Sunday, April 08, 2012

நெஞ்சிலிருந்து நேராய் !


நண்பர்களே,

வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவமே என்பதில் நான் திட நம்பிக்கை கொண்டவன்...! 

இத்தனை காலம் கழித்து ஒரு வலைப்பதிவு துவக்கி..அதன் சந்தோஷமான தருணங்களை ரசித்திட சந்தர்ப்பம் கிடைத்திட்ட எனக்கு ; கடந்த ஓரிரு தினங்களாய் இங்கே நடந்தேறி வரும் மறக்கத்தக்க சமாச்சாரங்கள் - அதன் கறுமையான பக்கங்களையும் பார்த்திட ஒரு வாய்ப்புத் தந்துள்ளது ! 

எங்கே ஆரம்பித்தது...யாரால் ஆரம்பித்தது...எதற்காக ஆரம்பித்தது இந்த சச்சரவு என்ற ஆராய்ச்சிகளெல்லாம் எனக்கு இங்கே அவசியமாகப்படவில்லை. For the simple reason that I still think we are all one big family !

ஈகோ எனும் பயனில்லா பிரகஸ்பதி நம்மிடையே ஊடுறுவி ; அசிங்கமான பல செயல்பாடுகளுக்குக் காரணமாகி உள்ளான் என்பது மட்டும் பட்டவர்த்தனமாகத் தெரிகின்றது ! காமிக்ஸ் களத்தில் நான் பெரியவனா ? ....நீ பெரியவனா ?...எனது காமிக்ஸ் ஞானம் உன்னதை விட சிறப்பானதா..? யாருக்கு யார் நெருக்கம் ? என்ற யூகங்கள்..கற்பனைகள்..அரையணாவிற்குப்  பிரயோஜனமில்லா விரோதங்களுக்கே வழி வகுத்துள்ளது ! 

Guys..எனக்கு ஒரு விஷயம் சிறிதும் புரியவில்லையே.. ? நாம் ஒண்ணும் ஊழலை ஒழித்திட யுத்தம் செய்திடும் புரட்சியாளர்களோ ; உலகிற்கு விடிவு கால சேதியினை அறிவிக்கும் தூதர்களோ அல்லவே !! காமிக்ஸ் எனும் ஒரு அழகான பொழுது போக்குக் கலையை ஆராதிக்கும் அடிமைகள் தானே நாம் எல்லாம் ?! இதில் நம்மிடையே இத்தனை வன்மம் வளர்த்துக் கொண்டிடத் தேவை தான் என்ன ?  

நம் இதழ்கள் வந்து கொண்டிருக்கும் போதும் சரி....நின்றிருந்த போதும் சரி.. என்னைப் பற்றி எழுந்திடும் பாராட்டுக்களோ ; பரிகாசங்களோ என்னை ஒரு போதும் பாதித்தது இல்லை ! ஏனெனில் நான் செய்து வருவது ஒரு glorified postman's job என்பதை ஒருக்கணமும் நான் மறந்திட்டதில்லை ! எங்கோ இருக்கும் சில திறமைசாலிகளின் கற்பனைகளில் உருவான படைப்புகளை புதியதொரு வடிவத்தில் உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பது மட்டும் தானே எனது contribution ! So பாராட்டுக்கள் என் தலைக்கு சென்றிட அனுமதித்திடாமல் இருப்பது எத்தனை சுலபமோ ; அத்தனை சுலபமே பரிகாசங்களை உதறித் தள்ளிடுவதும் ! 

எந்த ஒரு வேலை நாளின் போதும் எங்களது அலுவலகத்திற்கு வந்திடவோ ; நான் ஊரில் இருக்கும் பட்சத்தில் என்னை சந்தித்திடவோ உங்களில் யாருக்கும் தடைகள் என்றைக்குமே கிடையாதே ! பிரச்னைகளை...நிஜமான ஆதங்கங்களை என்னிடம் தெரிவிக்க நினைத்தால் செவி கொடுக்க நான் தயாரே ! தொலைபேசியில் அவ்வப்போது என்னை எட்டிப்பிடித்திட முயற்சிக்கும் நண்பர்களுக்குப் பெரும்பாலும் வெற்றி கிட்டிடுவதில்லை - simply because my job demands a lot of travel ! நான் ஏற்கனவே எழுதி இருந்தது போல - அச்சு இயந்திரங்களை இறக்குமதி செய்து...முழுமையாகப் புதுப்பித்து ; பின்னர் விற்பனை செய்திடுவதே நமது பிரதான தொழில். மிஷின்களைப் பார்வையிடும் பொருட்டு உலகெங்கும் பயணிப்பதும் ; பின்னர் அவற்றை விற்பனை செய்திட உள்நாட்டுக்குள் அலைந்திடுவதும் அவசியங்கள். So பெரும்பான்மையான சமயங்களில் ஆபிசில் நான் இருந்திடுவதில்லை என்பதால் உங்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு கவனம் செலுத்த இயலாது போகின்றது ! என்றைக்குமே நான் என்னை அவ்ளோ பெரிய 'அப்பாடக்கரா' நினைத்துக் கொண்டு ஒதுங்கி இருப்பதெல்லாம் இல்லை !  ! 

விஷ்வா ; ரகு ; டாக்டர் சதீஷ் ; சிங்கபூர் தயாளன் ; பிரகாஷ் மற்றும் சில வாசக நண்பர்கள் இவ்வருட சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நமது ஸ்டாலில் - நமது விற்பனைக்கு உதவிடும் நோக்கில் தத்தம் சொந்தப் பணிகளை விட்டுவிட்டு ஏராளமான உதவிகளை செய்திட்டனர் !  அதை நம் வாசகர்களின் ஆர்வமாய் நான் பார்த்திட்டேன் ......அதனையே அவர்களது ஆக்ரமிப்பாய் பார்த்திடவும் இயலும் என்பது இங்கே வந்து விழுந்திடும் சில பதிவுகள் சொல்லுகின்றன ! விஜயனோ...லயன் காமிக்ஸோ ...நிச்சயம் அத்தனை பெரிய brands அல்லவே...என்னோடு சேர்ந்திருப்பதால் அவர்கள் பெருமை தேடிக் கொள்ள நினைக்கிறார்கள் என்ற குற்றச் சாட்டு மெய்யாவதற்கு !! அந்த உதவிகளை உங்களில் யார் செய்திட முன்வந்தாலும் மலர்ந்த முகத்தோடு நாங்கள் வரவேற்போம் என்பதே நிஜம் ! அதே சமயம் மாறுபட்ட பார்வையில் சிலர் பார்த்திடுகிறார்கள் என்ற காரணத்துக்காக அன்பான வாசகர்களிடமிருந்து ஒதுங்கி நிற்பதும் தேவை அல்லவே !


CD  வடிவில் காமிக்ஸ்ளை யார் வாங்கி இருந்தாலும், அது பற்றிய முழு விபரங்களையும், ஆதாரங்களோடு எனக்குக் கொடுத்திட்டால் அதனை நிச்சயம் பரிசீலிப்பேன் ! வெறும் குற்றச்சாட்டுக்கள் சேற்றை வாரி தூற்றுவதற்குச் சமானமே ; அதில் எனக்கு எப்போதும் உடன்பாடு கிடையாது ! 

அப்புறம் ஒருவரது மதத்தைக் குறிப்பிட்டு பதிவு செய்வது மன்னிக்க முடியா..தரமற்ற செயல் ! அந்தப் பதிவை நான் விலக்கி விட்டதோடு - அந்த செயலுக்கு எனது மன்னிப்புகளை சமர்ப்பிக்கிறேன் ! இப்போது முதல் பெயரில்லா ; ஈ-மெயில் முகவரி இல்லா பதிவுகள் செய்திட இயலாது ! அதே போல் தரமற்ற பதிவுகள் வரும் பட்சத்தில் அவற்றை நான் அவ்வப்போது காலி பண்ணுவதாக உள்ளேன் ! 'ஜால்ரா மட்டும் தான் இங்கே அடிக்கணுமா?' என்று யாரேனும் நண்பர்கள் கேள்வி எழுப்பினால் - அதற்கான பதிலை நான் சொல்லிடத் தேவை இருக்கப் போவதில்லை- கேள்வி கேட்கும் நண்பர்களுக்கே பதிலும் நிச்சயம் தெரியும் என்ற காரணத்தினால் ! விமர்சனங்களையோ ; ஆக்கபூர்வமான சிந்தனைகளையோ கண்டு ஒதுங்கிடும் ஆசாமி அடியேன் அல்ல என்பது தெரிந்த ரகசியமே !  

Last but not the least -  அழகாய்...தரமாய் சென்று கொண்டிருக்கும் நமது இதழ்களின் புதிய பாதையும் சரி...இந்த வலைப் பதிவின் பயணமும் சரி....இது போன்ற சலசலப்புகளின் பொருட்டு நிச்சயம் சுணங்கிடவோ..தடைப்பட்டிடவோ செய்யாது ! எனது பணியும் சரி..பாணியும் சரி....ரொம்பவே diplomacyக்கு அவசியம் ஏற்படுத்திடும் சங்கதிகள் ! எல்லோரது ஈடுபாடும் அவசியமென்று எண்ணுவதால் உங்களின் கருத்துக்களுக்கு நிறையவே செவி சாய்ப்பேன்..! ஆனால் ஒரு முடிவு எடுத்திடும் போது அது நிச்சயம் அனைவரது அபிமானத்தையும் எனக்கு ஈட்டித் தந்திடுமென்று நான் நினைப்பதே இல்லை ! "திமிர் புடிச்சவன்..இஷ்டத்துக்கு முடிவெடுக்கிறான் பார் " என்று நினைக்கும் நண்பர்கள் நிச்சயம் இருக்கத் தான் செய்வார்கள் என்பது நான் அறிந்ததே !!! சமீபத்திய ரிப் கிர்பி & காரிகன் ஒய்வு பற்றி நான் செய்த அறிவிப்புக்கு வந்திட்ட mixed reactions அதற்கொரு சான்று ! ஆலோசனைகள் கேட்கிறேன் என்பதால் நான் மனதளவிலோ ; சிந்தனைகளிலோ பலவீனமானவன் என்ற கணிப்பு இருந்திடும் பட்சத்தில் அதனை துவம்சம் செய்திட ஒரு வாய்ப்பாகவே இந்தத் தருணத்தை நான் பார்க்கிறேன் ! 

நம் பயணம் தொடரும் நண்பர்களே...எப்போதும் போல்..உற்சாகமாய்..! ஆண்டவன் அருளும் ; உங்கள் அண்மையும் இருந்திடும் வரை வானமே நமக்கு எல்லை !  கடமையைச் செய்வோம் ; பலன்களை ஆண்டவன் தந்திடுவான் !! Take Care Folks ! 


220 comments:

  1. 'நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும்' எங்கள் தமிழ் தந்த வரம். அநாவசியச் சிந்தனைகளை விடுத்து எம் வழி நடப்போம் என்ற ஆசிரியரின் கூற்று வீண் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புவோம். நன்றி திரு.விஜயன்.

    ReplyDelete
  2. டியர் விஜயன் சார்.உங்கள் ஒவ்வொரு வார்த்தையிலும் சத்தியம் மிளிர்கிறது.இனியாவது வாசக நண்பர்கள் தரமற்ற பதிவுகளை தவிர்த்து ஆக்கபூர்வமான விமர்சனங்களை மட்டும் எழுதுவார்கள் என நம்புகிறேன்.ஒரு சிலரின் தவறான போக்கு நமது லயன் வாசகர்கள் அனைவருக்கும் வருத்தமூட்டகூடும்.எனினும் இந்த விசயத்தில் நீங்கள் நிதானம் தவறாமல் பொறுமையாக உங்கள் தரப்பு கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.ரிப் கிர்பி மற்றும் காரிகனுக்கு நீங்கள் கொடுத்த ஓய்வை புனித சாத்தான் வரவேற்கிறான்.மேற்படி தாத்தாக்கள் இனி நமக்கு தேவை இல்லை.லார்கோ விஞ்ச போன்ற இளம் புயல்களும் ,வனாந்தர மேற்கு (wild west)கௌ பாய்களும் மட்டும் இனி அடிக்கடி நமது லயனில் வந்தால் போதும்.

    ReplyDelete
  3. Saint Satan (பெயர் தேர்ந்தெடுக்க ரூம் போட்டு யோசிப்பீங்களோ ?!!)

    ரிப் கிர்பி & காரிகன் கதைகள் பற்றி சில நண்பர்கள் எழுதியதில் எனக்கு வருத்தமேதும் கிடையாது ! கடந்த ஐந்தாண்டுகளில் நாம் எத்தனை ரிப் கிர்பி கதைகளையும் ; காரிகன் கதைகளையும் வெளியிட்டு வந்திருக்கிறோம் என்று யாராவது புரட்டிப் பார்த்தாலே - இவ்விருவருமே ஏற்கனவே பாதி ஓய்வில் இருந்தவர்களே என்பது புரியும் ! 'மாற்றம் ஒன்று மட்டுமே நிரந்தரம் 'blah blah என்று தேய்ந்து போன டயலாக் விட மனசில்லை...! இன்னும் கொஞ்ச காலம் கழித்து நிச்சயம் ரிப் & காரிகன் கதைகளை மேற்கத்திய உலகில் remake செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது-Phantom கதைகள் புதுப் பொலிவுடன் வருவது போல..! So,காலத்துக்கேற்ற மாற்றங்களுடன் அவதாரமெடுக்கும் நண்பர்களை மறுபடியும் நம் வண்டியில் தொற்றிக் கொள்ளச் செய்தால் போச்சு !

    ReplyDelete
    Replies
    1. வேதாளர் கதைகள் இப்போது புதுவடிவில் வந்தாலும், முன்னர் இருந்த அந்த சீரான கதையோட்டமும் உயிருள்ள சித்திரங்களும் இப்போது மிஸ்ஸிங் என்பது எனது கருத்து. ஆசிரியர் என்ன நினைக்கிறார்?
      -Theeban (SL)

      Delete
  4. விஜயன் சார்,

    என் மனதில் ஓடிக்கொண்டு இருந்த எண்ணங்களை அப்படியே பிரதிபலித்தி இருக்கிறீர்கள். இனி வீண் சச்சரவுகளுக்கு, பிரிவினைவாதிகளுக்கும் இங்கே இடம் இல்லை தெளிவுபடுத்தி இருக்கறீர்கள். அப்பட்டமாக உண்மையையே பேசும் உங்கள் இந்த பதிவு எனக்கு ரொம்பவே பிடித்திருகிறது. பேச எனக்கு வார்த்தை வரவில்லை. நன்றி, நன்றி, நன்றி மட்டுமே.

    ReplyDelete
  5. Dear Editor & Staff,

    Well said Mr.Vijayan.really i started to worry about our bloggers way of hurting each other.
    hope we will be back on track with pure comics fun.

    Aldrin Ramesh from Oman

    ReplyDelete
  6. நெத்தியடி சார் ,நான் எனக்கு தெரிந்த illigal கலர் காமிக்ஸ் பிசினஸ் பற்றி எழுதி இருந்தேன் ,வாசகர்கள் ஏமாறகுடாது என்று . அதில் தவறாக எதாவது எழுதி ,அது உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் extremly sorry sir .

    ReplyDelete
  7. தவிர்க்க முடியாத இந்த மாற்றங்களை மனதார வரவேற்கிறேன்.

    அடுத்துள்ள லிங்க் நமது காமிக்ஸ் விற்பனைசார்ந்த விளம்பரம்: சென்னையில் இருக்கும் காமிக்ஸ் அன்பர்கள் கவனத்திற்கு: சென்னையில் காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்குமிடம்

    ReplyDelete
    Replies
    1. Sir chennai book stal mathiri anaithu oorkalilum periya book stal pidithu antha stal address namathu comicskalil veliyittal migavum payanullathaka irukkum!

      Delete
    2. நன்றி விஸ்வா!

      Delete
  8. Dear Vijayan,

    You're doing a wonderful job. You want to inform and involve the readers in your big decisions. That's our blessing.

    Thank You,

    by
    Boopathi L

    ReplyDelete
  9. ரிப் கிர்பி காரிகன் மன்றக் போன்ற கதைகள் முடுவிழ pana vandia கதைகள் தான்.

    ReplyDelete
  10. காமிக்ஸ்களின் காதலரான இயக்குநர் மிஷ்கின், 'முகமூடி' என்ற பெயரில் சூப்பர் ஹீரோ படத்தை எடுத்துவருவது நாம் அறிந்ததே!

    பொதுவாக ஆங்கில சூப்பர் ஹீரோ படங்கள் ஆரம்பிக்கும்போது மார்வல் போன்ற காமிக்ஸ்களை டைட்டிலில் காட்டுவது (அது அவர்களது பங்களிப்புடன் தயாரிக்கப்படும் படங்கள் என்பதால்) வழக்கம்.

    அதுபோல, 'முகமூடி'யில் நம்ம லயன், முத்து, திகில் காமிக்ஸ்களின் அட்டைகளை இயக்குநர் மிஷ்கின் காண்பித்தால் (ஆஹா.... கற்பனை நல்லாத்தான் இருக்கில்ல...?) எப்படி இருக்கும்? நடக்குமா?

    யாராவது நண்பர்கள் திரைத்துறையிலிருந்தால், அல்லது இயக்குநர் மிஷ்கினோடு தொடர்பிலிருந்தால் ஒரு வார்த்தை சொல்லிப்பார்க்கலாமே?

    -Theeban (SL)

    ReplyDelete
    Replies
    1. இந்த எனது அபிப்பிராயத்திற்கு பதில் கிடைத்தது. நன்றி. உத்தியோகபூர்வ அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறோம்.

      -Theeban (SL)

      Delete
  11. Thanks sir!
    nanka eppavum unka kooda irukkom!
    Nanparkale nam anaivarum onchaka sernthu COMICS valarppom varunkal...

    ReplyDelete
  12. காமிக்ஸ் நீ ஒருவன் தான் இருக்கிறாய் என்ற திமிரில் விஜயன் நீ இருக்கிறாய். உனக்கு பொறியாக சன் குரூப் காமிக்ஸ் வெலிட போவதாக எனக்கு தகவல்கள் வந்து விட்டுதது. லக்கி luke கேப்டன் பிரின்ஸ் ரேபோர்ட்டர் ஜானி போன்றா ஸ்டோரி வெரைவேல் குங்குமம் காமிக்ஸ் என்ற நேம்ல் வர போகிறது . அனைவரும் நல்ல காமிக்ஸ் வரவாப்போம்.

    ReplyDelete
    Replies
    1. முதலில் நல்ல மனிதராய் இருக்கப்பாரும் madavan . பிறகு மற்றவற்றைப் பார்க்கலாம். :(

      Delete
    2. madavan : இது எனக்குப் புதையல் சம்பாதித்துக் கொடுக்கும் துறையும் அல்ல...இதிலிருந்து நான் பெருமை சேர்த்து அடுத்த தேர்தலுக்கு நிற்பதாக உத்தேசமும் இல்லை ! இரண்டில் ஒன்று நிஜமாக இருந்தால் தானே நான் இன்னொரு நிறுவனம் காமிக்ஸ் தொடங்குவதைப் பற்றி கவலை கொண்டிட அவசியம் நேரும் ! எத்தனை பேர் வந்திட்டாலும் படித்திட வாசகர்களும் உண்டு ; பெற்றிடக் கதைகளும் உண்டு ! More the merrier !

      Delete
    3. சன் குழுமம் நீங்கள் சொன்னது போல காமிக்ஸ் வெளியிட்டால் மகிழ்ச்சியே. தரமானதாக இருப்பின், அதையும் வாங்கிப் படிப்போம். ஆதரிப்போம்.

      Delete
    4. நெத்தி அடி விஜயன் சார்! சில பேர் எவ்வளவு பொறுமையாக மற்றும் அமைதியாக சொன்னாலும் கேட்பதில்லை. ம்ம் என்ன செய்வது!

      Delete
    5. நல்ல கற்பனை நண்பர் மாதவன் அவர்களே நீங்களும் ஒரு நாள் மாறுவீர்கள் நன்றி

      Delete
    6. சரி அதுக்கு இப்போ
      என்னான்றீங்க?!! Mrமாதவன்?!!

      Delete
  13. Madhavan sir varthaikalil kanniyam vendum!
    kunkumam comics mattum alla tamilil entha comics vanthalum namakku santhosame varaverpom...

    ReplyDelete
  14. madavan என்ற பெயரை mad avan என்று படிக்கவும்.பைத்தியம் அவன்.வெயில் அதிகமாகி இருப்பதால் மெண்டல் ஆகி விட்டார் போலும்.புனித சாத்தானின் கடும் கண்டனத்தை mad அவனுக்கு தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. விடுங்கள் saint satan, அவர்தான் புரிதலின்றி பதிவிடுகிறாரென்றால் நாமும் அவர் வழியில் வார்த்தைகளைக் கொட்ட வேண்டாமே.....

      அவர் பதிவுகளைக் கண்டு கொள்ளாமல் விடுவதே அவருக்கு நல்ல பதிலாகும் என்பது என் கருத்து.

      Suganthan P

      Delete
  15. Editor Sir this was a wonderful article. வலைபூவினில் இதுமாதிரியான அனானி சங்கதிகள் தொடர்ச்சியாக நடந்து வரும் ஒன்றே. Never care about this.

    காமிக்ஸ் படிப்பது, லயன் மற்றும் முத்து காமிக்ஸ் மட்டும் படிப்பது என இரண்டுமே வெவ்வேறு சங்கதிகள். இதில் நான் இரண்டாம் வகை. உலகத்தில் எத்துனையோ காமிக்ஸ் வந்துள்ளது, வந்துகொண்டுள்ளது, இனிமேலும் வரும். ஆனால் எனக்கோ அல்லது என்னைபோன்றவர்களுக்கோ உலகமே லயன் மற்றும் முத்து காமிக்ஸ் மட்டும் தான்.

    நமது வெளியீடுகள் எனக்கு பிடித்தால் மீண்டும் மீண்டும் படிப்பேன். பிடிக்கவில்லை என்றால் ஒருமுறை படிப்பேன். சில சமயங்களில் படித்தால் உடனடியாக புத்தகம் முடிந்துவிடுமே என்று கையில் வைத்து வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தது கூட உண்டு. இது ஒரு காதல், அல்லது வெறி எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம். என்னிடம் வந்த நமது இதழ்களை யாருக்குமே நான் படிக்க கொடுத்ததில்லை.

    இப்பொழுது இந்த வலைப்பூ உங்களிடம் இன்னும் கொஞ்சம் நெருங்கி பழக , கருத்துகளை பகிர்ந்துகொள்ள ஒரு எளிமையான வாய்ப்பாக மட்டுமே நான் பார்கிறேன்.

    You know still I haven't made my choice for the top20. டிராகன் நகரம் படிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய ஆசை. உங்களது தேர்வினில் முதலாவதாகவே அக்கதை வந்தபடியால், எப்படியும் அக்கதை படிக்க கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. இன்று மட்டும் அல்ல, பல சமயங்களில் உங்களது எண்ண அலைகள் எனது ரசனையுடன் ஒன்றிபோயுள்ளது. may have some exceptions like, கருப்புகிழவி உள்ளே வருவது, ரிப் வெளியேறுவது.

    Suggestions differs entirely from making decisions. Up to me you are the end point and we are with you till our last breath.

    And by the way Mr.Madavan convey my best wishes to kungumam comics. :)

    ReplyDelete
  16. விஜயன் சாரின் வார்த்தைகள் தெள்ளத் தெளிவான ஒரு காமிக்ஸ் வாசகனின் மனதை காட்டுகின்றன. தொடருங்கள் உங்கள் பணியை!

