Sunday, January 15, 2012

உஷார்..சற்றே நீளமானதொரு பதிவு !!


நண்பர்களே,

சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தாண்டு நமது காமிக்ஸ்களை display செய்திட முடிவெடுத்த போது பெரியதொரு எதிர்பார்ப்பெல்லாம் கிடையாது..... விற்பனை ஆகிறதோ இல்லியோ, கொஞ்சமாவது ஒரு exposure கிடைக்குமே என்ற நம்பிக்கை மட்டுமே என்னுள்.அதுவும் இன்னொரு பதிப்பகத்துடன் ஸ்டால் பகிர்ந்து கொள்வதால், எவ்வளவு பிரதிகள் அங்கே எடுத்துச் செல்வது...எவ்வளவு விற்பனை ஆகும் என்றெல்லாம் சுத்தமாய் ஒரு கணக்கும் போடத் தெரியவில்லை என்பதே நிஜம்...!

முதல் நாள் 4600 ரூபாய் collection என்ற போது ,'சரி ...இது தான் ஒரு விற்பனை அளவுகோல் போல' என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டேன் !

ஆனால்.........

தொடர்ந்திட்ட நாட்களில் நீங்கள் காட்டிட்ட வரவேற்பு எங்களது wildest imaginationக்கும் அப்பாற்பட்டது !! அப்படியொரு ஆத்மார்த்தமான ; உற்சாகமான, துள்ளலான வரவேற்பு !

ஒவ்வொரு இரவும் நமது பணியாளர்கள் சொல்லும் 'கல்லாப்பெட்டி கணக்கை' விட, நான் மிக ஆவலாய் கேட்டிடுவது அன்றைய தினம் வந்திட்ட வாசக நண்பர்களின் பட்டியலை ...அவர்களது எண்ணங்களைப் பற்றியே !!

நம்மிடையே இருப்பது 'ஒரு பதிப்பகம்.....அதன் வாசகர்கள்' என்ற சராசரி உறவுச் சங்கிலி அல்ல என்பது எனக்கு முன்பே தெரியும் தான்..!ஆனால் கடந்த 10 நாட்களாய், அகன்ற விழிகளோடு நாங்கள் அனுபவித்து வரும் வெறித்தனமான இந்த அன்பு மழையை விவரித்திட, நான் கற்ற தமிழில் வார்த்தைகள் இல்லை !

"Thanks everybody " என்று கூலாக ஒரு கும்பிடு போட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்க நான் கிளம்பி விட்டால், 'ஆயுசுக்கும் தூர்தர்ஷன் டப்பிங் சீரியல்களைப் பார்க்கக் கடவது' என்ற தண்டனையை விட பாடாவதியான தண்டனைக்கு நான் தகுதியானவன் ஆகிடுவேன்...!!

So எங்களது நன்றிகளை வார்த்தைகளில் மட்டும் அல்லாது, செயலிலும்  காட்டிடுவதே எனக்குத் தெரியும் ஒரே வழி...!!

இந்த 2012 ஐ நம் காமிக்ஸ் பயணத்தில் ஒரு மறக்க முடியா phase ஆக செய்திட என் மண்டையில் மிச்சம் மீதி இருக்கும் சொற்பமான கேசத்தை பிய்த்துக் கொண்டு இருக்கிறேன்! நமது காமிக்ஸ்களைப் பொறுத்த வரை 1985 -'90 வரையிலான காலத்தை "Golden period " என்று நம் வாசகர்கள் எப்போதுமே சொல்லுவது உண்டு...God willing - வரவிருக்கும் மாதங்கள்.....ஆண்டுகள் அதனை தூக்கி சாப்பிடப் போகிறது ! Just sit back and enjoy the ride folks ... !  

 பின்குறிப்பு

புத்தகக் கண்காட்சி முடிவடைய இன்னும் 3  நாட்கள் உள்ள போதிலும் இந்தப் பகுதியை இப்போதே எழுதிடும் அவசியமென்ன என்று எண்ணிடலாம்...but மனதில் பட்டதை அப்போதே எழுத்தாக்கிப் பார்ப்பதும் ஒரு சுகமான திருப்தி தானே ! THANKS GUYS  .....THANKS FOR EVERYTHING !!!   பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!

பின்குறிப்பு -2 :

இந்தப் பதிவுக்குத் துளியும் சம்பந்தமில்லா ஒரு ஆசாமியின் சித்திரம் இங்கே ஏன் என்று நீங்கள் யோசிக்கலாம்...அது பற்றி அடுத்த பதிவில் !                               
       

21 comments:

  1. எடிட்டர் சாருக்கும், அனைத்து காமிக்ஸ் வாசகர்களுக்கும், இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் :)

    ReplyDelete
  2. சார்,
    எடிட்டர் சாருக்கும், அனைத்து காமிக்ஸ் வாசகர்களுக்கும், இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

    இன்று நான் புத்தக கண்காட்சிக்கு வர இருக்கிறேன். நேற்று மதியம் முழுவதும் அங்குதான் இருந்தேன். நண்பர் R.T.முருகன் அவர்களை சந்திக்க முடிந்தது. ஆனால் உங்களையோ, விஸ்வா அவர்களையோ சந்திக்க முடியவில்லை. இன்று நீங்கள் வருவீர்களா?

