது ஆசிரியரா கொக்கா? லார்கோ விஞ்ச் collectors ஸ்பெஷல் என்று 2015 இல் ஆயிரம் ரூபாய் விலையில் முழு வண்ணத்தில் அறிவிக்காமலா இருப்பார்? அப்போது மொத்தமாகப் படித்து விட்டால் போகிறது. ஹி ஹி ஹி :P

      Delete
    2. ஆனாலும், இதிலும் நம் நண்பர்களால முன்வைக்கப்படும் கருத்து: ஏற்கனவே தனி இதழ்களாக வந்தவற்றின் பாகங்களை இந்த ஸ்பெஷலில் இணைத்தால், எல்லாருமே கட்டாயமாக வாங்கியே ஆகவேண்டிய நிலை வந்துவிட்டதே! என்பதுதான். அது உண்மைதான்.
      >> Well said Friend! Here you can see our business tactics :-) Sir, here onward release tiger and largo winch stories in separate book and DONT publish them as part of special release.

      அதேபோல, இன்றைய சிறுவர்களைக் கவர்வதற்கும் - அவர்களை வாங்கச் செய்வதற்கும் - லக்கிலூக், சிக்பில், மற்றும் நமது மினிலயனில் வந்த சூப்பர் டுப்பர் (விஸ்கி சுஸ்கி, அலாவுதீன்,...) போன்றவர்களின் கதைகளை முழு வர்ணத்தில் 45 - 50 பக்கங்கள் கொண்ட இதழ்களாக தனியே வெளியிடலாம். இது, அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களை நமது காமிக்ஸ்களுக்குள் ஈர்க்கும். நமக்கும், சிறுவயதுக் குதூகலங்களை மீண்டும் அனுபவிக்க ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தித் தரும்.
      >> I have put similar thoughts many times but I don't know why he is not showing any interest on this. May be he is happy with current set of people!! Sir, please consider this.

      Delete
    3. Prunthaban : யதார்த்தத்தை அழகாய் என் சார்பில் பதிவிட்ட அதே கையோடு... லார்கோ கலெக்டர்'ஸ்பெஷல் என்று ஒரு அதிரடியையும் செய்து விட்டுப் போய் விட்டீர்கள் !! ஆஹா !

      Delete
    4. Parani : உங்களுக்கான பதிலிது என்ற போதிலும், நமது முந்தைய இதழ்களின் மறுபதிப்புக்காக குரல் தந்திடும் நிறைய பல நண்பர்களுக்குமான பதிலாகவும் இதனை எடுத்துக் கொண்டிடலாம் !

      சில சமயங்களில் 'பண்டிகை வருகின்றது...விடுமுறை வருகின்றது' என்ற எதிர்பார்ப்புகளும், உற்சாகமும், நிஜமான அந்த தினத்தின் வருகையினை விட ஸ்பெஷலான தருணங்களாய் அமைந்திடுவது உண்டு தானே ? 'ஆஹா....பட்டாசு வெடிக்கணும்' ; 'ரிலீஸ் படத்திற்குப் போகணும்' 'செமையாக லூட்டி அடிக்கணும்' என்றெல்லாம் கனவுகள் ஒருபுறமிருக்க தீபாவளி அன்று நடுக்கூடத்தில் படுத்துக் கொண்டே சாலமன் பாப்பையா பட்டிமன்றம் பார்த்து விட்டு ; நிம்மதியாய் நித்திரையில் ஆள்வதும் உண்டு தானே ?

      நமது ஆரம்ப காலத்து இதழ்களின் மறுபதிப்புக்காக நாம் ஆதங்கப்படுவது கூட ஒரு வகையில் இது போல் தான் என்று எனக்கொரு அபிப்ராயம். நமது ஆரம்ப காலத்து இதழ்கள் நம் நினைவில் 'பளிச்' என்று ஒட்டிக் கொண்டிருப்பதற்கு அக்கதைகளின் சிறப்புகள் மட்டுமே காரணமென்று நான் நினைத்திடவில்லை ! அந்நேரம் நாமிருந்த வயது ; அந்த இளம் பிராயத்தில் வேறு பொழுதுபோக்குகளுக்கு அதிகம் வாய்ப்புகளில்லா சூழல் ; வீட்டுக்குத் தெரியாமல் காமிக்ஸ் வாங்கப் பணம் சேகரித்த த்ரில் ; நண்பர்களோடு books பரிமாற்றம் செய்த அனுபவ சுகங்கள் ; கிடைக்காது போனதொரு இதழை தற்செயலாயோ ; தேடித் தேடியோ அடைந்திடும் பொது கிட்டிடும் சாதனை செய்திட்ட உற்சாகம் ; எல்லாவற்றிற்கும் மேலாக, இன்டர்நெட் எனும் உலகப் பார்வைக்கான ஜன்னல்கள் திறவாதிருந்த அந்தக் காலங்களில், அது நாள் வரைப் பரிச்சயமான மாயாவி ; லாரன்ஸ் டேவிட் ; ரிப் கிர்பி ; வேதாளன் போன்ற நாயகர்களைத் தாண்டி ஒரு வண்ணமயமான...அதிரடியான காமிக்ஸ் உலகம் உள்ளதென்ற realisation தந்திட்ட சந்தோஷத் துள்ளல் என்று பற்பல குட்டிக் குட்டியான சமாச்சாரங்கள் அடங்கியுள்ளதாக நான் நினைக்கிறேன். இன்று நாம் மறுபதிப்பிடும் போது நம்மால் at best அந்தக் கதையினை மட்டுமே மீண்டுமொருமுறை தந்திட முடியும் ; அவற்றோடு பின்னிப் பிணைந்து நிற்கும் இதர சந்தோஷங்களை கொணர்வது சாத்தியமல்லவே ! அது மட்டுமல்லாது, வயதினில் மட்டுமன்றி ரசனைகளிலும் நாம் நிறையவே பயணித்து விட்டோம் ! அன்றைக்கே வெகு குழந்தைத்தனமாய் எனக்குப் பட்ட Suske & Wiske கதைகள் இன்று நமக்கு nostalgic valueஐ தாண்டி நிஜமாக திருப்தி தந்திட இயலுமென்று நம்பிக்கை உள்ளதா ?

      இன்றைய தலைமுறையினைப் பொறுத்த வரை சங்கதியே வேறு ! அவர்கள் நமது பால்ய ரசனைகளில் ஒன்றிடும் வாய்ப்புகள் எத்தனை சதவீதமென்று நாம் கணித்திடுவது ? காலங்கள் தாண்டி, நம்மையும் சரி ; புதிய தலைமுறையினையும் சரி, கட்டிப் போடும் ஆற்றல் கொண்ட கதை வரிசைகள் உண்டு தான் ! அவற்றை மட்டும் அவ்வப்போது மறுபதிப்பாக கொணரும் முயற்சிகள் தொடர்ந்திடும் !

      மறுபதிப்புகளுக்கு நான் எதிர்ப்பாளன் அல்லவே ; ஆனால் அற்புதத் தரத்தில் புதிய தொடர்கள் பல காத்திருக்கும் சமயம், நம் கவனங்களையும், முயற்சிகளையும் பின்னோக்கிச் சென்றிடும் ஒரு பணியில் அதிகமாய் ஈடுபடுத்திக்கொள்ளுவது அத்தனை உசிதமல்லவே என்று தான் சொல்ல வருகிறேன் !

      மறுபதிப்புகளுக்கு related ஆக ஒரு கொசுறுச் சேதி !! 'மாயாவி ; லாரன்ஸ் டேவிட் ; ஜானி நீரோ கதைகளைப் "புறக்கணித்த" நீவிர் உருப்பட மாட்டீர் ' என்ற தொனியில் கடிதம் ஒன்று வரைந்துள்ள 52 வயது நண்பரின் எண்ணங்கள் நியூ லுக் special ல் வருகின்றது !

      Delete
    5. மிகவும் சரி சார் ,நீங்கள் அதே போன்ற புதிய நாயகர்களை மேலும் தேடி கொண்டு வாருங்களேன்,ஃ பேண்டசி கதை வரிசைகளை

      // இன்றைய தலைமுறையினைப் பொறுத்த வரை சங்கதியே வேறு ! அவர்கள் நமது பால்ய ரசனைகளில் ஒன்றிடும் வாய்ப்புகள் எத்தனை சதவீதமென்று நாம் கணித்திடுவது ? காலங்கள் தாண்டி, நம்மையும் சரி ; புதிய தலைமுறையினையும் சரி, கட்டிப் போடும் ஆற்றல் கொண்ட கதை வரிசைகள் உண்டு தான் ! அவற்றை மட்டும் அவ்வப்போது மறுபதிப்பாக கொணரும் முயற்சிகள் தொடர்ந்திடும் ! //

      ஆஹா நமது 1980 களின் வரிசை அனைத்தையுமே கொண்டு வருவீர்கள் என நினைக்கிறேன்

      முத்து 1970 வரிசை

      சார் ,ஆனால் டைகரின் அனைத்து கதைகளுமே மீண்டும் வண்ணத்தில் வேண்டும் ,எந்த சமரசத்திற்கும் இடமே கிடையாது !

      வண்ணத்தில் டைகரின் அனைத்து கதைகளும் வராவிடில் அது நீங்கள் எங்களுக்கு செய்யும் துரோகமாகவே எடுத்துக்கொள்ளப்படும் !

      எந்த காம்ப்ரமைசும் உதவாது ,இல்லையா நண்பர்களே ?


      //மறுபதிப்புகளுக்கு related ஆக ஒரு கொசுறுச் சேதி !! 'மாயாவி ; லாரன்ஸ் டேவிட் ; ஜானி நீரோ கதைகளைப் "புறக்கணித்த" நீவிர் உருப்பட மாட்டீர் ' என்ற தொனியில் கடிதம் ஒன்று வரைந்துள்ள 52 வயது நண்பரின் எண்ணங்கள் நியூ லுக் special ல் வருகின்றது !//

      அப்படியானால் சுவாரஸ்யமான வருத்தம் தரக்கூடிய சிறு கதை ஒன்று உள்ளது !இல்லையா சார் !!

      Delete
  9. Editor sir ,
    Thank you so much for sticking to 100rs issue - happy to see a definitive answer - please stick to your plan at least until end of 2012, then we can review the results/price if needed. Very much satisfied with your answer, I had also mentioned similar comment in the last post - its a simple demand vs supply.

    ReplyDelete
  10. இரவு எங்கள் ஊர் புதுச்சேரியில் பலத்தமழை...

    இங்கே ஆசிரியரின் ப்ளாகில் மனதைதொடும் பதிவுமழை....

    இதை படிக்கும் என் மனதிலோ ஆனந்தக் கண்ணீர்மழை...

    (ரொம்ப நாளா கவிதைநடையில் பின்னுட்டமிடனும்னு ஆசை, இன்னைக்கு நிறைவேறிடுச்சு)

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் கார்த்திகேயன் :-)

      Delete
  11. Sir,

    Trailer of never before special in color is fantastic.Please upload the remaining pages too.

    ReplyDelete
  12. இரவுக்கழுகு : கொஞ்சமாச்சும் இதழில் ரசித்திட விட்டு வைத்திடுவோமே ? அடுத்த வாரத்தில் உங்கள் கைகளில் இதழ் இருந்திடும் .....புனித சாத்தானின் குட்டியானதொரு போட்டோவுடன் :-)

    ReplyDelete
    Replies
    1. ஒரு ஆர்வக் கோளாறுதான் சார்.கண்டிப்பாக காத்திருக்கிறேன் சார்.

      Delete
  13. டியர் விஜயன் சார்,
    உங்களின் நீண்ட விளக்கம் நெகிழ வைத்தது. பதிவின் எல்லா வரிகளிலும் காமிக்ஸ் மீதான தங்களின் காதலும் அர்பணிப்பும் தெரிகிறது. வாசர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்க கூடாது என்பதில் நீங்கள் கொண்டிருக்கும் கவனம் மகிழ்ச்சி அளிக்கிறது.
    மாறுதல் ஒன்று தான் மாறாதது என்பார்கள். அந்த வகையில் நமது லைன் - முத்து காமிக்ஸ் இதழ்களின் விலையும், வடிவமைப்பும் மாறுதலுக்கு உட்பட்டது தான். நமது காமிக்ஸ் வாசகர்கள் பலர் பழைய வாசகர்கள் தான். அன்று இருந்த பொருள்களின் விலை அனைத்தும் இன்று மாறி விட்டது. அதே போல் காமிக்ஸ் இன் விலை மாற்றமும் தவிர்க்க முடியாது என்பதை அனைவரும் உணர்ந்து தான் இருப்பார்கள். 400 ருபாய் விலை என்பதில் சில பேருக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் இதழ் வரும் போது அவர்களும் தங்கள் கருத்தை மாற்றி கொள்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. முத்து காமிக்ஸின் 40 வது வருட மலர் - never before ஸ்பெஷல் இதழ் உங்கள் முயற்சியின் மற்றுமொரு மைல் கல் என்பது உறுதி.
    வாசகர்களின் உதவியோடு நீங்கள் இன்னும் பல புதிய முயற்சிகளையும், புதிய கதைகளையும் தொடர வேண்டுமென அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

    எஸ். ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

    ReplyDelete
  14. Editor Sir,

    Can I send the MO for a copy to be sent to USA ? what is he courier charge for the same

    ReplyDelete
  15. wow,

    Its heartening to see our editor so passionate in encouraging readers with trailer of our special, great going sir, hope to see you daily in this forum, with ur replies, which will be a good news for people like us who refresh the pages every 30 mins to see comments and replies. And thanks for the colour full page uploads. Keep rocking.

    If possible use an Ipad and 3g donggles net connection, so that you can post more comments.

    S.Mahesh

    ReplyDelete
  16. அன்பு விஜயருக்கு .........
    இதை டைப் செய்யும் போது ஸ்க்ரீன் மங்கலாய் தெரிகிறது ......
    கண்ணை தொட்டு பார்த்த பிறகு தான் தெரிகிறது அது கண்ணீர் ................
    முன் பின் பார்த்திராத உங்களுக்கும் ........
    என் கண்களுக்கும் ............
    என்ன சம்பந்தம் ..........?

    ReplyDelete
    Replies
    1. sent cheque for 870..... 2 copies ..thru professional courier
      one for me.
      another for my son.

      Delete
  17. சூப்பர், அட்டகாசம். இன்னமும் ஐந்து மாதங்கள் பொருதிருக்க வேண்டுமா !!!????

    ReplyDelete
  18. என்னது நம்ம கோவை காரர இன்னும் காணல.
    Steel claw எங்க இருக்கீங்க.

    ReplyDelete
  19. நீங்கள் படும் கஷ்டம் நிறையப்பேருக்கு புரியாது சார். உங்களுக்கு எங்கள் உறுதியான ஆதரவு எப்போதும் நிச்சயம் உண்டு. 400 ரூபா புக்குக்கு கண்டிப்பாக எதிர்ப்பு இருக்காது. நீங்கள் வேண்டுமானால் ஒரு வாக்கெடுப்பு நடத்துங்கள் 400 ரூபா புக்கு வேணும்னு 1000 வோட்டு கண்டிப்பாக விழும். நீங்கள் தயங்காது செயல்படுங்கள் சார். முன்பதிவு செய்ய காத்திருக்கும் LION மற்றும் முத்து காமிக்ஸை நேசிக்கும் வாசகர்கள் கள்ளவோட்டுக்களின் எண்ணிகையை விட அதிகம்.

    தி லார்கோ & டின் டின் புக்க ஆங்கிலத்தில 400 - 800 வரை கொடுத்து வாங்குவார்கள். ஆனால் தமிழில் மட்டும் 10 ரூபாய்க்கு வெளியிடனும் என்றால் என்ன நியாயம்.

    ReplyDelete
  20. Hi

    Never Before Special Booking no. 17 .....


    But 5 more months to go :(

    Regards
    Nagarajan S

    ReplyDelete
  21. விஜயன் சார்
    இந்த மாதிரி ஒரு format ஐ செட் செய்து அறிவித்து விடுங்கள்.. பலரின் கனவு இது சார்.. At least from 2013..
    - Spl issues at around Rs.100- 200 once in 3 months (4 issues per year)
    - Regular monthly issues at Rs.50 for 48pages each in Muthu / lion / Mini lion(for kids)in colour.
    - Comics classic or reprints at 25 for B&W / 100 for colour once in 2 months
    - One mega spl per year for diwali or anniversary at Rs. 200 to Rs 500 as appropriate. ( But it should be either individual stories like lucky luke/chick bill/iznogoud or one big volume of albums of a complete series like Xiii rather than stories from mulitiple series.
    (Apologies! for re-posting my comment)
    - Vijay.
    (As i am new in this forum a Self intro: i am Vijay from TN, working as a AGM at a MNC in HYD, reading comics from 80's. Have a collection of around 500+ tamil comics)

    ReplyDelete
    Replies
    1. You are welcome to our Comics Family :)

      NAGARAJAN

      Delete
    2. 500+ books wow!
      Address enga?
      Welcome to our family Mr. Vijay

      Aldrin Ramesh from Muscat

      Delete
  22. அன்புள்ள ஆசிரியருக்கு
    முத்து காமிக்ஸ் 40ஆவது வயதை வெற்றிகரமாக கொண்டாட போவதை மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனும் கடந்த முப்பத்து இரண்டு ஆண்டு காலமாக முத்து உடன் பயணிக்கும் வாசகன் என்ற பெருமையுடனும் என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்களை தேரிவித்து கொள்கிறேன்.
    40 ஆண்டுகளுக்கு முன்னாள் முத்து என்ற முத்துவை பெற்றேடுத்த ஐயா திரு சௌந்திரபாண்டியருக்கும் அந்த முத்துவை தொடர்ந்து மெருகேற்றி பல இன்னல்களுக்கிடையே பயணித்து இந்த மைல்கல்லை அடைந்திட்ட
    நம்முடைய ஆசிரியர் திரு விஜயன் அவர்களுக்கும் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்த இருக்கும் பணியாளர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    விஜயன் சார் உங்களுடைய அனைத்து புதிய முயற்சிக்கும் என்னை போன்ற வாசகர்களின் முழு ஆதரவு உண்டு. ஆன்லைனில் ரூ850 TRANSFER அனுப்பிய பிறகே இதை பதிவிடுகிறேன்
    PRAKASH PUBLICATIONS குழுமத்தின் நீண்ட நாள் வாசகன் என்ற உரிமையுடன் ஒரு KIND SUGGESTION


    விரைவாக நமது இதழ்களை STANDARDIZE செய்ய முழுமுயர்ச்சி எடுக்க வேண்டும். மாதம் தவறமல் வெளியிடும் தேதிஇ இதழ்களின் வடிவம்இ இதழ்களின் பக்கங்கள். நமது SUBSCRIPTION BASE உயர்த்த புதிய வாசகர்ளை நமது இதழ்கள் சென்றடைய இவை கட்டாயம் தேவை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

    ReplyDelete
  23. விலையை பற்றி ஒரு முடிவை அறிவித்து விட்டீர்கள்! மிக்க மகிழ்ச்சி, வி சப்போர்ட் இட்! அப்படியே பேக்கிங் தரத்தை மேம்படுத்துவது பற்றியும் ஒரு முடிவெடுங்களேன், ப்ளீஸ்?! நீங்கள் உபயோகப்படுத்தும் சாம்பலும் அல்லாத, பிரவுனும் அல்லாத அந்த மெல்லிய பேக்கிங் பேப்பரானது எத்தனை சுற்றுக்கள் சுற்றி கட்டினாலும் கிழிந்த நிலையிலேயே வந்து சேருகிறது! இதனால் புத்தக முனைகள் மடங்கி, அட்டை மேற்புறம் அழுக்காகி - எரிச்சலையே ஏற்படுத்துகிறது! பல வாசகர்கள் பல தடவை கேட்ட இந்த கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

    100 ருபாய் இதழ்கள்தான் என்று முடிவெடுத்து விட்டதால் - புத்தகத்தின் அளவிலும், பருமனிலும் ஒரு தெளிவு பிறந்திருக்குமே?! அதற்கேற்ப, 'உட்பகுதியில் நூல் வலை ஒட்டப்பட்ட பச்சை நிற ஆபீஸ் envelope போன்ற' கெட்டி Envelope-கள் வாங்கி அதில் புத்தகத்தை அனுப்பினால் என்ன? குறைந்த பட்சம் கார்ட்போர்ட் அட்டைக்குள் வைத்து அனுப்ப முடியுமா? இது எனது கருத்துக்களே, நீங்கள் எந்த வழிமுறையைப் பின்பற்றினாலும் - புத்தகம் முனை மடங்காமல், அழுக்காகாமல் வந்து சேர்ந்தால் சரிதான்!