    ReplyDelete
  17. ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு , தயவுசெய்து , மாதவன் போன்றவர்களுடைய நாகரீகமற்ற பதிவுகளை நீக்கிவிடவும் , உங்களின் நோக்கம் , செயல் ,போன்றவற்றின் நேர்மையை , வாசகர்களாகிய நாங்கள் அறிவோம் . இதுபோன்றவர்களின் , அர்த்தமற்ற , வயிற்றெரிச்சல் தாக்குதல்கள் , தங்களின் பதிகளுக்கோ , தன்னிலை விளகங்கலுகோ தகுதிஅற்றவை . இதுபோன்றவர்களின் , பைத்தியக்கார பதிவுகளுக்கு பின்னணியில் ஏதேனும் உண்மை இருக்குமோ என்று எண்ணுபவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கடந்த இரண்டாயிரத்து பத்தாம் வருடம் டிசம்பர் மாதம் குங்குமம் இதழில் ஆசிரியரின் பேட்டி கவர் ஸ்டோரி யாக வந்த போதே அவரிடம் இந்த தகவல் தெரிவிக்க பட்ட போது, மிகுந்த மகிழ்வுடன் வரவேற்று பேசினார் . ஆனால் குங்குமம் குழுமம் வெளியிட நினைத்திருந்தது , சுட்டி விகடன் போன்ற சிறுவர் இதழே வொழிய காமிக்ஸ் அல்ல , மேலும் அந்த திட்டமும் கைவிடப்பட்டுவிட்டது . மேலும் எதன்னை புது காமிக்ஸ் வந்தாலும் இதுவரை ஆசிரியர் செய்துருக்கும் சேவையை , சாதனையை , யாரும் மறக்கவோ ,மறுக்கவோ முடியாது.
    ஆதங்கத்துடன்
    -ரகு

    ReplyDelete
  18. காமிக்ஸ் வெளியிட பணம் மட்டும் போதாது.கூடவே நிறைய உலக அறிவும்,காமிக்ஸ் பற்றிய ஆழ்ந்த தெளிவும் தேவை.அது இல்லாவிட்டால் அம்முயற்சி பெரிய வெற்றி பெற்று விடாது.தமிழக வரலாற்றில் நிறைய காமிக்ஸ் முயற்சிகள் பெரும் தோல்வியையே சந்தித்துள்ளன.ஆனால் நமது முத்து,லயன் காமிக்ஸ்கள் நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றி நடை போடுகிறதென்றால் அதற்க்கு காரணம் மரியாதைக்குரிய பெரியவர் திரு .சௌந்தர பாண்டியன் அவர்களும் ,மரியாதைக்குரிய எங்கள் எடிட்டர் விஜயன் அவர்களும் ,காமிக்ஸ் குறித்த ஆழ்ந்த ஞானம் கொண்டவர்கள் என்பது தான்.இந்த ஞான தெளிவு சன் மற்றும் குங்குமம் குழுமத்தினருக்கு கண்டிப்பாக இராது.அவர்களின் மைய நீரோட்ட பத்திரிக்கைகள் சினிமா ,அரசியல் ,மற்றும் கிரிக்கெட் ஆகிய விசயங்களில் மட்டுமே சாமர்த்தியம் கொண்டவை.காமிக்ஸ் என்பதோ அறிவு ஜீவிகள் சமாசாரம்.இவற்றில் அனுபவம் இல்லாத யாரும் வீண் முயற்சிகளில் இறங்கினால் அது நிச்சயம் தோல்வியில் தான் முடியும்.ஆனானப்பட்ட தினத்தந்தி குழுமத்தினரே ராணி காமிக்ஸை தொடர்ந்து நடத்த முடியாமல் நிறுத்தி விட்டனர்.இந்நிலையில் மற்றவர்கள் காமிக்ஸ் ஆரம்பிக்கிறோம் பேர்வழி என்று கிளம்புவது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட கதையாகி விடும்.வடிவேலு காமெடி போல் சொன்னால் "அதற்க்கு இவர்கள் சரிப்பட்டு வரமாட்டார்கள்".

    ReplyDelete
  19. saint satan : உங்களின் பதிவில் சில விஷயங்களில் நான் சற்றே மாறுபட்ட கருத்துக் கொண்டவனாய் இருக்கின்றேன் ! காமிக்ஸ் நடத்திட நம்மால் தான் முடியும் என்று சொல்லுவது நிச்சயம் இறுமாப்பானதொரு கருத்தாகவே இருந்திடும் !

    சன் குழுமம் என்ன செய்தாலும் அதில் நிச்சயம் சிறப்பிருக்கும் என்பது தமிழகம் அறிந்த உண்மை ! அதே போல பத்திரிகைத் துறையின் ஜாம்பவான்களான தினத்தந்தி குழுமமும் சாதிக்காத உயரங்கள் எதுவுமே கிடையாது ! நான் என்றைக்குமே அவர்களை நமக்குப் போட்டியாகக் கருதியதே கிடையாது - for the simple reason that - அவர்கள் ஆடுவது சேப்பாக்கம் மைதானத்தில்...நாம் ஆடுவதோ நமது தெரு முனையில் !! இரண்டுமே கிரிக்கெட் தான் என்ற போதிலும் களங்கள்..விதிகள்..ஆட்ட முறைகள் எல்லாமே மாறுபட்டவை !

    காமிக்ஸ் என்பது ஒரு வெகு ஜன ரசனையாக நம் தமிழகத்தில் வளர்ந்திடவில்லை என்றே ஒரே காரணத்தால் தான் பத்திரிகை உலக பெருந்தலைகள் இதனில் அதீத நேரமோ..சிந்தனையோ செலுத்திட முனையவில்லை ! So இது அவர்களின் ஆற்றலுக்கோ ; அறிவுக்கோ அப்பாற்பட்ட சமாசாரம் என்று நாம் நினைத்திடுவது - பூனை கண்ணை மூடிக் கொண்டு 'இங்கே ஒரே பவர் கட்'-ன்னு மியாவிப்பதற்கு சமானமாகும் !

    நம் இதழ்களின் மீது நீங்கள் கொண்டுள்ள அபரிமிதக காதல் உங்களை இவ்விதம் நினைக்கச் செய்திருக்கின்றது என்பது புரிகின்றது ! But - நடுநிலையான பார்வை நிச்சயம் உங்கள் கருத்தினை ஏற்றுக் கொண்டிடாது !உங்களின் அதீத அன்பிற்கும், அபிமானத்துக்கும் எங்களது நன்றிகள் என்றைக்கும் உண்டு !

    ReplyDelete
    Replies
    1. >>>பூனை கண்ணை மூடிக் கொண்டு 'இங்கே ஒரே பவர் கட்'-ன்னு மியாவிப்பதற்கு சமானமாகும் ! <<<
      Wow! :)

      Delete
    2. சன் குழுமம் எல்லா துறைகளிலும் வெற்றி பெற முடியாது. சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்-ல் மட்டுமே சோபிக்க முடியும். மற்ற விளையாட்டுகளை அவர் விளையாடலாம். எல்லா விளையாட்டுகளிலும் சோபிப்பது கடினம்.

      அவரவர்களுக்கு காலம் நேரம் இடம் உள்ளது. இந்த காலகட்டத்தில் தமிழ் காமிக்ஸ் உலகில் நீங்கள்தான் ஜாம்பவான். இது மறுக்கமுடியாத உண்மை. மற்றவர்கள் இனிமேல் முயன்று பார்க்கட்டும்.

      Delete
  20. சன் அல்லது வேறு ஒரு பெரிய பத்திரிக்கை குழுமம், காமிக்ஸ் தொடங்கினால், அது நல்லதே. அதன் மூலம் காமிக்ஸ் பற்றிய புரிதல் தமிழக மக்களுக்கு அதிகமாகும். அது கண்டிப்பாக லயன், முத்து காமிக்ஸ்களுக்கு விளம்பரமாகவே அமையும். மறுபடியும் ஒரு காமிக்ஸ் பொற்காலம் ஆரம்பித்தால், காமிக்ஸ் பிரியர்களான நமக்குக் கொண்டாட்டமே.

    ReplyDelete
  21. Cheer up guys! உங்களது சோக பின்னூட்டங்கள் அயர்ச்சியையும், மன இறுக்கத்தையும் ஏற்படுத்துகின்றது!!! உங்களுக்காக ஒரு ஸ்பெஷல் பதிவு:

    நண்பேண்டா...! - பகுதி 1 - தமிழ் காமிக்ஸுகளில் நட்பு!"

    ReplyDelete
  22. நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
    நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
    குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
    இணங்கி இருப்பதுவும் நன்று.

    தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
    தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
    குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
    இணங்கி இருப்பதுவும் தீது.
    -ஔவையார்

    தீயார்க்கு எதற்கு பதில். காமிக்ஸ் கலாட்டா மட்டுமே இங்கு.

    ReplyDelete
  23. 40,000 கடந்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.

    ஒரு சின்ன அபிப்பிராயம். 'ஆட்சென்ஸ்' போன்ற ஏதாவதொன்றை இணைத்து அதன்மூலம் கிடைக்கும் (சிறியதாக இருந்தாலும்) வருவாயை எமது காமிக்ஸ்களை விளப்பரப்படுத்த உபயோகிக்கலாமே! (கொஞ்சம் ஓவராகவே போயிருந்தால் மன்னிக்கவும்)

    -Theeban (SL)

    ReplyDelete
    Replies
    1. நல்ல யோசனை நானும் பலமுறை நினைத்தது உண்டு . நமது இதழில் ஏன் விளம்பரங்கள் போடகூடாது ? முயற்சித்து பார்க்கலாமே ! .

      Delete
  24. Replies
    1. அத்தனை தடவை இந்த வலைதளத்தில் உள்ள பக்கங்கள் வாசகர்களால் திறக்கப்பட்டுள்ளன! 40000 வாசகர்கள் இருக்கிறார்கள் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது! ஒரே வாசகர், ஒரு பதிவை பத்து தடவை திறந்து பார்த்தாலும், அவை பத்து "Hits" ஆக கணக்கில் கொள்ளப்படும்! என்னையும் சேர்த்து, சில வாசகர்கள் புதிய பின்னூட்டங்கள் வந்திருக்கிறதா என்ற ஆர்வ கோளாறு காரணமாக பக்ககங்களை அடிக்கடி "Reload" செய்வது வழக்கம் என்பதால் இது ஒரு தோராயமான எண்ணிக்கையே!

      Delete
    2. Ippo puriyuthu nan thinam 5 muthal 10 varai...

      Delete
  25. நண்பர்களே

    ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும், மற்றவர்கள் பணம், லாபம் ஒன்றையே குறிக்கோளாககொண்டு தமிழில் காமிக்ஸ் நடத்தியவர்கள். அதை ஒரு தொழிலாக செய்தவர்கள். லாபம் வரும்போது சந்தோஷமாகவும், நஷ்டம் வந்தபின்னர் ஐயோ கசக்கிறதே என்று கடையை மூடிவிட்டு சென்றவர்கள். இனி புதிதாக வருபவர்களும் இதே எண்ணத்திலேயே வருவார்கள் வழக்கம்போல்...

    விஜயன் சார் மட்டுமே காமிக்ஸ் யை ஒரு தொழிலாக செய்யாமல், ஒரு கலையாக யாம் பெரும் காமிக்ஸ் எனும் இன்பம் மற்றவர்களும் பெறட்டும் என்ற ஈடுபாட்டுடன் செய்தார், செய்துகொண்டு இருக்கிறார், இன்னும் தொடர்ந்து செய்வார் என்று நம்புகிறேன். இது அவர் காமிக்ஸ் மீது கொண்ட அளப்பறியா காதலால்தான் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. ஒரு சின்ன உதாரணம் : வெறும் 1500 புத்தகங்களுக்கு வெறும் 200 விலையாக நிர்ணயித்து அதற்காக மூன்று ஆண்டுகளுக்குமேல் பல புரளிகளுக்கு மத்தியில் தன உழைப்பை கொடுத்து, விலையை நிர்ணயித்து விட்டோம் என்பதற்காக, தாறுமாறாக விலைவாசி ஏறிஇருந்த சமையதிலும் விலையை கூட்டாமல் சொன்ன விலைக்கே புத்தகத்தை வெளியிட்டார் என்றால், அவருடைய காமிக்ஸ் காதலை சற்று எண்ணிப்பாருங்கள் நண்பர்களே. இதில் என்ன லாபம் ஈட்டியிருப்பார், தயாரிப்பு செலவிற்கே போதியிருக்காது என்று எண்ணுகிறேன். இதை மற்றவர்களால் செய்யத்தான் முடியுமா.

    எனவே விஜயன் அவர்கள், தமிழ் காமிக்ஸ் வரலாறு தெரியாத அறைவேக்காட்டுதனமான பதிவுகளுக்கு எல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன்.

    என்னுடைய கவலை எல்லாம், எங்கே விஜயன் சார் ஒரு சிலரால் வெறுத்துபோய் " ச்சே இவனுங்களுக்கெல்லாம் காமிக்ஸ் வெளிஇடுகிறோம் பார், போங்கப்பா என் மெயின் பொழப்புக்கே நேரம் போதவில்லை " என்று நினைத்து விடுவாரோ என்கிற பயம் ஒன்றே.

    இதை சில புண்ணாக்குகள் ஜால்ரா என்று எடுத்துகொண்டாலும் எனக்கு கவலை இல்லை. என் மனதில் பட்டதை கூறினேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. arumaiyana vaarthaigal nanbare super star vijayan sir mattume

      Delete
  26. ச்சே... எங்க சிங்கத்தோட தலையையே சீப்பால வாரி பார்க்குறாங்களே? :-(

    ReplyDelete
  27. 1. அனானி கமெண்டுகளை தடுத்தது ஒரு நல்ல விஷயம். தன்னுடைய தொழில் சம்பந்தமான விஷயங்களிலும் சரி, தன்னுடைய கருத்துக்களிலும் சரி ஆசிரியரின் boldness வியக்க வைக்கிறது.

    2. //நாம் ஒண்ணும் ஊழலை ஒழித்திட யுத்தம் செய்திடும் புரட்சியாளர்களோ ; உலகிற்கு விடிவு கால சேதியினை அறிவிக்கும் தூதர்களோ அல்லவே !! காமிக்ஸ் எனும் ஒரு அழகான பொழுது போக்குக் கலையை ஆராதிக்கும் அடிமைகள் தானே நாம் எல்லாம் ?! இதில் நம்மிடையே இத்தனை வன்மம் வளர்த்துக் கொண்டிடத் தேவை தான் என்ன ?//

    மிக முக்கியமான, ஆழமான வரிகள்...

    ReplyDelete
  28. ஒரு வழியாக தலை வாங்கிக் குரங்கு வந்து சேர்ந்துவிட்டது. மற்றவர்களெல்லாம் சாத்தனின் தூதன் டாக்டர் செவன் படித்துக்கொண்டிருக்கும்போது நான் தலை வாங்கியை படித்துக்கொண்டிருக்கிறேன். :-( கனவுகளின் காதலன் (பிரான்ஸ்) கேட்டுக்கொண்டதைப்போல் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு முதலில் அனுப்ப முயற்சி செய்யலாமே.:-) குறைந்தபட்சம் உள்ளூரில் இருப்பவர்களுக்கும், வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் ஒரே சமயத்தில் கிடைக்கிரமாதிரியாவது பார்த்துக்கொள்ளுங்களேன்.

    ரபிக் இந்த அட்டைப்படம் பற்றி கமெண்ட் பகுதியில் குறிப்பிட்டதில் இருந்து கொஞ்சம் நெகடிவ் ஆகத்தான் எதிர்பார்த்தேன்.ஆனால் அட்டைப்படம் உங்கள் இணையதளத்தில் பார்த்ததை விட நன்றாக இருக்கிறது. பின் அட்டையில் டிஜிட்டல் படத்தை உபயோகித்திருப்பீர்கள் போலிருக்கிறது. தெளிவாக இல்லை.

    அட்டை மற்றும் உள்பக்கங்களுக்கு உபயோகித்த பேப்பர் அருமையாக இருக்கிறது, சர்வதேச தரத்தில். காமிக்ஸ் மொத்தமுமே சர்வதேச தரத்தில் இருக்கிறது என்று சொல்ல ஆசைதான், இருந்தாலும் சில குறைகள் அதனை தடுக்கிறது.

    முதலாவது படங்கள். மொத்தமாக ஓவியங்கள் எல்லாம் உயரமாகி விட்டது. படத்தை ஒரிஜினலில் இருந்து இந்த சைசுக்கு மாற்றும்போது அகலத்தை மட்டும் குறைத்துவிட்டு உயரத்தை அப்படியே வைத்துவிட்ட மாதிரி இருக்கிறது. முதன்முறையாக பார்பவர்களுக்கு வித்தியாசம் தெரியால் இருக்கலாம், ஆனால் ஒரிஜினல் கதையை படித்தவர்களுக்கு இதனை பார்ப்பது கொஞ்சம் விளக்கெண்ணெய்தான்.

    இரண்டாவது லெட்டரிங். புதிதாக செய்ததும், ஒரிஜினலில் இருந்ததும் கலந்துகட்டி ஒரு மார்க்கமாக இருக்கிறது. குறிப்பாக முதலில் உங்கள் ஹாட்லைன் தரமான பிரிண்டில் படித்துவிட்டு கதைப்பக்கங்களை பார்த்தால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

    அடுத்தது ஸ்கேன் குவாலிடி. பல இடங்களில் வளைந்து நெளிந்து இருக்கிறது, மழையில் நனைந்த ஒரிஜினல்களை உபயோகித்தமாதிரி,

    கடைசியாக பின்னுக்கும், படங்களுக்கும் உள்ள இடைவெளி. ஒரு சில பக்கங்களில் ஓவியங்கள் பின் உபயத்தால் சரியாக பார்க்க முடியவில்லை. படங்களை கொஞ்சம் பக்கங்களின் ஓரத்திற்கு(வெளிப்புறமாக) நகர்த்தினால் நன்றாக இருக்கும்.

    இன்னொரு வேண்டுகோள் : என்னதான் நீங்கள் டெக்ஸ் வில்லரை வண்ணத்தில் கொண்டுவருவது கடினம் என்றுகூறினாலும், ஒரு புத்தகமாவது வண்ணத்தில் கொண்டுவந்து முயற்சி செய்து பார்க்கலாமே? குறைந்தபட்சம் ஒரு நான்கு பக்கங்களை வண்ணத்திலும், கருப்பு & வெள்ளையிலும் அடுத்து வரும் புத்தகத்தில் வெளியிட்டு வாசகர்களின் கருத்தை கேட்கலாமே, ப்ளீஸ்? ப்ளீஸ்? ப்ளீஸ்?

    நமது சிங்கம் சர்வதேச தரத்தை தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கிறது. இந்திய விலையில், சர்வதேச தரத்தில் கூடியவிரைவில் வரும் சிங்கத்தின் பதிப்புகள் இருப்பதற்கு இது ஒரு முக்கிய படிக்கல்லாகவே இந்த இதழை பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. >>>மற்றவர்களெல்லாம் சாத்தனின் தூதன் டாக்டர் செவன் படித்துக்கொண்டிருக்கும்போது நான் தலை வாங்கியை படித்துக்கொண்டிருக்கிறேன். :-( <<<
      வெறுப்பேற்றாதீர்கள்! பெங்களூரில் இருந்து கொண்டு எனக்கு இன்னும் தலையே வந்து சேரவில்லை :(

      Delete
    2. கார்த்திக் என்ற பேருக்கெல்லாம் அனுப்பமாட்டங்களோ...
      எனக்கும் இன்னும் தலையே வந்து சேரவில்லை
      anyway எனக்கும் ஒரு partner இருக்கார் :)

      Delete
    3. நாகராஜன் என்று பெயர் வைத்தாலும் கூட அனுப்ப மாட்டார்கள் போல பாஸ் :)

      எனக்கும் இன்னும் வரலை ....

      Delete
    4. எனக்கும் இன்னும் வரவில்லை. எடிட்டர் சொன்னது போல மெயில் அனுப்புங்கள். நானும் அனுப்பியிருக்கிறேன்.

      Delete
    5. Dear MuthuFan,

      You are lucky. It takes minimum two months for the books to reach me here in the US. I can see from the messages stamped on the package, the Indian customs takes about 45 days to clear it to go to the US. Once it reaches the US, I usually get the book in a week. Sometimes it takes more than three to four months from the date posted in Sivakasi to the date I receive the package (Jolly special & XIII Jumbo special took more than three months).

      Delete
  29. Hai firends enakku sathanin thoothan
    DR 7 vanthu vittathu
    ippo padikka poren
    (perumoochu vidatheenka )

    ReplyDelete
  30. //Hai firends enakku sathanin thoothan
    DR 7 vanthu vittathu
    ippo padikka poren
    (perumoochu vidatheenka )//

    சென்ற வாரம் வியாழன் அன்று மதியம் எனக்கு வீட்டில் இருந்து ஒரு போன்: சிவகாசியில் இருந்து ஏதோ ரெண்டு புத்தகங்கள் (தலை வாங்கி + சாத்தனின் தூதன்??????????) வந்து இருக்கிறது என்பதே அதன் சாராம்சம். வழக்கமாக இப்படி ஏதாவது புத்தகம் வந்தால், உடனடியாக லீவு போட்டுவிட்டு வீட்டிற்கு சென்று படித்து விடுவேன்.

    அன்று பார்த்து எனக்கு ஏகப்பட்ட வேலைகள் இருந்ததால் உடனடியாக கிளம்ப முடியவில்லை. பிறகு வீட்டில் போன் செய்து அம்மாவிடம் "அது என்ன புக் என்று கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள்" என்று சொன்னால் ஸ்டாண்டர்ட் ஆக வந்த பதில்: "போடா, உனக்கு வேற வேலையே கிடையாது".

    சரி, அந்த புத்தகங்களாகவே இருக்கும் என்று இரவு வரை நினைத்துக்கொண்டே சென்றால்,








    வந்தவை "கொலைகாரக் கலைஞன்" மற்றும் "விண்ணில் ஒரு குள்ளநரி" சந்தா புத்தகங்கள்.

    ReplyDelete
  31. மை டியர் மானிடர்களே.இந்த சாத்தானுக்கே இன்னும் தலை வாங்கி குரங்கு வந்து சேரவில்லை.என்ன கொடுமை சார் இது .

    ReplyDelete
  32. ஒரு மூணு நாள் ஈஸ்டருக்கு லீவ் விட்டுட்டேன் அதுக்குள்ளே இம்மாம் நிறைய கும்மாங் குத்துக்கள் நானும் இருக்கேன் சாமி எங்க சார் வெல்வார் கடவுள் கஷ்ட படும் மனிதர்களுக்கு நிச்சயம் வெற்றி கொடுப்பார் நலம் வாழ்க வளமுடன் நல்லதே வெல்லும் அன்பே சிவம் சத்யம்

    ReplyDelete
  33. டியர் friends ,தலை வாங்கி இன்றுதான் கிடைத்தது .பேப்பர் சூப்பர் quality ,but pictures ரொம்ப சுமார் ,next மறு பதிப்பில் இந்த குறைகளை களை ந்தால் மிகவும் நன்றாக இரூக்கும்.அனைவரும் எதிர்பார்ப்பது போல் ஒரு டெக்ஸ் கதை யாவது கலர் ல் வந்தால் சூப்பர் ஆக இரு க்கும்.எடிட்டர் தான்மனது வைக்க வேண்டும் .ஆனால் நம் ஆட்கள் டெக்ஸ் கலர் ல் வந்தால் tiger (எ )ப்ளுபெர்ரி யும் கலர் ல் கேட்பார் களே என்ன செய்வது ?

    ReplyDelete
  34. விஜயன் சார்,

    எனக்கு இன்னும் தல வாங்கி குரங்க்கு மற்றும் சாத்தனின் தூதன் டாக்டர் செவன் வந்து சேரவில்லை.