    ReplyDelete
  3. //இந்தப் பதிவுக்குத் துளியும் சம்பந்தமில்லா ஒரு ஆசாமியின் சித்திரம் இங்கே ஏன் என்று நீங்கள் யோசிக்கலாம்...அது பற்றி அடுத்த பதிவில்//

    சார், இவரோடைய கதையைத்தானே நம்ம அணில் விஜய் படமாக எடுக்கிறார்? யோகன் அத்தியாயம் ஒன்று?

    ReplyDelete
  4. >> நான் கற்ற தமிழில் வார்த்தைகள் இல்லை !
    தூள்! :)

    ReplyDelete
  5. ithuva neelam???? Inum ethirpakarom sir ungakita...:-)

    ReplyDelete
  6. Sir,

    does the 900 rs complete collection contain the english comics too ?

    ReplyDelete
    Replies
    1. Yes. The complete collection contains the English comics too.

      Delete
  7. ஹாய் எடிட்டர் சார்,
    உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.. இவ்வருடம் நமது தமிழ் காமிக்ஸ் உலகத்தின் இன்னொரு பொற்காலத்தின் தொடக்கம் என்பது இன்னொரு இனிப்பான செய்தி.. எதிர்வரும் காலங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  8. I am so happy to see that the sales were so good. This is a bright moment in the history of Muthu/Lion. I hope this will give you the enthusiasm to publish more comics per year from now on instead of the long gaps we are used to.

    I hope you will reissue all comics classics in the large format one day.

    Wish you all the best and continued success.

    ReplyDelete
  9. I am happy to see that Largo Winch is coming to our comics soon. Hope it will be in full color. I have read most of them in English but will be good to read them in Tamil too.

    ReplyDelete
    Replies
    1. BN : Of course, Largo Winch would be in full color !!

      Delete
  10. Come Back Special is superb, esp, my fav lucky luke.
    - Suresh

    ReplyDelete
  11. Thanks for Largo Winch in Colour. Nanga Unga Kudumbathula Oruthar Brother. Romba Pugazhringa! enrum Athe Anbudan JohnYY

    ReplyDelete
  12. Engal OOril Atru Thiru Vizhavil(Manalur Pet) Oru Murai en comics semippai ellam Display Seithen. Appo Kidaitha varaverpu innum en nenjil nizhaladugirathu! Pona Book Fairil (34) Kooda engo oru Moolaiyil parthen. Anal Immurai Neenga neril Vanthu Sirappithu namathu comicsai Perumaipaduthi irunthathuthan Highlight!

    ReplyDelete
  13. ini varudam oru thadavai ithu polave ungalai neril parthu alavalava Chennaiyil vasikkum engalukku chance thanga ji

    ReplyDelete
  14. HAPPY PONGAL VIJAYAN SIR.

    EXPECTING MORE FROM YOU THIS YEAR.

    COMEBACK SPECIAL IS GOOD. but not fulfilling. second half avasara kathiyila panna mathiri irukku.... font size is toooo mini. pls take care of that sir.

    BEST WISHES..!!!!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. Thank you Varada Desigan....I agree the font size was a bit small in the Maayavi & Corrigan stories ; this was the problem I was mentioning in my earlier posting, when I spoke about Lion Comics getting done these days by computers, rather than artists ! We are learning our way around and hopefully will have this ironed out soon !

      Delete
  15. What a surprise,was trying to read Largo in English and pummeling through the french version with my limited understanding of that language and here it is...can't wait to read "Largo" in Tamil.

    And...really gladdened my heart to get the "comeback special" at book fair .

    A big thank you for all those great moments of bliss provided over the years reading comics and our wishes to make the coming years as memorable - Eternally a fan

    ReplyDelete
  16. இந்த முறை, நம் காமிக்ஸ் நன்றாக விற்பனையானது என்றறிந்து மகிழ்ச்சி. இதன் வெற்றி, அடுத்த வருடமும், நம் காமிக்ஸ் ஸ்டாலை காணமுடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. நிறைய பேர், வாங்க விருப்பமிருந்தாலும், எப்படி வாங்குவது எங்கே வாங்குவது என்ற கேள்விகளுக்கு, புத்தகக்காட்சி நல்லதொரு பதிலை அளித்திருக்கிறது. நன்றி.25 வருடங்களாக காமிக்ஸ் படித்தும், உங்களை நேரில் புத்தகக்காட்சியில் பார்த்தது நல்ல அனுப்வம்.

    ReplyDelete
  17. 20th. This is one of shortest post of editor. in future, the posts are 10 times longer than this

    ReplyDelete
  18. முதல் முதலில் லார்கோ புத்தகத்தை வரிசைக்கிரமமாக படிக்காமல் லார்கோ மீது பிடிப்பு இல்லாமல் இருந்தது, என் பெயர் லார்கோ படிக்கும் வரை.

    ReplyDelete