    ReplyDelete
    Replies
    1. நானும் இதை வழிமொழிகிறேன். புத்தகத்துக்கு நூறு கொடுக்கும் நாம் நல்ல packing க்கு ஒரு பத்து ரூபாய் அதிகமாகக் கொடுக்கக் கூடத் தயங்க மாட்டோம். ஆனால் புத்தகம் முனை மழுங்கி வருவது சகிக்கவில்லை :(

      Delete
    2. முற்றிலும் உண்மை,
      இதனை பற்றி எனது முன்னைய பதிவின் பின்னுட்டதீலேயே கூறியுள்ளேன்.
      தரத்தின் மீது ஆசிரியர் கொண்டுள்ள மாற்றத்தை சிறிது அது pack செய்து அனுப்பும் முறையிலும் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

      Delete
  24. Money is not the issue nowadays.
    Quality of paper, Artcover, Stories are superb.
    Please do bring Xiii full episodes in colour as collectors edition. Price and size as printed by cinebook.
    If possible bring xiii Mystery series also sooner in Lion comics.

    ReplyDelete
  25. டியர் எடிட்டர் திரு விஜயன் அவர்களுக்கு வணக்கம்,

    உங்களது முந்தய பதிவில் நான் சொன்னது போல இன்று சந்தாவும், முத்து காமிக்ஸின் நெவர் பிபோர் ஸ்பெஷலுக்கு முன் பதிவு பணமும் பேங்க் டிரான்ஸ்பராக உங்களது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக்கு அனுப்பியுள்ளேன்.உங்களது yahoo mail க்கு ஒரு டீடெய்லான மெயிலும் அனுப்பியிருக்கின்றேன். Kindly please acknowledge. உங்களது முந்தய பதிவில் பல பேர் ஆதரவாகவும்,சில பேர் விலைகுறித்து வருத்தங்களும் தெரிவித்திருந்தார்கள். அந்த கமெண்ட்களுக்கெல்லாம் பதில் கூறவேண்டும் என்ற ஆவல் மனதில் தோன்றினாலும், அது தேவையற்ற ஆவல் என்று என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். ஏனெனில் கேட்கும் கேள்வி உங்களிடம் கேட்கிறார்கள், அந்த கேள்விக்கு நீங்கள் பதில் சொல்வதே சரி. அதைவிட்டு நானோ அல்லது மற்றவர்களோ பதில் சொல்வதால் சச்சரவுகளே மிஞ்சும். அனைத்திற்கும் சேர்த்து பதில் சொல்வதற்கு பதில் ஒரு பதிவையே இட்டுவிட்டீர்கள், நன்றி. அதுவுமில்லாமல் ஒவ்வொரு கமெண்ட்க்கும் பொறுமையாக பதில் சொல்லியிருக்கின்றீர்கள், இதை எந்த காரணத்தைக் கொண்டும் நிறுத்தாமல் தொடர வேண்டும்.

    விலை விஷயத்தில் என் கருத்தை இங்கு வெளிப்படுத்துகின்றேன்.
    இன்று இருக்கும் விலைவாசியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.72.27, இதே பெட்ரோல் விலை மே மாதம் ரூ.77.53. பெட்ரோலிய கம்பெனிகள் இதை மேலும் மேலும் உயர்த்தாமல் இருக்கப் போவதில்லை. எவ்வளவு விலையானாலும் இதை நம்மில் யாரும் வாங்காமல் இருக்கப் போவதில்லை, ஒரு நாள் தட்டுப்பாடு என்றால் பெட்ரோல் பங்கில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள். ஆவின் பால், தினமும் ஒரு லிட்டராக ஒருமாதத்திற்கு வாங்க வேண்டும் என்றால் ரூ.1000/- தேவைப்படுகிறது. பணம் பத்து ரூபாயோ அல்லது 100 ரூபாயோ அதை அனைவரும் சிரமப்பட்டே சம்பாதிக்கின்றோம் ஒரு சிலரை தவிர.

    ஐந்து நாட்களுக்கு முன்னே லேண்ட்மார்க் புத்தக கடையில் வருடாந்திர சேல் என்றும் 70% வரை தள்ளுபடி என்றும் விளம்பரப் படுத்தியிருந்தார்கள். அங்கு இருந்த காமிக்ஸ்களிலேயே விலை குறைவான காமிக்ஸ் புத்தகம் பேண்டம் காமிக்ஸ்தான். விலை 100. 40தோ அல்லது 50 பக்கங்கள் தான் இருக்கும். ஒரு புத்தகத்தில் இரண்டு கதைகள். பேப்பரும் சுமார்தான், வாங்கலாம் என்று விசாரித்தால் அந்த புத்தகங்களுக்கு தள்ளுபடி கிடையாதாம், ஏனென்றால் அவையெல்லாம் ஸ்பெஷல் வகையறாவாம்.

    இதை தவிர மற்ற அனைத்து புத்தகங்களும் ரூ.800, 1000, 2000ம். ஒரு தடிமனான தரமான காமிக்ஸ் புத்தகம் மேலே 50% தள்ளுபடி என்று ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது. விலை ரூ.4700 சொச்சம். கணக்குப் போட்டு பார்த்தேன். எக்ஸிபிஷனுக்கு சென்றது போல சுற்றிப் பார்த்துவிட்டு வெறும் கையோடு திரும்பினேன்.
    இதை சொல்வதற்கு காரணம் லயன் முத்து போல இந்த விலையில் வேறு எங்கும் கிடைப்பதில்லை.
    அன்புடன்,
    பாலாஜி சுந்தர்,
    www.picturesanimated.blogspot.com

    ReplyDelete
  26. உங்கள் பதிவை படித்த பின்னர் ,சில நண்பர்கள் விலை உயர்வை இனி பெரிதாக பார்க்க மாட்டார்கள் என்பது எனது எண்ணம் .

    ஆசிரியருக்கு மற்றும் இரவு கழுகு ,நண்பர்கள் அனைவருக்கும் 12 .30 க்கு தான் நான் பதிவை படிக்க துவங்கினேன் .இவளவு நேரமும் நண்பர்களின் சுவாரஷ்யமான பதிவுகளில் லயித்திருந்தேன் .

    ஆசிரியரின் உறுதியான ,தெளிவான முடிவிற்கு நன்றி .அனைவரின் விருப்பமும் 50 லிருந்து தொடர்கிறது.ஆசிரியர் கூறுவது போல 40 விலையில் பொசுக்கென போய் விடும் .100 என்பது தரமான சரியான முடிவு.மறுப்பவர்கலாலும் முடியும் .மீறி போனால் குறைந்த பட்ச ஒரு நாள் சம்பளத்திற்கும் குறைவே.தரத்துடனும் ,நிறைவுடனும் எந்த சமரசமும் செய்ய போவதில்லை என்ற ஆசிரியரின் கருத்து சரியான ,பாராட்டத்தக்க முடிவே .

    இவ்வளவு கஷ்டப்பட்டு நமது காமிக்ஸ் யை உலக தரத்திற்கு உயர்த்திய உங்களது முயற்சிக்கு மேலும் நன்றி .


    வெளி வரவிருக்கும் கதைகளின் வண்ண அறிவிப்புகள் ,சுறாவோடு சடு குடு ஏற்கனவே பார்த்த ஓவியம் ,அதை மட்டும் மாற்றியிருக்கலாம் .

    இந்த இதழ் நமது வெற்றி விழா மலர் என அறிவித்த தங்கள் அறிவிப்பு அனைவருக்கும் நிலையினை புரிய வைக்கும்.

    இன்னும் வெளி விட ஏராளமான கதைகள் உள்ள நிலையில் ஒரு வெளியீட்டில் இரண்டு அல்லது மூன்று கதைகள் கண்டிப்பாக வேண்டும்.

    ஜில் ஜோர்டான் அட்டகாசமான தரமான கதையாக இருக்கும் என்பது (ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்) இந்த அட்டகாசமான விளம்பரத்தில்

    தெரிகிறது.கம்பளத்தில் கலாட்டா வும் அற்புதம் ,எதிபர்ப்பை எகிற வைத்து விட்டீர்கள் .பெரியதொரு வெற்றி விழாவிற்கு முன்னோட்டமே மிக அற்புதம்.

    இனி தரமே நமது தாரக மந்திரம் என வீறு நடை போடுவோம் .

    ReplyDelete
  27. We have about 5 months time for Never before special. We are with you Sir. Soon I'll transfer the amount in 2 installments.

    ReplyDelete
  28. 80 களின் 3 ரூபாயும் 4 ரூபாயும் இன்றைய 100 ,200 க்கு சமம் என்றே எனக்கு தோன்றுகின்றது .அன்றைக்கு நாம் காமிக்ஸ் படிக்கவில்லையா? .வண்ணத்தில் ,தரமான பேப்பரில் லயன் காமிக்ஸ் படிக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது ,இப்போ நிஜமாகின்றது . வாழ்த்தி வரவேற்கிறேன்!

    ReplyDelete
  29. கதையை முழுவதும் சொல்லாமல் அதை பற்றிய சிறப்பு தொகுப்பை மட்டும் (அனைவருக்கும் புத்தகம் கிடைக்கும் வரை) வெளியிடும் நண்பர்களின் சேவை கண்டிப்பாக தேவை என்பது எனது கருத்து.ஜெரோம் கதை நன்றாக இருந்திருக்குமோ என யோசிக்க வைத்தது நண்பரின் வண்ண பதிவிர்கப்புறமே.ஆசிரியர் அடுத்த இரண்டு பத்து ரூபாய் புத்தகங்களும் தேவைதானா என யோசித்தால் நலம். ஜெரோம் கதை நன்றாக இருந்தாலும் ,பொறுமையை சோதித்தது.அதே சமயம் நண்பர்கள் பதிவில் வண்ணத்தில் பார்த்து அசந்து விட்டேன்,மிதமான ,இதமான வண்ணக்கலவை அது.வண்ணத்தில் வெளி வந்திருந்தால் ,நம்மை ஈர்த்து மெதுவாக நகர்ந்த கதை (வண்ணத்தின் உதவியால் ) ,நம்மை கட்டி போட்டு ரசிக்க வைத்து மெதுவாக நகர்வதை மறைத்திருக்கலாம் .

    மீண்டும் அனைத்து கதைகளையுமே வண்ணத்தில் பார்க்க துடிக்கும் நமக்கு மீதமுள்ள பத்து ரூபாய் கதைகள் தேவைதானா?

    மேலும் ஆர்ட் பேப்பரில் தலை வாங்கியில் stretch பண்ணியதன் விளைவே அந்த பதிவின் சொதப்பல் .அடுத்த வெளியீடு விளம்பரத்தில் வந்த சூப்பர் ஹீரோ

    ஸ்பெஸல் எடுத்து பாருங்கள் அசத்தலாக இருக்கும் .

    இதிலிருந்து நான் சொல்ல விரும்புவது தரமே நன்று .தரமானவற்றை பெற தரமான விலை தர யோசிக்க வேண்டாம் நண்பர்களே.
    ஆசிரியர், நடுவில் நான் நுளைத்ததை படிக்காமல் விட்டு விடுவாரோ என எண்ணியே இந்த ஜெராக்ஸ் .இரண்டாம் முறை வெளி விட்டு உங்கள் பொறுமையை சோதித்ததர்க்கு தயவு செய்து மன்னித்து கொள்ளுங்கள் நண்பர்களே .

    கொண்டாட்டத்திற்கு அனைத்து நண்பர்களும் சமரசம் செய்யாமல் கலந்து கொள்ளுங்கள்

    // நாமே நம்மிடையே ஏற்ற தாழ்வுகளை வெளிச்சம் போட்டுக் கொண்டிடுவதற்குச் சமானமான அது போன்ற முயற்சிகளை எந்த ஒரு சூழ்நிலையிலும் நான்encourage செய்திடப் போவதில்லை //

    என்ற ஆசிரியரின் பொன்னான வார்த்தைகளுடன் குறை பட்ட நண்பர் அதிகம் சம்பாதித்து அடுத்து வரவிருக்கும் 1000 மற்றும் 10 ,000 விலை .....

    புத்தகங்களை வாங்கும் வலிமை பெற்று நம்முடன் கலந்து கொண்டாட வேண்டும் என வேண்டி ...........................................

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலியிருந்து ட்ரன்க் கால் (sorry) ஸ்டீல் க்ளா,

      நண்பரே எப்படிங்க உங்களால மட்டும் முடியுது. செமத்தியா டைப் பண்றீங்க. சூப்பர்ங்க.. நான் ரெண்டு லைன் டைப் பண்ணவே ரொம்ப தடுமாற்றமா இருக்கு.

      Delete
    2. மற்ற நண்பர்களின் பதிவுகள் என்னை விட அழகாக பிழையின்றி உள்ளன நண்பரே.நீங்களும் சிறிது நேரம் அதிகமாக எடுத்து கொண்டால் போதுமானது .நீங்கள் கிண்டல் செய்ய நான்தானா அகப்பட்டேன் .

      Delete
    3. இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.என்ற கிங் விஸ்வாவின்
      "தமிழ் காமிக்ஸ் உலகம் "
      பதிவே முக்கிய காரணம் ,தமிழில் நான் பதிவிட

      Delete
    4. நண்பர் ஸ்டீல் க்ளா மன்னிக்கவும், உண்மையில் கிண்டலுக்காக எதுவும் கூறவில்லை. பொறுமையாக டைப் பண்ணுவதை பார்த்து பாராட்டாகவே அப்படி எழுதினேன்.

      Delete
    5. நான் விளையாட்டுக்காகதான் அவ்வாறு கூறினேன் .எல்லாம் காமிக்ஸ் மேல் உள்ள காதல்தான் .

      Delete
  30. How do i pre-book when i am not sure where i would be in 6 months. Pls suggest..

    ReplyDelete
    Replies
    1. Even I have the same problem. But I just went ahead and booked. Later when if we change the place (even if it involves shifting to another country), I think we can always call them up and pay the differential amount to ship it to the new place.

      Delete
    2. Thanks! will do the same...

      Delete
  31. சிவகாசியிலேயே வேலை பார்த்து, பொடி நடையாக நடந்து, நமது காமிக்ஸ் அலுவலகத்திலேயே நேரடியாக இதழ்களை வாங்கி படிக்கும் பாக்கியம் பெற்றவன் நான். இங்கு சிவகாசியிலேயே, இன்றைய நிலையில் பெரிதும் உயர்ந்த பேப்பர் விலை மற்றும் மின்சார தட்டுப்பாடு, கூலி உட்பட்ட இதர செலவுகள், கழுத்தில் ரம்பத்தால் அறுக்கும் நிலையில் , பிரிண்டிங் தொழிலில் தனது காமிக்ஸ் பைத்தியத்தின் காரணமாகவே விடாது இயங்கும் ஆசிரியர் உண்மையில் மனிதனே இல்லை. (கடவுளுக்கு நன்றி).

    200 பக்கங்களுக்கு ஆர்ட் பேப்பரில் முழு வண்ணத்தில் அச்சிடும் செலவோடு பார்த்தால், 100 ரூபாய்க்கு விற்பதே எவ்வளவு கடினம் தெரியுமா! இதில் இன்னும் 10 ரூபாய்க்கோ, 25 ரூபாய்க்கோ நமது காமிக்ஸ் பொக்கிசங்களை எதிர்பார்த்து ஆசிரியருக்கும் நாம் சிரமம் குடுக்க கூடாது நண்பர்களே!

    1990 இல் வாங்கிய தங்க சங்கிலியை இன்றும் அதே விலைக்கு நாம் விற்போமா.. ஆனால் பழைய இதழ்களை அன்று வெளியிட்ட அதே விலைக்கே இன்றும் விற்கும் அளவுக்கு அப்பிராணியான நமது ஆசிரியருக்கு விலை விசயத்திற்காக தரத்தில் சமரசம் செய்யும்படி தர்மசங்கடத்தில் ஆழ்த்தாமல் முழு சுதந்திரம் தரும் படி அனைவரையும் கேட்டு கொள்கிறேன்.

    நாளை நமது லயன் காமிக்ஸ் உலகத்தரத்தில் மின்னிட செய்வது நமது கையிலேயே உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. உண்மை நிலையை எடுத்து சொல்ல ,அனுபவசாலியான உங்களை விட்டால் ஆளே கிடையாது .இதை விட தெளிவாக ஆசிரியரின் நிலை மற்றும் எண்ணத்தை விளக்கிட முடியாது .நன்றி நண்பரே .