    சீக்கிரம் அனுப்பி வைக்கவும்,


    மேலும் சில பழைய புத்தககங்கள் வேண்டி உங்களது யாஹூ மெயில் முகவரிக்கு மெயில் அனுப்பி உள்ளேன். அந்த புத்தகங்களையும் உடனடியாக அனுப்பி வைக்கவும்


    ரூபாய் ஐநூறு சந்தா முதலிலேயே கட்டி உள்ளேன். இன்னும் எவ்வளவு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடவும்,


    நாகராஜன்

    ReplyDelete
  35. கௌ பாய் கதைகள் கலரில் வெளியிட்டால் நன்றாக இராது என்பது என் அபிப்ராயம்.லக்கி லுக்,சிக்பில் போன்ற கார்டூன் கௌ பாய்களுக்கு வேண்டுமானால் கலர் பொருந்தும்.அதிரடி ஆக்சன் கௌ பாய்களுக்கு கலர் நன்றாக இராது.19 ஆம் நூற்றாண்டு கௌ பாய்கள் கருப்பு வெள்ளையில் வந்தால்தான் நன்றாக இருக்கும்.ஆனால் இன்றைய ஐரோப்பிய காமிக்ஸ்கள் முழுக்க கலர்களிலேயே வெளியிடப்படுவதால் நாமும் அதையே பின்ப்பற்ற வாசகர்கள் ஆசை படுகிறார்கள்.இது குறித்து எடிட்டர் அவர்கள்தான் இறுதி முடிவு எடுக்கவேண்டும்.

    ReplyDelete
  36. ரிப்: என்ன, ரொம்ப சோகமாய் இருக்கமாதிரியிருக்கு?
    காரிகன்: நம்மள கழற்றி விட்டுவிட்டார்கள்.?
    ரிப்: உன்னை மட்டுமா என்னையும்தான்..!
    காரிகன்: அதுசரி!
    ரிப்: பலப் பேருடைய ஆதரவு இருந்தும் வேலைக்கு ஆகலையே...
    காரிகன்: தான் புடிச்ச முயலுக்கு மூணு காலு...(மெதுவாக)
    ரிப்: என்ன எதோ முணுமுணுக்கிற மாதிரியிருக்கு...?
    காரிகன்: ஒண்ணும் இல்ல, ஒரு பழமொழி ஞாபகம் வந்துச்சி!
    ரிப்: ம்ம்ம்
    காரிகன்: இவங்க நம்மள தூக்குறதுக்கு நாமலே ஏன் ரிடையர்மென்ட் லெட்டர் கொடுக்க கூடாது?
    ரிப்: நானும் அதான் யோசனை பண்றேன்!
    காரிகன்: சரி, வளவள என்று பேசிக்கிட்டு இல்லாமே, நீ desmond யுடன் சேர்ந்து நம்மள ஏன் கழற்றி விட்டாங்கன்னு ஒரு ரிப்போர்ட் ரெடி பண்ணு...?
    ரிப்: சரி, நான் அந்த வேலையாவது பாக்குறேன்!
    காரிகன்: ஓகே, பை
    ரிப்: see you soon

    ReplyDelete
  37. டாக்டர் சுந்தர் (சேலம்) :
    கேப்டன் டைகர் : எல்லா கதைகளுமே வண்ணத்தில் வந்தவை தான், அதனால் அவற்றை வண்ணத்தில் பதிப்பிப்பது சுலபம்தான். ஆசிரியர் முன்னரே சொன்னபடி "வண்ணத்தில் வந்ததை வண்ணத்தில்தான் இனி பதிப்பிப்போம்", கேப்டன் டைகரை பொறுத்தவரை சாத்தியமே.
    செயின்ட் சாத்தான் :
    ஆச்ஷன் கவ்பாய் கதைகளை நீங்கள் முடிந்தால் வண்ணத்தில் டவுன்லோட் செய்து படித்து பாருங்கள், குறிப்பாக கேப்டன் டைகர் கதைகளை. குறிப்பிட்டு சொல்வதென்றால் மின்னும் மரணம் அல்லது தங்கக்கல்லறை. பஞ்ச் டயலாக் பாணியில்வேண்டுமென்றால் இதோ:

    தமிழில் படிப்பது(மின்னும் மரணம்/தங்கக்கல்லறை) : ஒரு நல்ல கதை/என்டேர்டைன்மென்ட்
    கருப்பு & வெள்ளையில் - உயர் தர பேப்பரில் : ஒரு நாடகத்தை முதல் வரிசையில் அமர்ந்து பார்ப்பது போல்.
    வண்ணத்தில்(உயர் தர பேப்பரில்) : கதையின் உள்ளே போய் ஒரு கதாபாத்திரமாக மாறுவது.

    ReplyDelete
    Replies
    1. மிக சரி! கிளின்ட் ஈஸ்ட் வுட்டின் கிளாசிக் வெஸ்டர்ன் படங்களை கருப்பு வெள்ளை திரையில் பார்த்தால் எப்படி அதை முழுதாய் அனுபவிக்க முடியாதோ, அதே போல்தான் இதுவும்!

      Delete
  38. தலை வாங்கியார் இன்றாவது வருவாரா?சோகத்துடன் புனித சாத்தான்.

    ReplyDelete
    Replies
    1. நேற்றும் இன்றும் அலுவலக விடுமுறை. அதனால் சாத்தியமில்லை என்ற நினைக்கிறேன். உங்களுக்கு வந்த உடன் இங்கு தகவல் தரவும் :)

      Delete
  39. ஊரில் எங்கள் வீட்டிற்கு தலை வாங்கியார் வந்து விட்டாராம். ஆனால் நான் மூன்று வாரங்கள் கழித்துதான் ஊருக்கு போகையில் தான் படிக்க வேண்டும்.
    என்ன கொடுமை சார் இது....

    ReplyDelete
  40. நிறைய நண்பர்களுக்கு புத்தகங்கள் கிடைக்கவில்லை என்று தெரிகிறது (என்னையும் சேர்த்துதான்). இதற்க்கு எடிட்டர் ஆவணசெய்வார் என்று நம்புகிறேன். லயன் அலுவலகத்துக்கு இன்று விடுமுறை (திருவிழா) என்பதால் நாளை நான் கண்டிப்பாக போன் செய்து விசாரிக்கபோகிறேன். தமிழ்நாட்டிற்குள் இவ்வளவு தாமதம் ஆகுமா என்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. பார்ப்போம் எடிட்டர் என்ன சொல்லபோகிறார் என்று - எடிட்டர் கண்டிப்பாக reply பண்ணுவார் என்ற நம்பிக்கையில்.

    ReplyDelete
    Replies
    1. sorry sir ,
      எனக்கு புக் வந்துவிட்டதாக இப்போதான் வீட்ல இருந்து phone வந்தது.
      நன்றி

      Delete
  41. உலக மன்னிக்கவும், ஒலக காமிக்ஸ் வரலாற்றில் முதல் முறையாக ஒலக காமிக்ஸ் ரசிகரின் அதிரடி பேட்டியுடன் புகைப்படமும் - இன்றைய இந்தியன் எக்ஸ்பிரெஸ் நியூஸ் பேப்பரில் (சென்னை எக்ஸ்பிரெஸ் எடிஷன்).

    எக்ஸ்டிரா போனஸ்: எடிட்டர் எஸ் விஜயன் சாரின் அட்டகாசமான புகைப்படம் பிளஸ் கருத்துக்கள்.

    கொடுமையான விஷயம்: கிங் விஸ்வா'வின் குளோஸ் அப் போட்டோ.

    அனைத்தும் இந்த பதிவில்

    ReplyDelete
  42. நெத்தியடி பதிவு நண்பர்களே

    ReplyDelete
  43. Sir,
    Not received "Thalai Vangi Kurangu" & Sathaninin thuthar Doc.7" yet.

    ReplyDelete
  44. நண்பர்களே,
    ஜாலியாக இருக்கவேண்டிய இந்த தளம் சற்று மோசமாக மாறி வருவதை கடந்த இரண்டு வாரங்களாக உணர்ந்து வந்தேன். அது நடந்தே விட்டது. இருந்தாலும் எது நடந்ததோ அதுவும் நல்லதற்கே என்று எடுத்துக்கொண்டு செயல்படலாம்.
    எடிட்டர் அவர்களின் மனவுறுதி வியக்க வைக்கிறது. மற்றவர்களாக இருந்தால் இந்நேரம் நொந்து போய் புத்தகங்களை வெளியிடுவதையே நிறுத்தி விட்டிருப்பார்கள். ஆனால் அப்படி கிண்டல் செய்பவர்களையும், பொறாமையில் கமென்ட் இடுபவர்களையும் கூட மதித்து அவர்களுக்கு பதில் அளிக்கும் மனப்பக்குவத்தை நாம் அனைவருமே எடிட்டரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஹாட்ஸ் ஆஃப் டு யூ சார்.

    அதே சமயம், let him fight his own battles. ஆம். எடிட்டர் சார்பாக நாம் யாருமே பதில் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இங்கே ஒருவர் வந்து ஏதோ ஒரு கமென்ட் இடுகிறார். எடிட்டர் மேல் இருக்கும் அன்பில் நாம் அவருக்கு பதில் சொல்ல களத்தில் இறங்கி சச்சரவுக்கு வழி வகுக்க வேண்டாமே? இப்படி கமென்ட் இட்டு, தற்கு நாம் பதில் சொல்லி, இந்த பதிவின் திசையே மாறிவிடுகிறது. கிட்ட தட்ட ஒவ்வொரு பதிவிலும் இப்படி இருப்பதை காண முடிகிறது. ஆகையால், நண்பர்களே, lets ignore them வேண்டாம். ஏதோ சிலர் இடும் கமென்ட்டுகளுக்கு நாம் அனைவருமே எதற்கு வீணாக டென்ஷன் ஆகி பதில் அளித்து நேரத்தை வீணடிக்க வேண்டும்?

    ReplyDelete
  45. நண்பர்களே,

    நான் சொன்ன கருத்து ஏதோ என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியது. ஆகையால் நான் ஏதோ அட்வைஸ் செய்வதாக தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம். நாம் அனைவருமே காமிக்ஸ் என்னும் மரத்தின் நிழலில் இளைப்பாறுபவர்கள் மட்டுமே. ஆகையால் அந்த இளைப்பாறும் நேரம் ஜாலியாக இருக்கட்டுமே?

    சச்சரவுக்கேன்றே சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எதிர்ப்பார்ப்பதும் இதுவே. வந்து ஒரு கமென்ட் போட்டு விட்டு சென்றால் போதும், மற்றவர்கள் பொங்கி எழுந்து பதில் சொல்லி, இதை அவர்கள் ஜாலியாக ஒரு பொழுது போக்காக வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆகையால் just ignore them.

    ReplyDelete
  46. நமது ஆசிரியர் டீ-சர்ட்டில் கலக்குகிறார்.

    ReplyDelete
    Replies
    1. Jolna Paiyan : என்னை வைச்சு காமெடி - கீமடி பண்ணலியே :-)

      Delete
    2. சிங்கத்திடம் சீறி வி​​ளையாடலாம்! சிரித்து வி​​ளையாடமுடியுமா?

      Delete
    3. அது நல்லா இருக்கும்போது நாங்க அப்புறம் கமெண்ட் போடதானே செய்வோம் சார் மிக மிக நல்லா இருந்தது உங்க தேர்வுகளில் எது சோடை போய் இருக்கு?

      Delete
  47. மன்னிக்கவும்- "சரிதான், ஆனால் புதுவாசகர்கள் இங்கு வரும் ​பொருட்டு, அனானி இடும்
    க​மென்ட்ஸ்களுக்கு, நாம் பதில் தராவிடில், தவறான கண்​ணோட்டம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்".

    ReplyDelete
  48. Jolly Jumper & To all who've written here :

    இம்மாத டாக்டர் 7 இதழ் இன்னும் நிறையப் பேருக்குக் கிடைக்கவில்லை என்பதால் அதன் ஹாட்லைனில் நான் எழுதி இருந்த துவக்க வரிகள் பெரும்பாலானோர் படித்திருக்க முடியாது. ஒரு முறை அதன் துவக்கத்தை மட்டும் இங்கே கொண்டு வந்திட்டால் நான் சொல்ல வரும் விஷயத்துக்குப் பொருத்தமாக இருந்திடுமென நினைக்கிறேன் !

    ============================================================================================
    சிங்காரச் சென்னையில் வசித்திடும் - "மின்வெட்டிற்கு அப்பாற்பட்ட" நம் நண்பர்களுக்கு - காலையில் ஒரு பெரிய புன்னகையோடு ஆபீசிற்குச் சென்றிடுவதில் பெரியதொரு சூட்சமம் இருப்பதாகத் தெரிந்திட வாய்ப்பில்லை தான் ! ஆனால் - சூரிய பகவானின் வீரியத்தில், காலையிலேயே 'கப்'படிக்கும் காலரும் ; புழுங்கிப் போன நெற்றியுமாய் - A/C ஓடாத ஆபீசிற்குள் அடியெடுத்து வைக்கும் இதர நண்பர்களிடம் கேட்டால் தெரியும் - "காலையில் புன்னகை" என்பது எத்தனை பெரிய சாதனை என்று !!

    அந்த "சாதனையை" செய்துவரும் பாக்கியசாலிகளின்பட்டியலில் சமீபகாலமாய் அடியேனும் அடக்கம் ! தினமும் காலையில் அலுவலகம் சென்றவுடன் புன்னகைக்க பல காரணங்கள் கிட்டியுள்ளன இப்போதெல்லாம்...! காத்திருக்கும் நம் வாசகர்களின் ஆர்வமான ஈ-மெயில்கள் ; இன்னமும் போஸ்ட்-கார்டில் எண்ணங்களை எழுத்தாக்கிடும் வாசகர்களின் நேர்த்தி ; எனது வலைப்பதிவில் சிலம்பம் ஆடிடும் நம் வாசகர்களின் சிந்தனைகள் ; அவ்வப்போது நம் அலுவலகம் வந்திடும் வாசக நண்பர்கள் என - என் முகத்தின் தசைகளுக்குப் புன்னகைப் பயிற்சி தந்திட ஏராளமான சமாச்சாரங்கள். Thanks guys !
    =============================================================================================

    வெறும் வார்த்தை ஜாலங்களுகாக எழுதிய வரிகள் அல்லவே இவை ...!வலைப்பதிவு உலகினுள் நான் அடியெடுத்து வைத்திட்ட பின்னர், உங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் நான் தினமும் கற்று வரும் விஷயங்கள் ஏராளம் ! மாறுபட்ட பார்வைகள் ; அபிப்ராயங்கள் ; சிந்தனைகள் ; reactions ; வாழ்க்கையின் வெவ்வேறு படிகளில் இருக்கும் போதிலும், காமிக்ஸ் எனும் சுவை மீது உங்கள் ஒவ்வொருவரிடமும் உள்ள அந்த வெறித்தனமான காதல் என்று - என்னை மலைக்கச் செய்யும் விஷயங்கள் நித்தமும் நூறு ! (ஆஹா..ஜால்ரா கச்சேரி பண்ணுவதை இப்போ பாகவதர் விஜயன் ஆரம்பிச்சுட்டானா ?!! என்று முணுமுணுப்பு கேட்டிட்டாலும் நிஜம் இதுவே!!)

    இத்தனை passion கொண்டிட்ட நண்பர்கள் என்னைச் சுற்றி இருந்திடும் வரை...இடையே எழுந்திடும் சலசலப்புகளுக்கு நான் சலனப்பட்டு பின்வாங்க வாய்ப்பே கிடையாது ! அது மட்டுமல்ல...நோக்கம் எதுவாக இருப்பினும் இங்கே எதிர்மறையான பதிவுகளை செய்திட்ட நண்பர்களும் கூட சந்தேகமின்றி காமிக்ஸ் ரசிகர்கள் தானே ! So என்னால் இயன்றளவிற்கு அவர்களது பக்கக் கண்ணோட்டத்தையும், உணர்ந்திட முயற்சிக்கவே செய்கிறேன்.சற்றே அவகாசமளித்தால் நிச்சயம் அவர்தம் வருத்தங்கள் கரைந்திடுமென்ற நம்பிக்கை எனக்கு உள்ளது !

    வண்ணத்தில் காமிக்ஸ் ; தரமான standards என்பது எனது நெடு நாட்கனவு ! ஒவ்வொரு முறை நான் நமது அயல்நாட்டுப் பதிப்பகங்களை சந்திதிடும் போது - நமது இதழ்களின் மாதிரிகளை அவர்களிடம் ஒப்படைத்திட ரொம்பவே கூச்சமாக இருக்கும்!புதுசு புதுசாய் துண்டு துக்கடா நாடுகளில் இருந்தெல்லாம் வெளிவந்திடும் இதழ்கள் அமர்க்களமாய் வண்ணத்தில் கலக்கும் போது, நமது கருப்பு வெள்ளை newsprint பாணி எனக்கு சங்கடமாய் இருக்கும். 2010 -ல் எங்கிருந்தோ பிறந்ததொரு உத்வேகத்தில், கேப்டன் பிரின்சின் எஞ்சி நின்ற புதுக் கதைகள் ரெண்டையுமாவது முழு வண்ணத்தில் அச்சிட வேண்டும் என்ற தீர்மானத்தோடு அவற்றிற்கான ராயல்டி செலுத்தி, வண்ண ஒரிஜினல்களின் CD க்களை வாங்கிக் கொண்டு பாரிஸ் நகரப் பூங்கா ஒன்றில் அமர்ந்து, அங்கே விளையாடிக் கொண்டிருந்த குட்டீஸ்களின் களேபரத்துக்கிடையே நான் போட்டிட்ட கணக்குகள் ஒரு வழியாக நமது Comeback Special மூலம் நனவாகியது.

    அந்த பனிக்காலப் பாரிஸ் மாலைப்பொழுது நமது லயனின் இரண்டாவது இன்னிங்க்ஸ் துவக்கத்துக்கு அடித்தளமாக அமைந்திட்ட போதிலும், புதிய முயற்சிக்கு இத்தனை அற்புதமானதொரு வரவேற்ப்பு கிட்டிடக் கூடும் என்பதை எனக்கு உணர்த்தியது இங்குள்ள ஒவ்வொருவருமே !!So தயங்கிடவோ ; தளர்ந்திடவோ சான்சே இல்லை ! எங்கள் மீது அசைக்க இயலா நம்பிக்கை கொண்டுள்ள உங்களை பெருமைப்படுத்திடும் கடமை எனக்குள்ளது ! Let's march on guys !

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியருக்கு,

      உங்களது உற்சாகமளிக்கும் வார்த்தைகள் சமீபகாலமாக இந்த வலைப்பூவில் படர்ந்துவந்த சந்தேக மேகங்களை முற்றிலும் விலக்கிவிட்டன.

      //இத்தனை passion கொண்டிட்ட நண்பர்கள் என்னைச் சுற்றி இருந்திடும் வரை...இடையே எழுந்திடும் சலசலப்புகளுக்கு நான் சலனப்பட்டு பின்வாங்க வாய்ப்பே கிடையாது !//

      அயல்நாட்டிலிருந்து நாம் பதிவிடும் கருத்துக்களுக்கு அன்போடு பதிலளித்திடும் தாங்கள், எங்கள் மின்னஞ்சல்களிற்கும் ஒருசில வார்த்தைகளில் பதிலனுப்பிட்டால் எங்களுக்கும் அது கொஞ்சம் ஊக்கத்தைத் தரும். சில விடயங்களில் உங்கள் அலுவலர்களைவிடவும் உங்களால் துல்லியமான ஆலோசனைகளை வழங்கமுடியும் என்பது எனது பட்டறிவு(தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்).
      நன்றி.
      -Theeban (SL)

      Delete
  49. ஆசிரியர் அவர்கட்கு,

    தலை வாங்கி குரங்கு வந்து விட்டது.

    அயல்நாட்டு சந்தாதாரர்களிற்கு இதழ்களை ஒரு மாத காலத்திற்கு முன்பாகவே அனுப்பி வைக்கலாமே என ஒரு நகைச்சுவைக்காகவே கருத்திட்டேன் ஆனால் நீங்கள் அதிலுள்ள நியாயத்தை உணர்ந்து கொண்டு மறுநாளே அயல்நாட்டு சந்தாதாரர்களிற்கு இதழ்கள் அனுப்பிவைக்கப்படும் என்றீர்கள். நீங்கள் சொன்ன வாக்கு தவறவில்லை 30 மார்ச்சில் இதழ் அனுப்பபட்டு இருக்கிறது. மிக்க நன்றி.

    அண்மையில் டெக்ஸின் கதை ஒன்றை படித்தேன். அதன் பக்கங்களின் எண்ணிக்கை 340, புத்தக அளவு 21 X 15, அதைக் கையில் வைத்திருப்பதே ஒரு சுகமான அனுபவமாக இருந்தது. என்னிடமிருந்த விண்ணில் ஒரு குள்ளநரியுடன் அதை ஒப்பிட்டு பார்த்தபோது அளவில் சிறிய வித்தியாசமே இருந்தது. மனதில் ஒரு ஏக்கத்துடன் டெக்ஸின் மாக்ஸி கதைகளை அதன் அசல் அளவுடனும் 300 க்கு மேற்பட்ட பக்கங்களுடனும் தமிழில் வெளிவந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்த்துக் கொண்டேன். ஆனால் இன்று தலைவாங்கியை ஒக்லாஹொமா எனும் அந்தக் டெக்ஸ் கதையுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது நீளத்தில் சில மில்லிமீற்றர்கள் கூடியும் அகலத்தில் சில மில்லிமீற்றர்கள் குறைந்தும் ஏறக்குறைய டெக்ஸ் மாக்ஸியின் அளவை தொட்டிருந்தது தவாகு. இனிய ஆச்சர்யம் என்பது இதுதான்.

    நீங்கள் வலைப்பூவில் தவாகு அட்டையை வெளியிட்டபோது என் கருத்து இப்படியாக இருந்தது... தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட முன்பாக டெக்ஸ் அண்ட் கோ எடுத்த குரூப் போட்டோபோல் அட்டை இருப்பதாக நான் எண்ணிக்கொண்டேன். ஆனால் இந்த அட்டையை நேரில் பார்க்கையில் ரத்தப் பிண்ணனியில் அட்டை மோசமான ஒன்றாக தோன்றவில்லை. கொலைவாளுடன் பக்கங்களை திருப்பி குதிரையில் பாய்ந்து வரும் குரங்கு, கதையை படிக்கும் வாசகர்களின் நிலையை குறிப்பால் உணர்த்துவது போலிருக்கிறது என்பதும் என் மற்றொரு எண்ணம் :)) [ நான் இனித்தான் கதையை படிக்க வேண்டும், தவாகு ஐ இன்றுவரை நான் படித்திருக்கவில்லை] மிக தரமான அட்டை என்பேன், காமிக்ஸ் சேகரிக்கும் அன்பர்கள் அட்டையைக் குறைகூறிட மாட்டார்கள்.

    உள்ளே சித்திரக் கட்டங்கள் அகலம் குறைந்து நீளம் அதிகரித்து காட்சி தருகின்றன. அச்சுத் தரமும் மங்கலாக தெளிவற்ற தன்மை கொண்டதாக இருக்கிறது. 92 - 93 பக்கங்களில் கறுப்பு சற்று ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. சில பக்கங்களை ஆர்வத்துடன் புரட்டிப் பார்க்கையில் இவை என் பார்வையில் நான் கண்டவை. அவை குறைகளாக இருந்திடினும் இவற்றை நான் இங்கு ஒரு குறையாக முன் வைக்கவில்லை. வரும் காலத்தில் இவற்றை களைவதில் நீங்களும் உங்கள் அணியும் அதிக சிரத்தை காட்ட வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். ஆர்ட் பேப்பரிற்கு பதில் சற்று தரமான வேறு தாள்களை பயன்படுத்தினால் கறுப்பு வெள்ளை கதைகளின் சித்திரங்கள் உயிரோட்டமாக இருந்திடாதா என்பதும் நான் உங்களிடம் முன் வைத்திடும் கேள்வி.

    காலாண்டு நிறைவடைவதற்குள் மொத்தம் நான்கு புத்தகங்கள் என் கைக்கு வந்து சேர்ந்திருக்கின்றன. ஐந்தாவதும் இன்னும் இரு வாரங்களினுள் கிடைத்து விடும் எனும் நம்பிக்கை எனக்கு வந்து சேர்ந்திருக்கிறது. இந்நம்பிக்கையை மீண்டும் துளிர்க்க வைத்த நீங்கள்தான் அதனை பெருவிருட்சமாக ஆக்கிடவோ இல்லை கவனிப்பின்றி கருகிடவோ வைத்திடக்கூடும். தரமான ஒரு காமிக்ஸை வழங்க காலம் தேவை எனும்போது அதற்கான காலங்களை எடுத்து அதை தரமாக வெளியிடுவதன் வழி நாம் அனைவரும் குதூகலித்திடலாம் என்றே நான் எண்ணுகிறேன்.

    தங்களின் கம்பேக் சிறப்பிதழின் முதல் 98 பக்கங்கள் என்னை உண்மையில் மகிழ்ச்சியில் ஆற்றியவை, மாறாக பின் வந்த பக்கங்கள்..... ஒரு நாளிலேயே இரவும் பகலும் உண்டு என்பதை இன்னொரு விதத்தில் கூறியவை... கம்பேக் ஸ்பெசலின் கதை தெரிவுகள் என்னை திருப்தி செய்யவில்லை. இருப்பினும் அண்மையில் வெளிவந்த லக்கி லூக் கதைகளின் தரம் நான் அறிந்ததே, பெர்னார்ட் பிரின்ஸ் சொல்லவே வேண்டாம்.

    ஒரு ஆட்டக்காரன் பந்தயத்தில் களமிறங்கு முன்பாக தன் உடலை வாகாக சூடாக்கி கொண்டு உள்ளே இறங்கும் செயலாகவே இந்த நான்கு மாதங்களை நான் கணக்கில் எடுத்துக் கொள்கிறேன். உண்மையான ஆட்டம் ஜூன் மாதம் ஆரம்பமாகும் என நான் நம்புகிறேன். சிறப்பானவற்றை நீங்கள் வழங்கும்போது பாராட்டி என் மகிழ்வான உணர்வுகளை பகிர்ந்து கொள்ள நான் தயங்கபோவதில்லை, அதேபோல் தங்கள் வெளியீடுகளின் தரத்திற்காக என் கடுமையான விமர்சனங்களையும் நான் இங்கு பதிவு செய்வேன். எனது விருப்பம், தமிழ் காமிக்ஸ் சர்வதேச தரத்திற்கு அதன் கதைகளிலும் சித்திரங்களிலும் சளைத்ததல்ல எனும் ஒன்றாக உருவெடுக்க வேண்டுமென்பதே. அந்த ஆசை என்னைவிட உங்களிடம் அதிகமாக உண்டு என நான் நம்புகிறேன். ஆட்டம் ஆரம்பம் ஆகட்டும். தமிழ் காமிக்ஸ் வளர்ச்சி களைகட்டட்டும். [ யப்பா சூப்பர் ஹீரோ ஸ்பெஷல நினைத்தால் உடம்பெல்லாம் இப்பவே ஜன்னி வந்த மாதிரி நடுங்குதே.... கொஞ்சம் இரக்கம் காட்டக் கூடாதா :)) ]

    ReplyDelete
    Replies
    1. முத்து விசிறி ; கனவுகளின் காதலன் : உங்களின் நீண்ட பதிவுகளுக்கு நன்றிகள் ! முன் எப்போதையும் விட, நமது புதிய பரிமாணம் என்னை மிக உற்சாகப்படுத்திடுவதற்கு பிரதம காரணங்கள் இரண்டு !

      'அட்டைப்படம் சூப்பர் ; கதை டாப் டக்கர் ; பாக்கெட் சைஸ் வேணும் " என்ற ரீதியிலிருந்த நமது வாசக விமர்சனங்கள்,ரசனைகள் இன்றைக்கு எத்தனை தூரம் ஒரு பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு முதிர்ந்த சிந்தனைகளோடும் ; கருத்துக்களோடும் ; விமர்சனங்களோடும் மிளிர்கின்றன என்பதற்கு உங்களின் பதிவுகளும் சரி, இங்கே நம் இதர நண்பர்கள் எழுதி வந்திடும் வரிகளுமே சான்று !

      கால் நூற்றாண்டுக்கு முன்னே டெக்ஸ் வில்லரை அறிமுகப்படுத்திடும் போது ஒரு கௌபாய் ஹீரோ இத்தனை பெரிய சாதனையாளராய் நம்மிடையே உலா வருவார் என்று அறுதியிட்டுச் சொல்லிடும் தைரியம் என்னுள் இல்லை ! ஆனால் இன்றோ தமிழில் கிராபிக் நாவல்கள் சுவைத்திடத் தயாராக நிற்கிறோம் ! நம் ரசனைகளில் நேர்ந்துள்ள அப்பட்டமான இந்த வளர்ச்சி இன்று காமிக்ஸ் தயாரிப்பு என்பதை எப்போதையும் விட ஒரு சவாலான ; சுவாரஸ்யமான ; சுவையான பணியாக ஆக்கியுள்ளது!

      காரணம் இரண்டென நான் நினைப்பது இதைத் தான் :

      அன்றைக்கு நான் வெளியிட்ட இதழ்களின் ஒரிஜினலகளைப் பார்த்திடப் / படித்திட உங்களின் பெரும்பானோர்க்கு வாய்ப்புகள் மிக மிகக் குறைவே ! So எனது தயாரிப்புகளின் தரத்தை ஒப்பிட்டுப் பார்த்திட ஒரு முறையான அளவுகோல் அன்று சாத்தியமல்ல என்பதே நிஜம் ! ஆனால் இன்றோ நிலைமையே தலைகீழ் ! உலகின் ஒவ்வொரு கோடியிலும் நீங்கள் கால்த்தடம் பதித்து வருவதால், ஒரிஜினல் படைப்புகளை எனக்கு முன்பே கூடப் பார்த்துப் ; படித்து ; ரசித்திட சாத்தியமே ! இன்டர்நெட்டின் வருகை அனைத்தையும் உங்களின் கணினித் திரைக்குக் கொண்டு வந்து சேர்த்திடுவதை ரொம்பவே சுலபமாகி விட்டது ! நண்பர் முத்து விசிறி சர்வதேசக் காமிக்ஸ் சேகரிப்புக்காக நாடு விட்டு நாடு பாய்ந்த கதைகளெல்லாம் எழுதிட ஒரு தனி வலைப்பக்கமே போடலாம் ! அவரைப் போல் இன்னும் ஏராளமாய் நண்பர்கள் உண்டென்பது உறுதி!So என்னைப் பொறுத்த வரையில் நிஜமான சவால் இனி தான் ஆரம்பம் !

      மொழியாக்கத்தில் ; தயாரிப்பில் ; அச்சில் - அற்புதமான அயல்நாட்டு ஒரிஜினல்களோடு நம்மை சீர்தூக்கிப் பார்க்கும் சந்தர்ப்பம் ரொம்ப சீக்கிரமே உங்களுக்குக் கிட்டப் போகின்றது ! நிஜமாகவே என்னுள் தொலைந்து போயிருந்த அந்த உத்வேகத்தை ; சவாலை சந்திக்கும் ஒரு போட்டித் திறனை இப்போதைய சூழல் மீட்டுக் கொடுத்துள்ளது என்றே தான் சொல்லுவேன் !

      இதற்க்கு முன்னே வாக்குறுதிகள் பலவற்றை "புத்தாண்டுத தீர்மானங்கள்" ரகத்தில் காற்றில் பறக்க விட்ட தவறை இம்முறையும் நான் செய்திடுவேனோ என்ற உங்களின் அச்சம் நியாயமானதே ! "அது நேற்றைக்கு...இது இன்றைக்கு" என்று வடிவேலு பாணி டயலாக் அடிக்காமல் எனது செயல்களின் மூலம் ; சீராய் தொடர்ந்திடும் இதழ்களின் மூலம் அந்த நம்பிக்கையை விதைப்பதே விவேகம் என்ற தீர்மானத்தில் உள்ளேன்.

      "தலைவாங்கிக் குரங்கு" தயாரிப்பில் உங்களில் பெரும்பான்மையினர் சுட்டிக் காட்டியுள்ள குறைபாடுகள் அடுத்த முறை தொடர்ந்திடாது !அதே போல் கறுப்பு வெள்ளை கதைகளுக்கு ஆர்ட் பேப்பர் சரிப்படவில்லை என்பதால், அதற்க்கு மாற்றாக வேறு உயர்தர காகிதத்தை ஏற்கனவே அடையாளம் கண்டு விட்டோம் !

      தற்சமய ஒத்திகைகள் எல்லாமே warmup ரகம் தான் என்று நீங்கள் கணித்திருப்பது நூற்றுக்கு நூறு நிஜமே..! இந்தாண்டின் நடுப் பகுதி இன்னும் அதிகத் தொலைவில் இல்லை ! அதற்குள் எங்களது ஒத்திகைகளை செப்பனிட்டு வைத்து main show அரங்கேறும் போது நிச்சயம் அசத்திடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு திடமாக உள்ளது !

      "சூப்பர் ஹீரோ ஸ்பெஷல்" கிளப்பிடும் பீதியை மட்டுப்படுத்த மருந்தொன்றும் தேடிக் கொண்டுள்ளேன் !கிடைக்குதாவென்று பார்ப்போமே ! :-)

      Delete
    2. <<<<[ யப்பா சூப்பர் ஹீரோ ஸ்பெஷல நினைத்தால் உடம்பெல்லாம் இப்பவே ஜன்னி வந்த மாதிரி நடுங்குதே.... கொஞ்சம் இரக்கம் காட்டக் கூடாதா :)) ]>>>>

      எனக்கும் தான் காதலரே உறுதியாக தவிர்த்துவிடுவேன்!!!

      Delete
  50. ஆசிரியர் அவர்கட்கு,

    இந்த தளத்தில் இதுவே என்னுடைய முதல் கமென்ட் (அநேகமாக ஆரம்ப பதிவுகளில் வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்).

    இன்றுவரை உங்களை ஒரு சாதாரண பத்திரிக்கையின் எடிட்டராக பார்த்ததே கிடையாது. ஏனென்றால் பிழைப்பிற்காக இந்த பதிப்பகத்தை நீங்கள் நடத்துவதில்லை என்பதை நெடுநாளைய வாசகர்கள் அறிவார்கள்.

    ஆனால் என்னமோ தெரியவில்லை, இங்கே கமென்ட் இடவே நேரமும், மனமும் இல்லை. ஆனால் இன்றைய உங்களின் நீண்ட (மிக நீண்ட என்று திருத்தி படிக்கவும்) பின்னூட்டத்தை படித்தவுடன் மறுபடியும் காமிக்ஸ் உலகின் பக்கங்களில் பதிவுகளை படிக்கவும், கமென்ட் இடவும் ஒரு புத்துணர்ச்சி பெற்றேன். நன்றி.

    இறைவன் (என்று ஒரு சக்தி இருந்தால்) அவர் உங்களுக்கு எல்லா விதங்களிலும் உறுதுணையாக இருக்க இன்று முதல் முறையாக பிரார்த்தனை செய்கிறேன்.

    நன்றி என்கிற வார்த்தைக்கு (அந்த வார்த்தை சரியானதுதானா?) உங்களுக்கு நான் சொல்வதைவிட வேறு யார் சொல்வதற்கும் மிகச்சரியான அர்த்தம் இருக்கவே இருக்காது. நன்றி, இதுவரை உங்களின் காமிக்ஸ் கதைகளுக்கும், இதற்க்கு மேல் நீங்கள் வெளியிடவிருக்கும் கதைகளுக்கும்.

    பின் குறிப்பு: எனக்கு பெண் குழந்தை பிறந்தால் கண்டிப்பாக அதற்க்கு மாடஸ்டி என்றுதான் பெயரிட உத்தேசித்துள்ளேன். ஆனால் ஆண் குழந்தை பிறந்தால் பெயர் என்னவென்பது முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. நான்கு எழுத்துக்கள். முதல் எழுது வி. கடைசி எழுது ன்.

    ReplyDelete
    Replies
    1. காமிக்ஸ் பிரியன் : ஆடிப் போகச் செய்கின்றது உங்களின் வரிகளில் மிளிர்ந்திடும் அன்பும் அபிமானமும் ! பிழைப்புக்கு ஆயிரம் பாதைகள் இருந்திட்ட போதும் நான் இதைத் தேர்ந்தெடுத்ததற்கு பெருமைப்படச் செய்யும் பல தருணங்களில் இது முதன்மையானது !!

      நமக்கு மேல் ஒரு மூலவர் இருப்பதில் சந்தேகமே கொண்டிட வேண்டாம் !எங்கெங்கோ சிதறிக் கிடக்கும் நாம் அனைவரும் ஒரு குடும்பமாய் உணர்ந்திடும் இந்த மாயாஜாலத்தை நிகழ்த்திட மானுட சக்திக்கு சாத்தியமே அல்ல ! சிரம் தாழ்த்துகிறேன் நன்றிகளோடு !

      Delete
    2. விஜயன் சார்,உங்கள் அன்பு, என்னையும் அறியாமல் கண்ணீர் வரவைத்துவிட்டது. இப்படி பலபேரின் உண்மையான அன்பு கண்டிப்பாக விஜயன் சாருக்கு ஒரு பாஸிடிவ் ஒளியை கொடுக்கும்! அவரது எண்ணங்கள் வெற்றிபெற அந்த பாஸிடிவ் வைபிரேஷன் உதவும்! நேற்று கேகேநகர் டிஸ்கவரி புக் போய் cbs, விண்ணில் ஒரு குள்ளநரி,கொலைகாரகலைஞன் வாங்கிட்டேன். திநகரில் பஸ்ஸில் ஏறியவுடன் தகவல்” நிலநடுக்கம் “ என்று! மறக்கமுடியாத காமிக்ஸ் வேட்டையாக அன்றைய தினம் அமைந்துவிட்டது!

      Delete
  51. // நம் பயணம் தொடரும் நண்பர்களே...எப்போதும் போல்..உற்சாகமாய்..! ஆண்டவன் அருளும் ; உங்கள் அண்மையும் இருந்திடும் வரை வானமே நமக்கு எல்லை ! கடமையைச் செய்வோம் ; பலன்களை ஆண்டவன் தந்திடுவான் !! Take Care Folks ! //

    மிக சத்தியமான வார்த்தைகள் விஜயன் சார்
    தொடருங்கள் உங்கள் சேவைகளை
    தொடர்வதற்கு காத்திருக்கிறோம் நாங்கள்
    .

    ReplyDelete
  52. டியர் எடிட்டர் க்கு, நம்ம lion ஆரம்பத்தில் கடந்து வந்த பாதையும் ,அதன் தற்போதிய தரமும் மனதிற்கு மிகவும் சந்தோசமாக உள்ளது. நீங்கள் எங்கள் மேல் கொண்ட நம்பிக்கை ,மற்றும் பாசம் மிகவும் பிரமிப்பாக உள்ளது .all bcse of just comic luv .comic friends குள்ளே சிறு சிறு சண்டைகள் வந்தாலும் அதை ஒரு பெரிய அண்ணனின் (not mean america just mean வானத்தை போல் விஜய காந்த்) பாசம் மற்றும் கண்டிப்பு உடன் வழி நடத்து கிறீர்கள் .அப்படியே நம்ம டெக்ஸ் அண்ணாச்சியை கலர் ல் காண்பித்தால் மிகவும் புண்ணியமாக போகும் .thanks tex villar sir sorry sorry editer sir .

    ReplyDelete
    Replies
    1. Dr.Sundar Salem : பொறுத்தார் பூமி ஆழ்வாரோ இல்லியோ...நிச்சயம் கலரில் நிறைய தமிழ் காமிக்ஸ் படித்திடுவார்! உங்களின் பொறுமை நிச்சயம் வீண் போகாது !

      Delete
  53. வண்ணங்களுக்கு புனித சாத்தான் எதிரியல்ல.வனாந்தர மேற்கு (wild west) ரக கதைகளை முழு வண்ணத்தில் வெளியிட்டால் ,பாகிஸ்தானை உலக வங்கியிடம் அடமானம் வைத்தாவது,அதை வாங்க புனித சாத்தான் தயார்.லெப்டினென்ட் ப்ளுபெர்ரியின் அனைத்து கதைகளையும் வண்ணத்தில் படிக்க சாத்தானுக்கு ஆசை.இந்த வருட இறுதிக்குள் அவரது மெகா கதை ஒன்றையாவது எடிட்டர் சார் வெளியிட வேண்டும்.மின்னும் மரணம் கதையை முழு வண்ணத்தில் வெளியிட்டால் சாத்தான் சந்தோச படுவான்.(பின் குறிப்பு;தலை வாங்கியார் இன்னும் வந்து சேராமல் உயிரை வாங்குகிறார்).

    ReplyDelete
  54. En akkavukku
    pen kulanthai pirantha pothu
    PLESSY
    enchu peyar vaithen avalukku ippothu vayathu 14

    ReplyDelete
  55. அன்பின் விஜயன் சார்..

    சாத்தானின் தூதன் டாக்டர் செவன் + கன்னித்தீவில் ஒரு காரிகை.. வந்து சேந்தது. ஒரே மூச்சில் படித்து முடித்தவுடன் தோன்றிய விசயம் - கண்டிப்பாக இவர்களுக்கு நீங்கள் கட்டாய ஓய்வு அளிக்கத்தான் வேண்டுமா? இரண்டு கதைகளுமே அட்டகாசம். குறிப்பாக சித்திரங்களின் தரம் அற்புதமாக இருக்கிறது. காரிகனைப் பொருத்தவரை ஆக்சன் என்றால் தெளிவான கதைக்கு ரிப் கெர்பி. சமீபமாக நண்பர்கள் தேடிக் கொடுத்த நம் லயனின் சென்சுரி ஸ்பெசலில் வெளியாகி இருந்த வைரச்சிலை மர்மம் படித்து கெர்பி மீது உண்டாகி இருந்த காதலை இந்த இதழ் இன்னும் அதிகமாக்கி இருக்கிறது. மொத்தத்தில் இதழ் பட்டாசு கிளப்பி இருக்கிறது. வாழ்த்துகள். தொடர்ச்சியா ரிப் + காரிகனை வெளியிட வேண்டும் எனும் கோரிக்கையோடு முடித்துக் கொள்கிறேன்...:-)))

    ReplyDelete
    Replies
    1. கார்த்திகைப் பாண்டியன் : கதவுகளை மூடிடுவது எத்தனை சுலபமோ...அத்தனை சுலபமே மீண்டும் திறந்திடுவதும் ! சொல்லப் போனால் காரிகனின் கதைகள் இன்னும் சில எங்களிடம் தயாராகவே கூட உள்ளன !அவற்றைக் கிடப்பில் போட்டிட நான் தீர்மானித்தது நிறைய தயக்கத்துக்குப் பின்னரே !எனினும் இந்த இதழுக்கு முழுமையான விமர்சனங்களை ....கருத்துக்களைப் பார்த்த பின்னர் நிச்சயம் பொருத்தமான முடிவெடுப்பேன் ! ஓ.கே-வா ?

      Delete
  56. சின்னதாய் ஒரு பதிவு...

    பிரின்ஸ், பார்னே, ஜின் மற்றும் கழுகு! - ஒரு அறிமுகம்!

    ....கவர் ஸ்கேன் செய்வதை போன்ற ஒரு போரடிக்கும் விஷயம் வேறெதுவும் இல்லை நண்பர்களே! :(

    ReplyDelete
  57. Vijayan sir,

    I subscribed at the chennai book fair jan 2012. I have not been provided any subscriber number in that subscription form receipt I received at the stall.

    Till now, I have not received thalai vangi kurangu and doctor 7.pls lookinto it..the books should be sent based on the subscription date..is that being followed? Why am i required to follow up so many times to get my copy? I should get that automatically when a new issue is released..

    I have sent my address details to your email id..pls send the books at the earliest..

    ReplyDelete
  58. ஆர்ச்சி - காலஇயந்திரத்​தை து​டைத்து சுத்த​ம் ​செய்தாகிவிட்டது, தாம்ஸன், விக்டர் ​வேகமாக வாருங்கள் காலஇயந்திரத்​தை முடக்கி விடப்​போகி​றேன்.

    தாம்ஸன் & விக்டர்- இவன் துள்ளுவ​தை பார்த்தால், நம்​மை இம்மு​றை என்னமாதிரியான சிக்கலில் மாட்டி​வைக்க​போகிறா​னோ ​தெறியவில்​லை!

    ஸ்​​பைடர் - உதவாக்க​ரை ஆர்டினி! எங்​கே ​​போய் ​தொ​​லைந்தாயடா, சட்டித​​லையன் கிழம்பிவிட்டான். ஹலிகா​ரை சுத்தம் ​செய்து பராமரித்து​ வை, இம்மு​றையும் நாம் தான் இவ்வுலகின் நிகரில்லா குற்றச்சக்ரவர்த்தி என்ப​தை நிருபிக்க​வேண்டும்.

    க்ராண்​டேல் - பிரிட்டிஷ் நிழற்ப​டையிலிருந்து அ​ழைப்பு,இரும்பு​​​கைக்கு ​​வே​லை வந்து விட்டது.

    ReplyDelete
  59. எடிட்டர் ஐயா மற்றும் லயன் அலுவலக ஊழியர்கள் மற்றும் காமிக்ஸ் காதலர்கள், வாசக நண்பர்கள் அனைவருக்கும் "சித்திரை முதல்நாள் - தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்"

    எடிட்டர் சார், புத்தாண்டை முன்னிட்டு கூலா, ஜாலியா ஒரு பதிவு போடுங்க சார். ப்ளீஸ்...

    ReplyDelete
  60. ஒருவழியாக சாத்தானின் தூதுவன் என்னிடம் சேர்ந்துவிட்டான். இரண்டு நாட்கள் ஆகிறது, நேற்று புத்தகத்தை முழுமையாக படித்து முடித்தேன். ஹ்ம்ம் பருகி முடித்தேன் என்றே சொல்லலாம். அருமை அருமை அருமை.


    மீண்டும் 90's சச்சின் ஆட்டங்களை பார்ப்பது போன்றதொரு உணர்வு. அருமையான சித்திரங்கள், எளிமையான கதையம்சம். நீண்ட நாட்கள் கழித்து மிகவும் ரசித்து படித்த கதைகள் எனலாம். old is always gold, and it is proven once again.

    ReplyDelete
  61. "மது​ரையிலிருந்து.." என்று அனானியாக முன்னைய பதிவில் பின்னூட்டம் போட்டவர், அதே பாணியையே இந்தப் பதிவிலும் பின்னூட்டம் போடப் பயன்படுத்தியதால் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாராமே? (ஒரு பதிவில் அனானி, அடுத்த பதிவில் அவனா நீ?)

    ஹி..ஹி.. குண்டன் பில்லிகூட இவ்வளவு சீக்கிரத்தில் அகப்பட்டதில்லை!

    அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    -Theeban (SL)

    ReplyDelete
    Replies
    1. ஐயா துப்பறியும் சிங்க​மே, என்​னை இரண்டு அடி ​வேண்டும் என்றாலும் அடித்து ​கொள்ளும், ஆனால் என்​னை அனானி லிஸ்டில் ​சேர்த்து விடாதீர்கள், வீட்டி​​லோ பயங்கர பில்லி இங்​கோ அனானி "ஐய​கோ என்ன ஓர் அவமானம்",

      "அவனா நீ "- இதற்கு ​வேறு பல அர்த்தங்களும் இங்​கே நிலவி வருகிறது, உங்களுக்கு ​தெறிந்திருக்க நியாயமில்​லைதான் "நான் அவன் இல்​லை".