      Delete
  32. Dear Editor Sir,

    We stand by you & there is no two way about it!!!

    Thank you for the confirmation email on receipt of payments and my booking # seven makes me feel like I am already in Heaven ;)

    2012 has been a great year for all of us with Lion & Muthu spls dwelling in our hands in new format along with new heroes & their adventures. Oppositions and hesitations are quiet natural whenever there is something new, but over a period of time we tend to get used to it. In fact we are experiencing this in our day to day life. Just don't want to get in to details as that will be a different forum by itself. I am pretty sure my fellow comic loving brothers would agree with me.

    While we are excited by your announcement of the spl and eagerly awaiting for the actual book itself, I thought of commenting my opinion as few of my web crawling brothers mentioned earlier, it would be great if Largo or Tiger is excluded in this special, the reason being it is difficult while stacking their adventures as a collection. Rather the special can introduce & include new adventures of forth coming heroes of 2013 along with the familiar faces to balance the thrill of enjoying this Ma-mooth(u) spl.

    This is just a suggestion, while I also understand and agree the fact we need certain familiar stars to spice up this 40th anniversary spl. I am pretty sure you would surprise us with the unexpected as always sir.

    Any suggestions from my bros?

    ReplyDelete
    Replies
    1. TEX WILLER SPECIAL RS200 Next Surprise! I am dreaming! i like Tex a lot!!!

      AR from Muscat

      Delete
    2. மேலே செல்லும் பொருட்கள் விசையை இழந்தால் எளிதாய் கீழே வர வேண்டும் ,ஆனால் அதற்கும் காற்றின் உராய்வு தடையே .எங்கும் எதற்கும் சிறிதாவது எதிர்ப்பு இருக்கும்.எளிதான செயல் கூட ,சில இழப்புகளை சேதாரமின்றி ஏற்படுத்தாமல் நடை பெறாது .நியூட்டன் லா ,தெர்மோடைனமிக்ஸ் லா உம் 100 % எஃபிசியன்சி கனவில் வேண்டுமானால் வரும் நிஜத்தில் கிடையாது என ஓலமிடும்.நமது விலை குறைவாக கேட்ட நண்பருக்கும் தொகுப்பில் வருவதைத்தான் குறை பட்டுள்ளார் (ஆனால் மிக பெரிய பட்ஜெட்டுக்கு ஸ்டார் வேல்யு அவசியமே),தரத்தை அல்ல,எதையாவது இழந்தால் தான் எதையாவது பெற முடியும் .நமது மகிழ்ச்சிக்கும் ,ரசனைக்கும் ,நாம் எப்படி டிரஸ் செய்ய செலவு செய்கிறோமோ அதை போல நமது புத்தகமும் மிளிர ,ஒளிர தந்தை ஆசிரியரும்,சகோதரர்களாய் நாமும் இழக்கும் சிறிய தொகையே என்பதை ,நண்பர்கள் பாலாஜி சுந்தரும் ,சிவகாசி செந்தில் குமாரும் வெளிவிட்டுள்ள கருத்துக்களை பார்த்தால் தெள்ளத்தெளிவாய் புரியும் .

      அனைவரும் ஆதரவு தந்து வாங்கி சந்தோசமாய் கொண்டாட நமக்கு நாமே வாழ்த்தி கொள்வோம் நண்பர்களே.

      அனைவரும் சந்தோஷத்தில் ஆளும் நாளை எதிர் நோக்கி பயணிப்போம் நண்பர்களே

      கால எந்திரம் இருந்தால் எளிதாய் இருந்திருக்கும் ஹூம் .........................

      Delete
  33. சந்தடி சாக்குள்ள கெட் டு கெதர் பற்றி மறந்துடாதீங்க ....அப்புறம் சூப்பர் ஹீரோ ஸ்பெசல் மறந்துடாதீங்க

    ReplyDelete
  34. மிகவும் நெகில்வானதொரு பதிவு. எவ்வளவோ அடிச்சேன் போஸ்ட் செய்ய மனமில்லை. ஸோ எடிட் செய்து சில விஷயங்கள் மட்டும் இங்கு.

    10 Rupee இதழுக்கு 5 Rupee கூரியர் கட்டணம், அதாவது ஒரு பொருளின் விலையில் 50% வீணாக செலவு செய்ய நண்பர்கள் தயார் என்றால், தினம் ஐந்து ருபாய் சேமித்து வைத்தால் நமது சாந்த தொகை நமது கையில்.

    நண்பர்களே எனது யூகம் சரியாக வருமானால், அடுத்த வருடம் நமது சந்தா தொகை Rupees 2,000/- ( Never Before special இல்லாமல்) நெருங்கி விடும் என்பதே. நமது ஆசிரியரின் என்ன ஓட்டம், மற்றும் அவர் எடுத்துள்ள புதிய முயற்சிகளின் அடிப்படையில், மேலோட்டமாக கணக்கு போட்டு பார்த்தால் கிடைத்த தீர்கமான எண்ணம் இது.

    நமது இதழ்கள் நூறு ருபாய் விலையில் வந்திட்டால் மட்டுமே, புது வரவுகள் சாத்தியப்படும். அது இல்லாமல் 250rs or 300rs விலையில் 1 or 2 may be released. இதனை மனதில் வைத்தே முன்பு ஒருமுறை நான் பின்னூட்டமிட்டிருந்தேன். 100 * 12 = 1200 and 250 * 2 = 500 + 300 as courier charge. Total 2000 rupees.

    இவ்வாறு நான் குறிப்பிட்ட தொகை, முன்பணமாக நமது நிறுவனத்திடம் சேரும் பொழுது (My approximate calculation 50L ) டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்துக்குள் நடந்தால் , நமது ஆசிரியருக்கு அந்த வருடத்தின் பிளான் உருவாக்க எளிதாக இருக்கும். நாமும் மாதம் தவறாமல் கொழு கொழு , மற்றும் வண்ணக்கலவையில் அமைந்த இதழ்களை ரசித்திட முடியும்.

    This is just a tactic calculation. யார் மனதையும் காயப்படுத்த இதனை எழுதவில்லை என்பதனை இங்கு சொல்லிக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. டியர் சிம்பா,

      மிகச் சரியாக சொல்லியிருக்கின்றீர்கள். எனது கருத்தும் உங்களது கருத்தோடு ஒத்துப் போகின்றது.

      எனது எண்ணம் என்னவென்றால், நம் எடிட்டருக்கு நாமெல்லாம் ஒரு Leverage கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவரால் சுதந்திரமாக செயல்பட முடியும்.
      அவர் வேலையில் அவர் சுதந்திரமாக செயல்பட அவருக்கு, அவருடைய Working Area-வில் எந்த தடையும் இருக்கக் கூடாது. கதைகளோ, கதையின் நாயகனோ அல்லது தரமோ சரியில்லையென்றால் மட்டுமே புகார் கூறலாம். எடிட்டரும், அவசியமான விஷயக்களில் அனைத்து வாசகர் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் அவர் வாசகர் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறார் என்ற காரணத்தாலேயே, அவர் விஷயங்களில் நமது தலையீடு இருந்தால் அது ஆசிரியரின் கையை கட்டிப்போடுவதற்கு சமம்.

      நாம் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான் அது சந்தாவையும், முன்பதிவையும் உடனுக்குடன் செய்வதுதான்.

      நல்ல மந்திரிக்கு அழகு இடித்துரைப்பது, மந்திரி எப்போது இடித்துரைப்பார்? மன்னர் தவறு செய்யும் போது மட்டுமே இடித்துரைப்பார். அப்படியல்லாமல் தினமும் அனைத்து சாதாரண விஷத்திற்கெல்லாம் மந்திரி இடித்துரைத்துக் கொண்டே இருந்தால் மன்னர் நிலை என்னாவது.

      Delete
  35. சார் நான் அனுப்பிய காசோலை திரும்பி வந்து விட்டது 03150050421782 தானே தங்களது acc .no . ஏன்?
    தவறான எண் என்று.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஸ்டீல் கிளா

      003150050421782 - இதுவே சரியான நம்பர் (முன்னால் ஒரு பூஜ்ஜியம் இல்லை)

      அனால் இது ஒரு பிரச்சினையாக இருக்குமென நான் நினைக்கவில்லை

      Delete
    2. முன்னால் வரும் பூஜ்ஜியத்துக்கு கணக்குப் பாடத்தில் தான் மதிப்புக் கிடையாது. account எண் என்று வரும்போது நிச்சயம் மதிப்பு உண்டு. உதாரணத்துக்கு வங்கிகளில் பெரும்பாலும் முதல் மூன்று (அல்லது நான்கு) எண்களும் கிளையைக் குறிக்கும். எனவே ஒரு பூஜ்ஜியத்தை விட்டு விட்டால் கிளையே மாறி விடும்.

      Delete
    3. நண்பர் ப்ளூ பெர்ரிக்கு நன்றி ,இங்கு சில பிரச்சினைகள் ,அவர்கள் செக்கை போஸ்ட் செய்யுமாறு கூறினார்கள் .நான்
      MT முறை மூலம் அனுப்பி விட்டேன் .

      Delete
  36. எடிட்டர் திரு. விஜயன் அவர்களுக்கு,

    ஒரு அன்பான வேண்டுகோள். இந்த கோரிக்கையை உங்களைத் தவிர வேறு யாரிடம் கேட்பது?.

    அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பல கடைகளில் கிடைக்கிறது, ஆனால் காமிக்ஸ் உங்களிடம் மட்டுமே கிடைக்கின்றது.

    மோபியஸ், ஜீன் வான் ஹெம்மி மற்றும் வில்லியம் வான்ஸ் மற்றும் அவர்களைப் போன்ற பல கதாசிரியர்களின் இன்னும் தமிழில் வெளிவராத காமிக்ஸ்களை வெளியிடுங்களேன். குறிப்பாக சயன்ஸ் பிக்‌ஷன் கதைகள்.

    இந்த கோரிக்கையை நீங்கள்தான் நிறைவேற்ற முடியும்/வேண்டும். வேண்டுமானால் முத்து காமிக்ஸின் நெவர் பிபோர் ஸ்பெஷலில் உள்ள 80 பக்க கருப்பு வெள்ளை பக்கங்களை எடுத்துவிட்டு, அதற்கு பதில் வண்ணத்தில் இந்த சயின்ஸ் பிக்‌ஷனோ அல்லது வேறு புதிய கதைகளையோ முயற்சி செய்யுங்களேன். இது போல் வெளியிட இருக்கும் ஜம்போ ஸைஸ் ஸ்பெஷல் புத்தகங்களில் 50 பக்கங்களை புதிய பரிட்சார்த்த முயற்சிகளுக்கு வைத்துக் கொள்ளுங்களேன். அல்லது இது போல் ஒரு ஜம்போ ஸ்பெஷலை “நெவர் பிபோர் நியூ ரிலீஸ் ஸ்பெஷல்” என்று 10 புதிய கதைகளை போட்டு அதில் அதிக வரவேற்பை பெறும் கதைகளை தொடர்ச்சியாக வெளியிடலாம்.

    உஸ்ஸ்... அப்பா... இந்த 80 பக்க கருப்பு வெள்ளை படங்களை தூக்க/மாற்ற எடிட்டரை கன்வின்ஸ் செய்ய எப்படியெல்லாம் சீன் போடவேண்டியிருக்கிறது)

    தொந்தரவுக்கு மன்னிக்கவும்.

    அன்புடன்,
    பாலாஜி சுந்தர்
    www.picturesanimated.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. Balaji Sundar : NEVER BEFORE SPECIAL நிச்சயம் பரிசோதனைகளுக்கானதொரு களமல்ல .... பரீட்ச்சார்த்த முயற்சிகளுக்கு அதில் இடமில்லை . தவிர science-fiction கதைகளினை எத்தனை பேர் விரும்புகின்றனர் என்பது million dollar question !

      Delete
    2. ஒகே சார், உன்மையிலேயே அது பல மில்லியன் டாலர் கேள்விதான். Accepted.

      Delete
  37. Dear Vijayan SIR, in muthu 40th annual special, I suggest you to put your team photo who are behind your success. It will honor them and motivate also.

    Also I suggest you to write 40 factors (one line) about muthu in the 40th annual special, it can be like some interesting factor for each year...

    ReplyDelete
    Replies
    1. Parani : Our team would be on the NEVER BEFORE Special for sure !

      Delete
  38. உங்க முயற்சிகளுக்கு என்றென்றும் நான் துணை இருப்பேன் சார்!
    காமிக்ஸ் மட்டும் அதிரடியல்ல எங்க ஆசிரியரும் அப்படியே என ஆட்சேபனை எழுப்பும் அன்பு நண்பர்களுக்கு அன்புடன் தெரிவித்து கொள்கிறேன். நல்லாதரவு தரும் நெஞ்சங்களுக்கு என்றும் எனது நன்றிகள் பல!
    நாற்பது வயது என்பது நிறைவை குறிக்கும் அருமையான ஒரு விடயம்!
    மனித வாழ்வே நாற்பதுக்கு மேல்தான் துவங்குகிறது! என்று ஓஷோ கூறுவார்!
    எனவே நண்பர்களே இன்னும் பலப்பல அருமையான தரமுயர்த்தப்பட்ட நிகழ்வுகளுக்கு இது ஒரு தொடக்கமாகவே இருக்க போகிறது! ஒரு முறை என்றாலும் தலை முறை கடந்து பேசப்படும்....
    ஒரு உன்னதமான பயணமாக இருக்க போகிறது நண்பர்களே?

    ReplyDelete
    Replies
    1. என்ன சைமன்ஜி ரொம்ப நாளா காணோம்.எப்படி இருக்கீங்க.

      Delete
    2. நண்பா இரவு கழுகாரே! நேரம் மிக மிக குறைவு!
      அதிகாரிகள் பணி மாறுதலில் சென்று விட்டதால் கொஞ்சம் புது அதிகாரிகளுடன் பழக வேண்டி பணிகள் மிகையாக உள்ளன. இதில் நம்ம சார் சொல்ற மாதிரி இன்டர்நெட் ரொம்ப ரொம்ப தாமதம் செய்கிறது! உங்களுக்கு பதில் அளிக்க நான் இதுவரை பன்னிரண்டு முறை முயன்றும் முடியலை! நான் டாட்டா போடான் உபயோகித்தும் இந்த நிலை! எனவே மன்னிக்க வேண்டுகிறேன்!

      Delete
    3. இதை பதிவு செய்ய ஒன்றரை மணி நேர போராட்டம்! கடவுளே! இன்டர்நெட் வேகத்தை என்ன பண்றது நண்பர்களே?

      Delete
  39. வாசக நண்பர் ராஜ்குமாருக்கு பதில் அளிக்கும் விதமாக நீங்கள் சொன்ன விளக்கங்கள் முற்றிலும் நியாயமானதே.ரூபாய் நானூறு விலையில் வெளிவரும் never before இதழ் பற்றி தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்குமாறு வாசக நண்பர்களை புனித சாத்தான் கேட்டு கொள்கிறான்.வெளிநாட்டு சினிமாக்களை திருடி எடுக்கப்படும் பாடாவதி தமிழ் படங்களை பார்க்க தாராளமாக செலவிடும் நாம்,வெளிநாட்டில் வெளியிடப்படும் காமிக்ஸ்களை முறைப்படி ராயல்ட்டி செலுத்தி தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் நமது லயன்,முத்து காமிக்ஸ்களை அதிக விலை ,ஏழ்மை,வறுமை ,பொருளாதார சிக்கல் என்றெல்லாம் ஜல்லியடித்து விமர்சிப்பது ரசக்குறைவான செயல்.தற்காலத்தில் ரூபாய் பத்து விலையில் காமிக்ஸ் வெளியிடுவது என்பது சொதப்பலுக்கு உத்தரவாதமான வழி.இம்மாதிரி விபரீதமான யோசனைகளை தயவு செய்து இனியும் சொல்லாதீர்கள்.சமீப காலமாக மிக உயர்ந்த தரத்தில் வெளிவரும் நமது இதழ்களை இதே தரத்தில் தொடர்ந்து வெளியிட எடிட்டர் செய்யும் முயற்சிகளை சீர்குலைக்கவே இம்மாதிரியான யோசனைகள் உதவும்.எனவே நமது இதழ்களின் விலையை நிர்ணயம் செய்யும் எடிட்டரின் சுதந்திரத்தில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம் என வாசக நண்பர்களை புனித சாத்தான் மன்றாடி கேட்டுகொள்கிறான்.

    ReplyDelete
    Replies
    1. ----.இம்மாதிரி விபரீதமான யோசனைகளை தயவு செய்து இனியும் சொல்லாதீர்கள்.சமீப காலமாக மிக உயர்ந்த தரத்தில் வெளிவரும் நமது இதழ்களை இதே தரத்தில் தொடர்ந்து வெளியிட எடிட்டர் செய்யும் முயற்சிகளை சீர்குலைக்கவே இம்மாதிரியான யோசனைகள் உதவும்.---


      எடிட்டர் செய்யும் முயற்சிகளை சீர்குலைக்கவா ? ண்ணா நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லன்னா. என்னைய போயி இன்டர்நேஷனல் டேர்ரோரிஸ்ட் ரேஞ்சுக்கு யோசிச்சிடீங்க்லே ? இவ்வலோவ் நல்ல பேர வச்சுக்கிட்டு இப்புடி யோசிக்கிறீங்களே. :-)

      Delete
  40. Dear Editor, I can understand the challenge on running this comics for US.
    Still I don't know why you are not interested to give advertisement at-least
    in chutti vikatan and gokukam to get new/youngster into our comics world; as
    I have mention in last post we can introduce them mini-lion stories at Rs.25.

    When are we getting our SUPER HERO SPECIAL, looking for our old-gold heroes
    stories eagerly.

    ReplyDelete
  41. அப்பாடா ஒரு வழியாக சப்ஸ்க்ரிப்சன் தொகை ஆபீஸ்க்கு வந்து விட்டது சார் !

    ---------------பொன்ராஜ் சண்முகசுந்தரம் ---------------------

    ReplyDelete
  42. Dear Friends

    ----- Announced ------

    July – Lion New Look Special (Rs. 100)
    August – Lion Double Thrill Special (Rs.100), Maranathin Nisaptham (Rs. 10)
    September - Wild West Special (Rs. 100 )
    October – Lion Super Hero Special (Rs. 100 - Diwali Malar)
    November – Thanka Kallarai (Rs. 100)
    December - Kaval Kazhuku (Rs. 10)
    January – Muthu Never Before Special (Rs. 400)

    ---- Underway -----

    Comics Classic Reprint - 6 Books in 2013

    ReplyDelete
    Replies
    1. நண்பரே... வரவிருக்கும் அனைத்து புத்தகங்களையும் லிஸ்ட் போட்டது, படிக்க, எதிர்பார்க்க எளிதாக இருக்கிறது.