      இப்படிக்கு- அனானிகளால் அநா​தையாக்கப்பட்ட இ​ளைஞன்.

      Delete
    2. மன்னிக்கவும்.

      யாரையும் குத்திக்காட்டும் நோக்கிலோ, விரல் சுட்டி இவர்தான் அவர் என்று குற்றஞ்சாட்டும் நோக்கிலோ இதைப் பதியவில்லை.

      சும்மா ஜாலிக்காகப் போட்டது. ஜோல்னா அவர்களை அது பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது. தயவுசெய்து மன்னிக்கவும். இனி ஜாலிக்காகவும் இப்படி எதுவும் எழுதமுயலாமல் இருக்க முயல்கிறேன்.

      (அனானி - அவனாநீ - என்பது சும்மா ரைமிங்கிற்குப் போட்டது. மற்றப்படி 'அவனாநீ' க்குரிய அர்த்தம் எனக்கும் தெரியும். அதுவும் உங்களைச் சங்கடப்படுத்தியிருக்கிறதுபோல் தெரிகிறது. மன்னிக்கவும்).

      இன்று 12ம் திகதி எனது பிறந்தநாள். கோபங்கள் விடுத்து நண்பர்களின் வாழ்த்துக்கள் கிடைக்குமா?

      -Theeban (SL)

      Delete
  62. இந்த முறையாவது 100 அடிப்போமே? ஒஹ்... முதல் ரன்னும் நான்தான் அடிச்சேனா?

    -Theeban (SL)

    ReplyDelete
  63. மே 1 வரும் I.A.S ஹீரோக்களை நானும் எதிர் பார்த்து காத்து கிடக்கிறேன்...........

    ReplyDelete
  64. லயன் வாசகர்கள் அனைவருக்கும் புனித சாத்தானின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.தலை வாங்கியார் இன்றாவது வருவாரா?

    ReplyDelete
  65. Dear Comrades & Editor,
    Wish all Happy Tamil New year !
    With Regards.,
    R.Senthil Kumar

    ReplyDelete
  66. மூணு நாள் லீவுக்கு ஊருக்கு போனப்போ தலை வாங்கி குரங்கு படிச்சாச்சு… திங்கள் கிளம்புறப்போ டாக்டரும் வர… டாக்டரை கையோட கூட்டிட்டு வந்துட்டேன்… இனிமே தான் டாக்டரை செக் பண்ணணும்… அது சரி… இன்னும் எவ்ளோ நாளைக்கு சந்தா இருக்கு…? எப்போ புதுப்பிக்கணும்னு ஒண்ணுமே புரிய மாட்டேங்குதே… விஜயன் சார்… கொஞ்சம் உதவி பண்ணுங்க… திடுதிப்புனு புக் அனுப்புறத நிப்பாட்டிப் புட்டீங்கனா மனுஷனா இருக்க மாட்டேன் சொல்லிப்புட்டேன்…

    ReplyDelete
  67. அதிர்வுகள் பெங்களூரிலும்! :(

    ReplyDelete
  68. இந்தோனேசியாவில் நிலநடுக்கம்.

    சிறிய அளவிலான அதிர்வுகள் பெங்களூரு, கொல்கட்டா மற்றும் சென்னையில். சென்னையில் குறிப்பாக அண்ணா நகர், முகப்பேர், வடபழனி, நுங்கம்பாக்கம், தி.நகர் போன்ற இடங்களில் அதிர்ச்சி அதிகமாக உணரப்பட்டது. மற்றபடி உயிர் அபாயம் எதுவும் இல்லை.

    சுனாமிக்கான அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  69. நிலநடுக்கம் காரணமாக ஆபீஸில் லீவு விட்டுவிட்டார்கள். வீட்டிற்கு வந்து படிக்க காமிக்ஸ்தான் இல்லை. லயன் அலுவலகத்திற்கு இன்று போன் செய்தேன். 800 புத்தகங்கள் இதுவரை அனுப்பியிருக்கிறோம். இன்று வரவில்லை என்றால் மறுபடியும் போன் செய்ய சொன்னார்கள்.

    ReplyDelete
  70. எடிட்டர் சார், நீங்கள் சொன்னது போலவே பலர் உங்களுக்கு சென்னை புத்தக கண்காட்சியில் உதவி செய்து இருக்கலாம். எனினும் அதில் ஒரு சிலரின் செயல்களில் சுய நலமும் கலந்து இருந்தது என்பதை நான் உணர்ந்ததும் அங்கு தான். நான் சென்னை புத்தக கண்காட்சியில் சந்தா செலுத்துவதற்காக உங்கள் அலுவலர் திரு. ராதா அவர்களிடம் எனது அலைபேசி எண்ணையும், விலாசத்தை தரும் முன்னரே அதனை குறித்து கொள்வதில் அந்த ஒரு சிலர் காட்டிய ஆர்வம் ஹ்ம்ம்ம்... நான் வெளி உலகிற்கு பிறரால் அறியப்படாதவன், அதில் விருப்பமும் இல்லாதவன். பின்னர் தொடர்ந்த அலைபேசி அழைப்புகள், ஒரு பழைய புத்தகத்திற்கு இத்தனை ரூபாய் என்ற பேரங்கள், ஆசை வார்த்தைகள் . ஹ்ம்ம்ம் நான் நொந்து போனேன் விஜயன் சார். எனது பழைய காமிக்ஸ் சேகரிப்பு எனக்கு பொக்கிஷம் போல. அதனை விலை பேசுவது என்பது என்னையே விற்பதற்கு சமம் என எண்ணுபவன் நான். அனைவரையும் ஒரே அளவு கோலில் எண்ணுவது வேதனையாக இருந்தது எனக்கு. காமிக்ஸ் ஆர்வத்தினை , வெறி ஆக மாற்றி விட்டனர் ஒரு சிலர். இதனை நீங்களும் நமது நண்பர்களும் புரிந்து கொள்ளவே இந்த பதிவு . இதனை உங்களுக்கு விருப்பம் இருப்பின் பிறர் பார்வைக்கு வையுங்கள் அல்லது கத்திரி போட்டு விடுங்கள். என்றும் உங்கள் பணியினை மெச்சும் ஒரு வாசகன். புத்தக ப்ரியன்

    ReplyDelete
    Replies
    1. ஹலோ புத்தக பிரியர் , ஏகப்பட்ட காமிக்ஸ் புத்தகங்களை அதிக பணத்தில் வாங்கி இருக்கேன், இப்பொழுது அதை பராமரிப்பது கஷ்டமா உள்ளது எனவே அதை நல்ல விலை கிடைத்தால் கொடுத்துவிடுகிறேன் என்று புத்தக கண்காட்சியில் பலரிடம் பினாத்தி கொண்டிருந்தீரே, மறந்துவிட்டீரா? நானும் கூட உமக்கு போன் செய்து கேட்கலாம் என்றிருந்தேன். நல்லவேளை நான் அப்படி எதுவும் செய்யவில்லை.

      Delete
    2. அப்ப அனானி இவர்தானா?

      Delete
  71. யர்ருக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று ஆண்டவனை பிராத்திப்போம்

    பெ. கார்த்திகேயன்
    பாண்டிச்சேரி

    ReplyDelete
    Replies
    1. thanks God ....

      சுனாமி எச்சரிக்கை வாபஸ்

      Delete
  72. எடிட்டரும், வாசகர்களும் என்னை இதுபோல பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும்.பிரச்சனை எல்லாம் முடிந்தது என்றால் மறுபடியும் புதிதாக ஒன்று. மெயில் ஐடியில் இருந்து லாகின் செய்து மட்டும்தான் கமென்ட் போட வேண்டுமென்று செய்தாலும் இப்படியும் ஒரு சிலர்.

    //எடிட்டர் சார், நீங்கள் சொன்னது போலவே பலர் உங்களுக்கு சென்னை புத்தக கண்காட்சியில் உதவி செய்து இருக்கலாம். எனினும் அதில் ஒரு சிலரின் செயல்களில் சுய நலமும் கலந்து இருந்தது என்பதை நான் உணர்ந்ததும் அங்கு தான். நான் சென்னை புத்தக கண்காட்சியில் சந்தா செலுத்துவதற்காக உங்கள் அலுவலர் திரு. ராதா அவர்களிடம் எனது அலைபேசி எண்ணையும், விலாசத்தை தரும் முன்னரே அதனை குறித்து கொள்வதில் அந்த ஒரு சிலர் காட்டிய ஆர்வம் ஹ்ம்ம்ம்... நான் வெளி உலகிற்கு பிறரால் அறியப்படாதவன், அதில் விருப்பமும் இல்லாதவன். பின்னர் தொடர்ந்த அலைபேசி அழைப்புகள், ஒரு பழைய புத்தகத்திற்கு இத்தனை ரூபாய் என்ற பேரங்கள், ஆசை வார்த்தைகள் . ஹ்ம்ம்ம் நான் நொந்து போனேன் விஜயன் சார். எனது பழைய காமிக்ஸ் சேகரிப்பு எனக்கு பொக்கிஷம் போல. அதனை விலை பேசுவது என்பது என்னையே விற்பதற்கு சமம் என எண்ணுபவன் நான். அனைவரையும் ஒரே அளவு கோலில் எண்ணுவது வேதனையாக இருந்தது எனக்கு. காமிக்ஸ் ஆர்வத்தினை , வெறி ஆக மாற்றி விட்டனர் ஒரு சிலர். இதனை நீங்களும் நமது நண்பர்களும் புரிந்து கொள்ளவே இந்த பதிவு . இதனை உங்களுக்கு விருப்பம் இருப்பின் பிறர் பார்வைக்கு வையுங்கள் அல்லது கத்திரி போட்டு விடுங்கள். என்றும் உங்கள் பணியினை மெச்சும் ஒரு வாசகன். புத்தக ப்ரியன்//

    புத்தகப் பிரியன் சார்,

    தயவு செய்து உங்களுக்கு போன் செய்தது யார் என்று சொல்லுங்கள். அதற்க்கு ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் காட்டுங்கள். அதை விட்டு விட்டு மறுபடியும் புதியதாக ஒரு சிக்கலை ஆரம்பிக்க வேண்டாம்.

    சத்தியமாக சொல்கிறேன் - இது சேற்றை வாரி இறைத்து அதில் இன்பம் காணும் செயல். இந்த புத்தகப் பிரியர் யாரென்று முதலில் அடையாளம் கட்டிக்கொண்டு பின்னர் அவருக்கு யார் போன் செய்தார்கள், எந்த தேதியில் போன் செய்தார்கள் என்று சொல்லட்டுமே? உங்களுக்கு தைரியம் இருந்தால் நிரூபியுங்கள். இல்லையென்றால் நீங்கள் சொல்வது ஒரு உண்மையற்ற விஷயம் என்றே அர்த்தம். வீண் விளம்பரம் தேடி அலைகிறீர்கள் என்றே நான் சொல்வேன்.

    நாம் வாழ்வது விஞ்ஞான உலகத்தில். ஆதாரங்கள் இல்லாத எதுவுமே இங்கே ஏற்றுக்கொள்ளப்படமாட்டா. மறுபடியும் சொல்கிறேன் - ஆதாரத்துடன் பேசுங்கள். இப்படி ஆதாரம் இல்லாமல் என்னாலும் பல விஷயங்களை இங்கே சொல்ல முடியும். உதாரணமாக ..... சரி வேண்டாம், விடுங்கள். பிறகு ஆதாரமில்லாமல் பேசுபவர்களுக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்யாசம் இருக்கும்?

    உங்களுக்கு போன் செய்தது யார்? எந்த எண்ணில் இருந்து செய்தார்கள்? ஆதாரம் இருக்கிறதா? கடந்த மூன்று மாதங்களில் பேசிய தொலைபேசி ரிக்கார்டுகளை சுலபமாக என்னால் பெற முடியும். இதற்க்கு ஆதாரங்களுடன் பதில் அளிக்காமல் சும்மா ஏதாவது கமென்ட் இட்டு இதனை வளர்க்க வேண்டாம்.

    எடிட்டரும், வாசகர்களும் என்னை இதுபோல பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும். முத்து விசிறி அவர்கள் இதற்காகவே சிங்கப்பூரில் இருந்து வந்தார். கும்பகோணத்தில் இருந்து, மதுரையில் இருந்து, கோவையில் இருந்தெல்லாம் நண்பர்கள் லீவு போட்டு விட்டு வந்து சென்னையில் தங்கி இருந்து இந்த விழாவை சிறப்பித்தார்கள். அவர்களின் உழைப்பை இப்படி ஊர் பெயர் தெரியாதவர்கள் எல்லாம் வந்து அசிங்கப்படுத்துவதை கண்டுக்கொண்டு வாளாவிருக்க இயலாமல் எழுதுகிறேன். மன்னிக்கவும்.

    எனக்கு தெரிந்து இந்த கமெண்ட்டையும், இதன் சார்பு கமெண்ட்டையும் டெலிட் செய்து விடுதல் நலம்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு நேர்ந்த அனுபவத்தை நான் எழுதியது எந்த விதத்தில் தவறு என எனக்கு புரியவே இல்லை. நான் யார் பெயரையும் குறிப்பிடவே இல்லை. பின்பு எதற்கு இந்த பதில்? என் அனுபவத்தை பிறர் அறியவே அந்த பதிவு. இதில் எந்த வகையில் எனக்கு விளம்பரம்? பெயர் குறிப்பிட்டால் தானே விளம்பரம் கிடைக்கும். என் ஆதங்கம் எல்லாம் நமது ஆசிரியர் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே. வேறு எதுவும் அல்ல. இதில் ஏதேனும் தவறு இருப்பின் விஜயன் சார் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். புத்தக ப்ரியன்

      Delete
    2. எடிட்டர் மிகவும் தெளிவாக சிலரின் பெயரை குறிப்பிட்டு இவர்கள் உதவினர் என்று சொல்கிறார். நீங்கள் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் அந்த சிலரின் செயல்கள் சுயநலம் நிறைந்தது என்று கற்பனை கலந்து கதைகளை குறிப்பிடும்போது அந்த சிலரில் ஒருவனான நான் கேள்வி கேட்பதில் தவறில்லையே?

      நீங்கள் உண்மை என்று நிரூபிக்கும் வரையில் அது ஒரு பச்சைப்பொய் என்றே நான் கூறுவேன். ஆதாரம் இல்லாமல் சேதாரம் - character assassination- செய்யும் உரிமை உங்களுக்கல்ல, யாருக்குமே கிடையாது.

      Even bad publicity is good publicity, when it happens for the opposition என்று சொல்வதைப்போல, இந்த விஷயத்தில் நீங்கள் நடந்து கொள்கிறீர்கள். இதற்க்கு மேலும் ஆதாரங்களோ, அல்லது விஷயங்களோ இல்லாமல் நேரத்தை வீணடிக்க வேண்டாம். இந்த விஷயத்தில் இதுவே என்னுடைய கடைசி கமென்ட். ஆதாரங்களை கொடுக்காத வரை, புத்தகப்பிரியர் ஒரு பொய்யர். போலி வேஷமிட்டு தன்னை யாரென்று காட்டிக்கொள்ளும் துணிவில்லாமல் கமென்ட் இடுபவர். அவ்வளவே.

      Delete
    3. may be some one not known to you, நீங்க ஏன் டென்ஷன் ஆகுறீங்க. இந்த மாதிரி விஷயங்கள் செய்யறதுக்கு புதுசா நமக்கு தெரியாம ஒருந்தன் வந்துட்டாநேன்னு கோபப்பட்ரீங்கலோ.. புத்தகப்ரியன் தயவு செய்து ஆதாரங்களை ரசிகருக்கு அனுப்பி வைக்கவும் அவர் இது போல் மற்றவர்கள் செய்யாது பாத்துக்கொள்வார்...

      Delete
    4. Comics fan from chennai என்கிற Geroge A Custer என்கிற தேவாரம் என்ற பெயரில் அழைக்கப்படும் அதி புத்திசாலி என்று நினைத்துக்கொண்டு கமென்ட் இட்டு இருக்கும் நண்பருக்கு,
      ஒருவர் தேவை இல்லாமல் வந்து குற்றம் சாட்டுகிறார். அதில் என் பெயர் சம்பந்தப்பட்டுள்ளதால் நான் வந்து ஆதாரம் கேட்கிறேன். நீங்கள் ஏன் வீணாக தேவை இல்லாமல் மேலும் குழப்பமும் அரசியலையும் உருவாக்குகிறீர்கள்?

      இரவு பனிரெண்டு மணியாகி விட்டதே, வழக்கம் போல சினி புக் அல்லது மைக் ப்ளூபெர்ரி கதைகளை முழுக்க முழக்க ஸ்கான் செய்து ஆன்லைனில் இல்லீகலாக அப்லோட் செய்ய செல்லவில்லையா? (ரொம்பவும் யோசிக்க வேண்டாம் - இதனை நீங்கள்தான் பெருமையாக அறிமுகப்படுத்தும்போது சொல்லிகொண்டீர்கள்).

      Delete
    5. //அதில் என் பெயர் சம்பந்தப்பட்டுள்ளதால் நான் வந்து ஆதாரம் கேட்கிறேன். நீங்கள் ஏன் வீணாக தேவை இல்லாமல் மேலும் குழப்பமும் அரசியலையும் உருவாக்குகிறீர்கள்? //

      ரசிகரே உங்க பேரை அங்க அவர் சொல்லவே இல்லையே!!

      Delete
    6. அப்லோட் பத்தி கேட்டா எப்படி, ஒரு சிலர் DVDல புக் விற்கிற மாதிரியா?

      Delete
    7. இது போன்ற தனி மனித தாக்குதல்களை தவிர்க்கலாமே ஒலக காமிக்ஸ் சார். நண்பர் குறிப்பிட்டதை போல நீங்கள் இவ்வளவு வேகம் கொள்ள தேவை இல்லை என்பது என் கருத்து. உங்களை நான் கண்டதே இல்லை, உங்கள் பெயரை நான் குறிப்பிடவும் இல்லை . பின்னர் ஏன் இந்த துவேஷம் ? அப்படி என்றால் எந்த ஒரு வாசகனுக்கும் விஜயன் சார் இடம் எந்த ஒரு விஷயத்தையும், தனக்கு நேர்ந்த அனுபவத்தையும் தெரிவிக்கும் பொதுவான கருத்து சுதந்திரம் கிடையாதா என்ன? இது எல்லா வாசகர்களுக்கும் பொதுவான ப்ளாக் தானே? புத்தக ப்ரியன்

      Delete
  73. Top 5 (comment களின் வரிசைப்படி)

    1 மறுபதிப்புக்கு மரியாதை - 216
    2 இது லார்கோ காலம் - 138
    3 நெஞ்சிலிருந்து நேராய் - 116 (இன்னும் சண்டை முடியல)
    4 தலைவாங்கி குரங்கு மீண்டும் - 113
    5 சென்று வாருங்கள் நண்பர்களே - 103

    இது இன்றைய நிலவரந்தான்....

    ReplyDelete
  74. விஜயன் சார்

    உங்க தாராள மனசுக்கு ஒரு எல்லையே இல்லாம போயிட்டுயிருக்கு. இன்னைக்கு ஆபீஸ் விட்டு 6 . 30 க்கு வீட்டுக்கு போனா, இரண்டு தனி தனி பார்சல் நீட்டினாங்க, என்னடா இது நேற்றுதான் தலையார் வந்தாறேன்னு கொழப்பத்துல கைல வாங்கினா....அட தேவுடா....

    ரெண்டுமே டாக்டர் 7

    இரண்டு புக்குமே ஒரே date ல தபால் பண்ணியிருக்கிங்க. என் புலம்பல் தாங்காம இரண்டு book அனுப்பிடிங்கலோ... இல்ல என்மேல அவ்வளோ பாசமா..

    ok இப்போ நான் என்ன சார் பண்ணட்டும், நாளைக்கு ஒரு டாக்டர் ஐ திருப்பி அனுப்பிடட்டுமா

    ReplyDelete
    Replies
    1. எனக்கு ஒரு ஐடியா தோணுது கார்த்திக் காமிக்ஸ்சே படிக்காம இருக்கும் உங்கள் நண்பர்களோ சிறுவர்களோ யாருக்கோ அவருக்கு இலவசமா குடுத்து படிக்க சொல்லுங்க. அவர் இந்த புத்தகத்தை பற்றி என்ன நினைக்கிறார் என்பதை இங்கு பகிர்ந்து கொள்ளுங்க, எடிட்டருக்கு திருப்பி அனுபரத விட இது நல்ல ஐடியா, படித்தவர் உயிரோடு இருக்கும் பட்சத்தில். எடிட்டரும் அத தெரிந்து விரும்புவார் ...

      Delete
    2. Mr அனானி (George ) உங்க வேலை என்னவோ பாத்துகிட்டு போங்க. உங்ககிட்ட ஒன்னும் suggestion கேக்கல

      Delete
    3. தங்கள் சித்தம்!!

      Delete
  75. புத்தக பாதுகாப்பு - ஒரு நுண்ணிய கலை!

    ...
    செய்தித்தாளை கொண்டு பல புத்தகங்களுக்கு அட்டை போட்டிருந்தேன்! அது மிக பெரிய தவறு என்பது காலம் கடந்து உறைத்தது!

    புத்தகங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்ககூடாது, மாறாக அவைகளை நிற்பாட்டிய நிலையில் வைக்கவும்
    ...

    விரிவாக ப்ளேட்பீடியாவில் படிக்கவும்!

    ReplyDelete
    Replies
    1. செய்தித்தாள்கள் கொண்டு அட்டை போடகூடாது. சரி.

      புத்தகங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கலாம், அவைகளை நிற்பாட்டிய நிலையில் வைக்ககூடாது என்று படித்ததாக ஞாபகம்.

      நிற்பாட்டிய நிலையில் புத்தகங்கள் வளைந்து போகலாம்.

      Delete
    2. பதிவை முழுதாக படித்தீர்களா? :)

      புத்தக பாதுகாப்பு - ஒரு நுண்ணிய கலை!

      >>>
      * ஒவ்வொரு புத்தகத்தையும் அதன் அளவை விட சற்றே பெரிதானதொரு "Mylar" பிளாஸ்டிக் உறையில் வைத்திட வேண்டும். புத்தகத்தை நுழைப்பதற்கு முதல் அதற்கு சாய்மானமாக, Mailaar உறை அளவிலான ஒரு அட்டையை வைத்திடவும் (கடின அட்டை கிடைக்கவில்லையெனில், இரண்டடுக்கு கார்ட்போர்ட் அட்டையை உபயோகித்திடலாம்). சாதாரண PVC பிளாஸ்டிக் உறையை பயன்படுத்துவது நல்லதல்ல!
      * இவ்வாறு பலப்படுத்தப்பட்ட புத்தகத்தை ஒன்றன் மீது ஒன்றாக சாய்வாக நிற்பாட்டி வைக்கலாம்!
      <<<<

      Delete
    3. இது.......இது.......இதைத்தான்.... வெகு நாட்களாக தேடி கொண்டிருந்தேன். நன்றி! கூடுதலாக ஒரு கொசுறு செய்தி: புத்தகங்களின் அருகில் வேப்பம் இலை போட்டு வைத்தால் ( 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றவும் ) பூச்சிகள் அனுகுவதில்லை இது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்த எனது அனுபவம் .இன்னொரு சேதியும் கூட : "பொள்ளாச்சி நசன்" என்ற எனது நண்பர் 80 ஆண்டுகளுக்கு மேலான புத்தகங்களை கூட அருமையாக பாது காத்து வருகிறார் தமிழின் பழைய நூல்களுக்காக பலசிரத்தை எடுத்து பாதுகாத்து வருகிறார் ( அறிய பொக்கிச நூலகம் வைத்துள்ளார் ). அவரின் ஆலோசனைகளை அனுப்ப கோருகிறேன்.