      எனக்கிருக்கும் கவலை 2
      1. சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் - இரண்டு முறை இந்த இதழ் தள்ளிப்போடப்பட்டு விட்டது...
      2. தங்கக் கல்லறை - இந்த இதழ் ஒரு முறை தள்ளப்பட்டு விட்டது.

      மேலே கூறிய இரண்டும் தவறாமல் வெளியிடப்படவேண்டும்...

      Delete
  43. வாவ் மிக மிக சந்தோசமான செய்தி
    மேலும் இப்படிப்பட்ட ஒரு இதழ் வந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்று நாங்கள் பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம்
    ஆனால் நம்ம கோவை ஸ்டீல் கிளா சொல்லியது போல நீங்களே ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ஸ்பெஷல் போட்டால் ...............!!!!!!!!!!!
    துவக்குங்கள் உங்கள் அதிரடி மற்றும் சரவெடி தோரணங்களை காத்திருக்கிறோம் நாங்கள் :))
    .

    ReplyDelete
    Replies
    1. Cibiசிபி : இப்படிப்பட்ட காமிக்ஸ் காதலை கொண்டாடிடுவது நமக்குக் கிடைத்த பேறு !!

      Delete
    2. கமெண்ட் போட்ட கொஞ்ச நேரத்துலையே உங்களிடமிருந்து பதில் வந்தது ரொம்ப சந்தோசமா இருக்கு சார்

      நீங்க சொன்னது முற்றிலும் உண்மையே :))

      நமது காமிக்ஸ் நண்பர்கள் சொல்வது போல "" தடையற தாக்க "" (தொடர்ந்து இதுபோல இன்ப அதிர்சிகளை ) வேண்டுமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
      .

      Delete
  44. Dear Sri Vijayan

    You are prepared to give upto 20% commission to agents, why not atleast waive the postage/courier charges to the regular subscribers.

    tgopalakrishnan

    ReplyDelete
    Replies
    1. tgopalakrishnan : The 20% commission we need to offer to agents is the incentive for them to be interested ; after all they aren't into comics for the passion of it ! Trying to get them to help boost our sales numbers, will work to benefit every one of us. And we need to remember that there still are readers who are not into the internet ; online purchases ; who still rely on buying our books from stores ! So this is the only (small) outlet for us to reach them.

      Right now the sale volume to agents is maybe around 250 books at best ! So that doesn't make for a big number to our costs.

      Delete
  45. Parani : உங்களுக்கான பதிலிது என்ற போதிலும், நமது முந்தைய இதழ்களின் மறுபதிப்புக்காக குரல் தந்திடும் நிறைய பல நண்பர்களுக்குமான பதிலாகவும் இதனை எடுத்துக் கொண்டிடலாம் !

    சில சமயங்களில் 'பண்டிகை வருகின்றது...விடுமுறை வருகின்றது' என்ற எதிர்பார்ப்புகளும், உற்சாகமும், நிஜமான அந்த தினத்தின் வருகையினை விட ஸ்பெஷலான தருணங்களாய் அமைந்திடுவது உண்டு தானே ? 'ஆஹா....பட்டாசு வெடிக்கணும்' ; 'ரிலீஸ் படத்திற்குப் போகணும்' 'செமையாக லூட்டி அடிக்கணும்' என்றெல்லாம் கனவுகள் ஒருபுறமிருக்க தீபாவளி அன்று நடுக்கூடத்தில் படுத்துக் கொண்டே சாலமன் பாப்பையா பட்டிமன்றம் பார்த்து விட்டு ; நிம்மதியாய் நித்திரையில் ஆள்வதும் உண்டு தானே ?

    நமது ஆரம்ப காலத்து இதழ்களின் மறுபதிப்புக்காக நாம் ஆதங்கப்படுவது கூட ஒரு வகையில் இது போல் தான் என்று எனக்கொரு அபிப்ராயம். நமது ஆரம்ப காலத்து இதழ்கள் நம் நினைவில் 'பளிச்' என்று ஒட்டிக் கொண்டிருப்பதற்கு அக்கதைகளின் சிறப்புகள் மட்டுமே காரணமென்று நான் நினைத்திடவில்லை ! அந்நேரம் நாமிருந்த வயது ; அந்த இளம் பிராயத்தில் வேறு பொழுதுபோக்குகளுக்கு அதிகம் வாய்ப்புகளில்லா சூழல் ; வீட்டுக்குத் தெரியாமல் காமிக்ஸ் வாங்கப் பணம் சேகரித்த த்ரில் ; நண்பர்களோடு books பரிமாற்றம் செய்த அனுபவ சுகங்கள் ; கிடைக்காது போனதொரு இதழை தற்செயலாயோ ; தேடித் தேடியோ அடைந்திடும் பொது கிட்டிடும் சாதனை செய்திட்ட உற்சாகம் ; எல்லாவற்றிற்கும் மேலாக, இன்டர்நெட் எனும் உலகப் பார்வைக்கான ஜன்னல்கள் திறவாதிருந்த அந்தக் காலங்களில், அது நாள் வரைப் பரிச்சயமான மாயாவி ; லாரன்ஸ் டேவிட் ; ரிப் கிர்பி ; வேதாளன் போன்ற நாயகர்களைத் தாண்டி ஒரு வண்ணமயமான...அதிரடியான காமிக்ஸ் உலகம் உள்ளதென்ற realisation தந்திட்ட சந்தோஷத் துள்ளல் என்று பற்பல குட்டிக் குட்டியான சமாச்சாரங்கள் அடங்கியுள்ளதாக நான் நினைக்கிறேன். இன்று நாம் மறுபதிப்பிடும் போது நம்மால் at best அந்தக் கதையினை மட்டுமே மீண்டுமொருமுறை தந்திட முடியும் ; அவற்றோடு பின்னிப் பிணைந்து நிற்கும் இதர சந்தோஷங்களை கொணர்வது சாத்தியமல்லவே ! அது மட்டுமல்லாது, வயதினில் மட்டுமன்றி ரசனைகளிலும் நாம் நிறையவே பயணித்து விட்டோம் ! அன்றைக்கே வெகு குழந்தைத்தனமாய் எனக்குப் பட்ட Suske & Wiske கதைகள் இன்று நமக்கு nostalgic valueஐ தாண்டி நிஜமாக திருப்தி தந்திட இயலுமென்று நம்பிக்கை உள்ளதா ?

    இன்றைய தலைமுறையினைப் பொறுத்த வரை சங்கதியே வேறு ! அவர்கள் நமது பால்ய ரசனைகளில் ஒன்றிடும் வாய்ப்புகள் எத்தனை சதவீதமென்று நாம் கணித்திடுவது ? காலங்கள் தாண்டி, நம்மையும் சரி ; புதிய தலைமுறையினையும் சரி, கட்டிப் போடும் ஆற்றல் கொண்ட கதை வரிசைகள் உண்டு தான் ! அவற்றை மட்டும் அவ்வப்போது மறுபதிப்பாக கொணரும் முயற்சிகள் தொடர்ந்திடும் !

    மறுபதிப்புகளுக்கு நான் எதிர்ப்பாளன் அல்லவே ; ஆனால் அற்புதத் தரத்தில் புதிய தொடர்கள் பல காத்திருக்கும் சமயம், நம் கவனங்களையும், முயற்சிகளையும் பின்னோக்கிச் சென்றிடும் ஒரு பணியில் அதிகமாய் ஈடுபடுத்திக்கொள்ளுவது அத்தனை உசிதமல்லவே என்று தான் சொல்ல வருகிறேன் !

    மறுபதிப்புகளுக்கு related ஆக ஒரு கொசுறுச் சேதி !! 'மாயாவி ; லாரன்ஸ் டேவிட் ; ஜானி நீரோ கதைகளைப் "புறக்கணித்த" நீவிர் உருப்பட மாட்டீர் ' என்ற தொனியில் கடிதம் ஒன்று வரைந்துள்ள 52 வயது நண்பரின் எண்ணங்கள் நியூ லுக் special ல் வருகின்றது !

    ReplyDelete
    Replies
    1. திரு விஜயன்
      தங்களது விரிவான பதிலுக்கு நன்றி !!!!


      //இன்று நாம் மறுபதிப்பிடும் போது நம்மால் at best அந்தக் கதையினை மட்டுமே மீண்டுமொருமுறை தந்திட முடியும் ; அவற்றோடு பின்னிப் பிணைந்து நிற்கும் இதர சந்தோஷங்களை கொணர்வது சாத்தியமல்லவே !//



      மறுபதிப்பு என்பது என்னை போன்ற சிலருக்கு அவசியமாகிறது. ஏனென்றால் பள்ளி பருவம் முடிந்து வாழ்க்கை பாதையில் பயணிக்க ஆரம்பிக்கும் பொழுது காமிக்ஸ் என்ற பாதையை பின்பற்ற முடியாமல் பொய் விட்டது. இப்பொழுதுதான் மீண்டும் இந்த பாதையை பிடித்து உள்ளோம். இந்த இடைப்பட்ட காலத்தில் நிறைய புத்தகங்களை சேகரிக்க முடியவில்லை.


      (பள்ளி பருவங்களில் கூட நான் இருந்தது கிராமம் என்பதால் என்னால் எல்லா புத்தகங்களையும் சேகரிக்க முடியவில்லை)

      சுருக்கமாக சொல்வதெனில் என்னிடம் ஜனவரி (௨௦௧௨) க்கு முன்னாள் இருந்தது விரல் விட்டு என்ன கூடிய புத்தகங்கள் மட்டுமே.


      இந்த ஆறு மாத காலங்களில் நான் சேகரித்தது சுமார் எழுபது புத்தகங்கள்.


      அனாலும் நான் படிக்க தவறிய சிறந்த புத்தகங்கள் எனக்கு கிடைக்கவில்லை (தங்க கல்லறை, கார்சனின் கடந்த காலம், டிராகன் நகரம், ...... இன்னும் நிறைய)


      உங்களுடைய மறுபதிப்பு கண்டு மிகவும் மகிழ்ந்தவன் நான்.


      நீங்கள் இந்த புத்தகங்களை மறுபதிப்பு செய்யும் பொழுது, கண்டியப்பாக எனக்கு அவற்றோடு பின்னிப் பிணைந்து நிற்கும் இதர சந்தோஷங்களை கொணர்வது சத்தியமே :)


      //மறுபதிப்புகளுக்கு நான் எதிர்ப்பாளன் அல்லவே ; ஆனால் அற்புதத் தரத்தில் புதிய தொடர்கள் பல காத்திருக்கும் சமயம், நம் கவனங்களையும், முயற்சிகளையும் பின்னோக்கிச் சென்றிடும் ஒரு பணியில் அதிகமாய் ஈடுபடுத்திக்கொள்ளுவது அத்தனை உசிதமல்லவே என்று தான் சொல்ல வருகிறேன் ! //



      இந்த அறிவிப்பு என்னை மிகவும் வருத்தமடைய செய்கிறது திரு. விஜயன் அவர்களே.


      இதை பற்றி மீண்டும் ஒரு முறை பரிசீலனை செய்யுமாறு தங்களை கேட்டு கொள்கிறேன்.


      //2013 -ல் நமது ரெகுலர் இதழ்கள் ஒருபக்கம் வெளிவந்திடும் போது - சிறப்பாய்...வண்ணத்தில்....நமது காமிக்ஸ் க்ளாசிக்ஸ் வரிசையில் - ஆண்டுக்கு 6 மறுபதிப்புகளை வெளியிட்டால் என்னவென்று தோன்றுகிறது ! முன்னக்கூடியே அந்த ஆண்டிற்கான மறுபதிப்புப் பட்டியலை வெளியிட்டு - அதற்கான கட்டணத்தையும் தெரிவித்து விட்டால், மறுபதிப்புகளை வாங்கிட விரும்பும் நண்பர்கள் மாத்திரமே அதற்கு subscribe செய்திடலாம் ! What say folks ? //


      இதில் எந்த மாற்றமும் இல்லையே சார் ?

      Delete
    2. டியர் எடிட்டர்,

      உங்களின் மறுபதிப்புக்கான கருத்துக்களில் நான் முற்றிலும் உடன்படுகிறேன். லார்கோவில் வந்த திகில் முதல் இதழ் கதையை இன்னும் நான் படிக்கவில்லை.

      முன்பு எங்கோ கேட்ட பாடல், வாசனை போன்றவற்றிற்கு பழைய காலத்தை நியாபகப்படுத்தும் சக்தி உண்டு. அதே போல பழைய காமிக்ஸ் இதழ்களும் கூட..

      லக்கிலூக், சிக்பில், அலிபாபா, அங்கிள் ஸ்குரூஜ் போன்ற கார்ட்டூன் காதாப்பாத்திரங்களை, இப்பொழுதும் வண்ணத்தில் படிப்பதற்கு நன்றாகவே இருக்கும் என்பது என் எண்ணம் (ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளில் சிறிது நாட்களுக்கு முன் படித்தேன்). அதனால், கலரில், கார்ட்டூன் கதைகளையாவது மறுபதிப்பு செய்யும் எண்ணத்தை தயவு செய்து மாற்றிக்கொள்ளாதீர்கள் :)

      ரூ 50, 48 பக்க வண்ணபுத்தகத்திற்கு கார்டூன் கதைகள் மிகவும் பொருத்தமானது.

      Delete
    3. நண்பர் ராம் கருத்துக்கு நான் உடன்படுகிறேன். மறுபதிப்பு என்றால் எல்லா புத்தகங்களும் இல்லை. மிக சிறந்த புத்தகங்கள் மறுபதிப்பு செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பமும்.

      குறிப்பாக புளுபெர்ரி, டெக்ஸ், லுக்கிளுக் கதைகள்.

      Delete
    4. நண்பர் ப்ளு பெர்ரியின் கருத்தை வழிமொழிகிறேன் .

      Delete
    5. நண்பர் கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா - நன்றி !!!

      Delete
    6. எனக்கும் அதேதான்

      சிந்துபாத் மற்றும் சிக் பில் இவர்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவும் :))

      .

      Delete
    7. Dear Sri.Vijayan,
      neenga kandippaga, JOHNY,NEERO, LAWRENCE&DAVID, IRUMBUKKAI MAAYAVI ivarkalai
      meendum athey kathaikaludan kondu varavendum, please.I am not comparing with
      the release and success of the movie KARNAN recently, but will fetch good results.

      As a librarian and a ardent fan of muthu comics, i am sure we can cultivate
      reading habits among our children so as parents will support us.all the best.

      Delete
  46. நண்பர்களே,

    நான் விலை குறித்து எழுதிய போது எத்தனை பேர் என் மீது பாய போகிறார்களோ , எடிட்டர் என்ன நினைக்க போகிறாரோ ? என்று நினைத்துக் கொண்டே தான் பின்னுட்ட மிட்டேன். ஆனால் எல்லாம் ஆரோக்கியமான வாதங்களாகவே இருந்தன என்பதை சொல்லியாக வேண்டும். கடைசியாக எடிட்டரே

    "நானூறு ரூபாய்க்கு ஒரு இதழ் என்பது நாற்பது ஆண்டுகானதொரு கொண்டாட்டமாகவே தவிர, உங்கள் பாக்கெட்களில் பொத்தல் போடும் முயற்சியாக அல்லவே ?!!" என்று முடித்து வைத்து விட்டார்.

    ----"எனக்கு, 'குறைந்த விலை ; நிறைய வாசகர்களைச் சென்றடைவது " என்ற concept ல் சொதப்பியாகி விட்டது ; இனி தரமாய் ; அழகாய் செய்ய முயற்சிப்போமே..முகவர்களுக்குக் கடன் என்பதே வேண்டாம்; முடிந்தளவு நேரடி விற்பனையில் முயற்சிப்போமே என்று தோன்றியது. "-----

    நான் சொன்ன கான்செப்ட் ஏற்கனவே தோற்று போய் உங்கள் பர்சில் ஓட்டை போட்டிருப்பதால் உங்கள் புது கான்செப்டை எல்லோருடனும் நானும் வரவேற்கிறேன்.

    ---"நமது தற்சமய இதழ்களின் costing-ல் விற்பனையாளர்கள் கமிஷன் என்று எதுவும் செலவினமாக கணக்குப் போட்டிடுவது கிடையாது ; அந்தக் கிரயத்திற்க்கும் சேர்த்து பக்கங்களை ; தரத்தை மேன்படுத்திவிடுகிறோம் என்று புரியச் செய்தேன். இதை நான் இங்கே சொல்லிடக் காரணம் - நம் இதழ்களில் ஒவ்வொரு முறையும் - நீங்கள் கொடுக்கும் காசுக்கு முழு நியாயம் செய்திட எங்களால் இயன்றதை செய்திடுவோமென்பதை வலியுறுத்தவே. நூறு ரூபாய் இதழாக இருப்பினும் ; நானூறு ரூபாய் இதழாக இருப்பினும் உங்கள் பணத்திற்கு நிச்சயம் ஈடானதொரு புக் உங்களுக்குக் கிடைத்திடுவதே எங்கள் priority ல் தலையாயது"------

    இவை கொடுக்கும் காசுக்கு வொர்த் என்று புரிய வாய்த்த வார்த்தைகள்.

    என் பின்னுட்டதால் உங்கள் வலியையும், விடா முயற்சியையும், காமிக்ஸ் மேலுள்ள காதலை மேலும் அறிந்து கொள்ள முடிந்தது. என் பின்னுட்டம் அனைவருக்கும் நம் காமிக்ஸ் சென்று சேர வேண்டும் என்ற துடிப்பால் ஏற்பட்டது, அது உங்கள் மனதை காயப்படுத்தி இருந்தால் மன்னியுங்கள்.

    இந்த கலாட்டாக்கள் மூலம் வாசகர்கள் எந்த அளவுக்கு நம் காமிக்ஸை நேசிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடிந்தது. புது புது ஐடியா க்களும் கொட்டபட்டன. நிறைய நண்பர்களும் கிடைத்தார்கள்.

    தொடர் கதைகளை தனி புத்தகங்களாக மட்டும் வெளியிடுவது மற்றும் ஏற்கனவே வெளியிட்ட (தனியாகவோ, கலெக்டர் ஸ்பெஷல் ஆகவோ) புத்தங்கள் இந்த மாதிரி ஸ்பெஷல் புத்தங்களில் மீண்டும் வராமலிருப்பது பற்றி நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே? Never before இல் முடிந்தால் மாற்றுங்கள் அல்லது இனி வரும் காலங்களில் செய்யுங்களேன் ப்ளீஸ்?

    மாதம் சம்பளம் போட்டவுடன் முதல் செலவு உங்களுக்கு ரூ 460 + டெக்ஸ் வில்லர் கதைகள் அனைத்தையும் வாங்க ரூபாய் அனுப்புவது தான்.

    டெக்ஸ் வில்லர் கதைகள் மட்டும் தனியே வாங்க முடியும் தானே?

    ReplyDelete
    Replies
    1. Raj Kumar :ஆரோக்கியமான விவாதங்களுக்கு நானும் சரி, நம் நண்பர்களும் சரி, என்றுமே ஆர்வலர்களே ! நமது தளம் எப்போதும் புது சிந்தனைகளுக்கு சிகப்புக் கம்பளம் விரித்திடவே செய்யும் ! நிச்சயம் டெக்ஸ் வில்லர் கதைகளை தனித்தும் வாங்கிடலாம் !

      Delete
    2. வாவ் சூப்பர் நியூஸ் சார் ;-)
      .

      Delete
    3. நண்பர் ராஜ்குமாருக்கு வணக்கம்,
      உங்கள் முந்தய பதிவை படித்ததிலிருந்தே உங்கள் ஆதங்கம் என் நெஞ்சில் உறுத்திக் கொண்டே இருந்தது. உங்கள் முந்தய கருத்துக்கு நான் மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தாலும், மனதில் இருந்த உறுத்தல் போகவில்லை. காரணம் புத்தக கடையில் இருக்கும் புத்தகத்தைப் பார்த்து ஆசைப்பட்டு, ஆனால் அதன் அதிக விலை காரணமாக வாங்க முடியாமல் வெறுங்கையுடன் வீடு திரும்பிய பல பொழுதுகள் எனக்கும் வாய்த்திருக்கின்றது. ஏன் சமீபத்தில் ஒரு வாரத்திற்கு முன் லேண்ட்மார்க் புத்தக கடையில் என் ஆர்வத்திற்கேற்ற பல புத்தகங்கள் அங்கே இருந்தும் விலை காரணமாக எதையும் வாங்காமல், கடையினுள் நுழையும் போது கொடுத்த 10 பக்க விளம்பர புத்தகத்தையும் கடையினுள்ளேயே ஒரு ஓரமாக வைத்து விட்டு வேறு எந்த புத்தகமும் வாங்காமல் வெறுமனே திரும்பினேன். அதனால் உங்களுடைய ஆதங்கத்தின் வலி என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. ஆனால் இப்போது உங்களுடைய பதிவைப் பார்த்த பின்னே, மனம் நிம்மதி அடைந்தது.
      வாழ்த்துக்கள். நன்றி.

      அன்புடன்,
      பாலாஜி சுந்தர்,
      www.picturesanimated.blogspot.com

      Delete
    4. எடிட்டர் சார்,

      தொடர் கதைகளை தனி புத்தகங்களாக மட்டும் வெளியிடுவது மற்றும் ஏற்கனவே வெளியிட்ட (தனியாகவோ, கலெக்டர் ஸ்பெஷல் ஆகவோ) புத்தங்கள் இந்த மாதிரி ஸ்பெஷல் புத்தங்களில் மீண்டும் வராமலிருப்பது பற்றி நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே?

      இதில் உங்கள் நிலைப்பாடு என்ன?

      Delete
  47. அப்பாடி நான் நூறாவது பதிவை நமது ப்ளாக் கடந்து விட்டது

    ReplyDelete
  48. *** செலவில்லாத மார்க்கெட்டிங் பற்றி ஒரு யோசனை ***

    ஒரு பின்னூட்டத்தில் நண்பர் ஒருவர் favourite ஹீரோக்களின் blowup போஸ்டர் கேட்டிருந்தார். அதனுடன் நம் காமிக்ஸ் பற்றியும் ஒரு போஸ்டர் ரெடி செய்து (Balde பீடியா கார்த்திகின் சமீபத்திய பதிவில் இருப்பது போன்ற தகவல்களுடன் வந்த, வரப்போகும் புத்தகங்கள் பற்றிய விவரங்களோடு) இந்த நெவெர் பிபோருடன் கொடுக்கலாம். வாசகர்கள் எல்லோரும் அதை தங்கள் வீட்டு வாசலிலோ, அலுவலகத்தில் நோட்டீஸ் போர்டில் அனுமதி வாங்கி அல்லதுயோ தங்கள் வொர்க் பண்ணும் கேபினிலோ
    பலர் கண் படும் இடத்தில ஒட்டி வைக்கலாம். அதிக செலவில்லாத யோசனை.

    மொக்கையா இருந்த மன்னித்து விடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. யப்பாடி.......நண்பர்கள் எப்படில்லாம் யோசிக்கிறாங்க. சூப்பர்..
      இதுதான் ஆசிரியரின் இந்த ப்ளாக் ன் வெற்றி.

      Delete
    2. மன்னிப்பு இதெல்லாம் இங்கு தேவை இல்லாதது ,நமது காமிக்ஸ் குடும்ப உறுப்பினர்களுடன் மென்மையாக வாதிடுகிறோம் ,உங்களது சரியான வாதமே நமது குடும்பத்தில் இவ்வளவு பெரிய சந்தோஷமான ,ஆசிரியரின் மனம் திறந்த பதில்களும் ,நண்பர்களின் கலந்துரையாடல்களும்,நண்பர்கள் யாரும் பிறரை புண்படுத்தும் வார்த்தைகளை போடாமலும்,சண்டை வந்தால் பதிலளிக்கமலும் கடந்து சென்றால் போதும் ,பிறகு அது சாதாரண விஷயம் என தெரியும் .யாருடைய பதிலிலும் ,கேள்வியிலும் மன்னிப்பு என்ற வார்த்தை இடம் பெறாமலிருந்தால் போதும் இனிமேல் .நானும் சில பதிவில் மன்னிப்பு கோரியிருக்கிறேன்,அது தேவை இல்லாதது என்பது எனது எண்ணம் .வார்த்தைகளில் காரம் இருந்ததால் ,மிளகாய் தின்றால் என்ன பண்ணுவோமோ அதை போல தண்ணீர் குடியுங்கள் .

      மன்னிப்பு தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை , என்பதை நானும் வழிமொழிகிறேன் .

      Delete
    3. Raj Kumar : மொக்கையல்ல.....மெய்யாகவே நல்லதொரு suggestion ! நிச்சயம் செயல்படுத்திட சிந்தித்திடுவேன் !

      Delete
    4. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா : "ரமணா" ஸ்டைல் பஞ்ச் டயலாக் !!

      Joking apart, மன்னிப்புக் கோர அவசியமோ ; முகாந்திரமோ நிச்சயம் கிடையாது ! ஒரு கனவைத் தேடி..காமிக்ஸ் எனும் காதலாய் நாம் குழுமும் இடமிது ! Let's just rock !

      Delete
    5. ஐயோ, இது தெரியாம கீழே ஒரு பதிவில், சாஷ்டாங்கமா உளுந்து பொரண்டு எடிட்டர் ஐயா மன்னிச்சுடுங்க, மன்னிச்சுடுங்கன்னு ரெண்டு தடவ மன்னிபு கேட்டுப்புட்டேனே. இனிமே அது மாதிரி கேக்க மாட்டேன் மன்னிச்சுடுங்க..அக்.. பழக்க தோஷம் மறுபடி கேட்டுட்டேன் ம... அய்யோ ஜூட்.

      Delete
  49. திரு விஜயன்

    தங்களது விரிவான பதிலுக்கு நன்றி !!!!

    //இன்று நாம் மறுபதிப்பிடும் போது நம்மால் at best அந்தக் கதையினை மட்டுமே மீண்டுமொருமுறை தந்திட முடியும் ; அவற்றோடு பின்னிப் பிணைந்து நிற்கும் இதர சந்தோஷங்களை கொணர்வது சாத்தியமல்லவே !//

    மறுபதிப்பு என்பது என்னை போன்ற சிலருக்கு அவசியமாகிறது. ஏனென்றால் பள்ளி பருவம் முடிந்து வாழ்க்கை பாதையில் பயணிக்க ஆரம்பிக்கும் பொழுது காமிக்ஸ் என்ற பாதையை பின்பற்ற முடியாமல் பொய் விட்டது. இப்பொழுதுதான் மீண்டும் இந்த பாதையை பிடித்து உள்ளோம். இந்த இடைப்பட்ட காலத்தில் நிறைய புத்தகங்களை சேகரிக்க முடியவில்லை.

    (பள்ளி பருவங்களில் கூட நான் இருந்தது கிராமம் என்பதால் என்னால் எல்லா புத்தகங்களையும் சேகரிக்க முடியவில்லை)

    சுருக்கமாக சொல்வதெனில் என்னிடம் ஜனவரி (2012) க்கு முன்னாள் இருந்தது விரல் விட்டு என்ன கூடிய புத்தகங்கள் மட்டுமே.

    இந்த ஆறு மாத காலங்களில் நான் சேகரித்தது சுமார் எழுபது புத்தகங்கள்.

    அனாலும் நான் படிக்க தவறிய சிறந்த புத்தகங்கள் எனக்கு கிடைக்கவில்லை (தங்க கல்லறை, கார்சனின் கடந்த காலம், டிராகன் நகரம், ...... இன்னும் நிறைய)

    உங்களுடைய மறுபதிப்பு கண்டு மிகவும் மகிழ்ந்தவன் நான்.

    நீங்கள் இந்த புத்தகங்களை மறுபதிப்பு செய்யும் பொழுது, கண்டியப்பாக எனக்கு அவற்றோடு பின்னிப் பிணைந்து நிற்கும் இதர சந்தோஷங்களை கொணர்வது சத்தியமே :)

    //மறுபதிப்புகளுக்கு நான் எதிர்ப்பாளன் அல்லவே ; ஆனால் அற்புதத் தரத்தில் புதிய தொடர்கள் பல காத்திருக்கும் சமயம், நம் கவனங்களையும், முயற்சிகளையும் பின்னோக்கிச் சென்றிடும் ஒரு பணியில் அதிகமாய் ஈடுபடுத்திக்கொள்ளுவது அத்தனை உசிதமல்லவே என்று தான் சொல்ல வருகிறேன் ! //

    இந்த அறிவிப்பு என்னை மிகவும் வருத்தமடைய செய்கிறது திரு. விஜயன் அவர்களே.

    இதை பற்றி மீண்டும் ஒரு முறை பரிசீலனை செய்யுமாறு தங்களை கேட்டு கொள்கிறேன்.

    //2013 -ல் நமது ரெகுலர் இதழ்கள் ஒருபக்கம் வெளிவந்திடும் போது - சிறப்பாய்...வண்ணத்தில்....நமது காமிக்ஸ் க்ளாசிக்ஸ் வரிசையில் - ஆண்டுக்கு 6 மறுபதிப்புகளை வெளியிட்டால் என்னவென்று தோன்றுகிறது ! முன்னக்கூடியே அந்த ஆண்டிற்கான மறுபதிப்புப் பட்டியலை வெளியிட்டு - அதற்கான கட்டணத்தையும் தெரிவித்து விட்டால், மறுபதிப்புகளை வாங்கிட விரும்பும் நண்பர்கள் மாத்திரமே அதற்கு subscribe செய்திடலாம் ! What say folks ? //

    இதில் எந்த மாற்றமும் இல்லையே சார் ?

    ReplyDelete
    Replies
    1. திருப்பூர் புளுபெர்ரி : மறுபதிப்புகள் நிச்சயம் தொடரும்... பந்தியில் பாயசமாய் ! பாயசத்தை main course ஆக பார்த்திடல் வேண்டாமே என்பது தான் எனது கோரிக்கை !

      Delete
    2. mmmmmmmmmmmmmm கஷ்டம்தான் ,பயசமாவது கிடைக்கிறதே என சந்தோசப்பட்டு கொள்கிறோம் சார்,முதலில் பாயசத்தை வைக்கவேண்டுமே

      (சூப்பர் ஹீரோ ஸ்பெஸல் ).............................................

      Delete
  50. எடிட்டர் சார்

    டிராகன் நகரம் (டெக்ஸ் வில்லர்)
    கார்சனின் கடந்த காலம் (டெக்ஸ் வில்லர்)
    நரகத்தின் எல்லையில் (கேப்டன் பிரின்ஸ்)
    மனித எரிமலை (இரும்புக்கை நார்மன் )

    இந்த நான்கையும் சேர்த்து ஏன் ஒரு மறுபதிப்பு ஸ்பெஷல் கொண்டு வரக்கூடாது ?

    ReplyDelete
    Replies
    1. 4 கதையும் வந்தால் ஹிட்டோ ஹிட்டு ,,,,,,,,, நானும் அதை வலி சாரி வழி மொழிகிறேன் ,,,,,,,, அப்பா எப்படி எல்லாம் யோசிகிறீங்க !,,,,,,,,,,,,,,,டேக் கேர் guys ,,,,,,,,,,,,,

      Delete
    2. மிக அருமையான ஐடியா “திருப்பூர் புளூபெர்ரி”. அந்த லிஸ்டில் இருக்கும் அனைத்துக் கதைகளுமே.. மறு பதிப்புக்கு ஏற்றவையாகும். சிலவை கலரில் இருந்தால் கலரிலும், மற்றவை கருப்பு வெள்ளையிலும் வெளியிடலாம். எடிட்டர் மனது வைக்கவேண்டும் :)

      Delete
  51. ஆஹா ! ஆசிரியர் லைன் -இல் இருக்கும் போதே கேட்டிரனும்.
    ஜி, நமது ஸ்பெஷல் பதிப்புகள் அனைத்தும் முழு வண்ணத்தில் வழ வழ ஆர்ட் பேப்பரில் அட்டகாசமாக இருக்க, அட்டையை மட்டும் ஏன் மடிகிற மாதிரி சினிபூக் போல் போட வேண்டும். கூட 10,20௦ ரூபாய் ஆனாலும் பரவாயில்லை.எங்கள் அனைத்து வாசகர்களின் நலன் கருதி... தயவு செய்து hardcover -இல் தரவேண்டும்.

    தங்களது முந்தைய பதிவில் ,திரு தேவாரம் அவர்கள் தந்த வீடியோ இணைப்பில் ( http://www.youtube.com/watch?v=iX08zAC7ivY ) Gil Jordan "Murder by High Tide" ஒரிஜினல் போல், தங்களின் ஈடு இணையில்லா தமிழ் வசனத்துடன், நமது ஸ்பெஷல் காமிக்ஸ் இதழ்களை பத்திர படுத்திட துடிக்கும் நமது அனைத்து வாசகர்களுக்காகவும் இதை மறுக்காமல் செய்யவேண்டும்.

    சின்ன வயதில், நான் மிகவும் ரசித்து படித்த சோவியத் புத்தகங்கள் ( நவரத்தின மலை, ஓவியன் எகோரியின் கதை) புத்தகங்களை இன்று என் மகள் அவ்வளவு ஆசையாக படம் பார்க்கிறாள். தினம் ஒரு கதை சொல்ல அவளுக்கு இன்னும் பத்திரமாக உள்ளது. அவள் காமிக்ஸ் படிக்கும் அளவுக்கு வளரும் போது நமது லயன் காமிக்ஸ் ஸ்பெஷல் இதழ்களை முரட்டு அட்டையில் மொத்தமாக பரிசளிக்க வேண்டும். அதை அவள் மகளுக்கு பரிசளிக்கும் வரை பத்திரமாக இருக்க வேண்டும். ப்ளீஸ் .. இதை கண்டிப்பாக நீங்கள் பரிசீலிக்க வேண்டும்... வெற்றிவேல்...!( ஸ்டீல் க்ளா, திருப்பூர் புளுபெர்ரி.. பொடியன் சொல்லுங்களேன்பா .. வீர வேல் !! என்று.. )

    அதோடு... அடுத்த கோரிக்கை..

    இதே hardcover -இல் அட்டகாசமான நமது லயன் காமிக்ஸ் நட்சத்திர நாயகர்களின் கோல்டன் சீரீஸ் கலெக்டர்ஸ் ஸ்பெஷல் இதழ்களாக டெக்ஸ் வில்லர் ஸ்பெஷல் , லக்கி லூக் ஸ்பெஷல் என பிரித்து மேய வேண்டும் .

    ஆஹா.. கண்களை மூடி கனவு காண்கிறேன். அட்டகாசமான hardcover - இல் உள்ளே முழு வண்ண ஆர்ட் பேப்பர் இல் , தங்கத்தமிழில், பலூனுக்கு பலூன் சிரிப்பு வெடிகள் வெடிக்கும் தங்கள் சிறப்பு வசனத்துடன் லக்கி லூக்கின் அட்டகாசமான கதைகள் ஆறும் ஒரே புத்தகத்தில்.

    ஹ்ம்ம்...........வேற என்ன வேணும்.... ப்ளீஸ் சார்ர்ர்ர்....

    ReplyDelete
    Replies
    1. To Senthil kumar: வீரவேல் சொல்வதற்கு நானும் ஆவலாய்த்தான் இருக்கிறேன். நீங்கள் சொல்வது போல் சோவியத் ருஷ்யா வெளியீடுகளை நானும் உள்ளே புகுந்து (குதிரையின் காது வழியாக) படித்தவன்தான்.

      ஆனால், கடல் கடந்து வரும்போது எடை அதிகமாக அதிகமாக புத்தகங்களுக்கான பார்சல் செலவுகளும் அதிகமாகி - புத்தகங்களின் விலையும் எகிறிடுமே! இதற்கு நம்ம எடி ஏதாவது வழிபண்ணுவாராக இருந்தால்.... தொடர்ந்து வீரவேல் சொல்லி - ஹார்ட் பவுண்ட் கவரை வரவேற்க நானும் ரெடி நண்பரே....!!!

      Delete
    2. நண்பரே பாதி படிக்கும் போதே உங்கள் கருத்தை வழி மொழிய நான் தயாராகி விட்டேன் ,என்னையும் அழைத்த பின்னால் விடுவேனா ,எனது சார்பிலும் இதனை சேர்த்து கொள்ளுங்கள் சார் ,நண்பர்களே நமது பொக்கிசத்தை நாள் முழுவதும் வைத்து பாதுகாத்திட நண்பர் செந்தில் குமார் அவர்களுக்கு வக்களியுங்களேன் .நண்பரே பச்சை மலை கதைகள் என் தந்தையார் வங்கி கொடுத்தது ,தொலைந்து விட்டது ,எகோரியின் கதை தற்போதுதான் வாங்கினேன் ,அற்புதமான கதைகள்,கிழியாமல் கிடைத்ததற்கு அந்த அட்டையே காரணம் .