      ஆசிரியருக்கு : நமது மிக பழைய காமிக்ஸ் உங்களிடம் இல்லை என்பது உங்களை சந்தித்த போது (1989 ) கூறியது இன்றும் நினைவில் உள்ளது . இனி வரும் காமிக்ஸ் களின் ஒரு பிரதியை "தஞ்சை தமிழ் பல்கலை கழகத்திற்கு " அனுப்பவும். எத்தனை நூறாண்டுகள் ஆனாலும் அவர்கள் பத்திரமாக வைத்திருப்பார்கள் . எனது கல்லூரி நாட்களில் நான் நடத்திய "சிப்பி " என்ற உருட்டச்சி (Cyclostyle ) சிற்றிதழ் பத்திரிகையை (1986 ) இன்றும் அவர்கள் பாது காப்பது மெய் சிலிர்க்க வைக்கிறது.

      Delete
    4. மிக்க நன்றி ஸ்டாலின்! கண் கெட்ட பிறகு காண்டாக்ட் லென்ஸ் போட்டாவது சூரிய நமஸ்காரம் பண்ணலாம் தவறில்லை :) வேப்ப இல்லை பற்றிய அனுபவ தகவலுக்கு மிக்க நன்றி! உங்கள் நண்பரின் ஆலோசனைகளுக்கு காத்திருக்கிறேன்!

      Delete
    5. விஜயன் சார்,

      நமது வாசகர்களில் பெரும்பாலோனோர் புத்தக சேகரிப்பாளர் வகையை சார்ந்தவர்களே என நான் கருதுகிறேன்! அவர்கள் ஒவ்வொருவருக்கும் புத்தக பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது நமது கடமை! என்னிடம் இல்லாவிட்டாலும், யாரோ ஒரு நண்பர், எங்கேயோ ஒரு ஊரில் அனைத்து பழைய காமிக்ஸுகளையும் சேகரித்து வைத்திருப்பார் என்ற ஒரு எண்ணமே எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒன்றாகும்! நீங்கள் உங்கள் வலை தளத்திலோ, அல்லது லயன் / முத்து எதாவது ஒரு வெளியீட்டிலோ இது பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினால் நான் நன்றி உடையவனாவேன்!

      செய்வீர்களா விஜயன் சார்??!

      Delete
  76. டியர் எடிட்டர் sir , இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (?) , சித்தரை திருநாள் வாழ்த்துக்கள் for u &ur family & ur staffs . we r waiting for super hero super special

    ReplyDelete
  77. விஜயன் சார், ஒரு வேண்டுகோள் . நம் காமிக்ஸ் வாசகர்கள் எத்தனை பேர் இங்கு பதிவை இட முடியும் என்று எனக்கு தோன்றுகிறது.ஏன் எனில் நீங்கள் மின்னஞ்சல் முகவரி வாயிலாக மட்டுமே கருத்துகளை சொல்ல முடியும் என்பது நம் வாசகர்களின் இணைய தள பயன்பாட்டினை சோதிக்கும் விஷயமாக படுகிறது. இந்த ப்ளாக் நமது கருத்துகளை உங்களுடன், பிறருடன் பகிர்ந்து கொள்ளவே அல்லவா! பின் எதற்கு இந்த கட்டுப்பாடுகள்? முன்பு இருந்ததை போலவே பெயர் அல்லது unanymous பதிவு வசதி இருப்பின் ஏனைய அனைவரும் இலகுவாக பயன்படுத்து ம் வகையில் நமது ப்ளாக் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. புத்தக ப்ரியன்

    ReplyDelete
  78. டென்சனின் உச்சத்தில் புனித சாத்தான்.தலை வாங்கியார் இன்றும் வரவில்லை.நில நடுக்கம் வந்ததுதான் பாக்கி.

    ReplyDelete
    Replies
    1. சீகிரமே வரும் பாஸ்

      Delete
    2. இது வரை 4 முறை போன் செய்துவிட்டேன். “இன்னைக்கு வரலைன்னா” திருப்பி சொல்லுங்க என்ற ஒரே பதில். சென்னையிலிருக்கும் எனக்கே ஏன் இவ்வளவு தாமதம் என்று தெரியவில்லை. :(. எடிட்டர் மெயில் அனுப்ப சொன்னார். 5 நாட்களுக்கு முன்பே மெயிலும் அனுப்பிவிட்டேன். வரும்போது வரட்டும் என்று விடவேண்டியதுதான் போல.

      Delete
  79. இங்கும் அதுவே...2 முறை தொலைபேசியில் தொடர்புகொண்டும், தலை வாங்கியாரும், டாக்டரும் வரவில்லை :(

    ReplyDelete
  80. 1 . தலைவாங்கி குரங்கு (டெக்ஸ் வில்லர்) - எதிர்பார்ப்புடன் வந்து சற்று ஏமாற்றம் கொடுத்தவர்

    2 . சாத்தனின் தூதன் டாக்டர் 7 (காரிகன் & ரிப் கெர்பி) - கட்டாய ஓய்வு கடுப்பிலும் கலக்கிட்டு போனவர்கள்

    ReplyDelete
  81. பொறுத்தார் பூமி ஆழ்வாரோ இல்லியோ...நிச்சயம் கலரில் நிறைய தமிழ் காமிக்ஸ் படித்திடுவார்!superb line editer sir .நல்லவேளை நீங்கள் நாவல் உலகத்திற்கு போகவில்லை ,போகி இருந்தால் ஒரு மினி rajeh kumar ஒ அல்லது ஒரு பட்டுகோட்டை ஒ கிடைத்து இருப்பார்கள் .நாவல் உலகம் ஒரு சூப்பர் ஸ்டார் யை இழந்ததால் காமிக்ஸ் உலகத்திற்கு ஒரு lion கிடைத்தது , அதுவும் இப்போது பன்மடங்கு ஆவேசத்தோடு ,நம் காமிக்ஸ் இன் கோல்டன் period 1985 -1990 யை மின்சும் ஆவேசத்தோடு .எல்லோரும் lion ன் சகாப்தம் முடிந்தது என்றும் இனிமேல் lion வராது என்றும் சொல்லிக்கொண்டு திரிந்த போது இப்போது 16 அடி பாய்சல் .keep it up sir .

    ReplyDelete
  82. விஜயன் சார்,உங்கள் அன்பு, என்னையும் அறியாமல் கண்ணீர் வரவைத்துவிட்டது. இப்படி பலபேரின் உண்மையான அன்பு கண்டிப்பாக விஜயன் சாருக்கு ஒரு பாஸிடிவ் ஒளியை கொடுக்கும்! அவரது எண்ணங்கள் வெற்றிபெற அந்த பாஸிடிவ் வைபிரேஷன் உதவும்! நேற்று கேகேநகர் டிஸ்கவரி புக் போய் cbs, விண்ணில் ஒரு குள்ளநரி,கொலைகாரகலைஞன் வாங்கிட்டேன். திநகரில் பஸ்ஸில் ஏறியவுடன் தகவல்” நிலநடுக்கம் “ என்று! மறக்கமுடியாத காமிக்ஸ் வேட்டையாக அன்றைய தினம் அமைந்துவிட்டது!

    ReplyDelete
  83. இலங்கையில் இருந்து கமென்ட்டுகளால் எங்கள் உள்ளம் குளிர்விக்கும் அன்பு நண்பர் தீபன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி விஸ்வா.

      -Theeban (SL)

      Delete
  84. Many many hapy returns of the day, Theepan.

    April seems to be the month of many comirades.

    on 6th april, we celebrated my birthday.

    12th april is yours.

    14th april is King Viswa's.

    21st april is vandumama.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஒலக காமிக்ஸ் ரசிகன்!

      -Theeban (SL)

      Delete
  85. ஜாம்பவான்களிடமிருந்து வாழ்த்தா? .. எதிர்பார்க்கவேயில்லை... மிக்க நன்றி.

    பிறந்தநாள் கொண்டாடிய ஒலக காமிக்ஸ் ரசிகன், கொண்டாடவிருக்கும் King Viswa, மதிப்பிற்குரிய வாண்டுமாமா அனைவருக்கும் காமிக்ஸ் ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள்.

    தொடர்ந்து காமிக்ஸ் படிப்பதனால் வயது ஏறுவதே தெரிவதில்லை. குறையுறமாதிரிதான் இருக்கு. :)

    -Theeban (SL)

    ReplyDelete
  86. காமிக்ஸ் உலக நண்பர்களுக்கு இனிய சித்திரை முதல் நாள் நல்வாழ்த்துக்கள்.

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    இன்று பிறந்த நாள் காணும் இலந்கைவாழ் காமிக்ஸ் சகோதரர் அண்ணன் தீபனுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்!

      (அண்ணன்? :) )

      -Theeban (SL)

      Delete
  87. கடுமையான வெயில் கொளுத்தும் சிவகாசியில், கரண்ட் இல்லாத சூழலில் அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் பொறுமையாக பதில் சொல்லும் லயன் காமிக்ஸ் அலுவலகப் பணியாளர்களுக்கும் என்னுடைய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    வேறெந்த பதிப்பகமும் இந்த அளவுக்கு பொறுப்பாக பதில் அளிக்க மாட்டார்கள். உதாரணமாக நான் பல மாதாந்திர புத்தகங்களுக்கு சந்தா கட்டி அவற்றை வாங்கி வருபவன் (சயின்ஸ் மற்றும் ரிசர்ச் ஜர்னல்கள்). எனக்கு இரண்டு மாதத்திய புத்தகங்கள் இன்னும் வரவில்லை. கேட்டால் பதிலே இல்லை.

    இன்னுமொன்று சொல்கிறேன் - நீங்கள் ஏர்டெல் அல்லது ஏர்செல் போன்ற தனியார் தொலைபேசி நிறுவனங்களின் கஸ்டமர் கேர் (கஷ்டமர் கேர்?) எண்ணுக்கு போன் செய்து பேசி இருக்கிறீர்களா? அவர்கள் அப்பனும் அலப்பறைக்கு அளவே இராது. ஆனால் அங்கே நம்மால் ஒன்றுமே செய்ய இயலாது. மிஞ்சி போனால் நம்பர் போர்டபிளிட்டி என்று பேசலாமே தவிர வேறொன்றுமே செய்ய முடியாது. ஆனால் அன்மது லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் இருக்கும் நண்பர்கள் அனைவருமே பொறுப்பாக பதில் சொல்வதோடில்லாமல் போன் செய்து புத்தகம் வந்து விட்டதா என்றுகூட விசாரித்து வருகிறார்கள்.

    நீங்கள் நினைப்பது போல அனைத்து புத்தகங்களும் ஒரே நாளில் வருவதில்லை. நூறு நூறு புத்தகங்களாகவே வருகின்றன. அவற்றை வந்த அன்றே குரியரிலும், தபாலிலும் அனுப்பி வைக்கிறார்கள். இதில் தபால் துறையில் இருக்கும் பல அன்பர்கள் அபேஸ் செய்தும் விடுகிறார்கள். அப்படி மிஸ் ஆன புத்தகங்களையும் மறுபடியும் லயன் காமிக்ஸ் ஆபீசில் விசாரித்தால் இன்னுமொரு புத்தகம் அனுப்பி வைக்கிறார்கள். இப்படி சிறப்பாக சேவை ஆற்றி வரும் அவர்களை பாராட்ட முடியாவிட்டாலும், அவர்களை கிண்டல் செய்யும் தொனியில் கமேட்டுகளை இடாமல் இருக்க முயலுங்கள்.

    வரவிருக்கும் இந்த புத்தாண்டு முதல் காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவரும் வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக இருக்க முயல்வோம். அப்படி இல்லையெனில், குறைந்தபட்சம் இந்த தளத்திலாவது சண்டை போடாமல் இருக்க முயல்வோம். எடிட்டருக்காவது தலைவலை சிறிது குறையும்.

    உங்களுக்கெல்லாம் சண்டை போட வேண்டும் என்றால் என்னுடைய பிளாக் பக்கம் வந்து கொஞ்சம் சண்டை போட்டாவது கமென்ட் கணக்கை ஏற்றுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. பதிவுக்கு நன்றி நண்பரே !

      எனக்கும் கூட இன்னும் புத்தகங்கள் வரவில்லை.

      விஜயன் சார் : தபால் மூலம் அனுப்பாமல் இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள் சேர்த்து கூரியர் மூலம் அனுப்பலாமே. தேவையில்லாத தாமதம் மற்றும் புத்தகங்கள் காணமல் போவதும் குறையுமே.

      நன்றி
      நாகராஜன்

      Delete
    2. //இதில் தபால் துறையில் இருக்கும் பல அன்பர்கள் அபேஸ் செய்தும் விடுகிறார்கள். அப்படி மிஸ் ஆன புத்தகங்களையும் மறுபடியும் லயன் காமிக்ஸ் ஆபீசில் விசாரித்தால் இன்னுமொரு புத்தகம் அனுப்பி வைக்கிறார்கள்.//

      ஜாலி ஜம்ப்பர், இது நமக்கு சந்தோசமான செய்தி அல்லவே. எனக்கு நேற்று டாக்டர் 7 இரண்டு வந்ததை நான் உடனே இங்கே எழுதிய கமெண்ட் ஐ படித்திருப்பீர்கள். லயன் ஆபீஸ் ஊழியர்கள் உண்மையிலேயே புத்தகம் வாசகர்கள் கையில் கிடைக்கவில்லையா என்று நன்கு விசாரித்து திரும்பவும் புத்தகம் அனுப்பலாம். ஏனென்றால் சந்தாக்களின் எண்ணிக்கையோ குறைவு, 100 விலைகொண்ட புத்தகம் இரண்டு தடவை 10 பேருக்கு அனுப்பினால் நமது ஆசிரியருக்கு 1000 ருபாய் நஷ்டம். மேலும் இது தவறான செயல்களுக்கு முன்னுதாரணம் ஆகிவிடும். எனவே கூடுமானவரை கூரியர் மூலமே புத்தகங்கள் அனுப்பி இந்த பிரச்னையை தவிர்க்கலாம்.

      வாசக நண்பர்கள் வேறு ஐடியாக்கள் இருந்தாலும் ஆசிரியருக்கு இங்கே பதிவிடலாமே.

      Delete
    3. நண்பர் கார்த்தி

      தங்கள் கருத்துக்கு நன்றி !!!

      ரூபாய் நூறு விலை உள்ள புத்தகங்கள் கூரியர் மூலமே அனுப்பி வைக்கப்படும் என்பது எனது கருத்து. ஏனென்றால் சந்தா பற்றிய பகுதியில் நமது ஆசிரியர் வருடத்திற்கு நான்கு புத்தகங்கள் ரூபாய் நூறு விலையில் அனுப்ப கூரியர் செலவு ரூபாய் 25 (25X4) என குறிப்பிட்டுள்ளார்.

      நன்றி
      நாகராஜன்

      Delete
  88. இங்கு யாருக்கும் சண்டை போடும் எண்ணம் எல்லாம் இல்லைங்க.பிறர் அனுபவங்களை சிலர் ஏற்று கொள்ள மறுக்கும் பிடிவாதம் தான் இது. இவை யாவும் நமது காமிக்ஸ் காதலை'யே காட்டுகிறது. இங்கு தனி மனித துதி ஏதும் இல்லாது இருத்தல் நலம். நம்மை ஒன்று படுத்துவது நமது காமிக்ஸ் ரசனையே என்பது உண்மை.நமது லயன் அலுவலக ஊழியர்களின் பொறுமை கடலினும் பெரிது என்பது கண் கூடு. புத்தக ப்ரியன்

    ReplyDelete
  89. //puthagapriyanApr 12, 2012 04:12 AM

    இது போன்ற தனி மனித தாக்குதல்களை தவிர்க்கலாமே ஒலக காமிக்ஸ் சார். நண்பர் குறிப்பிட்டதை போல நீங்கள் இவ்வளவு வேகம் கொள்ள தேவை இல்லை என்பது என் கருத்து. உங்களை நான் கண்டதே இல்லை, உங்கள் பெயரை நான் குறிப்பிடவும் இல்லை . பின்னர் ஏன் இந்த துவேஷம் ? அப்படி என்றால் எந்த ஒரு வாசகனுக்கும் விஜயன் சார் இடம் எந்த ஒரு விஷயத்தையும், தனக்கு நேர்ந்த அனுபவத்தையும் தெரிவிக்கும் பொதுவான கருத்து சுதந்திரம் கிடையாதா என்ன? இது எல்லா வாசகர்களுக்கும் பொதுவான ப்ளாக் தானே? புத்தக ப்ரியன்//

    கமென்ட் போட்டு ஒரு நிமிஷம் கூட ஆகலை. மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்க.

    புத்தகப்பிரியரே, நீங்கள் சொல்வது உண்மை எனில் யார் போன் செய்தார்கள் என்று சொல்லலாமே? எதற்கு தேவை இல்லாமல் விவாதம்? அப்படி உண்மை என்று சொல்ல விஷயம் இல்லை எனில் அமைதியாக காமிக்ஸ் மற்றும் புத்தகங்கள் குறித்தும் மட்டுமே விவாதிக்கலாமே?

    ஒரு விஷயம் முடிந்துவிட்டது என்றால் அதை ஊதி பெரிதாக்க சிலர் முயல்கிறார்கள் என்று தெரிகிறது. வேண்டாம் தோழர்களே,இது தவறான விஷயம்.

    இது பொதுவான தளமே, கருத்து தெரிவிக்க அனைவருக்குமே உரிமை உண்டு. கவனிக்கவும், கருத்து தெரிவிக்க மட்டுமே. கற்பனைகளை அல்ல. இவ்வளவு விவாதம் நடந்த பின்னரும்கூட நீங்கள் யாரென்று சொல்லவே முடியாத நிலையில் தானே நீங்கள் இருக்கிறீர்கள்?

    இப்படி ஒரு கமெண்ட்டை இடுவதால் நான் ஒலக காமிக்ஸ் ரசிகரை ஆதரிக்கிறேன் என்றோ அல்லது யாரென்று இனம்காண முடியாத புத்தகப்பிரியரை எதிர்க்கிறேன் என்றோ அர்த்தம் அல்ல. இங்கே மனிதர்களை பற்றி விவாதிக்காமல் கதைகளை பற்றி விவாதிக்கலாம் என்றே அப்படி கூறினேன். புத்தகப்பிரியர் தரப்பில் நியாயம் இருப்பின் பொதுவில் ஆதாரங்களுடன் நிரூபிக்கட்டும், நம்புகிறேன்.

    ReplyDelete
  90. நாளைமுதல் புதியதொரு ஆண்டு மலர்கிறது. புத்தாண்டுகளில் எப்போதுமே ஏதாவது ஒரு விஷயத்தை கடைபிடிக்க எண்ணுவதுண்டு (உதாரணமாக டயரி எழுதவேண்டும், காலையில் ஜாக்கிங் செல்ல வேண்டும் என்றெல்லாம்). ஆனால் ஒவ்வொரு வருடமும் முதல் ஐந்து நாட்கள் அல்லது மிஞ்சிப் போனால் பத்து நாட்கள் மட்டுமே இந்த ரெசல்யூஷன் வரும். பின்னர் பழைய குருடி கதைதான். ஆனால் இந்த முறை மட்டும் காமிக்ஸ் உலக நண்பர்களுக்காக ஒரே ஒரு வேண்டுகோள் வைத்து அதனை அனைவருமே பின்பற்ற ஆசைப்படுகிறேன்.

    ஜாலி ஜம்ப்பரின் பதிவு


    மேலே லிங்க் கொடுத்திருக்கும் பதிவில் இருக்கும் அழகான இந்த சித்திரத்தை பாருங்கள். லக்கிலூக்கின் அதிதீவிர எதிரியான டால்டன் சகோதரர்களும், அதிரடிப்போடியன் பில்லியுமே அழகாக நமக்காக நட்புடன் போஸ் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். சர்ரியலிச உண்மைகளை விளக்கினால் இவர்கள் வெறும் கதை மாந்தர்கள் மட்டுமே. கதையில் சண்டை போடும் இவர்கள் கதை களனுக்கு வெளியில் இப்படித்தான் இந்த கதாசிரியரின் பார்வையில் இருப்பார்கள். அப்படி இருக்க, இந்த கதைகளின் தீவிர ரசிகர்களாகிய நாம் மட்டும் என் சண்டை, சச்சரவு என்று புழுதியை அடுத்தவர் மீது வாரியிறைக்க வேண்டும்?

    என்னுடைய சிறு வயதில் பாடப்புத்தகத்தில் இந்த வாசகங்கள் இருக்கும். எனக்கு மிகவும் பிடித்தவை அவை:

    "இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம், இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்".

    இந்த வாசகத்தை சிறிதே மாற்றி,
    "காமிக்ஸ் ரசிகர் என்பதில் பெருமிதம் கொள்வோம், இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்" என்று செயல்படலாமே?

    ReplyDelete
  91. வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர்களே.

    'தலைவாங்கிக் குரங்கு' இன்று எனக்குக் கிடைத்தது. என்ன ஒரு பிறந்தநாள் பரிசு! ஆசிரியர் மற்றும் அலுவலகத்தினர், குறிப்பாக திரு.ராதாக்ருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி.

    -Theeban (SL)

    ReplyDelete
    Replies
    1. many more happy returns of the day Theeban
      enjoy the day with special edition comics classics.

      Delete
    2. Have a great Birthday Podiyan [I like this name very much]

      Delete
    3. Many more happy returns of the day Theeban :)

      Delete
  92. //ஜாலி ஜம்ப்பர், இது நமக்கு சந்தோசமான செய்தி அல்லவே. எனக்கு நேற்று டாக்டர் 7 இரண்டு வந்ததை நான் உடனே இங்கே எழுதிய கமெண்ட் ஐ படித்திருப்பீர்கள். லயன் ஆபீஸ் ஊழியர்கள் உண்மையிலேயே புத்தகம் வாசகர்கள் கையில் கிடைக்கவில்லையா என்று நன்கு விசாரித்து திரும்பவும் புத்தகம் அனுப்பலாம். ஏனென்றால் சந்தாக்களின் எண்ணிக்கையோ குறைவு, 100 விலைகொண்ட புத்தகம் இரண்டு தடவை 10 பேருக்கு அனுப்பினால் நமது ஆசிரியருக்கு 1000 ருபாய் நஷ்டம். மேலும் இது தவறான செயல்களுக்கு முன்னுதாரணம் ஆகிவிடும். எனவே கூடுமானவரை கூரியர் மூலமே புத்தகங்கள் அனுப்பி இந்த பிரச்னையை தவிர்க்கலாம்.

    வாசக நண்பர்கள் வேறு ஐடியாக்கள் இருந்தாலும் ஆசிரியருக்கு இங்கே பதிவிடலாமே.//

    எனக்கு தெரிந்த வரையில் புதிய செட் புத்தகங்கள் அனைத்துமே இனிமேல் குரியரில் தான் அனுப்பப்படும். பழைய பத்து ருபாய் விலையிலான புத்தகங்கள் மட்டுமே தபாலாபீஸ் மூலமாக அஞ்சலில் அனுப்பப் படும்.

    குரியரில் வருவதால் கவலை வேண்டாம். கரெக்ட் ஆக வந்து விடும்.

    நண்பர்களே, மற்றுமொரு விஷயம் - இப்போதுதான் லயன் காமிக்ஸ் ஆபீஸ் கலை கட்ட துவங்கி உள்ளது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இந்த சந்தா விஷயங்கள் ஸ்ட்ரீம்லைன் ஆகியதும் அனைத்துமே சரியாகிவிடும்.