      வெற்றிவேல் ! வீரவேல் !

      Delete
    3. மேலும் நாம் பைண்ட் செய்தால் ,கதைகள் உள்ளே சிக்கி கொள்கின்றன .

      Delete
    4. வீவீவீவீர வேல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்.
      சத்தம் போதுமா, கேட்டுச்சாப்பா.

      Delete
    5. பாலாஜி சுந்தர் நீங்கள் அதிரும் படி கத்தியும் நண்பர்களின் காதுகளுக்கு எட்டவில்லையே ................................................

      Delete
    6. ஏம்பா! வெற்றிவேல், வீரவேல் ன்னு கத்த சொன்னா, சரோஜாதேவி கத்தற மாதிரி அது என்ன வீவீவீவீ(ரவே)ல்ல்ல்ல்ல்ல்ல்ல்?! :)

      Delete
  52. எங்க ஊர்க்காரர்[திருப்பூர்] ப்ளூபெர்ரியின் கருத்தை நானும் வழி மொழிகிறேன்.......பழைய கோல்டன் கிளாசிக்ஸின் மறு பதிப்பு நிச்சயம் தேவை....... மற்றபடி இன்றைய விலைவாசியில் ஒரு செலிபரிட்டி இதழுக்கு நானூறு ரூபாய் ஒரு பெரிய விஷயமே இல்லை........

    ReplyDelete
  53. விஜயன் சார்

    முத்து நெவெர் பிபோர் ஸ்பெஷல் - வெளியிடு நாங்கள் கலந்து கொள்ள சிவகாசியில் நடக்குமா ?
    முத்து நெவெர் பிபோர் ஸ்பெஷல் - வெளியிடு நாங்கள் கலந்து கொள்ள சிவகாசியில் நடக்குமா ?
    முத்து நெவெர் பிபோர் ஸ்பெஷல் - வெளியிடு நாங்கள் கலந்து கொள்ள சிவகாசியில் நடக்குமா ?
    முத்து நெவெர் பிபோர் ஸ்பெஷல் - வெளியிடு நாங்கள் கலந்து கொள்ள சிவகாசியில் நடக்குமா ?
    முத்து நெவெர் பிபோர் ஸ்பெஷல் - வெளியிடு நாங்கள் கலந்து கொள்ள சிவகாசியில் நடக்குமா ?
    முத்து நெவெர் பிபோர் ஸ்பெஷல் - வெளியிடு நாங்கள் கலந்து கொள்ள சிவகாசியில் நடக்குமா ?
    முத்து நெவெர் பிபோர் ஸ்பெஷல் - வெளியிடு நாங்கள் கலந்து கொள்ள சிவகாசியில் நடக்குமா ?
    முத்து நெவெர் பிபோர் ஸ்பெஷல் - வெளியிடு நாங்கள் கலந்து கொள்ள சிவகாசியில் நடக்குமா ?
    முத்து நெவெர் பிபோர் ஸ்பெஷல் - வெளியிடு நாங்கள் கலந்து கொள்ள சிவகாசியில் நடக்குமா ?
    முத்து நெவெர் பிபோர் ஸ்பெஷல் - வெளியிடு நாங்கள் கலந்து கொள்ள சிவகாசியில் நடக்குமா ?
    முத்து நெவெர் பிபோர் ஸ்பெஷல் - வெளியிடு நாங்கள் கலந்து கொள்ள சிவகாசியில் நடக்குமா ?
    முத்து நெவெர் பிபோர் ஸ்பெஷல் - வெளியிடு நாங்கள் கலந்து கொள்ள சிவகாசியில் நடக்குமா ?
    முத்து நெவெர் பிபோர் ஸ்பெஷல் - வெளியிடு நாங்கள் கலந்து கொள்ள சிவகாசியில் நடக்குமா ?
    முத்து நெவெர் பிபோர் ஸ்பெஷல் - வெளியிடு நாங்கள் கலந்து கொள்ள சிவகாசியில் நடக்குமா ?
    முத்து நெவெர் பிபோர் ஸ்பெஷல் - வெளியிடு நாங்கள் கலந்து கொள்ள சிவகாசியில் நடக்குமா ?

    :)

    ReplyDelete
    Replies
    1. நானும் வருவேன் ஏன் போரையும் எழுதிகோங்க .............

      Delete
  54. அடுத்தது, ஆசிரியரின் 50ஆவது பதிவு!

    ReplyDelete
    Replies
    1. வோ ! தகவலுக்கு நன்றி நண்பரே ,ஆசிரியரின் இந்த பதிவு மிக பெரிய உற்சாகமான புது வரவுகள்,நமது எதிர் பார்ப்புகளை தீர்த்து வைப்பதுடன் ,தூண்டி விடவும் செய்யும் என நம்புகிறேன் !தினம் தோறும் தீபாவளி என்பார்களே இதுதானோ.

      Delete
  55. எடிட்டர் திரு விஜயன் அவர்களுக்கு வணக்கம்,
    திரு கிங் விஸ்வா அவர்களின் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பூவில் ஒரு சிறிய விவாதம். இதே போன்றதொரு விவாதம் உங்களது/நமது இந்த வலைப்பூவிலும் முன்பு எழுந்தது. கிங் விஸ்வா, அந்த விவாதத்திற்கு தனது பதிலால் முற்றுப் புள்ளி வைத்துவிட்டார். ஆனால் நான் ஏதோ ஒரு கமெண்ட் இடப்போய், மனதிலிருந்த சில எண்ணங்கள் என்னையறியாமல் வெளிவந்துவிட்டது. அந்த என்னுடைய கமெண்டை எடிட் செய்து இங்கு போட்டால் அரைகுறையாக இருக்கும் என்பதால் அதை முழுமையாக இங்கே மறுபடியும் பதிவிடுகின்றேன். எங்கேனுமோ அல்லது முழுமையாகவோ இந்த கருத்துக்கள் தேவையற்றதாக இருந்தால் உடனே இந்த கமெண்டை டெலீட் செய்துவிடுங்கள். இப்படி ஒரு காரியத்தை செய்தற்கு தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள். (எதையாவது எழுதப் போனால் அது 4096 எழுத்துக்களுக்குள்ளே அடங்குவதே இல்லை!. இன்னுமொரு முறை மன்னிக்கவும்!)

    அன்புடன்,
    பாலாஜி சுந்தர்.
    www.picturesanimated.blogspot.com

    ///நண்பர் கிங் விஸ்வா,

    வணக்கம், என்னடா எந்த கமெண்ட்டுக்கும் பதில் பதிவை காணோமே என்று நினைத்தேன். லூசு பையனுடைய கமெண்டை மதியமே படித்துவிட்டேன். படித்த உடன் இந்த கேள்விக்கு நீங்கள் கட்டாயம் உடனே பதில் அளிக்க வேண்டும் என்று உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பலாம் என்று நினைத்தேன். மெயில் அனுப்ப நினைத்ததற்கு காரணம், எடிட்டரின் ப்ளாகில் இதே போல் ஒரு கடுமையான குற்றச்சாட்டு, உங்கள் மீது சுமத்தப்பட்டது. அப்போது நீங்கள் மௌனம் காத்ததாக நினைக்கின்றேன். வேறொருவருடைய ப்ளாகில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு, அது எடிட்டருடைய ப்ளாகாக இருந்தாலும், அங்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம்/அவசியம் உங்களுக்கு இல்லை. அந்த சம்பவத்தை குறிக்கும் விதமாக என்னுடைய ப்ளாகில் ஒரு பதில் பதிவிடும்போது கிங் விஸ்வா கல்லடி படுகிறார், அவர் காய்த்து பழுத்த மரம் கல்லடி படத்தான் செய்யும் என்று எழுதியிருந்தேன். இது போன்ற சம்பவங்களுக்கு இன்னும் ஒரு சில காரணங்கள் இருக்கின்றதாக நினைக்கின்றேன். அவற்றுள் இரண்டு முக்கியமான விஷயங்கள்.
    1. லயன், முத்து காமிக்ஸ் மீண்டும் வாசகர்களை சென்றடைய தேவையான பாலம் கட்டுவதற்கு நீங்கள் ஏதோ ஒருவகையில் உங்களால் முடிந்த அளவுக்கு கல்லைத்தூக்கி போட்டிருக்கின்றீர்கள். ஒரு அணிலைப் போல!.

    2. அடுத்த முக்கியமான காரணம், முத்து காமிக்ஸின் 40 வருட பயணத்தில், வெவ்வேறு காலகட்டங்களில், அந்த காமிக்ஸ்களின் பால் ஈர்க்கப்பட்டு, ரசிகர்களான ஒவ்வொருவரும் அவர்கள் வாங்கிய புத்தகத்திற்கு முந்தைய வெளியீடுகளை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் பழைய புத்தக கடைகளில் தொடர்ந்து தேடிக் கொண்டே இருக்கின்றார்கள். இதில் நானும் அடக்கம். முத்து, லயன் காமிக்ஸின் முதல் இதழில் இருந்தே படிக்கும் வாய்ப்பு எனக்கு இருந்தது. ஆனாலும் என்னிடம் முழு கலெக்‌ஷன் இல்லை என்பது இப்போதும் என் நெஞ்சை கனக்கச் செய்கிறது. அதனால் நானும் என் கலக்‌ஷனை நிறைவு செய்ய பழைய புத்தக கடைகளில் தேடிக் கொண்டே இருக்கின்றேன். நீங்களும் உங்களிடம் முழு கலக்‌ஷன் இல்லை என்றே தெரிவித்திருக்கின்றீர்கள். இந்த வாரம் கூட மூர் மார்க்கெட் போகலாம் என்று தோன்றிக் கொண்டே இருக்கின்றது. இந்த நிலையை போக்குவதற்கு உங்களிடமும் எடிட்டர் திரு விஜயன் அவர்களிடமும் ஒரு கோரிக்கை. பழைய காமிக்ஸ் புத்தகங்களை கலக்டார்ஸ் எடிஷனாக தெளிவான நல்ல முறையில் கதைகளின் எண்ணிக்கையிலோ அல்லது வருடங்களை அடிப்படையாகக் கொண்டும் ஒரு கதை கூட விட்டுப் போகாமல் வரிசைக்கிரமாக பதிப்பிக்க, கருத்தளவிலேயாவது ஒரு முயற்சி செய்யப் படவேண்டும். இந்த புத்தகங்களை முன்பதிவு முறையிலே விற்பனை செய்யலாம்.///

    ReplyDelete
  56. டியர் எடி ,,,,,,,,,,,, ஜூலை 2nd week நீங்கள் சிவகாசி யில் இருப்பிர்களா?,,,,,,,,,,, நானும் என் நண்பர்கள் சிலரும் சிவகாசி வரும் பிளான் ல் இருக்கிறோம் ,,,,,,,, தாங்கள் பிஸி யாக இருந்தாலும் ,,,தங்கள் முகதரிசனம் மட்டும் ஆவது கண்டுவிட்டு செல்கிறோம் ,,,,,,,,,, லயன் ஸ் பர்த்டே கொண்டாட நாங்கள் வருகிறோம் என்று தாங்கள் நினைத்தால் ,,,,,,அது எங்கள் தவறு அல்ல ,,,,,,,,,,, வழக்கம்போல் 2 வாரம் கழித்து பதில் போடாமல் இன்னொரு பதிவாக போட வேண்டாம் சார் ,,,,,,,,, ஜஸ்ட் joking சார் ,,,,,, உங்களிடம் joke பண்ணாமல் வேறு யாரிடம் செய்வதாம்,,,,,,,,,,,,, டேக் கேர் guys ,,,,,,,,

    ReplyDelete
  57. // இன்றைய தலைமுறையினைப் பொறுத்த வரை சங்கதியே வேறு ! அவர்கள் நமது பால்ய ரசனைகளில் ஒன்றிடும் வாய்ப்புகள் எத்தனை சதவீதமென்று நாம் கணித்திடுவது ? காலங்கள் தாண்டி, நம்மையும் சரி ; புதிய தலைமுறையினையும் சரி, கட்டிப் போடும் ஆற்றல் கொண்ட கதை வரிசைகள் உண்டு தான் ! அவற்றை மட்டும் அவ்வப்போது மறுபதிப்பாக கொணரும் முயற்சிகள் தொடர்ந்திடும் ! //

    ஆஹா நமது 1980 களின் வரிசை அனைத்தையுமே கொண்டு வருவீர்கள் என நினைக்கிறேன்

    முத்து 1970 வரிசை

    சார் ,ஆனால் டைகரின் அனைத்து கதைகளுமே மீண்டும் வண்ணத்தில் வேண்டும் ,எந்த சமரசத்திற்கும் இடமே கிடையாது !

    வண்ணத்தில் டைகரின் அனைத்து கதைகளும் வராவிடில் அது நீங்கள் எங்களுக்கு செய்யும் துரோகமாகவே எடுத்துக்கொள்ளப்படும் !

    எந்த காம்ப்ரமைசும் உதவாது ,இல்லையா நண்பர்களே ?


    //மறுபதிப்புகளுக்கு related ஆக ஒரு கொசுறுச் சேதி !! 'மாயாவி ; லாரன்ஸ் டேவிட் ; ஜானி நீரோ கதைகளைப் "புறக்கணித்த" நீவிர் உருப்பட மாட்டீர் ' என்ற தொனியில் கடிதம் ஒன்று வரைந்துள்ள 52 வயது நண்பரின் எண்ணங்கள் நியூ லுக் special ல் வருகின்றது !//

    அப்படியானால் சுவாரஸ்யமான வருத்தம் தரக்கூடிய,சோகமான சிறு கதை ஒன்று உள்ளது !இல்லையா சார் !!

    ReplyDelete
  58. வங்கியினர் செய்த சதியால் 38 வது ஆர்டருக்கு தள்ள பட்டு விட்டேன் ,நாற்பதாவதாய் இருந்திருந்தால் நமது 40 வது வருட 4o வது நபராக தேர்ந்தெடுக்க பட்டிருப்பேன் .நண்பர்களே யார் அந்த 40 வது அதிர்ஷ்டசாலி

    ReplyDelete
  59. //அது நாள் வரைப் பரிச்சயமான மாயாவி ; லாரன்ஸ் டேவிட் ; ரிப் கிர்பி ; வேதாளன் போன்ற நாயகர்களைத் தாண்டி ஒரு வண்ணமயமான...அதிரடியான காமிக்ஸ் உலகம் உள்ளதென்ற realisation தந்திட்ட சந்தோஷத் துள்ளல் என்று பற்பல குட்டிக் குட்டியான சமாச்சாரங்கள் அடங்கியுள்ளதாக நான் நினைக்கிறேன். இன்று நாம் மறுபதிப்பிடும் போது நம்மால் at best அந்தக் கதையினை மட்டுமே மீண்டுமொருமுறை தந்திட முடியும் ; அவற்றோடு பின்னிப் பிணைந்து நிற்கும் இதர சந்தோஷங்களை கொணர்வது சாத்தியமல்லவே ! அது மட்டுமல்லாது, வயதினில் மட்டுமன்றி ரசனைகளிலும் நாம் நிறையவே பயணித்து விட்டோம் ! அன்றைக்கே வெகு குழந்தைத்தனமாய் எனக்குப் பட்ட Suske & Wiske கதைகள் இன்று நமக்கு nostalgic valueஐ தாண்டி நிஜமாக திருப்தி தந்திட இயலுமென்று நம்பிக்கை உள்ளதா //

    ஒத்துக்கொள்கிறேன் சார் புத்தகம் வாங்கிய உடன் ஹாட் லைன் ,அடுத்து பார்ப்பது புதிய வெளியீடுகள் என்ன என்பதே ஆர்வம் ,பின்புதான் நீங்கள் தீபாவளி பற்றி கூறியது போல கதையை படிப்போம்.

    அடுத்து மறுபதிப்புகள் என்ன ?செலக்ட் செய்து விட்டீர்களா........................................

    ReplyDelete
  60. டியர் friends ,,,dr .பாலசுப்ரமணியன் ,mbbs from சிவகாசி ,,,,,, வாசகர் கடிதம் சூப்பர் ஆக,plus minus in காமிக்ஸ் book ,,,,,, எழுதுவாரே அவர் என்ன ஆனார் என்று யாருகாவது தெர்யுமா?

    ReplyDelete
  61. உங்கள் வேதனைகளும் சோதனைகளும் எங்களுக்கு புரிகிறது. எனினும் ரூ10/- பத்தில் இருந்து ஓரேயடியாக ரூ100/- நூறு ஏற்றியதை ஏற்றுகொள்ள மனம் மறுக்கிறது.

    நீங்கள் கூறியபடி வசூலில் பரிதாபம், தமிழகத்திற்குள் ஊருக்குக் குறைந்தபட்சம் இரு முகவர்களிடமாவது பணத்தை முழுவதுமாய் இழந்த ஆற்றாமை எனவே நஷ்டம். அது வாசகர்களால் ஏற்பட்டது அல்ல.

    2000 வருட சமயத்தில் ஏற்பட்ட இன்டர்நெட் தொலைகாட்சி தாக்கத்தால் எல்லா பத்திரிக்கைகளும் சரிவை சந்தித்தன. இப்பொழுது எல்லாமே மீண்டு வருகின்றன.

    ரூபாய் 100, 2௦௦, 5௦௦, 1000,என்று விலையை கூட்ட சொல்லி உங்களை உசுப்பேத்தும் கூட்டம் வாங்கிய புத்தகத்தை தன் மனைவி இடம் கூட கான்பிக்காமல் பரணில் போட்டு பூதம் பிணத்தை காப்பதுபோல் காத்து நேரம் வரும் பொழுது ஸ்கேன் செய்து தன் பெயரை போட்டு ஆனந்த படுவதும், என்றாவது ஒரு நாள் அதை அதிக விலைக்கு விற்க நினைப்பதும், பிறிதொரு நாளில் லண்டன் ஏல நிலையத்தில் தனது காமிக்ஸ் ஏலம் போவதாக கனவு காண்பதுமே வேலை. சிறிது நாளில் அது நிறைவேறாது என்று தெரியும்போது அந்த கூட்டம் காணாமல் போய்விடும். (காமிக்ஸ்யை உண்மையில் வளர்க்க நினைக்கும் சேகரிப்பாளர்களுக்கு இது பொருந்தாது)

    ஒரு புத்தகம் என்பது வாங்கியவர் படித்து அவரது குடும்பத்தினர் படித்து, நண்பர்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் கொடுத்து அவர்களையும் அடுத்த இதழ்களை வாங்க ஊக்கப்படுத்தி பின்னர் பழைய பேப்பர் கடைக்கு சென்று அங்கு இயலாதவர்களால் வாங்கப்பட்டு சட்டை அட்டை எல்லாம் போய் பின்பு அரைவைக்கு செல்கிறதே அதுவே அந்த புத்தகம் விரும்பும் வாழ்க்கை பயணம். எல்லா புத்தகத்தையும் எல்லாரும் சேகரித்தால் வீட்டில் எங்கே இடம். இந்த பயணத்திற்கு வெளிநாட்டு ஆர்ட் பேப்பர் எல்லாம் தேவையில்லை. புத்தக சேகரிப்பாளர்களுக்கு மட்டுமே அது தேவைபட்டும்.

    எல்லா கம்பனிகளும் நாற்பதாயிறம் விலைக்கு செல்போன் விற்றாலும் ஆயிரம் ரூபாய்க்கும் செல்போன் விற்கத்தான் செய்கின்றன. அப்போலோ Hospital -ல் சூப்பர் specialty VVIP வார்டு இருந்தாலும் ஜெனரல் வார்டும் இருக்கத்தான் செய்கிறது. குறைந்த விலைக்கும் புத்தகத்தை விற்பது குற்றமல்ல.

    நீங்கள் எவ்வளவு விலை கூறினாலும் வாங்க தயாராக இருக்கும் இப்போதைய வாசகர் வட்டம் முதிர்ந்த சம்பாதிக்க ஆரம்பித்த வட்டம். நீங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கியது மற்றும் உங்கள் தந்தை உங்களுக்கு விட்டு சென்றது. குறைந்தவிலையில் கடைகளில் கிடைத்தால் மட்டுமே இன்றைய சிறுவர்கள் அவர்கள் பாக்கெட்மனியில் வாங்க முடியும் உங்கள் மகனுக்கு நீங்கள் ஒரு சிறந்த வாசகர் வட்டத்தை விட்டுசெல்லமுடியும்.

    உங்கள் தீர்மானம் சரியா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.

    ReplyDelete
    Replies
    1. ஹஜன் சுந்தர்,

      உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் உடன்பட மறுக்கிறேன். அனைத்துக்கும் இந்த சிறியவனே பதில் அளிக்கமுடியும்.

      ஒரேஒரு செய்திமட்டும் பதிவு செய்கிறேன். என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் இப்போது இருக்கும் - பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் யாரும் பாக்கெட் மணிக்கு புத்தகங்கள் வாங்குவதில்லை. இந்த உண்மை உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன்.

      ஆசிரியரின் 100 ரூபாய் விலை ஏற்றத்துக்கு இவ்வளவு மல்லுக்கட்டும் நாம், சினிமா நடிகைகளின் கவர்ச்சி படங்களை நிரப்பி வாரம் ஒருமுறை வரும் குமுதம் போன்ற வாரஇதழ்கள் என்ன விலையில் கடைகளில் தொங்குகின்றன என்று பாருங்கள்.

      நாளிதழ்கள் வாரம் ஒருமுறை இலவசமாக கொடுக்கும் சிறுவர்மலர் புத்தகங்களை எத்தனை சிறுவர்கள் படிக்கிறார்கள் என்று பாருங்கள்.

      நல்லதரத்துடன், என்னைபோன்ற நீண்டநாள்(வருட) காமிக்ஸ் காதலர்களின் ஆசைகளையும், அதனை நிறைவேற்றபோகும் ஆசிரியரின் நடவடிக்கைகளையும் தயவு செய்து கொச்சைபடுத்தாதீர்கள்.

      இறுதியாக ஒரேஒரு செய்தி. நானும் ஒரு தந்தைதான். எனக்கும் 10 வயது கடந்த மகன்கள் இருவர் இருக்கிறார்கள் என்ற அனுபவத்திலேயே இந்த விஷயங்களை சொல்கிறேன்.

      Delete
    2. ----நீங்கள் எவ்வளவு விலை கூறினாலும் வாங்க தயாராக இருக்கும் இப்போதைய வாசகர் வட்டம் முதிர்ந்த சம்பாதிக்க ஆரம்பித்த வட்டம். நீங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கியது மற்றும் உங்கள் தந்தை உங்களுக்கு விட்டு சென்றது. குறைந்தவிலையில் கடைகளில் கிடைத்தால் மட்டுமே இன்றைய சிறுவர்கள் அவர்கள் பாக்கெட்மனியில் வாங்க முடியும் உங்கள் மகனுக்கு நீங்கள் ஒரு சிறந்த வாசகர் வட்டத்தை விட்டுசெல்லமுடியும். -----

      Factu Factu Factu

      ஆனால் ரூ 10 க்கு தயவு செய்து எதிர் பார்க்காதீர்கள். நிச்சயம் தரத்தை எதிர் பார்க்க முடியாது.

      Delete
    3. Mr. Sundar,

      I don't think you are a regular blogger, if u visit this site regularly and read all comments from our loyal fans and our editor you will know that:

      1. The price in not stuffed to you by our publisher, after a long discussion and suggestions the price is being fixed at Rs.100. If you read other posts by our editor he is happy to publish a book at the cost of Rs.40 minimum.

      2. You are talking about the golden ages of comics where it is published for Rs.3,5,10 which you can buy in seconds for half rate. In that period there were thousands of readers who purchase comics regularly. now there are only handful ones who are interested in comics that too die hard fans like us. Our editor can't be running a social service by giving comics spending his own money, i hope you understand the point.

      3.the company that sells Rs.1000 for a mobile has lakhs of customer at the same time they can't sell at the same price to hundreds of customers.

      4. If there are 1 or 2 people who steal others hard work and try to make profit, don't blame all person's of same doing.

      5. Now a days i can't even make my daughter read her school books, it will be a Himalayan task for me to make her read comics. My point is the book we buy only makes us happy. So don't even think too much about others being benefited by it.

      S.Mahesh.

      Delete
  62. டியர் எடிட்டர் சார்,
    சந்தா செலுத்திவிட்டேன். நெவெர் பிபோர் ஸ்பெஷலுக்கும் முன் பதிவு செய்துவிட்டேன். உங்கள் அலுவலகத்திலிருந்து போன் கால் வந்தது. இமெயிலும் வந்தது. முன்பே கால் வந்துவிட்டது. நான் தான் குறிப்பிட தாமதித்துவிட்டேன்.

    நெவர் பிபோர் ஸ்பெஷல் புக்கிங் நெ.31

    ReplyDelete
  63. அடுத்த தலைமுறைக்கு காமிக்ஸ் போகனும்னா பெற்றோர்கள் எண்ணம் மாறனும். நேற்று நான் நேரிடையாக கண்டது. ஒரு பையன், கிரி புக் செண்டரில் அவன் அப்பாவிடம் “ அமர்சித்திரகதைகள் கேட்டான். அவர் அதற்கு சொல்கிறார்” இது என்ன தமிழ்ல? இங்கிலீஷ்ல வாங்கிகோ! நம்ம ஏரியா லைப்ரரில இங்கிலீஷ் காமிக்ஸ்தானே வாங்குற?” எனக்கு அதிர்ச்சியாக இருந்தது , தமிழில் வரும் ஒரு சித்திரகதை வாங்க தமிழரேதான் தடையாக உள்ளார் :( இதில் வளரும் தலைமுறைக்காக நம் காமிக்ஸ் என்ற கூற்று சாத்தியமே அல்ல. அதே அந்த சிறுவன் ஒரு டிங்கிளோ, அமர்சித்திரகதை ஆங்கிலமோ,டிஸி,ஏஸி காமிக்ஸ்ஸோ வாங்கினால் அவர் கண்டிப்பாக வாங்கி கொடுத்திருப்பாரோ என்னவோ? நமது காமிக்ஸ் வளர இப்போதைக்கு நம் பழைய வாசகர்கள்தான் ஆசிரியருக்கு உதவ முடியும்!நண்பர் ஹஜன் புரிந்துகொள்வார் என்று நினைக்கிறேன்!

    ReplyDelete
  64. cap tiger சொன்னது முற்றிலும் உண்மையே. தமிழில் எதைப் படிப்பதையும் ஊக்குவிக்க யாரும் தயாரில்லை என்பதே நிதர்சனம். லயன் காமிக்ஸ்சை ஒரு 10 வயது பையன் படிக்கமுடியுமா (கார்ட்டூன் கதைகள்) என்று தெரியவில்லை. 15 வயது முதல் 25 வயது வரை இருப்பவர்கள், காமிக்ஸ் படித்தால் சக நண்பர்களிடம் கிண்டல் கேலி மட்டுமே கிடைக்கும் என்பதால் படிக்க மறுக்கிறார்கள்.

    நீங்கள் டைகரின் ஒரு கதையை வண்ணபுத்தகத்தில் வெளியிடுங்கள், கண்டிப்பாக என்னால் சிலரிடம் அந்த இதழ்களைப் படிக்க சொல்லி வற்புறுத்த முடியும். ஒரு முறை படித்தால், காமிக்ஸ் பற்றிய எண்ணத்தைக் கண்டிப்பாக மாற்றிக்கொள்வார்கள். அதற்கு தயாரிப்பு தரம் உயரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

    எடிட்டர் பல முறை சொல்லிவிட்டார் : ரூ400 இதழ்,வருடம் ஒருமுறை வரப்போகும் இதழ் கிடையாது. அது சிறப்பு இதழ். அடுத்தது முத்து 50 இதழை மட்டுமே அந்த அளவுக்கு வெளியிட முடியும். அதற்கு 10 ஆண்டு காலம் ஆகும்.

    அதே நேரம் எல்லா இதழ்களும் ரூ 100ல் வருவது அதிகமானவர்களை சென்றடைய ஒரு தடங்கலே. 6 - ரூ 100 இதழ். 6 - ரூ 50 இதழ் கொண்டு வரலாம்.

    ReplyDelete
  65. இ-பேயில் இப்போது நியூ லுக் ஸ்பெஷல் - ஆஹா... ஸார் கலக்குறார்...!!!

    ReplyDelete
  66. This comment has been removed by the author.

    ReplyDelete
  67. Dear Vijayan SIR, I prefer you to finalize the format and the price for our comics, it is not good to keep changing the size and the price like our petrol price :-). As many people commented out already, we need to have some standard price here onward which should be affordable by every one. So I request you to decide on this immediately.
    நமது காமிக்ஸ் பற்றிய எனது எண்ணம்
    மாதம் இதழ்கள் Rs.25-40
    மூன்று மாதகள் ஓருமுறை சிறப்பு இதழ்கள் Rs.100
    வருடம் ஓருமுறை SUPER சிறப்பு இதழ்கள் Rs.200

    ReplyDelete
  68. நண்பர் ஹஜன் சுந்தர்,
    நீங்கள் கூறியபடி வசூலில் பரிதாபம், தமிழகத்திற்குள் ஊருக்குக் குறைந்தபட்சம் இரு முகவர்களிடமாவது பணத்தை முழுவதுமாய் இழந்த ஆற்றாமை எனவே நஷ்டம். அது வாசகர்களால் ஏற்பட்டது அல்ல.
    >> நீங்கள் ஆசிரியர் நிலையில் இருந்து யோசித்து பதில் சொல்லுங்கள். கஷ்டம் என்பது அது அனுபவிதவர்க்கு மட்டும்தான் தெரியும். அவர் வாசகர்களால் ஏற்பட்டது என்று சொல்லவில்லை. தனது அனுபவத்தை சொல்லியுள்ளார். கடந்த 5 வருடங்களாக நமது காமிக்ஸ் புத்தகம் சரியாக வரவில்லை, அதை சரிசெய்யும் முயற்சி இது. According to me he is doing this as passion and not for business. Please understand.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் பரணி கூறியதே உண்மை ,உண்மையை தவிர வேறில்லை.

      மேலும் 1980 1990 வரை அசைக்க முடியாத ஸ்டார்களின் அணிவகுப்பு,அப்போது அதுவே தரமாயும்,நிரந்த்தமாயும் இருந்தது.1990 ,2000 முக்கியமான ஸ்டார்களின் கதைகள் குறைந்தன,டெக்ஸ் தூக்கி பிடித்தார்,பிறகு ஆசிரியர் கூறிய காரணம் தவிர ,விறு விருப்பான கதைகள் குறைந்தன .

      இதை(விறு விறுப்பான ) அப்போதே ஆசிரியர் செய்திருக்கலாம் என சிலர் நினைக்கலாம் ,ஆனால் விற்பனையின் தொய்வு ,அடிபட்ட யாரையும் தவிக்க வைக்குமே தவிர புதிய வழி முறைகளை எடுத்துரைக்காது.விற்பனை அவருக்கு சந்தோசத்தை தந்திருந்தால் அவர் அன்றே இவற்றை கொண்டு வந்திருப்பார் .வெற்றிகரமான முறையை விட்டு ,புதிய முறைக்கு மாற யாருமே பயப்படுவார்கள் ,நமது மனமே எதிர்க்கும்.ஆசிரியர் எடுத்துரைத்த உண்மை நிலையினை மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள் ,எதிர்க்கும் நமது வளர்ச்சியில் அக்கறையான எண்ணம் கொண்ட நண்பர்களே !

      // விஷ்வாவும் , நண்பர்களும் பல நாட்களாய் நம்மை அங்கே stall எடுத்து விற்பனை முயற்சிகளைச் செய்திடக் கோரிய வண்ணமே இருந்தனர். 'சரி...முயற்சித்துத் தான் பார்ப்போமே' என்று சென்னைக்கு புறப்பட்டது ; வாசகர்களை நேரடியாகச் சென்றடைய ஒரு வலைப்பதிவு சுலபமான வழி என்று எனது மகன் எனக்கு உபதேசிக்க, "சரி..அதையும் ஏன் விட்டு வைப்பானேன்' என்று நான் டிசெம்பர் இறுதியில் எழுதத் துவங்கியது .... எனது 'பாரிஸ் போதிமரம்' தந்த தெளிவின் பலனாய் "லயன் Comeback ஸ்பெஷல் உருவாக்கியது - என்று ஒரே சமயத்தில் பல புதுக் கதவுகள் திறக்கப்பட்டன ! தொடர்ந்த நிகழ்வுகளுக்கு நாம் எல்லோருமே இங்கு சாட்சிகளே ! //



      நமது முன்னோடி நண்பர்களின் துணையுடன் ,ஆசிரியரின் புதிய முயற்சி வெற்றி பெற்றுள்ளதை அவரே குறித்துள்ளார் .

      விற்பனையில் தொய்வு ,ஆசிரியரின் கைகளை கட்டி போட்டிருக்கலாம் ,இப்போது ஏற்பட்டுள்ளது விவசாய புரட்சி,தொழில் புரட்சி போல ,காமிக்ஸ் புரட்சி இது தவிர்க்க முடியாதது.இப்போது ஆசிரியர் ஆர்வமாக கதைகளை திரட்டி வருவதும் ,அற்புதமான நாயகர்களை அறிமுக படுத்துவதும் தொடர காரணம் இப்போதைய புத்தகத்தின் அழகிய ஃ பார்மேட் மற்றும், விலையின் சுதந்திரமே.

      மேலும் ஆசிரயர் அனைத்து முயற்சிகளையும் செய்ததை விளக்கி உள்ளார்,அன்றைய கட்டத்தில் லார்கோ வெளியிடப்பட்டிருந்தால் இவளவு ஈர்ப்பு ஏற்பட்டிருக்காது.என்ன அழகான வண்ணத் தொகுப்பு .இது காலத்தின் கட்டாயம்தானே.அன்று வந்திருந்தாள் மறு பதிப்பிட வேண்டி இருந்திருக்கும். இயற்கையின் தேர்வே நிரந்தரம்,தன்னை மென் மேலும் செதுக்கி அழகு படுத்தி கொள்ளாத எந்த ஒன்றுமே காலத்தால் விளக்கி வைக்க படும் என்பதை எதிர்க்கும் நண்பர்கள் அனைவரும் உணர்வீர்கள் .

      எந்த ஒன்றையும் காலம் தரம் பார்த்து ,தூக்கி நிறுத்தி பிடிக்கும்.தகுதி உள்ளன தப்பி பிழைக்கும் என்ற டார்வின் சித்தாந்த படி ,தகுதிக்காக நமது காமிக்ஸ் செதுக்கப்பட்டு ,இப்போதைய வடிவத்தை அடைந்துள்ளது,நாம் கொடுக்கும் விலைக்கு ஆசிரியர் அவர் உறுதி அளித்ததை போல , சிறப்பான கதைகளை படைப்பார் ,கண்டிப்பாக நமது காமிக்ஸ் மென் மேலும் முன்னேறும் ,முன்னேற உங்கள் வாழ்த்துக்களை எதிர் பார்த்து புதிய முயற்சியை துவங்கிய ஆசிரியருக்கு ஜே போட்டு தொடருங்கள்.

      மேலும் அன்று இரண்டு ரூபாய்க்கு வாங்கிய நண்பர்களில் 80 சதம் ,கஷ்டப்பட்டுதான் வாங்கினோம்.இன்று 10 ரூபாய் என்பது எளிது,100 ரூபாய் என்பது கடினம்தான் ,ஆனால் அதே நிலை இன்றும் மாறவில்லை .ஆனால் இன்று சத்தியமாக ,நிச்சயமாக நமது புத்தகத்தின் தரம் உயர்ந்துள்ளது .

      அந்த நிலைப்பாடு ( குறைந்த விலை ,அதிக எண்ணிக்கை )தோல்வியடைந்ததை அடுத்து ,(குறைந்த எண்ணிக்கை,நிறைந்த தரம் ) புதிய வழியை ஆசிரியர் தொடங்கி உள்ளார் .கண்டிப்பாக காலத்திற்கு தேவை இல்லாததை,தகுதி இல்லாததை ஒதுக்கும் சக்தி உண்டு .அதன் வெளிப்பாடே நமது பழைய முறை ஓரம் கட்டப்பட்டு புதிய முறை வந்துள்ளது.

      இது சரியில்லை எனில் இதை விட சிறந்த முறை ஒன்றும் வரும் .ஆகையால் பயப்பட வேண்டாம் நண்பர்களே!