    ReplyDelete
  93. Dear Editor Sir

    Any plans for Annual issue[ஆண்டு மலர்] for this year .This July it will be our Lion 28th birthday . We wanted to see the classical ad of Lion sitting with birthday cake and candle in the upcoming lion issues like it featured in good old days

    For more info on Lion Annual issue and to see the classical ad visit this link

    http://akotheeka.blogspot.in/2010/07/blog-post.html


    Asterix and Tin Tin series : Many times you have mentioned that it will not be liked by our readers and royalty for the series is quite high .Is the royalty price is still that high for this series ? . If not, may be it is time to experiment Asterix and Tin Tin series . Personally I have a feeling Asterix will be huge hit with our fans since they liked Lucky Luke and Iznogoud series which are from the same creator [René Goscinny ] .Never a dull moment in Tin Tin series also .

    Any idea to bring back Jess Long in Muthu comics again ?. I came to know that a lot of stories of him is not published and his story are real treat for crime thriller fans like me .Please bring him again

    For more info on Jess long ,visit this link by Viswa

    http://tamilcomicsulagam.blogspot.in/2009/04/jess-long-forgotten-hero-of-muthu.html


    Ever since you started to share your comics experience through "சிங்கத்தின் சிறுவயதில் "series , I have become a huge fan of it . In fact I have started to read this as first when I get the book for the first time , instead of " Hot line" which was my first priority before that . This series brings me the nostalgic memories of how I got these books in good old days . Hence my sincere request , once this series is over , publish all parts of
    " சிங்கத்தின் சிறுவயதில் " in a single book . I can understand this will not liked by all readers and profit wise also not good .But still for the sake of collectors wish , you can do it for pleasure purpose or you can supply that as freebee in any one of the special issue .Like wise , please publish all the series written by you like " how to draw a picture ", "wild west" and one more series based on war [forgot the name ].

    One more request, during the 90's there was contest to pick best 4 cover page of our issue and that will be supplied as freebee poster .Even though it was dropped for the high cost of paper at that time, i reckon you can print some of the best poster of our comics now and sell them at affordable price . Certainly majority of our people liked to have their favorite hero's decorating their house wall. A humble request from a ardent comic fan

    adios

    ReplyDelete
    Replies
    1. Asterix/ Tin tin தமிழிலா? இப்ப லயன்/முத்து காமிக்ஸ் நல்லாதான போய்கிட்டு இருக்கு!!

      Delete
  94. Guys

    anybody happened to get this following book ?

    Johnny Hazard, Volume 1: The Newspaper Dailies 1944-1946

    by Frank Robbins


    This book is available in Flipkart . What are ths stories that came in Lion / Muthu comics? .It would be great if someone did review on it.

    ReplyDelete
    Replies
    1. Arun, no great reviews have been received for Johny Hazard, but 3 stars is real good rating for a classic collection.

      Also, if planning to buy, do it from homeshop18, the price is just above 1.7k, out there.

      Delete
  95. I think the new way of dealing titles is going to be a hit for sure Editor, just go ahead I like it, so as many.

    ReplyDelete
  96. ஏகப்பட்ட கடுப்பில் புனித சாத்தான் .தலை வாங்கியாரின் தாமதத்திற்கு காரணம் என்னவோ ?கூடவே ரிப் கிர்பி ,காரிகன் போன்ற தாத்தாக்களும் வருவதாலா?

    ReplyDelete
  97. கடலுக்கு ​தே​வையில்​லை சுணாமி, ​சொத்துக்கு ​தே​வையில்​லை பிணாமி, லயனுக்கு ​தே​வையில்​லை அனானி.

    ReplyDelete
  98. இந்த பதிவில் நான் கருத்திடவே தேவையில்லை என்று எண்ணி ஒதுங்கி இருந்தேன். ஏனெனில் குற்றமற்றவர்கள், அவர்களை எனக்கு நன்றாக தெரியும் என்று எடிட்டரே சான்றளித்து பதியும் இடத்தில், நாம் புதிதாக எதை கூறி மாற்று கருத்து அளிக்க முடியும். ஆனாலும், தனி மனித தாக்குதல்கள் இனியும் தொடர தேவையில்லை என்று ஒதுங்கி இருந்தாலும், பெயரை கூறி மற்றவர்களை சந்திக்கு இழுக்கும் செயலை விட்டுவிட, சிலரின் பிறவி குணங்கள் அனுமதிப்பதில்லை. பொய் ஐடிகளை உருவாக்கி அடுத்தவரை ஏசியும், தாக்கியும் பதிந்த நபர்கள் இன்றும் அதே செயலை தொடர்கிறார்கள். இதற்கு இனியும் பதிலளிக்கவில்லை என்றாலும் அது சரியாகாது.

    இத்தளம் எடிட்டருக்கும் அவரின் ரசிகர்களுக்கும் நேரடியாக ஒரு தொடர்பு ஏற்படுத்த வேண்டி உருவான ஒரு காரணி. இதில் லயன் முத்து காமிக்ஸ் ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் சந்தேகங்கள், குறைகள் இவற்றை நேரடியாக எடிட்டரிடமே கேட்டு பதில் பெற அவர் அவர் விரும்புகிறார்கள். பல காலமாக தங்கள் குறைகளை சொல்ல முடியாமல் மத்திய கும்பல் ஒன்றில் நிழற் மேற்பார்வையில் வைக்கபட்டிருந்தவர்கள், தங்கள் சுதந்திரத்தை பதிவு செய்ய விரும்புவது இயல்பு தானே. இதில் நடுவில் புகுந்து மத்தியஸ்தம் செய்யும் சாக்கில் தங்கள் சாக்கடை எண்ணங்களை கழுவி கொள்ளும் வாய்ப்பை தேடி ஏங்கும் கூட்டம் விடுமா... அது அவர்களின் சமீப நெருக்கத்தை பறைசாற்றி கொள்ள முடியாதது போன்று காட்டி விடுமே. இன்று எடிட்டரை தங்கள் குலதெய்வமாக, ஹீரோவாக தூக்கி சுமந்து கொள்ளும் இதே கும்பல் ஒரு சமயத்தில் அவரை தாறுமாறாக இணையத்தில் தாக்கிய ஆசாமிகள் தான். ஆனால், அதை செய்தது எல்லாம் போலி ஐடிகளில். உண்மையான பெயர்களில் அதை செய்ய எங்கே தைரியம்.

    இன்றும் பேஸ்புக்கில் நமது இதழ்கள் தொடர்பான குறைகளை, நக்கல் நய்யாண்டி செய்து கலாய்த்து வருவது எங்கள் சொந்த ஐடிகளில் தான். அதை செய்ய மற்றவர்கள் போல போலி முகமூடிகளில் உலவ எங்களுக்கு தேவை இருக்கவில்லை. அங்கு தனிபட்ட முறையில் யாரையும் புண்படுத்தும் நோக்கில் தாக்கி பேசி இருக்கிறோமா என்பதை சோதித்தே பார்த்து கொள்ளலாமே. அத்தளத்தில் எடிட்டர் கூட அவரின் சொந்த பெயரில் ஒரு அமைப்பாளராக இருக்கிறார். ஆனால், அங்கும் பொய் ஐடிகளில் மட்டுமே உலவி கொண்டிருக்கும் ஜீவன்கள், தங்களுக்கு ஒரு விளம்பரம் கிடைக்கும் போது மட்டும் வெளிச்சத்திற்கு வர முயல்வதை காண வேடிக்கையாக தான் இருக்கிறது.

    எடிட்டர் கூறியபடி இச்சிறு தமிழ் காமிக்ஸ் வட்டத்தில், அனைவரும் ஒன்றாக இருக்க பழகலமே, என்று நானும் ஆதங்கபடாத நாள் இல்லை. ஆனால் 5 விரல்களும் ஒன்றை போல ஒன்று இருப்பதில்லை என்ற உண்மையை சகித்து கொண்டு, நமது எண்ணங்கள் மற்றும் ரசனகைளை ஆக்கிரமிக்க முயலும் நபர்கள் மற்றும் குழுக்களில் இருந்து விலகி ஒரு காமிக்ஸ் ரசிகனாக மட்டும் தொடர நான் கற்று கொண்டிருக்கிறேன். நெருங்கிய வட்டாரத்திற்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்புகள் இருப்பதை ஒப்புக்கொள்ள மனம் ஆரம்பத்தில் ஒப்பவில்லை என்றாலும், பெரும்பான வாசகர்கள் போல சராசரி காமிக்ஸ் ரசிகர்களுள் ஒருவராக இருப்பதில் எனக்கு எந்த ஒரு ஈகோவும் இல்லை. இதே எண்ணம் கொண்டவர், நமது வட்டாரத்தில் அதிகம் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே.

    கடைசியாக நான் கூறி கொள்வது, எடிட்டர் மற்றும் அவர் வெளியீடுகளை ஆகோ ஓகோ வென்று பீற்றி கொண்டு கருத்திடுபவர்கள் அனைவரும் உண்மையான ரசிகர்களும் இல்லை. அவர் படைப்புகளை ஆத்மார்த்தமாக உணர்ந்து, அவற்றில் உள்ள நிறை குறைகளை நய்யாண்டியுடன் எடுத்து கூறுபவர்கள் அனைவரும் விரோதிகளும் இல்லை. இந்த உண்மை, எடிட்டருக்கு தெரிந்திருக்கும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. அவர் பதிவுகளில் அந்த முதிரிச்சி நன்றே வெளிச்சமிடபடுகிறது. நான் படித்து வளர்ந்து இன்றும் என் அருகே உலவும் ஒரே தமிழ் காமிக்ஸ் நிறுவனம் என்ற வகையில் லயன் முத்து மீது எனக்கு என்றும் மரியாதை உண்டு. ஆனால், அந்த மரியாதை, உண்மையான ரசிப்புத்தன்மைக்கு என்றும் குறுக்கே வர போவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. நான் பொதுவாக பேசிய ஒரு விஷயத்திற்கு சகட்டு மேனிக்கு பதில் தந்து என்னை கவுரவித்த அந்த நபருக்கு மிகவும் நன்றி. தகப்பன் குதருக்குள் இல்லை என்பது போல, தன் நிலைகளை தானே வாய் தவறி உளறி வரும் ஆசாமிக்கு, இதற்கு மேலும் சரிக்கு சரி பதிலளித்து என் கவுரவத்தை குறைத்து கொள்ள நான் விரும்பவில்லை. இணையத்தில் பல பெயர்களில் இவரே நடத்தும் கூத்தையும், அவர் பதிவின் ரகங்களையும் நான் சுட்டி காட்ட தேவையே இல்லை. அது அங்கே அங்கே டாலடித்து கொண்டிருக்கின்றன.

      காமிக்ஸ் பற்றிய ஞானத்தில், எனக்கு உள்ளதை, விட மொத்த ரசிகர்களின் ஒருசேர்ந்த ஞானம் அதிகம் என்பதை நானும் என்று நம்புபவன். நான் இடும் பதிவுகளில் எனக்கு தெரியாத சில விஷயங்களும் உண்டு என்பதை நான் நன்கே அறிந்திருக்கிறேன். பதிவுகளில் தவறான சுட்டிகாட்டிகள் இருப்பின், அதை மற்றவர்கள் சொல்லும் போது முறையே திருத்தம் செய்தும் இருக்கிறேன், இனியும் செய்வேன். ஏதோ நான் தான் காமிக்ஸ் என்சைக்ளோபீடியா என்று எங்கும் நான் பறைசாற்றி கொண்டதில்லை. அதற்கு நேர்மாறான கருத்துகளை சொல்பவர்களை சகட்டு மேனிக்கு திட்டி கருத்திட்டதுமில்லை.

      எடிட்டரின் இந்த பதிவோடு இனி இப்படிபட்ட விஷயங்களை அவர் அவர் தளங்களிலும் மட்டும் வைத்து கொள்ள எனக்கும் ஆசைதான். இனி பதிவிற்கு உண்டான நேரடியான விமர்சனங்கள் மட்டுமே இத்தளத்தில் என் சார்பில் வெளியிடபடும். அனானிகளுக்கும், சொல்லடி வம்பர்களுக்கும், எடிட்டரே உரிய நீக்கங்களை மேற்கொள்பார் என்று நம்புகிறேன். அது அப்படி விடுபட்டு போகையில் சீண்டல் கருத்துகளுக்கு சரியான பதில்களை கூற, நான் தயார்.

      Delete
  99. today i got thalaivagi kurangu and dr.7

    ReplyDelete
    Replies
    1. அடித்து தாக்குங்கள் குதுப்புதீன். டாக்டர் 7 வரவை நோக்கி நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். :)

      Delete
  100. அன்பு விஜயன் அவர்களுக்கு நான் கடந்த 23 வருடங்களாக நமது காமிக்ஸின் ரசிகன். இங்கு சென்னையில் காமிக்ஸ் கிடைக்காமல் அலைந்த காலத்தில் என்னுடைய சொந்த ஊரான ராமநாதபுரம் (கீழக்கரை) செல்லும் வழியில் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் நமது காமிக்ஸ் கிடைக்குமா என்று அங்குள்ள புத்தக கடையில் அலைந்தது எல்லாம் நம் கொமிக்ஸ் மேலுள்ள அன்பை பன்மடங்காக அதிகரித்து விட்டது. சிறு வயதில் படித்த கையோடு தொலைத்த இதழ்களும் வாங்க முடியாமல் தவற விட்ட இதழ்களும் பல அவற்றை எல்லாம் காமிக்ஸ் கிளாசிக்ஸ் வாயிலாக தரிசிக்க ஆசை.

    நீங்கள் மறுபதிப்பு வெளியிடும் போது உங்கள் தேர்வுகளில் சென்சுரி ஸ்பெஷல் போல நீங்கள் நாலு அல்லது ஐந்து கதைகள் கொண்ட புத்தகமாக வெளியிடலாம். பல வாசகர்களிடம் உங்களுடைய ஸ்பெஷல் பதிப்புகள் பல இல்லாமல் இருக்கலாம் இதில் உங்கள் கருத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு பலரயும் போல டெக்ஸ், மாயாவி, டைகர், லக்கி லூக் இவர்களை மிக பிடிக்கும் இவர்கள் தவிர வன ரேஞ்செர் ஜோ , மர்ம மனிதன் மார்டினையும் மிக பிடிக்கும் இவர்களுக்கும் கொஞ்சம் கருணை காட்டுங்கள். நீங்கள் ஜோவின் புதையல் பாதை, யானை கல்லறையை சரியான வருசையில் வெளியிட்டு இருந்தால் அவை சூப்பர் டூபெர் ஹிட்டாக அமைந்து இருக்கும்.

    சென்னையில் இருந்து kuthubudeen

    ReplyDelete
  101. சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் அனைத்து நண்பர்களுக்கும்

    ReplyDelete
  102. எடிட்டருக்கும், பொதுவான ரசிகர்களுக்கும்: இங்கே வந்து இப்படி எல்லாம் கமென்ட் போட எனக்கும் விருப்பம் இல்லைதான். அனால் என்ன செய்ய? பதில் அளிக்கமாட்டார்கள், பேஸ் புக்கில் செய்வதைப்போல இங்கும் செய்யலாம் என்றே சிலர் நினைத்துக்கொண்டு இருப்பதால் இந்த பதில். மன்னிக்கவும்.

    எந்த ஒரு விஷயத்திலும் மூன்று விதமான நிலைப்பாடுகள் உண்டு. எப்படி ஒரு நாணயத்திற்கு மூன்று பக்கங்கள் உண்டோ, அப்படி.

    1. உண்மை
    2. அடிப்படை உண்மை
    3. உண்மை என்று நாமாக ஒரு விஷயத்தை புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் நம்பி விடுவது.

    இதற்க்கு உதாரணமாக ராணி காமிக்ஸ் இதழ்களில் வந்த Modesty Blaise கதைகளை எடுத்துக்கொள்வோம்.

    உண்மை: டைட்டன் புக்ஸ் சமீபத்தில் வெளியிட்ட Modesty blaise தொகுப்புகளை படிக்கும் நண்பர்கள் அதனை மிகவும் சிறந்த ஒரு வெளியீடாக கருதி அதனை புகழ்வது.

    அடிப்படை உண்மை: ஆனால் சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக இதே டைட்டன் புக்ஸ் வெளியிட்ட ஒரிஜினல் வெளியீட்டுடன் இதனை பொருத்திப் பார்க்கையில் இதன் அச்சுத் தரமும், படிப்பும் மிகவும் சுமார் தான். இது அடிப்படை உண்மை.

    உண்மை என்று நாம் நம்பி அதன் அடிப்படையில் செயல்படுவது: வெறும் ராணி காமிக்ஸில் மட்டுமே கொத்து பரோட்டா போடப்பட்ட கதைகளை படித்தவர்கள் அதுதான் சூப்பர் என்று கருதி அதனை புகழ்வது.

    இங்கே முதல் மற்றும் கடைசி என்று இரண்டு நிலைப்பாடுகளுமே தவறில்லை. ஏனென்றால் அனைவருக்கும் மூன்று நிலைப்பாடுகளில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்று புரிய இயலாது. ஆனால் அடிப்படை உண்மையை தெரிந்தவர்கள் அமைதியாக இருப்பார்கள் (நிறை குடம் தளும்பாது). ஆனால் இந்த உண்மை நிலை (சிறிதளவேனும் அதனைப்பற்றி ஆராய்ச்சி செய்யாமல், அரை குறையாக தங்கள் கண்ணெதிரே தோன்றுவதை மட்டும் நம்பி விடுபவர்கள்) ஆசாமிகள் மிகவும் ரிஸ்க் ஆன நபர்கள். இவர்கள் ஏதோ ஒன்றை உண்மை என்று நம்பி விட்டு (அதற்க்கு காரணங்கள் இருந்தாலும்) அதனையே சதா சர்வ காலமும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள்.

    உதாரணமாக இங்கே ரபிக் ராஜா. இவர் உண்மையையும் தாண்டி (அடிப்படை உண்மை தெரியாமல்) தானாக பல விஷயங்களை கற்பனை செய்துக்கொண்டு வாதிடுவதில் வல்லவர். உதாரணம்: இவருடைய ராணி காமிக்ஸ் தளத்தில் கடைசி பதிவாகிய மந்திரியை கடத்திய மாணவி பற்றிய விமர்சனத்தில் அந்த கதையின் ஒரிஜினல் ஹாட் ஷாட்ஸ் என்றும், அது இங்கிலாந்தில் எந்த பத்திரிக்கையில் தொடராக வந்தது என்றும், அது வந்த கால கட்டத்தையும் மிகவும் தெளிவாக கூறுகிறார். அதை படிக்கும் பலரும் அது உண்மை என்றே நம்பி விடுகிறார்கள். இதற்காக அவரையும் குறை சொல்லிவிட முடியாது, ஏனென்றால் அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான். அவரு என்ன வைத்துக்கொண்டேவா வஞ்சனை செய்கிறார்?

    கதையின் விமர்சனத்தை பற்றி மட்டுமே கூறியிருந்தால் அது ஒரு அட்டகாசமான பதிவு என்று சொல்லி முடித்திருக்கலாம். ஆனால் இந்த சப்போர்டிங் டேட்டா கொடுத்திருக்கிறார் பாருங்கள். இங்கேதான் ஆரம்பிக்கிறது பிரச்சினை. உண்மையை சரியாக உணர்ந்து கொள்ளாமல் ஒரு தவறான விஷயத்தை அதற்க்கு சப்போர்டிங் விஷயங்களுடன் (டெய்லி மிர்ரர், வெளியான தேதிகள்) என்று சொல்வது உண்மைக்கு புறம்பான ஒரு விஷயத்திற்கு ஆதாரம் கட்டுவது போல. அந்த ஆதாரம் எதனை அடிப்படையாக கொண்டது என்று வினவினால், 2+2=4 என்று ஏதாவது சம்பந்தமில்லாத இரண்டு விஷயங்களை கூறி அவற்றை சம்பந்தப்ப் படுத்துவது.

    ஆனால் அடிப்படை உண்மை தெரிந்தவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஏனென்றால் இந்த ஹாட் ஷாட்ஸ் என்கிற கதை உண்மையில் ராணி காமிக்ஸில் கதிர்வெடி என்ற பெயரில் வெளியானது. ஆனால் ஆதாரமே இல்லாமல் ஏதோ இரண்டு விஷயங்களை நம்பி கதிர்வெடி கதையும் தெரியாமல், அதன் மூலக்கதையும் தெரியாமல் இதுதான் உண்மை என்று வெளியான தேதிகளுடன் சொல்வது எப்படிப்பட்ட "உண்மை" என்பதை வாசகர்களே முடிவு செய்துக்கொள்ளட்டும்.

    அநேகமாக ரபிக் அவர்களைப்பற்றிய ஒரு அறிமுகத்திற்கு இந்த விஷயம் போதும் என்று நினைக்கிறேன். இனிமேல் அடுத்த கட்டத்திற்கு நகரலாம்.

    ReplyDelete
  103. மேலே உள்ள கமென்ட்டில் நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்று பின்னர் சொன்னாலும், அதில் யாரை அவர் பேசி இருக்கிறார் என்பதை உணர்வதற்கு ராக்கெட் சைன்ஸ் படித்திருக்க தேவை இல்லை. ஆகவேதான் இந்த நீண்ட, தேவை இல்லாத, ஆனால் பொதுவில் இருக்கும் வாசகர்கள் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டிய இந்த பதில். இந்த பதிலை இங்கே நான் அளிக்கவில்லை என்றால் வழக்கம் போல இன்னுமொரு கதை ஆரம்பிக்கும்.

    //இந்த பதிவில் நான் கருத்திடவே தேவையில்லை என்று எண்ணி ஒதுங்கி இருந்தேன். ஏனெனில் குற்றமற்றவர்கள், அவர்களை எனக்கு நன்றாக தெரியும் என்று எடிட்டரே சான்றளித்து பதியும் இடத்தில், நாம் புதிதாக எதை கூறி மாற்று கருத்து அளிக்க முடியும்.//

    கண்டிப்பாக இவரால் மாற்றுக்கருத்து கூற இயலும், ஏனென்றால் இஅவரது ஆதாரத்துடன் கூடிய உண்மைகளை நாம்தான் பார்க்கிறோமே? இவராகவே சில விஷயங்களை "இங்கேயும்" நம்பி அதன் அடிப்படையில் ஒரு பெரிய லிஸ்டையே வெளியிடுவார். ஆதாரம் என்ன என்று கேட்டால், வழக்கம் போல 2+2=4 என்றுதான் ஒரு பதில் இருக்கும்.

    //பல காலமாக தங்கள் குறைகளை சொல்ல முடியாமல் மத்திய கும்பல் ஒன்றில் நிழற் மேற்பார்வையில் வைக்கபட்டிருந்தவர்கள், தங்கள் சுதந்திரத்தை பதிவு செய்ய விரும்புவது இயல்பு தானே.//

    எடிட்டர் ஏதோ இத்தனை ஆண்டுகள் அமெரிக்காவில் குடியிருந்த மாதிரியும், இப்போதுதான் அவர் இங்கே வந்த மாதிரியும் இருக்கிறதே? ஒரே ஒரு லெட்டர், அல்லது ஒரு போன்கால் போதுமே, எடிட்டரிடம் தங்கள் கருத்துக்களை சொல்ல? அவர் தமிழ் நாட்டில்தானே இருக்கிறார்? தேவைப்பட்டால் சிவகாசிக்கே சென்று உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு வந்திருக்கலாமே?

    //இன்று எடிட்டரை தங்கள் குலதெய்வமாக, ஹீரோவாக தூக்கி சுமந்து கொள்ளும் இதே கும்பல் ஒரு சமயத்தில் அவரை தாறுமாறாக இணையத்தில் தாக்கிய ஆசாமிகள் தான். ஆனால், அதை செய்தது எல்லாம் போலி ஐடிகளில். உண்மையான பெயர்களில் அதை செய்ய எங்கே தைரியம். //

    எங்கே, ஏதாவது ஆதரங்களை கூறுங்களேன் பார்க்கலாம்? ஏதாவது ஸ்க்ரீன் ஷாட்டுகள், அல்லது லின்க்குகள் கொடுங்களேன்? வழக்கம் போல நீங்களே ஒரு விஷயத்தை "உண்மை என்று நம்பி" பேசுகிறீர்கள்.