      மாற்றமே என்றும் மாறாதது எனும் மார்க்சின் தத்துவம் என்றும் மாறாதல்லவா !

      Delete
  69. வோர்ட் verificationai எடுத்து விடவும் ...........மஹா கஷ்டமாக உள்ளது சார் .....ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

    ReplyDelete
  70. நண்பர்களே,

    மீண்டும் மீண்டும் நாம் இந்த விசயத்தை விவாதித்துக்கொண்டு இருப்பதில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை.
    ஆசிரியர் தனது இறுதி முடிவை ஒரு பதிவாகவே இட்டு விட்டார்.
    நாம் அவருக்கு சிறிது விலை சுதந்திரம் அளித்து பார்ப்போமே.
    கண்டிப்பாக ஏமாந்துவிட மாட்டோம்.நம்மை எல்லாம் தரத்திலும் புதிய அறிமுகத்திலும் சந்தோசபடுத்த போகிறார்.

    இந்த விவாதத்தினால் நண்பர்கள் ஹஜன் சுந்தர்,ராஜ்குமார்,ஸ்டீல் claw ,பரணி இப்படி அனைவரும் பின்னுடத்தின் maximum count of characters பத்தாமல் பல பின்னுடம் இட வேண்டி இருகிறது.அதற்காகவாவது இதனை நாம் சற்று நிறுத்தி வைப்போம்.:))))

    நாம் இதனை மறந்து இன்னும் இரண்டொரு நாட்களில் வரப்போகும் லயன் பிறந்தநாள் பற்றியும் நமக்கு கிடைக்கப்போகும் வண்ண புத்தகம் பற்றியும் பேசுவோம்.
    நண்பர் பொடியன் கூறியது போல EBAY நியூ லுக் spl ஜூலை 20 முதல் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று கூறி உள்ளார்கள்.
    ஆகையால் நாமும் அதற்க்கு முன் எதிர்பார்க்கலாம்.

    இதுதான் எனது முதல் பெரிய பின்னுட்டம் என்பதையும் தெரியபடுதிக்கொல்கிறேன்.:))))))))))))
    எனது அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை நமக்கு எல்லாம் மிகவும் பிடித்த லயன் காமிக்ஸ் கு இந்த நேரத்தில் தெரியபடுதிக்கொள்கிறேன்.

    விரையில் அது பற்றிய பதிவை நமது ஆசிரியர் இன்று இரவு ஒரு இரண்டு மணி அளவில் அளிப்பார் என எதிர்பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வேன் ஆசிரியர் இப்படி ஏமாற்றிவிட்டாரே.
      ஹ்ம்ம் நியூ லுக் ஸ்பெசல் அனுப்பிவிட்டுதான் பதிவிடுவேன் என்று சபதம் செய்துள்ளாரோ எனவோ தெரியவில்லை.
      தெரிந்தால் நண்பர்கள் கூறலாம்

      Delete
    2. நண்பர் இரவுக்கழுகார் , இரவெல்லாம் தூங்கவில்லை போலும்,ஆசிரியரின் 50 வது பதிவாமே (நண்பர் பொடியனுக்கு நன்றி )இது.தூள் கிளப்பும் யோசனைகளை முன் வைக்க ,ரூம் போட்டு யோசிப்பதை விட ,வெளியூர் பயணம் செய்து இன்னும் அதிரடி ஹீரோக்களை தேடி சுற்றி அலைவதாக கேள்வி .நல்லதே நடக்கும் !

      விரைவில் விறு விருப்பான அடுத்த பதிவை எதிர் பார்ப்போம் .

      Delete
  71. நண்பர் சொன்னால் சரிதான் ."நண்பருக்காக எதையும் செய்வேன்,இதுதானே நீங்கள் எதிர் பார்த்த வார்த்தை "-(நன்றி-டெக்ஸ் ,க்ளேமெண்ட் )


    வருக வருக புத்தாண்டு மலரே வருக

    ReplyDelete
  72. இரத்தப்படலம் முன் பதிவு 1000த்தை தொட, பல மாதங்கள் எடுத்துக்கொண்டது.

    முத்து NEVER BEFORE SPECIAL புக்கிங் நிலவரத்தை இன்னும் சில வாரங்களில் எடிட்டர் பகிர்ந்துகொண்டால், முன்பதிவு செய்யாமல் இருப்பவர்களுக்கு, பதிவு செய்யவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும்.

    ReplyDelete
  73. சில நண்பர்கள் சில காமெண்ட்டுகளை போஸ்ட் செய்துவிட்டு பின்னர் டெலீட் செய்வதால் காமெண்ட்களின் எண்ணிக்கை வீணாக அதிகரிக்கிறது. அதனால், எண்ணிக்கையைப் பார்த்துவிட்டு அடடே 5 காமெண்ட்ஸ் வந்துருக்கே பார்க்கலாம் என்று வந்தால், அங்கே ஒரே ஒரு காமெண்ட் மட்டுமே இருக்கும்.

    எனவே, நண்பர்கள் இயலுமானவரை காமெண்ட்களை பைனல் செய்துகொண்டு இங்கே பதிப்பித்தால், வீணாக எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்படாது என்பது எனது வேண்டுகோள். நண்பர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. You are right Podiya. I always check the no's then i saw the same last commect. Thanks for your clarification. Theeban i will be visiting Srilanka in few weeks. Is it possible i can meet you. I need your contact No.
      Aldrin Ramesh from Muscat

      Delete
    2. எனது தவறுதான் அதிகமிருக்கும்,இனி தவறை சரி செய்து விடுகிறேன் நண்பரே.உங்கள் நியாயமான அறிவுறுத்தலுக்கு, நன்றி !

      Delete
  74. Looks like all our dreams are coming true...A Tamil Comics in International Standard...
    Guys, who are opposing against the price..pls try to understand..pattern of business has changed drastically..you cannot sustain in the market with out quality..Kids next to my door dont even look @ our old comic books..because they think they are substandard..but they love to read cinebooks..

    i am able to see the tables turning now..they are starting to read a Tamil comic book first time in their life & they are excited..

    we are going in the right track...Even if you have difference, pls support us in this journey...

    For the love of Tamil Comics.

    ReplyDelete
  75. Ordered "New Look Special" in ebay. Hope to get in another 2-3 days.

    ReplyDelete
  76. டிராகன் நகரம் (டெக்ஸ் வில்லர்)
    243 (31%)

    கார்சனின் கடந்த காலம் (டெக்ஸ் வில்லர்)
    292 (37%)

    நரகத்தின் எல்லையில் (கேப்டன் பிரின்ஸ்)
    373 (47%)

    மனித எரிமலை (இரும்புக்கை நார்மன் )
    85 (10%)

    ReplyDelete
  77. விஜய் டிவியில் நீயா நானா விவாதநிகழ்ச்சியில் விலைவாசி உயர்வை பற்றிய நிகழ்ச்சி!ஒரு தோழி, எம்.ஏ படித்துவிட்டு ஒரு தனியார் பள்ளியில் 4000ரூபாய்க்கு வேலை செய்கிறார். அவரது நிதிநிலைமைகளை சொல்லும்போது அழுதே விட்டார்,:( தேவையில்லாத ஒரு பின்னூட்டமாக இது தோன்றலாம். ஆனால்,வாழ்க்கை சூழ்நிலையால் நம் காமிக்ஸ் மீது இன்றும் காதல் கொணட, ஆனால் அதை வாங்கவோ, சேமிக்கவோ முடியாத ரசிகர்களும் இருக்கலாம். என்னுடைய முந்திய பின்னூட்டம் அவர்களை வேதனைபடுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்!

    ReplyDelete
  78. "லயன் நியூ லுக் ஸ்பெஷல்" இல் நீங்கள் சொன்ன "48 பக்கங்களில் surprise ஆக இரு ஆக்ஷன் ஹீரோக்களின் முழு நீள சாகசங்கள்" வருவதாகச் சொன்னவை எவை என்று இப்பொழுதாவது சொல்ல முடியுமா? எல்லாம் ஒரு ஆர்வத்தில் தான் கேட்கிறேன். வேறு ஒன்றும் இல்லை :-)

    ReplyDelete
  79. 100000 - 1 Lakh Hits!!! - வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
    Replies
    1. ஒரு சிறிய யோசனை! அய்யய்யோ மறுபடியுமா ஆரம்பிச்சுட்டானா என பயப்பட வேண்டாம் :) :) :)

      தற்போது தங்களுடைய ப்ளாக் பெரும்பாலும் காமிக்ஸ் ஆர்வலர்களாலேயே படிக்கப்படுகிறது! எந்த ஒரு திரட்டி (Blog aggregation sites) / விளம்பரங்களின் தயவின்றி ஒரு லட்சம் ஹிட்ஸ் என்பது மிகப் பெரிய சாதனைதான் - வாழ்த்துக்கள்! ஆனால், எங்களையும் தாண்டி உங்கள் பதிவுகள் பிறரை போய்ச் சேர வேண்டும் என்பது என் விருப்பம். என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன், இதற்கு சிறந்த வழி http://www.tamilmanam.net/-இல் உங்கள் வலைப்பூவை பதிவு செய்வது!

      இதை நானே கூட செய்யலாம் - ஆனால் அது முறையான செயல் அல்ல. நீங்கள் மேற்கண்ட தளத்தில் உங்கள் ஈமெயில் மற்றும் ப்ளாக் முகவரி அளித்து பதிவு செய்தால் பிறகு நீங்கள் இடும் இடுகைகளை நாங்கள் தமிழ்மணத்தில் பகிர ஏதுவாக இருக்கும். செய்வீர்களா? (பதிவு செய்ய சில வினாடிகளே பிடிக்கும்!).

      Delete
    2. Karthik Somalinga : நன்றிகள் பல ! பதிவு செய்து விட்டேன்...48 மணி நேரங்களுக்குள் பட்டியலில் நமது வலைப்பதிவும் இணைக்கப்படுமென தமிழ்மணம் சொல்லியுள்ளது ! நல்ல ஆலோசனைகளுக்கு எப்போதும் எனது செவிகள் சிறப்பாய் செயல்பட்டிடும் !

      Delete
  80. This is really amazing !!!!

    1 Lakh hits in 7 months time

    Approximately 476 hits per day / 14285 hits per month


    Congrats MR. VIJAYAN

    Also I would like thank all of you to achieve this.




    GREAT !!!!!!! GREAT !!!!!!! GREAT !!!!!!!


    GREAT !!!!!!!

    ReplyDelete
    Replies
    1. In 476/day Steel claw's page view itself would be 100 it seems.

      Delete
    2. பார்த்தவர்கள்தான் ,மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டிருக்கிறார்களோ என நினைத்தேன் நண்பரே ,ஆனால் ,அது எவ்வளவு பெரிய தவறு என நேற்றுதான் உரைத்தது,பின்னூட்டமிடாமல் பார்த்து மட்டும் செல்லும் நண்பர்களும் ஏராளம்,நேற்று 100000 தாண்டியவுடன் 150 முறை 5 நிமிடத்தில் கிளிக்கிட பட்டிருந்தது.பிற வலை தளங்களில் போல,ஆன் லைன் வாசகர்களின் எண்ணிக்கை அப்டேட் ஆனால், எத்தனை பேர் உண்மையில் இருக்கிறார்கள் என தெரிந்து விடும்.ஆனால் உறுதியாக நமது தளம் ஆன் லைனில் புதிய(பழைய காமிக்ஸ் வாசகர்கள் ), பார்வையாளர்களை ஈர்த்துள்ளது தெரிகிறது .

      ஆசிரியரின் இந்த பிரம்மாண்டமான அறிவிப்பே, இத்தனை கலாட்டக்களுக்கும் காரணம்.

      நாளை முதல் ஆண்டு மலரை வரவேற்க தயாராவோம் நண்பர்களே .உண்மையான கலாட்டாவே நாளைதான் !

      லயனின் பிறந்த நாள் வாழ்த்துக்களை ஆசிரியருக்கு தெரிவிப்போம் நண்பர்களே ..................................

      இதனை போலவே அனைத்து பதிவுகளும் நமக்கும், ஆசிரியருக்கும் உற்ச்சாகத்தை பாய்ச வேண்டும் என கூறி ...................................

      கச்சேரி ஆரம்பம் ............................................

      ஹாப்பி பர்த் டே டு லயன் .........................
      பின் குறிப்பு : 700 பேர் ஒரே நாளில்,நான் பதிவிடுவதர்க்குள் 50 எகிறி விட்டது.
      இது ஆசிரியரின் பதிவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி .இந்த ஆண்டு ஒளிர் விடும் ஆண்டாக பிரகாசிக்க போகிறது ........................

      Delete
  81. நமது பிரதிகளின் எண்ணிக்கையும் ,இதை போல அதிகரிக்க வாழ்த்துக்கள் சார்!..................

    ReplyDelete
  82. டியர் friends ,,,,,,,,, 373 வோட்ஸ் வாங்கி,,,,,,,,, வெற்றி வாகை சூ டிய நம் கடலின் காதலன் cap பிரின்ஸ் யை கொண்டாடுவோம் , இதில் ரியல் vote எவ்வளவு கள் ள vote எவ்வளவு என்ற முடிவை உங்களிடம்மே விட்டு விடுகிறேன் ,,,,,,,,,,,,,, டியர் எடி ,,,,,,, நியூ லுக் spl ல் 48 பக்க சாகசம் யார்ர்,,,,,,,,,,,,,,,,,,,? என்று சொல்ல முடியுமா ??????????????????? ரொம்ப யோசிச்சா தலையில இருக்கிற கொஞ்சநஞ்ச மு டி யும் கொட்டிவிடும் போல இருக்கு ,,,,,,,,,,,,,, தயவு செய்து newlook கைக்கு வரும்முன் சொல்லிவிடுங்க சார்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. நண்பா லூசு (இதுவேற கஷ்டமா இருக்கு),

      நீங்க கணக்குல வீக்குன்னு நினைக்கிறேன். நம்ம மஞ்சசட்டக்காரர் 242 + 292 = 534 ஓட்டு வாங்கி இருக்காரு. கூட்டி கழிச்சி பாருங்க கணக்கு சரியா வரும். எப்புடி :)

      Delete
  83. எனக்கென்னவோ இரும்புக்கை நார்மன் தான் முதல்ல பிரிண்ட் ஆவார்னு நினைக்கிறேன்.. :)

    ReplyDelete
  84. Replies
    1. நண்பர்களே,

      ஒரு லட்சம் பார்வைகள் என்பது உங்களின் உற்சாகத்திற்கும் , காமிக்ஸ் மீதான அளற்பரிய காதலுக்குமொரு பறைசாற்று !! நம்மை நாமே முதுகில் தட்டிக் கொள்ளும் சமயம் இது !! Great Job friends !

      நாளை முதல், லயன் நியூ லுக் ஸ்பெஷல் - பத்திரமான ; கெட்டியான கவரில் பேக் செய்யப்பட்டு உங்களைத் தேடிப் பயணமாகிடும் ! பரீட்சை எழுதி விட்டு மார்க் ஷீட்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாணவனைப் போல உங்களின் எண்ணங்களை ; விமர்சனங்களை அறிந்திட எப்போதும் போல் ஆவலாய்க் காத்திருப்பேன் !

      'மறுபதிப்புத் தேர்தலில்' எக்கச்சக்க கள்ள வோட்டுக்கள் விழுந்திருப்பது தெரிகிறது !! கோஷ்டி கோஷ்டியாய், தத்தம் பிரிய நாயகர்களுக்கு வோட்டுப் போட்டு புண்ணியம் தேடி இருப்பது கண்கூடு !

      இவ்வார இறுதிக்குள் மறுபதிப்பு பற்றியதொரு surprise பதிவு காத்துள்ளது ! See you in a day or two guys!

      Delete
  85. திரு.விஜயன்,
    உங்கள் கருத்துக்களை ஆமோதிக்கிறேன்! இன்று இந்த விலை எனக்குச் சாதாரணமாக இருந்தாலும், ஒரு மூன்று ரூபாய் இதழுக்கு அடம் பிடித்து வாங்கிய நிகழ்வு இன்னும் பசுமையாய் நிற்கிறது!தங்கள் குழந்தைகளுக்காக இன்றைய (நடுத்தர குடும்பத்து) தகப்பன்மார்கள், தாய்மார்கள் படிப்பிற்காக செலவழிக்கத் தயங்க வேண்டாம் என்பதை நாம் நம் நண்பர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

    இன்னொரு விஷயமும் கூட, தமிழ் காமிக்ஸ் தலைமை இடம் பிடித்து இருக்கும் லயன் காமிக்ஸ் பற்றி அறிந்தோர் மிகக் குறைவு. இதனைச் சரி செய்ய சிறிது விளமபரங்கள் மூலமாக முயற்சி செய்யலாமே! செலவு பிடிக்கக் கூடியதுதான் என்றாலும், தொடர்ந்த சில மாத விளம்பரங்களே போதுமானது ஆகும்! அடுத்த முறை புத்தகக் கண்காட்சியில் குழந்தைகளைக் கவர சில விலை மலிவான ஐடியாக்கள் முயற்சி செய்யலாம்! உண்மையில் "விற்பனையில் உயர்வு" விலையைக் குறைக்க மிக உதவும் என்பது உங்களுக்குத் தெரியும்!

    மேலும் என்னால் முடிந்தவரை லயன் பதிவுகளை எனது பேஸ் புக் பதிவுகளில் இட்டு வருகிறேன்! அனைத்து நண்பர்களும் இதனையும் முயற்சி செய்யலாம்! இணையத்தில் அழகாகப் பதிவிட தங்கள் ப்ளாக் ஸ்பாட்டில், வரப் போகும் கதைகள் பற்றிய அறிவிப்புகளை,படங்களுடன் தனியாகத் தருமாறும் கேட்டுக் கொள்கிறேன்!

    அன்புடன்,
    ராஜேஷ்கன்னா.ரா

    ReplyDelete
  86. நாளை பிறந்த நாள் மலர் வருகிறது ......................முரசறைந்து எல்லோருக்கும் சொல்லுங்கள் .............நண்பர்களே........................

    ReplyDelete
  87. மை டியர் மானிடர்களே .வழக்கம் போல எனக்கு இம்முறையும் புத்தகம் வந்து சேரவில்லை.ஜெரோம் எப்ப வருவாரோ?கவலையில் புனித சாத்தான்.

    ReplyDelete
  88. // கெட்டியான கவரில் பேக் செய்யப்பட்டு உங்களைத் தேடிப் பயணமாகிடும்//
    நன்றி!

    ReplyDelete