    //ஆனால், அதை செய்தது எல்லாம் போலி ஐடிகளில். உண்மையான பெயர்களில் அதை செய்ய எங்கே தைரியம். //Even GOD does not propose to judge a person, until the end of his days என்று ஆங்கிலத்தில் சொல்வதுண்டு. அப்படி இருக்க புனைப்பெயரில் வந்து கமென்ட் இடுபவர்களை எல்லாம் போலி என்று ஜட்ஜ் செய்யும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தார்கள்?
    எனக்கும் என்னுடைய உண்மையான பெயரில் வரவே ஆசைதான். ஆனால் உங்களைப்போன்ற "பிரபல பதிவர்களிடமிருந்து" நான் ஒரு பதிவு இட்டுவிட்டேன், வந்து கமென்ட் போடுங்கள் என்பது போன்ற ஸ்பாம் மெயில்கள் நிறைய வருகிறது. அதுவுமில்லாமல் நான் மீடியா துறையில் இருக்கும் ஒருவன் (விஸ்வா போல இன்னும் சிலரும் தான்). ஆனால் எனக்கு சொந்தப்பெயரில் வந்து பதிவுகளை இட்டாலோ, அல்லது பின்னூட்டங்களை பதித்தலோ, அதனை என்னுடைய சொந்தக்கருத்தாக பார்க்காமல், என்னுடைய பணி நிமித்த அடிப்படையிலேயே பார்க்கும் மனோப்பாங்கு இன்றும் உள்ளது. அது இல்லாமல் அது எனக்கு தேவை இல்லாத ஒரு செயல். சென்ற மாதம் மும்பையில் ரிடையர் ஆன Blogeswari மேடம், ஒரு பிரபலமான முன்னணி விளம்பர நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். ஆனால் அவருக்கு சொந்த பெயரில் ஆன் லைனில் வர விருப்பம் இல்லை. ஆனால் எங்களுக்கு அவர் யார் என்பது தெரியும். அவ்வளவே.

    ஆகவே உண்மையான பெயரில் கமென்ட் போட தேவை இருப்பது தைரியம் அல்ல. இதைப்போலவே தேவை இல்லாமல் பல கருத்துக்கள் வந்ததால் தான் நான் வேறு வழி இல்லாமல் அந்த இந்தியன் எக்ஸ்பிரெஸ் இண்டர்வியூவிற்கு வந்து என்னுடைய முகத்தை காண்பித்தேன்.

    ReplyDelete
  104. /தங்களுக்கு ஒரு விளம்பரம் கிடைக்கும் போது மட்டும் வெளிச்சத்திற்கு வர முயல்வதை காண வேடிக்கையாக தான் இருக்கிறது.//

    ரபிக், எனக்கு விளம்பரமே தேவை இல்லை. 4 முறை Superstar ரஜினிகாந்துடன் தனியாக பேசி இருந்தாலும், ஒரு முறைகூட அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டு அவரை வைத்து நான் விளம்பரம் தேட வேண்டிய நிலை எனக்கு இல்லை. எனக்கே சொந்தமாக ஒரு தொலைகாட்சி சேனல் இருக்கிறது. அப்படி இருக்க, "வழக்கம் போல உண்மையை அறியாமல்" நீங்கள் சொல்வது வேடிக்கையாகவே இருக்கிறது. தமிழ் நாட்டில் மூன்றுகோடி பேர் ரசிக்கும் ரஜினியுடனே என்னுடைய நிலைப்பாடு அப்படி என்றால், தற்போதைய நிலையில் சுமார் பத்தாயிரம் பேர் படிக்கும் தமிழ் காமிக்ஸ் புத்தகங்களை வைத்தா நான் விளம்ப்ரம் தேடிக்கொள்ளப்போகிறேன்?

    //எடிட்டர் கூறியபடி இச்சிறு தமிழ் காமிக்ஸ் வட்டத்தில், அனைவரும் ஒன்றாக இருக்க பழகலமே, என்று நானும் ஆதங்கபடாத நாள் இல்லை. ஆனால் 5 விரல்களும் ஒன்றை போல ஒன்று இருப்பதில்லை என்ற உண்மையை சகித்து கொண்டு, நமது எண்ணங்கள் மற்றும் ரசனகைளை ஆக்கிரமிக்க முயலும் நபர்கள் மற்றும் குழுக்களில் இருந்து விலகி ஒரு காமிக்ஸ் ரசிகனாக மட்டும் தொடர நான் கற்று கொண்டிருக்கிறேன்.//

    இதில் இருக்கும் உண்மையை பார்க்கலாம். ஆரம்ப காலத்தில் எங்கள் நண்பர்கள் பதிவில் ஸ்டாண்டர்ட் ஆக இருந்த உங்கள் பின்னூட்டம்: நீங்கள் எல்லாரும் என்னை பிளாக் லிஸ்ட் செய்து விட்டீர்கள், உங்கள் பின்னூட்டங்கள் என்னுடைய பதிவுகளில் வருவதில்லை போன்றவையே. அதைப்போலவே காமிக்ஸ் நண்பர்கள் நாங்கள் கூடி பேசினால், அதற்க்கு என்னை அழைக்கவில்லை என்று அதற்க்கும் ஆதங்கப்பட்டவர் நீங்கள். ஐயா, உங்களை மற்றவர்கள் அழைக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்?

    உண்மை இப்படி இருக்க, நான் விலகி விட்டேன் என்று சொல்வதில் எங்கே இருக்கிறது நியாயம்? இதன் பிறகே உங்களின் கிண்டல், கேலி நிறைந்த comments வர ஆரம்பித்தது. அதனையும்கூட ஆரம்பத்தில் கண்டித்த நாங்கள் பிறகு கண்டுக்கொள்வதையே நிறுத்தி விட்டோம். இப்படி ஆரம்பித்த ஒரு விஷயத்தை நாங்கள் எப்போதோ மறந்துவிட்டோம். நீங்கள் இன்னமும் நிராகரிக்கப்பட ஒரு கழிவிரக்கத்தில் இப்படியே பேசி வருகிறீர்கள்.

    ReplyDelete
  105. //கடைசியாக நான் கூறி கொள்வது, எடிட்டர் மற்றும் அவர் வெளியீடுகளை ஆகோ ஓகோ வென்று பீற்றி கொண்டு கருத்திடுபவர்கள் அனைவரும் உண்மையான ரசிகர்களும் இல்லை. அவர் படைப்புகளை ஆத்மார்த்தமாக உணர்ந்து, அவற்றில் உள்ள நிறை குறைகளை நய்யாண்டியுடன் எடுத்து கூறுபவர்கள் அனைவரும் விரோதிகளும் இல்லை. இந்த உண்மை, எடிட்டருக்கு தெரிந்திருக்கும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. அவர் பதிவுகளில் அந்த முதிரிச்சி நன்றே வெளிச்சமிடபடுகிறது.//

    பிரச்சினையே இங்கேதான். ஒவ்வொரு இதழ் தயாரிப்பிலும் இருக்கும் தடைகளை நன்கு உணர்ந்தவர்கள் அதன் அடிப்படை உண்மையை அறிந்தவர்கள், தமிழில் காமிக்ஸ் வெளியிடுவதில் இருக்கும் கஷ்ட,நஷ்டங்களை அறிந்தவர்கள் குறைகளை நீக்கி, நிறைகளை மட்டுமே காண்பவர்கள் அமைதியாகவே இருப்பார்கள்.

    நீங்கள் வெளியிட்டுள்ள கமென்ட்டில் இருக்கும் "பீற்றிக்கொண்டு" என்கிற வார்த்தையில் இருந்தே லயன் காமிக்ஸ் ரசிகர்களை என்ன பார்வையில் பார்க்கிறீர்கள் என்பது தெரிந்து விடுகிறது. மேற்கொண்டு வேறென்ன சொல்ல?இதைதவிர வேறு பல விஷயங்களையும் பொதுவில் வைத்து என்னால் வாதிட முடியும். ஆனால் இப்போதைக்கு இது போதும். நீங்கள் இதனை மேலும் தொடர்ந்திட விரும்பினால் நான் ரெடி. இன்னமும் பல விவாதங்களை என்னால் முன் நிறுத்த இயலும். ஆனால், எடிட்டரும் மற்ற வாசகர்களும் கடுப்பாகி விடுவார்கள் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Dear Brother,

      உங்க பிரச்சனைகள உங்க ப்ளாக்ல வச்சுக்கலாமே. காலையில் வந்து ஆர்வமா lion காமிக்ஸ் ப்ளாக்க ஓபன் செய்தால் உங்க பஞ்சாயத்துதான் நடந்துட்டிருக்கு. இது Lion காமிக்ஸ் ப்ளாக்கா? இல்லை ஒலக காமிக்ஸ் ரசிகன் ப்ளாக்கா ? உங்க பஞ்சாயத்த எல்லாம் உங்க ப்ளாக்கிலே வச்சுக்கோங்களேன். வெறுப்பா இருக்கு.

      உடனே அவர்கள் என்னை இந்த ப்ளாக்கில் தான் தாக்குகிறார்கள். அதனால் நான் இங்குதான் பதில் சொல்லுவேன் என்று சொல்லாதீர்கள். //காமிக்ஸ் நண்பர்கள் நாங்கள் கூடி பேசினால், அதற்க்கு என்னை அழைக்கவில்லை என்று அதற்க்கும் ஆதங்கப்பட்டவர் நீங்கள்// இதை படிக்கும்பொழுது உங்களுக்கும் நீங்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் நபருக்கும் நேரிலேயே தொடர்புகொள்ளமுடியும் என்று தெரிகிறது. எனவே உங்கள் பிரச்சினையை உங்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். இங்கு வந்து பத்தி பத்தியாக தெருச்சண்டை மாதிரி போட்டுக்கொள்ளவேண்டாம். நீங்கள் மட்டுமே Lion காமிக்ஸ் வாசகர்கள் அல்ல என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

      கடைசியாக, இதற்கும் பதில் சொல்கிறேன் பேர்வழி என்று இங்கு மீண்டும் உங்கள் தமிழ் ஆற்றலை காட்டவேண்டாம்.

      காமிக்ஸ் பற்றிய ஆரோகியமான தகவல்களை மட்டும் பதிவு செய்யவே இந்த ப்ளாக் என்பது என் போன்ற வாசகர்களின் கருத்து.

      இதையும் மீறி எனக்கு பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் இங்கு சண்டை போட்டு,

      "நாங்கள் மிகவும் நேசிக்கும் Lion காமிக்ஸ் ப்ளாக்கை பயன்படுத்த வேண்டாம்."

      நான் எனது தொடர்பு எண்ணை அளித்துள்ளேன் (Phone No : 9095031022 ) தொடர்பு கொள்ளுங்கள், உங்களுக்கு நல்ல முறையில் எனது எண்ணங்களை தெரிவிக்க காத்திருக்கிறேன்.

      Delete
    2. ஐயா நீர் ரஜினி உடன் போட்டோ எடுத்து கொள்ளாதது உம் பெரிய மனதை காட்டுவதாகவே இருக்கட்டும். நீர் இன்னும் பல தொலைகாட்சி சேனல் கள் துவங்க கடவுள் அருளட்டும். இந்த தகவல்கள் நமது காமிக்ஸ் ப்ளாக் இல் யாருக்கேனும் தேவையா என நீர் யோசித்து பதிவை இடவும் என அனைவரின் சார்பில் வேண்டி கொள்கிறேன். தற் புகழ்ச்சி யை போன்ற ஒரு கொடிய வியாதி வேறு எதுவும் இல்லை என்பர். எனவே நீர் thavare செய்தவர் இல்லை எனில் பிறர் செய்த தவறை சுட்டி காட்டினால் நல்லது என்பது எங்கள் கருத்து. தவுறு செய்தல் மனித இயல்பு, இல்லாதார் இப் புவியில் இல்லவே இல்லை. தேவை இன்றி பதிவுகள் தேவையா?விஜயன் சார் உடனடி ஆக்சன் ப்ளீஸ். உஸ்ஸ் அப்பாடஆஆஅ முடியல்ல... வலிக்குது... புத்தக ப்ரியன்

      Delete
  106. இந்த சாத்தானை யாருமே கண்டுக்க மாட்டேன் என்கிறார்கள்.யாராவது என்னை திட்ட கூடாதா?நான் என்ன அவ்வளவு நல்லவனா?தலை வாங்கியார் வருவதில் தாமதம் ஏனோ?இலங்கை வாசக நண்பர் தீபனுக்கு பிறந்த நாள் ,மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.ஒலக காமிக்ஸ் ரசிகனுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்.உங்கள் முழு நீல (ஹிஹி .சாரி நீள)கமெண்ட்களை படிப்பதற்கே பயமாக இருக்கிறது.தயவு செய்து சுருக்கமாக பதிவிடவும்.இல்லாவிட்டால் லயன் காமிக்ஸ் வாசகர்கள் நாட்டை விட்டே ஓடி விடுவார்கள்.எடிட்டர் சார் அவர்களுக்கு ;இவர்களை வைத்து எப்படி சமாளிக்கிறீர்கள்?உங்கள் பொறுமைக்கு ஒரு அளவே கிடையாதா?உங்களுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசுதான் வழங்கவேண்டும்.(ஹி ஹி ;பிட்ட போட்டுட்டேன்.இனிமே நம்ம காட்டுல மழைதான்)

    ReplyDelete
    Replies
    1. ஆஹாஹா! முடியல! உங்களுடைய தைரியத்தை பாரட்ட வார்த்தைகள் இல்லை நண்பரே! நானும் ரவுடி தான்!

      Delete
    2. சாத்தான்.. எனக்கும் இன்னும் தலை வாங்கியார் வரலை. முதல் காமிக்ஸ் கிடைக்கப்பெற்று இன்றுடன் 20 நாட்கள் ஆகியும், நமக்கு இன்னும் புத்தகம் வரவில்லை. ஆனால் எடிட்டர் அனைத்து சந்தாதாரர்களுக்கும் புத்தகம் அனுப்பியாயிற்று என்று சொல்கிறார். ஒரே குழப்பமாக இருக்கிறது. இனி சந்தாவை நம்பி பிரயோஜனம் இல்லை. டிஸ்கவரி பேலஸ் புத்தகக்கடை (சென்னை) நேரில் சென்று வாங்குவதே உசிதம் என்று நினைக்கிறேன். காத்திருத்தல் மிகக் கடுமையான விஷயமாகிறது :(

      Delete
    3. எனக்கும் ஐந்தாம் தேதி அனுப்பி விட்டார்களாம்! இன்னும் பெங்களூருக்கு வந்து சேர்ந்தபாடில்லை! :( அஞ்சல் துறைக்கு அஞ்சால் அலுப்பு மருந்து யாராவது கொடுங்கப்பா! ;)

      Delete
    4. சாத்தான் அன்பரே, அதற்கு எல்லாம் சரியான மச்ச பலன்கள் இருக்க வேண்டும். என்னவோ எனக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான் :)

      டாக்டர் 7 இன்னும் கைவசம் வந்து சேரவில்லை, என்று நான் பதிவிட எண்ணினால், தலை வாங்கியே இன்னும் வரவில்லை என்று நீங்கள் கருத்திடுகிறீர்கள். ஒருவரை பார்த்து இன்னொருவர் மன சாந்தி அடைந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது. சனி அன்று மறுபடியும் லயன் ஆபிஸிற்கு தொலைபேச வேண்டும். 10 ரூபாய் புத்தகத்திற்கு 30 ரூபாய் தொலைபேசியிலேயே செலவு ஆகி விடும் போல.

      10 ரூபாய் புத்தகங்களை கொரியரில் அனுப்புவது சாத்தியமான விசயம் இல்லை என்பதால், அவைகளை மொத்தமாக சேர்த்து அனுப்பி வைக்கலாம் என்று தோன்றுகிறது. என்ன அதற்காக 4, 5 புத்தகங்கள் வெளிவரும் வரை காத்திருக்க வேண்டும் என்பது இன்னும் பிரச்சனை. எடிட்டர் கூறியபடி இன்னும் 3, 4 10 ரூபாய் இதழ்களே பாக்கி என்ற நிலையில், இந்தியா போஸ்டை இனியும் அதிக நாட்களுக்கு நம்பி காத்திருக்க வேண்டி இருக்க போவதில்லை என்பது தான் தற்போதைய ஒரே சந்தோஷம்.

      Delete
  107. அவன நிறுத்த சொல்லு, நான் நிறுத்தறேன்!
    நன்றி: தளபதி

    இதே ரேஞ்சுல ரெண்டு (மூணு?) க்ரூப்பும் மாறி மாறி சண்ட போட்டீங்கன்னா Bladepedia-ல, தெனம் ரெண்டு இல்லனா மூணு பதிவு போட்டு, இங்க லிங்க் கொடுத்து டார்ச்சர் பண்ணுவேன் - ஜாக்கிரதை! :)

    ReplyDelete
  108. தயவு செய்து மாயாவி, லாரன்ஸ், ஜானி, ரிப், வில்லர் இவர்களில் யார் பெரியவர் என்பன போன்ற விவாதங்கள் மட்டுமே. காமிக்ஸ் காதலர்கள், காமிக்ஸ் கதாநாயகர்களை மட்டும் விமர்சிக்கட்டும். Please. Please and Please.
    MUTHU PRIYAN

    ReplyDelete
  109. இந்த பதிவின் ​பெய​ரை ஆசிரியர் அவர்கள் "​நெஞ்சிலிருந்து ​நேராய்" என்பதற்கு பதிலாக "சச்சரவிலிரந்து ​நேராய்" என்று ​பெயரிட்டுருக்கலா​மோ?

    ...என்னய்யா இது? எனக்கு ஒன்னு​மே புறியவில்​லை, இதுதான் நிழல் உலகமா?

    ReplyDelete
    Replies
    1. யாருக்கு காமிக்ஸ் பற்றி அதிகமாக மற்றும் நுண்ணிய தகவல்கள் தெரியும் என்ற போட்டியினால் வந்த சண்டைகள் போல இருக்கிறது (ஒலகக் காமிக்ஸ் ரசிகர், ரஃபீக் ஒரு தவறான காமிக்ஸ் பற்றிய பிண்ணனியினை தன் ப்ளாக்கில் குறிப்பிட்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைத்து நான் புரிந்துகொண்டது). என்னைப் போன்ற லயன் காமிக்ஸ் (மட்டும்) வாசகருக்கு பெரியதொரு பின்புலத்தகவல்கள் தெரியாது. எனினும் அது காமிக்ஸ் படித்து ரசிப்பதற்கு தடையாக இருப்பதில்லை. மேலும் நம் காமிக்ஸ் வாசகர்களில் ஒரு சிலரைத்தவிர மற்றவர்களுக்கு ஒரு கதையின் வரலாறு, அது முதலில் எங்கு வெளிவந்தது (இந்த மாதிரி நுண்ணிய தகவல்களை King Viswa மற்றும் Rafiq அவர்களின் வலைத்தளங்களில் படித்திருக்கிறேன்) போன்ற தகவல்கள் தெரிவதில்லை. தெரிந்தவர்கள் அவர்களின் வலைத்தளங்களில் வெளியிடும் தகவல்களை ஆர்வமுடன் படிக்கிறே(றோம்)(ன்). (அந்த ப்ளாக் King Viswa எழுதியதா அல்லது Rafiq எழுதியதா ? என்று பிரித்துப் பார்ப்பதில்லை)

      Delete
    2. >>>தெரிந்தவர்கள் அவர்களின் வலைத்தளங்களில் வெளியிடும் தகவல்களை ஆர்வமுடன் படிக்கிறே(றோம்)(ன்). (அந்த ப்ளாக் King Viswa எழுதியதா அல்லது Rafiq எழுதியதா ? என்று பிரித்துப் பார்ப்பதில்லை)<<<

      +1

      Delete
    3. நண்பர்களே, எனக்கு தெரிந்த விஷயங்களை பதிவுகளில் ஏற்றுகிறேன். அதில் சில தகவல்கள் தவறுகளாக இருக்க வாய்ப்பு இருப்பது நான் அறிந்ததே. தவறுகளை சுட்டிகாட்டும் நண்பர்களிடம், அதற்கான நன்றியை கூறி பதிவை மாற்றி இருக்கிறேன். ஆனால், என்றும் நான் சொல்பவை மட்டுமே உண்மை, என்று எங்கும் வாதிட்டதில்லை.

      இனியும் அப்பாணியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை. காமிக்ஸ் என்ற நமது அரிதான ரசிப்புத்தன்மையை சேர்ந்தே முகர நான் என்றும் தயார். உங்கள் உற்சாகம் தரும் கருத்திற்கு நன்றி, ராம்.

      Delete
  110. பத்தாம் திகதிக்குப் பின்னர் ஆசிரியரை இந்தப் பக்கமே காணோம். இவர்கள் சண்டையை முடிக்கட்டும் வருவோம் என்று வேறு பணிகளில் மூழ்கிவிட்டார்போலும்.

    ஆனால், இந்தச் சச்சரவுகளெல்லாம் இப்போதைக்குத் தீர்வது மாதிரித் தெரியவில்லை. பார்ப்போம்.
    (ஏதோ எப்படியோ இந்தப் பதிவும் 200 பின்னூட்டங்களை எட்டப்போகிறது!)

    நண்பர்கள் அனைவருக்கும் சித்திரைத் திருநாள் (புத்தாண்டு!) வாழ்த்துக்கள்.

    -Theeban (SL)

    ReplyDelete
    Replies
    1. நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் வருட பிறப்பு வாழ்த்துகள். பிறந்த நாள் வாழ்த்துகள் உங்களுக்கும், தீபன். லயன் முத்து மீது நீங்கள் கொண்ட அபரிதமான காதல், உங்கள் கருத்துகளில் ஸ்பஷ்டமாக தெரிகிறது. இலங்கையிலிருந்து இன்னொரு லயன் முத்து வாசகரை சந்திப்பதில் மகிழ்ச்சி. அந்த பொடியன் பெயர் அலாதி. மினி லயனின் பயங்கர பொடியன் தலைப்பை நியாபகபடுத்துகிறது.

      Delete
  111. அடடே.. 200 அடிக்கும் வாய்ப்பு எனக்கா? (இதிலென்னடா பெரிய சாதனை என்று நண்பர்கள் முறைப்பது புரிகிறது. ஒரு சின்ன சந்தோஷம் அவ்வளவுதான்!) !st, 100th and 200th... :)

    -Theeban (SL)

    ReplyDelete
  112. 201 ஐ நான் அடிச்சிட்டேனுள்ள?எப்பூடி ?

    ReplyDelete
  113. இப்படியே "ஜல்லிக்கட்டு, மல்லுகட்டு, கும்மாங்குத்து" என்று தொடருமேயானால் ஆசிரியரின் இந்த பதிவு முதல் இடத்தை பிடிப்பது நிச்சயம்

    ReplyDelete
  114. இந்திய தபால் துறைக்கு புனித சாத்தான் கடும் கண்டனம் தெரிவிக்கிறான்.இனி வரும் காலங்களில் லயன் ,முத்து காமிக்ஸ்கள் தனியார் கூரியர் மூலமாக அனுப்ப எடிட்டர் அவர்கள் உறுதியளிக்க வேண்டும்.இல்லாவிட்டால் சிவகாசிக்கு வந்து லயன் அலுவலகம் எதிரே ஆர்பாட்டம் நடத்தப்படும் என புனித சாத்தான் எச்சரிக்கிறான்.be carefull(நான் என்னெ சொன்னேன்)

    ReplyDelete